Dinamani - வேலூர் - http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3056212 சென்னை வேலூர் சாலை விதிமீறலைத் தடுக்க நவீன கண்காணிப்பு வாகனம் DIN DIN Wednesday, December 12, 2018 02:50 AM +0530
சாலை விதிமீறலைத் தடுக்க வேலூரில் கேமரா பொருத்திய வேனில் இருந்தபடி அதிகாரிகள் கண்காணிப்புப் பணியை மேற்கொண்டுள்ளனர். அதன் மூலம் சாலை விதிகளை மீறுவோரைப் பிடித்து அபராதமும் விதித்து வருகின்றனர்.
வேலூர் மாநகரில் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் பலரும் சாலை விதிகளைப் பின்பற்றாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து, சாலை விதிமீறலைத் தடுக்க போக்குவரத்து போலீஸாரும், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, வேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை விதியை மீறும் வாகன ஓட்டிகளைப் பிடிக்க கேமரா வசதியுடன் கூடிய வேன் வாங்கப்பட்டுள்ளது. இந்த வேனை சாலையின் ஒருபகுதியில் நிறுத்தியபடி வாகன ஓட்டிகளைக் கண்காணிக்கலாம். அப்போது, சாலை விதிமீறும் வாகன ஓட்டிகளைப் பிடித்து அபராதமும் விதிக்க முடியும்.
இதன்படி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே நவீன கேமரா வசதியுடன் கூடிய வேனுடன் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வேனில் இருந்தபடி தூரத்தில் வரும் வாகனங்களைக் கண்காணித்து விதிமீறும் வாகன ஓட்டிகள் குறித்து மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கு செல்லிடப்பேசியில் தகவல் தெரிவித்தார். உடனடியாக ஆய்வாளர்கள் அந்த வாகனங்களைப் பிடித்து அபராதம் வசூலித்தனர்.
இதுகுறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் கூறியது: இந்த கேமராவுடன் கூடிய வேனைக் கொண்டு 500 மீட்டர் தொலைவில் வரும் வாகனங்களையும் கண்காணிக்க முடியும். 300 மீட்டர் தூரத்தில் அந்த வாகனம் வரும்போது அந்த வாகனத்தின் எண் தெளிவாக தெரியும். இவை அனைத்தும் கேமரா மூலம் கணினியில் பதிவாகிவிடும்.
செவ்வாய்க்கிழமை காலை நடந்த சோதனையில் செல்லிடப்பேசியில் பேசியபடி வந்த 14 வாகன ஓட்டிகள் பிடிபட்டனர். மேலும், அதிக அளவில் நபர்களை ஏற்றி வந்த ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், சாலை விதிமீறலைத் தவிர்க்க ஆலோசனையும் வழங்கப்பட்டது என்றார்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/12/12/w600X390/camera.JPG http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/12/சாலை-விதிமீறலைத்-தடுக்க-நவீன-கண்காணிப்பு-வாகனம்-3056212.html
3056097 சென்னை வேலூர் பைக் மோதி பெண் சாவு DIN DIN Wednesday, December 12, 2018 01:29 AM +0530 ஜோலார்பேட்டை அருகே பைக் மோதியதில் பெண் உயிரிழந்தார்.
ஜோலார்பேட்டையை அடுத்த ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரனின் மனைவி சந்திரா (50). இவர், ஞாயிற்றுக்கிழமை இரவு ரெட்டியூர் கூட்டுச் சாலை அருகே சாலை கடந்தபோது, அவ்வழியாகச் சென்ற பைக்  மோதியது. இதில், பலத்த காயமடைந்த சந்திராவை அங்கிருந்த பொதுமக்கள் திருப்பத்தூர் அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து, சந்திராவின் மகள் தனலட்சுமி அளித்த புகாரின் பேரில், ஜோலார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து, 
விசாரித்து வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/12/பைக்-மோதி-பெண்-சாவு-3056097.html
3056096 சென்னை வேலூர் பள்ளிக்கு ரூ.10 லட்சம் செலவில் கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு DIN DIN Wednesday, December 12, 2018 01:28 AM +0530 ஆற்காட்டில் உள்ள நகராட்சி (தெற்கு) பள்ளிக்கு ரூ. 10 லட்சம் செலவில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்புறைக் கட்டடம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. இக்கட்டடம் ஓய்வு பெற்ற ஆசிரியர் சி. ராதாகிருஷ்ணன் சார்பில் கட்டப்பட்டதாகும்.
அதேபோல் ஆற்காடு தோப்புகானா கெங்கையம்மன் கோயில் வளாகத்தில் ரூ. 7 லட்சம் செலவில் கட்டப்பட்ட இலவச மருத்துவமனைக்கான கட்டடத் திறப்பு விழாவும் நடைபெற்றது. இக்கட்டடமானது, ஆற்காடு குசல் ஜுவல்லர்ஸ் என்.கியாந்சந்த் சார்பில் கட்டப்பட்டதாகும்.
நிகழ்ச்சிக்கு, அண்ணாமலையார் அறக்கட்டளை அறங்காவலர் கு.சரவணன் தலைமை வகித்தார். மகாத்மா காந்தி அறக்கட்டளைத் தலைவர் ஜெ.லட்சுமணன், ஆற்காடு சட்டப் பேரவை உறுப்பினர் ஜெ.எல். ஈஸ்வரப்பன், அண்ணா சிலை சிறு வியாபாரிகள் சங்கத்தின்  பொருளாளர் பாஸ்கரன் மற்றும் நண்பர்கள் நலக்குழு நிர்வாகிகள் பங்கேற்றனர். ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் மருத்துவமனை கட்டடத்தை திறந்து வைத்தார். கலவை சச்சிதானந்த சுவாமிகள்  பள்ளியின் கூடுதல் வகுப்பறை கட்டடத்தை திறந்து வைத்தார்.  
விழாவில், இலவச மருத்துவமனைக்கு இ.சி.ஜி. கருவி, ஆய்வகக் கருவி உபகரணங்கள் வழங்கிய தன்னார்வலர்கள் கெளரவிக்கப்பட்டனர். இதில் நகரின் முக்கியப் பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/12/பள்ளிக்கு-ரூ10-லட்சம்-செலவில்-கூடுதல்-வகுப்பறை-கட்டடம்-திறப்பு-3056096.html
3056094 சென்னை வேலூர் 3 மாநில பேரவைத் தேர்தலில் வெற்றி: காங்கிரஸார் கொண்டாட்டம் DIN DIN Wednesday, December 12, 2018 01:28 AM +0530 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி முன்னிலை நிலவரம் வெளியானதையொட்டி, ஆம்பூரில் காங்கிரஸ் கட்சியினர் செவ்வாய்க்கிழமை பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
 சட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளதாக வெளியான தகவலை அடுத்து, ஆம்பூரில் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்.சரவணன் தலைமையில் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.   வேலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொருளர் கொத்தூர் மகேஷ், நிர்வாகிகள் சமியுல்லா, சங்கர், மாணிக்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


வாணியம்பாடியில்...
வாணியம்பாடி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சிறுபான்மைத் துறை மாநிலத் தலைவர் அஸ்லம் பாஷா தலைமை வகித்து, இந்திரா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். பின்னர், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். 
இதில், மாவட்ட இளைஞரணித் தலைவர் பைசல் அமீன், மாநில ஒருங்கிணைப்பாளர் பரீத் அஹமத், சட்டப்பேரவை இளைஞர் காங்கிரஸ் தலைவர் முதஸ்சீர் பாஷா, நிர்வாகிகள் கவியரசன், சலாவுதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/12/3-மாநில-பேரவைத்-தேர்தலில்-வெற்றி-காங்கிரஸார்-கொண்டாட்டம்-3056094.html
3056092 சென்னை வேலூர் பாரதியார் பிறந்த நாள் விழா DIN DIN Wednesday, December 12, 2018 01:27 AM +0530 ஆம்பூர் அருகே ராமச்சந்திராபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பாரதியாரின் 137-ஆவது பிறந்த நாள்  விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் சரஸ்வதி தலைமை வகித்தார்.  மாணவ, மாணவியர் பாரதியார் வேடமணிந்து மாறுவேடப் போட்டியில் பங்கேற்றனர். இதில் பங்குபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் பாரதியார் கவிதைகள் வாசிக்கப்பட்டன.

வாணியம்பாடியில்...
வாணியம்பாடி பாரதி தமிழ்ச் சங்கம் சார்பில் பெருமாள்பேட்டையில் நடைபெற்ற விழாவில் பாரதியாரின் உருவச் சிலைக்கு பாரதி தமிழ்ச் சங்கம் தலைவர் பேராசிரியர் ப.சிவராஜ், செயலாளர்  வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

குடியாத்தத்தில்...
குடியாத்தம் சூரியோதயா தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியை ஜெனீப்பர்பிலிப் தலைமை வகித்தார். ஆசிரியர் எம். சுந்தரமூர்த்தி வரவேற்றார். வட்டாரக் கல்வி அலுவலர் இளவரசன் பாரதியார் குறித்து சிறப்புரையாற்றினார். 
பாரதியாரின் வாழ்க்கை வரலாறு குறித்து நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு அரசு வழக்குரைஞர் கே.எம். பூபதி பரிசுகளை வழங்கிப் பேசினார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/12/பாரதியார்-பிறந்த-நாள்-விழா-3056092.html
3056089 சென்னை வேலூர் சாராயம் கடத்திய சொகுசு கார் பறிமுதல்: ஓட்டுநர் கைது DIN DIN Wednesday, December 12, 2018 01:27 AM +0530 குடியாத்தம் அருகே சாராயம் கடத்தி வந்த சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது. கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
ஆந்திர மாநில வனப்பகுதியில் இருந்து யானைகள் குடியாத்தத்தை அடுத்த சைனகுண்டா பகுதிக்கு வருவதைத் தடுக்க குடியாத்தம் வனச்சரக அலுவலர் சி. மகேந்திரன் தலைமையில் வனத்துறையினர் சைனகுண்டா சோதனைச் சாவடி அருகே முகாமிட்டிருந்தனர். 
திங்கள்கிழமை இரவு ஆந்திர மாநிலம் முசல்மடுகு பகுதியில் இருந்து வந்த ஒரு சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது காரில் இருந்த 2 பேர் இறங்கி ஓடிவிட்டனர். காரில் 2 டியூப்களில் 300 லிட்டர் சாராயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 
மேலும், காரின் முன்பக்க நம்பர் பிளேட்டும், பின்பக்க நம்பர் பிளேட்டும் வெவ்வேறாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து காருடன், சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. கார் ஓட்டுநர் ஒடுகத்தூரை அடுத்த ஏரியூரைச் சேர்ந்த வெங்கடேசன் (22) கைது செய்யப்பட்டார். சாராயம் ஒடுகத்தூருக்குக் கடத்திச் செல்ல இருந்தது விசாரணையில் தெரியவந்தது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/12/சாராயம்-கடத்திய-சொகுசு-கார்-பறிமுதல்-ஓட்டுநர்-கைது-3056089.html
3056088 சென்னை வேலூர் விபத்தில் ரயில்வே காவலர் சாவு DIN DIN Wednesday, December 12, 2018 01:26 AM +0530 ஜோலார்பேட்டை அருகே பைக் மோதியதில் ரயில்வே பாதுகாப்பு படை காவலர் உயிரிழந்தார்.
திருப்பத்தூரை அடுத்த  சுந்தரம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (42). ஜோலார்பேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவர், திருப்பத்தூரை அடுத்த அண்ணானப்பட்டியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு ஜோலார்பேட்டையிலிருந்து திருப்பத்தூர் நோக்கி தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் செந்தில்குமார் கீழே விழுந்தார்.
அப்போது திருப்பத்தூரிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற லாரி செந்தில்குமாரின் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த செந்தில்குமார் மீட்கப்பட்டு, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார்.  இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/12/விபத்தில்-ரயில்வே-காவலர்-சாவு-3056088.html
3056087 சென்னை வேலூர் தனியார் பிளாஸ்டிக் சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து DIN DIN Wednesday, December 12, 2018 01:26 AM +0530 ராணிப்பேட்டை அருகே தனியார் பிளாஸ்டிக் சேமிப்பு கிடங்கில் செவ்வாய்க்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. 
ராணிப்பேட்டையை அடுத்த செட்டித்தங்கல் அருகே அம்மூர்-லாலாப்பேட்டை சாலையில் தனியாருக்குச் சொந்தமான பழைய பிளாஸ்டிக் பொருள்களை சேமித்து வைக்கும் கிடங்கு உள்ளது.
இந்தக் கிடங்கில் செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 8 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. கிடங்கு முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. 
இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சிப்காட் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்து சுமார் 1 மணி நேர போராடி தீயை அணைத்தனர். 
ஆனால், அதற்குள் கிடங்கில் இருந்த  பழைய பிளாஸ்டிக் பொருள்கள் முழுவதும் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து ராணிப்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/12/தனியார்-பிளாஸ்டிக்-சேமிப்புக்-கிடங்கில்-தீ-விபத்து-3056087.html
3056086 சென்னை வேலூர் லாரி மோதியதில் இளைஞர் சாவு DIN DIN Wednesday, December 12, 2018 01:26 AM +0530 திருப்பத்தூர் அருகே பைக்கில் சென்ற இளைஞர் லாரி மோதியதில் உயிரிழந்தார்.
 திருப்பத்தூரை அடுத்த ஜம்மனப்புதூரைச் சேர்ந்தவர் பழனி (34). இவர், திங்கள்கிழமை திருப்பத்தூர்-ஜம்மனப்புதூர் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னே சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்றபோது, நிலை தடுமாறி லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி,நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
 தகலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருப்பத்தூர் கிராமிய போலீஸார், பழனியின் சடலத்தை மீட்டு, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/12/லாரி-மோதியதில்-இளைஞர்-சாவு-3056086.html
3056085 சென்னை வேலூர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி: தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை DIN DIN Wednesday, December 12, 2018 01:26 AM +0530 அணைக்கட்டு பகுதியில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற கட்டடத் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வேலூர் விரைவு மகளிர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது. 
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், வர்த்தலாம்பட்டைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (20) கட்டடத் தொழிலாளி. 
இவர், கடந்த 2015 பிப்ரவரி 19-ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் கடைக்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த 10 வயது சிறுமியை சாக்லேட் வாங்கிக் கொடுத்து 2 கி.மீ. தூரமுள்ள மாந்தோப்புக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று, அங்கு அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார். 
இதைப் பார்த்த மாந்தோப்பு உரிமையாளர் முருகேசன், ராஜ்குமாரை பிடித்து தாங்கியதுடன் இதுதொடர்பாக வேப்பங்குப்பம் போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, போலீஸார் போக்சோ சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர். 
இந்த வழக்கு விசாரணை வேலூர் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.செல்வம், குற்றம்சாட்டப்பட்ட ராஜ்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 6 ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார். 
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய இழப்பீடு வழங்கவும் வேலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து ராஜ்குமார் வேலூர் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/12/சிறுமியை-பாலியல்-வன்கொடுமை-செய்ய-முயற்சி-தொழிலாளிக்கு-10-ஆண்டு-சிறை-3056085.html
3056084 சென்னை வேலூர் திருவள்ளுவர் பல்கலை.யுடன் சென்னை தேனீ வளர்ப்பு பயிற்சி மையம் புரிந்துணர்வு ஒப்பந்தம் DIN DIN Wednesday, December 12, 2018 01:25 AM +0530 அயல் மகரந்த சேர்க்கையை அதிகரித்து உணவுப் பொருள் உற்பத்தியைப் பெருக்கவும், உயிர்ச் சூழல் ஆராய்ச்சிக் கல்வியை மாணவர்கள்  மேற்கொள்ளவும் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக் கழகமும், சென்னை தனியார் தேனீ வளர்ப்பு பயிற்சி மையமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. 
சுமார் 112 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள திருவள்ளுவர் பல்கலைக் கழக வளாகத்தை மிகச் சிறந்த சுற்றுச்சூழலுக்கு உகந்த வளாகமாக மாற்ற துணை வேந்தர் க.முருகன், பதிவாளர்  வெ.பெருவழுதி ஆகியோரின் தீவிர முயற்சி மேற்கொண்டனர். 
இதில், பல்கலைக் கழக வளாகம் முழுவதும் அறியவகை மூலிகைச் செடிகள், காய், கனி, மலர் தாவரங்கள் நடப்பட்டு, மூலிகைத் தோட்டம் அமைக்கப்பட்டது. இதனால் பல்கலைக் கழக வளாகம் முழுவதும் பட்டாம் பூச்சிகள், தேனீக்கள், பறவைகள் என எண்ணற்ற உயிரினங்கள் வருகைக்கு ஏதுவான உயிர்ச் சூழலுக்கு உகந்த பசுமை வளாகமாக உருவெடுத்துள்ளது.
இத்தகைய உயிர்ச் சூழலுக்கு உகந்த பசுமை வளாகத்தை மாணவர்களின் ஆராய்ச்சிக்காகவும், அயல் மகரந்த சேர்க்கையை அதிகரித்து உணவுப் பொருள் உற்பத்தியை பெருக்கவும், உயிர்ச் சூழல் ஆராய்ச்சிக் கல்வியை மேம்படுத்தவும் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக் கழகமும், சென்னை தனியார் தேனீ வளர்ப்பு பயிற்சி மையமும் திங்கள்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. மேலும், சுற்றுவட்டார விவசாயிகள் பயன் பெறும் வகையில் இலவச தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு பயிற்சியும் அளிக்கப்பட்ட உள்ளதாக தெரிவித்தனர்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் போது பல்கலைக் கழகத் துணை வேந்தர் க.முருகன், பதிவாளர் வெ.பெருவழுதி, ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் மரியம் அந்தோணிராஜ், சென்னை தனியார் தேனீ வளர்ப்பு பயிற்சி மைய இயக்குநர் பி.வில்லியம் ஜேம்ஸ், உயிர்தொழில்நுட்பவியல் துறை உதவிப் பேராசிரியர் அ.ராஜசேகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/12/திருவள்ளுவர்-பல்கலையுடன்-சென்னை-தேனீ-வளர்ப்பு-பயிற்சி-மையம்-புரிந்துணர்வு-ஒப்பந்தம்-3056084.html
3056083 சென்னை வேலூர் ஜெருசலேம் புனித பயணத்துக்கு மானியத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்: மாநில சிறுபான்மையின ஆணையக் குழுத் தலைவரிடம் கோரிக்கை DIN DIN Wednesday, December 12, 2018 01:25 AM +0530 ஜெருசலேம் புனித பயணம் செல்லும் பயணிகளுக்கு பயணச் செலவு மானியம் ரூ. 20 ஆயிரத்தில் இருந்து ரூ. 40 ஆயிரமாக அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்று மாநில சிறுபான்மையின ஆணையக் குழுத் தலைவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா, பிரதமரின் 15 அம்சத் திட்டம், சிறுபான்னையினர் கருத்துக் கேட்புக் கூட்டம் வேலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்துக்கு, ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தலைமை வகித்தார். இதில், மாநில சிறுபான்மையின ஆணையக் குழுத் தலைவர் எம்.பிரகாஷ், மாவட்டத்திலுள்ள சிறுபான்மையின அமைப்பு உறுப்பினர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது, சிறுபான்மையின அமைப்பு உறுப்பினர்கள் கூறியது:
நாட்டில் சிறுபான்மை மக்கள் கல்வியிலும், தொழில் பொருளாதாரத்திலும் மிகவும் பின் தங்கியுள்ளனர். இவர்களுக்கு ஆதார், வாக்குரிமை அடையாள அட்டை, குடும்ப அட்டைகளில் பெயர் உச்சரித்து எழுதுவதில் பிழை ஏற்படும் நிலையைத் தவிர்க்க வேண்டும். வேலூர் மாவட்டத்தில் ஏழை சிறுபான்மையினர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா அளித்தல், இலவச வீடுகள் கட்டி தருவது ஆகியவற்றை விரைவாக மேற்கொள்ள வேண்டும். 
உருது பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள் அளிப்பதில் பெரிய குளறுபடி உள்ளது. இந்த மாணவர்கள் ஆண்டுதோறும் சில இடையூறுகளைக் கடந்து தேர்வு எழுத வேண்டியுள்ளது. எனவே, அரசு உருது மொழிக்கு உரிய அந்தஸ்து அளித்து உருது மொழி படிக்கும் மாணவர்களுக்கு உதவ வேண்டும். தமிழகத்தில் பல வாரியங்கள் அமைத்து அரசு உதவி வருவதுபோல், உருது அகாதெமி, உருதுமொழி வாரியம் அமைக்க வேண்டும். 
ஹஜ் பயணிகளுக்கு கட்டணங்களில் ஜிஎஸ்டி வரி விதிப்பதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். பிரதமரின் சிறுபான்மையினருக்கான 15 அம்ச திட்டம் தொடர்பாக ஒவ்வொரு மாதமும் சிறுபான்மையினரை அழைத்து ஆட்சியர் தலைமையில் கூட்டம் நடத்த வேண்டும்.
ஆம்பூரில் நீண்டகாலமாக தலித் கிறிஸ்தவ சிறுபான்மையினரின் பயன்பாட்டில் உள்ள நிலத்தை கையகப்படுத்த மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும். இம்மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின கிறிஸ்தவப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதி, சுகாதார வசதிகளை மேம்படுத்த அரசு மேலும் உதவி புரிய வேண்டும். ஜெருசலேம் புனித பயணம் செல்லும் பயணிகளுக்கு பயணச்
செலவு மானியம் ரூ. 20 ஆயிரத்தில் இருந்து ரூ. 40 ஆயிரமாக அரசு உயர்த்தி வழங்க வேண்டும்.
காட்பாடி வள்ளிமலையில் உள்ள ஜையின் குகைக் கோயிலுக்கு முறையாக பாதை அமைத்து ஜையின சமூகத்தினர் வழிபாடு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இந்தக் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறிய மாநில சிறுபான்மையின ஆணையக் குழுத் தலைவர் பிரகாஷ், சிறுபான்மையின மக்கள் நலன் காக்கவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் நலத் திட்டங்களை வேலூர் மாவட்ட சிறுபான்மையின சமூக மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும், சிறுபான்மையின மக்களுக்கு நலத் திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார். 
கூட்டத்தில், மாநில சிறுபான்மையின ஆணைய உறுப்பினர் அல்ஹாஜ் எஸ்.சையத் கமீல் சாஹிப், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பார்த்திபன், சார்-ஆட்சியர் (வேலூர்) மெஹராஜ், க.இளம்பகவத் (ராணிப்பேட்டை),  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலர் எஸ்.ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/12/ஜெருசலேம்-புனித-பயணத்துக்கு-மானியத்-தொகையை-உயர்த்தி-வழங்க-வேண்டும்-மாநில-சிறுபான்மையின-ஆணையக்-குழுத-3056083.html
3056082 சென்னை வேலூர் விஐடியில் அகில இந்திய  மகளிர் இறகுப் பந்து போட்டி தொடக்கம் DIN DIN Wednesday, December 12, 2018 01:24 AM +0530 அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான மகளிர் இறகுப் பந்து போட்டி விஐடி பல்கலைக் கழகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில், கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு என 4 மண்டலங்களில் இருந்து 16 அணி வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
தென்மண்டல பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான மகளிர் இறகுப் பந்து போட்டிகள் வேலூர் விஐடி பல்கலைக் கழகத்தில் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி 5 நாள்கள் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம், தெலங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு உள்பட்ட 82 பல்கலைக் கழக அணிகள் பங்கேற்றன. இதில், பெங்களூரைச் சேர்ந்த ஜெயின் பல்கலைக் கழகம், கோழிக்கோடு பல்கலைக் கழகம், ஆந்திரா பல்கலைக் கழகம், எஸ்ஆர்எம் ஆகிய 4 அணிகள் அகில இந்தியப் போட்டிக்குத் தகுதி பெற்றன.
இதேபோல், கிழக்கு மண்டல அளவிலான போட்டியில் வி.பி.எஸ். பூர்வாஞ்சல் பல்கலைக் கழகம் (ஜான்பூர்), ராஞ்சி பல்கலைக் கழகம் (ராஞ்சி), குவாஹாட்டி பல்கலைக் கழகம் (குவாஹாட்டி), திப்ரூகர் பல்கலைக் கழகம் (அஸ்ஸாம்), மேற்கு மண்டல அளவில் மும்பை பல்கலைக் கழகம், சாவித்திரி பாயி பூலே பூனா பல்கலைக் கழகம் (புணே), தேவி அகல்யா பல்கலைக் கழகம் (இந்தூர்), மகாராஷ்டிரா பல்கலைக் கழகம் (நாசிக்), வடக்கு மண்டலத்தில் தில்லி பல்கலைக் கழகம், பஞ்சாப் பல்கலைக் கழகம்(சண்டிகர்), பஞ்சாபி  பல்கலைக் கழகம் (பாட்டியாலா), எம். டி.பல்கலைக் கழகம் (ரோதக் ) என 4 மண்டலங்களில் மொத்தம் 16 பல்கலைக் கழக அணிகள் அகில இந்திய அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றன. இந்த அகில இந்திய அளவிலான இறகுப் பந்து போட்டிகள் விஐடி பல்கலைக் கழகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கின. இப்போட்டிகள் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. 
 தொடக்க விழாவில் விஐடி விளையாட்டுத் துறை இயக்குநர் என்.வி.தியாகசந்தன் வரவேற்றார். விஐடி இணை துணைவேந்தர் எஸ்.நாராயணன் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். விளையாட்டுத் துறை மாணவச் செயலர் தன்வி ஜி.பரிக் நன்றி கூறினார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/12/விஐடியில்-அகில-இந்திய--மகளிர்-இறகுப்-பந்து-போட்டி-தொடக்கம்-3056082.html
3056081 சென்னை வேலூர் மாணவர்களுக்கு கைகழுவுதல் விழிப்புணர்வு DIN DIN Wednesday, December 12, 2018 01:24 AM +0530 அரக்கோணத்தை அடுத்த சாலை, கைலாசபுரம் கிராம ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் பொம்மலாட்டம் மூலம் கைகழுவுதல் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் ஞானசேகரன் தலைமை வகித்தார். 
அரக்கோணம் திருக்குறள் தமிழ்ப் பேரவை நிர்வாகியும், இச்சிபுத்தூர் அரசினர் நடுநிலைப் பள்ளி ஆசிரியருமான வேல்குமார், நோய் ஏற்படுவதில் இருந்து மாணவர்கள் தங்களை காத்துக்கொள்ள சுகாதார முறையுடன் கூடிய கைகழுவுதல் குறித்து  பொம்மலாட்டம் மூலம் விழிப்புணர்வு பயிற்சியை அளித்தார்.  இதுவரை இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சியை திருக்குறள் தமிழ்ப் பேரவையினர் 60 பள்ளிகளில் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/12/மாணவர்களுக்கு-கைகழுவுதல்-விழிப்புணர்வு-3056081.html
3056080 சென்னை வேலூர் கஜா புயல் பாதிப்பு: திரட்டிய நிவாரண நிதியை ஆட்சியரிடம் வழங்கிய கலைஞர்கள் DIN DIN Wednesday, December 12, 2018 01:23 AM +0530 கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கத்தில் வேலூர் மாவட்ட தெருக்கூத்து கலைஞர்கள் பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகளை நடத்தி திரட்டிய நிவாரண நிதியை மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமனிடம் வழங்கினர். 
வேலூர் மாவட்ட நாடக நடிகர் சங்கத்தில் தெருக்கூத்து கலைஞர்கள், நாடக நடிகர்கள், இசை கலைஞர்கள், ஒப்பனையாளர்கள் உள்ளிட்ட 550 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். கோயில் விழாக்கள், தனியார் நிகழ்ச்சிகள், அரசு விழாக்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி வரும் இந்தக் கலைஞர்கள், கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவும் நோக்கத்தில் குடியாத்தம் வட்டத்துக்கு உள்பட்ட பல்வேறு இடங்களில் தெருக்கூத்து நிகழ்ச்சிகளை நடத்தி ரூ. 45 ஆயிரம் நிவாரண நிதி திரட்டினர். 
இந்த நிதியை சங்கத்தின் பொதுச் செயலர் ஜெ.சிவகுமார், தலைவர் கா.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமனிடம் திங்கள்கிழமை வழங்கினர். 
அப்போது, சங்க நிர்வாகிகள் கூறியது:
கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் உள்ள ஏராளமான தெருக் கூத்து, நாடக கலைஞர்கள் வீடுகளை இழந்துள்ளனர். அவர்களுக்கு மட்டுமின்றி பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பு மக்களுக்கு உதவும் நோக்கத்தில் தெருக்களில் கலை நிகழ்ச்சிகளை நடத்தி நிவாரண நிதி திரட்டி அளித்துள்ளோம். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் கலைஞர்களுக்கு தங்குவதற்கு வீடு கட்டித்தருவதுடன், அவர்கள் இழந்த பொருள்களை மீண்டும் அவர்களுக்கு வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது அரசு விழாக்களிலேயே தெருக்கூத்து கலை நிகழ்ச்சிகள் புறக்கணிக்கப்படுவதால் தெருக்கூத்து, நாடகக் கலைஞர்கள் மிகவும் வறுமை நிலையில் இருந்து வருகின்றனர். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த கலைஞர்கள் நலன் காக்க அவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/12/கஜா-புயல்-பாதிப்பு-திரட்டிய-நிவாரண-நிதியை-ஆட்சியரிடம்-வழங்கிய-கலைஞர்கள்-3056080.html
3056078 சென்னை வேலூர் கைதிகளின் மன அழுத்தத்தைக் குறைக்க பரோல் வழங்க வேண்டும்: கூடுதல் மாவட்ட நீதிபதி DIN DIN Wednesday, December 12, 2018 01:23 AM +0530 கைதிகளுக்கு பரோல் மறுக்கப்படுவதால் அவர்களின் மன அழுத்தம் அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு பரோல் வழங்கி குடும்பத்தினருடன் தங்க வைப்பதால் மனஅழுத்தத்தைக் குறைக்க முடியும் என்று கூடுதல் மாவட்ட நீதிபதி எஸ்.குணசேகரன் தெரிவித்தார்.
சிறை நிர்வாகம், சீர்திருத்த பயிற்சி மையம் (ஆப்கா) சார்பில் சிறைக்குள் போதைப் பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்கான 3 நாள்கள் பயிற்சி முகாம் வேலூரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இதில், தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், தெலங்கானா, கேரளம் ஆகிய 5 மாநிலங்களைச் சேர்ந்த 42 சிறைத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இந்தப் பயிற்சி முகாம் தொடக்க விழாவுக்கு ஆப்கா இயக்குநர் ராஜா தலைமை வகித்தார். 
பயிற்சியைத் தொடங்கி வைத்து  கூடுதல் மாவட்ட நீதிபதி எஸ்.குணசேகரன் பேசியது:
சிறைச் சாலைகள் கைதிகளுக்கு தண்டனை அளிக்கும் இடமாக அல்லாமல் அவர்களை சீர்திருத்தக்கூடிய இடமாகவும் உள்ளது. அதேசமயம், சிறைக்குள் ஊடுருவும் போதைப் பொருள்கள் அவர்களின் சீர்திருத்தத்துக்கு தடையாக இருந்து வருகிறது. அவ்வாறு போதைப் பொருள்களுக்கு அடிமையான கைதிகளைக் கையாள்வதில் பல்வேறு சிரமங்களும் நிலவுகின்றன. திடீரென போதைப் பொருள்களைத் தடை செய்வதால் அவர்களுக்கு மனஅழுத்தமும் ஏற்படுகின்றன. இவற்றுக்கு தீர்வுகாண சிறைக்குள் போதைப் பொருள்கள் கடத்தப்படுவதை முழுமையாகத் தடுக்க வேண்டும். 
வளர்ந்த நாடுகளில் கைதிகளைப் பார்க்க வரும் உறவினர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல், நம் நாட்டிலும் சிறைக்குள் போதைப் பொருள்கள் ஊடுருவலைத் தடுக்க மோப்ப நாய்கள், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பரிசோதனை செய்யலாம். 
மேலும், கைதிகளுக்கு ஆண்டுக்கு சில நாள்களுக்கு பரோல் வழங்கப்படுகிறது. சில கைதிகளுக்கு பரோல் மறுக்கப்படுவதால் அவர்கள் மனஅழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். அவர்களுக்கு பரோல் வழங்கி குடும்பத்தினருடன் தங்க வைப்பதால் மனஅழுத்தத்தை குறைக்க முடியும் என்றார்.
ஆப்கா துணை இயக்குநர் ராதாகிருஷ்ணன், பேராசிரியர் பியூலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/12/கைதிகளின்-மன-அழுத்தத்தைக்-குறைக்க-பரோல்-வழங்க-வேண்டும்-கூடுதல்-மாவட்ட-நீதிபதி-3056078.html
3056074 சென்னை வேலூர் சாலை விதிமீறலைத் தடுக்க நவீன கண்காணிப்பு வாகனம் DIN DIN Wednesday, December 12, 2018 01:22 AM +0530 சாலை விதிமீறலைத் தடுக்க வேலூரில் கேமரா பொருத்திய வேனில் இருந்தபடி அதிகாரிகள் கண்காணிப்புப் பணியை மேற்கொண்டுள்ளனர். அதன் மூலம் சாலை விதிகளை மீறுவோரைப் பிடித்து அபராதமும் விதித்து வருகின்றனர்.
வேலூர் மாநகரில் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் பலரும் சாலை விதிகளைப் பின்பற்றாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து, சாலை விதிமீறலைத் தடுக்க போக்குவரத்து போலீஸாரும், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, வேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை விதியை மீறும் வாகன ஓட்டிகளைப் பிடிக்க கேமரா வசதியுடன் கூடிய வேன் வாங்கப்பட்டுள்ளது. இந்த வேனை சாலையின் ஒருபகுதியில் நிறுத்தியபடி வாகன ஓட்டிகளைக் கண்காணிக்கலாம். அப்போது, சாலை விதிமீறும் வாகன ஓட்டிகளைப் பிடித்து அபராதமும் விதிக்க முடியும்.
இதன்படி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே நவீன கேமரா வசதியுடன் கூடிய வேனுடன் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வேனில் இருந்தபடி தூரத்தில் வரும் வாகனங்களைக் கண்காணித்து விதிமீறும் வாகன ஓட்டிகள் குறித்து மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கு செல்லிடப்பேசியில் தகவல் தெரிவித்தார். உடனடியாக ஆய்வாளர்கள் அந்த வாகனங்களைப் பிடித்து அபராதம் வசூலித்தனர்.
இதுகுறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் கூறியது: 
இந்த கேமராவுடன் கூடிய வேனைக் கொண்டு 500 மீட்டர் தொலைவில் வரும் வாகனங்களையும் கண்காணிக்க முடியும். 300 மீட்டர் தூரத்தில் அந்த வாகனம் வரும்போது அந்த வாகனத்தின் எண் தெளிவாக தெரியும். இவை அனைத்தும் கேமரா மூலம் கணினியில் பதிவாகிவிடும்.
 செவ்வாய்க்கிழமை காலை நடந்த சோதனையில் செல்லிடப்பேசியில் பேசியபடி வந்த 14 வாகன ஓட்டிகள் பிடிபட்டனர். 
மேலும், அதிக அளவில் நபர்களை ஏற்றி வந்த ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், சாலை விதிமீறலைத் தவிர்க்க ஆலோசனையும் வழங்கப்பட்டது என்றார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/12/சாலை-விதிமீறலைத்-தடுக்க-நவீன-கண்காணிப்பு-வாகனம்-3056074.html
3055633 சென்னை வேலூர் டிசம்பர் 12 மின் தடை DIN DIN Tuesday, December 11, 2018 06:24 AM +0530 வேலூர்
நாள்: 12-12-2018(புதன்கிழமை)
நேரம்: காலை 9 முதல் மாலை 5 வரை.
மின்தடைப் பகுதிகள்: வேலூர் புதிய பேருந்து நிலையம், பைபாஸ் ரோடு, தோட்டப்பாளையம், பழைய பேருந்து நிலையம், வேலூர் நகரம், பஜார், சலவன்பேட்டை, ஆபீசர்ஸ் லைன், கஸ்பா, ஊசூர், விரிஞ்சிபுரம், செதுவாலை, கொணவட்டம், சேண்பாக்கம், அதைச் சுற்றியுள்ள பகுதிகள், கிராமங்கள்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/11/டிசம்பர்-13-மின்-தடை-3055633.html
3055632 சென்னை வேலூர் ஆக்கிரமிப்பில் திணறும் திருப்பத்தூர் பேருந்து நிலையம்: நடவடிக்கையை எதிர்நோக்கும் பொதுமக்கள் DIN DIN Tuesday, December 11, 2018 06:21 AM +0530 திருப்பத்தூர் பேருந்து நிலையம் தொடர் ஆக்கிரமிப்புகளில் சிக்கித் தவிக்கிறது. இதனால் இப்பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாவதோடு, பேருந்து ஓட்டுநர்களும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமாக திருப்பத்தூர் அமைந்துள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வரும் இந்நகரில் மாவட்ட தலைமை இடத்துக்கு அடுத்தபடியாக அனைத்துத் துறை அலுவலகங்களும் செயல்படுகின்றன. சார்-ஆட்சியர் அலுவலகம் தொடங்கி, தொலைத் தொடர்புத் துறை, வனச் சரகம், மாவட்டக் கல்வி அலுவலகம், மின்துறை, மாவட்டக் கிளை நூலகம் உள்ளிட்டவை செயல்படுவதால், எந்நேரமும் திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படும். பேருந்து நிலையம் அருகிலேயே காய்கறி சந்தை, முக்கிய வணிக வளாகங்கள் என இருப்பதால் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களும் நாள்தோறும் நகரப் பேருந்துகளில் திருப்பத்தூர் பேருந்து நிலையத்துக்கு வாடிக்கையாக வந்து செல்கின்றனர்.
அத்துடன், சென்னையிலிருந்து, சேலம், தருமபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை செல்லும் பேருந்துகள் திருப்பத்தூர் வழியாகவே செல்கின்றன. அதேபோல் ஏராளமான லாரிகள் திருப்பத்தூரைக் கடந்து பிற மாவட்டங்களுக்குச் செல்வதும் வழக்கமானதாக உள்ளது. இந்நிலையில், திருப்பத்தூர் பேருந்து நிலையம் அமைந்துள்ள சாலை அகலமாக இல்லாத சூழலில் எப்போதும் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியேறும் பேருந்துகளாலும், அச்சாலையைக் கடக்கும் வாகனங்களாலும் நெரிசல் ஏற்படுவது தொடர்கிறது. இதனால் பேருந்து நிலையம் அருகே பகல் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது.
திருப்பத்தூர் பேருந்து நிலையம் அளவில் பெரிதாக இருப்பினும் பயணிகள் பயன்பாட்டில் உள்ள நிழற் கூரைகள் அனைத்தும் தனியார் கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர பேருந்துகள் வழக்கமாக நிறுத்தும் இடங்களைச் சுற்றிலும் பழக்கடைகள்,  தள்ளுவண்டிக் கடைகள் என ஏராளமானோர் ஆக்கிரமித்து வருகின்றனர்.
இதனால் பேருந்துகளை நிலையத்துக்குள் ஓட்டுநர்கள் குறிப்பிட்ட இடத்தில் நிறுத்துவதிலும், அவற்றை விரைவாக எடுத்துச் செல்வதிலும் சிரமத்தைச் சந்திக்க வேண்டியுள்ளது. இதனால் பயணிகளும் பேருந்துகளுக்காக எங்கே நிற்பது என்ற குழப்பத்தை தினந்தோறும் சந்திக்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக பேருந்து நிலையத்துக்குள் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதும் அதிகரித்துள்ளது.
பேருந்து நிலையத்தின் உள்புறம் மட்டுமின்றி வெளிப்பகுதியிலும் ஏராளமான தற்காலிகக் கடைகள் ஆக்கிரமித்துள்ளன. இத்தகைய கடைகளால் அதிகமான அளவில் குப்பைகளும், கழிவுகளும் சேர்ந்து இப்பகுதி சுற்றுப்புறத் தூய்மைக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
இதுதொடர்பாக பொதுமக்கள் தரப்பில் பல முறை நகராட்சி நிர்வாகத்துக்கு முறையீடு செய்யப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர். இதுபற்றி, திருப்பத்தூர் நகராட்சி ஆணையர் 
இரா.சந்திராவிடம் கேட்டதற்கு, இதுகுறித்து முறைப்படி ஆக்கிரமிப்பாளர்களுக்கு அறிவிப்பு அளிக்கப்பட்டுள்ளது. தவறினால் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/11/ஆக்கிரமிப்பில்-திணறும்-திருப்பத்தூர்-பேருந்து-நிலையம்-நடவடிக்கையை-எதிர்நோக்கும்-பொதுமக்கள்-3055632.html
3055631 சென்னை வேலூர் குறைதீர் கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் மனு DIN DIN Tuesday, December 11, 2018 06:20 AM +0530 வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர். 
 வேலூர் மாவட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம் ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பார்த்தீபன் முன்னிலை வகித்தார். ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று கோரிக்கை மனுக்களை அளித்தனர். 
இதில், சக்திசேனா அமைப்பினர் அளித்த மனுவில், சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, கடந்த 2 மாதங்களாக சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. 
ஐயப்ப பக்தர்களுக்கு தொடர்ந்து அநீதி இழைத்து வரும் கேரள முதல்வர் பினராயி விஜயன் வரும் 16-ஆம் தேதி தமிழகம் வர உள்ளார். அவரை தமிழகத்துக்குள் நுழைய விடக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியாத்தம் சந்தைமேடு பகுதியைச் சேர்ந்த பெண்கள் அளித்த மனுவில், குடியாத்தம் பகுதியில் மகளிர் சுய  உதவிக்குழு நடத்தி வரும் எங்களுக்கு அதே ஊரைச் சேர்ந்த பெண் ஒருவர் வங்கிக் கடன் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 1.10 லட்சம் பெற்றுக் கொண்டார். பின்னர், அவர் வங்கிக் கடன் பெற்றுத் தராததுடன், பணத்தையும்  திருப்பித்தர மறுக்கிறார். இடைத்தரகராக செயல்பட்ட பெண்ணை தொடர்பு கொண்டபோது, அவர் தனது கணவர், மகன்களுடன் சேர்ந்து எங்களை ஆபாசமாக திட்டுகிறார். அவர்கள் மீது  நடவடிக்கை எடுக்காமல் போலீஸார் எங்களை அலைக்கழித்து வருகின்றனர். பணத்தைப் பெற்றுக் கொண்டு  மோசடி செய்தவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதேபோல், இலவச வீட்டுமனைப் பட்டா, உதவித் தொகைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். முன்னதாக, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் அளித்திட ஆம்பூர் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் திரட்டிய ரூ. ஒரு லட்சம் நிதியை ஆட்சியரிடம் அளித்தனர். 
கூட்டத்தில்,  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜெயப்பிரகாஷ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வேணுசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/11/குறைதீர்-கூட்டத்தில்-300-க்கும்-மேற்பட்டோர்-மனு-3055631.html
3055630 சென்னை வேலூர் தரமதிப்பீடு தேசியக் கருத்தரங்கு: விஐடியில் தொடக்கம் DIN DIN Tuesday, December 11, 2018 06:20 AM +0530 விஐடி பல்கலைக் கழகத்தின் முன்னேற்றப்பட்ட அறிவியல் பள்ளி, மின் பொறியியல் பள்ளி ஆகியவை இணைந்து நடத்தும் தேசிய அளவிலான தரம், குறியீடுகள் குறித்த இரு வார கருத்தரங்கு, மின்சாரப் பாதுகாப்பு வார கருத்தரங்கு ஆகியவை திங்கள்கிழமை தொடங்கின.   
 தொடக்க விழாவுக்கு, விஐடி துணைவேந்தர் ஆனந்த் ஏ.சாமுவேல் தலைமை வகித்தார். இதில், சென்னையில் உள்ள தென் மண்டலத் தர ஆய்வு மையத் தலைவரும், தர மதிப்பீடு விஞ்ஞானியுமான ஏ.பி.திவேதி, இரு கருத்தரங்கையும் தொடங்கி வைத்துப் பேசியது:
 விஐடியில் நடத்தப்படும் தர மதிப்பீடு, குறியீடுகள் குறித்த கருத்தரங்கம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் தண்ணீர், உணவு, ஆற்றலின் அளவு அதிகரித்து வரும் நிலையில், அவற்றின் தரம், பாதுகாப்பு ஆகியவை மிக முக்கியமானதாக உள்ளது. தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் பொருள்களின் தரத்தை ஆராய்ச்சி, அபிவிருத்தி நிறுவனங்களின் ஆய்வகங்கள் மதிப்பீடு செய்து குறியீடு வழங்கப்படுகிறது. எனவே, தரம், மதிப்பீடு குறித்த பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை இக்கருத்தரங்கு மூலம் அறிந்து கொள்ளலாம் என்றார்.
 பெங்களூரு ஐஎஸ்ஏ நிறுவன எஸ்.ஆர்.வெங்கடபதி, இந்திய மின், மின்னணு பொறியியல் மையத்தின் தரம், தொழில்நுட்ப முதுநிலை இயக்குநர் ஸ்ரீகாந்த்சந்திரசேகரன் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாக பங்கேற்றனர். முன்னதாக, விஐடி மின்பொறியியல் பள்ளி முதல்வர் எஸ்.சிவபாலன் வரவேற்றார். இதில், விஐடி முன்னேற்றப்பட்ட அறிவியல் பள்ளி முதல்வர் மேரிசாரல், பேராசிரியர்கள் எஸ்.விவேகானந்தன், எஸ்.வெங்கடேஷ், சாய்சரஸ்வதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிறைவில், பேராசிரியர் பி.அருள்மொழிவர்மன் நன்றி கூறினார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/11/தரமதிப்பீடு-தேசியக்-கருத்தரங்கு-விஐடியில்-தொடக்கம்-3055630.html
3055629 சென்னை வேலூர் வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் 40 விவசாயிகளுக்கு நிதியுதவி: அமைச்சர் வழங்கினார் DIN DIN Tuesday, December 11, 2018 06:20 AM +0530 நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு பயிர்க் கடன் மற்றும் சங்க உறுப்பினர்களுக்கு பங்கு ஈவுத் தொகை வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 விழாவுக்கு சங்கத்தின் தலைவர் வேலு தலைமை வகித்தார். நாட்டறம்பள்ளி வட்டாட்சியர் குமார், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் ராஜா, மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கள அலுவலர் தர்மேந்திரன் வரவேற்றார். இதில்,  வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு, வாழை பயிரிட 40 விவசாயிகளுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 20 லட்சமும், சங்க அங்கத்தினர்கள் 2 ஆயிரத்து 344 பேருக்கு பங்கு ஈவுத் தொகையாக ரூ. 8. 74 லட்சமும் வழங்கினார். நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் முனிராஜி, பணியாளர் சங்கத் தலைவர் தேவன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் பிரேமலதா சாம்ராஜ், கணேஷ்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சங்கத்தின் துணைத் தலைவர் தங்கராஜ் நன்றி கூறினார்.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/11/வேளாண்-கூட்டுறவுக்-கடன்-சங்கத்தில்-40-விவசாயிகளுக்கு-நிதியுதவி-அமைச்சர்-வழங்கினார்-3055629.html
3055628 சென்னை வேலூர் ஜெருசலேம் புனிதப் பயண நிதி பெற விண்ணப்பிக்கலாம் DIN DIN Tuesday, December 11, 2018 06:19 AM +0530 ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள தமிழக அரசு அளிக்கும் ரூ. 20 ஆயிரம் நிதியுதவி பெற விரும்பும் வேலூர் மாவட்ட கிறிஸ்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன், வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்திலிருந்து ஜெருசலேம் புனிதப் பயணம் செல்லும் கிறிஸ்தவர்களுக்கு தமிழக அரசு ரூ. 20 ஆயிரம் நிதியுதவி அளித்து வருகிறது. இந்த திட்டத்தில் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் வேலூர் மாவட்ட கிறிஸ்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம், கிறிஸ்தவ மதம் தொடர்புடைய புனிதத் தலங்களை உள்ளடக்கிய இந்த புனித பயணம் நடப்பு டிசம்பர், ஜனவரி முதல் மேற்கொள்ளப்பட உள்ளது. பயணக்காலம் 10 நாள்கள். 
இதற்கான விண்ணப்பப் படிவங்களை வேலூர் மாவட்ட ஆட்சியர்அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெற்றுக் கொள்ளலாம், அல்லது அரசு இணையத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தேவையான இணைப்புகளுடன் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், கலச மஹால், பாரம்பரியக் கட்டடம், சேப்பாக்கம், சென்னை-5 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/11/ஜெருசலேம்-புனிதப்-பயண-நிதி-பெற-விண்ணப்பிக்கலாம்-3055628.html
3055627 சென்னை வேலூர் விஏஓக்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடக்கம் DIN DIN Tuesday, December 11, 2018 06:19 AM +0530 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை திங்கள்கிழமை தொடங்கினர். இப் போராட்டத்தால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர்.
தமிழகம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலகங்களில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும், கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான தகுதியை பட்டதாரியாக உயர்த்திடவும், இந்த பணியை தொழில்நுட்பப் பணியாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், கடந்த 28-ஆம் தேதி சான்றிதழ் வழங்கல் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. 
இதையடுத்து, கடந்த 8-ஆம் தேதி கூடுதலாக வழங்கப்பட்ட பணிகளை புறக்கணித்தனர். இதன்தொடர்ச்சியாக, திங்கள்கிழமை காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர். இந்த வேலைநிறுத்தத்தில் வேலூர் மாவட்டம் முழுவதும் உள்ள இந்த சங்கத்தைச் சேர்ந்த சுமார் 350 கிராம நிர்வாக அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால்,  சான்றிதழ்கள் பெறுவது உள்ளிட்ட அரசு தொடர்பான பணிகளை முடிப்பதில் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். அதேசமயம், கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்றச் சங்கத்தைச் சேர்ந்த சுமார் நூறு கிராம நிர்வாக அலுவலர்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்காமல், தொடர்ந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். 
வேலைநிறுத்தத்தையொட்டி, வேலூர் கோட்டையில் உள்ள கிராம நிர்வாக அலுவலகக் கட்டடத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வேலூர் வட்டத் தலைவர் கனகராஜ் தலைமை வகித்தார். செயலர் சுரேஷ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், வேலூர் வட்டத்துக்கு உள்பட்ட வேலூர் வடக்கு, தெற்கு பகுதிகள், சத்துவாச்சாரி, பென்னாத்தூர், கணியம்பாடி ஆகிய உள்வட்டங்களில் உள்ள பொதுமக்களை சந்தித்து, தங்களது வேலைநிறுத்தத்துக்கான காரணங்களை விளக்கி துண்டுப் பிரசுரங்கள் விநியோகிப்பது, வரும் 13-ஆம் தேதி அனைத்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.
திமிரியில்...
ஆற்காட்டை அடுத்த திமிரியில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு, ஆற்காடு வட்டக் கிளைத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். செயலாளர் தணிகாசலம் முன்னிலை வகித்தார். இதில், 25-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டு,  கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
அரக்கோணத்தில்...
கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் அரக்கோணம் வட்டக்கிளை சார்பில், அரக்கோணத்தை அடுத்த தணிகைபோளூர், பேருந்து நிறுத்தம் அருகே திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டத்துக்கு, கிளைச் செயலர் திவாகர் தலைமை வகித்தார். 
இதில், போராட்டக் குழுத் தலைவர் லட்சுமிநாராயணன், கிளைத் தலைவர் அண்ணாமலை, பொருளாளர் முருகன், துணைப் பொருளாளர் நெடுஞ்செழியன், ராஜேஷ், தணிகாசலம் மற்றும் 12 பெண் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட 49 பேர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். காலை 9.30-க்கு தொடங்கிய போராட்டம் மாலை 5.30-க்கு நிறைவுற்றது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/11/விஏஓக்கள்-காலவரையற்ற-வேலைநிறுத்தம்-தொடக்கம்-3055627.html
3055626 சென்னை வேலூர் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் DIN DIN Tuesday, December 11, 2018 06:18 AM +0530 ஆற்காடு அருகே குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆற்காட்டை அடுத்த  லப்பபேட்டை பகுதியில் கடந்த சில நாள்களாக குடிநீர் விநியோகம் சரிவர செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த  அப்பகுதி மக்கள் காலிக் குடங்களுடன் ஆற்காடு- கனியனூர் செல்லும் சாலையில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர், நிகழ்விடத்துக்குச் சென்று, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து,  அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/11/குடிநீர்-கேட்டு-பொதுமக்கள்-சாலை-மறியல்-3055626.html
3055625 சென்னை வேலூர் இலங்கை போர்க் குற்றம்: பசுமைத் தாயகம் அமைப்பினர் கையெழுத்து இயக்கம் DIN DIN Tuesday, December 11, 2018 06:18 AM +0530 இலங்கை போர் குற்றம் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்தியா தீர்மானங்கள் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி, வேலூரில் பசுமைத் தாயகம் அமைப்பினர் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில், வேலூரில் கையெழுத்து இயக்கம் திங்கள்கிழமை நடத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த கையெழுத்து இயக்கத்துக்கு பாமக மாநில துணைப் பொதுச்செயலர் கே.எல்.இளவழகன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் என்.டி.சண்முகம் முன்னிலை வகித்தார். 
அப்போது, இலங்கையில் நடைபெற்ற போர் குற்றம் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40-ஆவது கூட்டத்தில் தீர்மானங்கள் கொண்டு வர வேண்டும். அதற்கான முயற்சிகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதில், நூற்றுக்கணக்கானோர் கையெழுத்திட்டனர்.
இதுகுறித்து, பாமக மாநில துணைப் பொதுச்செயலர் கே.எல்.இளவழகன் கூறியது: இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு நடத்திய ராணுவத் தாக்குதலில் லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இத்தகைய குற்றங்கள் நீதி வழங்கவும், இதுபோன்ற குற்றங்கள் இனியும் நிகழாமல் தடுக்கவும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 31, 34-ஆவது கூட்டத்தொடரில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதனை இலங்கை அரசு செயல்படுத்தவில்லை. வரும் 2019 மார்ச் மாதம் இந்த தீர்மானத்துக்கான காலம் முடிவடைகிறது.  
இந்நிலையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40-ஆவது கூட்டத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு நீதி வழங்கிட அந்நாட்டு அரசுக்கு எதிராக தீர்மானங்கள் கொண்டு வர வேண்டும். அதற்கான முயற்சிகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் எனக்கோரி இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது என்றார்.
கட்சியின் மாவட்ட பொதுச்செயலர் கு.வெங்கடேசன், மாநகரச் செயலர் பிரபு உள்பட பலர் பங்கேற்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/11/இலங்கை-போர்க்-குற்றம்-பசுமைத்-தாயகம்-அமைப்பினர்-கையெழுத்து-இயக்கம்-3055625.html
3055624 சென்னை வேலூர் கழிப்பறைக்காக  சிறுமி நடத்திய போராட்டம்! DIN DIN Tuesday, December 11, 2018 06:18 AM +0530 ஆம்பூரில், தனது வீட்டில் கழிப்பறை கட்டித் தர தந்தையிடம் முறையிட்டும் பலனிக்காமல் போனதால் காவல் நிலையம் வரை சென்று கழிப்பறை கட்டுவதற்கான முயற்சியை 7 வயது சிறுமி எடுத்துள்ளார். அவரது முயற்சிக்கு காவல் துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டம், ஆம்பூர் நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி இஷானுல்லா. இவரது மகள் ஹனீஃபா ஜாரா (7). ஆம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வரும் அவர் பள்ளியில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று வருகிறார். அவர்களுடைய வீட்டில் கழிப்பறை வசதி இல்லை. வீட்டில் கழிப்பறை கட்டித் தருமாறு பலமுறை தன்னுடைய தந்தையிடம் ஹனீஃபா ஜாரா கேட்டு வந்துள்ளார். பள்ளியில் முதலிடம் பிடித்தால் வீட்டில் கழிப்பறை கட்டித் தருவதாக தந்தை வாக்குறுதி அளித்துள்ளார். எல்கேஜி முதல் தற்போது பயிலும் 2-ஆம் வகுப்பு வரையிலும் பள்ளியில் அவர் முதலிடம் பிடித்து வந்துள்ளார்.  எனினும், தந்தை கூறியபடி கழிப்பறை கட்டித் தரவில்லை. திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்துவது தனக்கு அவமானமாக இருப்பதாகவும், தன்னை ஏமாற்றி வருவதாகவும் கூறி அவரது தந்தையிடம் ஹனீஃபா ஜாரா சண்டையிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து,  தனது தந்தையிடம் கழிப்பறை கட்டித் தருவதாக எழுத்து மூலம் உறுதிமொழி பெற்றுத் தருமாறு கோரி தன் கைப்பட எழுதிய புகார் கடிதத்துடன் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு தாயாருடன் ஹனீஃபா ஜாரா திங்கள்கிழமை சென்றார்.
அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளரிடம் அக்கடிதத்தை கொடுத்தபோது போலீஸார் அதிர்ச்சியும், ஆச்சரியமும்  அடைந்தனர். உடனடியாக சிறுமியின் தந்தை காவல் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டார். அத்துடன் ஆம்பூர் நகராட்சிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் நிலையத்துக்குச் சென்ற நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சுப்பிரமணியன், சிறுமியின் பெற்றோர் மனு அளித்தால் அரசுத் திட்டத்தில் தகுதியின் அடிப்படையில் கழிப்பறை கட்டித் தரலாம் எனக் கூறினார். உடனடியாக சிறுமியின் பெற்றோர் இஷானுல்லா-மெஹ்ரீன் ஆகியோர் நகராட்சி அலுவலகத்தில் மனு அளித்ததை அடுத்து, கழிப்பறை தேவைப்படும் அந்த வீட்டுக்கு நகராட்சி துப்புரவு அலுவலர் பாஸ்கர் நேரடியாகச் சென்று இடத்தைப் பார்வையிட்டார். உரிய ஆவணங்கள் அளிக்கப்படும் நிலையில், தகுதியின் அடிப்படையில் கழிப்பறை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/11/கழிப்பறைக்காக--சிறுமி-நடத்திய-போராட்டம்-3055624.html
3055623 சென்னை வேலூர் லாரியில் கடத்திய 8 டன் ரேஷன் அரிசி பறிமுதல் DIN DIN Tuesday, December 11, 2018 06:17 AM +0530 ஆற்காடு-செய்யாறு சாலையில் 8 டன் ரேஷன் அரிசி மூட்டைகளைக் கடத்திச் சென்ற லாரியை ஆற்காடு மண்டலத் துணை வட்டாட்சியர் பறிமுதல் செய்தார்.
 ஆற்காடு  மண்டலத் துணை வட்டாட்சியர் செந்தில், கிராம நிர்வாக அலுவலர்  கபிலன்  மற்றும் வருவாய்த் துறையினர்  மணல் கடத்தலைத் தடுக்க திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆற்காடு-செய்யாறு சாலையில் தார்பாலினால் மூடப்பட்டிருந்த சரக்கு லாரி வந்தது. அதை சோதனையிட்டதில், 8 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. அதையடுத்து, லாரியுடன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. லாரி ஓட்டுநர் தப்பியோடி தலைமறைவானார். 


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/11/லாரியில்-கடத்திய-8-டன்-ரேஷன்-அரிசி-பறிமுதல்-3055623.html
3055622 சென்னை வேலூர் கல்லாற்றில் ரூ.10 கோடியில் தடுப்பணை: காணொலி மூலம் முதல்வர் அடிக்கல் DIN DIN Tuesday, December 11, 2018 06:17 AM +0530 அரக்கோணம் அருகே கல்லாற்றில் 11 ஏரிகளுக்கு நீரை பிரித்தளிக்கும் வகையில், ரூ. 10 கோடி செலவில் கட்டப்படவுள்ள தடுப்பணைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினார். தடுப்பணை கட்டப்படும் இடத்தில் அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி குத்துவிளக்கேற்றி பணிகளை தொடங்கி வைத்தார்.
 கடந்த 28.06.2017-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை மீதான மானியக்கோரிக்கையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், தமிழ்நாட்டில் நிலத்தடி நீரை செறிவூட்டும் விதமாகவும் ஆறுகளில் இருந்து ஏரிகளுக்கு நேரடியாக நீரை பிரித்தளிக்கும் விதமாகவும், வரும் மூன்று ஆண்டுகளில் தடுப்பணைகள், அணைக்கட்டு கட்டப்படும் என அறிவித்தார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி வலியுறுத்தலின்பேரில், அரக்கோணம் அருகே சயனபுரம் ஏரி உள்ளிட்ட 11 ஏரிகளுக்கு நீரை பிரித்தளிக்கும் விதமாக கல்லாற்றின் குறுக்கே அணைக்கட்டு கட்டும் பணிக்கு நபார்டு நிதி உதவியின் கீழ், ரூ. 990.21 லட்சம் ஒதுக்கி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். மேலும் வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு வட்டம், கருங்காலி கிராமம் அருகே அகரம் ஆற்றின் குறுக்கே ரூ. 5 கோடி நிதியில் தடுப்பணை கட்டவும், திருப்பத்தூர் வட்டம், சினராம்பட்டி கிராமம் அருகே பாம்பாற்றின் குறுக்கே ரூ. 2.48 கோடியில் தடுப்பணை கட்டவும் முதல்வர் நிதி ஒதுக்கி உத்தரவிட்டார்.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லாற்றில் கட்டப்பட இருக்கும் தடுப்பணைக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். அதே நேரத்தில் அணைகட்டப்படவுள்ள இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி குத்துவிளக்கேற்றி வைத்து, பணிகளை தொடங்கி வைத்தார்.
இதில் எம்எல்ஏ சு.ரவி பேசியது: இத்திட்டத்தால் சயனபுரம், சேந்தமங்கலம், கணபதிபுரம் உள்ளிட்ட 11 ஏரிகள் பயன்பெறும். மேலும் நெமிலி பேரூராட்சிக்கான குடிநீர் ஆதாரமாகவும் இந்த தடுப்பணை இருக்கும். மேலும் நெமிலியைச் சுற்றியுள்ள வேட்டாங்குளம் உள்ளிட்ட பெரிய ஊராட்சிகளுக்கும் குடிநீர் ஆதாரமாக இந்த தடுப்பணை விளங்கும். இதன் கீழ் உள்ள 2,340 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற இந்த தடுப்பணை வழி வகுக்கும் என்றார்.
மேலும், அணை குறித்து தமிழ்நாடு பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத் துறை வேலூர், மேல்பாலாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் அன்பரசன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், கல்லாற்றில் கட்டப்பட இருக்கும் தடுப்பணை 210 மீட்டர் நீளமும் 1.2 மீட்டர் உயரமும் கொண்டதாக அமைக்கப்படவுள்ளது. இந்த அணைக்கட்டின் இருபுறமும் 2 எண்கள் என மொத்தம் 4 மணற்போக்கிகள் இருக்கும். இப்பணிகள் அடுத்த ஆறு மாத காலத்தில் நிறைவு பெறும் என்றார்.
நிகழ்ச்சியில் கோட்ட உதவி செயற்பொறியாளர் ரவி, உதவி பொறியாளர் சேரலாதன், அரக்கோணம் வட்டாட்சியர் ஆர்.பாபு, அதிமுக ஒன்றியச் செயலர்கள் நெமிலி கிழக்கு ஏ.ஜி.விஜயன், மேற்கு அருணாபதி, அரக்கோணம் பிரகாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/11/கல்லாற்றில்-ரூ10-கோடியில்-தடுப்பணை-காணொலி-மூலம்-முதல்வர்-அடிக்கல்-3055622.html
3055621 சென்னை வேலூர் சிறையில் கைதி தற்கொலை முயற்சி DIN DIN Tuesday, December 11, 2018 06:17 AM +0530 வேலூர் மத்திய சிறையில் உள்ள தண்டனைக் கைதி அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு போராடிய அவருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டையைச் சேர்ந்தவர் சின்னசாமி(49). பெண்களிடம் கத்தியைக் காட்டி வழிப்பறி, நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இவருக்கு, கடந்த 2012-ஆம் ஆண்டு நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையை விதித்தது. இதையடுத்து, வேலூர் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்ட இவர், தொடர்ந்து தண்டனை அனுபவித்து வந்தார்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு கைதிகள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு சுமார் 11 மணியளவில் சின்னசாமி, தான் வைத்திருந்த மாத்திரைகளுடன், அருகில் மற்றொரு கைதி வைத்திருந்த மாத்திரைகளையும் சேர்த்து அதிகளவில் சாப்பிட்டதாகத் தெரிகிறது. இதனால், சின்னசாமி மயக்கமடைந்ததை அடுத்து, அதிர்ச்சியடைந்த மற்ற கைதிகள் கூச்சலிட்டு சிறைக் காவலர்களை அழைத்து தெரிவித்தனர். உடனடியாக சின்னசாமியை சிறைக் காவலர்கள் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். 
இச்சம்பவம் குறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், சின்னசாமி கடந்த சில மாதங்களாகவே மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, மனநோயாளி போல் இருந்து வந்தார். இதன்தொடர்ச்சியாக, அவர் அதிகளவில் மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றிருக்கலாம். கைதிகள் அவ்வப்போது காய்ச்சல், தலைவலிக்காக சிறை மருத்துவர்களிடம் மாத்திரைகள் வாங்குவது வழக்கம். இதில், சில கைதிகள் சாப்பிடாமல் வைத்திருந்த மாத்திரைகளையும் சேர்த்து சின்னசாமி சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.
இச்சம்பவம் குறித்து பாகாயம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/11/சிறையில்-கைதி-தற்கொலை-முயற்சி-3055621.html
3054950 சென்னை வேலூர் எரிசாராயம்  பதுக்கி வைத்திருந்த 5 பேர் கைது DIN DIN Monday, December 10, 2018 04:58 AM +0530 ஆற்காடு அருகே கடத்துவதற்காக எரிசாராம் பதுக்கி வைத்திருந்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
வாலாஜாபேட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையில் போலீஸார் ஆற்காட்டை அடுத்த கத்தியவாடி பகுதியில் விவசாய நிலத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் சோதனை நடத்தினர். அப்போது, அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற 5 பேரைப் பிடித்து விசாரணை நடத்தினர். 
அதில், அவர்கள் ஆற்காட்டை அடுத்த கீழ்விஷாரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (48), தவமணி (28), ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த கோபி (47), வேலூர் தோட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் (48), ஆற்காட்டை அடுத்த கருங்காலிகுப்பம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (24) என்பதும், இவர்கள் ஆற்காடு புறவழிச் சாலையில் உள்ள மெக்கானிக் கடையில் நிறுத்தி வைத்திருந்த வேனில் ரசசிய அறை அமைத்து, அதில் கேன்களில் எரிசாராயம் கடத்திச் செல்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.  இதையடுத்து அவர்கள் 5 பேரை போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து 14 கேன்களில் பதுக்கி வைத்திருந்த 500 லிட்டம் எரிசாராயம் மற்றும் வேனை பறிமுதல் செய்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/10/எரிசாராயம்--பதுக்கி-வைத்திருந்த-5-பேர்-கைது-3054950.html
3054949 சென்னை வேலூர் கார் மோதி தொழிலாளி சாவு DIN DIN Monday, December 10, 2018 04:58 AM +0530 ஆம்பூர் அருகே கார் மோதிய விபத்தில் கட்டடத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.
குடியாத்தத்தில் இருந்து கார் ஒன்று பெங்களூரு நோக்கிச் சென்றது. ஆம்பூர் அருகே வெங்கிளி கிராமம் அருகே சென்றபோது திடீரென சாலையின் குறுக்கே இருசக்கர வாகனம் வந்துள்ளது. எதிர்பாராத விதமாக அதன் மீது கார் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த பேர்ணாம்பட்டு வட்டம், ராசம்பட்டியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி சத்தியமூர்த்தி (38) பலத்த காயமடைந்தார். அவர் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார்.
இதுகுறித்து ஆம்பூர் கிராமிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/10/கார்-மோதி-தொழிலாளி-சாவு-3054949.html
3054948 சென்னை வேலூர் பஜார் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற தீர்மானம் DIN DIN Monday, December 10, 2018 04:57 AM +0530 ஆம்பூர் பஜார் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூராக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனக் கோரி வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆம்பூர் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தின் மாதாந்திர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்துக்கு, நுகர்வோர் பாதுகாப்பு இயக்கச் செயலாளர் இ. விஜயராஜ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் வி. குணசீலன், காந்தி, பாபு, குல்ஜார், ரபியுல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். குடிநீர்க் குழாய் இணைப்புக்காக தோண்டப்பட்ட சாலைகளை விரைவாக சீரமைக்க வேண்டும். பஜார் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/10/பஜார்-பகுதியில்-ஆக்கிரமிப்புகளை-அகற்ற-தீர்மானம்-3054948.html
3054947 சென்னை வேலூர் பேராசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி DIN DIN Monday, December 10, 2018 04:57 AM +0530 குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியில் பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் எம்.ஜெயஸ்ரீராணி தலைமை வகித்தார். பேராசிரியர் பா. டேனியல் சுந்தரராஜ் வரவேற்றார். கல்லூரி இயக்குநர் த. கஜபதி, கல்வியாளர்கள் வ. முருகவேல், பார்கவி கருணாகரன் ஆகியோர் கற்பித்தல் முறைகள் குறித்து பேராசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/10/பேராசிரியர்களுக்கு-திறன்-மேம்பாட்டுப்-பயிற்சி-3054947.html
3054946 சென்னை வேலூர் கராத்தே போட்டியில் சிறப்பிடம்:  குடியாத்தம் மாணவருக்குப் பாராட்டு DIN DIN Monday, December 10, 2018 04:57 AM +0530 ராணிப்பேட்டையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் முதலிடம் பிடித்த குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியின் 9-ஆம் வகுப்பு மாணவர் ஆர்.திஷ்வந்த்துக்கு பள்ளியில் வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. 
 மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் திஷ்வந்த் முதலிடம் பிடித்து, சாம்பியன்ஷிப் பட்டம், கோப்பை, மிதிவண்டியை பரிசாகப் பெற்றார். சாதனை படைத்த மாணவரை பள்ளித் தலைவர் கே.எம்.ஜி.சுந்தரவதனம், செயலர் கே.எம்.ஜி.ராஜேந்திரன், தலைமையாசிரியர் ஜி.புருஷோத்தமன் ஆகியோர் பாராட்டினர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/10/கராத்தே-போட்டியில்-சிறப்பிடம்--குடியாத்தம்-மாணவருக்குப்-பாராட்டு-3054946.html
3054945 சென்னை வேலூர் கைதிக்கு திடீர் உடல்நலக் குறைவு: மருத்துவமனையில் அனுமதி DIN DIN Monday, December 10, 2018 04:57 AM +0530 வேலூர் மத்திய சிறையில் அடைக்கச் சென்றபோது சாராய வியாபாரிக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வேலூர் மத்திய சிறையில் தண்டனைக் கைதிகள் உள்பட சுமார் 800 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் பலரும் அடிக்கடி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது வழக்கம். 
இந்நிலையில், செங்கம் பகுதியைச் சேர்ந்த சேட்டு (50), சாராய வழக்கில் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவரை போலீஸார் வேலூர் மத்திய சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனர். 
சிறை வளாகத்துக்குச் சென்றவுடன் சேட்டுவுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. சிறை மருத்துவர்கள் அவரை பரிசோதித்தனர். பின்னர், அங்கிருந்து வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/10/கைதிக்கு-திடீர்-உடல்நலக்-குறைவு-மருத்துவமனையில்-அனுமதி-3054945.html
3054944 சென்னை வேலூர் தாய், மகளை கட்டிப்போட்டு 35 பவுன் நகைகள் கொள்ளை DIN DIN Monday, December 10, 2018 04:56 AM +0530 காட்பாடி பகுதியில் வீட்டில் தனியாக இருந்த தாய், மகளை கட்டிப்போட்டு, 35 பவுன் நகைகள் மற்றும் ரூ. 55 ஆயிரம் ரொக்கத்தை வடமாநில கும்பல் கொள்ளையடித்துச் சென்றது. 
வேலூர் மாவட்டம், செங்குட்டை சாலை, அசோக் நகர் மிஷன் காம்பவுன்ட் ஜான் தெருவைச் சேர்ந்தவர் இந்திராணி (80). இவரது மகள் நளினிநேச தீபம் (43). இவர், சிஎம்சியில் செவிலியராக பணியாற்றி வருகிறார். 
இருவரும் அப்பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தனியாக வசித்து வருகின்றனர். இவர்கள் சனிக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். 
நள்ளிரவு 2 மணியளவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த 3-க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல், இந்திராணி, நளினி ஆகிய இருவரையும் கட்டிப்போட்டு, வாயை துணியால் கட்டியதுடன், பீரோ சாவிகளைக் கேட்டு தாக்கினராம். பின்னர், சாவிகளைப் பறித்த அந்தக் கும்பல், பீரோவில் இருந்த 35 பவுன் நகைகள், ரூ. 55 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றையும் கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றது. 
இதையடுத்து தாங்களாக கட்டுகளை அவிழ்த்துக் கொண்ட இந்திராணி, நளினி இருவரும் அப்பகுதியில் உள்ள தங்களது உறவினர்களை வரவழைத்தது, காட்பாடி போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 
அதன்பேரில், காவல் ஆய்வாளர் புகழ் தலைமையிலான போலீஸார் அங்கு சென்று இருவரிடமும் விசாரணை நடத்தினர். 
அப்போது, நள்ளிரவில் வீடுபுகுந்து கொள்ளையில் ஈடுபட்ட கும்பல், ஹிந்தி மொழியில் பேசிக் கொண்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, அவர்கள் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர். 
இச்சம்பவத்தை அறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார், காவல் துணைக் கண்காணிப்பாளர் லோகநாதன் உள்ளிட்ட போலீஸார் ஞாயிற்றுக்கிழமை காலை சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். 
மேலும், தடயவியல், மோப்ப நாய் சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. 
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காட்பாடி போலீஸார், இந்த கொள்ளையில் ஈடுபட்ட வடமாநில கும்பல் வேறு மாநிலத்துக்கு தப்பிச் சென்று விடாமல் தடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் உடனடியாக 8 தனிப்படைகள் அமைத்து, தீவிர தேடுல் வேட்டை நடத்தி வருகின்றனர். 
ஏற்கெனவே, காட்பாடி பகுதியில் உள்ள ஒசூர் தனி வட்டாட்சியர் வீட்டில் கடந்த மாதம் நகை, பணம் திருடப்பட்டது. 
இது தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் நடந்துள்ள கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/10/தாய்-மகளை-கட்டிப்போட்டு-35-பவுன்-நகைகள்-கொள்ளை-3054944.html
3054943 சென்னை வேலூர் ரயில்வே கேட் பழுதானதால் ரயில் நடுவழியில் நிறுத்தம் DIN DIN Monday, December 10, 2018 04:56 AM +0530 அரக்கோணத்தில் ரயில்வே கேட் பழுதானதால் செங்கல்பட்டு-அரக்கோணம் பாசஞ்சர் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டு, 20 நிமிடங்களுக்குப் பிறகு தாமதமாக புறப்பட்டுச் சென்றது. 
அரக்கோணம் நகரில் கிருஷ்ணாம்பேட்டையில் அரக்கோணம்-செங்கல்பட்டு ரயில் மார்க்கத்தில் எஸ்ஆர் ரயில்வே கேட் உள்ளது. 
ஞாயிற்றுக்கிழமை காலை செங்கல்பட்டு-அரக்கோணம் பாசஞ்சர் ரயில் வந்தபோது, கேட் பழுதானது. மேலும், அப்பகுதியில் சிக்னலும் பழுதானது. இதனால் ரயில் வெங்கடேசபுரத்தில் நிறுத்தப்பட்டது. 
இதைத் தொடர்ந்து பணியாளர்கள் தற்காலிகமாக சிக்னலையும், கேட்டையும் சரிசெய்தனர். இதையடுத்து கேட் மூடப்பட்ட பிறகு செங்கல்பட்டு-அரக்கோணம் பாசஞ்சர் ரயில் 20 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு அரக்கோணம் ரயில் நிலையத்துக்குச் சென்றது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/10/ரயில்வே-கேட்-பழுதானதால்-ரயில்-நடுவழியில்-நிறுத்தம்-3054943.html
3054942 சென்னை வேலூர் விபத்தில் இறந்த 10 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரணம்: அமைச்சர் வீரமணி வழங்கினார் DIN DIN Monday, December 10, 2018 04:56 AM +0530 ஆந்திரத்தில் இருந்து மாங்காய் லோடு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்த விபத்தில் இறந்த நாட்டறம்பள்ளியைச் சேர்ந்த 10 பேரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ. 1 லட்சம் நிவாரண நிதியை மாநிவ வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
நாட்டறம்பள்ளியை அடுத்த கல்நார்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் 30-க்கும் மேற்பட்டோர் கடந்த ஜூன் மாதம் ஆந்திர மாநிலம், கங்குனி கிராமத்தில் இருந்து லாரியில் மாங்காய் லோடு ஏற்றிக் கொண்டு வந்தபோது, பெரும்பள்ளம் பகுதியில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 
இதில், கல்நார்சம்பட்டி, விநாயகபுரம், மணல்கொல்லை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 10 பேர் இறந்தனர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து  மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் நிவாரன நிதி வழங்க நடவடிக்கை மேற்கொண்டார்.
அதன்பேரில் தமிழக முதல்வரின் பொது நிவாரன நிதியிலிருந்து ரூ. 18 லட்சம் நிதியை கடந்த மாதம் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஒதுக்கீடு செய்தார்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் உத்தரவின் பேரில், விபத்தில் இறந்தவர்கள், பலத்த காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி கல்நார்சம்பட்டி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
இதில், அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்டு விபத்தில் இறந்த 10 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 1 லட்சமும், பலத்த காயமடைந்த 11 பேருக்கு தலா 
ரூ. 50 ஆயிரமும், காயமடைந்த 10 பேருக்கு தலா ரூ. 25 ஆயிரம் என மொத்தம் ரூ. 18 லட்சத்துக்கான காசோலையை தனித் தனியே  வழங்கினார்.
நிகழ்ச்சியில் வட்டாட்சியர் குமார், வருவாய் ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/10/விபத்தில்-இறந்த-10-பேரின்-குடும்பத்தினருக்கு-தலா-ரூ-1-லட்சம்-நிவாரணம்-அமைச்சர்-வீரமணி-வழங்கினார்-3054942.html
3054941 சென்னை வேலூர் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி:: வேலூரில் நாளை தொடக்கம் DIN DIN Monday, December 10, 2018 04:55 AM +0530 நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த பயிற்சி வகுப்பு வேலூரில் செவ்வாய்க்கிழமை தொடங்கி 3 நாள்களுக்கு நடக்கிறது.
இதுதொடர்பாக வேலூர் கால்நடை பல்கலைக் கழகப் பயிற்சி, ஆராய்ச்சி மைய இணைப் பேராசிரியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வேலூர் கால்நடை பல்கலைக் கழகப் பயிற்சி, ஆராய்ச்சி மையம் சார்பில் இந்தப் பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மையத்தில் நடத்தப்பட உள்ளது. தினமும் காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும் இந்தப் பயிற்சி வகுப்பில், நாட்டுக்கோழி இனங்கள், வளர்ப்பு முறைகள், சந்தை வாய்ப்புகள், இனப்பெருக்கம், நோய் தாக்குதல், அவற்றைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்கப்பட உள்ளது. 
முற்றிலும் இலவசமாக அளிக்கப்படும் இந்தப் பயிற்சி வகுப்பில், கால்நடைப்  பண்ணையாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 0416 -2253022 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/10/நாட்டுக்கோழி-வளர்ப்பு-பயிற்சி-வேலூரில்-நாளை-தொடக்கம்-3054941.html
3054849 சென்னை வேலூர் 12-இல் சீவூரில் மனுநீதி நாள் முகாம் DIN DIN Monday, December 10, 2018 12:30 AM +0530 குடியாத்தம் வட்டம், சீவூர் கிராமத்தில் வரும் புதன்கிழமை (டிட.12) மனுநீதி நாள் முகாம் நடைபெறுகிறது. 
வேலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையில் நடைபெறும் இம்முகாமில் பொதுமக்கள் தங்கள் குறைகள் குறித்து மனு அளிக்கலாம் என வட்டாட்சியர் பி.எஸ். கோபி கேட்டுக்கொண்டுள்ளார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/10/12-இல்-சீவூரில்-மனுநீதி-நாள்-முகாம்-3054849.html
3054848 சென்னை வேலூர் குறும்பட வெளியீட்டு விழா DIN DIN Monday, December 10, 2018 12:29 AM +0530 இளைஞர்கள் சுயக் கட்டுப்பாட்டுடன் வாழ வலியுறுத்தும் "போயே போச்சி' எனும் குறும்படம் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
குடியாத்தத்தைச் சேர்ந்த குறும்பட இயக்குநர் கிருபா, சக்சஸ் படக் குழு சார்பில் உருவாக்கிய இந்த குறும்பட வெளியீட்டு விழா பிச்சனூரில் நடைபெற்றது. 
திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ கே.கே. ரத்தினம் குறும்படத்தை வெளியிட, படக்குழுவின்  ஒருங்கிணைப்பளர் பா.சம்பத்குமார் பெற்றுக்கொண்டார். 
நிகழ்ச்சியில் இயக்குநர் கிருபா, படக் குழுவைச் சேர்ந்த கோவர்தன், இளவரசன், அன்பில்பாஸ்கரன், ரிஷி, ஜீவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
கலாசார சீரழிவின் பிடியில் சிக்கியுள்ள இன்றைய இளைஞர்களை நல்வழிப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்வுகள் இந்த குறும்படத்தில் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக புகை, பெண், மதுப் பழக்கங்களுக்கு அடிமையாகியுள்ள இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/10/குறும்பட-வெளியீட்டு-விழா-3054848.html
3054847 சென்னை வேலூர் கஜா புயல் நிவாரண நிதி: பள்ளி மாணவர்கள் ரூ. 3.25 லட்சம் அளிப்பு DIN DIN Monday, December 10, 2018 12:28 AM +0530 வாணியம்பாடி எஸ்எப்எஸ் மெட்ரிக். பள்ளி மாணவர்கள் கஜா புயல் நிவாரண நிதிக்காக ரூ. 3.25 லட்சம் திரட்டி பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.
வாணியம்பாடி எஸ்எப்எஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், கஜா புயல் நிவாரணத்துக்காக நன்கொடை, உணவுத் திருவிழா, கலை நிகழ்ச்சி போன்றவற்றின் மூலம் ரூ. 3.25 லட்சம் நிதியை திரட்டினர். இந்த நிதியை பள்ளி நிர்வாகத்திடம் சனிக்கிழமை வழங்கினர்.
இத்தொகை மூலம் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் சென்று உதவி அளிக்கவுள்ளதாக பள்ளி முதல்வர் ஜான்
ததேயூஸ் தெரிவித்தார். இதில், பள்ளி தாளாளர் ஜான்சன், பொருளாளர் அமிர்தநாதன், ஆசிரியைகள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/10/கஜா-புயல்-நிவாரண-நிதி-பள்ளி-மாணவர்கள்-ரூ-325-லட்சம்-அளிப்பு-3054847.html
3054845 சென்னை வேலூர் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் DIN DIN Monday, December 10, 2018 12:28 AM +0530 ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நிறுவன வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பெல் நிறுவன செயல் இயக்குநர் கே.கலைச்செல்வன் தலைமை வகித்து தொடக்க உரை நிகழ்த்தினார். நிறுவனப் பொது மேலாளர்கள் கண்ணன், ரூபேஷ் செலான், ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூடுதல் பொது மேலாளர் (நிதி) கண்ணனன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தி.ரதி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பிளாஸ்டிக் ஒழிப்பின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
தொடர்ந்து, தமிழ்நாடு அறிவியியல் இயக்க மாவட்டத் தலைவர் கே.பூபாலன் சுற்றுச்சூழலை மாசுடையச் செய்யும் பிளாஸ்டிக் ஒழிப்பதில் பெரும் பங்கு அரசாங்கத்துக்கா, சமுதாயத்துக்கா என்ற தலைப்பிலான பட்டிமன்றத்தைத் தொடங்கி வைத்தார். பின்னர் நிறுவன செயல் இயக்குநர் உள்ளிட்ட அனைவரும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழியேற்றனர்.
இதையடுத்து பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் பட்டிமன்றத்தில் பேச்சாளர்களாக கலந்துகொண்ட  நிறுவன  ஊழியர்களுக்கும்  பரிசுகள் வழங்கப்பட்டன. 
இதில் நிறுவன கூடுதல் பொது மேலாளர்கள், பொது மேலாளர்கள், நிறுவனப் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஏலகிரிமலையடிவாரத்தில்...
திருப்பத்தூர், டிச. 8: ஜோலார்பேட்டையை அடுத்த பொன்னேரி ஊராட்சி ஏலகிரி மலையடிவாரத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கனகராஜ், பிரேம்குமார் ஆகியோர் ஏலகிரிமலைக்கு செல்லும் வாகன ஓட்டிகளிடம் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி, பொருள்கள் வாங்கி வைத்திருந்த பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து, துணிப் பைகளை வழங்கினர். மேலும், பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீங்கு குறித்த துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.
நிகழ்ச்சியில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலகிருஷ்ணன், பொன்னேரி ஊராட்சி செயலாளர் சின்னதம்பி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/10/பிளாஸ்டிக்-ஒழிப்பு-விழிப்புணர்வு-முகாம்-3054845.html
3054843 சென்னை வேலூர் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் DIN DIN Monday, December 10, 2018 12:27 AM +0530 ஜோலார்பேட்டையை அடுத்த பொன்னேரி பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜோலார்பேட்டையை அடுத்த பொன்னேரி பகுதியில் உள்ள லட்சுமணன் நகரில் அதே பகுதியைச் சேர்ந்த சங்கருக்குச் சொந்தமான இடத்தில் புதிதாக டாஸ்மாக் கடையை திறந்து அதன் ஊழியர்கள் மது பாட்டில்களை விற்பனை செய்தனர். இதையறிந்த பொன்னேரி சுற்றுப்பகுதியைச் சேர்ந்த  பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மஸ்தான் ஜோலார்பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். 
அதன் பேரில் போலீஸார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/10/டாஸ்மாக்-கடை-திறக்க-எதிர்ப்பு-தெரிவித்து-போராட்டம்-3054843.html
3054839 சென்னை வேலூர் மார்கபந்தீஸ்வரர் கோயிலில் சிம்மக் குளம் திறப்பு: திரளான பெண்கள் நீராடி வழிபாடு DIN DIN Monday, December 10, 2018 12:26 AM +0530 கார்த்திகை கடைஞாயிறு விழாவையொட்டி வேலூர், விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோயிலில் சனிக்கிழமை நள்ளிரவு சிம்மக் குளம் திறக்கப்பட்டது. குழந்தை வரம் வேண்டி இந்தக் குளத்தில் ஏராளமான பெண்கள் நீராடி வழிபாடு செய்தனர்.
வேலூரை அடுத்த விரிஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற மார்கபந்தீஸ்வரர் கோயில் உள்ளது. இங்குள்ள சிம்மக் குளத்தில் கார்த்திகை கடைசி ஞாயிற்றுக்கிழமை பெண்கள் நீராடி, ஈரச் சேலையுடன் கோயிலில் தங்கி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். 
அதன்படி, கார்த்திகை கடைஞாயிறு விழாவையொட்டி, சனிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு சிம்மக்குளத்தை ரத்தினகிரி பாலமுருகனடிமை, கலவை சச்சிதானந்த சுவாமிகள் ஆகியோர் திறந்து வைத்தனர். 
தொடர்ந்து, குழந்தை வரம் வேண்டி ஏராளமான பெண்கள் சிம்மக்குளத்தில் நீராடி கோயிலில் தங்கினர். 
தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை பிரம்ம குளத்தில் தீர்த்தவாரி, பாலகனாகப் பிறந்த  பிரம்மனுக்கு உபநயன சிவ தீட்சை, மாடவீதிகளில் உற்சவர் வீதியுலா நடைபெற்றது. 
இதில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் க.பெ.அசோக்குமார், அணைக்கட்டு தொகுதி 
எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
இவ்விழாவில் திராளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/10/மார்கபந்தீஸ்வரர்-கோயிலில்-சிம்மக்-குளம்-திறப்பு-திரளான-பெண்கள்-நீராடி-வழிபாடு-3054839.html
3054837 சென்னை வேலூர் சோனியா காந்தி பிறந்த நாள் கொண்டாட்டம் DIN DIN Monday, December 10, 2018 12:26 AM +0530 ஆம்பூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் சோனியா காந்தி பிறந்த நாள் விழா மற்றும் நகர காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவர் எஸ். சரவணன் தலைமை வகித்தார்.  மாவட்டச் செயலர் வரதா அர்ஷத் வரவேற்றார். வேலூர் மேற்கு மாவட்டத் தலைவர் எஸ். பிரபு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பிறந்த நாளையொட்டி கேக் வெட்டினார். மாவட்டப் பொருளாளர் 
பி. மகேஷ்,   நிர்வாகிகள் சமியுல்லா,  சேலூர் மாணிக்கம், வேலாயுதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாணியம்பாடியில்...
வாணியம்பாடியில் காங்கிரஸ் சார்பில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் 72-ஆவது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. 
விழாவுக்கு சிறுபான்மைப் பிரிவு மாவட்டத் தலைவர் ஏ.இலியாஸ்கான் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி தலைவர் பைசல்அமீன், மாநில ஒருங்கிணைப்பாளர் பரீத்அஹமத், கவியரசன், முஜம்மில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு மாநிலத் தலைவர் அஸ்லம்பாஷா கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார். 
தொடர்ந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பிறந்த 5 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்தார். 
இதில், மருத்துவர் சிவசுப்பிரமணி, சட்டப் பேரவைத் தொகுதி  இளைஞர் காங்கிரஸ் தலைவர் முதஸ்சீர்பாஷா, ரபீக், ஷேக்அஸ்லம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆலங்காயம் அரசு சுகாதார நிலையத்தில் மாவட்ட விவசாய அணிச் செயலாளர் ஜெயபால் தலைமையில் உள்நோயாளிகளுக்கு பால், பழம் மற்றும்  ரொட்டிகள்  வழங்கப்பட்டன.
அரக்கோணத்தில்...
அரக்கோணம் நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் நகரில் கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள், கோயில்களில் சிறப்பு பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பழனிபேட்டை ஸ்ரீசாணாத்தியம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டுக்கு நகர காங்கிரஸ் தலைவர் துரை.சீனிவாசன் தலைமை வகித்தார். தொடர்ந்து, நகர துணைத் தலைவர் ஜெ.தமீன்அன்சாரி இனிப்புகளை வழங்கினார். 
இதில், மாநிலப் பொதுக் குழு உறுப்பினர் பி.ராஜ்குமார், நகரப் பொருளாளர் ஜி.லவக்குமார், மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர் மு.உலகநாதன், மாவட்டப் பொதுச் செயலாளர் 
கே.ஆர்.நவீன், நகரத் துணைத் தலைவர் இன்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
இதைத் தொடர்ந்து ராஜாஜி பிறந்த நாளை முன்னிட்டு, சுவால்பேட்டையில் உள்ள அவரது சிலைக்கு நகர காங்கிரஸ் தலைவர் துரை. சீனிவாசன் மாலை அணிவித்தார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/10/சோனியா-காந்தி-பிறந்த-நாள்-கொண்டாட்டம்-3054837.html
3054835 சென்னை வேலூர் தடையை மீறி ஊர்வலம்: இந்து முன்னணி, பாஜகவினர் 28 பேர் கைது DIN DIN Monday, December 10, 2018 12:25 AM +0530 சபரிமலையில் போலீஸாரின் அடக்குமுறையைக் கண்டித்து அரக்கோணத்தில் சபரிமலை பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை தடையை மீறு ஊர்வலம் நடத்திய ஐயப்ப சேவா சங்கம், இந்து முன்னணி, பாஜக நிர்வாகிகள் 28 பேர் கைது செய்யப்பட்டனர்.
சபரிமலை பாதுகாப்பு இயக்கத்தின் அரக்கோணம் கிளையின் சார்பில் கிருபில்ஸ்பேட்டையில் இருந்து ஜோதி நகர் வரை ஊர்வலம் நடத்த கடந்த ஒரு வாரத்துக்கு முன் அதன் நிர்வாகி மோகன்குமார் நகரக் காவல் நிலையத்தில் அனுமதி கேட்டிருந்தார். இந்த ஊர்வலத்துக்கு அனுமதி இல்லை என காவல் ஆய்வாளர் பொன்.முத்துராமலிங்கம் சனிக்கிழமை தெரிவித்தார். 
இந்நிலையில், கிருபில்ஸ்பேட்டை வேணுகோபாலசாமி கோயிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை ஊர்வலம் புறப்பட்டது. இதில் சபரிமலை பாதுகாப்பு இயக்கத்தினர், இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்ட பல்வேறு அமைப்பினருடன் நகரில் சபரிமலைக்கு மாலையணிந்த பக்தர்களும் பங்கேற்றனர். 
ஊர்வலம் சிறிது தூரம் சென்ற நிலையில், போலீஸார் அவர்களைத் தடுத்தி நிறுத்தினர். இதையடுத்து அனுமதியின்றி ஊர்வலம் நடத்தியதாகக் கூறி ஊர்வலத்தில் பங்கேற்றவர்களைக் கைது செய்தனர்.  இதில், சபரிமலை பாதுகாப்பு இயக்கத்தின் அரக்கோணம் கிளை நிர்வாகி மோகன்குமார், இந்து முன்னணி கோட்டப் பொறுப்பாளர் 
டி.வி.ராஜேஷ், நகரத் தலைவர் குமார், ரகுநாதன், பாஜக நகரத் தலைவர் ஜெகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரமேஷ் உள்ளிட்ட 28 பேர் கைது செய்யப்பட்டு, அரக்கோணத்தை அடுத்த நேத்தாஜி நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/10/தடையை-மீறி-ஊர்வலம்-இந்து-முன்னணி-பாஜகவினர்-28-பேர்-கைது-3054835.html
3054834 சென்னை வேலூர் ஐயப்பன் கோயிலில் கார்த்திகை மாத சிறப்பு வழிபாடு DIN DIN Monday, December 10, 2018 12:24 AM +0530 வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் கார்த்திகை மாத சிறப்பு வழிபாடு மற்றும் பூஜை சனிக்கிழமை நடைபெற்றன.
காலை முதல் மாலை நடைபெற்ற சிறப்பு பூஜையில் திராளான ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதை முன்னிட்டு ஐயப்பன் சுவாமிக்கு ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்கரம் செய்யப்பட்டது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/10/ஐயப்பன்-கோயிலில்-கார்த்திகை-மாத-சிறப்பு-வழிபாடு-3054834.html
3054233 சென்னை வேலூர் இந்திய கல்வி மேம்பாட்டு சங்கத்தின்தேசிய தலைவராக ஜி.விசுவநாதன் மீண்டும் தேர்வு DIN DIN Saturday, December 8, 2018 11:51 PM +0530
இந்திய கல்வி மேம்பாட்டு சங்கத்தின் தேசிய தலைவராக விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தனியார் உயர்கல்வி நிறுவனங்களின் வளர்ச்சி, மேம்பாட்டுக்கான நாட்டில் உள்ள தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் இணைந்து இந்திய கல்வி மேம்பாட்டுச் சங்கம் என்ற தேசிய அளவிலான அமைப்பை உருவாக்கியுள்ளன. இதன் தற்போதைய தலைவராக வேலூர் விஐடி பல்கலைக் கழக வேந்தர் ஜி.விசுவநாதன் பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்த சங்கத்தின் 9-ஆவது தேசிய கருத்தரங்கம் பெங்களூருவில் அண்மையில் நடைபெற்றது. இந்திய உயர்கல்வியின் தரம், கட்டமைப்பில் உள்ள சவால்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்குக்கு சங்கத்தின் தலைவர் ஜி.விசுவநாதன் தலைமை வகித்தார். இதில் ஏஐசிடிஇ தலைவர் அணில் சகரஸபுத்தே சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று மாநாட்டை தொடங்கி வைத்தார்.
இதில், தேசிய கல்வி கொள்கை வடிவமைப்பு குழு உறுப்பினர் எம்.கே.ஸ்ரீதர், கர்நாடக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் எஸ்.வி.ரங்கநாத், சென்னை அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பா ஆகியோர் கெளரவ விருந்தினர்களாக பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற சங்கத்தின் 9-ஆவது ஆண்டு பொதுக் குழு மாநாட்டில் நாடு முழுவதும் இருந்து பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களின் வேந்தர்கள், துணைவேந்தர்கள், தலைவர்கள், முதல்வர்கள் என 350-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் 2018-19-ஆம் ஆண்டுக்கான சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்படி, சங்கத்தின் தேசிய தலைவராக விஐடி பல்கலைக் கழக வேந்தர் ஜி.விசுவநாதன் ஏகமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும், சங்கத்தின் மாற்று தலைவராக பிஐஎம் டெக் இயக்குநர் எச்.சதுர்வேதி, துணைத் தலைவர்களாக பெங்களூரு ராமைய்யா கல்வி குழுமங்களின் தலைவர் எம்.ஆர்.ஜெயராமன், நாக்பூர் தத்தா மேகே மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் இணைவேந்தர் வேதபிரகாஷ் மிஸ்ரா, பொருளாளராக பரிதாபாத் மணவ் ரச்சனா கல்வி குழுமத் தலைவர் பிரசாந்த் பல்லா ஆகியோரும், சங்கத்தின் மேலாண்மை குழு உறுப்பினர்களாக புணே எம்ஐடி ஏடிடி பல்கலைக் கழக நிர்வாகத் தலைவர் மங்கேஷ் டி.கரத், பஞ்சாப் சண்டிகர் பல்கலைக் கழக வேந்தர் எஸ்.சத்னாம் சிங் சாந்து, கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் எஸ்.மலர்விழி, கொல்கத்தா ஜேஐஸ் கல்வி குழுமங்களின் நிர்வாக இயக்குநர் தரன்ஜித்சிங் ஆகியோரும் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/08/இந்திய-கல்வி-மேம்பாட்டு-சங்கத்தின்தேசிய-தலைவராக-ஜிவிசுவநாதன்-மீண்டும்-தேர்வு-3054233.html
3054232 சென்னை வேலூர் திருவள்ளூரில் ஆதிமனிதன் வாழ்ந்ததன் அடையாளம்: அமைச்சர் க.பாண்டியராஜன் தகவல் DIN DIN Saturday, December 8, 2018 11:51 PM +0530
திருவள்ளூர் மாவட்டம், அகரம்பாக்கத்தில் ஆதிமனிதன் வாழ்ந்ததற்கு அடையாளமாக கல் ஆயுதங்கள் கிடைத்துள்ளதாக தமிழக தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.
மாமல்லபுரம் அருகே உள்ள மணமையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் உள்ள கீழடியில் தொல்லியல் துறை சார்பில் மீண்டும் அகழாய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பட்டரைப் பெரும்புதூரில் உறைகிணறுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அதே திருவள்ளூர் மாவட்டம், அகரம்பாக்கத்தில் ராபர்ட் புரூஸ் என்பவரால் கல் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவை 3 லட்சத்து 75 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தவையாகும்.
இதன் மூலம் ஆதிமனிதன் வாழ்ந்த இடம் தமிழகம் என்பது உறுதியாகியுள்ளது. குறிப்பாக, அகரம்பாக்கத்தில் ஆதிமனிதன் வாழ்ந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை வெளிப்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் 4 அருங்காட்சியகங்கள் அமைக்கப்படவுள்ளன. அவற்றை பொற்கை, ஆதிச்சநல்லூர், கீழடி உள்ளிட்ட இடங்களில் அமைக்க முயற்சியெடுத்து வருகிறோம். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இப்பணி மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/08/திருவள்ளூரில்-ஆதிமனிதன்-வாழ்ந்ததன்-அடையாளம்-அமைச்சர்-கபாண்டியராஜன்-தகவல்-3054232.html
3054231 சென்னை வேலூர் சிறப்பு மக்கள் நீதிமன்றம்மாவட்டத்தில் ஒரே நாளில் 5,345 வழக்குகளுக்கு தீர்வு DIN DIN Saturday, December 8, 2018 11:50 PM +0530
வேலூர் மாவட்டம் முழுவதும் நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றங்களில் நீண்ட நாள் நிலுவையிலுள்ள 5,345 வழக்குகளுக்கு ஒரே நாளில் தீர்வு காணப்பட்டதுடன், பயனாளிகளுக்கு ரூ. 17.34 கோடி நிதி பெற்றுத் தரப்பட்டது.
வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள 11 நீதிமன்றங்களிலும் சிறப்பு மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வாகன விபத்து, வங்கி வாராக் கடன், காசோலை மோசடி, தொழிலாளர் நல வழக்கு, நில ஆர்ஜித வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காண்பதற்காக இந்த மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது.
இதில், மாவட்டம் முழுவதும் 12,729 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றில் 5,345 வழக்குகளுக்கு ஒரே நாளில் தீர்வு காணப்பட்டன. அதன்மூலம் ரூ. 17 கோடியே 34 லட்சத்து 17 ஆயிரத்து 570 தொகை பயனாளிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது.
முன்னதாக, வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்துக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.ஆனந்தி தலைமை வகித்து தீர்வு காணப்பட்ட வழக்குகளில் பயனாளிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை அளித்தார். இதில், கூடுதல் மாவட்ட நீதிபதி எம்.வெற்றிச்செல்வி, மகளிர் நீதிமன்ற நீதிபதி செல்வம், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலர் தாமோதரன், கூடுதல் சார்பு நீதிபதி ராஜசிம்மவர்மன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி அருண்குமார், வழக்குரைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஆம்பூரில்
629 வழக்குகளுக்கு தீர்வு...
 ஆம்பூர் நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 629 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிபதி ஏ. கதிரவன், குற்றவியல் நீதித் துறை நடுவர் ஜி. ரூபனா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், 629 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டு, ரூ. 30.50 லட்சம் வசூலிக்கப்பட்டது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/08/சிறப்பு-மக்கள்-நீதிமன்றம்மாவட்டத்தில்-ஒரே-நாளில்-5345-வழக்குகளுக்கு-தீர்வு-3054231.html
3054230 சென்னை வேலூர் பகுதிநேர புதிய ரேஷன் கடை கட்ட ரூ. 9 லட்சம் ஒதுக்கீடு: அமைச்சர் கே.சி.வீரமணி உறுதி DIN DIN Saturday, December 8, 2018 11:50 PM +0530
நாட்டறம்பள்ளி அருகே பகுதி நேர ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்ட ரூ. 9 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்வதாக மாநில வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி உறுதியளித்தார்.
நாட்டறம்பள்ளியை அடுத்த வெலகல்நத்தம் பகுதியில் ரேஷன் கடை உள்ளது. இங்கு வீராகவுண்டனூர், முகமதாபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் சுமார் 2 கி.மீ. தூரம் சென்று ரேஷன் பொருள்களை வாங்கி வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் முகமதாபுரம் பகுதியில் பகுதிநேர ரேஷன் கடை வேண்டும் என தொகுதி எம்எல்ஏவும் அமைச்சருமான கே.சி.வீரமணியிடம் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து வெலகல்நத்தம் கடையில் உள்ள 1, 374 குடும்ப அட்டைகளில் இருந்து 235 குடும்ப அட்டைதாரர்களுக்காக முகமதாபுரம் கிராமத்தில் பகுதிநேர ரேஷன் கடை அமைக்க அமைச்சர் வீரமணி நடவடிக்கை மேற்கொண்டார். இதையடுத்து முகமதாபுரத்தில் வடகை கட்டடத்தில் அமைக்கப்பட்ட புதிய பகுதிநேர ரேஷன் கடை திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
முன்னாள் ஊராட்சித் தலைவர் சுப்பிரமணி தலைமை வகித்தார். அமைச்சர் கே.சி.வீரமணி பகுதிநேர ரேஷன் கடையை திறந்து வைத்தார். அப்போது, பகுதி நேர ரேஷன் கடைக்கு சொந்தமாக புதிய கட்டடம் கட்ட எம்எல்ஏ தொகுதி நிதியிலிருந்து ரூ. 9 லட்சம் ஒதுக்கீடு செய்வதாக உறுதியளித்தார்.
தொடர்ந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்கி, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
விழாவில் ஊராட்சிகளின் உதவி இயக்குநர் பிரேம்குமார், ஊரக வளர்ச்சி உதவி செயற்பொறியாளர் மாருதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரேம்குமார், கனகராஜி, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் ரமேஷ், முன்னாள் எம்எல்ஏ ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/08/பகுதிநேர-புதிய-ரேஷன்-கடை-கட்ட-ரூ-9-லட்சம்-ஒதுக்கீடு-அமைச்சர்-கேசிவீரமணி-உறுதி-3054230.html
3054229 சென்னை வேலூர் டிச.11-இல் மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் வேலூர் வருகை DIN DIN Saturday, December 8, 2018 11:50 PM +0530
தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பேராயர் எம். பிரகாஷ் மற்றும் ஆணையக் குழு உறுப்பினர்கள் வரும் செவ்வாய்க்கிழமை (டிச.11) வேலூருக்கு வருகை தர உள்ளனர் என வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வேலூர் மாவட்டத்துக்கு வருகை தர உள்ளனர். செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா, பாரதப் பிரதமரின் 15 அம்ச திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மேலும், தமிழ்நாடு அரசு சிறுபான்மையினருக்கு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த பொதுமக்களின் பிரதிநிதிகள், மாநில சிறுபான்மையினர் ஆணையக் குழுவினரைச் சந்தித்து தங்களுடைய குறைகள், அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்தும், சிறுபான்மையினரின் மேம்பாட்டிற்கான கருத்துகளையும் தெரிவிக்கலாம்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/08/டிச11-இல்-மாநில-சிறுபான்மையினர்-ஆணையத்-தலைவர்-வேலூர்-வருகை-3054229.html
3054228 சென்னை வேலூர் 2,204 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்:அமைச்சர் நிலோபர் கபீல் வழங்கினார் DIN DIN Saturday, December 8, 2018 11:50 PM +0530
வாணியம்பாடி இஸ்லாமியா ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் இந்து மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 2,204 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாநில தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபீல் சனிக்கிழமை வழங்கினார்.
வாணியம்பாடி இஸ்லாமியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளைச் சேர்ந்த 833 மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் நிலோபர் கபீல் வழங்கினார். தொடர்ந்து, வாணியம்பாடி இஸ்லாமியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 612 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
நிகழ்ச்சிகளில், முன்னாள் எம்எல்ஏ சம்பத்குமார், நகர அதிமுக செயலர் சதாசிவம், வாணியம்பாடி முஸ்லிம் கல்வி சங்கத் தலைவர் முகமதுமூபின், இஸ்லாமிய ஆண்கள் மேல்நிலைப் பள்ளிச் செயலர் நானவரம்நிசார், பெண்கள் மேல்நிலைப் பள்ளிச் செயலர் ஜமீல்அகமது, தலைமையாசிரியர்கள் அப்துல்ஹாதி (ஆண்கள்), சர்மிளா (பெண்கள்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, இந்து மேல்நிலைப் பள்ளியில் அப்பள்ளியைச் சேர்ந்த 759 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் வழங்கினார்.
பள்ளியின் தலைவர் ராஜேந்திரன், துணைத் தலைவர் ஜனார்த்தனன், வழக்குரைஞர் வரதராஜன், செயலர் குமரேசன், தலைமையாசிரியர் கருணாகரன், பள்ளி நிர்வாகிகள் ஞானேஸ்வரன், அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/08/2204-மாணவர்களுக்கு-விலையில்லா-மிதிவண்டிகள்அமைச்சர்-நிலோபர்-கபீல்-வழங்கினார்-3054228.html
3054227 சென்னை வேலூர் பள்ளி மாணவர்கள் 3 லட்சம் மரங்கள் நடும் திட்டம் தொடக்கம் DIN DIN Saturday, December 8, 2018 11:49 PM +0530
வேலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் 3 லட்சம் மரக் கன்றுகளை நடுவதற்கான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதை ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
ஈஷா பசுமை பள்ளி திட்டமும், தமிழக பள்ளி கல்வித் துறையும் இணைந்து 9 மாவட்டங்களில் 2,500 பள்ளிகளைச் சேர்ந்த ஒரு லட்சம் மாணவர்களுக்கு மரக்கன்று உற்பத்தி பயிற்சியை அளித்தன. வேலூர் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 150 பள்ளிகளைச் சேர்ந்த 8 ஆயிரம் மாணவர்களுக்கு மரம் வளர்ப்பு தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
இதற்காக, ஒவ்வொரு பள்ளியிலும் தேசிய பசுமை படை மாணவர்களைக் கொண்டு ஒரு நர்ஸரி உருவாக்கப்பட்டு அவற்றின் மூலம் ஆண்டுக்கு தலா 2 ஆயிரம் வீதம் மாவட்டம் முழுவதும் சுமார் 3 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வேலூர் மாவட்டப் பள்ளிகளில் மாணவர்களில் உற்பத்தி செய்த மரக்கன்றுகள் நடவு செய்வதற்கான தொடக்க விழா சத்துவாச்சாரியில் உள்ள தனியார் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன், மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியைத் தொடங்கி வைத்துப் பேசியது:
வழக்கமாக மரக்கன்று நடுவது என்றால், நர்ஸரிகளில் இருந்து வாங்கி வந்து மரக்கன்றுகளை மாணவர்களிடம் கொடுத்து நட வைப்பர். ஆனால், ஈஷா பசுமை பள்ளி இயக்கம் மாணவர்களே நேரடியாக மரக் கன்றுகளை உருவாக்கி நடுகின்றனர். இது ஒரு முன்மாதிரி திட்டமாகும். இந்தத் திட்டத்தில் ஒரு பள்ளியில் 2,000 மரக் கன்றுகள் உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், சில பள்ளிகள் இப்போதே 6,000 மரக்கன்றுகள் உருவாக்கியிருப்பது மாணவர்களிடம் உள்ள ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் அடுத்த 3 ஆண்டுகளில் வேலூரில் லட்சக்கணக்கான மரங்களை மாணவர்கள் நட்டு வேலூரை பசுமையாக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ், ஈஷா பசுமைத் திட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/08/பள்ளி-மாணவர்கள்-3-லட்சம்-மரங்கள்-நடும்-திட்டம்-தொடக்கம்-3054227.html
3054226 சென்னை வேலூர் பல வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கம்: வாக்குச்சாவடி முகவர்கள் குற்றச்சாட்டு DIN DIN Saturday, December 8, 2018 11:49 PM +0530
இறந்ததாகக் கருதி வாக்காளர்கள் பலரது பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக வாக்குச் சாவடி முகவர்கள் குற்றம்சாட்டினர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் தொடர்பாக கட்பாடி தொகுதிக்கு உள்பட்ட முகவர், தேர்தல் அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் காட்பாடியில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு வேலூர் சார்-ஆட்சியர் கே.மெஹராஜ் தலைமை வகித்தார். மாநகராட்சி முதலாவது மண்டல உதவி ஆணையர் மதிவாணன், வட்டாட்சியர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், அனைத்து வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்று கருத்துகளைத் தெரிவித்தனர்.
அப்போது, மாநகராட்சி முதலாவது மண்டலத்தில் முன்னறிவிப்பின்றி 120 வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதில், இறந்து விட்டதாகக் கூறி நீக்கப்பட்ட பலரும் அங்கேயே வசித்து வருகின்றனர். தவறுதலாக நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை மீண்டும் பட்டியலில் சேர்க்க வேண்டும். ஒவ்வொரு முறையும் பெயர் சேர்த்தல், திருத்ததல் முகாம் நடத்துகின்றனர். இதேபோல், இறந்தவரின் பெயர்களை நீக்க வார்டு அளவில் சிறப்பு முகாம் நடத்த வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலுக்கு வார்டு வரையறை செய்வதாக தெரிவித்து பிரிவித்துள்ளனர். இதில், ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் வெவ்வேறு வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்கும் நிலை உள்ளது. ஒரே குடும்பத்தினர் ஒரே வாக்குச்சாவடியில் வாக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
பின்னர், சார்-ஆட்சியர் மெஹராஜ் கூறியது:
வாக்காளர் பட்டியலில் இறந்ததாகக் கருதி பெயர் நீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக வரும் புதன்கிழமைக்குள் (டிச.12) எழுத்துப் பூர்வமாக தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்களின் செல்லிடப்பேசி எண்ணையும் அதில் இணைக்க வேண்டும். அவற்றை பரிசீலனை செய்து தகுதியான நபர்களின் பெயர்கள் மீண்டும் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இறந்தவர்களின் பெயர்களை நீக்க வார்டு அளவில் கூட்டம் நடத்தும் கருத்தை ஏற்கிறோம். இதுதொடர்பாக, தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளாட்சித் தேர்தல் வார்டு வரையறை என்பது வேறு. உள்ளாட்சித் தேர்தல் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. தற்போது நடைபெறுவது மக்களவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடாகும் என்றார்.
அரக்கோணத்தில்...
அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசியல் கட்சியினர் பங்கேற்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வேணுசேகரன் பேசியது:
அரக்கோணம் சட்டப் பேரவை தொகுதியில் வாக்காளர் பட்டியலில் சேர்தல், நீக்கல், திருத்தம் கோருதல் கோரி இதுவரை 9,924 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மூவர் அரக்கோணம் தொகுதியில் வாக்களிப்பதற்கு அனுமதி கோரி மனு அளித்துள்ளனர். 5,824 மனுக்கள் பெயர் சேர்த்தலுக்கும், 2,898 மனுக்கள் பெயர் நீக்குதலுக்கும் வந்துள்ளன.
வரும் தேர்தலுக்காக வாக்குச் சாவடி நிலை முகவர்களை நியமிக்க அந்தந்த அரசியல் கட்சிகள் சார்பில் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள நபரின் பெயரை தேர்தல் பிரிவில் அளிக்க வேண்டும். அந்த நபர் மட்டுமே வாக்குச் சாவடி நிலை முகவர்களை நியமிக்க முடியும். அவரால் நியமிக்கப்படும் வாக்குச் சாவடி நிலை முகவர்கள் அளிக்கும் இறந்த வாக்காளர்களின் பெயர்கள் பெறப்பட்டு அவை பட்டியலில் இருந்து நீக்கப்படும். இதுகுறித்த தவறான தகவல் அளித்தால் தகவல் அளிப்பவருக்கு ஓராண்டு வரை சிறைத் தண்டனை கிடைக்கும். தேர்தலின்போது அந்த நபரிடம் மட்டுமே வாக்குச் சாவடி வாக்காளர் பட்டியல் அளிக்கப்படும் என்றார்.
கூட்டத்துக்கு, வட்டாட்சியர் ஆர்.பாபு தலைமை வகித்தார். இதில் துணை வட்டாட்சியர் (தேர்தல்) உஷாராணி, அதிமுக நகரச் செயலர் கே.பி.பாண்டுரங்கன், ஒன்றியச் செயலர் பிரகாஷ், திமுக நகரச் செயலர் வி.எல்.ஜோதி, காங்கிரஸ் நகரத் தலைவர் துரைசீனிவாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஆம்பூரில்...
ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குச் சாவடி முகவர்களுக்கான ஆய்வுக் கூட்டத்துக்கு மாவட்ட வழங்கல் அலுவலரும், மண்டல அலுவலரான பேபி இந்திரா தலைமை வகித்தார்.
ஆம்பூர் வட்டாட்சியர் சுஜாதா, சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் முரளிகுமார், தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் பாக்கியலட்சுமி, மண்டல துணை வட்டாட்சியர் சரவணன் மற்றும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வாக்குச் சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/08/பல-வாக்காளர்களின்-பெயர்கள்-பட்டியலிலிருந்து-நீக்கம்-வாக்குச்சாவடி-முகவர்கள்-குற்றச்சாட்டு-3054226.html
3054225 சென்னை வேலூர் பிரசவ சேவையில் தமிழகத்திலேயே திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முதலிடம் : அமைச்சர் கே.சி.வீரமணி பாராட்டு DIN DIN Saturday, December 8, 2018 11:49 PM +0530
தமிழகத்திலேயே பிரசவ சேவையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முதலிடம் வகிக்கிறது என மாநில வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் பிரிவு திறப்பு, ஒரு மாதத்தில் 500 பிரசவங்கள் பார்த்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்குப் பாராட்டு மற்றும் விபத்து அறுவை சிகிச்சை மையக் கட்டுமானப் பணி தொடங்க விழா திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்றது.
டயாலிசிஸ் பிரிவைத் திறந்து வைத்து அமைச்சர் கே.சி.வீரமணி பேசியது:
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் மட்டும் 510 பிரசவங்கள் நடந்துள்ளன. ஒரு மாதத்தில் 6 மருத்துவர்கள் 510 பிரசவங்களைப் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்திலேயே திருப்பத்தூர் அரசு மருத்துவமனை பிசரவ சேவையில் முதலிடத்தில் உள்ளது பெருமைக்குரியது. இந்த அரசு மருத்துவமனை மாவட்ட அந்தஸ்தில் குறிப்பிடத்தக்க மருத்துவமனையாக உள்ளது.
நாள்தோறும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புற நோயாளிகள் வருகின்றனர். தற்போது ரூ. 18 கோடி மதிப்பில் விபத்து அறுவை சிகிச்சை மற்றும் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை பிரிவுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதேபோல், ரூ. 5 கோடி மதிப்பில் புதிய வார்டுகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. மேலும், இந்த மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை உள்ளதால் இதன் அருகேயுள்ள காவலர் கவாத்து மைதானத்தை அரசு மருத்துமனைக்குக் கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த மருத்துவமனையில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏ நல்லதம்பி சட்டப் பேரவையில் பேசியுள்ளார்.
இதுகுறித்து முதல்வரிடம் பேசி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நிகழ்ச்சிக்கு, மருத்துவ இணை இயக்குநர் யாஸ்மின் தலைமை வகித்தார். மருத்துவ அலுவலர் செல்வகுமார் வரவேற்றார். எம்எல்ஏ நல்லதம்பி, முன்னாள் எம்எல்ஏ ரமேஷ், அதிமுக நகரச் செயலர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர். மருத்துவர் பிரபாகரன் நன்றி கூறினார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/08/பிரசவ-சேவையில்-தமிழகத்திலேயேதிருப்பத்தூர்-அரசு-மருத்துவமனை-முதலிடம்--அமைச்சர்-கேசிவீரமணி-பாராட்ட-3054225.html
3054224 சென்னை வேலூர் 161 பயனாளிகளுக்கு ரூ. 12.50 லட்சத்தில் விலையில்லா ஆடுகள்: அமைச்சர் வழங்கினார் DIN DIN Saturday, December 8, 2018 11:49 PM +0530
வேலூர் மாவட்டத்தில் 161 பெண்களுக்கு ரூ. 12.50 லட்சம் மதிப்பிலான விலையில்லா ஆடுகளை மாநில வணிக வரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.
கிராமப்புற பெண்களுக்கு தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி வேலூர் மாவட்டம், கணியம்பாடியில் சனிக்கிழமை நடைபெற்றது.
கால்நடைத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பெண்களுக்கு ரூ. 12.50 லட்சம் மதிப்பிலான விலையில்லா ஆடுகளை வழங்கி அமைச்சர் கே.சி.வீரமணி பேசியது:
விலையில்லா ஆடுகள், கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் ஆயிரம் பெண்கள் பயனடைந்துள்ளனர். இதன் தொடர் நிகழ்வாக கணியம்பாடி ஊராட்சியில் 161 பயனாளிகளுக்கு ரூ. 12.50 லட்சம் மதிப்பிலான ஆடுகள் வழங்கப்பட்டன. வேலூர் மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள பெண்கள் அனைவருக்கும் விலையில்லா ஆடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பல பெண்கள் இந்தத் திட்டத்தில் வழங்கப்பட்ட ஆடுகளை தொடர்ந்து வளர்த்து 50 முதல் 100 ஆடுகளாக பெருக்கி அதன்மூலம் தங்கள் குடும்ப வாழ்க்கையை சிறப்பாக நடத்தி வருவது இத்திட்டத்தின் வெற்றியாகும்.
கால்நடைத் துறை சார்பில் பொதுமக்களுக்கும் கால்நடை விவசாயிகளுக்கும் 100 சதவீத மானியத்தில் நாட்டுக் கோழி வளர்ப்புக்கு கடனுதவிகள், கால்நடை தீவன வளர்ப்புக்கு உதவிகள், கால்நடைகளுக்கு மருந்துகள், புதிய கால்நடை மருந்தகங்கள் என தமிழக அரசு தொடர்ந்து திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்ட உதவிகளை கிராமப்புற மக்கள் நல்லமுறையில் பயன்படுத்தி தங்களது குடும்ப வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் முன்னிலை வகித்தார். மாவட்ட மருத்துவ நல சங்க உறுப்பினர் எம்.ராகவன், கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் பன்னீர்செல்வம், கணியம்பாடி கால்நடை உதவி மருத்துவர் மோகன்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/08/161-பயனாளிகளுக்கு-ரூ-1250-லட்சத்தில்-விலையில்லா-ஆடுகள்-அமைச்சர்-வழங்கினார்-3054224.html
3054223 சென்னை வேலூர் ஜவ்வாதுமலையில் ஆசிரியர் பணி: தகுதித் தேர்வு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் DIN DIN Saturday, December 8, 2018 11:48 PM +0530
ஜவ்வாதுமலை வனத்துறை பள்ளியில் காலியாக உள்ள 8 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருப்பத்தூர் வனக்கோட்டம், ஜவ்வாதுமலையில் உள்ள வனத்துறை பள்ளிகளில் 8 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜவ்வாது மலையில் தங்கி மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க விருப்பமுள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை திருப்பத்தூரில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் பெற்றுக்கொண்டு, அதைப் பூர்த்தி செய்து மாவட்ட வன அலுவலர், திருப்பத்தூர் கோட்டம், அரசு தோட்டம், திருப்பத்தூர் - 635601 வேலூர் மாவட்டம் என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ வரும் 15-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். வேலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/08/ஜவ்வாதுமலையில்-ஆசிரியர்-பணி-தகுதித்-தேர்வு-முடித்தவர்கள்-விண்ணப்பிக்கலாம்-3054223.html
3054222 சென்னை வேலூர் பளுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்குப் பாராட்டு DIN DIN Saturday, December 8, 2018 11:48 PM +0530  

தேசிய பளுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ. ராமன் வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பளுதூக்கும் மையத்தில் பயிற்சி பெற்று அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் கடந்த நவம்பர் 26 முதல் 30 வரை நடந்த தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் பெற்ற வீராங்கனைகளும், கேரள மாநிலம், கோழிகோட்டில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பளுதூக்கும் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் பெற்ற வீரர்களும் ஆட்சியரை வெள்ளிக்கிழமை சந்தித்தனர்.
அவர்கள் போட்டிகளில் வெற்றி பெற்றமைக்காக ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் உடனிருந்தார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/08/பளுதூக்கும்-போட்டியில்-வெற்றி-பெற்ற-வீரர்களுக்குப்-பாராட்டு-3054222.html
3054221 சென்னை வேலூர் திருமுறை நன்னெறிச் சங்க நிர்வாகக் குழுக் கூட்டம் DIN DIN Saturday, December 8, 2018 11:48 PM +0530
குடியாத்தம் திருமுறை நன்னெறிச் சங்கத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் தரணம்பேட்டை முத்தியாலம்மன் கோயில் வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, சங்கத்தின் கௌரவத் தலைவர் பி.என்.எஸ்.திருநாவுக்கரசு தலைமை வகித்தார்.
பொருளாளர் எம்.டி.சதானந்தம் வரவேற்றார். தலைவர் எஸ்.அசோக்குமார், முன்னாள் தலைவர் பி.என்.மாணிக்கம், நிர்வாகிகள் ஜி.வீரய்யபத்தர், எம்.எம்.சிவஞானம், வாசு உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.
கூட்டத்தில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஞாயிறுதோறும் நடைபெறும் வார வழிபாடு, தமிழ் மாதம் முதல் தேதியில் இல்லங்கள்தோறும் நடைபெறும் திருமுறை இன்னிசை, பௌர்ணமி தோறும் நடைபெறும் திருமுறைச் சொற்பொழிவு ஆகியவற்றை மேலும் சிறப்பாக நடந்த ஆவன செய்தல், மாணவர்களைக் கொண்டு கோயில்கள்தோறும் இலவச திருமுறை பயிற்சி அளித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/08/திருமுறை-நன்னெறிச்-சங்க-நிர்வாகக்-குழுக்-கூட்டம்-3054221.html
3054220 சென்னை வேலூர் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் தொழில்முனைவோருக்கு விரைவில் அனுமதி : மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் DIN DIN Saturday, December 8, 2018 11:48 PM +0530
இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கும் தொழில் முனைவோர்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் விரைவில் அனுமதி வழங்கப்படும் என மாவட்டத் தொழில் மைய பொதுமேலாளர் மணிவண்ணன் கூறினார்.
அரக்கோணத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் -2019 மாநாட்டுக்கான ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவர் பேசியது: உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு -2019 அனைவருக்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் இருந்து மட்டும் ரூ. 1,200 கோடி முதலீட்டை உருவாக்குவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தொழில் மையம் செய்து வருகிறது.
மேலும், பாரதப் பிரதமரின் புதிய திட்டத்தின் கீழ், தற்போது வேலூர் மாவட்டத்தில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் தொழில்முனைவோர்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் விரைவில் அனுமதி அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் அவர்களது அனைத்து கோரிக்கைகளையும் 100 நாள்களுக்குள் நிறைவேற்றி 101-ஆவது நாள் தொழிலை தொடங்கும் அளவுக்கு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரக்கோணம் சிட்கோவில் ஏற்கெனவே விண்ணப்பித்த தொழில்முனைவோர்களின் அனைத்து பிரச்னைகளையும் விரைந்து தீர்ப்பதற்கான பணிகளை மாவட்ட ஆட்சியர் மூலம் மாவட்ட தொழில் மையம் செய்து வருகிறது என்றார்.
கூட்டத்துக்கு, இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் சுந்தரராஜன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முருகேசன், அரக்கோணம் பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை மேலாளர் ஏ.ஆர்.ரகுநாதன், பஞ்சாப் நேஷனல் வங்கி மேலாளர் சுகன்யா, அரக்கோணம் சிட்கோ உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ஜெயக்குமார், கெளரவத் தலைவர் ஆதம்நேசன், பொருளாளர் சண்முகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/08/இணையதளம்-மூலம்-விண்ணப்பிக்கும்-தொழில்முனைவோருக்கு-விரைவில்-அனுமதி--மாவட்ட-தொழில்-மைய-பொது-மேலாளர்-3054220.html
3054219 சென்னை வேலூர் 396 மாணவியருக்கு இலவச மிதிவண்டிகள் DIN DIN Saturday, December 8, 2018 11:48 PM +0530
பேர்ணாம்பட்டு ஒன்றியத்தில் உள்ள மேல்பட்டி, அழிஞ்சிகுப்பம், தேவலாபுரம் அரசினர் மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 396 மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
மேல்பட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் டி. பிரபாகரன் தலைமை வகித்தார். பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் கஜேந்திரன் வரவேற்றார். தமிழக வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேர்ணாம்பட்டு நகர அதிமுக செயலர் எல்.சீனிவாசன், ஒன்றியச் செயலர் சி. வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/08/396-மாணவியருக்கு-இலவச-மிதிவண்டிகள்-3054219.html
3054218 சென்னை வேலூர் ஜாதி மோதலை தூண்டும் விடியோ வெளியீடு: எஸ்.பி.யிடம் பாமக புகார் DIN DIN Saturday, December 8, 2018 11:47 PM +0530
சமூக வலைதளங்களில் ஜாதி மோதலை தூண்டும் விதமாக விடியோ வெளியிட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் பாமகவினர் புகார் தெரிவித்தனர்.
பாமகவின் மாநில துணைப் பொதுச் செயலர் இளவழகன் தலைமையில் அக்கட்சியினர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்
குமாரை சனிக்கிழமை சந்தித்து மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியது:
தமிழகம் முழுவதும் தற்போது சமூக வலைதளங்களில் விடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. இதில், ஊதா, மஞ்சள் நிறத்தில் சட்டையும், நீலநிற பேன்ட்டும் அணிந்த ஒரு நபர், அம்பேத்கர் உருவப்படத்தின் முன் நின்றபடி ஜாதிய வன்முறையை தூண்டும் விதமாகவும், பொதுமக்கள் கூடும் இடத்தில் உறுதிமொழி ஏற்றுக்கொள்வது போன்றும், அவரைப் பின்பற்றி பலரும் அதை வழிமொழிவது போன்றும் காட்சிகள் உள்ளன.
இதன்மூலம், அந்த நபர் தமிழகத்தில் திட்டமிட்டு ஜாதிய மோதலை தூண்டுவதுடன் மட்டுமின்றி காவல் துறை ஆதிக்க ஜாதிக்கு துணைபோவது போன்ற தோற்றத்தையும் ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது.
அந்த விடியோ காட்சிகளில் உள்ள நபரையும், அவருடன் உறுதிமொழி எடுக்கும் கும்பலையும் பிடித்து போலீஸார் விசாரணை நடத்த வேண்டும் என மனு அளித்துள்ளோம் என்றனர்.
ஆம்பூரில்...
இதேபோல், வேலூர் வடமேற்கு மாவட்ட பாமக சார்பில் அதன் நிர்வாகி எஸ். கோதண்டன் ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகார் அளித்தார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/08/ஜாதி-மோதலை-தூண்டும்-விடியோ-வெளியீடு-எஸ்பியிடம்-பாமக-புகார்-3054218.html
3053627 சென்னை வேலூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் DIN DIN Saturday, December 8, 2018 06:46 AM +0530 வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை சுகாதாரச் சீர்கேட்டுடனும், மருத்துவர்கள் அலட்சியப் போக்குடனும் இருப்பதாகக் கூறி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, வேலூர் மாவட்ட ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, வேலூர் மாநகர துணைச் செயலர் கே.லோகேஷ்குமார் தலைமை வகித்தார்.  
அரியூர் வட்டச் செயலர் ஏ.மாணிக்கம் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலர் எஸ்.ஆர்.தேவதாஸ் கண்டன உரையாற்றினார். மாநகரச் செயலர் எஸ்.ஏ. சிம்புதேவன், நிர்வாகிகள் சரோஜா, கோவிந்தன், கோவிந்தராஜ், சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட துணைச் செயலர் பாஸ்கரன் நன்றி கூறினார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/08/இந்திய-கம்யூனிஸ்ட்-கட்சியினர்-ஆர்ப்பாட்டம்-3053627.html
3053628 சென்னை வேலூர் மகா பிரத்யங்கிரா தேவி கோயிலில் நிகும்பலா யாகம் DIN DIN Saturday, December 8, 2018 06:46 AM +0530 ராணிப்பேட்டை பாலாற்றங்கரை மிஸ்ரி நகரில் அமைந்துள்ள மகா பிரத்யங்கிரா தேவி கோயிலில் கார்த்திகை  மாத அமாவாசையையொட்டி, வியாழக்கிழமை மகா நிகும்பலா யாகம் நடைபெற்றது.
  கோயில் பீடாதிபதி  பி.எஸ்.மணி சுவாமிகள் தலைமையில்  இரவு 7 மணியளவில் மகா கணபதி ஹோமத்துடன், மகா யாகம் தொடங்கியது. தொடர்ந்து, மகா சுதர்சன யாகம், மகா சண்டி யாகம், மகா வராஹி யாகம் உள்ளிட்ட 21 வகையான யாகங்கள் நடைபெற்றன. பின்னர், நள்ளிரவு 12 மணியளவில் மிளகாய் வற்றல், வெண்கடுகு, பட்டு வஸ்திரம் உள்ளிட்ட பூஜை பொருள்களைக் கொண்டு உலக நன்மை மற்றும் மழை வேண்டி நிகும்பலா யாகம் நடைபெற்றது. தொடர்ந்து, கலசப் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. 
 இதையடுத்து, மகா பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர், பக்தர்களுக்கு குங்கும பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
 இதில், ராணிப்பேட்டை சுற்றுவட்டாரம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/08/மகா-பிரத்யங்கிரா-தேவி-கோயிலில்-நிகும்பலா-யாகம்-3053628.html
3053625 சென்னை வேலூர் கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரதம் DIN DIN Saturday, December 8, 2018 01:24 AM +0530 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 கிராம நிர்வாக அலுவலர்களின் கல்வித் தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். 
ஒரே உத்தரவில் மாவட்ட மாறுதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் டிசம்பர் 10-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளதாக சங்கத்தினர் தெரிவித்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/08/கிராம-நிர்வாக-அலுவலர்கள்-உண்ணாவிரதம்-3053625.html
3053631 சென்னை வேலூர் செம்மரக் கடத்தல்காரரிடம் சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை DIN DIN Saturday, December 8, 2018 01:22 AM +0530 செம்மரக் கடத்தல்காரர் அமித்கானிடம் சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
செம்மரக் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த அமீத்கானை சிபிசிஐடி போலீஸார் பெங்களூரு விமான நிலையத்தில் நவ.29-ஆம் தேதி கைது செய்தனர். 
அவரை வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, வேலூர் மத்திய சிறைக்கு அனுப்பினர். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கோரி, வேலூர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். 
இதையடுத்து, 4 நாள் காவலில் விசாரணை நடத்த நீதிபதி அனுமதி வழங்கினார். சிபிசிஐடி போலீஸார் அவரை அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  
கடத்திச் செல்லப்பட்ட 162 செம்மரக் கட்டைகள் யாருக்கு விற்பனை செய்யப்பட்டது. இதில், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் யார் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/08/செம்மரக்-கடத்தல்காரரிடம்-சிபிசிஐடி-போலீஸார்-தீவிர-விசாரணை-3053631.html
3053633 சென்னை வேலூர் மாவட்டத்தில் 48 ஆயிரம் வாக்காளர்கள் பெயரை பட்டியலில் இருந்து நீக்க பரிசீலனை: சிறப்பு தேர்தல் பார்வையாளர் தகவல் DIN DIN Saturday, December 8, 2018 01:22 AM +0530 வேலூர்  மாவட்டத்தில் வெளியூர்களுக்கு குடிபெயர்ந்தவர்கள், இறந்தவர்கள் என மொத்தம் 48 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்குவதற்கான பரிசீலனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக வேலூர், திருவண்ணாமலை மாவட்ட சிறப்பு தேர்தல்  பார்வையாளர் சந்தோஷ் கே மிஸ்ரா தெரிவித்தார்.
வேலூர், திருவண்ணாமலை மாவட்ட சிறப்பு தேர்தல் பார்வையாளர் சந்தோஷ் கே மிஸ்ரா வாலாஜாபேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் எஸ்.ராமன் உடன் இருந்தார்.
ஆய்வுக்கு பின் சந்தோஷ் கே மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறியது:
வேலூர் மாவட்டம் முழுவதும் வாக்காளர்கள் சரிபார்ப்பு பட்டியல் வைத்துக் கொண்டு, தேர்தல் அலுவலர்கள் நேரடியாக வீடு வீடாகச் சென்று சரிபார்த்து, சம்பந்தப்பட்ட வீடுகளில் நோட்டீஸ் வழங்கி விசாரணை நடத்தப்படும். தொடர்ந்து தீவிர விசாரணைக்குப் பின் படிவம் 7- ஐ பூர்த்தி செய்து மாவட்ட வருவாய் அலுவலர், வட்டாட்சியர் ஆகியோர் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்குவற்கான நடவடிக்கையை மேற்கொள்வர். 
அதேபோல், வேலூர் மாவட்டத்தில் இடம் விட்டு இடம் குடிபெயர்ந்தவர்கள், இறந்தவர்கள் என மொத்தம் 48 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்குவதற்கான திட்டம்  பரிசீலனையில் உள்ளது. இதில், வாலாஜாபேட்டை வட்டத்தில் மட்டும்  ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் உள்ளது என்றார்.  
ஆய்வைத் தொடர்ந்து வாலாஜாபேட்டை வட்டத்துக்குள்பட்ட கடப்பேரி ஊராட்சி பொதுமக்களிடம் வாக்காளர் பட்டியல் குறித்த குறைகளைக் கேட்டறிந்தார். 
ராணிப்பேட்டை வருவாய்க் கோட்டாட்சியர் (பொறுப்பு ) வேணுசேகரன், வட்டாட்சியர் பூமா மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி  ஆணையர்கள், வருவாய்த் துறையினர் உடன் இருந்தனர். 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/08/மாவட்டத்தில்-48-ஆயிரம்-வாக்காளர்கள்-பெயரை-பட்டியலில்-இருந்து-நீக்க-பரிசீலனை-சிறப்பு-தேர்தல்-பார்வைய-3053633.html
3053635 சென்னை வேலூர் திருமலையில் 4 போலி அபிஷேக டிக்கெட்டுகள் பறிமுதல் DIN DIN Saturday, December 8, 2018 01:22 AM +0530 திருமலையில் வெள்ளிக்கிழமை காலை 4 போலி அபிஷேக சேவை டிக்கெட்டுகளை விஜிலென்ஸ் போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமலையில் வெள்ளிக்கிழமைகளில் அபிஷேக சேவை நடைபெறுவது வழக்கம். இதற்கான டிக்கெட்டுகளை தேவஸ்தானம் இணையதளத்தில் வெளியிட்டு  வருகிறது. இந்த டிக்கெட்டுகளைப் பெற்ற பக்தர்கள் அபிஷேக சேவையில் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை சென்னையைச் சேர்ந்த 4 பக்தர்கள் அபிஷேக டிக்கெட்டுகளுடன் தரிசன வரிசையில் நுழைந்தனர். 
அவர்களின் டிக்கெட்டை ஸ்கேன் செய்த ஊழியர்களுக்கு அவை போலி டிக்கெட் என்று தெரிய வந்தது.
இது தொடர்பாக தேவஸ்தான ஊழியர்கள், ஊழல் கண்காணிப்பு போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் விரைந்து வந்து பக்தர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, பிரசாத் என்ற இடைத்தரகர் இந்த டிக்கெட்டுகளை ரூ.4 ஆயிரத்துக்கு விற்றது தெரிய வந்தது. 
அந்த டிக்கெட்டுகளை பறிமுதல் செய்த ஊழல் கண்காணிப்பு போலீஸார் இந்த வழக்கை போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்கள் இச்சம்பவம் தொடர்பாக  வழக்குப் பதிவு செய்து இடைத்தரகர் பிரசாத்தை தேடி வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/08/திருமலையில்-4-போலி-அபிஷேக-டிக்கெட்டுகள்-பறிமுதல்-3053635.html
3053630 சென்னை வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரைவை தொடக்கம் DIN DIN Saturday, December 8, 2018 01:21 AM +0530 வாணியம்பாடியை அடுத்த கேத்தாண்டப்பட்டியில் இயங்கி வரும் திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2018-19-ஆம் ஆண்டுக்கான கரும்பு அரைவை தொடக்கத்துக்கான பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், தனி அலுவலர் ராஜேந்திரன், நிர்வாகக் குழுத் தலைவர் ராஜேந்திரன், நாட்டறம்பள்ளி வட்டாட்சியர் குமார், துணைத் தலைவர் செல்வம்,  நிர்வாகக் குழு உறுப்பினர் சதீஷ்குமார், விவசாய சங்கப் பிரதிநிதிகள் தனபால், முல்லை, முத்துகிருஷ்ணன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி குத்துவிளக்கு ஏற்றி பூஜை நடத்தி அரைவையைத் தொடங்கி வைத்தார். நிர்வாகக் குழு உறுப்பினர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், ஆலைத் தொழிலாளர்கள், அலுவலகப் பணியாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
80 ஆயிரம் டன் அரைவை இலக்கு: 2018-19-ஆம் ஆண்டின் அரைவை பருவத்தில் மொத்தம் 80 ஆயிரம் டன் கரும்பு அரைவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கரும்பு அபிவிருத்தி அலுவலர் விஜயகுமார், கரும்பு அலுவலர்கள் வெற்றிவேந்தன், கணபதி, சந்திரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/08/கூட்டுறவு-சர்க்கரை-ஆலையில்-கரும்பு-அரைவை-தொடக்கம்-3053630.html
3053649 சென்னை வேலூர் சோளிங்கர், ஆற்காட்டில் 3,118 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் DIN DIN Saturday, December 8, 2018 01:19 AM +0530 சோளிங்கர், ஆற்காடு ஆகிய இடங்களில்  பள்ளி மாணவ, மாணவியர்  3,118 பேருக்கு வெள்ளிக்கிழமை விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
 சோளிங்கர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2,122 மாணவ, மாணவியருக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை அரக்கோணம் மக்களவை உறுப்பினர் கோ. அரி, சட்டப் பேரவை உறுப்பினர் சு.ரவி ஆகியோர் வெள்ளிக்கிழமை வழங்கினர்.
விழாவுக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் கற்பகம் தலைமை வகித்தார். பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் ராஜா வரவேற்றார். சோளிங்கர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, குட்லக் மேல்நிலைப் பள்ளி, ரெண்டாடி, கொடைக்கல், மின்னல் அரசினர் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த 2,122 மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
விழாவில் அதிமுக செயலர்கள் ராமு (சோளிங்கர் பேரூராட்சி), கார்த்திகேயன் (சோளிங்கர் கிழக்கு ஒன்றியம்), சின்னதுரை (சோளிங்கர் மேற்கு ஒன்றியம்) ராஜா (காவேரிபாக்கம்) ஏ.ஜி.விஜயன் (நெமிலி கிழக்கு ஒன்றியம்), பொதுக்குழு உறுப்பினர் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆற்காட்டில்...
ஆற்காடு, டிச. 7: ஆற்காடு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தலைமையாசிரியை ஹேமலதா தலைமை வதித்தார். முன்னாள் எம்எல்ஏ வி.கே.ஆர் சீனிவாசன், கூட்டுறவு வங்கித் தலைவர் எம்.சங்கர், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் தாஜ்புரா எம்.குட்டி  ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எம்.ஜி.ரவி வரவேற்றார்.
 விழாவில், அரக்கோணம் தொகுதி மக்களவை உறுப்பினர் கோ.அரி, எம்எல்ஏ ரவி ஆகியோர் கலந்துகொண்டு, 996 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினர்.
 இதில், ராணிப்பேட்டை மாவட்டக் கல்வி அலுவலர்  சம்பத், ரெண்டாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர்  பெல். கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/08/சோளிங்கர்-ஆற்காட்டில்-3118-மாணவர்களுக்கு-விலையில்லா-மிதிவண்டிகள்-3053649.html
3053646 சென்னை வேலூர் உதயேந்திரம் பேரூராட்சியில் இணை இயக்குநர் ஆய்வு DIN DIN Saturday, December 8, 2018 01:18 AM +0530 வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் பேரூராட்சிகளின் இணை இயக்குநர் மலையமான்திருமுடிக் காரி வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
வாணியம்பாடி அருகே உதயேந்திரம் பேரூராட்சியில் பணியாளர்கள் நியமனத்திலும், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்திலும் முறைகேடு நடைபெற்றதாக  தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை பணியாளர்கள் சங்கத்தின் கெளரவத் தலைவர் ராஜவேல் அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்தார். இந்நிலையில், வியாழக்கிழமை பேரூராட்சிகளின் இணை இயக்குநர் மலையமான் திருமலைமுடிக்காரி,  பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் திருஞானம் உள்ளிட்ட அதிகாரிகள் உதயேந்திரம் பேரூராட்சி அலுவலகத்தில் ஆய்வு செய்தனர். அப்போது, செயல் அலுவலர் விஜயா, பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், திடக்கழிவு மேலாண்மை பணியாளர்களிடம் விசாரணை மேற்கொண்டார். 


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/08/உதயேந்திரம்-பேரூராட்சியில்-இணை-இயக்குநர்-ஆய்வு-3053646.html
3053644 சென்னை வேலூர் புதிய நியாயவிலைக் கடை திறப்பு DIN DIN Saturday, December 8, 2018 01:17 AM +0530 திருப்பத்தூரை அடுத்த சின்னகந்திலியில் புதிய நியாய விலைக் கடையை தமிழக வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
திருப்பத்தூரை அடுத்த கந்திலி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சின்னகந்திலியில் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியினர் நீண்டகாலமாக 4 கி.மீ. தொலைவிலுள்ள தாதங்குட்டையில் அமைந்துள்ள நியாய விலைக் கடையில் பொருள்களை வாங்கி வந்தனர். 
இதனால் சின்னகந்திலியில் நியாய விலைக் கடை அமைத்துத் தரக் கோரி அதிகாரிகளிடம் மனு அளித்து இருந்தனர். இதையறிந்த  அமைச்சர் கே.சி.வீரமணி, அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று, அப்பகுதியில் பகுதி நேர நியாய விலைக் கடையை அமைக்க ஏற்பாடு செய்தார். இந்நிலையில், புதிய நியாய கடையை வெள்ளிக்கிழமை அவர் திறந்து வைத்தார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/08/புதிய-நியாயவிலைக்-கடை-திறப்பு-3053644.html
3053642 சென்னை வேலூர் நீதிமன்ற வளாகத்தில் தானியங்கி தொடுதிரை: மாவட்ட நீதிபதி திறப்பு DIN DIN Saturday, December 8, 2018 01:17 AM +0530 வாணியம்பாடி நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை பொதுமக்கள் நேரடியாக தெரிந்துகொள்வதற்கான தானியங்கி தொடுதிரை வசதியை மாவட்ட நீதிபதி ஆனந்தி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
வாணியம்பாடி, அம்பலூர், திம்மாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பல்வேறு வழக்குகள் தொடர்பாக வாணியம்பாடியில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.
 இந்நிலையில், பொதுமக்கள் தங்கள் வழக்குகளின் நிலை மற்றும் விவரங்களை நேரடியாக அறிந்துகொள்ள வசதியாக தானியங்கி தொடுதிரை மையங்கள் சார்பு நீதிமன்றத்திலும், மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்திலும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை வெள்ளிக்கிழமை மாவட்ட நீதிபதி ஆனந்தி திறந்து வைத்தார்.
 நிகழ்ச்சியில், வாணியம்பாடி சார்பு நீதிபதி ராமசந்திரன், மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜெனீபர், குற்றவியல் நீதிபதி காளிமுத்துவேல், வாணியம்பாடி டிஎஸ்பி முரளி, வட்டாட்சியர் கிருஷ்ணவேணி மற்றும்  வழக்குரைஞர்கள், காவல்துறை ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர். இந்த தொடுதிரை கணினி வசதியைப் பயன்படுத்தி, பொதுமக்கள் தங்களின் அனைத்து வழக்குகள் குறித்தும் உடனடியாக தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/08/நீதிமன்ற-வளாகத்தில்-தானியங்கி-தொடுதிரை-மாவட்ட-நீதிபதி-திறப்பு-3053642.html
3053641 சென்னை வேலூர் ரூ.104 கோடியில் வேலூர்-குடியாத்தம் புறவழிச் சாலைக்கு நில எடுப்புப் பணி தொடக்கம்: ஆட்சியர் தகவல் DIN DIN Saturday, December 8, 2018 01:17 AM +0530 வேலூர்-குடியாத்தம் புறவழிச் சாலை ரூ. 104 கோடியில் அமைப்பதற்கான நில எடுப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேலூர் மாவட்டத்தில் வேலூர் தேசிய நெடுஞ்சாலை 2016-17-ஆம் திட்டப் பணிகளில் மங்களூர் - விழுப்புரம் சாலையை அகலப்படுத்தவும், வேலூர் மற்றும் குடியாத்தம் நகர்ப்புறங்களில் மக்கள் நடமாட்டம் மற்றும் குடியிருப்புகள் அதிகமுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், விரிவான திட்ட அறிக்கை மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகத்தால் பரிசீலிக்கப்பட்டு, ரூ.104 கோடி மதிப்பீட்டில் தற்போது வேலூர் மற்றும் குடியாத்தம் புறவழிச் சாலைகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அதற்கான நில எடுப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
குடியாத்தம் புறவழிச் சாலை தேசிய நெடுஞ்சாலை அலகின் மூலம் சுமார் 7 கி.மீ. நீளத்துக்கு செயல்படுத்தப்பட உள்ளது. இப்புறவழிச் சாலை மங்களூர் - விழுப்புரம் சாலையில் (தே.நெ.234) குடியாத்தம் நகருக்கு முன்பாக இடதுபுறம் பிரிந்து நெல்லூர்பேட்டை, சீவூர், பாக்கம், பிச்சனூர், கொண்டசமுத்திரம் மற்றும் சேத்துவாண்டை கிராமங்கள் வழியாகச் சென்று, காட்பாடி சாலையில் இடதுபுறம் இணைகிறது. 
அதேபோல வேலூர் புறவழிச் சாலை தேசிய நெடுஞ்சாலை அலகின் மூலம் சுமார் 20.700 கி.மீ. நீளத்துக்கு அமைக்கப்பட உள்ளது. இப்புறவழிச் சாலை காட்பாடி சாலையில் லத்தேரிக்கு முன்பாக வலதுபுறம் பிரிந்து லத்தேரி, அன்னங்குடி, திருமணி, சோழமூர், கொத்தமங்கலம், பொய்கை, புத்தூர், தெள்ளூர், சேக்கனூர், அரியூர், பென்னாத்தூர், சாத்துமதுரை, நெல்வாய் கிராமங்கள் வழியாக, மங்களூர் - விழுப்புரம் சாலையில் நெல்வாய் பகுதியில் இணைகிறது. 
 வேலூர் புறவழிச் சாலையில் பாலாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம், சென்னை-சேலம் இருப்புப் பாதை (லத்தேரி அருகில்) மீது ஒரு ரயில்வே மேம்பாலம், காட்பாடி - விழுப்புரம் இருப்புப் பாதை (சாத்துமதுரை அருகில்) மீது ஒரு ரயில்வே மேம்பாலம், ராணிப்பேட்டை - கிருஷ்ணகிரி (தே.நெ.48) ஆறுவழிச் சாலையின் (பொய்கை அருகில்) மீது ஒரு மேம்பாலம் மற்றும் நான்கு சிறிய வாகன மேம்பாலங்களும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
 இப்புறவழிச் சாலை பொதுமக்களுக்கு நில எடுப்பின்போது, அதிக பாதிப்பு வராமல் மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
 இப்புறவழிச் சாலை அமைப்பதற்கான நில எடுப்புப் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இவ்விரு புறவழிச் சாலைகள் மூலம் வேலூர், காட்பாடி, குடியாத்தம் ஆகிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறையும், பயண நேரமும் குறையும். எரிபொருள் விரயம், சாலை விபத்துகள் குறைய வாய்ப்புள்ளது. வேலூர் மாவட்டத்தில் பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மேற்கொள்ளப்படும் சாலைப் போக்குவரத்து மேம்பாட்டின் முக்கிய அங்கமாக வேலூர் மற்றும் குடியாத்தம் புறவழிச் சாலைகள் அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/08/ரூ104-கோடியில்-வேலூர்-குடியாத்தம்-புறவழிச்-சாலைக்கு-நில-எடுப்புப்-பணி-தொடக்கம்-ஆட்சியர்-தகவல்-3053641.html
3053639 சென்னை வேலூர் கடை ஷட்டரை உடைத்து செல்லிடப்பேசிகள் திருட்டு DIN DIN Saturday, December 8, 2018 01:16 AM +0530 ஜோலார்பேட்டை அருகே செல்லிடப்பேசி கடையின் ஷட்டரை உடைத்து ரூ. 1 லட்சம் மதிப்பிலான செல்லிடப்பேசிகளை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை அருகே பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (35). இவர், பாச்சல் பகுதியில் உள்ள ஆசிரியர் நகரில் செல்லிடப்பேசி கடை வைத்துள்ளார். வழக்கம்போல், வியாழக்கிழமை இரவு கடையை பூட்டிச் சென்றார். வெள்ளிக்கிழமை காலை கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டிருந்ததை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். 
இதுகுறித்து, விஜயகுமாருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக அங்கு வந்த விஜயகுமார் கடைக்குச் சென்று பார்த்தபோது, செல்லிடப்பேசிகள் திருடுபோனது தெரியவந்தது. 
இதையடுத்து, அவர், ஜோலார்பேட்டை போலீஸாருக்கு தகவல் அளித்தார். நிகழ்விடத்துக்கு வந்த போலீஸார், கடையின் வெளிப்பக்கத்தில் கார் சக்கரத்தின் தடயம் இருந்ததையும், கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த படங்களையும் ஆய்வு செய்தனர். அப்போது, முகமூடி அணிந்த மர்ம நபர் ஷட்டரை உடைத்து, உள்ளே சென்று, செல்லிடப்பேசிகளை திருடியது பதிவாகியிருந்தது.
இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/08/கடை-ஷட்டரை-உடைத்து-செல்லிடப்பேசிகள்-திருட்டு-3053639.html
3053638 சென்னை வேலூர் அம்மன் கோயிலில்  நகை,பணம் திருட்டு DIN DIN Saturday, December 8, 2018 01:16 AM +0530 ஜோலார்பேட்டை அருகே காளியம்மன் கோயிலில் நகை, உண்டியல் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஜோலார்பேட்டையை அடுத்த புள்ளானேரி பகுதியில் காளியம்மன் கோயில் உள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயில் புதிதாக கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 
இந்நிலையில், கோயிலில் பூசாரி செல்வராஜ், வியாழக்கிழமை இரவு அம்மனுக்கு பூஜை செய்துவிட்டு, கோயில் நடையை பூட்டிவிட்டுச் சென்றார். வெள்ளிக்கிழமை காலை செல்வராஜ் கோயிலுக்கு வந்தபோது, கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, 2 அம்மன் சிலைகளில் இருந்த 3 சவரன் நகைகளும், உண்டியல் பணமும் திருடு போயிருந்தன. 
இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே கோயிலில் ஏற்கெனவே 3 முறை திருட்டு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/08/அம்மன்-கோயிலில்--நகைபணம்-திருட்டு-3053638.html
3053637 சென்னை வேலூர் வாகனம் மோதி முதியவர் சாவு DIN DIN Saturday, December 8, 2018 01:16 AM +0530 ராணிப்பேட்டை அருகே சைக்கிளில் சென்ற முதியவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 ராணிப்பேட்டையை அடுத்த குமணந்தாங்கல்  கிராமத்தைச் சேர்ந்தவர் ஏசுதாஸ் (60). இவர் அருகே உள்ள தனியார் இரும்பு தொழிற்சாலையில் இரவு காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், இரவு பணி முடிந்து சைக்கிளில் வெள்ளிக்கிழமை வீடு திரும்பிக் கொண்டிருந்தார். 
குமணன்தாங்கல் பகுதியில் வந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சிப்காட் போலீஸார், ஏசுதாஸின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காகாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.  மேலும், இதுதொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/08/வாகனம்-மோதி-முதியவர்-சாவு-3053637.html
3053636 சென்னை வேலூர் அதிகாரியைக் கண்டித்து வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை DIN DIN Saturday, December 8, 2018 01:16 AM +0530 நூறு நாள் வேலை திட்ட பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாக, துணைப் பொறியாளரைக் கண்டித்து பெண்கள் திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.
திருப்பத்தூரை அடுத்த ஜமுனாபுதூர் ஊராட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதி மக்கள் 100 நாள் வேலை திட்டம் சார்பில், புதுபூங்குளம் என்ற பகுதியில் உள்ள ஏரி மற்றும் குட்டைகளை தூர்வாரும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் துணைப் பொறியாளர் ஆய்வு செய்வதாகக் கூறி அங்கு சென்றுள்ளார். அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பெண்களை கணக்கெடுத்துள்ளார். அப்போது 8 பேரை வேறு இடத்தில் பணி செய்ய ஊராட்சி உதவியாளர் அனுப்பி இருந்தாராம். 
இதைப்பார்த்த துணைப் பொறியாளர் அந்த 8 பெண்களுக்கும் வருகைப் பதிவேட்டில் விடுப்பு போட்டதாகத் தெரிகிறது.
இதையறிந்த மற்ற பெண்கள், துணைப் பொறியாளரிடம், ஊராட்சி செயலர் டெங்கு ஒழிப்புப் பணிக்காக 8 பேரையும் அனுப்பி உள்ளதால், அங்கு பணி செய்து வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளனர். 
அப்போது பொறியாளர் பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும் அடுத்த நாளுக்கான பணி வழங்கப்பட மாட்டாது எனக் கூறி, அவர்களுக்கான பணி நியமன அட்டைகளையும் அலுவலகத்துக்கு கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் 100 நாள் வேலைத் திட்ட பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த ஊராட்சிகளின் உதவி இயக்குநர் பிரேம்குமார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில், அனைவரும் கலைந்து சென்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/08/அதிகாரியைக்-கண்டித்து-வட்டார-வளர்ச்சி-அலுவலகம்-முற்றுகை-3053636.html
3053624 சென்னை வேலூர் மாவட்டத்தில் கொடி நாள் வசூல் ஊர்வலம்: வேலூரில் ஆட்சியர்  தொடங்கி வைப்பு DIN DIN Saturday, December 8, 2018 01:12 AM +0530 வேலூர் மாநகரில் கொடி நாள் வசூல் ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
வேலூர் மக்கான் சந்திப்பில் சிப்பாய் நினைவு தூண் அருகில் கொடி நாள் வசூலை தொடங்கி வைத்த ஆட்சியர், ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அத்துடன், முன்னாள் படை வீரர்களின் குடும்ப நலனுக்காக பொதுமக்கள் அதிக அளவில் நிதி வழங்கவும் அவர் கேட்டுக் கொண்டார். 
மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பார்த்தீபன், மாவட்ட முன்னாள் படை வீரர் நல துணை இயக்குநர் மேஜர் போனி வின்சென்ட், முன்னாள் படைவீரர் நலவாரிய உப தலைவர் கேப்டன் துரைராஜ், வேலூர் வட்டாட்சியர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாலையில் காவலர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் படைவீரர்கள், அவர்தம் குடும்பத்தினர், போர் வீரர்கள் குடும்பத்தைச் சேர்ந்த விதவையர், போரில் ஊனமுற்ற வீரர்கள் ஆகியோருடன் தேநீர் விருந்து நடைபெற்றது.
வாணியம்பாடியில்...
வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகம் சார்பில் முன்னாள் ராணுவத்தினருக்கான கொடிநாள் வசூல் ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த ஊர்வலத்துக்கு வட்டாட்சியர் கிருஷ்ணவேணி தலைமை வகித்தார். 
வேலூர் மாவட்ட நீதிபதி ஆனந்தி கொடிநாள் வசூலை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, கொடி நாள் வசூல் ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
 நிகழ்ச்சியில், வாணியம்பாடி சார்பு நீதிபதி ராமசந்திரன், மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜெனீபர், குற்றவியல் நீதிபதி காளிமுத்துவேல், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ரேவதி, வருவாய்த் துறை ஆய்வாளர் ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பள்ளி மாணவர்கள் திரளானோர் பங்கேற்ற ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது.
இந்த ஊர்வலத்தில் பொதுமக்களிடம் கொடி நாள் நிதி வசூலிக்கப்பட்டது.
பேர்ணாம்பட்டில்...
பேர்ணாம்பட்டில் கொடி நாள் வசூல் ஊர்வலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கியது. ஊர்வலத்தை வட்டாட்சியர் கோட்டீஸ்வரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 
ஊர்வலம் நகரின் முக்கிய  சாலைகள் வழியாகச் சென்றது. தலைமையிடத்து துணை வட்டாட்சியர் பழனி, வருவாய் ஆய்வாளர் இளையராஜா, பல்வேறு பள்ளிகளின் மாணவர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/08/மாவட்டத்தில்-கொடி-நாள்-வசூல்-ஊர்வலம்-வேலூரில்-ஆட்சியர்-தொடங்கி-வைப்பு-3053624.html
3053180 சென்னை வேலூர் உறவினரைக் கொல்ல முயன்றவருக்கு 5 ஆண்டு சிறை DIN DIN Friday, December 7, 2018 07:13 AM +0530 குடும்பத் தகராறில் உறவினரைக் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து திருப்பத்தூர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. 
திருப்பத்தூரை அடுத்த ஜோலார்பேட்டை அருகே உள்ள சின்னகம்மியம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி (42). இவரது கணவர் இளங்கோ (45). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி தங்கையின் கணவர் முனுசாமிக்கு (40) இடையே குடும்பப் பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டோபர் 5-ஆம் தேதி ஏற்பட்ட தகராறில் முனுசாமி வீட்டிலிருந்து கத்தியை எடுத்து இளங்கோவை குத்தினார். இதில் பலத்த காயமடைந்த அவர் வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து முனுசாமியை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருப்பத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-இல் நடத்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வேலரசு, முனுசாமிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5,500 அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்தார். இதையடுத்து, போலீஸார் முனுசாமியை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/07/உறவினரைக்-கொல்ல-முயன்றவருக்கு-5-ஆண்டு-சிறை-3053180.html
3053179 சென்னை வேலூர் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் DIN DIN Friday, December 7, 2018 07:12 AM +0530 அயோத்தியில் ராமர் கோயில் அமைக்க மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டுவர வலியுறுத்தி, இந்து முன்னணியினர்  ஆற்காடு பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் கிழக்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, இந்து முன்னணியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.பி.ஜெகன் தலைமை வகித்தார். கோட்ட அமைப்பாளர் ரகு, கிழக்கு மாவட்டச் செயலர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.மோகன் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி வழக்குரைஞர் பிரிவு மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்  ரத்தினகுமார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கண்டன உரை நிகழ்த்தினார்.இதில் இந்து முன்னணியை சேர்ந்த 100 -க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

திருப்பத்தூரில்...
திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, இந்து முன்னணி அமைப்பின் ஜோலார்பேட்டை ஒன்றியச் செயலர் எஸ்.சோமேஸ்வரன் தலைமை வகித்தார். வேலூர் மேற்கு மாவட்டச் செயலர் விட்டல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். வேலூர் கோட்டச் செயலர் ரவி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். 
ஆர்ப்பாட்டத்தில், விரைவில் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/07/இந்து-முன்னணியினர்-ஆர்ப்பாட்டம்-3053179.html
3053178 சென்னை வேலூர் குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது DIN DIN Friday, December 7, 2018 07:12 AM +0530 பேர்ணாம்பட்டு பகுதியில் தொடர்ந்து கள்ளச் சாராயம் விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டஇளைஞர் குண்டர் சட்டத்தின்கீழ் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பேர்ணாம்பட்டு கோட்டைச்சேரியைச் சேர்ந்தவர் தர்மா (24). இவர் மீது கள்ளச் சாராயம் விற்றதாக  பேர்ணாம்பட்டு, மேல்பட்டி காவல் நிலையங்களில் 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், இவர் மீண்டும் கள்ளச் சாராயம் விற்றதாக பேர்ணாம்பட்டு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவரை குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து ஆட்சியர் எஸ்.ஏ. ராமன், தர்மாவை குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க வியாழக்கிழமை உத்தரவிட்டார். இதையடுத்து தர்மா வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/07/குண்டர்-சட்டத்தில்-இளைஞர்-கைது-3053178.html
3053177 சென்னை வேலூர் செம்மரக் கடத்தல்காரரை வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் DIN DIN Friday, December 7, 2018 07:12 AM +0530 பெங்களூருவில் கைது செய்யப்பட்ட செம்மரக் கடத்தல்காரரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி போலீஸார் வேலூர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜர்படுத்தினர்.
 வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே மாதனூரை அடுத்த ஜோதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த சின்னபையனின் கோழிப் பண்ணையில் 280 செம்மரக் கட்டைகள் பதுக்கி  வைக்கப்பட்டிருந்தன. இதை பெருமாள் என்பவர் பதுக்கியுள்ளார். இந்நிலையில், காவல் துறை சோதனை எனக்கூறி சிலர் கோழிப்பண்ணைக்குள் கடந்த 2015-ஆம் ஆண்டு நுழைந்து, சின்னபையனை மிரட்டி, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 280 செம்மரக் கட்டைகளை கடத்திச் சென்றனர். 
இது தொடர்பாக ஆம்பூர் கிராமிய போலீஸார் நடத்திய விசாரணையில், வேலூர் கலால் டிஎஸ்பியாக அப்போது இருந்த  தங்கவேலு, சின்னபையனின் கோழிப்பண்ணைக்குள் நுழைந்து, செம்மரக் கட்டைகளை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதற்கு வேலூரைச் சேர்ந்த நாகேந்திரன் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, நாகேந்திரனின் வீட்டில் போலீஸார் நடத்திய சோதனையில், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 118 செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 
 கோழிப்பண்ணையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட 280 செம்மரக் கட்டைகளில் 162 கட்டைகள் பெங்களூருவைச் சேர்ந்த செம்மரக் கடத்தல்காரர் அமித்கான் (52) என்பவருக்கு ரூ. 30 லட்சத்துக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. 
இந்நிலையில், அமித்கான் தலைமறைவானார். கடந்த 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அமித்கான், கடந்த நவம்பர் 29-ஆம் தேதி அதிகாலை பெங்களூர் விமான நிலையத்தில் வேலூர் சிபிசிஐடி துணைக் காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகர் தலைமையிலான போலீஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். வேலூர் மத்திய சிறையில் இருந்த அமித்கானை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, வேலூர் ஜே.எம்.3-ஆவது நீதிபதி வெற்றிமணி முன்னிலையில், சிபிசிஐடி போலீஸார் அவரை ஆஜர்படுத்தினர். அப்போது, டிசம்பர் 10-ஆம் தேதி மாலை 6 மணி வரை 4 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/07/செம்மரக்-கடத்தல்காரரை-வேலூர்-நீதிமன்றத்தில்-ஆஜர்படுத்திய-போலீஸார்-3053177.html
3053176 சென்னை வேலூர் செம்மரக் கடத்தல்:  தமிழகத் தொழிலாளர்கள் 13 பேர் கைது DIN DIN Friday, December 7, 2018 07:11 AM +0530 திருப்பதி அருகே செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த 13 தொழிலாளர்களை சிறப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸார் கூறியது:  திருப்பதி அருகே உள்ள சேஷாசல வனத்தில் செம்மரக் கடத்தல் தடுப்பு சிறப்புப் பிரிவு போலீஸார் வியாழக்கிழமை காலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பீமவரம் வனச் சரகத்துக்குட்பட்ட எல்லையில் செம்மரம் வெட்ட வந்த இருவரை அவர்கள் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் அளித்த தகவலின்பேரில் செம்மரம் வெட்டுவதற்காக காட்டுக்குள் நுழையத் தயாராக இருந்த மற்ற 11 பேரை போலீஸார் கைது செய்தனர். 
விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் விழுப்புரத்தைச் சேர்ந்த சின்னய்யன்(40), அழகேசன்(28), ஏழுமலை(37), அண்ணாமலை(36), குமார்(32), அண்ணாமலை(27), மகேந்திரன்(26), அழகேஸ்(36), கிருஷ்ணமூர்த்தி(28), ராஜாமணி(32), சின்னசாமி(25), சேலத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ்(26), வேலூரைச் சேர்ந்த சரவணன்(27) என்று தெரிய வந்தது என போலீஸார் 
தெரிவித்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/07/செம்மரக்-கடத்தல்--தமிழகத்-தொழிலாளர்கள்-13-பேர்-கைது-3053176.html
3053175 சென்னை வேலூர் பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை விரைந்து வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் DIN DIN Friday, December 7, 2018 07:11 AM +0530 பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை விரைந்து வழங்கக் கோரி சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா-எஸ்டிபிஐ சார்பில் ஆம்பூர் சார்-நிலை கருவூல அலுவலகம் அருகே வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எஸ்டிபிஐ வேலூர் மாவட்டத் தலைவர் பையாஸ்அஹமத் தலைமை வகித்தார். மாவட்டப் பொதுச் செயலர் சுஹேப்முஹமத் வரவேற்றார். கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா மாநில தலைவர் முஸ்தபா மற்றும் மாநிலத் துணைத் தலைவர் முஹம்மத்ஆசாத், மாவட்டப் பொதுச் செயலாளர் பஷீர்அஹமத், சையத்அலி பாத்திமா உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 
இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை ஆம்பூர் நகர போலீஸார் கைது செய்தனர். 
ஆம்பூர் டி.எஸ்.பி. சச்சிதானந்தம் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
திருப்பத்தூரில்...
திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம் எதிரே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் நசீர் அகமது தலைமை வகித்தார். 
நகரச் செயலர் பயாஸ் அகமத், இளைஞரணிச் செயலர் ஹாபிஸ் அப்துல், ரஹீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலச் செயலர் எஸ்.மைதீன் சேட்கான் மத்திய அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பி, உரையாற்றினார்.
மாவட்டச் செயலர் சையத் ஜாவித் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தையொட்டி, டி.எஸ்.பி. ஜேசுராஜ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/07/பாபர்-மசூதி-இடிப்பு-வழக்கின்-தீர்ப்பை-விரைந்து-வழங்கக்-கோரி-ஆர்ப்பாட்டம்-3053175.html
3053174 சென்னை வேலூர் மாவட்டத்தில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு DIN DIN Friday, December 7, 2018 07:10 AM +0530 வேலூர் மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் அம்பேத்கர் நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தலைமை வகித்து, அம்பேத்கர் உருவச் சிலைக்கு மாலை அணிவித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், சார்-ஆட்சியர் மெஹராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வேணுசேகரன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஆம்பூரில்...
ஆம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆம்பூர் நகரச் செயலர் எஸ். லோகேஷ் தலைமையில் மாவட்டத் தலைவர் என். பிச்சை பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். 
தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் சோமலாபுரம் கிராமத்தில் மாவட்ட அமைப்பாளர் ம. தமிழ்செல்வன் தலைமையில் மாநிலத் துணைச் செயலர் சி. ஓம்பிரகாசம், அம்பேத்கர் உருவச் சிலைக்கு மாலை அணிவித்தார்.
வேலூர் மாவட்ட எம்ஜிஆர் கழகம் சார்பில் மாநில செய்தித் தொடர்பாளர் சிவகுமார் மாலை அணிவித்தார். நகர அவைத் தலைவர் மாணிக்கவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அதன் நிர்வாகி எஸ்.ஆர். தேவதாஸ் தலைமையில் அம்பேத்கர் உருவச் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.  நிர்வாகிகள் ஹசன், பாரத்பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சோமலாபுரம் கிராமத்தில் அனைத்து கட்சிகள் சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.  மாதனூர் ஒன்றிய திமுக செயலர் சுரேஷ்குமார், அனைத்து கட்சிகளைச் சேர்ந்த சுதாகர், ஜார்ஜ், தமிழ்செல்வன், சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆம்பூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில், அதன் தலைவர் சரவணன் தலைமையில் வேலூர் மேற்கு மாவட்டத் தலைவர் பிரபு மாலை அணிவித்தார். வேலூர் மேற்கு மாவட்டப் பொருளாளர் மகேஷ், மாவட்டச் செயலர் குமரேசன், ஒன்றியத் தலைவர் மாணிக்கம், நகர நிர்வாகிகள் சௌந்தர், கவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
வேலூர் மத்திய மாவட்டம், பேர்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி சார்பில் அதன் தலைவர் சா. சங்கர் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
அம்பேத்கர் உருவச் சிலைக்கு, இந்திய தொழிற்சங்க தேசிய முன்னணி சார்பில் மாநில அமைப்புச் செயலர் பாபு மாலை அணிவித்தார். பாஜக மாநில பொதுக் குழு உறுப்பினர் குப்புசாமி, தொழிற்சங்கத்தின் பேர்ணாம்பட்டு ஒன்றியச் செயலர் இளையராஜா, சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டையில்...
வேலூர் கிழக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி செயலர் சீ.ம.ரமேஷ்கர்ணா தலைமை வகித்தார். வேலூர் கிழக்கு மாவட்டச் செயலர் சார்லஸ் அம்பேத்கரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவியருக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது.
இதில், வேலூர் கிழக்கு மாவட்டத் துணைச் செயலாளர் சோ.தமிழ்,தொகுதிச் செயலாளர் ராஜா, நகரச் செயலர் பா.செஞ்சுடர், மாவட்ட செய்தித் தொடர்பாளர் சசிகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில்...
திருவலத்தை அடுத்த சேர்க்காட்டில் அமைந்துள்ள வேலூர் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பல்கலைக் கழகத் துணைவேந்தர் க.முருகன் தலைமை வகித்து, அம்பேத்கரின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 
இதில், பல்கலைக் கழகப் பதிவாளர் (பொறுப்பு) வெ.பெருவழுதி, ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் தங்கராஜ், பல்கலைக் கழக  உடற்கல்வித் துறை இயக்குநர் (பொறுப்பு) சையத் சபி, பல்கலைக் கழக நூலகர் விநாயக மூர்த்தி, ஆங்கிலத் துறைப் பேராசிரியர் ரவிச்சந்தின் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
குடியாத்தத்தில்...
குடியாத்தம் ஒன்றிய அதிமுக சார்பில், ஒன்றியச் செயலர் வி.ராமு தலைமையில் மேல்ஆலத்தூரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. 
இதில், வேளாண்மைக் கூட்டுறவு சங்கத் தலைவர்கள் எஸ்.எல்.எஸ். வனராஜ், என்.கே.ராஜாமணி, துணைத் தலைவர் செ.கு.வெங்கடேசன், முன்னாள் ஒன்றியச் செயலர் பெ.மு. காசிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
புரட்சி பாரதம் கட்சியினர் குடியாத்தம் பலமநேர் சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். கட்சியின் மாவட்டச் செயலர் பி.மேகநாதன், கட்சியின் கொள்கை பரப்புச் செயலர் மு.ஆ. சத்யனார், மாவட்டப் பொருளாளர் கே. வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், கட்சியின் வேலூர் நாடாளுமன்றப் பொறுப்பாளர் சிவ. செல்லபாண்டியன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதில், மாவட்ட துணைச் செயலர் கு. விவேக், ஒன்றியச் செயலர் பெ. வெங்கடேசன், நிர்வாகிகள் ராஜேஷ், குருவிகணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாணியம்பாடியில்..
வாணியம்பாடி அம்பேத்கர் நற்பணி மன்றங்கள் ஒருங்கிணைப்பு அமைப்பு சார்பில் கோணாமேடு பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. 
சிலை அருகிலிருந்து காதர்பேட்டை, பேருந்து நிலையம், கோவிந்தபுரம் வழியாக புத்தூர் ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள அம்பேத்கார் சிலை வரை 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்ற மெளன ஊர்வலம் நடைபெற்றது. 
இதைத் தொடர்ந்து நடைபெற்ற ரத்ததான முகாமில் 40 பேர் ரத்த தானம் அளித்தனர். முகாமை விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில மருத்துவரணிச் செயலர் ஞானசேகரன் தொடங்கி வைத்தார்.
திமுக சார்பில் நகரப் பொறுப்பாளர் சாரதிகுமார் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. 
பாஜக சார்பில் செயற்குழு உறுப்பினர் க.சிவபிரகாசம் மாலை அணிவித்தார். ஆலங்காயத்தில் காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு சார்பில் நகரத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாவட்டத் தலைவர் வி.சக்தி மாலை அணிவித்தார். இதில் மாவட்ட பொதுச் செயலர் ஆனந்தன், நகர எஸ்.சி., பிரிவு தலைவர் தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அரக்கோணத்தில்...
அரக்கோணத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் எஸ்.ஆர்.கேட் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்டப் பொருளாளர் பொன்.பெருமாள் தலைமை வகித்தார். இதில், மாநில இளைஞரணி துணைச் செயலர் என்.தமிழ்மாறன் அம்பேத்கர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்தார். நகரச் செயலர் அப்பல்ராஜ், ஒன்றியச் செயலர் ச.சி.சந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காங்கிரஸ் எஸ்.சி.,எஸ்.டி. பிரிவு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அதன் நகரத் தலைவர் வி.பிரகாஷ் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் நாகேஷ் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். இதில், மாநில மாணவரணி துணைத் தலைவர் நரேஷ்குமார், மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலர் கோபண்ணாரவி, நகரப் பொருளாளர் இம்ரான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத்தின் சார்பில் ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அதன் தலைவர் நைனா மாசிலாமணி தலைமை வகித்தார். சங்கத்தின் பொதுச் செயலர் ரகுநாதன், அம்பேத்கர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்தார்.
அரக்கோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அரக்கோணம் பார் அசோசியேஷன் தலைவர் வீரராகவன் தலைமை வகித்து, அம்பேத்கர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்தார். 
இதில், அசோசியேஷன் செயலர் வெங்கடேசன், முன்னாள் நிர்வாகிகள் ஆர்.ரவி. என்.தமிழ்மாறன், அரக்கோணம் வழக்குரைஞர் சங்கச் செயலர் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/07/மாவட்டத்தில்-அம்பேத்கர்-நினைவு-தினம்-அனுசரிப்பு-3053174.html
3053173 சென்னை வேலூர் குறித்த காலத்தில் சாலைகள் சீரமைப்புப் பணி நிறைவடையும்: எம்எல்ஏ சு.ரவி DIN DIN Friday, December 7, 2018 07:09 AM +0530 அரக்கோணம் நகராட்சிப் பகுதியில் தொடங்கப்பட்டுள்ள சாலைகள் சீரமைப்புப் பணி குறித்த காலத்தில் நிறைவடையும் என்று அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி தெரிவித்தார்.
அரக்கோணம் நகரில் புதைசாக்கடை அமைக்கும் பணிகள் தற்போது 95 சதவீதம் முடிவடைந்துள்ளன. தோண்டப்பட்ட சாலைகளைச் சீரமைக்கும் பணிகள் தொடக்க விழா வியாழக்கிழமை பழனிபேட்டை வி.பி.கோயில் தெருவில் நடைபெற்றது. 
விழாவுக்கு, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சண்முகம் தலைமை வகித்தார். அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி பணிகளைத் தொடங்கி வைத்து, செய்தியாளர்களிடம் கூறியது: முதல்கட்டமாக ரூ. 5 கோடி மதிப்பீட்டில்  36 சிமென்ட் சாலைகள் அமைக்கும் பணிகளும், 8 தார்ச் சாலைகள் அமைக்கும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது தொடங்கப்பட்டுள்ள சாலைகள் சீரமைப்புப் பணிகள் குறித்த காலத்தில் நிறைவடையும் என்றார். 
விழாவில், அதிமுக நகரச் செயலர் கே.பி.பாண்டுரங்கன், அவைத் தலைவர் காமராஜ், நகர்மன்ற முன்னாள் உறுப்பினர்கள் செல்வம், சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/07/குறித்த-காலத்தில்-சாலைகள்-சீரமைப்புப்-பணி-நிறைவடையும்-எம்எல்ஏ-சுரவி-3053173.html
3053172 சென்னை வேலூர் யானைக் கூட்டத்தால் சேதமடைந்த 300-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் DIN DIN Friday, December 7, 2018 07:09 AM +0530 குடியாத்தம் அருகே கிராமத்துக்குள் புகுந்த யானைக் கூட்டம் அங்கிருந்த 300-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை நாசம் செய்து விட்டுச் சென்றன.
குடியாத்தத்தை அடுத்த தனகொண்டபல்லி கிராமம் ஆந்திர மாநில எல்லையில் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. புதன்கிழமை இரவு வனப்பகுதியில் இருந்து கிராமத்துக்குள் புகுந்த 11 யானைகள் அங்குள்ள குத்தூஸ்பாஷா நிலத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த 300-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை முறித்து நாசம் செய்தன. 
தகவலின்பேரில் வனச்சரக அலுவலர் மகேந்திரன், வனவர் ரவி ஆகியோர் தலைமையில் அங்கு சென்ற வனத் துறையினர் கிராம மக்கள் உதவியுடன் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/07/யானைக்-கூட்டத்தால்-சேதமடைந்த-300-க்கும்-மேற்பட்ட-வாழை-மரங்கள்-3053172.html
3053171 சென்னை வேலூர் விஐடியில் கணினி வடிவமைப்பு கருத்தரங்கம் தொடக்கம் DIN DIN Friday, December 7, 2018 07:09 AM +0530 விஐடி தகவல் தொழில்நுட்பப் பள்ளி சார்பில், 18-ஆவது சர்வதேச அறிவார்ந்த கணினி வடிவமைப்பு மற்றும் பயன்பாடுகள் குறித்த 3 நாள் கருத்தரங்கம் வியாழக்கிழமை தொடங்கியது.
பின்லாந்து ஒளலு பல்கலைக் கழக பேராசிரியை ரைஜா ஹலுநன் கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசியது:  விஐடியில் பல்வேறு துறைகளின் சார்பில், ஆராய்ச்சிப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா போன்ற நாடுகளில் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் தொழில்நுட்பத் துறையில் ஏற்படும் பிரச்னைகளுக்கும் நவீன தொழில்நுட்பம் மூலமாகவே தீர்வு காணப்படுகிறது.  இந்தியா, அமெரிக்கா, பின்லாந்து, ஐரோப்பா உள்பட பல்வேறு நாடுகளில் தொழில் வளர்ச்சி மற்றும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி வேகமாக வளர்ந்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் தங்களுக்கு ஏற்ற துறையில் தொழில்நுட்பத் துணையுடன் சமூகத்துக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் பாடுபட வேண்டும் என்றார். 
முன்னதாக விஐடி தகவல் தொழில்நுட்பப் பள்ளி டீன் பாலகிருஷ்ண திரிபாதி வரவேற்றார். துணைவேந்தர் ஆனந்த் சாமுவேல், பேராசிரியர்கள், மாணவ , மாணவியர் கலந்து கொண்டனர்.
 நிகழ்ச்சியை அஸ்வினி குமார் செருக்குரி மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/07/விஐடியில்-கணினி-வடிவமைப்பு-கருத்தரங்கம்-தொடக்கம்-3053171.html
3053170 சென்னை வேலூர் வேலூர் நேதாஜி மார்க்கெட் கடைகள் ஒதுக்கீட்டில் முன்னுரிமை: வியாபாரிகள் கோரிக்கை DIN DIN Friday, December 7, 2018 07:09 AM +0530 வேலூர் நேதாஜி மார்க்கெட் புதிதாக கட்டப்பட்டு கடைகள் ஒதுக்கீடு செய்யும்போது, ஏற்கெனவே அங்கு கடைகளை வைத்திருந்த வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் வணிகர்கள் வியாழக்கிழமை கோரிக்கை விடுத்தனர்.
 ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், வேலூர் மாநகரில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நேதாஜி மார்க்கெட் கட்டடம் இடிக்கப்பட்டு, புதிதாக கட்டப்பட உள்ளது. அதற்காக மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தலைமையில் வியாபாரிகள், அதிகாரிகள் பங்கேற்ற கருத்து கேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் உள்ள நேதாஜி மார்க்கெட் ரூ. 65 கோடி செலவில் புதிதாக கட்டப்பட உள்ளது.  இக்கட்டடம் கட்டப்பட்டதும், அதில் உள்ள கடைகள் உள்ளாட்சிகள் சட்ட விதிகளின்படி ஏல முறையில் தான் ஒதுக்கீடு செய்யப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். 
ஏற்கெனவே அங்கு கடைகளை நடத்தி வரும் வணிகர்களுக்கே அந்த கடைகளை திரும்ப வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். ஆனால் சட்ட விதிகளின்படி, அதற்கு வழியில்லையென அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 அதனால் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் வேலூர் மாவட்டச் செயலாளர் ஞானவேலு, வேலூர் நேதாஜி மார்க்கெட் அனைத்து வணிகர் சங்கச் செயலர் பிச்சாண்டி ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தனர். அதில், நேதாஜி மார்க்கெட் பழைய கட்டடம் இடிக்கப்பட்டு, புதிய கட்டடம் கட்டிய பிறகு, அங்கு ஏற்கெனவே வியாபாரம் செய்து வரும் 769 மாத வாடகை வியாபாரிகள், 300 தற்காலிக கடை வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஏலம் இல்லாமல் கடைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.  ஏற்கெனவே உள்ள வரைபடத்தில் தற்காலிக கடைகள் இடம்பெறவில்லை. அதனால் அந்த 300 கடைகளையும் சேர்த்து புதிய கட்டடம் கட்டுவதற்கான புதிய வரைபடத்தை வெளியிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/07/வேலூர்-நேதாஜி-மார்க்கெட்-கடைகள்-ஒதுக்கீட்டில்-முன்னுரிமை-வியாபாரிகள்-கோரிக்கை-3053170.html
3052535 சென்னை வேலூர் டிசம்பர் 7 மின் தடை DIN DIN Thursday, December 6, 2018 07:21 AM +0530 சாலை
நேரம்: காலை 9 முதல் மதியம் 2 மணி வரை 
மின்தடைப் பகுதிகள்: சாலை, மின்னல், நரசிங்கபுரம், அன்வர்திகான்பேட்டை, குண்ணத்தூர், கூடலூர், குருவராஜப்பேட்டை, பாராஞ்சி, கும்பினிப்பேட்டை, தண்டலம், வேடல், அல்ட்ராடெக் சிமென்ட் தொழிற்சாலைப் பகுதிகள்
இச்சிபுத்தூர்
தணிகைபோளூர் கண்டிகை, வாணியம்பேட்டை, வடமாம்பாக்கம், கைனூர், நேதாஜி நகர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/06/டிசம்பர்-7-மின்-தடை-3052535.html
3052534 சென்னை வேலூர் ஆம்பூர் பள்ளிகளில் மாணவர்களுக்கு 300 மிதிவண்டிகள் DIN DIN Thursday, December 6, 2018 07:20 AM +0530 ஆம்பூர் ஆனைக்கார் ஓரியண்டல் அரபிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஹபிபியா பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் தமிழக அரசின் இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
ஹபிபியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் நிலோபர் கபீல் ஹபிபியா பெண்கள் பள்ளி மாணவர்கள் 151 பேருக்கும், ஆனைக்கார் ஓரியண்டல் அரபிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 149 பேருக்கும்  இலவச மிதிவண்டிகளை வழங்கினார். இதில், ஹபிபியா பெண்கள் பள்ளித் தலைமை ஆசிரியை முஜிபுன்னிசா, ஆனைக்கார் ஓரியண்டல் பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் என். ரபீக் அஹமத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/06/ஆம்பூர்-பள்ளிகளில்-மாணவர்களுக்கு-300-மிதிவண்டிகள்-3052534.html
3052533 சென்னை வேலூர் 7 மாதங்களுக்குப் பிறகு பிடிபட்ட  தலைமறைவான ஆயுள் கைதி DIN DIN Thursday, December 6, 2018 07:19 AM +0530 வேலூர் மத்திய சிறையிலிருந்து பரோலில் சென்று தலைமறைவான ஆயுள் தண்டனைக் கைதி, 7 மாதங்களுக்குப் பிறகு பிடிபட்டார்.
பெங்களூரு மாநிலம், பேகூர் பகுதியைச் சேர்ந்தவர் பாப்புராஜ் (43). இவர், கடந்த 2002-ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு கடந்த 2008-ஆம் ஆண்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. தொடர்ந்து, வேலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வந்த பாப்புராஜ், கடந்த ஏப்ரல் மாதம் 6 நாள்கள் பரோலில் சொந்த ஊருக்குச் சென்றார். பின்னர், அவர் சிறைக்கு திரும்பவில்லை.
மேலும், பரோலில் சென்ற இவர் பெயர்களை மாற்றி பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து நுண்ணறிவுப் பிரிவு டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் உத்தரவின்பேரில் ஆய்வாளர் செல்வம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. 
இந்நிலையில், பெங்களூரு பேகூர் அருகே பதுங்கியிருந்த பாப்புராஜை போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர். தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் வேலூர் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/06/7-மாதங்களுக்குப்-பிறகு-பிடிபட்ட--தலைமறைவான-ஆயுள்-கைதி-3052533.html
3052532 சென்னை வேலூர் தண்டவாளத்தில் விரிசல்:  விரைவு ரயில்கள் தாமதம் DIN DIN Thursday, December 6, 2018 07:19 AM +0530 அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் புதன்கிழமை விரிசல் ஏற்பட்டதால் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு இரண்டரை மணிநேர தாமதத்துக்குப் பிறகு புறப்பட்டுச் சென்றன.
அரக்கோணம்-காட்பாடி ரயில் மார்க்கத்தில் சித்தேரி மற்றும் அன்வர்திகான்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே புதன்கிழமை அதிகாலை தண்டவாள பராமரிப்புப் பணிகளை ரயில்வே பணியாளர்கள் மேற்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு ஒரு இடத்தில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததைக் கண்டறிந்தனர். 
இதுகுறித்து அதிகாலை 5.40 மணிக்கு சித்தேரி ரயில் நிலைய அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், அவ்வழியே செல்லும் முசாபர்பூர்-யஸ்வந்தபூர், கெளஹாத்தி-பெங்களூரு, சென்னை-கோவை அதிவிரைவு ரயில்கள், சென்னை-கோவை சதாப்தி அதிவிரைவு ரயில், சென்னை-பெங்களூரு டபுள்டக்கர் அதிவிரைவு ரயில், அரக்கோணம்-பெங்களூரு பாசஞ்சர், அரக்கோணம்-வேலூர் கண்டோன்மென்ட் பாசஞ்சர் ஆகிய ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
இதையடுத்து அரக்கோணத்தில் இருந்து நிலைய மேலாளர் ராமகிருஷ்ணன், நிரந்தர இருப்புப்பாதை ஆய்வாளர் பங்கஜ்குமார் தலைமையிலான அலுவலர்கள் அப்பகுதிக்கு விரைந்து சென்று தண்டவாள விரிசலை சரி செய்தனர். இதையடுத்து ஆங்காங்கே நிறுத்தப்பட்ட ரயில்கள் இரண்டரை மணிநேர தாமதத்துக்குப் பிறகு 8.25 மணியளவில் புறப்பட்டுச் சென்றன. ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/06/தண்டவாளத்தில்-விரிசல்--விரைவு-ரயில்கள்-தாமதம்-3052532.html
3052531 சென்னை வேலூர் ரயில் டிக்கெட் முன்பதிவு மோசடி: ரூ.3.64 லட்சம் இ-டிக்கெட்டுகள் பறிமுதல்: டிராவல் ஏஜென்ஸி உரிமையாளர் கைது DIN DIN Thursday, December 6, 2018 07:19 AM +0530 ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டதாக வேலூரில் தனியார் டிராவல் ஏஜென்ஸி உரிமையாளரை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ. 3.64 லட்சம் மதிப்பிலான இ-டிக்கெட்டுகள், மடிக்கணினி, செல்லிடப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
வேலூர்-ஆற்காடு சாலை, மிட்டா ஆனந்தராவ் தெருவில் சாந்தி டிராவல்ஸ் என்ற பெயரில் பேருந்து, ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ரயில்வே டிக்கெட்டுகளை போலியாக முன்பதிவு செய்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக  காட்பாடி ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாரும், ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரும் இணைந்து அந்த டிராவல் ஏஜென்ஸியில் செவ்வாய்க்கிழமை இரவு திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, 17 பேரின் ரயில் டிக்கெட் முன்பதிவு முகவரியை பயன்படுத்தி ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து அதை கூடுதல் விலைக்கு விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த டிராவல் ஏஜென்ஸி உரிமையாளரான வேலூர், சேண்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (25) கைது செய்யப்பட்டார். அங்கிருந்த ரூ. 3 லட்சத்து 64 ஆயிரத்து 825 மதிப்புடைய 93 ரயில்வே இ-டிக்கெட்டுகள், மடிக்கணினி, செல்லிடப்பேசி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.  கைது செய்யப்பட்ட ராமச்சந்திரன் நீதிமன்ற காவலுக்கு புதன்கிழமை அனுப்பப்பட்டார்.
இதுகுறித்து, ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் கூறியது:
வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற வடமாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.  அவர்கள் சிகிச்சை முடிந்து திரும்பிச் செல்ல வசதியாக போலி முகவரிகள் மூலம் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். தற்போது ஒருவர் பிடிபட்டுள்ளதை அடுத்து வேறு யாரேனும் இதேபோல் ரயில் டிக்கெட் முன்பதிவு மோசடியில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது என்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/06/ரயில்-டிக்கெட்-முன்பதிவு-மோசடி-ரூ364-லட்சம்-இ-டிக்கெட்டுகள்-பறிமுதல்-டிராவல்-ஏஜென்ஸி-உரிமையாளர்-3052531.html
3052530 சென்னை வேலூர் ஜங்காலபுரத்தில் விளையாட்டுப் போட்டிகள் DIN DIN Thursday, December 6, 2018 07:18 AM +0530 தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வேலூர் மாவட்ட பிரிவின் கீழ் நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஜங்காலபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
இப்போட்டிகளில் 100 மீ, 200 மீ, 400 மீ ஓட்டப்பந்தயம், வட்டுஎறிதல், குண்டு எறிதல் மற்றும் கைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ்குமார் தொடங்கி வைத்தார். 
இதில், ஜங்காலபுரம், பூசாரியூர் ஆத்தூர்குப்பம், ஏலரப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் மாணவர்கள் இருந்து கலந்துகொண்டனர். இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.  போட்டிக்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர்கள் குமரேசன், ஆறுமுகம் ஆகியோர் செய்திருந்தனர். 
இதேபோல் நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 26 கிராம ஊராட்சி பகுதிகளிலும் விளையாட்டுப் போட்டிகள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நலங்கிள்ளி, ரமேஷ்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றன.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/06/ஜங்காலபுரத்தில்-விளையாட்டுப்-போட்டிகள்-3052530.html
3052529 சென்னை வேலூர் தூய்மை இந்தியா விழிப்புணர்வு ஊர்வலம் DIN DIN Thursday, December 6, 2018 07:17 AM +0530 ஆற்காட்டை அடுத்த ஆயிலம் அரசினர் உயர்நிலைப் பள்ளி தேசிய மாணவர் படை வேலூர் பத்தாவது பட்டாலியன் சார்பில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு ஊர்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
 ஊர்வலத்துக்கு, பள்ளியின் தலைமையாசிரியர் இ.அன்பழகன்  தலைமை வகித்து ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தார். நாட்டு 
நலப்பணித் திட்ட அலுவலர் பால்தேவசிகாமணி முன்னிலை வகித்தார். முக்கிய வீதிகள் வழியாகச் சென்று ஊர்வலம் நிறைவு பெற்றது. தொடர்ந்து  தேசிய மாணவர் படை மாணவர்கள் ஆயிலம் அரசுப் பள்ளி வளாகம், அருங்குன்றம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தை சுத்தம் செய்து தூய்மைப்படுத்தினர். இதில், பள்ளியின் ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/dec/06/தூய்மை-இந்தியா-விழிப்புணர்வு-ஊர்வலம்-3052529.html