Dinamani - கிருஷ்ணகிரி - http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2793865 தருமபுரி கிருஷ்ணகிரி தென்னக நதிகளை இணைக்கக் கோரி அன்னை காவிரி நதிநீர்ப் பாதுகாப்பு அறக்கட்டளையினர் பாத யாத்திரை DIN DIN Sunday, October 22, 2017 04:41 AM +0530 தென்னக நதிகளை இணைக்க வலியுறுத்தி,  தலைக் காவிரியிலிருந்து பூம்புகாருக்கு பாத யாத்திரை மேற்கொண்ட அன்னை காவிரி நதிநீர்ப் பாதுகாப்பு அறக்கட்டளையினர் சனிக்கிழமை ஒசூர் வந்தனர்.
பாத யாத்திரை தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியது:
புனித நதியான காவிரியைப் பாதுகாக்க வேண்டும். தமிழக- கர்நாடக விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாகவும், வாழ்வாதாரமாக உள்ள காவிரி நதி நீண்ட தொலைவுகளைக் கடந்து இறுதியில் பூம்புகாரில் கடலில் கலக்கிறது. புனிதமான காவிரியில் கழிவுநீர், ரசாயன கழிவுகள் கலக்கப்படுவதால் நீர் மாசடைந்துள்ளது.
காவிரிக்காக தனி அமைச்சகத்தை உருவாக்க வேண்டும். கங்கை நதியை தூய்மையாக்க நிதி ஒதுக்கியதை போல காவிரியையும்
தூய்மைப்படுத்த மத்திய அரசு நிதிக்க வலியுறுத்தியும், நதிகளை தேசிய மயமாக்குவதை அமல்படுத்த முதல் கட்டமாக தென்னக நதிகளை இணைக்க வலியுறுத்தியும் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளோம் என்றனர்.
அகில பாரதிய தரவியர்கள் சங்கத்தின் செயலாளர் சுவாமி ராமானந்தா தலைமையில் சுவாமி வேதானந்தா, ஞானேஸ்வரி,  அன்னை நதிநீர்ப் பாதுகாப்பு அறக்கட்டளை துணைத் தலைவர் அம்சராஜ், பொருளாளர் வாசு, நிர்வாகிகள் புஷ்பலிங்கம், ஜெயா தங்கவேல் உள்பட பலர் பாத யாத்திரையில் பங்கேற்றுள்ளனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/22/தென்னக-நதிகளை-இணைக்கக்-கோரி-அன்னை-காவிரி-நதிநீர்ப்-பாதுகாப்புஅறக்கட்டளையினர்-பாத-யாத்திரை-2793865.html
2793864 தருமபுரி கிருஷ்ணகிரி பெண் கத்தியால் குத்தி கொலை: ஆட்டோ ஓட்டுநரின் மனைவி கைது DIN DIN Sunday, October 22, 2017 04:41 AM +0530 கிருஷ்ணகிரி அருகே பெண்ணை கத்தியால் குத்தி கொன்ற ஆட்டோ ஓட்டுநரின் மனைவியை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள தாளாப்பள்ளியைச் சேர்ந்தவர் முத்துசாமி(35). ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி சித்ரா(27). இந்த தம்பதிக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், முத்துசாமிக்கும், காமராஜ் நகரைச் சேர்ந்த வெண்ணிலா(30) என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்ததாம். இதுதொடர்பாக தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாம்.  இந்த நிலையில், வெண்ணிலாவின் வீட்டிற்குச் சென்ற சித்ரா, தனது கணவருடன் உள்ள உறவை துண்டித்துக் கொள்ளுமாறு கண்டித்தாராம்.
அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சித்ரா, வெண்ணிலாவை கத்தியால் குத்தினாராம். காயமடைந்த வெண்ணிலாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து சித்ராவை தாலுகா போலீஸார்  கைது செய்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/22/பெண்-கத்தியால்-குத்தி-கொலை-ஆட்டோ-ஓட்டுநரின்-மனைவி-கைது-2793864.html
2793863 தருமபுரி கிருஷ்ணகிரி அமரர் ஊர்தி மீது லாரி மோதல் DIN DIN Sunday, October 22, 2017 04:41 AM +0530 போச்சம்பள்ளியில் லாரி மோதியதில் அரசு அமரர் ஊர்தி ஓட்டுநர் காயமடைந்தார்.
சேலம் அரசு மருத்துவமனையில் இறந்த போச்சம்பள்ளியை அடுத்த கீழ்குப்பத்தைச் சேர்ந்தவரின் உடலை அவரது வீட்டிற்கு கொண்டு வந்த அமரர் ஊர்தி மீது அங்கம்பட்டி அருகே லாரி மோதியதில் ஓட்டுநர் காயமடைந்தார்.
போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  அமரர் ஊர்தி ஓட்டுநர் ஆனந்தன் (30) அளித்த புகாரின் பேரில் போச்சம்பள்ளி காவல் உதவி ஆய்வாளர் வசந்தி வழக்குப் பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரியை தேடி வருகிறார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/22/அமரர்-ஊர்தி-மீது-லாரி-மோதல்-2793863.html
2793862 தருமபுரி கிருஷ்ணகிரி மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி சாவு DIN DIN Sunday, October 22, 2017 04:40 AM +0530 காவேரிப்பட்டணத்தில் மின்சாரம் பாய்ந்ததில் பந்தல் அமைப்பாளர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
காவேரிப்பட்டணம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சம்பத்(50). இவர் அந்தப் பகுதியில் உள்ள தனியார் நிப்பெட் தயாரிக்கும் நிறுவனத்தில் தீபாவளி பண்டிகைக்காக வண்ண அலங்கார மின் விளக்குகளை அமைத்து கொடுத்தாரம்.
இந்த நிலையில், சனிக்கிழமை மின் விளக்குகளை அகற்றும் போது  மின்சாரம் பாய்ந்ததில் சம்பத் பலத்த காயமடைந்தார்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/22/மின்சாரம்-பாய்ந்ததில்-தொழிலாளி-சாவு-2793862.html
2793861 தருமபுரி கிருஷ்ணகிரி ஊழல் ஒழிப்பு வார விழா DIN DIN Sunday, October 22, 2017 04:40 AM +0530 ஊத்தங்கரை யூனியன் வங்கி சார்பில் ஊழல் ஒழிப்பு வார விழா மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் மாதப்பன் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர்  பற்குணன், யூனியன் வங்கி கிளை உதவி மேலாளர் ஜி.ஹிமா சேகர்,வங்கி முதுநிலை கணக்கர் டி.விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  நிகழ்ச்சியில் வங்கி கிளை மேலாளர் ரெ.சார்லஸ் காலின்ஸ்  பேசினார். மாணவர்கள், ஆசிரியர்கள் பலர்  நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.  

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/22/ஊழல்-ஒழிப்பு-வார-விழா-2793861.html
2793860 தருமபுரி கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் பழுதான ரத்த பரிசோதனை கருவி: நோயாளிகள் அவதி DIN DIN Sunday, October 22, 2017 04:40 AM +0530 போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் ரத்த பரிசோதனை கருவி பழுதடைந்துள்ளதால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் நோய் குறிகள் தொடர்பான ஆய்வகப் பரிசோதனை மேற்கொள்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
பரவலாக டெங்கு உள்பட பல்வேறு காய்ச்சல் தொற்றுகள் அதிகரித்து வரும் நிலையில், வட்டார மருத்துவமனையில் ரத்த பரிசோதனை கருவி செயல்படாமல் இருப்பது நோயாளிகளுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போச்சம்பள்ளி அரசு தலைமை மருத்துவர் கந்தசாமி கூறியது:
தேன்கனிக்கோட்டை மருத்துவமனையிலிருந்து பரிசோதனை கருவி கொண்டு வந்ததிலிருந்தே பழுதாகியுள்ளது. அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கிருஷ்ணகிரி மாவட்ட இணை இயக்குநர் அசோக்குமார் கூறியது:
காய்ச்சலைக் கண்டறிய கருவிக்கு ஏற்ப மருந்துகள் மாறுபடும். பழுதாகியுள்ள கருவியில் பயன்படுத்த வேண்டிய தகுந்த மருந்து கிருஷ்ணகிரியிலிருந்து போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படும். மேலும், புதிய கருவி விரைவில் வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/22/போச்சம்பள்ளி-அரசு-மருத்துவமனையில்-பழுதான-ரத்த-பரிசோதனை-கருவி-நோயாளிகள்-அவதி-2793860.html
2793859 தருமபுரி கிருஷ்ணகிரி பணிமனை விபத்து: கிருஷ்ணகிரியில் போக்குவரத்து ஊழியர்கள் அஞ்சலி DIN DIN Sunday, October 22, 2017 04:39 AM +0530 பொறையாரில் அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனை கட்டடம் இடிந்து விழுந்ததில்  உயிரிழந்தோருக்கு கிருஷ்ணகிரியில் அரசு போக்குவரத்துக்கழக ஓட்டுநர்கள், நடத்துநர்கள் அஞ்சலி செலுத்தினர்.
நாகை மாவட்டம், பொறையார் அரசு போக்குவரத்துக்கழகப் பணிமனை கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் ஓட்டுநர்கள், நடத்துநர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.  இந்த நிலையில், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கிருஷ்ணகிரி புறநகர்ப் பேருந்து பணிமனை அருகே தொமுச, சி.ஐ.டி.யூ. ஏ.ஏ.எல்.எல்.எப். ஆகிய தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்வுக்கு தொ.மு.ச பொதுச் செயலாளர் கிருஷ்ணன் தலைமை வகித்தார்.சி.ஐ.டி.யூ குணசேகரன், ஏ.ஏ.எல்.எல்.எப். பொன்னுசாமி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/22/பணிமனை-விபத்து-கிருஷ்ணகிரியில்-போக்குவரத்து-ஊழியர்கள்-அஞ்சலி-2793859.html
2793858 தருமபுரி கிருஷ்ணகிரி சூளகிரி அருகே 4 யானைகள் முகாம் DIN DIN Sunday, October 22, 2017 04:39 AM +0530 சூளகிரி அருகே 4 யானைகள் முகாமிட்டுள்ளதால் விவசாயிகளுக்கு வனத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கர்நாடக மாநிலம், பன்னர்கட்ட வனப் பகுதியில் இருந்து தேன்கனிக்கோட்டை வனப் பகுதி வழியாக வந்த 4 யானைகள் சூளகிரி அருகே போடூர்பள்ளம் கிராமத்திற்குள் வெள்ளிக்கிழமை இரவு நுழைந்தது.
இதனால், இரவு நேரங்களில் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என ஒசூர் கோட்ட வனத் துறையினர் எச்சரித்துள்ளனர்.  யானைகளை விரட்டும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/22/சூளகிரி-அருகே-4-யானைகள்-முகாம்-2793858.html
2793851 தருமபுரி கிருஷ்ணகிரி சுகாதாரத்தை பராமரிக்காத வீடுகளின் குடிநீர், மின் இணைப்புகள் துண்டிக்கப்படும்: ஆட்சியர் DIN DIN Sunday, October 22, 2017 04:36 AM +0530 சுகாதாரத்தை பராமரிக்காத வீட்டின் குடிநீர், மின் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்  சி.கதிரவன் எச்சரித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சலுக்கு காரணமான கொசு புழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அதன் எதிரொலியாக மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு குறைந்து வருகிறது.
கிருஷ்ணகிரி நகராட்சியில் வார்டுகள் வாரியாகச் சென்று ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்,  ஒவ்வொரு வீட்டிலும் உள்ள குடிநீர்த் தொட்டிகளைப் பராமரிக்கும் முறைகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும்,  வீட்டை சுற்றிலும் பொது சுகாதாரத்தை பராமரிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார். குடிநீர்த் தொட்டிகளை சுகாதாரமாகப் பராமரிக்காத வீடுகளின் குடிநீர், மின் இணைப்புகள் துண்டிக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.
ஆய்வின் போது, சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநர் பிரியா ராஜ், கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் சிசில்தாமஸ், சுகாதார ஆய்வாளர் மோகன சுந்தரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஒசூரில் 3 கடைகளுக்கு அபராதம்... டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பொது சுகாதாரம் குறித்து ஒசூரில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், சுகாதாரச் சீர்கேடுகளுடன் காணப்பட்ட  ஒரு வீட்டின் குடிநீர் விநியோகத்தைத் துண்டிக்கவும் ,3 கடைகளுக்கு அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.
சூசூவாடியில் சார்- ஆட்சியர் சந்திரகலா, ஒசூர் நகராட்சி ஆணையர் செந்தில்முருகன் மற்றும் வருவாய்த் துறை, சுகாதாரத் துறை, நகராட்சி துப்புரவு பணியாளர்களுடன் சனிக்கிழமை வீடு வீடாகச் சென்று ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது,  டெங்கு நோய்த் தடுப்பு என்பது ஒவ்வொருவரிடம் கடமையாகும். வீடுகளைச் சுற்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். குறிப்பாக குடிநீர்த் தொட்டிகளில் உள்ள சுத்தமான தண்ணீரில்தான் டெங்கு பரப்பும் ஏடிஎஸ் கொசுக்கள் உற்பத்தியாகிறது.
இதைத் தடுக்க நீர்த் தேக்க தொட்டிகளை நன்கு மூடி வைக்க வேண்டும். வாரம் ஒரு முறை பிளிச்சிங் பவுடர் கொண்டு நன்கு சுத்தப்படுத்த வேண்டும். அதேபோல வீட்டின் அருகே காய்ந்த தேங்காய் ஓடுகள், பயன்படுத்தாத உரல்கள், பிளாஸ்டிக் பொருள்களை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது டெங்கு நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் சுகாதாரத்தை பராமரிக்காத  ஒரு உணவு விடுதி, வாகன பழுது நீக்கம் கடை உள்ளிட்ட மூன்று கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும், சூசூவாடி பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் நீர்த் தேக்கிவைத்த ஒரு வீட்டின் குடிநீர் இணைப்பை துண்டிக்கவும் உத்தரவிட்டார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/22/சுகாதாரத்தை-பராமரிக்காத-வீடுகளின்-குடிநீர்-மின்-இணைப்புகள்-துண்டிக்கப்படும்-ஆட்சியர்-2793851.html
2793439 தருமபுரி கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி மாவட்டவிவசாயிகள் குறைதீர் கூட்டம் DIN DIN Saturday, October 21, 2017 08:07 AM +0530 கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், வரும் அக்.27-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் சனிக்கிழமை வெளியான செய்தி: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் அக்.27-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பங்கேற்று, தங்கள் குறைகளை தெரிவித்து, நிவர்த்தி செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/21/கிருஷ்ணகிரி-மாவட்டவிவசாயிகள்-குறைதீர்-கூட்டம்-2793439.html
2793438 தருமபுரி கிருஷ்ணகிரி குழந்தைகள் உரிமைக்கான விழிப்புணர்வு DIN DIN Saturday, October 21, 2017 08:07 AM +0530 கோட்டையூர் கிராமத்தில் குழந்தைகள் உரிமைக்கான விழிப்புணர்வு நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி வட்டம், கோட்டையூரில் குழந்தைகள் பாதுகாப்பு, பராமரிப்பு, உரிமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு ஊராட்சி செயலர் மாதேஷ் தலைமை வகித்தார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சமூகப் பணியாளர் செந்தில்குமார், மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குழந்தைகளின் உரிமைகள், சிறார் திருமண தடைச் சட்டம், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், பாலியல் வன்கொடுமை பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகளை அவசர தொலைபேசி எண் 1098-க்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும். தொடர்ந்து, குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள், பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. சட்டங்கள் குறித்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/21/குழந்தைகள்-உரிமைக்கான-விழிப்புணர்வு-2793438.html
2793437 தருமபுரி கிருஷ்ணகிரி டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்புத் தெரிவித்து சாலை மறியல் DIN DIN Saturday, October 21, 2017 08:06 AM +0530 ஒசூர் அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்புத் தெரிவித்து, பெண்கள் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகில் உள்ளது தவசகானப்பள்ளி ஊராட்சி. இந்த கிராமத்தில் டாஸ்மாக் கடையைத் திறக்க  மதுப் புட்டிகள் கொண்டு வந்து வருவாய்த் துறையினர் இறக்கி வைத்தனர்.
இதனைப் பார்த்த அப் பகுதி பெண்கள் ஒன்று திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த உத்தனப்பள்ளி போலீஸார், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், டாஸ்மாக் கடையை திறக்கமாட்டோம் என உறுதி அளித்தால் மட்டுமே சாலை மறியல் கைவிடப்படும் என வலியுறுத்தினர்.
அதையடுத்து, டாஸ்மாக் கடை திறக்கப்பட மாட்டாது என  உறுதியளித்து, அங்கு வைக்கப்பட்டிருந்த மதுப்புட்டிகளை வருவாய்த் துறையினர் திருப்பி எடுத்துச் சென்றதால் சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/21/டாஸ்மாக்-கடை-திறக்க-எதிர்ப்புத்-தெரிவித்து-சாலை-மறியல்-2793437.html
2793436 தருமபுரி கிருஷ்ணகிரி ஊத்தங்கரையில் டெங்கு ஒழிப்பு ஆய்வு DIN DIN Saturday, October 21, 2017 08:06 AM +0530 ஊத்தங்கரையில் டெங்கு ஒழிப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் கதிரவன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வில், மாவட்ட ஆட்சியர் மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் இணைந்து ஊத்தங்கரை பேரூராட்சிக்குள்பட்ட எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் சுகாதாரமற்ற முறையில் மழை நீர் தேங்கும்  நிலையில் இருந்த பழைய இரும்புக் கடையை உடனடியாக சரி செய்யக் கோரியும், காந்திநகர்  பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ள புதிதாக கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த வீட்டுக்கு ரூ.10  ஆயிரம் அபராதமும், லாரி உரிமையாளர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த டயரில் மழை நீர்  தேங்கியதால்  அவருக்கு ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்தார். அருகில்  இருந்த தனியார் மழலையர்  பள்ளிக்கு சென்று ஆய்வு செய்த ஆட்சியர், அங்கு மழைநீர் தேங்கியுள்ளதை சுட்டிக் காட்டியும், சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும் கூறி பள்ளிக்கு 20 நாள் விடுமுறை அறிவித்து  உரிமத்தை ரத்து செய்யவும்  உத்தரவிட்டார்.
பள்ளியை மீண்டும் ஆய்வு செய்த பிறகே திறக்க வேண்டும் என கூறினார். ஆய்வில் தனியார் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள்,அலுவலர்கள்,துப்புரவுப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/21/ஊத்தங்கரையில்-டெங்கு-ஒழிப்பு-ஆய்வு-2793436.html
2793435 தருமபுரி கிருஷ்ணகிரி கூட்டுப் பண்ணைத் திட்ட உழவர் ஆர்வலர் குழுக் கூட்டம் DIN DIN Saturday, October 21, 2017 08:06 AM +0530 ஊத்தங்கரையை அடுத்த அனுமன்தீர்த்தத்தில் வேளாண் துறை சார்பில், சிறு, குறு விவசாயிகளுக்கு கூட்டுப்பண்ணை திட்ட உழவர் ஆர்வலர் குழுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) சு.பிரபாவதி தலைமை வகித்தார். துணை வேளாண்மை அலுவலர் மா.சீனிவாசன் முன்னிலை வகித்தார்.
சிறு, குறு விவசாயிகள் கூடுதல் மகசூல், கூடுதல் வருவாய் பெற கொண்டுவரப்பட்டது தான் கூட்டுப்பண்ணை திட்டம். இதன் நோக்கங்கள் சிறு, குறு விவசாயிகளுக்கு உயரிய தொழில்நுட்பங்களையும், நவீன இயந்திரங்களையும் அறிந்து, அவற்றை கூட்டாகப் பயன்படுத்தி உயர் மகசூல், உயர் வருமானம் பெற வைத்தல், உரிய கடன் வசதிகளையும் உயர் சந்தை விலையையும் பெற உதவுதல், விளைந்ததை மதிப்புக் கூட்டி விற்றல், ஒன்று கூடி இடுபொருள்களை வாங்குதல், ஒன்றாக விளைபொருள்களை விற்றல் போன்றவற்றை விவசாயிகள் ஒன்று சேர்ந்து பயன்பெறுமாறு விளக்கி கூறப்பட்டது.
ஒரு பகுதியில் குறிப்பிட்ட பயிரை சாகுபடி செய்யும் ஆர்வமுள்ள 20 விவசாயிகளை ஒன்றிணைத்து ஆர்வலர் குழுவை அமைப்பது முதல் படி. அடுத்து அருகருகே இருக்கும் ஐந்து ஆர்வலர் குழுக்களை ஒருங்கிணைத்து உழவர் உற்பத்தியாளர் குழுக்களை அமைப்பது இரண்டாவது படி. மூன்றாவதாக 10 குழுக்களை ஒன்று சேர்த்து உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்பு நிறுவனமாக உருவாக்கி, அதை ஒரு கம்பெனி போல் செயல்பட வைப்பது தான் இதன் நோக்கம் என வேளாண்மை உதவி இயக்குநர் விளக்கவுரையாற்றினர்.
இக்கூட்டத்தில் தலைவர், செயலர் மற்றும் பொருளர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் இக்கூட்டத்தில் உதவி வேளாண்மை அலுவலர் முனிராஜ் டெங்கு விழிப்புணர்வை விளக்கி கூறினார். இதில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/21/கூட்டுப்-பண்ணைத்-திட்ட-உழவர்-ஆர்வலர்-குழுக்-கூட்டம்-2793435.html
2793434 தருமபுரி கிருஷ்ணகிரி வேன் மரத்தில் மோதியதில் மெக்கானிக் பலி DIN DIN Saturday, October 21, 2017 08:05 AM +0530 சங்ககிரி அருகே வெள்ளிக்கிழமை  அதிகாலை மரத்தில் வேன் மோதியதில்  மெக்கானிக் உயிரிழந்தார்.  
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார் (36).  இவரது மனைவி சிவ சத்தியா. இவர்களுக்கு விஷ்வா,  சுதீப் என்ற இருமகன்கள் உள்ளனர். இந்தநிலையில், அசோக்குமார் சங்ககிரி பகுதியில் தங்கியிருந்து லாரி பட்டறையில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார்.  தீபாவளி பண்டிக்கைக்காக வந்திருந்த அவர், மனைவியை வேனில் அழைத்து சென்று ஊரில்  விட்டுவிட்டு மீண்டும் சங்ககிரி நோக்கி இரு குழந்தைகளுடன் வந்துள்ளார். அப்போது ராஜாமணி தோட்டம் பகுதியில் எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த புளியமரத்தின் மீது வேன் மோதியதில் பலத்த  காயமடைந்த அசோக்குமார்  சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார்.  இரு குழந்தைகளும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/21/வேன்-மரத்தில்-மோதியதில்-மெக்கானிக்-பலி-2793434.html
2793433 தருமபுரி கிருஷ்ணகிரி சிகிச்சைக்கு வந்த முதியவர் மருத்துவமனை எதிரிலேயே சாவு DIN DIN Saturday, October 21, 2017 08:05 AM +0530 போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த முதியவர் மயங்கி விழுந்ததில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
போச்சம்பள்ளி அரசு பொது மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். வெள்ளிக்கிழமை நண்பகல் உடல்நலம் சரியில்லாமல் இருந்த வீரமலை புதூர் கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் (82), மருத்துவரை பார்க்க தனது பேரன் பரசுராமனுடன் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
தனது தாத்தா குடிக்க தண்ணீர் வேண்டுமென கேட்டுள்ளார். உடனே, மருத்துவமனை வளாகத்தில் அவரது தாத்தாவை உட்கார வைத்துவிட்டு, தண்ணீர் கொண்டுவர மருத்துவமனையில் உள்ள குடிநீர் குழாய்க்கு சென்றுள்ளார். அங்கு தண்ணிர் இல்லாததால், கடையில் வாங்கி வர சென்று திரும்பிய பேரன் தனது தாத்தாவின் காது மற்றும் வாயில் ரத்தம் வெளிவந்த வண்ணம் மருத்துவமனை வளாகம் எதிரே சுருண்டு விழுந்துக் கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில், அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/21/சிகிச்சைக்கு-வந்த-முதியவர்-மருத்துவமனை-எதிரிலேயே-சாவு-2793433.html
2793432 தருமபுரி கிருஷ்ணகிரி அக்டோபர் 21 மின் தடை DIN DIN Saturday, October 21, 2017 08:04 AM +0530 கிருஷ்ணகிரி மின்கோட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால், சனிக்கிழமை (அக்.21) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என செயற் பொறியாளர் எஸ்.கோவிந்தராஜ் தெரிவித்தார்.
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: கிருஷ்ணகிரி நகர், ராஜாஜி நகர், வீட்டு வசதி வாரியம் எண்-1, எண்-2, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பழையபேட்டை, குந்தாரப்பள்ளி, பையனப்பள்ளி, கொண்டேப்பள்ளி, பில்லனகுப்பம், சாமந்தமலை, தளவாப்பள்ளி, நெடுமருதி, கே.திப்பனப்பள்ளி, பி.கொத்தூர், வேப்பனஅள்ளி, மணவாரனப்பள்ளி, எம்.சி.பள்ளி, வரட்டனப்பள்ளி, எம்.டி.வி. நகர், நாரலப்பள்ளி, போத்திநாயனப்பள்ளி, மகாராஜகடை, சுண்டம்பட்டி, எலத்தகிரி, ஒரப்பம், மருதேப்பள்ளி, கந்திகுப்பம், மலையாண்டஅள்ளி, அலப்பட்டி, கிருஷ்ணகிரி அணை, திம்மாபுரம், கூரம்பட்டி, மிட்டப்பள்ளி, மாதேப்பட்டி, சூலகுண்டா, செம்படமுத்தூர், பெல்லாரம்பள்ளி, கூலியம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.
ஒசூரில்
ஒசூரில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை நடைபெறுவதால், மின்நிறுத்தம் செய்யப்படுகிறது என ஒசூர் மின் வாரிய செயற்பொறியாளர் குமார் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டம் ஒசூர் கோட்டத்தைச் சேர்ந்த ஒசூர் துணை மின் நிலையத்தில், சனிக்கிழமை அத்தியாவசிய மின் சாதன பராமாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
ஒசூர் காந்தி சாலை, பேருந்து நிலையம், ராம்நகர், ஸ்ரீநகர், காமராஜ் காலனி, அண்ணா நகர், அப்பாவு நகர், முனீஸ்வர் நகர், துவாரகா நகர், சிவகுமார் நகர், கொத்தூர்,  அசோக் லேலண்ட் யூனிட் 1, சிப்காட் ஹவுசிங் காலனி (பகுதி), நேதாஜி நகர், பாலாஜி நகர், ஆனந்த நகர், சாந்தபுரம், அரசனட்டி, சூர்யா நகர், அண்ணாமலை நகர், கிருஷ்ணா நகர், அலசநத்தம், நரசிம்மா காலனி, டி.வி.எஸ்.நகர், மத்திகிரி, அந்திவாடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/21/அக்டோபர்-21-மின்-தடை-2793432.html
2793431 தருமபுரி கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரியில் அக்.25-இல்  மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் DIN DIN Saturday, October 21, 2017 08:04 AM +0530 கிருஷ்ணகிரியில் அக்.25-ஆம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சிவரஞ்சன் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், அக்.25-ஆம் தேதி காலை 9 மணிக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான குழுப் போட்டிகள், தடகளப் போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் மாவட்ட மாற்றுத் திறனாளி
கள் அலுவலகம் இணைந்து நடத்துகின்றன.
அதன்படி, கால் ஊனமுற்றோருக்கான பிரிவில் ஒரு கால் உனமுற்றோருக்கு 50மீ. ஓட்டம், குண்டு எறிதல், இரு கால் ஊனமுற்றோருக்கு 100 மீ. சக்கர நாற்காலி ஓட்டம், கை ஊனமுற்றோருக்கு 100 மீ. ஓட்டம் மற்றும் குழுப் போட்டிகளாக இறகுப் பந்து, மேசைப் பந்து ஆகிய போட்டிகள் நடத்தப்படுகின்றன.
பார்வையற்றோருக்கான பிரிவில் மிகக் குறைந்த பார்வையற்றோருக்கு 50 மீ. ஓட்டமும், நின்ற நிலையில் தாண்டுதல் போட்டியும், முற்றிலும் பார்வையற்றோருக்கு 50 மீ. ஓட்டம் மற்றும் குண்டு எறிதல் ஆகிய போட்டிகளும், குழுப் போட்டியாக அடாப்டட் வாலிபால் போட்டியும் நடைபெறுகிறது.
மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான பிரிவில், புத்தி சுவாதீனம் முற்றிலும் இல்லாதவர்களுக்கு 50மீ. ஓட்டமும், புத்தி சுவாதினம் நல்ல நிலையில் இருப்பவர்களுக்கு 100 மீ. ஓட்டமும், சாப்ட் பால் போட்டியும், மூளை நரம்பு பாதிப்புற்றோருக்கு நின்ற நிலையில் தாண்டுதல் மற்றும் குழுப் போட்டியாக எறிப் பந்து போட்டியும் நடத்தப்படுகிறது.
காது கேளாதோருக்கான பிரிவில் 100 மீ, 200 மீ, 400 மீ. ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகளும், குழுப் போட்டியாக கபாடி போட்டி ஆகியன நடத்தப்படுகின்றன.
தடகளப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களுக்கும், குழுப் போட்டியில் முதல் இரண்டு இடங்களைப் பெறுபவர்களுக்கும் பரிசுப் பொருள்கள் வழங்கப்படுவதுடன், சான்றிதழ்களும் வழங்கப்படும்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/21/கிருஷ்ணகிரியில்-அக்25-இல்--மாற்றுத்-திறனாளிகளுக்கான-விளையாட்டுப்-போட்டிகள்-2793431.html
2792815 தருமபுரி கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி அணையின் நீர்வரத்து விநாடிக்கு 1,497 கன அடியாக குறைந்தது DIN DIN Friday, October 20, 2017 08:05 AM +0530 கிருஷ்ணகிரி அணையின் நீர்வரத்து விநாடிக்கு 1,497 கன அடியாக வியாழக்கிழமை குறைந்தது.
கர்நாடகம், ஆந்திர மாநிலங்களிலும்,  கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதன் எதிரொலியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வழியாக பாயும் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக உயர்ந்தது.
இதனால், கிருஷ்ணகிரி அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணகிரி அணை முழு கொள்ளவை எட்டியது. இதையடுத்து, அணையிலிருந்து உபரி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி அணையிலிருந்து கடந்த இரு நாள்களுக்கு முன் அதிகபட்சமாக விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக மழை பெய்யவில்லை. இதனால், அணையின் நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. கிருஷ்ணகிரி அணையின் நீர்வரத்தானது வியாழக்கிழமை காலை 7 மணிக்கு விநாடிக்கு 2,349 கன அடியாகவும், நீர் வெளியேற்றானது விநாடிக்கு 1,856 கன அடியாகவும் இருந்தது.
அதேபோல், மாலை 4 மணி அளவில் நீர்வரத்தானது விநாடிக்கு 2,220 கன அடியாகவும், வெளியேற்றானது விநாடிக்கு 1,497 கன அடியாகவும் குறைந்தது. நீர்வரத்தும், வெளியேற்றமும் குறைந்த நிலையில், அணையின் நீர் இருப்பானது 50.40 அடியிலிருந்து, 50.60 அடியாக உயர்ந்தது. அணையின் மொத்த நீர்மட்டம் 52 அடி ஆகும்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/20/கிருஷ்ணகிரி-அணையின்-நீர்வரத்து-விநாடிக்கு-1497-கன-அடியாக-குறைந்தது-2792815.html
2791634 தருமபுரி கிருஷ்ணகிரி விபத்தில்லா தீபாவளி கொண்டாட்டம் குறித்த செயல் விளக்கம் DIN DIN Tuesday, October 17, 2017 06:26 AM +0530 போச்சம்பள்ளி எம்ஜிஎம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் எம்ஜிஎம் குளோபல் சிபிஎஸ்இ பள்ளியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து போச்சம்பள்ளி தீயணைப்பு நிலையம் மூலம் விழிப்புணர்வு விளக்க உரை திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளித்  தலைவர் ஜி.பி.பன்னீர் தலைமை வகித்தார். பள்ளித் தாளாளர் என்.மாதவி பன்னீர் முன்னிலை வகித்து நிகழ்ச்சியை தொடக்கிவைத்தார். டிரஸ்ட் உறுப்பினர்கள் பி.செந்தூரி,  பி.யோகதர்ஷினி,  பி.கல்கனி ஆகியோர் கலந்து கொண்டனர்.
 தீயணைப்புத் துறை ஊழியர்களுக்கு பள்ளி இயக்குநர் பி.ரகுவீரன் பொன்னாடை அணிவித்தார்.  பள்ளி முதல்வர் கே.ராஜ்குமார் வரவேற்றார். போச்சம்பள்ளி தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் ப.திராவிடமணி விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது  குறித்து செயல்விளக்கம் அளித்தனர். இதையடுத்து மாணவர்களிடம் வினாக்கள் கேட்கப்பட்டு, அதற்கு சரியான விடை அளித்த பேரின்பவள்ளி,  யாக்ஷினி,  தர்ஷன், அட்சயகுமார்,  ஜெயசாத்வி ஆகிய மாணவர்களுக்கு பள்ளித் தலைவர் ஜி.பி.பன்னீர் மற்றும் என்.மாதவி பன்னீர் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர் . நிறைவாக பள்ளி துணை முதல்வர் எஸ்.செல்வராஜ் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள் சகீனா,  மேனகா மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியைகள் செய்திருந்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/17/விபத்தில்லா-தீபாவளி-கொண்டாட்டம்-குறித்த-செயல்-விளக்கம்-2791634.html
2791633 தருமபுரி கிருஷ்ணகிரி "ஒலி மாசு, புகையில்லா தீபாவளி கொண்டாட வேண்டும்' DIN DIN Tuesday, October 17, 2017 06:26 AM +0530 ஒலி  மாசு, புகையில்லா தீபாவளி கொண்டாட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டில் தீபாவளி அன்று பட்டாசுகளை வெடித்து கொண்டாடுவது வழக்கம். இந்தப் பண்டிகை மற்றும் விழாக்காலங்களில் பட்டாசுகளை வெடிப்பதால் எழும் ஒலி தாற்காலிக செவிட்டுத் தன்மையையும், தொடர் ஓசை நிரந்தரமான செவிட்டுத் தன்மையையும் ஏற்படுத்தக் கூடிய வாய்ப்பு உள்ளது.  கட்டுப்பாடற்ற அதிக ஒலி,  ஒளியுடன் கூடிய வெடிகளையும்,  காலவரையின்றி பாதுகாப்பு அற்றவகையில் பட்டாசுகள் வெடிப்பதைக் கருத்தில் கொண்டும் பொது நல வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது.
இதையடுத்து, காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையில் வெடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அதிக ஒலி மாசு, அதிக ஒலி,  ஒளியால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையில் ஒலி எழுப்பக் கூடிய பட்டாசுகளை கண்டிப்பாக வெடிக்கக் கூடாது. விதிமுறைகளைக்
கடைப்பிடிக்காமல் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் பட்டாசுகளை வாங்கக் கூடாது.  எனவே, பொதுமக்கள் அனைவரும் அவரவர் குடும்பம், நண்பர்கள் மற்றும் அண்டை அயலாருடன் சாதி, மத பேதமின்றி பாதுகாப்பாகவும்,  ஒலி மற்றும் காற்று மாசற்ற சுற்றுச்சூழலுக்கு உகந்து  தீபாவளியை அமைதியாகக் கொண்டாடி மகிழும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/17/ஒலி-மாசு-புகையில்லா-தீபாவளி-கொண்டாட-வேண்டும்-2791633.html
2791632 தருமபுரி கிருஷ்ணகிரி லேப் டெக்னீஷியன்கள் நலச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் DIN DIN Tuesday, October 17, 2017 06:26 AM +0530 கிருஷ்ணகிரியில் பாரா மெடிக்கல் லேப் டெக்னீஷியன் கல்வி மற்றும் நலச் சங்கம் சார்பில் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அந்த சங்கத்தின் மாநில துணைத் தலைவர் குழுதன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் செல்வம், , சி.ஐ.டி.யூ. மாவட்டத் தலைவர் ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
லேப் அறிக்கையில் லேப் டெக்னீஷியன்கள் கையெழுத்திடக் கூடாது என்ற மெடிக்கல் கவுன்சில் உத்தரவை வாபஸ் பெற வேண்டும். தனியார் மருத்துவத் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும். அரசுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். ரத்தப் பரிசோதனைக் கூடங்களுக்கு அரசு அங்கீகாரம் அளிக்க வேண்டும்.
லேப் டெக்னீஷியன் கவுன்சிலை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். மருத்துவ ஆய்வக நுட்புனர்களுக்கு இலவசமாக மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் முழக்கங்களை எழுப்பினர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/17/லேப்-டெக்னீஷியன்கள்-நலச்-சங்கத்தினர்-ஆர்ப்பாட்டம்-2791632.html
2791631 தருமபுரி கிருஷ்ணகிரி ஊத்தங்கரையில் முப்பெரும் விழா DIN DIN Tuesday, October 17, 2017 06:25 AM +0530 ஊத்தங்கரை பேருராட்சியில்  உலக உணவு தினம்,  வறுமை ஒழிப்பு தினம்,  தீபாவளி கொண்டாட்டம்  ஆகிய முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு  அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் கொ.மாரிமுத்து  தலைமை வகித்தார்.  மருத்துவர் சந்திரமோகன் முன்னிலை வகித்தார். உதவித் தலைமை ஆசிரியர்  கு.கணேசன் வரவேற்றார்.  துப்புரவுப்  பணியாளர்களுக்கு அனைத்து வியாபாரிகள் சங்க செயலர் ர.உமாபதி - உமாராணி தம்பதியர்  புடவை,  பேண்ட்,  சர்ட் வழங்கினர்.  ஆர்கே ஓட்டல் எம்.ராஜா இனிப்பு, காரம் வழங்கினார். அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.செங்கோடன்,  தொண்டு நிறுவன நிர்வாகிகள் எம்.லட்சுமி,  கே.சின்னத்தாய்  சி.உமாமகேஸ்வரி, ம.ரமா,  பேருராட்சி அலுவலர்கள் செண்பகப்பாண்டியன், ஆர்.பெரியசாமி, எம்.பழனி மற்றும் துப்புரவுப்  பணியாளர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக அனைவரும் தீபாவளி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/17/ஊத்தங்கரையில்-முப்பெரும்-விழா-2791631.html
2791630 தருமபுரி கிருஷ்ணகிரி 15 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பும் ஒசூர் ராமநாயக்கன் ஏரி DIN DIN Tuesday, October 17, 2017 06:25 AM +0530 கடந்த 15 ஆண்டுகளுக்கு பிறகு  ஒசூர் ராமநாயக்கன் ஏரி மழை நீரால் நிரம்பி வருகிறது.
ஒசூரில் மலையில் அருள்மிகு மரகதாம்பாள் சமேத ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் கோயில் உள்ளது. கடந்த 2002-இல் கும்பாபிஷேக விழாவுக்கு முன்பாக கோயில் வளாகத்தில் இருந்த பெரிய நந்தி சிலை அகற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 15 ஆண்டுகளாக ஒசூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போதிய மழை இன்றி பாதிக்கப்பட்டதாக  பொதுமக்கள் மத்தியில் கூறப்பட்டது.
மேலும்,  ராமநாயக்கன் ஏரியும் நீரின்றி வறண்டு கிடந்தது. இதனால் ஒசூரில் ஆழ்துளைக் கிணறுகளின் நிலத்தடி நீர்மட்டும் 1000 அடிக்கும்  கீழாகச் சென்றது. கெலவரப்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து ராமநாயக்கன் ஏரியை நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் நிகழாண்டு ஒசூர் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் கோயிலுக்கு முன்னாள் எம்எல்ஏ  கே.ஏ.மனோகரன் தலைமையில் மீண்டும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தின் போது 15 ஆண்டுகளுக்கு முன்பு அகற்றப்பட்ட நந்தி பெருமான் சிலை மீண்டும் கோயில் வளாகத்தில்
பிரதிஷ்டை செய்யப்பட்டது. மேலும் காசி விஸ்வநாதர் சுவாமி சிலைக்கும் தனி சன்னிதி கட்டப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக ஒசூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து ஒசூர் ராமநாயக்கன் ஏரியில் மழை நீர் நிரம்பி வருகிறது. இதனால்  நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. சில பகுதிகளில் ஆழ்துளைக் கிணறுகளில்  மோட்டாரை இயக்காமலே மழைநீர் ஊற்று எடுத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  
இதையடுத்து, ஒசூர் ராமநாயக்கன் ஏரி நிரம்பி வருவதால் ஏரியில் இருந்து வெளியேறும் ராஜகால்வாய் பகுதியை உள்ளாட்சி நிர்வாகத்தினர் திங்கள்கிழமை ஜேசிபி இயந்திரம் மூலம் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/17/15-ஆண்டுகளுக்கு-பிறகு-நிரம்பும்-ஒசூர்-ராமநாயக்கன்-ஏரி-2791630.html
2791629 தருமபுரி கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி - செல்லம்பட்டி சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல் DIN DIN Tuesday, October 17, 2017 06:25 AM +0530 போச்சம்பள்ளி - செல்லம்பட்டி இடையே  தார்ச்சாலை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தினர்.
போச்சம்பள்ளியிலிருந்து செல்லம்பட்டி   8 கி.மீ. தூரத்தில் உள்ளது. இந்த வழியில் 25-க்கும்  மேற்பட்ட குக்கிராமங்கள்,  முக்கிய அலுவலகங்கள் அமைந்துள்ளன.
இச்சாலை வழியாக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக  காணப்படுவதால் பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்துக்கு வருவதில்லை என்று பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். இதுகுறித்து ஊர் மக்கள் பேருந்து ஓட்டுநர்களிடம் புகார் தெரிவித்தபோது,  சுமார்  5 கி.மீ. தூரம் வரை சாலை பழுதடைந்துள்ளதால் பேருந்துகளின் டயர்கள் பஞ்சராகிவிடுதவதால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.  மேலும், தற்போது மழை பெய்துள்ளதால் இருசக்கர வாகனங்கள், டெம்போக்கள் செல்லமுடியாமல் சாலை சேரும், சகதியுமாக உள்ளது. இந்தச் சாலையை புதிதாக அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் நீண்டநாள் கோரிக்கை விடுத்து மனு அளித்துள்ளனர்.
எனவே புதிய தார்ச் சாலை அமைக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/17/போச்சம்பள்ளி---செல்லம்பட்டி-சாலையை-சீரமைக்க-பொதுமக்கள்-வலியுறுத்தல்-2791629.html
2791628 தருமபுரி கிருஷ்ணகிரி ஒசூர் நகராட்சியுடன் தொரப்பள்ளியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு DIN DIN Tuesday, October 17, 2017 06:25 AM +0530 ஒசூர் நகராட்சியுடன் தொரப்பள்ளி ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒசூர் அருகேயுள்ள  தொரப்பள்ளி அக்ரஹாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனு விவரம்:  தொரப்பள்ளி ஊராட்சியில் 1,500 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களின் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த தொழில்களாகும்.  
ஒசூர் நகராட்சி,  மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்படும் நிலையில் தொரப்பள்ளி ஊராட்சி,  ஒசூர் நகராட்சியுடன் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
இதுகுறித்து கடந்த  2-ஆம் தேதி நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தின் நகலை இத்துடன் இணைத்துள்ளோம்.
எனவே,  தொரப்பள்ளி ஊராட்சியை ஒசூர் நகராட்சியுடன் இணைப்பதைக் கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/17/ஒசூர்-நகராட்சியுடன்-தொரப்பள்ளியை-இணைக்க-எதிர்ப்பு-தெரிவித்து-ஆட்சியரிடம்-மனு-2791628.html
2791627 தருமபுரி கிருஷ்ணகிரி வடமாநில இளைஞர் கொலையில் 3 பேர் கைது DIN DIN Tuesday, October 17, 2017 06:24 AM +0530 மத்திகிரி அருகே  வட மாநில இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
உத்தரகண்ட்  மாநிலத்தைச் சேர்ந்தவர் அலுக் ( 27). இவர் ஒசூர் கர்னூரில் தங்கி பொம்மண்டப்பள்ளியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த அக். 6-ஆம் தேதி இரவு அவர் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மத்திகிரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஆனேக்கல் அருகேயுள்ள மாயசந்திரத்தைச் சேர்ந்த சுனில் (22), பெரிய மதகொண்டப்பள்ளியைச் சேர்ந்த 17 மற்றும் 18 வயதுடைய இருவர் உள்பட  5 பேர் சேர்ந்து அலுக்கை கொலை செய்தது தெரிய வந்தது.  இதையடுத்து சுனில், மற்றும் 17, 18  வயதுடைய இருவர் என மொத்தம் 3 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கைதானவர்களிடம்  கொலை தொடர்பாக  போலீஸார் நடத்திய விசாரணையில், சுனில் உள்ளிட்ட 5 பேரும் பொம்மண்டப்பள்ளி செல்லும் சாலையோரத்தில் காரில் வந்து மது அருந்தியுள்ளனர். அப்போது அந்த வழியாக நடந்து சென்ற அலுக்கை  வழிமறித்து பணம் கேட்டுள்ளனர். அவர் பணம் தர மறுத்ததால் ஏற்பட்ட பிரச்னையில் 5 பேரும் சேர்ந்து அவரைத் தாக்கி கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரிய வந்தது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/17/வடமாநில-இளைஞர்-கொலையில்-3-பேர்-கைது-2791627.html
2791054 தருமபுரி கிருஷ்ணகிரி கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்றச் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம் DIN DIN Monday, October 16, 2017 06:44 AM +0530 ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டையில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்றச் சங்கம்  சார்பில் மாவட்ட செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு  மாநிலத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாநிலப் பொருளர் அழகிரிசாமி மாநில அமைப்புச் செயலர் அழகர்சாமி, மாநிலச் செயலர் பரமசிவம்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக, மாவட்டச் செயலர் பூபதி வரவேற்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் ஜார்ஜ், முன்னாள் மாநிலச் செயலர் சுந்தரவடிவேல், முன்னாள் மாநில பிரசார செயலர் தில்லையப்பன், முன்னாள் மாநிலச் செயலர் சிவராஜ் ஆகியோர் சங்க வளர்ச்சி  குறித்து பல்வேறு கருத்துக்களை கூறினர்.
செயற்குழுவில்  அடிப்படை ஊதியத்தை மாற்றி அமைக்க வேண்டும். பணிபுரியும் கிராமத்திலேயே தங்கி பணிபுரிய வேண்டும் என்ற ஆணையை மாற்றி அமைக்க வேண்டும், கணினி சான்று வழங்குவதில் ஏற்படும் அரசு செலவினங்களை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன,
இதில், ஊத்தங்கரை  வட்டாரத் தலைவர் சீனிவாசன் உள்பட 70-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள்  கலந்துகொண்டனர். கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க வட்டாரச் செயலர் ஆசைதம்பி நன்றி கூறினார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/16/கிராம-நிர்வாக-அலுவலர்-முன்னேற்றச்-சங்க-மாவட்ட-செயற்குழுக்-கூட்டம்-2791054.html
2791053 தருமபுரி கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரியில் வேலைவாய்ப்பு முகாம் DIN DIN Monday, October 16, 2017 06:44 AM +0530 கிருஷ்ணகிரியில் மகளிர் மேம்பாட்டு நிறுவனம், ஊரக வாழ்வாதார இயக்கம்  இணைந்து சனிக்கிழமை நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் 815 இளைஞர்கள் பங்கேற்றனர்.

கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமை மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தொடங்கிவைத்தார். தமிழ்நாடு வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர் சந்திரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முகாமில் எல் அண்டு டி, சி.எப்.ஐ. ஸ்ரீ குமரன் தங்க மாளிகை, எல்.ஐ.சி., அப்பல்லோ கணினி, ஆயத்த ஆடை நிறுவனங்கள் உள்பட 25 நிறுவனத்தினர் பங்கேற்று தங்களுக்குத் தேவையான இளைஞர்களைத் தேர்வு செய்தனர். தேர்வு பெற்றவர்களுக்கு ஆங்கில மொழித் திறன், தகவல் தொழில் நுட்பம் கூடிய தொழில் பயிற்சி, இலவச உறைவிட பயிற்சி, வங்கி கடன் பெற வசதிகள், பயிற்சி முடித்தபிறகு தொழில் அமைக்க வழிகாட்டல் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/16/கிருஷ்ணகிரியில்-வேலைவாய்ப்பு-முகாம்-2791053.html
2791052 தருமபுரி கிருஷ்ணகிரி அகரம் பள்ளியில் மழைநீர் தேக்கம்: மாணவர்கள் அவதி DIN DIN Monday, October 16, 2017 06:44 AM +0530 அகரம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கடந்த ஒரு வாரமாக தேக்கமடைந்துள்ள மழைநீரால் மாணவர்கள் அவதிக்குள்ளாகினர்.
போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக மழை பெய்து வருகிறது. இதனால், குளம், குட்டைகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இந்த நிலையில், சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீர் போதிய வடிகால் இல்லாததால், குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் உள்ள பள்ளங்களில் தேக்கமடைந்துள்ளது. அகரம் அரசு மேல் நிலைப்பள்ளியில் பள்ளியின் நுழைவு வாயிலிலிருந்து விளையாட்டு மைதானம், பள்ளி வளாகம் முழுவதும் குளம் போல மழை நீர் தேங்கியுள்ளது. இதனால், மாணவர்கள் பள்ளிகளுக்குள் செல்வதில் மிகுந்த சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். மேலும், இந்த தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி பொது சுகாதாரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இகுகுறித்து உள்ளாட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மொரப்பூர் கொங்கு கல்லூரியில் டெங்கு விழிப்புணர்வு முகாம்
அரூர், அக். 15 : மொரப்பூர் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமை கொங்கு கல்வி அறக்கட்டளையின் தலைவர் சி.முத்து தொடக்கிவைத்தார். டெங்கு நோய் பரவும் முறைகள், தடுப்பு நடவடிக்கைகள்,  டெங்கு நோய் தொடர்பாக வீடுகள் மற்றும் கிராமங்களில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அரூர் வட்டாட்சியர் அ.செல்வராஜ் விளக்கினார்.  
இதில், கொங்கு கல்வி அறக்கட்டளையின் செயலர் ரா.பன்னீர்செல்வம், பொருளர் பொ.காந்தி, தாளாளர்கள் செ.தீர்த்தகிரி, க.இளங்கோ, கல்லூரி முதல்வர் நா.குணசேகரன், துணை முதல்வர் க.சீனிவாசன், கல்லூரி மாணவியர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/16/அகரம்-பள்ளியில்-மழைநீர்-தேக்கம்-மாணவர்கள்-அவதி-2791052.html
2791051 தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நிலவேம்பு கசாயம் வழங்கப்படுமா? DIN DIN Monday, October 16, 2017 06:43 AM +0530 கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டெங்கு தொற்று அதிகரித்துள்ளதால், ஏற்கெனவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் துறை வாரியான கூட்டங்கள் மற்றும் மக்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. தற்போது,  இந்த உதவி நிறுத்தப்பட்டுள்ளது.
நாள்தோறும் பல்வேறு கோரிக்கைகளுக்காக நூற்றுக்கணக்கானோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகின்றனர்.  டெங்கு தீவிரம் அதிகரித்துள்ளதால், ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் நிலவேம்பு கசாயம் மீண்டும் விநியோகிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/16/மாவட்ட-ஆட்சியர்-வளாகத்தில்-நிலவேம்பு-கசாயம்-வழங்கப்படுமா-2791051.html
2791050 தருமபுரி கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி அணையில் 7 மதகுகள் வழியாக உபரிநீர் திறப்பு DIN DIN Monday, October 16, 2017 06:43 AM +0530 கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையிலிருந்து 4 பிரதான மதகுகள், 3 சிறிய மதகுகள் என மொத்தம் 7 மதகுகள் வழியாக தென்பெண்ணை ஆற்றில் உபரி நீர் திறந்துவிடப்படுகிறது.
கர்நாடக மாநிலம், பெங்களூரு மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருதால் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்னதாகவே அணை முழுக் கொள்ளவை எட்டியது. தொடர்ந்து அதே நிலை நீடிக்கிறது.
இந்த நிலையில், தென்பெண்ணை ஆற்றின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளான பெங்களூரு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், தென்பெண்ணை ஆற்றின் உபநதிகளான சின்னாறு, மார்கண்டயன் நதி வழியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி நீர்வரத்து விநாடிக்கு 7,552 கன அடியாக இருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு  7,799 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
பகலில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. மாலை 4 மணி நிலவரப்படி விநாடிக்கு 9,721 கனஅடியாக நீர்வரத்து இருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 9,721 கன அடி உபரி நீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.
கிருஷ்ணகிரி அணையில் உள்ள பிரதான மதகுகள் 8, சிறிய அளவிலான மதகுகள் 3 என 11 மதகுகள் உள்ள நிலையில், தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் பிரதான மதகுகள் எண் 1,2,3,5 ஆகிய 4 மதகுகள் சிறிய மதகுகள் 3 என 7 மதகுகள் வழியாக முதல்முறையாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/16/கிருஷ்ணகிரி-அணையில்-7-மதகுகள்-வழியாக-உபரிநீர்-திறப்பு-2791050.html
2791049 தருமபுரி கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரியில் முன்னாள் படைவீரர்களுக்கான குறைதீர் கூட்டம் DIN DIN Monday, October 16, 2017 06:43 AM +0530 கிருஷ்ணகிரியில் அக்.16-ஆம் தேதி முன்னாள் படைவீரர்களுக்கான குறை தீர் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர் செண்பகவல்லி அண்மையில் வெளியிட்ட செய்தி: கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், அவர்களைச் சார்ந்தோர்கள், தற்போது பணியாற்றும் படைவீரர்களை சார்ந்தோர்களுக்கான காலாண்டு சிறப்பு குறை தீர் தீர்க்கும் கூட்டம், அக்.16-ஆம் தேதி காலை 10 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறுகிறது.  எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்கள், படைவீரர்களின் சார்ந்தோர்கள் இந்த குறை தீர் கூட்டத்தில் பங்கேற்று தங்களது குறைகளை விண்ணப்பமாக சமர்ப்பித்து பயனடையலாம்.  மேலும், தங்களது விண்ணப்பத்தை இரண்டு பிரதிகளில் படைவிலகல் சான்று மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
எனவே, கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் அன்னாரைச் சார்ந்தோர்கள் அக்.16-ஆம் தேதி காலை 9 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/16/கிருஷ்ணகிரியில்-முன்னாள்-படைவீரர்களுக்கான-குறைதீர்-கூட்டம்-2791049.html
2791048 தருமபுரி கிருஷ்ணகிரி பேரிடர் தணிக்கும் நாள் விழிப்புணர்வு DIN DIN Monday, October 16, 2017 06:42 AM +0530 கிருஷ்ணகிரி நாளந்தா சர்வதேச பொதுப் பள்ளியில் பேரிடர் தணிக்கும் நாள் விழிப்புணர்வு நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் சாலை விபத்து, தீ விபத்த போன்ற விபத்துகளில் இருந்து பாதுகாப்பது, விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவது, அவர்களுக்கு அளிக்க வேண்டிய முதலுதவிகள் குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்வுக்கு  பள்ளிகளின் நிறுவனர் கொங்கரசன் தலைமை வகித்தார்.  
கிருஷ்ணகிரி நாளந்தா சர்வ தேச பொதுப் பள்ளி மாணவ, மாணவிகள், நாளந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/16/பேரிடர்-தணிக்கும்-நாள்-விழிப்புணர்வு-2791048.html
2790208 தருமபுரி கிருஷ்ணகிரி ஒசூர் அருகே  புதிய தொழில்நுட்பம் மூலம் நிலஅளவை ஒசூர், DIN Saturday, October 14, 2017 10:04 AM +0530 ஒசூர் அருகே புதிய தொழில்நுட்பக் கருவிகளை கொண்டு மறு நிலஅளவைப் பணிகளை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,   இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தனர். 
இந் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன்,  மாநில நிலஅளவை மற்றும் நில வரித் திட்ட இயக்குநர் ரவிக்குமார்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக,  கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  அமைச்சர்கள் உதயகுமார் மற்றும்  பா.பாலகிருஷ்ணா ரெட்டி தலைமையில் வருவாய்த் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மக்கள் தொடர்பு திட்ட முகாம், பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்,  அம்மா திட்ட முகாம்,  பேரிடர் மேலாண்மை நிவாரண நிதி வழங்குதல்,  உழவர் பாதுகாப்புத் திட்டம் ஆகியன கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படுவது குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பிறகு அமைச்சர் உதயகுமார் பேசியது:  மாநில அளவில் புதிய தொழில்நுட்பக் கருவிகளை கொண்டு மறு நிலஅளவைப் பணிகள் நவீனமயமாக்கப்பட்டுள்ளன.
உலகளவில் அமெரிக்க நாட்டுக்கு அடுத்து, இந்தியாவில் மாநிலம் தழுவிய அளவில் தமிழகத்தில்தான் முதன் முதலாக "டிஜிபிஎஸ்' எனும் நவீன நில அளவை கருவிகளைக் கொண்டு மறு நிலஅளவைப் பணிகள் செய்யப்பட உள்ளன.
அதன் அடிப்படையில், முதல்கட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் வட்டம் சென்னசந்திரம் கிராமத்தில் 390.40 ஏக்கர் நிலமும்,   திம்மசந்திரம் கிராமத்தில் 620 ஏக்கர் நிலமும்,  இளையசந்திரம் கிராமத்தில் 364 ஏக்கர் நிலமும்,  மாரசந்திரம் கிராமத்தில் 518 ஏக்கர் நிலமும், பைரசந்திரம் கிராமத்தில் 787 ஏக்கர் நிலமும், உளியாளம் கிராமத்தில் 672 ஏக்கர் நிலம் என மொத்தம் 3,353 ஏக்கர்  பரப்பளவு நிலம் நவீன கருவிகளைக் கொண்டு நிலஅளவைப் பணி மேற்கொள்ளப்படவுள்ளன.
நவீன நிலஅளவை கருவி மூலம் நிலஅளவைப் பணிகள் மேற்கொள்ளும் போது துல்லியமாக கணக்கிடப்படும்.  இப்பணிகளில் எந்த தவறும் நடைபெறுவதற்கான சாத்தியமில்லை.  நிலஅளவைப் பணிகள் மேற்கொள்ளும் போது சென்னை தலைமையிடத்திலிருந்து நேரடியாக கண்காணிக்க முடியும் என அவர் தெரிவித்தார். 
இந் நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சாந்தி, ஒசூர் சார்}ஆட்சியர் சந்திரகலா  நில அளவை கூடுதல் இயக்குநர் குணசேகரன்,  மண்டல துணை இயக்குநர் குமார்,  உதவி இயக்குநர்கள் கண்ணபிரான்,  அங்கையற்கண்ணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/14/ஒசூர்-அருகே--புதிய-தொழில்நுட்பம்-மூலம்-நிலஅளவை-2790208.html
2790036 தருமபுரி கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றம் DIN DIN Saturday, October 14, 2017 04:22 AM +0530 கிருஷ்ணகிரி அணையிலிருந்து வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 4,166 கன அடியாக இருந்த உபரி நீர் வெளியேற்றம், மாலையில் வினாடிக்கு 9,098 கன அடியாக இருமடங்காக உயர்ந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக பாயும் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் கடந்த இரு மாதங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக, கிருஷ்ணகிரி அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணகிரி அணை முழுக் கொள்ளளவான 52 அடியை எட்டியது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/14/கிருஷ்ணகிரி-அணையிலிருந்து-உபரி-நீர்-வெளியேற்றம்-2790036.html
2789596 தருமபுரி கிருஷ்ணகிரி கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கக் கோரி பள்ளி முற்றுகை DIN DIN Friday, October 13, 2017 07:26 AM +0530 கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கக் கோரி, கிருஷ்ணகிரி அருகே பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டனர்.
கிருஷ்ணகிரி அருகே எண்ணேக்கொள்புதூர் கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 180 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் 2 ஆசிரியர்கள், தலைமையாசிரியர் பணியாற்றி வருகின்றனர். இந்தப் பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் எனவும், பள்ளியை முறையாக நிர்வகிக்காத தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் வலியுறுத்தி இருந்தனர். ஆனால், கல்வித் துறை அலுவலர்கள் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந் நிலையில், பள்ளிக்கு சென்ற பெற்றோர்கள், வகுப்பறையில் இருந்த மாணவர்களை வெளியை அழைத்து வந்து பள்ளியை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்த கல்வித் துறை அலுவலர்கள் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று முற்றுகையிட்ட பெற்றோர்களை சமாதானப்படுத்தினர். கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள், தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்படுவார் என அலுவலர்கள் அளித்த உறுதியை ஏற்று, பெற்றோர்கள் கலைந்து சென்றனர். மாணவர்கள் வகுப்பறைக்கு திரும்பினர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/13/கூடுதல்-ஆசிரியர்களை-நியமிக்கக்-கோரி-பள்ளி-முற்றுகை-2789596.html
2789595 தருமபுரி கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரியில் டெங்கு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம், ஊர்வலம் DIN DIN Friday, October 13, 2017 07:26 AM +0530 கிருஷ்ணகிரியில் மாவட்ட காவல் துறை சார்பில், டெங்கு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் ஊர்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்வுகளுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.மகேஷ்குமார் தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட நீதிபதி ஆர்.பூர்ணிமா கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்றப் பணியாளர்கள், வழக்குரைஞர்கள், பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம், பப்பாளி இலைச் சாறு ஆகியவை வழங்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறை ஆயுதப்படை வளாகத்தில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாமும் நடைபெற்றன.  கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியர், ஊர்க்காவல் படை, நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள், சுயஉதவிக் குழுவினர் உள்ளிட்டோர் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி, லண்டன்பேட்டை, பெங்களூரு சாலை, பழையபேட்டை வழியாகச் சென்று வட்டச் சாலை அருகே நிறைவு பெற்றது.
இதில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பிரியா ராஜ், நலப் பணிகள் இணை இயக்குநர் அசோக்குமார், துணை காவல் கண்காணிப்பாளர் ரவிக்குமார், நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ், சுகாதார அலுவலர் மோகன சுந்தரம், காவல் ஆய்வாளர் அன்புமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/13/கிருஷ்ணகிரியில்-டெங்கு-விழிப்புணர்வு-கையெழுத்து-இயக்கம்-ஊர்வலம்-2789595.html
2789594 தருமபுரி கிருஷ்ணகிரி இளநிலை பட்டு ஆய்வாளர்களுக்கான பணி: வேலைவாய்ப்பு பதிவு மூப்பை சரிபார்க்க அழைப்பு DIN DIN Friday, October 13, 2017 07:25 AM +0530 தமிழ்நாடு பட்டு வளர்ச்சித் துறையால் இளநிலை பட்டு ஆய்வாளர் காலி பணியிடத்தை நிரப்பப்பட உள்ள நிலையில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பை சரிபார்த்துக் கொள்ளும்படி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பாஸ்கரன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அழைப்பு: தமிழ்நாடு பட்டு வளர்ச்சித் துறையால் 378 இளநிலை பட்டு ஆய்வாளர் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான மாநில பதிவு மூப்பு அடிப்படையிலான ஒருங்கிணைந்த பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது.
இதற்கான வயது வரம்பு 1.7.2017 அன்று எஸ்சிஏ, எஸ்சி, எஸ்டி ஆகிய பிரிவினருக்கு 35, எம்பிசி, பி, பிசிஎம் ஆகிய பிரிவினருக்கு 35, பொதுப் பிரிவினருக்கு 30 வயது ஆகும். பிளஸ் 2 வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதியினை உடையவர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை.
மேலும், 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் பட்டு வளர்ச்சியில் 6 மாத முன் அனுபவம் பெற்று, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். அல்லது ஒசூரில் செயல்படும் பட்டு வளர்ச்சி பயிற்சிப் பள்ளியில் 6 மாதம் படிப்பு முடித்து பதிவு செய்திருக்க வேண்டும்.
இந்த கல்வித்தகுதி மற்றும் வயது தகுதி உடைய பதிவுதாரர்கள் அனைவரும் கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு ஆக.16-ஆம் தேதிக்குள் நேரில் தங்களது பதிவினை சரிபார்த்துக் கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.      

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/13/இளநிலை-பட்டு-ஆய்வாளர்களுக்கான-பணி-வேலைவாய்ப்பு-பதிவு-மூப்பை-சரிபார்க்க-அழைப்பு-2789594.html
2789593 தருமபுரி கிருஷ்ணகிரி ஊத்தங்கரையில் நாளை ஆன்மிக சொற்பொழிவு DIN DIN Friday, October 13, 2017 07:22 AM +0530 ஊத்தங்கரையில் கிருஷ்ணகிரி முக்கியச் சாலையில் உள்ள ஐயப்பன் கோயில் வளாகத்தில், சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வாழ்வியல் ஆன்மிகம் என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைபெறுகிறது.
நெய்வேலி சைவ திருமுறை பயிற்சி மைய பேராசிரியர் முருகப்பனார் வாழ்வியல் ஆன்மிகம் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றுகிறார். நிகழ்ச்சியில், அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி.திருமால்முருகன், ஓய்வு துணை ஆட்சியர் முருகேசன், ஓய்வு தலைமை ஆசிரியர் முனிரத்தினம், அமைப்பாளர் கேசவன், குமரேசன், சிவா, வைத்தியலிங்கம், சண்முகம், மண்டலப் போக்குவரத்து அலுவலர் குணசேகரன் உள்ளிட்ட பலரும் பங்கேற்க உள்ளனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/13/ஊத்தங்கரையில்-நாளை-ஆன்மிக-சொற்பொழிவு-2789593.html
2789592 தருமபுரி கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை அருகே சாலையில் விழுந்த ராட்சத பாறை DIN DIN Friday, October 13, 2017 07:21 AM +0530 தேன்கனிக்கோட்டை அருகே ராட்சத பாறை உருண்டு சாலையில் விழுந்தது.
தேன்கனிக்கோட்டை அருகே  மலையடிவாரத்தில் உள்ளது குந்துகோட்டை கிராமம். தேன்கனிக்கோட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்ததில், குந்துகோட்டை மலையில் இருந்து 50 அடி உயரத்தில் இருந்து ராட்சத பாறை ஒன்று உருண்டு சாலையில் விழுந்தது. பொதுமக்கள் யாரும் அங்கு இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/13/தேன்கனிக்கோட்டை-அருகே-சாலையில்-விழுந்த-ராட்சத-பாறை-2789592.html
2789591 தருமபுரி கிருஷ்ணகிரி ரேஷன் அரிசி கடத்த முயன்ற இளைஞர் கைது DIN DIN Friday, October 13, 2017 07:21 AM +0530 கர்நாடக மாநிலத்துக்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்ற இளைஞரை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் முருகன் தலைமையில் போலீஸார் கிருஷ்ணகிரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் கண்ணன்டஅள்ளி பேருந்து நிறுத்தம் அருகே வாகனத் தணிக்கையில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், 2,500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வாகனம், ரேஷன் அரிசி ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸார், வழக்குப் பதிந்து வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் எல்.ஐ.சி. நகரைச் சேர்ந்த புங்கன் (30) என்பரை கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், கர்நாடக மாநிலம், பங்காருபேட்டைக்கு ரேஷன் அரிசி கடத்தியது தெரியவந்தது.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/13/ரேஷன்-அரிசி-கடத்த-முயன்ற-இளைஞர்-கைது-2789591.html
2789590 தருமபுரி கிருஷ்ணகிரி தொடர் மழையால் உடையும் நிலையில் இருப்பநாயக்கன் ஏரி DIN DIN Friday, October 13, 2017 07:21 AM +0530 தொடர் மழையால் தேன்கனிக்கோட்டை இருப்பநாயக்கன் ஏரி உடையும் நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, வருவாய்த் துறையினர் மண்கொட்டி சீர் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே இருப்பநாயக்கன் ஏரி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மழையின்றி வறண்டு கிடந்த இந்த ஏரி தொடர் மழையால் நிரம்பி வந்தது. புதன்கிழமை இரவு 104 மி.மீ. பெய்த மழைக்கு ஏரிக்கு அதிகளவில் தண்ணீர் வந்தது.  ஏரியின் உபரி நீர் செல்லும் பகுதியில் ஏற்கெனவே தடுப்புச் சுவர் வலுவிழந்து காணப்பட்ட நிலையில், ஏரியிலிருந்து வெள்ளம் அதிகரித்ததால் தடுப்புச் சுவர் பகுதி வழுவிழந்து உடையும் நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து விவசாயிகள் வருவாய்த் துறை அதிகாரிகளிடம் புகார் செய்ததையடுத்து, வட்டாட்சியர்  மணிமொழி ஏரியை ஆய்வு செய்து உடனடியாக சீர்செய்ய நடவடிக்கை எடுத்தார். இதைத் தொடர்ந்து, வருவாய்த் துறை ஊழியர்கள் மண்ணை கொட்டி சரி செய்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/13/தொடர்-மழையால்-உடையும்-நிலையில்-இருப்பநாயக்கன்-ஏரி-2789590.html
2789589 தருமபுரி கிருஷ்ணகிரி டெங்கு விழிப்புணர்வுப் பேரணி DIN DIN Friday, October 13, 2017 07:21 AM +0530 ஊத்தங்கரையில் காவல் துறை சார்பில் டெங்கு விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
பேரணிக்கு ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளர் அர்சுணன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இதில் ஊத்தங்கரை உள்கோட்டத்துக்குள்பட்ட காவலர்கள், ஊத்தங்கரை வித்யா மந்திர் கல்லூரி மாணவர்கள், அதியமான் மகளிர் கல்லூரி மாணவியர் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
அண்ணா சிலை அருகே தொடங்கிய பேரணி ஊத்தங்கரை முக்கியச் சாலை மற்றும் வீதிகள் வழியாக சென்றது. பேரணியில் டெங்கு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி, பாதுகாக்கப்பட்ட குடிநீரை காய்ச்சிக் குடிக்க வேண்டும், குடியிருப்புப் பகுதிகள் மற்றும் பொது இடங்களில் தண்ணீர் தேங்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும், சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளுதல், கிருமி நாசினிகளை தெளித்தல் ,நிலவேம்பு கசாயம் குடித்தல் உள்ளிட்ட வாசகங்களை முழக்கிமிட்டு சென்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/13/டெங்கு-விழிப்புணர்வுப்-பேரணி-2789589.html
2789588 தருமபுரி கிருஷ்ணகிரி 12 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய தளி ஏரி DIN DIN Friday, October 13, 2017 07:20 AM +0530 12  ஆண்டுகளுக்கு பிறகு தளி வண்ணம்மா ஏரி நிரம்பியது .
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே உள்ள சாரண்டப்பள்ளி கிராமத்தில் தளி தொகுதியிலேயே மிகப் பெரிய ஏரியாக சுமார் 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட வண்ணம்மா ஏரி உள்ளது. இந்த ஏரி மூலம் சாரண்டப்பள்ளி, கக்கதாசம், திருமாளிகை, சாதிநாயகனப்பள்ளி, மல்லசந்திரம், சின்னதொகரை, சீர்த்திமனட்டி உள்ளிட்ட கிராமங்களில் 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கடந்த 2005-ஆம் ஆண்டுக்கு பிறகு போதிய மழையின்மையால் ஏரி வறண்டுக் கிடந்தது. இதைத் தொடர்ந்து, ஏரியில் இருந்த புதர்கள் அகற்றப்பட்டு மதகுகள் சீரமைக்கப்பட்டன.
இந் நிலையில், தளி சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக பெய்த தொடர் மழையால் வண்ணம்மா ஏரி நிரம்பி வந்தது. புதன்கிழமை இரவு தளி பகுதியில் பெய்த பலத்த மழைக்கு வண்ணம்மா ஏரி முழு கொள்ளவை எட்டி உபரி நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து, கக்கதாசம் வழியாக சனத்குமார் நதியில் கலந்தது.
ஏரி முழு கொள்ளவு எட்டியதை அறிந்த கிராம மக்கள் சிறப்பு பூஜை செய்தும், ஆடுகள் வெட்டியும் வழிபட்டு வருகின்றனர்.
ஊத்தங்கரையில் காவல் துறை சார்பில்

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/13/12-ஆண்டுகளுக்கு-பிறகு-நிரம்பிய-தளி-ஏரி-2789588.html
2789587 தருமபுரி கிருஷ்ணகிரி சானமாவு வனப் பகுதிக்கு வந்த 4 யானைகள் கண்காணிப்பு DIN DIN Friday, October 13, 2017 07:20 AM +0530 சானமாவு வனப் பகுதிக்கு வந்த 4 யானைகளை வனத் துறையின் கண்காணித்து வருகின்றனர்.
ஒசூர் அருகே உள்ள சானமாவு வனப் பகுதியில், கடந்த 2 நாள்களுக்கு முன் 2 யானைகள் வந்தன. இந்த நிலையில், புதன்கிழமை இரவு மேலும் 2 யானைகள் வந்தன. மொத்தம் உள்ள 4 யானைகள் தற்போது சானமாவு காட்டில் முகாமிட்டுள்ளன. இந்த யானைகளின் நடமாட்டத்தை வனத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதனால், அருகில் உள்ள ராமாபுரம், பீர்ஜேப்பள்ளி, ராஜாபுரம் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், வனப் பகுதியையொட்டி உள்ள விவசாய நிலங்களுக்கு கவனமாக செல்ல வேண்டும் என்றும் வனத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
ஒசூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் தற்போது பலத்த மழை பெய்து வருவதால் யானைகளை விரட்டுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த யானைகளை சினிகிரிபள்ளி, ஊடேதுர்க்கம் காடுகள் வழியாக ஜவளகிரி அடர்ந்த வனப் பகுதிக்கு விரட்ட வனத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/13/சானமாவு-வனப்-பகுதிக்கு-வந்த-4-யானைகள்-கண்காணிப்பு-2789587.html
2789078 தருமபுரி கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி அணையில் வினாடிக்கு 4,935 கன அடி நீர் திறப்பு DIN DIN Thursday, October 12, 2017 09:56 AM +0530 கிருஷ்ணகிரி அணையின் நீர் திறப்பு புதன்கிழமை வினாடிக்கு 4,935 கன அடியாக
அதிகரிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வழியாக பாயும் தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவாதால் கிருஷ்ணகிரி அணை முழு கொள்ளவை எட்டியது. அணையின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையிலிருந்து உபரி நீர் தென்பெண்ணை ஆற்றிலில் திறந்து விடப்படுகிறது.
இந்த நிலையில், புதன்கிழமை காலை 7 மணி அளவில் நீர் வரத்தானது வினாடிக்கு நீர் வரத்து 3,718 கன அடியாக இருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு 3,145 கன அடி வெளியேற்றப்பட்டது. நீர் மட்டம் 51.10 அடியாக இருந்தது. இத்தகைய நிலையில், அணையின் நீர் வரத்து படிப்படியாக உயர்ந்தது. மாலை 4 மணி நிலவரப்படி அணையின் நீர்வரத்து வினாடிக்கு 3,900 கன அடியாக உயர்ந்தது. நீர் வெளியேற்றம் வினாடிக்கு 4,935 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/12/கிருஷ்ணகிரி-அணையில்-வினாடிக்கு-4935-கன-அடி-நீர்-திறப்பு-2789078.html
2789077 தருமபுரி கிருஷ்ணகிரி விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் DIN DIN Thursday, October 12, 2017 09:56 AM +0530 டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி, கிருஷ்ணகிரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் கனியமுதன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர்கள் முனிராவ், மாயவன், துணைச் செயலாளர் ராதா கிருஷ்ணன் உள்ளிடோர் பங்கேற்றனர்.
டெங்கு காய்ச்சால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு மத்திய அரசு உதவி வழங்காததையும், டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தாத மாநில அரசைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் முழக்கங்களை எழுப்பினர்.
தருமபுரியில்..
தொலைத் தொடர்பு அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலர் த. ஜெயந்தி தலைமை வகித்து பேசினார். மாவட்ட துணைச் செயலர் மின்னல் சக்தி, நகரச் செயலர் ராமதுரை, செய்தித் தொடர்பாளர் த.கு.பாண்டியன், மக்களவைத் தொகுதி துணைச் செயலர் ராமன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/12/விடுதலைச்-சிறுத்தைகள்-ஆர்ப்பாட்டம்-2789077.html
2789076 தருமபுரி கிருஷ்ணகிரி டெங்கு ஒழிப்புப் பணி: ஊத்தங்கரையில் ஆட்சியர் ஆய்வு DIN DIN Thursday, October 12, 2017 09:55 AM +0530 ஊத்தங்கரையில் மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் டெங்கு ஒழிப்பு குறித்து புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
ஊத்தங்கரை பேரூராட்சியில் டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மழையில் நீர்த்தேங்கி உள்ளதா? என வீடுகள் மற்றும் கடைகள் உள்ள பாத்திரங்களில் மழைநீர்த் தேங்கி உள்ளதா? என்பதைக் கண்டறிய ஆய்வு மேற்கொண்டார்.
கிருஷ்ணகிரி சாலையில் உள்ள தனியார் கடையில் விற்பனைக்காக வைத்திருந்த புதிய சின்டெக்ஸ் டேங்குகளில் மூடி இல்லாமல் கொசு உற்பத்தியாகும் லார்வாக்கள் இருந்ததை கண்டறிந்து அந்த சின்டெக்ஸ் டேங்குகளை பறிமுதல் செய்து ரூ. 25, 000 அபராதம் விதித்தும் , அபராதத் தொகை செலுத்தும் வரை கடையை மூடி வைக்கவும்  மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
மேலும் ஊத்தங்கரை திருமணக் கூடம். பிறகு பேரூராட்சியில் பேருந்து நிலையத்தில் உள்ள குடிநீர் தொட்டிகளை பார்வையிட்டார். தொடர்ந்து பாம்பாறு அணைக்கு வரும் உபரி நீரை பார்வையிட்டார். ஆய்வின் போது பேரூராட்சியின் பொறியாளர் சி.ராஜேந்திரன், பணி மேற்பார்வையாளர் கே. மகேந்திரன்,வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வே. சந்திரசேகரன், தணிகை கருணாநிதி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/12/டெங்கு-ஒழிப்புப்-பணி-ஊத்தங்கரையில்-ஆட்சியர்-ஆய்வு-2789076.html
2789075 தருமபுரி கிருஷ்ணகிரி ஊத்தங்கரையில் நீதிமன்றக் கட்டடம் திறப்பு DIN DIN Thursday, October 12, 2017 09:54 AM +0530 ஊத்தங்கரையில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களின் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
ஊத்தங்கரையில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றமும்,  சார்பு நீதிமன்றம் இயங்கி வருகின்றன.
இதில்  உரிமையியல் நீதிமன்றத்தைத் தனியாகவும், குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை தனியாகவும் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை
விடுக்கப்பட்டது.
இதையடுத்து ஊத்தங்கரை நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் தனித்தனியாக அமைக்கப்பட்டு அதன் திறப்புவிழா புதன்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணிமா பங்கேற்று நீதிமன்ற கட்டடங்களைத் திறந்து வைத்தார்.
ஊத்தங்கரை சார்பு நீதிபதி சுகந்தி வரவேற்றார். மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி அன்புச்செல்வி, சட்டப் பணிகள் குழுத் தலைவர் அறிவொளி, சார்பு நீதிபதி ஜெயஸ்ரீ, மோட்டார் வாகன நீதிமன்ற நீதிபதி லீலா, மாவட்ட சட்டப் பணிகள் செயலாளர் தஸ்லீம், கிருஷ்ணகிரி குற்றவியல் நீதிமன்ற நடுவர் ஜெயபிரகாஷ், ஊத்தங்கரை நீதிமன்ற நடுவர் ராஜேஷ் ராஜூ, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ராஜசேகர், கிருஷ்ணகிரி வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் பாண்டி, போச்சம்பள்ளி தலைவர் பீமராஜ், தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் அய்யப்பன்மணி, ஊத்தங்கரை வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் குணசேகரன், செயலாளர் மூர்த்தி, மூத்த வழக்குரைஞர் ரங்கநாதன், டி.எஸ்.பி. அர்ச்சுனன் உள்ளிட்ட பலரும் வாழ்த்திப் பேசினர்.
நிகழ்ச்சியில் வழக்குரைஞர்கள் ராமசாமி, கணநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிகளை வழக்குரைஞர் முருகன் தொகுத்து வழங்கினார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/12/ஊத்தங்கரையில்-நீதிமன்றக்-கட்டடம்-திறப்பு-2789075.html
2789074 தருமபுரி கிருஷ்ணகிரி ஒசூர் ஐடி பார்க் எல்காட் அலுவலகம்: முதல்வர் திறந்து வைத்தார் DIN DIN Thursday, October 12, 2017 09:54 AM +0530 ரூ. 22 கோடி நிதியில் கட்டி முடிக்கப்பட்ட ஒசூர் ஐடி பார்க் கட்டடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை காணொலி மூலம் திறந்து வைத்தார்.
ஒசூர் பாகலூர் சாலை விஸ்வநாதபுரம் கிராமத்தில் ரூ. 22 கோடி நிதியில் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் எல்காட் நிர்வாக அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.
இந்த அலுவலகத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் சென்னையில் இருந்தபடி திறந்து வைத்தார். இதையேற்று ஒசூர்  ஐடி பார்க் எல்காட் அலுவலகத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர். ஒசூர் நகர அதிமுக செயலாளர் நாராயணன், மாவட்ட பொருளாளர் நாராயணன், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெ.பி (எ) ஜெயப்பிரகாஷ், தவமணி, முத்துராஜ், வாசுதேவன், ஒன்றியச் செயலாளர் கே.டி.ஜெயராமன், ஒன்றியப் பொருளாளர் சிட்டி ஜெகதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/12/ஒசூர்-ஐடி-பார்க்-எல்காட்-அலுவலகம்-முதல்வர்-திறந்து-வைத்தார்-2789074.html
2789073 தருமபுரி கிருஷ்ணகிரி வேப்பனஅள்ளி அருகே ஏரி  உடைந்தது: பயிர்கள் சேதம் DIN DIN Thursday, October 12, 2017 09:54 AM +0530 வேப்பனஅள்ளி அருகே காட்டேரியில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் வெளியேறியதில் நெல் உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்தன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில், வேப்பனஅள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆவல்நத்தம் கிராமத்தின் அருகே உள்ள காட்டேரி நிரம்பியது. ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால், ஏரியின் கல்வெட்டின் சுவர் இடிந்தது. இதனால், ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேறி அருகில் உள்ள விளை நிலங்கள், கோயில்கள் நீரில் முழ்கின. இதனால் நெல், சிறுதானிய பயிர்கள் சேதம் அடைந்தன. ஏரி உடைப்பு குறித்து தகவல் அறிந்த வேப்பனஅள்ளி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த அலுவலர்கள், பொதுமக்களின் உதவியுடன் மணல் மூட்டைகளை அடுக்கியும், ஜேசிபி இயந்திரம் மூலம் நீர் வெளியேறுவதை தடுக்கும் பணியில் விரைந்து ஈடுபட்டனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/12/வேப்பனஅள்ளி-அருகே-ஏரி--உடைந்தது-பயிர்கள்-சேதம்-2789073.html
2789071 தருமபுரி கிருஷ்ணகிரி அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து DIN DIN Thursday, October 12, 2017 09:53 AM +0530 தேன்கனிக்கோட்டை அருகே அரசு நகரப் பேருந்து கவிழந்து விபத்துக்குள்ளானதில்  அதில் பயணம் செய்த 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.
தேன்கனிக்கோட்டையில் இருந்து அரசு நகரப் பேருந்து, பிக்கனப்பள்ளிக்கு வழக்கம்போல் புதன்கிழமை காலை சென்று கொண்டிருந்தது. பிக்கனப்பள்ளி தரைமட்டப் பாலத்தில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் சென்ற பயணிகள் காயமின்றி உயிர்தப்பினர். ஓட்டுநர் முனிராஜூக்கு லேசான காயம் ஏற்பட்டது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/12/அரசுப்-பேருந்து-கவிழ்ந்து-விபத்து-2789071.html
2789070 தருமபுரி கிருஷ்ணகிரி அஞ்செட்டி அருகே 10-ஆவது முறையாக தரைமட்டப் பாலம் உடைந்தது DIN DIN Thursday, October 12, 2017 09:53 AM +0530 தேன்கனிக்கோட்டை வட்டம், அஞ்செட்டி அருகே தொட்டல்லா ஆற்றில் உள்ள தரைமட்டப் பாலம் 10-ஆவது முறையாக செவ்வாய்க்கிழமை இரவு அடித்துச் செல்லப்பட்டது.
தேன்கனிக்கோட்டை வட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை இரவு கனமழை பெய்தது. அதிகபட்சமாக 103 மி.மீட்டர் மழை பதிவானது. ஆகஸ்ட் மாதம் முதல் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் தொட்டல்லா ஆற்றில் உள்ள தரைமட்டப் பாலம் 10 முறையாக செவ்வாய்க்கிழமை இரவு உடைந்தது.
அதனால் தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி வழியாக ஒகேனக்கல் சாலையில் முழுமையாகப் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. அதில், அஞ்செட்டிப் பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமியின் டிராக்டர், காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
அர்த்தகூர் ஏரி நிரம்பி வழிந்த வெள்ள நீரில் தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் எதிரில் உள்ள 6 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் தீயணைப்பு வீரர்கள் மூலம் மீட்கப்பட்டனர்.
செவ்வாய்க்கிழமை இரவு ஒரே நாளில் தேன்கனிக்கோட்டையில் 103 மி.மீ மழை, ஒசூரில் 11 மி.மீ மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/12/அஞ்செட்டி-அருகே-10-ஆவது-முறையாக-தரைமட்டப்-பாலம்-உடைந்தது-2789070.html
2789068 தருமபுரி கிருஷ்ணகிரி கிராமங்களில் நிலவேம்பு கஷாயம் வழங்கிய கிருஷ்ணகிரி தொகுதி எம்எல்ஏ DIN DIN Thursday, October 12, 2017 09:53 AM +0530 டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் வகையில், தனது தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் நிலவேம்பு கஷாயங்களை டி. செங்குட்டுவன் எம்எல்ஏ புதன்கிழமை வழங்கினார்.
கிருஷ்ணகிரி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பூவத்தி, கொடுகூர், வெலகலஅள்ளி, வெங்கிலிகானப்பள்ளி, சோக்காடி, பாலகுறி, சின்ன பெல்லாராம்பள்ளி, இட்டிக்கல் அகரம், மாதேப்பட்டி, கங்கலேரி, தாளாப்பள்ளி, காமராஜ் நகர், கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் டி.செங்குட்டுவன் எம்எல்ஏ, நிலவேம்பு கஷாயத்தை பொதுமக்களுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. வெற்றிச்செல்வன், திமுக மாவட்டஇளைஞரணி துணை அமைப்பாளர் அமீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கிருஷ்ணகிரி ராயக்கோட்டை சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் மையத்தில் வாகனயோட்டிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/12/கிராமங்களில்-நிலவேம்பு-கஷாயம்-வழங்கிய-கிருஷ்ணகிரி-தொகுதி-எம்எல்ஏ-2789068.html
2788097 தருமபுரி கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டையில் துப்பாக்கி சூட்டில் பலியான 4 பேருக்கு நினைவஞ்சலி DIN DIN Wednesday, October 11, 2017 06:43 AM +0530 தேன்கனிக்கோட்டையில் கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியான 4 பேருக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
தேன்கனிக்கோட்டை மேல்கோட்டை அருகே கடந்த 1990 ஆண்டு அக்.10-ஆம் தேதி  ராம ஜோதி ரத ஊர்வலம் புறப்பட்டது. அப்போது ஏற்பட்ட வன்முறையில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 4 பேர் உயிரிழந்தனர்.  அந்த 4 பேருக்கும் நினைவஞ்சலி மற்றும் பொதுக்கூட்டம் தேன்கனிக்கோட்டை கோட்டை வாசல் அருகில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாவட்டத் தலைவர் அன்னையப்பா தலைமை வகித்தார். விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட துணைத் தலைவர் ரங்கநாத் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலர் சாந்தகுமார் வரவேற்றார். கோவை காமாட்சி தலைமை ஆதீனம் ஞானகுரு,  பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் நரேந்திரன், கோட்டப் பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், இளைஞர் அணி செயலர் நாகராஜ், மாநில விஷ்வ ஹிந்து பரிஷத் இணைச் செயலர் விஷ்ணுகுமார் ஆகியோர் பேசினர்.
இதில் மாவட்ட இந்து முன்னணி பொதுச் செயலர் சந்துரு, பஜ்ரங்தள் மாவட்ட அமைப்பாளர் தேவராஜ், ஒன்றியச் செயலர் நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தேன்கனிக்கோட்டை சார்- பதிவாளர் அலுவலகச் சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகில் ஜோதி ஏற்றப்பட்டு ஊர்வலம் புறப்பட்டது. இந்த ஊர்வலம் பேருந்து நிலையம், மண்டி தெரு, காந்தி சாலை கடைவீதி வழியாக நடைபெற்றது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/11/தேன்கனிக்கோட்டையில்-துப்பாக்கி-சூட்டில்-பலியான-4-பேருக்கு-நினைவஞ்சலி-2788097.html
2788096 தருமபுரி கிருஷ்ணகிரி சூளகிரியில் பலத்த மழை: 15 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய சின்னார் அணை:  14 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை DIN DIN Wednesday, October 11, 2017 06:43 AM +0530 சூளகிரியில் விடிய, விடிய பெய்த பலத்த மழை காரணமாக 15 ஆண்டுகளுக்கு பிறகு சின்னார் அணை நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 14 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் பெருமளவில் வசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கடந்த சில நாள்களாக சூளகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகின்றது.
இதனால் சூளகிரி பகுதியில் வறண்டு கிடந்த 30-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி உள்ளன. நீர்வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளால் 20 ஏரிகளுக்கு தண்ணீர் வரவில்லை. அதே நேரத்தில் சின்னார் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக இருந்தது. 37 அடி கொள்ளளவு கொண்ட சின்னார் அணை 15 ஆண்டுகளுக்கு பிறகு செவ்வாய்க்கிழமை  நிரம்பியது. அணையில் இருந்து உபரிநீர் வழிந்தோடி வந்ததால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சின்னார் அணை நிரம்பி வழிந்த தண்ணீரை வேம்பள்ளி, இண்டிகானூர்,  போகிபுரம், கிருஷ்ணேபள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். மேலும்,  அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து வழிபாடுகள் செய்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/11/சூளகிரியில்-பலத்த-மழை-15-ஆண்டுகளுக்கு-பிறகு-நிரம்பிய-சின்னார்-அணை--14-கிராம-மக்களுக்கு-வெள்ள-அபாய-2788096.html
2788095 தருமபுரி கிருஷ்ணகிரி பாப்பனேரியில் நீர்க் கசிவை  சீரமைக்க வலியுறுத்தல் DIN DIN Wednesday, October 11, 2017 06:42 AM +0530 கிருஷ்ணகிரி அருகேயுள்ள பாப்பனேரியில் நீர்க் கசிவை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
கிருஷ்ணகிரி அருகே சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் பாப்பனேரி  உள்ளது.  தற்போது பெய்து வரும் தொடர் மழையால், இந்த ஏரி நிறைந்து, உபரி நீர் வெளியேறி வருகிறது. இந்த நிலையில், ஏரியின் கரை பலமிழந்து  நீர்க் கசிந்து வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த அலுவலர்கள், நீர்க் கசிவைக் கட்டுப்படுத்த மண் கொட்டி நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால், தொடர்ந்து நீர்க் கசிந்து கொண்டே இருக்கிறது. இதனால், ஏரியின் கரை பலவீனம் அடைய வாய்ப்புள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஏரிக்கு வரும் நீர்,  அவதானப்பட்டி ஏரிக்கு திருப்பிவிடப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் பாப்பனேரியில் தேக்கி வைக்கும் நீரின் அளவு குறையும் என்பதால் நீர்க் கசிவை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/11/பாப்பனேரியில்-நீர்க்-கசிவை--சீரமைக்க-வலியுறுத்தல்-2788095.html
2788094 தருமபுரி கிருஷ்ணகிரி டெங்குவை கட்டுப்படுத்த காங்கிரஸ் கோரிக்கை DIN DIN Wednesday, October 11, 2017 06:42 AM +0530 போச்சம்பள்ளி பகுதியில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பர்கூர் வட்டார காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து வட்டாரத் தலைவர் எம்.விவேகானந்தன் கூறியது:
போச்சம்பள்ளி  மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டெங்கு தாக்கம் அதிகமாக உள்ளது. கடந்த 10 நாள்களில் டெங்கு காய்ச்சலால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  டெங்கு காய்ச்சலுக்கு காரணமாக கொசுக்களே இருந்தாலும்,  கிராமங்களில் குடிநீர் மூலம் காய்ச்சல் பரவுகிறது.
காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் ஊராட்சிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளைச் சுத்தம் செய்து கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும்.
கொசுக்களை கட்டுப்படுத்தும் புகையை அடித்து கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/11/டெங்குவை-கட்டுப்படுத்த-காங்கிரஸ்-கோரிக்கை-2788094.html
2788093 தருமபுரி கிருஷ்ணகிரி ஒசூரில் ஜவுளிக்கடை சுவர்  இடிந்து விழுந்ததில் உயிரிழந்த இளைஞர்: அழுகிய நிலையில் சடலம் மீட்பு DIN DIN Wednesday, October 11, 2017 06:42 AM +0530 ஒசூரில் ஜவுளிக்கடையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த இளைஞரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் முதல் சிப்காட் பகுதியில் பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஜவுளிக்கடை இயங்கி வருகிறது. கடந்த அக்.4-ஆம் தேதி இந்தப் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக ஜவுளிக் கடையின் கார்கள் நிறுத்த கூடிய இடம் அருகில் உள்ள 18 அடி உயர சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
இந்த நிலையில் இடிந்து விழுந்த சுற்றுச்சுவரை அகற்றும் பணியில் கட்டடத் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது 27 மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் சுற்றுச்சுவரின் இடிபாடுகளுக்குள் சிக்கி அழுகிய நிலையில் சடலமாகக்  கிடப்பது தெரியவந்தது. இது குறித்து சிப்காட் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், இறந்து கிடந்தவர் திருவண்ணாமலையைச் சேர்ந்த மனோகர் ( 27) என்பவதும்,  ஒசூர் அரசனட்டி பகுதியில் தங்கி இருந்து சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது. சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த நேரத்தில் அவர், இயற்கை உபாதை கழிப்பதற்காக அந்தப் பகுதியில் சென்றதும், அப்போது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் அவர் பலியானதும் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து போலீஸார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஒசூர் சிப்காட் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/11/ஒசூரில்-ஜவுளிக்கடை-சுவர்--இடிந்து-விழுந்ததில்-உயிரிழந்த-இளைஞர்-அழுகிய-நிலையில்-சடலம்-மீட்பு-2788093.html
2788092 தருமபுரி கிருஷ்ணகிரி உரிமம் இன்றி இயங்கிய 2 ஆம்னி பேருந்துகள், லாரி பறிமுதல் DIN DIN Wednesday, October 11, 2017 06:41 AM +0530 சூளகிரியில் உரிமம் இன்றி இயங்கியதாக   2 ஆம்னி பேருந்துகள் மற்றும் ஒரு லாரி பறிமுதல் செய்யப்பட்டன.
மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் உத்தரவின் பேரில்,  ஒசூர் வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) மோகன் அறிவுறுத்தலின்பேரில், ஒசூர் மோட்டார் வாகன ஆய்வாளர் நாகராஜன் தலைமையில்,  சூளகிரியில்  தேசிய நெடுஞ்சாலை அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக ஒசூர் நோக்கிச் சென்ற 2 ஆம்னி பேருந்துகளை நிறுத்தி சோதனையிட்டபோது, உரிமம் இன்றியும்,  வரி செலுத்தாமலும் அந்த பேருந்துகள் இயக்கப்பட்டது தெரிய வந்தது. மேலும், அந்த 2 ஆம்னி பேருந்துகளிலும் பள்ளி மாணவ, மாணவிகளை சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து 2 ஆம்னிப் பேருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டு,  தலா ரூ 70 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம்  அபராதம் விதிக்கப்பட்டது.
லாரி பறிமுதல்:  இதேபோல் அந்த வழியாக அதிக கல் சுமை ஏற்றிச் சென்ற ஒரு லாரியைப் பிடித்து சோதனையிட்டதில்,  முறையாக வரி கட்டாமல் இயக்கியது தெரியவந்தது. இதையடுத்து அந்த லாரியைப் பறிமுதல் செய்து ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இச்சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட 2 ஆம்னி பேருந்துகள் மற்றும் லாரி  சூளகிரி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன. சோதனையின் தொடர்ச்சியாக, அதே பகுதியில் அதிக சிமெண்ட்  சுமை ஏற்றி வந்த 2 லாரிகளைப் பிடித்து ரூ. 25 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு, பின்னர் அந்த 2 லாரிகளும் விடுவிக்கப்பட்டன. மேலும், அதிக சுமை ஏற்றிச் சென்ற காரணத்துக்காக ஓட்டுநர் உரிமம் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு, வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் மோட்டார் வாகன ஆய்வாளர் நாகராஜன் தெரிவித்தார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/11/உரிமம்-இன்றி-இயங்கிய-2-ஆம்னி-பேருந்துகள்-லாரி-பறிமுதல்-2788092.html
2788091 தருமபுரி கிருஷ்ணகிரி சூளகிரியில் ஆம்புலன்ஸ் மீது லாரி மோதல்: 2 பேர் பலி DIN DIN Wednesday, October 11, 2017 06:41 AM +0530 சூளகிரியில்  செவ்வாய்க்கிழமை ஆம்புலன்ஸ் வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர்
வேலூர் மாவட்டம், திமிரியைச் சேர்ந்தவர் இளங்கோ (42). இவரது மனைவி விஜி. இவர்கள் பெங்களூரில் தங்கி, அங்குள்ள நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் திமிரியில் தனது மாமனாரின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக  இளங்கோ மற்றும் அவரது குடும்பத்தினர் ஒசூர் வந்தனர்.
அவர்கள், ஒசூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  மாமியார் சுந்தரவள்ளி(67)  என்பவரையும் அழைத்துக் கொண்டு ஆம்புலன்ஸ் வாகனத்தில் வேலூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். சூளகிரியில் உள்ள தனியார் பள்ளி அருகே ஆம்புலன்ஸ் வாகனம் சென்ற போது திடீரென்று பழுதாகி நின்றது.
அப்போது பின்னால் வந்த லாரி ஆம்புலன்ஸ் வாகனம் மீது மோதியது. இதில் இளங்கோ நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இளங்கோவின் மாமியார் சுந்தரவள்ளி, மனைவி விஜி,  உறவினர் விஜயகுமார் (45), அபிஷேக் (18), ரேவதி (21), சாந்தி (39) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் காயமடைந்த அனைவரையும்  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் வழியில் சுந்தரவள்ளி இறந்தார்.  மற்ற 5 பேரும் படுகாயத்துடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
இந்த விபத்து குறித்து சூளகிரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/11/சூளகிரியில்-ஆம்புலன்ஸ்-மீது-லாரி-மோதல்-2-பேர்-பலி-2788091.html
2788090 தருமபுரி கிருஷ்ணகிரி புலியூரில் மழையால் வீடு இடிந்தது DIN DIN Wednesday, October 11, 2017 06:41 AM +0530 போச்சம்பள்ளியை அடுத்த புலியூரில் பலத்த மழையால் வீடு இடிந்து விழுந்தது.
போச்சம்பள்ளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரு நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு தொடங்கிய  மழை, இரவு 10 மணி வரை பெய்தது. இந்த மழையின் காரணமாக ஆங்காங்கே வீடுகள் இடிந்து வருகின்றன.  
இந்த நிலையில், போச்சம்பள்ளியை அடுத்த புலியூர் கிராமத்தில் முருகேசன் (60) என்பவரின் ஓட்டு வீடு இரவில் பெய்த மழையால் இடிந்து விழுந்தது. இதில் வீட்டின் சமையலறை முழுவதும் இடிந்து அருகில் உள்ள மாட்டுக் கொட்டகை மீது விழுந்தது.
இதில்  இடிபாடுகளில் சிக்கி கொட்டகையில் கட்டப்பட்டிருந்த ஒரு மாடு இறந்தது. மேலும், வீட்டில் இருந்த பொருள்களும் சேதமடைந்தன.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/11/புலியூரில்-மழையால்-வீடு-இடிந்தது-2788090.html
2788089 தருமபுரி கிருஷ்ணகிரி போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரியும் கால்நடைகள்:  ஆட்சியர் எச்சரிக்கை DIN DIN Wednesday, October 11, 2017 06:40 AM +0530 போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரிய அனுமதிக்கும் கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி நகராட்சிப் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் கால்நடைகள் சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்றன. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவது மட்டுமின்றி, வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
கால்நடைகளை வீட்டில் வைத்து, முறையாகப் பராமரிக்காமல் தெருக்களில் திரிய விடும் கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939-இன் படி அபராதம் விதிக்கப்படுவதுடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/11/போக்குவரத்துக்கு-இடையூறாக-சுற்றித்-திரியும்-கால்நடைகள்--ஆட்சியர்-எச்சரிக்கை-2788089.html
2788088 தருமபுரி கிருஷ்ணகிரி ஒசூரில் மகளிர் சங்க உறுப்பினர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி: பெண் கைது DIN DIN Wednesday, October 11, 2017 06:40 AM +0530 ஒசூரில் மகளிர் சங்க உறுப்பினர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் ஜனபர் தெருவைச் சேர்ந்தவர் மஸ்தான். இவரது மனைவி சையத் பானு (35). இவர் ஒசூர் மற்றும் அதன் வட்டாரப் பகுதிகளில் செயல்பட்டு வரும் 30- க்கும் மேற்பட்ட மகளிர் சங்கங்களில் உறுப்பினர்களுக்கு தனியார் வங்கியில் கடன் உதவி பெற்று தந்துள்ளார்.
இதையடுத்து கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக அவர்களிடம் பெற்ற தொகையை முறையாக வங்கியில் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதன் மூலம் சையத்பானு பல லட்ச ரூபாய் கையாடல் செய்ததாக அவர் மீது புகார் கூறப்பட்டது.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பணமோசடி செய்ததாக சையத் பானுவை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். பின்னர் அவரை கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/11/ஒசூரில்-மகளிர்-சங்க-உறுப்பினர்களிடம்-பல-லட்சம்-ரூபாய்-மோசடி-பெண்-கைது-2788088.html
2788087 தருமபுரி கிருஷ்ணகிரி காய்ச்சலால் தொழிலாளி சாவு DIN DIN Wednesday, October 11, 2017 06:40 AM +0530 கிருஷ்ணகிரியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி, பழைய பேட்டை, மேல் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் (55). தொழிலாளியான இவர், கடந்த 10 நாள்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இந்த நிலையில், தொடர்ந்து காய்ச்சால் பாதிக்கப்பட்ட அவர், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து சுகாதாரத் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/11/காய்ச்சலால்-தொழிலாளி-சாவு-2788087.html
2788086 தருமபுரி கிருஷ்ணகிரி டெங்கு காய்ச்சல் தடுப்பு: வீடு வீடாகச் சென்று ஆட்சியர் ஆய்வு DIN DIN Wednesday, October 11, 2017 06:39 AM +0530 கிருஷ்ணகிரி நகராட்சிப் பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், வீடு வீடாகச் சென்று செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அனைத்துப் பகுதிகளிலும் குளோரினேஷன் செய்யப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ள உள்நோயாளிகளுக்கு தனித் தனியாக கொசு வலை அமைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், தேவையான மருந்து, மாத்திரைகள் தயார் நிலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.  கொசு ஒழிப்புப் பணியில் 700 களப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்ட 170 பேர் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பி உள்ளனர்.
இந்த நிலையில்,  கிருஷ்ணகிரி நகரில் வீடு வீடாகச் சென்று மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். வீட்டின் மேல்நிலைத் தொட்டிகள் சுத்தமாக வைக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்த ஆட்சியர், பயன்பாடற்ற பொருள்களில் மழைநீர் தேக்காமல் இருக்கும்படியும், வீட்டின் உள் பகுதி மற்றும் வெளி பகுதிகளை சுத்தமாக  வைத்திருக்கும்படியும் ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.
வீடுகளில் கொசு வலையைப் பயன்படுத்த வேண்டும் என்றும், போலி மருத்துவர்களிடம் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வேண்டாம் எனவும் வலியுறுத்தினார்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/11/டெங்கு-காய்ச்சல்-தடுப்பு-வீடு-வீடாகச்-சென்று-ஆட்சியர்-ஆய்வு-2788086.html
2788085 தருமபுரி கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அருகே தடுப்பணை உடைந்ததால் விவசாயிகள் வேதனை DIN DIN Wednesday, October 11, 2017 06:39 AM +0530 கிருஷ்ணகிரி மாவட்டம்,  ஊத்தங்கரையை அடுத்த கெங்கப்பிராம்பட்டி  ஊராட்சி,  ஏரிக்கரை ஜி.புதூர் பகுதியில் உள்ள தடுப்பணை  திங்கள்கிழமை இரவு உடைந்ததால்  விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
ஊத்தங்கரையை  அடுத்த கெங்கப்பிராம்பட்டி  ஊராட்சி ஜி.புதூர் ஏரிக்கரை பாம்பாறு அணை  ஆற்றுப்படுக்கை  பகுதி விவசாயிகளின் நீன்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு கடந்த 2013-2014-ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் சுமார் 600 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் 30 மீட்டர் நீலம், 1.20 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்ட தடுப்பணை பணிகள் முடிந்து ஓராண்டில் அணை உடைந்தது. இதையடுத்து மீண்டும் தடுப்பணை கட்டப்பட்டது. நீரை தேக்கிவைத்து விவசாயம் மற்றும் நிலத்தடிநீர் ஆதாரத்தை பெருக்கும் நோக்கில் கட்டப்பட்ட இந்தத் தடுப்பணையின் சுவர் தரமற்ற முறையில் கட்டப்பட்டதால் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும்,  தடுப்பணையின் உயரம் அதிக அளவில் உள்ளதால் பக்கவாட்டில் உள்ள விவசாய நிலங்களில் அரிப்பு ஏற்பட்டு  தடுப்பணை உடைகிறது என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்த தடுப்பணை சுவரின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்யவில்லை என விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.
கடந்த 11 ஆண்டுகளாக மழையின்றி தவித்து வந்த மக்களுக்கு கிருஷ்ணகிரி கே.ஆர்பி அணையின் உபரி நீர் தற்போது பாம்பாறு அணைக்கு  வருவதால் சந்தோஷம் அடைந்தோம். ஆனால் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததால் அருகில் உள்ள விவசாய நிலங்கள் மண் அரித்து செல்லப்பட்டதால் இப்பகுதியில் நிலத்தடி நீர் தேங்க முடியாத நிலை உள்ளது. இதனால் விவசாயம் பாதிக்கப்படும். எனவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் தடுப்பணையை சீரமைத்து இப் பகுதி விவசாயிகளை காக்க வேண்டும் என  கோரிக்கை  விடுத்துள்ளனர். 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/11/ஊத்தங்கரை-அருகே-தடுப்பணை-உடைந்ததால்-விவசாயிகள்-வேதனை-2788085.html
2787581 தருமபுரி கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அருகே மர்ம காய்ச்சலால் விவசாயி பலி DIN DIN Tuesday, October 10, 2017 06:44 AM +0530 ஊத்தங்கரை அருகே மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட விவசாயி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
ஊத்தங்கரையை அடுத்த எக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (38). விவசாயி. இவர் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து  ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர்,  தீவிர சிகிச்சைக்காக  வேலூர் மாவட்டம்,  திருப்பத்தூரில்  உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/10/ஊத்தங்கரை-அருகே-மர்ம-காய்ச்சலால்-விவசாயி-பலி-2787581.html
2787580 தருமபுரி கிருஷ்ணகிரி கட்டுரை, ஓவியப்  போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு DIN DIN Tuesday, October 10, 2017 06:44 AM +0530 தூய்மையான பாரதம் - தூய்மையான பள்ளி குறித்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகை காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், திங்கள்கிழமை வழங்கினார்.
அனைவருக்கும் கல்வி இயக்கம்,  மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் சார்பில் தூய்மையான பாரதம் - தூய்மையான பள்ளி குறித்து எனது கனவு தூய்மையான இந்தியா என்ற தலைப்பில் ஓவியப் போட்டி,  தூய்மையான இந்தியாவை உருவாக்குவதில் எனது பங்களிப்பு என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி அனைத்து வட்டாரங்களிலும் நடைபெற்றது.
இதையடுத்து,  மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற தொட்டபெல்லூர்,  கிருஷ்ணகிரி பழைய சப்-ஜெயில் சாலை,  கொண்டேப்பள்ளி, பெரியபஸ்தலப்பள்ளி,  மத்தூர்பதி, அட்டக்குறுக்கி  ஆகிய அரசு நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம்,  ரூ.5 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார்.
இதேபோல் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையில் பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு  எனது கனவு தூய்மையான இந்தியா என்ற தலைப்பில் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற ஊத்தங்கரை ஒன்றியத்தைச் சேர்ந்த புளியனூர் பள்ளியைச் சேர்ந்த ஜனனி,  என்.வெள்ளாலப்பள்ளி சக்திசிவா,  வேப்பனஅள்ளி ஒன்றியம்,  குப்பச்சிப்பாறை கஜலட்சுமி ஆகியோருக்கும்,  1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிக ளுக்கான போட்டியில் குப்பச்சிப்பாறை சரண்யா,  புலியரசி சத்யவதி, கொத்தகொண்டப்பள்ளி சந்தியா,  9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கான போட்டியில் சின்னகொத்தூர் தேவிகா, கிருஷ்ணகிரி  அஜித்,  சென்னசந்திரம் இந்திரா உள்ளிட்டோரை பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசுகளை ஆட்சியர் வழங்கினார்.
அப்போது,  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி,  மாவட்டக் கல்வி அலுவலர்கள் அகமது பாஷா,  ராஜேந்திரன், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் உடனிருந்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/10/கட்டுரை-ஓவியப்--போட்டிகளில்-வெற்றி-பெற்றவர்களுக்கு-பரிசளிப்பு-2787580.html
2787579 தருமபுரி கிருஷ்ணகிரி மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது அஞ்செட்டி தொட்டள்ளா ஆற்று தரைப்பாலம் DIN DIN Tuesday, October 10, 2017 06:43 AM +0530 அஞ்செட்டி தொட்டள்ளா ஆற்றுத் தரைப்பாலம் மழை வெள்ளத்தில் மீண்டும் அடித்துச் செல்லப்பட்டது.
அஞ்செட்டியில் இருந்து ஒகேனக்கல் செல்லும் சாலையில் தொட்டள்ளா ஆறு செல்கிறது.  இந்த ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதனால் போக்குவரத்து வசதிக்காக தாற்காலிகமாக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. கடந்த மே மாதம் முதல் இந்த தரைப்பாலம் மழையால் வெள்ளத்தில் அடிக்கடி அடித்துச் செல்லப்படுவதும், அதை சீரமைப்பதும் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் அஞ்செட்டி சுற்றுவட்டாரத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.
இதனால், தொட்டள்ளா ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் இரவில் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதையடுத்து அஞ்செட்டி -  ஒகேனக்கல் இடையே மீண்டும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த இடத்தில் தண்ணீர் கரைபுரண்டு செல்வதால் தாற்காலிக தரைப்பாலத்தை சீரமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.  ஒரிருநாளில் தரைப்பாலம் மீண்டும் அமைக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/10/மழை-வெள்ளத்தில்-அடித்துச்-செல்லப்பட்டது-அஞ்செட்டி-தொட்டள்ளா-ஆற்று-தரைப்பாலம்-2787579.html
2787578 தருமபுரி கிருஷ்ணகிரி 2 தொழிலாளர்கள் இறந்த தனியார் கல்குவாரிக்கு "சீல்' வைப்பு DIN DIN Tuesday, October 10, 2017 06:43 AM +0530 ஒசூரை அடுத்த பேரிகை அருகே, தனியார் கல்குவாரியில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 2  தொழிலாளர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து,  குவாரிக்கு  அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை  "சீல்' வைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம்,  ஒசூரை அடுத்த, பேரிகை அருகேயுள்ள மிடுதேப்பள்ளி கிராமத்தில் தனியார் கல்குவாரி இயங்கி வந்தது. இந்த குவாரியில் கடந்த,  6 ஆம் தேதி மாலை நிகழ்ந்த வெடிவிபத்தில், தருமபுரி மாவட்டம், இண்டூர் அருகேயுள்ள  நடுப்பணஹள்ளியைச் சேர்ந்த பெண் தொழிலாளி சித்ரா (32), பழைய இண்டூரைச் சேர்ந்த மாதையன் ஆகியோர் உயிரிழந்தனர்.  சித்ராவின் கணவர் பெரியண்ணன்,  மற்றும் பழைய இண்டூர் பகுதியைச் சேர்ந்த அருள், தங்கவேல் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த வெடி விபத்து தொடர்பாக உரிய விசாரணை நடத்த, மாவட்ட  ஆட்சியர் சி. கதிரவன் உத்தரவிட்டார். விசாரணை முடியும் வரை குவாரியைத் திறக்கக் கூடாது என்பதால், சூளகிரி வட்டாட்சியர் பெருமாள் தலைமையிலான வருவாய்த் துறையினர் வெடிவிபத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்த தனியார் கல் குவாரிக்கு  சீல் வைத்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/10/2-தொழிலாளர்கள்-இறந்த-தனியார்-கல்குவாரிக்கு-சீல்-வைப்பு-2787578.html
2787577 தருமபுரி கிருஷ்ணகிரி சதுரங்கப் போட்டி:  தீரன் சின்னமலை பள்ளி  மாணவர்கள் சிறப்பிடம் DIN DIN Tuesday, October 10, 2017 06:43 AM +0530 தருமபுரி  மாவட்ட சதுரங்க அமைப்பு நடத்திய சதுரங்கப் போட்டியில் ஊத்தங்கரை தீரன் சின்னமலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவியர் கலந்து கொண்டு சிறப்பிடம் பெற்றனர்.
இப் போட்டியில்  இரண்டாம் பரிசை நான்காம்  வகுப்பு மாணவி தசனிதா,  ஐந்தாம் பரிசை 9-ஆம் வகுப்பு  மாணவர் சஞ்சய் ஆகியோரும் பெற்று பரிசுக் கோப்பையை வென்றனர். மேலும் முதல் இருபது இடங்களில் எட்டு மாணவர்கள் பிடித்து சிறப்பிடம் பெற்றனர். பரிசு பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தாளாளர் பிரசன்னமூர்த்தி, செயலர் தங்கராசு,  முதல்வர் ஜோஸ்பின் மற்றும் ஆசிரியர்கள், நிர்வாகத்தினர் பாராட்டினர். 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/10/சதுரங்கப்-போட்டி--தீரன்-சின்னமலை-பள்ளி--மாணவர்கள்-சிறப்பிடம்-2787577.html
2787576 தருமபுரி கிருஷ்ணகிரி கழிவுநீர் குழியில் விழுந்த சிறுவன் பலி DIN DIN Tuesday, October 10, 2017 06:42 AM +0530 போச்சம்பள்ளி அருகே கழிப்பறைக்காக அமைக்கப்பட்டிருந்த குழியில் தவறி விழுந்து 2 வயது சிறுவன் உயிரிழந்தார்.
போச்சம்பள்ளியை அடுத்த புளியம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட குண்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பைரோஷ் - ஷாகிரா தம்பதியின் மகன் சயத் (2).  இவர்கள் வீட்டில்,   அரசின் இலவசக் கழிப்பறைத் திட்டத்தின் கீழ் புதிதாக கழிப்பறைக் கட்டி வந்தனர்.  அதற்காக வீட்டின் பின்பகுதியில் செப்டிக் டேங்க் அமைப்பதற்காக  சுமார் 7 அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டிருந்தது. சமீபத்தில் பெய்த மழையால் அந்தக் குழி நீர் நிரம்பி இருந்துள்ளது. இந்த நிலையில் அந்தப் பகுதியில் விளையாட சென்ற சயத்,  குழியில் தவறி விழுந்துள்ளார். வீட்டில் இருந்தவர்கள் யாரும் இதைக் கவனிக்காத நிலையில் சயத் உயிரிழந்தார்.  
இந்தச் சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் சரவணன் அளித்த புகாரின்பேரில், போச்சம்பள்ளி போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/10/கழிவுநீர்-குழியில்-விழுந்த-சிறுவன்-பலி-2787576.html
2787575 தருமபுரி கிருஷ்ணகிரி ஒசூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல் DIN DIN Tuesday, October 10, 2017 06:42 AM +0530 ஒசூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் காலியாக உள்ள 2 மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும்  வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப  வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் இராம கவுண்டர் வலியுறுத்தினார்.
இதுகுறித்து ஒசூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது.  ஒசூரில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் வேண்டி விண்ணப்பிக்க வந்து செல்கின்றனர். இந்த அலுவலகத்தில் 3 மோட்டார் வாகன ஆய்வாளர்கள் இருக்க வேண்டும். ஆனால், ஒரு ஆய்வாளர் மட்டுமே பணியில் உள்ளார்.  ஆகவே, விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி ஓட்டுநர் உரிமம்,  நிரந்தர ஓட்டுநர் உரிமம், வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே, இந்த அலுவலத்தில் காலியாக உள்ள  2 மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் நிரந்தர மோட்டார் வாகன அலுவலர் பணியிடங்களை  உடனடியாக நிரப்பி, பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என்றார்.  அப்போது, மாவட்ட நிர்வாகிகள் நசீர் அகமத்,  ராஜா, கோவிந்தராஜ், பரசுராமன், நாகராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/10/ஒசூர்-ஆர்டிஓ-அலுவலகத்தில்-காலி-பணியிடங்களை-நிரப்ப-வலியுறுத்தல்-2787575.html
2787574 தருமபுரி கிருஷ்ணகிரி மர்ம காய்ச்சலுக்கு மாணவி பலி DIN DIN Tuesday, October 10, 2017 06:41 AM +0530 ஊத்தங்கரையில் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தர்மராஜா கோயில் தெருவைச் சேர்ந்தவர்  ஜான்பாஷா. இவரது மகள் ஆசிகா (11). இவர் ஊத்தங்கரையில் உள்ள தனியார் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 5 நாள்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஆசிகா,  ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து அவரை,  தீவிர  சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள  தனியார்  மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வ ஆசிகா  உயிரிழந்தார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/10/மர்ம-காய்ச்சலுக்கு-மாணவி-பலி-2787574.html
2787573 தருமபுரி கிருஷ்ணகிரி அக்.13-இல் கேரம் விளையாட்டுப் போட்டி DIN DIN Tuesday, October 10, 2017 06:41 AM +0530 கிருஷ்ணகிரியில்  அக்.13-ஆம் தேதி மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன.
இதுகுறித்து, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சிவரஞ்சம்,  திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2017 - 18 -ஆம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டிகள் அக்.13-ஆம் தேதி காலை 9 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இளநிலை முதுநிலை என இரு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.  இளநிலைப் பிரிவில் மழலை வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரையில் பயிலும் சிறுவர், சிறுமியர்களுக்கு போட்டிகள் நடத்தப்படும். இதில் ஒற்றையர் போட்டியில் முதலிடம் பெறும் சிறுவர், சிறுமியருக்கு தலா ரூ.500,  இரண்டாம் இடம் பெறுவோருக்கு தலா ரூ.250,  மூன்றாமிடம் பெறுவோருக்கு தலா ரூ.125 பரிசாக வழங்கப்படுகிறது.  இரட்டையர் பிரிவுக்கான போட்டியில் முதலிடம் பிடிப்போருக்கு ரூ.2,000,  2-ஆம் இடம் பெறுவோருக்கு ரூ.1,000,  மூன்றாமிடம் பிடிப்பவருக்கு ரூ.500 பரிசாக வழங்கப்படும்.
ஒரு நபர் ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்க இயலும். கேரம் விளையாட்டில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர் தாங்கள் படிக்கும் படிக்கும்  வகுப்பு,  வயது ஆகிய விவரங்களை தலைமையாசிரியரிடம் பெற்று வருதல் வேண்டும்.  மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத் தொகையுடன் சான்றிதழ் வழங்கப்படுவதுடன்,  மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
எனவே, போட்டியில் பங்கேற்க விரும்புவோர் போட்டி நடைபெறும் நாளில் காலை 8 மணிக்கு வருகை தர வேண்டும் என  தெரிவித்துள்ளார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/10/அக்13-இல்-கேரம்-விளையாட்டுப்-போட்டி-2787573.html
2787572 தருமபுரி கிருஷ்ணகிரி பலத்த மழையால் தத்தளித்த கிராம மக்கள்: 2 வீடுகள் இடிந்தன DIN DIN Tuesday, October 10, 2017 06:40 AM +0530 போச்சம்பள்ளி அருகே  மழைநீர் புகுந்ததால் கிராம மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தத்தளித்தனர்.  மேலும்,   இரண்டு வீடுகள் இடிந்து சேதமடைந்தது.
போச்சம்பள்ளி  மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை அதிகாலை சுமார் 2 மணியளவில் இடி - மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 4 மணி நேரம் பெய்த மழையால் 50.7 மி.மீ. மழை பதிவானது. இந்தப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஏரிகள், குளங்கள், கிணறுகள் நிரம்பின.
இந்த நிலையில்  போச்சம்பள்ளியை அடுத்த வாடமங்கலம் கிராமத்தில் மழை நீர் வெளியேற வழியில்லாததால் கிராமம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்து காணப்பட்டது. குறிப்பாக, வாடமங்கலம் கிராமத்தில் உள்ள ஜடையன் கொட்டாய் என்னும் பகுதியில் 15-க்கும் மேற்பட்ட  வீடுகளில் மழை நீர் புகுந்தது. சுமார் 4 அடி உயரத்துக்கு குடியிருப்புப் பகுதியில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் உடனடியாக வெளியேறி உறவினர் வீடுகளில் சென்று தங்கினர். இதில் ராஜம்மாள் (79),  சாந்தி (43)  ஆகியோரின் குடிசை மற்றும் ஓடு வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் சுவர் இடிந்து விழுந்ததில் ராஜம்மாள் காயமடைந்தார்.  மேலும்,  ஜடையன்கொட்டாய் பகுதியில் 5 கிணறுகள் நீரில் மூழ்கின.
இதுகுறித்து தகவலறிந்த போச்சம்பள்ளி வட்டாட்சியர் கோபிநாத், மழையால் பாதிக்கப்பட்ட கிராமத்தைப் பார்வையிட்டார்.  மழை நீர் வடிய ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு பண்ணந்தூர், வாடமங்கலம் சாலையை துண்டிப்பு செய்து நீர் வெளியேற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும்,  நடமாடும் மருத்துவக் குழுவினர்  கிராம மக்களுக்கு மருந்து, மாத்திரை அளித்தனர்.  சுகாதாரக் குழுவினர் கொசு ஒழிப்பு மருந்துகள் தெளித்தனர்.
2 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் சாவு...
பர்கூர் அருகே  கோழிப் பண்ணைக்குள் மழை நீர் புகுந்ததால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிக் குஞ்சுகள்  உயிரிழந்தன.
கிருஷ்ணகிரி,  பர்கூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த மூன்று நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், ஏரி,  குளங்களில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. சில நீர்நிலைகளுக்கு மழைநீர் செல்லும் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் மழைநீர் செல்ல வழியில்லாமல்  குடியிருப்புகள்,  வயல்வெளிகளில் புகுந்துவிடுகிறது.
இந்த நிலையில்,  பர்கூர் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த மழையால், கொண்டப்பநாயனப்பள்ளி கிராமத்தில் சுந்தர்ராஜன் (45) என்பவரின் தரைமட்ட கோழிப் பண்ணைக்குள் மழைநீர் புகுந்தது. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிக் குஞ்சுகள் நீரில் மூழ்கி உயிரிழந்தன. இதுகுறித்து பர்கூர் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/10/பலத்த-மழையால்-தத்தளித்த-கிராம-மக்கள்-2-வீடுகள்-இடிந்தன-2787572.html
2787571 தருமபுரி கிருஷ்ணகிரி 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வினா- விடை கையேடு வெளியீடு DIN DIN Tuesday, October 10, 2017 06:40 AM +0530 கிருஷ்ணகிரியில் ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் சார்பில் 10,  12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வினா - விடை கையேட்டை ஆட்சியர் சி.கதிரவன் அண்மையில் வெளியிட்டார்.
கல்வியில் பின்தங்கியுள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 10, 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் வகையிலும், மாவட்டத்தின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் சார்பில் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு வெற்றி நம் கையில் என்னும் வினா - விடை தொகுப்பு நூலை தயாரித்து  மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.
இந்த இலவச கையேட்டை அண்மையில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன்  வெளியிட்டார். இந்த விழாவில் ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனத்தின் தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும், கடந்த கல்வி ஆண்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறப்பாகப் பணிபுரிந்த தலைமையாசிரியர்கள்,  ஆசிரியர்கள் 25 பேருக்கு தலா ஒரு கிராம் தங்க பதக்கம் வழங்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக வெற்றி நம் கையில் வினா -விடை தொகுப்பு நூலை தயாரிக்க உதவிய 100 ஆசிரியர்களைப் பாராட்டி பரிசு பொருள்கள் வழங்கப்பட்டன.
இதுவரை, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கல்வி வளர்ச்சிக்காக ரூ.22 கோடியை இந்தத் தொண்டு நிறுவனம் பங்களித்துள்ளது. நிகழ்வாண்டில் இந்த நூலை தயாரிக்க ரூ.64.75 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/10/10-12-ஆம்-வகுப்பு-மாணவர்களுக்கான-வினா--விடை-கையேடு-வெளியீடு-2787571.html
2786956 தருமபுரி கிருஷ்ணகிரி மத்தூர் அருகே பெண் தற்கொலை: கணவர் கைது; சாலை மறியல் DIN DIN Monday, October 9, 2017 05:32 AM +0530 மத்தூர் அருகே குடும்பத் தகராறில் பெண் தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கணவரை விடுவிக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில்
ஈடுபட்டனர்.
போச்சம்பள்ளியை அடுத்த ஒட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி கல்பனா (35).  இருவருக்கும் சனிக்கிழமை ஏற்பட்ட குடும்பத் தகராறில் கல்பனா பூச்சி மருந்து குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் ரமேஷ் அளித்த புகார் மனுவில்,  தனது மகளை திருமணம் செய்து தருமாறு ஒட்டப்பட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் அஜித், அவரது தாய் செல்வி ஆகியோர் வற்புறுத்தினர்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால்,  எங்கள் குடுபத்தினரை தகாத வார்த்தைகளைக் கூறி திட்டினர். இதனால், மனமுடைந்து கல்பனா பூச்சி மருந்து குடித்து உயிரிழந்தார் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட மத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் இரா.ஆண்டவர்,  உயிரிழந்த கல்பனாவை ரமேஷ் தாக்கியதும்,  தம்பதி இடையே ஏற்பட்ட பிரச்னையால் கல்பனா உயிரிழந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, ரமேஷ் கைது செய்யப்பட்டார்.
இதனால், ஆத்திரமடைந்த ரமேஷின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் மத்தூர் 4 வழிச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற மறியலால், கிருஷ்ணகிரி- திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, காவல் துறை உயரதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  விசாரணை  நடத்தி நடவடிக்கை எடுப்பதாக விளக்கம் அளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/09/மத்தூர்-அருகே-பெண்-தற்கொலை-கணவர்-கைது-சாலை-மறியல்-2786956.html
2786955 தருமபுரி கிருஷ்ணகிரி விவசாயியைக் கட்டிப்போட்டு 10 பவுன் நகை கொள்ளை DIN DIN Monday, October 9, 2017 05:31 AM +0530 ஊத்தங்கரை அருகே வீட்டில் புகுந்து விவசாயியைக் கட்டிப்போட்டு 10 பவுன் நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஊத்தங்கரையை அடுத்த  நாட்டாண்மை கொட்டாயைச் சேர்ந்தவர் லோகநாதன்(63). சனிக்கிழமை இரவு  வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சிப் பார்த்து கொண்டிருந்த போது,  மூகமுடி அணிந்து வந்த  5 பேர் கொண்ட  கும்பல் லோகநாதனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவரைக் கட்டிப்போட்டனர்.
அப்போது,  அங்கு வந்த லோகநாதனின் மனைவி மாதேஸ்வரி, கொள்ளை சம்பவத்தை உணர்ந்து, வீட்டின் கதவை வெளியே தாளிட்டுவிட்டு உதவிக்கு அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார். அதற்குள், வீட்டிலிருந்து 10 பவுன் நகை, ரூ.10 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு கண்ணாடியை உடைத்து மர்ம நபர்கள் தப்பினர்.
ஊத்தங்கரை  போலீஸார்  வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/09/விவசாயியைக்-கட்டிப்போட்டு-10-பவுன்-நகை-கொள்ளை-2786955.html
2786954 தருமபுரி கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சி DIN DIN Monday, October 9, 2017 05:31 AM +0530 தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஸ்ரீ சத்ய சாய் சேவா அமைப்பு மூலம் வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை இப் பயிற்சி தொடங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முதல் நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. இதையடுத்து 2-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை, கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இப் பயிற்சியை கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி தொடங்கிவைத்தார். பயிற்சி ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் தலைமையில் 12 பேர் கொண்டு குழுவினர் கயிறு மூலம் வெள்ளத்தில் சிக்கியவரை மீட்பது குறித்து பயிற்சி அளித்தனர்.
அப்போது, பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் சித்ரா மற்றும் வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, இளைஞர்கள் என 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/09/கிருஷ்ணகிரியில்-பேரிடர்-மேலாண்மை-பயிற்சி-2786954.html
2786953 தருமபுரி கிருஷ்ணகிரி கழிவுநீர்க் கால்வாய் பணி தொடக்கம் DIN DIN Monday, October 9, 2017 05:31 AM +0530 கிருஷ்ணகிரி அருகே ரூ.7 லட்சத்தில் கழிவுநீர்க் கால்வாய் அமைக்கும் பணியை டி.செங்குட்டுவன் எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தார்.
கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் உள்ள சத்யா சாய் நகர் இரண்டாவது குறுக்குத் தெருவில் கழிவுநீர் சாலையில் தேங்குவதால், கழிவுநீர்க் கால்வாய் அமைக்க வேண்டும் என டி.செங்குட்டுவன் எம்எல்ஏ-விடம் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 லட்சம் ஒதுக்கீடு செய்தார். இதைத் தொடர்ந்து, கழிவுநீர்க் கால்வாய் அமைக்கும் பணியை ஞாயிற்றுக்கிழமை செங்குட்டுவன் தொடங்கிவைத்தார்.

 

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/09/கழிவுநீர்க்-கால்வாய்-பணி-தொடக்கம்-2786953.html
2786478 தருமபுரி கிருஷ்ணகிரி கல்குவாரியில் வெடி விபத்து: பலி எண்ணிக்கை 2-ஆக உயர்வு DIN DIN Sunday, October 8, 2017 02:31 AM +0530 ஒசூர் அருகே தனியார் கல் குவாரியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 2-ஆக உயர்ந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த, பேரிகை அருகே உள்ள மிடுதேப்பள்ளி கிராமத்தில் உள்ள தனியார் கல் குவாரி உள்ளது. இந்த குவாரியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில், தருமபுரி மாவட்டம், இண்டூர் அருகே உள்ள நடுப்பனஅள்ளியைச் சேர்ந்த சித்ரா(32) என்பவர் உயிரிழந்தார்.
அவரது கணவர் பெரியண்ணன் (40), பழைய இண்டூரைச் சேர்ந்த மாதையன்(25), அருள் (32), தங்கவேல்(50) ஆகியோர் உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்கள் ஒசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் உயர் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட மாதையன் உயிரிழந்தது சனிக்கிழமை தெரியவந்தது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/08/கல்குவாரியில்-வெடி-விபத்து-பலி-எண்ணிக்கை-2-ஆக-உயர்வு-2786478.html
2786477 தருமபுரி கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளியை கிருஷ்ணகிரி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு DIN DIN Sunday, October 8, 2017 02:31 AM +0530 கிருஷ்ணகிரி நகராட்சியுடன் இணைக்க, காட்டிநாயனப்பள்ளி ஊராட்சியைச் சேர்ந்த கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடியேற்றி எதிர்ப்புத் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரியில் கடந்த மாதம் 23-ஆம் தேதி நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றூண்டு விழாவில், கிருஷ்ணகிரி நகராட்சியானது சிறப்பு நகராட்சியாக தரம் உயர்த்தப்படும். அப்போது, கட்டிகானப்பள்ளி, காட்டிநாயனப்பள்ளி உள்ளிட்ட 8 கிராம ஊராட்சிகள் நகராட்சியுடன் இணைக்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, காட்டிநாயனப்பள்ளி ஊராட்சிக்குள்பட்ட கிராம பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடியை ஏற்றினர். நகராட்சியுடன் கிராம ஊராட்சியை இணைப்பதன் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பயனாளிகள் பாதிக்கப்படுவர். மேலும், வரிகள் அதிகமாகும். இதனால், கிராம ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்கும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/08/காட்டிநாயனப்பள்ளியை-கிருஷ்ணகிரி-நகராட்சியுடன்-இணைக்க-எதிர்ப்பு-2786477.html
2786476 தருமபுரி கிருஷ்ணகிரி சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் DIN DIN Sunday, October 8, 2017 02:31 AM +0530 கிருஷ்ணகிரி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியாக ரூ.20 லட்சத்தை மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி சனிக்கிழமை வழங்கினார்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள தண்டேகுப்பம் கிராமத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ராதா, புஷ்பா, வசந்தகுமார், பகவதி (எ) சந்துரு, முல்லை ஆகிய 5 பேரும் கடந்த 5-ஆம் தேதி உயிரிழந்தனர்.
இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து தலா ரூ.4 லட்சம் வீதம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதையடுத்து, உயிரிழந்தவர்களின் வாரிசுகளான ஜெயந்தி, காளிரத்தினம், செல்வம் ஆகியோரிடம் நிவாரண நிதியை அமைச்சர் வழங்கினார். அப்போது, மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், கே.அசோக்குமார் எம்பி, எம்எல்ஏ-க்கள் மனோரஞ்சிதம் நாகராஜ், சி.வி.ராஜேந்திரன், வருவாய்க் கோட்டாட்சியர் அருண், வட்டாட்சியர் கன்னியப்பன், முன்னாள் எம்எல்ஏ கோவிந்தராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/08/சுவர்-இடிந்து-விழுந்து-உயிரிழந்தவர்களின்-குடும்பங்களுக்கு-நிவாரணம்-2786476.html
2786475 தருமபுரி கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி தொழிற்பேட்டையில் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி ஆய்வு DIN DIN Sunday, October 8, 2017 02:30 AM +0530 போச்சம்பள்ளி சிப்காட்டில் புதியதாக திறக்கப்பட உள்ள தனியார் தொழிற்சாலைகளை மாநில தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி பார்வையிட்டனர்.
போச்சம்பள்ளி பகுதியில் சிப்காட் வளாகத்தில்  தனியார் தொழிற்சாலை புதியதாக கட்டப்பட்டு வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்பு அதிகம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், 2015-இல் நடைபெற்ற  கூட்டத்தில் போச்சம்பள்ளி சிப்காட் வளாகத்தில் புதிய தொழிற்சாலை நிறுவ புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது.
அதன் அடிப்படையில் கடந்த 18 மாதங்களாக இந்த நிறுவனம் கட்டி முடிக்கப்பட்டது. வருகின்ற 11.10.2017 அன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களால் காணொலி காட்சி மூலம் தனியார் நிறுவனம் தொடங்கப்பட உள்ள நிலையில், இந்த தொழிற்சாலையை பார்வையிட தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், இளைஞர் நலன் மேம்பாட்டு விளையாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, பர்கூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேந்திரன், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கதிரவன், ஊத்தங்கரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ், பர்கூர் முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் ஜெயபால் ஆகியோர் தொழிற்சாலையை பார்வையிட்டனர்.
இதுகுறித்து தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அவர்களிடம் பேசிய போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விருப்பத்தின்பேரில் இப் பகுதியில் தொழிற்சாலை அமைக்கப்பட்டு கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட இருக்கிறது.
இத்தொழிற்சாலையில் 18 முதல் 21 வயதுடைய பெண்களுக்கு 80 சதவீதம் வேலைவாய்ப்பு அளிக்கப்பட இருக்கிறது. இதன்மூலம் 5 ஆண்டுகளுக்குள்ளாக 21ஆயிரம் கிராமபுற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்தார். மேலும், சசிகலா பரோலில் வந்திருப்பது குறித்து பதிலளிக்க நேரமில்லை என்றார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/08/போச்சம்பள்ளி-தொழிற்பேட்டையில்-அமைச்சர்-பாலகிருஷ்ணா-ரெட்டி-ஆய்வு-2786475.html
2786474 தருமபுரி கிருஷ்ணகிரி கணவாய்ப்பட்டி வேங்கடரமண கோயிலில் சிறப்பு பூஜை DIN DIN Sunday, October 8, 2017 02:30 AM +0530 புரட்டாசி 3-ஆவது சனிக்கிழமையையொட்டி, கணவாய்ப்பட்டி வேங்கடரமண கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள கணவாய்ப்பட்டியில் வேங்கடரமண சுவாமி கோயில் உள்ளது. இக் கோயிலில் ஒவ்வொரு சனிக்கிழமையில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கிருஷ்ணகிரி, ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபடுகின்றனர்.
புரட்டாசி 3-ஆவது சனிக்கிழமையையொட்டி நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சுவாமியை வணங்கினர். பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய வேங்கடரமண சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/08/கணவாய்ப்பட்டி-வேங்கடரமண-கோயிலில்-சிறப்பு-பூஜை-2786474.html
2786066 தருமபுரி கிருஷ்ணகிரி அஞ்செட்டி அருகே: வெள்ளப் பெருக்கால் 8-ஆவது முறையாக தரைப் பாலம் உடைப்பு  ஒசூர், DIN Saturday, October 7, 2017 08:58 AM +0530 தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டியில் தொட்டல்லா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தாற்காலிக மண் தரைப் பாலம் 8-ஆவது முறையாக உடைந்தது.
 கடந்த சில நாள்களாக தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக, அஞ்செட்டி தொட்டல்லா ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அஞ்செட்டியில் ஆற்றின் குறுக்கே தாற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த தரைப் பாலம் 8-ஆவது முறையாக உடைந்தது. இதனால், அஞ்செட்டியிலிருந்து அருகிலுள்ள கேரட்டி, தொட்டமஞ்சி, ஜேசுராஜபுரம், நாட்ராம்பாளையம், உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
 போக்குவரத்து தடைபட்டதால், அந்த வழியாக வாகனங்களில் செல்ல முடியாமலும், நடந்து செல்ல முடியாமலும் கிராம மக்கள், பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள் அவதியடைந்தனர். இதனிடையே, ஆற்றைக் கடக்க பொதுமக்கள் ஆற்றின் வெள்ள நீரில் பாறை மற்றும் கற்களைப் போட்டு தனிப் பாதை அமைத்து அதன் வழியாக ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு ஆற்றைக் கடந்து செல்லும்போது திடீரென மழை வெள்ளத்தால் தண்ணீரின் அளவு அதிகரித்தால், ஆற்று நீரில் அடித்துச் செல்லப்படும் அபாய நிலை உள்ளது. ஒவ்வொரு முறையும் இந்த ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது, இந் நிலையே தொடர்கிறது.
 எனவே, ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுவரும் புதிய உயர்மட்ட மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சுற்றுப்புற மலைக் கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/07/அஞ்செட்டி-அருகே-வெள்ளப்-பெருக்கால்-8-ஆவது-முறையாக-தரைப்-பாலம்-உடைப்பு-2786066.html
2786064 தருமபுரி கிருஷ்ணகிரி தமிழ் திறன் மேம்படுத்தும் போட்டிகள்  கிருஷ்ணகிரி, DIN Saturday, October 7, 2017 08:58 AM +0530 கிருஷ்ணகிரியில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், தமிழ் மொழியில் திறன் மேம்படுத்தும் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவியரிடையே காணப்படும் தமிழ் மொழியை மேம்படுத்தும் வகையில் 11, பிளஸ் 2 வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கான பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
 போட்டிகளுக்கு மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் ராஜேசுவரி தலைமை வகித்தார். பள்ளியின் தலைமையாசிரியர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.
 இந்தப் போட்டிகளில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 103 பேர் பங்கேற்றனர். இந்த போட்டிகளில் முதல் பரிசு பெறுவோர் சென்னையில் அக்.13-ஆம் தேதி நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
 
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/07/தமிழ்-திறன்-மேம்படுத்தும்-போட்டிகள்-2786064.html
2786062 தருமபுரி கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி அருகே வெள்ளம்: பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு  கிருஷ்ணகிரி, DIN Saturday, October 7, 2017 08:58 AM +0530 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
 கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஊராட்சி ஒன்றியம், சின்னமட்டாரப்பள்ளி ஊராட்சியில் உள்ள ஓதிகுப்பம் ஏரி மழைநீரால் நிறைந்து, வெள்ள நீர் வெளியேறியது.
 இதையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் ஆய்வு மேற்கொண்டார். ஓதிகுப்பம் கிராமத்தில் ஏரியைச் சுற்றி மணல் மூட்டைகளை அடுக்கி பாதுகாப்பு பணியை பார்வையிட்ட அவர், ஓடையில் நீர்வரத்து அதிகரித்த நிலையில், ஓடையின் அருகே உள்ள வீடுகளில் வசிப்பவர்களை அங்கிருந்து வெளியேற உத்தரவிட்டார். அவ்வாறு, வெளியேறியவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யும்படி வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டார். காளிக்கோயில் அருகே சாலையில் ஏற்பட்டுள்ள அரிப்பை கட்டுப்படுத்தும் வகையில் மணல் மூட்டைகளை அடுக்கி பலப்படுத்தும்படி ஊரக வளர்ச்சித் துறையினருக்கு உத்தரவிட்டார்.
 இயற்கை சீற்றத்தால் பாதிப்புகள் ஏற்பட்டால், பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077-க்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
 அப்போது, பர்கூர் வட்டாட்சியர் தணிகாசலம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தேவகி, பையாஸ் அகமது உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/07/கிருஷ்ணகிரி-அருகே-வெள்ளம்-பாதிக்கப்பட்ட-பகுதிகளில்-ஆட்சியர்-ஆய்வு-2786062.html
2786059 தருமபுரி கிருஷ்ணகிரி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பயனாளிகளுக்கு மின்னணு வருகைப் பட்டியல்  கிருஷ்ணகிரி, DIN Saturday, October 7, 2017 08:57 AM +0530 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பயனாளிகளுக்கு மின்னணு வருகைப் பட்டியல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
 இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2017-18-ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ஊராட்சி ஒன்றியத்துக்கு ஒரு கிராம ஊராட்சி வீதம் 10 கிராம ஊராட்சிகளில் முன்னோட்டமாக மின்னணு வருகைப் பட்டியல் (இ-மஸ்தூர் ரோல்) நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
 அதன்படி, கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் பெரியமுத்தூர், காவேரிப்பட்டணம் ஒன்றியத்தில் ஆவத்தவாடி, வேப்பனஅள்ளி ஒன்றியத்தில் குருபரப்பள்ளி, பர்கூர் ஒன்றியத்தில் வலசகவுண்டனூர், மத்தூர் ஒன்றியத்தில் குன்னத்தூர், ஊத்தங்கரை ஒன்றியத்தில் கெங்காபிராம்பட்டி, ஒசூர் ஒன்றியத்தில் பாகலூர், சூளகிரி ஒன்றியத்தில் பேரண்டப்பள்ளி, கெலமங்கலம் ஒன்றியத்தில் பிதிரெட்டி, தளி ஒன்றியத்தில் பௌகொண்டப்பள்ளி ஆகிய 10 ஊராட்சிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
 மின்னணு வருகைப் பட்டியல் முறையில் பயனாளிகள் (தனியாகவோ அல்லது குழுவாகவோ) பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் வேலை கேட்பு விண்ணப்பத்தினை உரிய படிவத்தில் ஊராட்சி செயலரிடம் அளிக்க வேண்டும். இந்த வேலை கேட்பு விவரம் இணையதளத்தில் பதிவு செய்த பின்னர், வேலை ஒதுக்கீடு விவரம், பயனாளிகள் விவரம் ஆகியவை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பிரதி புதன்கிழமை தோறும் தகவல் பலகையில் அறிவிப்பு செய்யப்படும்.
 இணையத்திலிருந்து பெறப்படும் மின்னணு வருகைப் பட்டியலின்படி வேலை கேட்பு அளித்த பயனாளிகளுக்கு பிரதி வியாழக்கிழமை முதல் பணி வழங்கப்படும்.
 இதனால், எவ்வித பாரபட்சமுமின்றி, எளிமையான, வெளிப்படையான முறையில் பணி கோருபவர்களுக்கு வழங்கப்படும். மேற்படி முன்னோடி ஊராட்சிகளில் பணிபுரியும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பயனாளிகள் மேற்குறிப்பிட்ட அறிவுரைகளை பின்பற்றி பயனடையும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த மின்னணு வருகைப் பட்டியல் செயலாக்கம் அனைத்து ஊராட்சிகளுக்கும் விரைவில் விரிவுப்படுத்தப்படும்.
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/07/தேசிய-ஊரக-வேலை-உறுதி-திட்ட-பயனாளிகளுக்கு-மின்னணு-வருகைப்-பட்டியல்-2786059.html
2786051 தருமபுரி கிருஷ்ணகிரி கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டம்  கிருஷ்ணகிரி, DIN Saturday, October 7, 2017 08:56 AM +0530 பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, கிருஷ்ணகிரியில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அந்த சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.நரசிம்மன் தலைமை வகித்தார். வறட்சியால் வேலை இழந்துள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கான உதவித்தொகை ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். தினசரி குறைந்தபட்ச ஊதியம் ரூ.400 வழங்க வேண்டும். வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உடனுக்குடன் ஊதியம் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
 
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/07/கோரிக்கைகளை-நிறைவேற்றக்-கோரி-ஆர்ப்பாட்டம்-2786051.html
2786049 தருமபுரி கிருஷ்ணகிரி வட மாநில இளைஞர் படுகொலை  ஒசூர், DIN Saturday, October 7, 2017 08:55 AM +0530 ஒசூர் அருகே வெள்ளிக்கிழமை இரவு வட மாநில இளைஞர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.
 ஒசூர் வட்டம், மத்திகிரி அருகே உள்ள பொம்மண்டப்பள்ளி கிராமத்துக்கு அருகில் சாலையின் ஓரத்தில் படுகாயத்துடன் ஒரு இளைஞர் இறந்து கிடந்தார். இதனைப் பார்த்த அந்த வழியாகச் சென்றவர்கள் மத்திகிரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
 இதையடுத்து, மத்திகிரி போலீஸார் சடலத்தை மீட்டனர். வட மாநில இளைஞரான அவரது உடலில் பல்வேறு இடங்களில் கத்தியால் குத்திய காயங்கள் இருந்தன. அவர் யார், அவரை கொலை செய்தவர்கள் யார் என மத்திகிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/07/வட-மாநில-இளைஞர்-படுகொலை-2786049.html
2786047 தருமபுரி கிருஷ்ணகிரி 12 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய ஓதிகுப்பம் ஏரி  கிருஷ்ணகிரி, DIN Saturday, October 7, 2017 08:55 AM +0530 பர்கூர் அருகே 12 ஆண்டுகளுக்கு பிறகு ஓதிகுப்பம் ஏரி நிறைந்து உபரி நீர் வெளியேறி தரைப் பாலம் முழ்கியதால், பர்கூர்-குப்பம் போக்குவரத்து வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்டது. மேலும் 20 கிராமங்கள் துண்டிக்கப்பட்டன.
 ஆந்திர மாநிலம், குப்பம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் அந்த மாநிலத்தில் உள்ள தடுப்பணைகளில் தண்ணீர் நிறைந்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓதிகுப்பம் ஏரிக்கு தண்ணீர் வந்தது.
 இந்த நிலையில், இந்த ஏரியானது வெள்ளிக்கிழமை நிறைந்து உபரி நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நீர், சிந்தகம்பள்ளி, கொட்டிலேட்டி, காரகுப்பம், எமக்கல்நத்தம் வழியாக பர்கூருக்கு சென்றது. இந்த நிலையில், சிந்தகம்பள்ளி தரைப் பாலம் நீரில் முழ்கி பர்கூர்-குப்பம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், ஆந்திர மாநில எல்லையோரத்தில் உள்ள துரை ஏரி, காளிக்கோயில், குருவிநாயனப்பள்ளி, மேடுகம்பள்ளி, கல்சாலிகாணூர், ஓதிகுப்பம், பசவண்ணகோயில், மேல்கொட்டாய் சிந்தகம்பள்ளி, கெம்பிநாயனப்பள்ளி, அண்ணாநகர் உள்ளிட்ட 20 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் 12 கி.மீ. சுற்றி பர்கூருக்கு சென்றனர். 12 ஆண்டுகளுக்கு பிறகு ஓதிகுப்பம் ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/07/12-ஆண்டுகளுக்கு-பிறகு-நிரம்பிய-ஓதிகுப்பம்-ஏரி-2786047.html
2786046 தருமபுரி கிருஷ்ணகிரி கர்நாடக அரசுப் பேருந்து மோதல்: காவலர் காயம்  ஒசூர், DIN Saturday, October 7, 2017 08:55 AM +0530 காவலர் வாகனம் மீது கர்நாடக அரசுப் பேருந்து மோதியதில் காவலர் காயமடைந்தார்.
 புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டிருந்த சிறுவனை, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை உதவி ஆய்வாளர் சொக்கலிங்கம் தலைமையில், காவலர்கள் குணசீலன், கார்த்திக் ஆகியோர் வெள்ளிக்கிழமை ஜீப்பில் சென்றனர். ஜீப்பை கார்த்திகேயன் ஓட்டிச் சென்றார்.
 தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, மீண்டும் புதுக்கோட்டை நோக்கி ஜீப்பில் சென்ற போது, ஒசூர் அருகே பேரண்டப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற கர்நாடக மாநில அரசுப் பேருந்து ஜீப்பின் பின்பகுதியில் மோதியது. இதில் ஜீப்பின் பின்பகுதி முழுவதும் நொறுங்கி, ஜீப்பில் இருந்த காவலர் குணசீலன் காயமடைந்தார். அவரை மீட்ட அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உதவி ஆய்வாளர் சொக்கலிங்கம் உள்பட 3 காவலர்கள் காயமின்றி தப்பினர். இந்த விபத்து குறித்து அட்கோ போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/07/கர்நாடக-அரசுப்-பேருந்து-மோதல்-காவலர்-காயம்-2786046.html
2786044 தருமபுரி கிருஷ்ணகிரி தென்பெண்ணை ஆற்று நீரை சேமிக்க நடவடிக்கை தேவை: ஜி.கே. மணி  கிருஷ்ணகிரி, DIN Saturday, October 7, 2017 08:54 AM +0530 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாயும் தென்பெண்ணை ஆற்றில் வீணாகச் செல்லும் நீரை சேமிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
 கிருஷ்ணகிரியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ள லாரி உரிமையாளர்களை அழைத்து அரசு பேச வேண்டும். லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் பொருளாதாரச் சிக்கல் ஏற்படும்.
 கிருஷ்ணகிரி வழியாக ரயில் போக்குவரத்தை தொடங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒசூரில் விமானச் சேவையைத் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாயும் தென்பெண்ணை ஆற்றின் நீரை சேமிக்க கால்வாய் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். மேலும், தென்பெண்ணை ஆற்றில் ரசாயனக் கழிவுகள் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார் அவர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/07/தென்பெண்ணை-ஆற்று-நீரை-சேமிக்க-நடவடிக்கை-தேவை-ஜிகே-மணி-2786044.html
2785498 தருமபுரி கிருஷ்ணகிரி பேரிடர் மேலாண்மை: துணை ஆட்சியர் ஆய்வு  போச்சம்பள்ளி, DIN Friday, October 6, 2017 09:21 AM +0530 போச்சம்பள்ளி பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஏரி மதகுகளை துணை ஆட்சியர் தலைமையிலான குழு வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டது.
 வட கிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், துணை ஆட்சியர் கிருஷ்ணகிரி மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலர் ஐயப்பன் தலைமையில், போச்சம்பள்ளி பகுதியில் உள்ள ஏரிகளை ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, போச்சம்பள்ளியை அடுத்த புளியம்பட்டி ஜம்பு ஏரி கரையின் மீது சாய்ந்து விழும் நிலையில் இருந்த பனை மரத்தை பார்வையிட்டு, அதை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், ஏரி கால்வாய்களில் மதகுகள் மற்றும் கரைகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து மத்தூர் அருகிலுள்ள பெனுகொண்டாபுரம் ஏரியையும் ஆய்வு செய்தார்.
 
 
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/06/பேரிடர்-மேலாண்மை-துணை-ஆட்சியர்-ஆய்வு-2785498.html
2785491 தருமபுரி கிருஷ்ணகிரி ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்பு  போச்சம்பள்ளி DIN Friday, October 6, 2017 08:58 AM +0530 ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்ததில், பெருமளவு குடிநீர் வீணாகிறது.
 தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் தாகத்தை தீர்க்க பாதுகாக்கப்பட்ட குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு, ஓகேனக்கல் காவிரி ஆற்றில் இருந்து ராட்சத மின் மோட்டார்கள் மூலம் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. அவ்வாறு உறிஞ்சப்பட்டு தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.
 இந்நிலையில், மத்தூரில் இருந்து சாமல்பட்டி செல்லும் சாலையில் முருகன் கோயில் எதிரில் உள்ள மேம்பாலம் கீழ் குழாய் உடைந்து பனை மரம் உயரத்துக்கு தண்ணீர் பீய்ச்சி அடிக்கிறது.
 இதனால் அந்தப் பகுதிகளுக்கு செல்லும் ஓகேனக்கல் குடிநீர் தடைபட்டுள்ளது. வீணாகும் குடிநீரை அருகில் உள்ள பெண்களும், ஆண்களும் குடங்களில் பிடித்துச் செல்கின்றனர். எனவே, குடிநீர் குழாயை விரைந்து சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/06/ஓகேனக்கல்-கூட்டுக்-குடிநீர்-குழாய்-உடைப்பு-2785491.html
2785490 தருமபுரி கிருஷ்ணகிரி காந்தி பிறந்த நாள் போட்டி: வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிப்பு  கிருஷ்ணகிரி, DIN Friday, October 6, 2017 08:58 AM +0530 கிருஷ்ணகிரி மாவட்ட நேரு இளையோர் மையம் சார்பில் நடைபெற்ற காந்தி பிறந்தநாள் போட்டியில், வெற்றிபெற்றவர்களுக்கு அண்மையில் பரிசளிக்கப்பட்டது.
 காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம், திம்மாபுரம் ஊராட்சி மன்ற வளாகத்தில் நடைபெற்ற காந்தி பிறந்த நாள் விழாவையொட்டி கட்டுரை, பேச்சு, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றிபெற்றவர்களுக்கு நேரு இளையோர் மையத்தின் ஒருங்கிணைப்பாளர் திருநீலகண்டன் பரிசு, சான்றிதழ்களை வழங்கினார்.
 திம்மாபுரம் சுவாமி விவேகானந்தா இளைஞர் மன்றத் தலைவர் பூவரசன், கௌரவத் தலைவர் அருள், தேசிய சேவைத் தொண்டர் பூங்கொடி, தேசிய இளைஞர் தொண்டர் முத்துலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/oct/06/காந்தி-பிறந்த-நாள்-போட்டி-வெற்றிபெற்றவர்களுக்கு-பரிசளிப்பு-2785490.html