Dinamani - சென்னை - http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2792223 சென்னை சென்னை "அடுத்த 3 மாதத்துக்குள் அனைத்து சுரங்க ரயில் பாதை அமைக்கும் பணிகளும் நிறைவு பெறும்' DIN DIN Wednesday, October 18, 2017 03:23 AM +0530 மெட்ரோ ரயில் போக்குவரத்துக்காக சுரங்க ரயில் பாதை அமைக்கும் அனைத்துப் பணிகளும் அடுத்த 3 மாதத்துக்குள் முழுமையாக நிறைவு பெறும் என மெட்ரோ ரயில் நிறுவன முதன்மை பொது மேலாளர் அரவிந்த் ராய் திவேதி கூறினார்.
மே தினபூங்கா முதல் தேனாம்பேட்டை (ஏஜி}டி.எம்.எஸ்) வரை நடைபெற்று வந்த 2 சுரங்கப்பாதை பணிகளில் முதல் சுரங்கப் பாதைக்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகளை செவ்வாய்க்கிழமை, தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், சிறப்புத் திட்ட அமலாக்கத்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன், தலைமை பாதுகாப்பு அதிகாரி ஜெயகெளரி, முதன்மை பொது மேலாளர் விஜயகுமார் சிங் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மெட்ரோ ரயில் நிறுவன முதன்மை பொது மேலாளர் அரவிந்த் ராய் திவேதி கூறியதாவது: சென்னையில் நடைபெற்று வரும் சுரங்க ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளன. 
அடுத்த 3 மாத காலத்துக்குள் அனைத்து சுரங்க ரயில் பாதை அமைக்கும் பணிகளும் நிறைவடைந்து விடும். மே தின பூங்கா முதல் தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வரையிலான பாதையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் ரயில்கள் இயக்கப்படும் என்றார். இரண்டாம் கட்ட பணிகளுக்காக மாநில அரசு, மத்திய அரசுக்கு விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் அடுத்த மாதம் (நவம்பர்) மாநில அரசு ஜப்பான் நிதி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
பயணத்துக்கான பொது அட்டை: மாநகர போக்குவரத்து கழகத்துடன் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இணைந்து பொதுவான பயண அட்டையை பயணிகளுக்கு வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கடற்கரை முதல் வேளச்சேரி வரை இயக்கப்படும் ரயில் சேவையை முற்றிலுமாக மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பொறுப்பில் கொண்டு வந்து இயக்குவது தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் மெட்ரோ ரயிலுக்கான சென்னை சதுக்கம் கட்டப்படவுள்ளது. அந்த பகுதியில் பாரம்பரியக் கட்டடங்களான ரிப்பன் மாளிகை, விக்டோரியா ஹால், அரசு மருத்துவமனை, தெற்கு ரயில்வே தலைமையகம், சென்ட்ரல் ரயில் நிலையம் இருப்பதால், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை சதுக்கம் கட்ட பாரம்பரிய கட்டடங்களைப் பாதுகாக்கும் அமைப்பின் அனுமதியை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்றார் அவர்.
தாமதம்: மே தின பூங்கா முதல் தேனாம்பேட்டை (ஏ.ஜி } டி.எம்.எஸ்.) இடையே உள்ள 3 ஆயிரத்து 616 மீட்டர் நீளம் (3.5 கிலோ மீட்டர்) கொண்ட 2 சுரங்கப் பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இதில் முதல் சுரங்கப்பாதை பணியில் ஈடுபட்டிருந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம் எல்.ஐ.சி, ஆயிரம் விளக்கு ரயில் நிலையங்களின் வழியாக தேனாம்பேட்டை பகுதிக்கு நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் வரவில்லை. இயந்திரத்தில் உள்ள வெட்டுக்கருவிகளின் தேய்மானமே தாமதத்துக்கு காரணம் எனச் சொல்லப்படுகிறது. இருப்பினும் ,அதனை சரிசெய்து, பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதே தடத்தில் உள்ள இரண்டாவது பாதையில் இன்னும் 450 மீட்டர் வரை தோண்ட வேண்டியுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/18/அடுத்த-3-மாதத்துக்குள்-அனைத்து-சுரங்க-ரயில்-பாதை-அமைக்கும்-பணிகளும்-நிறைவு-பெறும்-2792223.html
2792222 சென்னை சென்னை சமையல் கூடத்தில் தீ விபத்து: 3 மணி நேரம் போராடி அணைப்பு DIN DIN Wednesday, October 18, 2017 03:22 AM +0530 சென்னை தியாகராயநகரில் சமையல்கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்பு படை வீரர்கள் 3 மணி நேரம் போராடி அணைத்தனர்.
இது குறித்த விவரம்: தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் மாம்பலம் ரயில் நிலையம் அருகே ஒரு ஜவுளிக் கடையின் வீட்டு உபயோகப் பொருள்கள் கடை 3 மாடி கட்டடத்தில் உள்ளது. இந்த கட்டடத்தின் 3}ஆவது தளத்தில் சமையல் கூடம் உள்ளது.
மறதி காரணமாக...: இங்கு ஸ்வீட் கடைகளுக்குத் தேவையான இனிப்பு வகைககள், கார வகைகள் மொத்தமாக தயாரித்து வழங்கப்படுகின்றன. தீபாவளி பண்டிகை என்பதால் அந்த சமையல் கூடத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு வரை ஊழியர்கள் வேலை செய்தனர். பின்னர் அவர்கள், மின் விளக்கை அணைக்காமலும், சமையல் எரிவாயு உருளையை சரியாக மூடாமலும் சென்றதாகத் தெரிகிறது.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் அந்த சமையல் கூடத்தில் இருந்த சில பொருள்கள் எரிந்து கரும் புகை வெளியேறியது. இதைப் பார்த்த அங்கிருந்த கடை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை.
3 மணி நேரம் தொடர்ந்து போராடி...: இதையடுத்து அவர்கள், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த தீயணைப்பு படையினர் பாண்டி பஜார்,தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் இருந்து விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதேவேளையில் ரங்கநாதன் தெருவில் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தீயணைப்பு வாகனமும், தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
மூன்றாவது தளத்தில் சமையல் எரிவாயு உருளைகளை பாதுகாப்புடன் அங்கிருந்து தீயணைப்பு படை வீரர்கள் அகற்றினர். மேலும் தீ விபத்து ஏற்பட்ட பகுதி குறுகலாக இருந்ததால், தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதற்கிடையே தீ அந்த தளத்தில் இருந்து, வேறு தளத்துக்குப் பரவாதவாறு தீயணைப்பு படை வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
தீயணைப்பு படை வீரர்களின் தொடர் முயற்சியின் காரணமாக, சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து மாம்பலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில்...: விபத்து ஏற்பட்ட சமையல் கூடத்தில் எளிதில் தீப் பிடிக்கும் பொருள்களை பாதுகாப்பு இல்லாமல் வைத்ததினால் தீ விபத்து ஏற்பட்டிருப்பது போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தின் காரணமாக தியாகராயநகர் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பரபரப்பு ஏற்பட்டது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/18/சமையல்-கூடத்தில்-தீ-விபத்து-3-மணி-நேரம்-போராடி-அணைப்பு-2792222.html
2792221 சென்னை சென்னை தீபாவளி விபத்து: தயார் நிலையில் அரசு மருத்துவமனைகள் DIN DIN Wednesday, October 18, 2017 03:21 AM +0530 தீபாவளி பண்டிகை சமயத்தில் ஏற்படும் பட்டாசு விபத்துகள் மற்றும் சாலை விபத்துகளைக் கையாளும் வகையில் சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளும் சிறப்பு முன்னேற்பாடுகளைச் செய்துள்ளன.
பட்டாசு விபத்துகள்}கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி, அரசு பொது மருத்துவமனை: தீபாவளி பண்டிகை சமயத்தில் ஏற்படும் பட்டாசு விபத்துகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 10 படுக்கைகள் கொண்ட சிறப்பு தீக்காய வார்டுகள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர தீவிர சிகிச்சைப் பிரிவில் 10 படுக்கைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
கைகள் சேதப்படும் அளவில் ஏற்படும் பட்டாசு விபத்துகளுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கும் வகையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள கை சீரமைப்பு மற்றும் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சைத் துறையில் 40 மருத்துவர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஓர் அறுவைச் சிகிச்சை அரங்கும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்று ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பொன்னம்பலம் நமச்சிவாயம் கூறினார். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் 5 படுக்கைகளும், 14 மருத்துவர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும் சிறிய காயங்களைக் கையாளும் வகையில் 33 மருத்துவர்கள் பணியில் இருப்பார்கள்.
கண் மருத்துவமனை: எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில், கண்களில் ஏற்படும் பட்டாசு விபத்துகளுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளிப்பதற்காக 15 மருத்துவர்கள் பணியில் இருப்பர். அவரச கண் அறுவைச் சிகிச்சைகளுக்கு அறுவைச் சிகிச்சை அரங்கும் தயார் செய்யப்பட்டுள்ளது. கண்களில் தீவிர காயமடைந்தோரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்கு 108 ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று மருத்துவமனையின் நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் செந்தில் கூறினார்.
108 ஆம்புலன்ஸ்: தமிழகத்தில் தீபாவளி சமயத்தில் ஏற்படும் சாலை விபத்துகளைக் கையாள 902 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் உள்ளிட்டவற்றிலும் கூடுதல் வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/18/தீபாவளி-விபத்து-தயார்-நிலையில்-அரசு-மருத்துவமனைகள்-2792221.html
2792220 சென்னை சென்னை தீபாவளி பண்டிகை: ஆளுநர், முதல்வர் வாழ்த்து DIN DIN Wednesday, October 18, 2017 03:21 AM +0530 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: அறியாமையின் இருள் போக்கி சுய முன்னேற்றம், அகந்தை, வெறுப்புகளைக் களைவதை தீபாவளி உணர்த்துகிறது. இந்தத் தீப ஒளித் திருநாளில் தீமை விலகி, சகோதரத்துவம் வலுப்பெற்று, தூய்மையான இந்தியாவைக் கட்டமைக்க உறுதியேற்போம். தமிழக மக்கள் அனைவருக்கு எனது உளங்கனித்த பசுமை தீபாவளி நல்வாழ்த்துகள்.
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி: கொடுஞ்செயல்களால் மக்களைப் பெருந்துன்பத்துக்கு ஆளாக்கிய கொடிய அரக்கனை திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. மறம் வீழ்ந்து, அறம் வென்ற நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகிடும் நன்னாளாகவும் தீபாவளி விளங்குகிறது.
தீபத் திருநாளன்று, மக்கள் அதிகாலை கங்கை நதியில் குளிப்பதற்கு ஒப்பாகக் கருதப்படும் தீபாவளி எண்ணெய்க் குளியல் முடித்து, புதிய ஆடைகளை அணிந்து, தீபாவளி என்ற சொல்லின் பொருளுக்கேற்ப இல்லங்களில் வரிசையாக தீப விளக்கேற்றி, தங்கள் வாழ்வு சிறக்க கடவுளை வணங்கி, பலவகையான இனிப்புகளையும் பலகாரங்களையும் நண்பர்களோடும் உறவினர்களோடும் பகிர்ந்துண்டு, பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகையை தங்கள் உற்றார் உறவினர்களுடன் கோலாகலமாகக் கொண்டாடுவர்.
இந்தத் தித்திக்கும் தீபாவளித் திருநாளில் மக்கள் அனைவரின் வாழ்விலும் நலமும் வளமும் பெருகட்டும், இருள் அகன்று மகிழ்ச்சி ஒளிச்சுடர் பரவட்டும். அனைவருக்கும் எனது உளமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/18/தீபாவளி-பண்டிகை-ஆளுநர்-முதல்வர்-வாழ்த்து-2792220.html
2792219 சென்னை சென்னை தீபாவளி பண்டியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து DIN DIN Wednesday, October 18, 2017 03:21 AM +0530 தீபாவளி பண்டியை முன்னிட்டு, தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
விஜயகாந்த் (தேமுதிக): தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டிய வேளையில், தமிழகம் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது. பல உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. பல்லாயிரம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். டெங்குவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் பூரண குணமடைந்து இல்லம் திரும்ப இறைவனை வேண்டுகிறேன். 
வெகு சிறப்பாக தீபாவளி திருநாளைக் கொண்டாடும் நிலையில் இல்லையென்றாலும், அவரவர் சக்திக்கேற்ப தீபாவளியை அனைவரும் கொண்டாட வேண்டும். வரும் காலங்களில் தங்களின் வாழ்வில் செழிப்பும், மனதில் மகிழ்ச்சியும் ஏற்பட்டு மக்கள் அனைவரும் வளமான வாழ்வு வாழ, ஒளிமயமான எதிர்காலம் அமைந்திட வாழ்த்துகிறேன்.
சு.திருநாவுக்கரசர் (காங்கிரஸ்): மனித இனத்துக்கு எதிராக நடைபெற்ற கொடுமைகள் அகற்றப்பட்ட நாளையே தீபாவளி திருநாளாக கொண்டாடி வருகின்றனர். இன்றைய மத்திய அரசின் கீழும், மாநில அரசினாலும் மக்கள் படும் துயரமும், வறுமையும் அகன்று அனைத்து மக்களின் வாழ்விலும் வளமும், நலமும் பெருக நெஞ்சம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.
ராமதாஸ் (பாமக): தீபத்தின் ஒளியைப் போலவே விவசாயிகள், வணிகர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வெளிச்சமும், மகிழ்ச்சியும் கிடைக்கக்கூடிய ஒளிமயமான எதிர்காலம் அமைய வேண்டும்.
அன்புமணி (பாமக): இந்தியாவில் வாழும் அனைத்து தரப்பு மக்களிடமும் நட்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவை மலர வேண்டும்; நாட்டில் அமைதியும், வளமும், மகிழ்ச்சியும் பெருக வேண்டும். வறுமையும், சுரண்டலும், வேலையில்லாத் திண்டாட்டமும் ஒழிய வேண்டும் என்பன உள்ளிட்ட இலக்குகளை வென்றெடுக்க உறுதியேற்க வேண்டும்.
ஜி.கே.வாசன் (தமாகா): தீயன மறையும், நல்லவை நடக்கும் என்ற நம்பிக்கையை விதைக்கும் நாள் தீபாவளி. இன்று தேசத்தில் நிலவும் பேதங்களும், பிணக்குகளும் நீங்க வேண்டும். அனைவரையும் அரவணைக்கும் அன்பும், அணுகுமுறையும் மலர வேண்டும். ஒட்டு மொத்த மக்களும் மகிழ்வோடு வாழ வேண்டும்.
கே.எம்.காதர் மொகிதீன் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்): இந்தியாவில் வாழும் அனைத்து மத, மொழி, இன, கலாசாரங்களைக் கொண்ட அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வில் வாழ வேண்டும். இந்த உணர்வில் நம்பிக்கையுள்ளவர்கள் தேசத்துக்கு நல்வழி காட்டவும் வேற்றுமையில் ஒற்றுமை பேணும் மக்களாக எல்லோரும் வாழவும் இறையருளை வேண்டுகிறேன்.
நிஜாமுதீன் (இந்திய தேசிய லீக்): பண்பாடு, கலாசாரம் காத்திடவும், நாடு நலம்பெறவும் நாட்டு மக்கள் வளம் பெறவும் நல்லிணக்கம் பேணவும், ஏழ்மை போக்கிடவும் தீபாவளி திருநாளில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/18/தீபாவளி-பண்டியை-முன்னிட்டு-தலைவர்கள்-வாழ்த்து-2792219.html
2792218 சென்னை சென்னை ஜாதி, மதம், இனம், மொழிகளைக் கடந்து அனைவரையும் ஒன்றிணைக்கிறது இசை: வெங்கய்ய நாயுடு DIN DIN Wednesday, October 18, 2017 03:20 AM +0530 ஜாதி, மதம், இனம், மொழிகளைக் கடந்து இசை அனைவரையும் ஒன்றிணைக்கிறது என குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறினார்.
கர்நாடக இசை மேதை மறைந்த எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நினைவு கண்காட்சியை சென்னையில் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்துப் பார்வையிட்ட பின் வெங்கய்ய நாயுடு பேசியது: இந்தியா மிகப்பெரிய கலாசார பாரம்பரியத்தைக் கொண்ட நாடு. இதில் ஹிந்துஸ்தானி இசை, கர்நாடக இசை போன்றவை எங்கும் பரவியுள்ளன. அத்தகைய பாரம்பரியங்களைக் கொண்ட கலையில் எம்.எஸ்.சுப்புலட்சுமி கோலோச்சி நின்றவர் என்றால் அது மிகையாகாது.
மகாத்மா காந்தி முதல் பாமரன் வரை அனைவரையும் தன் இசையின் புலமையால் வசீகரித்தவர் அவர். 1947-ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் பிறந்தநாளின்போது தன் இனிமையான குரலால் "ஹரி தும்ஹரோ' 
என்ற பாடலை ஒரே இரவில் பாடி அதனைப் பதிவு செய்து அவருக்கு அனுப்பி வைத்து பெருமைப்படுத்தினார். 
இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னாவை இசைத் துறையில் முதன்முதலில் பெற்ற நபர் இவர். ஐ.நா. சபையில் தனது இசையைப் பதிவு செய்தவர். சமூக சேவைக்காக ரமோன் மகசேசே விருதைப் பெற்ற முதல் இந்தியர் இவர். இந்தியாவின் இசைக்குயில் என அனைவராலும் பாராட்டப்பட்டவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் பல பாடல்களைப் பாடியவர். அத்தகைய பெருமை மிக்க ஒரு இசை மேதையை நாம் அனைவரும் நினைவுகூர வேண்டும் என்றார் வெங்கய்ய நாயுடு.
இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர் டி. ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/18/w600X390/venkiah.jpg கர்நாடக இசை மேதை மறைந்த எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நினைவு கண்காட்சியை சென்னையில் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்துப் பார்வையிடும் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு. http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/18/ஜாதி-மதம்-இனம்-மொழிகளைக்-கடந்து-அனைவரையும்-ஒன்றிணைக்கிறது-இசை-வெங்கய்ய-நாயுடு-2792218.html
2792216 சென்னை சென்னை பொது அமைதிக்கு குந்தகம்: குற்றவியல் நடைமுறை சட்டத்தை அமல்படுத்த உத்தரவு DIN DIN Wednesday, October 18, 2017 03:17 AM +0530 பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துபவர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யாமல், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை உரிய முறையில் அமல்படுத்த வேண்டும் என காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்த திட்டமிட்டதாகக் கூறி, காவல் துறையினர் என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது குற்றவியல் நடைமுறைச் சட்டத்துக்கு எதிரானது. எனவே என் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குக்குத் தடைவிதிக்க வேண்டும்' என அந்த மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.டி.செல்வம், "குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 107 -ஆவது பிரிவின் படி, ஒருவர் பொது அமைதிக்கு பாதிப்பு விளைவிப்பதாக வரும் தகவலின் அடிப்படையிலோ, கருத்துகளின் அடிப்படையிலோ அவர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யக் கூடாது.
பொது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தமாட்டேன் என அவரிடம் எழுதி வாங்க வேண்டும். மேலும் இந்தப் பிரிவின் கீழ் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அனைத்து காவல் நிலையங்களிலும் தனிப் பதிவேட்டை கையாள வேண்டும். இந்த உத்தரவை அனைத்து காவல் நிலையங்களிலும் பின்பற்ற காவல் துறை டிஜிபி உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். மேலும், மனுதாரர் மீது தாராபுரம் காவல் துறையினர் பதிவு செய்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது' என உத்தரவிட்டார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/18/பொது-அமைதிக்கு-குந்தகம்-குற்றவியல்-நடைமுறை-சட்டத்தை-அமல்படுத்த-உத்தரவு-2792216.html
2792214 சென்னை சென்னை கேரள முதல்வரை மிரட்டுவதா? பாஜகவுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம் DIN DIN Wednesday, October 18, 2017 03:00 AM +0530 கேரள முதல்வர் பினராயி விஜயனை மிரட்டும் வகையில் பாஜக தலைவர்கள் பேசியிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. 
இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: 
தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், "கேரள முதல்வர் பினராயி விஜயன் கேரள மாநிலத்தைத் தாண்டி வேறு எங்கும் கால் வைக்க முடியாது' என்று பகிரங்கமாக மிரட்டியுள்ளார். 
தமிழக பாஜக தலைவர் தமிழிசை செüந்தரராஜனும், "பினராயி விஜயன் கேரளத்தை விட்டு வெளியே போக முடியாது' என்று கூறியுள்ளார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு முதல்வரை இவ்வாறு மிரட்டுவது முற்றிலும் ஜனநாயக விரோதமானது. இதற்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவிக்கிறது என ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/18/கேரள-முதல்வரை-மிரட்டுவதா-பாஜகவுக்கு-மார்க்சிஸ்ட்-கண்டனம்-2792214.html
2792213 சென்னை சென்னை அக். 21-இல் உலகத் தமிழ்க் கவிதை விழா: யாழ்ப்பாணத்தில் நடைபெறுகிறது DIN DIN Wednesday, October 18, 2017 02:59 AM +0530 உலகத் தமிழ்க் கவிதை விழா, இலங்கையின் யாழ்ப்பாணம் நகரில் சனிக்கிழமை (அக்.21) நடைபெறுகிறது.
டென்மார்க் ரியூப் தமிழ், யாழ்ப்பாணம் கோபால் வெளியீட்டகம், புத்தளம் அறிவு விருட்சம் துரித கல்வி சமூக மேம்பாடு, சாய் அச்சகம் ரவீந்திரன், புதுக்குடியிருப்பு கவிதாலயா நாடக மன்றம், யோகா பயிற்சிக் கல்லூரி, யாழ்ப்பாவாணன் வெளியீட்டகம், ஒளி அரசி இதழ், பிரான்ஸ் பன்னாட்டு இசை, இலக்கிய, ஓவிய ஒன்றியம், வடமாகாண கைப்பணி அபிவிருத்தி சங்கம், நதியோர நாணல்கள் இலக்கிய அமைப்பு, உலகப் பாவலர் மன்றம் ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த விழாவை நடத்துகின்றன. 
32 நாடுகளிலிருந்து 1,098 கவிஞர்கள்: இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் வீரசங்க மண்டபத்தில் சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு இவ்விழா தொடங்குகிறது. இதில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட 32 நாடுகளிலிருந்து 1,098 கவிஞர்கள் கலந்து கொள்கின்றனர்.
செல்லமுத்து வெளியீட்டகம் வழங்கும், உலகளாவிய பெருநூலின் வெளியீட்டு விழா முதலில் நடைபெறுகிறது. இந்தக் கவிதை நூலை முல்லைத்தீவு இனிய வாழ்வு இல்ல மாற்றுத் திறனாளி சிறுவர்கள் வெளியிட, முதல் படியைப் புத்தளம் துரித கல்வி மேம்பாட்டு நிறுவனத்தின் ஐ.எம்.சுரைசு பெற்றுக் கொள்கிறார். 1,861 பக்கங்கள் கொண்ட கவிதை நூலைத் தொகுத்து பதிப்பித்திருப்பவர் செயல் இயக்குநர் யோ.புரட்சி ஆவார்.
ம.இராசேந்திரன் சிறப்புரை: இந்த நிகழ்ச்சிக்கு பேராசிரியர் அ. சண்முகதாசு தலைமை வகிக்கிறார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் ம. இராசேந்திரன் சிறப்புரையாற்றுகிறார். யாழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் இ. விக்னேசுவரன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் என். சண்முகலிங்கன், இந்தியக் துணைத் தூதர் ஆ.நடராசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/18/அக்-21-இல்-உலகத்-தமிழ்க்-கவிதை-விழா-யாழ்ப்பாணத்தில்-நடைபெறுகிறது-2792213.html
2792210 சென்னை சென்னை டெங்கு: ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களின் பணியைத் தெளிவுபடுத்த வேண்டுகோள் DIN DIN Wednesday, October 18, 2017 02:58 AM +0530 டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கான பணியைத் தெளிவுபடுத்தி அரசாணை வெளியிட வேண்டும் என்று தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதனுக்கு தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் டாக்டர் கதிர்வேல் இந்தக் கடிதத்தை சங்கத்தின் எழுதியுள்ளார். வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் க.குழந்தைசாமி ஆகியோருக்கும் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கடித விவரம்: டெங்கு காய்ச்சல் பரவி வரும் சூழ்நிலையில் மருத்துவ அலுவலர்களின் பணியையும், பணி நேரத்தையும அரசாணை மூலம் தெளிவுபடுத்த வேண்டும். மாவட்ட இரண்டாம் நிலை மருத்துவர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், ஆரம்ப சுகாதார நிலைய இரண்டாவது நிலை மருத்துவ அலுவலர்கள், நடமாடும் மருத்துவக் குழுவில் பணிபுரியும் மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கான பணியைத் தெளிவுபடுத்த வேண்டும்.
சில இடங்களில் ஒரே நேரத்தில் காய்ச்சல் முகாமும், பள்ளிக்கூட முகாமும் வழக்கமாக மேற்கொள்ளப்படும் கிராமப்புற முகாம்களையும் நடத்த வலியுறுத்தப்படுகிறது. இந்த அவசர காலத்தில் இதுபோன்ற குழப்பங்களைத் தவிர்த்து, சரியான வழிகாட்டுதல்களை அரசு வழங்க வேண்டும்.
அவசர காலமாக அறிவித்து...: டெங்கு மற்றும் பிற காய்ச்சல்களால் ஏற்படும் உயிரிழப்புகளைக் கருத்தில் கொண்டு பொது சுகாதார அவசர காலமாக அறிவித்து, அதற்கேற்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் மேலாண்மை களப் பணியை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும் ஒரு வாகனம் வழங்க வேண்டும்.
ஓய்வு பெற்றவர்களையும்...: சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதால், விருப்பப் பணி ஓய்வு பெற்ற சுகாதாரப் பணியாளர்களையும், இதர தனியார் சுகாதாரப் பணியாளர்களையும் டெங்கு கட்டுப்பாட்டு பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
வேறு கிருமிகளால் காய்ச்சலா? தமிழகத்தில் காய்ச்சல் தற்போது அதிக அளவில் பரவி வருகிறது. சில இடங்களில் தொடர்ந்து உயிரிழப்பும் நிகழ்ந்து வருகிறது. தமிழக அரசும் சுகாதாரத் துறையும் பெருமுயற்சி எடுத்தும் இந்தப் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை. பரவி வரும் காய்ச்சலானது டெங்கு காய்ச்சல் மட்டும்தானா அல்லது வேறு கிருமிகள் கலந்த காய்ச்சலும் உள்ளதா என்பதைக் கண்டறிய வேண்டும்.
மருத்துவ நிபுணர் குழுவை அமைத்து...: எனவே, இதற்கான காரணங்களை ஆராய்வதற்காக மருத்துவ நிபுணர் குழுவினை நியமித்து, காய்ச்சலால் பெரிதும் பாதிக்கப்பட்ட சேலம் மாவட்டத்துக்கு ஆய்வுக்கு குழுவினரை அனுப்ப வேண்டும். அந்தக் குழுவின் அறிக்கையின்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பபட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/18/டெங்கு-ஆரம்ப-சுகாதார-நிலைய-மருத்துவர்களின்-பணியைத்-தெளிவுபடுத்த-வேண்டுகோள்-2792210.html
2792174 சென்னை சென்னை 3 மாதங்களுக்குப் பிறகு ராயபுரம் மேம்பாலம் மீண்டும் திறப்பு DIN DIN Wednesday, October 18, 2017 01:57 AM +0530 சீரமைப்புப் பணி காரணமாக மூடப்பட்டிருந்த ராயபுரம் ரயில்வே மேம்பாலம் 3 மாத இடைவெளிக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (அக்.17) மீண்டும் திறக்கப்பட்டது.
கடற்கரை சந்திப்பு - கொருக்குப் பேட்டை ரயில் மார்க்கத்தில் இரண்டு ரயில்பாதைகள்தான் உள்ளன. தென் மாவட்டங்களிலிருந்து எழும்பூர் வழியாக வட மாநிலங்களுக்குச் செல்லும் விரைவு மற்றும் சரக்கு ரயில்கள், ஆவடி, கும்மிடிப்பூண்டியிலிருந்து கடற்கரைக்கு வரும் ரயில்கள், சென்னை துறைமுகத்துக்குச் செல்லும் சரக்கு ரயில்கள் என இந்த மார்க்கத்தில் எப்போதும் பெரும் நெருக்கடி இருந்து வந்தது. இதனையடுத்து ரூ.150 கோடியில் கொருக்குப் பேட்டை-கடற்கரை மார்க்கத்தில் மேலும் இரண்டு ரயில்பாதைகள் அமைக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்திருந்தது. ஆனால், ராயபுரம் ரயில்வே மேம்பாலத்தின் தூண்கள் புதிய ரயில்பாதைகளை அமைக்கத் தடையாக இருந்து வந்தது.
இந்த நிலையில் இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்து கடந்த ஜூலை மாதம் பாலத்தின் தூண்களை இடிக்கும் பணியைத் தொடங்கியது. இதனையடுத்து போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது.
தூண்கள் அகற்றம்: கூடுதல் ரயில்பாதைகள் அமைக்க தடையாக இருந்து வந்த தூண்கள், மேல்தளம் உள்ளிட்டவை அடியோடு அகற்றப்பட்டு இடைவெளி விட்டு புதிய தூண்களும், மேல்தளமும் அமைக்கப்பட்டன. கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வந்த இப்பணிகள் சில தினங்களுக்கு முன்பு நிறைவு பெற்றன.
இதனையடுத்து சீரமைக்கப்பட்ட மேம்பாலம் செவ்வாய்க்கிழமை போக்குவரத்துக்குத் திறந்து விடப்பட்டது. இதனையடுத்து கடந்த மூன்று மாதங்களாக இருந்து வந்த போக்குவரத்து நெருக்கடி முடிவுக்கு வந்தது. பாலம் சீரமைக்கப்பட்டதையடுத்து கூடுதல் ரயில்பாதைகள் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/18/w600X390/rayapuram.jpg சீரமைப்புப் பணி காரணமாக மூடப்பட்டிருந்த சென்னை ராயபுரம் ரயில்வே மேம்பாலம் 3 மாத இடைவெளிக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை மீண்டும் போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டது. http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/18/3-மாதங்களுக்குப்-பிறகு-ராயபுரம்-மேம்பாலம்-மீண்டும்-திறப்பு-2792174.html
2792170 சென்னை சென்னை சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாமல் தீபாவளியை கொண்டாட மாசுக் கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தல் DIN DIN Wednesday, October 18, 2017 01:56 AM +0530 தீபாவளி பண்டிகையை ஒட்டி வெடி வெடிப்பதைக் குறைத்து, சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் பொது மக்கள் கொண்டாட வேண்டும் என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய உறுப்பினர் செயலர் ரா.கண்ணன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தீபாவளியை ஒட்டிய இரு நாள்களில் நிலவும் பருவநிலை மற்றும் வானிலை முன்னறிக்கையின்படி, புகையானது இயல்பாக வளி மண்டலத்தில் கலப்பதற்கு உகந்த சூழல் தற்போது ஏதுவாக இல்லை என்பது தெரிகிறது. இதனால், முறையான புகைச்சிதறல் ஏற்படாததனால், தரைமட்டத்தில் புகையின் அளவு அதிகரிக்கும். இதனால், சுவாசக் கோளாறு, மூச்சுத்திணறல், தொண்டை எரிச்சல், நுரையீரல் தொற்றும் ஏற்படுத்தி பொதுமக்களை பாதிப்படையச் செய்யும்.
தீபாவளியன்று இரவில் வளி மண்டலத்தில் நிலவும் குளிரின் தன்மையால் மாசு அடர்த்தி அதிகமாவதுடன், புகையுடன் கலந்த பனிப்புகை மூட்டமும் ஏற்படுகிறது. பொது இடத்தில் வெடி வெடிப்பதினால் சுற்றுப்புறத்தில் ஏற்படும் சேதம் மற்றும் மாசுகளால் உயிரினங்களின் பொதுச் சுகாதாரம் பாதிப்படைகிறது. இது மக்களை மட்டுமல்லாமல் பறவைகளையும், விலங்குகளையும் பாதிக்கிறது. செல்லப் பிராணிகள், தெருவில் திரியும் நாய்கள் மற்றும் கால்நடைகளையும் நினைவில் கொண்டு வெடி வெடிக்க வேண்டும்.
தீபாவளித் திருநாளில் வெடிக்கும் வெடிகளில் சுகாதாரக் கேட்டை உண்டாக்கக்கூடிய ஆபத்தான சல்பர்டை ஆக்ஸைடுகள் மற்றும் மாசு துகள்கள் மிக அதிக அளவில் உள்ளன. மேலும், அதில் வேதியியல் பொருள்களான ஆர்சனிக், சல்பர், மெக்னீசியம், சோடியம், இரும்பு, பொட்டாசியம் குளோரைடு, தாமிரம், துத்தநாகம் இருக்கின்றன.
இதனால் வளிமண்டலத்தில் மாசு ஏற்படுவதோடு, நமது சுவாச அமைப்புகளை பாதிக்கும் தன்மையை கொண்டுள்ளதாகவும் உள்ளது. ஆதலால், பொதுமக்கள் வெடி வெடிப்பதைக் குறைத்தும், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையிலும் இந்த இனிய தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/18/சுற்றுச்சூழலுக்கு-தீங்கு-ஏற்படுத்தாமல்-தீபாவளியை-கொண்டாட-மாசுக்-கட்டுப்பாடு-வாரியம்-அறிவுறுத்தல்-2792170.html
2792168 சென்னை சென்னை வணிக வளாக மாடியில் இருந்து குதித்து பொறியியல் பட்டதாரி சாவு DIN DIN Wednesday, October 18, 2017 01:56 AM +0530 சென்னை வடபழனியில் உள்ள வணிக வளாகத்தில் 3 ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.
வேலூரைச் சேர்ந்தவர் யுவராஜ் (27). பி.இ. பட்டதாரியான இவர், சென்னை சாலிகிராமத்தில் தங்கியிருந்து மாணவர்களுக்கு டியூஷன் வகுப்பு நடத்தி வந்தார். இந்நிலையில் யுவராஜ், வடபழனியில் உள்ள ஒரு பிரபலமான வணிக வளாகத்துக்கு செவ்வாய்க்கிழமை நண்பகல் வந்தார்.
அங்கு 3ஆவது தளத்தில் ஒரு பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்த யுவராஜ், திடீரென அங்கிருந்து கீழே குதித்தார். இதில் பலத்த காயமடைந்த யுவராஜ் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். யுவராஜ் காதல் பிரச்னையில் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, வடபழனி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/18/வணிக-வளாக-மாடியில்-இருந்து-குதித்து-பொறியியல்-பட்டதாரி-சாவு-2792168.html
2792167 சென்னை சென்னை வனத்துறை அலுவலகத்தில் ரூ.3.80 லட்சம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை DIN DIN Wednesday, October 18, 2017 01:55 AM +0530 சென்னை வனத்துறை அலுவலகத்தில் ரூ.3.80 லட்சம் பணத்தையும், 113 கிராம் தங்க நகையையும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
இது குறித்த விவரம்:
சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் இயங்கும் சென்னை மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தில் சில அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீஸார் அந்த அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை திடீர் சோதனை நடத்தினர்.
இச் சோதனையில் அந்த அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.3.80 லட்சம், 113 கிராம் எடையுள்ள தங்க நகை இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீஸார், அவற்றை பறிமுதல் செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.
இதேபோல, உதகமண்டலம் மாவட்டம், உதகமண்டல பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.73 ஆயிரத்து 200-யை லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மேலும் விழுப்புரம் மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.2.50 லட்சம் பணத்தையும், ஆவணத்தையும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/18/வனத்துறை-அலுவலகத்தில்-ரூ380-லட்சம்-பறிமுதல்-லஞ்ச-ஒழிப்புத்துறை-நடவடிக்கை-2792167.html
2792165 சென்னை சென்னை சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் ரூ.1.52 லட்சம் பறிமுதல் DIN DIN Wednesday, October 18, 2017 01:55 AM +0530 சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி, அங்கிருந்து கணக்கில் வராத ரூ.1.52 லட்சத்தைப் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: சென்னை ஆலந்தூர் புதிய தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி 12-ஆவது மண்டல அலுவலகத்தில் பணிபுரியும் சில அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை அந்த அலுவலத்தில் திடீர் சோதனை நடத்தினர். பல மணி நேரம் நீடித்த இந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.1,52,550 இருப்பது தெரியவந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், அந்தப் பணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல நந்தனம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் உள்ள தொழிலாளர் ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இச் சோதனையில் அங்கிருந்து கணக்கில் வராத ரூ.61,600-த்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/18/சென்னை-மாநகராட்சி-மண்டல-அலுவலகத்தில்-ரூ152-லட்சம்-பறிமுதல்-2792165.html
2792164 சென்னை சென்னை கடன் பெற்றுத் தருவதாக பண மோசடி: பெண் கைது DIN DIN Wednesday, October 18, 2017 01:55 AM +0530 சென்னையில் கடன் பெற்றுத் தருவதாக பணம் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக பெண் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: கோட்டூர்புரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் க.பட்டு (43). இவர் வங்கியில் கடன் பெறுவதற்காக, வேளச்சேரியில் மகளிர் சுய உதவிக் குழு நடத்தும் ம.லதா (42) என்பவரை சந்தித்தார்.
அப்போது அவர், வங்கியில் கடன் பெற்றுத் தருவதற்கு ரூ.10,000 தனக்கு தரும்படி கேட்டார். உடனே லதாவுக்கு ரூ.10,000-த்தை பட்டு வழங்கினார். இதேபோல 12-க்கும் மேற்பட்டோரிடம்கடன் பெற்றுத் தருவதாக தலா ரூ.10,000 லதா பெற்றார்.
இந்த நிலையில் பணத்தைப் பெற்றுக் கொண்ட லதா, யாருக்கும் கடன் பெற்றுக் கொடுக்கவில்லை. மேலும் வாங்கிய பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த பட்டு, கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் லதா மீது புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து லதாவை திங்கள்கிழமை கைது செய்தனர். அவரிடம் பண மோசடி குறித்து போலீஸார் விசாரணை செய்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/18/கடன்-பெற்றுத்-தருவதாக-பண-மோசடி-பெண்-கைது-2792164.html
2791597 சென்னை சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகளின் 23-ஆவது மாநாடு: 3 நிறுவனங்களுக்கு விருது DIN DIN Tuesday, October 17, 2017 04:28 AM +0530 இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகளின் 23-ஆவது மாநாடு சென்னையில் அண்மையில் நடைபெற்றது. 
இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் நலனுக்காக அரும்பணியாற்றிய மூன்று அரசு சாரா நிறுவனங்களுக்கு விருது, நிதியுதவி வழங்கப்பட்டன. 
இந்த மாநாட்டை வங்கியின் நிர்வாக இயக்குநர் சுப்ரமணியகுமார் தொடக்கி வைத்தார். இதையடுத்து சென்னை மண்டல பொது மேலாளர் கேதார்நாத் வரவேற்புரையாற்றினார். 
இந்தியாவில் வங்கித் துறையின் செயல்பாடுகள், எதிர்கொள்ளும் சவால்கள், பரிவர்த்தனையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஆகியவை குறித்து அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் தாமஸ் பிராங்கோ பேசினார். வங்கித் துறை வளர்ச்சிக்கான கூட்டமைப்பு ஆற்றி வரும் பணிகளை வங்கிகள் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டி.முரளி சௌந்தரராஜன் எடுத்துரைத்தார். இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலர் பி.சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/17/இந்தியன்-ஓவர்சீஸ்-வங்கி-அதிகாரிகளின்-23-ஆவது-மாநாடு-3-நிறுவனங்களுக்கு-விருது-2791597.html
2791596 சென்னை சென்னை ரூ.3 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் DIN DIN Tuesday, October 17, 2017 04:27 AM +0530 சென்னை துறைமுகத்தில் இருந்து மலேசியாவுக்குக் கடத்த முயன்ற ரூ.3.2 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை மத்திய வருவாய்வு புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை துறைமுகத்தில் இருந்து மலேசியாவுக்கு சரக்கு பெட்டகத்தின் மூலம் பல கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அந்தத் தகவலின் அடிப்படையில், மலேசியாவுக்கு கொண்டு செல்வதற்கு வைக்கப்பட்டிருந்த சரக்கு பெட்டகங்களை வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கடந்த 13-ஆம் தேதி சோதனையிட்டனர்.
இதில் சரக்கு பெட்டகத்தில் ரூ.3.2 கோடி மதிப்புள்ள 8.1 மெட்ரிக் டன் எடையுள்ள செம்மரக்கட்டைகளை 10 அட்டை பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து இதுவரை ரூ.31.5 கோடி மதிப்புள்ள 80 மெட்ரிக் டன் செம்மரட்டைகளை அதிகாரிகள் சென்னையில் பறிமுதல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு தொடர்பாக, தலைமறைவாக இருக்கும் சிலரை தேடி வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/17/ரூ3-கோடி-மதிப்புள்ள-செம்மரக்கட்டைகள்-பறிமுதல்-2791596.html
2791595 சென்னை சென்னை 'கண் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வேண்டும்' DIN DIN Tuesday, October 17, 2017 04:27 AM +0530 மாணவர்கள் தங்கள் கண்களை பாதுகாத்துக் கொள்வதுடன், பொதுமக்கள் மத்தியிலும் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று சங்கர நேத்ராலாயா மருத்துவமனை மருத்துவர் சந்தானம் வலியுறுத்தினார். 
பார்வை பாதுகாப்பு குறித்து உலகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை 'உலக பார்வை நாள்' கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, தமிழ்நாடு விழி ஒளி ஆய்வாளர்கள் நண்பர்கள் அமைப்பு சார்பில், விழிப்புணர்வு நடைப்பயணம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நடைப்பயணத்தை சங்கர நேத்ராலாயா கண் மருத்துவமனை மருத்துவர் சந்தானம் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், 'குழந்தைகளும், மாணவர்களும் தங்கள் கண்களை பாதுகாத்துக் கொள்வதுடன், பொதுமக்கள் மத்தியில் கண் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்' என்றார்.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு விழிஒளி ஆய்வாளர்கள் நண்பர்கள் அமைப்பின் தலைவர் கிருஷ்ணகுமார், பூங்கோதை செந்தில்குமார், கண் மருத்துவ நிறுவனத்தைச் சார்ந்தவர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உலக பார்வை தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கும், முதியோர் இல்லத்தில் உள்ள வயோதிகர்களுக்கும் கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/17/கண்-பாதுகாப்பு-குறித்த-விழிப்புணர்வு-வேண்டும்-2791595.html
2791594 சென்னை சென்னை டெங்குவுக்குச் சிறுமி உயிரிழப்பு DIN DIN Tuesday, October 17, 2017 04:27 AM +0530 டெங்குவால் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுமி சிகிச்சை பலனளிக்காமல் திங்கள்கிழமை (அக்.16) உயிரிழந்தார்.
சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த யமுனா (8) எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அக்டோபர் 15-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைச் சிகிச்சைப் பயனளிக்காமல் திங்கள்கிழமை உயிரிழந்தார். 
இது தொடர்பாக மருத்துவர்கள் கூறியது: மருத்துவமனைக்கு சிறுமியைக் கொண்டு வருவதற்கு முன்னரே அவருக்கு 7 நாள்களாக காய்ச்சல் இருந்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப் படுகையில் ரத்தக் கசிவும், உடல் உறுப்புகளில் அதிர்வு ஏற்பட்டது போன்ற நிலையும் காணப்பட்டது. மருத்துவ ஆய்வுகளின்படி டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இருப்பினும், ரத்த மாதிரி பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் வந்தால் எந்த வகையான காய்ச்சல் என்பதை உறுதிப்படுத்த முடியும் என்று தெரிவித்தனர். 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/17/டெங்குவுக்குச்-சிறுமி-உயிரிழப்பு-2791594.html
2791593 சென்னை சென்னை தமிழ்நாடு வழக்குரைஞர் சங்கத்தில் சான்றிதழ்கள் மாயம் DIN DIN Tuesday, October 17, 2017 04:26 AM +0530 தமிழ்நாடு வழக்குரைஞர் சங்கத்தில் பதிவு செய்துள்ள 42 வழக்குரைஞர்களின் கல்விச் சான்றிதழ்கள் மாயமான விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற நீதபதி என்.கிருபாகரன், சில தினங்களுக்கு முன்பு பிறப்பித்த உத்தரவில், கருப்பு வெள்ளை உடையில் வழக்குரைஞர்கள் என்ற பெயரில் குண்டர்கள் சிலர் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு வருவதாகவும், இவர்கள் மீது அகில இந்திய வழக்குரைஞர் சங்கமும், தமிழ்நாடு வழக்குரைஞர் சங்கமும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.
மேலும், ஆந்திரம் மற்றும் கர்நாடகத்தில் அதிக எண்ணிக்கையில் உள்ள சட்டக்கல்லூரிகள் தேவையா என கேள்வி எழுப்பிய நீதிபதி, வழக்குரைஞர்களின் உண்மைத் தன்மை குறித்து ஆராய உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் தமிழ்நாடு வழக்குரைஞர் சங்கத்தில் பதிவு செய்துள்ள வழக்குரைஞர்களின் கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வின்போது இச் சங்கத்தில் கடந்த 1980- ஆம் ஆண்டு பதிவு செய்த சசிகுமரன் நாயர், 1997-ஆம் ஆண்டு பதிவு செய்த அஞ்சலி நாக், 1998-ஆம் ஆண்டில் பதிவு செய்த டி.ஜி.மாணிக்கம், என்.சதீஷ்குமார், எம்.ரமேஷ், செல்வராஜ், செந்தில்குமார், தனபால், பாஸ்கரன் உள்ளிட்ட 42 வழக்குரைஞர்களின் கல்விச் சான்றிதழ்கள் மாயமாகி இருந்தது தெரியவந்தது.
தவறினால் பதிவு நீக்கம்: இவர்கள் அனைவரும் சட்டக்கல்வி உள்ளிட்ட அனைத்து கல்விச் சான்றிதழ்களையும் 15 நாள்களுக்குள் ஒப்படைக்க நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை சான்றிதழ்களை ஒப்படைக்கத் தவறும் நிலையில், வழக்குரைஞர் சங்கத்தில் இருந்து அவர்களின் பதிவு நீக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
2 ஊழியர்கள் இடைநீக்கம்: தற்போது தமிழ்நாடு வழக்குரைஞர் சங்கத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் 22 உறுப்பினர்களின் பதவிக்காலம் கடந்த ஆண்டே நிறைவடைந்து விட்டது. அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண் சங்கத்தின் பொறுப்புத் தலைவராக செயல்பட்டு வருகிறார். ஆவணங்கள் மாயமானது தொடர்பாக வழக்குரைஞர் சங்கத்தில் பணியாற்றும் 2 ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாக தமிழ்நாடு வழக்குரைஞர் சங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/17/தமிழ்நாடு-வழக்குரைஞர்-சங்கத்தில்-சான்றிதழ்கள்-மாயம்-2791593.html
2791592 சென்னை சென்னை பெண் கொலை வழக்கு: 4 ஆண்டுகளுக்கு பிறகு மகள்-மருமகன் கைது DIN DIN Tuesday, October 17, 2017 04:26 AM +0530 சென்னை அருகே மாங்காட்டில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 4 ஆண்டுகளுக்குப் பின்னர் மகளும், மருமகனும் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
மாங்காடு அருகே உள்ள சிவன்தாங்கல், குன்றத்தூர் சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் கஸ்தூரி (55). இவர் கந்து வட்டிக்கு கடன் வழங்குவது, சீட்டு நடத்துவது, அரிசி வியாபாரம் ஆகிய தொழில்களில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், 2013-ஆம் ஆண்டு கஸ்தூரி அவரது வீட்டில் மர்மான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். தலையில் அம்மிக்கல் போட்டு கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் இருந்தன. இந்தக் கொலை குறித்து மாங்காடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர். 
எனினும், வழக்கில் உடனடியாக துப்பு துலங்காததைத் தொடர்ந்து, கஸ்தூரியின் நெருங்கிய உறவினர்களை போலீஸார் ரகசியமாக கண்காணித்தனர். இதில், கஸ்தூரியின் இரண்டாவது மருமகன் சூரியக்குமார் (32) மீது போலீஸாருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவரிடம் போலீஸார் திங்கள்கிழமை விசாரணை செய்தனர்.
விசாரணையில், பணத் தகராறில் தனது மாமியார் கஸ்தூரியின் தலையில் அம்மிக் கல்லைப்போட்டு கொலை செய்ததை ஒப்புக்கொண்டாராம். மேலும், கொலையை மறைக்க அவர் மனைவியும், கஸ்தூரியின் மகளுமான அம்மு (28) உடந்தையாக இருந்ததாகவும் தெரிவித்தாராம்.
இதைத் தொடர்ந்து போலீஸார், சூரியக்குமார், அம்மு ஆகிய இருவரையும் கைது செய்து, மேலும் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் 4 ஆண்டுகளுக்குப் பின்னர் துப்பு துலங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/17/பெண்-கொலை-வழக்கு-4-ஆண்டுகளுக்கு-பிறகு-மகள்-மருமகன்-கைது-2791592.html
2791591 சென்னை சென்னை மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் விபத்து: தையல் தொழிலாளி சாவு DIN DIN Tuesday, October 17, 2017 04:26 AM +0530 சென்னை, ராயபுரத்தில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஏற்பட்ட விபத்தில் தையல் தொழிலாளி இறந்தார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: சென்னை ராயபுரம் தம்பு லைன் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரபீக் (37). இவர், தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். ராயபுரம் மேம்பாலம் அருகே ரபீக் மன்னார் சாமி கோயில் தெருவில் ஞாயிற்றுக்கிழமை சாலையைக் கடக்க முயன்றார்.
அப்போது அங்கு சில இளைஞர்கள் 10 மோட்டார் சைக்கிளில் பந்தயத்தில் ஈடுபட்டிருந்தனர். இதில் ஒரு மோட்டார் சைக்கிள் ரபீக் மீது வேகமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த ரபீக்கை அங்கிருந்தவர்கள் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் ரபீக் இறந்தார். இது குறித்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், இது தொடர்பாக மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட ஒரு இளைஞரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/17/மோட்டார்-சைக்கிள்-பந்தயத்தில்-விபத்து-தையல்-தொழிலாளி-சாவு-2791591.html
2791590 சென்னை சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் ரோபோ கண்காட்சி DIN DIN Tuesday, October 17, 2017 04:25 AM +0530 வடபழனி எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம் மின்னணு,தகவல் தொடர்பியல் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான ரோபோ கண்காட்சி திங்கள்கிழமை (அக்.16) நடைபெற்றது.
சென்னையில் உள்ள 20-க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் கண்காட்சியைப் பார்வையிட்டனர்.
ரோபோக்களின் செயல்பாடுகள், வெளிநாட்டு வர்த்தக,போர் கப்பல்களில் பயன்படுத்தப்படும் தனித்திறன் மிக்க ரோபோக்கள், ஆபத்தான பணிகளில் கையாளப்படும் ரோபோக்கள் ,எதிர்காலத்தில் ஆளுமைத் திறனுடன் செயல்படவிருக்கும் ரோபோக்கள் ஆகியவை குறித்து இந்திய கப்பல் படை ஓய்வு பெற்ற கேப்டன் ரமேஷ்வர் ரவி விவரித்தார். 
கல்லூரி முதல்வர் கே.துரைவேலு, துறைத் தலைவர் சி.கோமதி,கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஜெ.அனிதா கிறிஸ்டலின், கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/17/எஸ்ஆர்எம்-பல்கலைக்கழகத்தில்-ரோபோ-கண்காட்சி-2791590.html
2791589 சென்னை சென்னை அம்பத்தூர் பகுதியில் புற்றீசல்போல் முளைத்துள்ள பட்டாசுக் கடைகள் DIN DIN Tuesday, October 17, 2017 04:25 AM +0530 அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் எந்தவித அனுமதியுமின்றி, புற்றீசல் போல் பட்டாசுக் கடைகள் முளைத்துள்ளன.
தீபாவளி என்றாலே பட்டாசுதான் முதலில் ஞாபகத்துக்கு வரும். பட்டாசு உற்பத்தி முதல் அதனை வெடித்து முடித்து மகிழ்ச்சியை காண்பது வரை இடையில் பல்வேறு ஆபத்துகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை தொடங்குவதற்கு முன்பாக பட்டாசுக் கடைகள் அமைப்பதோ, அவற்றை பாதுகாப்பாக வெடிப்பதோ எதுவாக இருந்தாலும் அரசு முன்னெச்சரிக்கையாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
பட்டாசுக் கடை திறப்பதற்கு , காவல்துறை, தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை, கட்டட உரிமையாளர் என 4 வித அனுமதி பெற்றாக வேண்டும். 
ஒவ்வொருதுறையும் விண்ணப்பம் பெற்றபின் நேரடியாக களஆய்வு செய்து அரசு விதிகளின்படி அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக்கொண்டு சான்றிதழ் வழங்க வேண்டும். 
ஆனால், பட்டாசுக் கடை திறக்க வருவாய்த்துறையினர் இடைத்தரகர்களை வைத்துக்கொண்டு, நடைபாதை கடைக்கு ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரம் வரையிலும், கட்டடத்தில் வைத்து வியாபாரம் செய்ய ரூ. 10 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரம் வரையிலும் வசூலிக்கின்றனர். அரசின் விதிமுறையை அலுவலர்களே புறந்தள்ளிவிட்டு, எந்த ஆய்வும் செய்யாமல் அவசரக் கதியில் தடையில்லா சான்று வழங்குவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால், ஆங்காங்கே புற்றீசல்போல் பாதுகாப்பில்லாத பட்டாசுக் கடைகள் முளைத்துள்ளன. சாலையோரங்களில் கடை வைத்திருந்தவர்களில் பெரும்பாலானோர் அவற்றை தற்போது பட்டாசுக் கடைகளாக மாற்றி உள்ளனர்.
அம்பத்தூர், ஆவடி, மதுரவாயல், மாதவரம், பூந்தமல்லி வட்டாரங்களில் அனுமதிக்கப்பட்ட கடைகளைவிட, நூற்றுக்கணக்கான பட்டாசு கடைகள் திறக்கப்பட்டுள்ளன. 
எனவே, விபத்து நடந்த பிறகு ஆறுதல் சொல்ல வருவதை விட, சான்றிதழ் கொடுக்கும் முன், அதிகாரிகள் தீவிர கள ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/17/அம்பத்தூர்-பகுதியில்-புற்றீசல்போல்-முளைத்துள்ள-பட்டாசுக்-கடைகள்-2791589.html
2790847 சென்னை சென்னை உள்ளாட்சித் தேர்தலில் மகத்தான வெற்றியைத் தேடித் தர வேண்டும்: முதல்வர், துணை முதல்வர் கூட்டறிக்கை DIN DIN Monday, October 16, 2017 04:09 AM +0530 எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் மகத்தான வெற்றியைத் தொண்டர்கள் தேடித் தரவேண்டும் என அதிமுக தலைமை அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரான தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அதிமுகவின் மக்கள் நல ஆட்சிக்கும், அரசியல் பயணத்துக்கும் தெளிவான இலக்கணத்தை, உறுதியான பாதையை அமைத்துத் தந்திருக்கிறார்.
அவர் மீது பொய் வழக்குகளைப் போட்டு, அவரை மன வேதனைக்கும், உடல் பாதிப்புகளுக்கும் ஆளாக்கக் காரணமாக இருந்த நமது அரசியல் எதிரிகளோடு கடந்த சில மாதங்களாக தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு, அதிமுக அரசின் ஆட்சியைக் கலைக்க நினைத்தவர்களின் சதிச் செயலை முறியடித்திருக்கிறோம். 
இவர்களைப் பற்றி கட்சியினரிடமும், தமிழக மக்களிடமும் போதுமான அளவுக்கு மறைந்த முதல்வர் எச்சரித்துக்கிறார்.
கட்சித் தொண்டர்கள் கட்டுப்பாட்டுடனும், கடமை தவறாமலும் பணியாற்றுவதுபோல, எப்போதும் கட்சிக்கு விசுவாசமாக இருந்து, வரவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு மகத்தான வெற்றியைத் தேடித்தர வேண்டும்.
இந்த மாபெரும் மக்கள் இயக்கத்தை வீழ்த்தவோ, எதிர்த்து நிற்கவோ தமிழகத்தில் எந்தவொரு தனி மனிதனோ, இயக்கமோ தோன்றப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/3/w600X390/eps_ops1.PNG http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/16/உள்ளாட்சித்-தேர்தலில்-மகத்தான-வெற்றியைத்-தேடித்-தர-வேண்டும்-முதல்வர்-துணை-முதல்வர்-கூட்டறிக்கை-2790847.html
2790848 சென்னை சென்னை "இசை இருக்கும் வரை கண்டசாலா புகழ் இருக்கும்'  DIN DIN Monday, October 16, 2017 04:08 AM +0530 இசை இருக்கும் வரை கண்டசாலாவின் புகழ் இருக்கும் என்று பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.
கலா பிரதர்சினி அமைப்பு சார்பில், கண்டசாலாவின் 95-ஆவது பிறந்த நாள் விழா மற்றும் கண்டசாலா புரஸ்கார் விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை நாரத கான சபாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், நாராயண தீர்த்த மகா சுவாமிகள், புதுச்சேரி கலை, கலாசாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ், குஜராத் பல்கலைக்கழகத் துணைவேந்தர் (குண) மகேசன் உள்பட பலர் பங்கேற்றனர். 
கலா பிரதர்சினி கண்டசாலா புரஸ்கர் விருது பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், நடனக் கலைஞர் பத்மா சுப்ரமணியம், தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதுகளை மகா சுவாமிகள் வழங்கினார்.
விருது பெற்ற பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இந்த விருதைப் பெறுவதை பெருமையாகக் கருதுகிறேன். கண்டசாலாவின் இசையையும் குரலையும் எல்லாரும் மெய் மறந்து ரசிப்பார்கள். அவர் பாடிய பகவத் கீதை பாடல்கள் தெலுங்கு மொழி பேசும் மக்களின் வீடுகளில் தற்போதும் ஒலிக்கின்றன. அவரது வாரிசு என்று என்னை சொல்வார். அது எனக்குப் பெருமையாக இருக்கிறது. இசை இருக்கும் வரை கண்டசாலாவின் புகழ் இருக்கும் என்றார். 
குஜராத் பல்கலைக்கழக துணைவேந்தர் (குண) மகேசன் பேசுகையில், கண்டசாலாவின் எல்லாப் பாடல்களும் சிறப்புமிக்கது. அவரது பாடல்கள் எப்போதும் மக்கள் மனதில் நீங்காமல் ஒலித்துக்கொண்டிருக்கும் என்றார் .
கண்டசாலாவின் பிரபல பாடல்களை தேர்ந்தெடுத்து, "பாலே' நடனம் மூலம் வடிவமைத்து கான கந்தர்வ கண்டசாலாவுக்கு சமர்ப்பணம் என்ற பெயரில் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
பசுமை சென்னை திட்டத்தை மேம்படுத்தும் விதமாக, 950 மரக் கன்றுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கலா பிரதர்சினி அமைப்பின் தலைவர் பார்வதி கண்டசாலா செய்திருந்தார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/16/w600X390/music.jpg சென்னை நாரத கான சபாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 'கண்டசாலாவின்  95-ஆவது பிறந்தநாள் விழாவில், பிரதர்சினி கண்டசாலா புரஸ்கர் விருது  பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், நடனக் கலைஞர் பத்மா சுப்ரமணி http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/16/இசை-இருக்கும்-வரை-கண்டசாலா-புகழ்-இருக்கும்-2790848.html
2790846 சென்னை சென்னை அய்யா வைகுண்ட தர்மபதி புரட்டாதி திருவிழா தேரோட்டம்  DIN DIN Monday, October 16, 2017 04:06 AM +0530 சென்னையை அடுத்த மணலி புதுநகர் அய்யா வைகுண்டதர்மபதி புரட்டாசி மாத திருவிழாவினையொட்டி தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
புரட்டாசி மாத திருவிழா கடந்த அக். 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது, இதனையடுத்து கடந்த 9 நாள்களாக தினசரி பணிவிடை, உச்சிப்படிப்பு, திருஏடுவாசிப்பு நிகழ்ச்சிகளும் காளை வாகனம் , அன்ன வாகனம், கருட வாகனம், மயில் வாகனம், ஆஞ்சநேயர் வாகனம், சர்ப்ப வாகனம், மலர்முகசிம்ம வாகனம், குதிரை வாகனம், காமதேனு வாகனம், பூம்பல்லக்கு
வாகனம், மற்றும் இந்திர விமானங்களில் அய்யா வைகுண்டர் வீதி உலாவரும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இறுதிநாளான ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. 36 அடி உயரம் கொண்ட திருத்தேரில் அய்யா வைகுண்டர் வீற்றிருக்க அய்யா வழி பக்தர்களால் வடம் பிடித்து தேர் இழுக்கப்பட்டது. காலை 11.30 மணிக்கு புறப்படத் தொடங்கிய தேர் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து சுமார் 3 மணியளவில் நிலைக்கு வந்தது.
தேரோட்ட நிகழ்ச்சியையொட்டி அன்னதானம், தண்ணீர், மோர்ப் பந்தல்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. 
பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.நாராயணன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் விக்கிரமராஜா, மக்களவை முன்னாள் உறுப்பினர் ஜெயதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தர்மபதி தலைவர் பி.தங்கபெருமாள், செயலாளர் தேவதாஸ், வேலுசாமி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/16/w600X390/ayya.jpg சென்னையை அடுத்த மணலி புதுநகர் அய்யா வைகுண்டதர்மபதி புரட்டாசி மாத திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேரோட்டம். http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/16/அய்யா-வைகுண்ட-தர்மபதி-புரட்டாதி-திருவிழா-தேரோட்டம்-2790846.html
2790845 சென்னை சென்னை 1844 சிறப்புப் பேருந்து உள்பட சென்னையிலிருந்து இன்று 4119 பேருந்துகள் இயக்கம் DIN DIN Monday, October 16, 2017 04:05 AM +0530 தீபாவளி பண்டிகைக்காக மக்கள் தங்களது சொந்த ஊர் செல்ல ஏதுவாக 1844 சிறப்புப் பேருந்துகள் உள்பட சென்னையிலிருந்து திங்கள்கிழமை (அக். 16) 4119 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இது குறித்த விவரம்: தீபாவளி பண்டிகைக்காக மக்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்லத் தொடங்கினர். இதற்கு ஏதுவாக தமிழக அரசு 11, 645 சிறப்புப் பேருந்துகளை சென்னையில் இருந்து இயக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி அக்டோபர் 15-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோயம்பேடு உள்பட 5 இடங்களில் இருந்து 788 சிறப்புப் பேருந்துகள் உட்பட மொத்தம் 3,063 பேருந்துகள் இயக்கப்பட்டன. திங்கள்கிழமை 1,844 சிறப்புப் பேருந்து உள்பட 4119 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோன்று மாவட்டங்களின் பிற பகுதிகளில் இருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
முன்பதிவு செய்யபடாத பேருந்துகள்...: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள 1, 2-வது நடைமேடைகளில் இருந்து முன்பதிவு செய்யப்படாத பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருவண்ணாமலை, அரியலூர், ஜெயங்கொண்டம், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், கடலூர், சிதம்பரம், திருத்தணி உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. இதுதவிர, தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள 7, 8, 9 ஆகிய நடைமேடைகளில் இருந்தும் முன்பதிவு செய்யப்படாத விரைவுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பெங்களூருவுக்குச் செல்லும் முன்பதிவு பேருந்துகளும் இங்கிருந்து புறப்படுகின்றன.
முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகள்...: 3, 4, 5, 6 ஆகிய நடைமேடைகளில் இருந்து முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருச்சி, தஞ்சாவூர், சேலம், கரூர், சிவகங்கை, கம்பம், மதுரை, கோவை, ராமநாதபுரம், தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி உட்பட பல்வேறு இடங்களுக்குச் செல்லும் முன்பதிவு செய்யப்பட்ட விரைவு பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. 
கூட்டத்திற்கு ஏற்ப பேருந்துகள்....: சொந்த ஊர் செல்ல வரும் மக்களின் கூட்டத்திற்கு ஏற்ப, வயர்லெஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு பேருந்துகளை நடைமேடைகளுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் ஒவ்வொரு நடைமேடையிலும் ஒலிபெருக்கி மூலம் பயணிகளுக்கு தகவல் அறிவிக்கப்படுகிறது. திருட்டுகளைத் தடுக்க பேருந்து நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
குறுஞ்செய்தி மூலம் தகவல்: தீபாவளி பயணம் மேற்கொள்பவர்களுக்கு எந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து பயணம் செய்ய வேண்டும் என்று பயணிகளின் செல்லிடப்பேசி எண்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பப்படுகிறது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/16/1844-சிறப்புப்-பேருந்து-உள்பட-சென்னையிலிருந்து-இன்று-4119-பேருந்துகள்-இயக்கம்-2790845.html
2790843 சென்னை சென்னை பொறியாளர் வேலை வாங்கி தருவதாக ரூ.9 லட்சம் மோசடி: ஓய்வு பெற்ற எஸ்.ஐ. கைது DIN DIN Monday, October 16, 2017 04:03 AM +0530 போக்குவரத்து கழகத்தில் உதவிப் பொறியாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்ததாக ஓய்வு பெற்ற காவல் துறை உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:- 
சென்னை தி.நகர் ராமானுஜம் தெருவைச் சேர்ந்தவர் செல்லச்சாமி (62), ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர். இவர், கடந்த 2015-ஆ ம் ஆண்டு தனது உறவினர் ஒருவருக்கு போக்குவரத்து கழகத்தில் உதவிப் பொறியாளர் வேலை வேண்டி ஏற்கெனவே தனக்கு அறிமுகமான ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் பரமசிவம் என்பவரிடம் ரூ.12 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால், பரமசிவம் கூறியபடி வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி வந்துள்ளார். 
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பரமசிவம் ரூ.3 லட்சம் பணத்தை மட்டும் திருப்பி செல்லச்சாமியிடம் கொடுத்துள்ளார். மீதமுள்ள 9 லட்சம் பணத்தைக் கொடுக்கவில்லை. இது தொடர்பாக செல்லச்சாமி மாம்பலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதில், பரமசிவம் அவரது நண்பரான சேகர் என்பவருடன் சேர்ந்து, போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி செல்லச்சாமியிடமிருந்து ரூ.12 லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியது உண்மை என்பது தெரியவந்தது. அதன் பேரில், சூளைமேட்டைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் பரமசிவத்தை (62) போலீஸார் சனிக்கிழமை (அக்.14) கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளியான சேகர் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/16/பொறியாளர்-வேலை-வாங்கி-தருவதாக-ரூ9-லட்சம்-மோசடி-ஓய்வு-பெற்ற-எஸ்ஐ-கைது-2790843.html
2790842 சென்னை சென்னை தீபாவளி: பட்டாசு விபத்துகளைத் தடுக்க தயார் நிலையில் 5,500 தீயணைப்பு வீரர்கள் DIN DIN Monday, October 16, 2017 04:03 AM +0530 தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு விபத்து ஏற்பட்டால் மீட்புப் பணியில் ஈடுபட தமிழகம் முழுவதும் 5,500 தீயணைப்புத் துறை வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் 18-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. தீபாவளியின்போது, பட்டாசு விபத்து ஏற்பட்டால் விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொள்வது, காயம் அடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்வது உள்ளிட்டவை தொடர்பாக தீயணைப்புத் துறை அதிகாரிகளுக்கு உயரதிகாரிகள் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர். அதன்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறியது:- சென்னையில் பட்டாசு விபத்துகள் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள 700 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். பிற மாவட்டங்களில் இருந்து கூடுதலாக 500 வீரர்கள் சென்னைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் அக். 16, 17, 18, 19 தேதிகளில் பணிகளில் ஈடுபடும் வகையில் 5,500 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
சென்னையின் முக்கிய இடங்களில் 100 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. மற்ற மாவட்டங்களில் 400 வாகனங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. தீபாவளியை முன்னிட்டு, தமிழகத்தில் முதல்முறையாக "வாட்டர் பவுசர்' (ரஹற்ங்ழ் ஆர்ஜ்ள்ங்ழ்) என்ற புதிய வகை தீயணைப்பு வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை திருவல்லிக்கேணியில் இது நிறுத்தப்பட்டுள்ளது. பிற வாகனங்கள் 4,500 லிட்டர் தண்ணீர் மட்டுமே கொள்ளளவு உடையது. இந்த வாகனம் 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உடையது. தேவைப்படும் இடங்களுக்கு விரைந்து செல்லும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
முதியோர், நோயுற்றவர்கள் மற்றும் மருத்துவமனை அருகே பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. இரவு 9 மணி முதல் காலை 6 மணிவரை பட்டாசு வெடிப்பதை பொதுமக்கள் தவிர்க்கவேண்டும். அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்றார். தமிழகம் முழுவதும் கடந்த தீபாவளியின்போது, ராக்கெட் பட்டாசுகள் மூலம் 446 விபத்துகள், சாதாரண பட்டாசு மூலம் 335 விபத்துகள் என மொத்தம் 781 தீ விபத்துகள் நடந்தன. சென்னையில் 141 தீ விபத்துகள் நடந்தது குறிப்பிடத்தக்கது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/16/தீபாவளி-பட்டாசு-விபத்துகளைத்-தடுக்க-தயார்-நிலையில்-5500-தீயணைப்பு-வீரர்கள்-2790842.html
2790841 சென்னை சென்னை மனநலம் குன்றிய மாணவர்களுக்கு புத்தாடைகள் DIN DIN Monday, October 16, 2017 04:03 AM +0530 சென்னை தாம்பரம் சானடோரியம் ஜட்ஜ் காலனியில் உள்ள அரசு மனநலம் குன்றியோர் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களுடன், ஜமீன் பல்லாவரம் அரிமா சங்கத்தினர் அண்மையில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினர்.
மாவட்ட அரிமா சங்கத் தலைவரும், முன்னாள் மாநகர போக்குவரத்துக் கழக இயக்குநருமான கே.நாராயணன் பள்ளியைச் சேர்ந்த 60 மாணவ, மாணவிகளுக்கு புத்தாடைகள், இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் அரிமா மண்டலத் தலைவர் ஹரிகரன், சங்கத்தின் முதல்நிலை ஆளுநர் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/16/மனநலம்-குன்றிய-மாணவர்களுக்கு-புத்தாடைகள்-2790841.html
2790840 சென்னை சென்னை விருப்பம்போல் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள்: பொதுமக்கள் புகார் DIN DIN Monday, October 16, 2017 04:02 AM +0530 பண்டிகை காலத்தைப் பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெள்ளிக்கிழமை (அக்.13) முதல் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்கின்றனர். 
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஆம்னி பேருந்து நிறுவனங்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப கட்டணத்தை உயர்த்தி வசூலிக்கின்றன. ரூ.700 கட்டணம் உள்ள ஊர்களுக்கு தற்போது ரூ.1,100 முதல் ரூ.1,500 வரை வசூலிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் கூறினர்.
சென்னை கோயம்பேடு, எழும்பூர், தாம்பரம், பெருங்களத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, போன்ற பகுதிகளுக்கு நாள்தோறும் 700 முதல் 900 ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் கூடுதலாக 500 முதல் 600 ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 
சாதாரண நாட்களில் குறைந்த அளவு கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், பண்டிகை காலங்களில் 50 முதல் 60 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிப்பதாகவும் பொதுமக்கள் புகார் கூறினர். மேலும், ஒவ்வொரு முறையும் பண்டிகை காலங்களில் இதுபோன்று புகார் தெரிவிக்கப்பட்டு வந்தாலும் அரசு செவிசாய்ப்பதில்லை என பயணிகள் குற்றம்சாட்டினர். 
இது குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியது: 
அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து நாங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதைக் கருத்தில் கொண்டே போதிய அளவு சிறப்பு பேருந்துகளை அரசு இயக்கி வருகிறது. 
அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது புகார் தெரிவிப்பதற்காக கட்டணமில்லா தொலைபேசி எண்ணும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 1800 4256151 என்ற எண்ணுக்குப் புகார் தெரிவிக்கலாம் என்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/16/விருப்பம்போல்-அதிக-கட்டணம்-வசூலிக்கும்-ஆம்னி-பேருந்துகள்-பொதுமக்கள்-புகார்-2790840.html
2790829 சென்னை சென்னை தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 18 பவுன் திருட்டு DIN DIN Monday, October 16, 2017 03:55 AM +0530 திருமுல்லைவாயலில் தனியார் நிறுவன ஊழியரின் வீட்டில் 18 பவுன் நகை, ரூ.7 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் பட்டப்பகலில் திருடிச் சென்றனர்.
திருமுல்லைவாயல் பிருந்தாவன் நகரைச் சேர்ந்தவர் சரவணன் (33). செல்லிடப்பேசி விற்பனை செய்யும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவியும் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சனிக்கிழமை காலை இருவரும் வீட்டைப் பூட்டி, சாவியை மறைவான இடத்தில் வைத்துவிட்டு, வேலைக்குச் சென்றுவிட்டனர்.
இந்நிலையில், இரவு திரும்பி வந்துபார்த்தபோது, சாவியைக் காணவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்து, அப்பகுதியில் தேடிப் பார்த்தனர். அப்போது சாவி கீழே கிடந்துள்ளது. 
இதையடுத்து வீட்டைத் திறந்து பார்த்ததில் பீரோவில் இருந்த 18 பவுன் நகை, ரூ. 7 ஆயிரம் ரொக்கம் 
திருடுபோனது தெரியவந்தது. 
சாவி வைக்கும் இடத்தை நோட்டமிட்டு மர்ம நபர்கள், கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து சரவணன், அளித்த புகாரின்பேரில் திருமுல்லைவாயல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/16/தனியார்-நிறுவன-ஊழியர்-வீட்டில்-18-பவுன்-திருட்டு-2790829.html
2790626 சென்னை சென்னை இன்று அய்யா வைகுண்ட தர்மபதி புரட்டாசி திருவிழா தேரோட்டம்  DIN DIN Sunday, October 15, 2017 04:13 AM +0530 மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி புரட்டாசி மாத திருவிழா தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை (இன்று) நடைபெறுகிறது. 
ஆண்டுதோறும் நடைபெறும் புரட்டாசி மாத திருவிழா கடந்த அக்.6}ம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது, இதனையடுத்து கடந்த 9 நாள்களாக தினசரி பணிவிடை, உச்சிப்படிப்பு, திருஏடுவாசிப்பு நிகழ்ச்சிகளும் காளை வாகனம் , அண்ண வாகனம், கருட வாகனம், மயில் வாகனம், ஆஞ்சநேயர் வாகனம், சர்ப்ப வாகனம், மலர்முகசிம்ம வாகனம், குதிரை வாகனம், காமதேனு வாகனம், பூம்பல்லக்கு வாகனம், மற்றும் இந்திர விமானங்களில் அய்யா வைகுண்டர் வீதி உலாவரும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. விழாவின் இறுதி நிகழ்ச்சியாக ஞாயிற்றுகிழமை காலை11.30 மணிக்கு திருத்தேரில் அய்யா வைகுண்டர் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/15/இன்று-அய்யா-வைகுண்ட-தர்மபதி-புரட்டாசி-திருவிழா-தேரோட்டம்-2790626.html
2790625 சென்னை சென்னை வெளிநாடுகளுக்கு கடிதம், பார்சல் அனுப்ப 4 இடங்களில் சிறப்பு கவுன்ட்டர்கள் DIN DIN Sunday, October 15, 2017 04:13 AM +0530 வெளிநாடுகளுக்குப் புத்தகம், பதிவுத் தபால், பார்சல் உள்பட பல்வேறு பொருள்கள் அனுப்புவதற்காக 4 இடங்களில் சிறப்பு கவுன்ட்டர் திறக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு வட்டத் தலைமை தபால் துறைத் தலைவர் எம்.சம்பத் தெரிவித்தார்.
தி.நகரில் சிறப்பு கவுன்ட்டர் திறப்பு: சென்னை தியாகராயநகர் தலைமை தபால் அலுவலகத்தில் வெளிநாடுகளுக்கு புத்தகம், பார்சல், பதிவு தபால் ஆகியவற்றை பல்வேறு பொருள்களை அனுப்புவதற்காக சிறப்பு கவுன்ட்டர் சனிக்கிழமை (அக்.14) திறக்கப்பட்டது. இந்த கவுன்ட்டரை தமிழ்நாடு வட்டத் தலைமை தபால்துறை தலைவர் எம்.சம்பத் திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியது: 
இரண்டாவது சிறப்பு கவுன்ட்டர்: சென்னை பரங்கிமலை தபால் அலுவலகத்தில் ஒரு சிறப்பு கவுன்ட்டர் செயல்படுகிறது. தற்போது, தியாகராய நகரில் இரண்டாவது கவுன்ட்டர் திறக்கப்பட்டுள்ளது.
சிறப்புப் பயிற்சி: வெளிநாடுகளுக்கு பார்சல் உள்பட பொருள்களை அனுப்புவது தொடர்பாக எல்லா விவரங்களும் தபால் துறையின் பொது கவுன்ட்டர்களில் பணியில் இருப்பவர்களுக்குத் தெரிந்திருக்கும் என்று கூறமுடியாது. சிறப்புக் கவுன்ட்டர் மூலம், எல்லாத் தகவல்களும் உடனுக்குடன் வழங்க முடியும். இந்த கவுன்ட்டரில் இரண்டு பேர் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சிறப்புப் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சம் 35 கிலோ வரை...: கவுன்ட்டர் மூலம் வெளிநாடுகளுக்கு அதிகபட்சம் 35 கிலோ வரை அனுப்ப முடியும். வார விடுமுறை நாள்களிலும் இந்தச் சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தனியார் கூரியர் நிறுவனங்களை தபால் துறையில் கட்டணம் 50 சதவீதம் குறைவு.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/15/வெளிநாடுகளுக்கு-கடிதம்-பார்சல்-அனுப்ப-4-இடங்களில்-சிறப்பு-கவுன்ட்டர்கள்-2790625.html
2790624 சென்னை சென்னை புத்தாடைகள், பொருள்கள் வாங்க அங்காடித் தெருவில் அலைமோதிய மக்கள் DIN DIN Sunday, October 15, 2017 04:11 AM +0530 தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள், பொருள்கள் வாங்குவதற்காக சென்னை தியாகராய நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. 
தமிழகத்தின் அங்காடித் தெருவாக விளங்கும் தி. நகரில் ஆடைகள், நகைகள், வீட்டு உபயோகப் பொருள்கள் என அனைத்தும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் விழாக் காலங்களில் தி.நகரில் உள்ள உஸ்மான் சாலை, ரங்கநாதன் தெரு என அந்தப் பகுதியின் அனைத்துத் தெருக்களிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் மூன்று நாள்களே உள்ள நிலையில், தீபாவளி விற்பனை களை கட்டியுள்ளது. 
சனிக்கிழமை (அக்.14) காலை 9 மணி முதலே குழந்தைகள் முதல் பெரியவர் வரையிலான மக்களின் வருகையால் தி.நகர், புரசைவாக்கம் பகுதிகள் தீபாவளியை வரவேற்கத் தொடங்கின. ஜவுளிக்கடைகள் போட்டிபோட்டு தள்ளுபடி அறிவித்துள்ளதால் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. இதை ஒழுங்குபடுத்துவதற்காக அந்தக் கடைகளில் தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதேபோன்று தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி, சலவை இயந்திரம் போன்ற வீட்டு உபயோகப் பொருள்களை தள்ளுபடி விலையில் பொதுமக்கள் வாங்கிச் சென்றனர். 
புதிய "டிசைன்கள்': இது குறித்து விழுப்புரத்தைச் சேர்ந்த கே.சுமதி ராஜேந்திரன், திருவள்ளூரைச் சேர்ந்த டி.பிரியதர்ஷினி உள்ளிட்டோர் சனிக்கிழமை கூறியது: ஆடைகள், நகைகள் ஆகியவற்றில் எந்தப் புதிய வடிவமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டாலும் முதலில் தி.நகரில் தான் விற்பனைக்கு வரும். நிகழாண்டு அதிக தள்ளுபடி வழங்கியதால் மொத்தம் ரூ.2.500}க்கு இரு குழந்தைகள் உள்பட குடும்பத்தில் உள்ள நான்கு பேருக்கும் புத்தாடைகள் எடுத்து விட்டோம். கடந்த 15 ஆண்டுகளாக இங்கு வந்து தீபாவளிக்கு துணி வாங்குகிறோம் என்றனர். 
தீவிர கண்காணிப்பு: கூட்டநெரிசலை பயன்படுத்தி திருட்டு, வழிப்பறி, கொள்ளையில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்காணிப்பதற்காக தி.நகரில் 250}க்கும் மேற்பட்ட அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுதவிர ஆங்காங்கே உயர்கோபுரங்கள் அமைத்து பைனாகுலர் மூலமும் போலீஸார் கண்காணித்து வருகின்றனர். முக்கிய வீதிகளில் திருட்டு, கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகளின் படங்களை வைத்து பொதுமக்கள் கவனத்துடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. மாறுவேடத்திலும் போலீஸார் மக்களோடு மக்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/15/w600X390/tnagar.jpg தீபாவளிக்கு புத்தாடை உள்ளிட்ட பொருள்களை வாங்குவதற்காக சென்னை தி.நகரில் சனிக்கிழமை திரண்ட கூட்டத்தின் ஒரு பகுதி. http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/15/புத்தாடைகள்-பொருள்கள்-வாங்க-அங்காடித்-தெருவில்-அலைமோதிய-மக்கள்-2790624.html
2790622 சென்னை சென்னை தீபாவளி பண்டிகை: 243 கூடுதல் மாநகரப் பேருந்துகள்  DIN DIN Sunday, October 15, 2017 04:10 AM +0530 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களுக்கு சிறப்புப் பேருந்துகள் புறப்படும் இடங்களுக்கு, சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து பயணிகள் செல்ல வசதியாக 234 கூடுதல் இணைப்பு மாநகர பேருந்துகள், ஞாயிற்றுக்கிழமை முதல் 24 மணி நேரமும் இயக்கப்பட உள்ளன.
இதுதொடர்பாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தீபாவளி பண்டிகைக்காக சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை வெகுவாகக் குறைத்திடவும், வெளியூர் செல்லும் பயணிகள் எளிதாகப் பயணிக்கும் வகையிலும் ஞாயிற்றுக்கிழமை (அக்.15) முதல் தொடர்ந்து 3 நாள்களுக்கு மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்படும்.
எந்தெந்த இடங்களிலிருந்து...: வெளியூர் செல்லும் சிறப்புப் பேருந்துகள், அண்ணாநகர் (மேற்கு) பேருந்து நிலையம், தாம்பரம் புதிய பேருந்து நிலையம் (சானடோரியம்), பூந்தமல்லி பேருந்து நிலையம், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம், சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்கு அருகே உள்ள பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்து புறப்பட உள்ளன.
சென்னை பிராட்வே, தி.நகர், வடபழனி, திருவான்மியூர், ஆவடி, செங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து மேலே குறிப்பிட்ட ஐந்து சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு கூடுதல் மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/15/தீபாவளி-பண்டிகை-243-கூடுதல்-மாநகரப்-பேருந்துகள்-2790622.html
2790621 சென்னை சென்னை சிசிடிவியின் கட்டுப்பாட்டுக்குள் சென்னை மாநகரம்: காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் DIN DIN Sunday, October 15, 2017 04:10 AM +0530 குற்றங்கள் நடைபெறுவதைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் சென்னை மாநகரம் முழுவதும் கண்காணிப்புக் கேமராவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் தெரிவித்தார்.
சென்னை புதுப்பேட்டையில் உள்ள மோட்டார் வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் நிறைந்த பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள தெருக்களில் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காகவும் குற்றவாளிகளைக் கண்காணிக்கவும் ஆதித்தனார் சாலை மற்றும் அப்பகுதியில் 20}க்கும் மேற்பட்ட தெருக்கள் மற்றும் சந்திப்புகளில் புதிதாக நிறுவப்பட்ட 48 கண்காணிப்புக் கேமராக்களின் செயல்பாட்டை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் சனிக்கிழமை தொடக்கி வைத்து செய்தியாளர்களிடம் கூறியது:
சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருவதால் நகரில் நடைபெறும் குற்றங்கள் படிப்படியாகக் குறைந்து வருகின்றன. இதன் மூலம் பல முக்கிய வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். விரைவில் சென்னை முழுவதும் சிசிடிவியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என்றார். 
புதுப்பேட்டையில்...: புதிதாகப் பொருத்தப்பட்ட கண்காணிப்புக் கேமராக்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, புதுப்பேட்டை காமளீஸ்வரன்பேட்டை புறக்காவல் நிலையத்தில் கணினி திரை மூலம் கண்காணிக்கப்படும். புரசைவாக்கத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள தாணா தெரு, புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் நிறுவப்பட்ட கேமராக்களும் இயக்கி வைக்கப்பட்டன. இப்பகுதியில் ஏற்கெனவே இருக்கும் காவலர் கண்காணிப்புக் கோபுரம் மூலம் கேமராக்கள் ஒருங்கிணைக்கப்படும். இதற்காக ஏற்கெனவே உள்ள கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு கோபுரம் சீரமைக்கப்பட்டது.
கண்காணிப்பு கேமராக்களின் சிறப்பம்சம்: குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் பற்றிய புகைப்படம், மற்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு இணைக்கப்பட்டிருப்பதே இந்த கேமராக்களின் சிறப்பம்சமாகும். எங்காவது ஓரிடத்தில் கண்காணிப்புக் கேமராவில் குற்றவாளி பதிவானால் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துவிடும். இதனால் விழாக் காலங்களில் பொதுமக்களிடம் வழிப்பறி, பிக்பாக்கெட் செயின் பறிப்பு போன்ற முயற்சியில் ஈடுபடுபவர்கள் எளிதில் பிடிபடுவார்கள் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
காவல் துறை கூடுதல் ஆணையர் (தெற்கு) எம்.சி.சாரங்கன், கிழக்கு மண்டல இணை ஆணையர் எஸ்.மனோகரன், துணை ஆணையர் திரு.பிரவேஷ்குமார், (திருவல்லிக்கேணி ) உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/15/சிசிடிவியின்-கட்டுப்பாட்டுக்குள்-சென்னை-மாநகரம்-காவல்-ஆணையர்-ஏகேவிசுவநாதன்-2790621.html
2790619 சென்னை சென்னை கோயம்பேடு வியாபாரிகளுக்கு நிலவேம்பு கஷாயம் DIN DIN Sunday, October 15, 2017 04:06 AM +0530 டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் வகையில், சென்னை கோயம்பேடு சந்தை வியாபாரிகளுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது. 
கோயம்பேடு மலர் விற்பனைச் சந்தை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மண்டலத் தலைவர் கே.ஜோதிலிங்கம், மாநில நிர்வாகி பி.பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு 5,000-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்புக் கஷாயத்தை வழங்கினர். 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/15/கோயம்பேடு-வியாபாரிகளுக்கு-நிலவேம்பு-கஷாயம்-2790619.html
2790618 சென்னை சென்னை "தொழில் பயிற்சி வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' DIN DIN Sunday, October 15, 2017 04:06 AM +0530 தொழிற்சாலைகள் அளிக்கும் பயிற்சி வாய்ப்புகளை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று டைம்லர் இந்தியா பேருந்துகள் தயாரிப்புப் பிரிவு பொது மேலாளர் கர்னல் அலெக்சாண்டர் செய்டல் கூறினார். 
காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வணிக மேலாண்மை துறை சார்பில் நடைபெற்ற பயிற்சி நிறைவு விழாவில், மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கி அவர் மேலும் பேசியது:
வேலைவாய்ப்பைப் பெறுவதுதான் அறிவாற்றல் திறனை வளர்க்கும் உயர் கல்வியின் முக்கிய நோக்கமாக உள்ளது. தற்போது கல்வியுடன் வேலையைப் பெற்றுத் தருவதும் கல்வி நிறுவனங்களின் தவிர்க்க இயலாத கடமையாகிவிட்டது. கல்லூரியில் பேராசிரியர்கள் மூலம் அளிக்கப்படும் கல்வி அறிவாற்றலை செயல் வடிவில் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பை அளிக்கும் தொழில் நிறுவனங்களின் நோக்கத்தை மாணவர்கள் புரிந்து கொண்டு இந்த வாய்ப்பை சிறப்பான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
16 தொழிற்சாலைகளில் பயிற்சியை சிறப்பாக நிறைவு செய்துள்ள மாணவர்களுக்கு பாராட்டுகள். 
பன்னாட்டு நிறுவனங்களின் இன்றைய எதிர்பார்ப்புகளையும், எந்தத் துறையை தேர்ந்தெடுத்து தங்கள் திறமைகளை பட்டை தீட்டிக்கொள்ள வேண்டும் என்பது குறித்த பயிற்சியும் மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்குப் பேருதவியாகத் திகழும் என்றார் அவர். 
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக இணைவேந்தர் டி.பி.கணேசன், மேலாண்மை துறை டீன் வி.எம்.பொன்னையா, துறைத் தலைவர் ராஜன் டேனியல், அர்கஹா மனித வள மேம்பாட்டு நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி திரு.அ.ராஜன் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/15/தொழில்-பயிற்சி-வாய்ப்புகளை-மாணவர்கள்-பயன்படுத்திக்-கொள்ள-வேண்டும்-2790618.html
2790617 சென்னை சென்னை செவிலியர்கள் போராட்டம் வாபஸ் DIN DIN Sunday, October 15, 2017 04:06 AM +0530 அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து தனியார் செவிலியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு மற்றும் மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின்படி தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களுக்கு குறைந்தபட்சம் மாத ஊதியமாக ரூ.20 ஆயிரம் நிர்ணயிக்கக் கோரி, அக்டோபர் 11 -ஆம் தேதி முதல் தனியார் செவிலியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதைத்தொடர்ந்து அவர்கள், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். அப்போது செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஆவன செய்யப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார். 
இந்நிலையில், தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் அ.யாஸ்மின் பேகம் தலைமையில், இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை தொழிலாளர் நலத் துறை ஆணையர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் தொடங்கி இரவு 9 மணி வரை பேச்சுவார்த்தை நடைபெற்றது.
உடன்பாடு: பேச்சுவார்த்தையில் தனியார் செவிலியர்களின் பிரதிநிதிகள், தனியார் மருத்துவமனைகளின் நிர்வாக பிரதிநிதிகள், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட குளோபல் செவிலியர்கள் அமைப்பின் துணைத் தலைவர் ஜி.உதயகுமார் கூறியது: 
மத்திய குழுவின் பரிந்துரைகள் கேரளம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் அமல்படுத்தப்பட உள்ளது. ஆனால், தமிழகத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால்தான் நாங்கள் முறைப்படி அறிவித்துவிட்டு, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டோம். 
தற்போது நடைபெற்று முடிந்துள்ள பேச்சுவார்த்தையில் அரசு தரப்பில், மத்திய குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர். 
தனியார் மருத்துவமனைகளின் சார்பில் கலந்துக் கொண்டவர்களும் ஊதிய உயர்வு வழங்குவதாக உறுதியளித்தனர். இதையடுத்து வேலை நிறுத்தப் போராட்டத்தை தாற்காலிகமாக வாபஸ் பெறுகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/15/செவிலியர்கள்-போராட்டம்-வாபஸ்-2790617.html
2790615 சென்னை சென்னை மாங்காட்டில் கிளினிக் நடத்திய போலி பெண் மருத்துவர் கைது DIN DIN Sunday, October 15, 2017 04:04 AM +0530 சென்னை மாங்காட்டில் கிளினிக் நடத்தி வந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸார் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை அருகே உள்ள மாங்காடு கெருகம்பாக்கம் ஆகாஷ் நகரைச் சேர்ந்தவர் சந்திரகலா (44). இவர், மாங்காடு சையது சாதிக்நகரில் "சுகம் கிளினிக்' என்ற பெயரில் கடந்த 5 ஆண்டுகளாக அலோபதி மருத்துவ சிகிச்சை அளித்து வந்துள்ளார். 
இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட அரசு சுகாதார அதிகாரிகள் மாங்காடு பகுதியில் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்தி அந்தப் பகுதியில் வெள்ளிக்கிழமை (அக்.13) ஆய்வு செய்து சுற்றுப்புறத்தைச் சுகாதாரமாக வைத்திருக்க அறிவுரைகளை வழங்கினர். 
அப்போது, அந்தக் குழுவினர் "சுகம் கிளினிக்' சென்று ஆய்வு செய்தனர். அப்போது, சந்திரகலா முறையான மருத்துவப் படிப்பு படிக்காமல், Multi Purpose Healthy Work (எம்.பி.எச்.டபிள்யு) என்ற ஒன்றரை ஆண்டு படிப்பை மட்டும் படித்துவிட்டு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. 
இதுகுறித்து அரசு அதிகாரிகள் கொடுத்த தகவலின்பேரில் மாங்காடு போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை செய்தனர்.
அதையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து, போலி பெண் மருத்துவர் சந்திரகலாவை வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/15/மாங்காட்டில்-கிளினிக்-நடத்திய-போலி-பெண்-மருத்துவர்-கைது-2790615.html
2790614 சென்னை சென்னை பி.பார்ம், டி.பார்ம், பி.எஸ்சி. நர்சிங் படிப்புகளுக்கு அக்.23-இல் கலந்தாய்வு DIN DIN Sunday, October 15, 2017 04:01 AM +0530 தமிழகத்தில் போஸ்ட் பேசிக் பிஎஸ்சி, டி.பார்ம், பி.பார்ம் ஆகிய படிப்புகளுக்கான கலந்தாய்வு, சென்னையில் அக். 23-ஆம் தேதி நடைபெற உள்ளது.
செவிலியப் பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கான போஸ்ட் பேசிக் பி.எஸ்சி நர்சிங், ஏற்கெனவே டி.பார்ம் படித்து முடித்தவர்களுக்கான பி.பார்ம் (ப்ஹற்ங்ழ்ஹப் ங்ய்ற்ழ்ஹ்), மற்றும் டி.பார்ம் ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் இணையதளம் மூலம் நடைபெற்றது.
இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் தரைத்தளத்தில் உள்ள 2-ஆவது கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற உள்ளது.
அக். 23-ஆம் தேதி மூன்று படிப்புகளுக்கும் கலந்தாய்வு நடைபெறும். போஸ்ட் பேசிக் பி.எஸ்சி படிப்புக்கு மட்டும், 24-ஆம் தேதியும் தொடர்ந்து கலந்தாய்வு நடைபெற உள்ளது.
தகுதிப் பட்டியல், கலந்தாய்வு அட்டவணை www.tnhealth.org, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/15/பிபார்ம்-டிபார்ம்-பிஎஸ்சி-நர்சிங்-படிப்புகளுக்கு-அக்23-இல்-கலந்தாய்வு-2790614.html
2790613 சென்னை சென்னை செவிலியர்கள் போராட்டம் வாபஸ் DIN DIN Sunday, October 15, 2017 04:00 AM +0530 அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து தனியார் செவிலியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு மற்றும் மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின்படி தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களுக்கு குறைந்தபட்சம் மாத ஊதியமாக ரூ.20 ஆயிரம் நிர்ணயிக்கக் கோரி, அக்டோபர் 11 -ஆம் தேதி முதல் தனியார் செவிலியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதைத்தொடர்ந்து அவர்கள், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். அப்போது செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஆவன செய்யப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார். 
இந்நிலையில், தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் அ.யாஸ்மின் பேகம் தலைமையில், இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை தொழிலாளர் நலத் துறை ஆணையர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் தொடங்கி இரவு 9 மணி வரை பேச்சுவார்த்தை நடைபெற்றது.
உடன்பாடு: பேச்சுவார்த்தையில் தனியார் செவிலியர்களின் பிரதிநிதிகள், தனியார் மருத்துவமனைகளின் நிர்வாக பிரதிநிதிகள், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட குளோபல் செவிலியர்கள் அமைப்பின் துணைத் தலைவர் ஜி.உதயகுமார் கூறியது: 
மத்திய குழுவின் பரிந்துரைகள் கேரளம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் அமல்படுத்தப்பட உள்ளது. ஆனால், தமிழகத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால்தான் நாங்கள் முறைப்படி அறிவித்துவிட்டு, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டோம். 
தற்போது நடைபெற்று முடிந்துள்ள பேச்சுவார்த்தையில் அரசு தரப்பில், மத்திய குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர். 
தனியார் மருத்துவமனைகளின் சார்பில் கலந்துக் கொண்டவர்களும் ஊதிய உயர்வு வழங்குவதாக உறுதியளித்தனர். இதையடுத்து வேலை நிறுத்தப் போராட்டத்தை தாற்காலிகமாக வாபஸ் பெறுகிறோம் என்று அவர் தெரிவித்தார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/15/செவிலியர்கள்-போராட்டம்-வாபஸ்-2790613.html
2790612 சென்னை சென்னை ஒரே நேரத்தில் 1,049 மாணவர்களுக்கு பாடம் நடத்தி கின்னஸ் சாதனை DIN DIN Sunday, October 15, 2017 04:00 AM +0530 பள்ளி மாணவர்கள் 1049 பேருக்கு நீண்ட நேரம் பாடம் நடத்தி கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவின் ஒரு பகுதியாக சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் "நீண்ட உயிரியல்' பாடம் என்ற தலைப்பில் கின்னஸ் சாதனைப் படைக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களைச் சேர்ந்த 21 பள்ளிகளின் 1,049 மாணவர்களுக்கு ஓர் அரங்கத்தில் வைத்து லட்சுமி பிரபு என்ற உயிரியல் ஆசிரியர் ஒன்றரை மணி நேரம் மேடையில் நின்று பாடங்களை நடத்தினார். அரங்கத்தில் அமர்ந்திருந்த மாணவர்களுக்கு அதனை எளிதில் காணும் வகையில் 10 சிறிய திரைகளும், 2 பெரிய திரைகளும் அமைக்கப்பட்டிருந்தன.
உயிரியல் தொடர்பான 45 விஷயங்களை அவர் பாடமாக நடத்தினார். ஆங்கிலத்தில் பாடம் நடத்தப்பட்டது. பாடத்தின் இறுதியில் மனிதனின் மரபணுவை எவ்வாறு எளிதில் கண்டறிவது என்பது குறித்த செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது. மாணவர்கள் இடையிடையே சந்தேகங்களைக் கேட்டனர். பாடம் நடத்தி முடிந்த பின்னரும் நீண்ட நேரம் சந்தேகங்களுக்கு விடையளிக்கப்பட்டது.
விழாவுக்கு, கின்னஸ் சாதனையை ஆய்வு செய்து அங்கீகரிப்பதற்காக ஸ்வப்னீல் டாங்ரீகர் என்ற அதிகாரி வந்திருந்தார். நிகழ்ச்சி நிறைவடைந்ததும் கின்னஸ் சாதனை முயற்சி அங்கீகரிக்கப்பட்டது. அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது. இதனையடுத்து பாடத்தை நடத்திய ஆசிரியர், பங்கேற்ற 1,049 மாணவர்களின் பெயர்களும் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்று, கின்னஸ் சாதனை புரிந்ததற்கான சான்றிதழை வழங்கிப் பேசிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறுகையில், "புதிய இந்தியா 2022' என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் திட்டத்துக்குச் சான்றாக இந்த மாணவர்கள் சாதனை புரிந்துள்ளனர். இதுபோன்ற துடிப்புமிக்க மாணவர்களாலும், இளைஞர்களாலும்தான் புதிய இந்தியாவைப் படைக்க முடியும் என்றார்.
இதற்கு முன்பு தில்லியில் 500 மாணவர்களுக்கு ஒரு மணி நேரம் வேதியியல் பாடம் நடத்தியதே கின்னஸ் சாதனையாக இடம் பெற்றிருந்தது. தற்போது அந்தச் சாதனை தமிழக மாணவர்கள் மற்றும் ஆசிரியரால் முறியடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/15/w600X390/student1.jpg சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கின்னஸ் சாதனை முயற்சியில் தொடர் பாடத்தை நடத்திய ஆசிரியை லட்சுமி பிரபு. (வலது) பங்கேற்ற 21 பள்ளிகளின் மாணவர்கள். http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/15/ஒரே-நேரத்தில்-1049-மாணவர்களுக்கு-பாடம்-நடத்தி-கின்னஸ்-சாதனை-2790612.html
2790605 சென்னை சென்னை இந்திய மருத்துவக் கலந்தாய்வு நிறைவு: 192 காலியிடங்கள் DIN DIN Sunday, October 15, 2017 03:40 AM +0530 இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சனிக்கிழமை இரவு நிறைவு பெற்றது. கலந்தாய்வின் முடிவில் 192 காலியிடங்கள் ஏற்பட்டன.
சித்தா, ஆயுர்வேதம், யுனானி, இந்திய மருத்துவம் மற்றும் யோகா, ஹோமியோபதி ஆகிய படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா இந்திய முறை மருத்துவ வளாகத்தில் அக்.11-ஆம் தேதி தொடங்கியது.
இந்தப் படிப்புகளுக்கு 6 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 390 இடங்கள் உள்ளன. 17-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 826 இடங்கள் உள்ளன. நான்கு நாள்கள் கலந்தாய்வு நடைபெற்றது. சனிக்கிழமை நடைபெற்ற இறுதிநாள் கலந்தாய்வில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 390 இடங்கள், தனியார் கல்லூரிகளில் 634 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 1024 இடங்கள் நிரம்பியுள்ளன. 192 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.
மீதமுள்ள இடங்களுக்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/15/இந்திய-மருத்துவக்-கலந்தாய்வு-நிறைவு-192-காலியிடங்கள்-2790605.html
2790594 சென்னை சென்னை கேரளத்தில் கட்சியினர் மீது தாக்குதல்: சென்னையில் இன்று பாஜக ஆர்ப்பாட்டம் DIN DIN Sunday, October 15, 2017 02:58 AM +0530 கேரளத்தில் தங்களது கட்சியினர் மீது நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்து, சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (அக். 15) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக பாஜக அறிவித்துள்ளது.
இதுகுறித்து, மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்ட அறிவிப்பு: கேரளத்தில் பாஜக தொண்டர்கள் தொடர்ந்து கொலை செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த 15 மாதங்களில் 11 கொலைகள் நடந்துள்ளன. இச்சம்பவங்களைக் கண்டித்து பல்வேறு மாநிலங்களிலும், மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டனப் பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை (அக். 15) தமிழக பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/15/கேரளத்தில்-கட்சியினர்-மீது-தாக்குதல்-சென்னையில்-இன்று-பாஜக-ஆர்ப்பாட்டம்-2790594.html
2790588 சென்னை சென்னை தீபாவளி: சென்னை - நெல்லைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் DIN DIN Sunday, October 15, 2017 02:55 AM +0530 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏற்கெனவே சுவிதா மற்றும் சிறப்புக் கட்டண ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. தற்போது பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு சென்னை எழும்பூர் -நெல்லை இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்களை சனிக்கிழமை அறிவித்தது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
ரயில் எண் 06017: சென்னை எழும்பூரில் இருந்து அக்டோபர் 17 -ஆம் தேதி காலை 7 மணிக்குப் புறப்பட்டு இரவு 11 மணிக்கு நெல்லை சென்றடையும்.
இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், கடலூர், சிதம்பரம், சீர்காழி, வைதீஸ்வரன்கோயில், மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சை, திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
ரயில் எண் 06018: அக்டோபர் 20 -ஆம் தேதி நெல்லையிலிருந்து காலை 7.20 மணிக்குப் புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
இந்த ரயில் வாஞ்சி மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், திண்டிவனம், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/15/தீபாவளி-சென்னை---நெல்லைக்கு-முன்பதிவில்லா-சிறப்பு-ரயில்-2790588.html
2790587 சென்னை சென்னை மண்டல புற்றுநோய் மையங்கள் மேம்படுத்தப்படும் DIN DIN Sunday, October 15, 2017 02:54 AM +0530 தமிழகத்தில் உள்ள நான்கு மண்டல புற்றுநோய் மையங்கள் ரூ.60 கோடி செலவில் மேம்படுத்தப்படும் என்று தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார்.
உலக நல்வாழ்வு மற்றும் நோய் தடுப்பு பாதுகாப்பு நாள், சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதில், புற்றுநோயின் இறுதிநிலையில் உள்ளோருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் பங்கேற்றனர். 
நிகழ்ச்சியில் ஜெ.ராதாகிருஷ்ணன் பேசியது:
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளிலும் புற்றுநோய் மையங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. தஞ்சை, மதுரை, நெல்லை, கோவை ஆகிய இடங்களில் உள்ள நான்கு மண்டல புற்றுநோய் மையங்கள், ரூ.60 கோடி செலவில் மேம்படுத்தப்பட உள்ளன. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, இறுதி நிலையில் உள்ள நோயாளிகளுக்கு ஆதரவு சிகிச்சை அளிப்பது சிறப்பான தொண்டாகும். அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் சார்பில் செயல்படும் ஆதரவு சிகிச்சை மையங்கள், கிராமப்புற மக்களும் பயன்பெறும் வகையில் விரிவுப்படுத்தப்பட வேண்டும் என்றார் அவர்.
மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சாந்தா கூறுகையில், "அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் சார்பில் ஸ்ரீபெரும்புத்துôரில் புற்றுநோயின் கடைசி நிலையில் உள்ள நோயாளிகளுக்கான ஆதரவு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. அங்கு, 50 படுக்கை வசதிகள் உள்ளன. பல்வேறு அமைப்பினரிடம் நன்கொடை பெற்று இந்த மையம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது' என்றார். 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/15/மண்டல-புற்றுநோய்-மையங்கள்-மேம்படுத்தப்படும்-2790587.html
2790454 சென்னை சென்னை இனிப்பு, கார தயாரிப்பாளர்களுக்கு விழிப்புணர்வுக் கூட்டம் DIN DIN Sunday, October 15, 2017 01:43 AM +0530 தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் சார்பில் சென்னையில் உள்ள இனிப்பு, காரம் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. 
இதுகுறித்து சென்னை மாவட்ட உணவுப்பாதுகாப்பு அதிகாரி கதிரவன், அலுவலர்கள் சதாசிவம், சந்திரசேகர் உள்ளிட்டோர் கூட்டத்தில் கூறியது:
தீபாவளியை முன்னிட்டுத் தயாரிக்கப்படும் பலகாரங்களுக்கு தூய்மையான தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும். கார வகைகளில் கண்டிப்பாக வண்ணப் பொடிகளைச் சேர்க்கக் கூடாது. பால் வகை இனிப்புகளுடன் நெய் வகை இனிப்புகளைச் சேர்த்து விநியோகிக்கக் கூடாது. திருமண மண்படங்கள் உள்பட தனியார் இடங்களை வாடகைக்கு எடுத்து இனிப்பு, கார வகைகளைத் தயாரிப்பவர்கள் உணவுப் பாதுகாப்புத் துறையிடம் பதிவுச் சான்றிதழ் பெற வேண்டும். பெட்டிகளில் அடைத்து விற்கப்படும் பலகாரங்களில் சரியான விலை, அளவு, காலாவதியாகும் தேதி உள்ளிட்ட விவரங்களை அவசியம் குறிப்பிட வேண்டும். 
விழிப்புணர்வு சோதனை: இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்தவுடன் புரசைவாக்கம் பகுதியில் உள்ள இனிப்புக் கடைகளுக்கு அலுவலர்கள் சென்று விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/15/w600X390/sweets.jpg புரசைவாக்கத்தில் உள்ள இனிப்பகத்தில் சோதனையிட்ட அதிகாரிகள். http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/15/இனிப்பு-கார-தயாரிப்பாளர்களுக்கு-விழிப்புணர்வுக்-கூட்டம்-2790454.html
2790452 சென்னை சென்னை போக்குவரத்து விதிமீறல்: 97,456 வழக்குகள் பதிவு: ரூ.97.45 லட்சம் அபராதம் வசூல் DIN DIN Sunday, October 15, 2017 01:42 AM +0530 சென்னையில் கடந்த செப்டம்பர் 1 -ஆம் தேதி முதல் அக்டோபர் 10 -ஆம் தேதி வரை, போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை ஓட்டியது தொடர்பாக 97,456 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.97.45 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து, சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:
சென்னையில் வாகன விபத்துக்களை தவிர்க்கவும், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாகவும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையின் சார்பில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி, பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, சென்னையில் விபத்துக்கள் நடைபெறும் இடங்கள் கண்டறியப்பட்டு, அந்தப் பகுதிகள் மற்றும் அதிக அளவு வாகனங்கள் செல்லும் பிரதான சாலைகளான அண்ணா சாலை, காமராஜர் சாலை, ஈ.வெ.ரா. சாலை, 100 அடி சாலை, ஜி.எஸ்.டி. சாலை, எல்.பி.சாலை, எஸ்.வி. படேல் சாலை, இ.சி.ஆர். மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை ஆகிய இடங்களில் போக்குவரத்து காவலர்கள் மூலம் சிறப்பு வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
மேலும், சிறப்பு வாகன தணிக்கைகளில் விதிமுறைகளை மீறி வாகனங்கள் ஓட்டியோர் மீது கடந்த செப்டம்பர் 1 -ஆம் தேதி முதல் 30 -ஆம் தேதி வரை 68,187 வழக்குகளும், அக்டோபர் 1-ஆம் தேதி முதல் 10 -ம் தேதி வரை 29,269 வழக்குகளும் என மொத்தம் கடந்த 40 நாள்களில் 97,456 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.97.45 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
2 போலீஸாருக்கு அபராதம்: எஸ்.வி.பட்டேல் சாலையில், ராஜ்பவன் அருகே சனிக்கிழமை (அக்.14) , தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரிந்து வரும் 2 காவலர்கள் மீது, கிண்டி போக்குவரத்து ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்தார். அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/15/போக்குவரத்து-விதிமீறல்-97456-வழக்குகள்-பதிவு-ரூ9745-லட்சம்-அபராதம்-வசூல்-2790452.html
2790449 சென்னை சென்னை இலக்கியப் போட்டிகள்: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரூ.57 லட்சம் பரிசு DIN DIN Sunday, October 15, 2017 01:42 AM +0530 தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், மாநில மற்றும் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மொத்தம் ரூ.57.36 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. 
பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்தச் செய்யும் வகையில் கடந்த 12 ஆண்டுகளாக மாவட்ட மற்றும் மாநில அளவிலான பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகளை தமிழக அரசு நடத்தி வருகிறது.. 13 -ஆவது ஆண்டுக்கான இறுதிப் போட்டிகள் சென்னையில் வெள்ளிக்கிழமை (அக்.13) நடைபெற்றது. இதில் 32 மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர். 
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் பட்டியல் (பள்ளி மாணவர்கள் பிரிவு) :-
கவிதைப் போட்டி: முதல் பரிசு- அ.ஆனந்த், பிளஸ் 2, அரசுமேல்நிலைப்பள்ளி, ஜயங்கொண்டம், அரியலூர் மாவட்டம்; இரண்டாம் பரிசு -ஐ.ஆனந்தி, பிளஸ் 1, புனித சின்னப்பர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, நாகப்பட்டினம்; மூன்றாம் பரிசு -வி.யஸ்வந்த், பிளஸ் 2, பனிமலர் மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர் மாவட்டம்.
கட்டுரைப் போட்டி: முதல் பரிசு - க.விஜயகாந்த், பிளஸ் 1, புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல் மாவட்டம்; இரண்டாம் பரிசு -மா.அழகு கீர்த்தனா, நேரு வித்யாசாலை மேல்நிலைப்பள்ளி, மதுரை மாவட்டம்; மூன்றாம் பரிசு- மு.தர்ஷினி, பிளஸ் 2, புனித தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கரூர் மாவட்டம்.
பேச்சுப் போட்டி: முதல் பரிசு -சி.பபினா, எஸ்.எஸ்.வி. மேல்நிலைப்பள்ளி, கொடுமுடி, ஈரோடு மாவட்டம்; இரண்டாம் பரிசு- அ.சீனிவாசன், பிளஸ் 2, வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவாரூர் மாவட்டம்; மூன்றாம் பரிசு -மு.பாலமுருகன், பிளஸ் 2, பிஷப் உபகாரசாமி மேல்நிலைப் பள்ளி, திருப்பூர் மாவட்டம்.
கல்லூரி மாணவர்கள் பிரிவு:- 
கவிதைப் போட்டி: முதல் பரிசு -ம.வித்யா, சக்தி மகளிர் கலை அறிவியல் கல்லூரி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் மாவட்டம்; இரண்டாம் பரிசு -மு.அபிஷேக், கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை; மூன்றாம் பரிசு -இரா.ராஜ்குமார், வேதியியல் முதலாமாண்டு, விருதுநகர் இந்து நாடார் செந்தில்குமார் நாடார் கல்லூரி, விருதுநகர் மாவட்டம்.
கட்டுரைப் போட்டி: முதல் பரிசு -இரா.கார்த்திகேயன், பொறியியல் 4 -ஆம் ஆண்டு, அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரி, காரைக்குடி, சிவகங்கை மாவட்டம்; இரண்டாம் பரிசு- ப.தேவி, வேதியியல் 2 -ஆம் ஆண்டு பாத்திமா கல்லூரி, மதுரை; மூன்றாம் பரிசு - பெ.ஆஷிகா, அரசு கலைக் கல்லூரி, முதுநிலை வேதியியல், கிருஷ்ணகிரி மாவட்டம்.
பேச்சுப் போட்டி: முதல் பரிசு -ச.காவ்யா, வணிகவியல் முதலாமாண்டு, கே.எஸ்.ஆர். கலை அறிவியல் கல்லூரி, நாமக்கல்; இரண்டாம் பரிசு- த.செல்வராசு, இளங்கலை தமிழ் இலக்கியம், அரசுக் கலைக்கல்லூரி, உடுமலைப்பேட்டை, திருப்பூர் மாவட்டம்; மூன்றாம் பரிசு- ந.விஜயநம்பி, முதுநிலை வணிகவியல் முதலாமாண்டு, அய்ய நாடார் ஜானகியம்மாள் கல்லூரி, சிவகாசி, விருதுநகர் மாவட்டம். 
பரிசு எவ்வளவு? ஒவ்வொரு போட்டிகளிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு முறையே ரூ.15,000, ரூ.12,000, ரூ.10,000 பரிசுத் தொகையை தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கோ.விசயராகவன், கவிஞர் மருது அழகுராஜ், மொழிப்பெயர்ப்புத் துறை இயக்குநர் ஒளவை ந.அருள் ஆகியோர் வழங்கினர். 
மாவட்டம், மாநில அளவிலான போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு மொத்தம் ரூ.57.36 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. 
விழாவில், சொற்பொழிவாளர் உமையாள் முத்து, சென்னைப் பல்கலைக்கழக தமிழ் துறைத் தலைவர் ஒப்பிலா மதிவாணன், அகரமுதலித் திட்ட இயக்குநர் கோ.செழியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/15/இலக்கியப்-போட்டிகள்-வெற்றி-பெற்ற-மாணவர்களுக்கு-ரூ57-லட்சம்-பரிசு-2790449.html
2790033 சென்னை சென்னை தீபாவளி: பேருந்து சிறப்பு முன்பதிவு கவுன்ட்டர்கள் திறப்பு DIN DIN Saturday, October 14, 2017 04:01 AM +0530 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக, சிறப்பு முன்பதிவு கவுன்ட்டர்கள் வெள்ளிக்கிழமை (அக்.13) முதல் செயல்படத் தொடங்கியுள்ளன.
இது குறித்த விவரம்: தீபாவளியை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக, தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (அக். 15) முதல் 17-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் மொத்தம் 11,645 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 
பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக, சென்னை கோயம்பேட்டில் சிறப்பு முன்பதிவு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம் சானட்டோரியம்... சிறப்புக் கவுன்ட்டர்கள் கொண்ட முன்பதிவு மையத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். 
சிறப்பு பேருந்துகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு வசதியாக கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் 26 டிக்கெட் முன்பதிவு மையங்கள், பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் ஒரு முன்பதிவு மையம், தாம்பரம் சானட்டோரியத்தில் 2 முன்பதிவு மையங்கள் என மொத்தம் 29 கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. 
இந்த முன்பதிவு மையங்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/14/தீபாவளி-பேருந்து-சிறப்பு-முன்பதிவு-கவுன்ட்டர்கள்-திறப்பு-2790033.html
2790032 சென்னை சென்னை குடும்ப அட்டையில் மாற்றங்கள்: சென்னையில் இன்று சிறப்பு முகாம்கள் DIN DIN Saturday, October 14, 2017 04:01 AM +0530 குடும்ப அட்டையில் மாற்றங்கள், குறைபாடுகளைக் களைவதற்காக சென்னையில் சனிக்கிழமை (அக். 14) சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.
இது குறித்து, உணவுப் பொருள் வழங்கல் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்தல் மற்றும் பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து குறைதீர் கூட்ட முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும். அதன்படி உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், அந்தந்த மண்டல உதவி ஆணையர் அலுவலகத்திலேயே குறைதீர் முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடைபெறும். குடும்ப அட்டைதாரர்கள் குடும்ப அட்டைகளில் பெயர் திருத்தம், நீக்கல், சேர்த்தல், முகவரி மாற்றம், செல்லிடப்பேசி எண் திருத்தம் மற்றும் மாற்றம், பொது விநியோக திட்ட கடைகளின் செயல்பாடுகள் குறித்தும் தங்களுக்கு குறைகள் ஏதேனும் இருப்பின் அவற்றைக் கூட்டத்தில் தெரிவிக்கலாம் என்று உணவுப் பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/14/குடும்ப-அட்டையில்-மாற்றங்கள்-சென்னையில்-இன்று-சிறப்பு-முகாம்கள்-2790032.html
2790031 சென்னை சென்னை எண்ணூர் துறைமுகத்தைப் பார்வையிட மலேசிய தொழில் அமைச்சருக்கு அனுமதி மறுப்பு DIN DIN Saturday, October 14, 2017 03:58 AM +0530 மலேசியா நாட்டின் மாநில தொழில் அமைச்சர் தலைமையிலான குழுவிற்கு எண்ணூர் காமராஜர் துறைமுகத்தைப் பார்வையிட இந்திய அரசின் குடியேற்றத் துறை (ஐம்ம்ண்ஞ்ழ்ஹற்ண்ர்ய்) அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டனர். இதனையடுத்து வெள்ளிக்கிழமை இக்குழுவினர் மலேசியா திரும்பிச் சென்றனர். இதனால் சுமார் ரூ. 500 கோடி வெளிநாட்டு முதலீட்டு வாய்ப்பு பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மலேசியா நாட்டின் தெரங்க்கனு மாகாணத்தின் மன்னர் அப்துல் ரஜாக் அப்துல் ரஹ்மான். இவரது தலைமையிலான அமைச்சரவையில் தொழில் மற்றும் வர்த்தக அமைச்சராக இருப்பவர் டெங்கு அவாங். அங்கு ஏராளமான சிலிக்கா மணல் அபரிதமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. 
இம்மணலை, சென்னை அருகே உள்ள கண்ணாடி தயாரிக்கும் தொழிற்சாலைக்கு இறக்குமதி செய்வதற்காக அந்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
சிலிக்கா மணலை இறக்குமதி செய்யும் வசதிகளை அறிந்து கொள்வதற்காக எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் தனியார் நிறுவனம் கட்டமைக்கப்பட்டுள்ள பல்சரக்கு கையாளும் முனையத்தை அமைச்சர் டெங்கு அவாங் தலைமையிலான குழுவினர் பார்வையிட முடிவு செய்துள்ளனர். 
இதனையடுத்து மன்னர் அப்துல் ரஜாக், அமைச்சர் டெங்கு அவாங் மற்றும் குழுவினர் புதன்கிழமை இரவு சென்னை வந்தனர்.
அனுமதி மறுத்த அதிகாரிகள்: இந்நிலையில், இந்தக் குழுவினர், வெள்ளிக்கிழமை காமராஜர் துறைமுகத்திற்குச் செல்வதற்காக திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கான அனுமதியை பெறுவதற்காக அமைச்சர் மற்றும் குழுவினரின் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட விவரங்கள் துறைமுகத்தில் உள்ள குடியேற்றத் துறை அதிகாரிகளிடம் புதன்கிழமை சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதனை ஆய்வு செய்த குடியேற்றத்துறை அதிகாரிகள், இக்குழுவினர் அனைவருக்கும் அனுமதி மறுத்தனர். குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ள விசாவில் "சுற்றுலா'விற்கு எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அவர்கள் முறைப்படி வர்த்தக விசாவில் இந்தியா வந்தால் மட்டுமே துறைமுகத்திற்குள் செல்ல அனுமதிக்க முடியும் என்றும் தனியார் முனைய அதிகாரிகள் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர்.
ரூ. 500 கோடி முதலீட்டு வாய்ப்பு பறிபோகும் அபாயம்?: இது குறித்து துறைமுக அதிகாரிகள் வட்டாரத்தில் கூறியது:
தனியார் துறைமுகங்களின் போட்டி காரணமாக எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் வளர்ச்சி படிப்படியாக நலிவடைந்து வருகிறது. இந்நிலையில், இங்குள்ள தனியார் முனையங்களை முடுக்கி விடுவதன் மூலம் வளர்ச்சிக்கான அடித்தளமிட முடியும். இதன் ஒரு பகுதியாகத்தான் நிரந்தரமாக தொடர்ந்து சிலிக்கா மணலை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பு காமராஜர் துறைமுகத்திற்குக் கிடைத்துள்ளது. மலேசிய நாட்டின் திட்டம் செயல்பாட்டு வந்தால் சுமார் ரூ. 500 கோடி செலவில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வாய்ப்புள்ளது. இந்நிலையில் அமைச்சர் தலைமையிலான குழுவிற்கு குடியேற்றத்துறை அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர். 
அமைச்சரை மட்டுமாவது மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் முன்னிலையில் ஒரேயொரு முறை முனையத்தை பார்வையிட அனுமதிக்குமாறு தொடர்ந்து வாதிட்டு வந்த நிலையில், இறுதி வரை அனுமதி அளிக்கப்படவில்லை. இதன் காரணமாக, தெரங்க்கனு மாநில மன்னர் அப்துல் ரஹ்மான் வியாழக்கிழமை இரவு மலேசியா புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில் வெள்ளிக்கிழமையும் குடியேற்றத்துறை அதிகாரிகள் முடிவில் மாற்றம் இல்லாததையடுத்து துறைமுகத்தைப் பார்வையிடும் முடிவு கைவிடப்பட்டது. இதனையடுத்து அமைச்சர் டெங்கு தவாங் மற்றும் அவருடன் வந்த அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இரவு மலேசியா புறப்பட்டுச் சென்றனர். 
இது குறித்து சென்னைத் துறைமுக பி.எம்.எஸ். தொழிற்சங்க பொதுச் செயலாளர் ஆர்.சந்தானம் கூறியது:
வெளிநாட்டிலிருந்து தொழில் முனைவோர், முக்கிய பிரமுகர்கள் இங்கு வருவதை தடுக்கக் கூடாது. மாறாக விதிகளைக் கடைப்பிடிக்கும்போது நளினத்துடன் செயல்பட வேண்டும். 
நாட்டின் பாதுகாப்பு விதிகளில் சமரசம் செய்து கொள்வதில் ஆபத்து உள்ளது என்றாலும் நிகழ்வுகளின் முக்கியத்துவம் கருதி குடியேற்றத்துறை அதிகாரிகள் செயல்பட வேண்டும். இதுவே துறைமுகங்களின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கும் என்றார் சந்தானம்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/14/எண்ணூர்-துறைமுகத்தைப்-பார்வையிட-மலேசிய-தொழில்-அமைச்சருக்கு-அனுமதி-மறுப்பு-2790031.html
2790030 சென்னை சென்னை பாலம் அமைப்பு: இணையதள வானொலி ஒலிபரப்பு தொடக்கம் DIN DIN Saturday, October 14, 2017 03:55 AM +0530 "பாலம்' அமைப்பின் இணைதள வானொலி ஒலிபரப்பு சேவை சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
இசை ரசிகர்களுக்காக கடந்த 2013 -ஆம் ஆண்டு பாலம் தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த அமைப்பின் இணையதள வானொலி ஒலிபரப்பு தொடக்க விழா சென்னையில் வெள்ளிக்கிழமை (அக்.13) நடைபெற்றது. விழாவில் தொழிலதிபர் நல்லிகுப்புசாமி, முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபாலசாமி, தொழிலதிபர் க்ளீவ்லேண்ட் வி.வி.சுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டு ஒலிபரப்பு சேவையைத் தொடக்கி வைத்தனர். 
எப்படி பெறுவது? இதுகுறித்து பாலம் நிறுவனர் மற்றும் அறங்காவலர் முத்ரா பாஸ்கர் கூறுகையில், "ஆண்ட்ராய்டு வசதி கொண்ட செல்லிடப்பேசியில் கூகுள் பிளே ஸ்டோருக்குச் சென்று paalamradio' என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இதைத்தொடர்ந்து 24 மணி நேரமும் இதன் ஒலிபரப்பை கேட்கலாம். இசை மேதைகள் தொடங்கி அறிமுகக் கலைஞர்கள் வரை பலரின் கலைத்துறைப் பங்களிப்புடன் கலந்துரையாடல்களின் விரிவுரைகள் இதில் ஒலிபரப்பாகும். கணினி மூலம் இந்த ஒலிபரப்பை கேட்க விரும்புவோர் paalamradio.com என்ற வலைதள முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்' என்றார் அவர். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/14/w600X390/radio.jpg சென்னையில் பாலம் அமைப்பின் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இணையதள வானொலி ஒலிபரப்பு சேவை தொடக்க விழாவில் (இடமிருந்து) அமைப்பின் அறங்காவலர்கள் ராதா பாஸ்கர், முத்ரா பாஸ்கர், தொழிலதிபர் நல்லி குப்புசாமி, http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/14/பாலம்-அமைப்பு-இணையதள-வானொலி-ஒலிபரப்பு-தொடக்கம்-2790030.html
2790029 சென்னை சென்னை 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்துக்குத் தடை DIN DIN Saturday, October 14, 2017 03:52 AM +0530 தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான செவ்வாய்க்கிழமை (அக்.17) இரவு முதல் தீபாவளி பண்டிகை தினமான புதன்கிழமை (அக்.18) இரவு வரை, போனஸ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அறிவித்திருந்த வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
இதுதொடர்பாக, சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் பேட்ரிக், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "தமிழகத்தில் ஜிவிகே ஈஎம்ஆர்ஐ நிறுவனம் 108 ஆம்புலன்ஸ் சேவையை நிர்வகித்து வருகிறது. இந்தப் பணியில் சுமார் 5 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தில் 108 ஆம்புலன்சுக்கு தினமும் 90 ஆயிரம் அழைப்புகள் வருகின்றன. அவற்றில் 7 ஆயிரம் அழைப்புகள் அவசர அழைப்புகளாக உள்ளன.
இந்த நிலையில், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போனஸ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை இரவு வரை வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். தீபாவளி நேரத்தில் ஏற்படும் பட்டாசு விபத்துகளிலிருந்து பொதுமக்களை காக்க 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் சேவை இன்றியமையாதது. எனவே, இந்தப் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்' என கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தீபாவளி நேரத்தில் பட்டாசு அதிகமாக வெடிக்கப்படுகிறது. இந்த நேரத்தில் தீ விபத்துகள் அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது. உயிரைக் காப்பாற்றுவதில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் சேவை இன்றியமையாதது. இந்த வேலை நிறுத்தம் சட்டவிரோதமானது. எனவே 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் போராட்டத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. அதனை மீறி போராடினால் நீதிமன்ற அவமதிப்பை சந்திக்க நேரிடும். மேலும் இதுதொடர்பாக தமிழக அரசு, தொழிலாளர் நலத்துறை மற்றும் ஜிவிகே- ஈஎம்ஆர்ஐ நிறுவனம் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/14/108-ஆம்புலன்ஸ்-ஊழியர்கள்-வேலை-நிறுத்தத்துக்குத்-தடை-2790029.html
2790028 சென்னை சென்னை அமைச்சர் விஜயபாஸ்கரை முற்றுகையிட்ட செலிவியர்கள் DIN DIN Saturday, October 14, 2017 03:49 AM +0530 தங்களுக்கான பணிப் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி, தனியார் மருத்துவமனை செவிலியர்கள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவினரின் பரிந்துரைப்படி, தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் மற்றும் அரசு செவிலியர்களுக்கு வழங்கப்படும் இதர சலுகைகள் வழங்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில் மத்திய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதனை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் எனக் கூறி, சென்னையில் உள்ள பல்வேறு தனியார் மருத்துவமனை செவிலியர்கள் புதன்கிழமை முதல் (அக்.11) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபடும் செவிலியர்கள் மீது குறிப்பிட்ட தனியார் மருத்துவமனையின் நிர்வாகம் அடக்குமுறையைப் பிரயோகிப்பதால், தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரியும், மத்திய அரசின் உத்தரவைப் பின்பற்றி குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிப்பது குறித்து மாநில அரசு அரசாணையை வெளியிட வலியுறுத்தியும், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரை சந்திப்பதற்காக செவிலியர்கள் 50 -க்கும் மேற்பட்டோர், சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்திருந்தனர்.
அங்கு, டெங்கு பாதிப்பை ஆய்வு செய்ய வந்துள்ள மத்திய குழுவினருடனான ஆலோசனைக்குப் பின் புறப்படவிருந்த அமைச்சரை செவிலியர்கள் முற்றுகையிட்டனர்.
இதனையடுத்து அவர்களிடம் பேசிய அமைச்சர் மற்றும் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், குறைந்தபட்ச ஊதியம் தொடர்பான அரசாணை பிறப்பிக்கவும், செவிலியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனையடுத்து அங்கு திரண்டிருந்த செவிலியர்கள் கலைந்து சென்றனர். 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/14/அமைச்சர்-விஜயபாஸ்கரை-முற்றுகையிட்ட-செலிவியர்கள்-2790028.html
2790027 சென்னை சென்னை ஆயுஷ் மருத்துவர்கள் கைது: கண்டித்து போராட்டம் DIN DIN Saturday, October 14, 2017 03:48 AM +0530 ஆயுஷ் மருத்துவர்களை போலி மருத்துவர்கள் எனக் கூறி கைது செய்வதைக் கண்டித்து, சென்னை அரும்பாக்கம் இந்தியமுறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையரகம் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது. 30 -க்கும் மேற்பட்ட ஹோமியோபதி மருத்துவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். 
போராட்டத்தில் ஈடுபட்டோர் கூறியது: சேலம், நாமக்கல் பகுதியில் கிளினிக் நடத்தி வந்த இரண்டு ஹோமியோபதி மருத்துவர்களை, போலி மருத்துவர்கள் எனக் கூறி கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நடத்தி வந்த கிளினிக்குகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக போலி மருத்துவர்கள் எனக் கூறி, ஆயுஷ் மருத்துவர்கள் கைது செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. இந்த நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
போராட்டத்தைத் தொடர்ந்து, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையகரத்தின் பதிவாளரிடம் அவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/14/ஆயுஷ்-மருத்துவர்கள்-கைது-கண்டித்து-போராட்டம்-2790027.html
2790026 சென்னை சென்னை மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் டெங்கு: சுகாதாரத் துறை பதில் மனுவில் தகவல் DIN DIN Saturday, October 14, 2017 03:48 AM +0530 முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் டெங்கு காய்ச்சல் சேர்க்கப்பட்டுவிட்டதாக சுகாதாரத் துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக, சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் ஏ.பி.சூரியபிரகாசம், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பொதுமக்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறவும், அதற்கான தொகையை அரசிடமிருந்து பெற்றுக் கொள்ளவும் உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார். 
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய அமர்வு , "அரசின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் டெங்குவை சேர்க்காதது ஏன்?' என கேள்வி எழுப்பினர். மேலும், "டெங்குவை உருவாக்கும் கொசுக்களைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன, இந்த காய்ச்சலுக்கு எந்த மாதிரியான சிகிச்சைகளை அளிக்கப்படுகின்றன என்பது குறித்து தமிழக அரசு,சென்னை மாநகராட்சி பதிலளிக்க வேண்டும்' என உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், தமிழக அரசின் சுகாதார துறை செயலர் சார்பில் வெள்ளிக்கிழமை பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கொசுக்களை கட்டுப்படுத்த ரூ. 13.95 கோடியில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்து மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் டெங்கு காய்ச்சலுக்கான சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. டெங்குவை கண்டறிய தமிழகம் முழுவதும் 125 சோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு ரூ. 23.50 கோடி செலவில் 837 இரத்த அணு பரிசோதனை கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், பாரம்பரிய மருத்துவ முறைகளின்படி நிலவேம்பு குடிநீர் இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்காக, தமிழகத்தில் 2 ஆயிரம் கிலோ நிலவேம்பு பொடி இருப்பு வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை 1.5 லட்சம் பேருக்கு நிலவேம்பு நீர் வழங்கப்பட்டுள்ளது. 
முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ் டெங்கு ஏற்ஓழனவே சேர்க்கப்பட்டுள்ளது. டெங்ககுவால் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனைகளில், முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ் சிகிச்சைப் பெறலாம் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/14/மருத்துவக்-காப்பீட்டு-திட்டத்தில்-டெங்கு-சுகாதாரத்-துறை-பதில்-மனுவில்-தகவல்-2790026.html
2790025 சென்னை சென்னை வளாக நேர்முகத் தேர்வு விவகாரம்: தமிழக அரசு, அண்ணா பல்கலை. பதிலளிக்க உத்தரவு DIN DIN Saturday, October 14, 2017 03:47 AM +0530 பொறியியல் கல்லூரிகளில் நடத்தப்படும் வளாக நேர்முகத் தேர்வுகள் குறித்து , வரும் 23 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு அரசின் தலைமைச் செயலாளர், அண்ணா பல்கலைக்கழகம் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அண்ணா பல்கலைகழகத்தின் இணைப்பு பெற்ற கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர அண்ணா பல்கலைக்கழக தொழில் கூட்டமைப்பு மையம் மாநில அளவிலான திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 30 தனியார் பொறியியல் கல்லூரிகளை மட்டுமே தேர்வு செய்து வளாக நேர்முக தேர்வு (Campus Interview) நடத்துவதாக கூறி எஸ்.கே. நடராஜன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தமிழகம் முழுவதும் 532 பொறியியல் கல்லூரிகள் உள்ள நிலையில், குறிப்பிட்ட கல்லூரிகளை மட்டும் தேர்வு செய்து வளாக நேர்முக தேர்வு நடத்தப்படுகிறது. இதற்குத் தடை விதித்து, அனைத்து கல்லூரிகளிலும் வளாக நேர்முக தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி கிருபாகரன், தனியார் கல்லூரிகளும், தொழில் நிறுவனங்களும் மனுதாரரின் குற்றச்சாட்டுகளை புறந்தள்ளி விட முடியாது. இது போன்ற வளாக நேர்முக தேர்வுகளை நடத்துவதற்கான வழிமுறைகளை வகுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். 
மேலும், கடந்த 8 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் எத்தனை வளாக நேர்முக தேர்வுகள் நடந்துள்ளன, எந்த அடிப்படையில் அந்தக் கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டன, நேர்முக தேர்வில் எத்தனை மாணவர்கள் கலந்து கொண்டனர், அதில் எத்தனை பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டுள்ளது, கல்லூரிகளின் பெயரை பிரபலபடுத்துவதற்காக அந்தக் கல்லூரிகள் வளாக நேர்முக தேர்வுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதா, பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்கும், பொறியியல் கல்லூரிகளுக்கும் எதிரான குற்றச்சாட்டுகளை அண்ணா பல்கலைக்கழகம் அறியுமா என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதி, இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோர், வரும் 23 ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டார். 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/14/வளாக-நேர்முகத்-தேர்வு-விவகாரம்-தமிழக-அரசு-அண்ணா-பல்கலை-பதிலளிக்க-உத்தரவு-2790025.html
2790024 சென்னை சென்னை இலங்கை ஜெயராஜ் நடத்தும் திருக்குறள் தொடர் வகுப்புகள் இன்று தொடக்கம் DIN DIN Saturday, October 14, 2017 03:46 AM +0530 சொற்பொழிவாளர் இலங்கை ஜெயராஜ் நடத்தும் திருக்குறள் தொடர் வகுப்புகள் சென்னை சேத்துப்பட்டு குருசாமி சாலையில் உள்ள மகரிஷி பள்ளியில் சனிக்கிழமை (அக்.14) , ஞாயிற்றுக்கிழமை (அக்.15)ஆகிய இரு நாள்கள் நடைபெறவுள்ளன. 
கற்க கசடற அமைப்பின் சார்பில் இரு நாள்களிலும் காலை 9.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறவுள்ள இந்த வகுப்புகளில் விருப்பமுள்ளவர்கள் இலவசமாக கலந்து கொள்ளலாம். இது குறித்து மேலும் தகவல் பெற 94455 43442 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/14/இலங்கை-ஜெயராஜ்-நடத்தும்-திருக்குறள்-தொடர்-வகுப்புகள்-இன்று-தொடக்கம்-2790024.html
2790023 சென்னை சென்னை தீபாவளி: கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீக்காய சிறப்பு வார்டு தொடக்கம் DIN DIN Saturday, October 14, 2017 03:46 AM +0530 தீபாவளி பண்டிகை சமயத்தில் பட்டாசு விபத்துகளால் ஏற்படும் தீக்காயங்களுக்கு ஆளாவோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 20 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியின் தீக்காயம் -பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை துறைத் தலைவர் டாக்டர் நிர்மலா பொன்னம்பலம் கூறியது:
தீபாவளி சமயத்தில் ஏற்படும் பட்டாசு, தீக்காய விபத்துகளுக்கு ஆளாவோருக்கு சிகிச்சை அளிப்பதற்கென 10 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிக தீக்காயம் ஏற்படுவோருக்கு சிகிச்சை அளிக்க தீவிர சிகிச்சைப் பிரிவில் 10 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தச் சிறப்பு வார்டு தீபாவளி பண்டிகை முடிந்து ஒரு வாரத்துக்கு செயல்படும். மேலும், தீபாவளி தினத்துக்கு பின்பு பட்டாசு விபத்து ஏற்படுவோருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் இந்த வார்டு கூடுதலாக ஒரு வாரம் இயங்கும்.
24 மணி நேரமும் மருத்துவர்கள்: இந்த சிறப்பு வார்டில் 24 மணி நேரமும் 3 மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் என அனைவரும் பணியில் இருப்பார்கள். 
தீபாவளி தினத்தன்று சுமார் 5 மருத்துவர்கள் பணியில் இருப்பார்கள். தேவைப்பட்டால் கூடுதல் மருத்துவர்கள் பணிக்கு வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பட்டாசு விபத்தில் காயம் அடைவோருக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான மருந்துகள், களிம்புகள், மாத்திரைகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவை கூடுதலாக இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.

பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி?

1. சிறுவர்கள், பெரியவர்கள் துணையுடன் பட்டாசு வெடிக்க வேண்டும்.
2. பட்டாசு வெடிக்கும்போது தளர்வான ஆடைகளை அணியக்கூடாது.
3. காலில் செருப்பு அணிவது அவசியம்.
4. பட்டாசு வெடிக்கும் பகுதியில் ஒரு வாளி தண்ணீர் வைத்திருக்க வேண்டும்.

மாவு தடவ வேண்டாம்!

1. பட்டாசு விபத்தில் தீக்காயம் ஏற்பட்டால், அதன் மீது தண்ணீர் ஊற்றி கழுகிவிட்டு உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
2. தீக்காயத்தின் மீது பேனா மை, மாவு, மணல், பற்பசை, ஐஸ்கட்டி போன்ற எதையும் தடவக்கூடாது. 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/14/தீபாவளி-கீழ்ப்பாக்கம்-மருத்துவமனையில்-தீக்காய-சிறப்பு-வார்டு-தொடக்கம்-2790023.html
2790017 சென்னை சென்னை சிறப்புக் கண் சிகிச்சை மூலம் சிறுவனுக்கு பார்வைத் திறன் DIN DIN Saturday, October 14, 2017 03:41 AM +0530 பிறவி நிலை இமை இறக்கத்துடன் ஒற்றைக்கண் உயர்த்தல் குறைபாடு (Monocular Elevation Deficiency) கொண்ட 4 வயது சிறுவனுக்கு சிறப்பு சிகிச்சை மூலம் இயல்பான பார்வைத் திறனை, சென்னை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள் அளித்துள்ளனர். இதுதொடர்பாக இம்மருத்துவமனையின் செயல் இயக்குநர் டாக்டர் அஸ்வின் அகர்வால், குழந்தைகள் கண் சிகிச்சை மருத்துவர் மஞ்சுளா ஜெயக்குமார் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் -மீனாட்சி தம்பதியினரின் 4 வயது மகன் கார்த்திக்குக்கு பிறவி இமை இறக்கம், ஒற்றைக் கண் உயர்த்தல் பிரச்னை காரணமாக பார்வைத் திறன் குறைபாடு இருந்தது. மாறு கண் பிரச்னையும் இருந்தது. மரபுரீதியான பிரச்னை காரணமாக அச்சிறுவனின் வலது கண்ணில் தீவிர பார்வைத் திறன் பாதிப்பு கண்டறியப்பட்டது.
இத்தகைய குறைபாட்டுக்கு வழக்கமாக, 4 மாத இடைவெளியில் இரண்டு கட்டங்களாக கண்ணின் தசைகளில் சீரமைப்பு அறுவை கிச்சை மேற்கொள்ளப்படும். ஆனால், இந்தச் சிறுவனுக்கு திட்டமிட்டு ஒரே முறை கண் தசை சீரமைப்பு சிறப்பு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மாறு கண் பிரச்னையும் சரி செய்யப்பட்டுவிட்டது. தற்போது சிறுவனின் பார்வைத் திறன் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது என்று அவர்கள் தெரிவித்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/14/சிறப்புக்-கண்-சிகிச்சை-மூலம்-சிறுவனுக்கு-பார்வைத்-திறன்-2790017.html
2790009 சென்னை சென்னை தனியார் வங்கி ஊழியரிடம் ரூ.17லட்சம் வழிப்பறி DIN DIN Saturday, October 14, 2017 03:30 AM +0530 சோழவரம் அருகே தனியார் வங்கி ஊழியரிடம் வெள்ளிக்கிழமை இரவு ரூ. 17 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் அருகே உள்ள சிறுவானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசக்தி (29). இவர், திருப்பாச்சூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். 
இந்த வங்கி மூலம், பொன்னேரி, பழவேற்காடு, மீஞ்சூர் பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. அந்த கடன் தொகை ரூ.17 லட்சத்தை சிவசக்தி வசூல் செய்து கொண்டு, வெள்ளிக்கிழமை இரவு 7 மணி அளவில் செங்குன்றம்-திருவள்ளூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
காந்திநகர் பகுதியில் சென்றபோது, அவர் வைத்திருந்த பணப்பையை மர்ம நபர்கள் 2 பேர் பறித்துக்கொண்டு தப்பிச்சென்றதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சோழவரம் காவல் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/14/தனியார்-வங்கி-ஊழியரிடம்-ரூ17லட்சம்-வழிப்பறி-2790009.html
2790008 சென்னை சென்னை குரூப் 1 தேர்வு: 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு DIN DIN Saturday, October 14, 2017 03:30 AM +0530 குரூப் 1 முதன்மை தேர்வை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெள்ளிக்கிழமை எழுதினர். இந்தத் தேர்வு சனிக்கிழமை (அக்.14), ஞாயிற்றுக்கிழமையும் (அக்.15) நடைபெறவுள்ளது.
துணை ஆட்சியர் (29 காலியிடங்கள்), காவல் துணை கண்காணிப்பாளர் (34), வணிகவரித் துறை உதவி ஆணையாளர் (8), மாவட்ட பதிவாளர் (1) என குரூப் 1 தொகுதியில் காலியாகவுள்ள 85 இடங்களுக்கு முதல்நிலை தேர்வினை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தியது.
இந்தத் தேர்வில் வெற்றி பெற்று முதன்மைத் தேர்வுக்கு 4,199 பேர் தகுதி பெற்றனர். இவர்களுக்கான முதன்மைத் தேர்வு வெள்ளிக்கிழமை (அக். 13) தொடங்கியது. சென்னையில் மட்டும் 42 மையங்களில் நடந்த இந்தத் தேர்வை 4,000 -த்துக்கும் மேற்பட்டோர் எழுதியதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/14/குரூப்-1-தேர்வு-4-ஆயிரத்துக்கும்-மேற்பட்டோர்-பங்கேற்பு-2790008.html
2790007 சென்னை சென்னை இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.22.5 லட்சம் சிக்கியது DIN DIN Saturday, October 14, 2017 03:28 AM +0530 சென்னை விமான நிலையத்தில் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.22.5 லட்சம் வெளிநாட்டுப் பணம் சிக்கியது. இது குறித்து 8 பேரிடம் விசாரணை நடந்து 
வருகிறது. 
சென்னை விமான நிலையத்திருந்து செல்லும் பயணிகள், வெளிநாடுகளுக்கு பணம் கடத்திச் செல்வதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து பன்னாட்டு விமான நிலையத்தில் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது இலங்கை செல்ல சென்னை முகமது அசாருதீன், சாதிக் உள்பட 8 பேர் குழுவாக வந்தனர். 
அவர்கள் மீது சந்தேகமடைந்த அதிகாரிகள் 8 பேரையும் தனித் தனியாக அழைத்து விசாரித்தனர். 
அவர்கள் வைத்திருந்த பெட்டியைச் சோதனை செய்தபோது கட்டு கட்டாக அமெரிக்க டாலர், யூரோ உள்ளிட்ட வெளிநாட்டு பணத்தை கடத்தி வந்திருப்பது தெரிந்தது. இதன் இந்திய மதிப்பு ரூ.22.5 லட்சம். அவற்றைப் பறிமுதல் செய்தனர். 
தங்கம் கடத்தியவரிடம் விசாரணை: சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த பயணிகள் விமானத்தில் சென்னை பழனிகுமாரிடம் சோதனை செய்ததில் கால் கிலோ தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்தது. அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/14/இலங்கைக்கு-கடத்த-முயன்ற-ரூ225-லட்சம்-சிக்கியது-2790007.html
2789749 சென்னை சென்னை கோவை - சென்னை இடையே சுவிதா சிறப்பு ரயில் DIN DIN Friday, October 13, 2017 11:51 PM +0530 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை - சென்னை சென்ட்ரல் இடையே சுவிதா சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ரயில் எண் 82638: அக்டோபர் 22 -ஆம் தேதி கோவையில் இருந்து இரவு 7.10 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/13/கோவை---சென்னை-இடையே-சுவிதா-சிறப்பு-ரயில்-2789749.html
2789748 சென்னை சென்னை தீபாவளிபண்டிகை: சென்னை - நாகர்கோவில் சிறப்பு ரயில் DIN DIN Friday, October 13, 2017 11:50 PM +0530 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை எழும்பூர் -நாகர்கோவில் சுவிதா சிறப்பு ரயில்
ரயில் எண் 82611: அக்டோபர் 16 -ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து நண்பகல் 12.55 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் நிலையங்களில் நின்று செல்லும்.
நாகர்கோவில் -சென்னை எழும்பூர் சிறப்புக் கட்டண ரயில்
ரயில் எண் 06040: அக்டோபர் 15 -ஆம் தேதி நாகர்கோவிலில் இருந்து மாலை 5 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
இந்த ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/13/தீபாவளிபண்டிகை-சென்னை---நாகர்கோவில்-சிறப்பு-ரயில்-2789748.html
2789430 சென்னை சென்னை சுற்றுப்புறத்தில் கொசு உற்பத்தியானால் ரூ.2 ஆயிரம் அபராதம்: மாநகராட்சி எச்சரிக்கை DIN DIN Friday, October 13, 2017 04:40 AM +0530 பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களை கொசு உற்பத்தியாகும் வகையில் வைத்திருந்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் எச்சரித்துள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் பொது சுகாதாரத்துறை ஆகியவை இணைந்து ராயபுரம் மண்டலம் புதுப்பேட்டை மார்க்கெட் பகுதிகளில் டெங்கு மற்றும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இப் பணிகளை தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன், பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் க.குழந்தைசாமி உள்ளிட்ட அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.
14 புகைப் பரப்பும் இயந்திரங்கள், கையினால் அடிக்கும் 11 புகைப் பரப்பும் இயந்திரங்கள், 2 வாகனங்கள் மூலம் புகைப்பரப்பும் இயந்திரங்கள், தண்ணீர் தொட்டிகளில் மருந்து தெளிக்கும் பணியாளர்கள் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் நடைபெற்று வரும் கொசு ஒழிப்புப் பணிகளையும் பார்வையிட்டனர். 
வீதிவீதியாகச் சென்று பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி தேவையற்ற பொருள்களான டயர், தேங்காய் ஓடுகள், தண்ணீர் தொட்டிகள், ஆட்டுக்கல், உரல், மூடப்படாத பாத்திரங்கள், உடைந்த பிளாஸ்டிக் பொருள்கள், உடைந்த வாகன உதிரி பாகங்கள், கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்கள் ஆகியவற்றில் தேங்கும் மழைநீர் மூலம் 
உற்பத்தியாகும் கொசுப்புழுக்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 
இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் அளித்த பேட்டி: 
சென்னையில் உள்ள 200 வார்டுகளையும் 2,035 சிறு வட்டங்களாகப் பிரித்து டெங்கு மற்றும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கொசு ஒழிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளில் மாநகராட்சி மலேரியா தொழிலாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள், பொது சுகாதாரத் துறை ஊழியர்கள் என மொத்தம் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். 
டெங்கு கொசுக்களைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் தங்களது வீடுகளில் உபயோகமற்ற பொருள்களை அப்புறப்படுத்த வேண்டும் என இரண்டு முறை அறிவிப்பு வழங்கப்படும். அதனைப் பொருட்படுத்தாமலும், தொடர்ந்து கொசுப் புழுக்கள் உற்பத்தியாகும் வகையில் உள்ள வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு அங்கு கொசு ஒழிப்பு பணிகள் நடைபெறும். இதனையடுத்து அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
முதல் முறையாகக் கண்டறியப்பட்ட வீடுகளுக்கு ரூ.2 ஆயிரம், இரண்டாவது முறையாகக் கண்டறியப்படும் வீடுகளுக்கு ரூ.5 ஆயிரம், மூன்றாவதாகக் கண்டறியப்பட்டால் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இதுவரை ரூ.12.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 
அபராதத்தின் மூலம் வருமானம் ஈட்ட வேண்டும் என்பது நோக்கம் இல்லை. இந்தத் தவறை மீண்டும் தொடரக்கூடாது என்பதோடு அருகிலுள்ளோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும்தான் நோக்கம்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/13/சுற்றுப்புறத்தில்-கொசு-உற்பத்தியானால்-ரூ2-ஆயிரம்-அபராதம்-மாநகராட்சி-எச்சரிக்கை-2789430.html
2789427 சென்னை சென்னை போலி வழக்குரைஞர்கள் விவகாரம்: அரசு எடுத்த நடவடிக்கை என்ன? உயர் நீதிமன்றம் கேள்வி DIN DIN Friday, October 13, 2017 04:40 AM +0530 போலி வழக்குரைகள் விவகாரத்தில் தமிழக அரசு, வழக்குரைஞர் சங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அன்னை மருத்துவக் கல்லூரிக்கு உரிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவ கவுன்சில் தடை விதித்தது. இதையடுத்து, இந்தக் கல்லூரியில் 2 -ஆம் ஆண்டு படிக்கும் 145 மாணவர்கள், தங்களை அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்ற உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், இந்த விஷயத்தில் கல்லூரியை நிர்வகிக்கும் இரண்டு அறக்கட்டளைகளும் பேசி முடிவெடுக்க உத்தரவிட்டிருந்தார். 
இந்நிலையில், கடந்த மாதம் 20 -ஆம் தேதி கல்லூரி நிர்வாகிகளுக்கும், வழக்குரைஞர்கள் சிலருக்கும் இடையே கல்லூரிக்குள் தகராறு ஏற்பட்டது. இந்த நிகழ்வு குறித்த விவரங்கள் நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.
இதைத்தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: 
கடந்த 2015 -ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி, இந்தியாவில் 30 சதவீதம் போலி வழக்குரைஞர்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. சான்றிதழ்களை விலைக்கு வாங்கி போலி ஆவணங்கள் மூலம் வழக்குரைஞர்கள் சங்கத்தில் பதிவு செய்கின்றனர். போலி சான்றிதழ் மூலம் வழக்குரைஞரானவர்கள் கட்டப் பஞ்சாயத்துகளில் ஈடுபடுகின்றனர். மேலும் 20 சதவீதம் பேர் வழக்குரைஞர் தொழிலை செய்யாமல், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மீது காவல்துறையினரும் வழக்குப்பதிவு செய்வதில்லை.
தவறு செய்யும் வழக்குரைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அந்த வழக்குரைஞர்கள் மீது வழக்குரைஞர் சங்கமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்னை மருத்துவ க்கல்லூரி விவகாரத்தில், கல்லூரி தற்போது யார் கட்டுப்பாட்டில் உள்ளது, கருப்பு, வெள்ளை உடையணிந்து போலி வழக்குரைஞர்கள் கல்லூரிக்கு நுழைய அனுமதி வழங்கியது யார், கல்லூரியின் தற்போதைய நிலை என்ன, கல்லூரிக்குள் ஏதாவது விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்துள்ளனவா, கட்டப் பஞ்சாயத்துகளில் ஈடுபடும் வழக்குரைஞர்கள் மீது வழக்குரைஞர் சங்கம், காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் வரும் 24 -ஆம் தேதி பதிலளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/13/போலி-வழக்குரைஞர்கள்-விவகாரம்-அரசு-எடுத்த-நடவடிக்கை-என்ன-உயர்-நீதிமன்றம்-கேள்வி-2789427.html
2789424 சென்னை சென்னை மெட்ரோ ரயிலால் வீடுகளில் விரிசல் இல்லை: நிபுணர் குழு தகவல் DIN DIN Friday, October 13, 2017 04:39 AM +0530 சென்னை அண்ணா நகர், ஷெனாய் நகர் பகுதிகளில் உள்ள வீடுகளில் கடந்த சில நாள்களுக்கு முன் ஏற்பட்ட விரிசல் குறித்து ஆய்வு செய்த ஐஐடி நிபுணர் குழு, "மெட்ரோ ரயில்களை இயக்குவதால் வீடுகளில் விரிசல் ஏற்படவில்லை' என அக்குழுவினர் தெரிவித்தனர்.
திருமங்கலம் -நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் சேவை கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கியது. இந்த வழித்தடத்தில் ஷெனாய் நகர், அண்ணா நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் சுரங்கப் பாதையில் உள்ளன. சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில்கள் செல்லும்போது ஷெனாய் நகர், திரு.வி.க. நகர் குடியிருப்பு பகுதிகளில் அதிர்வு ஏற்படுவதாக பொதுமக்கள் கூறி வந்தனர். இந்த நிலையில், சில தினங்களுக்கு முன் மீண்டும் அந்த பகுதியில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக குடியிருப்புவாசிகள் தெரிவித்தனர். இதையடுத்து, ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் விரிசல் ஏற்பட்ட குடியிருப்புப் பகுதியில் நிலஅதிர்வு மீட்டரைப் பொருத்தி அதிர்வைக் கணக்கிட்டனர். 
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: 
அண்ணா நகர், ஷெனாய் நகர் பகுதிகளில் உள்ள சில வீடுகளில் அதிர்வும், விரிசலும் ஏற்பட்டதாகப் புகார் பெறப்பட்டது. இதனையடுத்து ஐ.ஐ.டி. பேராசிரியர் குழு வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் மெட்ரோ ரயில் இயங்குவதால் விரிசலும், அதிர்வும் ஏற்படவில்லை என தெரிய வந்தது. ஆனால், இன்னும் இரு தினங்களுக்கு தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு, அறிக்கை பெறப்பட்டு அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர். 
இப்பகுதிகளில் உள்ள 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மெட்ரோ சுரங்கப்பாதை பணிகள் நடந்தபோது விரிசல் ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் அதனை சரி செய்தனர்என்பது குறிப்பிடத்தக்கது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/13/மெட்ரோ-ரயிலால்-வீடுகளில்-விரிசல்-இல்லை-நிபுணர்-குழு-தகவல்-2789424.html
2789423 சென்னை சென்னை தீபாவளிக்கு சென்னையிலிருந்து பேருந்துகள் புறப்படும் இடங்கள் DIN DIN Friday, October 13, 2017 04:39 AM +0530 தீபாவளி பண்டிகைக்கு சென்னையிலிருந்து வெளியூர்களுக்குப் பேருந்துகள் புறப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தீபாவளியை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து, தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு அக்.15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் மொத்தம் 11, 645 சிறப்புப் பேருந்துகள் கீழ்கண்ட நான்கு பகுதிகளிலிருந்து இயக்கப்பட உள்ளன.
கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய வளாகத்தின் வெளிப்பகுதி, பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள்: வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, திருவனந்தபுரம், பண்ருட்டி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், கோயம்பத்தூர், எர்ணாகுளம், பெங்களூரு செல்லும் பேருந்துகள்.
அண்ணாநகர் மேற்கு பணிமனை பேருந்து நிறுத்தத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள்: ஆந்திர மாநிலத்திற்குச் செல்லும் பேருந்துகள் மற்றும் ஆந்திர மாநிலப் பேருந்துகள் அனைத்தும்.
பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள்: ஆர்க்காடு, ஆரணி, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஓசூர் செல்லும் பேருந்துகள்.
தாம்பரம் சானட்டோரியம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள்: திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மற்றும் அதைத் தாண்டிச் செல்லும் பேருந்துகள்.
சைதாப்பேட்டை மாநகரப் பேருந்து பணிமனையிலிருந்து இயக்கப்படும் பேருந்துகள்: கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.
கட்டுப்படுத்தி அனுப்பும் இடங்கள்: கீழ்க்கண்ட ஆறு இடங்களில் பேருந்துகளை நிறுத்தி கட்டுப்படுத்தி, சென்னை நகருக்குள் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜீரோ பாயிண்ட், இரும்புலியூர், மதுரவாயல் டோல் பிளாசா, பி.எச் ரோடு, கார்த்திகேயன் நகர், எம்.ஜி. ஆர். யுனிவர்சிட்டி, நெற்குன்றம், தூர்சன்பவர் சிஸ்டம். அதிகப்படியாக கோயம்பேடு நோக்கி வரும் பேருந்துகளை கோயம்பேடு மலர் வணிக வளாகத்தில் உள்ள திறந்தவெளி இடத்திலும், லாரிகள் நிறுத்தும் இடத்திலும், பருப்பு மார்க்கெட்டிலும் நிறுத்திவைத்து, அங்கிருந்து போக்குவரத்துக்கு உள்ளே அனுமதிக்கப்படும்.
ஆம்னி பேருந்துகள்: ஆம்னி பேருந்துகள், கோயம்பேடு சந்தை "உ' சாலையில் உள்ள நிறுத்தத்திலிருந்து, "ஆ' சாலை வழியாக, பூந்தமல்லி நெடுஞ்சாலை சென்று அங்கிருந்து வெளிவட்ட சாலை (நசரத்பேட்டை) வழியாக ஊரப்பாக்கம் சென்று அங்கிருந்து செல்லவேண்டிய ஊர்களுக்கு செல்லலாம். ஆம்னி பேருந்துகள் மதுரவாயல் பைபாஸ் சாலை மற்றும் 100 அடி சாலையில் வடபழனி நோக்கிச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கனரக மற்றும் சரக்கு வாகனங்கள்...தீபாவளி பண்டிகை போக்குவரத்து நெரிசலை முன்னிட்டு, வரும் 15, 16, 17 மற்றும் 23 ஆகிய நான்கு நாள்களிலும், பிற்பகல் 2 மணி முதல் நள்ளிரவு 2 மணிவரை செங்கல்பட்டு, காஞ்சிபுரம் , திருவள்ளூர் மார்க்கங்களிலிருந்து சென்னை வரும் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் மேற்கண்ட வாகனங்கள் மாதவரம் ஜி.என்.டி சாலை, மாதவரம், பாடியநல்லூர் டோல்கேட் அருகில், திருவள்ளூர் சாலை, கள்ளிகுப்பம் டோல்கேட் , மதுரவாயல் டோல்கேட், வெளிவட்ட சாலை நசரத்பேட்டை, ஜி.எஸ்.டி ரோடு, செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோயில், வண்டலூர் பாலம் வழியாக இயக்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சைதாப்பேட்டையிலிருந்து அண்ணாசாலை வழியாகவும், அடையாறிலிருந்து சர்தார் வல்லபபாய் பட்டேல் சாலை வழியாகவும் பெருங்களத்தூர் வரை செல்லும் வாகனங்களை கான்கார்டு சந்திப்பில் வேளச்சேரி பிரதான சாலை வழியாக பெரும்பாக்கம், அகரம்தென் சாலை, வண்டலூர் - கேளம்பாக்கம் சாலை வழியாக மாற்றுப் பாதையில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
100 அடி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக... 100 அடி சாலை மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலிருந்து செங்கல்பட்டு வழியாக செல்லும் சரக்கு வாகனங்கள் அனைத்தும் சிப்பெட் கம்பெனி அருகிலிருந்து கிண்டி நோக்கி கத்திப்பாரா மேம்பாலம் வந்து, சின்னமனை, தாலுகா அலுவலக ரோடு , கான்கார்டு சந்திப்பு, வேளச்சேரி மெயின்ரோடு, பெரும்பாக்கம், அகரம் தென் ரோடு, வண்டலூர் - கேளம்பாக்கம் சாலை வழியாக திருப்பிவிடப்படுகிறது. 
100 அடி சாலை, பாடியிலிருந்து கோயம்பேடு நோக்கி வரும் சரக்கு வாகனங்கள் பாடி மேம்பால சந்திப்பில் சி.டி.எச். சாலையில் திருப்பிவிடப்பட்டுள்ளது. 
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேடு நோக்கி வரும் சரக்கு வாகனங்கள் நடுவாங்கரை சந்திப்பு மற்றும் நெல்சன் மாணிக்கம் சாலை மேம்பாலம் வழியாக அண்ணாநகர் 3-ஆவது அவென்யு, 2-ஆவது நிழற்சாலை, சாந்தி காலனி, அம்பத்தூர் எஸ்டேட் ரோடு , மாந்தோப்பு வழியாக மாற்றுப் பாதையில் செல்ல வேண்டும்.
கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள தனியார் வாகனங்கள் ஈ.வெ.ரா சாலையில் மதுரவாயல் நோக்கிச் செல்பவர்கள் நடுவாங்கரை சந்திப்பு, சாந்தி காலனி, 13-ஆவது பிரதான சாலை, 2-ஆவது நிழற்சாலை, எஸ்டேட் ரோடு, மாந்தோப்பு, வானகரம் வழியாக மாற்றுப் பாதையில் செல்ல வேண்டும்.
வடபழனி நோக்கிச் செல்லும் தனியார் வாகனங்கள், என்.எஸ்.கே. நகர் சந்திப்பு , ரசாக் கார்டன், எம்.எம்.டி.ஏ. காலனி, விநாயகபுரம் வழியாகச் செல்ல வேண்டும். பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்பட்டால், வண்டலூர் நோக்கிச் செல்லும் வாகனங்கள், பெருங்களத்தூர் சந்திப்பிலிருந்து காந்தி ரோடு, நெடுங்குன்றம், ஆலபாக்கம், வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் திருப்பிவிடப்படும்.
தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள்...பண்டிகைக் காலங்களில் பொதுவாகவே தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் இடையே போக்குவரத்து நெரிசல் உள்ளதால், தென்மாவட்டங்களுக்குச் செல்லும் தனியார் வாகன ஓட்டுநர்கள் இ.சி.ஆர். மற்றும் ஓ.எம்.ஆர். சாலை வழியாக செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் வழியாகச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள். வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/13/தீபாவளிக்கு-சென்னையிலிருந்து-பேருந்துகள்-புறப்படும்-இடங்கள்-2789423.html
2788689 சென்னை சென்னை டெங்கு: அறிவிப்பு வெளியிட்டு 6 நாள்களாகியும் அப்புறப்படுத்தப்படாத வாகனங்கள்!: அலட்சியம் காட்டும் மாநகராட்சி அதிகாரிகள் ஆர்.ஜி.ஜெகதீஷ் DIN Thursday, October 12, 2017 10:39 AM +0530 பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உபயோகமற்று சாலையில் நிறுத்தி வைக்கிப்பட்டிருக்கும் வாகனங்களை ஒரு வாரத்திற்குள்ளாக அப்புறப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் உத்தவிட்டிருந்தார்.
டெங்கு காய்ச்சைலை பரப்பும் ஏடிஎஸ் கொசுக்கள் இதுபோன்று உபயோகமற்று நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களில் தேங்கி நிற்கும் நீரில் உற்பத்தியாவதால் இதனை தடுக்கும் பொருட்டு இத்தகைய அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பை கண்காணிக்கும் விதமாக பல்வேறு இடங்களில் மாநகராட்சியின் சுகாதாரத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், சென்னை மாநகரின் மிக முக்கியமான சாலையான அண்ணா சாலை மற்றும் அதனையொட்டியுள்ள ஜெனரல் பேட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தெருக்களில் இன்னமும் உபயோகமற்ற வாகனங்கள் அகற்றப்படவில்லை. அதுமட்டுமல்லால் இந்தப் பகுதிகளில் டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும், குப்பையும் அகற்றப்படவில்லை என்பது பொது மக்களின் புகாராக உள்ளது.
ராயப்பேட்டை: அண்ணா சாலையின் அருகே அமைந்துள்ள ஜெனரல் பேட்டர்ஸ் சாலை கார் உதிரிபாகங்கள் விற்பனைக்கு மிகவும் பெயர் பெற்றது. எனவே, இந்தச் சாலையை ஒட்டியுள்ள தெருக்களில் இந்த வியாபாரத்தைச் சார்ந்து பல தொழில்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பகுதிகளில் ஆண்டுக்கணக்காக பல்வேறு கார்களும், ஆட்டோக்களும், பைக்குகளும் உபயோகமற்று நிறுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த வாகனங்களில் தேங்கியுள்ள மழை நீர் மூலமாக ஏடிஎஸ் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பாதிப்பு ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. 
முக்கியமாக ராயப்பேட்டை பூ பேகம் வரிசை தெருக்கள் சுகாதார சீர் கேடுகளால் நிரம்பி வழிகின்றன. இந்தப் பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் குப்பை தொட்டிகளில் குப்பை இன்னும் அகற்றப்படாமல் உள்ளது. ராயப்பேட்டை பூபேகம் முதல் தெருவைச் சேர்ந்த யூனஸ் கூறியதாவது: வாரத்துக்கு இரண்டு முறையோ அல்லது மூன்று முறையோதான் குப்பைகள் அகற்றப்படுகின்றன. இங்கு கொசு தொல்லையும் அதிகமாகவே உள்ளது. டெங்கு குறித்த விழிப்புணர்வும் இந்தப் பகுதியில் பெரிய அளவில் இல்லை . மேலும், சில மாநகராட்சி ஊழியர்கள் பக்கத்து தெருக்களில் பிளீச்சிங் பவுடர்களை மட்டும் தேங்கிய நீரில் கொட்டிவிட்டுச் செல்கின்றனர். அனைத்து தெருக்களிலும் இத்தகைய பணியைச் செய்தால் சிறப்பாக இருக்கும். இங்கு உபயோகமற்று தெருக்களில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் எவருடையது என்பதே தெரியாது. சில வாடிக்கையாளர்கள் பழுது பார்க்க இங்கே கார்களையும், பைக்குகளையும் கொண்டு வந்து விடுவார்கள், பின்பு எடுத்துச் செல்ல வரமாட்டார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில்தான் இந்த வாகனங்கள் பல்லாண்டு காலமாக அப்படியே இருக்கின்றன என்றார் அவர்.
என்ன செய்கிறது மாநகராட்சி ?: சென்னை மாநகரின் அனைத்து மண்டலங்களிலும் கொசுப் புழுக்களை கட்டுப்படுத்த கொசுப்புழுக் கொல்லி மருந்து தெளித்தல், கைத்தெளிப்பான், புகைப்பரப்பும் இயந்திரம் மற்றும் வாகனம் மூலம் புகை பரப்பும் பணியும் நடைபெற்று வருவதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 
டெங்கு நோயை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் நல்ல நீரில்தான் உற்பத்தியாகின்றன. எனவே, பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் பொது இடங்களில் நீர் தேங்கும் பொருட்களை அகற்றுமாறு துண்டுப் பிரசுரங்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தனிநபர்களின் இருசக்கரம், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சொந்தமான கனரக வாகனங்கள் ஆகியவை பல வருடங்களாக உபயோகமில்லாமல் பழுதடைந்து நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் மழைக்காலங்களில் அவற்றில் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா மற்றும் சிக்குன்குனியா நோய்கள் உருவாகுவதற்கு மூலகாரணமாக அமைகிறது என பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் வந்ததையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சியின் சுகாரத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன உரிமையாளர்கள் சாலையோரங்களிலும், பொது இடங்களிலும் உபயோகமற்ற, பழுதுபட்ட வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர். அதில் மழைநீர் தேங்கி அதன்மூலம் பொதுமக்களுக்கு சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. அதனைத் தடுத்திட வாகன உரிமையாளர்கள் அவர்களுடைய உபயோகமற்ற, பழுதுபட்ட வாகனங்களை ஒருவார காலத்திற்குள் அப்புறப்படுத்த ஏற்கெனவே கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சி கொடுத்துள்ள காலக் கெடுவுக்குள் அப்புறப்படுத்த தவறினால் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/12/w600X390/car.JPG http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/12/டெங்கு-அறிவிப்பு-வெளியிட்டு-6-நாள்களாகியும்-அப்புறப்படுத்தப்படாத-வாகனங்கள்-அலட்சியம்-காட்டும்-மாந-2788689.html
2788688 சென்னை சென்னை நிறைவை நோக்கி துறைமுக இணைப்புச் சாலை திட்டம்?: சிக்கல்களை தீர்க்க அதிரடி நடவடிக்கை DIN DIN Thursday, October 12, 2017 10:37 AM +0530 துறைமுக இணைப்புச் சாலை திட்டப் பணிகளுக்காக திருவொற்றியூர் நல்ல தண்ணீர் ஓடைக்குப்பத்தில் வீடுகள் அகற்றப்பட்ட பகுதியில் சாலை அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது. இதனையடுத்து நிலுவையில் உள்ள விடுபட்ட பணிகள் முடிக்கப்பட்டு இத்திட்டம் விரைவில் முழுமை பெறும் என தேசிய நெடுஞ்சாலை ஆணைய தரப்பில் உறுதியாகத் தெரிவிக்கப்படுகிறது. 
ரூ. 650 கோடி மதிப்பீட்டிலான துறைமுக இணைப்புச்சாலைத் திட்டம் கடந்த ஜனவரி 2011-ல் தொடங்கப்பட்டது. இதில் சுமார் 95 சதவீத பணிகள் பல மாதங்களுக்கு முன்பே முடிக்கப்பட்டுவிட்டநிலையில் சில இடங்களில் மட்டும் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக சாலை அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதனால் இத்திட்டமே முழுமையடையாத நிலை ஏற்பட்டது. மேலும், இந்தப் பணியைச் செய்து வந்த ஒப்பந்ததாரரும் காலதாமதம் காரணமாக விலகிச் சென்றுவிட்டார். 
அகற்றப்பட்ட மீனவ கிராம வீடுகள்: நிலம் கையகப்படுத்துவதில் பிரச்னையாக இருந்து வந்த திருவொற்றியூர் நல்ல தண்ணீர் ஓடைக்குப்பம் மீனவ கிராம வீடுகள் அனைத்தும் சமீபத்தில் முழுமையாக அகற்றப்பட்டு விட்டன. இருப்பினும் ஏற்கனவே சாலை அமைக்கும் பணிகளைச் செய்து வந்த ஒப்பந்ததாரர் விலகிக் சென்று விட்டதால் நிலம் கையகப்படுத்தியும் சாலை அமைக்கும் பணி கடந்த 4 மாதங்களாக நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில் புதன்கிழமை காலை சாலை அமைக்கும் பணி தொடங்கியது. முதல்கட்டமாக தற்போதைய இடம் ஆழப்படுத்தப்படும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த ஒரு மாதத்திற்குள் சாலை அமைக்கும் பணி நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 
திட்டப்பணிகள் விரைவில் முழுமை பெறும்: நல்ல தண்ணீர் ஓடைக்குப்பம் மீனவ கிராமம் தவிர எண்ணூர் விரைவு சாலையில் அமைந்துள்ள ஜீவ வார்த்தை விடுதலை சபை, முத்துகிருஷ்ணசாமி மடம் ஆகிய இரண்டும் அகற்றப்பட வேண்டியதுள்ளது. இவை தவிர காசிமேடு மீன்பிடித் துறைமுக பகுதியில் பாலம் அமைப்பதற்காக இடத்தைக் கையகப்படுத்தும் பணி நிலுவையில் உள்ளது. இவைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிரடியாக இறங்கி உள்ளது. முதற்கட்டமாக இத்திட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்ட மாநில நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் ஒருவரை மீண்டும் அயல் பணி அடிப்படையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பணியமர்த்தியுள்ளது. இவரது அனுபவம் இத்திட்டத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும், இதற்கு மாநில அரசும் முழுமையாக ஒத்துழைப்பு நல்கி வருகிறது எனவும் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/12/w600X390/chennai.jpg http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/12/நிறைவை-நோக்கி-துறைமுக-இணைப்புச்-சாலை-திட்டம்-சிக்கல்களை-தீர்க்க-அதிரடி-நடவடிக்கை-2788688.html
2788683 சென்னை சென்னை குடிநீர் வாரிய அலுவலகங்களில் 24 மணி நேர குறைதீர் பிரிவுகள்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தல் DIN DIN Thursday, October 12, 2017 04:37 AM +0530 வடகிழக்குப் பருவமழை தொடங்குவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள 15 பகுதி அலுவலகங்களிலும் 24 மணி நேர குறைதீர் பிரிவுகள் அமைக்கப்பட வேண்டும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தியுள்ளார்.
வடகிழக்குப் பருவமழை குறித்து எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை (அக்.11) நடைபெற்றது. அப்போது அமைச்சர் பேசியது: அனைத்து கழிவுநீரேற்று நிலையங்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், குடிநீர் விநியோகிக்கும் நிலையங்கள் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் உள்ள இயந்திரங்களும் மாற்று இயந்திரங்களும் இயங்கும் நிலையில் தயாராக இருக்கவேண்டும்.
ஜெனரேட்டர் இயக்கத் தேவையான அளவு டீசல் இருப்பில் வைக்கவேண்டும். பகுதி அலுவலர்களால் பாதாளசாக்கடை தொட்டிகள் கண்காணிக்கப்பட வேண்டும். உடைந்த மற்றும் காணாமல் போன ஆள் நுழைவாயில் மூடிகள் உடனடியாக மாற்றி அமைக்கப்பட வேண்டும். மழைநீர் தேங்கக்கூடிய பகுதிகளில் குடிநீர் மாசுபடுவது கண்டறியப்பட்டால், குழாய்களின் மூலம் குடிநீர் வழங்குவதற்குப் பதிலாக, குடிநீர் லாரிகள் மூலம் வழங்க தேவையான ஏற்பாடுகளை செய்யவேண்டும்.
அடிக்கடி கழிவுநீர் அடைப்பு ஏற்படும் இடங்கள் கண்டறியப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தலைமை அலுவலகம் உள்பட அனைத்து பகுதி அலுவலகங்களிலும் 24 மணி நேர குறைதீர் பிரிவுகள் அமைக்கப்பட வேண்டும்.
வெள்ள நீர் தங்குத் தடையின்றிக் கடலில் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், அடையாறு, பக்கிங்காம் கால்வாய், கொசஸ்தலை ஆற்றின் முகத்துவாரங்களில் தூர் வாரும் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
தொலைபேசி எண்கள்: அனைத்து அலுவலர்களிடமும் அனைத்துத் துறைகளின் தொலைபேசி எண்கள், செல்லிடப்பேசி எண்கள் பதிவு செய்யப்பட வேண்டும். கடந்த முறை பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் முன்கூட்டியே சிறப்புத் திட்டம் வகுக்கப்பட்டு, பாதிப்பு ஏற்படும் முன்னரே தக்க நடவடிக்கைகள் தற்பொழுதே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார். 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/12/குடிநீர்-வாரிய-அலுவலகங்களில்-24-மணி-நேர-குறைதீர்-பிரிவுகள்-அமைச்சர்-எஸ்பிவேலுமணி-அறிவுறுத்தல்-2788683.html
2788682 சென்னை சென்னை சென்னை வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் திடீர் சோதனை DIN DIN Thursday, October 12, 2017 04:36 AM +0530 சென்னையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். 
இந்தச் சோதனையில் ரொக்கப் பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்த விவரம்:- ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அலுவலர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகங்கள், இணை சார் பதிவாளர் அலுவலகங்கள் ஆகியவற்றில் புதன்கிழமை திடீர் சோதனை நடத்தினர். 
சென்னை சைதாப்பேட்டை உள்ள இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.1.18 லட்சம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/12/சென்னை-வட்டாரப்-போக்குவரத்து-அலுவலகங்களில்-திடீர்-சோதனை-2788682.html
2788681 சென்னை சென்னை சிட்லப்பாக்கம் ஏரியில் ஆகாயத் தாமரை அகற்றும் பணி DIN DIN Thursday, October 12, 2017 04:36 AM +0530 சென்னை குரோம்பேட்டையை அடுத்த சிட்லப்பாக்கம் பெரிய ஏரியில் ஆகாயத் தாமரைச் செடிகளை அப்புறப்படுத்தி தூர் வாரும் பணியை தென்சென்னை மக்களவை தொகுதி முன்னாள் உறுப்பினர் சிட்லப்பாக்கம் சி.ராஜேந்திரன் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
சிட்லப்பாக்கம் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள பெரிய ஏரி முழுக்க ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து பரவிக் கிடந்தன.அவற்றை அகற்றி ஏரியைத் தூர்வார வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து சிட்லப்பாக்கம் பேரூராட்சி நிர்வாகம் சிட்லப்பாக்கம் பெரிய ஏரியில் உள்ள ஆகாயத் தாமரை செடிகளை அகற்ற முடிவு செய்து பணியைத் தொடங்கியது.
சிட்லப்பாக்கம் ஏரி முழுக்க படர்ந்து வளர்ந்துள்ள ஆகாயத்தாமரைச் செடிகளை முழுமையாக அகற்றிய பின் தூர் வாரும் பணி நடைபெற உள்ளது.
சிட்லப்பாக்கம் ஏரிக்கரையோரமாக 30 வருடங்களுக்கு மேலாக மலைபோல் குவித்து வைக்கப்பட்டு இருக்கும் குப்பைகளை அகற்றும் பணியையும் 
பேரூராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
சிட்லப்பாக்கம் பேரூராட்சி முன்னாள் தலைவர் ஆர்.மோகன்,நிர்வாக அலுவலர் கமல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/12/w600X390/rajendran.JPG சிட்லப்பாக்கம் பெரிய ஏரியில் ஆகாயத் தாமரைகளை அப்புறப்படுத்தி, தூர் வாரும் பணியை புதன்கிழமை தொடங்கி வைத்த தென் சென்னை மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் சிட்லப்பாக்கம் சி.ராஜேந்திரன் . http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/12/சிட்லப்பாக்கம்-ஏரியில்-ஆகாயத்-தாமரை-அகற்றும்-பணி-2788681.html
2788680 சென்னை சென்னை அக்டோபட் 13 மின் தடை DIN DIN Thursday, October 12, 2017 02:58 AM +0530 பராமரிப்புப் பணிகள் காரணமாக செம்பியம், கொடுங்கையூர், டைடல் பார்க், கே.கே.நகர், பெரியார் நகர் ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை (அக்.13) மின்தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
மின்தடை ஏற்படும் இடங்கள்:
செம்பியம்: லட்சுமி அம்மன் கோயில் தெரு, ஜவஹர் சாலை, நசிர் ஹுசைன், ரமணா நகர் (ஒரு பகுதி), பெரம்பூர், எம்.எச். சாலை, எஸ்.எஸ்.வி. கோயில் (ஒரு பகுதி), எம்.பி.எம். தெரு (ஒரு பகுதி).
கொடுங்கையூர்: தெலுங்கு காலனி, சிட்கோ 1,2 மற்றும் 3 -ஆவது பிரதான சாலை, அபிராமி நிழற்சாலை 6,7 மற்றும் 8 -ஆவது தெரு.
டைடல் பார்க்: தரமணி (ஒரு பகுதி), கானகம், சீதாபதி நகர், பெரியார் நகர், எம்.ஜி.ஆர். நகர் (எஸ். ஆர்.பி. டூல்ஸ் மற்றும் கானகம்), வேளச்சேரி (ஒரு பகுதி), வி.எஸ்.ஐ தொழிற்பேட்டை பகுதி -1, நூறடி சாலை (ஒரு பகுதி), அண்ணா நகர், சி.எஸ்.ஐ.ஆர். சாலை, ஆர்.எம்.இஸட் மில்லினியம், எல்.பி.சாலை(ஒரு பகுதி), கலாஷேத்ரா சாலை.
கே.கே.நகர்: கே.கே.நகர், அண்ணா பிரதான சாலை 6,7,8,12 -ஆவது செக்டார், ஆர்.கே. சண்முகம் சாலை, பொன்னம்பலம் சாலை, முனுசாமி சாலை, அசோக் நகர் 3, 5, 6, 7, 9 -ஆவது நிழற்சாலை, காமராஜர் சாலை, செளந்தரபாண்டியன் சாலை, புதூர், எம்.ஜி.ஆர். நகர் (அன்னை சத்யா நகர், சூளைப்பள்ளம் மார்க்கெட், அண்ணா பிரதான சாலை), ஈக்காட்டுத்தாங்கல், கலைமகள் நகர், பாலாஜி நகர், விசாலாட்சி நகர், மேற்கு மாம்பலம், பிருந்தாவன் விரிவு, நக்கீரன் தெரு, கிண்டி (ஒரு பகுதி), ஜாபர்கான்பேட்டை (பாரதிதாசன் காலனி, பிள்ளையார் கோவில் தெரு, ஜவஹர்லால் தெரு, எஸ்.எம். பிளாக், திருநகர், வாசுதேவன் நகர், 11 -ஆவது நிழற்சாலை, கேஎஃப்சி, 12 -ஆவது நிழற்சாலை, கே.கே.நகர் மேற்கு மற்றும் கிழக்கு (மேற்கு வன்னியர் தெரு, மாரியம்மன் கோவில் தெரு), நெசப்பாக்கம் (ஒரு பகுதி), வடபழனி (ஒரு பகுதி) (53-ஆவது தெரு, 4,6,7 -ஆவது நிழற்சாலை, 47-ஆவது தெரு, மாந்தோப்பு காலனி, விநாயகர் தெரு, ராஜகோபாலன் தெரு, மூர்த்தி தெரு).
பெரியார் நகர்: ஆர்.எச். சாலை (ஒரு பகுதி), மீனாட்சி நகர், பெருந்தேவி அம்மாள் நிழற்சாலை, விவேக் நகர், பத்மா நகர், ஸ்ரீநகர் காலனி, யுனைட்டெட் காலனி, திருமலை நகர், வஜ்ரவேல் நகர், திருப்பதி தங்கவேல் நகர், சுபாஷ் நகர், சாமி நகர், 200 அடி சாலை.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/12/அக்டோபட்-13-மின்-தடை-2788680.html
2788030 சென்னை சென்னை மாணவர்களுக்கு மலையேற்ற பயிற்சி DIN DIN Wednesday, October 11, 2017 04:37 AM +0530 மண்ணிவாக்கம், நடேசன் வித்யாசாலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 80 மாணவர்கள் ஏலகிரியில் மலை ஏறும் பயிற்சியில் அண்மையில் பங்கேற்றனர்.
இதுகுறித்து பள்ளி முதல்வர் காயத்ரி ராமச்சந்திரன் கூறியது: 
படிப்பு, விளையாட்டு, தேசிய மாணவர் படை, சாரணர் இயக்கம், பேச்சு, கவிதை உள்ளிட்ட தனித்திறனுடன் சிறந்து விளங்கும் மாணவர்களை பள்ளி ஆண்டு விழாவில் பரிசுகள் வழங்கி ஊக்குவிப்பதுடன், கடந்த 10 ஆண்டுகளாக அவர்களை தில்லி, ஹைதராபாத், ஊட்டி, கொடைக்கானல், செஞ்சி, ஏற்காடு ஆகிய இடங்களுக்கு இலவசமாக அழைத்துச் செல்கிறோம். 
இந்த வருடம் தேர்வு செய்யப்பட்ட 80 மாணவ, மாணவிகளுடன், 7 ஆசிரியர்கள், மலையேறும் பயிற்சியாளர்கள் என 16 பேரை ஏலகிரி மலைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு அனைவருக்கும் மலை ஏறும் பயிற்சி, யோகா, தியானம், ஆங்கிலத்தில் சரளமாக உரையாடும் மென்திறன் பயிற்சி ஆகியவை வழங்கப்பட்டன.
முதன்முதலாக பள்ளியில் இந்த ஊக்குவிப்புப் பயணத் திட்டத்தைத் தொடங்கியபோது 12 மாணவர்கள் பங்கேற்றனர். ஆண்டுதோறும் இந்த எண்ணிக்கை அதிகரித்து தற்போது 80 ஆக உயர்ந்துள்ளது. பயணத்திற்கான முழுச் செலவையும் பள்ளி நிர்வாகம் ஏற்று மாணவர்களை ஊக்குவித்து வருகின்றது என்றார் அவர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/11/மாணவர்களுக்கு-மலையேற்ற-பயிற்சி-2788030.html
2788029 சென்னை சென்னை 'டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் இலக்கிய இன்பம்' DIN DIN Wednesday, October 11, 2017 04:36 AM +0530 சென்னை அரும்பாக்கம் டி.ஜி. வைஷ்ணவ கல்லூரியில் இலக்கிய இன்பம் என்ற இலக்கிய நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
கல்லூரி முதல்வர் தி.சந்தானம் பேசுகையில், மாணவர்களின் இலக்கிய ஆர்வத்தையும், மொழி அறிவையும் மேம்படுத்தும் வகையில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் கல்லூரிகளில் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்றார்.
பொருளியல் துறைத் தலைவர் பாலசுப்பிரமணியன் பேசுகையில், கம்பராமாயணமும், மகாபாரதமும் தமிழர்களின் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் நிலைநாட்டுகின்றன. இலக்கிய ஏட்டுக் கல்வியுடன், சான்றோர்களின் சொற்பொழிவுகளையும் கேட்டு கேள்வி ஞானத்தையும் மாணவர்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும் என்றார். 
கல்லூரிச் செயலர் அசோக்குமார் முந்த்ரா நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார். தமிழ்த்துறை தலைவர் ப.முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/11/w600X390/price1.JPG http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/11/டிஜிவைஷ்ணவ-கல்லூரியில்-இலக்கிய-இன்பம்-2788029.html
2788028 சென்னை சென்னை லாரி குடிநீர் பெற விரும்புவோர் கவனத்துக்கு... DIN DIN Wednesday, October 11, 2017 04:36 AM +0530 நெம்மேலி கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் வியாழக்கிழமை (அக்.12) முதல் 2 நாள்களுக்கு பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. 
இதனால் திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, அடையாறு, வேளச்சேரி, பெசன்ட் நகர், சோழிங்கநல்லூர், ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை பகுதிகளுக்கு வியாழக்கிழமை காலை 6 மணி முதல் வெள்ளிக்கிழமை (அக்.13) மாலை 6 மணி வரை குடிநீர் வழங்குவதில் தடங்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. 
இதனால், பொது மக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரைச் சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக் கொள்ள கீழ்க்காணும் குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களில் துணைப் பொறியாளர்களைத் தொடர்பு கொள்ளலாம்.
மயிலாப்பூர், மந்தைவெளி- 81449 30215 
அடையாறு, வேளச்சேரி, பெசன்ட் நகர், திருவான்மியூர்- 81449 30245 
கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி- 81449 30267 
ஈஞ்சம்பாக்கம், 
நீலாங்கரை, சோழிங்கநல்லூர்- 8144930252.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/11/லாரி-குடிநீர்-பெற-விரும்புவோர்-கவனத்துக்கு-2788028.html
2788027 சென்னை சென்னை 'பிறருக்கு வேலை கொடுப்பவராகத் திட்டமிடுங்கள்' DIN DIN Wednesday, October 11, 2017 04:35 AM +0530 வணிக மேலாண்மைக் கல்வி பயிலும் மாணவர்கள் வேலை வழங்குவோராகத் திகழத் திட்டமிடுங்கள் என்று பி.எஸ்.அப்துர்ரகுமான் கிரசென்ட் பல்கலைக்கழகத் துணை வேந்தர் சாஹூல் ஹமீது பின் அபு பக்கர் கூறினார்.
பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்துறை சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசியக் கருத்தரங்கில் அவர் பேசியது: தகுதி, திறமை மூலம் சர்வதேச அளவிலான வாய்ப்புகளை மாணவர்கள் பெற முடியும். அதற்கான இலக்கை நிர்ணயித்து தெளிவான சிந்தனையுடன் நோக்கி செயல் பட வேண்டும் என்றார்.
எக்ùஸல் அகாதெமி இயக்குநர் கல்யாண் சுந்தரம், மனநல மருத்துவரும், வாழ்க்கைக் கல்வி அமைப்பின் நிறுவனருமான டாக்டர் கண்ணன் கிரீஷ், துறைத் தலைவர் ஹைடர் யாஸ்மின், டீன் ஹாஜி ஷேக், கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.பண்பொளி, எல்.அரவிந்த் குமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/11/w600X390/confrence.JPG http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/11/பிறருக்கு-வேலை-கொடுப்பவராகத்-திட்டமிடுங்கள்-2788027.html
2788026 சென்னை சென்னை அக்.14-இல் குடிநீர் வாரிய குறைதீர் கூட்டம் DIN DIN Wednesday, October 11, 2017 04:34 AM +0530 சென்னை குடிநீர் வாரியம் சார்பில் 15 இடங்களில் அமைந்துள்ள பகுதி அலுவலகங்களில் குறைதீர் கூட்டம் வரும் சனிக்கிழமை (அக்.14) நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை குடிநீர் வாரியம் சார்பில், மாதந்தோறும் 2-ஆவது சனிக்கிழமைகளில் குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது. சென்னையில் 15 இடங்களில் அமைந்துள்ள பகுதி அலுவலகங்களில் சனிக்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை கூட்டம் நடை பெறும்.
இதில் பொதுமக்கள் பங்கேற்று, குடிநீர் மற்றும் கழிவுநீர் தொடர்பான பிரச்னைகள், நிலுவையில் உள்ள குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் தொடர்பாக புகார் தெரிவிக்கலாம். சந்தேகங்களையும் கேட்கலாம்.
கடந்த மாதம் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் 44 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 35 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 9 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/11/அக்14-இல்-குடிநீர்-வாரிய-குறைதீர்-கூட்டம்-2788026.html
2788025 சென்னை சென்னை பெரம்பூர் மின்வாரிய அலுவலகம் இடமாற்றம் DIN DIN Wednesday, October 11, 2017 04:33 AM +0530 பெரம்பூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் புதிய முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பேப்பர் மில்ஸ் சாலையில் இயங்கி வந்த பெரம்பூர் மின்வாரிய செயற்பொறியாளர் மற்றும் உதவி கணக்கு அலுவலர் அலுவலகங்கள், செம்பியம் எம்.இ.எஸ். சாலை, சிம்சன் அலுவலகம் எதிரில் உள்ள செம்பியம் துணை மின்நிலைய வளாகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. 
இந்த அலுவலகம் புதிய முகவரியில் புதன்கிழமை (அக்.11) முதல் இயங்கும்.
மேலும் விவரங்களுக்கு பெரம்பூர், இயக்குதல் மற்றும் பராமரிப்பு செயற்பொறியாளர் அலுவலக தொலைப்பேசி எண்ணையும் (044 - 2558 1324), உதவி கணக்கு அலுவலர் அலுவலக தொலைப்பேசி எண்ணிலும் (044 -2558 4171) தொடர்பு கொள்ளலாம்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/11/பெரம்பூர்-மின்வாரிய-அலுவலகம்-இடமாற்றம்-2788025.html
2788024 சென்னை சென்னை அக்டோபர் 11 மின் தடை DIN DIN Wednesday, October 11, 2017 04:33 AM +0530 பராமரிப்புப் பணிகள் காரணமாக திருவேற்காடு பகுதியில் புதன்கிழமை (அக்.11) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை ஏற்படும் இடங்கள்:
திருவேற்காடு: திருவேற்காடு கோ-ஆபரேடிவ் நகர், கோப்பரசநல்லூர், பிள்ளையார் மடந்தாங்கல், மூவேந்தர் நகர், அஷோக் நந்தவனம், திருவேற்காடு, ஐஸ்வர்யா கார்டன், பூந்தமல்லி பிரதான சாலை, சவீதா பல் மருத்துவமனை, கே.ஜி.பி.நகர், ராணி அண்ணா நகர், பெருமாளகரம், கேந்திரியவிஹார், வட நூம்பல், நூம்பல் சாலை, அபிராமி நகர், மஹாலட்சுமி நகர், கே.பி.எஸ்.நகர், சுந்தர சோழபுரம், வேலப்பன் சாவடி, மதிரவேடு, காவேரி நகர், பள்ளிக்குப்பம்.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/11/அக்டோபர்-11-மின்-தடை-2788024.html
2788023 சென்னை சென்னை அக்டோபர் 12 மின் தடை DIN DIN Wednesday, October 11, 2017 04:33 AM +0530 பராமரிப்புப் பணிகள் காரணமாக திருவெள்ளவாயல், செம்பியம், பட்டாபிராம் பகுதிகளில் வியாழக்கிழமை (அக்.12) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை ஏற்படும் இடங்கள்:
திருவெள்ளவாயல்: வயலூர், நெய்தவாயல், காட்டூர், திருவெள்ளவாயல், காட்டுப்பள்ளி, ஊரணம்பேடு, காணியம்பாக்கம், செங்கழுநீர்மேடு, ராமநாதபுரம், வெள்ளப்பாக்கம், கடப்பாக்கம், மெரட்டூர்.
செம்பியம்: எம்.எச்.சாலை, செயின்ட் மேரிஸ் சாலை, கொல்லன் தோட்டம், கே.கே.ஆர். நிழற்சாலை மற்றும் அடுக்ககம் , டாக்டர் கோர்ட் அடுக்ககம், பல்லவன் சாலை.
பட்டாபிராம்: சி.டி.எச். சாலை, ஸ்ரீதேவி நகர், அய்யப்பன் நகர், சேக்காடு, தண்டுரை, ராஜீவ்காந்தி நகர், அண்ணாநகர், சத்திரம், சாஸ்திரி நகர், பாபு நகர், சார்லஸ் நகர், காந்தி நகர், உழைப்பாளர் நகர், பி.டி.எம்.எஸ், முத்தாபுதுப்பேட்டை, மிட்னமல்லி பகுதி, வள்ளலார் நகர், கோபாலபுரம், வெங்கடாபுரம், காமராஜபுரம்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/11/அக்டோபர்-12-மின்-தடை-2788023.html
2788022 சென்னை சென்னை ஐடிஐ மாணவர்களுக்கு கத்திக்குத்து DIN DIN Wednesday, October 11, 2017 04:32 AM +0530 சென்னை அருகே திருநின்றவூர் ரயில் நிலையத்தில் தனியார் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் கத்தியால் குத்தப்பட்டது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். 
இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சென்னை அருகே உள்ள வேப்பம்பட்டைச் சேர்ந்தவர் ஆனந்தபிரபு (16). இவரது நண்பர் அம்பத்தூரைச் சேர்ந்த விஜயகுமார் (17). இருவரும் அம்பத்தூர் மங்களபுரத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்பயிற்சி மையத்தில் முதலாமாண்டு படித்து வருகின்றனர். 
இந்த நிலையில் இருவரும் திருநின்றவூர் ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நின்று கொண்டிருந்தனர். 
அப்போது, அங்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர், மாணவர்கள் இருவரையும் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியதாக தெரிகிறது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/11/ஐடிஐ-மாணவர்களுக்கு-கத்திக்குத்து-2788022.html
2788002 சென்னை சென்னை திருவொற்றியூரில் நிலவேம்பு கஷாயம் DIN DIN Wednesday, October 11, 2017 02:44 AM +0530 திருவொற்றியூரில் சுமார் 10 ஆயிரம் பேருக்கு நிலவேம்புக் கஷாயம், ஆவின் பால் உள்ளிட்டவற்றை முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் கே.குப்பன் வழங்கினார்.
திருவொற்றியூர் பூந்தோட்டப் பள்ளியில் நடைபயிற்சியில் ஈடுபட்டவர்களுக்கும் மழையால் பாதிக்கப்பட்டு தண்ணீர் தேங்கியுள்ள திருவொற்றியூர் மேற்கு பகுதியில் கார்கில் நகர், ராஜாஜி நகர், ராமசாமி நகர், சார்லஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து நிலவேம்பு கசாயமும், ஆவின் பாலும் வழங்கப்பட்டு வருவதாகவும், இதுவரை சுமார் 10 ஆயிரம் பேர் பயன் பெற்றுள்ளதாகவும், மீதமுள்ள பகுதிகளிலும் தொடர்ந்து கஷாயமும், பாலும் வழங்கப்படும் எனவும் குப்பன் தெரிவித்தார். அதிமுக நிர்வாகிகள் ஸ்டீபன்ராஜ், கண்ணன், யுவராஜ், மணி, சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/11/திருவொற்றியூரில்-நிலவேம்பு-கஷாயம்-2788002.html
2787443 சென்னை சென்னை காசநோய் இல்லாத சென்னை!: தன்னார்வ அமைப்புகளுடன் மாநகராட்சி ஒப்பந்தம் DIN DIN Tuesday, October 10, 2017 08:36 AM +0530 காசநோய் இல்லாத சென்னையை உருவாக்க தன்னார்வ அமைப்புகளுடன் மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கான நிகழ்ச்சி, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: 
இந்த ஒப்பந்தத்தின் மூலமாக, காச நோய் உள்ளவர்களை கண்டறிவது, அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது, இந்த நோய் அதிகம் தாக்கக்கூடிய குடிசைப் பகுதிகளுக்குச் சென்று தேவையான பரிசோதனைகளை மேற்கொள்வது, விழிப்புணர்வை ஏற்படுத்துவது என நான்கு வகையான பணிகள் மேற்கொள்ளப்படும்.
இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் தனியார் மருத்துவமனைகளில் செயல்படுத்த 'ரீச்' எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்துடன் பெருநகர சென்னை மாநகராட்சி ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலமாக, காசநோயைக் கண்டறியும் கருவிகள் வழங்கப்படும். நாளொன்றுக்கு 10 கருவிகளின் மூலம் 120 பேருக்கு பரிசோதனை செய்யலாம்.
இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், உலக சுகாதார நிறுவனத்தின் திட்ட துணைப் பொது இயக்குநர் சௌமியா சுவாமிநாதன் முன்னிலையில், காசநோயை கண்டறிவதற்கான கருவியை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்க, அதனை மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/10/w600X390/eps.JPG http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/10/காசநோய்-இல்லாத-சென்னை-தன்னார்வ-அமைப்புகளுடன்-மாநகராட்சி-ஒப்பந்தம்-2787443.html
2787442 சென்னை சென்னை சென்னைப் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு பரிசோதனை DIN DIN Tuesday, October 10, 2017 04:51 AM +0530 பெருநகர சென்னை மாநகராட்சி மருத்துவ சேவைகள் துறையின் சார்பில், சென்னை பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சல் குறித்த சிறப்பு பரிசோதனை திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சென்னை மாநகராட்சியின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள 262 நகர சுகாதார செவிலியர்கள் மற்றும் செவிலியர் கல்லூரி மற்றும் பள்ளியில் பயிற்சி பெறும் 589 மாணவிகளையும் கொண்டு, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 262 பள்ளிகளில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் தொடர்பாக தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதையொட்டி, ஒவ்வொரு வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கும் காய்ச்சல் தொடர்பான பரிசசோதனை திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது. 
75,683 பேருக்கு பரிசோதனை: மொத்தம் 75,683 பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பரிசோதனையில், 686 மாணவர்களுக்குக் காய்ச்சல் இருப்பதாகக் கண்டறியப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும் நிலவேம்பு கசாயம் அளிக்கப்பட்டது. மேலும், பள்ளிகளைச் சுற்றி கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு டெங்கு கொசுக்கள் (ஏடிஎஸ்) உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து அவற்றை அழிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/10/சென்னைப்-பள்ளி-மாணவர்களுக்கு-டெங்கு-பரிசோதனை-2787442.html
2786886 சென்னை சென்னை டெங்கு: வறட்சியால் வந்த வினை! DIN DIN Monday, October 9, 2017 04:26 AM +0530 தமிழகத்தையே பீதியடையச் செய்துள்ள டெங்கு காய்ச்சலுக்கு வறட்சியே மூலக் காரணமாக திகழ்ந்துள்ளது.
கடந்த ஆண்டு சுமார் 2,500 பேருக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்திய டெங்கு காய்ச்சல், இந்த ஆண்டு பல ஆயிரங்களைத் தாண்டியுள்ளது. மருத்துவத் துறையில் முன்னோடியாகவும், திறமை வாய்ந்த மருத்துவர்களையும் கொண்டுள்ள தமிழகம், டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தத் திணறி வருவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
டெங்கு: 1980 முதல் 2000 ஆண்டுவரை தில்லி, ஹரியானா, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சலப் பிரதேச மாநிலங்களில் அதிக அளவில் காணப்பட்ட டெங்கு, தற்போது நாட்டின் பெரும்பாலான மாநிலங்களுக்கு பரவியுள்ளது. 
பருவமழைக் காலங்களில் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்திய ஏடிஸ் கொசுக்கள் கடந்த சில ஆண்டுகளாக ஆண்டு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. 20 முதல் 25 நாள்களாக இருந்த அதன் ஆயுள்காலம் தற்போது 40 நாள்களாக அதிகரித்துள்ளது. ஒரு வீட்டில் ஏடிஸ் கொசு உற்பத்தி இருந்தால், அதன் மூலம் 500 மீட்டர் தூரத்துக்கு டெங்கு பரவும். 
தாவித் தாவிப் பரவும் டெங்கு: தமிழகத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டுக்கு பின்பு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நிகழாண்டில் பல மடங்கு அதிகரித்துள்ளது. முதலில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் பரவத் தொடங்கியது. பின் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு மாவட்டங்களுக்குப் பரவி தற்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதன் தாக்கம் அதிகரித்துள்ளது.
6 மாவட்டங்கள்: சுகாதாரத் துறையின் தகவலின்படி, சேலம், நாமக்கல், தஞ்சாவூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில்தான் தற்போது டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. தமிழகம் முழுவதும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஒரு நாளைக்கு சராசரியாக 700 பேர் சிகிச்சை பெறுகின்றனர். 100-இல் 10 பேருக்கு உறுதி செய்யப்படுகிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
காரணம் என்ன?: டெங்கு காய்ச்சல் நிகழாண்டில் அளவுக்கு அதிகமாகப் பரவுவதற்கு மிகவும் தமிழகத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வறட்சிதான் காரணம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் க.குழந்தைசாமி கூறியது:
தமிழகத்தில் வறட்சியால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட இடங்களில் மக்கள் தண்ணீரைச் சேமித்து வைக்கத் தொடங்கினர். பற்றாக்குறை இல்லாத இடங்களில் முதன்முறையாக வறட்சி ஏற்பட்டபோது, மக்கள் தண்ணீரைச் சேமித்தாலும் அதில் ஏடிஸ் கொசுக்கள் பரவாமல் பாதுகாக்கத் தெரியவில்லை. போதிய அளவு கிடைக்காததால் அதிக நாள்கள் தண்ணீரைச் சேமித்து வைத்தனர். அதில் ஏடிஸ் கொசுக்கள் இனப்பெருக்கள் செய்தன. இதுவே டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு மூலக் காரணம் என்றார்.
டிஸ்போஸபிள் கலாசாரம்: நமது பழக்கவழக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் டெங்கு பாதிப்பை அதிகப்படுத்தியுள்ளது. தற்போது களைந்துவிடும் (டிஸ்போஸபிள்) கலாசாரத்துக்கு சமூகம் மாறியுள்ளது. இதன் காரணமாக பேப்பர் கப்புகள், பிளாஸ்டிக்குள் போன்றவை ஏடிஸ் கொசுக்களுக்கு நிரந்தர இருப்பிடமாக மாறின.
வடகிழக்குப் பருவமழை: தமிழகத்துக்கு மழைப்பொழிவைக் கொடுக்கும் வடகிழக்கு பருவமழை அதிகம் பெய்தால் டெங்கு காய்ச்சல் அதிகமாகப் பரவ வாய்ப்பில்லை. ஆனால் இந்த ஆண்டு பற்றாக்குறை ஏற்பட்டால் அதன் தாக்கம் மீண்டும் அதிகரிக்கும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
அறிகுறிகளுக்கே சிகிச்சை: உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, டெங்கு காய்ச்சலுக்கென்று எந்தவிதத் தடுப்பு மருந்துகளோ பிரத்யேக சிகிச்சைகளோ கிடையாது. சர்வதேச நெறிமுறைகளைப் பின்பற்றி அறிகுறிகளை அடிப்படையாகக் கொண்டே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
தமிழகத்தில் 22 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. மாவட்ட மருத்துவமனைகளிலும் காய்ச்சல் சிகிச்சைப் பிரிவு தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் மூலம் டெங்கு ஒழிப்பு மற்றும் சிகிச்சைக் கண்காணிப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் வரை அனைத்திலும் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தாமதம் தவிர்க்கப்பட வேண்டும்: டெங்கு காய்ச்சலைப் பொருத்தவரை அதிக தாமதத்தால் பாதிப்பு அதிகரிக்கக் கூடும். அதன் காரணமாக உடலில் உள்ள நீர்ச்சத்து வெளியேறி, உள்உறுப்புகளில் ரத்தக்கசிவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு உயிரிழப்பு நேரக்கூடும். எனவே, காய்ச்சல் பாதித்த உடனேயே மருத்துவரை அணுக வேண்டியவது அவசியம்.

தடுப்புக்கு பாரம்பரிய மருத்துவம்!

டெங்கு காய்ச்சலில் இருந்து தற்காத்துக் கொள்ள பாரம்பரிய சித்த மருத்துவர்களின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும்.
நிலவேம்பு குடிநீர்: ஒவ்வொரு வயதுக்குத் தகுந்தாற்போல நிலவேம்புக் குடிநீரைக் கொதிக்க வைத்துக் கொடுக்க வேண்டும். தயாரித்த 3 மணி நேரத்துக்குள் பருக வேண்டும். இதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்
மலைவேம்பு இலைச்சாறு: ஒரு நாளைக்கு 10 மி.லி. வீதம் மலைவேம்பு இலைச்சாறை 2 அல்லது 3 வேளைகள் பருக வேண்டும். தொடர்ந்து 5 நாள்களுக்கு இதைப் பருகினால் அனைத்து வைரஸ் காய்ச்சல்களுக்கும் தீர்வாக அமையும்.
பப்பாளி இலைச்சாறு: டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவருக்கு பப்பாளி இலைச்சாறை 10 மி.லி. வீதம் ஒரு நாளைக்கு 4 முறை கொடுக்க வேண்டும். 5 நாள்கள் தொடர்ந்து பருக வேண்டும்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/09/டெங்கு-வறட்சியால்-வந்த-வினை-2786886.html
2786885 சென்னை சென்னை தீபாவளி பண்டிகை: கூட்டத்தைக் கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் DIN DIN Monday, October 9, 2017 04:22 AM +0530 சென்னை தியாகராயநகரில் தீபாவளி பண்டிகைக்காக பொருள்கள் வாங்க வரும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராக்களை சென்னைப் பெருநகர் காவல் ஆணையர் அ.கா.விசுவநாதன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 18 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்பு வகைகள் உள்ளிட்ட பொருள்களை வாங்க தியாகராய நகர் உஸ்மான் சாலை, ரங்கநாதன் தெரு, உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் பொதுமக்கள் நெரிசலில் சிக்காமலும், திருடர்களைக் கண்காணித்து திருட்டு சம்பவங்களைத் தடுக்கும் வகையிலும் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் காவல்துறையில் சார்பில் செய்யப்பட்டுள்ளன.
மாம்பலம் பேருந்து நிலையம், வடக்கு மற்றும் தெற்கு உஸ்மான் சாலை, ரங்கநாதன் தெரு, பனகல் பார்க், வாணி மகால் வரை புதிதாக சுமார் 150 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர் கண்காணிப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சாலையோரப் பகுதிகளைக் கண்காணிக்க கடை உரிமையாளர்கள் மூலமாக 250 கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 3 இடங்களில் தாற்காலிக காவல் உதவி மையங்களும், 5 இடங்களில் காவல் கோபுரங்களும் அமைக்கப்பட்டு தொலைநோக்கி மூலமாக காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படுவதோடு, சாதாரண உடை அணிந்த ஆண்,பெண் காவலர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 
இவை தவிர பழைய குற்றவாளிகளை தொழில்நுட்ப உதவியுடன் முகத்தைக் கொண்டு எளிதில் அடையாளம் காணும் வகையில் (ஊஹஸ்ரீங் ஈங்ற்ங்ஸ்ரீற்ர்ழ் பங்ஸ்ரீட்ய்ர்ப்ர்ஞ்ஹ்) கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. தியாகராய நகர் துணை ஆணையர் தலைமையில், 2 உதவி ஆணையர்கள், 6 ஆய்வாளர்கள், 18 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 200 காவலர்கள், 100 க்கும் மேற்பட்ட ஊர்க்காவல்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் காவல் துறையினரை தொடர்பு கொள்ள 94981 62626 என்ற கைப்பேசி எண் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/9/w600X390/police.jpg தியாகராயநகரில் புதிதாக நிறுவப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை தொடங்கி வைத்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அ.கா.விசுவநாதன். http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/09/தீபாவளி-பண்டிகை-கூட்டத்தைக்-கண்காணிக்க-கண்காணிப்பு-கேமராக்கள்-2786885.html
2786881 சென்னை சென்னை தாம்பரத்தில் ரூ.240 கோடியில் குடிநீர் மேம்பாட்டுத் திட்டம் குறித்து ஆலோசனை DIN DIN Monday, October 9, 2017 04:19 AM +0530 தாம்பரம் நகராட்சிப் பகுதியில் ரூ.240 கோடியில் நிறைவேற்றப்படவிருக்கும் குடிநீர் மேம்பாட்டுத் திட்டம் குறித்து பொதுமக்கள் கருத்து,ஆலோசனை கேட்கும் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
தாம்பரம் நகராட்சி சார்பில் நடைபெற்ற கூட்டத்திற்கு பொறியாளர் பி.வி.ரவிச்சந்திரன் தலைமை வகித்து பேசியது: 
தாம்பரத்தில் பெருகி வரும் மக்கள் தொகை, குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு நகர்ப்புற கட்டமைப்பு நிதி ஆதாரக் கழகம் மூலம் நியமனம் செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு குடிநீர் முதலீட்டுக் கழகம் மூலம் ரூ240 கோடியில் குடிநீர் மேம்பாட்டுத் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.
தற்போது தாம்பரம் நகராட்சிக்கு 44 கிமீ தூரத்தில் உள்ள பாலாற்றுப் படுகையில் உள்ள நீராதாரக் கிணறுகள் மூலம் தினமும் பெறப்படும் சுமார் 99 லட்சம் லிட்டர் குடிநீர், 4 முதல் 6 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது.
தனிநபருக்கு தற்போது சராசரியாக 5 நாட்களுக்கு வழங்கப்பட்டு வரும் 72 லிட்டர் குடிநீர் எதிர்காலத்தில் குறைய வாய்ப்புள்ளது. இந்த குறையைப் போக்கி தினமும் குடிநீர் கிடைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. 
நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதி முழுவதும் ஏற்கெனவே சுமார் 187 கி.மீ தூரம் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் பகிர்மான குழாய்களின் நீர் அழுத்த தாங்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளது. 
அனைத்து பழைய குழாய்களையும் அகற்றிவிட்டு, தரம் மிகுந்த டி.ஐ. குழாய்களை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் குடிநீரை சேமிக்கும் திறனை அதிகரிக்கும் வகையில், அதிக கொள்ளளவு கொண்ட புதிய தரைமட்ட, மேல்நீர் தேக்கத் தொட்டிகள் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
கூட்டத்தில் பல்வேறு நலச்சங்கங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/09/தாம்பரத்தில்-ரூ240-கோடியில்-குடிநீர்-மேம்பாட்டுத்-திட்டம்-குறித்து-ஆலோசனை-2786881.html
2786878 சென்னை சென்னை பல்லாவரத்தில் பாதாளச் சாக்கடை திட்டப்பணி ஆய்வு DIN DIN Monday, October 9, 2017 04:17 AM +0530 பல்லாவரத்தில் விடுபட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பாதாளச்சாக்கடைத் திட்டக் கட்டுமானப்பணிகளை பல்லாவரம் எம்.எல்.ஏ.இ.கருணாநிதி சனிக்கிழமை பார்வையிட்டார்.
சென்னையை அடுத்த பல்லாவரத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன் செயல்பட தொடங்கிய பாதாளச் சாக்கடைத் திட்டம், பல்வேறு காரணங்களினால் சில பகுதிகளில் செயல்படுத்த முடியவில்லை.
போதிய நிதி ஒதுக்கப்படாமல், விடுபட்ட பகுதிகளில் திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ. இ.கருணாநிதி தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு பல்லாவரத்தில் விடுபட்ட பகுதிகளில் ரூ. 24 கோடி செலவில் பாதாளச் சாக்கடைத் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
கீழ்கட்டளை, நெமிலிச்சேரி, நியூ காலனி, செந்தில் நகர் , பெருமாள் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடைத் திட்டப்பணிகளில் தற்போது 20 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன.
வரும் மார்ச் இறுதிக்குள் பாதாளச் சாக்கடைத் திட்ட அனைத்து பணிகளும் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, நடைபெற்று வருவதாக எம்.எல்.ஏ.இ.கருணாநிதி 
செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/09/பல்லாவரத்தில்-பாதாளச்-சாக்கடை-திட்டப்பணி-ஆய்வு-2786878.html
2786877 சென்னை சென்னை தொழில்நுட்ப அறிவை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் DIN DIN Monday, October 9, 2017 04:17 AM +0530 நாளுக்கு நாள் மாறி வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப மாணவர்கள் தங்களது தொழில்நுட்ப அறிவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மலேசிய அரசின் தலைமைச் செயலர் அலி அம்சா வலியுறுத்தினார்.
வண்டலூர் பி.எஸ். அப்துர்ரகுமான் கிரசென்ட் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் 1105 பேருக்கு பட்டங்கள் வழங்கி சனிக்கிழமை அவர் பேசியது:
சர்வதேச அளவில் கணினி, கைபேசி, வலைதளம், தகவல் தொழில்நுட்பம் மூலம் ஏற்பட்டுள்ள வியக்கத்தக்க வளர்ச்சி, அனைத்துத் துறைகளிலும் கணிக்க இயலாத, கற்பனைக்கெட்டாத மாற்றங்களை உருவாக்கி வருகின்றது.
உலக அளவிலான தொழில்நுட்ப வளர்ச்சியை முன்னேற்றத்திற்கேற்ப மேம்படுத்திக் கொள்ளவில்லை என்றால் வீழ்ச்சியை எதிர்கொள்ள நேரிடும் என்பதற்கு நோக்கியா கைபேசி நிறுவனம் உதாரணம். வியக்கத்தக்க வளர்ச்சியை எட்டிப்பிடித்த நோக்கியா மாறி வரும் தொழில்நுட்ப மாற்றங்கள், போட்டிகளுக்கு ஏற்ப தன்னை மேம்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டது. சர்வதேச சந்தையில் மகத்தான இடத்தைப் பெற்றிருந்த நோக்கியாவின் சரிவின் மூலம் நீங்கள் உங்களை நிலைமைக்கேற்ப மாற்றிக் கொள்ளவில்லை என்றால் வீழ்ச்சியை சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நவீன தொழில்நுட்ப வளர்ச்சி, மாற்றங்களை மலேசிய அரசும், தனியார் நிறுவனங்களும் முழுக்கப் பயன்படுத்தி, மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்கி வருகின்றன.
அரசு, தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் சூரிய மின்சக்தி உற்பத்தித் திட்ட முதலீடு 72 சதவீதம் அதிகரித்துள்ளது. மின் சக்தி உற்பத்தித் துறையில் தனியார் முதலீடு மூன்றில் இரண்டு பங்காக அதிகரித்துள்ளது.
சேவை நோக்குடன் செயல்படும் அரசும், லாப நோக்குடன் செயல்படும் தனியாரும் ஒருங்கிணைந்து மக்களுக்கு சிறப்பான சேவையை அளிக்க முடிகிறது.
மலேசியாவில் அனைத்து ஆவணங்களும் ஒற்றைச் சாளர முறையில் சரிபார்க்கப்பட்டு, ஒரு மணி நேரத்தில் புதிய பாஸ்போர்ட் பெற முடியும் என்றார் அலி அம்சா.
அலி அம்சாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. பல்கலைக்கழக நிர்வாகக் குழுத் தலைவர் அப்துர் காதிர் ஏ.ரகுமான் புகாரி, துணை வேந்தர் சாகுல் ஹமீது பின்அபுபக்கர், பதிவாளர் வி.முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/09/தொழில்நுட்ப-அறிவை-மாணவர்கள்-மேம்படுத்திக்-கொள்ள-வேண்டும்-2786877.html
2786876 சென்னை சென்னை வெள்ளி விழா கல்விச் சேவை: வேல்ஸ் பல்கலைக்கழகத்துக்கு பாராட்டு DIN DIN Monday, October 9, 2017 04:16 AM +0530 கல்விச் சேவையாற்றி வரும் வேல்ஸ் கல்விக் குழுமத்தின் பணி மென்மேலும் தொடர வேண்டும் என்று அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி.ரெட்டி கூறினார்.
சென்னை பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கே.கணேஷின் 50 ஆம் பிறந்தநாள் பொன்விழா, வேல்ஸ் கல்விக்குழும வெள்ளி விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி.ரெட்டி, பல்கலைக்கழக வெள்ளிவிழா மலரை வெளியிட்டு மேலும் பேசியது: கடந்த 25 ஆண்டுகளில் ஆண்டுக்கு ஒரு கல்வி நிறுவனத்தைத் தொடங்கி, ஆரம்பப் பள்ளி முதல் பொறியியல், மருத்துவக் கல்லூரிகள் வரை 25 கல்வி நிறுவனங்களைத் தொடங்கி கல்வி சேவையாற்றி வரும் ஐசரி கே.கணேஷ், ஆயிரக்கணக்கான இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டும் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்து கொண்டு இருக்கிறார்.
அவர்,25 வயதில் முதன்முதலாக மருத்துவத்துறை சார்ந்த மருந்தாளுநர் கல்லூரி தொடங்கியவர் என்பதைக் கேள்விப்பட்டதும் வியப்படைந்தேன். மிகுந்த தன்னம்பிக்கையும், துணிவும் கொண்டவராக பல்வேறு கல்வி நிறுவனங்கள் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி வழங்கும் பொறுப்பை மிக சிறப்பாக மேற்கொண்டு வருகிறார் என்றார் அவர்.
விழாவில் வெள்ளி விழா தொடர்பாக வேல்ஸ் பல்கலைக்கழகக் கல்வி நிறுவனங்களில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக முன்னாள் பொருளாளர் ஆற்காடு வீராசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொது செயலாளர் வைகோ, தமாக தலைவர் ஜி.கே.வாசன், பாரத் பல்கலைக்கழகத் தலைவர் ஜெகத்ரட்சகன், தொழிலதிபர்கள் வி.ஜி.சந்தோஷம், நல்லி குப்புசாமி, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் மன்னர் ஜவஹர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/09/வெள்ளி-விழா-கல்விச்-சேவை-வேல்ஸ்-பல்கலைக்கழகத்துக்கு-பாராட்டு-2786876.html
2786875 சென்னை சென்னை ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளிக் கொண்டாட்டம் DIN DIN Monday, October 9, 2017 04:16 AM +0530 உதவும் உள்ளங்கள் தொண்டு நிறுவனம் சார்பில் 20-ஆம் ஆண்டு ஆனந்த தீபாவளி கொண்டாட்டம் தியாகராய நகரில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. 
உதவும் உள்ளங்கள் தொண்டு நிறுவனம் ஆண்டுதோறும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஆனந்த தீபாவளிக் கொண்டாட்டத்தை நடத்தி வருகிறது. இந்தாண்டு 20 ஆதரவற்ற இல்லங்களைச் சேர்ந்த சுமார் 1500 குழந்தைகளோடு தீபாவளி பண்டிகையை உதவும் உள்ளங்கள் அமைப்பு கொண்டாடியது. 
சென்னை தியாகராய நகரில் உள்ள கிருஷ்ணசாமி திருமண மண்டபத்தில் நடந்த விழாவில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விருந்துடன், பட்டாசுகளை வெடித்து குழந்தைகள், மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். பல்வேறு தன்னார்வத் தொண்டு இல்லங்களைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி குழந்தைகளுடன் உதவும் உள்ளங்கள் அமைப்பின் நிறுவனர் சங்கர் மகாதேவன் தீபாவளியை கொண்டாடினார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/09/ஆதரவற்ற-குழந்தைகளுடன்-தீபாவளிக்-கொண்டாட்டம்-2786875.html
2786874 சென்னை சென்னை சென்னையில் காய்ச்சல் காரணமாக 2000 பேர் மருத்துவமனைகளில் அனுமதி DIN DIN Monday, October 9, 2017 04:16 AM +0530 டெங்கு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சுமார் 2000 பேர் சென்னை மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் டெங்கு பாதிப்பும் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.
சென்னையில் மட்டும் கடந்த ஒரு வாரத்தில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 2000 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிசிக்சை பெற்று வருகின்றனர்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற தினமும் 250-க்கும் மேற்பட்டவர்கள் வருகிறார்கள். இதில் 180 பேர் உள்நோயாளியாக இருந்து சிகிச்சை பெறுகிறார்கள். 27 பேர் டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டில் சிகிச்சை பெறுகின்றனர்.
எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு தினசரி 175 குழந்தைகள் முதல் 250 குழந்தைகள் வரை காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகிறார்கள். 20 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகின்றனர். காய்ச்சல் என்று வருவோரில் 5 பேருக்கு டெங்கு இருப்பது உறுதியாகிறது.
ஸ்டான்லி மருத்துவமனையில் காய்ச்சலுக்கு 250 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இதில் 29 பேர் டெங்கு காய்ச்சல்காரர்கள். காய்ச்சலுக்காக பெரியவர்களுக்கு 8, குழந்தைகளுக்கு 4 வார்டுகள் உள்ளன. இவற்றில் நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் புறநோயாளியாக வரும் 200 பேரில் 5 பேருக்கு டெங்கு இருப்பது உறுதியாகிறது. ராயப்பேட்டை மருத்துவமனைக்கு தினமும் 150 பேரும் குரோம்பேட்டை மருத்துவமனைக்கு 50 பேரும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 10 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகிறார்கள். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கு தினமும் ஏராளமானோர் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தெருக்களில் உள்ள "கிளினிக்'குகளிலும் காய்ச்சலுக்கு ஏராளமானோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். 3 நாட்கள் ஆகியும் காய்ச்சல் குணமாகவில்லை என்றால் தனியார் "லேப்'களில் ரத்தப் பரிசோதனை செய்து பெரிய மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெறுகின்றனர். பூந்தமல்லி, குமணன்சாவடி, திருவேற்காடு பகுதியிலும் காய்ச்சல் பாதிப்பு உள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/oct/09/சென்னையில்-காய்ச்சல்-காரணமாக-2000-பேர்-மருத்துவமனைகளில்-அனுமதி-2786874.html