Dinamani - திருவண்ணாமலை - http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2903780 சென்னை திருவண்ணாமலை அதிமுக நிர்வாகி இல்ல விழாவில் 100 பவுன் நகைகள் திருட்டு DIN DIN Friday, April 20, 2018 07:32 AM +0530 திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் அதிமுக நிர்வாகி இல்ல விழாவில் வியாழக்கிழமை இரவு 100 பவுன் நகைகள் திருட்டு போயின.
ஆரணி மேற்கு ஒன்றிய அதிமுக செயலர் அரையாளம் எம்.வேலு. இவரது மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஆரணி - இரும்பேடு நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.இதில், மணமகன் கார்த்திக்கின் உறவினர்களான அசோக்குமார் மனைவி சுதா, அவரது சகோதரியான அனுராதா ஆகியோர் தங்களது நகைகளை பெட்டியில் வைத்து மண்டபத்தில் உள்ள அறையில் வைத்துவிட்டு சாப்பிடச் சென்றனர்.திரும்பி வந்து பார்த்த போது, அறை திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். 
மேலும், பெட்டியில் வைத்திருந்த சுமார் 100 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.தகவலறிந்த ஆரணி கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் 
சாலமன்ராஜா மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதில் தொப்பி அணிந்தபடி இளைஞர் ஒருவர் கேமராவை 
திருப்பி விடும் காட்சிகள் பதிவாகியிருந்தன. எனவே, தொப்பி அணிந்தபடி வந்த இளைஞர் யார்? 
என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/20/அதிமுக-நிர்வாகி-இல்ல-விழாவில்-100-பவுன்-நகைகள்-திருட்டு-2903780.html
2903573 சென்னை திருவண்ணாமலை தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு ஊர்வலம்கீழ்பென்னாத்தூரை அடுத்த கல்பூண்டி, கீரனூர், பன்னியூர், கார்ணாம்பூண்டி உள்ளிட்ட கிராமங்களில் தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு ஊர்வலம் புதன்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் இந்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்துக்கு கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய தனி அலுவலர் ரபியுல்லா தலைமை வகித்தார்.  வட்டார வளர்ச்சி அலுவலர் மணி எழிலன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) தமிழரசி சிற DIN DIN Friday, April 20, 2018 01:51 AM +0530 கீழ்பென்னாத்தூரை அடுத்த கல்பூண்டி, கீரனூர், பன்னியூர், கார்ணாம்பூண்டி உள்ளிட்ட கிராமங்களில் தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு ஊர்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் இந்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்துக்கு கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய தனி அலுவலர் ரபியுல்லா தலைமை வகித்தார். 
வட்டார வளர்ச்சி அலுவலர் மணி எழிலன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) தமிழரசி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடக்கி வைத்தார்.
இந்த ஊர்வலத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருள்செல்வம், குகனேஸ்வரன், திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயபால், ஊராட்சிச் செயலர் விஜயகாந்த் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், மகளிர் சுயஉதவிக் குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தின்போது, கிராமங்களில் தனிநபர் கழிப்பறைகளுக்கு உறிஞ்சு குழாய்கள் அமைக்க வேண்டும். 
அதிகாலையில் திறந்தவெளியில் மலம் கழிகக் கூடாது என்பன உள்பட பல்வேறு விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பிச் சென்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/20/தூய்மை-பாரத-இயக்க-விழிப்புணர்வு-ஊர்வலம்கீழ்பென்னாத்தூரை-அடுத்த-கல்பூண்டி-கீரனூர்-பன்னியூர்-கார்ணா-2903573.html
2903572 சென்னை திருவண்ணாமலை குடிநீர் தட்டுப்பாடு: கிராம மக்கள் சாலை மறியல் DIN DIN Friday, April 20, 2018 01:49 AM +0530 செங்கம் அருகே குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக் கோரி, கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செங்கத்தை அடுத்த கோலாந்தாங்கல் நாராயணபுரம் பகுதியில் கடந்த சில வாரங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறதாம். எனவே, குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக் கோரி, அந்தப் பகுதி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் காலிக் குடங்களுடன் செங்கம் - போளூர் சாலையில் குயிலம் கூட்டுச்சாலைப் பகுதியில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் சாலையின் இருபுறமும் சுமார் ஒரு கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டன. பேருந்து, கார் உள்ளிட்ட வாகனங்களில் காத்திருந்த பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனிடையே, தகவலறிந்து அங்கு வந்த செங்கம் காவல் நிலைய ஆய்வாளர் பூபதி, சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இது தொடர்பாக தகவல் தெரிவித்து, ஒருவார காலத்துக்குள் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார். 
இதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் அந்தப் பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து 
பாதிக்கப்பட்டது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/20/குடிநீர்-தட்டுப்பாடு-கிராம-மக்கள்-சாலை-மறியல்-2903572.html
2903571 சென்னை திருவண்ணாமலை கூடலூர் ஏரியில் மண் அள்ள  39 விவசாயிகளுக்கு அனுமதி DIN DIN Friday, April 20, 2018 01:49 AM +0530 போளூர் வட்டம், கூடலூர் ஊராட்சியைச் சேர்ந்த 39 விவசாயிகளுக்கு அந்தப் பகுதியில் உள்ள பெரிய ஏரியில் வண்டல் மண் அள்ள வட்டாட்சியர் தியாகராஜன் வியாழக்கிழமை அனுமதிச் சான்று வழங்கினார்.
கூடலூர் ஊராட்சியில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் தற்போது தண்ணீர் இல்லை. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் வருவாய்த் துறையினரிடம் ஏரியில் இருந்து விவசாயப் பயன்பாட்டுக்காக வண்டல் மண் அள்ளக்கொள்ள அனுமதி கோரினர்.
அதனடிப்படையில், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவின்பேரில், வட்டாட்சியர் தியாகராஜன் கூடலூர் ஊராட்சியைச் சேர்ந்த 39 விவசாயிகளுக்கு அந்த ஊராட்சியிலுள்ள பெரிய ஏரியில் வண்டல் மண் அள்ளிக்கொள்ள அனுமதிச் சான்றுகளை வழங்கினார்.
இதில், மண்டல துணை வட்டாட்சியர் மஞ்சுளா, வருவாய் ஆய்வாளர் தெய்வநாயகி, கிராம நிர்வாக அலுவலர் சுகந்தி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஏழுமலை மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/20/கூடலூர்-ஏரியில்-மண்-அள்ள--39-விவசாயிகளுக்கு-அனுமதி-2903571.html
2903541 சென்னை திருவண்ணாமலை சித்திரை பௌர்ணமி திருவிழா: திருவண்ணாமலையில் கற்பூரம் ஏற்ற, மலையேறத் தடை DIN DIN Friday, April 20, 2018 01:39 AM +0530 திருவண்ணாமலையில் வரும் 29-ஆம் தேதி நடைபெறும் சித்திரை பௌர்ணமி திருவிழாவின்போது கற்பூரம் ஏற்றவும், மலையேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் சித்திரை பெளர்ணமி திருவிழாவையொட்டி செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி, மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் க.லோகநாயகி, கோயில் இணை ஆணையர் ஞானசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், சித்திரை பெளர்ணமி திருவிழாவுக்காக கோயில் நிர்வாகம், நகராட்சி நிர்வாகம், மின்வாரியம் உள்பட பல்வேறு துறைகள் சார்பில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு செய்தார். இதையடுத்து, செய்தியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி அளித்த பேட்டி:
சித்திரை பெளர்ணமி திருவிழாவுக்கு பல பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. கோயில், கிரிவலப் பாதையில் 12 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்படுகின்றன. கோயிலுக்குள் முதியோர்களை அழைத்துச் செல்ல 3 பேட்டரி கார்களும், மாற்றுத் திறனாளிகளை அழைத்துச் செல்ல சக்கர நாற்காலிகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. பொது தரிசனப் பாதையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பாதுகாப்புப் பணியில் 2,500 காவலர்கள் ஈடுபடுகின்றனர்.
பக்தர்களின் பொருள்களை இலவசமாக வைத்துவிட்டுச் செல்ல 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அரசுப் போக்குவத்துக் கழகம் சார்பில், 2,800 சிறப்புப் பேருந்துகள் 7,800 நடைகள் இயக்கப்படும். 
கிரிவலம் வரும் பக்தர்கள் கற்பூரம் ஏற்றவும், மலை ஏறவும் தடை செய்யப்படுகிறது.
வனத் துறை மூலம் மலையில் உள்ள விலங்குகளுக்கு அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் தேவையான தண்ணீர் நிரப்பப்படும். தமிழகத்தின் பல்வேறு மார்கங்களில் இருந்து 14 ரயில்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகின்றன. வேளாண் துறை மூலம் திருவண்ணாமலைக்கு வரும் 9 அணுகு சாலைகளில் விவசாய நிலங்களில் பம்பு செட்டுகள் உள்ள 42 இடங்களில் இலவசமாக குளிக்கும் வசதிகள் ஏற்பாடு செய்யப்படும்.
கிரிவலப் பாதையில் உள்ள கழிப்பறைகளை பக்தர்கள் இலவசமாகப் பயன்படுத்தலாம். மீறி கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அன்னதானம் வழங்க 7 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட இடங்களில் மட்டும் தான் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கலாம். தற்காலிகப் பேருந்து நிலையங்களில் அன்னதானம் வழங்க விரும்புவோருக்கு போதிய இடம் அளிக்கப்படும் என்றார்.
கூட்டத்தில், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சு.ஜானகி, கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி, நகராட்சி ஆணையர் செ.பாரிஜாதம், உதவி காவல் கண்காணிப்பாளர் ரவாளி பிரியா, மகளிர் திட்ட அலுவலர் ஜெயசுதா உள்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


கிரிவலம் வர உகந்த நேரம்
திருவண்ணாமலையில் வரும் 29-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு பெளர்ணமி தொடங்கி, 30-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 6.54 மணிக்கு முடிவடைகிறது. சித்திரை பெளர்ணமியையொட்டி இந்த நேரத்தில் பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் வரலாம் என்று ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/20/சித்திரை-பௌர்ணமி-திருவிழா-திருவண்ணாமலையில்-கற்பூரம்-ஏற்ற-மலையேறத்-தடை-2903541.html
2903543 சென்னை திருவண்ணாமலை சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கூழ்வார்த்தல் திருவிழா DIN DIN Friday, April 20, 2018 01:38 AM +0530 வேட்டவலம், பெரியார் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீசமயபுரம் மாரியம்மன் கோயிலில் கூழ்வார்த்தல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
இதையொட்டி, திங்கள்கிழமை காப்பு அணிவித்தல் விழாவும், இரவு 7 மணிக்கு அம்மன் ஊஞ்சல் உத்ஸமும் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு சிங்காரக் குளக்கரையில் இருந்து அம்மன் கரகம், சக்தி கிரகம், பூங்கரகம் ஆகியவை மாட வீதியுலா புறப்பட்டன.
நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற கரகங்கள், கோயிலை வந்தடைந்தன. இதையடுத்து, கூழ்வார்த்தல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கேரள செண்டை மேளம் முழங்க ஸ்ரீசமயபுரம் மாரியம்மன் வீதியுலா வந்தார். 
ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி ஆறுமுகம் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/20/சமயபுரம்-மாரியம்மன்-கோயிலில்-கூழ்வார்த்தல்-திருவிழா-2903543.html
2903544 சென்னை திருவண்ணாமலை மனைவியைத் தாக்கிய கணவர் கைது DIN DIN Friday, April 20, 2018 01:38 AM +0530 வந்தவாசியில் மனைவியைத் தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார்.
வந்தவாசி கொசத் தெருவைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் மணிவண்ணன் (50). இவரது மனைவி தேவி (45). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மணிவண்ணன் சரிவர வேலைக்குச் செல்ல மாட்டாராம். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இதேபோல, கடந்த செவ்வாய்க்கிழமை மீண்டும் இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மணிவண்ணன் தேவியை தாக்கினாராம். இதில் காயமடைந்த தேவி, வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 
இதுகுறித்து தேவி அளித்த புகாரின்பேரில், வழக்குப் பதிந்த வந்தவாசி தெற்கு போலீஸார் மணிவண்ணனை புதன்கிழமை கைது செய்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/20/மனைவியைத்-தாக்கிய-கணவர்-கைது-2903544.html
2903546 சென்னை திருவண்ணாமலை மனுநீதி நாள் முகாம்:  419 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் DIN DIN Friday, April 20, 2018 01:38 AM +0530 சேத்துப்பட்டு, வெம்பாக்கம் பகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 419 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
சேத்துப்பட்டை அடுத்த தும்பூர் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமில் திருவண்ணாமலை மாவட்ட உதவி ஆட்சியர் (கலால்) தண்டபாணி தலைமை வகித்து, 158 பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். இதில், சேத்துப்பட்டு வட்டாட்சியர்அரிதாஸ், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் தமிழ்மணி, மண்டல வட்டாட்சியர் ராம்பிரபு, வருவாய் ஆய்வாளர் பிரியா, கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமார், வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
வெம்பாக்கம்: வெம்பாக்கம் வட்டத்தைச் சேர்ந்த இருமரம், மூஞ்சூர்பட்டு, சட்டுவந்தாங்கல், சிறுவஞ்சிப்பட்டு கிராமங்களுக்கான மனுநீதி நாள் முகாம் இருமரம் கிராமத்தில் நடைபெற்றது. முகாமுக்கு மாவட்டப் பிற்படுத்தபட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலர் பானுமதி தலைமை வகித்தார்.
இதில், சிறப்பு விருந்தினராக செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன் கலந்து கொண்டு, பட்டா மாற்றம், வாரிசுச் சான்று, வீட்டுமனைப்பட்டா, புதிய குடும்ப அட்டை, உழவர் பாதுகாப்புத் திட்ட அட்டை, நத்தம் சிட்டா நகல், சிறு, குறு விவசாயிச் சான்று மற்றும் வேளாண்மை, தோட்டக்கலைத் துறை மூலம் 261 பயனாளிகளுக்கு ரூ.4.89 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் எம்.மகேந்திரன், டி.பி.துரை, எஸ்.திருமூலன், ரமேஷ், செபாஸ்டியன் துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/20/மனுநீதி-நாள்-முகாம்--419-பயனாளிகளுக்கு-நலத்-திட்ட-உதவிகள்-2903546.html
2903548 சென்னை திருவண்ணாமலை ஆதிதிராவிடர் நல அலுவலர் பொறுப்பேற்பு DIN DIN Friday, April 20, 2018 01:38 AM +0530 திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலராக க.வ.பரிமளா பொறுப்பேற்றார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலராக இருந்த தே.ராஜஸ்ரீ, சென்னை ஆதிதிராவிடர் நல இயக்குநரின் நேர்முக உதவியாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலராகப் பணிபுரிந்து வந்த க.வ.பரிமளா, திருவண்ணாமலை மாவட்டத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டு புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/20/ஆதிதிராவிடர்-நல-அலுவலர்-பொறுப்பேற்பு-2903548.html
2903559 சென்னை திருவண்ணாமலை மானியத்துடன் நெல், உளுந்து விதைகளை விவசாயிகள் பெறலாம் DIN DIN Friday, April 20, 2018 01:37 AM +0530 மானியத்துடன் நெல், உளுந்து விதைகளைப் பெற விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து அனக்காவூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சித்திரைப் பட்டத்துக்குத் தேவையான நெல் கோ.51, 
உளுந்து வெம்பன் 5, வெம்பன் 6 ஆகிய விதைகள் அனக்காவூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு உள்ளது.
மானியத்துடன் கிடைக்கக்கூடிய இந்த நெல், உளுந்து விதைகளைத் தேவைப்படும் விவசாயிகள் ஆதார் அட்டை நகலுடன் சென்று பெற்றுக் கொள்ளலாம் என ஏ.எம்.சாந்தி தெரிவித்துள்ளார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/20/மானியத்துடன்-நெல்-உளுந்து-விதைகளை-விவசாயிகள்-பெறலாம்-2903559.html
2903558 சென்னை திருவண்ணாமலை ரூ.2.23 லட்சம் கையாடல்: சுகாதாரத் திட்ட ஒருங்கிணைப்பாளர் மீது வழக்கு DIN DIN Friday, April 20, 2018 01:37 AM +0530 வந்தவாசி ஒன்றியப் பகுதியில் கழிப்பறை கட்ட ஒதுக்கிய நிதியில் ரூ.2.23 லட்சம் கையாடல் செய்ததாக சுகாதாரத் திட்ட ஒருங்கிணைப்பாளர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுகாதாரத் திட்ட ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்து வந்தவர் தனசேகர் (50). இவர், கடந்த 2015-ஆம் ஆண்டு பணியின்போது  தென்சேந்தமங்கலம் ஊராட்சியில் கழிப்பறை கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட ரூ.2.23 லட்சத்தை கையாடல் செய்தது கடந்தாண்டு நடந்த தணிக்கையின்போது தெரியவந்ததாம். இதுகுறித்து வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) குப்புசாமி அளித்த புகாரின்பேரில், வந்தவாசி தெற்கு போலீஸார் தனசேகர் மீது புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/20/ரூ223-லட்சம்-கையாடல்-சுகாதாரத்-திட்ட-ஒருங்கிணைப்பாளர்-மீது-வழக்கு-2903558.html
2903556 சென்னை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் சித்திரை வசந்த உத்ஸவ பந்தக்கால் நடும் விழா DIN DIN Friday, April 20, 2018 01:37 AM +0530 திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் சித்திரை வசந்த உத்ஸவத்துக்கான கொடியேற்று விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
சிவனின் அக்னி ஸ்தலமான திருவணணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை வசந்த உத்ஸவ விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டுக்கான உத்ஸவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. மாலை 4 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் துலா லக்கினத்தில் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள ஸ்ரீசம்பந்த விநாயகர் சன்னதி எதிரே பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது. விழாவில் கோயில் அதிகாரிகள், ஊழியர்கள், உபயதாரர்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து, வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 20) முதல் தொடர்ந்து 10 நாள்கள் சித்திரை வசந்த உத்ஸவம் நடைபெறுகிறது.
இந்த 10 நாள்களும் தினமும் காலை வேளைகளில் உத்ஸவர் பெரியநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு வேளைகளில் உத்ஸவர் வீதியுலாவும் நடைபெறுகின்றன.
மன்மத தகனம் நிகழ்ச்சி: 10 நாள் உத்ஸவத்தின் நிறைவு நாளான வரும் 29-ஆம் தேதி காலை அய்யங்குளத்தில் தீர்த்தவாரியும், இரவு ஸ்ரீகோபால விநாயகர் கோயிலில் மண்டகப்படி நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.
இதைத் தொடர்ந்து, இரவு 10 மணிக்கு கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள கொடிமரம் எதிரே மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இத்துடன் இந்தக் கோயிலின் 10 நாள் சித்திரை வசந்த உத்ஸவம் நிறைவு பெறுகிறது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/20/அருணாசலேஸ்வரர்-கோயிலில்-சித்திரை-வசந்த-உத்ஸவ-பந்தக்கால்-நடும்-விழா-2903556.html
2903555 சென்னை திருவண்ணாமலை காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தமிழக அரசு வெற்றி பெறும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி DIN DIN Friday, April 20, 2018 01:36 AM +0530 காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தமிழக அரசு வெற்றி பெறும் என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதிபடத் தெரிவித்தார்.
ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு வருவாய்க் கோட்டம் அமைத்ததற்காக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், ஆரணியில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் பொதுக்கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்துக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். 
இதில், சிறப்பு விருந்தினராக ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலரும், வருவாய்த் துறை அமைச்சருமான ஆர்.பி.உதய
குமார் கலந்து கொண்டு பேசியதாவது:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாஅறிவித்த திட்டங்களை தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய்க் கோட்டம், ஜமுனாமரத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம் என ஒரே நேரத்தில் 2 அரசு ஆணைகளை தமிழக அரசு பிறப்பித்தது. இதனால் ஆரணி மக்களின் 65 ஆண்டு கால கனவு நிறைவேறியுள்ளது.
காவிரிப் பிரச்னையில் அதிமுக அரசு பல சட்டப் போராட்டங்களை சந்தித்து கடந்த 2013-இல் தமிழகத்துக்கு 192 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்ற ஆணையை அரசிதழில் வெளியிடச் செய்தது. இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு ஒத்துழைக்காததால், 17 நாள்களுக்கும் மேலாக அதிமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தை முடக்கினர்.
இந்தப் பிரச்னைக்காக மத்திய அரசை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தமிழக அரசு தொடர்ந்துள்ளது. விரைவில் தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்கும். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தமிழக அரசு வெற்றி பெறுவது உறுதி.
அதிமுக அரசு கடந்த 2011 முதல் 2018-ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் 72 புதிய வட்டங்களையும், ஆரணியுடன் சேர்த்து 10 வருவாய்க் கோட்டங்களையும் அமைத்துள்ளது. மக்களைத் தேடி செயல்படும் அரசாக அதிமுக அரசு உள்ளது என்றார்.
"ஆரணி புதிய கல்வி மாவட்டமாக்கப்படும்': கூட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பேசியதாவது:
ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு வருவாய்க் கோட்டமும், ஜமுனாமரத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டமும் அமைத்ததற்காக தமிழக முதல்வர், துணை முதல்வர், வருவாய்த் துறை அமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தற்போது நடைபெற்று வரும் அதிமுக ஆட்சியில் ஆரணியில் ரூ.2.5 கோடி மதிப்பில் திருமண மண்டபம் கட்டப்பட உள்ளது. ஆரணி கமண்டலநாக நதியில் ரூ.16 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.
மேலும், ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய கல்வி மாவட்டம் அறிவிக்கவும், ஆரணி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தவும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன், செய்யாறு எம்எல்ஏ தூசி கே.
மோகன், கலசப்பாக்கம் எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம், திருவண்ணாமலை தெற்கு  மாவட்டச் செயலர் பெருமாள்நகர் ராஜன், மகளிரணி துணைச் செயலர் எல்.ஜெயசுதா, முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் க.சங்கர், மாநில கூட்டுறவு சங்கத் தலைவர் அமுதாஅருணாச்சலம், நகரச் செயலர் அசோக்குமார், நகர பேரவை நிர்வாகி பாரிபாபு, ஒன்றியச் செயலர்கள்  பி.ஆர்.ஜி.சேகர், இராகவன், செல்வராஜ், மாவட்ட துணைச் செயலர்கள் டி.கருணாகரன், ரமணிநீலமேகம், முன்னாள் மாவட்டக் கவுன்சிலர் ஜெ.சம்பத், முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் திருமால், பாசறை மாவட்டச் செயலர் ஜி.வி.கஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ ஜெமினிராமச்சந்திரன், எம்ஜிஆர் மன்ற நிர்வாகி அ.கோவிந்தராசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/20/காவிரி-மேலாண்மை-வாரியம்-அமைப்பதில்-தமிழக-அரசு-வெற்றி-பெறும்-அமைச்சர்-ஆர்பிஉதயகுமார்-உறுதி-2903555.html
2903552 சென்னை திருவண்ணாமலை மாநில கைப்பந்துப் போட்டி: திருவண்ணாமலை மாணவிகள் சிறப்பிடம் DIN DIN Friday, April 20, 2018 01:36 AM +0530 மாநில அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கைப்பந்துப் போட்டியில் திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரி மாணவிகள் முதலிடம் பிடித்தனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாநில அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கைப்பந்துப் போட்டி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில், பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரி முதுகலை கணிதவியல் துறை மாணவி வி.மகேஸ்வரி, இளங்கலை ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு மாணவி ஜெ.கிருத்திகா ஆகியோர் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக கைப்பந்து அணி மூலம் கலந்து கொண்டனர்.
இவர்கள் இருவரும் முதலிடம் பிடித்து தலா ரூ.10 ஆயிரம் பரிசு வென்றனர். வெற்றி பெற்ற மாணவிகளை கல்லூரித் தலைவர் எம்.என்.பழனி, செயலர் என்.குமார், பொருளாளர் கே.ராஜேந்திரகுமார், கல்விப்புல முதன்மையர் அழ.உடையப்பன், முதல்வர் கே.ஆனந்தராஜ், துணை முதல்வர் கே.அண்ணாமலை, உடற்கல்வி இயக்குநர் எம்.கோபி, ஆர்.மீரா மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை பாராட்டினர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/20/மாநில-கைப்பந்துப்-போட்டி-திருவண்ணாமலை-மாணவிகள்-சிறப்பிடம்-2903552.html
2903551 சென்னை திருவண்ணாமலை போட்டிகளில் வென்ற மாணவிகளுக்குப் பாராட்டு DIN DIN Friday, April 20, 2018 01:35 AM +0530 திருவண்ணாமலை மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வென்ற அருணை காலேஜ் ஆப் என்ஜினீயரிங் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், மாவட்ட அளவிலான தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்ற கவிதை, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடைபெற்றன.
இதில், திருவண்ணாமலை, அருணை காலேஜ் ஆப் என்ஜினீயரிங் கல்லூரி சார்பில் கலந்து கொண்ட முதலாம் ஆண்டு மாணவி எஸ்.தீபிகா, உணவுப் பாதுகாப்பில் நுகர்வோரின் பங்கு என்ற தலைப்பில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் இரண்டாமிடம் பிடித்தார்.
உணவுப் பாதுகாப்பில் இன்றைய இளம் சமுதாய நுகர்வோரின் பங்கு என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதலாம் ஆண்டு மாணவி பி.தரணி மூன்றாமிடம் பிடித்தார். நுகர்வோர்கள் உணவுப் பொருள்களை எப்படி பாதுகாக்க வேண்டும் என்ற தலைப்பிலான ஓவியப் போட்டியில் மூன்றாம் ஆண்டு மாணவர் சரண்குமார் முதலிடம் பிடித்தார்.
போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசு வழங்கினார். இந்நிலையில், கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளை கல்லூரி துணைத் தலைவர் எ.வ.குமரன், பதிவாளர் இரா.சத்தியசீலன், கல்லூரி முதல்வர் தண்டபாணி, முதலாம் ஆண்டு துறைத் தலைவர் ஆனந்தகுமார், இயந்திரவியல் துறைத் தலைவர் மணிகண்டன் ஆகியோர் பாராட்டிப் பரிசு வழங்கினர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/20/போட்டிகளில்-வென்ற-மாணவிகளுக்குப்-பாராட்டு-2903551.html
2903549 சென்னை திருவண்ணாமலை பைக் பெட்டியை உடைத்து ரூ.2 லட்சம் திருட்டு DIN DIN Friday, April 20, 2018 01:35 AM +0530 திருவண்ணாமலையில் பைக் பெட்டியை உடைத்து, அதிலிருந்த ரூ.2 லட்சத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலையை அடுத்த ஆடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முன்னாள் ஊராட்சித் தலைவர் ராமமூர்த்தி. இவர், வேங்கிக்கால், தென்றல் நகர் பகுதியில் உள்ள ஒரு வங்கியில் இருந்து ரூ.2 லட்சத்தை வியாழக்கிழமை காலை எடுத்தாராம்.
இந்தப் பணத்தை தனது பைக் பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு, இதே பகுதியில் உள்ள நகல் எடுக்கும் (ஜெராக்ஸ்) கடைக்குச் சென்றாராம். சிறிது நேரம் கழித்து வந்தபோது பைக்கின் பெட்டி உடைக்கப்பட்டு, அதிலிருந்த ரூ.2 லட்சம் திருடப்பட்டு இருந்ததாம். இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/20/பைக்-பெட்டியை-உடைத்து-ரூ2-லட்சம்-திருட்டு-2903549.html
2903272 சென்னை திருவண்ணாமலை ஸ்ரீசிங்காரவேல் முருகன் கோயிலில் கிருத்திகை வழிபாடு DIN DIN Thursday, April 19, 2018 09:36 AM +0530 வேட்டவலம் மலை மீது அமைந்துள்ள ஸ்ரீசிங்காரவேல் முருகன் கோயிலில் புதன்கிழமை சித்திரை மாத கிருத்திகை வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி, மூலவர் ஸ்ரீமுருகப்பெருமான், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட சுவாமிகளுக்கு பல்வேறு பூஜை பொருள்களைக் கொண்டு சிறப்பு 
அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
தொடர்ந்து, மகா தீபாராதனை நடைபெற்றது. வெண் பொங்கல், புளியோதரை, கடலை ஆகியவை சுவாமிக்கு படையலிட்டு பின்னர், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகமும், ஊர் பொதுமக்களும் செய்திருந்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/19/ஸ்ரீசிங்காரவேல்-முருகன்-கோயிலில்-கிருத்திகை-வழிபாடு-2903272.html
2903270 சென்னை திருவண்ணாமலை வந்தவாசியில் கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம் DIN DIN Thursday, April 19, 2018 09:36 AM +0530 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில், வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின்போது, கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் வழங்க வேண்டும். கிராம உதவியாளர்கள் அலுவலக உதவியாளர்களாக பதவி உயர்வு பெறுவதை 10 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் எம்.பிரபாகரன் தலைமை வகித்தார். வட்ட வழங்கல் அலுவலர் கனி, மாவட்டப் பொருளாளர் ஜி.காளியப்பன் ஆகியோர் கோரிக்கைளை வலியுறுத்திப் பேசினர்.
மாவட்டச் செயலர் எஸ்.பச்சையப்பன், மாவட்ட துணைத் தலைவர்கள் சி.சுப்பிரமணி, 
ஆர்.ஆறுமுகம், வட்டத் தலைவர் பி.ஜி.சுப்பிரமணியன், வட்டச் செயலர் ஆதம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/19/வந்தவாசியில்-கிராம-உதவியாளர்கள்-ஆர்ப்பாட்டம்-2903270.html
2903267 சென்னை திருவண்ணாமலை அரசுப் பள்ளி ஆண்டு விழா DIN DIN Thursday, April 19, 2018 09:35 AM +0530 திருவண்ணாமலையை அடுத்த இனாம்காரியந்தல் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு துரிஞ்சாபுரம் ஒன்றிய தொடக்கக் கல்வி அலுவலர் ப.தேன்மொழி தலைமை வகித்தார். கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் வின்சென்ட் ஜெயராஜ், வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சாதிக்பாட்ஷா, ஆசிரியர் பயிற்றுநர் மு.க.சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளித் தலைமை ஆசிரியர் கே.ஜி.விஜயலட்சுமி வரவேற்றார். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் 
க.இளவரசு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார். தொடர்ந்து, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பல்வேறு போட்டிகள், கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள், பதக்கங்கள் வழங்கப்பட்டன. விழாவில், பள்ளிப் புரவலர்களாக 8 பேர் இணைந்தனர்.
இதில், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி முனியம்மாள், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவி பரிமளா, ஆசிரியர்கள் மேரி, செல்வி, தீபா, வளர்மதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/19/அரசுப்-பள்ளி-ஆண்டு-விழா-2903267.html
2903265 சென்னை திருவண்ணாமலை கல்பூண்டி விஸ்வநாதர் கோயிலில் பாஜக தூய்மைப் பணி DIN DIN Thursday, April 19, 2018 09:35 AM +0530 ஆரணியை அடுத்த கல்பூண்டி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோயிலில் பாஜக சார்பில் புதன்கிழமை தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பாஜக மாவட்ட துணைத் தலைவர் எஸ்.மூர்த்தி தலைமை வகித்தார். கல்பூண்டி சிவா, மாவட்ட நெசவாளர் அணி நிர்வாகி கே.ஜெ.கோபால், ஒன்றிய பொதுச்செயலர்கள் வேலு, ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தூய்மைப் பணியில் 
ஈடுபட்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/19/கல்பூண்டி-விஸ்வநாதர்-கோயிலில்-பாஜக-தூய்மைப்-பணி-2903265.html
2903263 சென்னை திருவண்ணாமலை லாரி மோதியதில் பெண் சாவு DIN DIN Thursday, April 19, 2018 09:35 AM +0530 வந்தவாசி அருகே லாரி மோதியதில் பெண் உயிரிழந்தார்.
வந்தவாசியை அடுத்த அத்திப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரஹாசன் மனைவி சரஸ்வதி (65). கடந்த சனிக்கிழமை சரஸ்வதி வந்தவாசியை அடுத்த இந்திரா நகரில் வசிக்கும் தனது மகன் சந்திரபாபு வீட்டுக்குச் சென்றார்.
பின்னர், அங்குள்ள பொதுக்குழாயில் தண்ணீர் பிடித்துக்கொண்டு வந்தவாசி - சேத்துப்பட்டு சாலையை கடக்க முயன்றார். அப்போது, வந்தவாசி நோக்கிச் சென்ற லாரி சரஸ்வதி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர், வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பின்னர், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சரஸ்வதி, அங்கு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து சந்திரபாபு அளித்த புகாரின்பேரில், பொன்னூர் போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/19/லாரி-மோதியதில்-பெண்-சாவு-2903263.html
2903260 சென்னை திருவண்ணாமலை பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்துள்ள 4,328 பேருக்கு நோட்டீஸ் DIN DIN Thursday, April 19, 2018 09:34 AM +0530 திருவண்ணாமலை மாவட்டத்தில் 7,775 ஏக்கர் பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்துள்ள 4,328 பேருக்கு 15 நாள்களுக்குள் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்குமாறு, அதிகாரிகளுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணைத் தலைவர் எல்.முருகன் உத்தரவிட்டார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி, சென்னை தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய இயக்குநர் மதியழகன், மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் க.லோகநாயகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தின் துணைத் தலைவர் எல்.முருகன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு ஆய்வு நடத்தினார். தாழ்த்தப்பட்ட மக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக்கொண்ட அவர், தாழ்த்தப்பட்டோருக்கு சாதிச்சான்று வழங்காமல் காலம் கடத்தும் வருவாய்த் துறை அதிகாரிகளை கடுமையாக எச்சரித்தார்.
பின்னர், எல்.முருகன் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டி: தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் சார்பில், மாவட்டம் வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மத்திய, மாநில அரசு திட்டங்களின் செயல்பாடுகள், நடைமுறைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 17 ஆயிரத்து 522 ஏக்கர் பஞ்சமி நிலங்கள் உள்ளன. இவற்றில், 7,775 ஏக்கர் பஞ்சமி நிலங்களை தாழ்த்தப்பட்டோரைத் தவிர இதர சாதியினர் 4,328 பேர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். இந்த நிலங்களை மீட்க சம்பந்தப்பட்ட 4,328 பேருக்கும் 15 நாள்களுக்குள் நோட்டீஸ் அனுப்பி மீட்க உத்தரவிட்டுள்ளேன்.
மாவட்டத்தில் பாரதப் பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், 2017 - 2018ஆவது ஆண்டில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு 3,980 வீடுகளும், பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ், 308 வீடுகளும் வழங்கப்பட்டுள்ளன. ஒரு லட்சம் தாழ்த்தப்பட்டோர் வீடுகளில் தனி நபர் இல்லக் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ், 591 தாழ்த்தப்பட்ட குடும்பங்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. சமூக நலத் துறையின் கலப்புத் திருமண திட்டத்தின் கீழ், 187 பேர் பயனடைந்துள்ளனர் என்றார்.
துணைத் தலைவர் வேதனை: மேலும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் பள்ளிகள், விடுதிகள் மேம்பாட்டுக்காக அரசு ஒரு ஆண்டுக்கு ரூ.2,000 கோடி முதல் ரூ.3,000 கோடி வரை நிதி அளிக்கிறது. இருப்பினும், இதில் படிக்கும் மாணவர்கள் ஒருவர்கூட மருத்துவம், அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, ஐஐடி உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் சேரவில்லை என்று வேதனை தெரிவித்த தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணைத் தலைவர் எல்.முருகன், மாவட்டத்தில் உள்ள தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் பள்ளிகள், விடுதிகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன் என்றார்.
தவறு செய்வோர் மீது நடவடிக்கை: மேலும், பஞ்சமி நிலங்களை தாழ்த்தப்பட்டோரைத் தவிர மாற்று சாதியினருக்கு பட்டா மாறுதல் செய்து தருவது சட்டப்படி குற்றம். இதுபோன்ற குற்றச் செயலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது உரிய ஆதாரங்களுடன் புகார் அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எல்.முருகன் எச்சரித்தார்.
கூட்டத்தில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் (பொறுப்பு) எம்.எஸ்.தண்டாயுதபாணி, கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி, உதவி காவல் கண்காணிப்பாளர் ரவாளி பிரியா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் எஸ்.பானு உள்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கோயிலில் சுவாமி தரிசனம் 

முன்னதாக, திருவண்ணாமலைக்கு வந்த தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தின் துணைத் தலைவர் எல்.முருகனை மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி, பாஜக கோட்ட அமைப்புச் செயலர் டி.எஸ்.குணசேகரன், மாவட்டத் தலைவர் எஸ்.நேரு, நகரத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
இதையடுத்து, ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலுக்குச் சென்ற அவர், கோயிலில் உள்ள ஸ்ரீசம்பந்த விநாயகர், ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/19/பஞ்சமி-நிலங்களை-ஆக்கிரமித்துள்ள-4328-பேருக்கு-நோட்டீஸ்-2903260.html
2903258 சென்னை திருவண்ணாமலை சாலை விபத்து: பூ வியாபாரி சாவு DIN DIN Thursday, April 19, 2018 09:34 AM +0530 திருவண்ணாமலை அருகே தடுப்புச் சுவரில் பைக் மோதியதில் பலத்த காயமடைந்த பூ வியாபாரி உயிரிழந்தார்.
திருவண்ணாமலையை அடுத்த ஆடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூ வியாபாரி கோவிந்தராஜ் (49). இவர், திருவண்ணாமலை, பூ சந்தையில் கடை வைத்துள்ளார். திங்கள்கிழமை இரவு பூ விற்ற வகையில் வசூலாக வேண்டிய பணத்தை வசூல் செய்வதற்காக பைக்கில் சென்றுகொண்டிருந்தார். திருவண்ணாமலை - திருக்கோவிலூர் சாலை, மேலத்திக்கான் கூட்டுச்சாலை அருகே சென்றபோது, சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் கோவிந்தராஜின் பைக் மோதியது.
இதனால் பலத்த காயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே கோவிந்தராஜ் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/19/சாலை-விபத்து-பூ-வியாபாரி-சாவு-2903258.html
2903256 சென்னை திருவண்ணாமலை அரசு ஆரம்பப் பள்ளியில் ஆண்டு விழா DIN DIN Thursday, April 19, 2018 09:33 AM +0530 போளூரை அடுத்த பெரியகரம் ஊராட்சி, பூங்கொல்லைமேடு அரசு ஆரம்பப் பள்ளியில் ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மோகன் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் சசிகலா, பெற்றோர்ஆசிரியர் கழகத் தலைவர் பூவராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமை ஆசிரியர் டேவிட்ராஜன் வரவேற்றார்.
இடைநிலை ஆசிரியை லீலாராணி ஆண்டறிக்கை வாசித்ததுடன், கலை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். கலை நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் நெடுஞ்செழியன் (போளூர்), சுந்தர் (கலசப்பாக்கம்) ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
நிகழ்ச்சியின்போது, 3, 4, 5-ஆம் வகுப்பு படிக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு அரசின் உதவித்தொகைக்கான காசோலைகளை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் நெடுஞ்செழியன், கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மோகன் ஆகியோர் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பூவராகவனிடம் வழங்கினர். உதவி 
ஆசிரியர் ஜாகீர்உசேன் நன்றி கூறினார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/19/அரசு-ஆரம்பப்-பள்ளியில்-ஆண்டு-விழா-2903256.html
2903254 சென்னை திருவண்ணாமலை களியம் கிராமத்தில் பாஜக சார்பில் தூய்மைப் பணி DIN DIN Thursday, April 19, 2018 09:33 AM +0530 போளூரை அடுத்த திண்டிவனம் ஊராட்சி, களியம் கிராமத்தில் பாஜக சார்பில் புதன்கிழமை தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.
தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ், பாஜக மாவட்ட பொதுச் செயலர் சாசா என்.வெங்கடேசன் தலைமையில், களியம் கிராமத்தில் உள்ள தெருக்கள், கோயில் வளாகம், அரசுப் பள்ளிகள் அருகே என பல்வேறு இடங்களில் அந்தக் கட்சியினர் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
இதில், ஒன்றியத் தலைவர் கே.வெங்கடேசன், களியம் கிளைத் தலைவர் குருராவ், ஒன்றியச் செயலர் சரவணன், இளைஞரணியைச் சேர்ந்த அகத்தியன், சதீஷ், கமல், பிரகாஷ், வைத்தீஸ்வரன் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/19/களியம்-கிராமத்தில்-பாஜக-சார்பில்-தூய்மைப்-பணி-2903254.html
2903252 சென்னை திருவண்ணாமலை அஞ்சலகங்களில் தங்கப் பத்திரத்தில் பொதுமக்கள் முதலீடு செய்யலாம் DIN DIN Thursday, April 19, 2018 09:33 AM +0530 திருவண்ணாமலை மாவட்ட பொதுமக்கள் அஞ்சலகங்களில் தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்து பயன் பெறலாம் என்று கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் எல்.சந்திரசேகரன் தெரிவித்தார்.
அட்சய திருதியை முன்னிட்டு, இந்திய ரிசர்வ் வங்கி இந்த நிதியாண்டின் முதலாவதாக தங்கப் பத்திரம் வரிசை-
1ஐ வெளியிட்டுள்ளது. 
அதன்படி, தங்கப் பத்திரம் முதலீடு செய்பவர்கள் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 1 கிராம் முதல் அதிகபட்சமாக தனிநபர் ஒருவருக்கு 4 கிலோ கிராமும், கூட்டுக் குடும்பத்துக்கு 4 கிலோ கிராமும், அறக்கட்டளைகள் 20 கிலோ கிராம் வரை முதலீடு செய்யலாம்.
முதலீடு செய்யும் தொகை 1 கிராமுக்கு ரூ.3,114 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது நடப்பு தங்கத்தின் விலையில் (கடைசி 3 நாள்களின்) சராசரி விலை ஆகும். இந்தப் பத்திரம் வாங்குவோருக்கு 8-ஆவது ஆண்டு முடிவில் அன்றைய தேதியில் தங்கத்தின் விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறதோ அந்த விலையில் நிர்ணயித்து அளிக்கப்படும்.
இடையில் பணம் தேவைப்படுவோர் 5 ஆண்டுகளுக்குப் பிறகு பணத்தை அந்தத் தேதி நிலவரப்படி பெற்றுக் கொள்ளலாம். முதலீடு செய்யும் தொகைக்கு ஆண்டுக்கு 2.5 சதவீதம் (6 மாதங்களுக்கு வட்டி கணக்கிடப்பட்டு கூட்டு வட்டியாக) வழங்கப்படும்.
ஏப்ரல் 16 முதல் 20-ஆம் தேதி வரை இந்த முதலீட்டை செய்யலாம். பத்திரத்தை வங்கியில் அடமானம் செய்து கொள்ளும் வசதியும் உண்டு. இந்தத் திட்டத்தில் சேருவோர் திருவண்ணாமலை கோட்டத்தில் உள்ள அஞ்சலகங்களை அணுகி முதலீடு செய்யலாம். 
இந்தத் திட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து பயன்பெறலாம் என்று திருவண்ணாமலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் எல்.சந்திரசேகரன் 
தெரிவித்தார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/19/அஞ்சலகங்களில்-தங்கப்-பத்திரத்தில்-பொதுமக்கள்-முதலீடு-செய்யலாம்-2903252.html
2903250 சென்னை திருவண்ணாமலை வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயிலில் ஏப்ரல் 25-இல் தேர்த் திருவிழா DIN DIN Thursday, April 19, 2018 09:33 AM +0530 திருவண்ணாமலையை அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீகூத்தாண்டவர் கோயிலில் வரும் 25-ஆம் தேதி தேர்த் திருவிழா நடைபெற உள்ளது.
பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தேர்த் திருவிழா கோலாகலமாக நடைபெறும். அதன்படி, நிகழாண்டுக்கான திருவிழா வரும் 25-ஆம் தேதி நடத்தப்படுகிறது. முன்னதாக, இந்தக் கோயிலில் கடந்த 6-ஆம் தேதி மகாபாரத தொடர் சொற்பொழிவு தொடங்கியது.
தொடர்ந்து, தினமும் மாலை வேளையில் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. வரும் 24-ஆம் தேதி இரவு 8 மணிக்கு திருநங்கைகள் பங்கேற்கும் மிஸ் வேடந்தவாடி அழகிப் போட்டியும், இரவு 10 மணிக்கு குறவன், குறத்தியுடன் திருநங்கைகள் பங்கேற்கும் நடன நிகழ்ச்சியும் கோலாகலமாக நடைபெறுகின்றன.
தேர்த் திருவிழா: தொடர்ந்து, வரும் 25-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஸ்ரீகூத்தாண்டவர் தேரோட்டம் தொடங்குகிறது. இந்தத் திருவிழாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள திருநங்கைகள் கோயிலில் திரண்டு புதுமணப் பெண்களைப்போல தங்களை அலங்கரித்துக்கொண்டு, பூசாரியின் கைகளால் தாலி கட்டிக்கொள்வர்.
இந்த நிகழ்ச்சியைக் காண வேடந்தவாடி, திருவண்ணாமலை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளானோர் கலந்து 
கொள்வர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/19/வேடந்தவாடி-கூத்தாண்டவர்-கோயிலில்-ஏப்ரல்-25-இல்-தேர்த்-திருவிழா-2903250.html
2903248 சென்னை திருவண்ணாமலை ராந்தம் கிராமத்தில் கிராம சுயாட்சி இயக்கம் தொடக்கம் DIN DIN Thursday, April 19, 2018 09:32 AM +0530 செய்யாறை அடுத்த ராந்தம் துரைராஜ் நகர் பகுதியில் கிராம சுயாட்சி இயக்கத்தை எம்எல்ஏ தூசி கே.மோகன் புதன்கிழமை தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய உதவிச் செயற்பொறியாளர் பி.மணிவாசகம் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் இ.கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். வட்டார ஒருங்கிணைப்பாளர் கே.ராஜேந்திரன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக செய்யாறு தொகுதி எம்எல்ஏ தூசி கே.மோகன் பங்கேற்று கிராம சுயாட்சி இயக்கத் திட்டத்தையும், தூய்மை பாரத நாள், ஜன்தன் யோஜனா, ஜீவன் பீமா யோஜனா, சுரக்சா யோஜனா, உஜ்ஜவாலா, செüபாக்கியா மிசன், இந்த்ரதனுஷ் ஆகிய சேவைகளையும் தொடக்கி வைத்தார். முன்னதாக, தூய்மை பாரத விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடக்கி வைத்ததுடன், தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுவதற்கு குழி தோண்டி பணியை தொடக்கி வைத்தார். மேலும், வீட்டுக் கழிவுகளிலிருந்து எருவாக மாறிய கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் எம்எல்ஏ தூசி கே.மோகன் ஈடுபட்டார்.
நிகழ்ச்சியில் உதவிப் பொறியாளர்கள் அன்பு, வேளாங்கன்னி, பணி மேற்பார்வையாளர்கள் வெங்கடேசன், சக்திவேல், கோபாலகிருஷ்ணன், முன்னாள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மகேந்திரன், டி.பி.துரை, எஸ்.திருமூலன், ரமேஷ், பிரகாஷ், கள பகுதி வழி நடத்துனர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர் என பலர் கலந்து கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/19/ராந்தம்-கிராமத்தில்-கிராம-சுயாட்சி-இயக்கம்-தொடக்கம்-2903248.html
2903221 சென்னை திருவண்ணாமலை கல்வி வளர்ச்சிக்காகவே உலக சாதனை முயற்சி DIN DIN Thursday, April 19, 2018 08:58 AM +0530 திருவண்ணாமலை மாவட்டத்தை கல்வியறிவில் வளர்ச்சியடையச் செய்வதன் ஒரு பகுதியாகவே தமிழ் செய்தித்தாளை படிக்க வைத்து உலக சாதனை முயற்சி செய்ய திட்டமிட்டுள்ளதாக என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்
களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி:
திருவண்ணாமலை மாவட்டம் கல்வி வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது ஆய்வில் தெரியவந்தது. 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளில் 60 ஆயிரம் பேருக்கு தமிழே சரியாக பேச, எழுத, படிக்கத் தெரியாமல் இருந்தது மிகவும் வேதனையாக இருந்தது.
எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றால், கல்வி வளர்ச்சியை பெருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். முதல்கட்டமாக, தமிழில் சரளமாக பேச, எழுத, படிக்க கற்றுத் தர வேண்டும் என்று முடிவு செய்தோம். அதன்படி, முற்றிலும் தமிழ் பேச, எழுத, படிக்கத் தெரியாத மாணவ, மாணவிகளை தேர்வு செய்து உண்டு, உறைவிடப் பள்ளிகளை அமைத்து படிக்க வைத்தோம்.
பல்வேறு கட்ட முயற்சிகளின் பலனாக தமிழ் படிக்க, எழுத, பேசத் தெரியாமல் இருந்த மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 60 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரமாகக் குறைந்துவிட்டது. இதன் ஒரு பகுதியாகவே, மாணவ, மாணவிகளை ஒரே நேரத்தில் செய்தித்தாளை படிக்க வைத்து உலக சாதனை படைக்க முடிவு செய்தோம். அதன்படி, வியாழக்கிழமை (ஏப்ரல் 19) காலை 9.30 மணி முதல் 9.50 மணி வரை மாவட்டத்தில் உள்ள 2,177 அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் 1.65 லட்சம் மாணவ, மாணவிகள் தமிழ் செய்தித்தாளை 20 நிமிடங்கள் வாசிக்கின்றனர்.
இதற்காக, 470 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சாதனை முயற்சிப் பணியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர், ஆசிரியைகள், தன்னார்வலர்கள் கலந்து கொள்கின்றனர். பள்ளி மாணவ, மாணவிகளை தமிழ் படிக்கும் முயற்சி இத்துடன் நின்றுவிடாது. 1, 2-ஆம் வகுப்புகளிலேயே தமிழ் மொழியை சரமாக பேச, எழுத, படிக்க கற்றுத் தருவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம் என்றார்.
பேட்டியின் போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.முத்தமிழ்ச்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/19/கல்வி-வளர்ச்சிக்காகவே-உலக-சாதனை-முயற்சி-2903221.html
2902876 சென்னை திருவண்ணாமலை சுற்றுப்புற சுகாதாரத்தை வலியுறுத்தி 7 கி.மீ. பின்னோக்கி நடந்து பள்ளி மாணவர் உலக சாதனை முயற்சி DIN DIN Thursday, April 19, 2018 01:37 AM +0530 திருவண்ணாமலை மாவட்ட பொதுமக்களிடையே சுற்றுப்புற சுகாதாரம், தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தனியார் பள்ளி மாணவர் 7 கி.மீ. தொலைவு பின்னோக்கி நடந்து சென்று உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.
திருவண்ணாமலை தனியார் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வருபவர் ஜி.சிவகுரு (11). யோகா பயிற்சி பெற்ற இவர், மாவட்ட பொதுமக்களிடையே சுற்றுப்புற சுகாதாரம், தூய்மை இந்தியா திட்டம் ஆகியவை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தார்.
அதன்படி, 7 கி.மீ. தொலைவு பின்னோக்கி நடந்து சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், உலக சாதனை முயற்சியிலும் அவர் ஈடுபட்டார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் இருந்து தொடங்கிய இந்த சாதனை முயற்சி தொடக்க விழாவுக்கு தூய்மை இந்தியா திட்டத்தின் மாநிலத் தலைவர் ஆர்.ரோஷன்லால் தலைமை வகித்தார்.
சர்வதேச மனித உரிமைக் கழக விழுப்புரம் மாவட்டத் தலைவர் ஏ.ஆர்.பாலமுருகன், சுவாமி விவேகானந்தா யோகா, ஸ்கேட்டிங் கழக நிர்வாகி எஸ்.சுரேஷ்குமார், ஜெய்சிவ் அகாதெமி நிறுவனர் துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை ஸ்ரீசரஸ்வதி விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தாளாளர் பி.கணேசன் வரவேற்றார்.
மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவரின் உலக சாதனை முயற்சியை தொடக்கி வைத்தார்.
இதையடுத்து, ஆட்சியர் அலுவலகம் எதிரில் இருந்து நகரின் மையப் பகுதியில் உள்ள ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் வரையில் சுமார் 7 கி.மீ. தொலைவுக்கு மாணவர் சிவகுரு பின்னோக்கி நடந்து சென்று பொதுமக்களிடையே சுற்றுப்புற சுகாதாரத்தைப் பாதுகாக்க வலியுறுத்தியும், தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
சுவாமி விவேகானந்தா யோகா, ஸ்கேட்டிங் கழகம், ஸ்ரீசரஸ்வதி விகாஸ் மெட்ரிக் பள்ளி இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில், எல்ஐசி வளர்ச்சி அலுவலர் பி.பாபு, தொழிலதிபர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/19/சுற்றுப்புற-சுகாதாரத்தை-வலியுறுத்தி-7-கிமீ-பின்னோக்கி-நடந்து-பள்ளி-மாணவர்-உலக-சாதனை-முயற்சி-2902876.html
2902779 சென்னை திருவண்ணாமலை வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயிலில் 25-இல் தேர்த் திருவிழா DIN DIN Thursday, April 19, 2018 01:10 AM +0530 திருவண்ணாமலையை அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீகூத்தாண்டவர் கோயிலில் வரும் 25-ஆம் தேதி தேர்த் திருவிழா நடைபெற உள்ளது.
பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தேர்த் திருவிழா கோலாகலமாக நடைபெறும். அதன்படி, நிகழாண்டுக்கான திருவிழா வரும் 25-ஆம் தேதி நடத்தப்படுகிறது. முன்னதாக, இந்தக் கோயிலில் கடந்த 6-ஆம் தேதி மகாபாரத தொடர் சொற்பொழிவு தொடங்கியது.
தொடர்ந்து, தினமும் மாலை வேளையில் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. வரும் 24-ஆம் தேதி இரவு 8 மணிக்கு திருநங்கைகள் பங்கேற்கும் மிஸ் வேடந்தவாடி அழகிப் போட்டியும், இரவு 10 மணிக்கு குறவன், குறத்தியுடன் திருநங்கைகள் பங்கேற்கும் நடன நிகழ்ச்சியும் கோலாகலமாக நடைபெறுகின்றன.
தேர்த் திருவிழா: தொடர்ந்து, வரும் 25-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஸ்ரீகூத்தாண்டவர் தேரோட்டம் தொடங்குகிறது. இந்தத் திருவிழாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள திருநங்கைகள் கோயிலில் திரண்டு புதுமணப் பெண்களைப்போல தங்களை அலங்கரித்துக்கொண்டு, பூசாரியின் கைகளால் தாலி கட்டிக்கொள்வர்.
இந்த நிகழ்ச்சியைக் காண வேடந்தவாடி, திருவண்ணாமலை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளானோர் கலந்து கொள்வர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/19/வேடந்தவாடி-கூத்தாண்டவர்-கோயிலில்-25-இல்-தேர்த்-திருவிழா-2902779.html
2902258 சென்னை திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் பக்தி சொற்பொழிவு DIN DIN Wednesday, April 18, 2018 06:55 AM +0530 திருவண்ணாமலை ஸ்ரீ யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில், பகவானின் நூற்றாண்டு விழா இசை நிகழ்ச்சி, பக்திச் சொற்பொழிவு ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
ஸ்ரீ யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில், பகவான் யோகி ராம்சுரத்குமாரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை தஞ்சாவூர் கலைமாமணி ஜானகி சுப்பிரமணியன் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து, மாலை 6.15 மணி முதல் 8.15 மணி வரை சென்னை ஸ்ரீ கணேஷ் சர்மாவின் சங்கீத உபன்யாச நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 
விழாவுக்கான ஏற்பாடுகளை ஆஸ்ரம அறங்காவலர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/18/யோகி-ராம்சுரத்குமார்-ஆஸ்ரமத்தில்-பக்தி-சொற்பொழிவு-2902258.html
2902243 சென்னை திருவண்ணாமலை காவிரி மேலாண்மை வாரியம் கோரி ஆர்ப்பாட்டம் DIN DIN Wednesday, April 18, 2018 06:49 AM +0530 காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கக் கோரி, திருவண்ணாமலையில் தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.கே.செல்வம் தலைமை வகித்தார். மாநில துணைச் செயலர் பி.ஆனந்தன், இணைச் செயலர் சீனு, மாநில இளைஞரணிச் செயலர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
மாவட்டத் தலைவர் ஏ.தட்சிணாமூர்த்தி வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தின்போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். 
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும்  என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதில், மாவட்டச் செயலர் பி.சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/18/காவிரி-மேலாண்மை-வாரியம்-கோரி-ஆர்ப்பாட்டம்-2902243.html
2902242 சென்னை திருவண்ணாமலை உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம்: மாநிலத் தேர்தல் ஆணையர் பங்கேற்பு DIN DIN Wednesday, April 18, 2018 06:49 AM +0530 திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், மாநிலத் தேர்தல் ஆணையர் எம்.மாலிக் பெரோஸ் கான் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். 
மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் க.லோகநாயகி, மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் ஜெயசுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக தேர்தல் ஆணையர் எம்.மாலிக் பெரோஸ் கான் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்காக செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். 
கூட்டத்தில், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், கிராம ஊராட்சிகள், மாவட்ட ஊராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகள் மறுவரையறை குறித்து ஏதேனும் ஆட்சேபனைகள் உள்ளனவா என்று மாநிலத் தேர்தல் ஆணையர் கேட்டறிந்தார். மேலும், உள்ளாட்சித் தேர்தலுக்குத் தேவையான படிவங்கள், எழுது பொருள்கள், வாக்குப் பெட்டிகள், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் போதுமான அளவில் இருப்பு உள்ளனவா என்று கேட்டறிந்ததுடன், வாக்குப் பெட்டிகள் மற்றும் உள்ளாட்சித் தேர்தலுக்கு வேண்டிய பொருள்களை சரிவர பராமரிக்க உதவி இயக்குநர் அளவிலான அலுவலர்களை நியமித்து ஊராட்சி ஒன்றியங்களில் பராமரிக்க வேண்டும் என்று மாநிலத் தேர்தல் ஆணையர் கூறினார்.
மேலும், நகரப் பகுதிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் நல்ல நிலையில் உள்ளனவா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையர் எம்.மாலிக் பெரோஸ் கான் அறிவுரை வழங்கினார்.
கூட்டத்தில், நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குநர் செ.ஜெயக்குமார், திருவண்ணாமலை மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ரவாளிப் பிரியா மற்றும் நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/18/உள்ளாட்சித்-தேர்தல்-முன்னேற்பாடுகள்-குறித்த-ஆய்வுக்-கூட்டம்-மாநிலத்-தேர்தல்-ஆணையர்-பங்கேற்பு-2902242.html
2902241 சென்னை திருவண்ணாமலை முத்திரைக் கொல்லர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் DIN DIN Wednesday, April 18, 2018 06:48 AM +0530 முத்திரை ஆய்வாளர் அலுவலகங்களில் காலியாக உள்ள 16 முத்திரைக் கொல்லர் காலிப் பணியிடங்களுக்கு திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியானோர் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை கூடுதல் தொழிலாளர் ஆணையரின் கட்டுப்பாட்டின்கீழ்    இயங்கும் சென்னை, காஞ்சிபுரம்,   திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களை உள்ளடக்கிய முத்திரை ஆய்வர் அலுவலகங்களில் காலியாக உள்ள 16 முத்திரைக் கொல்லர் பணியிடங்கள் இனச் சுழற்சி விதிகளின் அடிப்படையில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணிக்கு 2017 ஜூலை 1-ஆம் தேதியன்று 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் 30 வயதுக்கு உள்பட்டவராகவும், பிற்படுத்தப்பட்ட வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, சீர்மரபினர் 32 வயதுக்கு உள்பட்டவராகவும், ஆதிதிராவிடர் - பழங்குடியினர், ஆதரவற்ற விதவையர் 35 வயதுக்கு உள்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பங்களை சென்னை கூடுதல் தொழிலாளர் ஆணையர், சென்னை தொழிலாளர் இணை ஆணையர்-1, சென்னை தொழிலாளர் இணை ஆணையர்-2, வேலூர் தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகங்களிலும், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட அலுவலகங்களிலும் கட்டணம் ஏதுமின்றி பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் வேலைவாய்ப்பு அட்டை, முன்னுரிமைக்கான சான்றிதழ்கள், கல்விச் சான்றிதழ்களை இணைத்து மே 10-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் நேரிலோ அல்லது பதிவுத் தபாலிலோ கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.
முகவரி: கூடுதல் தொழிலாளர் ஆணையர் அலுவலகம், தொழிலாளர் நல வாரியக் கட்டடம், 6-வது தளம், டி.எம்.எஸ் வளாகம், சென்னை-600006 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/18/முத்திரைக்-கொல்லர்-பணியிடங்களுக்கு-விண்ணப்பிக்கலாம்-2902241.html
2902240 சென்னை திருவண்ணாமலை மாவட்ட கபடி சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு DIN DIN Wednesday, April 18, 2018 06:48 AM +0530 திருவண்ணாமலை மாவட்ட கபடி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட கபடி சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை, ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாநிலப் பொதுக் குழு கன்வீனர் கோபால் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் ஏ.முனியன், துணைச் செயலர் எம்.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.  
அதன்படி, சங்கத்தின் மாவட்டத் தலைவராக 3-ஆவது முறையாக வி.பவன்குமார், செயலராக ஆர்.ஆனந்தன் ஆகியோர் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் பன்னீர், பிரபு, ஆனந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/18/மாவட்ட-கபடி-சங்கத்துக்கு-புதிய-நிர்வாகிகள்-தேர்வு-2902240.html
2902239 சென்னை திருவண்ணாமலை அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள்: மகளிர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் DIN DIN Wednesday, April 18, 2018 06:48 AM +0530 நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களைத் தடுக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, சேத்துப்பட்டில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பில் செவ்வாய்க்கிழமை  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேத்துப்பட்டு - வந்தவாசி சாலை காமராஜர் திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி வனமயில் நந்தகுமார் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர்கள் செய்யாறு ஜெயராமன், ஜெயசீலன், ராஜேஸ்வரி, மாவட்ட துணைத் தலைவர் அன்பழகன், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரத் தலைவி ராணி வரவேற்றார். திருவண்ணாமலை வடக்கு மாவட்டத் தலைவர் வி.பி.அண்ணாமலை கண்டன உரையாற்றினார்.
இதில், மாவட்ட துணைத் தலைவர் தசரதன், வட்டாரத் தலைவர் அன்புதாஸ், நகரத் தலைவர் ஜாபர்அலி, மனித உரிமைக் கழக மாவட்டத் தலைவர் ராமலிங்கம், மகளிர் அணிச் செயலர் மரியதாரா, நிர்மலா, விமலா, மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/18/அதிகரிக்கும்-பாலியல்-வன்கொடுமைச்-சம்பவங்கள்-மகளிர்-காங்கிரஸ்-ஆர்ப்பாட்டம்-2902239.html
2902238 சென்னை திருவண்ணாமலை திருவண்ணாமலை தொழிலாளி மும்பையில் மர்மச் சாவு: விசாரிக்கக் கோரி மனைவி மனு DIN DIN Wednesday, April 18, 2018 06:48 AM +0530 ரூ.ஒரு கோடி மதிப்பிலான வீட்டு மனையை விற்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டபோது மும்பையில் இறந்த கணவரின் சாவில் உள்ள மர்மம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் பெண் மனு அளித்தார்.
தண்டராம்பட்டு வட்டம், பழைய சதக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (37). மும்பையில் உள்ள காகித தொழில்சாலையில் வேலை செய்து வந்தார். 20 ஆண்டுகளாக அங்கேயே வசித்து வந்த அவருக்கு அரசு சார்பில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது.
அந்த இடத்தின் தற்போதைய மதிப்பு ரூ.ஒரு கோடி. அண்மையில் சொந்த ஊருக்கு வந்திருந்த முருகனுடன் மும்பையில் அவருடன் வேலை செய்து வந்த விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் வட்டம், புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சூர்யா, ஆலடியான் ஆகியோரும் வந்தனராம்.
பின்னர், மும்பையில் உள்ள முருகனின் இடத்தை விற்றால் ரூ.25 லட்சம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி, அவரை சூர்யா, ஆலடியான் ஆகியோர் மும்பைக்கு அழைத்துச் சென்றனராம். இதையடுத்து, கடந்த 15-ஆம் தேதி முருகனின் மனைவி துக்கச்சியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சூர்யா, ஆலடியான் ஆகியோர் மும்பையில் முருகன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனராம்.
இந்த நிலையில், முருகன் மனைவி துக்கச்சி மற்றும் உறவினர்கள் செவ்வாய்க்கிழமை திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னியைச் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அதில், முருகனை மும்பைக்கு அழைத்துச் சென்ற சூர்யா, ஆலடியான் ஆகியோரை விசாரிக்க வேண்டும் என்றும், முருகனின் உடலை பெற்றுத் தர மாவட்ட நிர்வாகம் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர். 
மனுவை பெற்றுக்கொண்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/18/திருவண்ணாமலை-தொழிலாளி-மும்பையில்-மர்மச்-சாவு-விசாரிக்கக்-கோரி-மனைவி-மனு-2902238.html
2902237 சென்னை திருவண்ணாமலை தனியார் பேருந்துகள் மோதல்: இருவர் காயம் DIN DIN Wednesday, April 18, 2018 06:47 AM +0530 செய்யாறு அருகே செவ்வாய்க்கிழமை முன்னே சென்ற தனியார் பேருந்தை பின்னால் வந்த பேருந்து முந்திச் செல்ல முயன்றபோது, 2 பேருந்துகளும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஓட்டுநர் உள்பட 2 பேர் காயமடைந்தனர்.
செய்யாறிலிருந்து காஞ்சிபுரம் நோக்கி ஒன்றன் பின் ஒன்றாக 2 தனியார் பேருந்துகள் சென்றன. செய்யாறு கன்னியம் நகர் ஏரிப்பகுதி அருகே முன்னே சென்ற பேருந்தை பின்னால் சென்ற பேருந்து முந்திச் செல்ல முயன்றது.
அப்போது, முன்னால் சென்ற பேருந்தின் பின் பகுதியில் முந்திச் செல்ல முயன்ற பேருந்து மோதியது. இந்த விபத்தில் முந்திச் செல்ல முயன்ற பேருந்தின் முன் பக்கக் கண்ணாடி உடைந்ததுடன், அதன் ஓட்டுநர் காயமடைந்தார். மேலும், இரு சக்கர வாகனத்தில் எதிரே வந்த விண்ணவாடி கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமாரும் காயமடைந்தார். இவர்கள் இருவரும் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இரு பேருந்துகளிலும் பயணம் செய்த பயணிகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். தகவலறிந்து வந்த செய்யாறு போலீஸார் விபத்தில் சிக்கிய 2 பேருந்துகளையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/18/தனியார்-பேருந்துகள்-மோதல்-இருவர்-காயம்-2902237.html
2901931 சென்னை திருவண்ணாமலை இந்து முன்னணியினரை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்    வந்தவாசி DIN Tuesday, April 17, 2018 09:28 AM +0530 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை தாக்கிய இந்து முன்னணி அமைப்பினரை கைது செய்யக் கோரி, வந்தவாசி தேரடி பகுதியில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் கடந்த 5-ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
 அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வந்தவாசி சன்னதி தெருவில் உள்ள அரசு வங்கிக்குப் பூட்டுப் போட்டுப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும், இந்து முன்னணியினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் காயமடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரக் குழு உறுப்பினர் கா.யாசர்அராபத் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட பொதுச் செயலர் டி.ஆறுமுகம், மாவட்டச் செயலர் சுரேஷ் உள்ளிட்ட 3 பேர் மீது வந்தவாசி தெற்கு போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
 இந்த நிலையில், இந்து முன்னணியினரை கைது செய்யக் கோரியும், சரிவர நடவடிக்கை எடுக்காத காவல் துறையை கண்டித்தும் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் வந்தவாசி தேரடியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
 ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எம்.சிவக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட திமுக துணைச் செயலர் எம்.எஸ்.தரணிவேந்தன்
 ஆர்ப்பாட்டத்தைத் தொடக்கி வைத்தார்.
 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன், மனிதநேய மக்கள் கட்சித் தலைமைக் கழகப் பேச்சாளர் ஜெய்னுல் ஆப்தீன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலர் சாதிக், காங்கிரஸ் மாநில பொதுக் குழு உறுப்பினர் எச்.அப்துல் கலீம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொகுதிச் செயலர் மேத்தா ரமேஷ் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
 முன்னதாக, வந்தவாசி கோட்டை மூலையிலிருந்து தொடங்கிய கண்டனப் பேரணி, காஞ்சிபுரம் சாலை, பழைய பேருந்து நிலையம், பஜார் வீதி வழியாக மீண்டும் தேரடியை அடைந்தது.
 
 
 
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/17/இந்து-முன்னணியினரை-கைது-செய்யக்-கோரி-ஆர்ப்பாட்டம்-2901931.html
2901928 சென்னை திருவண்ணாமலை தமிழ்ச் செம்மல் விருது பெற்றவர்களுக்கு பாராட்டு    திருவண்ணாமலை, DIN Tuesday, April 17, 2018 09:27 AM +0530 தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற 2 பேருக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வாழ்த்துத் தெரிவித்தார்.
 தமிழக அரசு சார்பில், 2016, 2017-ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்ச் செம்மல் விருதுகள் அண்மையில் வழங்கப்பட்டன. இந்த விழாவில், திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மையப் பாவலர் ப.குப்பன், திருவண்ணாமலை மலர்ந்த திருக்குறள் சமுதாயம் அமைப்பின் நிறுவனர் சாமி தமிழ்ச்செல்வி கமலக்கண்ணன் ஆகியோருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழ்ச்செம்மல் விருதுகளையும், தலா ரூ.25 ஆயிரம் பரிசுத் தொகையையும் வழங்கினார்.
 விருது பெற்று திருவண்ணாமலை திரும்பிய இருவரையும் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி பாராட்டி, வாழ்த்துத் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/17/தமிழ்ச்-செம்மல்-விருது-பெற்றவர்களுக்கு-பாராட்டு-2901928.html
2901921 சென்னை திருவண்ணாமலை அம்பேத்கர் பதாகை கிழிப்பை கண்டித்து சாலை மறியல்    செய்யாறு, DIN Tuesday, April 17, 2018 09:26 AM +0530 செய்யாறை அடுத்த மாங்கால் கூட்டுச்சாலை பகுதியில் அம்பேத்கர் பதாகை கிழிக்கப்பட்டதைக் கண்டித்து, தலித் அமைப்பினர் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
 அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, இந்திய குடியரசுக் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை சார்பில் மாங்கால் கூட்டுச்சாலைப் பகுதியில் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்தப் பதாகைகளில் இருந்த அம்பேத்கர் படத்தை மட்டும் மர்ம நபர்கள் கிழித்து சேதப்படுத்தியதாகத் தெரிகிறது. இதனையறிந்த கட்சி நிர்வாகிகள், தலித் அமைப்பினர் அந்தப் பகுதியில் திரண்டு சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
 தகவலறிந்து வந்த தூசி போலீஸார் சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்தை நடத்தினர். மேலும், பதாகைகளை கிழித்தவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து, சாலை மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனர். இந்தச் சம்பவத்தால் காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 
 
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/17/அம்பேத்கர்-பதாகை-கிழிப்பை-கண்டித்து-சாலை-மறியல்-2901921.html
2901919 சென்னை திருவண்ணாமலை ஏப். 20-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்    திருவண்ணாமலை, DIN Tuesday, April 17, 2018 09:26 AM +0530 திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஏப்ரல் 20-ஆம் தேதி நடைபெறுகிறது.
 இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பயன்பெறும் வகையில், மாதந்தோறும் குறைதீர் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, ஏப்ரல் மாதத்துக்கான குறைதீர் கூட்டம் ஏப்ரல் 20-ஆம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெறுகிறது.
 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்துக்கு, ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகிக்கிறார். கூட்டத்தில், வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவுத் துறை, வருவாய்த் துறை, வங்கியாளர்கள் உள்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள், கோரிக்கைகளுக்குப் பதில் அளிக்க உள்ளனர்.
 எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் தவறாது கலந்து கொண்டு பயன் பெறலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/17/ஏப்-20-இல்-விவசாயிகள்-குறைதீர்-கூட்டம்-2901919.html
2901917 சென்னை திருவண்ணாமலை தேர்வெழுதச் சென்ற மாணவி கடத்தல்: மீட்டுத் தரக்கோரி எஸ்.பி.யிடம் மனு    திருவண்ணாமலை DIN Tuesday, April 17, 2018 09:25 AM +0530 செங்கம் அருகே வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் செல்லப்பட்ட மகளை மீட்டுத் தரக் கோரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னியிடம் மாணவியின் பெற்றோர் மனு அளித்தனர்.
 செங்கத்தை அடுத்த பி.எல்.தண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது 17 வயது மகள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்வு எழுதச் சென்ற அவர் வீடு திரும்பவில்லையாம். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
 இந்த நிலையில், தேர்வு முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த மாணவியை செங்கத்தை அடுத்த பொன்னி தண்டா கிராமத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன் மகன் ராம்ராஜ், கணேசன் மகன் பவன்குமார், பி.எல்.தண்டா கிராமத்தைச் சேர்ந்த பூபதி மகன் ரமேஷ் ஆகியோர் சேர்ந்து வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் சென்றது தெரிய வந்தது.
 இதுகுறித்து, செங்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
 இதனால், ரமேஷ், அவரது மனைவி சுசிலா மற்றும் உறவினர்கள் திங்கள்கிழமை திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னியிடம் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
 
 
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/17/தேர்வெழுதச்-சென்ற-மாணவி-கடத்தல்-மீட்டுத்-தரக்கோரி-எஸ்பியிடம்-மனு-2901917.html
2901895 சென்னை திருவண்ணாமலை பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழா: நடிகர் ஜீவா பங்கேற்பு    திருவண்ணாமலை, DIN Tuesday, April 17, 2018 08:58 AM +0530 திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியின் 18-ஆவது ஆண்டு விழா, விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 விழாவுக்கு கல்லூரி துணைத் தலைவர் எ.வ.குமரன் தலைமை வகித்தார். கல்லூரிச் செயலர் மா.புர்க்கிந்த்ராஜ், இயக்குநர் வி.ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ஜி.மோகன்குமார் வரவேற்றார்.
 திரைப்பட நடிகர் ஜீவா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கிப் பேசினார்.
 அப்போது, பொறியியல் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் தங்களது முழுக் கவனத்தையும் செலுத்தி கல்வி பயில வேண்டும். படிப்பை முடித்து வெளியே வரும்போது ஒரு நல்ல மாணவராக, மாணவியாக வெளியே வர வேண்டும். அண்மையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை மாணவர்கள் அமைதியாக நடத்தி வெற்றி கண்டனர் என்றார். தொடர்ந்து, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், கல்லூரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
 
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/17/பொறியியல்-கல்லூரியில்-ஆண்டு-விழா-நடிகர்-ஜீவா-பங்கேற்பு-2901895.html
2901894 சென்னை திருவண்ணாமலை இசை பயிற்சிப் பள்ளி சார்பில் முப்பெரும் விழா    வந்தவாசி DIN Tuesday, April 17, 2018 08:58 AM +0530 வந்தவாசி ஸ்ரீராகம் இசை பயிற்சிப் பள்ளி சார்பில் முப்பெரும் விழா வந்தவாசியில் சனிக்கிழமை நடைபெற்றது.
 இதில், நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள் பாடும் விழா, மாணவர்கள் கீபோர்டு வாசித்தல் விழா, கிராமிய இசைக் கலைஞர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றன.
 விழாவுக்கு புரிசை ந.சுப்பிரமணி தம்பிரான் தலைமை வகித்தார். பெ.பார்த்திபன் வரவேற்றார். மாம்பட்டு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் அறக்கட்டளைச் செயலர் ஆறு.லட்சுமண சுவாமிகள் நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள் பாடும் விழாவை தொடக்கி வைத்தார்.
 பின்னர், அம்மாப்பேட்டை கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில், ஸ்ரீராகம் இசைப் பயிற்சி பள்ளி மாணவர்களின் கீபோர்டு வாசித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, தமிழக கலை, பண்பாட்டுத் துறை முன்னாள் துணை இயக்குநர் வ.ஜெயபால் கிராமிய இசைக் கலைஞர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கிப் பேசினார்.
 விழாவில், வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் மூ.சங்கர், வந்தவாசி ஸ்ரீமந் நாதமுனி வைணவ சபை முதன்மைச் செயலர் கு.மணிவண்ணன் மற்றும் இரா.சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
 
 
 
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/17/இசை-பயிற்சிப்-பள்ளி-சார்பில்-முப்பெரும்-விழா-2901894.html
2901891 சென்னை திருவண்ணாமலை அனுமதியின்றி பதாகைகளை வைக்கக் கூடாது: ஆரணி காவல் ஆய்வாளர் எச்சரிக்கை    ஆரணி, DIN Tuesday, April 17, 2018 08:58 AM +0530 ஆரணி நகரில் அனுமதியின்றி டிஜிட்டல் பதாகைகளை வைக்கக் கூடாது. அவ்வாறு வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆரணி நகரக் காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்தி எச்சரித்தார்.
 டிஜிட்டல் பதாகை கடை உரிமையாளர்கள், சாரம் கட்டுபவர்களுடனான ஆலோசனைக் கூட்டம், ஆரணி நகரக் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆரணி டி.எஸ்.பி. செந்தில் தலைமை வகித்தார்.
 கூட்டத்தில் பங்கேற்ற நகரக் காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்தி பேசியதாவது: ஆரணி நகரத்தில் உரிய அனுமதியின்றி, பல்வேறு இடங்களில் டிஜிட்டல் பதாகைகள் வைக்கப்படுகின்றன. அவ்வாறு வைக்கப்படும் பதாகைகள் உடனடியாக அகற்றப்படும்.
 மேலும், கடைகள், வணிக நிறுவனங்கள் எதிரே பதாகைகளை வைக்கக் கூடாது. இதுகுறித்து கடைகளின் உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து புகார்கள் அளித்து வருகின்றனர். சூரிய குளம் பகுதி, கோட்டை மைதானம் பகுதி உள்ளிட்ட இடங்களில் பதாகைகளை அனுமதி பெற்று வைத்துக் கொள்ளலாம். பொதுமக்களும் அனுமதி பெறாமல் டிஜிட்டல் பதாகைகளை வைக்கக் கூடாது.
 ஆரணி வருவாய்க் கோட்ட அலுவலகத்தில் இதற்கான அனுமதியைப் பெற வேண்டும்.
 உரிய அனுமதி பெறாமல் டிஜிட்டல் பதாகைகளை வைத்தால், அவை அகற்றப்படுவதுடன், சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார்.
 கூட்டத்தில் பயிற்சி டி.எஸ்.பி. தங்கமணி, எஸ்.ஐ. ஜமீஸ்பாபு, டிஜிட்டல் பதாகை கடை உரிமையாளர்கள் சந்துரு, முரளி, மோகன், ஆறுமுகம், சாரம் கட்டும் உரிமையாளர்கள் பிரகாஷ், துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/17/அனுமதியின்றி-பதாகைகளை-வைக்கக்-கூடாது-ஆரணி-காவல்-ஆய்வாளர்-எச்சரிக்கை-2901891.html
2901889 சென்னை திருவண்ணாமலை முத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசை வழிபாடு    வந்தவாசி, DIN Tuesday, April 17, 2018 08:57 AM +0530 வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணா நகரில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை மாத அமாவாசை வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 இதனையொட்டி, காலை அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் மகா அபிஷேகம், தாய் மூகாம்பிகைக்கு மங்கள நீர் சேவை, புஷ்பாஞ்சலி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, ஆதிசக்தி சர்வமங்கள காளியம்மனுக்கு சர்வமங்களா மகா யாகம், அக்னி கரகம் எடுத்தல் உள்ளிட்ட பூஜைகளும் நடந்தேறின.
 பின்னர், அலங்கரிக்கப்பட்ட உற்சவர் அம்மனை பல்லக்கில் வைத்து, கோயில் வளாகத்தில் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். தொடர்ந்து, அம்மனை ஊஞ்சலில் வைத்து தாலாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று முத்துமாரியம்மனை வழிபட்டனர்.
 
 
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/17/முத்துமாரியம்மன்-கோயிலில்-அமாவாசை-வழிபாடு-2901889.html
2901886 சென்னை திருவண்ணாமலை 256 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்    திருவண்ணாமலை DIN Tuesday, April 17, 2018 08:57 AM +0530 திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் 256 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 5.45 லட்சத்தில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வழங்கினார்.
 குறைதீர் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி பொதுமக்கள், முதியோர், மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து பல்வேறு உதவித் தொகைகள் பெறுவதற்கான 405 மனுக்களைப் பெற்றார்.
 இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்ட மனுக்கள் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
 புகைப்படம் எடுக்கும் பிரிவு தொடக்கம்: ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் அடையாள அட்டை பெற புகைப்படம் இல்லாமல் வரும் மாற்றுத் திறனாளிகள் வசதிக்காக ரூ. 34,425 செலவில் அமைக்கப்பட்ட இலவச பாஸ்போர்ட் அளவு புகைப்படம் எடுக்கும் பிரிவை ஆட்சியர் திறந்து வைத்தார்.
 ஆட்சியரின் தன் விருப்பக் கொடை நிதியில் இருந்து 104 காது கேளாதோருக்கு தலா ரூ. 840 வீதம் மொத்தம் ரூ. 87,360 செலவில் காதொலி கருவிகள், 40 பேருக்கு ரூ. 1,80,000 செலவில் காதுக்குப் பின்னால் அணியும் காதொலி கருவிகள், 12 பேருக்கு ரூ. 1,08,000 மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்கள், 100 பேருக்கு ரூ. 1,35,000 மதிப்பிலான வாக்கர்கள் என மொத்தம் 256 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 5.45 லட்சத்தில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வழங்கினார்.
 மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.லோகநாயகி, மகளிர் திட்ட இயக்குநர் ப.ஜெயசுதா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் - சிறுபான்மையினர் நல அலுவலர் பானு உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்
 சட்டை தைத்துத் தர ரூ. 200 கூலி
 துரிஞ்சாபுரம் ஒன்றியம், வடகரிக்கலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி இளைஞர் சந்தோஷுக்கு இலவச தையல் இயந்திரத்தை ஆட்சியர் வழங்கினார். அப்போது, சந்தோஷிடம் தனக்கு ஒரு சட்டை தைத்துத் தர முடியுமா? என்று ஆட்சியர் கேட்டார்.
 அவர், உடனே தனது கையில் வைத்திருந்த டேப்பை எடுத்து ஆட்சியருக்கு சட்டை தைப்பதற்கான அளவை எடுத்தார். இதையடுத்து, தனது வீட்டில் இருந்த சட்டைத் துணியை எடுத்து வரச் செய்த ஆட்சியர், அதை சந்தோஷிடம் வழங்கி தையல் கூலியாக ரூ. 200 -ஐயும் வழங்கினார். இதைச் சற்றும் எதிர்பாராத சந்தோஷ் ஆட்சியரிடம் இருந்து சட்டைத் துணியையும், தையல் கூலியையும் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு, இரு நாள்களில் சட்டையைத் தைத்து எடுத்து வருவதாகக் கூறிச் சென்றார்.
 
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/17/256-மாற்றுத்-திறனாளிகளுக்கு-நலத்-திட்ட-உதவிகள்-ஆட்சியர்-வழங்கினார்-2901886.html
2901883 சென்னை திருவண்ணாமலை உழவன் செயலி: விவசாயிகள் பயன் பெற அழைப்பு    செய்யாறு DIN Tuesday, April 17, 2018 08:56 AM +0530 உழவன் செயலி மூலம் அனக்காவூர், வெம்பாக்கம் ஆகிய வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயனடையலாம் என வேளாண் துறை தெரிவித்தது.
 இதுகுறித்து அனக்காவூர் வட்ட வேளாண் உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 அனக்காவூர், வெம்பாக்கம் ஆகிய வட்டங்களில் உள்ள விவசாயிகள் அதிக அளவில் நெல், உளுந்து, நிலக்கடலை, கரும்பு ஆகிய பயிர்களைச் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில், விவசாயிகள் பயன் பெறும் வகையில், தமிழக அரசின் வேளாண் துறை "உழவன் செயலி' என்ற செல்லிடப்பேசி செயலியை அறிமுகம் செய்துள்ளது.
 இதன் மூலம், அரசு வழங்கும் மானியத் திட்டங்கள், இடுபொருள்கள் முன்பதிவு, பயிர்க் காப்பீட்டுத் திட்டம் தொடர்பான விவரங்கள், உரங்களின் இருப்பு நிலை, விதைகள் இருப்பு நிலை, வேளாண் இயந்திரம் வாடகை மைய விவரங்கள், விளை பொருள்களுக்கான சந்தை விலை நிலவரம், வானிலை முன் அறிவிப்பு, தங்களது பகுதிக்கு உதவி வேளாண் அதிகாரி வருகை குறித்த விவசாயம் சார்ந்த அனைத்து விவரங்களை உடனடியாக அறிந்து கொள்ளலாம். விவசாயிகள் இந்தச் செயலியைத் தங்களது செல்லிடப்பேசியில் தரவிறக்கம் செய்து பயனடையலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/17/உழவன்-செயலி-விவசாயிகள்-பயன்-பெற-அழைப்பு-2901883.html
2901881 சென்னை திருவண்ணாமலை ஆஸ்ரமத்தில் பக்தி சொற்பொழிவு    திருவண்ணாமலை, DIN Tuesday, April 17, 2018 08:56 AM +0530 திருவண்ணாமலை ஸ்ரீ யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில், பகவானின் நூற்றாண்டு விழா இசை நிகழ்ச்சி, பக்தி சொற்பொழிவு ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
 ஸ்ரீ யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில், பகவான் யோகி ராம்சுரத்குமாரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை தஞ்சாவூர் கலைமாமணி ஜானகி சுப்பிரமணியன் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, மாலை 6.15 மணி முதல் 8.15 மணி வரை சென்னை ஸ்ரீ கணேஷ் சர்மாவின் சங்கீத உபன்யாச நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ஆஸ்ரம அறங்காவலர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/17/ஆஸ்ரமத்தில்-பக்தி-சொற்பொழிவு-2901881.html
2901278 சென்னை திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் நன்கொடை நூல்கள் பெறும் விழா DIN DIN Monday, April 16, 2018 09:44 AM +0530 திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் நன்கொடை நூல்கள் பெறும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மைய நூலகத்தில் ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் டிஎன்பிஎஸ்சி குரூப் - 2 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்தப் பயிற்சியில் திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், போட்டித் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கான நூல்களை நன்கொடையாகப் பெறும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட நூலக அலுவலர் அர.கோகிலவாணி தலைமை வகித்தார். விழாவில், கோட்டை அமீர் விருது பெற்ற சாதிக் பாஷா, போட்டித் தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறுவது எப்படி எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். மேலும், தேர்வர்களுக்குப் பயன்படும் வகையிலான பல்வேறு போட்டித் தேர்வு நூல்களை அவர் நூலகத்துக்கு நன்கொடையாக வழங்கினார். விழாவில், முதல் நிலை நூலகர் பெ.வள்ளி, நல் நூலகர்கள் சாயிராம், சுந்தரேசன், கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/16/மாவட்ட-மைய-நூலகத்தில்-நன்கொடை-நூல்கள்-பெறும்-விழா-2901278.html
2901277 சென்னை திருவண்ணாமலை சாலை செப்பனிடும் பணியை தடுத்து நிறுத்திய பாஜகவினர்: தரமற்ற முறையில் நடைபெறுவதாகப் புகார் DIN DIN Monday, April 16, 2018 09:43 AM +0530 வந்தவாசி சன்னதி தெருவில் சாலையை செப்பனிடும் பணிகள் தரமற்று நடைபெறுவதாக புகார் தெரிவித்த பாஜகவினர், அந்தப் பணிகளை ஞாயிற்றுக்கிழமை தடுத்து நிறுத்தினர்.
வந்தவாசி நகராட்சி சார்பில் 3-ஆவது குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவதற்காக சன்னதி தெரு உள்ளிட்ட நகரின் பல தெருக்களில் பள்ளம் தோண்டப்பட்டு, பிரதான குடிநீர் குழாய்கள் புதைக்கப்பட்டன. இதன் பின்னர், இந்தச் சாலைகளை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் பயனில்லாமல் இருந்துவந்தது.
இந்த நிலையில், சன்னதி தெருவில் குழாய்கள் புதைக்கப்பட்டதால் சேதமடைந்து பள்ளமான தார்ச்சாலையை சிமென்ட் கலவை மூலம் செப்பனிடும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது. பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, அங்கு வந்த நகரச் செயலர் குருலிங்கம் தலைமையிலான பாஜகவினர், பணிகள் தரமற்று நடப்பதாக புகார் தெரிவித்து, அந்தப் பணிகளை தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து பாஜகவினர் கூறியதாவது:
இந்தப் பணிகள் ரூ.3 லட்சம் செலவில் நடைபெறுகிறது. ஒப்பந்தத்தின்படி, சுமார் ஒரு அடி ஆழம் பள்ளம் தோண்டி பெரிய ஜல்லிக் கலவை நிரப்பி, பின்னர் அதன் மீது சிறு ஜல்லிக் கலவை போட வேண்டும். இதற்கு ஆற்று மணலை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால், சுமார் 2 இன்ச் அளவுக்கு மட்டுமே பெயருக்கு ஒரு பள்ளம் தோண்டி செப்பனிடுகின்றனர். ஆற்று மணலுக்கு பதில் தரமற்ற ஜல்லிமாவை பயன்படுத்துகின்றனர்.
வந்தவாசியில் உள்ள ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயில், ஸ்ரீரங்கநாத பெருமாள் கோயில், ஸ்ரீஅங்காளம்மன் கோயில் ஆகிய கோயில்களின் தேரோட்டம் இந்த தெரு வழியாக நடைபெறும். மேலும், இந்தத் தெருவில் பல்வேறு வங்கிகள், பள்ளிகள் உள்ளன. பொதுமக்கள், மாணவர்கள் பெரிதும் பயன்படுத்தும் இந்தச் சாலையை தரமான முறையில் செப்பனிட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, தரமற்ற முறையில் செப்பனிடப்பட்டதை பெயர்த்து எடுத்து, தரமான முறையில் சாலையை செப்பனிட வேண்டும் என்றனர். இதைத் தொடர்ந்து, சாலை செப்பனிடும் பணியை நகராட்சி அதிகாரிகள் நிறுத்தினர். மேலும், சாலை தரமாக செப்பனிடப்படும் என்று அவர்கள் உறுதி அளித்ததை அடுத்து, பாஜகவினர் கலைந்து சென்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/16/சாலை-செப்பனிடும்-பணியை-தடுத்து-நிறுத்திய-பாஜகவினர்-தரமற்ற-முறையில்-நடைபெறுவதாகப்-புகார்-2901277.html
2901275 சென்னை திருவண்ணாமலை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி ஜல்லிக்கட்டு போராட்டக் குழுவினர் தர்னா DIN DIN Monday, April 16, 2018 09:43 AM +0530 காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கக் கோரி, திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டுப் போராட்டக் குழுவினர் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை அண்ணா சிலை எதிரே நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு ஜல்லிக்கட்டு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ராகவன் தலைமை வகித்தார். இளந்தளிர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஆர்.டி.பிரகாஷ், தர்னா போராட்டத்தைத் தொடக்கி வைத்தார்.
போராட்டத்தின்போது, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும். தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும். திருவண்ணாமலையை அடுத்த கவுத்திமலை, வேடியப்பன் மலைகளில் தனியார் நிறுவனம் மூலம் இரும்புத் தாது வெட்டி எடுக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதில், ஜல்லிக்கட்டு போராட்டக்குழு இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/16/காவிரி-மேலாண்மை-வாரியம்-அமைக்கக்-கோரி-ஜல்லிக்கட்டு-போராட்டக்-குழுவினர்-தர்னா-2901275.html
2901273 சென்னை திருவண்ணாமலை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: 185 பேருக்கு பணி நியமன ஆணை அளிப்பு DIN DIN Monday, April 16, 2018 09:43 AM +0530 திருவண்ணாமலையில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 185 பேருக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தொழில்நெறி வழிகாட்டி மையம் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை அண்மையில் நடத்தின. 
மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜி.மகிழேந்தி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு முகாமை தொடக்கி வைத்துப் பேசினார்.
இந்த முகாமில், டிவிஎஸ் டிரெயினிங் அன்ட் சர்வீசஸ், கிளஸ்டரல் நிறுவனங்கள், அப்பல்லோ மருத்துவமனை உள்பட 20-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள், திறன் பயிற்சி வழங்குபவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிறுவனங்களில் மேற்பார்வையாளர், கணினி இயக்குபவர், மேலாளர் உள்பட பல்வேறு பணியிடங்களுக்கு 10-ஆம் வகுப்புக்கு குறைவாகவும், 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, பட்டம், பட்டயம், தொழில்நுட்பப் படிப்பு, பொறியியல், மேலாண்மை உள்ளிட்ட கல்வித் தகுதிகள் கொண்ட மாணவ, மாணவிகளிடையே நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது.
இதில், 700-க்கும் மேற்பட்ட பணி நாடுநர்கள் கலந்து கொண்டனர். இவர்களில், 185 பேர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி பணி நியமன ஆணைகளை வழங்கிப் பாராட்டினார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் க.விஜயா மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/16/தனியார்-துறை-வேலைவாய்ப்பு-முகாம்-185-பேருக்கு-பணி-நியமன-ஆணை-அளிப்பு-2901273.html
2901272 சென்னை திருவண்ணாமலை விவசாய பயன்பாட்டுக்கு ஏரியில் மண் அள்ளும் பணி தொடக்கம் DIN DIN Monday, April 16, 2018 09:43 AM +0530 திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாய பயன்பாட்டுக்கு ஏரியில் மண் அள்ளும் பணியை செங்கத்தை அடுத்த காஞ்சி கிராமத்தில் உள்ள ஏரியில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி சனிக்கிழமை தொடக்கி வைத்தார்.
விவசாயிகள் பயன்பெறும் வகையில், நிலங்களை செம்மைப்படுத்தவும், ஏரிகள், குளங்களில் அதிகளவில் தண்ணீரை சேமிக்கும் வகையிலும், பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் அணைகளில் உள்ள வண்டல் மண்ணை இலவசமாக விவசாயிகளுக்கு வழங்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
அதனடிப்படையில், கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட காஞ்சியில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரியில் விவசாயப் பன்பாட்டுக்கு மண் அள்ளும் பணியை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தொடக்கி வைத்தார். பின்னர், ஆட்சியர் கூறியதாவது:
கிராமப்புறங்களில் பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் அணைகளில் விவசாயிகள் கட்டணம் ஏதும் இல்லாமல் விவசாயப் பயன்பாட்டுக்கு மண்ணை அள்ளிப் பயன்படுத்தலாம்.
அதற்கு முன்னதாக, விவசாய நிலத்தின் சிட்டா நகலுடன் தங்கள் பகுதியிலுள்ள வாட்டாட்சியர் அலுவலகத்தில் ஏரி, குளங்களில் மண் அள்ளுவது தொடர்பாக விவசாயிகள் பதிவு செய்து ஒப்புதல் பெற வேண்டும்.
தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஏரி, குளங்களுக்கு மண் அள்ள டிராக்டரை விவசாயிகள் கொண்டு சென்றால், அங்கு பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை சார்பில், பொக்லைன் இயந்திரம் மூலம் மண் அள்ளப்பட்டு, டிராக்டரில் ஏற்றி விடப்படும்.
பொக்லைன் இயந்திரத்துக்கு கட்டணமாக ஒரு டிராக்டரில் மண் பாரம் ஏற்ற ரூ.100 மட்டும் செலுத்த வேண்டும். விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வேளாண் நிலங்களை செம்மைப்படுத்திக் கொள்ளலாம் என்றார் அவர். திருவண்ணாமலை கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி, செங்கம் வட்டாட்சியர் ரேணுகா, போளூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சின்னராஜ், புதுப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் ராஜசேகரன், உதவிச் செயற்பொறியாளர் ராஜாராம் உள்பட வருவாய்த் துறையினர், பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் 
உடனிருந்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/16/விவசாய-பயன்பாட்டுக்கு-ஏரியில்-மண்-அள்ளும்-பணி-தொடக்கம்-2901272.html
2901271 சென்னை திருவண்ணாமலை சம்பந்த விநாயகர் கோயிலில் லட்ச தீபம் DIN DIN Monday, April 16, 2018 09:42 AM +0530 திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் ஸ்ரீசம்பந்த விநாயகர் கோயிலில் 63-ஆவது ஆண்டு லட்ச தீபத் திருவிழா சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
இதையொட்டி, முற்பகல் 11 மணிக்கு மூலவர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, மகா தீபாராதனைகள் நடைபெற்றன. மாலை 4 மணிக்கு சிறப்பு நாகஸ்வர கச்சேரியும், மாலை 6 மணிக்கு கோயில் அறங்காவலர்கள் ப.முருகையன், ரகுபதி ஆகியோர் முன்னிலையில் வேட்டவலம் ஜமீன்தார் சம்பத், லலித் ஆகியோர் குத்து விளக்கேற்றி லட்ச தீப திருவிழாவைத் தொடக்கி வைத்தனர். தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் திரண்டு லட்ச தீபம் ஏற்றினர். மாலை 7 மணிக்கு தீபம் சேவா சங்கம், அனைத்து போக்குவரத்து ஊழியர்கள் 
சங்கம், மூர்த்தி மெட்ரிக் பள்ளி உள்பட பல்வேறு அமைப்பினர் தனித்தனியே அன்னதானம் வழங்கினர்.
இரவு 8 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் ஸ்ரீசம்பந்த விநாயகர், வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீரேணுகாம்பாள் சுவாமிகள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
தொடர்ந்து வாணவேடிக்கை, கரகாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில், கோயில் குருக்கள் ராஜேஷ், கார்த்தி, சுப்பிரமணி மற்றும் விழாக் குழுவினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/16/சம்பந்த-விநாயகர்-கோயிலில்-லட்ச-தீபம்-2901271.html
2901269 சென்னை திருவண்ணாமலை திருவண்ணாமலை சித்திரை பௌர்ணமி திருவிழாவில் அனுமதி பெற்றே அன்னதானம் வழங்க வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல் DIN DIN Monday, April 16, 2018 09:42 AM +0530 திருவண்ணாமலையில் வருகிற 29-ஆம் தேதி நடைபெறும் சித்திரை பௌர்ணமி திருவிழாவன்று அன்னதானம் வழங்குவோர் முன் அனுமதி பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் வருகிற 29-ஆம் தேதி சித்திரை பெளர்ணமி திருவிழா நடைபெறுகிறது. அன்றைய தினம் திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, திருவண்ணாமலை நகரையும், மலை சுற்றும் கிரிவலப் பாதையையும் சுத்தமாகப் பராமரிப்பது நமது கடமை.
குறிப்பாக, மலை சுற்றும் பாதையில் அன்னதானம் வழங்கும் தனி நபர்கள், நிறுவனங்கள் முன் அனுமதி பெறுவது அவசியம். அதன்படி, அன்னதானம் அளிக்க விரும்புவோர் திங்கள்கிழமை (ஏப்ரல் 16) முதல் வரும் 25-ஆம் தேதிக்குள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக 2-ஆவது மாடியில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று, உரிய விவரங்களை சமர்ப்பித்து முன் அனுமதி பெற வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குப் பிறகு அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.
அன்னதானம் வழங்குவோர், கிரிவலப் பாதையில் எந்தக் காரணத்தைக் கொண்டும் உணவு சமைக்கக் கூடாது. அன்னதானம் விநியோகிக்க தயாரிக்கப்பட்ட உணவை மட்டுமே வழங்க வேண்டும். உணவுப் பொருள்கள் தரமானதாகவும், தூய்மையானதாகவும் இருக்க வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய எரிவாயு உருளைகள், விறகு அடுப்புகள், மண்ணெண்ணெய் அடுப்புகளை பயன்படுத்த அனுமதி இல்லை.
விண்ணப்பிக்க வரும்போது, 5 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், தங்களது முகவரியைத் தெரிவிக்கும் ஏதேனும் ஓர் அங்கீகரிக்கப்பட்ட சான்றின் நகல், எத்தனை நபர்களுக்கு அன்னதானம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்ற விவரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
அன்னதானம் வழங்க எந்த இடத்தில், எந்த தேதியில், எந்த நேரத்தில் நிர்ணயிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதோ, அந்த இடத்தில், அந்த நேரத்துக்குள்ளாக அன்னதானம் வழங்கி முடிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது.
அன்னதானம் வழங்க இலையால் ஆன தென்னை, பாக்குமட்டைப் பொருள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பைகள் மூலம் குடிநீர் விநியோகிக்கக் கூடாது. அன்னதானம் வழங்கும் இடத்திலேயே பக்தர்கள் உணவு சாப்பிட்டுவிட்டு, கழிவுப் பொருள்களை போடுவதற்கு ஏதுவாக குப்பைக் கூடைகளை வைக்க வேண்டும். அந்தக் குப்பைகளை அன்னதானம் வழங்குவோரே கேசரித்து, அப்புறப்படுத்த வேண்டும்.
அன்னதானம் முடிந்தவுடன் அந்த இடத்தை சுத்தம் செய்துவிட்டுச் செல்ல வேண்டும். உரிய அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்குவோர் மீது காவல் துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/16/திருவண்ணாமலை-சித்திரை-பௌர்ணமி-திருவிழாவில்-அனுமதி-பெற்றே-அன்னதானம்-வழங்க-வேண்டும்-ஆட்சியர்-அறிவுறுத-2901269.html
2901268 சென்னை திருவண்ணாமலை அம்பேத்கர் பிறந்த நாள் விழா DIN DIN Monday, April 16, 2018 09:42 AM +0530 சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் புதிய காலனியில் புரட்சி அம்பேத்கர் நூற்றாண்டு இயக்கம் சார்பில், சட்டமேதை அம்பேத்கரின் 127-ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
தேவிகாபுரம் புதிய காலனியில் தேவிகாபுரம் -ஆரணி சாலையில் அம்பேத்கர் முழு உருவச்சிலை உள்ளது. இந்தச் சிலைக்கு புரட்சி அம்பேத்கர் நூற்றாண்டு இயக்கத்தினர் மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். மேலும், பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஓன்றியத் தலைவர் கே.ஏழுமலை தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் கே.ஆர்.அலெக்சாண்டர் முன்னிலை வகித்தார். முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் விஎம்டி.வெங்கடேசன், ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் சித்ராபிச்சாண்டி, கே.சி.சண்முகம் மற்றும் புரட்சி அம்பேத்கர் நூற்றாண்டு இயக்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/16/அம்பேத்கர்-பிறந்த-நாள்-விழா-2901268.html
2901266 சென்னை திருவண்ணாமலை தமிழ் கலை இலக்கியத் திருவிழா DIN DIN Monday, April 16, 2018 09:41 AM +0530 வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பில், சங்கத்தின் 5-ஆம் ஆண்டு தொடக்க விழா, கலை இலக்கியத் திருவிழா வந்தவாசியில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு சங்கத் தலைவர் அ.மு.உசேன் தலைமை வகித்தார். சங்கச் செயலர் பா.சீனிவாசன் வரவேற்றார். கவிஞர் வசீகரன் வந்தை கவிஞர்களின் கவிதை உலாவை தொடக்கி வைத்தார். கடந்த பொதுத்தேர்வில் தமிழில் முதலிடம் பெற்ற வந்தவாசி பகுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் தமிழ் ஆசிரியர்களுக்கு கவிஞர் கார்முகிலோன் பரிசுகளை வழங்கினார்.
கவிஞர் மு.முருகேஷ் எழுதிய குழந்தைகளால் அழகாகும் 
பூமி என்ற நூலை திரைப்பட இயக்குநர் பிருந்தா சாரதி வெளியிட, இரா.சிவக்குமார் பெற்றுக்கொண்டார்.
விழாவில், சங்க துணைத் தலைவர்கள் சு.அசோக்குமார், பீ.ரகமத்துல்லா, செயற்குழு உறுப்பினர் பிரேம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சங்கப் பொருளாளர் தேவா நன்றி கூறினார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/16/தமிழ்-கலை-இலக்கியத்-திருவிழா-2901266.html
2901264 சென்னை திருவண்ணாமலை அரசுப் பள்ளியில்  கூடுதல் கட்டடம் கட்ட பூமிபூஜை DIN DIN Monday, April 16, 2018 09:41 AM +0530 சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் கூடுதல் கட்டடம் கட்ட ஞாயிற்றுக்கிழமை பூமிபூஜை நடைபெற்றது  .
தேவிகாபுரம் ஊராட்சியில் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை தமிழ், ஆங்கில வழியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்தப் பள்ளிக்கு மாவட்ட ஆட்சியர் அண்மையில் ஆய்வுக்காக வந்தபோது, பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாததால் மரத்தடியில் பாடம் படிப்பதாகவும், எனவே, கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தர வேண்டும் என்றும் மாணவிகள் கோரிக்கை விடுத்தனர்.
அதனடிப்படையில், இந்தப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ், ரூ. ஒரு கோடியே 50 லட்சத்தில் 8 வகுப்பறைகள், 2 அறிவியல் ஆய்வகங்கள் கட்ட மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி அனுமதி வழங்கினார். இதையடுத்து, தேவிகாபுரம் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் கூடுதல் கட்டடம் கட்ட பூமிபூஜை ஞாயிற்றுக்கிழமை பூமிபூஜை நடைபெற்றது. இதில், தலைமைச் செயற்பொறியாளர் அமுதா, முன்னாள் மாவட்டக் கவுன்சிலர் ஜெயசங்கரமூர்த்தி, முன்னாள் ஊராட்சித் தலைவர் ராதாஅம்மாள், முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர்கள் மண்ணம்மாள், ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் சித்ரா, பள்ளித் தலைமை ஆசிரியர்  சரவணன், ஒப்பந்ததாரர் சங்கர், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சின்னதுரை, செயலர் ஜெயராமன், கல்வி மேலாண்மைக் குழுத் தலைவர் நாகரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/16/அரசுப்-பள்ளியில்--கூடுதல்-கட்டடம்-கட்ட-பூமிபூஜை-2901264.html
2901263 சென்னை திருவண்ணாமலை வருவாய்த் துறை அமைச்சருக்குப் பாராட்டு விழா நடத்த ஆலோசனை DIN DIN Monday, April 16, 2018 09:41 AM +0530 ஆரணியில் வரும் 18-ஆம் தேதி வருவாய்த் துறை அமைச்சருக்கு பாராட்டு விழா நடத்துவது குறித்த அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு சார்பில், ஆரணி, போளூர், சேத்துப்பட்டு, கலசப்பாக்கம், ஜமுனாமரத்தூர் ஆகிய வட்டங்களை உள்ளடக்கி, ஆரணியைத் தலைமையிடமாகக் கொண்டு வருவாய்க் கோட்டம் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த 13-ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலி காட்சி மூலம் ஆரணி வருவாய்க் கோட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார்.
இந்த நிலையில், ஆரணி வருவாய்க் கோட்டம் அமைய நடவடிக்கை எடுத்ததற்காக ஆரணியில் வருவாய்த் துறை அமைச்சர் உதயக்குமாருக்கு அதிமுக சார்பில் வரும் 18-ஆம் தேதி பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான ஆலோசனைக் கூட்டம் ஆரணி எம்எல்ஏ அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின்போது, பாராட்டு விழாவுக்கு வருவாய்த் துறை அமைச்சர் உதயக்குமாரை மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகளுடன் வரவேற்பது குறித்தும், இந்த விழாவில் கட்சியினர் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதில், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் க.சங்கர், நகரச் செயலர் அசோக்குமார், ஒன்றியச் செயலர்கள்  பி.ஆர்.ஜி.சேகர், இராகவன், செல்வராஜ், நகர நிர்வாகி பாரிபாபு, மாவட்ட துணைச் செயலர்கள் டி.கருணாகரன், ரமணிநீலமேகம், பேரூராட்சிச் செயலர் பாண்டியன், முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் திருமால், பாசறை மாவட்டச் செயலர் ஜி.வி.கஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/16/வருவாய்த்-துறை-அமைச்சருக்குப்-பாராட்டு-விழா-நடத்த-ஆலோசனை-2901263.html
2901261 சென்னை திருவண்ணாமலை மதுக் கடையை அகற்றக் கோரி உண்ணாவிரதம் DIN DIN Monday, April 16, 2018 09:41 AM +0530 செய்யாறை அடுத்த அசனமாபேட்டை கிராமத்தில் அரசு மதுக் கடையை அகற்றக் கோரி, அந்தக் கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
அசனமாபேட்டை கிராமத்தில் தமிழக தன்னார்வத் தொண்டர்கள் சார்பில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும், அசனமாபேட்டை கூட்டுச்சாலைப் பகுதியிலும், பெருங்கட்டூர் கிராம எல்லையிலும் செயல்படும் 2 டாஸ்மாக் மதுக் கடைகளை மாநில அரசு அகற்றக் கோரியும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் என சுமார் 50 பேர் கலந்து கொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/16/மதுக்-கடையை-அகற்றக்-கோரி-உண்ணாவிரதம்-2901261.html
2901259 சென்னை திருவண்ணாமலை நெல் அறுவடை இயந்திரம் - லாரி மோதல்: 4 பேர் காயம் DIN DIN Monday, April 16, 2018 09:40 AM +0530 தண்டராம்பட்டு அருகே நெல் அறுவடை இயந்திரமும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் பலத்த காயமடைந்தனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் கிராமத்தில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு நெல் அறுவடை இயந்திரம் சென்றுகொண்டிருந்தது. இந்த இயந்திரத்தை ஆத்தூரைச் சேர்ந்த குமரேசன் (30) ஓட்டிச் சென்றார்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருவண்ணாமலையை அடுத்த வரகூர் அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி, நெல் அறுவடை இயந்திரம் மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில், லாரியில் வந்த விழுப்புரம் மாவட்டம், அகரம் கோட்டாளம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் (49), சரத்குமார் (19), அத்திக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (25), பச்சையம்மாள் (35) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
இவர்களை பொதுமக்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து வானாபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/16/நெல்-அறுவடை-இயந்திரம்---லாரி-மோதல்-4-பேர்-காயம்-2901259.html
2901258 சென்னை திருவண்ணாமலை வேட்டவலம் அருகே குடிநீர் கோரி பேருந்து சிறைபிடிப்பு DIN DIN Monday, April 16, 2018 09:40 AM +0530 வேட்டவலம் அருகே குடிநீர் கோரி அரசுப் பேருந்தை சிறைபிடித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேட்டவலத்தை அடுத்த பன்னியூர் கிராமம், பிள்ளையார் கோயில் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு அந்தப் பகுதி ஏரியில் உள்ள ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில், திடீரென கடந்த சில மாதங்களாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டதாம். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், ஞாயிற்றுக்கிழமை காலிக் குடங்களுடன் குடிநீர் கோரி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியே வந்த அரசுப் பேருந்தையும் பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த வேட்டவலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வீரமணி தலைமையிலான போலீஸார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.
விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டு, குடிநீர் வழங்கப்படும் என்று போலீஸார் அளித்த உறுதிமொழியை ஏற்று, பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டனர். மறியலால் அந்தச் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/16/வேட்டவலம்-அருகே-குடிநீர்-கோரி-பேருந்து-சிறைபிடிப்பு-2901258.html
2900631 சென்னை திருவண்ணாமலை அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை DIN DIN Sunday, April 15, 2018 04:11 AM +0530 அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் சனிக்கிழமை மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக சார்பில், திருவண்ணாமலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகரச் செயலர் ப.கார்த்திவேல்மாறன் தலைமை வகித்தார். மாவட்ட துணை அமைப்பாளர்கள் ஏ.கே.ரத்தினகுமார், அ.மோகன்ராஜ், நகர அமைப்பாளர் பி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும், எம்எல்ஏவுமான எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில், திமுக மாவட்ட துணைச் செயலர் சாவல்பூண்டி மா.சுந்தரேசன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.என்.அண்ணாதுரை, மருத்துவர் எ.வ.வே.கம்பன், நகராட்சி குழுத் தலைவர் குட்டி க.புகழேந்தி, வழக்குரைஞர் அ.அருள்குமரன், அனைத்து அமைப்புசாரா தொழில் சங்கங்களின் மாவட்டத் தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதிமுக சார்பில்...: திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகரச் செயலர் ஜெ.செல்வம் தலைமை வகித்தார். தெற்கு மாவட்டச் செயலர் பெருமாள் நகர் கே.ராஜன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.
மற்ற கட்சியினர்..: இதேபோல, அமமுக சார்பில் தெற்கு மாவட்டச் செயலர் எஸ்.ஆர்.தருமலிங்கம், பாஜக சார்பில் மாவட்டத் தலைவர் எஸ்.நேரு, காங்கிரஸ் சார்பில் நகரத் தலைவர் என்.வெற்றிச்செல்வன், மதிமுக சார்பில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் சீனி.கார்த்திகேயன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்டச் செயலர் பி.கே.அம்பேத்வளவன், அருந்ததி மக்கள் கட்சி சார்பில் மாநில நிதிச் செயலர் ஆர்.சத்தியமூர்த்தி ஆகியோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.
ஆரணி
அதிமுக: ஆரணி அதிமுக சார்பில் மாவட்டப் பிரதிநிதி ஏ.இ.சண்முகம், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். இதில், நகரச் செயலர் அசோக்குமார், ஒன்றியச் செயலர் பி.ஆர்.ஜி.சேகர், நகர நிர்வாகி பாரிபாபு, முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் அ.கோவிந்தராசன், முன்னாள் எம்எல்ஏ ஜெமினி ராமச்சந்திரன், ஆ.பெ.வெங்கடேசன், மாமண்டூர் சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திமுக: திமுக சார்பில் மாவட்டப் பிரதிநிதி ஆ.சி.ஆரோன் தலைமையில், வடக்கு மாவட்டச் செயலர் ஆர்.சிவானந்தம், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். உடன், முன்னாள் எம்எல்ஏ தயாநிதி, ஒன்றியச் செயலர்கள் தட்சிணாமூர்த்தி, அன்பழகன், சுந்தர், இலக்கிய அணி மாவட்டச் செயலர் விண்ணமங்கலம் ரவி, மாவட்டப் பிரதிநிதி கே.டி.ராஜேந்திரன், நகர நிர்வாகிகள் ஆர்.தயாளன், பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ்: காங்கிரஸ் கட்சி சார்பில், எஸ்.சி, எஸ்.டி பிரிவு நகரத் தலைவர் வி.செளந்தரராஜன் தலைமையில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நடைபெற்றது. அம்பேத்கர் சிலைக்கு காங்கிரஸ் நகரத் தலைவர் டி.ஜெயவேலு மாலை அணிவித்தார்.
எஸ்.சி, எஸ்.டி பிரிவு மாவட்டத் தலைவர் பி.சேகர் இனிப்புகளை வழங்கினார். இதில் முன்னாள் எம்எல்ஏ ராஜாபாபு, நகரச் செயலர் எம்.பழனி, நிர்வாகிகள் எஸ்.சிவபாண்டியன், பி.பாஸ்கர், பி.சம்பத், நேத்தபாக்கம் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விடுதலைச் சிறுத்தைகள்: ஆரணியை அடுத்த சேவூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, கட்சிக் கொடியேற்றும் விழா நடைபெற்றது. விழாவுக்கு ஆரணி தொகுதிச் செயலர் என்.முத்து தலைமை வகித்தார். முகாம் செயலர் அபிஷேக், நகரச் செயலர் சண்முகம், அசோக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், ஆரணி அம்பேத்கர் சிலைக்கும் மாலை அணிவித்தனர்.
இதேபோல, தேமுதிக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.
வந்தவாசி
வந்தவாசியில் அதிமுக சார்பில் பழைய பேருந்து நிலையம் எதிரில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு எம்ஜிஆர் மன்ற மாவட்டத் தலைவர் ஜெ.பாலு, திமுக சார்பில் வந்தவாசி எம்எல்ஏ அம்பேத்குமார், மாவட்ட துணைச் செயலர் எம்.எஸ்.தரணிவேந்தன் ஆகியோர் மாலை அணிவித்தனர்.
இந்திய குடியரசுக் கட்சி சார்பில் மாவட்டத் தலைவர் வந்தை மோகன், மாவட்ட இளைஞரணிச் செயலர் சி.எஸ்.கௌரிசங்கர், தமிழ்நாடு அரசு எஸ்.சி., எஸ்.டி. அலுவலர் நலச் சங்கம் சார்பில் மாவட்டச் செயலர் ஈ.தசரதன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தொகுதிப் பொறுப்பாளர் மேத்தாரமேஷ் ஆகியோர் மாலை அணிவித்தனர். மேலும், பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் மாலை அணிவித்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/15/அம்பேத்கர்-சிலைக்கு-அரசியல்-கட்சியினர்-மரியாதை-2900631.html
2900630 சென்னை திருவண்ணாமலை செய்யாறு அரசுக் கல்லூரியில் ஆண்டு விழா DIN DIN Sunday, April 15, 2018 04:11 AM +0530 செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரி முதல்வர் ஆ.மூர்த்தி தலைமை வகித்தார். வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியர் தனஞ்செழியன், விலங்கியல் துறைத் தலைவர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், சிறப்பு விருந்தினராக வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ) வி.பெருவழுதி கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் இயற்பியல் துறைத் தலைவர் மணி, கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/15/செய்யாறு-அரசுக்-கல்லூரியில்-ஆண்டு-விழா-2900630.html
2900629 சென்னை திருவண்ணாமலை தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுக்குழுக் கூட்டம் DIN DIN Sunday, April 15, 2018 04:11 AM +0530 ஆரணியில் தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆரணி சார்பனார்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் க.அன்பழகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சி.என்.அன்புதினகரன் முன்னிலை வகித்தார். மாநில பொதுச்செயலர் இரா.தாஸ், மாநில துணைப் பொதுச்செயலர் மு.புருஷோத்தமன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தின்போது, அரசுப் பள்ளிகளில் அதிக மாணவர்களை சேர்ப்பது குறித்து ஆலோசித்தனர்.
இதில், நிர்வாகிகள் பி.சீனிவாசன், தெ.ஏழுமலை, எம்.சிவக்குமார், கு.சிவக்குமார், பொருளாளர் அ.கோவிந்தசாமி, ஆரணி வட்டார நிர்வாகிகள் கு.ரமேஷ், கே.ஸ்ரீப்ரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/15/தமிழக-ஆரம்பப்-பள்ளி-ஆசிரியர்-கூட்டணியின்-பொதுக்குழுக்-கூட்டம்-2900629.html
2900623 சென்னை திருவண்ணாமலை தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு DIN DIN Sunday, April 15, 2018 04:09 AM +0530 திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் உள்பட மாவட்டத்தின் அனைத்து கோயில்களிலும் ஸ்ரீவிளம்பி தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி, சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில், மூன்றாம் பிரகாரத்தில் உள்ள ஸ்ரீசம்பந்த விநாயகர் சன்னதியில் சனிக்கிழமை காலை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், தங்கக் கவசம் அணிந்து அருள்பாலித்த ஸ்ரீசம்பந்த விநாயகரை திரளான பக்தர்கள் வழிபட்டனர்.
தொடர்ந்து, சம்பந்த விநாயகர் சன்னதி எதிரே கோயில் சிவாச்சாரியார்கள் ஸ்ரீவிளம்பி தமிழ் வருட பஞ்சாங்கத்தை வாசித்து, இந்த ஆண்டில் கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழா விவரங்களைப் படித்தனர். இதையடுத்து, கோயில் அதிகாரிகள், உபயதாரர்கள், பக்தர்களுக்கு பஞ்சாங்கம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, காலை முதல் இரவு வரை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல, ஸ்ரீகற்பக விநாயகர் சன்னதி, சின்னக்கடைத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீதுர்க்கையம்மன் கோயில், ஸ்ரீபூதநாராயணப் பெருமாள் கோயில், வேங்கிக்கால் ஸ்ரீஓம்சக்தி கோயில், ஸ்ரீவிநாயகர் கோயில், திருவண்ணாமலையை அடுத்த சோமாசிபாடியில் உள்ள ஸ்ரீமுருகப்பெருமான் கோயில்களில் சனிக்கிழமை காலை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
செய்யாறில்...: செய்யாறை அடுத்த கூழமந்தல் 27 நட்சத்திர திருக்கோயிலில் விளம்பி தமிழ் புத்தாண்டையொட்டி, சனிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் உக்கம்பெரும்பாக்கம் கிராமத்துக்கு தெற்கில் கூழமந்தல் ஏரிக்கரையில் நட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலும், 27 நட்சத்திர அதிதேவதைகள் கோயில்களும், சனீஸ்வரர், ராகு, கேது பகவான் கோயில்களும் என அனைத்து கோயில்களும் ஒரு சேர அமைந்துள்ளன.
விளம்பி தமிழ் புத்தாண்டு உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்ததால், சனிக்கிழமை காலை நட்சத்திர விருட்ச விநாயகர், 27 நட்சத்திர அதிதேவதைகள், ராகு கேது, சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து, உத்திரட்டாதி நட்சத்திர அதிதேவதையான அகிர்புத்நியன் பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், நிகழாண்டுக்கான பஞ்சாங்கம் பக்தர்கள் முன்னிலையில் வாசிக்கப்பட்டது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/15/தமிழ்ப்-புத்தாண்டு-கோயில்களில்-சிறப்பு-வழிபாடு-2900623.html
2900622 சென்னை திருவண்ணாமலை விவசாயப் பயன்பாட்டுக்கு ஏரியில் மண் அள்ளும் பணி தொடக்கம் DIN DIN Sunday, April 15, 2018 04:09 AM +0530 திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயப் பயன்பாட்டுக்கு ஏரியில் மண் அள்ளும் பணியை செங்கத்தை அடுத்த காஞ்சி கிராமத்தில் உள்ள ஏரியில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி சனிக்கிழமை தொடக்கி வைத்தார்.
விவசாயிகள் பயன்பெறும் வகையில், நிலங்களை செம்மைப்படுத்தவும், ஏரிகள், குளங்களில் அதிகளவில் தண்ணீரை சேமிக்கும் வகையிலும், பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் அணைகளில் உள்ள வண்டல் மண்ணை இலவசமாக விவசாயிகளுக்கு வழங்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
அதனடிப்படையில், கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட காஞ்சியில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரியில் விவசாயப் பன்பாட்டுக்கு மண் அள்ளும் பணியை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தொடக்கி வைத்தார். பின்னர், ஆட்சியர் கூறியதாவது:
கிராமப்புறங்களில் பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் அணைகளில் விவசாயிகள் கட்டணம் ஏதும் இல்லாமல் விவசாயப் பயன்பாட்டுக்கு மண்ணை அள்ளிப் பயன்படுத்தலாம்.
அதற்கு முன்னதாக, விவசாய நிலத்தின் சிட்டா நகலுடன் தங்கள் பகுதியிலுள்ள வாட்டாட்சியர் அலுவலகத்தில் ஏரி, குளங்களில் மண் அள்ளுவது தொடர்பாக விவசாயிகள் பதிவு செய்து ஒப்புதல் பெற வேண்டும்.
தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஏரி, குளங்களுக்கு மண் அள்ள டிராக்டரை விவசாயிகள் கொண்டு சென்றால், அங்கு பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை சார்பில், பொக்லைன் இயந்திரம் மூலம் மண் அள்ளப்பட்டு, டிராக்டரில் ஏற்றி விடப்படும்.
பொக்லைன் இயந்திரத்துக்கு கட்டணமாக ஒரு டிராக்டரில் மண் பாரம் ஏற்ற ரூ.100 மட்டும் செலுத்த வேண்டும். விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வேளாண் நிலங்களை செம்மைப்படுத்திக் கொள்ளலாம் என்றார் அவர். திருவண்ணாமலை கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி, செங்கம் வட்டாட்சியர் ரேணுகா, போளூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சின்னராஜ், புதுப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் ராஜசேகரன், உதவிச் செயற்பொறியாளர் ராஜாராம் உள்பட வருவாய்த் துறையினர், பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள்
உடனிருந்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/15/விவசாயப்-பயன்பாட்டுக்கு-ஏரியில்-மண்-அள்ளும்-பணி-தொடக்கம்-2900622.html
2900621 சென்னை திருவண்ணாமலை பார்வையற்றோர் பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு DIN DIN Sunday, April 15, 2018 04:08 AM +0530 அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, சேத்துப்பட்டை அடுத்த பத்தியாவரம் அமலராக்கினி பார்வையற்றோர் பள்ளி மாணவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சனிக்கிழமை இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முகாம் செயலர் ஏழுமலை தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் பாலு, ஒன்றிய துணைச் செயலர் ராஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாம் செயலர் ஸ்டாலின் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக தொகுதிச் செயலர் பொன்.உதயகுமார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு இனிப்பு, பிஸ்கட் வழங்கினார். தொகுதி துணைச் செயலர் சேகர், அன்பு மற்றும் விடுதலைச் சிறுத்தை கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/15/பார்வையற்றோர்-பள்ளி-மாணவர்களுக்கு-இனிப்பு-2900621.html
2900620 சென்னை திருவண்ணாமலை துர்கையம்மன் கோயிலில் 108 பால்குட அபிஷேகம் DIN DIN Sunday, April 15, 2018 04:08 AM +0530 திருவண்ணாமலை ஸ்ரீதுர்க்கையம்மன் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி, சனிக்கிழமை 108 பால்குட அபிஷேகம் நடைபெற்றது.
திருவண்ணாமலை, கண்ணன் என்ஜினீயரிங் குழுமம் சார்பில், ஆண்டுதோறும் புத்தாண்டு தினத்தன்று 108 பால்குட அபிஷேகம், சுமங்கலி பூஜை நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, சனிக்கிழமை 108 பால்குட ஊர்வலமும், சுமங்கலிப் பூஜையும் நடைபெற்றன. திருவண்ணாமலை, சின்னக் கடைத்தெருவில் தொடங்கிய பால்குட ஊர்வலம் ஸ்ரீதுர்கையம்மன் கோயிலை வந்தடைந்தது.
இதையடுத்து, மூலவர் ஸ்ரீதுர்க்கையம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம், சிறப்புப் பூஜை, மகா தீபாராதனை நடைபெற்றன. நிகழ்ச்சியில், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செயலர் பெருமாள்நகர் கே.ராஜன், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலர் அருள்பழனி, மாவட்டத் தலைவர் இளவழகன், முன்னாள் கவுன்சிலர் டிஸ்கோ குணசேகரன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/15/துர்கையம்மன்-கோயிலில்-108-பால்குட-அபிஷேகம்-2900620.html
2900618 சென்னை திருவண்ணாமலை இளம் செஞ்சிலுவைச் சங்கக் கூட்டம் DIN DIN Sunday, April 15, 2018 04:07 AM +0530 வந்தவாசியை அடுத்த ஜப்திகாரணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இளம் செஞ்சிலுவைச் சங்கக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு பள்ளித் தலைமை ஆசிரியை மு.தேன்மொழி தலைமை வகித்தார். பள்ளி இளம் செஞ்சிலுவைச் சங்க ஆலோசகர் அ.இதாயத்துல்லாபேக் வரவேற்றார்.
தெள்ளாறு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் எல்.இராஜகோபால், ரா.செந்தமிழ், இளம் செஞ்சிலுவைச் சங்க ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் அ.மதுரை ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மேலும், ரத்த தானம் குறித்த பேச்சுப் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்களை அவர்கள் வழங்கினர்.
பள்ளி ஆசிரியர்கள் எஸ்.ராஜா, ஜெ.கதிர்வேல், எல்.லிடியா சொர்ணகுமாரி, வி.தர்மராஜ் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/15/இளம்-செஞ்சிலுவைச்-சங்கக்-கூட்டம்-2900618.html
2900617 சென்னை திருவண்ணாமலை பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழா- நடிகர் ஜீவா பங்கேற்பு DIN DIN Sunday, April 15, 2018 04:06 AM +0530 திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியின் 18-ஆவது ஆண்டு விழா, விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரி துணைத் தலைவர் எ.வ.குமரன் தலைமை வகித்தார். கல்லூரிச் செயலர் மா.புர்க்கிந்த்ராஜ், இயக்குநர் வி.ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ஜி.மோகன்குமார் வரவேற்றார்.
திரைப்பட நடிகர் ஜீவா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கிப் பேசினார்.
அப்போது, பொறியியல் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் தங்களது முழுக் கவனத்தையும் செலுத்தி கல்வி பயில வேண்டும். படிப்பை முடித்து வெளியே வரும்போது ஒரு நல்ல மாணவராக, மாணவியாக வெளியே வர வேண்டும். அண்மையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை மாணவர்கள் அமைதியாக நடத்தி வெற்றி கண்டனர் என்றார். தொடர்ந்து, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், கல்லூரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/15/பொறியியல்-கல்லூரியில்-ஆண்டு-விழா--நடிகர்-ஜீவா-பங்கேற்பு-2900617.html
2900616 சென்னை திருவண்ணாமலை முக்குரும்பை கிராமத்தில் அம்மா திட்ட முகாம் DIN DIN Sunday, April 15, 2018 04:06 AM +0530 போளூர் வட்டம், முக்குரும்பை கிராமத்தில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு வட்ட வழங்கல் அலுவலர் சசிகலா தலைமை வகித்து, முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், தோராயப்பட்டா, சிறு, குறு விவசாயிச் சான்று உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் கோரி பொதுமக்கள் அளித்த 25 மனுக்களைப் பெற்றார். பின்னர், 10 பேருக்கு சிறு, குறு விவசாயிச் சான்றுகளை அவர் வழங்கினார்.
முகாமில் மண்டல துணை வட்டாட்சியர் மஞ்சுளா, வருவாய் ஆய்வாளர் தமிழரசி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/15/முக்குரும்பை-கிராமத்தில்-அம்மா-திட்ட-முகாம்-2900616.html
2900615 சென்னை திருவண்ணாமலை உதவி ஆய்வாளரைத் திட்டியதாக 2 இளைஞர்கள் கைது DIN DIN Sunday, April 15, 2018 04:06 AM +0530 திருவண்ணாமலையில் பெண் காவல் உதவி ஆய்வாளரைத் திட்டியதாக 2 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வருபவர் இளவரசி. இவர், சில தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை - செங்கம் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாராம். அந்தச் சாலையில் உள்ள ஓம்சக்தி கோயில் அருகே சென்றபோது, பைக்கில் வந்த 2 பேர் உதவி ஆய்வாளர் இளவரசியை தகாத வார்த்தையால் திட்டினராம்.
இதுகுறித்து திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் இளவரசி புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிந்து, திருவண்ணாமலை, அக்னிலிங்கம் தெருவைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (25), திருவண்ணாமலை, வ.உ.சி. நகர், 4-ஆவது தெருவைச் சேர்ந்த அசோக்குமார் (29) ஆகியோரை கைது செய்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/15/உதவி-ஆய்வாளரைத்-திட்டியதாக-2-இளைஞர்கள்-கைது-2900615.html
2900614 சென்னை திருவண்ணாமலை பைக் மீது கார் மோதல்: இளைஞர் சாவு DIN DIN Sunday, April 15, 2018 04:06 AM +0530 திருவண்ணாமலை அருகே பைக் மீது கார் மோதியதில் பலத்த காயமடைந்த இளைஞர் உயிரிழந்தார்.
திருவண்ணாமலை, பே கோபுரம், 6-ஆவது தெருவைச் சேர்ந்தவர் குமரன் (37). இவர், சனிக்கிழமை திருவண்ணாமலையை அடுத்த கோலாப்பாடி பகுதியில் பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவ்வழியே வந்த கார் பைக் மீது மோதியது.
பின்னர், கட்டுப்பாட்டை இழந்த கார் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ மீதும் மோதியது. இந்த விபத்தில் பைக்கில் சென்ற குமரன், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீஸார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி, உடல்கூறு பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/15/பைக்-மீது-கார்-மோதல்-இளைஞர்-சாவு-2900614.html
2900613 சென்னை திருவண்ணாமலை கங்கவரம் ஊராட்சியில் ரத்த தான முகாம் DIN DIN Sunday, April 15, 2018 04:05 AM +0530 கலசப்பாக்கத்தை அடுத்த கங்கவரம் ஊராட்சியில் அரசு மருத்துவமனை, தந்தைதாய் அறக்கட்டளை இணைந்து ரத்த தான முகாமை வெள்ளிக்கிழமை நடத்தின.
சட்டமேதை அம்பேத்கரின் 125-ஆவது பிறந்த நாளையொட்டி நடத்தப்பட்ட இந்த முகாமை கலசப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் குமார் தலைமை வகித்து தொடக்கி வைத்தார்.
கடலாடி வட்டார மருத்துவர் மணிகண்டபிரபு, ஆதமங்கலம்புதூர் அரசு மருத்துவர் திருமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தந்தைதாய் அறக்கட்டளை நிர்வாகி ராஜ்குமார் வரவேற்றார்.
இளைஞர்கள், தன்னார்வலர்கள் ரத்த தான முகாமில் கலந்து கொண்டு ரத்தத்தை தானமாக வழங்கினர். தீண்டாமை ஒழிப்பு உறுப்பினர் செல்வம், மக்கள் புரட்சிக் கழக நிர்வாகி வர்கீஸ், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/15/கங்கவரம்-ஊராட்சியில்-ரத்த-தான-முகாம்-2900613.html
2900600 சென்னை திருவண்ணாமலை செய்யாறு அருகே சிறுமி பலாத்காரம்: 2 பேர் கைது DIN DIN Sunday, April 15, 2018 04:01 AM +0530 திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்ததாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
வெம்பாக்கம் வட்டத்திலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை அதே கிராமத்தைச் சேர்ந்த எத்திராஜ் (25), சக்திவேல் (30) ஆகிய இருவரும் கடந்த 2016 அக்டோபர் மாதம் முதல் மிரட்டி, பலாத்காரம் செய்து வந்தனராம்.
மேலும், சிறுமியை பலாத்காரம் செய்ததை செல்லிடப்பேசியில் படம் பிடித்து அதைக் காட்டி மிரட்டியும் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்தனராம். இதன் காரணமாக அந்தச் சிறுமி கர்ப்பிணியானதாகத் தெரிகிறது. இதனையறிந்த பெற்றோர் சிறுமியிடம் கேட்டபோது, எத்திராஜ், சக்திவேல் ஆகிய இருவரும் பலாத்காரம் செய்ததாகத் தெரிவித்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி, செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், காவல் நிலைய ஆய்வாளர் புனிதா வழக்குப் பதிவு செய்து, எத்திராஜ், சக்திவேல் ஆகிய இருவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்து செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/15/செய்யாறு-அருகே-சிறுமி-பலாத்காரம்-2-பேர்-கைது-2900600.html
2900585 சென்னை திருவண்ணாமலை காவிரி: மேட்டூரில் நாளை ஜி.கே.வாசன் ஆர்ப்பாட்டம் DIN DIN Sunday, April 15, 2018 03:56 AM +0530 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மேட்டூர் அணைப் பகுதியில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் திங்கள்கிழமை (ஏப்.16) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளார்.
இது தொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
காவிரி நதிநீர் கிடைக்காமல் தமிழக விவசாயம் நலிவடைந்து, விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. மத்திய அரசு இந்தப் பிரச்னையை தமிழக மக்களின் வாழ்வாதாரப் பிரச்னையாகக் கருதி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகாவது காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திருக்க வேண்டும். ஆனால் இன்னும் அதனை அமைக்கவில்லை.
எனவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய பாஜக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக திங்கள்கிழமை (ஏப்.16) காலை 10 மணி
அளவில் மேட்டூர் அணை பூங்கா எதிரில் ஆர்ப்பாட்டம் எனது (ஜி.கே.வாசன்) தலைமையில் நடைபெற உள்ளது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/15/காவிரி-மேட்டூரில்-நாளை-ஜிகேவாசன்-ஆர்ப்பாட்டம்-2900585.html
2900583 சென்னை திருவண்ணாமலை தமிழ்ப் புத்தாண்டு: அருணாசலேஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு DIN DIN Sunday, April 15, 2018 03:56 AM +0530 திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் உள்பட மாவட்டத்தின் அனைத்து கோயில்களிலும் ஸ்ரீவிளம்பி தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி, சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில், மூன்றாம் பிரகாரத்தில் உள்ள ஸ்ரீசம்பந்த விநாயகர் சன்னதியில் சனிக்கிழமை காலை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், தங்கக் கவசம் அணிந்து அருள்பாலித்த ஸ்ரீசம்பந்த விநாயகரை திரளான பக்தர்கள் வழிபட்டனர்.
தொடர்ந்து, சம்பந்த விநாயகர் சன்னதி எதிரே கோயில் சிவாச்சாரியார்கள் ஸ்ரீவிளம்பி தமிழ் வருட பஞ்சாங்கத்தை வாசித்து, இந்த ஆண்டில் கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழா விவரங்களைப் படித்தனர். இதையடுத்து, கோயில் அதிகாரிகள், உபயதாரர்கள், பக்தர்களுக்கு பஞ்சாங்கம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, காலை முதல் இரவு வரை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல, ஸ்ரீகற்பக விநாயகர் சன்னதி, சின்னக்கடைத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீதுர்க்கையம்மன் கோயில், ஸ்ரீபூதநாராயணப் பெருமாள் கோயில், வேங்கிக்கால் ஸ்ரீஓம்சக்தி கோயில், ஸ்ரீவிநாயகர் கோயில், திருவண்ணாமலையை அடுத்த சோமாசிபாடியில் உள்ள ஸ்ரீமுருகப்பெருமான் கோயில்களில் சனிக்கிழமை காலை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
செய்யாறில்...: செய்யாறை அடுத்த கூழமந்தல் 27 நட்சத்திர திருக்கோயிலில் விளம்பி தமிழ் புத்தாண்டையொட்டி, சனிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் உக்கம்பெரும்பாக்கம் கிராமத்துக்கு தெற்கில் கூழமந்தல் ஏரிக்கரையில் நட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலும், 27 நட்சத்திர அதிதேவதைகள் கோயில்களும், சனீஸ்வரர், ராகு, கேது பகவான் கோயில்களும் என அனைத்து கோயில்களும் ஒரு சேர அமைந்துள்ளன.
விளம்பி தமிழ் புத்தாண்டு உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்ததால், சனிக்கிழமை காலை நட்சத்திர விருட்ச விநாயகர், 27 நட்சத்திர அதிதேவதைகள், ராகு கேது, சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து, உத்திரட்டாதி நட்சத்திர அதிதேவதையான அகிர்புத்நியன் பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், நிகழாண்டுக்கான பஞ்சாங்கம் பக்தர்கள் முன்னிலையில் வாசிக்கப்பட்டது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/15/தமிழ்ப்-புத்தாண்டு-அருணாசலேஸ்வரர்-கோயிலில்-சிறப்பு-வழிபாடு-2900583.html
2900582 சென்னை திருவண்ணாமலை துர்கையம்மன் கோயிலில் 108 பால்குட அபிஷேகம் DIN DIN Sunday, April 15, 2018 03:56 AM +0530 திருவண்ணாமலை ஸ்ரீதுர்க்கையம்மன் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி, சனிக்கிழமை 108 பால்குட அபிஷேகம் நடைபெற்றது.
திருவண்ணாமலை, கண்ணன் என்ஜினீயரிங் குழுமம் சார்பில், ஆண்டுதோறும் புத்தாண்டு தினத்தன்று 108 பால்குட அபிஷேகம், சுமங்கலி பூஜை நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, சனிக்கிழமை 108 பால்குட ஊர்வலமும், சுமங்கலிப் பூஜையும் நடைபெற்றன. திருவண்ணாமலை, சின்னக் கடைத்தெருவில் தொடங்கிய பால்குட ஊர்வலம் ஸ்ரீதுர்கையம்மன் கோயிலை வந்தடைந்தது. இதையடுத்து, மூலவர் ஸ்ரீதுர்க்கையம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம், சிறப்புப் பூஜை, மகா தீபாராதனை நடைபெற்றன. நிகழ்ச்சியில், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செயலர் பெருமாள்நகர் கே.ராஜன், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலர் அருள்பழனி, மாவட்டத் தலைவர் இளவழகன், முன்னாள் கவுன்சிலர் டிஸ்கோ குணசேகரன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/15/துர்கையம்மன்-கோயிலில்-108-பால்குட-அபிஷேகம்-2900582.html
2900581 சென்னை திருவண்ணாமலை ஆரணி அருகே மாடு விடும் திருவிழாநெரிசலில் சிக்கி முதியவர் சாவு DIN DIN Sunday, April 15, 2018 03:55 AM +0530 திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த பூசிமலைக்குப்பம் கிராமத்தில் மாடு விடும் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி முதியவர் உயிரிழந்தார்.
தமிழ்ப் புத்தாண்டையொட்டி, பூசிமலைக்குப்பத்தில் கிராம மக்கள் சார்பில், மாடு விடும் திருவிழா நடைபெற்றது. இதில், 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இந்த விழாவைக் காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். அப்போது, ஏற்பட்ட நெரிசலில் சென்னாத்தூர்லாடவரத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (60) சிக்கி அருகிலுள்ள பள்ளத்தில் விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு, மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்தனர். அப்போது, கார்த்திகேயன் உயிரிழந்திருந்தது தெரியவந்தது. மேலும், நெரிசலில் சிக்கி 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்களுக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். விழாவில் முதியவர் உயிரிழந்தது தொடர்பாக ஆரணி கிராமிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/15/ஆரணி-அருகே-மாடு-விடும்-திருவிழாநெரிசலில்-சிக்கி-முதியவர்-சாவு-2900581.html
2899920 சென்னை திருவண்ணாமலை தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: நலிவடைந்த பிரிவினர்  மே 18-க்குள் விண்ணப்பிக்கலாம் DIN DIN Saturday, April 14, 2018 08:26 AM +0530 திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் நுழைவு நிலை வகுப்பில் நலிவடைந்த பிரிவினர் தங்களது பிள்ளைகளைச் சேர்க்க ஏப்ரல் 20 முதல் மே 18 வரை விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் தெரிவித்தார்.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தமிழகத்தில் உள்ள சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி மெட்ரிகுலேஷன் பள்ளிகள், மழலையர், தொடக்கப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த இடங்களில் நலிவடைந்த பிரிவினர், வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர், ஆதரவற்றவர், எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவுத் தொழிலாளியின் குழந்தை, மாற்றுத் திறனாளிகளின் குழந்தைகளை அவரவர் இருப்பிடத்துக்கு அருகே உள்ள பள்ளிகளில் சேர்க்கலாம்.
அதன்படி, 2018 - 2019ஆவது கல்வியாண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட இடங்களை முழுமையாக நிரப்பும் பொருட்டு மூன்றாம் கட்டமாக ‌w‌w‌w.‌d‌g‌e.‌t‌n.‌g‌o‌v.‌i‌n​ என்ற இணையதள முகவரியில் இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்கள், வட்டார வள மைய அலுவலகங்கள், திருவண்ணாமலை மற்றும் செய்யாறு மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், திருவண்ணாமலை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகம், திருவண்ணாமலை அனைவருக்கும் கல்வி இயக்கம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட மாவட்ட அலுவலகங்கள், திருவண்ணாமலை மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் ஆய்வாளர் அலுவலகம் ஆகிய அலுவலகங்களிலும் விண்ணப்பிக்கலாம்.
மேலும், திருவண்ணாமலை மாவட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் இயங்கும் இ-சேவை மையங்களிலும் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். மேற்குறிப்பிட்ட அலுவலகங்கள், சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகள் தாங்கள் சேர்க்கை வழங்கும் மொத்த இடங்கள் மற்றும் 25 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்கள், இதர விவரங்களை பொதுமக்களுக்குத் தெரியும் வண்ணம் தகவல் பலகையில் ஒட்ட வேண்டும்.
விண்ணப்பிக்கும்போது, மாணவர்களின் சமீபத்தில் எடுத்த புகைப்படம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கான சாதிச் சான்று மற்றும் இதரச் சான்று, ஆண்டு வருமானச் சான்று (இதர வகுப்பினருக்கு மட்டும்), பிறப்புச் சான்று உள்ளிட்ட சான்றுகளை விண்ணப்பத்துடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இந்தச் சலுகையை பெற விரும்புவோர் நலிவடைந்த பிரிவினராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/14/தனியார்-பள்ளிகளில்-25-இட-ஒதுக்கீடு-நலிவடைந்த-பிரிவினர்-மே-18-க்குள்-விண்ணப்பிக்கலாம்-2899920.html
2899919 சென்னை திருவண்ணாமலை செய்யாறு அருகே  40 யூனிட் மணல் பறிமுதல் DIN DIN Saturday, April 14, 2018 08:23 AM +0530 செய்யாறு அருகே சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 40 யூனிட் ஆற்று மணலை போலீஸார் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
செய்யாறை அடுத்த அருகாவூர் கிராமப் பகுதியில் செய்யாறு ஆற்றுப்படுகையில் இருந்து உரிய அனுமதியின்றி ஆற்று மணலை அள்ளி வந்து ஆற்றங்கரைப் பகுதியில் உள்ள புஷ்பராஜ் நிலத்தில் மர்ம நபர்கள் பதுக்கி வைத்திருப்பதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து, வருவாய்த் துறையினர் அளித்த தகவலின்பேரில், அருக்காவூர் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை செய்யாறு காவல் துணைக் கண்காணிப்பாளர் குனசேகரன் தலைமையிலான போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, போலீஸாரைக் கண்டதும் அந்தப் பகுதியில் மணல் அள்ளிக்கொண்டிருந்தவர்கள் லாரிகளையும், பொக்லைன் இயந்திரத்தையும் எடுத்துக் கொண்டு ஆற்றின் மறுகரை வழியாக தப்பியோடிவிட்டனர்.
இதையடுத்து, அந்தப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 40 யூனிட் மணலை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர், மாவட்ட ஆட்சியருக்கும், கனிவளத் துறைக்கும் போலீஸார் தகவல் தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து செய்யாறு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/14/செய்யாறு-அருகே--40-யூனிட்-மணல்-பறிமுதல்-2899919.html
2899918 சென்னை திருவண்ணாமலை இரு தரப்பினர் மோதல்:  ஒருவர் கைது DIN DIN Saturday, April 14, 2018 08:23 AM +0530 திருவண்ணாமலை அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
திருவண்ணாமலையை அடுத்த பறையம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (38). இவர், வியாழக்கிழமை தனது வீட்டுக்கு எதிரே உள்ள மின் கம்பத்தில் எரியாமல் இருந்த மின் விளக்கை சரி செய்தாராம். அப்போது, அந்த வழியே வந்த அதே பகுதியைச் சேர்ந்த ஜானகி (30), கோவிந்தராஜை ஆபாசமாகப் பேசினாராம்.
இதை கோவிந்தராஜின் மனைவி தங்கமணி தட்டிக் கேட்டாராம். இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ஜானகியின் கணவர் பரந்தாமன், அவரது உறவினர் அய்யனார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து தகராறில் ஈடுபட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர். இதுகுறித்து கோவிந்தராஜ், அய்யனார் ஆகியோர் தனித்தனியே தச்சம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் இரு தரப்பைச் சேர்ந்த 5 பேர் மீது வழக்குப் பதிந்து, ஜானகியின் கணவர் பரந்தாமனை கைது செய்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/14/இரு-தரப்பினர்-மோதல்--ஒருவர்-கைது-2899918.html
2899917 சென்னை திருவண்ணாமலை ஜமுனாமரத்தூரில் புதிய வட்டாட்சியர் அலுவலகம் திறப்பு DIN DIN Saturday, April 14, 2018 08:23 AM +0530 ஜமுனாமரத்தூர் புதிய வட்டமாக அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கு புதிதாக வட்டாட்சியர் அலுவலகத்தை காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
தொடர்ந்து, அந்த அலுவலகத்தில் குத்துவிளக்கேற்றி எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் பணிகளைத் தொடக்கி வைத்தார்.
ஜவ்வாதுமலையில் உள்ள ஜமுனாமரத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இந்த வட்டமானது போளூர் வட்டத்தில் இருந்து 17 கிராமங்களும், செங்கம் வட்டத்தில் இருந்து 14 கிராமங்களும், கலசப்பாக்கம் வட்டத்தில் இருந்து 3 கிராமங்களும் என 34 வருவாய் கிராமங்களை உள்ளடக்கியதாவும், நம்மியம்பட்டு, புலியூர் என 2 பிர்காக்களைக் கொண்டதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஜமுனாமரத்தூரில் வனத் துறை அலுவலகம் எதிரே உள்ள டோக்ரா இல்லத்தில் ஜமுனாமரத்தூருக்கான புதிய வட்டாட்சியர் அலுவலகத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
தொடர்ந்து, அந்த அலுவலகத்தில் கலசப்பாக்கம் எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் குத்துவிளக்கேற்றி பணிகளைத் தொடக்கி வைத்ததுடன், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஜானகி, ஆதிதிராவிடர் நல வட்டாட்சியர் புவனேஸ்வரி, அதிமுக ஒன்றியச் செயலர் திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/14/ஜமுனாமரத்தூரில்-புதிய-வட்டாட்சியர்-அலுவலகம்-திறப்பு-2899917.html
2899916 சென்னை திருவண்ணாமலை ஆரணி வருவாய்க் கோட்டம் தொடக்கம்: அலுவலகத்தை முதல்வர் திறந்துவைத்தார் DIN DIN Saturday, April 14, 2018 08:23 AM +0530 ஆரணியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய்க் கோட்ட அலுவலகத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலி காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி குத்து விளக்கேற்றி அலுவலகத்தை தொடக்கி வைத்து, இனிப்புகளை வழங்கினார்.
திருவண்ணாமலையில் கடந்தாண்டு தமிழக அரசு சார்பில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் ஆரணி, போளூர், கலசப்பாக்கம், ஜமுனாமரத்தூர் ஆகிய 4 வட்டங்களை உள்ளடக்கி, ஆரணியைத் தலைமையிடமாகக் கொண்டு 3-ஆவது புதிய வருவாய்க் கோட்டம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணை கடந்த 6-ஆம் தேதி வெளியானது.
இந்த நிலையில், ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் உள்ள கட்டடத்தில் ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய்க் கோட்டத்துக்கான தற்காலிக அலுவலகத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலம்  திறந்து வைத்தார்.
அப்போது, முதல்வருடன் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.
தமிழக முதல்வர் ஆரணி வருவாய்க் கோட்ட அலுவலகத்ததை தொடக்கி வைத்தவுடன் ஆரணியில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி குத்து விளக்கேற்றி அலுவலகத்தை தொடக்கி வைத்து, இனிப்புகளை வழங்கினார்.
விழாவில் ஆரணி எம்.பி. செஞ்சி சேவல் வெ.ஏழுமலை, முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் க.சங்கர், நகரச் செயலர் அசோக்குமார், ஒன்றியச் செயலர் பி.ஆர்ஜி.சேகர், நகர நிர்வாகி பாரி பி.பாபு, எம்ஜிஆர் மன்ற நிர்வாகி கோவிந்தராசன், மாவட்ட துணைச் செயலர் டி.கருணாகரன், பாசறை மாவட்டச் செயலர் ஜி.வி.கஜேந்திரன், முன்னாள் மாவட்டக் கவுன்சிலர் சேவூர் ஜெ.சம்பத், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் ப.திருமால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனிடையே, ஆரணியின் புதிய வருவாய்க் கோட்டாட்சியராக பொ.குணசேகரன்  பொறுப்பேற்றுக்கொண்டார். உடன், செய்யாறு கோட்டாட்சியர் 
அரிதாஸ் இருந்தார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/14/ஆரணி-வருவாய்க்-கோட்டம்-தொடக்கம்-அலுவலகத்தை-முதல்வர்-திறந்துவைத்தார்-2899916.html
2899915 சென்னை திருவண்ணாமலை பள்ளி மாணவர்கள்  வேளாண் களப்பயணம் DIN DIN Saturday, April 14, 2018 08:22 AM +0530 திருவண்ணாமலை விக்னேஷ் பன்னாட்டுப் பள்ளி மாணவ, மாணவிகள் வேளாண்மையின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளும் வகையில், வெள்ளிக்கிழமை வேளாண் களப் பயணம் மேற்கொண்டனர்.
அதன்படி, திருவண்ணாமலை இளந்தளிர் அமைப்பின் வழிகாட்டுதலின்படி, கோணலூர் கிராமத்துக்குச் சென்றனர். அங்கு, வேளாண் நிலத்தில் நாற்று நடுதல், உழுவுப் பணி மேற்கொள்ளுதல், களை எடுத்தல் உள்ளிட்ட பணிகளில் மாணவ, மாணவிகள் ஈடுபட்டனர். பின்னர், விவசாயம், அதன் முக்கியத்துவம், நெல் உற்பத்தியாகும் முறை குறித்து விவசாயிகளிடம் அவர்கள் கேட்டறிந்தனர். நிகழ்ச்சியில், பள்ளி நிர்வாகி டி.எஸ்.சவீதா, பள்ளி முதல்வர் சி.சிவக்குமார் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/14/பள்ளி-மாணவர்கள்--வேளாண்-களப்பயணம்-2899915.html
2899914 சென்னை திருவண்ணாமலை பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு DIN DIN Saturday, April 14, 2018 08:22 AM +0530 ஆரணி எஸ்பிசி பொறியியல் கல்லூரியில் எம்பிஏ துறை சார்பில், வங்கித் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரிச் செயலர் ஏ.சி.ரவி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர்  வி.திருநாவுக்கரசு,  நிர்வாக அலுவலர் ஏ.வினோத்குமார், துணை முதல்வர் ஆர்.வெங்கடரத்தினம், எம்பிஏ துறைத் தலைவர் கே.சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் எஸ்.ரகோத்தமன் வரவேற்றார். திருவண்ணாமலை விஜயா வங்கியின் முதுநிலை மேலாளர் சுரேஷ்நாகராஜன் கலந்து கொண்டு, வங்கித் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து சிறப்புரையாற்றினார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/14/பொறியியல்-கல்லூரியில்-கருத்தரங்கு-2899914.html
2899913 சென்னை திருவண்ணாமலை கல்லூரியில் கருத்தரங்கம் DIN DIN Saturday, April 14, 2018 08:22 AM +0530 திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியின் முதுகலை, தமிழாய்வுத் துறை சார்பில், தேசிய அளவிலான கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கு தொடக்க விழாவுக்கு கல்லூரித் தலைவர் எம்.என்.பழனி தலைமை வகித்தார். செயலரும், தாளாளருமான என்.குமார் முன்னிலை வகித்தார். தமிழ்த் துறைத் தலைவர் இரா.சங்கர் வரவேற்றார். செவ்வியல் இலக்கியங்களில் வாழ்வியல் கூறுகள் என்னும் பொருண்மையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில், திருவண்ணாமலை அரசு கலை, அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் வே.நெடுஞ்செழியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு ஆய்வுக் கோவையை வெளியிட்டார். முதல் பிரதியை கல்லூரிப் பொருளாளர் கோ.ராஜேந்திரகுமார் பெற்றுக்கொண்டார்.
வெள்ளிக்கிழமை பிற்பகல் கருத்தரங்கின் நிறைவு விழா நடைபெற்றது. விழாவில், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன இணைப் பேராசிரியர் ஆ.மணவழகன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கருத்தரங்கில் சிறந்த ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.
இதில், கல்லூரி அறக்கட்டளை உறுப்பினர்கள் பி.ராமச்சந்திர உபாத்யாயா, ஜி.புல்லையா, கலைமணி, கஸ்தூரி, ராஜகுமாரி, கல்விப்புல முதன்மையர் அழ.உடையப்பன், முதல்வர் கே.ஆனந்தராஜ், தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் க.குமார், கு.ரமேஷ் மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/14/கல்லூரியில்-கருத்தரங்கம்-2899913.html
2899912 சென்னை திருவண்ணாமலை மயானப் பாதை பிரச்னை: கோட்டாட்சியர் ஆய்வு DIN DIN Saturday, April 14, 2018 08:22 AM +0530 புதுப்பாளையம் ஒன்றியம், நாகப்பாடி கிராமத்தில் மயானப் பாதையில் பிரச்னைக்குரிய இடத்தை வியாழக்கிழமை மாலை திருவண்ணாமலை கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாகப்பாடி கிராமத்தில் மயானத்துக்குச் செல்லும் பாதை தனிநபரின் இடத்தின் வழியாகச் செல்வதால், கடந்த சில ஆண்டுகளாக அந்தப் பாதை வழியாக சடலங்களை எடுத்துச் செல்லும்போது பிரச்னை ஏற்படுகிறது. எனவே, இது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, நாகப்பாடி கிராம மக்கள் திருவண்ணாமலை கோட்டாட்சியர் உமாமகேஸ்வரியிடம் கடந்த வாரம் கோரிக்கை மனு அளித்தனர்.
அதனடிப்படையில், பிரச்னைக்குரிய இடத்தை கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, இரு தரப்பையும் அழைத்துப் பேசி நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார். அப்போது, செங்கம் வட்டாட்சியர் ரேணுகா உள்பட வருவாய்த் துறையினர், அந்தப் பகுதி மக்கள் உடனிருந்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/14/மயானப்-பாதை-பிரச்னை-கோட்டாட்சியர்-ஆய்வு-2899912.html
2899911 சென்னை திருவண்ணாமலை செய்யாறில் நாளை இலவச கண் பரிசோதனை முகாம்   DIN DIN Saturday, April 14, 2018 08:21 AM +0530 செய்யாறில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 15) இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது.
செய்யாறு கௌதம் நிதி நிறுவனத்தின் அன்னை செல்லம்மாள் அறக்கட்டளை, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை காலை இந்த முகாமை நடத்துகின்றன.
முகாமின்போது, கண்புரை அறுவைச் சிகிச்சை, கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து போன்ற குறைபாடுகள் உள்ளவர்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை மேற்கொள்ளப்படும். கண்ணில் குறைபாடு கண்டறியப்படுவோர் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களுக்கு ஐ.ஓ.எல். லென்ஸ் பொருத்துதல், அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படும். மேலும், மருந்து, தங்கும் வசதி, உணவு, போக்குவரத்து உள்பட அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/14/செய்யாறில்-நாளை-இலவச-கண்-பரிசோதனை-முகாம்-2899911.html
2899910 சென்னை திருவண்ணாமலை மஷார் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் DIN DIN Saturday, April 14, 2018 08:21 AM +0530 புதுப்பாளையம் ஒன்றியம், மஷார் கிராமத்தில் தமிழக அரசின் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமில் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 
70 பேர் கலந்து கொண்டு அரசின் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கக் கோரி மனுக்களை அளித்தனர். மனுக்களை பரிசீலனை செய்த வருவாய்த் துறையினர், தகுதிவாய்ந்த 50 மனுக்கள் மீது விரைவான நடவடிக்கை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, பயனாளிகளுக்கு செங்கம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி நலத் திட்ட உதவிகளை வழங்கினார். வருவாய் ஆய்வாளர் ஜெயபாரதி, கிராம நிர்வாக அலுவலர்கள் குணாநிதி, சசிகலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/14/மஷார்-கிராமத்தில்-அம்மா-திட்ட-முகாம்-2899910.html
2899909 சென்னை திருவண்ணாமலை கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியர் பொறுப்பேற்பு DIN DIN Saturday, April 14, 2018 08:20 AM +0530 கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியராக சி.ஜெயப்பிரகாஷ் நாராயணன்  வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றார்.
கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியராக இருந்த சுகுணா, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக பேரிடர் மேலாண்மை தனி வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதேபோல, திருவண்ணாமலை டாஸ்மாக் கிடங்கு மேலாளராகப் பணிபுரிந்து வந்த சி.ஜெயப்பிரகாஷ் நாராயணன், கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு, வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இவருக்கு சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் முருகன், வட்ட வழங்கல் அலுவலர் ஜான்பாஷா, தலைமையிடத்து தனி வட்டாட்சியர் சீத்தாராமன் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/14/கீழ்பென்னாத்தூர்-வட்டாட்சியர்-பொறுப்பேற்பு-2899909.html
2899908 சென்னை திருவண்ணாமலை போளூரில் பால் முகவரிடம் ரூ.60 ஆயிரம் திருட்டு DIN DIN Saturday, April 14, 2018 08:20 AM +0530 போளூரில் பால் முகவரிடம் ரூ.60 ஆயிரத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சேத்துப்பட்டை அடுத்த செய்யானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னிகவுண்டர் மகன் ஜெயராமன். இவர், அதே கிராமத்தில் பால் பண்ணை நடத்தி வருகிறார். இந்த நிலையில், ஜெயராமன் வியாழக்கிழமை பால் விற்ற பணமான ரூ.60 ஆயிரத்தை போளூர் கரூர் வைஸ்யா வங்கியில் தனது வங்கிக் கணக்கில் இருந்து எடுத்து இரு சக்கர வாகனத்தில் உள்ள பெட்டியில் வைத்துக்கொண்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.
போளூர் - சேத்துப்பட்டு சாலையில் ரெட்டை ஏரிக்கரை அருகே இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு ஜெயராமன் இயற்கை உபாதையைக் கழித்தாராம். அப்போது, மர்ம நபர்கள் ஜெயராமன் மீது மயக்க மருந்து தெளித்து அவரது இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.60 ஆயிரம் மற்றும் சொத்து பத்திரம், பல்வேறு வங்கிப் புத்தகங்கள் ஆகியவற்றை திருடிச் சென்றனராம். இதுகுறித்து போளூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/14/போளூரில்-பால்-முகவரிடம்-ரூ60-ஆயிரம்-திருட்டு-2899908.html
2899907 சென்னை திருவண்ணாமலை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி வந்தவாசியில் ஆசிரியர்கள்  கவன ஈர்ப்புப் பேரணி DIN DIN Saturday, April 14, 2018 08:20 AM +0530 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, வந்தவாசி ஒன்றிய ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்புப் பேரணி வந்தவாசியில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
வந்தவாசி தேரடியில் தொடங்கிய இந்தப் பேரணி பஜார் வீதி, பழைய பேருந்து நிலையம், கோட்டை மூலை வழியாக வட்டாட்சியர் அலுவலகம் முன் சென்றடைந்தது.
அங்கு, மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை விரைந்து அமைக்க வலியுறுத்தி ஆசிரியர்கள் எ.சபரிராஜ், வி.கார்த்திகேயன், சித்ரா, இந்திரா, விவசாயி மணி உள்ளிட்டோர் பேசினர். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/14/காவிரி-மேலாண்மை-வாரியம்-அமைக்கக்-கோரி-வந்தவாசியில்-ஆசிரியர்கள்-கவன-ஈர்ப்புப்-பேரணி-2899907.html
2899906 சென்னை திருவண்ணாமலை வேங்கிக்கால், உக்கல் கிராமங்களில் கிராம சபைக் கூட்டம் DIN DIN Saturday, April 14, 2018 08:20 AM +0530 தமிழ்நாடு மாநில சமூக தணிக்கைச் சங்கம், திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், வேங்கிக்கால், உக்கல் கிராமங்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.
திருவண்ணாமலையை அடுத்த வேங்கிக்கால் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு ஊரக வளர்ச்சித் துறை உதவிச் செயற்பொறியாளர் எம்.கொஞ்சியப்பன் தலைமை வகித்தார். மாவட்ட வள அலுவலர் (சமூக தணிக்கை) சி.மணிமாறன், வட்டார வள அலுவலர் (சமூக தணிக்கை) பி.ஏழுமலை, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஏ.ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் குளம் மேம்பாடு செய்தல், நீர் வரத்துக் கால்வாய்களை மேம்பாடு செய்தல், சாலையோரம் மரக்கன்றுகளை நடுதல் குறித்து விவாதிக்கப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், ஊராட்சியின் வரவு - செலவு கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டன.
கூட்டத்தில், வேங்கிக்கால் ஊராட்சிச் செயலர் எம்.சுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள், கிராம பொதுமக்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.
செய்யாறு: அனக்காவூர் ஒன்றியம், உக்கல் கிராமத்தில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு கிராமத்தின் மூத்த குடிமகன் விஜயகுமார் தலைமை வகித்தார். 2017 -  2018ஆம் ஆண்டில் தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து வட்டார வள அலுவலர் (சமூக தணிக்கை)  டி.வெங்கடேசன் குறிப்பிட்டார்.
சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்ற அனக்காவூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமாரி, உதவிச் செயற்பொறியாளர் (சாலைகள்) ஜெகன் ஹரா, ஒன்றியப் பணி மேற்பார்வையாளர் அண்ணாதுரை ஆகியோர் 2018 - 2019ஆம் ஆண்டில் புதிய பணிகளாக ஏரி தூர்வாறுதல், மரக்கன்றுகளை நடுதல் குறித்து தெரிவித்து தீர்மானங்களை நிறைவேற்றினர். கூட்டத்தின்போது, கிராம மக்கள் 6 பேர் பசுமை வீடு கோரி மனு அளித்தனர். ஏற்பாடுகளை ஊராட்சிச் செயலர் ஜாவீத் செய்திருந்தார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/14/வேங்கிக்கால்-உக்கல்-கிராமங்களில்-கிராம-சபைக்-கூட்டம்-2899906.html
2899905 சென்னை திருவண்ணாமலை விவசாயக் குழுக்களுக்கு ரூ.18.38 லட்சம் மதிப்பில் இயந்திரங்கள்: வேளாண் துறை வழங்கியது DIN DIN Saturday, April 14, 2018 08:19 AM +0530 அனக்காவூர் வட்டார வேளாண் துறை சார்பில், 3 விவசாயக் குழுக்களுக்கு ரூ.18.38 லட்சம் மதிப்பிலான விவசாய இயந்திரங்கள், கருவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
அனக்காவூர் வட்டாரத்தில் வேளாண்மைத் துறையின் கூட்டுப் பண்ணையம் திட்டன்கீழ், 5 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
இவற்றில், கோட்டகரம் உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கு ரூ.5 லட்சம் மானியத்துடன் சுமார் ரூ.6.13 லட்சம் மதிப்பிலான 2 நெல் நடவு இயந்திரங்களும், எச்சூர் உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கு ரூ.5 லட்சம் மானியத்துடன் சுமார் ரூ.6.12 லட்சம் மதிப்பில் டிராக்டரும், நர்மாபள்ளம் உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கு ரூ.5 லட்சம் மானியத்துடன் சுமார் ரூ.6.13 லட்சம் மதிப்பில் நெல் நடவு இயந்திரம், பவர் டில்லர், களையெடுக்கும் இயந்திரம் ஆகியவையும் கூட்டுப் பண்ணையம் திட்டத்தின் கீழ், அனக்காவூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை துணை வேளாண் அலுவலர் பெ.சம்பத், உதவி வேளாண் அலுவலர்கள் ப.முருகானந்தம், ச.வெங்கடேசன், த.புகழேந்தி, ரா.குமார், சண்முகசுந்தரம், ச.பாண்டியன் ஆகியோர் செய்திருந்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/14/விவசாயக்-குழுக்களுக்கு-ரூ1838-லட்சம்-மதிப்பில்-இயந்திரங்கள்-வேளாண்-துறை-வழங்கியது-2899905.html
2899904 சென்னை திருவண்ணாமலை கீழ்பென்னாத்தூர், வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உளுந்து கொள்முதல் செய்யும் திட்டம் தொடக்கம் DIN DIN Saturday, April 14, 2018 08:19 AM +0530 கீழ்பென்னாத்தூர், வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உளுந்து கொள்முதல் செய்யும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்ட வேளாண் விற்பனை, வேளாண் வணிகத் துறை, திருவண்ணாமலை விற்பனைக்குழு, கீழ்பென்னாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் இணைந்து தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையம் மூலம் உளுந்து கொள்முதல் செய்வதற்கான தொடக்க விழாவை வெள்ளிக்கிழமை நடத்தின.
கீழ்பென்னாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மாவட்ட வேளாண் இணை இயக்குநர் செண்பகராஜ் தலைமை வகித்தார். வேளாண் துறை (வேளாண் வணிகம்) தனி அலுவலர் நரசிம்மரெட்டி முன்னிலை வகித்தார். திருவண்ணாமலை விற்பனைக்குழுச் செயலர் எம்.மாரியப்பன் வரவேற்றார்.
மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு உளுந்து கொள்முதலை தொடக்கி வைத்தார். தொடர்ந்து, ஆட்சியர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
திருவண்ணாமலை மாவட்டத்தில் 43 ஆயிரம் விவசாயிகள் சுமார் 23 ஆயிரம் ஹெக்டேரில் உளுந்து பயிரிட்டுள்ளனர். ஒரு கிலோ உளுந்து கடந்த ஆண்டு ரூ.100 முதல் ரூ.130 வரை விற்கப்பட்டது.
நிகழாண்டு விலை சரிந்து ரூ.46 முதல் ரூ.49 வரை விற்கப்படுகிறது. இந்த விலை சரிவால் விவசாயிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, அரசு சார்பில் ஒரு கிலோ உளுந்து ரூ.54-க்கு விலை நிர்ணயம் செய்து, கொள்முதல் செய்யும் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்தத் திட்டம் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது. 
திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பென்னாத்தூர், வந்தவாசி பகுதிகளில் இந்தத் திட்டத்தின் கீழ் உளுந்து கொள்முதல் செய்யப்படுகிறது என்றார் அவர். 
விழாவில், திருவண்ணாமலை விற்பனைக்குழுக் கண்காணிப்பாளர் கே.கிருஷ்ணமூர்த்தி, கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியர் சி.ஜெயப்பிரகாஷ் நாராயணன், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் 
எஸ்.முருகன், மண்டல துணை வட்டாட்சியர் பரிமளா மற்றும் அதிகாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/14/கீழ்பென்னாத்தூர்-வந்தவாசி-ஒழுங்குமுறை-விற்பனைக்-கூடங்களில்-உளுந்து-கொள்முதல்-செய்யும்-திட்டம்-தொடக்-2899904.html