Dinamani - கோயம்புத்தூர் - http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2815644 அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: அதிமுக சார்பில் மாரத்தான் போட்டி DIN DIN Monday, November 27, 2017 03:33 AM +0530 கோவை:  எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி  மினி மாரத்தான் போட்டி கோவை, வடவள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி சார்பில் நடைபெற்ற இப்போட்டியை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கிவைத்தார். 5 மற்றும் 10 கிலோ மீட்டர் என ஆண்,  பெண் இருபிரிவுகளாக இப்போட்டிகள் நடைபெற்றன. 
இதில் மாநகராட்சி ஆணையர் டாக்டர் விஜயகார்த்திகேயன், துணை ஆணையர் காந்திமதி,  சட்டப் பேரவை உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார்,  அம்மன் கே.அர்ச்சுணன்,  வி.சி.ஆறுக்குட்டி,  புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணிச் செயலாளர் சந்திரசேகர், பகுதிச் செயலாளர்கள் புதூர் செல்வராஜ்,  வார்டு செயலாளர்கள் ராயப்பன் பார்த்திபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 இப்போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்,  வீராங்கனைகளுக்கு புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணிச் செயலாளர் சந்திரசேகர் ரொக்கம் மற்றும் பரிசுகளை 
வழங்கினார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/2017/nov/27/எம்ஜிஆர்-நூற்றாண்டு-விழா-அதிமுக-சார்பில்-மாரத்தான்-போட்டி-2815644.html
2815641 அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கணுவாயில் குட்டியுடன் சுற்றித் திரிந்த யானை DIN DIN Monday, November 27, 2017 03:32 AM +0530 பெ.நா.பாளையம்: கோவை, துடியலூருக்கு அருகே உள்ள கணுவாய் பகுதியில் குட்டியுடன் யானை சுற்றித் திரிந்ததால் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோவை மாவட்டம்,  மருதமலை வனப் பகுதிகளில் யானைகள் வாழ்கின்றன. இவை மருதமலை, சோமையம்பாளையம் பகுதிகளில் நடமாடிக் கொண்டிருக்கின்றன. 
இதில் 5 யானைகள் காளப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள செங்கல் சூளைக்குள் சனிக்கிழமை புகுந்தன.  பின்னர் அவை மீண்டும் மருதமலை நோக்கிச் சென்று விட்டன. 
இந்நிலையில் குட்டியுடன் யானை கணுவாய் பகுதியில் உள்ள கல்லுக்குழி பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் வந்தது. இதனைக் கண்ட அப்பகுதி இளைஞர்கள் கற்களை வீசி அவற்றை தொந்தரவு செய்தனர். 
இதனால் ஆத்திரமடைந்த யானை, இளைஞர்களைத் துரத்தியது. தகவலறிந்த கோவை நகர வனத் துறையினர் யானைகளை மலைப் பகுதிக்குள் விரட்ட முயற்சி மேற்கொண்டனர். ஆனால் யானைகள்,  கணுவாய் முருகன்கோயில் அருகே சென்று, கோவை- ஆனைகட்டி சாலைக்குள் புக முயன்றன. இதன்காரணமாக வனத் துறையினர் அச்சாலையில் போக்குவரத்தை நிறுத்தினர்.  இதனையடுத்து யானைகள் சாலையைக் கடந்து சோமையனூர் நோக்கி செல்ல ஆரம்பித்தன. பின்னர் அவை,  திருவள்ளுவர் நகர் வழியாக காட்டுக்குள் சென்றன. இதன் காரணமாக இந்த சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/2017/nov/27/கணுவாயில்-குட்டியுடன்-சுற்றித்-திரிந்த-யானை-2815641.html