Dinamani - கோயம்புத்தூர் - http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2941322 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் சூலூரில் கைவரிசை காட்டிய 4 திருடர்கள் கைது: ரூ.10.76 லட்சம் மதிப்பு பொருள்கள் பறிமுதல் DIN DIN Sunday, June 17, 2018 02:47 AM +0530 சூலூர் அருகே நடைபெற்ற திருட்டுகளில் தொடர்புடைய 4 திருடர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து ரூ.10.76 லட்சம் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சூலூர் அருகே சத்தியநாராயணபுரம், மேற்குஅரசூர், பட்டணம், கருமத்தம்பட்டி, காடாம்பாடி, திருச்சி மெயின்ரோடு, சூலூர் ஜெர்மன்கார்டன் ஆகிய பகுதிகளில் வீடுகளிலும், கடைகளிலும் தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன.
இதையடுத்து கருமத்தம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவோரை தேடிவந்தனர்.
மேலும், சூலூர் காவல் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த 20 காவலர்களை தற்காலிக பணிக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூடுதலாக அனுப்பி வைத்தார்.
இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை பல்வேறு இடங்களில் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்துக்கு இடமான வாகனங்களையும், சந்தேக நபர்களையும் பிடித்தனர். இவர்களில் அவிநாசியைச் சேர்ந்த ரங்கசாமி மகன் செல்வராஜ் (28), திருவாரூர் மாவட்டம், நன்னிலம் திருவஞ்சியம் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் ரமேஷ் (24), அவிநாசி ஆலத்தூர் வெங்கிட்டாபுரம் பகுதியைச் சேர்ந்த முத்து மகன் நாகேந்திரன் (24), பவானி ரோடு குடில் நகர் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி மகன் வெள்ளியங்கிரி (27) ஆகியோரைப் பிடித்து விசாரித்ததில், இவர்களுக்கு இப்பகுதிகளில் நடைபெற்ற திருட்டுச் சம்பவங்களில் தொடர்பிருப்பது தெரியவந்தது.
இவர்களிடம் இருந்து நகைகள், வெள்ளி பொருள்கள், ஹோம் தியேட்டர்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், மடிக் கணினி, செல்லிடப்பேசிகள், சங்கிலி பறிப்புக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.10.76 லட்சம் ஆகும்.
திருடர்களைப் பிடித்ததோடு, திருட்டுப் பொருள்களையும் பறிமுதல் செய்த காவல்துறையினரை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனிதா பாராட்டினார். அப்போது, பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் உரியவர்களிடம் விரைவில் ஒப்படைக்கப்படும் என்றார்.
அப்போது, கருமத்தம்பட்டி துணைக் காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், பயிற்சி துணைக் கண்காணிப்பாளர் அருண் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/17/சூலூரில்-கைவரிசை-காட்டிய-4-திருடர்கள்-கைது-ரூ1076-லட்சம்-மதிப்பு-பொருள்கள்-பறிமுதல்-2941322.html
2941321 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் பொள்ளாச்சியில் கைவல்ய நவநீத 4வது மாநில மாநாடு DIN DIN Sunday, June 17, 2018 02:47 AM +0530 கைவல்ய நவநீத 4வது மாநில மாநாடு பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெற்றது. தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையும் மாநாடு நடைபெறவுள்ளது.
சக்தி குழுமங்கள் மற்றும் என்ஐஏ கல்வி நிறுவனங்களின் தலைவர் ம.மாணிக்கம் தலைமை வகித்து மாநாட்டை தொடக்கி வைத்துப் பேசினார். கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், கௌமார மடாலயம் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், முதலமடை சிநேகம் டிரஸ்ட் நிர்வாகி சுனில்தாஸ் சுவாமிகள், கோவிலூர் ஆதீனம் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள், கோவை மாவட்ட தலைமை தத்துவ ஞான சபை தலைவர் மாணிக்கத்தாய் கதிர்வேல் காளிங்கராயர், ராமானந்த சுவாமிகள் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 500க்கும் மேற்பட்ட துறவிகள் மாநாட்டில் பங்கேற்றனர். மூன்று நாள்கள் மாநாட்டில் பல்வேறு ஆய்வுக் கருத்துக்களும், கேள்வி, பதில்களும் நடைபெற்றது. பல்வேறு ஆய்வாளர்களின் ஆய்வுக் கட்டுரைகள் கொண்ட மாநாட்டு மலர் வெளியிடப்பட்டது.
சனிக்கிழமை நடைபெற்ற மாநாட்டில் சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கலைவாணி காளிங்கராயர், காயத்ரி காளிங்கராயர், தம்பரானந்தா சுவாமிகள், சொரூபானந்தா மகராஜ், ராமானந்த மகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/17/பொள்ளாச்சியில்-கைவல்ய-நவநீத-4வது-மாநில-மாநாடு-2941321.html
2941319 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் ஓய்வுபெற்ற பெண் ஆய்வாளர் உள்பட இருவரிடம் 14 பவுன் நகை பறிப்பு DIN DIN Sunday, June 17, 2018 02:46 AM +0530 கோவையில் ஓய்வு பெற்ற பெண் காவல் ஆய்வாளர் உள்பட இருவரிடம் 14 பவுன் நகையை மர்ம நபர்கள் வெள்ளிக்கிழமை பறித்துச் சென்றனர்.
கோவை, கணபதி காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன், இவரது மனைவி இந்திராணி (62). இவர் கோவை மாநகர காவல் துறையில் ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் வீட்டின் அருகே உள்ள சிறுவர் பூங்கா அருகே வெள்ளிக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இந்திராணியின் கழுத்தில் இருந்த 8 பவுன் நகையைப் பறித்து விட்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து சரவணம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராப் பதிவைக் கொண்டு விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்: போத்தனூரை அடுத்த மாச்சம்பாளையத்தில் வசித்து வருபவர் சிவஞானம், இவரது மனைவி கற்பகம் (63). இவர் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் வீட்டின் அருகே வெள்ளிக்கிழமை நின்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள் கற்பகத்தின் கழுத்தில் இருந்த 6 பவுன் நகையைப் பறித்து விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து போத்தனூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல், சுந்தராபுரத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரி (39). இவர் வீட்டின் அருகே நடந்து சென்றபோது மர்ம நபர்கள் மகேஸ்வரியின் கழுத்தில் இருந்த நகையைப் பறிக்க முயன்றனர். ஆனால் அவர் கூச்சலிட்டதைத் தொடர்ந்து இருவரும் தப்பிச் சென்றனர்.
கோவை மாநகரில் ஒரே நாளில் இரு பெண்களிடம் மர்ம நபர்கள் நகையைப் பறித்துச் சென்றதோடு, மற்றொருவரிடம் நகையைப் பறிக்க முயன்றுள்ளனர்.
எனவே சுந்தராபுரம், கணபதி ஆகிய பகுதிகளில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/17/ஓய்வுபெற்ற-பெண்-ஆய்வாளர்-உள்பட-இருவரிடம்-14-பவுன்-நகை-பறிப்பு-2941319.html
2941317 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் தங்கும் விடுதியில் பி.எஸ்.என்.எல். ஊழியர் தற்கொலை DIN DIN Sunday, June 17, 2018 02:46 AM +0530 கோவையில் தனியார் தங்கும் விடுதியில் பி.எஸ்.என்.எல். ஊழியர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
தருமபுரி மாவட்டம், பொம்மிடி மால்லாபுரத்தைச் சேர்ந்தவர் விமலன் (35). இவர் கோவையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், கடந்த மூன்று நாள்களுக்கு முன்னர் ராம்நகரில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்துத் தங்கியிருந்தார்.
இதனிடையே, வெள்ளிக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் விமலன் கதவைத் திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் ஜன்னலைத் திறந்து பார்த்தபோது அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலின்படி சம்பவ இடத்துக்கு வந்த காட்டூர் போலீஸார் விமலனின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரது தற்கொலைக்கான காரணம் குறித்தும் விசாரிக்கின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/17/தங்கும்-விடுதியில்-பிஎஸ்என்எல்-ஊழியர்-தற்கொலை-2941317.html
2941315 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் 1250 மாணவ, மாணவியருக்கு ரூ.25 லட்சம் மதிப்பில் கல்வி ஊக்கத் தொகை DIN DIN Sunday, June 17, 2018 02:46 AM +0530 கோவை மாவட்ட ஒக்கலிகர் பொதுநல அறக்கட்டளை, மாவட்ட ஒக்கலிகர் மகாஜன சங்கம், நண்பர்கள் பொதுப்பணி மகாஜன சங்கம், ஸ்ரீ விஜயலட்சுமி அறக்கட்டளை சார்பில் 38-வது கல்வி ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி சிறுமுகையில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட ஒக்கலிகர் சங்கத் தலைவர் தம்பு தலைமை வகித்தார். காரமடை வட்டாரத் தலைவர் சோமசுந்தரம் வரவேற்றார்.
நிகழ்ச்சியில், 10, 12ஆம் வகுப்பு தேர்வில் சிறந்த மதிப்பெண் எடுத்த மாணவர்கள் 1250 பேருக்கு ரூ.25 லட்சம் மதிப்பில் கல்வி ஊக்கத் தொகையை கோவை ஸ்ரீ விஜயலட்சுமி அறக்கட்டளைத் தலைவர் ஓ.ஆறுமுகசாமி வழங்கினார். மேலும், கடந்த 10ஆம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் வெள்ளியங்காடு அரசுப் பள்ளி மாணவி சபிதா, மாற்றுத் திறனாளி மாணவி பத்மப்ரியா ஆகியோருக்கு தலா ரூ.5,000 ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.
விழாவில் குடியரசுத் தலைவர், தமிழக ஆளுநர் ஆகியோரிடம் சிறந்த ஊராட்சித் தலைவருக்கான விருது பெற்ற ஓடந்துறை ஊராட்சித் தலைவர் சண்முகத்துக்கு சாதனைச் செம்மல் விருது வழங்கப்பட்டது.
சிறந்த சமுதாயப் பணிகளுக்காக டாக்டர் பட்டம் பெற்ற காரமடை டிஆர்எஸ் சண்முகசுந்தரம் கெளரவிக்கப்பட்டார்.
நண்பர்கள் பொதுப் பணி சங்கச் செயலர் சோமசுந்தரம் நன்றி கூறினார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/17/1250-மாணவ-மாணவியருக்கு-ரூ25-லட்சம்-மதிப்பில்-கல்வி-ஊக்கத்-தொகை-2941315.html
2941314 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் ரூ.45 லட்சம் மதிப்பில் 36 காவல் நிலையங்களில் நூலகம்: ரோட்டரி சங்கம் ஏற்பாடு DIN DIN Sunday, June 17, 2018 02:46 AM +0530 கோவை மாவட்டத்தில் 36 காவல் நிலையங்களில் ரூ.45 லட்சம் மதிப்பில் நூலகம் அமைக்கும் பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது என ரோட்டரி சங்க பொதுநல அமைப்பின் தலைவர் மருத்துவர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
ரோட்டரி சங்கத்தின் சார்பில் சூலூர் காவல் நிலையத்தில் நூலகத் திறப்புவிழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கோவை ரோட்டரி சங்கத்தின் பொதுநல அமைப்பின் தலைவர் ராஜசேகர், ரோட்டரி சங்கத் தலைவர் சுமித்குமார் பிரசாத், செயலாளர் வினோத்குமார், இயக்குநர் அருண்குமார், கோவை காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், ஆய்வாளர் தங்கராஜ் உள்பட போலீஸார் கலந்துகொண்டனர்
விழாவில் ரோட்டரி சங்க பொதுநல அமைப்பின் தலைவர் மருத்துவர் ராஜேந்திரன் பேசுகையில், கோவை மாவட்டத்தில் 36 காவல் நிலையங்களில் ரூ.45 லட்சம் மதிப்பில் நூலகம் அமைக்கும் பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் போலீஸார் மற்றும் பொதுமக்கள் பயன்பெறுவர் என்றார்.
கருமத்தம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் பேசுகையில், காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வந்து காத்திருக்கும் பொதுமக்கள் இந்த நூலகத்தை பயன்படுத்தும் வகையில் உள்ளது. இந்த நூலகத்தில் சட்ட புத்தகங்களும், ஆன்மீகம், அறிவியல், பண்பாடு, கலாசாரம் சம்பந்தப்பட்ட புத்தகங்களும் தினசரி நாளிதழ்களும் இடம்பெற்றுள்ளன என்றார்.
விழாவில் காவல்துறையினர் மற்றும் ரோட்டரி சங்கதினர் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/17/ரூ45-லட்சம்-மதிப்பில்-36-காவல்-நிலையங்களில்-நூலகம்-ரோட்டரி-சங்கம்-ஏற்பாடு-2941314.html
2941313 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் கணபதி தமிழ்ச் சங்கம் சார்பில் திருக்குறள் பன்னாட்டு கருத்தரங்கம்: அக்டோபர் மாதம் நடைபெறுகிறது DIN DIN Sunday, June 17, 2018 02:45 AM +0530 கணபதி தமிழ்ச் சங்கம், பசுமை காப்பகம் சார்பில் வரும் அக்டோபர் மாதம் திருக்குறள் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
கணபதி தமிழ்ச் சங்கம், பசுமை காப்பகம் சார்பில் அக்டோபர் மாதத்தில் புறவாழ்வில் திருக்குறள் பயன்பாடு என்னும் தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அழைப்பிதழ் வெளியீட்டு விழா சின்னவேடம்பட்டியில் உள்ள கௌமார மடாலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த மலரை சிரவையாதீனம் குமரகுருபர சுவாமிகள் வெளியிட்டார்.
இதுகுறித்து கணபதி தமிழ்ச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் ந.நித்யானந்தபாரதி கூறுகையில்,பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவரும் ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் கட்டுரைக் கட்டணம் ரூ.300-ஐ செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும். ஆய்வு மாணவர்கள் தங்களது நெறியாளர், துறைத் தலைவரின் ஒப்புதலுடன் கட்டுரைகளை அனுப்ப வேண்டும். கட்டுரைகள் ஏ4 தாளில் 5 பக்கங்களுக்கு மிகாமல் 1.5 இடைவெளியில் பாமினி எழுத்துருவில் இருக்க வேண்டும்.
கட்டுரையின் தலைப்புக்கு கீழ் தங்களது முழு முகவரியையும் தட்டச்சு செய்திருக்க வேண்டும். கட்டுரையை ஞ்ஹய்ஹல்ஹற்ட்ண்ற்ஹம்ண்ப்ள்ஹய்ஞ்ஹம்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் என்ற முகவரிக்கும் அனுப்பலாம். கட்டுரையை சுருக்கவோ, திருத்தவோ, நீக்கவோ பதிப்புக் குழுவுக்கு உரிமை உண்டு என்றார்.
நிகழ்ச்சியில், சிரவையாதீன புலவரும், கருத்தரங்க ஆலோசகருமான கு.சிவலிங்கம், சிவகுமார், கரிகாலன், கோவிந்தராசு, குரு பழனிசாமி, மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு ந.நித்யானந்தபாரதி, நிறுவனத் தலைவர், கணபதி தமிழ்ச் சங்கம், பசுமை காப்பகம், 1,கல்கட்டி தோட்டம், பெரியார் நகர், கணபதி, கோவை-6, என்ற முகவரியிலும், 98422-52051 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/17/கணபதி-தமிழ்ச்-சங்கம்-சார்பில்-திருக்குறள்-பன்னாட்டு-கருத்தரங்கம்-அக்டோபர்-மாதம்-நடைபெறுகிறது-2941313.html
2941312 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் காரில் இருந்து செல்லிடப்பேசி திருட்டு: போலீஸில் புகார் DIN DIN Sunday, June 17, 2018 02:45 AM +0530 சூலூர் அருகே காரில் வைத்திருந்த செல்லிடப்பேசி திருடுபோனது குறித்து சூலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கோவை, காளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் இளவரசன் (25). இவர் இப்பகுதியில் ஹாலோ பிளாக் கற்கள் வியாபாரம் செய்து வருகிறார். சூலூர் பகுதியில் உள்ள தனது உறவினரைச் சந்திக்க வெள்ளிக்கிழமை மாலை இவர் சென்றுள்ளார். தனது காரை சூலூர் குளத்தேரி சாலையில் நிறுத்தி விட்டு சற்று தூரத்தில் நின்று உறவினரோடு பேசிக்கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்த போது, காருக்குள் அவர் வைத்திருந்த ரூ. 26 ஆயிரம் மதிப்புள்ள செல்லிடப்பேசி திருடு போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து இளவரசன் கொடுத்த புகாரின் பேரில் சூலூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/17/காரில்-இருந்து-செல்லிடப்பேசி-திருட்டு-போலீஸில்-புகார்-2941312.html
2941311 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் ரத்த தான விழிப்புணர்வு நிகழ்ச்சி DIN DIN Sunday, June 17, 2018 02:45 AM +0530 கோவை குனியமுத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில் சர்வதேச ரத்த தான தின விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு முதல்வர் பி.பேபி ஷகிலா தலைமை வகித்தார். நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர்கள் பேராசிரியர் அழகர்சாமி, சொர்ணலதா, மூர்த்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இதில், கோவை சாந்தி சோஷியல் சர்வீஸ் ரத்த வங்கியின் அலுவலர் சுரேஷ் பாபு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று ரத்த தான விழிப்புணர்வு உரையாற்றினார்.
அவர் பேசும்போது, இந்தியாவில் ஒவ்வொரு 2 நிமிடத்துக்கும் ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது. ஆண்டுதோறும் 23.40 கோடி யூனிட் ரத்தம் அறுவை சிகிச்சைகளுக்கும், 6.30 கோடி யூனிட்டு ரத்தம் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், 3.10 கோடி யூனிட் ரத்தம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், ஒரு கோடி யூனிட் ரத்தம் மகப்பேறு சிகிச்சைக்கும் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் 50 கோடி ரத்தக் கொடையாளர்கள் இருந்தாலும் 12 லட்சம் யூனிட் ரத்தம் தேவைக்கும் குறைவாகவே உள்ளது. ரத்த தானம் செய்வதால் உடல் எடை குறைந்து ஆரோக்கிய வாழ்வு வாழ முடியும். தானம் செய்த 48 மணி நேரத்தில் புதிய ரத்த அணுக்கள் உற்பத்தியாகிவிடுகிறது. ரத்த தானம் செய்பவர்களுக்கு இருதய கோளாறுகளும், புற்று நோய் பாதிப்பும் குறைவாகவே ஏற்படுகிறது என்றார். இந்த நிகழ்ச்சியில் திரளான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/17/ரத்த-தான-விழிப்புணர்வு-நிகழ்ச்சி-2941311.html
2941309 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் ரமலான் சிறப்புத் தொழுகை DIN DIN Sunday, June 17, 2018 02:45 AM +0530 கோவையில் ரமலான் பண்டிகையை ஒட்டி சனிக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகைகளில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில், ஒப்பணக்கார வீதி, பூ மார்க்கெட், கோட்டைமேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்புத் தொழுகைகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அதே போல், பூ மார்க்கெட் பள்ளிவாசல் மைதானம், கரும்புக்கடையில் உள்ள இஸ்லாமிய மெட்ரிக் பள்ளியில் உள்ள திறந்தவெளி அரங்குகளிலும் சனிக்கிழமை காலை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மேலும், ரமலானை ஒட்டி புத்தாடை அணிந்து ஒருவருக்கு ஒருவர் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்திக் கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/17/ரமலான்-சிறப்புத்-தொழுகை-2941309.html
2941308 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் மேட்டுப்பாளையத்தில் 10 ஆயிரம் பேர் சிறப்புத் தொழுகை DIN DIN Sunday, June 17, 2018 02:44 AM +0530 ரமலானை முன்னிட்டு மேட்டுப்பாளையம்-உதகை சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் 25 பள்ளி வாசல்களைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்ற சிறப்புத் தொழுகை சனிக்கிழமை நடைபெற்றது.
புனித ரமலானையொட்டி மேட்டுப்பாளையம் நகர பகுதியிலுள்ள இஸ்லாமியர்கள் அதிகாலையிலேயே எழுந்து குளித்து புத்தாடை அணிந்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். பின்னர் காலை 8 மணியளவில் மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளின் ஜமாத்துக்களைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் அனைவரும் ஊர்வலமாக புறப்பட்டு உதகை சாலையிலுள்ள ஈத்கா மைதானத்திற்கு வந்து சிறப்புத் தொழுகை நடத்தினர்.
இதில் ஐக்கிய ஜமாத் தலைவர் இஸ்மாயில், அனைத்து வணிகர்கள் பேரவை அமைப்பாளர் ஹபிபுல்லா, எம்ஆர்டி ருக்முதீன், அனைத்து இஸ்லாம் இயக்கங்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முகமது அலி உட்பட அனைத்து பகுதிகளிலிருந்தும் 10 ஆயிரம் பேர் பங்கேற்று தொழுகையில் ஈடுபட்டனர்.
தினமணி ஈகைத்திருநாள் மலர் விற்பனை:
ஈத்கா மைதானம் அருகே கோவை தினமணி சார்பில் விற்பனை அரங்கு அமைக்கப்பட்டிருந்தது.
அதில் தினமணி சார்பில் வெளியிடப்பட்ட ஈகைத் திருநாள் சிறப்பு மலர் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. தொழுகை முடித்து வந்த இஸ்லாமியர்கள் ஆர்வமுடன் சிறப்பு மலரை வாங்கிச் சென்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/17/மேட்டுப்பாளையத்தில்-10-ஆயிரம்-பேர்-சிறப்புத்-தொழுகை-2941308.html
2941304 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் ஸ்டாலினின் முதல்வர் கனவு பலிக்காது: சட்டப் பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் DIN DIN Sunday, June 17, 2018 02:43 AM +0530 ஆட்சியை கவிழ்த்து குறுக்கு வழியில் முதல்வர் ஆகலாம் என்ற ஸ்டாலின் எண்ணம் பலிக்காது என சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தெரிவித்தார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த சேர்வக்காரன்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட எஸ்.நாகூர் பகுதியில் சூலக்கல் ஆறு கலக்கும் சிற்றாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டித்தரவேண்டும் விவசாயிகள் சார்பில் சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமனிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, ரூ.5 லட்சம் மதிப்பில் தடுப்பணை கட்டுவதற்கான பூமி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்று பணியை தொடக்கி வைத்த பொள்ளாச்சி வி.ஜெயராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் மக்கள் நன்மதிப்பைப் பெற்று தேர்தலை சந்தித்து ஆட்சிக்கு வர முடியாத ஸ்டாலின், எப்படியாவது அதிமுக ஆட்சியை கவிழ்த்து குறுக்கு வழியில் முதல்வர் ஆகிவிடலாம் என்று நினைக்கிறார். அவரின் இந்த எண்ணம் பலிக்காது.
தமிழக விவசாயிகளின் நலம் காக்கும் ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வல்லுநர் குழு அமைத்து தமிழக அரசு ஆய்வு மேற்கொண்டு வருகிறது என்றார்.
உடன், கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர்.ஏ.சக்திவேல், அதிமுக நிர்வாகிகள் வீராசாமி, தனசேகர், கிரி, மோகன், சிவசாமி, ராஜசேகர் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/17/ஸ்டாலினின்-முதல்வர்-கனவு-பலிக்காது-சட்டப்-பேரவை-துணைத்தலைவர்-பொள்ளாச்சி-விஜெயராமன்-2941304.html
2941302 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் பிஏபி: முக்கிய அணைகளின் நீர் இருப்பு நிலவரம் DIN DIN Sunday, June 17, 2018 02:43 AM +0530 ரம்பிக்குளம்- ஆழியாறு (பிஏபி) திட்டத்தின் முக்கிய அணைகளில் புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நீர் இருப்பு நிலவரம்:
சோலையாறு அணை: மொத்த உயரம் 160 அடி. இதில் 134 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து 2048 கன அடி, வெளியேற்றம் இல்லை.
பரம்பிக்குளம் அணை: மொத்த உயரம் 72 அடி. இதில் 17.20 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து 2720 கன அடி, வெளியேற்றம் 7 கன அடி.
ஆழியாறு அணை: மொத்த உயரம் 120 அடி. இதில் 69.45 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து 280 கன அடி, வெளியேற்றம் 69 கன அடி.
திருமூர்த்தி அணை: மொத்த உயரம் 60 அடி. இதில் 12.65 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து 20 கன அடி, வெளியேற்றம் 26 கன அடி.
அமராவதி அணை: மொத்த உயரம் 90 அடி. இதில் 62.17 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து 736 கன அடி, வெளியேற்றம் 2179 கன அடி.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/17/பிஏபி-முக்கிய-அணைகளின்-நீர்-இருப்பு-நிலவரம்-2941302.html
2941158 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்கக் கோரும் மனுவை குடியரசுத் தலைவர் மீண்டும் பரிசீலிக்க வேண்டும் DIN DIN Sunday, June 17, 2018 01:04 AM +0530 முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக் கோரும் தமிழக அரசின் மனுவை குடியரசுத் தலைவர் மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என டி.டி.வி.தினகரன் வலியுறுத்தினார்.
இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் அவர் சனிக்கிழமை கூறியதாவது:
சட்டப் பேரவை உறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்க வழக்கில் உயர் நீதிமன்றத் தீர்ப்பால் இந்த ஆட்சியின் ஆயுள்காலம் மேலும் சில நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் 3ஆவது நீதிபதியிடம் வழக்கைத் திரும்பப் பெறுவதாகக் கூறி மனு தாக்கல் செய்தால் அந்தத் தொகுதியில் இடைத் தேர்தல் நடத்தப்படும். அப்போது நமது பலத்தை நிரூபிப்போம் என்று தங்க தமிழ்ச்செல்வன் என்னிடம் கூறியுள்ளார். அதற்கு நான் ஒப்புதல் அளித்திருக்கிறேன். அதே நேரம் மற்ற 17 எம்.எல்.ஏ.க்கள் நீதிமன்றம் மூலமாகவே சட்ட நடவடிக்கையைத் தொடரலாம் என்று தெரிவித்துள்ளனர். சேலம் - சென்னை 8 வழிச் சாலை திட்டத்தை சேலம் மக்களே எதிர்க்கின்றனர். இந்த சாலைக்கான பணிகள் அனைத்தும் முதல்வரின் உறவினர்களுக்கே வழங்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடியில் அப்பாவி இளைஞர்களை போலீஸார் இன்னும் தேடித் தேடி கைது செய்து வருகின்றனர். இது கண்டனத்துக்குரியது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்கக் கோரும் தமிழக அரசின் மனுவுக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகிய ராஜீவின் குடும்பத்தினரே எதிர்ப்புத் தெரிவிக்காத நிலையில், மனுவை குடியரசுத் தலைவர் பரிசீலனை செய்து அவர்களை விடுதலை செய்திருக்கலாம். இருப்பினும், இனியாவது மீண்டும் 7 பேர் மனுவை மறுபரிசீலனை செய்து அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/17/ராஜீவ்-கொலையாளிகளை-விடுவிக்கக்-கோரும்-மனுவை-குடியரசுத்-தலைவர்-மீண்டும்-பரிசீலிக்க-வேண்டும்-2941158.html
2941138 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் கோவை குற்றாலத்தில் மீண்டும் வெள்ளம்: சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை DIN DIN Sunday, June 17, 2018 01:00 AM +0530 கோவை குற்றாலம் அருவியில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஞாயிற்றுக்கிழமையும் (ஜூன் 17) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையால் கோவை குற்றாலம் அருவிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, கடந்த சில நாள்களாக அருவிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த வியாழன், வெள்ளிக்கிழமைகளில் சிறுவாணி நீர்ப் பிடிப்புப் பகுதியில் மழையின் அளவு சற்று குறைந்தது. இதனால் அருவியில் வெள்ளம் குறைத்து இயல்பு நிலைக்குத் திரும்பியது.
இதைத் தொடர்ந்து, கோவை குற்றாலம் அருவியில் வனத் துறையினர் சனிக்கிழமை சீரமைப்புப் பணியில் ஈடுபட்டனர். வெள்ளப் பெருக்கின்போது உருண்டு வந்த பாறைகள், கற்களை அப்புறப்படுத்தியும், அருவிக்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட மண் சரிவை சீரமைக்கும் பணியிலும் ஈடுபட்டனர். மேலும், ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கவும் திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில்,கோவை குற்றாலம் அருவியில் சனிக்கிழமை மாலை 5 மணிஅளவில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, அருவியில் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. ஆகவே, ஞாயிற்றுக்கிழமையும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினர் தடைவிதித்துள்ளனர்.
மேலும், திங்கள்கிழமை வார விடுமுறை என்பதால் நீரின்அளவு குறைந்தால் வரும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 19) அனுமதி வழங்கப்படும் என்று போளுவாம்பட்டி வனச் சரகர் பழனிராஜா தெரிவித்துள்ளார்.
சிறுவாணியில் மழை: இதனிடையே, சிறுவாணி அணைக்கட்டு பகுதியிலும் சனிக்கிழமை மாலை மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால் சிறுவாணி அணையின் நீர் மட்டம் 44 அடியை எட்டியுள்ளது. மேலும் முழுக் கொள்ளவை எட்டுவதற்கு இன்னும் 6அடி தேவைப்படுகிறது. இதே போல் மழை நீடித்தால் விரைவில் சிறுவாணி அணை நிரம்ப வாய்ப்புள்ளதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/17/கோவை-குற்றாலத்தில்-மீண்டும்-வெள்ளம்-சுற்றுலாப்-பயணிகளுக்குத்-தடை-2941138.html
2941136 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் உடனடியாகத் தீர்ப்பு வழங்க வேண்டும்: திருநாவுக்கரசர் வலியுறுத்தல் DIN DIN Sunday, June 17, 2018 01:00 AM +0530 தமிழகத்தில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் விரைவில் இறுதித் தீர்ப்பு வழங்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.
உதகை பேருந்து விபத்தில் காயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக கோவைக்கு சனிக்கிழமை வந்த திருநாவுக்கரசர், மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உதகை பேருந்து விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்குத் தமிழக அரசு ரூ. 2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது. சுனாமி, இயற்கை சீற்றம் போன்றவற்றில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 20 லட்சம் வரை வழங்கி வரும் அரசு, இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ. 20 லட்சம் வழங்க வேண்டும். மேலும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் குணமாக பல மாதங்கள் ஆகும் என்பதால் அவர்களது குடும்பத்துக்குத் தேவையான நிதியுதவியையும் அரசு வழங்க வேண்டும். உதகை மலைப்பாதை அதிக வளைவு, நெளிவுகளைக் கொண்டது என்பதால் அங்கு தரமான பேருந்துகளை இயக்க வேண்டும்.
மேலும், மலைப் பாதையில் அடிக்கடி விபத்து நடைபெறுவதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க ஏதுவாக அங்கு பன்னோக்கு வசதி கொண்ட மருத்துவமனை அமைக்க வேண்டும்.
தற்போது அங்கு மூடப்பட்டுள்ள ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையிலேயே இந்த மருத்துவமனையை அமைக்கலாம். இல்லாவிட்டால் உதகையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும்.
ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 7 பேரையும் விடுவிக்கக் கோரும் தமிழக அரசின் மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்ட நிலையில் அரசியல்ரீதியாக எந்த முயற்சியும் செய்ய முடியாது. நீதிமன்றம் மூலம்தான் நிவாரணம் பெற முயற்சிக்க வேண்டும்.
ராஜீவ் கொலையாளிகள் தங்களை கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என கூறியிருப்பதாகத் தெரிகிறது. அவர்கள் விடுதலையை நம்பி இருந்து கருணை மனு நிராகரிக்கப்பட்டதால் ஏற்பட்ட வருத்தத்தில் அவ்வாறு சொல்லி இருக்கலாம். இருப்பினும் அது ஏற்புடைய கருத்து அல்ல.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் இரண்டு நீதிபதிகளும் இருவேறு விதமான தீர்ப்பை வழங்கியுள்ளனர். இதனால் அந்த எம்.எல்.ஏ.க்கள் பதவியில் இருக்கின்றனரா, இல்லையா என்பதில் குழப்பம் நீடிக்கிறது. நீதி தற்போது திரிசங்கு நிலையில் இருப்பதால் காலத்தைக் கருத்தில் கொண்டு 3ஆவது நீதிபதி மிக விரைவில் இறுதித் தீர்ப்பை வழங்க வேண்டும். ஏனெனில் 18 எம்.எல்.ஏ.க்களும் பதவி நீக்கம் செய்யப்பட்டு ஏற்கெனவே 8 மாதங்களாகிவிட்டது. இந்தப் பிரச்னை வெறுமனே 18 பேர் சம்பந்தப்பட்டது அல்ல. சுமார் 45 லட்சம் மக்களின் பிரச்னை ஆகும். மேலும் இந்த அரசுக்கு ஸ்திரத்தன்மை உள்ளதா என்பதும் இந்தத் தீர்ப்பின் முடிவில் தெரியவரும் என்றார்.
மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார், கணேஷ் எம்.எல்.ஏ., மாவட்ட முன்னாள் தலைவர் மகேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/17/18-எம்எல்ஏக்கள்-வழக்கில்-உடனடியாகத்-தீர்ப்பு-வழங்க-வேண்டும்-திருநாவுக்கரசர்-வலியுறுத்தல்-2941136.html
2941110 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் சிறுத்தையைப் பிடிக்க நடவடிக்கை: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல் DIN DIN Sunday, June 17, 2018 12:54 AM +0530 கோவை மாவட்டம், வால்பாறையில் சிறுத்தை தாக்கி பெண்உயிரிழந்துள்ள நிலையில், வனத் துறையின் மெத்தனப் போக்கு காரணமாகவே இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் மாவட்டச் செயலர் வி.ராமமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை:
வால்பாறையில் உள்ள காஞ்சமலை எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பில் வெள்ளிக்கிழமை துணி துவைத்துக் கொண்டிருந்த பெண்னை சிறுத்தை தாக்கி கொன்றுள்ளது என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
இந்த ஆண்டு மட்டும் தொடர்ந்து 10க்கும் மேற்பட்ட முறை பொதுமக்கள் மீது சிறுத்தை தாக்குதல் நடைபெற்றுள்ளது.
இதில், ஒரு சிறுவன், இரண்டு பெண்கள் என மூன்று பேர் பலியாகியுள்ளனர். மேலும், சின்கோனா பகுதியில் வியாழக்கிமையன்றும் சிறுத்தை ஒரு பெண்ணை தாக்கியுள்ளது. அவர் ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோல், வால்பாறை வாட்டர் பால்ஸ் எஸ்டேட் பகுதியில் கரடி தாக்கி ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
சிறுத்தை தாக்கி பலியாகியுள்ள காஞ்சமலை எஸ்டேட் பகுதி பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.
மேலும், சின்கோனாவில் காயமடைந்த பெண்ணுக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும். வால்பாறையில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடியிருப்புப் பகுதிகளில் நடமாடும் சிறுத்தைகளைப் பிடித்து அடர்ந்த வனப் பகுதியில் கொண்டு விட நடவடிக்கை எடுக்க வேண்டும். வால்பாறையில் வன விலங்குகள் நடமாடும் பகுதிகளில் மாலை 5 மணி வரை மட்டுமே வேலை நேரம் என்பதை தீர்மானிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வால்பாறை அரசு மருத்துவமனையின் தரத்தை உயர்த்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/17/சிறுத்தையைப்-பிடிக்க-நடவடிக்கை-மார்க்சிஸ்ட்-வலியுறுத்தல்-2941110.html
2941109 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் கோவையில் ஜூன் 23ஆம் தேதி ரியல் எஸ்டேட் சட்டம் குறித்த நுகர்வோர் வழிகாட்டி கருத்தரங்கு DIN DIN Sunday, June 17, 2018 12:54 AM +0530 ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை, முன்னேற்ற) சட்டம் குறித்த நுகர்வோர் வழிகாட்டி கருத்தரங்கு கோவையில் வரும் 23ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
இதுகுறித்து கோவையைச் சேர்ந்த நுகர்வோர் அமைப்பான சிட்டிசன்ஸ் வாய்ஸ் கிளப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வீடு, மனை விற்பவர்களுக்கும், வாங்குபவர்களுக்கும் இடையிலான பரிமாற்றம் நியாயமான, நேர்மையான முறையில் நடைபெறவும், ரியல் எஸ்டேட் துறையில் பொறுப்பையையும், வெளிப்படைத் தன்மையையும் மேம்படுத்தவும் ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை, முன்னேற்ற) சட்டம் கடந்த 2016ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் விதிகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில் இதன் முக்கிய அம்சங்கள் பற்றியும் பில்டர்கள், அரசாங்கத்தின் பார்வை குறித்தும் அறிய சிட்டிசன் கன்ஸ்யூமர், சிவிக் ஆக்சன் குரூப், சென்னை, கோவை சிட்டிசன் வாய்ஸ் கிளப் ஆகியவற்றுடன் இணைந்து இந்த கருத்தரங்கு நடத்தப்படுகிறது.
கோவையில், திருச்சி சாலையில் உள்ள விவேகாலயா மெட்ரிக் பள்ளியில் அன்று காலை 9.30 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறும் இந்த கருத்தரங்கில், தொடர்புடைய அரசு அதிகாரிகள், ரியல் எஸ்டேட் சங்கப் பிரதிநிதிகள், நுகர்வோர் அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பேசுகின்றனர்.
இதில் பொதுமக்கள், அரசியல் சார்பற்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/17/கோவையில்-ஜூன்-23ஆம்-தேதி-ரியல்-எஸ்டேட்-சட்டம்-குறித்த-நுகர்வோர்-வழிகாட்டி-கருத்தரங்கு-2941109.html
2940756 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ. படிப்புக்கு ஜூன் 25 இல் நுழைவுத் தேர்வு DIN DIN Saturday, June 16, 2018 08:02 AM +0530 பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ. படிப்பில் நேரடி இரண்டாம் ஆண்டில் சேர விரும்புபவர்கள் ஜூன் 25-ஆம் தேதி நடைபெறும் நுழைவுத் தேர்வை எழுத வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) நடத்தப்படுகிறது. இந்நிலையில், பாரதியார் பல்கலைக்கழகத்தின் கணினி பயன்பாட்டியல் துறையில், முதுநிலை கணினி பயன்பாட்டியல் (எம்.சி.ஏ.) படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர விரும்புபவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
 அதன்டி, டான்செட் தேர்வு எழுதாத, பி.சி.ஏ., பி.எஸ்சி. கணினி அறிவியல், கணினித் தொழில்நுட்பம், 
தகவல் தொழில்நுட்பப் படிப்புகளை முடித்தவர்கள் இந்த நுழைவுத் தேர்வை எழுதத் தகுதியானவர்களாவர்.
 நுழைவுத் தேர்வு ஜூன் 25-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் என்றும், மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு கணினி பயன்பாட்டியல் துறையை 0422 - 2428356, 99441 26231 என்ற எண்களிலோ அல்லது பல்கலைக்கழக இணையதளத்தின் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/16/பாரதியார்-பல்கலைக்கழகத்தில்எம்சிஏ-படிப்புக்கு-ஜூன்-25-இல்-நுழைவுத்-தேர்வு-2940756.html
2940755 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் இன்று ரமலான் பண்டிகை: பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு DIN DIN Saturday, June 16, 2018 08:01 AM +0530 ரமலான் பண்டிகை கொண்டாடப்பட இருப்பதை அடுத்து சனிக்கிழமை சனிக்கிழமை (ஜூன் 16) நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பாரதியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
 அதன்படி, பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி இயக்ககத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாகவும், தேர்வுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 அதேபோல, எம்.எஸ்சி. மருத்துவ இயற்பியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு சனிக்கிழமையில் இருந்து ஜூன் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/16/இன்று-ரமலான்-பண்டிகைபல்கலை-தேர்வுகள்-ஒத்திவைப்பு-2940755.html
2940754 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் அடல் திட்டத்தின் கீழ் ஆய்வகம்: இவாஞ்சலின் மெட்ரிக். பள்ளி தேர்வு DIN DIN Saturday, June 16, 2018 08:01 AM +0530 அடல் புத்தாக்கத் திட்டத்தின் கீழ் ஆய்வகம் அமைப்பதற்கு கோவை, இவாஞ்சலின் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளித் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பிரதமரின் தலைமையின் கீழ் இயங்கும் நிதி ஆயோக், பள்ளி மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவித்து, அன்றாடப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்காக அடல் புத்தாக்கத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் பள்ளிக்கு ஆய்வகத்தை நவீனப்படுத்த உதவித் தொகை வழங்கப்படும். அதன்படி, நாடு முழுவதிலும் இருந்து 9,500 பள்ளிகள் விண்ணப்பித்த நிலையில், 1,500 பள்ளிகள் ஆய்வகங்கள் அமைக்கத் தேர்வு செய்யப்பட்டன.
இந்தப் பட்டியலில் காருண்யா நகரில் உள்ள இவாஞ்சலின் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியும் இடம் பெற்றுள்ளது. இதையடுத்து, காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஓர் உயர்தர ஆய்வுக் கூடம் இந்தப் பள்ளியில் அமைக்கப்பட உள்ளது.
இதில், ஸ்டெம் ஆய்வுக் கூடம், மின்னணுவியல், ரோபோடிக்ஸ், சென்சார்கள், 3 டி அச்சுப்பொறி, கணினிகள், விடியோ கான்பரன்ஸிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இங்கு அமைக்கப்பட உள்ளன.
மேலும், பள்ளியின் நிறுவனர் பால் தினகரனின் வழிகாட்டுதலின்படி, மனித குலத்தின் தற்போதைய பிரச்னைகளான உணவு, நீர், ஆற்றல், சுகாதாரம் போன்றவற்றில் ஆராய்ச்சிகள் நடைபெறும் என்றும், இதற்கான ஏற்பாடுகளைத் தாளாளர் ஜோசப் கென்னடி, தலைமை ஆசிரியர் ஜெயிஸ் மேத்யூ சாஜன் ஆகியோர் செய்து வருகின்றனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/16/அடல்-திட்டத்தின்-கீழ்-ஆய்வகம்இவாஞ்சலின்-மெட்ரிக்-பள்ளி-தேர்வு-2940754.html
2940753 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் கே.எம்.சி.எச். மருத்துவமனை மருத்துவருக்குத் தொழில் திறன் விருது DIN DIN Saturday, June 16, 2018 08:00 AM +0530 கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரசாந்த் வைஜ்யநாத்துக்கு கோயம்புத்தூர் டெக்ஸ் சிட்டி ரோட்டரி கிளப் சார்பில் தொழில் திறன் விருது வழங்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் டெக்ஸ் சிட்டி ரோட்டரி கிளப் சார்பில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் டாக்டர் பிரசாந்த் வைஜ்யநாத்துக்கு ரோட்டரி கிளப் 3201 மாவட்ட ஆளுநர் கிருஷ்ணன் குட்டி, ராஜ் ஸ்ரீ சுகர்ஸ் நிறுவனத்தின் தலைவர் ராஜ் ஸ்ரீபதி ஆகியோர் விருது வழங்கினர். 
 விருது பெற்ற டாக்டர் பிரசாந்த் வைஜ்யநாத் மருத்துவத் துறையில் 20 ஆண்டுகள் அனுபவமும், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளும் மேற்கொண்டுள்ளார். மேலும், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சைக்கான கல்வியில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
 ஜெர்மன், அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளிலும் இவர் பணியாற்றியுள்ளர். இருதயம், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை, இருதயத்தின் பல்வேறு அறைகளில் அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிக்கலான அறுவை சிகிச்சைகளில் நிபுணத்துவம் பெற்றுள்ளார். இவரது மருத்துவ சேவையைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 
 இந்நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் டெக்ஸ் சிட்டி ரோட்டரி கிளப் தொழில் சேவைப் பிரிவுத் தலைவர் சுந்தரவடிவேலு, தலைவர் மகாவீர் போத்ரா, செயலாளர் நரேந்திரகுமார், ஆன்டணி ஜான்சன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/16/கேஎம்சிஎச்-மருத்துவமனை-மருத்துவருக்குத்-தொழில்-திறன்-விருது-2940753.html
2940752 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் விரிவாக்கம் செய்யாமலேயே திருச்சி சாலை புதுப்பிப்பு: போராட்டம் ஒத்திவைப்பு DIN DIN Saturday, June 16, 2018 08:00 AM +0530 காங்கேயம்பாளையம் முதல் சிந்தாமணிப்புதூர் வரையிலான திருச்சி சாலை விரிவாக்கம் செய்யப்படாமல் பழைய அளவிலேயே புதுப்பிக்கும் பணி தொடங்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் அறிவித்திருந்த   போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
 கரூரிலிருந்து கோவை வரையிலான திருச்சி சாலை நான்குவழிச்சாலையாக  திட்டமிடப்பட்டு சூலூர், காங்கேயம்பாளையம் வரை அமைக்கப்பட்டது.  இந்த சாலை காங்கேயம்பாளையம் முதல் சிந்தாமணிப்புதூர் வரை 7.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு இருவழிச்சாலையாகவே உள்ளது. இதனால் போக்குவரத்து நிறைந்த இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து வந்தன. 
எனவே, காங்கேயம்பாளையம் முதல் சிந்தாமணிப்புதூர் வரை 7.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள், அரசியல் கட்சியினர் மத்திய,  மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். 
இதுதொடர்பாக அவர்கள் கடந்த 7 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தனர். கோரிக்கையை வலியுறுத்தி சூலூரிலிருந்து 1000-க்கும் மேற்பட்டவர்கள் ஊர்வலமாக வாகனங்களில் சென்று கரூரில் உள்ள மண்டல தேசிய நெடுஞ்சாலை அலுவலகத்தில் மனு அளித்தனர். ஆனாலும் எவ்வித விரிவாக்கப் பணியும் நடைபெறவில்லை. 
இந்நிலையில் மேற்கண்ட பகுதியில் சாலை விரிவாக்கம் நடைபெறும் என பொதுமக்கள் நம்பியிருந்த நிலையில், நெடுஞ்சாலைத் துறையினர் சாலையை பழைய அளவிலேயே 
புதுப்பிக்கும் பணியினை செவ்வாய்க்கிழமை துவக்கினர். இதனால் இப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்தனர். 
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, தற்போது சாலை புதுப்பிக்கும் பணி மட்டுமே 
நடைபெறுகிறது. சாலை விரிவாக்கத்துக்காக அரசிடம் இருந்து உத்தரவு வந்ததும் அதற்கான பணிகள் நடைபெறும் என்று கூறியதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில்,  சூலூர் பகுதி அனைத்துக் கட்சியினர், பொதுமக்கள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.  இதில் விரிவாக்கம் செய்யாமல் சாலை புதுப்பிக்கும் பணிகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும்,  கோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டது.  
இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலைத் துறையினர், காவல் துறையினர் அவர்களுடன் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினர். அப்போது, கோரிக்கை குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசித்து சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, பொது மக்கள் போராட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/16/விரிவாக்கம்-செய்யாமலேயே-திருச்சி-சாலை-புதுப்பிப்பு-போராட்டம்-ஒத்திவைப்பு-2940752.html
2940751 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் சின்னத் தடாகத்தில் காவல் நிலையம் கட்டும் இடம்: எஸ்.பி. ஆய்வு DIN DIN Saturday, June 16, 2018 08:00 AM +0530 சின்னத் தடாகத்தில் புதிதாக கட்டப்பட உள்ள காவல் நிலையத்துக்கான இடத்தினை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பா.மூர்த்தி புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
துடியலூரின் காவல் நிலைய எல்லை மிகப் பெரியதாக இருந்ததால் குற்றச் சம்பவங்கள் அதிகமாக நடந்து வந்தன. மேலும்,  சின்னத் தடாகத்தில் செயல்பட்டு வந்த புறக்காவல் நிலையம் பல ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டுவிட்டது.
இந்நிலையில், பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று  சின்னத் தடாகத்தில் புதிதாக காவல் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு சொந்தக் கட்டடம் இல்லாததால் நஞ்சுண்டாபுரத்தில் உள்ள தனியார் கட்டடத்தில் தற்போது வாடகைக்கு இயங்கிவருகிறது. 
இந்நிலையில்  சின்னத் தடாகம் காவல் நிலையத்துக்கு சொந்த கட்டடம் கட்ட  தமிழக அரசு ரூ. 2 கோடி நிதி ஒதுக்கியது. 
இதனையடுத்து சின்னத் தடாகம் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு பின்புறம் புதிதாக கட்டப்படும் காவல் நிலையத்துக்கான  இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.மூர்த்தி பார்வையிட்டார். 
காவலர் குடியிருப்பு கழக செயற்பொறியாளர் சீனிவாசன்,  புதிதாக கட்டப்படும் காவல் நிலையம் கட்டடம்,  காவலர்களுக்கான குடியிருப்புகள் குறித்து அவருக்கு விளக்கினார்.  அப்போது பெரியநாயக்கன்பாளையம் சரக டி.எஸ்.பி. மணி, சின்னத் தடாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்குமார், கிராமநிர்வாக அலுவலர் பிரேம் கிருஷ்ணா உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதைத் தொடர்ந்து  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.மூர்த்தி,  பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில்  ஆய்வு மேற்கொண்டார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/16/சின்னத்-தடாகத்தில்-காவல்-நிலையம்கட்டும்-இடம்-எஸ்பி-ஆய்வு-2940751.html
2940750 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் கலப்பட டீ தூள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் DIN DIN Saturday, June 16, 2018 07:59 AM +0530 கோவையில் 67 கிலோ கலப்பட டீ தூள், 42 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை உணவுப் பாதுகாப்புத் துறையினர் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
 கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், காந்திபுரம், பீளமேடு, சிங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் டாக்டர் விஜயலலிதாம்பிகை உத்தரவின் பேரில், உணவுப் பாதுகாப்புத் துறையினர் 5 குழுக்களாக,  152 கடைகளில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினர்.
 இந்தச் சோதனையின்போது 67 கிலோ கலப்பட டீ தூள், 42 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், 30 லிட்டர் காலாவதியான தண்ணீர் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
 இது குறித்து உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 63 கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. மேலும் உணவுப் பாதுகாப்புத் துறையிடம் பதிவு செய்யாத 9 கடைகளுக்கும் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. உணவுப் பாதுகாப்புத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் உடனடியாக அழிக்கப்பட்டன.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/16/கலப்பட-டீ-தூள்-தடை-செய்யப்பட்ட-புகையிலைப்-பொருள்கள்-பறிமுதல்-2940750.html
2940749 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் விவசாயிகளுக்கு கோடை உழவு மானியம் DIN DIN Saturday, June 16, 2018 07:59 AM +0530 சூலூர் சுற்றுவட்டார விவசாயிகளுக்கு கோடை உழவு மானியம் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து, சூலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சபி அகமது கூறியதாவது:
சூலூர் வட்டாரத்துக்கு உள்பட்ட, காடம்பாடி, கலங்கல், பீடம்பள்ளி, கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில், கோடை உழவு செய்து, பயிர் சாகுபடி செய்யும் மற்றும் பயிர் சாகுபடி செய்யவுள்ள அனைத்து விவசாயிகளும்  நடப்பு ஆண்டில், நீடித்த மானாவாரி  விவசாயத் திட்டத்தின்கீழ் கோடை உழவு மானியமாக ஏக்கருக்கு ரூ. 500 பெறலாம். இந்தத் தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். 
விவசாயிகள், சிட்டா, ஆதார் அட்டை, உழவு செய்த புகைப்படம், மானியம் பெறும் உழவர் புகைப்படம் உள்ளிட்ட அனைத்து விவரங்களுடன்  காங்கேயம்பாளையம், காடம்பாடி கிராமங்களுக்கு உதவி வேளாண்மை அலுவலர் சந்தோஷ்குமார், கண்ணம்பாளையம், கலங்கல், பீடம்பள்ளி உள்ளிட்ட கிராமங்களுக்கு உதவி வேளாண்மை அலுவலர் அன்பழகன் என்பவரையும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/16/விவசாயிகளுக்கு-கோடை-உழவு-மானியம்-2940749.html
2940748 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் பீளமேடு ரயில்வே மேம்பாலத்தின் கீழ் சுரங்கப் பாதை அமைக்கக் கோரிக்கை DIN DIN Saturday, June 16, 2018 07:59 AM +0530 கோவை பீளமேடு பகுதியில் பாலத்தின் அடியில் சுரங்கப் பாதை அமைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 கோவை, பீளமேடு பகுதியையும், காந்தி மாநகரையும் இணைக்கும் வகையில், விளாங்குறிச்சி சாலையில் ரயில் பாதையின் குறுக்கே (லெவல் கிராஸிங் - 7) மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 30 கோடி செலவில் அமைக்கப்பட்ட இந்தப் பாலத்தை கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்துவைத்தார்.
 இதற்கிடையே ஒவ்வொரு உயர்நிலைப் பாலத்தின் கீழும் நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனங்களில் செல்லும் உள்ளூர் மக்களின் வசதிக்காக சுரங்கப் பாதை அமைக்கப்பட வேண்டும் என்று விதி உள்ளது. அதன்படி, இந்த பாலத்தின் கீழ், 16 அடி அகலம், 7 அடி உயரத்தில் இலகு ரக வாகனங்கள் மட்டும் செல்லுமாறு சுரங்கப் பாதை அமைக்கவும் திட்ட வரைவு தயாரிக்கப்பட்டது. ஆனால், வரைவு தயாரித்து 6 ஆண்டுகளுக்கு மேலாகியும், பாலமும் கட்டி முடிக்கப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்கப்பட்ட நிலையிலும், சுரங்கப் பாதைக்கான பணிகள் தொடங்கப்படவில்லை. பாலத்தின் கீழ் சுரங்கப் பாதை அமைக்கக் கோரி முருகன் நகர், ஹட்கோ காலனி, காந்தி மாநகர், உதயா நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உண்ணாவிரதம், வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.  இந்நிலையில், அப்பகுதி மக்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
இதுகுறித்து, போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் பூ.வெ.கோபால் கூறியதாவது:
 பாலத்தின் கீழ் சுரங்கப் பாதை அமைப்பதற்காகத் திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து, ரயில்வே நிர்வாகத்திடம் பல முறை வலியுறுத்தியும் சுரங்கப் பாதைக்கான பணிகள் தொடங்கப்படவில்லை. சுரங்கப் பாதைக்கு பதிலாக நடை மேம்பாலம் அமைக்க ரயில்வே நிர்வாகம் முன்வந்தது. ஆனால், அதனால் பயன் இருக்காது என்பதால் அதை நாங்கள் ஏற்கவில்லை. சுரங்கப் பாதை இல்லாததால் தண்டவாளத்தின் இரு பகுதிகளிலும் இருக்கும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களது பணிகளுக்காக நீண்ட தூரம் சுற்றிச் சென்று பாலத்தின் மீது செல்ல வேண்டியுள்ளது.
 அதேபோல, ரயில்வே மேம்பாலத்தின் வட பகுதியில் இணைப்புச் சாலை அமைக்க தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். 
 இது தொடர்பாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போராட்டம் நடத்தியபோது, கோரிக்கைகள் மீது 3 மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என்றார். 
 இந்தப் போராட்டத்தில் திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/16/பீளமேடு-ரயில்வே-மேம்பாலத்தின்-கீழ்-சுரங்கப்-பாதை-அமைக்கக்-கோரிக்கை-2940748.html
2940747 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றித் தண்ணீர் செல்ல நடவடிக்கை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி DIN DIN Saturday, June 16, 2018 07:58 AM +0530 தென்மேற்குப் பருவ மழையையொட்டி குளங்களுக்குத் தண்ணீர் செல்ல வசதியாக ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, தடையின்றி தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
 கோவை மாநகராட்சிப் பகுதிகளில் வெள்ளலூர், குறிச்சி குளங்களுக்குத் தண்ணீர் செல்லும் ராஜவாய்க்காலில் தடையின்றி நீர் செல்ல மாநகராட்சி நிர்வாகத்துடன் பொதுப் பணித் துறையினர் இணைந்து மேற்கொண்டு வரும் தூர்வாரும் பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பார்வையிட்டார்.
 மேலும், 85 ஆவது வார்டு, எம்.ஜி.ஆர். நகர், சேத்துமாவாய்க்காலில் மழை நீர் தடையின்றி செல்வதற்காக பொக்லைன் இயந்திரம் மூலமாகத் தூர்வாரும் பணியையும், கிரீன் பார்க் பகுதியில் உள்ள வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணியையும், 76 ஆவது வார்டு எல்.ஐ.சி. காலனியில் உள்ள பகுதியையும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பார்வையிட்டார்.
 அப்போது, அதிக மழையின்போது வாய்க்காலில் மழை நீர் செல்ல வசதியாகவும், குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும், கழிவுநீர் செல்ல வாய்க்கால் மேம்பாட்டுப் பணியை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
  அதைத் தொடர்ந்து, குறிச்சி என்.பி.இட்டேரி பகுதியில் வாய்க்கால் மற்றும் போத்தனூர், 95 ஆவது வார்டு, பேச்சியம்மன் கோயில் தெருவில், வெள்ளலூர் குளத்துக்குச் செல்லும் வாய்க்கால் ஆகிய பகுதிகளில் தூர்வாரும் பணிகளையும், குறிச்சி குளத்துக்குத் தண்ணீர் செல்வதற்காக நடைபெற்று வரும் பணியையும் பார்வையிட்டார். 
 பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவின் பேரில் ஆறுகள், வாய்க்கால்கள் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெள்ளலூர் மற்றும் குறிச்சி குளத்துக்குச் செல்லும் ராஜவாய்க்கால் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாய்க்கால் கரையோரங்களில் கான்கிரீட் அமைத்து ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 மேலும், பொலிவுறு திட்டத்தின்கீழ் மாநகராட்சி சார்பில் குளங்கள் அனைத்தும் மேம்படுத்தப்பட்டு கழிவுநீர் கலக்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
 இந்த ஆய்வின்போது, ஆட்சியர் த.ந.ஹரிஹரன், மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், துணை ஆணையர் ப.காந்திமதி, மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மாநகரப் பொறியாளர் லட்சுமணன், செயற்பொறியாளர் ஞானவேல் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/16/ராஜவாய்க்கால்-ஆக்கிரமிப்புகளை-அகற்றித்-தண்ணீர்-செல்ல-நடவடிக்கை-அமைச்சர்-எஸ்பிவேலுமணி-2940747.html
2940746 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் வீட்டுக்குள் நுழைந்த மோதிரவளையன் பாம்பு உயிருடன் மீட்பு DIN DIN Saturday, June 16, 2018 07:58 AM +0530 மதுக்கரை அருகே, வீட்டுக்குள் நுழைந்த மோதிரவளையன் பாம்பு உயிருடன் மீட்கப்பட்டு வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. 
கோவை மாவட்டம், மதுக்கரையை அடுத்த குறிச்சி, மோகன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ். இவரது வீட்டுக்குள் வியாழக்கிழமை இரவு பாம்பு புகுந்து விட்டதாக நேதாஜி பாம்புகள் அறக்கட்டளைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. 
இதையடுத்து, அந்த வீட்டுக்குச் சென்ற சுரேந்திரன் 3 அடி நீளமுள்ள பாம்பை உயிருடன் பிடித்து மதுக்கரை வனத் துறையினரிடம் ஒப்படைத்தார். மேலும், இதுகுறித்து சுரேந்திரன் 
கூறியதாவது: 
பிடிபட்ட பாம்பு குளிர்ப் பிரதேசங்களில் வசிக்கும் தன்மையுடைய மோதிரவளையன் பாம்பு ஆகும். இது விஷமற்ற பாம்பு. பகலில் பதுங்கி இரவில் இரைதேட வெளியே வரும்.  இதன் அருகில் எதிரிகள்  நெருங்கும்போது தனது உடலை எஸ் வடிவில் வளைத்துக் கடிக்க முற்படும். இவ்வாறு கடிக்க முற்படும்போது அதன் வேகம் அபாரமாக இருக்கும். கண் இமைக்கும் நேரத்தில் இந்தச் செயல் நடந்து முடிந்து விடும். இந்தப் பாம்பு, கடிக்க முற்படும் செயலைக் கண்டு, பலரும்  இதை நாகப் பாம்பு என நினைத்து விடுகின்றனர் என்றார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/16/வீட்டுக்குள்-நுழைந்த-மோதிரவளையன்-பாம்பு-உயிருடன்-மீட்பு-2940746.html
2940745 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் சிறுத்தை தாக்கியதில் பெண் தொழிலாளி சாவு DIN DIN Saturday, June 16, 2018 07:58 AM +0530 கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த எஸ்டேட் குடியிருப்புப் பகுதியில் சிறுத்தை தாக்கியதில் பெண் தொழிலாளி உயிரிழந்தார்.
வால்பாறையை அடுத்த சின்கோனா எஸ்டேட் முதல் டிவிஷனில் குடியிருப்புக்கு முன்பு பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த மாதவி என்ற பெண்னை வியாழக்கிழமை மாலை சிறுத்தை தாக்கியதில் பலத்த காயமடைந்து, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
இதையடுத்து, சின்கோனா எஸ்டேட் பகுதியில் தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட போராட்டத்தை அடுத்து வனத் துறையினர் சிறுத்தையைப் பிடிக்க அப்பகுதியில் கூண்டு வைத்தனர். 
இதையடுத்து, தொழிலாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இச்சம்பவம் வால்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் பரபரப்பு முடிவதற்குள் மற்றொரு பகுதியில் பெண்ணை சிறுத்தை தாக்கிக் கொன்றுள்ளது. 
வால்பாறையை அடுத்து உள்ளது வெள்ளமலை எஸ்டேட். இந்த எஸ்டேட்டுக்கு உள்பட்ட காஞ்சமலை எஸ்டேட், தெற்கு டிவிஷனை சேர்ந்த மதி என்பவரது மனைவி கைலாசம் (48). இவர், தனது குடியிருப்புக்கு முன்பு வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் துணி துவைத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அருகில் உள்ள தேயிலைச் செடிகளிடையே பதுங்கியிருந்த சிறுத்தை கைலாசத்தைக் கடித்து, இழுத்து சென்றுள்ளது. சிறுத்தை கடித்து இழுத்துச் சென்றதை அறிந்த அப்பகுதியினர் உடனடியாக அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். 
கைலாசத்தின் உடலில் இருந்து வெளியேறிய ரத்தக் கறை சாலையில் படிந்திருந்ததை வைத்து தேடிச் சென்ற அப்பகுதி மக்கள் அவரது உடலை அருகில் உள்ள ஒரு புதரில் கண்டுபிடித்தனர். 
தகவலறிந்த வனத் துறை,  காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று உடலை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 
தொடர்ந்து, நடைபெற்று வரும் சிறுத்தை தாக்குதல் சம்பவம் வால்பாறை பகுதி மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/16/சிறுத்தை-தாக்கியதில்-பெண்-தொழிலாளி-சாவு-2940745.html
2940744 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் ஏ.டி.எம். இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்திக் கொள்ளை: 3 பேர் கும்பல் அடையாளம் காணப்பட்டுள்ளது DIN DIN Saturday, June 16, 2018 07:57 AM +0530 கோவையில் ஏ.டி.எம். இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி பணத்தை திருட்டிச் சென்ற கும்பலைச் சேர்ந்த 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கோவை, சிங்காநல்லூரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரின் வங்கிக் கணக்கில் இருந்து ஜூன் 6 ஆம் தேதி அதிகாலை தலா ரூ. 10 ஆயிரம் வீதம் ஐந்து முறை எடுக்கப்பட்டதாக அவரது செல்லிடப்பேசிக்கு குறுந்தகவல் வந்துள்ளது. இதே போல 20 பேரின் வங்கி ஏ.டி.எம். அட்டையின் தகவலைத் திருடி ரூ. 11 லட்சத்துக்கு மேல் பணம் திருடப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து, பணத்தை இழந்தவர்கள் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏ.டி.எம். அட்டையின் தகவலைத் திருடியவர்கள் போலி ஏ.டி.எம். அட்டை தயாரித்து பெங்களூரில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தின் மூலமாக ரூ. 11 லட்சம் அளவுக்குப் பணம் திருடியது தெரியவந்துள்ளது.
பணத்தைத் திருடிச் சென்றவர்கள் ஏ.டி.எம். மையத்தில் ஸ்கிம்மர் கருவியைப் பொருத்தி தகவல்களைத் திருடியுள்ளனர். இதையடுத்து, கோவை மற்றும் பெங்களூரில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் பதிவான காட்சிகளை சேகரித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, மாநகரக் காவல் ஆணையர் கு.பெரியய்யா கூறியதாவது:
 கோவையில் சௌரிபாளையம் பகுதியில் ஏற்கெனவே ஸ்கிம்மர் கருவி பொருத்தியது தெரியவந்தது. அந்த மையத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்திய இரண்டு பேரின் உருவம் பதிவான காட்சியை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காமராஜர் சாலையில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்துக்குள் இரண்டு பேர் நுழைந்து ஸ்கிம்மர் கருவியைப் பொருத்துவதும், ஏ.டி.எம். அட்டையின் ரகசிய எண்ணைத் தெரிந்து கொள்ள அங்குள்ள குளிர்சாதனக் கருவியில் சிறிய கேமராவைப் பொருத்துவதும் அங்கு  பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
மேலும் ஏ.டி.எம். மையத்துக்கு வெளியே ஒருவர் காவலுக்கு நிற்பதும் தெரியவந்துள்ளது. அவர்களது முகம் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதைக் கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர்களுக்கும் வெளிமாநில கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 
மேலும், இவர்கள் பிடிபடும்போதுதான் புதுச்சேரி போலி ஏ.டி.எம். அட்டை தயாரிக்கும் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் தெரியவரும் என்றார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/16/ஏடிஎம்-இயந்திரத்தில்-ஸ்கிம்மர்-கருவி-பொருத்திக்-கொள்ளை-3-பேர்-கும்பல்-அடையாளம்-காணப்பட்டுள்ளது-2940744.html
2940743 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் மனைவி தற்கொலை: மனமுடைந்த கணவரும் தற்கொலை DIN DIN Saturday, June 16, 2018 07:57 AM +0530 குடும்பத் தகராறு காரணமாக மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதையடுத்து மனமுடைந்த கணவரும் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
 கோவை, குனியமுத்தூர், சுகுணாபுரம் விநாயகர் கோயில் வீதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி மணிகண்டன் (28). இவரது மனைவி சித்ரா (27). இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. திருமணத்துக்குப் பின்னர் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 
 இந்நிலையில், கணவர், மனைவி இடையே ஜூன் 12 ஆம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சித்ரா, வீட்டில் தனியாக இருந்தபோது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றித் தீ வைத்துக் கொண்டார். 
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து, குனியமுத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
 உடலில் 85 சதவீத தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த சித்ரா வியாழக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தார்.
 இதுகுறித்து,  சித்ராவின் கணவர் மணிகண்டனுக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, மனைவி இறந்த துக்கம் தாங்காமல் மனமுடைந்த மணிகண்டன் அரசு மருத்துவமனை அருகே உள்ள வணிக வளாகக் கட்டடத்தின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
 இதுகுறித்து, ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனின் உடலை மீட்டு, பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 
இதையடுத்து இருவரது சடலமும், பரிசோதனைக்குப் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/16/மனைவி-தற்கொலை-மனமுடைந்த-கணவரும்-தற்கொலை-2940743.html
2940741 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரி மாணவர் சேர்க்கை: 8 இடங்களே காலி DIN DIN Saturday, June 16, 2018 07:57 AM +0530 கோவை அரசு கலைக் கல்லூரியில் 2018-19 ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. மேலும் 8 இடங்களே காலியாக உள்ள நிலையில் அதற்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 18) நடைபெறுகிறது.
கோவை, ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் 22 இளநிலை பட்டப் படிப்புகளில் 1,409 இடங்கள் உள்ளன. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட்டது. 
மொத்தம் 14 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையான நிலையில், பூர்த்தி செய்யப்பட்ட 7,050 விண்ணப்பங்கள் பிளஸ் 2 தேர்வு முடிவுகளுக்குப் பின்னர் பெறப்பட்டன. இதையடுத்து, மதிப்பெண்கள் கணக்கீடு செய்யப்பட்டு கடந்த 1-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, கலந்தாய்வு ஜூன் 6-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி மொத்தமுள்ள 1,409 இடங்களில் 1,401 இடங்கள் நிரம்பியுள்ளன.
பி.சி. முஸ்லிம் பிரிவினருக்கான 5 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கான 3 இடங்களும் காலியாக உள்ள நிலையில், இந்த வகுப்பினர் மட்டுமே திங்கள்கிழமை கலந்தாய்வுக்கு வந்து சேர்க்கை பெற்றுச் செல்லலாம் என மாணவர் சேர்க்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/16/அரசு-கலைக்-கல்லூரி-மாணவர்-சேர்க்கை-8-இடங்களே-காலி-2940741.html
2940740 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் நூலகம்: பொது மக்கள் ஆதரவு DIN DIN Saturday, June 16, 2018 07:56 AM +0530 மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் பொது மக்கள் பயன்பாட்டுக்காக புதிதாகத் தொடங்கப்பட்ட நூலகத் திட்டம் பொது மக்களிடையே ஆதரவைப் பெற்று வருகிறது.
பல்வேறு பிரச்னைகளுக்காக காவல் நிலையத்துக்கு வரும் பொது மக்களிடையே போலீஸ் குறித்த நல்லுணர்வைப் பேணும் வகையிலும், அவர்களின் மன அழுத்தத்தைக் குறைத்து, வாசிப்பை ஊக்குவிக்கும் வகையிலும் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் நூலகம் அமைக்க வேண்டும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பா.மூர்த்தி அறிவுறுத்தியிருந்தார். அதன்பேரில், மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் பல்வேறு நூல்களுடன் கூடிய புதிய நூலகத்தை காவல் ஆய்வாளர் சென்னகேசவன் சமீபத்தில் திறந்துவைத்தார். இது, காவல் நிலையத்துக்கு வரும் பொது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பல்வேறு பிரச்னைகளுக்கு காவல் நிலையத்தை நாடி வரும் மக்கள் தங்கள் காத்திருப்பு நேரத்தில் இந்த நூலகத்தில் உள்ள நூல்களைப் படித்து, மகிழ்வுடன் காத்திருக்கிறார்கள்.  
இதுகுறித்து, காவல் நிலைய ஆய்வாளர் சென்னகேசவன் கூறியதாவது: 
சமீப காலமாக சமுதாயத்தில் குற்றங்கள் அதிகரிப்பதற்கு மக்கள் மனதில் ஏற்படும் மன அழுத்தமே காரணம். 
சிறந்த நண்பர்களிடையே பிரச்னைகளை பகிர்வதன் மூலமாகவும், நல்ல நூல்களை வாசிப்பதன் மூலமாகவும், சிறந்த இசையை ரசிப்பதன் மூலமாகவும் மனதில் உள்ள அழுத்தங்கள் காணமல் போகும். அதைக் கருத்தில்கொண்டு மாவட்டக் காவல் நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்பேரில் இந்தக் காவல் நிலையத்தில் புதிய நூலகம் தொடங்கப்பட்டுள்ளது. இதை அனைவரும் பயன்படுத்தி, பயன்பெற வேண்டும் என தெரிவித்தார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/16/மேட்டுப்பாளையம்-காவல்-நிலையத்தில்-நூலகம்-பொது-மக்கள்-ஆதரவு-2940740.html
2940739 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் போலி கையெழுத்துப் போட்டு ரூ. 1.21 கோடி மோசடி: வங்கியின் துப்புரவுப் பெண் பணியாளர் கைது DIN DIN Saturday, June 16, 2018 07:56 AM +0530 தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வாடிக்கையாளர்களின் கையெழுத்தை போலியாகப் போட்டு ரூ. 1.21 கோடி மோசடி செய்ததாக வங்கியில் பணியாற்றி வந்த துப்புரவுப் பெண் பணியாளரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
 கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் உள்ள சில வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்த நிரந்த வைப்புத் தொகை மற்றும் சில வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்கில் இருந்த பணம் அவர்களுக்குத் தெரியாமல் எடுக்கப்பட்டு இருப்பதாக வாடிக்கையாளர்கள் சிலர் வங்கி நிர்வாகத்திடம் கடந்த 2014 ஆம் ஆண்டு புகார் அளித்தனர்.
 அதன்பேரில், வங்கி மேலாளர் ரகுராமன், மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார். 
இதுகுறித்து குற்றப் பிரிவு போலீஸார் கடந்த ஏப்ரல் மாதம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து அவர்களது பெயரில் போலி கையெழுத்து போட்டு ரூ. 1.21 கோடி மோசடி செய்ததாக கோவை மாவட்டம், காரமடை, தோலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மங்கலதீபா (38) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
 கைது செய்யப்பட்ட மங்கலதீபா, சம்பந்தப்பட்ட வங்கியில் தற்காலிகப் பெண் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றி வந்தார். இவர், வாடிக்கையாளர்களின் கையெழுத்தை போலியாக போட்டு மோசடியில் ஈடுபட்டுள்ளார். மேலும், மோசடி செய்த பணத்தை அவரது கணவர் சிவகுமாரின் வங்கிக் கணக்கில் போட்டு அவரது தொழில் வளர்ச்சிக்கு உதவி வந்துள்ளார்.
 மோசடி பணத்தில் காரமடை அருகே வீட்டுமனையும், வீடு வாங்கிய ஆவணங்களையும் போலீஸார் கைப்பற்றினர். 
இந்த மோசடியில் வங்கி ஊழியர்களுக்குத் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/16/போலி-கையெழுத்துப்-போட்டு-ரூ-121-கோடி-மோசடி-வங்கியின்-துப்புரவுப்-பெண்-பணியாளர்-கைது-2940739.html
2940738 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் கோவை மாவட்டத்தில் 32,847 அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடுகள் கணினி மயமாக்கப்பட்டுள்ளன: அரசு முதன்மைச் செயலர் தென்காசி சு.ஜவஹர் தகவல் DIN DIN Saturday, June 16, 2018 07:56 AM +0530 கோவை மாவட்டத்தில் 32,847அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடுகள் கணினி மயமாக்கப்பட்டிருப்பதாக அரசு முதன்மைச் செயலரும், கருவூலம், கணக்குத் துறை ஆணையருமான தென்காசி சு.ஜவஹர் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட அரசு அலுவலர்களுக்கான ஒருங்கிணைந்த நிதி, மனித வள மேலாண்மைத் திட்டத்தின் திறனூட்டல் பயிற்சி ஆய்வுக் கூட்டம் ரேஸ்கோர்ஸ், நிர்மலா கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் த.ந.ஹரிஹரன் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அரசு முதன்மைச் செயலர் தென்காசி சு.ஜவஹர் கலந்து கொண்டு பேசியதாவது:
நிதி மேலாண்மை தொடர்பான அரசுப் பணிகள் திறம்பட நடைபெற, மாநில அரசின் நிதி மேலாண்மை, மனித வள மேலாண்மையை இணைத்து ஒருங்கிணைந்த நிதி, மனித வள மேலாண்மைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. மேலும், தற்போது நடைமுறையில் உள்ள தன்னியக்க கருவூலப் பட்டியல் ஏற்பளிக்கும் முறை, வலைத்தள சம்பளப் பட்டியல், மின்னணு வழி ஓய்வூதியம் ஆகியவை இத்திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளன.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த அரசு ரூ. 288.91 கோடியை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. 
தனியார் நிறுவனம் மூலமாக இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில், தற்போது உள்கட்டமைப்பு வசதிகள், மென்பொருள் உருவாக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலமாக மாநிலம் முழுவதும் உள்ள 29 ஆயிரம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் நேரடி இணையத்தின் மூலமாக சம்பளப் பட்டியல், இதரப் பட்டியல்களை கருவூலத்தில் சமர்ப்பிக்க இயலும். மேலும், இத்திட்டத்தில் அரசின் வருவாயை இணையம் மூலமாகப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளதால் அரசின் நிகழ் நேர வரவையும் உடனுக்குடன் அறிய முடியும். 
இத்திட்டத்தின் மூலமாக 9 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசுப் பணியாளர்களின் பணிப் பதிவேடு பராமரிப்பு எளிமையான முறையில் கணினி மயமாக்கப்பட்டு, சம்பளப் பட்டியல், பதவி உயர்வு, மாறுதல்கள், விடுப்பு, இதர விவரங்கள் உடனுக்குடன் பதியப்படும்.
அரசுப் பணியில் சேர்ந்தது முதல் ஓய்வு பெறும் வரை உள்ள அரசுப் பணியாளர்களின் பணி வரலாறானது முழுமையாக இத்திட்டத்தின் மூலமாக கணினி மயமாகிறது. இதன் மூலமாகப் பணிப் பதிவேடுகளைப் பராமரிக்கும் பணியில் இருந்து விடுபட்டு, அலுவலர்கள் தங்களது துறையின் ஆக்கபூர்வப் பணிகளில் ஈடுபட முடியும்.
 இதனால் பல்வேறு அலுவலகங்களுக்கு இடையேயும், வெவ்வேறு ஊர்களுக்கு இடையிலும் பணிப் பதிவேடுகள் மாற்றப்படுவதால் ஏற்படும் கால விரயம் குறைவதுடன் பணிப் பதிவேடு காணாமல் போகக்கூடிய சூழ்நிலையும் முடிவுக்கு வரும். பணிப் பதிவேடுகள் அவ்வப்போது கணினி மூலமாக ஆய்வு செய்யப்படுவதால் நடவடிக்கைகள் உடனுக்குடன் மேற்கொள்ளப்பட்டு, ஓய்வூதியம் தாமதமின்றி வழங்கப்படும்.
 பணியாளர் தொடர்பான அரசின் ஆய்வுக்கும், திட்டமிடலுக்கும் இந்த கணினி ஆவணங்கள் உதவும். ஆதாரப்பூர்வமான பணி விவரங்கள் கணினியில் இருப்பதால் பணிமாற்ற முடிவுகள் தாமதமின்றி முறையாக மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தின்
மூலமாக கோவை மாவட்டத்தில் பணம் பெற்று வழங்கும் 782 அலுவலகங்களைச் சேர்ந்த 32,847அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடுகள் கணினி மயமாக்கப்பட்டுள்ளன.
  இத்திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்த சில பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு 4 நாள்கள் கூடுதல் பயிற்சியும், கருவூல அலுவலர்களுக்கு  2 நாள் கூடுதல் பயிற்சியும் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும் என்றார்.
 இக்கூட்டத்தில் தலைமைக் குற்றவியல் நீதிபதி பி.நாகராஜன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பா.மூர்த்தி, மாவட்ட வன அலுவலர் வி.வெங்கடேஷ் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/16/கோவை-மாவட்டத்தில்-32847-அரசு-ஊழியர்களின்-பணிப்-பதிவேடுகள்-கணினி-மயமாக்கப்பட்டுள்ளன-அரசு-முதன்மைச்-2940738.html
2940699 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் வேளாண் பல்கலை. மாணவர் சேர்க்கைக்கு இதுவரை 31 ஆயிரம் பேர் விண்ணப்பம்: கடந்த ஆண்டை விட குறைவு DIN DIN Saturday, June 16, 2018 07:23 AM +0530 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 17-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கடைசி நாள் எனும் நிலையில், வெள்ளிக்கிழமை வரையிலும் 31,569 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 14 உறுப்பு, 26 இணைப்புக் கல்லூரிகளில் உள்ள வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், உணவு - ஊட்டச்சத்து அறிவியல் உள்ளிட்ட 12 பட்டப் படிப்புகளில் உள்ள 3,422 இடங்களுக்கு 2018-19 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறை மே 18-ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
 முதல் நாளில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து மாணவ, மாணவிகள் மே 19-ஆம் தேதி முதல் விண்ணப்பித்து வருகின்றனர்.
 விண்ணப்பங்களை அனுப்ப கடைசி 2 நாள்களே இருக்கும் நிலையில் வெள்ளிக்கிழமை வரையிலும் 47,702 மாணவ, மாணவிகள் விண்ணப்பிப்பதற்காக தங்களது விவரங்களைப் பதிவு செய்து கொண்டிருக்கின்றனர். இதில், 31,569 பேர் விண்ணப்பங்களை முழுமையாகப் பூர்த்தி செய்து விண்ணப்பித்துள்ளனர்.
 இவர்களில், 13,430 ஆண்களும், 18,139 பெண்களும் அடங்குவர். அதிகபட்சமாக பிற்பட்ட வகுப்பினர் 12,106 பேர் விண்ணப்பித்துள்ளனர். மிகவும் பிற்பட்டோரில் 8,481 பேரும், எஸ்.சி.பிரிவினர் 6,573 பேரும் விண்ணப்பங்கள் அனுப்பியுள்ளனர்.
 இருப்பினும் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு குறைவான மாணவ, மாணவிகளே விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு இறுதி நாள் வரையிலும் 53,047 மாணவ, மாணவிகள் பதிவு செய்திருந்த நிலையில், அவர்களில் 49,030 மாணவ, மாணவிகள் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பித்திருந்தனர். அதன்படி இந்த ஆண்டு 18 ஆயிரம் விண்ணப்பங்கள் குறைவாகவே வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 இருப்பினும் கடந்த ஆண்டு நீட் தேர்வால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அதிக அளவிலான மாணவ, மாணவிகள் வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பித்திருந்ததாகவும், இதற்கு முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தற்போதைய விண்ணப்பங்களின் எண்ணிக்கை சராசரியானதுதான் என்றும் பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 விண்ணப்பப் பதிவு முடிவடைந்த பின்னர் விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீடுதாரர்களுக்கு மட்டும் ஜூன் 18 முதல் 20-ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. சிறப்புப் பிரிவினர் மட்டுமே ஜூலை 7-ஆம் தேதி நடைபெறும் கலந்தாய்வுக்கு நேரில் வர வேண்டும்.
 அதைத் தொடர்ந்து, தரவரிசைப் பட்டியல் ஜூன் 22-ஆம் தேதி வெளியிடப்படும். பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 9-ஆம் தேதி நடைபெறும். 
இந்த ஆண்டு முதல் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலமாகவே நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/16/வேளாண்-பல்கலை-மாணவர்-சேர்க்கைக்குஇதுவரை-31-ஆயிரம்-பேர்-விண்ணப்பம்-கடந்த-ஆண்டை-விட-குறைவு-2940699.html
2940698 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் உதகையில் அரசுப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: சாவு எண்ணிக்கை 9 ஆக உயர்வு DIN DIN Saturday, June 16, 2018 07:23 AM +0530 உதகை-குன்னூர் சாலையில் 250 அடி பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலத்த காயமடைந்த பேருந்து நடத்துநர் வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தார். இதையடுத்து, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
 நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள மந்தாடா பகுதியில் 250 அடி பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில்  6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 35-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இவர்களில் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அல்மாஸ் (29) என்ற பெண் உயிரிழந்தார். 
 பின்னர், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தீட்டுக்கல் பகுதியைச் சேர்ந்த சிக்ராஜ் (47) என்பவர் வியாழக்கிழமை உயிரிழந்தார். 
இந்த நிலையில் தலையில் பலத்த காயத்துடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த உதகை, குருத்துக்குழியைச் சேர்ந்த பேருந்து நடத்துநர் பிரகாஷ் (38) வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.
 இதையடுத்து, உயிரிழந்த மூன்று பேரின் உடலும் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் பிரேதப் பரிசோதனை செய்வதில் காலதாமதம் ஏற்பட்டதாக கூறி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 மேலும், விபத்தில் பலத்த காயமடைந்து, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குன்னூர் அருகே உள்ள பெரியவண்டிச் சோலையைச் சேர்ந்த பாலசந்தர் (62), உதகை அருகே, அருவங்காடு பகுதியைச் சேர்ந்த நமசிவாயம் (54), சாந்தி (48), இடுவள்ளி பகுதியைச் சேர்ந்த கணேசன் (23), நஞ்சநாடு பகுதியைச் சேர்ந்த ராணி (50), குன்னூரைச் சேர்ந்த மாரிமுத்து (59), ஆனந்த் (36), உதகையைச் சேர்ந்த நடராஜன் (56), காந்தல் பகுதியைச் சேர்ந்த சுகன்யா (21) ஆகியோரை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
 விபத்தில் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் மருத்துவர்களை அறிவுறுத்தினார். 
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 விபத்தில் பலத்த காயமடைந்த 15 பேரில் 6 பேரின் உடல் நிலையில் முன்னேற்றம் அடைந்ததால் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள 9 பேருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ. 2 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார் என்றார்.
 மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன், சட்டப் பேரவை உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார், மாநகரக் காவல் ஆணையர் கு.பெரியய்யா, மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மருத்துவமனை டீன் அசோகன், இருப்பிட மருத்துவ அலுவலர் டாக்டர் சௌந்தரவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/16/உதகையில்-அரசுப்-பேருந்து-பள்ளத்தில்-கவிழ்ந்து-விபத்து-சாவு-எண்ணிக்கை-9-ஆக-உயர்வு-2940698.html
2940040 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் உரிய இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி DIN DIN Friday, June 15, 2018 08:45 AM +0530 சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
 கோவை, மருதமலை சாலை, நவாவூர் பிரிவில் வசித்து வந்தவர் வெங்கட்ராமன் (59). இவர் கடந்த 2012 மார்ச் 31-ஆம் தேதி லாலி சாலைப் பேருந்து நிறுத்தத்தில் நின்ற அரசுப் பேருந்தில் ஏறினார். இதில், பேருந்தில் ஏறுவதற்கு முன்பாகவே ஓட்டுநர் பேருந்தை இயக்கியதால் தவறி விழுந்த வெங்கட்ராமன், பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.
 இதையடுத்து, உயிரிழந்த வெங்கட்ராமனின் மனைவி இழப்பீடு கேட்டு கோவை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் உயிரிழந்த வெங்கட்ராமனின் குடும்பத்துக்கு ரூ. 11.71 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னரும் இழப்பீடு வழங்காததால் வட்டியுடன் ரூ. 16 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 
 இதையடுத்து, அரசுப் போக்குவரத்து கழகம் இழப்பீடாக ரூ. 13.61 லட்சத்தை கடந்த ஆண்டு வழங்கியது. மேலும், ரூ. 2.38 லட்சத்தை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தது. இதையடுத்து, மீதித் தொகையை வழங்காததால் கோவை சிட்ரா பகுதியில் இருந்து செல்லக் கூடிய அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் வியாழக்கிழமை ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/15/உரிய-இழப்பீடு-வழங்காததால்-அரசுப்-பேருந்து-ஜப்தி-2940040.html
2940039 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் கல்லூரி மாணவர்களுக்கு  புத்தாக்கப் பயிற்சி DIN DIN Friday, June 15, 2018 08:44 AM +0530 பொள்ளாச்சி பி.ஏ. பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பி.ஏ. கல்வி நிறுவனங்களின் தலைவர் அப்புக்குட்டி தலைமை வகித்தார். துணைத் தலைவர் லட்சுமி அப்புக்குட்டி குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார். பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பொன்னம்பலம் வரவேற்றார். பி.ஏ. கல்வி  நிறுவனங்களின் முதன்மை செயல் அலுவலர் மணிகண்டன், நிர்வாக அலுவலர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு சென்னை புரோக்கர் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவர் துவாரகநாதன் பங்கேற்று புத்தாக்கப் பயற்சியளித்தார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/15/கல்லூரி-மாணவர்களுக்கு--புத்தாக்கப்-பயிற்சி-2940039.html
2940038 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் அன்னூரில்  மகனுடன் பெண் மாயம் DIN DIN Friday, June 15, 2018 08:44 AM +0530 அன்னூர் அருகே, ஜீவா நகரில் மகனுடன் பெண் வியாழக்கிழமை மாயமானார்.
அன்னூர் அருகே உள்ள ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவராம் (எ) சுரேஷ் (35). இவர், தருமபுரியைச் சேர்ந்த சுதா (29) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 8 வயதில் மகன் உள்ளார். 
இந்நிலையில், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், வீட்டை விட்டு வியாழக்கிழமை மகனுடன் வெளியே சென்ற சுதா அதன்பின் வீடுதிரும்பவில்லை. சுரேஷ் பல இடங்களிலும் தேடியும் அவர்களை பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. 
இதுகுறித்து, அன்னூர் காவல் நிலையத்தில் சுரேஷ் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/15/அன்னூரில்--மகனுடன்-பெண்-மாயம்-2940038.html
2940036 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் வாகனம் மோதி ஒருவர் சாவு DIN DIN Friday, June 15, 2018 08:44 AM +0530 துடியலூர் அருகேயுள்ள வெள்ளகிணறு பகுதியில் நிகழ்ந்த சாலைவிபத்தில் ஒருவர் இறந்தார்.
சின்னவேடம்பட்டியை அடுத்துள்ள வேலப்பநாயக்கன்புதூரைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவர் புதன்கிழமை இரவு 7 மணியளவில் வெள்ளக்கிணறு பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. 
இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து துடியலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/15/வாகனம்-மோதி-ஒருவர்-சாவு-2940036.html
2940035 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் கோவையில் ஜூன் 23 - ஆம் தேதி உழவர்களுக்கான கருத்தரங்கு DIN DIN Friday, June 15, 2018 08:43 AM +0530 கோவை இந்தியத் தொழில் வர்த்தக சபை சார்பில் "உழவே தலை' எனும் தலைப்பிலான விவசாயிகளுக்கான ஒரு நாள் கருத்தரங்கு ஜூன் 23-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
இது குறித்து தொழில் வர்த்தக சபை தலைவர் வனிதா மோகன், கருத்தரங்கு தலைவர் சி.துரைராஜ், ஆலோசகரும் இயற்கை விவசாயியுமான மணி சுந்தர், ஒருங்கிணைப்பாளர் பிரதீப், வர்த்தக சபையின் கெளரவச் செயலர் நடராஜ் ஆகியோர் கோவையில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்ட இளைஞர்கள், தகவல் தொழில்நுட்பத் துறை உள்ளிட்ட பிற துறைகளில் பணியாற்றிக் கொண்டே வார இறுதி நாள்களில் விவசாயத்தில் ஈடுபட்டு வருபவர்கள், எதிர்காலத்தில் விவசாயத்தில் ஈடுபடத் திட்டமிட்டிருப்பவர்கள் போன்றவர்களுக்காக கடந்த ஆண்டு கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற வேளாண் கண்காட்சியின் ஒரு பகுதியாக "உழவே தலை' எனும் தலைப்பில் கருத்தரங்கு நடத்தப்பட்டது.
இந்தக் கருத்தரங்கில் 1,200 பேர் பங்கேற்ற நிலையில் இதுபோன்ற கருத்தரங்கைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று அவர்களிடம் இருந்தும், வேளாண் ஆர்வலர்களிடம் இருந்தும் தொடர் கோரிக்கைகள் எழுந்து வந்தன. இதையடுத்து, "உழவே தலை 2.0' எனும் தலைப்பில் இந்த ஆண்டும் கருத்தரங்கு நடத்தப்பட உள்ளது.
இந்தக் கருத்தரங்கு கோவை, நவ இந்தியா பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியில் ஜூன் 23-ஆம் தேதி காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது. 
இளைஞர்களுக்கு இயற்கை விவசாயத்தை அறிமுகப்படுத்தும் நோக்குடன் நடத்தப்படும் இந்தக் கருத்தரங்கில் 750 பேர் பங்கேற்க முடியும் என்ற நிலையில், தற்போது வரை 450 பேர் தங்களது இருக்கையை உறுதி செய்துள்ளனர்.
இந்தக் கருத்தரங்கில் பங்கேற்பதற்கு ரூ. 900 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கருத்தரங்கில், மண் வளம், நீர் மேலாண்மை, பயிர்ப் பாதுகாப்பு - பூச்சித் தாக்குதல், ஒருங்கிணைந்த வேளாண்மை, சந்தைப்படுத்துதல் ஆகிய தலைப்புகளில் துறை வல்லுநர்களான சுல்தான் இஸ்மாயில், பி.சேதுராமன், எம்.வி.ராமசந்துருடு, எஸ்.ராஜதுரை, மது ராமகிருஷ்ணன், எம்.கிருஷ்ணமூர்த்தி, ஆர்.எஸ்.வெங்கட்ராமன், பி.திருஞானசம்பந்தம், எஸ்.ஆர்.சுந்தரராமன், டி.கோவிந்தராஜன், கு.சிவராமன் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேச இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/15/கோவையில்-ஜூன்-23---ஆம்-தேதி-உழவர்களுக்கான-கருத்தரங்கு-2940035.html
2940034 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் கருமத்தம்பட்டிக்கு தற்காலிக டி.எஸ்.பி.நியமனம் DIN DIN Friday, June 15, 2018 08:43 AM +0530 கருமத்தம்பட்டி காவல் சரகத்துக்கு தற்காலிகமாக புதிய டி.எஸ்.பி. நியமிக்கப்பட்டுள்ளார். 
சூலூர் பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட திருட்டு மற்றும் வழிப்பறிக் கொள்ளைகள் ஒரே மாதத்தில் நடைபெற்றுள்ளதால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டது. இதனால், திருட்டைத் தடுக்க அனைத்துக் கட்சியினருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து சூலூர் காவல் நிலையத்துக்கு கூடுதலாக 20 போலீஸாரை  தற்காலிகமாக அனுப்பிவைத்தார். இதன்மூலம் சூலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 15 சோதனை இடங்களில் போலீஸார் வாகனச் சோதனை மற்றும் இரவு ரோந்து உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த 4 நாள்களாக ஒரு திருட்டுச் சம்பவமும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
இந்நிலையில், கடைகளில் பூட்டை உடைத்து திருடும் செயல்கள் அதிகரித்துள்ளதாகக் கூறி ஜூன் 19ஆம் தேதி சூலூர் முழுவதும் கடையடைப்பு நடத்தி தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க வணிகர்சங்கத்தினர் முடிவெடுத்தனர். இத் தகவலை தெரிவிப்பதற்காக வியாழக்கிழமை காவல்நிலையம் வந்திருந்தனர். அப்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வியாபாரிகள் சங்கத்தினர் சமாதானமடைந்ததாக கருமத்தம்பட்டி துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் தெரிவித்தார். 
இதற்கிடையே திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளை விரைவாகக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டி தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும், கருமத்தம்பட்டி துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரனை இப் பணிக்கு தனி அலுவலராக நியமித்து காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். கருமத்தம்பட்டி உள்கோட்டத்துக்கு கூடுதல் பொறுப்பில் கோவை நில அபகரிப்பு பிரிவு துணை கண்காணிப்பாளராக இருக்கும் சண்முகையா நியமிக்கப்பட்டுள்ளார். 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/15/கருமத்தம்பட்டிக்கு-தற்காலிக-டிஎஸ்பிநியமனம்-2940034.html
2940033 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் 41.65 அடியை எட்டியது சிறுவாணி அணை நீர்மட்டம் DIN DIN Friday, June 15, 2018 08:43 AM +0530 மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 3.28 அடி உயர்ந்து 41.65 அடியை எட்டியுள்ளது.
 கோவை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த 5 நாள்களுக்கு மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த 5 நாள்களில் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 32 அடிக்கு மேலாக உயர்ந்துள்ளது.
 இந்நிலையில், சிறுவாணி அணைப் பகுதியில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி 120 மில்லி மீட்டரும், அடிவாரத்தில் 44 மில்லி மீட்டரும் மழைப் பதிவாகியது. மேலும், அணையின் நீர்மட்டம் 3.28 அடி உயர்ந்து 41.65 அடியை எட்டியுள்ளது. அதே நேரத்தில் சகதி மற்றும் குப்பைகள் காரணமாக சிறுவாணி அணையின் மதகுகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் 1.6 கோடி லிட்டர் மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. 
இதைச் சீரமைக்கும் பணியில் குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
 மேலும் கடந்த 5 நாள்களுக்கு மேலாக நீடித்து வந்த பலத்த மழை வியாழக்கிழமை பகல் முதல் குறையத் தொடங்கியது. இதனால் மாவட்டம் முழுவதும் பரவலாக சாரல் மழை மட்டுமே பெய்தது. அதே நேரத்தில் மேற்குத் தொடர்ச்சி மழையில் பெய்து வரும் மழை காரணாக நொய்யல் மற்றும் அதன் கிளை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் குளங்கள் நிரம்பி வருகின்றன.
  மழையால் நிரம்பிய வெள்ளலூர் குளம்: தொடர் மழையால் மதுக்கரை வட்டாரத்தில் உள்ள வெள்ளலூர் குளத்துக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 15 ஆண்டுகளாக நீரின்றி வறண்டிருந்த வெள்ளலூர் குளத்தில் நீர் நிரம்பியதால் தண்ணீர்த் தட்டுப்பாடு ஓரளவு நிவர்த்தி ஆகும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தண்ணீர் இன்றி விவசாயம் மேற்கொள்ளாமல் இருந்தவர்களும் தற்போது காய்கறி பயிரிடுவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/15/4165-அடியை-எட்டியது-சிறுவாணி-அணை-நீர்மட்டம்-2940033.html
2940031 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் பில்லூர் அணையிலிருந்து நீர் வெளியேற்றம்: பவானி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்: பல்லாயிரம்  வாழைகள் மூழ்கின DIN DIN Friday, June 15, 2018 08:43 AM +0530 பில்லூர் அணையிலிருந்து தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதனால், சிறுமுகை பகுதிகளில் ஆற்றோரம் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் நீரில் மூழ்கின.
தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கத்தைவிட அதிகமாக உள்ளது. கேரளம், நீலகிரி உள்பட பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த வாரம் முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், கடந்த சனிக்கிழமை அணையில் நீர்வரத்து அதிகமாகி அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. 
ஞாயிற்றுக்கிழமை அணையின் மொத்தக் கொள்ளளவான 100 அடியில் 97 அடியை நீர்மட்டம் எட்டியது. இதையடுத்து அன்று மதியம் பாதுகாப்புக் கருதி அணையின் நான்கு மதகுகளும் திறந்து விடப்பட்டன. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
எனவே, மேட்டுப்பாளையம் பகுதியில் ஆற்றோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்வதால், அணையின் நீர்மட்டம் குறையவில்லை.
எனவே, அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதன் உச்சகட்டமாக கடந்த செவ்வாய்க்கிழமை அணையில் அதிக அளவு நீர் நிரம்பியதால், விநாடிக்கு 24,000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. 
இதனால் மேட்டுப்பாளையத்தில் வெள்ளம் கரை புரண்டோடியது. கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். வருவாய்த் துறையினர் பவானி ஆற்றின் வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து கண்காணித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வந்தனர். 
வெள்ளப் பெருக்கால் சிறுமுகையை அடுத்துள்ள திம்மராயம்பாளையம் பகுதிகளில் பவானி ஆற்றோரம் பயிரிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழைகள் நீரில் மூழ்கின. 
பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான நிலங்களில் இந்த ஆண்டு விவசாயிகள் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட வாழைகளைப் பயிரிட்டுள்ளனர். தொடர்ந்து பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு இருந்தால், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட வாழைகள் நீரில் மூழ்கும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/15/பில்லூர்-அணையிலிருந்து-நீர்-வெளியேற்றம்-பவானி-ஆற்றில்-கரைபுரண்டோடும்-வெள்ளம்-பல்லாயிரம்--வாழைகள்-ம-2940031.html
2940029 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை DIN DIN Friday, June 15, 2018 08:42 AM +0530 கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2018-19 கல்வி ஆண்டுக்கான முதுநிலை பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை, முதுநிலை பட்டப் படிப்பில் 33 துறைகளிலும், முனைவர் பட்டப் படிப்பில் 28 துறைகளிலும் ஒருங்கிணைந்த முனைவர் பட்டப் படிப்பில் 4 துறைகளிலும், பகுதி நேர முனைவர் ஆராய்ச்சி பட்டப் படிப்பில் 28 துறைகளிலும் வழங்கப்பட உள்ளது.
மேற்கண்ட முதுநிலை பட்டப் படிப்புகள், கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட உறுப்புக் கல்லூரிகளான மதுரை, திருச்சி, குமுளூர், கிள்ளிகுளம், பெரியகுளம், மேட்டுப்பாளையம் கல்லூரிகள் மூலமாக வழங்கப்படுகிறது. 
மாணவர் சேர்க்கைக்கு பல்கலைக்கழக இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மாணவர்கள் படிவங்களைப் பதிவிறக்கம் செய்து, உரிய கட்டணம் செலுத்தி, தேவையான ஆவணங்களை இணைத்து அனுப்ப வேண்டும்.  முதுநிலை பட்ட மேற்படிப்புக்கான விண்ணப்பங்களை ஜூலை 11-ஆம் தேதிக்குள்ளும், முனைவர் பட்ட மேற்படிப்புக்கான விண்ணப்பங்களை ஜூலை 13-ஆம் தேதிக்குள்ளும் அனுப்ப வேண்டும்.
மாணவர் சேர்க்கை தொடர்பான அனைத்துத் தகவல்களும் மின்னஞ்சல் மூலமாகவே தெரிவிக்கப்படும் என்பதால்,  விண்ணப்பதாரர்கள் தங்களது மின்னஞ்சல் முகவரி, செல்லிடப்பேசி எண் ஆகியவற்றை சரியாகப் பதிவு செய்ய வேண்டும்; பல்கலைக்கழக இணையதளத்தை தினமும் தவறாமல் பார்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/15/வேளாண்மை-பல்கலைக்கழகத்தில்-முதுநிலை-படிப்புக்கான-மாணவர்-சேர்க்கை-2940029.html
2940028 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் பாஜக அரசு மீதான ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை மக்கள் நம்ப மாட்டார்கள் DIN DIN Friday, June 15, 2018 08:42 AM +0530 பாஜக அரசு மீதான ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை மக்கள் நம்ப மாட்டார்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறினார். 
திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கோவைக்கு விமானம் மூலமாக வியாழக்கிழமை வந்த தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் ஆறுகள், குளங்கள் நிரம்பி வருகின்றன. கிடைக்கும் மழை நீரைச் சேமிக்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட வேண்டும்.  தமிழகத்தைப் பொருத்த வரை அண்மையில் நகைப் பறிப்புச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ஒரு மணி நேரத்தில் எவ்வளவு நகை பறிக்கிறோம் என்பதைப் போட்டியாகவே திருடர்கள் நடத்தி வருகின்றனர். இதனால் பெண்கள் வெளியில் நடமாடவே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது காவல் துறையினர் இதைத் தடுக்க ரோந்துப் படையை இறக்கியுள்ளனர். இதன் மூலமாவது நகைப் பறிப்புச் சம்பவங்கள் கட்டுப்பட வேண்டும்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை  பலவிதமாகக் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர் எவ்வளவு குறை சொன்னாலும் இன்று மத்தியில் நிலையான ஆட்சி, ஊழல் இல்லாத ஆட்சியை பாஜக கொடுத்து வருகிறது. 
கார்த்தி சிதம்பரம் மீதான 4,500 பக்கக் குற்றப் பத்திரிகையில், ப.சிதம்பரம் பதவியில் இருந்தபோது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி தனது மகனுக்கு உதவி இருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இத்தகைய நிலையில், ஊழலற்ற ஆட்சியை கொடுத்திருக்கிறோம் என்பதில் பாஜக தலைநிமிர்ந்து நிற்கிறது. ஆனால், பாஜக அரசு மீது ராகுல் காந்தி தினமும் கூறி வரும் குற்றச்சாட்டுகளை மக்கள் நம்ப மாட்டார்கள் என்றார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/15/பாஜக-அரசு-மீதான-ராகுல்-காந்தியின்-குற்றச்சாட்டுகளை-மக்கள்-நம்ப-மாட்டார்கள்-2940028.html
2940026 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் நீரில் அடித்துச் செல்லப்பட்டவர் சாவில் மர்மம்: உறவினர்கள் புகார் DIN DIN Friday, June 15, 2018 08:42 AM +0530 நீரில் அடித்துச் செல்லப்பட்டு இறந்த இளைஞர் சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
வால்பாறையை அடுத்துள்ள நல்லகாத்து எஸ்டேட்டை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (37). டூரிஸ்ட் வேன் ஓட்டுநரான இவர் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை தனது நண்பர்களுடன் வெள்ளமலை எஸ்டேட்  சுரங்கப் பாதை வழியாக கரைபுரண்டு வரும் தண்ணீரை பார்க்கச் சென்றுள்ளனர். அப்போது ஜெயபிராஷ் தண்ணீரில் தவறி விழுந்து அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. 
தொடர்ந்து இரண்டு தினங்களாகத் தீயணைப்புத் துறையினர் பல்வேறு பகுதி ஆறுகளில் தேடியும் உடல் கிடைக்கவில்லை. இதனிடையே ஜெயபிரகாஷ் சாவில் மர்மம் உள்ளது. எனவே, உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வால்பாறை காவல் நிலையத்தில் அவரது உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/15/நீரில்-அடித்துச்-செல்லப்பட்டவர்-சாவில்-மர்மம்-உறவினர்கள்-புகார்-2940026.html
2940024 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் பொள்ளாச்சி நிதி நிறுவன அதிபர் கொலை வழக்கில் இருவர் கைது DIN DIN Friday, June 15, 2018 08:41 AM +0530 பொள்ளாச்சியில் நித நிறுவன அதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரை போலீஸார் கைது செய்தனர். 
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்துள்ள வடுகபாளையத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. பைனான்ஸ் தொழில் செய்துவந்தார்.  கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பிறகு வீடு திரும்பவில்லை. திங்கள்கிழமை காலையில் சிங்காநல்லூர் பகுதியில் அவர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். 
ஆனைமலை போலீஸார் நான்கு தனிப்படைகளை அமைத்து கொலையாளிகளைத் தேடி வந்தனர்.  விசாரணையில், சோமந்துறை சித்தூரைச் சேர்ந்த செந்தில்வேல் (45), அவரது உதவியாளர் கிருஷ்ணகுமார் (20) ஆகியோர் கந்தசாமியை கொலை செய்தது தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் ஆனைமலை காவல் ஆய்வாளர் அம்மாத்துரை தலைமையிலான போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். 
செந்தில்வேல், வட்டிக்கு கந்தசாமியிடம் பணம் வாங்கியிருந்ததும் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டபோது ஏற்பட்ட  தகராறில் செந்தில்வேலும், அவரது உதவியாளர் கிருஷ்ணகுமாரும் இரும்புக் கம்பியால் தாக்கி கந்தசாமியைக் கொலை செய்ததும் தெரியவந்தது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/15/பொள்ளாச்சி-நிதி-நிறுவன-அதிபர்-கொலை-வழக்கில்-இருவர்-கைது-2940024.html
2940023 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் யானை தாக்கி முதியவர் காயம் DIN DIN Friday, June 15, 2018 08:41 AM +0530 மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள நெல்லித்துறை ஊராட்சி, பூதப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் சடையன் மகன் சின்னான் (55).  இருளர் இனத்தைச் சேர்ந்த இவர் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், சின்னான் வியாழக்கிழமை (ஜூன்14)  மதியம் தனது கிராமத்தின் அருகிலுள்ள வனப் பகுதிக்குச்
சென்றார். அப்போது  புதர் மறைவிலிருந்த ஒரு காட்டு யானை ஆக்ரோஷத்துடன் வெளியே வந்து சின்னானைத் தாக்கியது. இதில் இடது மார்பு பகுதி கிழிந்து அவர் பலத்த காயமடைந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மேட்டுப்பாளையம் வனச்சரகர் செல்வராஜ், வனவர் ரவி, வனக் காப்பாளர்  தினகரன் உள்ளிட்ட வனத் துறையினர்  சின்னானை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில்  சேர்த்தனர். அங்கு முதல் உதவி அளித்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இது குறித்து வனத்துறையினர் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/15/யானை-தாக்கி-முதியவர்-காயம்-2940023.html
2940021 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் சூலூர் வட்டாட்சியர் பெயரில் போலி ஆவணம் தயாரிப்பு: போலீஸார் விசாரணை DIN DIN Friday, June 15, 2018 08:41 AM +0530 வட்டாட்சியர் அளித்த சான்றுபோல போலியாக ஆவணங்கள்,  சான்றுகளைத் தயாரித்தவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு சூலூர் வட்டாட்சியர் போலீஸில் புகார் கொடுத்தார். 
கோவை, சூலூர் வட்டம், வடவள்ளி கிராமத்தில் வசிப்பவர் ஆறுசாமி மனைவி சந்திரா.  இவருக்கு சூலூர் வட்டாட்சியர் ஜெகதீசன் தடையில்லாச் சான்று அளித்ததுபோல போலியாக வட்டாட்சியர் கையெழுத்துடன், வட்டாட்சியர் அலுவலக முத்திரையிட்டு மே 17ஆம் தேதி சான்று கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல அப்பநாய்க்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி மேகலா என்பவருக்கும், அவரது நிலம் குறித்து  கிராம நிர்வாக அலுவலர்,  நிலஉரிமைச் சான்று அளித்தது போல போலியாகத் தயாரித்துள்ளனர். இதில் மே 31ஆம் தேதி என குறிப்பிடப்பட்டுள்ளது. 
இதுகுறித்து சூலூர் வட்டாட்சியரின் செல்லிடப்பேசிக்கு கட்செவி அஞ்சல் மூலம் தகவல் வந்துள்ளது. அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வட்டாட்சியர் ஜெகதீசன், மாவட்ட ஆட்சியர் ஹரிகரனிடம் கடந்த திங்கள்கிழமை புகார் தெரிவித்தார்.  பிறகு ஆட்சியர் கூடியபடி,  சந்திரா மற்றும் மேகலா ஆகியோரிடம் வட்டாட்சியர் ஜெகதீசன் நேரில் விசாரித்துள்ளார். 
மேகலா சுல்தான்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கடன் பெறுவதற்காக அங்கு முகவராகப் பணிபுரியும் இருவரை  அனுகினாராம். எனவே, குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த முகவர்களிடம் வட்டாட்சியர் விசாரித்துள்ளார். அப்போது, இருவரும் தங்களுக்கு  எதுவும் தெரியாது என  பதில் கூறினராம்.  எனவே, அப்பநாய்க்கன்பட்டியைச் சேர்ந்த மேகலாவிடம் விசாரிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.  இதுகுறித்து சூலூர் போலீஸில் வட்டாட்சியர் ஜெகதீசன் வியாழக்கிழமை புகார் அளித்தார். அவருடன் செலக்கரிச்சல் வருவாய் ஆய்வாளர் நாட்ராயன், அப்பநாய்க்கன்பட்டி, வடவள்ளி கிராம நிர்வாக அலுவலர்களும் புகார் அளித்தனர்.
புகாரில் சம்பந்தப்பட்ட இரு பெண்களின் பெயரில் போலியாக ஆவணங்களும், சான்றுகளும் தயாரிக்கப்பட்டுள்ளன.  இவற்றைத் தயாரித்தது யார்,  இதிலுள்ளஅரசு முத்திரைகள் போலியானதா, அலுவலகத்தில்  திருடப்பட்டதா என்பதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு வட்டாட்சியர் புகாரில் தெரிவித்துள்ளார். இது குறித்து  சூலூர் காவல் ஆய்வாளர் தங்கராஜ் தீவிர விசாரணையில் 
ஈடுபட்டுள்ளார். 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/15/சூலூர்-வட்டாட்சியர்-பெயரில்-போலி-ஆவணம்-தயாரிப்பு-போலீஸார்-விசாரணை-2940021.html
2940020 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் மோசமான திரைப்படத்தின் 2-ஆவது இடைவேளை போலிருக்கிறது: 18 எம்எல்ஏக்கள் வழக்கு குறித்து பொன். ராதாகிருஷ்ணன் DIN DIN Friday, June 15, 2018 08:41 AM +0530 மோசமான ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் படம் முடிந்து வெளியே செல்ல நினைக்கும்போது மீண்டும் 2-ஆவது இடைவேளை விட்டது போல தமிழக மக்களுக்கு 18 எம்எல்ஏ-க்கள் குறித்த தீர்ப்பு அமைந்து விட்டதாக,  கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். 
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருப்பூரிலிருந்து மேட்டுப்பாளையம் வருகை தந்த அவர், வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 
ஒரு பகுதியின் தொழில் ரீதியான வளர்ச்சியில் அதைச்  சுற்றியுள்ள பெருநகரங்களுக்கான இணைப்புச் சாலைகளின் பங்கு பிரதானமாக உள்ளது. பெருநகரங்களையும், தொழிற்சாலைகளையும் இணைக்க இணைப்புப் சாலைகள் அவசியம். தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி சிறப்பாக உள்ளது. அதைக் கருத்தில் கொண்டு, கொங்கு மண்டலத்தின் தொழில் வளர்ச்சிக்கு உதவும் வகையில், சேலம் பசுமை வழிச் சாலைத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 
இந்த 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்ப்பது, ஒட்டுமொத்த கொங்கு மண்டல வளர்ச்சியை முடக்க முயல்வதாகும். அதற்குக் காரணமானவர்கள் கண்டறியப்பட வேண்டும். சேலம்- சென்னை பசுமை வழிச் சாலைத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டமாகும் என்றார். 
இந்தச் சந்திப்பின்போது, பாஜக மாநிலப் பொதுச் செயலர் வானதி சீனிவாசன், மாநிலச் செயலர் நந்தகுமார், நகரமன்ற முன்னாள் தலைவர் சதீஷ்குமார், மாநில விவசாய அணி செயற்குழு உறுப்பினர் பாண்டுரங்கன், மாவட்டப் பொதுச் செயலாளர்கள் வி.பி.ஜெகநாதன், செல்வராஜ், நகரத் தலைவர் மனோஜ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/15/மோசமான-திரைப்படத்தின்-2-ஆவது-இடைவேளை-போலிருக்கிறது-18-எம்எல்ஏக்கள்-வழக்கு-குறித்து-பொன்-ராதாகிருஷ்-2940020.html
2940019 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் அரசு கலைக் கல்லூரியில் 22இல்  2ஆம் கட்ட கலந்தாய்வு DIN DIN Friday, June 15, 2018 08:40 AM +0530 காரமடை அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிகமாக இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலியாக உள்ள 116 இடங்களுக்கு ஜூன் 22ஆம் தேதி 2ஆவது கட்டமாக கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இது குறித்து கல்லூரி நிர்வாகம் சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  மேட்டுப்பாளையம், காரமடையைச் 
சுற்றியுள்ள கிராமப்புற  மாணவர்கள் பயனடையும் வகையில் மேட்டுப்பாளையத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது.
இதில் தற்போது பி.ஏ. (ஆங்கிலம்), பொருளாதாரம், பி.காம்., பி.காம் (சி.ஏ.), பி.எஸ்சி (கணிதம்) ஆகிய பாடப் பிரிவுகள் செயல்படுகின்றன. ஒவ்வொரு பாடப் பிரிவிலும் 60 பேர் வீதம் 300 மாணவர்கள் நிகழாண்டில் சேர்க்கப்பட உள்ளனர்.
கடந்த வாரம் நடைபெற்ற முதல்கட்ட கலந்தாய்வில் அனைத்து பாடப் பிரிவுகளிலும் 184 மாணவ,மாணவியர் சேர்க்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து  வெள்ளிக்கிழமை (ஜூன் 22) காலை 10.30 மணிக்கு  2ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க வரும் மாணவர்கள் சேர்க்கைக்குத் தேவையான அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் வர வேண்டும் என தெரிவிக்கப்
பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/15/மேட்டுப்பாளையம்-அரசு-கலைக்-கல்லூரியில்-22இல்--2ஆம்-கட்ட-கலந்தாய்வு-2940019.html
2940017 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் கொலை வழக்கில் கைதான 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது DIN DIN Friday, June 15, 2018 08:40 AM +0530 ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கில் கைதான 4 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகரக் காவல் ஆணையர் கு.பெரியய்யா உத்தரவிட்டுள்ளார்.
 கோவை, ஒண்டிப்புதூரைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் சிட்டிபாபு (39). இவர்,  இருகூர் செல்லும் சாலையில் ஏப்ரல் 5-ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். 
இதுகுறித்து, சிங்காநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து குனியமுத்தூரைச் சேர்ந்த சந்தோஷ் (29), ஒண்டிப்புதூரைச் சேர்ந்த கண்ணன் (24), சக்திவேல் (23), சுரேஷ் (24) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், முன்விரோதம் காரணமாக சிட்டிபாபுவை கொலை செய்ததும் தெரியவந்தது. 
இந்நிலையில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் 4 பேரையும் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாநகரக் காவல் ஆணையர் கு.பெரியய்யா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, 4 பேரும் குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/15/கொலை-வழக்கில்-கைதான-4-பேர்-குண்டர்-சட்டத்தில்-கைது-2940017.html
2940016 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் வீட்டில் ரூ.7  லட்சம் திருட்டு: வேலைக்காரப் பெண் தலைமறைவு DIN DIN Friday, June 15, 2018 08:40 AM +0530 அன்னூரில் வீட்டில் இருந்த பணத்தை திருடிச்  சென்ற வேலைக்காரப் பெண்ணை போலீஸார் தேடிவருகின்றனர்.
அன்னூரைச்  சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மனைவி புஷ்பா(60). இவர் கோழி இறைச்சிக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் புஷ்பாவின் மகனும், மகளும் தங்களது குழந்தைகளுடன்  தங்கியிருந்தனர். 
இவர்களது வீட்டில் அன்னூர், மேட்டுப்பாளையம் ரோடு பகுதியைச்  சேர்ந்த பாபு மனைவி பாப்பாத்தி (53) என்பவர் கடந்த 11 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி வெளியில் சென்றவர் 29ஆம் தேதி முதல் வேலைக்கு வரவில்லையாம். எனவே, பாப்பாத்தி வீட்டுக்குச் சென்று விசாரித்தபோது அவர் வீட்டில் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து புஷ்பாவின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரூ. 7 லட்சம் ரொக்கம் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து புஷ்பா அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/15/வீட்டில்-ரூ7--லட்சம்-திருட்டு-வேலைக்காரப்-பெண்-தலைமறைவு-2940016.html
2940014 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் வால்பாறையில் 97 மி.மீ. மழை: ஆறுகளில் பெருக்கெடுத்தோடும் வெள்ளம் DIN DIN Friday, June 15, 2018 08:40 AM +0530 வால்பாறை நகர்,  சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையால் அனைத்து ஆறுகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கோவை மாவட்டம், வால்பாறை பகுதியில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மண் சரிவுடன், மரங்கள் விழுந்து பல்வேறு எஸ்டேட் பகுதிகளுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வால்பாறை நகரப் பகுதிகளில் உள்ள சில வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன.
புதன்கிழமை காலை முதல் மழை குறைந்து காணப்பட்டது. இருப்பினும், வியாழக்கிழமை அதிகாலை, வால்பாறை- பொள்ளாச்சி சாலையில் மரம் விழுந்து சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. 
வியாழக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு (மி.மீ.):
வால்பாறை- 97, நீராறு அணை- 126, சின்னக் கல்லாறு- 114, சோலையாறு அணை- 124. 
சோலையாறு அணைக்கு 4246.53  கனஅடி நீர்வரத்து இருந்தது. 160 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 122.80 அடியாக உள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/15/வால்பாறையில்-97-மிமீ-மழை-ஆறுகளில்-பெருக்கெடுத்தோடும்-வெள்ளம்-2940014.html
2939200 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் ரூ. 73.50 கோடி கிழிந்த நோட்டுகள்  ரிசர்வ் வங்கிக்கு அனுப்பிவைப்பு DIN DIN Thursday, June 14, 2018 07:55 AM +0530 கோவையில் பல்வேறு வங்கிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட ரூ. 73.50 கோடி பழைய மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுகள் பலத்த பாதுகாப்புடன் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு புதன்கிழமை  அனுப்பி வைக்கப்பட்டன. 
கோவை, கணபதியில் உள்ள ஆக்சிஸ் வங்கி, சிறைச்சாலை சாலையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி, குறிச்சியில் உள்ள பேங்க ஆஃப் இந்தியா ஆகிய மூன்று வங்கிகளில் சேகரிக்கப்பட்ட பழைய மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுகளை சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்கு கொண்டு செல்லத் திட்டமிட்டிருந்தனர். 
அதன்படி, கோவையில் இருந்து புதன்கிழமை காலை 6 மணி அளவில் 2 கன்டெய்னர் லாரிகளில் ரூ. 73.50 கோடி ரூபாய் நோட்டுகள் பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/14/50-கோடி-கிழிந்த-நோட்டுகள்-ரூ-73ரிசர்வ்-வங்கிக்கு-அனுப்பிவைப்பு-2939200.html
2939199 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் தேநீர்க் கடைகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரி ஆய்வு DIN DIN Thursday, June 14, 2018 07:50 AM +0530 சூலூர் அருகே பாப்பம்பட்டிபிரிவில் உள்ள தேநீர் கடைகளில் கலப்பட டீ தூள் உபயோகப்படுத்துவதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி புதன்கிழமை  ஆய்வு நடத்தினார். 
சூலூர் அருகே பாப்பம்பட்டிபிரிவு பகுதியில் உள்ள தேநீர் கடைகளில் கலப்பட டீ தூள் பயன்படுத்துவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சக்திவேல் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.   இதில் தேநீர் கடைகளில் பயன்படுத்தப்படும் டீ தூளில் கலப்படம் உள்ளதா என பரிசோதனை செய்தனர்.
பொதுமக்களுக்கு வழங்கப்படும் பலகாரங்களை நாளிதழ்களில் வைத்து கொடுக்க கூடாது.  அவ்வாறு கொடுக்கும்போது காகிதத்தில் உள்ள காரியம் உடலுக்குள் சென்று வியாதிகளை ஏற்படுத்தும் என எச்சரித்தார். வாழை இலை அல்லது உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத தாள்களையோ உபயோகப்படுத்தவேண்டும் எனவும்,  பலகாரங்களை மூடிவைத்து வியாபாரம் செய்யவும் அறிவுறுத்தினார். 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/14/தேநீர்க்-கடைகளில்-உணவுப்-பாதுகாப்பு-அதிகாரி-ஆய்வு-2939199.html
2939197 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் கோவை அரசு கலைக் கல்லூரி கலந்தாய்வு: 1,252 இடங்கள் நிரம்பின DIN DIN Thursday, June 14, 2018 07:50 AM +0530 கோவை அரசு கலைக் கல்லூரியில் 2018-19-ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் புதன்கிழமை வரை 1,252 இடங்கள் நிரம்பியுள்ளன.
கோவை, ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் 22 இளநிலை பட்டப் படிப்புகளில் 1,400 இடங்கள் உள்ளன. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட்டது. மொத்தம் 14 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையான நிலையில், பூர்த்தி செய்யப்பட்ட 7,050 விண்ணப்பங்கள் பிளஸ் 2 தேர்வு முடிவுகளுக்குப் பின்னர் பெறப்பட்டன.
 இதையடுத்து, மதிப்பெண்கள் கணக்கீடு செய்யப்பட்டு ஜூன் 1-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, கலந்தாய்வு ஜூன் 6-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 6 நாள்கள் கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில் புதன்கிழமை மாலை நிலவரப்படி 1,252 இடங்கள் பூர்த்தியாகியுள்ளன.
 பெண்களுக்கான இடங்கள் முழுவதுமாகப் பூர்த்தியாகிவிட்ட நிலையில், ஆண்களுக்கான 156 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன. தொடர்ந்து, ஜூன்19-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ள நிலையில், ரம்ஜானுக்காக வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டால் அன்று நடைபெறும் கலந்தாய்வு மறுநாளான சனிக்கிழமை நடத்தப்படும் என்றும், 
ஒருவேளை சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவாறு வெள்ளிக்கிழமை கலந்தாய்வு நடைபெறும் என்றும் சேர்க்கைப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/14/கோவை-அரசு-கலைக்-கல்லூரிகலந்தாய்வு-1252-இடங்கள்-நிரம்பின-2939197.html
2939196 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் தொட்டிபாளையத்தில் பயன்பாட்டில் இல்லாத கிணற்றை மூடக் கோரிக்கை DIN DIN Thursday, June 14, 2018 07:49 AM +0530 காளப்பட்டி அருகே தொட்டிபாளையம் பகுதியில் உள்ள  பாழடைந்த  கிணற்றை மூட  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாநகராட்சி 34-ஆவது வார்டுக்கு உள்பட்ட தொட்டிபாளையம், நேரு நகர் மற்றும் பூபதி நகருக்கு மத்தியில் மாநகராட்சிக்கு சொந்தமான 125 அடி ஆழ பொதுக் கிணறு உள்ளது.  
பல ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட இந்தக் கிணறு தற்போது மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் பாழடைந்து உள்ளது.  
இங்குள்ள வீடுகளுக்கு செல்லும் வழியில்தான் இந்தக் கிணறு உள்ளது. இந்த கிணறுக்கு மேல் பகுதியில்  பாதுகாப்பு வளையம்  அமைக்கப்படாமல்  உள்ளது. அதனால் இந்தப் பகுதியில் விளையாடுவதற்காக வரும் சிறுவர்கள், கிணற்றை எட்டி பார்ப்பது, கிணற்றின் மீது ஏறுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  
இதில் எதிர்பாராதவிதமாக குழந்தைகள் கிணற்றுக்குள் விழவும் வாய்ப்பு உள்ளது. 
எனவே, பயன்பாட்டில் இல்லாத இந்த கிணறை மூட வேண்டும் என்று அப்பகுதியினர் கோவை வடக்கு வட்டாட்சியரிடம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மனு அளித்திருந்தனர். இதையடுத்து வட்டாட்சியரும் கிணற்றை மூடி அதன் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சரவணம்பட்டி வருவாய் ஆய்வாளர், காளப்பட்டி கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ஆனால் இதுவரை கிணறு மூடப்படவில்லை. 
மேலும் அந்தப் பகுதியில் அரசியல் கட்சியின் கொடிக்கம்பம் ஒன்று வீதியின் மத்தியில் நடப்பட்டுள்ளது. அதனால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு வாகனங்கள் செல்வதற்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே,  பாழடைந்த கிணற்றை மூடவும், கொடிக்கம்பத்தை அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/14/தொட்டிபாளையத்தில்-பயன்பாட்டில்-இல்லாத-கிணற்றை-மூடக்-கோரிக்கை-2939196.html
2939195 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் அரசு கலைக் கல்லூரியில்  சேர மாணவர்களுக்கு அழைப்பு DIN DIN Thursday, June 14, 2018 07:49 AM +0530 மேட்டுப்பாளையம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில், இளங்கலை 5 பாடப் பிரிவுகளில் காலியாக உள்ள 127 இடங்களில் சேர மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் (பொ) சுகுமாரன் கூறியதாவது:  
இப்பகுதியில் இதுவரை கலை, அறிவியல் பட்டப் படிப்புத் தேவைகளுக்கு கோவை அரசு கலைக் கல்லூரிக்குச் சென்று வந்த ஏழை, எளிய மாணவர்களின் கல்வித் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த 2016 முதல் மேட்டுப்பாளையம் பகுதியில் அரசுக் கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. 
தற்போது இங்கு பி.ஏ. ஆங்கிலம், பி.ஏ. பொருளாதாரம், பி.காம்., பி.காம். சி.ஏ., பி.எஸ்.சி. கணிதம் ஆகிய 5 இளங்கலை பாடப் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. 
ஒவ்வொரு பாடப் பிரிவுக்கும் 60 பேர் என 5 பாடப் பிரிவுகளுக்கு 300 பேர் சேர்க்கப்பட வேண்டும். இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு மாணவர்களிடமிருந்து 380 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 
அதைத் தொடர்ந்து இரண்டு நாள்கள் நடைபெற்ற கலந்தாய்வுக்குப் பின்னர் அனைத்து பாடப் பிரிவுகளிலும் 170 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 
இதனால், பி.ஏ.ஆங்கிலத்தில் 30, பொருளாதாரத்தில் 20, பி.காம் பிரிவில் 10, பி.காம் சி.ஏ. பிரிவில் 22, பி.எஸ்.சி. கணிதத்தில் 45 என மொத்தம் 127 இடங்கள் காலியாக உள்ளன.
 எனவே, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, இப்பகுதியில் இன்னும் கல்லூரியில் சேராத ஏழை, எளிய,  நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மேற் குறிப்பிட்ட பாடப் பிரிவுகளில் குறைந்த கட்டணத்தில் சேர்ந்து பட்டதாரிகளாக உருவாகவேண்டும்.  
இக்கல்லூரிக்கு மேட்டுப்பாளையம், குட்டையூர் அருகே புதிய கல்லூரிக்கான கட்டடப் பணிகள் நடைபெற்று வருவதால், தற்போது காரமடை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்திலேயே தற்காலிகமாக கல்லூரி செயல்பட்டு வருகிறது. 
இந்த ஆண்டின் 3-ஆம் வருட மாணவர்களுக்கு ஜூன் 18-ஆம் தேதியும், புதிதாகச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை 2-ஆம் தேதியும் வகுப்புகள் தொடங்க உள்ளன என்றார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/14/மேட்டுப்பாளையம்-அரசு-கலைக்-கல்லூரியில்-சேர-மாணவர்களுக்கு-அழைப்பு-2939195.html
2939194 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் கோவை விதைப் பரிசோதனை நிலையத்தில் ஓர் ஆண்டில் 7,329 பரிசோதனைகள் DIN DIN Thursday, June 14, 2018 07:49 AM +0530 கோவை தடாகம் சாலையில் உள்ள விதைப் பரிசோதனை நிலையத்தில் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 7,329 விதைப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக விதைப் பரிசோதனை அலுவலர் பா.கணேசன் தெரிவித்துள்ளார்.
 தமிழக அரசின் விதைச்சான்று, அங்ககச்சான்று இயக்ககத்தின் கீழ் கோவை, தடாகம் சாலையில் விதைப் பரிசோதனை நிலையம் செயல்பட்டு வருகிறது. விதைகளின் தரத்தை அறிய பிற ரகங்களின் கலப்பு, முளைப்புத் திறன், ஈரப்பதம் உள்ளிட்டவை அறிவியல் முறையில் இங்கு பரிசோதிக்கப்படுகின்றன.
 சர்வதேச விதைப் பரிசோதனை சங்கத்தின் (இஸ்டா) அங்கீகாரச் சான்று பெற்றுள்ள இந்த நிலையத்தில், உழவர்களுக்கான விதைப் பரிசோதனைகள், விதைத் தயாரிப்பு நிறுவனங்கள், ஏற்றுமதி செய்யப்படும் விதைகளுக்கான பரிசோதனைகளும் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன.
 இந்த நிலையத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த ஆண்டு மார்ச் வரையிலும் 7,499 விதை மாதிரிகள் ஆய்வுக்கு வந்ததாகவும், அதில் 7,329 விதை மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும், இதில், 281 விதை மாதிரிகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாகவும் விதைப் பரிசோதனை அலுவலர் பா.கணேசன் கூறினார்.
 இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: 
அதிக அளவிலான விதைகள் பரிசோதனைக்கு வந்திருந்தாலும் இந்த எண்ணிக்கையில் வெறும் 101 மாதிரிகள் மட்டுமே விவசாயிகள் தாங்களாகவே முன்வந்து ஆய்வுக்கு வழங்கியுள்ளனர். மற்றவை அனைத்தும் விதை நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்களின் மாதிரிகள்தான். ஒரு விதை மாதிரியை ஆய்வு செய்வதற்கு ரூ. 30 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
 விவசாயிகள், நடவுக்கு முன்னதாக விதைப் பரிசோதனை செய்து கொண்டால் அறுவடைக் காலத்தில் அவர்கள் ஏமாற்றம் அடைவதைத் தவிர்க்கலாம். அதேபோல, விதைத் தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்றுமதி செய்யும் விதைகளுக்கு இந்த மையத்தில் சான்றட்டைகள் வழங்கப்படுகிறது. தனியார் விதைப் பரிசோதனை மையங்களுடன் ஒப்பிடும்போது இங்கு கட்டணம் மிகவும் குறைவு என்பதால் நிறுவனங்களும் இந்த சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/14/கோவை-விதைப்-பரிசோதனை-நிலையத்தில்ஓர்-ஆண்டில்-7329-பரிசோதனைகள்-2939194.html
2939193 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் திருட்டு DIN DIN Thursday, June 14, 2018 07:48 AM +0530 மதுக்கரை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
மதுக்கரை அருகே உள்ள மாச்சேகவுண்டன்பாளையத்தில் வசிப்பவர் கிருஷ்ணன் (45). இவரது மனைவி சித்ரா (40). யோகா ஆசிரியர். 
இந்நிலையில், கிருஷ்ணன் தனது மகள்களுடன் உறவினர் வீட்டு விசேஷத்துக்கு ஜூன் 10 ஆம் தேதி சென்றுவிட்டார். இதையடுத்து,  சித்ரா வீட்டைப் பூட்டிவிட்டு யோகா வகுப்புக்காக திங்கள்கிழமை வெளியே சென்றுவிட்டார். பின்னர் இரவு வீடுதிரும்பியபோது,  வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.  உள்ளே சென்று பார்த்தபோது,  பீரோவில் இருந்த 8 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது தெரிந்தது. இதுகுறித்து மதுக்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/14/வீட்டின்-பூட்டை-உடைத்து-8-பவுன்-திருட்டு-2939193.html
2939192 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் சாலை விபத்து: தொழிலாளி சாவு DIN DIN Thursday, June 14, 2018 07:48 AM +0530 செட்டிபாளையம் அருகே மின்கம்பத்தின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.
செட்டிபாளையம் அருகேயுள்ள சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் மருதமுத்து (53). கூலித் தொழிலாளியான இவர்,  தனது இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தார்.  அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது.  
இதில் பலத்த காயமடைந்த மருதமுத்துவை அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து செட்டிபாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/14/சாலை-விபத்து-தொழிலாளி-சாவு-2939192.html
2939191 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் கஞ்சா கடத்தல்:  பெண் உள்பட 3 பேர் கைது DIN DIN Thursday, June 14, 2018 07:48 AM +0530 ஆந்திரத்தில் இருந்து கேரளத்துக்கு காரில் கஞ்சா கடத்திய மூன்று பேரை கோவை போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
 ஆந்திரத்தில் இருந்து கோவை வழியாக கேரளத்துக்கு காரில் கஞ்சா கடத்திச் செல்வதாக போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், நீலாம்பூர் புறவழிச் சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை சந்தேகத்தின்பேரில் சோதனையிட்டனர்.  அதில், மூட்டைகளில் கஞ்சா இருந்து தெரியவந்தது. 
இதுதொடர்பாக, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சிவராஜ் நாயக் (27), லக்மி சர்ஹாரா (27), சம்பத் பஞ்சாரா (28) ஆகியோரைக் கைது செய்தனர்.  விசாரணையில், இவர்கள், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கேரள மாநிலம், மலப்புரத்துக்கு காரில் கஞ்சா கடத்திச் சென்றது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ. 50 லட்சம் மதிப்பிலான 220 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், 3 செல்லிடப்பேசிகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/14/கஞ்சா-கடத்தல்-பெண்-உள்பட-3-பேர்-கைது-2939191.html
2939190 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் போராட்டம் DIN DIN Thursday, June 14, 2018 07:48 AM +0530 சென்னையில் கைது செய்யப்பட்ட அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளை விடுதலை செய்யக் கோரி கோவையில் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யவேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும். ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி 21 மாத ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதிலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் 
கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ கடந்த சில நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது.
 இந்நிலையில், சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கூட்டமைப்பினர், முதல்வரைச் சந்திக்க பேரணியாகச் சென்றபோது அவர்களை காவல் துறையினர் புதன்கிழமை கைது செய்தனர். இதைக் கண்டித்தும் அவர்களை விடுவிக்க வலியுறுத்தியும், கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் கோவையில் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் தர்னாவில் ஈடுபட்டனர்.
 மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் பாபு, அரசு ஊழியர் சங்கச் செயலர் குமார் உள்ளிட்டோர் தலைமை வகித்தனர். 
இதில், திரளான அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/14/ஜாக்டோ---ஜியோ-கூட்டமைப்பினர்-போராட்டம்-2939190.html
2939189 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம், காரமடை ரயில் நிலையங்களில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தித் தர கோரிக்கை DIN DIN Thursday, June 14, 2018 07:47 AM +0530 பயணிகள் வசதிக்காக மேட்டுப்பாளையம், காரமடை  ரயில் நிலையங்களில் கூடுதல் வசதிகளை மேம்படுத்தித் தர வேண்டுமென மத்திய ரயில்வே இணை அமைச்சரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
இதுகுறித்து கோவைக்கு வருகை தந்த மத்திய ரயில்வே இணை அமைச்சர் ராஜன் கோஹைய்யினிடம், சேலம் ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் டி.எல்.எஸ். ராஜேந்திரன்,  ஹபிபுல்லா,  ஜியார்ஜ் குட்டி  ஆகியோர் சார்பில் வழங்கப்பட்ட கோரிக்கை மனு விவரம் :  
மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் நடைமேடை 1-இல் 24 பெட்டிகள் நிற்கும் வகையிலும்,  நடைமேடை 1 ஏ-வில் 14 பெட்டிகள் நிற்கும் வகையிலும் தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே இரண்டு நடைமேடை பகுதிகளிலும் குடிநீர், மேற்கூரை மற்றும் கழிவறை வசதிகளை செய்து தர வேண்டும்.  புதிதாக அமைக்கப்பட்ட நடைமேடை 1 ஏ- க்கும், பழைய நடைமேடைக்கும் இடையே உள்ள 150 கி.மீ. இடைவெளியை இணைத்து ரயில் பெட்டிகள் நிற்கும்படி வசதி செய்து கொடுத்தால் பயணிகள் எளிதில் ரயிலைப் பிடிக்க ஏதுவாகும். 
புதிதாக நடைமேடை நீட்டிப்பு செய்யப்பட்ட இடத்திலிருந்து ரயில்கள் புறப்பட்டு செல்வதால் அங்கு பயணிகள் வசதியாக ரயிலை பிடிக்கும்வகையில் புதிய நடைபாலம் அமைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 காரமடை ரயில் நிலையத்தில் உள்ள பழைய குறுகிய நிலை நடைமேடைக்குப் பதிலாக, வயது முதிர்ந்தோரும் ரயிலில் எளிதில் ஏறி, இறங்கி செல்லும் வகையில் உயர்மட்ட நடைமேடை அமைக்கவும்,  அனைத்து பெட்டிகளிலும் பயணிகள் எளிதாக ஏறிச் செல்லும் வகையில் நடைமேடையை நீட்டிக்கவும், ரயில் நிலைய பகுதியில் புதிதாக குடிநீர் மற்றும் கழிவறை வசதிகளை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக் கொண்ட மத்திய அமைச்சர்,  கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதுகுறித்த மனுவின் நகல் மத்திய நிதி மற்றும் போக்குவரத்து துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடமும் வழங்கப்பட்டது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/14/மேட்டுப்பாளையம்-காரமடை-ரயில்-நிலையங்களில்-கூடுதல்-வசதிகளை-ஏற்படுத்தித்-தர-கோரிக்கை-2939189.html
2939188 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் தென்மேற்குப் பருவ மழை: பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல் DIN DIN Thursday, June 14, 2018 07:47 AM +0530 தென்மேற்குப் பருவ மழையையொட்டி பணியாளர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார்.
 கோவை மாநகராட்சி அலுவலகக் கூட்ட அரங்கில் பொலிவுறு நகரம் திட்டப் பணிகளின் செயல்பாடுகள் மற்றும் தென்மேற்குப் பருவமழையை ஒட்டி மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள குளங்கள், ஆறுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி அலுவலர்கள், பொதுப் பணித் துறையினர், தன்னார்வ அமைப்பினர் ஆகியோருடன் கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் பேசியதாவது:
 கோவை மாநகராட்சிப் பகுதிகளில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைகள், பூங்காக்கள், மேம்பாட்டுப் பணிகள், ஏரிகள், 24 மணி நேரக் குடிநீர் விநியோகப் பணிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். 
 தென்மேற்குப் பருவ மழையையொட்டி மாநகராட்சிப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போதுமான மணல் மூட்டைகள் மற்றும் பணியாளர்களைத் தேவையான இடங்களில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
 மேலும், மாநகராட்சிப் பகுதியில் உள்ள குளங்கள், ஏரிகள், குட்டைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும், வாய்க்கால் ஓரங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்தும், தூர்வாரப்பட்டுள்ள வாய்க்கால்களைப் பராமரித்தல் குறித்தும், சாலைகளில் தண்ணீர் தேங்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் அவர் கலந்தாய்வு செய்தார்.
 மேலும், மாநகராட்சியுடன் இணைந்து மிராகி இந்தியா கலை, அறிவியல் பள்ளியின் சார்பில் மாணவர்களுக்காக நடைபெற்று வரும் பயிற்சி வகுப்புகள் குறித்தும், பொலிவுறு நகரம் திட்டப் பணிகள் மற்றும் குளங்கள் மேம்பாட்டுப் பணிகள் குறித்தும் படத்துடன் விளக்கமளிக்கப்பட்டது.
 இந்தக் கூட்டத்தில் மாநகராட்சித் துணை ஆணையர் ப.காந்திமதி, கண்காணிப்புப் பொறியாளர் என்.நடராஜன், மாநகரப் பொறியாளர் லட்சுமணன், செயற்பொறியாளர் ஞானவேல், பொறியாளர் (திட்டங்கள்) ரவிச்சந்திரன், சிறுதுளி அமைப்பு 
நிர்வாகி வனிதா மோகன், ராக் ரவீந்திரன், கோவை குளங்கள் பாதுகாப்பு இயக்க நிர்வாகி மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/14/தென்மேற்குப்-பருவ-மழை-பணியாளர்கள்-தயார்-நிலையில்-இருக்க-அறிவுறுத்தல்-2939188.html
2939187 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் ஜூன் 29 இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் DIN DIN Thursday, June 14, 2018 07:47 AM +0530 கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூன் 29-ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.
 இதுகுறித்து ஆட்சியர் த.ந.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
 கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முதன்மைக் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்  ஜூன் 29 - ஆம் தேதி நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் கலந்துகொண்டு தங்களது வேளாண்மை தொடர்பான பிரச்னைகள் குறித்து மனுக்கள் மூலமாகத் தெரிவித்து நிவர்த்தி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/14/ஜூன்-29-இல்-விவசாயிகள்-குறைதீர்-கூட்டம்-2939187.html
2939186 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் கோவில்பாளையத்தில் ரூ. 26.50 லட்சத்தில் பள்ளிக் கட்டடம் DIN DIN Thursday, June 14, 2018 07:47 AM +0530 கோவில்பாளையத்தில் ரூ. 26.50 லட்சம் மதிப்பில் பள்ளிக் கட்டடம் கட்ட புதன்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.
எஸ்.எஸ்.குளம் ஒன்றியம், கோவில்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு புதிய வகுப்பறைக் கட்டடம் கட்ட கோவை மக்களவை உறுப்பினர் ஏ.பி.நாகராஜன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 26.50 லட்சம் நிதி ஒதுக்கியிருந்தார். 
இதையடுத்து நடைபெற்ற கட்டடம் கட்டுவதற்கான பூமிபூஜை நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் ஈஸ்வரி தலைமை வகித்தார். கூட்டுறவுச் சங்க முன்னாள் தலைவர் அருண் குணாளன், நடராஜ், பொறியாளர் மகேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மக்களவை உறுப்பினர் ஏ.பி.நாகராஜன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பூமிபூஜையைத் தொடக்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மணி, ராஜ்குமார், தெய்வசிகாமணி, சண்முகசுந்தரம், பூக்கடை வாசு, முத்து, பாலசண்முகம், மெகபூப் பாபு, அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் சுப்புலட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/14/கோவில்பாளையத்தில்-ரூ-2650-லட்சத்தில்-பள்ளிக்-கட்டடம்-2939186.html
2939185 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் ரூ.1.18 கோடி போலி நோட்டு வழக்கு: கைதான மூவரையும் காவலில்  எடுத்து விசாரிக்கஅனுமதி DIN DIN Thursday, June 14, 2018 07:47 AM +0530 கோவையில் போலியாகத் தயாரிக்கப்பட்ட ரூ. 1.18 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 3 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி வழங்கியது. 
கோவை, தடாகம் சாலையில் ஜூன் 1-ஆம் தேதி தனிப்படை போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரைச் சோதனையிட்டனர். அப்போது, அவரிடம் போலியாக அச்சடிக்கப்பட்ட  2,000 ரூபாய் நோட்டுகள்இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக வேலாண்டிபாளையம் மருதகோனார் வீதியைச் சேர்ந்த பி.ஆனந்த் (31) என்பவரைக் கைது செய்தனர்.  
அவர் அளித்த தகவலின்படி பதுக்கி வைக்கப்பட்டிருந்து ரூ. 1.18 கோடி மதிப்பிலான போலி 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக சாய்பாபா காலனி போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். 
மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய வடவள்ளியைச் சேர்ந்த கிதர் முகமது (55) என்பவரையும் கைது செய்தனர். ஆனால், இந்த வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த காரமடையைச் சேர்ந்த சுந்தர் (48) கோவை நீதிமன்றத்தில் சரணடைந்தார். 
இவர்கள் மூவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த சாய்பாபா காலனி போலீஸார் கோவை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் (ஜே.எம்.7) மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு மீதான விசாரணை புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, ஆனந்தை ஒரு நாளும், கிதர் முகமது, சுந்தர் ஆகியோரை 5 நாள்களும் போலீஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்த மாஜிஸ்திரேட் பாண்டி அனுமதி வழங்கினார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/14/ரூ118-கோடி-போலி-நோட்டு-வழக்கு-கைதான-மூவரையும்-காவலில்-எடுத்து-விசாரிக்கஅனுமதி-2939185.html
2938654 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் இருப்பிடச் சான்று தர மறுத்த விஏஓ தாக்கப்பட்டதாகப் புகார் DIN DIN Wednesday, June 13, 2018 08:20 AM +0530 இருப்பிடச் சான்று தரமறுத்த கிராம நிர்வாக அலுவலரைத் தாக்கியதாக விவசாயி மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியை அடுத்த சிங்காநல்லூரில் கிராம நிர்வாக அலுவலராகப் பணிபுரிந்து வருபவர் ஆர்.ராஜசேகர்.  
இவரிடம் கெட்டிமல்லன்புதூரைச் சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய இருப்பிடச் சான்று  மற்றும் சக்கரபாணி என்பவரிடமிருந்து சிறுநீரகம் பெற குடும்ப நண்பர் என்ற சான்றும் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், சக்கரபாணியை நேரில் பார்க்காமல் சான்று வழங்க முடியாது என ராஜசேகர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட  வாக்குவாதத்தில் கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின்பேரில் ஆனைமலை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/13/இருப்பிடச்-சான்று-தர-மறுத்த-விஏஓ-தாக்கப்பட்டதாகப்-புகார்-2938654.html
2938652 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் பேன்சி கடையில் தீ DIN DIN Wednesday, June 13, 2018 08:20 AM +0530 துடியலூரை அடுத்துள்ள நரசிம்மநாயக்கன்பாளையத்தில் பேன்சி கடையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பொருள்கள் எரிந்து சேதமாகின. 
நரசிம்மநாயக்கன்பாளையத்திலிருந்து பூச்சியூர் செல்லும் வழியில் உள்ள மாரியம்மன் கோயில் அருகில் முருகேசன் என்பவர் பேன்சி கடை  நடத்தி வந்தார். வழக்கம்போல வியாபாரம் முடிந்து கடையைப் பூட்டி விட்டு திங்கள்கிழமை இரவு வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில்,  மின் கசிவின் காரணமாக கடைக்குள் செவ்வாய்க்கிழமை அதிகாலை தீப்பிடித்தது. இதில் உள்ளே விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பொருள்கள் அனைத்தும் எரிந்து சேதமாகின. தகவலறிந்து கோவை வடக்கு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து  தீயை அணைத்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/13/பேன்சி-கடையில்-தீ-2938652.html
2938651 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் சம்பளம் வழங்குவதில் தாமதம்: டேன்டீ தொழிலாளர்கள் தவிப்பு DIN DIN Wednesday, June 13, 2018 08:20 AM +0530 வால்பாறை டேன்டீ  நிர்வாகம் தாமதமாக சம்பளம் வழங்குவதாக தொழிலாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
வால்பாறை பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட் மற்றும் தமிழ்நாடு அரசுத் தேயிலைத் தோட்ட கழகத்தின் எஸ்டேட்களில் பணியாற்றக்கூடிய தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் 7-ஆம் தேதி சம்பளம் வழங்கி வருகின்றனர். தற்போது தொழிலாளர்களின் வங்கிக் கணக்கிலேயே சம்பளத்தை செலுத்தி வருகின்றனர். 
இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக டேன்டீ நிர்வாகத்தினர் தொழிலாளர்களின் சம்பளத்தை 7-ஆம் தேதி வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர். 
இதுகுறித்து டேன்டீ தொழிலாளர்கள் கூறுகையில்,  இந்த மாதத்துக்கான சம்பளம் 5 நாள் தாமதத்துக்குப் பின் செவ்வாய்க்கிழமைதான் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளனர்.  உரிய நேரத்தில் சம்பளம் கிடைக்காமல் இருப்பதால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறோம்  என்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/13/சம்பளம்-வழங்குவதில்-தாமதம்-டேன்டீ-தொழிலாளர்கள்-தவிப்பு-2938651.html
2938649 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள்  ஊதிய நிலுவைத் தொகை பேச்சுவார்த்தை இழுபறி DIN DIN Wednesday, June 13, 2018 08:20 AM +0530 வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு 16 ஆண்டு காலமாக வழங்கப்படாமல் உள்ள ஊதிய நிலுவைத் தொகை தொடர்பாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
 இதுதொடர்பாக கோவையில் உள்ள தமிழ்நாடு தேயிலைத் தோட்டத் தொழிலதிபர்கள் சங்கத்தில் செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, தோட்டத் தொழிலதிபர்கள் சங்கத்தின் சார்பில் சட்ட ஆலோசகர் ராம்குமார், சங்கச் செயலாளர் பிரதீப்குமார், உட்பிரியர் தேயிலைத் தோட்ட துணைத் தலைவர் பாலசுந்தரம், பாரி அக்ரோ சார்பில் மகேஷ்நாயர், தொழிற்சங்கம் சார்பில் வால்பாறை அமீது (அதிமுக), சுந்தரராஜன், செல்லமுத்து (திமுக), மோகன் (ஏஐடியூசி), கருப்பையா (ஐஎன்டியூசி), வர்க்கீஸ் (ஆனைமலை தொழிற்சங்கம்), கல்யாணி (எம்.எல்.எஃப்), எட்வர்டு உள்ளிட்டோர் கலந்துகொண்ட இருத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
 கடந்த 2002 முதல் 2005 வரையில் வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய நிலுவைத் தொகை வழங்கப்பட வேண்டும். இது தொடர்பாக 16 ஆண்டு காலமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக சென்னையில் உள்ள தீர்ப்பாயத்தில் விசாரணை நடத்தப்பட்டது. 
 அப்போது இருத்தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக உடன்பாடு எடுக்க அறிவுறுத்தப்பட்டது. அதனடிப்படையில் பல கட்டப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது தொழிலாளர்கள் தரப்பில் முதலில் ரூ. 4 ஆயிரம் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
 அதை நிர்வாகம் தரப்பில் ஏற்கவில்லை. இதையடுத்து, பல கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் தொழிற்சங்கம் தரப்பில் ரூ. 1,600 வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், நீலகிரி, வயநாடு ஆகிய பகுதிகளில் தொழிலாளர்களுக்குத் தலா ரூ. 1,000 மட்டுமே ஊதிய நிலுவைத் தொகையாக வழங்கப்பட்டது. அதையே இங்கேயும் வழங்க நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது.
 இந்நிலையில், கோவையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது தொழிற்சங்கம் தரப்பில் ரூ.1,600 வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், தொழிற்சங்கங்களின் கோரிக்கையை நிர்வாகம் ஏற்க மறுத்துவிட்டது. இந்நிலையில் தீர்ப்பாயத்தில் புதன்கிழமை வழக்கு விசாரணைக்கு வருவதையொட்டி பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/13/வால்பாறை-தேயிலைத்-தோட்டத்-தொழிலாளர்கள்--ஊதிய-நிலுவைத்-தொகை-பேச்சுவார்த்தை-இழுபறி-2938649.html
2938647 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் சாலை விபத்தில் இளைஞர் சாவு DIN DIN Wednesday, June 13, 2018 08:19 AM +0530 அன்னூர் அருகே சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
கருமத்தம்பட்டி, கே.ராயர்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாபு மகன் பிரபு புருஷோத்தமன் (22). புதுக்கோட்டை மாவட்டம், பாக்கியநாதன் மகன் முத்துகிருஷ்ணன் (37). இவர்கள் இருவரும் பொன்னேகவுண்டன்புதூர்-கோவில்பாளையம் சாலையில் இருசக்கர வாகனத்தில் ஜூன் 10-ஆம் தேதி சென்று கொண்டிருந்தனர். 
மசக்கவுண்டன்செட்டிபாளையம் அருகே வளைவில் திரும்பும்போது,  எதிரே வந்த கார் மீது இருசக்கர வாகனம் மோதாமல் இருக்க முயற்சித்துள்ளனர். இதில் நிலை தடுமாறிய இருசக்கர வாகனம் அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்து அங்கிருந்த மரத்தில் மோதியது. 
இதில் பலத்த காயமடைந்த முத்துகிருஷ்ணன்,  பிரபு புருஷோத்தமன் ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு புருஷோத்தமன் செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து அன்னூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/13/சாலை-விபத்தில்-இளைஞர்-சாவு-2938647.html
2938645 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் ஜூன் 14 மின்தடை:  மாதம்பட்டி, தேவராயபுரம் DIN DIN Wednesday, June 13, 2018 08:19 AM +0530 மாதம்பட்டி, தேவாரயபுரம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 14) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.
மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:  மாதம்பட்டி, குப்பனூர், கரடிமடை, சென்னனூர், ஆலாந்துறை, இருட்டுப்பள்ளம், செம்மேடு, பூண்டி, சிறுவாணி, குளத்துப்பாளையம், தாளியூர், சுண்டபாளையம், கலிக்கநாயக்கன்பாளையம், தீத்திப்பாளையம், காளம்பாளையம், பேரூர், கவுண்டனூர், பேரூர்செட்டிபாளையம், தொண்டாமுத்தூர், முத்திபாளையம், புத்தூர், தென்னம்மநல்லூர், போளுவம்பட்டி, நரசீபுரம், விராலியூர், காளியண்ணன்புதூர், ஜாகீர்நாயக்கன்பாளையம், தேவராயபுரம், கெம்பனூர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/13/ஜூன்-14-மின்தடை--மாதம்பட்டி-தேவராயபுரம்-2938645.html
2938643 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் 110 அடியை எட்டியது சோலையாறு அணை DIN DIN Wednesday, June 13, 2018 08:19 AM +0530 தொடர் மழை காரணமாக  வால்பாறையில் உள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் 110 அடியை எட்டியது.
வால்பாறை நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 5 தினங்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் பல்வேறு இடங்களில் புதிய சிறிய அருவிகள் உருவாகியுள்ளன. இதில் இருந்து வரும் நீர் ஆறுகளில் கலந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  
அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் கரைபுரண்டோடுகிறது. இதன் காரணமாக சோலையாறு அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.  கடந்த வெள்ளிக்கிழமை காலை 47 அடியாக இருந்த நீர்மட்டம் தொடர் மழையால் 5 நாள்களில் 56 அடி உயர்ந்து 103.84 அடியை எட்டியது.
இதனிடையே சோலையாறு மின் நிலையத்தில் தற்போது உற்பத்தித் திறன் அதிகரிக்கும் பணிகள் நடைபெற்று முடியும் நிலையில் உள்ளது.  இதனால் நீரை வெளியேற்றாமல் உள்ளனர். இருப்பினும்  அணையில் உயர்ந்து வரும் நீர்மட்டத்தை பொதுப்பணித் துறைப் பணியாளர்கள் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை பதிவு செய்து கண்காணித்து வருகின்றனர். 
செவ்வாய்க்கிழமை காலை 6273.50 கனஅடி நீர்வரத்தாக இருந்தது.  இதையடுத்து அணையின் நீர்மட்டம் 104 அடியாக உயர்ந்தது. இது  தொடந்து மாலை 4 மணிக்கு 110 அடியாக உயர்ந்தது. மழை தொடர்ந்து நீடித்தால் ஒரு வார காலத்தில் அணை நிரம்ப வாய்ப்புள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/13/110-அடியை-எட்டியது-சோலையாறு-அணை-2938643.html
2938641 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் வால்பாறை வனப் பகுதியில்  நக்ஸல் தடுப்பு போலீஸார் ரோந்து DIN DIN Wednesday, June 13, 2018 08:18 AM +0530 கோவை மாவட்டம், வால்பாறை வனப் பகுதியில் நக்ஸல் தடுப்பு போலீஸார் ரோந்து பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
வால்பாறையை சுற்றிலும் அடர்ந்த வனப் பகுதிகள் உள்ளன. இந்த வனப் பகுதிகளுக்குள் பழங்குடியின மக்கள் வசிக்கும் செட்டில்மெண்ட்கள் உள்ளன.  தமிழக வனப் பகுதியின் தொடர்ச்சியாக கேரள வனப் பகுதி மிக அதிக பரப்பளவில் உள்ளது. இதில் கேரள வனப் பகுதியிலிருந்து மாவோயிஸ்டுகள் தமிழகத்துக்குள் ஊடுருவ வாய்ப்பு உள்ளது என்பதால் நக்ஸல் தடுப்பு போலீஸார் அவ்வப்போது தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்,  நக்ஸல் தடுப்புப் பிரிவு  ஆய்வாளர் சுந்தர்ராஜன்,  உதவி ஆய்வாளர் மாடசாமி ஆகியோர் அடங்கிய குழுவினர் வால்பாறை பகுதியில் உள்ள நெடுங்குன்று,  பரமன்கடவு ஆகிய செட்டில்மெண்ட் பகுதிகள் மற்றும் வனப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனர். 
இதில்,  வனப் பகுதிக்குள் புதிய நபர்களைக் கண்டால் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என பழங்குடியின மக்களிடம் அறிவுறுத்தினர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/13/வால்பாறை-வனப்-பகுதியில்--நக்ஸல்-தடுப்பு-போலீஸார்-ரோந்து-2938641.html
2938640 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் திமுக சார்பில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை DIN DIN Wednesday, June 13, 2018 08:18 AM +0530 பொள்ளாச்சியில் பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா  திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.   
கோவை வடக்கு ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கலந்து கொண்டு பேசியதாவது:  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு புற்றுநோய், ஆயுள்காலம் குறைவு போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதால் ஆலையை மூட வேண்டும் என பொதுமக்கள் போராடினர். 
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பலர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என்றார். கூட்டத்தில், வடக்கு ஒன்றிய செயலாளர் மருதவேல், தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/13/திமுக-சார்பில்-மாணவர்களுக்கு-ஊக்கத்தொகை-2938640.html
2938638 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் பவானி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளம்: 3-ஆவது நாளாக அபாய எச்சரிக்கை DIN DIN Wednesday, June 13, 2018 08:18 AM +0530 நீலகிரி மாவட்டப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பில்லூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் மேட்டுப்பாளையம், பவானி ஆற்றில் செவ்வாய்க்கிழமை மாலையில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து வருவாய்த் துறை சார்பில் 3-ஆவது நாளாக பவானி ஆற்றோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காரமடை அருகே அமைந்துள்ள பில்லூர் அணை, பல்வேறு குடிநீர்த் திட்டங்களுக்கு ஆதாரமாக உள்ளது. பருவ மழைக் காலங்களில் கேரள மாநிலம் மற்றும் நீலகிரி மாவட்டப் பகுதிகளிலும், அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான மேல் பவானி, காட்டுக் குப்பை உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் பலத்த மழையாலும் வரும் தண்ணீரே பில்லூர் அணையின் நீராதாரமாக உள்ளது. தென் மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த சில தினங்களாக பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. 
இந்நிலையில், அணையின் மொத்த நீர்மட்டமான 100 அடியில் ஜூன் 10-ஆம் தேதி 97 அடியை எட்டியதால் பாதுகாப்புக் கருதி அன்று மதியம் அணையின் நான்கு மதகுகளும் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. 
இதனால், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.  இதையடுத்து, ஆற்றில் வெள்ளப் பெருக்கைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தேவையான பாதுகாப்புப் பணிகள் குறித்த உத்தரவுகளை வழங்கினார். 
தொடர்ந்து, பில்லூர் அணைப் பகுதியில் பெய்து வந்த பலத்த மழை காரணமாக அணைக்குத் தண்ணீர் வரத்து தொடர்ந்ததால், பாதுகாப்புக் கருதி திங்கள்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது. 
இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, தொடர்ந்து இரு நாள்களும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் செவ்வாய்க்கிழமை மதியம் முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. 
மாலை 4 மணியளவில் அணைக்கு விநாடிக்கு 24,000 கன அடி தண்ணீர் வந்தது. இதையடுத்து, அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து 97 அடியை எட்டியது. இதனால், பாதுகாப்பு கருதி அணையில் இருந்து விநாடிக்கு 24,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால், அணையில் இருந்து பாய்ந்து வந்த தண்ணீரால், மேட்டுப்பாளையம், பவானி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, தொடர்ந்து 3-ஆவது நாளாக ஆற்றங்கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.
மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் புனிதா தலைமையில் ஆற்றின் வெள்ளப் பெருக்கை வருவாய்த் துறையினர் தொடர்ந்து கண்காணித்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுமுகை பகுதியில் நீரில் மூழ்கிய வாழைகள்: 
பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், சிறுமுகை பகுதியில், ஆற்றை ஒட்டி, பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயிகள் பயிரிட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழைகள் நீரில் மூழ்கின. இதனால், வாழை விவசாயிகளுக்குப் பெரும் பொருள் இழப்பு ஏற்பட்டுள்ளது. 
இந்த வெள்ளத்தால் பவானிசாகர் அணை வேகமாக நிரம்பி, அதன் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/13/பவானி-ஆற்றில்-வரலாறு-காணாத-வெள்ளம்-3-ஆவது-நாளாக-அபாய-எச்சரிக்கை-2938638.html
2938637 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் நீடிக்கும் கன மழை: சிறுவாணி நீர்மட்டம் ஒரே நாளில் 7.52 அடி உயர்வு DIN DIN Wednesday, June 13, 2018 08:18 AM +0530 மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சிறுவாணி அணைப் பகுதியில் தொடரும் பலத்த மழையால் அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 7.52 அடி உயர்ந்துள்ளது. 
சிறுவாணி அணைப் பகுதியில் சில நாள்களாக தென்மேற்குப் பருவ மழை பெய்து வருகிறது. இதில், குறிப்பாக கோவையின் முக்கியக் குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 
 இதில், அணைக்கட்டுப் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 155 மில்லி மீட்டரும், அடிவாரப் பகுதியில் 93 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் செவ்வாய்க்கிழமை 7.52 அடி உயர்ந்துள்ளது. அதாவது, திங்கள்கிழமை 23.28 அடியாக இருந்த நீர்மட்டம் தற்போது 30.80 அடியாக உயர்ந்துள்ளது. இதேநிலை நீடித்தால் இன்னும் சில தினங்களில் சிறுவாணி அணை நிரம்பவும் வாய்ப்பு உள்ளது. 
கோவை மக்களின் குடிநீர்த் தேவைக்காக 9.1 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. இந்த பலத்த மழையால் நொய்யல் ஆற்றிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கோவையின் முக்கியக் குளங்கள் அனைத்துக்கும் நீர்வரத் தொடங்கியுள்ளது. இதில், சுண்ணாம்புக்காளவாயில் உள்ள தடுப்பணையிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதில், அருவி போல ஆர்ப்பரிக்கும் நீரில் சிறுவர்கள் குளித்து மகிழ்ந்தனர். குறிச்சி, வெள்ளலூர் குளங்களுக்கும் ராஜவாய்க்கால் வழியாக தண்ணீர் வரத் தொடங்கியுள்ளது. 
சின்கோனாவில் 127 மி.மீ. மழை பதிவு: கோவை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை வரையில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): சின்கோனா - 127, சின்னக்கல்லாறு - 125, வால்பாறை வட்டம் - 95, வால்பாறை பிஏபி - 89, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் - 25.60, கோவை தெற்கு - 20, பீளமேடு - 14.90, மேட்டுப்பாளையம் - 9, பெ.நா.பாளையம் - 7, சூலூர் - 5.20, பொள்ளாச்சி - 2.
கோவை குற்றாலம் மேலும் சில நாள்கள் மூடப்படும் : கோவை குற்றாலம் அருவியின் நீர்வரத்துப் பகுதியில் சூறாவளியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அருவியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அருவியில் நீரின் வேகம் செவ்வாய்க்கிழமை மாலையில் சற்று அதிகரித்துள்ளது. மேலும், நீரில் மரக்கிளைகளும் அடித்து வரப்படுகின்றன. 
எனவே, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி மேலும் சில நாள்கள் கோவை குற்றாலம் அருவி மூடப்படும் என்று போளுவாம்பட்டி வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/13/நீடிக்கும்-கன-மழை-சிறுவாணி-நீர்மட்டம்-ஒரே-நாளில்-752-அடி-உயர்வு-2938637.html
2938635 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் பெ.நா.பாளையம் ரயில் நிலையத்தில் குடிநீர் வசதி  DIN DIN Wednesday, June 13, 2018 08:17 AM +0530 தனியார் நிறுவனத்தின் நிதிப் பங்களிப்புடன் புனரமைக்கப்பட்ட பெரியநாயக்கன்பாளையம் ரயில் நிலையத்தில் குடிநீர் வசதி இல்லை என தினமணியில் வெளிவந்த செய்தியின் எதிரொலியாக திங்கள்கிழமை இந்நிலையத்துக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. 
140 ஆண்டு காலப் பழமையான இந்த ரயில்நிலையம், எல்.எம்.டபிள்யூ நிறுவனத்தினரால் சுமார் ரூ. 2 கோடி செலவில் அனைத்து வசதிகளுடன் கடந்த ஆண்டு புனரமைக்கப்பட்டது. 
ஆனால் தண்ணீர் வசதி இல்லாததால் இங்குள்ள கழிப்பிடங்கள் பயன்படுத்தப்படவே இல்லை. மேலும் குடிநீர்க் குழாய்கள் இருந்தாலும் குடிப்பதற்கு குடிநீர் இல்லை. இதுகுறித்து பலமுறை பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி நிர்வாகத்திடமும்,  ரயில்வே நிர்வாகத்திடமும் புகார்அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், சேலம் கோட்ட  ரயில்வே மேலாளர் சுப்பாராவ் இந்நிலையத்தை  வெள்ளிக்கிழமை பார்வையிட்டார். அவரின் கவனத்துக்கு இப்பிரச்னை கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்த செய்தி தினமணி நாளிதழில் சனிக்கிழமை வெளியானது.  இதனையடுத்து ரயில் நிலையத்துக்கு குடிநீர் இணைப்பு திங்கள்கிழமை வழங்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/13/பெநாபாளையம்-ரயில்-நிலையத்தில்-குடிநீர்-வசதி-2938635.html
2938633 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் பேருந்து மோதி முதியவர் சாவு DIN DIN Wednesday, June 13, 2018 08:17 AM +0530 சூலூர் அருகே பேருந்து மோதி விமானப் படை ஊழியர் உயிரிழந்தார். 
சூலூர்,  பி.கே.டி. நகரைச் சேர்ந்தவர் ஜெயராமன் (75). ஓய்வுபெற்ற விமானப் படை ஊழியர்.  இவர், சூலூரில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் உள்ள கடையில் பொருள்களை வாங்கிக்கொண்டு திருச்சி சாலையை திங்கள்கிழமை  கடந்துள்ளார்.  அப்போது அந்த வழியாக வந்த தனியார் பேருந்து  மோதியதில் ஜெயராமன் பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து அவர்,  நீலாம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார். 
இதுகுறித்து விசாரணை நடத்திய சூலூர் போலீஸார், விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து ஓட்டுநர் பிரவீண் மீது வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனர். 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/13/பேருந்து-மோதி-முதியவர்-சாவு-2938633.html
2938631 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் பைனான்சியர் கொலை வழக்கில் 4 தனிப் படை அமைத்து விசாரணை DIN DIN Wednesday, June 13, 2018 08:17 AM +0530 பொள்ளாச்சியைச் சேர்ந்த பைனான்சியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 தனிப் படை அமைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
பொள்ளாச்சியை அடுத்த வடுகபாளையம் மணிமேகலை வீதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (47).  பைனான்ஸ் தொழில் செய்துவந்தார். வீட்டிலிருந்து ஞாயிற்றுகிழமை இரவு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், பொள்ளாச்சியை அடுத்த சிங்காநல்லூர் அருகே தலையில் வெட்டுக் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.  
இதுகுறித்து,  ஆனைமலை காவல் ஆய்வாளர் அம்மாத்துரை தலைமையில் 4 தனிப் படை அமைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட கந்தசாமி கழுத்தில் தங்க சங்கிலி அணிந்து இருந்ததாகவும், சட்டை பாக்கெட்டில் பணம் வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. 
கொலை செய்யப்பட்டவரின் உடலை போலீஸார் கைப்பற்றும்போது,  கழுத்தில் தங்க சங்கிலி இல்லாமல் இருந்துள்ளது. மேலும்,  சட்டை பாக்கெட்டில் பணம் இல்லை.  ஆகவே பணம்,  நகைக்காக கொலை நடந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/13/பைனான்சியர்-கொலை-வழக்கில்-4-தனிப்-படை-அமைத்து-விசாரணை-2938631.html
2938630 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் கஞ்சா விற்பனை: குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது DIN DIN Wednesday, June 13, 2018 08:16 AM +0530 கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட  இளைஞர்  குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். 
கோவை, சுகுணாபுரத்தைச் சேர்ந்தவர் என்.பிரகலாதன் (32). இவர், வெரைட்டி ஹால் சாலை காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட  சி.எம்.சி. காலனியில் கஞ்சா விற்றது தொடர்பாக ஏப்ரல் 17-ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், போத்தனூர் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டது தெரியவந்தது. 
எனவே, தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யக் காவல் ஆணையர் கு.பெரியய்யா உத்தரவிட்டார்.
இதையடுத்து, அந்த உத்தரவின் நகல் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரகலாதனிடம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/13/கஞ்சா-விற்பனை-குண்டர்-சட்டத்தில்-இளைஞர்-கைது-2938630.html
2938628 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் மருமகனைக் கொலை செய்த மாமனார் சரண் DIN DIN Wednesday, June 13, 2018 08:16 AM +0530 குடும்பத் தகராறில் மருமகனைக் கொலை செய்த மாமனார் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரண் அடைந்தார். 
கோவை, கணபதியில் வசித்து வருபவர் தியாகராஜன். பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மகள் சாரதாவுக்கும் (28), குணவேல் (32) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. 
இந்தத் தம்பதிக்கு இரண்டரை வயதில் மகன் உள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூரில் தங்கி அங்குள்ள ஆழ்துளைக் கிணறு அமைக்கும் தனியார் நிறுவனத்தில் குணவேல் மேலாளராகப் பணியாற்றி வந்தார். மாதம் ஒரு முறை கோவைக்கு வந்து மனைவி, மகனைப் பார்த்துச் செல்வார். 
இந்த நிலையில், சில நாள்களுக்கு முன்னர் குணவேல் கோவை வந்தபோது கணவர், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சாரதா தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். கணபதி, காவலர் குடியிருப்பில் உள்ள அவரது வீட்டில் குணவேல் தங்கி இருப்பது சாரதாவின் தந்தை தியாகராஜனுக்குத் தெரியவந்தது. 
இதையடுத்து, குடும்பப் பிரச்னை குறித்துப் பேசுவதற்காக தியாகராஜன் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 10) குணவேலின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தியாகராஜன், குணவேலை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். இதில் பலத்த காயமடைந்த குணவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 இதுகுறித்து, சரவணம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். கோவை மாநகரக் காவல் ஆணையரின் உத்தரவின்படி அமைக்கப்பட்ட தனிப் படையினர், தலைமறைவாக உள்ள தியாகராஜனைத் தேடிவந்தனர். 
இந்நிலையில், கோவை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் (ஜே.எம்.2) தியாகராஜன் செவ்வாய்க்கிழமை சரண் அடைந்தார். இதையடுத்து, அவரை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதித்துறை நடுவர் ஞானசம்பந்தம் உத்தரவிட்டார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/13/மருமகனைக்-கொலை-செய்த-மாமனார்-சரண்-2938628.html
2938626 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் கடையின் பூட்டை உடைத்து திருட்டு: இருவர் கைது DIN DIN Wednesday, June 13, 2018 08:16 AM +0530 சூலூரில் கடையின் பூட்டை உடைத்து திருடியதாக  இருவரை போலீஸார் கைது செய்தனர்.
சூலூர், கருப்பண்ணத் தேவர் வீதியில் வசிப்பவர் கணேஷ் மகன் செந்தில்குமார் (29). இவரது மளிகைக் கடையின் பூட்டை உடைத்து சிகரெட் பண்டல்கள், ரூ. 15 ஆயிரம் ரொக்கம், செல்லிடப்பேசி ஆகியவற்றை மர்ம நபர்கள் கடந்த மே 26 ஆம் தேதி திருடிச் சென்றனர். இதுகுறித்து சூலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.  
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சூலூரைச் சேர்ந்த செல்வம் மகன் எஸ்.சக்திவேல் (25), பழனிசாமி மகன் கோகுல் (20) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். தனியார் பேருந்தில் நடத்துநராக வேலை பார்த்த வந்த இவர்கள், போதைப்பொருள் வாங்க திருடியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து இருவரையும் கைதுசெய்த போலீஸார், சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/13/கடையின்-பூட்டை-உடைத்து-திருட்டு-இருவர்-கைது-2938626.html
2938625 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் வெளிநாட்டு நோயாளிகளுக்கு அதிக அளவில் உடல் உறுப்புகள் தானம்: டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் குற்றச்சாட்டு DIN DIN Wednesday, June 13, 2018 08:16 AM +0530 வெளிநாட்டு நோயாளிகளுக்கு அதிக அளவில் உடல் உறுப்பு தானம் வழங்கப்பட்டது தொடர்பான முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கப் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து, கோவையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் மூளைச் சாவு ஏற்பட்ட நபர்களிடம் இருந்து உறுப்புகளை தானம் பெற்று, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலமாக வெளிநாட்டு பணக்கார நோயாளிகளே அதிக அளவில் பயனடைந்துள்ளனர்.  
உறுப்பு மாற்று, திசு மாற்று அறுவை சிகிச்சைக்கான தேசிய அமைப்பின் இயக்குநர் பேராசிரியர் விமல் பண்டாரி இதை உறுதிப்படுத்தியுள்ளார். 2017 - ஆம் ஆண்டு இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக மூளைச்சாவு அடைந்தோரிடம் இருந்து பெறப்பட்ட 25 சதவீத இதயங்களும், 33 சதவீத நுரையீரல்களும் வெளிநாட்டு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. 
அதே சமயம் 5,310-க்கும் மேற்பட்ட இந்திய நோயாளிகள்,உறுப்புகளை பெறுவதற்காக காத்திருப்போர் பட்டியல் மூலமாக காத்திருக்கின்றனர். இதற்கு தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறையே காரணம். தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளும், தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறையும் இணைந்தே இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளன.
 எனவே, இம்முறைகேடு குறித்து  சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும் தவறு செய்த மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இதேபோல, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தையும் ரத்து செய்யவேண்டும் என்றார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/13/வெளிநாட்டு-நோயாளிகளுக்கு-அதிக-அளவில்-உடல்-உறுப்புகள்-தானம்-டாக்டர்-ஜிஆர்ரவீந்திரநாத்-குற்றச்சாட்ட-2938625.html
2938623 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் சாலை விபத்தில் மூதாட்டி உள்பட இருவர் சாவு: மதுபோதையில் வாகனம் இயக்கிய 2 பேர் கைது DIN DIN Wednesday, June 13, 2018 08:15 AM +0530 கோவை, போத்தனூர் அருகே இருவேறு சாலை விபத்துகளில் மூதாட்டி உள்பட இரண்டு பெண்கள் திங்கள்கிழமை உயிரிழந்தனர். 
மதுபோதையில் வாகனம் இயக்கியதாக லாரி ஓட்டுநர் உள்பட  இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். 
போத்தனூரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜலு. இவரது மனைவி கிருத்திகா (30). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வந்தார். 
இவர் பணிக்குச் செல்வதற்காக வெள்ளலூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை காலையில் வந்து கொண்டிருந்தார். 
அப்போது ஜி.டி.டேங்க் அருகே வந்தபோது அந்த வழியாக வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே கிருத்திகா உயிரிழந்தார்.
 இதுகுறித்து, கோவை மாநகரப் போக்குவரத்துப் புலனாய்வு மேற்கு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். 
மேலும், மதுபோதையில் வாகனத்தை இயக்கி வந்து விபத்தை ஏற்படுத்தியதாக கோவையை அடுத்துள்ள கிணத்துக்கடவைச் சேர்ந்த என்.பரசுராமன் (37) என்பவரைக் கைது செய்தனர். 
மற்றொரு விபத்து:
 கோவை, போத்தனூரை அடுத்த சித்தன்னபுரத்தைச் சேர்ந்தவர் மீனாட்சி (எ) லூர்துமேரி (80). இவர், வீட்டின் அருகே திங்கள்கிழமை பிற்பகலில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
  இதுகுறித்து, கோவை மாநகரப் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இதில், மாச்சம்பாளையத்தைச் சேர்ந்த பி.மதுரவன் (31) என்பவர் மதுபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்து விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து, அவரை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/13/சாலை-விபத்தில்-மூதாட்டி-உள்பட-இருவர்-சாவு-மதுபோதையில்-வாகனம்-இயக்கிய-2-பேர்-கைது-2938623.html
2938622 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் அறிவுத்திறன் போட்டியில் தங்கம்: மாணவருக்குப் பாராட்டு DIN DIN Wednesday, June 13, 2018 08:15 AM +0530 தேசிய அளவில் நடைபெற்ற அறிவுத்திறன் போட்டியில் அன்னூர் ஸ்ரீ அம்பாள் துளசி பப்ளிக் பள்ளி மாணவர் தங்கப்பதக்கம் வென்றார்.
அன்னூர் ஸ்ரீ அம்பாள் துளசி பப்ளிக் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர் பி.டி.விபின். இவர்,  தேசிய அளவில் நடைபெற்ற ஒலிம்பியாட் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இந்நிலையில், தங்கப் பதக்கம் வெற்ற மாணவரை பள்ளித் தாளாளர் அம்பாள் எஸ்.ஏ.நந்தகுமார்,  தலைமை ஆசிரியர்,  ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/13/அறிவுத்திறன்-போட்டியில்-தங்கம்-மாணவருக்குப்-பாராட்டு-2938622.html
2938620 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் முதன்மைக் கல்வி அலுவலகம் முற்றுகை DIN DIN Wednesday, June 13, 2018 08:15 AM +0530 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் 18 பேரை வெரைட்டி ஹால் சாலை போலீஸார் கைது செய்தனர். 
கோவை, டவுன்ஹாலில் உள்ள மாவட்ட  முதன்மைக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக இந்திய மாணவர் சங்கத்தினர் ஏற்கெனவே அறிவித்திருந்தனர். அதன்படி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் தினேஷ் தலைமை வகித்தார். 
இதில், அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க வேண்டும். மூடப்பட்ட அரசுப் பள்ளிகளைத் திறக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் 25 சதவீத இலவசக் கல்வி இடஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களிடம் கல்விக் கட்டணம் வசூலிப்பதைக் கைவிட வேண்டும். 
கோவை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில்உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யவேண்டும். தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை உடனடியாக நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 
இதையடுத்து, அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 18 பேரை வெரைட்டி ஹால் சாலை போலீஸார் கைது செய்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/13/முதன்மைக்-கல்வி-அலுவலகம்-முற்றுகை-2938620.html
2938559 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் ரூ.12.40 லட்சம் மோசடி வழக்கில்  ஒருவருக்கு 3 ஆண்டு சிறை DIN DIN Wednesday, June 13, 2018 07:31 AM +0530 கோவையில் இயந்திரம் விற்பதாகக்கூறி ரூ. 12.40 லட்சம் மோசடி செய்த நபருக்கு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கோவை, பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (40). இவர், தன்னிடம் உள்ள பேப்பர் கோப்பை தயாரிக்கும் இயந்திரத்தை விற்பனை  செய்வதாக அறிவித்திருந்தார். இதையறிந்த, நாமக்கல், நடராஜபுரத்தைச் சேர்ந்த நாகராஜ் (67), செல்வராஜைத் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, இயந்திரத்துக்கு ரூ. 13.65 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அந்தப் பணத்துக்கு வங்கியில் வரைவோலை எடுத்து செல்வராஜிடம், நாகராஜ் கொடுத்துள்ளார். 
ஆனால், அதன் பின்னரும் இயந்திரத்தைக் கொடுக்காமல் செல்வராஜ் தாமதப்படுத்தி வந்துள்ளார். இதுகுறித்து பலமுறை கேட்டபோதும் அவர் சரியாக பதில் அளிக்கவில்லை. இதுகுறித்து, ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் நாகராஜ் புகார் அளித்தார். அதன்பேரில், காவல் துறையினர் இருவரையும் அழைத்துப் பேசியதில் செல்வராஜ் ரூ. 1.25 லட்சத்தை திருப்பிக் கொடுத்துள்ளார்.  அதன்பின், மீதித் தொகையான ரூ. 12.40 லட்சத்தை கொடுக்காமல் தாமதப்படுத்தி வந்துள்ளார். 
இதுகுறித்து நாகராஜ் கோவை மாநகரக் குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் 2015 அக்டோபர் 14-ஆம் தேதி புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் செல்வராஜைக் கைது செய்தனர்.
இந்த வழக்கு, கோவை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் (ஜே.எம்.3) நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக் கட்ட விசாரணை நிறைவடைந்து நீதித்துறை நடுவர் வி.பி.வேலுசாமி செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கினார். அதில், செல்வராஜுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார். 
மேலும், மீதித் தொகையான ரூ. 12.40 லட்சத்தை நாகராஜுக்கு வழங்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/13/ரூ1240-லட்சம்-மோசடி-வழக்கில்--ஒருவருக்கு-3-ஆண்டு-சிறை-2938559.html
2938558 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு DIN DIN Wednesday, June 13, 2018 07:31 AM +0530 கோவை பாரதியார் பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளில் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை மாலை 4 மணிக்கு வெளியிடப்படுகின்றன.
 பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் நிர்வாகக் குழு வழிகாட்டுதலின் பேரில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. இந்தத் தேர்வு முடிவுகள் பல்கலைக்கழக இணையதளம் மூலமாக வெளியிடப்படுகிறது. 
மாணவர்கள் தங்களது தேர்வுப் பதிவு எண் மூலமாக W​W​W.​B-​U.​A​C.​IN மற்றும் W​W​W.​K​A​L​V​I​M​A​L​A​R.​C​OM ஆகிய இணைதளங்கள் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம். 
 மேலும், மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் செய்ய ஜூன் 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 
சிறப்பு துணைத் தேர்வுகள், தகுதி உள்ள மாணவர்களுக்கு மட்டும் ஜூலை 29-ஆம் தேதி நடத்தப்படும். இந்தத் தேர்வுக்கு ஜூலை 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/13/பாரதியார்-பல்கலைக்கழகத்-தேர்வு-முடிவுகள்-இன்று-வெளியீடு-2938558.html
2937990 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் இந்து முன்னணி நிர்வாகிக்கு கத்திக்குத்து: 7 பேர் கைது DIN DIN Tuesday, June 12, 2018 07:54 AM +0530 கோவையில் இந்து முன்னணி நிர்வாகியை கத்தியால் குத்தியது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். 
கோவை, சின்னவேடம்பட்டி, சுப்பிரமணியம் நகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (30). இந்து முன்னணி சரவணம்பட்டி ஒன்றியத் தலைவராக உள்ளார். சிலர் இவரது வீட்டின் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு நின்று கொண்டிருந்துள்ளனர். அதுகுறித்து பாலகிருஷ்ணன் அவர்களிடம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் பாலகிருஷ்ணனை கத்தியால் குத்தியுள்ளது. 
இதில், பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுதொடர்பாக, சரவணம்பட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கமலக்கண்ணன் (19), ஸ்ரீதர் (19), தினேஷ்குமார் (21), விஷ்ணு (21), சிவா (20), பிரகாஷ் (22), பழனி மாணிக்கம் (22) ஆகிய 7 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/12/இந்து-முன்னணி-நிர்வாகிக்கு-கத்திக்குத்து-7-பேர்-கைது-2937990.html
2937989 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் பெ.நா.பாளையத்தில் ஒருவருக்கு கத்திக்குத்து DIN DIN Tuesday, June 12, 2018 07:53 AM +0530 பெரியநாயக்கன்பாளையத்தையடுத்த பிரஸ் காலனியில், பொது இடத்தில் தகாத முறையில் பேசிக்கொண்டிருந்தருக்கும் கத்திக்குத்து விழுந்தது.
இங்குள்ள சீனிவாச நகரைச் சேர்ந்தவர் தியாகு (35).இதே பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமியின் மகன் ரவி பிரசாத் (45).இவர், கடந்த வெள்ளிக்கிழமை பொதுஇடத்தில் நின்றுகொண்டு, ஒருவரிடம் வாக்குவாதம் செய்து, தகாத வார்த்தையில் திட்டிக் கொண்டிருந்தாராம். 
அப்போது அங்கு தியாகு அதைத் தட்டிக் கேட்டுள்ளார். இதையடுத்து, தியாகுவின் வீட்டுக்கு கத்தியுடன் சென்ற ரவி பிரசாத் கத்தியால் தியாகுவைக் குத்தினாராம்.
அவரது அலறல் கேட்டு, அக்கம்பக்கத்தினர் தியாகுவை காப்பாற்றினர்.
இதுகுறித்து தியாகு, பெ.நா.பாளையம் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ரவிபிரசாத்தை கைது செய்து கோவை மத்தியச் சிறையில் அடைத்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/12/பெநாபாளையத்தில்-ஒருவருக்கு-கத்திக்குத்து-2937989.html
2937988 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் மருத்துவப் படிப்பு: கோவையில் முதல் நாளில் 1,893 விண்ணப்பங்கள் விநியோகம் DIN DIN Tuesday, June 12, 2018 07:53 AM +0530 கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது. இதில், முதல் நாளில் 1,893  விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டன. 
தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் 2018-19-ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம் அந்தந்த மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் திங்கள்கிழமை தொடங்கியது. 
 இதில், கோவையில், அவிநாசி சாலையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் டீன் டாக்டர் அசோகன் விண்ணப்ப விநியோகத்தை தொடக்கிவைத்தார். இதில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகியவற்றுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில், பொது பிரிவினருக்கான சேர்க்கை விண்ணப்பம் ரூ. 500-க்கும், தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு இடத்துக்கான விண்ணப்பம் ரூ. 1,000-க்கும், தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு இலவசமாகவும் வழங்கப்பட்டது.
இதில், முதல் நாளில் அரசு மருத்துவக் கல்லூரி பொதுப் பிரிவு சேர்க்கைக்கான விண்ணப்பம் 1,048, தனியார் கல்லூரி சேர்க்கைக்கான விண்ணப்பம் 686, தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான விண்ணப்பம் 159 என மொத்தம் 1,893 விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/12/மருத்துவப்-படிப்பு-கோவையில்-முதல்-நாளில்-1893-விண்ணப்பங்கள்-விநியோகம்-2937988.html
2937987 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் ஜூன் 13 மின் தடை DIN DIN Tuesday, June 12, 2018 07:53 AM +0530 ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 13) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: பால் கம்பெனி,  விநாயகர் கோயில்,  காந்திபார்க் , ஆர்.எஸ்.புரம் (ஒரு பகுதி),  தடாகம் சாலை (ஒரு பகுதி),  லாலி ரோடு,  டி.பி.சாலை (ஒரு பகுதி),  கௌலிபிரவுன் சாலை,  டி.வி. சாலை கிழக்கு மற்றும் மேற்கு,  சம்பந்தம் சாலை கிழக்கு மற்றும் மேற்கு,  சர் சண்முகம் சாலை, லோகமான்யா வீதி,  மெக்கரிக்கர் சாலை, சுக்கிரவார்பேட்டை (ஒருபகுதி), தியாகி குமரன் வீதி, லைட் ஹவுச் சாலை, பொன்னையராஜபுரம், இ.பி.காலனி, சொக்கம்புதூர், சலிவன் வீதி, தெலுங்கு வீதி, ராஜ வீதி (ஒரு பகுதி), பெரிய கடை வீதி (ஒரு பகுதி), இடையர் வீதி, பி.எம்.சாமி காலனி, சுண்டப்பாளையம் சாலை (ஒரு பகுதி).

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/12/ஜூன்-13-மின்-தடை-2937987.html
2937986 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் மாற்றுத் திறனாளிகளுக்கு  சிறப்பு குறைதீர் கூட்டம் DIN DIN Tuesday, June 12, 2018 07:52 AM +0530 கோவை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் ஜூன் 19, 21, 26 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் த.ந.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகளின் குறைகள் மற்றும் இன்னல்களைக் கேட்டறிந்து தீர்வு காணும் வகையில் சிறப்பு குறைதீர் கூட்டம் சரகம் வாரியாக நடத்தப்பட உள்ளது. 
பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஜூன் 19 ஆம் தேதியும், பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் ஜூன் 21 ஆம் தேதியும்,  கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜூன் 26 ஆம் தேதியும் இந்த குறைதீர் கூட்டங்கள் நடைபெற உள்ளன. 
இந்தக் கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை நகல் மற்றும் விண்ணப்பதுடன் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவைப்படும் உதவிகள் மற்றும் குறைகள் குறித்து தெரிவிக்கலாம்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jun/12/மாற்றுத்-திறனாளிகளுக்கு--சிறப்பு-குறைதீர்-கூட்டம்-2937986.html