Dinamani - சென்னை - http://www.dinamani.com/all-editions/edition-chennai/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2786238 அனைத்துப் பதிப்புகள் சென்னை ஹைக்கூ உலகம் நூல் வெளியீட்டு விழா  DIN DIN Saturday, October 7, 2017 06:03 PM +0530 சென்னை எழும்பூர் இக்‌ஷா அரங்கில் கடந்த ஞாயிறு 01-10-2017 அன்று மாலை ஹைக்கூ உலகம்" நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

ஓவியா பதிப்பகம் வெளியிட்ட இந்நூலினை முனைவர் ம. ரமேஷ் அருமையாக தொகுத்திருந்தார். 11 கவிஞர்களின் 660 ஹைக்கூ கவிதைகள் இடம்பெற்று இருந்தன.

நக்கீரன் குழுமத்தின் "இனிய உதயம்" இதழின் இணை ஆசிரியர் ஆரூர் தமிழ்நாடன் ஐயா தலைமையில், மூன்று தேசிய விருதுகள் பெற்ற திரைப்பட இயக்குநர் அகத்தியன் அவர்கள் நூலினை வெளியிட்டு சிறப்பு செய்ய, திரைப்பட இயக்குநரும் வசனகர்தாவுமான பிருந்தாசாரதி அவர்கள் முதல் நூலினை பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து திரைப்பட இயக்குநர் ராசி. அழகப்பன் சிறப்புரை நிகழ்த்த, அகநி பதிப்பகத்தின் உரிமையாளர் கவிஞர் மு.முருகேஷ் ஆய்வுரை நிகழ்த்தினார். முன்னதாக ’ஓவியா பதிப்பகம்’ வெளியீட்டாளர் வதிலைபிரபா வரவேற்புரை நிகழ்த்தினார். கவிஞர் ரவி சுப்பிரமணியன், இளையராஜா இசையில், தான் எழுதிய பாடலை அழகாய்ப் பாடி அவையை இசையால் நனைத்தார்.

கா.ந.கல்யாணசுந்தரம், பா. உதயக்கண்ணன், சோலை இசைக்குயில், புதுவை தமிழ்நெஞ்சன், கன்னிக்கோயில் ராஜா ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்தி நிகழ்வைச் சிறப்பாக்கினர். "ஹைக்கூ உலகம்" நூலின் தொகுப்பாசிரியர் முனைவர். ம. ரமேஷ் ஏற்புரை நிகழ்த்தினார்.

நூலாசிரியர்களில் ஒருவரான கவிதாயினி பிச்சிப்பூ நன்றியுரை கூறினார். நிகழ்ச்சிகளை சோமுசக்தி தொகுத்து வழங்கினார். தமிழகம், கேரளா, புதுச்சேரி, தெலங்கானா என பல பகுதிகளிலுமிருந்து ஹைக்கூ கவிஞர்கள் நிகழ்வுக்கு வந்திருந்து சிறப்பு செய்தனர். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/7/w600X390/hiko_book.jpg http://www.dinamani.com/all-editions/edition-chennai/2017/oct/07/ஹைக்கூ-உலகம்-நூல்-வெளியீட்டு-விழா-2786238.html
2783148 அனைத்துப் பதிப்புகள் சென்னை பரூர் பள்ளியின் வயலின் அரங்கேற்றம் DIN DIN Monday, October 2, 2017 08:18 PM +0530 பரூர் எம்.எஸ்.ஜியின் பாரம்பரிய பள்ளியான சஞ்சாராவின் சார்பில் டாக்டர் எம். நர்மதாவின் மாணவரான சூர்யாவின் வயலின் அரங்கேற்றம் நாரத கான சபாவில் நடந்தது.

கிளீவ்லாண்ட் தியாகராஜ ஆராதனைக் குழு செயலாளர் வி.வி.சுந்தரம் அவர்கள் தலைமை ஏற்றார். அவர் பரூர் வயலின் இசை முறையின் சிறப்புக்களை எடுத்து கூறினார். பத்மஸ்ரீ டாக்டர் நல்லி குப்புஸ்வாமி செட்டி அவர்கள் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார்.

காந்தியடிகளின் தனிச் செயலராக இருந்த வி. கல்யாணம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். சஞ்சாராவின் செயலாளர் ஜெயலக்ஷ்மி இறைவணக்கம் பாடினார். குரு டாக்டர் எம். நர்மதா வரவேற்புரை ஆற்றினார். பல முன்னணி இசை கலைஞர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

நெய்வேலி கே.வி.ராம் குமார், ஹெச்.பிரசன்னா ஆகியோரின் பக்க வாத்தியங்களுடன் சூர்யாவின் வயலின் இசை நிகழ்ச்சி அரங்கேறியது. அகில இந்திய வானொலியின் முதுநிலை அறிவிப்பாளர் குமரி எஸ். நீலகண்டன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.​

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/2/w600X390/paroor_arangetram_02.JPG http://www.dinamani.com/all-editions/edition-chennai/2017/oct/02/பரூர்-பள்ளியின்-வயலின்-அரங்கேற்றம்-2783148.html
2640192 அனைத்துப் பதிப்புகள் சென்னை மகாதேசிகர் புஷ்ப பல்லக்கு உலா மதுராந்தகம், DIN Sunday, January 29, 2017 02:00 AM +0530 மதுராந்தகம் அஹோபில மட மகா தேசிகரின் திருநட்சத்திரத்தை கொண்டாடும் வகையில் புஷ்ப பல்லக்கு உலா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 வெள்ளிக்கிழமை காலை சிறப்பு திருமஞ்சனமும், பின்னர் பெரியசாற்றுமறை தீர்த்த கோஷ்டி விநியோகமும் நடைபெற்றது. மாலையில் மேளதாளம் முழங்க, வாணவேடிக்கைகளுடன், அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் மகா தேசிகர் சுவாமி
 வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
 
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/2017/jan/29/மகாதேசிகர்-புஷ்ப-பல்லக்கு-உலா-2640192.html
2640191 அனைத்துப் பதிப்புகள் சென்னை அபிராமி அம்மனுக்கு மலரஞ்சலி மதுராந்தகம், DIN Sunday, January 29, 2017 02:00 AM +0530 தை அமாவாசையையொட்டி மதுராந்தகம் கடப்பேரி மாரியம்மன் கோயிலில் உள்ள அபிராமி அம்மனுக்கு மலரஞ்சலி நிகழ்ச்சி, அபிராமி பட்டர் உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 தை அமாவாசையை முன்னிட்டு கடப்பேரி மாரியம்மன் கோயிலில் உள்ள அபிராமி சந்நிதியில் சிறப்பு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சியில் அபிராமி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
 நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். அவர்களுக்கு அருட்பிரசாதம், அன்ன தானம் வழங்கப்பட்டது.
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/2017/jan/29/அபிராமி-அம்மனுக்கு-மலரஞ்சலி-2640191.html
2640188 அனைத்துப் பதிப்புகள் சென்னை மேல்மருவத்தூரில் மாநில அளவிலான குதிரை தாண்டுதல் போட்டி தொடக்கம் மதுராந்தகம், DIN Sunday, January 29, 2017 01:59 AM +0530 மதுராந்தகத்தை அடுத்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி குதிரை சவாரி மையம் சார்பில் குதிரை தாண்டுதல் போட்டி தொடக்க நிகழ்ச்சி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி விளையாட்டுத் திடலில் சனிக்கிழமை நடைபெற்றது.
 நிகழ்ச்சிக்கு ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத் தலைவரும், குதிரை சவாரி மையத் தலைவருமான கோ.ப.அன்பழகன் தலைமை வகித்தார். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாள்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் சென்னை, கோவை, திருச்செங்கோடு,திருநெல்வேலி, சத்யமங்கலம், ஆம்பூர், பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு குதிரைகள் உயரம் தாண்டுதல் போன்ற போட்டிகளில் பங்கேற்கின்றன.
 குதிரை சவாரி மைய செயலர் அ.அகத்தியன் விழா ஏற்பாட்டை செய்திருந்தார்.
 நிகழ்ச்சியில் ஆஷா அன்பழகன், கோ.காளிதாஸ், ஆதிபராசக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கோ.ப.செந்தில்குமார், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவர் உமாதேவி ஜெய்கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/2017/jan/29/மேல்மருவத்தூரில்-மாநில-அளவிலான-குதிரை-தாண்டுதல்-போட்டி-தொடக்கம்-2640188.html
2640185 அனைத்துப் பதிப்புகள் சென்னை சிறப்புத் தொடர் சொற்பொழிவு காஞ்சிபுரம், DIN Sunday, January 29, 2017 01:59 AM +0530 ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோயிலில் சிறப்புத் தொடர் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது.
 இந்தக் கோயிலில், ஸ்ரீராமானுஜரின் 1000-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, சிறப்பு தொடர் சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 21-ஆம் தேதி தொடங்கிய நிகழ்ச்சி, வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.30 மணி முதல் 8 மணி வரை நடைபெறும்.
 இதில் பல்வேறு தலைப்புகளில் ஆன்மிகச் சொற்பொழிவும், இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
 
 
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-chennai/2017/jan/29/சிறப்புத்-தொடர்-சொற்பொழிவு-2640185.html
2427 அனைத்துப் பதிப்புகள் சென்னை கல்விக் கடனை வசூலிக்க தனியார் நிறுவனம் மூலம் மிரட்டல் விடுப்பதா?:அன்புமணி கண்டனம் நாகூர் ரூமி DIN Tuesday, July 5, 2016 02:36 PM +0530 கல்விக் கடனை வசூலிக்க வங்கி நிர்வாகம், தனியார் நிறுவனம் மூலம் மிரட்டல் விடுத்த சம்பவத்துக்கு பாமக

இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்தார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
கல்விக் கடனை வசூலிக்க பாரத ஸ்டேட் வங்கி கொடூரமான வழிமுறையை கையில் எடுத்துள்ளது. மாணவர்களுக்கு வழங்கிய கல்விக்

கடன்களில் தவணை தவறிய கடன்களை தனியார் (ரிலையன்ஸ்) நிறுவனத்திடம் பாரத ஸ்டேட் வங்கி விற்றுள்ளது. மேலும்

மாணவர்களிடமிருந்து முழுத் தொகையையும் வசூலித்துக் கொள்ள அந்த நிறுவனத்துக்கு அனுமதி அளித்துள்ளது. இந்தச் செயல்

கண்டிக்கத்தக்கதாகும்.
பாரத ஸ்டேட் வங்கி மூலம் வழங்கப்பட்ட கல்விக் கடனில் ரூ.847 கோடி வாராக் கடனாக மாறியுள்ளது. இந்தக் கடன்கள் 45 சதவீத

தொகைக்கு தனியார் நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
கல்விக்கடனை உடனடியாக திரும்பச் செலுத்தாவிட்டால் மோசமான நடவடிக்கைகள் மேற்கொள்ள நேரிடும் என்று மாணவர்களுக்கு அந்த

நிறுவனம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் அச்சத்தில் உறைந்திருக்கின்றனர்.
ரூ.847 கோடி வாராக் கடனில், ரூ.381 கோடியை மட்டுமே தனியார் நிறுவனம் வங்கிக்கு வழங்கும். முதலில் ரூ.54.24 கோடியை வழங்கியுள்ள

நிறுவனம், மீதமுள்ள தொகையை அடுத்த 15 ஆண்டுகளில் படிப்படியாக வழங்கும். ரூ.54 கோடி பணத்துக்காக லட்சக்கணக்கான

மாணவர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கி விடக்கூடாது. ஒருவர் பெயரில் வாங்கும் கடனை அவரது ஒப்புதல் இல்லாமல் பிறருக்கு மாற்றித்

தருவது கந்துவட்டி வசூலிக்கும் குற்றத்துக்கு இணையானது.
பாரத ஸ்டேட் வங்கியின் முடிவால் வேலையில்லா பட்டதாரிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்னையில் தமிழக முதல்வர்

ஜெயலலிதா உடனடியாகத் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

 

]]>
Anbumani, PMK, Education, Loan, வங்கி , பாரத http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/6/23/w600X390/anbumani_3.jpg http://www.dinamani.com/edition_chennai/2016/jun/23/கல்விக்-கடனை-வசூலிக்க-தனியார்நிறுவனம்-மூலம்-மிரட்டல்-விடுப்பதாஅன்புமணி-கண்டனம்-2427.html
2426 அனைத்துப் பதிப்புகள் சென்னை வியாசர்பாடியில் வழக்குரைஞர் வெட்டிக் கொலை:உறவினர்கள் மறியலால் போக்குவரத்து பாதிப்பு dine_new1 DIN Thursday, June 23, 2016 02:43 AM +0530 சென்னை வியாசர்பாடியில் வழக்குரைஞர் புதன்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து

கொலைசெய்யப்பட்டவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை வியாசர்பாடி மெகசின்புரம் ஆறுமுகம் பிள்ளைத் தெருவைச் சேர்ந்தவர் தி.ரவி (45). இவரது மனைவி உமா மகேஸ்வரி. இத்

தம்பதிக்கு யுவதர்ஷினி என்ற மகளும், தனதர்ஷன் என்ற மகனும் உள்ளனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக இருக்கும் ரவி,

ஜனநாயக புரட்சி முன்னணி என்ற இயக்கத்தை நடத்தி வந்தார்.
வெட்டிக் கொலை: இந்நிலையில், புதன்கிழமை காலை 10.30 மணியளவில் ரவி, சத்தியமூர்த்தி நகர், மெகசின்புரம் சந்திப்பில் நின்று

கொண்டிருந்தார். அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் அவரை அரிவாளால் வெட்டியது. தப்பியோட முயன்றும் ரவியை

அந்தக் கும்பல் விரட்டிச் சென்று வெட்டிக் கொலை செய்தது.
இதைப் பார்த்த பொதுமக்கள், அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். உடனே அந்தக் கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பியோடியது.

இதுகுறித்து தகவலறிந்த வியாசர்பாடி போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ரவியின் சடலத்தை கைப்பற்றி, பிரேத

பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றனர்.
சாலை மறியல்: ஆனால், அதற்குள் அங்கு திரண்ட ரவியின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் சடலத்தை போலீஸார் எடுக்கவிடாமல்

தடுத்தனர். மேலும் அவர்கள், கொலை சம்பவத்தை கண்டித்தும், கொலையில் தொடர்புடைய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்

கோரியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே அங்கு வந்த புளியந்தோப்பு துணை ஆணையர் மயில்வாகனன், உதவி ஆணையர் மன்னர் மன்னன் ஆகியோர் போராட்டத்தில்

ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கொலை கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி

அளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், சுமார் 2 மணி நேரம் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதன் பின்னர், ரவியின் சடலத்தை போலீஸார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து,

விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்வேறு வழக்குகளில் தொடர்பு: முதல் கட்ட விசாரணையில், மாதவரம், வியாசர்பாடி ஆகிய காவல் நிலையங்களில் ரவி மீது பல்வேறு

பிரிவுகளின் கீழ் வழக்குகள் இருப்பது தெரியவந்தது. மேலும், கட்டப்பஞ்சாயத்து, நிலப் பிரச்னைகளை தீர்ப்பது உள்ளிட்ட பல்வேறு

செயல்களில் அவர் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் பிரச்னைகளில் ஏற்பட்ட பகையின் காரணமாகவே ரவி, கொலை

செய்யப்பட்டிருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இதில் வட சென்னையைச் சேர்ந்த ஒரு ரௌடிக்கும், ரவிக்கும் இடையே சில மாதங்களுக்கு முன்பு பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தப் பிரச்னையின் காரணமாகவும் ரவி கொலை செய்யப்பட்டாரா என போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

வியாசர்பாடியில் பட்டப்பகலில் வழக்குரைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/6/23/w600X390/RAVI.jpg http://www.dinamani.com/edition_chennai/2016/jun/23/வியாசர்பாடியில்-வழக்குரைஞர்-வெட்டிக்-கொலைஉறவினர்கள்-மறியலால்-போக்குவரத்து-பாதிப்பு-2426.html
2425 அனைத்துப் பதிப்புகள் சென்னை மெரீனாவில் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு dine_new1 DIN Thursday, June 23, 2016 02:43 AM +0530 சென்னை மெரீனாவில் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் இறந்தார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
அந்தமானைச் சேர்ந்தவர் கரண்ராஜ் (19). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. படித்து வந்தார். கரண்ராஜ்,

தனது நண்பர்களோடு மெரீனா கடற்கரைக்கு செவ்வாய்க்கிழமை சென்றார்.
அங்கு உழைப்பாளர் சிலை பின்புறம் கடலில் நண்பர்களுடன் அவர் குளித்தார். அப்போது அங்கு வந்த பெரிய அலையில் கரண்ராஜ் சிக்கிக்

கொண்டார். இதைப் பார்த்த அவரது நண்பர்கள், கரண்ராஜை காப்பாற்ற முயன்றனர். ஆனால் ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டதால்,

அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
இதையடுத்து அவர்கள், தீயணைப்பு படை வீரர்களுக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த தீயணைப்பு படை வீரர்களும்,

போலீஸாரும், அங்கு விரைந்து வந்து கரண்ராஜை தேடினர். இந்நிலையில் சிறிது நேரத்தில் கரண்ராஜ் சடலம், கரை ஒதுங்கியது. உடனே

போலீஸார் கரண்ராஜ் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு

செய்து,விசாரித்து வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/edition_chennai/2016/jun/23/மெரீனாவில்-கடலில்-மூழ்கிகல்லூரி-மாணவர்-சாவு-2425.html
2424 அனைத்துப் பதிப்புகள் சென்னை எரிவாயு உருளை வெடித்து மூதாட்டி சாவு dine_new1 DIN Thursday, June 23, 2016 02:43 AM +0530 திருவொற்றியூரில் எரிவாயு உருளை வெடித்ததில் பலத்த காயமடைந்த கன்னியம்மாள் (80) என்ற மூதாட்டி

புதன்கிழமை இறந்தார்.
சென்னை திருவொற்றியூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்த கன்னியம்மாள் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு

கன்னியம்மாள் எரிவாயு அடுப்பு மூலம் உணவு சமைத்துள்ளார். அப்போது திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டு தீப்பற்றியது.
இதனையடுத்து எரிவாயு உருளையும் வெடித்துச் சிதறியது. இதில் பலத்த காயமடைந்த கன்னியம்மாளை அருகில் வசிப்போர் மீட்டு

திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி கன்னியம்மாள்

புதன்கிழமை இறந்தார். இது குறித்து திருவொற்றியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/edition_chennai/2016/jun/23/எரிவாயு-உருளை-வெடித்து-மூதாட்டி-சாவு-2424.html
2423 அனைத்துப் பதிப்புகள் சென்னை நடிகர் விஜய் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தகராறு dine_new1 DIN Thursday, June 23, 2016 02:42 AM +0530 சென்னை கோடம்பாக்கத்தில் நடிகர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தகராறில் காவலர்களைத் தாக்கியதாக

4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை குமரன்நகர் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் தமிழ்செல்வன், சதீஷ்குமார் ஆகியோர் செவ்வாய்க்கிழமை இரவு

கோடம்பாக்கம் சாலை மாந்தோப்பு பள்ளி அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு கும்பல், நடிகர் விஜயின்

பிறந்தநாளையொட்டி, சாலையின் நடுவே கேக் வெட்டி கொண்டாடி கொண்டிருந்ததாம். இதைப் பார்த்த போலீஸார், அவர்களை சாலையில்

கேக் வெட்ட வேண்டாம் எனவும், பிறந்த நாள் கொண்டாட்டத்தை சாலையில் நடத்த வேண்டாம் எனவும் கூறினராம். அப்போது அங்கிருந்த

விஜய் ரசிகர்களுக்கும், காவலர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
தகராறு முற்றவே விஜய் ரசிகர்கள், காவலர்கள் தமிழ்செல்வன், சதீஷ்குமார் ஆகிய இருவரையும் தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு

ஏற்பட்டது. தாக்குதலில் காயமடைந்த காவலர்கள், குமரன் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்டதாக திருச்சிராப்பள்ளி மணப்பாறை அருகே உள்ள

வளையப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் (25), அவர் சகோதரர் குமரேசன் (23), கதிரேசன் (20), வெங்கடேசன் (23) ஆகிய 4 பேரை கைது செய்து

வழக்குப் பதிவு செய்தனர்.
இவர்கள் அனைவரும் குமரன்நகரில் தங்கியிருந்து, மாம்பலத்தில் உள்ள முடிதிருத்தும் கடையில் வேலை செய்து வந்தனராம்.

 

]]>
http://www.dinamani.com/edition_chennai/2016/jun/23/நடிகர்-விஜய்-பிறந்த-நாள்-கொண்டாட்டத்தில்-தகராறு-2423.html
2422 அனைத்துப் பதிப்புகள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் சாவு dine_new1 DIN Thursday, June 23, 2016 02:42 AM +0530 சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் விஷவாயு தாக்கி, இரண்டு தொழிலாளர்கள் இறந்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பல்வேறு சோதனைக் கூடங்கள் உள்ளன. இதில், என்.ஆர்.ஐ. விடுதியின் பின்புறம்

சூரியசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஆய்வுக் கூடம் உள்ளது. இந்த ஆய்வுக் கூடத்துக்கு பூமிக்கு அடியில் ஐந்தடி உயரம், ஐந்தடி

அகலத்தில் சிமென்ட்டால் அமைக்கப்பட்ட காற்றழுத்த அறை உள்ளது. இங்கிருந்து காற்றழுத்தம் சரியாக கிடைக்காமல் இருந்ததாகக்

கூறப்படுகிறது.
விஷவாயு தாக்கியது: இந்தப் பழுதை நீக்க தனியார் நிறுவன ஊழியர்களான அம்பத்தூர் கல்யாணபுரம் பஜனை கோயில் 2-ஆவது தெருவைச்

சேர்ந்த தீபன் என்ற தீபக் (26), அயனப்பாக்கம் அருகே உள்ள தேவி கருமாரியம்மன் நகர் மகாலட்சுமி தெருவைச் சேர்ந்த ஆ.ரமேஷ்சங்கர் (28)

ஆகியோர் வரவழைக்கப்பட்டனர்.
இவர்கள், காற்றழுத்த அறையில் பழுது நீக்கும் பணியில் செவ்வாய்க்கிழமை மாலை ஈடுபட்டனர். அப்போது, ரப்பரை ஒட்ட வைப்பதற்காக,

வேதிப் பொருள் கலந்த ஒரு திரவத்தை பயன்படுத்தினர்.
அதிலிருந்து வெளிப்பட்ட, விஷவாயு தாக்கியதில் இருவருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு, அங்கேயே மயங்கி விழுந்தனர். இதற்கிடையே

பணிக்குச் சென்ற தொழிலாளர்கள் இரவு 10 மணியைத் தாண்டிய பின்னரும் திரும்பாததால், சந்தேகமடைந்த, தனியார் நிறுவன அதிகாரிகள்,

பல்கலைக்கழகத்தை தொடர்பு கொண்டு விவரம் கேட்டனர். உடனே பல்கலைக்கழக காவலாளி நள்ளிரவு 11 மணியளவில் அந்த தொட்டியைப்

பார்த்தார்.
உயிரிழப்பு: அப்போது தீபக்கும், ரமேஷ்சங்கரும் விஷவாயு தாக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

உடனே அவர், கோட்டூர்புரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து,

இருவரையும் மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரையும் சோதித்துப் பார்த்த மருத்துவர்கள்,

ஏற்கனவே இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கோட்டூர்புரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி

வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/edition_chennai/2016/jun/23/அண்ணா-பல்கலைக்கழகத்தில்விஷவாயு-தாக்கி-2-தொழிலாளர்கள்-சாவு-2422.html
2421 அனைத்துப் பதிப்புகள் சென்னை வணிக வளாகத்தில் தீ விபத்து: 6 கடைகள் எரிந்து நாசம் dine_new1 DIN Thursday, June 23, 2016 02:41 AM +0530 சென்னை அண்ணாநகரில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 கடைகள் எரிந்து நாசமாயின.
இது குறித்த விவரம்:
அண்ணாநகர் ரவுண்டானா அருகே இரண்டாவது அவென்யூவில் தரைத் தளத்துடன் கூடிய 4 மாடி தனியார் வணிக வளாகம் செயல்படுகிறது.

இந்த வணிக வளாகத்தின் தரைத் தளத்தில் ஒரு ஜவுளிக் கடையில் புதன்கிழமை காலை 6.30 மணியளவில் கரும் புகை வெளியேறியது.
சிறிது நேரத்தில் அந்தக் கடையில் இருந்த பொருள்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கின. இதைப் பார்த்த அங்கிருந்த காவலாளிகளும்,

பொதுமக்களும் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த தீயணைப்பு படை வீரர்கள், ஜெ.ஜெ.நகர், கோயம்பேடு,

அம்பத்தூர், அண்ணாநகர், கீழ்ப்பாக்கம் ஆகிய இடங்களில் இருந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தீயை அணைக்கும் பணியில்

ஈடுபட்டனர்.
புகை அதிகமாக வெளியேறியதால் தீயை விரைவாக அணைப்பதில் இடர்பாடு ஏற்பட்டது. இருப்பினும் தீயணைப்பு படை வீரர்கள்,

நிலைமையைச் சமாளித்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மாவட்ட தீயணைப்பு படை வீரர்கள் சையது முகம்மது ஷா, ராஜேஷ்

கண்ணா, நிலைய அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் தீயணைப்புப் பணியை விரைவுப்படுத்தினர்.
சுமார் இரண்டு மணிநேர போராட்டத்துக்குப் பின்னர் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தால் தரைத்தளத்தில் இருந்த 3 ஜவுளிக்

கடை, கணினி பழுது நீக்கும் கடை, அலங்கார பொருள்கள் விற்கும் கடை, சலூன் கடை ஆகியவை எரிந்து நாசமாயின. இந்தக் கடைகளில்

இருந்த பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.
இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவுசெய்து, தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸாரின் முதல்

கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

 

]]>
http://www.dinamani.com/edition_chennai/2016/jun/23/வணிக-வளாகத்தில்-தீ-விபத்து-6-கடைகள்-எரிந்து-நாசம்-2421.html
2359 அனைத்துப் பதிப்புகள் சென்னை test article : சஞ்சய் தத் விடுதலை குறித்து பேரறிவாளன் கேள்வி test columnist DIN Wednesday, June 22, 2016 01:44 PM +0530

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் எந்த சட்டப்பிரிவின் கீழ் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுகிறார் என்ற தகவலை தெரிவிக்குமாறு, எரவாடா சிறைத்துறை அதிகாரியிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டு பேரறிவாளன் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பேரறி வாளன், எரவாடா சிறைத்துறை நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் எரவாடா சிறையில் அடைக்கப்பட்ட பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தண்டனை காலம் முடிவடைய 8 மாதங்கள் இருந்த நிலையில் முன்னதாகவே விடுவிக்கப்பட்டார். சிறையில் நல்லொழுக்கம் காரணமாக அவர் முன்கூட்டிய விடுதலை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால், அது தொடர்பான ஆவணங்களின் நகல்களை எனக்கு வழங்க வேண்டும். சஞ்சய் தத் விடுதலை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தர வேண்டும்.

எந்த அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் சஞ்சய்தத்தை முன் கூட்டியே விடுதலை செய்யும் முடிவு எடுக்கப்பட்டது. நானும், இதே சட்டப் பிரிவின் கீழ் முன் கூட்டியே விடுதலை பெறுவதற்கான விவரங்களுக்காக இந்த தகவல்களை கேட்கிறேன்.

இவ்விவகாரத்தில் மாநில அரசு, சிறை நிர்வாகம் போன்றவை மத்திய அரசை கலந்து ஆலோசித்ததா என்பன போன்ற கேள்விகளை கேட்டிருந்தார். வஇதற்கு பதிலளித்துள்ள சிறை நிர்வாகம் மூன்றாம் நபர் சம்பந்தப்பட்ட வழக்கின் விவரங்களை பகிர்ந்து கொள்ள முடியாது என கூறியிருந்தது. பேரளிவாளன் பதிலுக்கு அரசோ அல்லது அரசு அதிகாரிகளோ தனது அதிகார வரம்பை பயன்படுத்தி எடுக்கும் எந்த முடிவையும் மக்களின் ஆய்வுக்கு அளிக்க கடமைப்பட்டவர்கள் என கூறியிருந்தார்.

smileyஇந்த பதிலை எதிர்பார்க்காத எரவாடா சிறை அதிகாரிகள் வரும் 28ம் தேதி பிரதிநிதி ஒருவரை அனுப்பி அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ளுமாறு பதிலளித்துள்ளது. விவரங்களை நேரில் வந்து பெற்று கொள்ள சொல்வது தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு முரணானது என பேரறிவாளன் தரப்பினர் கூறியுள்ளனர்.

]]>
perarivalan, sanjay dutt http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/6/21/w600X390/perarivalan-sanjai.jpg http://www.dinamani.com/edition_chennai/2016/jun/22/test-article--சஞ்சய்-தத்-விடுதலை-குறித்து-பேரறிவாளன்-கேள்வி-2359.html