Dinamani - நாமக்கல் - http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2794394 தருமபுரி நாமக்கல் கொல்லிமலையில் நிலவேம்பு கஷாயம் விநியோகம் DIN DIN Monday, October 23, 2017 02:40 AM +0530 கொல்லிமலையில் உள்ள சோளக்காடு, செம்மேடு ஆகிய இடங்களில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக நிலவேம்பு கஷாயம் வழங்கும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் தொடக்கி வைத்து மக்களுக்கு நிலவேம்பு கஷாயத்தை வழங்கினார். இதில் சேந்தமங்கலம் எம்எல்ஏ சி.சந்திரசேகரன், கொல்லிமலை ஒன்றிய செயலர் சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/23/கொல்லிமலையில்-நிலவேம்பு-கஷாயம்-விநியோகம்-2794394.html
2794393 தருமபுரி நாமக்கல் திரைப்படங்களே வாழ்க்கையாகி விடக் கூடாது: பாடலாசிரியர் பொன்னடியார் DIN DIN Monday, October 23, 2017 02:39 AM +0530 திரைப்படங்களை பார்க்கலாம், ரசிக்கலாம், அதுவே வாழ்க்கையாகி விடக் கூடாது என்றார் திரைப்பட பாடலாசிரியர் பொன்னடியார்.
நாமக்கல் கவிஞர் சிந்தனைப் பேரவை சார்பில் நடைபெற்ற ஐம்பெரும் விழாவுக்கு நாமக்கல் நகைச்சுவை மன்றத் தலைவர் டாக்டர் ஆர். குழந்தைவேலு தலைமை வகித்தார். நாமக்கல் கவிஞர் சிந்தனைப் பேரவை கெளரவத் தலைவர் அரசு பரமேஸ்வரன், நாமக்கல் கம்பன் கழகத் தலைவர் வ. சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரவைத் தலைவர் டி.எம்.மோகன் வரவேற்றார்.
இதில் நாமக்கல் கவிஞர் நற்றமிழ் விருது பெற்ற திரைப்பட பாடலாசிரியர் பொன்னடியார் ஏற்புரையில் பேசியது:
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கடந்த 1912-ஆம் ஆண்டு தில்லிக்கு அழைக்கப்பட்ட நாமக்கல் கவிஞருக்கு ஆங்கிலேய ஆட்சியாளர்கள் தங்கப் பதக்கம் வழங்கி கெளரவித்தனர்.
இதுபோல் உலகிலேயே வேறு எந்த நாட்டிலும் அரசின் முக்கியமான அலுவலக கட்டடத்துக்கு கவிஞர்களின் பெயர் வைக்கப்படவில்லை. ஆனால், நாமக்கல் கவிஞர் பெயரில் சென்னையில் அரசுக் கட்டடம் உள்ளது.  
சுதந்திரப் போராட்ட காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, ராமாயணத்தையும், திருக்குறளையும் சிறைக் கைதிகளுக்கு கற்றுக்கொடுத்தவர் நாமக்கல் கவிஞர். எந்த இடத்தில் இருந்தாலும், அங்கு முடிந்த வரை நல்ல காரியங்களை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கவிஞருக்கு இருந்தது.
ஆந்திரம், கேரளம், ஒடிஸா மாநிலங்களில் திரைக்கலைஞர்களை கொண்டாடுவதில்லை. தமிழகத்தில் கூட்டம் சேர்க்க திரைக் கலைஞர்களை அழைக்க வேண்டும் என்ற நிலை உள்ளது. திரைப்படங்களை பார்க்கலாம், ரசிக்கலாம், அதுவே வாழ்க்கையாகி விடக்கூடாது என்றார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/23/திரைப்படங்களே-வாழ்க்கையாகி-விடக்-கூடாது-பாடலாசிரியர்-பொன்னடியார்-2794393.html
2794392 தருமபுரி நாமக்கல் முயல் வேட்டை: 6 பேருக்கு ரூ.15,000 அபராதம் DIN DIN Monday, October 23, 2017 02:39 AM +0530 முயல் வேட்டையில் ஈடுபட முயன்ற 6 பேருக்கு ரூ. 15,000 அபராதம் விதித்து வனத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
நாமக்கல் மாவட்டம், நைனாமலை காப்புக்காடு பகுதியில் சிலர் முயல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட வன அலுவலகத்துக்கு தகவல் வந்தது.
அதன்பேரில் வனச்சரகர் ரவிச்சந்திரன் தலைமையில், வனக்காப்பாளர்கள் அன்பரசு, பாலசுப்ரமணியம், சுகுமாறன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை காலை சம்பந்தப்பட்ட பகுதியில் திடீர் சோதனை
மேற்கொண்டனர்.
 அப்போது சிலர் முயல் வேட்டையில் ஈடுபட்டது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து பீமநாயக்கனூரைச் சேர்ந்த க.ராமன்(38), ஜி.ராமன்(30), பி.ராமன்(80), க.மணி(28), திருச்செங்கோடு ஆண்டிவலசு பி.ராஜூ(50), மோகனூர் ரா.செல்வகுமார்(24), ஆகியோருக்கு தலா ரூ. 2,500 வீதம் மொத்தம் ரூ. 15,000 அபராதம் விதித்து வசூல் செய்யப்பட்டது.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/23/முயல்-வேட்டை-6-பேருக்கு-ரூ15000-அபராதம்-2794392.html
2794391 தருமபுரி நாமக்கல் சேந்தமங்கலம் பேருந்து நிலையத்துக்கு காமராஜர் பெயர்: தமிழக அரசு பரிசீலிக்க உத்தரவு DIN DIN Monday, October 23, 2017 02:39 AM +0530 நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் பேருந்து நிலையத்துக்கு காமராஜர் பெயரை மீண்டும் சூட்டக் கோரிய மனுவை 8 வாரத்துக்குள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க  வேண்டும் என தமிழக உள்துறைச் செயலாளர்,  நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரான கே.எம்.ஷேக் நவீத் உயர் நீதிமன்றத்தில்  தாக்கல் செய்துள்ள மனுவில், "தமிழக முதல்வராக இருந்த கர்ம வீரர் காமராஜர்,  ஏழை மாணவர்கள் பள்ளிக் கூடம் செல்வதற்காகவே மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர்.  கல்விக்காகவும்,  ஏழைகளுக்காகவும் பல திட்டங்களை உருவாக்கியவர்.  அவரது  பெயர் நாமக்கல் மாவட்டம்,  சேந்தமங்கலம் பேருந்து நிலையத்துக்கு சூட்டப்பட்டிருந்தது.   இந் நிலையில்,  இந்தப் பேருந்து நிலையத்தை மாவட்ட நிர்வாகம் புதுப்பித்துக் கட்டியுள்ளது.  தற்போது, அங்கிருந்த காமராஜர் பெயர்  அகற்றப்பட்டு,  சேந்தமங்கலம் பேருந்து நிலையம் என  பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
பேருந்து நிலையத்தில் இருந்து காமராஜர் பெயரை நீக்கியது நேர்மையான செயல் அல்ல.  எனவே,  இப் பேருந்து நிலையத்துக்கு காமராஜர் பெயரை மீண்டும் சூட்ட வேண்டும் என கடந்த ஆக. 21-ஆம் தேதி அரசுக்குக் கோரிக்கை மனு அளித்தேன்.  அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே,  சேந்தமங்கலம் பேருந்து நிலையத்துக்கு காமராஜர் பெயரைச் சூட்டி,  பெயர்ப்  பலகை வைக்கும்படி, தமிழக உள்துறைச் செயலாளர்,  ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர்,  நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இம் மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ்,  எம்.சுந்தர் ஆகியோர் முன்  விசாரணைக்கு வந்தது.  மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர்  கோரிக்கையை 8 வார காலத்துக்குள் பரிசீலித்து தகுந்த  உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக உள்துறைச் செயலாளர்,  நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு உத்தரவிட்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/23/சேந்தமங்கலம்-பேருந்து-நிலையத்துக்கு-காமராஜர்-பெயர்-தமிழக-அரசு-பரிசீலிக்க-உத்தரவு-2794391.html
2794390 தருமபுரி நாமக்கல் முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களையக் கோரிக்கை DIN DIN Monday, October 23, 2017 02:38 AM +0530 முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை உடனடியாக களைய வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாமக்கல் மாவட்ட அமைப்புக்கான நிர்வாகிகள் தேர்தல் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநில அமைப்புச் செயலர் ரா. புஷ்பராசு முன்னிலையில் தேர்தல் நடைபெற்றது.
இதில்  மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் ஆ. ராமு மாவட்டத் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். கொக்கராயன் பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் ல. ரமேஷ் செயலராகவும், இறையமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் ரா. பாண்டியராஜன்  பொருளாளராகவும், வடுகம் அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் சி. எடின்பரோ கோமகன் அமைப்புச் செயலராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழக அரசு அமல்படுத்தியுள்ள 7ஆவது ஊதிய குழுவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை உடனடியாக களைய வேண்டும்.
7ஆவது ஊதிய குழுவில் 1.1.2016 முதல் இப்போது வரையிலான 21 மாத நிலுவைத் தொகையினை அனைத்து நிலை அரசு ஊழியர்களுக்கும் உடனடியாக வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/23/முதுகலை-ஆசிரியர்களின்-ஊதிய-முரண்பாடுகளை-களையக்-கோரிக்கை-2794390.html
2794389 தருமபுரி நாமக்கல் மரவள்ளிக் கிழங்கு ஒரு டன் ரூ. 9,500 DIN DIN Monday, October 23, 2017 02:38 AM +0530 பரமத்தி வேலூர் வட்டத்தில் மரவள்ளிக் கிழங்கின் விலை நிகழ்வாரம் டன் ஒன்றுக்கு ரூ. 9,500 -க்கு விலைபோனது. கிழங்கின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
பரமத்தி வேலூர் வட்டத்தில் எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, கூடச்சேரி, கபிலர்மலை, சின்ன மருதூர், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் விளையும் மரவள்ளிக் கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.
கிழங்கு ஆலையில் மரவள்ளிக் கிழங்கிலிருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும், சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். மரவள்ளிக் கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் மரவள்ளிக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். கடந்த வாரம் ஒரு டன் மரவள்ளிக் கிழங்கு ரூ.10 ஆயிரம் வரையில் விற்பனையானது.
நிகழ்வாரம் இக்கிழங்கு டன் ஒன்று ரூ. 9,500-க்கு விற்பனையானது. வெளி மாவட்ட மரவள்ளிக் கிழங்கின் வரத்து அதிகமானதால் விலை சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மரவள்ளிக் கிழங்கின் விலை தொடர்ந்து சரிவடைந்து வருவதால் மரவள்ளிப் பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/23/மரவள்ளிக்-கிழங்கு-ஒரு-டன்-ரூ-9500-2794389.html
2794388 தருமபுரி நாமக்கல் வங்கிகளை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட கோரிக்கை DIN DIN Monday, October 23, 2017 02:38 AM +0530 வங்கிகளை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என வங்கி ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்கத்தின் இரண்டாவது மாவட்ட மாநாடு மற்றும் இளைஞர் மாநாடு நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்திய வங்கி ஊழியர் சங்கப் பொதுச் செயலர் சி.எச். வெங்கடாசலம் தலைமை வகித்தார்.
மாவட்டத் தலைவர் பெ.பிரகாரன் வரவேற்றார். ஏஐடியுசி தொழிற்சங்க நிர்வாகி த. ஸ்டாலின் குணசேகரன் பேசினார். தமிழ்நாடு அரசு வங்கி ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் ஈ. அருணாசலம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க துணைப் பொதுச் செயலர் எம்.ஏ.சினிவாசன், தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளன துணைத் தலைவர் பி.விஜயாள்,  தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கச் செயலர் ஜி.வைரப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிறைவேற்றப்பட்ட
தீர்மானங்கள்: வங்கித் துறையில் சீர்திருத்தம் என்ற பெயரால் எடுக்கப்பட்டு வரும் சீர்குலைவு நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிக்கிறோம். வங்கிகள் இணைப்பு, வங்கிகள் தனியார் மயமாக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும்.
அனைத்து தனியார் மற்றும் கிராம வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டு வங்கி சேவை அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும். நாளுக்கு நாள் மலைபோல் குவியும் வராக் கடன்களால், வங்கி துறை பெரும் பாதிப்பை சந்திக்கிறது. இதைத் தடுக்கும் வகையில், கடன்களை வசூல் செய்ய கடும் சட்டம் இயற்ற வேண்டும். கடனை திருப்பி செலுத்தாதவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/23/வங்கிகளை-தனியார்-மயமாக்கும்-முயற்சியை-கைவிட-கோரிக்கை-2794388.html
2794387 தருமபுரி நாமக்கல் முயற்சியாலோ, பயிற்சியாலோ எழுத்தாளன் ஆகிவிட முடியாது: லேனா தமிழ்வாணன் DIN DIN Monday, October 23, 2017 02:38 AM +0530 எழுத்து என்பது தவம். முயற்சியாலோ,  பயிற்சியாலோ எழுத்தாளன் என்ற நிலையை அடைய முடியாது என்றார் எழுத்தாளர் லேனா தமிழ்வாணன்.
நாமக்கல் கவிஞர் சிந்தனைப் பேரவை சார்பில் நாமக்கல் கவிஞர்,  அப்துல்கலாம் பிறந்த நாள் விழா,  நாமக்கல் கவிஞர் நற்றமிழ் விருது வழங்கும் விழா,  சிறந்த சாதனையாளர்கள்,  சேவையாளர்களுக்கு விருது வழங்கும் விழா,  நூல் வெளியீட்டு விழா ஆகிய ஐம்பெரும் விழா நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  இந்த விழாவில் விருதுபெற்ற எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் ஏற்புரையின்போது இவ்வாறு தெரிவித்தார்.  அவர் மேலும் பேசியதாவது:
எழுத்து என்பது பெரிய தவம்,  எழுத்தாளன் படும் துன்பம் எத்தகையது என்பது எழுதி பார்ப்பவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.  பொருளை,  இலக்கை அடைய முயற்சியும்,  பயிற்சியும் போதும்.  அதற்கான காலம்தான் மாறுபடும்.
ஆனால், பயிற்சியாலோ, முயற்சியாலோ எழுத்தாளனாகிவிட முடியாது.
சாதனையாளர்களை,  சேவையாளர்களை வாழும் காலத்தில் அங்கீகரிக்க வேண்டும்.   ஒருவர் இறந்த பிறகு பாராட்டி என்ன பயன்?  சாதிப்பதற்கும்,  சேவை செய்வதற்கும் பாராட்டுதல் உந்துசக்தியாக உள்ளது.  இதனை இலக்கிய அமைப்புகள் செய்ய வேண்டும்.  இந்த அமைப்புகளுக்கு புரவலர்கள் தாராளமாக நிதி உதவி செய்ய வேண்டும் என்றார்.
விழாவுக்கு,  நாமக்கல் நகைச்சுவை மன்றத் தலைவர் டாக்டர் ஆர். குழந்தைவேலு தலைமை வகித்தார்.  நாமக்கல் கவிஞர் சிந்தனைப் பேரவை கெளரவத் தலைவர் அரசு பரமேஸ்வரன்,  நாமக்கல் கம்பன் கழகத் தலைவர் வ. சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  பேரவைத் தலைவர் டி.எம். மோகன் வரவேற்றார்.
நாமக்கல் கவிஞரின் பேத்தி பூங்கோதை குருநாதன்,  கவிஞரிடம் தனிச் செயலராகப் பணியாற்றிய சு.சிவராமன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
தேசிய பாதுகாப்புக் கழக நிறுவனர் எம்.குமார் எழுதிய "இந்தியா அன்று முதல் இன்று வரை' என்ற வரலாற்று நூல் வெளியிடப்பட்டது.
 விழாவில்,  பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 11 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.  வாழ்நாள் சாதனையாளர் விருது-எம்.காளிக் கவுண்டர்,  இயற்கை வேளாண் விவசாயி விருது-ஜி.எஸ்.முத்துசாமி,  சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது-என்.அசோகன்,  சிறந்த அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் விருது- ப.சாந்தி,  சிறந்த சமூக சேவகர் விருது-ஆர்.சிவகாமவல்லி ஆகியோருக்கு வழங்கப்பட்டன.
சிறந்த நாவலாசிரியர் விருது- ஜூவாலமுகி ராஜ்,  மனிதநேய மருத்துவர் விருது- பெ.ரங்கநாதன்,  சிறந்த தமிழ் ஆர்வலர் விருது-பி.தட்சிணாமூர்த்தி,  சிறந்த அரசுப் பள்ளி ஆசிரியர் விருது- கோ.யுவராஜா,   சிறந்த தன்னார்வலர் விருது-ஆர்.சிவராமகிருஷ்ணன்,  டாக்டர் அப்துல் கலாம் அறிவியல் மாணவர் விருது-டி.அபினேஷ் ஆகியோருக்கும் வழங்கப்பட்டன.
இதுபோல்,  நாமக்கல் கவிஞர் நற்றமிழ் விருதுகள் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் பொன்னடியார்,  எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.  இந்த விருதுகளை மகாத்மா காந்தியின் தனிச் செயலர் வீ. கல்யாணம் வழங்கினார்.
மேலும்,  போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
விழாவில்,  நாமக்கல் கவிஞரிடம் தனிச் செயலராக பணியாற்றிய சு. சிவராமனுக்கு கவிஞர் குடும்பத்தினர் சார்பில் பண முடிப்பு வழங்கப்பட்டது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/23/முயற்சியாலோ-பயிற்சியாலோ-எழுத்தாளன்-ஆகிவிட-முடியாது-லேனா-தமிழ்வாணன்-2794387.html
2794386 தருமபுரி நாமக்கல் மாநில வளையப்பந்து போட்டி: வித்யா நிகேதன் பள்ளி சாதனை DIN DIN Monday, October 23, 2017 02:37 AM +0530 மாநில அளவிலான வளையப்பந்து போட்டியில் ராசிபுரம் வித்யா நிகேதன் பள்ளி மாணவர்கள் பங்கேற்று சாதனை படைத்தனர்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் கடந்த 13 ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை இப்போட்டி நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அளவில் 16 மண்டலங்களைச் சேர்ந்த 14, 17, 19 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
இதில் 14 - வயதுக்குட்பட்ட மாணவியர் பிரிவில் வித்யா நிகேதன் பள்ளி மாணவியர் டி. தக்சிதா 2 தங்கப் பதக்கமும், ஒய். அம்பிகா ஒரு தங்கப் பதக்கமும் பெற்றனர்.
17 வயதுக்குள்பட்ட பிரிவில் மாணவர்கள் கே. மீனாகுமார் 2 தங்கப் பதக்கமும், எஸ். ஜேசுதாஸ் ஒரு தங்கப் பதக்கமும், மாணவி பி. ஜனார்த்தினி ஒரு வெண்கலம், ஒரு தங்கம்,  மாணவி கே.சிவானி ஒரு தங்கப் பதக்கமும் பெற்றனர். 19 வயதுக்குள்பட்டோர் பிரிவில் கே. மோதிஸ்குமார்  2 வெண்கலப் பதக்கமும், கே. சூர்யா ஒரு வெண்கலப் பதக்கமும், என்.பி.காவ்யா  ஆர்.முஜாஹிதா ஆகியோர் 2 தங்கப் பதக்கமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி இயக்குநர்கள், முதல்வர் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் பாராட்டினர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/23/மாநில-வளையப்பந்து-போட்டி-வித்யா-நிகேதன்-பள்ளி-சாதனை-2794386.html
2794385 தருமபுரி நாமக்கல் பளுதூக்கும் போட்டி: முத்தாயம்மாள் கல்லூரி மாணவர்கள் சாதனை DIN DIN Monday, October 23, 2017 02:37 AM +0530 பெரியார் பல்கலைக்கழக அளவிலான ஆடவர் பளுதூக்கும் போட்டி ராசிபுரம் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
இப்போட்டியில் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றனர்.
இக்கல்லூரி பளுதூக்குதலில் தொடர்ந்து 11-வது ஆண்டாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றுள்ளது
குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் மொத்தம் 3 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் ஆகிய பதக்கங்களைப் பெற்று இக்கல்லூரி மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றனர். இதில் சிறப்பாக பளுதூக்கி கோப்பையை வென்ற மாணவர்களுக்கு கல்லூரியின் தாளாளர் கே.பி.இராமசுவாமி, செயலாளர் முத்துவேல்ராமசுவாமி,  பெரியார் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநர் முனைவர். கே. அங்கமுத்து, கல்லூரியின் முதல்வர் முனைவர். இரா. செல்வகுமரன்,  புலமுதன்மையர்கள் முனைவர் ஆ.ஸ்டெல்லாபேபி (நிர்வாகம்), முனைவர்.எஸ்.பி.விஜியகுமார் (கல்வி), ஆகியோர் பரிசுகளை வழங்கிப் பாராட்டினர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/23/பளுதூக்கும்-போட்டி-முத்தாயம்மாள்-கல்லூரி-மாணவர்கள்-சாதனை-2794385.html
2794384 தருமபுரி நாமக்கல் எலச்சிபாளையம் ஒன்றியத்தில் ரூ. 1.85 கோடியில் திட்டப் பணிகள்: அமைச்சர்கள் தொடக்கி வைத்தனர் DIN DIN Monday, October 23, 2017 02:36 AM +0530 எலச்சிபாளையம் ஒன்றியத்துக்குள்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் புதிதாக கட்டப்பட்ட கட்டடங்கள் திறப்பு விழாவும், புதிய சாலை மேம்பாட்டுப் பணிகள் மற்றும் கட்டடங்கள்  கட்டும் பணி தொடக்க விழா, பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்குதல், பயனாளிகளுக்கு விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் கறவை மாடுகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

விழாக்களுக்கு மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் தலைமை வகித்தார். நாமக்கல் மக்களவைத் தொகுதி பி.ஆர். சுந்தரம், திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் பொன். சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாக்களில்  மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி,  சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் மருத்துவர் வெ.சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு புதிய கட்டடங்களை திறந்து வைத்தும்,  கட்டடங்கள் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் பணிகளைத் துவக்கி வைத்தனர்.
எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 87 கவுண்டம்பாளையம் ஊராட்சியில் ரூ. 6.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடத்தையும்,  தாய் திட்டத்தின் கீழ் ரூ. 8.69 லட்சம் மதிப்பீட்டில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும், ரூ. 13.12 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கிராம சேவை மையக் கட்டடத்தையும், உஞ்சனை ஊராட்சி,  சத்திநாயக்கன்பாளையம் ஊராட்சி, கவுண்டம்பாளையம் ஊராட்சி, அகரம் ஊராட்சி, அக்கலாம்பட்டி ஊராட்சி, மாவுரெட்டிபட்டி ஊராட்சி,  இளநகர் ஊராட்சி உள்ளிட்ட ஊராட்சிகளில் திட்டப் பணிகளை  அமைச்சர்கள் பங்கேற்று மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தும், புதிய பணிகளைத் தொடக்கியும் வைத்தனர்.
இதைத் தொடர்ந்து, எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயத்தை அமைச்சர்கள் வழங்கினர்.
நிகழ்ச்சியில் திருச்செங்கோடு வருவாய்க் கோட்டாட்சியர் பாஸ்கரன்,  கால்நடை பராமரிப்புத் துறையின் மண்டல இணை இயக்குநர் டாக்டர். சீனிவாசன், உதவி இயக்குநர் கிருஷ்ணமுர்த்தி, திருச்செங்கோடு வட்டாட்சியர் பூவராகவன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பி. ரமேஷ், கமலகண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/23/எலச்சிபாளையம்-ஒன்றியத்தில்-ரூ-185-கோடியில்-திட்டப்-பணிகள்-அமைச்சர்கள்-தொடக்கி-வைத்தனர்-2794384.html
2793879 தருமபுரி நாமக்கல் இந்திய குடிமைப் பணி தேர்வுக்கு இலவச பயிற்சி: மீனவ சமுதாய இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் DIN DIN Sunday, October 22, 2017 04:47 AM +0530 இந்திய குடிமைப் பணி தேர்வுக்கு அளிக்கப்படும் இலவசப் பயிற்சியில் சேர மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மீன்வளத் துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் (அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான பயிற்சி நிலையம்) சார்பில் ஆண்டுதோறும் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த படித்த 20 பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய குடிமைப் பணிக்கான போட்டித் தேர்வுக்கு இலவசமாகப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் குழந்தைகள் இப் பயிற்சியில் சேரலாம். இத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்பப் படிவம், அரசு வழிகாட்டுதல்களை மீன்வளத் துறையின் இணையதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்பப் படிவத்தை மேட்டூர் அணையில் உள்ள மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு அலுவலக வேலை நாள்களில் நேரில் அணுகி விலையின்றி பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பதாரர் மீன்வளத் துறை இணையதளத்தில் உள்ள விரிவான அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் மேட்டூர் அணை,  மீன்வள உதவி இயக்குநர் அலுவலத்துக்குப் பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வரும் 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 04298-244045 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/22/இந்திய-குடிமைப்-பணி-தேர்வுக்கு-இலவச-பயிற்சி-மீனவ-சமுதாய-இளைஞர்கள்-விண்ணப்பிக்கலாம்-2793879.html
2793878 தருமபுரி நாமக்கல் இன்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாம்: திமுகவினருக்கு களப் பணியாற்ற அறிவுறுத்தல் DIN DIN Sunday, October 22, 2017 04:47 AM +0530 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாமில் புதிய வாக்காளர்களை சேர்த்தல் மற்றும் பெயர் நீக்குதல் போன்ற களப்பணிகளை திமுகவினர் மேற்கொள்ள அக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக கட்சியின் செயற்குழுக் கூட்டம் திருச்செங்கோட்டில்  கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், பரமத்திவேலூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான கே.எஸ். மூர்த்தி கலந்து கொண்டு பேசினார். மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.சேகர், நகரச் செயலாளர்கள் ஆர்.நடேசன், கோ.வெங்கடேசன், அ. ரவிசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலைத் தடுக்க அரசு  உரிய நடவடிக்கை எடுக்காததைக் கண்டிக்கிறோம்.
அக். 22 ஆம் தேதி நடைபெறும் வாக்குச் சாவடி சிறப்பு முகாமில் 1.1.2018 அன்று 18-வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை சேர்த்தலும், இறந்தவர்கள் இடம் மாறி சென்றவர்களின் பெயர்களை நீக்கம் செய்தல் பணிகளையும்  மேற்கொள்ள அந்தந்த ஒன்றிய, நகர, பேரூர், கழக செயலாளர்கள் வாக்குச் சாவடிக்கு நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி முகவர்களை கொண்டு திருத்தல் பணிகளை மேற்கொள்ளுவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் இப்பணிகளை மேற்பார்வையிட மாவட்ட கழகத்தால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் ஒன்றிய, நகர, பேரூர், பகுதிகளில் ஆய்வு பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/22/இன்று-வாக்காளர்-பட்டியலில்-பெயர்-சேர்க்கும்-முகாம்-திமுகவினருக்கு-களப்-பணியாற்ற-அறிவுறுத்தல்-2793878.html
2793877 தருமபுரி நாமக்கல் நாமக்கல் நகராட்சியில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்: ஆட்சியர், எஸ்.பி. ஆய்வு DIN DIN Sunday, October 22, 2017 04:46 AM +0530 நாமக்கல் நகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதைத் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நாமக்கல் நகராட்சிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதாரப் பணிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் சனிக்கிழமை நேரில் பார்வையிட்டார். நாமக்கல் நகராட்சி 14-ஆவது வார்டு தில்லைபுரம், பரமத்தி சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது அப் பகுதியில் கொசு புழுக்கள் உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேங்கியிருந்தால் அவற்றை அப்புறப்படுத்தி சுத்தம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் சுகாதாரத்தை பராமரிக்காதவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும்  உத்தரவிட்டார்.
இதேபோல் நாமக்கல் காவல் நிலையம் சுகாதாரமாக பேணிகாக்கப்படுகிறதா? என்பதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு, எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் ஆகியோர் திடீர் ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய மோட்டார் சைக்கிள்களை அப்புறப்படுத்தியும், பழைய பொருள்களை சுத்தப்படுத்தி கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கவும் நடவடிக்கை எடுத்தனர்.
பின்னர் பரமத்தி சாலையில் காவலர் குடியிருப்பு பகுதிகளுக்குச் சென்று அங்கு மாடி வீடுகளில் மழைநீர் தேங்கியிருப்பதை அப்புறப்படுத்தியும், அங்கு கொசுப் புழுக்கள் உற்பத்தியாகும் வகையில் இருந்த பொருள்களை அப்புறப்படுத்தி கொசு மருந்து அடிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டனர்.
மேலும் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தங்களது சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்து கொள்ளவும் அறிவுரை வழங்கினர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/22/நாமக்கல்-நகராட்சியில்-டெங்கு-காய்ச்சல்-ஒழிப்பு-நடவடிக்கை-தீவிரம்-ஆட்சியர்-எஸ்பி-ஆய்வு-2793877.html
2793876 தருமபுரி நாமக்கல் குமாரபாளையத்தில் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் DIN DIN Sunday, October 22, 2017 04:46 AM +0530 விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்திய மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
வேலைவாய்ப்பை அதிகரித்து, வேலையில்லா திண்டாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். அடிப்படைத் தொழிலாளர் சட்டங்கள் அமல்படுத்தப்பட வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்க சமூகப் பாதுகாப்பு நிதியம் உருவாக்கப்பட வேண்டும். மத்திய, மாநில அரசு பொதுத்துறை நிறுவனப் பங்குகள் விற்பனையை நிறுத்த வேண்டும்.
குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தைத் திருத்தி அனைத்துத் தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். குமாரபாளையத்தில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைத்து விசைத்தறி, நெசவுத் தொழிலைப் பாதுகாக்க வேண்டுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியூசி, சிஐடியூ, ஏஐசிசிடியூ, எல்பிஎப், ஹெச்எம்எஸ், ஐஎன்டியூசி தொழில்சங்கங்கள் இணைந்து இப்பிரசார இயக்கத்தை நடத்தின.
குமாரபாளையம் காவேரி நகரில் தொடங்கி பேருந்து நிலையம் ஆனங்கூர் பிரிவு, பள்ளிபாளையம் பிரிவு உள்பட பல்வேறு இடங்களில் நடைபெற்ற இப்பிரசார இயக்கத்தில் நிர்வாகிகள் கே.எஸ்.பாலசுப்பிரமணி, எஸ்.ஜானகிராமன், எஸ்.ஆறுமுகம், எம்.சரஸ்வதி, கே.பாலுசாமி, எஸ்.பி.நஞ்சப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/22/குமாரபாளையத்தில்-மக்கள்-சந்திப்பு-பிரசார-இயக்கம்-2793876.html
2793875 தருமபுரி நாமக்கல் டெங்கு தடுப்பு நடவடிக்கை: பல்வேறு நிறுவனங்களுக்கு ரூ.2.50 லட்சம் அபராதம் DIN DIN Sunday, October 22, 2017 04:46 AM +0530 நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு கொசுப்புழு உற்பத்திக்கு காரணமாக இருந்த வீடுகள் உள்பட பல்வேறு நிறுவனங்களுக்கு ரூ. 2.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு நூற்றுக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். மேலும் ஏராளமான பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து உள்ளது.
இதுதொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வீடுகள், கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்காமல் கவனித்துக் கொள்ளுமாறு சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு காரணமாக இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  இந்த நிலையில், பள்ளிபாளையம் அருகே கோரப்பாளையூரில் உள்ள குமாரபாளையம் உயர் தொழில்நுட்ப நெசவு பூங்காவில்  விசைத்தறிக் கூடங்களில் சுகாதாரத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.
வளாகத்தை தூய்மையாக பராமரிக்காமல், கொசுக்கள் உற்பத்திக்கு காரணமான கழிவுப் பொருள்களை அகற்றாமல் இருந்த 2 ஆலை உரிமையாளர்களுக்கு ரூ. 60,000 அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து சுகாதாரத் துறை துணை இயக்குநர் கோ. ரமேஷ் குமார் கூறியதாவது:
கடந்த ஒரு வாரத்தில் மாவட்டம் முழுவதும் வீடுகள், கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் சுகாதாரத்துறை சார்பில் ஆய்வு நடத்தினர். அப்போது தங்கள் பகுதியை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ளாத, வீடுகள், கல்வி மற்றும் தனியார் நிறுவனங்கள் என 2,107 பேருக்கு அறிவிக்கை அளிக்கப்பட்டது.
 மேலும் பலமுறை அறிவிக்கை கொடுத்தும், சுகாதாரத்தை பேணாத கல்வி, தனியார் நிறுவனம் மற்றும் வீடுகளுக்கு ரூ. 2.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது என்றார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/22/டெங்கு-தடுப்பு-நடவடிக்கை-பல்வேறு-நிறுவனங்களுக்கு-ரூ250-லட்சம்-அபராதம்-2793875.html
2793874 தருமபுரி நாமக்கல் பணியின்போது உயிர்நீத்த காவலர்களுக்கு அஞ்சலி DIN DIN Sunday, October 22, 2017 04:45 AM +0530 பணியின்போது உயிர் நீத்த காவலர்களுக்கு நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
நாட்டில் பல்வேறு போலீஸ் படை பிரிவுகளில் பணியின்போது உயிர் தியாகம் செய்த 473 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கான நினைவு நாள் நிகழ்ச்சி, நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, காவலர் நினைவுத் தூணுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அப்போது போலீஸார் 3 முறை வாகனத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பி செந்தில், டி.எஸ்.பி. க்கள் ராஜேந்திரன், மணிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/22/பணியின்போது-உயிர்நீத்த-காவலர்களுக்கு-அஞ்சலி-2793874.html
2793873 தருமபுரி நாமக்கல் குமாரபாளையத்தில்  டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஊர்வலம் DIN DIN Sunday, October 22, 2017 04:45 AM +0530 குமாரபாளையத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
குமாரபாளையம் காவல் துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் இணைந்து நடத்திய இந்த ஊர்வலத்தை காவல் ஆய்வாளர் வேலுதேவன் தொடக்கி வைத்தார்.
நகராட்சி அலுவலகம் முன் தொடங்கிய ஊர்வலம் சேலம் சாலை, பள்ளிபாளையம் சாலை, மேற்கு காலனி வழியாகச் சென்று வட்டாட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது.
தொடர்ந்து, நகராட்சி மேலாளர் பிரான்சிஸ் சேவியர் மாணவ, மாணவியர், பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் நிலவேம்புக் குடிநீரை விநியோகம் செய்தார். ஊர்வலத்தில், டெங்குவைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட தட்டிகளை ஏந்தியபடி ஸ்ரீராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியர் சென்றனர்.
மேலும், ஊர்வலத்தில் விழிப்புணர்வு முழக்கங்கள் எழுப்பப்பட்டதோடு, துண்டுப் பிரசுரங்களும் விநியோகம் செய்யப்பட்டன. ஸ்ரீராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் எஸ்.விஜயகுமார், நகராட்சி சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் செல்வராஜ், குமரவேல், செந்தில் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/22/குமாரபாளையத்தில்--டெங்கு-காய்ச்சல்-விழிப்புணர்வு-ஊர்வலம்-2793873.html
2793872 தருமபுரி நாமக்கல் நூற்பாலை தொழிலாளி லாரி மோதி பலி DIN DIN Sunday, October 22, 2017 04:45 AM +0530 நல்லூர் அருகே நூற்பாலை தொழிலாளி லாரி மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
 சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே ஆண்டிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் மணி மகன் சேகர் (22). இவர், பரமத்தி அருகே ஒரு தனியார் நூற்பாலையில் வேலை செய்து வந்தார்.
தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்ற அவர், வெள்ளிக்கிழமை மீண்டும் பரமத்திக்கு தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். நல்லூர் உலகபாளையம் அருகே வந்தபோது பரமத்தியில் இருந்து திருச்செங்கோடு நோக்கிச் சென்ற லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த சேகர், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். நல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநர் ராஜாராமை (43) கைது செய்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/22/நூற்பாலை-தொழிலாளி-லாரி-மோதி-பலி-2793872.html
2793871 தருமபுரி நாமக்கல் அரசுக் கல்லூரி சிறப்புப் பேராசிரியை மின்சாரம் பாய்ந்து பலி DIN DIN Sunday, October 22, 2017 04:44 AM +0530 ராசிபுரம் அருகே சந்திரசேகரபுரம் அரசுக் கல்லூரியின் சிறப்புப் பேராசிரியை மின்சாரம் பாய்ந்து சனிக்கிழமை உயிரிழந்தார்.
சந்திரசேகரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். இவரது மனைவி சுபாஷினி (37). இவர்களுக்கு 5 வயதில் மாஷிவன் என்ற மகன் உள்ளார்.
சுபாஷினி, சேலம் எடப்பாடி அரசுக் கல்லூரியில் சிறப்புப் பேராசிரியையாகப் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், இவர் சனிக்கிழமை வீட்டில் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, குளிர்சாதனப் பெட்டியின் பின்பக்கம் இருந்த மின் ஒயர் மீது இவரது கைப்பட்டதில் மின்சாரம் பாய்ந்து பலத்த காயமடைந்தார்.
அவரை உடனடியாக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சுபாஷினி உயிரிழந்தார். போலீஸார் விசாரிக்கின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/22/அரசுக்-கல்லூரி-சிறப்புப்-பேராசிரியை-மின்சாரம்-பாய்ந்து-பலி-2793871.html
2793870 தருமபுரி நாமக்கல் இருசக்கர வாகனம் மோதியதில் மின்பாதை ஆய்வாளர் சாவு DIN DIN Sunday, October 22, 2017 04:44 AM +0530 நல்லூர் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்த மின்பாதை ஆய்வாளர் நிகழ்விடத்திலேயே பலியானார்.
நல்லூர் துணை மின் நிலையத்தில் மின்பாதை ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் சீனிவாசன் (58).
இவர், வழக்கம்போல பரமத்தி-திருச்செங்கோடு சாலையில்  சனிக்கிழமை காலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே கெங்கணாபுரத்தைச் சேர்ந்த தங்கராஜ் (35) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த சீனிவாசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
படுகாயமடைந்த தங்கராஜ் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/22/இருசக்கர-வாகனம்-மோதியதில்-மின்பாதை-ஆய்வாளர்-சாவு-2793870.html
2793869 தருமபுரி நாமக்கல் "திருச்செங்கோட்டில் சுற்றுவட்ட பாதை அமைக்க வேண்டும்' DIN DIN Sunday, October 22, 2017 04:44 AM +0530 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்செங்கோடு நகர 6-வது மாநாடு சனிக்கிழமை சூரியம்பாளையத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டை சிபிஎம் மூத்த தலைவர் சேஷாசலம் கொடியேற்றி தொடங்கி வைத்தார். சீனிவாசன், மாவட்டச் செயலாளர் ரங்கசாமி மாநாட்டை துவக்கி வைத்துப் பேசினார்.
மாநாட்டில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆதிநாராயணன், ஒன்றியச் செயலாளர் வேலாயுதம் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்டதீர்மானங்கள் விவரம்:
திருச்செங்கோட்டில் போக்குவரத்து நெரிசலைஓஈ கட்டுப்படுத்த ரிங் ரோடு அமைக்க வேண்டும், திருச்செங்கோடு அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும், நலவாரிய அலுவலகம் திருச்செங்கோட்டில் அமைக்க வேண்டும், திருச்செங்கோட்டில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் 9 பேர் கொண்ட நகரக் குழு அமைக்கப்பட்டு புதிய நகரச்  செயலாளராக ராயப்பன் தேர்வு செய்யப்பட்டார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/22/திருச்செங்கோட்டில்-சுற்றுவட்ட-பாதை-அமைக்க-வேண்டும்-2793869.html
2793868 தருமபுரி நாமக்கல் அக்டோபர் 23 மின் தடை DIN DIN Sunday, October 22, 2017 04:43 AM +0530 எருமப்பட்டி
துணை மின் நிலைய பராமரிப்புப் பணி காரணமாக எருமப்பட்டி பகுதியில் திங்கள்கிழமை (அக். 23) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியச் செயற்பொறியாளளர் ஆ. சபாநாயகம் தெரிவித்தார்.
மின்தடை பகுதிகள்: எருமப்பட்டி, வரகூர், பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், தோட்டமுடையான்பட்டி, நவலடிப்பட்டி, பவித்திரம், தேவராயபுரம், முட்டான்செட்டி, வரதராஜபுரம், சிங்களங்கோம்பை, பொன்னேரி, என்.புதுக்கோட்டை, கோணங்கிப்பட்டி மற்றும் காவக்காரப்பட்டி.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/22/அக்டோபர்-23-மின்-தடை-2793868.html
2793867 தருமபுரி நாமக்கல் பரமத்தி வேலூர் காவலர் குடியிருப்பில் டெங்கு தடுப்பு முகாம் DIN DIN Sunday, October 22, 2017 04:42 AM +0530 பரமத்தி வேலூர் காவலர் குடியிருப்பில் சுகாதாரத் துறை, பேரூராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த் துறை சார்பில் டெங்கு நோய்த் தடுப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
பரமத்தி வேலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம், காவலர் குடியிருப்புப் பகுதிகளில் நடைபெற்ற டெங்கு நோய்த் தடுப்பு விழிப்புணர்வு முகாமுக்கு நல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கெளரி பங்கேற்று காவலர் குடியிருப்பில் வசிப்போருக்கு மருத்துவ பரிசோதனை செய்தார்.
குடியிருப்பில் உள்ள காவலர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. பின்னர் குடியிருப்புப் பகுதிகளில் பேரூராட்சி நிர்வாகத்தினர் கொசு மருந்து அடித்தும், தண்ணீர் தொட்டிகளில் அபேட் மருந்து ஊற்றி கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதில் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மணிவண்ணன், வருவாய் ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/22/பரமத்தி-வேலூர்-காவலர்-குடியிருப்பில்-டெங்கு-தடுப்பு-முகாம்-2793867.html
2793866 தருமபுரி நாமக்கல் நிலவேம்பு கஷாயம் குடிப்பதால் எவ்வித பக்கவிளைவும் ஏற்படாது: அமைச்சர் பி.தங்கமணி DIN DIN Sunday, October 22, 2017 04:42 AM +0530 நிலவேம்பு கஷாயம் குடிப்பதால் எந்த பக்க விளைவும் ஏற்படாது என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி தெரிவித்தார்.
நாமக்கல், மோகனூர், புதுச்சத்திரம் ஒன்றியங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் தலைமை வகித்தார். மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம், எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பி. உஷா வரவேற்றார்.
இதில் 15 பள்ளிகளில் படித்து வரும் 1,870 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 2.31 கோடி   மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகளை அமைச்சர் பி.தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் வெ.சரோஜா ஆகியோர் வழங்கினர்.
 இந்த விழாவில் அமைச்சர் பி.தங்கமணி பேசியது:
கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியின்படி விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி வருகிறோம்.
தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற திட்டங்கள் இல்லை. தற்போது எந்த வேலைக்குச் சென்றாலும் கணினி அறிவு தேவைப்படுகிறது. எனவே மாணவ, மாணவிகள் இதை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி கொள்ளவேண்டும். மேலும் 100 சதவீத தேர்ச்சியைப் பெற்று, கல்வி மாவட்டம் என்ற சாதனையை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்றார்.
அமைச்சர் வெ.சரோஜா பேசியது: நிலவேம்பு கஷாயம் 9 வகையான மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. எனவே நிலவேம்பு கசாயம் குறித்து மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.
 தொடர்ந்து அமைச்சர் பி.தங்கமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து பகுதிகளிலும் சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நிலவேம்பு கஷாயம் நடமாடும் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.   நிலவேம்பு கஷாயம் குடிப்பதால் எந்த பக்க விளைவும் ஏற்படாது. காய்ச்சல் வந்தவுடன் அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தி வருகிறோம். ஆனால், பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை. எந்த காய்ச்சலாக இருந்தாலும் அரசு மருத்துவமனைக்கு சென்றால் அங்கு ரத்த பரிசோதனை செய்து உரிய சிகிச்சை அளிக்கப்படும். அனைத்து காய்ச்சலும் குணப்படுத்த கூடியவைதான் என்றார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/22/நிலவேம்பு-கஷாயம்-குடிப்பதால்-எவ்வித-பக்கவிளைவும்-ஏற்படாது-அமைச்சர்-பிதங்கமணி-2793866.html
2793714 தருமபுரி நாமக்கல் மர்ம காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி பலி DIN DIN Sunday, October 22, 2017 01:10 AM +0530 நாமக்கல் அருகே மர்ம காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி சனிக்கிழமை உயிரிழந்தார்.
நாமக்கல் அருகே கொண்டிசெட்டிப்பட்டி கணபதிநகரைச் சேர்ந்த லோகேஸ்வரன்-  திவ்யா தம்பதியரின் மகள் ரோஷிணி (6).  இவர், அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்புப் படித்து வந்தார்.
இந்த நிலையில்,  வெள்ளிக்கிழமை காலை முதல் ரோஷிணிக்கு கடுமையான குளிர் காய்ச்சல் இருந்ததோடு,  மாலையில் சிறுமிக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமியை நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.  அங்கு காய்ச்சல் அதிகமானதால், சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.  இந்த நிலையில்,  சனிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் ரோஷிணி உயிரிழந்தார். இதையடுத்து சுகாதாரத் துறை பணியாளர்கள் சிறுமி வசித்துவந்த கணபதி நகர் பகுதியில் முகாமிட்டு, தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/22/மர்ம-காய்ச்சலுக்கு-6-வயது-சிறுமி-பலி-2793714.html
2793519 தருமபுரி நாமக்கல் தோட்ட வேலை செய்துவந்த சத்தீஸ்கர் இளைஞர் தற்கொலை  பரமத்திவேலூர், DIN Saturday, October 21, 2017 09:40 AM +0530 பரமத்திவேலூர் வட்டம்,நல்லூர் அருகே வீட்டில் தங்கி தோட்டத்து வேலை பார்த்து வந்த சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து நல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 நல்லூர் அருகே உள்ள வண்டிக்காரர் தோட்டத்தைச் சேர்ந்தவர் தங்கவேல் (42). இவர் ரிக் லாரியும்,தோட்டமும் வைத்துள்ளார். இவர் தனது ரிக் லாரிக்கு வேலை பார்ப்பதற்காக சத்தீஸ்கர் மாநிலம், ஜாக்பூர் அருகே உள்ள கட்டன்கர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் மகன் விரிஜிநத்தை (34) அழைத்து வந்தார். பின்னர் அவர் ரிக் லாரிக்கு வேலைக்கு செல்லாமல் தோட்டத்து வேலையைப் பார்த்துக்கொள்வதாகக் கூறினாராம். இதையடுத்து கடந்த 40 நாள்களுக்கு மேலாக தங்கவேலின் தோட்டத்தில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்தநிலையில், வெள்ளிக்கிழமை காலை தங்கவேல் மற்றும் அவரது குடும்பத்தார் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். வீட்டில் தங்கி சமையல் வேலை பார்த்து வந்த மற்றொரு தொழிலாளி சாப்பிடுவதற்காக விரிஜிநந்தை அழைத்துள்ளார். ஆனால் விரிஜிநந்த் நீண்ட நேரம் ஆகியும் வராததால் அவரைத் தேடியுள்ளார். பின்னர், தங்கவேல் தோட்டத்துக்கு அருகே உள்ள கலிச்சிபிராகாடு பகுதியில் உள்ள ஒரு வேப்ப மரத்தில் விரிஜிநந்த் தூக்கில் தொங்கியது தெரியவந்தது. உடனடியாக நல்லூர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் அங்கு வந்த நல்லூர் போலீஸார், விரிஜிநந்தின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/21/தோட்ட-வேலை-செய்துவந்த-சத்தீஸ்கர்-இளைஞர்-தற்கொலை-2793519.html
2793455 தருமபுரி நாமக்கல் டெங்கு காய்ச்சலுக்கு மாணவன் பலி: அரசுப் பள்ளிக்கு அதிகாரிகள் நோட்டீஸ் விநியோகம் DIN DIN Saturday, October 21, 2017 08:19 AM +0530 டெங்கு காய்ச்சலுக்கு அரசுப் பள்ளி மாணவன் இறந்த நிலையில், பள்ளி வளாகத்தை சுத்தம், சுகாதாரம் இல்லாமல் வைத்திருந்தது குறித்து விளக்கம் கேட்டு மாணவன் படித்த அரசுப் பள்ளிக்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், புதுக்கோம்பை அருகே தொட்டித் தெருவைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் என்பவரின் மகன் பிரவீன் (6). புதுக்கோம்பை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 1ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஒரு வாரமாக டெங்கு காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரவீன், கடந்த 18 ஆம் தேதி உயிரிழந்தார்.
இந்நிலையில் பிரவீன் படித்து வந்த, புதுக்கோம்பை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கொசு உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமின்றி அரசுப் பள்ளியை வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து உரிய விளக்கம் கேட்டு அந்தப் பள்ளிக்கு, அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மேலும், அந்தப் பள்ளியின் அருகே இருந்த இரு வீடுகளிலும் கொசு உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேக்கி வைத்திருந்ததால் விளக்கம் கேட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/21/டெங்கு-காய்ச்சலுக்கு-மாணவன்-பலி-அரசுப்-பள்ளிக்கு-அதிகாரிகள்-நோட்டீஸ்-விநியோகம்-2793455.html
2793454 தருமபுரி நாமக்கல் சோலார் விளக்குப் பொறி அமைத்திட விவசாயிகளுக்கு மானிய உதவி DIN DIN Saturday, October 21, 2017 08:19 AM +0530 இயற்கை முறை விவசாயத்தை ஊக்கப்படுத்தி, சுற்றுச்சூழல் மாசுபடாமல் பூச்சி மேலாண்மை மேற்கொள்ள சூரிய ஒளி மூலம் இயங்கும் விளக்குப் பொறி அமைத்திட 50 சத மானிய உதவி விவசாயிகளுக்கு வழங்கப்படுவதாக நாமகிரிப்பேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பொ.அசோகன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிப்பதாவது:
சோலார் விளக்குப்பொறி என்பது விவசாயத்துக்குப் பயன்படும் சுற்றுச்சூழல் மாசற்ற சூரிய ஒளி மூலம் இயங்கக் கூடிய பூச்சி மேலாண்மை கருவியாகும். இதை அனைத்து வேளாண் பயிர் சாகுபடிக்கும் பயன்படுத்தி பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் பூச்சிகளை கண்காணித்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இக்கருவி மாலைப் பொழுதில் சுமார் 3 மணி நேரம் இயங்கும்.
அந்நேரத்தில் தாய் அந்து பூச்சிகளை கவரக் கூடியது. ஒரு தாய் அந்துப் பூச்சியைக் கவர்ந்து அழிப்பதின் மூலம் அதனால் உருவாகும் சுமார் 300-க்கும் மேற்பட்ட பூச்சிகளை கட்டுப்படுத்த முடியும்.
விளக்குப் பொறி பயன்படுத்துவதன் மூலம் நன்மை மற்றும் தீமை செய்யும் பூச்சிகளை எளிதாக இனம் கண்டறிந்து உரிய தொடர் நடவடிக்கை மேற்கொள்ளலாம். மேலும் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துப் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்ள இயலும். அதிகபட்சமாக 1 ஏக்கருக்கு 1 எண் போதுமானது.
தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில், இவ்விளக்குப் பொறியை 50 சத மானியத்தில் அல்லது 1 எண்ணுக்கு அதிகபட்சம் ரூ.2000-க்கு பின் ஏற்பு மானியமாக பெற்று பயனடையலாம். தேவைப்படும் விவசாயிகள் நாமகிரிப்பேட்டை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டு பயனடைய வேண்டும்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/21/சோலார்-விளக்குப்-பொறி-அமைத்திட-விவசாயிகளுக்கு-மானிய-உதவி-2793454.html
2793453 தருமபுரி நாமக்கல் சிறார் தொழிலாளர் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும்: அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல் DIN DIN Saturday, October 21, 2017 08:18 AM +0530 நாமக்கல் மாவட்டத்தை சிறார் தொழிலாளர் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம்
அறிவுறுத்தினார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தேசிய சிறார் தொழிலாளர் முறை அகற்றுதல் மற்றும் ஆதரவு சங்கத்தின் 2016-2017 ஆம் ஆண்டுக்கான ஆண்டு பொதுக்குழு மற்றும் நிர்வாகக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
அப்போது நாமக்கல் மாவட்டத்தில் தொடர் ஆய்வுகள் மேற்கொண்டு, சிறார் தொழிலாளர்களாகப் பணியாற்றும் குழந்தைகளை மீட்டு தொடர் கல்வி அளிக்க வேண்டும் எனவும்,  சிறார் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நாமக்கல் மாவட்டத்தை சிறார் தொழிலாளர் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு முனைப்புடன் செயல்பட வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
தேசிய சிறார் தொழிலாளர் திட்ட இயக்குநர் அ.போ.அந்தோணி ஜெனிட் ஆண்டறிக்கை வாசித்தார். இக்கூட்டத்தில் பொதுக்குழு நிர்வாகக் குழு, சட்டச் செயலாக்க குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் தேசிய சிறார் தொழிலாளர் திட்டப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/21/சிறார்-தொழிலாளர்-இல்லாத-மாவட்டமாக-மாற்ற-வேண்டும்-அதிகாரிகளுக்கு-ஆட்சியர்-அறிவுறுத்தல்-2793453.html
2793452 தருமபுரி நாமக்கல் அக்.24-இல் மீன்குஞ்சு உற்பத்தி இலவசப் பயிற்சி முகாம் DIN DIN Saturday, October 21, 2017 08:18 AM +0530 இறால் மீன் இனப்பெருக்கம் மற்றும் மீன் குஞ்சு உற்பத்தி குறித்த இலவசப் பயிற்சி நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வரும் 24ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து அதன் தலைவர் என்.அகிலா வெளியிட்ட செய்தி:  நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 24ஆம் தேதி காலை 9 மணிக்கு இறால் மீன் இனப்பெருக்கம் மற்றும் மீன்குஞ்சு உற்பத்தி என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.
இப்பயிற்சி முகாமில் இறால் மீன் வகைகள் மற்றும் அவைகள் வளர்ப்பதின் முக்கியத்துவம்,  பண்ணை அமைக்க இடம் தேர்வு செய்தல், பண்ணை அமைக்கும் முறை, நன்னீரில் வளர்க்கும் முறைகள், தனி இன வளர்ப்பு முறை, உணவுப் பழக்கம், இனப்பெருக்கம், தொட்டி மற்றும் வளர்ப்புக் குளங்களில் பராமரிப்பது,  நீர்தர மேலாண்மை மற்றும் வளர்ப்பு பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்துத் தொழில்நுட்பங்களும் பயிற்சியின் போது விரிவாகக் கற்றுத்தரப்படும்.
இப்பயிற்சி முகாமில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்துக்கு நேரில் வந்தோ அல்லது 04286 266345,  266650 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ வரும் 23ஆம் தேதிக்குள் பெயர் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/21/அக்24-இல்-மீன்குஞ்சு-உற்பத்தி-இலவசப்-பயிற்சி-முகாம்-2793452.html
2793451 தருமபுரி நாமக்கல் எரியாத மின் விளக்குகளை சரிசெய்யாவிட்டால் போராட்டம்: மார்க்சிஸ்ட் மாநாட்டில் தீர்மானம் DIN DIN Saturday, October 21, 2017 08:14 AM +0530 பரமத்தி வேலூர் பழைய காவிரி பாலத்தில் எரியாத மின் விளக்குகளை உடனடியாக சரி செய்யாவிட்டால் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, கபிலர்மலையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பரமத்திவேலூர் வட்ட 6-வது மாநாடு கபிலர்மலையில் உள்ள சமுதாயக் கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பரமத்திவேலூர் வட்டக்குழு உறுப்பினர் மணிமாறன் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். வட்டக்குழு உறுப்பினர் ராமசந்திரன் வரவேற்றுப் பேசினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் அசோகன் துவக்க உரையாற்றினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் வேலுச்சாமி, தங்கமணி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்டக் குழு செயலாளர் ரங்கசாமி மாநாடு குறித்து பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் விபத்து மற்றும் அவசர பிரிவு பகுதியைத் துவக்க வேண்டும். பாண்டமங்கலத்தில் அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும். மோகனூர் சர்க்கரை ஆலையின் கரும்பு கொள்முதல் எல்லையை விரிவுபடுத்த வேண்டும். பதிவு செய்யப்பட்டு பல ஆண்டுகளாய் காத்திருக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும். திருமணிமுத்தாற்றை தூர்வாரி, சீமை கருவேல முட்களை அகற்றி தடுப்பணைகள் அமைத்து பராமரிக்க வேண்டும்.
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். நதிகள் இணைப்பை உறுதிபடுத்த வேண்டும். பழைய காவிரி பாலத்தில் எரியாத மின் விளக்குகளை உடனடியாக சரி செய்யாவிட்டால் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் வட்டக் குழு உறுப்பினர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.   

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/21/எரியாத-மின்-விளக்குகளை-சரிசெய்யாவிட்டால்-போராட்டம்-மார்க்சிஸ்ட்-மாநாட்டில்-தீர்மானம்-2793451.html
2793450 தருமபுரி நாமக்கல் தோட்ட வேலை செய்துவந்த சத்தீஸ்கர் இளைஞர் தற்கொலை DIN DIN Saturday, October 21, 2017 08:14 AM +0530 பரமத்திவேலூர் வட்டம்,நல்லூர் அருகே வீட்டில் தங்கி தோட்டத்து வேலை பார்த்து வந்த சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து நல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 நல்லூர் அருகே உள்ள வண்டிக்காரர் தோட்டத்தைச் சேர்ந்தவர் தங்கவேல் (42). இவர் ரிக் லாரியும்,தோட்டமும் வைத்துள்ளார். இவர் தனது ரிக் லாரிக்கு வேலை பார்ப்பதற்காக சத்தீஸ்கர் மாநிலம், ஜாக்பூர் அருகே உள்ள கட்டன்கர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் மகன் விரிஜிநத்தை (34) அழைத்து வந்தார். பின்னர் அவர் ரிக் லாரிக்கு வேலைக்கு செல்லாமல் தோட்டத்து வேலையைப் பார்த்துக்கொள்வதாகக் கூறினாராம். இதையடுத்து கடந்த 40 நாள்களுக்கு மேலாக தங்கவேலின் தோட்டத்தில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்தநிலையில், வெள்ளிக்கிழமை காலை தங்கவேல் மற்றும் அவரது குடும்பத்தார் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். வீட்டில் தங்கி சமையல் வேலை பார்த்து வந்த மற்றொரு தொழிலாளி சாப்பிடுவதற்காக விரிஜிநந்தை அழைத்துள்ளார். ஆனால் விரிஜிநந்த் நீண்ட நேரம் ஆகியும் வராததால் அவரைத் தேடியுள்ளார். பின்னர், தங்கவேல் தோட்டத்துக்கு அருகே உள்ள கலிச்சிபிராகாடு பகுதியில் உள்ள ஒரு வேப்ப மரத்தில் விரிஜிநந்த் தூக்கில் தொங்கியது தெரியவந்தது.  உடனடியாக  நல்லூர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் அங்கு வந்த நல்லூர் போலீஸார், விரிஜிநந்தின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/21/தோட்ட-வேலை-செய்துவந்த-சத்தீஸ்கர்-இளைஞர்-தற்கொலை-2793450.html
2793449 தருமபுரி நாமக்கல் அக்.24-ல் ராசிபுரம் மாரியம்மன் கோயில் திருவிழா துவக்கம் DIN DIN Saturday, October 21, 2017 08:13 AM +0530 ராசிபுரம் மாரியம்மன் கோயிலி ஐப்பசி திருத்தேர் திருவிழா அக்டோபர் 24-இல் பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது.
ராசிபுரம் செல்லியாண்டியம்மன், மாரியம்மன், ஆஞ்சநேயர்  கோயில்களின் ஆண்டு திருவிழா வழக்கமாக ஐப்பசி மாதம் துவங்கி 20 நாள்களுக்கு நடைபெறும்.
நிகழ் ஆண்டுக்கான விழா பூச்சாட்டுதலுடன் வரும் 24-இல் துவங்குகிறது. இதைத் தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு சமூகத்தினரின் கட்டளையாக சுவாமி திருவீதி உலா அழைத்து வருதல், கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.  விழாவின் முக்கிய நிகழ்வுகளாக அக்.26-இல் கம்பம் நடுதல், நவம்பர் 6-இல் பூவோடு எடுத்தல், 7-ல் கொடியேற்று விழா, 8-ல் அம்மை அழைத்து பொங்கல் வைத்தல், 9-இல் தீக்குண்டம் இறங்குதல், மாலை திருத்தேரோட்டமும் நடைபெறும்.  10-ஆம் தேதி  உடற்கூறு வண்டி வேடிக்கை, 11-ஆம் தேதி சுவாமி பவனி அழைத்து வருதல்,  11-ஆம் தேதி சப்தாவர்ணம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/21/அக்24-ல்-ராசிபுரம்-மாரியம்மன்-கோயில்-திருவிழா-துவக்கம்-2793449.html
2793448 தருமபுரி நாமக்கல் நிலுவைத் தொகை கேட்டு தனியார் சர்க்கரை ஆலை முன் விவசாயிகள் போராட்டம் DIN DIN Saturday, October 21, 2017 08:12 AM +0530 நிலுவைத் தொகையை முழுமையாக வழங்க வலியுறுத்தி, தனியார் சர்க்கரை ஆலை முன் கருப்புக் கொடி ஏற்றி கரும்பு விவசாயிகள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரும்பு விவசாயிகளுக்கு ஆலைகள் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் ரூ.1,200 கோடி அளவுக்கு நிலுவை வைத்துள்ளன. இந்த நிலுவைத் தொகையை முழுமையாக வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். ஆனால் இதுவரை நிலுவைத் தொகை முழுமையாக வழங்கப்படவில்லை.
நிலுவைத் தொகை வழங்காததைக் கண்டித்து வெள்ளிக்கிழமை காலை தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் பள்ளிபாளையம் அருகே ஓடப்பள்ளியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை முன்பு திரண்டனர்.
கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் நல்லா கவுண்டர், பொதுச் செயலாளர் ரவீந்திரன், கிளை தலைவர் முத்துசாமி ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் ஆலை முன்பு கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நிலுவைத் தொகை வழங்காததைக் கண்டித்து முழக்கம் எழுப்பினர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/21/நிலுவைத்-தொகை-கேட்டு-தனியார்-சர்க்கரை-ஆலை-முன்-விவசாயிகள்-போராட்டம்-2793448.html
2793447 தருமபுரி நாமக்கல் ராசிபுரத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பொதுமக்கள் வேண்டுகோள் DIN DIN Saturday, October 21, 2017 08:12 AM +0530 ராசிபுரம் நகரில் நீர்தேங்கும் பகுதியில்  அபேட் மருந்து தெளித்தல், புகை மருந்து அடித்தல் போன்ற கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் நகராட்சி தீவிரமாக ஈடுபட வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ராசிபுரம் நகராட்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில், அதிக அளவு டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் நோய் உயிரிழப்புகள் நிகழ்கின்றன.
இதையடுத்து நகராட்சி, பொது சுகாதார துறை சார்பில் பல்வேறு நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கொசு ஒழிப்புப் பணிகள், விழிப்புணர்வு முகாம்கள், நிலவேம்பு குடிநீர் வழங்குதல் போன்றவை நடைபெற்று வருகின்றன. இருப்பினும் போதிய பணியாளர்கள் பற்றாக்குறையால், நோய் தடுப்புப் பணிகள் பல்வேறு பகுதியில் நடைபெறவில்லை என பொதுமக்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக 1, 17, 21, 26-வது வார்டுகளில் பல்வேறு இடங்களில் பட்டா நிலங்கள், நகராட்சி புறம்போக்கு இடங்கள், கால்வாய்கள் போன்றவற்றில் மழைநீர் தேங்கியவாறு உள்ளது.
நகராட்சி பணியாளர்கள் டெங்கு தாக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் கவனம் செலுத்துவதோடு அல்லாமல் பிற பகுதிகளிலும் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளில்  கவனம் செலுத்திட வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/21/ராசிபுரத்தில்-டெங்கு-தடுப்பு-நடவடிக்கைகளை-தீவிரப்படுத்த-பொதுமக்கள்-வேண்டுகோள்-2793447.html
2793446 தருமபுரி நாமக்கல் ராசிபுரம் நகர சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம் DIN DIN Saturday, October 21, 2017 08:10 AM +0530 ராசிபுரம் நகரில் புதை சாக்கடை திட்டப் பணிகளால் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை விரைவில் சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராசிபுரம் நகரில் புதை சாக்கடை திட்டம் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. மேலும், குடிநீர் குழாய் மாற்றியமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது. இதையடுத்து நகரில் சாலைகள் குண்டும் குழியுமாக சரிவர மூடப்படாமல் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் பெரும் இடையூறாக அமைந்துள்ளது. இதையடுத்து, இந்த சாலைகள் விரைவில் சீரமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், நகர கிளை செயலர் சி.சண்முகம் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கந்தசாமி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்துப் பேசினார்.
இதில் முன்னாள் பிரதேச குழு உறுப்பினர் எம்.ஜி.ராஜகோபால், ஆர்.நடேசன், சி.மாதேஸ்வரன், பி.ராணி, மகாலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன முழக்கம் எழுப்பினர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/21/ராசிபுரம்-நகர-சாலைகளை-சீரமைக்க-வலியுறுத்தி-கம்யூனிஸ்டு-ஆர்ப்பாட்டம்-2793446.html
2793445 தருமபுரி நாமக்கல் அரசுப் பள்ளியில் 2256 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கல் DIN DIN Saturday, October 21, 2017 08:09 AM +0530 தமிழக அரசின் சார்பில் பள்ளி மாணவ, மாணவியருக்கு மடிக்கணினி வழங்கும் விழா ராசிபுரம் அருகேயுள்ள ஆர்.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமை வகித்தார். விழாவுக்கு நாமக்கல் மக்களவைத் தொகுதி  உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம், நாமக்கல் சார்-ஆட்சியர் கிராந்திகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் வெண்ணந்தூர், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை ஒன்றியங்களை சேர்ந்த 15 பள்ளிகளின் 2256 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகளை மின்சாரம், மதுவிலக்கு, மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி, சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் வெ.சரோஜா ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு வழங்கினார்.  
விழாவில் பள்ளியில் வரையப்பட்ட கலைமகள் படத்தை அமைச்சர்கள் திறந்து வைத்தனர். மேலும் சேந்தமங்கலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சி.சந்திரசேகரன், ராசிபுரம் முன்னாள் நகர்மன்றத் தலைவர் எம்.பாலசுப்ரமணியன், ஆர்.சி.எம்.எஸ் தலைவர் எஸ்.பி.தாமோதரன், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஓன்றியக் குழு முன்னாள் தலைவர் ஈ.கே.பொன்னுசாமி, பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் ராதா சந்திரசேகரன், பள்ளியின் தலைமையாசிரியர் மு.ஆ.உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருச்செங்கோட்டில்...
திருச்செங்கோடு  அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடமாடும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் வாகனம் தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் தேன்மொழி தலைமை வகித்தார்.
இதில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் விதமாக கடந்த 15 நாள்களாக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சல் குறித்த போதுமான விழிப்புணர்வு பொதுமக்களிடையே இல்லாததாலேயே அசம்பாவிதங்கள் நடந்து வருகின்றன. காய்ச்சல் என்றால் அச்சமின்றி அருகே உள்ள ஆரம்ப சுகதார நிலையங்கள், அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து சிகிச்சை பெற வேண்டும் என்றார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/21/அரசுப்-பள்ளியில்-2256-மாணவர்களுக்கு-விலையில்லா-மடிக்கணினி-வழங்கல்-2793445.html
2793444 தருமபுரி நாமக்கல் கொல்லிமலையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது DIN DIN Saturday, October 21, 2017 08:08 AM +0530 கொல்லிமலை பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை பைல்நாடு குட்டுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சின்னு (60),  விவசாயி. இவர் வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் பட்டி அமைத்து 50-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார்.  
வியாழக்கிழமை மேய்ச்சலுக்கு அனுப்பிவிட்டு மாலையில் ஆடுகளை பட்டியில் அடைத்தார். நள்ளிரவில் ஆடுகள் சத்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்தார்.
அப்போது பட்டியில் 2 பேர் ஆடுகளை திருட முயன்றனர்.  அருகில் உள்ளவர்களின் உதவியுடன் 2 பேரையும் பிடித்து வாழவந்திநாடு போலீஸில் ஒப்படைத்தார். விசாரணையில், கொல்லிமலை புதுவளவு பகுதியைச் சேர்ந்த கணேசன் (42), சடையன் (48) என்பது தெரியவந்தது.
இந்த இருவரும் கொல்லிமலை பகுதியில் தொடர்ச்சியாக ஆடு திருட்டில் ஈடுபட்டதும், இதுவரை 60-க்கும் மேற்பட்ட ஆடுகளை திருடி விற்பனை செய்ததும் தெரியவந்தது.  இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/21/கொல்லிமலையில்-தொடர்-திருட்டில்-ஈடுபட்ட-2-பேர்-கைது-2793444.html
2793443 தருமபுரி நாமக்கல் பரமத்திவேலூரில் தீப்பற்றி எரிந்த கார் DIN DIN Saturday, October 21, 2017 08:08 AM +0530 பரமத்தி வேலூர் பழைய காவிரி பாலத்தில் வெள்ளிக்கிழமை இரவு கார் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் காரை ஓட்டி வந்த ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். காரில் ஏற்பட்ட தீ விபத்தால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
 கரூர் மாவட்டம், புகளூர் அருகே உள்ள செக்குமேடு பகுதியைச் சேர்ந்த வீரப்பன் மகன் சேரலாதன் (29). இவர் தற்பொழுது பரமத்தி வேலூர் அருகே உள்ள பரமத்தி ஆசிரியர் குடியிருப்பில் வசித்து வருகிறார். வெள்ளிக்கிழமை இரவு சேரலாதன் கரூர் மாவட்டம், புகளூரைச் சேர்ந்த பழனியப்பனின் ஆம்னி காரை எடுத்துக் கொண்டு புகளூரில் இருந்து வேலூர் நோக்கி வந்துள்ளார். கரூர்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பரமத்தி வேலூர் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள பழைய பாலத்தில் வந்து கொண்டிருந்த போது திடீர் என காரில் தீப்பற்றி எரிந்துள்ளது. இதைப் பார்த்த பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் சேரலாதனிடம் தெரிவித்துள்ளனர். உடனடியாக காரில் இருந்து வெளியே வந்துள்ளார்.
பின்னர் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் உள்ள தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் அடிப்படையில் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் காரில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். தீ விபத்தில் கார் முற்றிலும் எரிந்து நாசமானது.
மேலும் இதுகுறித்து பரமத்தி வேலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/21/பரமத்திவேலூரில்-தீப்பற்றி-எரிந்த-கார்-2793443.html
2793442 தருமபுரி நாமக்கல் தனியார் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு DIN DIN Saturday, October 21, 2017 08:08 AM +0530 முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி மற்றும் இந்திய தொழில்நுட்பக் கழகம்  இணைந்து இயந்திரவியல் துறையின் சார்பில் இயந்திரவியல் துறையிலுள்ள புதுமையான தொழில்நுட்பங்களுக்கான தேசிய அளவிலான கருத்தரங்கை  நடத்தின.
இந்தக் கருத்தரங்கின் சிறப்பு விருந்தினராக சேலம்,சோனா காலேஜ் ஆப் டெக்னாலஜி, இயந்திரவியல் துறைத் தலைவர் டி.செந்தில்குமார்  கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார். மாணவர்களுக்கு தாழ்ந்த தட்பவெப்ப நிலை பற்றிய விளக்க உரையாற்றினார்.
மேலும் கருத்தரங்கில் அவர் பேசியது:
மாணவர்கள் வளர்ந்துவரும் தொழில்நுட்பத்திற்கேற்ப தங்களின் தொழில்நுட்ப அறிவுத் திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு இதுபோன்ற கருத்தரங்குகளில் சமர்ப்பிக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகள் உறுதுணையாக இருக்கும். மாணவர்களும் பல்வேறு கருத்தரங்குகளில் கலந்துகொண்டு ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்து தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், இந்தக் கருத்தரங்கில் 51 ஆய்வுக் கட்டுரைகள் பல கல்லூரிகளில் இருந்து ஆசிரியர்கள், முதுநிலை மற்றும் இளம்நிலை பொறியியல் மாணவர்களால் சமர்ப்பிக்கப்பட்டன.
இந்தக் கருத்தரங்கில் கல்லூரியின் செயலாளர் பேராசிரியர்  கே.குணசேகரன், கல்லூரி முதல்வர் எஸ்.நிர்மலா துறைத் தலைவர் எஸ்.சுந்தரம், பேராசிரியர் பி.சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை இயந்திரவியல் துறை இணைப் பேராசிரியர் ஆர்.செந்தில்குமார் செய்திருந்தார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/21/தனியார்-கல்லூரியில்-தேசிய-கருத்தரங்கு-2793442.html
2793440 தருமபுரி நாமக்கல் மோகனூரில் வீடுதோறும் கொசு ஒழிப்பு தன்னார்வலர்: அரசு மருத்துவர்கள் நூதன முயற்சி DIN DIN Saturday, October 21, 2017 08:07 AM +0530 டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த மோகனூர் பகுதியில் வீடுதோறும் கொசு ஒழிப்பு தன்னார்வலர்களை நியமித்து அரசு மருத்துவர்கள் கண்காணிப்பு முயற்சியைத் தொடங்கியுள்ளனர்.
இந்திய மருத்துவ சங்கம் நாமக்கல் கிளை, நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம், மோகனூர் அரிமா சங்கம், மோகனூர் ரோட்டரி சங்கம், மோகனூர் சுப்ரமணியம் கலை, அறிவியல் கல்லூரி மற்றும் மோகனூர் வட்டார பொதுசுகாதார துறை சார்பில் டெங்கு காய்ச்சல்  மற்றும் கொசுப்புழுக்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மோகனூரில் வெள்ளிக்கிழமைநடைபெற்றது.
 இதையொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சுப்ரமணியம் கலை, அறிவியல் கல்லூரி முன்பு தொடங்கிய பேரணிக்கு வட்டார மருத்துவ அலுவலர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். இந்திய மருத்துவ சங்க நாமக்கல் கிளை தலைவர் எ.பி.சுப்ரமணியம், அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத் தலைவர் ரங்கநாதன், கல்லூரி தாளாளர் பழனியாண்டி முன்னிலை வகித்தனர்.
மோகனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், கொசுப்புழுக்கள் ஒழிப்பு பணியாளர்கள், அரிமா சங்க உறுப்பினர்கள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள் மற்றும் மாணவ,மாணவிகள் இணைந்து ஒவ்வொரு வீடாக சென்று டெங்கு கொசுப் புழு ஒழிப்பு மூன்று வார கால அட்டவணையை அளித்து விவரத்தை எடுத்துக் கூறினர். அட்டவணையை வீட்டின் முன் ஒட்டினர்.
கொசு ஒழிப்பு பணிகள் செய்ய ஒவ்வொரு வீட்டிலும் கொசு ஒழிப்பு தூதுவர்களை நியமித்தனர்.
விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மருத்துவர்கள் சந்திரமோகன், கருணாநிதி, மோகனூர் அரிமா சங்கத் தலைவர் நவலடி,மோகனூர் ரோட்டரி சங்கத் தலைவர்கள், கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/21/மோகனூரில்-வீடுதோறும்-கொசு-ஒழிப்பு-தன்னார்வலர்-அரசு-மருத்துவர்கள்-நூதன-முயற்சி-2793440.html
2792812 தருமபுரி நாமக்கல் நாமக்கல் கவிஞருக்கு அரசு சார்பில் மணி மண்டபம்: அமைச்சர் பி.தங்கமணி DIN DIN Friday, October 20, 2017 08:04 AM +0530 நாமக்கல்லில் தமிழக அரசின் சார்பில் நாமக்கல் கவிஞருக்கு மணி மண்டபம் கட்டப்படும் என்றார் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி.
 நாமக்கல்லில் உள்ள கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளையின் நினைவு இல்லத்தில், அவருடைய 129-ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில், மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி,  மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் உள்ளிட்டோர் பங்கேற்று கவிஞரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 தொடர்ந்து தமிழ் ஆர்வலர்கள் மரியாதை செலுத்தினர். கவிஞரின் புகழைப் போற்றும் வகையில் அவர் எழுதிய காந்தியப் பாடல்கள், சுதந்திர வேட்கைப் பாடல்களை இளைஞர்கள் பாடினர்.
அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சியும் இடம் பெற்றது.
நிகழ்ச்சியில் அமைச்சர் பி.தங்கமணி பேசியது:
தமிழக அரசின் சார்பில் நாமக்கல்லில் கவிஞருக்கு மணி மண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். தமிழக அரசின் தலைமை செயலகக் கட்டடம் ஒன்றுக்கு நாமக்கல் கவிஞர் மாளிகை என்று பெயர் சூட்டியும், நாமக்கல் திருச்சி சாலையில் உள்ள அரசு மகளிர் கல்லூரிக்கு நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரி என்று பெயர் சூட்டியும் அழகு பார்த்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா,  நாமக்கல்லில் உள்ள கவிஞரின் இல்லத்தை தமிழக அரசின் அரசுடைமையாக்கி  உத்தரவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது என்றார் அமைச்சர்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:
தரிசு நிலங்களில் ஆழ்குழாய் கிணறு அமைத்து விவசாயம் செய்யும் பணிகளுக்கு, இலவச மின்சாரம் அளிக்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட வீரர்கள், நாமக்கல் சார் ஆட்சியர் பி. கிராந்திகுமார், நாமக்கல் தொகுதி மக்களவை உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம், சேந்தமங்கலம் எம்எல்ஏ சி.சந்திரசேகரன், கவிஞர் சிந்தனைப் பேரவை தலைவர் டி.எம்.மோகன், தமிழ் ஆர்வலர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/20/நாமக்கல்-கவிஞருக்கு-அரசு-சார்பில்-மணி-மண்டபம்-அமைச்சர்-பிதங்கமணி-2792812.html
2792811 தருமபுரி நாமக்கல் மர்ம காய்ச்சலுக்கு மாணவர் பலி: மருத்துவர்கள் சிறைபிடிப்பு DIN DIN Friday, October 20, 2017 08:04 AM +0530 எருமப்பட்டி அருகே மர்ம காய்ச்சலுக்கு ஒன்றாம் வகுப்பு  மாணவர் உயிரிழந்தார். இதனால் நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வந்த மருத்துவர்களை அந்தப் பகுதி மக்கள் சிறைபிடித்தனர்.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம் புதுக்கோம்பை தொட்டிய தெருவைச் சேர்ந்த தம்பதியர் சுந்தர்ராஜன் (28), கலையரசி(25).  இவர்களுடைய மகள் பிரீத்தி(8),  மகன் பிரவீன்(6) ஆகியோர் அண்மையில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து பெற்றோர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இருவரையும் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரவீன் புதன்கிழமை உயிரிழந்தார். சிறுமி பிரீத்தி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த தகவலை அறிந்த எருமப்பட்டி வட்டார மருத்துவர்கள் அந்தப் பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வந்தனர்.
அவர்களை தொட்டியதெரு பகுதி மக்கள்  சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையறிந்த சேந்தமங்கலம் வட்டாட்சியர் செல்வராஜ், எருமப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் ஆகியோர் பொதுமக்களை சமாதானம் செய்து சிறைபிடிக்கப்பட்ட மருத்துவர்களை மீட்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/20/மர்ம-காய்ச்சலுக்கு-மாணவர்-பலி-மருத்துவர்கள்-சிறைபிடிப்பு-2792811.html
2791653 தருமபுரி நாமக்கல் பேச்சு, கட்டுரை போட்டி: அரசுப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் DIN DIN Tuesday, October 17, 2017 06:32 AM +0530 பேரிடர் மேலாண்மை குறித்த மாவட்ட அளவிலான பேச்சு, கட்டுரைப் போட்டியில் தொ.ஜேடர்பாளையம் அரசு பள்ளி மாணவியர் முதலிடம் பெற்று சாதனை படைத்தனர்.
பேரிடர் மேலாண்மை சார்பில், பேரிடர் வெள்ளம், தீ விபத்து, நில நடுக்கம், சூறாவளி மூலம் ஏற்படும் இழப்புகளை எவ்வாறு குறைப்பது என்ற தலைப்பில், பள்ளி மாணவ, மாணவியருக்கான மாவட்ட அளவிலான பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப்போட்டி, நாமக்கல்லில் நடைபெற்றது.
பள்ளி அளவில் நடைபெற்ற போட்டிகளில், முதலிடம் பெற்றவர்கள் மட்டுமே பங்கேற்றனர். அதில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், பிளஸ் 1, பிளஸ் 2 ஒரு பிரிவாகவும் போட்டி நடத்தப்பட்டது.
பேச்சுப் போட்டியில் நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், தொ.ஜேடர்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி சுகுணா,  கட்டுரைப் போட்டியில் மாணவி பிரியதர்ஷினி முதலிடம் பெற்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார். சாதனை படைத்த மாணவியரை, பள்ளித் தலைமையாசிரியர் லட்சுமி, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் பாராட்டினர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/17/பேச்சு-கட்டுரை-போட்டி-அரசுப்-பள்ளி-மாணவர்கள்-சிறப்பிடம்-2791653.html
2791652 தருமபுரி நாமக்கல் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் DIN DIN Tuesday, October 17, 2017 06:32 AM +0530 திருச்செங்கோடு எட்டிமடைபுதூர் பகுதியில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
விஷ்ணு வித்யாலயா பள்ளி சார்பில் நடைபெற்ற ஊர்வலத்தில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். ஊர்வலத்தில்  விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியும், துண்டறிக்கை கொடுத்தும் டெங்கு விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/17/டெங்கு-விழிப்புணர்வு-ஊர்வலம்-2791652.html
2791651 தருமபுரி நாமக்கல் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் பிறந்த தினம் DIN DIN Tuesday, October 17, 2017 06:31 AM +0530 ராசிபுரம் அருகே மங்களபுரம் மண்டேலா அறக்கட்டளை சார்பில் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் பிறந்த நாள் விழா அண்மையில் நடைபெற்றது.
இதில், அறக்கட்டளைத் தலைவர் கவிஞர் பெருமாள் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஜோதிலிங்கம்,  உடற்கல்வி ஆசிரியர் முருகன் ஆகியோர் பங்கேற்று, அப்துல் கலாம் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினர். இதில் அறக்கட்டளை நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/17/ஏபிஜெஅப்துல்கலாம்-பிறந்த-தினம்-2791651.html
2791650 தருமபுரி நாமக்கல் கொப்பரைத் தேங்காய் ஏலம் ரத்து: மீண்டும் 26-ஆம் தேதி நடைபெறும் DIN DIN Tuesday, October 17, 2017 06:31 AM +0530 பரமத்திவேலூர் அருகே வெங்கமேடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிகழ்வாரம் வியாழக்கிழமை (அக்.19) நடைபெற இருந்த கொப்பரைத் தேங்காய் ஏலம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் விற்பனைக் குழு பரமத்தி வேலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் கவிதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பரமத்திவேலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் கொப்பரைத் தேங்காய் ஏலம் நடைபெற்று வருகிறது.
நிகழ்வாரம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 19-ஆம் தேதி கொப்பரைத் தேங்காய் ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மீண்டும் வழக்கம்போல் அடுத்த வாரம் வியாழக்கிழமை (26-ஆம் தேதி) கொப்பரைத் தேங்காய் ஏலம் நடைபெறும் என செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/17/கொப்பரைத்-தேங்காய்-ஏலம்-ரத்து-மீண்டும்-26-ஆம்-தேதி-நடைபெறும்-2791650.html
2791649 தருமபுரி நாமக்கல் மாநில அறிவியல் கண்காட்சி: ஆர்.புதுப்பாளையம் அரசுப் பள்ளி சாதனை DIN DIN Tuesday, October 17, 2017 06:31 AM +0530 மாநில அறிவியல் கண்காட்சியில் ஆர். புதுப்பாளையம் அரசுப் பள்ளி மாணவர்கள் 3-ஆம் இடம் பெற்றுள்ளனர்.
தமிழக கல்வித்துறை சார்பில், மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி கரூர் தனியார் பள்ளியில் அண்மையில் மூன்று நாள்கள் நடைபெற்றது.
இதில் மாவட்ட அளவில் நடந்த அறிவியல் கண்காட்சியில் முதலிடம் பெற்ற 32 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் இக்கண்காட்சியில் பங்கேற்று தங்களது படைப்புகளை பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருந்தனர். நாமக்கல் மாவட்ட அளவில் நடந்த கண்காட்சியில் முதலிடம் பிடித்த ஆர். புதுப்பாளையம், அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் விஜய் தனபால், கிஷோர் ஆகியோர் இக்கண்காட்சியில் வைத்திருந்த தங்களது படைப்புகளுக்கு மாநில அளவில் 3-ம் இடத்துக்குத் தேர்வு பெற்றனர்.
இம் மாணவர்களையும், உடன் சென்ற ஆசிரியர் து. முத்துக்குமார் ஆகியோரையும் பள்ளித் தலைமை ஆசிரியர் மு.ஆ. உதயகுமார் பாராட்டினார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/17/மாநில-அறிவியல்-கண்காட்சி-ஆர்புதுப்பாளையம்-அரசுப்-பள்ளி-சாதனை-2791649.html
2791648 தருமபுரி நாமக்கல் காய்ச்சல் காரணமாக பள்ளிக்கு வராத மாணவர்கள் குறித்து விவரங்களைத் தெரிவிக்க அறிவுறுத்தல் DIN DIN Tuesday, October 17, 2017 06:31 AM +0530 காய்ச்சல் காரணமாக பள்ளிக்கு வராத மாணவர்கள் குறித்த விவரங்களை வட்டார மருத்துவ அலுவலருக்குத் தெரிவிக்க வேண்டும் என பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், பொது சுகாதாரத் துறை மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சார்பில் அனைத்துத் துறை அலுவலர்களுக்கான டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்குத் தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் பேசியது:
நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க மாவட்ட, நகராட்சி, வட்டார, பிர்கா மற்றும் கிராம ஊராட்சி வார்டு அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்குழுக்கள் மாவட்ட பொது சுகாதாரத்துறை மூலம் பெறப்படும் காய்ச்சல் கண்ட நபர்களின் விவரம் அடிப்படையில் சம்பந்தமாக பகுதிக்கு களப்பணியாளர்களின் குழுக்களை அனுப்பி கொசுப்புழு ஒழிப்புப் பணி மேற்கொள்ளுதல், கொசு ஒழிப்பு புகை மருந்து அடித்தல், மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்தல், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை கழுவி சுத்தம் செய்து தினசரி குளோரினேசன் செய்தல், குடிநீர் குழாய்களில் ஏற்படும் உடைப்பு, கசிவு உடன் சரி செய்தல் மற்றும் அந்த பகுதிகளில் உள்ள தேவையற்ற பிளாஸ்டிக் பொருள்கள், டயர்களை அகற்றுதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளுதல் மற்றும் உரிய ஆலோசனைகள் வழங்கும் என்றார்.
மருத்துவர்கள் கூட்டம்
இதையடுத்து மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் காய்ச்சல் மேலாண்மை குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள நடைமுறைகள் குறித்து எடுத்து கூறப்பட்டது.
பள்ளி நிர்வாகிகள் கூட்டம்
இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரி முதல்வர்கள் பங்கேற்ற டெங்கு காய்ச்சல் கட்டுப்பாடு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் வாரம்தோறும் வியாழக்கிழமைகளில் பள்ளி,  கல்லூரி வளாகங்களையும், சுற்றியுள்ள பகுதிகளையும் முழுமையாக சுத்தம் செய்து, ஏடிஸ்  கொசு இல்லாத வளாகமாக செய்திடவும்,  அது குறித்த சான்றிதழ் மாவட்ட நிர்வாகத்திற்கு அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.  
மேலும் வளாகம் முழுவதும் வாரம் ஒரு முறை கொசு ஒழிப்பு புகை மருந்து அடிப்பதன் மூலம் முதிர் கொசுக்களை கட்டுப்படுத்த முடியும். அத்துடன் காய்ச்சல் காரணமாக பள்ளிக்கு வர இயலாத மாணவர்களின் பட்டியலை சம்பந்தபட்ட வட்டார மருத்துவ அலுவலருக்கு தெரிவிப்பதன் மூலம் அத்தகைய மாணவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க உதவியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் சென்னை தலைமை பூச்சியியல் வல்லுநர் எஸ். குமார், மாவட்ட வருவாய் அலுவலர் கு.பழனிசாமி, சுகாதாரத் துறை இணை இயக்குநர் சரஸ்வதி, துணை இயக்குநர் கோ. ரமேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/17/காய்ச்சல்-காரணமாக-பள்ளிக்கு-வராத-மாணவர்கள்-குறித்து-விவரங்களைத்-தெரிவிக்க-அறிவுறுத்தல்-2791648.html
2791647 தருமபுரி நாமக்கல் கோயிலில் வழிபட அனுமதி மறுப்பு: கிராம மக்கள் ஆட்சியரிடம் முறையீடு DIN DIN Tuesday, October 17, 2017 06:30 AM +0530 கோயிலில் வழிபட அனுமதி அளிக்க மறுப்பதாக கிராம மக்கள் ஆட்சியரிடம் முறையிட்டனர்.
 நாமக்கல் அருகே தும்மங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மு. ஆசியா மரியத்திடம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:
நாமக்கல் அருகே தும்மங்குறிச்சி மேலப்பட்டி மேல்முகம் கிராமத்தில் சின்ன காமாட்சி அம்மன் கோயில், பெரிய காமாட்சி அம்மன் கோயில், பெரியசாமி கோயில், கம்பத்தையன் கோயில் உள்ளன. இக் கோயில்களில் அனைத்து சமுதாய மக்களும் வழிபட்டு வந்தோம். கோயில் கட்டுவதற்கு நிதி உதவிகளை அனைத்து சமுதாய மக்களும் வழங்கி உள்ளோம். ஆனால், ஒரு சமூகத்தைச் சேர்ந்த சிலர், அக் கோயில்களில் வழிபாடு நடத்த எங்களுக்கு தடை விதித்துள்ளனர். எனவே,  எங்களுக்கும் அக்கோயில்களில் வழிபாடு நடத்தவும், கோயிலுக்குள் சென்று வரவும் சமஉரிமை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/17/கோயிலில்-வழிபட-அனுமதி-மறுப்பு-கிராம-மக்கள்-ஆட்சியரிடம்-முறையீடு-2791647.html
2791646 தருமபுரி நாமக்கல் 39 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவி DIN DIN Tuesday, October 17, 2017 06:30 AM +0530 மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 39 பேருக்கு ரூ. 77,900 மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 201 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்களை உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
கூட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் சார்பில் 39 பயனாளிகளுக்கு ரூ. 77,900 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கு. பழனிசாமி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் நா. பாலச்சந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கே.எஸ். முரளிகிருஷ்ணன், கலால் உதவி ஆணையர் எம். இலாஹிஜான், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் க. சுப்பிரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/17/39-பயனாளிகளுக்கு-நலத்-திட்ட-உதவி-2791646.html
2791645 தருமபுரி நாமக்கல் "தீபாவளி பட்டாசு விபத்துகளால் 40 சதவீதம் பேருக்கு கண் பாதிப்பு' DIN DIN Tuesday, October 17, 2017 06:30 AM +0530 தீபாவளி பட்டாசு வெடித்து ஏற்படும் விபத்துகளில் 40 சதவீதம் பேருக்கு கண் பாதிப்பு ஏற்படுகிறது என கண் மருத்துவர் பெ. ரங்கநாதன் தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் நாமக்கல் கிளை சார்பில் பட்டாசும், கண் பாதுகாப்பும் என்ற தலைப்பில் விழிப்புணர்வுக் கூட்டம் நாமக்கல் கோட்டை நகரவை உயர்நிலைப் பள்ளி, நம்மாழ்வார் உயர்நிலைப் பள்ளி,  கோனூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கூட்டங்கள் திங்கள்கிழமை நடைபெற்றன.
வின்னர் கிளப் நிறுவனத் தலைவர் டி.எம். மோகன், ரோட்டரி சங்கத் தலைவர்  அண்ணாதுரை, நம்மார்வாழ் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெயசந்திரன், நிர்வாகி ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், பங்கேற்ற கண் மருத்துவர் பெ. ரங்கநாதன் பேசியது:
தீபாவளி பட்டாசு வெடித்து காயம் ஏற்படுபவர்களில் 40 சதவீதம் பேருக்கு கண்களில் காயம் ஏற்பட்டு பார்வை பாதிப்பை அடைகின்றனர்.
போதுமான விழிப்புணர்வுடன் பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடுவதன் மூலம் பார்வை இழப்பைத் தடுக்கலாம்.
பட்டாசு வெடித்து கண்ணில் அடிபட்டால்  உடனடியாக கண் மற்றும் உடலில் உள்ள அனைத்து தீக்காய பகுதிகளையும்  சுத்தமான குடிநீரில் கழுவி விட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று கண் மருத்துவரின் உதவியுடன் சிகிச்சை பெற  வேண்டும்.
மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்தையும் ஊற்றக் கூடாது. குழந்தைகளுக்கு உடல்நலக் கேடு மற்றும் பார்வையிழப்பை  ஏற்படுத்தும் பட்டாசு பொருட்களை தவிர்த்து பசுமை தீபாவளியைக் கொண்டாடிட அனைவரும் முன்வர வேண்டும் என்றார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/17/தீபாவளி-பட்டாசு-விபத்துகளால்-40-சதவீதம்-பேருக்கு-கண்-பாதிப்பு-2791645.html
2791644 தருமபுரி நாமக்கல் குமாரபாளையம்: குடிநீர் குழாய் உடைப்பு DIN DIN Tuesday, October 17, 2017 06:29 AM +0530 குமாரபாளையம் நகராட்சியின் புதிதாக பதிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் சரியாக இணைக்கப்படாததால் குழாயிலிருந்து குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது. மேலும் குடிநீர் வீடுகளுக்குள் தேங்குவதால் பொதுமக்கள் பாதிப்படைகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சியின் 17 வார்டு பகுதி மக்களுக்கு காவிரி குடிநீர் வழங்க திருவள்ளுவர் நகர் பகுதியில் மேல்நிலை குடிநீர்த் தொட்டி கட்டபட்டுள்ளது.
இந்த குடிநீர் தொட்டிக்கு அமைக்கபட்ட குடிநீர் குழாய்கள் பழுதடைந்ததின் காரணமாக சுமார் பல கோடி ரூபாய் மதிப்பில் புதிய குழாய்கள் கடந்த மாதம் இணைக்கபட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த குழாய்கள் முறையாக இணைக்கப்படாததால் , இந்தக் குழாயிலிருந்து தண்ணீர் பீறிட்டு வெளியேறுகிறது. இவ்வாறு வெளியேறும் நீரானது அருகிலுள்ள வீடுகளுக்குள் புகுந்து வீடுகளில் நீர், நிரம்பி, குளம்போல் காட்சியளிக்கிறது . இது குறித்து பல முறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை எனக் கூறப்படுகிறது.  குழாய் உடைந்து வீடுகளில புகுந்த  தண்ணீரால் வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் உணவு பொருள்கள் மற்றும் பள்ளிப் பாட புத்தகங்கள் நனைந்து வீணாவதாக புகார் கூறுகின்றனர்.
தொடரும் இந்தப் பிரச்னையால் , அப்பகுதி பொது மக்கள் பெரிதும் பாதிக்கபடுவதாகவும் உடனடியாக நகராட்சி நிர்வாகம்  குழாய் உடைப்பை சரி செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/17/குமாரபாளையம்-குடிநீர்-குழாய்-உடைப்பு-2791644.html
2791643 தருமபுரி நாமக்கல் திருச்செங்கோட்டில் சாலை தடுப்பு சுவரால் அடிக்கடி விபத்து DIN DIN Tuesday, October 17, 2017 06:29 AM +0530 திருச்செங்கோடு சங்ககிரி சாலைகளில் அமைக்கப்பட்ட தடுப்பு சுவர்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையத்துக்கு பின்புறமுள்ள சங்ககிரி சாலையின் மையத்தில் கட்டப்பட்டுள்ள சாலை தடுப்புச் சுவர்களில் இரவில் ஒளிரும் விளக்குகள் இல்லாததாலும், முறையாக தடுப்பு பேரி கார்டுகள் இல்லாமல் சிறுதிட்டுகளாக மட்டுமே உள்ளதால் இரவு நேரங்களில் இந்தச் சாலைகளைக் கடக்கும் கனரக வாகனங்கள் அடிக்கடி இந்தச் சுவற்றில் மோதி விபத்தில் சிக்கி ஓட்டுநர்கள் காயமடைகின்றனர்.
இடிந்த நிலையில் இருக்கும் இந்தத் தடுப்பு சுவர்களை முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட துறையினருக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/17/திருச்செங்கோட்டில்-சாலை-தடுப்பு-சுவரால்-அடிக்கடி-விபத்து-2791643.html
2791642 தருமபுரி நாமக்கல் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் DIN DIN Tuesday, October 17, 2017 06:29 AM +0530 வேலைப் பளுவற்ற ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய கூட்டமைப்பு சார்பில் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல் பூங்கா சாலையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் கே. சின்னுசாமி தலைமை வகித்தார். மாநில துணை பொதுச் செயலர் சி. ஜோதிமணி, மாவட்டச் செயலர் எஸ். கோவிந்தராசு உள்ளிட்டோர் கோரிக்கைகள் குறித்து பேசினர்.
வேலைப்பளுவற்ற ஊதிய உயர்வு வழங்க வேண்டும், 50,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கோட்டச் செயலர்கள் ஏ.செளந்திரராஜன், பி.கண்ணன், பி.விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொருளாளர் கே. முருகேசன் நன்றி கூறினார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/17/மின்வாரிய-ஊழியர்கள்-ஆர்ப்பாட்டம்-2791642.html
2791641 தருமபுரி நாமக்கல் அரசுப் பள்ளி ஆசிரியைக்கு பாராட்டு விழா DIN DIN Tuesday, October 17, 2017 06:28 AM +0530 தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ராசிபுரம் நகராட்சி அரசுத்  தொடக்கப் பள்ளி ஆசிரியைக்குப் பாராட்டு விழா, ராசிபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் அண்மையில் நடைபெற்றது.
கல்விப் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு கல்வித் துறையின் உயரிய விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது ஆண்டுதோறும் அரசால் செப்டம்பர் 5-இல் ஆசிரியர் தினத்தன்று வழங்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் நிகழ் ஆண்டுக்கான விருதுக்கு 5 பேர் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.
இதில் ராசிபுரம் செம்மலை தெருவில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியின் மாற்றுத்திறனாளி ஆசிரியரான மு. செல்வகுமாரியும் ஒருவர். இவரது கல்வி சேவை,  ஓவியம், பாடல், தனித்துவ கற்பிப்பு திறன் போன்றவற்றை பாராட்டி இந்த விருது அரசால் வழங்கப்பட்டது.
இதையடுத்து ஆசிரியை மு. செல்வகுமாரிக்கு பாராட்டு விழா, ராசிபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியை வரவேற்றார். ரோட்டரி சங்கத் தலைவர் கே. குணசேகர், ஆசிரியை செல்வகுமாரியை கௌரவித்துப் பேசினார்.  ரோட்டரி சங்கச் செயலர் டி. வினோத், ரோட்டரி முன்னாள் தலைவர் சிட்டி ஆர். வரதராஜன், கே.எஸ்.கருணாகர பன்னீர்செல்வம், அம்மன் வி. ரவி, வெங்கடாஜலபதி, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சந்திரவதனா,  ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை வசந்தா உள்ளிட்டோர் பங்கேற்றுப் பாராட்டிப் பேசினர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/17/அரசுப்-பள்ளி-ஆசிரியைக்கு-பாராட்டு-விழா-2791641.html
2791640 தருமபுரி நாமக்கல் மோகனூர் சார்- பதிவாளர் அலுவலகத்தில் சோதனை DIN DIN Tuesday, October 17, 2017 06:28 AM +0530 நாமக்கல் மாவட்டம், மோகனூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் நடத்திய சோதனையில் ரூ. 50,000 கணக்கில் வராத பணம் சிக்கியது.
நாமக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டி.எஸ்.பி. கிருஷ்ணராஜன் தலைமையில் திங்கள்கிழமை மாலை மோகனூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அலுவலகத்தில் சார் பதிவாளர் உள்பட 5 அலுவலர்கள் இருந்தனர். இந்தச் சோதனை இரவு 10 மணிக்கு மேலும் நீடித்தது. சோதனையில் கணக்கில் வராத ரூ. 50,000 பணம் இருந்தது கண்டறியப்பட்டது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/17/மோகனூர்-சார்--பதிவாளர்-அலுவலகத்தில்-சோதனை-2791640.html
2791639 தருமபுரி நாமக்கல் பரமத்தி வேலூர் கந்தசாமிக் கண்டர் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம் DIN DIN Tuesday, October 17, 2017 06:28 AM +0530 பரமத்தி வேலூர் கந்தசாமிக் கண்டர் கல்லூரியில் விலங்கியல் துறை சார்பில் ஒரு நாள் பன்னாட்டு கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
இதில் சுற்றுப்புறச் சீர்கேட்டினால் ஏற்படும் நோய்களும் மற்றும் மருந்துப் பொருளுக்கு எதிராக நுண்ணுயிர்களில் காணப்படும் எதிர்ப்புத் தன்மையும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்கத்திற்கு கல்லூரி முதல்வர் தங்கராஜ் தலைமை தாங்கினார். கந்தசாமிக் கண்டர் அறநிலையங்களின் தலைவர் மருத்துவர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தார். விலங்கியல் துறைத்தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். பேராசிரியர் முத்துசாமி கருத்தரங்கத்தின் நோக்கத்தை விளக்கி பேசினார். விலங்கியல் துறை முன்னாள் துறைத் தலைவர் முனைவர் கனகராஜ் தொடக்க விழா உரை நிகழ்த்தினார்.
இந்திய விலங்கியல் கூட்டமைப்பின் உறுப்பினர் முனைவர் என்.ஆறுமுகம், சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியின் முனைவர் காயத்ரி, கேரளா,  மலபார் புற்றுநோய் ஆராய்ச்சி மைய முனைவர் பார்த்திபன், முனைவர் செல்வக்குமார், லிபியா மிசராட்டா பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி முனைவர் செல்வகுமார் ஆகியோர் சுற்றுச்சுழல் சீர்கேட்டினால் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களைப் பற்றியும், அதைக் கண்டறியும் முறை மற்றும் அவற்றிற்கான சிகிச்சை முறைகளைப் பற்றியும் விளக்கி பேசினர்.
கருத்தரங்க நிறைவு விழாவில் கந்தசாமிக் கண்டர் அறநிலையங்களின் துணைத் தலைவர் டாக்டர் நெடுஞ்செழியன் சான்றிதழ்களை வழங்கினார். இக் கருத்தரங்கத்தில் நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலிருந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவ,மாணவியர்கள் உட்பட 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/17/பரமத்தி-வேலூர்-கந்தசாமிக்-கண்டர்-கல்லூரியில்-பன்னாட்டு-கருத்தரங்கம்-2791639.html
2791638 தருமபுரி நாமக்கல் திறனாய்வுப் போட்டி: ஸ்ரீராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி சிறப்பிடம் DIN DIN Tuesday, October 17, 2017 06:27 AM +0530 குமாரபாளையம் ஸ்ரீ ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி மின்னியல், மின்னணு பொறியியல் மற்றும் மின்னணு தொலைத்தொடர்புத் துறை மாணவர்கள் மாவட்ட அளவிலான திறன் மேம்பாட்டுப் போட்டியில் மூன்றாமிடம் பிடித்தனர்.
நாமக்கல் மாவட்ட அளவிலான தேசிய திறனாய்வுப் போட்டிகள்  ஸ்ரீ ரெங்கேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. 13 கல்லூரிகளின் மாணவ, மாணவியர் பங்கேற்ற இப்போட்டிகளை தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநரகம் மற்றும் தமிழ்நாடு திறன்மேம்பாட்டுக் கழகம் இணைந்து நடத்தியது. இப்போட்டியில் பங்கேற்ற மின்னணு மற்றும் தொலைத்தொடர்புத்துறை மாணவர் எஸ்.நவீன், மின்னணு பொறியியல் துறை மாணவர் கே. முத்துகிருஷ்ணன் ஆகியோர் துறைவாரியாக மூன்றாமிடம் பிடித்தனர்.
சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் எஸ்.விஜயகுமார், ராகா இன்குபேட்டர் பயிற்சியாளர் எஸ்.பவித்ரா ஆகியோர் பாராட்டுத் தெரிவித்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/17/திறனாய்வுப்-போட்டி-ஸ்ரீராகவேந்திரா-பாலிடெக்னிக்-கல்லூரி-சிறப்பிடம்-2791638.html
2791637 தருமபுரி நாமக்கல் திருச்செங்கோடு அரசுப் பள்ளிக்கு ஜெராக்ஸ் மிஷின் அளிப்பு DIN DIN Tuesday, October 17, 2017 06:27 AM +0530 திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில் ஜெராக்ஸ் இயந்திரம் வழங்கப்பட்டது.
அண்மையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் 1992-1993 ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான ஜெராக்ஸ் மிஷினை வழங்கினார்.
மோகன், செந்தில்குமார், செந்தில்நாதன், கார்த்திகேயன் உள்ளிட்ட முன்னாள்  மாணவர்கள் கலந்து கொண்டனர். ஜெராக்ஸ் மிஷினை  பள்ளித் தலைமை ஆசிரியர் லோகநாதன் பெற்றுக் கொண்டார்.
நாமக்கல் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் செல்வகுமார் பங்கேற்றோர். இதில் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/17/திருச்செங்கோடு-அரசுப்-பள்ளிக்கு-ஜெராக்ஸ்-மிஷின்-அளிப்பு-2791637.html
2791636 தருமபுரி நாமக்கல் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா DIN DIN Tuesday, October 17, 2017 06:27 AM +0530 குமாரபாளையத்தில் குடியரசு  முன்னாள் தலைவர் ஏபிஜெ அப்துல் கலாமின் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
நம்ம குமாரபாளையம் அமைப்பு சார்பில் நாராயண நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி நாராயணன் நகர், குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, புத்தர் நகராட்சிப் பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிகளுக்கு, நம்ம குமாரபாளையம் அமைப்பின் முதன்மை தன்னார்வலர் எஸ்.ஓம் சரவணா தலைமை வகித்தார். நிர்வாகிகள் வினோத், கிஷோர், தனபால் ஆகியோர் முன்னலை வகித்தனர். முன்னதாக, கலாமின் 86-ம் பிறந்த நாளை நினைவு கூரும் வகையில் குமாரபாளையம் பகுதியில் 86 மரக்கன்றுகள் நடப்பட்டதோடு, அதனை வளர்த்து மரமாக்க உறுதியேற்கப்பட்டது.
குமாரபாளையம் எஸ்எஸ்எம் பாலிடெக்னிக் கல்லூரி துணைத் தலைவர் பி.இ.ஈஸ்வர், தாளாளர் பி.இ.புருஷோத்தமன், நிர்வாகிகள் லோகு, சுகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நாமக்கல்லில்...
நாமக்கல் கோட்டை நகரவை உயர்நிலைப் பள்ளியில் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியர் பழனிசாமி தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் டி.எம்.மோகன், திருக்குறள் திலகம் ராசா, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் ரவி, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் கமால்பாஷா,  நரசிம்மன், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலாம் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/17/அப்துல்-கலாம்-பிறந்த-நாள்-விழா-2791636.html
2791635 தருமபுரி நாமக்கல் தீயணைப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி DIN DIN Tuesday, October 17, 2017 06:27 AM +0530 திருச்செங்கோடு தீயணைப்புத் துறையின் சார்பில் குமரமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளி, திருச்செங்கோடு அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் விபத்து இல்லாத தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிழ்ச்சி நடைபெற்றது.
தீயணைப்பு அலுவலர் ராகவன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியின்போது வீடுகளில் ஏற்படும் தீ விபத்துகளில் இருந்து எப்படி தற்காத்துக்கொள்வது?  தீயை எவ்வாறு கட்டுப்படுத்துவது?, தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும்போது பெரியவர்களின் மேற்பார்வையில் பட்டாசு வெடிக்க வேண்டும், பட்டாசு வெடிக்கும்போது இறுக்கமான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்,  பட்டாசு வெடிக்கும் போது வாளியில் தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும், வீடுகளில் மின் சாதனங்களில் தீ பிடித்தால் எவ்வாறு கட்டுப்படுத்திஅணைப்பது? எரிவாயு சிலிண்டரில் தீப்பிடித்தால் எப்படி அணைப்பது?   உள்ளிட்ட பல்வேறு தீத்தடுப்பு முறைகள்செயல்முறையாக  மாணவர்களுக்கு தீயணைப்பு வீரர்கள் செய்து காட்டினர்.
மேலும் தீத்தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள்விநியோகிக்கப்பட்டன.  நிகழ்ச்சியில் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்,  தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/17/தீயணைப்புத்-துறை-சார்பில்-விழிப்புணர்வு-நிகழ்ச்சி-2791635.html
2791238 தருமபுரி நாமக்கல் வையப்பமலை வேளாண்மை கூட்டுறவு வங்கியில் காவலாளியை கொன்று கொள்ளை முயற்சி  திருச்செங்கோடு, DIN Monday, October 16, 2017 08:55 AM +0530 நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்துள்ள வையப்பமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் சனிக்கிழமை இரவு காவலாளியைக் கொன்று நகை, பணத்தை மர்ம கும்பல் கொள்ளையடிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 இந்தக் கூட்டுறவு சங்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். சுமார் 2, 119 சவரன் நகைகளை உறுப்பினர்கள் அடகு வைத்து, கடன் பெற்றுள்ளனர். அனைத்து நகைகளும், இங்குள்ள பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
 இக் கடன் சங்கத்தின் இரவுநேரக் காவலாளியாக ராசிபுரம் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தைச் சேர்ந்த பெரியசாமி (45) என்பவர் கடந்த 6 மாதங்களாக பணிபுரிந்து வருகிறார்.
 இந்த நிலையில், வழக்கம்போல பெரியசாமி, சனிக்கிழமை இரவு சங்கக் கட்டடத்தில் காவல் பணியில் ஈடுபட்டிருந்தார்.
 மறுநாள் ஞாயிற்றுக்கிழமை சங்கத் தலைவர் செந்தில், சங்கத்துக்கு வந்தபோது சங்க வளாகத்தின் முன்புறக் கதவு திறக்கப்பட்டிருந்தது. இதில் சந்தேகமடைந்த செந்தில் பின்புறம் சென்று பார்த்தபோது, காவலாளி போர்வையால் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்து கிடந்தார். அதிர்ச்சியடைந்த செந்தில், எலச்சிபாளையம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
 நிகழ்விடம் வந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். தகவல் அறிந்ததும் நாமக்கல் மாவட்ட எஸ்.பி. அருளரசு நேரில் வந்து விசாரணை நடத்தினார். முதற்கட்ட விசாரணையில் சங்கத்தின் உள்ளே நகை இருந்த லாக்கரை மர்ம கும்பல் உடைக்க முயற்சித்துள்ளனர்.
 லாக்கரை கம்பியால் மெதுவாக திறக்க முயற்சித்ததால், அலாரம் அடிக்கவில்லை. இருப்பினும், லாக்கரை உடைக்க முடியாததால், கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
 இதனால், 2 ,119 சவரன் நகைகள், ரூ. 1 லட்சத்து 51 ஆயிரத்து 523 பணம் கொள்ளைபோவது தடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது.
 மேலும், கட்டட வளாகத்தின் வெளிப் பகுதியில் கண்காணிப்பு கேமரா இல்லை. உள் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவும் வேலை செய்யவில்லை.
 இதனால் வந்த கொள்ளையர்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
 நான்கு தனிப் படை: தப்பிச் சென்ற கும்பலைப் பிடிக்க துணைக் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் திருச்செங்கோடு நகர காவல் ஆய்வாளர் பாரதி மோகன், ஊரக காவல் ஆய்வாளர் ஆரோக்கிய ராஜ், எலச்சிபாளையம் காவல் ஆய்வாளர் செல்வராஜ், வேலகவுண்டன்பட்டி ஆய்வாளர் கைலாசம் ஆகியோர் தலைமையில் நான்கு தனிப் படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இறந்த காவலாளி பெரியசாமிக்கு கோகிலா என்ற மனைவியும், 9-ஆம் வகுப்புப் பயிலும் கெளதம் (14) என்ற மகனும் உள்ளனர்.
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/16/வையப்பமலை-வேளாண்மை-கூட்டுறவு-வங்கியில்-காவலாளியை-கொன்று-கொள்ளை-முயற்சி-2791238.html
2791111 தருமபுரி நாமக்கல் காவேரிப்பட்டணம் அருகே மனைவியைக் கொன்ற கணவர் கைது DIN DIN Monday, October 16, 2017 07:04 AM +0530 காவேரிப்பட்டணம் அருகே மனைவியைக் கொன்ற கணவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
காவேரிப்பட்டணம் அருகே உள்ள சுப்பிரமணிபுரத்தைச் சேர்ந்தவர் நாராயணன்(52).  இவரது மனைவி லட்சுமி(40). இவர்களுக்கு இரண்டு மகள்கள், மகன் உள்ளனர்.
இந்த நிலையில்,  நடத்தையில் சந்தேகமடைந்து சனிக்கிழமை இரவு லட்சுமியுடன் தகராறில் ஈடுபட்ட நாராயணன்,  அவரைக் கொலை செய்தாராம்.  தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவேரிப்பட்டணம் போலீஸார்,  நாராயணனிடம் மேற்கொண்ட விசாரணையில்,  மனைவியைக் கொலை செய்தது தெரிய வந்தது.  இதையடுத்து, அவரைக் கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/16/காவேரிப்பட்டணம்-அருகே-மனைவியைக்-கொன்ற-கணவர்-கைது-2791111.html
2791110 தருமபுரி நாமக்கல் வையப்பமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கொள்ளை முயற்சி: காவலாளி கொலை DIN DIN Monday, October 16, 2017 07:04 AM +0530 நாமக்கல் மாவட்டம்,  திருச்செங்கோடு அடுத்துள்ள வையப்பமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் சனிக்கிழமை இரவு காவலாளியைக் கொன்று நகை,  பணத்தை மர்ம கும்பல் கொள்ளையடிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கூட்டுறவு சங்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.  சுமார் 2, 119 சவரன்  நகைகளை உறுப்பினர்கள் அடகு வைத்து, கடன் பெற்றுள்ளனர். அனைத்து நகைகளும்,  இங்குள்ள பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இக் கடன் சங்கத்தின் இரவுநேரக் காவலாளியாக ராசிபுரம் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தைச் சேர்ந்த பெரியசாமி (45) என்பவர் கடந்த 6 மாதங்களாக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில்,  வழக்கம்போல பெரியசாமி,  சனிக்கிழமை இரவு சங்கக் கட்டடத்தில் காவல் பணியில் ஈடுபட்டிருந்தார்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை சங்கத் தலைவர் செந்தில்,  சங்கத்துக்கு வந்தபோது சங்க வளாகத்தின் முன்புறக் கதவு திறக்கப்பட்டிருந்தது.  இதில் சந்தேகமடைந்த செந்தில் பின்புறம் சென்று பார்த்தபோது,  காவலாளி போர்வையால் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்து கிடந்தார். அதிர்ச்சியடைந்த செந்தில்,  எலச்சிபாளையம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
நிகழ்விடம் வந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.  தகவல் அறிந்ததும்   நாமக்கல் மாவட்ட எஸ்.பி. அருளரசு நேரில் வந்து விசாரணை நடத்தினார்.  முதற்கட்ட விசாரணையில் சங்கத்தின் உள்ளே நகை இருந்த லாக்கரை மர்ம கும்பல் உடைக்க முயற்சித்துள்ளனர்.
லாக்கரை கம்பியால் மெதுவாக திறக்க முயற்சித்ததால், அலாரம் அடிக்கவில்லை.  இருப்பினும்,  லாக்கரை உடைக்க முடியாததால்,  கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.  இதனால்,   2 ,119 சவரன் நகைகள்,  ரூ. 1 லட்சத்து 51 ஆயிரத்து 523 பணம் கொள்ளைபோவது தடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது.  மேலும், கட்டட வளாகத்தின் வெளிப் பகுதியில் கண்காணிப்பு கேமரா இல்லை.   உள் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவும் வேலை செய்யவில்லை.
இதனால் வந்த கொள்ளையர்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
நான்கு தனிப் படை: தப்பிச் சென்ற கும்பலைப் பிடிக்க துணைக் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் திருச்செங்கோடு நகர காவல் ஆய்வாளர் பாரதி மோகன்,  ஊரக காவல் ஆய்வாளர் ஆரோக்கிய ராஜ்,  எலச்சிபாளையம் காவல் ஆய்வாளர் செல்வராஜ், வேலகவுண்டன்பட்டி ஆய்வாளர் கைலாசம் ஆகியோர் தலைமையில் நான்கு தனிப் படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
இறந்த காவலாளி பெரியசாமிக்கு கோகிலா என்ற மனைவியும், 9-ஆம் வகுப்புப் பயிலும் கெளதம் (14) என்ற மகனும் உள்ளனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/16/வையப்பமலை-தொடக்க-வேளாண்மை-கூட்டுறவு-சங்கத்தில்-கொள்ளை-முயற்சி-காவலாளி-கொலை-2791110.html
2791035 தருமபுரி நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 67 லட்சத்துக்கு மஞ்சள் விற்பனை DIN DIN Monday, October 16, 2017 06:38 AM +0530 திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 1,351 மஞ்சள் மூட்டைகள் ரூ. 67 லட்சத்துக்கு விற்பனையானது.
ஆத்தூர், கெங்கவல்லி, கூகையூர், கள்ளக்குறிச்சி, பொம்மிடி, அரூர், ஜேடர்பாளையம், பரமத்திவேலூர், நாமக்கல், மேட்டூர்,  பூலாம்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து நிகழாண்டு மஞ்சள் விற்பனைக்கு வந்தது.
மஞ்சளைக் கொள்முதல் செய்ய ஈரோடு,  ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, சேலம் ஆகிய ஊர்களிலிருந்து 35-க்கும் மேற்பட்ட  வியாபாரிகள் வந்திருந்தனர். ஒப்பந்தப்புள்ளி மூலம் ரூ. 67 லட்சத்துக்கு மஞ்சள் விற்பனையானது. இதில் விரலி  ரகம் குவிண்டாலுக்கு ரூ. 7,700  முதல் ரூ. 9,889  வரை விற்பனையானது.
கிழங்கு ரகம் ரூ. 7,399 முதல் ரூ. 8,589 வரை விற்பனையானது. பனங்காளிக்கு  ரூ. 10,212 முதல் ரூ. 15,869  வரை விலைபோனது கடந்த வாரம் 1,021 மூட்டைகள் ரூ. 51 லட்சத்துக்கு விற்பனையானது. மற்ற மார்கெட்டுகளை விட இங்கு விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு ரூ. 400 வரை அதிகம் கிடைப்பதாக கூட்டுறவு
சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/16/கூட்டுறவு-சங்கத்தில்-ரூ-67-லட்சத்துக்கு-மஞ்சள்-விற்பனை-2791035.html
2791034 தருமபுரி நாமக்கல் பரமத்திவேலூர் அருகே திருமணி முத்தாறு தரைப்பாலத்தை சீரமைக்கக் கோரிக்கை DIN DIN Monday, October 16, 2017 06:38 AM +0530 பரமத்தி அருகே திருமணி முத்தாற்றில் கூடச்சேரி-மூர்த்திபட்டி இடையே பழுதடைந்த தரைப் பாலத்தை சீர்செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரமத்தி அருகே கூடச்சேரியிலிருந்து மூர்த்திப்பட்டி  செல்லும் சாலையில் திருமணி முத்தாறு தரைப்பாலம் உள்ளது.
இந்தத் தரைப்பாலம் வழியாக நாமக்கல், பரமத்தி வேலூர், பரமத்தி பகுதிகளில் இருந்து கூடச்சேரி, மூர்த்திப்பட்டி,  பல்வேறு பகுதிகளுக்கு பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.
மேலும் விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களுக்கு இடுபொருள்களை கனரக வாகனங்கள் மூலம் எடுத்துச் செல்கின்றனர். இத் தரைப்பாலம் பல ஆண்டுகளாக முறையாக பராமரிப்பின்றி பழுதடைந்த நிலையில் உள்ளது.
தற்போது திருமணிமுத்தாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் திருமணி முத்தாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அதிகமாக தண்ணீர் வருவதால் இத் தரைப்பாலம் மேலும் பழுதடைந்து தண்ணீரில் அடித்துச் செல்ல வாய்ப்புள்ளது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன் பழுதடைந்த தரைப் பாலத்தை அதிகாரிகள் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/16/பரமத்திவேலூர்-அருகே-திருமணி-முத்தாறு-தரைப்பாலத்தை-சீரமைக்கக்-கோரிக்கை-2791034.html
2791033 தருமபுரி நாமக்கல் ராசிபுரத்தில் கூட்டு துப்புரவுப் பணி DIN DIN Monday, October 16, 2017 06:38 AM +0530 ராசிபுரம் நகராட்சி பகுதிக்கு உள்பட்ட இரு வார்டுகளில் டெங்கு நோய்த் தடுப்பு நடவடிக்கையாக கூட்டு துப்புரவு பணி ஞாயிற்றுக்கிழமை நகராட்சி சுகாதாரத் துறை யினரால் நடத்தப்பட்டது.
நகராட்சி ஆணையாளர் பி.கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் நகரில் 7, 10 ஆகிய இரு வார்டுகளில் கொசுப்புழு தடுப்புப் பணி, அபேட் மருந்து தெளிப்பு,  புகை மருந்து அடித்தல்,  கழிவுநீர் கால்வாய்கள் சுத்தம் செய்தல் போன்ற கூட்டுப்பணி மேற்கொள்ளப்பட்டது.
எல்லை மாரியம்மன் கோயில் பகுதி, விஜயலட்சுமி திரையரங்கு சாலை, பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் இப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயமும்
வழங்கப்பட்டது.  
நகராட்சி துப்புரவு அலுவலர் பாலகுமாரராஜூ, துப்புரவு அலுவலர்கள் ஆ.லோகநாதன், ஆர்.பாஸ்கரன் உள்ளிட்டோர் இப் பணியை மேற்பார்வையிட்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/16/ராசிபுரத்தில்-கூட்டு-துப்புரவுப்-பணி-2791033.html
2791032 தருமபுரி நாமக்கல் டெங்கு குறித்து திமுக பொய் பிரசாரம்: எம்.பி. குற்றச்சாட்டு DIN DIN Monday, October 16, 2017 06:38 AM +0530 டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் திமுகவினர் மக்களை பீதியடைய செய்யும் வகையில் பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக மக்களவை உறுப்பினர் பி.ஆர். சுந்தரம் தெரிவித்தார்.
ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.ஆர். சுந்தரம் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிலவேம்பு குடிநீர் தயாரித்து பொதுமக்களுக்கு வழங்கிட நாமக்கல் மாவட்டத்துக்கு ரூ. 25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்திருந்தார்.
அதன்படி, அந்த நிதியிலிருந்து ஆங்காங்கே முகாம்கள் நடத்தி நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டு வருகிறது. ராசிபுரம் பகுதியில், மங்களபுரம், முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, காக்காவேரி, ஆண்டகளூர் கேட் ஆகிய பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது.
நாமக்கல் எம்பி., பி.ஆர்.சுந்தரம் பொதுமக்களுக்கு வழங்கினார். இந்த முகாமில் பி.ஆர். சுந்தரம் பேசியதாவது:
டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த அரசுப் போதிய முயற்சிகள் எடுத்துவரும் நிலையில், திமுக கட்சியினர், மக்களிடம் பீதியை ஏற்படுத்தும் வகையில் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்த நோய்க் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு ஆகிய 5 தொகுதிகளில் நிலவேம்பு குடிநீர் தயாரித்து வழங்கிட ரூ. 25 லட்சமும், சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதிக்கு ரூ. 10 லட்சம் என மொத்தம் ரூ. 35 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிலவேம்பு குடிநீரை பொதுமக்கள் பருகி, நோய் பாதிப்பு இல்லாமல் பார்த்துக் கொள்வதுடன்,  சுற்றுப்பகுதியை  தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் மணிவண்ணன், மாவட்ட ஊராட்சிச் செயலர் பிரியா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆ. தனபால், மீராபாய், வட்டார மருத்துவ அலுவலர்கள் கே. செல்வி, பாலாமணி,  ராசிபுரம் வட்டாட்சியர் ந.ரத்தினம், சித்த மருத்துவர் செங்குட்டுவேல், நாமகிரிப்பேட்டை ஒன்றிய ஊராட்சிக்குழு முன்னாள் தலைவர் இ.கே.பொன்னுசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/16/டெங்கு-குறித்து-திமுக-பொய்-பிரசாரம்-எம்பி-குற்றச்சாட்டு-2791032.html
2791031 தருமபுரி நாமக்கல் சிவியம்பாளையத்தில் டெங்கு ஒழிப்பு முகாம் DIN DIN Monday, October 16, 2017 06:37 AM +0530 நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவர்கள்,  பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் மற்றும் நாமக்கல் கிளை இந்திய மருத்துவ சங்கம் சார்பில் கொசு ஒழிப்புப் பணி நாமக்கல் அருகே சிவியம்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த மருத்துவர்கள் சங்கத்தினர் இரண்டாவது வாரமாக டெங்கு தடுப்பு முகாமை சிவியம்பாளையம் அருந்ததியர் காலனியில் நடத்தினர்.
சிவியம்பாளையம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சிவியம்பாளையம் கணேசன் தலைமை வகித்தார். சிவியம்பாளையம் ராமசாமி முன்னிலை வகித்தார். நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத் தலைவர் மருத்துவர் ரங்கநாதன்,  நாமக்கல் கிளை இந்திய மருத்துவ சங்க மருத்துவர் சிவகுமார் ஆகியோர் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு மற்றும் கொசு புழுக்கள் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மருத்துவர் ரங்கநாதன் டெங்கு காய்ச்சலைத் தடுப்பது குறித்தும், அதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு குறித்தும் பேசினார். பணியின் போது இலக்கமநாயக்கன்பட்டி பெரியசாமி, சிவியம்பாளையம் அருந்ததியர் காலனியைச் சேர்ந்த வழக்குரைஞர் சக்திவேல் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர் .

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/16/சிவியம்பாளையத்தில்-டெங்கு-ஒழிப்பு-முகாம்-2791031.html
2791030 தருமபுரி நாமக்கல் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாத சம்பளம் ரூ.18 ஆயிரம் வழங்கக் கோரிக்கை DIN DIN Monday, October 16, 2017 06:37 AM +0530 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாத சம்பளம் ரூ. 18 ஆயிரம் வழங்க வேண்டும் என சங்கக் கூட்டத்தில் அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருச்செங்கோட்டில் அமைப்பு சாரா பொதுத் தொழிலாளர்கள், கட்டடத் தொழிலாளர்கள் சங்கத்தின் 2-ஆம் ஆண்டு பேரவைக் கூட்டம் சங்க அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் முருகேசன் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மணிவேல் துவக்கி வைத்தார். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நாமக்கல் மாவட்டத்தில் அமைப்புசாரா ஓய்வூதியம் வாங்குபவர்களுக்கு 7 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஓய்வூதியத்தை உடனே வழங்க வேண்டும். 2015 முதல் 2017 வரை உடல் உழைப்புக்கு உட்பட்ட15 வாரிய தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை. இதனால் 30 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கல்வி உதவித்தொகையை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 25 சத தீபாவளி போனஸ் வழங்க வேண்டும்.  அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச மாத  சம்பளம் ரூ. 18 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் ரூ. 3 ஆயிரம் வழங்க வேண்டும். திருச்செங்கோடு,  குமாரபாளையம் பகுதியில் பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இஎஸ்ஐ , பிஎப் திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/16/அமைப்புசாரா-தொழிலாளர்களுக்கு-மாத-சம்பளம்-ரூ18-ஆயிரம்-வழங்கக்-கோரிக்கை-2791030.html
2791029 தருமபுரி நாமக்கல் மதியம்பட்டி ஏரி பாலத்தில் மீண்டும் ரசாயன கழிவுநீர் நுரை: விவசாயிகள் வேதனை DIN DIN Monday, October 16, 2017 06:37 AM +0530 வெண்ணந்தூர் அருகே உள்ள மதியம்பட்டி ஏரியில்  ரசாயனக் கழிவு நீர் நுரை தொடர்ந்து தேங்குவதால் அப்பகுதியில் விளை நிலங்கள் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மதியம்பட்டியில் உள்ள ஏரிக்கு மழைக் காலங்களில் வரும் நீரை நம்பி இப்பகுதியில் விவசாயம் நடைபெறுகிறது.
இந்த ஏரி சேலத்திலிருந்து வரும் திருமணி முத்தாற்றின் குறுக்கே அமைந்துள்ளதால் திருமணி முத்தாற்றில் வரும் நீர் இங்கும் தேங்கும். இங்கிருந்து பின்னர் பரமத்திவேலூர் பகுதி வரை சென்று ஆற்றில் கலக்கிறது.
தற்போது பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால்,  நீர்வரத்து அதிக அளவில் உள்ளது. தற்போது மதியம்பட்டி ஏரிக்கு திருமணி முத்தாற்றில் இருந்து வரும் நீர் பெரும்பாலும், சேலம் மாநகராட்சி பகுதியின் கழிவுகளும்,  ரசாயனக் கழிவுநீரும் சேர்ந்து வருகிறது. இதனால், ஏரியின் அருகில் உள்ள பாலத்தில் அடிக்கடி கழிவுநீர் நுரை அதிகளவில் சூழ்ந்து விடுகிறது. நுரை அதிக அளவில் உருவாகி சாலையை மறைப்பதால் பாலத்தின் வழியே போக்குவரத்துப் பாதிப்பதோடு  அப்பகுதியில் நிலத்தடி நீரும்,  விளைநிலங்களும் பாதிப்புக்குள்ளாகின்றன.
மேலும் இந்தப் பாலத்தின் வழியாகதான் செம்மாண்டப்பட்டி,  கானாம்பாளையம்,  ராசாம்பாளையம், ஒலப்பட்டி,  நடுப்பட்டி போன்ற கிராமங்களுக்கு மக்கள் செல்கின்றனர். மாமுண்டி,  மல்லசமுத்திரம் போன்ற பிரதான பகுதிகளுக்குச்  செல்லும் வாகனங்களும் இந்த வழியாகச் செல்ல வேண்டும். இந்தப் பாலத்தில் மழைக் காலங்களில் இதுபோல தேங்கும் ரசாயன கழிவு நுரையால் சுவாசக் கோளாறு ஏற்படுவதாகவும், ஏரியின் மீன்களும் பாதிப்புக்குள்ளாகின்றன என பொதுமக்கள் கூறுகின்றனர்.
இந்த கழிவுநீர் நுரை ஏற்படாமல் இருக்கவும், ஆற்றில் ரசாயனக் கழிவுகளை திறந்துவிடுவோர் மீதும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/16/மதியம்பட்டி-ஏரி-பாலத்தில்-மீண்டும்-ரசாயன-கழிவுநீர்-நுரை-விவசாயிகள்-வேதனை-2791029.html
2791028 தருமபுரி நாமக்கல் புதன்சந்தை அரசுப் பள்ளி மாணவியர் கல்வி சுற்றுலா DIN DIN Monday, October 16, 2017 06:36 AM +0530 புதன்சந்தை அண்ணா நகர் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியின் மாணவியர் பள்ளி கல்வி பரிமாற்றத் திட்டத்தின் கீழ் ராசிபுரம் தேசிய பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு அண்மையில் சென்றிருந்தனர்.
அண்ணாநகர் அரசு ஊராட்சியில் ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் மாணவியர் 20 பேர் தலைமை ஆசிரியர் தலைமையில் ராசிபுரம் தேசிய பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வந்திருந்தனர்.
அவர்களை தேசிய பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெ. பாபு உள்பட ஆசிரியர்கள் வரவேற்றனர்.
பின்னர், பள்ளியில் கரகாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும் 8-ம் வகுப்பு தமிழ்ப் பாட செயல்பாடுகள் குறித்துப் பயிற்சி அளிக்கப்பட்டது. மகாத்மா காந்தி குறித்த குறும்படம்
காண்பிக்கப்பட்டது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/16/புதன்சந்தை-அரசுப்-பள்ளி-மாணவியர்-கல்வி-சுற்றுலா-2791028.html
2791027 தருமபுரி நாமக்கல் வைரஸ் காய்ச்சலுக்கு விவசாயி பலி DIN DIN Monday, October 16, 2017 06:36 AM +0530 நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா அணிமூர் கிராமத்தில் வைரஸ் காய்ச்சலுக்கு விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தார்.
திருச்செங்கோட்டை அடுத்த அணிமூர் பெரியகாடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்(41). விவசாயியான இவர், தன் சகோதரருடன் இணைந்து ரிக் தொழிலிலும் செய்து வந்தார்.
இவருக்கு அம்சலட்சுமி(35) என்ற மனைவியும், தனுஸ்ரீ (13) சம்ரிதா (7) என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட செந்தில், திருச்செங்கோட்டில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர்,  ஈரோட்டில் தனியார் மருத்துவமனையிலும், தீவிர சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு வெள்ளிக்கிழமை இறந்தார். இவரது ரிக் வண்டியில் வேலை செய்யும் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஜோகு பந்து(40) என்பவரும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அணிமூர் பகுதியில் பலருக்கு காய்ச்சல் இருப்பதாகவும் உடனடியாக தடுப்பு நடவடிக்கைள் மேற்கொள்ள வேண்டும் என பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ராசிபுரத்தில்...
ராசிபுரம் அருகே ஈஸ்வரமூர்த்திபாளையம் பகுதியைச்  சேர்ந்த பெண், வைரஸ் காய்ச்சலுக்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
ஈஸ்வரமூர்த்திபாளையம் பிரகாசம் என்பவரின் மனைவி மைதிலி (31), கடந்த சில நாள்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  அவருக்கு உடலில் ரத்த அணுக்கள் குறைந்திருப்பது  தெரியவந்தது. தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்று வந்த மைதிலி, ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/16/வைரஸ்-காய்ச்சலுக்கு-விவசாயி-பலி-2791027.html
2791026 தருமபுரி நாமக்கல் மல்லசமுத்திரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை திருட்டு DIN DIN Monday, October 16, 2017 06:36 AM +0530 மல்லசமுத்திரம் பேரூராட்சி பருத்தி பள்ளி சாலையில் ஆரம்ப சுகாதார நிலையம் பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணன் (68). இவர், மனைவி வசந்தா.
இந்த நிலையில் ஈரோட்டில் வசிக்கும் மகன் வழி பேத்திக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவரை பார்க்க கடந்த வியாழக்கிழமை தம்பதியர்,  வீட்டை பூட்டி விட்டு ஈரோடு சென்றிருந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை  வீடு திரும்பியபோது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.
மேலும்  வீட்டுக்குள் நிறுத்தப்பட்டிருந்த  புதிய இருசக்கர வாகனம், சமையல் எரிவாயு உருளை திருடுபோனதோடு பீரோவில் இருந்த 16 பவுன் நகைகள், ரொக்கம் ரூ. 50 ஆயிரம்,  வெள்ளிப் பொருள்கள் திருடுபோனது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதன் மதிப்பு ரூ. 5 லட்சம் எனக் கூறப்படுகிறது. தகவல் அறிந்த மல்ல சமுத்திரம் போலீஸார், நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/16/மல்லசமுத்திரத்தில்-வீட்டின்-பூட்டை-உடைத்து-16-பவுன்-நகை-திருட்டு-2791026.html
2791025 தருமபுரி நாமக்கல் நம்பிக்கை இல்ல குழந்தைகளுக்கு நலத் திட்ட உதவி DIN DIN Monday, October 16, 2017 06:35 AM +0530 நாமக்கல் லத்துவாடியில் உள்ள நம்பிக்கை இல்லத்தில் தனியார் கோழி மருந்து நிறுவனம் சார்பில் உலக முட்டை தின விழா மற்றும் மாணவ, மாணவிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
கோழித் தீவன ஆராய்ச்சியாளர் சந்திரசேகரன் பங்கேற்று குழந்தைகளுக்கு வேக வைத்த கோழி முட்டைகள், நோட்டுப் புத்தகம் உள்ளிட்டவற்றை வழங்கினார். நம்பிக்கை இல்ல மேலாளர் மலர்க்கொடி முன்னிலை வகித்தார். கோழி மருந்து நிறுவன அலுவலர்கள் குணசேகரன், பிரபாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/16/நம்பிக்கை-இல்ல-குழந்தைகளுக்கு-நலத்-திட்ட-உதவி-2791025.html
2791024 தருமபுரி நாமக்கல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, கார வகைகளை தயார் செய்வோரை கண்காணிக்க குழுக்கள் DIN DIN Monday, October 16, 2017 06:35 AM +0530 நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் உத்தரவின்படி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கவிக்குமார் தலைமையில் தீபாவளி பண்டிகைக்காக தயார் செய்யப்படும் இனிப்பு, கார வகைகளை கண்காணிக்க நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்புப் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உணவகங்கள், பேக்கரி, திருமண மண்டபம் உள்ளிட்ட இடங்களில் தயார் செய்யப்படும் இனிப்பு, கார வகைகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும்.
ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. செயற்கை வண்ணங்கள் கொண்டு இனிப்பு பொருள்களை தயார் செய்யக் கூடாது. பால் கொண்டு செய்யப்பட்ட இனிப்பு பொருள்களை மற்ற இனிப்பு பொருள்களுடன் கலந்து பைகளில் அடைத்து விற்பனை செய்யக்கூடாது.
தண்ணீரை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். இனிப்புகளை பைகள் மற்றும் அட்டை பெட்டிகளில் அடைத்து விற்பனை செய்யும்போது அந்தப் பொருட்கள் தயார் செய்யப்பட்ட தேதி, காலாவதியாகும் தேதி உள்ளிட்ட விவரங்களை அச்சிட வேண்டும்.
இனிப்பு, கார வகைகளுக்கு உணவு பாதுகாப்பு சட்ட விதிகளின்படி உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற்று விற்பனை செய்ய வேண்டும்.
உரிமம் பெறாத இனிப்பு மற்றும் கார வகைகளை தயார் செய்து விற்பனை செய்பவர்கள் மீது உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006 பிரிவு 55-ன் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விதிகளை பின்பற்றி இனிப்பு மற்றும் கார வகைகள் தாயார் செய்து விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிகப்பட்டு வருகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/16/தீபாவளி-பண்டிகையை-முன்னிட்டு-இனிப்பு-கார-வகைகளை-தயார்-செய்வோரை-கண்காணிக்க-குழுக்கள்-2791024.html
2791023 தருமபுரி நாமக்கல் தர மதிப்பீடு: பாவை கல்வி நிறுவனம் மாநில அளவில் 2-ஆம் இடம் DIN DIN Monday, October 16, 2017 06:35 AM +0530 "எஜுகேசன் வேர்ல்ட் மற்றும் சிஃபோர் சர்வே' அமைப்பு நடத்திய சிறந்த பள்ளிக்கான தர மதிப்பீட்டில் பாவை வித்யாஸ்ரம் பள்ளிகள் தமிழக அளவில் இரண்டாமிடமும், மண்டல அளவில் முதலிடமும் பெற்று சாதனை படைத்துள்ளன.
இவ்விருதானது உண்டு, உறைவிடப் பள்ளிகளின் பிரிவில் பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளின் ஆசிரியர்களின் கற்பிப்பு திறன், ஆசிரியர் நலன் மற்றும் மேம்பாடு,  நவீன வகுப்பறைகள், குளிரூட்டப்பட்ட வகுப்புகள், கூட்ட அரங்குகள், நீச்சல் குளம், டிஜிட்டல் நூலகங்கள், நவீன மயமான ஆய்வகங்கள், உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்குகள், இசை, நடனம், விளையாட்டுக்கான பயிற்சியாளர்கள் அம்சங்களின்படி  பரிந்துரைக்கப்பட்டு மண்டல அளவில் முதலாவதாக இப்பள்ளித் தேர்வாகியுள்ளது.
தில்லியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில்  பாவை கல்வி நிறுவனங்களின் இயக்குநர் (மாணவர் நலன்)  அவந்தி ராஜவேல், தி ஆர்ட் பீரோ  நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் ராஜவேல் ஆகியோர் பங்கேற்று விருது பெற்றனர்.
மத்திய அரசு கல்வித் துறை உயர் அதிகாரிகள்,  ஸ்மார்ட் கிளாஸ் எஜீகேசனல் சர்வீஷஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் திவ்யாலால், தமன்னா அசோசியேட்ஸ் நிறுவனர் டாக்டர் ஷியாமா சோனா ஆகியோர் விருதினை வழங்கினர்.
இந்த விருது பெற காரணமாக இருந்த பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளின் இயக்குநர் முனைவர் சி.சதீஸ், ஆசிரியர் குழு,  மாணவர்களை பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன்,  தாளாளர் மங்கைநடராஜன் ஆகியோர் பாராட்டினர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/16/தர-மதிப்பீடு-பாவை-கல்வி-நிறுவனம்-மாநில-அளவில்-2-ஆம்-இடம்-2791023.html
2791022 தருமபுரி நாமக்கல் டெங்கு காய்ச்சலுக்கு மாணவர் பலி: குடும்பத்தினரிடம் எம்.எல்.ஏ. ஆறுதல் DIN DIN Monday, October 16, 2017 06:34 AM +0530 பரமத்தி வேலூர் நல்லியாம்பாளையத்தில் டெங்கு காய்ச்சலால் பிளஸ் 1 மாணவர் பலியான சம்பவத்தில் அவரது குடும்பத்தாருக்கு  சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் கே.எஸ். மூர்த்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பரமத்தி வேலூர் நல்லியாம்பாளையத்தைச் சேர்ந்த குப்புசாமி-கோமதி தம்பதியின்  மகன் ஹரினிஸ் (16).
இவர், பாண்டமங்கலம் அருகே ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 1 பயின்று வந்தார்.
கடந்த 20 நாள்களுக்கு முன்பு  இவர், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பரமத்தி வேலூரில் தனியார் மருத்துவமனையிலும், பின்னர் தீவிர சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.
இருப்பினும் சனிக்கிழமை அதிகாலை ஹரினிஸ் உயிரிழந்தார்.
இந்த நிலையில்,  உயிரிழந்த மாணவரின் பெற்றோருக்கு  பரமத்தி வேலூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர்  கே.எஸ். மூர்த்தி ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
உடன் மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் ஆனந்த், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் பிரதாப் சக்ரவர்த்தி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சுந்தர், கபிலர்மலை ஒன்றியச் செயலாளர் சண்முகம், பரமத்தி வேலூர் நகரச் செயலாளர் மாரப்பன்,  திமுகவைச் சேர்ந்த பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/16/டெங்கு-காய்ச்சலுக்கு-மாணவர்-பலி-குடும்பத்தினரிடம்-எம்எல்ஏ-ஆறுதல்-2791022.html
2791021 தருமபுரி நாமக்கல் பள்ளிபாளையம் ஒன்றியத்தில் ரூ. 6.21 கோடி மதிப்பில் திட்டப் பணிகள்: அமைச்சர் தங்கமணி துவக்கி வைத்தார் DIN DIN Monday, October 16, 2017 06:34 AM +0530 குமாரபாளையம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 6.21 கோடி மதிப்பில் 20 புதிய திட்டப் பணிகளை அமைச்சர் தங்கமணி ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
பள்ளிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 85.65 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பொதுக் கழிப்பிடம், அங்கன்வாடி மையம், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கிராம சேவை கட்டடம் உள்ளிட்ட கட்டடங்களை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.
அதுபோல பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 6.21 கோடி மதிப்பிலான நியாயவிலைக் கடை, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, ஊராட்சி அலுவலகம், அங்கன்வாடி மையம், புதிய தார்சாலைகள் உள்ளிட்ட பணிகளுக்கான பூமி பூஜையை துவக்கி வைத்தார்.
முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் தலைமை வகித்தார்.  ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வக்குமார் சின்னையன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் திருச்செங்கோடு வருவாய்க் கோட்டாட்சியர் பாஸ்கரன், ஆவின் தலைவர் சின்னுசாமி, குமாரபாளையம் வட்டாட்சியர் ரகுநாதன், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் செந்தில் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/16/பள்ளிபாளையம்-ஒன்றியத்தில்-ரூ-621-கோடி-மதிப்பில்-திட்டப்-பணிகள்-அமைச்சர்-தங்கமணி-துவக்கி-வைத்தார்-2791021.html
2790572 தருமபுரி நாமக்கல் குமாரபாளையம் தொகுதியில்அரசுப் பொறியியல் கல்லூரிக்கு இடம் தேர்வு: பி. தங்கமணி DIN DIN Sunday, October 15, 2017 02:48 AM +0530 குமாரபாளையம் தொகுதியில் அரசுப் பொறியியல் கல்லூரி அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், திருச்செங்கோடு மற்றும் மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 25 பள்ளிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா மற்றும் ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தைப் பயன்பாட்டுக்கு வழங்கும் விழா பள்ளிபாளையம் கிருஷ்ணவேணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் தலைமை வகித்தார். ஈரோடு எம்பி எஸ்.செல்வக்குமார சின்னையன், திருச்செங்கோடு எம்எல்ஏ பொன்.சரஸ்வதி முன்னிலை வகித்தனர்.
விழாவில் 25 பள்ளிகளைச் சேர்ந்த 3,864 மாணவ, மாணவியர்களுக்கு ரூ. 4.79 கோடி மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி அமைச்சர் பி. தங்கமணி பேசியது: அரசு அனைத்து விதமான உதவிகளையும், சலுகைகளையும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. நீட் போன்ற எத்தகைய போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள மாணவர்கள் தயார்படுத்தி கொள்ள வேண்டும்.
ஆசிரியர்கள் நடத்துகின்ற பாடத்தை கவனமாக கவனித்து முழு மனதோடு செயல்பட்டால் 100 சதவிகித தேர்ச்சியை மட்டுமல்லாது அதிக மதிப்பெண்களை பெற முடியும். நாமக்கல் மாவட்டத்துக்கு 2016-2017 ஆம் ஆண்டுக்கு 11, 894 மாணவ, மாணவியர்களுக்கு வழங்க மடிக்கணினிகள் வரபெற்றுள்ளன. குமாரபாளையம் தொகுதி விசைத்தறி, தொழிலாளர்கள் நிறைந்தப் பகுதியாக இருப்பதால் இப்பகுதி மாணவ, மாணவியர்களின் மேல் படிப்பிற்காக ரூ. 10 கோடி மதிப்பீட்டில் அரசுக் கல்லூரி கட்டப்பட்டு தற்போது மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.
மேலும் இந்தத் தொகுதிக்கு அரசுப் பொறியியல் கல்லூரிக்கு அனுமதி வழங்கியுள்ளார்கள். இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது என்றார். முன்னதாக ஈரோடு எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை பயன்பாட்டுக்கு அமைச்சர் வழங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் கு. அருளரங்கன் வரவேற்றார். மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் டி.கே. சுப்பிரமணி, பள்ளிபாளையம் முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் எஸ். செந்தில், முன்னாள் நகர்மன்றத் தலைவர் எஸ். வெள்ளியங்கிரி, பள்ளித் தலைமையாசிரியர் க.கிருஷ்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/15/குமாரபாளையம்-தொகுதியில்அரசுப்-பொறியியல்-கல்லூரிக்கு-இடம்-தேர்வு-பி-தங்கமணி-2790572.html
2790571 தருமபுரி நாமக்கல் அண்ணா பிறந்த நாள் விழா போட்டி: 1,500 மாணவர்கள் பங்கேற்பு DIN DIN Sunday, October 15, 2017 02:48 AM +0530 நாமக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் அண்ணாவின் 109-ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அரசு, தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு, கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிகள் நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பார். இளங்கோவன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜேஷ் குமார் வரவேற்றார்.
மேற்கு மாவட்டச் செயலரும், பரமத்தி வேலூர் எம்எல்ஏவுமான கே.எஸ். மூர்த்தி ஆகியோர் போட்டிகளைத் துவக்கி வைத்துப் பேசினார். போட்டிகளில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்றவர்கள் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலானப் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர். போட்டியின் நடுவராக தஞ்சை கூத்தரசன், கூடுதல் நடுவராக நாமக்கல் மாவட்ட இலக்கிய அணித் தலைவர் பழனிசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/15/அண்ணா-பிறந்த-நாள்-விழா-போட்டி-1500-மாணவர்கள்-பங்கேற்பு-2790571.html
2790569 தருமபுரி நாமக்கல் திருச்செங்கோடு, ராசிபுரத்தில் தொழில் தொடங்க இலவசப் பயிற்சி DIN DIN Sunday, October 15, 2017 02:47 AM +0530 தொழில் தொடங்குவதற்கான இலவசப் பயிற்சி திருச்செங்கோடு, ராசிபுரத்தில் நடத்தப்படும் என நாமக்கல் மாவட்ட சிறு, குறுந்தொழில் கூட்டமைப்புச் செயலர் சண்முகம் தெரிவித்தார்.
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பட்டு மையம், நாமக்கல் மாவட்ட சிறு, குறுந்தொழில் கூட்டமைப்பு சார்பில் புதிதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களுக்கு தொழில் தேர்ந்தெடுத்தல், தொழிலுக்குத் தேவையான இயந்திரங்கள், மூலப்பொருள்கள், சந்தைப்படுத்துதல், கடன் பெறுவதற்கான திட்ட அறிக்கை தயாரித்தல், அரசு மானியம் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து 10 நாள்கள் இலவசப் பயிற்சி நடத்தப்பட்டது. இப்பயிற்சியின் நிறைவு விழா நாமக்கல் மாவட்ட சிறு, குறுந்தொழில் கூட்டமைப்புத் தலைவர் இளங்கோவன் தலைமையில் நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராஜு சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கிப் பேசினார்.
கூட்டமைப்பு செயலர் சண்முகம் பேசுகையில்,
இதுபோன்ற இலவசப் பயிற்சிகள் ராசிபுரம் மற்றும் திருச்செங்கோடு பகுதியில் நடத்தப்பட உள்ளதாகவும், தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள் 8825812528 என்ற செல்லிடப்பேசி எண்ணில் குறுஞ்செய்தி மூலம் பதிவு செய்துகொள்ளலாம் என்றார். ஏற்பாடுகளை தொழில் முனைவோர் ஆலோசகர் ஜெய்சங்கர் செய்திருந்தார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/15/திருச்செங்கோடு-ராசிபுரத்தில்-தொழில்-தொடங்க-இலவசப்-பயிற்சி-2790569.html
2790210 தருமபுரி நாமக்கல் உலக முட்டை தினம்: 30,000 முட்டைகள் இலவசமாக விநியோகம் நாமக்கல், DIN Saturday, October 14, 2017 10:07 AM +0530 உலக முட்டை தினத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் முட்டை நுகர்வை அதிகரிக்கும் வகையில், நாமக்கல்லில் 30,000 வேகவைத்த முட்டைகளை பண்ணையாளர்கள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினர். விழிப்புணர்வுப் பேரணியும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
 தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கம்,   தமிழ்நாடு முட்டை கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளனம்,  தமிழ்நாடு முட்டை கோழிப் பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி,   நாமக்கல் முட்டை வியாபாரிகள் சங்கம்,  தமிழ்நாடு கோழி முட்டை ஏற்றுமதியாளர்கள் சங்கம்,   நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் உலக முட்டை தின விழா நாமக்கல்லில் கொண்டாடப்பட்டது. 
 இதில் தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத் தலைவர் ஏ.கே..பி.சின்ராஜ் தலைமை வகித்தார்.  நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன்,  தமிழ்நாடு முட்டை கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளன மாநில துணைத் தலைவர் வாங்கிலி சுப்பிரமணியன்,   தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்க செயலர் சுந்தரராஜன்,  பொருளாளர் இளங்கோ,   நாமக்கல் மண்டல முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் நாகராஜன்  முன்னிலை வகித்தனர்.  
தமிழ்நாடு கோழிப் பண்ணை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஏ.கே.பி.சின்ராஜ் பேசியது:   வெளிநாடுகளில் ஆண்டுக்கு சராசரியாக தனி நபர் ஒருவர் 400 முட்டைகளைச் சாப்பிடுகின்றார். ஆனால்,  இந்தியாவில் அதிகபட்சமாக ஒரு நபர் 57 முட்டைகளை மட்டுமே சாப்பிடுகிறார்.  தனி நபர் ஒருவரின் முட்டை நுகர்வை ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 ஆக உயர்த்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த விழா நடத்தப்பட்டது.  அரசுப் பள்ளிகள் சத்துணவில் பிளஸ் 2 வரை முட்டை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.  
 தொடர்ந்து முட்டை நுகர்வின் பலன்கள் குறித்த கருத்தரங்கமும் நடைபெற்றது.  இந் நிகழ்ச்சியில்,  தமிழ்நாடு முட்டை கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளனத் துணைத் தலைவர் வாங்கிலி சுப்ரமணியன்,  முட்டை வியாபாரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.  
அதைத்தொடர்ந்து பேசிய நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி டீன் பாலசுப்பிரமணியன்,  முட்டை கலப்படம் செய்ய முடியாத உணவு என்றும்,  அதிக அளவில் புரத சத்துக்கள் அதில் இருப்பதாகவும் கூறினார்.  
 பின்னர்,  நாமக்கல்லில் பேருந்து நிலையம்,  சேலம் சாலை,  திருச்செங்கோடு சாலை,  அரசு மருத்துவமனை உள்பட 6 இடங்களில் இலவசமாக முட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  அதில் வேக வைக்கப்பட்ட சுமார் 30,000 முட்டைகள் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. 
அதைத்தொடர்ந்து,  முட்டை தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது.  அதில் நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு,  முட்டை சாப்பிடுவது தொடர்பான நன்மைகள் குறித்து பேசினார்.  மேலும்,  தேக்கமடையும் முட்டைகளை வீணாக்காமல் ஆதரவற்றோர் இல்லங்கள்,  பள்ளிகளுக்கு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். 
 முன்னதாக,  விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.  நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் அரசு மருத்துவமனையில் முடிவடைந்தது.  பேரணியில் முட்டை குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாகச் சென்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/14/உலக-முட்டை-தினம்-30000-முட்டைகள்-இலவசமாக-விநியோகம்-2790210.html
2790209 தருமபுரி நாமக்கல் ராசிபுரம் அருகே வைரஸ் காய்ச்சலுக்கு 7-ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு ராசிபுரம், DIN Saturday, October 14, 2017 10:07 AM +0530 ராசிபுரம் அருகேயுள்ள காக்காவேரி பகுதியைச் சேர்ந்த 7-ஆம் வகுப்பு பயிலும் அர்ச்சனா என்ற மாணவி வைரஸ் காய்ச்சலுக்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். 
சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  
ராசிபுரம் காக்காவேரி ஜெ.ஜெ.காலனி பகுதியில் வசித்துவரும் விவசாயக் கூலித் தொழிலாளியான ராஜா என்பவரின் 12 வயது மகளான அர்ச்சனா,  கடந்த 6-ஆம் தேதி காய்ச்சல் ஏற்பட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர்,  தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  ஆனால்,  அங்கு சிகிச்சை பலனின்றி அர்ச்சனா உயிரிழந்தார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/14/ராசிபுரம்-அருகே-வைரஸ்-காய்ச்சலுக்கு-7-ஆம்-வகுப்பு-மாணவி-உயிரிழப்பு-2790209.html
2789610 தருமபுரி நாமக்கல் ஆழ்துளைக் கிணறு மின் மோட்டாரை சீரமைக்க கோரிக்கை DIN DIN Friday, October 13, 2017 07:33 AM +0530 கடந்த 5 மாதங்களாக பழுதடைந்துள்ள ஆழ்துளைக் கிணறு மின் மோட்டாரை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் நகராட்சி பேட்டை காலனி அருந்ததியர் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள்,  காலி குடங்களுடன் நகராட்சி அலுவலகம் வந்து ஆணையர் பி.பாலசுப்ரமணியனிடம் வியாழக்கிழமை அளித்த மனு விவரம்: அருந்ததியர் தெருவில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் மின் மோட்டார் பழுதடைந்து 5 மாதங்களுக்கு மேல் ஆகிறது.  ஆனால்,  இதுவரை சீரமைக்கப்படவில்லை. இதனால் தண்ணீர் எடுக்க அருகில் உள்ள தெருவுக்குச் செல்ல வேண்டி இருப்பதால்,  அங்கு உள்ளவர்களுடன் பிரச்னை
ஏற்படுகிறது.
இதனால் பழுதடைந்த ஆழ்துளைக் கிணறு மின் மோட்டாரை சீரமைத்து,  தண்ணீர் விநியோகம் செய்ய நடவடிக்கையெடுக்க வேண்டும்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/13/ஆழ்துளைக்-கிணறு-மின்-மோட்டாரை-சீரமைக்க-கோரிக்கை-2789610.html
2789609 தருமபுரி நாமக்கல் வீட்டுக்குள் புகும் சாக்கடை கழிவுநீர்: நடவடிக்கையெடுக்க கோரிக்கை DIN DIN Friday, October 13, 2017 07:33 AM +0530 மழை பெய்தால் சாக்கடை  கால்வாய் நிரம்பி வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது.  இதனைச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் நகராட்சி தில்லைபுரம் முதல் குறுக்குச் சாலை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள்,  நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் பி.பாலசுப்ரமணியனிடம் வியாழக்கிழமை அளித்த மனு விவரம்: தில்லைபுரம் முதல் குறுக்குச் சாலையில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.  இங்கு மழைக் காலத்தில் சாக்கடை கால்வாய் நிரம்பி வீடுகளுக்குள் கழிவு நீர் புகுந்து விடுகிறது.  இதனால் இப் பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.  மேலும்,  கழிவு நீர் வீடுகளுக்குள் புகுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
இதனால் ஆணையர் இந்த பகுதியைச் நேரில் ஆய்வு செய்து,  மழைக் காலத்தில் சாக்கடை கழிவு நீர் வீடுகளுக்குள் புகாமல் தடுக்க உரிய நடவடிக்கையெடுக்க வேண்டும்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/13/வீட்டுக்குள்-புகும்-சாக்கடை-கழிவுநீர்-நடவடிக்கையெடுக்க-கோரிக்கை-2789609.html
2789608 தருமபுரி நாமக்கல் நாளை நாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் DIN DIN Friday, October 13, 2017 07:33 AM +0530 மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை (அக்.14) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:  8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்து வேலையற்ற 18 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட ஆண்,  பெண் இரு பாலருக்கும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு வேலைவாய்ப்பு முகாம் நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
வேலைவாய்ப்பு முகாமில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிராம,  நகர்ப்புறத்தைச் சேர்ந்த இளைஞர் மற்றும் இளம்பெண்கள் கலந்து கொள்ளலாம்.   சனிக்கிழமை அன்று காலை 9 மணியிலிருந்து 3 மணி வரை வேலைவாய்ப்பு முகாமுகாமுக்கு ஆதார் அட்டை,  குடும்ப அட்டை,  கல்விச் சான்றிதழ்கள் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் நேரில் கலந்து கொள்ளலாம்.  நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வேலையில்லா இளைஞர்கள்,  இளம்பெண்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/13/நாளை-நாமக்கல்லில்-தனியார்-துறை-வேலைவாய்ப்பு-முகாம்-2789608.html
2789607 தருமபுரி நாமக்கல் கன மழையால் ஓடைகளில் உடைப்பு: எம்.எல்.ஏ. ஆய்வு DIN DIN Friday, October 13, 2017 07:32 AM +0530 கன மழை காரணமாக சேந்தமங்கலம் பகுதியில் ஓடைகளில் ஏற்பட்டுள்ள உடைப்பைச் சீரமைக்கும் பணியை சட்டப்பேரவை உறுப்பினர் சி.சந்திரசேகரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
நாமக்கல் மாவட்டம்,  கொல்லிமலையில் கடந்த 10 ஆம் தேதி இரவு பெய்த பலத்த மழையினால் காட்டாறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக கொல்லிமலை அடிவாரப் பகுதியான சேந்தமங்கலம் வட்டம்,  நவலடிப்பட்டி,  வரகூர்,  திப்ரமாதேவி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள  ஓடைகளில் உடைப்பு ஏற்பட்டு,  அப் பகுதியில் சுமார் 100 ஏக்கர் விளை நிலங்களில் வெள்ள நீர் புகுந்தது.   இதனால் அங்கு பயிரிடப்பட்டிருந்த மரவள்ளி,  வெங்காயம், சோளம் உள்ளிட்ட பயிர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
பாதிக்கப்பட்ட பகுதிகளை சேந்தமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் சி.சந்திரசேகரன் வியாழக்கிழமை பார்வையிட்டார்.  பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறி,  அரசிடம்  உரிய இழப்பீடு  பெற்றுத் தரப்படும் என உறுதியளித்தார்.  அப்போது பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம்,  ஓடைகளில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளிடம் மணல் மூட்டை அடுக்கி சரிசெய்ய அறிவுறுத்தினார்.
மேலும்,  அப் பகுதி விவசாயிகள், கொல்லிமலை அடிவாரத்திலிருந்து வரும் மழை நீர் வழிப்பாதை பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால்தான் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளதாக புகார் தெரிவித்தனர்.   நீர் வழிப் பாதையை முழுமையாக ஆய்வுசெய்து இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கையெடுக்கப்படும் என எம்எல்ஏ உறுதியளித்தார்.
 பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர் முரளி,  சேந்தமங்கலம் வட்டாட்சியர் செல்வராஜ்,  அதிமுக பேரூர் செயலர் பாலுசாமி மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/13/கன-மழையால்-ஓடைகளில்-உடைப்பு-எம்எல்ஏ-ஆய்வு-2789607.html
2789606 தருமபுரி நாமக்கல் நாமக்கல் அரசு கல்லூரியில் கருத்தரங்கம் DIN DIN Friday, October 13, 2017 07:32 AM +0530 நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் ரெட் ரிப்பன் சங்கத்தின் சார்பில் வாழ்க்கையின் வெற்றிக்கான அவசியத் திறன்கள் என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கை கல்லூரி முதல்வர் அ.லீலா குளோரிபாய் குத்துவிளக்கேற்றித் துவக்கிவைத்தார்.  ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சந்திரசேகரன் வரவேற்றார்.
எர்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்து அலுவலர் பூபதிராஜா டெங்கு காய்ச்சல் தடுக்கும் முறைகள் குறித்தும்,  அண்ணாமலை பல்கலைக்கழக ஆங்கிலத் துறைப் பேராசிரியர் அய்யப்பராஜா ஆங்கில மொழியை ஆளுமைப்படுத்துதல்,  தலைமைப் பண்பு திறன் வளர்த்தல் மற்றும் மன அழுத்தத்தைச் சமாளிக்கும் திறன் குறித்தும்,  கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியர் அரசு பரமேஸ்வரன் நாட்டின் வளர்ச்சியில் இளையோரின் பங்கு என்ற தலைப்பில் பேசினர். இக் கருத்தரங்கில்100-க்கும் மேற்பட்ட மாணவ,  மாணவிகள் பங்கேற்றனர்.  கல்லூரி தாவரவியல் துறைத் தலைவைர் வசந்தாமணி நன்றி கூறினார்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/13/நாமக்கல்-அரசு-கல்லூரியில்-கருத்தரங்கம்-2789606.html
2789605 தருமபுரி நாமக்கல் டெங்குவை ஒழிக்க போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும்: அரசு கூடுதல் முதன்மைச் செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா DIN DIN Friday, October 13, 2017 07:32 AM +0530 குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு ஊராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை, அரசு கூடுதல் முதன்மைச் செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமை வகித்துப் பேசியதாவது :  டெங்குவால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில் அரசு அலுவலர்கள் மனித நேயம்,  மக்கள் தொண்டு நோக்குடன் போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும்.  தொடர்ந்து அடுத்த இரு வாரங்களுக்கு டெங்கு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்வதோடு,  பொதுமக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஊட்ட வேண்டும்.
மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பை முறைப்படுத்த குழுவை அமைக்கவும்  அனைத்து வீடுகளிலும் 100 சதவீதம் கொசுப்புழு ஒழிப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளவும்,  மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளைக் கண்காணித்து போதுமான அளவில் குளோரின் கலக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.  நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள்,  கல்லூரி மாணவர்கள்,  பள்ளி மாணவ, மாணவியர் அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்க வேண்டும்.
காய்ச்சல் பாதித்த பகுதிகளில் மருத்துவ முகாம் நடத்த வேண்டும் எனவும், இதுகுறித்த விவரங்களை அரசுச் செயலருக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.  குமாரபாளையம் வட்டாட்சியர் ஆர்.ரகுநாதன்,  நகராட்சி ஆணையர் ஆர்.மகேஸ்வரி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அதிகாரிகள்,  அலுவலர்கள் மற்றும் தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/13/டெங்குவை-ஒழிக்க-போர்க்கால-அடிப்படையில்-செயல்பட-வேண்டும்-அரசு-கூடுதல்-முதன்மைச்-செயலர்-ஹன்ஸ்ராஜ்-வர்-2789605.html
2789604 தருமபுரி நாமக்கல் முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரி செயலாளருக்கு தெற்காசிய விருது DIN DIN Friday, October 13, 2017 07:32 AM +0530 ராசிபுரம் முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரியின் செயலாளருக்கு தெற்காசிய அளவிலான "ஆங்கில கல்வி ஊக்குவிப்பாளர்' விருது வழங்கப்பட்டுள்ளது.
லண்டன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக ஆங்கிலக் கல்வி தரமதிப்பீட்டுக் குழுவின் சார்பில், தெற்காசிய அளவில் மாணவர்களுக்கான சிறந்த ஆங்கிலக்கல்வி ஊக்குவிப்பாளர்  விருதுகள் 25  சிறந்த கல்லூரிக்கு வழங்கப்பட்டன.
சென்னை பிரிட்டிஷ் துணை உயர்நிலைக் குழு அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற "சிறந்த ஊக்குவிப்பு மைய விருது 2016-18 வழங்கும் விழாவில், ராசிபுரம் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலாளர் முத்துவேல் ராமசுவாமிக்கு விருது வழங்கப்பட்டது.
இவ் விருதை பிரிட்டிஷ் உயர்நிலைக் குழுவின் துணை ஆணையர் பரத்ஜோஷி வழங்கினார். விழாவில் கல்லூரியின் புல முதன்மையர் (கல்வி)  எஸ். பி. விஜயகுமார், ஆங்கில மொழிப்புலத் துணை மேலாளர் யு. முகம்மது இக்பால் ஆகியோர் உடனிருந்தனர்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக  ஆனந்த்பிள்ளை,  டாக்டர்.கார்த்திஸ்ரீதர், தமிழக அரசின் உயர்கல்வித்துறை முதன்மை செயலர் சுனில் பாலிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/13/முத்தாயம்மாள்-கலை-அறிவியல்-கல்லூரி-செயலாளருக்கு-தெற்காசிய-விருது-2789604.html
2789603 தருமபுரி நாமக்கல் ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் உள்ள கட்டடங்கள் மறு அளவை பணி DIN DIN Friday, October 13, 2017 07:31 AM +0530 ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் உள்ள கட்டடங்கள்,  குடியிருப்பு வீடுகள் போன்றவற்றை மறு அளவை செய்யும் பணியில் நகராட்சி ஈடுபட்டுள்ளது.  இதற்கான பணி துவங்கி நடைபெற்று வருகிறது.
 ராசிபுரம் நகராட்சி 27 வார்டுகளைக் கொண்டது.  இதில் குடியிருப்பு வீடுகள்,  வணிக நிறுவனங்கள் என 17 ஆயிரம் வரி விதிப்பு கட்டடங்கள் உள்ளன. இதில் பல ஆண்டுகளுக்கு முன்பு வரி விதிக்கப்பட்ட கட்டடங்களும் அடங்கும்.  மிகக் குறைந்த வ ரிவிதிப்பு கட்டடங்களை கண்டறிந்து கூடுதல் வரி விதிப்புக்காக இந்த அளவை பணி துவங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.  மேலும்,  ஒரு குடியிருப்புக்கு வரி விதிப்பு செய்து,  நாளடைவில் பல்வேறு குடியிருப்புகளாக மாறியுள்ள கட்டடங்கள் குறித்தும் கணக்கிடும் பணியும் நடந்துவருவதாக தெரிகிறது.
தமிழகம் முழுவதும் அனைத்து நகராட்சிப் பகுதிகளிலும் உள்ள கட்டடங்கள் மறு அளவை செய்திட  அரசு உத்தரவிட்டுள்ளதையடுத்து,  ராசிபுரம் நகராட்சிப் பகுதிகளிலும் உள்ள கட்டடங்களை அளவை செய்யும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.  இதற்கென 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இந்த குழுவினர் மண்டல வாரிய குழுவிற்கு நாளொன்றுக்கு 50 கட்டடங்கள் வீதம் மறு அளவை நடத்தி வருகின்றனர்.  இந்த அளவை பணி நவம்பருக்குள் முடிக்கப்பட்டு, அரசுக்கு அறிக்கை வழங்கப்படும் என நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/13/ராசிபுரம்-நகராட்சிப்-பகுதியில்-உள்ள-கட்டடங்கள்-மறு-அளவை-பணி-2789603.html
2789602 தருமபுரி நாமக்கல் வாகனம் மோதி முதியவர் சாவு DIN DIN Friday, October 13, 2017 07:28 AM +0530 பரமத்தி வேலூர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் சரகத்துக்கு  உட்பட்ட வேலகவுண்டம்பட்டி அருகே புதன்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில், முதியவர் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள கட்டிபாளையத்தில் நடந்து சென்றவர் மீது புதன்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.   இதில் படுகாயமடைந்த முதியவரை அருகில் இருந்தவர்கள் காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.   ஆனால்,  மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே முதியவர் உயிரிழந்தார்.  விபத்தில் இறந்து போனவருக்கு சுமார் 55 வயது வரை இருக்கலாம்.  இவர் யார், எந்த ஊர் என்பது குறித்து வேலகவுண்டம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/13/வாகனம்-மோதி-முதியவர்-சாவு-2789602.html
2789601 தருமபுரி நாமக்கல் லிட்டில் ஏஞ்சல் பள்ளி சார்பில் விழிப்புணர்வு பேரணி DIN DIN Friday, October 13, 2017 07:27 AM +0530 நாமக்கல் மாவட்டம்,  அணியாபுரம் லிட்டில் ஏஞ்சல்ஸ் பள்ளி சார்பில் விவசாயத்தை காப்பது குறித்த விழிப்புணர்வுப் பேரணி மோகனூரில் வியாழக்
கிழமை நடைபெற்றது.
பேரணிக்கு லிட்டில் ஏஞ்சல் பள்ளிகளின் தலைவர் வெங்கடாசலம்,  செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். மோகனூர் காவல் நிலையம் முன் துவங்கிய பேரணியை பள்ளியின் முதல்வர் தமிழ்செல்வி துவக்கி வைத்தார்.  பேரணி மோகனூரின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.  பேரணியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விவசாயத்தைக் காப்பது,   மழை நீர் சேகரிப்பு,  மரம் வளர்ப்பு,  ஆழ்துளைக் கிணறுகள் தோண்டுவதை தவிர்ப்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியும் பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  அதனைத் தொடர்ந்து விவசாயத்தைக் காப்பது குறித்த தெரு நாடகத்தையும் மாணவ, மாணவிகள் நடத்தினர்.   இந் நிகழ்ச்சியில்,  அணியாபுரம் லிட்டில் ஏஞ்சல் பள்ளியின் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.  முடிவில் இன்க்லைன் நிறுவன நிறுவனர் யுவராஜ் நன்றி கூறினார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/13/லிட்டில்-ஏஞ்சல்-பள்ளி-சார்பில்-விழிப்புணர்வு-பேரணி-2789601.html
2789600 தருமபுரி நாமக்கல் குமாரபாளையத்தில் வரி உயர்வைக் கண்டித்து திமுக ஊர்வலம் DIN DIN Friday, October 13, 2017 07:27 AM +0530 குமாரபாளையம் நகராட்சியில் சொத்து வரி உயர்வு,  குப்பை அள்ள வரி விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளைக் கண்டித்து திமுக சார்பில் கண்டன ஊர்வலம் நடத்தப்பட்டதோடு,  வரி உயர்வைத் திரும்பப் பெறக் கோரி வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
குமாரபாளையம் நகராட்சிப் பகுதியில் குடியிருப்புகள்,  தொழில் நிறுவனங்கள்,  வணிக வளாகங்களின் பரப்பளவை அளவிட்டு,  அதற்கேற்ப புதிய வரிகள் பலமடங்கு விதிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.  மேலும், நகராட்சியின் முக்கியப் பணியான குப்பைகளைச் சேகரிக்க,  சொத்து வரி அடிப்படையில் கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன்மூலம் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.  எனவே, இவ் வரி விதிப்பைக் கைவிட வலியுறுத்தி திமுக மாவட்டத் துணைச் செயலர் எஸ்.சேகர் முன்னிலையில் திமுகவினர் ஊர்வலமாக நகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். தொடர்ந்து,  திமுக நகரச் செயலர் கோ.வெங்கடேசன் தலைமையில் நகராட்சி ஆணையர் ஆர்.மகேஸ்வரியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இப் புதிய வகையிலான வரி விதிப்பைக் கைவிட வேண்டும் எனவும்,  தொடர்ந்து வரி உயர்வு அமல்படுத்தப்பட்டால் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/13/குமாரபாளையத்தில்-வரி-உயர்வைக்-கண்டித்து-திமுக-ஊர்வலம்-2789600.html
2789599 தருமபுரி நாமக்கல் மாநில அளவிலான வன உயிரின வார விழா பேச்சுப் போட்டி: நாமக்கல் டிரினிடி கல்லூரி மாணவி முதலிடம் DIN DIN Friday, October 13, 2017 07:27 AM +0530 வன உயிரின விழாவை முன்னிட்டு நடைபெற்ற ஆங்கிலப் பேச்சுப் போட்டியில் நாமக்கல் டிரினிடி கல்லூரி மாணவி மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
சென்னையில் அண்மையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் இருந்து 100-க்கும்  மேற்பட்ட மாணவ,   மாணவிகள் கலந்து கொண்டனர்.  இதில் நாமக்கல் டிரினிடி மகளிர் கலை,  அறிவியல் கல்லூரியின் இறதியாண்டு பி.ஏ.  ஆங்கில பாடப் பிரிவு மாணவி ஈ.பிரதீபா மாநில அளவில் முதலிடம் பெற்றார்.   இவருக்கு சென்னையில் கடந்த 8 ஆம் தேதி நடைபெற்ற வன உயிரின வார நிறைவு விழாவில் வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றினை வழங்கினார்.
மாணவி ஈ.பிரதீபாவுக்கு பாராட்டு விழா கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.    கல்லூரித் தலைவர்  பி.கே.செங்கோடன் தலைமை வகித்தார்.  செயலர் கே.நல்லுசாமி,  டிரினிடி அகாதெமி தலைவர் டாக்டர் ஆர். குழந்தைவேல் முன்னிலை வகித்தனர்.   கல்லூரி முதல்வர் எம். ஆர். லட்சுமிநாராயணன்  வரவேற்றார்.
மேலும்,  நாமக்கல் மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகள் மற்றும் ஓவியப் போட்டிகளில் 3 ஆம் இடம் பிடித்த கல்லூரி மாணவிகள் எம்.காயத்ரி,  கே.கே. கிருத்திகா மற்றும் எம்.பி. செளம்யா ஆகியோருக்கும் இந் நிகழ்வில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.  
இந் நிகழ்வில், கல்லூரி ஆங்கிலத் துறைத் தலைவர் பி.செல்வி,  நிர்வாக அலுவலர் என்.எஸ்.செந்தில்குமார் உட்பட ஆங்கிலத் துறைப் பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/13/மாநில-அளவிலான-வன-உயிரின-வார-விழா-பேச்சுப்-போட்டி-நாமக்கல்-டிரினிடி-கல்லூரி-மாணவி-முதலிடம்-2789599.html
2789598 தருமபுரி நாமக்கல் ஏலச் சந்தையில் கொப்பரையின் வரத்து குறைவு DIN DIN Friday, October 13, 2017 07:27 AM +0530 பரமத்தி வேலூர் சேலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் கொப்பரை தேங்காயின் வரத்து குறைந்து, விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
 பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை பயிர் செய்யப்பட்டுள்ளது.  இங்கு விளையும் தேங்காய்களை உடைத்து, அதன் பருப்புகளை சிறு வியாபாரிகள் வியாழக்கிழமை பரமத்தி வேலூர், வெங்கமேட்டில் உள்ள சேலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு கொண்டு வருகின்றனர்.  இங்கு தரத்துக்கு தகுந்தார் போல் மறைமுக ஏலம்
விடப்படுகிறது.
  கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 3 ஆயிரத்து 190 கிலோ கொப்பரைத் தேங்காய் கொண்டு வரப்பட்டிருந்தது.  இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.109.10-க்கும், குறைந்த பட்சமாக ரூ.101.59-க்கும், சராசரியாக ரூ.106.60-க்கும் ஏலம் போனது.  மொத்தம் ரூ.3 லட்சத்து 4 ஆயிரத்து 610-க்கு வர்த்தகம் நடைபெற்றது.  இந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு ஆயிரத்து 724 கிலோ கொண்டு வரப்பட்டிருந்தது.  இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.110.99-க்கும்  குறைந்த பட்சமாக ரூ.103.65-க்கும், சராசரியாக ரூ.108.99-க்கும் ஏலம் போனது.  மொத்தம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்து 290-க்கு வர்த்தகம் நடைபெற்றது.  விலை உயர்வடைந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/13/ஏலச்-சந்தையில்-கொப்பரையின்-வரத்து-குறைவு-2789598.html
2789597 தருமபுரி நாமக்கல் ரூ.2 கோடியில் ராசிபுரம் ஒரு வழிச்சாலை சீரமைப்புப் பணி: பல்வேறு அமைப்பினர் அறிவித்த  போராட்டம் வாபஸ் DIN DIN Friday, October 13, 2017 07:26 AM +0530 ராசிபுரம் புதுப்பாளையம் செல்லும் ஒருவழிப் பாதை சீரமைப்புப் பணிகள் ரூ.2 கோடி மதிப்பில் துவங்கிட  அரசு அனுமதித்துள்ளதையடுத்து,  சாலையமைக்க வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் சார்பில் அறிவிக்கப்பட்ட போராட்டம் கைவிடப்பட்டது.
ராசிபுரம் நகரில் புதைக்குழி சாக்கடைத் திட்டத்தின் கீழ் பணிகள் சுமார் ரூ.56 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து,  நகரின் அனைத்து பகுதிகளிலும் குழாய்கள் அமைக்க சாலைகள் தோண்டப்பட்டு குண்டும் குழியாக காட்சியளிக்கின்றன.  மேலும்,  இந்தச் சாலைகளால் போக்குவரத்தில் கடும் நெரிசலும்,  பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.   நடப்பு ஆண்டு பிப்ரவரியில் முடிக்க வேண்டிய புதைகுழி சாக்கடைத் திட்டம்,  இதுவரை 65 சதம் பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளன.  இதனையடுத்து,  பாதாளச் சாக்கடைத் திட்டம் விரைவில் முடிக்கப்பட்டு,  ராசிபுரம் நகரச் சாலைகள் விரைவில் சீரமைக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.  மேலும் நகரின் முக்கிய பிரதான சாலையான ஒரு வழிப்பாதையான புதுப்பாளையம் சாலையை விரைந்து அமைக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கட்சியினரும்,  அமைப்பினரும் உருளும் போராட்டம் அறிவித்திருந்தனர்.
இதனையடுத்து,  போராட்டக் குழுவினர் அனைவரும் கையில் கங்கனம் கட்டி தேதி குறித்து இந்த போராட்டம் நடத்த அறிவித்திருந்தனர். இந் நிலையில், இந்த சாலையை அமைக்க அரசு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  இந்த சாலை பணிகள் விரைவில் துவங்கி, அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் முடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து,  போராட்டக் குழுவினரை காவல் துறையினர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.  இதனையடுத்து,  பல்வேறு அமைப்பினரின் சாலையில் உருளும் போராட்டம் கைவிடப்பட்டது.  பல்வேறு கட்சியினர்,  அமைப்பினர் கையில் கட்டிய கங்கனத்தை நகராட்சி முன்பாக கூடி,  அவிழ்த்து போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர்.  புதுப்பாளையம் சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டு, இப்பணிகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் முடிக்கப்படும் என நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/oct/13/ரூ2-கோடியில்-ராசிபுரம்-ஒரு-வழிச்சாலை-சீரமைப்புப்-பணி-பல்வேறு-அமைப்பினர்-அறிவித்த--போராட்டம்-வாபஸ்-2789597.html