Dinamani - தருமபுரி - http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3041555 தருமபுரி தருமபுரி தொல்லியல் செய்தி மடல் வெளியீடு DIN DIN Monday, November 19, 2018 04:12 AM +0530
தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதியமான் சமூக வரலாற்று ஆய்வு மையத்தின் முப்பெரும் விழாவில் தொல்லியல் செய்தி மடல் வெளியிடப்பட்டது .
கால்நடை மருத்துவர் இரா. அறிவழகன் வெளியிட ஆசிரியர் ப. அறிவொளி பெற்றுக் கொண்டார். தொடர்ந்து சிறந்த பள்ளிக்கான மகுடம் விருதை பெற்ற நல்லாம்பட்டி அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஆ.அன்பழகனுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் எம்பி இரா. செந்தில் பாராட்டுரை வழங்கினார்.
தமிழும் சம்ஸ்கிருதமும் என்ற புத்தக ஆய்வுரை அரங்கில் கல்வெட்டு ஆய்வாளர் க. குழந்தைவேல், மையத்தின் செயலர் தி. சுப்பிரமணியன் ஆகியோரும் பேசினர். முப்பெரும் விழாவுக்கு வரலாற்றுத் துறை பேராசிரியர் (ஓய்வு) இ.பி. பெருமாள் தலைமை வகித்தார். முன்னதாக தகடூர் புத்தகப் பேரவையின் தலைவர் இரா. சிசுபாலன் வரவேற்றார்.
முடிவில் திருவள்ளுவர் பொத்தக இல்லத்தின் இயக்குநர் நெ.த. அறிவுடைநம்பி நன்றி கூறினார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/19/தொல்லியல்-செய்தி-மடல்-வெளியீடு-3041555.html
3041554 தருமபுரி தருமபுரி சிட்லிங் சாலையை சீரமைக்க வலியுறுத்தல் DIN DIN Monday, November 19, 2018 04:11 AM +0530
கோட்டப்பட்டி-சிட்லிங் சாலையை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றியம், கோட்டப்பட்டி முதல் சிட்லிங் வரையிலான தார்ச் சாலை சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவு கொண்டதாகும். இந்த வழித்தடத்தில் சிட்லிங், ஏ.கே.தண்டா, எஸ்.தாதம்பட்டி, மலைத்தாங்கி, தும்பல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இந்த சாலை வழியாக நாள்தோறும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், லாரிகள், டிராக்டர்கள், இரு சக்கர வாகனங்கள், கார் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் வந்துச் செல்கின்றன. இந்த நிலையில், சிட்லிங் முதல் கோட்டப்பட்டி வரையிலான தார்ச் சாலையானது குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற வகையில் உள்ளது.
இதனால் இந்த சாலையில் நாள்தோறும் சென்று வரும் வாகன ஓட்டிகள், விவசாயிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பல்வேறு இடையூறுகளை சந்திக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய நிதி ஒதுக்கீடு செய்து, கோட்டப்பட்டி முதல் சிட்லிங் வரையிலான தார்ச் சாலையை சீரமைப்பு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/19/சிட்லிங்-சாலையை-சீரமைக்க-வலியுறுத்தல்-3041554.html
3041553 தருமபுரி தருமபுரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் DIN DIN Monday, November 19, 2018 04:11 AM +0530
சபரிமலையின் புனிதத்தை கெடுக்கும் செயலைக் கண்டித்து, தருமபுரியில் இந்து முன்னணி அமைப்பினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணியின் மாவட்டத் துணைச் செயலர் முரளி தலைமை வகித்தார். உலக இந்து மிஷன் நிர்வாகி காவேரிவர்மன் உள்ளிட்டோரும் பேசினர். சபரிமலையின் புனிதத்தைக் கெடுக்கும் கேரள அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஊத்தங்கரையில்... சபரிமலை கோயிலில் இளம் பெண்களுக்கு அனுமதியளிப்பதை கண்டித்து, ஊத்தங்கரை நான்குமுனை சாலை சந்திப்பில் இந்துதர்ம சேவா அறக்கட்டளை, இந்து மக்கள் கட்சி, கிராம கோயில் பூசாரிகள் தெய்வீகப் பேரவை இணைந்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
போராட்டத்துக்கு கிராம கோயில் தெய்வீகப் பேரவை தலைவர் அசோக் தலைமை வகித்தார். இறையருள் கௌரி சங்கர், சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் ராமரவிக்குமார், அணி பொதுச் செயலாளர் ரவிபாலா, மாவட்டத் தலைவர் குப்தா,கோட்ட பொறுப்பாளர் ராஜா ஜி.சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/19/இந்து-முன்னணியினர்-ஆர்ப்பாட்டம்-3041553.html
3041552 தருமபுரி தருமபுரி யாழும், பறையும் பழந்தமிழர் இசைக் கருவிகள்' DIN DIN Monday, November 19, 2018 04:10 AM +0530
யாழும், பறையும் பழந்தமிழர் இசைக் கருவிகள் என்றார் வரலாற்று ஆய்வாளர் த. பார்த்திபன்.
தருமபுரியில் தமிழ்க் கலை இலக்கியப் பட்டறை- கலைத்தாய் சிலம்பம் அமைப்பு சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்ப் பறை இசைப் பயிற்சிப் பட்டறை தொடக்க விழாவில் தமிழ் இலக்கியத்தில் பறை' என்ற தலைப்பில் அவர் மேலும் பேசியது:
யாழும் பறையும் தமிழர் இசைக் கருவிகள். ஆனால், யாழ் பெற்ற இடத்தை பறை பெறவில்லை என்பதற்குப் பின்னால் அரசியல் இருக்கிறது. அதை ஒரு சமூகத்தின் கருவியாக மாற்றிவிட்டார்கள். இது உண்மையல்ல.
86 வகையான பறைக் கருவிகள் இருந்ததாக பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றில் தற்போது வரை 32 கருவிகள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை சென்னையிலுள்ள தொல்பொருள் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
வீணையையும், பறை இசையையும் சேர்ந்திசைக்க முடியும். இதற்கான குறிப்புகள் சீவகசிந்தாமணியில் உள்ளன. ஆனால், எப்படி இணைத்து இசைப்பது என்பதற்கான தாளவிதிகளை இழந்துவிட்டோம். அதற்கான பதிவுகள் நம்மிடம் இல்லை.
தனி ஆவர்த்தனக் கருவியாக பறையை மாற்றிவிட்டனர். எல்லா இசைக் கருவிகளுடனும் இணைத்து வாசிக்கும் முறைகளை உருவாக்க வேண்டும். சங்க இலக்கியங்களில் 400 இடங்களில் பறை பற்றிய குறிப்புகள் உள்ளன. ஐவகை நிலத்துக்கும் சொந்தமானதாகத்தான் பறை இருந்திருக்கிறது. குரும்பர் இனமக்கள் பயன்படுத்தும் மகுடம்' என்ற வகைப் பறை இசைக் கருவி, கையால் அடிக்கக் கூடியது. இதேபோல, மேளம், துடி, உடுக்கை போன்றவையும் பறை இசைக் கருவிகளே.
பறை உள்ளிட்ட நாட்டுப்புறக் கலைகளை பழங்குடியின மக்களிடமிருந்துதான் நாம் அப்படியே எடுத்துக் கொள்ள முடியும். கிடைக்காமல் போன மற்ற பறை இசைக் கருவிகளையும் மீட்டெடுக்க வேண்டும் என்றார் பார்த்திபன்.
விழாவுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலர் சுஷீல்குமார் தலைமை வகித்தார். தருமபுரி மக்கள் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் உமாசங்கர், பாலா, தமிழ் இசை இணைய பண்பலை வானொலியின் இயக்குநர் பாரதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கலைத்தாய் சிலம்பம் அமைப்பின் பயிற்சியாளர் சாமுவேல் அறிமுகவுரை நிகழ்த்தினார். இலக்கியப் பட்டறையின் ஒருங்கிணைப்பாளர் அ. திருவள்ளுவன் வரவேற்றார். சோ. கார்த்திகேயன் நன்றி கூறினார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/19/யாழும்-பறையும்-பழந்தமிழர்-இசைக்-கருவிகள்-3041552.html
3041550 தருமபுரி தருமபுரி அரூர் அருகே பல்நோக்கு கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தல் DIN DIN Monday, November 19, 2018 04:10 AM +0530
அரூரை அடுத்த தம்பிசெட்டிப்பட்டியில் உள்ள பல்நோக்கு கட்டடத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரூர் ஊராட்சி ஒன்றியம், செட்ரப்பட்டி கிராம ஊராட்சிக்குள்பட்டது தம்பிசெட்டிப்பட்டி கிராமம். இக் கிராமத்தில் 700-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கிராம மக்களின் தேவைக்காக, 2013-14-ஆம் நிதி ஆண்டில், அரூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, ரூ. 8 லட்சத்தில் இக் கட்டடம் கட்டப்பட்டது.
இந்த கட்டடத்தின் கட்டுமான பணிகள் முடிவடைந்து சுமார் 4 ஆண்டுகள் ஆகியும் இதுவரை எவ்வித பயன்பாட்டுக்கும் இக் கட்டடம் திறக்கப்படாமல் பூட்டப்பட்டுள்ளது. இந்த பல்நோக்கு கட்டடம், தம்பிசெட்டிப்பட்டியில் இயங்கும் ரேஷன் கடையின் பயன்பாட்டுக்காக கட்டப்பட்டது.
இந்த பல்நோக்கு கட்டடம் பயன்பாட்டுக்கு வராமல் இருப்பதால், அந்த ஊரில் இயங்கும் ரேஷன் கடையானது தொடர்ந்து தனியார் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. எனவே, தம்பிசெட்டிப்பட்டியில் பயனற்று கிடக்கும் பல்நோக்கு கட்டடத்தைத் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும், தனியார் வாடகை கட்டடத்தில் இயங்கும் ரேஷன் கடையை பல்நோக்கு கட்டடத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்பதே தம்பிசெட்டிப்பட்டி கிராம மக்களின் எதிர்பார்ப்பு.
தேன்கனிக்கோட்டை வனப் பகுதியில்முகாமிட்டுள்ள யானைகள்
ஒசூர்,நவ.18: தேன்கனிக்கோட்டை வனப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஒசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டு பயிர்களை துவம்சம் செய்து வந்த 40 யானைகளை வனத் துறையினர் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டினர். அங்கு பேவநத்தம், சிவநஞ்சுண்டேஸ்வரன் மலைப் பகுதியில் முகாமிட்டிருந்த இந்த யானைகளை தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் வெங்கடாசலம் தலைமையிலான வனக்குழுவினர் மரக்கட்டா வனப் பகுதிக்கு விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த யானைகள் பல பிரிவுகளாகப் பிரிந்து கோட்டட்டி, லட்சுமிபுரம், புதூர், காடுலக்கசந்திரம் பகுதியில் உள்ள ராகி, தக்காளி, சோள பயிர்களை நாசம் செய்தன. பின்னர் அந்த யானைகள் பேவநத்தம் காட்டிற்கே மீண்டும் வந்தன. இந்த நிலையில், கர்நாடக வனப்பகுதியில் இருந்து மேலும் 20 யானைகள் ஜவளகிரி வழியாக தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் நுழைந்தன.
தற்போது தேன்கனிக்கோட்டையை சுற்றி 100 க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பேவநத்தம் காட்டில் முகாமிட்டுள்ள யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டாலும், மீண்டும் அதே பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளன.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/19/அரூர்-அருகே-பல்நோக்கு-கட்டடத்தை-பயன்பாட்டுக்கு-கொண்டுவர-வலியுறுத்தல்-3041550.html
3041549 தருமபுரி தருமபுரி சிட்லிங் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வலியுறுத்தல் DIN DIN Monday, November 19, 2018 04:10 AM +0530
தருமபுரி சிட்லிங் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையருக்கு மாவட்ட பாஜக செயலர் இரா. மாதுகவுண்டர் அனுப்பிய மனு:
சிட்லிங் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி அண்மையில் அதே பகுதியைச் சேர்ந்த இருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
சில நாள்கள் கழித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய போலீஸார் முறையான மருத்துவச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யவில்லை. சிறுமியின் உயிரிழப்புக்கு இரு சமூக விரோதிகள் மட்டும் காரணமல்ல, சிலர் சரியாக கடமையைச் செய்யாததும் காரணம்.
சாதி, பணம், அரசியல் பின்புலங்கள் எதுவும் விசாரணைக்குத் தடையாக இருந்து விடக் கூடாது. எனவே, இந்த வழக்கை மாநிலக் குற்றப்புலனாய்வுத் துறை (சிபி சிஐடி) விசாரிக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/19/சிட்லிங்-மாணவி-பாலியல்-வன்கொடுமை-வழக்கு-சிபிசிஐடி-விசாரணைக்கு-மாற்ற-வலியுறுத்தல்-3041549.html
3041548 தருமபுரி தருமபுரி வாசகசாலையில் இலக்கியச் சந்திப்பு DIN DIN Monday, November 19, 2018 04:10 AM +0530
தருமபுரி வாசகசாலை சார்பில் ஏழாவது இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
எழுத்தாளர் அ. வெண்ணிலாவின் தரையிறங்கும் இறகு என்ற சிறுகதை குறித்து தலைமை ஆசிரியர் மா. பழனி, எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவின் சொல்லவே முடியாத கதைகளின் கதை என்ற சிறுகதை குறித்து நூலகர் கல்யாணி, எழுத்தாளர் வண்ணநிலவனின் இதோ இன்னொரு விடியல் என்ற சிறுகதை குறித்து ராம் சுந்தர் ஆகியோர் பேசினர்.தொடர்ந்து கலந்துரையாடலும் நடைபெற்றது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/19/வாசகசாலையில்-இலக்கியச்-சந்திப்பு-3041548.html
3041546 தருமபுரி தருமபுரி ஊத்தங்கரையில் கூட்டுறவு வார விழா DIN DIN Monday, November 19, 2018 04:10 AM +0530
ஊத்தங்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை 65-ஆவது கூட்டுறவு வார விழா நடைபெற்றது .
நிகழ்ச்சிக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். கூட்டுறவு கடன் சங்க தலைவர் பி.கே.சிவானந்தம் வரவேற்றார். ஊரக வளர்ச்சி வங்கி தலைவர் சாகுல்அமீது, மோட்டுப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் ஏ.சி.தேவேந்திரன், வட்டார கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் வேங்கன், காரப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் பண்டரிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எக்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்க தலைவர் வேடி, மேட்டுத்தாங்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்க தலைவர் குணசேகரன், மூங்கிலேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்க தலைவர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்க செயலாளர் உஷா நன்றி கூறினார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/19/ஊத்தங்கரையில்-கூட்டுறவு-வார-விழா-3041546.html
3041545 தருமபுரி தருமபுரி சாலை விபத்து விழிப்புணர்வு பரப்புரை DIN DIN Monday, November 19, 2018 04:09 AM +0530
சாலை விபத்துகளில் உயிரிழப்போர் நினைவு நாளையொட்டி, தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை விழிப்புணர்வு பரப்புரையை பாமக நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ் தொடக்கிவைத்தார்.
தருமபுரி நான்கு சாலைச் சந்திப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியது:
நவம்பர் 18 சாலை விபத்துகளில் உயிரிழப்போர் நினைவு நாள். உலகிலே அதிக விபத்துகள் நடைபெறும் நாடு இந்தியா. கடந்த 2017-இல் 4.64 லட்சம் விபத்துகள் நடைபெற்றுள்ளன. இவற்றில் 1.47 லட்சம் பேர் இறந்துள்ளனர்.
வாகனங்களின் வேகத்துக்கேற்ப சாலைகள் தரமில்லை. நெடுஞ்சாலைகளில் விபத்துகள் அடிக்கடி நடைபெறும் பகுதிகளை கருப்புப் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. அவற்றை சரி செய்ய வேண்டும். மதுக் கடைகளை முழுமையாக மூடினால் இன்னும் விபத்துகள் குறையும் என்றார் ராமதாஸ்.
நிகழ்ச்சியில் பாமக மாநிலத் தலைவர் கோ.க. மணி, மாநிலத் துணைப் பொதுச் செயலர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/19/சாலை-விபத்து-விழிப்புணர்வு-பரப்புரை-3041545.html
3041070 தருமபுரி தருமபுரி தருமபுரியில் கூட்டுறவு வார விழா: ரூ. 9.45 கோடி நலத் திட்ட உதவிகள் வழங்கல் DIN DIN Sunday, November 18, 2018 09:34 AM +0530 தருமபுரியில் சனிக்கிழமை நடைபெற்ற 65ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 1620 உறுப்பினர்களுக்கு ரூ. 9.45 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வழங்கினார்.
விழாவில் அவர் பேசியது: தருமபுரி மாவட்டத்தில் 531 கூட்டுறவு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பொது விநியோகத் திட்டத்தின்கீழ் 446 முழுநேர நியாயவிலைக் கடைகளும், 561 பகுதிநேர நியாயவிலைக் கடைகளும், 9 மகளிர் நியாய விலைக் கடைகளும் என மொத்தம் 1016 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. 
இவற்றின் மூலம் 3.71 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
தருமபுரி மாவட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளில் 14 முழுநேர நியாயவிலைக் கடைகளும், 56 பகுதிநேர நியாயவிலைக் கடைகளும் என மொத்தம் 70 கடைகள் புதிதாகத் திறக்கப்பட்டுள்ளன. 
கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் கடந்த 7 ஆண்டுகளில் ரூ. 723 கோடி பயிர்க்கடனும், ரூ 50.80 கோடி முதலீட்டுக் கடனும், ரூ. 85.77 கோடி மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடனும், ரூ.3,343 கோடி நகைக்கடனும் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 28016 பயனாளிகளுக்கு ரூ. 139 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நிகழாண்டில் ரூ. 115 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இதரக் கடன்காக ரூ. 201 கோடி வழங்கப்பட்டுள்ளது.
கடன் தவணைகளைத் தவறாது திரும்பச் செலுத்துவோருக்கு 7 சதவீத வட்டித் தொகையை அரசே ஏற்றுக் கொள்ளும் திட்டத்தின்படி கடந்த 7 ஆண்டுகளில் 1.43 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 38.95 கோடி வட்டி மானியம் அரசிடமிருந்து பெறப்பட்டு வழங்கப்பட்டுள்ளன என்றார்.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி தலைமை வகித்தார். கூட்டுறவு வார விழாவையொட்டி நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி, கவிதைப் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்றோருக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் எச். ரஹமத்துல்லாகான், சார் ஆட்சியர் ம.ப. சிவன்அருள், மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் மா. சந்தானம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் தி. ரேணுகா, மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவர் டி.ஆர். அன்பழகன், நகரக் கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ்.ஆர். வெற்றிவேல் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/18/தருமபுரியில்-கூட்டுறவு-வார-விழா-ரூ-945-கோடி-நலத்-திட்ட-உதவிகள்-வழங்கல்-3041070.html
3041069 தருமபுரி தருமபுரி தேர்தல்: பாமக நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை DIN DIN Sunday, November 18, 2018 09:34 AM +0530 நடைபெறவுள்ள தேர்தல்களை எதிர்கொள்வது மற்றும் கட்சி வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக தருமபுரி மாவட்டத்தில் பாமக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
தருமபுரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஒன்றியம் வாரியாக பாமக நிர்வாகிகள், உழவர் பேரியக்க நிர்வாகிகள் மற்றும் பசுமைத் தாயகம் அமைப்பின் நிர்வாகிகள் ஆகியோருடன் இந்த ஆலோசனை நடைபெற்றது.
மக்களவைத் தேர்தல், 20 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்கள் அல்லது உள்ளாட்சித் தேர்தல் என எந்தத்  தேர்தல் வந்தாலும் போட்டியிடுவதற்குத் தயார் நிலையில் இருப்பது குறித்து அவர் கட்சியினருக்கு ஆலோசனைகளை வழங்கினார். மேலும், மாவட்டத்தில் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும் நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.
கூட்டத்தில், பாமக மாநிலத் தலைவர் கோ.க. மணி, பாமக மாநிலத் துணைப் பொதுச் செயலர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், மாநிலப் பொருளாளர் திலகபாமா, அமைப்புச் செயலர் செல்வகுமார், மாவட்டச் செயலர்கள் இமயவர்மன், சண்முகம், முன்னாள் எம்எல்ஏ வேலுசாமி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இரண்டாம் நாளாக ஞாயிற்றுக்கிழமையும் (நவ.18) இதுபோன்ற ஆலோசனைக்கூட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/18/தேர்தல்-பாமக-நிர்வாகிகளுடன்-ராமதாஸ்-ஆலோசனை-3041069.html
3041068 தருமபுரி தருமபுரி ஆளுநர் விருது பெற்ற சாரணர்களுக்கு பாராட்டு DIN DIN Sunday, November 18, 2018 09:33 AM +0530 தமிழ்நாடு ஆளுநரின் ராஜ்யபுரஷ்கார் விருது பெற்ற தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 1000 சாரணர்களை மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் சனிக்கிழமைப் பாராட்டிச் சான்றிதழ்களையும், கோப்பைகளையும் வழங்கினார்.
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சாரண- சாரணீயர்கள் 1000 பேர், பிரவேஷ், பிரதம சோபன், திவித்திய சோபன், திரித்திய சோபன் மற்றும் ராஜ்யபுரஷ்கார் நிலைகளில் பயிற்சி முடித்து மாநில ஆளுநரின் விருதுகளைப் பெற்றுள்ளனர். இவர்களுக்கான பாராட்டு விழா மாவட்ட பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி தலைமை வகித்தார். மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் இந்த விழாவில் கலந்து கொண்டு, விருதுகளைப் பெற்ற சாரணர்களைப் பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகளை வழங்கினார். 
விழாவில் அவர் பேசியது: பாரத சாரண- சாரணீயர் சங்கம் மாணவர்களுக்கு நல்லொழுக்கம், கட்டுப்பாடு, உதவும் மனப்பான்மை, சமூக சேவை, மனிதநேயம், தலைமைப் பண்பு உள்ளிட்ட நற்பண்புகளைப் பயிற்றுவிக்கிறது. தருமபுரி மாவட்டத்தில் கடந்த 1943ஆம் ஆண்டு முதல் சாரணர் சங்கம் செயல்பட்டு வருகிறது. 
தற்போது அனைத்துப் பள்ளிகளிலும் 580 படைப்பிரிவுகளில் சுமார் 20 ஆயிரம் மாணவ, மாணவிகள் இதில் இணைத்துக் கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.  மாநில ஆளுநரின் விருதுகளைப் பெற்றுள்ளவர்கள் எதிர்காலத்தில் தேசிய விருதுகளையும் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன் என்றார் அன்பழகன்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் எச். ரஹமத்துல்லாகான், சார் ஆட்சியர் ம.ப. சிவன்அருள், மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவர் டி.ஆர். அன்பழகன், நகரக் கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ்.ஆர் .வெற்றிவேல், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு. ராமசாமி, மாவட்டக்கல்வி அலுவலர்கள் உஷாராணி, பொன்முடி, குழந்தைவேல், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் ஹேமலதா, பாரத சாரண- சாரணீயர்கள் சங்கத்தின் செயலர் வெங்கடேசன், பொருளாளர் நாகராஜன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/18/ஆளுநர்-விருது-பெற்ற-சாரணர்களுக்கு-பாராட்டு-3041068.html
3041067 தருமபுரி தருமபுரி மருத்துவக் கல்லூரி முன் போக்குவரத்து சமிக்ஞை அமைக்க வலியுறுத்தல் DIN DIN Sunday, November 18, 2018 09:33 AM +0530 தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் விபத்துக்களைத் தவிர்க்க, போக்குவரத்து சமிக்ஞை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி நகரிலிருந்து சேலம் செல்லும் நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு எதிரே உள்ள நெடுஞ்சாலையில் எஸ்.வி. சாலை இணைகிறது. இச்சாலையில் ஏராளமான தனியார் பள்ளிகள், பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எதிரே உள்ள சந்திப்பு சாலை வழியாக எஸ்.வி.சாலைக்கு செல்கிறது. இவைத் தவிர, இச்சாலையில் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ் வாகனங்கள், மற்றும் நோயாளிகளை அழைத்து வரும் ஆட்டோ உள்ளிட்ட தனியார் வாகனங்கள் ஏராளமாக வந்து செல்கின்றன. மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் வாகனங்கள், எஸ்வி சாலைக்கு திரும்பும் வாகனங்கள், நகருக்குள் செல்லும் வாகனங்கள் என எப்போதும் இச்சாலையில் வாகன போக்குவரத்து நிரம்பி வழியும்.
 குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் வாகன நெரிசல் அதிகளவு காணப்படும். இருப்பினும், மருத்துவக் கல்லூரிக்கு எதிரே இதுவரை போக்குவரத்து சமிக்ஞையோ அல்லது போக்குவரத்துக் காவலரோ நியமிக்கப்பட வில்லை. இதனால், வாகனங்கள் மருத்துவமனைக்கு திரும்பிச் செல்லவும், நகருக்குள் வரவும், எஸ்வி சாலைக்கு திரும்பிச் செல்வதிலும் பெரும் சிக்கல் நீடிக்கிறது. மேலும், அவ்வப்போது விபத்துக்கள் நிகழ்கின்றன.
இந்த நிலையில், சனிக்கிழமை மருத்துவக் கல்லூரிக்கு எதிரே பள்ளி பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிரே வந்த சரக்கு லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்த நிலையில், பள்ளிப்  பேருந்தின் மீது மோதாமலிருக்க, லாரியை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சுற்றுச்சுவர் மீது ஓட்டுநர் இடித்து நிறுத்தினார். இதனால், பள்ளிப் பேருந்து விபத்திலிருந்து தப்பியது.
எனவே, வாகன நெரிசலை கட்டுப்படுத்தவும், விபத்து நிகழாமல் தவிர்க்கவும், அரசு மருத்துவக் கல்லூரிக்கு எதிரே சமிக்ஞை அமைத்து போக்குவரத்துக் காவலர்களை நியமித்து வாகன போக்குவரத்தை சீர்செய்ய மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் கோரிக்கைகயாக உள்ளது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/18/மருத்துவக்-கல்லூரி-முன்-போக்குவரத்து-சமிக்ஞை-அமைக்க-வலியுறுத்தல்-3041067.html
3041066 தருமபுரி தருமபுரி தருமபுரியில் கூடுதலாக "சைல்டுலைன்' துணை மையங்கள் அமைக்கப்படுமா? சா.ஜெயப்பிரகாஷ் DIN Sunday, November 18, 2018 09:33 AM +0530 தொலைதூர எல்லைகளைக் கொண்டிருக்கும் தருமபுரி மாவட்டத்தில், சிறார் குற்றங்களில் தலையிடும் வகையில் கூடுதலாக துணை மையங்களை "சைல்டுலைன்' நிறுவ வேண்டும் என சிறார் நல ஆர்வலர்கள் கோருகின்றனர்.
18 வயதுக்குள்பட்ட சிறார்களின் உரிமைகளுக்காகவும், பாதுகாப்புக்காகவும் "சைல்டுலைன் இந்தியா பவுண்டேஷன்' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் 1996-இல் "சைல்டுலைன்' என்ற அமைப்பை நாடு முழுவதும் உருவாக்கியது. 
1098 என்ற ஒருங்கிணைந்த- கட்டணமில்லா தொலைபேசி மூலம் புகார் பெறப்பட்டு, உடனுக்குடன் அந்தச் சிறாரை அணுகி, தீர்வுகளைக் காணும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இணை நிறுவனங்கள் நியமனம் செய்யப்பட்டன. அவ்வாறு நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் உள்ள மாவட்டங்களிலும் தற்போது "சைல்டுலைன்' அமைப்பு செயல்படுகிறது.
கடந்த 2015-இல் சைல்டுலைன் அமைப்புக்கு வந்த மொத்த அழைப்புகள் 360 கோடி. 24 மணி நேரமும், விடுமுறைகளில்லா 365 நாள்களும் இச் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்கு கணிசமான தொகையை ஆண்டு தோறும் மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள்  நலத் துறை வழங்குகிறது. பிற நன்கொடைகள் மூலம் சைல்டுலைன் செயல்பட்டு வருகிறது.
தருமபுரி மாவட்டத்தைப் பொருத்தவரை 2011-இல் இணை நிறுவனம் ஒன்றுக்கு அனுமதி வழங்கி,  தலா ஓர் இயக்குநர்,  ஒருங்கிணைப்பாளர், ஆற்றுப்படுத்துநர், தன்னார்வலர் மற்றும் அலுவலகப் பணியாளர் என 5 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
  கடந்த 2017 -18-ஆம் நிதியாண்டில் மட்டும் இக் குழுவினரால் 180 சிறார் திருமணங்களில் தலையீடு செய்யப்பட்டிருக்கிறது.  18 சிறார் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.  37 பேர் பள்ளிகளில் இடைநின்றவர்கள் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்.  ஆசிரியர் மற்றும் பெற்றோர்களால் உடலாலும் மனதாலும் துன்புறுத்தப்பட்ட 137 சிறார்களின் அழைப்புகளில் தலையீடு செய்யப்பட்டுள்ளது.
 இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.  ஆனால்,  தருமபுரி போன்ற பரந்துவிரிந்த மாவட்டத்தில் தொலைதூர எல்லைகளில் உள்ள கிராமங்களை இந்தக் குழுவினர் சென்றடைவது சிரமமான ஒன்றாக இருக்கிறது.
எடுத்துக்காட்டாக,  தருமபுரி நகரிலுள்ள சைல்டுலைன் மையத்திலிருந்து பென்னாகரத்தின் ஏரியூர், நாகமரை போன்ற பகுதி கிராமங்களுக்குச் செல்ல வேண்டுமானால் குறைந்தது 3 மணி நேரம் ஆகும்.  அதன்பிறகு அங்கிருந்து சிறாரை மீட்டு வரும் சூழல் ஏற்படின் மீண்டும் நகரிலுள்ள இல்லத்துக்கோ, குழந்தைகள் நலக் குழுமத்துக்கோ கொண்டு வர மேலும் 4 மணி நேரம் ஆகும்.
 ஒருவேளை பாலியல் துன்புறுத்தலாக இருந்தால் குறிப்பிட்ட காலத்துக்குள் மருத்துவப் பரிசோதனையோ, சிகிச்சைக்கோ கொண்டு வருவது சாத்தியமில்லாத ஒன்றாகும்.
எனவே, அரூர் மற்றும் பென்னாகரம் பகுதியில் சைல்டுலைனில் இரு துணை மையங்களை அமைக்க வேண்டும் என சிறார் நல ஆர்வலர்கள் கோருகின்றனர்.
அவ்வாறு அமைக்கப்படும் போது, துணை மையங்களில் தலா 3 பணியாளர்கள் நியமிக்கப்படலாம்.  பாதிக்கப்பட்ட சிறாரை அடுத்த 2 மணி நேரத்துக்குள் மீட்டு தருமபுரி நகருக்குக் கொண்டு வந்துவிட முடியும் என்கிறார்கள் அவர்கள்.
இரு துணை மையங்கள் அமைப்பதற்கு மாவட்ட ஆட்சியர் இதற்காக பரிந்துரைக்க இயலும்.  மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரை இருந்தால், விரைவில் அமைக்கப்பட வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் சிறார் ஆர்வலர்கள்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/18/தருமபுரியில்-கூடுதலாக-சைல்டுலைன்-துணை-மையங்கள்-அமைக்கப்படுமா-3041066.html
3040498 தருமபுரி தருமபுரி நவ. 22-இல் மக்கள் தொடர்பு முகாம்கள் DIN DIN Saturday, November 17, 2018 09:30 AM +0530 தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், இண்டூர் உள்வட்டம் எர்ரபையனஅள்ளி மற்றும் காரிமங்கலம் வட்டம், கம்பைநல்லூர் உள்வட்டம் கெலவள்ளி ஆகிய கிராமங்களில் வரும் நவ. 22-ஆம் தேதி மக்கள் தொடர்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.
எர்ரபையனஅள்ளியில் நடைபெறும் முகாமில், மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி கலந்துகொண்டு பொதுமக்களின் மனுக்களைப் பெற்றுக் கொள்கிறார். கெலவள்ளியில் நடைபெறும் முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் எச்.ரஹமத்துல்லாகான் கலந்துகொண்டு பொதுமக்களின் மனுக்களைப் பெற்றுக் கொள்கிறார். சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த முகாம்களில் கலந்துகொண்டு தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/17/நவ-22-இல்-மக்கள்-தொடர்பு-முகாம்கள்-3040498.html
3040497 தருமபுரி தருமபுரி சிட்லிங் மாணவி குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் DIN DIN Saturday, November 17, 2018 09:29 AM +0530 அரூரை அடுத்த சிட்லிங் மலைக் கிராமத்தில் உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு, ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரூர் கச்சேரிமேடு சாலை சந்திப்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்க மாவட்டச் செயலர் கே.பழனிசாமி தலைமை வகித்தார்.
சிட்லிங்கில் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த மலைவாழ் பழங்குடியின பிளஸ் 2 மாணவியின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், 2 ஏக்கர் நிலமும் வழங்க வேண்டும். பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். பள்ளி மாணவியின் புகார் மனுவை பெறாமல் அலைக்கழித்த கோட்டப்பட்டி காவல் ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மீது பிரிவு 304 -இன் கீழ் வழக்குப் பதிந்து அவரை கைது செய்ய வேண்டும். மாணவிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்காமல் புறக்கணித்த அரசு மருத்துவர்கள், மகளிர் காப்பக ஊழியர்கள் மீது பிரிவு 166-ஏ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதில், அகில இந்திய விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலர் பி.சண்முகம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு, மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி மாவட்டச் செயலர் ஏ.குமார், ஒன்றியச் செயலர்கள் ஆர்.மல்லிகா, கே.தங்கராஜ், சி.வஞ்சி, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கே.என்.மல்லையன், மாவட்ட துணைச் செயலர் ஏ.கண்ணகி உள்ளிட்டோர்
கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/17/சிட்லிங்-மாணவி-குடும்பத்துக்கு-ரூ25-லட்சம்-வழங்கக்-கோரி-ஆர்ப்பாட்டம்-3040497.html
3040496 தருமபுரி தருமபுரி மாவட்ட வளர்ச்சிப் பணிகள்: கண்காணிப்பு அலுவலர் ஆய்வு DIN DIN Saturday, November 17, 2018 09:29 AM +0530 தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தமிழக அரசின் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தகவல் தொழில்நுட்பத் துறை அரசுச் செயலருமான டாக்டர் சந்தோஷ்பாபு வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார். 
மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆய்வில் சந்தோஷ்பாபு பேசியது: வேளாண் துறையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களை அறிந்துகொள்ள உழவன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்திலுள்ள 2.10 லட்சம் விவசாயிகளும் உழவன் செயலியைப் பயன்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளிக் கல்வித் துறை மூலம் மாணவர்கள் இடைநிற்றலைத் தவிர்க்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் உயர்கல்விக்கு செல்வோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது பாராட்டுதற்குரியது.
மாவட்டத்திலுள்ள 251 ஊராட்சிகளிலும் இணையதள வேகம் 10 எம்பி முதல் 100 எம்பி வரை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைத்துத் துறைகளும் கணினி மயமாக்கப்பட்டு ஒரே இணையதளம், ஒரே செயலி என்ற நிலை உருவாக்கப்படும்.
ஜிபிஆர்எஸ் வாயிலாக அரசுத் துறை அலுவலர்கள் எந்த இடத்தில் பணியில் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிவதற்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்கவும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் சந்தோஷ்பாபு.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் எச்.ரஹமத்துல்லாகான், சார்-ஆட்சியர் ம.ப.சிவன்அருள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் எம்.காளிதாசன், வேளாண் இணை இயக்குநர் (பொ) வீராசாமி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் அண்ணாமலை, அரூர் கோட்டாட்சியர் புண்ணியகோட்டி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/17/மாவட்ட-வளர்ச்சிப்-பணிகள்-கண்காணிப்பு-அலுவலர்-ஆய்வு-3040496.html
3040495 தருமபுரி தருமபுரி 2,062 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல் DIN DIN Saturday, November 17, 2018 09:29 AM +0530 தருமபுரி மாவட்டத்தில், பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட 8 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 2,062 மாணவ, மாணவியருக்கு ரூ.76.44 லட்சத்தில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெள்ளிக்கிழமை
வழங்கினார்.
காரிமங்கலம் வட்டம், பந்தாரஅள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 143 மாணவ, மாணவியருக்கும், கன்னிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 144 பேருக்கும், மாட்லாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 219 பேருக்கும், பெரியாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 332 பேருக்கும், பொன்னேரி மாதிரிப் பள்ளியில் 105 பேருக்கும், பேகாரஅள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 311 பேருக்கும், பாலக்கோடு வட்டம் திருமல்வாடி மேல்நிலைப் பள்ளியில் 389 பேருக்கும், மாரண்டஅள்ளி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 408 பேருக்கும் இந்த விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிகளுக்கு, மாவட்டக் கல்வி அலுவலர் உஷாராணி தலைமை வகித்தார். முதன்மைக் கல்வி அலுவலர் மு.ராமசாமி, முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவர் தொ.மு.நாகராசன், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தலைவர் கே.வி.அரங்கநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/17/2062-மாணவர்களுக்கு-விலையில்லா-மிதிவண்டிகள்-வழங்கல்-3040495.html
3040494 தருமபுரி தருமபுரி "நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு ஏடிஎம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும்' DIN DIN Saturday, November 17, 2018 09:28 AM +0530 தருமபுரி மாவட்டத்தில் நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு, ஏடிஎம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
தருமபுரி பெரியார் மன்றத்தில் தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தின் கோரிக்கை மற்றும் பேச்சுவார்த்தை விளக்கக் கூட்டம் வெள்ளிக்கிழமை சங்கத்தின் மாவட்டத் தலைவர் தனசேகரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநில பிரசார செயலர் சுகமதி ஆகியோர் பேசினர். மாவட்டப் பொருளாளர் ஜான் ஜோசப் நன்றி தெரிவித்தார்.
கூட்டத்தின் நிறைவில், கு.பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியது: ஏடிஎம் மூலம் ஊதியம் வழங்க உத்தரவிட்ட பிறகும், தருமபுரி மாவட்ட நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு இதுவரை அவ்வாறு ஊதியம் வழங்கப்படவில்லை. எனவே, உடனடியாக அனைத்து நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு ஏடிஎம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும்.
பணியாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும் தொழிலாளர் வைப்புநிதியை அவரவர் கணக்கில் தொடர்ச்சியாக சேர்க்க வேண்டும். கட்டுப்பாடற்ற பொருள்களை நியாய விலைக் கடைகளுக்கு அதிகளவில் விநியோகம் செய்யக் கூடாது.
மேலும், இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, வரும் டிச. 7-ஆம் தேதி தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/17/நியாய-விலைக்-கடை-பணியாளர்களுக்கு-ஏடிஎம்-மூலம்-ஊதியம்-வழங்க-வேண்டும்-3040494.html
3040493 தருமபுரி தருமபுரி "கஜா' தாக்கம்; தருமபுரியிலும் மழை DIN DIN Saturday, November 17, 2018 09:28 AM +0530 வங்கக் கடலில் உருவான "கஜா' புயல் வியாழக்கிழமை இரவு கரையைக் கடந்ததன் தாக்கமாக, தருமபுரி மாவட்டத்திலும் வியாழக்கிழமை இரவும், வெள்ளிக்கிழமை விடியற்காலையும் மழை பெய்தது. தொடர்ந்து வானம் மேக மூட்டமாகவே காட்சியளித்தது. 
வங்கக் கடலில் உருவான "கஜா' புயல் காரணமாக கடலோர மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை விடிய விடிய கடும் மழைப் பொழிவும், அதிவேகக் காற்றும் அடித்தது. விடியற்காலை சுமார் 3 மணியளவில் "கஜா' புயல் கரையைக் கடந்தது.
இதன் தாக்கமாக தருமபுரி மாவட்டத்திலும் வியாழக்கிழமை மாலையில் அவ்வப்போது லேசான மழை பெய்து வந்தது. இரவில் தூறல் காணப்பட்டது. விடியற்காலை வரையிலும் தொடர்ந்து லேசான மழைப் பொழிவு இருந்தது. மாலை வரை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் வானம் மேக மூட்டமாகவே காணப்பட்டது.
வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பதிவான மழைப்பொழிவு: தருமபுரி- ஒரு மி.மீ, அரூர் - 24 மி.மீ, பாப்பிரெட்டிப்பட்டி- 10 மி.மீ. பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பென்னாகரம், ஒகேனக்கல் பகுதிகளில் மழை பதிவாகவில்லை.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/17/கஜா-தாக்கம்-தருமபுரியிலும்-மழை-3040493.html
3039638 தருமபுரி தருமபுரி காய்ச்சல் பாதிப்பை தடுக்க மருத்துவக் குழுக்கள் அமைக்க வலியுறுத்தல் DIN DIN Friday, November 16, 2018 08:31 AM +0530 தருமபுரி மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பை தடுக்க, கிராமங்கள்தோறும் மருத்துவக் குழுக்கள் அமைக்க வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.
தருமபுரியில் வியாழக்கிழமை திமுக மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம் அக் கட்சியின் மாவட்ட அவைத் தலைவர் ஜி.வி.மாதையன் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில், தருமபுரி மாவட்டச் செயலர் தடங்கம் பெ.சுப்பிரமணி எம்.எல்.ஏ., திமுக தேர்தல் பொறுப்பாளர்கள் பார் இளங்கோவன், தமிழ்மணி ஆகியோர் பேசினர்.கூட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில் தற்போது டெங்கு, பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல் பாதிப்புகளால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்புகளைத் தவிர்க்க, அனைத்து கிராமங்களிலும் மருத்துவக் குழுக்கள் அமைத்து தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வேண்டும். உள்ளாட்சி நிர்வாக பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
தருமபுரி மாவட்டம், அரூரில் வரும் நவ. 24-ஆம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் திரளானோரை பங்கேற்க செய்வது மற்றும் மக்களவைத் தேர்தல், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் எப்போது நடைபெற்றாலும், அதில் திமுக வேட்பாளர்களை வெற்றிபெற செய்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/16/காய்ச்சல்-பாதிப்பை-தடுக்க-மருத்துவக்-குழுக்கள்-அமைக்க-வலியுறுத்தல்-3039638.html
3039637 தருமபுரி தருமபுரி பணி நிரந்தரம் கோரி மருத்துவமனை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் DIN DIN Friday, November 16, 2018 08:30 AM +0530 பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவப் பணியாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாவட்டச் செயலர் கே.பாஸ்கரன் தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் தெய்வம், முருகேசன், சசிகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏஐடியுசி தொழிற்சங்க மாவட்டச் செயலர் கே.மணி, மாநில துணைப் பொதுச் செயலர் ஏ.பெரியசாமி ஆகியோர் பேசினர்.
இதில், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் இரண்டு ஆண்டுகள் பணி முடித்தவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். தினக்கூலி பணியாளர்களின் தொகுப்பூதியத்தை மாதந்தோறும் 5-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். குறைந்த ஊதியத்தில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள பணியாளர்களை அரசாணை 325-இன் படி ஊரகப் பகுதிகளில் இடமாறுதல் செய்ய வேண்டும். தேசிய சுகாதார திட்டப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச தினக்கூலியை நிர்ணம் செய்ய வேண்டும். பணியாளர்களின் இடமாறுதலுக்கான கலந்தாய்வு நடத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/16/பணி-நிரந்தரம்-கோரி-மருத்துவமனை-பணியாளர்கள்-ஆர்ப்பாட்டம்-3039637.html
3039636 தருமபுரி தருமபுரி வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க வலியுறுத்தல் DIN DIN Friday, November 16, 2018 08:30 AM +0530 தருமபுரி மாவட்டத்திலுள்ள வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்கவும், கல்லூரி மாணவர்கள் அவற்றைப் பார்வையிடுவதற்கு ஏற்பாடு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் அதியமான் சமூக வரலாற்று ஆய்வு மையம் வலியுறுத்தியுள்ளது.
அண்மையில் மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழியை நேரில் சந்தித்த மையத்தின் செயலர் தி.சுப்பிரமணியன், முன்னாள் எம்.பி. இரா.செந்தில், மையத்தின் பொருளாளர் வெ.ராஜன் ஆகியோர் அளித்த மனு விவரம்: தருமபுரி மாவட்டத்தில் லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனித இனம் வாழ்ந்துள்ளதற்கான அடையாளச் சின்னங்கள் இன்னமும்  உள்ளன. பாலக்கோடு வட்டத்தில், மல்லாபுரம், கும்மனூர் அருகிலுள்ள குன்றில் பெருங்கற்கால ஈமச் சின்னங்களான கல்திட்டைகள் ஏராளம் இருந்தன. தற்போது பெரும்பாலானவை அழிக்கப்பட்டு, மிகச்சில மட்டுமே எஞ்சியுள்ளன.
அதேபோல, மல்லாபுரம் அருகே இனக்குழுத் தலைவரின் நினைவாக அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அமைக்கப்படும் குத்துக்கல் உள்ளது. மல்லாபுரம் அருகேயுள்ள குத்துக்கல்கள் தென்னிந்தியாவில் காணப்படும் குத்துக்கல்களில் பெரியவை. பென்னாகரம் வட்டம், ஆதனூர் அருகேயுள்ள கல்வட்டம் மூன்றாயிரம் ஆண்டுகள் பழமையானது. தென்னிந்தியாவிலேயே சிதிலமடையாமல் இருக்கும் பெரிய கல்வட்டம் இதுவொன்றே.
தொல் பழங்குடிகளின் இந்த அரிய சின்னங்களை வேலியிட்டு பாதுகாத்து, தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் இவற்றைப் பார்வையிடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/16/வரலாற்றுச்-சின்னங்களை-பாதுகாக்க-வலியுறுத்தல்-3039636.html
3039635 தருமபுரி தருமபுரி ஊராட்சி செயலர் பதவிக்கு நேர்காணல் DIN DIN Friday, November 16, 2018 08:30 AM +0530 பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி செயலர் காலி பணியிடங்களுக்கான நேர்காணல் வியாழக்கிழமை நடைபெற்றது.
பாலக்கோடு ஓன்றியம் எம்.செட்டிஅள்ளி மற்றும் குட்லான அள்ளி ஆகிய 2 காலி பணியிடங்களுக்கு, பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற நேர்காணலில் 75 பெண்கள் கலந்துகொண்டனர். விண்ணப்பித்தோரிடம் அசல் பள்ளிச் சான்று, குடும்ப அட்டை, ஆதார்அட்டை போன்ற சான்றிதழ்களை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமஜெயம் மேற்பார்வையில் சரிபார்க்கப்பட்டது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/16/ஊராட்சி-செயலர்-பதவிக்கு-நேர்காணல்-3039635.html
3039634 தருமபுரி தருமபுரி ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் ரூ. 1.21 கோடியில் நலத் திட்ட உதவிகள் DIN DIN Friday, November 16, 2018 08:29 AM +0530 ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் தனது சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்திலிருந்து தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கடந்த இரு மாதங்களில் ரூ. 1.21 கோடி மதிப்பில் அரசுப் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் சமுதாயக் கூடங்களுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கியுள்ளது.
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் நாட்டின் "நவரத்னா' அந்தஸ்து பெற்ற பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்று. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவை இவற்றின் பிரதான உற்பத்திப் பொருள்கள். ஒவ்வொரு பொதுத் துறை மற்றும் பெருநிறுவனங்களும் அதன் லாபத்தின் ஒரு பகுதியில் இருந்து சமூகப் பணிகளில் ஈடுபடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி,  ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அரசுப் பள்ளிகள்,  அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமுதாயக் கூடங்களுக்கு முதல் முறையாக பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதில், கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய இரு மாதங்களில் தருமபுரி மாவட்டத்தில் ரூ. 35 லட்சம் மதிப்பிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ. 86 லட்சம் மதிப்பிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தருமபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி, தருமபுரி, காரிமங்கலம் ஆகிய மூன்று வட்டங்களில் 56 அரசுப் பள்ளிகள், 2 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 6 சமுதாயக் கூடங்களுக்கு 26 தண்ணீர் சுத்திகரிப்பு அமைப்புகளும் (ஆர்ஓ), 6 கழிப்பறைகளும், 8 கணினிகளும், 4 அச்சிடும் இயந்திரங்களும் மற்றும் மேசைகள், நாற்காலிகள், புத்தக அலமாரிகளும் வழங்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர்,  கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி ஆகிய மூன்று வட்டங்களில் 49 அரசுப் பள்ளிகள்,  2 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 6 சமுதாயக் கூடங்களுக்கு 24 தண்ணீர் சுத்திகரிப்பு அமைப்புகளும் (ஆர்ஓ), 18 கழிப்பறைகளும், 6 கணினிகளும், 4 அச்சிடும் இயந்திரங்களும் மற்றும் மேசைகள், நாற்காலிகள், புத்தக அலமாரிகளும் வழங்கப்பட்டுள்ளன.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/16/ஹிந்துஸ்தான்-பெட்ரோலியம்-நிறுவனம்-சார்பில்-ரூ-121-கோடியில்-நலத்-திட்ட-உதவிகள்-3039634.html
3039633 தருமபுரி தருமபுரி நூலக வார விழா DIN DIN Friday, November 16, 2018 08:29 AM +0530 கடத்தூர் கிளை நூலகம் மற்றும் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி இணைந்து நடத்தும் நூலக வார விழா மற்றும் குழந்தைகள் தின விழா புத்தகக் கண்காட்சி கடந்த புதன்கிழமை தொடங்கியது.
முன்னாள் எம்.பி. இரா.செந்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைத்துப் பேசினார்.
இரண்டாம் நாளாக வியாழக்கிழமை மாலை நடைபெற்ற கருத்தரங்கில், தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற எழுத்தாளர் ந.நாகராஜன் "இளமையில் கல்' என்ற தலைப்பில் பேசினார்.
நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை ரமாதேவி தலைமை வகித்தார். கடத்தூர் கிளை நூலகர் சி.சரவணன் வரவேற்றார். உதவித் தலைமை ஆசிரியர் சரவணன் நன்றி கூறினார். வெள்ளிக்கிழமை மாலையுடன் விழா நிறைவு பெறுகிறது. புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/16/நூலக-வார-விழா-3039633.html
3039632 தருமபுரி தருமபுரி தீர்த்தமலையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு DIN DIN Friday, November 16, 2018 08:28 AM +0530 தீர்த்தமலை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
அரூர் வட்டம், வேப்பம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட சலிக்குட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வன் (54). தொழிலாளியான இவர், கோவையில் நீலிக்கோணாம்பாளையத்தில் வசித்து வந்தார். கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்ட செல்வன், கோவையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். உயிரிழந்த செல்வனுக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரது சடலம் சொந்த ஊரான அச்சல்வாடியில் அடக்கம் செய்யப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் ஆய்வு....
பன்றிக் காய்ச்சலால் தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து தீர்த்தமலை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, ஆரம்ப சுகாதார நிலையத்தில் அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகள், டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், தேவையான மருந்து, மாத்திரைகள் இருப்பு உள்ளனவா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து, தீர்த்தமலையில் கழிவுநீர் கால்வாய் வசதிகள், தூய்மைப் பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/16/தீர்த்தமலையில்-மாவட்ட-ஆட்சியர்-ஆய்வு-3039632.html
3039631 தருமபுரி தருமபுரி "புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்' DIN DIN Friday, November 16, 2018 08:28 AM +0530 பாடநூல்களைத் தாண்டி வெளியே புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார் மக்களவை முன்னாள் உறுப்பினர் மருத்துவர் இரா. செந்தில்.
தருமபுரி மாவட்டம், சந்தப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற "நேர்படப்பேசு' நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியது:
கல்வியை  அவரவர் தாய்மொழியில் தான் கற்க வேண்டும்.  கூடுதலாக ஒரு மொழியாக ஆங்கிலத்தைக் கற்கலாம். தவிர பயிற்று மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும்.
அதேபோல,  தாய்மொழியில் புலமை இருந்தால் மட்டுமே மற்ற மொழிகளைக் கூடுதலாக எளிதில் கற்க முடியும். அதற்காக மொழி அறிவை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். 
அன்றாட நிகழ்வுகளை எழுதி வைக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதனால் நினைவுத்திறன் அதிகரிக்கும். தினமும் செய்தித்தாள் வாசிக்க வேண்டும். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வானொலியில் செய்திகளை கேட்கலாம். எதையும் அறிவியல் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகள்தான் அவற்றுக்கான விடைகளைத் தேடுவதற்கு நம்மைத் தூண்டும். புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை மாணவர்கள் இப்போதிருந்தே உருவாக்கிக் கொள்ள வேண்டும். மனிதனை மனிதனாக வைத்திருப்பதே புத்தகங்கள்தான். தலைசிறந்த பொருளாதார நிபுணராக அம்பேத்கர் விளங்கினார். அவருடைய திறமைக்குக் காரணம் அவர் படித்த நூல்கள் என்றார் செந்தில்.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ. அண்ணாதுரை தலைமை வகித்தார். ஆசிரியர் இ. தங்கமணி கூட்டத்தை ஒருங்கிணைத்தார். முன்னதாக மாணவி கோபிகா வரவேற்றார். முடிவில் மாணவி பிரீத்தி நன்றி கூறினார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/16/புத்தகங்கள்-வாசிக்கும்-பழக்கத்தை-மாணவர்கள்-வளர்த்துக்-கொள்ள-வேண்டும்-3039631.html
3039630 தருமபுரி தருமபுரி பெரியார் பல்கலை. கல்லூரி பேராசிரியர்கள் சங்கம் தொடக்கம் DIN DIN Friday, November 16, 2018 08:27 AM +0530 சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்ற மேட்டூர், பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், எடப்பாடி ஆகிய இடங்களிலுள்ள உறுப்பு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் உதவிப் பேராசிரியர்களுக்கான புதிய சங்கம் தொடங்கப்பட்டுள்ளது.
இச்சங்கம் முறைப்படி தமிழ்நாடு சங்கங்களின் பதிவுச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இதன் நிர்வாகிகள் பல்கலைக்கழகத் துணை வேந்தர் பி.கொழந்தைவேலை புதன்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கும், ஆசிரியர்- மாணவர் நலன் சார்ந்த பணிகளுக்கும் முக்கியத்துவம் அளித்து செயல்படவுள்ளதாக துணை வேந்தரிடம் நிர்வாகிகள் தெரிவித்தனர்.  
உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழுவில் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும், ஆசிரியர்களுக்கு பருவ விடுமுறை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் துணை வேந்தரிடம் முன்வைக்கப்பட்டன. இச்சந்திப்பில், பெரியார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் சங்கத்தின் தலைவர் பொ.செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள், பல்கலைக்கழக கல்லூரி வளர்ச்சிக் குழு புல முதன்மையர் வ.கிருஷ்ணகுமார், முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் பெ.மாது உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/16/பெரியார்-பல்கலை-கல்லூரி-பேராசிரியர்கள்-சங்கம்-தொடக்கம்-3039630.html
3039629 தருமபுரி தருமபுரி "ஜனநாயகம் மிக உயர்ந்தது' DIN DIN Friday, November 16, 2018 08:27 AM +0530 இந்திய நாட்டின் ஜனநாயகம் மிக உயர்ந்தது என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்.
தருமபுரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில் பங்கேற்ற திருமாவளவன் பேசியது:  இன்றைய சூழலில் தமிழகத்தில் மற்ற அரசியல் கட்சிகள் தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இது முக்கியம்தான் எனினும், தேர்தல் வாக்குகளைக் காட்டிலும், நாட்டைக் காப்பது முக்கியம்.
அம்பேத்கர் இயற்றிய அரசியலமைப்புச் சட்டம் ஜனநாயகத்தை நமக்களிக்கிறது.  ஆனால், பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் இந்திய நாட்டின் மிக உயர்ந்த ஜனநாயகத்தை மறுத்து,  மீண்டும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நடைமுறையில் இருந்த கோட்பாடுகளுக்கு இந்த நாட்டை இட்டுச் செல்ல முயற்சிக்கின்றன. இதனை முறியடித்து,  ஜனநாயகத்தையும், நாட்டையும் காக்க வேண்டிய கடமை தற்போது எழுந்துள்ளது.  இதற்காக, நாட்டிலுள்ள மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து, வரும் டிச. 10-ஆம் தேதி திருச்சியில் "தேசம் காப்போம்' என்ற முழக்கத்தை முன்வைத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் சுதாகர் ரெட்டி,  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க இசைவு தெரிவித்துள்ளனர். எனவே,  இந்த மாநாட்டை சிறப்பிக்க தருமபுரி மாவட்டத்திலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திரளாக பங்கேற்ற வேண்டும் என்றார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/16/ஜனநாயகம்-மிக-உயர்ந்தது-3039629.html
3039627 தருமபுரி தருமபுரி சிட்லிங் மாணவி உயிரிழந்த சம்பவம்: பெற்றோர் உள்ளிட்ட 5 பேர் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் DIN DIN Friday, November 16, 2018 08:27 AM +0530 அரூர் அருகே பாலியல் வன்கொடுமையால்  பிளஸ் 2 மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து அவரது பெற்றோர் உள்ளிட்ட 5 பேர், அரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ரகசிய வாக்குமூலம் அளித்தனர்.   
அரூர் வட்டம்,  சிட்லிங் மலைக் கிராமத்தைச் சேர்ந்த மலைவாழ் பழங்குடியின பிளஸ் 2 மாணவியை, அதே  ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனராம்.  இந்த சம்பவம் தொடர்பாக, சிட்லிங் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் (22), ரமேஷ் (22) ஆகியோரை கோட்டப்பட்டி போலீஸார் கைது செய்தனர்.
இதையடுத்து, சிறுமியின் பெற்றோர், பாலியல் வன்கொடுமை சம்பவத்தை நேரில் பார்த்ததாக கூறப்படும் சிட்லிங் கிராமத்தைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி கோவிந்தன், தருமபுரியில் உள்ள காப்பகத்தின் கண்காணிப்பாளர் மாதேஸ்வரி,  காப்பாளர் புனிதா ஆகிய 5 பேரும் அரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, இந்த 5 பேரிடமும், குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சக்திவேல் முன்னிலையில், பூட்டிய அறையில் ரகசிய வாக்குமூலம் தனித்தனியாக பெறப்பட்டது. இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் உள்ளிட்ட 5 பேரும் மதியம் 2 முதல் மாலை 5 மணி வரையிலும் ரகசிய வாக்குமூலம் அளித்தனர்.
சோதனைச் சாவடிகள் அமைப்பு...
சிட்லிங் மலைக் கிராமத்தில் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க, பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் வருகை தருகின்றனர்.
இதனால் பொது அமைதிக்கு இடையூறும், சட்டம்-ஒழுங்கு பிரச்னையும் ஏற்படும் என உளவுத் துறையினர் எச்சரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.  இதையடுத்து, சிட்லிங் செல்லும் சாலையில் பொரிசுகல்,  நாய்க்குத்தி ஆகிய இடங்களில் காவல் துறையினர் சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளனர்.  இந்த வழித்தடத்தில் செல்லும் அனைத்து வாகனங்களும் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகளுக்கு பிறகே சிட்லிங் மலைக் கிராமம் செல்வதற்கு அனுமதிக்கப்படுகிறது.
 மேலும், சிறுமியின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கச் செல்லும் கட்சிகள், அமைப்புகள் காவல் துறை உயர் அதிகாரிகளிடம் முன் அனுமதி பெறுவது அவசியம் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/16/சிட்லிங்-மாணவி-உயிரிழந்த-சம்பவம்-பெற்றோர்-உள்ளிட்ட-5-பேர்-நீதிமன்றத்தில்-ரகசிய-வாக்குமூலம்-3039627.html
3039626 தருமபுரி தருமபுரி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வெற்றி கிடைக்காது: டி.டி.வி. தினகரன் DIN DIN Friday, November 16, 2018 08:26 AM +0530 தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தால், அதிமுகவுக்கு வெற்றி கிடைக்காது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில், அரசின் வளர்ச்சிப் பணிகள், மக்கள் நலத் திட்டங்களைப் புறக்கணித்து வரும் தமிழக அரசைக் கண்டித்து, அ.ம.மு.க. சார்பில் பாப்பிரெட்டிப்பட்டியில் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம்  நடைபெற்றது.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துவைத்து, அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசியது:  அதிமுக தொண்டர்கள் 90 சதவீதம் பேர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் உள்ளனர்.  அதிமுகவில் அமைச்சர்களும், கட்சியின் தலைமைக் கழகக் கட்டடம் மட்டுமே உள்ளது.
தமிழகத்தில் நடைபெறும் ஆட்சியால்,  அனைத்து தரப்பு மக்களும் கொதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர்களின் தொகுதிகள் உள்பட 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தால், அதில் அ.ம.மு.க. வேட்பாளர்கள் தான் வெற்றி பெறுவார்கள்.   
18 சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில்,  உச்ச நீதிமன்றம் சென்றால் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்.  ஆனால், உச்ச நீதிமன்றம் சென்றால் தீர்ப்பு வருவதற்கு சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகும்.  அதற்குள் அதிமுக ஆட்சிக் காலம் முடிந்து விடும்.
எனவே,  18 சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர்களும் மேல்முறையீடு செய்யவில்லை.
வரும் மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றிபெற அ.ம.மு.க. தொண்டர்கள் உழைக்க வேண்டும்.  இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் சக்தி தமிழக மக்களிடம் உள்ளது என்றார் அவர்.
இதில், முன்னாள் அமைச்சரும், கழகத் தலைமை நிலையச் செயலருமான பி.பழனியப்பன்,  தருமபுரி மாவட்டக் கழகச் செயலர் டி.கே.ராஜேந்திரன்,  எம்.ஜி.ஆர்.  இளைஞரணி இணைச் செயலர் ஆர்.ஆர்.முருகன்,  மாவட்டக் கழக அவைத் தலைவர் டி.முத்துசாமி,  மாவட்டக் கழக இணைச் செயலர்கள் சி.சாந்தரூபி,  எம்.ஏ.ஏகநாதன், சி.ராணி, மாவட்டக் கழகப் பொருளாளர் டி.ராஜேந்திரன்,  மாவட்ட அம்மா பேரவைச் செயலர் சி.தென்னரசு,  மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணிச் செயலர் பூக்கடை எம்.முனுசாமி,  மாவட்ட மகளிரணிச் செயலர் ஜெ.இந்திரா காந்தி, மாவட்ட வழக்குரைஞர் பிரிவுச் செயலர் ஜி.அசோகன்,  மாவட்ட தொழிற்சங்கச் செயலர் டி.ராமன், மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலர் பி.ராஜா,  மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணிச் செயலர் எஸ்.பி.முனுசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


"பாஜகவுடன் கூட்டணி இல்லை'

தமிழகத்தில் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும்,  மக்களவைத் தேர்தலுடன் சேர்ந்து தேர்தல் நடைபெறலாம் என அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலர் டி.டி.வி தினகரன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு 90 நாள் கால அவகாசம் உள்ளது.  அது வரையிலும் 18 தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க முடியாது.  எனவே, 18 தொகுதிகளுக்கும் உடனே இடைத்தேர்தல் வராது.
அதே சமயம், திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு உடனே இடைத் தேர்தல் வரலாம். பாஜகவுடன் அ.ம.மு.க.வுக்கு  எந்த விதமான தேர்தல் கூட்டணியும் இல்லை. பாஜகவுடன் நாங்கள் கூட்டணி என்று ஒரு சில ஊடகங்கள் தவறான தகவல்களைத் தெரிவித்து வருகின்றன என்றார் அவர்.


சிட்லிங் மாணவியின் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி

அரூரை அடுத்த சிட்லிங் மலைக் கிராமத்தில் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த பள்ளி மாணவியின் குடும்பத்தினரை அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. வியாழக்கிழமை இரவு நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். 
சிட்லிங்கில் உயிரிழந்த மாணவியின் வீட்டுக்குச் சென்ற டி.டி.வி. தினகரன், மாணவியின் புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, மாணவியின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்து, ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/16/இடைத்தேர்தலில்-அதிமுகவுக்கு-வெற்றி-கிடைக்காது-டிடிவி-தினகரன்-3039626.html
3039084 தருமபுரி தருமபுரி சூரிய சக்தியில் மின் உற்பத்தி பயிற்சி DIN DIN Thursday, November 15, 2018 08:23 AM +0530 பாலக்கோடு அருகே காடையாம்பட்டியில் வேளாண்துறை சார்பில் சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் பயிற்சி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. 
பாலக்கோடு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பூ. சு. சித்ரா தலைமை வகித்து வேளாண் துறையில் உள்ள மானியத் திட்டங்கள் மற்றும் பிரதமரின் பயிர் காப்பீடு செய்வது குறித்து எடுத்துரைத்தார். வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் மு. சிவசங்கரி வரவேற்றுப் பேசினார்.
வேளாண் பொறியியல் துறை இளநிலை பொறியாளர் செல்வகுமார், சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்வது மற்றும் பராமரிப்பு முறைகள், அதன் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். பயிற்சியில் அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் அருள்குமார் மற்றும் அப்பகுதி விவசாயிகள், வேளாண் அலுவலர்கள் கலந்து
கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/15/சூரிய-சக்தியில்-மின்-உற்பத்தி-பயிற்சி-3039084.html
3039083 தருமபுரி தருமபுரி எய்ட்ஸ் தினத்தையொட்டி "மீம்ஸ்' போட்டி DIN DIN Thursday, November 15, 2018 08:22 AM +0530 வரும் டிச. 1-ஆம் தேதி உலக எய்ட்ஸ் நாளையொட்டி தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் சார்பில் நடத்தப்படும் "மீம்ஸ்' உருவாக்கும் போட்டியில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி அழைப்புவிடுத்துள்ளார்.
எச்ஐவி, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு, தொற்றுள்ள மக்களின் ஆரோக்கியம், மருத்துவம் மற்றும் பாதுகாப்பு, ஒதுக்குதல் மற்றும் புறக்கணிப்புச் செயல்களில் ஈடுபடாமல் இருத்தல், தன்னார்வ ரத்ததானம், பால்வினை நோய்கள் குறித்தும் மீம்ஸ்களை உருவாக்கலாம். போட்டிக்குத் தொடர்பில்லாத திரைப்பட நடிகர்களின் படம், அரசியல் கட்சிகளின் சின்னம், கொடி, விலங்குகளின் படம், ஆபாசமான கருத்துகள், படங்கள், வசனங்கள் இடம்பெறக் கூடாது. அதேபோல, எந்த ஒரு கருத்தையும் நகல் எடுத்திருக்கக் கூடாது. போட்டியாளர்கள் தங்களது சுய புகைப்படத்துடன், மீம்ஸ்களை வரும் நவ. 25ஆம் தேதிக்குள் ‌m‌e‌m‌e​a‌d​a‌y.‌t‌n‌s​a​c‌s@‌g‌m​a‌i‌l.​c‌o‌m  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களை‌w‌w‌w.‌t‌n‌s​a​c‌s.‌i‌n என்ற இணையதளத்தில் அறியலாம். அல்லது 18004191800 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலும் தெரிவிக்கலாம்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/15/எய்ட்ஸ்-தினத்தையொட்டி-மீம்ஸ்-போட்டி-3039083.html
3039082 தருமபுரி தருமபுரி கடத்தூர் நூலகத்துக்கு விருது DIN DIN Thursday, November 15, 2018 08:22 AM +0530 தருமபுரி மாவட்டம் கடத்தூர் கிளை நூலகத்துக்கு தமிழக அரசின் நூலக ஆர்வலர் விருது வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நூலகத்தைப் பயன்படுத்தும் வகையில், நூலகத்தை மேம்படுத்தி, பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதைப் பாராட்டி இவ்விருது வழங்கப்பட்டது.
சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற குழந்தைகள் தின விழா மற்றும் டாக்டர் எஸ்.ஆர். ரங்கநாதன் விருது வழங்கும் விழாவில், கடத்தூர் கிளை நூலகர் சி. சரவணன் மற்றும் வாசகர் வட்டம் சார்பில் கோவிந்தராஜன் ஆகியோரிடம் இந்த விருதை மாநிலப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.  செங்கோட்டையன்
வழங்கினார் .
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/15/கடத்தூர்-நூலகத்துக்கு-விருது-3039082.html
3039081 தருமபுரி தருமபுரி சிட்லிங்கில் புறக்காவல் நிலையம் திறப்பு DIN DIN Thursday, November 15, 2018 08:22 AM +0530 அரூரை அடுத்த சிட்லிங்கில் புறக்காவல் நிலையம் புதன்கிழமை திறக்கப்பட்டது.
அரூர் வட்டம், கோட்டப்பட்டியில் காவல் நிலையம் உள்ளது. இந்தக் காவல் நிலையத்துக்கும் சிட்லிங் மலைக் கிராமத்துக்கும் சுமார் 10 கிலோ மீட்டர் தூரமுள்ளது. இந்த நிலையில், சிட்லிங், ஏ.கே.தண்டா, எஸ்.தாதம்பட்டி பகுதியிலுள்ள மக்கள் காவல் நிலையத்துக்குச் செல்ல வேண்டும் எனில், கோட்டப்பட்டி செல்ல வேண்டும். இந்தப் பகுதி போதிய போக்குவரத்து வசதியில்லாத பகுதியாகவும், மலைக் கிராமங்களாகவும் உள்ளது. இதையடுத்து, குற்ற நிகழ்வுகளைக் கட்டுப்படுத்தும் வகையில், சிட்லிங் பகுதியில் புறக்காவல் நிலையம் ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, சிட்லிங் புறக்காவல் நிலையத்தை ஏடிஎஸ்பி ராஜ்மோகன் தொடக்கி வைத்தார். இதில், அரூர் டிஎஸ்பி ஏ.சி.செல்லப்பாண்டியன் உள்ளிட்ட காவல் துறையினர் பங்கேற்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/15/சிட்லிங்கில்-புறக்காவல்-நிலையம்-திறப்பு-3039081.html
3039080 தருமபுரி தருமபுரி ஊரக வேலை திட்டத்தில் ரூ. 3.60 லட்சம் முறைகேடு: 4 பேர் பணியிடை நீக்கம் DIN DIN Thursday, November 15, 2018 08:22 AM +0530 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ. 3.60 லட்சம் முறைகேடு செய்ததாக வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 4 பேர் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள எட்டு ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்ததாக, மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்கள் வரப்பெற்றன. இதனைத் தொடர்ந்து, உதவி இயக்குநர் நிலையிலான 8 அதிகாரிகள் இப்புகார் தொடர்பாக தணிக்கை செய்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்டனர். இதையடுத்து, இந்த அதிகாரிகள் கடந்த சில மாதங்களாக தணிக்கை பணியில் ஈடுபட்டனர். 
இதில், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சந்தானம், மேற்கொண்ட தணிக்கையில், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அரகாசனஅள்ளி கிராம ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ. 3.60 லட்சம் முறைகேடு நிகழ்ந்துள்ளது தெரியவந்தது.
இது தொடர்பான அறிக்கை மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, முறைகேட்டில் ஈடுபட்ட பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர் விமலன், உதவியாளர் அகமது ஷா, பணி மேற்பார்வையாளர் கண்ணன் மற்றும் அரகசானஅள்ளி ஊராட்சிச் செயலர் செல்வராஜ் ஆகிய 4 பேரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி உத்தரவிட்டார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/15/ஊரக-வேலை-திட்டத்தில்-ரூ-360-லட்சம்-முறைகேடு-4-பேர்-பணியிடை-நீக்கம்-3039080.html
3039079 தருமபுரி தருமபுரி ஆறு வழிச்சாலையை ஏரிகள் வழியாக அமைப்பதைக் கைவிட பாஜக வலியுறுத்தல் DIN DIN Thursday, November 15, 2018 08:21 AM +0530 தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டையிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் வரை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள ஆறு வழிச் சாலையை 9 ஏரிகளின் வழியாக அமைப்பதைக் கைவிட்டு, மாற்றுப் பாதையைத் தேர்வு செய்ய வேண்டும் என தருமபுரி மாவட்ட பாஜக வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தமிழக முதல்வருக்கு தருமபுரி மாவட்ட பாஜக செயலர் இரா. மாதுகவுண்டர் அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டையிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் வரை 79 கிமீ தொலைவுக்கு 6 வழிச்சாலை அமைப்பதற்காக நிலம் அளவிடப்பட்டு முட்டுக்கல் நடப்பட்டுள்ளது.
தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள பகுதியால் பல நூறு ஏக்கர் விவசாய நிலங்களும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகளும் பாதிக்கப்படுகின்றன.
மேலும், ஜக்கசமுத்திரம் ஏரி, ஜெகர்தலாவ்ஏரி, பி. கொல்லஅள்ளி ஏரி, செம்மனஅள்ளி ஏரி, பி. செட்டிஅள்ளி ஏரி, ஜெர்தலாவ்ஏரி, பாப்பிநாயக்கனஅள்ளி ஏரி, வெலகலஅள்ளி ஏரி, புலிகரை ஏரி ஆகிய  9 ஏரிகள் வழியாக இச்சாலை செல்கிறது.
இதன்படி சாலைத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் விவசாயத்துக்கான வேறு எந்த நீர்ப்பாசனத் திட்டங்களும் நிறைவேற்ற இயலாது. இப்பகுதி மேலும் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும். எனவே, ஆறு வழிச்சாலைத் திட்டத்தை மாற்றுவழியில் அமைத்திட வேண்டும். விவசாயத்துக்கான நீர்ப்பாசனத் திட்டங்களையும் விரைந்து நிறைவேற்ற வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/15/ஆறு-வழிச்சாலையை-ஏரிகள்-வழியாக-அமைப்பதைக்-கைவிட-பாஜக-வலியுறுத்தல்-3039079.html
3039078 தருமபுரி தருமபுரி ஊர்ப் பெயர்களை ஆங்கிலத்தில் ஒலிக்குறிப்பு மாறாமல் அமைக்க பொதுமக்கள் பரிந்துரைக்கலாம் DIN DIN Thursday, November 15, 2018 08:21 AM +0530 தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஊர்ப் பெயர்களை தமிழில் உள்ளவாறே ஆங்கிலத்தில் ஒலிக்குறிப்பு மாறாமல் அமைப்பதற்கு பொதுமக்களும், தமிழ் ஆர்வலர்களும் பரிந்துரைக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
தமிழகத்தில் ஊர்ப் பெயர்களை தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர் அறிவித்ததைத் தொடர்ந்து அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி தருமபுரி மாவட்டத்தில் உயர்நிலைக் குழு, ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டு பொதுமக்களிடமிருந்து பெறப்படும் ஊர்ப் பெயர்களின் பட்டியலை அதற்கு இணையான ஆங்கில எழுத்துக் கூட்டலை மாவட்ட ஆட்சியரின் பரிந்துரைப்படி மாற்றியமைக்கப்படும்.
எடுத்துக்காட்டாக திருவல்லிக்கேணி என்பதை ட்ரிப்ளிகேன் எனக் குறிப்பிடாமல் திருவல்லிக்கேணி என்றே ஆங்கிலத்திலும் அமைக்கப்படவுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர்ப் பெயர்களின் உச்சரிப்பு தமிழில் அமைந்துள்ளதைப் போலவே ஆங்கிலத்திலும் அதன் ஒலிக்குறிப்பு மாறாமல் அமைத்திட மாற்றப்பட வேண்டிய பட்டியலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
தொடர்புக்கு- 04342 230774, மின்னஞ்சல்- t​a‌m‌i‌l‌d‌e‌v.‌d‌p‌i@‌g‌m​a‌i‌l.​c‌o‌m..

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/15/ஊர்ப்-பெயர்களை-ஆங்கிலத்தில்-ஒலிக்குறிப்பு-மாறாமல்-அமைக்க-பொதுமக்கள்-பரிந்துரைக்கலாம்-3039078.html
3039075 தருமபுரி தருமபுரி வாக்குச் சாவடி முகவர் குழுவை காங்கிரஸார் வலுவாக அமைக்க வேண்டும்: மேலிட பொறுப்பாளர் அறிவுரை DIN DIN Thursday, November 15, 2018 08:20 AM +0530 வாக்குச் சாவடி முகவர்கள் குழுவை வலுவாக அமைக்க வேண்டும் என்றார் காங்கிரஸ் கட்சி மேலிட பொறுப்பாளர் ஸ்ரீவல்ல பிரசாத்.
மக்களவைத் தேர்தல் தொடர்பாக தருமபுரியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை அக் கட்சியின் மாவட்டத் தலைவர் கோவி. சிற்றரசு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் ஸ்ரீவல்ல பிரசாத் பேசியது: ஆந்திரத்தில், காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்து நான்காண்டுகள்தான் ஆகிறது.
அங்கு, தலைவர்கள், கிராமங்களுக்குச் சென்று தொண்டர்களை சந்திப்பது இல்லை. ஆனால், தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்து பல ஆண்டுகளைக் கடந்த நிலையிலும், இங்கு, தலைவர்கள் தொண்டர்களை சந்தித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இருப்பினும், இது மட்டும் ஆட்சி அமைக்க போதுமானது இல்லை.
எதிர்வரும் மக்களவைத் தேர்தலில், ராகுல்காந்தி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைய பாடுபட வேண்டும். மேலும், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வாக்குச் சாவடி முகவர்கள் குழுவை வலுவாக அமைப்பதோடு, அனைவரும் ஒற்றுமையோடு கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.
மத்தியில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது, மக்களுக்கு பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், அதை மறைக்கும் வகையில், பிரதமர் மோடி, காங்கிரஸ் மீது பொய்க் குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறார்.
பாஜக மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எனவே, காங்கிரஸ் ஆட்சியின்போது செய்த சாதனைகளை மக்களிடம் நாம் எடுத்துரைக்க வேண்டும் என்றார்.
இதில், தேசிய செயலர் செல்லக்குமார், மாநிலச் செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி. தங்கபாலு, காங்கிரஸ் கட்சி எஸ்சி., பிரிவு மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை, மாவட்டத் தேர்தல் பார்வையாளர் ராமசுகந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

சிட்லிங் மாணவியின் குடும்பத்துக்கு ஸ்ரீ வல்ல பிரசாத் ஆறுதல்

அரூரை அடுத்த சிட்லிங் மலைக் கிராமத்தில் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த பள்ளி மாணவியின் குடும்பத்தினரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளரும், தமிழக காங்கிரஸ் கமிட்டி மேலிடப் பொறுப்பாளருமான ஸ்ரீ வல்ல பிரசாத் புதன்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
அரூர் வட்டம், சிட்லிங் மலைக் கிராமத்தில் பிளஸ் 2 மாணவி இரு இளைஞர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் மாணவியின் குடும்பத்தாரை
தமிழக காங்கிரஸ் கமிட்டி மேலிடப் பொறுப்பாளர் 
ஸ்ரீ வல்ல பிரசாத், முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி. தங்கபாலு ஆகியோர் புதன்கிழமை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியது:
இளைஞர்களின் வன்கொடுமைகள் ஒருபுறமும், மருத்துவர்கள் மற்றும் காவல் துறையினரின் புறக்கணிப்பு மறுபுறமும் சிறுமியின் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாகும்.
சமூகத்தில் பழங்குடியினர், தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட ரீதியான உரிமைகளை அரசு வழங்க வேண்டும். சிறுமியின் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்த இளைஞர்கள், காவல் துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ துறையினர், காப்பக நிர்வாகிகள் மீது மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறுமியின் பெற்றோரிடம் துக்கம் விசாரிக்க வந்த சமூக ஆர்வலர்களை காவல் துறையினர் கைது செய்திருப்பது கண்டிக்கதக்கதாகும். கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றனர். இதில், காங்கிரஸ் கட்சியின் தருமபுரி மாவட்டத் தலைவர் கோவி. சிற்றரசு, எஸ்.சி, எஸ்.டி பிரிவு மாநிலத் தலைவர் பி. செல்வப் பெருந்தகை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/15/வாக்குச்-சாவடி-முகவர்-குழுவை-காங்கிரஸார்-வலுவாக-அமைக்க-வேண்டும்-மேலிட-பொறுப்பாளர்-அறிவுரை-3039075.html
3039074 தருமபுரி தருமபுரி தருமபுரி, கிருஷ்ணகிரியில் குழந்தைகள் தின விழா DIN DIN Thursday, November 15, 2018 08:15 AM +0530 தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்துள்ள சின்னப்பள்ளத்தூர் அரசு நடுநிலைப் பள்ளியில், குழந்தைகள் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுகள், பேச்சு, கவிதை, பாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன. பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்தப்பட்டது.
முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு குழந்தைகள் மீது கொண்டிருந்த அன்பு, பாசம் பற்றி பள்ளியின் தலைமை ஆசிரியர் மா. பழனி பேசினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் வளர்மதி, பழனிச்செல்வி, ரதி, திலகவதி, ரூத்பிரித் திரோஸ் மற்றும் ஊர்ப் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
மூக்கனஅள்ளியில்...
மூக்கனஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் மன்றம் மற்றும் பசுமைப் படை ஆகியவற்றின் சார்பில் நடைபெற்ற குழந்தைகள் தின விழா நிகழ்ச்சிக்கு பொறுப்பு ஆசிரியர் யமுனாபாய் தலைமை வகித்தார். தமிழ் மன்றத்தின் பொறுப்பு ஆசிரியர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.
கணித ஆசிரியர் ரமேஷ் வரவேற்றார். மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகள் நடைபெற்றன. மூக்கனஅள்ளி தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை அமலா, ஆசிரியர்கள் மகாலட்சுமி, ராஜேஸ்வரி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். முடிவில் பட்டதாரி ஆசிரியர் விக்கிரமன் நன்றி கூறினார்.
கிருஷ்ணகிரியில்
கிருஷ்ணகிரியில் அரசு அருங்காட்சியகம், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட இடங்களில் குழந்தைகள் தினவிழா, புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
குழந்தைகள் தினவிழாவையொட்டி, கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் அதன் காப்பாட்சியர் கோவிந்தராசு தலைமையில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.  ஓவியப் போட்டி நடைபெற்றது. 6,7,8 ஆகிய வகுப்பினர்களுக்கு எனக்கு பிடித்த விலங்கு, 9,10 ஆகிய வகுப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு எனக்குப் பிடித்த தேசிய தலைவர், 11, 12 ஆகிய வகுப்பினருக்கு எனக்கு பிடித்த சுற்றுலாத் தலம்  என்ற தலைப்புகளில் போட்டிகள் நடைபெற்றன.
ஓய்வுபெற்ற நல்லாசிரியர் வானவில் பன்னீர் செல்வம் சிறந்த மாணவர்களைத் தேர்வு செய்து, பரிசுகளை வழங்கினார். அரசு அருங்காட்சிய பணியாளர்கள் கிருஷ்ணன், செல்வகுமார் ஆகியோர் போட்டியை ஒருங்கிணைத்தனர்.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி: கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேந்திரன் தலைமை வகித்தார். நேருவின் உருவப் படத்துக்கு ஆசிரியர்கள், மாணவிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  நேருவின் சிறப்புகள் எடுத்துரைக்கப்பட்டன.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
ஒசூரில்...
ஒசூர் வட்டம், உத்தனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா  நடைபெற்றது. பள்ளியில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, நேருவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.  இதில் பள்ளித் தலைமை ஆசிரியர் முனிராஜ் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
ஊத்தங்கரையில்...
ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இலக்கிய மன்றம் சார்பில்  குழந்தைகள் தின விழா  புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன் தலைமை வகித்தார். பள்ளி உதவி ஆசிரியர் மு.  லட்சுமி
வரவேற்றார்.
பள்ளி மாணவர்கள் பேச்சு, கவிதை, நடனப் போட்டிகள் நடைபெற்றன. வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுநர் ப. சிவபிரகாசம் சிறப்புரை ஆற்றினார். சாய் அறக்கட்டளை சரவணன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் கு. ஆனந்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். உதவி ஆசிரியர் ந. திலகா நன்றி கூறினார்.
அதுபோல, ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியர் த. மாதப்பன் தலைமை வகித்தார்.
உதவி தலைமை ஆசிரியர்கள் பற்குணன், கு. கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜவாஹர்லால் நேருவும் குழந்தைகளும் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
போச்சம்பள்ளியில்...
அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து நேருவை பற்றிய பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன.
போட்டிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையில் 900-க்கும் அதிகமான மாணவிகள் பங்கேற்றனர்.  போட்டியை பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆனந்தி மாலா தலைமை வகித்துத் துவக்கி வைத்தார். உதவித் தலைமை ஆசிரியர் ஜெயந்தி, ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குக் கோப்பைகளும், பரிசுகளும் வழங்கப்பட்டன. ஆசிரியர் சண்முகம் நன்றி கூறினார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/15/தருமபுரி-கிருஷ்ணகிரியில்-குழந்தைகள்-தின-விழா-3039074.html
3038511 தருமபுரி தருமபுரி தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம்: சமூக ஆர்வலர் நந்தினி கைது DIN DIN Wednesday, November 14, 2018 09:54 AM +0530 "சிட்லிங்' மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் உயிரிழந்த சம்பவத்தில் துரித நடவடிக்கை எடுக்காத காவல் துறை உயர் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர் மதுரை நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகியோர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
     சிட்லிங் பள்ளத்தாக்குப் பகுதியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி அதே பகுதியைச் சேர்ந்த இருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.  தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த 10ஆம் தேதி உயிரிழந்தார்.
இந்த நிலையில்,  மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நந்தினி அவரது தந்தை ஆனந்தனுடன் செவ்வாய்க்கிழமை காலை தருமபுரி வந்தார்.  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் வந்த அவர்கள் காவல்துறை உயர் அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எழுதப்பட்ட பதாகையைப் பிடித்துக் கொண்டு திடீர் போராட்டத்தில் இறங்கினர்.
தகவலறிந்து வந்த போலீஸார் இருவரையும் கைது செய்து, காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.  
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/14/தருமபுரி-ஆட்சியர்-அலுவலகம்-முன்-போராட்டம்-சமூக-ஆர்வலர்-நந்தினி-கைது-3038511.html
3038505 தருமபுரி தருமபுரி பாலியல் வன்கொடுமையால்  உயிரிழந்த  சிறுமி குடும்பத்துக்கு அதிமுக சார்பில் ரூ. 5 லட்சம் நிதியுதவி DIN DIN Wednesday, November 14, 2018 09:53 AM +0530 அரூர் அருகே சிட்லிங் மலை கிராமத்தில் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த பள்ளி மாணவியின் குடும்பத்துக்கு அ.தி.மு.க. சார்பில்  ரூ.5 லட்சம் நிதியுதவியை அமைச்சர் கே.பி.அன்பழகன் செவ்வாய்க்கிழமை  வழங்கினார்.
   தருமபுரி மாவட்டம்,  அரூர் வட்டம், சிட்லிங் மலை கிராமத்தைச் சேர்ந்த மலைவாழ் பழங்குடியின பிளஸ் 2 மாணவியை,  அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.  இந்தச் சம்பவத்தில் சிட்லிங் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் (22) என்பவரை தனிப்படை போலீஸார் அண்மையில் கைது செய்தனர்.  மேலும், இதில் தொடர்புடைய அதே ஊரைச் சேர்ந்த ரமேஷ் (22) என்பவர் சேலம் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தார்.
 இந்த நிலையில்,  தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுமியின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டு, அவரது பெற்றோரிடம் திங்கள்கிழமை இரவு ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, சிறுமியின் உடல் சிட்லிங் மலை கிராமத்தில் அரூர் வருவாய் கோட்டாட்சியர் ஜி.புண்ணியகோடி,  வட்டாட்சியர் அன்பு,  வருவாய் ஆய்வாளர் சரஸ்வதி உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள்  முன்னிலையில் திங்கள்கிழமை இரவு அடக்கம் செய்யப்பட்டது.
 அமைச்சர் ஆறுதல்...
 சிட்லிங் மலை கிராமத்தில் உள்ள சிறுமியின் வீட்டுக்குச் சென்று அவரது பெற்றோரை நேரில் சந்தித்து மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆறுதல் தெரிவித்தார்.  அப்போது,  சிறுமியின் புகைப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  தொடர்ந்து, அ.தி.மு.க. சார்பில் ரூ.5 லட்சம் நிதியை ரொக்கமாக சிறுமியின் பெற்றோரிடம் அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்.    இதில்,  அதிமுக விவசாயப் பிரிவுத் தலைவர் டி.ஆர்.அன்பழகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/14/பாலியல்-வன்கொடுமையால்--உயிரிழந்த-சிறுமி-குடும்பத்துக்கு-அதிமுக-சார்பில்-ரூ-5-லட்சம்-நிதியுதவி-3038505.html
3038504 தருமபுரி தருமபுரி கந்தசஷ்டி பெருவிழா: சூரனை வதம் செய்தார் சுப்பிரமணியர் DIN DIN Wednesday, November 14, 2018 09:53 AM +0530 தருமபுரி குமாரசாமிப்பேட்டை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி பெருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை சுப்பிரமணியர்,  சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. 
குமாரசாமிப்பேட்டை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், கந்தசஷ்டி, லட்சார்ச்சனை பெருவிழா, கடந்த நவ.8-ஆம் தொடங்கியது.  நவ. 14-ஆம் தேதி வரை நடைபெறும் விழாவில் நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு பூஜைகள் மற்றும் லட்சார்ச்சனை நடத்தப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சுவாமி சுப்பிரமணியர் எழுந்தருளினார்.  இந்தத் திருத்தேருடன் சூரன் அமர்ந்திருத்த வாகனம், குமாரசாமிப்பேட்டை  திருக்கோயிலிருந்து நான்கு முனைச் சாலை சந்திப்பு வழியாக தலைமை அஞ்சல் அலுவலகம் அருகில் உள்ள திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்திற்கு வாண வேடிக்கை நிகழ்த்த,  ஊர்வலமாக அத்திருத்தேரில் வலம் வந்தனர். இதனைத் தொடர்ந்து, அங்கு,  யானை, சிங்கம், சேவல் வடிவத்தில்  வந்த சூரபத்மனை,  சுப்பிரமணிய சுவாமி வதம் செய்தார். இந்த சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் தருமபுரி நகரத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். மேலும், திருக்கோயில் நிர்வாகம் சார்பில், விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல,  அன்னசாகரம், லளிகம்,  பழைய பாப்பாரப்பட்டி, கம்பைநல்லூர் உள்ளிட்ட  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களிலும் சூரசம்ஹாரம்  நடைபெற்றது. விழாவின் நிறைவுநாளான புதன்கிழமை (நவ.14) காலை 10 மணிக்கு, குமாரசாமிப்பேட்டை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், பூர்த்தி ஹோமம்,  நண்பகலில் இடும்பனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையுடன் பக்தர்களுக்கு  அன்னதானம் வழங்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து, இரவு 7 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் முருகனுக்கு திருக்கல்யாணம் உத்ஸவம் நடைபெறுகிறது. மேலும், பொன்மயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுவாமி திருவீதி  உலா நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறையினர் மற்றும் சூரசம்ஹார விநாயகர் விழாக்குழுவினர்
செய்திருந்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/14/கந்தசஷ்டி-பெருவிழா-சூரனை-வதம்-செய்தார்-சுப்பிரமணியர்-3038504.html
3038502 தருமபுரி தருமபுரி மழை, பலத்த காற்று வீசும் போது  வெளியில் நடமாட வேண்டாம்: ஆட்சியர் DIN DIN Wednesday, November 14, 2018 09:52 AM +0530 மழை மற்றும் பலத்த காற்று வீசும்போது, பொதுமக்கள் வெளியில் நடமாட வேண்டாம் என்று  மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி அறிவுறுத்தியுள்ளார்.
புயல் பாதிப்பு தடுப்பு குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம்  ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, தலைமை வகித்து ஆட்சியர் சு.மலர்விழி பேசியது: வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல் வடதமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதியில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, நவ.14-ஆம் தேதி பிற்பகல் முதல் மழையும்,  நவ.15-ஆம் தேதி பலத்தக் காற்றும் வீசுக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் மழை மற்றும் காற்று பாதிப்பு தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், இயற்கை இடர்பாடுகள் குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு உடனடி தகவல் அளிக்கும் பொருட்டு, 252 ஊராட்சிகளிலும் தகவல் அளிப்பவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மரங்கள், மின்கம்பங்கள் கீழே விழுந்தால்  அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த அதிகாரிகள், போதிய  இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். போக்குவரத்து தடைபடும்போது, மாற்று வழியில் போக்குவரத்தைத் திருப்பி விடவேண்டும். அதேபோல, பொதுமக்களும், மழை மற்றும் பலத்தக் காற்று வீசும்போது வெளியில் நடமாட வேண்டாம். அதேபோல இடி மற்றும் மின்னல் ஏற்படும் வேளைகளில் தங்களது கால்நடைகளை பாதுகாப்பான இடங்களில் கட்டி வைக்க வேண்டும். மேலும், இடர்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தை 1077 என்கிற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்றார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/14/மழை-பலத்த-காற்று-வீசும்-போது-வெளியில்-நடமாட-வேண்டாம்-ஆட்சியர்-3038502.html
3038501 தருமபுரி தருமபுரி கடந்த ஆண்டில் 180 சிறார் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்: "சைல்டுலைன்' அமைப்பினர் தகவல் DIN DIN Wednesday, November 14, 2018 09:52 AM +0530 தருமபுரி மாவட்டத்தில் கடந்த 2017 ஏப்ரல் முதல் 2018 மார்ச் வரை 180 சிறார் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக  "சைல்டு லைன்' அமைப்பின் மாவட்ட இயக்குநர் எஸ். ஷைன் தாமஸ், மாவட்ட சமூக நல அலுவலர் ஜி. நாகலட்சுமி ஆகியோர் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அவர்கள் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:
தருமபுரி  "சைல்டு லைன்' (1098)  சார்பில் "என் நண்பன்' வார விழா செவ்வாய்க்கிழமை தொடங்கி வரும் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், புதன்கிழமை காலை கைப்பட்டை கட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதையடுத்து வியாழக்கிழமை அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, தருமபுரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பென்னாகரம் மற்றும் அரூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அதியமான்கோட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் சிறார் திருமணத்துக்குக் காரணம் பெற்றோர்களா அல்லது சிறார்களா என்ற தலைப்பில் விழிப்புணர்வு பட்டிமன்றம் நடத்தப்படுகிறது.
தொடர்ந்து வெள்ளிக்கிழமை தருமபுரி அரசு மருத்துவமனையில் இருந்து நான்கு சாலைச் சந்திப்பு வரை சிறார் திருமணத்துக்கு எதிராக விழிப்புணர்வு மனிதச் சங்கிலியும், சனிக்கிழமை முக்கல்நாயக்கன்பட்டி கிராமத்தில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்படவுள்ளது.
நவ. 19ஆம் தேதி தருமபுரி பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியும், நவ. 20ஆம் தேதி மாவட்ட அளவிலான கபடிப் போட்டியும் நடத்தப்படவுள்ளன.
தருமபுரி மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த 2011-இல் இருந்து சைல்டுலைன் செயல்பட்டு வருகிறது. 2017 ஏப்ரல் முதல் 2018 மார்ச் வரை 180 சிறார் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. 18 சிறார் தொழிலாளர்களை மீட்டு தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் மூலம் படிக்க வைத்து வருகிறோம். பள்ளி இடை நின்ற 37 சிறார்களை மீட்டு கல்வித் துறை மூலம் தொடர்ந்து படிக்க வைத்து வருகிறோம்.
தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தை சிறார்நேய மாவட்டமாக மாற்றுவதற்காக அனைத்துத் துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்களுக்கு பல்வேறு வகையான விழிப்புணர்வு கருத்தரங்குகளை, கணக்கெடுப்புப் பணிகளை நடத்தி வருகிறோம் என்றனர் அவர்கள்.
பேட்டியின்போது, சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் ஆர். ஆனந்தி உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/14/கடந்த-ஆண்டில்-180-சிறார்-திருமணங்கள்-தடுத்து-நிறுத்தம்-சைல்டுலைன்-அமைப்பினர்-தகவல்-3038501.html
3037800 தருமபுரி தருமபுரி தருமபுரியில் நாளை கூட்டுறவு வார விழா தொடக்கம் DIN DIN Tuesday, November 13, 2018 03:33 AM +0530
தருமபுரி மாவட்டத்தில் 65 - ஆவது கூட்டுறவு வார விழா நவ.14-ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.
இது குறித்து, தருமபுரி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் மா.சந்தானம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தருமபுரி மாவட்ட 65-ஆவது அகில இந்திய கூட்டுறவு வார விழா நவ.14 முதல் நவ.20 -ஆம் தேதி வரை ஒரு வாரம் காலம் நடைபெறவுள்ளது. முதல்நாளில் தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைமையகத்தில் கூட்டுறவு கொடியேற்று விழா மற்றும் அதியமான்கோட்டை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் மரக்கன்று நடப்பட உள்ளது.
இதைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கூட்டுறவுத் துறைப் பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. நவ.15-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு பாப்பாரப்பட்டி சிவா கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் இயற்கை வேளாண்மை மற்றும் செலவில்லா வேளாண்மை என்கிற தலைப்பில் கருத்தரங்கு நடைபெறவுள்ளது. நவ.16-ஆம் தேதி காலை 8 மணிக்கு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் ரத்ததானம் முகாம் நடைபெறுகிறது.
நவ.17 காலை 10.45 மணிக்கு தருமபுரி அரசு பொறியியல் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெறும் விழாவில், மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பங்கேற்று நலத் திட்ட உதவிகளை வழங்குகிறார். இதைத் தொடர்ந்து, நவ.18 காலை 8 மணிக்கு செம்மாண்டகுப்பம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் கால்நடை மருத்துவ முகாம் மற்றும் பி.துரிஞ்சிப்பட்டி, செம்மாண்டகுப்பம், சின்னாங்குப்பம், சின்னம்பள்ளி கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர் கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது. நவ.19 காலை 8 மணிக்கு தருமபுரி கூட்டுறவு நகர வங்கித் தலைமையகத்தில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது.
சாமனூர், பேகாரஅள்ளி, இருமத்தூர், சிட்லிங் கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர்களுக்கு கடன் வழங்கும் விளக்கக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதேபோல, நிறைவு நாளான நவ.20-ஆம் தேதி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொம்மிடி, கம்பைநல்லூர், அரூர் மற்றும் பாலக்கோடு கிளைகளில் கடன் வழங்கும் விளக்கக் கூட்டம் நடைபெறவுள்ளது என்றார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/13/தருமபுரியில்-நாளை-கூட்டுறவு-வார-விழா-தொடக்கம்-3037800.html
3037799 தருமபுரி தருமபுரி ஒகேனக்கல்லில் இரும்புத் தடுப்பு கம்பிகள் அமைக்க எதிர்ப்பு DIN DIN Tuesday, November 13, 2018 03:33 AM +0530
ஒகேனக்கல்லில் பிரதான அருவிக்கு செல்லும் பாதையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் இரும்புத் தடுப்பு கம்பிகள் அமைக்க, வியாபாரிகள், பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
ஒகேனக்கல்லுக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பிரதான அருவி வரை தங்களது வாகனங்களில் சென்று வந்தனர். இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு தங்கும் விடுதியின் அருகில் பிரதான அருவிக்குச் செல்லும் பாதையில் இரும்புத் தடுப்பு கம்பிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு வியாபாரிகள், சுற்றுலாப் பயணிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், பிரதான அருவிக்குச் செல்லும் சாலையில் இரும்புத் தடுப்பு கம்பிகள் அமைப்பதால், வியாபாரிகள், உள்ளூர்வாசிகள், சுற்றுலாப் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.எனவே மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து பிரதான அருவிக்கு செல்லும் சாலையில் இரும்புத் தடுப்பு கம்பிகள் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் என்றார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/13/ஒகேனக்கல்லில்-இரும்புத்-தடுப்பு-கம்பிகள்-அமைக்க-எதிர்ப்பு-3037799.html
3037798 தருமபுரி தருமபுரி பாப்பிரெட்டிபட்டி போராட்ட தேதி மாற்றம்: டிடிவி தினகரன் DIN DIN Tuesday, November 13, 2018 03:32 AM +0530
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டியில் புதன்கிழமை (நவ.14) நடைபெறவிருந்த உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை (நவ.15) நடைபெறும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்தக் கட்சி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:- பாப்பிரெட்டிபட்டி சட்டப்பேரவை தொகுதி மக்களின் கோரிக்கைகளையும், மேம்பாட்டையும் முற்றிலுமாக புறக்கணிக்கும் தமிழக அரசின் மக்கள் விரோத மனநிலையை கண்டிக்கும் வகையில், அங்கு புதன்கிழமை உண்ணாவிரத போராட்டத்துக்கு திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.
நீதிமன்றத்தில் முறையிடப்பட்டு, நீதிமன்ற அனுமதியுடன் பாப்பிரெட்டிபட்டியில் வரும் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/13/பாப்பிரெட்டிபட்டி-போராட்ட-தேதி-மாற்றம்-டிடிவி-தினகரன்-3037798.html
3037797 தருமபுரி தருமபுரி அரூரில் தேர்தல் பணிகள் குறித்து அ.தி.மு.க.வினருடன் அமைச்சர் ஆலோசனை DIN DIN Tuesday, November 13, 2018 03:32 AM +0530
அரூரில் இடைத் தேர்தல் பணிகள் குறித்து அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசுகையில், அரூர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தல், 2019 -இல் நடைபெறும் மக்களவைத் தேர்தல் பணிகளில் அதிமுக நிர்வாகிகள் எவ்வித தொய்வும் இல்லாமல் சிறப்பான முறையில் பணியாற்ற வேண்டும்.
அ.தி.மு.க. நிர்வாகிகள் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தால் அதனை மறந்து ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்ற வேண்டும். அனைத்து வாக்குப் பதிவு மையங்களிலும் முகவர்களை தேர்வு செய்து, வாக்காளர் பெயர் பட்டியல்களை சரிபார்க்க வேண்டும். தகுதியான வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க கட்சி நிர்வாகிகள் முயற்சிக்க வேண்டும்.
அதேபோல் மாவட்ட நிர்வாகம் சார்பில், அரூர் பேரூராட்சிக்கு உள்பட்ட 18 வார்டுகளிலும் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அரூர் நகரில் கழிவு நீர் கால்வாய் சேதம் இருந்தால் சீரமைப்பு செய்யப்படும். அதேபோல், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதில், முன்னாள் எம்.எல்.ஏ. எச்.ஜி ஆறுமுகம், மாவட்ட துணைச் செயலர் செண்பகம் சந்தோஷ், ஜெயலலிதா பேரவை ஒன்றியச் செயலர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பேரூராட்சி முன்னாள் தலைவர் பி.காவேரி, மாவட்ட பிரதிநிதி கீரை எஸ்.சம்பத், கூட்டுறவு வீட்டு வசதி சங்க முன்னாள் தலைவர் சாமுவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/13/அரூரில்-தேர்தல்-பணிகள்-குறித்து-அதிமுகவினருடன்-அமைச்சர்-ஆலோசனை-3037797.html
3037796 தருமபுரி தருமபுரி உடற்கூராய்வுக்குப் பிறகு சிட்−ங் சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு DIN DIN Tuesday, November 13, 2018 03:32 AM +0530
தருமபுரி மாவட்டம் சிட்லிங் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த நவ. 5ஆம் தேதி காலை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, 10ஆம் தேதி காலை உயிரிழந்த சிட்லிங் சிறுமியின் உடல் உடற்கூராய்வுக்குப் பிறகு திங்கள்கிழமை இரவு 8 மணிக்கு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம், சிட்லிங் பள்ளத்தாக்குப் பகுதியில் வசித்து வந்த 12ஆம் வகுப்பு பயிலும் பழங்குடியின மாணவி கடந்த நவ. 5ஆம் தேதி முற்பகல் 11.30 மணியளவில் அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ், ரமேஷ் ஆகியோரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக கோட்டப்பட்டி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரை அவர்கள் மாற்றி எழுதியதாகப் புகார் எழுந்தது. 7ஆம் தேதி பிற்பகலில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி 10ஆம் தேதி சனிக்கிழமை காலை 8 மணிக்கு அவர் உயிரிழந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோரும் சிட்லிங் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் கோட்டப்பட்டி- சிட்லிங் சாலையில் இரு நாள்களாக விடிய விடிய சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த இடத்துக்கு நேரில் சென்ற மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி, குற்றவாளிகளை 48 மணி நேரத்தில் பிடித்து, குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உறுதியளித்தார்.
அதன்பிறகு போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டாலும்,  சிட்லிங் சிறுமியின் பெற்றோர் திங்கள்கிழமை காலைதான் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர்.
ஆனாலும், பாலியல் பலாத்கார முயற்சிதான் எனப் புகாரை மாற்றி எழுதி, மருத்துவச் சிகிச்சைக்குத் தாமதப்படுத்திய காவல் துறை அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்தால் மட்டுமே உடற்கூராய்வுக்கு ஒப்புக்கொள்வோம் என இங்கு திரண்டிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், பாட்டாளி மக்கள் கட்சியினர், மலையாளிகள் சங்கத்தினர், சாதி ஒழிப்புச் சங்கத்தினர் தெரிவித்தனர்.
தொடர்ந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) மகேஷ்குமார், சார்- ஆட்சியர் ம.ப. சிவன்அருள் உள்ளிட்டோர் இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உறுதியான மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததைத் தொடர்ந்து, மாலை சுமார் 5.30 மணிக்கு மேல் உடற்கூராய்வுக்கு ஒப்புக்கொள்வதாக பெற்றோர் தெரிவித்தனர்.
அதன்பிறகு உரிய படிவங்களில் கையெழுத்து பெற்றுக் கொள்ளப்பட்டது. இதையடுத்து சுமார் 6.30 மணியளவில் டாக்டர் தண்டர்ஷிப், மதன்ராஜ், சுல்தானா ஆகியோரைக் கொண்ட மருத்துவக் குழுவினர் உடற்கூராய்வுப் பரிசோதனையைத் தொடங்கினர்.
சரியாக ஒன்றரை மணி நேரப் பரிசோதனைக்குப் பிறகு சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. சிட்லிங் கிராமத்தில் இரவு சிறுமியின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
மறைந்திருக்கும் மர்மங்களை விளக்குவார்களா அதிகாரிகள்?

சிட்லிங் சிறுமியின் பாலியல் மரணத்தில் மறைந்திருக்கும் மர்மங்களை அதிகாரிகள் விளக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சிறுமி பாலியல் பலாத்கார முயற்சி என்று முதல் தகவல் அறிக்கை தயாரிக்கப்பட்டது தொடங்கி, மருத்துவப் பரிசோதனை, சிறார் நலக் குழுமம் முன்னிலையில் ஆஜர்படுத்துவது, இல்லத்தில் தங்க வைத்தது, மருத்துவச் சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தது, சிகிச்சை அளித்தது வரையில் பெற்றோர் கூறி வந்த தகவல்களும், காவல் துறையினர் எழுதி - தயாரித்துள்ள அறிக்கைகளும் முற்றிலும் முரணாகவே உள்ளன.
சிறார் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் விரைவு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் முதன் முதலாகப் புகார்அளித்ததாகக் கூறப்படும் 5ஆம் தேதி இரவோ அல்லது சின்னச்சின்ன ஆவணப்படுத்தலுக்குப் பிறகு 6ஆம் தேதி காலையிலோ முழுமையான மருத்துவச் சிகிச்சைகள் சிட்லிங் சிறுமிக்குத் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், 7ஆம் தேதி மாலையில் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அதற்குபிறகும்கூட முறையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் மூன்று நாள்கள் கழித்து 10ஆம்தேதி காலை 9.10 மணிக்கு சிட்லிங் சிறுமி உயிரிழப்பு ஏற்பட்டிருக்க முடியாது. காப்பாற்றியிருக்க வேண்டும்.
சிட்லிங் பகுதியில் வாழும் சாதாரண அப்பாவி மலையாளி பழங்குடியின மக்களுக்கு எழும் இந்த சந்தேகங்களுக்கு விரைவில் விடையளிக்க வேண்டிய பொறுப்பு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்டக் காவல் துறைக்கு இருக்கிறது.
சுமார் 4 நாள்களாகவே மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ப. கங்காதர் சொந்த விடுப்பிலும், 11ஆம் தேதி பிற்பகலுக்குப் பிறகு மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி சென்னை தலைமைச் செயலகத்துக்கு முக்கிய அலுவலாகச் சென்றுவிட்டதாலும் இவை குறித்த விவரங்களை இறுதிப்படுத்த இயலவில்லை.
சார் -ஆட்சியர் ம.ப. சிவன்அருள் தருமபுரியை மையமாகக் கொண்ட அரசு மருத்துவமனை, குழந்தைகள் நலக் குழுமத்தின் காப்பகம் ஆகியவற்றில் தொடர் விசாரணையை மேற்கொண்டுள்ளார்.
அரூர் கோட்டாட்சியர், கோட்டப்பட்டி காவல் நிலையத்திலும், அரூர் அரசு மருத்துவமனையிலும் விசாரணைகளை நடத்தி வருகிறார்.
மாவட்ட நிர்வாகத்தின் முதல்நிலை அலுவலர்களான ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் வந்த பிறகே இச் சம்பவத்தின் முடிச்சுகள் அவிழும் எனத் தெரிகிறது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/13/உடற்கூராய்வுக்குப்-பிறகு-சிட்−ங்-சிறுமியின்-உடல்-பெற்றோரிடம்-ஒப்படைப்பு-3037796.html
3037795 தருமபுரி தருமபுரி நீலம் அமைப்பினர் மறியல்: 17 பேர் கைது DIN DIN Tuesday, November 13, 2018 03:31 AM +0530
சிட்லிங் சிறுமியின் உயிரிழப்புக்கு காரணமான அனைவர் மீதும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரி நீலம் பண்பாட்டு மையம் என்ற அமைப்பினர் திங்கள்கிழமை தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைப் பதாகைகளை ஏந்தியும், முழக்கங்களை எழுப்பியும் சாலையில் நின்ற அவர்களை, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் கைது செய்தனர். மையத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயா தலைமையில் 17 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/13/நீலம்-அமைப்பினர்-மறியல்-17-பேர்-கைது-3037795.html
3037794 தருமபுரி தருமபுரி இன்று பிஎஸ்என்எல் சிறப்பு மேளா DIN DIN Tuesday, November 13, 2018 03:31 AM +0530
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (நவ.13) பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில் மெகா மேளா நடைபெறவுள்ளதாகவும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தருமபுரி தொலைத்தொடர்பு பொதுமேலாளர் கே. வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.
இதன்படி மெகா மேளா நடைபெறும் இடங்கள்:
தருமபுரி இடென்பி தொலைபேசி நிலையம், ஒட்டப்பட்டி, பழைய தருமபுரி, தலைமை அஞ்சலகம், தொப்பூர், சின்னம்பள்ளி, பாலக்கோடு, ஜக்கசமுத்திரம், பண்ணந்தூர், பையர்நத்தம், கீரைப்பட்டி, அரூர், ஈச்சம்பாடி, சிங்காரப்பேட்டை, ராயக்கோட்டை, வெள்ளிச்சந்தை, பொம்மிடி, பஞ்சப்பள்ளி.
கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை, காந்தி சாலை, காவேரிப்பட்டணம், ஜெகதேவி, அரசுக் கலைக் கல்லூரி, வேப்பனப்பள்ளி.
ஒசூர் பேருந்து நிலையம், வட்டாட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை, பெல்லூர், சிப்காட், பாகலூர், ஊத்தனப்பள்ளி, உரிகம், தேன்கனிக்கோட்டை.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/13/இன்று-பிஎஸ்என்எல்-சிறப்பு-மேளா-3037794.html
3037793 தருமபுரி தருமபுரி இளைஞர் கைது DIN DIN Tuesday, November 13, 2018 03:30 AM +0530 அரூர் அருகே பாலியல் வன்கொடுமையால் மாணவி உயிரிழந்த சம்பவத்தில் சதீஷ் (22) என்பவரை கோட்டப்பட்டி போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், சிட்லிங் மலை கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பிளஸ் 2 மாணவியை, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இது குறித்து கோட்டப்பட்டி போலீஸார் வழக்குப்பதிந்து, சிட்லிங் கிராமத்தைச் சேர்ந்த சாமிக்கண்ணு மகன் சதீஷ் (22) என்பவரைக் கைது செய்தனர்.
முதலாவதாக, பள்ளி மாணவியை இளைஞர்கள் இருவரும் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது, அந்த வழக்கு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விசாரணை அதிகாரி மாற்றம்
பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த கோட்டப்பட்டி காவல் ஆய்வாளர் முத்து கிருஷ்ணன் மற்றும் கோட்டப்பட்டி போலீஸார் மீது, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிட்லிங் கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு புகார்களைத் தெரிவித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில், அரூர் வருவாய் கோட்டாட்சியர் ஜி.புண்ணியக்கோடி விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து, பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த காவல் ஆய்வாளர் முத்து கிருஷ்ணன் அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இளைஞர் சேலம் நீதிமன்றத்தில் சரண்
அரூர் அருகே பிளஸ் 2 மாணவியை பாலியல் பலாத்காரம்
செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞர் ரமேஷ், சேலம் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தார்.
தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள சிட்லிங் மலைக் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி, கடந்த நவ. 5 ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ், ரமேஷ் ஆகியோரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் குறித்து கோட்டப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் இளைஞர்கள் ரமேஷ் மற்றும் சதீஷ் ஆகியோர் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து இருவரையும் தேடி வந்த நிலையில், சதீஷை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்து வந்த ரமேஷ் திங்கள்கிழமை பிற்பகல் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இதையடுத்து, ரமேஷை 15 நாள் சிறைக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ரமேஷ் அழைத்துச் செல்லப்பட்டு, சேலம் மத்திய சிறையில்
அடைக்கப்பட்டார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/13/இளைஞர்-கைது-3037793.html
3037435 தருமபுரி தருமபுரி சிட்லிங்கில் பாலியல் வன்கொடுமையால் மாணவி உயிரிழந்த சம்பவம்: இளைஞர் கைது DIN DIN Tuesday, November 13, 2018 12:44 AM +0530
அரூர் அருகே பாலியல் வன்கொடுமையால் மாணவி உயிரிழந்த சம்பவத்தில் சதீஷ் (22) என்பவரை கோட்டப்பட்டி போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், சிட்லிங் மலை கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பிளஸ் 2 மாணவியை, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இது குறித்து கோட்டப்பட்டி போலீஸார் வழக்குப்பதிந்து, சிட்லிங் கிராமத்தைச் சேர்ந்த சாமிக்கண்ணு மகன் சதீஷ் (22) என்பவரைக் கைது செய்தனர்.
முதலாவதாக, பள்ளி மாணவியை இளைஞர்கள் இருவரும் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது, அந்த வழக்கு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விசாரணை அதிகாரி மாற்றம்:
பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த கோட்டப்பட்டி காவல் ஆய்வாளர் முத்து கிருஷ்ணன் மற்றும் கோட்டப்பட்டி போலீஸார் மீது, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிட்லிங் கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு புகார்களைத் தெரிவித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில், அரூர் வருவாய் கோட்டாட்சியர் ஜி.புண்ணியக்கோடி விசாரணை மேற்கொண்டார்.
இதையடுத்து, பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த காவல் ஆய்வாளர் முத்து கிருஷ்ணன் அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/13/சிட்லிங்கில்-பாலியல்-வன்கொடுமையால்-மாணவி-உயிரிழந்த-சம்பவம்-இளைஞர்-கைது-3037435.html
3037236 தருமபுரி தருமபுரி தருமபுரி இஸ்கானில் கோவர்த்தன பூஜை DIN DIN Monday, November 12, 2018 09:23 AM +0530 தருமபுரியில் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் (இஸ்கான்) சார்பில்  கோவர்த்தன பூஜை மற்றும் ஸ்ரீல பிரபுபாதர் மறைவு நாள் சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை (நவ.11) நடைபெற்றன.
தருமபுரியில் ஒட்டப்பட்டி பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ளது இஸ்கான் கிருஷ்ணர் கோயில். இங்கு ஞாயிற்றுக்கிழமை கோவர்த்தன பூஜையை முன்னிட்டு பகவான் ஸ்ரீ ராதாகிருஷ்ணர் மற்றும் பலராமருக்கு சந்தியா ஆரத்தியும், தொடர் ஆராதனைகளும் நடத்தப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் ஒசூர் இஸ்கான் தலைவர் சீனிவாச ஷியாம் தாஸ் பங்கேற்று,  ஸ்ரீமத் பாகவதம் பற்றிய சிறப்புச் சொற்பொழிவாற்றினார். இதில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் தருமபுரி இஸ்கான் பொறுப்பாளர் சாய்ராம் பாபு மற்றும் ஆலய மேற்பார்வையாளர் சனாதன வேணுதாரி தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/12/தருமபுரி-இஸ்கானில்-கோவர்த்தன-பூஜை-3037236.html
3037235 தருமபுரி தருமபுரி குரூப் 2 தேர்வு: தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 25,761 பேர் எழுதினர் DIN DIN Monday, November 12, 2018 09:22 AM +0530 தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப்-2 தேர்வை 25761 பேர் எழுதினர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் குரூப் -2 முதல் நிலைத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 44 மையங்களில் நடைபெற்ற தேர்வை 8779 பேர் எழுதினர். 3,358 பேர் விண்ணப்பித்திருந்தும் தேர்வெழுதவில்லை.
கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மையத்தில் நடைபெற்ற தேர்வை மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் ஆய்வு செய்தார். அப்போது, பள்ளி தலைமையாசிரியர் மகேந்திரன் உடனிருந்தார். 
தருமபுரி மாவட்டத்தில் 80 மையங்களில் 16,982 பேர் தேர்வெழுதினர். இம் மாவட்டத்தைச் சேர்ந்த 22,098 பேர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர். 
இவர்களுக்காக 80 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.14 பறக்கும் படைகளும், 14 நடமாடும் கண்காணிப்புக் குழுக்களும், 80 ஆய்வு அலுவலர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 16,982 பேர் மட்டுமே தேர்வெழுதினர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/12/குரூப்-2-தேர்வு-தருமபுரி-கிருஷ்ணகிரி-மாவட்டங்களில்-25761-பேர்-எழுதினர்-3037235.html
3037234 தருமபுரி தருமபுரி நவம்பர் 13 மின் தடை DIN DIN Monday, November 12, 2018 09:22 AM +0530 கடத்தூர்
தருமபுரி மாவட்டம், கடத்தூர் கோட்டத்துக்குள்பட்ட ராமியணஅள்ளி துணை மின் நிலையம், ஆர். கோபிநாதம்பட்டி துணை மின் நிலையம், கடத்தூர் துணை மின் நிலையம், பொம்மிடி துணை மின் நிலையம், வெ. முத்தம்பட்டி துணை மின் நிலையம் ஆகியவற்றில் செவ்வாய்க்கிழமை (நவ. 14) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் ஆர். ரவி அறிவித்துள்ளார்.
மின் விநியோகம் நிறுத்தப்படும் செய்யப்படும் பகுதிகள்: ராமியணஅள்ளி, சிந்தல்பாடி, பசுவாபுரம், காவேரிபுரம், தென்கரைக்கோட்டை, பூதநத்தம், பொம்பட்டி, நவலை, ஆண்டிப்பட்டி, ஜடையம்பட்டி, கர்த்தாங்குளம், ராமாபுரம். 
சுங்கரஅள்ளி, ரேகடஅள்ளி, கடத்தூர், சில்லாரஅள்ளி, தேக்கல்நாயக்கனஅள்ளி, புதுரெட்டியூர், நல்லகுட்லஅள்ளி, புட்டிரெட்டிபட்டி, மணியம்பட்டி, ஒடசல்பட்டி, ஒபிளிநாயக்கனஅள்ளி, புளியம்பட்டி, கதிர்நாயக்கனஅள்ளி, ராணிமூக்கனூர், லிங்கநாயக்கனஅள்ளி, மோட்டாங்குறிச்சி, நத்தமேடு.
பில்பருத்தி, அஜ்ஜம்பட்டி, பி. பள்ளிப்பட்டி, எஸ். பாளையம், பி. துறிஞ்சிப்பட்டி, பொம்மிடி, மல்லாபுரம், கே. மோரூர், கே.என். பட்டி, சுங்கரஅள்ளி, ரேகடஅள்ளி, கொண்டாரஅள்ளி, டி.ஆர். அள்ளி, வெ. முத்தம்பட்டி, வத்தல்மலை, பண்டாரசெட்டிபட்டி, சொரக்காபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/12/நவம்பர்-13-மின்-தடை-3037234.html
3037233 தருமபுரி தருமபுரி ஜூடோ போட்டி:  ஸ்டான்லி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் DIN DIN Monday, November 12, 2018 09:21 AM +0530 மாநில அளவிலான ஜூடோ போட்டிக்கு ஸ்டான்லி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மண்டல அளவிலான ஜூடோ போட்டிகள் கிருஷ்ணகிரியில் அண்மையில் நடைபெற்றது. இப் போட்டியில் பங்கேற்ற பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்
மகளிர் மிக மூத்தோர் பிரிவில் கே.நிகேதா, எஸ்.வினோதா முதலிடமும், எஸ்.சௌமியா, ஆர்.திவ்யா, எஸ்.சிவசங்கரி ஆகியோர் மூன்றாமிடமும், மூத்தோர் பிரிவில் டி.ஜனனி முதலிடமும், ஆர்.ராஜ ஸ்ரீ மூன்றாமிடமும், இளையோர் பிரிவில் பி.சகானா இரண்டாமிடமும், பி.சுமிதா மூன்றாமிடமும் பெற்றனர்.
ஆண்கள் மிக மூத்தோர் பிரிவில் பி.வினோத் கண்ணா, எம்.காண்டீபன் இரண்டாமிடம், எம்.ஹரிபிரசாத், ஜெ.மோகன்குமார் மூன்றாமிடம், இளையோர் பிரிவில் ஆர்.கே.மதன், ஜி.கதிர்வேல் ஆகியோர் இரண்டாமிடம், சப்- ஜூனியர் பிரிவில் வி.தினேஷ், ஆர்.அகரன், ஜி.பாலசந்துரு, ஜி.ஹரிஷ் ஆகியோர் மூன்றாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். இப் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகள் மாநில அளவிலான ஜூடோ போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.  விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியர்களை ஸ்டான்லி கல்வி  நிறுவனங்களின் தாளாளர் வி.முருகேசன், செயலர் மு.பிரு ஆனந்த் பிரகாஷ், உடல் கல்வி ஆசிரியர் ஆர்.சத்யராஜ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/12/ஜூடோ-போட்டி--ஸ்டான்லி-மெட்ரிக்-பள்ளி-மாணவர்கள்-சிறப்பிடம்-3037233.html
3037232 தருமபுரி தருமபுரி காரிமங்கலம் ஆகாயலிங்க கோயில் கும்பாபிஷேகம் DIN DIN Monday, November 12, 2018 09:21 AM +0530 காரிமங்கலம் அருணேசுவரர் கோயிலில் உள்ள ஆகாயலிங்கம், குபேரலிங்கம் கோயிலில் 123 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கவுதம மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த சிவலிங்கத்தால் காரிமங்கலம் மற்றும் அதன்  சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பொழிவும், மக்களும் சிறப்பாக வளர்ச்சியடைந்தனராம். காலப்போக்கில் இந்த லிங்க வழிபாடு குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில்  கந்திக்குப்பம் கால பைரவர சித்தர் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை  4 மணியளவில் கணபதி வழிபாட்டுடன் தொடங்கிய வேள்வி பூஜையை தொடர்ந்து மகாகும்பாபிஷேகம் சிவாச்சாரியார்களால் நடத்தப்பட்டது.நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் லிங்க தரிசனம் செய்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/12/காரிமங்கலம்-ஆகாயலிங்க-கோயில்-கும்பாபிஷேகம்-3037232.html
3037231 தருமபுரி தருமபுரி தமிழ்நாடு சிறார் நலக் கொள்கை அமலாக்கப்படுமா? சா. ஜெயப்பிரகாஷ் DIN Monday, November 12, 2018 09:20 AM +0530 18 வயதுக்கும் குறைவான சிறார்களைப் பாதுகாக்கும் வகையில் தேசிய சிறார் கொள்கை 2013-இன்படி வடிவமைக்கப்பட்ட தமிழ்நாடு சிறார் நலக் கொள்கையை மாநில அரசு அமலாக்க வேண்டும் என சிறார் பாதுகாப்பு செயற்பாட்டாளர்கள் கோருகின்றனர். 
அண்மைக்காலமாக நடைபெற்று வரும் சிறார் குற்றங்களைத் தொடர்ந்து இந்த கோரிக்கை வலுத்திருக்கிறது.
தேசிய சிறார் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட தேசிய சிறார் நலக் கொள்கை கடந்த 2013ஆம் ஆண்டு மத்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அமலாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக கோவா மாநிலத்தில் முதல் முறையாக அம்மாநில சிறார் நலக் கொள்கைகள் வரையறுக்கப்பட்டு அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 
தமிழ்நாடு மாநில சிறார் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இதேபோன்றதொரு மாநிலக் கொள்கையை வரையறுக்கும் பணிகளை கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தொடங்கியது. மாநிலம் முழுவதும் உள்ள சிறார் உரிமைகள் செயற்பாட்டாளர்கள், சட்ட வல்லுநர்கள், அரசு உயர் அலுவலர்களைக் கொண்ட பல்வேறு குழுக்களும் அமைக்கப்பட்டன. 
ஏறத்தாழ 2 ஆண்டுகள் நடைபெற்ற விவாத அரங்குகளின் முடிவில் தமிழ்நாடு மாநில சிறார் நலக் கொள்கை இறுதிப்படுத்தப்பட்டு, 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல்வர், முக்கிய அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆனால், இதுவரை சிறார் நலக் கொள்கைகள் ஏற்று முறைப்படி மாநில அரசால் அறிவிக்கப்படவில்லை. 
இதுகுறித்து கொள்கை தயாரிப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட தமிழ்நாடு மாநில சிறார் பாதுகாப்பு ஆணையத்தின் முன்னாள் உறுப்பினருமான முனைவர் டி. ரேவதி கூறியது:
சிறார் திருமணம் தடுப்பு, சிறார் குற்றங்கள் தடுப்பு, சிறார் கடத்தல் தடுப்பு ஆகியவற்றுடன் நின்றுவிடாமல், கல்வி உள்ளிட்டு எல்லா வகையான தாக்குதல்களில் இருந்தும் சிறார்களைப் பாதுகாக்கும் வகையில் அந்தக் கொள்கையை வடிவமைத்தோம்.
ஒரு வேளை அரசுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் மீண்டும் அந்த வரைவு அறிக்கையை விவாதத்துக்கு விட்டு சீர் செய்தாவது ஏற்றுக் கொள்ளலாம். அதில் நாங்கள் முரண்படவில்லை. ஏற்கிறோம். ஆனால், மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் தயாரிக்கப்பட்ட அந்தக் கொள்கையை அரசு பரிசீலனைக்காவது எடுத்துக் கொள்ள வேண்டும். ஏராளமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், சட்டப்படியான கட்டமைப்புகளை ஏற்படுத்தியும்கூட குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்பதன் அவசர- அவசியத்தைக் கருத்தில் கொண்டு மாநில அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என நம்புகிறோம்.
அவ்வாறு ஏற்கப்படும் பட்சத்தில் அனைத்துத் துறை சார்ந்த மேலும் கூடுதல் விழிப்புணர்வு நடவடிக்கைகள் பெருகும். எதிர்கொள்கிற மக்கள் மத்தியில், குறிப்பாக அவற்றை கையாளுகிற அரசுத் துறை அதிகாரிகள் மத்தியில் இன்னும் கூடுதல் விழிப்புணர்வு தேவைப்படுகிறது என்கிறார் ரேவதி.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/12/தமிழ்நாடு-சிறார்-நலக்-கொள்கை-அமலாக்கப்படுமா-3037231.html
3037230 தருமபுரி தருமபுரி வாலிபர் சங்கத்தினர் மறியல்; 15 பேர் கைது DIN DIN Monday, November 12, 2018 09:20 AM +0530 சிட்லிங் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால் உயிரிழந்த சம்பவத்தில் குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வலியுறுத்தி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 15 பேரை போலீஸார் கைது செய்தனர்.
வாலிபர் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலர் பிரவீன்குமார், மாவட்டச் செயலர் எழில் அரசு உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி முழக்கங்களும் எழுப்பப்பட்டன.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/12/வாலிபர்-சங்கத்தினர்-மறியல்-15-பேர்-கைது-3037230.html
3037229 தருமபுரி தருமபுரி "சிறார் பாதுகாப்பு அலகு கவனம் செலுத்தியிருந்தால்  மாணவியின் உயிரிழப்பைத் தடுத்திருக்கலாம்' DIN DIN Monday, November 12, 2018 09:19 AM +0530 தருமபுரி மாவட்டத்தில் செயல்படும் சிறார் பாதுகாப்பு அலகும், காவல் துறையும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் சிட்லிங் மாணவியின் உயிரிழப்பைத் தடுத்திருக்கலாம் என சிறார் பாதுகாப்பு செயற்பாட்டாளரும் தமிழ்நாடு சிறார் பாதுகாப்பு ஆணையத்தின் முன்னாள் உறுப்பினருமான பேராசிரியர் டி. ரேவதி தெரிவித்தார்.
சிட்லிங் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் உயிரிழந்த சம்பவம் குறித்து அவர் கூறியது:
சிறார் குற்றங்கள் தொடர்பான புகார்கள் வரும்போது உடனடியாக அந்தந்த மாவட்டங்களிலுள்ள சிறார் பாதுகாப்பு அலுவலருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். சிறார் பாதுகாப்புக் குழுமம் உடனடியாகக் கூடி சோதனைகள், வழக்கு, பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் முடிவெடுக்க வேண்டும். இவையனைத்தும் தேசிய சிறார் பாதுகாப்புக் கொள்கையில் வரையறுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் ஒரு காவல் அதிகாரி சிறார் பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் சீருடை அணியாமல், பாதிக்கப்பட்ட சிறாரிடமோ, குற்றம் சாட்டப்படும் சிறாரிடமோ விசாரணை நடத்த வேண்டும். அடுத்து நடக்க வேண்டிய தொடர் நடவடிக்கைகளை அவர் மாவட்ட அளவில்- துணைக் காவல் கண்காணிப்பாளர் நிலையிலுள்ள அலுவலருடன் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும்.
ஏற்கெனவே சட்டத்தில் கூறப்பட்டுள்ள இந்த வழிமுறைகளை முறையாகக் கடைப்பிடித்திருந்தால் மாணவி அப்போதே மருத்துவப் பரிசோதனைகளுக்கு உள்படுத்தப்பட்டிருப்பார். முறையான சிகிச்சை கிடைத்திருக்கும். புகார் மாற்றி எழுதியதான குற்றச்சாட்டுகள் எழாது.
இன்னும் சொல்லப் போனால் இதுபோன்ற பாதுகாப்புக் குழுக்களை வட்டார அளவிலும், கிராம அளவிலும் ஏற்படுத்த வேண்டும் என்ற விதிகளும் உள்ளன. ஏற்கெனவே சிறார் குற்றங்கள், சிறார் திருமணங்கள் அதிகம் என அறியப்படும் தருமபுரி போன்ற மாவட்டங்களில் இவை அமலாக்கப்பட்டிருக்க வேண்டும் என்றார் ரேவதி.
இதுகுறித்து மாவட்ட சிறார் பாதுகாப்பு அலகு வட்டாரங்களில் விசாரித்தபோது அவர்கள் கூறியது:
சிட்லிங் மாணவி வழக்கில் எங்களுக்கு போலீஸார் தெரிவித்த தகவல், மாணவி பாலியல் வன்கொடுமை முயற்சியில் சிக்கியுள்ளார் என்பதுதான். அப்படித்தான் காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தனர். அதனால், எங்களால் கூடுதல் கவனம் செலுத்த முடியவில்லை. சட்டப்படியான பரிசோதனைகளை மேற்கொள்ளத் தோன்றவில்லை என்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/12/சிறார்-பாதுகாப்பு-அலகு-கவனம்-செலுத்தியிருந்தால்--மாணவியின்-உயிரிழப்பைத்-தடுத்திருக்கலாம்-3037229.html
3037228 தருமபுரி தருமபுரி சிட்லிங்கில் பாலியல் வன்கொடுமையால் மாணவி உயிரிழந்த சம்பவம்: 2-ஆவது நாளாக மறியல்: ஆட்சியர் விசாரணை DIN DIN Monday, November 12, 2018 09:19 AM +0530 அரூர் அருகே பாலியல் வன்கொடுமையால் மாணவி உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி, மாணவியின் உறவினர்கள் 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் மறியலில் ஈடுபட்டனர்.
அரூர் வட்டம்,  சிட்லிங் மலைக் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பிளஸ் 2 மாணவியை, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனராம். இது தொடர்பாக, சிட்லிங் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் (22), ரமேஷ் (22) ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கோட்டப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
இந்த நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மாணவி திடீரென உயிரிழந்தார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளைக் கைது செய்யவும், மாணவியின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆட்சியர் விசாரணை
சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டக்காரர்களை சமரசம் செய்த மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி, மாணவியின் பிரேத பரிசோதனைகளை விடியோ பதிவுடன், சிறப்பு மருத்துவர் குழுவினர் உடற்கூறு ஆய்வு செய்யவும், தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் விசாரணை நடத்தவும் பரிந்துரை செய்யப்படும் என உறுதியளித்தார்.
மேலும், இச் சம்பவத்தில் தொடர்புடையவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யவும்,  புகார் மனுவை பெறாமல் அலைகழித்த கோட்டப்பட்டி போலீஸார் மீது துறை சார்ந்த விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
முன்னாள் எம்எல்ஏ பி.டில்லிபாபு, சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி, இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர் மாரியப்பன் உள்பட அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் பேச்சுவார்த்தையின்போது உடனிருந்தனர்.
இருவர் கைது?
இந்த சம்பவம் குறித்து காவல் ஆய்வாளர்கள் 3 பேர் தலைமையிலான  தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, ஏற்காடு பகுதியில் உறவினர்கள் வீட்டிலிருந்த சிட்லிங் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் ரமேஷ் (22), சாமிக்கண்ணு மகன் சதீஷ் (22) ஆகிய இருவரையும் தனிப்படை போலீஸார் கைது செய்திருப்பதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


நீதி விசாரணை வேண்டும்

சிட்லிங் மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் மாவட்டச் செயலர் எஸ். தேவராசன் வெளியிட்ட அறிக்கை:
சிட்லிங்கில் 16 வயதான சிறுமி அப்பகுதியைச் சேர்ந்த சதீஷ், ரமேஷ் ஆகியோரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இறந்துள்ளார். நவ. 5ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற்ற சம்பவத்துக்குப் பிறகு மறுநாள் 6-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  அன்றைய தினமே பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோரால் கொடுக்கப்பட்ட மனுவை போலீஸார் வாங்க மறுத்தது ஏன்? அன்றைக்கே நடவடிக்கை தொடங்கியிருந்தால் மாணவி உயிரிழப்பைத் தவிர்த்திருக்க முடியும். இதுதொடர்பாகவும் நீதி விசாரணை நடத்த வேண்டும்.
7-ஆம் தேதி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு 3 நாள்கள் சிகிச்சை வழங்கப்பட்டிருக்கிறது. அதன்பிறகுதான் 10ஆம் தேதி காலை உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் என்ன சிகிச்சை வழங்கப்பட்டது என்பது தொடர்பாகவும் நீதி விசாரணை நடத்த வேண்டும்.
உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரண நிதியாகவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டலச் செயலர் பொ. மு. நந்தன் மாவட்ட வருவாய் அலுவலரிடம் அளித்த மனு:
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதுடன், அவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைத்து பிணையில் வெளிவர இயலாமல் செய்து விசாரணையை முழுமையாக முடித்து தண்டனை பெற்றுத் தர வேண்டும். 
பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/12/சிட்லிங்கில்-பாலியல்-வன்கொடுமையால்-மாணவி-உயிரிழந்த-சம்பவம்-2-ஆவது-நாளாக-மறியல்-ஆட்சியர்-விசாரணை-3037228.html
3036579 தருமபுரி தருமபுரி குடிமைப் பணிகளுக்கு இலவசப் பயிற்சி DIN DIN Sunday, November 11, 2018 07:38 AM +0530 மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழக அரசின் சார்பில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வுக்கான  இலவசப் பயிற்சியில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்வமுள்ள இளைஞர்கள் சேர்ந்து பயன் பெறலாம்.
ரூ. 2 ஆயிரம் உணவுப்படி மற்றும் இலவச தங்குமிட வசதியும் செய்துத் தரப்படும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி- நவ. 16. நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள்- நவ. 25. மேலும் விவரங்களையும், விண்ணப்பப் படிவத்துக்கும் w‌w‌w.‌m‌k‌u‌n‌i‌v‌e‌r‌s‌i‌t‌y.‌o‌r‌g.‌i‌n  என்ற இணையதளத்தில் பெறலாம்.
இத்தகவல் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வெளியிட்ட  செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/11/குடிமைப்-பணிகளுக்கு-இலவசப்-பயிற்சி-3036579.html
3036578 தருமபுரி தருமபுரி முன்னாள் படை வீரர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் DIN DIN Sunday, November 11, 2018 07:38 AM +0530 கடந்த மூன்று ஆண்டுகளில் ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்கள் மற்றும் அலுவலர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் வரும் நவ. 14ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கத்திலுள்ள டிரேடு சென்டர் வளாகத்தில் நடைபெறவுள்ளதால், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குநர் (பொ) தே. பிரபாகர் தெரிவித்துள்ளார்.
இம்முகாமில் பல்வேறு பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இதில் பங்கேற்றுப் பயன்பெற விருப்பமுள்ளோர் w‌w‌w.‌d‌g‌r‌i‌n‌d‌i​a.​c‌o‌m, ‌w‌w‌w.‌t‌r‌i‌v‌i‌z.​c‌o‌m ஆகிய இணையதளங்களில் ஏதேனும் ஒன்றில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.  முன்பதிவு விவரங்களை தருமபுரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்துக்குத் தெரிவிக்க வேண்டும். முகாமுக்குச் செல்லும்போது தங்களின் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட வேலைவாய்ப்புக்குத் தேவையான ஆவணங்கள் தலா 5 பிரதிகளுடன் செல்ல வேண்டும்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/11/முன்னாள்-படை-வீரர்களுக்கு-வேலைவாய்ப்பு-முகாம்-3036578.html
3036577 தருமபுரி தருமபுரி அரசுப் பள்ளியில்  டெங்கு ஒழிப்பு பணிகள் DIN DIN Sunday, November 11, 2018 07:23 AM +0530 பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் டெங்கு ஒழிப்பு பணிகள் சனிக்கிழமை நடைபெற்றன .
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொ.மல்லாபுரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம், ஆதிதிராவிடர் மாணவர் விடுதி வளாகத்தில் புகை மருந்து அடிக்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றவும், குடிநீரை காய்ச்சி குடிக்கவும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, பொ.மல்லாபுரம் பேரூராட்சிக்கு உள்பட்ட 7 மற்றும் 10-ஆவது வார்டு பகுதியில் டெங்கு  ஒழிப்பு தூய்மைப் பணிகளை செயல் அலுவலர் மா.ராஜா ஆறுமுகம் தலையிலான பணியாளர்கள் மேற்கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/11/அரசுப்-பள்ளியில்-டெங்கு-ஒழிப்பு-பணிகள்-3036577.html
3036576 தருமபுரி தருமபுரி நூறு சதவீத மானியத்தில் கோழி வளர்க்க அழைப்பு DIN DIN Sunday, November 11, 2018 07:22 AM +0530 கோழி வளர்க்கும் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் 100 சதவீத மானியத்தில் தருமபுரி மாவட்டத்தில் 1600 பயனாளிகளுக்கு அசில் இன நாட்டுக் கோழிகள் வழங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தால் வழங்கப்பட்ட வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களின் பட்டியலில் பெயர் உள்ள பெண் பயனாளிகள் மட்டுமே இதில் பயன்பெற முடியும். ஏற்கெனவே விலையில்லா கறவைப் பசுக்கள், விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டங்களில் பயன்பெற்றிருக்கக் கூடாது. விதவைகள், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 
பயனாளிகளில் 30 சதவீதம் பேர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பில் இருந்து தேர்வு செய்யப்படுவர். ஒவ்வோர் ஊராட்சி ஒன்றியத்துக்கும் தலா 200 பேர் வீதம், மாவட்டத்தில் 1600 பேருக்கு தலா 25 பெட்டை மற்றும் சேவல்கள் வழங்கப்படவுள்ளன. 
தகுதியுடையோர் தங்களின் பெயர், முகவரி, புகைப்படம், செல்லிடப்பேசி எண் ஆகிய விவரங்களுடன் கூடிய விண்ணப்பத்தை ஆதார் அட்டை நகல், வங்கிக் கணக்குப் புத்தக நகல் ஆகியவற்றை இணைத்து அந்தந்தப் பகுதியிலுள்ள கால்நடை மருந்தக உதவி மருத்துவரிடம் வரும் நவ. 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு தருமபுரியிலுள்ள மண்டல கால்நடை இணை இயக்குநர் அலுவலகம் மற்றும் தருமபுரி மற்றும் அரூரிலுள்ள உதவி இயக்குநர் அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/11/நூறு-சதவீத-மானியத்தில்-கோழி-வளர்க்க-அழைப்பு-3036576.html
3036575 தருமபுரி தருமபுரி பென்னாகரத்தில் இறகுப் பந்துப் போட்டி DIN DIN Sunday, November 11, 2018 07:22 AM +0530 பென்னாகரம் ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் இறகுப் பந்துக் குழு சார்பில் இறகுப் பந்துப் போட்டிகள் பென்னாகரத்தில் அண்மையில் நடைபெற்றன. 
திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட அணிகள் இப்போட்டிகளில் பங்கேற்றன. நிறைவில், முதல் பரிசைப் பெற்ற தருமபுரி மனோஜ், சுசீந்திரன் ஆகியோருக்கு ரூ. 7500, இரண்டாம் பரிசைப் பெற்ற பென்னாகரம் செந்தில்குமார், பாலாஜி ஆகியோருக்கு ரூ. 6 ஆயிரம், மூன்றாம் பரிசு பெற்ற திருச்சி துரை, கலையரசன் ஆகியோருக்கு ரூ. 5 ஆயிரம், நான்காம் பரிசு பெற்ற பென்னாகரம் தங்கவேல், நாகராஜ் ஆகியோருக்கு ரூ. 4 ஆயிரம் ரொக்கப் பரிசுகளும் கோப்பைகளும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் மா. பழனி, ஆசிரியர்கள் தங்கவேல், கூத்தரசன், கணேசன், நாகராஜ், சேகர் ஆகியோர் செய்திருந்தனர். 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/11/பென்னாகரத்தில்-இறகுப்-பந்துப்-போட்டி-3036575.html
3036570 தருமபுரி தருமபுரி அரூர் அருகே  பாலியல் வன்கொடுமை: பிளஸ் 2 மாணவி சாவு; சாலை மறியல் DIN DIN Sunday, November 11, 2018 07:21 AM +0530 அரூர் அருகே பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட  பிளஸ் 2 மாணவி சனிக்கிழமை உயிரிழந்தார்.
பாப்பிரெட்டிப்பட்டி  பகுதியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்த அரூரை அடுத்த சிட்லிங் மலைக் கிராமத்தைச் சேர்ந்த 17 வயதான பிளஸ் 2 மாணவி, தீபாவளிப் பண்டிகைக்கு சொந்த ஊருக்குச் சென்றிருந்தார். அப்போது, அக் கிராமத்தைச் சேர்ந்த  இருவர் மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனராம்.
இதுகுறித்து கடந்த 6-ஆம் தேதி மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சிட்லிங் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் (22),  ரமேஷ் (22) ஆகிய இருவரை போக்சோ சட்டத்தின் கீழ் கோட்டப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்தனர். 
இதையடுத்து, தருமபுரியில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்கவைக்கப்பட்ட மாணவிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சனிக்கிழமை மருத்துவமனையில் மாணவி உயிரிழந்தார். 
இதனிடையே, உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கவும், இளைஞர்களைக் கைது செய்ய வலியுறுத்தி கோட்டப்பட்டி-சிட்லிங் சாலையில் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த அரூர் வருவாய்க் கோட்டாட்சியர் ஜி.புண்ணியகோடி, டிஎஸ்பி ஏ.சி.செல்லபாண்டியன் உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகாரிகள் மெத்தனம்?
பாலியல் வன்கொடுமை குறித்து தமது பெற்றோருடன் கோட்டப்பட்டி காவல் நிலையத்துக்கு நவ.5-ஆம் தேதி புகார் அளிக்க சென்ற மாணவியை போலீஸார் திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது. மேலும், அவருக்கு உடனடி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யாமல் போலீஸார் மெத்தனமாக செயல்பட்டதாகவும், மருத்துவமனையில் மாணவியின் பாதிப்பு குறித்து வழிகாட்டல் இல்லாததால் சிகிச்சையில் குறைபாடு ஏற்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.
மேலும் சம்பவம் நடைபெற்று ஏறத்தாழ 52 மணி நேரத்துக்குப் பிறகுதான் மாணவி மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.பாலியல் வன்கொடுமை நடந்துள்ளதாகக் கூட மருத்துவர்களிடம் முழுமையாகத் தெரிவிக்கப்படவில்லையாம். இந்த சம்பவத்தில் மெத்தனமாகச் செயல்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக  ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/11/அரூர்-அருகே--பாலியல்-வன்கொடுமை-பிளஸ்-2-மாணவி-சாவு-சாலை-மறியல்-3036570.html
3036574 தருமபுரி தருமபுரி அத்தூரனஅள்ளியில் குடிநீர்த் தட்டுப்பாடு DIN DIN Sunday, November 11, 2018 07:20 AM +0530 பாலக்கோடு ஒன்றியம், கொலசனஅள்ளி ஊராட்சி அத்தூரனஅள்ளியில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள இக் கிராமத்தில் 6 மாதங்களுக்கு முன்பு ஒகேனக்கல் குடிநீர்
விநியோகிப்பது நிறுத்தப்பட்டதாம். ஆழ்துளைக் கிணறுகளிலும் குடிநீர் வறண்டதால் குடிநீருக்கு நீண்ட தொலைவு செல்கின்றனர். இதுகுறித்து உள்ளாட்சி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் இப் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே அப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/11/அத்தூரனஅள்ளியில்-குடிநீர்த்-தட்டுப்பாடு-3036574.html
3036573 தருமபுரி தருமபுரி "வத்தல் மலைக்கு மினி பேருந்துகளை இயக்க வேண்டும்' DIN DIN Sunday, November 11, 2018 07:20 AM +0530 தருமபுரி அருகேயுள்ள வத்தல்மலைக்கு மினி பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 
வத்தல்மலையில் உள்ள கொட்டலாங்காடு பகுதியில் அச் சங்க நிர்வாகிகள் கூட்டம் ஒன்றியக்குழு உறுப்பினர் மாணிக்கம் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலர் ஜெ.பிரதாபன் பேசினார். இக் கூட்டத்தில், வத்தல் மலையில் பெரியூர், சின்னாங்காடு, ஒன்றியங்காடு, பால்சிலம்பு, கொட்டலாங்காடு, நாய்கனூர், மண்ணாங்குழி, திருவானப்பாடி, குழியனூர் ஆகிய கிராமங்களில் 5ஆயிரத்திற்கு மேற்பட்ட மலையாளி பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். 
இவர்கள் மலையிலிருந்து தருமபுரிக்கு செல்ல வசதியாக மினி பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வத்தல் மலையில் பயனாளிகளுக்கு விலையில்லா ஆடு வழங்கும் திட்டத்தில் அரசு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற நவ.26-ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க நடைபயணம் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/11/வத்தல்-மலைக்கு-மினி-பேருந்துகளை-இயக்க-வேண்டும்-3036573.html
3036572 தருமபுரி தருமபுரி மதுக் கடைகளை படிப்படியாக குறைக்க நடவடிக்கை DIN DIN Sunday, November 11, 2018 07:16 AM +0530 மதுக் கடைகளை படிப்படியாக குறைக்க  நடவடிக்கை எடுத்து வருவதாக மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
மதுக் கடைகளை மூட அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்த பல்வேறு குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் செய்தியாளர்களிடம் 
சனிக்கிழமை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியது:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மதுக் கடைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும் என தெரிவித்திருந்தார். அதனடிப்படையில், தற்போது மதுக் கடைகளை குறைக்க தமிழக அரசு வேகமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இதேபோல, தருமபுரி மாவட்டத்தில் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து எதுவுமே தெரியாமல் மக்கள் நீதி மய்யத்தினர் அக் கட்சியின் தலைவருக்கு தகவல் அளித்துள்ளனர்.
நல்லம்பள்ளி ஒன்றியத்தில் 14 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 20 உயர்நிலைப் பள்ளிகள், 2 அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. தருமபுரி மாவட்டத்தில் அதிமுக ஆட்சியில்தான் அதிக எண்ணிக்கையில் பள்ளிகள் தொடங்கப்பட்டன. நிகழ்கல்வியாண்டில் வத்தல்மலை உள்பட 5 உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாகவும், 5 நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. காரிமங்கலம் பகுதியை சுற்றுலாத்தலமாக்க வாய்ப்புகள் இல்லை.
தருமபுரி மாவட்டத்தில், தற்போது வரை 132 பேர் காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்றுள்ளனர். இதில், ஒருவருக்கு மட்டும் டெங்கு அறிகுறி இருந்தது தெரியவந்து. இவர், ஹைதராபாத்திலிருந்து காய்ச்சல் பாதிப்புடன் தருமபுரிக்கு வந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதால், தற்போது உடல் குணமாகி வருகிறார். 
மேலும், நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அலியாளம் அணைக்கட்டிலிருந்து தூள்செட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம், சின்னாறு உபரி நீரை புலிகரை வரையிலான 18 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம், எண்ணேகொல்புதூரிலிருந்து தென்பெண்ணையாற்று நீரை காரிமங்கலம் அருகேயுள்ள தும்பலஅள்ளி அணைக்கு கொண்டு வரும் திட்டம் ஆகியத் திட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்பட உள்ளன.
தருமபுரி மாவட்டத்திலிருந்து வேலை தேடி வெளியூருக்கு இடம் பெயர்வதைத் தடுக்க, நல்லம்பள்ளி அருகே 1783 ஏக்கரில் சிப்காட் தொழிற்பேட்டைக்கு நிலம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/11/மதுக்-கடைகளை-படிப்படியாக-குறைக்க-நடவடிக்கை-3036572.html
3036571 தருமபுரி தருமபுரி ஒளவையார் மகளிர் பள்ளியில் ரூ.5.62 கோடியில் புதிய கட்டடம்: அமைச்சர் கே.பி.அன்பழகன் DIN DIN Sunday, November 11, 2018 07:16 AM +0530 தருமபுரி ஒளவையார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்ட ரூ.5.62 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் கே.பி.அன்பழகன்.
ஒளவையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி தலைமையில் 1027 பேருக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்து. 
இவ் விழாவில், மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மாணவியருக்கு சைக்கிள்களை வழங்கி பேசியது:
பள்ளிக் கல்வியை முடித்த மாணவர்கள் உயர் கல்வி பயிலும் நோக்கில் தருமபுரி மாவட்டத்தில் புதிதாக 6 அரசு கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகக் கட்டுப்பாட்டில் இயங்கிய பலவகை தொழில்நுட்பக் கல்லூரி தற்போது அரசு கல்லூரியாகச் செயல்படுவதால் அங்கு பயிலும் மாணவர்கள் ரூ.2 ஆயிரம் கல்விக் கட்டணம் செலுத்தினால் போதுமானதாகும். 
நிகழ் கல்வியாண்டில் தருமபுரி மாவட்டத்தில் உயர் கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 98.41 சதவீதமாக உள்ளது. 
நீண்ட கால கோரிக்கையான, பள்ளி வளாகத்திற்கு இடையே செயல்பட்டு வரும் தருமபுரி வன அலுவலகத்துக்குச் சொந்தமான 2.44 ஏக்கர் நிலத்தை, பள்ளிக்கு பெற்று தர வேண்டும் என்கிற கோரிக்கையை அரசு நிறைவேற்றியுள்ளது. இதற்காக வனத் துறை இடத்தை பள்ளிக்கு வழங்க நிலமாற்றம் செய்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. 
இதேபோல, இங்கு செயல்படும் வனத்துறை அலுவலகத்துக்கு மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒளவையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ரூ.5.62 கோடி மதிப்பீட்டில் 34 வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிவறை மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றார்.
இதேபோல, காரிமங்கலம் அருகேயுள்ள அனுமந்தபுரம் மற்றும் பொம்மஅள்ளி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 251 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன. 
விழாவில், முதன்மைக் கல்வி அலுவலர் மு.ராமசாமி, பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத் தலைவர் டி.ஆர்.அன்பழகன், பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல் மற்றும் ஆசிரியர்கள், மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/11/ஒளவையார்-மகளிர்-பள்ளியில்-ரூ562-கோடியில்-புதிய-கட்டடம்-அமைச்சர்-கேபிஅன்பழகன்-3036571.html
3035955 தருமபுரி தருமபுரி மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும்: வைகோ DIN DIN Saturday, November 10, 2018 08:02 AM +0530 வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டத்துக்குள்பட்ட அரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியது:-
பண மதிப்பிழப்பு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கையால் தமிழக மக்கள் கோப உணர்ச்சியில் உள்ளனர். மத்திய அரசின் நடவடிக்கையின் காரணமாக,  வரும் மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.
நாட்டில் பல்வேறு மொழிகள், கலாசாரங்கள், இனங்கள் உள்ளன. இந்த நிலையில், இந்தியாவில் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கட்சி ஆட்சியில் இருக்க வேண்டும் என பாஜக, ஆர்.எஸ்.எஸ். திட்டம் தீட்டுகின்றன. இந்தச் செயல் ஜனநாயகத்தை அழிக்கும் முயற்சியாகும். இதனால்  சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் ராமர் கோயில் பிரச்னையை ஏற்படுத்தி, மோதலை உருவாக்க பாஜக அரசு முயற்சி செய்கிறது. பாஜக மீதும்,  பிரதமர் நரேந்திர மோடியின் மீதுள்ள வெறுப்பு காரணமாக, கர்நாடகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில், பாஜகவுக்கு எதிராக களம் இறங்கிய காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சியின் வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். தற்போது நாடு முழுவதும் மோடிக்கு எதிரான அலை உருவாகியுள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில் இதற்கான பலன் கிடைக்கும். தமிழக அரசு மீது  எழுந்துள்ள பல்வேறு குற்றச்சாட்டுகளால் அரசு நிர்வாகம் சீர்குலைந்துள்ளது என்றார் வைகோ.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/10/மக்களவைத்-தேர்தலில்-திமுக-கூட்டணி-வெற்றி-பெறும்-வைகோ-3035955.html
3035954 தருமபுரி தருமபுரி இண்டூர் அரசு மருத்துவமனையில் சித்தா பிரிவு தொடங்க வலியுறுத்தல் DIN DIN Saturday, November 10, 2018 08:01 AM +0530 தருமபுரி மாவட்டம், இண்டூரிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவப் பிரிவு தொடங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இண்டூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் வட்டார நிர்வாகக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: இண்டூர் மற்றும் பண்டஅள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான மருந்துகள் இருப்பு வைத்திருக்க வேண்டும். சித்த மருத்துவப் பிரிவைத் தொடங்க வேண்டும். அதிகப்படியான காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இண்டூர், தளவாய்அள்ளி ஏரிகளில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு, நிர்வாகக் குழு உறுப்பினர் எம்.ரத்தினவேல் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் எஸ்.தேவராசன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் மாதேஸ்வரன், சின்னசாமி, இண்டூர் பகுதி செயலர் எஸ்.பி.குட்டி, துணைச் செயலர்கள் பாலன், மாதையன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/10/இண்டூர்-அரசு-மருத்துவமனையில்-சித்தா-பிரிவு-தொடங்க-வலியுறுத்தல்-3035954.html
3035953 தருமபுரி தருமபுரி குத்துச் சண்டை, சிலம்பத்தில் மாணவர்கள் சாதனை DIN DIN Saturday, November 10, 2018 08:01 AM +0530 தருமபுரி மாவட்டம் இலளிகம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 19 மாணவ, மாணவியர் அண்மையில் சேலத்தில் நடைபெற்ற மண்டல அளவிலான குத்துச் சண்டை மற்றும் சிலம்பப் போட்டிகளில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.
குத்துச் சண்டையில் 8-ஆம் வகுப்பு மாணவி எஸ். திவ்யா, 9-ஆம் வகுப்பு மாணவி பி. சரண்யா ஆகியோர் தங்கமும், 9-ஆம் வகுப்பு மாணவி ஜி.தேவதர்ஷினி, 10-ஆம் வகுப்பு மாணவி எம்.சந்தியா, 6-ஆம் வகுப்பு மாணவி கே.ஷாலினி, 9-ஆம் வகுப்பு மாணவர் எஸ்.ராஜராஜன், 10-ஆம் வகுப்பு மாணவர் எஸ்.ஸ்ரீவிஷ்ணு, 9-ஆம் வகுப்பு மாணவர்கள் எஸ். தினேஷ்குமார், எஸ்.பிரவீன்குமார், 6-ஆம் வகுப்பு மாணவர் பி.தாமரை தமிழ்நிலவன் ஆகியோர் வெள்ளியும் பெற்றனர். 
10-ஆம் வகுப்பு மாணவர் எஸ்.இன்பத்தமிழன், 7-ஆம் வகுப்பு மாணவர் எஸ்.இளங்கோவன், 6-ஆம் வகுப்பு மாணவி ஆர்.ரேவதி, 9-ஆம் வகுப்பு மாணவியர் எஸ். நித்யா, எஸ்.சத்யா ஆகியோர் வெண்கலப் பதக்கம் பெற்றனர்.
சிலம்பப் போட்டியில் 9-ஆம் வகுப்பு மாணவியர் பி.ஆடலரசி, ஏ.சரண்யா, 11-ஆம் வகுப்பு மாணவி ஏ.காவியா, 7-ஆம் வகுப்பு மாணவர் எஸ்.ரத்தினகிரி ஆகியோர் வெண்கலப் பதக்கம் பெற்றனர்.
இவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் ப.சாக்ரடீஸ் மற்றும் கோ.குமாரசாமி ஆகியோரையும் பள்ளித் தலைமை ஆசிரியர் கே.சீனிவாசன், ஊர்கவுண்டர் உதயகுமார் உள்ளிட்டோர் பாராட்டினர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/10/குத்துச்-சண்டை-சிலம்பத்தில்-மாணவர்கள்-சாதனை-3035953.html
3035952 தருமபுரி தருமபுரி குடிசை வீட்டில் தீ: முதிய தம்பதி பலி DIN DIN Saturday, November 10, 2018 08:00 AM +0530 தருமபுரி மாவட்டம், தொப்பூர் அருகே குடிசை வீடு ஒன்றில் வெள்ளிக்கிழமை அதிகாலை நேரிட்ட தீ விபத்தில், தூங்கிக் கொண்டிருந்த முதிய தம்பதி உயிரிழந்தனர்.
தொப்பூர், சாமிசெட்டிப்பட்டி அருகேயுள்ள எஸ்.கே. புதூரைச் சேர்ந்தவர் செல்லபெருமாள் (80), விவசாயி. இவரது மனைவி முனியம்மாள் (70). இவர்களுக்கு வாரிசுகள் யாருமில்லை. தங்களின் விவசாய நிலத்தில் தனியாக குடிசை போட்டு வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலையில் இவர்கள் குடிசையில் திடீரென தீப்பற்றியது. தூங்கிக் கொண்டிருந்த இருவரும் தீயில் சிக்கினர்.
இவ்விபத்தில் முனியம்மாள் அந்த இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். செல்லபெருமாள் படுகாயங்களுடன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 
விபத்து குறித்து தொப்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/10/குடிசை-வீட்டில்-தீ-முதிய-தம்பதி-பலி-3035952.html
3035951 தருமபுரி தருமபுரி அரூரில் நவம்பர் புரட்சி தினம் DIN DIN Saturday, November 10, 2018 08:00 AM +0530 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரூர் ஒன்றியக் குழு சார்பில், நவம்பர் புரட்சி தின நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
அக்கட்சியின் ஒன்றியச் செயலர் என்.அல்லிமுத்து தலைமை வகித்தார். இதில், லெனின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாவட்டச் செயலர் ரவீந்திரபாரதி சிறப்புரை நிகழ்த்தினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டார துணைச் செயலர்கள் ஆர்.நடராஜன், ஜி.வெங்கடாசலம் உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/10/அரூரில்-நவம்பர்-புரட்சி-தினம்-3035951.html
3035950 தருமபுரி தருமபுரி பன்றிக் காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் DIN DIN Saturday, November 10, 2018 07:59 AM +0530 அரூரில் பன்றிக் காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரூர் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமை செயல் அலுவலர் செ.நந்தகுமார் தொடக்கி வைத்தார்.
இதில், கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும், இருமல் மற்றும் தும்பல் வரும் போது கைக்குட்டைகளை பயன்படுத்த வேண்டும். காய்ச்சல், இருமல், தொண்டை வலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். பன்றிக் காய்ச்சல் இருந்தால் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவரிடம் கை குலுக்குதல், கட்டித் தழுவுதல் கூடாது என்பன உள்ளிட்ட விழிப்புணர்களை வட்டார மருத்துவ அலுவலர் ஆர்.தொல்காப்பியன் தலைமையிலான  மருத்துவக் குழுவினர் ஏற்படுத்தினர்.
இதில், துப்புரவு ஆய்வாளர் கோ.சிவக்குமார்  உள்ளிட்ட பேரூராட்சி பணியாளர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/10/பன்றிக்-காய்ச்சல்-விழிப்புணர்வு-முகாம்-3035950.html
3035949 தருமபுரி தருமபுரி பண மதிப்பிழப்பு தினம்: காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் DIN DIN Saturday, November 10, 2018 07:59 AM +0530 பண மதிப்பிழப்பு தினத்தை கருப்பு தினமாகக் கடைப்பிடித்து, தருமபுரி மாவட்ட காங்கிரஸ் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டத் தலைவர் கோவி.சிற்றரசு தலைமை வகித்தார். ராம சுகந்தன் முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்டத் தலைவர்கள் பாலகிருஷ்ணன், ராஜாராம் வர்மா, இளங்கோவன், நகரத் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை அவர்கள் விளக்கிப் பேசினர். மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களும் எழுப்பப்பட்டன. 
கிருஷ்ணகிரியில்... கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, முன்னாள் மாநிலச் செயலர் அக.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மாநில பொதுக் குழு உறுப்பினர்கள் நாராயணமூர்த்தி, ராமநாதன், தகி, பாலகிருஷ்ணன், ஷானவாஸ், செயற்குழு உறுப்பினர் ஏகம்பவாணன், முன்னாள் மாவட்டத் தலைவர் ஜேசுதுரை, நகரத் தலைவர் ரகமத்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கிருஷ்ணகிரி தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் சுப்பிரமணி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டங்களில் மத்திய அரசைக் கண்டித்தும், பண மதிப்பிழப்பால் ஏற்பட்ட பொருளாதார சீரழிவைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.
ஒசூரில்...  ஒசூர் ரயில் நிலையம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் தலைமை வகித்தார். ஒசூர் நகரத் தலைவர் ஆர்.நீலகண்டன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. கே.கோபிநாத் கலந்துகொண்டார். இதில், மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.  
இதில், ரங்காரெட்டி, சாதிக்கான், சீனிவாச ரெட்டி, சந்துரு, பத்தலப்பள்ளி நாகராஜ், வெங்கடேஷ், சூரிய கணேஷ், முருகன், ஆதில், அன்பு, விஸ்வநாதன், முனிராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/10/பண-மதிப்பிழப்பு-தினம்-காங்கிரஸார்-ஆர்ப்பாட்டம்-3035949.html
3035948 தருமபுரி தருமபுரி மக்கள் வெற்றி பெற வேண்டும்: கமல்ஹாசன் DIN DIN Saturday, November 10, 2018 07:59 AM +0530 தேர்தலில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதைவிட, மக்கள் வெற்றி பெற வேண்டும் என்றார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன்.
தருமபுரி மாவட்டத்துக்கு உள்பட்ட நல்லம்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற "மக்களுடனான பயணம்' நிகழ்ச்சியில் பங்கேற்று,  அவர் மேலும் பேசியது:
அரசுப் பள்ளிகள் இல்லை, ஆனால், டாஸ்மாக் மதுக் கடைகள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் அரை நூற்றாண்டாக சாராயம் ஆறாக ஓடுகிறது. இதை ஒரே நாளில் நிறுத்த முடியாது. இதற்கு இன்னும் ஒரு தலைமுறை ஆகும். மக்கள் நீதி மய்யம் சொல்வதெல்லாம் மது குறைப்பு தான்.  அரசு செய்ய வேண்டிய வேலையைத் தனியார் செய்கிறார்கள். தனியார் செய்ய வேண்டிய வேலையை அரசு செய்கிறது. இந்த அநியாயத்தை அகற்றுவோம் என்று உறுதியளிக்கிறோம். ஆனால், மக்கள் எங்களுக்கு ஓர் உறுதியைத் தர வேண்டும்.
வாக்குகளை விற்க கூடாது: மொத்தமாக,  5 ஆண்டுகளுக்கு ஐந்தாயிரமோ, பத்தாயிரமோ என ரூபாயை கொடுத்துவிட்டு வெற்றி பெறலாம் என்று யாரும் நினைக்கக் கூடாது. உங்கள் விலை அதுவல்ல. விற்கவே கூடாது என்பதை, மிகவும் மலிவாக விற்றுவிட்டு செல்லக் கூடாது என்பதுதான் எங்களின் மன்றாடல்.
இது நம் தமிழ்நாடு. தவறுகளையெல்லாம் நாமே செய்துவிட்டு, நம்முடைய விதி என்று புலம்பி கவலைப்படுவதில் பிரயோஜனம் இல்லை. வாக்குதான் மக்களின் பலமான ஆயுதம். வாக்குகளை விற்றுவிட்டால் ஐந்து ஆண்டுகள் வாழ்க்கையில் காணாமல் போய்விடும். யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை விட மக்கள் வெற்றி பெற வேண்டும்.
கைக் காட்டிச் செல்லும் நடிகன் அல்ல நான். முழுநேர அரசியல் வாதிகளுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். கடந்த மூன்று மாதங்களில் மக்களின் மனங்களைத் தொட்டிருக்கிறோம். இதை நாங்கள் கடமையாகச் செய்கிறோம் என்றார் கமல்ஹாசன். 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/10/மக்கள்-வெற்றி-பெற-வேண்டும்-கமல்ஹாசன்-3035948.html
3035248 தருமபுரி தருமபுரி பிஎஸ்என்எல்லின் விழாக்கால தனலட்சுமி திட்டம் நவ. 23 வரை நீட்டிப்பு DIN DIN Friday, November 9, 2018 06:59 AM +0530 பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில் விழாக்கால கட்டண தள்ளுபடி சலுகை வழங்கும் தனலட்சுமி திட்டம், வரும் நவ. 23-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தருமபுரி தொலைத்தொடர்பு மாவட்ட பொது மேலாளர் வெங்கட்ராமன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு விழாக்கால சிறப்பு திட்டமாக தனலட்சுமி திட்டத்தை அக். 18-ஆம் தேதி முதல் நவ. 7-ஆம் தேதி வரை அறிவித்தது.
இதன்படி, தரைவழி மற்றும் செல்லிடப்பேசிகளின் கட்டணங்களை செலுத்தும்போது ஒரு சதவீதம் தள்ளுபடியும், நிறுவன வாடிக்கையாளர்களுக்கு இரு சதவீத தள்ளுபடியும் வழங்கப்படும். முன்கூட்டியே கட்டணத் தொகையை செலுத்துவோருக்கு 3 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படும். இத்திட்டம் வரும் நவ. 23-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இச்சலுகையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/09/பிஎஸ்என்எல்லின்-விழாக்கால-தனலட்சுமி-திட்டம்-நவ-23-வரை-நீட்டிப்பு-3035248.html
3035247 தருமபுரி தருமபுரி மானிய விலையில் வீட்டுத்தோட்ட காய்கறி விதைகளை பெறலாம் DIN DIN Friday, November 9, 2018 06:58 AM +0530 மானிய விலையில் வீட்டுத்தோட்ட காய்கறி விதைகளை பெறலாம் என தோட்டக்கலைத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் அண்ணாமலை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தின் புறநகர் மற்றும் கிராமப் புறங்களில் உள்ள வீட்டுத்தோட்டங்களில் காற்கறிகள் பயிரிடுவதை ஊக்குவிக்கும் பொருட்டு, வீட்டுத்தோட்ட காய்கறி விதை தளைகள் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதால் இத்திட்டம் நிகழாண்டும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, நிகழாண்டில் ரூ.25 மதிப்புடைய உயர் விளைச்சல் தரும் வெண்டை, முருங்கை , தட்டைப்பயிர், மிளகாய் மற்றும் அவரை ஆகிய காய்கறிகளில் ஏதேனும் ஐந்து காய்கறி விதைகள் தளைகள் தருமபுரி மாவட்ட நகரம் மற்றும் கிராமப் புறங்களில் 40 சதவீத மானிய விலையில் விநியோகிக்கப்படுகின்றன. ரூ.25 மதிப்புடைய ஒரு காய்கறி விதை தளைக்கு அரசு மானியமாக ரூ.10 வழங்கப்படுகிறது. பயனாளிகள் ரூ.15 செலுத்தி விதை தளைகளை பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டத்தில் ஒவ்வொரு பயனாளியும் அதிகபட்சமாக ஆறு காய்கறி தளைகள் வரை பெறலாம். இத் தளைகளை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களின் மூலம் பெற்று பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/09/மானிய-விலையில்-வீட்டுத்தோட்ட-காய்கறி-விதைகளை-பெறலாம்-3035247.html
3035246 தருமபுரி தருமபுரி கிருஷ்ணகிரிக்கு புறப்பட்டது தொடர் சைக்கிள் பேரணி DIN DIN Friday, November 9, 2018 06:58 AM +0530 தருமபுரியில் மூன்று நாள்கள் நடைபெற்ற ஆரோக்கிய பாரத விழிப்புணர்வு சைக்கிள் பேரணி வியாழக்கிழமை கிருஷ்ணகிரிக்கு புறப்பட்டது.
ஆரோக்கிய பாரத விழிப்புணர்வு சைக்கிள் பயணம் அண்மையில் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் தொடங்கியது. இப்பேரணி பயணக்குழு பல்வேறு மாவட்டங்கள் வழியாக கடந்த நவ. 6-ஆம் தேதி சேலத்திலிருந்து தருமபுரிக்கு வந்தடைந்தது. தருமபுரிக்கு வந்த இக்குழுவினருக்கு உணவு பாதுகாப்புத் துறை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மூன்று நாள்களாக உணவு கண்காட்சி, விழிப்புணர்வு நாடகம், கலை நிகழ்ச்சிகள், கோலப் போட்டிகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் உணவு கலப்படம் கண்டறிவது, ஆரோக்கியமான உணவு தேர்வு செய்து உள்கொள்வது உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தருமபுரி மாவட்டத்தில் நிகழ்ச்சிகளை நிறைவு செய்த இப்பேரணி கிருஷ்ணகிரிக்கு புறப்பட்டது.
தருமபுரி ஒளவையார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி பங்கேற்று கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மருத்துவர் பிருந்தா, ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/09/கிருஷ்ணகிரிக்கு-புறப்பட்டது-தொடர்-சைக்கிள்-பேரணி-3035246.html
3035245 தருமபுரி தருமபுரி தனியார் பேருந்து மோதியதில் தொழிலாளி சாவு DIN DIN Friday, November 9, 2018 06:57 AM +0530 அரூரில் தனியார் பேருந்து மோதியதில் தொழிலாளி புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.
அரூரை அடுத்த கோபிநாதம்பட்டியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (30). இவர், திருப்பூரில் தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி லட்சுமிக்கு அண்மையில் அரூர் அரசு மருத்துவமனையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.
இதையடுத்து, மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்துவிட்டு, வீட்டுக்கு செல்ல தனது இருசக்கர வண்டியில் அரூர்-சேலம் பிரதான சாலையில் சென்றார். அரூரில் உள்ள தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் சென்ற போது, எதிரே வந்த தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அரூர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/09/தனியார்-பேருந்து-மோதியதில்-தொழிலாளி-சாவு-3035245.html
3035244 தருமபுரி தருமபுரி நாளை பொது விநியோகத் திட்ட குறைகேட்பு முகாம் DIN DIN Friday, November 9, 2018 06:57 AM +0530 தருமபுரி மாவட்டத்தில், பொது விநியோகத் திட்ட குறைகேட்பு முகாம் சனிக்கிழமை நடைபெற உள்ளது என ஆட்சியர் சு.மலர்விழி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவு துறை மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழகத்தினரால் நடத்தப்படும் பொது விநியோகத் திட்ட நியாய விலைக் கடைகளில் நுகர்வோருக்கு முறையாக பொருள்கள் வழங்கப்படுவதை உறுதிபடுத்தவும், பிற குறைகள் தொடர்பாகவும் வட்ட அளவிலான குறைகேட்பு முகாம் நவ. 10-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
இதில், வட்ட வழங்கல் அலுவலர்கள், கூட்டுறவு சார்-பதிவாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள், தனி வருவாய் ஆய்வாளர்கள் சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடை விற்பனையாளர் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
முகாம் நடைபெறும் கிராமத்திலுள்ள நியாய விலைக் கடையில் பொருள்கள் பெறுவோர் அவர்களுடைய குறைகளை மனுக்களாக அளித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். இம் முகாம்கள், தருமபுரி அருகேயுள்ள ஜாலிஅள்ளி, பென்னாகரம் வட்டம், சின்னம்பள்ளி, பாலக்கோடு வட்டம், புலிகரை, அரூர் வட்டம், எச்.அக்ரஹாரம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கோழிமேக்கனூர், நல்லம்பள்ளி வட்டம், மிட்டா தின்னள்ளி மற்றும் காரிமங்கலம் வட்டம், எலுமிச்சனஅள்ளி ஆகிய நியாய விலைக் கடைகளில் நடைபெற உள்ளன. எனவே, பொதுமக்கள் இந்த முகாம்களில் கலந்துகொண்டு தங்களது குறைகளை நிவர்த்தி செய்துகொள்ளலாம் என்றார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/09/நாளை-பொது-விநியோகத்-திட்ட-குறைகேட்பு-முகாம்-3035244.html
3035243 தருமபுரி தருமபுரி மருத்துவமனையில் பெண் உயிரிழப்பு: உறவினர்கள் சாலை மறியல் DIN DIN Friday, November 9, 2018 06:56 AM +0530 மொரப்பூரில் தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக புகார் தெரிவித்து, அவரது உறவினர்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
   அரூர் வட்டம், சுண்டாங்கிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கார்மேகம் மனைவி தவமணி (37).  இவரது, வலது கையின் பெரு விரலில் காயம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து,  மொரப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாராம்.  அங்கு தவமணிக்கு இரண்டு ஊசிகளில் மருந்துகள் ஏற்றியதாகக் கூறப்படுகிறது.  அப்போது  சுமார் 10 நிமிட இடைவெளியில் தவமணி உயிரிழந்தாராம்.
  இதையடுத்து,  தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையின் காரணமாக தவமணி உயிரிழந்ததாகப் புகார் தெரிவித்து,  அவரது உறவினர்கள மொரப்பூர் மேம்பாலத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  தொடர்ந்து, மொரப்பூர் காவல் நிலையத்தையும் முற்றுகையிட்டனர்.
     அரசு அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு சாலை  மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.  இந்த சாலை மறியல் காரணமாக,  அரூர்- தருமபுரி, கிருஷ்ணகிரி சாலையில்  சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
  தகவல் அறிந்து வந்த அரூர் வருவாய் கோட்டாட்சியர் ஜி.புண்ணியக்கோடி தலைமையிலான அரசு அதிகாரிகள் சிகிச்சையளித்த மருத்துவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/09/மருத்துவமனையில்-பெண்-உயிரிழப்பு-உறவினர்கள்-சாலை-மறியல்-3035243.html
3034787 தருமபுரி தருமபுரி அரூர், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிகளின் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்: அமைச்சர் கே.பி.அன்பழகன் DIN DIN Thursday, November 8, 2018 04:01 AM +0530  

அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவது உறுதி என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
இரு தொகுதிகளுக்கு உள்பட்ட தீர்த்தமலை, அ.புதுப்பட்டி, கடத்தூர் ஆகிய இடங்களில் அதிமுக நிர்வாகிகள், வாக்குச் சாவடி மைய முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், கே.பி.அன்பழகன் பேசியது :-
அதிமுகவில் பல்வேறு பதவி சுகங்களை அனுபவித்து விட்டு, தற்போது கட்சிக்கு துரோகம் செய்து, ஆர்.கே. நகர் தொகுதி எம்எல்ஏ டி.டி.வி. தினகரனின் அணியில் இருக்கும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பி.பழனியப்பன், ஆர்.முருகன் ஆகியோருக்கு பாடம் புகட்டும் வகையிலும் அதிமுகவினர் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் கட்சிப் பணியாற்ற வேண்டும்.
அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் சிறு, சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நல்லாசியுடன், அனைவரும் ஒற்றுமையுடன் கட்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து வாக்குப் பதிவு மையங்களுக்கும் முகவர்களை தேர்வு செய்து, விரைவான தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும். இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் யாராக இருந்தாலும் ஒருங்கிணைந்து கட்சிப் பணியாற்ற வேண்டும்.
அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டங்களை வாக்காளர்களிடம் விளக்கிக் கூற வேண்டும். வீடு, வீடாகச் சென்று ஒவ்வொரு வாக்காளரையும் நேரில் சந்தித்து வாக்குகளை பெற வேண்டும். அயாரது உழைத்தால், இரு தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவது உறுதி என்றார் அன்பழகன்.
கூட்டத்தில் சமூக நலம்- சத்துணவுத் திட்ட அமைச்சர் டாக்டர் வி.சரோஜா, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், முன்னாள் அமைச்சர்கள் முக்கூர் என்.சுப்பிரமணியன், எஸ்.செம்மலை, பா.மோகன், அதிமுக விவசாய பிரிவுத் தலைவர் டி.ஆர்.அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ கே.சிங்காரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/08/அரூர்-பாப்பிரெட்டிப்பட்டி-தொகுதிகளின்-இடைத்தேர்தலில்-அதிமுக-வெற்றி-பெறும்-அமைச்சர்-கேபிஅன்பழகன்-3034787.html
3034786 தருமபுரி தருமபுரி இடைத்தேர்தல் பணியைத் தொடங்கிய அதிமுகவினர் DIN DIN Thursday, November 8, 2018 04:01 AM +0530
தருமபுரி மாவட்டத்துக்குள்பட்ட அரூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவிக்காத நிலையில், அதிமுகவினர் சுவர் விளம்பரப் பணிகளை தொடங்கியுள்ளனர்.
அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி குழப்பத்தையடுத்து, அரூர் சட்டப் பேரவைத் தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஆர்.முருகன், தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால், இடைத் தேர்தல் நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த நிலையில், அதிமுகவினர் அரூர் நகரின் முக்கியப் பகுதிகளில் சுவர் விளம்பரங்களை எழுதத் தொடங்கியுள்ளனர். இலவச வீடு, 100 யூனிட் இலவச மின்சாரம், முதியோருக்கு உதவித் தொகை ரூ.1000, தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய சின்னம் இரட்டை இலை என்ற வாசகத்துடன் சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டுள்ளன.
இந்த விளம்பரங்களில் வேட்பாளர் பெயர், தேர்தல் தேதி மட்டும் எழுவதற்கான இடங்கள் காலியாக விடப்பட்டுள்ளன. அரூர் நகர் மற்றும் நாச்சினாம்பட்டி பகுதியில் அரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அதிமுகவினர் இடைத்தேர்தல் குறித்த சுவர் விளம்பரங்களை எழுதியுள்ளனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/08/இடைத்தேர்தல்-பணியைத்-தொடங்கிய-அதிமுகவினர்-3034786.html
3034785 தருமபுரி தருமபுரி விதிமுறைகளை மீறி பட்டாசு வெடிப்பு: 46 பேர் மீது வழக்கு DIN DIN Thursday, November 8, 2018 04:00 AM +0530  

தீபாவளியன்று விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக, தருமபுரி மாவட்டத்தில் 46 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தீபாவளி திருநாளன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையொட்டி, தமிழகத்தில் காலை, மாலை வேளைகளில் ஒரு மணி நேரம் பட்டாசுகளை வெடிக்கலாம் என நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
இந்தக் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என காவல்துறை சார்பில் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தருமபுரி மாவட்டம் முழுதும் விதிமுறைகளை மீறி, பட்டாசு வெடித்ததாக 46 பேர் மீது போலீஸார், இந்திய தண்டனை சட்டம் 278,285, 286 ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/08/விதிமுறைகளை-மீறி-பட்டாசு-வெடிப்பு-46-பேர்-மீது-வழக்கு-3034785.html
3034784 தருமபுரி தருமபுரி தனியார் பேருந்து முன் படுத்து தகராறு: இளைஞர் கைது DIN DIN Thursday, November 8, 2018 04:00 AM +0530
தனியார் பேருந்து சக்கரத்தின் முன் படுத்து தகராறு செய்ததாக, இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
போச்சம்பள்ளியை அடுத்த குள்ளனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி மகன் தூயமணி(27) . இவர் தனது மனைவி, ஒரு வயது குழந்தையுடன் போச்சம்பள்ளியில் இருந்து மளிகைப் பொருள்களை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த ஜிங்கல்கதிரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தொடர்ந்து ஹாரன் அடித்துச் சென்றனராம். இதனால் ஆத்திரமடைந்த தூயமணி, வாகனத்தை நிறுத்தி இளைஞர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம்.
சாலையின் நடுவே ஏற்பட்ட பிரச்னையில் பொதுமக்கள் கூடியதால், இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் தப்பியோடினர். இதனால் ஆத்திரமடைந்த தூயமணி திருப்பத்தூர்- தருமபுரி நெடுஞ்சாலையில் தருமபுரியை நோக்கி சென்ற தனியார் பேருந்தை நிறுத்தி, அதன் சக்கரத்தின் முன் படுத்துக் கொண்டாராம்.
இதையடுத்து, தன்னை தாக்கிவிட்டு தப்பி சென்ற இளைஞர்கள் ஊர் பஞ்சாயத்துக்கு வர வேண்டும் என்று கூறி ரகளையில் ஈடுபட்டாராம். தகவலறிந்து வந்த போச்சம்பள்ளி போலீஸார் அங்கு வந்தபோது, அவதூறாக தூயமணி பேசினாராம்.
இதைத் தொடர்ந்து, அவரை போச்சம்பள்ளி காவல் நிலையத்துக்கு போலீஸார் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் தானேஷ்வரன் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து தூயமணியை கைது செய்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/08/தனியார்-பேருந்து-முன்-படுத்து-தகராறு-இளைஞர்-கைது-3034784.html
3034780 தருமபுரி தருமபுரி ஆதரவற்ற குழந்தைகளுக்கு நல உதவிகள் DIN DIN Thursday, November 8, 2018 03:58 AM +0530
தீபாவளியை முன்னிட்டு, ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் கலை, அறிவியல் கல்லூரி சார்பில் உடல்நலம் குன்றியோர், ஆதரவற்ற குழந்தைகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் ஆகியன இணைந்து நிகழ்ச்சியை நடத்தின. இதில், கல்லூரி முதல்வர் க.அருள், செயலர் ஆர்.பி.ராஜீ, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் ச. பார்த்திபன், சி.திருமுருகன், பேராசிரியர்கள் க. இராஜா, ஆர்.லிசி ஆகியோர் உதவிகளை வழங்கினர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/08/ஆதரவற்ற-குழந்தைகளுக்கு-நல-உதவிகள்-3034780.html
3034779 தருமபுரி தருமபுரி ஆரோக்கியமாக வாழ சத்தான உணவு அவசியம்: ஆட்சியர் மலர்விழி பேச்சு DIN DIN Thursday, November 8, 2018 03:57 AM +0530
ஆரோக்கியமாக வாழ, அனைவரும் சத்தான உணவு உட்கொள்ள வேண்டும் என்றார் தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி.
உணவு பாதுகாப்புத் துறை சார்பில் ஆரோக்கிய பாரத விழிப்புணர்வு சைக்கிள் பேரணி தருமபுரியில் , இரண்டாவது நாளாக புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் அமைக்கப்பட்டிருந்த உணவு கண்காட்சியைத் திறந்து வைத்து மலர்விழி பேசியது: -
நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு, மாநில அரசுடன் இணைந்து ஆரோக்கிய பாரதம் என்ற தொடர் சைக்கிள் பயணத்தை நடத்துகிறது. சத்தான ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதோடு போதிய உடற்பயிற்சிகளையும் மேற்கொள்வது சிறந்தது.
அறிவான, ஆரோக்கியமான, உடல் ஊனம் இல்லாத அடுத்த தலைமுறையை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும். அங்கன்வாடி மையங்களில் வளர் இளம்பெண்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் இணை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதை முறையாக பயன்படுத்த வேண்டும்.
தருமபுரி மாவட்டத்தில் கடந்த மாதம் மட்டும் 13 இளம் வயது திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. பெண்களுக்கு 18 வயதுக்கும் குறைவான வயதில் திருமணம் செய்துவைத்தால் அவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்.
ஆரோக்கியமாக வாழ அனைவரும் தங்கள் பகுதிகளில் கிடைக்கும் சத்தான உணவுகளை அனைவரும் உட்கொள்ள வேண்டும். பெண்கள் 30 வயதுக்குமேலும் போதிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் அப்போதுதான் ஆரோக்கியமாக வாழ முடியும் என்றார்.
உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பிருந்தா, வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/08/ஆரோக்கியமாக-வாழ-சத்தான-உணவு-அவசியம்-ஆட்சியர்-மலர்விழி-பேச்சு-3034779.html
3034778 தருமபுரி தருமபுரி மாற்றுத் திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.545.25 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் வி.சரோஜா DIN DIN Thursday, November 8, 2018 03:57 AM +0530
மாற்றுத் திறனாளிகள் நலத்துறைக்கு ரூ. 545.25 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது என்று சமூக நலம், சத்துணவுத்துறை அமைச்சர்
வி.சரோஜா தெரிவித்தார்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற அரசு அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் சரோஜா செய்தியாளர்களிடம் கூறியது:-
நிகழாண்டில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறைக்காக ரூ.545.25 கோநி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.111.90 கோடி ஒதுக்கப்பட்டது. இந்தத் தொகை படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது ரூ.545.25 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.365 கோடி மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு கல்வித் திட்டத்துக்கு ரூ.12 கோடியும், உதவி உபகரணங்கள் வழங்க ரூ.35 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொடக்கநிலை ஆயத்த பயிற்சி மையங்கள் மூலம் பிறந்த குழந்தைகளைப் பரிசோதனை செய்து அவர்களுக்கு இருக்கும் மாற்றுத்திறனை எளிதில் கண்டறிந்து அதை குணப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2 வயதுக்குள்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ஏற்படும் மாற்றுத்திறனை நிவர்த்தி செய்யவது எளிது. இந்தத் திட்டத்துக்காக 2013 ஆண்டில் பல விருதுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. தொடர்ந்து தமிழகம் இந்தத் துறையில் சிறந்து விளங்கிவருவதாக தமிழக ஆளுநரும் தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டத்தில் நிகழ் நிதியாண்டில் திருமண நிதியுதவி, தாலிக்கு தங்கம் வேண்டி விண்ணப்பித்துள்ள தகுதியான பயனாளிகளுக்கு உதவிகள் விரைவில் வழங்கப்படும் என்றார் அமைச்சர்.
மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/08/மாற்றுத்-திறனாளிகள்-நலத்துறைக்கு-ரூ54525-கோடி-ஒதுக்கீடு-அமைச்சர்-விசரோஜா-3034778.html
3034777 தருமபுரி தருமபுரி தருமபுரி, கிருஷ்ணகிரியில் இன்று பிஎஸ்என்எல் மெகா மேளா DIN DIN Thursday, November 8, 2018 03:56 AM +0530  

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பிஎஸ்என்எல் சார்பில், மெகா மேளா வியாழக்கிழமை (நவம்பர் 8) நடைபெறுகிறது.
இதுகுறித்து, பிஎஸ்என்எல் முதன்மை பொது மேலாளர் கே.வெங்கட்ராமன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது: -
தருமபுரி மாவட்டத்தில் இஐஓபி தொலைபேசி நிலையம், பாரதிபுரம், தலைமை அஞ்சல் அலுவலகம், சோகத்தூர் கூட்டுச் சாலை பகுதி, தொப்பூர், பென்னாகரம், பாலக்கோடு, வெள்ளிச்சந்தை, மாரண்டஹள்ளி, அரூர், ஈச்சம்பாடி, மெனசி, கம்பைநல்லூர் ஆகிய இடங்களிலும், கிருஷ்ணகிரியில், லண்டன் பேட்டை, பழைய பேட்டை, துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், அரசு கலைக்கல்லூரி, வேப்பனப்பள்ளி, காவேரிப்பட்டணம், சந்தூர், ஆனந்தூர், ராயக்கோட்டை, ஒசூர் வட்டாட்சியர் அலுவலகச் சாலை, அரசு மருத்துவமனை அருகில், பேருந்து நிலையம், பாகலூர், கலுக்கொண்டப்பள்ளி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட இடங்களிலும் இந்த மேளா நடைபெற உள்ளது. எனவே, வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/08/தருமபுரி-கிருஷ்ணகிரியில்-இன்று-பிஎஸ்என்எல்-மெகா-மேளா-3034777.html
3033501 தருமபுரி தருமபுரி தருமபுரி, கிருஷ்ணகிரியில் திறனறித் தேர்வு DIN DIN Monday, November 5, 2018 07:38 AM +0530 தருமபுரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 11 இடங்களில் நடத்தப்பட்ட திறனறித் தேர்வில் 3216 மாணவ, மாணவிகள் பங்கேற்று தேர்வெழுதினர்.
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்காக மாணவர்களுக்கு ஊக்கத்தொகை தலா ரூ. 1250 வழங்கும் பொருட்டு, எஸ்எஸ்எல்சி படிக்கும்போதே திறனறித் தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். 
அதன்படி, ஞாயிற்றுக்கிழமை தருமபுரி மாவட்டத்தில் இத்தேர்வுகள் 11 இடங்களில் நடத்தப்பட்டன. மொத்தம் 3216 மாணவ, மாணவிகள் பங்கேற்று தேர்வெழுதினர். தேர்வுக்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு. ராமசாமி, மாவட்டக் கல்வி அலுவலர் மு. பொன்முடி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
கிருஷ்ணகிரியில்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய திறனறித் தேர்வை 3,834 மாணவ, மாணவிகள் எழுதினர்.
மத்திய அரசின் சார்பில் ஆண்டுதோறும் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு ஆண்டுதோறும் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி - 2, ஒசூர் -4, காவேரிப்பட்டணம் -2, சூளகிரி, வேப்பனஅள்ளி, தேன்கனிக்கோட்டை, பர்கூர், மத்தூர், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை ஆகிய இடங்களில் தலா ஒரு மையம் என மொத்தம் 15 மையங்களில் தேர்வுகள் நடைபெற்றன. கிருஷ்ணகிரியில் நடைபெற்ற தேர்வை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி, மாவட்டக் கல்வி அலுவலர் ராஜா ஆகியோர் பார்வையிட்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/05/தருமபுரி-கிருஷ்ணகிரியில்-திறனறித்-தேர்வு-3033501.html
3033500 தருமபுரி தருமபுரி மின்சாரம் பாய்ந்ததில் ஆசிரியர் சாவு DIN DIN Monday, November 5, 2018 07:38 AM +0530 கடத்தூரில் மின்சாரம் பாய்ந்ததில் அரசுப் பள்ளி ஆசிரியர் ஸ்டாலின் (38) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். 
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பழைய புதுரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னராஜ் மகன் ஸ்டாலின் (38). இவர் வெங்கட்டம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். கடத்தூர்-புதுரெட்டியூர் சாலையில் ஸ்டாலினுக்கு சொந்தமான புதிய வீட்டின் கட்டுமான பணிகள் நடைபெறுகிறது.  
இந்த நிலையில், வீட்டின் 2-ஆவது மாடியில் இரும்பு கம்பிகளால் சாரம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுள்ளது. அப்போது, வீட்டின் அருகே செல்லும் மின்சார கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்ததில் ஆசிரியர் ஸ்டாலின், அவரது தாய் சிவகாமி (58), கலியபெருமாள் (46) ஆகிய மூவரும் காயமடைந்தனர்.
தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரும் வழியில் ஸ்டாலின் உயிரிழந்தார். மேலும், காயமடைந்த சிவகாமி, கலியபெருமாள் ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுகுறித்து கடத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/05/மின்சாரம்-பாய்ந்ததில்-ஆசிரியர்-சாவு-3033500.html
3033499 தருமபுரி தருமபுரி "காவலன் செயலி' தருமபுரி மக்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் DIN DIN Monday, November 5, 2018 07:37 AM +0530 தமிழ்நாடு காவல் துறையால் பொதுமக்களின் அவசர உதவிக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "காவலன் செயலி'யை தருமபுரி மாவட்ட மக்கள் பதிவிறக்கம் செய்து கொண்டு தங்கள் விவரங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ப. கங்காதர் அழைப்புவிடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு காவல் துறை சார்பில் பொதுமக்கள் தங்களது அவசரக் காலங்களில் காவல் துறையின் உதவியைப் பெறவும் குற்றச் செயல்களைத் தடுக்கவும் காவலன் செயலியை (ஓஅயஅகஅச நஞந) அறிமுகப்படுத்தியுள்ளது. 
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது செல்லிடப்பேசியில் இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்து கொண்டு தங்களுக்கு அருகிலுள்ள காவல் நிலையத்தின் தொடர்பு எண்ணையும், தங்கள் முகவரியையும் பதிவு செய்து கொள்ள வேண்டும். 
அவசரக் காலங்களில் காவலன் செயலியில் உள்ள எஸ்ஓஎஸ் பட்டனைத் தொட்டால் அழைப்பவரின் செல்லிடப்பேசியிலுள்ள கேமரா தானாக இயங்கி 15 விநாடிகள் விடியோ காட்சிகளைப் பதிவு செய்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு 5 விநாடிகளில் அனுப்பிவிடும்.
செல்லிடப்பேசி உள்ள பகுதியை ஜிபிஎஸ் மூலம் காவல்துறையினர் அறிந்து கொண்டு உதவிகளைச் செய்வார்கள். காவலன் செயலி தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் செயல்படும். இணைய இணைப்பு இல்லாத இடங்களிலும் குறுஞ்செய்தி எச்சரிக்கை மூலம் செயல்படும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
எனவே, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்து கொண்டு பயன்படுத்தி, குற்றத்தைத் தடுக்க காவல்துறைக்கு உதவ
வேண்டும்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/05/காவலன்-செயலி-தருமபுரி-மக்கள்-பதிவிறக்கம்-செய்து-கொள்ளலாம்-3033499.html
3033498 தருமபுரி தருமபுரி காரிமங்கலம் ஒன்றியத்தில் விளையாட்டுப் போட்டிகள் DIN DIN Monday, November 5, 2018 07:37 AM +0530 காரிமங்கலம் ஒன்றிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நேரு இளையோர் மையம், ஏபிஜே அப்துல் கலாம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
எஸ்எம்சி கல்வி நிறுவனத்தின் முதல்வர் வி .வெங்கடாஜலபதி விளையாட்டுப் போட்டிகளை தொடக்கிவைத்தார். வெற்றி பெற்றவர்களுக்கு நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர்  எம்.திருநீலகண்டன் பரிசுகளை வழங்கினார். மனித உரிமைகள் மண்டல அமைப்பாளர் கே.பி.செந்தில்ராஜா முன்னிலை வகித்தார். இளையோர் மையத்தைச் சேர்ந்த  எம்.மாரியப்பன், அசோக்குமார் நன்றி கூறினர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/nov/05/காரிமங்கலம்-ஒன்றியத்தில்-விளையாட்டுப்-போட்டிகள்-3033498.html