Dinamani - சேலம் - http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3037860 தருமபுரி சேலம் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஐநூறு ரூபாய் நோட்டுகளை எரித்தோம்: ரயில் கொள்ளையர் வாக்குமூலம் DIN DIN Tuesday, November 13, 2018 05:24 AM +0530
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், தாங்கள் கொள்ளையடித்த ஐநூறு ரூபாய் நோட்டுகளை தீவைத்து எரித்ததாக ரயில் கொள்ளையர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
சேலத்திலிருந்து சென்னை எழும்பூருக்கு 2016, ஆகஸ்ட் 8ஆம் தேதி இரவு புறப்பட்ட ரயிலில் இணைக்கப்பட்டிருந்த சரக்குப் பெட்டியின் மேற்கூரையில் துளையிட்டு, 4 பெட்டிகளிலிருந்த ரூ. 5.78 கோடியை கொள்ளையடித்த வழக்கில், சிபிசிஐடி போலீஸார், மத்தியப் பிரதேச மாநிலம் ரட்லத்தைச் சேர்ந்த ப. தினேஷ், ரோ.ரோஹன் பார்தி ஆகிய இருவரை கடந்த செப்டம்பரில் கைது செய்தனர்.
மேலும், வழக்கில் தொடர்புடைய மத்தியப் பிரதேசம் குணா மத்திய சிறையிலும், அசோக் நகர் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்த கொள்ளைக் கும்பல் தலைவர் எச்.மோகர் சிங், பி.ருசி பார்தி, ச.கலியா என்ற கிருஷ்ணா, மகேஷ் பார்தி, ந.பிராஜ்கமோகன் ஆகியோரை சிபிசிஐடி அதிகாரிகள் கடந்த 30ஆம் தேதி கைது செய்தனர். இவர்கள் 5 பேரிடமும் நீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த 14 நாள்களாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரித்து வந்தனர்.
விசாரணையில் கிடைத்த தகவல்கள்: மோகர்சிங்குக்கு கிரன், சங்காராம், ரசி, மகேஷ், பாசு, ஆமீன், தாராம் என 7 சகோதரர்கள் உள்ளனர். இவர்கள் கொள்ளையடிப்பதையே தொழிலாக கொண்டுள்ளனர். ராஜஸ்தான், தில்லி, ஹரியாணா, குஜராத், மகாராஷ்டிரம் மாநிலங்களில் கைவரிசை காட்டியுள்ளனர். ஆதாய கொலையிலும் ஈடுபட்டுள்ளனர். இக்கும்பலுக்கு ஒருகாலத்தில் தலைவராக இருந்த கிரேனை போலீஸார் என்கவுன்ட்டர் மூலம் 2012இல் கொலை செய்துள்ளனர். பின்னர் பல்வேறு கொள்ளை வழக்குகளில் மோகர்சிங் சகோதரர்கள் சிறைக்குச் சென்றனர். இதற்கிடையே, போலீஸாருக்கு தங்களை பற்றிய தகவல்களை அளித்ததாக மோகர்சிங், இருவரைக் கொன்றுவிட்டு தலைமறைவானார். போலீஸில் பிடிபடாமலிருக்க அவர் ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் குடும்பத்துடன் நாடோடியாக வசித்துள்ளார்.
2016ஆம் ஆண்டு தமிழகம் வந்த மோகர்சிங் விழுப்புரம், திண்டிவனம், விருத்தாசலம், சேலம், புதுச்சேரி, அரக்கோணம் பகுதிகளில் ரயில் நிலையங்கள், தண்டவாளம் ஆகியவற்றின் ஓரமாக வசித்து வந்தார். அப்போது சேலத்திலிருந்து சென்னைக்கு ரயிலில் பணம் கொண்டு செல்லப்படுவதை நோட்டமிடத் தொடங்கினார். இதற்காக சேலம் -சென்னை இடையே பலமுறை ரயிலில் பயணம் செய்த அவர், சின்னசேலம் - விருத்தாசலம் இடையே 45 நிமிஷம் ரயில் மிகவும் மெதுவாக செல்வதை நோட்டமிட்டு, அங்கு தனது திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்துள்ளார்.
பேட்டரி கட்டர்: அதன்படி, சம்பவத்தன்று சின்னசேலத்தில் ரயில் நின்றபோது மோகர்சிங் தரப்பினர் என்ஜின் பகுதி வழியாக ஏறி, சரக்குப் பெட்டிக்குள் சென்று, பேட்டரி கட்டர் மூலம் பெட்டியின் மேற்கூரையில் துளையிட்டு உள்ளே நுழைந்து, பணத்தை 6 லுங்கிகளில் மூட்டையாகக் கட்டி வெளியே எடுத்து வந்துள்ளனர்.
ரயில், விருத்தாசலம் அருகே வயலூர் பகுதியில் சென்றபோது அந்த 6 மூட்டைகளை ரயிலிலிருந்து கீழே வீசியுள்ளனர். அங்கு தயாராக இருந்த மற்றொரு கும்பல், பணமூட்டைகளை தூக்கிக்கொண்டு தப்பியோடியுள்ளது. இதன்பின்னர் மோகர்சிங், சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இந்நிலையில், அதே ஆண்டு நவம்பரில் மத்திய அரசு ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்ததால், மோகர்சிங் ஐநூறு ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர், அந்த நோட்டுக்களை தீயிலிட்டு எரித்துள்ளார். இத்தகவல்களை மோகர்சிங்கும், அவரது கூட்டாளிகளும் தங்களது வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது.
சிறையில் அடைப்பு: இதற்கிடையே, 14 நாள்கள் போலீஸ் காவல் முடிந்து, சைதாப்பேட்டை 11 -ஆவது நீதித் துறை நடுவர் மன்றத்தில் அவர்கள் திங்கள்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை, இம்மாதம் 26வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதித் துறை நடுவர் உத்தரவிட்டார். இதையடுத்து 5 பேரும் புழல் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டனர். இந்நிலையில், குற்றவாளிகளை அடையாளம் காண அடையாள அணிவகுப்பு நடத்த அனுமதி கேட்டு சிபிசிஐடி அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/13/பணமதிப்பிழப்பு-நடவடிக்கையால்-ஐநூறு-ரூபாய்-நோட்டுகளை-எரித்தோம்-ரயில்-கொள்ளையர்-வாக்குமூலம்-3037860.html
3037812 தருமபுரி சேலம் சேலம் புத்தகத் திருவிழா: மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுக் கல்வி உபகரணங்கள்! DIN DIN Tuesday, November 13, 2018 03:38 AM +0530
சேலம் முதலாவது புத்தகத் திருவிழாவில், மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுக் கல்வி உபகரணங்கள் அரங்கு பள்ளி சிறார் முதல் பெரியவர் வரை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
சேலம் போஸ் மைதானத்தில், சேலம் முதலாவது புத்தகத் திருவிழா நவ. 9-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் புத்தகக் கண்காட்சி வரும் நவ. 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
சுமார் 110 அரங்குகள் இடம்பெற்றுள்ள இக் கண்காட்சியில், புதுச்சேரியைச் சேர்ந்த சூரியா எஜுகேஷனிஸ்ட் என்ற அரங்கு சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த குணசேகரன் (48) என்பவர் அமைத்துள்ள இந்த அரங்கில், விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மரத்திலான விளையாட்டுக் கல்வி உபகரணங்கள் அனைவரையும் ஈர்ப்பதாக உள்ளது.
இது தொடர்பாக குணசேகரன் கூறியது: கற்றலை விட கேட்டலும், கேட்டலை விட பார்த்தலும், பார்த்தலை விட அனுபவித்தலும்தான் அடிப்படைக் கல்விக்கு முக்கியம். முன்பெல்லாம் ஏராளமான தொலைபேசி எண்களையும், கணக்குகளையும் மனதிலே போடும் பழக்கம் இருந்தது. இப்போது செல்லிடப்பேசி நம்மை ஆக்கிரமித்துவிட்ட நிலையில் எல்லாமே மாறி விட்டது. சாதாரண தொலைபேசி எண்களைக் கூட நினைவில் வைத்திருக்க முடியவில்லை. சாப்பிடாத குழந்தை கூட உண்டு. ஆனால், விளையாடாமல் குழந்தைகள் இருக்காது.
எனவே, அவர்களுக்கு விளையாட்டுடன் தொடர்புடைய மழலை புதிர்தட்டு, மணிச் சட்டம் உள்ளிட்ட மூளைக்கு வேலை தரும் கல்வி உபகரணங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். மரத்தில் தயாரிக்கப்படும் விளையாட்டு உபகரணங்கள் மூலம் குழந்தைகள் தொடு உணர்வுடன், மூளைக்கு வேலை கொடுக்கும் செயல் முறை கல்வி மூலம் அவர்களின் கற்றல் திறன் மேம்படும்.
மாற்றுத் திறன் குழந்தைகளும் பயன்படுத்துகிற விளையாட்டுக் கல்வி உபகரணங்களைத் தயாரித்து வருகிறேன். கடந்த 35 ஆண்டுகளாக இதுபோன்று சிறுவர் முதல் பெரியவர்களுக்கான விளையாட்டுக் கல்வி உபகரணங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளேன். வடிவங்கள், வண்ணங்கள், அளவுகள் என்ற பல்வேறு வகையிலான கல்வி உபகரணங்களைத் தயாரித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விற்பனை செய்து வருகிறோம் என்றார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/13/சேலம்-புத்தகத்-திருவிழா-மூளைக்கு-வேலை-கொடுக்கும்-விளையாட்டுக்-கல்வி-உபகரணங்கள்-3037812.html
3037811 தருமபுரி சேலம் மாணவி பாலியல் வழக்கில் தேடப்பட்ட இளைஞர் சேலம் நீதிமன்றத்தில் சரண் DIN DIN Tuesday, November 13, 2018 03:38 AM +0530
அரூர் அருகே பிளஸ் 2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞர் ரமேஷ், சேலம் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தார்.
தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள சிட்லிங் மலைக் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி, கடந்த நவ. 5 ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ், ரமேஷ் ஆகியோரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் குறித்து கோட்டப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் இளைஞர்கள் ரமேஷ் மற்றும் சதீஷ் ஆகியோர் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து இருவரையும் தேடி வந்த நிலையில், சதீஷை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்து வந்த ரமேஷ் திங்கள்கிழமை பிற்பகல் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இதையடுத்து, ரமேஷை 15 நாள் சிறைக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ரமேஷ் அழைத்துச் செல்லப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/13/மாணவி-பாலியல்-வழக்கில்-தேடப்பட்ட-இளைஞர்-சேலம்-நீதிமன்றத்தில்-சரண்-3037811.html
3037810 தருமபுரி சேலம் சாலை விபத்தில் ரௌடி உள்பட 2 பேர் சாவு DIN DIN Tuesday, November 13, 2018 03:38 AM +0530
சேலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் ரௌடி உள்பட 2 பேர் பலியாயினர்.
சேலம் அஸ்தம்பட்டி அருகே மணக்காடு பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரியத்தில் வசித்து வருபவர் சத்யா. இவர் மீது திமுக பிரமுகர் சோலைராஜ் கொலை வழக்கு மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில், திங்கள்கிழமை காலை சத்யா தனது நண்பர் சதீஷ்குமாருடன் இருசக்கர வாகனத்தில் மணக்காடு பகுதியில் இருந்து அஸ்தம்பட்டி நோக்கி வேகமாகச் சென்றார். இருசக்கர வாகனத்தை சதீஷ்குமார் ஓட்டிச் சென்றார்.
உழவர் சந்தை அருகே சென்ற போது, முன்னால் சென்ற சேலம் மாநகராட்சி குப்பை லாரியை முந்த முயன்றார். அப்போது, எதிரே ஆட்டோ வந்ததால் நிலைதடுமாறிய இருசக்கர வாகனம் லாரி மீது மோதியது. இதில் சத்யா மற்றும் அவரது நண்பர் சதீஷ்குமார் ஆகியோர் கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.
பின்னர் இருவரும் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், செல்லும் வழியில் சத்யா உயிரிழந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சதீஷ்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிறிது நேரத்தில் சதீஷ்குமாரும் உயிரிழந்தார். இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/13/சாலை-விபத்தில்-ரௌடி-உள்பட-2-பேர்-சாவு-3037810.html
3037788 தருமபுரி சேலம் கந்துவட்டி கொடுமையில் இருந்து காப்பாற்றக் கோரி மனு DIN DIN Tuesday, November 13, 2018 03:29 AM +0530
கந்துவட்டி கொடுமையில் இருந்து காப்பாற்றக் கோரி, கூலித் தொழிலாளி தனது மனைவி, மகளுடன் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
சேலம் மாவட்டம், சங்ககிரி இடங்கணசாலை பகுதியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம். கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவி கவிதா, இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்கியுளார். இதில் 4 ஆண்டுகள் மாதாமாதம் வட்டி செலுத்தி வந்துள்ள நிலையில், கடந்த ஆண்டு தர்மலிங்கம் உடல்நலம் பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் ஓர் ஆண்டு வட்டி செலுத்த முடியாமல் போனதாம்.
இதையடுத்து, 5-ஆம் ஆண்டு செலுத்த வேண்டிய வட்டித் தொகைக்கு வட்டி மேல் வட்டி கணக்கிட்டு ரூ.1.20 லட்சம் தருமாறு அந்த நபர் மிரட்டி வந்தாராம்.
இந்த நிலையில், பணம் கேட்டு அந்த நபர் தொடர்ந்து மிரட்டல் விடுப்பதால் தர்மலிங்கம் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்து, கந்து வட்டிக்காரர் தங்களை அடித்து துன்புறுத்துவதாகவும், அவர்களிடம் இருந்து தங்களை காப்பாற்றுமாறும் கோரிக்கை மனு அளித்தார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/13/கந்துவட்டி-கொடுமையில்-இருந்து-காப்பாற்றக்-கோரி-மனு-3037788.html
3037787 தருமபுரி சேலம் எடப்பாடி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் DIN DIN Tuesday, November 13, 2018 03:28 AM +0530
எடப்பாடி பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை திங்கள்கிழமை நகராட்சி அலுவலர்கள் அகற்றினர். ஆனால், முன்னறிவிப்பின்றி கடைகளை அகற்றக் கூடாது என வியாபாரிகள் முற்றுகையிட்டனர்.
எடப்பாடி நகரப் பேருந்து நிலையத்தைச் சுற்றிலும் சிறு கடைகள் மற்றும் நடைபாதை வியாபாரிகளின் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், இதனால் விபத்துகள் நிகழ்வதாகவும் நகராட்சி நிர்வாகத்துக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து, திங்கள்கிழமை நகராட்சி ஆணையர் முருகன் தலைமையிலான நகராட்சி அலுவலர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் பேருந்து நிலையப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, அப்பகுதியில் உள்ள சிறு வியாபாரிகள் ஒன்று திரண்டு, எந்த ஒரு முன்னெச்சரிக்கையும் தெரிவிக்காமல் திடீரென கடைகளை அகற்றுவதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், தங்களுக்கு கடைகள் அமைத்திட இடம் ஒதிக்கித் தருமாறும் கோரிக்கை விடுத்து, ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபட்ட அலுவலர்களை முற்றுகையிட்டனர்.
இதனை அடுத்து அங்கு வந்த காவல் துறை அலுவலர்கள் வியாபாரிகளிடம் பேச்சுவார்தை நடத்தினர். மேலும், நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் எடப்பாடி ராஜாஜி பூங்கா பின்புறம் உள்ள பகுதியில் கடைகள் அமைத்து தரப்படும் என கூறியதன் பேரில் வியாபாரிகள் முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டனர்.
அதைத் தொடர்ந்து, பேருந்து நிலையப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/13/எடப்பாடி-பேருந்து-நிலையத்தில்-ஆக்கிரமிப்புகள்-அகற்றம்-3037787.html
3037786 தருமபுரி சேலம் வாழப்பாடி நீதிமன்றத்துக்கு அரசு கட்டடம் அமைக்க நடவடிக்கை DIN DIN Tuesday, November 13, 2018 03:28 AM +0530
வாழப்பாடி நீதிமன்றத்துக்கு நிலம் தேர்வு செய்து, நிலையான அரசு கட்டடம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி மோகன்ராஜ் தெரிவித்தார்.
வாழப்பாடியில் கடந்தாண்டு நவ. 12-ஆம் தேதி குற்றவியல் நீதித்துறை நடுவர் மற்றும் முனிசீப் நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இந்நீதிமன்ற வளாகத்தின் இரண்டாமாண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, வாழப்பாடி வட்டார வழக்குரைஞர் சங்கத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். பொருளாளர் சண்முகநாதன் வரவேற்றார். வழக்குரைஞர் சங்கச் செயலர் சன்.ஆர்.திரவியம் முன்னிலை
வகித்தார்.
இதில், சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி மோகன்ராஜ், மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சிவஞானம், வாழப்பாடி குற்றவியல் நீதித்துறை நடுவர் சந்தோஷம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். வழக்குரைஞர்கள், நீதிமன்றப் பணியாளர்கள், காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். வழக்குரைஞர் சீனிவாசன் நன்றி கூறினார்.
இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி மோகன்ராஜ் கூறியது: வாழப்பாடியில் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அமைக்கப்பட்ட ஓராண்டுகளில் இதுவரை 1,850 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் ஆயிரம் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன.
வாழப்பாடியில் தனியார் வாடகைக் கட்டடத்தில் இயங்கும் நீதிமன்றத்துக்கு தகுந்த நிலத்தை தேர்வு செய்யவும், அரசின் நிதி ஒதுக்கீடு பெற்று நிலையான கட்டடம் அமைப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தை இரண்டாக பிரிக்கவும், தனித்தனி நீதிமன்றங்களாக மாற்றி அமைக்கவும் பரிந்துரை செய்யப்படும்.
வாழப்பாடியில் மக்கள் நீதிமன்றம் மற்றும் இலவச சட்ட ஆலோசனை மையங்களும் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன என்றார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/13/வாழப்பாடி-நீதிமன்றத்துக்கு-அரசு-கட்டடம்-அமைக்க-நடவடிக்கை-3037786.html
3037785 தருமபுரி சேலம் வாழப்பாடி நீதிமன்றத்துக்கு அரசு கட்டடம் அமைக்க நடவடிக்கை: சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி மோகன்ராஜ் DIN DIN Tuesday, November 13, 2018 03:28 AM +0530
வாழப்பாடி நீதிமன்றத்துக்கு நிலம் தேர்வு செய்து, நிலையான அரசு கட்டடம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி மோகன்ராஜ் தெரிவித்தார்.
வாழப்பாடியில் கடந்தாண்டு நவ. 12-ஆம் தேதி குற்றவியல் நீதித்துறை நடுவர் மற்றும் முனிசீப் நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இந்நீதிமன்ற வளாகத்தின் இரண்டாமாண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, வாழப்பாடி வட்டார வழக்குரைஞர் சங்கத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். பொருளாளர் சண்முகநாதன் வரவேற்றார். வழக்குரைஞர் சங்கச் செயலர் சன்.ஆர்.திரவியம் முன்னிலை வகித்தார்.
இதில், சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி மோகன்ராஜ், மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சிவஞானம், வாழப்பாடி குற்றவியல் நீதித்துறை நடுவர் சந்தோஷம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். வழக்குரைஞர்கள், நீதிமன்றப் பணியாளர்கள், காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். வழக்குரைஞர் சீனிவாசன் நன்றி கூறினார்.
இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி மோகன்ராஜ் கூறியது: வாழப்பாடியில் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அமைக்கப்பட்ட ஓராண்டுகளில் இதுவரை 1,850 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் ஆயிரம் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன.
வாழப்பாடியில் தனியார் வாடகைக் கட்டடத்தில் இயங்கும் நீதிமன்றத்துக்கு தகுந்த நிலத்தை தேர்வு செய்யவும், அரசின் நிதி ஒதுக்கீடு பெற்று நிலையான கட்டடம் அமைப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தை இரண்டாக பிரிக்கவும், தனித்தனி நீதிமன்றங்களாக மாற்றி அமைக்கவும் பரிந்துரை செய்யப்படும்.
வாழப்பாடியில் மக்கள் நீதிமன்றம் மற்றும் இலவச சட்ட ஆலோசனை மையங்களும் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன என்றார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/13/வாழப்பாடி-நீதிமன்றத்துக்கு-அரசு-கட்டடம்-அமைக்க-நடவடிக்கை-சேலம்-மாவட்ட-முதன்மை-நீதிபதி-மோகன்ராஜ்-3037785.html
3037784 தருமபுரி சேலம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் DIN DIN Tuesday, November 13, 2018 03:28 AM +0530
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சங்ககிரியில் திங்கள்கிழமை மாலை கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் சங்ககிரி வட்டத் தலைவர் பி.மணி தலைமை வகித்தார். வட்டச் செயலர் ஜி.மோகன் முன்னிலை வகித்தார். மாவட்ட பிரசார செயலர் எம்.முருகன், பொருளாளர் பி.சுமதி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.
கிராம நிர்வாக அலுவலர்களுக்கு இணைதள வசதிகள் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு அடங்கல் பதிவேடுகளை இலவசமாக வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலகங்களில் கழிப்பறை வசதி ஏற்படுத்தி தரவேண்டும். மாவட்ட மாறுதல், கூடுதல் பொறுப்பூதியம் வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் கல்வித்தரத்தை பட்டப்படிப்பு ஆக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தனித்துறையை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/13/பல்வேறு-கோரிக்கைகளை-வலியுறுத்தி-கிராம-நிர்வாக-அலுவலர்-சங்கத்தினர்-ஆர்ப்பாட்டம்-3037784.html
3037783 தருமபுரி சேலம் சித்தர் கோயில் அருகே தார்ச் சாலை திறப்பு DIN DIN Tuesday, November 13, 2018 03:27 AM +0530
சித்தர் கோயில் அருகே மக்கள் பயன்பாட்டுக்கு தார்ச் சாலை திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம், ஆரியகவுண்டம்பட்டி ஊராட்சி பகுதிக்குள்பட்ட அய்யண்ண வளைவு பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதிக்கு கடந்த 15 ஆண்டுகளாக தார்ச் சாலை கோரி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இதையடுத்து, வீரபாண்டி எம்.எல்.ஏ. மனோன்மணி நேரில் ஆய்வு செய்து இப்பகுதிக்கு உடனடியாக தார்ச் சாலை அமைக்கப்படும் எனஉறுதியளித்தார்.
இதைத் தொடர்ந்து, மாநில நிதிக்குழு மானியம் மாவட்ட ஊராட்சி நிதியில் இருந்து ரூ.11.06 லட்சத்தில் சித்தர்கோயிலிலிருந்து ஆரிய கவுண்டம்பட்டி அரசு தொடக்கப் பள்ளி வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு தார்ச் சாலை அமைக்கப்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இச் சாலையை வீரபாண்டி எம்.எல்.ஏ. மனோன்மணி ரிப்பன் வெட்டி தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், வீரபாண்டி பிடிஓ செல்வகுமார் (கிராம ஊராட்சி) உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/13/சித்தர்-கோயில்-அருகே-தார்ச்-சாலை-திறப்பு-3037783.html
3037782 தருமபுரி சேலம் கொங்கணாபுரம் ஒன்றியப் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பணி தொடக்கம் DIN DIN Tuesday, November 13, 2018 03:27 AM +0530
கொங்கணாபுரம் ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சி பகுதிகளில், ரூ.50 லட்சத்தில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் அங்கன்வாடி மையம் அமைப்பதற்கான திட்டப் பணிகள் தொடக்க நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
கொங்கணாபுரம் ஒன்றியத்துக்குள்பட்ட கோரணம்பட்டி, சமுத்திரம், புதுப்பாளையம் கிராமப் பகுதியில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் நிதி ஒதிக்கீட்டின் கீழ் அமையவுள்ள இப்பணிகளை, அட்மா திட்டக் குழுத் தலைவர் கரட்டூர் மணி தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் வாயிலாக, இப்பகுதியில் வசிக்கும் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்திலிருந்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கப்படும் என அலுவலர்கள் கூறினர். நிகழ்ச்சியில், பொதுப் பணித் துறை அலுவலர்கள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/13/கொங்கணாபுரம்-ஒன்றியப்-பகுதியில்-மேல்நிலை-நீர்த்தேக்கத்-தொட்டி-பணி-தொடக்கம்-3037782.html
3037781 தருமபுரி சேலம் முருகன் கோயிலில் சஷ்டி பூஜை DIN DIN Tuesday, November 13, 2018 03:27 AM +0530
ஆத்தூர் வெள்ளப் பிள்ளையார் திருக்கோயிலில் ஆறுபடை வீடு முருகன் கோயிலில் கந்த சஷ்டி 5-ஆம் நாள் பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரசித்தி பெற்ற வெள்ளப் பிள்ளையார் திருக்கோயிலில் உள்ள ஆறுபடை வீடு முருகன் கோயிலில் கந்த சஷ்டி 5-ஆம் நாள் பூஜையில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில், சிறப்பு அலங்காரத்தில் பாலமுருகன் அருள்பாலித்தார்.
தீபாராதனையை அடுத்து அன்னதானம் வழங்கப்பட்டது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/13/முருகன்-கோயிலில்-சஷ்டி-பூஜை-3037781.html
3037780 தருமபுரி சேலம் மேட்டூர் அணை நீர் திறப்பு 1,000 கன அடியாக குறைப்பு DIN DIN Tuesday, November 13, 2018 03:27 AM +0530
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 1,000 கன அடியாக குறைக்கப்பட்டது.
காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு கடந்த 10-ஆம் தேதி நொடிக்கு 2 ஆயிரம் கன அடியிலிருந்து 5 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. திங்கள்கிழமை இரவு 7 மணிக்கு காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 1,000 கன அடியாக குறைக்கப்பட்டது. பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவிலிருந்து மீண்டது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/13/மேட்டூர்-அணை-நீர்-திறப்பு-1000-கன-அடியாக-குறைப்பு-3037780.html
3037779 தருமபுரி சேலம் சேலம் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பு DIN DIN Tuesday, November 13, 2018 03:26 AM +0530
சேலம் மாவட்டத்தில் தொடர் குற்றச் சம்பவங்களும், கொள்ளைச் சம்பவங்களும் அதிகரித்துள்ளன என தேமுதிக புறநகர் மாவட்டச் செயலர் ஏ.ஆர்.இளங்கோவன் தெரிவித்தார்.
சேலம் புறநகர் மாவட்டம் சார்பில், தேமுதிக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில், மேற்கு, கிழக்கு மாவட்டம் மற்றும் புறநகர் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதில், சேலம் மாவட்டத் தொகுதியான ஆத்தூர், ஏற்காடு, வீரபாண்டி உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் கட்சியின் கட்டமைப்பை மேம்படுத்துவது, அனைத்து வாக்குச் சாவடியிலும் முகவர் மற்றும் பூத் கமிட்டியினரை நியமிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து ஏ.ஆர்.இளங்கோவன் பேசுகையில், தமிழகம் முழுவதும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை அதிகரித்துள்ளது. பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
எனவே, காவல் துறையினர் துரிதமாக செயல்பட்டு பாலியல் குற்றம் புரிபவர்கள் மீதும், குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/13/சேலம்-மாவட்டத்தில்-குற்றச்-சம்பவங்கள்-அதிகரிப்பு-3037779.html
3037778 தருமபுரி சேலம் வாழப்பாடி பகுதியில் புதர்மண்டிக் கிடக்கும் ஆறுகள், நீரோடைகள்: தூர்வாரி சீரமைக்கப்படுமா? DIN DIN Tuesday, November 13, 2018 03:26 AM +0530 சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் நீரோடைகள், ஆறுகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றியும், கரைகள் சிதைந்தும் புதர்மண்டி கிடக்கின்றன. எனவே, நீர்நிலைகளை தூர்வாரி சீரமைக்க பொதுப்பணித் துறை நீர்வள ஆதார அமைப்பு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விவசாயிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
வாழப்பாடியை அடுத்த
அருநூற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்டநதி, புழுதிக்குட்டை, குறிச்சி, பேளூரை கடந்து, 15 கி.மீ. துôரத்திலுள்ள பேளூர் ராமநாதபுரம் அருகே, கல்வராயன் மலையில் உற்பத்தியாகி பாப்பநாயக்கன்பட்டி, தும்பல், இடையப்பட்டி, பனைமடல், குமாரபாளையம் வழியாக செல்லும் வெள்ளாற்றுடன் இணைகிறது.
வசிஷ்டநதியின் குறுக்கே புழுதிக்குட்டை கிராமத்தில், 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கனஅடி நீர் தேங்கும் வகையில், 263.86 ஏக்கர் பரப்பளவில் ஆணைமடுவு அணையும், வெள்ளாற்றின் குறுக்கே கல்வராயன்மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் 52.49 அடி உயரத்தில்,190 மில்லியன் கனஅடி நீர் தேங்கும் வகையில் 188.76 ஏக்கர் பரப்பளவில் கரியகோயில் அணை
அமைந்துள்ளது.
இதுமட்டுமின்றி, குறிச்சி, பேளூர், அத்தனூர்பட்டி, கொட்டவாடி, கல்லேரிப்பட்டி, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் வசிஷ்டநதியால் நீர்வரத்து பெற்று பாசனத்துக்கு பயன்படும் 10 ஏரிகளும், பேளூர், குமாரபாளையம் உள்ளிட்ட சிறிய தடுப்பணைகளும் அமைந்துள்ளன.
வெள்ளாளகுண்டம் வனப்பகுதியில் இருந்து காட்டுவேப்பிலைப்பட்டி, முத்தம்பட்டி வழியாக வழிந்தோடி வரும் பெரியாறு, கோதுமலை வனப்பகுதியில் இருந்து மன்னாயக்கன்பட்டி வழியாக வழிந்தோடி வரும் சின்னாற்று நீரோடையும், பெரியகிருஷ்ணாபுரம் குடுவாறு, திருமனுôர் வரட்டாறு, கிடமலையாறு, கோலாத்துக்கோம்பை நீரோடை, கொட்டிப்பள்ளம் நீரோடை உள்ளிட்ட ஆறுகளும், நீர்நிலைகளும் உள்ளன.
வாழப்பாடி பாப்பான் ஏரி, சடையன் செட்டியேரி, சிங்கிபுரம், சோமம்பட்டி ஏரி, தேக்கல்பட்டி தடுப்பணை, காட்டுவேப்பிலைப்பட்டி ஏரி, பெரியகிருஷ்ணாபுரம் ஏரி உள்ளிட்ட பெரும்பாலான நீர்நிலைகளும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளன.
வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் வசிஷ்டநதி, வெள்ளாறு உள்ளிட்ட ஆறுகள், நீரோடைகள், ஏரிகள், தடுப்பணைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றியும், கரைகள் சிதைந்தும் முட்புதர்கள் அடர்ந்து புதர்மண்டியும் கிடக்கின்றன.
ஏராளமான கிராமங்களில் ஆறு, ஏரி, தடுப்பணை பாசன வாய்க்கால்களும், வருகால், மறுகால் வாய்க்கால்களும், ஆக்கிரமிப்பில் சிக்கி இருந்த சுவடே தெரியாத அளவிற்கு அழிந்து விட்டன.
இதனால், வழிந்தோடி வரும் மழைநீர் வெளியேறியும், முட்புதர்களால் உறிஞ்சியும் வீணாகி வருகிறது. கடந்த 10 ஆண்டுக்கு மேலாக வாழப்பாடி பகுதியில் எந்த ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படவில்லை. எந்த நீர்நிலையும் நிரம்பவில்லை என்பது வேதனையளிக்கும் தகவலாகும். நீர்நிலைகளில் மழைநீர் தேங்கிட வழியில்லாததால், நிலத்தடி நீர்மட்டமும் அடியோடு சரிந்து தண்ணீருக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
எனவே, வாழப்பாடி பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி, பராமரிப்பின்றி புதர்மண்டி கிடக்கும் ஆறுகள், நீரோடைகள், ஏரிகள் மற்றும் பாசன வாய்க்கால்களை தூர்வாரி சீரமைக்க, பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு உயரதிகாரிகளும், மாவட்ட நிர்வாகம் மற்றும் மக்கள் பிரதிநிதிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து சேலம் கிழக்கு மாவட்ட பா.ம.க. உழவர் பேரியக்க செயலாளர் இரா.முருகன் கூறியது:
வாழப்பாடி பகுதியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பராமரிப்பின்றி நீர்நிலைகள் சிதைந்தும், புதர்மண்டியும் கிடக்கின்றன. புயல் மழை ஏற்பட்டால், நீர்நிலைகளுக்கு செல்லும் வெள்ளம் கிராமத்திற்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, நீர்நிலைகளை தூர்வாரி சீரமைக்க பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் சிறப்பு திட்டம் தீட்டி நிதி ஒதுக்கீடு பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுமட்டுமின்றி, ஆக்கிரமிப்பில் சிக்கி இருந்த சுவடே தெரியாத அளவிற்கு மறைந்து போன ஏரி, ஆறு, தடுப்பணை பாசன வாய்க்கால்கள், வருகால் மறுகால் வாய்க்கால்களையும் மீட்டு புதுப்பிக்க வேண்டும் என்றார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/13/வாழப்பாடி-பகுதியில்-புதர்மண்டிக்-கிடக்கும்-ஆறுகள்-நீரோடைகள்-தூர்வாரி-சீரமைக்கப்படுமா-3037778.html
3037777 தருமபுரி சேலம் கிணற்றில் தவறி விழுந்தவர் உயிரிழப்பு DIN DIN Tuesday, November 13, 2018 03:26 AM +0530 காட்டுக்கோட்டையில் கிணற்றில் தவறி விழுந்தவர் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள காட்டுக்கோட்டை ஊராட்சியைச் சேர்ந்தவர் இராமசாமி மகன் சீனிவாசன் (40), தையல் தொழிலாளி. இவருக்கு மகாலஷ்மி (35) என்ற மனைவியும், தாரணிகா (8) என்ற மகளும், கிஷோர் (1) என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்ற போது, மதுபோதையில் இருந்த அவர் கிணற்றில் தவறி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் கிணற்றில் இறங்கி அவரை மீட்ட போது, சீனிவாசன் இறந்திருந்தார். தகவல் அறிந்த ஆத்தூர் ஊரக காவல் ஆய்வாளர் ஆர்.சரவணன், உடலை மீட்டு வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/13/கிணற்றில்-தவறி-விழுந்தவர்-உயிரிழப்பு-3037777.html
3037776 தருமபுரி சேலம் ஸ்கேட்டிங் பேஸ்கட்பால் போட்டி: தனியார் பள்ளி மாணவர்கள் சாதனை DIN DIN Tuesday, November 13, 2018 03:26 AM +0530 ஸ்கேட்டிங் பேஸ்கட்பால் (சறுக்கு கூடைப்பந்து) போட்டியில் ஈச்சம்பட்டி ராசிவித்யாஷ்ரம் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
சேலம் மாவட்டம், ஈச்சம்பட்டி ராசிவித்யாஷ்ரம் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் ஸ்கேட்டிங் பேஸ்கட்பால் போட்டியில் மாநில அளவில் சாதனை படைத்துள்ளனர். திருச்சி மாவட்டம், துறையூர் ஜெயராம் பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில், மாநிலத்தில் இருந்து பல பள்ளிகள் கலந்துகொண்டன. இதில், ராசிவித்யாஷ்ரம் பள்ளியின் 8-ஆம் வகுப்பு மாணவர் சங்கரநாராயணன், 5-ஆம் வகுப்பு மாணவர் கெளதம் ஆகியோர் மாநில அளவில் தங்கப் பதக்கம் பெற்றனர்.
சாதனை படைத்த மாணவர்களை ராசி கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.ராதாகிருஷ்ணன், செயலர் டி.மாசிலாமணி, பொருளாளர் பி.குமரேசன், கல்விக் குழுத் தலைவர் ஆர்.கனகராஜ், துணைத் தலைவர் சுசிலா ராஜமாணிக்கம், இயக்குநர்கள் மணி, மதியழகன், ரங்கசாமி, ரவிக்குமார், செல்லதுரை, முதல்வர் சுகிதாதினேஷ் உள்ளிட்ட ஆசிரிய, ஆசிரியைகள் பரிசு வழங்கி
பாராட்டினர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/13/ஸ்கேட்டிங்-பேஸ்கட்பால்-போட்டி-தனியார்-பள்ளி-மாணவர்கள்-சாதனை-3037776.html
3037775 தருமபுரி சேலம் மூளைக் காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் DIN DIN Tuesday, November 13, 2018 03:25 AM +0530 கெங்கவல்லி வட்டார ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளின் பெற்றோருக்கு மூளைக் காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு முகாம் தம்மம்பட்டி நடுநிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) சுஜாதா தலைமை வகித்தார். பள்ளியின் தலைமையாசிரியர் து.அன்பழகன், ஆங்கில ஆசிரியர் பயிற்றுநர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.
இதில் மாற்றுத் திறனாளிகளின்குழந்தைகளின் பெற்றோர் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முகாமில் மூளைக் காய்ச்சல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/13/மூளைக்-காய்ச்சல்-விழிப்புணர்வு-முகாம்-3037775.html
3037774 தருமபுரி சேலம் இளைஞர் மன்றம் தொடக்கவிழா DIN DIN Tuesday, November 13, 2018 03:25 AM +0530 ஏத்தாப்பூர் பேரூராட்சி அபிநவம் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து, சேலம் மாவட்ட நேரு இளையர் மையத்துடன் இணைந்து தமிழன் இளைஞர் நற்பணி மன்றத் தொடக்கவிழா அவிநவம் மாரியம்மன் கோயில் திடலில் அண்மையில் நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, மன்றத் தலைவர் மாதவன் செல்வக்குமார் வரவேற்றார். வசிஷ்ட உழவர் கூட்டமைப்புத் தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார்.
வாழப்பாடி இளைஞர் கூட்டமைப்பு ஆலோசகர்கள் ஜவஹர், உதவி தோட்டக்கலை அலுவலர் விஜயக்குமார் ஆகியோர், இளைஞர் மன்றத்தை திறந்து வைத்து, மன்ற செயல்பாடுகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் பயிற்சிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
விழாவின் நிறைவாக இளைஞர் மன்ற செயலாளர் நிர்மல் நன்றி கூறினார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/13/இளைஞர்-மன்றம்-தொடக்கவிழா-3037774.html
3037773 தருமபுரி சேலம் அரசுப் பள்ளியில் பறவைகள் கணக்கெடுப்பு DIN DIN Tuesday, November 13, 2018 03:25 AM +0530 தளவாய்ப்பட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியர் பறவைகள் கணக்கெடுப்பை மேற்கொண்டனர்.
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டத்துக்குள்பட்ட தளவாய்ப்பட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியர் பறவை மனிதர் என அழைக்கப்படும் சாலீம்அலி பிறந்த நாளை கொண்டாடும் வகையில், பறவைகள் கணக்கெடுப்பை நடத்தினர்.
1896 நவ. 12-ஆம் தேதி பிறந்த சலீம்அலி, 80 ஆண்டுகளாக பறவைகள் பற்றி ஆய்வு நடத்தினார். இவருடைய பிறந்தநாளை முன்னிட்டு மாணவ, மாணவியர் கிராமத்தில் 21 பறவைகளை கணக்கெடுத்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/13/அரசுப்-பள்ளியில்-பறவைகள்-கணக்கெடுப்பு-3037773.html
3037772 தருமபுரி சேலம் சங்ககிரியில் நாளை மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம் DIN DIN Tuesday, November 13, 2018 03:25 AM +0530 சங்ககிரி கோட்ட மின்சார வாரியத்தின் சார்பில், மின் நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் சங்ககிரி, வி.என்.பாளையம் மின்வாரிய அலுவலக வளாகத்தில் புதன்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.
இதில், மேட்டூர் மேற்பார்வை பொறியாளர் பங்கேற்று மின் நுகர்வோர்களிடமிருந்து மனுக்களை பெறுகிறார். எனவே, சங்ககிரி கோட்டத்துக்குள்பட்ட மின் நுகர்வோர்கள் மின்சாரம் சம்பந்தமான குறைகளைத் தெரிவிக்கலாம் என சங்ககிரி மின்வாரிய செயற்பொறியாளர் (இயக்கமும்-பராமரிப்பும்) கே.பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/13/சங்ககிரியில்-நாளை-மின்-நுகர்வோர்-குறை-தீர்-கூட்டம்-3037772.html
3037771 தருமபுரி சேலம் கூடமலையில் மின்விளக்குகள் எரியுமா? DIN DIN Tuesday, November 13, 2018 03:24 AM +0530  

கெங்கவல்லி அருகே கூடமலை பிரதான சாலையில் மின்விளக்குகள் இல்லாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கூடமலை ஊராட்சியில் தம்மம்பட்டி -கெங்கவல்லி பிரதான சாலையில் உள்ள மின்கம்பத்தில் பல ஆண்டுகளாக மின்விளக்கு இல்லை. இதனால் அப்பகுதியில் இரவு நேரங்களில் மக்கள் நடமாடுவது இன்னலுக்குரிய விஷயமாக இருந்துவருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: கூடமலையில் பல இடங்களில் உள்ள 50 மின்கம்பங்களில் மின்விளக்குகள் பொருத்தப்படுவதும் இல்லை. அதேபோன்று பழுதாகும் மின்விளக்குகளை மீண்டும் எரிய வைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதும் இல்லை பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
இதுகுறித்து கூடமலை ஊராட்சி நிர்வாகம் மற்றும் கெங்கவல்லி வட்டார வளர்ச்சி அலுவலகத்தினர் உரிய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/13/கூடமலையில்-மின்விளக்குகள்-எரியுமா-3037771.html
3037264 தருமபுரி சேலம் அரசு உத்தரவை மீறும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை: முதன்மைச் செயலர் பெ.அமுதா எச்சரிக்கை DIN DIN Monday, November 12, 2018 09:32 AM +0530 டெங்கு, பன்றிக்காய்ச்சல் சிகிச்சை குறித்த அரசு உத்தரவை மீறும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையரும், முதன்மைச் செயலாளருமான பெ.அமுதா தெரிவித்துள்ளார்.
டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால்,  நோய் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்த வகையில்டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் குறித்து கண்காணிக்க  மாவட்டங்கள்தோறும் முதன்மைச் செயலர் தலைமையில் சிறப்புக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 இந்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையரும், அரசு முதன்மைச் செயலாளருமான பெ.அமுதா ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். பின்னர்,  அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
சேலம் அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் பாதிக்கப்பட்ட நிலையில் 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  தற்போது அவர்களுக்கு காய்ச்சலின் தாக்கம் குறைந்துள்ளது. காய்ச்சல் முழுவதும் குணம் அடைந்த பின்பு அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
அதே நேரத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு டெங்கு,  பன்றிக்காய்ச்சல் இருப்பது தெரியவந்தால் உடனடியாக மாவட்ட சுகாதாரத் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
 மாறாக,  சிகிச்சை அளித்த சில நாள்களுக்கு பிறகு  அரசு மருத்துவமனைக்குச் செல்ல பரிந்துரைக்கக்கூடாது என ஏற்கெனவே தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
இந்த உத்தரவை மீறும் தனியார் மருத்துவமனைகள் மீது இந்திய மருத்துவச் சங்கத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். காய்ச்சலுக்கு வருவோரைக் காப்பாற்றிட போதிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/12/அரசு-உத்தரவை-மீறும்-தனியார்-மருத்துவமனைகள்-மீது-நடவடிக்கை-முதன்மைச்-செயலர்-பெஅமுதா-எச்சரிக்கை-3037264.html
3037263 தருமபுரி சேலம் அனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்த பதிவு செய்ய நவ.16 வரை கால நீட்டிப்பு DIN DIN Monday, November 12, 2018 09:31 AM +0530 சேலம்  மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் உள்ள அனுமதியற்ற மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கு இணையதளம் வாயிலாக பதிவு செய்யப்படுவதற்கான கால அவகாசம் நவம்பர் 16 ஆம் தேதி வரை நீட்டிப்பு  செய்யப்பட்டுள்ளது.
தமிழக  அரசால்,  அனுமதியற்ற மனைப் பிரிவுகளில் அமையும்  தனித்த மனைகளை வரன்முறைப்படுத்துவதற்கு விண்ணப்பித்திட நவம்பர் 3 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. 
அதைத் தொடர்ந்து நவம்பர் 3 ஆம் தேதி முதல் நவ.6 ஆம் தேதி வரை விடுமுறை காலமாக இருந்ததால் பொதுமக்களிடமிருந்து அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கு கால நீட்டிப்பு வழங்கக் கோரி, கோரிக்கைகள் வரப்பெற்றன.
இதன்  அடிப்படையில், தமிழக அரசின் உத்தரவின் பேரில் அனுமதியற்ற மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்காக  இணையதளம் வாயிலாக பதிவு செய்ய நவம்பர் 12 ஆம் தேதி முதல் நவ.16 ஆம் தேதி வரை நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில்,  தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்ட கால அளவான நவ.12  முதல் நவ.16 ஆம் தேதி வரைக்குள், சேலம் மாநகராட்சியில் 4 மண்டலத்துக்குள்பட்ட  பகுதிகளில் 2016 அக்டோபர் 20 ஆம் தேதிக்கு முன்பு கிரயம் பெற்றுள்ள அனுமதியற்ற மனைகளின் உரிமையாளர்கள் ரூ. 500-ஐ, ‌w‌w‌w.‌t‌n‌l​a‌y‌o‌u‌t‌r‌e‌g.‌i‌n  என்ற இணையதள முகவரியில் செலுத்த
வேண்டும்.
மேலும் பதிவு செய்த ரசீதை மனையின் கிரையப் பத்திர நகல் (20.10.2016- க்கு முன் கிரயம்), நடப்பு வரையிலான வில்லங்கச் சான்றிதழ் நகல், பட்டா நகல் நகர நில அளவை வரைபடம்  (டி.எஸ்.எல்.ஆர்.)  நகல், மனை அமையும் மனைப் பிரிவின் வரைபடம் - 5 நகல்கள், அடையாள அட்டை (ஆதார் அட்டை / வாக்காளர் அடையாள அட்டை).
ஆவணங்களுடன் இணைத்து, சேலம் மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில்,  மூன்றாம் தளத்தில் உள்ள நகரமைப்புப் பிரிவில் விண்ணப்பித்து, தங்களது மனைகளை வரன்முறைப்படுத்திக் கொள்ளலாம் என்று சேலம் மாநகராட்சி  ஆணையர் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/12/அனுமதியற்ற-மனைகளை-வரன்முறைப்படுத்த-பதிவு-செய்ய-நவ16-வரை-கால-நீட்டிப்பு-3037263.html
3037262 தருமபுரி சேலம் கடத்தல் பான்மசாலா பொருள்களை காரில் வந்து பறித்து சென்ற மர்ம நபர்கள்! போலீஸார் விசாரணை DIN DIN Monday, November 12, 2018 09:31 AM +0530 பெங்களூரில் இருந்து ஆட்டோவில் கடத்தி வந்த தடை செய்யப்பட்ட பான்மசாலா பொருள்களை காரில் வந்து பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கோவை,  தாமஸ் தெரு, விநாயகர் கோயில் பகுதியைச் சேர்ந்த ஜிகாதஜி மகன் பவர்லால்,  அதே பகுதியைச் சேர்ந்த ஒட்டுநர் ஜோர்ஜி  மகன் மோகன்லால் ஆகியோர்  பெங்களூருவில் இருந்து  தடைசெய்யப்பட்ட  பான்மசாலா பொருள்களை மினி ஆட்டாவில் ஏற்றிக்கொண்டு கோவைக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.  அந்த மினிஆட்டோவை பின்தொடர்ந்து கார் ஒன்று வந்துள்ளது.  சேலத்திலிருந்து சங்ககிரி நோக்கி வந்த போது, சங்ககிரி வைகுந்தம் சுங்கச்சாவடி அருகே காரில் வந்த நான்கு பேர்,  ஆட்டோவை நிறுத்தி  போதை பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார்  எனக்கூறி,  ஆட்டோ  ஒட்டுநரை காரில் ஏற்றிக்கொண்டனர்.பின்னர்  ஆட்டோவை காரில் வந்த நபர்களில் ஒருவர்  ஓட்டிச் சென்றுள்ளார். 
சங்ககிரி அருகே உள்ள பச்சாம்பாளை சென்றபோது,  அங்கு மினி ஆட்டோவில் இருந்த பொருள்களை காரில் ஏற்றிக் கொண்டு ஆட்டா ஓட்டுநர் மோகன்லாலை அப்பகுதியில் இறக்கிவிட்டு கார் கோவையை நோக்கிச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.  அப்பகுதியில் நெடுஞ்சாலை ரோந்துப் பணியில் இருந்த போலீஸார் சந்தேகம் அடைந்து மினி ஆட்டோவுடன் நின்று கொண்டிருந்த மோகன்லாலிடம் விசாரித்துள்ளனர். பின்னர் இதுகுறித்து  சங்ககிரி போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 
இந்தச் சம்பவம் குறித்து காவல் துணைக் கண்காணிப்பாளர் அசோக்குமார்,  சங்ககிரி காவல் ஆய்வாளர் செல்வம் உள்ளிட்ட போலீஸார்  விசாரித்தனர்.  போதை பொருள் தடுப்புப் பிரிவு தனிப்படை போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விசாரணை நடத்துவததற்காக  தனிப்படை போலீஸார் கோவை, பெங்களூரு பகுதிகளுக்கு  சென்றுள்ளனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/12/கடத்தல்-பான்மசாலா-பொருள்களை-காரில்-வந்து-பறித்து-சென்ற-மர்ம-நபர்கள்-போலீஸார்-விசாரணை-3037262.html
3037261 தருமபுரி சேலம் சின்ன கிருஷ்ணாபுரம்  பாலதண்டாயுதபாணி கோயிலில் 15-ஆம் ஆண்டு கந்தசஷ்டி விழா DIN DIN Monday, November 12, 2018 09:30 AM +0530 வாழப்பாடியை அடுத்த சின்னகிருஷ்ணாபுரம் பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில், 15-ஆம் ஆண்டு கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 
நிகழாண்டு விழா, கடந்த  9-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன்  தொடங்கியது. தொடர்ந்து பக்தர்களுக்கு காப்புக் கட்டுதல், சஷ்டிபாராயணம் மற்றும் தீபாராதனை,  சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், அன்னதானம் நடைபெற்றது. அன்றிரவு வாழப்பாடி இலக்கியப் பேரவையின் நகைச்சுவை பாட்டிசைப் பட்டிமன்றம் நடைபெற்றது.
10-ஆம் தேதி மகாதீபாராதனை, அபிஷேக ஆராதனைகள், பள்ளிக் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. 11 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை சிறப்பு பூஜை,  இரவு உதயமாம்பட்டு பாரதபிரசங்கர் கொளஞ்சி குழுவினரின் கந்தபுராண பிரசங்கம் நடைபெற்றது. 12-ஆம் தேதி (திங்கள்கிழமை) கோயில் வளாகத்தில் கந்தபுராண பிரசங்கம் நடைபெறுகிறது.  
நாளை செவ்வாய்க்கிழமை காலை, திருநங்கைகள் நடத்தும் சூரசம்கார நிகழ்ச்சியும், விநாயகர் ஆலயத்தில் இருந்து பாலதண்டாயுதபாணி கோயிலுக்கு பால்குட ஊர்வலமும் நடைபெறுகிறது. பகல் 12 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாண வைபோவம் நடைபெறுகிறது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது.  மாலை 4 மணிக்கு புஷ்ப அலங்காரத்தில் சுவாமி திருவீதி உலா உற்சவம்,  இரவு 7 மணிக்கு, ஆதிகேசவன் குழுவினரின் திருநங்கைகள் தெய்வீக நடன நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர் பெரியதனக்காரர்கள், இறைவழிபாட்டு மன்றத்தினர் மற்றும் விழாக்குழுவினர், கட்டளைதாரர்கள் செய்து வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/12/சின்ன-கிருஷ்ணாபுரம்--பாலதண்டாயுதபாணி-கோயிலில்15-ஆம்-ஆண்டு-கந்தசஷ்டி-விழா-3037261.html
3037260 தருமபுரி சேலம் சிறுமி ராஜலட்சுமி குடும்பத்தினருக்கு 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும்: செ.கு. தமிழரசன் கோரிக்கை DIN DIN Monday, November 12, 2018 09:30 AM +0530 வன்கொடுமையால் கொலை செய்யப்பட்ட சிறுமி ராஜலட்சுமி குடும்பத்தினருக்கு 5 ஏக்கர் நிலமும், நிரந்தர அரசுப் பணியும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர் செ.கு.தமிழரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆத்தூர் அருகே உள்ள தளவாய்ப்பட்டி காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சிறுமி ராஜலட்சுமி வன்கொடுமையால் கொலை செய்யப்பட்டார். அவரை  கொலை செய்த தினேஷ்குமார் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
இந்த நிலையில் ராஜலட்சுமி குடும்பத்தினரை நேரில் சந்தித்து இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர் செ.கு.தமிழரசன் ஆறுதல் தெரிவித்தார். 
இதைத்தொடர்ந்து அவர் சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:
சேலம் சிறுமி ராஜலட்சுமி வன்கொடுமையால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இதில் தொடர்புடைய நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். 
மேலும், அவருக்குப் பின்னால் சதித்திட்டம் தீட்டிய நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களையும் அடையாளம் கண்டுபிடித்து கைது செய்து மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
ராஜலட்சுமியின் குடும்பத்தினருக்கு தரிசு நிலத்தில் இருந்து 5 ஏக்கர் நிலம் வழங்க முன்வர வேண்டும். அவரின் குடும்பத்தினருக்கு நிரந்தர அரசுப் பணி வழங்க வேண்டும். மேலும் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். ராஜலட்சுமியை ஒருவர் மட்டுமே கொலை செய்தாரா என்பது குறித்து பல்வேறு சந்தேகங்கள் உள்ளது. தினேஷ்குமாரை இயக்கியது யார், வேறு ஏதாவது சக்திகள் பின்னணியில் இருக்கின்றதா என்பதை தகுந்த முறையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு உண்மையை வெளிக் கொண்டுவர வேண்டும். ராஜலட்சுமி குடும்பத்தினருக்கு அரசு தகுந்த பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்றார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/12/சிறுமி-ராஜலட்சுமி-குடும்பத்தினருக்கு-5-ஏக்கர்-நிலம்-வழங்க-வேண்டும்-செகு-தமிழரசன்-கோரிக்கை-3037260.html
3037259 தருமபுரி சேலம் மூன்று நாளில் 10 ஆயிரம் பேர் பார்வையிட்ட சேலம் முதலாவது புத்தகத் திருவிழா DIN DIN Monday, November 12, 2018 09:29 AM +0530 !சேலம் முதலாவது புத்தகக் கண்காட்சியை மூன்று நாளில் சுமார் 10 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளதாக,  நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள போஸ் மைதானத்தில், சேலம் முதலாவது புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார். மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் இந்த புத்தகக் கண்காட்சியில் 110 புத்தக அரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. வரும் நவம்பர் 21 ஆம் தேதி வரை நடைபெறும் புத்தகக் கண்காட்சி காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். தஞ்சை சரஸ்வதி மகால் பதிப்பகம்,  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், காலச்சுவடு,  தமிழினி,  பாரதி புத்தகாலயம் உள்ளிட்ட தமிழகத்தின் முன்னணி பதிப்பகங்கள் புத்தகக் கண்காட்சியில் அரங்குகளை திறந்து வைத்துள்ளன. 50 லட்சம் தலைப்புகளில்,  பல லட்சம் புத்தகங்கள் வாசகர்களை கவரும் வகையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.  இது தொடர்பாக சேலம் புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர் நாதம் கீதம் எஸ்.கே.முருகன் கூறுகையில், சேலம் முதலாவது புத்தகத் திருவிழாவில் மூன்று நாளில் சுமார் 10 ஆயிரம் பேர் கண்காட்சிக்கு வருகை தந்துள்ளனனர். மேலும் புத்தகங்களையும் வாங்கிச் சென்றனர். வாசகர்களை கவரும் அனைத்துத் தலைப்புகளிலும் புத்தகங்கள் இருப்பதால் மீதமுள்ள நாள்களில் இன்னும் பல ஆயிரம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/12/மூன்று-நாளில்-10-ஆயிரம்-பேர்-பார்வையிட்ட-சேலம்-முதலாவது-புத்தகத்-திருவிழா-3037259.html
3037258 தருமபுரி சேலம் குரூப் 2 தேர்வு: சேலத்தில் 27,157 பேர் எழுதினர் DIN DIN Monday, November 12, 2018 09:29 AM +0530 சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வை 27,157 பேர்
எழுதினர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வு, சேலம் மாவட்டத்தில் 104 தேர்வு மையங்களில் 134 தேர்வுக் கூடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இத்தேர்வுக்கு சேலம் மாவட்டத்தில் மொத்தம் 36,274 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 27,157 பேர் பங்கேற்று தேர்வெழுதினர்.  
சுமார் 9,117 பேர் தேர்வு எழுத வரவில்லை. இது 74.84 சதவீதம்  வருகை ஆகும். 
சுமார்  35 பறக்கும் படைகள், 14 கண்காணிப்புக் குழுக்கள் மூலம் தேர்வு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. மேலும், அனைத்துத் தேர்வு மையங்களில் விடியோ பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 
சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/12/குரூப்-2-தேர்வு-சேலத்தில்-27157-பேர்-எழுதினர்-3037258.html
3037257 தருமபுரி சேலம் அமில வீச்சு தாக்குதலில் பாதிக்கப்பட்ட பெண் சாவு DIN DIN Monday, November 12, 2018 09:29 AM +0530 சேலத்தில் அமில வீச்சு தாக்குதலில் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சனிக்கிழமை இறந்தார்.
சேலம் குகை பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி காயத்ரி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவருடன் நெருங்கிப் பழகி வந்தார் எனக் கூறப்படுகிறது. இதுபற்றி தெரியவந்ததால் கணவர் பாலமுருகன், மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து காயத்ரி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று தங்கியிருந்தார். மேலும், சீனிவாசனுடன் பேசுவதையும் தவிர்த்து வந்தார். இதனால் கோபமடைந்த சீனிவாசன், கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி குகை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த காய்த்ரி மீது அமிலத் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடினார். இதில் படுகாயமடைந்த காயத்ரி, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதுபற்றி செவ்வாய்ப்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், சீனிவாசன், அவருக்கு உடந்தையாக இருந்த அசோக்குமார், ரவி ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.
இந்த நிலையில் சேலம் அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த காயத்ரி சனிக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதைத்தொடர்ந்து கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி செவ்வாய்ப்பேட்டை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/12/அமில-வீச்சு-தாக்குதலில்-பாதிக்கப்பட்ட-பெண்-சாவு-3037257.html
3037256 தருமபுரி சேலம் எடப்பாடி பகுதியில் கோமாரி நோய் தாக்குதல் குறித்து ஆய்வு DIN DIN Monday, November 12, 2018 09:29 AM +0530 எடப்பாடி சுற்றுப்புறப் பகுதிகளில் கோமாரி நோய்  தாக்குதல்  குறித்த  ஆய்வு முகாம் அண்மையில்  நடைபெற்றது.
 எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் முகமது உசேன் தலைமையில் கால்நடை பராமரிப்புத்துறையினர், விவசாயிகள் வளர்த்துவரும் கால்நடைகளை  சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.  இது குறித்து இணை இயக்குநர் முகமது உசேன்  கூறுகையில்,  இப்பகுதியில் ஒரு சில கால்நடைகளை
தாக்கியுள்ள கோமாரி நோய் குறித்து விவசாயிகள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.  கோமாரி நோயானது கொடிய நோய் அல்ல. அதே சமயம் இந்நோய்தொற்று இருக்கும் நேரங்களில் கால்நடைகளை தாக்கும் மறைமுகமான நோய்களிலிருந்து பாதுகாத்திட வேண்டும். நோய் தாக்கம் அறிந்து அருகில் உள்ள
கால்நடை மருத்துவமனைகளை அணுகி, கால்நடைகளுக்கு தொடர் சிகிச்சை அளித்திட வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட கால்நடைகளை தனிமைப்படுத்துவதுடன்,  மற்ற கால்நடைகளுக்கு முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி போட வேண்டும்.  இந் நோய்க்கான மருத்துகள் போதியளவில் இருப்பில் உள்ளது என்றார்.  முகாமில் வட்டாட்சியர் கேசவன், கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர்கள்,  கால்நடை மருத்துவர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/12/எடப்பாடி-பகுதியில்-கோமாரி-நோய்-தாக்குதல்-குறித்து-ஆய்வு-3037256.html
3037255 தருமபுரி சேலம் ஓமலூரில் நூலகக் கட்டடம் திறப்பு DIN DIN Monday, November 12, 2018 09:28 AM +0530 ஓமலூரில் புதிதாக கட்டப்பட்டு  ஐந்து மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த நூலகக் கட்டத்தை எம்.பி. வி. பன்னீர்செல்வம் திறந்து வைத்து நூலகத்துக்கு தனிப்பட்ட முறையில் நூல்கள் வழங்குவதாக உறுதியளித்தார்.
ஓமலூரில் 1955-ஆம் ஆண்டு முதல் நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்துக்கு தனியாக கட்டடம் இல்லாத நிலையில் தற்போது வரை ஓமலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே உள்ள தனியார் கட்டடத்தில் ரூ.6 ஆயிரம் வாடகையில் கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. மேலும், இந்நூலகத்தில் சுமார் 58 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.  8,190 உறுப்பினர்களை கொண்ட  இந்த நூலகத்துக்கு தனியாக கட்டடம் இல்லாததால் வாசகர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்தநிலையில் ஓமலூர் பேரூராட்சியில் புதிய நூலகம் கட்ட இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், கட்டடம் கட்டப்படாமல் இருந்த நிலையில் ஓமலூர்காசிவிஸ்வநாதர் கோயில் அருகே ரூ.12 லட்சம்  மதிப்பில் புதிதாக கிளை நூலகக் கட்டடம் சேலம் மக்களவை உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒதுக்கீடு செய்து கட்டி முடிக்கப்பட்டது. மின்சாரம், குடிநீர், கழிப்பிடம்  என அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்ட புதிய நூலகக் கட்டடம்  பணிகள் முடிவடைந்தும் ஐந்து மாதங்களாக திறக்கப்படாமல் பூட்டியே கிடந்தது. 
இதனைத் தொடர்ந்து நூலகக் புதிய கட்டடம் திறப்புவிழா அண்மையில் நடைபெற்றது. எம்.பி. வி.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு நூலகத்தை திறந்து வைத்தார். மேலும், அவர் பேசும்போது நூலகம் ஒரு நாட்டின் அறிவுப்பூர்வமான வளர்ச்சிக்கு வித்திடும். அதனால், இந்த நூலகத்தை அனைவரும் முறையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த நூலகத்திற்கு தனது சொந்த செலவில் தேவையான நூல்கள் வழங்கப்படும் என்றார்.       சட்டப்பேரவை  உறுப்பினர் வெற்றிவேல், முன்னாள் எம்.எல்.ஏ.  பல்பாக்கி கிருஷ்ணன் ஆகியோரும் நூலகத்துக்கு புத்தகங்கள் வழங்குவதாக தெரிவித்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/12/ஓமலூரில்-நூலகக்-கட்டடம்-திறப்பு-3037255.html
3037254 தருமபுரி சேலம் மாநில மல்யுத்த போட்டி: ஆட்டையாம்பட்டி  அரசுப் பள்ளி மாணவர் முதலிடம் DIN DIN Monday, November 12, 2018 09:28 AM +0530 சேலம் மாவட்டம் மேட்டூரில் நடைபெற்ற மாநில அளவிலான மல்யுத்தப் போட்டியில் ஆட்டையாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் முதலிடம் பெற்றார்.
கடந்த நவம்பர் 8 இல்  மேட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாநில அளவிலான மல்யுத்தப் போட்டி நடைபெற்றது. 
இதில் தமிழகம் முழுவதும் இருந்து 700 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 14 வயதுக்குள்பட்டோருக்கான 45 எடை கிலோ பிரிவில் ஆட்டையாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் கௌரிசங்கர் கலந்து கொண்டு நான்கு போட்டிகளிலும்  "நாக் அவுட்'  முறையில் வென்று முதலிடம் பிடித்து தேசிய அளவிலான போட்டிக்குத் தேர்வாகியுள்ளார்.
இதுகுறித்து ஆட்டையாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் முருகேசன்,  முத்துக்குமார் ஆகியோர் கூறுகையில், இந்திய பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளில் இப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பல்வேறு வெற்றிகளை குவித்துள்ளனர்.
நடப்பாண்டு புதிதாகச் சேர்க்கப்பட்ட மல்யுத்த போட்டிக்கு 10 மாணவர்கள் சென்றனர். இவர்களில் கட்டடத் தொழிலாளி ரவி - சுமதி தம்பதி மகன் 8-ஆம் வகுப்பு பயிலும் கௌரிசங்கர் கலந்து கொண்ட முதல் போட்டியிலேயே மாநில அளவில் முதலிடம் பிடித்து தேசிய போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/12/மாநில-மல்யுத்த-போட்டி-ஆட்டையாம்பட்டி--அரசுப்-பள்ளி-மாணவர்-முதலிடம்-3037254.html
3036569 தருமபுரி சேலம் ஓமலூர் அருகே தனியார் மருத்துவமனை ஸ்கேன் மைய உரிமம் ரத்து: மருத்துவமனை நிர்வாகி கைது DIN DIN Sunday, November 11, 2018 07:15 AM +0530 சேலம் மாவட்டம்,  ஓமலூர் அருகே  தனியார் மருத்துவமனைக்கு சொந்தமான ஸ்கேன் மையத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ஸ்கேன் மையத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. மேலும் அதன் நிர்வாகியும் கைது செய்யப்பட்டார்.
ஓமலூர் அருகேயுள்ள கருப்பூரில் தனியாருக்குச் சொந்தமான மருத்துவமனை உள்ளது.  இந்த மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு  அல்ட்ரா ஸ்கேன் செய்யும் வசதி உள்ளது. இந்த நிலையில், அரசு விதிமுறைகளை மீறி இந்த மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் மையத்தில்  கருவில் உள்ள பாலினம் குறித்து தெரிவிப்பதாக மருத்துவத் துறைக்கு புகார் சென்றது. இதனைத் தொடர்ந்து  மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை துணை இயக்குநர் வளர்மதி, குழுக் கண்காணிப்பாளர் கமலக்கண்ணன்,  மருத்துவத்துறையின் போலீஸ் டி.எஸ்.பி. தாமஸ்பிரபாகர், சேலம் மாவட்ட குடும்ப நலம்,  ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் சத்யா மற்றும் மருத்துவ ஆய்வுக் குழுவினர் தனியார் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை  திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் கடந்த 11 மாதங்களாக ஸ்கேன் விவரம், சிகிச்சை அளிக்கப்பட்ட விவரங்கள்  குறித்து ஆய்வு நடத்தினர்.  இந்த  ஆய்வில் முறைகேடுகள் கண்டறியப்பட்டன.  இதனைத் தொடர்ந்து, ஸ்கேன் கருவி மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்து, மருத்துவமனையின் ஸ்கேன் மையத்துக்கான உரிமத்தை ரத்து செய்தனர். மேலும்,  மருத்துவமனை நிர்வாக இயக்குநர் மருத்துவர் வித்யாசாகரை கைது செய்து, சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து,  சேலம் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர் சத்யா கூறும்போது,  கருப்பூரில் உள்ள ஸ்கேன் மையத்தில் சோதனை நடத்தப்பட்டது.  அதில், ஸ்கேன் செய்யப்பட்டதற்கான ஆவணங்களை முறையாகப் பராமரிக்கப்படாதது,  பாலினம் குறித்து விவரம் தெரிவிப்பது உள்ளிட்ட முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், விதிமுறையை மீறி செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/11/ஓமலூர்-அருகே-தனியார்-மருத்துவமனைஸ்கேன்-மைய-உரிமம்-ரத்து-மருத்துவமனை-நிர்வாகி-கைது-3036569.html
3036568 தருமபுரி சேலம் போலி பெண் மருத்துவர் கைது: மருத்துவமனை, மருந்துக்கடைக்கு சீல் DIN DIN Sunday, November 11, 2018 07:15 AM +0530 சேலம்  அருகே நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி பெண் மருத்துவரை போலீஸார் கைது செய்து மருத்துவமனை, மருந்துக் கடைக்கு சீல் வைத்தனர்.
சேலம் மாவட்டம், காகாபாளையம், வேம்படிதாளம் ரயில்வே பாலம் அருகில்  எட்வின் ராஜ்  மனைவி சரோஜா (69)  என்பவர் கடந்த 38 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இவர் மீது புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, சென்னையில் இருந்து மருத்துவக் கண்காணிப்பாளர் கமலக்கண்ணன்,  மருத்துவர் நடராஜன் மற்றும் சேலம் மருத்துவப் பணிகள் துணை இயக்குநர் வளர்மதி ஆகியோர் சம்பந்தப்பட்ட  மருத்துவமனையில் சனிக்கிழமை  திடீர் சோதனை செய்தனர்.
இதில் செவிலியர் படிப்பு மட்டுமே படித்துள்ள சரோஜா,  கடந்த 1972 -ஆம் ஆண்டு முதல் 1976 வரை சேலம் அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று தனது வீட்டிலேயே நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்ததைக் கண்டுபிடித்தனர்.  இப்பகுதியில் கருக்கலைப்பு, கருவில் உள்ள சிசுவின் பாலினம் குறித்து ஸ்கேன் மூலம் கண்டறிதல்  உள்ளிட்ட சட்ட விரோதச் செயல்களை இவர் செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும், இவரது கணவர் எட்வின் ராஜ் மருத்துவமனையின் அருகில் மருந்துக் கடை நடத்தி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சிறப்பு குழுவினர் அளித்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீஸார்,  போலி பெண் மருத்துவர் சரோஜாவை கைது செய்தனர். மேலும், சேலம் தெற்கு வட்டாட்சியர்  ஜாகீர் உசேன் தலைமையிலான வருவாய்த்துறையினர் மருத்துவம் பார்த்து வந்த வீடு மற்றும் மருந்துக் கடையைப் பூட்டி சீல் வைத்தனர். 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/11/போலி-பெண்-மருத்துவர்-கைது-மருத்துவமனை-மருந்துக்கடைக்கு-சீல்-3036568.html
3036567 தருமபுரி சேலம் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு DIN DIN Sunday, November 11, 2018 07:14 AM +0530 மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு நொடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர்  அணையிலிருந்து  காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு  2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் பாசனப் பகுதிகளில் நீருக்கான தேவை அதிகரித்ததால் சனிக்கிழமை காலை முதல் பாசனத்துக்கு நீர் திறப்பு நொடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 
இந்த நிலையில், சனிக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.01 அடியாக இருந்தது. அணைக்கு நொடிக்கு 6,038 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து  காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 5000 கனஅடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 700 கனஅடி வீதமும் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.  அணையின் நீர் இருப்பு 64.85 டி.எம்.சி.யாக இருந்தது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/11/மேட்டூர்-அணையிலிருந்துநீர்-திறப்பு-அதிகரிப்பு-3036567.html
3036566 தருமபுரி சேலம் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை: 5 பேரை சேலத்துக்கு அழைத்து வந்து விசாரணை DIN DIN Sunday, November 11, 2018 07:14 AM +0530 சேலம்  ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை அடிக்கப்பட்ட  வழக்கில் கைது செய்யப்பட்ட  5 பேரை சிபிசிஐடி போலீஸார் சேலம் அழைத்து வந்து  ரயில் நிலையங்களில் வைத்து விசாரணை நடத்தினர்.
சேலம்,  நாமக்கல் மாவட்டங்களின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து ரூ.323 கோடி மதிப்பிலான கிழிந்த ரூபாய் நோட்டுகளைச்  சேகரித்து, கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி சேலம் ரயில் நிலையத்தில் இருந்து சேலம் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைத்தனர். 
சேலத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்ட அந்த ரயில் மறுநாள் காலை 4.15 மணி அளவில் எழும்பூர் ரயில் நிலையம் சென்று அடைந்தது. பின்னர் பணம் இருந்த பெட்டி மட்டும் சேத்துப்பட்டு பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. 
அங்கு ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ரயில் பெட்டியைத் திறந்து பார்த்தபோது பெட்டியின் மேற்கூரையை துளையிட்டு ரூ.5.78 கோடி பணம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.  
இதுகுறித்து, சி.பி.சி.ஐ.டி. போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 
கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் விசாரணையை அடுத்து மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளைக் கும்பல் தலைவன் மோகர்சிங்,  தினேஷ், ரோகன், பில்டியா உள்ளிட்ட 7 பேரை போலீஸார் கைது செய்தனர். 
நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்ட அவர்களை 14 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கொள்ளையர்களில் 5 பேரை சனிக்கிழமை சென்னையில் இருந்து இரண்டு வேன்கள் மூலம் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் சேலத்துக்கு அழைத்து வந்தனர். 
இதையடுத்து விருத்தாசலம் ரயில் நிலையம் மற்றும் சின்னசேலம் ரயில் நிலையங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதன் பின்னர் சேலத்துக்கு அழைத்து வந்தனர்.
கொள்ளைச் சம்பவத்தின்போது, சேலத்தில் கொள்ளையர்கள் நடமாடிய சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் மற்றும் அயோத்தியாப்பட்டணம் ரயில் நிலையத்துக்கு அழைத்துச் சென்று கொள்ளையர்களை வாகனத்திலேயே அமர வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது எந்த ரயில் நிலையத்தில் இருந்து அவர்கள் ரயில் ஏறினர் என்பது குறித்தும்,  அப்போது யார், யார் உடனிருந்தனர் என்பது குறித்தும் பல்வேறு  கோணங்களில் சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/11/ரயிலில்-ரூ578-கோடி-கொள்ளை-5-பேரை-சேலத்துக்கு-அழைத்து-வந்து-விசாரணை-3036566.html
3036565 தருமபுரி சேலம் நாட்டாம்பாளையம் அங்காள பரமேஸ்வரி கோயிலில் இன்று கும்பாபிஷேகம் DIN DIN Sunday, November 11, 2018 07:14 AM +0530 சங்ககிரி அருகே உள்ள சன்னியாசிப்பட்டி அக்ரஹாரம், நாட்டாம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை (நவ.11) நடைபெற உள்ளது.
சன்னியாசிப்பட்டி அக்ரஹாரம் கிராமம்,  நாட்டாம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும்   விநாயகர்,  லிங்கேஸ்வரர், குருவாயூரப்பன்,  பிரம்மா, முருகன்  கோயில் கும்பாபிஷேக விழா சனிக்கிழமை காலை கணபதி, மஹாலட்சுமி,  நவக்கிரக ஹோமங்களுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வாஸ்து சாந்தி, முதற் கட்ட யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.  ஞாயிற்றுக்கிழமை 2-ஆம் கட்ட யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு காலை 7 மணிமுதல் 8 மணிக்குள் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இவ்விழாவுக்கான ஏற்பாட்டுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/11/நாட்டாம்பாளையம்-அங்காள-பரமேஸ்வரிகோயிலில்-இன்று-கும்பாபிஷேகம்-3036565.html
3036564 தருமபுரி சேலம் நடிகர் சரவணனுக்கு காய்ச்சல் DIN DIN Sunday, November 11, 2018 07:13 AM +0530 நடிகர் சரவணன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 
சேலம்  சூரமங்கலம் அருகில் உள்ள காசக்காரனூர்  பகுதியில் உள்ள விநாயகர் கோவில் தெருவில் வசித்து வருபவர் நடிகர் சரவணன். சென்னையில் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் சேலம் வந்து தங்கிச் செல்வார்.
கடந்த வாரம் சேலத்தில் நடந்த விழாவில் நாடக நடிகர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வழங்கிய வேட்டி சேலை மற்றும்  இனிப்புகளை நடிகர் சரவணன் வழங்கினார்.
இந்த நிலையில்  நடிகர் சரவணனுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அவர்   கடந்த 6 ஆம் தேதி சேலம் ஏ.வி.ஆர். ரவுண்டானா அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இவருக்கு ரத்தம் மற்றும் பல்வேறு சோதனைகள் நடத்தி மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் அவருக்கு காய்ச்சல் குறையவில்லை. 
  இந்த நிலையில் சனிக்கிழமை காலை நடிகர் சரவணன் சென்னையில் சிகிச்சை பெறுவதாகக் கூறி சேலத்தில் இருந்து  சென்று விட்டார். தற்போது சரவணன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/11/நடிகர்-சரவணனுக்கு-காய்ச்சல்-3036564.html
3036563 தருமபுரி சேலம் விபத்தில் தனியார் வங்கி ஊழியர் சாவு DIN DIN Sunday, November 11, 2018 07:13 AM +0530 சங்ககிரி அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் தனியார் வங்கி ஊழியர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
கேரள மாநிலம், பாலக்கோடு,  மண்ணூர் அருகே உள்ள கேச்சிரகாடு பகுதியைச் சேர்ந்த சுகுமார் மகன் ரோஹித்  (28). இவர் பெங்களூருவில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராகப் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் பெங்களூருவில் இருந்து இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சேலத்திலிருந்து சங்ககிரி  செல்லும் வழியில், காளிப்பட்டி பிரிவு சாலை மேம்பாலம் பகுதியில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் எதிர்பாரதவிதமாக இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த ரோஹித் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 
இந்தச் சம்பவம் குறித்து சங்ககிரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/11/விபத்தில்-தனியார்-வங்கி-ஊழியர்-சாவு-3036563.html
3036562 தருமபுரி சேலம் வாழப்பாடி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு DIN DIN Sunday, November 11, 2018 07:13 AM +0530 வாழப்பாடி அரசு மருத்துவமனையில் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் மருத்துவ பரிசோதனை நிறுத்தம் குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை  ஆய்வு செய்தனர். 
 வாழப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு இரு ஆண்டுகளை கடந்தும்,  கூடுதல் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை.  போதிய வசதிகளும் ஏற்படுத்தப்படவில்லை. இளநிலை உதவியாளர், மகப்பேறு உதவியாளர், ரத்த பரிசோதகர், சுகாதாரப் பணியாளர், உதவி செவிலியர், ஆய்வக உதவியாளர், பல்நோக்கு பணியாளர்கள், சமையலர் உள்ளிட்ட 10 பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளதாகக் கூறப்படுகிறது. 
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக, மருத்துவமனை வளாகத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதாலும், ரத்த பரிசோதனை நிறுத்தப்பட்டதாலும் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக, சமூக ஊடகங்களில் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இந்த தகவல் பொதுமக்களுக்கு மட்டுமின்றி, மருத்துவர்கள் மற்றும் மருத்துவத்துறை உயரதிகாரிகளுக்கும் சென்றது.  
இதனையடுத்து, சேலம் மாவட்ட குடும்ப நலம் மற்றும் ஊரகப்பணிகள் இணை இயக்குநர் சத்யா, மாவட்ட ஊரக நல அலுவலர் ரமேஷ் ஆகியோர் வாழப்பாடி அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை ஆய்வு செய்தார். நோயாளிகளுக்கு முறையாக சிசிக்சை அளிக்க மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினர். நோயாளிகளுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கவும், தேவையான நோயாளிகளுக்கு ரத்தப் பரிசோதனை செய்து உடனுக்குடன் அறிக்கையை வழங்கிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இந்த  ஆய்வின் போது, வாழப்பாடி மருத்துவ அலுவலர் ராதிகா மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உடனிருந்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/11/வாழப்பாடி-அரசு-மருத்துவமனையில்சுகாதாரத்துறை-அதிகாரிகள்-ஆய்வு-3036562.html
3036561 தருமபுரி சேலம் வாழப்பாடியில் அதிமுக பொதுக்கூட்டம் DIN DIN Sunday, November 11, 2018 07:13 AM +0530 வாழப்பாடியில், அ.தி.மு.க. 47-ஆவது ஆண்டு விழா பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கூட்டத்துக்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.எஸ். சதீஷ்குமார் தலைமை வகித்தார். அயோத்தியாப்பட்டணம் ஒன்றியச் செயலாளர் ஏ.பி.மணி வரவேற்றார். ஆர். இளங்கோவன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏற்காடு கு.சித்ரா, ஆத்தூர் சின்னத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் பங்கேற்று வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் பேசியதாவது  :
எதிர்க்கட்சியினர் இதுவரை 32 ஆயிரம் போராட்டங்களை நடத்தியிருக்கின்றனர். எத்தனைத் தடைகள் வந்தாலும், அவற்றை முறியடிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடைக்கோடி மனிதருக்கும் அனைத்து அரசு நலத்திட்டங்களையும் கொண்டு சேர்த்து வருகிறார். 
சிலர் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க வேண்டுமென நினைக்கின்றனர். அது எப்போதும் நடக்காது.  நோய்வாய்ப்பட்டிருந்த கட்சியை மருத்துவராக வந்து அவசர சிகிச்சை அளித்து எடப்பாடி பழனிசாமி காப்பற்றினார். 
இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற 18 எம்.எல்.ஏக்கள்  தினகரனை நம்பிச் சென்று பதவியை இழந்து நடுத்தெருவில் நிற்கின்றனர் என்றார்.
இக்கூட்டத்தில்,  மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் குபாய் (எ)  கே.குபேந்திரன், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியச் செயலாளர்கள் ரமேஷ், முருகேசன், நகரச் செயலர் சிவக்குமார், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் மெடிக்கல்ராஜா,  ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் அனிதா பழனிமுத்து, பேரூராட்சி முன்னாள் தலைவி செல்வி ரவி மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் நீலமேகம், ஜெயராமன், பேளூர் வெங்கடேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/11/வாழப்பாடியில்-அதிமுக-பொதுக்கூட்டம்-3036561.html
3036560 தருமபுரி சேலம் ஓமலூரில் மயானப் பாதை கோரி சடலத்துடன் சாலை மறியல் DIN DIN Sunday, November 11, 2018 07:12 AM +0530 ஓமலூர் அருகே மயானப்பாதை கோரி சடலத்துடன் சாலை மறியல் நடைபெற்றதால் சனிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
ஓமலூர் அருகேயுள்ள சிக்கம்பட்டி உப்பாறு கரையோரத்தை சிக்கம்பட்டி,  எம்.செட்டிப்பட்டி, பெரியேரிப்பட்டி  உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் சுடுகாடாக பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் இந்த ஆற்றங்கரையோரத்தில் தனியாருக்குச் சொந்தமான நில உரிமையாளர் தனது நிலத்தைச் சுற்றிலும் கம்பி வேலிகள் அமைத்துக் கொண்டார். இந்த நிலையில் சிக்கம்பட்டியில் இறந்த பழனியம்மாள் சடலத்தை அடக்கம் செய்ய முற்பட்டபோது, சுடுகாட்டுக்கு செல்லும் பாதை சுருங்கி விட்டதாகவும், அந்தப் பாதையில் சடலத்தை எடுத்துச் சென்று அடக்கம் செய்ய முடியாது என்றும் கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அங்கே வந்த ஓமலூர் வருவாய்த் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.  இதையடுத்து கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட அதிகாரிகள், உப்பாற்றின் கரையில் சடலத்தை அடக்கம் செய்வதற்கான பாதையை சீரமைத்துக் கொடுத்தனர். தொடர்ந்து புதூர் கடம்பட்டி பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் புதிய சுடுகாடு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனையடுத்து போராட்டத்தைக் கைவிட்டனர். 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/11/ஓமலூரில்-மயானப்-பாதை-கோரி-சடலத்துடன்-சாலை-மறியல்-3036560.html
3036559 தருமபுரி சேலம் தமிழ்ப் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் DIN DIN Sunday, November 11, 2018 07:12 AM +0530 ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் முன் தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பில் சிறுமி ராஜலட்சுமி படுகொலையைக் கண்டித்து மாவட்டச் செயலாளர் க.ராமலிங்கம் தலைமையில் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
 ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு மாவட்டச் செயலாளர் சிந்தனை செல்வன்,நாமக்கல் மாவட்டச் செயலாளர் செந்தமிழன், அறிவரசு, ரமேசு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேடியப்பன், கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் சிவசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கட்சித் தலைவர் நாகை.திருவள்ளுவன் கலந்து கொண்டு பேசினார்.ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/11/தமிழ்ப்-புலிகள்-கட்சியினர்-ஆர்ப்பாட்டம்-3036559.html
3036558 தருமபுரி சேலம் கெங்கவல்லி வட்டாட்சியர் பொறுப்பேற்பு DIN DIN Sunday, November 11, 2018 07:12 AM +0530 கெங்கவல்லி வட்டாட்சியராக சுந்தரராஜன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றார்.
கெங்கவல்லி வட்டாட்சியராக இருந்துவந்த வரதராஜன், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராக மாறுதலாகி பொறுப்பேற்றதையடுத்து, சேலம் தெற்கு வட்டாட்சியராக இருந்துவந்த சுந்தரராஜன், மாறுதலாகி, கெங்கவல்லி வட்டாட்சியராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றார்.
அவருக்கு மண்டல துணை வட்டாட்சியர் நல்லுசாமி, வருவாய் ஆய்வாளர்கள் சிவக்குமார், சங்கரி உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/11/கெங்கவல்லி-வட்டாட்சியர்-பொறுப்பேற்பு-3036558.html
3036557 தருமபுரி சேலம் தொழிலாளி மர்மச்சாவு: காவல் நிலையம் முற்றுகை DIN DIN Sunday, November 11, 2018 07:12 AM +0530 ஆந்திர மாநிலத்தில் வேலைக்கு சென்ற தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்ததால் அவரது உறவினர்கள் ஆத்தூர் ஊரக காவல் நிலையத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனர்.
ஆத்தூரை அடுத்த வளையமாதேவி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (47). சமையல் தொழிலாளி. இவர் கெங்கவல்லி வட்டம், கூடமலை பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் போர்வெல் வாகனத்தில் சமையலராகப் பணி செய்து வந்தார்.
இந்த நிலையில், ஆந்திர மாநிலம், பந்தலூரில் கடந்த 7 -ஆம் தேதி வேலையை முடித்துவிட்டு வெளியே சென்றவர் புதைக் குழியில் சிக்கி உயிரிழந்துள்ளார்.இது குறித்து ஆந்திர போலீஸார் வழக்குப் பதிவு செய்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனை செய்து சடலத்தை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
 இது குறித்து தகவல் அறிந்த ராஜேந்திரனின் மனைவி மற்றும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து ஆத்தூர் ஊரக காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து ஊரகக் காவல் ஆய்வாளர் ஆர்.சரவணன்,  ராஜேந்திரனின் குடும்பத்தினரை சமாதானம் செய்தார். உயிரிழந்த ராஜேந்திரனுக்கு மனைவி ராதா, இரு மகள்கள் உள்ளனர். 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/11/தொழிலாளி-மர்மச்சாவுகாவல்-நிலையம்-முற்றுகை-3036557.html
3036556 தருமபுரி சேலம் அஸ்தம்பட்டி, சூரமங்கலம் பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்து ஆட்சியர் ஆய்வு DIN DIN Sunday, November 11, 2018 07:11 AM +0530 சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மற்றும் சூரமங்கலம் மண்டலங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
அஸ்தம்பட்டி மண்டலம், வார்டு 14-க்கு உள்பட்ட குமாரசாமிப்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு  மேற்கொண்டார். 
சேலம் மாவட்டம் முழுவதிலும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கைகழுவுதல் மற்றும் 5 சதவிகிதம் லைசால் கிருமி நாசினி கொண்டு மருத்துவமனை வளாகங்களை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்தார். பின்னர் சூரமங்கலம் மண்டலம் வார்டு 23-க்கு உள்பட்ட முல்லைநகர் பகுதியில் ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று டெங்கு,  இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் ஆய்வு செய்தார்.
சேலம் ரயில் நிலையத்தில் பயண சீட்டு வழங்கும் இடம்,  பயணிகள் நடைபாதை ஆகிய இடங்களில் 5 சதவிகிதம் லைசால் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணிகளை ஆய்வு மேற்கொண்டு மாநகராட்சி அலுவலர்கள் அப்பணிகளை தொடர்ந்து கண்காணிக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது மாநகர் நல அலுவலர் மருத்துவர் கே.பார்த்திபன், அஸ்தம்பட்டி மண்டல உதவி ஆணையர் பி.கே.கோவிந்தன்,  சூரமங்கலம் மண்டல உதவி ஆணையர் ரமேஷ்பாபு, சேலம் மேற்கு வட்டாட்சியர் தீபசித்ரா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/11/அஸ்தம்பட்டி-சூரமங்கலம்-பகுதிகளில்-டெங்கு-தடுப்பு-நடவடிக்கை-குறித்து-ஆட்சியர்-ஆய்வு-3036556.html
3036555 தருமபுரி சேலம் சேலத்தில்  டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு: 36,236 பேர் எழுதுகின்றனர் DIN DIN Sunday, November 11, 2018 07:11 AM +0530 சேலத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப் 2 தேர்வை 104 மையங்களில் 36,236 பேர் எழுதுகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி 2 தேர்வு 104 மையங்களில் 134 தேர்வு கூடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இத்தேர்வை சுமார் 36,236 பேர் எழுதுகின்றனர்.
அனைத்துத் தேர்வு மையங்களிலும் தேர்வு நடைபெறுவதை விடியோ பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 134 தேர்வு கூடங்களில் 1 தேர்வு மையம் கூர்நோக்கு தேர்வு கூடமாகத் தேர்வு செய்யப்பட்டு அவற்றில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டும், கூடுதல் விடியோ கேமரா பதிவு செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேர்வைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பறக்கும் படை, கண்காணிப்புக் குழு, தலைமைக் கண்காணிப்பாளர் ஆகியோர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் விதிமுறைகளின்படி  வினாத்தாள் வழங்குதல், விடைத்தாள் வழங்குதல், விடைத்தாள் சேகரித்தல், தேர்வு எழுதும் நேரம் மற்றும் தேர்வு எழுதுபவர்களின் நுழைவுச் சீட்டு ஆகியவற்றை சரிபார்த்தல் போன்ற பணிகளை சிறப்பான முறையில் செய்திட  அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக,  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/11/சேலத்தில்--டிஎன்பிஎஸ்சி-குரூப்-2-தேர்வு-36236-பேர்-எழுதுகின்றனர்-3036555.html
3036554 தருமபுரி சேலம் பசுமை சாலைத் திட்டப் பணி நடக்கும் பகுதியில்  மரக்கன்றுகளை நட முயன்ற விவசாயிகளால் பரபரப்பு DIN DIN Sunday, November 11, 2018 07:10 AM +0530 சேலம் அருகே பசுமை சாலைத் திட்டப் பணி நடக்கும் பகுதியில் மரக்கன்றுகளை நட வந்த பொதுமக்கள் உள்ளிட்ட விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் முதல் சென்னை வரையிலான பசுமை சாலைத் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவதற்காக நிலம் அளவீடு செய்யும் பணி நடைபெற்று முடிந்துள்ளது. இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள நிலையில், சேலம் மாவட்ட எல்லையில் உள்ள மஞ்சவாடி கணவாய்  வனப்பகுதியில் உள்ள ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன.இதற்கு கண்டனம் தெரிவித்தும், வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக மாற்று இடங்களில் மரக்கன்றுகள் நடுவதற்காக பசுமை சாலைத் திட்டத்தால் பாதிக்கப்படும் ஏரிக்காடு பகுதி விவசாயிகள் சனிக்கிழமை காலை ஒன்று திரண்டனர்.அப்பகுதியில் உள்ள ஏரிக் கரையோரம் மரக்கன்றுகளை நடுவதற்காக வந்தனர். இதுபற்றி தகவலறிந்து சேலம் மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.பின்னர் சம்பவ இடத்துக்கு  வட்டாட்சியர் வள்ளிதேவி மற்றும் வருவாய்த் துறையினர் விரைந்து வந்தனர்.மேலும், மரக்கன்றுகள் நடக்கூடாது என்று வருவாய்த் துறையினர் கூறினர். அவர்களுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீஸாரும் அவர்களை தடுத்து நிறுத்தியதால் விவசாயிகள் அனைவரும் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. சுமார் ஒருமணிநேரத்துக்கு பிறகு அதிகாரிகள் சமரசமானதால் மரக்கன்றுகளை நடுவதற்கு அனுமதித்தனர். அதன்பிறகு விவசாயிகள் அப்பகுதியில் உள்ள சாலையோரம் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/11/பசுமை-சாலைத்-திட்டப்-பணி-நடக்கும்-பகுதியில்-மரக்கன்றுகளை-நட-முயன்ற-விவசாயிகளால்-பரபரப்பு-3036554.html
3036553 தருமபுரி சேலம் கொளத்தூர் ஒன்றியத்தில் ரூ.169.44 லட்சத்தில் தடுப்பணைகள்: பொதுப்பணித்துறையினர் ஆய்வு DIN DIN Sunday, November 11, 2018 07:10 AM +0530 சேலம் மாவட்டம், கொளத்தூர் ஒன்றியத்தில்  ரூ.169.44 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு தடுப்பணைகள் கட்ட பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆய்வுப் பணி மேற்கொண்டனர்.
பொதுப்பணித்துறையின் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ர.செந்தில்குமார், மேல் காவிரி வடிநில வட்டக் கண்காணிப்புப் பொறியாளர் கண்ணன், மேட்டூர் அணைக் கோட்ட செயற்பொறியாளர் தேவராஜன் ஆகியோர்  கொளத்தூர் ஒன்றியத்தில் ஆய்வு பணி மேற்கொண்டனர்.
கொளத்தூர் ஒன்றியம், வவ்வால்தோப்பு அருகே பெரியபள்ளம் ஓடையில் ரூ.73.97 லட்சம் செலவில் ஒரு தடுப்பணையும்,  லக்கம்பட்டி கிராமம், சின்னதண்டா அருகே பெரும்பள்ளம் அருகே ரூ.95.47 லட்சத்தில்  இன்னொரு தடுப்பணையும் கட்ட தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கி உள்ளது.இந்தத் தடுப்பணைகள் கட்டப்படும் இடங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். மேலும், மேட்டூர் அணையில் படகில் சென்று பருவகாவ ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர். அணையின் வலதுகரை, இடதுகரை மற்றும் பூங்கா பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டனர். இந்த ஆய்வின் போது உதவி செயற்பொறியாளர் கோபி,  உதவிப் பொறியாளர் மதுசூதனன் ஆகியோர் உடனிருந்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/11/கொளத்தூர்-ஒன்றியத்தில்-ரூ16944-லட்சத்தில்-தடுப்பணைகள்-பொதுப்பணித்துறையினர்-ஆய்வு-3036553.html
3036048 தருமபுரி சேலம் சேலத்துக்கு  விமானத்தில் வந்த கமல்ஹாசன் DIN DIN Saturday, November 10, 2018 08:56 AM +0530 மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் சென்னையில் இருந்து விமானம் மூலம் வெள்ளிக்கிழமை சேலம் வந்தார். 
சென்னையில் இருந்து சேலத்துக்கு விமானம் மூலம் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர்  நடிகர் கமல்ஹாசன் வந்தார்.  சேலம் விமான நிலையத்துக்கு  வந்த அவருக்கு அக்கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.  அவர் வருகையின் போது பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவரால் வெளிவர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சுமார் அரைமணி நேரம் விமான நிலையத்திலேயே அவர் காத்திருந்தார். பின்னர் வெளியே வந்த கமல்ஹாசனை பொதுமக்கள், மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகிகளும்சூழ்ந்து கொண்டனர்.   கூட்டநெரிசலிலும், தள்ளுமுள்ளுவிலும் சிக்கிக் கொண்ட அவரை கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூட்டத்தை விலக்கி அழைத்துச் சென்றனர். அப்போது நடிகர்கள் குறித்து தமிழக அமைச்சர்களின் கருத்துக்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், அவர் பதில் அளிக்காமல் காரில் ஏறிச் சென்றார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/10/சேலத்துக்கு--விமானத்தில்-வந்த-கமல்ஹாசன்-3036048.html
3036047 தருமபுரி சேலம் கந்தசஷ்டி விழா: சிறப்பு பூஜை DIN DIN Saturday, November 10, 2018 08:55 AM +0530 ஆத்தூர் வெள்ளப்பிள்ளையார் கோயில் அறுபடை வீடு முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா இரண்டாவது நாளையொட்டி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
வெள்ளப்பிள்ளையார் கோயிலில் உள்ள அறுபடைவீடு முருகன் கோயிலில் கந்தசஷ்டியை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து சுவாமிக்கு வெள்ளிக்கவசம் அலங்காரம் செய்யப்பட்டது.  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு  அன்னதானம் வழங்கப்பட்டது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/10/கந்தசஷ்டி-விழா-சிறப்பு-பூஜை-3036047.html
3036046 தருமபுரி சேலம் பாலியல் பலாத்கார வழக்குகளில் ஆட்டோ ஓட்டுநர், தொழிலாளிக்கு சிறை DIN DIN Saturday, November 10, 2018 08:55 AM +0530 சேலத்தில் இருவேறு பாலியல் பலாத்கார வழக்குகளில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் கூலித் தொழிலாளிக்கு சிறைத் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
சேலம்  அருகே உள்ள தேக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். கூலித் தொழிலாளியான இவர் கடந்த 2015 இல் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை  பாலியல் பலாத்காரம் செய்தார். 
இதுபற்றி யாரிடமும்  தெரிவித்தால் கொலை செய்து விடுவேன் என கத்தியைக் காட்டி மிரட்டி அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார் என தெரிகிறது.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், சூரமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து  சண்முகத்தை போலீஸார் கைது செய்தனர்.அதேபோல சேலம் அருகிலுள்ள களரம்பட்டியைச் சேர்ந்தவர் அருண். ஆட்டோ ஓட்டுநர் .இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு அதே பகுதியில் உள்ள சிறுமியை காதலிப்பதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்தார்.  மேலும் அவருக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால் மனமுடைந்த சிறுமி விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் . தீவிர சிகிச்சைக்கு பின்  சிறுமி உயிர் பிழைத்தார்.  இதுகுறித்து சேலம் டவுன் மகளிர் காவல் நிலைய போலீஸில் புகார் செய்தார் .இதை விசாரித்த போலீஸார் ஆட்டோ ஓட்டுநர் அருணை கைது செய்தனர் .இந்த இரண்டு வழக்குகளும் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தன. வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமாரி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுநர் அருணுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.62 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
தேக்கம்பட்டியைச் சேர்ந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக சண்முகத்துக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ,ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி விஜயகுமாரி தீர்ப்பளித்தார். தண்டனை விதிக்கப்பட்ட சண்முகம், ஆட்டோ ஓட்டுநர் அருண் ஆகியோர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/10/பாலியல்-பலாத்கார-வழக்குகளில்-ஆட்டோ-ஓட்டுநர்-தொழிலாளிக்கு-சிறை-3036046.html
3036045 தருமபுரி சேலம் நெல் பயிருக்கு காப்பீடு செய்ய வேண்டுகோள் DIN DIN Saturday, November 10, 2018 08:55 AM +0530 கெங்கவல்லி வட்டாரத்தில் நெல் நடவு செய்துள்ள விவசாயிகள் தங்களது நெல் பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளவேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கெங்கவல்லி வட்டார வேளாண் உதவி இயக்குநர் க.சித்ரா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: கெங்கவல்லி வட்டாரத்தில்  வடகிழக்கு பருவமழை தாமதமாகியிருப்பதால் நெல் பயிரிடும் பரப்பு கடந்த 5 வருடங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைந்துள்ளது.
எனவே நெல் நடவுக்கு தயார் நிலையில் உள்ள மற்றும் நாற்றுவிட தயார் நிலையில் உள்ள விவசாயிகள் அனைவரும் விதைப்புச் சான்று அடிப்படையில் பிரதம மந்திரி பயிர்க் காப்பீடுத் திட்டத்தில் ஒரு ஏக்கருக்கு ரூ.435 வீதம் செலுத்தி ,வரும் நவ.15-ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து பயனடைய வேண்டும். இதற்கு தேவையான ஆவணங்கள்  கிராம நிர்வாக அலுவலரின் விதைப்புச் சான்று,  சிட்டா நகல்,  ஆதார் அட்டை நகல்,  வங்கி புத்தக நகல் ஆகியவற்றை உடன் எடுத்துவரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/10/நெல்-பயிருக்கு-காப்பீடு-செய்ய-வேண்டுகோள்-3036045.html
3036044 தருமபுரி சேலம் சேலத்துக்கு வருகை தரும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அதிமுக முடிவு DIN DIN Saturday, November 10, 2018 08:54 AM +0530 சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என மாநகர அ.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக முதல்வர் கே.எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வரும் நவம்பர் 14 ஆம் தேதி இரவு சேலம் வருகிறார். முதல்வர் வருகையை முன்னிட்டு அதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 
இந்த கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவர் எம்.பி. வி.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் ஜி.வெங்கடாசலம், ஏ.பி.சக்திவேல், முன்னாள் எம்.எல்.ஏ. எம்.கே.செல்வராஜு ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் மாநகர மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ஜி.வெங்கடாசலம் பேசியது:
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வரும் நவம்பர் 14 ஆம் தேதி இரவு சேலம் வருகிறார். அவருக்கு திருவாக்கவுண்டனூர்  ரவுண்டானா அருகில் மாநகர மாவட்ட அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். வரும் நவம்பர் 15 ஆம் தேதி நங்கவள்ளி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை தொடக்கி வைக்கிறார். பின்னர் மாலை சூரமங்கலம், அஸ்தம்பட்டி மண்டலம் நிர்வாகிகளைச் சந்தித்து கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். 
வரும் நவம்பர் 16 ஆம் தேதி எடப்பாடி தொகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்குகிறார். பின்னர் மாலையில் கொண்டலாம்பட்டி அம்மாப்பேட்டை பகுதி நிர்வாகிகள் சந்தித்துப் பேசுகிறார்.
 வரும் நவம்பர் 17 ஆம் தேதி அரசு சார்பில் நடைபெறும் விழாக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் முதல்வர் பங்கேற்கிறார்.
வரும் நவம்பர் 18 ஆம் தேதி காலை 9 மணிக்கு இரும்பாலை பிரிவு அருகில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைக்கிறார் என்றார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/10/சேலத்துக்கு-வருகை-தரும்-முதல்வருக்கு-சிறப்பான-வரவேற்பு-அளிக்க-அதிமுக-முடிவு-3036044.html
3036043 தருமபுரி சேலம் ஆத்தூர் கோட்டாட்சியர் மீது வழக்குப் பதிவு DIN DIN Saturday, November 10, 2018 08:54 AM +0530 ஆத்தூர் கோட்டாட்சியர் மீது நீதிமன்ற உத்தரவின் பேரில்  காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
ஆத்தூர் கோட்டாட்சியர் ம.செல்வன் மீது அம்மம்பாளையம் பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரி (45) என்பவர் புகார் தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்1 மாஜிஸ்திரேட் என்.சிவக்குமார் கோட்டாட்சியர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார்.இதனையடுத்து ஆத்தூர் காவல்நிலைய ஆய்வாளர் என்.கேசவன் வழக்குப் பதிவு செய்தார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/10/ஆத்தூர்-கோட்டாட்சியர்-மீது-வழக்குப்-பதிவு-3036043.html
3036042 தருமபுரி சேலம் பொட்டியபுரம் கிராமத்தில் அதிகாரிகள் ஆய்வு DIN DIN Saturday, November 10, 2018 08:52 AM +0530 ஓமலூர்  அருகேயுள்ள பொட்டியபுரம் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் குடிநீரை பல நாள்களுக்கு பொதுமக்கள் சேமித்து வைக்கும் நிலை உள்ளது.
இதனால் டெங்கு காய்ச்சலை உற்பத்தி செய்யும் புழுக்கள் குடிநீரில் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மூன்று நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கும் நோக்கில் நீர் ஆதாரப் பகுதிகளை உதவித் திட்ட அலுவலர் கண்ணன் ஆய்வு செய்தார்.
காடையாம்பட்டி   வட்டம்,  பொட்டியபுரம் கிராமத்தில் சுமார் 3 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை உள்ளதால், இங்குள்ள மக்கள் குடிநீரை வீட்டில் உள்ள பாத்திரங்கள்,  தொட்டிகள் மற்றும்  பிளாஸ்டிக் கேன்களில் நீண்ட நாள்கள் சேமித்து வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சலை உற்பத்தி செய்யும் கொசுப் புழுக்கள்  உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இங்கு வசிக்கும் மக்களுக்கு அதிகளவு காய்ச்சல், சளி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக்  கூறப்படுகிறது . இந்நிலையில் இங்குள்ள பொதுமக்களுக்கு 10 அல்லது 15 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது என பொது மக்கள் புகார் கூறுகின்றனர். மேலும் குடிநீர் சம்பந்தமாக ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் கிராம மக்கள் மனு அளித்தனர் .இதனையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் பொட்டியபுரம்  கிராமத்துக்கு தேவையான குடிநீர் கிடைக்கும் அளவிற்கு  நீர் ஆதாரம் குறித்து  உதவித் திட்ட அலுவலர் கண்ணன் ஆய்வு மேற்கொண்டார். இதே போல்  இந்தக் கிராமத்தில் உள்ள பொதுமக்கள்சேகரித்து வைத்திருக்கும் நீரை சுகாதாரத்துறை அதிகாரிகள் கொசு புழுக்கள் உண்டாகும் தொட்டிகளை கண்டறிந்து நீரை கீழே கொட்டினர். 
தொடர்ந்து பள்ளிகளில் உள்ள குடிநீர்த் தொட்டிகளில் டெங்கு காய்ச்சலை உற்பத்தி செய்யும் புழுக்களை அழிக்கும் மருந்தையும் ஊற்றினர். இதில் மாவட்ட பூச்சியியல்துறை வல்லுநர் கண்ணன் மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகர் ஆகியோர் பொதுமக்களுக்கு காய்ச்சல் வராமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கூறினர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/10/பொட்டியபுரம்-கிராமத்தில்-அதிகாரிகள்-ஆய்வு-3036042.html
3036040 தருமபுரி சேலம் தமிழ் வளர்ச்சித்துறை ஆலோசனைக் குழு உறுப்பினர் நியமனம் DIN DIN Saturday, November 10, 2018 08:52 AM +0530 சேலம் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் ஆலோசனைக் குழு உறுப்பினராக எழுத்தாளரும், கவிஞருமான கு.கணேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கு  மாவட்ட அளவிலான கவிதை, பேச்சுப் போட்டிகள் நடத்துவதற்காக மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்டு 2003 ஆம் ஆண்டு ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. அக்குழு 2007 இல் மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலுடன் மாற்றி அமைக்கப்பட்டது.  
இக்குழுவின் உறுப்பினர்களாக  உள்ளூர் தமிழாசிரியர் இருவர் நியமிக்கப்பட்டனர். 
இதில் ஒருவரான பாவலர் எழுஞாயிறு காலமானதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக எழுத்தாளரும், கவிஞரும், ஓய்வு பெற்ற தமிழாசிரியருமான கு.கணேசன் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல 2018-19 ஆம் ஆண்டிற்கான சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கையின் போது தமிழகத்தில் உள்ள ஊர் பெயர்கள் தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் உதாரணமாக திருவல்லிக்கேணி என்பதை ட்ரிப்ளிகேன் என குறிப்பிடாமல் திருவல்லிக்கேணி என குறிப்பிட வேண்டும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.
மானியக் கோரிக்கை  அறிவிப்பை செயலாக்கம் செய்யும் வகையில் அரசு உயர்நிலைக் குழு அமைத்துள்ளது. மாவட்ட அளவிலான குழுவில் எழுத்தாளரும், கவிஞருமான கு.கணேசனை நியமித்து மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் தி.உமா அறிவித்துள்ளார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/10/தமிழ்-வளர்ச்சித்துறை-ஆலோசனைக்-குழு-உறுப்பினர்-நியமனம்-3036040.html
3036038 தருமபுரி சேலம் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் DIN DIN Saturday, November 10, 2018 08:51 AM +0530 பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக் கண்டித்து, சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
பணமதிப்பிழப்பு நடவடிக்கை 2 ஆண்டு நிறைவையொட்டி, மத்திய அரசைக் கண்டித்து சேலம் மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் தலைமை தபால் நிலையம் முன் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், மாநகர மாவட்டத் தலைவர் ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, ஆக்ஸ்போர்டு ராமநாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணி, திருமுருகன், மகிளா காங்கிரஸ் கட்சி தலைவர் சாரதா தேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆத்தூரில்... சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில்  வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆத்தூரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன் சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில்  மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் 2-ஆம் ஆண்டை கருப்புத் தினமாக அனுசரித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மாவட்டத் தலைவர் எஸ்.கே.அர்த்தநாரி தலைமை வகித்தார்.
மாவட்ட பொருளாளர் ஆர்.ஓசுமணி வரவேற்றுப் பேசினார். முன்னாள் எம்.எல்.ஏ.  எம்.ஆர்.சுந்தரம், மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.சக்ரவர்த்தி, நகரத் தலைவர் எல்.முருகேசன்,மாவட்டச் செயலாளர்கள் ஜீ.பாஸ்கர்,வி.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக குமரி மகாதேவன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர்கள் பி.குமரேசன், தர்மராஜ், மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவி மகாலட்சுமி அன்புநிதி, நரசிங்கபுரம் நகரத் தலைவர் ஜோதிபாசு  உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.   முடிவில் மாவட்டச் செயலாளர் முகிலரசன் நன்றி கூறினார்.
மேட்டூரில்... மத்திய அரசின் பணமதிப்பிழப்பு  நடவடிக்கையைக் கண்டித்து மேட்டூரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் எதிரில்  சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்துக்கு சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் முருகன் தலைமை வகித்தார். மேட்டூர் நகரத் தலைவர் ஏ.எஸ்.வெங்கடேஸ்வரன், நங்கவள்ளி வட்டாரத் தலைவர் அய்யண்ணன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
மத்திய அரசைக் கண்டித்தும், பா.ஜ.கவை கண்டித்தும் முழங்கங்கள் எழுப்பப்பட்டன. 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/10/காங்கிரஸ்-கட்சியினர்-ஆர்ப்பாட்டம்-3036038.html
3036035 தருமபுரி சேலம் இளைஞரை தாக்கிய வழக்கில் ஒருவருக்கு 7 ஆண்டு சிறை DIN DIN Saturday, November 10, 2018 08:51 AM +0530 எடப்பாடியில்  இளைஞரை மரக்கட்டை,  மதுப் புட்டியால் தாக்கியவருக்கு சங்ககிரி உதவி அமர்வு நீதிமன்றம்  7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
எடப்பாடி  அருகேயுள்ள தாவாந்தெரு,  கவுண்டம்புதூர் மேற்குத் தெரு,  கந்தசாமி மகன் மணிகண்டன். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3-ஆம் தேதி எடப்பாடி பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் தேநீர்க் கடையில் பணிபுரிந்த தனது தந்தையை பார்த்துவிட்டு அப்பகுதியில் ராஜவேல் என்பவரை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த எடப்பாடி, தாவாந்தெரு காட்டு வளவு பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் கார்த்தி (எ) கார்த்திகேயன் (36), மணிகண்டனுடன் வாய்த் தகராறில் ஈடுபட்டுட்டுள்ளார். இதில் மணிகண்டனை மரக்கட்டையாலும், மதுப் புட்டியை உடைத்தும் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர்  சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 
இதுகுறித்து எடப்பாடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து கார்த்தி மீது சங்ககிரி உதவி அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி இ.ராஜேந்திரகண்ணன் குற்றம்சாட்டப்பட்ட கார்த்தி (எ) கார்த்திகேயனுக்கு 7 ஆண்டுகள் 1 மாதம் சிறைத் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் அரசு தரப்பில் அரசு கூடுதல் வழக்குரைஞர் எஸ்.செந்தில்முருகன் ஆஜராகினார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/10/இளைஞரை-தாக்கிய-வழக்கில்-ஒருவருக்கு-7-ஆண்டு-சிறை-3036035.html
3035958 தருமபுரி சேலம் சேலத்தில் சர்கார் படத்துக்கு எதிராக அ.தி.மு.க.வினர் போராட்டம்: சினிமா காட்சிகள் ரத்து DIN DIN Saturday, November 10, 2018 08:04 AM +0530 சர்கார் படத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி அ.தி.மு.க.வினர் பேனர்களை கிழித்து எறிந்தனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் மாநகரில் சுமார் 8 திரையரங்குகளில் சர்கார் படம் திரையிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் அதிமுக அரசை விமர்சனம் செய்யும் வசனங்களும், காட்சிகளும் அமைந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.இதனால் சர்ச்சைக்குரிய வசனங்களையும், காட்சிகளை நீக்கக் கோரி சர்கார் படம் வெளியான திரையரங்குகள் முன் அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு  திரையரங்குக்கு வந்த இளைஞர், இளம்பெண்கள் பாசறை பொருளாளர் தினேஷ்குமார் தலைமையிலான அ.தி.மு.க.வினர் விஜய் ரசிகர்கள் சார்பில் வைக்கப்பட்ட சர்கார் பட விளம்பர பேனர்களை கிழித்து எறிந்தனர்.  பின்னர் விஜய்க்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.மேலும்,   திரையரங்கு வளாகத்தில்  புகுந்து சர்கார் பட டிக்கெட்டை வழங்கக் கூடாது. சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிய பிறகு திரைப்படத்தை திரையிட வேண்டும் என வாக்குவாதத்தில்  ஈடுபட்டனர்.இதைத்தொடர்ந்து, சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிய பிறகு படம் திரையிடப்படும் என திரையரங்கு நிர்வாகம் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் சர்கார் பட காட்சி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அ.தி.மு.க.வினர் கலைந்து சென்றனர்.இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சேலத்தில் பல திரையரங்குகளில் சர்கார் பட காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் படம் பார்க்க குவிந்திருந்த விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/10/சேலத்தில்-சர்கார்-படத்துக்கு-எதிராக-அதிமுகவினர்-போராட்டம்-சினிமா-காட்சிகள்-ரத்து-3035958.html
3035957 தருமபுரி சேலம் மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்தது DIN DIN Saturday, November 10, 2018 08:04 AM +0530 மேட்டூர்  அணையின் நீர்மட்டம்  நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக வெள்ளிக்கிழமை நூறு அடியை எட்டியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த ஜூலை முதல் வாரத்தில் பெய்த மழையின் காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இந்த அணைகளின் பாதுகாப்புக் கருதி காவிரியில் உபரிநீர் திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து கடந்த ஜூலை 17-ஆம் தேதி அணையின் நீர்மட்டம் நூறு அடியாக உயர்ந்தது. தொடர்மழையின் காரணமாக கடந்த ஜூலை 27-ஆம் தேதி மேட்டூர் அணை நிரம்பியது. பின்னர் கர்நாடக மாநிலத்தில் மழை தணிந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்து வந்தது. நீர்வரத்து சரிந்த நிலையில் தொடர்ந்து மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் மளமளவென சரிந்தது. இந்த நிலையில் 105 நாள்களுக்கு பிறகு அணையின் நீர்மட்டம்  கடந்த 30-ஆம் தேதி 100 அடிக்கும் கீழாகச் சரிந்தது. இந்நிலையில் பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு வெகுவாகக் குறைக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவிலிருந்து மீண்டு உயரத் தொடங்கியது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை பகல் 11 மணிக்கு நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்தது.
மேலும்,  வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு நொடிக்கு 5,971 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 2,000 கனஅடி வீதமும்,  கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 700 கனஅடி வீதமும் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.அணையின் நீர் இருப்பு 64.77 டி.எம்.சி.யாக இருந்தது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/10/மேட்டூர்-அணை-நீர்மட்டம்-100-அடியாக-உயர்ந்தது-3035957.html
3035956 தருமபுரி சேலம் சேலம் முதலாவது புத்தகத் திருவிழா தொடக்கம்:  ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டனர் DIN DIN Saturday, November 10, 2018 08:03 AM +0530 சேலம் முதலாவது புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் வெள்ளிக்கிழமை  தொடக்கி  வைத்தார். 
சேலம் பழைய பேருந்து  நிலையம் அருகில் உள்ள போஸ் மைதானத்தில் சேலம் மாவட்ட  நிர்வாகம்,  தென்னிந்திய  புத்தக  விற்பனையாளர்கள்  மற்றும்  பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) மற்றும் சேலம் புத்தக வாசிப்போர் இயக்கம் இணைந்து, சேலம் மாவட்டத்தில் முதலாவது  சேலம் புத்தகத்  திருவிழாவை நடத்துகின்றன. இந்த புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் வெள்ளிக்கிழமை மாலை தொடக்கி வைத்தார். இதில் எம்.பி.க்கள்  வி.பன்னீர்செல்வம், காமராஜ், எம்.எல்.ஏ. எஸ்.செம்மலை, மாவட்ட  வருவாய் அலுவலர் இரா.சுகுமார், மாநகராட்சி ஆணையர் ரெ.சதீஷ், மாநகர காவல்துறை துணை ஆணையர் சியாமளா தேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பபாசி தலைவர் எஸ்.வைரவன், துணைத் தலைவர் பெ.மயிலவேலன், சேலம் புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர் நாதம் கீதம் எஸ்.கே.முருகன்,  சேலம் புத்தக வாசிப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் விஜய் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.புத்தகக் கண்காட்சி நவ.21 ஆம் தேதி வரை 13 நாள்கள் நடைபெறுகின்றது. இதில் 110-க்கும் மேற்பட்ட அரங்குகள் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள், லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் இடம்பெறுகின்றது. இப்புத்தக கண்காட்சி அரங்கில் ரூ.10 முதல் ரூ.10,000 வரையிலான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், புத்தகங்கள் வாங்குவோர்களுக்கு 10 சதவீதம் சிறப்பு கழிவு வழங்கப்படுகிறது. 
புத்தகங்கள் வாங்கும் வாசகர்களின் நுழைவுச் சீட்டின் அடிப்படையில் குலுக்கல் முறையில் ரூ.300, ரூ.200, ரூ.100 மதிப்புமிக்க புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும். இக்கண்காட்சி நாள்தோறும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம். முதல் நாளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களும், பார்வையாளர்கள் சுமார் 500 பேரும் கண்காட்சியைப் பார்வையிட்டனர்.புத்தகக் கண்காட்சியில் சனிக்கிழமை மாலை 3 மணிக்கு கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு வாசிப்போம், நேசிப்போம் என்ற தலைப்பில் பி.மணிகண்டன் பேசுகிறார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/10/சேலம்-முதலாவது-புத்தகத்-திருவிழா-தொடக்கம்--ஆயிரக்கணக்கானோர்-பார்வையிட்டனர்-3035956.html
3035282 தருமபுரி சேலம் மேட்டூர்அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு DIN DIN Friday, November 9, 2018 07:14 AM +0530 சேலம் மாவட்டத்துக்குள்பட்ட மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காகத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 2 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 
காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் மழை பெய்ததால்,   மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 500 கன அடியாகக் குறைக்கப்பட்டிருந்தது. 
 தற்போது பாசனத் தேவை அதிகரித்துள்ளதால்,  வியாழக்கிழமை காலை மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 2 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 700 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 
அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 6,144 கன அடியாகவும் இருந்தது.  அணையின் நீர் மட்டம் 99.74 அடியாகவும்,  நீர் இருப்பு 64.50 டி.எம்.சி.யாகவும் இருந்தது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/09/மேட்டூர்அணையில்-தண்ணீர்-திறப்பு-அதிகரிப்பு-3035282.html
3035281 தருமபுரி சேலம் ஆத்தூர் சிறுமி கொலை வழக்கு: நவ. 22 வரை இளைஞருக்கு காவல் நீட்டிப்பு DIN DIN Friday, November 9, 2018 07:14 AM +0530 ஆத்தூரில் வன்கொடுமையால் சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில்,   இளைஞருக்கு நவம்பர் 22- ஆம் தேதி வரை சிறைக் காவலை நீட்டித்து சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 ஆத்தூர் அருகேயுள்ள  தளவாய்பட்டி காட்டுகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி ( 14) .  இவர்  அக்டோபர் 22-இல் வன்கொடுமை செய்யப்பட்டு,   கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார்.
இதுதொடர்பாக  அதே பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் தினேஷ்குமார் என்பவர் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு,  சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.  இவரை குண்டர் சட்டத்தில் அடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 இதைத் தொடர்ந்து, 15 நாள்களுக்குள் தினேஷ் குமார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில்,  தினேஷ் குமாரின் சிறைக் காவல் வியாழக்கிழமை முடிவடைந்தது.   இதையடுத்து,  பாதுகாப்பு கருதி சேலம் மத்திய சிறையில் இருந்து 50-க்கும் மேற்பட்ட போலீஸாருடன் தினேஷ்குமார்,  தனி வேனில் ஏற்றப்பட்டு, சேலம் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டார்.
பின்னர்,  மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி விஜயகுமாரி முன்பு தினேஷ்குமார் ஆஜர்படுத்தப்பட்டார்.  வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமாரி,   நவம்பர் 22 ஆம் தேதி வரை தினேஷ்குமாரை  சேலம் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
பின்னர்,   தினேஷ்குமார் மீண்டும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேனில் ஏற்றப்பட்டு,  சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் .
இந்த நிலையில்,  சேலம் நீதிமன்றத்துக்கு தினேஷ்குமார் வருகையடுத்து,  திரளான பொதுமக்கள் சிறை முன்பு கூடினர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/09/ஆத்தூர்-சிறுமி-கொலை-வழக்கு-நவ-22-வரை-இளைஞருக்கு-காவல்-நீட்டிப்பு-3035281.html
3035280 தருமபுரி சேலம் சேலத்தில் முதலாவது புத்தகத் திருவிழா:  இன்று முதல் நவ. 21 வரை நடக்கிறது DIN DIN Friday, November 9, 2018 07:14 AM +0530 சேலத்தில் முதலாவது புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை (நவம்பர் 9)  தொடங்கி,   21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
சேலம் மாவட்ட  நிர்வாகம்,  தென்னிந்திய  புத்தக  விற்பனையாளர்கள்- பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) , சேலம் புத்தக வாசிப்போர் இயக்கம் ஆகியன இணைந்து சேலம் மாவட்டத்தில் முதல்முறையாக 1- ஆவது  சேலம் புத்தகத்  திருவிழாவை சேலம் போஸ் மைதானத்தில் நடத்துகின்றன.  
இந்தத் திருவிழா வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்குத் தொடங்கி,   நவம்பர் 21 ஆம் தேதி வரை 13 நாள்களுக்கு  காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது.  இலவசமாக வாசகர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதில்,  110-க்கும் மேற்பட்ட அரங்குகளில் லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில்  50 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் ரூ.10 முதல் ரூ.10,000 வரையிலான விலையில் உள்ளன.  
  அறிவியல்,  ஆன்மிகம்,  சிறு கதைகள்,  மருத்துவம், கவிதைகள், கட்டுரைகள், வர்த்தகம், சிறுவர் கதைகள்,  சுய முன்னேற்றம்,  உளவியல், கணினி, ஒவியம், வரலாறு, நடப்பு நிகழ்வுகள், கணிதம்,  இலக்கியம் உள்ளிட்ட புத்தகங்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருக்கின்றன.
 புத்தகங்கள் வாங்குவோருக்கு 10 சதவீதம் சிறப்புக் கழிவு வழங்கப்படும்.  இதுதவிர,  நுழைவுச் சீட்டின் அடிப்படையில் குலுக்கல் முறையில் ரூ.300, ரூ.200, ரூ.100 மதிப்புமிக்க புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும்.   மேலும்,  பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களைக் கவரும் வகையில் குறுந்தகடுகள்,  கணினி அரங்குகளும் இடம்பெறுகின்றன.
தமிழ் இலக்கியங்களுக்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் சரஸ்வதி மகால் நூலகம்,  சாகித்ய அகாதெமி பங்கேற்கின்றன.  தினமும் மாலை 3 மணியளவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும், மாலை 6 மணிக்கு தமிழகத்தின் தலைசிறந்த தன்னம்பிக்கை சுய முன்னேற்றப் பேச்சாளர்கள், சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள், கருத்தரங்குகள் நடைபெற உள்ளன.
     மேற்கண்ட தகவலை பபாசி தலைவர் எஸ்.வைரவன்,   துணைத் தலைவர் பெ.மயிலவேலன்,  செயலர் அரு.வெங்கடாசலம்,  சேலம் புத்தக வாசிப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டி.விஜய் ஆனந்த்,  சேலம் புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர் நாதம் கீதம் எஸ்.கே.முருகன்,   துணைச் செயலர் குருதேவ், நிர்வாகக் குழு உறுப்பினர் சிவகுமார் உள்ளிட்டோர் தெரிவித்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/09/சேலத்தில்-முதலாவது-புத்தகத்-திருவிழா--இன்று-முதல்-நவ-21-வரை-நடக்கிறது-3035280.html
3035279 தருமபுரி சேலம் விவசாயிகள் கவனத்துக்கு... DIN DIN Friday, November 9, 2018 07:13 AM +0530 பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேருமாறு விவசாயிகளை  தலைவாசல் வட்டார  வேளாண் அதிகாரிகள் கேட்டுகொண்டுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியது:-
தலைவாசல் வட்டாரத்தில் நெல் (சம்பா) சாகுபடி பருவக் காலமான ஆகஸ்ட் மாதத்திலிருந்து தற்பொழுது வரை இயல்பு மழையைவிட 50 சதவீதம் அளவு குறைவாகப் பதிவாகியுள்ளது. 
போதிய மழை இல்லாததால்,  சம்பா நெல் சாகுபடி அளவு 75 சதவீதத்திற்கும் மேலாக சாகுபடி செய்ய முடியாத நிலை உள்ளது.
பயிர் சாகுபடி செய்ய இயலாத விவசாயிகள் பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்ட வருவாய் கிராமங்களில் 15.11.2018 வரை விதைப்புச்சான்றினை காப்பீடு செய்யும் பொழுது நடவு செய்யாமை இனத்தின் கீழ் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 25 சதவீதம் இழப்பீடு கிடைக்கும்.
இந்தச் சூழ்நிலையில் விவசாயிகள் தானே முன்வந்து காட்டுக்கோட்டை,வீரகனூர், தலைவாசல் கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள் மூலம் ஏக்கருக்கு ரூ.425 பிரிமீயம் செலுத்தி பயனடையலாம் என்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/09/விவசாயிகள்-கவனத்துக்கு-3035279.html
3035278 தருமபுரி சேலம் கெங்கவல்லி நகர காங்கிரஸார் ஆலோசனை DIN DIN Friday, November 9, 2018 07:13 AM +0530 கெங்கவல்லி நகர காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்   வியாழக்கிழமை நடைபெற்றது .  
கூட்டத்தில் வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட வேண்டும்,  2014-இல் காங்கிரஸ் தனித்து போட்டியிட்ட போது போட்டியிட்டவர்களுக்கு வேட்பாளர் பட்டியலில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும், மத்திய அரசின் தவறான கொள்கைகளை எதிர்த்து மக்களிடம் பிரசாரம் செய்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/09/கெங்கவல்லி-நகர-காங்கிரஸார்-ஆலோசனை-3035278.html
3035277 தருமபுரி சேலம் ரயில் மோதியதில் இளைஞர் சாவு DIN DIN Friday, November 9, 2018 07:12 AM +0530 ரயில் மோதியதில் இளைஞர் இறந்தார்.
சேலம்,  வீரபாண்டி ரயில் நிலையங்களுக்கு இடையே 35 வயதுமதிக்கத்தக்க இளைஞர் ரயில் மோதி இறந்து கிடந்தது வியாழக்கிழமை தெரியவந்தது.  இவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. சிமென்ட் கலர் பேண்ட், வெள்ளை நீலம் கருப்புக் கட்டம் போட்ட அரை சட்டை அணிந்திருந்தார்.
தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த ரயில்வே போலீஸார் உடலை மீட்டு,  சேலம் அரசு மருத்துவமனையின் பிணவறையில் வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக ஏதேனும் தகவல் கிடைத்தால்  0427-2447404, 9498101963 என்ற எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என சேலம் ரயில்வே போலீஸார் தெரிவித்துள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/09/ரயில்-மோதியதில்-இளைஞர்-சாவு-3035277.html
3035276 தருமபுரி சேலம் குப்பை தேங்குவதால் நோய் பரவும் அபாயம்:  ஜி.கே.மணி குற்றச்சாட்டு DIN DIN Friday, November 9, 2018 07:12 AM +0530 மேட்டூர் நகரில் குப்பை தேங்குவதால்,  காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.
 மேட்டூர் நகரில் சொத்து வரியை உயர்த்திய நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து,   வட்டாட்சியர் அலுவலகம் அருகே  பாமக சார்பில் ஆர்ப்பாட்டம்  வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை வகித்து ஜி.கே.மணி பேசியது:-
மேட்டூர் நகரில் குப்பைகள் தேங்கி கிடப்பதால்,  டெங்கு,  பன்றி காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவற்றை உடனுக்குடன் அகற்றி, சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.  சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளாமல், சொத்து வரியை உயர்த்திய நகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. இதை குறைக்க வேண்டும்  என்றார். 
ஆர்ப்பாட்டத்தில் பாமக துணைத் தலைவர் எஸ்.சதாசிவம்,  துணைப் பொதுச் செயலர் கண்ணன், சேலம் மேற்கு மாவட்ட சிறப்பு செயலர் வெடிகாரனூர் ராஜேந்திரன்,  மாவட்டத் தலைவர் டாக்டர் மாணிக்கம்,  நகரச் செயலர் சந்திரசேகரன், முன்னாள் மாவட்டத் தலைவர் எம்.கே.மணி,  முன்னாள் நகரச் செயலர்கள் கே.ஜி.ராஜேந்திரன்,  மதியழகன், மாதேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/09/குப்பை-தேங்குவதால்-நோய்-பரவும்-அபாயம்--ஜிகேமணி-குற்றச்சாட்டு-3035276.html
3035275 தருமபுரி சேலம் ஸ்கேன் மையத்துக்கு சீல் வைப்பு: ஓய்வுபெற்ற அரசு அதிகாரி கைது DIN DIN Friday, November 9, 2018 07:12 AM +0530 மேட்டூரில் கர்ப்பிணிகளை ஸ்கேன் செய்து சிசுவின் பாலினத்தைத் தெரிவித்ததாக எழுந்த புகாரின்பேரில்,  தனியார் ஸ்கேன் சென்டருக்கு சீல் வைக்கப்பட்டது. 
இதுதொடர்பாக ஸ்கேன் சென்டர் உரிமையாளரும்,  ஓய்வுபெற்ற சுகாதாரப் பணிகள் இணைஇயக்குநருமான டாக்டர் சந்திரா கைது செய்யப்பட்டார்.  கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன், கரு கலைப்பு செய்வதாக வந்த ரகசிய தகவலின்பேரில் சேலம் மாவட்ட சுகாதார பணிகளின் இணை இயக்குநர் சத்யா, சென்னையில் இருந்து வந்திருந்த ஊரக நலப் பணிகள் துறை மருத்துவ கண்காணிப்பு குழு டிஎஸ்பி தாமஸ்  பிரபாகரன்,  முதுநிலை நுண்கதிர் பிரிவு மருத்துவர் நடராஜன்,  மேட்டூர் அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவர் சுகந்தி உள்ளிட்டோர் ஸ்கேன் சென்டரை வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.  இதில், ஸ்கேன் செய்த கர்ப்பிணிகள் குறித்த விவரங்கள் முறையாகப் பராமரிக்கப்படாமல் இருந்ததும்  தெரியவந்தது.  இதையடுத்து,  ஸ்கேன் சென்டருக்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். 
ஸ்கேன் சென்டரையும்,  மருத்துவமனையையும்  நடத்தி வந்த ஓய்வு பெற்ற சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் டாக்டர் சந்திரா கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து சேலம் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் சத்யா கூறுகையில், " கருவில் இருக்கும் குழந்தைகளின் பாலினத்தைக் கூறுவதால்தான் ஆவணங்கள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை.  அதனால் டாக்டர் சந்திரா கைது செய்யப்பட்டார்' என்றார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/09/ஸ்கேன்-மையத்துக்கு-சீல்-வைப்பு-ஓய்வுபெற்ற-அரசு-அதிகாரி-கைது-3035275.html
3035274 தருமபுரி சேலம் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு:  ஒலி, காற்று மாசு குறைந்தது DIN DIN Friday, November 9, 2018 07:09 AM +0530 தீபாவளியின்போது,  பட்டாசு  வெடிக்க உச்சநீதிமன்றம் கடும் கட்டுப்பாடுகளை விதித்ததால், சேலத்தில் ஒலி, காற்று மாசு குறைந்துள்ளது.
தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடு காரணமாக,  சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும் ஒலி, காற்று மாசு இந்த ஆண்டு வெகுவாக குறைந்துள்ளது.
இயற்கை சூழல் சார்ந்த பகுதியில் காற்று மாசு 40 -50 டெசிபல் அளவாகும்.  வர்த்தக நிறுவனப் பகுதிகளில் 55- 65 தொழிற்சாலை பகுதிகளில் 70- 75 டெசிபல் அனுமதிக்கப்பட்ட அளவாகும். சாரதா கல்லூரி சாலையில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு  ஒலி அளவு52.2 ஆக இருந்தது. இது நடப்பாண்டில் 66.79 -ஆகக் குறைந்துள்ளது.
குடியிருப்புப் பாதுகாக்கப்பட்ட பகுதி, தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியில் கடந்த ஆண்டு ஒலி அளவு 67 ஆக இருந்தது. இது நடப்பாண்டில் 59.76 ஆக குறைந்துள்ளது.கடந்த ஆண்டு குடியிருப்புப் பகுதியில் காற்று மாசு 162 ஆக இருந்தது. நடப்பாண்டில் 154 ஆக குறைந்துள்ளது.
குடியிருப்பு, தொழிற்சாலை,பாதுகாக்கப்பட்ட இடம், வர்த்தகப் பகுதியில் சேர்ந்து கடந்த ஆண்டு 138 ஆக இருந்தது. நடப்பாண்டு 127 ஆக குறைந்துள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைந்த அளவிலான பட்டாசுகள் வெடித்ததால் நடப்பாண்டில் ஒலி, காற்று மாசு குறைந்துள்ளது.  தொழிற்சாலை, வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையால் காற்று மாசு ஏற்படுகிறது என்று மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/09/பட்டாசு-வெடிக்க-கட்டுப்பாடு--ஒலி-காற்று-மாசு-குறைந்தது-3035274.html
3035273 தருமபுரி சேலம் கரூர்-சேலம் பயணிகள் ரயில் இன்று முதல் நவ. 23 வரை ரத்து DIN DIN Friday, November 9, 2018 07:09 AM +0530 கரூர்-சேலம் இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில் பராமரிப்புப் பணிகளுக்காக, வெள்ளிக்கிழமை ( நவம்பர் 9)  முதல் 23- ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
கரூர்-சேலம் இடையே நாமக்கல் வழியாகப் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.  தற்போது கரூர்-சேலம் இடையேயான 83 கிலோ மீட்டர் தூரத்துக்கான ரயில் பாதை மின்
மயமாக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 
இதையொட்டி, பராமரிப்புப் பணிகளுக்காக வண்டி எண் 06883,  06834 என்ற பயணிகள் ரயில் நவம்பர் 9 ஆம் தேதி முதல் நவம்பர் 23 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது என சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/09/கரூர்-சேலம்-பயணிகள்-ரயில்-இன்று-முதல்-நவ-23-வரை-ரத்து-3035273.html
3035272 தருமபுரி சேலம் மின்சாரம் பாய்ந்து பெண் சாவு DIN DIN Friday, November 9, 2018 07:09 AM +0530 மின்சாரம் பாய்ந்து பெண் இறந்தார்.
தலைவாசல் அருகேயுள்ள பட்டுத்துறையைச் சேர்ந்த காவலாளி பாலு மனைவி சின்னப்பொண்ணு(46). கட்டடத் தொழிலாளி.  இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் வியாழக்கிழமை சின்னப்பொண்ணு கட்டடப் பணியின்போது,   மணல் ஜலித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மின் கம்பி அறுந்து ஜல்லடையில் பட்டு மின்சாரம் பாய்ந்து இருந்ததை அறியாமல் மிதித்தாராம். இதில் மின்சாரம் பாய்ந்து பலத்த காயம் அடைந்த சின்னப்பொண்ணு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 
இதுகுறித்து தலைவாசல் காவல் ஆய்வாளர் (பொறுப்பு ) ஆர்.சரவணன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகிறார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/09/மின்சாரம்-பாய்ந்து-பெண்-சாவு-3035272.html
3035271 தருமபுரி சேலம் மூளைக்காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு DIN DIN Friday, November 9, 2018 07:08 AM +0530 மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு மூளைக்காய்ச்சல் தடுப்பு குறித்த இருநாள் விழிப்புணர்வுப் பயிற்சி கருத்தரங்கம் வாழப்பாடியில் வியாழக்கிழமை தொடங்கியது.
 அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் சார்பில் வட்டார வள மைய வளாகத்தில் முகாம் நடக்கிறது.
தொடக்க விழாவுக்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் கோகிலா தலைமை வகித்தார்.  சிறப்பு ஆசிரியர் வெங்கடேசன் வரவேற்றார். 
பேளூர் அரசு ஆரம்ப சுகாதாரநிலைய மருத்துவர் விஜயகுமார்,  ஆசிரியர் பயிற்றுநர்கள் கந்தசாமி, சங்கர்நாத், கீதா,  சிறப்பு ஆசிரியர்கள் தேன்மொழி, ஆனந்தி, காளியம்மாள், இயன்முறை மருத்துவர் முகமது நாசில்கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமையும் நடக்கிறது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/09/மூளைக்காய்ச்சல்-தடுப்பு-விழிப்புணர்வு-3035271.html
3034783 தருமபுரி சேலம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்கிறது DIN DIN Thursday, November 8, 2018 04:00 AM +0530
மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் 100 அடியை எட்டுகிறது.
காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் மழை பெய்த காரணத்தால், பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 500 கன அடியாகக் குறைக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவிலிருந்து மீண்டு மெல்ல உயரத் தொடங்கியது.
இந்த நிலையில், புதன்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99.42 அடியாக உயர்ந்தது. அணைக்கு நொடிக்கு 6,066 கன அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 500 கன அடி தண்ணீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 300 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 64.09 டி.எம்.சி.யாக இருந்தது.
நீர் வரத்தும், திறப்பும் இதே நிலையில் இருந்தால், வியாழக்கிழமை இரவு மேட்டூர் அணையின் நீர்மட்டம் நடப்பாண்டில் இரண்டாவது முறையாக 100 அடியை எட்டும் வாய்ப்பு உள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/08/மேட்டூர்-அணையின்-நீர்மட்டம்-உயர்கிறது-3034783.html
3034782 தருமபுரி சேலம் எடப்பாடியில் டிஜிட்டல் நூலகம் தொடக்கம் DIN DIN Thursday, November 8, 2018 03:59 AM +0530
எடப்பாடியில் நூல்களை செல்லிடப்பேசி வாயிலாக படித்திடும் வசதி கொண்ட டிஜிட்டல் நூலகத்தை மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட நூலக அலுவலர் அர.கோகிலவாணி வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் வி. பன்னீர்செல்வம் டிஜிட்டல் நூலகத்தின் பயன்பாடு குறித்து விளக்கினார். மாவட்டத்தில் முதன் முறையாக எடப்பாடி பகுதியில் நிறுவப்பட்ட டிஜிட்டல் நூலகத்தை தொடக்கி வைத்த ஆட்சியர், டிஜிட்டல் நூலகத்தில் உள்ள நூல்களை செல்லிடப்பேசி வழியாக படிக்கும் வகையிலான புதிய செயலியை அறிமுகப்படுத்தினார்.
இதையடுத்து பேசிய ஆட்சியர், தற்போதைய நவீன உலகத்துக்கு ஏற்ற வகையில் இந்த புதிய டிஜிட்டல் நூலகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பலதரப்பட்ட மக்கள் படித்து பயன்னடையும் வகையிலான பல்வேறு நூல்கள் டிஜிட்டல் வடிவில் மாற்றம் செய்யப்பட்டு, கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த டிஜிட்டல் நூலகத்தில் உள்ள பல பயனுள்ள நூல்களை இப்பகுதியில் உள்ள மாணவர்கள், போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள், ஆராய்ச்சிப் படிப்பு பயின்றுவரும் உயர்கல்வி பயில்வோர் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் படித்து பயனடைய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும், நவம்பர் 9-ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில், லட்சக்கணக்கான பல்வேறு வகை புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளதால், இதில் பங்கேற்று பயனடைய வேண்டும் என்றார்.
டிஜிட்டல் நூலகம் குறித்து நூலகர் மோகன்ராஜ் கூறுகையில், தற்போது எடப்பாடி நூலகத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த டிஜிட்டல் நூலகத்தில் முதல்கட்டமாக சுமார் 1,600 புத்தகங்கள் டிஜிட்டல் வடிவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
மேலும், இதில் போட்டித் தேர்வுக்குரிய வினா-விடை குறிப்புகள், ஆசிரியர் தேர்வுகான குறிப்புகள் மற்றும் 1 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கான புத்தகங்கள் மற்றும் இந்திய ஆட்சிப் பணி தேர்வுக்கான குறிப்பேடுகள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந் நூலகத்துக்கு வரும் வாசகர்கள் இங்குள்ள வை-ஃபை வசதியைக் கொண்டு தங்கள் செல்லிடப்பேசி மூலம் தாங்கள் தேர்வு செய்யும் புத்தகங்களை படிக்கலாம், மேலும், ஒரே நேரத்தில் ஒரு புத்தகத்தை பலர் படிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால், இதனை அதிகமானோர் பயன்படுத்தி பயனடைய வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் சங்ககிரி கோட்டாட்சியர் (பொ) வேடியப்பன், வட்டாட்சியர் கேவசன், துணை வட்டாட்சியர் மாணிக்கம், கோமதி மற்றும் பெற்றோர்-ஆசிரியர் சங்க நிர்வாகிகள் டி.கதிரேசன், சி.ராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். எடப்பாடி நூலகர் இரா.கருத்திருமான் நன்றி கூறினார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/08/எடப்பாடியில்-டிஜிட்டல்-நூலகம்-தொடக்கம்-3034782.html
3034781 தருமபுரி சேலம் இருசக்கர வாகனங்கள் மோதியதில் ஒருவர் சாவு DIN DIN Thursday, November 8, 2018 03:59 AM +0530
தம்மம்பட்டியில் இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் இருசக்கர வாகன பழுது நீக்குபவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
தம்மம்பட்டி அருகே கொண்டயம்பள்ளியைச்சேர்ந்த பெரியசாமி மகன் பிச்சமுத்து(20), அதே ஊரில் இருசக்கர வாகன பழுதுநீக்குபவராக இருந்து வந்தார். இவர் செவ்வாய்க்கிழமை மாலை தம்மம்பட்டியிலிருந்து கொண்டயம்பள்ளி நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்ற போது, கோனேரிப்பட்டி பிரிவு சாலையில், எதிரே வந்த இருசக்கர வாகனம் இவரது வாகனம் மீது நேருக்குநேர் மோதியது. இதில் படுகாயமடைந்த பிச்சமுத்து ,நிகழ்விடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தம்மம்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/08/இருசக்கர-வாகனங்கள்-மோதியதில்-ஒருவர்-சாவு-3034781.html
3034758 தருமபுரி சேலம் மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் DIN DIN Thursday, November 8, 2018 03:49 AM +0530
மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் நடத்தப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் புதன்கிழமை தொடக்கி வைத்தார்.
சேலத்தில் திரிவேணி அரங்கில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் நடத்தப்பட்ட இம் முகாமில் ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் பேசியது: மாற்றுத் திறனாளிகள் சுயமரியாதை மற்றும் சுயகெளரவத்துடன் வாழ்வதற்கு அரசு சார்பாக வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு அரசு பணி கிடைக்காத பட்சத்தில், தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத் தரும் வகையில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் தொடங்கி வைக்கப்பட்டது.
சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகள், தனியார் நிறுவனங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கன் மற்றும் தனியார் பள்ளிகளும் மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டினை உறுதி செய்யும் வகையில் மாற்றுத் திறனாளிகளுக்கு பணி வழங்க கோரப்பட்டது. சுமார் 37 தனியார் நிறுவனங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க முன் வந்துள்ளனர். இம்முகாமில் மாவட்ட தொழில் மையம் கலந்துகொண்டு படித்த மாற்றுத் திறனாளிகள் தொழில் தொடங்குவதற்கான வங்கிக் கடன் வழங்கவும், முன்னோடி வங்கி மூலமாக மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு பெறுவதற்கான சிறப்பு பயிற்சிகள் பெறுவதற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் தொண்டு நிறுவனங்களும் பங்கேற்றுள்ளனர்.
இம்முகாமில் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்று, பதிவு செய்து அதன் அடிப்படையில் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன என்றார்.
நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி, வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் ஒ.செ.ஞானசேகரன், திரிவேணி குழும நிறுவனத் தலைவர் பி.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/08/மாற்றுத்-திறனாளிகளுக்கான-தனியார்-வேலைவாய்ப்பு-முகாம்-3034758.html
3034757 தருமபுரி சேலம் மத்திய சிறையில் கைதியிடம் செல்லிடப்பேசி பறிமுதல் DIN DIN Thursday, November 8, 2018 03:48 AM +0530
சேலம் மத்திய சிறையில் கைதியிடம் இருந்து செல்லிடப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம் மத்திய சிறையில் கஞ்சா மற்றும் செல்லிடப்பேசி புழக்கம் அதிகரித்துள்ளதாக புகார்கள் பல வந்தன.
இதையடுத்து, சேலம் மாநகர காவல் துறையினரின் ஒத்துழைப்புடன் சிறையில் அனைத்து இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், சோதனையில் செல்லிடப்பேசியோ அல்லது கஞ்சாவோ பறிமுதல் செய்யவில்லை என போலீஸார் தெரிவித்தனர்.
இந்த நிலையில், தண்டனை கைதிகளில் ஒருவர் செல்லிடப்பேசியை மறைத்து வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில், மத்திய சிறை அதிகாரிகள், அந்த கைதியைக் கண்காணித்து அவர் மறைத்து வைத்திருந்த செல்லிடப்பேசியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/08/மத்திய-சிறையில்-கைதியிடம்-செல்லிடப்பேசி-பறிமுதல்-3034757.html
3034756 தருமபுரி சேலம் தம்மம்பட்டியில் இருசக்கர வாகனங்கள் மோதியதில் ஒருவர் சாவு DIN DIN Thursday, November 8, 2018 03:48 AM +0530
தம்மம்பட்டியில் இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் இருசக்கர வாகன பழுது நீக்குபவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
தம்மம்பட்டி அருகே கொண்டயம்பள்ளியைச்சேர்ந்த பெரியசாமி மகன் பிச்சமுத்து(20), அதே ஊரில் இருசக்கர வாகன பழுதுநீக்குபவராக இருந்து வந்தார்.
இவர் செவ்வாய்க்கிழமை மாலை தம்மம்பட்டியிலிருந்து கொண்டயம்பள்ளி நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்ற போது, கோனேரிப்பட்டி பிரிவு சாலையில், எதிரே வந்த இருசக்கர வாகனம் இவரது வாகனம் மீது நேருக்குநேர் மோதியது. இதில் படுகாயமடைந்த பிச்சமுத்து ,நிகழ்விடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து தம்மம்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/08/தம்மம்பட்டியில்-இருசக்கர-வாகனங்கள்-மோதியதில்-ஒருவர்-சாவு-3034756.html
3034755 தருமபுரி சேலம் ஓமலூர் அருகே கோழிப் பண்ணையில் தீ விபத்து DIN DIN Thursday, November 8, 2018 03:47 AM +0530
ஓமலூர் அருகே பட்டாசு வெடிக்கும் போது தீப்பொறி பட்டு கோழிப் பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டது.
ஓமலூர் அருகேயுள்ள கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் வசிக்கும் ராஜ்குமார், தனது தோட்டத்தில் கோழிப் பண்ணை அமைத்து, கோழிகளை வளர்த்து மொத்தமாக விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து கோழிகளையும் விற்பனை செய்த இவர், மீண்டும் கோழிக் குஞ்சுகள் வளர்ப்பதற்காக, பண்ணையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்துள்ளார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிராமத்தில் பல்வேறு இடங்களிலும் இளைஞர்கள் பட்டாசு வெடித்துள்ளனர். அப்போது, பட்டாசு தீப்பொறி ராஜ்குமாரின் கோழிப் பண்ணையில் விழுந்துள்ளது. இதனால், கோழிப் பண்ணை தீப் பிடித்து எரியத் தொடங்கியது.
தகவலின் பேரில் விரைந்து வந்த ஓமலூர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால், தீயணைப்பு வாகனம் திடீரென பழுதடைந்து இயங்காமல் நின்றது. இதனால், கோழிப் பண்ணை முழுமையாக எரியத் தொடங்கியது. பின்னர் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் பழுதை சரி செய்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முற்பட்டனர். அதற்குள் கோழிப் பண்ணை பெருமளவில் எரிந்து சேதமடைந்தது. பண்ணையில் கோழிகள் இல்லாததால் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/08/ஓமலூர்-அருகே-கோழிப்-பண்ணையில்-தீ-விபத்து-3034755.html
3034754 தருமபுரி சேலம் ரயில்களில் சோதனை  நடத்தியதில் ரூ.10.79 லட்சம் அபராதம் வசூல் DIN DIN Thursday, November 8, 2018 03:47 AM +0530
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரயில்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தது உள்ளிட்டவைகளுக்காக ரூ.10.79 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சேலம் ரயில்வே கோட்டத்தின் வணிகப் பிரிவு சார்பில் ரயில்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் யு.சுப்பாராவ் உத்தரவின் பேரில் வணிகப் பிரிவு முதுநிலை ஏ.விஜுவின் மேற்பார்வையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
கடந்த நவ. 2-ஆம் தேதி முதல் நவ. 6-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட சோதனையில், பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பது, முறையற்ற பயணம், முறையாக சரக்குகள் பதிவு செய்யாமல் எடுத்துச் செல்வது உள்ளிட்டவைகளுக்காக 2,625 பேரிடம் இருந்து ரூ.10.79 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/08/ரயில்களில்-சோதனை--நடத்தியதில்-ரூ1079-லட்சம்-அபராதம்-வசூல்-3034754.html
3034753 தருமபுரி சேலம் கபடி போட்டி: மங்களபுரம் அணி சிறப்பிடம் DIN DIN Thursday, November 8, 2018 03:47 AM +0530
வாழப்பாடியை அடுத்த துக்கியாம்பாளையத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான மூன்றாம் ஆண்டு கபடி போட்டியில், நாமக்கல் மாவட்டம், மங்களபுரம் அணி வெற்றிபெற்று முதல் பரிசை பெற்றது.
துக்கியாம்பாளையம் கிராமத்தில் மின்னல் பாய்ஸ் நண்பர்கள் குழு சார்பில், கடந்த மூன்றாண்டுகளாக மாவட்ட அளவிலான கபடி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தாண்டு சனிக்கிழமை தொடங்கிய போட்டிக்கு, வாழப்பாடி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒன்றியச் செயலர் (தெ) அ.முல்லைவாணன் தலைமை வகித்தார். மின்னல் பாய்ஸ் நண்பர்கள் குழு நிர்வாகிகள் தா.ரமேஷ், இரா. முனியப்பன் ஆகியோர் வரவேற்றனர்.
இதில், சேலம், நாமக்கல் மற்றும் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.
இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று முதலிடம் பிடித்த நாமக்கல் மாவட்டம், மங்களபுரம் அணிக்கு, முன்னாள் வாழப்பாடி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் இரா.முருகன் முதல் பரிசாக ரூ.15,003 வழங்கினார். இரண்டாமிடம் பெற்ற வாழப்பாடியை அடுத்த அத்தனூர்பட்டி அணிக்கு துக்கியாம்பாளையம் சிவசக்தி ரூ.10,003 வழங்கினார். மூன்றாமிடம் பெற்ற துக்கியாம்பாளையம் மின்னல் பாய்ஸ் அணிக்கு ரூ.7,003, நான்காமிடம் பிடித்த வாழப்பாடி கெத்பாய்ஸ் அணிக்கு ரூ.5,003 வழங்கப்பட்டன.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/08/கபடி-போட்டி-மங்களபுரம்-அணி-சிறப்பிடம்-3034753.html
3034752 தருமபுரி சேலம் சட்ட விரோதமாக மது விற்றதாக 17 பேர் கைது DIN DIN Thursday, November 8, 2018 03:46 AM +0530
ஓமலூர் வட்டார கிராமங்களில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சட்ட விரோதமாக பல்வேறு இடங்களில் மது விற்பனை செய்ததாக 17 பேரை மதுவிலக்கு போலீஸார் கைது செய்தனர்.
ஓமலூர் வட்டத்தில் ஓமலூர், தாரமங்கலம், காடையாம்பட்டி ஆகிய நகரப் பகுதிகள் மற்றும் கிராமப் பகுதிகளில் மொத்தம் 16 அரசு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிராமப் பகுதிகளில் சட்ட விரோதமாக சிலர் ஆங்காங்கே சந்துக் கடைகள் அமைத்து மது விற்பனை செய்து வந்தனர். மேலும், ஏரிகள், ஆற்றங்கரை, மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடங்களை தேர்வு செய்து பல்வேறு இடங்களில் மதுபானங்கள் விற்பனை செய்து வந்தனர்.
இதையடுத்து, சட்ட விரோதமாக மது விற்போரை கைது செய்ய இரும்பாலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, சட்ட விரோதமாக கலப்பட மற்றும் வெளி மாநில மதுபானங்களை விற்பனை செய்த 17 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடம் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கலப்பட மதுப்புட்டிகளை பறிமுதல் செய்து அழித்தனர். சந்துக் கடைகள் அமைத்து கலப்பட மது விற்போரை கைது செய்யும் நடவடிக்கை தொடரும் என போலீஸார் தெரிவித்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/08/சட்ட-விரோதமாக-மது-விற்றதாக-17-பேர்-கைது-3034752.html
3034751 தருமபுரி சேலம் சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணிக்கான நேர்காணல் ஒத்திவைப்பு DIN DIN Thursday, November 8, 2018 03:46 AM +0530
பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு நடைபெற இருந்த நேர்காணல் சில நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுகிறது என ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்பட்டு வரும் பள்ளி சத்துணவு மையங்களில், காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் உள்ளிட்ட 1,101 காலி பணியிடங்களுக்கு தகுதியான பெண்களிடமிருந்து கடந்த அக். 1-ஆம் தேதி முதல் அக். 16-ஆம் தேதி வரை அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் சேலம் மாநகராட்சி அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் சேலம் மாநகராட்சி அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் சத்துணவு அமைப்பாளர் காலி பணியிடங்களுக்கு நவ. 12 மற்றும் நவ. 13 ஆகிய நாள்களிலும், சமையல் உதவியாளர் காலி பணியிடங்களுக்கு நவ. 14-ஆம் தேதியும் நேர்காணல் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் காலி பணியிடங்களுக்கான நேர்காணல் சில நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுகிறது. நேர்காணல் நடத்தப்படும் தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்துள்ளார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/08/சத்துணவு-அமைப்பாளர்-சமையல்-உதவியாளர்-பணிக்கான-நேர்காணல்-ஒத்திவைப்பு-3034751.html
3034750 தருமபுரி சேலம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறி பட்டாசு வெடித்ததாக 105 பேர் மீது வழக்கு DIN DIN Thursday, November 8, 2018 03:46 AM +0530
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறி பட்டாசு வெடித்ததாக, சேலம் நகரம் மற்றும் மாவட்டப் பகுதிகளில் சுமார் 105 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என உச்ச நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்தது. தமிழகத்தில் காலை 6 மணி முதல் 7 வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க அரசு உத்தரவிட்டது.
அந்த வகையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறி சேலம் மாநகரத்தில் பட்டாசு வெடிக்கிறார்களா என கண்காணிக்க சேலம் மாநகர காவல் ஆணையர் கே.சங்கர் உத்தரவிட்டார்.
இதையடுத்து, மாநகரத்தில் உள்ள 11 காவல் நிலைய எல்லைப் பகுதி முழுவதும் காவலர்கள் ரோந்து சென்று கண்காணித்தனர். அரசு அனுமதித்த நேரத்தை தவிர அனைத்துப் பகுதியிலும் கட்டுப்பாடு இல்லாமல் பட்டாசு வெடிக்கப்பட்டது.
இதையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாக சேலம் மாநகரத்தில் மட்டும் 44 வழக்குகள் பதிவு செய்து, 49 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் 39 பேர் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
சேலம் மாவட்டம் முழுவதும் கண்காணிக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜோ.ஜார்ஜ் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் கண்காணித்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறி பட்டாசு வெடித்ததாக 61 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். சேலம் மாவட்டத்தில் காவல் துறையினர் யாரையும் கைது செய்யவில்லை. சேலம் மாநகரம் மற்றும் சேலம் மாவட்டத்தில் மட்டும் 105 பேர் மீது பட்டாசு வெடித்ததாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறும்போது, உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்கிறோம் . ஆனால், தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பது காலங்காலமாக நடந்து வருகிறது. இந்த தீர்ப்பை பரிசீலனை செய்து தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க வழிவகை செய்ய வேண்டும் என்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/08/உச்ச-நீதிமன்றத்-தீர்ப்பை-மீறி-பட்டாசு-வெடித்ததாக-105-பேர்-மீது-வழக்கு-3034750.html
3034749 தருமபுரி சேலம் தலைதீபாவளிக்கு வந்தபோது போலீஸாரிடம் பிடிபட்ட இளைஞர் DIN DIN Thursday, November 8, 2018 03:46 AM +0530
எடப்பாடி அருகே தலைதீபாவளிக்கு மாமனார் வீட்டுக்கு வருகை தந்த இளைஞரை எடப்பாடி போலீஸார் கைது செய்தனர்.
எடப்பாடி அருகேயுள்ள ஆவணிப்பேரூர் கீழ் முகம் ஊராட்சி, குப்பதாசன் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, பள்ளியொன்றில் படித்துவந்தார். இவரை ஓசூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஜலகண்டாபுரத்தைச் சேர்ந்த மணி (26) என்பவர் ஆசைவார்த்தை கூறி, கடந்த மே மாதம் கடத்திச் சென்றாராம்.
புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் மணி மீது வழக்குப் பதிவு செய்த எடப்பாடி போலீஸார், இருவரையும் பல்வேறு இடங்களில் தேடிவந்தனர். இதனிடையே, பள்ளி மாணவியைக் கடத்திச் சென்ற மணி, கோயிலில் திருமணம் செய்ததுடன், திருப்பூரில் தனிக்குடித்தனம் நடத்தி வந்ததாராம். இதனை அறிந்த சிறுமியின் உறவினர்கள், மணியைச் சந்தித்து சமரசம் பேசி தீபாவளி பண்டிகைக்கு அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, மணி தனது மனைவியை அழைத்துக்கொண்டு கடந்த சில தினங்களுக்கு முன் மாமனார்வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில், இளம்பெண்ணை கடத்திச் சென்ற மணி குப்பதாசன் வளவு பகுதிக்கு வந்திருக்கும் தகவல் அறிந்த எடப்பாடி போலீஸார், மணியைக் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, மணியிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/08/தலைதீபாவளிக்கு-வந்தபோது-போலீஸாரிடம்-பிடிபட்ட-இளைஞர்-3034749.html
3034748 தருமபுரி சேலம் மதுவில் விஷம் கலந்து அருந்தி தற்கொலை DIN DIN Thursday, November 8, 2018 03:45 AM +0530
கொண்டயம்பள்ளியில் இளைஞர் ஒருவர் மதுவில் விஷம் கலந்து அருந்தி தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தம்மம்பட்டி அருகே கொண்டயம்பள்ளியில் உள்ள மதுபானக்கடையில் தீபாவளியன்று இரவு 21 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், மது வாங்கிஅதில் விஷம் கலந்து அருந்தியுள்ளார். இதையடுத்து, புதன்கிழமை காலை அந்த மதுக்கடை அருகே அவர் சடலமாக கிடந்தார். தகவலறிந்த தம்மம்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து, அவர் யார், எந்த ஊர் என்ற விவரம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/08/மதுவில்-விஷம்-கலந்து-அருந்தி-தற்கொலை-3034748.html
3034746 தருமபுரி சேலம் அகில இந்திய வில்வித்தை போட்டிக்கு மேட்டூர் ஜிவி பள்ளி மாணவர் தேர்வு DIN DIN Thursday, November 8, 2018 03:45 AM +0530  

மேட்டூர் ஜிவி மேல்நிலைப் பள்ளி மாணவர் ஓம் ஸ்ரீவிஷ்வா அகில இந்திய வில்வித்தை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பாக நாமக்கல் மாவட்டத்தில் மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையேயான வில்வித்தை போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் 17 வயதுக்குள்பட்டோர் பிரிவில் மேட்டூர் ஜிவி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஓம் ஸ்ரீவிஷ்வா தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். மேலும், இவர் இந்திய பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் நடத்தும் அகில இந்திய வில்வித்தை போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். இவரை பள்ளியின் தாளாளர் எம்.அன்பழக ன், தலைமை ஆசிரியர் ராஜலிங்கம் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பாராட்டி பள்ளியின் சார்பில் சான்று வழங்கினர் .

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/08/அகில-இந்திய-வில்வித்தை-போட்டிக்கு-மேட்டூர்-ஜிவி-பள்ளி-மாணவர்-தேர்வு-3034746.html
3034745 தருமபுரி சேலம் ஆத்தூரில் கெளரி நோன்பு DIN DIN Thursday, November 8, 2018 03:45 AM +0530
ஆத்தூர் பாவநாராயண சுவாமி திருக்கோயிலில் புதன்கிழமை ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கெளரி நோன்பு எடுத்தனர் .
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெருமாளுக்காகவும், லஷ்மிக்காகவும் எடுக்கப்படும் கெளரி நோன்பு பிரபலமானது. இங்கு குடும்பத்தோடு புத்தாடை அணிந்து அதிரசம், வெற்றிலைப் பாக்கு, மஞ்சள் என 21 பொருள்களோடு நோன்பு எடுத்துக் கொண்டனர். இதே போல் ஆத்தூர் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில், திரெளபதி அம்மன் ஆலயம் என அனைத்து வைணவ திருக்கோயில்களிலும் கெளரி நோன்பு எடுத்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/08/ஆத்தூரில்-கெளரி-நோன்பு-3034745.html
3034743 தருமபுரி சேலம் கோழிப் பண்ணையில் தீ விபத்து DIN DIN Thursday, November 8, 2018 03:45 AM +0530
ஓமலூர் அருகே பட்டாசு வெடிக்கும் போது தீப்பொறி பட்டு கோழிப் பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டது.
ஓமலூர் அருகேயுள்ள கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் வசிக்கும் ராஜ்குமார், தனது தோட்டத்தில் கோழிப் பண்ணை அமைத்து, கோழிகளை வளர்த்து மொத்தமாக விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து கோழிகளையும் விற்பனை செய்த இவர், மீண்டும் கோழிக் குஞ்சுகள் வளர்ப்பதற்காக, பண்ணையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்துள்ளார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிராமத்தில் பல்வேறு இடங்களிலும் இளைஞர்கள் பட்டாசு வெடித்துள்ளனர். அப்போது, பட்டாசு தீப்பொறி ராஜ்குமாரின் கோழிப் பண்ணையில் விழுந்துள்ளது. இதனால், கோழிப் பண்ணை தீப் பிடித்து எரியத் தொடங்கியது.
தகவலின் பேரில் விரைந்து வந்த ஓமலூர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால், தீயணைப்பு வாகனம் திடீரென பழுதடைந்து இயங்காமல் நின்றது. இதனால், கோழிப் பண்ணை முழுமையாக எரியத் தொடங்கியது. பின்னர் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் பழுதை சரி செய்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முற்பட்டனர். அதற்குள் கோழிப் பண்ணை பெருமளவில் எரிந்து சேதமடைந்தது. பண்ணையில் கோழிகள் இல்லாததால் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/08/கோழிப்-பண்ணையில்-தீ-விபத்து-3034743.html
3034742 தருமபுரி சேலம் பசுமை தீபாவளி கொண்டாட்டம் DIN DIN Thursday, November 8, 2018 03:44 AM +0530
பசுமை சங்ககிரி அமைப்பின் சார்பில், சங்ககிரி காவல் நிலைய வளாகம் முன் 5 மரக் கன்றுகளை நட்டு பசுமை தீபாவளியை கொண்டாடினர்.
பசுமை சங்ககிரி அமைப்பின் சார்பில், சங்ககிரி வட்டப் பகுதிகளில் சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் உதவியுடன் இதுவரை சுமார் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனை விதைகளை பதிய வைத்தும் உள்ளனர்.
இந்நிலையில், காற்று மாசை தடுக்க, அந்த அமைப்பின் நிறுவனர் மரம் பழனிசாமி தலைமையில் எஸ்டிஎஸ்.கனகராஜ், துரைசாமி, கேஎம்எஸ்.கனகராஜ், காந்தி, மணிகண்டன், தினேஷ், ராஜ், அபிஷேக், கோகிலா உள்ளிட்ட குழுவினர் தீபாவளியன்று பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்த்து, வேங்கை, குமிழ்தேக்கு, நாவல், தான்றிக்காய், மகிழம் உள்ளிட்ட ஐந்து வகை மரக்கன்றுகளை சங்ககிரி காவல் நிலையம் வளாகம் முன் நட்டு பசுமை தீபாவளியை கொண்டாடினர் .

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/08/பசுமை-தீபாவளி-கொண்டாட்டம்-3034742.html
3034740 தருமபுரி சேலம் பட்டாசு வெடித்ததில் கூரைவீடுகள் எரிந்து சாம்பல் DIN DIN Thursday, November 8, 2018 03:44 AM +0530
கெங்கவல்லி அருகே 74.கிருஷ்ணாபுரத்தில் பட்டா தீப்பொறி பட்டு மாட்டுத் தொழுவம் உள்பட 3 கூரை வீடுகள் எரிந்து சாம்பலாயின.
கெங்கவல்லி அருகே 74.கிருஷ்ணாபுரம் ஊராட்சி கணவாய்க்காடு பகுதியில் தீபாவளியன்று மாலை சிலர் பட்டாசு வெடித்தனர். அப்போது, அதில் இருந்து கிளம்பிய பட்டாசு தீப்பொறி அருகே உள்ள மணி (51) என்பவருக்கு சொந்தமான கூரை வீட்டில் விழுந்தது. அதில், அவரது கூரைவீடு, மற்றொரு கூரைவீடு, மாட்டுத்தொழுவம் ஆகிய மூன்று கூரைகளும் தீப்பிடித்து எரிந்தன. தகவல் அறிந்த கெங்கவல்லி தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் மூன்று கூரை வீடுகளும் முழுமையாக எரிந்து சாம்பலாயின.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/08/பட்டாசு-வெடித்ததில்-கூரைவீடுகள்-எரிந்து-சாம்பல்-3034740.html
3033609 தருமபுரி சேலம் ஏரியில் இறைச்சி கழிவுகளை கொட்டினால் அபராதம்: பேரூராட்சி அறிவிப்பு DIN DIN Monday, November 5, 2018 08:43 AM +0530 காடையாம்பட்டி ஏரி மற்றும் நீர் நிலைகளில் இறைச்சிக் கடை கழிவுகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று இடங்கணசாலை பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலை பேரூராட்சிக்கு உள்பட்ட காடையாம்பட்டி ஏரி மற்றும் நீர் நிலைகளில் இறைச்சிக் கடைகளின் கழிவுப் பொருள்களை கொட்டி வருகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் பொதுமக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, இறைச்சிக் கடைகளின் கழிவுப் பொருள்களை ஏரி மற்றும் நீர்நிலை பகுதிகளிலும், பொது இடங்களிலும் கொட்டுவோருக்கு அபராதம் விதிக்கப்படும்.  தவறும் பட்சத்தில் காவல்துறை மூலம் வழக்குப் பதிவு செய்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என இடங்கணசாலை பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா விஜயகணேசன் தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து பேரூராட்சிப் பகுதியில் உள்ள இறைச்சிக் கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/05/ஏரியில்-இறைச்சி-கழிவுகளை-கொட்டினால்-அபராதம்-பேரூராட்சி-அறிவிப்பு-3033609.html
3033608 தருமபுரி சேலம் "நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக பட்டாசுகள் வெடிப்பவர்கள் மீது நடவடிக்கை' DIN DIN Monday, November 5, 2018 08:43 AM +0530 சேலம் மாவட்டத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணாக பட்டாசுகளை வெடிப்பவர்கள் மீது அரசு விதிமுறைகளின்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று, மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகை (நவ.6) கொண்டாடப்படுவதை  முன்னிட்டு உச்சநீதிமன்ற உத்தரவின்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகள் வெடிக்க தமிழக அரசினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற ஆணை மற்றும் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள்  பட்டாசுகளை வெடித்து எவ்வித அசம்பாவிதம் ஏற்படா வண்ணம் பாதுகாப்பாக தீபாவளி பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாட வேண்டும். உச்சநீதிமன்ற ஆணைக்கு முரணாக பட்டாசு வெடிப்பவர்கள் மீது அரசு விதிமுறைகளின்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பாதுகாப்பான தீபாவளியை விதிகளுக்கு உட்பட்டு கொண்டாட வேண்டும் எனத்  தெரிவித்துள்ளார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/05/நீதிமன்ற-உத்தரவுக்கு-முரணாக-பட்டாசுகள்-வெடிப்பவர்கள்-மீது-நடவடிக்கை-3033608.html
3033607 தருமபுரி சேலம் தீபாவளி ஜவுளி, பொருள்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்! DIN DIN Monday, November 5, 2018 08:43 AM +0530 தீபாவளிப் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் ஜவுளி மற்றும் பொருள்கள் வாங்குவதற்காக கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
தீபாவளிப் பண்டிகை  செவ்வாய்க்கிழமை (நவ. 6)  கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜவுளிக்கடைகள், பட்டாசுக்கடைகள்  மற்றும் இனிப்பு கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
தீபாவளிக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில் டவுன் சின்னக்கடை வீதி,  பெரிய கடை வீதி, அருணாசல ஆசாரி தெரு, தாதுபாய்குட்டை ஆகிய பகுதிகளில் உள்ள ஜவுளிக் கடைகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி
வழிகிறது.
அதேபோல  நான்கு சாலை, புதிய பேருந்து நிலையம், ஐந்து சாலை பகுதிகளில் உள்ள பெரிய ஜவுளிக் கடைகளிலும் புத்தாடை வாங்க பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் குவிந்தனர். மாநகரப் பகுதியில் பட்டாசுக் கடை, இனிப்புக் கடைகள் மற்றும் பலகாரக் கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு உள்ளிட்ட அசம்பாவிதச் சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு மாநகர போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/05/தீபாவளி-ஜவுளி-பொருள்கள்-வாங்க-அலைமோதிய-மக்கள்-கூட்டம்-3033607.html
3033606 தருமபுரி சேலம் ஆரோக்கிய பாரத சைக்கிள் பேரணிக்கு சங்ககிரியில் வரவேற்பு DIN DIN Monday, November 5, 2018 08:43 AM +0530 மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்தநாளையொட்டி  திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டு புதுதில்லி நோக்கிச் செல்லும் ஆரோக்கிய பாரத  சைக்கிள் பேரணிக்கு சங்ககிரியில் ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு  அளிக்கப்பட்டது. 
பாதுகாப்பான,  சுகாதாரமான ஊட்டச்சத்தான உணவு மற்றும் செறிவூட்டப்பட்ட  உணவை உண்போம் என்பதை வலியுறுத்தும் 30 பேர் கொண்ட ஆரோக்கிய பாரத சைக்கிள் பேரணியை சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு)  ஜி.வேடியப்பன், மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர்  மருத்துவர் மாரியப்பன் ஆகியோர் வரவேற்றனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில்,  சங்ககிரி வட்டாட்சியர் சி.ரவிச்சந்திரன்,  மண்டல துணை வட்டாட்சியர் சிவராஜ்,   வட்ட வழங்கல் அலுவலர் தியாகராஜன், அங்கன்வாடி அலுவலர் தெய்வஜோதி,   மாவட்ட உபயோகிப்பாளர் உரிமைக் கழகத்தின் தலைவர் சி.ஜி.இளமுருகன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
இந்த ஆரோக்கிய பாரத சைக்கிள் பேரணியின் நோக்கம் குறித்து மாவட்ட  உணவுப் பாதுகாப்பு அலுவலர் விளக்கிக் கூறினார். இதையொட்டி, பல்வேறு வகையான சத்தான உணவு வகைகளை அங்கன்வாடி ஊழியர்கள் தயாரித்து காட்சிப்படுத்தி வைத்திருந்தனர். நிலவேம்பு குடிநீரும்  வைக்கப்பட்டிருந்தது. வரவேற்பு விழாவில், சிலம்பம்,  ஒயிலாட்டம், கும்மி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள்,  பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்ட  கலைநிகழ்ச்சிகள்,  சொற்பொழிவுகள் நடைபெற்றன.  பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள்
வழங்கப்பட்டன.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/05/ஆரோக்கிய-பாரத-சைக்கிள்-பேரணிக்கு-சங்ககிரியில்-வரவேற்பு-3033606.html
3033605 தருமபுரி சேலம் சேலம் புத்தகத் திருவிழா இலச்சினை வெளியீடு DIN DIN Monday, November 5, 2018 08:42 AM +0530 சேலம் புத்தகத்  திருவிழாவுக்கான இலச்சினையை மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார்.
சேலம் பழைய பேருந்து நிலையம்  அருகில் உள்ள போஸ் மைதானத்தில் சேலம் மாவட்ட நிர்வாகம்,  தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம், சேலம் புத்தக வாசிப்போர் இயக்கம் சார்பில் முதல்முறையாக நடத்தும் புத்தகத் திருவிழா வரும் நவ. 9 ஆம் தேதி  முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 
இக்கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகள், 50 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள், லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் இடம்பெற உள்ளன. 
இக்கண்காட்சி தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. அனுமதி இலவசம்.  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான புத்தகங்கள்  இடம் பெறுகின்றன. அதுமட்டுமன்றி நாள்தோறும் கலை நிகழ்ச்சிகள்,  அறிஞர்கள், வல்லுநர்களின் கருத்துரைகள், பட்டிமன்றங்கள் நடைபெறுகின்றன. சேலம் புத்தகத் திருவிழாவுக்கான இலச்சினையை  மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ்  வெளியிட்டார். அதை மாவட்ட வருவாய் அலுவலர் இரா.சுகுமார் பெற்றுக் கொண்டார். 
தொடர்ந்து சேலம் புத்தக வாசிப்போர் இயக்கத்தின் இலச்சினையை ஆட்சியர் வெளியிட அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் விஜயானந்த் பெற்றுக் கொண்டார்.  இதையடுத்து புத்தகத் திருவிழா துண்டுப் பிரசுரத்தை ஆட்சியர் வெளியிட்டார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/05/சேலம்-புத்தகத்-திருவிழா-இலச்சினை-வெளியீடு-3033605.html
3033604 தருமபுரி சேலம் மர்ம விலங்குகள் கடித்து ஐந்து ஆடுகள் சாவு DIN DIN Monday, November 5, 2018 08:42 AM +0530 ஓமலூர் அருகே மர்ம விலங்குகள் கடித்து  ஐந்து ஆடுகள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தன. 
ஓமலூர் அருகே உள்ள கோட்டை மாரியம்மன்கோவில் ஊராட்சிக்குள்பட்ட  மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த  கோவிந்தன் -கமலா தம்பதி  ஐந்து ஆடுகளை வளர்த்து வந்தனர்.  வீட்டின் அருகில் இவர்கள் கட்டியிருந்த ஐந்து ஆடுகளையும் மர்ம விலங்குகள் கடித்துக் கொன்றன. கடந்த இரண்டு நாள்களாக இந்தப் பகுதியில் மர்ம விலங்குகள் நடமாட்டம் இருப்பதாகவும்,   வயலில் மேய்ந்துகொண்டு இருக்கும் ஆடுகளைக் கடித்து ரத்தத்தைக் குடித்து வருவதாகவும்  விவசாயிகள் கூறுகின்றனர். 
இந்தச் சம்பவம் குறித்து ஓமலூர் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். 
சம்பவ இடத்தை பார்வையிட்ட அதிகாரிகள், கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். 
இதையடுத்து கால்நடை மருத்துவர்கள் உயிரிழந்த ஆடுகளை பிரேதப் பரிசோதனை செய்தனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து  வனத்துறையினர் விசாரணை செய்து
வருகின்றனர்.  
ஆடுகளைக் கடித்துக் கொன்றது செந்நாய்களாகவும்,  காட்டுப் பூனைகளாகவும் இருக்கலாம் என்றனர். 
அதனால், ஆடு, மாடுகளை மேய்க்கும்போது விவசாயிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டு என்றும், மர்ம விலங்குகள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/05/மர்ம-விலங்குகள்-கடித்து-ஐந்து-ஆடுகள்-சாவு-3033604.html