Dinamani - அரியலூர் - http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2793210 திருச்சி அரியலூர் விவசாயிகளுக்கு நலத் திட்ட உதவி DIN DIN Saturday, October 21, 2017 05:55 AM +0530 அரியலூர் மாவட்டம் தா. பழூர் அருகேயுள்ள பொற்பதிந்தநல்லூர் ஊராட்சி சேவை மையத்தில், மாவட்ட நீர்வடிப் பகுதி மேம்பாட்டு முகமை,வேளாண் உற்பத்தி சார்ந்த பணிகள்,வாழ்வாதாரப் பணிகள் சார்பில் விவசாயிகள், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் அண்மையில் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு நீர் வடிப்பகுதி மேம்பாட்டு முகமை செயல் திட்ட இயக்குநர் சந்திரசேகர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் இலவச தையல் இயந்திரம், மருந்து தெளிப்பான் மற்றும் இடுபொருள்களை வழங்கினார். மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு துணை இயக்குநர் அண்ணாதுரை,உதவி இயக்குநர் பழனிசாமி, நிர்வாக உதவி செயற்பொறியாளர் சிவானந்தம், பொறியாளர் பாலசுந்தரம், அணைக்குடம் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமைத் தலைவர் சிவகுருநாதன் ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமைத் தலைவர் தர்மலிங்கம் வரவேற்றார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/21/விவசாயிகளுக்கு-நலத்-திட்ட-உதவி-2793210.html
2793209 திருச்சி அரியலூர் பூ விற்கும் பெண் வாகனம் மோதி சாவு DIN DIN Saturday, October 21, 2017 05:54 AM +0530 அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பூ விற்கும் பெண் உயிரிழந்தார்.
அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள வளவனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி தேவகி (58). இவர் தினமும் கும்பகோணம் சென்று பூ வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில்  கும்பகோணத்தில் இருந்து பேருந்தில் வந்து ஜயங்கொண்டம் குறுக்குச் சாலையில் இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்.  சென்னை -கும்பகோணம் சாலையில் சென்றபோது இரவு12.45 மணியளவில் வீரசேழபுரம் ஏரியருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து கிடந்தார். அவ்வழியாக வந்த ஒருவர் அளித்த தகவலையடுத்து மீன்சுருட்டி காவல் உதவி ஆய்வாளர் குணசேகரன் சடலத்தை மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து,  வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/21/பூ-விற்கும்-பெண்-வாகனம்-மோதி-சாவு-2793209.html
2793208 திருச்சி அரியலூர் மின் விநியோகம் கோரி மறியல் DIN DIN Saturday, October 21, 2017 05:54 AM +0530 அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே மின்சாரம் கேட்டு கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருமானூர் அருகே ஏலாக்குறிச்சியில் உள்ள செல்லாண்டித்தெரு,கொள்ளிடப்பாதைத் தெரு,  வேளார் தெருக்களில் வசிப்போருக்கு அங்குள்ள 2 மின்மாற்றிகளில் இருந்து மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில வாரத்துக்கு முன் ஒரு  மின்மாற்றி பழுதானதால் மற்றொரு மின்மாற்றிலிருந்து மின்சாரம் விநியோகிக்கப்பட்டது.
இதனால் பெரும்பாலான நேரங்களில் குறைந்தளவு மின்சாரமே கிடைத்ததால் மின்சாதனப் பொருள்களை இயக்குவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.
இந்நிலையில் தற்போது இயங்கி வந்த  மின்மாற்றியும் சில நாள்களுக்கு முன் பழுதானதால் மேற்கண்ட பகுதிகளில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த  பொதுமக்கள் ஏலாக்குறிச்சியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த திருமானூர் போலீஸார், ஏலாக்குறிச்சி கிளை மின் துறை அலுவலர் மற்றும் வருவாய்த் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் மின்மாற்றி பழுது நீக்கி மின் விநியோகம் செய்யப்படும், அதுவரை மாற்று வழியில் மின்சாரம் விநியோகிக்கப்படும் என அளித்த உறுதியின்பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.
 இதனால் ஏலாக்குறிச்சி - திருமானூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/21/மின்-விநியோகம்-கோரி-மறியல்-2793208.html
2793207 திருச்சி அரியலூர் திருமானூர் கோயில்களில் சிறப்பு யாகம் DIN DIN Saturday, October 21, 2017 05:53 AM +0530 ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு அரியலூர் மாவட்டம், திருமானூர் பகுதி கோயில்களில் சிறப்பு யாகம்,பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
திருமானூர் அருகேயுள்ள பெரியமறை கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி,பூதேவி சமேதய ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் மக்களும், நாடும் முன்னேற வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், 108 விளக்கு பூஜையும், 68 திரவிய பொருள்கள் கொண்டு யாக பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து, உஞ்ஞினி அம்மன் கோயிலில் மிளகாய் கொண்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. விழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடத்தப்பட்டு, தீப ஆராதனையுடன் பக்தர்களுக்கு துளசிநீர், குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/21/திருமானூர்-கோயில்களில்-சிறப்பு-யாகம்-2793207.html
2793206 திருச்சி அரியலூர் திருமானூர்,தா. பழூர் பகுதிக்கு தொடர்ந்து காவிரி நீர் தேவை: அரியலூர் விவசாயிகள் கோரிக்கை DIN DIN Saturday, October 21, 2017 05:53 AM +0530 அரியலூர் மாவட்டத்தில் டெல்டா பகுதியான திருமானூர், தா. பழூர் பகுதிக்கு தொடர்ந்து காவிரி நீர் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் க. லட்சுமிபிரியா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பேசியது:
அரியலூர் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் செங்கமுத்து: மின் மோட்டார் இணைப்பு பெற 7 ஆண்டுகளாகக் காத்திருக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக இணைப்பு வழங்க வேண்டும். புதிய விவசாயிகளுக்கும் பயிர்க் கடன் தொகையை வழங்க வேண்டும். அரசு சிமென்ட் ஆலையில் ஒப்பந்தத் தொழிலாளராகப் பணிபுரியும் ஊழியர்களுக்கு அரசு அறிவித்த ஊதியத்தை வழங்க வேண்டும். ஏரி,வாரி,ஆறு,ஓடை மற்றும் அரசு புறம்போக்கு இடங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
தமிழக அம்பேத்கர் விவசாய இயக்க மாநிலத் தலைவர் அம்பேத்கர் வழியன்: மாவட்டத்தில் உளுந்து சாகுபடி செய்த விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் இடுப்பொருட்கள் வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும். பெரம்பலூர் - மானாமதுரை சாலைப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் விசுவநாதன்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 7 ஆவது ஊதியக் குழுவை அமல்படுத்திய மத்திய மாநில அரசுகள், 20 ஆண்டுகளுக்கு முன் விவசாயிகளின் நலன் குறித்து அமைக்கப்பட்ட எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையையும் அமல்படுத்த வேண்டும்.
விவசாயிகள் அளிக்கும் புகார்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விளக்கமளிக்க வேண்டும். பயிர்க் காப்பீட்டுத் தொகையை உடனே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். பயிர்க் கடன்களை விவசாயிகளுக்கு முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாகனச் சோதனையில் தீவிரம் காட்டும் காவல் துறை பொதுமக்களின் புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை.
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பூ. விசுவநாதன்: காவிரி டெல்டா பகுதியான திருமானூர்,டி. பழூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து காவிரி நீர் கிடைக்கவில்லையெனில் 52 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா பயிர் பாதிக்கும் அபாயம் ஏற்படும். எனவே இப்பகுதியில் தொடர்ந்து தண்ணீர் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள ஏரி,வரத்துவாய்க்கால்,தடுப்பணைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கியும் இதுவரை நடவடிக்கை இல்லை. மழை தொடங்கியுள்ளதால் உடனடியாக விவசாயிகளுக்கு முந்திரி கன்று வழங்க வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் விவசாயத்துக்கு மின் இணைப்புக் கேட்டு காத்திருக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக இணைப்பு வழங்க வேண்டும்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் மாவட்டத் தலைவர் பாண்டியன்:ஸ்ரீபுரந்தான் ஊராட்சியில் மழைநீர் வடிகால் பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றார்.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் வாரணவாசி ராஜேந்திரன், ஜெயச்சந்திரன் உள்ளிட்ட விவசாயிகள் பேசினர். தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கைக்கு விளக்கமளித்தார் மாவட்ட ஆட்சியர் க. லட்சுமிபிரியா.  கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தனசேகரன், வேளாண் இணை இயக்குநர் அய்யாசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் இளங்கோவன் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/21/திருமானூர்தா-பழூர்-பகுதிக்கு-தொடர்ந்து-காவிரி-நீர்-தேவை-அரியலூர்-விவசாயிகள்-கோரிக்கை-2793206.html
2793205 திருச்சி அரியலூர் செந்துறை வட்டாரத்தில் சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்ய அழைப்பு DIN DIN Saturday, October 21, 2017 05:53 AM +0530 அரியலூர் மாவட்டம்  செந்துறை வட்டாரம் அசாவீரன்குடிக்காடு, அயன்தத்தனூர், மனக்குடையான், மனப்பத்தூர், குழுமூர், சன்னாசிநல்லூர், தளவாய் (வ),கிளிமங்கலம், ஆனந்தாவாடி, நக்கம்பாடி, நமங்குணம், செந்துறை, பெரியாக்குறிச்சி மற்றும் வஞ்சினாபுரம் ஆகிய வருவாய் கிராமங்களில் சம்பா நெல் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள், பிரதமரின் புதிய காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து பயன்  பெறலாம்.
இதற்காக ஒரு ஏக்கர் நெற்பயிருக்கு காப்பீட்டுத் தொகையான ரூ. 26,800-க்குரிய பிரீமிய தொகை ரூ. 402-ஐ விவசாயிகள் செலுத்த வேண்டும்.இப்பிரீமிய தொகையை பயிர்க் கடன் பெறாத விவசாயிகள் பொதுச் சேவை மையம் அல்லது காலிகடை மடை ஏஜென்சி,தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கம் மூலம் செலுத்தலாம். இதற்காக சம்பா நெல் நடவு செய்தவுடன் வயலின் சிட்டா, அடங்கல், ஆதார் நகல், வங்கி கணக்குப் புத்தகம் ஆகியவற்றுடன் பிரீமியத் தொகையை 30.11.2017-க்குள் விவசாயிகள் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட வருவாய் கிராமங்களில் இயற்கை சீர்கேட்டால் பயிர் மகசூல் சராசரிக்கு கீழ் குறையும்போது  உரிய நிவாரணத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் செலுத்தப்படும்.
எனவே விவசாயிகள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அரியலூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் க. நாகராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/21/செந்துறை-வட்டாரத்தில்-சம்பா-நெல்-பயிருக்கு-காப்பீடு-செய்ய-அழைப்பு-2793205.html
2793204 திருச்சி அரியலூர் பெரியார் பள்ளியில் தாத்தா பாட்டி தின விழா DIN DIN Saturday, October 21, 2017 05:52 AM +0530 அரியலூர் மாவட்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாத்தா பாட்டிகள் தினவிழா வெள்ளிகிழமை கொண்டாடப்பட்டது.
பள்ளி முதல்வர் பவுல் தலைமை வகித்தார். பெரியார் கல்விக் குழும இயக்குநர் ராதாகிருஷ்ணன் வாழ்த்தினார். விழாவில் மாணவர்கள் பங்கேற்ற கூட்டுக் குடும்பத்தின்அவசியம் குறித்தும், தாத்தா பாட்டிகளுடன் சேர்ந்து வாழ்வதின் மகிழ்ச்சி குறித்த விழிப்புணர்வு நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் பள்ளிக் குழந்தைகளின் தாத்தா பாட்டிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அவர்களின் பேரக் குழந்தைகள் பரிசு வழங்கினர். விழாவில் எல்கேஜி முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களின் தாத்தா பாட்டிகள்,  பெற்றோர் பங்கேற்றனர்.
பள்ளி ஒருங்கிணைப்பாளர் வின்சி பிரியங்கா வரவேற்றார், துணை முதல்வர் பாக்கியலட்சுமி நன்றி கூறினார்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/21/பெரியார்-பள்ளியில்-தாத்தா-பாட்டி-தின-விழா-2793204.html
2793203 திருச்சி அரியலூர் உடையார்பாளையம் அரசு மருத்துவமனையில் ஆய்வு DIN DIN Saturday, October 21, 2017 05:52 AM +0530 அரியலூர் மாவட்டம்,உடையார்பாளையம் அரசு மருத்துவமனையில் ஆட்சியர் க. லட்சுமிபிரியா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
மருத்துவப் பரிசோதனை பிரிவு மற்றும் மகப்பேறு பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பெண்களிடம் முறையாக கிராம செவிலியர்கள் கிராமத்துக்கு வந்து  மருந்து மாத்திரைகள் வழங்குகின்றனரா,  தடுப்பூசிகள் போடுகிறார்களாக எனக் கேட்டறிந்து,   சித்தா பிரிவில் நிலவேம்பு கசாயம் வழங்கும் பணியை பார்வையிட்டு, நிலவேம்பு கசாயப்பவுடர் இருப்பு உள்ளதா, 24 மணிநேர அவசர சிகிச்சை பிரிவு செயல்படுகிறதா என்று கேட்டறிந்தார்.
மருத்துவர்கள்,  செவிலியர்கள், பணியாளர்கள் விவரங்களைக் கேட்டறிந்து, அவர்களுடைய வருகைப்பதிவேட்டை ஆய்வு செய்தார். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவப் பரிசோதனை குறித்தும், டெங்கு சம்பந்தப்பட்ட நோயாளிகள் வந்துள்ளனரா, மருந்து மாத்திரைகள் இருப்பில் உள்ளதா எனவும் கேட்டறிந்தார்.
மருத்துவமனையைச் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள அறிவுறுத்தினார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/21/உடையார்பாளையம்-அரசு-மருத்துவமனையில்-ஆய்வு-2793203.html
2793202 திருச்சி அரியலூர் போக்குவரத்து கழகப் பணிமனையில் அடிப்படை வசதி கோரி ஆர்ப்பாட்டம் DIN DIN Saturday, October 21, 2017 05:51 AM +0530 அரியலூர் போக்குவரத்துக் கழக பணிமனையில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி, அந்த பணிமனை முன் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், நாகை மாவட்டம் பொறையார் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் பழமையான கட்டடம் இடிந்து விழுந்ததில் ஊழியர்கள் 8 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை கண்டித்தும்,  அரசுப் போக்குவரத்து கழக பணிமனைகளிலுள்ள பழமையான கட்டடங்களை அகற்றி புதிய கட்டடங்களை கட்ட வேண்டும்.
கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தொழிலாளர் முன்னேற்றச் சங்கத் தலைவர் கனகராஜ் தலைமை வகித்தார். செயலர் சட்டநாதன், சிஐடியு மாவட்டத் தலைவர் அன்பழகன், விடுதலைச் சிறுத்தைகள் கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/21/போக்குவரத்து-கழகப்-பணிமனையில்-அடிப்படை-வசதி-கோரி-ஆர்ப்பாட்டம்-2793202.html
2793201 திருச்சி அரியலூர் ஜயங்கொண்டத்தில் டெங்கு விழிப்புணர்வு பேரணி DIN DIN Saturday, October 21, 2017 05:51 AM +0530 அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காவல்துறை, சுகாதாரத் துறை, ஜயங்கொண்டம் நகராட்சி மற்றும் அன்னைதெரசா மெட்ரிக் பள்ளி இணைந்து நடத்திய பேரணிக்கு  ஜயங்கொண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளர் கென்னடி தலைமை வகித்தார்.
ஜயங்கொண்டம் காவல் ஆய்வாளர் வேலுச்சாமி, அன்னை தெரசா மெட்ரிக் பள்ளித் தாளாளர் முத்துக்குமரன், நகராட்சி பொறியாளர் புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் உஷா பேரணியைத் தொடக்கிவைத்தார்.
பேரணியில் அன்னை தெரசா மெட்ரிக் பள்ளி மாணவர்கள், அன்னை தெரசா நர்சிங் கல்லூரி மாணவிகள் பங்கேற்று டெங்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். ஜயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் பேரணி புறப்பட்டு அண்ணாசிலை, கடைவீதி, நான்கு சாலை, பேருந்து நிலையச் சாலை வழியாக சென்று அன்னை தெரசா பள்ளியில் முடிந்தது.
காவல் உதவி ஆய்வாளர்கள் குணசேகரன், அன்பழகன் உள்ளிட்ட போலீஸார், நகராட்சி நகர வடிவமைப்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட  ஊழியர்கள் பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/21/ஜயங்கொண்டத்தில்-டெங்கு-விழிப்புணர்வு-பேரணி-2793201.html
2792746 திருச்சி அரியலூர் அரியலூரில் அக்டோபர் 21 மின்தடை DIN DIN Friday, October 20, 2017 07:31 AM +0530 அரியலூர் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (அக். 21) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அரியலூரின் ஒரு சில பகுதி,  கயர்லாபாத், வாலாஜாநகரம்,  கல்லங்குறிச்சி,  தாமரைக்குளம்,  பொய்யாதநல்லூர்,  ஓட்டக்கோயில், ஓ.கூத்தூர்,  அமினாபாத்,  மகாலிங்கபுரம்,  கோவிந்தபுரம்,  மங்கலம்,  காட்டுப்பிரிங்கியம்.
பெரியநாகலூர்,  வாரணவாசி,  அஸ்தினாபுரம்,  கொளப்பாடி,  ராஜீவ்நகர் மற்றும் மணக்குடி, குறிச்சி நத்தம், புதுப்பாளையம், சிறுவளுர், ஜெமீன் ஆத்தூர், ரசுலாபாத், பாளம்பாடி, பார்ப்பனச்சேரி, தவுத்தாய்குளம், மல்லூர், கடுகூர், கோப்பிலியன்குடிக்காடு, அயன்ஆத்தூர், சீனிவாசபுரம், கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், மண்ணுழி ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 5.30 மணி வரை  மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் சாமிதுரை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/20/அரியலூரில்-அக்டோபர்-21-மின்தடை-2792746.html
2792745 திருச்சி அரியலூர் அரியலூர் மாவட்டத்தில் இன்று அம்மா திட்ட முகாம் DIN DIN Friday, October 20, 2017 07:31 AM +0530 அரியலூர் வட்டம்,  சுள்ளங்குடி, சென்னிவனம், உடையார்பாளையம் வட்டம் கோடங்குடி (வ), த.சோழங்குறிச்சி (வ),ஆண்டிமடம் வட்டம் கொடுக்கூர், செந்துறை வட்டம் கீழமாளிகை ஆகிய கிராமங்களில் வெள்ளிக்கிழமை (அக். 20)  அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.
வருவாய் வட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெறும் இம்முகாமில் வருவாய்த்துறையின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள்,  பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாக தீர்வு வழங்கப்படும். எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் க.லட்சுமிபிரியா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/20/அரியலூர்-மாவட்டத்தில்-இன்று-அம்மா-திட்ட-முகாம்-2792745.html
2792744 திருச்சி அரியலூர் திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு DIN DIN Friday, October 20, 2017 07:31 AM +0530 அரியலூர் மாவட்டம், திருமானூரிலுள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் க.லட்சுமிபிரியா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
மருத்துவப் பரிசோதனை பிரிவு மற்றும் மகப்பேறு பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பெண்களிடம் முறையாக கிராம செவிலியர்கள் கிராமத்திற்கு வருகை புரிந்து மருந்து மாத்திரைகள் வழங்குகின்றனரா,  தடுப்பூசிகள் போடப்படுகிறதா என கேட்டறிந்தார். மேலும்,  சித்தா பிரிவில் நடைபெற்று வரும் நிலவேம்பு கசாயம் வழங்கும் பணியையும் பார்வையிட்டு, நிலவேம்பு கசாயப்பவுடர் இருப்பு உள்ளதா என்றும் கேட்டறிந்தார். 24 மணிநேர அவசர சிகிச்சை பிரிவு செயல்படுகிறதா என்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
மருத்துவர்கள்,  செவிலியர்கள், பணியாளர்கள் விவரங்களை கேட்டறிந்து, அவர்களுடைய வருகைப்பதிவேட்டினை ஆய்வு செய்தார். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவப் பரிசோதனைக் குறித்தும், டெங்கு சம்மந்தப்பட்ட நோயாளிகள் வரப்பெற்றுள்ளனரா, மருந்து மாத்திரைகள் இருப்பில் உள்ளதா என கேட்டறிந்தார்.
ஆரம்ப சுகாதார நிலையத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்களிடம் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து,  திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு செய்து, சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், சுள்ளங்குடி பஞ்சாயத்து அலுவலக கட்டட கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தும், காமரசவல்லி சுக்கிரன் ஏரிக்கு வரும் நீர் வரத்தையும், கரையினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மருத்துவர்கள், பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/20/திருமானூர்-அரசு-ஆரம்ப-சுகாதார-நிலையத்தில்-ஆட்சியர்-ஆய்வு-2792744.html
2792743 திருச்சி அரியலூர் அரியலூர் அருகே  வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் மறியல் DIN DIN Friday, October 20, 2017 07:30 AM +0530 அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சியை அடுத்த கடுகூர் கிராமத்தில் பாரபட்சமின்றி அனைவருக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அந்த திட்ட பணியாளர்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடுகூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெரிய ஊராட்சியாக இருப்பதால், பணியாளர்களை இரு குழுவாக பிரித்து,ஒரு குழுவினர்களுக்கு இன்றும்,மற்றொரு பிரிவு குழுவினர்களுக்கு  மறுநாளும் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,கடந்த சில வாரங்களாக ஒரு குழுவினருக்கு மட்டும் வேலைகள் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் வேலையில்லாமல் அவதிப்பட்டு வந்த மற்றொரு குழு பணியாளர்கள்,அனைவருக்கும் வேலைவாய்ப்புகள் வழங்க வலியுறுத்தி இரண்டு அரசுப் பேருந்துகளை சிறை பிடித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் கயர்லாபாத் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று அனைவருக்கும் வேலை வழங்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் அனைவரும் கலைந்துச் சென்றனர்.
இதனால் அந்தப் பகுதியில் ஒரு மணிநேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/20/அரியலூர்-அருகே--வேலை-உறுதி-திட்ட-தொழிலாளர்கள்-மறியல்-2792743.html
2792742 திருச்சி அரியலூர் சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்ய அழைப்பு DIN DIN Friday, October 20, 2017 07:30 AM +0530 அரியலூர் வட்டத்தில் சுமார் 2,400 ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பயிருக்கு பிரதமரின் புதிய காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் சேர்ந்து பயன் அடையலாம்.
இதற்காக ஒரு ஏக்கர் நெற்பயிருக்கு காப்பீட்டுத் தொகையான ரூ.26,800-க்குரிய பிரீமிய தொகையான ரூ.402-யை விவசாயிகள் செலுத்தவேண்டும்.
இப்பிரீமிய தொகையை பயிர் கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையம் அல்லது காலிகடை மடை ஏஜென்சி,தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் மூலம் செலுத்தலாம்.
இதற்காக சம்பா நெல் நடவு செய்தவுடன் வயலின் சிட்டா, அடங்கல், ஆதார் நகல், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் பிரீமியத் தொகையை 30.11.2017-க்குள் விவசாயிகள் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட வருவாய் கிராமங்களில் இயற்கை சீர்கேட்டினால் பயிர் மகசூல் சராசரிக்கு கீழ் குறையும்போது  உரிய நிவாரணத் தொகை விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் செலுத்தப்படும்.
எனவே விவசாயிகள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அரியலூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் ரா.பழனிசாமி அண்மையில் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/20/சம்பா-நெல்-பயிருக்கு-காப்பீடு-செய்ய-அழைப்பு-2792742.html
2792741 திருச்சி அரியலூர் அரியலூர் மாவட்டத்தில் தீபாவளி கோலாகலம் DIN DIN Friday, October 20, 2017 07:30 AM +0530 தீபாவளி பண்டிகையையொட்டி,  அரியலூர் மாவட்ட மக்கள் புத்தாடை அணிந்து, மத்தாப்பு கொளுத்தி,  நண்பர்களுக்கும்,  உறவினர்களுக்கும் வாழ்த்துச் சொல்லி இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மாவட்டத்திலுள்ள அனைத்து கோயில்களிலும் காலை  4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. புத்தாடை அணிந்து வந்த திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கல்லங்குறிச்சி கலியுக வரதராஜப் பெருமாள் கோயிலில், புத்தாடை அணிந்து வந்த குடும்பத்தினர் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர், தரிசனம் முடிந்து வீடு திரும்பிய மக்கள் அறுசுவை உணவை சமைத்து, நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வழங்கினர். மேலும்,  பலவித இனிப்பு வகைகளை நண்பர்களுக்கு கொடுத்து மகிழ்ந்தனர்.
நகரின் பல பகுதிகளிலுள்ள டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட சில நொடிகளில் கூட்டம் அலைமோதியது. மதுக்கடைகளுக்கு முன்பே குடித்துவிட்டு போதையில் நிலை தடுமாறிய நபர்கள் அங்கேயே போதையில் மயங்கி விழுந்து கிடந்தனர்.
தீபாவளியை காலையில் கொண்டாடிய பெரும்பாலானவர்கள்,அரியலூர் செட்டி ஏரி பூங்கா,கங்கை கொண்ட சோழப்புரம் பிரகதீஸ்வரர் கோயில் பூங்கா,கரைவெட்டி பறவைகள் சரணாலாயம் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களில் திரண்டனர்.அங்கு ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/20/அரியலூர்-மாவட்டத்தில்-தீபாவளி-கோலாகலம்-2792741.html
2792740 திருச்சி அரியலூர் அரியலூரில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான திறன் வளர்ப்பு பயிற்சி DIN DIN Friday, October 20, 2017 07:29 AM +0530 அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில், மாவட்ட காவல்துறை அலுவலர்களுக்கு,குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான திறன் வளர்ப்பு பயிற்சி அரியலூர் மாவட்ட ஆயுதப்படை கூட்டரங்கில் அண்மையில் நடைபெற்றது.
அரியலூர் மாவட்ட முதன்மை நீதித்துறை நடுவர் ஆ.மகாலட்சுமி பயிற்சியை தொடக்கி வைத்து பேசுகையில், 0-18 வயது பூர்த்தி ஆகாத அனைவரும் குழந்தைகள்தான். சட்டத்தில் 2 வகையான குழந்தைகள் கையாளப்படுகின்றனர். அவை சட்டத்திற்கு முரணான செயல்புரிந்த குழந்தைகள் மற்றும் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகள்.
பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்படும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளாக கருதப்படுகின்றனர்.  இவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை உறுதி செய்யும் விதமாக மாவட்டத்தில் அரியலூர் காமராஜா நகரில் குழந்தைகள் நலக்குழு செயல்படுகின்றது.
சட்டத்திற்கு முரணாக செயல் புரிந்ததாக கருதப்படும் குழந்தைகள் காவல் துறையில் உள்ள குழந்தைகள் நல அலுவலர் வாயிலாக மாவட்ட அளவிலான சிறப்பு சிறார் காவல் அலகு மூலமாக குழந்தைகள் கையகப்படுத்தப்பட்டு இளைஞர் நீதிக்குழுமத்தில் ஆஜர்படுத்த வேண்டும்.
அவ்வாறு சட்டத்திற்கு முரணாக செயல்புரிந்த குழந்தைகளை முறையாக கையாள வேண்டும் என்றார் அவர்.
ஓய்வு பெற்ற நீதிபதி மேகநாதன், வழக்குரைஞர் பகுத்தறிவாளன் ஆகியோர் பங்கேற்று பங்கேற்று, குற்ற வழக்குகளை விசாரணை செய்தல் மற்றும் கையாளும் முறைகள் குறித்தும்,குற்றம் புரிந்த நபர்களை கையாளும் விதம் குறித்தும், குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் குற்றங்களும், குற்றங்களுக்கேற்ற தண்டனைகளும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அரசின் நிவாரண உதவி தொகை பெறுவதற்கான வழிமுறைகள் பற்றியும், பாலியல் குற்றங்களினால் பாதிக்கப்பட்ட குழந்தையின் மனநிலை பற்றியும் விளக்கம் அளித்தனர்.
பயிற்சியில் அரியலூர் வட்டார துணை காவல் கண்காணிப்பாளரும், சிறப்பு சிறார் காவல் அலகு தலைவருமான மோகன்தாஸ், ஜயங்கொண்டம் வட்டார துணை காவல் கண்காணிப்பாளர் கென்னடி,  மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் க. முகமது யூனுஸ்கான்,  நன்னடத்தை அலுவலர் க. திருமாவளவன்,  குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்  கண்ணையன், இளைஞர் நீதிக்குழும உறுப்பினர்கள் பட்டு,பேசுமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, பாதுகாப்பு அலுவலர் ம.இருதயராஜ் வரவேற்றார்.
நிறைவில்,  தகவல் பகுப்பாளர் ஹ.செல்வம் நன்றி கூறினார்.  ஏற்பாடுகளை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர்கள் செய்திருந்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/20/அரியலூரில்-குழந்தைகள்-பாதுகாப்பு-தொடர்பான-திறன்-வளர்ப்பு-பயிற்சி-2792740.html
2792739 திருச்சி அரியலூர் வள்ளலார் பிறந்த தின விழா DIN DIN Friday, October 20, 2017 07:29 AM +0530 அரியலூர் லிங்கத்தடிமேடி சித்தசக்தி அருட்ஜோதி வள்ளலார் கல்வி நிலையத்தில் வள்ளலாரின் 195 ஆவது அவதார தின விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு, அந்த கல்வி நிலையத்தின் தலைவர் சீனி. பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். உறுப்பினர்கள் கணேசன் செட்டியார், நடராஜன், சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்வி நிலையத்தின் முன்னாள் தலைமை ஆசிரியர் இளங்கோவன், ரோவர் பொறியியல் கல்லூரி பேராசிரியர் ரவிச்சந்திரன், தயவு நிறை சுப்ரமணிய அடிகளார் ஆகியோர் பங்கேற்று, வள்ளலாரின் பிறப்பு மற்றும் அவரின் சேவைகளை மக்களிடம் எடுத்துரைத்தனர்.
விடுதி நுழைவுக் கதவு, விளையாட்டு மைதானம் ஆகியவற்றை சரவணவேலு திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தில் மாணவர்களின் கல்வித் தரம் உயர பொற்றோர்கள் முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிறைவில் பள்ளி தலைமை ஆசிரியர் பெ.சௌந்தராஜன் நன்றி கூறினார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/20/வள்ளலார்-பிறந்த-தின-விழா-2792739.html
2792738 திருச்சி அரியலூர் ஜயங்கொண்டம் அருகே 2 குடிசை வீடுகள் தீக்கிரை DIN DIN Friday, October 20, 2017 07:29 AM +0530 அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே இரண்டு குடிசைகள் தீப்பிடித்ததில் பணம் நகைகள் தீயில் எரிந்து சாம்பலானது.
ஜயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் தண்டலை கிராமத்தில் ரோட்டு தெருவில் வசிக்கும் கலியபெருமாள் மகன்கள்  அருமைராஜ்(35) மற்றும் தண்டபாணி(33). இருவரும் உப்பு வியாபாரம் செய்து கொண்டுஅடுத்தடுத்த குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர். வியாழக்கிழமை அன்று அருமைராஜ் தண்டபாணி இருவரும் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தனர். அப்போது அருமைராஜின் குடிசை தீப்பிடித்ததாக அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் கைபேசியில் கூறினர். இதுகுறித்து தகவலறிந்து வந்த ஜயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கரன் தலைமையிலான குழுவவினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.  அதற்குள்   இரண்டு குடிசைகளும் எரிந்து சேதமடைந்தது. மேலும் அருமைராஜ் வீட்டில் வைத்திருந்த 1.25 லட்சம் ரூபாய் ரொக்கம் 15 பவுன் நகை, ஒரு பைக், ஒரு மொபட், சைக்கிளும், தண்டபாணி வீட்டில் வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் 8 பவுன் நகை மற்றும் ஆவணங்கள் முழுவதும் தீயில் எரிந்து சாம்பலானது.
புகாரின்பேரில்,  ஜயங்கொண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். தீவிபத்துக்கான காரணம் தெரியவில்லை.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/20/ஜயங்கொண்டம்-அருகே-2-குடிசை-வீடுகள்-தீக்கிரை-2792738.html
2791754 திருச்சி அரியலூர் சுண்ணாம்புக் கல் சுரங்க நீரை வெள்ளாற்றில் வெளியேற்றுவதை தடுக்கக் கோரிக்கை DIN DIN Tuesday, October 17, 2017 07:26 AM +0530 அரியலூர் மாவட்டம், ஆலத்தியூர் அருகேயுள்ள சுண்ணாம்புக் கல் சுரங்கங்களின் ஊற்று நீரை, வெள்ளாற்றில் வெளியேற்றுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் க. லட்சுமிபிரியாவிடம்,  சுரங்கப்பகுதி வாழ் பொதுமக்கள் சார்பாக முள்ளுக்குறிச்சி இரா.அருள்மொழிவர்மன் திங்கள்கிழமை மனு அளித்தார்.
அவர் அளித்த மனு:  இந்திய சிமென்ட் ஆலையின் சுண்ணாம்புக் கல் சுரங்கம் ஆலத்தியூர் பகுதியில் உள்ளது. இந்த சுரங்கத்தில் ஊற்றெடுக்கும் நிலத்தடி நீர் வெள்ளாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் நிலத்தடி நீர் அழிந்தும், விவசாயம் பாதிக்கப்படுவதாக ஆலத்தியூரில் கடந்த மாதம் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும்,  பொதுமக்களின் தொடர் போராட்டத்தினால், வட்டாட்சியர் தலைமையில் ஆலை அதிகாரிகளிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில்,  சுரங்க ஊற்றுநீரை இனி வெளியேற்ற மாட்டோம் என ஆலை அதிகாரிகள் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.
தற்போது இந்த உடன்படிக்கையை  மீறி, மீண்டும் சுரங்க நீரை வெள்ளாற்றில் வெளியேற்றி வருகிறார்கள். எனவே,  இந்த கோரிக்கை மனுக்கள் மீது ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/17/சுண்ணாம்புக்-கல்-சுரங்க-நீரை-வெள்ளாற்றில்-வெளியேற்றுவதை-தடுக்கக்-கோரிக்கை-2791754.html
2791753 திருச்சி அரியலூர் தீபாவளி பண்டிகை: அரியலூர் கடைவீதிகளில் குவிந்த மக்கள் DIN DIN Tuesday, October 17, 2017 07:26 AM +0530 தீபாவளி பண்டிகை புதன்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி,  அரியலூர் கடைவீதிகளில் திங்கள்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது.
புத்தாடைகள், வீட்டு உபயோக பொருட்கள், தங்க நகைகள், இனிப்புகள், பட்டாசுகள் விற்பனை களைகட்டியுள்ளது. மக்களைக் கவரும் வகையில்,  வணிக வளாகங்கள்,  முன்னனி நிறுவனங்கள் பல்வேறு தள்ளுபடி சலுகைகளை அறிவித்துள்ளன. இதனால்,  அரியலூர் நகரில் பிரதான கடைவீதி,  சின்னக்கடைவீதி,  மார்க்கெட் தெரு,  உள்ளிட்ட பகுதிகளில் 2 நாள்களாக  மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இப்பகுதிகளில் தாற்காலிக கடைகளும் அதிகரித்துள்ளன. திங்கள்கிழமை காலையிலேயே மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
பிரபல கடைகள் முதல் சாலையோரக் கடைகள் வரை அனைத்திலும் மக்கள் கூட்டம் அதிகம் இருந்தது. நெரிசலை போக்குவரத்து போலீஸார் ஒழுங்குபடுத்தினர். குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரை கண்காணிக்க 50-க்கும் மேற்பட்ட போலீஸார் சாதாரண உடையில் மக்களோடு மக்களாக சென்று கண்காணித்து வருகின்றனர்.  அதிக நகை அணிந்து சென்ற பெண்களிடம், நகைகளை கவனமாகப் பார்த்துக் கொள்ளும்படி அறிவுரை வழங்கினர். பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன. மேலும்,  பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரியலூரில் பணிபுரிபவர்கள் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.
இதனால், அரியலூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
திருச்சி, தஞ்சை, விருத்தாசலம், பெரம்பலூர், கடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளிலும் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. இதேபோல், அரியலூர் ரயில் நிலையத்திலும் வழக்கத்தைவிட திங்கள்கிழமை மக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/17/தீபாவளி-பண்டிகை-அரியலூர்-கடைவீதிகளில்-குவிந்த-மக்கள்-2791753.html
2791752 திருச்சி அரியலூர் மக்கள் குறைகேட்பு கூட்டம்: 222 கோரிக்கை மனுக்கள் அளிப்பு DIN DIN Tuesday, October 17, 2017 07:26 AM +0530 அரியலூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 222 கோரிக்கை மனுக்களை ஆட்சியர் க. லட்சுமிபிரியா பெற்றார்.
கூட்டத்துக்கு ஆட்சியர் தலைமை வகித்து, பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், ஆண்டிமடத்தில் கடந்த 13 ஆம் தேதி நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு மாதாந்திர உதவித்தொகைக் கோரி மனு அளித்த 11 மாற்றுத்திறனாளிகளுக்கு,  மாதாந்திர உதவித்தொகை ரூ. 1000 பெறுவதற்கான உத்தரவுகளையும், 1 நபருக்கு ரூ.10,000 மதிப்பில் நவீன காதொலிக்கருவிகளையும் அவர் வழங்கினார். கூட்டத்தில், துணை ஆட்சியர் பாலாஜி,  மாவட்ட வழங்கல் அலுவலர் கதிரேசன்,  மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (பொ) சீனிவாசன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/17/மக்கள்-குறைகேட்பு-கூட்டம்-222-கோரிக்கை-மனுக்கள்-அளிப்பு-2791752.html
2791751 திருச்சி அரியலூர் சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் DIN DIN Tuesday, October 17, 2017 07:25 AM +0530 தீபாவளி முன்பணம் வழங்காததைக் கண்டித்து,  அரியலூர் நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில்,  தீபாவளி பண்டிகை முன்பணம் காலதாமதப்படுத்தாமல் உடனே வழங்க வேண்டும். ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு பணப் பயன்கள் காலதாமதம் இல்லாமல் உடனுக்குடன் வழங்க வேண்டும்.
சாலைப் பணிகளை செப்பனிட போதிய கருவி, தளவாடப் பொருள்களை உடனே
வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி. காமராஜ் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஜி. பஞ்சாபிகேசன், மாவட்டச் செயலர் எம்.சிவக்குமார், மாநில பொருளாளர் எம். பாலசுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று பேசினார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/17/சாலைப்-பணியாளர்கள்-ஆர்ப்பாட்டம்-2791751.html
2791750 திருச்சி அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் வீரபாண்டிய கட்டப்பொம்மன் நினைவு தினம் அனுசரிப்பு DIN DIN Tuesday, October 17, 2017 07:25 AM +0530 அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை வீரபாண்டிய கட்டப்பொம்மனின் 218  ஆவது நினைவுத் தினம் அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு அக்கல்லூரியின் வரலாற்றுத்துறை பேராசிரியர் மேஜர் ஜி.இருளப்பன் தலைமை வகித்து,வீரபாண்டிய கட்டபொம்மனின் சிறப்புகளையும்,அவரது தியாகத்தையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வரலாற்றுத் துறை பேராசிரியர்கள் பி.செல்லத்துரை, ஆர்.ஆனந்தகுமாரன், கு.குமரவேல், எஸ்.புவனேஸ்வரி ஆகியோர் பங்கேற்று கருத்துரை வழங்கினர்.
அனைத்துத் துறை மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிறைவில் மாணவர் கே.அஜித்குமார் நன்றி கூறினார்.  
நிகழ்ச்சி முன்னதாக அனைவரும் 2 இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/17/அரசு-கலைக்-கல்லூரியில்-வீரபாண்டிய-கட்டப்பொம்மன்-நினைவு-தினம்-அனுசரிப்பு-2791750.html
2791749 திருச்சி அரியலூர் கைத்தறி நெசவாளர் விழிப்புணர்வு முகாம் DIN DIN Tuesday, October 17, 2017 07:25 AM +0530 அரியலூர் மாவட்டம்,  ஜயங்கொண்டத்தில் தேசிய கைத்தறி மேம்பாட்டு கழகம் மற்றும் இந்திய அரசின் கள விளம்பரதுறை சார்பில்,  கைத்தறி நெசவாளர்கள் விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு திருச்சி கள விளம்பர அலுவலர் தேவிபத்மநாபன் தலைமை வகித்து பேசும்போது,  தேசிய கைத்தறி வளர்ச்சி கழகத்தின் கீழ் நெசவாளர்களுக்கு பத்து சதம் மானிய விலையில் நூல் வழங்கப்படுகிறது. மேலும்,  எந்த கூட்டுறவு சங்கங்களிலும் உறுப்பினராக இல்லாத நெசவாளர்களும் இந்த திட்டத்தின்கீழ் மானிய விலையில் நூல் வாங்கி பயன்பெறலாம். நெசவாளர்களுக்கு மத்திய அரசின் முத்ரா திட்டத்தின்கீழ் 50, 000 ரூபாய் வங்கி கடன் வழங்கப்படுகிறது. இதில் பத்தாயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. கைத்தறி நெசவாளர்களின் குழந்தைகளுக்கு இந்திராகாந்தி பல்கலைக்கழகத்தின் மூலம் இலவசமாக கணினி பயிற்சி வழங்கப்படுகிறது என்றார்.
முகாமில்,  ஜயங்கொண்டம் எம்எல்ஏ ஜே.கே.என். ராமஜெயலிங்கம் பங்கேற்று சிறந்த நெசவாளர்களுக்கு பரிசும் கைத்தறி வளர்ச்சிக் கழகத்தின் மூலம் மானிய விலையில் நூல் வாங்கி பயன்பெறுவதற்கான பாஸ் புத்தகமும் வழங்கி பேசினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் எஸ். தனசேகரன்,  கோட்டாட்சியர் டினாகுமாரி, கைத்தறி வளர்ச்சி கழக மேலாளர் விக்ரம்சிங்ஜாங்வால் உள்ளிட்டோர் பேசினர்.
தேசிய கைத்தறி வளர்ச்சி கழக அலுவலர்ஆஷிக்பாஷா,  நெசவாளர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள இ.தாகா செயலியை ஆன்ட்ராய்டு போனில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் முறை குறித்து விளக்கமளித்தார்.  நிகழ்ச்சியில் கைத்தறி துணிநூல் உற்பத்தி துறை கோவிந்தசாமி,  இந்தியன் வங்கி ஜயங்கொண்டம் கிளை மேலாளர் ஸ்ரீராம்,  இந்திராகாந்தி பல்கலைக்கழக மண்டல இயக்குநர் பீமாராவ், வடிவமைப்பாளர் ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 முன்னதாக, மருதூர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க மேலாளர் சுந்தரமூர்த்தி வரவேற்றார். தேசிய கைத்தறி மேம்பாட்டு கழக அலுவலர் ஆஷிக்பாஷா நன்றி கூறினார்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/17/கைத்தறி-நெசவாளர்-விழிப்புணர்வு-முகாம்-2791749.html
2791748 திருச்சி அரியலூர் அரியலூரில் இன்று மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் DIN DIN Tuesday, October 17, 2017 07:25 AM +0530 அரியலூர் ராஜாஜி நகர், கல்லூரிச் சாலையிலுள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், அரியலூர் கோட்ட அலுவலகத்தில்,  பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வையாளர் தலைமையில் மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்  செவ்வாய்க்கிழமை (அக். 17) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
எனவே, இக்கோட்ட மின்நுகர்வோர்கள் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவித்து பயன் அடைந்திட வேண்டுமாறு அரியலூர் கோட்ட செயற்பொறியாளர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 9445853675 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/17/அரியலூரில்-இன்று-மின்நுகர்வோர்-குறைகேட்பு-கூட்டம்-2791748.html
2791117 திருச்சி அரியலூர் கலாம் பிறந்த தின விழா: போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு DIN DIN Monday, October 16, 2017 07:27 AM +0530 மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் 86 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப்போட்டிகள் அண்மையில் நடைபெற்றது.
இதில் போட்டியில் பங்கேற்று வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கல்லூரி முதல்வர்(பொ)மேஜர்.இருளப்பன் தலைமை வகித்து பரிசுகளை வழங்கினார். பேராசிரியர்கள் பாலசுப்ரமணியன்,ராமர்,தோமினிக் அமல்ராஜ், ஸ்டீபன், தமிழ்மாறன், ஆனந்தகுமரன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/16/கலாம்-பிறந்த-தின-விழா-போட்டியில்-வென்றவர்களுக்கு-பரிசு-2791117.html
2791116 திருச்சி அரியலூர் திருமானூர் பகுதியில் டெங்கு தடுப்பு பணிகள் DIN DIN Monday, October 16, 2017 07:26 AM +0530 அரியலூர் மாவட்டம் திருமானூர் பகுதியில் டெங்கு கொசுக்களை ஒழிக்கும் வகையில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டன.
திருமானூர் சுகாதார வட்டாரத்தின் சார்பில் ஆட்சியர் லட்சுமிபிரியா உத்தரவின் பேரில் மாவட்ட துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) ஹேமசந்த் காந்தி பரிந்துரையின் பேரில் அப்பகுதியில் கொசு மருந்து அடிக்கும் பணி, தூய்மைப்பணி மற்றும் நிலவேம்புக் கசாயம் வழங்கும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  
திருமானூர் அருகேயுள்ள கீழகாவட்டாங்குறிச்சி, குந்தபுரம், எரக்குடி ஆகிய கிராமங்களில் வட்டார மருத்துவ அலுவலர் மணிவண்ணன் தலைமையில் திருமானூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அகிலா, ஜெயராஜ் ஆகியோர் முன்னிலையில் இந்த தூய்மைப் பணி நடைபெற்றது.
இதேபோல், திருமானூர் அருகேயுள்ள கோவிலூர், கீழப்பழுவூர் ஆகிய பகுதிகளிலும் கொசு மருந்து அடிக்கும் முகாம் நடைபெற்றது.
மேலும், அந்தந்த பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவும், குடிதண்ணீரை சுத்தமாக வைத்துக்கொள்ளவும், மூடி வைக்கவும் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. தொடர்ந்து மேற்கண்ட கிராமங்களில் நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/16/திருமானூர்-பகுதியில்-டெங்கு-தடுப்பு-பணிகள்-2791116.html
2791115 திருச்சி அரியலூர் அங்கன்வாடி மையத்துக்கு கட்டடம் கட்டித்தரக் கோரிக்கை DIN DIN Monday, October 16, 2017 07:26 AM +0530 அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே கண்டராதித்தம் கிராமத்தில் உள்ள விநாயகர் கோயிலில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
   திருமானூர் அருகே கண்டராதித்தம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி அருகே குழந்தைகள் ஊட்டச்சத்து அங்கன்வாடி மையம் இயங்கி வந்தது. பழுதான இந்த அங்கன்வாடி மையம் கடந்த 2  ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டது.  பிறகு சில காலம் பள்ளி வளாகத்தில் இயங்கி வந்தது.  இட நெருக்கடியைத் தொடர்ந்து,  அருகே உள்ள விநாயகர் கோயிலுக்கு அங்கன்வாடி மையம் மாற்றப்பட்டு சுமார் 6 மாதங்களாக இயங்கி வருகிறது.
தற்போது, இம்மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு அங்கன்வாடி பணியாளரது இல்லத்தில் இருந்து உணவுப் பொருட்கள் சமைத்து தரப்பட்டு வருகிறது. மேலும் கோயிலில் உள்ள அங்கன் வாடி மைய குழந்தைகள் இயற்கை உபாதைகளை கழிக்க இடமில்லாமல் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். ஆகவே, குழந்தைகள் நலன்கருதி, புதிய அங்கன்வாடி மைய கட்டடம் கட்டித்தர வேண்டுமென கண்டராதித்தம் பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/16/அங்கன்வாடி-மையத்துக்கு-கட்டடம்-கட்டித்தரக்-கோரிக்கை-2791115.html
2791114 திருச்சி அரியலூர் கைத்தறி நெசவாளர் மேம்பாட்டு முகாம் DIN DIN Monday, October 16, 2017 07:26 AM +0530 அரியலூர் மாவட்டம் வாரியங்காவல் கிராமத்தில் இந்திய அரசின் கள விளம்பரத்துறை சார்பில் கைத்தறி நெசவாளர் மேம்பாட்டு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முகாமில், திருச்சி கள விளம்பர அலுவலர் தேவிபத்மநாபன் தலைமை வகித்து பேசியது:
கைத்தறி நெசவாளர் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தும் வகையில் உயர் கல்வி கற்கவும், இந்திராகாந்தி தேசிய திறந்த வெளி பல்கலை.யுடன் மத்திய ஜவுளி அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது. கல்விக் கட்டணத்தில் 75 சதவீதத் தொகையை ஜவுளி அமைச்சகம் திருப்பி தருகிறது. நெசவாளர்கள் புதிய தொழில் நுட்பத்தில் தரமான ஆடைகளை நெசவு செய்யும் வகையில் உபகரணங்களின் தொகையில் 90 சதவீதத்தை மானியமாக வழங்குகிறது. நெசவாளர்கள் பங்கர் மித்ரா திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டால் தொழில்நுட்பம் சார்ந்த பிரச்னைகள், கச்சாப் பொருள், கடன் வசதிகள், தர கட்டுப்பாடு மற்றும் சந்தைப் படுத்துதல் குறித்த ஆலோசனை வழங்கப்படுகிறது. மேலும், பிரதம மந்திரியின் முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.50 ஆயிரம் முதல் 10 லட்சம் வரை கடன் வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், இ-தாகா செயலி நெசவாளர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் விநியோகஸ்தர்கள், சரக்கு போக்குவரத்து ஏஜென்ஸிகள், விற்பனை தகவல் பட்டியல் உள்ளிட்ட தகவல்களை பெற்றுக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நெசவாளர்களுக்கான திட்டங்களைப் பெற்று தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என்றார். நிகழ்ச்சியில், நெசவாளர்களுக்கான திட்டங்கள் குறித்து விளக்க பேனர்கள் வைக்கப்பட்டடிருந்தது. மேலும், நெசவாளர்களுக்கு விளக்க கையேடு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கள விளம்பர உதவி அலுவலர் ரவீந்திரன், நெசவாளர்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/16/கைத்தறி-நெசவாளர்-மேம்பாட்டு-முகாம்-2791114.html
2791113 திருச்சி அரியலூர் "டெங்குவால் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு' DIN DIN Monday, October 16, 2017 07:25 AM +0530 தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
அரியலூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:  டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தும் பொறுப்பு மாநில, மத்திய அரசுகளுக்கு உள்ளது.  உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின் படி, மத்திய குழு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசின் கொள்ளை நோய் தடுப்பு சட்டத்தின் அடிப்படையில் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அதற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்து, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீட்டு வழங்க வேண்டும். மேலும், தமிழக அரசு டெங்கு குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். நவம்பர் 1 ஆம் தேதி சென்னையில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. மதிமுக கட்சி சார்பில் நடத்தப்படும் மாநில சுய ஆட்சி மாநாட்டில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும் என்றார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/16/டெங்குவால்-இறந்தவர்கள்-குடும்பத்துக்கு-ரூ-25-லட்சம்-இழப்பீடு-2791113.html
2790559 திருச்சி அரியலூர் தாமரைக்குளம் கிராமத்தில் ஒருங்கிணைந்த பண்ணையப் பயிற்சி DIN DIN Sunday, October 15, 2017 02:44 AM +0530 அரியலூர் மாவட்டம் தாமரைக்குளம் கிராமத்தில், வட்டார வேளாண் மையம் சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணையப் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சுந்தரி தலைமை வகித்தார். அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் ந. பழனிசாமி பங்கேற்று பேசுகையில், நெற்பயிர் சாகுபடி செய்யும் போது அதிலிருந்து கிடைக்கும் வைக்கோல் மாடுகளுக்கு உணவாக பயன்படுகிறது. மாட்டின் கழிவுகள் மீன் குட்டைக்கு சிறந்த உணவாகிறது என்றார் அவர்.
தொடர்ந்து தாமரைக்குளத்தைச் சேர்ந்த க. சுப்ரமணியன் என்பவரின் வயலில் ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றிய செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. வட்டார தொழில்நுட்பக் குழு உறுப்பினர் செ. முத்துலட்சுமி முன்னிலை வகித்தார். முன்னதாக தொழில்நுட்பக் குழு உறுப்பினர் ப. ரெங்கராஜ் வரவேற்றார். விவசாயி த. காமராஜ் நன்றி கூறினார். பயிற்சி ஏற்பாடுகளை வேளாண் அலுவலர் அ. இளவரசன், தொழில்நுட்ப உதவி மேலாளர்கள் வாசுகி, சுந்தரமூர்த்தி, வேளாண் உதவி அலுவலர் மு.கொளஞ்சி ஆகியோர் செய்திருந்தனர். இப்பயிற்சியில் சுற்றுவட்டாரகிராமத்தைச் சேர்ந்த 100-க்கு மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/15/தாமரைக்குளம்-கிராமத்தில்-ஒருங்கிணைந்த-பண்ணையப்-பயிற்சி-2790559.html
2790558 திருச்சி அரியலூர் பொற்பதிந்தநல்லூரில் விவசாயிகளுக்கு உதவி DIN DIN Sunday, October 15, 2017 02:43 AM +0530 அரியலூர் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மற்றும் வேளாண் உற்பத்திப் பணிகள், வாழ்வாதார பணிகள் சார்பில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தா. பழூர் ஒன்றியத்திற்குட்பட்ட பொற்பதிந்தநல்லூர் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை செயல்திட்ட இயக்குநர் சந்திரசேகரன் தலைமை வகித்து விவசாயிகள், பொதுமக்களுக்கு விசைத்தெளிப்பான் மற்றும் தையல் இயந்திரங்களை வழங்கிப் பேசினார். மாவட்ட நீர்வடிப் பகுதி மேம்பாட்டு முகமை துணை இயக்குநர் அண்ணாதுரை, உதவி இயக்குநர் பழனிசாமி உள்ளிட்டோர் பேசினர்.
நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை உதவி நிர்வாக செயற்பொறியாளர் சிவானந்தம், பொறியாளர் பாலசுந்தரம், அணைக்குடம் நீர்வடிப்பகுதி தலைவர் சிவகுருநாதன், சமூகவியலர் ராமலிங்கம், வேளாண்வியலர் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நீர்வடிப்பகுதி தலைவர் தர்மலிங்கம் வரவேற்றார். ஊராட்சி செயலர் செல்வராஜ் நன்றி கூறினார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/15/பொற்பதிந்தநல்லூரில்-விவசாயிகளுக்கு-உதவி-2790558.html
2790556 திருச்சி அரியலூர் வடவாற்றில் தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் மறியல் DIN DIN Sunday, October 15, 2017 02:43 AM +0530 அரியலூர் மாவட்டத்திற்கும் தஞ்சை மாவட்டத்திற்கும் இடையே அணைக்கரையில் உள்ள கீழணையில் இருந்து விவசாயத்திற்காக வடவாற்றில் தண்ணீர் திறந்துவிடக்கோரி விவசாயிகள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டமும், தஞ்சை மாவட்டமும் இணையும் இடத்தில் சென்னை- கும்பகோணம் நெடுஞ்சாலையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கீழணை மற்றும் பாலம் உள்ளது. இதிலிருந்து உப்பனாறு, மண்ணியாறு, வடவாறு மற்றும் வாய்க்கால்களில் நீர் திறந்து விடப்பட்டு விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வடவாற்றில் இருந்து கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி உள்ளிட்ட பகுதி விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. கடந்த ஆண்டு மழை சரியாக பெய்யாததால் பயிர்கள் கருகி விவசாயிகள் நஷ்டமடைந்தனர். தற்போது கர்நாடகத்தில் பெய்துவரும் மழை காரணமாக மேட்டூர் அணையில் இருந்து கல்லணைக்கும், கல்லணையிலிருந்து அணைக்கரையில் உள்ள கீழணைக்கும் கடந்த 5 ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் திறந்து 9 நாள் ஆகியும் நீர் கீழணைக்கு வராததால் கடலூர் மாவட்டம் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் வட்டத்திற்குட்பட்ட 19 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் இளங்கீரன் தலைமையில் வடவாற்றின் தலைப்பில் சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த மீன்சுருட்டி காவல் ஆய்வாளர் (பொறுப்பு)வேலுச்சாமி உள்ளிட்ட போலீஸார் மற்றும் கீழணை உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி திங்கள்கிழமை இரவுக்குள் தண்ணீர் திறந்து விடுவதாக உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/15/வடவாற்றில்-தண்ணீர்-திறந்து-விடக்கோரி-விவசாயிகள்-மறியல்-2790556.html
2790555 திருச்சி அரியலூர் குழந்தைகள் பாதுகாப்புக்கு திறன் வளர்ப்புப் பயிற்சி DIN DIN Sunday, October 15, 2017 02:43 AM +0530 அரியலூர் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்புத் தொடர்பான திறன் வளர்ப்புப் பயிற்சி ஜயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.
பயிற்சியில் தஞ்சாவூர் நன்னடத்தை அலுவலர் நடராஜன் பேசியது:
குழந்தைத் திருமணம், குழந்தை கடத்தல், குழந்தை தொழிலாளர், சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், அவர்களின் கல்வி, பாதிப்பு ஆகியவை இச்சமுகத்திலிருந்து அகற்றப்பட வேண்டும். கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழு குழந்தைகளுக்கு எதிரான பிரச்னைகளைக் களைய வேண்டும்.
கிராம பகுதிகளில் சிறார்கள் கொத்தடிமைகளாக உள்ளனரா என கண்காணிக்க வேண்டும். கிராமங்களில் உயர் கல்வி பயிலாத பெண் குழந்தைகளைக் கண்காணித்து கல்வி ஆலோசனை வழங்க வேண்டும் என்றார். மேலும் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், இளைஞர் நீதிச் சட்டம் 2015, இளைஞர் நீதிக் குழுமம், குழந்தைகள் நலக் குழு ஆகியவற்றின் செயல்பாடுகள், குழந்தைகள் எதிர்கொள்ளும் உளவியல் ரீதியான பிரச்னைகள் குறித்தும் பேசினார். வழக்குரைஞர் பகுத்தறிவாளன் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், அவற்றுக்கான தண்டனைகள், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அரசின் நிவாரண உதவி தொகை பெறும் வழிமுறைகள் குறித்து விளக்கினார்.
மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் யூனுஸ்கான், நன்னடத்தை அலுவலர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ் வரவேற்றார். கணக்காளர் செல்வமணி நன்றி கூறினார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/15/குழந்தைகள்-பாதுகாப்புக்கு-திறன்-வளர்ப்புப்-பயிற்சி-2790555.html
2790553 திருச்சி அரியலூர் அரியலூரில் அக்.20-இல் விவசாயிகள் குறைகேட்பு DIN DIN Sunday, October 15, 2017 02:43 AM +0530 அரியலூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் அக். 20 காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடைபெறுகிறது.
கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளைத் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் க. லட்சுமிபிரியா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/15/அரியலூரில்-அக்20-இல்-விவசாயிகள்-குறைகேட்பு-2790553.html
2790551 திருச்சி அரியலூர் தீபாவளி முன்பணம் வழங்க சாலைப் பணியாளர்கள் கோரிக்கை DIN DIN Sunday, October 15, 2017 02:42 AM +0530 நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்களுக்கு தீபாவளி முன்பணம் உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அச்சங்க செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்: நெடுஞ்சாலைத்துறை நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால் தீபாவளி பண்டிகைக்கு கிடைக்கக் கூடிய முன்பணம் இதுவரை வழங்கப்படவில்லை. எனவே தீபாவளிக்கான முன்பணத்தையும், பணப்பயன்களையும் உடனடியாக வழங்க வேண்டும். சாலைப் பணியினை மேற்கொள்ள உடனடியாக தளவாடப் பொருள்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி. காமராஜ் தலைமை வகித்தார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/15/தீபாவளி-முன்பணம்-வழங்க-சாலைப்-பணியாளர்கள்-கோரிக்கை-2790551.html
2789934 திருச்சி அரியலூர் திருமானூர் அருகே மணல் அள்ளிய 4 பேர் கைது DIN DIN Saturday, October 14, 2017 01:59 AM +0530 அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே அனுமதியின்றி லாரியில் மணல் அள்ளிய 4 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
திருமானூர் அருகேயுள்ள வடுகபாளையம் ஓடை, கொள்ளிடம் ஆற்றிலிருந்து மாட்டு வண்டியில் கொண்டுவரப்பட்ட மணலை நால்வர் லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே ரோந்து வந்த திருமானூர் காவல் உதவி ஆய்வாளர் கமலஹாசன் லாரியை பறிமுதல் செய்து, மணல் ஏற்றிக்கொண்டிருந்த ஆலந்துறையார் கட்டளையை சேர்ந்த ஓட்டுநர் தேவேந்திரன் (24), வடுகபாளையத்தைச் சேர்ந்த லோடுமேன்கள் ரவிசந்திரன் (35), சத்தியராஜ்(29), நல்லேந்திரன்(23) ஆகியோரைக் கைது செய்தார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/14/திருமானூர்-அருகே-மணல்-அள்ளிய-4-பேர்-கைது-2789934.html
2789933 திருச்சி அரியலூர் பெண் தற்கொலை வழக்கில் கணவர்,மாமனார் கைது DIN DIN Saturday, October 14, 2017 01:58 AM +0530 அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர்,மாமனார் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
திருமானூர் அருகேயுள்ள ஆண்டிபட்டாக்காடு காலனித் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன் (29). இவரது மனைவி மீரா (23). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் 4 மாத கர்ப்பிணியாக இருந்த மீரா, கடந்த மாதம் 27 ஆம் தேதி வீட்டில் யாருமில்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தனது மகள் சாவில் சந்தேகமிருப்பதாக மீராவின் தந்தை தமிழரசன் கீழப்பழுவூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் தஞ்சாவூர் வருவாய்க் கோட்டாட்சியர் (பொ) மணி மேற்கொண்ட விசாரணையில், அவரது கணவர் பிரபாகரன்,மாமனார் முருகேசன் ஆகியோர் மீராவைத் தற்கொலைக்குத் தூண்டியதாகத் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் இருவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/14/பெண்-தற்கொலை-வழக்கில்-கணவர்மாமனார்-கைது-2789933.html
2789931 திருச்சி அரியலூர் கரும்பு விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம் DIN DIN Saturday, October 14, 2017 01:58 AM +0530 கரும்பு விவசாயிகளுக்குத் தர வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி அரியலூர் மாவட்டம் சாத்தமங்கலத்திலுள்ள தனியார் சர்க்கரை ஆலை முன் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரும்பு விவசாயிகளுக்குத் தர வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். அறுவடை செய்யவுள்ள கரும்புக்கு டன்னுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சங்கத்தின் மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலர் பிச்சைப்பிள்ளை முன்னிலை வகித்தார். பொறுப்பாளர்கள் துரை. வைத்தியநாதன், தங்க சண்முகசுந்தரம்,பாஸ்கர், மணியன், வரப்பிரசாதம் மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/14/கரும்பு-விவசாயிகள்-காத்திருப்புப்-போராட்டம்-2789931.html
2789929 திருச்சி அரியலூர் கல்லக்குடி பள்ளியில் பேரிடர் தின விழிப்புணர்வுப் போட்டி DIN DIN Saturday, October 14, 2017 01:58 AM +0530 அரியலூர் மாவட்டம், கல்லக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக பேரிடர் தின விழிப்புணர்வுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
பேரிடர் குறைப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையில் நடத்தப்பட்ட பேச்சு,கட்டுரை,ஓவியப் போட்டிகளில் 100-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பங்கேற்றனர்.
மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன பேராசிரியர் ராஜேந்திரன் கலந்து கொண்டு மாணவ,மாணவிகளுக்கு பரிசு வழங்கிச் சிறப்புரையாற்றினார். பள்ளித் தலைமை ஆசிரியை கலைமதி தலைமை வகித்து வரவேற்றார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் தீபக், ஆனந்த், வேதா, சாந்தி, கோமதி, துர்கா, பாரதி ஆகியோர் செய்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/14/கல்லக்குடி-பள்ளியில்-பேரிடர்-தின-விழிப்புணர்வுப்-போட்டி-2789929.html
2789927 திருச்சி அரியலூர் சிறுவளூர் அரசுப் பள்ளியில் திறன் வளர்ப்புப் பயிற்சி DIN DIN Saturday, October 14, 2017 01:57 AM +0530 அரியலூர் மாவட்டம், சிறுவளூர் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய உயர்நிலை மற்றும் தொடக்கப் பள்ளியில், மாணவர்கள் தங்களது திறனை எப்படி வளர்த்துக் கொள்வது மற்றும் திறனை எப்படி வெளிக்கொணர்தல் என்பது குறித்த பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரியலூர் ராஜேஷ் ஐஏஎஸ் அகாதெமி நிர்வாக இயக்குநர் கே.எம். ராஜேஷ் பங்கேற்று, வானமே எல்லை என்னும் தலைப்பில் பயிற்சியளித்துப் பேசுகையில், இலக்கை நோக்கிச் செல்லும் சில நேரங்களில் பல தடைகள் ஏற்படலாம். அந்த தடைகளை எல்லாம் நாம் அனுபவமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
நமது இலக்கை அடைய விடாமுயற்சியில் ஈடுபட வேண்டும் என்றார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/14/சிறுவளூர்-அரசுப்-பள்ளியில்-திறன்-வளர்ப்புப்-பயிற்சி-2789927.html
2789925 திருச்சி அரியலூர் டெங்கு தடுப்புப் பணிகளை விரைவாக்க வேண்டும்: முதன்மைச் செயலர் உத்தரவு DIN DIN Saturday, October 14, 2017 01:57 AM +0530 அரியலூர் மாவட்டத்தில் சிறப்புக் குழுக்கள் மூலம் மேற்கொள்ளப்படும் டெங்கு தடுப்புப் பணிகளை துரிதமாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அரசின் முதன்மைச் செயலரும்,கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்துறை இயக்குநருமான மு. பணீந்திரரெட்டி உத்தரவிட்டார்.
மாவட்ட ஆட்சியரகத்தில், டெங்கு காய்ச்சல் தொடர்பாக இதுவரை மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது: டெங்கு கொசு பரவாமல் இருக்க மாவட்டத்தில் சிறப்பு குழுக்கள் மூலம் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இப் பணிகளைத் துரிதமாகச் செயல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சிகள், பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளில் வாரம் ஒரு முறை சுத்தம் செய்து, குளோரின் கரைசல் தெளிக்கப்பட வேண்டும்.
கழிவுநீர் வாய்க்கால்கள் சுத்தப்படுத்துதல், மழைநீர் தேங்காமல் இருக்க வடிகால் வசதி ஏற்படுத்துதல் போன்ற பணிகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும். காய்ச்சல் போன்ற நோய்களுக்கு உடனடியாக அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுக வேண்டும். டெங்கு தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வடக்கு கிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் பேரிடர் காலங்களில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றார் அவர். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் க. லட்சுமிபிரியா, மாவட்ட வருவாய் அலுவலர் சே. தனசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ஜி.கே. லோகேஷ்வரி, ஆட்சியரின்
நேர்முக உதவியாளர் ரெங்கராஜன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஹேமசந்த் காந்தி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் பழனிசாமி மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/14/டெங்கு-தடுப்புப்-பணிகளை-விரைவாக்க-வேண்டும்-முதன்மைச்-செயலர்-உத்தரவு-2789925.html
2789921 திருச்சி அரியலூர் மண்ணுழி கிராமத்தில் பயிர்க் கழிவு மேலாண்மை பயிற்சி DIN DIN Saturday, October 14, 2017 01:56 AM +0530 அரியலூர் மாவட்டம், மண்ணுழி கிராமத்தில் வட்டார வேளாண் மையம் சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் பயிர்க் கழிவு மேலாண்மை பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.
தலைமை வகித்த அரியலூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் ரா. பழனிசாமி பேசியது:கடலையில் இருந்து கிடைக்கும் கடலை செடிகளை பயிர் மேலாண்மைக்கு உட்படுத்த வேண்டும். அதுபோல கரும்பு பயிரில் செய்யப்படும் நிலப்போர்வை மூலம் களையை கட்டுப்படுத்தலாம்.இந்நிலப் போர்வை மண்ணின் ஈரப்பதத்தைக் காக்கிறது .
காலியாக உள்ள வயல்களில், (சாகுபடி செய்யப்படாத வயல்களில்) நிலப்போர்வை மேற்கொள்வதன் மூலம் மண் அரிமானம் தடுக்கப்படுவதோடு மண்ணின் நீர் பிடிப்புத் தன்மையும் அதிகரிக்கிறது. பயிர்க் கழிவு மேலாண்மை மூலம் வயல்களில் நீர் ஆவியாதல் வேகம் தடுக்கப்படுகிறது. பயிர்க் கழிவு மேலாண்மை மூலம் மண்ணில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. நீர் ஆவியாதல் வேகம் குறைக்கப்படுகிறது என்றார் அவர். வட்டார வேளாண் அலுவலர் சவீதா முன்னிலை வகித்தார். ஏற்பாடுகளை வேளாண் துணை அலுவலர் அ. இளவரசன், தொழில்நுட்ப உதவி மேலாளர்கள் இரா. வாசுகி, செ. சுந்தரமூர்த்தி,வேளாண் உதவி அலுவலர் ஏ. ஷீலாகுமாரி ஆகியோர் செய்தனர். அட்மா திட்ட வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் ந. பழனிசாமி வரவேற்றார். விவசாய நண்பர் ரவிச்சந்திரன் நன்றி தெரிவித்தார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/14/மண்ணுழி-கிராமத்தில்-பயிர்க்-கழிவு-மேலாண்மை-பயிற்சி-2789921.html
2789923 திருச்சி அரியலூர் ஜயங்கொண்டத்தில் டெங்கு தடுப்பு பணி ஆய்வு DIN DIN Saturday, October 14, 2017 01:55 AM +0530 அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் பகுதியில் நடைபெற்றுவரும் டெங்கு தடுப்பு தூய்மை நடவடிக்கைகள் மற்றும் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் சிகிச்சைப் பிரிவை அரசு முதன்மைச் செயலரும், மாவட்டக் கண்காணிப்பு அலுவலருமாகிய கே. பணீந்திரரெட்டி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் நகராட்சி மற்றும் ஜயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தேவமங்கலம் கிராமத்தில் நடைபெற்றுவரும் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவர் ஆய்வு செய்தார். அப்போது கழிவுநீர் வாய்க்கால்களைத் தூய்மை செய்ய வேண்டும்.
மழைநீர் தேங்காமல் வடிகால் வசதி மேற்கொள்ள வேண்டும். மேலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை வாரம் ஒருமுறை சுத்தப்படுத்தி குளோரின் கரைசல் தெளித்து தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஎஸ் கொசுக்களை ஒழிக்கும் முறைகளை பொதுமக்களுக்கு தெரிவிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பிரிவைப் பார்வையிட்டு நோயாளிகளுக்கான சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
மேலும் டெங்கு காய்ச்சலுக்குத் தேவையான மருந்துகளையும், நிலவேம்பு பவுடர் போன்றவற்றை போதுமான அளவு வைத்துக் கொள்ள மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் க. லட்சுமிபிரியா, மாவட்ட வருவாய் அலுவலர் தனசேகரன், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் லோகேஸ்வரி, சுகாதாரப் பணிகள் துறை துணை இயக்குநர் ஹேமசந்த்காந்தி, உடையார்பாளையம் கோட்டாட்சியர் டினாகுமாரி, நகராட்சி ஆணையர் சங்கர், வட்டாட்சியர் வேல்முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/14/ஜயங்கொண்டத்தில்-டெங்கு-தடுப்பு-பணி-ஆய்வு-2789923.html
2789916 திருச்சி அரியலூர் சி.எஸ்.ஐ. பள்ளியில் நிலவேம்பு கசாயம் வழங்கல் DIN DIN Saturday, October 14, 2017 01:53 AM +0530 அரியலூர் சி.எஸ்.ஐ. மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
ஆட்சியர் க. லட்சுமிபிரியா உத்தரவையடுத்து டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்படுவதையொட்டி இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்டக் கல்வி அலுவலர் கலைமதி,மாவட்டக் கல்வி ஆய்வாளர் பழனிசாமி ஆகியோர் நிலவேம்பு கசாயத்தை வழங்கினர். பள்ளித் தலைமை ஆசிரியர்,உதவித் தலைமை ஆசிரியர் ஆகியோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஆசிரியை புஷ்பம்,உடற்கல்வி ஆசிரியர் ராஜ்குமார் ஆகியோர் செய்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/14/சிஎஸ்ஐ-பள்ளியில்-நிலவேம்பு-கசாயம்-வழங்கல்-2789916.html
2789290 திருச்சி அரியலூர் விவசாயிகளுக்கு விதை உற்பத்தி பயிற்சி DIN DIN Friday, October 13, 2017 03:30 AM +0530 தமிழ்நாடு அரசு பெரம்பலூர் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று துறை மற்றும் அட்மா திட்டம் சார்பில் தரமான  விதை உற்பத்தி பயிற்சி ஜயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.
பயிற்சிக்கு ஆண்டிமடம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் காசிநாதன் தலைமை வகித்தார். பெரம்பலூர் விதைச்சான்று உதவி இயக்குநர் பி. பாலகிருஷ்ணன், அரியலூர்  மாவட்ட வேளாண் துறை துணை இயக்குநர் பா. மனோகரன், அரியலூர் மாவட்ட விதைச்சான்று அலுவலர்கள் க. ராமலிங்கம், சேகர், ஜயங்கொண்டம் வேளாண் உதவி இயக்குநர் கலைச்செல்லி ஆகியோர் தரமான விதை உற்பத்தியின் அவசியம், நெல் மற்றும் பயரு வகை பயிர் மற்றும் எண்ணெய் வித்துப் பயிர்கள்,  விதைகள் உற்பத்தி செய்வதற்கான வேளாண் தொழில்நுட்பங்கள்,   விதைச் சான்று விதிகள், விதைச் சட்ட நடைமுறைகள், சான்றட்டை பொறுத்துதலின் முக்கியத்துவம், உயிர் உரங்களின் முக்கியத்துவம் ஆகியவை குறித்து பயிற்சியளித்தனர்.
இதில் ஜயங்கொண்டம், ஆண்டிமடம், தா. பழூர் வட்டாரங்களைச் சேர்ந்த விதைப்பண்ணை விவசாயிகள் பயிற்சி பெற்றனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/13/விவசாயிகளுக்கு-விதை-உற்பத்தி-பயிற்சி-2789290.html
2789289 திருச்சி அரியலூர் திருமானூரில் விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் DIN DIN Friday, October 13, 2017 03:30 AM +0530 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்டம், திருமானூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், பழைய பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
புதிய கடன்களை விரைந்து வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
சங்கத்தின் மாவட்ட துணைச் செயலர் ஜி. ஆறுமுகம் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியத் துணைச் செயலர்கள் பன்னீர்செல்வம், கலியபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாயிகள் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலர் பரிசுத்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/13/திருமானூரில்-விவசாயிகள்-சங்கம்-ஆர்ப்பாட்டம்-2789289.html
2789288 திருச்சி அரியலூர் ஜயங்கொண்டத்தில் மருத்துவ ஆய்வகர்கள் ஆர்ப்பாட்டம் DIN DIN Friday, October 13, 2017 03:30 AM +0530 அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து மருத்துவ ஆய்வகர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 ரத்தப் பரிசோதனை முடிவுகளில் மருத்துவ ஆய்வகர்கள் கையெழுத்திடக் கூடாது,  மருத்துவர்கள்தான் கையெழுத்திட வேண்டும் என்ற   இந்திய மருத்துவ கவுன்சிலின் பரிந்துரையை நடைமுறைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்துவரும் மத்திய அரசைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு  மருத்துவ ஆய்வகர்கள் நலச் சங்க மாவட்டத் தலைவர் த. முத்துக்குமரன் தலைமை வகித்தார். அகில இந்தியத் தலைவர் காளிதாசன், மாநிலத் தலைவர்  துரைசாமி ஆகியோர் பேசினர். மாவட்டப் பொருளாளர் செல்வராஜ், துணைத் தலைவர்கள் செல்வி, மாரியப்பன், துணைச்  செயலர்கள் சுந்தரி, மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  மாவட்டச் செயலர் அருள் வரவேற்றார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மனோகரன் நன்றி கூறினார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/13/ஜயங்கொண்டத்தில்-மருத்துவ-ஆய்வகர்கள்-ஆர்ப்பாட்டம்-2789288.html
2789287 திருச்சி அரியலூர் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை தேவை: சிஜடியு மாநில பொதுச்செயலர் DIN DIN Friday, October 13, 2017 03:29 AM +0530 நீட் தேர்வை ரத்து செய்ய  நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றார் சிஐடியு மாநில பொதுச் செயலர் சுகுமாறன்.
நீட் தேர்வால் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தை சேர்ந்த மாணவி அனிதா வீட்டுக்கு வியாழக்கிழமை மாலை  சென்ற சிஐடியு மாநில பொதுச் செயலர் சுகுமாறன், அனிதாவின் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தி, அவரின் தந்தை சண்முகம், சகோதர்களுக்கு ஆறுதல் கூறி சிஐடியு சார்பில் ரூ. 1.50 லட்சம் நிதியுதவியையும் அளித்தார்.
பின்னர் அவர் கூறியது: நீட் தேர்வை ஜெயலலிதா தொடர்ந்து எதிர்த்து வந்தார். ஆனால்  எடப்பாடி பழனிசாமி அத்தேர்வை ஆதரிக்கும் நிலை கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு நீட் தேர்வுக்கு எதிராகத் தொடர்ந்து போராட வேண்டும்.
சாதாரணமானவர்கள் மருத்துவராக வேண்டும் என நினைப்பதை இத் தேர்வு  தடுத்து நிறுத்தியுள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக என்றும் சிஐடியு போராடும்.
அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஏமாற்று வேலை. கடந்த 2016 ஜனவரியில் வழங்க வேண்டிய ஊதியத்தை தற்போது வழங்கியுள்ளது. மேலும், அன்றிலிருந்து வழங்க வேண்டிய முன்பணத்தையும் கொடுக்க வேண்டும் என்றார் அவர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/13/நீட்-தேர்வை-ரத்து-செய்ய-நடவடிக்கை-தேவை-சிஜடியு-மாநில-பொதுச்செயலர்-2789287.html
2789286 திருச்சி அரியலூர் பருத்தியில் வாடல் நோய் தாக்குதல்: திருமானூர் வட்டாரத்தில் ஆய்வு DIN DIN Friday, October 13, 2017 03:29 AM +0530 அரியலூர் மாவட்டம், திருமானூர் வட்டாரத்தில் பருத்தி சாகுபடி பணிகளை வட்டார வேளாண் உதவி இயக்குநர் சே. கண்ணன் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
இதுகுறித்து அவர் தெரிவித்தது: அரியலூர் மாவட்டம், திருமானூர் வட்டாரத்தில் பருத்தி பயிர் மானாவாரியாக சுமார் 1,500 ஹெக்டேரில் வீரிய ஒட்டு ரகங்களான ஆர்சி எச்2,  659 சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தற்போது சன்னாவூர் மற்றும் பூண்டி பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்தியில் வாடல் நோய் காணப்படுகிறது. இந்நோய் பாதிக்கப்பட்ட பருத்தி வயலில் ஆங்காங்கே இளஞ்செடியில், இலைகள் மஞ்சளாகவும்,  பழுப்பாகவும் மாறுவதுடன் இலைக்காம்புகளின் மீது பழுப்பு வளையம் காணப்படுகிறது.
மேலும் நாளடைவில் இளஞ்செடிகள் காய்ந்துவிடும். வளர்ந்த செடியில் நோய் தொற்றினால் அடிப்பாகத்திலுள்ள முதிர்ந்த இலைகள் ஆரம்பத்தில் மஞ்சளான மாறி பின் வாடி உதிர்ந்து விடும். தண்டின் அடிப்பகுதி கருமையாகவும் உரித்துப் பார்த்தால் கருப்பு அல்லது பழுப்பு நிற கோடுகள் காணப்படும்.
இதைக் கட்டுப்படுத்த 10 லிட்டர் தண்ணீரில் 2 கிராம் காப்பர் ஆக்ஸி குளோரைடு 1 பாக்கெட் ஸப்டோரோமைசின் (6 கிராம்) மற்றும் நான்கு கிராம் மல்டி கே ஆகியவற்றை கலந்து பாதிக்கப்பட்ட செடியின் மற்றும் அதனருகில் உள்ள செடியின் வேர் நன்கு நனையும் படி ஊற்றுவதன் மூலம் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம் என்றார் அவர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/13/பருத்தியில்-வாடல்-நோய்-தாக்குதல்-திருமானூர்-வட்டாரத்தில்-ஆய்வு-2789286.html
2789285 திருச்சி அரியலூர் பெரியதிருகோணத்தில் டெங்கு விழிப்புணர்வு பேரணி DIN DIN Friday, October 13, 2017 03:29 AM +0530 அரியலூர் மாவட்டம், பெரியதிருகோணம் அரசு மேல்நிலைப் பள்ளி, நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் வியாழக்கிழமை டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி சென்றனர்.
பேரணியை பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ்.பி. தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்து பேசினார். நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் அ. சுதாகர் முன்னிலை வகித்தார். பேரணியானது பெரியதிருக்கோணம் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பள்ளியை வந்தடைந்தது. பேரணியில் பள்ளி மாணவ,மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
பள்ளகிருஷ்ணாபுரத்தில்...
 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,பசுமைப் படை மாணவர்கள்,வீடு விடாகச் சென்று டெங்கு குறித்த விழிப்புணர்வு அடங்கிய துண்டுப் பிரசுரங்களையும்,மேலும் தெருக்களில் குவிந்து கிடந்த குப்பைகள்,பிளாஸ்டிக் பைகள்,பாட்டில்கள்,தேங்காய் ஓடுகளை அகற்றும் பணியிலும் ஈடுபட்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/13/பெரியதிருகோணத்தில்-டெங்கு-விழிப்புணர்வு-பேரணி-2789285.html
2789284 திருச்சி அரியலூர் தூய்மை இந்தியா விழிப்புணர்வு முகாம் DIN DIN Friday, October 13, 2017 03:28 AM +0530 அரியலூர் மாவட்டம் தா. பழூரை அடுத்த கோடாலி கிராமத்தில் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு  முகமை, நீர்வடிபகுதி தன்னார்வ அமைப்பு மற்றும் மகளிர் குழுக்கள் சார்பில் தூய்மை இந்தியா குறித்த விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.  
சமூகவியலர் ராமலிங்கம் தலைமை வகித்தார். ஊராட்சி செயலர் இளங்கோவன் முன்னிலை வகித்தார்.
உதயநத்தம் விஏஓ  சுந்தரம் தூய்மை இந்தியா குறித்து பேசினார்.
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கொழுப்பு நிறைந்த இறைச்சிகளைத் தவிர்த்து கீரை, காய்கறிகள்,  பழவகைகளை அதிகம் பயன்படுத்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/13/தூய்மை-இந்தியா-விழிப்புணர்வு-முகாம்-2789284.html
2789283 திருச்சி அரியலூர் அரியலூரில்  மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி DIN DIN Friday, October 13, 2017 03:28 AM +0530 அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் 30 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 3.40 லட்சத்திலான நலத் திட்ட உதவிகளை அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன் வழங்கினார்.
கடுமையாகப் பாதிக்கப்பட்ட 10 மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் தலா ரூ. 3000 வீதம் ரூ. 30,000 மதிப்பிலான ஆணைகளையும், தொழுநோயால் பாதிக்கப்பட்ட 10 மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் தலா ரூ. 10,000 வீதம் ரூ. 1 லட்சம் மதிப்பிலான ஆணைகளையும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ. 25,000 மதிப்பில்  முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு சக்கர நாற்காலிகளையும், ஓசை மற்றும் அன்பகம் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளிகளுக்கு தலா ரூ. 25,000 மதிப்பில் சிறப்பு மின்பொருளுடன் கூடிய கையடக்க கணினிகளையும், 4 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.10,000 மதிப்பில் இலவச பேருந்துப் பயணப் அட்டையையும், 1 மாற்றுத்திறனாளிக்கு தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை என மொத்தம் 30 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 3 லட்சத்து 40 ஆயிரத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் க. லட்சுமிபிரியா தலைமை வகித்தார்.
முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் சே. தனசேகரன், துணை ஆட்சியர் பாலாஜி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஹேமசந்த்காந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (பொ) சீனிவாசன், மருத்துவர்கள், செவிலியர்கள், தொண்டு நிறுவனப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
வெள்ளிக்கிழமை (அக். 13) ஜயங்கொண்டம், தா. பழூர் ஆகிய வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/13/அரியலூரில்--மாற்றுத்திறனாளிகளுக்கு-நலத்திட்ட-உதவி-2789283.html
2789282 திருச்சி அரியலூர் தம்பியை அடித்து கொன்றவர் கைது DIN DIN Friday, October 13, 2017 03:28 AM +0530 அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே தம்பியை அடித்துக் கொன்றவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
திருமானூர் அருகேயுள்ள மேலப்பழுவூர் கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி (54). இவரது மகள் கடந்தாண்டு உறவினர் மகனுடன் சென்று திருமணம் செய்து கொண்டார்.  இதனால், கருணாநிதி உடன் பிறந்த 4 பேரும் அவருடன் பேச்சுவார்த்தையின்றி இருந்தனர்.
இந்நிலையில், கடந்த 5 ஆம் தேதி கருணாநிதி தனது மகளுக்கு வளைகாப்பு நடத்தி தனது வீட்டுக்கு கூட்டி வந்துள்ளார். அப்போது, இவ்வளவு நாளாக பேசாமல் இருந்துவிட்டு தற்போது ஏன் இப்படி செய்கிறாய் என கருணாநிதியின் தம்பி காசிநாதன் கேட்டுள்ளார்.
இதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த கருணாநிதி அருகில் கிடந்த கட்டையை எடுத்து காசிநாதனை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த காசிநாதன் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.  இதையடுத்து கீழப்பழுவூர் போலீஸார் வழக்குப் பதிந்து கருணாநிதியை வியாழக்கிழமை கைது செய்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/13/தம்பியை-அடித்து-கொன்றவர்-கைது-2789282.html
2789281 திருச்சி அரியலூர் கூத்தூர் பகுதியில் அக்டோபர் 13 மின் தடை DIN DIN Friday, October 13, 2017 03:28 AM +0530 அரியலூர் மாவட்டம் கூத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அரியலூர் மேற்கு பகுதி, பி.ஆர்.நல்லூர், கூத்தூர், கூடலூர், குளத்தூர், ராமலிங்கபுரம், ரசுலாபுரம், உசேன்நகரம், அல்லிநகரம், மேலமாத்தூர், வெண்மணி, காடூர் நமங்குணம், புதுவேட்டக்குடி, கோயில்பாளையம், கீழப்பெரம்பலூர் மற்றும் துங்கபுரம் ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9.45 முதல் பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/13/கூத்தூர்-பகுதியில்-அக்டோபர்-13-மின்-தடை-2789281.html
2788790 திருச்சி அரியலூர் போதிய தடுப்பு நடவடிக்கைகள் இல்லை DIN DIN Thursday, October 12, 2017 07:24 AM +0530 டெங்குவைத் தடுக்க போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றார் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி.
அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டத்தில் உள்ள பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மருத்துவமனை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவில், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பங்கேற்று மருத்துவமனையைத் திறந்து வைத்து மேலும் பேசியது:
தமிழ்நாட்டில் தற்போது  நிலவேம்புக் கசாயமும், பப்பாளி இலையுமே மக்களைக் காப்பாற்றி வருகிறதே தவிர, டெங்குவைத் தடுக்க அரசு போதிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை. டெங்கு மட்டுமன்றி, மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகள் நிறைய உள்ளன.  அவற்றைத் தீர்க்கும் மனப்பான்மை தமிழக அரசிடம் இல்லாதது வருத்தத்துக்குரியது. அனைத்து சாதியினரும் கோயிலில் அர்ச்சகராக வேண்டும் என்று தந்தை பெரியார் கேட்டு திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.  
தமிழகத்தில் பயிற்சிபெற்ற அர்ச்சகர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர்,  அவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும்.
நீட் தேர்வை எதிர்த்து, திராவிடர் கழகம் அதனுடன் ஒத்த கருத்துடைய மற்ற கட்சிகளுடன் இணைந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளோம் என்றார்.
நிகழ்ச்சியில், பெரியார் கல்விக் குழுமத் தலைவர் அன்புமணி, மருத்துவ குழும இயக்குநர் கவுதமன், திராவிடர் கழக மண்டல தலைவர் காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக ரூ. 5 லட்சம் நன்கொடையை விருத்தாசலம் நகைக்கடை அதிபர் அகர்சந்த் கி.வீரமணியிடம் வழங்கினார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/12/போதிய-தடுப்பு-நடவடிக்கைகள்-இல்லை-2788790.html
2788245 திருச்சி அரியலூர் கல்லூரி வளாகத்தில் தூய்மைப் பணி DIN DIN Wednesday, October 11, 2017 08:26 AM +0530 பாரதப் பிரமதரின் தூய்மையே சேவை திட்டத்தையொட்டி, அரியலூர் அரசு கலைக் கல்லூரியில், நாட்டு நலப் பணித் திட்டம் (அலகு-1) சார்பில் தூய்மைப் பணிகள் முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

முகாமை கல்லூரி முதல்வர்(பொ)சா. சிற்றரசு தொடக்கி வைத்து, சமூக சேவையின் முக்கியத்துவத்தை மாணவர்களிடையே வலியுறுத்தினர். முகாமிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் வெ.கருணாகரன் செய்தார்.  பணியின்போது என்.எஸ்.எஸ் அலகு 1-யைச் சார்ந்த மாணவர்கள் சுமார் 100 பேர்  கலந்துகொண்டு, கல்லூரி வளாகத்தில் இருந்த சீமைக்கருவேல முள்செடிகள், எருக்கு செடிகள் மற்றும் பார்த்தீனியம் செடிகளை அகற்றி சுத்தம் செய்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/11/கல்லூரி-வளாகத்தில்-தூய்மைப்-பணி-2788245.html
2787467 திருச்சி அரியலூர் அரியலூரில் தொழில் கடன்பெற விண்ணப்பிக்கலாம் DIN DIN Tuesday, October 10, 2017 05:14 AM +0530 பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் (P​M​E​G​P)  அரியலூர் மாவட்டத்தில் வசிக்கும் 18 வயது பூர்த்தியான சுயதொழில் செய்ய விரும்பும் ஆண் மற்றும் பெண் பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இத்திட்டத்தின் கீழ்  உற்பத்தி சார் தொழில் தொடங்க ரூ. 25 லட்சம் வரையிலும் சேவை சார் தொழில்களுக்கு ரூ. 10 லட்சம் வரையிலும் கடன் அளிக்கப்படும். இத்திட்டங்களுக்கு குறைந்த பட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்திட்டம் நகர்ப் பகுதிகளில் மாவட்டத் தொழில் மையம் வாயிலாகவும், கிராமப் பகுதிகளில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில்கள் வாரியம் அரியலூர் கிளை வாயிலாகவும் செயல்படுத்தப்படும். நிகழாண்டில் 55 பயனாளிகளுக்கு ரூ.111.50 லட்சம் மானியத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடன் பெறவிரும்பும் தொழில் முனைவோர்கள் h‌t‌t‌p://‌w‌w‌w.‌k‌v‌i​c‌o‌n‌l‌i‌n‌e.‌g‌o‌v.‌i‌n  என்ற இணையதளம் வாயிலாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். மேலும்,  விவரங்களுக்கு 04329-228555 மற்றும் 98403 01651.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/10/அரியலூரில்-தொழில்-கடன்பெற-விண்ணப்பிக்கலாம்-2787467.html
2787466 திருச்சி அரியலூர் விவசாயி மீது தாக்குதல்: தந்தை, மகன் கைது DIN DIN Tuesday, October 10, 2017 05:12 AM +0530 அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே விவசாயியைத் தாக்கிய தந்தையும், மகனும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
விக்கிரமங்கலம் அருகேயுள்ள காசங்கோட்டை தெற்குதெருவைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி (58). அதே பகுதியைச் சேர்ந்த இவரது அண்ணன் ஜெயராமன் (68). இருவரும் விவசாயிகள். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஜெயராமன் தனது வயலில் இருந்து வடிக்கால் தண்ணீரை கலியமூர்த்தி வயலுக்கு திறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜெயராமன், அவரது மகன் அறிவழகன் ஆகியோர் சேர்ந்து கலியமூர்த்தியைத் தாக்கியுள்ளனர்.இதில் பலத்த காயமடைந்த கலியமூர்த்தி மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்பட்டுள்ளார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/10/விவசாயி-மீது-தாக்குதல்-தந்தை-மகன்-கைது-2787466.html
2787465 திருச்சி அரியலூர் மக்கள் குறைகேட்புக் கூட்டம்: அரியலூரில் 427 மனுக்கள் அளிப்பு DIN DIN Tuesday, October 10, 2017 05:11 AM +0530 அரியலூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 427 மனுக்கள் பெறப்பட்டது.
கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியர் க. லட்சுமிபிரியா தலைமை வகித்தார். கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, தொகுப்பு வீடுகள், திருமண நிதியுதவித் திட்டம் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 427 மனுக்களைப் பொதுமக்களிடம் இருந்து பெற்ற ஆட்சியர், இம்மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
முன்னதாக, சுகாதாரத் துறையின் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை ஆட்சியர் வழங்கினார். தொடர்ந்து, நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டத்தில், 16 கோரிக்கை மனுக்களைப் பெற்றார். கூட்டத்தில், சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் பாலாஜி, கடுகூர் ஆரம்ப சுகாதார நிலை மருத்துவர் உமா மகேஸ்வரி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பழனியாண்டி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.   
நிலத்தை மீட்டுத்தரக்கோரி விவசாயி தீக்குளிக்க முயற்சி:
அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள சூரியமணல் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் பரமசிவம் (50). ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்துக்கு வந்தவர், திடீரென தான் கொண்டு வந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
இதனையறிந்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார், அவரது உடலில் தண்ணீரை ஊற்றி மீட்டனர்.  இதுகுறித்து தீக்குளிக்க முயன்ற பரமசிவம் மேலும் கூறியது: என்னையும், எனது தந்தை கலியபெருமாள் மற்றும் சகோதரர் உள்ளிட்டோரை கோமகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ராஜேந்திரன், சேட்டு, கலியபெருமாள் ஆகியோர் கடத்திச்சென்று, மிரட்டி கையெழுத்து பெற்று, எனது நிலத்தை அபகரித்துள்ளனர். இதுகுறித்து கடந்த 7.3.2017இல் ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், தீக்குளிக்க முயற்சித்ததாகத் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து விவசாயி பரமசிவத்திடம் அவரது கோரிக்கைகளை கேட்டறிந்தார்  சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் பாலாஜி.
நிலத்தை அளந்து தரக்கோரிக்கை:
கடந்த 30.12.2007 இல் தமிழக அரசு சார்பில் செந்துறை வருவாய் வட்டம் வாணத்திரையான் பட்டின பகுதியைச் சேர்ந்த 99 குடும்பங்களுக்கு தலா 3 சென்ட் இலவச வீட்டுமனை வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை யாருக்கும் நிலத்தை அளந்து கொடுக்கவில்லை. இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே எங்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை அளந்து தர ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் அளித்த மனுவில்  தெரிவித்துள்ளனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/10/மக்கள்-குறைகேட்புக்-கூட்டம்-அரியலூரில்-427-மனுக்கள்-அளிப்பு-2787465.html
2786446 திருச்சி அரியலூர் தரக்குறைவான பேச்சு? செந்துறை காவல் நிலையம் முற்றுகை DIN DIN Sunday, October 8, 2017 02:20 AM +0530 அரியலூர் அருகே வாகனச் சோதனையின் போது, போதிய ஆவணங்கள் இல்லாமல் வரும் வாகன ஓட்டிகளை தரக்குறைவாக பேசும் காவலர்களைக் கண்டித்து, செந்துறை காவல் நிலையத்தை அனைத்து கட்சியினர் சனிக்கிழமை இரவு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செந்துறை-திட்டக்குடி சாலை, குழுமூர் வஞ்சினபுரம், ஆர்.எஸ்.மாத்தூர் சொக்கநாதபுரம், அன்னை தெரசா பள்ளி, ராயம்புரம், சென்னைவனம்,சிறுகடம்பூர், உஞ்சினி, நல்லாம்பாளையம், விழுப்பணங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் செந்துறை போலீஸார் கடந்த சில நாட்களாக தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, போதிய ஆவணங்கள் இல்லாமல், இருசக்கர வாகனங்களை ஓட்டிவரும் விவசாயிகள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை தரக்குறைவாகப் பேசி, அபராதம் வசூலிப்பதாகவும், மேலும், அன்றாட கூலிவேலைக்குச் சென்றுவிட்டு வீடுதிரும்பும் வாகன ஓட்டிகளிடம், சோதனை என்ற பெயரில் அவர்களது கூலித்தொகையை பறித்துவிடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை இரவு மேற்கண்ட பகுதிகளில் வாகனச் சோதனையின் போது, போதிய ஆவணங்கள் கொண்டுவராத வாகன ஓட்டிகளை காவல் துறையினர் தரக்குறைவாக பேசியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், பாமக, திமுக, விசிக உள்ளிட்ட கட்சியினர் செந்துறை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, பேச்சுவார்த்தைக்கு வந்த காவல் ஆய்வாளர் கருணாநிதியிடம்,விவசாயம் மற்றும் கூலிவேலை செய்யும் நாங்கள் அனைத்து நேரத்திலும் ஆவணங்கள் மற்றும் தலைக்கவசம் எடுத்துவர முடிவதில்லை. இதனால், தரக்குறைவாகப் பேசி, அதிக தொகை அபராதம் விதித்தால் எவ்வாறு செலுத்த முடியும் என அவர்கள் கேட்டனர். அதற்கு ஆய்வாளர், அவர்களது கோரிக்கைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனுவாக அளிக்கும்படி கூறினார். இதையடுத்து அவர்கள் கலைந்துசென்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/08/தரக்குறைவான-பேச்சு-செந்துறை-காவல்-நிலையம்-முற்றுகை-2786446.html
2786445 திருச்சி அரியலூர் ஆண்டிமடம் அருகே நின்ற லாரியில் ஆண் சடலம் DIN DIN Sunday, October 8, 2017 02:20 AM +0530 அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே லாரியில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் கிடந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ஆண்டிமடம் அருகே காடுவெட்டி சாலையில், திருக்களப்பூர் கிராமத்தில் உள்ள சுடுகாடு அருகே சனிக்கிழமை காலை லாரி ஒன்று நீண்ட நேரமாக நின்றுகொண்டிருந்தது. இதனால், சந்தேகமடைந்த கிராம மக்கள் லாரியின் பின்புறம் மேலே ஏறி பார்த்தபோது, தார்பாய் சுருண்டு கிடந்தது. அதை விலக்கி பார்த்தபோது, ஆண்சடலம் ஒன்று முகம் முழுவதும் அடையாளம் தெரியாத அளவிற்கு சிதைக்கப்பட்டு கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கிராம மக்கள் ஆண்டிமடம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, ஜயங்கொண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளர் கென்னடி, ஆண்டிமடம் காவல் ஆய்வாளர் நித்யா மற்றும் போலீஸார் அங்கு சென்று கொலை செய்யப்பட்டவர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/08/ஆண்டிமடம்-அருகே-நின்ற-லாரியில்-ஆண்-சடலம்-2786445.html
2786443 திருச்சி அரியலூர் நாம் வாழ, வன உயிரினங்கள் வாழ்வது அவசியம்' DIN DIN Sunday, October 8, 2017 02:20 AM +0530 நாம் வாழ, வன உயிரினங்கள் வாழ்வது மிகவும் அவசியம் என்றார் மாவட்ட ஆட்சியர் க. லட்சுமிபிரியா.
வன உயிரின வாரவிழாவையொட்டி, அரியலூர் மாவட்ட வனத்துறை சார்பில் நடைபெற்ற பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி மற்றும் வினாடிவினா போட்டிகளில் வெற்றிபெற்ற 11 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் விழா அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தலைமை வகித்து ஆட்சியர் பேசியது:
இந்தியாவில் வன உயிரின வாரவிழா 1952 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் 2 முதல் 8 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. மேலும், மகாத்மா காந்தி ஓர் அகிம்சைவாதியாதலால், அவரை நினைவுகூரும் வகையிலும் இந்த வன உயிரன பாதுகாப்பு வாரவிழா நடத்தப்படுகிறது.
வன உயிரினங்கள் அழிவதிலிருந்து பாதுகாப்பதற்கும், அவற்றின் வாழ்விடங்களை பாதுகாப்பதன் அவசியத்தை மாணவ, மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கமாகவும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.
மாணவ, மாணவிகள் கற்கும் பருவத்தில் வன உயிரினங்களைப் பற்றி அறிந்துகொள்ள பேச்சுப்போட்டி மற்றும் ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டும் போட்டி ஆகியவை நடத்தப்பட்டு வருகிறது.
நாம் வாழ, வன உயிரினங்கள் வாழ்வது மிகவும் அவசியம். ஏனெனில், அவை நம் உயிர்ச்சூழல் தொகுப்பின் ஓர் அங்கம். எனவே, வன உயிரினங்களை பாதுகாத்தும், அவற்றின் வாழ்விடங்களான தாவரங்களை பேணி பாதுகாப்பதும் நமது தலையாய கடமை.
சுற்றுச்சூழலை பாதுகாப்பதோடு வன வளங்களை மேம்படுத்த வேண்டும். மரம் வளர்த்தால் அது நம்மை வளர்க்கும். நாட்டிற்கும் வீட்டிற்கும் நன்மைபயக்கும் என்றார் அவர்.
விழாவில், சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற அரசு தலைமை கொறடா தாமரை. எஸ். ராஜேந்திரன்,வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பேசுகையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் வனத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. வன உயிரின வாரவிழாவையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளைப் பாராட்டுகிறேன் என்றார் அவர்.
விழாவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிநவ்குமார், வனவியல் விரிவாக்க அலுவலர் இளங்கோவன், மாவட்ட கல்வி அலுவலர் (பொ) கலைமதி, அரசு கலைக் கல்லூரி முதல்வர் (பொ) சிற்றரசு, வன காப்பாளர் சிவக்குமார் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
முன்னதாக, மாவட்ட வன அலுவலர் எ.எஸ். மோகன்ராம் வரவேற்றார். முடிவில், வனச்சரக அலுவலர் கணேசன் நன்றி கூறினார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/08/நாம்-வாழ-வன-உயிரினங்கள்-வாழ்வது-அவசியம்-2786443.html
2786442 திருச்சி அரியலூர் ராயம்புரம் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் DIN DIN Sunday, October 8, 2017 02:19 AM +0530 அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள ராயம்புரம் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு அரியலூர் கோட்டாட்சியர் மோகனராஜன் தலைமை வகித்தார். ராயம்புரம், ஆதிக்குடிக்காடு, காவேரிப்பாளையம் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து வருவாய்த் துறையின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்ட மனுக்கள் பெறப்பட்டு தகுதியான மனுக்களின் மீது உடனடியாக தீர்வுகாணப்பட்டது.
மேலும், இம்முகாமில் பொய்யாதநல்லூர் மருத்துவ அலுவலர் மகாலட்சுமி தலைமையிலான மருத்துவக் குழுவினர் பங்கேற்று பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினர்.
இதேபோல, வி.கைகாட்டி அருகேயுள்ள புதுப்பாளையம், மணக்குடையான் ஆகிய கிராமங்களிலும் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/08/ராயம்புரம்-கிராமத்தில்-அம்மா-திட்ட-முகாம்-2786442.html
2786441 திருச்சி அரியலூர் தா.பழூரில் வழிப்பறி: 2 பேரிடம் அரிவாளை காட்டி ரொக்கம், செல்லிடப்பேசி பறிப்பு DIN DIN Sunday, October 8, 2017 02:19 AM +0530 அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே தா.பழூர் பகுதியில் அரிவாளை காட்டி மிரட்டி வங்கி ஊழியர் மற்றும் தனியார் நிறுவன விற்பனையாளரிடம் செல்லிடப்பேசி, ரொக்கத்தைப் பறித்தச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
அரியலூரைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (51). தா.பழூரில் உள்ள இந்தியன் வங்கியில் உதவி மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் வெள்ளிக்கிழமை இரவு பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் தா.பழூரில் இருந்து அரியலூருக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பின்னால் மோட்டார் சைக்கிள்களில் தொடர்ந்து வந்த 6 மர்ம நபர்கள், நடுவலூர் சாலை அருகே மகாலிங்கத்தை வழிமறித்து அரிவாளை காட்டி மிரட்டி, அவரிடமிருந்து 5 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் செல்லிடப்பேசியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். இதேபோல, தா.பழூரை அடுத்த கீழகுடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை மகன் ஆனந்தவேல் (29). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனையாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, இடங்கண்ணி சாலையில் பின்னால் வந்த மர்ம நபர்கள், ஆனந்தவேலை மறித்து அரிவாளை காட்டி மிரட்டி அவரிடமிருந்த 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம், செல்லிடப்பேசி, ஏடிஎம் கார்டுகளை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஜயங்கொண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளர் கென்னடி மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/08/தாபழூரில்-வழிப்பறி-2-பேரிடம்-அரிவாளை-காட்டி-ரொக்கம்-செல்லிடப்பேசி-பறிப்பு-2786441.html
2786439 திருச்சி அரியலூர் அக். 14-இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் DIN DIN Sunday, October 8, 2017 02:19 AM +0530 அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், வரும் 14 -ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
முகாமில், அரியலூர், சென்னை, திருவள்ளூர், திருச்சி, கோவை, திருப்பூர் போன்ற பெருநகரங்களில் உள்ள 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்துக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து வேலைவாய்ப்பு வழங்க உள்ளன.
எனவே, இந்த நேர்காணலில் 8 ஆம் வகுப்பு முதல் தொழிற்பயிற்சி, பட்டயப்படிப்பு, நர்சிங், பொறியியல், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பு வரை படித்த இருபாலரும் உரிய கல்விச்சான்றுகள், சுயவிவரக் குறிப்பு மற்றும் புகைப்பட நகலுடன் பங்கேற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் க. லட்சுமிபிரியா சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/08/அக்-14-இல்-தனியார்-வேலைவாய்ப்பு-முகாம்-2786439.html
2786438 திருச்சி அரியலூர் 'விவசாய நிலப் பட்டாக்களை ஆதாருடன் இணைக்க வேண்டும் DIN DIN Sunday, October 8, 2017 02:18 AM +0530 கிராம மக்கள் தங்களது விவசாய நிலப் பட்டாக்களை கிராம நிர்வாக அலுவலகத்தில் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்றார் உடையார்பாளையம் கோட்டாட்சியர் டினாகுமாரி.
அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கச்சிபெருமாள் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
கிராம மக்கள் அனைவரும் தங்களது விவசாய நிலப் பட்டாக்களை கிராம நிர்வாக அலுவலகத்தில் சென்று ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். 13 ஆம் தேதி ஜயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
வரும் 14 ஆம் தேதி அரியலூரில் நடைபெறும் தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு முகாமில் 8 ஆம் வகுப்பிற்கு மேல் படித்தவர்கள் பங்கேற்று பயன்பெற வேண்டும்.
மேலும், கிராம மக்கள் அனைவரும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க, தங்களது சுற்றுப்புறங்களை மழைநீர் தேங்காமல் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.
கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் பார்வைக்கு வைக்கப்பட்டது. கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் குருநாதன் தலைமை வகித்தார். உடையார்பாளையம் வருவாய் அலுவலர் ஜானகிராமன், கிராம நிர்வாக அலுவலர் பொய்யாமொழி உள்ளிட்ட வருவாய்த் துறை அலுவலர்கள், பணிதள பொறுப்
பாளர்கள், கிராம மக்கள் பங்கேற்றனர்.
முன்னதாக, ஊராட்சிப் பகுதிகளில் 500 மரக்கன்றுகள் நடும் பணியை கோட்டாட்சியர் டினாகுமாரி தொடக்கி வைத்தார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/08/விவசாய-நிலப்-பட்டாக்களை-ஆதாருடன்-இணைக்க-வேண்டும்-2786438.html
2786008 திருச்சி அரியலூர் தலைக்கவச விழிப்புணர்வு பேரணி DIN DIN Saturday, October 7, 2017 08:44 AM +0530 அரியலூரில் அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் அரியலூர் மாவட்ட காவல்துறை இணைந்து தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு வாகனப் பேரணியை வெள்ளிக்கிழமை நடத்தின.
பேரணிக்கு கல்லூரி முதல்வர்(பொ) சிற்றரசு தலைமை வகித்தார். பேரணியை மாவட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளர் மோகன்தாஸ் கொடியசைத்து தொடக்கி வைத்தார். பேரணியில் பங்கேற்ற காவலர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தங்களது இருசக்கர வாகனங்களில் பொருத்தி கொண்டு பேரணியாகச் சென்றனர். பேரணியானது மார்க்கெட் தெருவில் தொடங்கி, பேருந்து நிலையம், சுப்ரமணியர் கோவில் தெரு, ராஜாஜி நகர் வழியாக கல்லூரியில் நிறைவடைந்தது. வரலாற்றுத்துறை தலைவர் இருளப்பன், சுற்றுச்சூழல் அறிவியல் துறைத் தலைவர் அருள், அரியலூர் காவல்துறை ஆய்வாளர் ரவிசக்கரவர்த்தி, உதவி ஆய்வாளர் நந்தகுமார், மற்றும் முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட கண்காணிப்புக்குழு கூட்டம்அரியலூர், அக். 6: அரியலூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட கண்காணிப்புக்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், சிதம்பரம் மக்களவை உறுப்பினர் சந்திரகாசி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் க. லட்சுமிபிரியா தெரிவித்தாவது:
அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 774 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது.
இவற்றின் மூலமாக 22,565 குழந்தைகள் இணை உணவுத் திட்டத்திலும், 5,374 கர்ப்பிணிகளும், 4,695 பாலூட்டும் தாய்மார்களும், 15,699 குழந்தைகள் மதிய உணவுத் திட்டத்திலும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் மூலமாக மாவட்டத்திலுள்ள 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் உடல்நலத்தையும், ஊட்டச்சத்தையும் மேம்படுத்துதல், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு முறையான ஊட்டச்சத்து வழங்குதல் போன்ற பணிகளை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அங்கன்வாடி மையங்களில் ஒவ்வொரு மாதமும் குழந்தைகளின் எடை அளவீட்டு வயதுகேற்ற வளர்ச்சி உள்ளதா என கண்காணித்து, கடுமையான ஊட்டச்சத்துப் பற்றாக்குறை உள்ள குழந்தைகளுக்கு கூடுதல் இணை உணவு அளிக்கப்படுவதுடன் தொடர் கண்காணிப்புடன் சிறப்பு கவனம் அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு தேவையான இணை உணவு, தடுப்பூசி போன்றவைகள் அளிக்கப்படுவதால், இதனை கிராமப்புறங்களில் உள்ள பெற்றோர்கள் தங்களுடைய 5-வயதுக்குட்பட்ட குழந்தைகளை அருகிலுள்ள அங்கன்வாடி மையங்களில் சேர்த்து பயன்பெறலாம் என்றார் அவர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/07/தலைக்கவச-விழிப்புணர்வு-பேரணி-2786008.html
2786007 திருச்சி அரியலூர் தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் மகளிருக்கான கபடிப் போட்டி DIN DIN Saturday, October 7, 2017 08:44 AM +0530 பாரதிதாசன் பல்கலைகழக கல்லூரிகளுக்கிடையே மகளிருக்கான கபடி போட்டி அரியலூர் மாவட்டம் தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இப்போட்டிக்கு பாரதிதாசன் பல்கலைக்கழக விளையாட்டுச் செயலர் பழனிசாமி தலைமை வகித்தார். பூண்டி பஷ்பம் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் முருகதாஸ், ஒருங்கிணைப்பாளர் உமா, திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி உடற்கல்வி இயக்குநர் சுதாமதி,  மீனாட்சி ராமசாமி கல்லூரி முதல்வர் முனைவர் சேகர், இயக்குநர் ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரிகளிலிருந்து 31 அணிகள் விளையாடின.
இதில் பாரதிதான் பல்கலைக்கழக மைய வளாகக் கல்லூரி முதலிடத்தையும், புதுக்கோட்டை ராஜாஸ் கல்லூரி இரண்டாமிடத்தையும், ஒரத்தநாடு பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி மூன்றாமிடத்தையும், திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி நான்காமிடத்தையும் பிடித்து முறையே ரூ. 4000, ரூ. 3000, ரூ. 2000, ரூ. 1000 பரிசாக பெற்றன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு மீனாட்சு ராமசாமி கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம். ஆர்ரகுநாதன் பரிசுகளை வழங்கினார்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/07/தத்தனூர்-மீனாட்சி-ராமசாமி-கல்லூரியில்-மகளிருக்கான-கபடிப்-போட்டி-2786007.html
2786006 திருச்சி அரியலூர் அரசு மருத்துவமனைகளில் ஆட்சியர் ஆய்வு DIN DIN Saturday, October 7, 2017 08:43 AM +0530 அரியலூர் மாவட்டம் செந்துறை மற்றும் குழுமூர் அரசு மருத்துவமனைகளில் டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை ஆட்சியர் க. லட்சுமிபிரியா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
அப்போது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் குறைகளை கேட்டறிந்து, அதற்கு உண்டான சிகிச்சை முறைகளை சிறப்புடன் செய்து தர மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களிடம் காய்ச்சல் மற்றும் டெங்கு தொடர்பான நோய்களுக்கு சிறப்பு கவனம் எடுத்து சிகிச்சை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
தவிர, மருத்துவமனைகளுக்கு வரும் பொதுமக்களுக்கு தினமும் நிலவேம்பு கசாயம், உப்புகரைசல் வழங்கிட வேண்டும் என
மருத்துவர்களிடம் அறிவுறுத்தினார்.
மருத்துவர்கள் செவிலியர்கள், பணியாளர்கள் மருத்துவமனைக்கு வந்து செல்லும் நோயாளிகளிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.
டெங்கு காய்ச்சல் தொடர்பாக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி, டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய ஏ.டி.எஸ் கொசுக்களை உருவாக்கிடாமல் வீடு மற்றும் சுற்றுப்புறங்களைத் தூய்மையாகவும், சுத்தமாகவும் பராமரித்திட அறிவுறுத்த வேண்டும் என அவர் உத்தரவிட்டார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/07/அரசு-மருத்துவமனைகளில்-ஆட்சியர்-ஆய்வு-2786006.html
2786004 திருச்சி அரியலூர் 201 கிராம ஊராட்சிகளில் இன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம் DIN DIN Saturday, October 7, 2017 08:43 AM +0530 அரியலூர் மாவட்டத்திலுள்ள 201 கிராம ஊராட்சிகளில் சனிக்கிழமையும், அக். 21 ஆம் தேதியும் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.
இதில் 3.10.2017 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல்  வாசித்து காண்பிக்கப்படவுள்ளது. மேலும், 1.1.2018 அன்று தகுதிநாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், சிறப்பு சுருக்கம் திருத்தம் 3.10.2017 முதல் 31.10.2017 வரை நடைபெற்று வருவதை குறித்து தெரிவித்தல்.
13.10.2017 அன்று அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெறுவது குறித்தும், 14.10.2017 அன்று அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாம் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த கூட்டங்களில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் க. லட்சுமிபிரியா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/07/201-கிராம-ஊராட்சிகளில்-இன்று-சிறப்பு-கிராம-சபைக்-கூட்டம்-2786004.html
2786003 திருச்சி அரியலூர் செவிலியர் கல்லூரி மாணவிகளுக்கு அவசரகால முதலுதவிப் பயிற்சி DIN DIN Saturday, October 7, 2017 08:43 AM +0530 அவசர கால ஊர்தி (108) மற்றும் ஏகம் அறக்கட்டளை சார்பில் அன்னை தெரசா நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு விபத்து மற்றும் அவசர கால முதலுதவிப் பயிற்சி வெள்ளிக்கிழமை  நடைபெற்றது.
 பயிற்சிக்கு அன்னை தெரசா நர்சிங் கல்லூரி தாளாளர் த. முத்துகுமரன் தலைமை வகித்தார். மருத்துவ உதவியாளர் சுமித்ராதேவி, ஏகம் அறக்கட்டளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரவீன்குமார் மற்றும் பைலட் சத்தியராஜ் ஆகியோர் மாணவிகளுக்கு ஆபத்து மற்றும் அவசர கால முதலுதவி பயிற்சியளித்தனர்.
பயிற்சியில்அன்னைதெரசா கல்வி நிறுவன செயலாளர் வேல்முருகன், இயக்குநர் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக அன்னை தெரசா நர்சிங் கல்லூரி முதல்வர் சித்ரா வரவேற்றார். மெட்ரிக் பள்ளி முதல்வர் தனலட்சுமி நன்றி கூறினார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/07/செவிலியர்-கல்லூரி-மாணவிகளுக்கு-அவசரகால-முதலுதவிப்-பயிற்சி-2786003.html
2785209 திருச்சி அரியலூர் ஜயங்கொண்டத்தில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி DIN DIN Friday, October 6, 2017 05:12 AM +0530 அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் பாத்திமா மெட்ரிக் பள்ளியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
 நிகழ்ச்சிக்கு உதவி தந்தை எடிசன் சின்னப்பா தலைமை வகித்தார். முதல்வர் உர்சலாசமந்தா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கே. சண்முகம், அரிமா சங்க வட்டாரத் தலைவர் கே. சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் ஜெனிபர்சுகந்தி வரவேற்றார்.
கருத்தரங்கில் ஜயங்கொண்டம் வட்டார நடமாடும் மருத்துவமனை மருத்துவர் சந்திரசேகரன் பங்கேற்று டெங்கு காய்ச்சல் நோய் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து பேசினார். மேலும் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற பேரணியை ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் உஷா கொடியசைத்து தொடக்கி வைத்தார். பேரணியில் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்று டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு விழிப்புணர்வு கோஷங்கள்எழுப்பியவாறு சென்றனர். மேலும் பொதுமக்களிடையே டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தனர்.
பேரணி பள்ளியில் இருந்து புறப்பட்டு தா. பழூர்சாலை, பேருந்து நிலைய சாலை, கடைவீதி வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.
நிகழ்ச்சிகளில் அரிமா சங்க பொருளாளர் தண்டபாணி, பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/06/ஜயங்கொண்டத்தில்-டெங்கு-ஒழிப்பு-விழிப்புணர்வு-பேரணி-2785209.html
2785208 திருச்சி அரியலூர் பருத்தியில் வேர் அழுகலை தடுக்க வழிமுறைகள். DIN DIN Friday, October 6, 2017 05:12 AM +0530 அரியலூர் வட்டாரத்தில் பருத்திப் பயிர் மானாவாரியாக சுமார் 10,750 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பயிர் தற்சமயம் இளம் பயிராகவும், சப்பை கட்டும் தருணத்திலும் உள்ளது.
கடந்த மாதத்தில் பரவலாக பெய்த மழைக்கு பின்னர், கடந்த ஒரு வாரமாக நிலவிய அதிக வெப்பநிலை காரணமாக மண்ணின் வெப்பநிலை அதிகமாகி வளம் குறைந்த மண்ணில் பருத்தியில் வேர் அழுகல் நோய் தென்படுகிறது.
இதன் பாதிப்பால் வயலில் திட்டுத்திட்டாக செடிகள் முழுவதும் திடீரென காய்ந்துவிடும் பாதிக்கப்பட்ட செடியை வேருடன் பிடுங்கி பார்த்தால், வேரின் மேற்பகுதியை தேய்த்தால் நார் போல் உரிந்து காணப்படும்.  இதனைக் கட்டுப்படுத்திட கார்பெண்டசிம் 50 சதவீத நனையும் தூளை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் வீதம் கலந்து பாதிக்கப்பட்ட செடிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள செடிகளின் வேர்பகுதியில் வேர்பகுதி நனையும் அளவிற்கு ஊற்ற வேண்டும். மழை பெய்வதற்கு முன்பாக சிங்க்சல்பேட் நுண்சத்தை ஒரு ஏக்கருக்கு 8 கிலோ வீதம் மணலுடன் கலந்து தூவ வேண்டும்.
இதனால் வேர் அழுகல் நோய் பரவாமலும் தாக்குதல் கட்டுப்படுத்தப்படுகிறது. விவசாயிகள் தாமதிக்காமல் வயலை கண்காணித்து மேற்காணும்படி பாதிப்பு இருந்தால் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரியலூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் பழனிசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/06/பருத்தியில்-வேர்-அழுகலை-தடுக்க-வழிமுறைகள்-2785208.html
2785207 திருச்சி அரியலூர் தவறான சிகிச்சை: பெண் அரசு மருத்துவருக்கு ரூ. 10 லட்சம் அபராதம் DIN DIN Friday, October 6, 2017 05:11 AM +0530 அரியலூரில், தனியார் மருத்துவமனையில் பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்த வழக்கில் பெண் அரசு மருத்துவருக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து அரியலூர் நுகர்வோர் குறை தீர்வு மன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
அரியலூர் கே.கே.நகரைச் சேர்ந்தவர் செந்தில்வேல். இவரது மனைவி பெருமாள் தாய் (35). கடந்த 2009 ஆம் ஆண்டு இவருக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டின் அருகே தனியார் மருத்துவனை நடத்தி வரும் அரசு மருத்துவர் ஆர்.கே. காஞ்சனாவை சந்தித்து சிகிச்சை பெற்றார். இருப்பினும் தொடர் ரத்தப்போக்கு மற்றும் வயிற்றுவலி இருந்ததால் காஞ்சனா வயிற்றில் கரு சரியாக தரிக்கவில்லை உடனடியாக கருவை கலைக்க வேண்டும் என்று கூறி அறுவைச் சிகிச்சை செய்துள்ளார்.
ஆனால் அதன் பிறகும் வயிற்றுவலி குறையாததால் பெருமாள்தாயின் தந்தை, அவரை ஆபத்தான நிலையில் திருநெல்வேலியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், பெருமாள்தாய்க்கு தவறான அறுவைச் சிகிச்சை அளிக்கப்பட்டு கரு கலைக்கப்பட்டுள்ளது என்றும், ஆபத்தான நிலையில் இருப்பதால் வயிற்றில் உள்ள ஒரு குழாயை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து பெருமாள்தாயின் கணவர் செந்தில்வேல், மருத்துவர் காஞ்சனாவை சந்தித்து, தனது மனைவிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகளின் அறிக்கைகளை  கேட்டுள்ளார். அதற்கு அவர் திருச்சியிலுள்ள ஒரு தனியார் பரிசோதனை மையத்துக்கு ஆய்வுக்காக அனுப்பட்ட அறிக்கைகள் இன்னும் வரவில்லை என கூறி பல நாட்களாக இழுத்தடித்துள்ளார்.
இதுகுறித்து செந்தில்வேல், மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு மன்றத்தில் கடந்த 16.11.2011 அன்று மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர்வு மன்றத் தலைவர் ஜெயசந்திரன், தவறான  சிகிச்சையளித்த மருத்துவர் காஞ்சனா, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 10 லட்சமும், வழக்கு தொடர்ந்த நாளில் இருந்து தொகை செலுத்தும் தேதி வரை 9 சதவீத வட்டியுடன் சேர்ந்து நஷ்ட ஈடு வழங்குமாறு வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கில், ஒரு அரசு மருத்துவர், தனியாக மருத்துவமனை நடத்தி வருவதை கண்காணிக்காத பெரம்பலூர் மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் குடும்ப நல இணை இயக்குநரகம், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் செந்தில்வேலுக்கு ரூ. 1 லட்சமும், வழக்கு தொடர்ந்த நாளில் இருந்து தொகை செலுத்தும் தேதி வரை 9 சதவீத வட்டியுடன் சேர்த்து நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என  நுகர்வோர் குறைதீர் மன்றத் தலைவர் ஜெயந்திரன் உத்தரவிட்டார்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/06/தவறான-சிகிச்சை-பெண்-அரசு-மருத்துவருக்கு-ரூ-10-லட்சம்-அபராதம்-2785207.html
2785206 திருச்சி அரியலூர் முந்திரிகாட்டில் சடலமாக கிடந்த புதுமாப்பிள்ளை DIN DIN Friday, October 6, 2017 05:11 AM +0530 அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள முந்திரிகாட்டில் தூக்கிட்ட நிலையில் தொங்கிய புதுமாப்பிள்ளையின் சடலத்தை போலீஸார் வியாழக்கிழமை மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
செந்துறை அருகேயுள்ள குமிழியம் காலனித்தெருவைச் சேர்ந்தவர் மகேஷ் (32). பெயிண்டர். இவருக்கு கடந்த மாதம் 10 ஆம் தேதி திருமணமானது. அன்றிலிருந்து குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்ததாம். இந்நிலையில் புதன்கிழமை இவர், தனது மனைவியை உறவினர் வீட்டில் விட்டு விட்டு, ஊருக்கு திரும்பியவர் வீட்டுக்கு வரவில்லையாம். குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் வியாழக்கிழமை காலை சிறுகடம்பூர் பகுதியில் அரசுக்கு சொந்தமான முந்திரிகாட்டில் மகேஷ் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடப்பதாக இரும்புலிக்குறிச்சி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், சடலத்தை மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/06/முந்திரிகாட்டில்-சடலமாக-கிடந்த-புதுமாப்பிள்ளை-2785206.html
2785205 திருச்சி அரியலூர் ஓடையில் மணல் அள்ளிய 2 பேர் கைது; 2 வாகனங்கள் பறிமுதல் DIN DIN Friday, October 6, 2017 05:10 AM +0530 அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள ஓடையில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 வாகனங்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டு வாகனங்களின் உரிமையாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருமானூர் அருகே வாரணவாசி மல்லூர் கிராமத்திலுள்ள ஓடையில் இருந்து வியாழக்கிழமை அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டர் மற்றும் மினிலோடு ஆட்டோவை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கீழப்பழுவூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அமரஜோதி பறிமுதல் செய்தார். மேலும், டிராக்டர் உரிமையாளர் மேலகருப்பூர் செந்தில் (27), சுமை ஆட்டோ உரிமையாளர் அரியலூர் தெற்குத்தெரு பிரபாகரன் (26) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/06/ஓடையில்-மணல்-அள்ளிய-2-பேர்-கைது-2-வாகனங்கள்-பறிமுதல்-2785205.html
2785204 திருச்சி அரியலூர் தவறான சிகிச்சை: பெண் அரசு மருத்துவருக்கு ரூ. 10 லட்சம் அபராதம் DIN DIN Friday, October 6, 2017 05:10 AM +0530 அரியலூரில், தனியார் மருத்துவமனையில் பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்த வழக்கில் பெண் அரசு மருத்துவருக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து அரியலூர் நுகர்வோர் குறை தீர்வு மன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
அரியலூர் கே.கே.நகரைச் சேர்ந்தவர் செந்தில்வேல். இவரது மனைவி பெருமாள் தாய் (35). கடந்த 2009 ஆம் ஆண்டு இவருக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டின் அருகே தனியார் மருத்துவனை நடத்தி வரும் அரசு மருத்துவர் ஆர்.கே. காஞ்சனாவை சந்தித்து சிகிச்சை பெற்றார். இருப்பினும் தொடர் ரத்தப்போக்கு மற்றும் வயிற்றுவலி இருந்ததால் காஞ்சனா வயிற்றில் கரு சரியாக தரிக்கவில்லை உடனடியாக கருவை கலைக்க வேண்டும் என்று கூறி அறுவைச் சிகிச்சை செய்துள்ளார். ஆனால் அதன் பிறகும் வயிற்றுவலி குறையாததால் பெருமாள்தாயின் தந்தை, அவரை ஆபத்தான நிலையில் திருநெல்வேலியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், பெருமாள்தாய்க்கு தவறான அறுவைச் சிகிச்சை அளிக்கப்பட்டு கரு கலைக்கப்பட்டுள்ளது என்றும், ஆபத்தான நிலையில் இருப்பதால் வயிற்றில் உள்ள ஒரு குழாயை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து பெருமாள்தாயின் கணவர் செந்தில்வேல், மருத்துவர் காஞ்சனாவை சந்தித்து, தனது மனைவிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகளின் அறிக்கைகளை  கேட்டுள்ளார். அதற்கு அவர் திருச்சியிலுள்ள ஒரு தனியார் பரிசோதனை மையத்துக்கு ஆய்வுக்காக அனுப்பட்ட அறிக்கைகள் இன்னும் வரவில்லை என கூறி பல நாட்களாக இழுத்தடித்துள்ளார்.
இதுகுறித்து செந்தில்வேல், மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு மன்றத்தில் கடந்த 16.11.2011 அன்று மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர்வு மன்றத் தலைவர் ஜெயசந்திரன், தவறான  சிகிச்சையளித்த மருத்துவர் காஞ்சனா, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 10 லட்சமும், வழக்கு தொடர்ந்த நாளில் இருந்து தொகை செலுத்தும் தேதி வரை 9 சதவீத வட்டியுடன் சேர்ந்து நஷ்ட ஈடு வழங்குமாறு வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/06/தவறான-சிகிச்சை-பெண்-அரசு-மருத்துவருக்கு-ரூ-10-லட்சம்-அபராதம்-2785204.html
2784830 திருச்சி அரியலூர் வேனுக்கு அடியில் படுத்துறங்கிய அரசுப் பேருந்து ஓட்டுநர் சாவு DIN DIN Thursday, October 5, 2017 08:58 AM +0530 அரியலூரில், மதுபோதையில் மினிவேனுக்கு அடியில் படுத்துறங்கிய அரசுப் பேருந்து ஓட்டுநர், வேன் திடீரென இயக்கப்பட்டதால் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.
அரியலூர் கே.கே.நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் கேசன் மகன் சுந்தரவேல் (52). அரசுப் பேருந்து ஓட்டுநர். மது அருந்தும் பழக்கம் உள்ள இவர், செவ்வாய்க்கிழமை இரவு கே.கே.நகர் சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு மினிவேனுக்கு அடியில் மது போதையில் படுத்து உறங்கினாராம்.
இந்நிலையில் இதனையறியாத அந்த வேனின் ஓட்டுநர், புதன்கிழமை காலை வேனை ஓட்டிச் சென்றுள்ளார். இதில் காருக்கு அடியில் இருந்த சுந்தரவேல் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அரியலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/05/வேனுக்கு-அடியில்-படுத்துறங்கிய-அரசுப்-பேருந்து-ஓட்டுநர்-சாவு-2784830.html
2784771 திருச்சி அரியலூர் 6  கிராமங்களில் நாளை அம்மா திட்ட முகாம் DIN DIN Thursday, October 5, 2017 08:33 AM +0530 அரியலூர் மாவட்டம் ராயம்புரம், புதுப்பாளையம், வெண்மான்கொண்டான் (கி), அங்கராயநல்லூர் (கி), ஆண்டிமடம், மணக்குடையான் ஆகிய 6 கிராமங்களில் வெள்ளிக்கிழமை (அக். 6) அம்மா திட்ட முகாம்கள் வட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெறுகிறது. முகாமில் வருவாய்த்துறையின் சமூகப்பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாக  தீர்வு வழங்கப்படும். எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு  மாவட்ட ஆட்சியர் க. லட்சுமி பிரியா புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூரில்...
பெரம்பலூர் வட்டம், நொச்சியம், வேப்பந்தட்டை வட்டம், வேப்பந்தட்டை (வ), குன்னம் வட்டம், அகரம் சிகூர், ஆலத்தூர் வட்டம், இரூர் ஆகிய வருவாய் கிராமங்களில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளன. இந்த முகாம்களில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, உரிய ஆணைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு பெறப்படும் மனுக்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டு ஒப்புகை ரசீது வழங்கப்படும்.
எனவே, சம்பந்தப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா, புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/05/6--கிராமங்களில்-நாளை-அம்மா-திட்ட-முகாம்-2784771.html
2784769 திருச்சி அரியலூர் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வுக் கூட்டம் DIN DIN Thursday, October 5, 2017 08:33 AM +0530 அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் க. லட்சுமிபிரியா தலைமை வகித்துப் பேசியதாவது:
அக். 5 டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு தினமாக தமிழக அரசு அறிவித்ததையடுத்து, அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலக வளாகங்களில் ஏடிஸ் கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்களை  கண்டறிந்து அவற்றை அகற்றும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மருத்துவ அலுவலர் தலைமையிலான குழுவினர் மாணவ, மாணவிகளுக்கு இறை வணக்கத்தின் போது காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மற்றும் சுகாதார உறுதிமொழி எடுத்திடவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
கொசுப்புழு தடுப்புப் பணியாளர்கள், மேற்கொள்ளும் பணிகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதி மற்றும் இதர பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் நிலவேம்பு கசாயம், உப்புக்கரைசல் ஆகியவை வழங்கப்பட வேண்டும். அத்துடன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள் நோயாளிகளுக்கு சாப்பாட்டு கஞ்சி சேர்த்து வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.  அனைத்து வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கென்று சிறப்பு மருத்துவ சிகிச்சை மையம் 24 மணிநேரமும் இயங்கக்கூடிய வகையில் ஏற்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும்.    
நகராட்சிகள், பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளில் வாரம் ஒரு முறை சுத்தம் செய்து, குளோரின் கரைசல் தெளிக்கப்பட வேண்டும்.
மழைநீர் தேங்காமல் இருக்க வடிகால் வசதி ஏற்படுத்துதல் போன்ற பணிகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சே. தனசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கே. லோகேஷ்வரி மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் செல்வராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்  ப. ரெங்கராஜன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஹேமந்த்சந்த்காந்தி, கோட்டாட்சியர்கள் மோகனராஜன், டினாகுமாரி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் பழனிசாமி, அரியலூர் வட்டாட்சியர் சு. முத்துலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/05/டெங்கு-தடுப்பு-முன்னெச்சரிக்கை-நடவடிக்கை-ஆய்வுக்-கூட்டம்-2784769.html
2784767 திருச்சி அரியலூர் தா.பழூர் அருகே ஜல்லிக்கட்டு: காளை முட்டியதில் ஒருவர் காயம் DIN DIN Thursday, October 5, 2017 08:32 AM +0530 அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ளவானாநல்லூர் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் ஒருவர் காயமடைந்தார்.

 தா.பழூர் அருகே உள்ள வேனநல்லூர் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் அரியலூர், திருச்சி, பெரம்பலூர், சேலம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 500 காளைகள் பங்கேற்றன.
இவை அனைத்தும் வாடிவாசல் வழியாக ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. 150 மாடுபிடி வீரர்கள் இதில் கலந்து கொண்டு வாடிவாசலிலிருந்து சீறிப்பாய்ந்த காளைகளை பிடிக்க முயன்றனர். பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் தங்கம், வெள்ளிக் காசுகள், நாற்காலி, கட்டில், பீரோ உள்ளிட்ட பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன. இதில் மாடு முட்டியதில் கோட்டியால் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி (60) காயமடைந்தார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/05/தாபழூர்-அருகே-ஜல்லிக்கட்டு-காளை-முட்டியதில்-ஒருவர்-காயம்-2784767.html
2784765 திருச்சி அரியலூர் அரியலூரில் சுகாதார  தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் DIN DIN Thursday, October 5, 2017 08:32 AM +0530 அரியலூர் நகராட்சி அலுவலர்களைக் கண்டித்து அண்ணாசிலை அருகே ஏஐடியுசி சுகாதார தொழிலாளர் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், நகராட்சி அலுவலர்களின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்தும், புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அரசு விடுமுறை நாள்களில் சுகாதாரப் பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். அல்லது முழுநேரப்பணி கொடுத்து இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும். புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டையை விரைவில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்துக்கு ஏஐடியுசி மாநில துணைப் பொதுச் செயலர் டி. தண்டபாணி தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருமானூர் ஒன்றியச் செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/05/அரியலூரில்-சுகாதார--தொழிலாளர்கள்-ஆர்ப்பாட்டம்-2784765.html
2784763 திருச்சி அரியலூர் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி DIN DIN Thursday, October 5, 2017 08:32 AM +0530 அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே உள்ள மீன்சுருட்டியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
மீன்சுருட்டி காவல்துறை சார்பில் நடைபெற்ற  இந்த பேரணிக்கு ஜயங்கொண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளர் கென்னடி தலைமை வகித்து தொடக்கி வைத்தார். காவல் உதவி ஆய்வாளர்கள் முத்துகுமார், திவாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியின் போது தலைகவசம் அணியாமல் மோட்டார்சைக்கிள் ஓட்டகூடாது.  18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை மோட்டார்சைக்கிள் ஓட்ட பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது. மது அருந்திவிட்டு வகானம் ஓட்டக்கூடாது. மோட்டார் சைக்கிளில் மூன்று பேர் பயணம் செய்யக்கூடாது என்பவைகள்  உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. பேரணி ஜயங்கொண்டம் குறுக்குசாலையில் இருந்து புறப்பட்டு நெல்லிதோப்பு, மீன்சுருட்டி கடைவீதி வழியாக சென்று காவல் நிலையம் முன் நிறைவடைந்தது. இதில் போலீஸார் மற்றும் பொதுமக்கள் தலைகவசம் அணிந்து கலந்து கொண்டனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/05/சாலைப்-பாதுகாப்பு-விழிப்புணர்வு-பேரணி-2784763.html
2784059 திருச்சி அரியலூர் இலவச செட்டாப் பாக்ஸ்  செயலாக்க கட்டணம் ரூ. 200 DIN DIN Wednesday, October 4, 2017 08:41 AM +0530 தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 1.9.2017 அன்று தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சந்தாதாரர்களுக்கு விலையில்லா செட்டாப் பாக்ஸ்களை வழங்கி, சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள டிஜிட்டல் ஒளிபரப்பு சேவைக்கான M​P​E​G  4  தொழில்நுட்பத்தில் தரம் உயர்த்தப்பட்ட கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்து, டிஜிட்டல் ஒளிபரப்பு சேவையைத் தொடக்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து முதல்கட்டமாக, 32,000 செட்டாப் பாக்ஸ்கள் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக சந்தாதாரர்களுக்கு வழங்கப்பட்டு செயலாக்கம் செய்யப்பட்டு வருகின்றன.உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள், சந்தாதாரர்களுக்கு செட்டாப் பாக்ஸ்களை விலையில்லாமல் வழங்க வேண்டும். மேலும், விலையில்லா செட்டாப் பாக்ஸ்களை சந்தாதாரர்களின் இடத்தில் நிறுவி செயலாக்கம் செய்வதற்காக  ரூ. 200 ஒரு முறை மட்டும் பெற்றுக் கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
விலையில்லா செட்டாப் பாக்ஸ் என்பதால் நிறுவுதல் மற்றும் செயலாக்கம் செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட ரூ.200-க்கு மேல் சந்தாதாரர்கள் கூடுதலாக தொகை ஏதும் செலுத்த தேவையில்லை.
இதற்கு மேல் கூடுதல் தொகை வசூலிப்பது தொடர்பாக புகார் தெரிவிக்க வேண்டும் என்றால் இந்நிறுவனத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 2911-க்கு  தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் க. லட்சுமிபிரியா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/04/இலவச-செட்டாப்-பாக்ஸ்--செயலாக்க-கட்டணம்-ரூ-200-2784059.html
2784058 திருச்சி அரியலூர் தேசிய நெட்பால் போட்டி: மாணவர்களுக்கு பாராட்டு DIN DIN Wednesday, October 4, 2017 08:40 AM +0530 தேசிய அளவிலான நெட்பால் போட்டியில் பங்கேற்கத் தேர்வான பெரியார் மெட்ரிக் பள்ளி மாணவர்களை பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை பாராட்டினர்.  
 இந்திய பள்ளி கல்விக் குழுமம் சார்பில் 63- வது தேசியளவிலான நெட்பால் போட்டியில் தமிழக அணியில் பங்கேற்று விளையாட பெண்கள்அணிக்கான தேர்வு செப்.24-ல்  சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும்,  ஆண்கள்அணிக்கான  தேர்வு ஜயங்கொண்டம் செப். 26-ல் அன்னை தெரசா மெட்ரிக் பள்ளியிலும் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து  270 மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தமிழக அணி சார்பில் விளையாட ஜயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சி. ஆகாஷ், சே.ஜெகதீஷ் ஆகியோரும், 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஆண்கள் அணியில் இ. நேருஆகாஷும் , பெண்கள் பிரிவில் ப. பாக்ஷி,  பா.ஜெபிஷா ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களை பள்ளி முதல்வர் பவுல், பயிற்சியாளர்கள் பாராட்டினர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/04/தேசிய-நெட்பால்-போட்டி-மாணவர்களுக்கு-பாராட்டு-2784058.html
2784057 திருச்சி அரியலூர் ஓலையூர் பகுதிகளில் அக்டோபர் 5 மின்தடை DIN DIN Wednesday, October 4, 2017 08:40 AM +0530 ஓலையூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் ஓலையூர், பெரியாத்துகுறிச்சி, விழுதுடையான் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணி முடியும் வரை மின் விநியோகம் இருக்காது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக  ஆண்டிமடம் உதவி செயற்பொறியாளர் ஆர்.சாந்தி வெளியிட்டு செய்திக்குறிப்பில் இதைத் தெரிவித்தார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/04/ஓலையூர்-பகுதிகளில்-அக்டோபர்-5-மின்தடை-2784057.html
2784056 திருச்சி அரியலூர் பலாத்கார முயற்சி:இளைஞர் கைது DIN DIN Wednesday, October 4, 2017 08:39 AM +0530 அரியலூர் அருகே பெண்ணை பலாத்காரம்  செய்ய முயன்ற இளைஞர் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
 அரியலூர் மாவட்டம், காட்டுப்பிரிங்கியம் பகுதியைச் சேர்ந்தவர் வாலாம்பாள்(55),  திருமணம் ஆகாதவர். கடந்த செப். 29-ல் இவர் அதே பகுதியில் உள்ள தனது சகோதரி வீட்டுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் ராமலிங்கத்தான் ஏரி அருகே வந்தபோது அதே ஊரைச் சேர்ந்த மார்கோனி (30) அவரை பலாத்காரம் செய்ய முயன்றாராம். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வந்த கயர்லாபாத் போலீஸார்,செவ்வாய்க்கிழமை இரவு மார்கோனியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/04/பலாத்கார-முயற்சிஇளைஞர்-கைது-2784056.html
2784055 திருச்சி அரியலூர் அனுமதியின்றி மது விற்ற 10 பேர் கைது DIN DIN Wednesday, October 4, 2017 08:39 AM +0530 காந்தி ஜெயந்தியையொட்டி அரியலூர் மாவட்டத்திலுள்ள டாஸ்மாக் கடைகளுக்கு திங்கள்கிழமை விடுமுறையாகும். இந்நிலையில், அன்றிரவு போலீஸாரின் ரோந்து பணியின்போது,அனுமதியின்றி மது விற்றதாக ஏலாக்குறிச்சியில் சிவக்குமார்(30), இலந்தைக்கூடத்தில் ரெங்கராஜ்(40), புவனேஸ்வரி (30), அடைக்கலபுரம் கிராமத்தில் ரமேஷ் (29), ஆண்டிமடம் பகுதிகளில் கருப்பாயி, அலீமா உட்பட 10 பேரை போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து 400 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/04/அனுமதியின்றி-மது-விற்ற-10-பேர்-கைது-2784055.html
2784054 திருச்சி அரியலூர் மஞ்சமேடு ஜல்லிக்கட்டில் காயமடைந்தவர் சாவு DIN DIN Wednesday, October 4, 2017 08:39 AM +0530 அரியலூர் மாவட்டம் திருமானூரை அடுத்த மஞ்சமேடு கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை முட்டி  காயமடைந்தவர் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார்.
மஞ்சமேடு கிராமத்தில் கடந்த 1 ஆம் தேதி நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 12 பேர் காயமடைந்தனர்.
இவர்களில் பலத்த காயமடைந்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட காரைப்பாக்கத்தைச் சேர்ந்த அய்யாரப்பன்(47), சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார். இது குறித்து திருமானூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இறந்தவருக்கு மனைவி மான்விழி (38) , மகன் அருணாச்சலம் (18) ஆகியோர் உள்ளனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/04/மஞ்சமேடு-ஜல்லிக்கட்டில்-காயமடைந்தவர்-சாவு-2784054.html
2784053 திருச்சி அரியலூர் பள்ளி,கல்லூரிகளில் நாளை டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி DIN DIN Wednesday, October 4, 2017 08:38 AM +0530 வியாழக்கிழமையை (அக்.5) டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு தினமாக தமிழக அரசு அறிவித்ததையடுத்து,அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலக வளாகங்களில் காணப்படும் ஏடிஸ் கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்களை  கண்டறிந்து அவற்றை அகற்றும் பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவ அலுவலர் தலைமையிலான குழுவினர் மாணவ, மாணவியர்களுக்கு இறை வணக்கத்தின்போது காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மற்றும் சுகாதார உறுதிமொழி எடுத்திடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொசுப்புழு தடுப்புப் பணியாளர்கள், மேற்கொள்ளும் பணிகளுக்கு பொதுமக்கள் அனைவரும்  ஒத்துழைக்க வேண்டும்.
காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதி மற்றும் இதர பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் நிலவேம்பு கசாயம், உப்புக்கரைசல் ஆகியவை வழங்கப்படுகிறது. அத்துடன் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட உள் நோயாளிகளுக்கு சாப்பாட்டு கஞ்சி சேர்த்து வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காய்ச்சலால் பாதிக்கப்படும் நபர்கள் தன்னிச்சையாக எவ்வித மருத்துவமும் மேற்கொள்ளாமல் காய்ச்சல் கண்டவுடன் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் சென்று உரிய சிகிச்சைப் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் க. லட்சுமிபிரியா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/04/பள்ளிகல்லூரிகளில்-நாளை-டெங்கு-விழிப்புணர்வு-நிகழ்ச்சி-2784053.html
2784052 திருச்சி அரியலூர் அரியலூர் மாவட்டத்தில் 5,05,059 வாக்காளர்கள் DIN DIN Wednesday, October 4, 2017 08:38 AM +0530 அரியலூர் மாவட்டத்திலுள்ள அரியலூர்,ஜயங்கொண்டம் ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்காளர் வரைவுப் பட்டியலை மாவட்ட ஆட்சியர் க. லட்சுமிபிரியா செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.
அப்போது அவர் தெரிவித்தது:
 அரியலூர் மாவட்டத்தில் உள்ள 149 அரியலூர், 150 ஜயங்கொண்டம் ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிக்கான வரைவுப் வாக்காளர் பட்டியல் 1.9.2016 அன்று வெளியிட்டதின் அடிப்படையில், அரியலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 1,24,924 ஆண்களும், 1,25,160 பெண்களும், 5 இதரரும் என மொத்தம் 2,50,089 வாக்காளர்கள் உள்ளனர். 150 ஜயங்கொண்டம் சட்டப் பேரவைத் தொகுதியில் 1,26,412 ஆண்களும், 1,28,557 பெண்களும், 1 இதரர்களும் என மொத்தம் 2,54,970 வாக்காளர்கள் உள்ளனர்.  இம்மாவட்டத்தில் 2,51,336 ஆண்களும், 2,53,717 பெண்களும், 6 இதரர்களும் ஆக மொத்தம் 5,05,059 வாக்காளர்கள் உள்ளனர்.
3.10.2017 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டதைத் தொடர்ந்து சிறப்பு சுருக்க திருத்த காலமான 1.1.2018 அன்றைய தேதியின்படி 18 வயது நிரம்பியவர்கள் மற்றும் வாக்காளர் பட்டியல்களில் இதுவரை பெயர் இடம் பெறாதவர்கள் ஆகியோரிடமிருந்து விண்ணப்பங்கள் 3.10.2017 முதல் 31.10.2017 வரை அந்தந்த வாக்குசாவடி நிலை அலுவலர்களால் பெறப்படும். மேலும், 7.10.2017 மற்றும் 21.10.2017 ஆகிய இரு தினங்கள் கிராம சபை அந்தந்த ஊராட்சிகளில் நடைபெறும்.
8.10.2017 மற்றும் 22.10.2017 ஆகிய தினங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரால் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்களும் ஒருங்கிணைந்து வாக்காளர் பட்டியலிலுள்ள தவறுகள், விடுதல்கள் போன்றவற்றைக் கண்டறிந்து தெரிவிக்கலாம். எனவே, தகுதியான வாக்காளர்கள் அனைவரும் 3.10.2017 முதல் 31.10.2017 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்கலாம் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சே. தனசேகரன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ரெங்கராஜன், அரியலூர் வருவாய்க் கோட்டாட்சியர் மோகனராஜன், உடையார்பாளையம் வருவாய்க் கோட்டாட்சியர் டினாகுமாரி,தேர்தல் பிரிவு வட்டாட்சியர் ரவி, வருவாய் வட்டாட்சியர்கள் முத்துலெட்சுமி,திருமாறன் வேல்முருகன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/04/அரியலூர்-மாவட்டத்தில்-505059-வாக்காளர்கள்-2784052.html
2783525 திருச்சி அரியலூர் நல்லாசிரியர் விருது பெற்றவருக்கு பாராட்டு விழா DIN DIN Tuesday, October 3, 2017 08:49 AM +0530 நல்லாசிரியர் விருது பெற்ற அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியரும்,தொழிற்கல்வி ஆசிரியர் சங்க மாநில பிரசார செயலாளருமான துரை செல்வராசுக்கு பாராட்டு விழா அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட தொழிற்கல்வி ஆசிரியர்கள், ரெட்கிராஸ் பொறுப்பாளர்கள் சார்பில் அரியலூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
விழாவுக்கு அரியலூர் மாவட்டத் தலைவர் நா. கலையரசன் தலைமை வகித்துப் பேசினார். நிறுவனத் தலைவர் அ. நல்லப்பன், மாநிலத் தலைவர் முருகேசன்,  கொள்கை பரப்புச் செயலர் எம். வரதன், பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் மருதைராஜ், பாஸ்கர், கருணாநிதி ஆகியோர் பங்கேற்று நல்லாசிரியர் விருது பெற்ற துரை செல்வராஜை பாராட்டிப் பேசினர்.
முன்னதாக பெரம்பலூர் மாவட்ட செயலர் எம்.எஸ். ராஜேந்திரன் வரவேற்றார். அரியலூர் மாவட்டச் செயலர் செங்குட்டுவன் நன்றி கூறினார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/03/நல்லாசிரியர்-விருது-பெற்றவருக்கு-பாராட்டு-விழா-2783525.html
2783524 திருச்சி அரியலூர் மின் பாதையில் இடையூறாக உள்ள மரங்களை வெட்ட பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை DIN DIN Tuesday, October 3, 2017 08:49 AM +0530 அரியலூர் மாவட்டத்தில் மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறும் நாள்களில் மின் பாதைகளில் இடையூறாக உள்ள மரங்களை மின்சார வாரியப் பணியாளர்களை கொண்டு வெட்ட பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட செயற்பொறியாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
 இதுகுறித்து அரியலூர் மாவட்ட செயற்பொறியாளர் செல்வராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அரியலூர் கோட்டத்திற்குட்பட்ட துணை மின் நிலையங்களில் அக்டோபர் மாதத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
சாத்தமங்கலம் துணை மின் நிலையத்தில் அக். 3, ஓலையூர் துணை மின் நிலையத்தில் அக். 5,  ஜயங்கொண்டம், பாப்பாகுடி, ஆண்டிமடம், தா.பழூர் ஆகிய துணை மின் நிலையங்களில் அக. 7,  ஈச்சங்காடு துணை மின் நிலையத்தில் அக். 10,  கூத்தூர்  தேனூர், கீழ பெரம்பலூர் துணை மின் நிலையங்களில் அக். 13, செந்துறை, கீழப்பழூர், தேளூர், நடுவளூர் ஆகிய துணை மின் நிலையங்களில் அக். 19,  அரியலூர் துணை மின் நிலையத்தில் அக். 21 ஆம் தேதியும் மின்மாற்றி மற்றும் மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
 தற்போது பெய்து வரும் மழை மற்றும் காற்றினால் மரங்கள் மின் கம்பிகள் மீது விழுந்து விபத்து ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த  மின் பாதைகளில் உரசிக்கொண்டு உள்ள மரங்கள் குறித்து மின் பணியாளர்களுக்கு தகவலளித்து அதை அப்புறப்படுத்த வேண்டும். மேலும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளும் நாள்களில் தன்னிச்சையாக யாரும் மரங்களை வெட்ட முயற்சி செய்யக்கூடாது. மின் வழித்தடங்களுக்கு அருகே வீடு கட்டுபவர்கள் பராமரிப்பு நாள்களில் அலுவலகத்தில் தெரிவிக்காமல் கட்டுமானப் பணிக்கான சாரம் அமைத்தல், மின் கம்பிகளில் பிளாஸ்டிக் குழாய் செருகுதல் போன்ற பணிகளில் ஈடுபடக்கூடாது. மழை காலங்களில் மின் கம்பத்தின் அருகிலும், மின் இழுவை கம்பிகளுக்கு அருகிலும் செல்ல வேண்டாம்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/03/மின்-பாதையில்-இடையூறாக-உள்ள-மரங்களை-வெட்ட-பொதுமக்களின்-ஒத்துழைப்பு-தேவை-2783524.html
2783523 திருச்சி அரியலூர் காதி கிராப்டில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்கம் DIN DIN Tuesday, October 3, 2017 08:49 AM +0530 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரியலூர் கதர் மற்றும் கிராம பொருள்கள் அங்காடியில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை அரசு தலைமை கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன் திங்கள்கிழமை தொடக்கி வைத்தார்.
முன்னதாக அவர், அங்குள்ள மகாத்மாகாந்தி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் க. லட்சுமிபிரியா, ஜயங்கொண்டம் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம் ஆகியோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சிக்கு ஆட்சியர் தலைமை வகித்து தெரிவித்தாவது: ஒவ்வொரு கிராமமும், மக்களும் தங்களது தேவைகளை தாங்களே நிறைவு செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக பெண்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திட வேண்டும். சமூகத்தில் அவர்களுக்கு உரிய அந்தஸ்துடன் வாழ வழிவகுக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு அண்ணல் காந்தியடிகளால் ஏற்படுத்தப்பட்டதே காதி திட்டமாகும்.
இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் வகையில் கதர் வாரியத்தில் கதர், பாலிஸ்டர், பட்டு மற்றும் உல்லன் ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கிராம பொருள்களான சோப்பு தயாரித்தல், தேன் உற்பத்தி செய்தல், மெழுகுவர்த்தி செய்தல், ஜவ்வாது, அகர்பத்தி தயாரித்தல் ஆகியவைகள் கிராமப்புற மக்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் கதர் வாரியத்தில் நடைமுறைபடுத்தப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
அரியலூரில் புதிய மார்க்கெட் தெருவிலுள்ள காதி கிராப்டில் கடந்தாண்டு கதர் விற்பனை குறியீடாக ரூ. 20 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ரூ.12.77 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. நிகழாண்டு தீபாவளி விற்பனை குறியீடு ரூ. 20 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. கதர், பாலியஸ்டர் ரகங்களுக்கு 30 சதவீதமும், பட்டு 30 சதவீதமும் மற்றும் உல்லன் ரகங்களுக்கு 20 சதவீதமும் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
 நிகழ்ச்சியில் வட்டாட்சியர் முத்துலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பெரம்பலூரில்... பெரம்பலூரில் உள்ள காதிகிராப்ட் அங்காடியில் தீபாவளி சிறப்பு விற்பனை திங்கள்கிழமை தொடங்கியது. பெரம்பலூர் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் விற்பனை நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த காந்தியடிகளின் படத்தை திறந்துவைத்து மலர் தூவி மரியாதை செலுத்தி, தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா பேசுகையில், கதர் சிறப்பு விற்பனை மூலம் கடந்த ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ. 7.50 லட்சம் மதிப்பிலான கதர் ஆடைகள் விற்பனை செய்யப்பட்டது. நிகழாண்டு தீபாவளிக்கு ரூ. 20 லட்சம் மதிப்பிலான ஆடைகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக, பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா, மக்களவை உறுப்பினர்கள் மா. சந்திரகாசி (சிதம்பரம்), ஆர்.பி. மருதராஜா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் இரா. தமிழ்ச்செல்வன் (பெரம்பலூர்), ஆர்.டி. ராமச்சந்திரன் (குன்னம்) ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/03/காதி-கிராப்டில்-தீபாவளி-சிறப்பு-தள்ளுபடி-விற்பனை-தொடக்கம்-2783523.html
2783522 திருச்சி அரியலூர் தூய்மையே சேவை விழிப்புணர்வு பேரணி DIN DIN Tuesday, October 3, 2017 08:49 AM +0530 ஜயங்கொண்டம் நகராட்சி, அன்னைதெரசா நர்சிங் கல்லூரி மற்றும் ஜயங்கொண்டம் சோழன்சிட்டி அரிமா சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய தூய்மையே சேவை விழிப்புணர்வு பேரணி ஜயங்கொண்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
பேரணிக்கு அன்னை தெரசா கல்வி நிறுவனங்களின் தாளாளர் த. முத்துக்குமரன் தலைமை வகித்தார். பேரணியை நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் தொடக்கி வைத்தார்.  இதில் அன்னை தெரசா நர்சிங் கல்லூரி மாணவிகள் மற்றும் நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் பங்கேற்று திடக்கழிவு மேலாண்மை, மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தனித்தனியாக சேகரித்தல்,  டெங்கு விழிப்புணர்வு, தனிநபர் கழிப்பறை கட்டுதல் ஆகியவற்றை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
பேரணி அண்ணா சிலையில் இருந்து புறப்பட்டு கடைவீதி மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்று பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.  இறுதியில் ஜயங்கொண்டம் சோழன்சிட்டி லயன்ஸ் சங்கத் தலைவர் சி.பி.ராஜா நன்றி கூறினார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/03/தூய்மையே-சேவை-விழிப்புணர்வு-பேரணி-2783522.html
2783521 திருச்சி அரியலூர் "அமைச்சர்கள்,  மாவட்ட செயலாளர்கள் கூறும் கருத்துக்கள் கட்சிக்கு அப்பாற்பட்டது' DIN DIN Tuesday, October 3, 2017 08:48 AM +0530 ஜெயலலிதா உடல்நிலை குறித்து அமைச்சர்கள்,  மாவட்ட செயலாளர்கள் கூறும் கருத்துக்கள் கட்சிக்கு அப்பாற்பட்டது என்றார் எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ.குன்னம் ஆர்.டி.ராமச்சந்திரன்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள சிறுகளத்தூர் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
தினகரனையும், சசிகலாவையும் அதிமுகவினர் ஏற்று கொண்டால் ஆட்சியாளர்கள் நல்லவர்கள், இந்த ஆட்சி தொடரலாம். இல்லையென்றால் ஆட்சியை கலைக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறி வருகிறார். தினகரன், அதிமுகவில் இருந்து விலகி வெகு நாள்கள் ஆகிறது. ஜெயலலிதா தலைமையில் கட்சியை நடத்திய பொறுப்பாளர்கள் எல்லாம் டிடிவி தினகரனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால்  தினகரன் அவர்களை நீக்கி வருகிறார். சட்டம் ஒழுங்கும் கெடும் வகையில் யார் செயல்பட்டாலும் காவல் துறையும் அரசும் கண்டிப்பாக வழக்குப் பதிவு செய்யும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை குறித்து அமைச்சர்களோ, மாவட்ட செயலாளர்களோ கூறும் கருத்துக்கள் கட்சிக்கு அப்பாற்பட்டது என்றார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/03/அமைச்சர்கள்--மாவட்ட-செயலாளர்கள்-கூறும்-கருத்துக்கள்-கட்சிக்குஅப்பாற்பட்டது-2783521.html
2783520 திருச்சி அரியலூர் "தனிநபர் இல்ல கழிப்பறை கட்ட அனைவரும் முன்வர வேண்டும்' DIN DIN Tuesday, October 3, 2017 08:48 AM +0530 அரசு மானியத்தில் கட்டிக்கொடுக்கப்படும் தனி நபர் இல்ல கழிப்பறைகளை கட்டிப் பயன்படுத்த அனைவரும் முன்வர வேண்டும் என்றார் அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரியலூர் மாவட்டம், தவுத்தாய் குளம் ஊராட்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
மக்களைத் தேடி அரசு, மக்களுக்காக அரசு என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின்  கூற்றுப்படி அரசு அலுவலர்கள் மக்களைத்தேடி கலந்து பேசி அவர்களின் குறைகளை போக்க வேண்டும். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெறும் இந்த கிராம சபைக் கூட்டத்தில் மக்கள் தங்களது அடிப்படை வசதிகளை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.
மேலும், கிராமங்களில் அரசு மானியத்தில் கட்டிக்கொடுக்கப்படும் தனி நபர் இல்ல கழிப்பறைகளை அனைவரும் கட்டிக்கொண்டு, சுகாதாரத்தினை பேணிக்காக்க வேண்டும் என்றார் அவர்.
கூட்டத்துக்கு ஆட்சியர் க. லட்சுமிபிரியா தலைமை வகித்துப் பேசியது: பொது சுகாதாரத்துறையின் சார்பில் காய்ச்சல் தடுப்பு மருத்துவக் குழு இக்கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை பயன்படுத்திக்கொண்டு சிகிச்சை மற்றும் நிலவேம்பு குடிநீர் ஆகியவற்றை பெற்று காய்ச்சல் வராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அரியலூர் மாவட்டத்திலுள்ள இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. இதன் மூலம் படித்த இளைஞர்கள் தங்களின் கல்வி தகுதிக்கேற்ப வேலை வாய்ப்புகளை பெறலாம் என்றார் அவர்.
ஜயங்கொண்டம் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கூட்டத்தில், குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துதல், பருவ மழை முன்னெச்சரிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், சுகாதாரம், திறந்தவெளியில் மலம் கழித்தல் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/03/தனிநபர்-இல்ல-கழிப்பறை-கட்ட-அனைவரும்-முன்வர-வேண்டும்-2783520.html
2783519 திருச்சி அரியலூர் காந்தி சிலைக்கு கட்சியினர் மாலை அணிவிப்பு DIN DIN Tuesday, October 3, 2017 08:48 AM +0530 காந்தி ஜயந்தியை முன்னிட்டு, அரியலூர் மாவட்டத்திலுள்ள காந்தி சிலைக்கு அரசியல் கட்சியினர் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருமானூர் அருகேயுள்ள இலந்தை கூடத்திலுள்ள காந்தி சிலைக்கு இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வட்டார தலைவர் (மேற்கு) பாண்டியராஜன், துணைத் தலைவர் பூமி, மாவட்ட துணைத் தலைவர் சந்தானம், மாவட்டச் செயலர் செல்வக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் திமுக, தமிழ் மாநில காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதேபோல் காமராஜர் நினைவு தினத்தையொட்டி அரியலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள அவரது சிலைக்கு காங்கிரஸ், அதிமுக, திமுக, தேமுதிக, பாஜக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் மலரஞ்சலி செலுத்தினர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/oct/03/காந்தி-சிலைக்கு-கட்சியினர்-மாலை-அணிவிப்பு-2783519.html