Dinamani - திருப்பூர் - http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2791719 கோயம்புத்தூர் திருப்பூர் பாம்பு கடித்து தொழிலாளி சாவு DIN DIN Tuesday, October 17, 2017 06:54 AM +0530 சேவூர் அருகே மங்கரசுவலையபாளையத்தில் பாம்பு கடித்து கூலித் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
சேவூர் அருகே பேரநாயக்கன்புதூர் மங்கரசுவலையபாளையத்தைச் சேர்ந்த சின்னசாமி மகன் தங்கராஜ்(32). கூலித் தொழிலாளி. இவரது மனைவி கார்த்திகா(27). இவர்களது மகள் சம்யுக்தா (1).
இந்நிலையில்,  தங்கராஜ்,  வேலை முடிந்து வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்து வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது  தங்கராஜை பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து தங்கராஜ் அவிநாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் திங்கள்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து சேவூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/17/பாம்பு-கடித்து-தொழிலாளி-சாவு-2791719.html
2791718 கோயம்புத்தூர் திருப்பூர் சின்ன வெங்காயம் விலை அபரிமிதமாக உயர்வு DIN DIN Tuesday, October 17, 2017 06:54 AM +0530 வெள்ளக்கோவிலில் சின்ன வெங்காயத்தின் விலை அபரிமிதமாக உயர்ந்துள்ளது.
கிலோ ரூ. 45 விற்ற சின்ன வெங்காயம் கடந்த 4 வாரங்களில் படிப்படியாக உயர்ந்து தற்போது ரூ.110-க்கு விற்கப்படுகிறது. சாகுபடி இல்லாததால் இருப்பு வைக்கப்பட்டுள்ளவை மட்டுமே விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது.
வெளியூர் வரத்தும் குறைந்து விட்டது. இதனால் பற்றாக்குறை ஏற்பட்டு விலை உயர்ந்துள்ளது. இதேபோல வரத்து குறைவு காரணமாக முருங்கைக்காயும் கிலோ ரூ. 100 ஆக உயர்ந்துள்ளது. மற்ற முக்கியக் காய்கறிகளின் விலை விவரம் வருமாறு:
பெரிய வெங்காயம் ரூ.40, தக்காளி ரூ.32, கத்தரிக்காய் ரூ.100, கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ் ரூ.55, உருளைக்கிழங்கு ரூ.30, பீன்ஸ் ரூ.60.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/17/சின்ன-வெங்காயம்-விலை-அபரிமிதமாக-உயர்வு-2791718.html
2791717 கோயம்புத்தூர் திருப்பூர் சேவூரில் ரூ.52 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் DIN DIN Tuesday, October 17, 2017 06:53 AM +0530 சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ. 52 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது.
சேவூர்  ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் கடந்த வாரத்தை விட வரத்து அதிகரித்து மொத்தம் 2,140 மூட்டைகள் வந்திருந்தன. குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ. 4,540 வரையிலும்,  இரண்டாவது ரக நிலக்கடலை ரூ. 4,100 வரையிலும்,  மூன்றாவது ரகம்  ரூ. 2,300 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.52 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/17/சேவூரில்-ரூ52-லட்சத்துக்கு-நிலக்கடலை-ஏலம்-2791717.html
2791716 கோயம்புத்தூர் திருப்பூர் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி பள்ளியில் அறிவியல் கண்காட்சி DIN DIN Tuesday, October 17, 2017 06:53 AM +0530 காங்கயம் ஸ்ரீராஜராஜேஸ்வரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் பிறந்த நாளைமுன்னிட்டு இளைஞர் எழுச்சி தினம், அறிவியல் கண்காட்சி ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
  அறிவியல் கண்காட்சியில் மாணவ, மாணவிகள் சுமார் 180 அறிவியல் படைப்புகளை வைத்திருந்தனர். இந்தக் கண்காட்சியை இந்தியன் வங்கியின் காங்கயம் கிளை மேலாளர் டி.ராமன் தொடக்கிவைத்தார்.  இளைஞர் எழுச்சி நாள் விழாவில், திருச்சி நேஷனல் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் டாக்டர் எஸ். நீலகண்டன் கலந்துகொண்டு அப்துல் கலாம் குறித்து உரையாற்றினார்.
  பரிசளிப்பு விழாவில்,  காவல் துறையில் கடந்த 30 ஆண்டுகளாக சிறப்பாகப் பணியாற்றி, மெச்சத் தகுந்த பணிக்கான குடியரசுத் தலைவர் பதக்கம் பெற்ற காங்கயம் காவல் ஆய்வாளர் எஸ்.முருகேசன், கிராமப்புறத்தில் கல்விப் பணி சேவை செய்து டாக்டர்.ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்ற காங்கயம் ஒன்றியம், பெரிய இல்லியம் அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பி.அங்குலட்சுமி, காங்கயம் வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தைத் தொடர்ந்து 5 ஆண்டுகளாக மாநில அளவில் சிறந்த சங்கமாகத் தேர்வு செய்ய காரணமான பி.செல்வராஜ்,  காங்கயம் பகுதியில் ஆன்மிகப் பணியில் சேவை செய்து வரும் எம்.சென்னியப்பகவுண்டர் ஆகியோருக்கு பள்ளி சார்பாக டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
   பள்ளித் தாளாளர் கே.வைத்தீஸ்வரன், கே.வி.கே.அறக்கட்டளைஅறங்காவலர் விசாலாட்சி வைத்தீஸ்வரன், பள்ளி துணை முதல்வர்கள் பி.கலைச்செல்வி, அர்ச்சனா ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/17/ஸ்ரீ-ராஜராஜேஸ்வரி-பள்ளியில்-அறிவியல்-கண்காட்சி-2791716.html
2791715 கோயம்புத்தூர் திருப்பூர் செலவுக்குப் பணம் தர மறுத்த மூதாட்டியின் கழுத்தை அறுத்த நபர் DIN DIN Tuesday, October 17, 2017 06:53 AM +0530 திருப்பூரில் செலவுக்குப் பணம் தர மறுத்த மூதாட்டியின் கழுத்தை அறுத்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருப்பூர், பெருமாநல்லூர் சாலை,  பூலுவப்பட்டியை அடுத்த விக்னேஷ்வரா நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி காவேரியம்மாள் (78). கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணன் இறந்து விட்டார். குழந்தைகள் இல்லாததால் காவேரியம்மாள் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அவரை கொங்கு பிரதான சாலையைச் சேர்ந்த அவரது தங்கை மகன் விஜயகுமார் பராமரித்து வருகிறார்.
இந்நிலையில்,  காவேரியம்மாள் வீட்டுக்கு அவருடைய பக்கத்து வீட்டில் வசித்து வந்த மணி என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சென்றுள்ளார். அவர் காவேரியம்மாளிடம் செலவுக்குப் பணம் கேட்டுள்ளார். ஆனால்,  மூதாட்டி பணம் கொடுக்க மறுக்கவே,  ஆத்திரத்தில் மணி கத்தியால் மூதாட்டியின் கழுத்தை அறுத்துள்ளார். அப்போது மூதாட்டியின் சப்தம் கேட்டு, அருகிலிருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். இதனால் மணி அங்கிருந்து தப்பியோடினார்.
அருகிலிருந்தவர்கள் காவேரியம்மாளை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து விஜயகுமார் அளித்த புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/17/செலவுக்குப்-பணம்-தர-மறுத்த-மூதாட்டியின்-கழுத்தை-அறுத்த-நபர்-2791715.html
2791714 கோயம்புத்தூர் திருப்பூர் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர் கைது:  36 பவுன் நகைகள் பறிமுதல் DIN DIN Tuesday, October 17, 2017 06:52 AM +0530 திருப்பூரில் பல்வேறு  வழிப்பறிச் சம்பவங்களில் தொடர்புடைய நபரை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 36 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருப்பூர்,  திருமுருகன்பூண்டி பகுதியில் அனுப்பர்பாளையம் காவல்  ஆய்வாளர்  ராஜன்பாபு தலைமையில் போலீஸார் ரோந்துப் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்ற ஒருவரை அழைத்து விசாரிக்க முற்பட்டனர்.  ஆனால் அவர் அங்கிருந்து தப்பியோடினார். தொடர்ந்து போலீஸார் அவரைத் துரத்திப் பிடித்தனர்.
விசாரணையில் அவர், கோவை,  உக்கடம், அல்-அமீன் காலனியை சேர்ந்த சையது ஷபில் (41) என்பது தெரிந்தது. மேலும்,  அவர் கூட்டாளிகளான ஜவ்வாது (எ) சையது,  யூசுப்,  கமலகண்ணன் ஆகியோருடன் சேர்ந்து பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதும்,  அவர்கள் மீது கோவை மற்றும் கேரள காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளதும்,  இதில், ஜவ்வாது, யூசுப்பை கேரள போலீஸார் கைது செய்து, அவர்கள் சிறையில் இருப்பதும் தெரிய வந்தது. அதோடு,  திருப்பூரில் அனுப்பர்பாளையம்,  திருப்பூர் வடக்கு, தெற்கு,  15-வேலம்பாளையம் ஆகிய காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் ஷபில் மீது 8 குற்ற வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீஸார் ஷபிலைக் கைது செய்து  அவரிடமிருந்து 36 பவுன் தங்க நகைகளைப் பறிமுதல் செய்தனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/17/பல்வேறு-குற்றச்-சம்பவங்களில்-ஈடுபட்டவர்-கைது--36-பவுன்-நகைகள்-பறிமுதல்-2791714.html
2791713 கோயம்புத்தூர் திருப்பூர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களைத் தொடர் கண்காணிப்புக்கு உள்படுத்த வேண்டும்: மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தல் DIN DIN Tuesday, October 17, 2017 06:52 AM +0530 காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களைத் தொடர் கண்காணிப்புக்கு உள்படுத்த வேண்டும் என்று  மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கே.கோபால் தெரிவித்தார்.
அனைத்துத் துறை திட்டப் பணிகள் குறித்த அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு,  மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட கண்காணிப்பு அலுவலரும்,  கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் பால்வளத் துறை அரசு முதன்மைச் செயலாளருமான கே.கோபால் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் கே.கோபால் பேசியதாவது:
கடந்த ஒரு மாதமாக திருப்பூர் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. இயற்கையின் மாற்றத்தால் பரவலாக வைரஸ், டெங்கு காய்ச்சல் தாக்கம் உள்ளது. இதைத் தடுக்கும் வகையில்,  மாநகராட்சி,  நகராட்சிகள்,  பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் ஆகிய பகுதிகளில் வார்டு, வார்டாக தூய்மைப் பணியினை மேற்கொள்வதுடன்,  அபேட் மருந்து தெளித்தல்,  புகைமருந்து அடித்தல்,  பிளிச்சிங் பவுடர் தூவுதல்,  நிலவேம்புக் குடிநீர் வழங்குதல் மற்றும் மருத்துவ முகாம்கள் நடத்துதல் போன்ற பணிகளை முறையாக மேற்கொண்டு, காய்ச்சலைத் தடுக்க வேண்டும்.
மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கான மருத்துவப் பரிசோதனைகளை முறையாக மேற்கொள்வதுடன்,  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை முழுமையாக கண்காணித்து, அவர்கள் வசிக்கும் இருப்பிடங்களைச் சுற்றியுள்ள பகுதிகள் சுகாதாரமாக இருப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயர் சிகிச்சை தேவைப்படுபவர்களை,  உடனடியாக உரிய மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதுடன், அவர்களைத் தொடர் கண்காணிப்புக்கு உள்படுத்தவும், சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பின்னரும் கண்காணித்து, மாவட்டத்தில் காய்ச்சலின் தாக்கத்தினை குறைப்பதற்கு அனைத்து அலுவலர்கள், பொது மக்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
மேலும், திருப்பூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும்,  மேற்கொள்ளபடவுள்ள திட்டப் பணிகள் குறித்து துறை வாரியாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மாவட்டத்தில் 3 பேர் டெங்குவால் சாவு: முன்னதாக அவர், திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டு பகுதியினை நேரில் சென்று பார்வையிட்டு,  அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்து, மருத்துவமனை நிர்வாகத்திற்கு அறிவுறுத்தல்கள் வழங்கினார்.
இதில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி அடங்கிய குழுவினர் பங்கேற்றனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கே.கோபால் பேசுகையில்,  மாவட்டத்த்ல் 150-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். மொத்தம் 17 பேருக்கு டெங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனையில் டெங்குவுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் குறித்தும் தகவல் சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க போதுமான மருந்துகள் கையிருப்பு உள்ளன. இதுவரை 3 பேர் டெங்குவால் உயிரிழந்துள்ளனர். அவர்களும் மேல்சிகிச்சைக்காக பிற மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள் என்றார்.
தொடர்ந்து,  அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் ரத்த வங்கியினையும்,  திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களையும் பார்த்து ஆய்வு செய்தனர். பிறகு, மாநகராட்சி 19-ஆவது வார்டு மும்மூர்த்தி நகர்,  44-ஆவது வார்டு வெங்கடேஷ்வரா நகர் பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு,  நோய்த் தடுப்பு நடவடிக்கையினையும் ஆய்வு செய்தனர். தொடர்ந்து,  திருப்பூர் நொய்யலாறு தூய்மைப்படுத்தபட்ட பகுதிகளையும் பார்வையிட்டனர்.
இதில்,  மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.பிரசன்ன ராமசாமி,  திருப்பூர் சார் ஆட்சியர் ஜெ.ஷ்ரவண்குமார், தாராபுரம் சார் ஆட்சியர் கிரேஸ் பச்சாவு,  மாநகராட்சி ஆணையர் மா.அசோகன்,  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/17/காய்ச்சலால்-பாதிக்கப்பட்டவர்களைத்-தொடர்-கண்காணிப்புக்கு-உள்படுத்த-வேண்டும்-மாவட்ட-கண்காணிப்பு-அலுவல-2791713.html
2791712 கோயம்புத்தூர் திருப்பூர் பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத் தொகை DIN DIN Tuesday, October 17, 2017 06:52 AM +0530 காங்கயம் அருகே மறவபாளையம், புதுக்காடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பண்டிகை ஊக்கத் தொகை ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
   இதில்,  மறவபாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் எம்.எஸ்.யுவராஜ்,  சங்க உறுப்பினர்களுக்கு ஊக்கத் தொகையை வழங்கினார். ஊக்கத் தொகையான ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் 35 உறுப்பினர்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டது. சங்கத் தலைவர் லோகநாதன், செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, உதவித் தலைவர் டி.விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/17/பால்-உற்பத்தியாளர்களுக்கு-ஊக்கத்-தொகை-2791712.html
2791711 கோயம்புத்தூர் திருப்பூர் விழிப்புணர்வுப் பேரணி DIN DIN Tuesday, October 17, 2017 06:52 AM +0530 தாராபுரத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் விபத்தில்லா தீபாவளி பண்டிகை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
  தாராபுரம் சிந்து மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சாரணர் இயக்கம்,  தீயணைப்புத் துறை,  நகராட்சி ஆகியவை சார்பில் இப்பேரணி நடைபெற்றது.  புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட இப்பேரணியை பள்ளி நிறுவனர் வி.என்.கோபாலன் தொடக்கிவைத்தார். போக்குவரத்து துறை ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். இப்பேரணி, பொள்ளாச்சி சாலை, கடைவீதி, பழைய பேருந்து நிலையம் வழியாகச் சென்று, நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.
  விபத்தில்லா தீபாவளி பண்டிகை மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்புக் குறித்த விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. போக்குவரத்துத் துறை உதவி ஆய்வாளர் சுகுமாறன், பள்ளித் தாளாளர் வி.ஜி.சுரேஷ்குமார், முதல்வர் கே.ராஜேஸ்வரி, துணை முதல்வர் கணேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/17/விழிப்புணர்வுப்-பேரணி-2791711.html
2791710 கோயம்புத்தூர் திருப்பூர் பேரிடர் குறைப்பு தினப் பேரணி DIN DIN Tuesday, October 17, 2017 06:51 AM +0530 உலக பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு தாராபுரத்தில் விழிப்புணர்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 தாராபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த விழிப்புணர்வு பேரணிக்கு வட்டாட்சியர் வெங்கடலட்சுமி தலைமை வகித்தார்.  இப்பேரணி முக்கிய சாலைகள் வழியாகச் சென்று நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதை அடுத்து, சார் ஆட்சியர் கிரேஸ்  பச்சாவு தலைமையில் நடைபெற்ற பேரிடர் பாதுகாப்பு  குறித்த செயல் விளக்க நிகழ்ச்சியில் புயல், வெள்ளம் மற்றும் தீ விபத்து காலங்களில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/17/பேரிடர்-குறைப்பு-தினப்-பேரணி-2791710.html
2791709 கோயம்புத்தூர் திருப்பூர் அரசுப் பேருந்துகளில் புறக்கணிக்கப்படும் பள்ளி மாணவர்கள்: மாவட்ட ஆட்சியரகத்தில் புகார் DIN DIN Tuesday, October 17, 2017 06:51 AM +0530 அரசுப் பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் புறக்கணிக்கப்படும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.
மாவட்ட மக்கள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் சுகவனம் தலைமை வகித்தார். கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை,  புதிய குடும்ப அட்டை,  சாலை வசதி,  குடிநீர் வசதி என பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர்.
பொது மக்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனுக்கள் விவரம்:
மாணவர்களைப் புறக்கணிக்கும் பேருந்துகள்: நல்லூர் நுகர்வோர் நலமன்றம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில்,  ஏழை மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சென்று படிக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு பல்வேறு சலுகைகளை அளித்துவருகிறது. குறிப்பாக இலவசப் பேருந்து பயண அட்டை, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி,  மதிய உணவு என உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், இலவசப் பேருந்து பயண அட்டை வைத்திருக்கும் மாணவர்களை, பேருந்துகளில் நடத்துநர்கள் ஏற்றாமல் செல்வது,  ஏறியவர்களை இறக்கி விடுவது,  நிறுத்தாமல் செல்வது போன்ற சம்பவங்கள் திருப்பூரில் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன.
திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவியரும்,  நஞ்சப்பா பள்ளியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும் படிப்பதால்,  மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை, திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் அரசுப் பேருந்துகள் அனைத்தும், நஞ்சப்பா பள்ளி வழியாக சென்று, அங்குள்ள மாணவர்களை ஏற்றிக் கொண்டு, ஜெய்வாபாய் பள்ளி வழியாக சென்று அங்குள்ள மாணவிகளையும் ஏற்றிச் செல்ல வேண்டும் என்று கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது பேருந்துகள் அந்த வழியாக செல்லாததோடு, ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் மாணவிகளையும் ஏற்றாமல் செல்கின்றனர்.
இதேபோல் எல்.ஆர்.ஜி. கல்லூரி பேருந்து நிறுத்தத்திலும் சில ஓட்டுநர்கள் பேருந்துகளை நிறுத்தாமல் செல்கின்றனர். அனைத்து நிறுத்தங்களிலும் நிறுத்தி மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். அப்படி ஏற்றிச் செல்லாத பேருந்துகளின் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. ஆனால் திருப்பூரில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம், மாணவர்களின் நலன் கருதி இதுகுறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலைகளை சீரமைக்க வேண்டும்:"நாளைய திருப்பூர்' அமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட மனுவில்,  திருப்பூர், பெருமாநல்லூர் சாலையில் பல்வேறு பகுதிகளில் ஆழமான குழிகள் உள்ளன. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளைச் சந்திக்கும் சூழல் உள்ளது. அவிநாசி சாலையின் நிலையும் மோசமாக உள்ளது. சாலையில் உள்ள குழிகளை சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் சாலையை சீரமைக்க எங்களுக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி தினக்கூலி ஓட்டுநர்களுக்கு ஊதியம்: திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில்,  திருப்பூர் மாநகராட்சியில் தினக்கூலி ஓட்டுநர்களாக 38 பேர் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணி செய்து வருகின்றனர். அவர்களுக்கான தினசரி ஊதியம் ஒவ்வோர் ஆண்டும் மாவட்ட ஆட்சியர் அறிவிப்புப்படி நிலுவைத் தொகைகளுடன் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஜூலை மாதம் முதல் 38 லாரி ஓட்டுநர்கள், 17 ஆட்டோ ஓட்டுநர்கள் என 55 பேருக்கு,  பல்வேறு காரணங்களால் ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் அவர்களது குடும்பத்தினர் கடும் துயரத்தில் உள்ளனர். குறிப்பாக மாநகராட்சியில் ஓட்டுநராக இருந்த பாலமுருகன் என்ற ஓட்டுநர்,  கடந்த சில நாள்களுக்கு முன், கடன் தொல்லையால் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தீபாவளிப் பண்டிகைக்கு சில தினங்களே உள்ள நிலையில்,  அவர்கள் குடும்பத்துடன் பரிதவித்து வருகின்றனர். எனவே,  மாவட்ட நிர்வாகம் சிறப்பு கவனத்துடன் நடவடிக்கை எடுத்து, மூன்று மாத ஊதியத்தை உடனடியாக வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் பொது மக்கள் பயன்படுத்தும் கழிவறை சீர்கேடாக உள்ளது. புதிய பேருந்து நிலையத்துக்குள் பொதுக் கழிப்பிடம் இல்லாத காரணத்தால், புதிய கழிப்பிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சி 22-ஆவது வார்டில் பொது மக்கள் உபயோகத்துக்காக கட்டப்பட்ட கழிப்பிடத்தைத் திறக்க வேண்டும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில், மொத்தம் 152 மனுக்கள் அளிக்கப்பட்டன. அவற்றின் மீது உரிய நடவடிக்கையை மேற்கொள்ள அலுவலர்களுக்கு துணை ஆட்சியர் அறிவுறுத்தினார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/17/அரசுப்-பேருந்துகளில்-புறக்கணிக்கப்படும்-பள்ளி-மாணவர்கள்-மாவட்ட-ஆட்சியரகத்தில்-புகார்-2791709.html
2791708 கோயம்புத்தூர் திருப்பூர் பிஎஸ்என்எல் அனைத்து சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் DIN DIN Tuesday, October 17, 2017 06:50 AM +0530 செல்லிடப்பேசிக் கோபுரங்களை நிர்வகிக்க துணை நிறுவனம் அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி திருப்பூர் பிஎஸ்என்எல் அனைத்து சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
திருப்பூர் பிரதான தொலைபேசி நிலையம் முன்பு நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்துக்கு,  என்எப்டிஇ தலைவர் அந்தோணி மரிய பிரகாஷ் தலைமை வகித்தார்.  ஆர்ப்பாட்டத்தில்,  பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள்,  அதிகாரிகளுக்கு உடனடியாக ஊதிய மாற்றம் வழங்க வேண்டும். செல்லிடப்பேசிகளுக்கான கோபுரங்களை நிர்வகிக்க தனித் துணை நிறுவனம் அமைக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும்,  நேரடி நியமன ஊழியர்களின் ஓய்வூதியப் பலன்களை இறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மாநில உதவிச் செயலாளர் எஸ்.சுப்பிரமணியம்,  ஏஐபிஎஸ்என்எல்இஏ அமைப்பின் நிர்வாகி கேசவன்,  எப்என்டிஓ மாநில உதவிச் செயலாளர் தனபதி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/17/பிஎஸ்என்எல்-அனைத்து-சங்கத்தினர்-ஆர்ப்பாட்டம்-2791708.html
2791707 கோயம்புத்தூர் திருப்பூர் ஏற்றுமதிக்கான ஊக்கத் தொகையை அதிகரிக்க வேண்டும்: பிரதமருக்கு டீமா கடிதம் DIN DIN Tuesday, October 17, 2017 06:50 AM +0530 ஏற்றுமதிக்கான ஊக்கத் தொகையை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் (டீமா) கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து பிரதமருக்கு டீமா தலைவர் எம்.பி.முத்துரத்தினம் அனுப்பியுள்ள கடித விவரம்:
விவசாயத்துக்கு அடுத்தபடியாக ஜவுளி உற்பத்தி மற்றும் வர்த்தகம்தான் இந்திய நாட்டின் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. விவசாயமும், ஜவுளி உற்பத்தியும் நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதில் ஏற்றுமதி வர்த்தகத்தின் உயிர்நாடியாக திகழ்வது டிராபேக் எனும் ஊக்கத் தொகை தான். இந்த ஊக்கத் தொகை கடந்த 1990-ஆம் ஆண்டு காலகட்டத்தில் 26 சதவீதம் வரை இருந்தது. இதன் காரணமாகவே ஏற்றுமதி வளர்ச்சி பெற்றது. அதற்குப் பிறகு,  டூட்டி டிராபேக் படிப்படியாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு, கடைசியாக 7.5 சதவீதத்தில் இருந்தது. அதை 2.5 சதவீதமாக குறைத்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த ஊக்கத்தொகை மற்றும் வங்கிக் கடன் இரண்டின் மூலம்தான் திருப்பூரில் பெருமளவு நடுத்தர ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஊக்கத்தொகை குறைப்பால் நிறுவனங்கள் தொழில் செய்ய இயலாது. லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பும், வாழ்வாதாரமும் இழக்க நேரிடும். கடன் சுமையால் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலையும் உள்ளது.
சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் ஏற்றுமதி தொழிலுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்படும் நிலையில், இந்தியாவில் பல நெருக்கடிக்கு இடையே ஏற்றுமதி தொழில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டிராபேக் ஊக்கத்தொகையை குறைக்காமல்,  அதிகப்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/17/ஏற்றுமதிக்கான-ஊக்கத்-தொகையை-அதிகரிக்க-வேண்டும்-பிரதமருக்கு-டீமா-கடிதம்-2791707.html
2791706 கோயம்புத்தூர் திருப்பூர் புதிய பாலங்கள் கட்ட ரூ.45 லட்சம் நிதி ஒதுக்கீடு DIN DIN Tuesday, October 17, 2017 06:50 AM +0530 உடுமலை அருகே வெள்ளத் தடுப்புச் சுவர் கட்டவும்,  சிறு பாலங்கள் அமைக்கவும் ரூ.45 லட்சம் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
    உடுமலை வட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் சனிக்கிழமை இரவு கன மழை பெய்தது. பொன்னேரி ஊராட்சிக்கு உள்பட்ட ஐயம்பாளையம்புதூர் கிராமத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் 45- க்கும் மேற்பட் ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
   இந்நிலையில், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்  உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். வெள்ளநீர் புகுந்த வீடுகளையும் பார்வையிட்டார். ஐயம்பாளையம் கிராமத்தில் உள்ள 2 ஓடைகள் அருகில் வெள்ளத் தடுப்புச் சுவர் கட்டவும்,  2 சிறு பாலங்கள் கட்டவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
   இது குறித்து அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
   பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக வேட்டி, சேலை, அரிசி, உதவித் தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வெள்ளத் தடுப்புச் சுவர் கட்டவும்,  2 சிறு பாலங்கள் கட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து ரூ. 45 லட்சம் ஒதுக்கீடு செய்து, உடனடியாக பணிகளை தொடங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.   பின்னர்,  ஐயம்பாளையம் கிராமத்தில் பொது மக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது. கோட்டாட்சியர் அசோகன், மாவட்ட உதவித் திட்ட அலுவலர் அம்பிகா,  வட்டாட்சியர் தங்கவேலு, குடிமங்கலம் ஒன்றிய ஆணையாளர் அகமது, வருவாய்த் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/17/புதிய-பாலங்கள்-கட்ட-ரூ45-லட்சம்-நிதி-ஒதுக்கீடு-2791706.html
2791000 கோயம்புத்தூர் திருப்பூர் டெங்கு காய்ச்சல்: தாராபுரத்தில் குழந்தை சாவு DIN DIN Monday, October 16, 2017 05:59 AM +0530 தாராபுரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு குழந்தை பலியானதை அடுத்து மருத்துவப் பணிகளின் இணை இயக்குநர் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
  தாராபுரம் அருகே  குள்ளகாளிபாளையத்தைச் சேர்ந்தவர் செந்தில் (30), விவசாயி.  இவரது மனைவி மேரி (25). இவர்களது மகள் ஓவியா (2). இந்நிலையில்,  காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இக்குழந்தையை தாராபுரம் அரசு மருத்துவமனையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு சேர்த்தனர்.  அங்கு ஓவியா ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
   அதையடுத்து, மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் சௌந்தர்ராஜன்,  தாராபுரம் அரசு மருத்துவமனையில் டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது,  காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்றுவருவோரிடம் சிகிச்சை குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/16/டெங்கு-காய்ச்சல்-தாராபுரத்தில்-குழந்தை-சாவு-2791000.html
2790999 கோயம்புத்தூர் திருப்பூர் கிணறுகளில் நீர்மட்டம் உயர்வு DIN DIN Monday, October 16, 2017 05:57 AM +0530 தாராபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த பலத்த மழையால் கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
  தாராபுரம் பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. வீராட்சிமங்கலம், மதுக்கம்பாளையம், சின்னப்புத்தூர், தாசர்பட்டி, பொன்னாபுரம், எம்.குமாரபாளையம்
ஆகிய பகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது. இதனால், மகிழ்ச்சி அடைந்துள்ள விவசாயிகள் பயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
 இந்தப் பகுதியிலுள்ள பல்வேறு குளங்களில் தண்ணீர் நிரம்பி உள்ளது. ஆழ்துளைக் கிணறுகளிலும்,  கிணறுகளிலும் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/16/கிணறுகளில்-நீர்மட்டம்-உயர்வு-2790999.html
2790998 கோயம்புத்தூர் திருப்பூர் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு DIN DIN Monday, October 16, 2017 05:57 AM +0530 கலை, இலக்கியப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு இளைஞர் சமூக சேவை அறக்கட்டளை, அக்னி சிறகுகள் நற்பணி மன்றம் ஆகியவை இணைந்து மாவட்ட அளவிலான கலை, இலக்கியப் போட்டிகளை நடத்தின.
இதில்,  உடுமலையை அடுத்துள்ள பள்ளபாளையம் ஆதர்ஷ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றனர்.
பேச்சுப் போட்டியில் ரிதன்யா முதலிடமும், விநாடி-வினா போட்டியில் ஜெஸ்வந்த் முதலிடமும்,  ஓவியப் போட்டியில் விஷ்ணுவர்த்தினி இரண்டாமிடமும்,  அறிவியல் கண்காட்சியில் சிவப்பிரணேஷ் மூன்றாமிடமும்,  மாறுவேடத்தில் ஹரிசுதன் மூன்றாமிடமும் பெற்றனர்.
மேலும்,  குழு நடனப் போட்டியில் இப்பள்ளி மாணவர்கள் மூன்றாம் இடம் பிடித்தனர்.
சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி முதல்வர் ஜீ.ஜீவராஜ் அலெக்ஸாண்டர் உள்ளிட்டோர் பாராட்டினர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/16/வெற்றி-பெற்ற-மாணவர்களுக்குப்-பாராட்டு-2790998.html
2790997 கோயம்புத்தூர் திருப்பூர் காய்ச்சல் பாதிப்பு விவரங்களைத் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்கள் DIN DIN Monday, October 16, 2017 05:57 AM +0530 காய்ச்சல் பாதிப்பு குறித்த விவரங்களைத் தெரியப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
  டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தவும்,  அதனால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கவும் அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருப்பூர்  மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
காய்ச்சல் பாதிப்பு குறித்து பொது மக்கள் தகவல் தெரிவிக்கவும், தகவல் பெறவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தகவல் மற்றும் கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. பொது மக்கள் 1800-4257-023 மற்றும் 1077 (கட்டணமில்லா எண்) 0421- 2971163 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம். கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதில் அளிக்க யாரும் இல்லை எனப் புகார்:  திருப்பூர் ஏ.வி.பி.லே-அவுட் பகுதியில் குப்பை அகற்றப்படாமல், கழிவுநீர்க் கால்வாய் சுத்தப்படுத்தப்படாமல் உள்ளது. இதனால், அப்பகுதி மக்களிடையே காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது எனத் தகவல் தெரிவிப்பதற்காக கட்டணமில்லா தொலைபேசி எண்களைத் தொடர்புகொண்டபோது, யாரும் பதில் அளிக்கவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புகார்களுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனவும் அப்பகுதி பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/16/காய்ச்சல்-பாதிப்பு-விவரங்களைத்-தெரிவிக்க-கட்டணமில்லா-தொலைபேசி-எண்கள்-2790997.html
2790996 கோயம்புத்தூர் திருப்பூர் விதை உற்பத்தி நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு DIN DIN Monday, October 16, 2017 05:57 AM +0530 தாராபுரம் பகுதிகளில் உள்ள விதை உற்பத்தி, விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.  
  திருப்பூர் மாவட்டத்தில் தற்போது பரவலாக  மழை பெய்து வருகிறது. இதையடுத்து  விவசாயிகள்,  நெல் சாகுபடிக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளுக்கு சான்று செய்யப்பட்ட தரமான நெல் விதைகள் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்யும் பொருட்டு கோவை மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் ச.சுமதி தலைமையில் கோவை,  உடுமலை, பொள்ளாச்சி வட்டங்களை சேர்ந்த விதை ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் தாராபுரம் பகுதியில் உள்ள விதை உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
   ஆய்வின்போது,  விதை விற்பனை நிலைய உரிமம்,  கொள்முதல் பட்டியல்கள், விதை இருப்புப் பதிவேடு, மாதாந்திர அறிக்கை ஆகியவற்றை ஆய்வு செய்தனர். மேலும், தனியார் நெல் விதை உற்பத்தி நிலையங்களில்  நெல் விதைகளை உற்பத்தி செய்து, விநியோகம் செய்வதற்கான ஆவணங்களையும் ஆய்வு செய்தனர்.
அப்போது,  உரிய ஆவணங்களின்றி நெல் உற்பத்தி செய்து, விநியோகம் செய்யப்பட்ட நிறுவனங்கள் கண்டறியப்பட்டு,  விதைகள் சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.
    இதுகுறித்து விதை ஆய்வு துணை இயக்குநர் ச.சுமதி கூறியதாவது:
  விதை சேமிப்புக் கிடங்குகளில் நெல் விதைகளை குவியல் வாரியாக தனித்தனியே இருப்பு வைத்திருக்க வேண்டும். காலாவதியான  நெல் விதைகளை இருப்பு வைக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது என உற்பத்தியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகளுக்கு விற்பனை பட்டியலிடாமல் விதை விற்பனை விநியோகம் செய்ய கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/16/விதை-உற்பத்தி-நிலையங்களில்-அதிகாரிகள்-ஆய்வு-2790996.html
2790995 கோயம்புத்தூர் திருப்பூர் மாட்டுச் சந்தையில் ரூ. 65 லட்சத்துக்கு காங்கயம் இன மாடுகள் விற்பனை DIN DIN Monday, October 16, 2017 05:56 AM +0530 காங்கயத்தை அடுத்துள்ள நத்தக்காடையூர் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பழையகோட்டை மாட்டுச் சந்தையில் 90 காங்கயம் இன மாடுகள் மொத்தம் ரூ. 65 லட்சத்துக்கு விற்கப்பட்டன.
  பழையகோட்டையில் காங்கயம் இன மாடுகளுக்கான சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இந்தச் சந்தையில், காங்கயம் இன மாடுகளை விற்பதுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தைக்கு கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மாடுகளை விற்பதற்காகக் கொண்டுவந்திருந்தனர்.
  மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 210 மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன. காங்கயம் இன மாடுகள் ரூ.30 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 48 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன. காளைக் கன்றுகள் ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 65 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன. மொத்தம் 90 மாடுகள் ரூ.65 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டதாக சந்தை மேற்பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/16/மாட்டுச்-சந்தையில்-ரூ-65-லட்சத்துக்கு-காங்கயம்-இன-மாடுகள்-விற்பனை-2790995.html
2790994 கோயம்புத்தூர் திருப்பூர் நொய்யல் ஆற்றைப் பாதுகாப்பது நமது கடமை: ஆட்சியர் DIN DIN Monday, October 16, 2017 05:56 AM +0530 நொய்யல் ஆற்றைப் பாதுகாப்பது ஒவ்வொருவருடைய கடமை என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர்  கே.எஸ்.பழனிசாமி பேசினார்.
   மாவட்ட நிர்வாகம்,  மாநகராட்சி நிர்வாகம்,  திருப்பூரின்  பின்னலாடை,  அனைத்துத் தொழில் கூட்டமைப்பு சார்பில்  நொய்யலைத் தூய்மை செய்யும் முதற்கட்ட பணியின் நிறைவு நிகழ்வு,  முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்த நாள் விழாவையொட்டி நொய்யல் ஆற்றங்கரையில் தூய்மை விழிப்புணர்வு பேரணி, மரக்கன்றுகள் நடும் விழா திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
   இதற்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்து, பேரணியைத் தொடக்கிவைத்துக் கலந்து கொண்டார்.  வளர்மதி பாலம் அருகேயுள்ள நொய்யல் கமல விநாயகர் கோயிலில் இருந்து புறப்பட்டப் இப்பேரணி, நொய்யல் அணைக்காடு பகுதியில் நிறைவு பெற்றது.  கல்லூரி, பள்ளி, மாணவ, மாணவியர், தொழில் துறையினர், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  நொய்யல் ஆற்றைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்த பதாதைகளை ஏந்தியவாறு ஆற்றின் கரையோரப் பகுதி வழியாகச் சென்றனர்.
  அதைத் தொடர்ந்து, மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியை  மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.பிரசன்ன ராமசாமி, சார் ஆட்சியர் ஜெ.ஷ்ரவண்குமார், மாநகராட்சி ஆணையர் எஸ்.அசோகன்,  திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம், சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், வெற்றி அமைப்பு கிளாசிக் சிவராம், ஜீவ நதி நொய்யல் தலைவர் அகில் சு.ரத்தினசாமி  உள்ளிட்டோர் தொடக்கிவைத்தனர்.
 இதில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி பேசியதாவது:
  நொய்யல் ஆற்றைப் பாதுகாப்பது ஒவ்வொருவருடைய கடமையாகும்.
  நொய்யல் ஆற்றில் முதல் கட்டமாக மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொடர்ந்து 2-ஆம் கட்டமாக மாவட்டத்திலுள்ள மற்ற பகுதிகளிலும் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் மூலம் ஸ்மார்ட் சிட்டி அமையும் விதமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ரூ.125 கோடி மதிப்பீட்டில் நொய்யல் ஆற்றின் இரு கரையோரப் பகுதிகளில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு, கம்பி வேலிகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
 அதேபோல், ரூ.415 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சி மூலம் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்பட்டு, வீடுகளிலிருந்து வரும் கழிவுநீர்  நொய்யல் ஆற்றில் கலக்காமல், குழாய் மூலமாக சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லும் அளவிற்கு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. அனைவரும் ஜீவ நதியான நொய்யலைப் பாதுகாத்து திருப்பூருக்கு பெருமை தேடித் தரவேண்டும் என்றார்.
  திருப்பூர் மாநகர பொறியாளர் ரவி, மாநகர செயற்பொறியாளர் தமிழ்செல்வன், வட்டாட்சியர்கள் கோபாலகிருஷ்ணன் (திருப்பூர் தெற்கு), சுப்ரமணியம் (திருப்பூர் வடக்கு), மாநகராட்சி உதவி ஆணையர்கள், பொதுப் பணித் துறை அலுவலர்கள்,தொழில் துறையினர் மற்றும் அரசு அலுவலர்கள் ,பொது மக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/16/நொய்யல்-ஆற்றைப்-பாதுகாப்பது-நமது-கடமை-ஆட்சியர்-2790994.html
2790993 கோயம்புத்தூர் திருப்பூர் பல்லடம் அருகே வாய்க்காலில் கார் கவிழ்ந்து 4 பேர் சாவு DIN DIN Monday, October 16, 2017 05:55 AM +0530 பல்லடம் அருகே கள்ளிப்பாளையம் பி.ஏ.பி. வாய்க்காலில் கார் கவிழ்ந்ததில் 4 பேர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.
  கோவை, சுண்டப்பாளையம் பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த பொறியாளர்கள் அன்பழகன் (30), மாரியப்பன் (31), விஜயன்(36), பிரதீப் (35), சுதாகர் (29) ஆகியோர் கொடைக்கானலுக்கு காரில் சனிக்கிழமை சுற்றுலா சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு கோவைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
   அப்போது,  பல்லடம் அருகே வி.கள்ளிப்பாளையம் பி.ஏ.பி.வாய்க்கால் பகுதி அருகே இந்த கார் கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலுக்குள் கவிழ்ந்தது. இதில்,  வாய்க்கால் தண்ணீரில் மூழ்கி மாரியப்பன், விஜயன்,  பிரதீப், சுதாகர் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். சுதாகர் சடலம் வாய்க்கால் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதால்,  அதை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இவ்விபத்தில் காயம் அடைந்த அன்பழகன் பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட மூவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
  இது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/16/பல்லடம்-அருகே-வாய்க்காலில்-கார்-கவிழ்ந்து-4-பேர்-சாவு-2790993.html
2790992 கோயம்புத்தூர் திருப்பூர் புதுச்சேரி தம்பதி விஷம் குடித்து தற்கொலை DIN DIN Monday, October 16, 2017 05:55 AM +0530 தங்கள் மகள் காதலித்து ஏமாற்றப்பட்டதால் மனவேதனை அடைந்த, புதுச்சேரியைச் சேர்ந்த தம்பதி திருப்பூரில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.
   இதுகுறித்து போலீஸார் கூறியது:
  புதுச்சேரி,  கதிர்காமம்,  ஆனந்த நகர் பாரதி தெருவைச் சேர்ந்தவர் ராஜபெருமாள் (37). இவரது மனைவி அம்பிகா (32). இருவரும் கூலி வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு 2 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர்.  இவர்களது மூத்த மகள் புதுச்சேரியில் உள்ள பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியில் படிக்கும்போது, காதல் விவகாரத்தில் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டதாக
கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டு,  இதற்குக் காரணமான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக,  ராஜபெருமாள் குடும்பத்தினர் கடும் மனஉளைச்சலில் இருந்துவந்தனர்.
  இந்நிலையில்,  இத்தம்பதி புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தங்கள் மூத்த மகளை அழைத்துக் கொண்டு  கடந்த சனிக்கிழமை மாலை திருப்பூருக்கு பேருந்தில் வந்துகொண்டிருந்தபோது, திருப்பூர், கோயில்வழி பகுதியில் உள்ள
கடையில் அவர்கள் குளிர்பானம் வாங்கிக் குடித்துள்ளனர்.  அப்போது, மகளுக்குத் தெரியாமல் தாங்கள் குடித்த குளிர்பானத்தில் பூச்சி மருந்தைக் கலந்து இருவரும் குடித்துள்ளனர். பின்னர், அங்கிருந்து திருப்பூர் நோக்கி சாலையில் நடந்து சென்றனர்.  அப்போது,  இத்தம்பதி வாந்தி எடுத்துள்ளனர்.
  அவ்வழியாகச் சென்றவர்கள், இத்தம்பதியை மீட்டு, திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு ராஜபெருமாள் உயிரிழந்தார்.  கோவை அரசு மருத்துவமனையில் அம்பிகா சனிக்கிழமை இரவு உயிரிழந்தார். இவர்களது மகள் திருப்பூரில் உள்ள காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.
   இது குறித்து திருப்பூர் ஊரக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில்,  புதுச்சேரியிலிருந்து புறப்படும் முன்பு தங்களது மற்ற 4 குழந்தைகளையும் பார்த்துக்கொள்ளுமாறு கூறி,  தனது தாயாருக்கு அம்பிகா கடிதம் எழுதிவைத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/16/புதுச்சேரி-தம்பதி-விஷம்-குடித்து-தற்கொலை-2790992.html
2790991 கோயம்புத்தூர் திருப்பூர் பல்லடத்தில்  17 பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி DIN DIN Monday, October 16, 2017 05:55 AM +0530 பல்லடம் வட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி 17 பட்டாசுக் கடைகளுக்கு  வருவாய் துறை அனுமதி வழங்கியுள்ளது.
 தீபாவளி பண்டிகையையொட்டி,  பல்லடம் வட்டத்தில் சாமளாபுரத்தில் 3, காரணம்பேட்டையில் 3, அருள்புரத்தில் 3,  பொங்கலூரில் 1,  பல்லடம் நகரில் 7 என மொத்தம் 17 பட்டாசுக் கடைகள் வைக்க வருவாய் துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/16/பல்லடத்தில்--17-பட்டாசுக்-கடைகளுக்கு-அனுமதி-2790991.html
2790990 கோயம்புத்தூர் திருப்பூர் கிணற்றில் தவறிவிழுந்து  தொழிலாளி சாவு DIN DIN Monday, October 16, 2017 05:54 AM +0530 தாராபுரம் அருகே கிணற்றில் தவறிவிழுந்த இளைஞர்  ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
 பல்லடம் அருகே கொசவம்பாளையம், செல்லையகவுண்டன் வீதியைச் சேர்ந்தவர் துரைசாமி மகன் நந்தகுமார்(33). இவர்,  தாராபுரம் அருகே தளவாய்ப்பட்டிணத்தில் உள்ள காளியம்மன் கோயிலுக்கு வழிபடுவதற்காக அடிக்கடி வருவது வழக்கம்.
  இந்நிலையில்,  ஞாயிற்றுக்கிழமை கோயிலுக்கு வந்த இவர் அருகிலுள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்கச் சென்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறிவிழுந்து உயிரிழந்தார்.  இது குறித்து தகவல் கிடைத்ததை அடுத்து தாராபுரம் தீயணைப்புப் படையினர்,  சம்பவ இடத்துக்குச் சென்று நந்தகுமார் உடலை மீட்டனர்.
  இதுகுறித்து அலங்கியம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/16/கிணற்றில்-தவறிவிழுந்து--தொழிலாளி-சாவு-2790990.html
2790989 கோயம்புத்தூர் திருப்பூர் பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் DIN DIN Monday, October 16, 2017 05:54 AM +0530 திருப்பூரில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு அமைப்பினர்,  கட்சியினர் சார்பில் பொது மக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
 டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தவும்,  உயிரிழப்புகளைத் தடுக்கவும் மாவட்ட,  மாநகராட்சி நிர்வாகங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. மருத்துவமனைகள், சுகாதார மையங்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
   இந்நிலையில்,  திருப்பூரில் பல்வேறு கட்சியினர்,  அமைப்பினரும் பொது இடங்கள், குடியிருப்புப் பகுதிகளில் நிலவேம்புக் குடிநீர் வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  திருப்பூர் மண்டல, மாவட்ட மதிமுக மாணவர் அணி சார்பில் சந்திராபுரம், வாய்க்கால்மேடு பகுதியில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தப்பட்டு,  நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது.
   திருப்பூர்,  46-ஆவது வார்டு கல்லம்பாளையம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அப்பகுதி மக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது. பத்மாவதிபுரம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகியவை சார்பில் பொது மக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது.
   திருப்பூர் வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் எதிரில், அங்கேரிபாளையம் சாலையில் உள்ள தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டுக்கு வந்தோருக்கு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது.  15 வேலம்பாளையம் அருகே ஜவாஹர் நகர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் அப்பகுதி மக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது.
உடுமலையில்...  உடுமலையில்,  உழவர் சந்தை எதிரே உள்ள கிளை நூலகம்  2-இல் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு நூலகர் வீ.கணேசன் தலைமையில் மகாத்மாகாந்தி உண்டு,  உறைவிடப் பள்ளி மாணவர்கள் பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது. நூலகர் கு.மகேந்திரன் உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
  உடுமலை அரசு மருத்துவமனையில்  பொதுமக்கள், நோயாளிகளுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது.  டெங்கு காய்ச்சல் தடுப்புக் குறித்து விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. தனியார் கல்லூரி முதுகலை சமூகப் பணித் துறை மாணவ, மாணவிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/16/பொதுமக்களுக்கு-நிலவேம்புக்-குடிநீர்-2790989.html
2790988 கோயம்புத்தூர் திருப்பூர் விபத்தில் விவசாயி சாவு DIN DIN Monday, October 16, 2017 05:54 AM +0530 தாராபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த விவசாயி,  தடுமாறி விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
  தாராபுரம் அருகே கோவிந்தாபுரத்தைச் சேர்ந்தவர் குழந்தைவேலு (50),  விவசாயி.  இவர், சின்னக்காம்பாளையத்துக்கு இருசக்கர வாகனத்தில் பொள்ளாச்சி சாலை வழியாக ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்தார்.
 அப்போது, சின்னப்புத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சாலையில் நாய் ஓடிவந்ததால்,  இருசக்கர வாகனத்தை ஓடிச்சென்ற குழந்தைவேலு நிலை தடுமாறி விழுந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.    இதுகுறித்து தாராபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/16/விபத்தில்-விவசாயி-சாவு-2790988.html
2790987 கோயம்புத்தூர் திருப்பூர் திமுக சார்பில் மாணவர்களுக்குப் போட்டி DIN DIN Monday, October 16, 2017 05:54 AM +0530 திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு, கவிதைப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின்பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை ஒப்புவித்தல் ஆகிய போட்டிகள் திருப்பூர், காமாட்சி அம்மன் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. போட்டியில்  ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ் தலைமை வகித்தார். மாநகர இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் செல்வராஜ் கலந்து கொண்டு போட்டிகளைத் தொடக்கிவைத்தார்.  
 பரிசளிப்பு விழாவில், வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.5 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.2,500, ஆறுதல் பரிசாக 10 பேருக்கு தலா ரூ.1000 மற்றும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/16/திமுக-சார்பில்-மாணவர்களுக்குப்-போட்டி-2790987.html
2790986 கோயம்புத்தூர் திருப்பூர் உடுமலையில் 2 கொள்ளையர்கள்   கைது:8 பவுன் பறிமுதல் DIN DIN Monday, October 16, 2017 05:53 AM +0530 உடுமலையில் வழிப்பறி கொள்ளையர்கள் இருவரை போலீஸார் கைது செய்து, 8 பவுன்,  3 செல்லிடப்பேசிகள், இருசக்கர வாகனத்தை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்துள்ளனர்.
  உடுமலையை அடுத்துள்ள போடிபட்டி ஐஸ்வர்யா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் வேலுசாமி(69).  இவர், தனது மனைவியுடன் அருகில் உள்ள நாராயணசாமி வீட்டில் சனிக்கிழமை இரவு தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது,  வீட்டிற்குள்  திடீரென நுழைந்த 2 மர்ம நபர்கள்,  வேலுசாமி,  நாராயணசாமி ஆகியோரை கட்டிப்போட்டு அறைக்குள் வைத்துப் பூட்டினர். பின்னர், வேலுசாமி மனைவியின் கழுத்தில் கத்தியைவைத்து மிரட்டி,  சங்கிலி, தோடு, மோதிரம் ஆகியவற்றைக் கொள்ளையடித்த மர்ம நபர்கள், 3 செல்லிடப்பேசிகளையும் எடுத்துக்கொண்டு தப்பிவிட்டனர்.
 இது குறித்து உடுமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.இந்நிலையில்,  உடுமலை அருகே போடிபட்டியை அடுத்துள்ள சுண்டக்காம்பாளையம் பகுதியில் இக்குற்றவாளிகள் பதுங்கி உள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீஸார்,  பதுங்கி இருந்த தூத்துக்குடியைச் சேர்ந்த அகமது உசேன்(24), திருநெல்வேலியைச் சேர்ந்த சுரேஷ் (27) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 பவுன் நகை, 3 செல்லிடப்பேசிகள்,  இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/16/உடுமலையில்-2-கொள்ளையர்கள்---கைது8-பவுன்-பறிமுதல்-2790986.html
2790985 கோயம்புத்தூர் திருப்பூர் அவிநாசி அருகே கோயில் பூஜையின்போது படமெடுத்து ஆடிய நாகப் பாம்பு DIN DIN Monday, October 16, 2017 05:53 AM +0530 அவிநாசி அருகே ராயம்பாளையம் ஸ்ரீசீனிவாசப் பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தின்போது, நாகப் பாம்பு படமெடுத்து ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
   ராயம்பாளையம் ஸ்ரீசீனிவாசப் பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை விழாவையொட்டி,  ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீசீனிவாசப் பெருமாள் திருக்கல்யாண வைபவம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்றது. சிறப்பு பூஜைகள் நிறைவடைந்தபோது,  சன்னதி வாசல் வழியாக நுழைந்த இரண்டு அடி நீளமுள்ள நாகப் பாம்பு படமெடுத்து ஆடியது. இதைப் பார்த்த பக்தர்கள், பெரும் பரவசமடைந்து பாம்பை வழிபட்டனர். பாம்புக்கு பால் ஊற்றினர். பாம்பு படமெடுத்து உற்சவர் சிலை மீது ஏறியது.
சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக அதே இடத்தில் பாம்பு காணப்பட்டது.  இந்நிலையில்,  அங்கிருந்தவர்கள் பாம்பைப் பிடித்துச் சென்று காட்டுக்குள் விடுவிடுத்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/16/அவிநாசி-அருகே-கோயில்-பூஜையின்போது-படமெடுத்து-ஆடிய-நாகப்-பாம்பு-2790985.html
2790984 கோயம்புத்தூர் திருப்பூர் தெக்கலூரில் பேருந்து சிறைபிடிப்பு DIN DIN Monday, October 16, 2017 05:52 AM +0530 அவிநாசி அருகே தெக்கலூரில் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற தனியார் பேருந்தை பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை  சிறைபிடித்து,  போராட்டத்தில் ஈடுபட்டனர்.
   அவிநாசி அருகே தெக்கலூர் பகுயில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. தெக்கலூர் வழியாக வரும் தனியார், அரசு பேருந்துகள்,  பேருந்து நிறுத்ததில் நிற்காமல், புறவழிச்சாலை மேம்பாலம் வழியாகச் சென்றுவந்தன.
  இதனால், பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள்,  சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டதை அடுத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உத்தரவின்பேரில், பேருந்துகள் தெக்கலூர் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டு வந்தன.
   இந்நிலையில்,  கோவையில் இருந்து அந்தியூர் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில் பயணித்த தெக்கலூர் பகுதியைச் சேர்ந்த முத்துகுமார் தெக்கலூருக்கு பயணச் சீட்டு கேட்டுள்ளார்.  அப்பேருந்து  நடத்துநர்,  ஓட்டுநர் ஆகியோர் தெக்கலூர் பேருந்து நிறுத்ததில் பேருந்தை நிறுத்தமாட்டோம்.  அவிநாசியில்தான் பேருந்தை நிறுத்துவோம் எனக் கூறி, அவிநாசிக்கு பயணச் சீட்டு கொடுத்துள்ளனர்.
  இதனால், நடத்துநருக்கும், முத்துகுமாருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டதாம். உடனே  முத்துகுமார்,  இது குறித்து தெக்கலூர் பொதுமக்களுக்கு செல்லிடப்பேசி மூலமாகத் தகவல் தெரிவித்தார். அதையடுத்து,  அந்த ஊர் பொதுமக்கள்,  தெக்கலூர் புறவழிச்சாலை மேம்பாலம் வழியாக வந்துகொண்டிருந்த தனியார் பேருந்தை சிறை பிடித்து,  தெக்கலூர் சாலைக்கு பேருந்து கொண்டுவரச் செய்து,  போராட்டத்தில் ஈடுபட்டனர்.  சம்பவ  இடத்துக்குச் சென்ற போலீஸார்,  தனியார் பேருந்து நடத்துநர், ஓட்டுநரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது,  இனிவரும் காலங்களில் தெக்கலூர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தப்படும் என உறுதி அளித்தனர். அதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/16/தெக்கலூரில்-பேருந்து-சிறைபிடிப்பு-2790984.html
2790699 கோயம்புத்தூர் திருப்பூர் ஆண்டுக்கு ரூ. 96 மட்டுமே சம்பாதிப்பதாக வருமானச் சான்று DIN DIN Sunday, October 15, 2017 05:29 AM +0530 திருப்பூரில் சலவைப் பணியாளர் ஒருவர் ஆண்டுக்கு ரூ. 96 மட்டுமே சம்பாதிப்பதாக வருமானச் சான்று அளிக்கப்பட்ட விவகாரத்தில் சனிக்கிழமை அவருக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், வடக்கு வட்டத்துக்கு உள்பட்ட வேலம்பாளையம் கிராமம், சாமுண்டிபுரம், நாகாத்தம்மன் கோயில் 2-ஆவது வீதியைச் சேர்ந்தவர் சலவைப் பணியாளர் என்.மாமுண்டி. இவர் கடந்த சில நாள்களுக்கு முன்னர் வருமானச் சான்று கோரி திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்துக்கு இணையசேவை மூலமாக விண்ணப்பித்துள்ளார்.
தனது சுய தேவைக்காக ரூ. 70 ஆயிரம் என்ற அளவில் பதிவு செய்து வருமானச் சான்று கோரியுள்ளார். ஆனால், ரூ. 96 ஆயிரத்துக்கு மட்டுமே வருமானச் சான்று அளிக்க முடியும் என்று வருவாய்த் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, ரூ. 96 ஆயிரம் தனது ஆண்டு வருமானமாகப் பதிவு செய்துள்ளார். அவருக்கு அக்டோபர் 12-ஆம் தேதி வருமானச் சான்று வழங்கப்பட்டது. ஆனால், அதில் அவரது வருமானம் ரூ. 96 என்று மதிப்பிட்டு எண்ணாலும், எழுத்தாலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், விசாரணையின் அடிப்படையில் சான்றளிக்கப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியது.
இதுகுறித்து, வருவாய்த் துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, இவ்வளவு குறைவாக வருமானச் சான்று அளிக்கப்பட்டிருப்பது திருப்பூர் வடக்கு வட்டாசியர் அலுவலகத்தில் இதுவே முதல் முறையாகும். எண்ணால் எழுதும் போது தவறு நிகழ்ந்தது என்றாலும், எழுத்தால் எழுதும்போது அதை அறிந்திருக்கலாம். சில நேரங்களில் கவனக்குறைவால் இவ்வாறு நடப்பது உண்டு என்றனர். அதேநேரத்தில், அவருக்கு உரிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ரூ. 96 ஆயிரம் என்று பதிவு செய்யப்பட்ட வருமானச் சான்று சனிக்கிழமை வழங்கப்பட்டது.
இதுகுறித்து, வடக்கு வட்டாட்சியர் சுப்ரமணியனிடம் பேசியபோது, "தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்தத் தவறு நடைபெற்றுள்ளது. உடனடியாக அவரை அழைத்து புதிய சான்று வழங்கப்பட்டு விட்டது' என்றார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/15/ஆண்டுக்கு-ரூ-96-மட்டுமே-சம்பாதிப்பதாக-வருமானச்-சான்று-2790699.html
2790698 கோயம்புத்தூர் திருப்பூர் அமராவதி நகர் ராணுவப் பள்ளியில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு DIN DIN Sunday, October 15, 2017 05:27 AM +0530 திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள அமராவதி நகரில் உள்ள ராணுவ ப் பள்ளியில் 2018-19-ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பள்ளி நிர்வாகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகமும், தமிழக அரசும் ஒருங்கிணைந்து நடத்தும் இந்த உண்டு உறைவிடப் பள்ளியில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் 2018-2019-ஆம் கல்வியாண்டில் 6, 9-ஆம் வகுப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 01-08-2018 அன்று 10 வயது முடிந்தும் 11 வயது முடியாமலும் (02-07-2007-இல் இருந்து 01-07-2008-ஆம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்) இருக்கும் மாணவர்கள் மட்டுமே 6-ஆம் வகுப்பில் சேர முடியும். மேலும் 01-08-2017 அன்று 13 வயது முடிந்தும் 14 வயது முடியாமலும் (02-07-2004-இல் இருந்து 01-07-2005-க்குள் பிறந்திருக்க வேண்டும்) அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 8-ஆம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் மட்டுமே 9-ஆம் வகுப்பில் சேரத் தகுதி பெற்றவராவர்.
6-ஆம் வகுப்பில் சேர விரும்பும் மாணவர்களும் 9-ஆம் வகுப்பில் சேர விரும்பும் மாணவர்களும் 2018 ஜனவரி 7-ஆம் தேதி நடைபெறும் நுழைவுத் தேர்வை ஓஎம்ஆர் (ஒளியியல் கண்டறிதல் அல்லது ஒளிவக் குறி உணர்த்துதல்) எனும் தேர்வு முறையில் எழுத வேண்டும். 6-ஆம் வகுப்பு நுழைவுத் தேர்வு எழுத விரும்புவர்கள் ஆங்கிலம், இந்தி மற்றும் எந்த ஒரு மொழியிலும் எழு தலாம். 9-ஆம் வகுப்பு நுழைவுத் தேர்வு எழுதுபவர்கள் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதமுடியும்.
பெற்றோர்களின் மாத வருமான அடிப்படையில் ரூ. 50 ஆயிரம் வரை மத்திய, மாநில அரசுகளின் உதவித்தொகை வரையறுக்கப்பட்ட விதிமுறைகளின்படி வழங்கப்படும். காலியாக உள்ள தோராயமாக 6-ஆம் வகுப்பு 90 இடங்கள், 9-ஆம் வகுப்பு 15 இடங்கள்.
இதில், 15 சதவீத இடங்கள் பட்டியல் வகுப்பினருக்கும் (எஸ்.சி), 7.5 சதவீத இடங்கள் பழங்குடியினருக்கும் (எஸ்.டி.) ஒதுக்கப்படும். மீதமுள்ள இடங்கள் 67 சதவீதம் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 33 சதவீத இடங்கள் பிற மாநிலத்தவர்களுக்கும், யூனியன் பிரதேசம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் தேர்ச்சி தரப் பட்டியல் அடிப்படையில் ஒதுக்கப்படும். மேற்குறிப்பிட்ட ஒதுக்கீட்டில் 25 சதவீதம் ராணுவத்தில் பணிபுரிபவர்கள் குழந்தைகளுக்கும், முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகளுக்கும் ஒதுக்கப்படும்.
6-ஆம் வகுப்பு நுழைவுத் தேர்வு மையங்கள் அமராவதி நகர், புதுச்சேரியிலும், 9-ஆம் வகுப்பு நுழைவுத் தேர்வு மையங்கள் உடுமலைப்பேட்டை, புதுச்சேரி, சென்னை ஆகிய இடங்களிலும் உள்ளன.
விளக்கக் குறிப்பேடும், விண்ணப்ப படிவமும் பெற விரும்புவர்கள் பொதுப் பிரிவு மற்றும் படைத் துறையை சேர்ந்தவர்கள் நேரில் ரூ. 400-க்கும், தபாலில் ரூ. 450-க்கும் பெற்றுக் கொள்ளலாம். தாழ்த்தப்பட்ட இனத்தவர் மற்றும் பழங்குடி வகுப்பினர் நேரில் ரூ. 250-க்கும் தபாலில் ரூ. 300-க்கும் பெற்றுக் கொள்ளலாம். அமராவதி நகர் ஸ்டேட் வங்கியில் கிளை எண் 2191-இல் பெறத்தக்க வகையில் முதல்வர், சைனிக் பள்ளி, அமராவதி நகர் என்ற பெயரில் வரைவோலை (டி.டி.) எடுத்து அனுப்பவேண்டும். அதில் எந்த வகுப்பு, எந்தப் பிரிவினர் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். விண்ணப்பமும், குறிப்பேடும் 16-10-2007 முதல் 30-11-2017 வரை வழங்கப்படும்.
மேலும்  இணைய தளத்திலும் விண்ணப்பப் படிவங்களை முழுமையாகப் பூர்த்தி செய்து அதற்குரிய கட்டணத்தை 16-10-2017 முதல் 5-12-2017-க்குள் செலுத்தவேண்டும். தேர்வு நடைபெறும் நாள் 07-01-2018.
மேலும், விவரங்களு க்கு 04252-256246, 256296 எனும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/15/அமராவதி-நகர்-ராணுவப்-பள்ளியில்-மாணவர்-சேர்க்கை-அறிவிப்பு-2790698.html
2790693 கோயம்புத்தூர் திருப்பூர் பாலியல் தீங்கு, வன்முறைகள் தடுத்தல் கருத்தரங்கு DIN DIN Sunday, October 15, 2017 05:25 AM +0530 அவிநாசி அரசு கலை, அறிவியல் கல்லூரி, சமூகக் கல்வி மற்றும் முன்னேற்ற மையம் சார்பில் "பாலியல் தீங்கிழைத்தல்கள் மற்றும் வன்முறைகளைத் தடுப்பதில் இளையோரின் பங்கு' எனும் தலைப்பில் அவிநாசி பேரூராட்சி சமுதாயக் கூடத்தில் சனிக்கிழமை கருத்தரங்கு நடைபெற்றது.
இதற்கு, அவிநாசி சி.எஸ்.ஈ.டி. மைய செயல் இயக்குநர் செல்லையாநம்பி தலைமை வகித்துப் பேசினார். இதில், இன்றைய இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் குறித்த புள்ளி விவரங்கள் குறித்து விளக்கமளித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆறுசாமி, "குழந்தைகளின் இன்றைய நிலை' எனும் தலைப்பிலும், திட்ட மேலாளர் பாஸ்கரன் "பாலினப் பாகுபாடுகள் மற்றும் அதன் பாதிப்புகள்' எனும் தலைப்பிலும் பேசினர்.
இதையடுத்து, அவிநாசி அரசு கலைக் கல்லுரி முதல்வர் ராமையா அரங்கில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியைத் தொடக்கிவைத்தார். இதில் "குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் தீங்கிழைத்தல்கள் மற்றும் வன்முறைகளைத் தடுப்பதில் இளையோரின் பங்கு' பற்றிய குழு விவாதமும், பாலியல் மற்றும் இனப் பெருக்க நலவாழ்வு உரிமைகள் பற்றிய விளக்கப்படம் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன.
மேலும், இளவயது திருமணத்தின் பாதிப்புகள், பால், பாலின வேறுபாடு, பாலினப் பாகுபாடு, வளர் இளம் பருவத்தின் நலன்கள், மனித உடலமைப்பின் மாதிரி (டாசோ) உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
இந்நிகழ்ச்சியில், கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள், பேராசிரியர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் குலசேகரன், ஆங்கிலத் துறைத் தலைவர் தாரணி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். திட்ட ஒருங்கிணைப்பாளர் முருகேசன் நன்றி கூறினார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/15/பாலியல்-தீங்கு-வன்முறைகள்-தடுத்தல்-கருத்தரங்கு-2790693.html
2790692 கோயம்புத்தூர் திருப்பூர் காங்கயம் தாலுகா பகுதியில் 33 பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி DIN DIN Sunday, October 15, 2017 05:25 AM +0530 தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, காங்கயம் தாலுகா பகுதியில் பட்டாசுகள் விற்பதற்கு 33 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காங்கயம் தாலுகாவுக்கு உள்பட்ட பகுதிகளில் பட்டாசுக் கடைகள் அமைப்பதற்கு 33 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதையடுத்து, மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்ன ராமசாமி, தாராபுரம் சார் ஆட்சியர் கிரேஸ் பச்சாவு, காங்கயம் வட்டாட்சியர் மாணிக்கவேலு ஆகியோர் காங்கயம், வெள்ளக்கோவில், முத்தூர், நத்தக்காடையூர் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், பட்டாசுகளை விற்பதற்கு நிரந்தரக் கடைகள் 25, தாற்காலிக கடைகள் 8 என மொத்தம் 33 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்தக் கடைகளுக்கு அரசு விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். விற்பனை செய்பவர்கள் கடையில் தீயணைப்புச் சாதனங்கள் வைத்திருக்கவேண்டும். பட்டாசுகளை வெடித்துக் காட்டக் கூடாது. மின் சுவிட்சுகள் பழுதில்லாமல் இருக்கவேண்டும் என்பன உள்ளிட்ட அரசு நிபந்தனைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/15/காங்கயம்-தாலுகா-பகுதியில்-33-பட்டாசுக்-கடைகளுக்கு-அனுமதி-2790692.html
2790691 கோயம்புத்தூர் திருப்பூர் பாசுமதி நெல் பயிரிடத் தடை: விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு கண்டனம் DIN DIN Sunday, October 15, 2017 05:24 AM +0530 தமிழ்நாட்டில் பாசுமதி நெல் பயிரிடத் தடை விதித்துள்ள இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் செயலாளர் செ.நல்லசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சுவையில் தனி இடம் பிடித்திருப்பது பாசுமதி அரிசி. இதற்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. இங்கிருந்து 100 நாடுகளுக்கு பாசுமதி அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், ரசாயன உரங்களையும், 2-ஆம் நிலை விதைகளையும் பயன்படுத்துகிறார்கள் எனக்கூறி
தமிழகம் உள்ளிட்ட 22 மாநிலங்களில் பாசுமதி பயிரிட இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சில் தடை விதித்துள்ளது.
பாசுமதி அரிசியின் தரத்தைக் கண்டறிந்து ஏற்றுமதிக்கு அனுமதிக்க வேண்டுமே தவிர, பயிரிடுவதற்கு தடைவிதித்திருப்பது விவசாய விரோதப் போக்காகும். இதனை தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு கண்டிக்கிறது என்றார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/15/பாசுமதி-நெல்-பயிரிடத்-தடை-விவசாயிகள்-சங்கங்களின்-கூட்டமைப்பு-கண்டனம்-2790691.html
2790690 கோயம்புத்தூர் திருப்பூர் கடன் சுமையால் ஏற்றுமதியாளர்கள் தற்கொலை: வங்கிகளின் அழுத்தத்தை அரசு குறைக்க வேண்டும்: டீமா சார்பில் முதல்வருக்கு கடிதம் DIN DIN Sunday, October 15, 2017 05:24 AM +0530 கடன் சுமையால் ஏற்றுமதியாளர்களின் தற்கொலையைத் தடுக்க வங்கிகள் கொடுக்கும் அழுத்தத்தைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் (டீமா) கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, சங்கத் தலைவர் எம்.பி.முத்துரத்தினம் தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள கடித விவரம்:
கடந்த 10 ஆண்டுகளாகப் பின்னலாடைத் தொழிலில் தொடர்ந்து பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் ஏற்றுமதியாளர்களுக்கு கடன் சுமையும் அதிகரித்து வருகிறது. இந்தப் பிரச்னைகளுக்கு நமது நாட்டின் ஜவுளிக் கொள்கையே முக்கியக் காரணமாக இருக்கிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
ஏற்றுமதி வர்த்தகத்தில் அண்டை நாடுகளின் கடுமையான போட்டி, உள்நாட்டில் விலை உயர்வு, கூலி உயர்வு, வங்கிகளின் அதிக வட்டி விகிதம், மூலப்பொருள்களின் விலை உயர்வு, தொழிலாளர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் ஆர்டர்கள் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அவ்வாறு ஆர்டர்கள் பெற்றாலும் ஆரம்பத்தில் சிறிய லாபம் கிடைப்பதுபோல இருந்தாலும், பிறகு நஷ்டமே ஏற்படுகிறது. இதனால் ஏற்றுமதியாளர்கள் சிலர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இதை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளாமலேயே இருந்து வருகின்றன.
ஏற்றுமதி வர்த்தகத்துக்கான அடிப்படை வசதிகள் செய்து தராமல், சலுகைகள் புறக்கணிக்கப்படும் நிலை இருப்பதால் உயிர் பலி ஏற்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, வங்கிகளில் இருந்து பெறும் கடன் தொகைகளை வசூல் செய்வதில் வங்கி நிர்வாகங்கள் காட்டும் மிகப்பெரிய அழுத்தம் இன்னொரு காரணமாக இருந்துவருகிறது. இதைக் கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் வங்கிகள் கொடுக்கும் அழுத்தத்தைக் குறைக்க ஆவண செய்யவேண்டும். விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதுபோல, தற்போது திருப்பூர் பின்னலாடை உற்பத்தியில் ஏற்பட்டுள்ள கடன் சுமையைக் குறைக்க, பாதிக்கப்படும் ஏற்றுமதியாளர்கள் கடன் தொகையை தள்ளுபடி செய்யவேண்டும்.
பின்னலாடை உற்பத்தியையும், ஏற்றுமதியையும் ஊக்கப்படுத்தும் விதத்தில் மத்திய, மாநில அரசுகள் தனித் திட்டங்களைக் கொண்டுவர வேண்டும். வங்கிகளின் வட்டி விகிதத் தள்ளுபடி, பாதிக்கப்பட்ட ஏற்றுமதியாளர்களுக்கு மறுவாழ்வு கொடுக்க முன் வருதல் போன்ற திட்டங்களில் அரசு கவனம் செலுத்தவேண்டும். ஏற்றுமதியாளர்கள் தற்கொலை செய்வதைத் தடுக்க அரசு முழுமையான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/15/கடன்-சுமையால்-ஏற்றுமதியாளர்கள்-தற்கொலை-வங்கிகளின்-அழுத்தத்தை-அரசு-குறைக்க-வேண்டும்-டீமா-சார்பில்-ம-2790690.html
2790689 கோயம்புத்தூர் திருப்பூர் செல்லிடப்பேசியில் பேசியவாறு வாகனம் ஓட்டியவர்கள் போலீஸில் சிக்கினர் DIN DIN Sunday, October 15, 2017 05:24 AM +0530 வெள்ளக்கோவிலில் செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டியவர்களை போலீஸார் சனிக்கிழமை மடக்கிப் பிடித்தனர்.
தீபாவளிப் பண்டிகையையொட்டி, கடைவீதியில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
நான்கு சக்கர வாகனங்களை விட இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளன. இதனால் வெள்ளக்கோவில் பிரதானக் கடைவீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதனால், வெள்ளக்கோவில் போலீஸார் நகரின் பல்வேறு பகுதிகளில் வாகனச் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டு இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்த பலரை மடக்கிப் பிடித்தனர். இதேபோல, அதிவேகம், ஓட்டுநர் உரிமம், வாகன ஆவணங்கள் இல்லாத குற்றங்களுக்காகவும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை ஓட்டி வந்த பலர் சிக்கினர். பின்னர், பிடிபட்ட வாகனங்கள் காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/15/செல்லிடப்பேசியில்-பேசியவாறு-வாகனம்-ஓட்டியவர்கள்-போலீஸில்-சிக்கினர்-2790689.html
2790688 கோயம்புத்தூர் திருப்பூர் டெங்குவுக்கு சித்த மருத்துவப் பிரிவுகளில் சிகிச்சையளிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு சித்த மருத்துவர்கள் கோரிக்கை DIN DIN Sunday, October 15, 2017 05:23 AM +0530 டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவப் பிரிவுகளில் சிகிச்சையளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்ப் பாரம்பரிய சித்த மருத்துவப் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்ப் பாரம்பரிய சித்த மருத்துவப் பாதுகாப்பு இயக்கத்தின் கொங்கு மண்டல ஆட்சி மன்றக்குழுக் கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு இயக்கத்தின் தலைவர் மு.தணிகாசலம் தலைமை வகித்தார். வர்ம நிபுணர் புளியரை முருகேசன், இயக்கத்தின் மாவட்டத் தலைவர் ப.அருணாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
அரசு மருத்துவமனைகளில் உள்ள சித்த மருத்துவப் பிரிவுகளுக்கு படுக்கைகள் ஒதுக்கி, டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தமிழகத்தில் தற்போது மக்களை பாதித்துள்ள டெங்குவைத் தடுக்கவும், மக்களின் உயிர்களைப் பாதுகாக்கவும் நிலவேம்புக் குடிநீர், பப்பாளி இலைச்சாறு ஆகிய மருந்துகளை அரசு சித்த மருத்துவப் பிரிவுகளில் வழங்கவேண்டும்.
கர்ப்பிணிகளுக்கான மாதுளை பனப்பாகு, உரை மருந்து உள்ளிட்ட பதினொரு வகையான மருந்துகள் அடங்கிய சஞ்சீவிப் பெட்டகத்தை அனைத்து கர்ப்பிணிகளுக்கும் வழங்கவேண்டும்.
மகப்பேறு அடைந்த தாய்மார்களுக்கு தாய், சேய் நலம் காக்கவும், தாய்ப்பால் சுரக்கவும், கருப்பை புற்றுநோயிலிருந்து தற்காத்துக் கொள்ளவும் சௌபாக்ய சுண்டிலேகியத்தை தொடர்ந்து வழங்க வேண்டும்.
பரம்பரை, பரம்பரையாக சித்த மருத்துவம் செய்து பல ஆண்டுகளாகப் பதிவுக்குக் காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான பாரம்பரிய சித்த மருத்துவர்கள், எவ்வித அச்சுறுத்தலுக்கும் இடமில்லாமல் மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய அனைவருக்கும் அரசாணை மூலமாக என்லிஸ்ட்மென்ட் வழங்கியதுபோல், மீண்டும் ஒருமுறை என்லிஸ்ட்மென்ட் வழங்கி சித்த மருத்துவர்களைப் பாதுகாப்பதுடன், அடுத்த தலைமுறைக்கு சித்த மருத்துவத்தை எடுத்துச் செல்லவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், இயக்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/15/டெங்குவுக்கு-சித்த-மருத்துவப்-பிரிவுகளில்-சிகிச்சையளிக்க-வேண்டும்-தமிழக-அரசுக்கு-சித்த-மருத்துவர்கள-2790688.html
2790687 கோயம்புத்தூர் திருப்பூர் சிகிச்சைக்கு வருவோரிடம் மருத்துவர்கள் நட்புடன் பழக வேண்டும்: மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் DIN DIN Sunday, October 15, 2017 05:23 AM +0530 சிகிச்சைக்கு வருவோரிடம் மருத்துவர்கள் நட்புடன் பழகவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
மாவட்ட மருத்துவத் துறையின் மூலமாக டெங்கு, வைரஸ் காய்ச்சல் தடுப்பு தொடர்பான சிகிச்சை மேற்கொள்ளப்படுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி பேசியதாவது:
தற்போது விஷக் காய்ச்சல் பொது மக்களுக்கு பரவுவதைத் தடுத்திடவும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை உடனுக்குடன் வழங்கிடும் வகையிலும் மருத்துவர்கள் பணிகளை மேற்கொள்ளவேண்டும்.குறிப்பாக ஒருவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, இரண்டு மூன்று நாள்கள் கழித்து வரும்போது, காய்ச்சல் வந்த விவரம் குறித்து மருத்துவரிடம் தெரிவிப்பதில்லை. அதனால், ஆரம்ப சிகிச்சை எடுத்துக் கொண்டு சென்று விடுவதால், மேலும் இரண்டு நாள் கழித்து, பின்னர் உடல்நிலை பாதிக்கப்பட்டவுடன் அந்த நோயாளி வேறு மருத்துவமனைக்கு சென்று புதிய மருத்துவ சிகிச்சையைத் தொடங்குகிறார்.
இவ்வாறு அந்த நோயாளி சிகிச்சை மேற்கொள்ளும்போது சிகிச்சை பலனளிக்காமல் அபாய கட்டத்துக்குச் செல்லும் நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற நிலையைத் தவிர்க்க மருத்துவர்கள் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் தங்கள் உதவியாளர்கள் மூலமாக முழுமையான விவரத்தைக் கேட்டுப் பதிவு செய்யவேண்டும்.
ஒன்றிய, நகர அளவிலான மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், நோயாளிகளுக்குத் தேவையான அறிவுரைகளை வழங்கி, அவர்களிடம் நட்பாக பழகும்போதே மன அழுத்தத்தில் உள்ள நோயாளி எளிதாக குணமாகும் நிலையை உணர்வர்.
அதேபோல, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது, அதைவிட உயர் சிகிச்சை அந்த நோயாளிக்குத் தேவைப்படும் என கருதினால், காலதாமதமின்றி தலைமை மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்திடவேண்டும். இறுதிக் கட்டம் வரை இங்கு சிகிச்சையளிக்கலாம் என நினைத்து, பின்னர் அனுப்பி வைக்கும்போது, வேறு வகையான நிலைகள் உருவாகின்றன. சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் தன்மைக்கேற்ப தகுந்த அறிவுரைகள் வழங்கி மருத்துவ சிகிச்சை வழங்கவேண்டும். அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும், மாவட்ட அளவில், மருத்துவப் படிப்பு இல்லாமல் அனுபவ ரீதியாக சிகிச்சை வழங்கும் போலி மருத்துவர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவர்கள் யாரும் போலி மருத்துவர்களுக்குத் துணை போகவேண்டாம். அதேபோல, பொது மக்களும் காய்ச்சல் இருப்பதை உணர்ந்தவுடன் அரசு மருத்துவர்களை அணுகவேண்டும். அதைவிடுத்து, மருந்துக் கடைகளுக்குச் சென்று மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடக் கூடாது. மருத்துவர் ஆலோசனையின்றி மாத்திரைகலை உட்கொள்ளக் கூடாது. மருந்துக் கடை சில்லறை விற்பனையாளர்கள், கட்டாயம் மருத்துவர் பரிந்துரைச் சீட்டு பெற்று வர வலியுறுத்தி, அதற்கேற்ப மருந்துகளை வழங்கிடவேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில், இணை இயக்குநர் செளந்தரராஜன் (மருத்துவம்), துணை இயக்குநர் ஜெயந்தி (சுகாதாரம்), இந்திய மருத்துவ சங்கத் தலைவர் நசீர், செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் செந்தில் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/15/சிகிச்சைக்கு-வருவோரிடம்-மருத்துவர்கள்-நட்புடன்-பழக-வேண்டும்-மாவட்ட-ஆட்சியர்-அறிவுறுத்தல்-2790687.html
2790686 கோயம்புத்தூர் திருப்பூர் பெருமாள் மலையில் புரட்டாசி கடைசி சனிக்கிழமை வழிபாடு DIN DIN Sunday, October 15, 2017 05:23 AM +0530 காங்கயம் அருகே பெருமாள் மலையில் உள்ள பிரசன்ன வெங்கட ரமணர் கோயிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், காங்கயத்தை அடுத்துள்ள பெருமாள் மலையில் புகழ்பெற்ற பிரசன்ன வெங்கட ரமணர் சுவாமி சன்னதி உள்ளது. இங்கு ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் அனைத்து சனிக்கிழமைகளிலும் அதிக அளவில் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்வர்.
இந்த ஆண்டு புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி காலை 5 மணி முதல் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் ஒரு மாதம் விரதம் இருந்து, சனிக்கிழமை கோயிலில் பொங்கல் வைத்து, வழிபட்டனர். பூலோக நாயகி சமேதராய் பிரசன்ன வெங்கட ரமணர் மதியம் 12 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் கோயிலை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
காங்கயம், சிவன்மலை, திருப்பூர், ஊதியூர் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/15/பெருமாள்-மலையில்-புரட்டாசி-கடைசி-சனிக்கிழமை-வழிபாடு-2790686.html
2790685 கோயம்புத்தூர் திருப்பூர் வெள்ளக்கோவிலில் அம்மா திட்ட முகாம் DIN DIN Sunday, October 15, 2017 05:23 AM +0530 வெள்ளக்கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் 57 மனுக்கள் பெறப்பட்டன.
வெள்ளக்கோவில் காங்கயம் சாலையிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, காங்கயம் வட்ட வழங்கல் அலுவலர் கண்ணாமணி தலைமை வகித்தார். காங்கயம் வட்டாட்சியர் மு.மாணிக்கவேல் முகாமைப் பார்வையிட்டார். முகாமில் வீட்டுமனைப் பட்டா, குடும்ப அட்டை திருத்தம், முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 57 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 50 மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/15/வெள்ளக்கோவிலில்-அம்மா-திட்ட-முகாம்-2790685.html
2790198 கோயம்புத்தூர் திருப்பூர் தீபாவளி பண்டிகை: வெளியூர்களுக்கு 685 சிறப்புப் பேருந்துகள் : இன்றுமுதல்  இயக்கம் DIN DIN Saturday, October 14, 2017 06:22 AM +0530 தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் தொழிலாளர்களுக்காக,  திருப்பூரில் இருந்து 685 சிறப்புப் பேருந்துகள் சனிக்கிழமை முதல் இயக்கப்படவுள்ளன.
திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களும்,  4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜாப்-ஒர்க் நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் சுமார் 7 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களில் பெரும்பான்மையினர் தஞ்சாவூர்,  திருச்சி,  மதுரை, தேனி, திண்டுக்கல், நாகர்கோயில், நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை,  நாகப்பட்டிணம்,  தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் திருப்பூரில் குடும்பத்தோடு தங்கி பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இத்தொழிலாளர்கள்  தீபாவளி,  பொங்கல் பண்டிகைகளைக் கொண்டாட ஆண்டுதோறும் குடும்பத்துடன் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதற்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் பண்டிகை கால சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,  இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 18-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு,  திருப்பூர், காங்கயம்,  பல்லடம், தாராபுரம்,  உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 8 பணிமனைகளில் இருந்து மொத்தம் 685 சிறப்புப் பேருந்துகளை இயக்க போக்குவரத்து நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இப்பேருந்துகள் திருப்பூர் பழைய,  புதிய பேருந்து நிலையங்கள் மற்றும் தாற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படவுள்ளன.
வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை மாலை முதல் வெளியூர் செல்ல மக்கள் ஆர்வம் காட்டுவார்கள் என்பதால்,  அக்டோபர் 14-ஆம் தேதி முதல் சிறப்புப் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 18-ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகளை இயக்கவும்,  தேவைக்கேற்ப தகுந்த நேரங்களில் கூடுதல்,  குறைவாக பேருந்துகளை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும்,  இதற்கென தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சேலத்தில் தாற்காலிக பேருந்து நிலையம்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில்,  திருப்பூரில் இருந்து சேலம் மார்க்கமாக செல்லும் அனைத்து பேருந்துகளும்,  சேலத்தில் தாற்காலிகமாக நிறுவப்பட்டுள்ள சேலம்,  ஜவகர் மில் திடல் பேருந்து நிலையம் செல்லும். அங்கிருந்து சேலம் புறநகர் பேருந்து நிலையம்,  நகரப் பேருந்து நிலையம் ஆகிய இடங்களுக்கு ஜவகர் மில் திடலில் இருந்து நிமிடத்துக்கு ஒரு இணைப்பு பேருந்து இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/14/தீபாவளி-பண்டிகை-வெளியூர்களுக்கு-685-சிறப்புப்-பேருந்துகள்--இன்றுமுதல்--இயக்கம்-2790198.html
2790197 கோயம்புத்தூர் திருப்பூர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி DIN DIN Saturday, October 14, 2017 06:21 AM +0530 புதுவாழ்வு திட்டத்தின் மூலம் மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்பினர் உள்ளிட்டோருக்கு ரூ. 2 கோடி மதிப்பிலான சுழல் நிதிக் கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் வெள்ளிக்கிழமை வழங்கினார்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் திட்டம் மூலம் மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்புகளுக்கு சுழல் நிதிக் கடன் வழங்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்து,  மகளிர் குழுக்களுக்கு சுழல் நிதிக் கடன்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:
தமிழக அரசானது வறுமையில் உள்ள மக்களைப் பொருளாதார முன்னேற்றம் பெறச் செய்ய,  மகளிர் திட்டத்தின் மூலம் பல்வேறு வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதனடிப்படையில்,  கிராமப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு தொழில் பயிற்சி மற்றும் வங்கிக் கடன் வழங்கும் வகையில்,  மகளிர் திட்டத்தின் மூலமாக சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு,  அதன் மூலம் தேர்வு செய்யப்பட்ட குழு உறுப்பினர்களுக்கு தகுதிக்கேற்ப தொழிற்பயிற்சி வழங்கி,  சுயதொழில் அமைத்துக் கொள்வதற்கான சுழல் நிதியும் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் பெண்கள் தன்னம்பிக்கையுடன் தங்களது பொருளாதார நிலையில் உயர்ந்து  குடும்பத்தின் சுமையை குறைக்க உதவியாக இருக்கும்.  
எனவே,  அரசின் திட்டங்களை பொதுமக்கள் தெரிந்து கொண்டு, தங்களுக்குள் குழுக்கள் அமைத்து,  தேவையான பயிற்சி பெற்று,  சிறுதொழில் அமைத்துப் பயன்பெற வேண்டும் என்றார்.
நிகழ்வில்,  மூன்று ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு பெருங்கடனாக ரூ. 62 லட்சத்து 65 ஆயிரம்,  66 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி தொகை ஒரு கோடியே 59 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் மற்றும் 5 மாற்றுத் திறனாளிகளுக்கு கடனுதவித் தொகை ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் என மொத்தமாக 74 கூட்டமைப்புகளுக்கு ரூ. 2 கோடியே 24 லட்சத்து 49 ஆயிரம் வங்கிக் கடனுக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
விழாவில் மகளிர் திட்ட இயக்குநர் மைக்கேல் பெர்ணான்டஸ்,  மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சுந்தரமூர்த்தி,  மாவட்ட தொழில் மைய மேலாளர் கண்ணன் மற்றும் உதவி திட்ட அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உள்பட பலர்  கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/14/சுய-உதவிக்-குழுக்களுக்கு-கடனுதவி-2790197.html
2790196 கோயம்புத்தூர் திருப்பூர் காங்கயத்தில் பைக் திருட்டு: கண்காணிப்பு கேமராவில் பதிவு DIN DIN Saturday, October 14, 2017 06:21 AM +0530 காங்கயம் நகரில் இருசக்கர வாகனத்தை திருடும் நபர்களின் உருவங்கள் கண்காணிப்பு கேமராவில் பதிவானதால்,  அதை வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காங்கயம்,  பழையகோட்டை சாலையில் துணிக்கடை நடத்தி வருபவர் கோபால் (30). இவர் கடந்த இரு தினங்களுக்கு முன் தனது பைக்கை கடையின் முன்பு நிறுத்திவிட்டு,  மாடியில் உள்ள தனது கடையில் பணிகளைக் கவனித்து வந்துள்ளார்.  பின்னர்,  வந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லை. இது குறித்து அவர் காங்கயம் போலீஸில் புகார் செய்தார்.
  இந்நிலையில்,  இந்த பைக்கை திருடும் நபர்களின் உருவங்கள் அருகில் உள்ள கடையில் வைத்திருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது தெரியவந்தது.
அதில் 2 இளைஞர்கள் பைக்கை எடுத்துச் செல்வது பதிவாகியுள்ளது. இந்த பதிவை வைத்து பைக் திருடிச் சென்ற நபர்கள் குறித்து காங்கயம் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/14/காங்கயத்தில்-பைக்-திருட்டு-கண்காணிப்பு-கேமராவில்-பதிவு-2790196.html
2790195 கோயம்புத்தூர் திருப்பூர் திருட்டு வழக்கில் 3  சிறுவர்கள் கைது: போலீஸாருக்கு காவல் ஆணையர் பாராட்டு DIN DIN Saturday, October 14, 2017 06:18 AM +0530 திருப்பூரில் உள்ள செல்லிடப்பேசிக் கடையில் இருந்து 28 செல்லிடப்பேசிகள்,  மடிக்கணினி உள்ளிட்டவற்றை திருடிய மூன்று சிறுவர்களை பிடித்த போலீஸாரை காவல் ஆணையர் பாராட்டினார்.
திருப்பூர்,  அனுப்பர்பாளையம் எல்லைக்கு உள்பட்ட திருமுருகன்பூண்டியிலிருந்து பூலுவப்பட்டி செல்லும் சுற்றுச்சாலையில் அனுப்பர்பாளையம் காவல் நிலைய தலைமைக் காவலர் செல்வராஜ்,  தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர் சக்திவேல் ஆகியோர் கடந்த 12-ஆம் தேதி அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது,  சந்தேகப்படும் வகையில் அவ்வழியாக வந்த 17, 15 வயதுடைய மூன்று சிறுவர்களைத் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள்,  திருப்பூர், பாண்டியன் நகரைச் சேர்ந்தவர்கள் என்பதும்,  மூவரும் பல்லடம் சாலை, தென்னம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள செல்லிடப்பேசிக் கடையின் மேற்கூரையைப் பிரித்து,  மடிக்கணினி,  28 செல்லிடப்பேசிகள் உள்ளிட்டவற்றை திருடிய வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரிந்தது.  அதைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், சிறப்பாக பணி செய்து குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைப் பிடித்த காவலர்களை மாநகரக் காவல் ஆணையர் பொ.நாகராஜன் வெள்ளிக்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி அளித்தார். மாநகரக் காவல் துணை ஆணையர் அ.கயல்விழி,  உதவி ஆணையர் தங்கவேல்,  காவல் ஆய்வாளர் சண்முகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/14/திருட்டு-வழக்கில்-3--சிறுவர்கள்-கைது-போலீஸாருக்கு-காவல்-ஆணையர்-பாராட்டு-2790195.html
2790194 கோயம்புத்தூர் திருப்பூர் உடுமலை அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்: அமைச்சர் ராதாகிருஷ்ணன் DIN DIN Saturday, October 14, 2017 06:18 AM +0530 உடுமலை அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
உடுமலையில் கடந்த சில வாரங்களாக மர்மக் காய்ச்சல் பரவி வருகிறது.
காய்ச்சல் பாதிப்பின் காரணமாக இதுவரை பலர் உயிரிழந்துள்ளனர். காய்ச்சலைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,  கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் உடுமலை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நோயளிகளிடம் நலம் விசாரித்தார்.  இதைத் தொடர்ந்து,  டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் தலைமையில் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
 இந்தக் கூட்டத்தில், திருப்பூர் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் ஜெயந்தி,  உடுமலை வருவாய்க் கோட்டாட்சியர் அசோகன்,  நகராட்சிப் பொறியாளர் தங்கராஜ், ஒன்றிய ஆணையர்கள், மருத்துவர்கள்,  சுகாதார ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.
பின்னர் அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உடுமலை அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு நிதி பெற ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. குறிப்பாக மருத்துவமனை வளாகத்தில் 100 படுக்கைகள் கொண்ட நவீன வசதிகளுடன் சிறப்பு பிரிவு தொடங்கப்பட உள்ளது. இதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அந்தப் பணிகள் தொடங்கப்படும் என்றார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/14/உடுமலை-அரசு-மருத்துவமனையில்-அடிப்படை-வசதிகள்-மேம்படுத்தப்படும்-அமைச்சர்-ராதாகிருஷ்ணன்-2790194.html
2790193 கோயம்புத்தூர் திருப்பூர் உடுமலை அரசுக் கல்லூரியில் ரத்த தான முகாம் DIN DIN Saturday, October 14, 2017 06:18 AM +0530  உடுமலை அரசு கலைக் கல்லூரியில் செஞ்சிலுவை சங்கம் சார்பில் ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமை கல்லூரி பொறுப்பு முதல்வர் வ.கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். உடுமலை அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் எஸ்.வனஜா தலைமையிலான மருத்துவக் குழுவினர் முகாமை ஒருங்கிணைத்தனர்.முகாமில்,  ரத்த தானம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும், ரத்த தானம் செய்யும் முறைகள் குறித்தும் மாணவ,  மாணவிகளுக்கு எடுத்துரைக்கப் பட்டது. இயற்பியல் துறைப் பேராசிரியர் இரா.இளங்கோ தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் 46 பேர் ரத்த தானம் செய்தனர். ரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கல்லூரி இளைஞர் செஞ்சிலுவைச் சங்க திட்ட அலுவலர் அ.கன்னிமுத்து மற்றும் மா ணவர்கள் முகாமுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/14/உடுமலை-அரசுக்-கல்லூரியில்-ரத்த-தான-முகாம்-2790193.html
2790192 கோயம்புத்தூர் திருப்பூர் உடுமலையில் பாஜக ஆர்ப்பாட்டம் DIN DIN Saturday, October 14, 2017 06:17 AM +0530 குடிமங்கலம் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் உடுமலையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு,  யுகேபிஎன்.கந்தசாமி தலைமை வகித்தார். குடிமங்கலம் ஒன்றியச் செயலாள ர் குணசேகரன் முன்னிலை வகித்தார். இதில்,  குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள பொன்னேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடைபெற்று வரும் முறைகேடு
களைத் தடுத்து நிறுத்த வே ண்டும் என வலியுறுத்தப்பட்டது.  இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஏ.வடுகநாதன், செந்தில், ராகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/14/உடுமலையில்-பாஜக-ஆர்ப்பாட்டம்-2790192.html
2790191 கோயம்புத்தூர் திருப்பூர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் DIN DIN Saturday, October 14, 2017 06:17 AM +0530 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வெள்ளக்கோவிலில் ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முத்தூர் சாலை வாரச் சந்தை எதிரில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு,  கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் தமிழ்முத்து தலைமை வகித்தார்.
 வெள்ளக்கோவில் பகுதியில் அதிக அளவில் நடைபெற்று வரும் தீண்டாமை,  வன்கொடுமைச் சம்பவங்களைத் தடுக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படுவதில்லை.  இந்தப் போக்கை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/14/விடுதலைச்-சிறுத்தைகள்-கட்சி-ஆர்ப்பாட்டம்-2790191.html
2790190 கோயம்புத்தூர் திருப்பூர் டெங்கு தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி DIN DIN Saturday, October 14, 2017 06:17 AM +0530 வெள்ளக்கோவிலில் டெங்கு தடுப்பு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வெள்ளக்கோவில் நகராட்சி ஆணையர் இ.ஷாஜகான் பேரணியைத் துவக்கி வைத்தார்.
முத்தூர் சாலை புதிய பேருந்து நிலையத்தில் துவங்கிய பேரணி,  நான்கு சாலைச் சந்திப்பு,  பழைய பேருந்து நிலையம்,  காங்கயம் சாலை வழியாக நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.
ஆரம்ப சுகாதார நிலையம்,  நகராட்சிப் பணியாளர்கள்,  அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி,  புனித அமல அன்னை மகளிர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள்,  அரிமா சங்கம்,  மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை உறுப்பினர்கள் என 300 பேர் பேரணியில் பங்கேற்றனர்.
இதில்,  டெங்கு காய்ச்சல் தடுப்பு,  பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
 அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் தமயந்தி,  நகராட்சி சுகாதார ஆய்வாளர் சரவணன்,  மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளைத் தலைவர் ராஜ்குமார்,  அரிமா சங்கத் தலைவர் அப்பு (எ) ஆர்.என்.ராஜ்மோகன்,  வட்டாரத் தலைவர் கே.ஆர்.சின்னசாமி,  ஒன்றிய பள்ளிக் கல்வி அறக்கட்டளைத் தலைவர் எம்.வி.சண்முகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/14/டெங்கு-தடுப்பு-விழிப்புணர்வுப்-பேரணி-2790190.html
2790189 கோயம்புத்தூர் திருப்பூர் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மெட்ரிக் பள்ளியில் தேசிய பேரிடர் குறைப்பு தினவிழா DIN DIN Saturday, October 14, 2017 06:16 AM +0530 காங்கயம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பேரிடர் குறைப்பு தினவிழா, விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு,  காங்கயம் வட்டாட்சியர் எம்.மாணிக்கவேலு தலைமை வகித்தார். மாணவி சுரபிசுந்தரி வரவேற்றார்.
இதில் காங்கயம் தீயணைப்புத் துறை ஆய்வாளர் மதியழகன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இணைந்து பல்வேறு தீயணைப்பு செயல்முறை விளக்கங்களை செய்து காட்டினர்.
இந்த நிகழ்ச்சியில்,  பள்ளித் தாளாளர் க.வைத்தீஸ்வரன்,  பள்ளி முதல்வர் மு.ப.பழனிவேலு,  ஆசிரிய, ஆசிரியைகள்,  மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/14/ஸ்ரீ-ராஜராஜேஸ்வரி-மெட்ரிக்-பள்ளியில்-தேசிய-பேரிடர்-குறைப்பு-தினவிழா-2790189.html
2790188 கோயம்புத்தூர் திருப்பூர் உடுமலையில் கன மழை DIN DIN Saturday, October 14, 2017 06:16 AM +0530 உடுமலை,  மடத்துக்குளம் வட்டங்களில் கடந்த இரண்டு நாள்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உடுமலை, மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பருவ மழை பொய்த்துப் போனதால் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களாக உடுமலை,  மடத்துக்குளம் வட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் உடுமலை நகரில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. வெய்யிலின் தாக்கம் குறைந்து நகரில் குளிர் காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். உடுமலை நகரைப் போலவே பல்வேறு கிராமங்களிலும் கன மழை பெய்தது. இத னால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/14/உடுமலையில்-கன-மழை-2790188.html
2790185 கோயம்புத்தூர் திருப்பூர் போனஸ் கோரி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் DIN DIN Saturday, October 14, 2017 05:58 AM +0530 போனஸ் கோரி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் திருப்பூரில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூரில் பி.எஸ்.என்.எல். பிரதான தொலைபேசி நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் கிளைத் தலைவர் வாலீசன் தலைமை வகித்தார். மாநில உதவிச் செயலாளர் எஸ்.சுப்பிரமணியம்,  மாவட்டத் தலைவர் முகமது ஜாபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில்,  பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச போனஸ் தொகை ரூ. 7ஆயிரம் வீதம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. கோரிக்கையை வலியுறுத்தி சங்கத்தின் கிளைச் செயலாளர்கள் குமரவேல், விஸ்வநாதன், என்.எப்.டி.இ. சங்கத் தலைவர் என்.ரவி ஆகியோர் பேசினர். பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். சங்கத்தின் கிளை உதவிச் செயலாளர் இளஞ்செல்வன் நன்றி கூறினார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/14/போனஸ்-கோரி-பிஎஸ்என்எல்-ஊழியர்கள்-ஆர்ப்பாட்டம்-2790185.html
2790184 கோயம்புத்தூர் திருப்பூர் மழை, வெள்ளக் காலங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: பொது மக்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல் DIN DIN Saturday, October 14, 2017 05:58 AM +0530 மழை, வெள்ளக் காலங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு திருப்பூரில் வருவாய்த் துறை, சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பேரணியை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி பேசியதாவது:
ஆண்டுதோறும் அக்டோபர் 13-ஆம் தேதி சர்வதேச பேரிடர் குறைப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பேரிடர் காலங்களில் மக்கள் தங்களைப் பாதுகாத்து கொள்ள எச்சரிக்கை மிக அவசியம் என்பதை உறுதிபடுத்தவே இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பொதுமக்கள் மழை, வெள்ளக் காலங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  ஆறு,  குளங்களை கடக்கும் போது பாதுகாப்புடன் செல்ல வேண்டும்.  தண்ணீர் சூழ்ந்த பகுதியில் மின் இணைப்பை துண்டித்து வைக்க வேண்டும். இடி, மின்னல் காலங்களில் மின்சாதன பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும். காய்ச்சிய குடிநீரையே பயன்படுத்த வேண்டும், என்றார். திருப்பூர் ரயில் நிலையம் அருகே துவங்கிய பேரணி,  முக்கிய வீதிகள் வழியாக சென்று சிக்கண்ணா கல்லூரியில் நிறைவடைந்தது. இதில், மழை, வெள்ள காலங்களில் மக்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவது தொடர்பான விழிப்புணர்வு குறித்த பதாகைகளை  கல்லூரி மாணவ, மாணவியர் பேரணியில்  ஏந்திச் சென்றனர்.
ஆட்சியரக வளாகத்தில்: பேரிடர் காலத்தில் மழை, வெள்ளத்தின்போது தண்ணீரில் சிக்கியவர்களை மீட்பது, முதலுதவி சிகிச்சை வழங்குதல்,  தீ மற்றும் மின் கசிவினால் ஏற்படும் விபத்துகளை தடுப்பது,  உயரமான கட்டடங்களில் இருந்து மக்களைப் பாதுகாப்பாக மீட்பது, கால்நடைகளை மழை வெள்ளக் காலங்களில் மீட்பது போன்ற செயல் விளக்க நிகழ்ச்சி  மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினரால் நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.பிரசன்ன ராமசாமி,  வட்டாட்சியர்கள் ரமேஷ்,  சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/14/மழை-வெள்ளக்-காலங்களில்-எச்சரிக்கையுடன்-இருக்க-வேண்டும்-பொது-மக்களுக்கு-ஆட்சியர்-அறிவுறுத்தல்-2790184.html
2789404 கோயம்புத்தூர் திருப்பூர் வெள்ளக்கோவிலில் விதைச்சோளம் கிலோ ரூ. 50-க்கு விற்பனை DIN DIN Friday, October 13, 2017 04:25 AM +0530 வெள்ளக்கோவிலில் விதைச்சோளம் கிலோ ரூ. 50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 வெள்ளக்கோவில் பகுதியில் கடந்த பல மாதங்களாகப் போதிய மழையில்லாததால் கால்நடைகளுக்குத் தீவனத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது ஓரளவு மழை பெய்துள்ளதால் விவசாயிகள் மானாவாரிப் பயிரான தானிய தீவனச் சோளத்தைச் சாகுபடி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
 சோளத்தை (தானியத்தை) அறுவடை செய்து விட்டு, எஞ்சிய தட்டுகள் தீவனமாகப் பயன்படுத்தப்படுகின்றன. பாசனத்துக்குத் தண்ணீர் இல்லாவிட்டால் கூட, வரும் அடைமழை கால மழைநீரிலேயே சோளம் வளர்ந்து விடும். தற்போது பலரும் விதைப்புக்குத் தயாராகி வருவதால் வெள்ளை, மஞ்சள் ரக விதைச்சோளம் வேகமாக விற்பனையாகி வருகிறது.
 உள்ளூர் நாட்டு ரகம் கிலோ ரூ. 45 - 65 வரை விலை போகிறது.
இதுகுறித்து, பாப்பம்பாளையம் விவசாயி முத்துக்குட்டி கூறியதாவது:
 கடும் வறட்சிக்குப் பின் கிடைத்த மழையால் தீவனச் சோளம் பயிரிட்டுள்ளேன். விதைச்சோளம் விலை அதிகரித்துள்ளது. தனியார் சந்தைகளில் முளைப்புத் திறன் குறைந்த விதைச்சோளமும் புழக்கத்தில் உள்ளது. வேளாண் துறை சார்பில் குறைந்த விலையில் விதைச்சோளம் கிடைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/13/வெள்ளக்கோவிலில்-விதைச்சோளம்-கிலோ-ரூ-50-க்கு-விற்பனை-2789404.html
2789403 கோயம்புத்தூர் திருப்பூர் பல்லடம் பேருந்து நிலையத்தில்  பேருந்துகள் நிறுத்துவதை ஒழுங்குபடுத்த பயணிகள் கோரிக்கை DIN DIN Friday, October 13, 2017 04:25 AM +0530 பல்லடம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிறுத்துவதை ஒழுங்குபடுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல்லடத்துக்கு திருப்பூர், கோவை, திருச்சி, மதுரை, தாராபுரம், உடுமலை, பொள்ளாச்சி, அவிநாசி உள்ளிட்ட முக்கியப் பகுதிகளை இணைக்கும் வகையில் பேருந்துகள் வந்து செல்கின்றன. ஒருசில பேருந்துகள் பேருந்து நிலையத்தின் உள்ளே வந்துசெல்கின்றன. நீண்ட தூரப் பேருந்துகள் பேருந்து நிலையத்தின் முன்பு நின்று பயணிகளை இறக்கிவிட்டுச் செல்கின்றன.
இன்னும் சில பேருந்துகள் பேருந்து நிலையத்தினுள் நுழைந்து, ஏதோ ஒரு இடத்தில் நிறுத்திப் பயணிகளை இறக்கி, ஏற்றிச் செல்கின்றன.
இதனால், பல்லடம் பேருந்து நிலையத்தின் உள்ளே பேருந்துகள் எங்கு வந்துசெல்லும் என்று யாராலும் கணித்து நிற்க முடியாத நிலை நிலவுகிறது. பேருந்துகளில் ஏறி இடம் பிடிக்கப் பயணிகள் தங்களது உடமைகளை எடுத்துக்கொண்டு அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இரவு 9 மணிக்கு மேல் மதுரை,திருச்சி போன்ற பகுதிகளுக்கு செல்லும் நீண்ட தூரப் பேருந்துகள் மற்றும் திருப்பூர், உடுமலை, பொள்ளாச்சி பகுதிக்கு செல்லும் பேருந்துகளும் பல்லடம் பேருந்து நிலையத்தின் உள்ளே வருவதில்லை.
இதனால், பயணிகள் பேருந்து நிலையத்துக்கு வெளியே சாக்கடை கால்வாய் ஓரத்தில், கொசுக்கடியில் நின்றவாறு பேருந்துகளுக்கு காத்திருக்கும் நிலை உள்ளது.
24 மணி நேரமும் பேருந்துகள் வந்துசெல்லும் பல்லடம் பேருந்து நிலையத்தினுள் அனைத்து பேருந்துகளும் வந்துசெல்ல போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/13/பல்லடம்-பேருந்து-நிலையத்தில்--பேருந்துகள்-நிறுத்துவதைஒழுங்குபடுத்த-பயணிகள்-கோரிக்கை-2789403.html
2789402 கோயம்புத்தூர் திருப்பூர் டெங்கு விழிப்புணர்வு முகாம்: மாவட்ட ஆட்சியரிடம் பொது மக்கள் புகார் DIN DIN Friday, October 13, 2017 04:25 AM +0530 காங்கயம் அருகே கோவில்பாளையத்தில் நடைபெற்றது மருத்துவ முகாமின்போது மாவட்ட ஆட்சியரிடம் பொது மக்கள் புகார் தெரிவித்தனர்.
  காங்கயம் ஒன்றியம், சிவன்மலை ஊராட்சியில் உள்ளது கோவில்பாளையம், புதுக் காலனி பகுதியில் 150-க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் இப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுமதி (25) என்பவர் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சில நாள்களுக்கு முன்னர் சங்கரன் மகள் சங்கமித்ரா (6) என்பவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
 இந்நிலையில், கோவில்பாளையம், காடையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிசாமி பங்கேற்று ஆய்வு மேற்கொண்டார்.
 கோவில்பாளையத்தில் நடைபெற்ற முகாமில், டெங்குவால் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை மற்றும் அப்பகுதி மக்கள், காங்கயம் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை அளிப்பதில்லை என மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர்.
  மேலும், இதுகுறித்து அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கூறுகையில்,  "அரசு மருத்துவமனையில் சரியாக சிகிச்சை அளிக்காததால், வட்டிக்குப் பணம் வாங்கி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறோம். அரசு மருத்துவமனையில் பல மணிநேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. சரிவரப் பரிசோதனையும் செய்வதில்லை' என்றனர்.
  இதையடுத்து, புகார் குறித்து முறையான விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் உறுதியளித்தார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/13/டெங்கு-விழிப்புணர்வு-முகாம்-மாவட்ட-ஆட்சியரிடம்-பொது-மக்கள்-புகார்-2789402.html
2789401 கோயம்புத்தூர் திருப்பூர் தீ விபத்தில் ஒருவர் சாவு DIN DIN Friday, October 13, 2017 04:24 AM +0530 சேவூர் அருகே, சின்னக்கானூரில் தீ விபத்தில் வியாழக்கிழமை ஒருவர் உயிரிழந்தார்.
சேவூர் அருகே, சின்னக்கானூர் பகுதியைச் சேர்ந்த ரங்கன் மகன் பத்ரன்(42). இவர் கடந்த 3 ஆண்டுகளாக  பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் குடிசை வீட்டில் புதன்கிழமை தனியாக இருந்தபோது, பீடியைப் பிடித்துவிட்டுக் கீழே போட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட தீயில் குடிசை தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதில், குடிசையின் உள்ளேயிருந்த பத்ரன் பலத்த காயமடைந்தார். இதையடுத்து, பத்ரன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால், அவர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து, சேவூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/13/தீ-விபத்தில்-ஒருவர்-சாவு-2789401.html
2789400 கோயம்புத்தூர் திருப்பூர் காங்கயம் அருகே மின்னல் பாய்ந்து பெண் சாவு DIN DIN Friday, October 13, 2017 04:24 AM +0530 காங்கயம் அருகே, மழைக்கு ஒதுங்கிய பெண் மின்னல் பாய்ந்ததால் புதன்கிழமை உயிரிழந்தார்.
காங்கயம் அருகே உள்ள கீரனுர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி மனைவி ஷகீலா (32). இவர், அப்பகுதி பெண்கள் சிலருடன் மறவபாளையம் கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் புதன்கிழமை தென்னை மரங்களுக்கு உரம் இடும் வேலை செய்துகொண்டிருந்தார். அன்றைய தினம் மாலை 5 மணியளவில் இடி, மின்னலுடன் லேசாக மழை பெய்துள்ளது.
வேலை முடிந்து அனைவரும் வீட்டுக்குச் செல்லத் தயரானபோது ஷகீலா ஒரு தென்னை மரத்தின் கீழ் நின்றுகொண்டிருந்துள்ளார்.
அப்போது, அவர் நின்று கொண்டிருந்த தென்னை மரத்தின் மீது மின்னல் பாய்ந்ததில் ஷகீலா பலத்த காயமடைந்தார். அவரை,  உடனடியாக காங்கயத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்து விட்டதாக டாக்டர் கூறியதால், சடலத்தை வீட்டுக்கு கொண்டுசென்றனர். பின்னர் ஷகீலாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர்  காங்கயம் போலீஸார் புகார் தெரிவித்தனர்.
அதன்பேரில், வழக்குப் பதிவு செய்த போலீஸார் ஷகீலாவின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/13/காங்கயம்-அருகே-மின்னல்-பாய்ந்து-பெண்-சாவு-2789400.html
2789399 கோயம்புத்தூர் திருப்பூர் வெள்ளக்கோவிலில் ரூ. 20 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் DIN DIN Friday, October 13, 2017 04:23 AM +0530 வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை ரூ. 20 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.
இந்த வார ஏலத்துக்கு மொத்தம் 494 மூட்டைகள் கொப்பரையை விவசாயிகள் கொண்டுவந்திருந்தனர். இதன் மொத்த எடை 23 ஆயிரம் கிலோ.
உள்ளூர் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் 100 உழவர்கள் கொப்பரையை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். 9 வணிகர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றனர்.
இதில், அதிகபட்சமாக கிலோ ரூ. 114.25-க்கும், குறைந்தபட்சமாக  ரூ. 60.65-க்கு விற்பனையானது. மொத்தம் ரூ. 20 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெற்றதாக விற்பனைக்கூடக் கண்காணிப்பாளர் சி.மகுடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/13/வெள்ளக்கோவிலில்-ரூ-20-லட்சத்துக்கு-கொப்பரை-ஏலம்-2789399.html
2789398 கோயம்புத்தூர் திருப்பூர் பல்லடத்தில் அறிவிக்கப்படாத மின்தடை: தொழில் துறையினர் பாதிப்பு DIN DIN Friday, October 13, 2017 04:22 AM +0530 பல்லடம் பகுதியில் அறிவிக்கப்படாத மின்தடையால் தொழில் துறையினர் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
பல்லடம் பகுதியில் விசைத்தறி, சைஸிங், நூற்பாலை, பின்னலாடை நிறுவனங்கள், சாய ஆலைகள், கல்குவாரி, கோழிப் பண்ணை, கால்நடைத் தீவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் நடைபெற்று வருகின்றன. தீபாவளிப் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில் ஆர்டர்களை முடித்து தருவதில் தொழில் நிறுவனங்கள் தீவிரமாக இயங்கி வருகின்றன.
இநிலையில்,  பல்லடத்தில் அறிவிக்கப்படாமல் அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன.
தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தொழிலாளர்கள் ஓரிரு நாளில், சொந்த ஊருக்குச் செல்ல திட்டமிட்டு உள்ளனர். அதற்குள் பணிகளை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் தொழில் நிறுவனத்தினர் உள்ளனர். தற்போதைய நிலையில் பெட்ரோல், டீசலைப் பயன்படுத்தி ஜெனரேட்டர் உதவியுடன் தொழிற்சாலைகளை இயக்க முடியாத நிலையில் தொழில்துறைனர் உள்ளனர்.
எனவே, தொழிற்சாலைகள் பாதிப்பு இன்றி இயங்கத் தடையில்லா மின்சார விநியோகத்தை பல்லடம், திருப்பூர் பகுதிக்கு ஏற்படுத்தித் தர மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/13/பல்லடத்தில்-அறிவிக்கப்படாத-மின்தடை-தொழில்-துறையினர்-பாதிப்பு-2789398.html
2789397 கோயம்புத்தூர் திருப்பூர் பல்லடத்தில் இலவசத் தையல் பயிற்சி DIN DIN Friday, October 13, 2017 04:22 AM +0530 பல்லடம் - கோவை பிரதான சாலையில் கொங்கு வேளாளர் திருமண மண்டபம் அருகில் உள்ள சிட்ரா விசைத்தறி பணி மையத்தில் மத்திய அரசின் உதவித் தொகையுடன் கூடிய இலவசத் தையல் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.  
இதுகுறித்து, அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசின் திட்டத்தின்கீழ் பொதுமக்களுக்கு 45 நாள்கள் இந்த இலவசத் தையல் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இப்பயிற்சியின்போது உதவித் தொகையாக ரூ. 1,000 வழங்கப்படுகிறது. பிளவுஸ், சுடிதார், நைட்டி, பெட்டி கோட், பட்டியாலா உள்ளிட்டவை தைக்க கற்று தரப்படுகிறது.
இதில், குறைந்தபட்சம் 6-ஆம் வகுப்பு படித்திருப்பவர்கள் சேரலாம். தினசரி காலை 9.30 மணி முதல் 4.30 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக்குத் தேவையான உபகரணங்களும் இலவசமாக வழங்கப்படும்.
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினராக இருந்தால் அதற்குரிய ஜாதிச் சான்றுகளைச் சமர்ப்பிக்கவேண்டும். பயிற்சி பெறுபவர்கள், தைப்பதற்கான துணிகளை மட்டும் எடுத்துவர வேண்டும்.
இம்மாத இறுதியில் இலவசத் தையல் பயிற்சி வகுப்புகள் தொடங்கவுள்ளதால் உடனடியாக முன்பதிவு செய்வது அவசியம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/13/பல்லடத்தில்-இலவசத்-தையல்-பயிற்சி-2789397.html
2789396 கோயம்புத்தூர் திருப்பூர் கேம்பிரிட்ஜ் பள்ளி சார்பில் சேவூரில் டெங்கு விழிப்புணர்வு DIN DIN Friday, October 13, 2017 04:22 AM +0530 அவிநாசி அருகே, சேவூரில் கேம்பிரிட்ஜ் பள்ளி சார்பில், டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
சேவூர், பந்தம்பாளையம் கேம்பிரிட்ஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக பள்ளி வளாகத்தில் டெங்கு விழிப்புணர்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியை சேவூர் காவல் உதவி ஆய்வாளர் குமார் தொடக்கிவைத்தார்.
பந்தம்பாளையம் பள்ளியில் இருந்து தொடங்கிய இப்பேரணி, சேவூர் கைகாட்டி, கோபி சாலை, வடக்கு வீதி, ஈஸ்வரன் கோயில் வீதி, மாரியம்மன் கோயில் வீதி வழியாக பந்தம்பாளையம் பள்ளியில் நிறைவடைந்தது. மேலும், சேவூர் நகரப் பகுதி முழுவதும் உள்ள ஒவ்வொரு வீடுகள், பனியன், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் உள்ள அனைத்து மக்களுக்கும், குழுவாகச் சென்ற கேம்பிரிட்ஜ் பள்ளி மாணவர்கள் நிலவேம்புக் குடிநீர் வழங்கினர்.
இதில், 2ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நிலவேம்புக்  குடிநீர் வழங்கபபட்டது.  மேலும், தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகளை மூடி வைக்கவேண்டும். சுயமாக மருந்து வாங்கி உட்கொள்ளக் கூடாது. மூன்று நாள்களுக்கு மேல் குடிநீரைச் சேமித்து வைக்கக் கூடாது. சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளவேண்டும். அனைவரும் நிலவேம்புக் குடிநீர்  குடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தும், பதாகைகளை ஏந்தியும் பேரணியில் பங்கேற்றனர்.
இதில், பள்ளித் துணை முதல்வர் விவேகானந்தன், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் யசோதா, சுகாதார ஆய்வாளர் ரமேஷ், பள்ளி நிர்வாகத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/13/கேம்பிரிட்ஜ்-பள்ளி-சார்பில்-சேவூரில்-டெங்கு-விழிப்புணர்வு-2789396.html
2789395 கோயம்புத்தூர் திருப்பூர் திருப்பூர் - ஹெளரா இடையே பிரத்யேக "காட்டன் எக்ஸ்பிரஸ்' ரயில் சேவை தொடக்கம் DIN DIN Friday, October 13, 2017 04:21 AM +0530 பின்னலாடை சரக்குகளைக் கொண்டு செல்வதற்கென பிரத்யேக சரக்கு ரயில், "காட்டன் எக்ஸ்பிரஸ்' முதன்முறையாக திருப்பூரிலிருந்து மேற்குவங்கத்துக்கு வியாழக்கிழமை இயக்கப்பட்டது.
பின்னலாடை உற்பத்தி நகரமான திருப்பூரில் இருந்து உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதிக்கான சரக்குகள் நாள்தோறும் ரயில்கள் மற்றும் லாரிகளில் பிற நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, கப்பல்களில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இதில், திருப்பூரிலிருந்து மேற்குவங்கத்துக்கு அதிக அளவில் சரக்குகள் ரயில் மற்றும் லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன. ரயில்களில் தேவையான சரக்குகளை குறிப்பிட்ட நேரத்துக்குள் அனுப்புவதில் சிக்கல் உள்ளது. தவிர,  ரயில்கள் பிற ஊர்களுக்குச் சென்று செல்வதும், லாரிகள் சாலை வழியாக மேற்குவங்கம் செல்வதற்கும் காலதாமதம் ஏற்படுவதால் சரக்குகளை உரிய நேரத்துக்கு அனுப்ப முடிவதில்லை.
மேலும் சரக்குகளை அனுப்ப அதிகப் பொருள் செலவும் தேவைப்படுவதாக ஏற்றுமதியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது.
இதன்காரணமாக திருப்பூரில் இருந்து சரக்குகளை மொத்தமாக அனுப்ப சிறப்பு சரக்கு ரயில் வேண்டும் என ரயில்வே நிர்வாகத்திடம் தொழில் துறையினர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, திருப்பூர் தொழில் துறையினர் மற்றும் ரயில்வே நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் கடந்த இரு தினங்களுக்கு முன் திருப்பூரில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, முதற்கட்டமாக திருப்பூரில் இருந்து மேற்குவங்க மாநிலம் ஹெளராவுக்கு பின்னலாடை சரக்குகளை மட்டும் கொண்டு செல்லும் "காட்டன் எக்ஸ்பிரஸ்' எனும் சிறப்பு சரக்கு ரயில் வியாழக்கிழமை இரவு இயக்கப்பட்டது. திருப்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரயில் சனிக்கிழமை பகல் ஹெளராவைச் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ரயில் சேவையை சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் ஹரிசங்கர் வர்மா தொடக்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில், திருப்பூர் ரயில் நிலைய மேலாளர் ஜி.சரவணன், வர்த்தகப் பிரிவு நிர்வாகிகள் மற்றும் திருப்பூர் தொழில் துறையினர் பங்கேற்றனர்.
காட்டன் எக்பிரஸ் ரயில் சேவை தொடக்கம் குறித்து திருப்பூர் ரயில் நிலைய மேலாளர் ஜி.சரவணன் கூறியதாவது:
தெற்கு ரயில்வே சார்பில் முதன்முறையாக திருப்பூரிலிருந்து சிறப்பு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. முழுவதும் பின்னலாடை சரக்குகளை இந்த "காட்டன் எக்ஸ்பிரஸ்' ரயில் கொண்டு செல்கிறது. திருப்பூரிலிருந்து புறப்படும் ரயில் வேறு எங்கும் நிற்காது. இரு தினங்களில் நேராக ஹெளராவைச் சென்றடையும். இதனால் சரக்குகள் விரைவாக தேவையான இடங்களைச் சென்றடையும். தொழில் துறையினருக்கும் மிகவும் பயனுள்ள சேவையாக இது அமைந்துள்ளது. வாரம் ஒரு நாள் இந்த ரயிலை இயக்கத் தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. சரக்கு அனுப்பும் தேவை, வரவேற்பைப் பொறுத்து வாரத்தில் இருநாள்கள் இயக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
திருப்பூர் ரயில் நிலைய வர்த்தகப் பிரிவு மேலாளர் முத்துகுமார் கூறியதாவது:
திருப்பூரிலிருந்து சரக்குகள் அனுப்புவதன் மூலமாக நாள்தோறும் திருப்பூர் ரயில் நிலையத்துக்கு ஒரு லட்ச ரூபாய் வருமானம் கிடைத்து வந்தது. இதனால் மாதம் ரூ. 30 லட்சம் வரை வருமானம் வந்தது. இந்த சிறப்பு சரக்கு ரயில் சேவையைப் பொறுத்தவரை, 20 பெட்டிகளில் ரூ. 26 லட்சம் மதிப்புள்ள 468 டன் சரக்குகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதுவரை திருப்பூரிலிருந்து கிலோவுக்கு ரூ. 8.50-க்கு சரக்குகள் அனுப்பி வைக்கப்பட்டன. சிறப்பு ரயில் சேவையில் கிலோவுக்கு ரூ. 5.50-க்கு சரக்குகள் அனுப்பப்படுகின்றன. இதனால் தொழில் துறையினருக்கு செலவினம் குறையும். ஒரு குவிண்டாலுக்கு ரூ. 530 வசூலிக்கப்படுகிறது. இதில் சரக்குகளை அனுப்பித் தொழில் துறையினர் பயன்பெறலாம். சரக்கு ரயில் இயக்கப்பட்டதன் மூலமாக ரயில்வேக்கு ரூ. 26 லட்சம் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது என்றார்.
அதே நேரத்தில், சிறப்பு ரயில் இயக்கப்பட்டது மிகவும் பயனளிக்கும் விஷயம் என்று தொழில் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சரக்குகளை விரைவாகவும், குறைந்த செலவிலும் கொண்டு செல்ல உதவும் என்றார் சைமா தலைவர் ஈஸ்வரன்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/13/திருப்பூர்---ஹெளரா-இடையே-பிரத்யேக-காட்டன்-எக்ஸ்பிரஸ்-ரயில்-சேவை-தொடக்கம்-2789395.html
2789011 கோயம்புத்தூர் திருப்பூர் வரி உயர்வுக்கு எதிர்ப்பு: தாராபுரம் நகராட்சியைக் கண்டித்து பேரணி DIN DIN Thursday, October 12, 2017 09:38 AM +0530 தாராபுரம் நகராட்சியின் வரி உயர்வைக் கண்டித்து பொதுமக்கள் கண்டனப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
நகர வரி செலுத்துவோர் சங்கம் சார்பில், தாராபுரம் புறவழிச்சாலையில் துவங்கிய பேரணிக்கு உழவர் உழைப்பாளர் கட்சியின் மாநிலத் தலைவர் கு.செல்லமுத்து தலைமை வகித்தார். திமுக நகரச் செயலாளர் கே.எஸ்.தனசேகர், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வட்டாரத் தலைவர் சி.காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தாராபுரம் பொள்ளாச்சி சாலை, கடைவீதி வழியே சென்ற பேரணி, நகராட்சி அலுவலகம் முன்பு நிறைவுற்றது. பின்னர் நகராட்சியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தாராபுரம் நகராட்சியில் கடந்த 2008-ஆம் ஆண்டு வரி உயர்த்தியபோது பிற நகராட்சிகளைக் காட்டிலும் பலமடங்கு வரி உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து வரி செலுத்துவோர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தி,  நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வரி உயர்வு குறைக்கப்பட்டது. தற்போது மீண்டும் தாராபுரம் நகராட்சி அதிக அளவில் வரி உயர்த்தியிருப்பதை திரும்பப் பெற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.  

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/12/வரி-உயர்வுக்கு-எதிர்ப்பு-தாராபுரம்-நகராட்சியைக்-கண்டித்து-பேரணி-2789011.html
2789009 கோயம்புத்தூர் திருப்பூர் நள்ளிரவில் வழிப்பறிக் கும்பலை விரட்டிப் பிடித்த காவலர்கள்: காவல் ஆணையர் பாராட்டு DIN DIN Thursday, October 12, 2017 09:38 AM +0530 திருப்பூரில் நள்ளிரவில் வழிப்பறியில் ஈடுபட்ட மூவர் கும்பலை விரட்டிப் பிடித்த போலீஸாரை மாநகரக் காவல் ஆணையர் நேரில் அழைத்துப் பாராட்டினார்.
திருப்பூர்,  15 வேலம்பாளையம் காவல் எல்லைக்கு உள்பட்ட ஏ.பி. நகர் பகுதியில் கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு, தனியார் பின்னலாடை உற்பத்தி நிறுவனத்தில் பணி செய்து வரும் அஜய் பேகரா, போலோராம் நாயக் ஆகியோர் பணி முடித்து, தாங்கள் தங்கியுள்ள வீட்டின் அருகில் செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த மூன்று பேர் கத்தியைக் காட்டி மிரட்டி , அஜய் பேகராவின் செல்லிடப்பேசியையும், போலோராம் நாயக்கிடம் இருந்த பணம் ரூ. 2,500-ஐயும் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். வழிப்பறியால் பாதிக்கப்பட்டோர் மாநகரக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு உடனே தகவல் அளித்தனர். காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து, அப்பகுதியில் இருசக்கர வாகன ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் சங்கர் பிரபு, காவலர் சுரேஷ், தமிழ்நாடு சிறப்புப் படை காவலர் பிரசாத், காவலர் மோகன் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் ரோந்துக் காவலர்கள் துரிதமாகச் செயல்பட்டு, சம்பவ இடத்துக்கு விரைந்து, பாதிக்கப்பட்டோரிடம் விசாரித்து, உடனடியாக சுமார் 2 கி.மீ. தொலைவுக்குத் துரத்திச் சென்று, வழிப்பறியில் ஈடுபட்ட திருப்பூர், சாமுண்டிபுரத்தைச் சேர்ந்த ஜீவா, வலையங்காடு பகுதியைச் சேர்ந்த தினேஷ் மற்றும் 17 வயது சிறுவனைக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்லிடப்பேசி, பணம்,  கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.வழிப்பறியில் ஈடுபட்ட மூவரை உடனடியாகப் பிடித்த ரோந்துக் காவலர்களை மாநகரக் காவல் ஆணையர் புதன்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினார். அவர்களுக்கு ரூ. 5,000 வெகுமதி வழங்கப்பட்டது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/12/நள்ளிரவில்-வழிப்பறிக்-கும்பலை-விரட்டிப்-பிடித்த-காவலர்கள்-காவல்-ஆணையர்-பாராட்டு-2789009.html
2789008 கோயம்புத்தூர் திருப்பூர் பண்டிகை சமயத்தில் திருட்டைத் தடுப்பது எப்படி? விழிப்புணர்வூட்டும் காவல் துறை DIN DIN Thursday, October 12, 2017 09:37 AM +0530 தீபாவளி பண்டிகை சமயத்தில் திருட்டைத் தடுக்க பொது மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென காவல் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெள்ளக்கோவில் போலீஸார் விடுத்துள்ள அறிவிப்பு:
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், வீடுகளில் அதிக அளவில் பணம், தங்க நகைகள் இருக்கலாமெனக் கருதி,  திருடலாம் என்கிற எண்ணத்தில் அந்நிய நபர்களின் நடமாட்டம் இருந்து வருகிறது. எனவே, பகல், இரவு எந்நேரமும் சிறிது நேரமே வீட்டைவிட்டுச் சென்றாலும்கூட அண்டை வீட்டினரிடம் கண்காணிக்கச் சொல்லவும்.  
இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தியபடி தெருவிலோ, பூட்டிய வீட்டின் அருகிலோ அந்நிய நபர்கள் நின்றிருந்தால், காவல் துறைக்கு உடனே தகவல் தெரிவிக்கவும்.
பண்டிகைச் செலவுக்கென வங்கிகளில் பணம் எடுக்கும்போது, உடன் ஒருவரை அழைத்துச் செல்லவும்.
உங்கள் உடலில் அரிப்புப் பொடிகளைத் தூவியும், ஆடைகளை அசிங்கப்படுத்தியும், ரூபாய் நோட்டுகளைக் கீழே போட்டு கவனத்தைத் திசை திருப்பியும் உங்கள் பொருளை மர்ம நபர்கள் திருடிச் செல்லலாம்.
வீடுகளுக்கு வந்து டெங்கு காய்ச்சலுக்குத் தடுப்பூசி போடுவதாகக் கூறி மயக்க ஊசி போட்டும் கொள்ளை நடைபெற்றுள்ளது. எனவே பொது மக்கள் எச்சரிக்கையாக
இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/12/பண்டிகை-சமயத்தில்-திருட்டைத்-தடுப்பது-எப்படி-விழிப்புணர்வூட்டும்-காவல்-துறை-2789008.html
2789007 கோயம்புத்தூர் திருப்பூர் செங்கப்பள்ளியில் மனு நீதி முகாம் DIN DIN Thursday, October 12, 2017 09:37 AM +0530 செங்கப்பள்ளியில் நடைபெற்ற மனு நீதி முகாமில் 39 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டாட்சியரகத்துக்கு உள்பட்ட செங்கப்பள்ளியில் மனு நீதி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.  முகாமில் திருப்பூர் சார் ஆட்சியர் ஜெ.ஷ்ரவண்குமார்  தலைமை வகித்தார். ஊத்துக்குளி வட்டாட்சியர் அருணா முன்னிலை வகித்தார்.
மனு நீதி முகாமில் செங்கப்பள்ளி, அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டு மனுக்களை அளித்தனர். இந்த முகாமில்,  14 பயனாளிகளுக்கு சலவைப்பெட்டி, 14 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள், முதியோர் உதவித்தொகை உள்பட 39 பயனாளிகளுக்கு ரூ. 3 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/12/செங்கப்பள்ளியில்-மனு-நீதி-முகாம்-2789007.html
2789005 கோயம்புத்தூர் திருப்பூர் எஸ்.வி.புரத்தில் பூட்டிய வீட்டில் 30 பவுன் நகை திருட்டு DIN DIN Thursday, October 12, 2017 09:37 AM +0530 உடுமலை, எஸ்.வி.புரத்தில், பூட்டியிருந்த வீட்டிலிருந்து  30 பவுன் நகை மற்றும் ரூ. 20,000 ரொக்கம் உள்ளிட்டவை திருடு போயுள்ளன.
உடுமலை நகரை ஒட்டியுள்ள பகுதியான எஸ்.வி.புரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ், அதே பகுதியில் பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறார். தனது குடும்பத்துடன் வெளியூர் சென்ற செல்வராஜ்,  புதன்கிழமை அதிகாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பின்பக்கக் கதவு உடைந்திருப்பதைக் கண்டு செல்வராஜ் அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 30 பவுன் நகை,   ரூ. 20,000 ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. தகவல் கிடைத்ததும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். திருப்பூரில் இருந்து வந்த கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. இதுகுறித்து உடுமலை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/12/எஸ்விபுரத்தில்-பூட்டிய-வீட்டில்-30-பவுன்-நகை-திருட்டு-2789005.html
2789004 கோயம்புத்தூர் திருப்பூர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புது மார்க்கெட் வீதியில் போக்குவரத்து நிறுத்தம் DIN DIN Thursday, October 12, 2017 09:36 AM +0530 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூர்- புது மார்க்கெட் வீதியில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 13) முதல் போக்குவரத்து நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு, திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் வேலை செய்யும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வரும் சனிக்கிழமை தொடங்கி தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள் என்றும், இதனால், வெள்ளிக்கிழமை முதல் கடைவீதிகளில் தீபாவளி விற்பனைஅதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு திருப்பூர் மாநகரில் உள்ள முக்கிய வீதிகளில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் மாநகரக் காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக குமரன் சாலை பகுதிகளில் மக்கள் தடையின்றி கடைகளுக்குச் செல்லவும், நெரிசல் ஏற்படாத வகையிலும், சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்படுகின்றன. வாகனங்களை நிறுத்துவதிலும் மாற்றம் செய்ய மாநகரக் காவல் துறை ஆலோசித்து வருகிறது.
தவிர, குமரன் சாலை, புது மார்க்கெட் வீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கவும் பணிகள்முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்நிலையில் புது மார்க்கெட் வீதியில் பொது மக்களின் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, வெள்ளிக்கிழமை முதல் அப்பகுதியில் போக்குவரத்தில் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையரகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
அடுத்து வரும் நாள்களில் திருப்பூர், புது மார்க்கெட் வீதியில் பொது மக்களின் கூட்டம் அதிக அளவில் வரக்கூடும் என்பதால், அவ்வழியாக பேருந்துகள் செல்ல இயலாத நிலை ஏற்படும். எனவே மக்களின் நலன் கருதியும், வணிகர்களின் நலன் கருதியும் பேருந்து இயக்கத்தில் வெள்ளிக்கிழமைமுதல் சிறு மாற்றம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பழைய பேருந்து நிலையத்திலிருந்து புது மார்க்கெட் வீதி வழியாக வெளியேறும் அனைத்துப் பேருந்துகளும்,   பழைய பேருந்து நிலையத்தின் கிழக்குப் புற  வாயில் வழியாக வெளியேறி, பெருமாள் கோயில்,  காமராஜர் சாலை வழியாக மாநகராட்சி அலுவலகம் சென்று, வேண்டிய இடங்களுக்குச் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/12/தீபாவளி-பண்டிகையை-முன்னிட்டு-புது-மார்க்கெட்-வீதியில்-போக்குவரத்து-நிறுத்தம்-2789004.html
2789003 கோயம்புத்தூர் திருப்பூர் நொய்யல் தூய்மைப் பணி கலாம் பிறந்த நாளில் நிறைவடைகிறது: வேலி அமைக்கவும், கரைகளில் மரம் நடவும் திட்டம் DIN DIN Thursday, October 12, 2017 09:36 AM +0530 நொய்யலாற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணியை  அப்துல் கலாம் பிறந்த நாளில் நிறைவு செய்து, இரு கரைகளிலும் மரக் கன்றுகள் நடவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் பெய்த கனமழையால் திருப்பூர் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அப்போது ஆற்றில் பெருமளவு குப்பைகள் சேர்ந்தன. எனவே, நொய்யலைத் தூய்மை செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன்படி, மாவட்ட நிர்வாகம், திருப்பூர் பின்னலாடை மற்றும் தொழில் கூட்டமைப்பு இணைந்து திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் நொய்யல் ஆற்றைத் தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டு, கடந்த 4-ஆம் தேதி பணிகள் தொடங்கப்பட்டன; பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இப்பணிகள் ஓரளவு  நிறைவு பெற்றுள்ள நிலையில், வரும் அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்  கலாம் பிறந்த நாளுக்குள் பணிகளை முடித்து, இரு கரைகளிலும் மரக் கன்றுகள் நட்டுப் பாதுகாத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள ஜீவ நதி நொய்யல் சீரமைப்புக் குழு செயலாளர் சண்முகராஜ் கூறியதாவது:
திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் நொய்யல் ஆற்றை தூய்மைப்படுத்தும் பணியினை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.  திருப்பூர் மாவட்ட நிர்வாகம்,  திருப்பூர் பின்னலாடை மற்றும் தொழில் கூட்டமைப்பு இணைந்து தூய்மைப் பணி, திருப்பூர் குமரன் பிறந்த நாளான கடந்த 4-ஆம் தேதி தொடங்கப்பட்டது. பணிகள் தொடர்ந்து நடைபெற்று, தற்போது நிறைவு நிலையை எட்டியுள்ளன.
திட்டமிட்டபடி வரும் 15-ஆம் தேதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்த நாளில் பணிகள் முடிக்கப்பட்டு, நொய்யல் ஆற்றின் கரைகளில் மரக் கன்றுகள் நடவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.  அன்றைய தினம் காலை நொய்யல் ஆற்றின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணியை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நொய்யல் தூய்மைப் பணிகள் தொடங்கப்பட்ட நாள் முதல் தற்போதுவரை,  600 டன் குப்பை மற்றும் கழிவுப் பொருள்கள் எடுக்கப்பட்டு, மாநகராட்சி குப்பைக் கிடங்கில் சேர்க்கப்பட்டுள்ளன. மண் மற்றும் சிறு கற்களை ஆற்றின் இரு கரைகளிலும் கொட்டி பலப்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன.
ஒவ்வொரு நாளும் மாநகராட்சிக்குச் சொந்தமான பொக்லைன் இயந்திரங்களுடன் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ள பொக்லைன் இயந்திரங்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதற்காக பின்னலாடை மற்றும் தொழில் கூட்டமைப்பினர் சார்பில் ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும் பணிகள் முடிக்கப்பட்டவுடன், நொய்யல் ஆற்றைப் பாதுகாத்திடும் விதமாக, மாவட்ட நிர்வாக  அனுமதியுடன் இரு கரைகளிலும் வேலி அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.முன்னதாக, நொய்யலில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டார். அப்போது ஆட்சியர் கூறுகையில்,  ""தற்பொழுது தூய்மைப்படுத்தப்பட்டுள்ள நொய்யல் பகுதியில்  மக்களும் வியாபார நிறுவனங்களும் குப்பைகள், கழிவுப் பொருள்களைப் போடாமல் பாதுகாக்க வேண்டும்.  அனைவரும் ஒருங்கிணைந்து நொய்யல் ஆற்றைப் பாதுகாத்திட வேண்டும்'' என்றார்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/12/நொய்யல்-தூய்மைப்-பணி-கலாம்-பிறந்த-நாளில்-நிறைவடைகிறது-வேலி-அமைக்கவும்-கரைகளில்-மரம்-நடவும்-திட்டம்-2789003.html
2789002 கோயம்புத்தூர் திருப்பூர் தாராபுரத்தில் அக்டோபர்14-இல் வேலைவாய்ப்பு முகாம் DIN DIN Thursday, October 12, 2017 09:36 AM +0530 மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலமாக அக்டோபர் 14-இல் தாராபுரத்தில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றுப் பயன்பெறலாம்.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்களைக் கொண்டு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலமாக மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் வரும் அக்டோபர் 14-ஆம் தேதி, தாராபுரம், என்.சி.பி. நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.
இம்முகாமில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகள் மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள படிக்காத, தொழிற்பயிற்சி, பட்டயப் படிப்பு, இளநிலை பட்டம், முதுநிலை பட்டம் படித்த இளைஞர்கள், இளம்பெண்கள்  கலந்துகொண்டு பயன்பெறலாம்.
முகாமில் கலந்துகொள்ள வருபவர்கள், தங்களது சுய குறிப்பு, அனைத்து கல்விச் சான்றிதழ்கள் (அசல் மற்றும் நகல்), குடும்ப அட்டை, ஆதார் அட்டை நகல் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவற்றுடன்  வர வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு, இணை இயக்குநர், திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மகளிர் திட்டம், மாவட்ட ஆட்சியர் வளாகம், திருப்பூர் மாவட்டம் என்ற முகவரியிலோ, அல்லது  0421 2971149,  94440 94395 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/12/தாராபுரத்தில்-அக்டோபர்14-இல்-வேலைவாய்ப்பு-முகாம்-2789002.html
2789000 கோயம்புத்தூர் திருப்பூர் மேற்குத் தொடர்ச்சி மலையில் கனமழை: பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கத் தடை DIN DIN Thursday, October 12, 2017 09:36 AM +0530 மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் புதன்கிழமை கனமழை பெய்ததன்  காரணமாக, பஞ்சலிங்கம் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உடுமலையில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது சுற்றுலாத் தலமான திருமூர்த்தி மலை. இங்கு புகழ் பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்யவும், மருத்துவக் குணமுள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கவும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
மேலும் இங்குள்ள படகுக் குழாம், வண்ணமீன் பூங்கா, நீச்சல் குளம், திருமூர்த்தி அணை ஆகியவற்றை ரசிக்கவும் தினசரி ஏராளமானோர் வருகின்றனர்.
இந்நிலையில் புதன்கிழமை மாலை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்தது. இதனால் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஓடைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, பஞ்சலிங்கம் அருவியில் பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் குளிக்க கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.   

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/12/மேற்குத்-தொடர்ச்சி-மலையில்-கனமழை-பஞ்சலிங்கம்-அருவியில்-குளிக்கத்-தடை-2789000.html
2788999 கோயம்புத்தூர் திருப்பூர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் ரூ. 1.89 கோடி வாடகை நிலுவை: 33 கடைகளுக்கு சீல் வைப்பு;  88 வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிப்பு DIN DIN Thursday, October 12, 2017 09:35 AM +0530 பெருமாநல்லூரில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலத்தில் ரூ. 1189 கோடி வாடகை நிலுவையைச் செலுத்தாமல் இருந்த 33 கடைகளுக்கு "சீல்' வைத்ததுடன், 88 வீடுகளுக்கு மின்னிணைப்பைத் துண்டித்து அறநிலையத் துறையினர் புதன்கிழமை நடவடிக்கை மேற்கொண்டனர்.
திருப்பூர் மாவட்டத்தில்  பிரசித்தி பெற்றதாக, பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோயில் விளங்குகிறது. இந்து அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்படும் இக்கோயிலுக்குச் சொந்தமாக கோவை -சேலம் சாலையில் உள்ள நிலத்தில் ஏராளமான கடைகள், வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றை கோயில் பூசாரிகள் உள்ளிட்ட பலர் உள்வாடகைக்கு விட்டிருப்பது தெரியவந்தது. மேலும் கடந்த 7 ஆண்டுகளாக இந்து சமய அறநிலையத் துறைக்கு கடை,  வீட்டின் உரிமையாளர்கள்  ரூ. 1 89 கோடி தொகையை வாடகையாகச் செலுத்தாமல் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அறநிலையத்துறை சார்பில் எச்சரிக்கை அறிவிப்புகள் வழங்கப்பட்டன. மேலும் கடன் தொகையைச் செலுத்தாததால், அவர்களது பெயர்கள் கடனாளிகள் பட்டியலாக கோயில் முன்பு வைக்கப்பட்டது. இருப்பினும் கடன் தொகையைச் செலுத்தாததால், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் வி. ஹர்ஷினி, பெருமாநல்லூர் போலீஸார், வருவாய்த் துறையினர் இணைந்து கடும் நடவடிக்கையில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
அப்போது, 33 கடைகளுக்கு "சீல்' வைத்ததுடன், 88 வீடுகளின் மின்னிணைப்பைத் துண்டித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.  கோயில் இடத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிக்கு மட்டும் குறிப்பிட்ட கால அவகாசம் அளிக்கப்பட்டது.
 இதனால் பெருமாநல்லூர் பகுதியில் புதன்கிழமை காலை முதல் மாலை வரை பெரும் பரபரப்பு காணப்பட்டது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/12/கோயிலுக்குச்-சொந்தமான-இடத்தில்-ரூ-189-கோடி-வாடகை-நிலுவை-33-கடைகளுக்கு-சீல்-வைப்பு--88-வீடுகளுக்க-2788999.html
2788998 கோயம்புத்தூர் திருப்பூர் சொட்டு நீர்ப் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு மானியம் DIN DIN Thursday, October 12, 2017 09:35 AM +0530 பிரதமரின் விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் 100 சதவீத மானியத்தில் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கலாம்.
இதுகுறித்து காங்கயம் வட்டாரத் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் பெ.சித்தார்த்தன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு :
திருப்பூர் மாவட்டத்தில் காங்கயம் வட்டாரத்துக்கு  தோட்டக்கலைத் துறை மூலம்  பிரதம மந்திரி விவசாய நீர்பாசனத் திட்டத்தின் (2017-18)  கீழ் விவசாயிகளுக்கு சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க 73 ஹெக்டேர் பொருள் இலக்கும், ரூ. 44 லட்சம் நிதி இலக்கும் பெறப்பட்டுள்ளது.
இதன்மூலம் தோட்டக்கலைப் பயிர்களுக்கு சொட்டுநீர்ப் பாசனம்  அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகின்றன. சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க, ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஹெக்டேர் (12.5 ஏக்கர்) வரை மானியம் அளிக்கப்படும். சென்னையில் உள்ள டேன்ஹோடா நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட சொட்டுநீர்ப் பாசன நிறுவனங்களை விவசாயிகளே தேர்வு செய்து, சொட்டுநீர்ப் பாசனம் அமைத்துக் கொள்ளலாம்.
இந்தத் திட்டத்தின் கீழ் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள், இந்த மானியத்தைப் பெறுவதற்கு, விண்ணப்பத்துடன் கிராம நிர்வாக அலுவலர் சான்று, சிட்டா-அடங்கல்,  வயல் வரைபடம், குடும்ப அட்டை நகல், 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மண்- நீர் ஆய்வுச் சான்று, சிறு-குறு விவசாயி சான்று ஆகியவற்றை இணைத்து காங்கயம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு, முன்னுரிமைப் பதிவேட்டில் பதிவு செய்து கொள்ளலாம்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/12/சொட்டு-நீர்ப்-பாசனம்-அமைக்க-விவசாயிகளுக்கு-மானியம்-2788998.html
2788997 கோயம்புத்தூர் திருப்பூர் சாலை விபத்தில் பனியன் தொழிலாளி சாவு DIN DIN Thursday, October 12, 2017 09:35 AM +0530 அவிநாசி அருகே கருவலூரில் கார் மோதி நடந்து சென்ற பனியன் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தார்.
கருவலூர், சாமித்தேவர் நகரைச் சேர்ந்த கருப்புசாமி மகன் சதீஷ்குமார் (40), பனியன் தொழிலாளி. இவர் கருவலூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சாமித்தேவர் நகர் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவிநாசியில் இருந்து கோவை நோக்கி வேகமாக வந்த கார் சதீஷ்குமார் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சதீஷ்குமார் அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து அவிநாசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/12/சாலை-விபத்தில்-பனியன்-தொழிலாளி-சாவு-2788997.html
2788996 கோயம்புத்தூர் திருப்பூர் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் DIN DIN Thursday, October 12, 2017 09:34 AM +0530 மத்திய அரசைக் கண்டித்து, திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், குமரன் சிலை முன்பு புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ப.கோபி தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டத் தலைவர் முத்துசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா மகன் ஜெய் ஷாவின் நிறுவனத்தில் முறைகேடு நிகழ்ந்ததாக புகார் எழுந்துள்ளது குறித்து  மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
மாவட்ட துணைத் தலைவர் சக்திவேல், மாநில தாழ்த்தப்பட்டோர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் தா.செல்வகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/12/மத்திய-அரசைக்-கண்டித்து-காங்கிரஸ்-கட்சியினர்-ஆர்ப்பாட்டம்-2788996.html
2788995 கோயம்புத்தூர் திருப்பூர் முதுகலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு DIN DIN Thursday, October 12, 2017 09:34 AM +0530 முதுகலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம், உடுமலை எஸ்.கே.பி. மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த முதுகலை ஆசிரியர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.சாந்தி தலைமை வகித்தார்.
திருப்பூர் மாவட்டக் கல்வி அலுவலர் ஆர்.விஜயலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.
முன்னதாக எஸ்.கே.பி. பள்ளி தலைமை ஆசிரியர் கே.டி.பூரணி அனைவரையும் வரவேற்றார்.  

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/12/முதுகலை-ஆசிரியர்களுக்கான-கலந்தாய்வு-2788995.html
2788994 கோயம்புத்தூர் திருப்பூர் கல்லூரி விடுதியில் மாணவி மர்ம சாவு DIN DIN Thursday, October 12, 2017 09:34 AM +0530 உடுமலை அரசு கலைக் கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவர் விடுதியில் புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
கேரள மாநிலம், மூணாறு அருகில் உள்ள கடலார் எஸ்.டி.ஆர். கிழக்கு டிவிஷன் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் பாஸ்டின்- பேபி. இவர்களது மகள் புஷ்பா ஏஞ்சலின் (19). உடுமலை அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரியின் எதிரே உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவியர் தங்கும் விடுதியில் தங்கியிருந்தார்.
பிற்பகல் கல்லூரியில் படித்து வந்த இவர்,  புதன்கிழமை கல்லூரிக்குச் செல்லவில்லை. எனவே இவரது தோழிகள் புஷ்பா ஏஞ்சலினைத் தேடி விடுதிக்கு வந்தனர். ஆனால் விடுதியிலும் காணாததால்
சந்தேகம் அடைந்த தோழிகள்,
ஒவ்வோர் அறையாகத் தேடிய பின்னர் அங்கிருந்த தண்ணீர்த் தொட்டியை திறந்து பார்த்துள்ளனர்.  அதில் புஷ்பா ஏஞ்சலின் த ண்ணீருக்குள் மிதந்து கொண்டிருந்ததைக் கண்டு கல்லூரி நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
உடுமலை போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.  
அங்கு வந்த கல்லூரி நிர்வாகத்தினர் புஷ்பா ஏஞ்சலினை தொட்டியில் இருந்து மேலே தூக்கியபோது அவர் உயிருடன் இருந்தது தெரியவந்தது. உடனடியாக மாணவர்கள் இரு சக்கர வாகனத்தில் கொண்டுசென்று புஷ்பா ஏஞ்சலினை உடுமலை அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், புஷ்பா உயிரிழந்து விட்டதாகக் கூறினர். அப்போது நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் அங்கு குவிந்ததால் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இது குறித்து போலீஸார் கூறியது:
உயிரிழந்த மாணவியின் வாயில் நுரை வந்துள்ளதைப் பார்க்கும்போது அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரிகிறது. இந்தச் சம்பவம் நடந்தபோது விடுதி வார்டன் வெளியூர் சென்றிருந்தது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். புஷ்பாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றனர். உடுமலை போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/12/கல்லூரி-விடுதியில்-மாணவி-மர்ம-சாவு-2788994.html
2788993 கோயம்புத்தூர் திருப்பூர் திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதியாளர் மர்ம மரணம் DIN DIN Thursday, October 12, 2017 09:33 AM +0530 திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதியாளர் ஒருவர் மர்மமான முறையில் இறந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுவது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியது:
திருப்பூர், 15 வேலம்பாளையத்தை அடுத்த சொர்ணபுரி விரிவு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் ( 51). இவர் திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி - ஏற்றுமதி  தொழில் செய்து வந்தார். திருப்பூர், அண்ணாநகரில் அவரது நிறுவனத்தின் தலைமை அலுவலகமும், பல இடங்களில் அவருக்கு சொந்தமான உற்பத்தி நிறுவனங்களும் உள்ளன.
கடந்த சில நாள்களுக்கு முன் சீனிவாசனுக்கு தொழிலில் சுமார் ரூ. 30 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அத்துடன் கோடிக்கணக்கில் கடனும் இருப்பதாகத் தெரிகிறது. கடன் பிரச்னை காரணமாக சீனிவாசன் கடந்த சில நாள்களாக மனஉளைச்சலுடன் காணப்பட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சீனிவாசன் வழக்கம் போல சாப்பிட்டு விட்டு, தனது அறைக்கு தூங்கச் சென்றார். புதன்கிழமை காலை வெகுநேரமாகியும் சீனிவாசன் அறையை விட்டு வெளியே வராததால், அவருடைய மனைவி மோகனஸ்ரீக்கு சந்தேகம் ஏற்பட்டு, சீனிவாசன் அறைக்கு சென்று பார்த்த போது, அவர் அசைவின்றிக் கிடந்துள்ளார்.  படுக்கையின் அருகில் உடலில் மருந்து செலுத்தும் இரு ஊசிகள் கிடந்துள்ளன.
மோகனஸ்ரீயின் அலறல் கேட்டு ஓடி வந்த அருகிலிருந்தவர்கள், அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள்,  அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்த 15 வேலம்பாளையம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சீனிவாசனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர் சர்க்கரை நோய்க்கு நாள்தோறும் ஊசி மூலமாக உடலில் மருந்து செலுத்தி வந்துள்ளார். கடன் பிரச்னையால் அதிக மருந்தை உடலில் செலுத்தி தற்கொலை செய்து கொண்டாரா, மரணத்திற்கு வேறு காரணங்கள் உள்ளதா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/12/திருப்பூரில்-பின்னலாடை-ஏற்றுமதியாளர்-மர்ம-மரணம்-2788993.html
2788992 கோயம்புத்தூர் திருப்பூர் உடுமலையில் கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரம்: 4 டன் பழைய டயர்கள் பறிமுதல் DIN DIN Thursday, October 12, 2017 09:33 AM +0530 உடுமலை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. இதையொட்டி, பயனற்ற 4 டன் பழைய டயர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
உடுமலை நகரில் கடந்த சில வாரங்களாக டெங்கு, மர்மக் காய்ச்சல் பரவி வருகிறது. இதைத் தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள் மர்மக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கொசுவால் ஏற்படும் காய்ச்சல்களைக் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
வீடுகளில் தேவையில்லாத பொருள்களில் தண்ணீர் தேக்கி வைக்கக் கூடாது எனவும்,  குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பருவ மழை பெய்து வருவதால், உடைந்த பானைகள், தேங்காய் சிரட்டைகள், பாட்டில்கள், டயர்கள் ஆகிவற்றில் தண்ணீர் தேங்குகிறது. இதனால் டெங்கு காய்ச்சலை உ ருவாக்கும் கொசுப் புழுக்கள் பெருகுகின்றன.
எனவே,  நகராட்சி அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள் மூலம் விழிப்புணர்வை
ஏற்படுத்தி, தண்ணீர் தேங்கும் தேவையில்லாத பொருள்களை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் உடுமலை நகர்நல அலுவலர் மருத்துவர் கே.சி.அருண் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள், பழனி சாலை, தாராபுரம் சாலை, திரு ப்பூர் சாலை, ஏரிப்பாளையம் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பயன்படாத நிலையில் இருந்த 4,000 கிலோ டயர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/12/உடுமலையில்-கொசு-ஒழிப்புப்-பணிகள்-தீவிரம்-4-டன்-பழைய-டயர்கள்-பறிமுதல்-2788992.html
2788991 கோயம்புத்தூர் திருப்பூர் தெக்கலூர் நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற அரசுப் பேருந்து சிறைப்பிடிப்பு DIN DIN Thursday, October 12, 2017 09:33 AM +0530 அவிநாசி அருகே தெக்கலூர் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற அரசுப் பேருந்தை பொதுமக்கள் புதன்கிழமை இரவு சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவிநாசி அருகே உள்ள தெக்கலூரில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வசிக்கின்றனர்.  இப்பகுதியில் இரு ஆண்டுகளுக்கு முன்னர் புறவழிச்சாலை அமைக்கப்பட்டதை  அடுத்து, இவ்வழியாக வந்து செல்லும் தனியார் பேருந்துகள், அரசுப் பேருந்துகள், பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல், புறவழிச்சாலை மேம்பாலத்தின் மீது சென்று வந்தன.
இதையடுத்து பலமுறை அப்பகுதி மக்கள்,  சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். எனவே மோட்டார் வாகன அலுவலர்கள் உத்தரவுப்படி, பேருந்துகள் நிறுத்தத்தில் நின்று சென்றன.
புதன்கிழமை இரவு திருப்பூரில் இருந்து கோவை நோக்கிச் சென்ற ஓர் அரசுப் பேருந்தில் தெக்கலூர் பகுதியைச் சேர்ந்த  பெண் ஒருவர் சீனிவாச திரையரங்கு பேருந்து நிறுத்ததில் ஏறியுள்ளார். ஆனால் அரசுப் பேருந்து நடத்துநர்,  ஓட்டுநர் இருவரும், தெக்கலூர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிற்காது என்று கூறி அப்பெண்மணியை கீழே இறக்கி விட்டனர்.
இதனால் கோபமடைந்த அப்பெண், தங்கள் பகுதி மக்களுக்கு, தொலைபேசியில் இதுகுறித்து தகவல் அளித்துள்ளார்.
 அதைத் தொடர்ந்து  தெக்கலூர் பகுதி மக்கள் அவ்வழியாக வந்த அரசுப் பேருந்தை சிறைப் பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த காவல்துறையினர்,  அரசுப் பேருந்து நடத்துநரிடமும், ஓட்டுநரிடமும் பேச்சு நடத்தினர். இறுதியில்,  வரும் காலங்களில் தெக்கலூர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்திச் செல்வோம் என்று நடத்துநரும், ஓட்டுநரும் உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/12/தெக்கலூர்-நிறுத்தத்தில்-நிற்காமல்-சென்ற-அரசுப்-பேருந்து-சிறைப்பிடிப்பு-2788991.html
2788156 கோயம்புத்தூர் திருப்பூர் கடையின் பூட்டை உடைத்து ரூ. 80 ஆயிரம் திருட்டு DIN DIN Wednesday, October 11, 2017 07:02 AM +0530 வெள்ளக்கோவிலில் கடையின் பூட்டை உடைத்துப் பணம் திருடப்பட்டுள்ளது.
முத்தூர் சாலை, கொங்கு நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (37). இவர், டி.ஆர்.நகரில் வட்டிக் கடை வைத்துள்ளார். திங்கள்கிழமை மதியம் கடையின் கண்ணாடிக் கதவை மட்டும் பூட்டிவிட்டு சாப்பிடச் சென்றுள்ளார்.
பின்ன மாலை 4 மணிக்கு மீண்டும் கடைக்கு வந்து பார்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு, கண்ணாடிக் கதவு திறந்துகிடந்தது. உள்ளே மேஜையின் இழுப்பறையும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த ரூ. 80 ஆயிரம் திருட்டுப் போயிருப்பது தெரியவந்தது.  இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளக்கோவில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/11/கடையின்-பூட்டை-உடைத்து-ரூ-80-ஆயிரம்-திருட்டு-2788156.html
2788155 கோயம்புத்தூர் திருப்பூர் உடுமலையில் "ஜாய் ஆப் கிவிங் வீக்' கொண்டாட்டம் DIN DIN Wednesday, October 11, 2017 07:02 AM +0530 ஈகை மனப்பான்மையை மாணவ, மாணவிகளிடையே உருவாக்கும் பொருட்டு உடுமலை எஸ்கேபி மேல்நிலைப் பள்ளி சார்பில் ஜாய் ஆப் கிவிங் வீக் கொண்டாடப்பட்டது.
அக்டோபர் 3-ஆம் தேதி தொடங்கி 9-ஆம் தேதி வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியை பள்ளிச் செயலர் ராதாகிருஷ்ணன் தொடக்கிவைத்தார். தலைமை ஆசிரியர் கே.டி.பூரணி முன்னிலை வகித்தார்.
இதையொட்டி, "ஆறுவது சினம்' எனும் தலைப்பில் உடல் உறுப்பு தானம் செய்வோம், பிறருக்கு உதவி செய்வோம் என்பதை வலியுறுத்தும் பதாகைகளை கையில் ஏந்தியவாறு ஊர்வலமாக சென்ற மாணவர்கள் உடுமலை காவல் நிலையத்துக்குச் சென்று காவல் துறையினருடன் கலந்துரையாடினர்.
இந்நிகழ்ச்சியை பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் கே.அன்பரசு, ஓவிய ஆசிரியர் சி.திலகராஜ் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். "ஈவது விலக்கேல்' எனும் தலைப்பில் ஆசிரியர் சுரேஷ் தலைமையில், உடுமலை ராமசாமி நகரில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன.
"எண் எழுத்து இகழேல்' எனும் தலைப்பில் உதவித் தலைமை ஆசிரியர் சி.பி.குமரேசன் தலைமையில் எழுத்தறிவு இல்லா மக்களுக்கு வாசிப்புப் பயிற்சியும், எழுத்துப் பயிற்யும் வழங்கப்பட்டது. "ஊக்கமது கைவிடேல்' எனும் தலைப்பில் ஆசிரியர் நாராயணன் தலைமையில் மாணவர்கள் உடுமலை அரசு மருத்துவமனைக்கு சென்று உள்நோயாளிகளைச் சந்தித்து ரொட்டி, பிஸ்கட்டுகளை வழங்கி,  அவர்களிடம் கலந்துரையாடினர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/11/உடுமலையில்-ஜாய்-ஆப்-கிவிங்-வீக்-கொண்டாட்டம்-2788155.html
2788154 கோயம்புத்தூர் திருப்பூர் குற்றச் சம்பவங்களைத் தடுக்க காங்கயத்தில் விழிப்புணர்வுக் கூட்டம் DIN DIN Wednesday, October 11, 2017 07:02 AM +0530 குற்றச் சம்பவங்களைத் தடுப்பது குறித்து காங்கயத்தில் போலீஸார் செவ்வாய்க்கிழமை விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தினர்.
காங்கயம் பகுதியில் சமீபத்தில், பூட்டியிருந்த கடை, வீடுகளின் பூட்டுகளை உடைத்து நகை, பணம், பொருள்கள் திருடப்பட்டன. இதையடுத்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காங்கயம் காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையில், பேருந்து நிலையம், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
அதில், இரவு நேரத்தில் சந்தேகமான நபர்கள் நடமாடினால் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தல், வீடுகளை பூட்டி விட்டு வெளியூர் சென்றால் எப்போது திரும்புவோம் என்ற விவரத்தை காவல் நிலையத்தில் தெரிவித்தல், இரவு நேரத்தில் வீட்டின் வெளிப்புறங்களில் மின் விளக்குகளை எரியச் செய்தல் போன்றவை குறித்து அறிவுறுத்தப்பட்டது.
மேலும், திருட்டைத் தடுக்கப் பொது மக்கள், வியாபாரிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. இதில், காங்கயம் காவல் உதவி ஆய்வாளர்கள் பன்னீர்செல்வம், மாலா உள்பட காவல் துறையினர் பலர் கலந்துகொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/11/குற்றச்-சம்பவங்களைத்-தடுக்க-காங்கயத்தில்-விழிப்புணர்வுக்-கூட்டம்-2788154.html
2788153 கோயம்புத்தூர் திருப்பூர் சீராக குடிநீர் விநியோகிக்க கோரி சாலை மறியல் DIN DIN Wednesday, October 11, 2017 07:02 AM +0530 அனுப்பர்பாளையம் அருகே சீராக குடிநீர் விநியோகிக்கக் கோரி பொது மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சி, 2-ஆவது மண்டலம், 18-ஆவது வார்டுக்கு உள்பட்ட வாரணாசிபாளையத்தை அடுத்த குருசாமி நகர் பகுதியில் 80-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மாநகராட்சி சார்பில் வாரத்துக்கு ஒருமுறை 3-ஆவது திட்டக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 3 வாரங்களாக அங்கு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், சீராகக் குடிநீர் வழங்கக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட பொது மக்கள் பலர் வாரணாசிபாளையம் பிரிவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். வாவிபாளையம், சேடர்பாளையம், குருவாயூரப்பன் நகர் செல்லும் சாலைகளை மறித்து, காலிக் குடங்களுடன் சாலையில் அமர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த அனுப்பர்பாளையம் போலீஸார், குடிநீர்க் குழாய் ஆய்வாளர் தனராஜ் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்குச் சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது,  வாரம் ஒருமுறை குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/11/சீராக-குடிநீர்-விநியோகிக்க-கோரி-சாலை-மறியல்-2788153.html
2788152 கோயம்புத்தூர் திருப்பூர் மூலனூர் அருகே சாலையோரம் இறந்து கிடந்த மான் DIN DIN Wednesday, October 11, 2017 07:01 AM +0530 வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் அருகே சாலையோரம் மான் ஒன்று செவ்வாய்க்கிழமை இறந்து கிடந்தது.
மூலனூர் - கரூர் பிரதான சாலையில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி அருகே மான் இறந்து கிடப்பதைப் பலர் பார்த்துள்ளனர். சுற்றுவட்டாரத்தில் வனப் பகுதிகள் எதுவும் இல்லாத நிலையில் அங்கு மான் இறந்து கிடப்பது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மூலனூர் காவல் ஆய்வாளர் வனிதாமணி வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, அவர்கள் முன்னிலையில் மூலனூர் கால்நடை உதவி மருத்துவர் மணிவேல் சம்பவ இடத்திலேயே மானின் உடலைப் பரிசோதனை செய்தார்.  அதில்,  80 கிலோ எடையுள்ள 4 வயது மதிக்கத்தக்க அந்த மான் ஆண் இனத்தைச் சேர்ந்தது என்றும், நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்ததும் தெரியவந்தது.  பின்னர், மானின் கொம்புகள் அகற்றப்பட்டு அதேஇடத்தில் புதைக்கப்பட்டது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/11/மூலனூர்-அருகே-சாலையோரம்-இறந்து-கிடந்த-மான்-2788152.html
2788151 கோயம்புத்தூர் திருப்பூர் இருசக்கர வாகனங்கள் திருடியவர் கைது DIN DIN Wednesday, October 11, 2017 07:01 AM +0530 இருசக்கர வாகனங்களைத் திருடியவரை அவிநாசி போலீஸார் செவ்வாய்க்கிழமை கைதுசெய்தனர்.
அவிநாசி காவல் சரகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் குற்றச் செயல்களைத் தடுக்கும் பொருட்டு,  போலீஸார் அவிநாசி, கைக்காட்டிப்புதூர் பகுதியில் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்த நபரைப் பிடித்து விசாரித்தனர்.
அதில், அவர் கேரள மாநிலம், கண்ணூர், இருட்டி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் ரவிகுமார்(42) என்பது தெரியவந்தது. மேலும், அவர், கடந்த ஜனவரி 9-ஆம் தேதி தெக்கலூர் பகுதியில் நிறுத்தியிருந்த ரகுராம் என்பவரது இருசக்கர வாகனத்தையும், அக்டோபர் 9-ஆம் தேதி குன்னத்தூரில் நிறுத்தியிருந்த சரவணன் என்பவரது இருசக்கர வாகனத்தையும் திருடியது தெரியவந்தது. இதையடுத்து, அவிநாசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து ரவிகுமாரைக் கைது செய்தனர். மேலும், திருடப்பட்ட  2 இருசக்கர வாகனங்களும் மீட்கப்பட்டன.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/11/இருசக்கர-வாகனங்கள்-திருடியவர்-கைது-2788151.html
2788150 கோயம்புத்தூர் திருப்பூர் "தீபாவளியை சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் கொண்டாட வேண்டும்' DIN DIN Wednesday, October 11, 2017 07:01 AM +0530 தீபாவளியை சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் கொண்டாட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுளை வெடிக்கக்கூடாது. 125 டெஸிபல் அளவுக்குகீழ் ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை மட்டுமே வாங்கவேண்டும். பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் புகை மாசு காரணமாக நுரையீரல் சமந்தப்பட்ட நோய்கள், ஆஸ்துமா, ஒவ்வாமை (அலர்ஜி) போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.
போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகள், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் பட்டாசுகளை கொளுத்த வேண்டாம். மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றங்கள் அமைந்துள்ள அமைதிப் பகுதிகளில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. முடிந்தால் பட்டாசு வெடிப்பதைத் தவிர்த்து விடலாம் அல்லது குறைத்துக் கொள்ளலாம்.
சரவெடியை நெருக்கமான, குறுகிய சந்துகள், அடுக்குமாடிக் குடியிருப்புகளின் மத்தியில் வெடிக்கக் கூடாது. வீட்டில் ஒரே இடத்தில் பட்டாசுகளை மூட்டையாகக் கட்டிப் போட வேண்டாம். பட்டாசு கொளுத்துவதற்கு தீப்பெட்டியைப் பயன்படுத்த வேண்டாம். நீளமான ஊதுபத்திகளை உபயோகிப்பது நல்லது.
பட்டாசு கொளுத்தும்போது பருத்தி ஆடைகளை உடுத்துவதுடன், அவற்றை இறுக்கமாக அணிவது நல்லது. பொதுவாக ராக்கெட் வெடிகளில் அதிக தீ விபத்துகள் ஏற்படுவதால் குடிசைகள் மற்றும் எளிதில் தீப்பற்றும் பொருள்கள் இருக்கும் இடங்களில் அவற்றை வெடிப்பதைத் தவிர்க்கவும்.
பட்டாசுகளை வெடிக்கும்போது காலணிகளை அணிந்து கொண்டு வெடிப்பது நல்லது. தீக்காயம் ஏற்படும்போது அதிகப்படியான தண்ணீரைக் காயத்தின் மேல் ஊற்றவேண்டும். கண்ணில் ஏற்படும் தீக்காயங்களை நிறைய தண்ணீர் விட்டு 10 நிமிடங்களுக்குக் குறையாமல் கழுவவேண்டும். பிறகு மருத்துவமனைக்குச் செல்லவேண்டும்.
குழந்தைகள் பெரியவர்கள் உடன் பட்டாசு வெடிப்பது பாதுகாப்பானது. மேலும், குழந்தைகளின் சட்டைப் பைகளில் பட்டாசுகளை வைத்துக்கொள்ள அனுமதிக்க கூடாது. கொளுத்திய பட்டாசுகளை ஒருவரை நோக்கிக் காட்டுவதோ அல்லது தெருவில் எறிவதோ கூடாது. மேலும், வெடிக்காத பட்டாசுகளின் அருகில் செல்வதோ, மீண்டும் அதை வெடிக்கச் செய்ய முயற்சிப்பதோ ஆபத்தாகும்.
பட்டாசு வெடிப்பதற்கு முன்னர் பாத்திரங்களில் தண்ணீர், மணல் ஆகியவற்றைத் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். "ஒளித் திருநாளான தீபாவளி பண்டிகையை, ஒலி மாசை ஏற்படுத்தும் பட்டாசுகளைத் தவிர்த்து, வண்ணமிகு ஒளி ஏற்படுத்தும் பட்டாசுகளைக் குறைந்த அளவில் உபயோகித்து, ஒலி மற்றும் காற்று மாசற்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த தீபாவளியைக் கொண்டாடி சுற்றுச்சூழலைக் காப்போம். ஒளி பண்டிகையான தீபாவளியை, ஒலி மாசற்ற பண்டிகையாக கொண்டாட பொது மக்கள் ஒத்துழைக்கவேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/11/தீபாவளியை-சுற்றுச்சூழலுக்கு-உகந்த-வகையில்-கொண்டாட-வேண்டும்-2788150.html
2788149 கோயம்புத்தூர் திருப்பூர் அவிநாசியில் இன்று மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் DIN DIN Wednesday, October 11, 2017 07:00 AM +0530 தமிழ்நாடு மின்சார வாரியம், அவிநாசி மின்கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில்  அக்டோபர் 11- ஆம் தேதி  காலை 11 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள்  கூட்டம் நடைபெறுகிறது.
இதில், தமிழ்நாடு மின்சார வாரியம், திருப்பூர் மின்பகிர்மான வட்டம் மேற்பார்வைப் பொறியாளர் சண்முகம் பங்கேற்று மின் நுகர்வோரின் குறைகளைக் கேட்டறிந்து நிவர்த்தி செய்யவுள்ளார்.
எனவே, இதில் மின் நுகர்வோர்கள் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவித்துப் பயன்பெறலாம் என  மின் வாரிய அவிநாசி கோட்டச் செயற்பொறியாளர் தசரதன் தெரிவித்துள்ளார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/11/அவிநாசியில்-இன்று-மின்நுகர்வோர்-குறைதீர்-கூட்டம்-2788149.html
2788148 கோயம்புத்தூர் திருப்பூர் அருள்புரத்தில் மனைவி நல வேட்பு விழா DIN DIN Wednesday, October 11, 2017 07:00 AM +0530 பல்லடம் அருள்புரத்தில் மனவளக்கலை மன்றத்தின் சார்பில் மனைவி நல வேட்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
ஜெயந்தி மெட்ரிக். பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு ஜெயந்தி கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.கிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில், "உயிர்க் கலப்பு தவம்' எனும் தலைப்பில் பேராசிரியர் ரவிகுமார் பேசியதாவது:
மனிதர்கள் இன்று வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் பெற நினைக்கின்றனர். அவை அனைத்தும் இருந்தாலும் வாழ்க்கையில் நிம்மதி, ஒற்றுமை, அமைதியைத் தொலைத்து விட்டு செய்வதறியாமல் இருக்கிறோம். வெளியே சென்று வீட்டுக்குத் திரும்பும் பலரும் காலில் அணிந்து வரும் செருப்புடன் சந்தோஷத்தையும் வாசலிலேயே விட்டு விடுகின்றனர். வாழ்க்கையில் கணவன் - மனைவி இருவருமே புரிந்து நடந்து கொள்வதுதான் மகிழ்ச்சிக்கு மிகவும் அவசியமாகிறது. மனைவி தனது கணவனை, கண் அவனே என நினைக்கவேண்டும். இறந்த காலத்தின் குற்ற நிகழ்வுகளை ஒருவருக்கொருவர் எடுத்துக் காட்டியே வாழ்க்கையை பாழாக்கி வருகிறோம். அதை விடுத்து வருங்கால சந்தோஷத்துக்காக ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழவேண்டும். அப்போதுதான் வாழ்க்கைப் பயணம் இனிமையாக, மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற 100-க்கும் மேற்பட்ட தம்பதிகள் உயிர்க் கலப்பு தவம் செய்தனர்.
இதில், மனவளக்கலை மன்ற அறக்கட்டளை நிர்வாகிகள், பயிற்றுநர்கள், ஜெயந்தி பள்ளி முதல்வர்கள் ரோஸின் ஜோசப்,  சுரேஷ்நாதன்,  மணிகண்டன் மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/11/அருள்புரத்தில்-மனைவி-நல-வேட்பு-விழா-2788148.html
2788147 கோயம்புத்தூர் திருப்பூர் சுகாதாரச் சீர்கேட்டைத் தடுக்க போர்க்கால நடவடிக்கை வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் DIN DIN Wednesday, October 11, 2017 07:00 AM +0530 மாநகரம் முழுவதும் சுகாதாரச் சீர்கேட்டால் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு வருவதால் அதைத் தடுக்க போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ரவி தலைமையில், அந்தக் கட்சி நிர்வாகிகள் மாநகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த மனு விவரம்:
திருப்பூர் மாநகரில் குப்பைகள் சரிவர அள்ளப்படுவதில்லை. வீதிகள், தெருமுனைகளில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் குப்பைகள் முறையாக அகற்றப்படாததால் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. சாக்கடைக் கால்வாய்கள் தூர்வாரப்படுவதில்லை. சாலையோரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கி நிற்கும் நீர் உரிய நேரத்தில் அப்புறப்படுத்தப்படுவதில்லை. இதனால் திருப்பூர் மாநகரம் முழுவதும் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
இதனால் கொசுக்கள் பெருகியுள்ளன. மாநகரம் முழுவதும் டெங்கு, வைரஸ், மர்மக் காய்ச்சல்களால் குழந்தைகள், பெண்கள் உள்பட ஏராளமானோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனை மட்டுமல்லாது தனியார் மருத்துவமனைகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. பொது மக்கள் மத்தியில் அச்சமும், பீதியும் ஏற்பட்டுள்ளது.
எனவே, திருப்பூர் மாநகரம் முழுவதும் சுகாதாரச் சீர்க்கேட்டைப் போக்கிட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும். குப்பைகள், சாக்கடைக் கழிவு, பள்ளங்களில் நீர்த்தேக்கம் ஆகியவற்றை அப்புறப்படுத்துவதுடன், உரிய மருந்துகளை அனைத்துப் பகுதிகளிலும் தெளித்து கொசு உற்பத்தியை ஒழிக்கவேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/11/சுகாதாரச்-சீர்கேட்டைத்-தடுக்க-போர்க்கால-நடவடிக்கை-வேண்டும்-இந்திய-கம்யூனிஸ்ட்-கட்சி-வலியுறுத்தல்-2788147.html
2788146 கோயம்புத்தூர் திருப்பூர் புதிய திரைப்பட சி.டி.க்கள் பறிமுதல்: ஒருவர் கைது DIN DIN Wednesday, October 11, 2017 06:59 AM +0530 உடுமலையில் புதிய தமிழ்த் திரைப்பட சிடிக்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அண்மையில் வெளியான தமிழ்த் திரைப்படங்களின் சிடிக்கள் உடுமலையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், உடுமலை காவல் ஆய்வாளர் ஓம்பிரகாஷ் தலைமையில் போலீஸார் உடுமலை நகரில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, உடுமலை டிவி பட்டணம் அருகே உள்ள ஒரு கடையில் சோதனையிட்டபோது அங்கு கருப்பன், விவேகம், மகளிர் மட்டும், ஸ்பைடர் உள்ளிட்ட பல்வேறு  புதிய தமிழ்ப் படங்களின் சிடிக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுசம்பந்தமாக அதேபகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் மணி (23) என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 28 சிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/11/புதிய-திரைப்பட-சிடிக்கள்-பறிமுதல்-ஒருவர்-கைது-2788146.html
2788145 கோயம்புத்தூர் திருப்பூர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் தீ DIN DIN Wednesday, October 11, 2017 06:59 AM +0530 அவிநாசி அருகே, கருவலூரில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
அவிநாசி அருகே, கருவலூர் மாரியம்மன் கோயில் பின்புறம் பி.எஸ்.என்.எல். அலுவலகம் செயல்பட்டு வருகிறது.  அந்த அலுவலகத்தில் உள்ள ஜெனரேட்டரில் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது.  தகவலறிந்த அவிநாசி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும், அங்கிருந்த ஜெனரேட்டரின் ரேடியேட்டர் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து, அவிநாசி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/11/பிஎஸ்என்எல்-அலுவலகத்தில்-தீ-2788145.html
2788144 கோயம்புத்தூர் திருப்பூர் சாலைப் பாதுகாப்பு மோட்டார் வாகனச் சட்டத்துக்கு எதிர்ப்பு: ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் DIN DIN Wednesday, October 11, 2017 06:59 AM +0530 மத்திய அரசின் சாலைப் பாதுகாப்பு மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாவட்டத்தில் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் செவ்வாய்க்கிழமை ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு, சாலைப் பாதுகாப்பு மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்தை நவம்பர் மாதத்தில் நிறைவேற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் மோட்டார் வாகனத் தொழில் துறை பெருநிறுவனமயம் ஆக்கப்படுவதுடன், இத்தொழிலை நம்பிப் பிழைக்கும் சாதாரண, சிறு, குறு தொழில் துறையினர் கடும் நெருக்கடியைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
எனவே, மத்திய அரசின் சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்டோபர் 10-ஆம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்ள உள்ளதாக திருப்பூர் மாவட்ட ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஏற்கெனவே அறிவித்திருந்தனர்.
அதன்படி, திருப்பூர், பல்லடம், அவிநாசி, உடுமலை, காங்கயம், வெள்ளக்கோவில், தாராபுரம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள 120-க்கும் மேற்பட்ட ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் செவ்வாய்க்கிழமை ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக திருப்பூர் வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திருப்பூர் மாவட்ட இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர் நலச் சங்கத் தலைவர் டி.ரத்தீஷ்குமார் தலைமை வகித்தார். செயலாளர் ஆர்.சிவசுப்பிரமணியம், பொருளாளர் ஆர்.அன்பழகன் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளானோர் பங்கேற்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/11/சாலைப்-பாதுகாப்பு-மோட்டார்-வாகனச்-சட்டத்துக்கு-எதிர்ப்பு-ஓட்டுநர்-பயிற்சிப்-பள்ளி-உரிமையாளர்கள்-வேல-2788144.html
2788143 கோயம்புத்தூர் திருப்பூர் டெங்குவை தடுக்க திட்டமிட்டுப் பணியாற்ற வேண்டும்: டெங்குவை தடுக்க திட்டமிட்டுப் பணியாற்ற வேண்டும் DIN DIN Wednesday, October 11, 2017 06:58 AM +0530 டெங்குவைத் தடுக்க, வரும் முன் காக்கும் வகையில் அனைத்துப் பகுதிகளிலும் திட்டமிட்டுப் பணியாற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
ஊரக வளர்ச்சித் துறையின் மூலமாக டெங்கு ஒழிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு தொடர்பான சுகாதாராப் பணிகள் குறித்து இக்கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:
மாநகராட்சிப் பகுதியில் மண்டல வாரியாக குழு நியமித்து கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்வதுடன், குடிநீர் வழங்கும் மேல்நிலைத் தொட்டிகள் சரியான காலகட்டங்களில் சுத்தம் செய்து, குளோரினேஷன் செய்யப்பட்டு, தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறதா என்பதை உறுதி செய்யவேண்டும்.
அதேபோல எந்தப் பகுதியில் காய்ச்சல் அதிகமாக உள்ளது என்பதைத் தெரிந்து அங்கு போர்க்கால அடிப்படையில் தூய்மைப் பணி மேற்கொள்ளவேண்டும். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பதிவேட்டில் காய்ச்சல் தொடர்பாக சிகிச்சை பெற, ஒரே பகுதியில் இருந்து அதிக அளவு வருவதாகக் கண்டறியப்பட்டால், அங்கு சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்து, தேவையான சிகிச்சைகளை வழங்கவேண்டும். பள்ளிகளில் மாணவர்களின் வருகையைக் கண்காணிக்க வேண்டும். குடியிருப்புப் பகுதிகளில் காய்ச்சல் அறிகுறிகளை அப்பகுதிகளில் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழு மூலமாகக் கண்காணித்து அறியலாம்.
அனைத்துப் பகுதிகளிலும் தூய்மைப் பணியில் அதிக கவனம் செலுத்தவேண்டும். தூய்மைப் பகுதிகளை முழுமையாக மேற்கொள்ளவேண்டும். தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும்போது எந்தப் பகுதியிலும் குப்பைகள் சிறிதளவு கூட சேராத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். பொது மக்களும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்.
கிராமங்களில், கிராம உதவியாளர்கள் அவ்வப்போது கண்காணித்து, யாருக்கேனும் காய்ச்சல் இருப்பதாகக் கண்டறிந்தால், உடனடியாக சுகாதாரத் துறைக்கு தெரியப்படுத்தவேண்டும். அதேபோல, பொது சுகாதாரத் துறையும் தீவிரமாகக் கண்காணிப்பதுடன், தேவையான முன்னெச்சரிக்கைப் பணிகளை மேற்கொள்ளவேண்டும்.
ஒரு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டு அதன்பின் நடவடிக்கைகள் மேற்கொள்வதைவிட, வரும் முன்னரே அனைத்துப் பகுதிகளிலும் திட்டமிட்டுப் பணியாற்ற வேண்டும். ஒவ்வொரு அலுவலரும், பணியாளரும் இந்தப் பணியைத் தங்களது தலையாய கடமையாக எண்ணிச் செயல்பட்டால் கண்டிப்பாக முழுமையான வெற்றியைப் பெறமுடியும் என்றார்.
இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஜெயந்தி, மகளிர் திட்ட இயக்குநர் மைக்கேல் மற்றும் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/11/டெங்குவை-தடுக்க-திட்டமிட்டுப்-பணியாற்ற-வேண்டும்-டெங்குவை-தடுக்க-திட்டமிட்டுப்-பணியாற்ற-வேண்டும்-2788143.html
2788142 கோயம்புத்தூர் திருப்பூர் காரணம்பேட்டையில் 8 மணல் லாரிகள் பறிமுதல் DIN DIN Wednesday, October 11, 2017 06:58 AM +0530 பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில், கலப்பட மணல் ஏற்றி வந்ததாகச் சந்தேகப்படும் 8 லாரிகளை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
பல்லடம், காரணம்பேட்டையில் கலப்பட மணல் விற்பனை செய்யப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், பல்லடம் வட்டாட்சியர் சுப்பிரமணியம் தலைமையில் வருவாய்த் துறையினர் திங்கள்கிழமை லாரிகளை ஆய்வு செய்தனர்.
ஆய்வில் அது கலப்பட மணல்போல இருந்ததால் 8 லாரிகளையும் பறிமுதல் செய்து, பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டுசென்றனர்.
அதைத்தொடர்ந்து,  கனிம வளத் துறையினர் அந்த மணலை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர். பரிசோதனைக்குப் பின்னரே அந்த மணல் குறித்த உண்மைத் தன்மை தெரியவரும்
என்றனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/11/காரணம்பேட்டையில்-8-மணல்-லாரிகள்-பறிமுதல்-2788142.html
2788141 கோயம்புத்தூர் திருப்பூர் வெள்ளக்கோவில் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் நூற்பாலைக் கழிவுநீர்: விவசாயிகள் புகார் DIN DIN Wednesday, October 11, 2017 06:58 AM +0530 வெள்ளக்கோவில் அருகே பி.ஏ.பி.வாய்க்காலில் நூற்பாலைக் கழிவுநீர் வெளியேற்றப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளக்கோவில், காங்கயம் சாலையில் உள்ள வெள்ளமடை வழியாக பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன வாய்க்கால் செல்கிறது. தற்போது அணையில் இருந்து பாசன வாய்க்கால்களுக்குத் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வெள்ளமடையில் இருந்து பிரிந்து செல்லும் 2 கிலோ மீட்டர் நீளமுள்ள கிளை வாய்க்கால் மூலமாக வெள்ளமடை, மொட்டக்காடு, பனங்காடு, வேலகவுண்டன்பாளையம், இரட்டைக்கிணறு பகுதி விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்தக் கிளை வாய்க்காலையொட்டி, வெள்ளமடையில் பழனிசாமி என்பவருக்குச் சொந்தமான நூற்பாலை உள்ளது. நூற்பாலைக் குடியிருப்புகளில் பல தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கியுள்ளனர்.
இந்தக் குடியிருப்புகளின் சாக்கடை நீர் மற்றும் நூற்பாலையின் கழிவுநீர் குழாய்கள் மூலமாக வாய்க்காலில் விடப்படுகின்றன.  இதனால் மாசடைந்த வாய்க்கால் நீரை பாசனத்துக்கும், குடிநீருக்கும் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, அப்பகுதி விவசாயிகள் ராமசாமி, வடக்கத்தியார் சதாசிவம் ஆகியோர் கூறியதாவது:
நூற்பாலையிலிருந்து குழாய் அமைத்து கழிவுநீரை வாய்க்காலில் விடுகின்றனர்.  இதை நிறுத்த வேண்டுமென வலியுறுத்தியும் ஆலை நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. வெள்ளக்கோவில் பி.ஏ.பி.வாய்க்கால் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.  எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இப்பிரச்சனை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/11/வெள்ளக்கோவில்-அருகே-பிஏபி-வாய்க்காலில்-நூற்பாலைக்-கழிவுநீர்-விவசாயிகள்-புகார்-2788141.html
2788140 கோயம்புத்தூர் திருப்பூர் ஜி.எஸ்.டி. குறைப்பு: தொழில் துறையினர் வரவேற்பு DIN DIN Wednesday, October 11, 2017 06:57 AM +0530 மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி குறைப்பு நடவடிக்கைக்கு, தென்னிந்திய காலர் சர்ட் மற்றும் உள்ளாடை சிறு தொழில் முனைவோர் சங்கம் (சிஸ்மா) வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சிஸ்மா பொதுச் செயலாளர் கே.எஸ்.பாபுஜி மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லிக்கு எழுதியுள்ள கடிதம்:
ஜி.எஸ்.டி. 22-ஆவது கவுன்சில் கூட்டத்தில் சிறு,குறு, நடுத்தரத் தொழில் மற்றும் ஏற்றுமதியாளர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக ரூ. 1 கோடி முதல் ரூ. 1.5 கோடி வரை சிறு, நடுத்தரத் தொழிலகங்கள் மாதம் ஒருமுறை கணக்குத் தாக்கல் செய்வதற்கு பதிலாக, மூன்று மாதத்துக்கு ஒருமுறை தாக்கல் செய்யலாம் என்ற அறிவிப்பும், ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ. 75 லட்சத்தில் இருந்து ஒரு கோடி ரூபாயாக உயர்த்தியிருப்பதும், ஏற்றுமதியாளர்கள் கணக்குத் தாக்கல் செய்ய வசதியாக ஒவ்வொருவருக்கும் பிரத்யேக இ-வாலட் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு, ஏற்றுமதியாளர்களுக்கு ஐ.ஜி.எஸ்.டி.யில் இருந்து 6 மாதங்களுக்கு விலக்கு அளிக்க அறிவிப்பு செய்திருப்பது, 27 பொருள்களுக்கு வரி குறைப்பு செய்திருப்பது ஆகியவை வரவேற்புக்கு உரியவை.
அதேநேரத்தில், ரூ. 75 லட்சத்தில் இருந்து ஒரு கோடி ரூபாய் வரை வர்த்தம் செய்யும் வர்த்தகர் பட்டியலில், சிறு,குறு பின்னலாடைத் துறையினரையும் இணைத்துப் பயன்பெறும் வகையில், ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் நகை வாங்குவோருக்கு பான், ஆதார் அட்டைகள் தேவையில்லை என்ற வரம்பை ரூ. 2 லட்சமாக உயர்த்தவேண்டும். குளிர்சாதன வசதி உணவகங்களைத் தவிர்த்து சாதாரண உணவகங்களில் ஐ.ஜி.எஸ்.டி. தவிர்த்து ஜி.எஸ்.டி. 2 சதவீதம் விதிக்க ஆவன  செய்ய வேண்டும்.
மத்திய அரசானது சாதக, பாதகங்களை மக்கள் குரலோடு ஒப்பிட்டு, பல மாற்றங்களைச் செய்து வருவது பின்னலாடைத் துறை மற்றும் தொழிலாளர்களிடையே நம்பிக்கையை வலுப்பெறச் செய்துள்ளது. அடுத்து மேற்கொள்ளப்படும் முடிவுகளில், மக்கள் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கான வரிவிகிதாசாரத்தைக் கணக்கிட்டு, வரிச் சுமைகளைக் குறைப்பதுடன் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் வளர்ச்சி சரிவடையாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பிலும் மத்திய அரசின் அறிவிப்பை வரவேற்று அதன் தலைவர் ராஜா எம்.சண்முகம் மத்திய நிதி அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/11/ஜிஎஸ்டி-குறைப்பு-தொழில்-துறையினர்-வரவேற்பு-2788140.html