Dinamani - காஞ்சிபுரம் - http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3024227 சென்னை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஒப்படைக்க சோமாஸ்கந்தர் சிலைக்கு பாலாலயம்!  காஞ்சிபுரம், DIN Monday, October 22, 2018 04:00 AM +0530 ஏகாம்பரநாதர் கோயில் சோமாஸ்கந்தர் சிலையை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்காக அச்சிலைகளுக்கு பாலாலயம் செய்யப்பட்டது.
 பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை பழுதடைந்த நிலையில் இருந்தது. இதற்காக, புதிய திருமேனி சிலையை இந்து சமய அறநிலைத்துறை கடந்த 2016ஆம் ஆண்டு பிரதிஷ்டை செய்தது.
 இந்தச் சிலையை செய்வதற்காக, பக்தர்களிடமிருந்து தங்கம் பெறப்பட்டது தொடர்பாகவும் ஏலவார் குழலி பஞ்சலோகச் சிலைகள் திருடுபோனது தொடர்பாகவும் பக்தர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி, 9 பேர் மீது சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
 மேலும், நவீன தொழில்நுட்பக் கருவி மூலம் சோமாஸ்கந்தர் சிலை ஆய்வு செய்யப்பட்டது. இதில், சிலையில் 5.75 கிலோ தங்கம் சேர்க்கப்படவில்லை என உறுதியானது. இதனிடையே, ஸ்தபதி முத்தையா, கூடுதல் ஆணையர் கவிதா ஆகியோர் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டதோடு, தொடர்ந்து புலன்விசாரணை நடைபெற்று வருகிறது.
 அதன்படி, வழக்கின் அடுத்தகட்ட நகர்வாக, புதிய உற்சவர் சிலை, ஏலவார் குழலி சிலை ஆகியவற்றை முழுமையாக ஆய்வு செய்து, நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் அறநிலையத் துறையிடம் அனுமதி கோரினர்.
 அதன்பேரில், புதிய உற்சவர் சிலையை வெளியே எடுத்துச் செல்ல வேண்டுமெனில், அச்சிலைகளுக்கு ஆகம விதிப்படியான பூஜைகளை நடத்த வேண்டும்.
 அதன்படி, சனிக்கிழமை இரவு புதிய சோமாஸ்கந்தர் சிலைக்கு பாலாலயம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, பாலாலயம் செய்யப்பட்ட சிலைகள் வரும் வியாழக்கிழமை சென்னை அல்லது கும்பகோணத்துக்கு கொண்டு செல்லப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/22/w600X390/kanch.jpg http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/22/நீதிமன்றத்தில்-ஒப்படைக்க-சோமாஸ்கந்தர்-சிலைக்கு-பாலாலயம்-3024227.html
3024230 சென்னை காஞ்சிபுரம் அச்சிறுப்பாக்கத்தில் தொடர் மழையால் வாரச்சந்தை பாதிப்பு  மதுராந்தகம் DIN Monday, October 22, 2018 12:53 AM +0530 மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் கூடும் வாரச்சந்தையானது தற்போது பெய்து வரும் தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.
 வாரத்தின் தொடக்க நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று அச்சிறுப்பாக்கத்தில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே இந்த வாரச்சந்தை கூடுவது வழக்கம். அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் இச்சந்தை நடைபெற்று வருகிறது. இது கிராம நிர்வாக அதிகாரி பதிவேட்டின்படி சுமார் 4.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் நடைபெறுகிறது. இந்த இடம் தற்போது, அரசியல் செல்வாக்கு படைத்தவர்களாலும், பணபலம் மற்றும் செல்வாக்கு படைத்தவர்களாலும் ஒரு சில பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு மிகவும் சுருங்கிய நிலப்பகுதியாக மாறி விட்டது.
 இந்த வாரச்சந்தையில் அச்சிறுப்பாக்கம், தொழுபேடு, ஒரத்தி, கரசங்கால், எலப்பாக்கம், விளங்காடு, கீழ் அத்திவாக்கம், மின்னல் சித்தாமூர் உள்ளிட்ட பகுதிகளில் விளையும் காய்கறிகள், பழவகைகள், சூனாம்பேடு, செய்யூர் பகுதிகளில் இருந்து மீனவப் பெண்களால் கொண்டு வரப்படும் மீன்கள், இறால், நண்டு போன்ற கடல்வாழ் உணவுப் பொருள்கள், இப்பகுதி பெண்களால் தயாரிக்கப்படும் முறுக்கு, பஜ்ஜி, போண்டா, சுண்டல் மசாலா போன்றவையும் மலிவான விலையில் விற்கப்படுகின்றன.
 இங்கு சுமார் 60-க்கும் மேற்பட்ட சிறு கடைகள் மூலம் வியாபாரிகள் எத்தகைய மேற்கூரைகளும் இன்றி, வெயிலிலும், மழையிலும் தங்கள் வியாபாரத்தை செய்து வருகின்றனர். இச்சந்தையில் கடை வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் கூறியது:
 கோயில் நிர்வாகத்தினர் கேட்கும் தொகையை அவசியம் கொடுக்க வேண்டும். எங்களுக்கு மழையின்போது ஒதுங்கிக் கொள்ள இடம் இல்லை. இதனால் மழையில் நனைந்தவாறு பொருள்களை வாங்க மக்கள் வருவதில்லை. இந்தக் காரணத்தால் எங்களுக்கு வியாபாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. கோயில் நிர்வாகம் நினைத்தால் வாரச்சந்தை நடைபெறும் இந்த இடத்தில் வரிசையாக மேற்கூரை போட்டு சிறிய அளவிலான கடைகளைக் கட்டித் தர முடியும். அவ்வாறு கட்டிக் கொடுத்தால் எங்களுக்கு உதவியாக இருக்கும். ஆனால், கோயில் செயல் அலுவலர் இது தொடர்பாக எந்த முயற்சியும் எடுக்காமல் இருப்பது எங்ககளை வேதனைக்கு உள்ளாக்குகிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.
 கடந்த சில நாள்களாக அச்சிறுப்பாக்கத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வாரச்சந்தை பகுதி சேறும் சகதியுமாக மாறி, சிறிய நீர்க்குட்டைகளுடன் காணப்படுகிறது. இதனால் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற வாரச்சந்தையில் பெரும்பாலான வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியாமலும், பொதுமக்கள் பொருள்களை வாங்க வராமலும் இருந்தனர்.
 மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, வாரச்சந்தை நடைபெறும் பகுதியில் நீர் தேங்காத வகையில் மணலைக் கொட்டி, மேற்கூரை கொண்ட கடைகளாக அமைத்தால் பொருள்களை வாங்க வருபவர்களுக்கும், விற்பவர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும் என வியாபாரிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/22/அச்சிறுப்பாக்கத்தில்-தொடர்-மழையால்-வாரச்சந்தை-பாதிப்பு-3024230.html
3024229 சென்னை காஞ்சிபுரம் அடிக்குமாடிக் குடியிருப்பு பகுதியில் காவல் உதவி மையம் திறப்பு  ஸ்ரீபெரும்புதூர், DIN Monday, October 22, 2018 12:52 AM +0530 ஒரகடத்தை அடுத்த நாவலூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடிக் குடியிறுப்புப் பகுதியில் புதிய காவல் உதவி மையம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
 மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாவலூர் பகுதியில் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் அடுக்குமாடிக் குடியிறுப்பு உள்ளது.
 இப்பகுதியில் உள்ள சுமார் ஆயிரம் வீடுகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அவ்வப்போது குற்றச்சம்பவங்கள் நடைபெற்று வந்தன.
 இந்நிலையில் இப்பகுதில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
 இதையடுத்து நாவலூர் குடிசைமாற்று வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் புதிதாக காவல் உதவி மையத்திற்கான கட்டடம் கட்டப்பட்டது.
 இந்தக் காவல் உதவி மையத்தை ஸ்ரீபெரும்புதூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் ஞாயிற்றுக்கிழமை ரிப்பன் வெட்டித் திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மணிமங்கலம் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) நடராஜன், ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் விநாயகம், உதவி ஆய்வாளர்கள் விஜயகாந்த், சுரேஷ் உள்ளிட்ட போலீஸார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
 அப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட குடியிருப்போர் நலச்சங்கத்தின் பெயர்ப் பலகையை ஸ்ரீபெரும்புதூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் திறந்துவைத்தார்.
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/22/அடிக்குமாடிக்-குடியிருப்பு-பகுதியில்-காவல்-உதவி-மையம்-திறப்பு-3024229.html
3024228 சென்னை காஞ்சிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் அவதி: மணிக்கணக்கில் காத்திருக்கும் நோயாளிகள்  ஸ்ரீபெரும்புதூர், DIN Monday, October 22, 2018 12:52 AM +0530 படப்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டு மருத்துவர்களில் ஒருவர் மட்டுமே பணிக்கு வருவதால் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மணிக்கணக்கில் காத்திருந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
 காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம் படப்பை ஊராட்சிக்குட்பட்ட ஆத்தனஞ்சேரி பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில், படப்பை, கரசங்கால், சாலமங்கலம், மணிமங்கலம், சேத்துப்பட்டு, மாகாண்யம், ஆரம்பாக்கம், ஒரத்தூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தினமும் 400-க்கும் மேற்பட்டோர் படப்பை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதுதவிர மேற்குறிப்பிட்ட பகுதிகளைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்களும் சிகிச்சைக்காகவும், மருத்துவப் பரிசோதனைக்ளுக்காகவும் வந்து செல்கின்றனர்.
 படப்பை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் இரண்டு மருத்தவர்களில் ஒருவர் மட்டுமே பணிக்கு வருகிறார். மற்றொருவர் மொளச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றுவதாக தெரிகிறது. படப்பையில் ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே பணியில் இருப்பதால் சிகிச்சைக்காக வரும் பொதுமக்கள் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் அவர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக கர்ப்பிணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
 இது குறித்து ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக வரும் பொதுமக்கள் கூறியது:
 படப்பை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஏராளமானோர் சிகிச்சைக்காக வருகின்றனர். இந்த மையத்தில் பணிபுரிந்து வந்த இரண்டு மருத்துவர்களில் தற்போது ஒருவர் மட்டுமே பணியில் உள்ளார். மற்றொரு மருத்துவர் இங்கு பணியாற்றாமல் மொளச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்போது பணியாற்றி வருகிறார். இதனால் சிகிச்சைக்காக வருபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருவதால், சிகிச்சைக்காக பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
 மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வெளியே மேற்கூரை அமைக்கப்படாததால் வெயிலில் வரிசையில் நிற்க வேண்டியுள்ளதால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகிறோம். எனவே இங்கு பணியாற்றி வந்த மற்றொரு மருத்துவரை மீண்டும் இங்கு பணியமர்த்த அதிகாரிகள் நடடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பொதுமக்கள் சார்பாக போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
 
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/22/ஆரம்ப-சுகாதார-நிலையத்தில்-மருத்துவர்-இல்லாததால்-அவதி-மணிக்கணக்கில்-காத்திருக்கும்-நோயாளிகள்-3024228.html
3024226 சென்னை காஞ்சிபுரம் பல்வேறு இடங்களில் திருடியவர் கைது: 90 சவரன் தங்க நகைகள் பறிமுதல்  செங்கல்பட்டு, DIN Monday, October 22, 2018 12:49 AM +0530 செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் திருடிய நபரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 90 சவரன் நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
 இது குறித்து போலீஸார் கூறியது:
 செங்கல்பட்டு கிராமிய காவல் நிலையத்திற்குட்பட்ட மணப்பாக்கம், ஓழலூர், பி.வி.களத்தூர், வீராபுரம், பட்டரைவாக்கம், அம்மணம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பூட்டியிருக்கும் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிற்கு புகுந்து பீரோவில் இருக்கும் பணம் நகைகள் மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக பல வழக்குகள் கிராமிய காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. தொடர்ந்து வீடுகளில் திருடு போனதால், திருடர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
 இந்தப் படையில் செங்கல்பட்டு டிஎஸ்பி கந்தன், கிராமிய காவல்துறை ஆய்வாளர் இளங்கோ ஆகியோர் தலைமையில் துணை ஆய்வாளர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் பல்வேறு இடங்களில் திருடர்களைத் தேடிவந்தனர்.
 இந்நிலையில், செங்கல்பட்டை அடுத்த ஒழலூர் பகுதியில் போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக ஒருவர் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தனர். போலீûஸக் கண்டதும் தப்பியோட முயன்ற அவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
 அப்போது பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு பூட்டை உடைத்து திருடி வந்ததாக அவர் ஒப்புக் கொண்டார். அவர் கொளப்பாக்கத்தைச் சேர்ந்த ஆதி என்பவரின் மகன் கோபி (35) என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து அவரைக் கைது செய்த போலீஸார், அவர் திருடி பதுக்கி வைத்திருந்த இடத்திற்குச் சென்று 90 சவரன் நகைகளைப் பறிமுதல் செய்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/22/பல்வேறு-இடங்களில்-திருடியவர்-கைது-90-சவரன்-தங்க-நகைகள்-பறிமுதல்-3024226.html
3024225 சென்னை காஞ்சிபுரம் அமமுக-வில் இணைந்த திமுகவினர்  ஸ்ரீபெரும்புதூர், DIN Monday, October 22, 2018 12:49 AM +0530 திமுகவைச் சேர்ந்த சுமார் 100 பேர் அக்கட்சிகளில் இருந்து விலகி குன்றத்தூர் ஒன்றிய செயலாளர் மலைப்பட்டு பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை தங்களை இணைத்துக் கொண்டனர்.
 காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம், மணிமங்கலம் ஊராட்சியைச் சேர்ந்த திமுகவினர், அமமுக-வில் இணையும் நிகழ்ச்சி மணிமங்கலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அமமுக குன்றத்தூர் ஒன்றியச் செயலாளர் மலைப்பட்டு பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்ட விவசாய அணிச் செயலாளர் யோகேஸ்வரன், மணிமங்கலம் ஊராட்சி செயலாளர் சண்முகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 அப்போது, திமுகவைச் சேர்ந்த பிரபாகரன் தலைமையில் சுமார் 100 பேர் திமுகவில் இருந்து விலகி அமமுக-வில் தங்களை இணைத்துக் கொண்டனர். அமமுக-வில் இணைந்த அனைவரையும் ஒன்றியச் செயலாளர் மலைப்பட்டு பி.ராதாகிருஷ்ணன் சால்வை அணிவித்து வரவேற்றார்.
 இந்த நிகழ்ச்சியில் அமமுக மாவட்ட சிறுபான்மைப் பிரிவு செயலாளர் அப்துல் வாஜித், எம்ஜிஆர் மன்ற ஒன்றியச் செயலாளர் ரோஸ், ஒன்றியப் பொருளாளர் முனியன், ஒன்றிய துணைச் செயலாளர் ராஜகுமாரி கார்த்திகேயன், நிர்வாகிகள் ரங்கநாதன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/22/அமமுக-வில்-இணைந்த-திமுகவினர்-3024225.html
3024224 சென்னை காஞ்சிபுரம் காவலர் வீரவணக்க நாள்: 21 குண்டுகள் முழங்க அஞ்சலி  காஞ்சிபுரம், DIN Monday, October 22, 2018 12:49 AM +0530 காவலர் வீரவணக்கநாளையொட்டி வீரமரணமடைந்த காவலர்களுக்கு 21 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.
 ஜம்மு-காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள ஹாட் ஸ்பிரிங்ஸ் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் கடந்த 1959ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதியன்று திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், மத்திய பாதுகாப்புப் படை காவலர்கள் 10 பேர் வீரமரணமடைந்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பல்வேறு சம்பவங்களிலும், பணியின்போதும் வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு ஆண்டுதோறும் அக்டோபர் 21ஆம் தேதி நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
 அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள நினைவு ஸ்தூபி முன்பு காவலர் வீர வணக்கநாள் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 இதில், டிஐஜி தேன்மொழி, எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி ஆகியோர் கலந்துகொண்டு, வீரமரணம் அடைந்த காவலர்களை நினைவுகூர்ந்து, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, காவலர் நினைவு ஸ்தூபியில் 21 குண்டுகள் முழங்க காவல்துறை அதிகாரிகள், அலுவலர்கள், காவலர்கள் என திரளானோர் வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தினர்.
 வீரவணக்க நாளையொட்டி கடந்த வாரத்தில் மினி மாரத்தான், பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டு காவலர்களின் தியாகங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
 ஸ்ரீபெரும்புதூரில்...
 ஸ்ரீபெரும்புதூர், அக். 21: காவலர்கள் வீரவணக்க நாளை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நினைவு ஸ்தூபியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) சந்தோஷ் ஹதிமானி உள்ளிட்ட போலீஸார் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
 காவல்துறையில் பணியின்போது வீரமரணமடைந்த காவல்துறையினரை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21ஆம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நாளையொட்டி ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையம் அருகே உள்ள நினைவு ஸ்தூபியில் காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி தலைமையிலான போலீஸார் ஞாயிற்றுக்கிழமை மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) ராஜேஷ் கண்ணன், ஆய்வாளர் விநாயகம் உள்ளிட்ட போலீஸார் கலந்து கொண்டனர்.
 முன்னதாக, வீரவணக்க நாளையொட்டி ஸ்ரீபெரும்புதூர் காவல் உட்கோட்டத்தின் சார்பில், அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கிடையே பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் கடந்த சனிக்கிழமை பென்னலூர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
 
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/22/காவலர்-வீரவணக்க-நாள்-21-குண்டுகள்-முழங்க-அஞ்சலி-3024224.html
3024223 சென்னை காஞ்சிபுரம் சிவானந்த சரஸ்வதி ஆஸ்ரமத்தில் மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா  செங்கல்பட்டு, DIN Monday, October 22, 2018 12:48 AM +0530 காட்டாங்கொளத்தூர் சிவானந்த சரஸ்வதி ஆஸ்ரமத்தில் மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த ஆண்டுத் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
 இந்த விழாவிற்கு சிவானந்த சேவாஸ்ரமத்தின் பொதுச் செயலாளர் ராஜாராம் தலைமை வகித்து வரவேற்றுப் பேசினார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்களிடையே அவர் பேசியதாவது:
 மாணவர்கள் தங்களுக்கு கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும். மகாத்மா காந்தியின் அறிவுரைகளும் எளிமையும் இன்றைய காலக்கட்டத்திற்கும் சாலப் பொருந்தும். அன்றாடம் ஏற்படும் பிரச்னைகளிலும் போராட்டங்களிலும் பல கொடுமைகளைப் பார்க்கும்போது மகாத்மா காந்தி தனி ஒரு மனிதராக அஹிம்சை வழியில் சத்தியாகிரகத்தை மூலதனமாக வைத்து வெள்ளையர்களிடமிருந்து நம்நாட்டிற்கு சுதந்திரத்தை பெற்றுத் தந்தார். நாட்டு மக்களுக்கு விடுதலை கிடைக்கச் செய்து மட்டுமல்லாமல் பல அரிய பணிகளையும் அவர் செய்துள்ளார்.
 மாணவ சமுதாயத்தினர் அனைவரும் மகாத்மா காந்தியின் கொள்கைகளையும் அவரது எளிமையை கற்றுக் கொண்டு பண்போடு வாழ்ந்து பல வெற்றிகளையும் சாதனைகளையும் படைத்து சிறந்து விளங்க வேண்டும் என்றார் அவர்.
 விழாவில் சிறப்பு விருந்தினராக திரைப்படத் தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு மகாத்மா காந்தியின் எளிமை குறித்து எடுத்துக் கூறி சிறப்புரையாற்றினார். விழாவுக்கான ஏற்பாடுகளை சேவாஸ்ரம நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர். விழாவின் நிறைவாக சிவானந்த குருகுலத்தின் செயலர் லட்சுமி ராஜாராம் நன்றி கூறினார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/22/சிவானந்த-சரஸ்வதி-ஆஸ்ரமத்தில்-மகாத்மா-காந்தி-பிறந்த-நாள்-விழா-3024223.html
3024222 சென்னை காஞ்சிபுரம் காத்திருந்து... காத்திருந்து: வட்டாட்சியர் அலுவலகம்..!  நமது நிருபர்,மதுராந்தகம், DIN Monday, October 22, 2018 12:48 AM +0530 மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து ஆண்டுக்கணக்கில் காத்திருந்தாலும், பட்டா பெயர் மாற்றச் சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை என பொதுமக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
 மதுராந்தகம் வட்டத்துக்கு உட்பட்ட அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி, கருங்குழி பேரூராட்சி, மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நில அளவை செய்தல், பட்டா பெயர் மாற்றம் செயதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக, மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தை நாடுகின்றனர். மதுராந்தகம் வருவாய்த் துறையில் உள்ள நில அளவு பிரிவில் 4 ஊழியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
 தங்கள் நிலத்தை உட்பிரிவுக்காக பொதுமக்கள் நில அளவை, பட்டா பெயர் மாற்றம் கோரி ஆன்லைன் மூலமும், மக்கள் குறைதீர் முகாமிலும், ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஜமாபந்தி நிகழ்ச்சியிலும் உரிய மனுவை அளிக்க வேண்டும்.
 அந்த மனுவின் மீது 30 நாள்களுக்குள் விண்ணப்பித்த நபர்களுக்கு பட்டா சான்றிதழ் அளித்தல், நில அளவை செய்தல் போன்றவை நடைபெறும். ஆனால் தற்சமயம் மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் நில அளவைத் துறையில் (சர்வே) பணியாற்றும் ஊழியர்கள் சிலர் நிலத் தரகுத் தொழிலை செய்பவர்களாக உள்ளனர்.
 அவர்கள், செல்வாக்கு மிக்கவர்களும், அரசியல் கட்சிப் பிரமுகர்களும் கோருவதற்கு ஏற்ப, விண்ணப்பித்த 5 நாள்களுக்குள் பட்டா சான்று வழங்குவதாகவும், ஏழை மக்கள் அளிக்கும் மனுக்களை கிடப்பில் போட்டு கடைசியில் அவை காணாமல் போவதாகவும் இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
 இது தொடர்பாக மதுராந்தகத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறியது:
 எனது 7 சென்ட் நிலத்துக்காக பட்டா பெயர் மாற்றம் கோரி ஆன்லைன் மூலமாகவும், கடந்த 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்விலும் விண்ணப்பித்திருந்தேன்.
 அந்த மனுவில் கோரியபடி இதுவரை வட்டாட்சியர் அலுவலகத்தின் மூலம் பட்டா சான்று கொடுக்காமல் அலைக்கழித்து வருகின்றனர். இதுபற்றி நேரில் மதுராந்தகம் வட்டாட்சியரிடம் மாற்றல் சான்று முறையிட்டபோது அவர் தனது அலுவலக ஊழியர்களைக் காப்பாற்றும் நோக்கில் செயல்படுகிறார். "இது பற்றி கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்டுச் சொல்கிறேன்' என அவர் தெரிவித்தார்.
 30 நாள்களில் முடிய வேண்டிய பணியை ஆண்டுக்கணக்கில் இங்குள்ள நில அளவை ஊழியர்கள் இழுத்தடித்து வருகின்றனர். இது தொடர்பாக அலுவலகத்தில் கேட்டால் ஆள் பற்றாக்குறையைக் காரணம் காட்டுகின்றனர்.
 பட்டா பெயர் மாற்றம், நில அளவீடு செய்யக் கோருதல் ஆகிய பணிகளுக்காக வருவாய்த் துறையினர் மெத்தனமாகச் செயல்படுவதாக கூறி சார் ஆட்சியருக்கு புகார் அளித்தோம்.
 எனினும், அதன் மீது இதுவரை எந்த மேல் நடவடிக்கையும் இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு விரைவாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த சமூக ஆர்வலர் தெரிவித்தார்.
 
 தற்சமயம் மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் நில அளவைத் துறையில் (சர்வே) பணியாற்றும் ஊழியர்கள் சிலர் நிலத் தரகுத் தொழிலை செய்பவர்களாக உள்ளனர். அவர்கள், செல்வாக்கு மிக்கவர்களும், அரசியல் கட்சிப் பிரமுகர்களும் கோருவதற்கு ஏற்ப, விண்ணப்பித்த 5 நாள்களுக்குள் பட்டா சான்று வழங்குவதாகவும், ஏழைமக்கள் அளிக்கும் மனுக்களை கிடப்பில் போட்டு கடைசியில் அவை காணாமல் போவதாகவும் இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
 
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/22/w600X390/tamilnadu-jamabandi.jpg http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/22/காத்திருந்து-காத்திருந்து-வட்டாட்சியர்-அலுவலகம்-3024222.html
3024220 சென்னை காஞ்சிபுரம் அழிந்து வரும் சிட்டுக் குருவிகளுக்கு அரணாக விளங்கும் முதியவர்!  நமது நிருபர், காஞ்சிபுரம் DIN Monday, October 22, 2018 12:39 AM +0530 குக்கிராமத்தில் வசிக்கும் முதியவர் ஒருவரின் முயற்சியால் அழிந்து வரும் சிட்டுக்குருவி இனங்களுக்கு புகலிடம் கிடைத்துள்ளது.
 "குன்றத்து இருந்த குரீஇ இனம் போல்', "தூக்கலாம் குரீஇத் தூங்கு கூடு' எனும் புறநானூற்றுக் கூற்றுப்படி, சங்க காலம் தொட்டே சிட்டுக்குருவிகள் குறித்து அறிந்துள்ளோம். ஆனால், வளர்ந்து வரும் நவீன உலகத்தால் சுற்றுச்சூழலில் மாற்றங்கள் ஏற்பட்டு, மரங்களும் பறவைகளும் உலகெங்கும் அழிந்தும், குறைந்தும் வருகிறது. இதனால், சுற்றுச்சூழல் சீர்கெட்டு உலகம் வெப்பமயமாகி இயற்கைப் பேரழிவுகள் நேர்கின்றன.
 அந்த ஒரு நிலையில்தான், நகர்ப்பகுதிகளில் சிட்டுக்குருவி இனங்கள் முற்றிலுமாக அழிந்துவிட்டதாக கூறப்படுகிறது. செல்லிடப்பேசிகள் மற்றும் அவற்றுக்கான கோபுரங்களிலிருந்து வெளியாகும் நுண்ணிய மின்காந்த அலைகளின் தாக்கத்தால் இக்குருவி இனத்தின் இனப்பெருக்க மண்டலம் பாதிக்கப்படுவதால், இவ்வினங்கள் வேகமாக அழிந்து வரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
 இப்பறவையைப் பாதுகாக்க பல்வேறு பறவை நல ஆர்வலர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பல்வேறு நாட்டினரும் முயற்சி எடுத்து வருகின்றனர். இதன் காரணமாகவே, மார்ச் 20ஆம் தேதியை உலக ஊர்க்குருவிகள் தினமாகக் கொண்டாடி அவற்றைக் காக்கப் போராடி வருகின்றனர். இதனை உணர்த்தும் வகையில் பல நாடுகள் சிறப்பு அஞ்சல்தலைகளை வெளியிட்டு குருவி இனங்களைப் பெருமைப்படுத்தியுள்ளன.
 இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் வட்டத்துக்குட்பட்ட மல்லியங்கரணை ஊராட்சியில் உள்ள நாரைமேடு எனும் குக்கிராமத்தில் வசித்து வருபவர் லட்சுமணன் (70). அவர் தனது சொந்த நிலத்தில் சிட்டுக்குருவி உள்ளிட்ட பல்வேறு பறவை இனங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் கடந்த பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார்.
 அதன்படி, தனது நிலத்தில் ஆங்காங்கே குளங்களை வெட்டியும், பல்வேறு வகையான மரங்களை நட்டும் சிட்டுக்குருவி இனங்களுக்கு சரணாலய இடமாக மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அவரது இந்த முயற்சியின் காரணாக, அவரது நிலப்பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட குருவி இனங்கள் கூடு அமைத்தும், மரங்கள், புதர்களில் தஞ்சமடைந்தும் வசித்து வருகின்றன. அதன்படி, சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குருவிகள் அவரது நிலப்பகுதியில் வசிக்கின்றன. முழுக்க முழுக்க பறவையினங்களுக்காகவே சுமார்
 25 ஏக்கர் நிலப்பரப்பை ஒதுக்கி குருவி இனங்களைப் பாதுகாத்து வருகிறார் பறவை லட்சுமணன்.
 இதுகுறித்து அவர் கூறியதாவது:
 எனது சொந்த ஊர் உத்தரமேரூர். இந்தப் பேரூராட்சியில் குடிநீர்க் குழாய் பழுதுநீக்கும் பணியில் சேர்ந்து, படிப்படியாக பேரூராட்சி செயல் அலுவலர் வரை பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்றேன். பணியில் இருக்கும்போது, பறவை இனங்கள் மீது தனி அன்பு உண்டு. அதிலும், வேகமாக அழிந்து வரும் சிட்டுக்குருவி இனங்களைப் பாதுகாக்க வேண்டும் என நினைத்து, அதற்காக சுமார் 25 ஏக்கர் நிலத்தை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மல்லியங்கரணை பகுதியில் வாங்கினேன்.
 அதோடு, லட்சுமண குருசாமி அறக்கட்டளை எனும் பெயரில் பறவைகள் தாகம் தணிக்கும் தடாகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலப்பரப்பில், குளம், பயிர் செய்யும் பகுதி, மரங்கள் நடும் பகுதி என பிரிக்க திட்டமிடப்பட்டு, தற்போது குளம் வெட்டி அதில் நீரை தேக்கிவைக்கப்பட்டுள்ளது.
 24 வகை இனங்கள்
 இந்த தடாகத்தில், மீன்கொத்தி, மரங்கொத்தி, கருப்புவால், ஆந்தை, மஞ்சள்குருவி, சிட்டுக்குருவி, தேன்சிட்டு, கிளி, காடை, தவிட்டுக்குருவி, மைனா, தூக்கணாங்குருவி என 24 வகையான பறவை இனங்கள் வசித்து வருகின்றன. தொடக்கத்தில், சில நூறு குருவிகள் இருந்தன. தற்போது, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவை இனங்கள் வசித்து வருகின்றன.
 பறவைகளின் பசிக்கு..!
 குருவிகள் மற்றும் பறவையினங்களின் பசிக்காக, வேம்பு, ஆலம், அரசு, சீத்தா, கொய்யா, நாவல் உள்ளிட்ட பழமரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம், அந்தந்த பருவத்தில் கிடைக்கும் பழங்களுக்கேற்ப பறவைகள் பசியாறுகின்றன. அதேபோல், குளம் வெட்டப்பட்டு, அதில் மீன்கள் வளர்க்கப்படுகின்றன. மேலும், குளக்கரையையொட்டிய பகுதியில் உள்ள சிறு பூச்சியினங்களை உணவாகக் கொண்டு பறவைகள் வசிக்கின்றன.
 மேலும், வன்னி, கருங்காளி, வெள்ளெருக்கு, முருங்கை, இலுப்பை உள்ளிட்ட பல்வேறு மரங்களும் வளர்க்கப்படுகின்றன. பறவைகளுக்காக நெல் உள்ளிட்டதானியப் பயிர்களும் செய்யப்படுகின்றன. இம்மரங்களில் பறவைகள் கூடுகளை அமைத்து முட்டையிட்டு, குஞ்சு பொறித்து பறவையினங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்காக, பிரத்யேக பானை அமைத்து கூடுகளும் அமைக்கப்பட்டுள்ளன.
 கருடனுக்கு கோயில்
 பறவையினங்களுக்குக் தலைவனாக கருடன் விளங்குகிறது. இந்தப் பறவை இனம் முற்றிலும் அழிந்து விட்டது. இதன் நினைவாக நாட்டிலேயே முதன்முதலாக கருடபட்சி கோயில் நாரை மேடு பகுதியில் கட்டப்பட்டுள்ளது. அதுபோல், சிட்டுக்குருவி இனங்களைப் பாதுகாக்க தடாகம் அமைக்கப்பட்டுள்ளது.
 மரக்கன்றுகள் அதிகம் தேவை
 இந்தப் பகுதியில் நடப்படும் மரங்களை ஒருபோதும் வெட்டக் கூடாது எனும் நோக்கில் பல்வேறு வகையான மரக்கன்றுகள் தற்போது வளர்ந்துள்ளன. மேலும், இப்பகுதியைச் சுற்றி சுமார் 2,000 பனைக்கன்றுகள் வேலி போல் அமைத்து நடப்பட்டுள்ளன. மேலும், குருவினங்களுக்கு சரணாலயமாக இருக்க ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நடவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், போதிய நிதியின்மை காரணமாக மரக்கன்றுகளை வாங்கமுடியாத சூழல் உள்ளது. இருப்பினும், மாவட்ட நிர்வாகம் வனத்துறை சார்பில் அதிகளவில் மரக்கன்றுகளை வழங்கினால், அவற்றை நட்டுப் பராமரிப்போம். அதன்மூலம், சிட்டுக்குருவிகளுக்கென்று ஓர் சரணாலயத்தை உருவாக்கிக் காட்டுவோம் என்றார் அவர்.
 இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், "சிட்டுக்குருவி இனங்களை பாதுகாக்க முதியவர் லட்சுமணன் எடுத்துள்ள இம்முயற்சி வரவேற்கத்தக்கதும், மகிழ்ச்சி அளிக்கக் கூடியதும் ஆகும். எனவே, மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் அமைப்பினர், சிட்டுக்குருவிகளுக்கென ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தத் தடாகத்துக்கு போதிய உதவிகள் செய்ய முன்வர வேண்டும்' என்றனர்.
 
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/22/w600X390/kanchi2.jpg http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/22/அழிந்து-வரும்-சிட்டுக்-குருவிகளுக்கு-அரணாக-விளங்கும்-முதியவர்-3024220.html
3023700 சென்னை காஞ்சிபுரம் மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்  செங்கல்பட்டு DIN Sunday, October 21, 2018 12:35 AM +0530 மாமல்லபுரத்தில் குவிந்த உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளால் நகரில் உள்ள சுற்றுலாப் பகுதிகள் களைகட்டின.
 ஆயுத பூஜை, விஜயதசமி என விடுமுறை நாள்கள் தொடர்ச்சியாக வந்ததால் மாமல்லபுரத்திற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பேருந்துகள், கார்கள், வேன்கள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றில் சனிக்கிழமை காலை "முதல் குவிந்தனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினர். இதனால் மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலாப் பகுதிகள் களைகட்டின. அப்பகுதிகளைக் காண்பதற்காக வந்த சுற்றுலாப் பயணிகள் நுழைவுச் சீட்டு வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பின்னர் கடற்கரைக் கோயில், வராகி மண்டபம், அர்ஜுனன் தபசு, வெண்ணை உருண்டைப்பாறை, ஐந்து ரதம், குடைவரை சிற்பங்கள், குடைவரை மண்டபங்கள் என எங்கு பார்த்தாலும் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். சுற்றுலாப் பகுதிகளைக் கண்டுகளித்த பயணிகள் மாலை நேரத்தில் கடற்கரைக்குச் சென்று காற்று வாங்கியதோடு, கடலில் கால்களை நனைத்து விளையாடியும், கடலில் குளித்தும் மகிழ்ந்தனர்.
 சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியதால் மாமல்லபுரத்தில் உள்ள உணவகங்கள், ரெஸ்டாரண்டுகள், நட்சத்திர ஓட்டல்களில் வியாபாரம் அமோகமாக இருந்தது. மேலும் குளிர்பானக் கடைகள், தேநீர்க் கடைகளிலும் வர்த்தகம் சிறப்பாக நடைபெற்றது. மாமல்லபுரம் சுற்றுலாப் பகுதிகளில் மணிகள், தொப்பிகள், தின்பண்டங்கள், தண்ணீர் பாட்டில்கள், இளநீர் ஆகியவற்றின் விற்பனையும் அமோகமாக இருந்தது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/21/மாமல்லபுரத்தில்-குவிந்த-சுற்றுலாப்-பயணிகள்-3023700.html
3023699 சென்னை காஞ்சிபுரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வுச் சுற்றுலா  செங்கல்பட்டு, DIN Sunday, October 21, 2018 12:34 AM +0530 தமிழக சுற்றுலாத்துறை சார்பில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலாப் பயணத்தை காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
 தமிழக சுற்றுலாத் துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 15 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளை முக்கியமான இடங்களுக்கு இலவச விழிப்புணர்வு சுற்றுலா அழைத்துச் செல்வதன் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் எஸ்.சக்திவேல் தலைமை வகித்துப் பேசினார்.
 இந்த சுற்றுலாப் பயணத்தை மாமல்லபுரம் அர்ஜுனன் தபசு பகுதிக்கு அருகில் காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ லூர்துசாமி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். சுற்றுலாத் துறை சார்பில் விழிப்புணர்வு சுற்றுலா பயணத்தில் பங்கு கொண்ட மாணவ, மாணவிகளுக்கு இலவசப் பை மற்றும் தொப்பிகள் வழங்கப்பட்டன. சுற்றுலாப் பணியாளர்கள், முன்னாள் சுற்றுலா அலுவலர் ராமதாஸ் உள்ளிட்டோர் மாணவர்களை அழைத்துச் சென்றனர்.
 மாமல்லபுரம் சிற்பங்களை சுற்றிப் பார்த்த பின்னர், மாணவர்கள் முட்டுக்காடு படகுத் துறை , சதுரங்கப்பட்டினம் கோட்டை, வண்டலூர் உயிரியல் பூங்கா ஆகிய இடங்களை சுற்றிப்பார்க்க சுற்றுலாத் துறை பேருந்துகள் மூலம் இலவசமாக அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த விழிப்புணர்வு சுற்றுலா பயணத்தில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு, சுற்றுலாத் தலங்களைக் கண்டுகளித்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/21/அரசுப்-பள்ளி-மாணவர்களுக்கான-விழிப்புணர்வுச்-சுற்றுலா-3023699.html
3023698 சென்னை காஞ்சிபுரம் விபத்தில் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளரின் உடல் உறுப்புகள் தானம்  செங்கல்பட்டு DIN Sunday, October 21, 2018 12:34 AM +0530 மாமல்லபுரம் அருகில் சாலை விபத்தில் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளரின் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
 காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டை அடுத்த கல்பாக்கம் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்துவந்தவர் துரை (50). அவர் கடந்த 15ஆம் தேதி பணிநிமித்தம் மாமல்லபுரம் சென்றார்.
 அதன் பின்தனது மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து செங்கல்பட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது குழிப்பாந்தண்டலம் அருகில் வந்தபோது அவரது மோட்டார்சைக்கிள் நிலைதடுமாறி சாலையில் விழுந்தது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
 அங்கிருந்து மேல்சிகிச்சைகாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டுவந்தார். துரையின் தலையில் அடிபட்டதால் மூளைச்சாவு ஏற்பட்டு கடந்த 18ஆம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில், அவரது உடல் உறுப்புகளை தானமாக அளிக்க அவரது குடும்பத்தினர் முன்வந்தனர். அதன்படி, அவரது 5 உறுப்புகள் தானம் செய்யப்பட்டு, மற்றவர்களுக்கு அந்த உறுப்புகள் பொருத்தப்பட்டன.
 இதனிடையே, துரையின் இறப்புக்குக் காரணமான சாலை விபத்து தொடர்பாக மாமல்லபுரம் காவல் ஆய்வாளர் ரவிக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/21/விபத்தில்-உயிரிழந்த-காவல்-உதவி-ஆய்வாளரின்-உடல்-உறுப்புகள்-தானம்-3023698.html
3023696 சென்னை காஞ்சிபுரம் கோயில்களில் நவராத்திரி கொலு நிறைவு  காஞ்சிபுரம் DIN Sunday, October 21, 2018 12:31 AM +0530 காஞ்சிபுரம் மற்றுரம் அதனைச் சுற்றியுள்ள அம்மன் கோயில்களில் நவராத்திரி கொலு விழா நிறைவு பெற்றது.
 காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோயில், படவேட்டம்மன், ரேணுகாம்பாள், தும்பவனத்தம்மன் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோயில்களில் நவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, காமாட்சியம்மன் கோயில் நவராத்திரி கொலு மண்டபத்தில் ஆஸ்தான வித்வான்கள், பிரபல கர்நாடக இசைக் கலைஞர்கள் மூலம் கச்சேரிகள் நடத்தப்பட்டன.
 இதைத் தொடர்ந்து, விஜயதசமி நாளான வெள்ளிக்கிழமை காமாட்சியம்மன் கோயில் வளாகத்தில் தேர் உற்சவம் நடைபெற்றது. அப்போது, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை (21ஆம் தேதி) ஊஞ்சல் சேவையுடன் நவராத்திரி விழா நிறைவு பெற உள்ளது.
 இதனிடையே, காஞ்சிபுரம் ஐயப்பா நகர் பகுதிகளில் அமைந்துள்ள படவேட்டம்மன் கோயிலில் நவராத்திரி அலங்காரப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் அம்மன் நாள்தோறும் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி காட்சியளித்தார். காஞ்சிபுரத்தை அடுத்த திருப்புலிவனம் ஸ்ரீதிரிசூலகாளியம்மன் கோயிலில் நவராத்திரி கொலு விழா நிறைவடைந்தது. அப்போது, கொலுவில் துர்கை, லட்சுமி, சரஸ்வதி உள்ளிட்ட அம்மன்களுடன் உற்சவ ஸ்ரீதிரிசூலகாளியம்மன் பொது மக்களுக்கு காட்சியளித்தார்.
 உத்தரமேரூர் கருட பட்சி கோயிலில் நவராத்திரி கொலு விழா நிறைவடைந்தது. இதையொட்டி, சிறப்பு அபிஷேக, தீபாராதனை நடத்தப்பட்டது. பல்வேறு இடங்களில் உள்ள அம்மன் கோயில்களின் நவராத்திரி நிறைவு விழாக்களில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.
 திருவள்ளூரில்....
 திருவள்ளூர், அக். 20: திருவள்ளூர் கபாலீஸ்வரர் சமேத காளிகாம்பாள் கோயிலில் விஜயதசமியையொட்டி, வெள்ளிக்கிழமை அம்மன் வீதி உலா நடைபெற்றது.
 இக்கோயிலில் நவராத்திரி விழா கடந்த 10-ஆம் தேதி தொடங்கி, 20-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், ஒவ்வொரு நாளும் கபாலீஸ்வரர் சமேத காளிகாம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வந்தது.
 இந்நிலையில், விஜயதசமியையொட்டி, வெள்ளிக்கிழமை காலை சிறப்பு அபிஷேகமும், மகா ஆரத்தியும் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து இரவில் திருவள்ளூர் காந்தி சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக அம்மன் வீதி உலா நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர்.
 இதைத் தொடர்ந்து நவராத்திரி விழாவின் நிறைவு நாளான சனிக்கிழமை மாலையில் விடையாற்றி உற்சவம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் வே.மாரியப்பன் மற்றும் ஐந்தொழில் புரியும் இந்து விஸ்வகர்மா சமுதாயத்தினர் ஆகியோர் செய்திருந்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/21/கோயில்களில்-நவராத்திரி-கொலு-நிறைவு-3023696.html
3023695 சென்னை காஞ்சிபுரம் தசரா உற்சவம் கோலாகலம்: அம்மன் சிலைகளுடன் பவனி வந்த ரதங்கள்  செங்கல்பட்டு, DIN Sunday, October 21, 2018 12:31 AM +0530 செங்கல்பட்டு நகரின் பாரம்பரிய திருவிழாக்களில் ஒன்றான தசரா உற்சவத்தையொட்டி வெள்ளிக்கிழமை நள்ளிரவு தொடங்கி சனிக்கிழமை அதிகாலை வரை மின்விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதங்களில் பல்வேறு அம்மன் சிலைகள் பவனி வந்த தசரா ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த ஊர்வலத்தைக் கண்டுகளிப்பதற்காக சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு ஒரு லட்சத்திற்கும் மேல் மக்கள் கூட்டம் அலைமோதியது.
 காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு நகரில் 130 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியமாக தசரா உற்சவம் நடைபெற்ற வருகிறது. நகரின் பல்வேறு பகுதிகளில் நவராத்திரி உற்சவ நாள்களில் நாள்தோறும் இரவு அலங்காரங்களில் அம்மன் கொலு நிறுத்தப்பட்டு பல்வேறு சிறப்பு அலங்காரங்களுடன் பூஜைகள் நடைபெற்று வந்தன. நகரின் ஹைரோடு பகுதியில் 122ஆவது ஆண்டு சின்னக்கடை தசரா, 110 ஆண்டுகளாக பஜார் தெரு பூக்கடை தசரா, ஹைரோடில் 123 ஆண்டுகளாக ஜவுளிக்கடை தசரா, மேட்டுத்தெருவில் 85ஆவது ஆண்டாக மளிகைக்கடை தசரா, பலிஜ குலச் செட்டியார் சமூகத்தினர் தசரா ஆகியவை நடைபெற்றன.
 அதேபோல், மார்க்கெட் சின்னம்மன் கோயில், பெரியநத்தம் ஓசூரம்மன் கோயில், நத்தம் மதுரைவீரன் கோயில், மேட்டுத் தெரு திரெüபதி அம்மன் கோயில், பழைய பேருந்து நிலையம் கோட்டையில் உள்ள கடும்பாடியம்மன் கோயில், சின்னநத்தம் சுந்தரவிநாயகர் கோயில், புது ஏரி செல்வவிநாயகர் முத்துமாரியம்மன் கோயில், ஹைரோடு முத்துமாரியம்மன் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் தசரா கமிட்டியினர் நவராத்திரி தினங்களில் கொலு நிறுத்தப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் வழிபாடு நடைபெற்றது. இவை அனைத்து தசரா குழுவினரின் ஏற்பாட்டில் தனித்தனியாக அலங்கார மின்விளக்குகளுடன் மகிஷாசுரமர்த்தினி, சிவசக்தி போன்ற வடிவங்களில் அம்மன் சிலைகள் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டன. சனிக்கிழமை விடியற்காலையில் பழைய பேருந்து நிலையம் அருகில் இந்த அம்மன் சிலைகள் கொண்டுவரப்பட்டு நிறுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து அச்சிலைகள் ஒன்றன்பின் ஒன்றாக தசரா திருவிழா ஊர்வலமாகப் புறப்பட்டன. ஹைரோடு வழியாக அனுமந்தபுத்தேரி அருகில் வன்னிமரம் குத்து சாமி புறப்பட்டு மேட்டுத் தெரு, ஜிஎஸ்டிசாலை வழியாக அந்தந்த கோயில்களில் கொண்டு செல்லப்பட்டு நிறுத்தப்பட்டன.
 இது மட்டுமின்றி செங்கல்பட்டை அடுத்த அம்மணம்பாக்கம் சுயம்பு சமயபுரம் மாரியம்மன் கோயில், செங்கல்பட்டு ரயில்வே காலனி முத்துமாரியம்மன் கோயில், வ.உ.சி தெரு ஏகாம்பரேஸ்வரர் கோயில், பெரியநத்தம் கைலாசநாதர் கோயில், அண்ணாநகர் எல்லையம்மன் கோயில், ரத்தினவிநாயகர் கோயில், அனுமந்தபுத்தேரி செல்வவிநாயகர் கோயில், வேதாசலநகர் கோதண்டராமர் கோயில், என்ஜிஜிஓ நகர் சித்திவிநாயகர் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் அம்மன் கொலு நிறுத்தப்பட்டு நவராத்திரி உற்சவ வழிபாடுகள் நடைபெற்றன. கோயில்களில் கொலு நிறுத்தப்பட்ட அம்மன் சிலைகள் தசரா ஊர்வலத்தில் பங்கேற்பதில்லை. எனவே தசரா குழுவினரால் கொலு நிறுத்தப்பட்ட மகிஷாசுரமர்த்தினி, மதுரை மீனாட்சியம்மன், காமாட்சியம்மன் தேவி கருமாரியம்மன், ரேணுகாதேவி, பிரத்யங்கிரா தேவி, ராஜராஜேஸ்வரி, பார்வதி பரமசிவன், சிவலிங்கத்திற்கு வழிபாடு செய்யும் சக்தி ஆகிய பல்வேறு கோலங்களில் அம்மன் சிலைகள் அலங்கரிக்கப்பட்டன.
 பக்திப் பாடல் கச்சேரி, பரதநாட்டிய நிகழ்ச்சி, ஆன்மிகச் சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சுவாமி ரதங்களுடன் தசரா ஊர்வலம் செங்கல்பட்டு ஹைரோடு, அண்ணாசாலை மேட்டுத் தெரு இணையும் இடத்தில் வன்னிமரம் குத்துதல், அம்பெய்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திரளான மக்கள் இதில் பங்கேற்று வழிபட்டனர்.
 செங்கல்பட்டு பஜார் தெரு, சின்னக்கடை, ஹைரோடு, மேட்டுத்தெரு, ஜிஎஸ்டி சாலை வழியாக சுமார் 3 கிமீ தூரத்திற்கு தசரா ஊர்வலம் நடைபெற்றது.
 இந்த ஊர்வலத்தை முன்னிட்டு அண்ணா சாலையின் இருபுறமும் சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு கடைகள், பொழுதுபோக்கு அம்சங்களாக அசுரத் தாலாட்டு, ராட்சத குடை ராட்டினங்கள் மற்றும் கேளிக்கை அரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றை வேடிக்கை பார்க்க வந்த உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலையில் இருந்தே வரத்தொடங்கியது. விடிய விடிய தசரா திருவிழாவை மக்கள் கண்டுகளித்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/21/தசரா-உற்சவம்-கோலாகலம்-அம்மன்-சிலைகளுடன்-பவனி-வந்த-ரதங்கள்-3023695.html
3023684 சென்னை காஞ்சிபுரம் மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் DIN DIN Saturday, October 20, 2018 11:51 PM +0530
மாமல்லபுரத்தில் குவிந்த உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளால் நகரில் உள்ள சுற்றுலாப் பகுதிகள் களைகட்டின.
ஆயுத பூஜை, விஜயதசமி என விடுமுறை நாள்கள் தொடர்ச்சியாக வந்ததால் மாமல்லபுரத்திற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பேருந்துகள், கார்கள், வேன்கள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றில் சனிக்கிழமை காலை முதல் குவிந்தனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினர். இதனால் மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலாப் பகுதிகள் களைகட்டின. அப்பகுதிகளைக் காண்பதற்காக வந்த சுற்றுலாப் பயணிகள் நுழைவுச் சீட்டு வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பின்னர் கடற்கரைக் கோயில், வராகி மண்டபம், அர்ஜுனன் தபசு, வெண்ணை உருண்டைப்பாறை, ஐந்து ரதம், குடைவரை சிற்பங்கள், குடைவரை மண்டபங்கள் என எங்கு பார்த்தாலும் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். சுற்றுலாப் பகுதிகளைக் கண்டுகளித்த பயணிகள் மாலை நேரத்தில் கடற்கரைக்குச் சென்று காற்று வாங்கியதோடு, கடலில் கால்களை நனைத்து விளையாடியும், கடலில் குளித்தும் மகிழ்ந்தனர்.
சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியதால் மாமல்லபுரத்தில் உள்ள உணவகங்கள், ரெஸ்டாரண்டுகள், நட்சத்திர ஓட்டல்களில் வியாபாரம் அமோகமாக இருந்தது. மேலும் குளிர்பானக் கடைகள், தேநீர்க் கடைகளிலும் வர்த்தகம் சிறப்பாக நடைபெற்றது. மாமல்லபுரம் சுற்றுலாப் பகுதிகளில் மணிகள், தொப்பிகள், தின்பண்டங்கள், தண்ணீர் பாட்டில்கள், இளநீர் ஆகியவற்றின் விற்பனையும் அமோகமாக இருந்தது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/20/மாமல்லபுரத்தில்-குவிந்த-சுற்றுலாப்-பயணிகள்-3023684.html
3023683 சென்னை காஞ்சிபுரம் தசரா உற்சவம் கோலாகலம்: அம்மன் சிலைகளுடன் பவனி வந்த ரதங்கள் DIN DIN Saturday, October 20, 2018 11:51 PM +0530
செங்கல்பட்டு நகரின் பாரம்பரிய திருவிழாக்களில் ஒன்றான தசரா உற்சவத்தையொட்டி வெள்ளிக்கிழமை நள்ளிரவு தொடங்கி சனிக்கிழமை அதிகாலை வரை மின்விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதங்களில் பல்வேறு அம்மன் சிலைகள் பவனி வந்த தசரா ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த ஊர்வலத்தைக் கண்டுகளிப்பதற்காக சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு ஒரு லட்சத்திற்கும் மேல் மக்கள் கூட்டம் அலைமோதியது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு நகரில் 130 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியமாக தசரா உற்சவம் நடைபெற்ற வருகிறது. நகரின் பல்வேறு பகுதிகளில் நவராத்திரி உற்சவ நாள்களில் நாள்தோறும் இரவு அலங்காரங்களில் அம்மன் கொலு நிறுத்தப்பட்டு பல்வேறு சிறப்பு அலங்காரங்களுடன் பூஜைகள் நடைபெற்று வந்தன. நகரின் ஹைரோடு பகுதியில் 122ஆவது ஆண்டு சின்னக்கடை தசரா, 110 ஆண்டுகளாக பஜார் தெரு பூக்கடை தசரா, ஹைரோடில் 123 ஆண்டுகளாக ஜவுளிக்கடை தசரா, மேட்டுத்தெருவில் 85ஆவது ஆண்டாக மளிகைக்கடை தசரா, பலிஜ குலச் செட்டியார் சமூகத்தினர் தசரா ஆகியவை நடைபெற்றன.
அதேபோல், மார்க்கெட் சின்னம்மன் கோயில், பெரியநத்தம் ஓசூரம்மன் கோயில், நத்தம் மதுரைவீரன் கோயில், மேட்டுத் தெரு திரெளபதி அம்மன் கோயில், பழைய பேருந்து நிலையம் கோட்டையில் உள்ள கடும்பாடியம்மன் கோயில், சின்னநத்தம் சுந்தரவிநாயகர் கோயில், புது ஏரி செல்வவிநாயகர் முத்துமாரியம்மன் கோயில், ஹைரோடு முத்துமாரியம்மன் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் தசரா கமிட்டியினர் நவராத்திரி தினங்களில் கொலு நிறுத்தப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் வழிபாடு நடைபெற்றது. இவை அனைத்து தசரா குழுவினரின் ஏற்பாட்டில் தனித்தனியாக அலங்கார மின்விளக்குகளுடன் மகிஷாசுரமர்த்தினி, சிவசக்தி போன்ற வடிவங்களில் அம்மன் சிலைகள் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டன. சனிக்கிழமை விடியற்காலையில் பழைய பேருந்து நிலையம் அருகில் இந்த அம்மன் சிலைகள் கொண்டுவரப்பட்டு நிறுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து அச்சிலைகள் ஒன்றன்பின் ஒன்றாக தசரா திருவிழா ஊர்வலமாகப் புறப்பட்டன. ஹைரோடு வழியாக அனுமந்தபுத்தேரி அருகில் வன்னிமரம் குத்து சாமி புறப்பட்டு மேட்டுத் தெரு, ஜிஎஸ்டிசாலை வழியாக அந்தந்த கோயில்களில் கொண்டு செல்லப்பட்டு நிறுத்தப்பட்டன.
இது மட்டுமின்றி செங்கல்பட்டை அடுத்த அம்மணம்பாக்கம் சுயம்பு சமயபுரம் மாரியம்மன் கோயில், செங்கல்பட்டு ரயில்வே காலனி முத்துமாரியம்மன் கோயில், வ.உ.சி தெரு ஏகாம்பரேஸ்வரர் கோயில், பெரியநத்தம் கைலாசநாதர் கோயில், அண்ணாநகர் எல்லையம்மன் கோயில், ரத்தினவிநாயகர் கோயில், அனுமந்தபுத்தேரி செல்வவிநாயகர் கோயில், வேதாசலநகர் கோதண்டராமர் கோயில், என்ஜிஜிஓ நகர் சித்திவிநாயகர் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் அம்மன் கொலு நிறுத்தப்பட்டு நவராத்திரி உற்சவ வழிபாடுகள் நடைபெற்றன.
கோயில்களில் கொலு நிறுத்தப்பட்ட அம்மன் சிலைகள் தசரா ஊர்வலத்தில் பங்கேற்பதில்லை. எனவே தசரா குழுவினரால் கொலு நிறுத்தப்பட்ட மகிஷாசுரமர்த்தினி, மதுரை மீனாட்சியம்மன், காமாட்சியம்மன் தேவி கருமாரியம்மன், ரேணுகாதேவி, பிரத்யங்கிரா தேவி, ராஜராஜேஸ்வரி, பார்வதி பரமசிவன், சிவலிங்கத்திற்கு வழிபாடு செய்யும் சக்தி ஆகிய பல்வேறு கோலங்களில் அம்மன் சிலைகள் அலங்கரிக்கப்பட்டன.
பக்திப் பாடல் கச்சேரி, பரதநாட்டிய நிகழ்ச்சி, ஆன்மிகச் சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சுவாமி ரதங்களுடன் தசரா ஊர்வலம் செங்கல்பட்டு ஹைரோடு, அண்ணாசாலை மேட்டுத் தெரு இணையும் இடத்தில் வன்னிமரம் குத்துதல், அம்பெய்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திரளான மக்கள் இதில் பங்கேற்று வழிபட்டனர்.
செங்கல்பட்டு பஜார் தெரு, சின்னக்கடை, ஹைரோடு, மேட்டுத்தெரு, ஜிஎஸ்டி சாலை வழியாக சுமார் 3 கிமீ தூரத்திற்கு தசரா ஊர்வலம் நடைபெற்றது.
இந்த ஊர்வலத்தை முன்னிட்டு அண்ணா சாலையின் இருபுறமும் சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு கடைகள், பொழுதுபோக்கு அம்சங்களாக அசுரத் தாலாட்டு, ராட்சத குடைராட்டினங்கள் மற்றும் கேளிக்கை அரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றை வேடிக்கை பார்க்க வந்த உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலையில் இருந்தே வரத்தொடங்கியது. விடிய விடிய தசரா திருவிழாவை மக்கள் கண்டுகளித்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/20/தசரா-உற்சவம்-கோலாகலம்-அம்மன்-சிலைகளுடன்-பவனி-வந்த-ரதங்கள்-3023683.html
3023664 சென்னை காஞ்சிபுரம் ஒரகடம் தனியார் தொழிற்சாலை ஊழியர் போராட்டம்: திருமாவளவன் ஆதரவு DIN DIN Saturday, October 20, 2018 11:47 PM +0530
ஒரகடத்தில் உள்ள இருசக்கர வாகனத் தொழிற்சாலையின் தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் பகுதியில் இயங்கி வரும் ராயல் என்ஃபீல்டு தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர், பயிற்சித் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இத்தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சனிக்கிழமை பங்கேற்றார். அப்போது அவர் தொழிலாளர்களின் போராட்டம் குறித்து பேசினார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் செங்கை தமிழரசன், மாவட்ட துணைச் செயலாளர் மேனகாதேவி கோமகன், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியச் செயலாளர் தியாகராஜன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கட்சியினர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அதன் பின் தொல்.திருமாவளவன் செய்தியாளரிடம் பேசினார். அப்போது அவர் கூறியது:
ஒரு பெண் சபரிமலைக்கு வர வேண்டும் என்று விரும்பினால் அவர் சுவாமி தரிசனம் செய்யும் வரை அவருக்கு அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும். நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றுவதுதான் கேரள அரசின் கடமையாகும்.
தமிழக முதல்வர் நிரபராதி என்றால் சிபிஐ விசாரணையில் அதை உறுதிப்படுத்த வேண்டும். அந்த விசாரணைக்கு முதல்வர் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றால் அவர் பதவியில் இருப்பது முறையாக இருக்காது.
ராயல் என்ஃபீல்டு தொழிலாளர்களும், தொழிற்சங்க நிர்வாகிகளும் ஒரகடம் பகுதியில் இருந்து காஞ்சிபுரம் வரை
வரும் 23ஆம் தேதி நீதிகேட்டு நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். அந்த நடைப்பயணத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நானும் பங்கேற்பேன். அந்தப் போராட்டம் வெற்றி பெற எங்கள் கட்சி உறுதுணையாக இருக்கும் என்றார் அவர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/20/ஒரகடம்-தனியார்-தொழிற்சாலை-ஊழியர்-போராட்டம்-திருமாவளவன்-ஆதரவு-3023664.html
3023663 சென்னை காஞ்சிபுரம் ரூ.1 லட்சம் வெளிமாநில மது பாட்டில்கள் பறிமுதல் DIN DIN Saturday, October 20, 2018 11:46 PM +0530
சூனாம்பேடு பகுதியில் காவல்துறையினரின் வாகனச் சோதனையில் காலி எரிவாயு சிலிண்டர்களை எடுத்து வந்த லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்புள்ள வெளிமாநில மது பாட்டில்களும், லாரியும் பறிமுதல் செய்யப்பட்டன.
மதுராந்தகம் உட்கோட்டத்தின் காவல்துறை டிஎஸ்பி மகேந்திரன் உத்தரவின்படி, கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் சூனாம்பேடு போலீஸார் கடந்த வெள்ளிக்கிழமை வாகனச் சோதனை நடத்தினர்.
அதன்படி, சூனாம்பேடு காவல் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் காவலர்கள் கிழக்கு கடற்கரைச் சாலை, சூனாம்பேட்டில் வெள்ளிக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு லாரி காலி எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிக் கொண்டு கும்மிடிப்பூண்டிக்கு சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை போலீஸார் சோதனை செய்தனர். அதில் காலி எரிவாயு சிலிண்டர்களுக்கு மத்தியில் வெளிமாநிலத்தில் இருந்து குவார்ட்டர் அளவுள்ள சுமார் 1200 பாட்டிகள் கடத்தி வரப்பட்டதை அவர்கள்
கண்டுபிடித்தனர்.
அவற்றைக் கடத்தி வந்த மரக்காணம் பகுதியைச் சேர்ந்த பழனியின் மகன் பிரகாஷ் (35), கொளத்தூர் ஏழுமலையின் மகன் முருகன் (43),செய்யூர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜின் மகன் முனியாண்டி (42) ஆகிய மூவரையும் போலீஸாôர் கைது செய்தனர். அந்த லாரியை முனியாண்டி ஓட்டிக் கொண்டு வந்தார்.
வாகனச் சோதனையில் கைப்பற்றப்பட்ட மது பாட்டில்களின் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம். அந்த பாட்டில்களையும், லாரியையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/20/ரூ1-லட்சம்-வெளிமாநில-மது-பாட்டில்கள்-பறிமுதல்-3023663.html
3023662 சென்னை காஞ்சிபுரம் கிறிஸ்தவ தேவாலயங்கள் பழுதுநீக்கும் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் DIN DIN Saturday, October 20, 2018 11:46 PM +0530
கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுநீக்கும், சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த விவரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சொந்தக் கட்டடங்களில் செயல்படும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுநீக்குதல், சீரமைத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்வதற்கான நிதியுதவித் திட்டத்தை கடந்த 2016ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி, கிறிஸ்தவ தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேல் சொந்தக் கட்டடத்தில் செயல்பட வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடம், தேவாலயம் ஆகியவை பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். தேவாலயத்தின் சீரமைப்புப் பணிக்காக வெளிநாட்டிலிருந்து எந்தவொரு நிதியுதவியையும் பெற்றிருக்கக் கூடாது. இதற்கான சான்றிதழை அளிக்க வேண்டும். சீரமைப்புப் பணிக்காக ஒருமுறை நிதியுதவி அளிக்கப்பட்ட தேவாலயத்துக்கு மறுமுறை நிதியுதவி 5 ஆண்டுகளுக்கு பின்பே வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்பப் படிவமும், சான்றிதழும்  இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. இதனைப் பதிவிறக்கம் செய்து, பிற்சேர்க்கை சான்றுகளை பூர்த்தி செய்து அனைத்து உரிய ஆவணங்கள், சான்றிதழ் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதையடுத்து, ஆட்சியர் தலைமையிலான குழுவினர் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து, கிறிஸ்தவ தேவாலயங்களை ஸ்தல ஆய்வு செய்வர். பின்பு, கட்டடத்தின் வரைபடம், திட்ட மதிப்பீடு ஆகிய தகுதிகளின் பேரில் நிதியுதவி குறித்து ஆட்சியர் பரிந்துரை செய்வார். நிதியுதவி இரு தவணைகளாக தேவாலய வங்கிக் கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும் என ஆட்சியர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/20/கிறிஸ்தவ-தேவாலயங்கள்-பழுதுநீக்கும்-பணிகளுக்கு-விண்ணப்பிக்கலாம்-3023662.html
3023661 சென்னை காஞ்சிபுரம் மதுராந்தகத்தில் திமுக பொதுக்கூட்டம் DIN DIN Saturday, October 20, 2018 11:46 PM +0530
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பாக, அதிமுக அரசின் ஊழல் ஆட்சியைக் கண்டிப்பதாகக் கூறி, மதுராந்தகம் தேரடி வீதியில் திமுகவின் பொதுக் கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்டச் செயலரும், உத்திரமேரூர் தொகுதி எம்எல்ஏ-வுமான க.சுந்தர் தலைமை வகித்தார். நகர செயலர் கே.குமார் வரவேற்றார். முன்னாள் நகரமன்றத் தலைவர் மலர்விழி குமார், திமுக நிர்வாகிகள் ஆர்.தசரதன், ஜே.விஸ்வநாதன், இரா.நாகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் மாநில மகளிர் அணி பிரசாரக் குழு செயலர் வசந்தி ஸ்டான்லி,
எம்எல்ஏ-க்கள் எஸ்.புகழேந்தி (மதுராந்தகம்), மருத்துவர் ஆர்.டி.அரசு (செய்யூர்), சி.வி.எம்.பி.எழிலரசன் (காஞ்சிபுரம்), ஒன்றியச் செயலர்கள் எண்டத்தூர் வி. ஸ்ரீதரன், சத்யசாயி, கே.கண்ணன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் எல்.எஸ்.ரவீந்திரநாத், மு.வேதாசலம், கட்சி நிர்வாகிகள் அச்சிறுப்பாக்கம் சையது முகமது, எம்.பாண்டுரங்கன், ஆர்.தயாளன், ஜி.சுகுமாரன், சிவலிங்கம், ஆர்.என்.மூர்த்தி, ஆண்டோ டிரில் ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர இளைஞர்அணி அமைப்பாளர் ஆர்.பரணி நன்றி கூறினார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/20/மதுராந்தகத்தில்-திமுக-பொதுக்கூட்டம்-3023661.html
3023660 சென்னை காஞ்சிபுரம் அதிமுக 47-ஆவது ஆண்டு தொடக்க விழா DIN DIN Saturday, October 20, 2018 11:45 PM +0530
அதிமுகவின் 47-ஆவது ஆண்டு தொடக்க விழா சுங்குவார்சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் அருகே புதன்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இதில் ஒன்றியச் செயலாளர் எறையூர் முனுசாமி, ஒன்றிய துணைச் செயலாளர் தயாளன், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் வளர்புரம் கூட்டறவு வங்கித் தலைவர்கள் வெங்காடு உலகநாதன், குமார், கொளத்தூர் முன்னாள் தலைவர் முனுசாமி, ஒன்றிய விவசாயப் பிரிவுச் செயலாளர் ராமசந்திரன், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/20/அதிமுக-47-ஆவது-ஆண்டு-தொடக்க-விழா-3023660.html
3023659 சென்னை காஞ்சிபுரம் அக்டோபர் 22 மின் தடை DIN DIN Saturday, October 20, 2018 11:45 PM +0530

வெம்பாக்கம்
நேரம்: காலை 9 முதல் மாலை 5 மணி வரை.
பகுதிகள்: வெம்பாக்கம், சித்தாத்தூர், வெள்ளகுளம், குத்தனூர், கரந்தை, காகனம், வெங்களத்தூர், மேலேரி, சுமங்கலி, சுற்றுப் பகுதிகள்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/20/அக்டோபர்-22-மின்-தடை-3023659.html
3023117 சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு மதுரைவீரன் கோயிலில் குழந்தைகளுக்கு வித்யாரம்ப பூஜை DIN DIN Saturday, October 20, 2018 10:51 AM +0530
விஜயதசமியை முன்னிட்டு, செங்கல்பட்டில் அமைந்துள்ள மதுரைவீரன் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெறும் தசரா திருவிழாவில் 9ஆம் நாளான வியாழக்கிழமை இரவு குழந்தைகளுக்கு கல்வி தொடங்குவதற்கான வித்யாரம்ப பூஜை நடைபெற்றது. 
இக்கோயில் தசரா திருவிழாவையொட்டி கடந்த 9 நாள்களாக முப்பெரும் தேவியர் வடிவமான அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. ஆயுத பூஜை விழாவையொட்டி அம்மனுக்கு வியாழக்கிழமையன்று சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடைபெற்றன. சரஸ்வதி அலங்காரம் செய்யப்பட்ட பின் மகாதீபாராதனை காட்டப்பட்டது.
இதையொட்டி குழந்தைகளுக்கு கல்வி தொடங்குவதற்கான வித்யாரம்ப பூஜை நடைபெற்றது. இதில், திரளான பெண்கள், பக்தர்கள் கலந்துகொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், விழாக் குழுவினர், மதுரைவீரன் கோயில் தெருவில் உள்ள பொதுமக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
இதேபோல், பெரியநத்தம் ஓசூரம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. 
சரஸ்வதி அலங்காரம் குத்துவிளக்கில் அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு, நாடு செழிப்பாக இருக்கவும், மக்கள் நலமுடன் வாழவும், தீய சக்திகள் அகன்று நல்லது நடக்கவும் கூட்டுப் பிரார்த்தனை, விளக்கு பூஜை ஆகியவை நடைபெற்றன. 
இதில் சுமங்கலிப் பெண்கள், கன்னிப்பெண்கள் ஆகியோர் கலந்துகொண்டு 108 திருவிளக்கு பூஜையை நடத்தினர். 
இந்த விழாவையொட்டி கல்விக்கருவிகள் வழங்கப்பட்டதோடு, அன்னதானமும் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர். 
மதுராந்தகத்தில்...
விஜய தசமியை முன்னிட்டு, மதுராந்தகம் விவேகானந்தா வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் 3 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளைச் சேர்க்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இப்பள்ளியில் வெள்ளிக்கிழமை காலை இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் முதன்மை முதல்வர் மங்கையர்க்கரசி முன்னிலை வகித்தார். பள்ளிக் குழுமத்தின் தாளாளர் டி.லோகராஜ் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் மதுராந்தகம் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 3 வயது முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு பள்ளி ஆசிரியைகள் தட்டில் வைக்கப்பட்ட அரிசியில் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சியை நடத்தினர். 
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் திலகவதி தலைமையில் பள்ளி நிர்வாகிகள் செய்திருந்தனர்.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/20/w600X390/vidhyarambam.JPG மதுராந்தகம் விவேகானந்தா வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் புதிதாக சேர்ந்த குழந்தைகளுக்கு அரிசியில் எழுத வைத்த பள்ளி ஆசிரியைகள். http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/20/செங்கல்பட்டு-மதுரைவீரன்-கோயிலில்-குழந்தைகளுக்கு-வித்யாரம்ப-பூஜை-3023117.html
3023123 சென்னை காஞ்சிபுரம் மதுராந்தகம் முன்னாள் எம்எல்ஏ உக்கம் சந்த் படத்தைத் திறந்து வைத்தார் ஸ்டாலின் DIN DIN Saturday, October 20, 2018 04:14 AM +0530
மதுராந்தகத்தில் மறைந்த முன்னாள் எம்எல்ஏ எஸ்.டி.உக்கம் சந்தின் படத்திறப்பு மற்றும் அஞ்சல்வில்லை வெளியிடுதல் ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க திமுக தலைவரும், சட்டப் பேரவை எதிர்கட்சித் தலைவருமான மு.க ஸ்டாலின் வியாழக்கிழமை நகருக்கு வந்தார். 
திமுக சிறுபான்மைப் பிரிவு மாநிலத் தலைவரும், மதுராந்தகம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ-வுமான மறைந்த எஸ்.டி.உக்கம் சந்தின் படத்திறப்பு, அவரது உருவம் பொறித்த அஞ்சல்வில்லைகள் வெளியிடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் மதுராந்தகம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டார். மேடையில் மலர்த் தோரணங்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட உக்கம் சந்தின் படத்தை அவர் திறந்து வைத்தார். தொடர்ந்து, அவரது உருவப் படம் பொறித்த அஞ்சல் வில்லையை ஸ்டாலின் வெளியிட்டார். அதனை உக்கம் சந்தின் மனைவி உக்குமா பாய், மூத்த மகன் யு.சந்திரபிரகாஷ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மதுராந்தகம் நகரமன்ற முன்னாள் துணைத் தலைவர் எஸ்.டி.பிரேம்சந்த் வரவேற்றார். திமுக அமைப்புச் செயலரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்டச் செயலர்களும், எம்எல்ஏ-க்களுமான அன்பரசன், சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
நிகழ்ச்சியில் திமுக முதன்மைச் செயலர் டி.ஆர்.பாலு, எம்எல்ஏகள் எஸ்.புகழேந்தி (மதுராந்தகம்), மருத்துவர் ஆர்.டி அரசு (செய்யூர்), எழிலரசன் (காஞ்சிபுரம்), எஸ்.ஆர்.ராஜா (தாம்பரம்), முன்னாள் எம்எல்ஏ-க்கள் வைத்தியலிங்கம், தமிழ்மணி, மதுராந்தகம் நகரமன்ற முன்னால் தலைவர் மலர்விழி குமார், நகர செயலர் கே.குமார், உக்கம் சந்தின் மூத்த சகோதரர் எஸ்.டி.விமல்சந்த், மதுராந்தகம் சௌபாக்மல் சௌகார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் எஸ்.டி.அசோக்குமார், சுபம் கல்வியியல் கல்வி நிறுவனங்களின் தாளாளர் எஸ்.டி.மனோகர்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக இணைச் செயலர் எஸ்.டி.சுஷில்குமார் நன்றி கூறினார்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/20/w600X390/stalin1.JPG மறைந்த முன்னாள் எம்எல்ஏ எஸ்.டி.உக்கம்சந்த் அஞ்சல் வில்லைகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட அதை உக்கம்சந்தின் மனைவி உக்குமாபாய் பெற்றுக்கொண்டார். http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/20/மதுராந்தகம்-முன்னாள்-எம்எல்ஏ-உக்கம்-சந்த்-படத்தைத்-திறந்து-வைத்தார்-ஸ்டாலின்-3023123.html
3023121 சென்னை காஞ்சிபுரம் சமூக நீதிக்கான பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் DIN DIN Saturday, October 20, 2018 04:13 AM +0530
சமூக நீதிக்கான பெரியார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து ஆட்சியர் பா.பொன்னையா விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பிக்கும் வகையில் சமூக நீதிக்கான பெரியார் விருது தமிழக அரசால் வழங்கப்படுகிறது. இவ்விருதைப் பெறுவோருக்கு ரூ. 1 லட்சம் பொற்கிழி, ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை ஆகியவை வழங்கப்படுகின்றன. 
அந்த ஆண்டிற்கான சமூக நீதிக்கான பெரியார் விருது வழங்கப்பட உள்ளது. எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு, மக்களின் வாழ்க்கைத் தரம் உயர செய்யப்பட்ட பணிகள், சாதனைகள் ஆகியவற்றுடன் விண்ணப்பதாரரின் பெயர், சுயவிவரம், முழு முகவரியுடன் அக்டோபர் 31 -ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/20/சமூக-நீதிக்கான-பெரியார்-விருதுக்கு-விண்ணப்பிக்கலாம்-3023121.html
3023120 சென்னை காஞ்சிபுரம் அக்டோபர் 20 மின் தடை DIN DIN Saturday, October 20, 2018 04:13 AM +0530 ஓரிக்கை
நாள்: 20.10.2018 (சனிக்கிழமை)
நேரம்: காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை
மின்தடைப் பகுதிகள்: காமராஜர் வீதி, காந்தி சாலை, மேட்டுத் தெரு, சின்ன காஞ்சிபுரம், பெரியார் நகர், தேனம்பாக்கம், ஐயம்பேட்டை, ஓரிக்கை தொழிற்பேட்டை, ஆட்சியர் அலுவலகம், பாலாறு தலைமை நீரேற்றம், ஓரிக்கை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/20/அக்டோபர்-20-மின்-தட-3023120.html
3023116 சென்னை காஞ்சிபுரம் திருவடிசூலம் கருமாரியம்மன் கோயிலில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வழிபாடு DIN DIN Saturday, October 20, 2018 03:00 AM +0530
நவராத்திரி விழாவை முன்னிட்டு, திருவடிசூலத்தில் உள்ள தேவி கருமாரியம்மன் கோயிலில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சுவாமி தரிசனம் செய்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த கொலுவை அவர் பார்வையிட்டார்.
செங்கல்பட்டு-திருப்போரூர் சாலையில் திருவடிசூலம் கோயில்புரத்தில் தேவி கருமாரிம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 51 அடி உயரமுள்ள அம்மன் சிலை வீற்றிருப்பது சிறப்பு வாய்ந்ததாகும்.
இந்நிலையில், நவராத்திரி விழாவின் 9ஆம் நாளான வியாழக்கிழமையன்று, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இக்கோயிலுக்கு வருகை தந்தார். அவரை கோயில் ஸ்தாபகர் தேவி குகாயோகி பு.மதுரைமுத்து சுவாமிகள் கும்ப மரியாதையுடன் வரவேற்றார். 
அதன் பின், அம்மன் திருவடிசூலத்தை ஆளுநர் தரிசித்தார். உற்சவர் அம்மனையும் வணங்கினார். இதையடுத்து, கொலு பொம்மைகள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஆளுநருக்கு மரியாதை செய்யப்பட்டது.
பின்னர், புதிதாக வெள்ளியில் செய்யப்பட்ட அம்மனின் முகக் கவசத்தை மதுரைமுத்து சுவாமிகள், ஆளுநரிடம் காட்டினார். அதை ஆளுநர் வாங்கிப் பார்வையிட்டு, மிகவும் அருமையாக உள்ளதாகக் கூறினார். அதன் பின், சொர்ண ரேகையுடன் கூடிய சுயம்பு அம்மன் தரிசனம் செய்து வைக்கப்பட்டிருந்த கொலுவை ஆளுநர் பார்வையிட்டார். 
கொலு பற்றிய விளக்கத்தை மதுரை முத்து சுவாமிகள் ஆளுநரிடம் கூறினார். அதைத் தொடர்ந்து 51 அடி உயரமுள்ள தேவி கருமாரியம்மனை ஆளுநர் தரிசனம் செய்தார். 
மேலும் கோயிலுக்குப் பின்னால் உள்ள 108 வைணவ திவ்ய தேசங்களைச் சுற்றிப் பார்வையிட்டு சுவாமி தரிசனம் செய்தார். ஆளுநர் சுமார் 1 மணிநேரம் கோயிலை சுற்றிப் பார்த்து வழிபட்டார்.
முன்னதாக, காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி தலைமையில் ஏடிஎஸ்பி, எஸ்.பி.க்கள், காவல் ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள் உள்ளிட்ட போலீஸாரும், ரிசர்வ் போலீஸாரும் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர். 
அவர்கள் வியாழக்கிழமை மதியம் 1 மணி முதல் செங்கல்பட்டு திருப்போரூர் கூட்டுச்சாலை, ஜிஎஸ்டி சாலை, கோயில் பாதைகள், கோயிலுக்கு உள்புறம் என தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/20/w600X390/purohit.JPG திருவடிசூலம் கோயிலுக்கு வழிபாடு மேற்கொள்ள வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/20/திருவடிசூலம்-கருமாரியம்மன்-கோயிலில்-ஆளுநர்-பன்வாரிலால்-புரோஹித்-வழிபாடு-3023116.html
3023115 சென்னை காஞ்சிபுரம் மீ டூ இயக்கம் மூலம் பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது DIN DIN Saturday, October 20, 2018 02:59 AM +0530
மீ டூ (எனக்கும் பாதிப்பு) இயக்கம் மூலம் பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
காஞ்சிபுரத்தில் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியது: 
நீண்ட காலமாக பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்படுகின்றனர். அப்போது, இந்த சமூகத்தால் பெண்கள் அவமானப்படுத்தப்பட்டு வந்தனர். தற்போது, இந்த நிலை மாறியுள்ளது. 
அவ்வகையில், பெண்கள் தங்களது உணர்வுகளை மீ டூ என்ற இயக்கத்தைப் பயன்படுத்துகின்றனர். இதனால், வருங்காலத்தில் பாலியல் சீண்டல் சம்பவங்கள் நடைபெறால் இருப்பதற்கு பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது என்றே இதைக் கருத வேண்டும் என்றார் அவர். அப்போது, அதிமுக மேற்கு மாவட்டச் செயலர் வாலாபாத் பா.கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/20/மீ-டூ-இயக்கம்-மூலம்-பெண்களிடையே-விழிப்புணர்வு-ஏற்பட்டுள்ளது-3023115.html
3023114 சென்னை காஞ்சிபுரம் மரக்கன்று நடும் விழா DIN DIN Saturday, October 20, 2018 02:59 AM +0530
உத்தரமேரூர் அருகே பட்டாங்குளம் பகுதியில் அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி, இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் மரக்கன்று நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு செஞ்சிலுவை சங்கத் தலைவர் சேகர் தலைமை வகித்தார். ஆலோசகர் வீரபாண்டியன் முன்னிலை வகித்தார். இதில், அப்துல் கலாம் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. 
தொடர்ந்து, மரம் வளர்ப்பின் முக்கியத்துவம், மரங்களின் பயன்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. பின்னர், தனியார் பள்ளி வளாகம், பட்டாங்குளம் கிராமப் பகுதியில் 150 மரக்கன்றுகள் நடப்பட்டன. இளையோர் செஞ்சிலுவை சங்க மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/20/மரக்கன்று-நடும்-விழா-3023114.html
3023113 சென்னை காஞ்சிபுரம் கல்லூரியில் சமய நல்லிணக்க நவராத்திரி விழா DIN DIN Saturday, October 20, 2018 02:58 AM +0530
காஞ்சிபுரத்தை அடுத்த செம்பரம்பாக்கம் சோழன் கல்வியியல் கல்லூரியில் சமயநல்லிணக்க நவராத்திரி விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. 
விழாவுக்கு கல்லூரி முதல்வர் அன்பு தலைமை வகித்து, நவராத்திரி விழா சிறப்பு, தேசிய ஒருமைப்பாடு, மத நல்லிணக்கம் குறித்துப் பேசினார். பேராசிரியர் பூங்குழலி வரவேற்றார். தொடர்ந்து, கல்லூரி வளாகத்தில் தேசத் தலைவர்கள், ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் ஆகிய மதங்களைச் சார்ந்த கொலு பொம்மைகள் வைக்கப்பட்டன. மேலும், சமய நல்லிணக்கத்தை வளர்க்கும் வழிமுறைகளை பேராசிரியர்கள் எடுத்துரைத்தனர். இதில், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/20/w600X390/navarathri.JPG http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/20/கல்லூரியில்-சமய-நல்லிணக்க-நவராத்திரி-விழா-3023113.html
3023112 சென்னை காஞ்சிபுரம் மாமல்லபுரம் முதல் தில்லி வரை 6,500 கி.மீ. தூர சைக்கிள் யாத்திரை DIN DIN Saturday, October 20, 2018 02:57 AM +0530
உணவுப் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் மாமல்லபுரம் முதல் தில்லி வரை 6,500 கி.மீ. தூரத்திற்கு சைக்கிள் விழிப்புணர்வு யாத்திரையை தமிழக உணவுப் பாதுகாப்புத்துறை இயக்குநர் அமுதா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
உணவுப் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தியும், ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தியும் கல்லூரி மாணவர்களின் சைக்கிள் யாத்திரையை நடத்தத் திட்டமிடப்பட்டது. தமிழக அரசின் உணவுப் பாதுகாப்புத்துறை இதற்கு ஏற்பாடு செய்தது. மாமல்லபுரத்தில் இருந்து தில்லி வரை 6,500 கி.மீ. தூரத்துக்கு மேற்கொள்ளப்பட உள்ள இந்த விழிப்புணர்வு சைக்கிள் யாத்திரை மாமல்லபுரத்தில் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. உணவுப் பாதுகாப்புத்துறை இயக்குநர் அமுதா கொடியசைத்து 
தொடங்கி வைத்தார்.
இதில் பல்வேறு கல்லூரிகளின் என்எஸ்எஸ் மாணவர்கள் கலந்துகொண்டு மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் வழிநெடுகிலும் உணவுப் பாதுகாப்பின் அவசியத்தையும், ஆரோக்கிய உணவின் அவசியத்தையும் வலியுறுத்தி விழிப்புணர்வுப் பயணம் மேற்கொண்டனர். இந்த விழிப்புணர்வுப் பயணம் ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களின் வழியாகச் சென்று தில்லியில் முடிவடைகிறது. முன்னதாக, விழிப்புணர்வு யாத்திரை மேற்கொள்ளும் பல்வேறு கல்லூரி மாணவர்களிடையே உணவுப் பாதுகாப்பு குறித்தும் சைக்கிள் யாத்திரையில் பாதுகாப்பாக செல்வது குறித்தும் அமுதா விளக்கவுரையாற்றினார். 
மாணவர்களின் சாசக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. உணவுப் பாதுகாப்பு குறித்த கண்காட்சி ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, எம்.பி. மரகதம் குமரவேல், அதிமுக மாவட்டச் செயலாளர் எஸ்.ஆறுமுகம், எஸ்வந்தராவ் உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகள், அரசுத்துறை அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். 
பின்னர் உணவுப் பாதுகாப்புத்துறை இயக்குநர் அமுதா, மாவட்ட ஆட்சியர் பொன்னையா உள்ளிட்டோர் மாமல்லபுரம் புறவழிச்சாலை வரை கல்லூரி மாணவர்களுடன் சென்று வழியனுப்பி வைத்தனர்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/20/w600X390/cycle.JPG http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/20/மாமல்லபுரம்-முதல்-தில்லி-வரை-6500-கிமீ-தூர-சைக்கிள்-யாத்திரை-3023112.html
3023111 சென்னை காஞ்சிபுரம் ரயில்வே மண்டல மேலாளரிடம் காஞ்சிபுரம் எம்எல்ஏ கோரிக்கை DIN DIN Saturday, October 20, 2018 02:57 AM +0530
தென்னக ரயில்வே கூடுதல் மண்டல மேலாளரிடம் காஞ்சிபுரம் எம்.எல்.ஏ வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தார்.
காஞ்சிபுரம் கிழக்கு ரயில் நிலையத்துக்கு தென்னக ரயில்வே கூடுதல் மண்டல மேலாளர் கே.மனோஜ் வெள்ளிக்கிழமை வந்தார். அப்போது, காஞ்சிபுரம் எம்.எல்.ஏ எழிலரசன் அவரை வரவேற்றார். தொடர்ந்து, இருவரும் ரயில் நிலையங்களில் உள்ள அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தனர். அப்போது மண்டல மேலாளரிடம் எம்எல்ஏ மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது
காஞ்சிபுரம்-திருமால்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய ரயில் நிலையத்தை அமைக்க வேண்டும். இது நீண்ட நாள் கோரிக்கையாகும். கேந்திரீய வித்யாலயா மத்திய அரசுப் பள்ளி அமைக்க காஞ்சிபுரம் கிழக்கு ரயில் நிலையத்தில் 2.5 ஏக்கர் நிலம் ஒதுக்கித் தருமாறு கோரப்பட்டுள்ளது. 
அந்த ரயில் நிலையத்தில் நடைமேடையை உயர்த்துதல், ரயில்வே காவல் நிலையம் அமைத்தல், ரயில்வே போலீஸார் ரோந்துப் பணி மேற்கொள்ளுதல், சுகாதாரம் மற்றும் குடிநீர் வசதி செய்தல், போதிய மின்விளக்குகளை அமைத்தல், கழிப்பறை புதுப்பித்தல், ரயில் பணிகளுக்கு ரயில்வே நடைமேடையில் அவசியக் குறியீடுகள் அமைத்துத் தருதல் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/20/w600X390/kanjip.JPG http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/20/ரயில்வே-மண்டல-மேலாளரிடம்-காஞ்சிபுரம்-எம்எல்ஏ-கோரிக்கை-3023111.html
3023110 சென்னை காஞ்சிபுரம் மருத்துவரின் சீட்டு இல்லாமல் மருந்து கேட்டு தாக்குதல் நடத்திய 3 இளைஞர்கள் கைது DIN DIN Saturday, October 20, 2018 02:57 AM +0530
மருத்துவரின் சீட்டு இல்லாமல் மருந்து கேட்டு தகராறு செய்து, ஆங்கில மருந்துக் கடையைத் தாக்கி, சேதப்படுத்திய இளைஞர்களை மணிமங்கலம் போலீஸார் கைது செய்தனர்.
படப்பை பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். அவர் படப்பை பஜார் பகுதியில் ஆங்கில மருந்துக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு வந்த சில இளைஞர்கள் மருத்துவரின் சீட்டு இல்லாமல் சில மாத்திரைகளைக் கேட்டதாகத் தெரிகிறது. அதற்கு சரவணன், மருத்துவரின் சீட்டு இல்லாமல் இந்த மருந்துகளைத் தர முடியாது என்று கூறினார். 
இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் திடீரென்று கருங்கற்களாலும், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியாலும் அக்கடையைச் சேதப்படுத்தினர். அதன் பின், அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். அப்போது, அவர்களுக்கு முன்னால் பைக்கில் சென்று கொண்டிருந்த படப்பை முருகாத்தம்மன்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் என்பவரைத் திட்டியதோடு, கத்தியால் அவரை வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.
இது தொடர்பாக மருந்துக் கடை உரிமையாளர் சரவணனும், பிரசாந்த்தும் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகார்களின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், படப்பை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த முரளி(23), ஆத்தனஞ்சேரி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன்(23), படப்பை டேவிட் நகர் பகுதியைச் சேர்ந்த அமானுல்லா(25) ஆகிய மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/20/w600X390/arest1.JPG http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/20/மருத்துவரின்-சீட்டு-இல்லாமல்-மருந்து-கேட்டு-தாக்குதல்-நடத்திய-3-இளைஞர்கள்-கைது-3023110.html
3023109 சென்னை காஞ்சிபுரம் ரூ.12.50 லட்சம் குட்கா பொருள் கடத்தி வந்த வேன் பறிமுதல் DIN DIN Saturday, October 20, 2018 02:56 AM +0530
சென்னைக்கு வேனில் கடத்தி வரப்பட்ட ரூ.12.50 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருள்களை ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் பறிமுதல் 
செய்தனர்.
அவர்கள் கடந்த புதன்கிழமை இரவு ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பென்னலூர் பகுதியில் உள்ள சுங்கச் சாவடியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேலூர் பகுதியில் இருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு வேனை வழிமறித்தனர். எனினும், அந்த வேன் நிற்காமல் சென்று விட்டது. இதையடுத்து, அந்த வேனை போலீஸார் துரத்திச் சென்று நிறுத்தினர். அப்போது வேனின் ஓட்டுநர் வண்டியில் இருந்து இறங்கித் தப்பியோடி விட்டார்.
இதையடுத்து, அந்த வேனில் போலீஸார் சோதனை செய்தபோது வேனில் இருந்த அட்டைப் பெட்டிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் இருந்தது தெரிய வந்தது. வேனை ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து சோதனை செய்தனர். அப்போது, 145 அட்டைப் பெட்டிகளில் புகையிலைப் பொருள்களும், 15 மூட்டை போதைப் பாக்குகளும் இருந்தன. 
அவற்றின் மதிப்பு ரூ. 12.50 லட்சமாகும். வேன் மற்றும் புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்த போலீஸார், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/20/ரூ1250-லட்சம்-குட்கா-பொருள்-கடத்தி-வந்த-வேன்-பறிமுதல்-3023109.html
3022569 சென்னை காஞ்சிபுரம் மாமண்டூரில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார் DIN DIN Thursday, October 18, 2018 03:35 AM +0530
செங்கல்பட்டை அடுத்த மாமண்டூரில் தமிழக முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் வெண்கல உருவச் சிலைகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை திறந்து வைத்தார். 
உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை சென்றார். வழியில் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தின் சார்பில், ஒன்றியச் செயலாளர் கெளஸ்பாஷாவின் ஏற்பாட்டில் காட்டாங்கொளத்தூர், சிங்கப்பெருமாள்கோயில், பாரேரி, செட்டிப்புண்ணியம், புலிப்பாக்கம், ஆலப்பாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து, செங்கல்பட்டு சக்தி விநாயகர் முதல்வர் வழிபட்டார். தொடர்ந்து, ஆலப்பாக்கம் முன்னாள் ஊராட்சித் தலைவர் சல்குரு தலைமையில், கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர், மாமண்டூர் தேசிய நெடுஞ்சாலை அருகில் மதுராந்தகம் ஒன்றியச் செயலாளர் அப்பாதுரை தனது சொந்தசெலவில் அமைத்திருந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளை விழா மேடையில் இருந்தபடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரிமோட் மூலம் திறந்துவைத்தார். பின்னர், சிலைகளை அருகில் சென்று பார்வையிட்டார். முன்னதாக விழா மேடை அருகில் மலை வையாவூர் பிரன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் நிர்வாக அலுவலர் வஜ்ஜிரவேல் ஏற்பாட்டின்பேரில், முதல்வருக்கு பட்டாச்சாரியார்கள் கும்ப மரியாதை செய்தனர்.
முதல்வர் செல்லும் வழியில் கட்சியினர் அமைத்திருந்த 100 அடி உயர கட்சிக் கொடிக் கம்பங்களில் கொடி ஏற்றி முதல்வர் திறந்து வைத்தார். 
விழாவில், சுகாதாரத் துறை மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் எஸ்.ஆறுமுகம், எம்.பி. மரகதம் குமரவேல், முன்னாள் எம்.பி. சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏக்கள் தண்டரை மனோகரன், கணிதா சம்பத், தனபால், ராஜி, பி.கணேசன், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/18/w600X390/mamandur.jpg சென்னை மாமண்டூரில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளைத் திறந்து வைத்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/18/மாமண்டூரில்-எம்ஜிஆர்-ஜெயலலிதா-சிலைகள்-முதல்வர்-எடப்பாடி-பழனிசாமி-திறந்து-வைத்தார்-3022569.html
3022568 சென்னை காஞ்சிபுரம் ஆயுத பூஜை: பூக்களின் விலை உயர்வு DIN DIN Thursday, October 18, 2018 03:33 AM +0530
ஆயுத பூஜை, விஜய தசமி பூஜைக்கான பொருள்களின் விற்பனை காஞ்சிபுரம் பகுதிகளில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பூக்களின் விலை அதிகரித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் நவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன், ரேணுகாம்பாள், நாகலுத்தம்மன், தும்வனத்தம்மன், படவேட்டம்மன் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கென, கோயில்களில் நாள்தோறும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளல், பூஜைகள் ஆகியவை நடைபெற்று வருகின்றன. மேலும், வீடுகள் உள்பட பல்வேறு இடங்களில் நவராத்திரி கொலு அமைத்து, பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து, உழைப்போர் வளம் பெருக ஆயுத பூஜையும், கல்விக்கு சரஸ்வதி பூஜையும், நவராத்திரி நிறைவு நாளில் கல்வி, கலை, செல்வ வளம் பெருகிட விஜயதசமியும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, காஞ்சிபுரத்திலுள்ள தொழில், வர்த்தக நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகள், வாகனங்கள் ஆகியவற்றை தூய்மை செய்து, பூஜைக்கு தயார் செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 
இற்காக, வாழைக் கன்று, கரும்பு, பழ வகைகள், பொரி கடலை, சுண்டல், பொங்கல் ஆகியவை வைத்து படைப்பதற்கு தேவையான பொருள்களை வாங்குவதற்காக, ஜவஹர்லால், ரயில்வே சாலை ராஜாஜி மார்க்கெட், தேரடி வீதி, மேட்டுத்தெரு, செங்கழுநீரோடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் புதன்கிழமை காலை முதலே அதிகமானோர் வந்திருந்து, தேவையான பொருள்களை வாங்கிச் சென்றனர். அதுபோல், முக்கிய நகர வீதிகளில் உள்ள கடைகள், நிறுவனங்களில் இயந்திரங்கள், கருவிகள், அலுவலகப் பயன்பாட்டு பொருள்கள் தூய்மைசெய்து, அதற்கு மலர் மாலைகள், வாயில்களில் மாவிலை தோரணம், வர்ண காகிதங்கள், மாலைகள் ஆகியவற்றை வைத்து அலங்கரிக்கப்பட்டுள்ளன. 
அதுபோல், பூக்களின் வரத்து அதிகரித்துள்ளதுடன், விலையும் உயர்ந்துள்ளது. இதில், கடந்த வாரம் விற்கப்பட்ட சாமந்தி பூ வின் விலை ரூ. 100-120 என இருந்தது. தற்போது, ரூ. 200-240 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல், மல்லிகை, கோழிக்கொண்டை, செவ்வந்தி, முல்லை உள்ளிட்ட பூக்களின் விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பொரி கடலை படி ஒன்றுக்கு ரூ. 20-30-க்கு விற்பனையாகிறது. ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, காஞ்சிபுரத்தில் உள்ள முக்கிய கோயில்களில் விஷேச வழிபாடுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம், அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் சில மணி நேரம் கனமழை பெய்தது. 

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/18/w600X390/flower.jpg விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்ட சாமந்தி பூமாலை. http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/18/ஆயுத-பூஜை-பூக்களின்-விலை-உயர்வு-3022568.html
3022567 சென்னை காஞ்சிபுரம் பொறியியல் கல்லூரியில் ஆசிய சாதனைப் புத்தகத்துக்கான தேசிய மதிப்பீடு DIN DIN Thursday, October 18, 2018 03:32 AM +0530
மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 87ஆவது பிறந்த நாளையொட்டி, சின்ன கொளம்பாக்கம் கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழிற்நுட்ப கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை சார்பாக ஆசிய அளவிலான சாதனைப் புத்தகத்தில் இடம் பெற தேசிய மதிப்பீட்டுக்கான நிகழ்ச்சி திங்கள் கிழமை நடைபெற்றது.
மதுராந்தகத்தை அடுத்த சின்ன கொளம்பாக்கம் கற்பக விநாயகா பொறியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி நிர்வாகம் ஒவ்வொரு ஆண்டும் அப்துல் கலாமின் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு அவரது 87ஆவது பிறந்த நாளையொட்டி, ஆசிய அளவிலான சாதனைப் புத்தகத்தில் (ஆசியன் புக் ஆஃப் ரிக்கார்ட்ஸ்) இடம்பெறுவதற்கான தேசிய மதிப்பீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் இயக்குநர் மீனாட்சிஅண்ணாமலை தலைமை வகித்தார். முதல்வர் காசிநாதபாண்டியன், ஆலோசகர் ரவிச்சந்திரன், டீன் சுப்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைத் தலைவர் ஜெயராஜ் ரத்தினகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய மதிப்பீட்டு நிகழ்ச்சிகாக கலந்து கொண்ட கல்லூரி மாணவ, மாணவிகள் யோகா, ஆங்கிலப் பாட்டு பாடுதல், விளையாட்டு, ஓவியம் வரைதல், ஆங்கிலம், தமிழ் மொழியில் கட்டுரை எழுதுதல் உள்ளிட்ட 11வகையான போட்டிகளை 73 நிமிடத்துக்குள் முடித்து சாதனை படைத்தனர். 
இந்த நிகழ்ச்சிகளுக்கு நடுவராக படாளம் நகரில் செயல்பட்டு வரும் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எம்.இளங்கோவன், ஆசிரியர் ஆர்.பரந்தாமன் ஆகியோர் நடுவர்களாக இருந்து நிகழ்ச்சிகளை நடத்தினர். இதில் 50-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை தலைவர் ஜெயராஜ் ரத்தினகுமார் தலைமையில் உதவிப் பேராசிரியர்கள் பிரபு, கோபுராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.  

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/18/w600X390/yoga.jpg ஆசிய அளவிலான புத்தகத்தில் இடம் பெறுவதற்கான யோகா நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள். http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/18/பொறியியல்-கல்லூரியில்-ஆசிய-சாதனைப்-புத்தகத்துக்கான-தேசிய-மதிப்பீடு-3022567.html
3022566 சென்னை காஞ்சிபுரம் மொபெட் மீது லாரி மோதல்: பிஎஸ்என்எல் ஊழியர் சாவு DIN DIN Thursday, October 18, 2018 03:32 AM +0530
செங்கல்பட்டு அருகே மொபெட் மீது லாரி மோதிய விபத்தில் பிஎஸ்என்எல் ஊழியர் இறந்தார். 
செங்கல்பட்டை அடுத்த கல்பாக்கம் டவுன் ஷிப் 14-ஆவது அவின்யூவைச் சேர்ந்தவர் மணி (55) . இவர் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் டெலிகாம் டெக்னிஷியனாக பணியாற்றி வந்தார். இவர், புதன்கிழமை தனது மொபெட்டில் கல்பாக்கத்தில் இருந்து திருக்கழுகுன்றம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். முள்ளிப்பாக்கம் அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி மொப்பெட் மீது மோதியதில் மணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 
தகவலறிந்த திருக்கழுகுன்றம் போலீஸார் அங்கு சென்று மணியின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/18/w600X390/mani.jpg http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/18/மொபெட்-மீது-லாரி-மோதல்-பிஎஸ்என்எல்-ஊழியர்-சாவு-3022566.html
3022565 சென்னை காஞ்சிபுரம் சாலையைக் கடந்த பெண் பைக் மோதி சாவு DIN DIN Thursday, October 18, 2018 03:31 AM +0530
சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் சாலையைக் கடக்க முயன்ற பெண் மீது பைக் மோதியதில் அவர் உயிரிழந்தார். 
செங்கல்பட்டை அடுத்த சிங்கப் பெருமாள்கோவில் அருகே உள்ளதிருத்தேரியைச் சேர்ந்தவர் பழனியம்மாள்(48). அவர் ஞாயிற்றுக்கிழமை மாலை சிங்கப்பெருமாள் கோவில் அருகே சாலையைக் கடக்க முயன்றார். அப்போது வேகமாக வந்த ஒரு பைக் அவர் மீது மோதியதில் படுகாயமடைந்தார். 
இதையடுத்து, சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பழனியம்மாள் அங்கு திங்கள்கிழமை இறந்தார். இதுகுறித்து மறைமலைநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/18/சாலையைக்-கடந்த-பெண்-பைக்-மோதி-சாவு-3022565.html
3021822 சென்னை காஞ்சிபுரம் பன்னாட்டு நிறுவன சலுகைகளை ரத்து செய்யக் கோரி : அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் DIN DIN Wednesday, October 17, 2018 04:16 AM +0530
பன்னாட்டு நிறுவனச் சலுகைகளை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று கோரி அனைத்து தொழிற்சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் பகுதியில் செயல்பட்டு வரும் யமஹா, எம்எஸ்ஐ, ராயல் என்பீல்டு, கிரௌன் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாதக்கணக்கில் தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வர தமிழக அரசு பல்வேறு அறிவுரைகளைத் தொழிற்சாலை நிறுனங்களுக்கு வழங்கியுள்ளது. 
எனினும், அரசின் அறிவுரைகளை அந்த நிறுவனங்கள் ஏற்காமல், தொழிலாளர் விரோதப் போக்கை கடைபிடித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனை வெளிப்படுத்தும் வகையில், பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அரசு சலுகைகளை ரத்து செய்யக் கோரி காஞ்சிபுரம் காந்தி சாலை பெரியார் தூண் அருகே அனைத்து தொழிற்சங்கத்தினர், யமஹா உள்ளிட்ட நிறுவனங்களின் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாவட்டப் பொருளாளர் ஆர்.மதுசூதனன், எல்பிஎஃப் மாவட்டத் தலைவர் சுந்தரவரதன் உள்ளிட்டோர் தலைமை வகித்தனர்.
தொடர்ந்து, நம் நாட்டுச் சட்டங்களை மதிக்காமல் செயல்பட்டு வரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள சலுகைகளை ரத்து செய்யவேண்டும்; டாங்கஸன், அனிவல், கனிஷ் கோல்டு, ஃபாக்ஸ்கான் ஆகிய ஆலைகள் மூடப்பட்டதால் வேலையிழந்துள்ள தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்; ஒப்பந்த முறைகளை ரத்து செய்ய வேண்டும்; போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதியத்தில் சேர்த்து வைத்த பிடித்தம் செய்த தொகையினை வழங்க வேண்டும்; மின்வாரியத்தில் மின்சாரம் வாங்குதல் - வழங்குதலில் நடைபெற்றுள்ள ஊழலை விசாரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் கோஷமிட்டனர். 
மேற்கண்ட கோரிக்கைகளை, சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கண்ணன், மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார், எல்பிஎப் மாவட்டத் தலைவர்கள் செ.சுந்தரவரதன், கே.எ.இளங்கோவன், ஏஐடியுசி மாநில செயலாளர் சொ.இரணியப்பன் உள்ளிட்டோர் விளக்கிப் பேசினர். தொடர்ந்து, சிஐடியு மாநிலத் தலைவர் அ.செளந்தரராஜன் நிறைவுரையாற்றினார். இதில் திரளான யமஹா உள்ளிட்ட நிறுவனங்களின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/17/w600X390/demand.JPG http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/17/பன்னாட்டு-நிறுவன-சலுகைகளை-ரத்து-செய்யக்-கோரி--அனைத்து-தொழிற்சங்கத்தினர்-ஆர்ப்பாட்டம்-3021822.html
3021821 சென்னை காஞ்சிபுரம் புதிதாக சாலை அமைக்கக் கோரி குடியிருப்புவாசிகள் மனு DIN DIN Wednesday, October 17, 2018 04:16 AM +0530 புதிதாக சாலை அமைக்கக்கோரி கொருக்கந்தாங்கல் குடிருப்புவாசிகள், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து அம்மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: 
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், ஆதனூர் கிராமத்துக்குட்பட்ட கொருக்கந்தாங்கல் பகுதியில் எல்.வி.ஆர். நகர், எம்.ஆர். நகர் ஆகிய பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகளான கழிவுநீர்க் கால்வாய், சாலை வசதிகள் என எதுவும் முறையாக இல்லை. நாங்கள் வசித்துவரும் 23 அடி அகலம் உள்ள சாலை மண்சாலையாகவே உள்ளது. இதனால், மழைக்காலங்களில் அதிகப்படியான மழைநீர் தேங்கி இச்சாலையைப் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது. மேலும், இங்கு தேங்கும் மழைநீரில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாவதோடு, தொற்று நோய்கள் பரவும் சூழலும் உள்ளது. இதனால், பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு இருசக்கர வாகனங்களில் கூட செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகிறோம். எனவே, எங்கள் நகர்ப் பகுதிகளில் புதிதாக சாலை அமைத்து அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/17/புதிதாக-சாலை-அமைக்கக்-கோரி-குடியிருப்புவாசிகள்-மனு-3021821.html
3021820 சென்னை காஞ்சிபுரம் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு விழா DIN DIN Wednesday, October 17, 2018 04:15 AM +0530
நகரில் உள்ள வித்யாசாகர் குளோபல் பள்ளியில் 11ஆவது மாணவர் விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
செங்கல்பட்டு வேதநாராயணபுரம் பகுதியில் அமைந்துள்ள வித்யாசாகர் கல்விக் குழுமத்தின் குளோபல் பள்ளியின் 11ஆவது மாணவர்களுக்கான விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு கல்விக் குழுமத்தின் தாளாளர் விகாஸ் சுரானா தலைமை வகித்தார். பொருளாளர் சுரேஷ் காங்கரியா, இயக்குநர் பி.ஜி.ஆச்சாரியா, பள்ளி முதல்வர் ச.கல்பனாபிரியா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பள்ளி மாணவர் ஷா.அஃப்ராஸ் ஜவஹர் வரவேற்றார். தலைமை விருந்தினராக சென்னை ஸ்ரீபி.எஸ்.மேத்தா மகளிர் மேல்நிலைப்பள்ளி முதல்வர் சுதா மாலினி கலந்து கொண்டு விளையாட்டு விழாவைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றனார். முன்னதாக மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை சிறப்பு விருந்தினர் ஏற்றுக் கொண்டார். 
இதையடுத்து மாணவர்களுக்கான தடகளப் போட்டிகள், கண்கவரும் மாணவர்களின் கூட்டு உடற்பயிற்சிகள், மனதை ஒருநிலைப்படுத்தும் யோகா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும், பெற்றோர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு மியூசிக்கல் சேர் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அவற்றில் பெற்றோர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். 
மாணவர்களின் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பெற்றோர்களுக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு அழைப்பாளர் சுதாமாலினி பரிசுகள், பதக்கங்கள், சான்றிதழ்கள் ஆகியவற்றை வழங்கிப் பாராட்டினர். முடிவில் மாணவி சு.யாழினி நன்றி கூறினார்.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/17/w600X390/play.JPG போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களை அணிவித்த சிறப்பு அழைப்பாளர். உடன் பள்ளி நிர்வாகிகள். http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/17/பள்ளி-மாணவர்களுக்கான-விளையாட்டு-விழா-3021820.html
3021819 சென்னை காஞ்சிபுரம் பள்ளியில் விழிப்புணர்வு கருத்தரங்கம் DIN DIN Wednesday, October 17, 2018 04:14 AM +0530
மதுராந்தகம் இந்து மேல்நிலைப் பள்ளியின் மாணவர்களுக்கு தீய பழக்கங்களால் ஏற்படும் தீûமைகளை விளக்கும் வகையிலான விழிப்புணர்வு கருத்தரங்க நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
மதுராந்தகம் இந்து மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பயன்பெறும்வகையில், குட்கா, பான் பராக் போன்ற போதை தரும் புகையிலை, மது, ராகிங் போன்ற தீய பழக்கங்கள் இல்லாமல் படித்து முன்னேற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் பள்ளி நிர்வாகம் விழிப்புணர்வு கருத்தரங்க நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடுகளை செய்திருந்தது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடபெருமாள் தலைமை வகித்தார். புதுச்சேரி ஸ்ரீராம் அறக்கட்டளை நிர்வாகி அமுதா முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் சித்ரலேகா, விவேகானந்தன் உள்பட பலர் சிறப்புரை ஆற்றினர். 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். பள்ளி உதவி தலைமை ஆசிரியை வைதேகி நன்றி கூறினார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/17/பள்ளியில்-விழிப்புணர்வு-கருத்தரங்கம்-3021819.html
3021818 சென்னை காஞ்சிபுரம் மாணவர்களுக்கு வழங்கத் தயாராகி வரும் இலவச சைக்கிள்கள் DIN DIN Wednesday, October 17, 2018 04:14 AM +0530
ஸ்ரீபெரும்புதூர் கல்வி மாவட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தில் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அரசு பள்ளி வளாகங்களில் சைக்கிள் உதிரிபாகங்களைப் பொருத்தும் பணியில் வடமாநிலத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 
தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு அரசு சார்பாக இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் கல்வி மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு நிகழாண்டில் இலவச சைக்கிள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ள மிதிவண்டிகளுக்கான உதிரிபாகங்கள்ப் பொருத்தும் பணியில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் படப்பை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகங்களில் வடமாநிலத் தொழிலாளர்கள் கடந்த சில தினங்களாக ஈடுபட்டு வருகின்றனர். 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/17/மாணவர்களுக்கு-வழங்கத்-தயாராகி-வரும்-இலவச-சைக்கிள்கள்-3021818.html
3021817 சென்னை காஞ்சிபுரம் வீட்டின் பூட்டை உடைத்து 4 சவரன் நகை, பணம் திருட்டு DIN DIN Wednesday, October 17, 2018 04:14 AM +0530
கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். 
மாடம்பாக்கம் ஸ்ரீராகவேந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் வாணி(44). அவர் அண்மையில் தன் வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊருக்குச் சென்றார். அதன் பின், ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பியபோது பூட்டு உடைக்கப்பட்டுக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். வீட்டினுள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 4 சவரன் தங்க நகையும், ரூ.30 ஆயிரம் ரொக்கமும் திருடு போனது தெரிய வந்தது.
இது குறித்து வாணி, கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/17/வீட்டின்-பூட்டை-உடைத்து-4-சவரன்-நகை-பணம்-திருட்டு-3021817.html
3021816 சென்னை காஞ்சிபுரம் பருவமழை நீரைச் சேமிக்க நீர்நிலைகள் தயார்நிலையில் உள்ளன: அமைச்சர் உதயகுமார் DIN DIN Wednesday, October 17, 2018 03:03 AM +0530
வடகிழக்குப் பருவமழையினால் கிடைக்கும் நீரைச் சேமிக்க நீர்நிலைகள் பராமரிக்கப்பட்டு தயார்நிலையில் உள்ளதாக தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
வடகிழக்குப் பருவமழை தொடர்பான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து காஞ்சிபுரத்தில் உள்ள பொதுமக்கள் நல்லுறவு மையத்தில் அனைத்து அரசுத் துறையினருடன் செவ்வாய்க்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு வருவாய்த் துறை, பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை வகித்தார். கூடுதல் தலைமைச் செயலர் சத்தியகோபால், முதன்மைச் செயலர் அதுல்ய மிஸ்ரா, ஆட்சியர் பா.பொன்னையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது: 
தமிழக முதல்வரின் உத்தரவுக்கிணங்க அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் தொடர் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பொருத்தவரையில், பாதிப்புக்குள்ளாகும் 515 இடங்களில் பருவமழை தொடர்பான பணிகளுக்காக 50 மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
முதல்நிலை தகவல் அளிக்கும் நபர்களாக 3,458 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில் 1,231 பேர் பெண்கள் ஆவர். விலங்கினங்களைப் பாதுகாக்க 106 முதல் நிலைப் பொறுப்பாளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் 1,270 நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. 1,281 பாலங்கள், 3,878 சிறுபாலங்களில் அடைப்புகள் நீக்கப்பட்டுள்ளன. 70 வட்ட வடிவிலான சிறுபாலங்கள் சதுர வடிவிலான பாலங்களாக மாற்றப்பட்டுள்ளன. 5 பாலங்களில் கூடுதல் துவாரங்கள் போடப்பட்டுள்ளன. 5 கிணறுகள் செறிவூட்டப்பட்டுள்ளன. 
அதேபோல், செயலிழந்த 789 கிணறுகளில் செறிவூட்டும் கிணறுகளாக மாற்றப்பட்டுள்ளன. புதிதாக 55 தடுப்பணைகள், 933 நீர் ஊடுருவும் குளங்கள், 73 ஆழப்படுத்தப்பட்ட குளங்கள் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், வெள்ளத்தினால் பாதிக்கப்படும் மக்களைத் தங்கவைக்க 5 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள், புயல் பாதுகாப்பு மையங்கள், 352 தற்காலிகப் பாதுகாப்பு மையங்கள், 90 கால்நடைப் பாதுகாப்பு மையங்கள் ஆகியவை தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 
மேலும், வெள்ளத்தடுப்பு பணிகளில் பொதுப்பணித் துறை மூலம் மொத்தம் 48 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், 264 ஏரிகள், 2 அணைக்கட்டுகள் சீரமைக்கப்பட்டு 220.89 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது. ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ரூ.17.83 கோடியில் 103 பணிகள், ரூ.13.26 கோடியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. மேலும், நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.118.77 கோடியில் 80 பணிகள் நடைபெற்று வருகின்றன. 
இதர துறைகள் மூலம் ரூ.23 கோடியில் 30 பணிகள் என மொத்தம் ரூ.393.75 கோடியில் 316 பணிகள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, வடகிழக்குப் பருவமழை மூலம் 13 கடலோர மாவட்டங்களில் குடிநீர், விவசாயத்துக்கு 60 சதவீத மழைநீர் கிடைக்கும். 
இந்த மழைநீரை சேமிக்கும் வகையில், நீர்நிலைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதற்காக, தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளுதல், வெள்ளத் தடுப்புப் பணி, மீட்பு, நிவாரணப் பணிகள், நிவாரண முகாம்கள் தொடர்பாக ஆய்வு ஆகியவை மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், பருவமழைக்கு முன்பு, மழையின்போது, மழைநீர் வடிந்த பிறகு என 3 நிலைகளில் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. 
கண்டறியப்பட்ட பருவமழை பாதிப்புப் பகுதிகளில் யாரும் சுய படம் (செல்ஃபி) எடுத்தல், மீன்பிடித்தல், கால்நடைகளைக் குளிப்பாட்டுதல் போன்ற வேலைகளைச் செய்யக் கூடாது என எச்சரிக்கப்படுகின்றனர். அதன்படி, முன்னேற்பாட்டுப் பணிகள் எந்தவித வெள்ள அபாயத்தையும் எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் தயார்நிலையில் உள்ளது என்றார் அமைச்சர்.
இக்கூட்டத்தில், எம்.பி. மரகதம் குமரவேல், ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம் எம்எல்ஏ-க்கள் பழனி, எஸ்.ஆர். ராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, முன்னாள் எம்எல்ஏ-க்கள் வாலாஜாபாத் பா.கணேசன், சோமசுந்தரம், முன்னாள் எம்.பி.க்கள் ராஜேந்திரன், பன்னீர்செல்வம், சாலூர் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் ஆறுமுகம் உள்ளிட்ட ஆளும் கட்சியினர், அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/17/w600X390/meet1.JPG http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/17/பருவமழை-நீரைச்-சேமிக்க-நீர்நிலைகள்-தயார்நிலையில்-உள்ளன-அமைச்சர்-உதயகுமார்-3021816.html
3021815 சென்னை காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் வேளாண் கூட்டுறவு வங்கித் தலைவர் பதவியேற்பு DIN DIN Wednesday, October 17, 2018 03:03 AM +0530
ஸ்ரீபெரும்புதூர் வட்ட வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை வங்கியின் புதிய தலைவராக எழிச்சூர் ராமச்சந்திரன் செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை பகுதியில் ஸ்ரீபெரும்புதூர் வட்ட வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் கட்டுப்பாட்டில் ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், பூந்தமல்லி ஆகிய ஒன்றியங்களில் உள்ள 60 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் இயங்கி வருகின்றன. 
இந்நிலையில், வங்கியின் 11 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, இந்த வங்கிக்கு புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நசரத்பேட்டை பகுதியில் உள்ள வங்கி வளாகத்தில் கடந்த 6ஆம் தேதி நடைபெற்றது. இதில் அதிமுகவைச் சேர்ந்த ஸ்ரீபெரும்புதூர் சட்டப் பேரவை உறுப்பினர் கே.பழனி, குன்றத்தூர் ஒன்றியச் செயலாளர் எழிச்சூர் ராமச்சந்திரன், டி.எஸ்.ராஜா, லலிதா சுந்தரம், செல்வி சுந்தரம், சம்பூர்ணம் பாலு, லட்சுமி தங்கராஜ், தெய்வசிகாமணி, சுந்தர்ராஜன், சேட்டு, மேட்டுப்பாளையம் தயாளன் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 
இந்தத் தேர்தலில் அதிமுகவைத் தவிர மற்ற கட்சியினர் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் அதிமுகவினர் அனைவரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து, அவர்களின் பதவியேற்பு நிகழ்ச்சி ஸ்ரீபெரும்புதூர் வட்ட வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை வங்கியில் பதவியேற்றுக் கொண்டனர். 
இதில் வங்கியின் புதிய இயக்குநராக அதிமுக குன்றத்தூர் ஒன்றியச் செயலாளர் எழிச்சூர் ராமச்சந்திரனும், துணைத் தலைவராக போந்தூர் எஸ்.சேட்டுவும், இயக்குநர்களாக ஸ்ரீபெரும்புதூர் சட்டப் பேரவை உறுப்பினர் கே.பழனி, டி.எஸ்.ராஜா, லலிதா சுந்தரம், செல்வி சுந்தரம், சம்பூர்ணம் பாலு, லட்சுமி தங்கராஜ், தெய்வசிகாமணி, சுந்தர்ராஜன், மேட்டுப்பாளையம் தயாளன் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். 
இதில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியச் செயலாளர் முனுசாமி, முன்னாள் ஒன்றியச் செயலாளர் செந்தில்ராஜன், ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் சிவகுமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு புதிதாக பதவியேற்றுக் கொண்டவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.  

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/17/w600X390/setu.JPG http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/17/ஸ்ரீபெரும்புதூர்-வேளாண்-கூட்டுறவு-வங்கித்-தலைவர்-பதவியேற்பு-3021815.html
3021814 சென்னை காஞ்சிபுரம் மாமல்லபுரம் அருகே கொலை செய்யப்பட்டவரின் அடையாளம் தெரிந்தது DIN DIN Wednesday, October 17, 2018 03:02 AM +0530
மாமல்லபுரம் அருகில் உள்ள சூளேரிகாட்டுக்குப்பம் கடற்கரையில் இரு தினங்களுக்கு முன்பு முகம் சிதைத்துக் கொல்லப்பட்டவர் பல்லாவரம் கன்டோன்மென்ட் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.
கிழக்குக் கடற்கரை சாலைப்பகுதியில் மாமல்லபுரம் அருகில் உள்ள சூளேரிக்குப்பம் கடற்கரையில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில், கொலை செய்யப்பட்ட ஆணின் கடலம் கிடப்பதாக போலீஸாருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தகவல் வந்தது. அதன்பேரில் மாமல்லபுரம் டிஎஸ்பி சுப்பாராஜ், ஆய்வாளர் ரவிக்குமார் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்றனர். அங்கு கொலையுண்டு கிடந்தவரின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார் என்ற விவரம் தெரியவில்லை.
அதன் பின், போலீஸார் இக்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தனிப்படை போலீஸார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் கொலையுண்டவர் சென்னை பல்லாவரம் கன்டோன்மென்ட் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் வடிவேல் (39) என்பது தெரிய வந்தது. அவருக்குத் திருமணமாகி மாதவி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
மாரிமுத்து தனது குழந்தைகளின் காதணி விழாவிற்காக மாமல்லபுரத்தை அடுத்த முட்டுக்காட்டில் உள்ள தனது மூத்த சகோதரிக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை தனது வீட்டை விட்டுக் கிளம்பினார். அவர் காணாமல் போனது குறித்த தகவல் ஏதுமில்லை. இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்து தேடிவந்துள்ளனர். 
இந்நிலையில், மாமல்லபுரம் அருகில் கிடந்த ஆண் சடலத்தை அடையாளம் காட்டும்படி வடிவேலுவின் உறவினர்களுக்கு வந்த தகவலை அடுத்து அவர்கள் வந்து அடையாளம் காட்டினர். அதன்படி, கொலையுண்டவர் வடிவேலு என்பது உறுதியானது. 
பல்லாவரத்தில் இருந்து வடிவேலைப் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் அவரைக் கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை போலீஸார் விசாரித்தனர். அதன் பேரில், பல்லவரத்தைச் சேர்ந்த நாகராஜ்(35) என்பவரைப் பிடித்து, அவரிடம் கொலைக்கான பின்னணி குறித்து காவல்துறை ஆய்வாளர் ரவிக்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/17/w600X390/man.jpg http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/17/மாமல்லபுரம்-அருகே-கொலை-செய்யப்பட்டவரின்-அடையாளம்-தெரிந்தது-3021814.html
3021813 சென்னை காஞ்சிபுரம் உத்தரமேரூர்: ரூ. 5 லட்சம் மதிப்பிலான அரசு நிலம் மீட்பு DIN DIN Wednesday, October 17, 2018 03:02 AM +0530
உத்தரமேரூர் அருகே ரூ.5 லட்சம் மதிப்பிலான அரசு நிலம் மீட்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூரை அடுத்த மலையாங்குளம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான ரூ. 5 லட்சம் மதிப்பிலான நிலம் உள்ளது. இந்த இடத்தில், சிமெண்ட் கொட்டகை அமைத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக வருவாய்த் துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், வருவாய்துறை அலுவலர்கள் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்துக்கு அண்மையில் சென்று, சிமெண்ட் கொட்டகையை அகற்றக்கோரி காலக்கெடு வழங்கினர். 
இந்நிலையில், காலக்கெடு முடிந்தும் ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்படவில்லை. இதையடுத்து, வருவாய்த்துறை அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்றனர். தொடர்ந்து, பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு, வட்டாட்சியர் அகிலாதேவி வருவாய் ஆய்வாளர் கிரிஜா, வட்ட வழங்கல் அலுவலர் பாலாஜி ஆகியோர் தலைமையிலான வருவாய் அலுவலர்கள், போலீசார் உதவியோடு ஆக்கிரப்புகளை அகற்றினர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/17/w600X390/land.JPG ஆக்கிரமிப்புகளை அகற்றும் வருவாய்த் துறையினர். http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/17/உத்தரமேரூர்-ரூ-5-லட்சம்-மதிப்பிலான-அரசு-நிலம்-மீட்பு-3021813.html
3021810 சென்னை காஞ்சிபுரம் மகனை இழந்த சோகத்தில் பெண் தீக்குளித்து சாவு DIN DIN Wednesday, October 17, 2018 03:00 AM +0530
மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதால் மனமுடைந்த தாய் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து உயிரிழந்தார். திருப்போரூரை அடுத்தகேளம்பாக்கம் கீழக்கோட்டையூர் பஜனைக் கோயில் தெருவைச் சேர்ந்தவர் இந்திராணி. அவரது கணவர் வெங்கடேசன் இறந்துவிட்டார். அவரது மகன் கோவிந்தராஜன் (16) விலை உயர்ந்த மோட்டார்சைக்கிளை வாங்கித் தரும்படி தனது தாயாரிடம் கேட்டு வந்தார்.
எனினும், அதை வாங்கித் தர தன்னிடம் பணமில்லை என்று இந்திராணி கூறினார். இதனால் மனவேதனை அடைந்த கோவிந்தராஜ் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்திராணி மாலை வீடு திரும்பியபோது மகன் இறந்ததைக் கண்டு மனவேதனை அடைந்தார். அவரது உறவினர்கள் கோவிந்தராஜனின் தற்கொலை தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவில்லை. அவரது உடலை வீட்டின் வெளியே அடக்கம் செய்ய செவ்வாய்க்கிழமை சென்றனர்.
அப்போது வீட்டிற்குள் இருந்த இந்திராணி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தீக்காயங்களுடன் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் அங்கு இறந்தார். 
இதற்கிடையில் இது தொடர்பாக தகவலறிந்த தாழம்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, புதைக்கப்பட்ட கோவிந்தராஜனின் சடலத்தை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். தாயும் மகனும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/17/மகனை-இழந்த-சோகத்தில்-பெண்-தீக்குளித்து-சாவு-3021810.html
3020959 சென்னை காஞ்சிபுரம் வீட்டில் பதுக்கப்பட்ட ரேஷன் பொருள்கள் பறிமுதல்  செங்கல்பட்டு DIN Tuesday, October 16, 2018 12:35 AM +0530 செங்கல்பட்டில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மூவாயிரத்து 40 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 55 பாக்கெட் பாமாயிலை வட்ட வழங்கல் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
 செங்கல்பட்டு பகுதியில் ரேஷன் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த ரகசிய தகவலின் பேரில் வட்ட வழங்கல் அலுவலர் பூங்கோதை தலைமையில் அங்குள்ள மக்கான்சந்து பகுதியில் உள்ள 2 வீடுகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு ரேஷன் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
 அந்த வீட்டில் இருந்து 3 ஆயிரத்து 40 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 55 பாக்கெட் பாமாயிலை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த வீடுகளில் வசித்து வந்த ஷீலா, மஸ்தான் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். அவர்கள் மீது காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் பொருள்களை அதிகாரிகள் செங்கல்பட்டை அடுத்த திம்மாவரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/16/வீட்டில்-பதுக்கப்பட்ட-ரேஷன்-பொருள்கள்-பறிமுதல்-3020959.html
3020958 சென்னை காஞ்சிபுரம் மாமல்லபுரம் அருகே கடற்கரையில் ஆண் சடலம் மீட்பு  செங்கல்பட்டு, DIN Tuesday, October 16, 2018 12:35 AM +0530 மாமல்லபுரத்தை அடுத்த சூளேரிக்காடு கடற்கரையில் முகம் சிதைந்த நிலையில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸார் மீட்டனர். இது தொடர்பாக தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 மாமல்லபுரம் கிழக்கு கடற்கரைச் சாலையில் சூளேரிக்காடு கடற்கரைப் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் கிடந்தது. சென்னை புறநகர்ப் பகுதியில் இருந்து ஆட்டோவில் வந்த மர்மக் கும்பல் அவரைக் கொலை செய்து, சடலத்தை வீசி விட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
 இது தொடர்பாக தகவல் அறிந்து மாமல்லபுரம் டிஎஸ்பி சுப்புராஜ், காவல் ஆய்வாளர் ரவிக்குமார், காவல் உதவி ஆய்வாளர்கள் திருநாவுக்கரசு, கன்னியப்பன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக ஓடி சூளேரிக்காடு கடற்கரைப் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் வரை சென்றது. ஆனால் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.
 இதனிடையே, சம்பவ இடத்துக்கு வந்த கைரேகை நிபுணர்கள் குற்றவாளிகளின் கைரேகைகளைப் பதிவு செய்தனர். சூளேரிக்காடு கிராம மக்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், ஒரு கும்பல் ஆட்டோவில் வந்ததாகவும் அவர்களே அந்த நபரைக் கொலை செய்துவிட்டு பிணத்தை வீசிச் சென்றிருக்கலாம் என்றும் தெரிய வந்தது. கொலை செய்யப்பட்டவர் யார், எந்த ஊரைச்சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் குற்றவாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/16/மாமல்லபுரம்-அருகே-கடற்கரையில்-ஆண்-சடலம்-மீட்பு-3020958.html
3020957 சென்னை காஞ்சிபுரம் வேனில் கடத்தி வரப்பட்ட ரூ.3 லட்சம் மது பாட்டில்கள் பறிமுதல்  மதுராந்தகம், DIN Tuesday, October 16, 2018 12:35 AM +0530 மதுராந்தகத்தை அடுத்த ஜானகிபுரம் கிராமத்தின் சாலையோரம் நின்றிருந்த வேனில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான வெளிமாநில மதுபாட்டில்களை போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
 சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஜானகிபுரம் கிராமச் சாலையோரம், திங்கள்கிழமை சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஒரு வேன் நின்றிருந்தது. இது பற்றி அப்பகுதி மக்கள் படாளம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
 அதன்படி, செங்கல்பட்டு காவல்துறை டிஎஸ்பி கந்தன், படாளம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் அன்பு, பயிற்சி உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர் நேரில் சென்று அந்த வேனைச் சோதனையிட்டனர்.
 அந்த வேனின் உள்பகுதியில் சற்று வித்தியாசமான தடுப்பு ஒன்று இருந்தது. அதனை அகற்றி காவல்துறையினர் சோதனை செய்தபோது அதில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான வெளிமாநில மதுபாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. 48 குவார்ட்டர் மதுபாட்டில்கள் அடங்கிய 100 பெட்டிகள் அதில் இருந்தன.
 மதுபாட்டில் பெட்டிகளையும், அந்த வேனையும் காவல்துறையினர் கைப்பற்றினர். டிஎஸ்பி கந்தன் உத்தரவின்படி, மதுவிலக்கு காவல் ஆய்வாளர் கன்னையாவிடம் அவை ஒப்படைக்கப்பட்டன. இதுபற்றி மதுவிலக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/16/வேனில்-கடத்தி-வரப்பட்ட-ரூ3-லட்சம்-மது-பாட்டில்கள்-பறிமுதல்-3020957.html
3020956 சென்னை காஞ்சிபுரம் செல்லிடப்பேசிகள் திருட்டு: இருவர் கைது  ஸ்ரீபெரும்புதூர் DIN Tuesday, October 16, 2018 12:34 AM +0530 ஒடிஸா மாநில இளைஞரிடம் செல்லிடப்பேசி திருடிய இரு இளைஞர்களை மணிமங்கலம் போலீஸார் கைது செய்தனர்.
 ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்தவர் கீதாலா கோபால் ரெட்டி. அவர் படப்பை பகுதியில் தங்கி ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை படப்பையில் உள்ள உணவகம் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவரது செல்லிடப்பேசியை இரு இளைஞர்கள் பறித்துச் சென்றனர். இது குறித்து கீதாலா கோபால் ரெட்டி, மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், செல்லிடப்பேசியை பறித்துச் சென்ற இளைஞர்களைத் தேடி வந்தனர்.
 இந்த நிலையில், படப்பையை அடுத்த செரப்பணஞ்சேரி பேருந்து நிலையம் அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை மணிமங்கலம் போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இருவரும் ஒரகடத்தை அடுத்த நாவலூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (26), கணேசன்(28) என்பதும் அவர்கள்தான் கீதாலா கோபால் ரெட்டியிடம் செல்லிடப்பேசியை பறித்துச் சென்றதும் தெரிய வந்தது.
 இதையடுத்து ராஜேஷ், கணேசன் ஆகியோரைக் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து 6 செல்லிடப்பேசிகளைப் பறிமுதல் செய்தனர்.
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/16/செல்லிடப்பேசிகள்-திருட்டு-இருவர்-கைது-3020956.html
3020955 சென்னை காஞ்சிபுரம் விவசாயக் கிணற்றில் மிதந்த பெண்ணின் சடலம் மீட்பு  செங்கல்பட்டு, DIN Tuesday, October 16, 2018 12:34 AM +0530 கூடுவாஞ்சேரி அருகே ஆதனூர்-படப்பை சாலை அருகே விவசாயக் கிணற்றில் மிதந்த பெண்ணின் சடலத்தை போலீஸார் மீட்டனர். இது தொடர்பாக அவர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 இது தொடர்பாக வந்த தகவலை அடுத்து, அந்த இடத்திற்கு போலீஸார் சென்றனர். அங்குள்ள கிணற்றில் மிதந்த 23 வயது பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 கிணற்றில் பிணமாக மிதந்த பெண் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரிய வரவில்லை. அந்த இளம் பெண் தானாகவே தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது யாராவது அவரை கொலை செய்து கிணற்றில் வீசிவிட்டனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/16/விவசாயக்-கிணற்றில்-மிதந்த-பெண்ணின்-சடலம்-மீட்பு-3020955.html
3020954 சென்னை காஞ்சிபுரம் ரூ.57 லட்சத்தில் சாலை சீரமைப்புப் பணி தொடக்கம்  ஸ்ரீபெரும்புதூர் DIN Tuesday, October 16, 2018 12:34 AM +0530 வரதராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட மார்வல் கவுண்டி பிரதான சாலை சீரமைப்புப் பணி திங்கள்கிழமை பூமிபூஜையுடன் தொடங்கியது.
 குன்றத்தூர் ஒன்றியம் வரதராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட மார்வல் கவுண்டி நகர் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மார்வல் கவுண்டி நகர் பிரதான சாலை கடந்த சில வருடங்களாக சீரமைக்கப்படாமல் இருந்து வந்தது. இச்சாலையை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கோரிக்கை வைத்து வந்தனர். அதை ஏற்று, இச்சாலையை சீரமைக்க தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.57 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்தச் சாலையின் சீரமைப்புப் பணி பூமி பூஜையுடன் திங்கள்கிழமை தொடங்கியது. ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ கே.பழனி பணியைத் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்வில் குன்றத்தூர் ஒன்றியச் செயலாளர் எழிச்சூர் ராமச்சந்திரன், ஊராட்சி செயலாளர் கோதண்டராமன், மார்வல் கவுண்டி குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/16/ரூ57-லட்சத்தில்-சாலை-சீரமைப்புப்-பணி-தொடக்கம்-3020954.html
3020953 சென்னை காஞ்சிபுரம் செய்யூரில் பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம்  மதுராந்தகம், DIN Tuesday, October 16, 2018 12:33 AM +0530 மதுராந்தகத்தை அடுத்த செய்யூர் வட்ட வழங்கல் துறை சார்பாக, பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் செய்யூர் ரேஷன் கடை-2இல் சனிக்கிழமை நடைபெற்றது.
 மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும் வட்டவழங்கல் துறையினர் பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாமை நடத்த மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்திரவிட்டார். அதன்படி, இந்த மாதம் செய்யூர் வட்டாட்சியர் அலுவலகத்தின் வட்ட வழங்கல் துறை சார்பாக, செய்யூர் கிராமத்தில் இயங்கும் 2ஆவது ரேஷன் கடையில் பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாமை நடத்த ஏற்பாடு செய்தது.
 இந்த முகாமுக்கு வட்ட வழங்கல் அதிகாரி தயாளன் தலைமை வகித்தார். கூட்டுறவு சார் பதிவாளர் சுமித்ரா முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் சரவணன், ரேஷன் கடை விற்பனையாளர்கள், வட்ட வழங்கல் துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
 செய்யூர் பகுதியில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கான பிரச்னைகளைத் தீர்க்க வேண்டி இந்த சிறப்பு முகாம் நடைபெற்றது. ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல் கோரி 34 பேரும், செல்லிடப்பேசி எண்ணை இணைக்கக் கோரி 17 பேரும், பெயர் திருத்தம் கோரி 3 பேரும் வட்ட வழங்கல் அதிகாரி தயாளனிடம் மனுக்களை அளித்தனர்.
 மொத்தம் 54 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு உடனடியாகத் தீர்வு காணப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்யூர் வட்ட வழங்கல் துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/16/செய்யூரில்-பொது-விநியோகத்-திட்ட-சிறப்பு-முகாம்-3020953.html
3020952 சென்னை காஞ்சிபுரம் பெண் கல்வியை வலியுறுத்தி மாரத்தான் போட்டி  செங்கல்பட்டு DIN Tuesday, October 16, 2018 12:33 AM +0530 பெண் கல்வியை வலியுறுத்தும் வகையில், மாரத்தான்-2018 ஓட்டப் போட்டி செங்கல்பட்டை அடுத்த மஹீந்திரா வேர்ல்ட் சிட்டி சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், 9 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
 பெண் கல்வியை வலியுறுத்தி நடத்தப்பட்ட மாரத்தான் ஓட்டம் 42 கி.மீ., 21 கி.மீ., 10 கி.மீ. மாரத்தான் ஓட்டம் பிரிவுகளில் ஓட்டப்பந்தய வீரர்கள் பங்கேற்றனர். வேர்ல்ட் சிட்டி நிறுவன வர்த்தக தலைமை மேலாளர் பி.விஜயன் சிறப்புரையாற்றி மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அவர் பேசியது:
 42 கி.மீ., 21 கி.மீ., 10 கி.மீ. ஆகிய பிரிவுகளில் நடத்தப்பட்ட இப்போட்டியில் பங்கேற்று முதலாவது, இரண்டாவது, மூன்றாவது இடங்களைப் பிடித்தவர்களுக்கும், மகளிர் பிரிவினருக்கும் ரூ 3.5 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்படும். மாரத்தான் ஓட்டத்தை நிறைவு செய்பவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.
 இந்த ஓட்டத்தில் பங்கேற்போரை உற்சாகப்படுத்தும் வகையில் பசுமையான இயற்கை சூழ்நிலைகள் மிக்க சாலைகள் வழியாக இப்போட்டியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வரை இப்போட்டியை 10 கி.மீ. முதல் 25 கி.மீ. தூரம் வரை மட்டுமே நடத்தினோம். எனினும், 42 கி.மீ. தூரம் வரை நடைபெறும் ஓட்டப் பந்தயம்தான் முழுமையான மாரத்தான் போட்டியாகும். இம்முறை அவ்வாறு நடத்துகிறோம்.
 இப்போட்டியின் மூலம் ஈட்டப்படும் தொகையை பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, பெண் கல்வி, பெண்களின் முன்னேற்றம் ஆகியவற்றுக்கு செலவழிக்க உள்ளோம். பெண்கள் நாட்டில் முன்னேற வேண்டும். அவர்கள் சாதனைகனைப் படைக்க வேண்டும் என்பதே இந்த மாரத்தான் ஓட்டத்தின் நோக்கமாகும்.
 இதைக் காண சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் வந்து ஆர்வத்துடன்கலந்து கொண்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/16/பெண்-கல்வியை-வலியுறுத்தி-மாரத்தான்-போட்டி-3020952.html
3020951 சென்னை காஞ்சிபுரம் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றக் கோரி குமிழி ஊராட்சியினர் மனு  காஞ்சிபுரம், DIN Tuesday, October 16, 2018 12:33 AM +0530 மேய்ச்சல் புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றக்கோரி குமிழி ஊராட்சியினர், மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
 இதுகுறித்து அம்மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:
 காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு வட்டம், குமிழி ஊராட்சி மேட்டுப்பாளையத்தில் சுமார் 150 குடியிருப்புகள் பூர்வீகமாக வசித்து வருகிறோம். எங்களுக்கு பிரதான தொழில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பாக உள்ளது. எங்களது கிராமத்தில் வடக்கு திசையில் சர்வே எண் 310-1இல் உள்ள அரசு மேய்ச்சல் புறம்போக்கு இடம் மேய்ச்சல், நீர்ப்பிடிப்புப் பகுதியாக உள்ளது.
 இந்த இடத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்தில் உள்ள குமிழி பகுதியைச் சேர்ந்த சிலர், கடந்த 2011ஆம் ஆண்டில் ஓலைக் குடிசை அமைத்து மேய்ச்சல் நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்தனர். இதையடுத்து, கிராமத்தினர் சார்பாக மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோரிடம் மனு அளித்தோம்.
 இதைத் தொடர்ந்து, கடந்த 2014ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த மாதம் ஆக்கிரமிப்புகளை மாவட்ட நிர்வாகம் அகற்றியது. இந்நிலையில், மீண்டும் மேய்ச்சல் நிலப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்யும் முயற்சியில் அந்த நபர்கள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, நிரந்தரமாக அந்த இடத்தை யாரும் ஆக்கிரமிக்காதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/16/ஆக்கிரமிப்பு-குடியிருப்புகளை-அகற்றக்-கோரி-குமிழி-ஊராட்சியினர்-மனு-3020951.html
3020950 சென்னை காஞ்சிபுரம் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா    காஞ்சிபுரம், DIN Tuesday, October 16, 2018 12:32 AM +0530 முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரத்தில் திரளான இளைஞர்கள் விழிப்புணர்வுப் பேரணியை நடத்தினர்.
 அப்துல் கலாமின் 87ஆவது பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரம் காந்தி சாலை தேரடியில் அவர்கள் திங்கள்கிழமை விழிப்புணர்வுப் பேரணியில் ஈடுபட்டனர். இப்பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், விவசாய சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் என சுமார் 600-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
 தேரடியில் தொடங்கிய இப்பேரணியில் இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், விவசாயத்தின் முக்கியத்துவம்-மீட்டெடுத்தல், மதுவிலக்கு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பதாகைகள் ஏந்த பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும், விவசாயத்தை மீட்டெடுப்பதை வலியுறுத்தும் வகையில், மாட்டு வண்டியை ஓட்டியபடி விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பினர். பேரணியானது, காஞ்சிபுரம் காந்தி சாலையில் தொடங்கி, மூங்கில் மண்டபம் பகுதியில் நிறைவு பெற்றது.
 ஸ்ரீபெரும்புதூரில்...
 ஸ்ரீபெரும்புதூர், அக். 15: அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி, படப்பை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வுப் பேரணி படப்பை பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
 மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் 87ஆவது பிறந்த நாளையொட்டி, பெண் கல்வி, தன்னம்பிக்கை, பாலியல் வன்கொடுமைத் தடுப்பு மற்றும் பனைமரங்கள் வளர்ப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், படப்பை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வுப் பேரணி படப்பை பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
 படப்பை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ரவிச்சந்திரன் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் யுவராணி ஆகியோர் தலைமையில் இந்தப் பேரணி நடைபெற்றது. பேரணியை குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (வளர்ச்சி ஊராட்சி) பாஸ்கரன், (கிராம ஊராட்சி) சந்திரபாபு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். படப்பை பகுதியில் உள்ள குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி பஜார் வழியாக அரசு ஆண்கள் பள்ளி வளாகத்தில் முடிவடைந்தது. இதையடுத்து பள்ளி வளாகத்தில் 500 பனைவிதைகளை பள்ளி மாணவர்கள் நட்டுவைத்தனர்.
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/16/அப்துல்-கலாம்-பிறந்த-நாள்-விழா-3020950.html
3020949 சென்னை காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியருக்கு விருது  மதுராந்தகம், DIN Tuesday, October 16, 2018 12:32 AM +0530 மதுராந்தகம் சௌபாக்மல் சௌகார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் முதுகலை ஆசிரியரும், பள்ளி நாட்டு நலத்திட்ட அலுவலருமான வி.சிவகுமாரின் பணிகளைப் பாராட்டி, மாவட்ட ஓய்வு பெற்ற மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நலச் சங்கத்தின் சார்பாக, ஆசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
 மதுராந்தகத்தின் வட்டத்தின் முக்கிய மகளிர் மேல்நிலைப் பள்ளியாக திகழும் சௌபாக்மல் சௌகார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முதுகலை ஆசிரியராகவும், பள்ளியின் நாட்டு நலத்திட்ட அலுவலராகவும் பணியாற்றி வருபவர் வி.சிவகுமார். அவரது பணிகளையும், சமூகப் பணிகளையும் பாராட்டி காஞ்சிபுர மாவட்ட ஓய்வு பெற்ற மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நலச்சங்கம் சிறந்த ஆசிரியருக்கான விருதையும், நற்சான்றையும் வழங்க முடிவு செய்தது. அதற்கான விழா பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை காலை நடைபெற்றது.
 நலச்சங்க தலைவரும், நூலக வாசகர் வட்டத் தலைவருமான ஆர்.விஸ்வநாதன் தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் எம்.அன்பழகன், பி.முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை விஜயகுமாரி வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக இணைச் செயலர் எஸ்.டி.மனோகர்குமார், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் என்.எஸ்.ராஜேந்திரன், வி.ஞானசேகரன், வி.வெங்கடேசன், சௌந்திரராஜன், இந்து மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலத்திட்ட அலுவலர் டி.குமார், பள்ளியின் அனைத்து ஆசிரியைகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 நிகழ்ச்சிகளை ஆசிரியை கோ.பாரதி தொகுத்து வழங்கினார். பள்ளி ஆசிரியர் வி.சிவகுமாருக்கு சிறந்த ஆசிரியருக்கான விருது, நற்சான்றுகளை சங்கத் தலைவர் பி.விஸ்வநாதன் வழங்கி பாராட்டினார். விருது பெற்ற ஆசிரியர் வி.சிவகுமார் ஏற்புரை ஆற்றினார். ஆசிரியை மகாலட்சுமி நன்றி கூறினார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/16/அரசு-மகளிர்-மேல்நிலைப்-பள்ளி-ஆசிரியருக்கு-விருது-3020949.html
3020948 சென்னை காஞ்சிபுரம் கிராமப் பகுதிகளில் மர்மக் காய்ச்சல்: பொதுமக்கள் பீதி  ஸ்ரீபெரும்புதூர், DIN Tuesday, October 16, 2018 12:31 AM +0530 குன்றத்தூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியங்களில் உள்ள கிராமப் பகுதிகளில் வேகமாகப் பரவி வரும் மர்மக் காய்ச்சலால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். இதனால் கிராமப் பகுதிகளில் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க அரசுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்திற்குள்பட்ட படப்பை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலும், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் ஏகனாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக பரவி வரும் மர்மக் காய்ச்சலால் ஏராளமான பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த மர்மக் காய்ச்சலால் குன்றத்தூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியங்களில் ஒரு சில பகுதிகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதால் வேகமாக பரவும் மர்மக் காய்ச்சல் குறித்து பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். இப்பகுதிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கடந்த சில தினங்களாக காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.
 இந்நிலையில், குன்றத்தூர் ஒன்றியம் கரசங்கால் ஊராட்சி, ராமதாஸ் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் என்ற கூலித் தொழிலாளியின் 2 வயது மகள் சத்யஸ்ரீக்கு கடந்த வாரம் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, அக்குழந்தையை படப்பை மற்றும் தாம்பரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
 அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சத்யஸ்ரீ-க்கு டெங்கு காய்ச்சல் இருப்பதால் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர். இதையடுத்து, அக்குழந்தையை சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு குழந்தை சனிக்கிழமை இறந்தது.
 இதேபோல், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் ஏகனாபுரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அவர் தண்டலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளார்.
 இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியது:
 கிராமப் பகுதிகளில் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க சுகாதாரத்துறை உள்ளிட்ட அரசுத்துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். மேலும் வேகமாகப் பரவி வரும் மர்மக் காய்ச்சல் குறித்து பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
 இந்த அச்சத்தைப் போக்க அரசுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/16/கிராமப்-பகுதிகளில்-மர்மக்-காய்ச்சல்-பொதுமக்கள்-பீதி-3020948.html
3020947 சென்னை காஞ்சிபுரம் தேசிய அளவிலான கோகோ போட்டி: தங்கப் பதக்கம் வென்று மாணவர்கள் சாதனை  செங்கல்பட்டு, DIN Tuesday, October 16, 2018 12:31 AM +0530 பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸில் நடைபெற்ற தேசிய அளவிலான கோகோ விளையாட்டுப் போட்டியில் மாமல்லபுரம் செயின்ட் மேரீஸ் பள்ளி மாணவர்கள் 10 பேர் தங்கம் வென்றனர். அவர்களுக்கான பாராட்டு விழா வியாழக்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
 காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள இந்தப் பள்ளியின் மாணவர்கள் 10 பேர் பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ் நகரில் அண்மையில் நடைபெற்ற கோகோ விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டனர். மகாராஷ்டிரம், பிகார், மத்தியப் பிரதேசம், ஆந்திரம், ஒடிஸா, பஞ்சாப், கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட 11 மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர்.
 தேசிய அளவில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் மாமல்லபுரம் பள்ளிக்கூட மாணவர்கள் 10 பேர் மற்ற மாநில மாணவர்களைத் தோற்கடித்து கோப்பையைக் கைப்பற்றி, தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தனர். வெற்றிக் கோப்பை மற்றும் தங்கப் பதக்கத்துடன் ஊர்திரும்பிய மாணவர்கள் கிழக்குக் கடற்கரைச் சாலையிலிருந்து மேளதாளங்களுடன் அழைத்து வரப்பட்டனர். பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பள்ளியின் தாளாளர் எம்.அதிரூபன், மாணவர்களுக்கு சால்வை அணிவித்துப் பாராட்டினார்.
 இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியை சகாயபிருந்தா, டாக்டர் சரவணன், உடற்கல்வி ஆசிரியர் செல்வராஜ், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/16/தேசிய-அளவிலான-கோகோ-போட்டி-தங்கப்-பதக்கம்-வென்று-மாணவர்கள்-சாதனை-3020947.html
3020946 சென்னை காஞ்சிபுரம் காவலர் வீரவணக்க நாள்: மினி மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார் எஸ்.பி.  காஞ்சிபுரம், DIN Tuesday, October 16, 2018 12:30 AM +0530 காவலர்கள் வீரவணக்க நாளையொட்டி மினி மாரத்தான் போட்டியை எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
 காவல் பணியின்போது வீரமரணம் அடைந்தவர்களை நினைவுகூரும் வகையில் காவலர்கள் வீரவணக்கநாள் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளை முன்னிட்டு, காவலர்களின் தியாகங்களை நினைவுகூரும் வகையில் காவல்துறை காஞ்சிபுரம் உட்கோட்டம் சார்பில் மினி மாரத்தான் போட்டி ஆட்சியர் அலுவலக வளாக மைதானத்தில் தொடங்கியது. இதனை, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி, டிஎஸ்பி பாலசுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய மாரத்தான் போட்டியில் எஸ்.பி. மற்றும் திரளான பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு, நகரின் முக்கிய சாலை, வீதிகள் வழியாக 8 கி.மீ. தூரம் ஓடி, மீண்டும் ஆட்சியர் அலுவலக வளாகத்தை வந்தடைந்தனர். இப்போட்டியில் வெற்றி பெற்ற 8-ஆம் வகுப்பு மாணவர் எழில்குமார் உள்ளிட்ட மாணவர்களுக்கு எஸ்.பி. பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டினார்.
 அதைத் தொடர்ந்து, அன்னை அஞ்சுகம் நகராட்சி மண்டபம், அண்ணா அரங்கம் ஆகியவற்றில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, காவல்துறை திரைப்பட நடன நிகழ்ச்சி, காவலர் வீரவணக்க நினைவேந்தல் கூட்டம், பரிசளிப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் திரளான காவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/16/காவலர்-வீரவணக்க-நாள்-மினி-மாரத்தான்-போட்டியை-தொடங்கி-வைத்தார்-எஸ்பி-3020946.html
3020293 சென்னை காஞ்சிபுரம் மாற்றுத் திறனாளி பயனாளிகளுக்கான உதவித் தொகை சான்றிதழ் வழங்கல்  செங்கல்பட்டு, DIN Monday, October 15, 2018 12:32 AM +0530 ஒத்திவாக்கத்தில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் மாற்றுத் திறனாளி பயனாளிகளுக்கான உதவித்தொகைக்கான சான்றிதழை வட்டாட்சியர் வழங்கினார்.
 செங்கல்பட்டை அடுத்த ஒத்திவாக்கத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் சரணவன் தலைமையில் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் உள்ளிட்ட வருவாய்த் துறை மற்றும் பல்வேறு அரசுத் துறைகளின் அலுவலர்கள், மருத்துவர்கள் அதிமுக ஒன்றியச் செயலாளர் விஜயரங்கன், கிராம முக்கியஸ்தர்கள், பொதுமக்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.
 இம்முகாமில் முதியோர் உதவித்தொகை, உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை, கைம்பெண் உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், சிட்டா நகல் பெறுதல், குடும்ப அட்டை உள்ளிட்டவை தொடர்பான கோரிக்கை மனுக்களை பொதுமக்கள், அதிகாரிகளிடம் அளித்தனர். இம்முகாமில் மாற்றுத் திறனாளி பயனாளிகள் உதவித்தொகை பெறுவதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. தவிர, கடந்த 6ஆம் தேதி தேசிய ஊரக வேலை திட்டப் பணிக்குச் சென்றபோது பி.வி.களத்தூர், குன்னப்பட்டு அருகில் மினிசரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு போதிய நிவாரணம் வழங்கவும், காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை மனுவை வட்டாட்சியரிடம் அளித்தனர்.
 வல்லிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், கண் பரிசோதனை, சர்க்கரை அளவு உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகளை மருத்துவர்கள் மேற்கொண்டதோடு, சிகிச்சையும் அளித்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/15/மாற்றுத்-திறனாளி-பயனாளிகளுக்கான-உதவித்-தொகை-சான்றிதழ்-வழங்கல்-3020293.html
3020292 சென்னை காஞ்சிபுரம் அப்துல் கலாம் பிறந்த நாள்: மரக்கன்று நடும் விழா  காஞ்சிபுரம், DIN Monday, October 15, 2018 12:31 AM +0530 முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்த நாளை (அக்.15) முன்னிட்டு, வனச்சரக அலுவலர் தலைமையில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 பசுமையின் கூடாரம் என்ற அமைப்பு சார்பில் மரக்கன்று நடும் விழா ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதில், அந்த அமைப்பின் நிர்வாகி மேகநாதன் தலைமை வகித்தார். 14ஆவது வார்டு பேரவைச் செயலர் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட வனச்சரக அலுவலர் சச்சின் போஸ்லே கலந்துகொண்டு, மரக்கன்றுகளை நட்டு வைத்து சிறப்புரையாற்றினார். மேலும், மரம் வளர்க்கும் ஆர்வமுள்ள பலருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
 இதுகுறித்து வனச்சரக அலுவலர் கூறுகையில், "முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் மரக்கன்று நடுவதில் ஆர்வமுள்ளவர். அதன்படி, அதிக அளவில் மரக்கன்று நடும்போது, புவி வெப்பமயமாவதைத் தடுக்கலாம்.
 இதற்காக, சுற்றுச்சூழல் ஆர்வலர்களோடு இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் மரக்கன்று நட்டு இயற்கைச் சூழலை பாதுகாக்க வேண்டும். இங்கு வைக்கப்பட்டுள்ள மரக்கன்றுகள் அனைத்தும் வளரும் வரை தொடர்ந்து பராமரிக்கப்படும்' என்றார். இந்த நிகழ்ச்சியில், திரளான தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/15/அப்துல்-கலாம்-பிறந்த-நாள்-மரக்கன்று-நடும்-விழா-3020292.html
3020291 சென்னை காஞ்சிபுரம் மாமல்லபுரத்தில் வீடுகளின் மின் இணைப்பிற்கு தரைவழியாக கேபிள் பதிக்கும் பணி  செங்கல்பட்டு DIN Monday, October 15, 2018 12:31 AM +0530 சென்னை பெருநகர மாநகராட்சியில் உள்ளது போல், மாமல்லபுரத்தில் வீடுகளின் மின் இணைப்பிற்கு தரைவழி கேபிள் பதிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
 மாமல்லபுரத்தில் வீடுகள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின்கம்பங்கள் மூலமாக மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு சென்னை பெருநகர மாநகராட்சியில் உள்ளது போல் மின்கம்பங்களை அகற்றிவிட்டு தரை வழி கேபிள் மூலமாக மின் இணைப்புகள் வழங்க வேண்டும் என்று கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மாவட்ட திட்டக்குழு கூட்டத்தில் அப்போதைய மாவட்ட கவுன்சிலர் லயன் வீராசாமி வலியுறுத்தினார். மேலும் இது தொடர்பாக அப்போதைய மின்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதனிடமும் கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டது. பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அமைப்புகள், மாமல்லபுரம் மின்வாரியம் என தொடர் நடவடிக்கையின் மூலம் திட்டமிப்பீடு தயார் செய்யப்பட்டு தமிழ்நாடு மின் வாரிய நிர்வாகம் மாமல்லபுரத்தில் தரை வழி கேபிள் இணைப்பு வழங்க ஒப்புதல் வழங்கியது.
 இதையடுத்து தற்போது அத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில் மாமல்லபுரம் நகரப்பகுதி முழுவதும் வீடுகள், உணவு விடுதிகள், வணிக நிறுவனங்களுக்கு தரை வழி கேபிள் மூலம் மின் இணைப்பு வழங்க ஆங்காங்கே சாலையோரம் பள்ளங்கள் தோண்டப்பட்டு தரைவழி கேபிள் பதிக்கும் பணி தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணி முடிவடைந்தவுடன் மின்கம்பங்கள் அனைத்தும் அகற்றப்பட்டு, தரைவழி கேபிள் மூலம் மின் இணைப்பு வழங்க மாமல்லபுரம் மின்வாரியம் துரித கதியில் பணிகளை மேற்கொண்டுள்ளது.
 இதுகுறித்து மாமல்லபுரம் மின்வாரிய உதவிப் பொறியாளர் வினோத்குமார் மற்றும் முதல்நிலை முகவர் பழனி ஆகியோர் கூறியது:
 சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கும் மாமல்லபுரத்தில் உள்நாட்டுச்சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில் வந்து செல்கின்றனர். அவர்களின் பாதுகாப்பு கருதியும் நகர மக்களின் பாதுகாப்பு கருதியும் சென்னை பெருநகர மாநராட்சி போலவே தரைவழி மின் இணைப்புக்காக கோரிக்கை விடப்பட்டது.
 தமிழ்நாடு மின்வாரியத்தின் தொடர் நடவடிக்கைக்குப் பிறகு தரைவழி மின்இணைப்பு வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
 இந்த மின் இணைப்புகள் வழங்கும் பணியை பருவமழை வருவதற்குள் விரைந்து முடிக்க முடிவு செய்யப்பட்டது.
 அதன்படி, தரைவழி மின் இணைப்பிற்காக கேபிள் பதிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணியை விரைவில் முடித்துவிடுவோம்.
 மாமல்லபுரத்தில் இருந்து பூஞ்சேரி வரை சாலையோரம் கேபிள் பதிக்கும் பணி நடைபெறுகிறது. இப்பணி முடிந்து அனைத்து பகுதிகளிலும் மின் இணைப்பு வழங்கப்பட்டவுடன் மின்கம்பங்கள் படிப்படியாக அகற்றப்படவுள்ளன.
 இதனால் காற்றுடன் கூடிய பலத்த மழை, புயல் மற்றும் சூறாவளி போன்ற பேரிடர்க் காலங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுந்து ஏற்படும் உயிரிழப்புகள் தவிர்க்கப்படும். இது ஒரு அருமையான திட்டம் என அவர்கள் தெரிவித்தனர்.
 
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/15/மாமல்லபுரத்தில்-வீடுகளின்-மின்-இணைப்பிற்கு-தரைவழியாக-கேபிள்-பதிக்கும்-பணி-3020291.html
3020290 சென்னை காஞ்சிபுரம் ரூ.21 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருள்கள் பறிமுதல்  ஸ்ரீபெரும்புதூர், DIN Monday, October 15, 2018 12:30 AM +0530 ஓசூர் பகுதியில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ.21 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருள்களை ஒரகடம் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
 ஒரகடம் காவல் ஆய்வாளர் நடராஜன் உள்ளிட்ட போலீஸார் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஒரகடம் மேம்பாலம் அருகே வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
 அப்போது, வேகமாக வந்த ஒரு மினிவேனை நிறுத்தி சோதனை செய்தனர். மினிவேனின் ஓட்டுநர் கூறுகையில், அதில் துணிசோப்புகள் உள்ளதாகத் தெரிவித்தார். எனினும், சந்தேகமடைந்த போலீஸார் அந்த மினிவேனை சோதனை செய்தனர். அதில் 18 மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், போதைப் பாக்குகள் உள்ளிட்ட குட்கா பொருள்கள் இருப்பது தெரிய வந்தது.
 இதையடுத்து, மினிவேனின் ஓட்டுநரான ஓசூரை அடுத்த வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த கார்த்திகேயனைத் கைது செய்து ஒரகடம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். இந்த விசாரணையில், ஓசூர் பகுதியில் இருந்து குட்கா பொருள்களை அவர் சென்னைக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
 மேலும் மினிவேன் மற்றும் அதில் கடத்தி வரப்பட்ட 18 மூட்டைகளில் இருந்த 350 கிலோ குட்கா பொருள்களை போலீஸார் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களின் மதிப்பு ரூ.21 லட்சம் என போலீஸார் தெரிவித்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/15/ரூ21-லட்சம்-மதிப்புள்ள-குட்கா-பொருள்கள்-பறிமுதல்-3020290.html
3020289 சென்னை காஞ்சிபுரம் சபரிமலை விவகாரம்: ஐயப்ப பக்தர்கள் பேரணி  ஸ்ரீபெரும்புதூர், DIN Monday, October 15, 2018 12:30 AM +0530 சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஸ்ரீபூதபுரி தர்மதாஸ்தா கோயில் நித்ய அறக்கட்டளை சார்பாக பேரணி நடைபெற்றது.
 அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை வழிபடலாம் என சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
 இத்தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி நாட்டின் பல்வேறு பகுதிகளில் பேரணி மற்றும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
 இதே கோரிக்கையை வலியுறுத்தி ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீபூதபுரி தர்மசாஸ்தா கோயில் நித்ய அறக்கட்டளை சார்பாக ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பேரணி நடைபெற்றது. குருசாமி ஆர்.பாலசுப்பிரமணி தலைமையில் நடைபெற்ற இப்பேரணி, ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோயில் வளாகத்தில் தொடங்கி, காந்தி சாலை, சின்னக்கடை தெரு, திருமங்கை ஆழ்வார் தெரு, தேரடி வழியாக வந்து ஸ்ரீபூதபுரி தர்மதாஸ்தா ஆலயத்தில் முடிவடைந்தது.
 பேரணியில் பல்வேறு ஐயப்பா சேவா சங்க நிர்வாகிகள், இந்து அமைப்பினர், பாஜகவினர், பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு ஸ்ரீபூதபுரி தர்மசாஸ்தா கோயில் நித்ய அறக்கட்டளை சார்பாக அன்னதானம் செய்யப்பட்டதோடு, மோரும் வழங்கப்பட்டது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/15/சபரிமலை-விவகாரம்-ஐயப்ப-பக்தர்கள்-பேரணி-3020289.html
3020287 சென்னை காஞ்சிபுரம் உத்தரமேரூரில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை  காஞ்சிபுரம், DIN Monday, October 15, 2018 12:29 AM +0530 உத்தரமேரூரில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
 காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் உத்திரமேரூர் ஒன்றியம், ஆனைப்பள்ளம், அகரந்தூளி , பெருங்கோழி, கம்மாளம்பூண்டி, அபி சத்திரம் பகுதியைச் சேர்ந்த கட்சியினருக்கான ஆலோசனைக் கூட்டம் உத்தரமேரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்து. இதில், காஞ்சிபுரம் மேற்கு மாவட்டச் செயலர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை வகித்தார். காஞ்சிபுரம் எம்.பி. மரகதம் குமரவேல், அமைப்புச் செயலர்கள் வி.சோமசுந்தரம், மைதிலி, முன்னாள் எம்.பி. பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 மாவட்ட அவைத் தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியச் செயலர் பிரகாஷ்பாபு ஆகியோர் வரவேற்றனர். இக்கூட்டத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் சிறப்பாகச் செயல்படவேண்டும். அப்போது, அரசின் சாதனைத் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் உத்தரமேரூர் அதிமுக நிர்வாகிகள் தங்கபஞ்சாட்சரம், ரேவதி, பழனி, மாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/15/உத்தரமேரூரில்-அதிமுக-நிர்வாகிகள்-ஆலோசனை-3020287.html
3020286 சென்னை காஞ்சிபுரம் மாகரல் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம்  காஞ்சிபுரம், DIN Monday, October 15, 2018 12:29 AM +0530 மாகரல் கிராமத்தில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 காஞ்சிபுரம் அடுத்த மாகரல் கிராமத்தில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதனை, மீனாட்சி நிகர்நிலை பல்கலைக்கழகம், தமிழக அரசின் இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், காஞ்சி மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோல்டு பார்க் அரிமா சங்கம் ஆகியவை சார்பில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. முகாமில், மீனாட்சி மருத்துவக் கல்லூரி டீன் கோபிநாதன் தலைமை வகித்து, தொடங்கி வைத்தார்.
 மூத்த மருத்துவர் பக்தா ரெட்டி, மருத்துவர்கள் சுப்பரமணியன், நிரஞ்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் உஷாராணி, மருத்துவப் பதிவேடு அலுவலர்கள் வெங்கடேசன், பிரதீப் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். இதில், மாகரல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 547 பேர் சிகிச்சை பெற்றனர்.
 அவர்களுக்கு, சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு இருதய நோய், சிறுநீரக நோய், எலும்பு, காது, மூக்கு, தொண்டை, பெண்கள் சிறப்புப் பிரிவு, கண் மருத்துவம், பொது மருத்துவம் குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை இசிஜி, எக்ஸ்ரே உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பெற்றவர்களுக்கு இலவசமாக மருந்துப் பொருள்கள் வழங்கப்பட்டன.
 அதோடு, தமிழக அரசின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 22 பேர் மேல்சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். இந்த முகாமில், மருத்துவர்கள், செவிலியர், திரளான கிராமத்தினர் கலந்துகொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/15/மாகரல்-கிராமத்தில்-இலவச-மருத்துவ-முகாம்-3020286.html
3020285 சென்னை காஞ்சிபுரம் செவிலிமேடு, ஓரிக்கை பகுதிகளில் வருவாய் நிர்வாக ஆணையர் டெங்கு ஆய்வு  காஞ்சிபுரம் DIN Monday, October 15, 2018 12:28 AM +0530 செவிலிமேடு, ஓரிக்கை பகுதிகளில் டெங்கு ஆதாரங்களை அழிக்கும் ஆய்வினை வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டார்.
 காஞ்சிபுரம் நகராட்சிப் பகுதிகளில் தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால், மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா ஆகியோர் டெங்கு கொசு உற்பத்திக்கான ஆதாரங்களை அழிப்பதற்கான ஆய்வினை மேற்கொண்டனர். அப்போது, காஞ்சிபுரத்தை அடுத்த செவிலிமேடு தனியார் சிமெண்ட் நிறுவனம், ஓரிக்கை போக்குவரத்துக் கழக பணிமனை, டாஸ்மாக் கிடங்கு ஆகிய பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து, டெங்கு கொசுக்களின் உற்பத்திக்கு காரணமான பொருள்களில் லார்வா உற்பத்தியாகியுள்ளதா? என சத்தியகோபால் பார்வையிட்டார். அதோடு, கொசுப்புழுக்கள் உற்பத்திக்கு காரணமான தேங்காய் ஓடு, நெகிழி கப்புகள் உள்ளிட்ட பொருள்களை முறையாக அந்தந்த பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தி கொசுக்கள் உற்பத்தியாகாகவாறு பார்த்துக் கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
 அதைத் தொடர்ந்து, புஞ்சை அரசாந்தாங்கல், காலூர், முத்தியால்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு சென்று, புதிய முறைப்படி நடப்பட்டு, வளரும் பழமரக்கன்றுகளை அவர் பார்வையிட்டார். அப்போது, தேக்கு மரங்களும், மயில்கொன்றை மரங்களும் சாதாரண முறைப்படி வளர்க்கும் முறையை விட வேகமாக புதிய முறையில் வளர்வதைக் கண்டு, இதே போன்று மரக்கன்றுகளை நடுவதற்கு மரக்கன்று நடுவோர்களிடம் எடுத்துரைத்தார். அதோடு, மரக்கன்று நடும் நாள் உள்ளிட்ட விவரங்களுடன் பலகை வைத்து மரக்கன்று நட்டு பராமரிக்க அறிவுறுத்தினார்.
 இந்த ஆய்வில், மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ஜெயக்குமார், வருவாய் கோட்ட அலுவலர் ராஜு, சுகாதார துணை இயக்குநர் டாக்டர் செந்தில்குமார், நகராட்சி ஆணையர் சர்தார், பொறியாளற் மகேந்திரன், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 தாம்பரம் கோட்டத்தில்...
 தாம்பரம் கோட்டப் பகுதிகளில் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்புப் பணிகளை வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
 காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் கோட்டத்துக்குட்பட்ட ஒரத்தூர் ஏரி ஆரம்ப எல்லையில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக, ஒரத்தூர் ஏரி, ஆரம்பாக்கம் ஏரிப் பகுதிகளில் அரசுக்கு சொந்தமான இடங்களை ஒருங்கிணைத்து புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக, முதல்கட்டமாக ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் கரை அமைக்கும் பணி, ஏற்கெனவே இருக்கும் அணைக்கட்டை ரூ.4.5 கோடியில் அமனம்பாக்கம் படப்பை ஏரிக்கு நீர் செல்வதற்கு கால்வாய் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை, வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால், ஆட்சியர் பா.பொன்னையா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து, ரூ.70 லட்சத்தில் ஆதனூர் ஏரிக்கு வரத்து கால்வாயிலும், உபரி நீர் அடையாறு ஆற்றுக்கு செல்லும் வகையில் வெள்ள வடிநீர் கதவணைகள் அமைக்கும் பணி, ரூ.8.5 கோடியில் ஆதனூரில் 760 மீ நீளத்துக்கு மூடு கால்வாய் அமைக்கும் பணி, வண்டலூர் - வாலாஜா சாலையில் புதிய பாலம், வெளிவட்டச் சாலை சிறுபாலம், ரூ.20 கோடியில் நடைபெறும் பாப்பான் கால்வாயையொட்டி தர்கா சாலையில் மூடு கால்வாய் அமைக்கும் பணி ஆகியவற்றை வருவாய் நிர்வாக ஆணையர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
 ஒரத்தூர் ஏரி, ஆரம்பாக்கம் ஏரியை இணைத்து புதிய நீர்த்தேக்கம் அமைப்பட்டு வருகிறது. இதன்மூலம், 0.3 டிஎம்சி முதல் 0.5 டிஎம்சி நீரை கூடுதலாகச் சேமிக்க முடியும். அதோடு, ஆதனூரில் புதிய வெள்ள வடிநீர்க் கதவணைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம், கடந்த 2015ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 17 நகர்ப்பகுதிகளும், வருங்காலத்தில் பாதிக்கப்படாது. மேலும், உபரி நீர் கடலில் வீணாவதும் தடுக்கப்படும்.
 முடிச்சூர் சாலையில் மழைக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் வகையில் மூடு கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் தாமதமானாலும், வரும் பருவமழைக் காலங்களில் மழைநீர் வடிவதற்கு எவ்வித தடங்கலும் ஏற்படாது. அதோடு, பணிகளும் பாதிப்பு ஏற்படாமல் தொடர்ந்து நடைபெறும் என்றார் அவர்.
 இந்த ஆய்வில், மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ஜெயக்குமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தியாகராஜன், உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவிப்பொறியாளர் குகராஜ் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/15/செவிலிமேடு-ஓரிக்கை-பகுதிகளில்-வருவாய்-நிர்வாக-ஆணையர்-டெங்கு-ஆய்வு-3020285.html
3019676 சென்னை காஞ்சிபுரம் கணினி அறிவியல் தேசியக் கருத்தரங்கு  காஞ்சிபுரம், DIN Sunday, October 14, 2018 12:27 AM +0530 சங்கரா பல்கலைக்கழக கணினி அறிவியில் துறை சார்பில் தேசியக் கருத்தரங்கு நடைபெற்றது.
 காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூரில் உள்ள சங்கரா பல்கலைக்கழகம் - கணினி அறிவியல் பயன்பாட்டுத் துறை சார்பில் தேசிய அளவிலான "எலைட்-2018' தொழில்நுட்பக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கை, பல்கலைக்கழக பதிவாளர் ஸ்ரீனிவாசு, பல்கலைக்கழக டீன் எஸ்.பாலாஜி ஆகியோர் தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினர். துறைத் தலைவர் ராஜலட்சுமி வரவேற்றார். தொடர்ந்து, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிடிஎஸ் நிறுவன நிர்வாகி எம்.எஸ்.ராகேஷ் சிறப்புரையாற்றினார். அதோடு, தற்போது வளர்ந்துவரும் தொழில்நுட்பக் கல்வித் துறை குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். நிறைவாக, விஐடி பல்கலைக்கழக பேராசிரியர் எம்.பிரசன்னா மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். இக்கருத்தரங்கை, மாணவர்கள் பிரசாந்த், குணசேகர், தனசேகர், யுவஸ்ரீ, அஸ்வதி உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர். துறை ஒருங்கிணைப்பாளர் கண்ணன் நன்றியுரையாற்றினார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/14/கணினி-அறிவியல்-தேசியக்-கருத்தரங்கு-3019676.html
3019675 சென்னை காஞ்சிபுரம் மேல்நிலைத் தொட்டியில் பறவை விழுந்ததால் குடிநீரில் துர்நாற்றம்  மதுராந்தகம், DIN Sunday, October 14, 2018 12:27 AM +0530 கடமலைப்புத்தூர் ஊராட்சிக்கு உள்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் பறவை விழுந்து இறந்ததால் அதில் இருந்து குழாய் மூலம் வரும் குடிநீரில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், கடமலைப்புத்தூர் ஊராட்சி, 4-ஆவது வார்டு, மாரியம்மன் கோயில் தெருவில் சுமார் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. இத்தொட்டியில் கடந்த 4 தினங்களுக்கு முன் ஒரு பறவை தவறி விழுந்து இறந்தது. இதனை யாரும் கவனிக்கவில்லை.
 இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று குடிநீரை தொட்டியில் பிடித்த அப்பகுதியைச் சேர்ந்த பெண் தண்ணீரில் இறந்த பறவையின் இறகுகள் மிதந்ததைக் கண்டார். குடிநீரில் துர்நாற்றம் வீசியதையும் உணர்ந்தார்.
 இதுபற்றி அப்பகுதி சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் சார்லஸிடம் புகார் கூறினர். இதுபற்றி அவர் எந்த நடவடிக்கையும் எடுக்காமலும், மக்களின் உடல் நலத்தைக் கண்டுகொள்ளாமலும் மெத்தனமாக இருந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குறை கூறுகின்றனர்.
 இதனிடையே, அப்பகுதி இளைஞர்கள் சிலர் குடிநீர்த் தொட்டியில் இறந்த பறவையின் உடலை வெளியே எடுத்தனர். எனினும், தொட்டியில் இருந்த நீரைக் குடித்த ஒரு சிலருக்கு வாந்தி போன்ற உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இந்த குடிநீர்த் தொட்டியை சுத்தம் செய்து, அதில் உள்ள குடிநீரை அகற்றி, புதிய குடிநீரை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/14/மேல்நிலைத்-தொட்டியில்-பறவை-விழுந்ததால்-குடிநீரில்-துர்நாற்றம்-3019675.html
3019674 சென்னை காஞ்சிபுரம் "தாமிரவருணி மகிமை': நூல் வெளியீட்டு விழா  காஞ்சிபுரம், DIN Sunday, October 14, 2018 12:26 AM +0530 "தாமிரவருணி மகிமை' எனும் நூலை காஞ்சி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சனிக்கிழமை வெளியிட்டார்.
 நிகழாண்டு நெல்லை தாமிரவருணியில் நடைபெற்று வரும் புஷ்கரத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி, "தாமிரவருணி மகிமை' என்ற தலைப்பிலான நூல் வெளியீட்டு நிகழ்ச்சி காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
 இதில், சங்கர மட பீடாதிபதி விஜயேந்திரர் கலந்துகொண்டு அந்த நூலை வெளியிட்டார். வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் பாலச்சந்திரன், ஆடிட்டர் சுபஸ்ரீ ஸ்ரீதர், அல்லயன்ஸ் பதிப்பகத்தின் உரிமையாளர் சீனிவாசன் ஆகியோருக்கு பிரதிகளை அளித்து, விஜயேந்திரர் அருளாசி வழங்கினார்.
 பி.என்.பரசுராமன் எழுதியுள்ள இந்த நூலில், தாமிரவருணி நதி உருவான வரலாறு, அதன் கரையில் உள்ள திருத்தலங்கள் உள்ளிட்ட தகவல்கள் அடங்கியுள்ளன. நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் திரளானோர் கலந்து கொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/14/தாமிரவருணி-மகிமை-நூல்-வெளியீட்டு-விழா-3019674.html
3019673 சென்னை காஞ்சிபுரம் டெங்கு கொசு உற்பத்திக்கான ஆதாரங்களை அக்.24-க்குள் அழிக்க வேண்டும்: ஆட்சியருக்கு வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவு  காஞ்சிபுரம், DIN Sunday, October 14, 2018 12:26 AM +0530 மாவட்டம் முழுவதும் உள்ள டெங்கு கொசுக்களின் உற்பத்தி ஆதாரங்களை வரும் 24-ஆம் தேதிக்குள் அழிக்க வேண்டும் என ஆட்சியருக்கு வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் உத்தரவிட்டுள்ளார்.
 காஞ்சிபுரம் மாவட்டத்தில் டெங்கு தடுப்பு, வடகிழக்குப் பருவமழை தொடர்பான முன்னேற்பாடு குறித்த ஆய்வுக் கூட்டம் பொதுமக்கள் நல்லுறவு மையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்தியகோபால் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா முன்னிலை வகித்தார். இதில், டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் செயல்பாடு, விழிப்புணர்வு குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் ஆய்வு மேற்கொண்டார். அதோடு, டெங்கு பரவாமல் தடுக்கும் வகையில், கொசு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தினார். தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
 தமிழக முதல்வர் தலைமையில் அண்மையில் டெங்கு, வடகிழக்குப் பருவமழை தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை பருவமழைக்கு முன்னதாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அதன்பேரில், கடந்த ஆண்டின் அனுபவத்தின் வாயிலாக, டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் காணொலி மூலம் ஆய்வு நடத்தினோம். அதன்பேரில், கூடுதலாக காய்ச்சல் பாதிப்பு இருக்கும் மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தி தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்.
 சுகாதாரத்துறை சார்பில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், தற்போது மாவட்டங்களில் வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, பள்ளிக் கல்வித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. டெங்கு கொசு உற்பத்தியாவதைத் தடுக்க 300 வீடுகளுக்கு ஒருவர் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர். அதோடு, வடகிழக்குப் பருவமழை குறித்து முதல் தகவல் அளிப்போராக 30, 679 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்கள் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
 மேலும், மகளிர் சுய உதவிக் குழுக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்படுவதோடு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், மாவட்டத்திலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள், செவிலியர் பயிற்சிக் கல்லூரிகளும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு, குறிப்பிட்ட பகுதிகளைக் கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 மாவட்ட ஆட்சியர் தலை மையில் வரும் 24-ஆம் தேதிக்குள் வீடுகள், வணிக நிறுவனங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் டெங்கு கொசு உற்பத்தியாவதற்கான ஆதாரங்களை அழிக்க வேண்டும். அதன் பிறகு, டெங்கு கொசு உற்பத்தியாகக் காரணமாக இருக்கும் வீடுகள், தனியார் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றார் அவர்.
 இதைத் தொடர்ந்து, கூடுதல் தலைமைச் செயலர், சுகாதாரத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த டெங்கு விழிப்புணர்வுக் கண்காட்சியை பார்வையிட்டார்.
 இதில், மாவட்ட வருவாய் அலுவலர் என்.சுந்தரமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், சுகாதாரத் துறை இணை இயக்குநர் ஜீவா, மகளிர் திட்ட அலுவலர் சீனிவாச ராவ், அரசுத்துறை அலுவலர்கள் என திரளானோர் கலந்துகொண்டனர்.
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/14/டெங்கு-கொசு-உற்பத்திக்கான-ஆதாரங்களை-அக்24-க்குள்-அழிக்க-வேண்டும்-ஆட்சியருக்கு-வருவாய்-நிர்வாக-ஆணைய-3019673.html
3019672 சென்னை காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிப்பு இல்லாத கழிப்பறைகள்  ஸ்ரீபெரும்புதூர், DIN Sunday, October 14, 2018 12:26 AM +0530 ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள கழிப்பறைகள் முறையாக பராமரிப்பு செய்யப்படாததால் துர்நாற்றம் வீசி வருவதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 இந்த வட்டாசியர் அலுவலகத்திற்கு பல்வேறு கோரிக்கைகளுக்காக தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இங்கு பொதுமக்களின் பயன்பாட்டுக்காக மூன்று கழிப்பறைகள் உள்ளன. இவை முறையாக பராமரிக்கப்படாததால் துர்நாற்றம் வீசி வருகிறது. இதன் காரணமாக, இந்த கழிப்பறைகளை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
 இதனால் இயற்கை உபாதைகளைக் கழிக்க பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே இந்தக் கழிப்பறைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/14/வட்டாட்சியர்-அலுவலகத்தில்-பராமரிப்பு-இல்லாத-கழிப்பறைகள்-3019672.html
3019671 சென்னை காஞ்சிபுரம் இளைஞர் கொலை வழக்கு: 5 பேர் கைது  செங்கல்பட்டு, DIN Sunday, October 14, 2018 12:25 AM +0530 மாமல்லபுரம் அருகே இளைஞர் ஒருவரின் முகம் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்த வழக்கில் துப்பு துலங்கியுள்ளது. தனது இரண்டாவது மனைவி தன்னை பாலியல் புகாரில் சிறைக்கு அனுப்பியதால் ஆத்திரமடைந்த மோகன்ராஜ் என்பவர், மனைவியின் தம்பியைக் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இவ்வழக்கில் 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
 மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலையையொட்டி திருவிடந்தை சாலையோரத்தில் சில தினங்களுக்கு முன் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் ஒரு இளைஞர் கொலையுண்டு கிடந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியாத நிலையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில், அவர் கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியைச் சேர்ந்த அருண்பிரகாஷ் (24) என்பது தெரிய வந்தது. அவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததும் தெரிய வந்தது.
 இந்தக் கொலை வழக்கை விசாரிக்க மாமல்லபுரம் டிஎஸ்பி சுப்புராஜ் மேற்பார்வையில் மாமல்லபுரம் காவல் ஆய்வாளர் ரவிக்குமார், தாழம்பூர் காவல் ஆய்வாளர் ராஜாங்கம், துணை ஆய்வாளர் திருநாவுக்கரசு ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் புதுச்சேரி, நெய்வேலி ஆகிய இடங்களில் இக்கொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளை தேடிவந்தனர்.
 இந்நிலையில், கொலையில் தொடர்புடைய 5 பேரில் 4 பேர் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மேலும் ஒருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பகுதியில் மடக்கிப் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ஜெயராமன் என்ற அந்த நபர் போலீஸாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது:
 கொலை செய்யப்பட்ட அருண்பிரகாஷின் பெரியம்மா மகள் இந்திரா என்கிற சுந்தரவல்லி தன் கணவரை பிரிந்து புதுச்சேரியை அடுத்த ரெட்டியார்பாளையத்தில் வசித்து வருகிறார். அவருக்கு நிவேதா (13) அபிநயா (14) என்ற இரு மகள்கள் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவரை இந்திரா 2-ஆவது திருமணம் செய்து கொண்டார். மோகன்ராஜுக்கு ஏற்கெனவே திருமணமாகி ஜூலி என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர்.
 எனினும், மோகன்ராஜ் அதே பகுதியில் உள்ள தனது வீட்டிற்குப் போகாமல் இந்திராவுடன் தங்கி குடும்பம் நடத்தி வந்தார். இதனிடையே, இந்திரா வெளியே செல்லும் நேரங்களில் அவரது மகள்களான நிவேதாவுக்கும், அபிநயாவுக்கும் மோகன்ராஜ் பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இதை அறிந்த இந்திரா இது தொடர்பாக மோகன்ராஜ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் அவரைக் கைது செய்து காலாப்பேட்டை சிறையில் அடைத்தனர்.
 அதன் பின் ஒரு மாதம் கழித்து சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த மோகன்ராஜ் தன்னை சிறைக்கு அனுப்ப இந்திராவுக்கு உறுதுணையாக இருந்த அவரது தம்பி அருண்பிரகாஷை தீர்த்துக் கட்ட சதித்திட்டம் தீட்டினார். அதன்படி, புதுச்சேரியில் இருந்த தனது நண்பர்கள் சிவசங்கரன்(27), மதியரசன் (24), முகிலன் (23), ஜெயராமன் (26) ஆகியோருடன் சில தினங்களுக்கு முன் அவர் காரில் மாமல்லபுரத்திற்கு வந்தார். அருகில் உள்ள கோவளம் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து அவர்கள் தங்கினர்.
 அதன் பிறகு கோவளத்தில் இருந்து மோகன்ராஜ் செல்லிடப்பேசியில் அருண்பிரகாஷைத் தொடர்புகொண்டு, மது அருந்த அழைத்தார். தாம் வண்டலூரில் காத்திருப்பதாக அருண்பிரகாஷ் கூறியதையடுத்து மதியரசன் தனது காரில் வண்டலூர் சென்று அவரை அழைத்து வந்தார். கோவளம் அருகில் உள்ள திருவிடந்தை சவுக்குத் தோப்பில் அருண்பிரகாஷ், மோகன்ராஜ், சிவசங்கரன், முகிலன், ஜெயராமன், மதியரசன்ஆகியோர் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர். போதை தலைக்கேறியதும் அருண்பிரகாஷின் காலை மோகன்ராஜ், முகிலன்ஆகியோரும், அவரது கைகளை ஜெயராமனும் முகிலனும் பிடித்துக் கொண்டனர். சிவசங்கரனும், மோகன்ராஜும் அருண்பிரகாஷின் தலையில் கல்லைப் போட்டு முகத்தை சிதைத்து கொலை செய்து விட்டு அனைவரும் காரில் ஏறித் தப்பி விட்டனர்.
 இந்நிலையில், வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட ஜெயராமனிடம் போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளது. இதற்கிடையில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த மோகன்ராஜ், சிவசங்கரன், முகிலன், மதியரசன் ஆகிய 4 பேரும் வியாழக்கிழமை விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அடுத்தகட்டமாக சரணடைந்த 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க மாமல்லபுரம் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
 
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/14/இளைஞர்-கொலை-வழக்கு-5-பேர்-கைது-3019671.html
3019670 சென்னை காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம் அருகே விபத்து: இருவர் சாவு  ஸ்ரீபெரும்புதூர், DIN Sunday, October 14, 2018 12:25 AM +0530 சுங்குவார்சத்திரம் அருகே சனிக்கிழமை இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோ மீது மினிவேன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
 சுங்குவார்சத்திரம் பகுதியில் இருந்து பிள்ளைச்சத்திரம் நோக்கி ஷேர் ஆட்டோ ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சனிக்கிழமை சென்று கொண்டிருந்தது. இதில் சந்தவேலூர் இ.பி. காலனியில் பயணிகளை இறக்குவதற்காக சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக ஆட்டோவை அதன் ஓட்டுநர் நிறுத்தினார். அதன் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் தங்கள் வாகனத்தை அந்த ஆட்டோவின் பின்னால் நிறுத்தினர்.
 அப்போது சென்னையில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி மீன்களை ஏற்றியபடி சென்று கொண்டிருந்த ஒரு மினிவேன் அந்த இருசக்கர வாகனம் மற்றும் ஷேர் ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஷேர் ஆட்டோவில் இருந்து இறங்கிக் கொண்டிருந்த சந்தவேலூர் இ.பி.காலனி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன்(60), இருசக்கர வாகனத்தில் வந்த சேலம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த வினோத்(28) ஆகியோர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர். பைக்கில் வந்த சந்தோஷ் படுகாயடைந்தார்.
 இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சுங்குவார்சத்திரம் போலீஸார், காயமடைந்த சந்தோஷை சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்த கிருஷ்ணன் மற்றும் வினோத் ஆகியோரின் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இவ்விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/14/சுங்குவார்சத்திரம்-அருகே-விபத்து-இருவர்-சாவு-3019670.html
3019669 சென்னை காஞ்சிபுரம் கல்லூரியில் காட்சித் தொடர்பியல் படைப்புத் திறன் போட்டிகள்  செங்கல்பட்டு DIN Sunday, October 14, 2018 12:24 AM +0530 கேளம்பாக்கத்தை அடுத்த படூரில் உள்ள பேராசிரியர் தனபாலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காட்சித் தொடர்பியல் (விஸ்காம்) துறை சார்பில் "லைம்லைட்-2018' என்ற தலைப்பில் காட்சித் தொடர்பியல் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
 இந்த நிகழ்ச்சிக்கு, கல்லூரியின் செயலர் புகழேந்தி தனபாலன் தலைமை வகித்தார். திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், சென்னை நுண்கலைக் கல்லூரியின் முதல்வர் விஜயகுமார், புணே தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த சுதிர் சர்மா, பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் அதிகாரி சோனியா மன்சந்தா ஆகியோர் நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்துப் பேசினர். இயக்குநர் ஸ்ரீதேவி புகழேந்தி வரவேற்றார்.
 இதில், புகைப்படம், ஓவியம், குறும்படப் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் சென்னை, மதுரை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 27 கல்லூரிகள், 8 பல்கலைக்கழங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
 மாணவர்கள் பல்வேறு அரிய வகை புகைப்படங்கள், சமூக அவலங்கள் உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் குறித்த ஓவியங்கள், படித்த மாணவர்களின் கனவு, புகைக்கு எதிரான கருத்துகள் கொண்ட குறும்படம் உள்ளிட்டவற்றை அளித்தனர். அவற்றில் சிறந்தவற்றை சிறப்பு அழைப்பாளர்கள் தேர்ந்தெடுத்தனர். சிறந்த புகைப்படம் மற்றும் ஓவியங்களை அரசு கலைக் கல்லூரி முதல்வர் விஜயகுமார் நடுவராக இருந்து தேர்வு செய்தார். போட்டிகளில் வென்றவர்களுக்கும், குழுக்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/14/கல்லூரியில்-காட்சித்-தொடர்பியல்-படைப்புத்-திறன்-போட்டிகள்-3019669.html
3019668 சென்னை காஞ்சிபுரம் காஞ்சிபுரம் கோயில்களில் நவராத்திரி விழா விமரிசை  காஞ்சிபுரம், DIN Sunday, October 14, 2018 12:24 AM +0530 காஞ்சிபுரத்திலுள்ள பல்வேறு கோயில்களில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் திரளானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
 காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோயிலில் சாரதா நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி, காமாட்சியம்மன் கோயில் கொலுமண்டபத்தில் நாள்தோறும் மாலை வேளையில் சங்கர மடத்தின் ஆஸ்தான வித்வான்கள், பிரபல சங்கீதக் கலைஞர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
 அதேபோல், ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள படவேட்டம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதையொட்டி, நாள்தோறும் படவேட்டம்மன் பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். விழாவின் 5ஆவது நாளையொட்டி படவேட்டம்மன் புற்றுத் தோற்றத்தில் எழுந்தருளினார். அதேபோல், ரேணுகாம்பாள் கோயிலில் விஷ்ணு துர்கை அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார்.
 காஞ்சிபுரம் நாகலுத்து தெருவில் உள்ள தும்பவனத்தம்மன் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி, ரூ.1 லட்சம் மதிப்பிலான புதிய ரூ.1, ரூ.5, ரூ.10 சில்லறைக் காசுகளில் மாலையாகவும், ரூ. ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.500 என்று புதிய ரூபாய் நோட்டுகளைக் கோர்த்து பணமாலையாகவும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், அனைத்து அம்மன்களுக்கும் நாள்தோறும் சிறப்பு அலங்காரம், தீபாராதனை, பூஜைகள் நடத்தப்பட்டு, விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கோயில்களுக்கு வரும் திரளான பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப்படுவதோடு பிரசாதமும் வழங்கப்படுகிறது. அம்மன் கோயில்களில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/14/காஞ்சிபுரம்-கோயில்களில்-நவராத்திரி-விழா-விமரிசை-3019668.html
3019667 சென்னை காஞ்சிபுரம் பள்ளியில் கொலு கண்காட்சி  மதுராந்தகம், DIN Sunday, October 14, 2018 12:24 AM +0530 மதுராந்தகம் விவேகானந்தா வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி வளாகத்தில் நவராத்திரி விழாவையொட்டி பள்ளி ஆசிரியைகளால் அமைக்கப்பட்ட கொலுக் கண்காட்சியை பள்ளிக் குழந்தைகள் பார்வையிட்டனர்.
 விவேகானந்தா பள்ளிக் குழுமங்களின் சார்பாக இயங்கி வரும் பள்ளிகளின் சார்பாக, விவேகானந்தா வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி வளாகத்தில் நவராத்திரி விழாவையொட்டி கொலு கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் சுவாமி பொம்மைகள், ஆன்மிக நூல்கள், இயற்கை வளத்தைக் காட்சிப்படுத்தும் பொம்மைகள், உலக உருண்டையை வலம் வரும் கால்நடைகள், பல்வகைப் பறவைகள், பல்வேறு பொம்மைகளின் விளையாட்டுகள் உள்ளிட்டவை அழகாக காட்சிப் பொருள்களாக வைக்கப்பட்டுள்ளன.
 இந்தக் கொலு கண்காட்சியை பள்ளியின் தாளாளர் டி.லோகராஜ் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். வரும் 18ஆம் தேதி (வியாழக்கிழமை) வரை கொலு கண்காட்சி நடைபெற உள்ளது. இக்கண்காட்சியைப் பார்வையிட வரும் பள்ளிக் குழந்தைகள், பெற்றோர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு சுண்டல், இனிப்பு வகைகள் ஆகியவை பிரசாதமாக வழங்கப்படுகின்றன. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் திலகவதி தலைமையில் பள்ளி ஆசிரியைகள் செய்துள்ளனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/14/பள்ளியில்-கொலு-கண்காட்சி-3019667.html
3019666 சென்னை காஞ்சிபுரம் கல்யாண சீனிவாசப் பெருமாளுக்கு அன்னக்கூட உற்சவம்  ஸ்ரீபெரும்புதூர், DIN Sunday, October 14, 2018 12:23 AM +0530 புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு மாகாண்யம் கல்யாண சீனிவாசப் பெருமாளுக்கு அன்னக்கூட உற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது.
 ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மகாண்யம் கிராமத்தில் கல்யாண சீனிவாசப் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாளுக்கு அன்னக்கூட உற்சவமும், அகண்ட தீபம் ஏற்றப்பட்டு கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெற்றது. இதில் புரட்டாசி மாதம் மாலை அணிந்து விரதமிருந்த பக்தர்கள் அகண்ட தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர். முரளிதர சுவாமிகள், கோயிலிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கினார்.
 இதையடுத்து, அவரது சீடர் பம்மல் பாலாஜி தலைமையில் கூட்டுப் பிரார்த்தனை நடத்தப்பட்டது. ஏராளமான நிவேதனப் பொருள்கள் கல்யாண சீனிவாசப் பெருமாளுக்கு அன்னக்கூடமாக சமர்ப்பிக்கப்பட்டு உலகம் முழுவதும் வாழும் உயிரினங்களுக்காக கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. இந்த உற்சவத்தில், கன்னியாகுமரி, விருதுநகர், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், வள்ளியூர், தேனி, பெரியகுளம், குடியாத்தம், வேலூர், ஆரணி உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கல்யாண சீனிவாசப் பெருமாளைவழிபட்டனர்.
 இதனிடையே, ஸ்ரீபெரும்புதூர், சிங்கப்பெருமாள்கோவிலை அடுத்த தென்மேல்பாக்கம், குன்றத்தூரை அடுத்த கௌத்திபேட்டை ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக கல்யாண சீனிவாசப் பெருமாளுக்கு கோயிலுக்கு வந்தனர். அவ்வாறு வந்த சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் குன்றத்தூர் ஒன்றியச் செயலாளர் மலைப்பட்டு பி.ராதாகிருஷ்ணன் மற்றும் விழாக் குழுவினர் சார்பாக அன்னதானம் செய்யப்பட்டது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/14/கல்யாண-சீனிவாசப்-பெருமாளுக்கு-அன்னக்கூட-உற்சவம்-3019666.html
3019665 சென்னை காஞ்சிபுரம் காஞ்சிபுரத்திலிருந்து வெளியூர்களுக்கு புதிய பேருந்துகள்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்  காஞ்சிபுரம், DIN Sunday, October 14, 2018 12:23 AM +0530 காஞ்சிபுரத்திலிருந்து புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு புதிய பேருந்துகளை ஆட்சியர் பா.பொன்னையா தொடங்கி வைத்தார்.
 தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் கோட்டத்துக்குட்பட்ட புதிய பேருந்துகளின் இயக்கத்தை அவர் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி வைத்தார். காஞ்சிபுரத்திலிருந்து புதுச்சேரிக்கும், மதுரைக்கும் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி, விழுப்புரம் கோட்டத்துக்கு புதிய பேருந்துகளை இயக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டார். அதன்பேரில், காஞ்சிபுரத்திலிருந்து மதுரை, சென்னை, புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு புதிய பேருந்துகளின் தொடங்கியுள்ளது.
 இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் எம்.பி. மரகதம் குமரவேல், எம்எல்ஏ எழிலரசன், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனி, முன்னாள் எம்எல்ஏ-க்கள் வாலாஜாபாத் பா.கணேசன், சோமசுந்தரம், மைதிலி, முன்னாள் எம்.பி. பன்னீர்செல்வம், அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/14/காஞ்சிபுரத்திலிருந்து-வெளியூர்களுக்கு-புதிய-பேருந்துகள்-ஆட்சியர்-தொடங்கி-வைத்தார்-3019665.html
3018584 சென்னை காஞ்சிபுரம் உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடுகள் : மாநிலத் தேர்தல் ஆணையர் நேரில் ஆய்வு DIN DIN Friday, October 12, 2018 03:39 AM +0530
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாநிலத் தேர்தல் ஆணையர் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார். 
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து அனைத்து மாவட்டங்களிலும் மாநில தேர்தல் ஆணையர் எம்.மாலிக் ஃபெரோஸ்கான் ஆய்வு நடத்தி வருகிறார். அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வணிக வரி இருப்பறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள், ஆவணங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பின், நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்புக் கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களையும், கட்டுப்பாட்டு இயந்திரங்களையும் பார்வையிட்டார். 
நகராட்சி, பேரூராட்சிகளுக்கான வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாக்குப்பதிவு, கட்டுப்பாடு இயந்திரங்களில் உரிய எண்ணிக்கையில் உள்ளதா என்பதை துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். அதோடு, இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ள கிடங்குப் பாதுகாப்பு, அங்கு பொருத்தப்பட்டிருந்த தீயணைப்பான் கருவிகள் முறையாகப் பராமரிக்கப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனவா? என்பதைப் பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து, உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ள வாக்குப் பெட்டிகள், வாக்குச் சாவடிகளுக்கான பொருள்களை அவர் பார்வையிட்டார். வாக்குப் பெட்டிகள் வாக்குச்சாவடிகளுக்கு உரிய எண்ணிக்கையில் உள்ளனவா? எனக் கேட்டறிந்து தேவையான அனைத்து பொருள்களையும் தயார்நிலையில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தினார். 
மேலும், தேர்தலுக்கான சட்டமுறைப் படிவங்கள், சட்டமுறையற்ற படிவங்கள், தேர்தலுக்கான வாக்குச் சாவடிப் பொருள்கள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். தேவைக்கு அதிகமான படிவங்கள் மற்றும் பொருள்கள் இருந்தால் மிகுதியாக உள்ள பொருள்களை தேவைப்படும் பிற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுப்பி வைக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், தேர்தல் ஆணைய உதவி இயக்குநர் (மறுவரையறை) ஏ.கே.சம்பத்குமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஆனந்தன், நேர்முக உதவியாளர் (தேர்தல்) கிருஷ்ணமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/12/w600X390/election.JPG http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/12/உள்ளாட்சித்-தேர்தல்-முன்னேற்பாடுகள்--மாநிலத்-தேர்தல்-ஆணையர்-நேரில்-ஆய்வு-3018584.html
3018583 சென்னை காஞ்சிபுரம் அடிமைகளாக நடத்தப்பட்ட 7 கூலித் தொழிலாளர்கள் மீட்பு DIN DIN Friday, October 12, 2018 03:38 AM +0530
மதுராந்தகத்தை அடுத்த கருங்குழி பகுதியில் செயல்படும் தனியார் பாட்டிலிங் தொழிற்கூடத்தில் வேலை செய்து வந்த தொழிலாளர்களுக்கு உரிய கூலி தராமல், அடிமைகளாய் நடத்தப்பட்டு வந்தனர். இதை அறிந்து தமிழ்நாடு இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு சங்க நிர்வாகிகள் அவர்களை வியாழக்கிழமை மீட்டு சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
கருங்குழி பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பாட்டிலிங் தொழிற்கூடம் இயங்கி வருகிறது. அதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த, பல்வேறு வயதுடைய தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அவர்களில் சிதம்பரத்தை அடுத்த குமராட்சி கிராமத்தைச் சேர்ந்த சம்பத்குமார், கதிரவன், திலேக்குமார், தயாநிதி, ராமராஜ், ராஜேஷ், மதன்குமார் உள்ளிட்டோரும் அடங்குவர். 
அவர்களுக்கு உரிய கூலி தராமல், அடித்து மிரட்டி வேலை வாங்குவதாகவும், அவர்களை அடிமைகளாக வைத்திருப்பதாகவும் மதுராந்தகத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு சங்கத்தின் தலைவர் ஜி.முனுசாமிக்கு தகவல் வந்தது. இதையடுத்து சங்க நிர்வாகிகள் நேரில் சென்று அவர்களை மீட்டு மதுராந்தகம் சார் ஆட்சியர் மாலதி முன்னிலையில் ஒப்படைத்தனர். சார் ஆட்சியரின் உத்திரவின்படி இதுபற்றி மதுராந்தகம் வட்டாட்சியர் ஏகாம்பரம் தலைமையிலான வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தினார்கள். வருவாய்த்துறையினரின் விசாரணையில் அவர்கள் அனைவரும் கொத்தடிமைகள் அல்ல என்பதும் அவர்களுக்கு அந்த தொழிற்சாலை நிறுவனம் உரிய கூலி கொடுக்காமல் ஏமாற்றி, அடிமைகளைப் போல் நடத்தி வந்ததும் தெரிய வருகிறது. 
இதுபற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/12/w600X390/labour.JPG கருங்குழி தொழிற்சாலையில் கூலி கொடுக்காமல் அடிமைகளாக நடத்தப்பட்டு, மீட்கப்பட்டு சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்ட தொழிலாளர்கள். http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/12/அடிமைகளாக-நடத்தப்பட்ட-7-கூலித்-தொழிலாளர்கள்-மீட்பு-3018583.html
3018582 சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டில் 31-ஆம் தேதி வரை மின்தடை அறிவிப்பு DIN DIN Friday, October 12, 2018 03:37 AM +0530
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் செங்கல்பட்டு வட்டம், செங்கல்பட்டு கோட்டம் சார்பில் மின்பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பகுதியில் அத்தியாவசியப் பணிகளுக்காக செங்கல்பட்டில் வெள்ளிக்கிழமை (12-ஆம் தேதி) தொடங்கி வரும் 31-ஆம் தேதி வரை அவ்வப்போது மின்தடை காரணமாக எந்த நேரத்திலும் மின்விநியோகம் தடைபடும் என செங்கல்பட்டு மின்பகிர்மான வட்ட செயற் பொறியாளர் எஸ்.மனோகரன் தெரிவித்திள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பு: செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட நகரப் பகுதியில் 12-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மின்கம்பங்களை மாற்றியமைக்கும் பணி நடைபெற இருப்பதால் அதன் முக்கியத்துவம் கருதியும் வேலைகளை குறிப்பிட்ட காலத்தில் முடிக்கும் விதமாகவும் மின்விநியோகம் அவ்வப்போது தடைபடும். அதுசமயம் ஏற்படும் மின்தடைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள்: செங்கல்பட்டு நகரம், ஜிஎஸ்டி சாலை, ராஜாஜி தெரு, அண்ணா சாலை, ஜேசிகே நகர், பெரியநத்தம், சின்னநத்தம், பஜார் தெரு, மேட்டுத் தெரு, காஞ்சிபுரம் ஹைரோடு, களத்துமேடு, தட்டான்மலை தெரு, மலைப்பூங்கா, பாசித்தெரு, வேதப்பர் தெரு, முருகேசனார் தெரு மற்றும் சுந்தரவிநாயகர் கோயில் தெரு ஆகிய பகுதிகள்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/12/செங்கல்பட்டில்-31-ஆம்-தேதி-வரை-மின்தடை-அறிவிப்பு-3018582.html
3018581 சென்னை காஞ்சிபுரம் நாளை 9 வட்டங்களில் பொது விநியோக குறை தீர் முகாம் DIN DIN Friday, October 12, 2018 03:37 AM +0530
நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் சனிக்கிழமை (13-ஆம் தேதி) 9 வட்டங்களில் குறை தீர் முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்த விவரம்: 
உணவுப் பொருள், நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 9 வட்டங்களில் குறை தீர்முகாம் வரும் 13 -ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில், குடும்ப அட்டைதாரர்கள் தங்களது பகுதிகளில் உள்ள குறைகளுக்குத் தீர்வு காணலாம். மேலும், இம்முகாமில் மின்னணு குடும்ப அட்டை தொடர்புடைய குறைகளும் பரிசீலிக்கப்படும். 
அதன்படி, காஞ்சிபுரம் இலுப்பைப்பட்டு ரேஷன் கடை (வழங்கல் அலுவலரின் தொடர்பு எண்-9445000169), ஸ்ரீபெரும்புதூர்-
படப்பை ரேஷன் கடை (9445000170), உத்தரமேரூர்-காவனூர் புதுச்சேரி ரேஷன் கடை (9445000171), செங்கல்பட்டு-வல்லம் பகுதி ரேஷன் கடை(9445000172), திருக்கழுக்குன்றம்-நத்தம்கரியசேரி ரேஷன் கடை (9445000173), திருப்போரூர்-பையனூர் ரேஷன் கடை (8838330697), மதுராந்தகம்-ஒரத்தி களத்தூர் பகுதி ரேஷன் கடை (9445000174), செய்யூர்-செய்யூர்-2 பகுதி ரேஷன் கடை (9445000175), வாலாஜாபாத்-கண்ணடியன் குடிசை ரேஷன் கடை (9952912646) ஆகிய 9 வட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் குறை தீர் முகாம் நடைபெறும். பொது விநியோகத் துறை தொடர்பான குறைகளுக்காக, வட்ட வழங்கல் அலுவலரையும் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/12/நாளை-9-வட்டங்களில்-பொது-விநியோக-குறை-தீர்-முகாம்-3018581.html
3018580 சென்னை காஞ்சிபுரம் தசரா விழா தொடங்கியும் களைகட்டாத பொழுதுபோக்கு அம்சங்கள்: பார்வையாளர்கள் ஏமாற்றம் DIN DIN Friday, October 12, 2018 03:37 AM +0530
செங்கல்பட்டில் வருடாந்திர தசரா விழா தொடங்கியும் குடை ராட்டினம் உள்ளிட்ட பொழுதுபோக்கு சாதனங்கள் இன்னும் இயக்கப்படாததாலும், கடைகள் திறக்கப்படாததாலும் பார்வையாளர்கள் ஏமாற்றமடைந்தனர்.
பிரம்மாண்டமாக நடைபெறும் இத்திருவிழாவில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் பிற மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகள், அசுரதாலாட்டி, ராட்சத குடை ராட்டினங்கள் ஆகியவற்றை அமைப்பர். பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்கும் உற்சாகம் அளிக்கும் நோக்கில் பல்வேறு ராட்டினங்கள் ரயில் வண்டி, ஸ்னோபால்ஸ் உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக லாரிகள் மூலம் பொருள்களை 20 நாள்களுக்கு முன்பே எடுத்து வந்து விடுவர். 
சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு சாலையின் இருபுறத்திலும் கடைகள் அமைக்கப்பட்டு பேன்சி பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்களான இரும்பு, அலுமினியம், பித்தளை, பிளாஸ்டிக், பீங்கான் பொருள்கள், செயற்கை மலர்கள், கொலு பொம்மைகள், தின்பண்டங்கள் ஆகியவற்றை விற்பனைக்கு வைப்பார்கள். ஏராளமான கடைவீதிகள் அமைத்து கோலாகலமாக தசரா விழா நடைபெறுவது வழக்கம். இந்தக் கடைகளை ஆண்டுதோறும் நகராட்சி நிர்வாகம் ஏலம் விடும். விழா வசூல் செய்து நடத்துபவர்கள் இந்தக் கடைகளை ஏலம் எடுத்து நடத்துவார்கள். அனைவரின் ஒத்துழைப்புடன் விழா நடைபெறும். முதல் நாளில் இருந்தே மக்கள் திருவிழாவைக் காண்பது போல் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வந்து மகிழ்வார்கள்.
நகராட்சிக்கு ஆண்டிற்கு ஒருமுறை இத்திருவிழாவால் கணிசமான தொகை வருமானமாக கிடைக்கும். இந்த ஆண்டு ரூ.12.5 லட்சத்திற்கு ஏலம் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஜிஎஸ்டி வரியுடன் அவர் ரூ.14.5 லட்சம் செலுத்தி ஏலம் எடுத்தும் பயனின்றி விழா நடத்தாமல் உள்ளனர். 
ஏலம் எடுப்பவர்கள் கோட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த்துறை, தீயணைப்புத் துறை, காவல்துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட அனுமதி பெறவேண்டிய துறைகளில் அனுமதி பெற்றும் , மின்வாரியத்துறைக்கு பணம் செலுத்தியும் அரசியல்வாதிகள் தலையீட்டினால் ராட்டினங்கள் அமைக்கப்படாமல் உள்ளதாககக் கூறப்படுகிறது. அமைக்கப்பட்ட சில ராட்டினங்கள் இன்னும் இயக்கப்படாமல் உள்ளன. 
எனினும், கடந்த 8ஆம் தேதியில் இருந்தே மக்கள் தசரா கடை வீதிகளை கண்டுகளிக்க வந்து செல்கின்றனர். ஆனால், அங்கு தெருவிளக்கு கூட இல்லாமல் திருவிழா நகரம் இருட்டில் மூழ்கிக் கிடக்கிறது. அரசியல் தலையீட்டினால் காவல்துறையும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இதனால் பார்வையாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். வழக்கம் போல் இம்முறையில் தசரா விழாவை நடத்துமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விழா நடைபெறவில்லை என்றால் விழாக் குழுவினரும், பொதுமக்களும் இணைந்து போராட்டம் நடத்துவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/12/w600X390/game.JPG நம்பிக்கையுடன் பொழுதுபோக்கு மேடை அமைக்கும் தொழிலாளர்கள். http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/12/தசரா-விழா-தொடங்கியும்-களைகட்டாத-பொழுதுபோக்கு-அம்சங்கள்-பார்வையாளர்கள்-ஏமாற்றம்-3018580.html
3018579 சென்னை காஞ்சிபுரம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்திய பயங்கரவாத எதிர்ப்புக் கருத்தரங்கம் DIN DIN Friday, October 12, 2018 03:36 AM +0530
காஞ்சிபுரம் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் முன்னாள் எம்எல்ஏ ரவிக்குமாக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டலுக்கு கண்டனம், பஞ்சமி நிலம் மீட்பு, மண்ணுரிமை நாள், பயங்கரவாத எதிர்ப்புக் கருத்தரங்கம் புதன்கிழமை மாலை செங்கல்பட்டில் நடைபெற்றது.
செங்கல்பட்டில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கிற்கு காஞ்சிபுரம் மத்திய மாவட்டச் செயலாளர் செங்கை இரா.தமிழரசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர்கள் ஆதவன், ராஜ்குமார், தேவ அருள்பிரகாசம், அன்புச்செல்வன், மேனகாதேவி கோமகன், ஒன்றியச் செயலாளர் ராஜ்குமார், செயலாளர் காஞ்னா, மாலதி, கலைதாசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தொகுதிச் செயலாளர் தே.தென்னவன் வரவேற்றார்.
கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சிந்தனைச்செல்வன், மண்டலச் செயலாளர் விடுதலைச் செழியன், மாவட்டப் பொருளாளர் தி.வ.எழிலரசு, மாவட்ட செய்தித் தொடர்பாளர் வழக்குரைஞர் அன்புச்செல்வன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் சாந்தன், நகரச் செயலாளர் ரவீந்திரன், தொகுதிச் செயலாளர் தென்னவன் உள்பட பலர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர். மதிமுக-வின் அரசியல் ஆய்வு மையச் செயலாளர் செந்தில் அதிபன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொறுப்பாளர் அருணன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்று, கருத்துகளையும், கண்டனத்தையும் தெரிவித்துப் பேசினர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இக்கருத்தரங்கில் சிறப்புரையாற்றினார். அவர் பேசியது:
தலித் மக்களை ஓரணியில் திரட்டி அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்போம். மதசார்பற்ற சக்திகளை ஒன்றுதிரட்டி மத்திய பாஜக அரசை வீழ்த்துவோம். தமிழகம் முழுவதும் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டெடுத்து, நில மீட்புப் போராட்டத்தில் உயிரிழந்த போராளிகளான ஜான்தாமஸ் மற்றும் ஏழுமலைக்கு நினைவுத்தூண் அமைப்போம்.
தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் முற்போக்கு சிந்தனையாளர்களுக்கும், மதச்சார்பற்ற சக்திகளுக்கும் தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. முற்போக்கு எழுத்தாளர்களான கலபுர்கி, தபோல்கர், பன்சாரே, பெண் பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் ஆகியோர் குறிவைத்து படுகொலை செய்யப்பட்டதைக் கண்டிக்கிறோம். தமிழ்நாட்டில் எழுத்தாளரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலப் பொறுப்பாளருமான ரவிக்குமாரைக் குறிவைத்து கொலை மிரட்டல் விடுத்து வரும் பயங்கரவாத சக்திகள் அதிகரித்து வருவதைக் கண்டிக்கிறோம். திருச்சியில் தேசம் காப்போம் மாநாடு வரும் டிசம்பர் 10-இல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் இருந்து மட்டுமின்றி, அகில இந்திய அளவிலும் மதச்சார்பற்ற சக்திகள் பங்கேற்க உள்ள இந்த மாநாட்டிற்கு நமது கட்சியினர் திரளாக வந்து கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என்றார் அவர். முடிவில் ரவீந்திரன் நன்றி கூறினார்.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/12/w600X390/vc.JPG http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/12/விடுதலைச்-சிறுத்தைகள்-கட்சி-நடத்திய-பயங்கரவாத-எதிர்ப்புக்-கருத்தரங்கம்-3018579.html
3018578 சென்னை காஞ்சிபுரம் கடைகளில் உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் அதிரடி ஆய்வு DIN DIN Friday, October 12, 2018 03:35 AM +0530
காஞ்சிபுரம் நகர்ப் பகுதிகளில் உள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் வியாழக்கிழமை அதிரடி ஆய்வு மேற்கொண்டார். 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான சில்லறை விற்பனைக் கடைகள் உள்ளன. இதில், மளிகைப் பொருள்கள் மற்றும் பெட்டிக் கடைகளிலும் பீடி, சிகரெட் விற்பனை செய்யும் கடைகளிலும் குட்கா, புகையிலைப் பொருள்களை விற்பதற்கு தமிழக அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
எனினும், இத்தடை உத்தரவை மீறி சட்டவிரோதமாக பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் குட்கா மற்றும் புகையிலைப் பொருள்களின் விற்பனை ரகசியமாக நடைபெற்று வருகிறது. இதைத் தடுப்பதற்கு அவ்வப்போது மாவட்ட நிர்வாகம் அதிரடிச் சோதனைகளை நடத்தி நடவடிக்கை எடுத்துவருகிறது. 
அத்துடன், தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகளில் குட்கா பொருள்களைப் பறிமுதல் செய்வதோடு, அக்கடைகளுக்கு சீல் வைத்து சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில், காஞ்சிபுரம் மாவட்ட உணவுப் பாதுகாப்புப் பிரிவு நியமன அலுவலர் டாக்டர் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் காஞ்சிபுரம் நகர்ப்பகுதியில் உள்ள சில கடைகளில் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். 
இதில், பெரிய காஞ்சிபுரம் பகுதியில் உள்ள மொத்த வியாபாரம் செய்யும் கடைகளில் ஆய்வு நடத்தியபோது, தடை செய்யப்பட்ட போதை, புகையிலைப் பொருள்கள் அதிக அளவில் இருப்பதைக் கண்டறிந்தனர். தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து, கடைக்கு சீல் வைக்கவும் பரிந்துரை செய்யப்பட்டது. 
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், தடை செய்யப்பட்ட பான், குட்கா பொருள்கள் பெருமளவில் ரகசியமாக பெட்டிக் கடைகள், மளிகைக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு நடத்தினாலும், தொடர்ந்து விற்பனை செய்யவே செய்கின்றனர். எனவே, அவற்றை விற்பனை செய்வோரை மாவட்ட நிர்வாகம் ரகசியமாகக் கண்காணித்து, இதற்கு ஆதரவாக இருக்கும் சமூக விரோதிகளைக் கண்டறிந்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/12/w600X390/test.JPG பெரிய காஞ்சிபுரம் பகுதியில் குட்கா பொருள்களைப் பறிமுதல் செய்யும் உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் உள்ளிட்டோர்.  http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/12/கடைகளில்-உணவுப்-பாதுகாப்பு-நியமன-அலுவலர்-அதிரடி-ஆய்வு-3018578.html
3018577 சென்னை காஞ்சிபுரம் அறிவியல் கண்காட்சி - கணிதக் கருத்தரங்கு DIN DIN Friday, October 12, 2018 03:35 AM +0530
ஸ்ரீபெரும்புதூர் கல்வி மாவட்டத்தின் சார்பாக 46ஆவது ஜவாஹர்லால் நேரு அறிவியல், சுற்றுப்புறக் கண்காட்சி மற்றும் கணிதக் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றுது.
மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்தின் சார்பாக ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஆகிய ஒன்றியங்களில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட இந்தக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கண்காட்சி தொடக்க விழாவுக்கு வந்திருந்தவர்களை அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தங்கபாய் வரவேற்றார். மாவட்டக் கல்வி அலுவலர் மதிவாணன் தலைமை வகித்து, தலைமையுரையாற்றினார். ஸ்ரீபெரும்புதூர் சட்டப் பேரவை உறுப்பினர் கே.பழனி கலந்து கொண்டு கண்காட்சியைத் திறந்துவைத்து பார்வையிட்டு, மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
கண்காட்சியில் குன்றத்தூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியங்களைச் சேர்ந்த அரசு தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி, தனியார் பள்ளிகள் ஆகியவற்றைச் சேர்ந்த சுமார் 100 பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். அங்கு 215 பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. கண்காட்சியைத் தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது. 
இதையடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஏஞ்சலோ இருதயசாமி, கண்காட்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/12/w600X390/show.JPG http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/12/அறிவியல்-கண்காட்சி---கணிதக்-கருத்தரங்கு-3018577.html
3018576 சென்னை காஞ்சிபுரம் பருவமழை முன்னெச்சரிக்கை ஆலோசனை DIN DIN Friday, October 12, 2018 03:34 AM +0530
உத்திரமேரூரில் மழைக் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கான குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 
காஞ்சிபுரத்தை அடுத்த உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகக் கூட்டரங்கில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அரசு அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் புதன்
கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலர், மழைகாலத் தடுப்புப் பிரிவு மண்டல அலுவலர் மாலதி தலைமை வகித்தார்.
உத்திரமேரூர் பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன், வட்டாட்சியர் அகிலாதேவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாரிச்சாமி, ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பேரூராட்சி அலுவலர்கள், வருவாய்த் துறையினர், கிராம நிர்வாக அலுவலர்கள், மருத்துவத் துறையினர், காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர், நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்துத் துறை, மின்சாரத்துறை என பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். எதிர்வரும் வடகிழக்குப் பருவமழையினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பது, மழைக்காலத்தில் ஏற்படும் பேரிடரில் இருந்து பொதுமக்களை மீட்டு முதலுதவி அளிப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதோடு, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது. 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/12/பருவமழை-முன்னெச்சரிக்கை-ஆலோசனை-3018576.html
3018575 சென்னை காஞ்சிபுரம் லாரிகள் மோதல்: 2 ஓட்டுநர்கள் சாவு DIN DIN Friday, October 12, 2018 03:34 AM +0530
மதுராந்தகம் புறவழி நெடுஞ்சாலையில் பழுதாகி நின்றிருந்த சரக்கு லாரி மீது அதன் பின்னால் லாரி மோதிய விபத்தில் 2 லாரி ஓட்டுநர்கள் பலியானார்கள். உடனிருந்த லாரி கிளீனர் படுகாயமடைந்தார். 
மதுராந்தகம் ஏரிக்கரையை ஒட்டி புறவழிச்சாலை அருகில் சென்னை-திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. புதன்கிழமை நள்ளிரவு மதுராந்தகம் ஏரிக்கரை புறவழிச் சாலையோரம் திருச்சி-சென்னை மார்க்கமாக செல்லும் பகுதியில் ஒரு சரக்கு லாரி பழுதாகி நின்றது. அந்த லாரியில் சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டுநர் அரவிந்தர் சிங் (38) மற்றும் கிளீனர் சமீர் சிங் (19) ஆகியோர் இருந்தனர்.
பழுதான லாரியின் பழுதினை சரிசெய்யும்போது அதே மாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு லாரி டிரைவர் மித்ரா சிங் (35) தனது லாரியை நிறுத்தி விட்டு இறங்கினார். அங்கு பழுதை சரிசெய்து கொண்டிருந்தவர்களுக்கு உதவிக் கொண்டிருந்தார். அப்போது அதே திசையில் வந்த சரக்கு லாரி எதிர்பாராத வகையில் லாரியைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தவர் மீது மோதியது. 
இந்த விபத்தில் 2 லாரி ஓட்டுநர்களும் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே இறந்தனர். அங்கு உடனிருந்த லாரி கிளீனர் சமீர் சிங் படுகாயமடைந்தார். தகவலறிந்து வந்த மதுராந்தகம் காவல் ஆய்வாளர் அந்தோணி ஸ்டாலின் தலைமமையிலான காவல்துறையினர், காயமடைந்த சமீர் சிங்கை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 
இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். விபத்து குறித்து மதுராந்தகம் காவல் ஆய்வாளர் அந்தோணி ஸ்டாலின் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/12/லாரிகள்-மோதல்-2-ஓட்டுநர்கள்-சாவு-3018575.html
3017818 சென்னை காஞ்சிபுரம் சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் DIN DIN Thursday, October 11, 2018 03:18 AM +0530
சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின் கீழ், செயல்பட்டு வரும் பள்ளி சத்துணவு மையங்களில் 159 சத்துணவு அமைப்பாளர் மற்றும் 127 சமையல் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. காலிப் பணியிடங்களுக்கு தகுதியுடைய பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து மனுக்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி, அக்டோபர் 10 முதல் நவம்பர் 1-ஆம் தேதி வரை அலுவலக வேலை நாள்களில் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய, நகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படும். மேலும் http://kancheepuram.nic.in என்ற இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் அளிக்கப்படவோ, பெறப்படவோ மாட்டாது. காலிப் பணியிடங்கள் இனசுழற்சி முறையில் நிரப்பப்படும். 
அரசு நிதி உதவி பெறும் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு இனசுழற்சி முறை பின்பற்றப்படமாட்டாது. சத்துணவு அமைப்பாளர் பணிக்கு, பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நிகழாண்டு ஜூலை 1 அன்று 21 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்கவேண்டும். 
பழங்குடி இனத்தைச் சேர்ந்தவராக இருந்தால் 8-ஆம் வகுப்பு தோல்வி அல்லது தேர்ச்சி அடைந்தவராக இருத்தல் வேண்டும். நிகழாண்டு ஜூலை 1 அன்று 21 வயது பூர்த்தி அடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் 20 வயது பூர்த்தி அடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பணியிடத்துக்கும் விண்ணப்பதாரரின் குடியிருப்புக்கும் இடையே உள்ள தொலைவு 3 கி.மீ.க்குள் இருக்கவேண்டும்
சமையல் உதவியாளர் பணி: பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 5-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி, நிகழாண்டு ஜூலை 1 அன்று 21 வயது பூர்த்தி அடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராக வும் இருக்க வேண்டும். பழங்குடி இனத்தைச் சேர்ந்தவராக இருந்தால் எழுதப் படிக்கத் தெரிந்தவராகவும், நிகழாண்டு ஜூலை 1 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் 20 வயது பூர்த்தி அடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்கவேண்டும். 
அதுபோல், 3 கி.மீ.க்குள் குடியிருப்பு இருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மனுதாரரின் புகைப்படம், கல்விச் சான்று, பள்ளி மாற்றுச் சான்று, ஜாதி, இருப்பிடம், வருமானச் சான்று, குடும்ப அட்டை, விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர் எனில் அதற்கான வட்டாட்சியர் சான்று, இதர முன்னுரிமைச் சான்று இணைப்புகளுடன் நவம்பர் 1-ஆம் தேதி வரை அலுவலக வேலை நாள்களில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பிறகு விண்ணப்பங்கள் வழங்கப்படவோ, பெறப்படவோ மாட்டாது. 
சத்துணவு அமைப்பாளர் பணிக்கு ரூ. 7,700 - 24,200 மற்றும் சமையல் உதவியாளர் பணிக்கு ரூ. 3,000 - 9000 என்ற ஊதிய விகிதத்தின்கீழ் ஊதியம் வழங்கப்படும். சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கான இனசுழற்சி குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய, நகராட்சி அலுவலகங்களில் தெரிந்து கொள்ளலாம். நவம்பர் 1-ஆம் தேதி மாலை 5.45 மணி வரை பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே உரிய பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். தகுதிவாய்ந்த மனுதாரர்களுக்கு மட்டும் நேர்முக தேர்வுக்கான அழைப்பாணை அனுப்பப்படும் என ஆட்சியர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/11/சத்துணவு-அமைப்பாளர்-உள்ளிட்ட-பணியிடங்களுக்கு-விண்ணப்பிக்கலாம்-3017818.html
3017817 சென்னை காஞ்சிபுரம் தமிழர்களின் உழைப்பால் மோரீஷஸ் நாடு வளமிக்கதாக மாறியுள்ளது: துணை அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி DIN DIN Thursday, October 11, 2018 03:17 AM +0530
தமிழர்களின் உழைப்பால் மோரீஷஸ் நாடு வளம் மிக்கதாக மாறியுள்ளது என அந்நாட்டு துணை அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி தெரிவித்தார்.
மோரீஷஸ் நாட்டின் துணை அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி புதன்கிழமை காலை காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு வருகை புரிந்தார். தொடர்ந்து, குமரகோட்டம் முருகன் கோயில், காமாட்சியம்மன் கோயில்களுக்குச் சென்றார். அப்போது, அவரை அறநிலைத்துறை அலுவலர்கள், சிவாச்சாரியர்கள் வரவேற்று, சுவாமி தரிசனம் செய்ய அழைத்துச் சென்றனர். கோயில்களில் வழிபட்ட பின்பு, காஞ்சி சங்கர மடத்துக்குச் சென்றார். அங்கு, அண்மையில் சித்தியடைந்த ஜயேந்திரரின் பிருந்தாவனத்துக்குச் சென்று வழிபட்டார். தொடர்ந்து, பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசிபெற்றார். இதையடுத்து, பிரபல பட்டு விற்பனைக் கடையில் புகழ்பெற்ற பட்டுச் சேலைகளைப் பார்வையிட்ட பின்பு, சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றார். 
முன்னதாக, செய்தியாளர்களிடம் மோரீஷஸ் துணை அதிபர் கூறியதாவது: தமிழ் வர்த்தக மாநாட்டில் கலந்துகொள்ள புதுச்சேரிக்கு வருகை தந்து, பல்வேறு தமிழ் வளர்ச்சி நல அமைப்பினர்களை சந்தித்தேன். இதைத்தொடர்ந்து, கோயில்களின் நகரமான காஞ்சிபுரத்துக்கு புதன்கிழமை வந்தேன். தமிழக சகோதர, சகோதரிகள் எனக்கு சிறப்பானதொரு வரவேற்பை அளித்து வருகின்றனர். இது மகிழ்ச்சியளிக்கிறது. அத்துடன், எனது முன்னோர்களையும் நினைவு கூருகிறது. கடந்த 150-200 ஆண்டுகளுக்கு முன்னர், தமிழகத்திலிருந்து மோரீஷஸ் நாட்டுக்கு எனது முன்னோர்கள் குடியேறினர். குறிப்பாக, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட இந்திய மாநிலங்களிலிருந்து திரளானோர் மோரீஷஸ் நாட்டு கரும்புத் தோட்டங்களில் பணிபுரிந்து, நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தனர். அந்த உழைப்பின் காரணமாக மோரீஷஸ் நாடு தற்போது வளமிக்கதாக மாறியுள்ளது. இந்த வளத்துக்கு, தமிழக, இந்திய கலாசார பாரம்பரியம் உறுதுணையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. 
மேலும், மோரீஷஸ் நாட்டில் தமிழ், இந்தி, தெலுங்கு, போஜ்பூரி உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகள் அடிப்படை புழக்கத்தில் உள்ளன. குறிப்பாக, தமிழர் கலாசாரம் தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, தமிழர்களின் நல்லுறவை வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், இந்திய மோரீஷஸ் நாடுகளின் நட்புறவு தொடர்ந்து மேம்படுத்தப்படும் என்றார். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/11/w600X390/vijendar.jpg காஞ்சி சங்கரமடத்தில் ஜயேந்திரரின் மெழுகுச் சிலையைப் பார்வையிட்ட மோரீஷஸ் துணை அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி. உடன் , விஜயேந்திரர். http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/11/தமிழர்களின்-உழைப்பால்-மோரீஷஸ்-நாடு-வளமிக்கதாக-மாறியுள்ளது-துணை-அதிபர்-பரமசிவம்-பிள்ளை-வையாபுரி-3017817.html
3017816 சென்னை காஞ்சிபுரம் ஓய்வூதிய சங்கக் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் DIN DIN Thursday, October 11, 2018 03:16 AM +0530
நிலுவை பலன்களை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் காஞ்சிபுரம் காவலான் கேட் பகுதியில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் சீத்தாராமன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் செல்வமணி முன்னிலை வகித்தார். அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் சாரங்கன், அஞ்சல், ஆர்எம்எஸ் ஓய்வூதியர் சங்க நிர்வாகி சுப்பிரமணியன், போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் அமைப்பு நிர்வாகி இமயவரம்பன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில், ஓய்வூதியத்தை வருமான வரிச்சட்டத்தில் இணைக்கக் கூடாது, 21 மாத நிலுவைப் பலன்களை வழங்க வேண்டும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அனைத்து வாரியங்களிலும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/11/w600X390/demand.JPG http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/11/ஓய்வூதிய-சங்கக்-கூட்டமைப்பினர்-ஆர்ப்பாட்டம்-3017816.html
3017815 சென்னை காஞ்சிபுரம் துபை கட்டுமான நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: நாளை நேர்காணல் DIN DIN Thursday, October 11, 2018 03:16 AM +0530
துபை கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிய வெள்ளிக்கிழமை ( அக்டோபர் 12) நடைபெறும் நேர்காணலில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இது குறித்த விவரம்: தமிழக அரசின் ஓ.எம்.சி.எல் நிறுவனம் சார்பில் துபையில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிய ஆள்கள் தேவைப்படுகின்றனர். அதன்படி, இரண்டு ஆண்டு பணி அனுபவத்துடன் 27 வயது முதல் 45 வயதுள்ள கொத்தனார்கள், ஆப்ரேட்டர்கள், தச்சர்கள், போர்மேன்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இப்பணி தொடர்பான விவரங்களை www.omcmanpower.com  என்ற தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். 
கொத்தனார், ஆப்ரேட்டர், தச்சர்களுக்கு மாத ஊதியம் ரூ.23 ஆயிரத்துடன் கூடுதல் நேர பணி ஊதியமும் வழங்கப்படும். அதேபோல், ஃபோர்மேன்களுக்கு மாத ஊதியமாக ரூ.38 ஆயிரம் வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு அனுபவத்தின் பேரில் கூடுதல் ஊதியம், இலவச இருப்பிடம், அந்நாட்டின் சட்டதிட்டத்துக்குட்பட்ட இதர சலுகைகள் ஆகியவை வழங்கப்படவுள்ளன. 
கொத்தனார், ஆப்ரேட்டர்கள், தச்சர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது இ.சி.என்.ஆர். பாஸ்போர்ட்டை வைத்திருக்க வேண்டும். ஃபோர்மேன் வேலைக்கு டிப்ளமோ சிவில் என்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உரிய தகுதியோடு, விருப்பமுடையோர் தங்களின் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், செல்லத்தக்க பாஸ்போர்ட், இரண்டு புகைப்படங்கள் ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 12) காலை 9 மணி முதல் மாலை 5 மணிக்குள் நடைபெறும் முதல்கட்ட நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-27237124 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 
பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கொத்தனார், தச்சர் தொழிலில் 2 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர்கள், டிப்ளமோ சிவில் என்ஜினியர்கள் 2 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் உடன் செல்லத்தக்க பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மட்டும் நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/11/துபை-கட்டுமான-நிறுவனத்தில்-வேலைவாய்ப்பு-நாளை-நேர்காணல்-3017815.html
3017814 சென்னை காஞ்சிபுரம் ராஜீவ் காந்தி இளைஞர் மேம்பாட்டு மைய மாணவர்கள் 5 பேர் இடைநீக்கம் DIN DIN Thursday, October 11, 2018 03:15 AM +0530
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தின் மாணவர்கள் 5 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனைக் கண்டித்து மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ், இயங்கும் இந்த மையத்தின் இயக்குநராக இருந்த மதன்மோகன்கோயலின் பதவிக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, இந்த மையத்துக்கு புதிய இயக்குநர் நியமிக்கப்படாமல் உள்ளது. தற்போது தற்காலிக இயக்குநராக தங்கலம்லியான் செயல்பட்டு வருகிறார். 
இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களாக ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்துக்கு, நிரந்தர இயக்குநரை நியமனம் செய்ய வேண்டும், ராஜீவ் காந்தியின் புகைப்படத்தையே மீண்டும் மையத்தின் இலச்சிணையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட 5 மாணவர்களை மைய நிர்வாகம் புதன்கிழமை இடைநீக்கம் செய்தது. இந்நிலையில், மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும், மாணவர்கள் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் கூறுகையில், நிரந்தர இயக்குநரை நியமிக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறோம். எங்களை பணியவைக்கும் வகையில் மாணவர்கள் மகேஷ்குமார், கோபிநாத், சுசித்ரா, முஷாபர் அகமது, குப்புபாலாஜி ஆகிய ஐந்து பேரை நிர்வாகத்தினர் இடைநீக்கம் செய்துள்ளனர். ஏற்கெனவே நூலகத்தை இரவு 12 மணி வரை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தினோம். அதில் ஈடுபட்டவர்களையும் தற்போது இடைநீக்கம் செய்துள்ளனர். போராட்டத்தை ஒடுக்கவே நிர்வாகம் இந்த நடைமுறையை கடைப்பிடித்துள்ளது.
இடைநீக்கத்தை திரும்பப் பெறவும், நிரந்தர இயக்குநரை நியமிக்கவும் வலியுறுத்தி நடைபெறும் எங்களது போராட்டம் தொடரும் என்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/11/ராஜீவ்-காந்தி-இளைஞர்-மேம்பாட்டு-மைய-மாணவர்கள்-5-பேர்-இடைநீக்கம்-3017814.html