Dinamani - தஞ்சாவூர் - http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2961760 திருச்சி தஞ்சாவூர் பாபநாசம் அருகே கிணற்றில் விழுந்த 2 காட்டுப் பன்றிகள் மீட்பு DIN DIN Tuesday, July 17, 2018 08:46 AM +0530 பாபநாசம் அருகே திங்கள்கிழமை கிணற்றில் விழுந்த 2 காட்டுப் பன்றிகளை வனத்துறையினர் உயிருடன் மீட்டனர்.
பாபநாசம்அருகே ரெகுந்தபுரம் ஊராட்சி அக்கரை பகுதியை சேர்ந்த சீனிவாசன் மனைவி செல்லப் பாப்பா. இவருக்கு சொந்தமான  நிலத்தில் சுமார் 10 அடி ஆழம் உள்ள கிணறு உள்ளது. இந்த கிணற்றில் ஞாயிற்றுக்கிழமை இரவு இரண்டு காட்டுப் பன்றிகள் தவறி விழுந்தன.  திங்கள்கிழமை காலை அந்த பகுதிக்கு சென்ற செல்லப் பாப்பா கிணற்றில் விழுந்து கிடந்த காட்டு பன்றிகளை பார்த்துவிட்டு,  ரெகுநாதபுரம் கிராம நிர்வாக அலுவலர் சுகந்திக்கு தகவல் கொடுத்தார். அவர் அளித்த தகவலின்பேரில்,  சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் கிணற்றில் விழுந்து கிடந்த இரண்டு காட்டு பன்றிகளையும் உயிருடன் மீட்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/17/பாபநாசம்-அருகே-கிணற்றில்-விழுந்த-2-காட்டுப்-பன்றிகள்-மீட்பு-2961760.html
2961759 திருச்சி தஞ்சாவூர் பூண்டி பேராலயத்தில் ஆயர்கள் கூட்டம் தொடக்கம் DIN DIN Tuesday, July 17, 2018 08:46 AM +0530 தஞ்சாவூர் மாவட்டம், பூண்டி மாதா பேராலய தியான மையத்தில் தமிழக ஆயர்களின் ஆண்டுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இக்கூட்டத்தில் தமிழக ஆயர்களின் தலைவர் பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் 23 ஆயர்கள் மற்றும் குருக்கள் பங்கேற்றுள்ளனர். இதில், கூட்டுப் பாடல் திருப்பலி நடைபெற்றது. இதில், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு ஆசி பெற்றனர். 
தொடர்ந்து ஜூலை 19-ம் தேதி வரை நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் தமிழக ஆன்மிக, அரசியல் பொருளாதார, சுற்றுச்சூழல், மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகள் பற்றி விவாதித்து முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/17/பூண்டி-பேராலயத்தில்-ஆயர்கள்-கூட்டம்-தொடக்கம்-2961759.html
2961758 திருச்சி தஞ்சாவூர் "மேட்டூர் அணை நீர் கடலில் கலக்க அனுமதிக்கக் கூடாது' DIN DIN Tuesday, July 17, 2018 08:45 AM +0530 மேட்டூர் அணையில் இருந்து ஜூலை 19-ஆம் தேதி முதல் திறக்கப்படும் காவிரி நீர்,  கடலில் வீணாகக் கலப்பதை அரசு அனுமதிக்கக் கூடாது என விவசாய சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
இதுகுறித்து தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கச் செயலர் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் தெரிவித்தது:
காவிரி நீரைத் தமிழகம் கடலில் கலக்கவிட்டு, வீணாக்குகிறது என்ற வாதத்தைக் கர்நாடக அரசு ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறது. இதை உச்ச நீதிமன்றமும் கவனத்தில் எடுத்துக் கொள்கிறது. எனவே, மேட்டூர் அணையிலிருந்து ஜூலை 19-ஆம் தேதி முதல் திறக்கப்படும் தண்ணீரை எக்காரணம் கொண்டும் கொள்ளிடத்தில்விட்டு கடலில் கலக்க அனுமதிக்கக்கூடாது. கொள்ளிடத்தில் வினாடிக்கு 1,000 கன அடிக்கு மேல் தண்ணீர் விடக் கூடாது.
மாறாக,  முதன்மை ஆறுகளான காவிரி,  வெண்ணாறு, கல்லணைக் கால்வாயில் தண்ணீரைவிட வேண்டும். மேலும், கிளை ஆறுகள், வாய்க்கால்களில் தண்ணீரை விட்டு ஏரி, குளங்களை நிரப்ப வேண்டும். இதைச் செய்யாவிட்டால்,  நீர் மேலாண்மையை ஒட்டுமொத்தமாகச் செய்யத் தவறிவிட்டோம் என்ற நிலை உருவாகும். குடிமராமத்துப் பணியை ஜூலை 19-ஆம் தேதிக்குப் பிறகு நிறுத்தவேண்டும். அதன் பிறகு மேற்கொள்ளப்பட்டால், முறைகேடுகள் நிகழ வாய்ப்புள்ளது என்றார் விமல்நாதன்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) மாவட்டச் செயலர் சாமி. நடராஜன் தெரிவித்தது: மேட்டூர் அணைக்குத் தண்ணீர் கூடுதலாக வருவதால், அணையைத் திறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், டெல்டா மாவட்டங்களில் ஒரு போக சாகுபடியைப் பொருத்தவரை ஆகஸ்ட் கடைசி வாரத்தில்தான் தொடங்குவது வழக்கம். எனவே, ஜூலை 19-ம் தேதி முதல் திறக்கப்படும் தண்ணீரை டெல்டா மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்களில் நிரப்புவதற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். ஆனால், இப்போதுள்ள நிலைமையில் பெரும்பாலான ஏரி, குளங்களுக்குத் தண்ணீர் செல்லும் அளவுக்குத் தூர் வாரப்படாமல் உள்ளது. எனவே, 5 நாட்களுக்குள் தூர் வாரும் பணியை மேற்கொண்டு முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் தண்ணீர் வீணாகக் கடலில் கலந்து விடும் என்றார் நடராஜன்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/17/மேட்டூர்-அணை-நீர்-கடலில்-கலக்க-அனுமதிக்கக்-கூடாது-2961758.html
2961756 திருச்சி தஞ்சாவூர் தஞ்சையில் 18, 19-இல் குடிநீர் விநியோகம் இருக்காது DIN DIN Tuesday, July 17, 2018 08:45 AM +0530 தஞ்சாவூரில் ஜூலை 18, 19-ம் தேதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என மாநகராட்சி ஆணையர் ப. காளிமுத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூர் மாநகராட்சி குடிநீர் வழங்கல் பணியில் வெண்ணாறு ஆற்றுப் படுகையில் உள்ள பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதைச் சரி செய்யும் பணி நடைபெறவுள்ளது. எனவே, இம்மாநகராட்சிக்கு உள்பட்ட அனைத்து வார்டுகளிலும் ஜூலை 18, 19-ம் தேதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது. பொதுமக்கள் தேவையான அளவுக் குடிநீரைச் சேமித்து வைத்துக் கொண்டு,  சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/17/தஞ்சையில்-18-19-இல்-குடிநீர்-விநியோகம்-இருக்காது-2961756.html
2961755 திருச்சி தஞ்சாவூர் சாலை விபத்தில் மெக்கானிக் சாவு DIN DIN Tuesday, July 17, 2018 08:45 AM +0530 ஒரத்தநாடு வட்டம், அருமளை கீழத்தெருவை சேர்ந்த முருகேசன் மகன் சக்திவேல் (16). இவர் செல்லம்பட்டியில் உள்ள ஒரு இரு சக்கர வாகன மெக்கானிக் கடையில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். 
இந்நிலையில்,  கடந்த 14ஆம் தேதி இரவு வேலை முடிந்து வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். செல்லம்பட்டி பாலம் அருகே சென்றபோது வாகனத்தில் இருந்து எதிர்பாரதவிதமாக நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். 
இதில் பலத்த காயமடைந்த சக்திவேல் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து ஒரத்தநாடு உதவி காவல் ஆய்வாளர் பாரதிதாசன் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/17/சாலை-விபத்தில்-மெக்கானிக்-சாவு-2961755.html
2961753 திருச்சி தஞ்சாவூர் மாணவருக்கு கொலை மிரட்டல்: மூன்று பேர் கைது DIN DIN Tuesday, July 17, 2018 08:45 AM +0530 பாபநாசம் அருகே பெருமாங்குடி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் தேவநேசன் (19). இவர் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கும் பாபநாசம் காப்பன் தெருவை சேர்ந்த விஸ்வநாதன்(24), அருண்ராஜ் (24), ராகுல் (21) உள்ளிட்ட 7 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்,  விஸ்வநாதன் உள்ளிட்ட 7 பேரும் தேவநேசன்  வீட்டிற்கு சென்று அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கினார்களாம். 
இதுகுறித்து தேவநேசன் அளித்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸார் வழக்குப் பதிந்து விஸ்வநாதன், அருண்ராஜ், ராகுல் உள்ளிட்ட மூவரையும் கைது செய்தனர்.இதில் தொடர்புடைய நான்கு பேரை தேடி வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/17/மாணவருக்கு-கொலை-மிரட்டல்-மூன்று-பேர்-கைது-2961753.html
2961751 திருச்சி தஞ்சாவூர் பழைய இரும்பு  கிடங்கில் தீ விபத்து DIN DIN Tuesday, July 17, 2018 08:44 AM +0530 தஞ்சாவூரில் பழைய இரும்புக் கிடங்கில் திங்கள்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தஞ்சாவூர் சீனிவாசபுரம் செவ்வப்பநாயக்கன்வாரி நடுக்குளம் பகுதியில் கணேசன் என்பவர் பழைய இரும்புக் கிடங்கு வைத்துள்ளார். 
இக்கிடங்கில் திங்கள்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கிடங்கு மேல் செல்லும் மின் கம்பி பலத்தக் காற்று வீசியதன் காரணமாக அறுந்து விழுந்ததால் தீ பற்றியதாகக் கூறப்படுகிறது.
இதனால், கிடங்கில் இருந்த ஏராளமான பழைய இரும்புப் பொருட்கள், பேப்பர்கள் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன. தகவலறிந்த தஞ்சாவூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைத்தனர். மேலும், அப்பகுதியில் மின் இணைப்பை மின் வாரியத்தினர் தற்காலிகமாகத் துண்டித்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/17/பழைய-இரும்பு--கிடங்கில்-தீ-விபத்து-2961751.html
2961749 திருச்சி தஞ்சாவூர் கும்பகோணத்தில்  ஆகஸ்ட் 7-இல் வாகனங்கள் ஓடாது DIN DIN Tuesday, July 17, 2018 08:44 AM +0530 கும்பகோணத்தில் ஆகஸ்ட் 7 ஆம் தேதி எவ்வித வாகனங்களையும் இயக்க கூடாது என போக்குவரத்துத் தொழிலாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.
கும்பகோணம் சிஐடியூ அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கும்பகோணம் பகுதி சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சங்க சிறப்பு பேரவைக் கூட்டத்தில் மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, கூட்டத்துக்கு நகரத் தலைவர் ஆர். அய்யப்பன் தலைமை வகித்தார்.
மாவட்ட தலைவர் ம. கண்ணன், மாநில குழு உறுப்பினர் பி. பார்த்தசாரதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். 
பேரவையில், கெளரவத் தலைவர் கே. செந்தில்குமார், தலைவராக கே. ரவி. செயலாளராக கே. குருமூர்த்தி, பொருளாளராக ஆர். அய்யப்பன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: ஆகஸ்ட் 7 ஆம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய வேலைநிறுத்தத்தில் கும்பகோணம் பகுதியில் அனைத்து வாகனங்களையும் ஓட்டாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/17/கும்பகோணத்தில்--ஆகஸ்ட்-7-இல்-வாகனங்கள்-ஓடாது-2961749.html
2961748 திருச்சி தஞ்சாவூர் மாநிலப் போட்டிகளில் வென்ற மாற்றுத் திறனாளிகளுக்குப் பாராட்டு DIN DIN Tuesday, July 17, 2018 08:44 AM +0530 தஞ்சாவூர் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் ந. சக்திவேல் பாராட்டினார்.
மதுரையில் அண்மையில் மாநில அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான குழு மற்றும் தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி பள்ளி மாணவ, மாணவிகள் குழுப் போட்டிகளில் வெற்றி பெற்றனர். இவர்களைக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பாராட்டினார். மேலும், கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித் தொகை, குடும்ப அட்டை, கல்விக் கடன் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 360 மனுக்கள் வரப்பெற்றன. செளதி அரேபியாவில் பணியின்போது இறந்தவரின் மனைவிக்குச் சேர வேண்டிய சட்டப்படியான நிலுவைத் தொகை ரூ. 17,271-க்கான காசோலை வழங்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சு. ரவீந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/17/மாநிலப்-போட்டிகளில்-வென்ற-மாற்றுத்-திறனாளிகளுக்குப்-பாராட்டு-2961748.html
2961746 திருச்சி தஞ்சாவூர் அதிக மதிப்பெண்: மாணவர்களுக்கு பாராட்டு DIN DIN Tuesday, July 17, 2018 08:43 AM +0530 தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் தஞ்சை மாவட்ட கிளை சார்பில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட தலைவர் ரகுநாதன் தலைமை வகித்தார்.
இதில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளில் 90 சதவீதத்திற்கு அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற 75 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், கேடயமும் வழங்கி பாராட்டப்பட்டது. இதில், மாநில தலைவர் பம்மல் ராமகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டிப் பேசினார்.
இந்நிகழ்வில் மாநில துணைத் தலைவர் வாசுதேவன், மாநில இளைஞரணி செயலாளர் சீனிவாசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பாலாஜி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதில் மாணவ, மாணவிகளும், அவர்களது பெற்றோர்களும் பங்கேற்றனர். நிறைவில் மாவட்ட பொதுச்செயலாளர் ராஜூ நன்றி கூறினார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/17/அதிக-மதிப்பெண்-மாணவர்களுக்கு-பாராட்டு-2961746.html
2961745 திருச்சி தஞ்சாவூர் தஞ்சையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்  கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் DIN DIN Tuesday, July 17, 2018 08:43 AM +0530 தஞ்சாவூர் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் திங்கள்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆசிரியர் நலன், மாணவர் நலன், கல்வி நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு முறைகேடுகள் இன்றி, ஒளிவு மறைவற்ற வெளிப்படையான மாவட்ட மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கூட்டணியின் மாவட்டத் தலைவர் மா. கலைச்செல்வன் தலைமை வகித்தார். மாநிலச் செயற் குழு உறுப்பினர் ஜா. சார்லி தேவபிரியம், மாவட்டச் செயலர் இரா. அழகர், பொருளாளர் க. மதியழகன், பொதுக்குழு உறுப்பினர்கள் தேன்மொழி, தேசிகன், கார்த்திகேயன், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் ஆ. ரங்கசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/17/தஞ்சையில்-ஆரம்பப்பள்ளி-ஆசிரியர்--கூட்டணியினர்-ஆர்ப்பாட்டம்-2961745.html
2961743 திருச்சி தஞ்சாவூர் குடிநீர் கோரி கிராம மக்கள் சாலை மறியல் DIN DIN Tuesday, July 17, 2018 08:43 AM +0530 தஞ்சாவூர் அருகே சூரக்கோட்டையில் கிராம மக்கள் குடிநீர் வழங்க வலியுறுத்தி திங்கள்கிழமை காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சூரக்கோட்டை ஆதிதிராவிடர் தெருவில் சுமார் 150-க்கும் அதிகமான குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் குடிநீர் விநியோகம் செய்ய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இருந்தாலும், அதில் மோட்டார் பழுது காரணமாக ஒரு மாதமாகத் தண்ணீர் வருவதில்லை.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம், ஒன்றிய நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால், அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் காலிக் குடங்களுடன் பட்டுக்கோட்டை சாலையில் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அப்பகுதியில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த தாலுகா போலீஸார், வட்டார வளர்ச்சி அலுவலர் சூரியநாராயணன் சம்பவ இடத்துக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பழுதடைந்த மோட்டார் சீரமைக்கப்படும் என அலுவலர் உறுதி அளித்தார். இதையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/17/குடிநீர்-கோரி-கிராம-மக்கள்-சாலை-மறியல்-2961743.html
2961742 திருச்சி தஞ்சாவூர் கும்பகோணம்  நர்த்தன விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் DIN DIN Tuesday, July 17, 2018 08:43 AM +0530 கும்பகோணம் பேட்டை யாதவர் தெருவில் உள்ள நர்த்தன விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோயிலில் திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில்,  கடந்த 14 ஆம் தேதி முதல் வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம் உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றன.
இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை யாகசாலை பூஜைகள், சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டது. 
தொடர்ந்து மகா பூர்ணாஹூதி தீபாராதனைக்குப் பிறகு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு, விநாயகர் சன்னதி, கோயில் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள பரிவார தெய்வங்களான மகாலெட்சுமி,  விஷ்ணு துர்க்கை அம்மன்,  நவக்கிரக மூர்த்திகளுக்கான சன்னதிகளின் விமானங்களை சென்றடைந்தது. 
அங்கு கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/17/கும்பகோணம்--நர்த்தன-விநாயகர்-கோயில்-கும்பாபிஷேகம்-2961742.html
2961740 திருச்சி தஞ்சாவூர் கல்வி நிறுவனங்களில் காமராஜர் பிறந்த நாள் விழா DIN DIN Tuesday, July 17, 2018 08:42 AM +0530 பேராவூரணியில்...
பேராவூரணி பகுதி அரசுப் பள்ளிகளில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்த நாளானது,  கல்வி வளர்ச்சி நாளாக ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
பேராவூரணி  ஊராட்சி ஒன்றிய வடகிழக்கு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எஸ்.கெளதமன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் சித்ராதேவி வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் நீலவேணி, தொண்டு நிறுவன பிரதிநிதி எஸ்.ஜகுபர்அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி ஆசிரியர்கள் ஏ. ஹாஜாமுகைதீன், பி. ரேணுகா மற்றும் பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பேராவூரணி ஊராட்சி ஒன்றிய கிழக்கு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் மாலதி தலைமை வகித்தார். ஆசிரியர்கள் சுபாஷ், சுபா மற்றும் பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
மாவடுகுறிச்சி கிழக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில்: நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் ஈஸ்வரி தலைமை வகித்தார். ஆசிரியர்  வாசுகி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் மா. ராணி, பெ.ஆ. கழகத் தலைவர் சு.ராமநாதன், டாக்டர் கலாம் இளைஞர் மன்றம் மற்றும் பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கொன்றைக்காடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் பள்ளி தலைமையாசிரியர் தேன்மொழி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் பவுனம்மாள், கிரிஜா, இளையராஜா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரெத்தினவேல், துணைத்தலைவர் பிரபாகரன், கிராம கல்விக்குழு தலைவர் ஆர்.கே.பாலசுப்பிரமணியம், பள்ளி மேலாண்மை குழு தலைவர் லதா மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். பெரிய தெற்குக்காடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் பேராவூரணி ஒன்றியத்தில் பல்வேறு  அரசுப்பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கும்பகோணத்தில்...
கும்பகோணத்தில் பள்ளி கல்வித்துறை,  இளையோர் செஞ்சிலுவை சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய கல்வி வளர்ச்சி நாள் விழிப்புணர்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
காமராஜர் பிறந்தநாளை ஒட்டி கும்பகோணம் மகாமகக் குளக்கரையில் இருந்து தொடங்கிய இப்பேரணியை கும்பகோணம் டிஎஸ்பி கணேசமூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணிக்கு கும்பகோணம் மாவட்ட கல்வி அலுவலர் பாப்பம்மாள் தலைமை வகித்தார். இளையோர் செஞ்சிலுவை சங்க அமைப்பாளர் ஜான் ஸ்டீபன் வரவேற்றார்.
இதில் கும்பகோணம் நகரில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட இளையோர் செஞ்சிலுவை சங்க மாணவர்கள், கல்வி வளர்ச்சியினால் ஏற்படும் பயன்கள் பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை  ஏந்தியபடி  ஊர்வலமாகச் சென்றனர்.
கும்பகோணத்தின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற இப்பேரணி நகர மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது. 
 இதில் நகர மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் விஜயா, தனியார் பள்ளி முதல்வர் சையதுஅப்துல்சுபான், அரிமா சங்க தலைவர் சதீஷ், போக்குவரத்து காவல் ஆய்வாளர் அருள்செல்வன், கல்வித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

லாரல் பள்ளியில்...
பட்டுக்கோட்டையை அடுத்த பள்ளிகொண்டான் லாரல் மேல்நிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளையொட்டி கல்வி வளர்ச்சி நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளித் தாளாளர் வி. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்து, காமராஜரின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். காமராஜரின் சிறப்புகள், சாதனைகள் குறித்து தலைமை ஆசிரியர் டி.ஆறுமுகம் உரையாற்றினார்.   விழாவையொட்டி "கர்மவீரர் காமராஜர்" என்ற தலைப்பில் நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் பரிசு வழங்கிப் பாராட்டப்பட்டனர்.  பள்ளி முதல்வர் வி.பி.சந்திரசேகர், இயக்குநர்கள்  எலிசபெத் தேவாசீர்வாதம், கே.பாரத்,  உதவி தலைமை ஆசிரியர்கள் ஜி.ராஜேந்திரன், ஏ.ராபர்ட் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.  உடற்கல்வி இயக்குநர் ஆர்.கிட்டப்பா நன்றி கூறினார். 
அணைக்காடு பள்ளியில்: பட்டுக்கோட்டையை அடுத்த அணைக்காடு புனித பிரான்சிஸ் சவேரியார் உயர்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா பள்ளித் தாளாளர் ஆர்.சவரிநாதன் தலைமையில் நடைபெற்றது. பெற்றோர் -ஆசிரியர் கழகத் தலைவர் ஜி.தேவசகாயம் முன்னிலை வகித்தார். மாவட்டக் கல்வி அலுவலர் கு.பாண்டியன், பட்டுக்கோட்டை தமிழ்ச் சங்கச் செயலர் ந.மணிமுத்து, அணைக்காடு ஊராட்சி முன்னாள் தலைவர்கள் டி.அலங்காரமேரி, டி.சுதாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆசிரியை எஸ்.ஜெயசீலி வரவேற்றார். தலைமை ஆசிரியர் எஸ்.சூசைராஜ் நன்றி கூறினார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/17/கல்வி-நிறுவனங்களில்-காமராஜர்-பிறந்த-நாள்-விழா-2961740.html
2961738 திருச்சி தஞ்சாவூர் மாற்றுத் திறனாளிகள் காத்திருப்புப் போராட்டம் DIN DIN Tuesday, July 17, 2018 08:42 AM +0530 தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில்,  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் பருவகால மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம் மேற்கொண்டனர்.
இரு ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பு ஊதியத்தில் பணிபுரியக்கூடிய மாற்றுத்திறனாளி பணியாளர்களைப் பணி நிரந்தரப்படுத்த வேண்டும் என 2008 ஆம் ஆண்டு அரசாணை எண் 151-இல் இருந்தும், இதுவரை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் பருவகால மாற்றுத்திறனாளி பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. 
எனவே, அரசாணைப்படி உடனடியாக பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கத் தலைவர் ஏ. பஹாத்அகமது தலைமை வகித்தார். தகவலறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் என். சக்திவேல், போராட்டத்தில் ஈடுபட்ட சிலரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், ஏற்பட்ட உடன்பாட்டை அடுத்து, சுமார் 2 மணி நேரத்துக்குப் பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/17/மாற்றுத்-திறனாளிகள்-காத்திருப்புப்-போராட்டம்-2961738.html
2961737 திருச்சி தஞ்சாவூர் மதுக்கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு DIN DIN Tuesday, July 17, 2018 08:42 AM +0530 தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மதுக்கடைகளை அமைக்கக் கூடாது என வலியுறுத்தி பொதுமக்கள் மனு அளித்தனர்.
இக்கூட்டத்தில் பேராவூரணி பகுதியில் உள்ள பட்டுக்கோட்டை சாலை கடைத் தெரு வியாபாரிகள், பொதுமக்கள் அளித்த மனு:
பட்டுக்கோட்டை சாலையின் இரு பகுதிகளிலும் 300-க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறோம். இப்பகுதியில் தற்போது டாஸ்மாக் கடை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.  இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்தால் மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் பாதிப்படைவர். எனவே, டாஸ்மாக் கடை அமைக்கக் கூடாது என தெரிவித்துள்ளனர்.
இதேபோல, பூதலூர் அருகே சின்னமுத்தாண்டிப்பட்டி பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க அலுவலர்கள் இடம் தேர்வு செய்துள்ளனர் என்றும், அந்த இடத்தில் டாஸ்மாக் கடையை அமைக்கக் கூடாது எனவும் வலியுறுத்தி அக்கிராம மக்கள் மனு அளித்தனர்.
குடிநீர் கோரி:  தம்பிக்கோட்டை வடகாடு ஊராட்சி 1வது வார்டு வயல்காட்டுத்தோப்பு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனு:
தம்பிக்கோட்டை வடகாடு ஊராட்சி ஒன்றாவது வார்டு வயல்காட்டுத் தோப்புப் பகுதியில் 200 வீடுகள் உள்ளன. இப்பகுதியில் குடிநீர் வசதிக்காக ஒரே ஒரு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி மட்டுமே உள்ளது. 
அதிலிருந்து 10 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. எனவே குடிநீருக்காகக் கிழக்குக் கடற்கரைச் சாலையைக் கடந்து சென்று, அங்குக் காசு கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டிய நிலை உள்ளது. குழந்தைகள் தண்ணீருக்காகச் சாலையைக் கடந்து செல்லும்போது விபத்து நிகழ்கிறது. எனவே ஏற்கெனவே உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி மூலம் சீராகக் குடிநீர் விநியோகம் செய்வதுடன், மேலும் ஒரு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டித் தர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/17/மதுக்கடை-அமைக்க-பொதுமக்கள்-எதிர்ப்பு-2961737.html
2961735 திருச்சி தஞ்சாவூர் அதிரையில் தூய்மை இந்தியா திட்ட  விழிப்புணர்வுப் பேரணி DIN DIN Tuesday, July 17, 2018 08:41 AM +0530 அதிராம்பட்டினத்தில் காதிர் முகைதீன் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் ஆகியவற்றின் சார்பில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
பேரணியை கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தொடங்கி வைத்தார். கல்லூரி வளாகத்தில் இருந்து அதிரை நகர  முக்கிய வீதிகள் வழியாக பேருந்து நிலையம் வரை நடைபெற்ற பேரணியில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். கல்லூரிப் பேராசிரியர்கள் ஓ.ஹாஜா முகைதீன், என்.ஜெயவீரன், பி.குமாரசாமி, கே.முருகானந்தம் ஆகியோர் பேரணியை வழி நடத்தினர். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் பேராசிரியர்கள் எஸ்.சாபிரா பேகம், கே.முத்துக்குமாரவேல், எம்.பழனிவேல் ஆகியோர் செய்திருந்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/17/அதிரையில்-தூய்மை-இந்தியா-திட்ட--விழிப்புணர்வுப்-பேரணி-2961735.html
2961734 திருச்சி தஞ்சாவூர் ஆட்சியரகத்தில் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் DIN DIN Tuesday, July 17, 2018 08:41 AM +0530 திருவையாறு அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தில் அமைதி ஏற்படுத்த வலியுறுத்தி ஆட்சியரகத்தில் பொதுமக்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் திருவையாறு அருகேயுள்ள கருப்பூர், கோனேரிராஜபுரம், மணத்திடல், அந்தளி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 100 பேர் மனு அளித்துவிட்டு, பின்னர் வளாகத்தில் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கருப்பூர் கிராமத்தில் ஜூலை 1-ம் தேதி கருப்பு உடை அணிந்து சிலர் பல மாவட்டங்களின் பதிவெண்கள் கொண்ட வாகனங்களில் ஸ்ரீலபதி ராமதாஸ் சுவாமிகள் வீட்டுக்கு வந்தனர். சுவாமிகள் அப்பகுதியில் பல ஆண்டு காலமாக ஜோதிடம் பார்த்து வருவதால், பிரபலமானவர். இவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கோடிக்கணக்கான மதிப்புள்ள ரொக்கம், தங்கம், வெள்ளி நகைகளை எடுத்து சென்றுவிட்டனர். திடீரென ஊருக்குள் அதிக அளவில் மர்ம நபர்கள் வந்ததால், எங்கள் பகுதியைச் சேர்ந்தவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இதனால், அப்பகுதியில் எந்த நேரமும் அச்சமாகவே உள்ளது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் செய்த பிறகும் மர்ம நபர்கள் வந்து செல்கின்றனர். 
எனவே அப்பகுதியில் அமைதி நிலவ வேண்டும். அதற்குத் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இதில், வழக்குரைஞர் வெ. ஜீவகுமார், பி. கருப்பையன், டி. ராமதாஸ், எம். பேச்சிமுத்து, எம். அம்பலவாணன், கே. ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/17/ஆட்சியரகத்தில்-கிராம-மக்கள்-ஆர்ப்பாட்டம்-2961734.html
2961732 திருச்சி தஞ்சாவூர் மேட்டூர் நீரை முழுமையாக பயன்படுத்த நடவடிக்கை தேவை DIN DIN Tuesday, July 17, 2018 08:41 AM +0530 மேட்டூர் நீர் கொள்ளிடம் ஆற்றில் கலந்து வீணாகாமால் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
பட்டுக்கோட்டையை அடுத்த துவரங்குறிச்சியில் கிராம காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம் வட்டாரத் தலைவர் வி.எம்.காசிநாதன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ஏ.ஆர்.எம்.யோகானந்தம் கலந்து கொண்டு பேசினார். மாவட்டச் செயலர் கோவி.செந்தில், பட்டுக்கோட்டை நகரப் பொறுப்பாளர் பி.வி.கிருஷ்ணமூர்த்தி, அதிரை நகரத் தலைவர் கார்த்திகேயன், வட்டார விவசாய சங்கத் தலைவர் எம்.ரெங்கசாமி, மாவட்ட மாதர் 
காங்கிரஸ் நிர்வாகி கலைவாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், ஆண்டுதோறும் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டும் வரை காத்திருந்து திறக்கப்படுவதால், அதிக சதவீத தண்ணீர் மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் கொள்ளிடம் ஆற்றில் கலந்து வீணாகிறது. எனவே, தமிழக அரசு மேட்டூர் அணை நிரம்பும் வரை காத்திருக்காமல் வரும் தண்ணீரை மக்கள் பயன்பாட்டுக்கான குளம், கிணறு போன்ற குடிநீர் ஆதாரத்துக்காக அவ்வப்போது திறந்து விட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  
முன்னதாக, முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் துவரங்குறிச்சி கே.ஆர்.நாடிமுத்து, முன்னாள் ஊராட்சித் தலைவர் ஏ.சி.தனபால் கணேசன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கே.ஆர்.என்.சுரேஷ் நன்றி கூறினார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/17/மேட்டூர்-நீரை-முழுமையாக-பயன்படுத்த-நடவடிக்கை-தேவை-2961732.html
2961089 திருச்சி தஞ்சாவூர் தஞ்சாவூரின்  சில பகுதிகளில் ஜூலை 17 மின்தடை DIN DIN Monday, July 16, 2018 08:43 AM +0530 தஞ்சாவூர் நகர துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால்,  ரயிலடி, கீழவாசல், காந்திஜி சாலை, பழைய பேருந்து நிலையம், கீழவீதி, தெற்கு வீதி, மேலவீதி, சிவாஜி நகர்,  சீனிவாசபுரம்,  வண்டிக்காரத்தெரு,  நாகை சாலை,  மகர்நோன்புச்சாவடி,  எஸ்.எம். சாலை,  வ.உ.சி. நகர்,  மேரீஸ் கார்னர்,  பூக்காரத்தெரு,  அன்பு நகர்,  கோரிக்குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஜூலை 17 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தஞ்சாவூர் நகரிய உதவி செயற்பொறியாளர் அ. கலையரசி தெரிவித்துள்ளார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/16/தஞ்சாவூரின்--சில-பகுதிகளில்-ஜூலை-17-மின்தடை-2961089.html
2961086 திருச்சி தஞ்சாவூர் தேவேந்திர குல வேளாளர்களுக்கு தனி இடஒதுக்கீடு வேண்டும்: தேவேந்திர குல வேளாளர்களுக்கு தனி இடஒதுக்கீடு வேண்டும் DIN DIN Monday, July 16, 2018 08:43 AM +0530 தேவேந்திர குல வேளாளர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் முன்னேற்றச் சங்கம் இணைந்து நடத்திய வேளாண் மரபினர் மாநாட்டில் மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, மாநாட்டிற்கு தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் தியாக. காமராஜ் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் மா. குருமூர்த்தி வரவேற்றார். 
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்: வேளாண் மரபினராக தனிப்பிரிவின் கீழ், தேவேந்திரகுல மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். குடும்பன், காலாடி, பண்ணடி, கடையன், மூப்பன், பள்ளன், தேவேந்திரகுலத்தான், வாதிரியான் என்ற உட்பிரிவுகளை ஒன்றாக்கி தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயரில் அழைக்க வகை செய்யும் அரசாணை வெளியிட வேண்டும். தியாகி இமானுவேல் சேகரன் நினைவுநாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் ஜா. பிரிசில்லா பாண்டியன், மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் ஆகியோர் கருத்துரை வழங்கினார். பொருளாளர் மு.சு. அய்யாத்துரைப்பாண்டியன், தொண்டரணி செயலாளர் ஆ. முத்துராக்கு, விவசாய அணி செயலாளர் துரைதவமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பசுமைவழிச்சாலை 
திட்டத்தை அரசியல் கட்சிகள்தான் எதிர்க்கின்றன
முன்னதாக,  த.ம.மு.க. நிறுவனத் தலைவர் பெ. ஜான்பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியது: சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்தை மக்கள் எதிர்க்கவில்லை. அரசியல் கட்சிகள்தான் எதிர்க்கின்றன. இத்திட்டத்தில் உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட்டு, அதற்கேற்ப அரசு செயல்பட வேண்டும். இதில் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு அவர்களின் வாழ்வாதாரம் நிலைத்து நிற்கும் வகையில் அரசு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலை பிரச்னையில் சமூக விரோதிகள் யாரும் ஊடுருவவில்லை. உச்சநீதிமன்றமே உத்தரவிட்டாலும் ஆலையைத் திறக்க விடமாட்டோம். இதில் தமிழக அரசும் உறுதியாக உள்ளது. நியூட்ரினோ, மீத்தேன் உள்ளிட்ட தமிழக மக்களை பாதிக்கும் திட்டங்களை எதிர்ப்போம். அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாங்கள் ஆதரவளிக்க மாட்டோம். தேர்தல் காலத்தில் கூட்டணி குறித்து பேசுவோம். காவிரி நீர் பிரச்னையில் முறையாக செயல்படாத கர்நாடகம் மீது உச்சநீதிமன்றம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/16/தேவேந்திர-குல-வேளாளர்களுக்கு-தனி-இடஒதுக்கீடு-வேண்டும்-தேவேந்திர-குல-வேளாளர்களுக்கு-தனி-இடஒதுக்கீடு-2961086.html
2961084 திருச்சி தஞ்சாவூர் கும்பகோணம் பெரியநாயகி அன்னை ஆலய தேர்பவனி DIN DIN Monday, July 16, 2018 08:42 AM +0530 கும்பகோணம் காமராஜர் நகரில் உள்ள பெரியநாயகி அன்னை ஆலயத்தில் 98 ஆம் ஆண்டு அலங்கார தேர்பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
தேர்பவனி விழாவை முன்னிட்டு கடந்த 7 ஆம் தேதி ஆலயத்தில் கொடியேற்றமும், ஜெபமாலையும், சிறப்புத் திருப்பலியும் நடைபெற்றது. தொடர்ந்து 14 ஆம் தேதி மாலையில் நவநாள் திருப்பலி நடைபெற்று,  இரவு பெரியநாயகி அன்னை தேர்பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்களும், அப்பகுதி பொதுமக்களும் பங்கேற்றனர். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை திருப்பலி நிறைவேற்றப்பட்டு,  கொடி இறக்கம் செய்யப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஆலய பங்குத் தந்தைகள்,  அன்னை தெரசா இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் பங்கு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/16/கும்பகோணம்-பெரியநாயகி-அன்னை-ஆலய-தேர்பவனி-2961084.html
2961083 திருச்சி தஞ்சாவூர் விஜயகாந்த் நலம் பெற தேமுதிகவினர் பால்குடம் எடுத்து வழிபாடு DIN DIN Monday, July 16, 2018 08:42 AM +0530 தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைய வேண்டி, சுவாமிமலை முருகன் கோயிலுக்கு கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை பால்குடம் எடுத்து பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.
இந்நிகழ்வுக்கு கட்சியின் கும்பகோணம் மேற்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சங்கர் பால்குட ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தார்.இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தேமுதிக கட்சியினர் பால்குடம் எடுத்து கொண்டு, சுவாமிமலையின்  நான்கு வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து,  முருகன் கோயிலை அடைந்தனர். அங்கு தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பெயரில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரம் செய்வித்து, ஆராதனை செய்தனர். 
இதில் சுவாமிமலை பேரூர் செயலாளர் பாஸ்கர்,  ஒன்றிய செயலாளர் குமார்,  அவைத் தலைவர் சாமிநாதன், பொருளாளர் சரவணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/16/விஜயகாந்த்-நலம்-பெற-தேமுதிகவினர்-பால்குடம்-எடுத்து-வழிபாடு-2961083.html
2961081 திருச்சி தஞ்சாவூர் உறவினர் கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர் தற்கொலை DIN DIN Monday, July 16, 2018 08:42 AM +0530 பட்டுக்கோட்டையை அடுத்த ஆலத்தூர் மேலத் தெருவைச் சேர்ந்தவர் ஆர்.லெனின்தாசன் (46). இவர் கடந்த மார்ச் மாதம் நிலத்தகராறில் 60 வயது உறவினரை அரிவாளால்  வெட்டிக் கொன்றார். இவரை பட்டுக்கோட்டை தாலுகா போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து, இவர் மனைவி செங்கதிர் (31) தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்று விட்டார். 
இந்நிலையில் அண்மையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட லெனின்தாசன் வீடு திரும்பினார். மனைவி வீட்டில் இல்லாததால் பல நாள்கள் தனியாக இருந்துள்ளார்.  இதனால் ஏற்பட்ட  மன உளைச்சல் காரணமாக சனிக்கிழமை காலை விஷ மாத்திரைகளை தின்று மயங்கி விழுந்துள்ளார். ஆபத்தான நிலையில்  தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட லெனின்தாசன் இரவு உயிரிழந்தார். புகாரின் பேரில் பட்டுக்கோட்டை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/16/உறவினர்-கொலை-வழக்கில்-ஜாமீனில்-வந்தவர்-தற்கொலை-2961081.html
2961079 திருச்சி தஞ்சாவூர் அதிராம்பட்டினம் அருகே  தீக்காயமடைந்த பள்ளி மாணவி சாவு DIN DIN Monday, July 16, 2018 08:41 AM +0530 அதிராம்பட்டினத்தை  அடுத்த மகிழங்கோட்டை செட்டியப்பள்ளி பகுதியைச்  சேர்ந்த கட்டடத் தொழிலாளி பாலசுப்பிரமணியனின் மகள் மகாதேவி (16). அதிராம்பட்டினத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வந்தார். 
இவர் வயிற்று வலி நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், ஜூலை 10 ஆம் தேதி வீட்டிலிருந்த மகாதேவிக்கு வழக்கம் போல் வயிற்று வலி ஏற்பட்டதாம். அப்போது நோய்க் கொடுமை தாங்காமல் அவர் தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீயிட்டுக் கொண்டாராம்.
இதில் பலத்த காயமடைந்த மகாதேவி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 15) காலை உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் அதிராம்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/16/அதிராம்பட்டினம்-அருகே--தீக்காயமடைந்த-பள்ளி-மாணவி-சாவு-2961079.html
2961078 திருச்சி தஞ்சாவூர் கஞ்சனூர் தீர்த்தவாரிக்காக ரூ.6 லட்சத்தில் ஆழ்துளை கிணறு DIN DIN Monday, July 16, 2018 08:41 AM +0530 கும்பகோணம் அருகே கஞ்சனூர் தீர்த்தவாரி திருவிழாவின் போது பக்தர்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்வதற்காக காவிரி ஆற்றில் ரூ. 6 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
 எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் இப்பணியை மயிலாடுதுறை எம்.பி. ஆர்.கே. பாரதிமோகன் தொடங்கி வைத்தார்.  
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டம், கஞ்சனூரில் கற்பகாம்பிகை சமேத அக்னீஸ்வரர் கோயில் உள்ளது. நவக்கிரக கோயில்களில் சுக்கிரன் கோயிலாக விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் ஆடிப்பூரம் திருவிழா தீர்த்தவாரி, கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீர்த்தவாரி, மாசி மகத்தின் போது நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்வுகளின் போது, காவிரியில் தண்ணீர் இல்லாததால் பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிரமம் நிலவி வந்தது. இதையடுத்து மயிலாடுதுறை எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மயிலாடுதுறை எம்பி. பாரதிமோகன் தற்போது ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை தொடங்கி வைத்துள்ளார்.    
இதில் ஒன்றிய செயலாளர் அசோக்குமார், முன்னாள் ஒன்றிய குழு துணைத் தலைவர்கள் அண்ணாதுரை பாலகுமாரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ராஜேந்திரன், முருகன், சுப்பிரமணியன், பொதுப்பணித் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/16/கஞ்சனூர்-தீர்த்தவாரிக்காக-ரூ6-லட்சத்தில்-ஆழ்துளை-கிணறு-2961078.html
2961076 திருச்சி தஞ்சாவூர் இந்து மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை கோரி ஆர்ப்பாட்டம் DIN DIN Monday, July 16, 2018 08:41 AM +0530 இந்து மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கக்கோரி சிவசேனா மற்றும் காவி புலிப் படை சார்பில் தஞ்சாவூர் ரயிலடியில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு சிவசேனாவின் மாவட்டத் தலைவர் ராஜா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சுபாஷ் சந்திர போஸ் வரவேற்றார். 
மாநில துணைத் தலைவர் போஸ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். 
இதில்,  மற்ற மதங்களில் உள்ள மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்குவதுபோல, இந்து மாணவர்களுக்கும் கல்வி ஊக்கத்தொகை வழங்க வேண்டும். இந்து மாணவர்களை உயர்கல்வி பெற்று,  உயர்நிலையை அடைய கல்வி ஊக்கத்தொகை அவசியம் என வலியுறுத்தப்பட்டது.
மேற்கண்ட கோரிக்கைளை வலியுறுத்தி முழக்கங்களும் எழுப்பப்பட்டன. 
இதில் அகில இந்திய சத்திய சேனா தேசிய தலைவர் வசந்தகுமார்,  இந்து தேசிய கட்சி நிறுவனத் தலைவர் மணி,  இந்து இளைஞர் சேனா மாநிலத் தலைவர் சோலை கண்ணன், இந்து மகா சபா மாநில அமைப்பாளர் அண்ணாதுரை,  காவிப் புலிப் படை பொதுச் செயலாளர் சந்திரசேகர்,  ஒருங்கிணைப்பாளர் வீரமணி,  சிவசேனா மாநில அமைப்பாளர் தங்கமுத்து கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/16/இந்து-மாணவர்களுக்கு-கல்வி-ஊக்கத்தொகை-கோரி-ஆர்ப்பாட்டம்-2961076.html
2961075 திருச்சி தஞ்சாவூர் கும்பகோணம் பாணபுரீஸ்வர் கோயிலில்  தடையை மீறி விளக்கேற்றும் போராட்டம் DIN DIN Monday, July 16, 2018 08:41 AM +0530 கும்பகோணம் பாணபுரீஸ்வரர் கோயிலில் தடையை மீறி விளக்கேற்றும் போராட்டம் நடத்த வந்த இந்து மக்கள் கட்சியினரை அறநிலையத்துறை அதிகாரிகளும், போலீஸாரும் தடுத்து நிறுத்தினர்.  
இந்து சமய அறநிலையத்துறை அண்மையில் தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோயில்களில் பக்தர்கள் விளக்கேற்றி வழிபட தடை விதித்தது.  
இந்த உத்தரவு,  பண்டைய காலம் தொட்டு கோயில்களில் தீபமேற்றி வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள பொதுமக்களின் மனதை புண்படுத்தும்படியாக உள்ளது. இத்தகைய அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில்,  கும்பகோணம் பாணாதுறையிலுள்ள பாணபுரீஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை தடையை மீறி 1008 விளக்கேற்றி வழிபடும் போராட்டம் நடத்தப்படும் என இந்து மக்கள் கட்சி அறிவித்தது.  
இதன்படி,  கட்சியின் கும்பகோணம் நகர பொதுச் செயலாளர் பாலாஜி, மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் குருமூர்த்தி ஆகியோர் தலைமையில் இந்து மக்கள் கட்சியினர் கோயிலில் விளக்கேற்றத் திரண்டனர். 
இதையறிந்த அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா தலைமையிலான செயல் அலுவலர்களும், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரும், இந்து மக்கள் கட்சியினரை தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து இந்து மக்கள் கட்சியினர், கோயில் முன்புற வாசலில் 1008 விளக்கேற்றி வழிபாடு நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதில் மாவட்ட தலைவர் ராஜ்குமார், மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் செல்வம், மாவட்ட அமைப்பாளர் விஜய் பிரபு, மாவட்ட இளைஞரணி செயலாளர் சேகர், கும்பகோணம் ஒன்றிய தலைவர் கணேஷ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/16/கும்பகோணம்-பாணபுரீஸ்வர்-கோயிலில்--தடையை-மீறி-விளக்கேற்றும்-போராட்டம்-2961075.html
2961074 திருச்சி தஞ்சாவூர் பேராவூரணி அருகே தீவிபத்து:  தென்னை மரங்கள் எரிந்து நாசம் DIN DIN Monday, July 16, 2018 08:40 AM +0530 பேராவூரணி அருகே பஞ்சுக் கழிவில் ஏற்பட்ட   தீ விபத்தில் தேங்காய் பஞ்சு கழிவுத்  தூள்,  தென்னை மரங்கள் ஞாயிற்றுக்கிழமை எரிந்து நாசமானது.
பேராவூரணியை அடுத்த  செங்கமங்கலம் சிவன்கோயில் அருகே, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியை சேர்ந்த செந்தில் என்பவர்  தேங்காய்  மட்டையில் இருந்து, கயறு தயாரிக்கும் பஞ்சு  கழிவுகளில் இருந்து கேக்  தயாரிப்பதற்காக பஞ்சு கழிவுகளை  ஒரு ஏக்கர் இடத்தில் காயவைத்து   சேமித்து வைத்திருந்தார். ஞாயிற்றுக்கிழமை  பகலில் திடீரென எதிர்பாராதவிதமாக கழிவு பஞ்சில் தீப்பற்றியது. இப்பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியதில்  தீ  மளமளவென பரவியதில் அருகில் உள்ள சந்திரமோகன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பிலும் தீ பரவியது. இதில் தென்னந்தோப்பில் இருந்த 10 க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் தீயில் கருகியது. தகவல் அறிந்து பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறையினர்  போராடி தீயை அணைத்தனர். சேத மதிப்பு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/16/பேராவூரணி-அருகே-தீவிபத்து--தென்னை-மரங்கள்-எரிந்து-நாசம்-2961074.html
2961073 திருச்சி தஞ்சாவூர் வேன் மோதி 2 தொழிலாளிகள் சாவு DIN DIN Monday, July 16, 2018 08:40 AM +0530 பாபநாசம் அருகே சனிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தின் மீது லோடு ஆட்டோ மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 சமையல் தொழிலாளிகள் காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பாபநாசம் அருகே பண்டாரவாடை திருமஞ்சன வீதியை சேர்ந்தவர் முத்தலீப் மகன் சாதிக்பாட்சா(35). அதே பகுதியை சேர்ந்தவர் ரகமத்துல்லா மகன் ஜெய்லானி(38). இவர்கள் இருவரும்  சமயல் வேலை செய்து வந்தனர். சனிக்கிழமை இரவு இருவரும் ஒரு இருசக்கர வாகனத்தில் அய்யம்பேட்டை சென்று விட்டு மீண்டும் பண்டாரவாடைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். இருசக்கர வாகனத்தை ஜெய்லானி ஓட்டி சென்றார். இருசக்கர வாகனம் தஞ்சாவூர் கும்பகோணம்  பிரதான சாலையில் நெடுந்தெரு பள்ளிக்கூடம் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது  கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் நோக்கி சென்ற லோடு ஆட்டோ இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த ஜெய்லானி,சாதிக்பாட்சா இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அய்யம்பேட்டை போலீஸார் உயிரிழந்த ஜெய்லானி, சாதிக்பாட்சா உள்ளிட்டோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், புகாரின் பேரில் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/16/வேன்-மோதி-2-தொழிலாளிகள்-சாவு-2961073.html
2961071 திருச்சி தஞ்சாவூர் தஞ்சாவூரில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் DIN DIN Monday, July 16, 2018 08:40 AM +0530 தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாள் விழா தஞ்சாவூரில் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் எதிரே மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜர் படத்துக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வுக்கு மாநகர மாவட்ட தலைவர் பி.ஜி. ராஜேந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் நாஞ்சில் வரதராஜன், பொருளாளர் பழனியப்பன், கோட்ட தலைவர் கதர் வெங்கடேசன், நிர்வாகி வாசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டது.
சிவாஜி மன்றம்...: தஞ்சை கீழவாசலில் உள்ள காமராஜர் சிலைக்கு அகில இந்திய சிவாஜி மன்றம் சார்பில் செயற்குழு உறுப்பினர் ராஜசேகர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் போட்டோவிஜயன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
தமாகா சார்பில்...: தமாகா சார்பில் நிர்வாகி பிஎல்ஏ. சிதம்பரம் தலைமையில் தஞ்சை கீழவாசலில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநகர தலைவர் ராஜவேலு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 
தஞ்சை மாவட்ட பாரதப் பெருந்தலைவர் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் காமராஜர் பிறந்தநாளையொட்டி கீழவாசலில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து தஞ்சாவூர் செவித்திறன் குறையுடையோர், பார்வைத்திறன் குறையுடையோர் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கல்வி வளர்ச்சி விழாவில் மன்றத் தலைவர் அழகேசன் தலைமையிலான மன்ற நிர்வாகிகள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கினர்.
பள்ளிகளில்...: தஞ்சாவூர் அரசர் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் ச. புகழேந்தி தலைமையில் காமராஜரின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து காமராஜரின் புகழ், கல்வி வளர்ச்சிப் பணிகள், பண்புகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கிக் கூறப்பட்டது. இதையடுத்து காமராஜர் பற்றிய பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கிராம பகுதிகளில்...: தஞ்சை அருகே விளார், பர்மா காலனி, கண்டிதம்பட்டு, பொட்டுவாச்சாவடி, கா. புதூர் உள்ளிட்ட இடங்களில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. 
பட்டுக்கோட்டையில்... காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கக் கிளை சார்பில், பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் எதிரிலுள்ள பெரியார் சிலை பீடத்தில்  வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு  
மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு தமுஎகச கிளைச் செயலர் மோரீஸ் அண்ணாதுரை தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் முருக.சரவணன், நிர்வாகிகள் கே.கிருஷ்ணமூர்த்தி, ஆம்பல் காமராஜ், சுந்தரபாண்டியன், கிறிஸ்துதாஸ், பக்கிரிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கும்பகோணத்தில்... முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் விழா கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது.
தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கும்பகோணம் பாலக்கரையிலுள்ள காமராஜர் உருவ சிலைக்கு மாவட்ட தலைவர் லோகநாதன் மாலை அணிவித்து, மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கினார். இதில் நகர தலைவர் மிர்சாவூதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதே போல,  கும்பகோணம் நகர தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கும்பகோணம் பாலக்கரையில் உள்ள காமராஜரின் சிலைக்கு தமாகா  மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர மூப்பனார் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். 
இதில் முன்னாள் எம்பி கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் எம்எல்ஏக்கள் கருப்பண்ண உடையார், ராஜாங்கம், மாநிலச் செயலாளர் சாதிக் அலி, மாவட்ட துணை தலைவர் சிவா, வட்டாரத் தலைவர் செல்வராஜ் மற்றும் தமாக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 
நிகழ்ச்சியில்  மாணவர்களுக்கு புத்தக பை மற்றும் நோட்டு புத்தகங்களும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதே போல, திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


இ - சேவை மையம் தொடக்கம்: தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ், மாநகர காங்கிரஸ் சார்பில் காமராஜரின் பிறந்த நாளையொட்டி தஞ்சை கீழவாசலில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதற்கு தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமை வகித்தார். 
மாநகர செயலாளர் அலாவுதீன் வரவேற்றார். இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் அபிஷேக் மோசஸ், ஐ.என்.டி.யூ.சி. மாநில பொதுச்செயலாளர் ஆரோக்கியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கீழவாசல் பகுதியில் செயல்படும் வகையில் இலவச இ-சேவை மையம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த மையத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமையன்று அரசு வழங்கும் சேவைகள் பொதுமக்களுக்கு இலவசமாக மேற்கொள்ளப்படும் என காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.  இதையடுத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், எழுதுபொருள்களும், பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டது. 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/16/தஞ்சாவூரில்-காமராஜர்-பிறந்தநாள்-விழா-கொண்டாட்டம்-2961071.html
2961070 திருச்சி தஞ்சாவூர் மதுக்கூரில் தீ விபத்து:  8 குடிசை வீடுகள் எரிந்து சேதம் DIN DIN Monday, July 16, 2018 08:39 AM +0530 தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூரில் சனிக்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில்  8 குடிசை வீடுகள் எரிந்து நாசமானது. 
மதுக்கூர் பஜனைமடத்தெருவில் ஒரு குடிசை வீட்டில் மின் கசிவு காரணமாக திடீரென தீ பிடித்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் அடுத்தடுத்த வீடுகளுக்கும் தீ பரவியது.
இதையடுத்து பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை ஆகிய ஊர்களிலிருந்து  வரவழைக்கப்பட்ட தீயணைப்புப் படையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் அப்பகுதியை சேர்ந்த மாலா, மகேஸ்வரி, குமார், வசந்தி, சாந்தி, பாப்பாத்தி, உமா, குப்பம்மாள் ஆகிய 8 பேரின் வீடுகள் முற்றிலுமாக எரிந்து சாம்பலானது.  வீடுகளில் இருந்த பணம், ஆவணங்கள், டி.வி.  உள்ளிட்ட  பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது. 
தகவல் அறிந்த பட்டுக்கோட்டை எம்எல்ஏ சி.வி.சேகர், மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் மகாலெட்சுமி, வட்டாட்சியர் ஜி.சாந்தகுமார் ஆகியோர்  சம்பவயிடத்தை நேரில் பார்வையிட்டு,  பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினர். மேலும், நிவாரண உதவியாக மாவட்ட நிர்வாகம், எம்எல்ஏ சி.வி.சேகர், மதுக்கூர் ஒன்றிய அதிமுக செயலர் துரை.செந்தில் ஆகியோர் சார்பில் தலா ரூ.5,000 வழங்கப்பட்டது. மதுக்கூர் வர்த்தக சங்கத்தினரும் நிதியுதவி அளித்தனர். தவிர, அரிசி 
உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன.  தீ விபத்து குறித்து மதுக்கூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/16/மதுக்கூரில்-தீ-விபத்து--8-குடிசை-வீடுகள்-எரிந்து-சேதம்-2961070.html
2960489 திருச்சி தஞ்சாவூர் சுற்றுலாப் பயணிகளுக்காக 42 இடங்களில் வைஃபை வசதி' DIN DIN Sunday, July 15, 2018 04:56 AM +0530 தஞ்சாவூர் தொலைத்தொடர்பு மாவட்டத்தில் மத்திய அரசின் உத்தரவின்படி, சுற்றுலா பயணிகளுக்காக 42 இடங்களில் வைஃபை வசதி ஏற்படுத்தப்படும் என்றார் தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் கு. பரசுராமன்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற தஞ்சாவூர் தொலைத்தொடர்பு மாவட்டத்தின் மூன்றாவது தொலைபேசி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் மேலும் பேசியது:
தஞ்சாவூர் மாவட்ட அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பி.எஸ்.என்.எல். அலுவலர்கள் தரமான தரைவழி மற்றும் செல்லிடப்பேசி சேவைகளை வழங்க வேண்டும். மத்திய அரசின் உத்தரவின்படி, தஞ்சாவூர் தொலைத்தொடர்பு மாவட்டத்தில் 42 இடங்களில் சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் வைஃபை வசதி புதிதாக நிறுவப்படும். இதில், மன்னார்குடியில் 8 இடங்களிலும், ஒரத்தநாடு, பாபநாசத்தில் தலா இரு இடங்களிலும், பட்டுக்கோட்டையில் 9 இடங்களிலும், தஞ்சாவூர், திருத்துறைப்பூண்டி, திருவாரூரில் தலா 7 இடங்களிலும் இந்த வைஃவை வசதி விரைவில் ஏற்படுத்தப்படவுள்ளது என்றார் அவர்.
பி.எஸ்.என்.எல். தஞ்சாவூர் தொலைத்தொடர்பு மாவட்ட முதன்மை பொது மேலாளர் சி.வி. வினோத் பேசியது: செல்லிடப்பேசி வாடிக்கையாளர்கள் ரூ. 99-க்கு ரீசார்ஜ் செய்து 26 நாட்களுக்கு பி.எஸ்.என்.எல். உட்பட அனைத்து வகையான செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களிடமும் அளவற்று பேசலாம்.
ரூ. 99 சிறப்பு ரீசார்ஜ் செய்து 26 நாட்களுக்கு நாள்தோறும் 1.5 ஜி.பி. டேட்டா பயன்படுத்தலாம். புதிதாக அறிமுகமான ரூ. 1,999 திட்டத்தில் ஆண்டு முழுவதும் நாள்தோறும் 2 ஜி.பி. டேட்டா மற்றும் அனைத்து வகையான செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களிடமும் இலவசமாகப் பேசிக் கொள்ளலாம்.
புதிதாக அறிமுகமாகியுள்ள ரூ. 1,199 மாதத் திட்டத்தின் கீழ் நாள்தோறும் அளவற்ற இணையதள டேட்டா மற்றும் அனைத்து வகையான செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களிடமும் அளவற்று பேசலாம். மேலும், இந்தத் தரைவழி தொலைபேசி சேவையுடன் சேர்த்து மூன்று இலவச சிம் கார்டுகள் வழங்கப்படும். இதிலும், பி.எஸ்.என்.எல். உட்பட அனைத்து வகையான அலைபேசி வாடிக்கையாளர்களிடமும் ஆண்டு முழுவதும் அளவற்று பேசலாம். இதனுடன் கூடுதலாக ஒரு தரைவழித் தொலைபேசி இரண்டு மாதங்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்றார் வினோத்.
கூட்டத்தில் தொலைபேசி ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் அறிவழகன், பன்னீர்செல்வம், ராஜமோகன், நெல்சன், சாமிநாதன், இளங்கோ, துணைப் பொது மேலாளர்கள் ராஜாராமன், விவேகானந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/15/சுற்றுலாப்-பயணிகளுக்காக-42-இடங்களில்-வைஃபை-வசதி-2960489.html
2960488 திருச்சி தஞ்சாவூர் ஒத்திகையில் கண்ணீர் புகை: பெண் காவலர் மயக்கம் DIN DIN Sunday, July 15, 2018 04:56 AM +0530 தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியில் வீசப்பட்ட கண்ணீர் புகை குண்டால் பெண் காவலர் மயக்கமடைந்தார்.
தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில், கலவரத்தின்போது கூட்டத்தைக் கலைப்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவர் ஜெ. லோகநாதன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் த. செந்தில்குமார் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுவது, வாகனங்கள் மூலம் தண்ணீரைப் பீய்ச்சி அடிப்பது, கண்ணீர் புகை குண்டு வீசுவது போன்ற பயிற்சிகளில் காவலர்கள் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, வீசப்பட்ட கண்ணீர் புகை குண்டால், அங்கு புகை சூழ்ந்தது. இதனால், ஒரு பெண் காவலர் மயக்கமடைந்தார். அவரை மற்ற காவலர்கள் அழைத்து சென்று ஓரமாக அமர வைத்தனர். பின்னர், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். கண்ணீர் புகை குண்டு வீசினால் கண் எரிச்சல், இருமல், மூச்சுத் திணறல் போன்ற பிரச்னைகள் ஏற்படுவது வழக்கம் என்றும், இப்பெண்ணுக்கு மயக்கம் ஏற்பட்டதற்கு உடல்நலக் குறைவு காரணமாக இருக்கலாம் எனவும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/15/ஒத்திகையில்-கண்ணீர்-புகை-பெண்-காவலர்-மயக்கம்-2960488.html
2960487 திருச்சி தஞ்சாவூர் சிறுமியை கர்ப்பிணியாக்கியவர் கைது DIN DIN Sunday, July 15, 2018 04:55 AM +0530 தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், திருவோணம் அருகே சில்லத்தூர் வெட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்த முத்துச்சாமி மகன் ஆனந்தராஜ் (22), டிராக்டர் ஓட்டுநர்.
இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியிடம் பழகி வந்துள்ளார். இதையடுத்து சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, கடந்த ஜனவரி 6 ஆம் தேதி முதல் பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கருவுற்றார். தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் அந்த சிறுமி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஆனந்தராஜை வற்புறுத்தியுள்ளார். ஆனால் சிறுமியை திருமணம் செய்ய ஆனந்தராஜ் மறுத்து விட்டாராம். இதுகுறித்து அந்த சிறுமி வெள்ளிக்கிழமை அளித்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயா, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ)சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ஆனந்தராஜை வெள்ளிக்கிழமை கைது செய்தார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/15/சிறுமியை-கர்ப்பிணியாக்கியவர்-கைது-2960487.html
2960472 திருச்சி தஞ்சாவூர் தேசிய மக்கள் நீதிமன்றம்: 4,805 வழக்குகளுக்கு ரூ.12.49 கோடியில் தீர்வு DIN DIN Sunday, July 15, 2018 04:51 AM +0530 தஞ்சாவூர் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4,805 வழக்குகளுக்குரூ. 12.49 கோடியில் தீர்வு வழங்கப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழு மூலமாக உரிமையியல், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாக தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த வழக்குகளில் 5,965 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், 4,668 வழக்குகளில் ரூ. 10 கோடியே 62 லட்சத்து 91 ஆயிரத்து 829-க்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. இவற்றில் விபத்து இழப்பீடு தொடர்பாக 800 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில் 365 வழக்குகளில் ரூ. 7 கோடியே 47 லட்சத்து 664-க்கு தீர்வு வழங்கப்பட்டது.
விபத்து இழப்பீடு வழக்கில் பாதிக்கப்பட்டு கோமா நிலையில் இருந்த மனுதாரருக்கு ரூ. 17 லட்சமும், மற்றொரு மூளை பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ. 12 லட்சமும் உடனடி தீர்வாக இழப்பீடு வழங்கப்பட்டது.
விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்த இரு வழக்குகளில் கணவன் - மனைவி இருவரையும் சமரசம் செய்து சேர்ந்து வாழ வழிசெய்து வழக்கு முடிக்கப்பட்டது.
மேலும் மாவட்டம் முழுவதும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வராக்கடன் தொகைக்கான 4,780 கணக்குகள் மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதில், 136 வாடிக்கையாளர்களுக்கு ரூ. ஒரு கோடியே 86 லட்சத்து 59 ஆயிரத்து 665-க்கு தீர்வு காணப்பட்டது.
இதேபோல, கும்பகோணம், பட்டுக்கோட்டை, திருவையாறு, ஒரத்தநாடு, பாபநாசம் ஆகிய ஊர்களிலும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 4,805 வழக்குகள் முடிவு செய்யப்பட்டு, ரூ. 12 கோடியே 49 லட்சத்து 57 ஆயிரத்து 557-க்கு தீர்வு காணப்பட்டது.
முதன்மை மாவட்ட நீதிபதி (முழுக் கூடுதல் பொறுப்பு) கே. பூர்ண ஜெய ஆனந்த் தலைமையில் இந்த மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இவரே மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கும் தலைமை வகித்தார்.
மேலும், குடும்ப நல வழக்குகள், குற்றவியல் வழக்குகளுக்கு இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதி எஸ். பாஸ்கரன் தலைமை வகித்தார். முதன்மை சார்பு நீதிபதி ஆர். மாலதி, கூடுதல் சார்பு நீதிபதி ஜி. சுந்தர்ராஜன், சிறப்பு சார்பு நீதிபதி ஏ. மலர்விழி, குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் எஸ். விஜய அழகிரி, எஸ். நளினக்குமார், எஸ். தங்கமணி, மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆர். மனோகரன், மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழுச் செயலர் பி. சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/15/தேசிய-மக்கள்-நீதிமன்றம்-4805-வழக்குகளுக்கு-ரூ1249-கோடியில்-தீர்வு-2960472.html
2960471 திருச்சி தஞ்சாவூர் தஞ்சையில் இருசக்கர வாகனம் மோதி காயமடைந்தவர் சாவு DIN DIN Sunday, July 15, 2018 04:50 AM +0530 தஞ்சாவூரில் மோட்டார் சைக்கிள் மோதி காயமடைந்தவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், கோவிந்தபுரம் ஸ்ரீராம் நகரைச் சேர்ந்தவர் கே. ரவிசங்கர் (52). இவர் தஞ்சாவூரில் உள்ள திருச்சி சாலையில் அண்மையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதி பலத்தக் காயமடைந்தார்.
இதையடுத்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து நகரப் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/15/தஞ்சையில்-இருசக்கர-வாகனம்-மோதி-காயமடைந்தவர்-சாவு-2960471.html
2960470 திருச்சி தஞ்சாவூர் நாட்டார் கல்லூரியில் பாரதிதாசன் பல்கலை. சேர்க்கை மையம் DIN DIN Sunday, July 15, 2018 04:50 AM +0530 தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரையில் உள்ள நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரியில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக்கல்விப் புதிய சேர்க்கை மையம் திறக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் கோ.வெ. நடராஜன் தெரிவித்திருப்பது: தஞ்சாவூர், வெண்ணாற்றங்கரை கபிலர் நகரில் அமைந்துள்ள நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரியில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக்கல்வி இயக்ககத்தின் சார்பில் புதிய சேர்க்கை மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் 2018 - 2019 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெறுகிறது.
இம்மையத்தில் பருவ முறையிலான படிப்புகள், பருவம் அல்லாத படிப்புகள், இளநிலைப் படிப்புகள், முதுநிலைப் படிப்புகள், பட்டயப் படிப்புகள், சான்றிதழ் படிப்புகள், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. போன்ற படிப்புகளுக்கும் சேர்க்கை நடைபெறுகிறது. படிப்புகளுக்கான கட்டணம், சேர்கை முறை போன்றவற்றை பாரதிதாசன் பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
கட்டணங்களை பாரதிதாசன் பல்கலைக்கழக இணையதளத்தில் நேரடியாக மாணவர்கள் செலுத்தலாம். அல்லது சேர்க்கை மையத்தில் பணம் செலுத்தி சேர்க்கையை உறுதிப்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு 04362 - 252971, 89038-21981,

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/15/நாட்டார்-கல்லூரியில்-பாரதிதாசன்-பல்கலை-சேர்க்கை-மையம்-2960470.html
2960469 திருச்சி தஞ்சாவூர் மேரீஸ் கார்னர் பாலத்தில் போக்குவரத்து குழப்பத்துக்கு தீர்வு காண வலியுறுத்தல் DIN DIN Sunday, July 15, 2018 04:50 AM +0530 தஞ்சாவூர் மேரீஸ் கார்னர் மேம்பாலத்தில் போக்குவரத்து குழப்பத்துக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட லஞ்சம் கொடாதோர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் அண்மையில் நடைபெற்ற இந்த இயக்கத்தின் கூட்டத்தில் தஞ்சாவூரில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பல சாலைகள் மிகவும் சேதம் அடைந்துள்ளன. எனவே, இச்சாலைகளை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகப் பழுது பார்க்க வேண்டும். ரயில்களில் செயல்படுத்தப்படும் பயோ கழிவு சுத்தம் செய்யும் முறையை அனைத்து ரயில்களிலும் செயல்படுத்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேரீஸ் கார்னர் மேம்பாலத்தைத் திறந்த பிறகு ஒவ்வொரு நாளும் வரைமுறை இல்லாமல் போக்குவரத்து வாகனங்கள் தாறுமாறாகக் கட்டுப்பாடின்றி திக்கு தெரியாமல், ஊர்ந்து செல்கின்றன. எனவே, இப்பாலத்தில் விபத்துகள் நிகழ்வதைத் தடுக்க தொடக்கத்தில் திட்டமிட்டபடி பாலத்தைச் சீர் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இயக்கத்தின் மாவட்டத் தலைவர் கோ. அன்பரசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஆதி. நெடுஞ்செழியன், அமைப்பாளர் மு. செல்வராஜ், பொருளாளர் ராமகிருஷ்ணன், பாவலர் தஞ்சை தர்மராஜன், எஸ்.பி. கமலா, தஞ்சை ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/15/மேரீஸ்-கார்னர்-பாலத்தில்-போக்குவரத்து-குழப்பத்துக்கு-தீர்வு-காண-வலியுறுத்தல்-2960469.html
2960468 திருச்சி தஞ்சாவூர் குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை குறித்து விழிப்புணர்வு தேவை DIN DIN Sunday, July 15, 2018 04:50 AM +0530 குழந்தைகளுக்கான அறுவைச் சிகிச்சை குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்றார் இந்தியக் குழந்தைகள் அறுவைச் சிகிச்சை மருத்துவர்கள் சங்கத் தேசியச் செயலர் பிரகாஷ் அகர்வால்.
தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநில குழந்தைகள் அறுவை சிகிச்சை மருத்துவர்களின் இரு நாள் மாநாட்டின் தொடக்க விழாவில் அவர் பேசியது: குழந்தைகள் அறுவை சிகிச்சையைப் பொதுமக்கள் மத்தியில் அறிமுகம் செய்ய வேண்டும். இதன் மூலம் பொதுமக்கள் விழிப்புணர்வு அடைவர். வளர்ந்து வரும் அறிவியல் உலகில் உள்ள நவீன அறுவை சிகிச்சை முறைகளைக் கையாண்டு பிறவிக் குறைபாடுடைய குழந்தைகளை அடையாளம் கண்டு அறுவைச் சிகிச்சை செய்தால் குழந்தைகள் இறப்பு விகிதத்தைக் குறைக்க முடியும். இதை மருத்துவர்கள் சபதமேற்றுச் செய்ய வேண்டும் என்றார் அவர். இந்தியக் குழந்தைகள் அறுவைச் சிகிச்சை சங்கத்தின் தமிழ்நாடு, பாண்டிச்சேரி மாநில மையத் தலைவர் ஏ. பாவை தலைமை வகித்தார். தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் எம். இளங்கோவன், மாநாட்டு அமைப்புத் தலைவர் டி.வி. சாத்தப்பன், செயலர் கே. ரவி, இணைத் தலைவர் ஏ. மைக்கேல், இணைச் செயலர் கே.பி. முகமது ஜாகிர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/15/குழந்தைகளுக்கான-அறுவை-சிகிச்சை-குறித்து-விழிப்புணர்வு-தேவை-2960468.html
2960467 திருச்சி தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையைப் புதிதாக அமைக்கக் கோரி நாளை மறியல் DIN DIN Sunday, July 15, 2018 04:49 AM +0530 தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையைப் புதிதாக அமைக்கக் கோரி திங்கள்கிழமை (ஜூலை 16) சாலை மறியல் போராட்டம் நடத்துவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூரில் இக்கட்சியின் மாநகரக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், குண்டும் குழியுமாகப் போக்குவரத்துக்குப் பயனற்ற வகையில் உள்ள நாஞ்சிக்கோட்டை சாலையை மேம்படுத்தி, புதிதாகச் சாலை அமைத்து தர வலியுறுத்தி, தொடர்புடைய அலுவலர்களிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் சரி செய்யப்படாததைக் கண்டித்தும், சாலையை உடனடியாகப் புதிதாக அமைத்து தர வலியுறுத்தியும் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பது, இயற்கை வளக் கொள்ளைக்கு எதிராகப் போராடுபவர்களைச் சிறையில் அடைப்பது போன்ற மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத செயலைக் கண்டித்து தஞ்சாவூர் ரயிலடியில் ஜூலை 21-ம் தேதி அனைத்துக்கட்சி, அனைத்து இயக்கங்கள் சார்பில் நடைபெற உள்ள தொடர் முழக்கப் போராட்டத்தில் மாநகரக் குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
எச். அப்துல் நசீர் தலைமை வகித்தார். மாவட்டச் செயற் குழு உறுப்பினர் பி. செந்தில்குமார், மாநகரச் செயலர் என். குருசாமி, மாநகரக் குழு உறுப்பினர்கள் எம். வடிவேலன், இ. வசந்தி, எஸ். சாந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/15/நாஞ்சிக்கோட்டை-சாலையைப்-புதிதாக-அமைக்கக்-கோரி-நாளை-மறியல்-2960467.html
2960466 திருச்சி தஞ்சாவூர் பள்ளிகளில் தொழுநோய் கண்டறியும் முகாம் DIN DIN Sunday, July 15, 2018 04:49 AM +0530 புனல்வாசல் புனித அன்னாள் பெண்கள் உயர்நிலைப்பள்ளி மற்றும் டான்பாஸ்கோ மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை தொழுநோய் கண்டறியும் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
பேராவூரணி வட்டாரத்தில் தொழுநோயின்  தாக்கம் அதிகம் காணப்படுவதால் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, துணை இயக்குநர் சுகாதார பணிகள் தஞ்சாவூர் மற்றும் துணை இயக்குநர் (தொழுநோய்) அறிவுறுத்தலின்படி இங்குள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு தொழுநோய் பரிசோதனை நடத்தப்படுகிறது.
வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சௌந்தரராஜன் தலைமையில் வெள்ளிக்கிழமை புனல்வாசல் பள்ளியில் பரிசோதனை முகாம் நடைபெற்றது. பள்ளிச்சிறார் ஆய்வு மருத்துவக் குழு மருத்துவர்கள் ரஞ்சித், கீர்த்திகா மற்றும் மருத்துவ குழுவினர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் எஸ். சந்திரசேகரன்,  மருத்துவமல்லா மேற்பார்வையாளர் எஸ். கண்ணன், சுகாதார ஆய்வாளர் தவமணி, கிராம சுகாதார செவிலியர்கள் பரிசோதனை மேற்கொண்டனர். தோல் சிகிச்சை முகாம் புனல்வாசல் மற்றும் ஒட்டங்காடு கிராமத்தில் நடமாடும் மருத்துவக் குழு மருத்துவ அலுவலர் எம். தீபா தலைமையில் நடைபெற்றது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/15/பள்ளிகளில்-தொழுநோய்-கண்டறியும்-முகாம்-2960466.html
2960465 திருச்சி தஞ்சாவூர் டெல்டா மாவட்டங்களில் 2.20 லட்சம் ஏக்கர் சாகுபடி: வேளாண்மைத் துறை இயக்குநர் தகவல் DIN DIN Sunday, July 15, 2018 04:49 AM +0530 டெல்டா மாவட்டங்களில் குறுவை தொகுப்புத் திட்டத்தின் கீழ் 2.20 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெறுகிறது என்றார் வேளாண் துறை இயக்குநர் வ. தட்சிணாமூர்த்தி.
தஞ்சாவூர் மாவட்டத்தில் அம்மாபேட்டை அருகே புத்தூர் உக்கடை கிராமத்தில் குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் சாகுபடிப் பணிகளை சனிக்கிழமை பார்வையிட்ட அவர் தெரிவித்தது:
டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசு குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தில் நெல் விதைக்கான மானியம், பயறு வகை பயிர்களுக்கான மானியம், இயந்திர நடவுக்கான மானியம் உள்பட பல்வேறு மானியங்கள் வழங்கப்படுகின்றன.
குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தின் கீழ் டெல்டா மாவட்டங்களில் 3.15 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தற்போது, சுமார் 2.20 லட்சம் ஏக்கர் நெல் சாகுபடியும், 6 ஆயிரம் ஏக்கரில் உளுந்து சாகுபடியும் நடைபெறுகிறது.
தமிழ்நாடு அளவில் சுமார் 6.90 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது என்றார் தட்சிணாமூர்த்தி.
பின்னர், மாவட்ட ஆட்சியரகத்தில் குறுவை தொகுப்புத் திட்டம், நுண்ணீர் பாசன திட்டம் மற்றும் பல்வேறு வேளாண் திட்டப் பணிகள் குறித்து வேளாண் துறை அலுவலர்களுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அவர் பேசியது:
குறுவை தொகுப்புத் திட்டத்தைப் பொருத்தவரை நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இடுபொருள் மானியங்களையும், பயறு வகை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இடுபொருள் மானியங்களையும் ஜூலை 25-க்குள் வழங்கி முடிக்க வேண்டும்.
இயந்திரங்கள், ஆயில் என்ஜின், பி.வி.சி. பைப் மானியங்களுக்கான பயனாளிகளை உடனடியாகத் தேர்வு செய்து விரைவில் வழங்க வேண்டும்.
நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள மானியத் தொகைக்கான பயனாளிகளை ஜூலை மாதத்துக்குத் தேர்வு செய்து, பதிவு செய்து உடனுக்குடன் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன கருவிகளை வழங்க வேண்டும்.
அனைத்து திட்டங்களையும் அந்தந்த பருவ காலத்துக்குள் முடித்து உணவு தானிய உற்பத்தியில் முழுமையான இலக்கை அடைய வேளாண் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து களப் பணியாற்ற வேண்டும் என்றார் அவர்.
முன்னதாக, புத்தூர் உக்கடை கிராமத்தில் குறுவை தொகுப்புத் திட்டத்தின் கீழ் உளுந்து விதை, உயிர் உரங்கள், நுண்ணூட்டச் சத்து, டி.ஏ.பி. ஆகிய இடுபொருட்களையும் இயக்குநர் வழங்கினார். மேலும், திருவையாறு அருகே விளாங்குடி கிராமத்தில் இயந்திர நடவு மேற்கொள்ளப்பட்டுள்ள வயல்களைப் பார்வையிட்டு, 25 விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் நடவு மானியம், மேல் நுண்ணூட்டச் சத்து, சிங்சல்பேட், ஜிப்சம் ஆகியவற்றை மானிய விலையில் வழங்கினார்.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, மாநில தேசிய உணவு பாதுகாப்புத் திட்ட ஆலோசகர் தனசேகரன், வேளாண் துறை இணை இயக்குநர் அ. மதியழகன், துணை இயக்குநர்கள் (மத்தியத் திட்டம்) கோ. கணேசன், ஏ. ஜஸ்டின் (மாநில திட்டம்), ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஆர்.என். முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/15/டெல்டா-மாவட்டங்களில்-220-லட்சம்-ஏக்கர்-சாகுபடி-வேளாண்மைத்-துறை-இயக்குநர்-தகவல்-2960465.html
2960464 திருச்சி தஞ்சாவூர் பாபநாசத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் DIN DIN Sunday, July 15, 2018 04:48 AM +0530 தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நேஷனல் லோக் அதாலத் என்னும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதியும், பாபநாசம் வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவருமான எஸ். ராஜசேகர் தலைமையில், தேசிய மக்கள் நீதிமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் என். சிவகுமார் உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடர்பாக இரு தரப்பினரையும் அழைத்து கலந்து பேசி வழக்குகளை சமரசமாக முடிக்கும் பொருட்டு பல்வேறு வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதில் குடும்பம் நல வழக்குகள், காசோலை,வாய்த் தகராறு,பொதுநல வழக்குகள் உள்ளிட்ட 150 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு ரூ. 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 வசூலிக்கத் தீர்வானது. இதில் வழக்குரைஞர்கள் எஸ். கண்ணன், எஸ். பாலசுப்ரமணியன், என்.அரியராஜபூபதி, ஆர். அண்ணாமலை,டி. வெற்றிச்செல்வன், எ. கார்த்திக்கேயன், கே. மணிகண்டன் மற்றும் வழக்காடிகள் நீதிமன்றப் பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பாபநாசம் வட்ட சட்டப் பணிகள் குழு தன்னார்வ சட்டப் பணியாளர்கள் எஸ்.பி. ராஜேந்திரன், எஸ். தனசேகரன் உள்ளிட்டோர் செய்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/15/பாபநாசத்தில்-தேசிய-மக்கள்-நீதிமன்றம்-2960464.html
2960463 திருச்சி தஞ்சாவூர் குடந்தையில் சமையலர் தீக்குளித்து சாவு DIN DIN Sunday, July 15, 2018 04:47 AM +0530 கும்பகோணம் காமாட்சி ஜோசியர் தெருவில் உள்ள யாகசாலைத் தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் மகேஷ் (எ) சீனிவாசன் (42), சமையலர்.
இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை உறவினர்கள் திருமணம் செய்து வைத்த நிலையில், சில மாதங்களில் அப்பெண் மாயமாகிவிட்டதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் தனிமையில் இருந்த இவர், மதுபோதைக்கு அடிமையானார். இந்நிலையில் சனிக்கிழமை தனது வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இவரின் அலறல் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர், தீயை அணைத்து போலீஸாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து வந்த கும்பகோணம் கிழக்கு காவல்நிலைய போலீஸார், சீனிவாசனின் உடலைக் கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/15/குடந்தையில்-சமையலர்-தீக்குளித்து-சாவு-2960463.html
2960462 திருச்சி தஞ்சாவூர் சாரங்கபாணி கோயிலில் இன்று பவித்ரோத்சவம் தொடக்கம் DIN DIN Sunday, July 15, 2018 04:47 AM +0530 கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலில் ஜூலை 15-ல் பவித்ரோத்சவம் தொடங்குகிறது.
இதை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை ஆராவமுதன் திருப்பவித்ரோத்சவம் பகவத் அனுக்ஞை, 16 ஆம் தேதி முதலாம் திருநாள் தஷிணாயன வாயில் திறப்பு, 17 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை ஆராவமுதன் திருப்பவித்ரோத்சவம், 22 ஆம் தேதி உதயகருட சேவை, தீர்த்தவாரி, பெரியசாற்று முறை, 23 ஆம் தேதி ஜேஷ்டாபிஷேகம், 24 ஆம் தேதி காலையில் விஷேச திருமஞ்சனம், மாலையில் பெருமாள் தாயார் சேர்த்தி, ஆகஸ்ட் 13 ஆம் தேதி திருஆடிப்பூரம், ஆண்டாள் சந்நிதியில் திருமஞ்சனம், தீர்த்தவாரி, சாற்றுமுறை நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை பகவத் கைங்கர்ய சபா மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்கின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/15/சாரங்கபாணி-கோயிலில்-இன்று-பவித்ரோத்சவம்-தொடக்கம்-2960462.html
2960461 திருச்சி தஞ்சாவூர் ஒரத்தநாடு பகுதிகளில் ஜூலை 17-ல் மின்தடை DIN DIN Sunday, July 15, 2018 04:46 AM +0530 ஒரத்தநாடு அருகேயுள்ள வடசேரி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெறவிருப்பதால் வடசேரி, திருமங்கலக்கோட்டை, முள்ளூர்பட்டிக்காடு, பரவாக்கோட்டை, தளிக்கோட்டை, கருப்பூர், புலவஞ்சி, கீழக்குறிச்சி, மண்டலக்கோட்டை, ஆவிக்கோட்டை, ஒலையகுன்னம், மோகூர், அண்டமி, கண்ணுக்குடி மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என ஒரத்தநாடு மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்தார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/15/ஒரத்தநாடு-பகுதிகளில்-ஜூலை-17-ல்-மின்தடை-2960461.html
2960460 திருச்சி தஞ்சாவூர் வேளாண் அலுவலர் பணி போட்டித் தேர்வு: 679 பேர் பங்கேற்பு DIN DIN Sunday, July 15, 2018 04:46 AM +0530 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சனிக்கிழமை நடத்திய வேளாண் அலுவலர் (விரிவாக்கம்) பணிக்கான போட்டித் தேர்வை தஞ்சாவூரில் 679 பேர் எழுதினர்.
வேளாண் அலுவலர் போட்டித் தேர்வை மாநில அளவில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சனிக்கிழமை நடத்தியது. இத்தேர்வு தஞ்சாவூரில் அரசர் மேல்நிலைப் பள்ளி மற்றும் மேக்ஸ்வெல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மாவட்டத்தில் இப்போட்டித் தேர்வுக்கு 759 பேர் விண்ணப்பம் செய்தனர். இவர்களில் 679 பேர் தேர்வு எழுதினர்.
இம்மையங்களை மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை பார்வையிட்டார். இம்மையங்களில் வெப் காமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. மேலும், பறக்கும் படை மூலமும் கண்காணிப்பு செய்யப்பட்டது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/15/வேளாண்-அலுவலர்-பணி-போட்டித்-தேர்வு-679-பேர்-பங்கேற்பு-2960460.html
2960459 திருச்சி தஞ்சாவூர் சாலை விபத்தில் நாளிதழ் முகவரின் கணவர் சாவு DIN DIN Sunday, July 15, 2018 04:46 AM +0530 பட்டுக்கோட்டையை அடுத்த முள்ளூர்பட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பி. முத்துக்குமார் (41). தற்போது பக்கத்து ஊரான ஆலம்பள்ளம் கிராமத்தில் மனைவி சித்ராவுடன் (35) வசித்து வந்தார். அருகிலுள்ள பாப்பாநாடு என்ற ஊரில் சித்ரா பல்வேறு நாளிதழ்களின் முகவராக உள்ளார். தினமும் அதிகாலையில் முத்துக்குமார் ஆலம்பள்ளம் கிராமத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் பாப்பாநாடு சென்று அந்த பகுதியில் நாளிதழ்களை விநியோகித்து வந்தார்.
இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை நாளிதழ்களை விநியோகம் செய்ய முத்துக்குமார் வழக்கம்போல் மோட்டார் சைக்கிளில் பாப்பாநாடு சென்றார். ஆலத்தூர் பெரிய பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாக வாகனம் மோதி முத்துக்குமார் உயிரிழந்தார். புகாரின் பேரில் பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/15/சாலை-விபத்தில்-நாளிதழ்-முகவரின்-கணவர்-சாவு-2960459.html
2960276 திருச்சி தஞ்சாவூர் குடந்தை காவிரியாற்றில் 16 டன் குப்பைகள் அகற்றம் DIN DIN Sunday, July 15, 2018 01:44 AM +0530 குப்பையில்லா கும்பகோணம்' குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தன்னார்வ அமைப்புகள் சார்பில் கும்பகோணம் காவிரி ஆற்றில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
சிட்டி யூனியன் வங்கி, கும்பகோணம் கிங்ஸ் ரோட்டரி சங்கம், அரசு பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், கும்பகோணம் நகராட்சி ஆகியவை இணைந்து காவிரியாற்றில் கொட்டையூர் முதல் மணஞ்சேரி வரை 6 கி.மீ. தூரத்துக்கு தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
பணியை கும்பகோணம் உதவி ஆட்சியர் எம். பிரதீப்குமார் தொடங்கி வைத்தார். குப்பை அகற்றும் பணியில் கல்லூரி மாணவர்கள் 400 பேர், நகராட்சி துப்புரவு பணியாளர்கள் 60 பேர் ஈடுபட்டனர். இதில் பிளாஸ்டிக் பைகள், தேவையில்லாத துணிகள், காகிதம், பாட்டில்கள், செடி கொடிகள் ஆகிய மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என தனித்தனியாக பிரித்து அகற்றப்பட்டன.
நிகழ்ச்சியில் சிட்டி யூனியன் வங்கி முதன்மைத் திட்ட அலுவலர் எஸ். பாலசுப்பிரமணியன், நகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் பிரேமா, அரசு பொறியியல் கல்லூரித் தலைவர் திருநாவுக்கரசு, கிங்ஸ் ரோட்டரி சங்கத் தலைவர் எஸ். அரவிந்த் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் கே. உமாமகேஸ்வரி கூறியது:
குப்பையில்லா கும்பகோணத்தை உருவாக்கும் வகையில் பொதுமக்கள் பயன்படுத்தும் குப்பைகளை குறைக்க வேண்டும் என தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
தற்போது, காவிரியாற்றை சுத்தமாக வைத்துக் கொள்ளும் விதமாக, ஆற்றில் காணப்படும் குப்பைகள் தன்னார்வ அமைப்புகள் மூலம் அகற்றப்பட்டது. காவிரி ஆற்றில் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு சனிக்கிழமை மட்டும் 16 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன என்றார் அவர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/15/குடந்தை-காவிரியாற்றில்-16-டன்-குப்பைகள்-அகற்றம்-2960276.html
2959893 திருச்சி தஞ்சாவூர் பேராவூரணி அருகே  ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல் DIN DIN Saturday, July 14, 2018 09:20 AM +0530 பேராவூரணி அருகே ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள்  வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டை  வரை தற்போது வாரத்தில் 2 நாள்கள் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. 
இந்த ரயிலுக்கான பாதை பேராவூரணி  அருகே உள்ள கட்டையங்காடு வழியாக செல்கிறது. இந்த ரயில்பாதையை கடந்துதான் கட்டையங்காடு, அய்யனார் கோவில், பூவாணம்,  ஆகிய பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டும்.
எனவே, கட்டையங்காடு பகுதியில் தானியங்கி ரயில்வே கேட் அமைக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், ரயில்வே நிர்வாகம் கேட் அமைப்பதற்கு மறுத்து விட்டதாக தெரிகிறது. 
இந்நிலையில்,  பொதுமக்கள் ரயில் தண்டாவாளத்தை கடந்து தங்களது ஊருக்கு சென்று வந்து கொண்டிருந்தனர். பொதுமக்களின் பாதுகாப்பினை கருதி ரயில்வே துறையினர்,  ரயில்வே தண்டவாளத்தை கட்டயங்காடு பகுதியில்   பொதுமக்கள் கடக்கும் இடத்தில், சாலையின் இரண்டு பக்கத்திலும் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் பள்ளம் தோண்டி போட்டனர்.  இதனால், பாதிக்கப்பட்ட  கட்டயங்காடு மற்றும் சுற்றுப்புற பகுதி பொதுமக்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள்    கட்டயங்காட்டில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் விஜயலெட்சுமி,   டி.எஸ்.பி. செங்கமலக்கண்ணன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து,  பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ அலுவலகத்தில்  பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அதில்,  கட்டயங்காடு பகுதி பொதுமக்களின் நலன் கருதி தானியங்கி ரயில்வே கேட்   அல்லது  சுரங்கப்பாதை வசதி செய்து தர வேண்டுமென கோரிக்கை  மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து ரயில்வே நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக ஆர்.டி.ஓ. விஜயலெட்சுமி பொதுமக்களிடம் உறுதி அளித்தார். இந்த சாலை மறியலால் பட்டுக்கோட்டை பேராவூரணி இடையே சுமார் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/14/பேராவூரணி-அருகே--ரயில்வே-நிர்வாகத்தை-கண்டித்து-சாலை-மறியல்-2959893.html
2959892 திருச்சி தஞ்சாவூர் பள்ளிக்கொண்டான்-அதிராம்பட்டினம் இடையே அகல ரயில் பாதை அமைப்பு பணிகள் தீவிரம் DIN DIN Saturday, July 14, 2018 09:20 AM +0530 பள்ளிக்கொண்டான்-அதிராம்பட்டினம் இடையிலான அகல ரயில் பாதைக்கான நிரந்த ரயில் தண்டவாளங்கள் பொருத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
காரைக்குடி ~ திருவாரூர் இடையிலான 147 கி.மீ. தொலைவுக்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணியில்,  தற்போது காரைக்குடி-பட்டுக்கோட்டை வரையிலான 73 கி.மீ. தொலைவுக்கு அகலப் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
இதையடுத்து, கடந்த ஜூலை 2 ஆம் தேதி முதல் காரைக்குடி-பட்டுக்கோட்டை வழித்தடத்தில் பயணிகள் ரயில்  வாரத்தில் திங்கள், வியாழன் ஆகிய இரு நாள்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. 
எஞ்சிய, பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வரையிலான 76 கிலோ மீட்டர் தொலைவுக்கு அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே, பட்டுக்கோட்டையிலிருந்து அதிராம்பட்டினம் வழியாக  முத்துப்பேட்டை வரை  தற்காலிக தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பாதையில் கடந்த ஜூன் 23 ஆம் தேதி தெற்கு ரயில்வே சென்னை மண்டல கட்டுமானப் பிரிவு முதன்மைப் பொறியாளர் காளிமுத்து டிராலியில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். 
அதன் தொடர்ச்சியாக,  தற்போது பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, தில்லைவிளாகம் வழியாக திருத்துறைப்பூண்டி வரையிலான சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவுக்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இதில் ஒருபகுதியாக,  பள்ளிக்கொண்டான் முதல் அதிராம்பட்டினம் ரயில் நிலையம் வரை உள்ள ரயில் பாதையில் புதுதில்லியிலிருந்து சரக்கு ரயில் மூலம் கொண்டு வரப்பட்ட  360 மீட்டர் நீளமுள்ள நிரந்தர தண்டவாளங்களை  இறக்கி வைக்கும் பணிகள்  வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
 இப்பாதையில் ஏற்கெனவே தற்காலிகமாக பொருத்தப்பட்டுள்ள தண்டவாளங்களை அகற்றிவிட்டு,  நிரந்தர தண்டவாளங்களை பொருத்த இருப்பதாக ரயில்வேத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/14/பள்ளிக்கொண்டான்-அதிராம்பட்டினம்-இடையே-அகல-ரயில்-பாதை-அமைப்பு-பணிகள்-தீவிரம்-2959892.html
2959891 திருச்சி தஞ்சாவூர் "விரும்புகிற சேனல்களை மட்டும் பார்க்க கேபிள் சேவையில் மாற்றம் தேவை' DIN DIN Saturday, July 14, 2018 09:20 AM +0530 மக்கள் விரும்புகிற சேனல்களை மட்டும் பார்க்கும் விதமாக கேபிள் சேவையில் மாற்றம் செய்ய வேண்டும் என கேபிள் ஆபரேட்டர்கள் வலியுறுத்தினர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, அரியலூர் மாவட்ட கேபிள் ஆபரேட்டர்கள், வட்ட டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர்கள், உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவன நிர்வாக இயக்குநர் அ. ஜான் லாயிஸ்,  ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆபரேட்டர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.
இதில், டிஜிட்டல் மயமாக்கப்பட்டதில், ஒளிபரப்புக்கான கட்டணத் தொகை அதிகமாக்கப்பட்டுள்ளது என்பதால், ஆபரேட்டர்களுக்கான பங்குத் தொகையை அதிகப்படுத்தி தர வேண்டும் என ஆபரேட்டர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 
மேலும், பொதுமக்கள் தாங்கள் விரும்பும் சேனல்களை மட்டும் பார்க்கும் முறையில் மாற்றம் செய்வதுடன், அதற்குரிய  கட்டணம் மட்டும் வசூல் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த ஆலோசனைகள் அனைத்தும் பரிசீலனை செய்யப்படும் என தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன நிர்வாக இயக்குநர் தெரிவித்தார்.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/14/விரும்புகிற-சேனல்களை-மட்டும்-பார்க்க-கேபிள்-சேவையில்-மாற்றம்-தேவை-2959891.html
2959890 திருச்சி தஞ்சாவூர் தஞ்சாவூரில் நாளை தமமுக மாநாடு: வாகன வழித்தடம், நிறுத்துமிடம் அறிவிப்பு DIN DIN Saturday, July 14, 2018 09:20 AM +0530 தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள மாநகராட்சி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 15) நடைபெறவுள்ள தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (தமமுக) மாநில மாநாட்டில் கலந்து கொள்ள வரும் கட்சி பிரமுகர்கள், தொண்டர்களின் வாகனங்கள் வந்து செல்வதற்கான வழித்தடங்கள், நிறுத்துமிடம் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டன.
இதுகுறித்து மாவட்டக் காவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவாரூர் வழித்தடத்தில் (நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இருந்து) மாநாட்டுக்கு வரும் வாகனங்களை மாரியம்மன் கோயில் ரவுண்டானா வழியாகத் தேசிய நெடுஞ்சாலையில் பட்டுக்கோட்டை புறவழிச்சாலை, நாஞ்சிக்கோட்டை புறவழிச்சாலை, டான்டெக்ஸ் ரவுன்டானா, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் வரை சென்று திரும்பிப் புதிய சுற்றுச்சாலை, பூக்கொல்லை ரவுண்டானா, மருத்துவக் கல்லூரி சாலை வழியாக டி.பி.எஸ். நகருக்குச் சென்று வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்த வேண்டும்.
பட்டுக்கோட்டை வழித்தடத்தில் (திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து) மாநாட்டுக்கு வரும் கட்சி வாகனங்களைப் பட்டுக்கோட்டை ரவுண்டானா, தேசிய நெடுஞ்சாலை அடைந்து நாஞ்சிக்கோட்டை புறவழிச்சாலை, டான்டெக்ஸ் ரவுண்டானா, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் வரை சென்று திரும்பி, புதிய சுற்றுச்சாலை வழியாகப் பூக்கொல்லை ரவுண்டானா, மருத்துவக் கல்லூரி சாலை வழியாக டி.பி.எஸ். நகர் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்த வேண்டும்.
கும்பகோணம் வழித்தடத்தில் (திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து) வரும் கட்சி வாகனங்கள் பாபநாசம், அய்யம்பேட்டை வழியாக பள்ளியக்ரஹாரம் ரவுண்டானா, அம்மன்பேட்டை ரவுண்டானா, புதிய சுற்றுச்சாலை ரயில்வே மேம்பாலம், பூக்கொல்லை ரவுண்டானா, மருத்துவக் கல்லூரி சாலை வழியாக டி.பி.எஸ். நகர் வாகன நிறுத்த மைதானத்தில் நிறுத்தி செல்ல வேண்டும்.
திருவையாறு வழித்தடத்தில் (அரியலூர், பெரம்பலூர், சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து) மாநாட்டுக்கு வரும் கட்சி வாகனங்கள் அம்மன்பேட்டை ரவுண்டானா வந்து புதிய சுற்றுச்சாலை வழியாக புதிய ரயில்வே மேம்பாலம், பூக்கொல்லை ரவுண்டானா, மருத்துவக் கல்லூரி சாலை வழியாக டி.பி.எஸ். நகர் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்த வேண்டும்.
திருச்சி வழித்தடத்தில் (திருச்சி, கரூர், மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, நாமக்கல் மாவட்டங்களில் இருந்து) வரும் கட்சி வாகனங்களை செங்கிப்பட்டி, வல்லம், ஆலக்குடி அணுகுசாலை, மருத்துவக் கல்லூரி சாலை வழியாக டி.பி.எஸ். நகர் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்த வேண்டும். 
புதுக்கோட்டை வழித்தடத்தில் (புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து) வரும் கட்சி வாகனங்களை மேலூர், திருப்பத்தூர், புதுக்கோட்டை வழியாக தஞ்சாவூர் டான்டெக்ஸ் ரவுண்டானா, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் வரை சென்று திரும்பி புதிய சுற்றுச்சாலை, பூக்கொல்லை ரவுண்டானா, மருத்துவக் கல்லூரி சாலை வழியாக டி.பி.எஸ். நகர் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்த வேண்டும்.
இந்த அனைத்து வாகனங்களும் வந்த வழியாகவே திரும்பிச் செல்ல வேண்டும். இந்த மாநாட்டுக்குக் கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக எவ்வித வாகனங்களும் வர அனுமதி இல்லை.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/14/தஞ்சாவூரில்-நாளை-தமமுக-மாநாடு-வாகன-வழித்தடம்-நிறுத்துமிடம்-அறிவிப்பு-2959890.html
2959889 திருச்சி தஞ்சாவூர் ஒரத்தநாடு வட்டத்தில் குறுவை தொகுப்பு திட்டப் பணிகள் ஆய்வு DIN DIN Saturday, July 14, 2018 09:20 AM +0530 ஒரத்தநாடு வட்டத்தில் குறுவை தொகுப்பு திட்டப் பணிகளை வேளாண்மை இயக்குநர் வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது நடைபெற்று வரும் குறுவை தொகுப்பு திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து கள ஆய்வு வேளாண்மை இயக்குநர் வ. தெட்சிணாமூர்த்தி வெள்ளிக்கிழமை பார்வையிட்டார். 
கள ஆய்வின்போது,  ஒரத்தநாடு வட்டம்,  மூர்த்தியம்மாள்புரம் கிராமத்தில் விவசாயி சி.சௌந்தராஜன் என்பவரது வயலில் இயந்திர நடவை தொடக்கிவைத்து விவசாயிகளுக்கிடையே இயந்திர நடவு குறித்த அனுகூலங்களை கேட்டறிந்தார். இயந்திர  நடவு மேற்கொள்ளும் விவசாயிக்கு அரசு மானியமாக ஏக்கருக்கு ரூ. 4 ஆயிரம் எனவும், அதிகப்பட்சமாக ஒரு விவசாயிக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.10 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுவதால் விவசாயிகள் இயந்திர நடவு மேற்கொண்டு பயன் பெறலாம் என கேட்டு கொண்டார். மேலும்,  குறுவை சாகுபடி மேற்கொண்ட விவசாயிகளுக்கு மானியத்தில் ஜிங்க் சல்பேட், ஜிப்சம், உளுந்து, உளுந்து நுண்சத்து  உரம் மற்றும் உயிர் உரங்கள் ஆகியவற்றை வேளாண்மை இயக்குநர் வழங்கினார். 
இக்கள ஆய்வின்போது,  தஞ்சாவூர் வேளாண்மை இணை இயக்குநர் அ. மதியழகன், துணை இயக்குநர்கள் அ.ஜஸ்டின் , கோ.கணேசன், ஒரத்தநாடு வேளாண்மை உதவி இயக்குநர் ச.மாலதி ஆகியோர் உடனிருந்தனர்.
இயந்திர நடவிற்கான  ஏற்பாடுகளை ஒரத்தநாடு வேளாண்மை அலுவலர் செ.செல்வராசு மற்றும் வேளாண்மை உதவி அலுவலர் ஆர்.நடனகோபால் ஆகியோர் செய்திருந்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/14/ஒரத்தநாடு-வட்டத்தில்-குறுவை-தொகுப்பு-திட்டப்-பணிகள்-ஆய்வு-2959889.html
2959888 திருச்சி தஞ்சாவூர் மத்திய அரசு ஜி.எஸ்.டி.யை கைவிட வலியுறுத்தல் DIN DIN Saturday, July 14, 2018 09:19 AM +0530 ஜி.எஸ்.டி.யை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாவட்டச் சிறப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரசியல் கட்சிகள் மாநாடு மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு வியாபாரிகளிடம் நன்கொடை கேட்டு துன்புறுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களைத் தடை செய்ய வேண்டும் என்பதை வரவேற்பதுடன், 51 மைக்ரானுக்கு அதிகமான தடிமன் உள்ள பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தலாம் என்ற மத்திய அரசின் சட்டத்தைத் தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அரசு ஜி.எஸ்.டி.யை உடனடியாகக் கைவிட வேண்டும். தஞ்சாவூர் மாநகரைப் பொலிவுறு நகரமாக வருவதை வரவேற்பதுடன், வியாபாரிகளுக்கு பாதகம் இல்லாமல் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். தேநீர் மற்றும் சிற்றுண்டி கடைகளை இரவு 12 மணி வரை வியாபாரம் செய்ய அனுமதி தர வேண்டும். தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு இரவு நேரத்தில் ரயில் விட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்டத் தலைவர் எம். கணேசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் பி. முருகேசன், பொருளாளர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/14/மத்திய-அரசு-ஜிஎஸ்டியை-கைவிட-வலியுறுத்தல்-2959888.html
2959865 திருச்சி தஞ்சாவூர் ஆக. 2-இல் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் DIN DIN Saturday, July 14, 2018 08:57 AM +0530 தஞ்சாவூர் ஆட்சியரகத்தில் உள்ள குறைதீர் நாள் கூட்ட அரங்கில் ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆக. 2-ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் சென்னை ஓய்வூதிய இயக்குநர் கலந்து கொள்கிறார். அப்போது, மாவட்டத் தில் அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசுப் பணியாளர்களில் இதுவரை ஓய்வூதியப் பலன்கள் கிடைக்காதவர்கள் தங்களுடைய ஓய்வூதியம் தொடர்பான குறைகளையும், ஆலோசனைகளையும் நேரில் தெரிவித்து தொடர்புடைய துறை அலுவலர்களிடம் விவரங்களைப் பெறலாம்.
கூட்டத்தில் விவாதிக்க ஏதுவாக தீர்வு செய்யப்படாத குறைகளைத் தெரிவிக்க விரும்பும் ஓய்வூதியர்கள் கடைசியாகப் பணிபுரிந்த அலுவலகத்தின் பெயர், பதவி, ஓய்வு பெற்ற நாள், கோரிக்கை விவரம், செல்லிடப்பேசி எண், கோரிக்கை தொடர்புடைய அலுவலகத்தின் முகவரியைத் தெளிவாகக் குறிப்பிட்டு ஜூலை 25-ம் தேதிக்குள் ஆட்சியருக்கு இரு பிரதிகளில் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும் என ஆட்சியரக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/14/ஆக-2-இல்-ஓய்வூதியர்-குறைதீர்-கூட்டம்-2959865.html
2959864 திருச்சி தஞ்சாவூர் ஜூலை 19-இல் பொன் விழா ஆண்டு விளையாட்டுப் போட்டிகள் DIN DIN Saturday, July 14, 2018 08:57 AM +0530 தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் தமிழ்நாடு பொன் விழா ஆண்டு மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 19-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்திருப்பது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் ஜூலை 19-ம் தேதி நடைபெறவுள்ளது.  போட்டிகளில் பங்கேற்போர் 1.1.1997 அன்றோ அல்லது அதற்கு பின்னர் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். மேலும்,  தமிழ்நாட்டில் குறைந்தது 5 ஆண்டுகளாவது வசித்து வருவதற்கான புகைப்படத்துடன் கூடிய சான்றை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரிடம் வழங்க வேண்டும். 
முதலிடம் பெறுபவர்களுக்கு தலா ரூ. 2,500-ம், இரண்டாமிடம் பெறுபவர்களுக்கு தலா ரூ. 1,500-ம், மூன்றாமிடம் பெறுபவர்களுக்கு தலா ரூ. 1,000-ம் பரிசுத் தொகையாக வழங்கப்படும். மாவட்ட அளவில் முதலிடம் பெறும் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வர். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டுப் பிரிவை 04362 - 235633 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/14/ஜூலை-19-இல்-பொன்-விழா-ஆண்டு-விளையாட்டுப்-போட்டிகள்-2959864.html
2959863 திருச்சி தஞ்சாவூர் ஒரத்தநாடு த.மு.எ.க.ச. கிளை பேரவை நிர்வாகிகள் தேர்வு DIN DIN Saturday, July 14, 2018 08:57 AM +0530 தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள்  சங்கத்தின் ஒரத்தநாடு கிளை பேரவைக் கூட்டம் விஏஓ சங்க கட்டடத்தில் புதன்கிழமை எல்.சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
தமுஎகச மாவட்டச் செயலாளர் ஆர்.விஜயகுமார் தொடக்கிவைத்து பேசினார். பட்டுக்கோட்டை தமுஎகச கிளைச் செயலாளர் மோரீஸ் அண்ணாதுரை,  டாக்டர் பரமானந்தம்,  ஆர்.ராமச்சந்திரன்(சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர்),  சமுதாகனி (தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம்), தமுஎகச மாவட்ட இணைச் செயலாளர் ப.சத்தியநாதன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தமுஎகச மாநில துணைப் பொதுச் செயலாளர் கவிஞர் களப்பிரன் புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்துப் பேசினார். 
இக்கூட்டத்தில்,  தலைவராக எல். சுந்தரமூர்த்தி,  செயலாளராக சுனந்தா சுரேஷ், பொருளாளராக தம்பி அய்யா,  துணைத் தலைவர்களாக சக்திவேல், பாரதிதாசன்,  துணைச் செயலாளர்களாக ஹஸ்ரத் பேகம்,  முருகானந்தம்,  செயற்குழு உறுப்பினர்களாக துரைராஜ்,  அமுதாராணி,  ஜெயராமன்,  இலக்கியா, கருணாநிதி,  மஞ்சுளா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
நிகழ்ச்சியில் க.பாரதிதாசன், பெ.சரண்யா கவிதை வாசித்தனர். வி.எஸ்.சக்திவேல் நாட்டுப்புற இசை வாசித்தார். எஸ்.ஜெயராமன், ஜே.ஹிஸ்ரத் பேகம் ஆகியோர்  பேசினர்.  முன்னதாக, சுனந்தா சுரேஷ் வரவேற்றார். நிறைவில் தம்பி அய்யா நன்றி கூறினார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/14/ஒரத்தநாடு-தமுஎகச-கிளை-பேரவை-நிர்வாகிகள்-தேர்வு-2959863.html
2959862 திருச்சி தஞ்சாவூர் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை.யில் ஆய்வேடுகள் பிரிவு திறப்பு DIN DIN Saturday, July 14, 2018 08:56 AM +0530 தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக நூலகத்தில் ஆய்வேடுகள் பிரிவைத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலர் இரா. வெங்கடேசன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இதுவரை பல துறைகளில் மேற்கொள்ளப்பட்ட  முனைவர் பட்டம் மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்ற ஆய்வு மாணவர்கள் மேற்கொண்ட ஆய்வேடுகளின் எண்ணிக்கை 5,512. இந்த ஆய்வேடுகளை மற்ற மாணவர்கள் அறிந்து கொள்ளும் விதமாகத் தமிழ்ப் பல்கலைக்கழக நூலகத்தில் தனிப் பிரிவாக தொடங்கப்பட்டுள்ளது.   
இப்பிரிவை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலர் இரா. வெங்கடேசன் கூறுகையில், இப்பிரிவு தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு மிகவும் முக்கியமானது. இந்த நல்ல வாய்பை வருங்கால ஆய்வாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் அவர்.
இந்த விழாவில் துணைவேந்தர் க. பாஸ்கரன், பதிவாளர் ச. முத்துக்குமார், தமிழ் வளர்ச்ச்சித் துறை இயக்குநர் கோ. விஜயராகவன், ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியன், ராஜேந்திரன், பாண்டி, சி. சுப்பிரமணியம், முனைவர் இரா. பாஸ்கரன், நூலகர் சி. வேல்முருகன், உதவி நூலகர் தி. சிவக்குமார், முதல் நிலை நூலகர் பா. சண்முகம் துணைப் பதிவாளர் கோ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/14/தஞ்சாவூர்-தமிழ்ப்-பல்கலையில்-ஆய்வேடுகள்-பிரிவு-திறப்பு-2959862.html
2959861 திருச்சி தஞ்சாவூர் ஒரத்தநாடு பேரூராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸார் சோதனை DIN DIN Saturday, July 14, 2018 08:56 AM +0530 ஒரத்தநாடு பேரூராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் சோதனை மேற்கொண்டனர். 
தஞ்சாவூர் மாவட்டம்,  ஒரத்தநாடு பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்சம் உள்ளிட்ட முறைகேடுகள் அதிகளவில் நடைபெறுவதாக தஞ்சாவூர் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல்கள் வந்தன. இதன்பேரில், பேரூராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பேரூராட்சி அலுவலகத்தில் குறிப்பிட்ட சில நபர்கள் மீது ஏராளமான புகார்கள் வந்ததன் அடிப்படையிலேயே இச்சோதனை நடைபெற்றது.  
இச்சோதனையின்போது அந்த குறிப்பிட்ட  நபர்கள் அலுவலகத்தில் இல்லாததால், சில ஆவணங்களை மட்டும் எடுத்து சென்ற ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், சம்பந்தப்பட்ட நபர்களை நேரில் வந்து ஆஜராக வேண்டும் என சொல்லி சென்றதாக கூறப்படுகிறது.  
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/14/ஒரத்தநாடு-பேரூராட்சி-அலுவலகத்தில்-ஊழல்-தடுப்பு-போலீஸார்-சோதனை-2959861.html
2959860 திருச்சி தஞ்சாவூர் திருவோணத்தில் 300 லிட்டர் பதுக்கல் சாராயம் பறிமுதல்: 3 பேர் கைது DIN DIN Saturday, July 14, 2018 08:56 AM +0530 ஒரத்தநாடு வட்டம்,  திருவோணம் பகுதியில் தோட்டத்தில் பதுக்கிய 300 லிட்டர் சாராயத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். 
 இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருவோணம் அருகேயுள்ள மணிக்கிரான் விடுதியில் சாராய விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின்பேரில் திருவோணம் உதவி ஆய்வாளர் மகேந்திரன், தலைமை காவலர் மலர்மன்னன் மற்றும் போலீஸார் சம்பவ  இடத்தில் சோதனை மேற்கொண்டனர். 
இதில், அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் பானை, அண்டா உள்ளிட்ட பொருள்கள் கிடந்தன. அங்கு போலீஸார் மேற்கொண்ட தீவிர சோதனையில் பிளாஸ்டிக் குடங்களில் 300 லிட்டர் சாராய ஊறல் புதைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி,  அங்கு சாராயத்தை பதுக்கி விற்பனை செய்த மணிகிரான்விடுதியை சேர்ந்த அய்யாகண்ணு மகன் ராமன் (35),  மாயக்கண்ணு மகன் செந்தில் (30),  செவ்வாய்பட்டியை சேர்ந்த தங்கப்பா (56) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/14/திருவோணத்தில்-300-லிட்டர்-பதுக்கல்-சாராயம்-பறிமுதல்-3-பேர்-கைது-2959860.html
2959859 திருச்சி தஞ்சாவூர் சாலை விபத்தில் கல்லூரி மாணவர் சாவு DIN DIN Saturday, July 14, 2018 08:56 AM +0530 தஞ்சாவூர் கீழவாசல் எஸ்.என்.எம். நகரைச் சேர்ந்தவர் ரவிகுமாரின் மகன் பிரவீன் (19). இவர் வல்லம் அருகேயுள்ள தனியார் கல்லூரியில் பி.காம். மூன்றாமாண்டு படித்து வந்தார். இவர் மோட்டார் சைக்கிளில் வல்லம் ஆலக்குடி அணுகுசாலையில் மோட்டார் சைக்கிளில் வெள்ளிக்கிழமை மாலை சென்றபோது சாலையோர தடுப்பில் வாகனம் மோதியது. இதில், பலத்தக் காயமடைந்த பிரவீன் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து வல்லம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/14/சாலை-விபத்தில்-கல்லூரி-மாணவர்-சாவு-2959859.html
2959858 திருச்சி தஞ்சாவூர் பேராவூரணியில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக 4 பேர் மீது வழக்கு DIN DIN Saturday, July 14, 2018 08:55 AM +0530 பேராவூரணியில் அலுவலகத்தில் வேலை பார்த்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக 4 பேர் மீது போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பேராவூரணி அருகே பழைய பேராவூரணியில் பசுமை பூமி என்ற பெயரில் இயற்கை விவசாயம் தொடர்பான ஆலோசனைகள்,  இயற்கை உரம்,   தென்னங்கன்றுகள் விற்பனை நிலையம் நடத்தி வருபவர் அக்ரி நடராஜன் (48).  இவரது நிறுவனத்தில் ஆதனூரைச் சேர்ந்த ஆபிரஹாம் மனைவி புஷ்பலதா  (40) என்பவர் வேலை செய்து வந்தார். 
புஷ்பலதாவிற்கு நடராஜன் அடிக்கடி பாலியல்  தொந்தரவு கொடுத்து வந்தாராம்.  இதற்கு புஷ்பலதா உடன்படாததால்,  ஆத்திரமடைந்த நடராஜன் புஷ்பலதாவை வேலையைவிட்டு நீக்கிவிட்டாராம். இதுகுறித்து பேராவூரணி காவல் நிலையத்தில் புஷ்பலதா புகார் அளித்தார். புகாரில், பசுமை பூமி நிறுவனத்தில் வேலை செய்தபோது நடராஜன் பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், அவரோடு உடன்பட்டு போகும்படி அவரது உதவியாளர்கள் ரூபன், நித்யா, நித்யாவின் தாய் சித்ரா ஆகியோர் வற்புறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். புகாரின்பேரில், பேராவூரணி போலீஸார், அந்த 4 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல், தமது நிறுவனத்தில் வேலை செய்தபோது 2 லட்சம் ரூபாயை புஷ்பலதா கையாடல் செய்துவிட்டதாகவும், அந்தப் பணத்தை திரும்ப கேட்டதால் தம் மீதும், தனது நிறுவன ஊழியர்கள் மீதும் அவர் பொய் புகார் கொடுத்துள்ளதாக நடராஜன் புகார் அளித்துள்ளார். இதன்பேரில், புஷ்பலதா மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/14/பேராவூரணியில்-பெண்ணுக்கு-பாலியல்-தொந்தரவு-அளித்ததாக-4-பேர்-மீது-வழக்கு-2959858.html
2959857 திருச்சி தஞ்சாவூர் தேங்காய் விலையை உயர்த்த புனல்வாசல் நுகர்வோர் குழு வலியுறுத்தல் DIN DIN Saturday, July 14, 2018 08:55 AM +0530 தேங்காய் விலையை உயர்த்த வேண்டும் என புனல்வாசல் நுகர்வோர் குழு வலியுறுத்தியுள்ளது. 
இதுகுறித்து,  அந்த அமைப்பின் தலைவர் வி.ஏ.சவரிமுத்து வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ஒரு தேங்காயின் உற்பத்தி செலவு, தேங்காய் பறிக்க, ஒருங்கிணைக்க,  உறிக்க வேலையாட்கள் கூலி என ரூ.15 ஆகிறது. வெளிச்சந்தை விலையாக வியாபாரிகள் தர வாரியாக சிறிய தேங்காய் ரூ. 10-க்கும், பெரிய தேங்காய் ரூ.15-க்கும் பேரம் பேசி குறைந்த விலைக்கு வாங்குவதால் தென்னை விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது.
மற்ற பொருள்களின் விலையை ஒப்பிடுகையில், குறிப்பாக 1ஆப்பிள்  ரூ.30-க்கு விற்கப்படுகிறது. ஆனால் 1 உறித்த தேங்காய்  
ரகத்துக்கு ஏற்றபடி ரூ.10-ல் இருந்து ரூ.15 வரை மட்டுமே விற்கப்படுவது தென்னை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு பேரிழப்பாகும். 
ஆந்திரா, கேரளா மாநில அரசுகள் தங்கள் மாநில தென்னை விவசாயிகளை காப்பாற்றும் வகையில் தேங்காய் வணிக மையம் ஏற்படுத்தி, உறித்த தேங்காய்  ஒன்றின் விலை ரூ. 30 எனவும், அதற்கேற்ப கொப்பரை விலையை கிலோ ரூ. 250 எனவும் நிர்ணயம் செய்து, அரசே கொள்முதல் செய்து, தென்னை விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாதவாறு செயல்படுவதை கவனத்தில் கொண்டு, தமிழக அரசும் உறித்த தேங்காய் ஒன்றின் விலையை ரூ. 30 என நிர்ணயம் செய்து, அதற்கேற்ப கொப்பரை விலையை கிலோ ரூ. 250 என நிர்ணயம் செய்வதுடன், அவற்றை தமிழக அரசே கொள்முதல் செய்து தென்னை விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/14/தேங்காய்-விலையை-உயர்த்த-புனல்வாசல்-நுகர்வோர்-குழு-வலியுறுத்தல்-2959857.html
2959856 திருச்சி தஞ்சாவூர் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் DIN DIN Saturday, July 14, 2018 08:55 AM +0530 மழைக் காலம் தொடங்கப்படவுள்ளதால் கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கும்பகோணம் வட்டாரப் பொது சுகாதாரத் துறையின் சார்பில் நடைபெற்ற இந்த முகாமில் பட்டீசுவரம் வட்டார மேற்பார்வையாளர் சங்கரன் கொசு போல் வேடமணிந்து டெங்கு காய்ச்சல் பரவும் விதம்,  தடுக்கும் முறைகள் பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள் விஜயேந்திரன்,  வீரமணி,  செளந்தர்ராஜன், செந்தில்குமார்,  சிவகுமார்,  கோமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/14/டெங்கு-காய்ச்சல்-தடுப்பு-விழிப்புணர்வு-முகாம்-2959856.html
2959855 திருச்சி தஞ்சாவூர் உதவித்தொகை கோரி ஆர்ப்பாட்டம் DIN DIN Saturday, July 14, 2018 08:54 AM +0530 இளம் வழக்குரைஞர்களுக்குத் தமிழக அரசு உதவித்தொகை வழங்க வலியுறுத்தி கும்பகோணம் நீதிமன்றம் முன் இளம் வழக்குரைஞர்கள் வெள்ளிக்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில், ஆந்திரம், கேரளம், புதுச்சேரி அரசுகளைப் போல தமிழக அரசும் இளம் வழக்குரைஞர்களுக்கு மாத உதவித் தொகை ரூ. 5,000 வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் எஸ். குருமூர்த்தி தலைமை வகித்தார். இதில் 50-க்கும் அதிகமான வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/14/உதவித்தொகை-கோரி-ஆர்ப்பாட்டம்-2959855.html
2959854 திருச்சி தஞ்சாவூர் பாபநாசம் அருகே கார் மோதி  தொழிலாளி சாவு DIN DIN Saturday, July 14, 2018 08:54 AM +0530 பாபநாசம் அருகேயுள்ள அய்யம்பேட்டை ரயிலடி பகுதியை சேர்ந்தவர் ஜெ. ராஜீ (38). தொழிலாளி. இவர் வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் மனைவி கனகா(33), இரண்டு குழந்தைகளுடன்  வியாழக்கிழமை திங்களூருக்கு சென்றுவிட்டு அய்யம்பேட்டைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
திருவையாறு-கும்பகோணம் பிரதான சாலையில் சோமேஸ்வரபுரம் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது,  பின்னால் திருவையாறிலிருந்து வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு  நிற்காமல் சென்று விட்டதாம்.
இதில்,  இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த ராஜீ பலத்த காயமடைந்து  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், காயமடைந்த ராஜீவின் மனைவி கனகா, மற்றும் இரண்டு குழந்தைகள் ஆகியோர் தஞ்சாவூர் அரசு மருத்துவக்  கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.  சம்பவம் குறித்த புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/14/பாபநாசம்-அருகே-கார்-மோதி--தொழிலாளி-சாவு-2959854.html
2959853 திருச்சி தஞ்சாவூர் அதிரை கல்லூரியில் கருத்தரங்கம் DIN DIN Saturday, July 14, 2018 08:54 AM +0530 அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் வியாழக்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் ஏ. முகமது முகைதீன் தலைமை வகித்தார். தஞ்சாவூர் மாவட்ட தேசிய பசுமைப்படை திட்ட ஒருங்கிணைப்பாளர் பி. ராம்மனோகர் சிறப்புரையாற்றினார். கல்லூரி விலங்கியல் துறைத் தலைவர் பி.குமாரசாமி வரவேற்றார். பேராசிரியர் ஏ. அம்ஜத் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். பேராசிரியர் கே. முத்துக்குமாரவேல் நன்றி கூறினார். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் ஓ.சாதிக், ஜெ. சுகுமாரன் ஆகியோர் செய்திருந்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/14/அதிரை-கல்லூரியில்-கருத்தரங்கம்-2959853.html
2959852 திருச்சி தஞ்சாவூர் தீவிபத்து நிவாரண உதவி DIN DIN Saturday, July 14, 2018 08:54 AM +0530 பாபநாசம் அருகே நரசிம்மபுரம் கிராமத்தில் வசித்து வரும் மணி என்பவரின் கூரை வீட்டில் கடந்த 10ஆம் தேதி தீப்பிடித்தது. இதில், வீட்டிலிருந்த வீட்டு உபயோக பொருள்கள் எரிந்து ரூ. 25 ஆயிரம் மதிப்பில் சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 
இதையடுத்து, தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பாபநாசம் வட்டாட்சியர் மாணிக்கராஜ் ஆறுதல் கூறி, அரசின் நிவாரண உதவிகளை வழங்கினார். இதில் மண்டல துணை வட்டாட்சியர்கள் செல்வராஜ்,  தர்மராஜ், வட்ட வழங்கல் அலுவலர் பூங்கொடி, வருவாய் அதிகாரி ஜெயமதி, கிராம நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/14/தீவிபத்து-நிவாரண-உதவி-2959852.html
2959851 திருச்சி தஞ்சாவூர் மின் கசிவால் வீடு தீக்கிரை DIN DIN Saturday, July 14, 2018 08:53 AM +0530 பாபநாசம் அருகேயுள்ள மேலகபிஸ்தலம் கிராமம், காமராஜர் காலனி தெருவை சேர்ந்தவர் நாகராஜன்.  நீதித் துறையில் ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 
இந்நிலையிலல்,  வியாழக்கிழமை இரவு மின் கசிவின் காரணமாக இவரது ஓட்டு வீட்டில் தீ பற்றியது. தகவலின்பேரில் பாபநாசம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். ஆனாலும், தீ விபத்தில் வீட்டிலிருந்த வீட்டு உபயோக பொருள்கள், ரூ. 30ஆயிரம் ரொக்கம், 4 பவுன் நகை உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/14/மின்-கசிவால்-வீடு-தீக்கிரை-2959851.html
2959850 திருச்சி தஞ்சாவூர் காலமானார்: டி. அப்பாவு DIN DIN Saturday, July 14, 2018 08:53 AM +0530 பட்டுக்கோட்டை வட்டம்,  ஆலத்தூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலரும், அக்கட்சியின் மூத்த உறுப்பினருமான டி.அப்பாவு (74) உடல்நலக்குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை (ஜூலை 13) அதிகாலை ஆலத்தூர் மேலத் தெருவிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
அவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர். ஆலத்தூரில் வெள்ளிக்கிழமை மாலை இறுதிச்சடங்கு நடைபெற்றது. தொடர்புக்கு: 96264 33324.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/14/காலமானார்-டி-அப்பாவு-2959850.html
2959849 திருச்சி தஞ்சாவூர் பேராவூரணி அருகே அம்மா திட்ட சிறப்பு முகாம் DIN DIN Saturday, July 14, 2018 08:52 AM +0530 மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தஞ்சாவூரில் ஜூலை 21-ம் தேதி தொடர் முழக்கப் போராட்டம் நடத்துவது என பல்வேறு கட்சிகள், இயக்கங்களின் நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தஞ்சாவூரில் இக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் சுரண்டப்படுவதைத் எதிர்த்து அமைதியான முறையில் போராடுபவர்களைத் தடுக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, தஞ்சாவூர் ரயிலடியில் ஜூலை 21-ம் தேதி தொடர் முழக்கப் போராட்டம் நடத்துவது,  இப்போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் தா. பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணனை பங்கேற்க அழைப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலர் அய்யனாபுரம் சி. முருகேசன் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டப் பொருளாளர் என். பாலசுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் பி. செந்தில்குமார், சி.பி. எம்.எல். மக்கள் விடுதலை மாவட்டச் செயலர் இரா. அருணாசலம், சமவெளி விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சு. பழனிராசன், தமிழ்த் தேசியப் பேரியக்க மாவட்டச் செயலர் நா. வைகறை, ஏஐடியூசி மாவட்டத் துணைச் செயலர் துரை. மதிவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/14/பேராவூரணி-அருகே-அம்மா-திட்ட-சிறப்பு-முகாம்-2959849.html
2959848 திருச்சி தஞ்சாவூர் பேராவூரணி அருகே பனை மரங்களை வெட்டிக் கடத்த முயற்சி DIN DIN Saturday, July 14, 2018 08:52 AM +0530 பேராவூரணியை அடுத்த கழனிவாசல் கிராமத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள கண்மாயில் இருந்த பனைமரங்களை மர்ம நபர்கள் வெட்டிக் கடத்த முயற்சித்துள்ளனர். 
தஞ்சாவூர் மாவட்டம்,  பேராவூரணி அருகே கழனிவாசல் கிராமத்தில் கண்மாய் உள்ளது. பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கண்மாய் மூலம் கழனிவாசல் மற்றும் ஆதனூர் பகுதியில் உள்ள நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. கண்மாய் பகுதியையொட்டி ஏராளமான பனைமரங்கள் உள்ளன.
இந்த மரங்களை மர்மநபர்கள், வெட்டிக் கடத்துவதாக பேராவூரணி வருவாய்த் துறையினருக்கு  தகவல் கிடைத்தது. இதையடுத்து பேராவூரணி வட்டாட்சியர் எல். பாஸ்கரன், பொதுப்பணித் துறை உதவி செயற் பொறியாளர் செல்வராஜ், உதவி பொறியாளர் பிரசன்னா மற்றும் வருவாய்த் துறையினர், பொதுப்பணித் துறையினர் கழனிவாசல் கண்மாய் பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தினர்.
அங்கு மரங்களை வெட்டிக் கடத்த முயன்ற நபர்கள்,  அதிகாரிகளை கண்டதும் தப்பியோடினர். அங்கு 28-க்கும் மேற்பட்ட பனைமரங்கள் வெட்டப்பட்டு துண்டுகளாக கிடந்தன. இதையடுத்து,  பொதுப்பணித் துறை சார்பில் பேராவூரணி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில்,  பனை மரங்களை வெட்டிக் கடத்த முயன்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/14/பேராவூரணி-அருகே-பனை-மரங்களை-வெட்டிக்-கடத்த-முயற்சி-2959848.html
2959847 திருச்சி தஞ்சாவூர் மின் மோட்டாரை திருடிய இளைஞர் கைது DIN DIN Saturday, July 14, 2018 08:52 AM +0530 பாபநாசம் அருகே வடக்குமாங்குடி கிராமம்,  ரஹ்மானியா தெருவை சேர்ந்தவர் அ. அபுசாலி (28). இவர் தனது வீட்டு உபயோகத்திற்காக மின் மோட்டார் அமைத்திருந்தார். புதன்கிழமை இரவு இவர் வீட்டிலிருந்த  மின் மோட்டாரை யாரோ திருடி சென்றுவிட்டனராம். இதுகுறித்து அபுசாலி அய்யம்பேட்டை போலீஸில் புகார் அளித்தார். 
இந்நிலையில்,  அபுசாலியின் வீட்டருகே சந்தேகத்துக்கிடமான வகையில் ஒருவர் நின்றுகொண்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். இதில்,  அவர் வடக்குமாங்குடி தெற்கு தெருவை சேர்ந்த ரவி (30) என்பதும், அவரது நண்பர் வெங்கடேசனுடன் சேர்ந்து அபுசாலி வீட்டிலிருந்த மின் மோட்டாரை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து, ரவியை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவான வெங்கடேசனை தேடி வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/14/மின்-மோட்டாரை-திருடிய-இளைஞர்-கைது-2959847.html
2959846 திருச்சி தஞ்சாவூர் சிமென்ட் மூட்டைகளை  திருடியவர் கைது DIN DIN Saturday, July 14, 2018 08:52 AM +0530 அய்யம்பேட்டை மைதீன் நகரை சேர்ந்தவர் முகம்மது ரபீக் (30). இவர் அய்யம்பேட்டை தானீஸ் நகரில் புதிதாக வீடு கட்டி வருகிறார். 
வியாழக்கிழமை  முகம்மது ரபீக் புதிய கட்டடத்துக்கு சென்றபோது அங்கு சிமென்ட் மூட்டைகளை திருடிக் கொண்டிருந்த நபரை அய்யம்பேட்டை போலீஸார் உதவியுடன் பிடித்தார். விசாரணையில் அவர் சூலமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்பது தெரியவந்தது. 
அவரை போலீஸார் கைது செய்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/14/சிமென்ட்-மூட்டைகளை--திருடியவர்-கைது-2959846.html
2959845 திருச்சி தஞ்சாவூர் பேராவூரணி அருகே அம்மா திட்ட சிறப்பு முகாம் DIN DIN Saturday, July 14, 2018 08:51 AM +0530 பேராவூரணி அருகே அம்மா திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது
பேராவூரணியை அடுத்த சித்தாதிக்காடு கிராமத்தில் தமிழக அரசின் சிறப்பு திட்ட முகாம்   வட்டாட்சியர் எல். பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.  முகாமில்,  ஏரி, குளங்களில் வண்டல் மண்,  சவுடு மண் எடுக்க அனுமதி கோரி 35 பேரும்,  முதியோர், விதவை உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கை மனுக்கள் 22 என மொத்தம் 57 மனுக்கள் பெறப்பட்டது.  
இம்முகாமில் வட்டாட்சியர் எல். பாஸ்கரன் பேசுகையில்,  விதிமுறைகளுக்கு உட்பட்டு,  கோரிக்கை மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு உரிய அனுமதி வழங்கப்படும்.  மண் எடுக்க அனுமதி பெறுவோர் விதிகளைப் பின்பற்றி மண் எடுக்க வேண்டும் என்றார்.
முகாமில் மண்டல துணை வட்டாட்சியர் செல்வகுமார்,  தலைமை நில அளவையர் செல்வராஜ், பேராவூரணி சரக வருவாய் ஆய்வாளர் அஷெரப் அலி,  கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசன் மற்றும் கிராமத்தினர் கலந்து கொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/14/பேராவூரணி-அருகே-அம்மா-திட்ட-சிறப்பு-முகாம்-2959845.html
2959844 திருச்சி தஞ்சாவூர் மூன்று ஆண்டுகளில் 45 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன DIN DIN Saturday, July 14, 2018 08:51 AM +0530 தஞ்சாவூர் மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளில் 45 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன என்றார் ஆட்சியர் ஆ. அண்ணாதுரை.
தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பல்லுயிர் பன்முகத்தன்மை குறித்த பயிலரங்கத்தைத் தொடங்கி வைத்த அவர் மேலும் பேசியது:
மாவட்டத்தில் வனத் துறை சார்பில் மூன்று ஆண்டுகளில் 45 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு, 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. 
இம்மாவட்டத்தை 2017, டிச. 31-ம் தேதி முதல் திறந்தவெளிக் கழிப்பிடமற்ற மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தில் மாவட்டத்தில் 2.30 லட்சம் தனி நபர் கழிப்பறைகள் கட்டித் தரப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்களுக்குத் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் ஜூலை 2-ம் தேதி முதல் பிளாஸ்டிக் முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இதேபோல, வாரந்தோறும் திங்கள்கிழமை நடத்தப்படும் மக்கள் குறை தீர் நாள் கூட்டத்தில் மாவட்ட வனத் துறையின் சார்பில் 3 லட்சம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர்.
தமிழ்நாடு உயிரிப் பல்வகை வாரியச்  செயலரும், கூடுதல் தலைமை வனப் பாதுகாவலருமான அ. உதயம், மாவட்ட வன அலுவலர்கள் குருசாமி (தஞ்சாவூர்), சுஜாதா (திருச்சி) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/14/மூன்று-ஆண்டுகளில்-45-லட்சம்-மரக்கன்றுகள்-நடப்பட்டன-2959844.html
2959843 திருச்சி தஞ்சாவூர் கும்பகோணம் அரசுக் கல்லூரியில்  போராட்டம் நடத்திய 5 மாணவர்கள் தற்காலிக நீக்கம் DIN DIN Saturday, July 14, 2018 08:51 AM +0530 கும்பகோணம் அரசுக் கல்லூரியில் போராட்டம் நடத்திய 5 மாணவர்கள் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டனர்.
கும்பகோணம் அரசுத் தன்னாட்சி கலை, அறிவியல் கல்லூரியில் போதிய கழிப்பறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறி மாணவர்கள் வியாழக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
மாணவர்களைப் போராட்டம் நடத்தத் தூண்டியதாகவும், கல்லூரியில் ஒழுங்கீனமற்ற வகையில் செயல்பட்டதாகவும், வகுப்புகளுக்குள் செல்லும் சக மாணவர்களைத் தடுத்ததாகவும் கூறி, கல்லூரியின் ஆட்சி மன்ற நிர்வாகக் குழு முடிவின்படி, மூன்றாமாண்டு மாணவர்கள் பிரவீன்ராஜ், தீபக், பாலமுருகன், பிரகாஷ்ராஜ் இரண்டாமாண்டு மாணவி ஜெனி ஆகிய ஐந்து பேரும் வியாழக்கிழமை தற்காலிக நீக்கம் செய்யப்பட்டனர்.
இவர்களை மீண்டும் கல்லூரிக்குள் அனுமதிக்க வேண்டும். தற்காலிக நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி மற்ற மாணவர்கள் இரண்டாம் நாளாக வெள்ளிக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, மாணவர்களிடம் கல்லூரி முதல்வர் பூங்கோதை பேச்சுவார்த்தை நடத்தினார். என்றாலும், போராட்டத்தில் ஈடுபட்ட சில  மாணவர்கள், வகுப்புக்குள் சக மாணவர்களைச் செல்ல விடாமல் தடுத்தனர். இதையடுத்து அனைத்து மாணவர்களும் வகுப்பைப் புறக்கணித்தனர். 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/14/கும்பகோணம்-அரசுக்-கல்லூரியில்--போராட்டம்-நடத்திய-5-மாணவர்கள்-தற்காலிக-நீக்கம்-2959843.html
2959842 திருச்சி தஞ்சாவூர் இரு இடங்களில் இன்று வேளாண்மை அலுவலர் பதவிக்கான தேர்வு DIN DIN Saturday, July 14, 2018 08:50 AM +0530 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் வேளாண்மை அலுவலர் (விரிவாக்கம்) பதவிக்கான போட்டித் தேர்வு தஞ்சாவூரில் இரு இடங்களில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
ஆட்சியரகத்தில் இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் வேளாண்மை அலுவலர் போட்டித் தேர்வு சனிக்கிழமை நடைபெறவுள்ளது. 
தஞ்சாவூரில் இத்தேர்வு தஞ்சாவூர் அரசர் மேல்நிலைப் பள்ளி மற்றும் மேக்ஸ்வெல் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையங்களில் நடைபெற இருக்கிறது. இரு மையங்களிலும் 759 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர். 
இம்மையங்களில் வெப் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளது.  
தேர்வுகளை இயங்குக் குழுத் கண்காணிக்கவுள்ளது. மேலும், பறக்கும் படை மூலமும் கண்காணிப்பு செய்யப்படவுள்ளது.  
தேர்வு நடைபெறும் மையங்கள் மற்றும் வினாத்தாள் வைக்கப்படும் இடத்தில் போதுமான காவல் துறை பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் அறைக்குள் செல்லிடப்பேசி,  கால்குலேட்டர் மற்றும் நவீன மின்னணு பொருள்களை  அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர்.  இந்தக் கூட்டத்தில்,  பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/14/இரு-இடங்களில்-இன்று-வேளாண்மை-அலுவலர்-பதவிக்கான-தேர்வு-2959842.html
2959232 திருச்சி தஞ்சாவூர் செட்டிக்குளத்திலுள்ள வெங்காயம் பதப்படுத்துதல் மையத்தின் திறனை மேம்படுத்தத் திட்டம் DIN DIN Friday, July 13, 2018 09:26 AM +0530 பெரம்பலூர் அருகே செட்டிக்குளத்திலுள்ள வெங்காயப் பதப்படுத்துதல் மையத்தின் திறனை மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என தஞ்சாவூரில் உள்ள இந்திய உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்ப நிறுவன இயக்குநர் சி. அனந்தராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:
மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்ப நிறுவனமும், மாநில வேளாண் வணிகத் துறையும் இணைந்து பெரம்பலூர் மாவட்டம், செட்டிக்குளம் கிராமத்தில் பொது உணவு பதப்படுத்துதல் வளர்ப்பக மையத்தை அமைத்துள்ளன. இதில், இந்திய உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்ப நிறுவனத்தால் ஒருங்கிணைந்த வெங்காயப் பதப்படுத்துதல் பிரிவும், வெங்காயத்தில் இருந்து மதிப்புக் கூட்டுப் பொருட்கள் செய்வதற்கான இயந்திரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே இம்மையத்தின் நோக்கம்.
இந்திய உணவு பதன தொழில்நுட்ப நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி, இந்த மையத்தின் சேவைகளை விவசாயிகள் பயன்படுத்தி வெங்காயக் கூழ், வெங்காயத் தூள், வெங்காயத் தோல், தோல் உரிக்கப்பட்ட வெங்காயம் போன்ற மதிப்புக் கூட்டுப் பொருட்களைத் தயாரித்து வருகின்றனர். இந்த மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றதுடன், சந்தையில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. அதிகரித்து வரும் தேவையை நிறைவு செய்வதற்காக இம்மையத்தின் திறனை விரிவாக்கம் செய்ய மாநில வேளாண்மை வணிகத் துறை, பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளன.
இம்மையத்தின் தொழில்நுட்பப் பங்குதாரராக இருந்து வரும் இந்திய உணவு பதன தொழில்நுட்ப நிறுவனம் ஒருங்கிணைந்த வெங்காயப் பதப்படுத்துதல் பிரிவின் திறனை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்ப உதவியைச் செய்ய உள்ளது. இத்திறன் மேம்பாட்டுப் பணிக்கு மாநில அரசின் ஒதுக்கீடான ரூ. 29.5 லட்ச நிதி பயன்படுத்தப்படவுள்ளது. தஞ்சாவூரில் ஆக. 17 முதல் 19-ம் தேதி வரை நடைபெறவுள்ள மாநாட்டில் மாநில அரசிடம் மேம்படுத்தப்பட்ட வெங்காயப் பதப்படுத்துதல் பிரிவு ஒப்படைக்கப்படும் என அனந்தராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/13/செட்டிக்குளத்திலுள்ள-வெங்காயம்-பதப்படுத்துதல்-மையத்தின்-திறனை-மேம்படுத்தத்-திட்டம்-2959232.html
2959231 திருச்சி தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை. பிளாஸ்டிக் இல்லாத கல்வி வளாகமாக அறிவிப்பு DIN DIN Friday, July 13, 2018 09:26 AM +0530 தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் வியாழக்கிழமை முதல் பிளாஸ்டிக் இல்லாத கல்வி வளாகமாக உருவாக்கப்படுகிறது என்றார் அப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் க. பாஸ்கரன்.
இப்பல்கலைக்கழகத்தில் கல்வியியல், மேலாண்மையியல் துறை சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற இளங்கல்வியியல் பட்டப்படிப்பு முதலாமாண்டு வகுப்புத் தொடக்க விழாவில் அவர் மேலும் பேசியது:
இப்பல்கலைக்கழகமானது வியாழக்கிழமை முதல் பிளாஸ்டிக் இல்லாத கல்வி வளாகமாக உருவாக்கப்படுகிறது.   இன்றைய மாணவர்கள் நாளைய ஆசிரியர்கள் என்ற இரு பொறுப்பை உடையவர்கள். எனவே,  இந்த வளாகத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும்.
பிளாஸ்டிக் பொருள்களை அறவே அகற்ற வேண்டும் என்ற பொறுப்பு மாணவர்களுக்குத்தான் உள்ளது.  சமுதாயத்தை நல்ல விதத்திலே கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு மாணவர்களுக்கு உள்ளது. ஆசிரியர்களுடைய பொறுப்பு அந்தச் சமுதாய மேம்பாட்டுக்கு நல்ல மாணவர்களை உருவாக்க வேண்டும். 
இளங்கல்வியியலில் 2018 - 19 ஆம் ஆண்டுக்கான 100 மாணவர்கள் சேர்க்கை நிறைவுற்றது. முதுநிலை கல்வியியல் (எம்.எட்.) பட்டப் படிப்புக்கான நேரடிச் சேர்க்கை ஜூலை 31-ம் தேதி வரை நடைபெறும் என்றார் துணைவேந்தர். 
பதிவாளர் ச. முத்துக்குமார், புலத் தலைவர் சி. சுப்பிரமணியன், துறைத் தலைவர் கு. சின்னப்பன், இணைப் பேராசிரியர் சா. ரவிவர்மன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/13/தமிழ்ப்-பல்கலை-பிளாஸ்டிக்-இல்லாத-கல்வி-வளாகமாக-அறிவிப்பு-2959231.html
2959230 திருச்சி தஞ்சாவூர் கூலிப்படையைச் சேர்ந்த 4 பேர் கைது DIN DIN Friday, July 13, 2018 09:26 AM +0530 ஒரத்தநாடு அருகே வீடு ஒன்றில் தங்கியிருந்த கூலிப்படையை சேர்ந்த நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர். 
தஞ்சாவூர் மாவட்டம்,  ஒரத்தநாடு அடுத்த வன்னிப்பட்டு தேவபுரத்தை சேர்ந்த ஆறுமுகம் மனைவி காந்திமதி (50). இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கணவரை கொன்று, வீட்டின் உள்ளே புதைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
தேவபுரத்திலுள்ள சொந்த வீட்டை காலி செய்துவிட்டு, தற்போது ஒரத்தநாட்டில் வசித்து வரும் அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில்,  தேவபுரத்திலுள்ள காந்திமதியின் வீட்டில் சந்தேகமளிக்கும் வகையிலான சில நபர்கள் கடந்த ஓராண்டாக தங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில்,  அந்த வீட்டை புதன்கிழமை இரவு போலீஸார் சுற்றி வளைத்தனர். அப்போது, அங்கு 7 பேர் தங்கியிருந்தது தெரிந்தது. அந்த நபர்களை பிடிக்க முயன்றபோது,  3 பேர் தப்பியோடிவிட்டனர். 4 பேரை போலீஸார் மடக்கிபிடித்தனர். 
விசாரணையில், அவர்கள்  பட்டுக்கோட்டை நரியாம்பாளைத்தை சேர்ந்த சுரேஷ் (34), கும்பகோணம் சாக்கோட்டையை சேர்ந்த வினோத் (23),  திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்த அருண்குமார்(28),  அருள்சுந்தர் என்பது தெரிய வந்தது.  அவர்கள் ஒக்கநாடு கீழையூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளனர்.
பிடிபட்ட வினோத் மீது வலங்கைமான், அதிராம்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களிலும்,  அருள்குமார் மீது காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட காவல் நிலையங்களிலும்,  இதேபோல் அருள்சுந்தர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. மேலும்,  இவர்கள் வெளி மாவட்ட,  மாநிலங்களுக்கு சென்று பல்வேறு கொலை சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, நால்வரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/13/கூலிப்படையைச்-சேர்ந்த-4-பேர்-கைது-2959230.html
2959229 திருச்சி தஞ்சாவூர் காமராஜர் பிறந்த நாள் விழா DIN DIN Friday, July 13, 2018 09:26 AM +0530 தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில்  பள்ளி மற்றும் சேவாலயா அமைப்பு சார்பில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமையாசிரியர் வடிவேல் தலைமை வகித்தார். இதில், பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. 
சேவாலயா அமைப்பின் கி. முத்துராமகிருஷ்ணன், பாரதி இலக்கியப் பயிலக இயக்குநர் தஞ்சை வெ. கோபாலன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மனவளக் கலை மன்றத்தின் சார்பில் பெருமாள், பானுமதி பங்கேற்று யோகாவின் அவசியம் குறித்து பேசினர். ஆசிரியை ஜெயந்தி வரவேற்றார். ஆசிரியர் செல்வராஜூ நன்றி கூறினார்.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/13/காமராஜர்-பிறந்த-நாள்-விழா-2959229.html
2959228 திருச்சி தஞ்சாவூர் கும்பகோணம் அரசுக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் DIN DIN Friday, July 13, 2018 09:26 AM +0530 கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்துதர வலியுறுத்தி மாணவர்கள் வியாழக்கிழமை வகுப்புகளை புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் சுகாதாரமான குடிநீர்,  கழிப்பிட வசதிகள் சரிவர இல்லை எனக் கூறப்படுகிறது. எனவே,  அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் எனவும்,  பாதுகாப்பற்ற நிலையிலுள்ள வகுப்பறை கட்டடங்களை சீரமைத்துத் தர வேண்டும் எனவும் வலியுறுத்தி கும்பகோணம் அரசுக் கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களும் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கல்லூரி மாணவர்கள் சார்பில் அர்ஜூன்குமார் தலைமை வகித்தார். இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/13/கும்பகோணம்-அரசுக்-கல்லூரி-மாணவர்கள்-போராட்டம்-2959228.html
2959227 திருச்சி தஞ்சாவூர் ஜூலை 16, 17-இல் கறவை மாடு வளர்ப்புப் பயிற்சி DIN DIN Friday, July 13, 2018 09:26 AM +0530 தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகம் அருகேயுள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் கறவை மாடு வளர்ப்பு மற்றும் முதலுதவி மூலிகை மருத்துவம் குறித்த இருநாள் பயிற்சி முகாம் ஜூலை 16, 17-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
இப்பயிற்சிக்கு வரும் அனைவரும் தவறாமல் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கொண்டு வர வேண்டும் என்றும், மேலும் விவரங்களுக்கு 9047157859, 04362 - 264665 ஆகிய எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் மையத் தலைவர் ஏ. முகமது சபியுல்லா தெரிவித்துள்ளார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/13/ஜூலை-16-17-இல்-கறவை-மாடு-வளர்ப்புப்-பயிற்சி-2959227.html
2959226 திருச்சி தஞ்சாவூர் குடிமராமத்து பணிகள்: கண்காணிப்பு அலுவலர் ஆய்வு DIN DIN Friday, July 13, 2018 09:26 AM +0530 தஞ்சாவூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமராமத்து பணிகளை மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், தேசிய சுகாதாரத் திட்டக் குழும இயக்குநருமான தரேஸ் அகமது வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
திருவையாறு அருகே நாகத்தி வாய்க்காலில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டுமானம் மற்றும் புனரமைப்புப் பணி,  ஒரத்தநாடு வட்டம்,  தோப்புவிடுதி ஊராட்சியில் ரூ. 23 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டு வரும் பனங்குளம் ஏரி, புலவன்காடு ஊராட்சியில் ரூ. 20 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்படும் லகுஸ்தான் ஏரி, பட்டுக்கோட்டை வட்டம், பழஞ்சூர் கிராமத்தில் ரூ. 25 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டு வரும் தச்சனோடை ஏரி, பட்டுக்கோட்டை வட்டம், தம்பிக்கோட்டை மறவக்காடு கிராமத்தில் ரூ. 47 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டு வரும் அமெரிகுளம் ஏரி ஆகியவற்றைப் பார்வையிட்டார். 
பின்னர், பட்டுக்கோட்டை அக்னியாறு கோட்ட அலுவலகத்தில் குடிமராமத்து பணிகள் குறித்து ஆய்வு செய்தார். 
ஆய்வின்போது ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் மகாலெட்சுமி, பொதுப் பணித் துறை காவேரி கோட்டச் செயற் பொறியாளர் முகமது இக்பால், அக்னியாறு கோட்டச் செயற் பொறியாளர் செல்லமுத்து, வெண்ணாறு கோட்டச் செயற் பொறியாளர் அசோகன், கல்லணை கால்வாய் கோட்ட செயற்பொறியாளர் திரு.முருகேசன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/13/குடிமராமத்து-பணிகள்-கண்காணிப்பு-அலுவலர்-ஆய்வு-2959226.html
2959225 திருச்சி தஞ்சாவூர் பெரியகோயிலில் ஆஷாட  நவராத்திரி விழா தொடக்கம் DIN DIN Friday, July 13, 2018 09:26 AM +0530 தஞ்சாவூர் பெரியகோயிலில் 11 நாள்கள் நடைபெறும் ஆஷாட நவராத்திரி பெருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.
இதையொட்டி, காலையில் கணபதி ஹோமமும், சிறப்பு யாகமும் நடைபெற்றன. பின்னர், வாராஹி அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், பழங்கள் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. மாலையில் வாராஹி அம்மனுக்கு இனிப்பு அலங்காரம் செய்யப்பட்டது . விழா நாள்களில் நாள்தோறும் காலையில் யாகமும்,  மாலையில் வாராஹி அம்மனுக்கு அலங்காரமும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
வாராஹி அம்மனுக்கு வெள்ளிக்கிழமை மஞ்சள் அலங்காரமும்,  சனிக்கிழமை குங்கும அலங்காரமும் செய்யப்படவுள்ளது. வரும் 15-ம் தேதி சந்தன அலங்காரமும், 16-ம் தேதி தேங்காய்ப்பூ அலங்காரமும், 17-ம் தேதி மாதுளை அலங்காரமும், 18-ம் தேதி நவதானிய அலங்காரமும், 19-ம் தேதி வெண்ணெய் அலங்காரமும், 20-ம் தேதி கனிவகை அலங்காரமும், 21-ம் தேதி காய்கறி அலங்காரமும், 22-ம் தேதி புஷ்ப அலங்காரமும், திருவீதி உலாவும் நடைபெறுகிறது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/13/பெரியகோயிலில்-ஆஷாட--நவராத்திரி-விழா-தொடக்கம்-2959225.html
2959224 திருச்சி தஞ்சாவூர் கும்பகோணம் மீன் மார்க்கெட்டில் கடைகள் அடைப்பு: வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் DIN DIN Friday, July 13, 2018 09:26 AM +0530 மீன்களில் ரசாயனம் கலப்பு என்ற தவறான பரப்புரையைக் கண்டித்து,  கும்பகோணம் மீன் மார்கெட்டிலுள்ள மீன் வியாபாரிகள் வியாழக்கிழமை கடையடைப்பு நடத்தி,  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம் பெரியார் மீன் அங்காடியில் கடந்த 9 ஆம் தேதி மீன்வளத்துறை சார்பில் மீன்களில் ரசாயனம் கலப்பு தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பார்மலின் என்ற ரசாயனம் கலக்கப்பட்ட மீன்கள் விற்பனைக்கு இருந்ததாக அதிகாரிகள் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் கும்பகோணம் பகுதி பொதுமக்கள் அச்சமடைந்து,  மீன்கள் வாங்க வராததால் கடந்த 2 நாள்களாக மீன் மார்க்கெட் வெறிச்சோடியது. 
அதிகாரிகள் தவறான தகவல் தெரிவித்ததால்தான் வியாபாரம் பாதிக்கப்பட்டது. இந்த தவறான பரப்புரையைக் கண்டித்து கும்பகோணம் மீன் மார்க்கெட் வியாபாரிகள் வியாழக்கிழமை காலை கடைகளை அடைத்து,  மார்க்கெட் வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, ஜூலை 13 ஆம் தேதி வரை இரண்டு நாள்களுக்கு கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என அவர்கள் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு தந்தை பெரியார் மீன் மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.எஸ். ராஜ் தலைமை வகித்தார். இதில் மார்க்கெட் வியாபாரிகள் சங்கப் பொருளாளர் நசீர், அவைத் தலைவர் ஜெயினுலாப்தீன், உறுப்பினர் ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ரசாயனம் தடவிய மீன்கள் விற்கவில்லை
கும்பகோணம் தந்தை பெரியார் மீன் மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.எஸ். ராஜ் கூறியது: கும்பகோணம் மீன் மார்க்கெட்டில் ரசாயனம் கலக்கப்பட்ட மீன்கள் விற்கப்படுவதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தவறான தகவல் தெரிவித்ததால் எங்களுடய வியாபாரம் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. 
நாங்கள் தஞ்சாவூர், நாகை மாவட்டங்களிலிருந்து வரும் புதிய மீன்களை மட்டுமே விற்பனை செய்கிறோம். எந்த ரசாயனம் தடவிய மீன்களையும் நாங்கள் விற்கவில்லை.
எனவே,  மீன்களில் ரசாயனம் கலக்கப்பட்டதாக தவறான பரப்புரை செய்த அதிகாரிகள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து, கும்பகோணம் மீன் மார்க்கெட் மீன்களின் மீதுள்ள பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும். இல்லையெனில் அடுத்த கட்டமாக மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/13/கும்பகோணம்-மீன்-மார்க்கெட்டில்-கடைகள்-அடைப்பு-வியாபாரிகள்-ஆர்ப்பாட்டம்-2959224.html
2959223 திருச்சி தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை மக்கள் நீதிமன்றம் DIN DIN Friday, July 13, 2018 09:26 AM +0530 தஞ்சாவூர் மாவட்டச் சட்டப் பணிகள் ஆணைக் குழு மூலமாக மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களில் சனிக்கிழமை (ஜூலை 14) தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழு வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் கூறியிருப்பதாவது:
தேசிய மக்கள் நீதிமன்றத்தை முன்னிட்டு, நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், சமாதானம் ஆகக்கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள் தொடர்பாக முதன்மை மாவட்ட நீதிபதி (முழுக் கூடுதல் பொறுப்பு) கே. பூர்ண ஜெய ஆனந்த் தலைமையில் ஐந்து அமர்வுகள் போடப்பட்டு மக்கள் நீதிமன்றம் நடைபெற்று வருகிறது.
நியு இந்தியா இன்சூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ் ஆகியவற்றுக்கான விபத்து இழப்பீடு கோரும் வழக்குகளுக்குரிய மக்கள் நீதிமன்றத்துக்கான முன்அமர்வு முடிந்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கான விபத்து இழப்பீடு வழக்குகள் மற்றும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு எதிரான வழக்குகளுக்கான முன் அமர்வு வெள்ளிக்கிழமை (ஜூலை 13) நடைபெறவுள்ளது.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/13/தஞ்சாவூர்-மாவட்டத்தில்-நாளை-மக்கள்-நீதிமன்றம்-2959223.html
2959222 திருச்சி தஞ்சாவூர் பட்டுக்கோட்டையில் நகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் DIN DIN Friday, July 13, 2018 09:26 AM +0530 பட்டுக்கோட்டையில் நகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து நகர திமுக சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
ஆர்ப்பாட்டத்தில்,  நகராட்சி குடிநீரில் சாக்கடை நீர் கலப்பதை தடுக்க வேண்டும். சாக்கடையில் தேங்கியுள்ள கழிவு நீரை அகற்ற வேண்டும். எரியாத தெரு விளக்குகளை எரியவிட வேண்டும். நகராட்சி எரிவாயு தகன மேடைக்குச் செல்ல தார்ச்சாலை அமைக்க வேண்டும். அனைத்து வார்டுகளிலும் பல மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டு இன்னும் நிறைவடையாமல் உள்ள கப்பிச்சாலைகளை தார்ச்சாலைகளாக மாற்றும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தஞ்சை தெற்கு மாவட்ட திமுக முன்னாள் அவைத் தலைவர்  அ.அப்துல்சமது தலைமை வகித்தார். நகரப் பொறுப்பாளர் எஸ்.ஆர்.என். செந்தில்குமார், மாவட்ட  துணைச்செயலாளர் கா. அண்ணாதுரை, மாநிலப்  பேச்சாளர் ந.மணிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர்மன்ற முன்னாள் உறுப்பினர்கள்  எஸ். ஸ்ரீதர், என். வெங்கடேசன், கே.வி. அழகேசன், ஜி. இளங்கோவன்,  கே.வி.ஆர்.திருச்செந்தில்,  டி. கோவிந்தராஜ்,  அ. அப்துல்ரகுமான் மற்றும் நகர பொறுப்புக் குழு  உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/13/பட்டுக்கோட்டையில்-நகராட்சி-நிர்வாக-சீர்கேட்டை-கண்டித்து-திமுக-ஆர்ப்பாட்டம்-2959222.html
2959221 திருச்சி தஞ்சாவூர் பெரியகோயிலில் உண்டியல்கள் திறப்பு: ரூ. 8.22 லட்சம் காணிக்கை DIN DIN Friday, July 13, 2018 09:26 AM +0530 தஞ்சாவூர் பெரியகோயிலில் உள்ள உண்டியல்கள் வியாழக்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தர்கள் ரூ. 8.22 லட்சம் காணிக்கையாகச் செலுத்தியிருப்பது தெரிய வந்தது.
இக்கோயிலில் மொத்தம் 11 உண்டியல்கள் உள்ளன. இவை அறநிலையத் துறை உதவி ஆணையர் சிவராம்குமார், அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் ஜெ. பரணிதரன், கோயில் செயல் அலுவலர் மாதவன், ஆய்வர் மனோகரன், மேற்பார்வையாளர் ரெங்கராஜ் உள்ளிட்டோர் முன்னிலையில் வியாழக்கிழமை காலை திறக்கப்பட்டது. இவற்றை எண்ணும் பணியில் கோயில் பணியாளர்கள், இந்தியன் வங்கி ஊழியர்கள், புன்னைநல்லூர் வார வழிபாட்டுக் குழுவினர் என மொத்தம் சுமார் 50 பக்தர்கள் பங்கேற்றனர். காலையில் தொடங்கிய இப்பணி மாலை வரை நடைபெற்றது. இதில், பக்தர்கள் 8 லட்சத்து 22 ஆயிரத்து 585 ரூபாய் காணிக்கையாகச் செலுத்தியிருப்பது தெரிய வந்தது. மேலும், 4.1 கிராம் தங்கம், 73 கிராம் வெள்ளி, 153 வெளிநாட்டு நோட்டுகள் ஆகியவற்றையும் பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/13/பெரியகோயிலில்-உண்டியல்கள்-திறப்பு-ரூ-822-லட்சம்-காணிக்கை-2959221.html
2959220 திருச்சி தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் கூடுதலாக 112 வாக்குச்சாவடிகள்: ஆட்சியர் தகவல் DIN DIN Friday, July 13, 2018 09:25 AM +0530 தஞ்சாவூர் மாவட்டத்தில் மறு சீரமைப்புக்குப் பிறகு கூடுதலாக 112 வாக்கு சாவடிகள் அமைக்கப்படவுள்ளன என்றார் ஆட்சியர் ஆ. அண்ணாதுரை.
அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்கு சாவடி பட்டியல்கள் ஜூலை 2-ம் தேதி வெளியிடப்பட்டது. இப்பட்டியல் மீது வாக்காளர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் இருந்து எழுத்து மூலம் கருத்து மற்றும் ஆட்சேபனை கேட்கப்பட்டது. அவர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துருக்களின் அடிப்படையில் ஆட்சியரகத்தில் ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் முன்னிலையில் கலந்தாலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
இதில், ஆட்சியர் தெரிவித்தது:
கிராமப்புறத்தில் 1,200 வாக்காளர்களுக்கும் அதிகமாக உள்ள வாக்கு சாவடிகளும், நகர்புறத்தில் 1,400 வாக்காளர்களுக்கும் அதிகமாக உள்ள வாக்கு சாவடிகளும் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி பிரிக்கப்படவுள்ளது.
இதன்படி,  திருவிடைமருதூர் தொகுதியில் ஏற்கெனவே உள்ள 277 வாக்கு சாவடிகளுடன் 14 புதிய வாக்கு சாவடிகள் உருவாக்கப்பட்டு மொத்தம் 291 வாக்கு சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.
கும்பகோணம் தொகுதியில் ஏற்கெனவே உள்ள 267 வாக்கு சாவடிகளுடன் 20 புதிய வாக்கு சாவடிகள் உருவாக்கப்பட்டு மொத்தம் 287 வாக்கு சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.
பாபநாசம் தொகுதியில் ஏற்கெனவே உள்ள 289 வாக்கு சாவடிகளுடன் 11 புதிய வாக்கு சாவடிகள் உருவாக்கப்பட்டு மொத்தம் 300 வாக்கு சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.
திருவையாறு தொகுதியில் ஏற்கெனவே உள்ள 291 வாக்கு சாவடிகளுடன் 16 புதிய வாக்கு சாவடிகள் உருவாக்கப்பட்டு மொத்தம் 307 வாக்கு சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.
தஞ்சாவூர் தொகுதியில் ஏற்கெனவே உள்ள 276 வாக்கு சாவடிகளுடன் 10 புதிய வாக்கு சாவடிகள் உருவாக்கப்பட்டு மொத்தம் 286 வாக்கு சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.
ஒரத்தநாடு தொகுதியில் ஏற்கெனவே உள்ள 274 வாக்கு சாவடிகளுடன் 11 புதிய வாக்கு சாவடிகள் உருவாக்கப்பட்டு மொத்தம் 285 வாக்கு சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.
பட்டுக்கோட்டை தொகுதியில் ஏற்கெனவே உள்ள 254 வாக்கு சாவடிகளுடன் 17 புதிய வாக்கு சாவடிகள் உருவாக்கப்பட்டு மொத்தம் 271 வாக்கு சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.
பேராவூரணி தொகுதியில் ஏற்கெனவே உள்ள 247 வாக்கு சாவடிகளுடன் 13 புதிய வாக்கு சாவடிகள் உருவாக்கப்பட்டு மொத்தம் 260 வாக்கு சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.
மாவட்டத்தில் மறு சீரமைப்புக்குப் பின்னர் 112 புதிய வாக்கு சாவடிகள் உருவாக்கப்பட்டு 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 2,287 வாக்கு சாவடிகள் அமையவுள்ளன.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/13/தஞ்சாவூர்-மாவட்டத்தில்-கூடுதலாக-112-வாக்குச்சாவடிகள்-ஆட்சியர்-தகவல்-2959220.html
2959197 திருச்சி தஞ்சாவூர் காவிரி ஆணையமும் ஒழுங்காற்றுக் குழுவும் செயலற்றுப் போனது ஏன்? காவிரி உரிமை மீட்புக் குழு  கேள்வி DIN DIN Friday, July 13, 2018 08:56 AM +0530 காவிரி மேலாண்மை ஆணையமும், நீர் ஒழுங்காற்றுக் குழுவும் செயலற்று போனது ஏன் என தஞ்சாவூரில் வியாழக்கிழமை நடைபெற்ற காவிரி உரிமை மீட்புக் குழுக் கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கருத்துகள்:
கடந்த 2.7.2018 அன்று கூடிய காவிரி மேலாண்மை ஆணையமும், 5.7.2018 அன்று கூடிய காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் இதுவரை செயலற்ற அமைப்புகளாக உள்ளன. உச்ச நீதிமன்றம் இறுதி செய்து அளித்த தீர்ப்பின்படி கர்நாடகத்தின் 4 அணைகள், தமிழ்நாட்டின் 3 அணைகள்,  கேரளத்தின் ஓர் அணை ஆகியவற்றில் தண்ணீரைத் திறந்து மூடும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவுக்கும்தான் இருக்கிறது. ஆனால்,  காவிரி மேலாண்மை ஆணையம் இதுவரை அந்தப் பணியைச் செய்யவில்லை.
நிகழாண்டு கர்நாடக அணைகளில் ஜூன் மாதம் முதல் தண்ணீர் அதிகமாக இருக்கிறது.
ஜூன், ஜூலை மாதங்களுக்குரிய தண்ணீரை உரிய கால வரையறைப்படி ஆணையமும் ஒழுங்காற்றுக் குழுவும் திறந்து விட்டிருந்தால் தமிழ்நாட்டில் குறுவை சாகுபடியைத் தொடங்கியிருக்க முடியும்.
வழக்கத்தைவிட அதிகமாகப் பருவமழை பெய்து, கர்நாடக அணைகள் உடைந்து விடக்கூடிய அபாயம் ஏற்பட்டதால், அந்த மிகை நீரைத் தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட்டுள்ளது கர்நாடக அரசு. வெள்ள அபாய காலத்தில் அணைகளை நேரடியாகப் பார்வையிட்டு மிகை நீரைத் திறந்துவிட ஆணை இட வேண்டிய ஆணையமும் ஒழுங்காற்றுக் குழுவும் கர்நாடகம் வராதது ஏன்? 
மிகை வெள்ளம் வரும் இந்தப் பருவத்தில் செயல்படாத மேலாண்மை ஆணையமும், ஒழுங்காற்றுக் குழுவும் பருவமழை குறையும் காலத்தில் செயல்படுமா என்ற வினா எழுகிறது. தமிழ்நாடு அரசு இப்போதுகூட செயல்படவில்லை என்றால் எப்போது செயல்படும்?
இக்கூட்டத்துக்குக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தலைமை வகித்தார். தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலர் அய்யனாபுரம் சி. முருகேசன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் த. மணிமொழியன், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் இலரா. பாரதிசெல்வன், இந்திய ஜனநாயகக் கட்சி மாவட்டத் தலைவர் ச. சிமியோன் சேவியர்ராசு, உழவர் உரிமை இயக்கத் தலைவர் சீ. தங்கராசு, தாளாண்மை உழவர் இயக்கத் தலைவர் கோ. திருநாவுக்கரசு, சமவெளி விவசாயிகள் சங்கத் தலைவர் சு. பழனிராசன், தமிழ்த் தேசியப் பாதுகாப்புக் கழகத் தலைவர் வழக்குரைஞர் த.சு. கார்த்திகேயன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், தமிழ்த்தேச மக்கள் முன்னணி மாவட்டச் செயலாளர் அருண்சோரி, மனிதநேய ஜனநாயகக் கட்சி மாவட்டச் செயலாளர் அகமது கபீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/13/காவிரி-ஆணையமும்-ஒழுங்காற்றுக்-குழுவும்-செயலற்றுப்-போனது-ஏன்-காவிரி-உரிமை-மீட்புக்-குழு--கேள்வி-2959197.html
2958490 திருச்சி தஞ்சாவூர் சிலை கடத்தல் வழக்கு: சுபாஷ் கபூர் நீதிமன்றத்தில் ஆஜர் DIN DIN Thursday, July 12, 2018 09:19 AM +0530 சிலை கடத்தல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுபாஷ் சந்திர கபூர் போலீஸ் பாதுகாப்புடன் கும்பகோணம் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். 
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் காவல் சரகத்துக்குள்பட்ட சித்தமல்லி வரதராஜ பெருமாள் கோயிலில் 2008ஆம் ஆண்டு 20 சிலைகள் திருடு போனது. அதே போல, விக்கிரமங்கலம் காவல் சரகம் ஸ்ரீபுரந்தான் பிரகதீஸ்வரர் கோயிலில் 2008-இல் 8 சிலைகள் திருடு போனது. விருதுநகர் மாவட்டம் பழுவூர் சிவன்கோயிலில் கடந்த 2006 ஆம் ஆண்டு 6 ஐம்பொன் சிலைகள் காணாமல் போனது.  இந்த மூன்று வழக்குகளில் தொடர்புடையதாக அமெரிக்காவைச் சேர்ந்த சுபாஷ் சந்திர கபூரை தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த மூன்று வழக்குகளும், சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் கும்பகோணம் கூடுதல் தலைமைக் குற்றவியல்  நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது திருச்சி மத்திய சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட சுபாஷ் சந்திர கபூர் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, ஜூலை 25 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/12/சிலை-கடத்தல்-வழக்கு-சுபாஷ்-கபூர்-நீதிமன்றத்தில்-ஆஜர்-2958490.html
2958489 திருச்சி தஞ்சாவூர் நீதிமன்ற உத்தரவுபடி பழனி முருகன் சிலை பாதுகாப்பு மையத்தில் வைப்பு DIN DIN Thursday, July 12, 2018 09:19 AM +0530 கும்பகோணம் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்ட பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் சர்ச்சைக்குரிய அபிஷேக மூர்த்தி சிலை, நீதிமன்ற உத்தரவுபடி பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டது.
பழனியில் பழமையான தண்டாயுதபாணி கோயிலில் உள்ள மூலவர் சிலையைப் போல மூன்றரை அடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன அபிஷேக மூர்த்தி சிலை ஒன்று, கடந்த 2004-இல் புதிதாக செய்யப்பட்டு, மூலவர் சிலைக்கு முன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பக்தர்களின் எதிர்ப்பால் இச்சிலை அங்கிருந்து அகற்றப்பட்டது.
இந்தச் சிலை வடிவமைக்கப்பட்டத்தில் முறைகேடு ஏற்பட்டதாக வந்த புகாரையடுத்து, ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து, முன்னாள் இணை ஆணையர் கே.கே. ராஜா, சிலையை செய்த ஸ்தபதி முத்தையா, கோயில் துணை ஆணையராகப் பணிபுரிந்த புகழேந்தி, அறநிலையத் துறை நகை மதிப்பீட்டாளர் தெய்வேந்திரன் ஆகியோரைக் கைது செய்தனர்.
இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் ப.தனபால் முன்ஜாமீன் பெற்று கும்பகோணத்தில் தங்கியுள்ளார்.
பிரச்னைக்குரிய முருகன் சிலையை வழக்கு நடைபெறும் கும்பகோணம் கூடுதல் தலைமைக் குற்றவியல்  நீதிமன்றத்தில் ஒப்படைக்க முடிவு செய்த போலீஸார், பழனி சென்று கோயில் நிர்வாகத்திடம் தெரிவித்தனர். 
இதையடுத்து, கோயிலில் சிறப்பு யாகம் செய்யப்பட்டு, 14 ஆண்டுகளாக பழனி மலைக்கோயிலில் இரட்டை பூட்டு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த சிலையை போலீஸார் பலத்த பாதுகாப்புடன் கும்பகோணம் நீதிமன்றத்துக்கு கொண்டு வந்தனர்.
அப்போது, பழனி கோயில் உதவி ஆணையர் செந்தில், மேலாளர் செல்வராஜ், கோயில் வரைவர் ராஜேஷ், 8 சீர்பதம் தாங்கிகளும் வந்தனர். அவர்களோடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் வெங்கட்ராமன் தலைமையிலான போலீஸாரும் நீதிமன்றத்துக்கு வந்தனர்.
பின்னர் நீதிபதி முன்னிலையில் எடை போட்ட போது 221 கிலோ, 115 செ.மீட்டர் உயரம் இருந்தது. பின்னர் இந்த சிலையை வழக்கின் தன்மை கருதி கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.  இதையடுத்து, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார், புதன்கிழமை மாலை சிலையை பாதுகாப்பு மையத்தில் வைத்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/12/நீதிமன்ற-உத்தரவுபடி-பழனி-முருகன்-சிலை-பாதுகாப்பு-மையத்தில்-வைப்பு-2958489.html
2958488 திருச்சி தஞ்சாவூர் அமித்ஷா பேச்சு  மொழி பெயர்ப்பில் தவறு இல்லை DIN DIN Thursday, July 12, 2018 09:19 AM +0530 அமித்ஷா பேச்சின் மொழி பெயர்ப்பில் தவறு இல்லை என்றார் பாஜக தேசியச் செயலர் ஹெச். ராஜா.
தஞ்சாவூரில் பாஜக நகர அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற வீரன் அழகுமுத்துகோன் பிறந்த நாள் விழாவில் அவரது உருவப் படத்தை திறந்து வைத்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
பாஜக தலைவர் அமித்ஷா பேச்சின் மொழி பெயர்ப்பில் தவறு இல்லை. ஒரு வார்த்தைக் கூட மாற்றம் இல்லாமல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அவர் இந்தியில் பேசிய பேச்சு அவருடைய முகநூலில் முழுமையாக உள்ளது. அதை வேண்டுமானால் பார்த்துக் கொள்ளலாம். அதில் தவறு இருப்பதாகக் கூறினால், பதில் சொல்லத் தயாராக இருக்கிறேன். 
சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு இல்லை. நிலம் கொடுக்கும் விவசாயிகளுக்கு சந்தை விலையை விட 4 மடங்கு கூடுதலாக நிவாரணம் கொடுக்கப்படுகிறது. இத்திட்டத்துக்கு மொத்தம் 2,300 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில், 1,500 ஹெக்டேர் அரசு புறம்போக்கு, வனத் துறை நிலங்களாகவும், 400 ஹெக்டேர் தரிசு நிலங்களாகும். விவசாய நிலம் 400 ஹெக்டேர் மட்டுமே கையகப்படுத்தப்படுகிறது. அதைத் தர விவசாயிகள் தயாராக இருக்கின்றனர். அவர்களுக்கு உரிய நிவாரணம் கொடுக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை.
காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியில் இருந்தபோது சாலை விரிவாக்கத்துக்கு 3,800 ஹெக்டேர் நிலத்தை நெடுஞ்சாலைத் துறை கையகப்படுத்தியது. அவர்கள் செய்ததை விரிவாக்கம் என்றும், இப்போது விவசாயத்துக்கு விரோதம் என்கின்றனர். 
வீரன் அழகுமுத்து கோன், தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாற்றை பாடப் புத்தகத்தில் சேர்க்க வேண்டும். வீரன் அழகுமுத்து கோன் அஞ்சல்தலை வெளியிடுவதற்கு மத்திய அரசிடம் வலியுறுத்த உள்ளேன் என்றார் ஹெச்.ராஜா. பாஜக மாவட்டத் தலைவர் ஆர்.இளங்கோ, செயலர் பி.ஜெய் சதீஷ், நகரத் தலைவர் வி.விநாயகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/12/அமித்ஷா-பேச்சு--மொழி-பெயர்ப்பில்-தவறு-இல்லை-2958488.html
2958487 திருச்சி தஞ்சாவூர் ஜூலை இறுதியில் யானைக்கால் நோய் கண்டறிதல் முகாம் DIN DIN Thursday, July 12, 2018 09:19 AM +0530 தஞ்சாவூர் மாவட்டப் பள்ளிகளில் யானைக்கால் நோய் தொற்று கண்டறிதல் முகாம் ஜூலை மாத இறுதியில் நடைபெறவுள்ளது.
மாவட்ட ஆட்சியரகத்தில் அண்மையில் நடைபெற்ற 5 முதல் 7 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு யானைக்கால் நோய் தொற்று கண்டறிதல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியர் ஆ.அண்ணாதுரை பேசியது: மாவட்டத்தில் 1997 முதல் 2012ஆம் ஆண்டு வரை 11 சுற்றுகள் மூலம் டி.இ.சி. மாத்திரைகள் வழங்கப்பட்டதால், யானைக்கால் ஒட்டுண்ணி விகிதம் 1.2 சதவீதத்தில் இருந்து 0.44 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் யானைக்கால் நோயின் தாக்கம் இல்லை என்ற நிலையை அடைவதற்காக 5 முதல் 7 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் ரத்தத்தில் யானைக்கால் நோய் தொற்றுக்கான ஆன்டிஜென் இருப்பதைக் கண்டறிவதற்கான முகாம் ஜூலை மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இம்முகாம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் முதல், இரண்டாம் வகுப்புகளில் பயிலும் சுமார் 3,200 மாணவர்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி, சுகாதாரம், உள்ளாட்சித் துறை ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும் என்றார்.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/12/ஜூலை-இறுதியில்-யானைக்கால்-நோய்-கண்டறிதல்-முகாம்-2958487.html
2958486 திருச்சி தஞ்சாவூர் சமுத்திரம் ஏரியை மேம்படுத்த ஆலோசனை DIN DIN Thursday, July 12, 2018 09:19 AM +0530 தஞ்சாவூர் சமுத்திரம் ஏரியை மேம்படுத்துவது குறித்து ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியரகத்தில் மாநகராட்சி, ஊரக வளர்ச்சித் துறை, பொதுப் பணித் துறை, தன்னார்வத் தொண்டு நிறுவன உறுப்பினர்களுடன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை பேசியது:
தஞ்சாவூர் மாநகராட்சி மற்றும் ஊரகப் பகுதியை ஒட்டியுள்ள சமுத்திரம் ஏரியை மேம்படுத்தி சுற்றுலா தலமாக்க வேண்டும். தற்போது, சமுத்திரம் ஏரி பரப்பளவை அளவீடு செய்து உறுதி செய்ய வேண்டும். ஆக்ரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது மாநகராட்சி மூலம் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து நாள்தோறும் வெளியேற்றப்படும் 28 மில்லியன் லிட்டர் கழிவு நீரை முழுமையாக மறு சுழற்சி செய்ய வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட நீரை சமுத்திரம் ஏரி பாசன வசதி செய்யும் 1,116 ஆயக்கட்டுப் பகுதியில் மூன்று போகம் விவசாயம் செய்யப் பயன்படுத்த வேண்டும். சமுத்திரம் ஏரிக்கு நீர் வரக்கூடிய 6 வரத்து வடிகால்களையும் தூர்வார வேண்டும்.
திட்டம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும்போது சுற்றுலா பயணிகளை ஈர்க்கிற வகையில் சமுத்திரம் ஏரியை சுற்றிலும் நடைபாதை அமைக்க வேண்டும். பூங்காக்கள், படகு இல்லம், பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 100 சதவீதக் கழிவு நீரைக் கட்டமைத்து செயல்படுத்துவதன் மூலம் பொது சுகாதாரம் மேம்படும். நிலத்தடி நீர் மற்றும் நீர் நிலைகளில் கழிவு கலப்பது தவிர்க்கப்படும். ஒவ்வொரு நாளும் வெளியேற்றப்படும் சுத்திரிக்கப்பட்ட கழிவு நீரை விவசாயம் மற்றும் கால்நடைகளுக்குப்  பயன்படுத்தப்படும் என்றார் ஆட்சியர்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ந. சக்திவேல், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பி. மந்திராசலம், மாநகராட்சி ஆணையர் (பொ) பி. காளிமுத்து, பொதுப் பணித் துறை கல்லணைக் கால்வாய் கோட்டச் செயற்பொறியாளர் ஆர்.ஏ. முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/12/சமுத்திரம்-ஏரியை-மேம்படுத்த-ஆலோசனை-2958486.html
2958485 திருச்சி தஞ்சாவூர் ஆனந்தவல்லி வாய்க்காலை மராமத்து செய்ய கோரிக்கை DIN DIN Thursday, July 12, 2018 09:19 AM +0530 பேராவூரணி நகரின் மையத்தில் செல்லும்   ஆனந்தவல்லி வாய்க்கால் பாலத்தை  சீரமைத்து  வாய்க்காலை முழுமையாக தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காவிரியின் கிளை வாய்க்காலான ஆனந்தவல்லி வாய்க்கால் ஆவணத்தில் உள்ள கல்லணைக் கால்வாய் மெயின் வாய்க்காலில் இருந்து பிரிந்து,  சுமார் 12 கிமீ தூரம் சென்று கழனிவாசல் - கொரட்டூர் பகுதியில் முடிகிறது.  ஆவணம்,  ஏனாதிகரம்பை, செங்கமங்கலம்,  அம்மையாண்டி, மாவடுகுறிச்சி, பொன்காடு, பேராவூரணி, நாட்டாணிக்கோட்டை, கழனிவாசல், கொரட்டூர் என பல இடங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி அளித்த இந்த வாய்க்காலை பொதுப்பணித்துறையினர் கண்டுகொள்ளாததால் இந்த வாய்க்கால் கடந்த பல ஆண்டுகளாகவே தண்ணீர் வரத்தின்றி பராமரிப்பு இல்லாமல் உள்ளது. 
இந்த வாய்க்காலில் பாசனத்திற்காக அமைக்கப்பட்ட  துருசு,  ஷட்டர்கள் பழுதடைந்து, கவனிப்பாரின்றி உள்ளது. போராட்டங்கள் பல நடத்தியும் எந்த பலனுமில்லை. இந்த வாய்க்கால் குப்பைக் கழிவுகளாலும், வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீராலும் சாக்கடை வாய்க்காலாக மாறிவிட்டது. குறிப்பாக,  பேராவூரணி  பழைய பேருந்து நிலையம் தொடங்கி செங்கொல்லை, நாட்டாணிக்கோட்டை பகுதிகளில் சாக்கடை நீர் தேங்கி நின்று சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு ஆனந்தவல்லி வாய்க்காலை பொக்லைன் இயந்திரம் மூலம் தூர்வாரி சுத்தம் செய்யப்பட்டது. ஆனாலும்,  வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் குழாய்களை அகற்ற பொதுப்பணித் துறை அலுவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால்  மீண்டும்  சாக்கடை நீர் தேங்கும் இடமாக மாறி போனது. அவ்வப்போது ஆள்களை கொண்டு பேரூராட்சி நிர்வாகம் சுத்தம் செய்தாலும்கூட, பொதுப்பணித் துறை அதிகாரிகளே உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. இதை தவிர்த்து,  இந்த வாய்க்காலின் குறுக்கே அமைக்கப்பட்ட பாலங்கள்,  ஆண்டுகள் பல கடந்த நிலையில் வலுவிழந்து உடையும் நிலையில் உள்ளன.  வாய்க்காலில் அமைக்கப்பட்ட படித்துறைகள்,  வாய்க்காலில் இருபக்கமும் அமைக்கப்பட்ட சிமெண்ட் தடுப்பு சுவர் உடைந்தும்,  சிதிலமடைந்த நிலையிலும் காணப்படுகிறது. தேவதாஸ் மருத்துவமனை  அருகில் உள்ள பாலம் எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் உள்ளது. வாய்க்காலின் குறுக்கே அமைக்கப்பட்ட பாலம்,  பல இடங்களிலும் சுவர்கள் இடிந்து விழுந்தும், பாலம் இடிந்து விழும் நிலையிலும் உள்ளன.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினரும் வழக்குரைஞருமான வீ. கருப்பையன் கூறியது: பொதுப்பணித் துறை,  மாவட்ட நிர்வாகம் உடனடியாக இடியும் நிலையில் உள்ள பாலங்களை சரி செய்து புதிதாக அமைக்க வேண்டும். ஷட்டர், துருசு உள்ளிட்ட பாசனத்திற்கு தண்ணீர் செல்லும் வழிகளை சரிசெய்ய வேண்டும். 
வாய்க்காலில் கழிவுநீர் கலக்காமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வாய்க்காலின் கரைகளை பலப்படுத்த வேண்டும்.  
ஆனந்தவல்லி வாய்க்கால் மராமத்து செய்யப்படாததால்,  கடைமடைப் பகுதியான கழனிவாசல்,  கொரட்டூர் பகுதிகளில் ஏரி, குளங்களுக்கு தண்ணீர் சென்று சேருவதில்லை. 
இதனால், கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதோடு, நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருகிறது. விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்படுகிறது. 
எனவே பொதுப்பணித் துறை அலுவலர்கள் உடனடியாக ஆனந்தவல்லி வாய்க்கால் பாலங்களை  சீரமைத்து மராமத்து செய்ய  வேண்டும் என்றார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/jul/12/ஆனந்தவல்லி-வாய்க்காலை-மராமத்து-செய்ய-கோரிக்கை-2958485.html