Dinamani - திருவள்ளூர் - http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2824669 சென்னை திருவள்ளூர் பிரசவித்த பெண் சாவு: பொதுமக்கள் சாலை மறியல் DIN DIN Tuesday, December 12, 2017 03:36 AM +0530 திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு பின்னர் பெண் இறந்ததையடுத்து அவரது உறவினர்கள், பொது மக்கள் 
சாலை மறியலில் ஈடுபட்டனர். 
ஊத்துக்கோட்டை அருகே உள்ள மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரின் மனைவி சிவசங்கரி(25).
இவர், பிரசவத்திற்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஞாயிற்றுக்கிழமை ஆண்குழந்தை பிறந்தது.
இந்நிலையில் பிரசவத்திற்குப் பிறகு சிவசங்கரிக்கு அதிக ரத்தப்போக்கின் காரணமாக உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சிவசங்கரி உயிரிழந்தார்.
இந்நிலையில், முறையாக சிகிச்சை அளிக்காததால்தான் அவர் உயிரிழந்தார். எனவே, மரணத்திற்கு இழப்பீடு தர வேண்டும் எனக் கோரி கூறி அப்பகுதி மக்கள் மாம்பாக்கம்-கிளாம்பாக்கம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 
நிகழ்விடத்துக்கு வந்த ஊத்துக்கோட்டை காவல் ஆய்வாளர் பரந்தாமன், பெரியபாளையம் உதவி ஆய்வாளர் வெங்கடேசன் உள்ளிட்ட போலீஸார் முன்னிலையில், சுகாதாரத் துறை இயக்குநர் சுவாதி, இணை இயக்குநர் தயாளன், ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் கிருபா உஷா ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 
துறை ரீதியாக விசாரணை நடத்தி பிரசவம் பார்த்த மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால், இப்பகுதியில் 7 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/12/w600X390/demand.JPG 7 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள். (உள்படம்) சிவசங்கரி. http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/dec/12/பிரசவித்த-பெண்-சாவு-பொதுமக்கள்-சாலை-மறியல்-2824669.html
2824668 சென்னை திருவள்ளூர் கழிப்பறையை மாணவர்கள் சுத்தம் செய்தது உண்மையா?: விடியோ காட்சி குறித்து கல்வி அதிகாரி ஆய்வு DIN DIN Tuesday, December 12, 2017 03:35 AM +0530 அரசு மேல்நிலைப் பள்ளியில், இரண்டு மாணவர்கள் கழிப்பறையை சுத்தம் செய்யும் விடியோ காட்சி சமூக வலைத் தளங்களில் பரவியதால், உண்மை நிலை அறிய மாவட்ட கல்வி அதிகாரி நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
திருத்தணி ஒன்றியம், கே.ஜி.கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளியில் மொத்தம், 923 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். 
இப்பள்ளி கழிப்பறையில் இரு மாணவர்கள் முகத்தில் கைக்குட்டை கட்டிக்கொண்டு துடைப்பத்தால் சுத்தம் செய்யும் விடியோ காட்சி சனிக்கிழமை சமூக வலைத் தளங்களில் வேகமாக பரவியது.
இதையடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் டி. ராஜேந்திரன், மாவட்ட கல்வி அலுவலர் குமாரசாமி ஆகியோர் பள்ளிக்கு வந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். 
அப்போது, கழிப்பறையை சுத்தம் செய்யும்படி மாணவர்களிடம் ஆசிரியர்கள் வற்புறுத்தினார்களா என்பது குறித்து கடிதம் எழுதித் தருமாறு அனைத்து மாணவர்களிடமும் அதிகாரிகள் அறிவுறுத்தினர். அதேபோல், அனைத்து ஆசிரியர்களும் கடிதம் மூலம் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். 
இதுகுறித்து டி.ராஜேந்திரன் கூறும்போது, பள்ளியில் நேரடியாக வகுப்புகளுக்கே சென்று மாணவர்களிடம் விசாரணை நடத்தி, கடிதம் மூலம் பதில் பெற்றோம். 
இதில் ஆசிரியர்கள் யாரும் மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்யச் சொல்லவில்லை என மாணவ, மாணவிகள் தெளிவாக எழுதியிருந்தனர். மேலும் கழிப்பறைகளுக்குச் சென்று ஆய்வு செய்தோம். பள்ளியில் கழிப்பறைகள் சுத்தமாக இருந்தன. 
விடியோ காட்சி வெளியானது வேண்டுமென்றே ஆசிரியர்களைப் பழிவாங்கும் செயலாகத்தான் உள்ளது. ஏனெனில், பள்ளியில் உள்ள பழுதடைந்த கழிப்பறை கடந்த ஓராண்டாக பூட்டியே உள்ளது. இந்த கழிப்பறையைத்தான் மாணவர்கள் சுத்தம் செய்வதுபோல் விடியோ காட்சியில் தெரிகிறது. 
இந்த செயலில் மாணவர்களே ஈடுபட்டார்களா அல்லது ஆசிரியர்கள் தூண்டுதல் பேரில் வேறு யாரேனும் ஈடுபட்டார்களா என மேலும் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/12/w600X390/school.JPG திருத்தணி கே.ஜி.கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடம் விசாரணை நடத்திய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் டி. ராஜேந்திரன். http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/dec/12/கழிப்பறையை-மாணவர்கள்-சுத்தம்-செய்தது-உண்மையா-விடியோ-காட்சி-குறித்து-கல்வி-அதிகாரி-ஆய்வு-2824668.html
2824667 சென்னை திருவள்ளூர் அடிப்படை வசதிகள் கோரி ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு DIN DIN Tuesday, December 12, 2017 03:35 AM +0530 திருவள்ளூர் அருகே அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி கிராம மக்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர். 
இதுகுறித்து, கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், தண்டலம் கிராம மக்கள் தெரிவித்திருப்பதாவது: 
தண்டலம் கிராமத்தில் சாலை, தெருவிளக்குகள், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் கிடையாது.
பேருந்து வசதி இல்லாததால் பள்ளி, மாணவிகள் பள்ளிக்கூடம் செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. தெருவிளக்குகள் இல்லை. வயல்வெளிகளில் விஷப்பூச்சிகளின் பெருக்கத்தால் பொதுமக்கள் அவதிப்படும் சூழ்நிலை உள்ளது. 
மேலும், பசுமைக் குடியிருப்புகள் மற்றும் இந்திரா நினைவுக் குடியிருப்புத் திட்ட பயனாளிகளுக்கு நிலுவைத் தொகை வழங்கியும், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை அளிக்காத ஊராட்சி செயலாளரை இட மாற்றம் செய்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, இந்திய கை பூ வேலை தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஆதித்தா தலைமையில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். 


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/12/w600X390/people.JPG அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த தண்டலம் கிராம மக்கள். http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/dec/12/அடிப்படை-வசதிகள்-கோரி-ஆட்சியரிடம்-கிராம-மக்கள்-மனு-2824667.html
2824666 சென்னை திருவள்ளூர் பேருந்துகள் நிறுத்தம்: பெரியபாளையத்தில் ஆர்ப்பாட்டம் DIN DIN Tuesday, December 12, 2017 03:34 AM +0530 கும்மிடிப்பூண்டியை அடுத்த பெரியபாளையத்தில் இயங்கி வந்த அரசுப் பேருந்துகள் திடீரென நிறுத்தப்பட்டதைக் கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியபாளையத்தைச் சுற்றியுள்ள வெங்கல், தாமரைப்பாக்கம், வடமதுரை, ஆவாஜிபேட்டை, மாளந்தூர், பூரிவாக்கம், திருக்கண்டலம், தண்டலம், ஏனம்பாக்கம் போன்ற கிராமங்கள் வழியாக மாநகரப் பேருந்துகள், விழுப்புரம் கோட்ட பேருந்துகள் என ஏறக்குறைய 30-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் இயங்கி வந்தன. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், வியாபாரிகள் உள்ளிட்ட பல தரப்பு மக்களும் பயனடைந்து வந்தனர்.
இந்நிலையில், மேற்கண்ட வழித்தடத்தில் இயங்கி வந்த சில பேருந்துகள் அடியோடு நிறுத்தப்பட்டுள்ளன. ஒரு சில பேருந்துகள் காலை, மாலை என நாள் ஒன்றுக்கு இரண்டு முறைகள் மட்டும் இயக்கப்படுகின்றன. இதனால், அனைத்துத் தரப்பு மக்களும் போக்குவரத்து வசதியின்றி அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, நிறுத்தப்பட்ட அனைத்துப் பேருந்துகளையும் இயக்க வேண்டும் என வலியுறுத்தி மாதர் சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர். ஆனால், இதுதொடர்பாக எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. 
இந்நிலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில், நிறுத்தப்பட்ட அனைத்து பேருந்துகளையும் மீண்டும் இயக்க வேண்டும் என வலியுறுத்தி பெரியபாளையம் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு மாதர் சங்க மாவட்ட பொருளாளர் ஏ.பத்மா, வாலிபர் சங்கத்தின் பகுதி செயலாளர் டி.சண்முகசுந்தரம் ஆகியோர் தலைமை வகித்தனர். 
இதில், மாநில செயற்குழு உறுப்பினர் எம்.மகாலட்சுமி, மாவட்ட தலைவர் கே.ரமா, மாவட்ட செயலாளர்கள் இ.மோகனா, என். கங்காதரன், என்.தினேஷ், முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ். கோபால், சிபிஎம் வட்டச் செயலாளர் ஏ.ஜி.கண்ணன் ஆகியோர் பேசினர். 
தகவல் அறிந்து வந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போக்குவரத்து அதிகாரிகள், தடம் எண் 505-பி, தடம் எண் 580-பி ஆகிய இரண்டு பேருந்துகளை உடனடியாக இயக்க உத்தரவிட்டனர். மேலும் மற்ற 27-பேருந்துகளையும் படிப்படியாக இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/12/w600X390/dyfi.JPG http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/dec/12/பேருந்துகள்-நிறுத்தம்-பெரியபாளையத்தில்-ஆர்ப்பாட்டம்-2824666.html
2824665 சென்னை திருவள்ளூர் மீன் வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்கக் கோரிக்கை DIN DIN Tuesday, December 12, 2017 03:34 AM +0530 திருவள்ளூரில் மீன் வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்க வலியுறுத்தி ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர். 
இதுகுறித்து திருவள்ளூர்-பெரியகுப்பம் பகுதி மீன் வியாபாரிகள் ஆட்சியர் எ.சுந்தரவல்லியிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: பெரியகுப்பம் கற்குழாய் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் கடந்த 50 ஆண்டுகளாக செயல்பட்டுவந்தன. 
இந்த மீன்கடைகளை நம்பி சைக்கிள் கூடை வியாபாரிகள், தலைச்சுமை வியாபாரிகள் என 400-க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் உள்ளனர். 
இந்த நிலையில் கூவம் ஆற்றுப் பகுதியில் மீன்கடைகள் ஆக்கிரமிப்பில் இருப்பதாகக் கூறி வருவாய்த்துறை அதிகாரிகள் கடந்த வாரம் கடைகளை அகற்றினர். 
இதனால், மீன் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளன. இத்தொழிலைத் தவிர்த்து வேறு எந்தத் தொழிலும் தெரியாத நிலையில் , கடந்த ஒருவாரமாக வருவாய் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். எங்களின் அவல நிலையை கருத்தில் கொண்டு மாற்று இடம் ஒதுக்கித் தர வேண்டுகிறோம் என மீன் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
இக் கோரிக்கையை ஏற்று, மாற்று இடம் வழங்குவது தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்து முடிவு எடுக்கப்படும் என ஆட்சியர் கூறியதைத் தொடர்ந்து மீன்வியாபாரிகள் கலைந்து சென்றனர்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/12/w600X390/fisher_man5.JPG http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/dec/12/மீன்-வியாபாரிகளுக்கு-மாற்று-இடம்-வழங்கக்-கோரிக்கை-2824665.html
2824664 சென்னை திருவள்ளூர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது DIN DIN Tuesday, December 12, 2017 03:33 AM +0530 இந்து கோயில்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனை கண்டித்து திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீஸார் கைது செய்தனர். 
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில், பஜார் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகரத் தலைவர் ரகுராமன் தலைமை வகித்தார். 
மாவட்ட செயலாளர்கள் கருணாகரன், ஆர்யா சீனிவாசன், பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
பொதுச்செயலாளர் அசின்குமார் வரவேற்புரை வழங்கினார். மாவட்ட தலைவர் லோகநாதன் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தார். 
இதில், கடந்த சில நாள்களுக்கு முன்பு பெரம்பூரில் நடைபெற்ற தலித் -முஸ்லிம் எழுச்சி மாநாட்டில் பங்கேற்று தொல். திருமாவளவன் இந்து கோயில்கள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. 
அப்போது, அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, 12 பெண்கள் உள்பட 80 பேரை திருவள்ளூர் போலீஸார் கைது செய்தனர். பின்னர், மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/12/w600X390/bjp.JPG http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/dec/12/ஆர்ப்பாட்டத்தில்-ஈடுபட்ட-பாஜகவினர்-கைது-2824664.html
2824663 சென்னை திருவள்ளூர் இன்று மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டம் DIN DIN Tuesday, December 12, 2017 03:32 AM +0530 திருவள்ளூரில், மாற்றுத்திறனாளிகள் குறைதீர் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் கை, கால், காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோர், பார்வைக் குறைபாடு, பார்வையற்றவர், மனவளர்ச்சி குன்றியவர், மூளை முடக்குவாதம், தொழுநோயால் பாதித்து குணமடைந்தோர், தசைச் சிதைவு நோய், மனநலம் பாதித்தோர், பல்வகை ஊனம் ஆகிய மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில், சிறப்பு குறை தீர்க்கும் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 12), காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. 
இதில் மாற்றுத் திறனாளிகள் அனைவரும் பங்கேற்று, குறைகளுக்கு காணலாம்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/dec/12/இன்று-மாற்றுத்-திறனாளிகள்-குறைதீர்-கூட்டம்-2824663.html
2824662 சென்னை திருவள்ளூர் பெண்ணிடம் நகை பறிப்பு DIN DIN Tuesday, December 12, 2017 03:32 AM +0530 அம்பத்தூரில் பெண்ணிடம் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர். 
அம்பத்தூர், பிரகாஷ் நகர் பாண்டியன் தெருவைச் சேர்ந்த ராமநாதனின் மனைவி விசாலாட்சி (59). இவர் சனிக்கிழமை மாலை அருகிலுள்ள மளிகை கடைக்குச் சென்றுவிட்டு, சோழன் தெருவழியாக வீடு திரும்பி கொண்டிருந்தார்.
இவரைப் பின்தொடர்ந்து பைக்கில் வந்த மர்ம ஆசாமிகள் விசாலாட்சியின் கழுத்திலிருந்த 9 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்தனர். அப்போது, சங்கிலி அறுந்ததால் 3 சவரன் எடையுள்ள துண்டுச் சங்கிலியுடன் மர்ம நபர்கள் தப்பிச்சென்றனர்.
இதுகுறித்து, விசாலாட்சி அளித்த புகாரின்பேரில், அம்பத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/dec/12/பெண்ணிடம்-நகை-பறிப்பு-2824662.html
2824661 சென்னை திருவள்ளூர் பைக் மீது டிராக்டர் மோதி ஒருவர் சாவு DIN DIN Tuesday, December 12, 2017 03:32 AM +0530 திருத்தணி அருகே பைக் மீது டிராக்டர் மோதிய விபத்தில் ஒருவர் இறந்தார். 
சித்தூர் மாவட்டம், விஜயபுரம் மண்டலம் பண்ணூர் எல்லசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த சுகுமார்(40), ஜெய வேலு(40). 
இருவரும் ஒரே பைக்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், கனகம்மா சத்திரத்தை அடுத்த பனப்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே வந்த டிராக்டர், பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயம் அடைந்த இருவரையும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 
பின்னர் மேல் சிகிச்சைக்காக, சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சுகுமார் திங்கள்கிழமை மதியம் இறந்தார். இதுகுறித்து கனகம்மாசத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/dec/12/பைக்-மீது-டிராக்டர்-மோதி-ஒருவர்-சாவு-2824661.html
2824660 சென்னை திருவள்ளூர் இலவச சைக்கிள்: எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவர்கள் DIN DIN Tuesday, December 12, 2017 03:31 AM +0530 பிளஸ் 1 மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா சைக்கிள்கள் இன்னும் வழங்கப்படாததால், நடப்பாண்டு சைக்கிள் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் மாணவர்கள் கவலையுடன் காத்திருக்கின்றனர். 
தமிழகத்தில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில், மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த மாணவிகள் அனைவருக்கும் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் திட்டம் 2001-02ஆம் ஆண்டு முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது. 
பின்னர், 2005-06ஆம் ஆண்டு முதல், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் அனைத்துப் பிரிவு மாணவ, மாணவியருக்கும் இத்திட்டத்தின் கீழ் சைக்கிள்கள் வழங்கப்பட்டு மாணவ, மாணவியர் பயனடைந்து வருகின்றனர்.
பள்ளி மாணவ, மாணவியருக்கு ஆண்டுதோறும் அளிக்கப்படும் இலவச பாடப்புத்தகம், சீருடை, பஸ் பாஸ், சைக்கிள் போன்றவற்றை, உரிய நேரத்தில் அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளிகளுக்கு கல்வித்துறை அறிவுறுத்தி இருந்தது. 
ஆனால், நடப்புக் கல்வியாண்டு தொடங்கி 6 மாதங்களாகி விட்ட நிலையில் இலவச சைக்கிள் வழங்குவது குறித்து அரசு இன்னமும் அறிவிப்பு வெளியிடவில்லை. இதனால் நெடுந்தொலைவிலிருந்து பள்ளிக்கு வரும் பிளஸ் 1 மாணவ, மாணவியர் கவலையடைந்துள்ளனர். 
காலையில், சிறப்பு வகுப்புகளுக்குச் செல்ல, போதிய பஸ் வசதியில்லாத பகுதி மாணவர்கள், குறிப்பிட்ட நேரத்துக்கு வரும் பஸ்சைப் பிடிக்க, காலை 7 மணிக்கு முன்னரே செல்கின்றனர். 
மாலைநேரத்தில், சிறப்பு வகுப்புகள் முடிந்து வீடு திரும்பும் மாணவர்கள் நெடுந்தூரம் நடந்தே செல்லவேண்டிய நிலையுள்ளது. 
உபகரணங்கள் வரவில்லை: இலவச சைக்கிள் வழங்குவதற்கு முன்பாக, சைக்கிள்களைப் பொருத்துவதற்கான உபகரணங்கள், ஒவ்வொரு பள்ளிக்கும் வழங்கப்படும். ஆனால், உபகரணங்களே இன்னும் வழங்கப்படாததால், சைக்கிள் கிடைக்குமா என மாணவ, மாணவியர் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். 
பிளஸ் 2 வகுப்பை முடித்த மாணவர்களுக்கு, இலவச மடிக்கணினி சமீபத்தில் வழங்கப்பட்டது. அவ்விழாக்களிலும், இலவச சைக்கிள் வழங்குவது குறித்து அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இதுகுறித்து அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது, 
இலவச சைக்கிள் பெறும் மாணவர்களின் பெயர்ப் பட்டியல் மாவட்ட கல்வித்துறையிடம் ஏற்கெனவே, சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் இலவச சைக்கிள் வழங்கும் பணி தொடங்கப்பட்டது. 
ஆனால், இந்த ஆண்டு அரையாண்டு தேர்வுகள் நடந்து வரும் நிலையிலும், இதுவரை எவ்வித அறிவிப்பும் வரவில்லை. முன்னதாகவே பெயர்ப் பட்டியல் அனுப்பப் பட்டுள்ளதால், அரசு அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/12/w600X390/cycle.jpg http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/dec/12/இலவச-சைக்கிள்-எதிர்பார்த்து-காத்திருக்கும்-மாணவர்கள்-2824660.html
2824659 சென்னை திருவள்ளூர் பாரதியார் பிறந்த நாள் விழா DIN DIN Tuesday, December 12, 2017 03:31 AM +0530 சென்னை, அம்பத்தூரில் மகாகவி பாரதியாரின் 135 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. 
அம்பத்தூர் சி.டி.எச். சாலையில் உள்ள அரசு தொழில் நுட்பப் பயிற்சி மைய வளாகத்தில் உள்ள மகாகவி பாரதியாரின் திரு உருவச் சிலைக்கு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர், தமிழ்மொழியைப் பாதுகாக்கவும், பாரதியாரின் பாடல்களையும், அவரின் கருத்துக்களையும் மக்களிடம் கொண்டு செல்லவும் உறுதிமொழி ஏற்கப்பட்டது. 
இதைத் தொடர்ந்து அம்பத்தூர் நூலகத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த பாரதியின் படத்திற்கும் மாலை அணிவித்தனர். 
இந்நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் இ.பாக்கியம், தாட்சாயிணி, சி.சுந்தர்ராஜ், ச.பால்சாமி, லெனின் சுந்தர், உதயா, என்.கணேசன், பிரபு, தீபா, பி.யு.சுனிதா, எம்.சுதர்சனம், கோபி, ஜான்சி, குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/12/w600X390/ambattur.JPG அம்பத்தூரில் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர். http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/dec/12/பாரதியார்-பிறந்த-நாள்-விழா-2824659.html
2824658 சென்னை திருவள்ளூர் சோழவரம் அருகே இளைஞர் சடலம் மீட்பு DIN DIN Tuesday, December 12, 2017 03:29 AM +0530 சோழவரம் அருகே மழை நீர் கால்வாயில் இறந்த நிலையில் கிடந்த இளைஞரின் சடலத்தை போலீஸார் மீட்டனர். 
சோழவரம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட அலமாதி பகுதியில் உள்ள மழை நீர் கால்வாயில் இளைஞர் ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. 
இதையடுத்து அங்கு சென்ற போலீஸார் இளைஞரின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில் இறந்து போன நபர் சென்னை கொளத்தூரைச் சேர்ந்த கதிரவன்(18) என தெரிய வந்தது. 
மேலும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர், அண்மையில் புதிதாக வாங்கிய பைக்கில் திருவள்ளூர் அருகே கீழானூரில் உள்ள கோவிலுக்குச் செல்வதாகக் கூறிச் சென்றவர், கால்வாயில் சடலமாக கிடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து சோழவரம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/dec/12/சோழவரம்-அருகே-இளைஞர்-சடலம்-மீட்பு-2824658.html
2821615 சென்னை திருவள்ளூர் திருவள்ளூர் அருகே கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம் DIN DIN Thursday, December 7, 2017 04:40 AM +0530 திருவள்ளூர் அருகே கடந்த 30 ஆண்டுகளாக நீடித்திருந்த கால்வாய் ஆக்கிரமிப்புகளை வருவாய் மற்றும் பொதுப்பணித் துறையினர் செவ்வாய்க்கிழமை அகற்றினர். 
திருவள்ளூர் அருகே நத்தம்மேடு கிராமத்தில் 450 ஏக்கர் பரப்பளவில் பாக்கம் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி நிரம்பினால் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒன்றைரை கி.மீ. தொலைவுள்ள கால்வாய் வழியாக 76 ஏக்கர் பரப்பளவு கொண்ட தாங்கல் ஏரிக்கு சென்றடையும். அங்கிருந்து விவசாய பாசனத்துக்கு திறந்து விடப்படும். இந்த ஏரியின் மூலம் 500 ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. ஆனால், கடந்த 30 ஆண்டுகாலமாக மேற்படி, 10 முதல் 20 மீட்டர் வரையில் உள்ள ஒன்றரை கி.மீ. தொலைவுக்கு கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இந்த கால்வாய் வீட்டு மனை விற்பனையாளர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு சாலைகளாகவும், சுற்றுச்சுவர் மற்றும் வீடுகள் மூலம் ஆக்கிரமிப்பு செய்தும் மறைக்கப்பட்டிருந்தது. 
இதனால் கடந்த 30 ஆண்டுகாலமாக ஒவ்வொரு பருவ மழையின் போதும், நத்தமேடு கிராமத்தில் உள்ள பாலாஜி நகர், ராகவேந்திரா நகர், எம்.எஸ்.ராயல்கேட், குமரன் நகர், தணிகாசலம் நகர், பெருமாள்புரம் உள்ளிட்ட 20 -க்கும் மேற்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அதிகாரிகளிடம் புகார் செய்தனர். இதன் அடிப்படையில், ஆட்சியர் எ.சுந்தரவல்லி உடனே ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீர் கால்வாய்களை அமைக்க வருவாய்த் துறைக்கும், பொதுப்பணித் துறைக்கும் உத்தரவிட்டார். 
இதையடுத்து, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளில் வட்டாட்சியர் தமிழ்செல்வன், வருவாய் ஆய்வாளர் முரளி, கிராம நிர்வாக அலுவலர் புகழேந்தி, பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி செயற்பொறியாளர் பாபு உள்ளிட்டோர் வரைபட உதவியுடன் ஆய்வு மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து கடந்த 30 ஆண்டுகாலமாக 31 வீடுகள் மற்றும் வேலி அமைத்து நிலைபெற்றிருந்த ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர். 
தொடர்ந்து, பெரிய ஏரியில் இருந்து தாங்கல் ஏரி வரையில் 1,800 மீட்டர் தொலைவுக்கு மீண்டும் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், எக்காரணம் கொண்டும் ஆக்கிரமிப்பு செய்வதிலிருந்து பாதுகாக்கும் வகையில் எச்சரிக்கைப் பலகையும் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/7/w600X390/nathamedu.JPG நத்தம்மேடு பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை பார்வையிடும் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன். http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/dec/07/திருவள்ளூர்-அருகே-கால்வாய்-ஆக்கிரமிப்புகள்-அகற்றம்-2821615.html
2821614 சென்னை திருவள்ளூர் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் DIN DIN Thursday, December 7, 2017 04:40 AM +0530 திருவள்ளூர் அருகே கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி புதன்கிழமை பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
கடம்பத்தூர் ஊராட்சியைச் சேர்ந்த வெண்மனம்புதூர் கிராமத்தை அடுத்து பணப்பாக்கம் ஏரி உள்ளது. 
இந்த ஏரி நிரம்பினால், உபரிநீர் வெண்மனம்புதூர் ஏரிக்குச் செல்லும் வகையில் 2 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் அமைக்கப்பட்டிருந்தது. இக் கால்வாய் குடியிருப்புதாரர்கள் மற்றும் விளைநிலங்களைச் சேர்ந்தோரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. 
இதனால், மழைக்காலங்களில் செஞ்சி பணப்பாக்கம் ஏரியில் இருந்து வரும் உபரி நீர் செல்ல வழியில்லாமல் வெண்மனம் புதூர் கிராமத்தில் உள்ள குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்து விடுகிறது. இதனால் மழை பெய்யும் போதெல்லாம் இப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக பல்முறை மாவட் ட நிர்வாகம் மற்றும் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஆணையாளரிடம் புகார் தெரிவித்த நிலையிலும் எவ்விதமான நடவடிக்கை இல்லை.
இதையடுத்து, அடுத்த மழைக்காலம் வருவதற்குள் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வலியுறுத்தி கடம்பத்தூர்-விடையூர் சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
தகவல் அறிந்து, கடம்பத்தூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கால்வாயை தூர்வாருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.  

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/7/w600X390/puthur.JPG http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/dec/07/ஆக்கிரமிப்பை-அகற்ற-வலியுறுத்தி-பொதுமக்கள்-சாலை-மறியல்-2821614.html
2821613 சென்னை திருவள்ளூர் அம்பேத்கர் நினைவு நாள்:மாலை அணிவித்து மரியாதை DIN DIN Thursday, December 7, 2017 04:39 AM +0530 அம்பேத்கரின் 61-ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அரசியல் கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. 
திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவிப்பு நடைபெற்றது. அப்போது, மாவட்ட செயலாளர் சா.மு.நாசர், திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், முன்னாள் மக்களவை உறுப்பினர் கிருஷ்ணசாமி ஆகியோர் பங்கேற்றனர். 
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வைத்திருந்த அம்பேத்கர் புகைப்படத்திற்கு, தகுதி நீக்கம் செய்யப்பட்ட பூந்தமல்லி எம்எல்ஏ ஏழுமலை மாலை அணிவித்தார். 
புத்தர் உடற்பயிற்சிக் கூடம் சார்பில் மரியாதை : திருவள்ளூர் மணவாளநகர் ஆ யில் மில் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு, புத்தர் உடற்பயிற்சிக் கூட நிறுவனர், தமிழக முன்னாள் ஆணழகன் து.சீனிவாசன் மற்றும் பயிற்சிக்கூட மாணவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில், தமிழக முன்னாள் ஆணழகர்கள் ஆர்.யுரேந்திரன், பா.ஸ்ரீராமுலு, ஆ.ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கும்மிடிப்பூண்டியில்...
 பெரியபாளையம் அருகே குமரப்பேட்டையில் அம்பேத்கர் நினைவு நாளை ஒட்டி பகுஜன் சமாஜ் கட்சியினர் நல உதவிகள் வழங்கினர்.
குமரப்பேட்டை பழங்குடியின குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு பகுஜன் சமாஜ் கட்சி தொகுதித் தலைவர் ஜெ.ஜீவா தலைமை வகித்தார். 
கட்சி நிர்வாகிகள் இ.சரவணன், ஆர்.நாகராஜ், ஜி.விவேக்பாபு, ஏ.திருமலை, எஸ்.தங்கராஜ், ஆர்.வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, 100 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு பாய், போர்வை, தலையணை போன்றவை வழங்கப்பட்டன. 
நிகழ்வில், மாவட்ட செயலாளர் ஏ.டி.எஸ்.ஆனந்தன், பெரியபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஜி.டி.வேலுமயில் ஆகியோர் பங்கேற்றனர்.
முன்னதாக, பெரியபாளையம் பேருந்து நிலையம், கும்மிடிப்பூண்டி சாணாபுத்தூரில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மாலையிட்டு மரியாதை செலுத்தினர்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/7/w600X390/ambethkar.jpg அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் உடற்பயிற்சி நிலையத்தினர். http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/dec/07/அம்பேத்கர்-நினைவு-நாள்மாலை-அணிவித்து-மரியாதை-2821613.html
2821612 சென்னை திருவள்ளூர் ஆர்ப்பாட்டம்: தமுமுகவினர் 300 பேர் கைது DIN DIN Thursday, December 7, 2017 04:38 AM +0530 திருவள்ளூரில், பயங்கரவாத எதிர்ப்பு தினத்தை ஒட்டி, புதன்கிழமை கண்ட ன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர். 
திருவள்ளூர் மேற்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர், எம்.ஜி.ஆர் சிலை முன்பு நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.எம்.சேக்தாவுத் தலைமை வகித்தார். முன்னாள் மாநில செயலாளர் ஏ.எஸ்.எம்.ஜூனைத் , தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு தலைவர் அ.மார்க்ஸ் ஆகியோர் கண்டன ஆர்ப்பாட்டத்தைத் தொடக்கி வைத்தனர். 
இதில், பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படாததைக் கண்டித்தும், வழக்கை விரைவாக முடிக்கக் கோரியும் , பாபர் மசூதி இடப்பிரச்னையில் ஆவணங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்க வலியுறுத்தியும் தமுமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திருவள்ளூர் போலீஸார் அனுதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30 பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/7/w600X390/tmmk.JPG கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமுமுகவினர். http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/dec/07/ஆர்ப்பாட்டம்-தமுமுகவினர்-300-பேர்-கைது-2821612.html
2821611 சென்னை திருவள்ளூர் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் DIN DIN Thursday, December 7, 2017 04:38 AM +0530 சென்னை, மாதவரத்தில் பயங்கரவாத அமைப்புகளுக்கு கண்டனம் தெரிவித்து புதன்கிழமை இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
பயங்கரவாத எதிர்ப்பு தினத்தை ஒட்டி, மாதவரம் மண்டலம் அலுவலம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சென்னை மாநகரச் செயலாளர் செல்வகுமார் தலைமை வகித்தார். 
இந்த ஆர்ப்பாட்டத்தில், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்றும், டிசம்பர் 6-ஆம் தேதியை பயங்கரவாத நாளாக அறிவிக்கும் அமைப்புகளுக்கு கண்டனம் தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பினர். 
இதில் மாதவரம் தொகுதிச் செயலாளர் லிங்கேஸ்வரன், தலைவர் வெங்கேடசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். 

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/7/w600X390/demand.JPG http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/dec/07/இந்து-முன்னணியினர்-ஆர்ப்பாட்டம்-2821611.html
2821610 சென்னை திருவள்ளூர் சாலையை சீரமைக்கக் கோரி மறியல் DIN DIN Thursday, December 7, 2017 03:22 AM +0530 பட்டாபிராம் அருகே சாலையைச் சீரமைக்கக் கோரி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பட்டாபிராம் அருகே உள்ள தண்டரையில் சில நாள்களுக்கு முன் பெய்த மழையால் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதைச் சீரமைக்கக் கோரி, மாரியம்மன் கோயில் தெரு, பெரியார் தெருவை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஆவடி நகராட்சிக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த 50 பெண்கள் உள்பட 70 பேர் புதன்கிழமை தண்டரை பிரதானசாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த ஆவடி நகராட்சி பொறியாளர் சீனிவாசன், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலையைச் சீரமைப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/dec/07/சாலையை-சீரமைக்கக்-கோரி-மறியல்-2821610.html
2821609 சென்னை திருவள்ளூர் நாளை 9 இடங்களில் 'அம்மா' திட்ட முகாம் DIN DIN Thursday, December 7, 2017 03:22 AM +0530 திருவள்ளூர் மாவட்டத்தில் 9 கிராமங்களில் 'அம்மா' திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளதாக ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்தார். 
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளை அவர்களின் இருப்பிடங்களுக்கு நேரில் சென்று மனுக்கள் பெற்று நலத் திட்ட உதவிகள் வழங்கும் வகையில் வாரந்தோறும் குறிப்பிட்ட நாள்களில் அம்மா திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, மாவட்டத்தில் உள்ள 9 வட்டாட்சியர்களின் தலைமையில் குறிப்பிட்ட வருவாய் கிராமங்களில் வெள்ளிக்கிழமை காலை 10 முதல் மாலை 5 மணி வரை முகாம்கள் நடைபெற உள்ளன.
இதில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள இருப்பதால் மனுக்கள் உடனே பரிசீலனை செய்யப்பட்டு நலத் திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பொன்னேரி-வேம்பேடு கிராம நிர்வாக அலுவலகம் அருகிலும், திருத்தணி-அமிர்தாபுரம் கிராமம் நல்லாங்குலம் அருகே உள்ள காலியிடத்திலும், பூந்தமல்லி-கொரட்டூர் கிராம கிராம நிர்வாக அலுவலகம் அருகிலும், ஊத்துக்கோட்டை-கூரம்பாக்கம் கிராம ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம் அருகிலும், கும்மிடிப்பூண்டி-பாலவாக்கம் கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி எதிரே உள்ள காலியிடத்திலும், திருவள்ளூர்-மப்பேடு அருகே மதுரா சமத்துவபுரம் கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அருகிலும், ஆவடி-நெமிலிச்சேரி கிராம ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம் அருகிலும், பள்ளிப்பட்டு-ராகவநாயுடுகுப்பம் கிராம நிர்வாக அலுவலகம் அருகிலும், மாதவரம்-சூரப்பட்டு கிராம நிர்வாக அலுவலகம் அருகிலும் அம்மா திட்ட முகாம்கள் நடைபெற உள்ளன. 
எனவே, பொதுமக்கள் இந்த முôகமில் கலந்து கொண்டு பயனடையலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/dec/07/நாளை-9-இடங்களில்-அம்மா-திட்ட-முகாம்-2821609.html
2821608 சென்னை திருவள்ளூர் மணல் கடத்தியதாக இருவர் கைது: லாரி, டிராக்டர் பறிமுதல் DIN DIN Thursday, December 7, 2017 03:21 AM +0530 கும்மிடிப்பூண்டி அருகே செவ்வாய்க்கிழமை மணல் கடத்தியதாக 2 பேரை போலீஸார் கைது செய்து, லாரி, டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் சோதனை சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் கஜேந்திரன், குணா ஆகியோர் மணல் கடத்தல் தடுப்புப் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். 
அப்போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டதில், ஆந்திர மாநிலம், தடாவில் இருந்து ஆரம்பாக்கம் வழியே சென்னைக்கு மணல் கடத்திச் செல்வது தெரியவந்தது. 
இதையடுத்து போலீஸார் லாரியை பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநரான கடலூர் மாவட்டம், வடலூரைச் சேர்ந்த பாலச்சந்தரை (25) கைது செய்தனர். 
இதேபோல, ஆரம்பாக்கத்துக்கு உள்பட்ட ஏரிகளை உதவி ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையிலான போலீஸார் ஆய்வு செய்தனர். 
அப்போது பெரிய ஓபுளாபுரம் ஏரியில் டிராக்டரில் மணல் கடத்த முயன்ற அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டனை (28) போலீஸார் கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/dec/07/மணல்-கடத்தியதாக-இருவர்-கைது-லாரி-டிராக்டர்-பறிமுதல்-2821608.html
2821607 சென்னை திருவள்ளூர் வீடு புகுந்து 50 பவுன் நகைகள் திருட்டு DIN DIN Thursday, December 7, 2017 03:21 AM +0530 கும்மிடிப்பூண்டி அருகே இரு சக்கர வாகன விற்பனையாளர் வீட்டில் 50 பவுன் தங்க நகைகள், ரூ. 15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (45). இவர், கும்மிடிப்பூண்டியில் இரு சக்கர வாகனம் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி. 
இந்நிலையில், தட்சிணாமூர்த்தி, அவரது மனைவி, பிள்ளைகள் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டை பூட்டி தூங்கிக் கொண்டிருந்தனர். புதன்கிழமை அதிகாலை சரஸ்வதி வீட்டின் மேல் தளத்தில் உள்ள அறைக்குச் சென்று பார்த்த போது கதவுப் பூட்டு உடைந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே 2 பீரோக்களும் உடைக்கப்பட்டு 50 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் ரொக்கம், அரை கிலோ வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
தகவலறிந்த சிப்காட் போலீஸார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மேலும், வழக்குப் பதிவு செய்து, வீட்டின் முன் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/dec/07/வீடு-புகுந்து-50-பவுன்-நகைகள்-திருட்டு-2821607.html
2821054 சென்னை திருவள்ளூர் ஜெயலலிதா நினைவு தினம்: அதிமுகவினர் அஞ்சலி DIN DIN Wednesday, December 6, 2017 03:36 AM +0530 மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் திருத்தணியில் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது. 
திருத்தணி காந்தி சாலை 3- வது தெருவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப் படத்துக்கு எம்எல்ஏ பி.எம். நரசிம்மன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் 500 பேருக்கு அன்னதானம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் டி.செளந்தர்ராஜன், திருவள்ளூர் - காஞ்சிபுரம் மாவட்ட ஆவின் தலைவர் வேலஞ்சேரி த.சந்திரன், கட்சி நிர்வாகிகள் வி.குப்புசாமி, எம். மாசிலாமணி, நகர சிறுபான்மை பிரிவு தலைவர் எம். சுல்தான்பாய், துணைச் செயலாளர் எஸ். மஜீத், ஆர்.கே.பேட்டை ஒன்றிய முன்னாள் தலைவர் கே. ஜெயராமன் உள்ளிட்ட அதிமுகவினர் திரளானோர் பங்கேற்றனர்.
திருத்தணியில், சித்தூர் சாலையில் உள்ள அரக்கோணம் மக்களவை உறுப்பினர்அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்.பி. கோ. அரி பங்கேற்று ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
தொடர்ந்து பெரிய தெரு, மேட்டுத்தெரு, பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் நகர்மன்றத் தலைவர் டி.சௌந்தர்ராஜன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் இ.என்.கண்டிகை எ.ரவி, முன்னாள் கவுன்சிலர் கேபிள் எம்.சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஆர்.கே.பேட்டை ஒன்றியம், சின்ன நாகபூண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருவள்ளூர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் நாகபூண்டி கோ. குமார் பேருந்து நிலையம் அருகில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, அன்ன தானம் வழங்கினார். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/6/w600X390/tiruthani.JPG http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/dec/06/ஜெயலலிதா-நினைவு-தினம்-அதிமுகவினர்-அஞ்சலி-2821054.html
2821053 சென்னை திருவள்ளூர் 90,144 விவசாயிகளுக்கு மண்வள அடையாள அட்டை வழங்க இலக்கு: ஆட்சியர் தகவல் DIN DIN Wednesday, December 6, 2017 03:36 AM +0530 திருவள்ளூர் மாவட்டத்தில் நிகழாண்டில் 90,144 விவசாயிகளுக்கு விளைநிலங்களில் மண்ஆய்வு செய்து மண்வள அடையாள அட்டைகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்தார். 
வேளாண் துறை சார்பில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சர்வதேச மண்வள தினத்தை முன்னிட்டு கண்காட்சி தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியர் எ.சுந்தரவல்லி தலைமை வகித்து, கருத்துக் கண்காட்சியை தொடங்கி வைத்துப் பேசியதாவது: திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் தவறாமல் விளைநிலங்களில் மண் ஆய்வு செய்து, வேளாண்துறை வழங்கும் உரப் பரிந்துரையின் படி, தேவைக்கேற்ப ரசாயன உரங்களை பயன்படுத்த வேண்டும். அதிலும், மண்ணின் தன்மைக்கேற்ப தொழு உரம், பசுந்தாள் உரங்களான வேம்பு, புங்கம், கிளிரிசிடியா மற்றும் தக்கைப்பூண்டு ஆகியவற்றை அதிகம் பயன்படுத்தி மண் வளத்தை பாதுகாக்க வேண்டும்.
மேலும், நடப்பு சம்பா பருவத்தில் விவசாயிகள் பிரதம மந்திரி பயிர்காப்பீட்டு திட்டத்தில் பயிர்காப்பீடு செய்து எதிர்காலத்தில் இழப்புகளில் இருந்து பாதுகாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போது வடகிழக்குப் பருவ மழையால் கிடைத்துள்ள நீர் வளத்தையும் முறையாக பயன்படுத்துவதோடு மண் ஆய்வு செய்து மண் வளத்தை பாதுகாக்க வேண்டும். கடந்த ஆண்டு தேசிய மண் வள அட்டை இயக்கம் மூலம் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 976 விவசாயிகளுக்கு மண் வள அட்டைகள் வழங்கப்பட்டன. 
அதேபோல், நிகழாண்டில் 90 ஆயிரத்து 144 விவசாயிகளுக்கு மண் வள அட்டைகள் வழங்க இலக்கு நிர்ணயித்து மண் மாதிரிகள் சேகரித்து வரப்படுகிறது என்றார். அதைத் தொடர்ந்து, திருவள்ளூர், பூண்டி வட்டாரப் பகுதி விவசாயிகளுக்கு பாரத பிரதமரின் தேசிய மண் வள அட்டை இயக்கத்தின் சார்பில், மண் வள அட்டைகளையும் , விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதை மற்றும் தக்கைப்பூண்டு விதைகளையும் ஆட்சியர் வழங்கினார். 
இந்த வேளாண் கண்காட்சியில் மாவட்ட அளவில் மண் வகைகள், களர், உவர் மற்றும் அமில மண் வகைகள், பசுந்தாள் உரங்களான வேம்பு, புங்கம், கிளிரிசிடியா, தக்கைப்பூண்டு, தக்கைப்பூண்டு விதைகள், நுண்ணூட்டச்சத்து உரங்கள், மண்புழு உரம், அசோஸ்பைரில்லம், திரவ ரைசோமியம், திரவ பாஸ்போ பாக்டீரியா, பயிர்களில் நுண்ணூட்டச்சத்து குறைபாடு அறிகுறிகளுக்கான படங்கள் ஆகியவை இடம் பெற்றிருந்தன. 
இதில் வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) தேவேந்திர சிங் பரிகார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) ப.பிரதாபராவ், வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) வி.எபினேசன், வேளாண்மை உதவி இயக்குனர் கலாதேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/6/w600X390/sundaravlli.JPG வேளாண் பொருள்கள் கண்காட்சியைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி. http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/dec/06/90144-விவசாயிகளுக்கு-மண்வள-அடையாள-அட்டை-வழங்க-இலக்கு-ஆட்சியர்-தகவல்-2821053.html
2821052 சென்னை திருவள்ளூர் கோயில் பூசாரிகளுக்கு ரூ. 2 லட்சம் கடனுதவி DIN DIN Wednesday, December 6, 2017 03:36 AM +0530 கோயில் பூசாரிகளுக்கு வங்கியில் கடனுதவி பெற்று ரூ. 2 லட்சத்திற்கான காசோலைகளை பேரவையின் மாநில அமைப்பாளர் வேணு, 38 கிராம பூசாரிகளுக்கு திங்கள்கிழமை வழங்கினார்.
திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகை ஷீரடி சாய்பாபா கோயில் வளாகத்தில் பூக்கட்டுவோர் பேரவை மற்றும் ஸ்ரீராம் நிதி நிறுவனம் ஆகியவை இணைந்து கோயில் பூசாரிகளுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பூக்கட்டுவோர் பேரவையின் மாநில அமைப்பாளர் வேணு, கிராம கோயில் பூசாரிகள் பேரவையின் திருவள்ளூர் மாவட்ட அமைப்பாளர் ஜலேந்திரசாமி, சாய்பாபா கோயில் நிர்வாகி சாய்சீனிவாசன், ஆகியோர் 38 கிராம பூசாரிகளுக்கு கடனுதவி வழங்கினர். 
அடுத்த மாதம், 28 ம் தேதி நாகர்கோவிலில் நடைபெற உள்ள கிராம கோயில் பூசாரிகள் மற்றும் பூக்கட்டுவோர் பேரவை மாநில மாநாட்டில், மாவட்டத்தில் இருந்து திரளாக பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் வேணுகோபால்ராஜ், ஒன்றிய கிராம கோயில் பூசாரி பேரவை அமைப்பாளர் கோதண்டராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/6/w600X390/venu.JPG கே.ஜி.கண்டிகையில் பூக்கட்டுவோர் பேரவையின் சார்பில், கோயில் பூசாரிகளுக்கு ரூ. 2 லட்சத்திற்கான காசோலைகளை வழங்குகிறார் பேரவையின் மாநில அமைப்பாளர் வேணு. http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/dec/06/கோயில்-பூசாரிகளுக்கு-ரூ-2-லட்சம்-கடனுதவி-2821052.html
2821051 சென்னை திருவள்ளூர் துப்புரவுப் பணியில் குழந்தைகளை ஈடுபடுத்திய தொழிலாளர்கள் பணி நீக்கம்: ஆட்சியர் உத்தரவு  DIN DIN Wednesday, December 6, 2017 03:35 AM +0530 திருவள்ளூர் மாவட்டத்தில் துப்புரவுப் பணியில் தங்கள் குழந்தைகளை ஈடுபடுத்திய 2 துப்புரவுப் பணியாளர்களை பணியிலிருந்து விடுவித்து ஆட்சியர் எ.சுந்தரவல்லி நடவடிக்கை எடுத்துள்ளார். 
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: பெத்திக்குப்பம் ஊராட்சியில் தனது குழந்தையை தூய்மைப் பணிக்கு உதவிக்காக வைத்திருந்த தூய்மைக் காவலரையும், நேமம் ஊராட்சியில் தனது உறவினர் குழந்தையை துப்புரவுப் பணிக்கு உதவிக்காக வைத்திருந்த துப்புரவுப் பணியாளரையும் பணியிலிருந்து விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/dec/06/துப்புரவுப்-பணியில்-குழந்தைகளை-ஈடுபடுத்திய-தொழிலாளர்கள்-பணி-நீக்கம்-ஆட்சியர்-உத்தரவு-2821051.html
2821050 சென்னை திருவள்ளூர் வேலைவாய்ப்பு முகாம் ஒத்திவைப்பு DIN DIN Wednesday, December 6, 2017 03:35 AM +0530 திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், நடத்தப்பட இருந்த தனியார் வேலைவாய்ப்பு முகாம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை (வேலைவாய்ப்பு பிரிவு) மூலமாக திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து மதுரவாயலில் உள்ள டாக்டர் எம்.ஜிஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனப் பல்கலைக்கழக வளாகத்தில் டிசம்பர் 10-ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது நிர்வாகக் காரணங்களால் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/dec/06/வேலைவாய்ப்பு-முகாம்-ஒத்திவைப்பு-2821050.html
2821049 சென்னை திருவள்ளூர் குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது DIN DIN Wednesday, December 6, 2017 03:34 AM +0530 திருவள்ளூர் அருகே கள்ளச்சாராயம் விற்றதாக இளைஞர் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து மப்பேடு போலீஸார் தரப்பில் கூறியதாவது: திருவள்ளூர் அருகே தொடுகாடு நமச்சியவாயபுரம் கிராமத்தைச் சேர்ந்த சாமிநாதன் மகன் வெங்கடாசலபதி என்ற சரவணன்(28). இவர், கடந்த மாதம் அப்பகுதியில் மறைவிடத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக மப்பேடு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். 
இதற்கு முன்னதாகவே இக் காவல் நிலையத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனால், இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி ஆட்சியருக்கு பரிந்துரைத்தார். அதன் அடிப்படையில், ஆட்சியர் எ.சுந்தரவல்லி கள்ளச்சாராய வழக்கில் தொடர்புடைய சரவணனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/dec/06/குண்டர்-சட்டத்தில்-இளைஞர்-கைது-2821049.html
2821048 சென்னை திருவள்ளூர் கார் ஏற்றி மூதாட்டி கொலை: மூவருக்கு போலீஸார் வலைவீச்சு DIN DIN Wednesday, December 6, 2017 03:34 AM +0530 கும்மிடிப்பூண்டி அருகே கார் ஏற்றி மூதாட்டி கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, மூதாட்டியின் உறவினர் உள்ளிட்ட மூவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த சிறு
புழல்பேட்டையைச் சேர்ந்த நடராசனின் மனைவி ராணியம்மாள்(60). இவர் அப்பகுதியில் தனது மருமகளுடன் சேர்ந்து ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி பண்டு நடத்தி வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் ராணியம்மாளின் சகோதரர் ஞானமூர்த்தியின் மகன் கந்தன். இவர் ராணியம்மாளிடம் சீட்டு போட்டு ஏலச்சீட்டு எடுத்ததுடன், சீட்டு மற்றும் பண்டு பணம் கட்டாமல் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் பாக்கி வைத்திருந்ததாகவும், 3 ஆண்டுகளாக கடன்பாக்கி தராமல் இழுத்தடித்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக கந்தனுக்கும், ராணியம்மாளுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சில மாதங்களாக கந்தன் சென்னையில் தங்கி கார் ஓட்டுநராக வேலைபார்த்துள்ளார். அவ்வப்போது சிறுபுழல்பேட்டைக்கு வரும்போது, ராணியம்மாள் -கந்தனுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை கந்தன் சிறுபுழல்பேட்டைக்கு வந்துள்ளார். அப்போதும் ராணியம்மாளுக்கும், கந்தனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர், ராணியம்மாள் அவரது வீட்டு வாசலில் அமர்ந்துள்ளார். அப்போது கந்தன் மற்றும் அவருடன் சென்னையில் இருந்து வந்த இரு இளைஞர்கள் காரை ஓட்டிச் சென்று ராணியம்மாள் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் ராணியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
ராணியம்மாளை கார் ஏற்றிக் கொலை செய்ததும், கந்தன் உள்ளிட்ட மூவரும் அருகில் இருந்த புதர் பகுதியில் தப்பி ஓடி மறைந்தனர். தகவல் அறிந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று ராணியம்மாளின் சடலத்தை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கந்தன் உள்ளிட்ட மூவரை தேடி வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/dec/06/கார்-ஏற்றி-மூதாட்டி-கொலை-மூவருக்கு-போலீஸார்-வலைவீச்சு-2821048.html
2821047 சென்னை திருவள்ளூர் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி DIN DIN Wednesday, December 6, 2017 03:34 AM +0530 திருமுல்லைவாயல் பகுதியில் இரு வங்கிகளின் ஏடிஎம் மையங்களில் நுழைந்த மர்ம நபர்கள் இயந்திரங்களை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருமுல்லைவாயல் ரயில் நிலையம் நிலையம் முன்பு பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையமும், தனியார் ஏடிஎம் மையமும் உள்ளன. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை இந்த இரு ஏ.டி.எம் மையங்களுக்குள்ளும் நுழைந்த மர்ம நபர்கள் சிலர், கடப்பாரை உள்ளிட்டவற்றைக் கொண்டு ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து பணம் எடுக்க முயன்றுள்ளனர். ஆனால் இயந்திரத்தை உடைக்க முடியவில்லை. இதையடுத்து கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை வங்கி ஏ.டி.எம். மையங்களுக்குச் சென்று பொதுமக்கள் பணம் எடுக்கச் சென்றபோது, இயந்திரம் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து திருமுல்லைவாயல் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். 
இதையடுத்து நிகழ்விடத்துக்குச் சென்ற போலீஸார், சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, வங்கிக்கு தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து அங்கு 2 வங்கிகளின் அலுவலர்களும் ஆய்வு செய்தனர். இதில், பணம் கொள்ளை போகவில்லை எனத் தெரிவித்தனர். மேலும், இரு ஏ.டி.எம். மையங்களுக்கும் காவலாளி இல்லை எனத் தெரிவித்தனர். 
இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/dec/06/வங்கி-ஏடிஎம்-இயந்திரத்தை-உடைத்து-கொள்ளை-முயற்சி-2821047.html
2821046 சென்னை திருவள்ளூர் கோஷ்டி மோதலில் இருவர் காயம்: 4 பேரிடம் போலீஸார் விசாரணை DIN DIN Wednesday, December 6, 2017 03:34 AM +0530 செங்குன்றம் அருகே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் இருவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து இரு கோஷ்டிகளைச் சேர்ந்த 4 பேரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்குன்றம் அருகே பாலவாயல் கலைவாணர் தெருவைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (21). அதே பகுதி, திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் ஆடலரசு (25). இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை இரவு தமிழ்ச்செல்வனுக்கும், ஆடலரசுக்கும் பாலவாயல் சாலை சந்திப்பில் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து சென்ற இரு தரப்பு கோஷ்டியினரும் பயங்கர ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். இந்த தாக்குதலில் தமிழ்ச்செல்வனுக்கு தலையில் வெட்டும், ஆடலரசு கோஷ்டியைச் சேர்ந்த கௌதமனுக்கு நெற்றியில் வெட்டுக் காயமும் ஏற்பட்டது. இந்த நிலையில், பயங்கர தாக்குதலால் அங்கிருந்து பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். 
தகவல் அறிந்து புழல் சரக காவல் உதவி ஆணையர் பிரபாகரன், செங்குன்றம் காவல் ஆய்வாளர் சுரேந்திரன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதையடுத்து, அனைவரும் தப்பியோடினர். மோதலில் பலத்த காயமடைந்த தமிழ்ச்செல்வனையும், கௌதமனையும் போலீஸார் மீட்டு, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். 
இது தொடர்பாக மணி, சினியோன், லட்சுமணன், ஆனந்த் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/dec/06/கோஷ்டி-மோதலில்-இருவர்-காயம்-4-பேரிடம்-போலீஸார்-விசாரணை-2821046.html
2821045 சென்னை திருவள்ளூர் பெண்ணிடம் ரூ.14 ஆயிரம் லஞ்சம் கேட்ட வழக்கு: கூட்டுறவு அதிகாரிக்கு 21 மாதம் சிறை DIN DIN Wednesday, December 6, 2017 03:33 AM +0530 வீட்டு அடமான பத்திரத்தை திருப்பி தருவதற்கு பெண்ணிடம் ரூ. 14 ஆயிரம் லஞ்சம் கேட்ட வழக்கில் வீட்டு வசதி கூட்டுறவு சங்க அதிகாரிக்கு 21 மாதம் சிறைத் தண்டனை, ரூ. 20 அபராதம் விதித்து திருவள்ளூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். 
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே குமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷின் மனைவி புவனேஸ்வரி(45). இவர், பொன்னேரி வீட்டு வசதி கடன் சங்கத்தில் வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து ரூ. 20 ஆயிரம் கடன் பெற்றிருந்தாராம். இதைக் கடந்த 2008 -ஆம் ஆண்டு செப்டம்பரில் வட்டியும் , அசலும் சேர்த்து ரூ. 67 ஆயிரத்தை வங்கியில் செலுத்தினாராம். அப்போது, இச் சங்கத்தின் செயலாளர் சுந்தரராமன் (40) தனக்கு ரூ. 14 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் தான் அடமானப் பத்திரத்தை தருவேன் என புவனேஸ்வரியிடம் கூறியுள்ளார். உடனே இது குறித்து சென்னை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புவனேஸ்வரி புகார் தெரிவித்தார். 
அதன் அடிப்படையில் போலீஸார் கூறிய ஆலோசனையின் படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அளித்தனர். அதனை, கடந்த 19.06.2009 அன்று புவனேஸ்வரி முதல் தவணையாக ரூ. 4 ஆயிரம் தருவதாகக் கூறி செயலாளர் சுந்தரராமனிடம் கொடுத்துள்ளார். 
அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் சுந்தரராமனை கையும், களவுமாக பிடித்து வழக்குப் பதிவு செய்தனர். 
இந்த வழக்கு திருவள்ளூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி சாந்தி முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. 
அப்போது, இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் செயலாளர் சுந்தரராமனுக்கு 21 மாத சிறைத் தண்டனையும், ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதித்ததோடு, அபராதம் செலுத்தாவிட்டால் கூடுதலாக 6 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பில்வழக்குரைஞர் அமுதா ஆஜரானார். 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/dec/06/பெண்ணிடம்-ரூ14-ஆயிரம்-லஞ்சம்-கேட்ட-வழக்கு-கூட்டுறவு-அதிகாரிக்கு-21-மாதம்-சிறை-2821045.html
2821043 சென்னை திருவள்ளூர் 30 கிலோ கஞ்சா கடத்தல்: 2 பேர் கைது DIN DIN Wednesday, December 6, 2017 03:32 AM +0530 கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திர மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த 2 பேரை போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி வழியாக தமிழகத்துக்கு கஞ்சா கடத்தப்படுவதாக காஞ்சிபுரம் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு மற்றும் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, ஆய்வாளர் சித்ராதேவி தலைமையில் போலீஸார் ஆரம்பாக்கம் மற்றும் கவரப்பேட்டை பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆரம்பாக்கத்தில் ஆந்திர பேருந்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் பயணம் செய்த மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த மொக்கை மாயனின் (65) பையில் 14 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், அவரை கைது செய்தனர். அதேபோல கவரப்பேட்டையில் ஆந்திர பேருந்தில் சோதனையிட்டதில் உசிலம்பட்டியைச் சேர்ந்த தெய்வம் (35) என்பவர் பையில் வைத்திருந்த 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 
இதையடுத்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து இருவரிடமும் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சோதனையில் ஒரு பெண் உள்ளிட்ட இருவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்தும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த கஞ்சாவை மொக்கை மாயனும், தெய்வமும் விஜயவாடா அருகில் துனி கிராமத்தில் இருந்து வாங்கி வந்தது விசாரணையில் தெரியவந்தது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/6/w600X390/arest.JPG http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/dec/06/30-கிலோ-கஞ்சா-கடத்தல்-2-பேர்-கைது-2821043.html
2821042 சென்னை திருவள்ளூர் இடிந்து விழும் நிலையில் வேளாண் கிடங்கு DIN DIN Wednesday, December 6, 2017 03:32 AM +0530 திருவள்ளூர் அருகே கடம்பத்தூரில் இடிந்து விழும் நிலையில் உள்ள வேளாண்மைக் கிடங்கு கட்டடத்தை அரசு சீரமைக்க வேண்டும் என வேளாண்மை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வட்டார வேளாண்மை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் அருகே விவசாயிகளுக்குப் பல்வேறு வகையான விதைகள், உரங்கள் போன்றவற்றை இருப்பு வைக்க தனிக் கட்டடம் உள்ளது.
இக் கட்டடம் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போதைய நிலையில், போதிய பராமரிப்பின்றி இக் கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், விவசாயிகளுக்கு ஒதுக்கப்படும் விதைகள், இயற்கை உரங்கள் அடங்கிய மூட்டைகளை அங்கு வைத்துப் பாதுகாக்க முடியாத அவல நிலை உள்ளது. 
ஏற்கெனவே ஒன்றிய அலுவலக வளாகம் சிறிய அளவில் இருப்பதால் கூடுதலாக விதைகளையும், உரங்களையும் இங்கு வைக்க இடையூறாக உள்ளது. இதுபோன்ற காரணங்களைக் கருத்தில் கொண்டு, பாழடைந்து கிடக்கும் வேளாண்மைக் கிடங்கை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வேளாண்மை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/6/w600X390/gowdon.JPG http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/dec/06/இடிந்து-விழும்-நிலையில்-வேளாண்-கிடங்கு-2821042.html
2821041 சென்னை திருவள்ளூர் கிராமங்களில் அம்மா பூங்கா: நவீன உடற்பயிற்சிக் கூடம் DIN DIN Wednesday, December 6, 2017 03:31 AM +0530 இளைஞர்களின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் நோக்கில் ஒவ்வொரு கிராமங்களிலும் அனைத்து வசதியுடன் கூடிய அம்மா பூங்காவுடன் இணைந்த நவீன உடற்பயிற்சிக் கூடத்தை ரூ. 30 லட்சத்தில் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
கிராமங்களில் உள்ள இளைஞர்களின் திறன்களை பயனுள்ளதாக்கவும், உடல் நலத்தையும், மனநலத்தையும் பாதுகாப்பதன் மூலமும் ஒவ்வொருவரும் தனித்திறன்களை வளர்த்துக் கொள்ள முடியும். இதற்காக அரசு பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் இளைஞர்கள் விளையாட்டில் முழுக் கவனத்தை செலுத்தும் வகையில் கிராமங்களில் விளையாட்டு மைதான வசதியில்லாத நிலையிருக்கிறது. இதனால் நகரங்களுக்கு சென்று விளையாட்டு பயிற்சி பெற வேண்டிய சூழ்நிலையுள்ளது. இதனால் கால விரயமும், பொருள் செலவும் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கும் நோக்கில் கிராம அளவில் பொழுது போக்குக்கான பூங்காவுடன் இணைந்த உடற்பயிற்சிக் கூடம் அமைத்துக் கொடுப்பதன் மூலம் ஒவ்வொரு கிராமங்களில் இருந்தும் திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்க முடியும் என கருதப்படுகிறது.
இத்திட்டம் முதல்கட்டமாக ஒவ்வொரு மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களில் கிராமங்களை தேர்வுசெய்து, ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் நிறைவேற்றப்பட உள்ளது. இந்த பூங்காவில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரையில் மனதைக் கவரும் வகையில் பூச்செடிகள், நிழல் தரும் மரக்கன்றுகள், சிறுவர்கள் விளையாடுவதற்கான ஊஞ்சல், அமரும் இருக்கைகள், நடைபயிற்சி தளங்களும் அமைக்கப்படுகிறது. அதேபோல், இப்பூங்காவுடன் இணைந்த நவீன உடற்பயிற்சி கூடத்தில் உடலை வலிமையாக்கக் கூடிய விளையாட்டுக் கருவிகள் இடம் பெறும் வகையில் அமைக்கப்படவுள்ளன.
இது தொடர்பாக ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலக அலுலவர் ஒருவர் கூறியதாவது: இத்திட்டம் மாநில அளவில் அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு செய்யப்பட்ட ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக இத்திட்டம் மூலம் 14 ஊராட்சி ஒன்றியங்களில் 49 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 
இந்த அம்மா பூங்காவுடன் இணைந்த உடற்பயிற்சிக் கூடம் அமைக்க ஊராட்சியில் 15 ஆயிரம் சதுர அடி முதல் 20 ஆயிரம் சதுர அடி வரை இடம் இருக்க வேண்டும். அதில் அம்மா பூங்காவுக்கு தலா ரூ. 20 லட்சமும், பூங்காவோடு இணைந்த நவீன உடற்பயிற்சிக் கூடம் அமைக்க ரூ. 10 லட்சத்திலும் அமைக்கப்படவுள்ளன. 
இதற்காக இம்மாவட்டத்துக்கு மட்டும் ரூ. 14.70 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் சுகாதார வளாகம் உள்ளிட்ட அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற்றிருக்கும். அதேபோல், உடற்பயிற்சிக் கூடத்தில் உடலை வலிமையாக்கும் வகையில் நவீன விளையாட்டுக் கருவிகளும் இடம்பெறும். 
இதன் மூலம் கிராமங்களில் உள்ள இளைஞர்கள் விளையாட்டுப் பயிற்சிக்காக நகரங்களுக்குச் செல்ல அவசியமில்லை என்றார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/dec/06/கிராமங்களில்-அம்மா-பூங்கா-நவீன-உடற்பயிற்சிக்-கூடம்-2821041.html
2818805 சென்னை திருவள்ளூர் 350 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு DIN DIN Saturday, December 2, 2017 03:31 AM +0530 மீஞ்சூர் ஒன்றிய ஒருங்கிணைந்த குழந்தைள் வளர்ச்சி திட்டம் சார்பில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா பொன்னேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது., 
நிகழ்ச்சிக்கு, தமிழக ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா.பெஞ்சமின் தலைமை வகித்தார். ஆட்சியர் சுந்தரவல்லி, பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பலராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 350 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டு, அவர்களுக்கு புடவை, வளையல் உள்ளிட்ட சீர்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டன. 
நிகழ்ச்சியில் பொன்னேரி கோட்டாட்சியர் முத்துசாமி, வட்டாட்சியர் சுமதி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். 
திருத்தணியில்...
திருத்தணியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருத்தணி திட்ட அலுவலர் கவிதா வரவேற்றார். எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன், மாவட்ட ஆவின் தலைவர் வேலஞ்சேரி த.சந்திரன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் டி. சவுந்தர்ராஜன் ஆகியோர் 240 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசைகளை வழங்கி வாழ்த்தினர்.
பின்னர் எம்எல்ஏ பி.எம். நரசிம்மன் பேசுகையில், தமிழகத்தில் மட்டும் தான் மகப்பேறு திட்டம் சிறப்பாக செயல்படுகிறது. இதற்காக, ஆண்டுக்கு, ரூ. 1001 கோடியை தமிழக அரசு வழங்கி வருகிறது என்றார்.
நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் டி.டி. சீனிவாசன், அவைத் தலைவர் குப்புசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/2/w600X390/penjamin.JPG http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/dec/02/350-கர்ப்பிணிகளுக்கு-சமுதாய-வளைகாப்பு-2818805.html
2818803 சென்னை திருவள்ளூர் சாலை விதிகள் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி DIN DIN Saturday, December 2, 2017 03:31 AM +0530 சாலை விபத்துகள் குறித்து, விடியோ மூலம் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடத்தப்பட்டது. 
திருத்தணி பழைய சென்னை சாலையில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில், சாலை விபத்துகள் குறித்து, வாகன ஓட்டிகளுக்கு விடியோ மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பேசும்போது, கடந்த ஆண்டில், மாவட்டத்தில் சாலை விதிகளை மதிக்காமலும், தலைக்கவசம் அணியாமலும், வாகனங்கள் ஓட்டியவர்களில், 454 பேர் இறந்துள்ளனர். மேலும், 905 பேர் படுகாயமும், 15 பேர் லேசான காயமும், 41 பேர் அதிர்ஷ்டவசமாக காயமின்றியும் தப்பியுள்ளனர்.
இந்த ஆண்டு, விபத்துகளை குறைப்பதற்கு, அரசு ஓட்டுநர் உரிமம் சட்டம் கொண்டு வந்து உள்ளதால், 18 வயதுக்கு குறைவாக உள்ள இளைஞர்கள் வாகனங்கள் ஓட்ட முடியாது. அவர்கள் அதிகஅளவில் வேகமாக வாகனங்களை ஓட்டுவதால் விபத்துகள் அதிகரிக்கின்றன. 
மது அருந்துபவர்கள், அதிவேகம் வாகனம் ஓட்டுபவர்களின் அசல் ஓட்டுநர் உரிமம், மூன்று மாதங்களுக்குப் பறிமுதல் செய்வதால், வாகனங்களை அவர்களால் இயக்க முடியாது. அதே போல், வாகன ஓட்டிகளால் விபத்து ஏற்பட்டு, உயிரிழப்பு ஏற்படும் போது, விபத்து ஏற்படுத்திய வாகன ஓட்டியின் அசல் ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்படும் என்றார் அவர். இந்நிகழ்ச்சியில், 150 க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் பங்கேற்றனர்.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/2/w600X390/awarnes1.JPG http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/dec/02/சாலை-விதிகள்-குறித்து-வாகன-ஓட்டிகளுக்கு-விழிப்புணர்வு-நிகழ்ச்சி-2818803.html
2818801 சென்னை திருவள்ளூர் பூண்டி மீனவர்களின் பிரச்னை: அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் DIN DIN Saturday, December 2, 2017 03:30 AM +0530 பூண்டி ஏரியில் மீன்பிடித்து விற்பனை செய்வது தொடர்பான பிரச்னை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத் துறை கூடுதல் இயக்குநர் ஆறுமுகம் தெரிவித்தார்.
திருவள்ளூர் அருகே பூண்டி ஏரியைச் சுற்றிலும் புல்லரம்பாக்கம், அரும்பாக்கம், கிருஷ்ணாபுரம், பட்டறைப் பெரும்புதூர், சதுரங்கபேட்டை , கன்னிமாபேட்டை உள்ளிட்ட 24 கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களைச் சேர்ந்த 20 மீனவர் சங்கங்களில் சுமார் 3 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். 
இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக ஏரியில் மீன் பிடித்து விற்பனை செய்வதில் மீன்வளத் துறையுடன் பிரச்னை இருந்து வருகிறது. 
இதுதொடர்பாக திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மீன்வளத் துறை அதிகாரிகள், வருவாய்த் துறையினர், காவல் அதிகாரிகள் மற்றும் உள்ளூர் மீனவர்கள் பங்கேற்ற கருத்து கேட்பு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
மீன்வளத் துறை கூடுதல் இயக்குநர் ஆறுமுகம், பொது மேலாளர் ஜூடோ, மண்டல இணை இயக்குநர்கள் சந்திரா , துணை இயக்குநர் வேலன் , திருவள்ளூர் வட்டாட்சியர் தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், 20 மீனவர்கள் சங்கங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 
ஏரியில் பிடிக்கும் மீன்களை எக்காரணம் கொண்டும் வெளியில் விற்கக் கூடாது என்றும், மீன்வளத் துறை நிர்ணயித்த தொகைக்கு மீன்வள அங்காடியில் அளிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 
இதற்கு, ஏரியில் பிடித்த மீன்களை அந்தந்த பகுதிலேயே விற்பனை செய்வோம் என்றும், மீன்வள அங்காடிக்குக் கொண்டு சென்றால் நேரம் விரயம் ஆகும் எனக் கூறி மீனவர்கள் சங்க முகவர்கள் மறுப்பு தெரிவித்தனர். 
இது குறித்து அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று விரைவில் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத் துறை கூடுதல் இயக்குநர் ஆறுமுகம் தெரிவித்தார்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/2/w600X390/arumugam.JPG http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/dec/02/பூண்டி-மீனவர்களின்-பிரச்னை-அரசின்-கவனத்துக்கு-கொண்டு-செல்லப்படும்-2818801.html
2818799 சென்னை திருவள்ளூர் விடுமுறை அறிவிக்க காலதாமதம்: மாணவர்கள் அவதி DIN DIN Saturday, December 2, 2017 03:30 AM +0530 திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி விடுமுறை காலதாமதமாக அறிவிக்கப்பட்டதால், மாணவர்கள் பள்ளிக்கு வந்து மழையில் நனைந்தவாறும், பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருந்தும் வீடுகளுக்கு திரும்பிச் சென்றனர்.
ஒக்கி புயலால் தமிழகம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக காலை நேரத்தில் மட்டும் பலத்த மழையும், மாலையில் தூறல் மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில், பலத்த மழையால், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்பட 13 மாவட்டங்களில், காலை 6 மணிக்கே பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டது. ஆனால், திருவள்ளூர் மாவட்டத்துக்கு காலை 7.50 மணிக்கு மேல் தான் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டது.
இதனால் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மாணவர்கள் குறிப்பிட்ட அளவில் வந்திருந்தனர். திருத்தணியில் உள்ள அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் காலை 7.00 மணிக்கே மழையில் நனைந்துவாறு பள்ளிக்கு வந்திருந்தனர்.
பின்னர், காலை 8 மணிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டவுடன், மீண்டும் மழையில் நனைந்தவாறு வீடுகளுக்கு திரும்பினர். சிலர் பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருந்து வீடுகளுக்கு திரும்பினர்.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/2/w600X390/student.JPG http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/dec/02/விடுமுறை-அறிவிக்க-காலதாமதம்-மாணவர்கள்-அவதி-2818799.html
2818797 சென்னை திருவள்ளூர் வடகிழக்குப் பருவ மழையை சமாளிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார்: ஆட்சியர் எ.சுந்தரவல்லி  DIN DIN Saturday, December 2, 2017 03:29 AM +0530 திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழையை எதிர்கொள்வதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருப்பதாக ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது: 
மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழையால் மிக அதிகளவில் பாதிக்கப்படும் பகுதியாக 18 இடங்களும், அதிகளவில் பாதிக்கப்படும் பகுதியாக 74 இடங்களும், மிதமாக பாதிக்கப்படும் பகுதியாக 64 இடங்களும், குறைந்த அளவில் பாதிக்கப்படும் பகுதியாக 44 இடங்களும் என மொத்தம் 200 இடங்களை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளன.
அதேபோல, பேரிடர் சமயங்களில் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் இருந்து மீட்கப்படும் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க 5 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்களும், 4 புயல் பாதுகாப்பு மையங்களும், 178 தாற்காலிக முகாம்களும் தயார் நிலையில் உள்ளன. மீட்புப் பணிக்காக நீச்சல் தெரிந்த 145 பேர் மற்றும் 11 படகுகளும் பல்வேறு பகுதிகளில் உள்ளன. 
ஏரி, குளங்கள் உடைப்புகளை சரி செய்வதற்காக மணல் மூட்டைகள், பொக்லைன் இயந்திரங்கள், மரம் அறுக்கும் இயந்திரம், நீர் வெளியேற்றும் மோட்டார்கள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி, பேரூராட்சிகள், பொதுப் பணித் துறை, நீர்வள ஆதார அமைப்பு, நெடுஞ்சாலைத் துறை, மீன்வளத்துறை, தீயணைப்பு மீட்புத் துறை, சுகாதாரத் துறை, மின்சாரத் துறை போன்ற பல்வேறு துறைகளில் 12,3071 மணல் மூட்டைகள், 2736 சவுக்கு குச்சிகள், 12 ஜேசிபி இயந்திரங்கள், 94 மரம் அறுக்கும் இயந்திரங்கள், நீர் வெளியேற்றும் மோட்டார்கள்-28 , ஜெனரேட்டர்கள்- 187, குடிநீர் லாரிகள்- 19, சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகள்-52, பிளீச்சிங் பவுடர் - 136.075 மெட்ரிக் டன், குளோரின் மாத்திரைகள்-1.151 மெட்ரிக் டன் அளவில் உள்ளன. 
கனமழை தொடர்பாக தகவல் அளிக்க வருவாய் கோட்ட அளவில் திருவள்ளூர்- 044-27660248, 99403 18661, பொன்னேரி-044-27974073, 86089 84066, திருத்தணி-044-27885877, 99941 23566, அம்பத்தூர்-04426541221, 94445 55950 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம் . 
இதேபோல், திருவள்ளூர் மாவட்ட பேரிடர் தடுப்பு கட்டுப்பாட்டு அறைக்கான கட்டணம் இல்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 044-27664177, 27666746 ஆகிய எண்களிலும் 24 மணிநேரமும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
விடுமுறை நாள்களில் பள்ளிகளை திறக்கக் கூடாது
மழைக் காலங்களில் பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்கும் நாள்களில் தனியார், அரசுப் பள்ளிகள் எக்காரணம் கொண்டும் செயல்படக் கூடாது. இதை மீறி செயல்படுவது தெரியவந்தால் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் விசாரணை நடத்தப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எ.சுந்தரவல்லி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/dec/02/வடகிழக்குப்-பருவ-மழையை-சமாளிக்க-அனைத்து-ஏற்பாடுகளும்-தயார்-ஆட்சியர்-எசுந்தரவல்லி-2818797.html
2818796 சென்னை திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் கனமழை: செம்பரம்பாக்கத்தில் 76 மி.மீ. பதிவு DIN DIN Saturday, December 2, 2017 03:29 AM +0530 திருவள்ளூர் பகுதியில் வியாழக்கிழமை இரவு முழுவதும் பெய்த தொடர் கனமழையால் ஏரி, குளங்களில் நீர்வரத்தும் அதிகரித்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக செம்பரம்பாக்கத்தில் 76 மி.மீ. மழை பதிவானது.
திருவள்ளூர் மாவட்டத்தில் தாமரைபாக்கம், சோழவரம், செம்பரம்பாக்கம், அம்பத்தூர், பூந்தமல்லி, திருத்தணி, பொன்னேரி ஆகிய வட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாள்களாக மழை பெய்து வருகிறது. 
இந்நிலையில் வியாழக்கிழமை இரவு தொடங்கிய மழை, வெள்ளிக்கிழமை காலை வரை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடந்தனர்.
மேலும், சின்ன ஈக்காடு, போந்தவாக்கம், மண்ணவேடு, நசரேத், சித்தம்பாக்கம், ராஜபாளையம், தண்ணீர்குளம், கசுவா, குத்தம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கனமழை பெய்ததால் அங்குள்ள ஏரிகள் மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 
மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்): செம்பரம்பாக்கம்-76, தாமரைபாக்கம், -68, சோழவரம்-67, அம்பத்தூர்-66, திருவள்ளூர்-63, பூந்தமல்லி-62, பூண்டி-61.20, பொன்னேரி-59, ஆர்.கே.பேட்டை -56, திருத்தணி-55, திருவாலங்காடு, செங்குன்றம் தலா-51, ஊத்துக்கோட்டை-45, பள்ளிப்பட்டு-42, கும்மிடிப்பூண்டி-6.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/dec/02/மாவட்டம்-முழுவதும்-கனமழை-செம்பரம்பாக்கத்தில்-76-மிமீ-பதிவு-2818796.html
2818794 சென்னை திருவள்ளூர் 'அம்மா' திட்ட முகாமில் 16 மனுக்களுக்கு உடனடித் தீர்வு DIN DIN Saturday, December 2, 2017 03:28 AM +0530 மாதவரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 'அம்மா' திட்ட முகாமில் 16 மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டது. 
சென்னை மாதவரத்தை அடுத்த பெரியசேக்காடு 28-வது வார்டில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு மாதவரம் வட்டாட்சியர் ரமேஷ் தலைமை வகித்தார். இதில் பெரியசேக்காடு, கே.கே.சாலை, அறிஞர்அண்ணாநகர், பொற்றும்பு, வசந்தம்நகர், மூலச்சத்திரம், பெருமாள்கோயில் தெரு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் விதவை உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை, பட்டா பெயர் மாற்றம், சான்றிதழ் பெயர் மாற்றம், வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட 38 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் 16 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. 
முகாமில், துணை வட்டாட்சியர் சுப்பிரமணி, ரமேஷ்குமார், வருவாய் ஆய்வாளர் வினோத், கிராம நிர்வாக அலுவலர் ஜெயபிரீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/dec/02/அம்மா-திட்ட-முகாமில்-16-மனுக்களுக்கு-உடனடித்-தீர்வு-2818794.html
2818793 சென்னை திருவள்ளூர் வீட்டின் பூட்டை உடைத்து 48 சவரன் திருட்டு DIN DIN Saturday, December 2, 2017 03:28 AM +0530 மீஞ்சூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 48 சவரன் நகை, 4 கிலோ வெள்ளிப் பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
மீஞ்சூர் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட அத்திப்பட்டு வைகுந்த பெருமாள் நகரில் வசித்து வருபவர் சரவணன்(38). இவர் சென்னைக் குடிநீர் வாரியத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் சரவணன் சென்னை கொரட்டூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வியாழக்கிழமை சென்று விட்டு, வெள்ளிக்கிழமை காலை வீடு 
திரும்பியுள்ளார். 
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 48 சவரன் நகை, 4 கிலோ வெள்ளிப் பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மீஞ்சூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/dec/02/வீட்டின்-பூட்டை-உடைத்து-48-சவரன்-திருட்டு-2818793.html
2818791 சென்னை திருவள்ளூர் ரூ. 3 ஆயிரம் லஞ்சம்: மோட்டார் வாகன ஆய்வாளர் உள்பட 3 பேர் கைது DIN DIN Saturday, December 2, 2017 03:28 AM +0530 செங்குன்றம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்சம் 
வாங்கியதாக மோட்டார் வாகன ஆய்வாளர் உள்பட 3 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். 
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (50). இவர், செங்குன்றத்தில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் எல்பிஜி கேஸ் பொருத்திய வாகனத்தை இயக்க அனுமதி சான்றிதழ் பெறச் சென்றார். இதற்காக தரகர் மோகன்ராஜ் மூலம் அணுகியதாகத் தெரிகிறது. அப்போது அனுமதி சான்றிதழைப் பெற்றுத் தர ரூ. 3,000 லஞ்சம் கேட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, முருகேசன் சென்னை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அளித்துள்ளார். 
இதையடுத்து, ரசாயனம் தடவிய ரூ. 3,000-த்தை முருகேசனிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கொடுத்து அனுப்பியுள்ளனர். 
இதைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி குமரகுருபரன் தலைமையில் 5 பேர் கொண்ட அதிகாரிகள், செங்குன்றம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை மதியம் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ரூ. 3, 000 லஞ்சப் பணத்தை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம், கணினி தட்டச்சர் பிரகாஷ் மற்றும் தரகர் மோகன்ராஜ் ஆகியோரை கைது செய்தனர். அவர்களை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் வைத்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/dec/02/ரூ-3-ஆயிரம்-லஞ்சம்-மோட்டார்-வாகன-ஆய்வாளர்-உள்பட-3-பேர்-கைது-2818791.html
2818790 சென்னை திருவள்ளூர் வீடு புகுந்து 16 பவுன் நகை, பணம் திருட்டு DIN DIN Saturday, December 2, 2017 03:28 AM +0530 அம்பத்தூரில் வீடு புகுந்து 16 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
அம்பத்தூர் வரதராஜபுரம் ஜி.என்.ஜி. சாலையில் வசிப்பவர் கிருஷ்ணகுமார் (62). இவரது மனைவி பார்வதி. இவர்களது மகன் ஸ்ரீராம் (30) தரமணியில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 
இந்நிலையில், வியாழக்கிழமை இரவு கிருஷ்ணகுமாரும், பார்வதியும் வீட்டின் கதவைப் பூட்டி விட்டு தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, கதவை உடைத்துக் கொண்டு உள்ள புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 16 பவுன் தங்க நகைகளையும், ரூ. 20 ஆயிரம் ரொக்கம், 2 செல்லிடப்பேசி ஆகியவற்றை திருடிச் சென்றனர். 
இரவுப் பணி முடிந்து அதிகாலை 3.30 மணிக்கு வீடு திரும்பிய ஸ்ரீராம், நகை, பணம் திருடு போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் அம்பத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/dec/02/வீடு-புகுந்து-16-பவுன்-நகை-பணம்-திருட்டு-2818790.html
2818165 சென்னை திருவள்ளூர் திருவள்ளூர், திருத்தணியில் கனமழை : தாமரைப்பாக்கத்தில் அதிக பட்சமாக 33 மி.மீ. மழை DIN DIN Friday, December 1, 2017 04:41 AM +0530 திருவள்ளூர் பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டனர். 
திருவள்ளூர் மாவட்டத்தில் புதன்கிழமை இரவு தொடங்கி, மறுநாள் காலை வரையில் விடாமல் கன மழை பெய்தது . இதனால், அன்றாடம் கூலி வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள், பள்ளி கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகளும் மிகவும் பாதிக்கப்பட்டனர். 
இந்த மழையால் ஏரி, குளங்களுக்கு மீண்டும் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுப்புற கிராமங்களில் குடிநீர் பிரச்னை தீரும். அதேபோல், விவசாய பாசன கிணறுகளுக்கும் போதுமான நீர் வரத்து ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
இதில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழையளவு வருமாறு (மில்லி மீட்டரில்): தாமரைபாக்கம்-33 , செங்குன்றம்-32.40, சோழபுரம்-31, பூண்டி, ஊத்துக்கோட்டை தலா -25, பூந்தமல்லி-24, கும்மிடிப்பூண்டி-17, செம்பரம்பாக்கம்-16.20, பொன்னேரி-16, பூண்டி-15.20, திருவள்ளூர்-15, திருத்தணி-7, திருவேலங்காடு-4, பள்ளிப்பட்டு-3, ஆர்.கே.பேட்டை-2. இதில் தாமரைப்பாக்கத்தில்தான் அதிகபட்ச மழையளவு (33மி.மீ) பதிவாகியுள்ளது.
திருத்தணியில்...
திருத்தணி பகுதியில் வியாழக்கிழமை காலை முதல் மதியம் வரை பெய்த பலத்த மழையால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.
திருத்தணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில், வியாழக்கிழமை அதிகாலை தூறல் மழை ஆரம்பித்தது. பின்னர், காலை, 8 மணி முதல், மதியம், 1 மணி வரை தொடர்ந்து பலத்த மழை பெய்தது.
இதனால், சாலை மற்றும் தெருக்களில் மழை நீருடன் கழிவுநீரும் கலந்து ஓடியதால், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கடும் சிரமப்பட்டனர். 
குறிப்பாக, பள்ளி மாணவர்கள் சிலர் குடைகளுடன் வராததால் திடீரென பெய்த மழையால் நனைந்தபடியே பள்ளிக்குச் சென்றனர்.
சில பெற்றோர் தங்களது குழந்தைகளை குடைகளுடன் பாதுகாப்பாக அழைத்துச் சென்று பள்ளியில் விட்டனர். வியாழக்கிழமை பள்ளிக்கு விடுமுறை அளிக்காததால், பெரும்பாலான மாணவர்கள் காலதாமதமாக வந்தனர். திடீர் கன மழையால் சில மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் தவித்தனர்.
பொன்னேரியில்...
பொன்னேரியில் புதன்கிழமை முதல் மீண்டும் பெய்துவரும் கன மழையால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். 
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி தொடங்கிய வடகிழக்குப் பருவமழை, 15 நாள்களுக்கு மேல் நீடித்தது. அப்போது பொன்னேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது. 
இதனால் ஆரணி ஆற்றின் குறுக்கே லட்சுமிபுரம், ரெட்டிப்பாளையம் பகுதிகளில் கட்டப்படுள்ள அணைகள் நிரம்பின. அத்துடன் அப்பகுதியில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களும் நிரம்பின. 
மேலும், பொன்னேரி, மீஞ்சூர், அத்திப்பட்டு, நந்தியம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வாக உள்ள குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தது. 
இதன் காரணமாக, இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிக்குளாகினர். இந்நிலையில், மீண்டும் புதன்கிழமை மாலை தொடங்கிய கன மழை விட்டு, விட்டுப் பெய்து வருகிறது. இதனால், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்குச் செல்வோர் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.

 


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/1/w600X390/tiruvalur.JPG திருவள்ளூரில் பெய்த கன மழையில் குடை மற்றும் மழைக்கோட்டுடன் பள்ளிக்குச் சென்ற மாணவ, மாணவிகள். http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/dec/01/திருவள்ளூர்-திருத்தணியில்-கனமழை--தாமரைப்பாக்கத்தில்-அதிக-பட்சமாக-33-மிமீ-மழை-2818165.html
2818164 சென்னை திருவள்ளூர் திருவள்ளூர் அருகே ஏரியில் உடைப்பு DIN DIN Friday, December 1, 2017 04:40 AM +0530 திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு முழுவதும் பெய்த கன மழையால் நாகேரியில் உடைப்பு ஏற்பட்டது. இந்த ஏரியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
திருவள்ளூர் பகுதியில் இரவு தொடங்கி, தொடர்ந்து கன மழை பெய்ததால் ஏரி, குளங்களுக்கு மீண்டும் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. 
திருவள்ளூரை அடுத்த மெய்யூரில் உள்ள நாகேரி தொடர்ந்து பெய்த மழையால் நிரம்பியுள்ளது. இந்த ஏரி 150 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரிக்கு, ராஜபாளையம் ஏரியின் உபரி நீர், பெரிய ஏரியின் உபரிநீர் மற்றும் மழைநீர் ஆகியவை நீர் ஆதாரங்களாக விளங்குகின்றன. 
இந்த ஏரி நிரம்பினால் 450 ஏக்கருக்கு பாசன வசதி கிடைக்கும். அதோடு, அந்தப் பகுதியில் உள்ள கிணறுகளுக்கும் குடிநீர் ஆதாரமாக இந்த ஏரி விளங்கி வருகிறது. 
தற்போதைய நிலையில், இந்த ஏரிக்குத் தடுப்பணை அமைக்காததாலும், ஏரியை தூர்வாராததாலும், கரைகளை உயர்த்தி, பலப்படுத்தாமல் இருப்பதாலும், உடைப்பு ஏற்பட்டு மழை நீர் வெளியேறி கொசஸ்தலை ஆற்றில் கலந்து கடலில் சென்று வீணாகிறது. 
இப்பகுதியின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ள இந்த ஏரியில் தடுப்பணை அமைத்து, மராமத்துப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி கூறியதாவது: இந்த ஏரியில் மராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 50 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இதுவரையில் தூர்வாராத காரணத்தாலும், கரையைப் பலப்படுத்தாமல் இருப்பதாலும் சிறிது மழை பெய்தாலும் ஏரி நிரம்பி உடைப்பு ஏற்பட்டு வருகிறது. 
ஒவ்வொருமுறை உடைப்பு ஏற்படும்போதும், ஏரி நீர் அனைத்தும் சாலை வழியாக ஊருக்குள் புகுந்து விடும் நிலையிருக்கிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. 
இதைத் தவிர்க்கும் வகையில், உடைப்பு ஏற்படும் பகுதியில் கரையை உயர்த்தியும், தடுப்பணை அமைத்து விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்படும் வகையில் ஏரியில் அதிக கொள்ளளவு நீரை சேமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/1/w600X390/nageri.JPG திருவள்ளூரை அடுத்த மெய்யூரில் உள்ள நாகேரியில் உடைப்பு ஏற்பட்டதால் விரயமாகும் ஏரி நீர். http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/dec/01/திருவள்ளூர்-அருகே-ஏரியில்-உடைப்பு-2818164.html
2818163 சென்னை திருவள்ளூர் அரசுப் பள்ளியில் நூலக வார விழா DIN DIN Friday, December 1, 2017 04:39 AM +0530 பொன்னேரி வட்டம், கோளூர் அரசுப் பள்ளியில் தேசிய நூலக வார விழா நடைபெற்றது.
கோளூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், ஊர்ப் புற நூலகம் சார்பில் 50-வது தேசிய நூலக வார விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தலைமை வகித்தார். பொன்னேரி கிளை நூலக நூலகர் சம்பத் முன்னிலை வகித்தார். விழாவில் பள்ளி மாணவர்களுக்கு வாசிப்போம், நேசிப்போம் என்ற பெயரில் நூலகம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 
விழாவில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு நூலகர் சம்பத் புத்தகங்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/1/w600X390/school.JPG நூலக வார விழாவில் வாசிப்போம், நேசிப்போம் நிகழ்ச்சியில் பேசிய பள்ளி மாணவி. http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/dec/01/அரசுப்-பள்ளியில்-நூலக-வார-விழா-2818163.html
2818162 சென்னை திருவள்ளூர் புதிய வாக்காளர்கள் சேர்க்கும் முகாம் DIN DIN Friday, December 1, 2017 04:39 AM +0530 கும்மிடிப்பூண்டி வட்டத்தில் 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் முகாம் நடைபெற்றது. 
வட்டாட்சியர் ஆர்.எஸ்.ராஜகோபால் தலைமையில் டி.ஜெ.எஸ். பொறியியல் கல்லூரியில், நடத்தப்பட்ட இந்த முகாமில் 18 வயது நிரம்பிய மாணவர்களிடம், வருவாய்த் துறையினர் வாக்காளர் விண்ணப்பிக்கும் படிவத்தைத் தந்து, பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பங்களைச் சேகரித்தனர்.
இந்த முகாமில் 198 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தகுதியான விண்ணப்பதாரர்கள், திருத்தப்பட்ட வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெறுவதோடு இவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டையும் வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்வில், டி.ஜெ.எஸ் கல்விக் குழுமத் தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன், கல்லூரி முதல்வர் பழனி, நிர்வாக அலுவலர் ஏழுமலை உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதைத்தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் புதிய வாக்காளர்களைச் சேர்க்கும் பணியில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/1/w600X390/camp.JPG http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/dec/01/புதிய-வாக்காளர்கள்-சேர்க்கும்-முகாம்-2818162.html
2818161 சென்னை திருவள்ளூர் 4 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம்: வாகன ஓட்டுநருக்கு 2 ஆண்டு சிறை DIN DIN Friday, December 1, 2017 04:38 AM +0530 திருத்தணி அருகே கல்குவாரி நீரில் மாணவ, மாணவிகள் 4 பேர் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வாகன ஓட்டுநருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியது. 
வேலூர் மாவட்டம், அரக்கோணம் வின்டர்பேட்டையை சேர்ந்தவர் ரவி(42).இவர் கைக்கடிகாரம் பழுது நீக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ராணி(38) என்கிற மனைவியும், ஸ்ரீதேவி(16),சுவேதா(15),திவ்யபிரகாஷ்(9) என்கிற இரண்டு மகள்களும்,ஒரு மகனும் உள்ளனர். இவர்களில் ஸ்ரீதேவி 10 -ஆம் வகுப்பும், சுவேதா 8-ஆம் வகுப்பும், திவ்யபிரகாஷ் 5-ஆம் வகுப்பும் படித்து வந்தார்கள். இவர்களது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவருக்கு ஹேமலதா என்கிற மனைவியும், ரித்திக் ராக்கேஷ்(7) என்ற ஒரு மகனும் உள்ளனர். ஹேமலதாவின் உறவினர் வீடு திருத்தணி பெரியார் நகரில் உள்ளது. 
இந்நிலையில், கடந்த 12-06-2011 அன்று ஹேமலதா தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராணி மற்றும் அவரது குழந்தைகளான ஸ்ரீதேவி,சுவேதா,திவ்யபிரகாஷ் ஆகியோரை அழைத்துக்கொண்டு 6 பேரும் திருத்தணியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தனர். அப்போது, திருத்தணியில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து, பெரியார் நகரில் உள்ள கன்னிகோவிலுக்கு சென்று சாமி தரிசனம் முடித்து விட்டு அமர்ந்திருந்தனர். அப்போது ராணியின் உறவினரான வேலூர் மாவட்டம், அரக்கோணம் பூக்காரத்தெருவை சேர்ந்த திருமால் (36) என்ற வாகன ஓட்டுநரும் கோயிலுக்கு வந்தார். 
பின்னர், அங்கிருந்த கல்குவாரியில் தேங்கியிருந்த தண்ணீரில் ஸ்ரீதேவி,சுவேதா,திவ்யபிரகாஷ்,ரித்திக்ராக்கேஷ் ஆகியோர் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது, திருமால் மேற்குறிப்பிட்ட 4 பேருக்கும் நீச்சல் கற்றுத் தருவதாக கூறியுள்ளார். 
நீச்சல் கற்கும்போது, எதிர்பாராத வகையில் 4 பேரும் ஆழமான பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கினர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த திருமால் 4 பேரையும் காப்பாற்றப் போராடியும் பயனின்றி, நால்வரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 
இச்சம்பவம் குறித்து ராணி திருத்தணி காவல் நிலையத்தில் புகார் செய்தார். 
இவ்வழக்கு திருவள்ளூரில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரமராஜ், திருமாலின் மீதான குற்றம் நிருபிக்கப்பட்டதால் அவருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/dec/01/4-குழந்தைகள்-உயிரிழந்த-சம்பவம்-வாகன-ஓட்டுநருக்கு-2-ஆண்டு-சிறை-2818161.html
2818160 சென்னை திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 9 இடங்களில் அம்மா திட்ட முகாம் DIN DIN Friday, December 1, 2017 04:38 AM +0530 திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் பயனடையும் நோக்கத்தில் 9 இடங்களில்அம்மா திட்டமுகாம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற இருப்பதாக ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
அனைத்து கிராமங்களிலும் ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் , அந்தந்த பகுதியில் மனுக்கள் அளித்து பயன்பெறும் நோக்கத்திலும் வாரந்தோறும் குறிப்பிட்ட கிராமங்களைச் தேர்வு செய்து வருவாய் திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 
இதன் அடிப்படையில் திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வட்டத்திலும் 9 வருவாய் கிராமங்களில் தேர்வு செய்து காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரையில் நடைபெற 
உள்ளது.
இந்த முகாம் ஒவ்வொரு வட்டத்திலும் நடைபெற உள்ள தேர்வு செய்யப்பட்ட கிராமங்கள் வருமாறு: 
பொன்னேரி-சுன்னம்பேடு -3 கிராமம்விகிராம நிர்வாக அலுவலகம் அருகில் யிடத்திலும், திருத்தணி-தாழவேடு கிராம நிர்வாக அலுவலகம் அருகே உள்ள காலியிடத்திலும், பூந்தமல்லி-செம்பரம்பாக்கம் கிராம ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் அருகிலும், ஊத்துக்கோட்டை-மேல்மாளிகைப்பட்டு கிராம ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் அருகிலும், கும்மிடிப்பூண்டி-பூவலை கிராம நிர்வாக அலுவலகம் அருகிலும், திருவள்ளுர்-சத்தரை கிராம ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் அருகிலும், ஆவடி-நடுக்குத்தகை கிராம ஊராட்சி பூங்கா வளாகத்திலும், பள்ளிப்பட்டு-கிருஷ்ணமராஜகுப்பம் கிராம நிர்வாக அலுவலகம் அருகிலும், மாதவரம்-பெரியசேக்காடு கிராமத்தில் சென்னை அரசு துவக்கப்பள்ளி அருகிலும் இந்த முகாம் நடைபெற இருக்கிறது. 
அதனால் , இந்த முகாம்களில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மனுக்கள் அளித்து பயனடையலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/dec/01/மாவட்டத்தில்-இன்று-9-இடங்களில்-அம்மா-திட்ட-முகாம்-2818160.html
2818159 சென்னை திருவள்ளூர் டிச.4- இல் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் DIN DIN Friday, December 1, 2017 04:38 AM +0530 திருவள்ளூர் மாவட்டத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் டிச.4-ஆம் தேதி நடைபெறவுள்ளது. 
பள்ளிகளில் படித்து வரும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளிடையே தனித்திறமைகளை வளர்க்கும் வகையில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் மூலம் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு ஊக்கப்படுத்தப்பட்டு வருகின்றனர். 
நவ.30-ஆம் தேதி பாண்டூர் கிராமத்தில் உள்ள டி.இ.எல்.சி மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் டிச.4-ஆம் தேதி ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்க உதவித் திட்ட அலுவலர் ராமச்சந்திரன் இதனைத் தெரிவித்தார். 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/dec/01/டிச4--இல்-மாற்றுத்திறனாளிகளுக்கான-விளையாட்டுப்-போட்டிகள்-2818159.html
2818158 சென்னை திருவள்ளூர் ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை திருட்டு DIN DIN Friday, December 1, 2017 04:37 AM +0530 சோழவரத்தில், ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 
சோழவரம்-ஒரக்காடு சாலையில் வசித்து வருபவர் ராதா(52). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். 
வியாழக்கிழமை காலை பள்ளிக்குச் சென்று விட்டு மதியம் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் வைக்கப்பட்டிருந்த 30சவரன் நகைகள், 4 கிலோ வெள்ளிப் பொருள்கள் மற்றும் 50ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. 
இதுகுறித்து, சோழவரம் காவல் நிலையத்தில் ராதா புகார் அளித்தார். இத்திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/dec/01/ஆசிரியை-வீட்டின்-பூட்டை-உடைத்து-30-சவரன்-நகை-திருட்டு-2818158.html
2818096 சென்னை திருவள்ளூர் கன மழையால் இடிந்து விழும் நிலையில் பள்ளிக்கூடம்: மாணவர்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு DIN DIN Friday, December 1, 2017 01:55 AM +0530 திருவள்ளூர் அருகே கன மழையால் பள்ளி கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழக்கூடிய அபாயம் ஏற்பட்டதால், மாணவர்களை அமர வைக்க மாற்று இடம் ஏற்பாடு செய்யப்பட்டது. 
பூண்டியை அடுத்த மெய்யூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இதில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரையில் மாணவ, மாணவிகள் 167 பேர் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் மேற்கூரை ஓடுகளால் வேயப்பட்டிருந்தது. இக்கட்டடம் சுமார் 50 ஆண்டுகள் பழைமையானதாகும். 
இந்நிலையில், புதன்கிழமை இரவு தொடங்கிய கன மழையால் கட்டடம் மழை நீரால் ஓதம் ஏறியதோடு, மேற்கூரைவழியாக மழை நீர் ஒழுகியது. இதேபோல், தலைமையாசிரியர் அறை, சத்துணவு சமைக்கும் அறை, சாப்பிடும் அறைகளும் மழையால் ஒழுகின. இதனால், மாணவ, மாணவிகள் அமர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. 
மாற்று இடம் ஏற்பாடு: இதுகுறித்து, தலைமை ஆசிரியர் ராஜூ மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் பூண்டி உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ரங்கனுக்குத் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ரங்கன் விரைந்து வந்து, ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்களுடன் ஆலோசனை செய்தார். 
அதைத் தொடர்ந்து, தாற்காலிகமாக கிராம சேவை மைய வளாகத்திற்கு 3,4,5 ஆகிய வகுப்புகளை மாற்றலாம் என கிராம மக்கள் தெரிவித்தனர். உடனே மாணவ, மாணவிகளை புதிதாக அமைக்கப்பட்ட கிராம சேவை மைய வளாகத்திற்கு மாற்றம் செய்து அமரவைத்தனர். 
இது தொடர்பாக அக்கிராமத்தைச் சேர்ந்த விஜய் கூறியதாவது: இப்பள்ளி வளாகம் மழை பெய்தால் சுவர் ஈரமாகி விடுகிறது. ஓடுகள் சரியில்லாததால் மழை நீர் ஒழுகி வருகிறது. இதனால் மாணவ, மாணவிகள் அமர்ந்து படிக்க முடியாமல் பாதிக்கும் சூழ்நிலையிருக்கிறது. இப்பழைய கட்டடங்களை அகற்றிவிட்டு புதிதாக கட்டடம் அமைக்க வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர், மேல் அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளோம் . ஆனால் , இதுவரையில் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதாக அவர் தெரிவித்தார். 
இதுகுறித்து உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ரங்கன் கூறியதாவது: மழை நீர் ஒழுகிய வகுப்பறையில் இருந்து தாற்காலிகமாக கிராம சேவை மைய வளாகத்திற்கு 3 வகுப்புகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 
ஏற்கெனவே இப்பள்ளிக் கட்டடத்தைப் புதுப்பிப்பது தொடர்பாக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலருக்குத் தெரிவித்துள்ளோம். அதனால், ஒன்றிய அதிகாரிகள் விரைவில் திட்ட மதிப்பீடு தயார் செய்து உடனே கட்டடம் புதுப்பிக்கப்படவுள்ளது என்றார். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/1/w600X390/meyur.JPG திருவள்ளூரை அடுத்த மெய்யூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மழை நீர் ஒழுகிய வகுப்பறையில் அமர்ந்திருக்கும் மாணவ, மாணவிகள். http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/dec/01/கன-மழையால்-இடிந்து-விழும்-நிலையில்-பள்ளிக்கூடம்-மாணவர்களுக்கு-மாற்று-இடம்-ஏற்பாடு-2818096.html
2817581 சென்னை திருவள்ளூர் திருவள்ளூர் நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு : வெங்கத்தூரில் கடையடைப்பு போராட்டம் DIN DIN Thursday, November 30, 2017 04:53 AM +0530 திருவள்ளூர் நகராட்சியுடன் வெங்கத்தூர் ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சங்கத்தினர் புதன்கிழமை கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
திருவள்ளூர் நகராட்சியை தரம் உயர்த்த அருகில் உள்ள காக்களூர், வெங்கத்தூர், திருப்பாச்சூர், சின்ன ஈக்காடு ஆகிய கிராம ஊராட்சிகளையும் இணைக்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
இந்நகராட்சி மேம்படுத்தப்பட்டால் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் இயங்குவதற்கான நவீன பேருந்து நிலையம், தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களும் மேம்படுத்தப்படும். பாதாளச் சாக்கடைத் திட்டங்களும் விரைவில் செயல்படுத்தப்படும். அதோடு நகராட்சிப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும் எனவும் தெரிவித்திருந்தனர். 
இந்நிலையில், நகராட்சியில் உள்ள வார்டுகளை மறுசீரமைப்பு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் அருகில் உள்ள ஊராட்சிகளையும் இணைப்பதற்கான நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. 
இதற்கு வெங்கத்தூர் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பொதுமக்களுக்கு ஆதரவாக அப்பகுதி வியாபாரிகள் சங்கத்தினர் புதன்கிழமை ஒருநாள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவர் பாலயோகி கூறியதாவது: வெங்கத்தூர் தற்போதைய நிலையில் முதல் நிலை ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. 
இங்கு சுமார் 20 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழை எளிய மக்களாவர். 
இது, கிராம ஊராட்சியாக இருப்பதால் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் பசுமை வீடுகள் திட்டம் , காலனி குடியிருப்புகள் அமைக்கும் திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
நகராட்சியுடன் இணைக்கப்பட்டால் இத்திட்டங்கள் அனைத்தும் ரத்தாகிவிடும். அதனால் எக்காரணம் கொண்டும் வெங்கத்தூரை நகராட்சியோடு இணைக்கக் கூடாது. அதை மீறி இணைத்தால் பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் அனைத்துக் கட்சியினரும் இணைந்து பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/30/w600X390/venkatur.JPG வெங்கத்தூரில் புதன்கிழமை அடைக்கப்பட்டிருந்த கடைகள். http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/30/திருவள்ளூர்-நகராட்சியுடன்-இணைக்க-எதிர்ப்பு--வெங்கத்தூரில்-கடையடைப்பு-போராட்டம்-2817581.html
2817580 சென்னை திருவள்ளூர் லாரி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம் DIN DIN Thursday, November 30, 2017 04:53 AM +0530 திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் மணல் லாரி ஓட்டுநர்களிடம் போலீஸார் பணம் வசூல் செய்வதைக் கண்டித்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 
செங்குன்றம் பகுதியில் 800க்கும் மேற்பட்ட மணல் லாரிகள் இயங்கி வருகின்றன. இந்த லாரிகள் மூலம் ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்படும் மணலை பாதுகாப்புக்காக பாடியநல்லூர் அங்காளீஸ்வரி கோயில் மைதானத்தில் கொட்டி வைக்கின்றனர். 
பின்னர், சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு லாரிகள் மூலம் இந்த மணல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 
இவ்வாறு இரவு நேரங்களில் செல்லும் லாரிகளை காவல்
துறையினர் தடுத்து நிறுத்தி பணம் வசூல் செய்வதாக லாரி ஓட்டுநர்கள் குற்றம் சாட்டினர். 
இதையடுத்து, செங்குன்றம் சுற்றுவட்டார மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் இன்னாசி தலைமையில், செயலாளர் கே.எம்.டில்லி முன்னிலையில் ஓட்டுநர்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து இன்னாசி கூறியதாவது: நாங்கள் ஆந்திராவில் இருந்து மணலைக் கொண்டு வந்து, கலப்படம் செய்யாமல் சென்னைக்கு விநியோகம் செய்து வருகிறோம். 
ஆனால், மணலில் கலப்படம் செய்வதாக சில மர்ம நபர்கள் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். 
இவ்வாறு வதந்தி பரப்புவோர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மணலை வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரே விநியோகம் செய்து வருகிறோம். 
பொய்யான வதந்திகளை நம்பி, லாரி உரிமையாளர்களையும், ஓட்டுநர்களையும் கைது செய்வதைத் தடுக்க வேண்டும். மேலும், ஓட்டுநர்களிடம் பணம் வசூல் செய்யும் போலீஸார் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.  

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/30/w600X390/lorry_driver.JPG பணம் வசூல்: போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள்.  http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/30/லாரி-ஓட்டுநர்கள்-வேலை-நிறுத்தம்-2817580.html
2817579 சென்னை திருவள்ளூர் முதல்வர் கோப்பை - விளையாட்டு போட்டிகள்: 1050 பேர் பங்கேற்பு DIN DIN Thursday, November 30, 2017 04:52 AM +0530 திருவள்ளூரில் மாவட்ட அளவில் நடைபெற்ற முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 
மாவட்ட விளையாட்டு மைதான வளாகத்தில் நடைபெற்ற முதல்வர் கோப்பை - விளையாட்டு போட்டிகளின் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் மாணவ-மாணவிகள் 1050 பேர் கலந்து கொண்டனர். 
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அலுவலர் அருணா தலைமை வகித்தார். இப்போட்டிகளை கொடியசைத்துத் தொடக்கி வைத்து ஆட்சியர் எ.சுந்தரவல்லி பேசுகையில், மாணவ, மாணவிகளின் உடல்நலத்தையும், மனநலத்தையும் வலிமைப்படுத்தும் வகையில் பல்வேறு வகைகளில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை தொடங்கி, நவ. 30 மற்றும் டிச.2-ஆம் தேதி வரையிலும் நடைபெற இருக்கிறது. இதுபோன்ற போட்டிகளில் மாணவ, மாணவிகள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என்றார். 
இதில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.1000, 2-வது பரிசாக ரூ.750 மற்றும் 3-ஆவது பரிசாக ரூ.500 வழங்கப்பட இருக்கிறது. இந்த விளையாட்டுப் போட்டிகளுக்கு, மாவட்ட விளையாட்டுத்துறை அலுவலர்கள் மற்றும் பயிற்றுநர்கள் ஆகியோர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். 


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/30/w600X390/cm_cup.JPG http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/30/முதல்வர்-கோப்பை---விளையாட்டு-போட்டிகள்-1050-பேர்-பங்கேற்பு-2817579.html
2817578 சென்னை திருவள்ளூர் பொறுப்பூதியம் வழங்கக் கோரி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் DIN DIN Thursday, November 30, 2017 04:52 AM +0530 திருவள்ளூர் மாவட்டத்தில் பொறுப்பூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
வட்டாட்சியர் அலுவலக வளாகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். சங்க நிர்வாகி புகழேந்தி வரவேற்புரையாற்றினார். மாவட்ட இணைச் செயலாளர் திருமால் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தார். 
இதில், கிராம நிர்வாக அலுவலர்கள் மாவட்ட மாறுதல் உத்தரவை உடனே செயல்படுத்த வேண்டும். உள்பிரிவு பட்டா மாறுதல்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் பரிந்துரை இல்லாமல் செய்வதால் சட்டம் - ஒழுங்குப் பிரச்னை மற்றும் நீதிமன்ற வழக்குகள் அதிகமாக ஏற்படுவதைத் தடுக்கவும், சான்றுகள் வழங்க இணையதள சேவைக்கான தொகையை அளிக்க உத்தரவிட்டும் இதுவரையில் வழங்கப்படவில்லை மற்றும் கூடுதல் பொறுப்பு வகிக்கும் அலுவலர்களுக்கு பொறுப்பூதியம் நிறுத்தப்பட்டதை திரும்ப வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
இதில், வட்ட த் தலைவர் சீனிவாசன், செயலாளர் சசிகுமார், பொருளாளர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
இதேபோல், ஒவ்வொரு வட்டாரத் தலைமையிடத்திலும் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/30/w600X390/vao_union.JPG http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/30/பொறுப்பூதியம்-வழங்கக்-கோரி-கிராம-நிர்வாக-அலுவலர்கள்-சங்கத்தினர்-ஆர்ப்பாட்டம்-2817578.html
2817577 சென்னை திருவள்ளூர் மீனவர்களை சுட்ட கடலோரக் காவல் படையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் DIN DIN Thursday, November 30, 2017 04:51 AM +0530 பொன்னேரியில், கடலோரக் காவல் படையைக் கண்டித்து புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
பொன்னேரி பழைய பேருந்து நிலையம் - அண்ணாசிலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பின் நிர்வாகிகள், மலையப்பன், ஆனந்தன், மதிவாணன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில், தமிழக மீனவர்களை துப்பாக்கியால் சுட்ட கடலோரக் காவல் படையைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/30/w600X390/munani.JPG http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/30/மீனவர்களை-சுட்ட-கடலோரக்-காவல்-படையைக்-கண்டித்து-ஆர்ப்பாட்டம்-2817577.html
2817576 சென்னை திருவள்ளூர் குடிநீர் பிரச்னைக்குத் தீர்வு காணக் கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை DIN DIN Thursday, November 30, 2017 04:50 AM +0530 திருவள்ளூர் நகராட்சியில் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வலியுறுத்தி, காலி குடங்களுடன் பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 
திருவள்ளூர் நகராட்சியில் 3-வது வார்டுக்கு உள்பட்டது எடப்பாளையம் கிராமம். இப்பகுதியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நகராட்சி சார்பில் ஆழ்துளைக் குழாய்க் கிணறு அமைத்து மின் மோட்டார் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்த மின் மோட்டார் அமைத்திருந்த இடத்தை தனி நபர் ஆக்கிரமித்ததாக நகராட்சி சார்பில் வழக்குத் தொடரப்பட்டு நடைபெற்று வந்தது. இந்நிலையில், அந்த இடம் தனி நபருக்குச் சொந்தமானது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, மின் மோட்டார் அமைத்திருந்த இடத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 
இதனால் ஆத்திரம் அடைந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 
அப்போது, வழக்கின் போது நகராட்சி சார்பில் யாரும் ஆஜராகாததாலும், நிர்வாகத்தின் அலட்சியத்தாலும்தான் தீர்ப்பு எதிர்த் தரப்புக்குச் சாதகமானது என மக்கள் குற்றம் சாட்டினர். அதைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஏற்கெனவே உள்ள இடத்தில் இருந்து மீண்டும் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/30/w600X390/women.JPG http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/30/குடிநீர்-பிரச்னைக்குத்-தீர்வு-காணக்-கோரி-காலி-குடங்களுடன்-பொதுமக்கள்-முற்றுகை-2817576.html
2817575 சென்னை திருவள்ளூர் 294 மதுக்கூடங்களை ஏலம் எடுக்க ஆளில்லை: வைப்புத் தொகை உயர்வால் ஏலதாரர்கள் புறக்கணிப்பு DIN DIN Thursday, November 30, 2017 04:50 AM +0530 டாஸ்மாக் மதுக்கூட ஏலத்திற்கான வைப்புத் தொகை உயர்த்தப்பட்டதால் அனைத்து ஏலதாரர்களும் ஏலம் எடுக்காமல் புறக்கணித்தனர். 
திருவள்ளூர் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் செயல்பட்டு வரும் மதுக்கூடங்களுக்கான ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. 
இதில், திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தில் 194 மதுக்கூடங்களுக்கு திருமழிசை சிட்கோவில் உள்ள டாஸ்மாக் மண்டல அலுவலகத்திலும் , மேற்கு மாவட்டத்தில் 103 மதுக்கூடங்களுக்கு காக்களூர் சிட்கோவில் உள்ள டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகத்திலும் ஏலம் நடைபெற்றது. 
அப்போது, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும், டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏலம் எடுப்பதில் கடும் போட்டி நிலவியதால், அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் மரக்கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு, பாதுகாப்புக்குப் போலீஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர். 
இந்த ஏலத்தில் பங்கேற்க, பல்வேறு பகுதிகளில் இருந்து ஏலதாரர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இதில், ஒவ்வொரு மதுபானக் கடைகளில் விற்பனையாகும் தொகைக்கேற்ப 3 சதவீதம் வைப்புத்தொகையைச் செலுத்த வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 
இந்த வைப்புத் தொகை அறிவிப்புக்கு ஏலதாரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எப்போதும் போல் 2 சதவீத அளவிலேயே வைப்புத் தொகை செலுத்த அனுமதிக்குமாறு அதிகாரிகளிடம் 
கேட்டனர். 
இதற்கு அதிகாரிகள் மறுத்ததால், வெறும் 4 மதுக்கூடங்களுக்கு மட்டும் 8 பேர் விண்ணப்பித்தனர். மீதமுள்ள 294 மதுக்கூடங்களை ஏலம் கேட்க யாரும் முன்
வரவில்லை. இதனால், ஒரே நாளில் ஏலம் முடிந்துவிடும் என நினைத்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
இதுகுறித்து, திருவள்ளூர் மேற்கு மாவட்ட மண்டல அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், இதற்கு முன்பு வரையில், ஒரு மதுபானக் கடையின் ஒரு நாள் விற்பனையை ஒரு மாதத்திற்குக் கணக்கிட்டு அதில் 2 சதவீதத்தை வைப்புத் தொகையாக செலுத்தி வந்தனர். 
தற்போது இதில் ஒரு சதவீதம் அதிகரித்து 3 சதவீதமாக வைப்புத் தொகை செலுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. 
ஆனால், கூடுதல் வைப்புத் தொகையை குறைக்கும்படி ஏலதாரர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக அரசுதான் முடிவு எடுக்க வேண்டும். இந்த ஏலம் அரசு அறிவிக்கும் மற்றொரு நாளில் மீண்டும் நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/30/294-மதுக்கூடங்களை-ஏலம்-எடுக்க-ஆளில்லை-வைப்புத்-தொகை-உயர்வால்-ஏலதாரர்கள்-புறக்கணிப்பு-2817575.html
2817574 சென்னை திருவள்ளூர் தலைமை ஆசிரியை இடைநீக்கம் DIN DIN Thursday, November 30, 2017 04:49 AM +0530 திருவள்ளூரில் பள்ளியின் கழிப்பறையை மாணவிகளைக் கொண்டு சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை மணிமேகலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் ஆர்.எம்.ஜெயின் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் மாணவிகள் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் பயன்படுத்த 10 கழிப்பறைகள் உள்ளன. 
பள்ளித்தலைமை ஆசிரியை, மணிமேகலை அவ்வப்போது மாணவிகளை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்தாராம். கடந்த வெள்ளிக்கிழமையும் (நவம்பர் 24) மாணவிகளை வெறும் கையால், கழிப்பறையை சுத்தம் செய்யுமாறு கூறியுள்ளார். 
இதையடுத்து மாணவிகள் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி, கைகளால் கழிப்பறையைச் சுத்தம் செய்தனர். இது குறித்து பள்ளியில் விரிவான விசாரணை நடத்துமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி உத்தரவிட்டார். 
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் பள்ளியில் விசாரணை நடத்தினர். கழிப்பறையைச் சுத்தம் செய்த மாணவியர் மற்றும் ஆசிரியர்களிடம் தனித் தனியாக விசாரணை நடத்தி, அதை கடிதமாக எழுதி பெற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை மணிமேகலையை பணியிடை நீக்கம் செய்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/30/தலைமை-ஆசிரியை-இடைநீக்கம்-2817574.html
2816951 சென்னை திருவள்ளூர் குடியிருப்புகளை அகற்றாமல் பட்டா வழங்கக் கோரிக்கை DIN DIN Wednesday, November 29, 2017 04:38 AM +0530 திருநின்றவூரில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் குடியிருப்புகளை அகற்றாமல், பட்டா வழங்க வேண்டும் என அரசுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
திருநின்றவூர் பேரூராட்சியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக 400 -க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகள் வீடுகளுக்கு அருகில் உள்ள பள்ளி, கல்லூரியில் தங்கள் குழந்தைகளை சேர்த்து கல்வி பயின்று வருகின்றனர். 
அதேபோல், குடியிருப்புகள் அருகே தனியார் நிறுவனங்களில் இப்பகுதியினர் பணியாற்றி வருகின்றனர். 
இந் நிலையில் குடிசை மாற்று வாரியம் அருகில் இருக்கும் வீடுகளை அகற்ற அரசும், அதிகாரிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதனால் திருநின்றவூர் பேரூராட்சிக்கு உள்பட்ட 9, 12, 13-ஆகிய வார்டுகளில் உள்ள முத்தமிழ் நகரில் 20, பெரியார் நகரில் 70, முத்துமாரியம்மன் கோயில் தெரு, எம்.ஜி.ஆர் தெரு ஆகியவற்றில் 130, கொசவன்பாளையம் ஊராட்சியில் கொட்டாமேடு புதிய லட்சுமிபதி நகரில் 110 என மொத்தம் 330 வீடுகள் வரை அகற்ற பொதுப்பணி துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி மீண்டும் நோட்டீஸ் வழங்கியதோடு, அடுத்து வரும் 21 நாள்களில் வீடுகளை காலி செய்யவில்லை என்றால் தாங்களே அகற்றிவிட்டு அதற்கான செலவு தொகையையும் உங்களிடமே வசூலிப்போம் என பொதுப்பணித் துறையினர் எச்சரித்துள்ளனர். 
அதனால், திருநின்றவூர் பெரிய ஏரிக்கோ அல்லது மற்ற நீர்நிலைக்கோ பாதிப்பின்றி ஒதுக்குப்புறமாக வாழ்ந்து வருகிறோம். 30 ஆண்டுகளாக மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு மற்றும் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றுடன் வசித்து வரும் தங்களுக்கு அரசு சார்பில் குடிமனைப்பட்டா வழங்கி வாழ்வாதாரம் காக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/29/w600X390/tirunintravur.JPG http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/29/குடியிருப்புகளை-அகற்றாமல்-பட்டா-வழங்கக்-கோரிக்கை-2816951.html
2816950 சென்னை திருவள்ளூர் திருவேற்காட்டில் சுகாதாரச் சீர்கேடு DIN DIN Wednesday, November 29, 2017 04:37 AM +0530 திருவேற்காடு நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கழிவுநீர் கொட்டப்படுவதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
திருவேற்காடு நகராட்சிக்கு உள்பட்ட நூம்பல், சூசையா நகர் ஆகிய பகுதிகளில் 2,500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. 
இங்கு மழைநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. 
நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தாத காரணத்தால், திருவேற்காடு, கோலடி, வேலப்பன்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் சேகரமாகும் கழிவுநீர் தனியார் லாரிகள் மூலம் எடுத்து வரப்பட்டு, சூசையா நகரில் உள்ள மழைநீர் கால்வாயிலும், காலி இடத்திலும் கொட்டப்படுகிறது.
இதனால் கொசு உற்பத்தியாகி தொற்று நோய், டெங்கு காய்ச்சல் பரவம் அபாயம் உள்ளது. 
இதுகுறித்து இப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் முதல்வரின் தனிப் பிரிவுக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
எனவே, கழிவுநீர் கொட்டப்படுவதைத் தடுக்க திருவள்ளூர் ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/29/w600X390/tiruverkadu.JPG http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/29/திருவேற்காட்டில்-சுகாதாரச்-சீர்கேடு-2816950.html
2816944 சென்னை திருவள்ளூர் 2,263 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள்: அமைச்சர் வழங்கினார் DIN DIN Wednesday, November 29, 2017 03:31 AM +0530 பூந்தமல்லியில் பள்ளி மாணவர்கள் 2,263 பேருக்கு விலையில்லா மடிக்கணினிகளை ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் திங்கள்கிழமை வழங்கினார். 
பூந்தமல்லி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஆட்சியர் எ.சுந்தரவல்லி தலைமை வகித்தார். இதில் ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கிப் பேசியதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் 111 பள்ளிகளில் 21,903 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன. 
இதில், பூந்தமல்லி பகுதிகளைச் சேர்ந்த அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 439, குருவாயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 75 , வெள்ளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 239, கீழ்மணம்பேடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 212, காக்களூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 21, திருமழிசை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 200, சென்னீர்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 64, பூந்தமல்லி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 403 , செவ்வாப்பேட்டை அரசு (மகளிர்) ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளி-112, செவ்வாப்பேட்டை அரசு (ஆண்கள்) ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளி- 68, கோலப்பன்சேரி அரசு ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளி-69 என மொத்தம் 1,902 பேருக்கு விலையில்லா மடிக் கணினிகள் வழங்கப்பட்டன. 
அதேபோல், பூந்தமல்லி சரோஜினி வரதப்பன் பெண்கள் மேல்
நிலைப் பள்ளியில் 361 பேருக்கும், 12 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் என மொத்தம் 2,263 பேருக்கு மடிக்கணிகள் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 
நிகழ்ச்சியில் திருவள்ளூர் எம்.பி. பி.வேணுகோபால், பொன்னேரி எம்எல்ஏ பி.பலராமன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.ராஜேந்திரன், வருவாய் கோட்டாட்சியர் (பொ) நாராயணன், பூந்தமல்லி வட்டாட்சியர் ரமா, அரசு அலுவலர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/29/w600X390/venugobal.JPG http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/29/2263-மாணவர்களுக்கு-விலையில்லா-மடிக்கணினிகள்-அமைச்சர்-வழங்கினார்-2816944.html
2816943 சென்னை திருவள்ளூர் வீட்டுமனை வாங்கித் தருவதாக ரூ.29.30 லட்சம் மோசடி: தலைமை ஆசிரியர் மீது புகார் DIN DIN Wednesday, November 29, 2017 03:30 AM +0530 குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீட்டுமனை வாங்கித் தருவதாக ரூ.29.30 லட்சம் மோசடி செய்ததாக அரசு பள்ளி தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட மக்கள் ஆட்சியர் எ.சுந்தரவல்லியிடம் புகார் மனு கொடுத்தனர். 
கடம்பத்தூர் அருகே உள்ள திருப்பாச்சூர் அரசுப் பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வருபவர் மேகலா (எ)பர்வீன். இவர் சென்னையை அடுத்த அம்பத்தூர் அயப்பாக்கத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் குறைந்த விலையில் வீட்டுமனைகள் வாங்கித் தருவதாக மணலி, திருவொற்றியூர், பாடி, ஒரகடம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொது மக்களிடம் கூறியுள்ளார். இதற்கு முதலில் ரூ.60 ஆயிரம் பணம் கொடுக்க வேண்டும் என தலைமையாசிரியர் வலியுறுத்தினார். இதை உண்மையென நம்பிய பொதுமக்களிடம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ. 60 ஆயிரம் வரை சுமார் 100-க்கும் மேற்பட்டோரிடம் மொத்தம் ரூ.29.30 லட்சம் வசூலித்துள்ளார்.
பின்னர், நீண்ட நாள்களாகியும் குடியிருப்புகான இடம் பெற்றுத் தராமல் காலதாமதம் செய்துள்ளார். இதையடுத்து, பொதுமக்கள் அவரிடம் இடம் வாங்கிக் கொடுங்கள் அல்லது எங்கள் பணத்தைத் திருப்பிக் கொடுங்கள் என்று கேட்டபோது, இடமும் தரமுடியாது பணமும் தரமுடியாது என கூறி தலைமையாசிரியர் மிரட்டல் விடுத்துள்ளார். 
இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தலைமையாசிரியரிடம் இருந்து பணத்தைப் பெற்றுத் தரவும், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இந்த மனுவின் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதியளித்த பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/29/w600X390/application.jpg திருப்பாச்சூர் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த மக்கள். http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/29/வீட்டுமனை-வாங்கித்-தருவதாக-ரூ2930-லட்சம்-மோசடி-தலைமை-ஆசிரியர்-மீது-புகார்-2816943.html
2816942 சென்னை திருவள்ளூர் ஆசிரியர் பணியிடங்களுக்கு பணி நியமன ஆணை வழங்கல் DIN DIN Wednesday, November 29, 2017 03:28 AM +0530 திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு இணையதளம் வழியாக நடந்த கலந்தாய்வில் தேர்வு செய்யப்பட்டோருக்கு பணி நியமன ஆணைகளை முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் வழங்கினார். 
மாநில அளவில் கடந்த 2015-2016- ஆம் கல்வி ஆண்டில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் 195 பேர் பள்ளிக் கல்வித் துறைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டனர். இதில் அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியிடங்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இணையதளம் வழியாக நியமன கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் பாடவாரியாக ஆசிரியர்கள் 7 பேர் தேர்வு செய்யப்பட்டு, பணியிடம் ஒதுக்கப்பட்டதற்கான நியமன ஆணையை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வழங்கினார். நேர்முக உதவியாளர் (மேல்நிலைக் கல்வி) திருவரசு உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/29/w600X390/rajendren.JPG http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/29/ஆசிரியர்-பணியிடங்களுக்கு-பணி-நியமன-ஆணை-வழங்கல்-2816942.html
2816941 சென்னை திருவள்ளூர் அடுத்தடுத்த 3 வீடுகளில் திருட்டு DIN DIN Wednesday, November 29, 2017 03:27 AM +0530 கும்மிடிப்பூண்டியை அடுத்த சித்தராஜகண்டிகை பகுதியில் மர்ம நபர்கள் அடுத்தடுத்த 3 வீடுகளில் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்மிடிப்பூண்டியை அடுத்த சித்தராஜகண்டிகை டி.ஆர்.பி நகரைச் சேர்ந்தவர் மாரி (32). பன்றி வளர்க்கும் தொழில் செய்துவரும் இவருக்கு, இரு வீடுகள் உள்ளன. இந்நிநிலையில், திங்கள்கிழமை இரவு மாரி, ஒரு வீட்டை பூட்டிவிட்டு, இன்னொரு வீட்டில் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ரூ. 70 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றனர். மேலும், அதே பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலரான ஜெயச்சந்திரன் வீட்டின் பூட்டை உடைத்து அங்கிருந்த பைக்கை திருட முயன்றனர். பைக்கின் பூட்டை உடைக்க முடியாததால் அதை சேதப்படுத்திச் சென்றனர்.
தொடர்ந்து அருகே உள்ள ரேணுகா (35) வீட்டின் கதவை உடைக்க முயன்ற போது, சப்தம் கேட்டு அவர் வீட்டிற்கு வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது மர்ம நபர் 3 பேர் நிற்பதைக் கண்டு சப்தமிட்டதால், மர்ம நபர்கள் ரேணுகா மீது கற்களை வீசி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடிவருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/29/அடுத்தடுத்த-3-வீடுகளில்-திருட்டு-2816941.html
2816940 சென்னை திருவள்ளூர் நகை திருட்டு: இளைஞர் கைது DIN DIN Wednesday, November 29, 2017 03:27 AM +0530 கொரட்டூர் பகுதியில் வீடு புகுந்து திருடியதாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை கொரட்டூர் போத்தியம்மன் கோயில் தெருவில் மளிகை கடை நடத்தி வருபவர் மலையாண்டி. இவர், திங்கள்கிழமை மதியம் கடையில் இருந்த போது, விரலில் இருந்த மோதிரத்தை கழட்டி வைத்து விட்டு முகம் கழுவச் சென்றாராம். அப்போது, மளிகை பொருள் வாங்குவது போல வந்த மர்ம நபர், அங்கிருந்த மோதிரத்தை திருடிச் சென்றார். இதைப் பார்த்த மலையாண்டி, மர்ம நபரை விரட்டிப் பிடித்தார். பின்னர், அவரை கொரட்டூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். 
விசாரணையில், அவர், கொரடடூர் போத்தியம்மன்கோயில் தெருவைச் சேர்ந்த மதன்குமார் (30) என்பதும், கடந்த செப்டம்பர் மாதம் வன்னியர் தெருவைச் சேர்ந்த முருகேசனின் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் தங்க நகை, பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த பிஜூ வீட்டில் 3 பவுன் தங்க நகை ஆகியவற்றை திருடிச் சென்றதும் தெரியவந்தது. 
இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மதன்குமாரை கைது செய்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/29/நகை-திருட்டு-இளைஞர்-கைது-2816940.html
2816939 சென்னை திருவள்ளூர் டெங்கு மற்றும் தொற்று நோய் தடுப்பு பணிகள்: ஆட்சியர் ஆய்வு DIN DIN Wednesday, November 29, 2017 03:27 AM +0530 பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் டெங்கு மற்றும் தொற்று நோய்த் தடுப்புப் பணிகள் குறித்து ஆட்சியர் எ.சுந்தரவல்லி திங்கள்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார். 
பூண்டியை அடுத்த கலவை கிராமத்தில் டெங்கு மற்றும் தொற்று நோய் தடுப்பு குறித்து வீடுகள் தோறும் சென்று ஆட்சியர் ஆய்வு செய்தார். அப்போது, பொதுமக்களிடம் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் தேங்காய் சிரட்டைகள் ஆகியவை போட்டு வைக்கக் கூடாது. வீட்டின் சுற்றுப்புறங்களையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றார். 
அதேபோல், ஊராட்சிகளில் தூய்மைப் பணியாளர்கள் நாள்தோறும் குப்பைகளை அகற்றவும் வலியுறுத்தினார். பின்னர் டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயமும் வழங்கி, அதில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திகள் குறித்து ஆட்சியர் விளக்கமாக எடுத்துரைத்தார். அப்போது, வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/29/டெங்கு-மற்றும்-தொற்று-நோய்-தடுப்பு-பணிகள்-ஆட்சியர்-ஆய்வு-2816939.html
2816938 சென்னை திருவள்ளூர் மீலாது நபியை முன்னிட்டு மதுக்கடைகளை டிச.2-இல் மூட ஆட்சியர் உத்தரவு DIN DIN Wednesday, November 29, 2017 03:27 AM +0530 நபிகள் நாயகம் பிறந்த நாளை (மீலாது நபி) முன்னிட்டு டிச.2-ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகளை மூட ஆட்சியர் எ.சுந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார். 
இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் நபிகள் நாயகம் பிறந்த நாளான டிச.2-ஆம் தேதி, தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், அனைத்து ஹோட்டல் மற்றும் கிளப்புகளில் உரிமம் பெற்று செயல்பட்டு வரும் மது பானக் கூடங்கள் அதனுடன் இணைந்த பார்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும். 
எனவே அன்றைய நாளில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கடத்துதல், பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டோர் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கச் சட்டப்பிரிவின் படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அதில் அவர் எச்சரித்துள்ளார். 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/29/மீலாது-நபியை-முன்னிட்டு-மதுக்கடைகளை-டிச2-இல்-மூட-ஆட்சியர்-உத்தரவு-2816938.html
2816937 சென்னை திருவள்ளூர் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள் DIN DIN Wednesday, November 29, 2017 03:27 AM +0530 அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு திருவள்ளூர் மாவட்ட அளவில் ஓவியம் உள்பட பல்வேறு வகையான போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. 
பள்ளி மாணவ, மாணவிகள் ஒவ்வொருவரும் கற்பனைத் திறனை வளர்த்துக் கொள்ளும் நோக்கத்திலும், தனித்தன்மையுடன் செயல்படும் வகையில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருவள்ளூர் மாவட்ட அளவில் அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட வளாகத்தில் பேச்சு, ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். இதில் பெண்கள் கல்வி, சுத்தம், சுகாதாரம் , கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் ஆகிய தலைப்புகளில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. 
இதில் 1,2,3 ஆகிய வகுப்புகளுக்கு ஓவியப் போட்டியும், 4, 5-ஆம் வகுப்புக்கு பேச்சுப் போட்டியும், 6-முதல் 8-ஆம் வகுப்புகளுக்கு ஓவியம், பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளும் நடத்தப்பட்டன. இதில் ஏற்கெனவே ஒன்றிய அளவில் நடந்த போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள் 140 பேர் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டனர். இவற்றில் சிறப்பிடங்கள் பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படும். அதோடு மண்டல , மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கவும் அனுப்பி வைக்கப்படுவர்.
இதற்கான ஏற்பாடுகளை அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட உதவி அலுவலர் நந்தகுமார், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் செய்திருந்தனர். 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/29/அனைவருக்கும்-கல்வி-இயக்கம்-சார்பில்-மாணவ-மாணவிகளுக்கான-போட்டிகள்-2816937.html
2816935 சென்னை திருவள்ளூர் இரிடியம் மோசடி: ஒருவர் கைது DIN DIN Wednesday, November 29, 2017 03:26 AM +0530 செப்புத் தகட்டில் இருந்து இரிடியம் எடுத்துத் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபரை போலீஸார் கைது செய்தனர். 
திருவண்ணாமலை மாவட்டம், மாத்தூர் கிராமம் பள்ளத்தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம்(43) இவரது வீட்டில் மிகவும் பழைமையான செப்புத் தகடுகள், பாத்திரங்கள் இருந்தன. இதனை இவரது முன்னோர்கள் பாதுகாத்து வந்தனர். இதனில் சக்தி வாய்ந்த இரிடியம் இருக்கலாம் என்று இவரின் நண்பர்கள் கூறியதையடுத்து, பரிசோதித்து பார்க்க முடிவு செய்தார்.
அப்போது, பாலசுப்ரமணியத்திடம் அவரின் நண்பர் கோபால், தனக்கு வடநாட்டைச் சேர்ந்த ராம்ராஜ் பாண்டே (33) என்ற விஞ்ஞானியைத் தெரியும் என்றும், அவரிடம் செப்புத் தகட்டை கொடுத்து பரிசோதித்து விவரம் தெரிந்துகொள்ளலாம் என்றும் ஆலோசனை கூறினார். 
இதைத்தொடர்ந்து இருவரும், அம்பத்தூர் ஒரகடத்தைச் சேர்ந்த ராம்ராஜ் பாண்டேவை தொடர்புகொண்டனர். இவர்கள் 3 பேரும் அம்பத்தூர் தொழிற்பேட்டையிலுள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்துத் தங்கினார்கள். 
அப்போது, ராம்ராஜ் பாண்டே செப்புத் தகட்டில் இரிடியம் உள்ளதா என பரிசோதிக்க ரூ. 8 லட்சம் வரை செலவாகும் என்றும், இரிடியம் இருப்பது கண்டறியப்பட்டால் பலகோடி ரூபாய் பணம் கிடைக்கும் எனவும் ஆசைவார்த்தைகள் கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய பாலசுப்ரமணியம் ஊருக்குச் சென்று பணத்தை எடுத்துக் கொண்டுவந்து ராம்ராஜ் பாண்டேயிடம் கொடுத்தார். 
இதையடுத்து, இரிடியம் பரிசோதனைக்கு ரசாயனம் வாங்கி வருவதாகச் சென்ற ராம்ராஜ்பாண்டே மாயமானார். அவரது செல்லிடப்பேசியும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாலசுப்ரமணியம், அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். காவல் ஆய்வாளர் வள்ளியின் விசாரணையில் ராம்ராஜ் பாண்டே மிகப்பெரிய மோசடி மன்னன் என்பது தெரியவந்தது.
ராம்ராஜ் பாண்டே ஏற்கெனவே நவ.3-ம் தேதி தனது வீட்டில் சி.பி.ஐ அதிகாரிகளை போல் வந்த கும்பல் தன் வீட்டில் இருந்த ரூ.3 லட்சம் ரொக்கம்,15 சவரன் தங்கநகையை அள்ளிச் சென்றனர் என்று அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். பின்னர், விசாரணையில் அது பொய்ப் புகார் என்று தெரியவந்தது. அப்போது போலீஸார் ராம்ராஜ் பாண்டேயை எச்சரித்து அனுப்பி வைத்தனர். 
தற்போது, பாலசுப்ரமணியம் கூறிய அடையாளமும், பொய்ப் புகார் கொடுத்த ராம்ராஜ் பாண்டேயின் அடையாளமும் ஒத்துப்போனதால் போலீஸார் ராம்ராஜ் பாண்டேவை கைது செய்து சிறையில் அடைத்தனர். 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/29/இரிடியம்-மோசடி-ஒருவர்-கைது-2816935.html
2816934 சென்னை திருவள்ளூர் ஊராட்சி செயலர் மீது தாக்குதல்: போலீஸார் விசாரணை DIN DIN Wednesday, November 29, 2017 03:26 AM +0530 திருவள்ளூர் அருகே ஊராட்சி செயலாளரை பணி செய்யவிடாமல் தடுத்து, தாக்கியது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீஸார் தரப்பில் கூறியதாவது: 
திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது வேப்பம்பட்டு கிராமம். இக்கிராம ஊராட்சியில் செயலாளராக ஹரி (39) பணிபுரிந்து வருகிறார். இந்த ஊராட்சியில் வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த மணி (37) சாலை அமைத்துத் தருமாறு பலமுறை கேட்டுள்ளார். 
இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் கேட்டு நடவடிக்கை எடுப்பதாக ஹரி ஒவ்வொரு முறையும் கூறி வந்ததாகத் தெரிகிறது. ஆனால், அப்பகுதியில் சாலை அமைக்க எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மணி செவ்வாய்க்கிழமை ஊராட்சிப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஹரியை தகாத வார்த்தையால் பேசி, கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். மேலும் பணி செய்ய விடாமல் தடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் ஹரி புகார் செய்தார். அதன்பேரில், போலீஸார் மணி மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/29/ஊராட்சி-செயலர்-மீது-தாக்குதல்-போலீஸார்-விசாரணை-2816934.html
2816161 சென்னை திருவள்ளூர் கொசஸ்தலை ஆற்றில் மணல் குவாரி: கிராம மக்கள் எதிர்ப்பு: ஆட்சியர் அலுவலகம் முற்றுகை DIN DIN Tuesday, November 28, 2017 03:39 AM +0530 கொசஸ்தலை ஆற்றில் அரசு மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து லட்சுமி விலாசபுரம் கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பொதுமக்களுக்கு ஆதரவாக திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் பங்கேற்றார்.
திருவள்ளூர் அருகே லட்சுமி விலாசபுரத்தில் கொசஸ்தலை ஆற்றுப் பகுதியில் மணல்குவாரி அமைக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. 
இம்முயற்சியை அரசு கைவிட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் தலைமையில் பொதுமக்கள் 5 கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் நேரில் அளித்தனர். 
அந்த மனுக்களில் கிராம மக்கள் தெரிவித்திருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த பொன்னாங்குளம், லட்சுமி விலாசபுரம் , பாகசாலை கிராமம் வழியாகச் செல்லும் கொசஸ்தலை ஆற்றில் அரசு மணல் குவாரி அமைக்க ஆயத்த பணிகள் நடந்து வருகிறது. இதை பொதுமக்களின் நலன் கருதி தடை விதிக்க வேண்டும். 
கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியில் மணல் குவாரி அமைத்து விதிமுறைகளை மீறி அதிகமான மணல் எடுக்கப்பட்டது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டதால் விவசாயம் செய்ய முடியவில்லை. குடிநீருக்கும் பெரும் அவதிக்குள்ளானோம்.
மேலும், பல்வேறு கிராமங்களுக்கான குடிநீர் ஆதாரத்திற்கான ஆழ்குழாய் கிணறுகளும் கொசஸ்தலை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ளது. குவாரியினால் இவையும் பாதிக்கப்படும் சூழ்நிலையுள்ளது.
அதோடு, இப்பகுதி மக்கள் விவசாய நிலங்களுக்கு சென்று வரும் வழியாகவும், கால்நடைகள் நடமாடும் பகுதியாகவும் இருப்பதால் இங்கு குவாரி அமைத்தால் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. இதனால், இப்பகுதியில் மணல்குவாரிகள் அமைக்கக்கூடாது என மனுவில் தெரிவித்துள்ளனர். 


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/28/w600X390/vg_rajendran.JPG பாகசாலை பகுதியில் அரசு மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து எம்எல்ஏ வி.ஜி. ராஜேந்திரன் தலைமையில் ஆட்சியரிடம் மனு கொடுத்த கிராம மக்கள். http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/28/கொசஸ்தலை-ஆற்றில்-மணல்-குவாரி-கிராம-மக்கள்-எதிர்ப்பு-ஆட்சியர்-அலுவலகம்-முற்றுகை-2816161.html
2816160 சென்னை திருவள்ளூர் சத்துணவு ஊழியர்கள் நூதன ஆர்ப்பாட்டம் DIN DIN Tuesday, November 28, 2017 03:38 AM +0530 தமிழ்நாடு ஓய்வூதிய சத்துணவு ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நெற்றியில், நாமம் போட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி மைய ஓய்வூதியர் சங்கம் சார்பில், திருத்தணி கமலா தியேட்டர் அருகே, நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். செயலர் ஜெகந்நாதன் வரவேற்றார். 
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி திருவள்ளூர் மாவட்டத் தலைவர் சத்தியநாதன் தொடங்கி வைத்தார்.
இதில், 100க்கும் மேற்பட்டோர் கருப்பு பேட்ஜ் அணிந்து, நெற்றியில் பட்டை நாமம் போட்டு, தமிழ்நாடு ஓய்வு சட்ட விதிகளின்படி, குறைந்தபட்ச ஊதியம் 7,850 ரூபாய் வழங்க வேண்டும். 
மருத்துவக் காப்பீடு, ஈமக்கிரியை செலவு மற்றும் பொங்கல் கருணைத் தொகை வழங்க வேண்டும், மாத ஓய்வூதியம், முதல் தேதியில் வழங்க வேண்டும், எட்டாவது ஊதியக்குழுவின் படி சொற்ப ஓய்வு ஊதியமாக ரூ. 500 உயர்த்தியதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.
இதில், ஒன்றியப் பொருளாளர் லலிதா உள்ளிட்ட சத்துணவு ஊழியர்கள் பங்கேற்றனர்.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/28/w600X390/teacher.JPG ஆறு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, நெற்றியில் பட்டை நாமம் போட்டு நூதன முறையில்ஆர்ப்பாட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்கள். http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/28/சத்துணவு-ஊழியர்கள்-நூதன-ஆர்ப்பாட்டம்-2816160.html
2816159 சென்னை திருவள்ளூர் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து: 3 பேர் சாவு DIN DIN Tuesday, November 28, 2017 03:38 AM +0530 திருவாலங்காடு அருகே மதுபோதையில் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். 
திருவாலங்காட்டை அடுத்த குப்பம் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த சந்தானத்தின் மகன் நவீன்(20) டிப்ளமோ படித்தவர். அவருக்குச் சொந்தமான காரில், அதே கிராமத்தைச் சேர்ந்த நண்பர்கள் கிருஷ்ணமூர்த்தி(24), புருஷோத்தமன்(24),சிவகுமார்(28), பார்த்திபன்(28), ரவிகுமார்,(23) நடராஜ்(21) உள்பட 7 பேர் திங்கள்கிழமை மதியம் கனகம்மாசத்திரத்தில் உள்ள நண்பரின் பிறந்தநாள் விழாவுக்குச் சென்றதாக கூறப்படுகிறது.
பின்னர், மாலை 5 மணி அளவில் அனைவரும் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். காரை நவீன் ஓட்டிவந்தார். கார் அத்திப்பட்டு கிராமம் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் திடீரென தலைகீழாக கவிழ்ந்து, விபத்துக்குள்ளானது. 
இதில் நவீன்,கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திலேயே இறந்தனர். புருஷோத்தமன் திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். படுகாயம் அடைந்த மற்ற நான்கு நண்பர்களும் சென்னை அரசு பொதுமருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நவீனும், நண்பர்களும் மது குடித்துவிட்டு காரை ஓட்டி வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 
இதுகுறித்து கனகம்மாசத்திரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் குப்பம் கண்டிகை கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/28/w600X390/naveen.JPG கார் விபத்தில் இறந்த நவீன், புருஷோத்தமன்.  http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/28/மதுபோதையில்-கார்-ஓட்டி-விபத்து-3-பேர்-சாவு-2816159.html
2816158 சென்னை திருவள்ளூர் ரூ.30 லட்சம் கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது DIN DIN Tuesday, November 28, 2017 03:37 AM +0530 ஆந்திரத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு லாரியில் கடத்தப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை தமிழக போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு லாரியில் சென்னை வழியாகப் போதைப் பொருள் கடத்தப்படுவதாக தமிழக காவல்துறையின் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு திங்கள்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.
அதையடுத்து, போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் டி. புருஷோத்தமன் தலைமையில் போலீஸார் பூந்தமல்லி அருகேயுள்ள நசரத்பேட்டை புறவழிச்சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த லாரியில் ரப்பர் ஷீட்டுகளுக்கு இடையே ரூ.30 லட்சம் மதிப்பில் 270 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். லாரியில் சென்ற சேலம் மாவட்டம், ஆத்தூரைச் சேர்ந்த செல்வம் (28), மதி (40), ரமேஷ் (25) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆந்திர வனப்பகுதியில் விளைவிக்கப்பட்ட கஞ்சாவை, கேரள மாநிலம் கொச்சிக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது. மேலும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரியும், அதில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.35 லட்சம் மதிப்பிலான ரப்பர் ஷீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இரு மாதத்தில் 2 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல்: தமிழக போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் கடந்த இரு மாதங்களாக நடத்திவரும் தொடர் சோதனையில் இதுவரை 2 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 325 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 15 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/28/w600X390/arest.JPG கஞ்சாவுடன் பறிமுதல் செய்யப்பட்ட லாரி. (வலது) கைது செய்யப்பட்டவர்களுடன் போலீஸார். http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/28/ரூ30-லட்சம்-கஞ்சா-பறிமுதல்-3-பேர்-கைது-2816158.html
2816157 சென்னை திருவள்ளூர் ஆந்திர எல்லையில் சாலை விபத்து: பக்தர்கள் இருவர் சாவு DIN DIN Tuesday, November 28, 2017 03:36 AM +0530 கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் அருகே திங்கள்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் பக்தர்கள் இருவர் இறந்தனர்.
ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், தேளப்புரவூலு கிராமத்தைச் சேர்ந்தவர் ராம ஆஞ்சநேயலு (31). இவருடன் அதே பகுதியைச் சேர்ந்த சிவகுமார் மற்றும் அவரது மகன் ராகுல் (8) உள்பட 8 பேர் மினி வேனில் நவ-20ஆம் தேதி புறப்பட்டு சபரிமலை கோயிலுக்குச் சென்றனர். வேனை துர்காபிரசாத் ஓட்டினார்.
அவர்கள் கடந்த புதன்கிழமை சபரிமலையில் சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, ராமேஸ்வரம் கோயிலுக்குச் சென்றுவிட்டு அங்கிருந்து வீட்டிற்கு திரும்பி வந்துகொண்டிருந்தனர். 
இந்நிலையில், திங்கள்கிழமை (நவம்பர்-27) அதிகாலையில் ஆரம்பாக்கம் அருகே ஆந்திர மாநிலம் தடாவை அடுத்த ராமாபுரம் பகுதியில் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்து கொண்டிருந்தது.
அப்போது சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் எதிர்பாராத விதமாக வேன் மோதியது. இதில் வேனில் இருந்த அய்யப்ப பக்தர்கள் ராம ஆஞ்சநேயலு, ராகுல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் அதில் இருந்த சிவகுமார், கோட்டிபள்ளி சிவா, போலா திரிநாத், போனி சீனிவாசராவ், தவிட்டி நாயுடு ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர். ஓட்டுநர் துர்கா பிரசாத்துக்கு லேசான காயம் ஏற்பட்டது. அனைவரும் ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து தடா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் சபரிமலை பக்தர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/28/w600X390/axident.JPG http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/28/ஆந்திர-எல்லையில்-சாலை-விபத்து-பக்தர்கள்-இருவர்-சாவு-2816157.html
2816155 சென்னை திருவள்ளூர் சாம்பல் கழிவுகளால் பாதிக்கப்படும் செப்பாக்கம் கிராமம்: கனிமொழி எம்.பி. பார்வையிட்டார் DIN DIN Tuesday, November 28, 2017 03:36 AM +0530 செப்பாக்கம் கிராமத்தில் சாம்பல் கழிவுகளால் அவதிப்பட்டு வரும் பொதுமக்களை மாநிலங்களவை எம்.பி. கனிமொழி, திங்கள்கிழமை நேரில் சந்தித்து அவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். 
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள காட்டுப்பள்ளி பகுதியில் எண்ணூர் காமராஜர் துறைமுகம், கடல் நீரை குடிநீராக்கும் ஆலை, வடசென்னை அனல் மின் நிலையம், வல்லூர் அனல் மின் நிலையம், இந்தியன் ஆயில் சமையல் எரிவாயு நிரப்பும் ஆலை உள்ளிட்டவை அமைந்துள்ளன. 
இந்த அனல் மின் நிலைய சாம்பல் கழிவுகளால் இப்பகுதியில் நீர் மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு பொதுமக்கள் வசிக்க முடியாத நிலை உள்ளதாக அப்
பகுதியில் வசிக்கும் சமூக நல ஆர்வலர்கள் நீண்ட காலமாக தெரிவித்து வருகின்றனர். 
கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி நடிகர் கமல்ஹாசன் இப்பகுதிக்கு வந்து பார்வையிட்டுச் சென்றார்.
இந்நிலையில், செப்பாக்கம் பகுதிக்கு திடீரென வருகை புரிந்த கனிமொழி எம்.பி., அப்பகுதியில் உள்ள சாம்பல் குளம், கொசஸ்தலை ஆறு, பக்கிங்ஹாம் கால்வாய்களில் கொட்டப்பட்டுள்ள சாம்பல் கழிவுகளைப் பார்வையிட்டார். அப்போது, அங்கு வசிக்கும் பெண்களிடம் அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். 
பின்னர், செய்தியாளர்களிடம் கனிமொழி எம்.பி. கூறியதாவது: எண்ணூர் துறைமுக விரிவாக்கம், வடசென்னை அனல் மின் நிலையை சாம்பல் கழிவுகள் காரணமாக இப்பகுதியில் வசித்து வந்த மக்கள் ஏற்கெனவே இடம் பெயர்ந்து சென்று விட்டனர். தற்போது இங்கு வசித்து வருபவர்கள் மாற்று இடம் செல்ல வழியின்றி அவதிப்படுகின்றனர். 
இவர்கள், சாலை, போக்குவரத்து, பள்ளிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் வாழ்கின்றனர். இங்குள்ள கொசஸ்தலை ஆற்றில் வடிகால் தண்ணீர் செல்லவில்லை என்றால், வெள்ளத்தில் சென்னை மூழ்கும். ஏற்கெனவே இப்பகுதி மக்களின் பிரச்னை குறித்து மாநிலங்களவையில் பேசியுள்ளேன். ஆனால் அதற்கு அமைச்சரிடம் இருந்து முழுமையான பதில் வரவில்லை. வருகிற கூட்டத்தொடரில் இது குறித்து கேள்வி எழுப்பி, முழுமையாக விளக்கம் பெறவுள்ளேன் என்றார்.
மேலும் ஒரு புகார்: இப்பகுதியில், எண்ணூர் காமராஜர் துறைமுகம் அமைந்துள்ளதன் காரணமாக கடல் பகுதியில் மீன் வளம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புகார் கூறப்படுகிறது. வடசென்னை அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் சாம்பல் கழிவுகள் (கொதிக்கும் நீர்) ராட்சத குழாய்கள் மூலம் 8 கி.மீ. தொலைவிலுள்ள ஊரணம்பேடு கிராமத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது. 
அங்கு (சாம்பல் குளத்தில்) மொத்தமாக குவித்து வைக்கப்படும் சாம்பல் கழிவுகள், சுடு நீர் ஆவியானவுடன் திடச் சாம்பல் கழிவுகள் மட்டும் லாரி மூலம் பல்வேறு பகுதிகளுக்கு மாற்றுத் தேவைகளுக்காக கொண்டு செல்லப்படுகிறது. சாம்பல் கழிவுகள் ராட்சத குழாய் மூலம் கொண்டு செல்லப்படும் வழியில் செப்பாக்கம், கே.ஆர். பாளையம், மவுத்தம்பேடு உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. 
இவ்வழியே செல்லும் ராட்சத குழாய்களில் அவ்வப்போது உடைப்பு ஏற்பட்டு, அதிக வெப்பமான சாம்பல் கழிவுகள் கசிவதால் இக்கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு அவ்வப்போது மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. இதனால், இந்த கிராமங்களில் பொதுமக்கள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கொசஸ்தலை ஆற்றின் நீரும் செப்பாக்கம் கிராமம் அருகே உள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் கலக்கிறது. 
இதனால், இப்பகுதியிலிருந்து வெளியேறும் சாம்பல் கழிவுகள் அங்குள்ள நீர் நிலைகள் அனைத்திலும் கலப்பதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கொசஸ்தலை ஆறு ஆக்கிரமிப்பால் வடசென்னைக்கு வெள்ள ஆபத்து ஏற்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முகநூலில் பதிவிட்டு வருகின்றனர். 


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/28/w600X390/kanimozhi.JPG செப்பாக்கம் பகுதியில் வசிக்கும் பெண்களிடம் குறைகளைக் கேட்டறிந்த மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி. http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/28/சாம்பல்-கழிவுகளால்-பாதிக்கப்படும்-செப்பாக்கம்-கிராமம்-கனிமொழி-எம்பி-பார்வையிட்டார்-2816155.html
2816156 சென்னை திருவள்ளூர் பொன்னேரி அரசு மருத்துவமனையில் நூலகம்: தலைமை மருத்துவரின் முன்மாதிரி நடவடிக்கை DIN DIN Tuesday, November 28, 2017 03:35 AM +0530 பொன்னேரி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு வரும் பெண்கள் படிப்பதற்காக நூலகம் அமைக்க தலைமை மருத்துவர் முன்மாதிரி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். 
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி ரயில் நிலைய சாலையில் தலைமை அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு புறநோயாளிகள் பிரிவில் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உள் நோயாளிகள் பிரிவில் 100-க்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெற்று வருவர். 
இம்மருத்துவமனையில் சித்த மருத்துவப் பிரிவும் தனி கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள மகப்பேறு பிரிவில் மாதத்திற்கு 150 முதல் 200 வரை மகப்பேறுகள் நடைபெறுகின்றன. 
இங்கு பிரசவத்திற்கு வரும் பெண்கள் உள்நோயாளிகளாக 15அல்லது 20நாள்கள் வரை தங்கி சிகிச்சை பெற்றுச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அவர்கள் பொழுதினை போக்கவும், அதே நேரத்தில், அறிவை வளர்க்கும் நோக்கில் ஒரு முன் மாதிரியாக இங்கு நூலகம் அமைக்க மருத்துவர் அனுரத்னா நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். 
நூலகம் அமைப்பதற்குத் தேவையான (ஜாதி, மதம், அரசியல் தொடர்புடைய புத்தகங்களைத் தவிர்த்து) அனைத்துப் புத்தகங்களையும் வழங்கும்படி சமூக வலைதளங்களில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 
பொதுமக்கள் பாராட்டு: நோயாளிகளுக்கு அலட்சியமாக சிகிச்சை அளிப்பது, சிகிச்சையில் தாமதம் உள்ளிட்ட பல்வேறு குறைகள் (ஒரு சில அரசு மருத்துமனைகளில்) இன்னமும் நீடித்து வருவதாக பொதுமக்கள் தரப்பில் புகார் உள்ளது. அதே நேரத்தில் பொன்னேரி அரசு மருத்துவமனையில் பெண்களின் அறிவை வளர்க்கும் நோக்கிலும், அவர்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கிலும் நூலகம் அமைப்பதென்பது ஒரு முன் மாதிரி முயற்சியாகும். பொன்னேரி பகுதி பொதுமக்களும் மருத்துவர் அனுரத்னாவின் முன் மாதிரி முயற்சிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/28/பொன்னேரி-அரசு-மருத்துவமனையில்-நூலகம்-தலைமை-மருத்துவரின்-முன்மாதிரி-நடவடிக்கை-2816156.html
2814389 சென்னை திருவள்ளூர் குளத்திலிருந்து பெயிண்டர் சடலமாக மீட்பு DIN DIN Saturday, November 25, 2017 04:36 AM +0530 செங்குன்றம் அருகே குளத்தில் இருந்து பெயிண்டர் சடலமாக மீடகப்பட்டார்.
செங்குன்றத்தை அடுத்த பாலவாயல் கங்கையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (58). இவர், பெயிண்டராக வேலை செய்து வந்தார். 
இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு பாலவாயலில் உள்ள குளத்தில் அமர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை அவ்வழியாகச் சென்ற சிலர் கோபாலகிருஷ்ணன் குளத்தில் சடலமாகக் கிடந்ததைப் பார்த்து, செங்குன்றம் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். 
அதன் பேரில் போலீஸார் அங்கு சென்று குளத்தில் இருந்து கோபாலகிருஷ்ணனின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/25/குளத்திலிருந்து-பெயிண்டர்-சடலமாக-மீட்பு-2814389.html
2814382 சென்னை திருவள்ளூர் குறைதீர் கூட்டம்: வெளிநடப்பு செய்த கரும்பு விவசாயிகள் DIN DIN Saturday, November 25, 2017 04:05 AM +0530 திருத்தணி சர்க்கரை ஆலை நிர்வாகம் 3 ஆண்டுகளாக வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி குறைதீர் கூட்டத்தில் இருந்து கரும்பு விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியர் எ.சுந்தரவல்லி தலைமைவகித்தார்.
கூட்டத்தில்,விவசாயிகள் அளிக்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் விவசாயிகள் அனைவரும் பாதிக்கப்படுவதாகக் கூறி விவசாயிகள் ஆட்சியரை முற்றுகையிட்டனர். அதைத் தொடர்ந்து வெளிநடப்பிலும் ஈடுபட்டனர். இதையடுத்து,சமரசம் மேற்கொள்ளப்பட்டதையடுத்து,கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டனர். 
அப்போது, பள்ளிப்பட்டு விவசாயி பெருமாள் கூறுகையில்,திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை வட்டாரத்தில் ஒவ்வொரு விவசாயியும் குறைந்தது 5 ஏக்கர் முதல் 10 ஏக்கர் பதிவு செய்து கரும்புகளை பயிரிட்டுள்ளனர். ஆனால், உடனே வெட்டப்படும் கரும்புக்கு ஆலை நிர்வாகம் பணம் வழங்குவதில்லை. இதேபோல், கடந்த 3 ஆண்டுகளாக கரும்பு விவசாயிகளுக்கு ரூ. 20 கோடி வரை நிலுவைத் தொகை வழங்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு பருவத்தின் போதும், கரும்பை அங்கு அளித்தாலும் குறிப்பிட்ட நாள்களுக்குள் பணம் தராமல் காலதாமதம் செய்து விவசாயிகளை காத்திருக்க வைக்கின்றனர் என்றார். 
திருவாலங்காடு விவசாயி ராஜேந்திரன் கூறுகையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து விவசாயிகளுக்கு கரும்பு வெட்டக் கூலி, வாகன வாடகை, ஏற்று, இறக்கு கூலி உள்ளிட்டவற்றை முதலிலேயே வழங்குகின்றனர். அதைத் தொடர்ந்து, கரும்பை அறுவடை செய்து, கொள்முதல் செய்கின்றனர். அதேபோல், வாகனத்தில் இருந்தபடியே எடைபோட்டு அதற்கான தொகையை உடனே அளிக்கின்றனர். அதனால் இங்கிருந்து வெளிமாநிலத்துக்கு கரும்புகளை அனுப்ப தடை செய்யக் கூடாது என்றார்.
இதேபோல் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி வட்டாரப் பகுதிகளில் மழையால் நெற்பயிர் மூழ்கியது. இதற்கான கணக்கெடுப்பு இதுவரையில் நடத்தவில்லை. அதேபோல் காப்பீடு தொகையும் கிடைக்கவில்லை என்றனர். 
இதற்கு ஆட்சியர் எ.சுந்தரவல்லி பதில் அளித்துப் பேசியதாவது: திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம் நிலுவைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கரும்பு விவசாயிகள் பாதிக்காமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமோ, அதற்கான ஏற்பாடுகளை செய்வோம். அதேபோல், கரும்பு விவசாயிகளுக்கு என்னென்ன சலுகைகள் கொடுக்கலாம் என்பது குறித்து சர்க்கரை ஆணைய இயக்குநரிடம் பேசி முடிவு செய்யப்படும். 
மேலும், மழையால் சேதமடைந்த பயிர்கள் குறித்து கணக்கெடுக்க வருவாய்த் துறை மற்றும் வேளாண்மைத் துறை அதிகாரிகளுக்கு ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/25/w600X390/meet.JPG http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/25/குறைதீர்-கூட்டம்-வெளிநடப்பு-செய்த-கரும்பு-விவசாயிகள்-2814382.html
2814381 சென்னை திருவள்ளூர் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச கொசு வலை விநியோகம் DIN DIN Saturday, November 25, 2017 04:04 AM +0530 உலக குழந்தைகள் தினத்தையொட்டி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக கொசு வலைகள் வழங்கப்பட்டன. 
திருத்தணி ஒன்றியம், பெரியகடம்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், டெங்கு கொசு உள்பட அனைத்து கொசுக்கடி நோய் குறித்து விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் ஞானசேகரன் தலைமை வகித்தார். ஆசிரியர் கோகுல்ராஜ் 
வரவேற்றார். இந்நிகழ்வில் மருத்துவர் அருண்குமார் கலந்து கொண்டு, கொசுக்கடியில் இருந்து எவ்வாறு தப்பிப்பது, கொசுக்களால் பரவும் நோய்கள் குறித்தும் விளக்கினர். மேலும், டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பதற்கு செய்ய வேண்டிய பணிகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்தும் மாணவர்களிடம் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த உளூர் சமூக சேவகர் கணேஷ், 23 மாணவ, மாணவியருக்கு கொசு வலைகள் வழங்கினார். நிகழ்ச்சியில், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் எழிலரசு, சுரேஷ்பாபு, அனைவருக்கும் கல்வி இயக்கம் (திருத்தணி கிளை) ஆசிரியர் பயிற்றுநர் சரவணன், மாணவர்களின் பெற்றோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/25/w600X390/student.JPG http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/25/அரசுப்-பள்ளி-மாணவர்களுக்கு-இலவச-கொசு-வலை-விநியோகம்-2814381.html
2814380 சென்னை திருவள்ளூர் ஆழ்துளைக் கிணற்றுக்கு மின் இணைப்பு துண்டிப்பு: பொதுமக்கள் சாலை மறியல் DIN DIN Saturday, November 25, 2017 04:04 AM +0530 திருவள்ளூர் அருகே குடிநீர் ஆழ்துளைக் கிணற்றுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். 
திருவள்ளூர் நகராட்சி யில் உள்ள எடப்பாளையம் பகுதியில் 3 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து மேல்நிலைத் தொட்டியில் தண்ணீர் தேக்கி வைத்து, விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 
இந்நிலையில், ஆழ்துளைக் கிணறு தனியார் இடத்தில் உள்ளதாகவும், நீதிமன்றத்தில் ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளதாகவும் கூறி திடீரென குடிநீர் விநியோகம் செய்வதற்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் குழாயில் தண்ணீர் வரவில்லை. இதுகுறித்து அறிந்த பொதுமக்கள், திருவள்ளூர் நகராட்சி அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நகராட்சி ஆணையர் செந்தில்குமரன், காவல் துணைக் கண்காணிப்பாளர் புகழேந்தி, காவல் ஆய்வாளர் வெங்கடேசன் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 
அப்போது பொதுமக்கள் அதிகாரிகளிடம் கூறுகையில், இப்பகுதியில் பொது இடத்தில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குடிநீரை 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள ஒருவர் தனக்குச் சொந்தமானது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அப்போது நகராட்சி நிர்வாகம் சார்பில், ஏன் மேல் முறையீடு செய்யவில்லை எனக் கேட்டனர். மேலும் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து கிடைக்கும் நீர் சுத்தமானது. அங்கிருந்து குடிநீர் விநியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 
இதற்கு அதிகாரிகள் மேல்நிலைத் தொட்டியில் தேவையான அளவு குடிநீர் உள்ளதாகவும், உடனே மின் இணைப்பு கொடுக்கப்பட்டு குறிப்பிட்ட ஆழ்துளைக் கிணற்றிலிந்து குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். 
சாலை மறியல் போராட்டம் காரணமாக சென்னை-திருத்தணி-திருப்பதி அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/25/w600X390/strike.JPG http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/25/ஆழ்துளைக்-கிணற்றுக்கு-மின்-இணைப்பு-துண்டிப்பு-பொதுமக்கள்-சாலை-மறியல்-2814380.html
2814379 சென்னை திருவள்ளூர் வல்லம்பேடு குப்பத்தில் சுனாமி ஒத்திகை DIN DIN Saturday, November 25, 2017 04:03 AM +0530 கும்மிடிப்பூண்டியை அடுத்த வல்லம்பேடு குப்பத்தில் நடத்தப்பட்ட ஒத்திகை பயிற்சிக்கு கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ஆர்.எஸ்.ராஜகோபால் தலைமை வகித்தார். 
நிகழ்வில் கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ராஜன், கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் தயாநிதி, கும்மிடிப்பூண்டி மண்டல துணை வட்டாட்சியர் தாமோதரன், ஆரம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் முத்துராமலிங்கம், வருவாய் ஆய்வாளர் பாலாஜி முன்னிலை வகித்தனர். இதில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 83 பேர் பங்கேற்றனர். 
தொடர்ந்து ஹைதராபாத்தில் உள்ள இந்திய பெருங்கடல் சுனாமி முன்னறிவிப்பு அமைப்பின் மூலம் சுனாமி தாக்கக்கூடும் என்ற எச்சரிக்கை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் மூலம் பொன்னேரி கோட்டாட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் இது குறித்து அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தி மீட்பு மற்றும் பாதுகாப்பு குழுவினை வல்லம்பேடு குப்பம் பகுதிக்கு வரவழைத்தார். 
வல்லம்பேடு குப்பம் கிராமத்தில் மாவட்ட நிர்வாகத்தில் பேரிடர் மேலாண்மை பயிற்சி பெற்ற அப்பகுதியைச் சேர்ந்த 15 முதல் நிலை பொறுப்பாளர்கள் அக்கிராம மீனவர் கூட்டமைப்பு தலைவர் எல்லப்பன் தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் இணைந்து, பொதுமக்களுக்கு சுனாமி எச்சரிக்கை தந்து அவர்களை அங்கிருந்து இருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். 
பொன்னேரியில்...
பொன்னேரி வட்டத்தில் கடலோரப் பகுதியான பழவேற்காடு, நக்கத்துறவில் நடத்தப்பட்ட ஒத்திகை நிகழ்ச்சியில், சுனாமி ஆழிப்பேரலை வருவதை போல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 
இதனை தொடர்ந்து அலாரம் அடிக்கப்பட்டது. பேரிடர் மீட்புக் குழுவினர் அங்கிருந்த உயரமான கட்டடங்களில் ஏறி கொடியசைத்து கடலில் இருக்கும் படகுகளை உள்ளே செல்லுமாறு ஒலி பெருக்கியில் எச்சரித்தனர். மேலும் நக்கத்துறவு சென்ற வருவாய்துறையினர் அங்கிருந்த மக்களை பேருந்துகள் மூலம் பாதுகாப்பாக அழைத்து சென்று ஆண்டாள் மடத்தில் உள்ள அரசு சமுதாய நலக்கூடத்தில் தங்க வைத்தனர். மேலும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களை பேரிடர் மீட்புக்குழு மற்றும் தீயணைப்புதுறையினர் கடற்கரை பகுதிக்கு சென்று மீட்டனர். மீட்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சைகள் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகைகள் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில் தேசிய பேரிடர் மீட்பு துறையினர், வருவாய்துறையினர், சுகாதாரத்துறையினர், தீயணைப்புதுறையினர், நெடுஞ்சாலைத்துறையினர், மின்சாரத்துறை, மீன்வளத்துறையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் போலீஸார் பங்கேற்றனர்.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/25/w600X390/valembedu.JPG வல்லம்பேடு குப்பத்தில் சுனாமி பேரிடர் ஒத்திகையில் சுனாமி எச்சரிக்கை தந்து பொதுமக்களை வெளியேற்றும் அதிகாரிகள். http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/25/வல்லம்பேடு-குப்பத்தில்-சுனாமி-ஒத்திகை-2814379.html
2814378 சென்னை திருவள்ளூர் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் DIN DIN Saturday, November 25, 2017 04:03 AM +0530 திருவள்ளூர் அருகே ஏரியின் மதகை சீரமைக்கவும், அங்கு இறைச்சிக் கழிவுகள் கொட்டுவதைத் தடுத்து பாதுகாக்க வலியுறுத்தியும் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், முன் மார்க்சிஸ்ட் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
ஆர்ப்பாட்டத்தில், திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது மேல்நல்லாத்தூர் முதல் நிலை ஊராட்சி ஆகும். 
இந்த ஊராட்சியில் உள்ள எம்.ஜி.ஆர். தெருவில் கழிப்பறை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். 
ஜீவா தெரு, காந்தி தெரு, எல்லையம்மன் கோவில் தெருக்களில் கழிவு நீர் தேங்குகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்த்தொற்று ஏற்படும் அபயாம் உள்ளது. மேல்நல்லாத்துர் ஏரியில் உள்ள மதகை சீரமைத்து, அதில் கொட்டப்படும் கோழிக் கழிவுகளை கொட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ரெட்டி குளம் உள்ளிட்ட அனைத்து ஏரிகளையும் தூர்வாருவதோடு, குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 
ஆர்ப்பாட்டத்துக்கு திருவள்ளுர் வட்ட குழு உறுப்பினர் கே.ஆறுமுகம் தலைமை வகித்தார். இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.பன்னீர்செல்வம், வட்டச் செயலாளர் ஆர்.தமிழ்அரசு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ். பூங்கோதை, இ.மோகனா, எஸ். விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/25/w600X390/maksist.JPG http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/25/மார்க்சிஸ்ட்-கட்சியினர்-ஆர்ப்பாட்டம்-2814378.html
2814377 சென்னை திருவள்ளூர் சாலையோரப் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து: 5 பேர் காயம் DIN DIN Saturday, November 25, 2017 04:02 AM +0530 திருத்தணி அருகே சாலையோரப் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருவாலங்காடை அடுத்த பழையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் (40). தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் வெள்ளிக்கிழமை காலை திருத்தணி முருகன் கோயிலுக்குச் சென்றுவிட்டு, வீட்டுக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அருங்குளம் கூட்டுச் சாலை அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரப் பள்ளத்தில் கார் தலைகீழாகக் கவிழ்ந்தது. 
இதில், காரில் பயணம் செய்த சரவணன், அவரது தாய் கொளசல்யா (53), மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் காயமடைந்தனர். அவர்களை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து அரக்கோணம் தாலுக்கா போலீஸார் விசாரித்து வருகின்றனர்.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/25/w600X390/car1.JPG சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கார். http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/25/சாலையோரப்-பள்ளத்தில்-கார்-கவிழ்ந்து-விபத்து-5-பேர்-காயம்-2814377.html
2814376 சென்னை திருவள்ளூர் பைக் மீது லாரி மோதல்: தீயணைப்பு வீரர் சாவு DIN DIN Saturday, November 25, 2017 04:02 AM +0530 கும்மிடிப்பூண்டி அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் தீயணைப்பு வீரர் இறந்தார்.
பெரியபாளையத்தை அடுத்த அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (28) . இவர், கும்மிடிப்பூண்டி வட்டத்துக்கு உள்பட்ட தேர்வாய் கண்டிகை சிப்காட் தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், ரமேஷ் வெள்ளிக்கிழமை தனது பைக்கில் பெரியபாளையம் வழியாகச் சென்று கொண்டிருந்தார். சூளைமேனி பகுதியில் சென்ற போது, பின்னால் வந்த லாரி பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த ரமேஷ் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார்.
இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரமேஷுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன் தான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/25/பைக்-மீது-லாரி-மோதல்-தீயணைப்பு-வீரர்-சாவு-2814376.html
2814375 சென்னை திருவள்ளூர் குளத்திலிருந்து பெயிண்டர் சடலமாக மீட்பு DIN DIN Saturday, November 25, 2017 04:01 AM +0530 செங்குன்றம் அருகே குளத்தில் இருந்து பெயிண்டர் சடலமாக மீடகப்பட்டார்.
செங்குன்றத்தை அடுத்த பாலவாயல் கங்கையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (58). இவர், பெயிண்டராக வேலை செய்து வந்தார். 
இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு பாலவாயலில் உள்ள குளத்தில் அமர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை அவ்வழியாகச் சென்ற சிலர் கோபாலகிருஷ்ணன் குளத்தில் சடலமாகக் கிடந்ததைப் பார்த்து, செங்குன்றம் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். 
அதன் பேரில் போலீஸார் அங்கு சென்று குளத்தில் இருந்து கோபாலகிருஷ்ணனின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/25/குளத்திலிருந்து-பெயிண்டர்-சடலமாக-மீட்பு-2814375.html
2814297 சென்னை திருவள்ளூர் பராமரிப்புப் பணி: ரயில் சேவையில் மாற்றம் DIN DIN Saturday, November 25, 2017 01:50 AM +0530 பொன்னேரி ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதையொட்டி, அந்த வழித்தடத்தில் சனி (நவ.25) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (நவ.26) ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரத்து செய்யப்படும் மின்சார ரயில்கள்:
1. கும்மிடிப்பூண்டி -மூர்மார்க்கெட் 
காலை 9.50, 10.50, 11.20.
2. மூர்மார்க்கெட் -கும்மிடிப்பூண்டி 
பிற்பகல் 1.25.
இடையில் நிறுத்தப்படும் ரயில் சேவைகள்:
சூளூர்பேட்டையில் இருந்து மூர்மார்க்கெட்டுக்கு காலை 10, 11.15 மணிக்கு புறப்படும் ரயில்கள் கும்மிடிப்பூண்டி வரை மட்டுமே இயக்கப்படும். மூர்மார்க்கெட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு காலை 9.30, 10.25, மதியம் 12.20 புறப்படும் ரயில்கள் மீஞ்சூர் வரை மட்டுமே செல்லும். 
சென்னை கடற்கரை -கும்மிடிப்பூண்டி இடையே காலை 9.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் மீஞ்சூர் வரை மட்டுமே செல்லும்.
பாசஞ்ஜர் சிறப்பு ரயில்கள்: மீஞ்சூர் -மூர்மார்க்கெட் இடையே காலை 10.35, 
11, 11.25, பிற்பகல் 1.05 மணிக்கு பாசஞ்ஜர் சிறப்பு ரயில் இயக்கப்படும்.
தாமதமாகும் விரைவு ரயில்கள்: 
1. ரயில் எண் 12711: விஜயவாடா -சென்னை சென்ட்ரல் பினாகினி விரைவு ரயில் பொன்னேரியில் 65 நிமிஷம் நிறுத்தப்படும்.
2. ரயில் எண் 12296: தானாபூர் -கேஎஸ்ஆர் பெங்களூரு சங்கமித்ரா விரைவு ரயில் கும்மிடிப்பூண்டியில் 60 நிமிஷம் நிறுத்தப்படும்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/25/பராமரிப்புப்-பணி-ரயில்-சேவையில்-மாற்றம்-2814297.html
2813638 சென்னை திருவள்ளூர் ஊராட்சி செயலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்: பணிகள் முடங்கின DIN DIN Friday, November 24, 2017 03:39 AM +0530 கும்மிடிப்பூண்டியை அடுத்த பெரியபாளையத்தில் ஊதியம் தொடர்பான கோரிக்கையை வலியுறுத்தி ஊராட்சி செயலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் மற்றும் எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள் ஆகியோர் வியாழக்கிழமை நடத்திய உள்ளிருப்பு போராட்டத்தின்போது, இளநிலை உதவியாளர்களுக்கு இணையான காலமுறை ஊதியத்தை ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் 58 ஊராட்சி செயலாளர்களும், 50 ஊழியர்களும் ஆர்ப்பாட்டம் செய்தனர். 
பெரியபாளையத்தில் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 53 ஊராட்சி செயலாளர்களும், 40 ஊழியர்களும் பங்கேற்றனர். 
திருவள்ளூரில்...
இப்போராட்ட த்தினால், ஒப்பந்ததாரர்களுக்கு பணம் விடுவித்தல், பயனாளிகளுக்கு சுகாதார வளாகம் அமைப்பதற்கான உத்தரவு, பசுமை குடியிருப்புத் திட்டம், பிரதமர் குடியிருப்புத் திட்டத்தில் வீடுகள் அமைப்பதற்கான பணி ஆணை வழங்குதல், தேசிய ஊரக வேலை திட்ட தொழிலாளர்களுக்கு கூலி விடுவித்தல், திருமண நிதி உதவிக்கான விண்ணப்பம் அளித்தல் உள்பட பல்வேறு திட்டப்பணிகள் முடங்கின. அலுவலகங்களும் வெறிச்சோடி காணப்பட்டன. 
இதுகுறித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் பொறுப்பாளர் மில்கி ராஜாசிங் கூறுகையில், தமிழகம் முழுவதும் 12,254 ஊராட்சிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் கிராம ஊராட்சிகளில் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்துவதில் ஊராட்சி செயலர்கள் பெரும் பங்காற்றி வருகின்றனர். கிராமிய திட்டங்கள், அடிப்படை வசதிகள் செய்து தருதல், வரிவசூல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 
அதனால் ஊராட்சியில் பணிபுரிந்து வரும் செயலாளர்களுக்கு, இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் கருவூலம் மூலம் வழங்க வேண்டும். இக்கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் தமிழக முதல்வரை வரும் டிச.12-இல் நேரில் சந்தித்து பணியாளர்கள் அனைவரும் பெருந்திரளாக முறையிடுவோம். இதற்கும் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் அடுத்த கட்டமாக டிசம்பர் 22-இல் சென்னையில் உள்ள பனகல் மாளிகையை முற்றுகையிடுவோம். 
அதற்கும் செவிசாய்க்கவில்லை என்றால் ஜனவரி மாதம் முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அவர் தெரிவித்தார். 

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/24/w600X390/gumutipoondi.JPG கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள். http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/24/ஊராட்சி-செயலாளர்கள்-உள்ளிருப்புப்-போராட்டம்-பணிகள்-முடங்கின-2813638.html
2813637 சென்னை திருவள்ளூர் அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் DIN DIN Friday, November 24, 2017 03:39 AM +0530 திருத்தணியில், இரட்டை இலை சின்னத்தை இபிஎஸ், ஓபிஎஸ் அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியதைத் தொடர்ந்து ஒன்றிய அதிமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். 
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பிறகு அதிமுக வில் ஏற்பட்ட பிளவால், அக்கட்சியின் சின்னமான இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கியது. இதை மீண்டும் யாருக்கு வழங்குவது என்பது தொடர்பாக தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. 
இந்நிலையில், வியாழக்கிழமை இபிஎஸ், ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்கி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதனால் அதிமுகவினர் மகிழ்ச்சி அடைந்தனர். எம்ஜிஆரின் சின்னம் மீண்டும் கிடைத்ததைக் கொண்டாடும் வகையில் திருத்தணி ஒன்றிய அதிமுக சார்பில் அரக்கோணம் எம். பி. திருத்தணி கோ. அரி, ஒன்றியச் செயலாளர் இ.என்.கண்டிகை எ. ரவி ஆகியோர் முன்னிலையில், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர். 
இந்நிகழ்வில் தாலுக்கா கூட்டுறவு வங்கி தலைவர் ஜெயசேகர்பாபு, நகர துணை செயலாளர் கேபிள் சுரேஷ், எச்.டி வங்கி தலைவர் டி.எம்.சீனிவாசன், ஏ.எஸ். பாலாஜி, ஒன்றியப் பொருளாளர் கோ.தாமோதரன், வேலஞ்சேரி பழனி, கொண்டாபுரம் பிச்சாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/24/w600X390/admk.JPG இரட்டை இலை சின்னம் இபிஎஸ், ஓபிஎஸ் அணிக்குக் கிடைத்தமைக்காக பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிய திருத்தணி அதிமுக ஒன்றியச் செயலாளர் இ.என்.கண்டிகை எ.ரவி. http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/24/அதிமுகவினர்-இனிப்பு-வழங்கி-கொண்டாட்டம்-2813637.html
2813636 சென்னை திருவள்ளூர் அரசுப் பள்ளியில் புதிய கலையரங்கம் அமைக்க எம்.பி. நிதி ஒதுக்கீடு DIN DIN Friday, November 24, 2017 03:38 AM +0530 அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் புதியதாக கலையரங்கம் கட்டவும், விளையாட்டு மைதானம் சீரமைக்கவும் அரக்கோணம் எம்.பி. திருத்தணி கோ.அரி ரூ. 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். 
திருத்தணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 1700 க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி வளாகத்தில் கலையரங்கம் இல்லாததால், பள்ளியில் நடக்கும் விழாக்களின் போது, தனிநபர் மூலம் பந்தல் வாடகைக்கு எடுத்து விழாக்கள் நடத்தி வந்தனர். இந்நிலையில், சனிக்கிழமை கடந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவிகளுக்கு பகல் 2 மணிக்கு இலவச மடிக்கணினி வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அரக்கோணம் எம். பி. கோ.அரி மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கி சிறப்புரையாற்றினார். 
அப்போது பள்ளிக்கு புதிதாக கலையரங்கம், விளையாட்டு மைதானத்தை சீரமைத்து தருமாறு பள்ளி தலைமை ஆசிரியை டி.தெமினா கிரேனாப்,பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுரேஷ் ஆகியோர் கோரிக்கை மனு கொடுத்தனர். தொடர்ந்து, எம்.பி. திருத்தணி கோ.அரி தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கலையரங்கம், விளையாட்டு மைதான சீரமைப்புக்கு ரூ.10 லட்சம் ரூபாய் நிதி ஓதுக்கீடு செய்தார். இப்பணிகளுக்கு விரைவில் டெண்டர் விடப்பட்டு புதியதாக கலையரங்கம் அமைக்கவும், விளையாட்டு மைதானத்தை சீரமைக்கப்பட உள்ளதாகவும் பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவித்தனர்.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/24/w600X390/hari.JPG அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் புதிய கலையரங்கம் அமைக்க, அரக்கோணம் எம்.பி. திருத்தணி கோ.அரியிடம் கோரிக்கை மனு வழங்கிய தலைமை ஆசிரியை டி.தெமினா கிரேனாப். http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/24/அரசுப்-பள்ளியில்-புதிய-கலையரங்கம்-அமைக்க-எம்பி-நிதி-ஒதுக்கீடு-2813636.html
2813635 சென்னை திருவள்ளூர் தொண்டு நிறுவனத்தைப் பார்வையிட்ட மாதவரம் எம்எல்ஏ DIN DIN Friday, November 24, 2017 03:38 AM +0530 திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தை அடுத்த சிறுணியம் பகுதியில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்ட மாதவரம் எம்எல்ஏ எஸ்.சுதர்சனம் உடல் நலம் குன்றியவர்களுக்கு உரிய உதவிகள் செய்வதாக உறுதி அளித்தார். 
சிறுணியம் பகுதியில் அபயம் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 
இந்நிறுவனம், தீராத வலி மற்றும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மேல் சிகிச்சை செய்ய வசதியில்லாமல் தவிப்பவர்களை மீட்டு இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறது. 
இந்நிலையில், இங்குள்ள நோயாளிகளை பார்வையிட்ட மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம், தொண்டு நிறுவனத்தினரிடம் விசாரணை நடத்தினார். 
அவர்களின் சேவைகள் குறித்துப் பாராட்டிய எம்எல்ஏ, மேலும் இங்குள்ள ஏழை, எளிய மக்கள் பயன் பெற அவர்களுக்கு எவ்வித உதவிகளையும் செய்யத் தயார் என உறுதியளித்தார். 
இந்நிகழ்வின்போது, சோழவரம் ஒன்றியச் செயலாளர் (திமுக) வே.கருணாகரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/24/w600X390/sudarsanam.JPG http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/24/தொண்டு-நிறுவனத்தைப்-பார்வையிட்ட-மாதவரம்-எம்எல்ஏ-2813635.html
2813634 சென்னை திருவள்ளூர் மாற்றுத் திறனாளிகளுக்கு உணவுப் பொருள்கள் அளிப்பு DIN DIN Friday, November 24, 2017 03:37 AM +0530 திருவள்ளூர் அருகே தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருவள்ளூர் அருகே ஈக்காடு கிராமத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் புதன்கிழமை நடபெற்ற நிகழ்ச்சிக்கு, நியூ விஷன் பிளானிங் அமைப்பின் தலைவர் டி.சாதுபீட்டர் தலைமை வகித்தார். இதில், மாற்றுத் திறனாளிகளுக்கு உணவுப் பொருள்கள், சோப்புகள், துணிகள், போர்வைகள் அடங்கிய பொருள்கள் பொட்டலங்களை வழங்கினர். இந்நிகழ்ச்சி மூலம் 120 மாற்றுத் திறனாளிகளுக்கு மொத்தம் ரூ. 40 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் வழங்கப்பட்டன. 
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நியூ விஷன் அறக்கட்டளை நிர்வாகிகள் எஸ்.பிரபாகர், ஐசக், உதயசங்கர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/24/w600X390/sathu_peter.JPG நியூ விஷன் பிளானிங் அறக்கட்டளை சார்பில் பார்வையற்றவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நிறுவனர் சாதுபீட்டர். http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/24/மாற்றுத்-திறனாளிகளுக்கு-உணவுப்-பொருள்கள்-அளிப்பு-2813634.html
2813633 சென்னை திருவள்ளூர் சாலை விபத்தில் தொழிலாளி சாவு DIN DIN Friday, November 24, 2017 03:36 AM +0530 திருவள்ளூர் அருகே பைக்கில் சென்ற தொழிலாளி ஜல்லிக் கற்கள் மீது மோதிய விபத்தில் இறந்தார். 
காக்களூர் அரசு குடியிருப்பு வளாகத்தில் வசிப்பவர் நடராஜன்(38). இவர் இப்பகுதியில் உள்ள பல தொழிற்சாலைகளில் பகுதி நேர எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வந்தார். 
இந்நிலையில் புதன்கிழமை இருங்காட்டுக் கோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இரவுப் பணியை முடித்து விட்டு, கொப்பூர் தார்ச் சாலையில் வந்துகொண்டிருந்தார். அப்போது, சாலையோரத்தில் குவித்து வைத்திருந்த ஜல்லிக்கற்களின் மேல் அவரது பைக் மோதியது. 
இதில் சறுக்கி விழுந்த நடராஜன் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து, அவரது சகோதரர் ஜெய்சங்கர் அளித்த புகாரின் பேரில், மணவாளநகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/24/சாலை-விபத்தில்-தொழிலாளி-சாவு-2813633.html
2813632 சென்னை திருவள்ளூர் கூடுவாஞ்சேரி ஏரி மதகை சேதப்படுத்தியவர் கைது DIN DIN Friday, November 24, 2017 03:36 AM +0530 திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே ஏரி மதகை சேதப்படுத்திய நபரை போலீஸார் கைது செய்தனர். 
பொன்னேரி வட்டத்தில் அமைந்துள்ளது கூடுவாஞ்சேரி ஏரி. இந்த ஏரியில் தேக்கி வைக்கப்படும் நீர் மூலம், பெரியகாவனம், கனகவல்லிபுரம், கூடுவாஞ்சேரி பகுதிகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற்று வருகின்றன. பொன்னேரியில் பொதுப்பணித்துறையினரின் கட்டுப்பாட்டில் இந்த ஏரி அமைந்துள்ளது.ஏரியில் நீர் நிரம்பும்போது பாசனத்துக்கான நீரினை பொதுப்பணித்துறையினர் மதகு மூலம் திறந்து விடுவர். 
பொன்னேரி பகுதியில் நவம்பர் முதல் வாரத்தில் பெய்த கன மழையால் கூடுவாஞ்சேரி ஏரி நிரம்பியதால், அருகில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கியது. இதன் காரணமாக பெரியாகவனம் கிராமத்தை சேர்ந்த சிலர் மதகினை சேதப்படுத்தி நீரை வெளியேற்றிதாக கூறப்படுகிறது. இதனால் பாசனத்துக்கு தேக்கி வைக்கப்பட்ட நீர் வெளியேறி வீணாகியது. 
இது குறித்து தகவல் அறிந்த பொன்னேரி கோட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட்டு சேதமடைந்த மதகினை சீரமைத்தனர். பின்னர், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஜெயகுரு பொன்னேரி காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். பொன்னேரி போலீஸார் ஏரி மதகை சேதப்படுத்திய பெரியகாவனம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜை (40) கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/24/கூடுவாஞ்சேரி-ஏரி-மதகை-சேதப்படுத்தியவர்-கைது-2813632.html
2813631 சென்னை திருவள்ளூர் பொன்னேரி, கும்மிடிப்பூண்டியில் இன்று சுனாமி முன்னெச்சரிக்கை பயிற்சி DIN DIN Friday, November 24, 2017 03:36 AM +0530 திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி- நக்கத்துரவு மற்றும் கும்மிடிப்பூண்டி- மெதிப்பாளையம் ஆகிய கிராமங்களில் பொதுமக்களுக்கு சுனாமி குறித்த விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை பயிற்சிக்கான ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
கடலோர கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களின் இடர்ப்பாடுகளை களைவதே பயிற்சி ஒத்திகையின் நோக்கமாகும். இதன் அடிப்படையில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமானது , இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்புடன் இணைந்து ஆந்திரம், மேற்கு வங்கம், தமிழகம், புதுச்சேரி மற்றும் ஒடிஸா ஆகிய மாநிலங்களில் கடலோர மாவட்டங்களில் உள்ள சில கிராமங்களை தேர்வு செய்து சுனாமி முன்னெச்சரிக்கை குறித்த பயிற்சி மற்றும் ஒத்திகை அளிக்கப்படவுள்ளது. 
இப்பயிற்சி ஒத்திகையானதுகடலோர பகுதியில் உள்ள பொன்னேரி-நக்கத்துரவு, கும்மிடிப்பூண்டி-மெதிப்பாளையம் ஆகிய கிராமங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
இதில், சுனாமி வரும் பட்சத்தில் இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்பின் மூலம் எவ்வாறு முன் அறிவிப்புகள் வெளியிடப்படும். அதையடுத்து அந்த தகவல் பரிமாற்றத்தை அரசு துறை மூலம் பாதிக்கப்படும் கிராம மக்களுக்கு எவ்வாறு சென்றடைய வேண்டும். 
அதேபோல், கடலோர பகுதியில் உள்ள கிராம பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையிலேயே பயிற்சி ஒத்திகை மூலம் விளக்கமாக எடுத்துரைக்கவும் உள்ளதாக இயற்கை பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெவித்தனர். 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/24/பொன்னேரி-கும்மிடிப்பூண்டியில்-இன்று-சுனாமி-முன்னெச்சரிக்கை-பயிற்சி-2813631.html
2813630 சென்னை திருவள்ளூர் தேசிய நூலக வாரவிழா: வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு DIN DIN Friday, November 24, 2017 03:36 AM +0530 தேசிய நூலக வாரவிழாவை முன்னிட்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள்வழங்கப்பட்டன. 
திருவள்ளூர் மாவட்ட மைய நூலக வளாகத்தில் 50-ஆவது தேசிய நூலக வார விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இவ்விழாவை ஆட்சியர் எ.சுந்தரவல்லி தொடங்கி வைத்தார். மாவட்ட நூலக அலுவலர் (கூடுதல்-பொறுப்பு) க.ஆனந்தன் வரவேற்றார். 
நூலக வார விழா என்பது பொதுமக்களிடத்தில் நூலகத்தின் தேவையை எடுத்துச் சொல்வதற்கும், மாணவர்களுக்கு நூலகம் ஓர் அறிவுக் களஞ்சியம் என்பதை உணர்த்தவும், அறிவுத்திறனை மேம்படுத்தவும் நடத்தப்படுகிறது. நூலகத்தில், அனைவரையும் உறுப்பினராகவும், புரவலராகவும் தங்களை இணைத்துக் கொள்வதற்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த இத்தேசிய நூலக வார விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு, ஓவியம் மற்றும் கதை சொல்லுதல் ஆகிய பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் தேர்வு செய்யப்பட்ட 96 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளும் வழங்கப்பட்டன. 
இவ்விழாவில் திருவள்ளூர் மைய நூலக வாசகர் வட்டத் தலைவர் ரவிச்சந்திரன், தமிழ் பண்பாட்டுச் சங்க பொதுச்செயலாளர் (சித்த மருத்துவர்) தமிழன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன், திருவள்ளூர் மாவட்ட மைய நூலகர் எ.சச்சிதானந்த யோகீஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/24/தேசிய-நூலக-வாரவிழா-வெற்றி-பெற்ற-மாணவர்களுக்குப்-பரிசு-2813630.html
2813629 சென்னை திருவள்ளூர் மாதவரம் அருகே ரூ.30 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு DIN DIN Friday, November 24, 2017 03:36 AM +0530 சென்னை மாதவரம் அருகே ரூ.30 கோடி மதிப்பிலான கோயில் நிலம், ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. 
மாதவரத்தை அடுத்த வில்லிவாக்கம் சாலையில் பழைமையான அகத்தீஸ்வரர் கோயில் உள்ளது. அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் இந்த கோயிலுக்குச் சொந்தமான 12 கிரவுண்ட் நிலத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்து வீடுகள் , கிடங்கு, கடைகள் கட்டி வாடகைக்கு விட்டிருந்தனர். 
இதுகுறித்து, அறநிலையத்துறைக்குப் புகார்கள் வந்தன. இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் மூலம் தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியது. 
ஆனால், ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருந்த குடியிருப்பு வாசிகள், வியாபாரிகள் உள்ளிட்டோர் அரசின் சுற்றறிக்கையை பொருட்படுத்தாமல் அலட்சியமாக இருந்துள்ளனர். 
இந்த நிலையில், வியாழக்கிழமை அறநிலையத்துறை இணை ஆணையர் லட்சுமணன் உத்தரவின்படி அறநிலைத்துறை உதவி ஆணையர் அன்னக்கொடி, கோயில் செயல் அலுவலர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் அரசு அதிகாரிகள், கோயில் நிலத்தில் கட்டப்பட்ட தனியார் மருந்தகம், அடுக்கு மாடி குடியிருப்புகள், கிடங்கு உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 
அப்போது, காவல் உதவி ஆணையர் காமில்பாஷா தலைமையில் ஆய்வாளர்கள் மாரியப்பன், சையத் ஜமால் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். குடியிருப்புகள், வணிக வளாகம், கிடங்கு உள்ளிட்டவை பூட்டி சீல் வைக்கப்பட்டன. 
இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.30 கோடியாகும். இங்கு தனியார் சிலர் அடுக்கு மாடி குடியிருப்புகளையும், கிடங்கு மற்றும் வணிக வளாகமும் கட்டி வாடகைக்கு விட்டிருந்தனர். இந்த வாடகையை அவர்கள் கோயிலுக்குச் செலுத்தியிருக்கலாம். ஆனால், அதுவும் செலுத்தாமல் பல ஆண்டுகளாக வாடகை வசூலித்து வருகின்றனர். இதனால், வாடகைக்கு இருப்பவர்களை ஆக்கிரமிப்பாளர்களாகப் பதிவு செய்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாகக் காணப்பட்டது.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/24/w600X390/madhavaram.JPG கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய வணிக வளாகம். (உள்படம்) வணிக வளாகத்தைப் பூட்டி சீல் வைத்த அதிகாரிகள். http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/24/மாதவரம்-அருகே-ரூ30-கோடி-மதிப்பிலான-கோயில்-நிலம்-மீட்பு-2813629.html