Dinamani - ஈரோடு - http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3007023 கோயம்புத்தூர் ஈரோடு குறைவான மாணவர்களைக் கொண்ட பள்ளிகளை மூடும் நோக்கம் இல்லை: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் DIN DIN Tuesday, September 25, 2018 01:14 AM +0530 குறைவான மாணவர்களைக் கொண்ட பள்ளிகளை மூடும் நோக்கம் அரசுக்கு இல்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.    
 ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட இ.பி.பி. நகரில் ரூ. 59 லட்சம் மதிப்பிலான சுகாதார நிலையம், காமராஜ் நகரில் ரூ. 30 லட்சம் மதிப்பிலான சமுதாயக் கூடம், ஞானபுரத்தில் ரேஷன் கடை என மொத்தம் ஒரு கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடக்கிவைத்த பிறகு அவர் கூறியதாவது:
 ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு, ஆழப்படுத்தப்பட்டு  சுற்றுச்சூழல் துறையின் மூலம் சீரமைக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பாலிதீன் பயன்படுத்துவது இல்லை என்ற நிலையால் மிக விரைவில் இந்தியாவுக்கு வழிகாட்டியாகத் தமிழகம் மாறும் நிலை ஏற்படும்.
 பெரியசேமூர் இ.பி.பி. பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு 100  நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட உள்ள நிலையில், வரும்  கல்வி ஆண்டில் இ.பி.பி. பள்ளியைத் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
 பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. சிறப்பாக செயல்படாத பெற்றோர் ஆசிரியர் சங்கங்களை  உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு பள்ளியையும் அதன் வளாகத்தில் இருந்து மற்றொரு பள்ளிக்கு மாற்றுவது பற்றிய ஆய்வோ, பரிசீலனையோ இல்லை.
 தமிழகத்தில் 1,311 பள்ளிகளில் ஒரு மாணவர் முதல் 10 மாணவர்கள் மட்டுமே உள்ளனர். அந்தப் பள்ளிகளுக்கு கூடுதல் செலவாகிறது. இருப்பினும், எந்தப் பள்ளியையும் மூடுகிற நோக்கம் அரசுக்கு இல்லை. போராட்டம் நடத்துவோம் என சொல்கிறவர்கள் பள்ளியில் கூடுதலாக மாணவர்களை எப்படி சேர்ப்பது, அதை எவ்வாறு  சீரமைப்பது என்பது குறித்து ஆலோசனை வழங்கினால் நன்றாக  இருக்கும். ஒரு பள்ளியில் ஒரு மாணவர், இரண்டு மாணவர்கள் இருக்கிறார்கள் என்றால், ஒரு மாணவருக்கு குறைந்தபட்சம் ரூ. 6 லட்சத்தை அரசு செலவழிக்க வேண்டியுள்ளது. மக்கள் வரிப் பணத்தை  சீரான முறையில் செலவழிப்பது, ஆசிரியர்களை சிறப்பான முறையில்  வழிநடத்திச் செல்வது, மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது குறித்து அவர்கள் ஆலோசனை தெரிவிக்கலாம்.
 அங்கன்வாடி குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் இணைக்கும் நோக்கமில்லை. அந்தக் குழந்தைகளுக்கும் எல்கேஜி, யுகேஜி வகுப்பில் ஆங்கிலம், தமிழ் ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்படும். ஆசிரியர்களுக்கும் சிறந்த பயிற்சி வழங்கப்படும் என்றார்.
 இதில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ். தென்னரசு, கே.வி.இராமலிங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா, மாநகராட்சி ஆணையர் சீனி அஜ்மல்கான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/25/குறைவான-மாணவர்களைக்-கொண்ட-பள்ளிகளை-மூடும்-நோக்கம்-இல்லை-அமைச்சர்-கேஏசெங்கோட்டையன்-3007023.html
3007022 கோயம்புத்தூர் ஈரோடு ராவுத்தகுமாரசாமி கோயிலில் சுயம்வர பார்வதி யாகம் DIN DIN Tuesday, September 25, 2018 01:14 AM +0530 கொடுமுடி அருகே சிவகிரி காகம் கிராமத்தில் உள்ள ராவுத்தகுமாரசாமி, வீரமாத்தியம்மன் கோயிலில் சுயம்வர பார்வதி யாகம் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.
 ராவுத்தர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோயில் முகப்பில் யாக குண்டம் அமைக்கப்பட்டு சுயம்வர பார்வதி ஹோமம் நடைபெற்றது. பாசூர் மடாதிபதிகள் சந்திரசேகர் தீட்சிதர், விஷ்வநாத தீட்சிதர் ஆகியோரை கோயிலுக்கு அழைத்து வந்து குரு வணக்கம் செய்து, மக்கள் தங்களது குடும்பத்தினருடன் குல குரு காணிக்கை வழங்கி மடாதிபதிகளிடம் ஆசி பெற்றனர். 
 இந்நிகழ்ச்சியில், கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், பழனி ஆகிய பகுதிகளிலிருந்து  500 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து மடாதிபதிகளிடம் காணிக்கை செலுத்தி ஆசி பெற்றனர். பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/25/ராவுத்தகுமாரசாமி-கோயிலில்-சுயம்வர-பார்வதி-யாகம்-3007022.html
3007020 கோயம்புத்தூர் ஈரோடு பவானி ஆற்றில் குளித்த இரு தொழிலாளர்கள் மாயம் DIN DIN Tuesday, September 25, 2018 01:14 AM +0530 சத்தியமங்கலத்தை அடுத்த கொண்டமுத்தனூர் பவானி ஆற்றில் குளித்த 3 பேரில், நீரில் அடித்துச் செல்லப்பட்ட இருவரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், 15 வேலம்பாளையத்தைச் சேர்ந்த சுந்தர், திருப்பதி, கார்த்தி, எபின், அலெக்ஸ் ஆகியோர் விடுமுறை நாளைக் கழிப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை திருப்பூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டனர். அதில், சுந்தர், திருப்பதி ஆகியோர் ஒரு இருசக்கர வாகனத்திலும் கார்த்தி, எபின், அலெக்ஸ் ஆகியோர் மற்றொரு இருசக்கர வாகனத்திலும் சென்றுள்ளனர். இவர்கள் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளர்களாக வேலை பார்த்தனர்.
இதில், எபின் என்பவர் சத்தியமங்கலத்தை அடுத்த கொண்டமுத்தனூர் பவானி ஆற்றுக்கு அடிக்கடி வந்து செல்லவாரம். இதையடுத்து, எபின் தனது நண்பர்களான கார்த்தி, அலெக்ஸ் ஆகியோருடன் கொண்டமுத்தனூர் பவானி ஆற்றுக்கு வந்துள்ளார். அங்கு மூவரும் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. மது போதையில் கார்த்தி, எபின் இருவரும் பவானி ஆற்றில் குளித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, வேகமான நீரில் இருவரும் அடித்துச் செல்லப்பட்டதாகத் தெரிகிறது.
நீண்ட நேரமாகியும் இருவரும் வராதது குறித்து நண்பர் சுந்தரனுக்கு அலெக்ஸ் தகவல் தெரிவித்துள்ளார். அங்கு வந்த நண்பர்கள் அவர்களைத் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் கடத்தூர், சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில், மாயமான கார்த்தி, எபின் ஆகியோரின் உடல் பவானி ஆற்றில் கிடப்பதாக கிடைத்த தகவலின்பேரின் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தேடிப் பார்த்தனர். அங்கும் கிடைக்காததால் திரும்பிச் சென்றனர். கடந்த 10 நாள்களில் பவானி ஆற்றில் குளித்த  9 பேர் உயிரிழந்துள்ளனர்  என்பது குறிப்பிடத்தக்கது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/25/பவானி-ஆற்றில்-குளித்த-இரு-தொழிலாளர்கள்-மாயம்-3007020.html
3007018 கோயம்புத்தூர் ஈரோடு கும்பகோணம் கொண்டு செல்லப்பட்ட வெள்ளோடு ராசா சுவாமி கோயில் சிலைகள் DIN DIN Tuesday, September 25, 2018 01:14 AM +0530 நீதிமன்ற உத்தரவை ஏற்று, சென்னிமலை ஒன்றியம், வெள்ளோடு புதிய ராசா சுவாமி கோயிலில் உள்ள 8 சிலைகளை அகற்றி, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் கோயில்  நிர்வாகிகள் திங்கள்கிழமை ஒப்படைத்தனர்.
ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஒன்றியம், வெள்ளோட்டில் ஒரு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வழிபடும் ராசா சுவாமி கோயில் உள்ளது. நூற்றாண்டு பழைமையான இக்கோயில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலை புனரமைப்பு செய்ய முடிவு செய்த கோயில் நிர்வாகக் கமிட்டியினர் 2008 ஆம் ஆண்டு 12 சுவாமி சிலைகளை பாலாலயம் செய்தனர். பின்னர், அருகில் கட்டப்பட்ட புதிய கோயிலில்  சிலைகளை பிரதிஷ்டை செய்தனர்.
பழைய கோயிலில் இருந்த உச்சகுமாரசுவாமி, உச்சனன், சார்க்கனன், பெரியண்ண சுவாமி, துவாரகாண்டியம்மன், ஆத்தா - ஐயன், கன்னிமார் சுவாமி, மசிரியம்மன் உள்ளிட்ட 8 சிலைகளை கோயிலில் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்தினர். மீதமுள்ள நான்கு சிலைகள் பழைய கோயிலில் தனி அறையில் வைத்து பூட்டி வைத்திருந்தனர்.
இந்நிலையில், ஈரோட்டைச் சேர்ந்த பொன் தீபங்கர், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில், பழைய ராசா சுவாமி கோயில் சிலைகளைக் காணவில்லை என புகார் அளித்தார். இதேபோல, வெள்ளோட்டைச் சேர்ந்த வி.என்.துரைசாமி, வெள்ளோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார்களின்பேரில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு  போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்து வரும் கும்பகோணம் தனி நீதிமன்றம், வெள்ளோடு புதிய ராசா சுவாமி கோயிலில் உள்ள சிலைகளை மீட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவு நகலுடன் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி. சந்திரசேகர், இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை உள்ளிட்ட போலீஸார் செப்டம்பர் 6 ஆம் தேதியன்று வெள்ளோடு ராசா சுவாமி கோயிலுக்கு வந்தனர். இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் நந்தகுமார், ஆய்வாளர் கமலம், செயல் அலுவலர் ரமணிகாந்த் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்ட அவர்கள், நீதிமன்ற உத்தரவுப்படி புதிய கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள  சிலைகளையும் எடுத்துச் செல்வதாக போலீஸார் தெரிவித்தனர். ஆனால், புதிய கோயிலில் புதிய சிலைகளை நிறுவி பாலாலயம் செய்யும் வரை, புராதன சிலைகளை இங்கு வைத்திருக்க அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள், கோயில் நிர்வாகக் குழுவினர் கேட்டுக் கொண்டதன் பேரில் போலீஸார் சிலைகளை எடுக்க அவகாசம் அளித்தனர். 
இந்நிலையில், வெள்ளோடு ராசா சுவாமி கோயிலில் வைக்கப்பட்டு இருந்த சிலைகளுக்கு பாலாலயம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, சிலை கடத்தல் தடுப்பு போலீஸாரிடம் கோயில் நிர்வாகக் குழுவினர் சிலைகளை சனிக்கிழமை ஒப்படைத்தனர்.  
சனி, ஞாயிறு நீதிமன்றம் விடுமுறை என்பதால் சிலைகள்அகற்றப்படவில்லை. 
திங்கள்கிழமை வந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. சந்திரசேகர் தலைமையிலான போலீஸார் புதிய கோயில் வளாகத்தில் உள்ள சிலைகளை அகற்றி,  கும்பகோணம் தனி நீதிமன்றத்தில் ஒப்படைக்க எடுத்துச் சென்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/25/கும்பகோணம்-கொண்டு-செல்லப்பட்ட-வெள்ளோடு-ராசா-சுவாமி-கோயில்-சிலைகள்-3007018.html
3007017 கோயம்புத்தூர் ஈரோடு கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம் DIN DIN Tuesday, September 25, 2018 01:13 AM +0530 மொடக்குறிச்சி தாலுகா, 46புதூர் ஊராட்சியில் 1,209  கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு, கால்நடைத் துறை ஈரோடு மண்டல இணை இயக்குநர் கோபால்சாமி தலைமை வகித்தார். மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. வி.பி.சிவசுப்பிரமணி முகாமைத் தொடக்கிவைத்தார்.
மொடக்குறிச்சி ஒன்றியச் செயலாளர் ஆர்.பி.கதிர்வேல், ஒன்றியக் குழு முன்னாள் துணைத் தலைவர் கணபதி, 46புதூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கால்நடைத் துறை உதவி இயக்குநர் பழனிசாமி வரவேற்றார். சட்டப் பேரவை உறுப்பினர் வி.பி.சிவசுப்பிரமணி, முகாமைத் தொடக்கிவைத்து, சிறந்த மாடுகளைத் தேர்வு செய்து அதற்கான பரிசுகளை விவசாயிகளுக்கு வழங்கினார். மாடு, ஆடு, எருமை, கோழி, நாய் உள்ளிட்ட 1,209 கால்நடைகளுக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.  இதில், ஆவின் துணை மேலாளர் வெங்கடாசலம், கால்நடைத் துறை மருத்துவர்கள் தங்கவேல், சக்திவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/25/கால்நடைகளுக்கான-தடுப்பூசி-முகாம்-3007017.html
3007016 கோயம்புத்தூர் ஈரோடு மழை பெய்ய வேண்டி ஆத்தூர் அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை DIN DIN Tuesday, September 25, 2018 01:13 AM +0530 சிவகிரி, தொப்பம்பாளையம் ஆத்தூர் அம்மன் கோயிலில் மழை பெய்ய வேண்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் சிறப்பு பூஜை நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு புரட்டாசி மாதம் ஞாயிற்றுக்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது. இரவு 7 மணிக்கு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. 
தொடர்ந்து, அம்மனுக்கு பொங்கல் படையல் வைத்து, மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.
சிவகிரி, கொடுமுடி  சுற்று வட்டாரப் பகுதிகளான தொப்பம்பாளையம், வேட்டுவபாளையம், கந்தசாமிபாளையம் ஆகிய பகுதிகளில் இரவு 10 மணியளவில் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/25/மழை-பெய்ய-வேண்டி-ஆத்தூர்-அம்மன்-கோயிலில்-சிறப்பு-பூஜை-3007016.html
3007014 கோயம்புத்தூர் ஈரோடு இருசக்கர வாகனத்துடன் கிணற்றில் விழுந்த  தொழிலாளி சாவு DIN DIN Tuesday, September 25, 2018 01:13 AM +0530 சென்னிமலை அருகே இருசக்கர வாகனத்துடன் கிணற்றில் விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.
சென்னிமலையை அடுத்த அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் வீரன் (63). விவசாய கூலித் தொழிலாளி. சனிக்கிழமை வேலைக்குச் சென்ற இவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், வெப்பிலி - அய்யம்பாளையம் சாலையில், உடையதோட்டம் அருகே சாலையோர கிணற்றின் திட்டுப் பகுதியில் வீரனின் இருசக்கர வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து, சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை தகவல் கொடுக்கப்பட்டது. கிணற்றில் இறங்கி தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். 80 அடி ஆழ கிணற்றில் அதே அளவுக்குத் தண்ணீர் இருந்ததால், பவானியில் இருந்து மீனவர்கள் வரவழைக்கப்பட்டனர். மூன்று மணி நேர போராட்டத்துக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை மாலை வீரன் உடல் மீட்கப்பட்டது.
இதுகுறித்து, சென்னிமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/25/இருசக்கர-வாகனத்துடன்-கிணற்றில்-விழுந்த--தொழிலாளி-சாவு-3007014.html
3007013 கோயம்புத்தூர் ஈரோடு நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம் DIN DIN Tuesday, September 25, 2018 01:13 AM +0530 நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பத் துறையின் சார்பில், 9 ஆவது தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்குக்கு, நந்தா கல்வி அறக்கட்டளைத் தலைவர் வி.சண்முகன் தலைமை வகித்தார்.
மெக்ஸிகோ மின்ட் ஸ்ட்ராட்டஜிக் நிறுவன முதன்மை அதிகாரி டாக்டர் த.விஜேஷ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினார். கணினி அறிவியல் துறை மாணவி  பூமா விழாவைத் தொடக்கிவைத்தார்.
தலைமை நிர்வாக அலுவலர் டாக்டர் ஆறுமுகம் கருத்தரங்கின் மூலம் புதிய முயற்சிகளை எப்படி கையாள்வது என்பது குறித்து விளக்கமளித்தார். செயலர்கள் ச.நந்தகுமார் பிரதீப், ச. திருமூர்த்தி, முதல்வர் விஜயகுமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
கருத்தரங்கில் தமிழகம் முழுவதும் 53 க்கும் மேற்பட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களில் இருந்து 241 மாணவர்கள் பங்கேற்றனர். கணினி அறிவியல் துறை மாணவர் ஆரோன் டி சஞ்சு நன்றி கூறினார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/25/நந்தா-தொழில்நுட்பக்-கல்லூரியில்-தேசிய-கருத்தரங்கம்-3007013.html
3007011 கோயம்புத்தூர் ஈரோடு பூம்புகார் நிலையத்தில் கொலு பொம்மைகள் விற்பனைக் கண்காட்சி DIN DIN Tuesday, September 25, 2018 01:12 AM +0530 தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் விற்பனைக் கண்காட்சி திங்கள்கிழமை தொடங்கியது.
ஈரோடு - மேட்டூர் சாலையில் உள்ள  பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி, விற்பனையை மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன்  தொடக்கி வைத்தார்.
இக்கண்காட்சியில், காகிதக் கூழ், மண்ணால் செய்யப்பட்ட லட்சுமி, கணேஷ், சரஸ்வதி, துர்கா, மகாபாரதம், தட்சிணாமூர்த்தி, லட்சுமி நாராயணன், தசாவதாரம், அஷ்டலட்சுமி, மீனாட்சி கல்யாணம், ஸ்ரீனிவாச கல்யாணம், கஜலட்சுமி, கிருஷ்ணன், தங்கத்தேர், கல்யாண செட், பள்ளிக்கூடம் செட், திருப்பதி, விஸ்வரூபம் செட், சீமந்தம் செட், பத்ரி நாராயணன் செட், கும்பகர்ணன் செட், பிரதோஷ சிவன், பெருமாள், மலேசியா முருகன், தன்வந்திரி, மூகாம்பிகை, வராகியம்மன், உலகளந்தார் செட், விவசாயம் செட், ராகவேந்திரர், தலைவர்கள், ஜல்லிக்கட்டு, பசுவும் கன்றும், குபேரர், மீராபாய், கோபியர் செட், கார்மேன், டோரா, மிக்கிமவுஸ், காய்கறிகள், பழங்கள் செட், டான்சிங்டால், மரச்சொப்பு செட், மரப்பாச்சி பொம்மைகள், பலவித கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, மேலாளர் ஜி.சரவணன் கூறியதாவது:
அக்டோபர் 20 ஆம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியில் ரூ. 10 முதல் ரூ. 20 ஆயிரம் வரையிலான கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கொலு பொம்மைகளுக்கு 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது. அனைத்து கடன்/பற்று அட்டைகளும் எவ்வித சேவை கட்டணமின்றி ஏற்றுக் கொள்ளப்படும் என்றார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/25/பூம்புகார்-நிலையத்தில்-கொலு-பொம்மைகள்-விற்பனைக்-கண்காட்சி-3007011.html
3007010 கோயம்புத்தூர் ஈரோடு ஸ்பிரிங் போர்டு டைவிங் போட்டி: ஈரோடு மாணவிக்கு வெண்கலம் DIN DIN Tuesday, September 25, 2018 01:12 AM +0530 மாநில அளவிலான ஸ்பிரிங் போர்டு டைவிங் போட்டியில் ஈரோடு மாணவி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
தமிழ்நாடு ஸ்டேட் அக்வாடிக் அசோசியேஷன் சார்பில் 72 ஆவது சீனியர் ஸ்டேட் அக்வாடிக் சாம்பியன் ஷிப் போட்டிகள் ஆகஸ்ட் 31 இல் தொடங்கி செப்டம்பர் 2 ஆம் தேதி வரை மூன்று நாள்கள் சென்னை வேளச்சேரியில் நடைபெற்றது. தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு பிரிவு போட்டிகளில் 400 க்கும் மேற்பட்ட நீச்சல் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில், 1.5 மீட்டர் ஸ்பிரிங் போர்டு டைவிங் போட்டியில் ஈரோடு கலைமகள் பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவி தங்கம் ரூபினி, மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
மாநில அளவில் ஈரோட்டுக்குப் பெருமை சேர்த்த மாணவிக்குப் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி, தாளாளர் மங்களவதி, முதல்வர் இந்திராணி, சக்தி துரைசாமி, டவுன் டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன், பயிற்சியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/25/ஸ்பிரிங்-போர்டு-டைவிங்-போட்டி-ஈரோடு-மாணவிக்கு-வெண்கலம்-3007010.html
3007008 கோயம்புத்தூர் ஈரோடு பவானி, சித்தோட்டில் வீடு புகுந்து 12 பவுன் திருட்டு DIN DIN Tuesday, September 25, 2018 01:12 AM +0530 பவானி, சித்தோடு பகுதியில் இருவேறு இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். 
பவானியை அடுத்த திப்பிசெட்டிபாளையம், வசந்தம் நகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (75). இவர், தனது மகள் வீட்டுக்கு சனிக்கிழமை இரவு சென்றிருந்தபோது, மர்ம நபர்கள் இவரது வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகைகளை திருடிச் சென்றனர். இதன் மதிப்பு ரூ. 50 ஆயிரம். 
சித்தோடு, நடுப்பாளையம் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் உமா சங்கர் (36). இவரது மனைவி சுகந்தி. இருவரும் தனியார் கல்லூரிப் பேராசிரியர்கள். உமாசங்கரைத் தவிர அனைவரும் சனிக்கிழமை இரவு உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டனர். 
இந்நிலையில், வீட்டின் மேல்மாடி அறையின் கதவை உடைத்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த ஏழே கால் பவுன் நகையைத் திருடிச் சென்றனர். இதன் மதிப்பு ரூ. 75 ஆயிரம். 
இதுகுறித்து, அளிக்கப்பட்ட புகாரின்பேரில் பவானி, சித்தோடு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/25/பவானி-சித்தோட்டில்-வீடு-புகுந்து-12-பவுன்-திருட்டு-3007008.html
3007007 கோயம்புத்தூர் ஈரோடு தூய்மை விழிப்புணர்வு முகாம் DIN DIN Tuesday, September 25, 2018 01:11 AM +0530 கோபிசெட்டிபாளையத்தில் தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில், தூய்மையே சேவை என்ற தலைப்பில் தூய்மை விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், கோபி நகராட்சி ஆணையர் சுதா பங்கேற்று தூய்மையின் முக்கியத்துவம் குறித்து விளக்கிப் பேசினார்.
இதில், மார்க்கெட் சங்கத் தலைவர் துரை, நிர்வாகிகள், நகராட்சிப் பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள்,  தினசரி மார்க்கெட் வியாபாரிகள், சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/25/தூய்மை-விழிப்புணர்வு-முகாம்-3007007.html
3007005 கோயம்புத்தூர் ஈரோடு கோபியில் செப்டம்பர் 26 முதல் கலை விழா DIN DIN Tuesday, September 25, 2018 01:11 AM +0530 கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரி 25 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, கலைச் சங்கமம் கலை விழா செப்டம்பர் 26 முதல் 30 ஆம் தேதி வரை கோபி சீதா கல்யாண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.    
செப்டம்பர் 26 ஆம் தேதி மாலை 6 மணிக்கு  நாட்டுப்புறப் பாடல்களின் சங்கமம் என்ற தலைப்பில் தொலைக்காட்சி புகழ் செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி  குழுவினரின் நாட்டுப்புறப் பாடல்கள் நிகழ்ச்சியும், 27 ஆம் தேதி மாலை 6 மணிக்கு கோ.ப.நல்லசிவத்தின் தேவாரப் பாடல் நிகழ்ச்சியும், 28 ஆம் தேதி மாலை 6 மணிக்கு சிங்கிலிப்பாடி ஸ்ரீ செல்லியம்மன் தெருக்கூத்து மன்றம் சார்பில், ராமசந்திரன் வழங்கும் பாஞ்சாலக் குறவஞ்சி, பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சி ஆகியன நடைபெறவுள்ளன. 
 29 ஆம் தேதி மாலை 6 மணிக்கு சேரன் துடும்பாட்டக் கலைக் குழு சார்பில், கலை வளர்மணி எஸ்.சாமிநாதனின் துடும்பாட்டம், எஸ்.எஸ்.செல்வம் குழுவினரின் பம்பை, கைச்சிலம்பாட்டம், மகேந்திரனின்  ஸ்டார் ஜிக்காட்டம் நடைபெறவுள்ளது. 30 ஆம் தேதி கோமதி சங்கர் குழுவினரின் கரகாட்டம், நையாண்டி மேளம், காவடி ஆட்டம், காளையாட்டம், கருப்பசாமி ஆட்டம், பறையாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆகியன நடைபெறவுள்ளன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரித் தாளாளர் பி.என்.வெங்கடாசலம், முதல்வர், துணை முதல்வர், பேராசிரியர்கள், கல்லூரி நிர்வாகத்தினர், மாணவிகள் செய்து வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/25/கோபியில்-செப்டம்பர்-26-முதல்-கலை-விழா-3007005.html
3007003 கோயம்புத்தூர் ஈரோடு பண்ணையம் திட்டப் பயனாளிகள் தேர்வு முகாம் DIN DIN Tuesday, September 25, 2018 01:11 AM +0530 பெருந்துறை வட்டாரத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டத்தில், பயனாளிகள் தேர்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
 முகாமிற்கு, வேளாண்மை இணை இயக்குநர் குணசேகரன் தலைமை வகித்தார். வேளாண்மை கூடுதல் இயக்குநர் குமரவேல் பாண்டியன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று விவசாயிகளிடம் திட்டத்தின் பயன்கள், செயல்படுத்தப்படும் முறைகள் குறித்து விளக்கினார். மேலும், திட்டம் தொடர்பான விவசாயிகளின் கருத்துகள், கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். 
இதில், பெருந்துறை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) ராஜாத்தி, வேளாண்மை உதவி இயக்குநர் (தரக் கட்டுப்பாடு) ஜெயராமன், வேளாண் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். 
முகாமிற்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரபாகரன், உதவி தொழில்நுட்ப மேலாளர் விஜயகுமார், அதிகாரிகள் செய்திருந்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/25/பண்ணையம்-திட்டப்-பயனாளிகள்-தேர்வு-முகாம்-3007003.html
3007002 கோயம்புத்தூர் ஈரோடு கோ-கோ போட்டி: பெருந்துறை சாகர் பள்ளி சிறப்பிடம் DIN DIN Tuesday, September 25, 2018 01:10 AM +0530 தமிழ்நாடு, பாண்டிச்சேரி சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையேயான 6 ஆவது கிளஸ்டர் கோ-கோ விளையாட்டுப் போட்டியில், பெருந்துறை சாகர் பள்ளி சிறப்பிடம் பிடித்துள்ளது.
மயிலாடுதுறை, அழகுஜோதி அகாதெமி பள்ளியில் செப்டம்பர் 20 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற்ற இப்போட்டியில், தமிழ்நாடு, பாண்டிச்சேரி, அந்தமான் தீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டன. 
இதில், 17 வயதுக்கு உள்பட்ட மாணவியர் பிரிவில் பெருந்துறை சாகர் இண்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் இரண்டாமிடம் பெற்றனர். இப்பள்ளியின் 7 ஆம் வகுப்பு மாணவி தக்ஷிதா சிறந்த விளையாட்டு வீராங்கனையாகத் தேர்வு செய்யப்பட்டார்.  வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளித் தாளாளர் சி.சௌந்திரராசன், நிர்வாகிகள் பாராட்டினர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/25/கோ-கோ-போட்டி-பெருந்துறை-சாகர்-பள்ளி-சிறப்பிடம்-3007002.html
3006998 கோயம்புத்தூர் ஈரோடு நம்பியூரில் புதிய காவல் நிலையம் திறப்பு DIN DIN Tuesday, September 25, 2018 01:10 AM +0530 கோபி அருகே உள்ள நம்பியூரில் காவல் நிலையத்தின் புதிய கட்டடம் திறப்பு விழா, ரூ. 1 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படும் ரவுண்டானாவுக்கான அடிக்கல் நாட்டு விழா ஆகியன திங்கள்கிழமை நடைபெற்றன.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூரில் ரூ. 35 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட காவல் நிலையத்தின் புதிய கட்டடத்தை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்து வைத்தார். காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.
தொடர்ந்து, நம்பியூர் பேருந்து நிலையம் முன்பு மேட்டுப்பாளையம் - கோவை - கோபி ஆகிய சாலைகள் சந்திக்கும் இடத்தில் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள ரவுண்டானா பணிக்கு அடிக்கல் நாட்டி பணியைத் தொடக்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசியதாவது:
நம்பியூர் பகுதியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு அரசு கலைக் கல்லூரிஅமைக்கப்பட்டுள்ளது. 
புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அத்திக்கடவு - அவிநாசி குடிநீர்த் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படவுள்ளது.
செப்டம்பர் 26, 27 ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளில், பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள் பங்கேற்று பள்ளிக் கல்வித் துறைக்கு நிதி அளிக்கவுள்ளனர். 
அந்த நிதியைக் கொண்டு மாணவர்களின் ஒழுக்கம், கற்றல் ஆற்றலை மேம்படுத்துதல், சிறந்த கல்வி போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். 
இப்பணிகளை பாண்டிச்சேரி வானவில் நிறுவனம் ஒருங்கிணைந்த பணிகளாக மேற்கொள்ளவுள்ளது என்றார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/25/நம்பியூரில்-புதிய-காவல்-நிலையம்-திறப்பு-3006998.html
3007000 கோயம்புத்தூர் ஈரோடு பெருந்துறை ஒன்றியத்தில் பொதுமக்கள் குறைகேட்பு முகாம் DIN DIN Tuesday, September 25, 2018 01:10 AM +0530 பெருந்துறை ஒன்றியத்துக்கு உள்பட்ட சுள்ளிபாளையம், கராண்டிபாளையம், பொன்முடி ஆகிய ஊராட்சிகளில் அந்தந்த ஊராட்சி அலுவலகங்களில் பொதுமக்கள் குறைகேட்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முகாமில், சட்டப் பேரவை உறுப்பினர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று அம்மனுக்கள் 
மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 
இதில், பெருந்துறை சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் குணசேகரன், மண்டல துணை வட்டாட்சியர் முருகேசன், அவைத் தலைவர் சந்திரசேகர், ஒன்றியச் செயலாளர் விஜயன், ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் எஸ்.பெரியசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/25/பெருந்துறை-ஒன்றியத்தில்-பொதுமக்கள்-குறைகேட்பு-முகாம்-3007000.html
3006996 கோயம்புத்தூர் ஈரோடு மதுக் கடைகளை அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு DIN DIN Tuesday, September 25, 2018 01:09 AM +0530 விஜயமங்கலத்தில் செயல்படும் 2 டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமிற்கு, ஆட்சியர் சி.கதிரவன் தலைமை வகித்தார். பெருந்துறை ஒன்றிய பாரதிய ஜனதா கட்சித் தலைவர் சசிதயாள் தலைமையில் ஆட்சியரிடம் அளித்துள்ள மனு:
விஜயமங்கலம் பேருந்து நிலையம் அருகிலும், பெருமாள் கோயில் அருகிலும் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்தக் கடைகளால் பொதுமக்களுக்கு அடிக்கடி இடையூறு ஏற்படுவதால் அதை அகற்றக் கோரி டாஸ்மாக் மேலாளரிடம் கடந்த மாதம் மனு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மேற்படி கடையை அகற்றுவதாக டாஸ்மாக் அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர். ஆனால், இன்றுவரை டாஸ்மாக் கடை அகற்றப்படவில்லை. எனவே, மேற்கண்ட 2 டாஸ்மாக் கடைகளையும் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல, அந்தியூர் அருகே உள்ள வெள்ளாளபாளையம் பகுதியைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட பொதுமக்கள்  ஆட்சியரிடம் அளித்துள்ள மனு:
 எங்கள் ஊரில் ரைஸ் மில் பிரிவில் டாஸ்மாக் கடை அமைக்க அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். டாஸ்மாக் கடை அமையவுள்ள இடத்துக்கு அருகில் 2 கல்லூரிகளும், 2 பள்ளிக்கூடங்களும் செயல்பட்டு வருகின்றன. இங்கு கடை அமைத்தால் குடிகாரர்களால் மாணவ, மாணவிகளுக்குப் பெரிதும் பாதிப்பு ஏற்படும். எனவே, டாஸ்மாக் கடையை வேறு இடத்தில் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில்  நாங்கள்  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
தேங்காய் நார் 
தொழிற்சாலையை மூடக் கோரிக்கை:
வெள்ளோடு அருகே உள்ள நடுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள  மனுவில், எங்கள் பகுதியில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான தேங்காய் நார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் எங்கள் பகுதியில் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளதால்,  சுத்தமான  குடிநீருக்காக சிரமப்படுகிறோம். மேலும், விவசாயம் செய்ய முடியாமல் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.  எனவே, சம்பந்தப்பட்ட தொழிற்சாலையை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் அளித்துள்ள மனுவில், ஈரோடு மாநகர் பகுதியில் நடைபெற்று வரும் புதை சாக்கடைத் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் அளித்துள்ள மனுவில், பெருந்துறை அருகே உள்ள மூங்கில்பாளையம் பகுதியில் கட்டப்பட்டுள்ள கிராம சேவை மையத்தை உடனடியாகத் திறக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
ஊஞ்சலூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில், பொதுமக்களின் வசதிக்காக ஊஞ்சலூர், ஆனங்கூர் கூட்டு பரிசல் துறையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
மக்கள் பாதை சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில், மாவட்ட அரசு அலுவலகங்களில் பதியப்படும் பதிவேடுகள், கடிதங்கள், ஆணைகள்,  காலமுறை அறிக்கைகள், நாட்குறிப்புகள், பெயர் பலகைகள், முத்திரைகள் முதலியன அனைத்தும் தமிழிலேயே அமைத்தல் வேண்டும். அரசு அலுவலர்கள், பணியாளர்கள் தமிழிலேயே கையொப்பம் இட வேண்டும் என்றும் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை மீண்டும் நடைமுறைப்படுத்த ஆணை பிறப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் சுற்றித் திரியும் வெறிநாய்களைப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
மாவட்ட நிர்வாகத்திடம் 219 பேர் மனு:
மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் 219 மனுக்கள் அளிக்கப்பட்டன. மனுக்களை ஆய்வு செய்த ஆட்சியர் அவற்றின் மீது துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்புடைய துறை அலுவலர்களிடம் அறிவுறுத்தி ஒப்படைத்தார். சாலை விபத்தில் உயிரிழந்த செய்தியாளர்  ஷாலினியின் குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 3 லட்சத்துக்கான காசோலையை அவரது தந்தை ராஜேந்திரனிடம் மாவட்ட  ஆட்சியர் சி.கதிரவன் வழங்கினார்.
கூட்டத்தில், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் பிரபாவதி, மாவட்ட வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/25/மதுக்-கடைகளை-அகற்றக்-கோரி-ஆட்சியரிடம்-மனு-3006996.html
3006652 கோயம்புத்தூர் ஈரோடு பெருந்துறையில் ஊரகத் திறனாய்வுத் தேர்வு DIN DIN Monday, September 24, 2018 07:30 AM +0530 எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான ஊரகத் திறனாய்வுத் தேர்வு பெருந்துறை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
  இந்தத் தேர்வில் பெருந்துறைப் பகுதியைச் சுற்றியுள்ள நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 8ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் சுமார் 140 பேர் பங்கேற்றனர். தேர்வு நடைபெற்ற பெருந்துறை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தேர்வு மையத்தை மாவட்டக் கல்வி அலுவலர் டி.ராமன் பார்வையிட்டார். 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/24/பெருந்துறையில்-ஊரகத்-திறனாய்வுத்-தேர்வு-3006652.html
3006651 கோயம்புத்தூர் ஈரோடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் வெள்ளோடு கோயில் சிலைகள் ஒப்படைப்பு DIN DIN Monday, September 24, 2018 07:30 AM +0530 சென்னிமலை ஒன்றியம், வெள்ளோடு ராஜா சுவாமி கோயில் சிலைகள் நீதிமன்ற உத்தரவுபடி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸில் சனிக்கிழமை கோயில் நிர்வாகக் குழுவினரால் ஒப்படைக்கப்பட்டன.
   ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஒன்றியம், வெள்ளோட்டில் ஒரு சமூகத்தின் ஒரு பிரிவு மக்கள் வழிபடும் ராஜா சுவாமி கோயில் உள்ளது. நூறாண்டுகள் பழமையான இக்கோயில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்தக் கோயிலில் உள்ள பழமை வாய்ந்த சிலைகளைக் காணவில்லை என்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் புகார் தரப்பட்டது.
  இந்த வழக்கை விசாரித்து வரும் கும்பகோணம் தனி நீதிமன்றம், சிலைகளை மீட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டது.  உத்தரவு நகலுடன் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி. சந்திரசேகர், போலீஸார் கடந்த 6 ஆம் தேதி கோயிலுக்கு வந்தனர். பக்தர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததாலும், அவகாசம் கேட்டதாலும் திரும்பிச் சென்றனர்.
  இந்நிலையில்,  இந்தக் கோயிலில் உள்ள 10 சிலைகளுக்கும் சனிக்கிழமை இரவு பாலாலயம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் சிலைகள் அகற்றப்பட்டன. பின்னர், புகாருக்கு உள்ளான சிலைகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் கோயில் நிர்வாகக் குழுவினர் ஒப்படைத்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/24/சிலை-கடத்தல்-தடுப்புப்-பிரிவில்-வெள்ளோடு-கோயில்-சிலைகள்-ஒப்படைப்பு-3006651.html
3006650 கோயம்புத்தூர் ஈரோடு சென்னிமலையில் ஆர்ப்பாட்டம் DIN DIN Monday, September 24, 2018 07:29 AM +0530 சென்னிமலையில் குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மன்றம், மக்கள் மன்றம், பொதுநல அமைப்புகள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  சென்னிமலை பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மன்றத் தலைவர் பொன்.ஆறுமுகம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பி.பி.ராமசாமி, மக்கள் மன்ற அமைப்பாளர் கு.செல்லப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குடிமக்கள் நுகர்வோர் மன்றச் செயலாளர் செ.கந்தசாமி கோரிக்கைகள் குறித்து பேசினார். 
  சென்னிமலை பேரூராட்சியில் தண்ணீர் வரி, சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். சென்னிமலைப் பேருந்து நிலையத்தில் உள்ள கட்டணக் கழிப்பிடத்தை மாற்றி அமைக்க வேண்டும். கால்நடை மருத்துவரை பணியிட மாற்றம் செய்துவிட்டு வேறு மருத்துவரை நியமிக்க வேண்டும். கைத்தறி நெசவாளர் சங்கங்களில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க வேண்டும். குமரன் சிலை அருகில் நிழற்குடை அமைக்க வேண்டும். பள்ளி, கல்லூரி விடுதிகளில் உள்ள மாணவிகளுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
  பனியம்பள்ளி ஊராட்சி முன்னாள் தலைவர் சிவகுமார்,  கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். எம்.பெரியசாமி நன்றி கூறினார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/24/சென்னிமலையில்-ஆர்ப்பாட்டம்-3006650.html
3006649 கோயம்புத்தூர் ஈரோடு செப்டம்பர் 25 மின் தடை - சென்னம்பட்டி DIN DIN Monday, September 24, 2018 07:29 AM +0530 சென்னம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 25) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என கோபி மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பி.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: கண்ணாம்மூச்சி, கொமராயனூர், தொட்டிக்கிணறு, கிட்டம்பட்டி, முரளிபுதூர், வெள்ளக்கரட்டூர், சனிச்சந்தை, விராலிக்காட்டூர், குருவரெட்டியூர், தொப்பபாளையம், பழையூர், கண்ணப்பள்ளி, புரவிபாளையம், குரும்பபாளையம், ஆலமரத்தோட்டம், தண்ணீர்பந்தல்பாளையம், ஜிஜி நகர், சாணாத்திக்கல்மேடு.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/24/செப்டம்பர்-25-மின்-தடை---சென்னம்பட்டி-3006649.html
3006648 கோயம்புத்தூர் ஈரோடு கார் மோதி விபத்து: ஒரே இருசக்கர வாகனத்தில் பயணித்த 3 பெண்களில் ஒருவர் சாவு; இருவர் காயம் DIN DIN Monday, September 24, 2018 07:29 AM +0530 கொடுமுடி அருகே கார் மோதியதில் ஒரே இருசக்கர வாகனத்தில் பயணித்த 3 பெண்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை  உயிரிழந்தார்.
  சிவகிரி மரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த பூபதி மனைவி பேபி (40), இச்சிப்பாளையத்தைச் சேர்ந்த முத்துசாமி மனைவி பேபி (35), சாமிநாதன் மனைவி புஷ்பா (50) ஆகிய மூன்று பெண்களும் ஒரே இருசக்கர வாகனத்தில் சிவகிரி நோக்கி ஈரோடு-கரூர் சாலையில் ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்தனர். கொடுமுடி, தண்ணீர்ப்பந்தல் அருகே சென்றுகொண்டிருந்தபோது இந்த இருசக்கர வாகனமும்,  எதிரே ஈரோட்டிலிருந்து கொடுமுடி நோக்கி வந்து கொண்டிருந்த காரும் மோதிக்கொண்டது. 
   விபத்தில் ஒரே இருசக்கர வாகனத்தில் பயணித்த மூன்று பெண்களும் தூக்கிவீசப்பட்டனர். இதில், பூபதி மனைவி பேபி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு பேபி,  புஷ்பா ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்குச் சென்ற கொடுமுடி போலீஸார் உயிரிழந்த பேபி சடலத்தை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த இரு பெண்களும் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
  இது குறித்து கொடுமுடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/24/கார்-மோதி-விபத்து-ஒரே-இருசக்கர-வாகனத்தில்-பயணித்த-3-பெண்களில்-ஒருவர்-சாவு-இருவர்-காயம்-3006648.html
3006647 கோயம்புத்தூர் ஈரோடு பவானியில் மழை நீர் ஓடைகளில் ரூ.1.50 கோடியில் 18 தடுப்பணைகள்: பணிகளை அமைச்சர் தொடக்கிவைத்தார் DIN DIN Monday, September 24, 2018 07:28 AM +0530 பவானி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 4 சிற்றூராட்சிகளில் மழை நீர் ஓடைகளின் குறுக்கே 18 இடங்களில் ரூ.1.50 கோடி மதிப்பில் தண்ணீரைத் தேக்கி வைக்கும் தடுப்பணைகள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பவானியை அடுத்த பெரியபுலியூர் சிற்றூராட்சியில் 10  இடங்களிலும், சின்னப்புலியூர் சிற்றூராட்சியில் இரு இடங்களிலும், வைரமங்கலம் சிற்றூராட்சியில் இரு இடங்களிலும், ஆலத்தூர் சிற்றூராட்சியில் 4 இடங்களிலும் என மொத்தம் 18 இடங்களில் தண்ணீரைத் தேக்கும் தடுப்பணைகள் கட்ட முடிவு செய்யப்பட்டது. 
மழைக் காலங்களில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரை சேமித்து,  நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் ரூ.1.50 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் இத்திட்டப் பணிகளை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பூமிபூஜை செய்து ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தார்.
 தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியக் குழு உறுப்பினர் பி.தட்சிணாமூர்த்தி, அதிமுக ஒன்றியச் செயலர் எஸ்.எம்.தங்கவேலு, மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலர் கே.ஆர்.ஜான், அதிமுக விவசாய அணிச் செயலர் குப்புசாமி, ஒன்றியப் பொறியாளர் பி.ரமேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/24/பவானியில்-மழை-நீர்-ஓடைகளில்-ரூ150-கோடியில்-18-தடுப்பணைகள்-பணிகளை-அமைச்சர்-தொடக்கிவைத்தார்-3006647.html
3006646 கோயம்புத்தூர் ஈரோடு வெள்ள நிவாரண உதவி: வாகனப் பிரசாரம் மூலமாக  நன்றி தெரிவிக்கும் கேரள இளைஞர்கள் DIN DIN Monday, September 24, 2018 07:28 AM +0530 மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தங்கள் மாநிலத்துக்கு வெள்ள நிவாரண உதவி அளித்து உதவி செய்தற்காக  தமிழகம், ஆந்திரம், கர்நாடக மக்களுக்கு கேரளம்,  வயநாடு சுற்றுலா மையம் சார்பில் இருசக்கர வாகனங்களில் பேரணியாக வந்து கேரள இளைஞர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
  கேரள மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும்,  மீட்புப் பணியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தன்னார்வ தொண்டர்கள் ஈடுபட்டனர்.
  பேரிடர் காலங்களில் கேரள மக்களுக்கு உதவியதற்காக நன்றி தெரிவிக்கும் வகையில் கேரள, வயநாடு சுற்றுலா மையம் சார்பில் 30க்கும் மேற்பட்ட கேரள இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் பேரணியாகப் புறப்பட்டு கர்நாடகம் சென்றனர். அங்குள்ள மக்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு சத்தியமங்கலம்,  திம்பம் மலைப் பாதை வழியாக தமிழகம் வந்தனர். இங்குள்ள மக்களுக்கு கேரள இளைஞர்கள் நன்றி தெரிவித்துவிட்டு கோவைக்கு புறப்பட்டுச் சென்றனர்.  வழி நெடுகிலும் உள்ள மக்களுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தவாறு சென்றனர்.     வயநாடு தற்போது இயல்புநிலைக்கு திரும்பியுள்ளதாவும், சுற்றுலாப் பயணிகளை வரவேற்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/24/வெள்ள-நிவாரண-உதவி-வாகனப்-பிரசாரம்-மூலமாக-நன்றி-தெரிவிக்கும்-கேரள-இளைஞர்கள்-3006646.html
3006645 கோயம்புத்தூர் ஈரோடு குடிநீர் வடிகால் வாரியத்தில் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்: சங்கத் தலைவர்  DIN DIN Monday, September 24, 2018 07:28 AM +0530 குடிநீர் வடிகால் வாரியத்தில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று அந்த வாரியத்தின் பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள் சங்கத் தலைவர் சசிதரன் தெரிவித்துள்ளார்.
 ஈரோட்டில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியப் பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் சங்கப் பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  
  இதற்கு தலைமை வகித்து சங்கத் தலைவர் சசிதரன் பேசியதாவது:
  தமிழ்நாடு குடிநீர் வடிக்கால் வாரியத்தில் 3,600 பேர் பணியாற்றி வருகின்றனர். வாரியத்தில் தற்போது நிதி நிலைமை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. வாரியத்தில் ஓய்வூதியதாரர்கள் மட்டும் 7800 பேர் உள்ளனர். இவர்களுக்கான பணப் பலன்களை வாரியம் வழங்கி வருகிறது.   குடிநீர் வடிக்கால் வாரியத்தின் மூலமாக 554 குடிநீர்த் திட்டங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 1000 லிட்டர் குடிநீருக்கு ஊரகப் பகுதிக்கு ரூ. 7 ,  மாநகரப் பகுதிக்கு ரூ. 9 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 1,000 லிட்டர் குடிநீரை சுத்திகரிப்பு செய்வதற்கு ரூ. 17 முதல் ரூ. 20 வரை செலவாகிறது. தமிழகம் முழுவதும் 2,050 எம்எல்டி குடிநீர் சுத்திகரிப்பு செய்து விநியோகம் செய்யப்படுகிறது.
   கோவை மாநகரில் குடிநீர் விநியோகத்தை தனியார் பராமரிப்பில் விட்டதை நாங்கள் ஆதரிக்கவில்லை. குடிநீர் வடிகால் வாரியத்துக்கு நிதி நெருக்கடி அதிகம் ஏற்பட்டு வருவதால் வாரியத்தின் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதிய நிதியை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
  மாநில நிர்வாகி முருகன், மாநிலச் செயலாளர்கள் சீனிவாசன், மதுபாலன், பொருளாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, ஈரோடு செயலாளர் உலகநாதன் வரவேற்றார். கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு, பதவி ஏற்றுக்கொண்டனர்.    இதில், நிர்வாகி தங்கவேல்,  ஈரோடு, மதுரை, சென்னை உள்ளிட்ட மண்டலங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/24/குடிநீர்-வடிகால்-வாரியத்தில்-காலிப்-பணியிடங்களை-உடனே-நிரப்ப-வேண்டும்-சங்கத்-தலைவர்-3006645.html
3006644 கோயம்புத்தூர் ஈரோடு தேசிய சக்கர நாற்காலி கூடைப்பந்து: மகாராஷ்டிர மகளிர் சாம்பியன் DIN DIN Monday, September 24, 2018 07:27 AM +0530 ஈரோடு வஉசி பூங்கா விளையாட்டரங்கில் நடைபெற்ற தேசிய அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி கூடைப்பந்துப் போட்டியில் மகாராஷ்டிர மகளிர் அணி கோப்பையை வென்றது.
 அகில இந்திய வீல்சேர் கூடைப்பந்துக் கழகம் சார்பில் தேசிய அளவிலான சக்கர நாற்காலி கூடைப்பந்து (வீல்சேர்) போட்டிகள் ஈரோட்டில் கடந்த 20ஆம் தேதி தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றன.
 இதில், 22 மாநிலங்களைச் சேர்ந்த 19 ஆடவர் அணிகளும்,  மகளிர் பிரிவில்  8 அணிகளும் பங்கேற்றன. 2 கூடைப்பந்து மைதானங்களில் இப்போட்டிகள் நடைபெற்றன.  இதில், மகளிர் பிரிவு இறுதி ஆட்டத்தில் தமிழகம், மகாராஷ்டிர அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதின.  தமிழக அணியை 22-18 என்ற புள்ளிகள் கணக்கில் மகாராஷ்டிர அணி தோற்கடித்து கோப்பையை வென்றது.
  பரிசளிப்பு விழாவில், புதுச்சேரி முதல்வர் வே. நாராயணசாமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை, ரொக்கப் பரிசுகளை வழங்கினார்.
  போட்டி ஒருங்கிணைப்பாளர் மக்கள் ஜி. ராஜன் வரவேற்றார். சக்தி பி.சி. துரைசாமி தலைமை வகித்தார். எம்சிஆர்- ராபின், கே.எம். கண்ணன், வேளாளர் கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ்.டி.சந்திரசேகர், அ. அமீர் கான், உடற்கல்வி இயக்குநர் ரமேஷ், மாவட்ட விளையாட்டு அலுவலர் நோயலின் ஜான், ஈ.பி. ரவி  உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
 ஒட்டுமொத்தப் போட்டியின் சிறந்த வீராங்கனையாகத் தேர்வு செய்யப்பட்ட மகாராஷ்டிர அணியைச் சேர்ந்த கார்த்திப் படேல், சிறந்த ஆட்டக்காரராகத் தேர்வு செய்யப்பட்ட தமிழக அணியைச் சேர்ந்த அ. கனகலட்சுமி ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/24/தேசிய-சக்கர-நாற்காலி-கூடைப்பந்து-மகாராஷ்டிர-மகளிர்-சாம்பியன்-3006644.html
3006643 கோயம்புத்தூர் ஈரோடு ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும் DIN DIN Monday, September 24, 2018 07:27 AM +0530 ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
 ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
  இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள மிகப் பழமையான நூலகத்துக்கு 50 ஆயிரம் நூல்கள், தமிழர்கள் வாழ்கின்ற பகுதிகளில் உள்ள 5 நூலகங்களுக்கு 50 ஆயிரம் நூல்கள்,  10  ஹிந்து பள்ளிகளுக்கு தலா 500 நூல்கள் என மொத்தம் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் நூல்கள்  வழங்கப்பட்டுள்ளன. 
 தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும். வெயிட்டேஜ் முறை நீக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு வைக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெறும் ஆசிரியர்களைக் கொண்டு காலிப் பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும்.
  ஆசிரியர் காலிப் பணியிடங்கள் உள்ள பள்ளிகளில் பெற்றோர், ஆசிரியர் கழகத்தின் மூலம் ரூ. 7,500 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  இந்தப் பணிகள் ஓரிரு நாள்களில் நிறைவடையும். ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும். 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளை கணினிமயமாக்கவும்,  3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் நிறைவடைந்தவுடன் கணினி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும் என்றார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/24/ஆசிரியர்-பணியிடங்கள்-அனைத்தும்-நிரப்பப்படும்-3006643.html
3006642 கோயம்புத்தூர் ஈரோடு ஈரோடு அருகே விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் சாவு DIN DIN Monday, September 24, 2018 07:26 AM +0530 ஈரோட்டில் விஷ வாயு தாக்கியதால் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 2 தொழிலாளர்கள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.
 ஈரோடு, பெரிய சேமூர் பகுதியில் இயங்கி வரும்  தனியாருக்குச் சொந்தமான பிரிண்டிங் ஆலையில்,  ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மணீர் அன்சாரி (46), மார்வாடி பண்டிட் (38) ஆகியோர் பணிபுரிந்து வந்தனர். உறவினர்களான இருவரும்  சின்ன சேமூர் பகுதியில் குடும்பத்துடன் தங்கி இருந்தனர். 
 இந்நிலையில், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை  ஆலையில் உள்ள கழிவு நீர்த் தொட்டியை சுத்தப்படுத்தும் பணிக்காக ஆலைக்குச் செல்வதாக வீட்டில் கூறிவிட்டுச்  சென்றுள்ளனர்.  சுமார் 2 மணி நேரம் கழித்து, ஆலையில் இருந்த சில தொழிலாளர்கள் கழிவு நீர்த் தொட்டி இருந்த பகுதிக்குச்  சென்றபோது, அன்சாரி, பண்டிட் அணிந்திருந்த ஆடைகள் தொட்டியின் அருகே இருப்பதைப் பார்த்துள்ளனர்.  இதையடுத்து, தொட்டிக்குள் எட்டிப் பார்த்தபோது அன்சாரி, பண்டிட் ஆகியோரது உடல்  மிதந்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள், வீரப்பன்சத்திரம் போலீஸாருக்கும்,  தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.  இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறை வீரர்கள், பாதுகாப்பு உபகரணங்களுடன் தொட்டிக்குள் 
இறங்கி இருவரது சடலங்களையும் மீட்டனர்.
இது குறித்து, தீயணைப்புத் துறையினர் கூறியதாவது: 15 அடி ஆழமுள்ள தொட்டியில் சுமார் 3 அடி ஆழத்துக்குத்  தண்ணீர் தேங்கியுள்ளது. தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்தபோது, விஷ வாயு தாக்கி உயிரிழந்திருக்கலாம் என்றனர்.
 இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
 இதனிடையே, ஆலை நிர்வாகம் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அன்சாரி, பண்டிட் ஆகியோரது குடும்பத்தினரும், உறவினர்களும் பெரிய சேமூர் பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் பேச்சு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து  மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/24/ஈரோடு-அருகே-விஷ-வாயு-தாக்கி-2-தொழிலாளர்கள்-சாவு-3006642.html
3006641 கோயம்புத்தூர் ஈரோடு அந்தியூர் அருகே நோய் கொடுமையால் விபரீதம்: இரு மகள்களுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற தொழிலாளி தற்கொலை முயற்சி DIN DIN Monday, September 24, 2018 07:26 AM +0530 அந்தியூர் அருகே நோய்  கொடுமையால் தனது இரு மகள்களுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு கூலித் தொழிலாளி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
  ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த பர்கூர் செங்குளத்தைச் சேர்ந்தவர் சிக்கிரன் (50), கூலித் தொழிலாளி. இவரது மனைவி 5 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்து சென்றுவிட்டார். இவரது மகள்கள் சுதா (15), மேகலா (13). இவர்களில் சுதா பத்தாம் வகுப்பும், மேகலா எட்டாம் வகுப்பும் படித்து வந்தனர்.
  தீராத நோயினால் பாதிக்கப்பட்ட சிக்கிரன் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லையாம். இதனால், விரக்தியடைந்து காணப்பட்டார். தனது மரணத்துக்குப் பின்பு தனது மகள்கள் இருவரும் அநாதையாகி விடுவார்கள் என வேதனைப்பட்டு வந்தாராம்.
   இந்நிலையில், பள்ளி விடுதியிலிருந்து தனது மகள்களை அழைத்துச் சென்ற சிக்கிரன் அந்தியூர் அருகேயுள்ள கொன்னமரத்தையன் கோயிலுக்குச் சனிக்கிழமை சென்றுள்ளார். அங்கு,  தனது இரு மகள்களுக்கும் விஷம் கொடுத்துவிட்டு, தானும் விஷம் அருந்தியுள்ளார். மூவரும் மயங்கிய நிலையில் கிடப்பதைப் பார்த்த அப்பகுதியினர் அவர்களை ஆம்புலன்ஸ் மூலமாக   அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, மேகலா உயிரிழந்தார். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அங்கு சுதா உயிரிழந்தார். சிக்கிரன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 
  இச்சம்பவம் குறித்து அந்தியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/24/அந்தியூர்-அருகே-நோய்-கொடுமையால்-விபரீதம்-இரு-மகள்களுக்கு-விஷம்-கொடுத்துக்-கொன்ற-தொழிலாளி-தற்கொலை-மு-3006641.html
3006203 கோயம்புத்தூர் ஈரோடு காட்டாற்று வெள்ளத்தைப் பயணிகளுடன் கடக்கும் வாகனங்கள்: பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா? DIN DIN Sunday, September 23, 2018 05:06 AM +0530  

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையத்துக்குச் செல்ல 3 காட்டாறுகளைக் கடந்து செல்ல வேண்டும். இப்பகுதிகளில் பாலம் இல்லாததால் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர் மலைப் பகுதியில் மாக்கம்பாளையம் மலைக் கிராமம் அமைந்துள்ளது. இங்கு சுமார் 2,500 க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையத்துக்கு 25 கி.மீ. தூரம் பயணிக்க வேண்டும். மாக்கம்பாளையத்தில் 10 ஆம் வகுப்பு வரை மட்டுமே கற்பிக்கப்படுகிறது. பிளஸ் 2 மாணவர்கள் தினந்தோறும் மாக்கம்பாளையத்தில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் அரசுப் பேருந்து மூலம் கடம்பூர் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று வருகின்றனர்.
மாக்கம்பாளையம் வழித்தடத்தில் உள்ள கோம்பைத்தொட்டி, அருகியம், குரும்பூர், மொசல்மடுவு பகுதி மாணவர்களும் அதே பேருந்தில் கடம்பூர் பள்ளிக்கு வருகின்றனர். அதேபோல, பள்ளி முடிந்து கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையத்துக்கு மாலை 6.30 மணிக்குப் புறப்படும் அரசுப் பேருந்தில் பயணித்து 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் வீடு திரும்புகின்றனர்.
மாக்கம்பாளையம் செல்லும் சாலையின் குறுக்கே உள்ள சர்க்கரைப்பள்ளம், மாமரத்துப்பள்ளம் ஆகிய பள்ளங்களில் அடிக்கடி காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது போக்குவரத்து பாதிக்கப்படுவது வழக்கமாகிவிட்டது. இக்கிராமத்துக்கு ஒரே ஒரு அரசுப் பேருந்து மட்டும் காலை, பிற்பகல், மதியம், மாலை என நான்கு முறை இயக்கப்படுகிறது. மழைக் காலத்தில் பாதுகாப்பு கருதி அதுவும் இயக்கப்படுவதில்லை.
கடந்த வாரங்களில் பெய்த மழையால் மாக்கம்பாளையம், சர்க்கரைப்பள்ளம் ஆகியவற்றில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், கடம்பூர், மாக்கம்பாளையம் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும், சாலை மிகவும் மோசமாக உள்ளதால் வாடகை சரக்கு வாகனங்கள் கூட வருவதில்லை.
காட்டாற்று வெள்ள அபாய எச்சரிக்கையால் காலை, மாலை நேரங்களில் கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையத்துக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் பாதுகாப்புக் கருதி இயக்கப்படுவதில்லை. பள்ளி முடிந்து மாக்கம்பாளையம் செல்லும் பள்ளி மாணவ, மாணவியர் கடம்பூரில் இருந்து மாலை 6.30 மணிக்குப் புறப்படும் அரசுப் பேருந்தில் ஏறுவார்கள். மாக்கம்பாளையம் வழித்தடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் சர்க்கரைப்பள்ளத்துடன் பேருந்து நின்றுவிடும். சில நேரங்களில் மாணவர்கள் காட்டு வழியாக 4 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், மாணவ, மாணவிகளின் கல்வி கேள்விக்குறியாகிறது.
தினந்தோறும் பள்ளி செல்லவும், விவசாயப் பொருள்களை எடுத்துச் செல்லவும் அவதிப்படும் அப்பகுதி மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க பாலம் அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதுகுறித்து, சத்தியமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) மூர்த்தி கூறியதாவது:
கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையம் செல்லும் சாலையின் குறுக்கே ஓடும் பள்ளத்தில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் சாலை வசதி துண்டிக்கப்படுகிறது. அஞ்சலைப் பிரிவில் இருந்து மாக்கம்பாளையம் கிராமங்களிடையே 2 பாலங்கள் கட்டிக் கொள்ள வனத் துறை அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுமானத் துறையினர் சார்பில், இரு பாலம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு கேட்டு அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் பாலம் கட்டுவதற்கான பணிகள் துவங்கும் என்றார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/23/காட்டாற்று-வெள்ளத்தைப்-பயணிகளுடன்-கடக்கும்-வாகனங்கள்-பாலம்-கட்ட-நடவடிக்கை-எடுக்கப்படுமா-3006203.html
3005862 கோயம்புத்தூர் ஈரோடு பவானி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அமைச்சர் ஆறுதல் DIN DIN Sunday, September 23, 2018 01:07 AM +0530
பவானி ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அமைச்சர் கே.சி.கருப்பணன் தலா ரூ. 10 ஆயிரம் நிதியுதவி அளித்தார்.
சத்தியமங்கலத்தை அடுத்த ஆலத்துக்கோம்பை காலனியைச் சேர்ந்த பெரிய அம்மணி, சரசாள், வசந்தா உள்ளிட்ட 13 பெண்கள் பவானி ஆற்றைக் கடந்து விவசாயப் பணிக்கு செப்டம்பர் 19 ஆம் தேதி சென்றனர். அங்கு பணி முடிந்துவிட்டு 13 பேரும் மீண்டும் ஆலத்துக்கோம்பைக்கு திரும்புவதற்கு பவானி ஆற்றைக் கடந்தனர்.
அப்போது, நீரின் வேகம் காரணமாக 13 பேரும் அடித்துச் செல்லப்பட்டனர். அதில், உயிருக்குப் போராடிய 10 பேரை கிராம மக்கள் மீட்டனர். பெரிய அம்மணி, சரசாள், வசந்தா ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், பவானிசாகர் எம்.எல்.ஏ. எஸ்.ஈஸ்வரன் ஆகியோர் ஆலத்துக்கோம்பை கிராமத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு சென்றனர். அங்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். உயிரிழந்த குடும்பத்துக்கு நிவாரண நிதியாக அமைச்சர் தனது சொந்த பணத்தில் இருந்து தலா ரூ. 10 ஆயிரத்தை வழங்கினார். மேலும், அவர்களின் குழந்தைகளுக்குத் தேவையான கல்வி உதவிகளை செய்து தருவதாகவும் உறுதியளித்தார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/23/பவானி-ஆற்றில்-மூழ்கி-உயிரிழந்தவர்களின்-குடும்பங்களுக்கு-அமைச்சர்-ஆறுதல்-3005862.html
3005861 கோயம்புத்தூர் ஈரோடு புரட்டாசி முதல் சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு DIN DIN Sunday, September 23, 2018 01:07 AM +0530
ஈரோட்டில் கோட்டை கஸ்தூரி அரங்கநாதர், அக்ரஹார வீதி அய்யர் பெருமாள் கோயில், காவிரிக் கரை ஆதவன் மாதவன் கோயில், பெருமாள் மலைக் கோயில் ஆகிய கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் திருமஞ்சனம், கோ பூஜை, சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதையொட்டி கோயில் திரண்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரையும், கமலவல்லி தாயாரையும் தரிசனம் செய்தனர்.
விழா மண்டபத்தில், பூதேவி, ஸ்ரீதேவி சமேதராக எழுந்தருளிய கஸ்தூரி அரங்கநாதர் உற்சவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் வசதிக்காக நிழல் தரும் மேற்கூரையும், வரிசை சாரமும் நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், திருப்பதி கோயிலில் உள்ளதுபோல் பக்தர்கள் கோரிக்கை, வேண்டுதல் வைத்து காணிக்கை செலுத்தும் ஸ்ரீவாரி உண்டியல்கள் மூன்று இடங்களில் வைக்கப்பட்டிருந்தன.
 புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சென்னிமலை, மேலப்பாளையம், ஆதிநாராயணப் பெருமாள் அலமேலுமங்கை - நாச்சியார் அம்மை உடனமார் கோயிலில் அதிகாலை 5 மணி முதல் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெற்றன. ஆதிநாராயணப் பெருமாள், அலமேலுமங்கை - நாச்சியார் அம்மையுடன் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பின்னர், பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல, பெருந்துறை, கோட்டைமேடு, ஸ்ரீதேவி பூதேவி உடனமார் வெங்கட்டரமண சுவாமிகள் கோயிலில் அதிகாலை 5 மணி முதல் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெற்றன. வெங்கட்டரமண சுவாமி, ஸ்ரீதேவி பூதேவியுடன் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பின்னர், பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.
சத்தியமங்கலத்தில்...: சத்தியமங்கலம் வேணுகோபால சுவாமி கோயிலில் சனிக்கிழமை அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. ரங்கநாதருக்கு திருமஞ்சனமும், அலங்கார பூஜையும் நடைபெற்றன. நின்ற, அமர்ந்த, படுத்த என மூன்று நிலைகளில் உள்ள மூலவருக்கு புஷ்ப அலங்காரம் நடைபெற்றது. பாமா ருக்குமணியுடன் மூலவர் புல்லாங்குழல் அலங்காரத்தில் காட்சியளித்தார். லட்சுமி நாராயண சுவாமிக்கு மலர், துளசியால் புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவியுடன் ரங்கநாதர் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சத்தி கருடஸ்தம்ப ஆஞ்சநேயர் கோயிலிலும் சிறப்பு வழிபாட்டு பூஜைகள் நடைபெற்றன.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/23/புரட்டாசி-முதல்-சனிக்கிழமை-பெருமாள்-கோயில்களில்-சிறப்பு-வழிபாடு-3005861.html
3005860 கோயம்புத்தூர் ஈரோடு பெரிய அக்ரஹாரத்தில் ரூ. 29 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி தீவிரம் DIN DIN Sunday, September 23, 2018 01:07 AM +0530
ஈரோடு பெரிய அக்ரஹாரத்தில் ரூ. 29.38 கோடி மதிப்பில் 448 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி தீவிரமாக நடபெற்று வருகிறது.
ஈரோடு அருகே பெரிய அக்ரஹாரம் அன்னை சத்யா நகரில் 1987 ஆம் ஆண்டு குடிசைமாற்று வாரியத்தின் மூலமாக 648 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. இந்தக் குடியிருப்பு கட்டப்பட்டு 31 ஆண்டுகள் கடந்து பாழடைந்த நிலைக்குச் சென்றது. இந்நிலையில், பால்கனியில் நின்று கொண்டிருந்த இளம்பெண் ஒருவர் கட்டடம் இடிந்து விழுந்து உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து, அந்தக் குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிய குடியிருப்பு கட்ட முடிவு செய்யப்பட்டு, குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, 4 அடுக்குமாடி கொண்ட 448 வீடுகள் கட்டுவதற்காக 29 கோடியே 38 லட்சத்து 79 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. குடியிருப்புவாசிகளை அப்புறப்படுத்திவிட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கின.
தற்போது கட்டுமானப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் பூச்சு பணிகளும், மின் வயரிங் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த குடியிருப்பில் வீடு ஒதுக்கீட்டுக்கு ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ. 79 ஆயிரம் செலுத்த வேண்டும்.
இதையடுத்து, விண்ணப்பதாரர்களுக்கு குலுக்கல் முறையில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும் என குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை 330 பேர் மட்டுமே பணத்தை செலுத்தியுள்ளனர். மீதமுள்ளவர்களையும் பணத்தை விரைந்து செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இந்த அடுக்குமாடி குடியிருப்பில் எந்த வீட்டில் குடியிருந்தார்களோ அந்த வீட்டையே மீண்டும் ஒதுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது கட்டுமானப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதால் இன்னும் 3 மாதகாலத்தில் அடுக்குமாடி குடியிருப்புப் பணிகள் முழுமை பெற்று திறப்பு விழா நடத்தப்படவுள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
ஓடைப் பகுதிகளில் குடிசை போட்டு வசித்து வந்தவர்களுக்காக குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் எங்களுக்கு இங்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிக் கொடுத்தனர். ஆனால், அந்தக் கட்டடம் பழுதடைந்த நிலையில் பழைய குடியிருப்பை இடித்துவிட்டு தற்போது புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வீட்டுக்கும் பயனாளிகளின் பங்களிப்பாக ரூ. 79 ஆயிரம் செலுத்தக் கூறியுள்ளனர். இதில் பலரும் பணத்தைக் கட்டியுள்ளார்கள். இங்கு குடியிருந்த பலரும் வெளியே வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். நாங்கள் கூலி வேலைக்குச் சென்று வருவதால் வாடகை கட்ட முடியாமல் தவித்து வருகிறோம். இந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
மேலும், குலுக்கல் முறையில் வீடு வழங்குவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், நாங்கள் ஏற்கெனவே குடியிருந்த வீட்டுக்கு ரேஷன்அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களைப் பெற்றுள்ளோம். அதனால், ஏற்கெனவே எந்தெந்த வீட்டில் குடியிருந்தார்களோ அந்த வீட்டையே ஒதுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/23/பெரிய-அக்ரஹாரத்தில்-ரூ-29-கோடியில்-அடுக்குமாடி-குடியிருப்புகள்-கட்டும்-பணி-தீவிரம்-3005860.html
3005858 கோயம்புத்தூர் ஈரோடு புதுப்பாளையத்தில் மக்கள் தொடர்பு முகாம் DIN DIN Sunday, September 23, 2018 01:06 AM +0530
ஈரோடு அருகே உள்ள புதுப்பாளையத்தில் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு மக்களவை உறுப்பினர் செல்வகுமார சின்னையன், எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ். தென்னரசு, கே.வி.இராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இம்முகாமிற்கு, மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமை வகித்து, 158 பயனாளிக்கு ரூ. 1.06 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:
மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்களைத் தகுதியான பொதுமக்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் இதுபோன்ற மக்கள் தொடர்பு முகாம்கள் கிராமங்களில் நடத்தப்படுகிறது. நடப்பு ஆண்டில் செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு எடை அளவு பார்த்தல், எடை குறைபாடு இருந்தால் ஊட்டச்சத்து மூலம் மேம்படுத்த முயற்சி செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
பல்வேறு பகுதிகளில் வீடு இல்லாதவர்கள், புறம்போக்கில் வசிப்போருக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் கார்டு, வீட்டுமனைப் பட்டா உள்ளோருக்கு வீடு வழங்கும் திட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்படுகிறது. மனுக்கள் வழங்கிய தகுதியான மக்களுக்கு விரைவில் வீடு வழங்கப்படும் என்றார்.
தொடர்ந்து, இலவச வீட்டுமனைப் பட்டா, குடிநீர் வசதி செய்து தருதல் என 250 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.
இதில், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயராமன், வட்டாட்சியர் அமுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/23/புதுப்பாளையத்தில்-மக்கள்-தொடர்பு-முகாம்-3005858.html
3005857 கோயம்புத்தூர் ஈரோடு திருமணமான சிறுமி மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு DIN DIN Sunday, September 23, 2018 01:06 AM +0530
சென்னிமலை அருகே திருமணமான சிறுமியை மீட்டு பெண்கள் காப்பகத்தில் போலீஸார் ஒப்படைத்தனர்.
சென்னிமலை அருகே உள்ள கொளத்துபாளையத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்.
இவருடைய மகனுக்கும், சீனாபுரம், ராம் நகரைச் சேர்ந்த சிறுமிக்கும், ஊத்துக்குளி அருகே ஒரு கோயிலில் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், திருமணமான பெண் உரிய வயதை எட்டவில்லை என்று ஈரோடு குழந்தைகள் உதவி மையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சென்னிமலை போலீஸார், குழந்தைகள் உதவி மைய அமைப்பினர், குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் கௌசின் ஆகியோர் வெள்ளிக்கிழமை நேரில் சென்று விசாரித்தனர்.
இதில், திருமணமான அந்த சிறுமிக்கு 16 வயது என்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த சிறுமியை மீட்டு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/23/திருமணமான-சிறுமி-மீட்கப்பட்டு-காப்பகத்தில்-ஒப்படைப்பு-3005857.html
3005855 கோயம்புத்தூர் ஈரோடு சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு கூடாது: வியாபாரிகள் நலச் சங்கம் வலியுறுத்தல் DIN DIN Sunday, September 23, 2018 01:06 AM +0530
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடுகளை அனுமதிக்கக் கூடாதென அனைத்து வியாபாரிகள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஈரோடு, பெரியசேமூரில் சங்கத் தலைவர் ஜோதி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்து வியாபாரிகள் நலச் சங்கத்தின் பொதுக் குழுக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிற தீர்மானங்கள்:
சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது. ரூ. 50 லட்சத்துக்கும் குறைவாக வணிகம் செய்வோருக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். உணவு பாதுகாப்புச் சட்டத்தில் உள்ள தண்டனைகளை மாற்றி அமைக்க வேண்டும். ஜனவரி 2019 வரை காலக்கெடு உள்ள நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் கடைகளில் புகுந்து பாலிதீன் பைகள் என்ற பெயரில் பொருள்களைக் கைப்பற்றும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும். எல்லப்பாளையம் சாலையின் மீது நடத்தப்படும் வாரச் சந்தையை, மாற்று இடத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், சங்கத்தின் புதிய துணை செயலாளராக மைக்கேல் தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவர் சுரேஷ்குமார் வரவேற்றார். செயலாளர் ரவீந்திரன் வளர்ச்சிப் பணிகள் குறித்துப் பேசினார். பொருளாளர் அருள்ராஜ், கெளரவத் தலைவர் தேவதாஸ், ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/23/சில்லறை-வர்த்தகத்தில்-அந்நிய-முதலீடு-கூடாது-வியாபாரிகள்-நலச்-சங்கம்-வலியுறுத்தல்-3005855.html
3005854 கோயம்புத்தூர் ஈரோடு மூன்றாம் நபர் காப்பீட்டுக் கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்தல் DIN DIN Sunday, September 23, 2018 01:06 AM +0530
வாகனங்களுக்கு மூன்றாம் நபர் காப்பீட்டுக் கட்டணத்தை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என ஈரோடு லாரி புக்கிங் முகவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஈரோடு அருகே கணபதிபாளையத்தில் சங்கத் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அச்சங்கத்தின் 16 ஆம் ஆண்டு மகா சபைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பிற தீர்மானங்கள்:
ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் புதைவழி மின்சார கேபிள்கள் பதிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதற்கு நன்றி தெரிவிப்பது. லாரி தொழில் நலிவடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் டீசல் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர்த்தப்பட்ட சுங்கக் கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாகனங்களுக்குப் பல மடங்கு உயர்த்தப்பட்ட மூன்றாம் நபர் காப்பீட்டுக் கட்டணத்தை மத்திய, மாநில அரசுகள் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கன ரக வாகனங்கள் நகர எல்லைக்குள் வந்து செல்வதால் ஈரோடு மாநகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சுற்று வட்டச் சாலைப் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சிக்கோட்டையில் இருந்து ஈரோட்டுக்கு குழாய்கள் மூலமாக தூய்மையான குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். ஈரோடு மாநகரப் பகுதிகளில் புதை சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். 80 அடி சாலை திட்டத்தை போக்குவரத்துக்காக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு மாநகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க புறநகர் பேருந்து நிலையத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், செயலாளர் செல்வம், இணைச் செயலாளர்கள் ராஜு, குமார், நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/23/மூன்றாம்-நபர்-காப்பீட்டுக்-கட்டணத்தைக்-குறைக்க-வலியுறுத்தல்-3005854.html
3005853 கோயம்புத்தூர் ஈரோடு ஓய்வூதியர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்க வலியுறுத்தல் DIN DIN Sunday, September 23, 2018 01:05 AM +0530
ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு வருமான வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஈரோட்டில் மாநில துணைத் தலைவர் ஆறுமுகம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கத்தின் சார்பில், பொதுக் குழு, ஆண்டு விழாவில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி ஆணையர் சீனி அஜ்மல்கான் பங்கேற்றுப் பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கு 8 ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்தி 1.10.2017 முதல் திருத்திய ஓய்வூதியம் வழங்க ஆணை பிறப்பித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது. தமிழக அரசு ஓய்வூதியதாரர்களுக்கு 8 ஆவது ஊதியக்குழு பணப் பயன்களை 1.1.2016 முதல் கணக்கிட்டு 21 மாதங்களுக்கான திருத்தப்பட்ட ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல, தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கும் ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும்.
ஏ, பி பிரிவு ஓய்வூதியதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்குவதுடன், தொகையை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். மருத்துவப் படியாக ரூ. 1,000 வழங்க வேண்டும். ஓய்வூதிய குடும்ப பாதுகாப்புத் திட்டத்தில் வழங்கப்படும் ரூ. 50 ஆயிரத்தை ரூ. 1.50 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய தொகைக்கு வருமான வரியில் இருந்து விலக்களிக்க வேண்டும்.
கேரள மாநில ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் எந்தத் தேதியில் இயற்கை எய்தினாலும் அந்த மாதம் முழுமைக்கும் வாழ்நாள் ஓய்வூதியம் வழங்குவதுபோல தமிழக ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும், புதிய பங்களிப்புத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், பாரத ஸ்டேட் வங்கி உதவிப் பொது மேலாளர் பாலசங்கர், மாவட்ட கருவூல அலுவலர் ஆறுமுகம், நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/23/ஓய்வூதியர்களுக்கு-வருமான-வரி-விலக்கு-அளிக்க-வலியுறுத்தல்-3005853.html
3005852 கோயம்புத்தூர் ஈரோடு கொங்கு பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா DIN DIN Sunday, September 23, 2018 01:05 AM +0530
ஈரோடு பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியின் 30 ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இந்திய அரசின் மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அறிவியல் நிறுவனமான (சிடேக்-புணே) நவீன கம்ப்யூட்டிங் மேம்பாட்டு மையத்தின் இயக்குநர் (பொது) டாக்டர் ஹேமந்த் தர்பாரி கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இளங்கலை, முதுகலை பொறியியல், கணினி பயன்பாடு, மேலாண்மைத் துறைகளின் 24 பாடப் பிரிவுகளின் படிப்பில் மொத்தம் 1,898 பேர் பட்டம் பெற்றனர். இதில், 111 பேர் முதல் வகுப்பில் சிறப்பு தேர்ச்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில், கொங்கு வேளாளர் தொழில்நுட்ப அறக்கட்டளைத் தலைவர் பரமேஸ்வரி லிங்கமூர்த்தி, பொருளாளர் கிருஷ்ணன், துணைத் தலைவர் தங்கவேலு, அறக்கட்டளையின் மூத்த உறுப்பினர்களான முத்துசாமி, பழனிசாமி, கொங்கு பொறியியல் கல்லூரித் தாளாளர் வெங்கடாச்சலம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/23/கொங்கு-பொறியியல்-கல்லூரியில்-பட்டமளிப்பு-விழா-3005852.html
3005850 கோயம்புத்தூர் ஈரோடு தேசிய சக்கர நாற்காலி கூடைப்பந்து: கர்நாடக அணிகள் வெற்றி DIN DIN Sunday, September 23, 2018 01:05 AM +0530
ஈரோட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அளவிலான வீல்சேர் கூடைப்பந்துப் போட்டிகளின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் கர்நாடக மாநில ஆடவர், மகளிர் அணிகள் வென்றுள்ளன.
அகில இந்திய வீல்சேர் கூடைப்பந்துக் கழகம் சார்பில், எம்.சி.ஆர். கோப்பைக்கான தேசிய அளவிலான வீல்சேர் கூடைப்பந்துப் போட்டிகள் ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஆடவர் பிரிவில் 11 ஆட்டங்கள், மகளிர் பிரிவில் இரண்டு ஆட்டங்கள் என மொத்தம் 13 ஆட்டங்கள் நடைபெற்றன. இதில், ஆடவர், மகளிர் ஆட்டங்களில் கர்நாடக அணிகள் வெற்றி பெற்றன.
ஆண்கள் பிரிவில், முதல் ஆட்டத்தில் தமிழ்நாடு, அஸ்ஸாம் அணிகள் மோதியதில் 32 க்கு 2 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது. பஞ்சாப், கோவா மோதிய ஆட்டத்தில் 33 க்கு 11 என்ற புள்ளிகள் கணக்கில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
ராஜஸ்தான், தில்லி மோதிய ஆட்டத்தில் 6 க்கு 0 என்ற புள்ளிகள் கணக்கில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. தெலங்கானா, குஜராத் மோதிய ஆட்டத்தில் 18 க்கு 4 என்ற கோல் கணக்கில் தெலங்கானா அணி வெற்றி பெற்றது. மகாராஷ்டிரம், மணிப்பூர் மோதிய ஆட்டத்தில் 26 க்கு 6 என்ற கோல் கணக்கில் மகாராஷ்டிர அணி வெற்றி பெற்றது. ஒடிஸா, சத்தீஸ்கர் மோதிய ஆட்டத்தில், 18 க்கு 0 என்ற புள்ளிகள் கணக்கில் ஒடிஸா அணி வெற்றி பெற்றது.
உத்தரப்பிரதேசம், மணிப்பூர் மோதிய ஆட்டத்தில் 21 க்கு 4 என்ற புள்ளிகள் கணக்கில் உத்தரப்பிரதேச அணி வெற்றி பெற்றது. கர்நாடகம், அஸ்ஸாம் மோதிய ஆட்டத்தில், 14 க்கு 4 என்ற புள்ளிகள் கணக்கில் கர்நாடக அணி வெற்றி பெற்றது. ஜம்மு காஷ்மீர், கோவா மோதிய ஆட்டத்தில் 25 க்கு 23 என்ற புள்ளிகள் கணக்கில் ஜம்மு காஷ்மீர் அணி வெற்றி பெற்றது. பிகார், மத்தியப் பிரதேசம் மோதிய ஆட்டத்தில், 11 க்கு 3 என்ற புள்ளிகள் கணக்கில் பிகார் அணி வெற்றி பெற்றது. ஹரியாணா, ராஜஸ்தான் மோதிய ஆட்டத்தில், 8 க்கு 2 என்ற புள்ளிகள் கணக்கில் ஹரியாணா அணி வெற்றி பெற்றது.
பெண்கள் பிரிவில், கேரளம், தில்லி அணி மோதிய ஆட்டத்தில், 8 க்கு 7 என்ற புள்ளிகள் கணக்கில் கேரள அணி வெற்றி பெற்றது. கர்நாடகம், சத்தீஸ்கர் மோதிய ஆட்டத்தில் 12 க்கு 2 என்ற புள்ளிகள் கணக்கில் கர்நாடக அணி வெற்றி பெற்றது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/23/தேசிய-சக்கர-நாற்காலி-கூடைப்பந்து-கர்நாடக-அணிகள்-வெற்றி-3005850.html
3005849 கோயம்புத்தூர் ஈரோடு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அதிமுக மீது ஸ்டாலின் குற்றம்சாட்டுகிறார்: அமைச்சர் கே.சி.கருப்பணன் DIN DIN Sunday, September 23, 2018 01:05 AM +0530 அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அதிமுக ஆட்சியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் கூறி வருகிறார் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார்.
அந்தியூர், அம்மாபேட்டை, டி.என்.பாளையம் ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், அந்தியூரில் சட்டப் பேரவை உறுப்பினர் ஈ.எம்.ஆர்.ராஜா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் என்.ஆர்.கோவிந்தராஜர், அம்மாபேட்டை ஒன்றியச் செயலர் சரவணபவா, பேரூர் செயலர் டி.எஸ்.மீனாட்சிசுந்தரம், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணிச் செயலர் எஸ்.பி.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசியதாவது:
கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் அனைத்துத் தொகுதிகளையும் அதிமுகவே கைப்பற்றியது. அதிமுக தொண்டர்களின் தன்னலமற்ற உழைப்பால், வரும் மக்களவைத் தேர்தலில் அதிக வாக்கு பெற வேண்டும். புதிய வாக்காளர்களை சேர்ப்பதில் அக்கறை காட்டுவதோடு, மக்கள் நலத் திட்டங்களால் பயனடைந்த திமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சியினரைச் சந்தித்து அதிமுக ஆட்சி தொடர வாக்களிக்குமாறு ஆதரவு கேட்க வேண்டும்.
தொடர்ந்து அதிமுக ஆட்சியின் மீது களங்கம் கற்பிக்கும் செயலில் திமுக ஈடுபட்டுள்ளது. மக்கள் ஆதரவை இழந்த திமுக தலைவர் ஸ்டாலின், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அதிமுக மீது தொடர்ந்து புகார்களைத் தெரிவித்து வருகிறார். தமிழக மக்கள் இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளை நம்பமாட்டார்கள். மக்களவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் எது வந்தாலும் ஒருங்கிணைத்து பாடுபட்டு அதிமுக வெற்றி பெற உழைக்க வேண்டும் என்றார்.
இதில், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் இ.செல்வராஜ், எஸ்.பாலுசாமி, மாவட்ட அண்ணா தொழில்சங்கச் செயலர் கே.ஆர்.ஜான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/23/அரசியல்-காழ்ப்புணர்ச்சியால்-அதிமுக-மீது-ஸ்டாலின்-குற்றம்சாட்டுகிறார்-அமைச்சர்-கேசிகருப்பணன்-3005849.html
3005292 கோயம்புத்தூர் ஈரோடு சாலை விபத்து இழப்பீடு ஆவணங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் DIN DIN Saturday, September 22, 2018 05:54 AM +0530 சாலை விபத்துகளில் இழப்பீடு கோருவதற்கான ஆவணங்களை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
 இது குறித்து  மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்டுள்ள செய்தி:
சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்கள், சாலை விபத்துகளால் உயிர் இழந்தவர்களின் வாரிசுதாரர்கள் இழப்பீடு கோருகின்றனர். தங்களுக்கு தேவையான ஆவணங்களை பெற,  2017 மார்ச் மாதத்துக்குப் பின், பதிவு செய்யப்பட்ட மற்றும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட சாலை விபத்துகளில், புலனாய்வின்போது காவல் நிலையத்தில்  உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்கின்றனர்.
  எனவே, காவல் துறை இணையதளமான w‌w‌w.‌e‌s‌e‌r‌v‌i​c‌e‌s.‌t‌n‌p‌o‌l‌i​c‌e.‌g‌o‌v.‌i‌n இல் சாலை விபத்து ஆவணங்களை பதிவிறக்கம் என்ற இணைய வழி சேவை மூலம் ரூ. 20  கட்டணம் செலுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். கட்டணத் தொகையை  இணைய வங்கி மூலம் செலுத்த வேண்டும். இவ்வாறு பதிவிறக்கம் செய்து கொள்ள செல்லிடப்பேசி எண், புலனாய்வின்போது வழக்கில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/22/சாலை-விபத்து-இழப்பீடு-ஆவணங்களை-இணையதளத்தில்-பதிவிறக்கம்-செய்துகொள்ளலாம்-3005292.html
3005291 கோயம்புத்தூர் ஈரோடு பெருந்துறையில் வளர்ச்சிப் பணிகளுக்கு பூமி பூஜை: புதிய கட்டடங்கள் திறப்பு DIN DIN Saturday, September 22, 2018 05:53 AM +0530 பெருந்துறை ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகளுக்கு பூமி பூஜையும்,  புதிய கட்டடங்கள் திறப்பு விழாவும் வெள்ளிக்கிழமை  நடைபெற்றன.
  பெருந்துறை ஒன்றியம், கல்லாகுளம் ஊராட்சியில் ரூ. 14 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலை,  ரூ. 5 லட்சம் மதிப்பில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணிகளுக்கு பூமிபூஜை நடைபெற்றது. திங்களூர் ஊராட்சிப் பகுதியில் ரூ. 5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கழிப்பறை பயன்பாட்டுக்கொண்டுவரப்பட்டது.
  விழாவில்,  சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவரும், பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினருமான தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் பங்கேற்று வளர்ச்சிப் பணிகளைத் தொடக்கிவைத்து,  புதிய கட்டடங்களை திறந்து வைத்தார். 
   வட்டாட்சியர் வீரலட்சுமி, பெருந்துறை ஒன்றிய அதிமுக செயலாளர் விஜயன், பெருந்துறை ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் எஸ்.பெரியசாமி,  வேளாண் கூட்டுறவு விற்பனைச் சங்க துணைத் தலைவர் டி.டி.ஜெகதீஷ், அதிமுக அவைத் தலைவர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/22/பெருந்துறையில்-வளர்ச்சிப்-பணிகளுக்கு-பூமி-பூஜை-புதிய-கட்டடங்கள்-திறப்பு-3005291.html
3005290 கோயம்புத்தூர் ஈரோடு கம்யூனிஸ்ட் கட்சி பிரசார இயக்கத்துக்கு பவானி, அந்தியூரில் வரவேற்பு DIN DIN Saturday, September 22, 2018 05:53 AM +0530 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு தழுவிய அளவில் நடைபெறும் வாகனப் பிரசார இயக்கத்துக்கு பவானி, அந்தியூரில் வியாழக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. 
 இந்திய அரசியல் சாசனத்தைப் பாதுகாப்போம், இந்தியாவைப் பாதுகாப்போம் எனும் முழக்கத்துடன், மத்திய பாஜக அரசைக் கண்டித்து நடைபெறும் இப்பிரசார இயக்கத்துக்கு, பவானி, அந்தியூர் மேட்டூர் பிரிவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வரவேற்பு தெரிவித்தனர். 
 இதையடுத்து, அந்தியூரில் பத்ரகாளியம்மன் கோயில் அருகே ஏ.ஐ.டி.யூ.சி. மாநிலக் குழு உறுப்பினர் வ.சித்தையன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரசாரக் குழுத் தலைவர் எம்.ஆறுமுகம் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். 
 இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் திருநாவுக்கரசு, ஏ.ஐ.டி.யூ.சி. ஐக்கிய பீடி தொழிலாளர் சங்கச் செயலர் அப்துல் வகாப், அஸ்ரப் அலி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/22/கம்யூனிஸ்ட்-கட்சி-பிரசார-இயக்கத்துக்கு-பவானி-அந்தியூரில்-வரவேற்பு-3005290.html
3005289 கோயம்புத்தூர் ஈரோடு ஈரோட்டில் மகளிர் காங்கிரஸ் கொடி அறிமுகம் DIN DIN Saturday, September 22, 2018 05:52 AM +0530 ஈரோட்டில் மகளிர் காங்கிரஸ்  தனிக் கொடி அறிமுக விழா  வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
  ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மகளிர் காங்கிரஸ் மாநகரத் தலைவர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். மாநில இணைச் செயலாளர்கள் தீபா, கஸ்தூரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி மகளிர் காங்கிரஸ் கொடியை அறிமுகம் செய்து பேசியதாவது:
  தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லவும், இளைஞர்கள், பெண்கள் போன்றோரை கட்சியில் இணைக்க பல்வேறு யுக்திகளை காங்கிரஸ்  தலைவர் ராகுல்காந்தி மேற்கொண்டு வருகிறார். மகளிர் காங்கிரஸை  பலப்படுத்தும் நோக்கில் அதற்கென தனிக் கொடியை  அவர் அறிமுகம் செய்தார். இந்தக் கொடியை மக்களிடம் அறிமுகம் செய்வதுடன் அந்தந்தப் பகுதியிலுள்ள மகளிரை கட்சியில் உறுப்பினராக இணைக்கத் தொண்டர்கள் பாடுபட வேண்டும்.  2019இல் நடைபெறவுள்ள மக்களவை பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை அதிக இடங்களில் வெற்றி பெற செய்ய அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றார்.   
 நிர்வாகிகள் கோமதி,  ரஞ்சிதம், அங்காளபரமேஸ்வரி, பாரிசம்மாள், பிரேமா, கே.என்.பாஷா, சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/22/ஈரோட்டில்-மகளிர்-காங்கிரஸ்-கொடி-அறிமுகம்-3005289.html
3005288 கோயம்புத்தூர் ஈரோடு திம்பம் மலைப் பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து DIN DIN Saturday, September 22, 2018 05:52 AM +0530 திம்பம் மலைப் பாதையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்து  27 அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட திம்பம் மலைப் பாதை உள்ளது. இந்த மலைப் பாதை திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை என்பதால் 24 மணி நேரமும் வாகனப் போக்குவரத்து உள்ளது.
சத்தியமங்கலத்தில் இருந்து மைசூருக்கு மாட்டுத் தீவனம் ஏற்றிச் சென்ற லாரி  வியாழக்கிழமை நள்ளிரவு, திம்பம் மலைப் பாதை 7ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. லாரி ஓட்டுநர் காயமின்றி உயிர்தப்பினார். மலைப் பாதையின் ஓரத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்படவில்லை.
கவிழ்ந்து கிடந்த லாரியில் இருந்து மாட்டுத் தீவன மூட்டைகள் வெள்ளிக்கிழமை மற்றொரு லாரிக்கு மாற்றி அனுப்பிவைக்கப்பட்டன. பின்னர் கிரேன் மூலம் விபத்துக்குள்ளான லாரி அப்புறப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/22/திம்பம்-மலைப்-பாதையில்-லாரி-கவிழ்ந்து-விபத்து-3005288.html
3005287 கோயம்புத்தூர் ஈரோடு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி: ஆட்சியர் ஆய்வு DIN DIN Saturday, September 22, 2018 05:52 AM +0530 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்க்கும் பணிகளை அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில்  மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான சி. கதிரவன் வியாழக்கிழமை  ஆய்வு செய்தார்.
    ஈரோடு ரயில்வே காலனி, மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில்  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் ( வாக்காளர் சரிபார்க்கக்கூடிய காகிதத் தணிக்கை யயடஅப) முதல்நிலை சரிபார்க்கும் பணிகளை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி களின் பிரதிநிதிகள் முன்னிலையில் ஆய்வு செய்த பின்னர் ஆட்சியர் கூறியதாவது:
   இந்திய தேர்தல் ஆணையத்தால் பெங்களூரு பெல் நிறுவனம் மூலம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும்,  நாடாளுமன்றத் தேர்தல்-2019க்குப் பயன்படுத்தக்கூடிய  5,350 புதிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்,  வாக்குப் பதிவு அலகுகள் மற்றும் 2,910 வாக்காளர் சரி பார்க்கக்கூடிய  காகிதத் தணிக்கை  புதியதாக  பெறப்பட்டு  ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட கொல்லம்பாளையம் ரயில்வே காலனி மாநகராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
  இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி  பெங்களூரு  பெல் நிறுவனத்தினரால் வாக்குப் பதிவு இயந்திரங்களில் முதல்நிலை சரிபார்க்கும்  பணி நடைபெற்றுள்ளது. வாக்காளர்கள் தான் யாருக்கு வாக்களித்தோம் என்பதை இதன் மூலம்  உறுதி செய்து கொள்ளும் வகையில் விவிபேட் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  கணினி மூலமாக வேட்பாளர்களின் சின்னம், வரிசை  எண் ஆகியவை விவிபேட் இயந்திரத்தில் பதிவு செய்யப்படும். வாக்காளர் வாக்குப் பதிவு இயந்திரத்தில் பட்டனை அழுத்தி வாக்களித்தவுடன் அருகில் பார்வையில் படும்படி வைக்கப்படும் இந்த இயந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்ற விவரம் தாள் வடிவில் ஒரு சில மணித்துளிகள் தெரிந்ததும் சேமிப்பு கலனுக்குள் சென்றுவிடும். மேலும், கருவியில் வரும் ரசீதை வாக்காளர்கள் யாரும் தொடவோ எடுக்கவோ இயலாது. ஓட்டுப் பதிவு முடிந்தவுடன் தனி பெட்டியில் வைத்து சீல் வைக்கப்படும்.  இந்தக் கருவி ஓட்டு எண்ணிக்கைக்கு  உபயோகப்படுத்தப்படமாட்டாது என்றார்.     வட்டாட்சியர் (தேர்தல்) வ.ரவிச்சந்திரன், பெங்களூரு பெல் நிறுவனப் பொறியாளர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/22/மின்னணு-வாக்குப்-பதிவு-இயந்திரங்களை-சரிபார்க்கும்-பணி-ஆட்சியர்-ஆய்வு-3005287.html
3005286 கோயம்புத்தூர் ஈரோடு தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வுப் பேரணி DIN DIN Saturday, September 22, 2018 05:51 AM +0530 ஈரோட்டில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து  மாத விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 ஈரோடு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ். தென்னரசு, கே.வி. ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்தப் பேரணியை  ஆட்சியர் சி.கதிரவன் தொடக்கி வைத்தார். இங்கிருந்து புறப்பட்ட  பேரணி 
குமலன்குட்டை , பூமாலை வணிக வளாகம் சென்று நசியனூர் சாலை வழியாக மீண்டும் ஆட்சியர் அலுவலக வளாகத்தில்  நிறைவடைந்தது. 
  பேரணியில் பங்கேற்ற  மகளிர் சுய உதவிக் குழுவினர், சமூக நல விரிவாக்க அலுவலர்கள்,  அங்கன்வாடி ப் பணியாளர்கள், குழந்தைகளுக்கு சத்துள்ள உணவு வழங்குவது,  தாய்ப் பாலின் அவசியம்,  இணை உணவு வழங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 
  முன்னதாக, ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப்  பணிகள் துறை சார்பில்  போஷன் அபியான் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த  புகைப்படக் கண்காட்சியில், குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பணிகள், சமுதாய வளைகாப்பு விழா,   குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து மாவு வழங்குதல் போன்ற விழிப்புணர்வு தரக்கூடிய  புகைப்படங்கள்  வைக்கப்பட்டிருந்தன.  மாவட்ட வருவாய் அலுவலர் ச. கவிதா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் மரகதம், மகளிர் திட்ட அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/22/தேசிய-ஊட்டச்சத்து-விழிப்புணர்வுப்-பேரணி-3005286.html
3005285 கோயம்புத்தூர் ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயில் தேரோட்டம் DIN DIN Saturday, September 22, 2018 05:51 AM +0530 ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
  ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயில் தேர்த் திருவிழா இம்மாதம் 14ஆம் தேதி கிராம சாந்தி பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து கொடியேற்றம், யாகசாலை பூஜை, திருமஞ்சனம் சாத்துபடி ஆகிய பூஜைகள் நடைபெற்றன. தினமும் இரவில் அன்னபட்சி வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், கருட சேவை, யானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.  திருக்கல்யாணம், புஷ்ப பல்லக்கு ஊர்வலம்  நடைபெற்றது. 
  விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த தேரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக கஸ்தூரி அரங்கநாதர் எழுந்தருளினார்.  தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.  ஈஸ்வரன் கோயில் வீதி, மணிக்கூண்டு, பன்னீர்செல்வம் பூங்கா, பிரப் சாலை, காமராஜர் வீதி வழியாகச் சென்ற தேர் மீண்டும் நிலையை வந்தடைந்தது.    முன்னதாக, தேரோட்டத்தை எம்எல்ஏ.  கே.எஸ்.தென்னரசு  தொடக்கிவைத்தார். மாநகராட்சி மண்டல உதவி ஆணையாளர் அசோக்குமார், டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன், கோயில் செயல் அலுவலர் கங்காதரன், நூற்றுக்கணக்கான பக்தர்கள்  கலந்து கொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/22/கோட்டை-கஸ்தூரி-அரங்கநாதர்-கோயில்-தேரோட்டம்-3005285.html
3005284 கோயம்புத்தூர் ஈரோடு 8 வழிச் சாலைத் திட்டம் நிறைவேற்றப்படும்: அமைச்சர் கே.சி.கருப்பணன் DIN DIN Saturday, September 22, 2018 05:51 AM +0530 சென்னை-சேலம் இடையே 8 வழிச் சாலைத் திட்டம்  நூறு சதவீதம் நிறைவேற்றப்படும் என அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.
   தாளவாடியில், பவானிசாகர் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச் சாவடி அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சுற்றுச் சூழல்துறை அமைச்சர் கே.சி. கருப்பணன், எம்.எல்.ஏ. ஈஸ்வரன் கலந்து ஆகியோர் கொண்டனர். 
    இதன் பின்னர் அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறிதாவது:
  சென்னை-சேலம் இடையேயான 8 வழிச் சாலைத் திட்டத்துக்கு மத்திய அரசுதான் முழு அளவிலான நிதியைக் கொடுக்கிறது. மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் அனுமதிக்காகக் காத்திருக்கிறோம். அனுமதி கிடைத்தவுடன் தமிழக சுற்றுச் சூழல் துறை உடனடியாக இதற்கு அனுமதி வழங்கும். 8 வழிச் சாலை திட்டம் நூறுசதவீதம் நிறைவேற்றப்படும். எம்.எல்.ஏ. கருணாஸ் பேசியது குறித்து முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்றார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/22/8-வழிச்-சாலைத்-திட்டம்-நிறைவேற்றப்படும்-அமைச்சர்-கேசிகருப்பணன்-3005284.html
3005283 கோயம்புத்தூர் ஈரோடு கெம்பநாயக்கன்பாளையம் பள்ளத்தில் மணல் கடத்தல்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை DIN DIN Saturday, September 22, 2018 05:50 AM +0530 சத்தியமங்கலத்தை அடுத்த கெம்பநாயக்கன்பாளையம் பள்ளத்தில் மணல் கடத்தலைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 சத்தியமங்கலம் ஒன்றியம், கெம்பநாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்டது பெரும்பள்ளம் அணை. பெரும்பள்ளம் அணையில் இருந்து வெளியேறும் வெள்ளம் கெம்பநாயக்கன்பாளையம் மாகாளியம்மன், வேட்டைசாமி கோயில் வழியாக பவானி ஆற்றைச் சென்றடைகிறது. இந்த நீர்வழிப் பாதையில் படிந்துள்ள மணல் திட்டுகளை கடந்த பத்து நாள்களாக பகல் நேரங்களில் கூலிக்கு ஆள்களை வைத்து பள்ளம் தோண்டி மணல் எடுத்து, சலித்து மூட்டை கட்டி வைத்து விடுகின்றனர். பின்னர், இரவு நேரங்களில் ஆட்டோ, டெம்போ வேன்களில் கடத்திச் செல்கின்றனர். இந்தக் கடத்தலில் அப்பகுதியைச் சேர்ந்த மூன்று கும்பல் ஈடுபட்டுள்ளதாகவும், தினந்தோறும் சுமார் 1 டன் மணல் கடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. 
 மணல் கடத்தலில் ஈடுபடும் மினி டெம்போ, டிராக்டர்கள் அதிவேகமாக செல்வதால் விபத்துகள் நிகழ்வதாகவும், சில நேரங்களில் பட்டப்பகலிலேயே வாகனங்களில் மணல் மூட்டைகள் கடத்தப்படுவதாகவும், வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை, காவல் துறையினர் மணல் கடத்தலைக் கண்டு கொள்ளவதில்லை எனவும் குற்றம் சாட்டப்படுகிறது.
 நீர்வழிப் பாதையில் பள்ளம் தோண்டி மணல் எடுப்பதால் வெள்ளப்பெருக்கின்போது அதை அறியாமல் நீரில் மூழ்கி மக்கள் இறக்கும் நிகழ்வுகள் நடப்பாதல் மணல் கடத்தலைத் தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 இதுகுறித்து, சத்தியமங்கலம் வட்டாட்சியர் கிருஷ்ணன் கூறியதாவது: மணல் கடத்தல் குறித்து தகவல் எதுவும் கிடைக்கவில்லை. சம்பவ இடத்தை ஆய்வு செய்து  மணல் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பெரும்பள்ளம் பகுதியில் காவல் துறையினருடன் இணைந்து ரோந்துப் பணியில் ஈடுபட உள்ளதாகவும் கூறினார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/22/கெம்பநாயக்கன்பாளையம்-பள்ளத்தில்-மணல்-கடத்தல்-நடவடிக்கை-எடுக்க-பொதுமக்கள்-கோரிக்கை-3005283.html
3005282 கோயம்புத்தூர் ஈரோடு 4 சலவைப் பட்டறைகளை மூட நடவடிக்கை DIN DIN Saturday, September 22, 2018 05:50 AM +0530 ஈரோட்டில் விதிகளை மீறி கழிவுநீரை வெளியேற்றியதாகக் கண்டறியப்பட்ட 4 சலவைப் பட்டறைகளை மூட மாவட்ட சுற்றுச்சூழல்துறையினர்  நடவடிக்கை எடுத்துள்ளனர்.
  ஈரோட்டில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மலையாண்டி தலைமையில் பறக்கும் படையினர் தண்ணீர்பந்தல்பாளையம், பி.பெ.அக்ரஹாரம் ஆகிய பகுதிகளில் உள்ள சலவை,  சாயப் பட்டறைகளில் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது 4 சலவைப் பட்டறைகளில் இருந்து சுத்திகரிப்பு செய்யாமல் கழிவுநீரை அருகில் உள்ள நீர்நிலைகளில் வெளியேற்றியது தெரியவந்தது. இதையடுத்து, 4  சலவைப் பட்டறைகளின் மின் இணைப்பைத் துண்டிக்க அனுமதிக்க வேண்டும் என
ஆட்சியருக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினர் பரிந்துரை செய்தனர். இதையடுத்து ஆட்சியர் உத்தரவின்பேரில் 4 சலவைப் பட்டறைகளின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
  இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்,  சாய, சலவை, தோல் தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிப்பு செய்யாத கழிவுநீரை  நீர்நிலைகளில் வெளியேற்றக் கூடாது. சுத்திகரிப்பு செய்யாத கழிவுநீரை வெளியேற்றும் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/22/4-சலவைப்-பட்டறைகளை-மூட-நடவடிக்கை-3005282.html
3005281 கோயம்புத்தூர் ஈரோடு அந்தியூரில் வனத் துறையினருக்கு பேரிடர் மேலாண்மைப் பயிற்சி DIN DIN Saturday, September 22, 2018 05:49 AM +0530 அந்தியூர் அருகே வனத் துறை அலுவலர்களுக்கு வனப் பகுதியில் நேரிடும் பேரிடர்களை மேலாண்மை செய்வது குறித்த பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. 
அந்தியூர், பர்கூர், சென்னம்பட்டி ஆகிய வனத் துறை அலுவலங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு சென்னம்பட்டி பகுதியில் உள்ள வனப் பகுதியில் பேரிடர் மேலாண்மைப் பயிற்சி அளிக்கப்பட்டது.  ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி மைக்கேல் பேரிடர் மேலாண்மை செயல்விளக்கப் பயிற்சி அளித்தார். 
இதில், தீ விபத்தின்போது கயிறு மூலம் மாடிக்கு ஏறி, இறங்குதல், கிணற்றில் விழுந்த வன விலங்குகள், மனிதர்களைக் காப்பாற்றுதல், திடீர் வெள்ளத்தில் சிக்குவோரைக் காப்பாற்றுதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. கயிறு வீசும் இயந்திரத்தின் உதவியுடன் மீட்புப் பணி குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், 100க்கும் மேற்பட்ட வனத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/22/அந்தியூரில்-வனத்-துறையினருக்கு-பேரிடர்-மேலாண்மைப்-பயிற்சி-3005281.html
3005280 கோயம்புத்தூர் ஈரோடு செப்டம்பர் 22 மின்தடை-  காசிபாளையம் DIN DIN Saturday, September 22, 2018 05:49 AM +0530 ஈரோடு காசிபாளையம் பகுதியில் சனிக்கிழமை (செப்டம்பர் 22) மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இது குறித்து மின்வாரிய (நகரியம்) செயற்பொறியாளர் கோ.வா. பழனிவேல் வெளியிட்ட செய்தி:
 ஈரோடு காசிபாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கீழ்க்கண்ட சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் தடைபடும்.
  சூரம்பட்டி வலசு, கே.கே. நகர், சென்னிமலை சாலை, தொழில்பேட்டை,  காசிபாளையம், சாஸ்திரிநகர், குமரன் நகர், ஜீவா நகர், மூலப்பாளையம், நாடார்மேடு, கொல்லம்பாளையம், பச்சப்பாளி, செந்தில் நகர், காந்திஜி சாலை, ஈவிஎன் சாலை, முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரியம் பகுதி-1, 2, 3, அம்பிகை நகர், அன்னை நகர், நல்லியம்பாளையம், பழைய ரயில் நிலையம்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/22/செப்டம்பர்-22-மின்தடை---காசிபாளையம்-3005280.html
3005279 கோயம்புத்தூர் ஈரோடு தமிழக அணிக்கான தேர்வு: மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு DIN DIN Saturday, September 22, 2018 05:48 AM +0530 தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கும் தமிழக மல்யுத்த அணிக்கான வீரர், வீராங்கனைகள் தேர்வு, அவர்களுக்கான பயிற்சி முகாம் பவானியை அடுத்த அம்மாபேட்டையில் நடைபெற்று வருகிறது. 
 தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்கம் சார்பில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் தமிழக அணிக்கான தேர்வில் தற்போது பங்கேற்றுள்ளனர். சென்னை, கடலூர், திருவண்ணாமலை, நாமக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 66 பேர் இடம் பெற்றுள்ளனர். 
  இதில், 23 வயதுக்கு உள்பட்டோருக்கான மகளிர் பிரிவு பிரி ஸ்டைல் பிரிவில் 10 பேரும், ஆடவர் பிரி ஸ்டைல் பிரிவு மற்றும்
கிரிக்கோ ரோமன் பிரிவில் தலா 10 பேர் வீதமும் மொத்தம்  30 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். 
  ராஜஸ்தான் மாநிலம், சித்தோர்கரில் செப்டம்பர் 27ஆம் தொடங்கி அக்டோபர் முதல் தேதி வரை நடைபெறும் இப்போட்டிகளில் தமிழக அணிக்கு தேர்வு செய்யப்படும் வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.  தேர்ச்சி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நடு அமெச்சூர் மல்யுத்த சங்கத்தின் பொதுச்செயலர் எம்.லோகநாதன் தலைமையில் பயிற்சியாளர்கள் ஜி.ரஞ்சிதா, எஸ்.மெய்ஞானம், எம்.ஜெகன்குமார் ஆகியோர் பயிற்சி அளிக்க உள்ளனர்.
   தமிழக அணிக்கான தேர்வுப் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் என்.ஆர்.கோவிந்தராஜர் ஆகியோர் நேரில் வாழ்த்துத் தெரிவித்தனர். 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/22/தமிழக-அணிக்கான-தேர்வு-மல்யுத்த-வீரர்-வீராங்கனைகள்-பங்கேற்பு-3005279.html
3005278 கோயம்புத்தூர் ஈரோடு 28இல் விவசாயிகள் குறைகேட்பு முகாம் DIN DIN Saturday, September 22, 2018 05:48 AM +0530 ஈரோட்டில் மாவட்ட அளவிலான வேளாண்குறை கேட்பு முகாம் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது.
 இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி:
  மாவட்ட வேளாண் குறை கேட்பு நாள் கூட்டம் வரும் 28ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் நடைபெறவுள்ளது. காலை 11 மணி முதல் 11.30 மணி வரை மனுக்கள் பெறப்படும். பின்னர் விவசாய சங்கப் பிரதிநிதிகள் விவசாயம் தொடர்பான பிரச்னைகள் குறித்து தெரிவிக்கலாம். எனவே, விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளைத்  தெரிவிக்கலாம்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/22/28இல்-விவசாயிகள்-குறைகேட்பு-முகாம்-3005278.html
3004518 கோயம்புத்தூர் ஈரோடு பவானி ஆற்றில் மூழ்கிய மேலும் ஒரு பெண்ணின் சடலம் மீட்பு DIN DIN Friday, September 21, 2018 05:10 AM +0530 பவானி ஆற்றைக் கடக்கும்போது புதன்கிழமை நீரில் மூழ்கி இரு பெண்கள் உயிரிழந்தனர். அப்போது, நீரில் அடித்துச் செல்லப்பட்ட மற்றொரு பெண்ணின் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த ஆலத்துக்கோம்பை காலனியைச் சேர்ந்த சரசாள், மல்லிகா, பெரிய அம்மணி, வசந்தா உள்பட 13 பெண்கள் புதன்கிழமை அங்குள்ள பவானி ஆற்றைக் கடந்து அரியப்பம்பாளையத்துக்குச் சென்றுள்ளனர். அங்கு நடவுப் பணியை முடித்துவிட்டு மீண்டும் 13 பேரும் வீடு திரும்ப ஆலத்துக்கோம்பை பவானி ஆற்றைக் கடந்தனர்.
13 பெண்களும் ஒருவருக்கொருவர் கையைப் பிடித்தபடி ஆற்றைக் கடந்தபோது நீரின் வேகம் காரணமாக அனைவரும் அடித்துச் செல்லப்பட்டனர். இதில், நீச்சல் தெரிந்த 9 பேர் பத்திரமாக கரைக்கு வந்து சேர்ந்தனர். தகவலறிந்து அங்கு வந்த கிராம மக்கள் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த மல்லிகாவை மீட்டனர்.
அதைத் தொடர்ந்து, நீரில் மூழ்கிய சரசாள், பெரிய அம்மணி ஆகியோரை தீயணைப்பு வீரர்கள் புதன்கிழமை சடலமாக மீட்டனர். நீரில் அடித்துச் செல்லப்பட்ட வசந்தா  என்ற பெண் மாயமானார். புதன்கிழமை இரவு வரை தேடியும் கிடைக்கவில்லை. மீனவர்கள் பவானி ஆற்றில் வியாழக்கிழமை தேடியபோது வசந்தா இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டு, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/21/பவானி-ஆற்றில்-மூழ்கிய-மேலும்-ஒரு-பெண்ணின்-சடலம்-மீட்பு-3004518.html
3004517 கோயம்புத்தூர் ஈரோடு கிணற்றில் குளித்த பள்ளி மாணவர் நீரில் மூழ்கி சாவு DIN DIN Friday, September 21, 2018 05:10 AM +0530 மொடக்குறிச்சியை அடுத்த லக்காபுரம் பகுதியில் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
 மொடக்குறிச்சியை அடுத்த சோலார் பகுதி, பாலுசாமி நகரைச் சேர்ந்தவர் குமார் (45), கூலித் தொழிலாளி. இவரது மனைவி பார்வதி (40). இவர்களுக்கு தீர்த்தகிரி (15), கெளசல்யா (11) என்ற மகனும், மகளும் உள்ளனர். இருவரும் லக்காபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தனர். 
 இந்நிலையில், தீர்த்தகிரி தேர்வு எழுதி முடித்துவிட்டு தனது வகுப்பு நண்பர்களான கிஷோர் (15), விஸ்வநாதன் (15), அலெக்ஸ் (15) ஆகியோருடன் பெரியார் நகர் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில் வியாழக்கிழமை குளிக்கச் சென்றுள்ளார். மாலை 5 மணியளவில் கிணற்றின் மீது குதித்து விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. திடீரென தீர்த்தகிரிக்கு வலிப்பு ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது. உடன் இருந்த மாணவர்கள் முயற்சி செய்தும் தீர்த்தகிரியை காப்பாற்ற முடியவில்லை.
 மாணவர்களின் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து காப்பாற்ற முயன்றும் முடியாததால் மொடக்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கும், மொடக்குறிச்சி காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த மொடக்குறிச்சி காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் பொதுமக்கள் உதவியுடன் தீர்த்தகிரியின் சடலத்தை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 இதுகுறித்து, மொடக்குறிச்சி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/21/கிணற்றில்-குளித்த-பள்ளி-மாணவர்-நீரில்-மூழ்கி-சாவு-3004517.html
3004516 கோயம்புத்தூர் ஈரோடு வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது DIN DIN Friday, September 21, 2018 05:09 AM +0530 விளாமுண்டி வனப் பகுதியில் நடந்து சென்ற இளம்பெண்ணிடம் கத்தியைக் காட்டி நகையைப் பறித்துச் சென்ற இருவரை பவானிசாகர் போலீஸார் கைது செய்தனர்.
 திருப்பூர் மாவட்டம், அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிசெல்வம் (37), தொழிலாளி. இவரது மனைவி நிர்மலா(30). இவர், குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக புளியம்பட்டி அரசு மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை வந்துள்ளார். மீண்டும் திருப்பூர் செல்ல வழிதெரியாமல் வேறு பேருந்தில் ஏறிய அவர் பவானிசாகர் நால்ரோட்டில் இறங்கியுள்ளார். பின்னர், வீடு திரும்பிச் செல்வதற்காக விளாமுண்டி வனப்பகுதி வழியாக தனியாக நடந்து சென்றுள்ளார்.
 அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் நிர்மலாவிடம் கத்தியைக் காட்டி மிரட்டி  4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியுள்ளனர். உடனடியாக, நால்ரோடு பகுதி பொதுமக்களுக்கு தகவல் தரப்பட்டது. இதையடுத்து, இருசக்கர வாகனத்தில் வந்த இருவரையும் பொதுமக்கள் மடக்கிப் பிடித்து பவானிசாகர் போலீஸில் ஒப்படைத்தனர்.    
 விசாரணையில், இருசக்கர வாகனத்தை ஓட்டியவர் திருப்பூர் மாவட்டம், வேலம்பாளையத்தைச் சேர்ந்த வரதராஜ் மகன் கெளதம் (27), பின்னால் அமர்ந்திருந்தவர் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் திருமாந்துரையைச் சேர்ந்த சிவமணி மகன் மகேஸ்வரன் (24) என்பதும், இருவரும் நெருங்கிய உறவினர்கள் என்பதும் தெரியவந்தது.
 இதுகுறித்து, நிர்மலா அளித்த புகாரின்பேரில் பவானிசாகர் போலீஸார் இருவரையும் கைது  செய்து சத்தி ஜே.எம். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/21/வழிப்பறியில்-ஈடுபட்ட-இருவர்-கைது-3004516.html
3004515 கோயம்புத்தூர் ஈரோடு சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்பு பேரணி DIN DIN Friday, September 21, 2018 05:09 AM +0530 தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், 14 ஆவது மாநில மாநாடு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
 ஈரோடு தலைமை அஞ்சல் நிலையத்தில் தொடங்கி ஈரோடு தாலுகா அலுவலகம் வரை நடைபெற்ற பேரணிக்கு, சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.தனுஷ்கோடி தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜே.பாஸ்கர்பாபு பேரணியைத் தொடக்கிவைத்தார்.
 சிறப்பு காலமுறை ஊதியத்தை மாற்றி வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். வரையறுக்கப்பட்ட குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஒட்டுமொத்த தொகை ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும். 1.1.2016 முதல் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். அரசு மானியத்தை ரூ. 5 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
 இதில், மாவட்ட செயலாளர் பி.மூர்த்தி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கே.வெங்கிடு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில செயலாளர் உஷாராணி, கண் மருத்துவ உதவியாளர் சங்கம் சுகுமார், சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ஏ.முருகேசன் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/21/சத்துணவு-ஊழியர்கள்-கவன-ஈர்ப்பு-பேரணி-3004515.html
3004514 கோயம்புத்தூர் ஈரோடு தனித்து நின்றாலும் அதிமுக வெற்றி பெறும்: அமைச்சர் DIN DIN Friday, September 21, 2018 05:08 AM +0530 தனித்து நின்றாலும் அதிமுக வெற்றி பெறும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசினார். 
 பவானி நகர, ஒன்றிய அதிமுக கிளைச் செயலர்கள், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பவானியில் நகரச் செயலர் என்.கிருஷ்ணராஜ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஒன்றியச் செயலர் எஸ்.எம்.தங்கவேலு வரவேற்றார்.
 சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசுகையில், உள்ளாட்சித் தேர்தல் மட்டுமல்ல சட்டப் பேரவைத் தேர்தல், மக்களவைத் தேர்தல் என எந்தத் தேர்தல் வந்தாலும், தனித்து நின்றாலும் அதிமுக வெற்றி பெறும் என்றார். 
 இதில், திருப்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் வி.சத்யபாமா, அம்மாபேட்டை ஒன்றியச் செயலர் வி.எஸ்.சரவணபவா, தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியக் குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட அண்ணா தொழில்சங்கச் செயலர் கே.ஆர்.ஜான், கூட்டுறவு சங்கத் தலைவர் பி.மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/21/தனித்து-நின்றாலும்-அதிமுக-வெற்றி-பெறும்-அமைச்சர்-3004514.html
3004513 கோயம்புத்தூர் ஈரோடு தடை செய்யப்பட்ட  புகையிலைப் பொருள்கள் 220 கிலோ பறிமுதல் DIN DIN Friday, September 21, 2018 05:08 AM +0530 ஈரோட்டில் உள்ள கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட 220 கிலோ புகையிலைப் பொருள்களை உணவுப் பாதுகாப்புத் துறையினர் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
 வீரப்பன்சத்திரம் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், ஈரோடு மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணி தலைமையில், அலுவலர்கள் அங்கு சென்று ஆய்வு நடத்தியபோது குட்கா, புகையிலை, பான்பராக் உள்ளிட்ட பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
 மேலும், அப்பகுதியில் மளிகை உள்ளிட்ட பொருள்களை மொத்த வியாபாரம் செய்து வரும் கமலஹாசன் (44) என்பவர் வாடகைக்குப் பிடித்து வைத்திருக்கும் கிடங்கு என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்த 220 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/21/தடை-செய்யப்பட்ட--புகையிலைப்-பொருள்கள்-220-கிலோ-பறிமுதல்-3004513.html
3004512 கோயம்புத்தூர் ஈரோடு பெரும்பள்ளம் காரைவாய்க்காலில் தூர்வாரும் பணிகள் தொடக்கம் DIN DIN Friday, September 21, 2018 05:08 AM +0530 ஈரோடை அமைப்பின் சார்பில், ரூ. 15 லட்சம் செலவில் பெரும்பள்ளம் காரைவாய்க்கால் தூர்வாரும் பணிகள் வியாழக்கிழமை நடைபெற்றது.
 சூரம்பட்டி அணைக்கட்டில் ஈரோடை அமைப்பின் தலைவர் டாக்டர் சுதாகர், தொழிலதிபர்கள் சின்னசாமி, குமார் ஆகியோர் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் பங்கேற்று பணியைத் தொடக்கி வைத்துப் பேசியதாவது:
 சூரம்பட்டி அணைக்கட்டு மூலம் சுமார் 2,450 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வந்த நிலையில் அணைக்கட்டு தூர்வாரப்படாததாலும், கழிவு நீர் தேங்கியதாலும் பல ஆண்டுகளாக பாசனத்துக்குத் தண்ணீர் திறக்க முடியாமல் போனது. ஈரோடை தொண்டு நிறுவனம் மூலம் சூரம்பட்டி அணைக்கட்டு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 33 லட்சம் செலவில் தூர்வாரப்பட்டது. இதையடுத்து, வாய்க்காலில் பாசனத்துக்காக  அணைக்கட்டில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
 இந்நிலையில், அணைக்கட்டின் கீழ் பகுதியான பெரும்பள்ளம் ஓடையானது திட, திரவக் கழிவுகளால் நிரம்பிக் கிடக்கிறது. ஈரோடு மாநகர எல்லைக்குள் ஓடும் இந்த ஓடையால் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும், ஓடையில் செல்லும் கழிவுகள் அனைத்தும் காவிரி ஆற்றில் நேரடியாக கலப்பதால் காவிரி தண்ணீரும் மாசடைந்து வருகிறது. இதைத் தடுக்கும் வகையில் ஈரோடை அமைப்பின் சார்பில் ரூ. 15 லட்சம் செலவில்  இரண்டாவது முறையாக தூவாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
 இதன் மூலம்,  சூரம்பட்டி அணைக்கட்டில் இருந்து காரைவாய்க்கால் வரை 6 கிலோ மீட்டர் தொலைவுக்கு தூர்வாரும் பணிகள்  ஒரு மாத காலத்துக்குள் நிறைவுபெறும். தூர்வாரிய பிறகு ஓடையைப் பாதுகாக்க இப்பகுதி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என ஈரோடை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
 இதில், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சுப்பு உள்ளிட்டோர் 
கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/21/பெரும்பள்ளம்-காரைவாய்க்காலில்-தூர்வாரும்-பணிகள்-தொடக்கம்-3004512.html
3004511 கோயம்புத்தூர் ஈரோடு ஈரோடு கறவை மாட்டுச் சந்தை: ரூ. 3.5 கோடிக்கு விற்பனை DIN DIN Friday, September 21, 2018 05:07 AM +0530 ஈரோட்டில் வியாழக்கிழமை கூடிய மாட்டுச் சந்தையில் பசு, எருமை கறவை மாடுகள், வளர்ப்புக் கன்றுக்குட்டிகள் ஆகியவை ரூ. 3.5 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளன.
 ஈரோடு, கருங்கல்பாளையத்தில் காவிரிக்கரை சோதனைச் சாவடி அருகே வாரந்தோறும் புதன், வியாழன் ஆகிய இரு நாள்களில் மாட்டுச் சந்தை நடைபெறுகிறது. அதில், புதன்கிழமை வளர்ப்பு மாடுகளும், வியாழக்கிழமை கறவைப் பசு மாடுகளும், எருமை மாடுகள், வளர்ப்பு கன்றுக்குட்டிகளும் விற்பனை செய்யப்படுகின்றன. வியாழக்கிழமை நடைபெற்ற  சந்தைக்கு அனைத்து மாநில வியாபாரிகளும், மாடுகள் வரத்தும் கணிசமாக இருந்தது. 
 இதுகுறித்து, மாட்டுச் சந்தை மேலாளர் ஆர்.முருகன் கூறியதாவது:
 தென் மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகள் வழக்கம்போல வந்திருந்தனர். கடும் மழை காரணமாக கடந்த ஒரு மாதமாக வராமல் இருந்த கேரள, கர்நாடக மாநில வியாபாரிகள் அதிகமானோர் இந்த வாரச் சந்தைக்கு வந்திருந்தனர். இந்த வாரச் சந்தையில் 400 பசு மாடுகள், 350 எருமைகள், 200 வளர்ப்புக் கன்றுகள் விற்பனை செய்யப்பட்டன. இதில், பசுமாடு ரூ. 16 ஆயிரம் முதல் ரூ. 34 ஆயிரம் வரையிலும், எருமை மாடு ரூ. 18 ஆயிரம் முதல் ரூ. 36 ஆயிரம் வரையிலும், வளர்ப்புக் கன்றுகள் ரூ. 2,000 முதல் ரூ. 12 ஆயிரம் வரையிலும் விற்பனை ஆகியுள்ளன. மொத்தம் சுமார் ரூ. 3.5 கோடிக்கு வணிகம் நடைபெற்றுள்ளதாவும், இந்த வாரச் சந்தைக்கு வந்துள்ள மாடுகளுக்கு கால்நடைத் துறை சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றதாகவும் தெரிவித்தார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/21/ஈரோடு-கறவை-மாட்டுச்-சந்தை-ரூ-35-கோடிக்கு-விற்பனை-3004511.html
3004510 கோயம்புத்தூர் ஈரோடு கிராமத் தங்கல் திட்டத்தின்கீழ் வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் பயிற்சி DIN DIN Friday, September 21, 2018 05:07 AM +0530 கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், ஆப்பக்கூடல் குமரகுரு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் கிராமத் தங்கல் திட்டத்தின்கீழ், மூன்று மாதங்கள் பயிற்சி பெறுவதற்காக கோபி வட்டாரத்துக்கு வருகை தந்து பல்வேறு களப் பணிகளைச் செய்து வருகின்றனர்.
 கோவை வேளாண் கல்லூரியில் இருந்து 12 மாணவிகளும், ஆப்பக்கூடல் வேளாண் கல்லூரியிலிருந்து 7 மாணவிகளும் இதில் பங்கேற்றுள்ளனர். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக திருந்திய நெல் சாகுபடித் திட்டத்தை அறிந்து கொள்வதற்காக தாசம்பாளையம் கிராமத்தில் உள்ள விவசாயியின் வயலுக்கு மாணவிகள் சென்றனர். அங்கு நெல் நாற்றுப் பறித்தல், பவர் டிரில்லர் மூலம் சேற்று உழவு செய்தல், பரம்பு அடித்தல், உரமிடுதல், நாற்று நடவு செய்தல்  ஆகிய பணிகளைச் செய்தனர்.
 கடந்த 5 ஆண்டுகளாக திருந்திய நெல் சாகுபடியை மேற்கொண்டு வரும் விவசாயி தமது வயல் அனுபவங்களை மாணவிகளுக்குக் கூறியதுடன், நடவு முறைகள் குறித்தும் பயிற்சி அளித்தார். இந்நிகழ்ச்சியில், கோபி வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/21/கிராமத்-தங்கல்-திட்டத்தின்கீழ்-வேளாண்மைக்-கல்லூரி-மாணவிகள்-பயிற்சி-3004510.html
3004509 கோயம்புத்தூர் ஈரோடு மலைப் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம் DIN DIN Friday, September 21, 2018 05:07 AM +0530 மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து விழிப்புணர்வு  முகாம் செப்டம்பர் 27 ஆம் தேதி நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.
 ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வனத் துறை சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான கூட்டு வன மேலாண்மை குழுக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து ஆட்சியர் பேசியதாவது:
 ஈரோடு மாவட்டத்தில் தாளவாடி, கடம்பூர், பர்கூர் ஆகிய பகுதிகளின் மலைவாழ் மக்களுக்கு அடிப்படை வசதிகள், கல்வி, குடிநீர் போன்ற வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நில உரிமைச் சட்டத்தின்படி பட்டா வழங்க வேண்டும் என்ற மலைவாழ் மக்களின் நெடுநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார பகிர்மானக் கழகம் மூலம் அனைத்துப் பகுதிகளுக்கும் சோலார் மின் வசதி செய்து தரப்பட்டுள்ளது.
 மேலும், உண்டு உறைவிடப் பள்ளி, வீட்டுமனைப் பட்டா, ரேஷன் கடை, தொகுப்பு வீடுகள், தார் சாலை, வடிகால், சமுதாய நலக்கூடம், துணை சுகாதார நிலையம்,  தனிநபர் கழிப்பிடம், நடமாடும் ரேஷன் கடை, கால்நடை மருத்துவ முகாம், வேளாண் கருவிகள், குடிநீர் வசதி ஆகியவை ஏற்படுத்திக் கொடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 வனத் துறையினரிடம் இருந்து தடையின்மைச் சான்றுகள் பெற்று வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வருவாய்த் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்படுவதால் மலைப் பகுதியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, அங்குள்ள குழந்தைகளை செப்டம்பர் 27 ஆம் தேதி  நடைபெறவுள்ள எடை மேளாவில் பங்கேற்கச் செய்ய வேண்டும் என்றார்.  இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா, மாவட்ட வன அலுவலர்கள் விஸ்வநாதன்(ஈரோடு), அருண்லால் (சத்தி), வேளாண் இணை இயக்குநர் குணசேகரன், மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநர் ரமாமணி உள்ளிட்டோர்  கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/21/மலைப்-பகுதிகளில்-உள்ள-குழந்தைகளுக்கு-ஊட்டச்சத்து-விழிப்புணர்வு-முகாம்-3004509.html
3004508 கோயம்புத்தூர் ஈரோடு ஈரோட்டில் ரூ. 26 லட்சத்திலான வளர்ச்சிப் பணிகள் தொடக்கம் DIN DIN Friday, September 21, 2018 05:06 AM +0530 ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு உள்பட்ட முனிசிபல் காலனி, திருநகர் காலனி பகுதிகளில் ரூ. 26 லட்சம் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
 ஈரோடு, முனிசிபல் காலனியில் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 7.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய நியாயவிலைக் கடையை எம்.எல்.ஏ.க்கள் கே.வி. இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் திறந்துவைத்தனர்.
 இதைத்தொடர்ந்து, ஈரோடு காவிரிக்கரை பகுதியில் ரூ. 7 லட்சம் மதிப்பில் புதிதாக அமையவுள்ள அங்கன்வாடி மையத்துக்கான பூமிபூஜையும், ஈரோடு, புதுமை காலனி, சின்னப்பா லே அவுட்- 1 பகுதியில் ரூ. 11 லட்சம் மதிப்பில் அமைக்கப்படவுள்ள தார் சாலைக்கான  பூமிபூஜையும் எம்.எல்.ஏ.க்கள் முன்னிலையில் நடைபெற்றது.
 இப்பகுதியில் தார் சாலை அமைக்க வேண்டும் என சுமார் 40 ஆண்டுகாலமாக  பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இக்கோரிக்கையை நிறைவேற்றிய எம்.எல்.ஏ. தென்னரசுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
 இதில், அதிமுக பகுதி செயலாளர்கள் சூரம்பட்டி ஜெகதீஷ், கேசவமூர்த்தி, கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளர் பார்த்திபன், மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார், அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் தெய்வநாயகம்  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/21/ஈரோட்டில்-ரூ-26-லட்சத்திலான-வளர்ச்சிப்-பணிகள்-தொடக்கம்-3004508.html
3004408 கோயம்புத்தூர் ஈரோடு திறன் மேம்பாட்டுப் பயிற்சி பதிவு முகாம் DIN DIN Friday, September 21, 2018 01:42 AM +0530 ஈரோடு மாவட்டத்தில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி விழிப்புணர்வு, திறன் பயிற்சி பதிவு முகாம் நடைபெற உள்ளது.
 இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்ட தகவல்:
 ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் திறன் பயிற்சி விழிப்புணர்வு, பதிவு முகாம் பின்வரும் தேதிகளில் நடைபெற உள்ளது. இம்முகாமில், ஆட்டோ மொபைல், தொலைத் தொடர்பு, அழகுக் கலை, விருந்தோம்பல், ஆயத்த ஆடை, வங்கி நிதி சேவை, காப்பீடு, சுகாதாரம் போன்ற பல்வேறு துறைகளில் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு, தங்களுக்குத் தேவையான பயிற்சியாளர்களை நேரடியாக சேர்க்கை நடத்தவுள்ளனர். 
 அதன்படி, செப்டம்பர் 25 இல் பெருந்துறையிலும், 28 இல் சென்னிமலையிலும், அக்டோபர் 3 இல் கொடுமுடியிலும், 5 இல் பவானியிலும், 9 இல் அம்மாபேட்டையிலும், 12 இல் அந்தியூரிலும், 16 இல் கோபியிலும், 23 இல் சத்தியிலும், 26 இல்  தூக்கநாயக்கன்பாளையத்திலும், 30 இல் நம்பியூரிலும், நவம்பர் 8 இல் பவானிசாகரிலும், 14 இல் தாளவாடியிலும் காலை 10 முதல் பிற்பகல் 3 மணி வரை முகாம்கள் நடைபெறவுள்ளன.
 பயிற்சிக் காலத்தில் போக்குவரத்து செலவுக்காக நாளொன்றுக்கு ரூ. 100, விடுதியில் தங்கிப் பயின்றால் உணவு, தங்கும் வசதிக்கான செலவும் வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் தமிழக அரசின் தொழிற்பயிற்சி சான்றிதழும், தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படும். மேலும், முகாம்களில் திறன் பயிற்சியினால் வேலைவாய்ப்பு பெற்று பயனடைந்தவர்களுக்கு வேலை அளிக்கும் நிறுவனங்கள் மூலம் விழிப்புணர்வுக் கருத்தரங்கமும் நடத்தப்பட உள்ளது.   இம்முகாம்களில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள், முகவரிச் சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றுடன் கலந்துகொண்டு பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/21/திறன்-மேம்பாட்டுப்-பயிற்சி-பதிவு-முகாம்-3004408.html
3004407 கோயம்புத்தூர் ஈரோடு கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கிய மாணவரின் சடலம் மீட்பு DIN DIN Friday, September 21, 2018 01:41 AM +0530 கீழ்பவானி வாய்க்கால் நீரில் மூழ்கிய மாணவரின் சடலம் மாரனூர் வாய்க்கால் பாலத்தில் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
 அன்னூரைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி மன்சூர் (31). இவரது உறவினர் மகன் ஆசிப் அகமது (14) அன்னூரில் உள்ள அரசுப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், அன்னூரில் இருந்து பவானிசாகர் டணாக்கன்கோட்டைக்கு இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை வந்த இவர்கள் கீழ்பவானி வாய்க்காலில் குளித்தனர்.
 அப்போது, வேகமாக வந்த நீரில் மாணவர் ஆசிப் அடித்துச் செல்லப்பட்டார். அவரைக் காப்பாற்ற முயன்ற மன்சூரும் நீரில் மூழ்கினார். கரையில் இருந்த கிராம மக்கள் தீயணைப்பு நிலையத்துக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் மாயமான இருவரையும் தேடி வந்தனர்.
 இந்நிலையில், மன்சூரின் சடலம் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தேடி வந்த நிலையில், மாரனூர் வாய்க்காலில் 4 நாள்களுக்குப் பிறகு  மாணவர் ஆசிப்பின் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டு, உடற்கூறு ஆய்வுக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/21/கீழ்பவானி-வாய்க்காலில்-மூழ்கிய-மாணவரின்-சடலம்-மீட்பு-3004407.html
3004406 கோயம்புத்தூர் ஈரோடு பெருந்துறை மருத்துவக் கல்லூரியில் இலவச தொழில்நுட்பப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் DIN DIN Friday, September 21, 2018 01:40 AM +0530 ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள ஐஆர்டி மருத்துவக் கல்லூரியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் நடத்தப்படும் பின்வரும்  பணிகளுக்கான இலவசப் பயிற்சியில் தகுதியுள்ளவர் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அக்கல்லூரி நிர்வாகம் வெளியிட்ட தகவல்:
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் 100 சதவீத மானியத்தில் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3, 4 மாதங்கள் வரையில், பல் பராமரிப்பு உதவியாளர், அவசர சிகிச்சைப் பிரிவு உதவியாளர், மருத்துவ கவனிப்பு உதவியாளர், மருத்துவ லேப் டெக்னீஷியன் உதவியாளர், அறுவை சிகிச்சைப் பிரிவு உதவியாளர், மருந்தாளுநர் பயிற்சி உதவியாளர், நுண் கதிர்வீச்சு பிரிவு உதவியாளர், விழி ஒளி பரிசோதகர் உதவியாளர் ஆகிய பணிகளுக்கான இலவசப் பயிற்சிகளுக்கு மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெறுகிறது.
 பயிற்சியில் சேர அனைத்து ஜாதிகளைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சிக் கட்டணம் முழுவதும் அரசே ஏற்றுக் கொள்ளும். மேலும், பயிற்சிக் காலத்தில் பயிற்சியாளர்களுக்கு சீருடை, உணவு, போக்குவரத்து செலவினங்கள் ஆகியவை விதிமுறைகளின்படி வழங்கப்படும்.
 பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு, அதற்குமேல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயதுக்கு குறையாமலும் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். எந்த கல்வி நிறுவனத்திலும் மாணவ, மாணவியாக இருக்கக் கூடாது.
 ஒரு வெள்ளைத்தாளில் விண்ணப்பதாரரின் பெயர், தந்தை பெயர், அஞ்சல் முகவரி, செல்லிடப்பேசி எண், பிறந்த தேதி, வயது, கல்வித் தகுதி, ஜாதி, ரேஷன் கார்டு எண், வங்கிக் கணக்கு எண், ஆதார் அட்டை எண் ஆகியவற்றைத் தெளிவாக எழுதி புகைப்படம் ஒட்டி கையொப்பமிட்டு, கல்வித் தகுதிக்கான சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், கல்வி நிலைய மாற்றுச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு ஆகியவற்றின் நகல்களுடன் முதல்வர், ஐஆர்டி பெருந்துறை மருத்துவக் கல்லூரி, பெருந்துறை சானிடோரியம்-638 053, ஈரோடு மாவட்டம் என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/21/பெருந்துறை-மருத்துவக்-கல்லூரியில்-இலவச-தொழில்நுட்பப்-பயிற்சிக்கு-விண்ணப்பிக்கலாம்-3004406.html
3004405 கோயம்புத்தூர் ஈரோடு வாக்குச் சாவடிகளுக்கு குழு அமைக்க அதிமுக முடிவு DIN DIN Friday, September 21, 2018 01:40 AM +0530 ஈரோடு மாநகர மாவட்ட அதிமுக சார்பில் வாக்குச் சாவடி குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
 ஈரோட்டில் மாவட்ட செயலாளர் கே.வி.இராமலிங்கம் தலைமையில், மக்களவை உறுப்பினர் செல்வகுமார சின்னையன், எம்.எல்.ஏ. தென்னரசு, முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான  நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 ஈரோடு மாநகர மாவட்டம் சார்பில், எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவது. மக்களவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தலுக்காக அனைத்து வார்டு, கிளைகளிலும் பூத் கமிட்டி அமைத்து உறுப்பினர்களை நியமிப்பது. அனைத்துப் பகுதிகளிலும் உறுப்பினர்களைச் சேர்ப்பது. இலங்கையில் நடந்த போரின்போது, இந்திய அரசு அனைத்து விதமான உதவிகளையும் செய்ததாக  இலங்கை முன்னாள் அதிபர் ராஜபட்சே தெரிவித்துள்ளார். தமிழ் மக்களை அழிக்க உதவிய திமுக, காங்கிரஸ் கட்சிகளைக் கண்டித்து செப்டம்பர் 25 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில்  திரளாக பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 கூட்டத்தில், பகுதி செயலாளர்கள் மனோகரன், ஜெகதீசன், கேசவமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/21/வாக்குச்-சாவடிகளுக்கு-குழு-அமைக்க-அதிமுக-முடிவு-3004405.html
3004404 கோயம்புத்தூர் ஈரோடு ஈரோடு புதை சாக்கடைத் திட்டம்: பிரதான குழாய்களை இணைக்கும் பணிகள் தொடக்கம் DIN DIN Friday, September 21, 2018 01:39 AM +0530 ஈரோடு மாநகராட்சியில் புதை குழாய் திட்டத்தின் பிரதான குழாய்களை இணைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
 இதுகுறித்து, ஈரோடு மாநகராட்சி ஆணையர் சீனி அஜ்மல்கான் கூறியதாவது:
 ஈரோடு மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள குடியிருப்பு, வணிக பயன்பாட்டில் உள்ள கட்டடங்களுக்கு, பிரதான புதை சாக்கடை குழாய்களுடன் சாக்கடைக் குழாய்கள் இணைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இப்பணிகள், மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஒப்பந்ததாரர்கள், மாநகராட்சிப் பணியாளர்கள் கட்டட உரிமையாளர்களை அணுகும்போது, அவர்களது சொத்து வரி, குடிநீர் வரி, பாதாள சாக்கடை வைப்புத் தொகை ரசீது நகல்களுடன், அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்து கையொப்பமிட்டு அளிக்க வேண்டும்.
 கட்டடத்தில் உள்ள நச்சுத் தொட்டியைப் பயன்படுத்தாமல் கழிப்பிடக் கழிவுகளையும், ஏனைய அனைத்து நீர் கழிவுகளையும் (சமையல் அறை கழிவுநீர், குளியலறை கழிவுநீர்) மழைநீர் தவிர பாதாள சாக்கடையில் இணைக்கப்பட வேண்டும். இப்பணிக்காக கட்டப்படும் 2 ஆய்வுக் குழிகள், தேவைக்கேற்ப கட்டட வளாகத்துக்குள்ளேயே அமைக்கப்பட வேண்டும். சாலைகளில் அமைக்கக் கூடாது.  
 6 மீ நீளம் வரை 2 ஆய்வுக் குழிகள் ஒப்பந்ததாரரால் அமைத்துத் தரப்படும். இதற்குரிய கட்டணத்தை மாநகராட்சி மூலம் ஒப்பந்ததாரருக்கு வழங்கப்படும். பிறகு, வீடு, கட்டட உரிமையாளர்களிடம் வீட்டு இணைப்புக்கான டெபாசிட் தொகையையும் சேர்த்து 6 தவணைகளில் வசூலிக்கப்படும். இத்திட்டத்தை நிறைவேற்ற பொதுமக்கள் முழு  ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/21/ஈரோடு-புதை-சாக்கடைத்-திட்டம்-பிரதான-குழாய்களை-இணைக்கும்-பணிகள்-தொடக்கம்-3004404.html
3004403 கோயம்புத்தூர் ஈரோடு ஈரோடு மாவட்டத்தில் கோ ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்கு ரூ. 3.55 கோடி DIN DIN Friday, September 21, 2018 01:38 AM +0530 ஈரோடு மாவட்டத்தில் கோ ஆப்டெக்ஸ் கைத்தறி நிறுவனத்துக்கான நடப்பு ஆண்டின் தீபாவளி பண்டிகை விற்பனை இலக்கு ரூ. 3.55 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
 ஈரோட்டில் உள்ள வசந்தம் கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் அண்மையில் நடைபெற்ற தீபாவளி பண்டிகை சிறப்பு விற்பனையைத் தொடக்கி வைத்து ஆட்சியர் சி.கதிரவன் கூறியதாவது:
 தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ ஆப்டெக்ஸ் கடந்த 83 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றி வருகிறது. தமிழகத்தில் உள்ள கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் துணி ரகங்களைக் கொள்முதல் செய்து  நாடு முழுவதும் உள்ள கோ ஆப்டெக்ஸ் நிலையங்கள் மூலம் சந்தைப்படுத்தி விற்பனை செய்து நெசவாளர்களுக்கு பேருதவி புரிந்து வருகிறது. 
 மேலும், பல்வேறு விழாக் காலங்களில் கோ ஆப்டெக்ஸ் நிலையங்கள் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு சிறப்புத் தள்ளுபடி விலையில் பல்வேறு துணி, ஆடை, விரிப்பு, போர்வை, வேஷ்டி, சேலை, பட்டுச்சேலை ரகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, நடப்பு ஆண்டின் தீபாவளி பண்டிகைக்காக வாடிக்கையாளர்களுக்கு 30 சதவீத தள்ளுபடி சலுகை விற்பனை செப்டம்பர் 15 முதல்  தொடங்கப்பட்டுள்ளது.
 இதில், ஈரோடு வசந்தம் கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தின் தீபாவளி பண்டிகைக்கான விற்பனை இலக்கு ரூ. 2.5 கோடியும், கோபிசெட்டிபாளையம் கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தின் விற்பனை இலக்கு ரூ. 1.05 கோடியும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் புத்தாடைகளை வாங்கி நெசவாளர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவிட முன்வர வேண்டும் என்றார்.
 இதில், கோஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் சுரேஷ்குமார், முதுநிலை மேலாளர் (அரசுத் திட்டம்) ஜெகநாதன், வடிவமைப்பு, உற்பத்தி மேலாளர் நந்தகோபால், ஆயத்த ஆடைகள் பிரிவு மேலாளர் பாலமுருகன், துணை மண்டல மேலாளர் (தணிக்கை) மோகன்குமார், விற்பனை மேலாளர் மு.சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/21/ஈரோடு-மாவட்டத்தில்-கோ-ஆப்டெக்ஸ்-தீபாவளி-விற்பனை-இலக்கு-ரூ-355-கோடி-3004403.html
3003947 கோயம்புத்தூர் ஈரோடு பவானி ஆற்றில் மூழ்கி 2 பெண்கள் சாவு; ஒரு பெண் மீட்பு, மற்றொருவர் மாயம் DIN DIN Thursday, September 20, 2018 07:58 AM +0530 சத்தியமங்கலம் அருகே பவானி ஆற்றைக் கடந்தபோது நீரின் வேகம் காரணமாக 13 பெண்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அதில், 2 பெண்கள் உயிரிழந்தனர், ஒருவர் மீட்கப்பட்டார். மாயமான மற்றொரு பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த ஆலத்துக்கோம்பை காலனியைச் சேர்ந்த சரசாள், மல்லிகா, பெரியஅம்மணி, வசந்தா உள்பட 13 பெண்கள் புதன்கிழமை காலை அங்குள்ள பவானி ஆற்றைக் கடந்து அரியப்பம்பாளையம் சென்றுள்ளனர். அங்கு நடவுப் பணியை முடித்துவிட்டு மீண்டும் 13 பேரும் வீடு திரும்ப ஆலத்துக்கோம்பை பவானி ஆற்றைக் கடந்தனர். 13 பெண்களும் ஒருவருக்கொருவர் கையைப் பிடித்தபடி ஆற்றைக் கடந்தபோது நீரின் வேகம் காரணமாக  அனைவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
 இதில், சரசாள், மல்லிகா, பெரியஅம்மணி, வசந்தா ஆகியோர் மற்றவர்களின் பிடியில் இருந்து விலகி ஆற்றில் மூழ்கினர். நீச்சல் தெரிந்த மற்ற 9 பெண்களும் போராடி கரைக்கு வந்து சேர்ந்தனர். பெண்களின் சப்தம் கேட்டு கிராம மக்கள் திரண்டு வந்து ஆற்றில் உயிருக்குப் போராடிய மல்லிகா என்ற பெண்ணை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பாதுகாப்பு உபகரணங்களுடன் தேடும் பணியில் ஈடுபட்டனர். அதில் சரசாள், பெரிய அம்மணி ஆகிய இருவரின் சடலம் மீட்கப்பட்டு, உடற்கூறு ஆய்வுக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாயமான வசந்தாவை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர். பவானிசாகர் அணையில் இருந்து முன்னறிவிப்பின்றி 900 கன அடி நீர் திறந்து விடப்பட்டதால், பெண்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பவானி ஆற்றில் குளிக்கத் தடை: சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கன அடி நீர் திறந்துவிடப்படுவதால் வாய்க்காலின் இருபுறமும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், கடந்த 3 நாள்களில் அணை பூங்கா, கீழ்பவானி வாய்க்காலில் குளித்த இரு ஆண்கள், 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர். நீரின் வேகம் அதிகமாக உள்ளதால் கீழ்பவானி வாய்க்காலில் பொதுமக்கள் குளிக்க 3 நாள்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/20/பவானி-ஆற்றில்-மூழ்கி-2-பெண்கள்-சாவு-ஒரு-பெண்-மீட்பு-மற்றொருவர்-மாயம்-3003947.html
3003791 கோயம்புத்தூர் ஈரோடு பெருந்துறை சிப்காட் சாலையை ரூ. 40 லட்சம் மதிப்பில் செப்பனிட பூமிபூஜை DIN DIN Thursday, September 20, 2018 02:14 AM +0530 பெருந்துறை பேரூராட்சிக்கு உள்பட்ட சின்னவேட்டுவபாளையம் முதல் பெரியவேட்டுவபாளையம் வரை செல்லும் சிப்காட் சாலையை ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் செப்பனிடும் பணிக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது. 
விழாவில், பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம்  பூமிபூஜை செய்து, பணியைத் தொடக்கி வைத்தார்.
இதில், பெருந்துறை வட்டாட்சியர் வீரலட்சுமி,  சிப்காட் திட்ட அலுவலர் சாய்லோகேஷ்,  பேரூராட்சி செயல் அலுவலர் உஷா, ஒன்றியச் செயலாளர் விஜயன், ம.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் கந்தசாமி, வேளாண்மை கூட்டுறவு விற்பனைச் சங்கத் தலைவர் அருள்ஜோதி செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/20/பெருந்துறை-சிப்காட்-சாலையை-ரூ-40-லட்சம்-மதிப்பில்-செப்பனிட-பூமிபூஜை-3003791.html
3003789 கோயம்புத்தூர் ஈரோடு மேட்டூர் மேற்குக் கரை பாசனப் பகுதியில் நெல் நடவுப் பணிகள் தீவிரம் DIN DIN Thursday, September 20, 2018 02:14 AM +0530 மேட்டூர் அணையின் மேற்குக் கரை பாசனப் பகுதிகளான பவானி, அம்மாபேட்டை கிராமப் பகுதிகளில் விவசாயிகள் நெல் நடவுப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 
மேட்டூர் மேற்குக் கரை வாய்க்கால் பாசனத்துக்கு கடந்த ஜூலை மாதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம், ஈரோடு மாவட்டத்தில் 17 ஆயிரத்து 230 ஏக்கர் நிலங்கள்  பாசன வசதி பெறுகிறது. 
மேட்டூர் அணைக்குத் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து நிரம்பியபோதிலும், வாய்க்கால் பாசனத்துக்குத் திறக்கப்பட்ட தண்ணீர் விவசாய நிலங்களுக்கு வந்து சேர்வதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதனால், நெல் சாகுபடி செய்ய கடைமடைப் பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டாத நிலை இருந்தது.
கிணறுகளுடன் கூடிய பாசன நிலங்கள் வைத்துள்ளோர் முன்னதாகவே நாற்று விட்டதோடு, நெல் நடவுப் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், வாய்க்காலைப் பராமரித்த விவசாயிகள், கிளை வாய்க்கால்களில் தண்ணீர் வந்து சேர்ந்ததால் நடவுப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவ்வப்போது, மழை பெய்வதால் நடவுப் பணி சிக்கலில்லாமல் நடைபெற்று வருகிறது. 
பவானி, அம்மாபேட்டை பகுதிகளில் நடவுப் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேட்டூர் மேற்குக் கரை பகுதியில் பிபிடி சன்ன ரகம் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. 
மேலும், அதிக விளைச்சல் தரும் ஏடிடி 39, வெள்ளைப் பொன்னி ஆகிய நெல் ரகங்களும் பயிரிடப்பட்டுள்ளன. வேளாண் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் நடவுப் பணிக்கு ஆள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. 
ஆள் தட்டுப்பாடு நிலவுவதால் பரவலாக விவசாயிகள் இயந்திரம் மூலமாக நடவுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 
கடைமடைப் பகுதிகளில் தாமதமாக நெல் விதைப்பில் ஈடுபட்டதால் விவசாயிகள் நடவுப் பணிகளைத் தொடங்காமல் உள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/20/மேட்டூர்-மேற்குக்-கரை-பாசனப்-பகுதியில்-நெல்-நடவுப்-பணிகள்-தீவிரம்-3003789.html
3003788 கோயம்புத்தூர் ஈரோடு பவானியில் மணல் கடத்தப் பயன்படுத்தப்பட்ட 2 டிராக்டர்கள் பறிமுதல் DIN DIN Thursday, September 20, 2018 02:13 AM +0530 பவானியில் வருவாய்த் துறையினர் நடத்திய திடீர் சோதனையின்போது, மணல் கடத்தப் பயன்படுத்தப்பட்ட இரு டிராக்டர்களை பறிமுதல் செய்தனர்.
பவானி ஆற்றில் மூலப்பாளையம் பகுதியிலிருந்து மணல் கடத்திச் செல்வதாக ஈரோடு வடக்கு வருவாய் ஆய்வாளர் தாமரைக்கொடிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஈரோடு மண்டல துணை வட்டாட்சியர் சண்முகசுந்தரம், கிராம நிர்வாக அலுவலர்கள் அரச்சலகுமார், சிலம்பரசி கொண்ட குழுவினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.  அப்போது, சென்னாநாயக்கனூர் அருகே வேகமாக வந்த டிராக்டரை வழிமறித்து சோதனையிட்டபோது, ஆற்றிலிருந்து மணல் கடத்திச் சென்றது தெரியவந்தது. 
இதேபோல, பவானி வட்டாட்சியர் வி.சிவகாமி தலைமையில் வருவாய்த் துறையினர் பவானி பழைய பேருந்து நிலையம் அருகே சென்ற டிராக்டரில் சோதனை நடத்தினர். அப்போது, மேற்பரப்பில் செயற்கை மணல் காணப்பட்டது. சந்தேகப்பட்ட அதிகாரிகள் சோதனையிட்டபோது ஆற்று மணல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இரு டிராக்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டு பவானி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு எடுத்து வரப்பட்டன.
பவானி துணை வட்டாட்சியர் (பயிற்சி) எம்.சரவணன் தலைமையில், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்ராஜா, அலுவலர்கள் பழனிபுரம் பகுதியில் பவானி ஆற்றில் இறங்கி செவ்வாய்க்கிழமை இரவு திடீர் சோதனை நடத்தினர். அப்போது, 300 க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் கடத்தலுக்குத் தயார் நிலையில் இருப்பது தெரியவந்தது. 
இதையடுத்து, அப்பகுதியினர் உதவியுடன் மூட்டைகளிலிருந்த மணல் மீண்டும் ஆற்றுக்குள் கொட்டப்பட்டது. பின்னர், சேகரிக்கப்பட்ட சிமென்ட் பைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. மணல் திருட்டைத் தடுக்க அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். ஆனாலும், மணல் திருட்டு துணிகரமாக நடைபெற்று வருகிறது. எனவே, மணல் திருட்டில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/20/பவானியில்-மணல்-கடத்தப்-பயன்படுத்தப்பட்ட-2-டிராக்டர்கள்-பறிமுதல்-3003788.html
3003786 கோயம்புத்தூர் ஈரோடு செப்டம்பர் 20 மின் தடை DIN DIN Thursday, September 20, 2018 02:13 AM +0530 ஈங்கூர்
ஈங்கூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இங்கிருந்து மின் விநியோகம் நடைபெறும் பெருந்துறை கோட்டத்தைச் சார்ந்த பெருந்துறை தெற்கு பகுதி, கொங்கு கல்லூரி,  நந்தா கல்லூரி, மூலக்கரை, வெள்ளோடு, கவுண்டச்சிபாளையம், அனுமன்பள்ளி, அவல்பூந்துறை, ஈங்கூர்,  பாலப்பாளையம், மு.பிடாரியூர், வடக்குப் பகுதி, வேலாயுதம்பாளையம், 1010 நெசவாளர் காலனி, பெருந்துறை ஆர்.எஸ். ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை (செப்டம்பர் 20) காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின் தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/20/செப்டம்பர்-20-மின்-தடை-3003786.html
3003783 கோயம்புத்தூர் ஈரோடு அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் தற்காலிக பணிநீக்கம் DIN DIN Thursday, September 20, 2018 02:11 AM +0530 கோபி அருகே நம்பியூர், பட்டிமணியகாரன்பாளையம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவி ஒருவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு, இப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர்தான் காரணம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி பெற்றோர், உறவினர்கள், பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கோபி காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் செல்வம், நம்பியூர் வட்டாட்சியர் உமா மகேஸ்வரன், கல்வித் துறை அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், 2 நாள்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன்பேரில் முற்றுகைப் போராட்டத்தைக்  கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதையடுத்து, ஆசிரியர் சண்முகம் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து புதன்கிழமை தற்காலிகப் பணீநீக்கம் செய்யப்பட்டுள்ளார். நம்பியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/20/அரசு-மாதிரி-மேல்நிலைப்-பள்ளி-ஆசிரியர்-தற்காலிக-பணிநீக்கம்-3003783.html
3003781 கோயம்புத்தூர் ஈரோடு விவசாயியை கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை DIN DIN Thursday, September 20, 2018 02:10 AM +0530 விவசாயியை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோபி நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.    
கோபி அருகே உள்ள செம்மாம்பாளையம், வெள்ளியங்காட்டு தோட்டத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (45), விவசாயி. இவருக்கும், நம்பியூர் அருகே உள்ள குட்டகத்தைச் சேர்ந்த உறவினரான சதீஷ்குமாருக்கும் (25) சொத்துத் தகராறு இருந்து வந்தது. 
இந்நிலையில், கடந்த 20.11.2017 அன்று பழனிசாமி தனது வீட்டுத் தோட்டத்தில் இரவு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த சதீஷ்குமார் அரிவாளால் பழனிசாமியை வெட்டிக் கொலை செய்ததாகவும், மேலும்  இவரது மகன் துரைசாமியையும் அரிவாளால் வெட்டிக் காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்து, தலைமறைவாகியதாகவும் கூறப்பட்டது.  
இச்சம்பவம் குறித்து வரப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தனர். பின்னர், கோபி 3 ஆவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. நீதிபதி மணி வழக்கை விசாரித்து சதீஷ்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/20/விவசாயியை-கொலை-செய்த-வழக்கில்-இளைஞருக்கு-ஆயுள்-தண்டனை-3003781.html
3003779 கோயம்புத்தூர் ஈரோடு வரி உயர்வைக் கைவிடக் கோரி ஈரோட்டில் கையெழுத்து இயக்கம் DIN DIN Thursday, September 20, 2018 02:10 AM +0530 மாநகராட்சி சார்பில் உயர்த்தப்பட்டுள்ள வரி உயர்வைக் கைவிட வேண்டும், வளர்ச்சிப் பணிகளை விரைவுபடுத்த வலியுறுத்தி ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்துப் பெறும் இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது.
ஈரோடு வரி செலுத்துவோர் சங்கத் தலைவர் பாரதி தலைமையில் கையெழுத்து இயக்கம் நடத்தினர். வீட்டு உரிமையாளர், குடியிருப்போர் நலச் சங்கங்கள் உள்பட பல்வேறு அமைப்பினர் சேர்ந்து கையெழுத்து பெற்றனர். 
தமிழக அரசு வீட்டுக்கு 50 சதவீதமும், கடை உள்ளிட்ட வணிக நிறுவனங்களுக்கு 100 சதவீதம் வரையும் சொத்து வரியை அதிரடியாக உயர்த்தி உள்ளது. இதைக் குறைக்க வேண்டும். வரி உயர்வு என்பது ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை 5  சதவீதம் முதல் 10 சதவீதம் வரை மட்டும் இருக்க வேண்டும். சொத்து வரியுடன், குப்பை வரியை சேர்த்து வசூலிப்பதை நிறுத்த வேண்டும்.
ஈரோடு மாநகரில் சேதமடைந்த சாலைகளை முழுமையாக சீரமைக்க வேண்டும். காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியும், ஈரோடு மாநகராட்சிப் பகுதிக்கு தட்டுப்பாட்டுடன் குடிநீர் வழங்கப்படுகிறது. நீரேற்று நிலையங்களில் உள்ள பழுதை முழுமையாக நீக்கம் செய்து, சீரான குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி  கையெழுத்து பெற்றனர். ஒரு லட்சம் கையெழுத்து பெற்ற பின், அவற்றை நகல் எடுத்து மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம், மக்கள் பிரதிநிதிகளிடம் வழங்க உள்ளனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/20/வரி-உயர்வைக்-கைவிடக்-கோரி-ஈரோட்டில்-கையெழுத்து-இயக்கம்-3003779.html
3003778 கோயம்புத்தூர் ஈரோடு குப்பை வரியை ரத்து செய்ய வலியுறுத்தல் DIN DIN Thursday, September 20, 2018 02:10 AM +0530 திருமண மண்டபங்களுக்கு விதிக்கப்படும் குப்பை வரியை ரத்து செய்ய வேண்டும் என ஈரோடு மாநகர திருமண மண்டப உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஈரோட்டில் சங்கச் செயலர் டி.வரதராஜன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் மேலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 
திருமண மண்டபங்களில் நடக்கும் நிகழ்ச்சியின்போது சேரும் குப்பைக் கழிவுகளை அகற்றி, தூய்மை இந்தியா  திட்டத்தின் மூலம் மாநகராட்சி அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் திடக்கழிவு மேலாண்மை செய்ய மாநகராட்சியை வலியுறுத்த வேண்டும்.   மாநகராட்சியின் சொத்து வரி உயர்வு என்பது 5 முதல் 10 சதவீதத்துக்கு மிகாமல்  5  ஆண்டுகளுக்கு ஒரு முறை மிதமாக உயர்த்த வேண்டும். திருமண மண்டபத்தில் சேரும் குப்பைகளை அவ்வப்போது அகற்றி வரும் நிலையில் சொத்து வரி செலுத்தும்போது குப்பை வரியும் வசூலிக்கின்றனர். ஒரே வரி இனத்துக்கு இரு வரி செலுத்தும் நிலை உள்ளது.
எனவே, சொத்து வரியுடன் குப்பை வரியை வசூலிப்பதைத் தவிர்க்க வேண்டும். திருமண நிகழ்ச்சிகளில் தேவைக்கு அதிகமாக உணவு வகைகள் தயாரித்து மிஞ்சும்போது அவற்றை குப்பைத் தொட்டியில் வீணாக்குகின்றனர். அதைத் தவிர்ப்பதுடன், மின்சாரம், எரிவாயு, குடிநீர், பிற பயன்பாட்டுக்கான நீரை சிக்கனமாகப் பயன்படுத்த வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன. இதில், தலைவர் சுப்பிரமணியம், பொருளாளர் பி.தர்மராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி வரவேற்றார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/20/குப்பை-வரியை-ரத்து-செய்ய-வலியுறுத்தல்-3003778.html
3003776 கோயம்புத்தூர் ஈரோடு ரூ. 1.07 கோடிக்கு கொப்பரை ஏலம் DIN DIN Thursday, September 20, 2018 02:10 AM +0530 பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ. 1 கோடியே 7 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.
பெருந்துறை அதன் சுற்று வட்டாரப் பகுதி விவசாயிகள், 2,505 மூட்டைகளில் 1,16,000 கிலோ  கொப்பரையை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர்.
இதில், முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 92.50 க்கும், அதிகபட்சமாக ரூ. 96.15 க்கும் விற்பனையானது. இரண்டாம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 50.15 க்கும், அதிகபட்சமாக ரூ. 91.70 க்கும் விற்பனையானது. மொத்தம், ரூ. 1 கோடியே 7 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது.    
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/20/ரூ-107-கோடிக்கு-கொப்பரை-ஏலம்-3003776.html
3003774 கோயம்புத்தூர் ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் நாளை தேரோட்டம் DIN DIN Thursday, September 20, 2018 02:09 AM +0530 ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 21) நடைபெறவுள்ள தேரோட்ட விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயில் தேர்த்திருவிழா செப்டம்பர் 14 ஆம் தேதி கிராம சாந்தி பூஜையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, கொடியேற்றம், யாக சாலை பூஜை, திருமஞ்சனம் சாத்துபடியும் நடைபெற்று வருகின்றன. தினமும் இரவு, அன்னபட்சி வாகனம்,  சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், கருடசேவை, யானை வாகனம் திருவீதி உலாக் காட்சியும் நடைபெறுகிறது. இதையடுத்து, வியாழக்கிழமை திருக்கல்யாணம், இரவில் புஷ்ப பல்லக்கில் ஊர்வலமும் நடைபெறுகிறது.
வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள திருத்தேரோட்ட விழாவுக்காக கோயில் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேர் வெளியில் கொண்டு வரப்பட்டு தேர் சிற்பங்களுக்கு வார்னிஷ், தேர் துணி கட்டுவதற்கு ஏதுவாக சாரங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/20/கஸ்தூரி-அரங்கநாதர்-கோயிலில்-நாளை-தேரோட்டம்-3003774.html
3003773 கோயம்புத்தூர் ஈரோடு ஈரோடு பெரிய மாரியம்மன் கோயிலுக்கு அணையா விளக்கு காணிக்கை DIN DIN Thursday, September 20, 2018 02:09 AM +0530 ஈரோடு பெரிய மாரியம்மன் கோயிலுக்கு பக்தர் காணிக்கையாக அளித்த  அணையா விளக்கில் பக்தர்கள் எண்ணெய் ஊற்றி வழிபட்டனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நேரிட்ட தீ விபத்து சம்பவத்துக்குப் பிறகு அறநிலையத் துறை கட்டுபாட்டில் உள்ள கோயில்களில் தீ  விபத்துகளைத் தடுக்கவும், பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை அனைத்து கோயில் அலுவலர்கள், செயல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டது. 
அதன்படி, ஈரோட்டில் உள்ள கபாலீஸ்வரர், கஸ்தூரி அரங்கநாதர், திண்டல் வேலாயுதசாமி உள்ளிட்ட கோயில்களில்  பக்தர்கள் தனித்தனியாக அகல் விளக்கு ஏற்றும் நடைமுறைக்குத் தடை விதித்ததுடன், ஒரே விளக்கில் பக்தர்கள் எண்ணெயை ஊற்றும் வகையில் அணையா விளக்கு ஏற்பாடு செய்து வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஈரோடு பெரிய மாரியம்மன் கோயிலில் பக்தரால் காணிக்கையாக  அளிக்கப்பட்ட அணையா விளக்கு வைக்கப்பட்டுள்ளது. மாரியம்மன் சொரூபம் கொண்டதாக இந்த  விளக்கு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கில் சுமார் 10 லிட்டர் எண்ணெயும், கீழ் பாகத்தில் உள்ள கலனில் 200 லிட்டர் எண்ணெயும், மேல்புற கலனில் 30 லிட்டர் எண்ணெயும் சேமித்து வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த அணையா விளக்கை புதன்கிழமை கோயிலில் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில், கோயில் செயல் அலுவலர் ரமணிகாந்தன், ஊழியர்கள் கலந்துகொண்டனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் இந்த விளக்கில் சுத்தமான நல்லெண்ணெயை மட்டும் ஊற்ற வேண்டும் என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/20/ஈரோடு-பெரிய-மாரியம்மன்-கோயிலுக்கு-அணையா-விளக்கு-காணிக்கை-3003773.html
3003772 கோயம்புத்தூர் ஈரோடு தோட்டக் கலைப் பயிர்களுக்கு 1 ஆம் தேதிக்குள் காப்பீடு செய்யலாம் DIN DIN Thursday, September 20, 2018 02:09 AM +0530 தோட்டக் கலைப் பயிர்களுக்கு காரீப்  பருவத்தில் அக்டோபர் 1 ஆம் தேதிக்குள் காப்பீடு செய்யலாம் என  அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்ட  தகவல்:
நடப்பு காரீப் (2018) பருவத்தில் தோட்டக் கலைப் பயிர்களான மஞ்சள், வாழை, சின்ன வெங்காயம், மரவள்ளிப் பயிர்களுக்கு பயிர்க் காப்பீடு செய்யலாம் என்ற அறிவிப்பின்படி,          தோட்டக் கலைப் பயிர்களுக்கு காப்பீடு மதிப்பில் 5 சதவீதம் பிரீமியத் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வாழைக்கு ஏக்கருக்கு ரூ. 3,700, மஞ்சளுக்கு ரூ. 3,350, மரவள்ளிப் பயிருக்கு ரூ. 1,525, சின்ன வெங்காயம் பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 1,750 பிரீமியம் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காப்பீடு செய்வதற்கு அக்டோபர் 1 ஆம் தேதி கடைசி நாளாகும். 
 எனவே, தோட்டக் கலைப் பயிர்களை சாகுபடி செய்து வரும் விவசாயிகள் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்து பயனடையலாம். தங்கள் பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், பொது சேவை மையங்களில் உரிய ஆவணங்களுடன் அணுகி காப்பீடு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/20/தோட்டக்-கலைப்-பயிர்களுக்கு-1-ஆம்-தேதிக்குள்-காப்பீடு-செய்யலாம்-3003772.html
3003771 கோயம்புத்தூர் ஈரோடு பெருந்துறை சிப்காட்டில் 4,569 டன் திடக் கழிவுகள் அகற்றம் DIN DIN Thursday, September 20, 2018 02:08 AM +0530 பெருந்துறை சிப்காட் வளாகத்தில் இருந்து கடந்த 3 மாதங்களில் 4569.58 டன் திட நச்சுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, பெருந்துறை சிப்காட் வளாகத்தில் இருந்து 2018 ஜூன் 6 முதல் செப்டம்பர் 10 ஆம் தேதி வரை 3671.35 டன் திடக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும், மேற்கண்ட காலத்தில் 898.23 டன் கலப்பு உப்புகள் அகற்றப்பட்டுள்ளன. மொத்தம், 4569.58 டன் திட நச்சுக் கழிவுகள் சிப்காட் வளாகத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளன.
மேலும், பெருந்துறை சிப்காட் அருகிலுள்ள ஓடைக்காட்டூர் குளத்துக்குச் செல்லும் கசிவுநீர் தடுக்கப்பட்டுள்ளது. சிப்காட் வளாகத்தில் உள்ள பொது சுத்திகரிப்பு நிலையம் அருகில் இருந்து கசிவுநீர் வெளியேறி குட்டப்பாளையம் ஓடை வழியாகச் சென்று, ஓடைக்காட்டூர் குளத்தில் தேங்குவதைத் தடுத்து நிறுத்த குட்டப்பாளையம் அருகில் 35,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரும்பாலான நிலத்தொட்டி அமைக்கப்பட்டு, அதில் கசிவுநீர் சேமிக்கப்பட்டு டேங்கர் லாரி மூலம் தொழிற்சாலைகளுக்கு முறை வைத்து விநியோகிக்கப்பட்டு, மீண்டும் மறுசுழற்சி முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது செப்டம்பர் 7 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/20/பெருந்துறை-சிப்காட்டில்-4569-டன்-திடக்-கழிவுகள்-அகற்றம்-3003771.html
3003770 கோயம்புத்தூர் ஈரோடு அரசு வாகன ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் DIN DIN Thursday, September 20, 2018 02:08 AM +0530 ஈரோடு, பவானி வடிநில வட்ட நீர் வள ஆதாரத் துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலக ஜீப் ஓட்டுநருக்கான ஒரு பணியிடத்துக்கு தகுதியுள்ளஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு அலுவலகம் பரிந்துரைக்கும் நபர்கள் தவிர, இதர தகுதியுள்ள ஆண்கள், பெண்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் (முன்னுரிமை அற்றவர்) பொது(பெண்கள், ஆண்கள்) விண்ணப்பிக்கலாம். வயது, கல்வி, ஜாதி சான்று, ரேஷன் அட்டை நகல், ஓட்டுநர் உரிமம், அனுபவச் சான்று ஆகியவற்றை இணைத்து, கண்காணிப்புப் பொறியாளர், நீர் வள ஆதாரத் துறை, பவானி வடி நில வட்டம், மாவட்ட கருவூல கட்டடம், மூன்றாவது தளம், ஈரோடு 11 என்ற முகவரிக்கு அக்டோபர் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/20/அரசு-வாகன-ஓட்டுநர்-பணிக்கு-விண்ணப்பிக்கலாம்-3003770.html
3003769 கோயம்புத்தூர் ஈரோடு இட ஒதுக்கீட்டுப் போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி DIN DIN Thursday, September 20, 2018 02:08 AM +0530 தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் உயிர்நீத்த 21 பேருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி பவானியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாநில துணை பொதுச் செயலர் மு.வேலுசாமி தலைமையில் அலங்கரிக்கப்பட்ட தியாகிகள் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. ஈரோடு வடக்கு மாவட்டச் செயலர் எஸ்.சி.ஆர்.கோபால், மாநில அமைப்புச் செயலர் பி.சி.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
இதில், மாநில செயற்குழு உறுப்பினர் சாமிநாதன், மாவட்ட துணைச் செயலர் பெ.ரா.முருகானந்தம், நிர்வாகிகள் சண்முகம், திருமுருகன், மனோகரன், வேலுசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/20/இட-ஒதுக்கீட்டுப்-போராட்ட-தியாகிகளுக்கு-அஞ்சலி-3003769.html
3003768 கோயம்புத்தூர் ஈரோடு நல்லாசிரியர் விருது பெற்றவருக்குப் பாராட்டு DIN DIN Thursday, September 20, 2018 02:07 AM +0530 தமிழக அரசின் சிறந்த ஆசிரியராகத் தேர்வு செய்யப்பட்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற அந்தியூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியருக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. 
அந்தியூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் த.செல்வராஜ் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றார். இவருக்கு, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விருது வழங்கிப் பாராட்டுத் தெரிவித்தார். 
இவ்விருது பெற்ற தலைமையாசிரியர் செல்வராஜுக்கு அந்தியூர் அரசுப் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, அந்தியூர் சட்டப் பேரவை உறுப்பினர் ஈ.எம்.ஆர்.ராஜா தலைமை வகித்தார். வட்டாரக் கல்வி அலுவலர் தேவகி, அந்தியூர் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் சுப்பிரமணி, அரசு மருத்துவமனை மருத்துவர் கவிதா, ஓய்வூதியர் சங்கத் தலைவர் நல்லாசிரியர் கந்தசாமி, முதுகலை ஆசிரியை பாக்கியலட்சுமி, விவசாயிகள் சங்கத் தலைவர் தவசியப்பன், அனைத்து பொது நல அமைப்புத் தலைவர் த.கு.பத்மநாபன், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இயக்கத் தலைவர் த.ப.கோவிந்தராஜ் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். 
தொடர்ந்து, ஈரோடு மாவட்ட அளவில் பங்கேற்று நடித்தல் போட்டியில் மூன்றாமிடம் பிடித்த மாணவியருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், ஆசிரியர்கள் ஜெகதீஸ்வரி, தாமோதரன், குருவாயி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/20/நல்லாசிரியர்-விருது-பெற்றவருக்குப்-பாராட்டு-3003768.html
3003163 கோயம்புத்தூர் ஈரோடு அதிமுக அரசின் ஊழல்களைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் DIN DIN Wednesday, September 19, 2018 06:19 AM +0530 அதிமுக அரசின் பல்வேறு ஊழல்களைக் கண்டித்து, ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஈரோடு, வீரப்பன்சத்திரம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சு.முத்துசாமி தலைமை வகித்துப் பேசியதாவது:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி அதிமுக அரசின் மிகப்பெரிய ஊழல்களைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக அமைச்சர்கள், அதிகாரிகள், நிர்வாகிகள் வீடுகளில் சிபிஐ, வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையின் மூலம் ஊழல் முறைகேடுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதிமுகவினரின்  ஊழல்களால் பொதுமக்கள் பணம் சூறையாடப்பட்டு வருகிறது. குட்கா ஊழல் காரணமாக  லட்சக்கணக்கான இளைஞர்கள் போதைக்கு அடிமையாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. 
தரம் இல்லாத சாலைகளால் மக்கள் தினமும் விபத்துகளைச் சந்திக்கும் அவலம் தொடர்கிறது. இதை எல்லாம் ஒழுங்குபடுத்தவும், தவறுகள் தடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் சிபிஐ சோதனைகளில் சம்பந்தபட்டவர்கள் யாராக இருந்தாலும்  பதவி விலக வேண்டும் அல்லது பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த  ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது என்றார்.
இதில், மாநில நிர்வாகிகள் சச்சிதானந்தம், முன்னாள் எம்.பி. கந்தசாமி, அந்தியூர் செல்வராஜ், சந்திரகுமார், மாவட்ட நிர்வாகிகள் சுப்பிரமணி, பழனிசாமி, குமார் முருகேஷ் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/19/அதிமுக-அரசின்-ஊழல்களைக்-கண்டித்து-திமுகவினர்-ஆர்ப்பாட்டம்-3003163.html
3003162 கோயம்புத்தூர் ஈரோடு சக்கர நாற்காலி கூடைப்பந்துப் போட்டி: முழுவீச்சில் தயாராகி வரும் மைதானம் DIN DIN Wednesday, September 19, 2018 06:19 AM +0530 தேசிய அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி கூடைப்பந்துப் போட்டிக்காக ஈரோடு வ.உ.சி. பூங்கா விளையாட்டரங்கில் மைதானங்கள்  முழுவீச்சில் தயாராகி வருகின்றன.
அகில இந்திய வீல் சேர் கூடைப்பந்துக் கழகம் நடத்தும், தேசிய அளவிலான வீல்சேர் கூடைப்பந்துப் போட்டிகள் ஈரோட்டில் செப்டம்பர் 20 முதல் 23 ஆம் தேதி வரை ஈரோட்டில் நடைபெறவுள்ளது. இதில், நாடு முழுவதிலும் இருந்து 22 மாநிலங்களைச் சேர்ந்த ஆடவர், மகளிர் பிரிவுகளில் 23 அணிகள் பங்கேற்கவுள்ளன. இப்போட்டிகளுக்காக   இரண்டு கூடைப்பந்து மைதானங்கள் முழுவீச்சில் தயார் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 இதுகுறித்து, போட்டிக்கான ஏற்பாடுகளை செய்து வரும் தமிழ்நாடு வீல்சேர் கூடைப்பந்துக் கழக ஆலோசகர் மக்கள் ராஜன் கூறியதாவது: 
மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக வீல்சேர் கூடைப்பந்துப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. 5 ஆவது ஆண்டாக நடைபெறும் இப்போட்டியில்  22 மாநிலங்களைச் சார்ந்த 29 அணிகள் பங்கேற்கின்றன.
இதற்காக ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் சர்வதேசத் தரத்தில் 2 மைதானங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
மேலும், மழை வந்தால் ஆட்டம் தடைபடாமல் நடைபெற ஒரு மைதானத்தில்  மேற்கூறை அமைக்கப்படுகிறது. மாற்றுத் திறனாளி வீரர், வீராங்கனைகள் வசதிக்காக பிரத்யேகமான 2 ஓய்வு அறைகள் அமைக்கப்படுகிறது. விளையாட்டு வீரர்கள் தங்குமிடம், உணவு அனைத்தும் வெளியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 பரிசளிப்பு விழாவில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு வழங்கவுள்ளதாக
குறிப்பிட்டார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/19/சக்கர-நாற்காலி-கூடைப்பந்துப்-போட்டி-முழுவீச்சில்-தயாராகி-வரும்-மைதானம்-3003162.html
3003161 கோயம்புத்தூர் ஈரோடு மக்கள் குறைகேட்பு முகாம் DIN DIN Wednesday, September 19, 2018 06:18 AM +0530 பெருந்துறை ஒன்றியம், ஆயிக்கவுண்டம்பாளையத்தில் மக்கள் குறைக்கேட்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
முகாமில், சட்டப் பேரவை உறுப்பினர் தோப்பு என்.டி வெங்கடாசலம், மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  
இதில், பெருந்துறை ஒன்றியச் செயலாளர் விஜயன், அவைத் தலைவர் சந்திரசேகர், ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் எஸ்.பெரியசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/19/மக்கள்-குறைகேட்பு-முகாம்-3003161.html
3003160 கோயம்புத்தூர் ஈரோடு அதிமுகவில் இணைந்த அமமுக நிர்வாகிகள் DIN DIN Wednesday, September 19, 2018 06:17 AM +0530 பவானியை அடுத்த அம்மாபேட்டையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பிற கட்சிகளைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் திங்கள்கிழமை இணைந்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு, மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் என்.ஆர்.கோவிந்தராஜ் தலைமை வகித்தார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர்.சி.செல்வம் தலைமையில், அம்மாபேட்டை, வெள்ளிதிருப்பூர், ரெட்டிபாளையம், குரும்பபாளையம், மலையம்பாறைகாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர். 
இவர்களுக்கு, சுற்றுச்சூழல் துறை அமைச்சரும், ஈரோடு புறநகர் மாவட்ட அதிமுக செயலாளருமான கே.சி.கருப்பணன், சால்வை அணிவித்து வரவேற்பு தெரிவித்தார். இதில், அம்மாபேட்டை ஒன்றிய அதிமுக செயலர் வி.எஸ்.சரவணபவா, நெரிஞ்சிப்பேட்டை பேரூர் செயலாளர் எஸ்.எஸ்.மாரியப்பன், அம்மாபேட்டை ஒன்றிய ஜெ. பேரவைச் செயலர் ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/19/அதிமுகவில்-இணைந்த-அமமுக-நிர்வாகிகள்-3003160.html
3003159 கோயம்புத்தூர் ஈரோடு அஞ்சல் துறை சார்பில் ஓவியப் போட்டி: செப்டம்பர் 22 க்குள் விண்ணப்பிக்கலாம் DIN DIN Wednesday, September 19, 2018 06:17 AM +0530 இந்திய அஞ்சல் துறை சார்பில் நடத்தப்படும் ஓவியப் போட்டியில் பங்கேற்க விரும்புவோர் செப்டம்பர் 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து, ஈரோடு கோட்ட முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுரேக் ரகுநாதன் வெளியிட்ட தகவல்:
இந்திய அஞ்சல் துறையின் மேற்கு மண்டல அளவிலான தபால் தலை கண்காட்சி (நஅகஉஙடஉல-18) சேலம், அம்மாபேட்டை,  வைஷ்யா மஹாலில் அக்டோபர் 2 முதல் 4 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அஞ்சல் துறை சார்பில் "தமிழகத்தில் காந்தியும், விடுதலை இயக்கமும்' என்ற தலைப்பில் ஓவியப் போட்டி நடத்தப்படுகிறது. இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் ஓவியமானது சேலத்தில் நடைபெற உள்ள தாபல் தலை கண்காட்சியில் சிறப்பு தபால் உறையாக வெளியிடப்படும்.
போட்டிக்கான விதிமுறைகள்:
அனைத்து வயதினரும் கலந்துகொள்ளலாம். நுழைவுக் கட்டணம் இல்லை. ஏ-4 அளவு பேப்பர் அல்லது கேன்வாஸ் அட்டையில் வாட்டர் கலர், ஸ்கெட்ச், ஆயில் பெயிண்டிங் பயன்படுத்தி தங்களது கற்பனைத் திறனில் வரைய வேண்டும். ஓவியத்தின் பின்புறத்தில் பெயர், பிறந்த தேதி, முகவரி, செல்லிடப்பேசி எண் குறிப்பிட வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
ஆறுமுகம், போட்டி ஒருங்கிணைப்பு கமிட்டி செயலாளர், மேற்கு மண்டல தபால் நிலையம், கோவை - 641002 என்ற முகவரிக்கு செப்டம்பர் 22 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இதில் தேர்வு செய்யப்படும் ஓவியத்துக்கு முதல் பரிசு ரூ. 10 ஆயிரமும், 5 பேருக்கு தலா ரூ. 1,000 ஆறுதல் பரிசும் அளிக்கப்படும். மேலும், விவரங்களுக்கு 0424-2227077, 0424-2258066 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/19/அஞ்சல்-துறை-சார்பில்-ஓவியப்-போட்டி-செப்டம்பர்-22-க்குள்-விண்ணப்பிக்கலாம்-3003159.html
3003158 கோயம்புத்தூர் ஈரோடு ஈரோட்டில் உலக நன்மைக்காக காயத்ரி தேவி வீதி உலா DIN DIN Wednesday, September 19, 2018 06:17 AM +0530 ஈரோடு, காரைவாய்க்கால் சுயம்பு நாகர் ஆலயத்தில் விஸ்வகர்மா அமைப்பு சார்பில், உலக நன்மைக்காக காயத்ரி தேவி திருவீதி உலா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஐந்தொழில்கள் சிறப்பாக அமையவும், ஐந்தொழிலாளர்கள் ஒற்றுமைக்கும், உலக நன்மைக்கும், உலக அமைதி வேண்டியும், மானசாந்தி கிடைக்கவும், ஈரோடு காரைவாய்க்கால், சுயம்பு நாகர் ஆலயத்தில் விஸ்வகர்மா அமைப்பு சார்பில் ஆண்டுதோறும்  சிறப்பு விஸ்வகர்மா, காயத்ரி தேவி வழிபாடு நடத்தப்படுகிறது.
 அதன் தொடர்ச்சியாக, நடப்பு ஆண்டில் செவ்வாய்க்கிழமை காலை 7 முதல் 11 மணி வரை மஹா யாக வேள்வியும், தொடர்ந்து இரவு 7 மணிக்கு நடைபெற்ற விஸ்வகர்மா, காயத்திரி தேவி திருவீதி உலாவின்போது திரளான  பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். காரைவாய்க்காலில் தொடங்கிய திருவீதி உலா, கச்சேரி வீதி, மண்டபம் வீதி, பெரியார் வீதி வழியாக வந்து கோயிலில் நிறைவடைந்தது.
இதில், விஸ்வகர்மா மக்கள், பக்தர்கள், பொதுமக்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/19/ஈரோட்டில்-உலக-நன்மைக்காக-காயத்ரி-தேவி-வீதி-உலா-3003158.html
3003157 கோயம்புத்தூர் ஈரோடு இலவச கால்பந்துப் பயிற்சி: ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்கலாம் DIN DIN Wednesday, September 19, 2018 06:16 AM +0530 ஈரோடு, நாராயணவலசில் இயங்கி வரும் "யுனைடெட் ஸ்போர்ட்ஸ்' சார்பில், இலவச கால்பந்துப் பயிற்சி முகாம் செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இதில் பங்கேற்கலாம்.
தேசிய அளவில் வளர்ந்து வரும் கால்பந்து விளையாட்டு வீரர்களை, மாவட்ட, மாநில, தேசிய அளவில் தயார் செய்யும் நோக்கில் இந்த கால்பந்து முகாம் நடத்தப்படுகிறது. மாணவர்களுக்கு கால்பந்தின் அடிப்படைப் பயிற்சி, விளையாட்டு நுணுக்கங்கள், உணவு முறை குறித்த பாடம், முதலுதவி, யோகா உள்பட  பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. முகாமில் பயிற்சி பெறும் வீரர்களில்  சிறந்த வீரர்களாகத் தேர்வாகும் மாணவர்களுக்கு ஆண்டு முழுவதும் விளையாட்டுப் பயிற்சி, உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும்.
முகாமில், 5 முதல் 17 வயது வரையிலான ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம். முகாமிற்கு வரும்போது விளையாடத் தேவையான உபகரணங்கள், தண்ணீர் பாட்டில், விரிப்பு, சிற்றுண்டியை மாணவர்களே எடுத்து வர வேண்டும். தினமும் காலை 6 முதல் 8 மணி வரையும், மாலை 4 முதல் 6.30 மணி வரையிலும் பயிற்சி அளிக்கப்படும். விருப்பம் உள்ள  மாணவர்கள் தங்களது பெயரை 99940-46055 என்ற எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/19/இலவச-கால்பந்துப்-பயிற்சி-ஆர்வமுள்ளவர்கள்-பங்கேற்கலாம்-3003157.html
3003156 கோயம்புத்தூர் ஈரோடு ஓடத்துறை குளத்துக்கு முறைகேடாக தண்ணீர் நிரப்ப முயற்சி: விவசாயிகள் எதிர்ப்பு DIN DIN Wednesday, September 19, 2018 06:15 AM +0530 கீழ்பவானி முதன்மைக் கால்வாயின் அவசரகால நீர் போக்கி மூலம், சட்டத்துக்குப் புறம்பாக ஓடத்துறை குளத்துக்கு நீர் திறக்க முயற்சி செய்வதைத்  தடுத்து நிறுத்தக் கோரி, கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மனு அனுப்பியுள்ளனர். 
இதுகுறித்து, கூட்டமைப்புத் தலைவர் பி.காசியண்ணன், செயலாளர் கி.வடிவேல் ஆகியோர் அனுப்பிய மனு:
கீழ்பவானி முதன்மைக் கால்வாய் 35/6 மைலில் உள்ள அவசரகால நீர் போக்கி வழியாக சட்டத்துக்குப் புறம்பாக கடந்த மே 16 முதல் 20 வரை நீர் திறக்கப்பட்டு குளம் நிரப்பப்பட்டது. இதுகுறித்து முதல்வர் உள்பட  பல்வேறு துறையினருக்குப் புகார் மனுக்கள் அனுப்பிய பிறகே அப்பிரச்னை முடிவுக்கு வந்தது. இதனிடையே, ஓடத்துறை குளத்துக்கு பவானி ஆற்றிலிருந்து தண்ணீர் திறக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி வி.கே.வெங்கடாசலம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தர்.
கோவை மண்டல பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளர் அந்த மனு மீதான முடிவை எடுக்க வேண்டும் என  நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தலைமைப் பொறியாளர் அவ்வாறு திறக்க இயலாது என உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தார். 
அதில், ஓடத்துறை குளத்துக்கு மழை நீரும், கீழ்பவானி பிரதான வாய்க்காலின் கசிவு நீரை  மட்டுமே வழங்க முடியும் எனவும், அந்தக் குளம் வேறு எந்தப் பகுதிக்கும் குடிநீராதாரமாக  இல்லை என்ற நிலையில், இக்குளத்துக்கு தண்ணீரைத்  திறந்தால் கீழ்பவானி வாய்க்கால் செல்லும் பகுதிகளில் உள்ள அனைத்து குளங்களைச் சார்ந்தவர்களும் இதே கோரிக்கையை முன்வைக்கும் நிலை உருவாகும்.
இக்குளத்துப் பகுதியில் குடிநீர் ஆதாரத்துக்குத் தேவையான நடவடிக்கை மாவட்ட நிர்வாகத்தால் எடுக்கப்பட்டுள்ளதால், இக்குளத்தில் நீர் தேக்க குடிநீராதாரமும்,  நிலத்தடி நீர் உயர்வும் தேவை எனக் கூற முடியாது. எனவே,  ஓடத்துறை குளத்துக்கு நீர் திறக்க வேண்டியதில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக ஓடத்துறை குளத்துக்கு முறைகேடாக தண்ணீரைத் திறக்கும் முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும். அனுமதிக்கக் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/19/ஓடத்துறை-குளத்துக்கு-முறைகேடாக-தண்ணீர்-நிரப்ப-முயற்சி-விவசாயிகள்-எதிர்ப்பு-3003156.html
3003155 கோயம்புத்தூர் ஈரோடு ரூ. 3 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை DIN DIN Wednesday, September 19, 2018 06:15 AM +0530 கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 3 லட்சத்து 344 க்கு  நிலக்கடலை விற்பனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கொடுமுடி வட்டாரத்துக்கு உள்பட்ட பகுதிகளிலிருந்து விவசாயிகள், 190 மூட்டைகளில்  நிலக்கடலையை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். 
இதில், நிலக்கடலை கிலோ அதிகபட்சமாக ரூ. 49.40 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 43.30 க்கும் விற்பனையானது. மொத்தம், ரூ. 3 லட்சத்து 344 க்கு நிலக்கடலை விற்பனை நடைபெற்றது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/sep/19/ரூ-3-லட்சத்துக்கு-நிலக்கடலை-விற்பனை-3003155.html