Dinamani - தருமபுரி - http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2818782 அனைத்துப் பதிப்புகள் தருமபுரி மேட்டூர் அணை நீர் திறப்பு 500 கனஅடியாகக் குறைப்பு DIN DIN Saturday, December 2, 2017 03:25 AM +0530 மேட்டூர்:    மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு நொடிக்கு 500 கனஅடியாகக்  குறைக்கப்பட்டது. 
காவிரி டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால், மேட்டூர் அணையிலிருந்து டெல்டா  பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு வியாழக்கிழமை இரவு 2 ஆயிரம் கனஅடியிலிருந்து 500 கன அடியாகக்  குறைக்கப்பட்டது. 
இதேபோல்,  கால்வாய் பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவும் 900 கனஅடியிலிருந்து 650  கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. காவிரியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால்,  வெள்ளிக்கிழமை  காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 2,626 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 76.01 அடியாக உயர்ந்தது.  அணையின் நீர் இருப்பு 38.09 டி.எம்.சி.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/2017/dec/02/மேட்டூர்-அணை-நீர்-திறப்பு-500-கனஅடியாகக்-குறைப்பு-2818782.html