Dinamani - கரூர் - http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2791741 திருச்சி கரூர் பள்ளபட்டியில் டெங்கு விழிப்புணர்வு  முகாம் DIN DIN Tuesday, October 17, 2017 07:22 AM +0530 பள்ளபட்டி  ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு முகாமில் 60 நபர்களுக்கு இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டு இலவச மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.  
கோவில் தெருவில் நடைபெற்ற இந்த முகாமில் காய்ச்சல், சளி இருமல்,  ரத்தப்  பரிசோதனை  உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் 60 பேருக்கு செய்யப்பட்டு, இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. முகாமில் டெங்கு பரவும் முறைகள், தடுப்பு முறைகள், சுகாதாராம் பேணுதல் குறித்து அறிவுறுத்தப்பட்டது.  முகாமை மாவட்ட சுகாதார துணை இயக்குநர் நளினி ஆய்வு செய்தார். மருத்துவர் உத்ரா, நோயாளிகளை பரிசோதனை செய்தார்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/17/பள்ளபட்டியில்-டெங்கு-விழிப்புணர்வு--முகாம்-2791741.html
2791740 திருச்சி கரூர் டெங்கு காய்ச்சல் எதிரொலி: பள்ளபட்டியில் தூய்மைப் பணி DIN DIN Tuesday, October 17, 2017 07:21 AM +0530 பள்ளபட்டியில் டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பேரூராட்சி நிர்வாகம் கடந்த ஒரு வார காலமாக தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் உயிரிழந்துள்ளனர். இதை தடுக்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பள்ளபட்டி பேரூராட்சி பகுதியில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.அப்பகுதியில் மொத்தம் 16 வார்டுகள் உள்ளன.இதில் ஒவ்வொரு வார்டுகளிலும் கட்டப்பட்ட சாக்கடையில் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரால் சாக்கடை  பல  இடங்களில் ஆக்கிரமிப்பால் அடைபட்டது.  இதை அகற்றும் விதமாக பேரூராட்சி ஊழியர்கள் கடந்த ஒருவாரமாக  சாக்கடைகளை சுத்தம் செய்து,  கொசு மருந்து தெளித்து வருகின்றனர்.
பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகளை ஞாயிற்றுக்கிழமை மாவட்ட பூச்சியியல் அலுவலர் மதியழகன், சுகாதாரத் துறை ஆய்வாளர் கருப்புசாமி ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி, சுகாதார ஆய்வாளர் குருசாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/17/டெங்கு-காய்ச்சல்-எதிரொலி-பள்ளபட்டியில்-தூய்மைப்-பணி-2791740.html
2791739 திருச்சி கரூர் விபத்தில்லா தீபாவளி  வெற்றி விநாயகா பள்ளி சார்பில் விழிப்புணர்வு பேரணி DIN DIN Tuesday, October 17, 2017 07:20 AM +0530 விபத்தில்லா தீபாவளி பண்டிகை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு பேரணி கரூர் வெற்றிவிநாயகா மெட்ரிக் பள்ளி சார்பில் திங்கள்கிழமை நடைபெற்றது.
 வாங்கலில் நடைபெற்ற இப்பேரணியை வாங்கல் கிராம நிர்வாக அலுவலர் ஆர்.மலையப்பசாமி மற்றும் வாங்கல் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.  பேரணிக்கு பள்ளித் தாளாளர் ஆர்த்தி ஆர். சாமிநாதன் முன்னிலை வகித்தார்.
இதில் பள்ளி ஆலோசகர் பி.பழனியப்பன், பள்ளி முதல்வர் டி.பிரகாசம் , துணை முதல்வர் பி.லிடியாஜெனீபர் மற்றும் மாணவ,  மாணவிகள் திரளாக பங்கேற்றனர். இதில் பட்டாசுளை எவ்வாறு பாதுகாப்பாக வெடிப்பது என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறுச் சென்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/17/விபத்தில்லா-தீபாவளி--வெற்றி-விநாயகா-பள்ளி-சார்பில்-விழிப்புணர்வு-பேரணி-2791739.html
2791738 திருச்சி கரூர் மர்மக் காய்ச்சல்: காய்கறி வியாபாரி உள்பட 2 பேர் சாவு DIN DIN Tuesday, October 17, 2017 07:20 AM +0530 கரூர் மாவட்டத்தில் மர்மக் காய்ச்சலுக்கு காய்கறி வியாபாரி உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
கரூர் ராமகிருஷ்ணபுரம் கிழக்கு பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மகன் சந்தோஷ்குமார்(24). இவர் கரூர் காமராஜர் சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் அவருக்கு கடந்த வாரம் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து கரூர் நகர காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல,  கரூர் அருகே உள்ள வேலாயுதம்பாளையம் கடம்பங்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ஜெகநாதன் மனைவி துளசிமணி(51).
இவருக்கு கடந்த புதன்கிழமை காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்  அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை காலை உயிரிழந்தார்.
இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/17/மர்மக்-காய்ச்சல்-காய்கறி-வியாபாரி-உள்பட-2-பேர்-சாவு-2791738.html
2791737 திருச்சி கரூர் ரூ.1.20 கோடி மதிப்பிலான திருட்டுப் பொருள்கள் மீட்பு: எஸ்.பி. தகவல் DIN DIN Tuesday, October 17, 2017 07:20 AM +0530 கரூர் மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை ரூ.1.20 கோடி மதிப்பிலான திருட்டுப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டிகே.இராஜசேகரன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது:
நிகழாண்டில் கரூர் மாவட்டத்தில் கொலை,  கொள்ளை,  வழிப்பறி,  திருட்டு போன்ற சம்பவங்கள் தொடர்பாக மொத்தம் 177 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 154 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு திருட்டுப்போன சொத்துக்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நிகழாண்டில்,  ரூ.1.52 கோடி மதிப்பிலான பொருள்கள் களவு போனது. இதில் ரூ.1.20 கோடி மதிப்பில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது.  திருட்டுப்போன வழக்கில் 349 தங்க நகைகளும்,  பணம் ரூ. 55,1635-ம்,  39 இருசக்கர வாகனங்களும் மீட்கப்பட்டுள்ளன.  
 மேலும்,  வாகன விபத்து தொடர்பாக மாவட்டத்தில் கடந்த ஆண்டு 869 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 282 பேர் இறந்துள்ளனர். 949 பேர் காயமடைந்துள்ளனர்.  நிகழாண்டில் 847 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 274 பேர் இறந்துள்ளனர். 972 பேர் காயமடைந்துள்ளனர். கடந்தாண்டு மோட்டார் வாகன விபத்து தொடர்பாக குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 3107 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.  மொத்தம் வாகன விதிமீறல் தொடர்பாக கடந்தாண்டு மட்டும் ரூ.1.57 கோடி மதிப்பில் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.  நிகழாண்டில் இதுவரை ரூ.1.88 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
  மேலும் கடந்தாண்டு குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் 12 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  நிகழாண்டில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
பேட்டியின்போது,  துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் கும்மராஜா(கரூர்), முத்துக்கருப்பன்(குளித்தலை) மற்றும் குற்றப்பிரிவு தனி ஆய்வாளர் அருள்மொழி அரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/17/ரூ120-கோடி-மதிப்பிலான-திருட்டுப்-பொருள்கள்-மீட்பு-எஸ்பி-தகவல்-2791737.html
2791736 திருச்சி கரூர் கரூரில் அக். 21-இல்  பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள்: ஆட்சியர் தகவல் DIN DIN Tuesday, October 17, 2017 07:19 AM +0530 கரூரில் வரும் 21-ம்தேதி மாவட்ட விளையாட்டரங்கில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாதாந்திர விளையாட்டுப்போட்டிகள் நடைபெற உள்ளதாக ஆட்சியர் கு. கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கரூர் மாவட்ட பிரிவின் சார்பில் பிளஸ்-2 வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தடகளம்,  வளைகோல்பந்து மற்றும் கால்பந்து போட்டிகள் மாவட்ட விளையாட்டரங்கில் வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது.
இதில் மாணவ, மாணவிகளுக்கு 100மீ.,  400மீ., 1500மீ., 3000 மீ., ஓட்டப் பந்தயங்களும்,  நீளம் தாண்டுதல், குண்டுஎறிதல்,  ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளது.
மேலும் குழுப்போட்டிகளும் நடைபெற உள்ளன. குழுப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாமிடம், தடகளத்தில் முதல் மூன்று இடங்கள் பெறுபவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்படும்.
எனவே,  மேற்காணும் போட்டிகளில் பங்கேற்க கரூர் மாவட்ட பள்ளிகளில் பயிலும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் போட்டிகள் நடைபெறும் நாளன்று காலை 8.30 மணிக்கு மாவட்ட விளையாட்டரங்கிற்கு வந்து பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.  
மேலும், விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம், மாலநாயக்கன்பட்டி கிராமம், நீதிமன்றம் பின்புறம், தாந்தோன்றிமலை என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/17/கரூரில்-அக்-21-இல்--பள்ளி-மாணவர்களுக்கு-விளையாட்டுப்-போட்டிகள்-ஆட்சியர்-தகவல்-2791736.html
2791735 திருச்சி கரூர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு DIN DIN Tuesday, October 17, 2017 07:19 AM +0530 கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை,  இலவச வீட்டுமனைப்பட்டா, கல்வி உதவித்தொகை,  புதிய குடும்ப அட்டை, குடிநீர் வசதி கேட்டல் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 275 மனுக்கள் பெறப்பட்டன.  மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பார்வையற்றோருக்கான 13 பயனாளிகளுக்கு நவீன ஊன்றுகோல், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 18 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை ஆட்சியர் வழங்கினார்.
 கூட்டத்தில்,  மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ்,  மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அலுவலர் பாலசுப்ரமணியன்,  சமூக பாதூகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் ஜான்சிராணி,  மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் சாந்தி,  மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/17/மக்கள்-குறைதீர்க்கும்-நாள்-கூட்டத்தில்-நலத்திட்ட-உதவிகள்-அளிப்பு-2791735.html
2790584 திருச்சி கரூர் அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: 10 இடங்களில் தடுப்பணை அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல் DIN DIN Sunday, October 15, 2017 02:51 AM +0530 அமராவதி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் நீரை சேமிக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சங்க காலத்தில் ஆம்பிராவதி என்றழைக்கப்பட்ட அமராவதி நதி கடந்த நான்கு வருடமாக தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டது.
இதனால் அமராவதி நதியின் பழைய ஆயக்கட்டுப்பாசனப் பகுதியான கரூர் மாவட்டத்தில் சுமார் 32,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி இன்றி விவசாயம் பொய்த்துப்போய் கால்நடைகளுக்கு கூட தீவனம் கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் தங்களது கால்நடைகளை அடிமாட்டுக்கு விற்கும் நிலை உருவானது.
தற்போது நிகழாண்டில் தென்மேற்குப் பருவமழை ஓரளவு கை கொடுத்திருந்த நிலையில் வடகிழக்குப் பருவமழையும் நல்ல தொடர்மழையுடன் பெய்யத்தொடங்கியுள்ளது. தமிழகத்தின் சில மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடும் அளவிற்கு நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் எப்போதும் வறண்டு காணப்படும் அமராவதி நதியில் கடந்த மாதம் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் சனிக்கிழமையும் ஆற்றில் திடீரென தண்ணீரின் வருகை அதிகரித்தது.
இதுதொடர்பாக அமராவதி வடிநில கோட்ட பொறியாளரிடம் கேட்டபோது, அமராவதி அணையில் இருந்து ஏற்கெனவே கடந்த 1-ஆம் தேதி குடிநீருக்காக 800 கனஅடி திறந்தோம்.
பின்னர் அணையில் நீரின் வரத்து குறைந்ததையடுத்து நிறுத்தினோம். தற்போது கடந்த 10-ஆம் தேதி முதல் மீண்டும் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஆற்றின் துணை நதிகளான நங்காஞ்சி மற்றும் குடகனாறுகளின் நீர்பிடிப்புப் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை முதல் இரவு வரை பெய்த பலத்த மழை காரணமாக அமராவதி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது என்றார்.
தடுப்பணை தேவை
கரூர் மாவட்ட நிலத்தடி நீர் மற்றும் சாயக்கழிவு நீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்க செயலாளர் ராமலிங்கம் கூறுகையில், அமராவதி ஆற்றில் தற்போது கரைபுரண்டு ஓடும் நீரை சேமிக்க ஆற்றின் பல இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும். அமராவதியை பொறுத்தவரை காவிரியைப் போன்று திருப்பூர் மாவட்டத்திடம் இருந்து கரூர் மாவட்ட விவசாயிகள் கையேந்தும் நிலை உள்ளது. வருண பகவான் கருணை காட்டும்போது கிடைக்கும் தண்ணீரையாவது சேமித்தால்தான் வரும்காலங்களில் கடந்த 4 வருடங்களில் விவசாயிகள் அனுபவித்த வேதனையை தடுக்கலாம். கடந்த 4-ஆம் தேதி கரூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் காவிரி ஆற்றில் புகழூர் பகுதியில் தடுப்பணை அமைக்கக் கோரினர். ஆனால் அடிக்கடி வறண்டு போகும் அமராவதி ஆற்றில் தண்ணீரை சேமிக்க யாரும் தடுப்பணை கேட்கவில்லை. இனியாவது விழித்துக்கொண்டு அமாரவதியில் கரூர் மாவட்டத்திற்குள் 10 இடங்களில் தடுப்பணை கட்டினால் மட்டுமே எதிர்கால வறட்சியை சமாளிக்க முடியும் என்றார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/15/அமராவதி-ஆற்றில்-வெள்ளப்பெருக்கு-10-இடங்களில்-தடுப்பணை-அமைக்க-விவசாயிகள்-வலியுறுத்தல்-2790584.html
2790583 திருச்சி கரூர் "கொசு ஒழிப்புப் பணிக்கு 200 பணியாளர்கள் நியமனம்' DIN DIN Sunday, October 15, 2017 02:51 AM +0530 கரூர் நகராட்சிப் பகுதியில் ஒரு கொசு ஒழிப்பு பணியாளர் நாளொன்றுக்கு 50 வீடுகளை ஆய்வு செய்யும் வகையில் 200 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விடுதியுடன் கூடிய பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் நிர்வாகிகளுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற டெங்கு தடுப்பு தொடர்பான ஆலோசனைக்கூட்டத்திற்கு தலைமை வகித்து அவர் மேலும் கூறியது: முதல்வரின் உத்தரவின்படி கரூர் மாவட்டத்தில் தீவிர டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி கரூர் நகராட்சியில் 200 பணியாளர்களும், பேரூராட்சி பகுதிகளில் 120 பணியாளர்களும், ஊராட்சிப் பகுதிகளில் ஒரு ஊராட்சிக்கு ஒரு பணியாளர் என்ற அடிப்படையில் கொசுப்புழு ஒழிக்கும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை கண்காணிக்க 5 வார்டுகளுக்கு ஒரு மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பணி மாவட்டம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் மாவட்டத்தில் உள்ள விடுதியுடன் கூடிய பள்ளிகள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் விடுதிகள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாகவும், தண்ணீர் தேங்காத வகையிலும் பார்த்துக்கொள்ள வேண்டும். உள்நோயாளிகள் சிகிச்சை பெறும் வசதியுள்ள மருத்துவமனை நிர்வாகங்கள் தங்களது மருத்துவமனையை சுத்தமாக வைத்துக் கொôள்ள வேண்டும். நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டதுடன் அனைவருக்கும் நில வேம்புகசாயம் வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு வழங்கும் குடிநீர் குளோரினேசம் செய்து வழங்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் பொதுமக்கள் காய்ச்சி வடிகட்டிய குடிநீரையே பருகவேண்டும். குடிநீர் வழங்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் 15 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்யப்படுகிறது. தற்போது 7 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தங்கள் வசிப்பிடங்களில் தண்ணீர், மழைநீர் போன்றவை தேங்காத வகையில் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி, மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் விஜயகுமார், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் நளினி மற்றும் நகராட்சி ஆணையர்கள் ப. அசோக்குமார், கமால்பாட்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/15/கொசு-ஒழிப்புப்-பணிக்கு-200-பணியாளர்கள்-நியமனம்-2790583.html
2790582 திருச்சி கரூர் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் வென்றவர்களுக்குப் பரிசு DIN DIN Sunday, October 15, 2017 02:50 AM +0530 கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியின் நிறைவு விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜ் வழங்கினார்.
கரூர் பரணிபார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாநில அளவிலான ஜவஹர்லால் நேரு அறிவியல், கணித, சுற்றுப்புறக் கண்காட்சி மற்றும் அறிவியல் பெருவிழா, கருத்தரங்கம் கடந்த 12-ஆம் தேதி தொடங்கியது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து 128 மாணவர்களின் படைப்புகளும், 32 ஆசிரியர்களின் படைப்புகளும் இடம்பெற்றிருந்தன. கண்காட்சியை மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 15,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். இக்கண்காட்சியின் நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜ் பேசுகையில், சுடர் விட்டு எரியும் விளக்காக இருந்தாலும் அதற்கும் ஒரு தூண்டுகோல் வேண்டும். அதனடிப்படையில் மாணவ, மாணவிகளின் திறனை வெளிப்படுத்தும் வகையில் இந்த அறிவியல் கண்காட்சி ஒரு வாய்ப்பாக அமைகிறது. மாற்றம்தான் வாழ்க்கையில் மாறாத ஒன்று. அதனடிப்படையில் அறிவியல் வளர்ச்சிக்கேற்ப மனிதன் தன் வாழ்க்கை முறையை மாற்றியமைத்து வருகிறான். அதற்கு உங்கள் படைப்புகள் உதவியாக இருக்க வேண்டும். மாணவ, மாணவிகள் தன்னம்பிக்கையுடன் தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பயத்தைக்கண்டு பயப்படக்கூடாது. தெளிவாக செயல்பட்டால்தான் நமக்குள் ஒரு தெளிவு பிறக்கும். அதன்மூலமே வெற்றி கிடைக்கும். பெற்றோர், ஆசிரியர்களை மதிக்கக் கற்றுகொள்ள வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் சாமிநாதன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டு, பள்ளியின் தாளாளர் எஸ். மோகனரெங்கன், முதன்மை முதல்வர் சொ. இராமசுப்ரமணியம், வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, பெங்களூர் விஸ்வேஸ்வரய்யா அருங்காட்சிய மாவட்டகல்வி அலுவலர் முத்துக்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/15/மாநில-அளவிலான-அறிவியல்-கண்காட்சியில்-வென்றவர்களுக்குப்-பரிசு-2790582.html
2790581 திருச்சி கரூர் காவிரியில் அனுமதியின்றி மணல் அள்ளியவர் கைது DIN DIN Sunday, October 15, 2017 02:50 AM +0530 காவிரி ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளியவரை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் காவல் நிலைய போலீஸார் வெள்ளிக்கிழமை வேலாயுதம்பாளையம்-நொய்யல் நெடுஞ்சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சாக்குமூட்டையில் மணல் ஏற்றி வந்த லாரியை மடக்கி சோதனை செய்தபோது, அனுமதியின்றி காவிரி ஆற்றில் மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் லாரி ஓட்டுநர் கரூர் மண்மங்கலத்தைச் சேர்ந்த ரவி (43) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்த லாரியையும் பறிமுதல் செய்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/15/காவிரியில்-அனுமதியின்றி-மணல்-அள்ளியவர்-கைது-2790581.html
2790580 திருச்சி கரூர் அமைச்சுப் பணியாளர் பணியிடங்களை ஆசிரியர்கள் எண்ணிக்கை அடிப்படையில் உருவாக்க வலியுறுத்தல் DIN DIN Sunday, October 15, 2017 02:50 AM +0530 ஆசிரியர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் புதிய அமைச்சுப் பணியாளர்கள் பணியிடம் உருவாக்கப்பட வேண்டும் என கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்க 4-ஆவது மாநில மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் 4-ஆவது மாநில மாநாட்டிற்கு மாநிலத் தலைவர் பிஎஸ். அப்பர் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் மு. சுப்ரமணியன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் மு. மகாவிஷ்ணன் வரவேற்றார். மாநாட்டில் தலைமைச் செயலக சங்கச் செயலாளர் கு. வெங்கடேசன் துவக்கவுரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் அ.சேகர் அறிக்கையையும், பொருளாளர் நா.வினோத்குமார் நிதிநிலை அறிக்கையையும் வாசித்தனர்.
மாநாட்டில் 7-வது ஊதியக்குழுவில் பரிந்துரைக்கப்பட்ட 21 மாத நிலுவை ஊதியத்தை உடனே வழங்கிட வேண்டும். கல்வித்துறையில் சிறப்பு கால முறை ஊதியத்தில் அனுமதிக்கப்பட்ட 3,000 துப்புரவு தொழிலாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். நேரடி உதவியாளர் நியமனம் கல்வித்துறையில் ஏற்படுத்தக்கூடாது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் இயக்குநர், முதன்மைக்கல்வி, மாவட்ட கல்வி, தொடக்க கல்வி, உதவி தொடக்ககல்வி அலுவலகங்களில் ஆசிரியர்கள் எண்ணிக்கை அடிப்படையில் புதிய அமைச்சுப்பணியாளர் பணியிடங்களை உருவாக்கிட வேண்டும். மேலும் மேற்கண்ட அலுவலகங்களுக்கு அமைச்சுப் பணியாளர்களில் இருந்து பதவி உயர்வு மூலம் நேர்முக உதவியாளர் (நிர்வாகம்) என்ற புதிய பணியிடத்தை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்டச் செயலாளர் கோ. லட்சுமணன் நன்றி கூறினார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/15/அமைச்சுப்-பணியாளர்-பணியிடங்களை-ஆசிரியர்கள்-எண்ணிக்கை-அடிப்படையில்-உருவாக்க-வலியுறுத்தல்-2790580.html
2790579 திருச்சி கரூர் கரூரில் தவ்ஹீத்ஜமாத், கொமதேக சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் DIN DIN Sunday, October 15, 2017 02:49 AM +0530 கரூரில் தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் கொமதேக சார்பில் பொதுமக்களுக்கு சனிக்கிழமை நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
கரூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை ஒழிக்கும் வகையில் நிலவேம்பு கசாயம் பல்வேறு அமைப்பினர் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. சனிக்கிழமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டத் தலைவர் மதார்ஷாபாபு தலைமையில் கரூர் பேருந்துநிலையத்தில் உள்ள பயணிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் செயலாளர் இர்ஷாத், மருத்துவ அணி செயலாளர் ஜாகிர் உசேன், மாவட்ட பொருளாளர் ஷானாவஸ், துணைத் தலைவர் ரமலான், துணைச் செயலாளர் காதர்பாஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோல கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் கரூர் பேருந்துநிலையம் ரவுண்டானா அருகே பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் மூர்த்தி தலைமை வகித்தார். இதில் மாநில வர்த்தக அணிச் செயலாளர் விசா ம. சண்முகம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். இதில் மண்டல விவசாய அணிச் செயலாளர் கே.எஸ். பொன்னுசாமி, மாணவரணி விக்னேஷ், பொருளாளர் தங்கவேல், தலைமை நிலையச் செயலாளர் தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/15/கரூரில்-தவ்ஹீத்ஜமாத்-கொமதேக-சார்பில்-பொதுமக்களுக்கு-நிலவேம்பு-கசாயம்-2790579.html
2790577 திருச்சி கரூர் தென்னிலையில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி DIN DIN Sunday, October 15, 2017 02:49 AM +0530 அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட தென்னிலையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
பேரணியை அரவக்குறிச்சி வட்டாட்சியர் சந்திரசேகர் தொடக்கி வைத்தார். அருள் முருகன் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் தொடங்கிய பேரணி தென்னிலை பேருந்து நிறுத்தம் வ ரை வந்து மீண்டும் கல்லூரி வளாகத்தில் நிறைவடைந்தது. அப்போது கல்லூரி மாணவர் வாக்காளர் சேர்க்கை தொடர்பான பதாகைகளை கையில் ஏந்திச் சென்றனர்.
பின்னர் வட்டாட்சியர் கூறுகையில், 18 வயது பூர்த்தி அடைந்த இளைஞர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்க்க வேண்டும்.
வாக்காளர்கள் பெயர் சேர்க்க வரும் 8 ஆம் தேதி மற்றும் 22 ஆம் தேதி சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச் சாவடியில் நடை பெறும் முகாமில் விண்ணப்பிக்கலாம். மற்ற நாள்களில் வருவாய் கோட்ட அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகங்களில் படிவம் 6, 7, 8, ஆகிய படிவங்களை பூர்த்தி செய்து கொடுக்கலாம் என்றார்.
மண்டலத் துணை வட்டாட்சியர் செந்தில், தாளாளர் கந்தசாமி, தலைவர் துரைசாமி, இயக்குநர் ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/15/தென்னிலையில்-வாக்காளர்-விழிப்புணர்வுப்-பேரணி-2790577.html
2790576 திருச்சி கரூர் புரட்டாசி கடைசி சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு DIN DIN Sunday, October 15, 2017 02:49 AM +0530 புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு கரூர் தாந்தோன்றிமலை மற்றும் கோம்புபாளையம் பெருமாள் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
தென்னகத் திருப்பதி என்றழைக்கப்படும் கரூர் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கட ரமண சுவாமி கோயில் புரட்டாசி தேர்த் திருவிழா கடந்த மாதம் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 29-ஆம் தேதி திருக்கல்யாண உற்சவம், அக்.1-ஆம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெற்றது. தொடர்ந்து கல்யாண வெங்கட ரமண சுவாமி மற்றும் பூதேவி, ஸ்ரீதேவிக்கும் சிறப்பு வழிபாடுகள், வெங்கடரமண சுவாமி நாள்தோறும் கருட வாகனம், ஹனுமந்த வாகனம், முத்துப்பல்லக்கில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து புரட்டாசி மாதத்தின் கடைசி மற்றும் நான்காவது சனிக்கிழமையை முன்னிட்டு அக். 14 ஆம் தேதி சுவாமிக்கு அதிகாலையே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல கரூர்மாவட்டம் கோம்புபாளையத்தில் உள்ள சீனிவாச பெருமாள் கோயிலிலும் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று புனித நீராடி எடுத்து வந்த தீர்த்தக்குடங்களுடன் பூமிதேவி, நீலாதேவி மற்றும் சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/15/புரட்டாசி-கடைசி-சனிக்கிழமை-பெருமாள்-கோயில்களில்-சிறப்பு-வழிபாடு-2790576.html
2789264 திருச்சி கரூர் க.பரமத்தி பெட்ரோல் பங்கில் மின் கசிவு DIN DIN Friday, October 13, 2017 03:22 AM +0530 க. பரமத்தி அருகே உள்ள பெட்ரோல் பங்கில் வியாழக்கிழமை இரவு திடீரென மின் கசிவு ஏற்பட்டதால் மின் ஒயரில் தீ பிடித்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
க. பரமத்தி அருகே உள்ள பெட்ரோல் பங்கில் வியாழக்கிழ மை இரவு 7 மணிக்கு  திடீரென மின் கசிவு ஏற்பட்டு வயரில் தீப்பிடித்தது. இதனால் பங்க் ஊழியர்கள்  உடனடியாக மின் இணைப்பைத் துண்டித்து, க. பரமத்தி காவல் நிலையத்துக்கும்,கரூர் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் அளித்தனர். இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் யாரும் உள்ளே நுழையாதபடி பாதுகாப்பு அளித்தனர். தீயணைப்பு வீரர்கள் பெட்ரோல் பங்கு முழுவதும் தண்ணீர் அடித்துச் சென்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/13/கபரமத்தி-பெட்ரோல்-பங்கில்-மின்-கசிவு-2789264.html
2789263 திருச்சி கரூர் கோம்புபாளையம் ஊராட்சியில்  சிறப்பு கிராமசபைக் கூட்டம் DIN DIN Friday, October 13, 2017 03:22 AM +0530 கோம்புபாளையம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
 மண்டலத் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார் தலைமை வகித்தார். இதில் 2017-18-ம் ஆண்டுக்கான 2-ம் கட்ட விலையில்லா வெள்ளாடுகள் வழங்குவதற்காக 34 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் கூட்டுறவு வங்கித்தலைவர் ரங்கநாதன்,  முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ்,  கால்நடை மருந்தக உதவியாளர் மாலதி மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் திரளாக பங்கேற்றனர்.  ஊராட்சி செயலர் அனிதா வரவேற்றார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/13/கோம்புபாளையம்-ஊராட்சியில்--சிறப்பு-கிராமசபைக்-கூட்டம்-2789263.html
2789262 திருச்சி கரூர் வேலாயுதம்பாளையத்தில் டெங்கு விழிப்புணர்வு பேரணி DIN DIN Friday, October 13, 2017 03:21 AM +0530 வேலாயுதம்பாளையத்தில் டெங்கு விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
புன்செய்புகழூர் பேரூராட்சி சார்பில் வேலாயுதம்பாளையம் ரவுன்டானா அருகே நடைபெற்ற பேரணியை பேரூராட்சி செயல் அலுவலர் கிருஷ்ணசாமி கொடியசைத்து  தொடக்கிவைத்தார். பேரணியில் புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் திரளாகப் பங்கேற்று, டெங்கு காய்ச்சல் பரவும் முறை, அதைத் தடுக்கும் முறை குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கிச் சென்றனர். பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் ரவுண்டானா பகுதியை அடைந்தது.
ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அனிதா, சுகாதார ஆய்வாளர் கார்த்தீஸ், பேரூராட்சி பணியாளர்கள், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், சுகாதாரத் துறையினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/13/வேலாயுதம்பாளையத்தில்-டெங்கு-விழிப்புணர்வு-பேரணி-2789262.html
2789261 திருச்சி கரூர் ரேஷன் கடை பூட்டை உடைத்து  6 மூட்டை சர்க்கரை திருட்டு DIN DIN Friday, October 13, 2017 03:21 AM +0530 கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே ரேஷன் கடை பூட்டை உடைத்து 6 சர்க்கரை மூட்டைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
அரவக்குறிச்சி அருகேயுள்ள தெத்துப்பட்டியில் உள்ள ரேஷன் கடையை கடந்த 3-ம் தேதி விற்பனையாளர் அன்புமணி (54)  பூட்டிச் சென்றார். பின்னர் கடந்த 7-ம் தேதி திறக்கச் சென்றபோது  பூட்டு உடைக்கப்பட்டு கடையினுள் இருந்த தலா 50 கிலோ எடைகொண்ட 6 சர்க்கரை மூட்டைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.  இதன் மதிப்பு ரூ.4,050 .  இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸில் விற்பனையாளர் அன்புமணி புதன்கிழமை அளித்த புகாரின்பேரில் போலீஸார் விசாரிக்கின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/13/ரேஷன்-கடை-பூட்டை-உடைத்து--6-மூட்டை-சர்க்கரை-திருட்டு-2789261.html
2789259 திருச்சி கரூர் கரூர் வந்த தமிழுக்கு முதன்மை பரப்புரை பயணக் குழு: தமிழார்வலர்கள் வரவேற்பு DIN DIN Friday, October 13, 2017 03:21 AM +0530 கரூருக்கு வியாழக்கிழமை வந்த தமிழறிஞர் வா.மு. சேதுராமனின் தலைமையிலான தமிழுக்கு முதன்மை பரப்புரை பயணக் குழுவுக்கு தமிழ் ஆர்வலர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழுக்கு முதலிடம் கொடுத்து கடைகளில் பெயர்ப் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும், குழந்தைகளுக்கு நல்ல தமிழ் பெயர் வையுங்கள், வீட்டில் பேச்சு, எழுத்து மொழியாக தமிழைப் பயன்படுத்துங்கள்,  நல்ல தமிழில் உறவுகளை முறை கூறி அழையுங்கள்,  திருக்குறள் உள்ளிட்ட  நல்ல தமிழ் நீதிநூல்களை வாங்கி வீட்டில் சேமிக்கும் முறையை கற்றுக்கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கருத்துகளை வலியுறுத்தி
தமிழறிஞர் வா.மு. சேதுராமன் கடந்த சில தினங்களுக்கு முன் கன்னியாகுமரியில் தனது பயணத்தை தனது குழுவினருடன்  தொடங்கினார்.
இக்குழு பெங்களூர், ஹைதராபாத், நாக்பூர், மத்தியபிரதேசம், அலகாபாத் வழியாகச் சென்று புதுதில்லியை வரும் 22-ம் தேதி  அடைகிறது.  இதையடுத்து பெங்களூர் செல்லும் வழியில் வியாழக்கிழமை இரவு கரூர் வந்த அக்குழுவினருக்கு கரூர் திருக்குறள் பேரவை நிறுவனர் மேலை. பழனியப்பன் தலைமையில் தமிழறிஞர்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன் உள்ள சங்க காலப்புலவர்கள் நினைவுத்தூண் அருகே உற்சாக வரவேற்பளித்தனர். அங்கு தமிழறிஞர் வா.மு. சேதுராமன் சிறப்புரையாற்றினார்.
பின்னர் நினைவுத் தூணில் இருந்து தலைமை தபால் நிலையம் வரை தமிழுக்கு முதலிடம் கொடுக்குமாறு ஜவஹர் பஜார் கடைவீதிகளில் பிரசார பயணம் மேற்கொண்டனர்.  நிகழ்ச்சியில் தமிழறிஞர்கள் நன்செய்புகழூர் அழகரசன், தென்னிலை கோவிந்தன், முனைவர் கடவூர் மணிமாறன், தமிழன் குமாரசாமி ஏசுதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/13/கரூர்-வந்த-தமிழுக்கு-முதன்மை-பரப்புரை-பயணக்-குழு-தமிழார்வலர்கள்-வரவேற்பு-2789259.html
2789258 திருச்சி கரூர் பள்ளபட்டியில் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் DIN DIN Friday, October 13, 2017 03:20 AM +0530 பள்ளபட்டியில் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மையினர் பிரிவு ஆலோசனைக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சிறுபான்மைப் பிரிவு மாநிலத் தலைவர் ஜெ. அஸ்லம் பாஷா தலைமை வகித்தார்.  முன்னாள் மாவட்டத் தலைவர் பேங்க் சுப்ரமணியம், ஓதுகூடம் பீர்முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   கரூர் மாவட்ட சிறுபான்மை பிரிவு பொறுப்பாளர் டோனி அறிமுக உரையாற்றினார்.  மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சின்னசாமி,  மாநிலச் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி, தாராபுரம் முருகானந்தம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட, நகர, வட்டார நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கரூர் மாவட்ட சிறுபான்மைப் பிரிவு தலைவர் அன்னம்பாரிஜக்காரியா வரவேற்றார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/13/பள்ளபட்டியில்-காங்கிரஸ்-ஆலோசனைக்-கூட்டம்-2789258.html
2789256 திருச்சி கரூர் தொடரும் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி DIN DIN Friday, October 13, 2017 03:20 AM +0530 கரூரில் மாவட்டத்தில் இரவு நேரங்களில் அடிக்கடி மழை பெய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வியாழக்கிழமை இரவு மிதமான மழை பெய்தது. இதனால் மழைநீர் வெள்ளம்போல சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை ஆங்காங்கே பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்திலும் பெரும்பாலும் இரவு நேரங்களில் ஓரளவு மழை பெய்து வருகிறது.  புதன்கிழமை இரவும் மழை பெய்தது. புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை அதிகாலை வரை பெய்த மழை அளவு (மி.மீட்டரில்): கரூர்-3.4,  அரவக்குறிச்சி-10, அணைப்பாளையம்-5, க.பரமத்தி-5.2,  குளித்தலை-7, தோகைமலை-20, கிருஷ்ணராயபுரம்-7.8, மாயனூர்-10, பஞ்சப்பட்டி-19.2, கடவூர்-24.6, பாலவிடுதி-18.4, மைலம்பட்டி-12.4 என மொத்தம் 143 மி.மீ. மழை பெய்துள்ளது.
 இதுதொடர்பாக கரூர் மாவட்ட சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்கச் செயலர் ராமலிங்கம் கூறுகையில்,  மாவட்டத்தில் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் அமராவதி அணை உள்ளிட்ட  அணைகள் நிரம்பி வருகின்றன.  
இதனால் விவசாயம் நிகழாண்டு ஓரளவு நடைபெறும் என எதிர்பார்க்கிறோம். கடந்தாண்டை விட இந்தாண்டு விவசாயிகள் மகிழ்ச்சியாகத்தான் உள்ளனர்.
மேலும் கரூர் மாவட்டத்தில் உள்ள தடுப்பணைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் நீர்மட்டமும் ஓரளவு உயர்ந்துள்ளது.
மானாவாரி விவசாயிகள் நிலக்கடலை, சோளம் போன்றவற்றை விதைக்கத் தொடங்கியுள்ளனர். இருப்பினும் தொடர்ந்து பலத்த மழை பெய்தால் மட்டுமே அனைத்து நீர்நிலைகளும் நிரம்பும்.  இதற்கு வருண பகவான்தான் கருணை காட்ட வேண்டும் என்றார் அவர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/13/தொடரும்-மழை-விவசாயிகள்-மகிழ்ச்சி-2789256.html
2788791 திருச்சி கரூர் விவசாயிகள் பிரச்னையைப் புரிந்த நடிகர்கள் அரசியலுக்கு வரலாம்: கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி DIN DIN Thursday, October 12, 2017 07:24 AM +0530 விவசாயப் பிரச்னைகளைத் தீர்க்கும் நடிகர்கள் அரசியலுக்கு வரலாம் என்றார் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி.
கரூரில் புதன்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ஆளுமை, திறமை மற்றும் விவசாயப் பிரச்னைகளைப் புரிந்து கொண்ட நடிகர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். காவிரியில் தண்ணீர்ப் பங்கீடு கொள்கையை மத்திய அரசு கொண்டு வரவேண்டும். கர்நாடக அணைகளில் தண்ணீரை தேக்கி வைக்க அவர்களுக்கு உரிமை இல்லை.  நீரா பானத்தை நடைமுறைக்கு கொண்டு வருவோம் என  முதல்வர் அறிவித்து 6 மாதங்களாகியும் செயல்படுத்தவில்லை.
ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் நிலத்தடி  நீரை எடுக்கத் தடை உள்ளது. ஆனால் நம் நாட்டில் 1,500 அடிக்கும் கீழ்  நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது. எனவே  நிலத்தடி நீரை உறிஞ்சுவதற்கு தடை விதிக்க வேண்டும்.  காவிரி, தென் பெண்ணை, பாலாறு உள்ளிட்ட நதிகளை இணைக்க வேண்டும். ஆனால் நதிகளின் குறுக்கே அணைகள் கட்டக்கூடாது.  மேற்குதொடர்ச்சி மலைகளில் உருவாகி மேற்கே அரபிக்கடலில் சென்று வீணாகக் கலக்கும் நதிகளை கிழக்கு நோக்கி திருப்பிவிட மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பேட்டியின்போது கள் இயக்க கரூர் மாவட்ட அமைப்பாளர் தமிழ்சேது, விவசாயிகள் நல சங்க அமைப்பாளர் பிகே.முத்துசாமி, கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்க செயலாளர் ஜீவரத்தினம் ஆகியோர் உடனிருந்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/12/விவசாயிகள்-பிரச்னையைப்-புரிந்த-நடிகர்கள்-அரசியலுக்கு-வரலாம்-கள்-இயக்க-ஒருங்கிணைப்பாளர்-செநல்லசாமி-2788791.html
2788775 திருச்சி கரூர் இறந்த பெண் காவலரின் வாரிசுதாரருக்கு உதவித்தொகை DIN DIN Thursday, October 12, 2017 07:19 AM +0530 இறந்த பெண் காவலரின் வாரிசுக்கு உதவித்தொகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டிகே.இராஜசேகரன் புதன்கிழமை வழங்கினார்.
கரூர் மாவட்டம் குளித்தலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பணியாற்றிய முதல்நிலை காவலர் விஜயசாந்தி கடந்த ஜூலை 9 ஆம் தேதி நோய்வாய்ப்பட்டு இறந்தார்.
இதையடுத்து அவரது குழந்தைகள் தேவ தர்ஷன் (4), தேன் மொழி (1) ஆகியோருக்கு கரூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவல் அலுவலர்கள் தன்னார்வத்துடன் வழங்கிய உதவித்தொகை ரூ.1.30 லட்சத்தை விஜயசாந்தியின் தந்தை பிரபாகரனிடம் புதன்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டிகே. ராஜசேகரன் வழங்கினார். நிகழ்ச்சியின்போது மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் அருள்மொழிஅரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/12/இறந்த-பெண்-காவலரின்-வாரிசுதாரருக்கு-உதவித்தொகை-2788775.html
2788774 திருச்சி கரூர் மாடியில் இருந்து தவறி விழுந்த கொத்தனார் சாவு DIN DIN Thursday, October 12, 2017 07:19 AM +0530 கரூரில் மாடியில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த  கொத்தனார் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை  உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம்,  அரவக்குறிச்சி கஸ்பா தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன்(34). கொத்தனார். இவர் கரூர் வெங்கமேட்டில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் கூடுதல் கட்டுமான பணியில் கடந்த 6-ஆம் தேதி ஈடுபட்டிருந்தார். அப்போது,  4-வது மாடியில் டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டபோது திடீரென தவறி விழுந்தார்.
இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இறந்தார். இதுகுறித்து வெங்கமேடு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/12/மாடியில்-இருந்து-தவறி-விழுந்த-கொத்தனார்-சாவு-2788774.html
2788773 திருச்சி கரூர் தீயணைப்பு நிலையத்துக்கு சொந்தக் கட்டடம் கட்டித்தர வலியுறுத்தல் DIN DIN Thursday, October 12, 2017 07:19 AM +0530 அரவக்குறிச்சி தீயணைப்பு நிலையம் கடந்த 20 ஆண்டுகளாக வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. சுமார் 15 -க்கும் மேற்பட்ட காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தவும், கருவிகள் வைப்பதற்கும் போதிய இடவசதியின்றி உள்ளது. எனவே தீயணைப்பு வீரர்கள் நலன் கருதி அரவக்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்கு சொந்தக் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/12/தீயணைப்பு-நிலையத்துக்கு-சொந்தக்-கட்டடம்-கட்டித்தர-வலியுறுத்தல்-2788773.html
2788772 திருச்சி கரூர் பல்கலை. தேர்வில் வள்ளுவர் கல்லூரி மாணவிகள் சிறப்பிடம் DIN DIN Thursday, October 12, 2017 07:18 AM +0530 பாரதிதாசன் பல்கலை. அளவில் முதுகலை வணிகவியல் படிப்பு தேர்வில் கரூர் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி மாணவிகள் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளனர்.
பாரதிதாசன் பல்கலை.  2017 ஆம் ஆண்டுக்கான முதுகலை வணிகவியல் பட்டப்படிப்பு தேர்வில் கரூர் வள்ளுவர்அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் சரண்யா, நித்யா, கோகிலா ஆகியோர் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளனர். மேலும்  முதுகலை மேலாண்மை பட்டப்படிப்பு பயின்ற மாணவிகள் லீமா,  சுபப்பிரியா ஆகியோர் பல்கலை. அளவில் 2 ஆம் மற்றும் 3 ஆம் இடம் பிடித்தனர். மாணவிகளை கல்லூரியின் தாளாளர் க.செங்குட்டுவன், முதல்வர் டி.சாலைபற்குணன் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள் பாராட்டினர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/12/பல்கலை-தேர்வில்-வள்ளுவர்-கல்லூரி-மாணவிகள்-சிறப்பிடம்-2788772.html
2788771 திருச்சி கரூர் மாவட்ட சதுரங்கப் போட்டியில் அரசுப் பள்ளி மாணவர் சிறப்பிடம் DIN DIN Thursday, October 12, 2017 07:18 AM +0530 கரூரில் அண்மையில் (அக். 9) நடைபெற்ற மாவட்ட சதுரங்கப் போட்டியில் கார்வழி தொடக்கப்பள்ளி மாணவர் மோகன்குமார் சிறப்பிடம் பிடித்தார்.
கரூர் ஆனந்த சதுரங்க அகாதெமி சார்பில் கடந்த 9 ஆம் தேதி கரூரில் நடைபெற்றது. இதில், 6 முதல் 17 வயது வரையிலான பள்ளி மாணவர்கள் அவரவர் வயது மற்றும் பிரிவுகளில் தனித்தனி போட்டிகளில் கலந்து கொண்டனர். இதில், கார்வழி தொடக்கப்பள்ளி மாணவன் மோகன்குமார், அவர் பங்கேற்ற போட்டியில் வெற்றி பெற்றார். தொடர்ந்து சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டது. இதையடுத்து பள்ளியில் புதன்கிழமை மாணவர் மோகன்குமாரை பள்ளித் தலைமை ஆசிரியர் வாசுதேவன், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/12/மாவட்ட-சதுரங்கப்-போட்டியில்-அரசுப்-பள்ளி-மாணவர்-சிறப்பிடம்-2788771.html
2788770 திருச்சி கரூர் வி.சி. கட்சியினர் ஆர்ப்பாட்டம் DIN DIN Thursday, October 12, 2017 07:18 AM +0530 டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி கரூரில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் பெ.ஜெயராமன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் சதீஷ்குமார், செய்தித்தொடர்பாளர் இளங்கோவன், கரூர் சட்டமன்ற தொகுதிச் செயலாளர் செல்வப்பெருந்தகை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நெறியாளர் நாவரசு,  மாநிலதுணைச் செயலாளர் பகலவன், மாநில செயற்குழு உறுப்பினர் அகரமுத்து ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில், கரூர் நகரச் செயலாளர் முரளி, தாந்தோணி நகரச் செயலாளர் சக்திவேல், இனாம்கரூர் நகரச் செயலாளர் அருள், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ராஜா, துணை அமைப்பாளர் சந்திரசேகர், மாணவரணி அமைப்பாளர் தீபக்குமார் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டில் டெங்கு சிகிச்சை சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/12/விசி-கட்சியினர்-ஆர்ப்பாட்டம்-2788770.html
2788769 திருச்சி கரூர் மாநில தடகளம்: வெண்ணைமலை சேரன் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் DIN DIN Thursday, October 12, 2017 07:17 AM +0530 மாநில அளவிலான தடகளப் போட்டியில் கரூர் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனர்.
 பள்ளி கல்வித்துறை சார்பில் 2017-18 ஆம்  கல்வி ஆண்டுக்கான மாநில அளவிலான தடகளப் போட்டிகள் கடந்த 3 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.  
இதில் பங்கேற்ற கரூர் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் என். நவநீதி, கேகே.மோனீஸ்வரன், பி.விக்னேஷ்,  என்.ஜீவன்ராஜ்  ஆகியோர் 4ல400மீ.தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
வெற்றிபெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர், ஆசிரியைகளையும் பள்ளியின் தலைவர் பிஎம்.கருப்பண்ணன், தாளாளர் பிஎம்கே.பாண்டியன், நிர்வாகி பிஎம்கே.பெரியசாமி, ஆலோசகர் பி.செல்வதுரை, பள்ளி முதல்வர் வி.பழனியப்பன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/12/மாநில-தடகளம்-வெண்ணைமலை-சேரன்-பள்ளி-மாணவர்கள்-சிறப்பிடம்-2788769.html
2788768 திருச்சி கரூர் கரூர் அருகே பெண்ணிடம் ஏழரை பவுன் சங்கிலி பறிப்பு DIN DIN Thursday, October 12, 2017 07:17 AM +0530 கரூர் அருகே பெண்ணிடம் ஏழரை பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
 கரூர் அருகே உள்ள மாரிகவுண்டன்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன்.  இவர் கரூரில் உள்ள தனியர் கூரியர் நிறுவனத்தில் வாகன ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரீத்தா(24). செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் பிரித்தா தனது மாமியார் லட்சுமி ஆகியோருடன் வீட்டில் டிவி பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது,  பக்கத்து வீட்டைச் சேர்ந்த ரேவதி என்பவர் பிரீத்தா வீட்டுக்கு டிவி பார்க்க வந்தபோது,  அந்தப் பகுதியில் மறைந்திருந்த மர்ம நபர்கள் 2 பேர் அவரது கழுத்தில் கிடந்த செயினை பறிக்க முயன்றனர்.
அப்போது,  அவர் கூச்சலிடவே அருகில் கிடந்த சிறிய மண்வெட்டியால் ரேவதியை தாக்கியுள்ளனர். இதை பார்த்த பிரீத்தா ஓடி வந்து தடுக்க முயன்றபோது அவரது கழுத்தில் கிடந்த ஏழரை பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக்கொண்டு மர்ம நபர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில்  தப்பி ஓடி விட்டனர்.இதுகுறித்த புகாரின்பேரில் வாங்கல் போலீஸார் வழக்குப்பதிந்து, தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/12/கரூர்-அருகே-பெண்ணிடம்-ஏழரை-பவுன்-சங்கிலி-பறிப்பு-2788768.html
2788767 திருச்சி கரூர் சர்வதேச அறிவியல் வார விழா: வெள்ளியணை அரசுப் பள்ளி தேர்வு DIN DIN Thursday, October 12, 2017 07:17 AM +0530 சர்வதேச அறிவியல் வார விழாவிற்கு வெள்ளியணை அரசுப் பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
 சென்னை அண்ணா பல்கலை.யில் அக். 13 ஆம் தேதி முதல் 16 வரை அறிவியல் கிராமம் என்ற சர்வதேச அறிவியல் வாரவிழா நடைபெற உள்ளது. இதில், பங்கேற்ற கரூர் மக்களவைத் தொகுதி சார்பில் வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் ச.ஹரிகரன், வெ.சரண், ஆ.லோகேஷ், ர.தீபக்கண்ணன் ஆகியோரும்,  வழிகாட்டி ஆசிரியராக பெ.தனபால் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சர்வதேச அறிவியல் வார விழாவில், வெள்ளியணை ஊராட்சியைச் சேர்ந்த 13 கிராமங்களின் மக்கள் தொகை, வீடுகளின் எண்ணிக்கை, பரப்பளவு, ஏரிகள், குளங்கள், கிணறுகளின் எண்ணிக்கை,  விளையும் பயிர், குடகனாற்றில் இருந்து வெள்ளியணை குளத்திற்கு நீர்வரும் கால்வாயை அகலப்படுத்துதல், உயர்கல்வி நிறுவனங்கள், காவிரிக் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் வெள்ளியணை பெரிய குளத்திற்கு நீர் கொண்டு வருதல் உள்ளிட்ட எதிர்கால திட்டங்களை அப்பள்ளி மாணவர்கள் கூற உள்ளனர்.
விழாவில் பங்கேற்கும் மாணவர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெ.அய்யண்ணனை அண்மையில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது பள்ளித் தலைமை ஆசிரியர் சி.தமிழரசன், பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் அ.கருப்பண்ணன், வழிகாட்டி ஆசிரியர் பெ.தனபால் ஆகியோர் உடனிருந்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/12/சர்வதேச-அறிவியல்-வார-விழா-வெள்ளியணை-அரசுப்-பள்ளி-தேர்வு-2788767.html
2788766 திருச்சி கரூர் கடவூர் அருகே மக்கள் தொடர்பு முகாம்: ரூ.50 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு DIN DIN Thursday, October 12, 2017 07:17 AM +0530 கரூர் மாவட்டம், கடவூர் அருகே புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 226 பயனாளிகளுக்கு ரூ. 50.13 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் வழங்கினார்.
கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள வெள்ளபட்டியில் மக்கள் தொடர்பு முகாம் நிறைவு விழா புதன்கிழமை ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தலைமையில்  நடைபெற்றது.
விழாவில் பல்வேறு துறைகள் சார்பில் 226 பேருக்கு ரூ.50.13 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் கு.கோவிந்தராஜ் வழங்கி மேலும் பேசியது:
     தற்போது மழைக்காலமாக உள்ளதால், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். சுற்றுப்புறச்சூழலை சுத்தமாக வைக்காவிட்டால் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்கள் பரவும் நிலை ஏற்படும். டெங்கு போன்ற பல்வேறு வகையான காய்ச்சல் ஏற்படாமல் இருக்க சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்குவதைத் தடுக்க வேண்டும். குடிநீர் பாத்திரங்கள்,  நீர் சேகரிப்பு தொட்டிகளை கொசுக்கள் புகாத வகையில் மூடி வைக்க வேண்டும்.  ஆட்டுக்கல், உடைந்த மண்பானை,  டயர், தேங்காய் ஓடு,  குளிர்சாதன பெட்டியின் பின்புறம் நீர் தேங்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல் என்ற அறிகுறி தென்பட்டால் உடனே அருகே உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் சென்று சிகிச்சை மற்றும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றார்.
விழாவில் வருவாய் கோட்டாட்சியர் விமல்ராஜ், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் ஜான்சிராணி, வேளாண் இணை இயக்குநர் பாஸ்கரன்,  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) ஜெயந்தி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சாந்தி, மாவட்ட  ஆதிதிராவிட நல அலுவலர் பாலசுப்ரமணியன், வட்டாட்சியர் புகழேந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/12/கடவூர்-அருகே-மக்கள்-தொடர்பு-முகாம்-ரூ50-லட்சத்தில்-நலத்திட்ட-உதவிகள்-அளிப்பு-2788766.html
2788751 திருச்சி கரூர் விவசாயிகள் பிரச்னையைப் புரிந்த நடிகர்கள் அரசியலுக்கு வரலாம்: கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி DIN DIN Thursday, October 12, 2017 06:36 AM +0530 விவசாயப் பிரச்னைகளைத் தீர்க்கும் நடிகர்கள் அரசியலுக்கு வரலாம் என்றார் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி.
கரூரில் புதன்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ஆளுமை, திறமை மற்றும் விவசாயப் பிரச்னைகளைப் புரிந்து கொண்ட நடிகர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். காவிரியில் தண்ணீர்ப் பங்கீடு கொள்கையை மத்திய அரசு கொண்டு வரவேண்டும். கர்நாடக அணைகளில் தண்ணீரை தேக்கி வைக்க அவர்களுக்கு உரிமை இல்லை.  
நீரா பானத்தை நடைமுறைக்கு கொண்டு வருவோம் என  முதல்வர் அறிவித்து 6 மாதங்களாகியும் செயல்படுத்தவில்லை.
ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் நிலத்தடி  நீரை எடுக்கத் தடை உள்ளது. ஆனால் நம் நாட்டில் 1,500 அடிக்கும் கீழ்  நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது. எனவே  நிலத்தடி நீரை உறிஞ்சுவதற்கு தடை விதிக்க வேண்டும்.  காவிரி, தென் பெண்ணை, பாலாறு உள்ளிட்ட நதிகளை இணைக்க வேண்டும். ஆனால் நதிகளின் குறுக்கே அணைகள் கட்டக்கூடாது.  மேற்குதொடர்ச்சி மலைகளில் உருவாகி மேற்கே அரபிக்கடலில் சென்று வீணாகக் கலக்கும் நதிகளை கிழக்கு நோக்கி திருப்பிவிட மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/12/விவசாயிகள்-பிரச்னையைப்-புரிந்த-நடிகர்கள்-அரசியலுக்கு-வரலாம்-கள்-இயக்க-ஒருங்கிணைப்பாளர்-செநல்லசாமி-2788751.html
2788283 திருச்சி கரூர் நீதிமன்றத்தில் ஆஜரான மாவோயிஸ்ட்டுகள், வழக்குரைஞருக்கு நவ.7 வரை காவல் நீட்டிப்பு DIN DIN Wednesday, October 11, 2017 08:39 AM +0530 கரூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட பெண் மாவோயிஸ்ட்டுகள் கலா, சந்திரா மற்றும் வழக்குரைஞர் முருகன் ஆகியோருக்கு நவம்பர் 7 வரை காவல் நீட்டிப்பு செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
கரூர் வெங்கமேடு கணக்குப்பிள்ளைத் தெருவில் பதுங்கியிருந்த  சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியைச் சேர்ந்த பெண் மாவோயிஸ்டுகள் கலா(53), சந்திரா(46) ஆகியோரை கடந்த ஆண்டு ஜூலை 21 இல் கைது செய்த  கியூ பிராஞ்ச் போலீஸார், குற்றவியல் நீதிமன்றம் 1-இல் ஆஜர்படுத்தி திருச்சி பெண்கள் சிறையில் அடைத்தனர்.
இவர்களுக்கு உதவியதாக மதுரை மாவட்டம் ஆலங்குளம் அன்புநகரைச் சேர்ந்த வழக்குரைஞர் முருகனை(35) கடந்த ஜனவரி 8 ஆம் தேதி கைது செய்து, கரூர் மாவட்ட முதன்மை நீதிபதி முன் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.  அவ்வப்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் மூவருக்கும் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பெண் மாவோயிஸ்ட்டுகள் கலா, சந்திரா மற்றும் வழக்குரைஞர் முருகன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் மூவருக்கும் நவம்பர் 7 வரை காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மூவரும் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/11/நீதிமன்றத்தில்-ஆஜரான-மாவோயிஸ்ட்டுகள்-வழக்குரைஞருக்கு-நவ7-வரை-காவல்-நீட்டிப்பு-2788283.html
2788282 திருச்சி கரூர் லாரிகள் வேலைநிறுத்தம்: கரூரில் ரூ.6 கோடி பொருள்கள் தேக்கம் DIN DIN Wednesday, October 11, 2017 08:38 AM +0530 ஜிஎஸ்டி விலக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் மேற்கொண்ட  2 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தால், கரூர் மாவட்டத்தில் ரூ.6 கோடி மதிப்பிலான பொருள்கள் தேக்கமடைந்துள்ளன.
சரக்கு மற்றும் சேவை வரியை ரத்து செய்ய வேண்டும், பெட்ரோல்-டீசல் விலையை தினம்தோறும் விலை நிர்ணயம் செய்யக் கூடாது, சுங்க வரியை ஆண்டுக்கு ஒருமுறை வசூலிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை இரு நாட்கள் வேலைநிறுத்தம் நடைபெறும் என அறிவித்திருந்தன.
அதன்படி, தமிழகத்தில் சுமார் 4.50 லட்சம் லாரிகள் இயக்கப்படவில்லை.
இதன்காரணமாக வெளி மாநிலங்களுக்குக் கொண்டு செல்லப்படும் சுமார் ரூ. 600 கோடி மதிப்பிலான பொருள்கள் தேக்கம் அடைந்துள்ளன.
    கரூர் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக சுமார் 2,200 லாரிகள் இயங்கவில்லை.
இதனால் கரூரில் இருந்து ஆந்திரம், கேரளம், கர்நாடகம்,  மகாராஷ்டிரம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பப்படும் கொசுவலைகள்,  உள்ளூர் ஜவுளி உற்பத்தி ரகங்கள் அனுப்பப்படாமல் சுமார் ரூ.6 கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கமடைந்தன.  
மேலும் திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்படும் அத்தியாவசிய பொருட்களான காய்கறிகளும் போதிய அளவில் வரவில்லை. இதனால் காய்கறி சந்தைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/11/லாரிகள்-வேலைநிறுத்தம்-கரூரில்-ரூ6-கோடி-பொருள்கள்-தேக்கம்-2788282.html
2788240 திருச்சி கரூர் கரூரில் அக்.14-இல் வேலைவாய்ப்பு முகாம் DIN DIN Wednesday, October 11, 2017 08:25 AM +0530 கரூரில் அக். 14-இல் நடைபெற உள்ள ஊரக மற்றும் நகர்ப்புற இளைஞர், மகளிருக்கு வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விரும்புவோர் இணையதளத்தில் பதிவு செய்யுமாறு ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர் மற்றும் மகளிருக்கு வேலைவாய்ப்பு முகாம் அக்.14-இல் கரூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.
இதில் தமிழகத்தின் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தகுதியான நபர்களைத் தேர்வு செய்ய உள்ளனர். முகாமில் பங்கேற்க விரும்புவோர் ‌w‌w‌w.‌n​c‌s.‌g‌o‌v.‌i‌n  என்ற இணையதளத்தில் பதிவு செய்து, ஒப்புகைச் சீட்டுடன் முகாமில் கலந்து கொள்ளலாம்.  மேலும் முகாமில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மேற்கொள்ளப்படும் பதிவு, புதுப்பித்தல், சிறப்பு புதுப்பித்தல்மற்றும் கூடுதல் பதிவு ஆகிய பணிகளையும் செய்துகொள்ளலாம். முகாமில் பங்கேற்கும் தனியார் தொழில் நிறுவனங்கள் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/11/கரூரில்-அக்14-இல்-வேலைவாய்ப்பு-முகாம்-2788240.html
2788239 திருச்சி கரூர் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு DIN DIN Wednesday, October 11, 2017 08:24 AM +0530 சின்னதாராபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகையைத் திருடிச் சென்ற மர்ம நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகே உள்ள புஞ்சைகாளக்குறிச்சி காசிபாளையத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி(54). இவர் திங்கள்கிழமை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் திரும்பி வந்துபார்த்தபோது வீட்டின்பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 10 பவுன் நகை திருடு போயுள்ளது தெரியவந்தது. கருப்பசாமி அளித்த புகாரின்பேரில் சின்னதாராபுரம் போலீஸார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/11/வீட்டின்-பூட்டை-உடைத்து-10-பவுன்-நகை-திருட்டு-2788239.html
2788238 திருச்சி கரூர் உட்கட்சி தேர்தல் வேட்பு மனு அளிப்பு DIN DIN Wednesday, October 11, 2017 08:24 AM +0530 தமிழக வாழ்வுரிமை கட்சியின் கரூர் மாவட்ட நிர்வாகிகளுக்கான உட்கட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமை கரூர் தனியார் அரங்கில் நடைபெற்றது.
இதில், கட்சியின்  தேர்தல் நடத்தும் அலுவலர் ஜம்புலிங்கம் தலைமையில் நடைபெற்ற வேட்புமனு தாக்கலில் மாவட்ட செயலாளர், தலைவர், பொருளாளர், நகரம், வட்டம், ஒன்றியம் ஆகிய பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நிலைய செயலாளர் கண்ணன் உள்பட  பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/11/உட்கட்சி-தேர்தல்-வேட்பு-மனு-அளிப்பு-2788238.html
2788237 திருச்சி கரூர் குடிநீர் கேட்டு க.பரமத்தியில் சாலை மறியல் DIN DIN Wednesday, October 11, 2017 08:23 AM +0530 குடிநீர் வழங்காத க. பரமத்தி ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து கரூர் கோவை தேசிய நெடுஞ்சாலையில் அன்னை நகர் பொதுமக்கள் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
க. பரமத்தி ஊராட்சிக்குட்பட்ட அன்னை நகர் மற்றும் அம்மன் நகர் ஆகிய பகுதிகளுக்கு கடந்த 20 நாட்களாக ஊராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை காலை கரூர் கோவை தேசிய நெடுஞ்சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த க.பரமத்தி காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி மற்றும் ஊராட்சி செயளர் வேத சுப்பிரமணியம் ஆகியோர்  அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அப்பகுதியினர் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/11/குடிநீர்-கேட்டு-கபரமத்தியில்-சாலை-மறியல்-2788237.html
2788236 திருச்சி கரூர் இருசக்கர வாகனங்கள் மோதல்: தொழிலாளி சாவு DIN DIN Wednesday, October 11, 2017 08:23 AM +0530 வெள்ளியணை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை ஜக்கம்பட்டியைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன்(48). இவர் தற்போது கரூர் தெற்கு காந்திகிராமத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.  
இவர் திங்கள்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் சேங்கல் - உப்பிடமங்கலம் சாலையில் ராசாக்கவுண்டனூர் என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே சேங்கலைச் சேர்ந்த நாகராஜன்(25) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் நேருக்குநேர் மோதியது. இதில், பலத்த காயமடைந்த கமலக்கண்ணன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.  இதுகுறித்து வெள்ளியணை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/11/இருசக்கர-வாகனங்கள்-மோதல்-தொழிலாளி-சாவு-2788236.html
2788235 திருச்சி கரூர் தேசிய அஞ்சல் வாரம்: பரணிபார்க் சாரணீயர்கள் அஞ்சலகர்களுக்கு வாழ்த்து DIN DIN Wednesday, October 11, 2017 08:23 AM +0530 தேசிய அஞ்சலக வார (அக். 9 முதல் அக். 14) விழாவையொட்டி அஞ்சல் துறையினருக்கு பரணிபார்க் சாரணீயர்கள் செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்தனர்.
    அக். 9 முதல் 14 ஆம் தேதி வரை தேசிய அஞ்சலக வாரமாக கொண்டாடப்பட்டு வருவதையொட்டி,  கரூர் மாவட்ட அஞ்சல் துறையினருக்கு  கரூர் பரணிபார்க் சாரண, சாரணீயர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.  கரூர் மாவட்ட தலைமை அஞ்சலக கண்காணிப்பாளர் எம்.தேவராஜன், துணை கண்காணிப்பாளர் ஹேமாவதி, அஞ்சல் அலுவலர் தங்கராசு, விற்பனை நிர்வாகி அரசகுமார் மற்றும் அஞ்சலக ஊழியர்கள் அனைவருக்கும் பரணிபார்க் மாவட்ட சாரணீயர்கள் தயாரித்த பூங்கொத்துகளை வழங்கி அன்பைப் பரிமாறிக் கொண்டனர்.
    நிகழ்ச்சியில், பரணிபார்க் சாரண, சாரணீய மாவட்ட முதன்மை ஆணையர் எஸ்.மோகனரெங்கன்,  சாரண ஆணையர் சொ.இராமசுப்ரமணியன், சாரணர் மாவட்டச் செயலாளர் பிரியா, துணைச் செயலாளர் கௌசல்யா, பரணிபார்க் கல்விக்குழும நிர்வாக அலுவலர் எம்.சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/11/தேசிய-அஞ்சல்-வாரம்-பரணிபார்க்-சாரணீயர்கள்-அஞ்சலகர்களுக்கு-வாழ்த்து-2788235.html
2788234 திருச்சி கரூர் கரூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் DIN DIN Wednesday, October 11, 2017 08:22 AM +0530 கரூரில் காங்கிரஸ் கட்சியினர் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்டத் தலைவர் ர.சின்னசாமி தலைமை வகித்தார். புதுச்சேரி தேர்தல் குழு பொறுப்பாளரும், முன்னாள் மாவட்டத் தலைவருமான பேங்க் கே.சுப்ரமணியன்,  மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கணேசன்,  சேங்கல்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  பாஜக தலைவர் அமித்ஷாவின் மகனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கினை பதிவு செய்யக்கோரி நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஜக்கரியா, டாக்டர் பைசல்அகமது, நகரத் தலைவர் சௌந்தரராஜன், வட்டார தலைவர்கள் மற்றும் சுரேகாபாலச்சந்தர், ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/11/கரூரில்-காங்கிரஸ்-கட்சியினர்-ஆர்ப்பாட்டம்-2788234.html
2788233 திருச்சி கரூர் ஒலி, காற்று மாசில்லா தீபாவளியாக கொண்டாட ஆட்சியர் அறிவுறுத்தல் DIN DIN Wednesday, October 11, 2017 08:22 AM +0530 தீபாவளி நாளன்று இரவு 10 மணிக்கு மேல் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. மேலும்  ஒலி, காற்று மாசில்லா தீபாவளியை
கொண்டாட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, பட்டாசு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வெடி உற்பத்தியாளர்கள் பட்டாசுகளில் அடங்கியுள்ள வேதிப்பொருட்கள், ஒலி அளவின் விவரத்தினை பட்டாசு பேக்கிங் பெட்டியில் குறிப்பிட வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் ஒலி அளவானது 4 மீ. தொலைவில் 125 டெசிபல் அல்லது 145 டெசிபல் ஒலி ஏற்படுத்தும் பட்டாசுகளை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது.  சில்லறை விற்பனையாளர்கள் 125 டெசிபல் அளவிற்குமேல் ஒலி எழுப்பும் பட்டாசுகளை விற்கக்கூடாது. பொதுமக்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை கண்டிப்பாக வெடிக்கக்கூடாது. 125 டெசிபல் அளவிற்கு கீழ் ஒலி எழுப்பக் கூடிய பட்டாசுகளை மட்டுமே வாங்க வேண்டும். ஒலி மற்றும் காற்று மாசு ஏற்படுத்தும் பட்டாசு வகைகளைத் தவிர்த்து வண்ண ஒளி தீபங்களால் தீபாவளியை கொண்டாடுவோம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/11/ஒலி-காற்று-மாசில்லா-தீபாவளியாக-கொண்டாட-ஆட்சியர்-அறிவுறுத்தல்-2788233.html
2788232 திருச்சி கரூர் திருமாநிலையூரில் மக்கள் சந்திப்பு பிரசாரம் DIN DIN Wednesday, October 11, 2017 08:22 AM +0530 மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில்  நாடாளுமன்றம் முன் தொடர் தர்னா போராட்டம் நடத்துவது குறித்த மக்கள் சந்திப்பு பிரசாரம் கரூரில் திருமாநிலையூர் அரசு போக்குவரத்து கழகப் பணிமனை முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தொழிலாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் விரோத மத்திய அரசின் கொள்கைகளைக் கண்டித்தும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில்வாரி சம்மேளனங்கள் சார்பில் வரும் நவ. 9,10, 11 ஆம் தேதிகளில் நாடாளுமன்றம் முன் தொடர் தர்னா போராட்டம் நடைபெற உள்ளது.
இப்போராட்டம் குறித்து மக்களிடையே விளக்கும் வகையில், கரூர் மாவட்ட போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் மக்கள் சந்திப்பு பிரசாரம் கடந்த 5 ஆம் தேதி முதல் வரும் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
 கரூரில் திருமாநிலையூர் அரசு போக்குவரத்து பணிமனை முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் ஜிபிஎஸ்.வடிவேலன் தலைமை வகித்தார். இதில் டாஸ்மாக் சங்த்தின் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கரூர் கோவைச்சாலையில் உள்ள தலைமை மின்வாரிய அலுவலகம் முன் நடைபெற்ற மக்கள் சந்திப்பு பிரசாரத்துக்கு ஆர்.குமரேசன் தலைமை வகித்தார்.
இதில், போராட்டத்தை விளக்கி ஏஐசிசிடியு மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர், தொமுச பரமேஸ்வரன், ஹெச்எம்எஸ் மாவட்டச் செயலாளர் ஆனந்தராஜ், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் ஜிபிஎஸ்.வடிவேல், ஏஐசிசிடியு மாவட்டச் செயலாளர் பால்ராஜ், சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.முருகேசன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.  
இதில், அனைத்து தொழிற்சங்கத்தினர் திரளாகப் பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/11/திருமாநிலையூரில்-மக்கள்-சந்திப்பு-பிரசாரம்-2788232.html
2788231 திருச்சி கரூர் எலக்ட்ரீசியன்கள் சாவு: உறவினர்கள் மறியலுக்கு முயற்சி DIN DIN Wednesday, October 11, 2017 08:22 AM +0530 மாயனூர் பூங்காவில் பணியின்போது மின்சாரம் பாய்ந்து இறந்துபோன எலக்ட்ரீசியன்களின் உறவினர்கள் உரிய நிவாரணம் கேட்டு உடலை வாங்க மறுத்து சாலை மறியலுக்கு செவ்வாய்க்கிழமை முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் வெங்கமேட்டைச் சேர்ந்தவர்கள் அசோக்குமார்(42), கண்ணன்(43). இவர்கள் இருவரும் மாயனூர் அடுத்த தண்ணீர்பாலம் அருகே உள்ள அம்மா பூங்காவில் ஒப்பந்த அடிப்படையில் சோலார் மின்விளக்குகள் அமைக்கும் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
அப்போது மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தனர். இதையடுத்து  கரூர் அரசு மருத்துவமனை முன் பழைய சேலம் புறவழிச்சாலையில் நிவாரணத் தொகை கேட்டு மறியலுக்கு முயன்றனர். தகவலறிந்த கரூர் நகர காவல் ஆய்வாளர் பிருத்விராஜ் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.  இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/11/எலக்ட்ரீசியன்கள்-சாவு-உறவினர்கள்-மறியலுக்கு-முயற்சி-2788231.html
2788230 திருச்சி கரூர் தமிழ் வளர்ச்சித் துறை போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு DIN DIN Wednesday, October 11, 2017 08:21 AM +0530 தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் திங்கள்கிழமை வழங்கினார்.
தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே பல்வேறு திறமைகளை வெளிப்படுத்த ஆண்டுதோறும் தமிழ்வளர்ச்சித் துறை சார்பில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளை நடத்தி வருகிறது. நிகழாண்டிற்கான போட்டிகள் கரூரில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்றது. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியர் வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தலைமை வகித்து போட்டிகளில்  வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் வெ.குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/11/தமிழ்-வளர்ச்சித்-துறை-போட்டிகளில்-வென்றவர்களுக்கு-பரிசு-2788230.html
2787457 திருச்சி கரூர் அக். 12-இல் கரூர் வரும் தமிழ் பரப்புரைக் குழு DIN DIN Tuesday, October 10, 2017 05:08 AM +0530 கரூருக்கு அக்.12 இல் வருகை தரும்,  தமிழ் பரப்புரை பயணக்குழுவுக்கு தமிழ் அமைப்புகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
    தமிழ்ப்பணி நிறுவனரும், மூத்த தமிழறிஞருமான வா.மு.சேதுராமன் ஆண்டுதோறும் தமிழுக்காக பரப்புரை பயணம் மேற்கொண்டு வருகிறார்.
  25 ஆம் ஆண்டாக நிகழாண்டில் கன்னியாகுமரியில் பரப்புரை தொடங்கி பெங்களூரு, ஹைதராபாத், நாக்பூர், போபால், அலகாபாத் வழியாக புதுதில்லியில் வரும் 22 ஆம் தேதி நிறைவு செய்கிறார்.
   அக். 12-இல் கரூர் வரும் அவரது குழுவினருக்கு ஜவஹர் பஜாரில் உள்ள சங்ககால புலவர்கள் நினைவுத்தூண் அருகே சிறப்பான வரவேற்பு தமிழறிஞர்கள் சார்பில் அளிக்கப்பட உள்ளது என கரூர் திருக்குறள் பேரவை நிறுவனர் மேலை.பழநியப்பன் தெரிவித்துள்ளார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/10/அக்-12-இல்-கரூர்-வரும்-தமிழ்-பரப்புரைக்-குழு-2787457.html
2787456 திருச்சி கரூர் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த தையல் தொழிலாளி சாவு DIN DIN Tuesday, October 10, 2017 05:07 AM +0530 கரூரில் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த தையல் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். கரூர் மேற்குகாமராஜபுரத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன்(46). தையல் தொழிலாளி. இவரது வீட்டின் கீழ்தளத்தில் 10 ஆடி ஆழம் கொண்ட தண்ணீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் தொட்டிக்குள் ஞாயிற்றுக்கிழமை மாலை இறங்கியதில் நிலைத்தவறி, நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து கரூர் நகர காவல்நிலையத்தினர் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/10/தண்ணீர்-தொட்டிக்குள்-விழுந்த-தையல்-தொழிலாளி-சாவு-2787456.html
2787455 திருச்சி கரூர் வெள்ளியணையில் அக்டோபர் 10 மின் நிறுத்தம் DIN DIN Tuesday, October 10, 2017 05:07 AM +0530 கரூர் மின்வாரிய கோட்டத்திற்குட்பட்ட வெள்ளியணை, மண்மங்கலம், ஒத்தக்கடை, பாலம்மாள்புரம் ஆகிய துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (அக்.10) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் வெள்ளியணை, செல்லாண்டிபட்டி, பால்வார்பட்டி, மணவாடி, கே.பிச்சம்பட்டி, ஜெகதாபி, தாளப்பட்டி, மூக்கணாங்குறிச்சி, விஜயநகரம், கந்தசாரப்பட்டி, முஷ்டகிணத்துப்பட்டி மற்றும் வெங்கமேடு, வாங்கப்பாளையம், வெண்ணைமலை,  பெரிச்சிபாளையம், அரசு காலனி, பஞ்சமாதேவி, மின்னாம்பள்ளி, வாங்கல், மண்மங்கலம், என்.புதூர், கடம்பங்குறிச்சி, வள்ளியப்பம்பாளையம், வடுகப்பட்டி மற்றும்  ஒத்தக்கடை, சோமூர், ரெங்கநாதன்பேட்டை, செல்லிபாளையம், நெரூர், திருமுக்கூடலூர், புதுப்பாளையம், வேடிச்சிபாளையம், பெரியகாளிபாளையம், சின்னகாளிபாளையம் மற்றும் பாலம்மாள்புரம், ஆலமரத்தெரு, 5ரோடு, கருப்பாயிகோயில்தெரு,  கச்சேரிபிள்ளையார் கோயில்தெரு, மாரியம்மன்கோயில், அனுமந்தராயன்கோயில், புதுத்தெரு, மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என  கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் கு.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/10/வெள்ளியணையில்-அக்டோபர்-10-மின்-நிறுத்தம்-2787455.html
2787454 திருச்சி கரூர் மாயனூர் பூங்காவில் மின்சாரம் தாக்கி தச்சுத் தொழிலாளிகள் இருவர் சாவு DIN DIN Tuesday, October 10, 2017 05:06 AM +0530 மாயனூர் அரசுப் பூங்காவில் திங்கள்கிழமை பழுதுபார்த்துக்கொண்டிருந்த தச்சுத்தொழிலாளிகள் இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.  
 கரூர் வெங்கமேட்டைச் சேர்ந்தவர்கள் கண்ணன்(35), அசோகன்(45). தச்சுத்தொழிலாளிகள். இருவரும் மாயனூரில் உள்ள அம்மா பூங்காவில் திங்கள்கிழமை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கண்ணன் கீழே கிடந்த இரும்புக்குழாயை தூக்கியபோது,  அந்த இரும்புக்குழாய் மேலே சென்ற மின்கம்பியில் எதிர்பாராதவிதமாக உரசியுள்ளது.  
இதில் தூக்கி வீசப்பட்ட கண்ணனை அசோகன் காப்பாற்றச் சென்றதில் அவரையும்  மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே கண்ணன் உயிரிழந்தார். பலத்த காயமடைந்த அசோகனை அக்கம்பக்கத்தினர் மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவரும் உயிரிழந்தார்.
தகவலறிந்த போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் ஆகியோர் கரூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று உயிரிழந்தவர்களின் சடலங்களைப் பார்வையிட்டனர். பின்னர் இருவரின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/10/மாயனூர்-பூங்காவில்-மின்சாரம்-தாக்கி-தச்சுத்-தொழிலாளிகள்-இருவர்-சாவு-2787454.html
2787453 திருச்சி கரூர் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தர்னா DIN DIN Tuesday, October 10, 2017 05:06 AM +0530 கரூர் மாவட்டம் கடவூர் அடுத்த பி. உடையாப்பட்டியைச் சேர்ந்த ராயப்பன் மனைவி அன்புராணி(51) , திங்கள்கிழமை காலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் அமர்ந்து, பி.உடையாப்பட்டியில் பொதுஇடத்தை ஆக்கிரமித்து கடை வைத்துள்ளவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூச்சலிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.  இதனைக்கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் உடனே அவரை சமாதானப்படுத்தி, ஆட்சியரிடம் அழைத்துச் சென்றனர். பின்னர் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் கூறியதையடுத்து அவர் சமாதானம் அடைந்து சென்றார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/10/ஆக்கிரமிப்பை-அகற்றக்கோரி-தர்னா-2787453.html
2787452 திருச்சி கரூர் 100 நாள் வேலை கோரி மனு DIN DIN Tuesday, October 10, 2017 05:05 AM +0530 கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியத்துக்குட்பட்ட புஞ்சைகாளக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட காசிபாளையம் கிராமத்தில் வசித்து வரும் எங்களுக்கு கடந்த 100 நாட்களாக 100 நாள் வேலைத்திட்டத்தில் பணிகள் வழங்கப்படவில்லை. க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மற்ற பகுதிகளில் 100 நாள்வேலை வழங்கப்படுகிறது. எனவே வறுமையில் வாடும் எங்களுக்கு மீண்டும் பணி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என மனுவில் தெரிவித்துள்ளனர்.
இதேபோல வேட்டமங்கலம் ஊராட்சி குந்தாணிபாளையத்தைச் சேர்ந்த பெண்கள் எங்கள் பகுதிக்கு காவிரிக்குடிநீர் வந்து பலமாதங்கள் ஆகிறது.  சிலர் எங்கள் பகுதிக்கு காவிரிக் குடிநீர் வருவதைத் தடுக்கிறார்கள். எனவே எங்களுக்கு குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/10/100-நாள்-வேலை-கோரி-மனு-2787452.html
2787451 திருச்சி கரூர் மக்கள் குறைதீர்க்கும் முகாம்: நலத்திட்ட உதவிகள் அளிப்பு DIN DIN Tuesday, October 10, 2017 05:05 AM +0530 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ்.
 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை,  மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை,  வீட்டுமனைப்பட்டா,  புதிய குடும்ப அட்டை, கல்விக்கடன், குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 256 மனுக்கள் பெறப்பட்டன.  
மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ், அவற்றை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.  கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்குள் திருமணம் செய்துகொண்டவர்களுக்கு திருமண நிதியுதவியாக 8 தம்பதியினருக்கு ரூ.2.75 லட்சம் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் ஜான்சிராணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சாந்தி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மீண்டும் பட்டா வழங்கக்கோரி மனு:  கடந்த 2000-01 இல் தமிழக அரசு சார்பில் எங்கள் பகுதியில் வசிக்கும் 357 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் அடிப்படை வசதிகள்  வேண்டி மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியானது.  அதில் ரெங்கநாதபுரம் பகுதியில் இலவச வீட்டுமனை பட்டா பெற்றவர்கள் இன்னும் ஒரு வாரத்துக்குள் வீடு கட்ட வேண்டும். இல்லையேல் பட்டா ரத்து செய்யப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.  ஏற்கெனவே வழங்கப்பட்ட 357 பட்டாக்களில் தற்போது 180 பேருக்கு மட்டும் புதிதாக அதிகாரிகள் பட்டா போட்டுக்கொடுத்துள்ளனர்.  மீதியுள்ளவர்களுக்கும் இதேபோல் மீண்டும் இலவச வீட்டுமனை பட்டா தருமாறு அப்பகுதியினர் ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/10/மக்கள்-குறைதீர்க்கும்-முகாம்-நலத்திட்ட-உதவிகள்-அளிப்பு-2787451.html
2787450 திருச்சி கரூர் அக். 11-இல் வெள்ளப்பட்டியில் மக்கள் தொடர்பு முகாம் DIN DIN Tuesday, October 10, 2017 05:04 AM +0530 கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், வெள்ளப்பட்டி கிராமத்தில் வரும் 11 ஆம் தேதி மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. முகாமில், பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்று பொதுமக்களின் கோரிக்கைகள் தொடர்பாக ஏற்கெனவே பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்க உள்ளனர். மேலும் அவர்களது துறை சார்பான நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்தும் விளக்க உள்ளனர். முகாமில், மருத்துவ முகாம், அரசுத்துறை கண்காட்சி நடைபெற உள்ளது. எனவே வெள்ளப்பட்டி கிராமமக்கள் முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/10/அக்-11-இல்-வெள்ளப்பட்டியில்-மக்கள்-தொடர்பு-முகாம்-2787450.html
2787449 திருச்சி கரூர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: ஆட்சியருக்கு அமைச்சர் பரிசு DIN DIN Tuesday, October 10, 2017 05:04 AM +0530 கரூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்ததையடுத்து,  ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தார் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
விழாவில் மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டிகே.இராஜசேகரன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ் மற்றும் கண்காட்சி அரங்குகள் அமைத்த அனைத்து துறையினருக்கும் நினைவுப் பரிசுகளை அமைச்சர் எம்ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார். இதில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா,  அதிமுக மாவட்ட அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், நகரச் செயலாளர் வை.நெடுஞ்செழியன், கரூர் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் எஸ்.திருவிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/10/எம்ஜிஆர்-நூற்றாண்டு-விழா-ஆட்சியருக்கு-அமைச்சர்-பரிசு-2787449.html
2786730 திருச்சி கரூர் கரூரில் துளிர் வாசகர் திருவிழா DIN DIN Monday, October 9, 2017 12:45 AM +0530 கரூரில் துளிர் வாசகர் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
 வானியியல் இயற்பியலின் முன்னோடி அறிவியல் விஞ்ஞானி மேக்நாத்சாகாவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கரூர் மாவட்டக்குழு சார்பில் கரூர் குமரன் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் உ. சங்கர் தலைமை வகித்தார். துணைத் தலைவர் காமராஜ் முன்னிலை வகித்தார். அறிவியல் இயக்க மாநில செயலாளர் எஸ்டி. பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.  இதில் மாவட்ட நிர்வாகிகள் ஜெயராஜ், தனபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/09/கரூரில்-துளிர்-வாசகர்-திருவிழா-2786730.html
2786729 திருச்சி கரூர் அமராவதி ஆற்றில் புதை மணலில் சிக்கி தையல் தொழிலாளி சாவு DIN DIN Monday, October 9, 2017 12:45 AM +0530 கரூரில் அமராவதி ஆற்றில் புதை மணலில் சிக்கி தையல் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
 திண்டுக்கல் மாவட்டம் வடுகப்பட்டியைச் சேர்ந்தவர் கந்தசாமி (26).  தையல் தொழிலாளி. இவர் கரூர் சுக்காலியூரில் தையல் கடை நடத்தி வந்தார். ஞாயிற்றுக்கிழமை மாலை தனது நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது கந்தசாமி ஆழமான பகுதியில் குளித்த போது புதை மணலில் சிக்கி மூழ்கினாராம். உடனே அருகில் இருந்த அவரது நண்பர்கள் காப்பாற்ற முயற்சித்தும் முடியாததால் உடனே கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து நிலைய அலுவலர் ராஜகோபால் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கந்தசாமி உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கரூர் நகர காவல்நிலையத்தினர் விசாரிக்கின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/09/அமராவதி-ஆற்றில்-புதை-மணலில்-சிக்கி-தையல்-தொழிலாளி-சாவு-2786729.html
2786728 திருச்சி கரூர் "தனி மனித ஒழுக்கம் மேலோங்கினால் நாடு வல்லரசாகும்' DIN DIN Monday, October 9, 2017 12:45 AM +0530 தனிமனித ஒழுக்கம் மேலோங்கினால் மட்டுமே நம் நாடு வல்லரசாகும் என்றார் லயன்ஸ் சங்கத்தின் மாவட்ட ஆளுநர் டாக்டர் எஸ். வீரபாண்டியன்.
 கரூர் மாவட்டம், வாங்கலில் பிரைடு லயன்ஸ் சங்கத்தை ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்து அவர் மேலும் பேசுகையில்,  வாழ்வில் நாம் மட்டும் சந்தோசத்தை அனுபவித்தால் போதாது. நம்முடன் சுற்றுப்புறத்தில் வாழ்பவர்கள் அனைவரும் சந்தோசமாக இருக்க வேண்டும். ஜாதி, மத, இன வேறுபாடுகள் களைந்த 210 நாடுகளில் 14 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பேரியக்கமாக லயன்ஸ் சங்கம் உள்ளது.
 தனிமனித ஒழுக்கத்தை கற்றுத்தரும் இயக்கமாக லயன்ஸ் சங்கம் இருப்பதால்தான் இந்த இயக்கம் அமெரிக்காவில் தொடங்கப்பட்டாலும் கம்யூனிச நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.  உலகின் மிகப்பெரிய சேவை இயக்கமாக உள்ள இந்த இயக்கம் வெளிப்படையாகச் செயல்படுவதால் உலகம் முழுவதும் பரவி வருகிறது. தனி மனித ஒழுக்கம் மேலோங்கினால் மட்டுமே பிரதமர் மோடி கூறியதுபோல 2020-க்குள் நம் நாடு உலக வல்லரசாகும். அத்தகைய தனி மனித ஒழுக்கத்தை கற்றுத்தரும் இயக்கமாக லயன்ஸ் சங்கங்கள் உள்ளன என்றார்.
 முன்னதாக விழாவிற்கு குளித்தலை லயன்ஸ் சங்கத் தலைவர் கே.பி.அருண்மொழி தலைமை வகித்தார். கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கத்தலைவர் மேலை.பழநியப்பன் முன்னிலை வகித்தார்.
இதில் ரத்த தான முகாம், நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது. மேலும் டெங்கு, கருவேல மரங்கள் அகற்றுவது தொடர்பான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களும் வெளியிடப்பட்டன.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/09/தனி-மனித-ஒழுக்கம்-மேலோங்கினால்-நாடு-வல்லரசாகும்-2786728.html
2786727 திருச்சி கரூர் ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் கோயிலில் குருபூஜை விழா DIN DIN Monday, October 9, 2017 12:44 AM +0530 கரூரில்  தீயணைப்பு வளாகத்தில் உள்ள ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் கோயிலில் 56-ம் ஆண்டு மஹாபரணி குருபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் கோவை சிவோகா மனிதவள மேம்பட்டு நிறுவனர் டி. லட்சுமிகாந்தன் பங்கேற்றுப் பேசுகையில்,  உலகத்திலேயே மூன்று பேரிடம் நாம் சாபம் வாங்கக்கூடாது. ஒன்று தாய், இரண்டாவது மனைவி,  மூன்றாவது கணவன்.  இதில் தாய் தனது பெற்ற பிள்ளைகள் மீது அளவற்ற பாசம் கொண்டிருப்பாள். ஒரு தாயின் பிரசவ வலியை மறுஜென்மன் என்பார்கள். பொதுவாக வலியை டெல் என்ற அளவீட்டில் அளப்பார்கள்.  தீக்காயம் அடைந்தவன் 60 சதவீதத்திற்கு மேல் உடலில் தீக்காயம் ஏற்பட்டுவிட்டால், அந்த வலி தாங்க முடியாமல் இறந்துவிடுகிறான்.  ஆனால் பிரசவத்தின்போது தாயின் உடலில் இருக்கு வலி 72 சதவீதம்.  அந்த மாபெரும் வலியை தாங்கிக்கொண்டுதான் தனது குழந்தையை பெற்றெடுக்கிறாள். இவ்வளவு கஷ்டப்பட்டு குழந்தையை பெற்றெடுக்கும் தாயின் சாபம் வாங்கினால் அவன் உலகின் தலைசிறந்த யாகமான அசுவமேத யாகம் நடத்தினால் கூட அவனது பாவம் அவனை விட்டு நீங்காது.
இதேபோலத்தான் மனைவியை அழவிட்டு கணவன் பார்க்கக்கூடாது. எங்கோ பிறந்து, எங்கேயோ வளர்ந்து, தனது கணவனுக்காக, தனது குடும்பத்திற்காக பாசம் கொண்டு உழைக்கிற மனைவியை கணவன் அழ வைத்தால் அந்த பாவம் அவனை சும்மாவிடாது. மனைவி கணவனையும் அழ வைத்து பார்க்கக்கூடாது. ஒருவருக்கொருவர் அன்பாக இருக்க வேண்டும். உலகத்திலேயே அன்பைப் போல ஆயுதம் எதுவும் கிடையாது. நாம்  பிறருக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைக்கும்போது நாம் நல்லவர்களாக மாறிவிடுகிறோம். எனவே மனதில் நல்லதை விதையுங்கள். அது நல்ல மரமாக வளர்ந்து மற்றவர்களுக்கு பயன் கொடுக்கும் என்றார்.முன்னதாக சுவாமிக்கு 9 விதமாத சிறப்பு ஹோமம்,  சிறப்பு அபிஷேக வழிபாடுகள் நடைபெற்றது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/09/ஸ்ரீ-சத்ரு-சம்ஹார-மூர்த்தி-சுவாமிகள்-கோயிலில்-குருபூஜை-விழா-2786727.html
2786726 திருச்சி கரூர் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பெண் சாவு DIN DIN Monday, October 9, 2017 12:44 AM +0530 கரூர், சிந்தாமணிப்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தார். அவரது கணவர் படுகாயமடைந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் வீரகவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் பட்டுசாமி (45). இவர் சனிக்கிழமை தனது மனைவி முத்துலட்சுமி(40) என்பவருடன் இருசக்கர வாகனத்தில்  பாளையம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிந்தாமணிப்பட்டி அரபிக் கல்லூரி அருகே சென்றபோது திடீரென நிலைதடுமாறி இருசக்கர வாகனத்திலிருந்து கணவன், மனைவி இருவரும் கீழே விழுந்தனர்.
இதில் படுகாயமடைந்த இருவரும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆனால் செல்லும் வழியில் முத்துலட்சுமி இறந்தார். இதுகுறித்து சிந்தாமணிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/09/இருசக்கர-வாகனத்திலிருந்து-தவறி-விழுந்த-பெண்-சாவு-2786726.html
2786725 திருச்சி கரூர் மாநில அளவிலான ஜூனியர் சிலம்பாட்டம்: திருவள்ளூர் மாவட்டம் சாம்பியன் DIN DIN Monday, October 9, 2017 12:44 AM +0530 கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான ஜூனியர் சாம்பியன் சிலம்பாட்ட போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை திருவள்ளூர் மாவட்டம் பெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இரண்டாம் கிடைத்தது.
கரூர் மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் மாநில அளவிலான ஜூனியர் சாம்பியன்ஷிப் சிலம்பாட்ட போட்டி சனிக்கிழமை தொடங்கியது.
போட்டிகளை கரூர் மாவட்டத்தலைவர் மலையப்பசாமி தொடக்கி வைத்தார்.  இதில் 15 முதல் 17 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு எடைப்பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. கரூர், திருச்சி, சேலம் , சென்னை, திருவள்ளூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
தொடர்ந்து இறுதிப்போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. இதில் திருவள்ளூர் மாவட்டம் அதிக புள்ளிகளைப் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இரண்டாம் இடத்தை புதுக்கோட்டையும், மூன்றாம் இடத்தை சென்னையும் பிடித்தன. மேலும் தனி நபர் பிரிவுகளில் வெற்றிபெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர். விஜயபாஸ்கர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகளை வழங்கினார். இதில் தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத் தலைவர் ராஜேந்திரன், கரூர் மாவட்டத் தலைவர் மலையப்பசாமி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/09/மாநில-அளவிலான-ஜூனியர்-சிலம்பாட்டம்-திருவள்ளூர்-மாவட்டம்-சாம்பியன்-2786725.html
2786724 திருச்சி கரூர் ஜாக்டோ-ஜியோ போராட்ட விளக்கக் கூட்டம் DIN DIN Monday, October 9, 2017 12:43 AM +0530 கரூரில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சார்பில் வேலைநிறுத்தம் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்த விளக்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 கரூர் அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்டச் செயலாளர் அ. வேலுசாமி, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்டச் செயலர் வ. குமாரவேல், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் மு. மகாவிஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில மகளிரணி அமைப்பாளர் ரெ. மதனா, தமிழ்நாடு அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் எம். ராஜ்குமார், தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாநில பொதுச் செயலாளர் பெ. கிருஷ்ணசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் என்.கே. கந்தசாமி வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கே. சக்திவேல்நன்றி கூறினார். இதில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் போராட்டங்கள் குறித்து விளக்கிப் பேசப்பட்டது.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/09/ஜாக்டோ-ஜியோ-போராட்ட-விளக்கக்-கூட்டம்-2786724.html
2786723 திருச்சி கரூர் சாகுபடிக்கு புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் திறப்பு DIN DIN Monday, October 9, 2017 12:43 AM +0530 கரூர் மாவட்டம் மாயனூரில் உள்ள புதிய கட்டளை மேட்டுவாய்க்காலில் இருந்து சுமார் 20,286 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் சனிக்கிழமை மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜ் தண்ணீர் திறந்துவைத்தார்.
பின்னர் அவர் கூறுகையில், கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் காவிரி ஆற்றின் உப வாய்க்காலான மாயனூர் புதிய கட்டளை மேட்டுவாய்க்காலில் இருந்து 20286 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் 7-ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தண்ணீர் கடைமடை பகுதி வரை செல்லும் வகையில் முகப்பு விவசாயிகள் நீரை பயன்படுத்த வேண்டும்.  இந்த தண்ணீரை பயன்படுத்தி உரிய பயிரை சாகுபடி செய்து விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்றார். நிகழ்ச்சியின்போது குளித்தலை கோட்டாட்சியர் விமல்ராஜ், காவிரி வடிநில கோட்ட உதவி செயற்பொறியாளர் வி.சி. பிரபாகர், உதவி பொறியாளர்கள் செல்லமுத்து, ஸ்ரீதர், வட்டாட்சியர் பாலசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/09/சாகுபடிக்கு-புதிய-கட்டளை-மேட்டு-வாய்க்காலில்-தண்ணீர்-திறப்பு-2786723.html
2786722 திருச்சி கரூர் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்: ஆட்சியர் ஆய்வு DIN DIN Monday, October 9, 2017 12:43 AM +0530 கரூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்களை மாவட்ட ஆட்சியர்  கு. கோவிந்தராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேடி கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் தொடர்பாக சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கரூர் அரவக்குறிச்சி பகுதியில் நடைபெற்ற முகாம்களை மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறுகையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி) மற்றும் குளித்தலை ஆகிய நான்கு சட்டப்பேரவை தொகுதிகளிலும் 2018-ஆம் ஆண்டிற்கான புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 3-ஆம் தேதி வெளியிடப்பட்டது. கரூர் மற்றும் குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து வட்டாட்சியர், நகராட்சி அலுவலகங்கள்,  வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வைக்கப்பட்டு ள்ளது. மேலும் அக். 8, 22-ஆம் தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ளவும், 1.1.2018-ஐ தகுதி நாளாகக்கொண்டு 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் இதுவரை தங்களது பெயரை பதிவு செய்யாதவர்கள் பதிவு செய்து வாக்காளர்களாக சேர்ந்து பயன்பெறலாம் என்றார்.
ஆய்வின்போது கரூர் நகராட்சி குமரன் நடுநிலைப்பள்ளி, பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிஎஸ்ஐ பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளவும்,  புதிதாக பட்டியலில் பெயர் சேர்க்க வந்தவர்களிடம் விவரம் கேட்டறிந்து, அவர்களுக்கு விளக்கமளித்தார்.
 ஆய்வின்போது வட்டாட்சியர்கள் அருள் (கரூர்), சந்திரசேகர்(அரவக்குறிச்சி) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/09/வாக்காளர்-பட்டியல்-சிறப்பு-முகாம்-ஆட்சியர்-ஆய்வு-2786722.html
2786454 திருச்சி கரூர் கரூர் அருகே அரசுப் பேருந்து மீது டேங்கர் லாரி மோதி 12 பேர் காயம் DIN DIN Sunday, October 8, 2017 02:23 AM +0530 கரூர் திருக்காம்புலியூர் அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவு அரசுப் பேருந்து மீது டேங்கர் லாரி மோதியதில், பேருந்து ஓட்டுநர் உள்பட 12 பேர் காயமடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சேர்ந்தவர் ஆனந்தன் (35). அரசுப் பேருந்துஓட்டுநர்.
வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து அறந்தாங்கி செல்ல 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு கரூர் நோக்கி அரசுப் பேருந்தை ஓட்டிச் சென்றார்.
கரூர் திருக்காம்புலியூர் அருகே இரவு 12 மணியளவில், கரூரிலிருந்து ஈரோடு சென்ற டேங்கர் லாரி, அரசுப் பேருந்து மீது மோதியது. இதில், பேருந்து ஓட்டுநர் உள்பட 12 பேர் பலத்த காயமடைந்தனர்.
இவர்கள் அனைவரும் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.கரூர் நகர போலீஸார் வழக்குப் பதிந்து தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடிவருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/08/கரூர்-அருகே-அரசுப்-பேருந்து-மீது-டேங்கர்-லாரி-மோதி-12-பேர்-காயம்-2786454.html
2786453 திருச்சி கரூர் பேரிடர் மேலாண்மை மண்டல குழுக் கூட்டம் DIN DIN Sunday, October 8, 2017 02:22 AM +0530 குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை மண்டல அலுவலர்களுக்கான குழுக் கூட்டம் குளித்தலை வட்டாட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு வட்டாட்சியர் பாலசுந்தர் தலைமை வகித்து பேசுகையில், பேரிடர் மேலாண்மை குழுவில் உள்ள 14 துறைகளைச் சேர்ந்தவர்கள் 24 மணி நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டும். தங்கள் செல்லிடப்பேசியை எக்காரணம் கொண்டும் சுவிட்ச் ஆப் செய்யக்கூடாது என்றார்.
குளித்தலை காவல் ஆய்வாளர் ராஜசேகர், ஒன்றிய ஆணையர் புவனேஸ்வரி, வட்டார மருத்துவ அலுவலர் சசிக்கலா உள்ளிட்ட அரசு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/08/பேரிடர்-மேலாண்மை-மண்டல-குழுக்-கூட்டம்-2786453.html
2786009 திருச்சி கரூர் அந்தியோதயா திட்டப் பிரசார வாகனம் தொடக்கம் DIN DIN Saturday, October 7, 2017 08:45 AM +0530 கரூரில் அந்தியோதயா திட்ட குறித்த பிரசார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜ் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.
இதனை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடக்கி வைத்து மேலும் அவர் கூறுகையில்,  கரூர் மாவட்டத்தில் கிராம நலவாழ்வு மற்றும் தூய்மைக்கான இயக்கம் சார்பில் 18 முதல் 35 வயது வரையிலான படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து உரிய வேலையும் பெற்றுத்தர அந்தியோதயா இயக்கத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகள் மூலம் இளைஞர்களுக்கும், சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கும் சுய வேலைவாய்ப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சிபெற விரும்பும் இளைஞர்கள் ‌w‌w‌w.‌k​a‌u‌s‌h​a‌l‌p​a‌n‌j‌e‌e.‌n‌i​c.‌i‌n எனும் இணையதள முகவரியில் பதிவு செய்துகொள்ளலாம்.  இந்த வாகனம் கரூர் மாவட்டத்தில் உள்ள 67 ஊராட்சிகளில் 7 நாட்களுக்கு பிரசார பயணம் மேற்கொள்ளும் என்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ். கவிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/07/அந்தியோதயா-திட்டப்-பிரசார-வாகனம்-தொடக்கம்-2786009.html
2785993 திருச்சி கரூர் லாலாப்பேட்டை அருகே ஆண் சடலம் DIN DIN Saturday, October 7, 2017 08:40 AM +0530 லாலாப்பேட்டை அருகே முகம் சிதைந்த நிலையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மகாதானபுரம் பிரிவு பகுதியில்  வியாழக்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முகம் சிதைந்த நிலையில் ஆண்சடலம் கிடந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மகாதானபுரம் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் தமிழ்செல்வி (30) சடலத்தை பார்வையிட்டு லாலாப்பேட்டை போலீஸில் புகார் செய்தார்.
போலீஸார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/07/லாலாப்பேட்டை-அருகே-ஆண்-சடலம்-2785993.html
2785992 திருச்சி கரூர் புலியூர் பகுதியில் அக். 9-இல் மின்தடை DIN DIN Saturday, October 7, 2017 08:39 AM +0530 புலியூர் பகுதியில் திங்கள்கிழமை (அக். 9) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் கு.சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  
கரூர் மின்விநியோக கோட்டத்திற்குட்பட்ட புலியூர் துணைமின் நிலையத்தில் வரும் 9-ஆம் தேதி மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான புலியூர், எஸ்பி.புதூர், மேலப்பாளையம், வடக்குப்பாளையம், சணப்பிரட்டி, எஸ்.வெள்ளாளப்பட்டி, நரிகட்டியூர், தொழிற்பேட்டை,  ஆர்.என்.பேட்டை, மணவாசி, சாலப்பட்டி,  பாலராஜபுரம், உப்பிடமங்கலம், லட்சுமணம்பட்டி, பொரணி வடக்கு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/07/புலியூர்-பகுதியில்-அக்-9-இல்-மின்தடை-2785992.html
2785991 திருச்சி கரூர் க.பரமத்தி பகுதியில் கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி DIN DIN Saturday, October 7, 2017 08:39 AM +0530 க. பரமத்தி பகுதியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் சுமார் 4 மணி நேரம் தொடர் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
க.பரமத்தி பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தொடர்ந்து ஒரு வார காலம் பெய்த பருவ மழையை நம்பி விவசாயிகள் மானவாரி பயிரான கம்பு, சோளம், நிலக்கட லையை பயிரிட்டிருந்தனர்.
ஆனால் எதிர்பார்த்த அளவு மழை பொழியாததால் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் மழையை எதிர்நோக்கி இருந்தனர். இந்நிலையில் க. பரமத்தி பகுதியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு தொடங்கிய மழை மாலை 5 மணி வரை பெய்தது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.  
இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், க. பரமத்தி ஒன்றியப் பகுதியில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மானாவாரி விவசாய நிலங்கள் உள்ளன. இதில் விவசாயிகள் பருவ மழையை நம்பி விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக  சரியாக பருவமழை பெய்யாததால் கால்நடைகளைக் கூட காப்பாற்ற முடியாமல் திண்டாடி வந்தோம். இந்த ஆண்டு ஆடி மாதம் சரியான நேரத்தில் தென் மேற்கு பருவமழை பெய்து விவசாயிகளின் வாழ்க்கையில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/07/கபரமத்தி-பகுதியில்-கனமழை-விவசாயிகள்-மகிழ்ச்சி-2785991.html
2785990 திருச்சி கரூர் இருசக்கர வாகனங்கள் மோதல்: இளைஞர் சாவு; 3 பேர் காயம் DIN DIN Saturday, October 7, 2017 08:38 AM +0530 கரூரில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இளைஞர் உயிரிழந்தார். 3 பேர் படுகாயமடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி நரிக்கால்பட்டியைச் சேர்ந்தவர் கன்னிமுத்து. இவரது மகன் வேல்முருகன்(33).
இவர் வியாழக்கிழமை மாலை தனது நண்பர் கரூர் தாந்தோணிமலையைச் சேர்ந்த பல்ராம் மகன் சுந்தரம் (29) என்பவரது வீட்டுக்கு சென்று அவரை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் நரிக்கால்பட்டிக்கு சென்று கொண்டிருந்தனர்.
கரூர் - திண்டுக்கல் சாலையில் உள்ள வெங்கக்கல்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் சென்றபோது எதிரே திருச்சி தொட்டியம் பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் அருண்குமார் (28) ஓட்டி வந்த இருசக்கர வாகனம் வேல்முருகன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அருண்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மேலும் அருண்குமாருடன் இருசக்கர வாகனத்தில் வந்த நாமக்கல் காமராஜ் நகரைச் சேர்ந்த கணேசன் மகன் பிரபாகரன்(24) மற்றும் வேல்முருகன், சுந்தரம் ஆகியோரும் படுகாயமடைந்தனர். இவர்கள் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பசுபதிபாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/07/இருசக்கர-வாகனங்கள்-மோதல்-இளைஞர்-சாவு-3-பேர்-காயம்-2785990.html
2785989 திருச்சி கரூர் தும்பிவாடியில் அம்மா திட்ட முகாம்: 29 மனுக்களுக்கு தீர்வு DIN DIN Saturday, October 7, 2017 08:38 AM +0530 க.பரமத்தி ஒன்றியம் தும்பிவாடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் 29 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
முகாமில் பட்டா மாறுதல், குடும்ப அட்டையில் பெயர் நீக்கல், சேர்த்தல் , புதிய குடும்ப அட்டைக்கு  விண்ணப்பித்தல், முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் அங்கிய 35 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 29 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு ஆணைகளை சமூக நலத்துறை அலுவலர் மூர்த்தி வழங்கினார்.
சின்னதாராபுரம் வருவாய் ஆய்வாளர் தனசேகர், கிராம நிர்வாக அலுவலர் சரவணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/07/தும்பிவாடியில்-அம்மா-திட்ட-முகாம்-29-மனுக்களுக்கு-தீர்வு-2785989.html
2785988 திருச்சி கரூர் கரூர் அருகே மொபெட்டிலிருந்து விழுந்த கூலித்தொழிலாளி சாவு DIN DIN Saturday, October 7, 2017 08:37 AM +0530 கரூர் அருகே மொபெட்டில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த கூலித்தொழிலாளி மருத்துவமனையில்  வியாழக்கிழமை உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம் நெரூர் வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன்(55). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 1-ஆம் தேதி தனது மொபெட்டில் அருகம்பாளையம்-வாங்கல் சாலையில் கருப்பண்ணசாமி நகர் பகுதியில் சென்றபோது சாலையின் குறுக்கே அதே பகுதியைச் சேர்ந்த பெண் வந்துள்ளார். அவர் மீது மோதாமல் இருக்க மொபெட்டை திருப்பியபோது மொபெட்டில் இருந்து மனோகரன் தவறி விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்கு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இறந்தார். கரூர் வெங்கமேடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/07/கரூர்-அருகே-மொபெட்டிலிருந்து-விழுந்த-கூலித்தொழிலாளி-சாவு-2785988.html
2785987 திருச்சி கரூர் விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் DIN DIN Saturday, October 7, 2017 08:37 AM +0530 கரூரில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் கரூர் மாவட்டக்குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயத் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு தீபாவளி பண்டிகை உதவிப்பணமாக ரூ. 5,000 வழங்கிட வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை திருத்தி பேரூராட்சி, நகராட்சி பகுதிகளிலும் தேசிய ஊரக வேலை திட்டத்தை செயல்படுத்திட வேண்டும், ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டத்தில் 200 நாட்கள் வேலை கொடுக்க வேண்டும், வேலை செய்த தொழிலாளர்களுக்கு தாமதமின்றி உடனுக்குடன் ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் கரூர் மாவட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் கரூர் வட்டட்சியர் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 மாவட்டத் தலைவர் பி. பாலன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ராஜலிங்கம், செல்வம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாவட்டச் செயலாளர் ஆர். தங்கவேல், இந்திய கம்யூ. கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் ரத்தினம் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் திரளாக பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/07/விவசாயத்-தொழிலாளர்கள்-ஆர்ப்பாட்டம்-2785987.html
2785986 திருச்சி கரூர் வளர்ச்சி, மழைகால முன்னேற்பாடு பணிகள் ஆய்வு DIN DIN Saturday, October 7, 2017 08:37 AM +0530 கரூர் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் மழைகால முன்னேற்பாடு பணிகளை கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும்,  பூம்புகார் துறைமுக கழக நிறுவன மேலாண்மை இயக்குநருமான ப. அண்ணாமலை மற்றும் மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜ் ஆகியோர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர்.
குளித்தலை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை நேரில் ஆய்வு செய்து, கொசு மருந்து அடிக்கப்பட்டதை உறுதி செய்த அவர்கள், அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பொது சுகாதார வளாகம் அமைத்துத் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். மேலும் கரூர் ஊராட்சி ஒன்றியம் வேட்டமங்கலம் ஊராட்சி, குந்தாணிபாளையத்தில் சுகாதாரப் பணிகள் மற்றும் குடிநீர் விநியோகம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட அவர்கள்,  ஆத்தூர் நத்தமேட்டில் அமைக்கப்பட்ட குளத்தை பார்வையிட்டு மழைநீர் மூலம் சேகரிக்கப்பட்ட நீரின் இருப்பை பார்வையிட்டனர்.
தொடர்ந்து திருக்காம்புலியூர் ஊராட்சி மாயனூரில் அமைக்கப்பட்டுள்ள அம்மா பூங்காவை பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்,  வேளாண்மைத் துறை, நகராட்சி நிர்வாக ஊரக வளர்ச்சி முகமை,  கூட்டுறவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்தும், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
பின்னர் மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் ப. அண்ணாமலை கூறுகையில், எதிர்கால மழைக்காலங்களை கருத்தில் கொண்டு டெங்கு ஒழிப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அலுவலர்கள் சிறப்பாக பணியாற்றிட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் தங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும், உடைந்த தேங்காய் ஓடுகள்,  பழைய டயர்களை அப்புறப்படுத்தி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.
 ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ச. சூர்யபிரகாஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ். கவிதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/07/வளர்ச்சி-மழைகால-முன்னேற்பாடு-பணிகள்-ஆய்வு-2785986.html
2785985 திருச்சி கரூர் புனித தெரசம்மாள் ஆலயத்தில் தேர் பவனி விழா தொடக்கம் DIN DIN Saturday, October 7, 2017 08:37 AM +0530 கரூர் புனித தெரசம்மாள் ஆலயத்தில் தேர் பவனி விழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கரூர் வடக்கு பிரதட்சணம் சாலையில் உள்ள புனித தெரசம்மாள் ஆலயத்தில் தேர் பவனி திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. நிகழாண்டிற்கான விழாவையொட்டி வெள்ளிக்கிழமை ஆலயத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
முன்னதாக கொடி மந்திரிக்கப்பட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னர் கோயில் கொடிமரத்தில் ஆலய பங்குத்தந்தை  எம்.ராயப்பன் ஆலயக்கொடியேற்றினார். இந்நிகழ்ச்சியில் கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்றனர்.
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. விழாவின் முக்கியான தேர் பவனி வரும் 15-ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்று காலை கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ்அக்குவினாஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. பின்னர் புனித தெரசம்மாள் சொரூபம் தாங்கிய தேர் பவனி நடக்கிறது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/07/புனித-தெரசம்மாள்-ஆலயத்தில்-தேர்-பவனி-விழா-தொடக்கம்-2785985.html
2785203 திருச்சி கரூர் கோவக்குளம் அரசுப்பள்ளியில்  டெங்கு விழிப்புணர்வு முகாம் DIN DIN Friday, October 6, 2017 05:09 AM +0530 கோவக்குளம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
 கரூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையின் கிருஷ்ணராயபுரம் அரசு மருத்துவமனை சார்பில் கோவக்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.  
இதில் மாணவ, மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சல் பரவும் முறை, காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வழிமுறைகள்,  காய்ச்சல் வந்தால் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள்,  சுற்றுப்புறத்தூய்மையின் அவசியம், சுற்றுப்புறத்தில் தேங்கிய நீரில் உருவாகும் கொசுக்கள் ஆகிய குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மருத்துவமனையின் மருத்துவர் டி. சங்கீதா மற்றும் மருந்தாளுநர்கள்,  ஆய்வகநுட்புனர் ஆகியோர் விளக்கி கூறினர்.
தொடர்ந்து டெங்கு காய்ச்சல் குறித்த உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/06/கோவக்குளம்-அரசுப்பள்ளியில்--டெங்கு-விழிப்புணர்வு-முகாம்-2785203.html
2785202 திருச்சி கரூர் குளித்தலை மின்பகிர்மானங்களில் முறைகேடுகள் கண்டுபிடிப்பு DIN DIN Friday, October 6, 2017 05:09 AM +0530 குளித்தலை மின்பகிர்மானங்களில் கடந்த மாதம் நடத்தப்பட்ட திடீர் ஆய்வில் முறைகேடுகள் கண்டறியப்பட்டு,  அபராதம் வசூலிக்கப்பட்டது.
இதுதொடர்பாக கரூர் மின்பகிர்மான வட்டமேற்பார்வை பொறியாளர் ஸ்டாலின்பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
 கரூர் மின்பகிர்மான வட்டத்திற்குட்பட்ட குளித்தலை கோட்டம், குளித்தலை பிரிவு அலுவலக மின்பகிர்மானங்களில் கடந்த மாதம் 19-ஆம் தேதி அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது 620 தாழ்வழுத்த மின் இணைப்புகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 6 தாழ்வழுத்த மின் இணைப்புகளில் விதிமீறல் நடந்துள்ளது கண்டறியப்பட்டது.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து இழப்பீட்டுத்தொகையாக ரூ.33,375 வசூலிக்கப்பட்டது.
 மேலும் மின் திருட்டு குறித்து திருச்சி மின் திருட்டு தடுப்புக்குழு செயற்பொறியாளர்களை 944332851, 9443153111 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/06/குளித்தலை-மின்பகிர்மானங்களில்-முறைகேடுகள்-கண்டுபிடிப்பு-2785202.html
2785201 திருச்சி கரூர் புகழூரில் தடுப்பணை: முதல்வரின் அறிவிப்புக்கு வெற்றிலை விவசாயிகள் வரவேற்பு DIN DIN Friday, October 6, 2017 05:08 AM +0530 புகழூரில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணைக் கட்டப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு புகழூர் வட்டார வெற்றிலை விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கரூரில் புதன்கிழமை நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியிடம் போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர். விஜயபாஸ்கர் புகழூரில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டித்தரவேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதையடுத்து முதல்வரும் கரூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட புகழூரில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட மீண்டும் ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்படும்.  தொழில்நுட்ப சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டத்திற்கான மொத்த மதிப்பீட்டில் டிஎன்பிஎல் நிறுவனம் ரூ. 3 கோடி வழங்கும் என்றும் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு புகழூர் வட்டார வெற்றிலை விவசாயிகள் சங்கச் செயலாளர் க. ராமசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், இந்த திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இந்த திட்டம் தொடர்பாக பலமுறை எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் சட்டசபையில் பேசியுள்ளனர். இப்போது அதற்கு தீர்வு கிடைத்துள்ளது.  முதல்வரின் அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம். புகழூரில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டால், இப்பகுதியில் அதிகளவு விளையும் வெற்றிலை, வாழை விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கோடை காலங்களில் விவசாயம் மட்டுமின்றி,  குடிநீருக்கும் பஞ்சம் ஏற்படாது. ஏனெனில் தடுப்பணை கட்டப்படும்போது தண்ணீர் தேங்கி நீர்மட்டமும் உயரும். இதனால் தண்ணீர் பிரச்னை இருக்காது.  இந்த அணை கட்டப்பட்டால்,  வேட்டமங்கலம், நொய்யல், திருக்காடுதுறை, கோம்புபாளையம், நஞ்சைபுகழூர், புஞ்சைபுகழூர், தோட்டக்குறிச்சி உள்ளிட்ட ஊராட்சி, பேரூராட்சிக்குட்பட்ட ஆயிரக்கணக்கான கிராமங்களின் குடிநீர் பற்றாக்குறை தீரும். எனவே இந்த திட்டத்தை அறிவிப்போடு நிறுத்திவிடாமல் உடனே பணிகளை தொடங்க வேண்டும் என்றார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/06/புகழூரில்-தடுப்பணை-முதல்வரின்-அறிவிப்புக்கு-வெற்றிலை-விவசாயிகள்-வரவேற்பு-2785201.html
2785200 திருச்சி கரூர் கரூர் மாவட்டத்தில் காந்திஜெயந்திக்கு விடுமுறை அளிக்காத 40 நிறுவனங்கள் மீது நடவடிக்கை DIN DIN Friday, October 6, 2017 05:08 AM +0530 காந்திஜெயந்தி அன்று கரூர் மாவட்டத்தில் தொழிலாளர்களை பணியமர்த்திய 40 நிறுவனங்கள்மீது தொழிலாளர் நலத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
 இதுதொடர்பாக தொழிலாளர் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன்  வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரூர் தொழிலாளர் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் பெரியசாமி, குமரக்கண்ணன், ஜோதிமாணிக்கம் ஆகியோர் காந்திஜெயந்தி அன்று
மாவட்டத்தில் தொழில்நிறுவனங்களில் கூட்டாய்வு நடத்தினர்.
அப்போது அரசு விடுமுறை தினத்தில் தொழிலாளர்களை வேலை செய்ய அனுமதிக்க கோரும் படிவத்தை ஆய்வாளருக்கு அனுப்பாமல் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திய  நிறுவனங்களுக்கு மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்டப்படி 10 நிறுவனங்களை ஆய்வு செய்ததில் 3 முரண்பாடுகள் கண்டறியப்பட்டது.
இதுபோல 31 கடைகளை ஆய்வு செய்ததில் 16 முரண்பாடுகளும், 31 உணவகங்களில் ஆய்வுசெய்ததில் 21 முரண்பாடுகளும் கண்டறியப்பட்டு அந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/06/கரூர்-மாவட்டத்தில்-காந்திஜெயந்திக்கு-விடுமுறை-அளிக்காத40-நிறுவனங்கள்-மீது-நடவடிக்கை-2785200.html
2785199 திருச்சி கரூர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: புகைப்படக் கண்காட்சி DIN DIN Friday, October 6, 2017 05:08 AM +0530 கரூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா புகைப்படக் கண்காட்சி மற்றும் பல்துறை பணி விளக்க முகாம் அக். 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை பொதுமக்கள் சென்று பார்வையிடலாம் என மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கரூரில் புதன்கிழமை நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படக் கண்காட்சி மற்றும் பல்துறை பணி விளக்க முகாம் நடைபெற்றது.
விழாவில் பங்கேற்காத கிராமப்புற பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க கண்காட்சியைப் பார்வையிடும் வகையில் இந்த கண்காட்சி வரும் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  கரூர் மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு விடியோ வாகனம் வாயிலாக குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எம்ஜிஆர் நடித்த முழுநீள சிறப்பு திரைப்படங்கள் நாள்தோறும் காண்பிக்கப்பட உள்ளது. இந்த அரிய வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/06/எம்ஜிஆர்-நூற்றாண்டு-விழா-புகைப்படக்-கண்காட்சி-2785199.html
2785198 திருச்சி கரூர் அரவக்குறிச்சி வட்டத்தில் இன்று அம்மா திட்ட முகாம் DIN DIN Friday, October 6, 2017 05:07 AM +0530 கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டத்தில் வெள்ளிக்கிழமை(அக். 6) மற்றும் வரும் 13, 20, 27-ஆம் தேதிகளில் அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வருவாய்த்துறை சார்பில் அம்மா திட்டமுகாம் அரவக்குறிச்சி வட்டத்தில் வெள்ளிக்கிழமை மற்றும் வரும் 13, 20, 27-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. வெள்ளிக்கிழமை சின்னதாராபுரம் குறுவட்டத்திற்குட்பட்ட தும்பிவாடி கிராம சேவை மைய கட்டடத்திலும்,  13-ஆம் தேதி பள்ளபட்டி குறுவட்டத்திற்குட்பட்ட அம்மாபட்டி அங்கன்வாடி மைய கட்டடத்திலும்,  20-ஆம் தேதி கூடலூர் கீழ்பாகம் அணைப்புதூர் கிராம சேவை மைய கட்டடத்திலும், 27-ஆம் தேதி சேந்தமங்கலம் குரும்பப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் நடைபெற உள்ளது. முகாம் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் தலைமையில் நடைபெற உள்ளதால் பொதுமக்கள் தங்களின் கோரிக்கையை மனுக்களாக தெரிவித்து பயன்பெறலாம்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/06/அரவக்குறிச்சி-வட்டத்தில்-இன்று-அம்மா-திட்ட-முகாம்-2785198.html
2785197 திருச்சி கரூர் பெண் சாவில் மர்மம்: உறவினர்கள் சாலை மறியல் DIN DIN Friday, October 6, 2017 05:07 AM +0530 பாலவிடுதி அருகே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் பெண்ணின் சாவில் மர்மம் இருப்பதாகக்கூறி அவரது உறவினர்கள் வியாழக்கிழமை கரூர் அரசு மருத்துவமனை முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டம் பாலவிடுதி காவல்நிலையத்துக்குட்பட்ட செட்டியப்பட்டியைச் சேர்ந்தவர் சிவகுமார் (25).  கரூரில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் தொழிலாளியாக வேலைப்பார்த்து வருகிறார். இவரது மனைவி போதும்பொண்ணு (22). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இதுவரை அவர்களுக்கு குழந்தை இல்லையாம்.  இதுதொடர்பாக கணவன் - மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் போதும்பொண்ணு கடந்த 3-ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாராம். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் போதும்பொண்ணுவின் தந்தை ராசு மற்றும் அவரது உறவினர்கள் சிவகுமார் வீட்டுக்குச் சென்றுள்ளனர். அப்போது வீட்டில் சிவகுமார் இல்லையாம், மேலும் போதும்பொண்ணுவின் உடல் கீழே இறக்கி வைக்கப்பட்டிருந்ததாம். இதனால் தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாக ராசு பாலவிடுதி போலீஸில் புகார் செய்துள்ளார். போலீஸார் வழக்குப் பதிந்து போதும்பொண்ணுவின் சடலத்தை மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் வியாழக்கிழமை உடற்கூறு பரிசோதனைக்கு பின்னர்  சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி சடலத்தை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை முன் பழைய சேலம் பிரதான சாலையில்  அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த நகர காவல்நிலையத்தினர் மற்றும் கரூர் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சிவகுமாரிடம் விசாரணை நடத்தி வருகிறோம் எனக் கூறியதையடுத்து உறவினர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/06/பெண்-சாவில்-மர்மம்-உறவினர்கள்-சாலை-மறியல்-2785197.html
2785196 திருச்சி கரூர் மாரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் ஆலங்குடி,பாப்பான்விடுதி, ராசியமங்கலம், கீவாழைத்தார் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை DIN DIN Friday, October 6, 2017 05:07 AM +0530 கரூர் சந்தையில் வியாழக்கிழமை வாழைத்தார் ஏலம் விடப்பட்டதில் அவற்றின் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
 கரூர் காமராஜர் மார்க்கெட்டில் உள்ள வாழைக்காய் மண்டிகளுக்கு நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பாண்டமங்கலம், நன்செய்இடையார், பொத்தனூர்,  அணிச்சம்பாளையம்,  குப்புச்சிபாளையம், ஓலப்பாளையம்,  எல்லமேடு உள்ளிட்ட பகுதிகளிலும் இருந்தும்,  கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம், குளித்தலை, லாலாப்பேட்டை, மாயனூர், நெரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வாழைத்தார்கள் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
கடந்த மாதத்தை விட வியாழக்கிழமை சந்தைக்கு கொண்டு வரப்பட்ட வாழைத்தார்கள் விலை மிகவும் குறைந்து ஏலம் போனது. கடந்த மாதம் ஒரு தார் பூவன்பழம் ரூ.1000 வரை ஏலம் போனது. ஆனால் வியாழக்கிழமை ரூ. 450-க்கு ஏலம் விடப்பட்டது. இதேபோல கடந்த மாதம்  ரூ. 800-க்கு ஏலம் போன ரஸ்தாளி ரூ.400-க்கும்,  ரூ. 1200 வரை விற்கப்பட்ட கற்பூரவள்ளி ரூ. 500-க்கும்,  ரூ.650-க்கு ஏலம் போன மொந்தன் பழம் தற்போது ரூ. 400-க்கும், ரூ.750-க்கு விற்கப்பட்ட பச்சை நாடன் ரூ. 600-க்கும் ஏலம் போனது.
இதுதொடர்பாக வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி சின்னசாமி கூறுகையில்,  கடந்த மாதம் ஆயுத பூஜை மற்றும் புரட்டாசி திருவிழாவையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றதால் வாழைத்தாரின் தேவை அதிகரித்தது. இதனால் அவற்றின் விலை அதிகரித்து இருந்தது. ஆனால் தற்போது குறிப்பிடும்படியாக நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாததால் அவற்றின் விலையும் குறைந்துவிட்டது. ஏற்கெனவே உரச் செலவு, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாழைத்தார் அறுவடை செய்து அதனை சந்தைக்கு கொண்டு வரும் செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால் வாழை விவசாயிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறோம்.  உழைப்புக்கேற்ற ஊதியம் வாழை விவசாயத்தில் கிடைப்பதில்லை. எனவே தமிழக அரசு வாழைத்தாருக்கும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும், மேலும் ஜாம் உள்ளிட்ட பயன்பாட்டுக்கு கரூரில் வாழைத்தார் விற்பனைக்கூடம் அரசு சார்பில் ஏற்படுத்தினால் வாழை விவசாயிகள் பயன்பெறுவர் என்றார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/06/மாரிப்புப்-பணிகள்-நடைபெற-இருப்பதால்-இங்கிருந்து-மின்சாரம்-பெறும்-ஆலங்குடிபாப்பான்விடுதி-ராசியமங்கல-2785196.html
2784748 திருச்சி கரூர் விபத்தில் காயமடைந்த பள்ளி மாணவர் சாவு DIN DIN Thursday, October 5, 2017 08:29 AM +0530 பரமத்தி ஒன்றியம் தென்னிலை அருகே விபத்தில் காயமடைந்த பள்ளி மாணவர் புதன்கிழமை காலை இறந்தார்.
 க.பரமத்தி ஒன்றியம், தென்னிலை தெற்கு ஊராட்சிக்குட்பட்ட செஞ்சேரிவலசைச் சேர்ந்தவர் செல்லமுத்து மகன் ரிதீஸ் (14) .அப்பகுதியிலுள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்த இவர் கடந்த 28-ம் தேதி காலை க.பரமத்தியிலிருந்து தென்னிலைக்கு மொபெட்டில் வந்தபோது தென்னிலை பெட்ரோல் பங்க்  அருகே கரூர் நோக்கி வந்த கார் மோதி படுகாயமடைந்தார்.
இதையடுத்து  கோவை தனியார்  மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.  தென்னிலை போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/05/விபத்தில்-காயமடைந்த-பள்ளி-மாணவர்-சாவு-2784748.html
2784746 திருச்சி கரூர் கரூரில்  ஓய்வுபெற்றோர் சங்கக் கூட்டம் DIN DIN Thursday, October 5, 2017 08:28 AM +0530 கரூரில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது.    
தலைவர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். செயலாளர் ராமசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 10 ஆண்டுக்கு குறைவாக பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியம் வழங்க வேண்டும்.
7-வது ஊதியக்குழுவின் அறிக்கையை விரைந்து அமல்படுத்த தமிழக அரசை கேட்டுக்கொள்வது,  குடும்பப் பாதுகாப்பு நிதியை ரூ.1.50 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதுபோல குடும்ப ஓய்வூதியர்களுக்கு மருத்துவப் படியை ரூ.1000 என உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் திரளாகப் பங்கேற்றனர். பொதுச் செயலர் ஜி.சிவசங்கரன் வரவேற்றார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/05/கரூரில்--ஓய்வுபெற்றோர்-சங்கக்-கூட்டம்-2784746.html
2784745 திருச்சி கரூர் கரூர் மாவட்டத்துக்கு முதல்வர் அறிவித்த புதிய திட்டங்கள் DIN DIN Thursday, October 5, 2017 08:28 AM +0530 கரூரில் புதன்கிழமை நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கரூர் மாவட்டத்துக்கான புதிய திட்டங்களை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தார்.
விழாவில் முதல்வர் பேசுகையில், மாயனூர் காவிரிஆற்றின் தென்கரை,  கட்டளை மேட்டுவாய்க்கால் உள்ள பகுதியில் பழைய பாலம் அருகே ரூ. 7 கோடியில் புதிய பாலம் கட்டப்படும்.  சின்னதாராபுரம் அருகே அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டித் தரப்படும்.  தாந்தோணி ஒன்றியத்தில் 64,350 பேர் பயன்பெறும் வகையில் புதிய காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டம் அடுத்த ஆண்டுக்குள் நடைமுறைக்கு வந்துவிடும்.  
பசுபதிபாளையம் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதிகள் அதிகளவில் உள்ளதால் அக்காவல் நிலையத்தை இரண்டாகப் பிரித்து புதிதாக தாந்தோணிமலையில் காவல் நிலையம் உருவாக்கப்படும். கரூர் ரயில் நிலையத்தில் இருந்து சேலம் புறவழிச்சாலைக்கு புதிதாக அணுகு சாலை அமைக்கப்படும்.  குளித்தலையில் புதிய பேருந்து நிலையம் கட்ட பரிசீலிக்கப்படும். கரூரில் கோவை-ஈரோடு சந்திப்பு சாலை பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு அப்பகுதியில் புதிதாக மேம்பாலம் அமைக்கப்படும்.  மேலும் வைரமடை-தொப்பம்பட்டி இடையே புதிய மேம்பாலம் மற்றும் மணப்பாறை-குஜிலியம்பாறை சாலையில் புதிய உயர்மட்டப்பாலம்,  புகழூரில் காவிரியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ஆய்வு செய்யப்படும் என்றார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/05/கரூர்-மாவட்டத்துக்கு-முதல்வர்-அறிவித்த-புதிய-திட்டங்கள்-2784745.html
2784743 திருச்சி கரூர் திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவிப்பு DIN DIN Thursday, October 5, 2017 08:28 AM +0530 சுதந்திரப் போராட்டத் தியாகி திருப்பூர் குமரனின் 112-வது பிறந்த நாளை முன்னிட்டு கரூரில் அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கரூர் நகர காவல் நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு இனாம் கரூர் நகர காங்கிரஸ் தலைவர் ஆர். ஸ்டீபன்பாபு தலைமையில் அக்கட்சியைச் சேர்ந்த சுரேகாபாலச்சந்தர், பசுவை அசோக் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/05/திருப்பூர்-குமரன்-சிலைக்கு-மாலை-அணிவிப்பு-2784743.html
2784741 திருச்சி கரூர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் ரூ.88.48 கோடியில் உதவி: முதல்வர் வழங்கினார் DIN DIN Thursday, October 5, 2017 08:27 AM +0530 கரூரில் புதன்கிழமை நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் 22,282 பயனாளிகளுக்கு ரூ. 88.48 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வழங்கினார்.
வருவாய்த் துறை சார்பில் 5,975 பேருக்கு ரூ. 34.24 கோடியிலும், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் 2639 பேருக்கு  ரூ. 9.76 கோடியிலும்,  மகளிர் திட்டம் சார்பில் 2,000 பேருக்கு ரூ. 6.59 கோடியிலும்,  தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் 720 பேருக்கு ரூ. 15.12 கோடியிலும் , பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் 1000 பேருக்கு ரூ. 2.4 கோடியிலும்,  நில அளவைத் துறை சார்பில் 93 பேருக்கு ஆன்லைன் உட்பிரிவு பட்டா என பல்வேறு துறைகள் சார்பில் மொத்தம் 22,282 பயனாளிகளுக்கு ரூ. 88.48 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சாதனைத் திட்டங்களைப் பட்டியலிட்ட முதல்வர்:
முன்னதாக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பேசும்போது,  கரூர் மாவட்டத்துக்கு கடந்த
ஆறு ஆண்டுகளில் அளிக்கப்பட்ட சாதனைத் திட்டங்களை பட்டியலிட்டார்.அவர் பேசுகையில்,  கரூர் மாவட்டத்தில் ரூ. 61.80 கோடியில் 37,486 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் கிராம மாணவர்களுக்கும் விசால  அறிவு கிடைக்கும் என்ற உயரிய நோக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.  இதேபோல ரூ. 12.97 கோடியில் 37,694 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களும், , முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 25,653 விவசாயிகளுக்கு ரூ. 15.7 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டது.  ஏழை எளிய குடும்பங்களுக்கு ரூ.87.4 கோடியில்  சூரிய மின்சக்தியுடன் கூடிய 5,232 பசுமை வீடுகள் கட்டப்பட்டுள்ளன.  தாய் திட்டத்தில் 157 ஊராட்சிகளில் 2,174 குக்கிராமங்களில் ரூ. 65.27 கோடியில் 3,849 பணிகள் நடந்துள்ளன.
 சிறு, குறு விவசாயிகளின் ரூ.129.28 கோடி கடன் தள்ளுபடி,  மகசூல் பாதித்த 34,058 விவசாயிகளுக்கு இடுபொருள் மானியமாக ரூ.14.78 கோடி வழங்கப்பட்டுள்ளது. இன்னும் எத்தனையோ திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார் முதல்வர்.
விழாவில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கரூர் மாவட்ட அவைத் தலைவர் ஏ.ஆர். காளியப்பன்,  மாவட்டத் துணைச் செயலர் பசுவை சிவசாமி,  நகரச் செயலர் வை. நெடுஞ்செழியன்,  முன்னாள் கரூர் ஒன்றியக் குழுத் தலைவர் எஸ். திருவிகா,  மாவட்ட இளைஞரணிச் செயலர் விசிகே. ஜெயராஜ்,  இளம்பெண், இளைஞர் பாசறைச் செயலர் விவி. செந்தில்நாதன், கரூர் ஒன்றியச் செயலர் கமலக்கண்ணன்,  முன்னாள் மாவட்ட மாணவரணி செயலர் தானேஷ் என்கிற முத்துக்குமார், நகர இளைஞரணிச் செயலர் சேரன்பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் திரளாகப் பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/05/எம்ஜிஆர்-நூற்றாண்டு-விழாவில்-ரூ8848-கோடியில்-உதவி-முதல்வர்-வழங்கினார்-2784741.html
2784051 திருச்சி கரூர் நொய்யல் அருகே சூதாடிய 5 பேர் கைது DIN DIN Wednesday, October 4, 2017 08:38 AM +0530 நொய்யல் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே குறுக்குச்சாலை பகுதியில் ஒரு தோட்டத்தில் சிலர் பணம் வைத்துச் சூதாடுவதாக வேலாயுதம்பாளையம் போலீஸாருக்கு  திங்கள்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸார் அங்கு சோதனையிட்டபோது, பணம் வைத்து சூதாடிய அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (30), முருகேசன் (24), ஜீவா (50), முதல்வன் (37), கணேசன் (57) ஆகிய 5 பேரையும்  கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்த சூதாட்டப் பணம் ரூ. 1800-ஐயும் பறிமுதல் செய்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/04/நொய்யல்-அருகே-சூதாடிய-5-பேர்-கைது-2784051.html
2784050 திருச்சி கரூர் காணியாளம்பட்டியில் அக்டோபர் 5 மின் தடை DIN DIN Wednesday, October 4, 2017 08:37 AM +0530 வரும் 5-ம் தேதி காணியாளம்பட்டி பகுதியில் மின்சாரம் நிறுத்தம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக கரூர் மின்வாரிய  செயற்பொறியாளர்(இயக்குதல், காத்தலும்) கு. சிவக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரூர் மின்வாரிய கோட்டத்திற்குட்பட்ட காணியாளம்பட்டி துணை மின் நிலையத்தில் வரும் 5-ம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் காணியாளம்பட்டி, முத்துரெங்கம்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, வீரியப்பட்டி, சோனம்பட்டி, துளசிக்கொடும்பு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/04/காணியாளம்பட்டியில்-அக்டோபர்-5-மின்-தடை-2784050.html
2784049 திருச்சி கரூர் பாதுகாப்பு பணியில் 4500 போலீஸார் DIN DIN Wednesday, October 4, 2017 08:37 AM +0530 முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி புதன்கிழமை கரூர் வருவதையொட்டி பாதுகாப்பு பணியில் 4500 போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
கரூரில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி,  துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள்,  எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
விழாவையொட்டி கரூரில் டிஐஜி விஜயகுமார் தலைமையில் 3 ஐஜிக்கள், 11 டிஐஜிக்கள், 14 எஸ்பிக்கள் உள்ளிட்ட 4500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/04/பாதுகாப்பு-பணியில்-4500-போலீஸார்-2784049.html
2784048 திருச்சி கரூர் ஆசிரியர் கூட்டணியினர் உள்ளிருப்புப் போராட்டம் DIN DIN Wednesday, October 4, 2017 08:36 AM +0530 மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்திற்குள் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியினர் செவ்வாய்க்கிழமை மாலை முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் இரா. ரஞ்சித்குமார், இரா.வெங்கடேஷ் ஆகியோர்மீது தாந்தோணி கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் இந்திரா மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரிடம் அளித்த ஏதோ புகாரின்பேரில் ஆசிரியர்கள் இருவரும் ஜூலை 23-ல் தாற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனராம். இதையடுத்து பணிநீக்கத்துக்கான காரணம் மற்றும் விளக்கம் கேட்டு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியினர் பலமுறை மாவட்ட தொடக்க கல்வி அலுவலரை அணுகினராம். மேலும் இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியினர் தொடக்கக் கல்வி இயக்குநரிடமும் புகார் தெரிவித்தார்களாம். இதையடுத்து இரு ஆசிரியர்களையும் மீண்டும் பணியில் சேர்க்குமாறு மாவட்ட தொடக்க கல்வி அலுவலரிடம் இயக்குநர் கூறியதாகக் கூறப்படுகிறது.
ஆனால் இதுவரை இருவரையும் பணியில் சேர்க்காததால் ஆத்திரமடைந்த தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியினர் மாநிலத் தலைவர் முத்துசாமி தலைமையில் பொதுச் செயலர் செல்வராஜ், மாநில இளைஞரணி செயலர் நாகராஜ், மாநில துணைத் தலைவர் எம்ஏ. ராஜா,  மாவட்டத் தலைவர் ரகுபதி, செயலர் பெரியசாமி உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை மாலை ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் செயல்படும் மாவட்டத் தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத்தில் உள்ளிருப்புப் போரட்டத்தில் ஈடுபட்டனர்.  மாவட்டத் தொடக்க கல்வி அலுவலர் உரிய தீர்வு கூறாதவரை இரவு முழுவதும் போராட்டம் தொடரும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/04/ஆசிரியர்-கூட்டணியினர்-உள்ளிருப்புப்-போராட்டம்-2784048.html
2784047 திருச்சி கரூர் குடிநீர் பிரச்னை: மறியல் ஒத்திவைப்பு DIN DIN Wednesday, October 4, 2017 08:36 AM +0530 க.பரமத்தி ஊராட்சிக்குட்பட்ட அன்னை நகரில் குடிநீர் விநியோகிக்காத ஊராட்சியைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை  மறியல் செய்ய முயன்றனர்.
க.பரமத்தி ஊராட்சிக்குட்பட்ட அன்னைநகரில் சுமார் 75-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் அரசு ஊழியர்கள் வசிக்கும் பகுதியில் தினசரி ஊராட்சி  நிர்வாகம் தண்ணீர் விநியோகித்து வந்தது.  இந்நிலையில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வராததால் அவதிப்பட்டு வந்த அப்பகுதி மக்கள்  செவ்வாய்க்கிழமை காலை ஊராட்சியை கண்டித்து திடீரென மறியல் செய்ய முயன்றனர்.
இதையடுத்து அங்கு வந்த போஸீஸார் தற்போது மறியல் வேண்டாம். உடனடியாக சம்மந்தப்பட்ட துறையினரிடம் பேசி தண்ணீர் விநியோகிக்க ஏற்பாடு செய்வதாகக் கூறியதால்   போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/04/குடிநீர்-பிரச்னை-மறியல்-ஒத்திவைப்பு-2784047.html
2784046 திருச்சி கரூர் கரூர் மாவட்டத்தில் 8,54,830 வாக்காளர்கள் DIN DIN Wednesday, October 4, 2017 08:36 AM +0530 கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜ் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். இதன்படி கரூர் மாவட்டத்தில் மொத்தம் 8,54,830 வாக்காளர்கள் உள்ளனர்.
அனைத்துக்கட்சி பிரமுகர்கள் முன்னிலையில்  வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜ் கூறுகையில்,   இந்தியத் தேர்தல் ஆணைய உத்தரவின்படி கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம்(தனி), குளித்தலை ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 2018-ம் ஆண்டுக்கான புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல்  வெளியிடப்பட்டு கரூர், குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி அமைவிடங்கள் ஆகியவற்றில் பொதுமக்களின் பார்வைக்காக  3-ம்தேதி முதல் 31-ம் தேதி வரை வைக்கப்பட உள்ளன.
மேலும் வரும் 7-ம் தேதி மற்றும் 21-ம் தேதி நடைபெறவுள்ள சிறப்பு கிராமசபை கூட்டங்களிலும் வாக்காளர் பட்டியல்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.  வரும் 8-ம் தேதி, 22-ம் தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.  
தற்போது வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி அரவக்குறிச்சி தொகுதியில் 98,221 ஆண்களும், 1,0430 பெண்களும் என 2,03151 வாக்காளர்களும், கரூர் தொகுதியில் 1,11,342  ஆண்கள், 1,21,740  பெண்கள், இதரர் 2 என மொத்தம் 2,33,084 வாக்காளர்களும், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 1,00,420 ஆண்கள், 1,04,878 பெண்கள் மற்றும் இதரர் 42 பேர் என மொத்தம் 2,05,340 வாக்காளர்களும்,  குளித்தலை தொகுதியில் 1,04,582 ஆண்கள், 1,08,670 பெண்கள், இதரர் 3 என மொத்தம் 2,13,255 என மொத்தம் 4 தொகுதிகளிலும் 4,14,565 ஆண்கள், 4,40,218 பெண்கள் மற்றும் இதரர் 47 என மொத்தம் 8,54, 830 வாக்காளர்கள் உள்ளனர். பொதுமக்கள் வாக்காளர்பட்டியலை பார்வையிட்டு அதில் தங்களது பெயர், புகைப்படம் மற்றும் இதரவு பதிவுகள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். மேலும் 1.1.2018 அன்று 18 வயது நிறைவடைந்த வாக்காளர்களாக பதிவு செய்யாத தகுதியுள்ள அனைவரும் வாக்காளர்களாக பதிவுசெய்துகொள்ளலாம்.  மேலும் வரும் 3-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய மற்றும் இடமாற்றம் செய்ய அனைத்து வேலைநாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அமைவிட அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர் ஆகியோரிடம் மனுக்களை அளிக்கலாம் என்றார்.
நிகழ்ச்சியில் வருவாய்க் கோட்டாட்சியர்கள் சரவணமூர்த்தி (கரூர்), விமல்ராஜ்(குளித்தலை), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சிவப்பிரியா, நகராட்சி ஆணையர் அசோக்குமார், அனைத்து வட்டாட்சியர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/04/கரூர்-மாவட்டத்தில்-854830-வாக்காளர்கள்-2784046.html
2783532 திருச்சி கரூர் 157 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் DIN DIN Tuesday, October 3, 2017 08:52 AM +0530 காந்தி ஜயந்தியை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பவித்திரம் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜ் பங்கேற்று பேசுகையில், தனி நபர் கழிப்பறை இல்லாதோர் விவரப்பட்டியல் இக்கூட்டத்தில் தயாரிக்கப்பட வேண்டும்.  தனி நபர் இல்ல கழிப்பறை கட்ட தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு ரூ.12,000 மானியம் அரசு திட்டங்கள் மூலம் வழங்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி தங்களது ஊராட்சியை திறந்தவெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சியாக மாற்ற அனைவரும் முன் வரவேண்டும்.
 மேலும் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். ஊரக பகுதிகளில் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுத்து கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும். பவித்திரம் ஊராட்சியில் 29 குக்கிராமங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கணக்கெடுப்பு செய்து அரசின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் பணிகள் நடைபெறும் என்றார்.
 மேலும் பருவமழை தொடர உள்ளதால் முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ள விவரங்கள், அந்தியோதையா இயக்கம், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுசெலவினம்,  ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்களின் பராமரிப்பு மற்றும் அவற்றின் செயல்பாடு குறித்தும், திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகள் நடைபெற்று வருவது குறித்தும் கேட்டறிந்தார்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா,  வேளாண் இணை இயக்குநர் பாஸ்கரன்,  ஊராட்சிகள் உதவி இயக்குநர் மோகன்ராஜ்,  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தண்டபாணி, ஞானசம்பந்தம், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் பாலசுப்ரமணியன், வட்டாட்சியர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/03/157-ஊராட்சிகளில்-சிறப்பு-கிராம-சபைக்-கூட்டம்-2783532.html
2783531 திருச்சி கரூர் சாலையில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு DIN DIN Tuesday, October 3, 2017 08:51 AM +0530 கரூர் - திண்டுக்கல் சாலையில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் உடனே குப்பைகளை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 கரூர் திண்டுக்கல் சாலையில் உள்ள தாந்தோணிமலையில் கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் புரட்டாசி தேர்த்திருவிழா ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக ஏராளமானோர் அன்னதானம் வழங்கினர்.  இந்த அன்னதானம் பாக்கு மட்டையில் வழங்கப்பட்டது. இந்த பாக்கு தட்டுகள் அனைத்தும் கோயில் முன் கரூர் -திண்டுக்கல் சாலையில் ஓரிடத்தில் குப்பையாக குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவ்வழியே நடமாட முடியாமல் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.  மேலும் குப்பையில் இருந்து வெளியேறும் துர்நாற்றத்தால் சுகாதார கேடு ஏற்படும் அபாயம்  உள்ளது.  எனவே உடனே அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை விரைந்து அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/03/சாலையில்-குவிந்து-கிடக்கும்-குப்பைகளால்-சுகாதார-சீர்கேடு-2783531.html
2783530 திருச்சி கரூர் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரி திமுகவினர் மனு DIN DIN Tuesday, October 3, 2017 08:51 AM +0530 சின்னதாராபுரத்தில் செயல்பட்டு வந்த துணை சார் பதிவாளர் அலுவலகத்தை அரவக்குறிச்சிக்கு மாற்றும் எண்ணத்தை அரசு கை விடக் கோரி க.பரமத்தி ஒன்றிய தி.மு.க சார்பில் வரும் 4 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு சின்னதாராபுரம் காவல் நி லையத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
  க .பரமத்தி ஒன்றியத்தில் உள்ள 30 ஊராட்சிகளுக்கு சின்னதாராபுரத்தில்  துணை சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் அந்தந்த ஒன்றியத்தை சேர்ந்த மக்கள் பயன்படும் வகையில் கடந்த 15 ஆண்டு காலமாக செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தை அரவக்குறிச்சிக்கு மாற்றப்போவதாக வந்த தகவலையடுத்து, அந்த திட்டத்தை அரசு  கைவிடக் கோரி க.பரமத்தி ஒன்றிய தி.மு.க சார்பாக ஒன்றிய செயலாளர் கே.கருணாநிதி தலைமையில் வரும் 4 ஆம் தேதி அனைத்து கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு சின்னதாராபுரம் காவல் நிலையத்தில் மனு அளித்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/03/ஆர்ப்பாட்டத்துக்கு-அனுமதி-கோரி-திமுகவினர்-மனு-2783530.html
2783529 திருச்சி கரூர் பூரண மதுவிலக்கு அமல்படுத்த சமத்துவ மக்கள் கழகம் வலியுறுத்தல் DIN DIN Tuesday, October 3, 2017 08:51 AM +0530 தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என சமத்துவ மக்கள் கழகம் வலியுறுத்தியுள்ளது.
 கரூரில் அக்கட்சியின் மாவட்ட செயற்குழுக்கூட்டம் மாவட்டச் செயலாளர் எம். கோபாலகிருஷ்ணன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அவைத் தலைவர் எஸ். செல்வம்,  பொருளாளர் எஸ். ஹரிகரன்,  மாவட்ட துணைச் செயலாளர் சத்தியராஜ்,  இளைஞரணி செயலாளர் வெங்கடேஷ்,  மாணவர் அணி செயலாளர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் காமராஜரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
 தொடர்ந்து கூட்டத்தில் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு முழு விலக்கு அளிக்க மத்திய அரசு முன்வரவேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வி வியாபாரமாவதை தடுக்க வேண்டும். வேகமாகப் பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுத்து, உயிரிழப்புகள் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு  கொண்டு வரவேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்திட வேண்டும். விவசாயிகளின் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். கரூரில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.  கரூர் நகர் பகுதியில் உள்ள சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நகரச் செயலாளர் டி. மயில்சாமி,  நகரத் தலைவர் பாபு, தாந்தோன்றி நகரச் செயலாளர் வேலுமணி, மாவட்ட பிரதிநிதி நாகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/oct/03/பூரண-மதுவிலக்கு-அமல்படுத்த-சமத்துவ-மக்கள்-கழகம்-வலியுறுத்தல்-2783529.html