Dinamani - நீலகிரி - http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2963065 கோயம்புத்தூர் நீலகிரி உதகை அருகே இளம்பெண் மரணத்தில் மர்மம்: உடலை வாங்க மறுத்து கிராம மக்கள் போராட்டம் DIN DIN Thursday, July 19, 2018 07:31 AM +0530 தொரையட்டி கிராமத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டதாகக் கூறி, அவரது கணவர் குடும்பத்தினரை கைது செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உதகை அருகிலுள்ள தொரையட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு, உதகையில்  தனியார் விடுதி ஒன்றில் வேலை செய்து வருகிறார்.  இவருக்கும் இடுஹட்டி பகுதியைச் சேர்ந்த ஷோபனாவுக்கும் 2011ஆம் ஆண்டில் திருமணம் நடந்து, 5 வயதில் சச்சின் என்ற மகன் உள்ளான். 
பிரபுவுக்கு திருமணத்துக்கு முன்னரே தேனாடுகம்பை பகுதியைச் சேர்ந்த தீனா என்ற பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. இந்தத் தொடர்பு திருமணத்துக்குப் பின்னரும் தொடர்ந்துள்ளது.  
இந்நிலையில், பிரபுவுக்கும், ஷோபனாவுக்கும் இடையே அடிக்கடி சச்சரவு ஏற்பட்டது. ஷோபனா கோபித்துக்கொண்டு  தாய் வீட்டுக்கு வந்து விடுவதும்,  சமரசம் செய்த பின்னர் கணவன் வீட்டுக்குத் திரும்புவதுமாக இருந்து வந்தது.
கடந்த சில நாள்களுக்கு முன்னர் பிரபுவின் செல்போனிலிருந்து ஷோபனாவிடம் பேசிய தீனா, தானே அவரது உண்மையான மனைவி என்று பேசியதாகக் கூறப்படுகிறது. 
அதனால் மனமுடைந்த ஷோபனா மீண்டும் தனது தாய் வீட்டுக்கு வந்ததோடு, இதுதொடர்பாக தேனாடுகம்பை காவல் நிலையத்திலும் புகார் செய்துள்ளார்.
இப்புகாரை விசாரித்த தேனாடுகம்பை போலீஸார், பிரபு - ஷோபனா இருவரையும் வரவழைத்து சமரசம் செய்து வைத்தனர். கடந்த வாரம் பிரபுவின் வீட்டுக்கு ஷோபனா திரும்பியுள்ளார். ஆனால், அதன் பின்னரும் இருவரிடையே சர்ச்சை தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது. 
இப்பிரச்னை செவ்வாய்க்கிழமை இரவு வலுத்த நிலையில்,   பிரபு, அவரது தந்தை மணிகண்டன் மற்றும் குடும்பத்தார் ஷோபனாவின் கழுத்தை நெரித்துத் தாக்கியதாகவும்,  பின்னர் அவர்கள் அனைவரும் வீட்டிலிருந்து வெளியேறியதாகவும்  கூறப்படுகிறது. 
சற்றுநேரத்தில் அந்த வீட்டிலேயே ஷோபனா தூக்கில் தொங்கி இறந்த நிலையிலிருப்பதை அவ்வழியாகச் சென்றவர்கள்  பார்த்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கு வந்த தேனாடுகம்பை போலீஸார், ஷோபனாவின் உடலைக் கைப்பற்றி உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  
இந்நிலையில் ஷோபனாவின் மரணத்துக்குக் காரணமான  கணவர் பிரபு, அவரது தந்தை மணிகண்டன், பிரபுவின் தாய் சின்னம்மாள், பிரபுவின் சகோதரர் முருகேசன் ஆகியோரையும்,  தேனாடுகம்பையைச் சேர்ந்த இளம்பெண்  தீனாவையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை அதிகாலையிலிருந்தே உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரேதப் பரிசோதனை முடிவுற்ற பின்னரும், ஷோபனாவின் உடலை வாங்க மறுத்து அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து கிராம மக்களுடன் காவல் துறையினர் சமரசப் பேச்சு நடத்தினர். இறுதியில், ஷோபனாவின் கணவர் பிரபு, அவது தந்தை மணிகண்டன், தாய் சின்னம்மாள், சகோதரர் முருகேசன், இளம்பெண் தீனா ஆகிய 5 பேர் மீதும்  கொலை முயற்சி, மிரட்டல், துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்தனர்.
இவர்களில் பிரபு, மணிகண்டன் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். தீனா தலைமறைவாகி விட்டார். இதையடுத்து ஷோபனாவின் உடல் அவரது  ஊரான இடுஹட்டிக்குக் கொண்டு செல்லப்பட்டது. 
இந்தச் சம்பவம் தொடர்பாக, தொரையட்டி, இடுஹட்டி, தேனாடுகம்பை கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் உதகை மருத்துவமனையில் குவிந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/19/உதகை-அருகே-இளம்பெண்-மரணத்தில்-மர்மம்-உடலை-வாங்க-மறுத்து-கிராம-மக்கள்-போராட்டம்-2963065.html
2963064 கோயம்புத்தூர் நீலகிரி ஆபாச உரையாடல் வெளியானதால் கல்லூரி விரிவுரையாளர்கள் இருவர் நீக்கம் DIN DIN Thursday, July 19, 2018 07:31 AM +0530 பெண்களைப் பற்றிய ஆபாச உரையாடல் வெளியானதால் இரண்டு விரிவுரையாளர்களை பாரதியார் பல்கலைக்கழக நிர்வாகம் பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூரில் இயங்கிவரும் பாரதியார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி தற்போது அரசு கலைக் கல்லூரியாக மாற்றப்பட்டுள்ளது. 
இந்தக் கல்லூரியில் அலுவலகப் பணியாளர்கள், விரிவுரையாளர்கள் பெரும்பாலானோரை  தொகுப்பூதிய அடிப்படையில் பல்கலைக்கழகம் நியமித்துள்ளது.
இரண்டு  மாதங்களுக்கு முன் இந்தக் கல்லூரியில் பணியாற்றிய இரண்டு விரிவுரையாளர்கள் பெண்களைப் பற்றி ஆபாசமாக உரையாடியதன் ஒலிப்பதிவு கட்செவி அஞ்சலில் வெளியானது. 
இதனால் கல்லூரியிலுள்ள மாணவிகளும் பெண் விரிவுரையாளர்களும் அதிர்ச்சியடைந்தனர். சில பெண்களின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். காவல் துறையினரின் விசாரணையும் நடைபெற்றது. 
தொகுப்பூதிய அடிப்படையில் பணியிலுள்ள விரிவுரையாளர்களை 180 நாள்களுக்கு ஒருமுறை பல்கலைக்கழக நிர்வாகம் பணி முறிவு செய்து விடுமுறைக்குப் பிறகு மீண்டும் பணியில் சேர்ப்பது வழக்கம். 
அவ்வாறு தற்போது பணிமுறிவு செய்து அனைத்து அலுவலகப் பணியாளர்களையும் விரிவுரையாளர்களையும் பல்கலைக்கழக நிர்வாகம் மீண்டும் பணியில் சேர்த்துக் கொண்டது. 
ஆனால், ஆபாச உரையாடலில் தொடர்புடைய இரண்டு விரிவுரையாளர்களை மட்டும் மீண்டும் பணியில் சேர அனுமதிக்காமல் விடுவித்து நடவடிக்கை எடுத்துள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/19/ஆபாச-உரையாடல்-வெளியானதால்-கல்லூரி-விரிவுரையாளர்கள்-இருவர்-நீக்கம்-2963064.html
2963062 கோயம்புத்தூர் நீலகிரி எமரால்டு, அவலாஞ்சி பகுதிகளில் தொடர்கிறது பலத்த மழை DIN DIN Thursday, July 19, 2018 07:31 AM +0530 மஞ்சூர் அருகே எமரால்டு, அவலாஞ்சி சுற்றுவட்டாரப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.  
மஞ்சூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக சூறாவளிக் காற்றுடன் பரவலான மழை பெய்து வருகிறது. 
இதனால் மஞ்சூரில் இருந்து கிண்ணக்கொரை, கெத்தை, தங்காடு, பிக்கட்டி, அவலாஞ்சி, எமரால்டு, கெத்தை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் சாலையோரங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. 
மேலும், சாலையோர மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றன. 
கடந்த புதன்கிழமை, இத்தலார், நஞ்சாடு, கோத்தகண்டி மட்டம், எல்ல கண்டி, அவலாஞ்சி, எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளியுடன் கூடிய மழையின் தாக்கம் அதிகமாக இருந்தது. 
இதனால் சாலையோரத்தில் பல இடங்களில் மண் சரிவுடன், சிறு மரங்கள் முறிந்து விழுந்து வருகின்றன. அவற்றை நெடுஞ்சாலைத் துறையினர் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/19/எமரால்டு-அவலாஞ்சி-பகுதிகளில்-தொடர்கிறது-பலத்த-மழை-2963062.html
2963061 கோயம்புத்தூர் நீலகிரி 5 பேரூராட்சிகளுக்கு குப்பை சேகரிப்பு வாகனம் வழங்கல் DIN DIN Thursday, July 19, 2018 07:30 AM +0530 நீலகிரி மாவட்டத்திலுள்ள 5 பேரூராட்சிகளுக்கு குப்பை சேகரிக்கும் வாகனங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ் குப்பைகளை எடுத்துச் செல்ல வசதியாக, நடுவட்டம், பிக்கட்டி, சோலூர், ஓவேலி ஆகிய 4 பேரூராட்சிகளுக்கு தலா ஒரு வாகனத்தையும், கேத்தி பேரூராட்சிக்கு இரண்டு வாகனங்களையும் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா புதன்கிழமை வழங்கினார் . 
பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ராஜகோபால், கேத்தி பேரூராட்சி செயல் அலுவலர் நடராஜ் ஆகியோர் அப்போது உடன் இருந்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/19/5-பேரூராட்சிகளுக்கு-குப்பை-சேகரிப்பு-வாகனம்-வழங்கல்-2963061.html
2963060 கோயம்புத்தூர் நீலகிரி நீலகிரி மாவட்டத்தில் ஓய்ந்தது மழை: உதகையில் இயல்பு வாழ்க்கை திரும்பியது DIN DIN Thursday, July 19, 2018 07:30 AM +0530 நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 நாள்களாகப் பெய்து வந்த வந்த தொடர் மழை பெரும்பாலான பகுதிகளில் ஓய்ந்துள்ளது. புதன்கிழமை பகலில் மழைப்பொழிவு இல்லாததால், உதகையில் மக்களின் வழக்கமான இயல்பு வாழ்க்கை திரும்பியது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த வாரத்தில் தொடர்ந்து 4 நாள்கள் பலத்த காற்றுடன் பெய்த மழையால், மஞ்சூர், கூடலூர், உதகை ஆகிய பகுதிகளில் மரம் விழுந்து நான்கு பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.  
செவ்வாய்க்கிழமை இரவில் மழை பெய்த நிலையில், புதன்கிழமை மழை ஓய்ந்தது. மேகமூட்டத்துடன் கூடிய  காலநிலை நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.
நீலகிரி மாவட்டத்தில் புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மேல் பவானியில் 74 மி.மீ. மழை பதிவானது. 
மேலும் மழைப்பொழிவு விவரம் (மி.மீ.):
அவலாஞ்சி- 54, நடுவட்டம்- 41,  கிளன்மார்கன்- 34,  தேவாலா- 31,  கூடலூர்- 19,  எமரால்டு- 13,  கல்லட்டி- 5,   குன்னூர்- 4.2,  உதகை- 4.1,  கோத்தகிரி- 3.2,  பர்லியாறு, குந்தா- 3,  கெத்தை- 2,  கேத்தி-1.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/19/நீலகிரி-மாவட்டத்தில்-ஓய்ந்தது-மழை-உதகையில்-இயல்பு-வாழ்க்கை-திரும்பியது-2963060.html
2963059 கோயம்புத்தூர் நீலகிரி வங்கிக் கடன் முறைகேடு: விடுதி முன்பு மக்கள் முற்றுகை DIN DIN Thursday, July 19, 2018 07:30 AM +0530 உதகையில் வங்கிக் கடன் மோசடி தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மோசடியில் தொடர்புடையவரின் விடுதி முன்பு, முற்றுகையிட்டு பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம் நடத்தினர்.
நீலகிரி மாவட்டத்தில் கொய்மலர் சாகுபடிக்காக வங்கிகளிடமிருந்து கடன் வாங்கித் தருவதாகக் கூறி ராஜன் என்பவர் உதகையிலுள்ள பாங்க் ஆஃப் இந்தியா கிளையில் ரூ. 18 கோடி வரை மோசடி செய்ததோடு,  தலைமறைவாகிவிட்டார். இதுதொடர்பாக சிபிஐ போலீஸார் விசாரித்து வருகின்றனர். 
இந்நிலையில்,   உதகையிலுள்ள ராஜனுக்குச் சொந்தமான தங்கும் விடுதியை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனர் .  
அங்கு வந்த போலீஸார் இப்பிரச்னை சிபிஐ வசமுள்ளதோடு,  இக்கட்டடத்திற்கும் "சீல்' வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினர்.  எனவே அங்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியில்லை என்று கூறி அவர்களைத் திருப்பி அனுப்பினர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/19/வங்கிக்-கடன்-முறைகேடு-விடுதி-முன்பு-மக்கள்-முற்றுகை-2963059.html
2963058 கோயம்புத்தூர் நீலகிரி விழிப்புணர்வுப் பேரணி DIN DIN Thursday, July 19, 2018 07:29 AM +0530 மஞ்சூர் அருகிலுள்ள நஞ்சநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 31 தனி அணி என்சிசி அமைப்பு சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வுப் பேரணி நடத்தப்பட்டது. 
இந்தப் பேரணியை பள்ளித் தலைமை ஆசிரியர் அசோக்குமார் துவக்கி வைத்தார். என்சிசி அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில் 100 என்சிசி மாணவர்கள் பள்ளியில் துவங்கி,  அருகிலுள்ள கிராமங்களான நரிக்குழி ஆடா, எல்லக்கண்டி, மொட்டோரை, கக்கன்சி காலனி ஆகிய பகுதிகளுக்குச் சென்று பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை தவிர்க்குமாறு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 
நீலகிரியை அழகிய மாவட்டமாக மாற்ற காகித டம்ளர், பிளாஸ்டிக் ஆகியவற்றை உபயோகிக்க மாட்டோம் என என்சிசி மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். இந்தப் பேரணியில் ராணுவ வீரர்கள் சுபேதார் சந்தோஷ், ராஜேஷ், ஆசிரியர்கள் சசி, வேலாயுதம் ஆகியோரும் பங்கேற்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/19/விழிப்புணர்வுப்-பேரணி-2963058.html
2963057 கோயம்புத்தூர் நீலகிரி பழங்குடியினருக்கு மூலிகை சிறப்புப் பயிற்சி அளிக்க நீதி ஆயோக் குழுவினர் கோத்தகிரியில் ஆலோசனை DIN DIN Thursday, July 19, 2018 07:29 AM +0530 பழங்குடியினருக்கு மூலிகை தொடர்பான சிறப்புப் பயிற்சி அளிப்பது தொடர்பாக, நீதி ஆயோக் அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் கோத்தகிரியில் நடத்தப்பட்டது.
மத்திய அரசின் நீதி ஆயோக் அமைப்பின் சார்பில் "அடல் புதிய கண்டுபிடிப்புகள் திட்டம்' செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 2,000 பழங்குடியின பயனாளிகளுக்கு மூலிகை தொடர்பான நுண்ணறிவு, அது தொடர்பான சிறப்புப் பயிற்சிகளை அளித்து,  அவர்கள் அனைவரையும் தொழில் முனைவோராக மாற்றி வருகின்றனர்.  
இத்திட்டத்தின்கீழ் மூலிகை சம்பந்தப்பட்ட தொழில் தொடர்பான வாழ்வாதாரம் பெருக வழிவகை செய்யப்படுகிறது. 
இந்தத் திட்டத்தை கோத்தகிரியில் நாவா அமைப்பின் மூலம் செயல்படுத்துவது தொடர்பாக, நீதி ஆயோக் சார்பில்  புதன்கிழமை சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. 
இக்கூட்டத்தில் ஐசிஏஆர் அமைப்பின் மூத்த விஞ்ஞானி குமாரவடிவேலு,  ஜேஎஸ்எஸ் மருந்தாக்கியல் கல்லூரியின் முதல்வர் தனபால், பழங்குடியினர் நலத் துறை தனி அலுவலர் குமாரராஜா, டைபேக் அமைப்பின் சார்பில் சுரேஷ்குமார்,  சிபிஎம் முன்னாள் மாவட்டத் தலைவர் பத்ரி ஆகியோருடன், மத்திய அரசின் ஆலோசகர் டாக்டர் சுதர்சன் தலைமையிலான குழுவினரும்,  நாவா அமைப்பின் செயலாளர் ஆல்வாஸ், பண்டைய பழங்குடியினர் நலச்சங்கத்தின் செயலாளர் புஷ்பகுமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/19/பழங்குடியினருக்கு-மூலிகை-சிறப்புப்-பயிற்சி-அளிக்க-நீதி-ஆயோக்-குழுவினர்-கோத்தகிரியில்-ஆலோசனை-2963057.html
2963056 கோயம்புத்தூர் நீலகிரி கோத்தகிரி காம்பாய் கடைப் பகுதி ஓடையில் தூர்வாரக் கோரிக்கை DIN DIN Thursday, July 19, 2018 07:29 AM +0530 கோத்தகிரி, காம்பாய் கடை பகுதியில் உள்ள ஓடைகளைத்  தூர்வார வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
கோத்தகிரி, காம்பாய் கடை ஓடையில்  மாரியம்மன் லைன், ராம்சந்த் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகளில் இருந்து வெளியேறும்  கழிவுநீரும் இந்த ஓடையில்தான் கலக்கிறது. 
பேரூராட்சி நிர்வாகம் ஓடையை தூர்வாராததால், ஓடை முழுவதும் குப்பைகள் தேங்கியும், முள்புதர்கள் மண்டியும் கிடக்கிறது. இதனால் பல இடங்களில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.  
எனவே இந்த ஓடையைத் தூர்வார வேண்டும் என்று இப் பகுதி மக்கள் கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/19/கோத்தகிரி-காம்பாய்-கடைப்-பகுதி-ஓடையில்-தூர்வாரக்-கோரிக்கை-2963056.html
2963055 கோயம்புத்தூர் நீலகிரி மீக்கேரி கிராமத்தில் புலி நடமாட்டம்: ஒலிபெருக்கி மூலம் வனத் துறையினர் எச்சரிக்கை DIN DIN Thursday, July 19, 2018 07:29 AM +0530 மஞ்சூர் அருகே மீக்கேரி கிராமத்தில் புலி நடமாட்டம் இருப்பதால் வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாமென ஒலிபெருக்கி மூலம் வனத் துறையினர் எச்சரித்துள்ளனர். 
மஞ்சூர் அருகே காத்தாடிமட்டம், பி.மணியட்டி, மீக்கேரி, பரமூலை உள்ளிட்ட கிராமங்கள், அடர்ந்த தேயிலைத் தோட்டம், வனப்பகுதி, விளைநிலங்கள் நிறைந்ததாக உள்ளன. இப்பகுதிகளில் சுமார் 2,000 வீடுகள் உள்ளன. அருகிலுள்ள வனத்தில் இருந்து உணவு, குடிநீர் தேடி கரடி, காட்டெருமை, சிறுத்தை, புலி, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் இப்பகுதியில் ஊடுருவி பொதுமக்களையும் விவசாயிகளையும் அச்சுறுத்தி வருகின்றன. 
கடந்த் 2 வாரங்களாக பி.மணியட்டி கிராம சுற்றுவட்டாரத்தில் புலி ஒன்று உலவுகிறது. இந்நிலையில் காத்தாடிமட்டம் - பி.மணியட்டி சாலையின் இடையே மீக்கேரி கிராமத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள இடத்தில் புலியைக் கண்ட கிராம மக்கள் அச்சத்துடன் ஓட்டமெடுத்தனர். 
இதுகுறித்து தகவலறிந்த வனத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். அதன்பின், புலியின் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் யாரும் தனியாக வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வனத் துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/19/மீக்கேரி-கிராமத்தில்-புலி-நடமாட்டம்-ஒலிபெருக்கி-மூலம்-வனத்-துறையினர்-எச்சரிக்கை-2963055.html
2963054 கோயம்புத்தூர் நீலகிரி ஆபத்தான மரங்கள் எவை? கூடலூரில் கணக்கெடுப்பு DIN DIN Thursday, July 19, 2018 07:28 AM +0530 கூடலூர் பகுதியில் உள்ள ஆபத்தான மரங்கள் குறித்து கணக்கெடுப்புப் பணி நடைபெறுகிறது.
கூடலூர் கோட்டத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பேரிடரை த் தவிர்க்க சாலையோரங்களிலும் குடியிருப்புப் பகுதிகளுக்கு மேலும் விழும் நிலையில் உள்ள ஆபத்தான மரங்களை அகற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக வருவாய்த் துறை சார்பில் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது.
அந்தந்தப் பகுதியில் உள்ள மக்கள் ஆபத்தான மரங்கள் தங்களது பகுதியில் இருந்தால் வருவாய்த் துறைக்கு தகவல் தெரிவித்து,  அவற்றை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/19/ஆபத்தான-மரங்கள்-எவை-கூடலூரில்-கணக்கெடுப்பு-2963054.html
2963053 கோயம்புத்தூர் நீலகிரி தொரப்பள்ளி பஜாருக்குள் மீண்டும் உலவும் யானை DIN DIN Thursday, July 19, 2018 07:28 AM +0530 தொரப்பள்ளி பஜாருக்குள் புதன்கிழமை காலை 8 மணியளவில் மீண்டும் ஒற்றை யானை நுழைந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியிலுள்ள தொரப்பள்ளியில் தொடர்ந்து யானைகள் அட்டகாசம் செய்து வருகின்றன. செவ்வாய்க்கிழமை காலை மதரசாவுக்குச் சென்ற மாணவர்களை யானை விரட்டியதால் அப்பகுதி மக்கள் ஒன்றுகூடி சாலை மறியிலில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. அன்றிரவு மீண்டும் அப்பகுதிக்கு வந்த யானை பல இடங்களுக்குச் சென்றுவிட்டு மீண்டும் காட்டுக்குள் சென்றது. திடீரென புதன்கிழமை காலை 8 மணியளவில் தொரப்பள்ளி பஜாருக்குள் நுழைந்த ஒற்றை யானை தேசிய நெடுஞ்சாலையில் பிளிறியபடி சென்றது. 
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் யானை தானாகவே காட்டுக்குள் சென்றுவிட்டது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/19/தொரப்பள்ளி-பஜாருக்குள்-மீண்டும்-உலவும்-யானை-2963053.html
2963052 கோயம்புத்தூர் நீலகிரி குன்னூர் மலைப் பாதையில் காட்டு யானைகள் நடமாட்டம் DIN DIN Thursday, July 19, 2018 07:28 AM +0530 குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மலைப் பாதையில் பலாப் பழங்களைச் சுவைக்க முகாமிட்ட யானைகள் புதன்கிழமை சாலைக்கு வந்து சென்றன.
நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியில் தற்போது பலாப் பழ சீசன் துவங்கியுள்ளது. இதனால் ஈர்க்கப்படும் காட்டு யானைகள் சமவெளிப் பகுதிகளிலிருந்து குன்னூர் மலைப் பாதைக்குப் படையெடுக்கின்றன. 
குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் கே.என்.ஆர். பகுதியில் உணவு தேடி வந்த குட்டியுடன் கூடிய 2 காட்டு யானைகள், தேசிய நெடுஞ்சாலையைக்  கடந்து அருகிலுள்ள வனப் பகுதிக்குச் சென்று  வருவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.  
இந்தக் காட்டு யானைகளை சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுக்க முயற்சிக்க வேண்டாம் என்று வனத் துறையினர்  எச்சரித்துள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/19/குன்னூர்-மலைப்-பாதையில்-காட்டு-யானைகள்-நடமாட்டம்-2963052.html
2962280 கோயம்புத்தூர் நீலகிரி குள்ளங்கரைப் பகுதிக்கு இரவு நேரப் பேருந்தை இயக்க கோரிக்கை DIN DIN Wednesday, July 18, 2018 06:10 AM +0530 கோத்தகிரியிலிருந்து சோலூர்மட்டம் குள்ளங்கரை பகுதிக்கு இரவு நேரத்தில் இயக்கப்பட்டு வந்த அரசுப் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என  அப்பகுதி மக்கள்  கோரிக்கை  விடுத்துள்ளனர். 
கோத்தகிரி அருகே, சோலூர்மட்டம் பகுதியிலுள்ள குள்ளங்கரை, கண்டிபட்டி, சீகைக்காடு, ஆணைக்கல் உள்ளிட்ட ஆதிவாசிக் கிராமங்களில் சுமார் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சோலூர்மட்டத்திலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ள குள்ளங்கரைப் பகுதிக்கு இயக்கப்பட்டு வந்த அரசுப் பேருந்து இரவு அப்பகுதியிலேயே நிறுத்தப்படும். பின்னர் அடுத்தநாள் காலை 6 மணிக்கு குள்ளங்கரையில் இருந்து சோலூர்மட்டத்துக்கு செல்லும்.
கடந்த 2 ஆண்டு காலமாக இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்ட இந்த பேருந்து எவ்வித காரணமும் இல்லாமல் நிறுத்தி வைத்துள்ளனர். காலை மற்றும் மாலை என இருமுறை மட்டுமே இந்தப் பேருந்து இயக்கப்பட்டு வருவதால் இரவு நேரங்களில் 12 கி.மீ தொலைவுக்கு ஆதிவாசிகள் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், வன விலங்குகளின் நடமாட்டத்தால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். 
எனவே,  ஆதிவாசி மக்களின் நலன் கருதி ஏற்கெனவே குள்ளங்கரைக்கு இரவு நேரத்தில் பேருந்தை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/18/குள்ளங்கரைப்-பகுதிக்கு-இரவு-நேரப்-பேருந்தை-இயக்க-கோரிக்கை-2962280.html
2962279 கோயம்புத்தூர் நீலகிரி பி.மணியட்டி கிராமத்தில் சுற்றித் திரியும் புலி DIN DIN Wednesday, July 18, 2018 06:10 AM +0530 நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகே பி.மணியட்டி கிராமத்தில் நடமாடி வரும் புலியைக் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். 
மஞ்சூர் அருகே பி.மணியட்டி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இக்கிராமத்தையொட்டி தேயிலை தோட்டம், வனப் பகுதி உள்ளது. இங்கிருந்து உணவு, குடிநீர் தேடி கரடி, காட்டெருமை, சிறுத்தை, புலி, காட்டுப் பன்றி உள்ளிட்ட விலங்குகள் கிராமத்துக்குள் நுழைந்து வருகின்றன. இந்நிலையில், இப்பகுதியிலுள்ள சுடுகாடு அருகேயுள்ள தேயிலைத் தோட்டத்தில் புலி சுற்றித் திரிந்ததை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள்  செவ்வாய்க்கிழமை பார்த்துள்ளனர். 
இத்தகவல் சுற்றுவட்டாரத்தில் பரவியதால் பொதுமக்களிடையே கடும் பீதி ஏற்பட்டது. சுடுகாட்டை ஒட்டி அதிக அளவில் தேயிலைத் தோட்டங்கள் உள்ளதால் தேயிலைப் பறிக்கச் செல்லும் தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த குந்தா வனத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து புலியின் நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/18/பிமணியட்டி-கிராமத்தில்-சுற்றித்-திரியும்-புலி-2962279.html
2962278 கோயம்புத்தூர் நீலகிரி கூடலூரில் இடியும் நிலையில் மதில் சுவர் DIN DIN Wednesday, July 18, 2018 06:10 AM +0530 கூடலூரில் வருவாய்த் துறை அலுவலர்கள் சங்க கட்டடத்தின் சுற்றுச்சுவர் சேதமடைந்து இடியும் நிலையில் உள்ளது.
நீலகிரி மாவட்டம்,  கூடலூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் வருவாய்த் துறை அலுவலர்கள் சங்க கட்டடம் உள்ளது.
இக்கட்டடத்தின் சுற்றுச் சுவர் விரிசல் அடைந்து  கீழே சாயும் அபாய நிலையில் உள்ளது.  தற்போது இப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் எந்த நேரத்திலும் இந்த சுவர் இடிந்து விழும் என்ற அச்சம் அப்பகுதி மக்களிடையே உள்ளது.  எனவே, விபரீதம் ஏதும் ஏற்படும் முன் உடனடியாக பழுதடைந்த சுவரை சீரமைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/18/கூடலூரில்-இடியும்-நிலையில்-மதில்-சுவர்-2962278.html
2962277 கோயம்புத்தூர் நீலகிரி கோத்தகிரியில் தண்ணீரை காய்ச்சிப் பருக அறிவுறுத்தல் DIN DIN Wednesday, July 18, 2018 06:10 AM +0530 கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலநிலை மாற்றத்தால் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் வருவதைத் தடுக்க தண்ணீரை காய்ச்சி பருக வேண்டும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 
கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் மழை காரணமாக பொதுமக்களுக்கு  சளி, காய்ச்சல், இருமல், மூட்டு வலி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள்  வர வாய்ப்புள்ளது. இதனைத் தடுக்க பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் நிர்வாகம் சார்பில் பொது கிணறுகளில் குளோரின் கலக்கிறார்கள்.
மேலும், நோயின் பிடியிலிருந்து காத்துக் கொள்ள பொதுமக்கள் தண்ணீரைக் காய்ச்சி ஆற வைத்து பின்னர் அருந்த வேண்டும் என சுகாதாரத் துறை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க வீடுகளில் குடிநீரை மூடி வைக்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/18/கோத்தகிரியில்-தண்ணீரை-காய்ச்சிப்-பருக-அறிவுறுத்தல்-2962277.html
2962276 கோயம்புத்தூர் நீலகிரி குனில் வயல் பகுதியில் வீட்டைத் தாக்கிய யானைகள் DIN DIN Wednesday, July 18, 2018 06:09 AM +0530 நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள குனில்வயல் பகுதியில் திங்கள்கிழமை இரவு நுழைந்த யானைகள், அங்குள்ள ஒரு வீட்டை தாக்கி உள்ளேயிருந்த பொருள்களை சேதப்படுத்தின.
கூடலூரை அடுத்துள்ள குனில் வயல் கிராமத்துக்குள் திங்கள்கிழமை நள்ளிரவு யானைகள் நுழைந்தன.  அவை, அங்குள்ள சுனில் என்பவரது வீட்டை த் தாக்கின. வீட்டிலிருந்த பொருள்களை சேதப்படுத்தியதுடன்,  வெளியே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் பைக்கையும் சேதப்படுத்தின. இதில் அதிர்ஷ்டவசமாக வீட்டிலிருந்தவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.  தகவலறிந்து அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்து சப்தமிட்டு யானைகளை விரட்டினர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/18/குனில்-வயல்-பகுதியில்-வீட்டைத்-தாக்கிய-யானைகள்-2962276.html
2962275 கோயம்புத்தூர் நீலகிரி மாணவர்களை விரட்டிய யானைகள்: பொதுமக்கள் சாலை மறியல் DIN DIN Wednesday, July 18, 2018 06:09 AM +0530 கூடலூரை அடுத்துள்ள தொரப்பள்ளியில் மதரசா பள்ளிக்குச் சென்ற மாணவர்களை யானைகள் விரட்டியதால் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள தொரப்பள்ளி பகுதியில் உள்ள மதரசா பள்ளிக்கு மாணவர்கள் செவ்வாய்க்கிழமை காலை சென்று கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் முகாமிட்டிருந்த யானைகள், மாணவர்களை விரட்டியுள்ளன. இதில் பயந்து ஓடிய சில மாணவர்கள் கீழே விழுந்ததில் காயமடைந்தனர்.  தகவலறிந்த அங்கு திரண்ட மக்கள்,  யானைகளை காட்டுக்குள் விரட்ட வலியுறுத்தி முதுமலை புலிகள் காப்பக நுழைவாயில் பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த முதுமலை புலிகள் காப்பக உதவி கள இயக்குநர் செண்பகப்பிரியா விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் யானைகளை விரட்ட  நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. 
இதனால் கூடலூர்-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/18/மாணவர்களை-விரட்டிய-யானைகள்-பொதுமக்கள்-சாலை-மறியல்-2962275.html
2962274 கோயம்புத்தூர் நீலகிரி குந்தா கூட்டுறவுத் தேயிலைத் தொழிற்சாலைக்கு பசுந்தேயிலை விநியோகத்தை நிறுத்திய விவசாயிகள் DIN DIN Wednesday, July 18, 2018 06:09 AM +0530 மஞ்சூர் அருகே குந்தா கூட்டுறவுத் தொழிற்சாலைகளுக்கு விவசாயிகள் பசுந்தேயிலை விநியோகத்தை நிறுத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகே எடக்காடு பகுதியில் தென்னிந்தியாவின் முதல் கூட்டுறவுத் தேயிலை தொழிற்சாலையான குந்தா (எடக்காடு) கூட்டுறவுத் தேயிலை தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்தத் தொழிற்சாலையில் எடக்காடு, முக்கிமலை, நடுஹட்டி, தலையட்டி, சூண்டட்டி, கவுண்டம்பாளையம், பாதகண்டி, காந்திகண்டி, காந்திகண்டி புதூர், தக்கர்பாபாநகர், சத்தியமூர்த்தி நகர் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் தினசரி தங்களது தேயிலைத் தோட்டங்களில் இருந்து பறிக்கும் பசுந்தேயிலையைத் தொழிற்சாலைக்கு விநியோகித்து வருகிறார்கள். இவர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பசுந்தேயிலைக்கு குன்னூர் இன்கோ சர்வ் மூலம் மாதந்தோறும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு பணம் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் குந்தா கூட்டுறவுத் தொழிற்சாலைக்கு விவசாய உறுப்பினர்கள் விநியோகித்த பச்சைத் தேயிலைக்கு மாத விலையாக கிலோவுக்கு ரூ. 8 என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. மிகவும் குறைவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் விலையை உயர்த்தி வழங்க வேண்டி குன்னூரில் உள்ள இன்கோ சர்வ் அதிகாரியிடம் நேரில் முறையிட்டனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் கடும் விரக்தியடைந்தனர். இதனைத் தொடர்ந்து எடக்காடு நடுஹட்டி சமுதாயக் கூடத்தில் விவசாயிகள் சார்பில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 
கூட்டத்தில், கடந்த ஜூன் மாதம் விவசாய உறுப்பினர்களிடம் இருந்து கொள்முதல் செய்த பசுந்தேயிலைக்கு மிகவும் குறைவாக விலை நிர்ணயம் செய்த கூட்டுறவுத் தொழிற்சாலையின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு உடனடியாக பசுந்தேயிலைக்கு விலையை உயர்த்தி வழங்க வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் கவன ஈர்ப்பாக முதற்கட்டமாக குந்தா கூட்டுறவு தொழிற்சாலைக்கு திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் பசுந்தேயிலை விநியோகிப்பதை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. 
அதன்பிறகும் கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட போராட்டங்களை நடத்துவது குறித்து முடிவெடுப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் கூட்டுறவுத் தொழிற்சாலைகளில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/18/குந்தா-கூட்டுறவுத்-தேயிலைத்-தொழிற்சாலைக்கு-பசுந்தேயிலை-விநியோகத்தை-நிறுத்திய-விவசாயிகள்-2962274.html
2962273 கோயம்புத்தூர் நீலகிரி அவலாஞ்சி அணையின் நீர்மட்டம் உயர்வு: பாசனத்துக்குத் தண்ணீர் திறக்க மின் வாரியம் முடிவு DIN DIN Wednesday, July 18, 2018 06:09 AM +0530 மஞ்சூர் அருகே உள்ள அவலாஞ்சி அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பாசனத்துக்குத் திறந்து விட மின்வாரியம் முடிவு செய்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் குந்தா, எமரால்டு,  அவலாஞ்சி,  காட்டு குப்பை, சிங்கரா, மாயாறு, கெத்தை,  பரளி உள்ளிட்ட12 நீர்மின் நிலையங்கள் மூலம் தினசரி 834 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 
கடந்த சில நாள்களாக கோரகுந்தா, கேரிங்டன், மேல்பவானி, அவலாஞ்சி, எமரால்டு அணைகள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 
மொத்தம் 171 அடி கொள்ளளவு கொண்ட அவலாஞ்சி அணையில் தற்போது 161 அடிக்கு நீர்இருப்பு உள்ளது.  இன்னும் 10 அடிகள் நிரம்பினால் முழு கொள்ளளவை எட்டி அணை நிரம்பி வழியும். இங்கு மின் உற்பத்தியும் செய்யப்படுகிறது. 
இந்த அணையில் இருந்து தண்ணீர் அருகில் உள்ள எமரால்டு அணைக்கும் செல்கிறது. எமரால்டு அணையின் நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், எமரால்டு அணையிலிருந்து குழாய்கள் மூலம் வெளியேற்றப்படும் தண்ணீர் குந்தா அணையை வந்தடைகிறது. 
குந்தாவில் சேமிக்கப்படும் நீரைக் கொண்டு மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது குந்தா அணை  88.5 அடி  நீர்மட்டம் (மொத்த கொள்ளளவு 89 அடி)  உள்ளது. இங்கிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் கெத்தை அணைக்கு செல்கிறது. இதனால் கெத்தை அணை 155.5 அடியை (மொத்த கொள்ளளவு 156 அடி) எட்டியுள்ளது. 
அந்த அணையிலிருந்து தண்ணீர் குழாய் மூலம் திறக்கப்பட்டு பரளி மின் வாரியத்தை அடைகிறது. அங்கிருந்து வெளியேற்றப்படும் நீரானது பில்லூர் அணையை சென்றடைகிறது. அங்கிருந்து திறக்கப்படும் தண்ணீர் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு பாசனத்துக்காகவும், குடிநீர்த் தேவைக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது பெய்து வரும் மழையால் நீலகிரி மாவட்டத்தில் மின் உற்பத்திக்கு இனி சிக்கல் இருக்காது என்பதும், தொடர்ந்து மழை பெய்து வருவதால் அவலாஞ்சி அணையின் உபரி நீரை நேரடியாக மதகுகள் மூலம் பாசனத்துக்கு திறந்து விடவும் மின் வாரியம் முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/18/அவலாஞ்சி-அணையின்-நீர்மட்டம்-உயர்வு-பாசனத்துக்குத்-தண்ணீர்-திறக்க-மின்-வாரியம்-முடிவு-2962273.html
2962272 கோயம்புத்தூர் நீலகிரி யானை வழித்தட நில கட்டடங்கள் விவகாரம்: வதந்திகளை நம்ப வேண்டாம்: ஆட்சியர் அறிவிப்பு DIN DIN Wednesday, July 18, 2018 06:08 AM +0530 நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தட நிலங்களில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில்,  இதுதொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் சீகூர் பள்ளத்தாக்கு பகுதியில் யானைகள் வழித்தடம் உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலங்களில் கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டடங்களையும் அகற்ற வேண்டுமென உச்ச நீதிமன்றம் கடந்த வாரத்தில் தீர்ப்பு வழங்கியுள்ளது. 
2008 ஆம் ஆண்டில் வழக்குரைஞர் யானை ராஜேந்திரனால் தொடரப்பட்ட இவ்வழக்கில்,  2011 ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து கட்டட உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்துக்கு சென்ற நிலையில், உச்ச நீதிமன்றமும் 2011ஆம் ஆண்டுக்குப் பின்னர் எதற்காக இந்த வழித்தடத்தில்  புதிய கட்டுமானங்கள் அனுமதிக்கப்பட்டன எனக் கேள்வி எழுப்பியிருந்தது. மேலும், இந்த வழித்தடத்திலுள்ள கட்டடங்கள் தொடர்பான அறிக்கையை 30 நாள்களுக்குள் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அளிக்க வேண்டுமெனவும் தெரிவித்திருந்தது.
நீலகிரி மாவட்டத்தில் 1992 ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா அறிவித்திருந்த மாஸ்டர் பிளான் சட்டத்தின்படி எத்தகைய பெரிய கட்டுமானங்கள் என்றாலும் சென்னையிலுள்ள ஹாக்கா என்ற உயர்மட்ட அமைப்பிடம் ஒப்புதல் பெற்ற பின்னரே கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள முடியும். ஆனால்,  தற்போது  யானை வழித்தட நிலத்தில் கட்டப்பட்டுள்ள 1 சதவீத  கட்டடங்களைத் தவிர 99 சதவீத கட்டடங்கள் எவ்வித அனுமதியும் பெறாமலேயே உள்ளூர் அதிகாரிகளின் துணையோடு எழுப்பப்பட்டுள்ளதாக ஏற்கெனவே நீதிமன்றத்தில் புகார் உள்ளது. அத்துடன் நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டிய முக்கிய அமைப்பான நூறாண்டு  பழமை வாய்ந்த நீலகிரி கானுயிர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கமும் இதுதொடர்பாக எத்தகைய நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை எனவும்  குற்றச்சாட்டு உள்ளது. 
 இந்நிலையில், எத்தகைய அனுமதியும் பெறாமல் கட்டப்பட்டுள்ள தனியார் ரிசார்ட்டுகள் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு எதிராக  2011 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட தீர்ப்பையும் மீறி புதிய கட்டுமானங்களுக்கு அனுமதி  அளிக்கப்பட்டுள்ளதால் தற்போது சுமார் 400 கட்டுமானங்கள் யானை வழித்தட நிலத்தில் உருவாகியிருப்பதாகவும், இதன் காரணமாகவே யானைகள் தடம் மாறி ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்துவதோடு, மனித விலங்கு மோதல்கள் அதிகரித்துள்ளதாக நீதிமன்றமே தெரிவித்துள்ளதால், யானை வழித்தட நிலங்களிலுள்ள கட்டடங்களை அகற்ற வேண்டியது அவசியமென அனைத்து தரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இதுதொடர்பான அறிக்கையை தில்லி உச்ச நீதிமன்றத்தில் ஆகஸ்டு  8 ஆம் தேதிக்குள் நீலகிரி மாவட்ட ஆட்சியர் சமர்ப்பிக்க வேண்டிய நிலையில் யானை வழித்தட நிலங்களிலுள்ள கட்டடங்கள் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாமென மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட்  திவ்யா அறிவித்துள்ளார். 
இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
தில்லி உச்ச நீதிமன்றம் யானைகள் வழித்தட நிலங்கள்  தொடர்பாக கடந்த 12 ஆம் தேதி வழங்கிய இடைக்காலத் தீர்ப்பில்  யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ளக்  கட்டடங்களை அடையாளம் கண்டு,  அவை எப்போது கட்டப்பட்டது, எதற்காக கட்டப்பட்டது,  தற்போது அக்கட்டடங்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பன தொடர்பான விவரங்களைக் கணக்கெடுத்து ஆகஸ்டு 8 ஆம் தேதிக்குள் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது. 
எனவே,  உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு சம்பந்தப்பட்டத் துறை அலுவலர்களால் உதகை வட்டத்திலுள்ள யானைகள் வழித்தடப் பகுதிகளில் கணக்கெடுப்பு பணி மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாகப் பரவி வரும் வதந்திகளை  நம்ப வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/18/யானை-வழித்தட-நில-கட்டடங்கள்-விவகாரம்-வதந்திகளை-நம்ப-வேண்டாம்-ஆட்சியர்-அறிவிப்பு-2962272.html
2962271 கோயம்புத்தூர் நீலகிரி குன்னூர் நகராட்சி நகரமைப்பு அலுவலர் கைது DIN DIN Wednesday, July 18, 2018 06:08 AM +0530 வழக்கு ஒன்றில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு ஆஜராகாத குன்னூர் நகராட்சி நகரமைப்பு அலுவலர் காவல் துறையினரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்தவர் ஜின்னா. அதிமுக பிரமுகர்.  இவருக்கும், தாராபுரம் நகராட்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நகரமைப்பு அலுவலராகப் பணியாற்றியவரும், தற்போது நீலகிரி மாவட்டம், குன்னூர் நகராட்சியில் பணிபுரிந்து வருபவருமான அறிவுடைநம்பி என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது தொடர்பாக தாராபுரம் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.   
இந்நிலையில், இந்த வழக்கில் ஆஜராகுமாறு நகரமைப்பு அலுவலர் அறிவுடைநம்பிக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து,  தாராபுரம் குற்றவியல் நீதித் துறை நடுவர் மன்றம் கடந்த மார்ச் மாதம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது. 
எனினும், அறிவுடைநம்பி தொடர்ந்து ஆஜராகாமல் காலம் தாழ்த்தி வந்ததால் கோவை மாவட்டம்,  காரமடை பகுதியில் தங்கியிருந்த நகரமைப்பு அலுவலர் அறிவுடைநம்பியை காவல்
துறையினர் கைது செய்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/18/குன்னூர்-நகராட்சி-நகரமைப்பு-அலுவலர்-கைது-2962271.html
2962270 கோயம்புத்தூர் நீலகிரி தொடர் மழை காரணமாக நீலகிரியில் நிலச்சரிவு அபாயம் DIN DIN Wednesday, July 18, 2018 06:08 AM +0530 நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாள்களாகத் தொடர்ந்து பெய்து வந்த  மழை செவ்வாய்க்கிழமை சற்றே ஓய்ந்திருந்தது. இருப்பினும் தொடர் மழை காரணமாக,  சரிவான பகுதிகளில் தண்ணீர் ஊற்றெடுக்கத் தொடங்கியுள்ளதால் நிலச்சரிவு அபாயம் அதிகரித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை வலுத்து கடந்த 4 நாள்களாக பலத்தக் காற்றுடன் மழை பெய்து வந்தது. குறிப்பாக, கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கூடலூர், பந்தலூர் பகுதிகளிலும், மாவட்டத்தின் முக்கிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளான மேல்பவானி, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளிலும் கன மழை பெய்துவந்தது.  
தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை  அளிக்கப்பட்டிருந்தது. செவ்வாய்க்கிழமை பகலில் மழை குறைந்தது.  தொடர் மழை மற்றும் பலத்த காற்றால் உதகையில் நிலவி வந்த குளிர்ச்சியான காலநிலையும் செவ்வாய்க்கிழமை மாறியது.
இருப்பினும் தொடர் மழை காரணமாக, சரிவான பகுதிகளில் உள்ள மண் திட்டுகள் சரியத் தொடங்கியுள்ளன. அதேபோல, நிலத்தில் நீரின் தன்மை அதிரித்துள்ளதால் மரங்களும் எப்போது வேண்டுமானாலும் விழும் அபாயம்  நிலவுகிறது. 
உதகையில் புனித மரியன்னை குன்று பகுதியில் திங்கள்கிழமை இரவு தனியார் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 வாகனங்கள் சேதமடைந்தன.  இந்து நகர் பகுதியில் திலக் என்பவரது வீட்டுக்கு அருகே மண் சரிவு ஏற்பட்டதில், மழை நீர் முழுவதும் அவரது குடியிருப்புக்குள் புகுந்தது. மண் அடித்துச் செல்லப்பட்டதால் அங்கிருந்த மின்கம்பம் குடியிருப்பின் மீது சாய்ந்தது. தகவலறிந்த மின்வாரியத்தினர் மின் விநியோகத்தை நிறுத்தியதால் அசம்பாவிதம் நிகழாமல் தவிர்க்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மேல்பவானியில் 165 மி.மீ,  அவலாஞ்சியில் 161 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழை விவரம் (மி.மீ.):
தேவாலா- 59, எமரால்டு- 54,  கிளன்மார்கன்- 49,  கூடலூர்- 43,  நடுவட்டம்- 34,  உதகை-  23.2,   குந்தா- 21, பர்லியாறு மற்றும் கல்லட்டி-15,  கெத்தை- 10,  கேத்தி  மற்றும்  குன்னூர்- 9,  கோத்தகிரி- 8,  கிண்ணக்கொரை-3.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/18/தொடர்-மழை-காரணமாக-நீலகிரியில்-நிலச்சரிவு-அபாயம்-2962270.html
2961546 கோயம்புத்தூர் நீலகிரி கூடலூர் பேருந்து நிலையத்தில்  தனியார் வாகனங்கள் ஆக்கிரமிப்பு: மழைக்கு ஒதுங்க முடியாமல் பயணிகள் அவதி DIN DIN Tuesday, July 17, 2018 07:25 AM +0530 கூடலூர் பேருந்து நிலையத்தில் கார் உள்ளிட்ட தனியார் வாகனங்கள் ஆக்கிரமித்துள்ளதால் மழைக்குகூட பயணிகள் ஒதுங்கி நிற்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
கூடலூரில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து நிலையத்தில் பயணிகள் நிற்கும் இடத்தில் கார், இருசக்கர வாகனம் உள்ளிட்ட  வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், தற்போது கன மழை பெய்து வரும் நிலையில் பயணிகள் பேருந்து நிலையத்தில் ஒதுங்கி நிற்க முடியாமல் அவதிப்படுகின்றனர். 
கூடலூர் நகரம் கேரளம், கர்நாடகம் ஆகிய  மாநிலங்களின் நகரங்களை இணைக்கும் பகுதி என்பதால் அந்த மாநிலங்களில் இருந்து பொது மக்கள் கூடலூர் வந்து செல்கின்றனர். 
பேருந்து நிலையத்தில் வெளி மாநிலத்தவர்,  வெளியூர் பயணிகள், உள்ளூர் பயணிகள் என பலரும் தனியார் வாகனங்களின் ஆக்கிரமிப்பால் அவதிப்படுகின்றனர். எனவே, பேருந்து நிலையத்தில் பயணிகள் நிற்குமிடத்தை ஆக்கிமிரப்பில் இருந்து மீட்டு முறைப்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/17/கூடலூர்-பேருந்து-நிலையத்தில்--தனியார்-வாகனங்கள்-ஆக்கிரமிப்பு-மழைக்கு-ஒதுங்க-முடியாமல்-பயணிகள்-அவதி-2961546.html
2961545 கோயம்புத்தூர் நீலகிரி மழை வெள்ளத்தால் உருக்குலைந்த சாலையை செப்பனிடக் கோரிக்கை DIN DIN Tuesday, July 17, 2018 07:25 AM +0530 கோத்தகிரி அருகே நெடுகுளா ஊராட்சிக்கு உள்பட்ட ஜக்கலோடை கிராமத்து சாலை  அண்மையில் பெய்த மழையால்  வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உருக்குலைந்து காணப்படுகிறது.
நெடுகுளா ஊராட்சிக்கு உள்பட்ட ஜக்கலோடை கிராமத்துக்குச் செல்லும் சாலை சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு, அண்மையில் பெய்த தொடர் மழை காரணமாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இப்பகுதியில்   சிறுத்தை, கரடி, காட்டெருமைகள்  நடமாட்டம் இருக்கும் நிலையில் பொதுமக்கள் இந்த சாலை வழியாக விரைந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளிக் சென்று திரும்பும் மாணவர்கள் மாலை  நேரத்தில் இவ்வழியாக அச்சத்துடன் வீடு திரும்பவ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 
இது குறித்து கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்தில் பலமுறை புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, பொது  மக்களின் நலன் கருதி  உருக்குலைந்து கிடக்கும் இந்தச் சாலையை உடனடியாகச் செப்பனிட வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/17/மழை-வெள்ளத்தால்-உருக்குலைந்த-சாலையை-செப்பனிடக்-கோரிக்கை-2961545.html
2961544 கோயம்புத்தூர் நீலகிரி குன்னூரில் முப்படை ராணுவ வீரர்களுக்கு இடையே நெடுந்தூர ஓட்டப் பந்தயம் DIN DIN Tuesday, July 17, 2018 07:25 AM +0530 நீலகிரி மாவட்டம், குன்னூரில்  முப்படை  ராணுவ வீரர்களுக்கு இடையேயான நெடுந்தூர ஓட்டப் பந்தயம்  எம்ஆர்சி தங்கராஜ் ஸ்டேடியத்தில் திங்கள்கிழமை  நடைப்பெற்றது.
குன்னூர் எம்.ஆர்.சி  ராணுவ மையம் சார்பில் கடற்படை, காலாட்படை, விமானப் படையைச் சேர்ந்த ராணுவ வீரர்களுக்கான 49ஆவது10  கிலோ மீட்டர் நெடுந்தூர ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. 
இதில், 24  வீரர்கள் கலந்து கொண்டனர். நெடுந்தூர  ஓட்டப் பந்தயம் தங்கராஜ் ஸ்டேடியத்தில் தொடங்கி சிங்காரத் தோப்பு வழியாக மீண்டும் ஸ்டேடியத்தில் நிறைவடைந்தது. இதில், சிவப்புப் படையைச் சேர்ந்த ராணுவ வீரர் குமார் யாதவ் 31 நிமிடம் 44 விநாடிகளில் குறிப்பிட்ட தூரத்தைக் கடந்து முதலிடம் பிடித்தார். சிவப்புப் படையைச் சேர்ந்த  ஹவில்தார் அனிஷ் தாபா 31 நிமிடம் 47 விநாடிகளில் கடந்து இரண்டாமிடம் பெற்றார். நாயக் தீர்த்த குமார் 31  நிமிடம் 53 விநாடிகளில் கடந்து மூன்றாமிடம் பெற்றார்.
முப்படை  வீரர்களுக்கான 2018 -2019 ஆண்டுக்கான ஒட்டு மொத்த போட்டிக்கான கோப்பையை ராணுவ சிவப்பு அணி பெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு ராணுவ மையத் தலைவர் பிரிகேடியர் எஸ்.கே.சாங்வான் பரிசுகளைப் வழங்கிப் பாராட்டினார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/17/குன்னூரில்-முப்படை-ராணுவ-வீரர்களுக்கு-இடையே-நெடுந்தூர-ஓட்டப்-பந்தயம்-2961544.html
2961543 கோயம்புத்தூர் நீலகிரி கூடலூர் அருகே யானை தாக்கி தம்பதி காயம் DIN DIN Tuesday, July 17, 2018 07:24 AM +0530 கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு யானை தாக்கியதில் தம்பதி காயமடைந்தனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை தைதமட்டம் பகுதிக்குள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு புகுந்த யானைகள் அங்கு வசிக்கும்  மணிகண்டன் என்பவரது வீட்டை சேதப்படுத்தின. 
அப்போது, வீட்டுக்குள் இருந்து வெளியேறி தப்பியோடிய மணிகண்டன், அவரது மனைவி ஷோபனா ஆகிய இருவரையும் யானை துரத்திச் சென்று தாக்கியது. 
அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து சென்று யானையை அங்கிருந்து துரத்தினர்.
யானை தாக்கியதில் மணிகண்டனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவரது மனைவிக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வனத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/17/கூடலூர்-அருகே-யானை-தாக்கி-தம்பதி-காயம்-2961543.html
2961542 கோயம்புத்தூர் நீலகிரி நள்ளிரவில் திடீரென தீப்பிடித்து எரிந்த வேன்; இருவர் தப்பினர் DIN DIN Tuesday, July 17, 2018 07:24 AM +0530 குன்னூர்  அருகே உள்ள எல்லநள்ளிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆம்னி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமானது. இதில், அதன் உரிமையாளர், ஓட்டுநர் ஆகிய இருவரும்  உயிர் தப்பினர்.
குன்னூர்  எல்லநள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கங்காதரன், ஆம்னி வேன்  உரிமையாளர். இவர்,  தனது வேன்  ஓட்டுநர் நந்தகுமாருடன்  பழைய அருவங்காடு பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தார். வழியில், எல்லநள்ளி பகுதியில் ஆம்னி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது.  உடனே, கங்காதரனும், நந்தகுமாரும் வேனில் இருந்து கீழே குதித்துத் தப்பினர். 
அச்சமயத்தில் சாரல் மழையும் பெய்து கொண்டிருந்ததால் சற்று நேரத்தில் தீ அணைந்துவிட்டது.
இது குறித்து கேத்தி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/17/நள்ளிரவில்-திடீரென-தீப்பிடித்து-எரிந்த-வேன்-இருவர்-தப்பினர்-2961542.html
2961541 கோயம்புத்தூர் நீலகிரி பந்தலூர் பகுதியில் கன மழை: வீடு சேதம் DIN DIN Tuesday, July 17, 2018 07:24 AM +0530 பந்தலூரில் பெய்துவரும் கனமழையால் ஞாயிற்றுக்கிழமை இரவு வீடு இடிந்து சேதமானது.
கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கடந்த 10 நாள்களாகத் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. 
இதனால், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சாலைகளின் குறுக்கே விழுந்த மரங்கள் பொதுமக்கள் உதவியுடன் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.  
பந்தலூர் பகுதியில் பெய்த கன மழைக்கு எருமாடு பகுதியில் உள்ள வெட்டுவாடி கிராமத்தில் வசிக்கும் ஜெயராமன் வீடு சேதமடைந்துள்ளது. சேதமடைந்த வீட்டுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/17/பந்தலூர்-பகுதியில்-கன-மழை-வீடு-சேதம்-2961541.html
2961540 கோயம்புத்தூர் நீலகிரி மிக இளையோர் கால்பந்துப் போட்டி:  அணிக்கு 19 வீரர்கள் தேர்வு DIN DIN Tuesday, July 17, 2018 07:24 AM +0530 நெய்வேலியில் வரும் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெறவுள்ள 30ஆவது மாநில அளவிலான மிக இளையோருக்கான (சப்-ஜூனியர்) கால்பந்துப் போட்டியில் பங்கேற்க நீலகிரி மாவட்ட அணிக்கு வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக நீலகிரி மாவட்ட கால்பந்து சங்கச் செயலாளர் மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: 
நெய்வேலியில் நடைபெறும் கால்பந்துப் போட்டியில் விளையாடுவதற்காக முகமது ரிபான்,  அபீப் முஸ்தபா,  முகமது ஷாகின்,  துரை ரகுராம்,  கமலேஷ்,  மானுஷ்,  விபுல்தர்மராஜ்,  எஸ்.பிரசாந்த்,  ஹார்திக் பட்டேல், பாரத்,  லித்வான்,  பிஜோ, மரி செல்வம்,  கார்வின் பாபு,  ஜெல்சன்,  தர்மாஸ் குட்டன்,  ரஞ்சித்,  தினேஷ்குமார், பிரணவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அணியின் பயிற்சியாளராக டி.மனோகரன் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/17/மிக-இளையோர்-கால்பந்துப்-போட்டி--அணிக்கு-19-வீரர்கள்-தேர்வு-2961540.html
2961539 கோயம்புத்தூர் நீலகிரி உத்திரிய மாதா பஜனை சங்க ஆலய ஆண்டு விழா DIN DIN Tuesday, July 17, 2018 07:23 AM +0530 உதகையிலுள்ள உத்திரிய மாதா பஜனை சங்க ஆலய  ஆண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
  உதகையில் புனித மரியன்னை குன்றுப் பகுதியில் உள்ள உத்திரிய மாதா பஜனை சங்க ஆலயத்தின்140ஆவது ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை  சிறப்பாகக் கொண்டாடப்பட்டது .  பாரம்பரிய  சிறப்புமிக்க இந்த ஆலயத்தை  பிரான்சிஸ்  சகாய், மார்ஷல் , ரவி , சார்லஸ் , சுரேஷ், சார்லஸ் பெரோஸ் ஆகியோர்  இணைந்து அன்னையின்  பீடம்,  மேல்கூரை உள்ளிட்டவற்றைப் புதுப்பித்துள்ளனர். பங்குத் தந்தை வின்சென்ட்  புதுப்பித்த ஆலயத்தை மந்திரித்து அர்ப்பணித்தார்.
முன்னதாக, கடந்த  8ஆம் தேதி  பங்குத் தந்தை வின்சென்ட்  திருவிழா கொடியை ஏற்றி வைத்தார். தினமும்  மாலை நேரத்தில் உபய வழிபாடு நடைபெற்றது. ஜெபமாலை, சிறப்பு மறையுரைகளும்  நிகழ்த்தப்பட்டன. அருட்தந்தையர்கள் வின்சென்ட் , ஜோசப் சந்தோஷ், எல்.சி.பெலவேந்திரம் , இருதய லாரன்ஸ் ,  ஆண்டனி இருதயராஜ், லியோன் பிரபாகரன், பாஸ்டின்  ஆகியோர் அன்னையின் அற்புதங்கள் குறித்தும், தாயின் முக்கியத்துவம்,  தாயை ஒரு நாளும் ஒதுக்கிவைக்கக் கூடாது என விளக்கினர்.
இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை  உலகம் முழுவதும் உத்திரிய மாதா திருவிழாக் கொண்டாடப்பட்ட  நிலையில் இங்கு அற்புத பஜனை சங்கத்தின் சார்பாக  சிறப்பு திருப்பலி நடைபெற்றது . அன்னையின்  சுரூபம்  பவனியாக  ஆலயத்தில் இருந்து புறப்பட்டு  நாசரேத் கான்வென்ட் ஆலயத்தை வந்தடைந்தது. பின்னர் சிறப்பு  நன்றி பிரார்த்னை நடைபெற்றது. இரவு 8 மணி முதல் நள்ளிரவு 12  மணி வரை பாரம்பரிய அன்னையின் புகழ் பஜனை நடைபெற்றது . இதற்கான ஏற்பாடுகளை  பஜனை சங்க செயலர் லாசர், குணசீலன் , ஷீலா,  மிலானிஸ்   ஆகியோருடன்  புனித மரியன்னை  இளைஞர்  குழுவினர் செய்திருந்தனர் .

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/17/உத்திரிய-மாதா-பஜனை-சங்க-ஆலய-ஆண்டு-விழா-2961539.html
2961538 கோயம்புத்தூர் நீலகிரி நீலகிரியில் பலத்த காற்றுடன் மழை: மரங்கள் முறிந்து விழுந்தன: அபாயகரமான மரங்களை வெட்டி அகற்ற கோரிக்கை DIN DIN Tuesday, July 17, 2018 07:23 AM +0530 நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை தொடர்ந்து வலுத்து வருகிறது.
மாவட்டத்தில் கூடலூர், உதகை பகுதிகளில் திங்கள்கிழமை பலத்த மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக  மேல் பவானி பகுதியில் திங்கள்கிழமை காலை வரை 100 மி.மீ., பகலில் மாலை 4 மணி வரை 125 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. அவலாஞ்சியில் 123 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாள்களாகத் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அவலாஞ்சி,  மேல் பவானி பகுதிகளில் மழையின் தாக்கம் அதிக அளவில் உள்ளதால் குந்தா நீர்மின் நிலையத்திற்குத்  தண்ணீர் அளவு அதிகரித்து நீர்மின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.
கூடலூர், தேவாலா, உதகை, குந்தா பகுதிகளில் அதிக அளவில் மழைப் பொழிவு உள்ளதால் இந்த நான்கு தாலுகாக்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு  திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.  திங்கள்கிழமையும் இப்பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பதிவாகியுள்ளது.
தொடர் மழையுடன் பலத்த காற்றும் வீசி வருவதால் ஏராளமான மரங்கள் சாலையின் குறுக்கே அவ்வப்போது விழுந்து வருகின்றன. இதன் காரணமாக போக்குவரத்துத் தடை ஏற்படும் பகுதிகளில் வனத் துறையினருடன், நெடுஞ்சாலைத் துறையினர், காவல் துறையினர், உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்கள் இணைந்து மரங்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.
உதகையில் மட்டும் திங்கள்கிழமை பகலில் தொட்டபெட்டா,  பிங்கர்போஸ்டு மற்றும் படகு இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் 5 மரங்கள் முறிந்து விழுந்தன. அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தி, போக்குவரத்தும் சீர் செய்யப்பட்டது. 
தொடர்ந்து  காற்று வீசுவதால்  ஏராளமான மரங்கள் சாய்ந்து விழும் அபாயம் உள்ளது.  இதனால்,  குடியிருப்புப் பகுதிகளிலும், போக்குவரத்து மிகுந்த  சாலைகளின் ஓரத்திலும் முறிந்து விழும் நிலையில் உள்ள மரங்களை உடனடியாக வெட்டி அகற்ற வேண்டுமென பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.  
இதில்,  உதகையில் எட்டின்ஸ் சாலையிலுள்ள அபாயகரமான மரங்களை உடனடியாக வெட்டி  அகற்ற வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது. 
மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த காற்றுடன் பெய்து வரும் தொடர் மழையால் கடும் குளிர் நிலவுவதோடு,  உதகை, குந்தா,  கூடலூர், பந்தலூர் பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
மழைப் பதிவு விவரம்...:  மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி  நேரத்தில் மேல் பவானியில் 100 மி.மீ.,  அவலாஞ்சியில் 97 மி.மீ., தேவாலாவில் 54 மி.மீ.,   நடுவட்டத்தில் 46 மி.மீ.,  கூடலூரில் 42 மி.மீ.,  உதகை, கிளன்மார்கனில் தலா  34 மி.மீ., கல்லட்டியில் 33 மி.மீ., எமரால்டில் 29 மி.மீ., கொடநாட்டில் 16 மி.மீ., குந்தாவில் 15 மி.மீ.,  கேத்தியில்  7 மி.மீ., கோத்தகிரியில் 3 மி.மீ.,  கிண்ணக்கொரையில் 2 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.
  மேலும்,  திங்கள்கிழமை பகலில் பெரும்பாலான இடங்களில் மழை வலுத்து காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மேல் பவானியில் 125 மி.மீ.,  அவலாஞ்சியில் 123 மி.மீ.,  எமரால்டில் 44 மி.மீ., தேவாலாவில் 42 மி.மீ.,  கிளன்மார்கனில் 37 மி.மீ, கூடலூரில் 36 மி.மீ.,  நடுவட்டத்தில் 30 மி.மீ.,  உதகையில் 19.5 மி.மீ.,  குந்தாவில் 18 மி.மீ.,  கெத்தையில் 10 மி.மீ., கோத்தகிரி, குன்னூரில் தலா  8 மி.மீ.,  பர்லியாறில் 7 மி.மீ.,  கிண்ணக்கொரையில் 3 மி.மீ.,   கல்லட்டியில் 2.3 மி.மீ., கேத்தியில் 2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/17/நீலகிரியில்-பலத்த-காற்றுடன்-மழை-மரங்கள்-முறிந்து-விழுந்தன-அபாயகரமான-மரங்களை-வெட்டி-அகற்ற-கோரிக்கை-2961538.html
2961027 கோயம்புத்தூர் நீலகிரி ஜூலை 16 மின் தடை DIN DIN Monday, July 16, 2018 08:00 AM +0530 உப்பட்டி, அத்திப்பள்ளி,  சேரம்பாடி, கூடலூர், அதிகரட்டி

நீலகிரி மின்பகிர்மான வட்டத்தில் உப்பட்டி, அத்திப்பள்ளி, சேரம்பாடி, கூடலூர், அதிகரட்டி துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 16 ) காலை 9 மணி  முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:
உப்பட்டி துணை மின்நிலையம்: உப்பட்டி, பொன்னானி, தேவாலா, பந்தலூர், அத்திக்குன்னா, கொளப்பள்ளி,  எல்லமலா,  நாடுகாணி,  குந்தலாடி,  ராக்வுட்,  அய்யன்கொல்லி மற்றும் உட்பிரையர் 3வது டிவிஷன்.
அத்திப்பள்ளி துணை மின்நிலையம்: முதுமலை, அத்திப்பள்ளி, தொரப்பள்ளி, பாடாந்துரை, ஸ்ரீமதுரை, மண்வயல்,  தெப்பக்காடு, பாட்டவயல், நெலாக்கோட்டை, கார்குடி, தேவர்சோலை. 
சேரம்பாடி துணை மின்நிலையம்: சேரம்பாடி டவுன், கண்ணம்வயல், நாயக்கன்சோலை, கையுண்ணி, எருமாடு, தாளூர், பொன்னச்சேரா, கக்குண்டி, சோலாடி.
கூடலூர் துணை மின்நிலையம்: கூடலூர்,  நந்தட்டி,  சூண்டி, மரப்பாலம், செம்பாலா, ஓவேலி, 1வது மைல், 2வது மைல், காந்திநகர்.
 அதிகரட்டி துணை மின்நிலையம்: அதிகரட்டி, பாலகொலா, காத்தாடிமட்டம், நுந்தளா, தாம்பட்டி, மணியட்டி, நான்சச், ஆருகுச்சி, உலிக்கல், மேலூர், மஞ்சக்கொம்பை, கிளிஞ்சாடா,  சேலாஸ், பாரதி நகர்,  தூதூர்மட்டம்,  கரும்பாலம், கிளண்டேல், கொலக்கம்பை, பென்காம்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/16/ஜூலை-16-மின்-தடை-2961027.html
2960952 கோயம்புத்தூர் நீலகிரி ஸ்டெர்லிங் பயோடெக் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தல் DIN DIN Monday, July 16, 2018 07:33 AM +0530 உதகையில் உள்ள ஸ்டெர்லிங் பயோடெக் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தியுள்ளது.
உதகையில் உள்ள மாவட்டக் குழு அலுவலகத்தில் இக்கட்சியின் மாவட்ட கமிட்டிக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. முன்னாள் மாவட்டச் செயலர் ஆர்.பத்ரி தலைமை வகித்தார். கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன்  சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். 
கூட்டத்தில், உதகையில் 48 ஆண்டுகளாக இயங்கி வந்த ஸ்டெர்லிங் பயோடெக்  நிறுவனம் மூடப்பட்டுள்ளது. இதை மீண்டும் திறந்து தொழிற்சாலையை இயக்குவதற்கும், தொழிலாளர்கள் திரும்பவும் பணிக்குத் செல்லும் வகையில் தமிழக அரசும், நீலகிரி மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/16/ஸ்டெர்லிங்-பயோடெக்-ஆலையை-மீண்டும்-திறக்க-வலியுறுத்தல்-2960952.html
2960951 கோயம்புத்தூர் நீலகிரி கூடலூர் மனவளக்கலை மன்றத்தில் காயகல்ப பயிற்சி DIN DIN Monday, July 16, 2018 07:32 AM +0530 கூடலூர் மனவளக்கலை மன்றத்தில் காயகல்ப பயிற்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூடலூர் மனவளக் கலை மன்ற அறக்கட்டளையில் நடைபெற்ற காயகல்ப பயிற்சிக்கு பேராசிரியர் சி.பாஸ்கரன் தலைமை வகித்தார். கோவை மனவளக் கலை பேராசிரியர் சண்முகசுந்தரம் விளக்கமளித்து பயிற்சி அளித்தார்.
இந்த பயிற்சியில் பேராசிரியர்கள் சுமிதா, மணிகண்டகுமார், சந்திரகலா, துணை பேராசியர்கள் மணிகண்டன், ரஞ்சினி, மணி, பாக்கியநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/16/கூடலூர்-மனவளக்கலை-மன்றத்தில்-காயகல்ப-பயிற்சி-2960951.html
2960950 கோயம்புத்தூர் நீலகிரி பாதியில் நின்ற பாலம் கட்டும் பணி:  பொதுமக்கள் சேர்ந்து முடித்தனர் DIN DIN Monday, July 16, 2018 07:32 AM +0530 கூடலூரை அடுத்துள்ள தேவாலா பகுதியில் பாலம் கட்டும் பணி பாதியில் கைவிடப்பட்டதால் பொதுமக்கள் ஒன்றுசேர்ந்து பணியை நிறைவு செய்தனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டத்தில் உள்ள தேவாலா சோளவயல் பகுதிக்குச் செல்லும் வழியில் பாலம் கட்டும் பணி நடந்து வந்தது.
 இந்நிலையில் நிதிநிலையைக் காரணம் காட்டி பணியை நிறைவு செய்யாமல் ஒப்பந்ததாரர் விட்டுவிட்டார். 
மீண்டும் பாலம் கட்டுமானப் பணி நடக்கும் என பொறுத்திருந்து பார்த்த பொதுமக்கள் தற்போது தொடர் மழை பெய்வதால் மீதமுள்ள பணியை அவர்களே ஒன்றுசேர்ந்து கடந்த இரண்டு நாள்களில் செய்து முடித்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/16/பாதியில்-நின்ற-பாலம்-கட்டும்-பணி-பொதுமக்கள்-சேர்ந்து-முடித்தனர்-2960950.html
2960949 கோயம்புத்தூர் நீலகிரி குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் கவிழ்ந்த வேன்:  21 பேர் காயம் DIN DIN Monday, July 16, 2018 07:32 AM +0530 நீலகிரி மாவட்டம்,  மரப்பாலம் பகுதியில் குடியாத்தத்தில் இருந்து  உதகைக்கு  சுற்றுலா வந்தவர்களின் வேன் தடுப்புச் சுவற்றில் மோதி ஏற்பட்ட விபத்தில் 21 பேர் படுகாயம் அடைந்தனர். 
வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த சிலர் வேனில் உதகைக்கு சுற்றுலா வந்தனர். அங்கு பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை குடியாத்தம் புறப்பட்டனர். வேனை குடியாத்தத்தைச் சேர்ந்த வசந்தரூபன் ஓட்டிவந்தார். 
குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் மரப்பாலம் என்ற இடத்தில் வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரத் தடுப்பில் மோதி கவிழ்ந்தது. 
இதில் வேனில் வந்த 21பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் குன்னூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். படுகாயம் அடைந்த முத்துகுமார் (39), விஷ்ணுராம் (18), கோகுலன் (30), மாதவன் (38), விக்னேஷ் (25), ஷபியுல்லா (22)  ஆகிய 6  பேர் கோவை  மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டனர்.  இந்த விபத்து குறித்து வெலிங்டன் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/16/குன்னூர்---மேட்டுப்பாளையம்-சாலையில்-கவிழ்ந்த-வேன்--21-பேர்-காயம்-2960949.html
2960948 கோயம்புத்தூர் நீலகிரி குன்னூர், கோத்தகிரியில் பலத்த காற்று: சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு DIN DIN Monday, July 16, 2018 07:31 AM +0530 குன்னூர், கோத்திகிரி சுற்றுவட்டாரப்  பகுதிகளில்  தொடர்ந்து பலத்த காற்று வீசி வருவதால் பல்வேறு இடங்களில்  மரங்கள் பெயர்ந்து வீடுகள் மீது விழுந்தன. சாலைகளில் மரம் விழுந்ததால் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலைமுதல் பலத்த காற்று வீசி வருகிறது.  
இதனால் உதகை - கோத்தகிரி சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
இதேபோல ஓட்டுப்பட்டறைப் பகுதியில் ரசாக் என்பவரது வீட்டின் மீதும், ஒசட்டி பகுதியில் செல்வி என்பவரது வீட்டின் மீதும் பெரிய மரங்கள் விழுந்தன. 
இதில் வீட்டுச் சுவர்கள் இடிந்தன. வீட்டிலிருந்த யாருக்கும் அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
நடுஅட்டி பகுதியில் சாலையில் விழுந்த மரங்களை தீயணைப்புத் துறை வீரர்கள் உடனடியாக அகற்றி போக்குவரத்தைச் சீரமைத்தனர். பலத்த காற்று வீசி வருவதால் பல்வேறு பகுதிகளில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும்  என பொதுமக்கள்  கோரிக்கை  விடுத்துள்ளனர்.   
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/16/குன்னூர்-கோத்தகிரியில்-பலத்த-காற்று-சாலையில்-மரம்-விழுந்ததால்-போக்குவரத்து-பாதிப்பு-2960948.html
2960947 கோயம்புத்தூர் நீலகிரி பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை  DIN DIN Monday, July 16, 2018 07:31 AM +0530 நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து வலுத்து வரும் நிலையில் உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா  உத்தரவிட்டுள்ளார். ஆனால் குன்னூர், கோத்தகிரி தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/16/பள்ளி-கல்லூரிகளுக்கு-இன்று-விடுமுறை-2960947.html
2960946 கோயம்புத்தூர் நீலகிரி பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை  DIN DIN Monday, July 16, 2018 07:31 AM +0530 நீலகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை இரவிலிருந்து தொடர்ந்து பரவலாக  மழை பெய்து வருகிறது. மழையுடன் பலத்த காற்றும் வீசி வருவதால் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. உதகையில் பிங்கர்போஸ்ட் பகுதியில் கல்லூரி மாணவரின் மீது மரம் விழுந்ததில் அவர் உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும், கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கூடலூர், தேவாலா உள்ளிட்ட பகுதிகளிலும், குந்தா, அவலாஞ்சி உள்ளிட்ட நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.  மழையுடன் பலத்த காற்றும் வீசி வருவதால், உதகை - கூடலூர் சாலையில் பைக்காரா, 18வது மைல், நடுவட்டம்  உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. இதனால் ஞாயிற்றுக்கிழமை காலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நடுவட்டம் பேரூராட்சி ஊழியர்கள், வனத் துறையினர், காவல் துறையினர் இணைந்து மரங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்தினர்.
மாணவர் சாவு: உதகையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் இமான் அகஸ்டியன் (18),  தனது தாய் ரோஸலின், சகோதரர் விபின் அபிலேஷ் ஆகியோருடன் ஞாயிற்றுக்கிழமை காலை பிங்கர்போஸ்டு பகுதியிலிருந்து அருகிலிருந்த தேவாலயத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் இருந்த மரம் அகஸ்டியன் தலை மீது விழுந்ததில் படுகாயம் அடைந்தார்.  உடனடியாக அவர் உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மரம் விழுந்ததில் காயமடைந்த அகஸ்டியனின் தாய் ரோஸலின், சகோதரர் அபிலேஷ் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நீர்த் தேக்கங்களில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த 2 நாள்களில் குந்தாவில் 4 வீடுகளும், கோத்தகிரியில் 2 வீடுகளும், உதகையில் ஒரு வீடும் சேதமடைந்துள்ளன.
அதேபோல, பலத்த காற்று காரணமாக பல்வேறு இடங்களில் மின்கம்பிகளின் மீது மரங்கள் விழுந்துள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. உதகை நகரில் காந்தல், பிங்கர்போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை நள்ளிரவில் துண்டிக்கப்பட்ட மின்சாரம் ஞாயிற்றுக்கிழமை மாலையில்தான் மீண்டும் சரியானது. தொடர்ந்து காற்று வீசி வருவதால் அவ்வப்போது மின் தடை தொடர்கிறது. கடும் குளிர் வாட்டுவதால், உதகை, குந்தா, கூடலூர் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி மழை நிலவரம்:
அவலாஞ்சி- 70 மி.மீ, கிளன்மார்கன்- 36 மி.மீ,   நடுவட்டம்- 33 மி.மீ, தேவாலா- 30 மி.மீ,  மேல் பவானி- 24 மி.மீ,  கூடலூர்- 17 மி.மீ, எமரால்டு- 9 மி.மீ.,  உதகை- 6.2 மி.மீ,  கல்லட்டி- 5 மி.மீ,  கொடநாடு- 4 மி.மீ. 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/16/பள்ளி-கல்லூரிகளுக்கு-இன்று-விடுமுறை-2960946.html
2960945 கோயம்புத்தூர் நீலகிரி நீலகிரியில் பரவலாகத் தொடர் மழை: மரம் தலையில் விழுந்து கல்லூரி மாணவர் பலி DIN DIN Monday, July 16, 2018 07:31 AM +0530 நீலகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை இரவிலிருந்து தொடர்ந்து பரவலாக  மழை பெய்து வருகிறது. மழையுடன் பலத்த காற்றும் வீசி வருவதால் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. உதகையில் பிங்கர்போஸ்ட் பகுதியில் கல்லூரி மாணவரின் மீது மரம் விழுந்ததில் அவர் உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும், கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கூடலூர், தேவாலா உள்ளிட்ட பகுதிகளிலும், குந்தா, அவலாஞ்சி உள்ளிட்ட நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.  மழையுடன் பலத்த காற்றும் வீசி வருவதால், உதகை - கூடலூர் சாலையில் பைக்காரா, 18வது மைல், நடுவட்டம்  உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. இதனால் ஞாயிற்றுக்கிழமை காலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நடுவட்டம் பேரூராட்சி ஊழியர்கள், வனத் துறையினர், காவல் துறையினர் இணைந்து மரங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்தினர்.
மாணவர் சாவு: உதகையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் இமான் அகஸ்டியன் (18),  தனது தாய் ரோஸலின், சகோதரர் விபின் அபிலேஷ் ஆகியோருடன் ஞாயிற்றுக்கிழமை காலை பிங்கர்போஸ்டு பகுதியிலிருந்து அருகிலிருந்த தேவாலயத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் இருந்த மரம் அகஸ்டியன் தலை மீது விழுந்ததில் படுகாயம் அடைந்தார்.  உடனடியாக அவர் உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மரம் விழுந்ததில் காயமடைந்த அகஸ்டியனின் தாய் ரோஸலின், சகோதரர் அபிலேஷ் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நீர்த் தேக்கங்களில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த 2 நாள்களில் குந்தாவில் 4 வீடுகளும், கோத்தகிரியில் 2 வீடுகளும், உதகையில் ஒரு வீடும் சேதமடைந்துள்ளன.
அதேபோல, பலத்த காற்று காரணமாக பல்வேறு இடங்களில் மின்கம்பிகளின் மீது மரங்கள் விழுந்துள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. உதகை நகரில் காந்தல், பிங்கர்போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை நள்ளிரவில் துண்டிக்கப்பட்ட மின்சாரம் ஞாயிற்றுக்கிழமை மாலையில்தான் மீண்டும் சரியானது. தொடர்ந்து காற்று வீசி வருவதால் அவ்வப்போது மின் தடை தொடர்கிறது. கடும் குளிர் வாட்டுவதால், உதகை, குந்தா, கூடலூர் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி மழை நிலவரம்:
அவலாஞ்சி- 70 மி.மீ, கிளன்மார்கன்- 36 மி.மீ,   நடுவட்டம்- 33 மி.மீ, தேவாலா- 30 மி.மீ,  மேல் பவானி- 24 மி.மீ,  கூடலூர்- 17 மி.மீ, எமரால்டு- 9 மி.மீ.,  உதகை- 6.2 மி.மீ,  கல்லட்டி- 5 மி.மீ,  கொடநாடு- 4 மி.மீ. 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/16/நீலகிரியில்-பரவலாகத்-தொடர்-மழை-மரம்-தலையில்-விழுந்து-கல்லூரி-மாணவர்-பலி-2960945.html
2960575 கோயம்புத்தூர் நீலகிரி மழைக் காலம்: தடுப்புச் சுவர்களை சீரமைக்க வலியுறுத்தல் DIN DIN Sunday, July 15, 2018 05:25 AM +0530 மழைக் காலம் என்பதால் மலைக் காய்கறித் தோட்டங்களைப் பாதுகாக்கவும், மக்களின் பயன்பாட்டுக்கான வழித்தடத்தில் உள்ள தடுப்புச் சுவர்களைச் சீரமைக்கவும் வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
குன்னூர் கோத்தகிரி பகுதிகளில் நகராட்சி, நெடுஞ்சாலைத் துறைக் கட்டுப்பாட்டில் 50 க்கும் மேற்பட்ட தடுப்புச் சுவர்கள் மற்றும் மழைநீர் வடியும் கால்வாய்கள் உள்ளன.
இதில், குன்னூர் தபால் நிலையச் சாலைப் பகுதியில் உள்ள மழைநீர் செல்லும் கால்வாய், தடுப்புச் சுவர் மிகவும் பழுதடைந்து உள்ளது.
இதனால், மழைக் காலத்தில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொது மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
இதேபோல, இத்தலாறு, கைகாட்டி, சாம்ராஜ், மேரிலேண்ட் பகுதிகளில் 35 க்கும் மேற்பட்ட தடுப்புச் சுவர்கள் மழையின்போது, தேயிலை, மலைக் காய்கறித் தோட்டத்தில் இருந்து அடித்து வரப்பட்ட சகதியால் அடைபட்டுக் கிடக்கின்றன. இந்த அடைப்பால் பருவமழையின்போது பெய்யும் பலத்த மழையால், சாலையில் மழைநீர் முழுவதும் வழிந்தோடுவதுடன், கீழ் பகுதியில் உள்ள மலைக் காய்கறித் தோட்டங்களும் பாதிக்கப்படுகின்றன.
இதன் காரணமாக விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, பருவமழை தற்போது தொடங்கியுள்ள நிலையில், மழைநீர் வடியும் கால்வாய்கள், தடுப்புச் சுவர்களை சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/15/மழைக்-காலம்-தடுப்புச்-சுவர்களை-சீரமைக்க-வலியுறுத்தல்-2960575.html
2960574 கோயம்புத்தூர் நீலகிரி கூடலூர் - மைசூரு சாலையில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி தீவிரம் DIN DIN Sunday, July 15, 2018 05:25 AM +0530 நிலச்சரிவு ஏற்பட்ட கூடலூர் - மைசூரு சாலையில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
நீலகிரி மாவட்டம், கூடலூரில் இருந்து மைசூரு செல்லும் சாலையில், மரப்பாலம் பகுதியில் வியாழக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது.
கனரக வாகனங்கள் சென்றால் சாலை முற்றிலும் சேதமடையும் நிலை ஏற்பட்டதால் சாலையின் நடுப் பகுதியில் தடுப்பு ஏற்படுத்தி ஒருபுறம் மட்டும் வாகனங்கள் சென்றுவர வழி ஏற்படுத்தப்பட்டது.
கர்நாடகம் - தமிழகம் - கேரளம் ஆகிய மூன்று மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலையான இது, பயணிகள் போக்குவரத்துக்கு மட்டுமின்றி சரக்கு வாகனங்கள் போக்குவரத்துக்கும் மிகவும் முக்கியமானதாகும்.
எனவே, நிலச்சரிவு ஏற்படாமல் தடுக்கும் விதமாகத் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/15/கூடலூர்---மைசூரு-சாலையில்-தடுப்புச்-சுவர்-அமைக்கும்-பணி-தீவிரம்-2960574.html
2960573 கோயம்புத்தூர் நீலகிரி கான்கிரீட் கூரை சேதம்: நூலகக் கட்டடத்தில் மழைநீர் கசிவு DIN DIN Sunday, July 15, 2018 05:25 AM +0530 கூடலூர் நூலகக் கட்டடத்தின் கான்கிரீட் கூரை சேதமடைந்துள்ளதால் நூலகத்துக்குள் மழைநீர் கசிவு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூரில் உள்ள நூலகத்தின் கான்கிரீட் கூரை சேதமடைந்துள்ளது. இதனால் தற்போது பெய்யும் தொடர் மழையால் நூலகத்துக்குள் மழைநீர் கசிந்து வருகிறது.
தொடர்ந்து பலத்த மழை பெய்யும்போது நூலகம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதே நிலை நீடித்தால் நூலகத்தில் உள்ள அரிய, பழமையான புத்தகங்கள் சிதைந்து போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் நூலகக் கட்டடத்தை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வாசகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/15/கான்கிரீட்-கூரை-சேதம்-நூலகக்-கட்டடத்தில்-மழைநீர்-கசிவு-2960573.html
2960572 கோயம்புத்தூர் நீலகிரி நீலகிரியில் வலுக்கும் தேயிலை விவசாயிகள் போராட்டம்: குடும்ப அட்டை, ஆதார் அட்டைகளை ஆட்சியரிடம் ஒப்படைக்க முடிவு DIN DIN Sunday, July 15, 2018 05:24 AM +0530 நீலகிரி மாவட்டத்தில் பசுந்தேயிலைக்கான குறைந்தபட்ச விலை வழங்கப்படாவிட்டால் மாவட்டத்தில் உள்ள தேயிலை விவசாயிகள் தங்களது குடும்ப அட்டை, ஆதார் அட்டைகளை ஆட்சியரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.
படுக தேச பார்ட்டியின் மாநில உயர்மட்டக் குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் மஞ்சை மோகன் தலைமையில் உதகையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பசுந்தேயிலை சாகுபடியாளர்களின் எதிர்காலம் குறித்தும், நிரந்தர விலையாக கிலோவுக்கு ரூ. 30 நிர்ணயம் செய்யக் கோரியும் நடைபெறவுள்ள போராட்டம் தொடர்பாகவும் நிர்வாகிகள் ஆலோசனை தெரிவித்தனர்.
மேலும், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள், அனைத்துத் தேயிலை விவசாய சங்கத் தலைவர்கள், அனைத்து வியாபார சங்கத் தலைவர்கள் கலந்துக்கொள்ளும் ஆலோசனைக் கூட்டம் உதகையில் ஜூலை 20 ஆம் தேதி நடத்தப்பட்டு பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைத்திட எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்தும், அதைத் தொடர்ந்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்தும் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் சங்கத்தின் உயர்மட்டக்குழு உறுப்பினர்களான குள்ளா கவுடர், வேணுகோபால், சரத் ஆகியோருடன் சிறப்பு அழைப்பாளர்களான நீலகிரி பார்மர்ஸ் பிரடியூசர்ஸ் நிறுவன நிர்வாகி பிரகாஷ், தேயிலைத் தூள் விற்பனையாளர் சங்க நிர்வாகி வாசுதேவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/15/நீலகிரியில்-வலுக்கும்-தேயிலை-விவசாயிகள்-போராட்டம்-குடும்ப-அட்டை-ஆதார்-அட்டைகளை-ஆட்சியரிடம்-ஒப்படைக-2960572.html
2960570 கோயம்புத்தூர் நீலகிரி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் அபாயத்தில் ஆற்றுப்பாலம் DIN DIN Sunday, July 15, 2018 05:24 AM +0530 தேவாலா பகுதியில் உள்ள ஹட்டி கிராமத்தில் உள்ள ஆற்றுப்பாலம் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் அபாயத்தில் உள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டத்தில் உள்ள தேவாலா பகுதியில் இருந்து ஹட்டி கிராமத்தை இணைக்கும் சாலையில் உள்ள ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள சாலை மழை வெள்ளத்தில் அரிப்பு ஏற்பட்டு தடுப்புகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. தற்போது தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் தொடர்ந்து ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. தற்போது உள்ள சூழலில் அபாயக் கட்டத்தில் உள்ள இந்த ஆற்றுப்பாலம் மழை வெள்ளத்தில் எந்த நேரத்திலும் அடித்துச் செல்லப்படும் நிலையில் உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் இப்பாலத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/15/வெள்ளத்தில்-அடித்துச்-செல்லப்படும்-அபாயத்தில்-ஆற்றுப்பாலம்-2960570.html
2960569 கோயம்புத்தூர் நீலகிரி சிதிலமடைந்துள்ள அரசு ஊழியர் குடியிருப்பை சீரமைக்க வலியுறுத்தல் DIN DIN Sunday, July 15, 2018 05:24 AM +0530 கோத்தகிரி மிஷன் காம்பவுண்ட் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் சிதிலமடைந்துள்ள அரசு ஊழியர் குடியிருப்பைச் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோத்தகிரி மிஷன் காம்பவுண்ட் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகள் 24 உள்ளன. இந்தக் குடியிருப்புகளுக்காக உள்ள குடிநீர் கிணறு சுத்தப்படுத்தாமல் உள்ளது. இதனால், அந்தக் கிணற்று நீரைப் பயன்படுத்த முடியாத நிலை
ஏற்பட்டு உள்ளது. மேலும், பேரூராட்சி சார்பில் 24 வீடுகளுக்காக கொடுக்கப்பட்டுள்ள 2 இணைப்புகளில் தண்ணீர் கிடைக்காமல் குடியிருப்பு வாசிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும், கழிப்பறை வசதி இல்லாமலும், குடியிருப்பில் உள்ள படிகட்டுகள் உடைந்தும், சுவர்கள் சிதிலமடைந்தும் உள்ளதால் இங்கு வசிக்க பயந்து 11 குடும்பத்தினர் வாடகை வீட்டுக்குச் சென்றுவிட்டனர். எனவே, 35 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்தப் பழைய கட்டடத்தைச் சீரமைக்க வேண்டும் என குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/15/சிதிலமடைந்துள்ள-அரசு-ஊழியர்-குடியிருப்பை-சீரமைக்க-வலியுறுத்தல்-2960569.html
2960294 கோயம்புத்தூர் நீலகிரி நீலகிரியில் வலுவடையும் பருவ மழை DIN DIN Sunday, July 15, 2018 01:49 AM +0530 நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக தென்மேற்குப் பருவ மழை வலுத்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் கேரளம், கர்நாடக மாநிலங்களை ஒட்டியுள்ள சில இடங்களில் தென்மேற்குப் பருவ மழை பரவலாக வலுத்தும், கூடலூர், தேவாலா உள்ளிட்ட பகுதிகளில் மிக வலுத்தும், உதகை, குன்னூர், கேத்தி பகுதிகளில் இயல்பான அளவிலும் பெய்து வருகிறது.
இந்த மழையின் தாக்கம் அடுத்த சில நாள்களில் நீலகிரி மாவட்டத்தில் மிக அதிக அளவில் இருக்கும் என கூறப்படுகிறது.
சனிக்கிழமை பகலில் மழை வெகுவாக குறைந்திருந்த நிலையில் மாலை வரை அவலாஞ்சியில் 86 மி.மீ., தேவாலாவில் 78 மி.மீ., மேல்பவானியில் 73 மி.மீ., கிளன்மார்கனில் 41 மி.மீ., கூடலூரில் 37 மி.மீ., நடுவட்டத்தில் 32 மி.மீ., எமரால்டில் 11 மி.மீ., உதகையில் 8.4 மி.மீ., குந்தாவில் 6 மி.மீ., கேத்தியில் 3 மி.மீ., கல்லட்டியில் 2 மி.மீ., குன்னூரில் 2 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. உதகை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து வீசிய பலத்த காற்றின் காரணமாக உதகை, கூடலூர் வழித்தடத்தில் தலைக்குந்தா, நடுவட்டம், பைக்காரா மற்றும் ஹில்பங்க் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை மாலையில் சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்ததால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர் மழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக உதகை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பகல் நேரத்தில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டு, இரவில் சீரடைந்தது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/15/நீலகிரியில்-வலுவடையும்-பருவ-மழை-2960294.html
2959540 கோயம்புத்தூர் நீலகிரி மழைநீர் ஒழுகும் அரசு மருந்தகக் கட்டடம் DIN DIN Saturday, July 14, 2018 01:53 AM +0530 கூடலூர் நகர அரசு மருந்தகக் கட்டடத்தில் மழைநீர் ஒழுவதால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் அரசு மருத்துவமனையின் நகர மருந்தகம் பழைய பேருந்து நிலையம் சந்திப்பு அருகே செயல்பட்டு வருகிறது.இந்தக் கட்டடத்தின் காங்கிரீட் கூரை பழுதடைந்து, மழை நீர் கசிந்து உள்ளே ஒழுகுகிறது. 
இதனால், மருந்தகத்துக்கு வரும் நோயாளிகள் மருந்தகத்தின் உள்ளேயே குடை பிடித்துக் கொண்டு நிற்கவேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவர்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும் இதே நிலைதான்.
இதனால், வெளியூர்களிலிருந்து வரும் நோயாளிகளும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தென்மேற்குப் பருவ மழை தொடர்ந்து பெய்வதால் நிலைமை மேலும் மோசமாகி வருகிறது. 
எனவே, நோயாளிகளின் நிலையைக் கருத்தில் கொண்டு இந்தக் கட்டடத்தை விரைவில் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு
ள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/14/மழைநீர்-ஒழுகும்-அரசு-மருந்தகக்-கட்டடம்-2959540.html
2959532 கோயம்புத்தூர் நீலகிரி தோட்ட மூலா பகுதியில் ஆபத்தான திறந்தவெளிக் கிணறு DIN DIN Saturday, July 14, 2018 01:47 AM +0530 கூடலூர், தோட்டமூலா பகுதியில் உள்ள திறந்தவெளிக் கிணற்றால் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் நகராட்சியில் உள்ள தோட்டமூலாவில் தனியாருக்குச் சொந்தமான பழைய கிணறு உள்ளது. இந்தக் கிணற்றின் சுற்றுச் சுவர் கற்களை வேறு பயன்பாட்டுக்கு எடுத்துச் சென்றுவிட்டனர்.
இதனால் சுற்றுச் சுவர் இன்றி மிகவும் ஆபாத்தான நிலையில், திறந்தவெளியில் கிணறு உள்ளது. குடியிருப்புப் பகுதியில் உள்ள இந்த கிணற்றால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன் கிணற்றை மூடவேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/14/தோட்ட-மூலா-பகுதியில்-ஆபத்தான-திறந்தவெளிக்-கிணறு-2959532.html
2959531 கோயம்புத்தூர் நீலகிரி தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டுள்ளது: கே.பாலகிருஷ்ணன் DIN DIN Saturday, July 14, 2018 01:47 AM +0530 தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டுள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
கூடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு அரசியல் பேரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
இதில் பங்கேற்ற அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
காவல் துறை மூலமாகத் தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை அரசு அமல்படுத்தியுள்ளது. பாதிக்கப்படும் மக்களுக்காகப் போராடுபவர்கள், போராடும் அமைப்புகள் மீது வழக்குத் தொடுத்து, அடக்கு முறையைக் கையாள்கிறது. பசுமை வழிச் சாலை பிரச்னையில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கச் சென்ற கம்யூனிஸ்ட் கட்சியினரை கைது செய்திருப்பது அரசின் ஏதேச்சாதிகாரத்தைக் காட்டுகிறது.
விவசாயிகளை மிரட்டி, ஜனநாயகத்தின் குரல்வளையை நெறித்துப் போடப்படும் இந்தப் பசுமை வழிச்சாலை யாருக்காக என்பது மர்மமாக உள்ளது. அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து விவசாயிகளைத் திரட்டி, ஆகஸ்ட் 1ஆம் தேதி, திருவண்ணாமலையில் இருந்து சேலம் வரை நடைப் பயணம் மேற்கொள்வது என முடிவுசெய்யப்பட்டுள்ளது. சத்துணவு முட்டை விநியோகத்தில் ரூ. 5 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பது குறித்து சி.பி.ஐ.விசாரனை நடத்த வேண்டும்.
பழனி கோயில் சிலை செய்வதில் முறைகேடு நடைபெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசின் அடக்கு முறையைக் கண்டித்து நீதிமன்றங்களுக்குச் சென்று நீதி பெறுவதுடன், மக்களைத் திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டங்களை நடத்தும். உதகை, சாண்டிநள்ளா பகுதியில் செயல்பட்ட ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் மாசுக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் உத்தரவால் திடீரென மூடப்பட்டுள்ளது. எந்தவித அறிவிப்பும் இன்றித் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். வேலை இழந்த தொழிலாளர்கள், நிறுவனத்தைத் திறக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/14/தமிழகத்தில்-அறிவிக்கப்படாத-எமர்ஜென்சி-அமல்படுத்தப்பட்டுள்ளது-கேபாலகிருஷ்ணன்-2959531.html
2959529 கோயம்புத்தூர் நீலகிரி குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு DIN DIN Saturday, July 14, 2018 01:47 AM +0530 நீலகிரி மாவட்டம், குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப் பாதை  கொண்டை ஊசி வளைவில் வைக்கோல் லாரி கவிழ்ந்து வெள்ளிக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் -  மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் சத்தியமங்கலத்தில் இருந்து வைக்கோல் ஏற்றி வந்த லாரி, மரப்பாலம் அருகே 12 ஆவது கொண்டை ஊசி வளைவில் வந்தபோது நிலை தடுமாறிக் கவிழ்ந்தது.
இதன் காரணமாக சாலையின் இருமார்க்கத்திலும் வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மலைப் பாதையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. சம்பவ இடத்துக்கு வந்த  குன்னூர் காவல் துறையினர், நெடுஞ்சாலைத் துறையினர் போக்குவரத்தைச் சீர் செய்தனர். கொண்டை ஊசி வளைவில் லாரி கவிழ்ந்ததால் பேருந்து மற்றும் கனரக வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. 
இதையடுத்து, குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் அனைத்தும் கோத்தகிரி வழியாகத் திருப்பி விடப்பட்டன.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/14/குன்னூர்---மேட்டுப்பாளையம்-மலைப்-பாதையில்-லாரி-கவிழ்ந்து-போக்குவரத்து-பாதிப்பு-2959529.html
2959528 கோயம்புத்தூர் நீலகிரி கூடலூர் அரசுக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு DIN DIN Saturday, July 14, 2018 01:45 AM +0530 கூடலூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கல்லூரியில் 2018-19 ஆம் கல்வியாண்டுக்கான (20 சதவீதம் கூடுதல் இடங்களுக்கான) கடந்த மே விண்ணப்பங்களை 16 முதல் 30 ஆம் தேதி வரை சமர்பித்தவர்களுக்கான மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு கீழ்க்கண்ட தேதிகளில் காலை 10 மணிக்கு நடைபெறும்.
அதன்படி, 800 முதல் 438 கட்ஆஃப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஜூலை 17 ஆம் தேதியும், 437 முதல் 359 கட் ஆஃப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஜூலை 18 ஆம் தேதியும், 358 முதல் 216 வரை கட் ஆஃப் பெற்றவர்களுக்கு 19 ஆம் தேதியும் கலந்தாய்வு நடைபெறும்.
தாமதமாக சமர்ப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். முதுநிலை மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 20 ஆம் தேதி நடைபெறும் என கல்லூரி முதல்வர் டாக்டர் சி.வடிவேலு தெரிவித்துள்ளார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/14/கூடலூர்-அரசுக்-கல்லூரியில்-மாணவர்-சேர்க்கைக்-கலந்தாய்வு-2959528.html
2959526 கோயம்புத்தூர் நீலகிரி இளம் அறிவியலாளர்களுக்கான 2 நாள் சிறப்பு முகாம் உதகையில் தொடக்கம் DIN DIN Saturday, July 14, 2018 01:45 AM +0530 உதகையில் உள்ள கிரஸண்ட் கேஸில் பள்ளியில் இளம் அறிவியலாளர்களுக்கான 2 நாள் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இக்கண்காட்சியை நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சண்முகப்ரியா தொடக்கிவைத்தார்.
இளம் அறிவியலாளர்களை ஊக்குவிக்கும்  வகையிலும்,  புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்க வலியுறுத்தியும் ஆண்டுதோறும் நடத்தப்படும் இளம் அறிவியலாளர்களுக்கான 2 நாள் சிறப்பு முகாம் உதகையில் உள்ள கிரஸண்ட் கேஸில் பள்ளியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. 
இளம் விஞ்ஞானிகளுக்கு மிகப்பெரும் உயரத்தை தொடக்கூடிய அளவுக்கான தொழில்நுட்பத்தை எளிதாதவும், விரைவாகவும் வெளிக்கொண்டு வரும் வகையில் இந்தக் கண்காட்சி நடத்தப்படுகிறது.
1ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ள இந்த அறிவியல் கண்காட்சி 2 நாள்கள் நடைபெறவுள்ளது.  
இதில், மாணவ, மாணவிகளின் பல்வேறு படைப்புகளைத் தவிர, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள படைப்புகள், கண்காட்சி குறித்த விளக்கக் கூட்டமும் நடைபெற்றது. 
அதைத் தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோருக்கான கண்காட்சி சனிக்கிக்கிழமை நடைபெறும். 
இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளர் ஜி.உமர் பாரூக் தலைமையிலான குழுவினர் செய்துள்ளனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/14/இளம்-அறிவியலாளர்களுக்கான-2-நாள்-சிறப்பு-முகாம்-உதகையில்-தொடக்கம்-2959526.html
2959013 கோயம்புத்தூர் நீலகிரி உதகை: பகலில் ஓய்ந்த மழையால் மக்கள் நிம்மதி DIN DIN Friday, July 13, 2018 07:48 AM +0530 நீலகிரியில் பரவலாகத் தொடர்ந்து பெய்து வந்த மழை வியாழக்கிழமை பகலில் ஓய்ந்ததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.  
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை வலுத்து வரும் நிலையில் கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள பகுதிகளிலும்,  மாவட்டத்தின் முக்கிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் அதிகபட்சமாக அப்பர்பவானி பகுதியில் 167 மில்லி மீட்டரும்,  அவலாஞ்சியில் 156 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. 
உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார்ப பகுதிகளில் பலத்த மழையாக இல்லாவிட்டாலும், பலத்த காற்றுடன் கூடிய மழையாக இருந்ததால் புதன்கிழமை முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது. பலத்த காற்றின் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்தது.  
இந்நிலையில், வியாழக்கிழமை பகலில் மழை இல்லாததாலும், மின் இணைப்புகள் சீரமைக்கப்பட்டதாலும் மக்கள் நிம்மதி அடைந்தனர்.
மாவட்டத்தில் கடந்த 4 நாள்களாகத் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக கூடலூரில் ஓவேலி, மரப்பாலம்  பகுதியில் ஒரு வீடும், உதகை வட்டத்தில், உதகை நகரம், நடுவட்டம் மற்றும் கக்குச்சி பகுதிகளில் தலா ஒரு வீடும் என மொத்தம் 4 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதைத் தவிர மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த காற்றின் காரணமாக எப்போது வேண்டுமானாலும் விழலாம் எனும் நிலையில் நூற்றுக்கணக்கான மரங்கள் உள்ளன. இவற்றில், குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில், அபாயகரமாக உள்ள மரங்களை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 
இருப்பினும் நீலகிரி மாவட்டம், உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்திலேயே உள்ளனர். தொடர் மழையின் காரணமாக உதகை உள்ளிட்ட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடும் குளிர் நிலவுகிறது.
மாவட்டத்தில், வியாழக்கிழமை காலை வரை பதிவான மழை விவரம் வருமாறு (அளவு மில்லி மீட்டரில்): 
அப்பர்பவானி-167, அவலாஞ்சி-156, தேவாலா-92,   கிளன்மார்கன்-65,  கூடலூர்-62, எமரால்டு-44,  நடுவட்டம்-36.5,  குந்தா-34, கொடநாடு-22,  உதகை-12.2,  கேத்தி-9,  குன்னூர்-6.8,  கெத்தை-6,  பர்லியாறு-5, கோத்தகிரி-4.1, கிண்ணக்கொரை 2.2.
இதுவே, பகலில் மழை வெகுவாக குறைந்து  வியாழக்கிழமை காலை 8 முதல் மாலை 4 மணி வரையிலான 8 மணி  நேரத்தில் அதிகபட்சமாக தேவாலாவில் 45 மி.மீ,  கூடலூரில் 23 மி.மீ, அவலாஞ்சியில் 17 மி.மீ, அப்பர்பவானியில் 10 மி.மீ,  குந்தாவில் 8 மி.மீ, எமரால்டு, நடுவட்டம் மற்றும் கிளன்மார்கனில் தலா 7 மி.மீ, உதகையில் 4.4 மி.மீ, கல்லட்டியில் 3.3 மில்லி மீட்டரும் பதிவாகியுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/13/உதகை-பகலில்-ஓய்ந்த-மழையால்-மக்கள்-நிம்மதி-2959013.html
2959012 கோயம்புத்தூர் நீலகிரி குன்னூர் காட்டேரி அரசு தோட்டக் கலை மாதிரிப் பண்ணையில் அன்னாசி பழ சாகுபடி DIN DIN Friday, July 13, 2018 07:47 AM +0530 குன்னூர் காட்டேரி அரசு தோட்டக் கலைப் பண்ணையில் உள்ள மாதிரிப் பண்ணையில் அன்னாசி பழ சாகுபடி வெற்றிகரமாக மகசூல் கிடைத்து வருகிறது. 
அன்னாசி பழ சாகுபடி கேரள மாநிலத்தில் அதிக அளவு மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை நாமக்கல் மாவட்டத்தில், குறிப்பாக கொல்லி மலைப் பகுதியில் அதிக அளவு பயிரிடப்படுகிறது. 
அன்னாசி பழ வகைகளில் பல ரகங்கள் இருந்தாலும் மொரீஷியஸ் எனும் வகை அதிக அளவில் பயிரிடப்படுகிறது. அன்னாசி பழம் பயிரிட அதிகம் தண்ணீர் தேவைப்படாது என்பதால் மானாவாரி நிலத்திலும் இதை சாகுபடி செய்யலாம். 
நீலகிரி மாவட்டத்திலும் அன்னாசி பழ சாகுபடி மேற்கொண்டால் அது வெற்றிகரமாக அமையுமா எனும் சோதனையில் ஈடுபட தோட்டக் கலைத் துறை நிர்வாகம் முடிவு செய்தது. 
அதன்படி குன்னூர் அருகே உள்ள காட்டேரி அரசு தோட்டக் கலைப் பண்ணையில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 
அதன்பேரில் அரசு தோட்டக் கலைப் பண்ணையில் உள்ள மாதிரிப் பண்ணையில், 20 சென்ட் நிலத்தில், 4 ஆயிரம் அன்னாசி பழ நாற்றுகள் கடந்த ஓர் ஆண்டுக்கு முன்னர் நடவு செய்யப்பட்டன. தற்போது இந்தச் செடிகளில் அன்னாசி காய்த்துள்ளது. இதை நடவு செய்த ஒன்றரை ஆண்டுகளில் மகசூல் எடுக்கலாம். 
காட்டேரி அரசு தோட்டக் கலைப் பண்ணையில் உள்ள மாதிரிப் பண்ணையில் அன்னாசி பழம் வெற்றிகரமாக மகசூல் கிடைத்து வருகிறது. 
மேலும், இதை ஆய்வு  செய்து நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கு மாற்று பழப் பயிராக அறிமுகப்படுத்த தோட்டக் கலைத் துறை முடிவு செய்துள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/13/குன்னூர்-காட்டேரி-அரசு-தோட்டக்-கலை-மாதிரிப்-பண்ணையில்-அன்னாசி-பழ-சாகுபடி-2959012.html
2959011 கோயம்புத்தூர் நீலகிரி தொடர் மழை: அதிகாரிகள் கண்காணிப்பு DIN DIN Friday, July 13, 2018 07:47 AM +0530 தொடர் மழை பெய்து வருவதால் அதிகாரிகள் தொடர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம், மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக சாரல் மழை பெய்துவருகிறது. கடந்த சில நாள்களாக இடைவிடாமல் வீசும் சூறாவளி காற்றால், சாலையோரம் மற்றும் தேயிலைத் தோட்டங்களில் நூற்றுக்கணக்கான மரங்கள் சாய்துள்ளன.
 குந்தா பாலம், ராமையா பிரிட்ஜ் அருகே காற்றினால் 3 மரங்கள் வியாழக்கிழமை சாலையில் விழுந்தன. இதனால், மஞ்சூரில் இருந்து உதகை, குன்னூர், அப்பர்பவானி, கிண்ணக்கொரை பகுதிகளுக்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. 
இதேபோல, கோரகுந்தா, அவலாஞ்சி பகுதிகளிலும் ஏராளமான மரங்கள் விழுந்துள்ளன. இதனால் மஞ்சூர் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பல இடங்களில் தொடர் மின் தடை ஏற்பட்டு வருகிறது. இந்தத் தொடர் மழை காரணமாக நெடுஞ்சாலை, மின் வாரியத் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/13/தொடர்-மழை-அதிகாரிகள்-கண்காணிப்பு-2959011.html
2959010 கோயம்புத்தூர் நீலகிரி தனியார் செல்லிடப்பேசி நிறுவனங்கள் தோண்டும் குழியால் விபத்துக்குள்ளாகும் வாகனங்கள் DIN DIN Friday, July 13, 2018 07:47 AM +0530 கோத்தகிரியில் தனியார் செல்லிடப்பேசி நிறுவனங்கள் தோண்டும் குழிகளில் சிக்கி வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றன.   
கோத்தகிரியிலிருந்து கூக்கல்தொரை வரை சாலையோரத்தில் தனியார் செல்லிடப்பேசி நிறுவனம் கேபிள் ஒயர் பதிக்க சாலையோரத்தில் குழி தோண்டி வருகிறது. 
வெட்டியெடுக்கப்பட்டு, சாலையிலேயே போடப்படும் மண் குவியல், மழை காரணமாக சேறும், சகதியுமாக உள்ளது. பல இடங்களில், தோண்டிய குழிகளில் கேபிள்களைப் பதித்து, குழிகளை மூடாததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். 
இந்நிலையில், காய்கறி லாரி ஒன்று கண்ணேரி முக்கு அருகில் தோண்டப்பட்ட குழியில்  புதன்கிழமை இரவு சிக்கியது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 
இதையடுத்து, பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு, இரண்டு மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் காய்கறி லாரி மீட்கப்பட்டது. 
இதேபோல ராம்சந்த் பகுதியில் இருந்து, சக்தி மலை வரை, பல இடங்களில் குழிகள் தோண்டப்பட்டன. சாலையில் கொட்டப்பட்ட ஈர மண்ணால் வாகனங்கள் செல்ல முடியவில்லை. மண் கொட்டப்பட்டதால் குறுகலான சாலையில் வாகனங்கள் செல்லமுடியாமல் தனியார் ஜீப் ஒன்று, நின்று கொண்டிருந்த காரில் மோதியது. 
இதில், கார் பலத்த சேதமடைந்தது. இதுகுறித்து, கார் உரிமையாளர் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினர் வந்து பணிகளைத் தடுத்து நிறுத்தினர். 
இதுகுறித்து, பேரூராட்சி அதிகாரி கண்ணன் கூறும்போது, தனியார் செல்லிடப்பேசி நிர்வாகம், பேரூராட்சி நிர்வாகத்திடம் எவ்வித அனுமதியும் பெறவில்லை என தெரிவித்தார். 
எனவே, முறையான அனுமதி பெறாமல் சாலைகளைத் தோண்டி, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீது  கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/13/தனியார்-செல்லிடப்பேசி-நிறுவனங்கள்-தோண்டும்-குழியால்-விபத்துக்குள்ளாகும்-வாகனங்கள்-2959010.html
2959009 கோயம்புத்தூர் நீலகிரி கூடலூரில் தொடர் மழை: மைசூரு சாலையில் மண் சரிவு DIN DIN Friday, July 13, 2018 07:47 AM +0530 நீலகிரி மாவட்டம், கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் நான்காவது நாளாகத் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்தத் தொடர் மழை காரணமாகப் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை காலை நிலவரப்படி கூடலூரில் 62 மி.மீ.மழையும், தேவாலாவில் 92 மி.மீ.மழையும் பதிவாகியுள்ளது.
தாழ்வான பகுதிகள் தொடர்ந்து நீரில் மூழ்கி வருகின்றன. சிற்றாறுகள், ஓடைகள் மற்றும் முக்கிய ஆறுகளான பாண்டியாறு, புன்னம்புழா ஆறு, முதுமலையின் முக்கிய நீராதாரமான மோயாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. 
சாலைகள் மற்றும் வயல் பகுதியில் உள்ள நடைபாதைகள், சிறிய சாலைகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேறும், சகதியுமாக மாறியுள்ளன. 
பல இடங்களில் சாலைகளில் உள்ள குழிகளில் மழை நீர் தேங்கி, குளங்களாகக் காட்சியளிக்கிறது.
புதன்கிழமை இரவு பெய்த மழையில் கூடலூர், மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் மரப்பாலம் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் அந்த சாலை துண்டிக்கப்படும் அபாயத்தில் உள்ளது. சாலையின் ஒரு பகுதியைத் தடுத்து ஒருவழிச் சாலைபோல வாகனங்களைத் தடுப்பு மூலமாக நிறுத்தி அனுப்பி வைக்கின்றனர். 
இதேநிலை நீடித்தால் கூடலூரில் இருந்து கர்நாடக மாநிலத்துக்குச் செல்லும் சாலை முற்றிலுமாகத் துண்டிக்கப்படும் அபாயம் ஏற்படும். 
உதகை, கேரள மாநிலத்தின் முக்கிய நகரங்களை இணைக்கும் இந்தச் சாலை கர்நாடாக மாநிலத்தின் மைசூரு, தமிழகத்தின் கூடலூர், கேரளத்தின் நிலம்பூர் ஆகிய மூன்று மாநில நகரங்களை இணைக்கும் முக்கியச் சாலையாகும். 
இந்தச் சாலை துண்டிக்கப்பட்டால் பயணிகள் போக்குவரத்து உள்பட அனைத்துப் போக்குவரத்தும் ஸ்தம்பித்துபோகும் அபாயம் உள்ளது. 
மேலும், தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் வெள்ள அபாயம் மற்றும் நிலச்சரிவு அபாயம் தொடர்கிறது. தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும் உள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/13/கூடலூரில்-தொடர்-மழை-மைசூரு-சாலையில்-மண்-சரிவு-2959009.html
2959008 கோயம்புத்தூர் நீலகிரி ஒணிகண்டியில் நியாயவிலைக் கடை அமைக்க வலியுறுத்தல் DIN DIN Friday, July 13, 2018 07:45 AM +0530 மஞ்சூர் அருகே உள்ள ஒணிகண்டியில் நியாயவிலைக் கடை அமைக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
 மஞ்சூர் அருகே ஒணிகண்டி, அன்னமலை, காமராஜர் நகர், அண்ணா நகர், பெள்ளத்திக்கம்பை உள்ளிட்ட10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தேயிலைத் தோட்டம், கட்டடப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
 இந்த கிராம மக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்க கீழ்குந்தா கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடைக்குதான் செல்லவேண்டும். இந்தக் கடையில் குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதால் பொருள்கள் வாங்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 
இதனால், தினசரி கூலி வேலைக்குச் செல்ல வேண்டிய நிலையில் உள்ள அவர்கள் 2 அல்லது 3 நாள்கள் வேலையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 
எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி ஒணிகண்டி பகுதியில் நியாயவிலைக் கடை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர். 
இதுகுறித்து, அண்ணா நகரைச் சேர்ந்த சுரேஷ் கூறியதாவது: 
நியாயவிலைக் கடையில் பொருள்கள் வாங்க மாதத்தின் முதல் வாரத்தை நியாயவிலைக் கடையிலேயே செலவிட வேண்டிய நிலை உள்ளது. இருப்பினும், புழுங்கல் அரிசி, சர்க்கரை, பாமாயில், மண்ணெண்ணெய், கோதுமை, பருப்பு உள்ளிட்ட பொருள்கள் விரைவில் தீர்ந்து விடுவதாக கடை ஊழியர்கள் கூறுகின்றனர். அதனால் பொருள்களை வாங்க மீண்டும் மீண்டும் கடைக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, எங்கள் பகுதியில் நியாயவிலைக் கடை அமைக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "ஒணிகண்டி பகுதியில் புதிய நியாயவிலைக் கடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக அதிகாரிகள் தரப்பில் ஆலோசித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/13/ஒணிகண்டியில்-நியாயவிலைக்-கடை-அமைக்க-வலியுறுத்தல்-2959008.html
2959007 கோயம்புத்தூர் நீலகிரி கூடலூர் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்துக்கு மேலும் 6 வாகனங்கள் DIN DIN Friday, July 13, 2018 07:45 AM +0530 கூடலூர் நகராட்சி மூலமாக செயல்படுத்தப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்துக்கு மேலும் 6 புதிய வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
நகராட்சி மூலமாக செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்துக்கு நகரின் பல பகுதிகளில் இருந்து குப்பைகளைச் சேகரிக்க நகராட்சி ஊழியர்களுடன் வாகனங்கள் அனுப்பப்படுகின்றன. 
காலையில் செல்லும் அந்த வாகனங்களில் வீடுகள் மற்றும் கடைகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகள் தரம் பிரித்து வழங்கப்படுகின்றன. அந்த வாகனங்களில் வரும் ஊழியர்கள் அதைச் சேகரித்து கிடங்குக்கு கொண்டு செல்கின்றனர்.
இத்திட்டத்தை செயல்படுத்த பொது மக்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள், வணிகர்கள் என அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்து, நகராட்சி ஆணையர் பொதுமக்களின் ஒத்துழைப்பையும், பங்களிப்பையும் பெறுவதற்கு ஒவ்வொரு பகுதியாகச் சென்றுவருகிறார். குப்பைகளை சாலை, கழிவு நீர்க் கால்வாய்கள், நீரோடைகளில் வீசுபவர்களைத் தொடர்ந்து எச்சரித்து, அதைக் கண்காணிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை நகரின் பல பகுதியிலும் விரிவுபடுத்தும் நோக்கத்துடன்,  6 புதிய வாகனங்கள் இயக்கப்படுவதால் நகரில் குடியிருப்புகள் நெருக்கமாக உள்ள இடங்களுக்கும், தொலை தூரப் பகுதிக்கும், குறுகிய சாலைகள் உள்ள பகுதிகளுக்கும் இந்த வாகனங்கள் இயக்கப்படுகின்றன. 
அப்பகுதியில் உள்ளவர்கள் தங்களது வீடுகள், கடைகளில் சேகரிக்கப்படும் குப்பைகளைத் தரம் பிரித்து, மக்கும், மக்காத குப்பைகளை, நகராட்சி வாகனங்களில் வரும் ஊழியர்களிடம் தனித்தனியாக வழங்கவேண்டும். குப்பை வாகனம் வரவில்லையெனில் உடனே நகராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம் என ஆணையர் பார்வதி தெரிவித்துள்ளார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/13/கூடலூர்-நகராட்சியில்-திடக்கழிவு-மேலாண்மைத்-திட்டத்துக்கு-மேலும்-6-வாகனங்கள்-2959007.html
2959006 கோயம்புத்தூர் நீலகிரி "கூட்டுறவு ஆலைத் தொழிலாளர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும்' DIN DIN Friday, July 13, 2018 07:45 AM +0530 கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலையில் பணி மூப்பு அடிப்படையில் தொழிலாளர்களுக்குப் பதவி உயர்வு வழங்க வேண்டும் என சிஐடியூ வலியுறுத்தியுள்ளது.
 இது குறித்து, சிஐடியூ மாவட்டச் செயலாளர் ஆல்துரை வெளியிட்டுள்ள அறிக்கை: 
தமிழக அரசின் தொழில் கூட்டுறவு வணிக வரித் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் மஞ்சூர், குந்தா, கிண்ணக்கொரை, பிக்கட்டி, கைகாட்டி, மேற்குநாடு, இத்தலார், மகாலிங்கா, கரும்பாலம், பிதர்காடு, எப்பநாடு, சாலீஸ்பரி, பிராண்டியர், பந்தலூர், கட்டபெட்டு உள்ளிட்ட 15 கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. 
இதில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் சிலர் 20 முதல் 30 ஆண்டுகள் வரை தற்காலிகத் தொழிலாளர்களாகவே பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், பணிமூப்பு அடிப்படையில் தங்களுக்குப் பதவி உயர்வு வழங்கவேண்டும் என சம்பந்தப்பட்ட தொழிற்சாலை நிர்வாகங்களிடம் நீண்ட காலமாகத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இவர்களது கோரிக்கைக்கு இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 
இதற்கிடையே பதவி உயர்வு பெறாமலேயே தொழிலாளர்கள் பலர் பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். 
இந்நிலையில், பணிமூப்பு அடிப்படையில்  தொழிலாளர்களுக்குப் பதவி உயர்வு வழங்கக் கோரி சிஐடியூ சார்பில் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை  நிர்வாகம், இண்ட்கோ சர்வ் இணை இயக்குநர், தொழில் துறை ஆணையர் உள்ளிட்ட பலருக்கும் ஏற்கெனவே மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. 
எனவே, தொழிலாளர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில்  பதவி உயர்வு வழங்கத் தமிழக அரசின் தொழிற்கூட்டுறவுத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/13/கூட்டுறவு-ஆலைத்-தொழிலாளர்களுக்கு-பணி-மூப்பு-அடிப்படையில்-பதவி-உயர்வு-வழங்க-வேண்டும்-2959006.html
2959005 கோயம்புத்தூர் நீலகிரி குரங்குகளை கூண்டுவைத்து பிடிக்க வலியுறுத்தல் DIN DIN Friday, July 13, 2018 07:45 AM +0530 குரங்குகளை கூண்டுவைத்துப் பிடிக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மஞ்சூர் அருகே ஆறாமைல், காத்தாடிமட்டம், பாலகொலா, நுந்தளாமட்டம், அதிகரட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்கள், அடர்ந்த தேயிலைத் தோட்டம், வனப் பகுதியையொட்டி அமைந்துள்ளன. 
இந்நிலையில், உணவு குடிநீர் தேடி கரடி, காட்டெருமை, சிறுத்தை, காட்டுப்பன்றி, குரங்கு உள்ளிட்ட பல்வேறு வன விலங்கள் கிராமப் பகுதிகளுக்குள் நுழைந்து, பொதுமக்களையும், விவசாயிகளையும் அச்சுறுத்தி வருகின்றன. 
இந்நிலையில், ஆறாமைல் பகுதியில் 100 க்கும் மேற்பட்ட குரங்குகள் நடமாடி வருகின்றன. அவை, குடியிருப்புகளில் நுழைந்து, வீட்டில் உள்ள பொருள்களைச் சேதப்படுத்துவதுடன், குழந்தைகளையும் தாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வீட்டைவிட்டு வெளியே அனுப்ப முடியாத நிலை உள்ளது. 
எனவே, இப்பகுதியில் நடமாடும் குரங்குகளை கூண்டுவைத்துப் பிடிக்க வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/13/குரங்குகளை-கூண்டுவைத்து-பிடிக்க-வலியுறுத்தல்-2959005.html
2959004 கோயம்புத்தூர் நீலகிரி கோத்தகிரி ஊராட்சியில் வளர்ச்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு DIN DIN Friday, July 13, 2018 07:44 AM +0530 கோத்தகிரி ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் இன்சென்ட் திவ்யா வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
 நீலகிரி மாவட்டத்தில், கோத்தகிரி ஊராட்சிப் பகுதிகளில் பொது சுகாதாரம் மற்றும் சாலை வசதிகள்  உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் சரியாக உள்ளதா என்பதை  மாவட்ட  ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வியாழக்கிழமை  ஆய்வு மேற்கொண்டார். அப்போது, நெடுகுளா ஊராட்சிக்கு உள்பட்ட இந்திரா காலனி, காக்காசோலை மற்றும் கெங்கரை ஊராட்சிக்கு உள்பட்ட அம்பாள் நகர், தேனாடு ஊராட்சிக்கு உள்பட்ட ஓம் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், தெருவிளக்கு போன்ற வசதிகள் உள்ளனவா என்பது குறித்தும்,  சுகாதாரம் குறித்தும் ஆய்வு செய்து, அப்பகுதி மக்களிடம் குறைகள், கோரிக்கைகளை கேட்டறிந்தார்.  அத்துடன் காக்காசோலை ஒருங்கிணைந்த குழந்தைகள் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் வருகைப் பதிவேடு, இருப்புப் பதிவேடு, மதிய உணவு, சமையல் அறை ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.
அதைத் தொடர்ந்து, கோத்தகிரி பேரூராட்சிக்கு உள்பட்ட தவிட்டு மேடு பகுதியில் சட்டபே பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தையும், கெங்கரை ஊராட்சிக்கு உள்பட்ட அகநாடு ஆதிதிராவிடர் காலனி பகுதியில், மத்திய சிறப்பு நிதித் திட்டத்தின் கீழ் ரூ. 4 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டியையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். 
இந்த ஆய்வின்போது, மாவட்ட  ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெய்குமார்,  வட்டாட்சியர் தனபாக்கியம், வட்டார வளர்ச்சி அலுவலர் கோல்டி சாராள், துணை வட்டாட்சியர் குப்புராஜ்,  செயல் அலுவலர் குணசேகரன் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/13/கோத்தகிரி-ஊராட்சியில்-வளர்ச்சிப்-பணிகள்-மாவட்ட-ஆட்சியர்-ஆய்வு-2959004.html
2959003 கோயம்புத்தூர் நீலகிரி நீலகிரியில் யானை வழித்தடத்தில் கட்டடங்கள்: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் சிக்கலில் அதிகாரிகள் DIN DIN Friday, July 13, 2018 07:44 AM +0530 நீலகிரி வனப் பகுதி உள்ளிட்ட சீகூர் பள்ளத்தாக்கில் உள்ள யானை வழித்தட நிலங்களில்  உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம் குறித்த செயல் திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டுக்குப் பின்னர் கட்டப்பட்ட கட்டடங்கள் குறித்தும்,  அதற்கு உதவிய அதிகாரிகள் குறித்தும் கேள்வி எழுந்துள்ளதால் அதில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 நீலகிரி வனப் பகுதி உள்ளிட்ட சீகூர் பள்ளத்தாக்குப் பகுதியில் யானைகள் வழித்தட நிலங்களை மறித்து காட்டேஜ்கள், ரிசார்ட்டுகள்,  கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. 
இத்தகைய கட்டடங்களை அகற்றக் கோரி வழக்குரைஞர் யானை ராஜேந்திரன்  2008ஆம் ஆண்டு வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில், அத்தகைய கட்டடங்கள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் 2011 இல் தீர்ப்பளித்தது.  
அந்த  உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், அத்தகைய கட்டடங்களுக்கு குடிநீர் மற்றும் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. ஆனால்,  அந்த உத்தரவை எதிர்த்து தனியார் கட்டட உரிமையாளர்கள் சார்பில்  மேல் முறையீட்டு வழக்குத் தொடரப்பட்டதால் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நிறுத்தப்பட்டன.
 இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில்  தொடரப்பட்டிருந்த இந்த வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. 
அதில், யானை வழித்தட நிலத்தில் உள்ள 400 க்கும் மேற்பட்ட கட்டடங்களை அகற்ற 2011 இல் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் அதுதொடர்பான முழு விவரங்களையும், அந்த 400  கட்டடங்களில் குடியிருப்புக்கான அனுமதி பெற்ற கட்டடங்கள் மற்றும் விதிகளை மீறிக் கட்டப்பட்ட கட்டடங்கள் உள்ளிட்ட முழு விவரங்களையும் ஒரு மாதத்துக்குள் நீதிமன்றத்தில் நீலகிரி மாவட்ட  ஆட்சியர் தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
 ஏற்கெனவே நீலகிரி மாவட்டத்தில் தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கட்டப்பட்ட கட்டடங்களை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், 2011 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சென்னை  உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி பல்வேறு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது குறித்த விவரத்தையும் உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளதால் 2011 ஆம் ஆண்டில் இருந்து தற்போதைய உச்ச நீதிமன்ற உத்தரவு வரையிலான காலகட்டத்தில் புதிய கட்டடங்களுக்கு அனுமதி வழங்கியவர்களும், விதிகளை மீறிக் கட்டப்பட்ட கட்டடங்களுக்கு மறைமுகமாக உதவியவர்களும் சிக்கலில்  உள்ளனர்.  
யானை வழித்தட நில விவகாரத்தில் 2008 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் 2018 ஆம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டிருந்தாலும், 2011 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் அறிக்கை கேட்கப்பட்டுள்ளதால் இதில் தொடர்புடைய அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/13/நீலகிரியில்-யானை-வழித்தடத்தில்-கட்டடங்கள்-உச்ச-நீதிமன்றத்தின்-தீர்ப்பால்-சிக்கலில்-அதிகாரிகள்-2959003.html
2959002 கோயம்புத்தூர் நீலகிரி பீட்ரூட் கிலோ ரூ. 25 முதல் ரூ. 35 வரை விற்பனை DIN DIN Friday, July 13, 2018 07:44 AM +0530 மஞ்சூர் பகுதியில் பீட்ரூட் கிலோவுக்கு ரூ. 25 முதல் ரூ. 35 வரை விலை கிடைப்பதால் விவசாயிகள் தீவிர அறுவடைப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மஞ்சூர் அருகே அவலாஞ்சி, எமரால்டு, காந்திகண்டி, கோத்தகண்டி, முள்ளிக்கூர், தேவர்சோலை, எடக்காடு, இத்தலாறு, தங்காடு, பாலகொலா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மலைத் தோட்டக் காய்கள் பயிரிடப்படுகின்றன. 
இதில், பீன்ஸ், கேரட், முட்டைகோஸ், காளிபிளவர், பீட்ரூட், அவரை, பட்டாணி, டர்னபீஸ், மேராக்காய் உள்ளிட்ட பல்வேறு மலைத்தோட்டக் காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 
இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் உதகை, மேட்டுப்பாளையம், கோவை, சென்னை, திருச்சி, பெங்களுரு ஆகிய பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகின்றன. 
இதில், ஒரு சில வியாபாரிகள் விளை நிலங்களுக்கே வந்தே கொள்முதல் செய்து செல்கின்றனர். 
தற்போது பீட்ரூட் கிலோவுக்கு ரூ. 25 முதல் ரூ. 35 வரை விலை கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
இதுகுறித்து லாரன்ஸ் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சதீஷ் கூறியதாவது:
நீலகிரி மாவட்டக் காய்கறிகளுக்கு கடந்த ஜனவரி மாதம் போதிய விலை கிடைக்காததால் அவற்றைக் கால்நடைகளுக்குத் தீவனமாகவும், விளை நிலங்களுக்கு உரமாகவும் போட வேண்டிய நிலை ஏற்பட்டது. 
இந்நிலையில், தற்போது கேரட், பீட்ருட் காய்கறிகளுக்குச் சந்தையில் நல்ல விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் அறுவடைப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/13/பீட்ரூட்-கிலோ-ரூ-25-முதல்-ரூ-35-வரை-விற்பனை-2959002.html
2959001 கோயம்புத்தூர் நீலகிரி இளைஞரைத் தாக்கிய காவல் துறையினர்: பர்லியாறு சோதனைச் சாவடியை  முற்றுகையிட்ட ஆதிவாசிகள் DIN DIN Friday, July 13, 2018 07:44 AM +0530 நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள பர்லியாறில் காவல் துறையினர் இளைஞரைத் தாக்கியதை கண்டித்து ஆதிவாசி மக்கள் பர்லியாறு சோதனைச் சாவடியை வியாழக்கிழமை முற்றுகையிட்டனர். 
நீலகிரி மாவட்டம், குன்னூர் - மேட்டுப்பாளையம்  சாலையில் குரும்பர், இருளர் உள்ளிட்ட ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். 
இந்நிலையில், குன்னூர், ட்ருக் அருகில் உள்ள சேம்பக்கரை பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (28) எனும் ஆதிவாசி இளைஞர் பர்லியாறு, கொட்டம்பாறை பகுதியில்  நடைபெற்ற உறவினரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வியாழக்கிழமை வந்துள்ளார். 
திருமணம் முடிந்த பின்னர் பர்லியாரில் ஒரு கடையில் தேநீர் குடித்துள்ளார். அப்போது, அங்கு வந்த வெலிங்டன் காவல் துறையினர் அந்த இளைஞரை,  சந்தேகத்தின் பேரில் வாகனத்தில் அழைத்துச் சென்று தாக்கியதுடன்,  அவைர நடுக்காட்டில் இறவிட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது. காயமடைந்த ரமேஷ் தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து  திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார். 
இதனால் ஆத்திரம் அடைந்த ஆதிவாசி மக்கள்  50 க்கும் மேற்பட்டோர் விசாரணை எனும் பெயரில் ரமேஷை அழைத்துச் சென்று தாக்கிவிட்டு, காட்டில் விட்டுச்சென்ற காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, பர்லியாறு சோதனைச் சாவடியை முற்றுகையிட்டனர். 
இதையடுத்து, அங்கு வந்த காவல் துறையினர், உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் ஆதிவாசி மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/13/இளைஞரைத்-தாக்கிய-காவல்-துறையினர்-பர்லியாறு-சோதனைச்-சாவடியை--முற்றுகையிட்ட-ஆதிவாசிகள்-2959001.html
2957422 கோயம்புத்தூர் நீலகிரி நடிகர் மகனுக்கு மசினகுடியில் திருமணம் DIN DIN Thursday, July 12, 2018 10:36 AM +0530 உதகையில் கடந்த 7ஆம்தேதி நிறுத்தப்பட்ட பிரபல ஹிந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தியின் மகன் திருமணம் மசினகுடி அருகேயுள்ள பொக்காபுரம் பகுதியிலுள்ள அவருக்குச் சொந்தமான ரிசார்ட்டில் செவ்வாய்க்கிழமை அதிகாலை நடந்தது.
 பிரபல ஹிந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி. உதகையில் உள்ள இவருக்குச் சொந்தமான ஹோட்டலில் அவரது மகன் மகாக்ஷயின் திருமணத்தைக் கடந்த 7ஆம்தேதி நடத்த அவர் திட்டமிட்டிருந்தார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்து உறவினர்களும், முக்கிய விருந்தினர்களும் உதகையில் குவிந்திருந்தனர். 
இந்நிலையில், தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டதாகவும், தான் பாலியல் தொல்லைக்கு ஆளானதாகவும் மகாக்ஷய் மீது  மும்பையைச் சேர்ந்த நடிகை ஒருவர் போலீஸில் புகார் கொடுத்திருந்தார்.  இதைத் தொடர்ந்து உதகை வந்த மும்பை போலீஸார், கடந்த சனிக்கிழமை நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து மிதுன் சக்கரவர்த்தியின் நெருங்கிய உறவினர்கள் உதகையிலேயே தங்கியிருந்த நிலையில், மகாக்ஷயின் திருமணம் செவ்வாய்க்கிழமை அதிகாலை மசினகுடி அருகேயுள்ள பொக்காபுரம் பகுதியிலுள்ள மிதுன் சக்கரவர்த்திக்குச் சொந்தமான ரிசார்ட்டில் நடந்து முடிந்துள்ளது. 
இதைத் தொடர்ந்து மணமக்கள் மைசூருவில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில் புதன்கிழமை காலை நடைபெற உள்ள சிறப்பு பூஜையில் பங்கேற்க உள்ளதாகவும், இதில் பங்கேற்பதற்காக உதகையில் தங்கியிருந்த அவரது  நெருங்கிய உறவினர்கள் தற்போது மைசூருவுக்குச் சென்று விட்டதாகவும் தெரிகிறது. ஆனால், மிதுன் சக்கரவர்த்தி மட்டும் தற்போது உதகையிலேயே தங்கியுள்ளார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/11/நடிகர்-மகனுக்கு-மசினகுடியில்-திருமணம்-2957422.html
2958321 கோயம்புத்தூர் நீலகிரி திடக்கழிவு மேலாண்மைத் திட்டம்: கூடலூர் நகராட்சிக்கு உதவும் தனியார் DIN DIN Thursday, July 12, 2018 07:44 AM +0530 கூடலூர் நகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தைச் செயல்படுத்த தனியார் பங்களிப்பு பெறப்படுகிறது.
கூடலூர் நகராட்சி சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் நகரின் பல பகுதிக்கும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து நடைபெறும் இத் திட்டத்தில், அடர்ந்த வனப்பகுத்க் குடியிருப்புகளிலும் சாலை வசதிகள் இல்லாத இடங்களிலும் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளைச் சமாளிக்க நகராட்சி ஆணையர் பார்வதி குடியிருப்புகளிலேயே இயற்கை உரம் தயாரிக்கும் திட்டம் குறித்து விளக்கமளித்து, செயல்படுத்தி வருகிறார். 
இத்திட்டத்தில் குடியிருப்புப் பகுதியில் மக்கும் குப்பை- மக்காத குப்பைகளைச் சேகரிக்க குப்பைத் தொட்டிகளை வாங்க தனியாரிடமிருந்து நிதிப் பங்களிப்பு பெறப்படுகிறது. முதல் கட்டமாக தேவசிங்கம் என்பவர் ரூ. 20,000க்கான காசோலையை  நகராட்சி ஆணையர்  பார்வதியிடம் வழங்கினார். 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/12/திடக்கழிவு-மேலாண்மைத்-திட்டம்-கூடலூர்-நகராட்சிக்கு-உதவும்-தனியார்-2958321.html
2958320 கோயம்புத்தூர் நீலகிரி கோத்தகிரியில் பள்ளி மாணவர்களுக்கு கம்பளி ஆடைகள் DIN DIN Thursday, July 12, 2018 07:44 AM +0530 கோத்தகிரி புனித மரியன்னை பள்ளியில் கம்பளி ஆடைகள் வழங்கும் நிகழ்ச்சி, கோத்தகிரி நுகர்வோர் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.   
இந்த நிகழ்ச்சிக்கு நுகர்வோர் சங்கத்தின் தலைவர் நாகேந்திரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சுந்தர்ராஜ், ஜீவானந்தம், தொழிலதிபர் சுதாகேஸ், ரமேஷ், பிரபாகரன், பொருளாளர் பரமேஸ், பள்ளி ஆசிரியை ஜெனிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, பள்ளிக் குழந்தைகளுக்கு கம்பளி ஆடைகள், இனிப்புகள் வழங்கப்பட்டன.  ஆசிரியர் இமாகுலேட் நன்றி கூறினார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/12/கோத்தகிரியில்-பள்ளி-மாணவர்களுக்கு-கம்பளி-ஆடைகள்-2958320.html
2958319 கோயம்புத்தூர் நீலகிரி கோத்தகிரி பகுதியில் ஒற்றை யானை நடமாட்டம் DIN DIN Thursday, July 12, 2018 07:43 AM +0530 கோத்தகிரி பகுதியில்  கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை காட்டு யானை கீழ்தட்டப்பள்ளம் கிராமத்துக்கு அருகில் புதன் கிழமை   நடமாடியதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.   
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பகுதிக்கு  கடந்த வாரம்  சமவெளிப் பகுதியிலிருந்து காட்டு யானைகள் படையெடுத்தன. இவை  கோத்தகிரி- மேட்டுப்பாளையம்  சாலையோரத்தில் உள்ள  கிராமங்களான  குஞ்சப்பனை,  மாமரம் உள்ளிட்டப் பகுதிகளில் முகாமிட்டிருந்தன. 
இந்தக் கூட்டத்தில் இருந்து பிரிந்த  ஒற்றை பெண் யானை, கீழ்தட்டப்பள்ளம், அதன் அருகிலுள்ள கிராமங்களில் பகல்நேரத்தில் தற்போது சுற்றி வருகிறது. இதனால் அப் பகுதியில் உள்ள ஆதிவாசி கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்த ஒற்றை  காட்டு யானையை இதன் கூட்டத்துடன் சேரும் வண்ணம் துரத்த  வேண்டும் அல்லது  அடர்ந்த வனப் பகுதிகளுக்குள் விரட்ட வேண்டும் என வனத் துறைக்கு கீழ் தட்டப்பள்ளம் கிராம மக்கள் வனத் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/12/கோத்தகிரி-பகுதியில்-ஒற்றை-யானை-நடமாட்டம்-2958319.html
2958318 கோயம்புத்தூர் நீலகிரி கூடலூர் பகுதியில் தொடர் கன மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு DIN DIN Thursday, July 12, 2018 07:43 AM +0530 கூடலூர், பந்தலூர் பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கனமழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் கோட்டத்திலுள்ள கூடலூர், பந்தலூர் பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள், சிற்றாறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தாழ்நிலங்கள் முற்றிலும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. தொடர்ந்து கன மழை இடைவிடாது பெய்வதால், கடும் குளிர் நிலவுகிறது. புதன்கிழமை காலை நிலவரப்படி, கூடலூரில் 78 மி.மீ. மழையும் தேவாலாவில் 107 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
ஓவேலி பேரூராட்சியிலுள்ள பார்வுட் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த கனமழை காரணமாக,  ராட்சதப் பாறை உருண்டு சாலையில் விழுந்ததால், சாலையில் போக்குவரத்து தடைபட்டது. ஓவேலி பேரூராட்சிப் பணியாளர்கள் பொதுமக்கள் உதவியுடன் சாலையைச் சீரமைத்தனர். 
மீட்புப் பணிகளை கூடலூர் வட்டாட்சியர் ரவிகுமார் நேரில் ஆய்வு செய்தார். நீண்ட நேரத்துக்குப் பிறகு போக்குவரத்து சீரானது. பல இடங்களில் குடியிருப்புப் பகுதியில் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.  

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/12/கூடலூர்-பகுதியில்-தொடர்-கன-மழை-இயல்பு-வாழ்க்கை-பாதிப்பு-2958318.html
2958317 கோயம்புத்தூர் நீலகிரி காட்டுப் பன்றி வேட்டை: மூவருக்கு அபராதம் DIN DIN Thursday, July 12, 2018 07:43 AM +0530 குன்னூர் அருகே  ஆர்செடின்  பகுதியில் காட்டுப் பன்றியை வேட்டையாடியவர்களுக்கு வனத் துறையினர் செவ்வாய்க்கிழமை இரவு அபராதம் விதித்தனர்.   
குன்னூர், நான்சச் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (32), காட்டேரியைச் சேர்ந்த ஆனந்தகுமார் (29), தினேஷ் (30) ஆகியோர் ஆர்செடின் பகுதியில் காட்டுப் பன்றியை வேட்டையாடியதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. 
வனச்சரகர் பெரியசாமி தலைமையில், வனவர் பாலகிருஷ்ணன், காவலர்கள் பாபு, மணிகண்டன் ஆகியோர் இதுதொடர்பாக விசாரணை நடத்தினர். அதில் காட்டுப் பன்றியை மூவரும் வேட்டையாடியது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, மாவட்ட  வன அலுவலர் சோமன் சுமேஷ் உத்தரவுப்படி, மூவருக்கும் தலா ரூ. 25,000 அபராதம் விதிக்கப்பட்டது. 
இதே போல, கோடமலை, சோல்ரா மட்டம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுப் பன்றிகள் அதிக அளவில் வேட்டையாடப்படுவது குறித்து வனத்துறை கண்காணிக்க உள்ளதாக அதிகாரிகள்  தெரிவித்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/12/காட்டுப்-பன்றி-வேட்டை-மூவருக்கு-அபராதம்-2958317.html
2958316 கோயம்புத்தூர் நீலகிரி உதகை மலைப் பாதையில் இருசக்கர வாகன விபத்து: ஒருவர் சாவு DIN DIN Thursday, July 12, 2018 07:43 AM +0530 உதகை மலைப்  பாதையில்  நேரிட்ட சாலை விபத்தில், இரண்டு லாரிகளுக்கிடையே சிக்கி  ஒருவர் இறந்தார்.  
உதகை, கடநாடு பகுதியைச் சேர்ந்த  தருமன் என்பவரின் மகன் தியாகு (31)  அவரது மனைவி சசிகலா (27) ஆகியோர் மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு புதன்கிழமை  இருசக்கர வாகனத்தில் குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் வந்து  கொண்டிருந்தனர். 
காட்டேரி டபுள்ரோடு  அருகே  ஒரு லாரியை முந்த முயன்றபோது , குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி எதிரே வந்த லாரியில் மோதி இரண்டு லாரிகளுக்கிடையே சிக்கிக் கொண்டார். இதில் அவர் லாரியில் பாதி தூரம் இழுத்துச் செல்லப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். 
அவருக்குப் பின்புறம் அமர்ந்திருந்த மனைவி சசிகலா தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.  சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார்  தியாகுவின் உடலை மீட்டு  பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த சசிகலாவை   குன்னூர் லாலி மருத்துவமனையில் அனுமதித்தனர்.  
இந்த விபத்து காரணமாக, குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் சுமார் இரண்டு மணிநேரம்   போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  தற்போது குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதியில்  பலத்த மழை பெய்து வருவதால், இருசக்கர வாகனத்தில் வரும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் இயக்குமாறு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/12/உதகை-மலைப்-பாதையில்-இருசக்கர-வாகன-விபத்து-ஒருவர்-சாவு-2958316.html
2958315 கோயம்புத்தூர் நீலகிரி தரமில்லாமல் தார் சாலை அமைப்பு: குஞ்சப்பனை மக்கள் புகார் DIN DIN Thursday, July 12, 2018 07:42 AM +0530 கோத்தகிரி அருகே குஞ்சப்பனைப் பகுதியில்  அமைக்கப்பட்டு வரும் தரமில்லாத தார் சாலையை அதிகாரிகள்  ஆய்வு செய்து உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   
கோத்தகிரி- குஞ்சப்பனை  இடையிலான  நெடுஞ்சாலையில் தார் சாலை அமைக்கும் பணி கடந்த  சில நாள்களாக நடைபெற்று வருகிறது. இந்த தார் சாலை தரமில்லாமல் இருப்பதால், சாலையில்  ஒட்டாமல் பெயர்ந்து ஜல்லியாகக் காட்சியளிக்கிறது.  
இதனால் அவ்வப்போது  வாகனங்கள் சறுக்கி விபத்து ஏற்படுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் இந்தச் சாலையை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். தரமான சாலை அமைக்கப்படுவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்  என்று இப் பகுதி மக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/12/தரமில்லாமல்-தார்-சாலை-அமைப்பு-குஞ்சப்பனை-மக்கள்-புகார்-2958315.html
2958314 கோயம்புத்தூர் நீலகிரி நீலகிரியில் தீவிரமடையும் தென்மேற்குப் பருவ மழை: அனைத்து அணைகளும் நிரம்புகின்றன DIN DIN Thursday, July 12, 2018 07:42 AM +0530 நீலகிரியில்  தீவிரமடையும் இரண்டாம் கட்ட தென்மேற்குப் பருவ மழை காரணமாக இங்குள்ள அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.   
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் இரண்டு பருவ மழைகளும் பெய்து வருகின்றன. மே மாத இறுதியிலிருந்து ஆகஸ்ட் மாதத் துவக்கம் வரை தென்மேற்கு பருவ மழையின் தாக்கமும், செப்டம்பர் முதல் நவம்பர் வரை வடகிழக்குப் பருவ மழையின் தாக்கமும் காணப்படும். 
கேரள, கர்நாடக மாநில எல்லைப் பகுதியாகவும் மலைப் பகுதியாகவும் நீலகிரி மாவட்டம் இருப்பதால், தென்மேற்கு பருவ மழையின் தாக்கம் சற்று அதிகமாகவே காணப்படும்.
கடந்த 2016ஆம் ஆண்டு இரண்டு பருவ மழைகளும்  பொய்த்ததால், நீலகிரி மாவட்டம் முழுவதும் வறட்சி நிலவியது. ஆனால், கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் போதிய அளவில் மழை பெய்ததால் நீலகிரி மாவட்டத்தில் பசுமையான காலநிலை நிலவுகிறது. இந்த ஆண்டு எதிர்பார்த்ததைவிட தென்மேற்கு பருவ மழையின் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. 
மழையளவு: நீலகிரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலைமுதல்  24 மணி நேரம்  பெய்த மழை அளவு (மி.மீ.): மேல் பவானி- 144, தேவாலா- 107, அவலாஞ்சி- 100, உதகை- 17.20,  குன்னூர் 5. 
இந்த மழையால்,  மாவட்டத்தில் உள்ள குடிநீர் ஆதாரங்கள், மின்னுற்பத்திக்கு உறுதுணையாக உள்ள அணைகளின் நீர் இருப்பு அதிகரித்துள்ளது. 
அணைகளின் நீர் இருப்பு: மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்ட நிலவரம் (நீர் இருப்பு/ மொத்த அளவு- அடியில்):
குந்தா அணை- 86/  89, கெத்தை 150/ 156, எமரால்டு 133/ 184, அவலாஞ்சி- 146/ 171, மேல் பவானி- 147/ 210, பார்சன்ஸ் வேலி- 48/ 58, போர்த்திமந்து- 115/ 130, பைக்காரா- 84/ 100, முக்குருத்தி-  14/ 18, சாண்டிநள்ளா- 44/ 49, கிளன்மார்கன்- 28/ 33, மாயாறு- 14/ 17. 
மாவட்டத்திலுள்ள அணைகளிலிருந்து குடிநீர்த் தேவைக்காக மட்டுமல்லாது மின்னுற்பத்திக்கும்  தேவையான அளவு நீர் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/12/நீலகிரியில்-தீவிரமடையும்-தென்மேற்குப்-பருவ-மழை-அனைத்து-அணைகளும்-நிரம்புகின்றன-2958314.html
2958313 கோயம்புத்தூர் நீலகிரி உதகை தலைமை அரசு மருத்துவமனையில் ரத்தக் கூறுகள் பிரிப்பு மையம் திறப்பு DIN DIN Thursday, July 12, 2018 07:42 AM +0530 ரத்தக் கூறுகள் பிரிப்பு மற்றும் சேகரிப்பு மையத்தை உதகை  தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா புதன்கிழமை துவக்கி வைத்தார். 
தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தும் திட்டம் 2013ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் 110ஆம் விதியின் கீழ் அறிவிக்கப்பட்டது. அத்திட்டத்தில்,  நீலகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் ரூ.  25 லட்சம் செலவில் ரத்தக் கூறுகள் பிரிப்பு மற்றும் சேகரிப்பு மையம் துவக்கப்பட்டுள்ளது. 
இதனை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா  புதன்கிழமை துவக்கிவைத்தார். அவர் பேசியதாவது:
உலகெங்கும் பிரசவிக்கும் தாய்மார்களில் 30 சதவீதம் பேர் ரத்தப் போக்கினால் இறக்கிறார்கள். மேலும் சாலை விபத்து அவசர சிகிச்சைகளிலும், புற்றுநேய், ரத்த சோகைக்கான சிகிச்சைகளிலும், பெரிய அறுவை சிகிச்சைகளின் போதும் ரத்தம் அதிக அளவில் தேவைப்படுகிறது.
உயிர் காக்கும் ரத்தம் தன்னார்வ ரத்ததானிகளிடமிருந்து பெறப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 2,500 முதல் 3,000 யூனிட் வரை ரத்தம் கொடையாளர்களிடமிருந்து பெறப்படுகிறது.
தமிழகத்தில் 341 ரத்த வங்கிகளும் 519  ரத்த சேமிப்பு மையங்களும் செயல்படுகின்றன. நீலகிரி மாவட்டத்தில் 5 ரத்த வங்கிகளும், 3 ரத்த சேமிப்பு மையங்களும் உள்ளன. முதல்முறையாக உதகை தலைமை மருத்துவமனையில் ரத்தக் கூறுகள் பிரிப்பு- சேமிப்பு மையம் செயல்பட உள்ளது.  
இங்கு ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள், தட்டணுக்கள், உறையும் பிளாஸ்மா ஆகிய மூன்றும் ரத்தத்திலிருந்து தனியே பிரிக்கப்பட்டு தனித்தனியே சேமிக்கப்படும். இவற்றை மூன்று விதமான நோயாளிகளுக்கு செலுத்தி உயிர் காக்க முடியும்    என்றார்.
இதைத் தொடர்ந்து  மக்கள் நல்வாழ்வு,  குடும்பநலத் துறை சார்பாக நடைபெற்ற உலக மக்கள் தொகை தின உறுதிமொழி ஏற்பு நிகழ்வு உதகை அரசு சேட் மகப்பேறு மருத்துவமனையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் சிரியன் ரவிகுமார், குடும்பநல துனை இயக்குநர் நிர்மலா, மாவட்ட மக்கள் கல்வி தொடர்பு அலுவலர் சார்லஸ் ஜான்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/12/உதகை-தலைமை-அரசு-மருத்துவமனையில்-ரத்தக்-கூறுகள்-பிரிப்பு-மையம்-திறப்பு-2958313.html
2958312 கோயம்புத்தூர் நீலகிரி பசுந்தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்வதில் தொடரும் தாமதம்! விவசாயிகள் கவலை DIN DIN Thursday, July 12, 2018 07:41 AM +0530 பசுந்தேயிலைக்கு உரிய காலத்தில் விலை நிர்ணயம் செய்யப்படாதது தேயிலை விவசாயிகளை கவலைக்குள்ளாக்கியிருக்கிறது.
நீலகிரி மாவட்டத்தின் முக்கிய ஆதாரமாக விளங்கி வருவது தேயிலை சாகுபடி. இதை நம்பி சுமார் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளும், ஆயிரக்கணக்கான கூலித் தொழிலாளர்களும் உள்ளனர்.  சிறு, குறு விவசாயிகள், தனியார் எஸ்டேட்டுகள் உற்பத்தி செய்யும் பசுந்தேயிலையை மாவட்டத்தில் உள்ள 15 கூட்டுறவுத் தொழிற்சாலைகளும், 100க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகளும் கொள்முதல் செய்து வருகின்றன.
கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளில் 25,000க்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களிடம் இருந்து தினசரி கொள்முதல் செய்யப்படும் பசுந்தேயிலைக்கு "இண்ட்கோசர்வ்' எனப்படும் தமிழ்நாடு சிறு தேயிலை உற்பத்தியாளர்கள், தேயிலைத் தொழிற்சாலைகளின் இணையம் என்ற கூட்டுறவுத் தலைமை சங்கம் விலை நிர்ணயம் செய்கிறது.
இந்த விலை நிர்ணயமானது தேயிலை வாரியம் உள்ளடங்கிய விலை நிர்ணயக் குழு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச விலையின் அடிப்படையில் இருக்கும். இந்த விலை நிர்ணயம் மாதத்தின் முதல் தேதியிலேயே அறிவிக்கப்படும். ஆனால் கடந்த ஜூன் மாதத்துக்கான விலை நிர்ணயம் ஜூலை 10 தேதியாகியும் நிர்ணயிக்கப்படவில்லை.
இதனால், கூட்டுறவுத் தொழிற்சாலைகள் முந்தைய மாதத்தில் நிர்ணயம் செய்த அதே விலையையே நிர்ணயித்துள்ளன. அதன்படி,  மஞ்சூர், கூடலூர் சாலீஸ்பரி கூட்டுறவுத் தொழிற்சாலைகளில் பசுந்தேயிலை கிலோ ஒன்றுக்கு ரூ. 12.60 எனவும், பந்தலூர் தொழிற்சாலையில் கிலோ ரூ. 12, கரும்பாலம் கைகாட்டி, பிராண்டியர், பிக்கட்டி ஆகிய தொழிற்சாலைகளில் கிலோவுக்கு ரூ. 9, மேற்கு நாடு, மகாலிங்கா, இத்தலார், கிண்ணக்கொரை, எப்பநாடு, பிதர்காடு, நஞ்சநாடு கூட்டுறவுத் தொழிற்சாலைகளில் கிலோவுக்கு ரூ. 8 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த விலை நிர்ணயம் தங்களுக்கு கட்டுப்படியாகும் அளவுக்கு இல்லை என்று தேயிலை சாகுபடி விவசாயிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 
ஏற்கெனவே பசுந்தேயிலையின் விலை தொடர்ந்து சரிந்து வருவதால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கூலித் தொழிலாளர்கள் திருப்பூர், கோவை, திருச்சி, சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு வேலை தேடி குடும்பத்துடன் சென்று வருகின்றனர். மேலும், சிறு விவசாயிகள் பலர் தங்களது தேயிலைத் தோட்டங்களை விற்பனை செய்வதும் தொடர்கதையாகி இருக்கிறது.
இதுகுறித்து மஞ்சூர் பகுதி தேயிலை விவசாயிகள் கூறியதாவது: 
நிரந்தரத் தீர்வாக பசுந்தேயிலைக்கு குறைந்தபட்சம் கிலோ ரூ. 30 விலை என நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதற்காக விவசாயிகள் சார்பில் வழக்கும் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்பு நிலுவையில் உள்ளதால், குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யும் வரை தற்காலிகமாக தேயிலை வாரியம், மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் அடங்கிய விலை நிர்ணயக் குழு  அமைக்கப்பட்டது. இந்த விலை நிர்ணயக் குழு 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் மாதந்தோறும் முதல் தேதி குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்துவந்தது.
இந்த விலை நிர்ணயத்தை அனைத்துத் தொழிற்சாலைகளும் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், இதை மீறும் தேயிலைத் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரவிடப்பட்டது. இதனால் நாங்கள் ஓரளவுக்கு ஆறுதல் அடைந்திருந்தோம்.
ஆனால், தற்போது தேயிலை வாரியம் ஒரு மாதத்துக்கும் மேலாக விலை நிர்ணயம் செய்யாமலிருப்பதால், ஏற்கெனவே வழங்கப்பட்ட விலையை விட குறைவான விலையே விவசாயிகளுக்கு கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே, தேயிலைக்கு விரைவில் விலை நிர்ணயம் செய்வதுடன் வரும் காலங்களில் உரிய நேரத்தில் விலை நிர்ணயம் செய்து அறிவித்து சிறு, குறு விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/12/பசுந்தேயிலைக்கு-விலை-நிர்ணயம்-செய்வதில்-தொடரும்-தாமதம்-விவசாயிகள்-கவலை-2958312.html
2957466 கோயம்புத்தூர் நீலகிரி கோழிப்பாலம் பகுதியில் யானைகள் அட்டகாசத்தால் பீதி DIN DIN Wednesday, July 11, 2018 06:56 AM +0530 கூடலூரை அடுத்துள்ள கோழிப்பாலம் பகுதியில் தொடர்ந்து யானைகள் அட்டகாசம் செய்து வருகின்றன.
கூடலூரை அடுத்துள்ள கோழிப்பாலம் கல்லூரி வளாகத்தில் உள்ள குடியிருப்புப் பகுதிக்கு தினமும் இரவு நேரத்தில் வரும் யானைகள் வீடுகளின் அருகே உள்ள தென்னை, பாக்கு, வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. தொடர்ந்து இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்கு யானைகள் வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். யானைகளை குடியிருப்பு பகுதிக்குள் நுழையாமல் தடுத்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/11/கோழிப்பாலம்-பகுதியில்-யானைகள்-அட்டகாசத்தால்-பீதி-2957466.html
2957465 கோயம்புத்தூர் நீலகிரி வாக்குச் சாவடி சீரமைப்பு பணி குறித்து ஆலோசனை DIN DIN Wednesday, July 11, 2018 06:55 AM +0530 நீலகிரி மாவட்டத்தில் வாக்குச் சாவடிகளை மறு சீரமைப்பு செய்யும் பணிகள் குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிதிகளுடன் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.
உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் உள்ள வாக்குச் சாவடிகளில் மறு சீரமைப்பு செய்யும் வாக்குச் சாவடிகள் குறித்து அறிவிக்கப்பட்டு, அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் கருத்து  கேட்கப்பட்டது. 
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், ஆட்சியரின்  நேர்முக உதவியர் கீதாப்பிரியா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/11/வாக்குச்-சாவடி-சீரமைப்பு-பணி-குறித்து-ஆலோசனை-2957465.html
2957432 கோயம்புத்தூர் நீலகிரி தெப்பக்காடு-மசினகுடி சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு DIN DIN Wednesday, July 11, 2018 03:19 AM +0530 கூடலூரை அடுத்துள்ள தெப்பக்காடு - மசினகுடி சாலையில் செவ்வாய்க்கிழமை காலை மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு - மசினகுடி சாலையில் காலை 6 மணிக்கு சாலையின் குறுக்கே ராட்சத மரம் விழுந்ததால் அந்த மார்க்கமாக செல்லும் போக்குவரத்து தடைபட்டது. வனத் துறை மற்றும் காவல் துறையினர் லாரி ஓட்டுநர்கள் உதவியுடன் சாலையை சீரமைத்தனர். சுமார் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு மரத்தை அகற்றியவுடன் போக்குவரத்து சீரானது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/11/தெப்பக்காடு-மசினகுடி-சாலையில்-மரம்-விழுந்து-போக்குவரத்து-பாதிப்பு-2957432.html
2957426 கோயம்புத்தூர் நீலகிரி மண் வள அட்டையின் சிபாரிசு அடிப்படையில் விவசாயிகளுக்கு உரம் வழங்க முடிவு DIN DIN Wednesday, July 11, 2018 03:02 AM +0530 மண் வள அட்டையின் சிபாரிசின் அடிப்படையிலேயே இனிமேல் விவசாயிகளுக்கு உரம் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. 
இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளதாவது:
 ஒரு பயிருக்கான உரத் தேவையைக் கணக்கிடுவதற்கு மண்ணிலுள்ள சத்துகளின் அளவு விவரம் அறிந்திட மண்  பரிசோதனை செய்வது மிகவும் அவசியமாகும். மண் பரிசோதனை மூலம் நிலத்தில் உள்ள சத்துகளின் அளவு அறிந்து உரமிட  தற்போது விவசாயிகளுக்கு மண் வள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இரு வருட சுழற்சி முறையில் விவசாயிகளின் வயல்களில் கிரிட் முறையில் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மண்ஆய்வு செய்து மண் வளஅடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் இத் திட்டத்தின்கீழ் முதற்கட்ட சுழற்சியில் 68 லட்சம் விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் கட்ட சுழற்சியில் மேலும்  68 லட்சம் விவசாயிகளுக்கு மண் வளஅட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.  
நீலகிரி மாவட்டத்தைப் பொறுத்த மட்டில் 31 வருவாய் கிராமங்களில் 3,867 மண் மாதிரிகள் எடுக்கப்பட்டு மண் ஆய்வுக்கு பின்னர் 31,879 விவசாயிகளுக்கு மண் வள அட்டைகள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  மண் வளஅட்டையில் குறிப்பிட்டுள்ள சிபாரிசின்படி பயிருக்கு தேவையான உரம் இடுவதால் உரச் செலவு குறைவதோடு,  மண் வளமும் பாதுகாக்கப்படுகிறது. சமச்சீர் உரமிடுவதன்  மூலம்  மகசூல் கணிசமாக அதிகரிக்கிறது. இதனால் விவசாயிகளின் வருமானமும் அதிகரிக்கும்.
 எனவே,  வருங்காலங்களில் மண் வளஅட்டையின் சிபாரிசின் அடிப்படையில் மட்டுமே விவசாயிகள் உரங்களை விற்பனையாளர்களிடம் இருந்து விற்பனை முனைய கருவி மூலம் பெற திட்டமிடப்பட்டு வருகிறது. எனவே, ஒவ்வொரு விவசாயியும் தங்களது ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டைகளை வைத்திருப்பதைப்போல மண் வள அட்டையையும் பாதுகாப்பாக வைத்திருப்பதுஅவசியமானதாகும். 
மண் வளஅட்டையினை தமிழகத்தில் அனைத்து விவசாயிகளிடத்திலும் பிரபலப்படுத்தும் நோக்கில் 31 மாவட்டங்களிலும் விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்களை விற்பனையாளர்களிடமிருந்து விற்பனை முனைய கருவி மூலம் மட்டும் செயல்படுத்தப்பட உள்ளதால், விவசாயிகள் உடனடியாக மண் வள அட்டையை பெற்று அதன் பயன்பாட்டினை அறிந்து மண் வளஅட்டையின் அடிப்படையிலேயே உரமிட்டு மண் வளத்தை பாதுகாக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/11/மண்-வள-அட்டையின்-சிபாரிசு-அடிப்படையில்-விவசாயிகளுக்கு-உரம்-வழங்க-முடிவு-2957426.html
2957425 கோயம்புத்தூர் நீலகிரி நீலகிரி மாவட்டத்தில் மலைத் தோட்டக் காய்கள் விலை கிடுகிடு உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி DIN DIN Wednesday, July 11, 2018 03:02 AM +0530 நீலகிரி மாவட்டத்தில் பயிரிடப்படும் மலைத் தோட்டக் காய்களின் விலை உயர்ந்து வருவதால் விவாசயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயத்துக்கு அடுத்தபடியாக மலைக் காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. மாவட்டத்தில், குந்தா, உதகை, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்டதாலுகா பகுதிகளில் அதிகளவில் மலைத் தோட்டக் காய்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களாக உருளைக்கிழங்கு கிலோ 
ஒன்றுக்கு ரூ. 25 முதல் ரூ. 35 வரை இருந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக உருளைக்கிழங்கு விலை படிப்படியாக உயர்ந்து, தற்போது ஒரு கிலோ ரூ. 40 முதல் ரூ. 50 வரை தரத்திற்கு ஏற்றவாறு விற்பனை செய்யப்படுகிறது. 
பொதுவாக உருளைக்கிழங்கு விலை ரூ. 40 தாண்டினாலேயே விவசாயிகளுக்கு போதுமான லாபம் கிடைக்கும். ஆனால் தற்போத கிலோவுக்கு ரூ. 50 வரை விலை கிடைத்து வருகிறது. 
  இதேபோல் கடந்த ஒரு வாரமாக பீன்ஸ் கிலோவுக்கு ரூ. 20 முதல் ரூ. 30 வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. தற்போது இதுவும் விலையேற்றம் கண்டு கிலோ ஒன்று ரூ.50 முதல் ரூ. 60 வரை விற்பனை செய்யப்படுகிறது.
 நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மலைக் காய்கறிகளின் விலை கடந்த சில மாதங்களாக சரிவிலேயே இருந்ததால் விவசாயிகள் கவலையில் இருந்தனர். பலர் நஷ்டம் அடைந்திருந்தனர். இந்நிலையில் கடந்த 10 நாள்களாக பெரும்பாலான காய்கறிகள் விலை ஏறுமுகத்தில் உள்ளது.  ஒரு கிலோ பீட்ரூட்  ரூ. 40 முதல் ரூ. 50 வரை விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/11/நீலகிரி-மாவட்டத்தில்-மலைத்-தோட்டக்-காய்கள்-விலை-கிடுகிடு-உயர்வால்-விவசாயிகள்-மகிழ்ச்சி-2957425.html
2957424 கோயம்புத்தூர் நீலகிரி உள்வாடகைக்கு விடப்பட்ட  நகராட்சிக் கடைகளுக்கு சீல்: ஆணையரின் அதிரடி நடவடிக்கைக்கு பொதுமக்கள் வரவேற்பு DIN DIN Wednesday, July 11, 2018 03:01 AM +0530 குன்னூர் நகராட்சிக்குச் சொந்தமான கடைகளில் உள் வாடகைக்கு விடப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.   
குன்னூர் நகராட்சிக்குச் சொந்தமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் கடந்த பல ஆண்டுகளாக  செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில்,  பல கடைகள்  நகராட்சி நிர்ணயித்துள்ள வாடகையைவிட அதிகமாக உள் வாடகைக்கு  விடப்பட்டு வருவதாக  நகராட்சி  நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
 நாளொன்றுக்கு 20 முதல் 25 ரூபாய் வரை கடை வாடகையை  நகராட்சிக்குக் கட்டிவிட்டு ஒரு கடைக்கு ரூ. 500  முதல் 1000 வரை நாளொன்றுக்கு  வாடகை  வசூலித்து லட்சக்கணக்கில் தனி நபர்கள் லாபம் சம்பாதித்து வருவது நகராட்சி அதிகாரிகளின் ஆய்வில் தெரிய வந்தது. இதையடுத்து அதிரடியாக இந்த கடைகளுக்கு சீல் வைக்கும் பணி தொடங்கியுள்ளது.
இதுகுறித்து புதிதாக பொறுப்பேற்றுள்ள நகராட்சி ஆணையர் சரஸ்வதி கூறியதாவது:
 அனைத்து கடைகளையும் ஆய்வு செய்து, உள்வாடகைக்கு  விடப்பட்ட கடைகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பேருந்து நிலையத்தில் மட்டும் நகராட்சிக்குச் சொந்தமான லாட்ஜில் 25க்கும் மேற்பட்ட அறைகள் பலருக்கு உள்வாடகைக்கு  விடப்பட்டுள்ளது கண்டறியப்பட்டு அவற்துக்கு சீல் வைக்கும் பணி துவங்கியுள்ளது. மீதமுள்ள கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதோடு, இந்தக் கடைகளை காலி செய்து கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.   
நகராட்சி நிர்வாகம் கடும் நிதிச் சுமையில் இருக்கும் நிலையில், தனிநபர்கள் பலர் சொந்தக் கடைகள் போல் லட்சக்கணக்கில்  அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு கடைகளை உள் வாடகைக்கு விட்டிருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ள நிலையில் நகராட்சி  நிர்வாகம் எடுத்து வரும் இந்த அதிரடி நடவடிக்கை பொது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.  
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/11/உள்வாடகைக்கு-விடப்பட்ட--நகராட்சிக்-கடைகளுக்கு-சீல்-ஆணையரின்-அதிரடி-நடவடிக்கைக்கு-பொதுமக்கள்-வரவேற்ப-2957424.html
2957423 கோயம்புத்தூர் நீலகிரி இந்து நகர் 84ஆவது வாக்குச் சாவடியிலிருந்து 585 வாக்காளர்களை தகுதி நீக்கம் செய்ய முடிவு DIN DIN Wednesday, July 11, 2018 03:01 AM +0530 உதகை சட்டப் பேரவைத் தொகுதியில் இந்து நகரிலுள்ள 84ஆவது வாக்குச் சாவடியில் 585 வாக்காளர்களை தகுதி நீக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. 
இதுதொடர்பாக உதகை சட்டப் பேரவைத் தொகுதி தேர்தல்அலுவலரும், உதகை வருவாய் கோட்டாட்சியருமான ஆர்.சுரேஷ் தெரிவித்துள்ளதாவது:
 உதகை சட்டப் பேரவைத் தொகுதியில் இந்து நகரிலுள்ள 84ஆவது வாக்குச் சாவடியில் 585 வாக்காளர்கள் உள்ளனர்.  இதிலுள்ள வாக்காளர்கள் அனைவரும் இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை குடியிருப்பில் வசித்து வந்தவர்களாவர்.  
இந்நிலையில், இந்த தொழிற்சாலை கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம்தேதி மூடப்பட்டு விட்டதால்  இங்கிருந்தவர்கள்  நீலகிரி மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும், கோவை, மைசூரு உள்ளிட்ட பகுதிகளுக்கும் இடம் பெயர்ந்து  சென்று விட்டனர். அதனால் இந்த வாக்குச் சாவடிக்கு உள்பட்ட அனைத்து வாக்காளர்களையும் தகுதி  நீக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. 
இதுதொடர்பாக ஆட்சேபனைகள் ஏதாவது இருப்பின் அவற்றை இம்மாதம் 17ஆம் தேதிக்குள் வாக்காளர் பதிவு அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும். அத்துடன் இந்த வாக்குச் சாவடிக்கு உள்பட்ட அனைத்து வாக்காளர்களும் தற்போது தாங்கள் வசிக்கும் பகுதியிலுள்ள  வாக்குச் சாவடிக்கு உள்பட்ட அதிகாரிகளிடத்தில் உரிய படிவங்களைக் கொடுத்து தங்களது பெயரைஅந்த வாக்குச் சாவடியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/11/இந்து-நகர்-84ஆவது-வாக்குச்-சாவடியிலிருந்து-585-வாக்காளர்களை-தகுதி-நீக்கம்-செய்ய-முடிவு-2957423.html
2956827 கோயம்புத்தூர் நீலகிரி வங்கிக் கடன் மோசடி வழக்கு: குன்னூரில் சிபிஐ சீல் வைத்த பண்ணை வீட்டின் கேட் உடைப்பு DIN DIN Tuesday, July 10, 2018 07:46 AM +0530 கொய்மலர் சாகுபடிக்காக உதகை பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ரியல் எஸ்டேட்  அதிபர் ராஜன் ரூ.15 கோடி கடன்பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும்  வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் குன்னூரில் சீல் வைக்கப்பட்ட அவரின் பண்ணை வீட்டின் கேட் உடைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
கொடைக்கானலைச் சேர்ந்த ராஜன் என்பவர் கொய்மலர் சாகுபடிக்காக 58 பேரின் சார்பில்  உதகையிலுள்ள  பேங்க் ஆஃப் இந்தியா கிளையில் கடனுதவி பெற்று மோசடி செய்துள்ளது வங்கி அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து 2015ஆம் ஆண்டில் சிபிஐக்கு தெரிவிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தற்போது வழக்கு பதியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வங்கியின் மேலாளர் சிவகுமார்  பணி இடை நீக்கம் செய்யப்பட்டு விட்டார்.  குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜன் தற்போது தலைமறைவாக  உள்ளார்.
 இந்நிலையில் உதகைக்கு சனிக்கிழமை வந்த சிபிஐ அதிகாரிகள் குழுவினர், உதகையில் ராஜனுக்கு சொந்தமான தனியார் தங்கும் விடுதி  மற்றும் குன்னூரில் ஸ்டேன்ஸ் சாலையிலுள்ள அவரது  பண்ணை வீடு அமைந்துள்ள  சொகுசு பங்களா ஆகியவற்றுக்கு சீல் வைத்தனர். 
இந்நிலையில்  திங்கள்கிழமை பகலில் அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் சிலர் அந்த பங்களாவின் வெளிப்புற கேட்டிலிருந்த சீல் அகற்றப்படாமல்  கேட் மட்டும் திறந்து கிடப்பதைப் பார்த்து குன்னூர் நகர காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சீல் சிபிஐயால் வைக்கப்பட்டது என்பதால் உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் மூலம் சிபிஐ அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஐ அதிகாரிகளால் வைக்கப்பட்ட சீல் அகற்றப்படாமல் கேட் மட்டும் திறந்து கிடக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/10/வங்கிக்-கடன்-மோசடி-வழக்கு-குன்னூரில்-சிபிஐ-சீல்-வைத்த-பண்ணை-வீட்டின்-கேட்-உடைப்பு-2956827.html
2956813 கோயம்புத்தூர் நீலகிரி ஓவேலியில் மளிகைக் கடையை சூறையாடிய யானைகள் DIN DIN Tuesday, July 10, 2018 07:43 AM +0530 கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு மளிகைக் கடையை யானைகள் சூறையாடியதால் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பேரூராட்சியில் உள்ள பார்வுட் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சுரேஷ் என்பவர் மளிகைக் கடை நடத்தி வருகிறார். அப்பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் வந்த யானைகள் கடையில் இருந்த  பொருள்களை சேதப்படுத்திவிட்டு அரிசி, பருப்பு,  உப்பு உள்ளிட்ட பொருள்களை சாப்பிட்டுவிட்டு கடையை துவம்சம் செய்துவிட்டுச் சென்றன. அப்போது கடையருகே நிறுத்தி வைத்திருந்த மோட்டார் பைக்கையும் சேதப்படுத்தியுள்ளன.
காலையில் வந்து பார்த்தபோது கடையை யானைகள் சூறையாடியது தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் ஒன்றுகூடி யானைகளிடமிருந்து பாதுகாப்பு வழங்குவதோடு, யானைகள் சேதப்படுத்திய கடைக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஓவேலி வனச் சரக அலுவலர் குமார் வந்து சமாதானப்படுத்திய பிறகு போராட்டத்தைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். கடந்த மாதம் இரவு நேரத்தில் வந்த யானைகள் இதே கடையை சேதப்படுத்தின. தொடர்ந்து யானைகள் அப்பகுதியில் அட்டகாசம் செய்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/10/ஓவேலியில்-மளிகைக்-கடையை-சூறையாடிய-யானைகள்-2956813.html
2956814 கோயம்புத்தூர் நீலகிரி உதகையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்: 165 மனுக்கள் பெறப்பட்டன DIN DIN Tuesday, July 10, 2018 07:37 AM +0530 உதகையில்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை  நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.செல்வராஜ் பொதுமக்களிடமிருந்து 165 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் குடும்ப அட்டை,  வீட்டு மனைப் பட்டா, தொழில் மற்றும் கல்விக் கடன் உதவி,  முதியோர்  உதவித் தொகை, சாலை, குடிநீர், கழிப்பிடம் மற்றும் மின்சார வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 165  மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. இம்மனுக்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்குமாறும், ஏற்கனவே பெறப்பட்டு நிலுவையிலுள்ள மனுக்கள் மீதும்  உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய்  அலுவலர் ப.செல்வராஜ்  அறிவுறுத்தினார்.
இம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் உதகையில் காந்தல் பகுதியைச் சேர்ந்த ஆர்.சுரேஷ்பாபு என்பவருக்கு துணி வியாபாரம் செய்வதற்காக மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.20,000த்துக்கான காசோலையையும் மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.  கூட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியர் முருகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பாஸ்கரன், பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் குழந்தைவேலு மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/10/உதகையில்-மக்கள்-குறை-தீர்க்கும்-கூட்டம்-165-மனுக்கள்-பெறப்பட்டன-2956814.html
2956811 கோயம்புத்தூர் நீலகிரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு வட்டிச் சலுகை அறிவிப்பு DIN DIN Tuesday, July 10, 2018 07:30 AM +0530 தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு வட்டிச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக  கோவை வீட்டு வசதிப் பிரிவு செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு மாதாந்திர தவணை செலுத்த தவறியதற்கான அபராத வட்டி மற்றும் முதலாக்கத்தின் மீதான வட்டியினை முழுவதுமாகவும்,  நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்தின் மீதான வட்டியினை  வருடத்திற்கு 5 மாதம் மட்டும் கணக்கிட்டு தள்ளுபடி செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 
கோவை வீட்டு வசதி வாரியத் திட்டங்களில் தவணை முறையின் மூலம் மனை, வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பு பெற்றவர்களில் ஏற்கனவே முழுத் தொகையும் செலுத்தியவர்கள் நீங்கலாக ஏனைய ஒதுக்கீடுதாரர்கள் மட்டும் தாங்கள் ஒதுக்கீடு பெற்ற கோவை வீட்டு வசதிப்பிரிவு அலுவலகத்தை அணுகி வட்டித் தள்ளுபடி போக மீதம் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையினை ஒரே தவணையில் செலுத்தி விற்பனைப் பத்திரத்தை பெற்று பயனடையலாம்.  
அத்துடன் இச்சலுகை  ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளதால் ஒதுக்கீடுதாரர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்  கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/10/தமிழ்நாடு-வீட்டு-வசதி-வாரியத்தில்-வீடு-ஒதுக்கீடு-பெற்றவர்களுக்கு-வட்டிச்-சலுகை-அறிவிப்பு-2956811.html
2956810 கோயம்புத்தூர் நீலகிரி குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்து DIN DIN Tuesday, July 10, 2018 07:29 AM +0530 குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் லாரி மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இந்த விபத்தால் திங்கள்கிழமை 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.  
நீலகிரி மாவட்டம், குன்னூர் கிளையைச் சேர்ந்த அரசுப் பேருந்து கோவைக்கு புறப்பட்டுச் சென்றது , இந்த பேருந்து மரப்பாலம் கே .என்.ஆர். நகர் அருகே வரும்போது ஒரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே மேட்டுப்பாளையத்தில் இருந்து  ஜல்லிக் கற்கள் ஏற்றிக் கொண்டு வந்த  லாரி மீது மோதியது 
இதில் பேருந்தில்  இருந்த 7 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதேபோல் லாரி ஓட்டுநருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் பேருந்தில் இருந்த பயணிகள் மாற்றுப்பேருந்து மூலம் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  
இந்த விபத்தால் குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கடந்த 5 நாள்களுக்கு முன்புதான் குன்னூர் கிளைக்கு இந்த புதிய பேருந்து வழங்கப்பட்டது. விபத்து குறித்து வெலிங்டன் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/10/குன்னூர்---மேட்டுப்பாளையம்-மலைப்-பாதையில்-லாரி-மீது-அரசுப்-பேருந்து-மோதி-விபத்து-2956810.html
2956808 கோயம்புத்தூர் நீலகிரி வங்கிக் கடன் மோசடி வழக்கு: குன்னூரில் சிபிஐ சீல் வைத்த பண்ணை வீட்டின் கேட் உடைப்பு DIN DIN Tuesday, July 10, 2018 07:29 AM +0530 கொய்மலர் சாகுபடிக்காக உதகை பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ரியல் எஸ்டேட்  அதிபர் ராஜன் ரூ.15 கோடி கடன்பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும்  வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் குன்னூரில் சீல் வைக்கப்பட்ட அவரின் பண்ணை வீட்டின் கேட் உடைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
கொடைக்கானலைச் சேர்ந்த ராஜன் என்பவர் கொய்மலர் சாகுபடிக்காக 58 பேரின் சார்பில்  உதகையிலுள்ள  பேங்க் ஆஃப் இந்தியா கிளையில் கடனுதவி பெற்று மோசடி செய்துள்ளது வங்கி அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து 2015ஆம் ஆண்டில் சிபிஐக்கு தெரிவிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தற்போது வழக்கு பதியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வங்கியின் மேலாளர் சிவகுமார்  பணி இடை நீக்கம் செய்யப்பட்டு விட்டார்.  குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜன் தற்போது தலைமறைவாக  உள்ளார்.
 இந்நிலையில் உதகைக்கு சனிக்கிழமை வந்த சிபிஐ அதிகாரிகள் குழுவினர், உதகையில் ராஜனுக்கு சொந்தமான தனியார் தங்கும் விடுதி  மற்றும் குன்னூரில் ஸ்டேன்ஸ் சாலையிலுள்ள அவரது  பண்ணை வீடு அமைந்துள்ள  சொகுசு பங்களா ஆகியவற்றுக்கு சீல் வைத்தனர். 
இந்நிலையில்  திங்கள்கிழமை பகலில் அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் சிலர் அந்த பங்களாவின் வெளிப்புற கேட்டிலிருந்த சீல் அகற்றப்படாமல்  கேட் மட்டும் திறந்து கிடப்பதைப் பார்த்து குன்னூர் நகர காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சீல் சிபிஐயால் வைக்கப்பட்டது என்பதால் உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் மூலம் சிபிஐ அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஐ அதிகாரிகளால் வைக்கப்பட்ட சீல் அகற்றப்படாமல் கேட் மட்டும் திறந்து கிடக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/10/வங்கிக்-கடன்-மோசடி-வழக்கு-குன்னூரில்-சிபிஐ-சீல்-வைத்த-பண்ணை-வீட்டின்-கேட்-உடைப்பு-2956808.html
2956809 கோயம்புத்தூர் நீலகிரி வங்கிக் கடன் மோசடி வழக்கு: குன்னூரில் சிபிஐ சீல் வைத்த பண்ணை வீட்டின் கேட் உடைப்பு DIN DIN Tuesday, July 10, 2018 07:29 AM +0530 கொய்மலர் சாகுபடிக்காக உதகை பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ரியல் எஸ்டேட்  அதிபர் ராஜன் ரூ.15 கோடி கடன்பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும்  வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் குன்னூரில் சீல் வைக்கப்பட்ட அவரின் பண்ணை வீட்டின் கேட் உடைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
கொடைக்கானலைச் சேர்ந்த ராஜன் என்பவர் கொய்மலர் சாகுபடிக்காக 58 பேரின் சார்பில்  உதகையிலுள்ள  பேங்க் ஆஃப் இந்தியா கிளையில் கடனுதவி பெற்று மோசடி செய்துள்ளது வங்கி அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து 2015ஆம் ஆண்டில் சிபிஐக்கு தெரிவிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தற்போது வழக்கு பதியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வங்கியின் மேலாளர் சிவகுமார்  பணி இடை நீக்கம் செய்யப்பட்டு விட்டார்.  குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜன் தற்போது தலைமறைவாக  உள்ளார்.
 இந்நிலையில் உதகைக்கு சனிக்கிழமை வந்த சிபிஐ அதிகாரிகள் குழுவினர், உதகையில் ராஜனுக்கு சொந்தமான தனியார் தங்கும் விடுதி  மற்றும் குன்னூரில் ஸ்டேன்ஸ் சாலையிலுள்ள அவரது  பண்ணை வீடு அமைந்துள்ள  சொகுசு பங்களா ஆகியவற்றுக்கு சீல் வைத்தனர். 
இந்நிலையில்  திங்கள்கிழமை பகலில் அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் சிலர் அந்த பங்களாவின் வெளிப்புற கேட்டிலிருந்த சீல் அகற்றப்படாமல்  கேட் மட்டும் திறந்து கிடப்பதைப் பார்த்து குன்னூர் நகர காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சீல் சிபிஐயால் வைக்கப்பட்டது என்பதால் உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் மூலம் சிபிஐ அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஐ அதிகாரிகளால் வைக்கப்பட்ட சீல் அகற்றப்படாமல் கேட் மட்டும் திறந்து கிடக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/10/வங்கிக்-கடன்-மோசடி-வழக்கு-குன்னூரில்-சிபிஐ-சீல்-வைத்த-பண்ணை-வீட்டின்-கேட்-உடைப்பு-2956809.html
2956028 கோயம்புத்தூர் நீலகிரி சிங்காரா தனியார் எஸ்டேட் பகுதியில் சிறுத்தை சாவு DIN DIN Monday, July 9, 2018 05:25 AM +0530 நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள சிங்காரா தனியார் எஸ்டேட் பகுதியில் சிறுத்தை இறந்துகிடந்தது வனத் துறையினருக்கு ஞாயிற்றுக்கிழமை தெரியவந்துள்ளது.
கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகப் பகுதியில், சிங்காரா தனியார் எஸ்டேட் பகுதியில் சிறுத்தை இறந்துகிடப்பதாக வனத் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், வனத் துறையினர், கால்நடை மருத்துவர்கள் ராஜமுரளி, பொன்கலை ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று சிறுத்தையின் உடலைப் பரிசோதனை செய்தனர்.  உயிரிழந்துகிடந்தது சுமார் 4 வயதுடைய ஆண் சிறுத்தை என்பதும், அதன் முக்கிய பாகங்கள் ஆய்வகப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் வனத் துறையினர் தெரிவித்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/09/சிங்காரா-தனியார்-எஸ்டேட்-பகுதியில்-சிறுத்தை-சாவு-2956028.html
2956027 கோயம்புத்தூர் நீலகிரி ஜவகர் சிறுவர் மன்றம் மூலமாக பகுதி நேரக் கலைப் பயிற்சி DIN DIN Monday, July 9, 2018 05:25 AM +0530 பள்ளி செல்லும் சிறார்களுக்கு ஜவகர் சிறுவர் மன்றம் மூலமாகப் பகுதி நேரக் கலைப் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இதுகுறித்து, ஜவகர் சிறுவர் மன்றத் திட்ட அலுவலர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் கலைகளைப் பயிலும் வண்ணம் தமிழ்நாடு அரசுக் கலை, பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் ஜவகர் சிறுவர் மன்றங்கள் மூலமாகப் பகுதி நேரக் கலைப் பயிற்சி அளித்து வருகிறது. அதன்படி, உதகை, ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் மேரிஸ் ஹில் பகுதியில் உள்ள புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் குரலிசை (வாய்பாட்டு), கீ போர்டு, பரதநாட்டியம் மற்றும் ஓவியப் பயிற்சிகள் சனிக்கிழமை மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், ஞாயிற்று கிழமை காலை 10 முதல் 12 மணி வரையிலும் வழங்கப்படுகின்றன. 5 வயது முதல் 16 வயது வரை உள்ள சிறுவர், சிறுமியர் இப்பயிற்சியில் சேரலாம். பயிற்சிக்கு கட்டணம் இல்லை.
சிறுவர் மன்ற உறுப்பினராகப் பதிவு செய்வதற்கு ஆண்டு சந்தாவாக ரூ. 400 மட்டும்  செலுத்தப்பட வேண்டும். 2018 ஜூலை 15 ஆம் தேதி அன்று தொடங்கும் பயிற்சிகள் 2019 மார்ச் இறுதி வரை நடைபெறும். இம்மன்றத்தில் உறுப்பினராகப் பயிற்சி பெறும் சிறார்கள் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கவும், கருத்தரங்கம், செயல்முறைப் பயிலரங்கம் ஆகியற்றில் கலந்துகொள்ளவும் வாய்ப்பு அளிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/09/ஜவகர்-சிறுவர்-மன்றம்-மூலமாக-பகுதி-நேரக்-கலைப்-பயிற்சி-2956027.html
2956026 கோயம்புத்தூர் நீலகிரி குன்னூரில் ரம்மியமான காலநிலை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி DIN DIN Monday, July 9, 2018 05:25 AM +0530 குன்னூரில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வந்த நிலையில், தற்போது   வெயில் அடித்து ரம்மியமான காலநிலை நிலவுவதால் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக காற்றுடன் கூடிய மழை பெய்து வந்தது. இதனால், கடும் குளிர் நிலவியது. இதனால், பள்ளி செல்லும் குழந்தைகள், தோட்டத் தொழிலாளர்கள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மழையால் சுற்றுலாப் பயணிகளின் வருகை மிகவும் குறைந்திருந்தது.
பெரும்பாலான சுற்றுலாத் தலங்கள் சுற்றுலாப் பயணிகள் இன்றி வெறிச்சோடியது. தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள் வெறிச்சோடின.  இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை முதல்  குன்னூர் புறநகர் பகுதிகளில் ரம்மியமான காலநிலை நிலவியது. காற்றும் குறைந்து, குளிரின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. 
ஒரு வாரத்துக்குப் பின் லேம்ஸ் ராக், டால்பின்நோஸ், சிம்ஸ்  பூங்கா,  படகு இல்லம் போன்ற பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் வருகை  கணிசமாக  அதிகரித்துக் காணப்பட்டது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/09/குன்னூரில்-ரம்மியமான-காலநிலை-சுற்றுலாப்-பயணிகள்-மகிழ்ச்சி-2956026.html
2955993 கோயம்புத்தூர் நீலகிரி ஒரே வீட்டில் பிடிபட்ட 3 பாம்புகள் DIN DIN Monday, July 9, 2018 02:55 AM +0530 கோவை அருகே ஒரே வீட்டில் 3 கொம்பேறிமூக்கன் பாம்புகள் ஞாயிற்றுக்கிழமை பிடிபட்டன.
ஒத்தக்கால்மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். இவரது வீட்டின் மேற்கூரையில் பாம்பு இருப்பதாக நேதாஜி பாம்புகள் அறக்கட்டளைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.  இதையடுத்து, அந்த வீட்டுக்குச் சென்ற சுரேந்திரன் என்பவர் 3 அடி நீளமுள்ள 3 கொம்பேறிமூக்கன் பாம்புகளை உயிருடன் பிடித்து மதுக்கரை வனத் துறையினரிடம் ஒப்படைத்தார். 
இதுகுறித்து சுரேந்திரன் கூறியதாவது: இங்கு பிடிபட்டவை கொம்பேறிமூக்கன் பாம்புகளாகும்.  இவை விஷமற்றவை. சுறுசுறுப்பாகவும் அதிக துடிப்புடனும் ஓடக்கூடியவை.  இவை விரைவாக மரம் ஏறக்கூடியவை. இவை பிடிபட்டவுடன் கடிக்கும் தன்மை கொண்டவை.  கடிபட்டவர்களுக்து  தலைச் சுற்றல் போன்ற சோர்வு இருக்கும். உடனே சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/09/ஒரே-வீட்டில்-பிடிபட்ட-3-பாம்புகள்-2955993.html
2955960 கோயம்புத்தூர் நீலகிரி ஜோசப் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் 130 ஆவது ஆண்டு விளையாட்டுப் போட்டிகள் DIN DIN Monday, July 9, 2018 01:08 AM +0530 குன்னூர் ஜோசப் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில்  130 ஆவது ஆண்டு விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன. 
இதில், சப்-ஜூனியர், ஜூனியர், இண்டர் சீனியர், சூப்பர் சீனியர் பிரிவுகளில் பல்வேறு தடகளப் போட்டிகள் நடைபெற்றன. சிறப்பு விருந்தினராக ராணுவப் பயிற்சிக் கல்லூரி காமாண்டர் ராஜீவ் அசோக் பங்கேற்றுப் பரிசுகளை வழங்கிப் பேசினார்.
பள்ளி முதல்வர் நவீன் பிரான்சிஸ் முன்னிலை வகித்தார். விளையாட்டுத் துறைச் செயலாளர் பாஸ்கர், பெட்ரிஷியன் துணைத் தலைவர் குபேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு  பேசினர். இதில், காந்தி இல்லம் அணி 222 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்தது. தாகூர் இல்லம் அணி 145 புள்ளிகளும், பிரசாந்த் இல்லம் அணி 143 புள்ளிகளும், ஆசாத் இல்லம் அணி 128 புள்ளிகளையும் பெற்றன. 
சூப்பர் சீனியர் பிரிவில் "விவியன் ரிச்சர்டு' அணி சாம்பியன் பட்டம் வென்றது. பெண்கள் பிரிவில் "காந்தி இல்லம்' அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/09/ஜோசப்-ஆங்கிலோ-இந்தியன்-பள்ளியில்-130-ஆவது-ஆண்டு-விளையாட்டுப்-போட்டிகள்-2955960.html
2955959 கோயம்புத்தூர் நீலகிரி ஊராட்சிப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம்: உள்ளாட்சித் துறைப் பணியாளர் சம்மேளனம் வலியுறுத்தல் DIN DIN Monday, July 9, 2018 01:07 AM +0530 ஊராட்சிப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் என உள்ளாட்சித் துறைப் பணியாளர் சம்மேளனம் வலியுறுத்தி உள்ளது. 
இதுகுறித்து, தமிழ்நாடு உள்ளாட்சித் துறைப் பணியாளர் சம்மேளன மாநிலச் செயலாளர் ரகுநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  
ஊராட்சிப் பணியாளர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்வது தொடர்பாக ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழுவின் அறிக்கையின் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயித்து அறிவிப்பு வெளியிடவேண்டும். அனைத்து துப்புரவுத் தொழிலாளர்களுக்கும் பசுமை வீடு கட்டிக்கொடுக்க வேண்டும். ஊதிய முரண்பாடுகளைக் களைந்து அனைத்து ஊழியர்களுக்கும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கவேண்டும். 
மலைப் பகுதிகளில் உள்ள ஊராட்சிக் குடிநீர் மற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு மலைப்படி,  குளிர்காலப் படி, மருத்துவப்படி வழங்க வேண்டும். 
ஊராட்சிகளில் உள்ள செயலாளர் காலிப் பணியிடங்களை நிரப்பும்போது ஊராட்சிகளில் உள்ள பம்ப் ஆபரேட்டர்களை பணி மூப்பு, கல்வித் தகுதி, பணித் திறன் அடிப்படையில் ஊராட்சி செயலாளராகப் பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  
1992 முதல் 2006 வரை ஊராட்சி பம்ப் ஆபரேட்டர் மற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய சிறப்பு ஊதிய உயர்வு நிலுவைத் தொகை ரூ. 58 ஆயிரத்து 900 த்தை உடனடியாக வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/09/ஊராட்சிப்-பணியாளர்களுக்கு-குறைந்தபட்ச-ஊதியம்-உள்ளாட்சித்-துறைப்-பணியாளர்-சம்மேளனம்-வலியுறுத்தல்-2955959.html
2955954 கோயம்புத்தூர் நீலகிரி உதகை பைன் பாரஸ்டுக்குள் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தற்காலிகத் தடை DIN DIN Monday, July 9, 2018 12:59 AM +0530 உதகை அருகே உள்ள பைன் பாரஸ்டில் பாதைகள் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் செல்லத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தலைகுந்தா பைன் பாரஸ்ட் பகுதிக்குச் செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், அங்குள்ள காமராஜ் சாகர் அணைக்குச் சென்று கண்டு ரசிப்பதுடன் புகைப்படமும் எடுத்துச் செல்கின்றனர். இங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பல மடங்காக உயர்ந்து வருகிறது. ஆனால், உதகை - கூடலூர் சாலையில் இருந்து பைன் பாரஸ்ட் வழியாக காமராஜ் சாகர் அணைக்குச் செல்லும் பாதை மிகவும் செங்குத்தாக உள்ளது. மேலும், மரத்தின் இலைகள் உதிர்ந்துள்ள நிலையில், முறையான பாதை இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் வழுக்கி விழுகின்றனர். குறிப்பாக மழைக் காலங்களில் சுற்றுலாப் பயணிகள் அணைக்கு சென்று திரும்புவதற்குள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதியும், இப்பகுதியை மேம்படுத்தும் நோக்கிலும் பைன் பாரஸ்ட் பகுதியில் படிக்கட்டுகள் அமைக்க வனத் துறையினர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 
எனவே, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி பைன் பாரஸ்ட் பகுதிக்குச் செல்ல தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jul/09/உதகை-பைன்-பாரஸ்டுக்குள்-செல்ல-சுற்றுலாப்-பயணிகளுக்குத்-தற்காலிகத்-தடை-2955954.html