Dinamani - திருச்சி - http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2791781 திருச்சி திருச்சி இருசக்கர வாகனங்களை திருடியவர் கைது DIN DIN Tuesday, October 17, 2017 07:36 AM +0530 திருச்சியில் இருசக்கர வாகனங்கள் திருடியவரை போலீஸார் அண்மையில் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள பூவாலூர் கிரிதரன் திருச்சி கரூர் புறவழிச்சாலையில் உள்ள ஹோட்டல் முன் கடந்த 3-ஆம் தேதி நிறுத்தியிருந்த இருசக்கர வாகனமும், சோமரசம்பேட்டையைச் சேர்ந்த ராமநாதன் உறையூர் சாலை ரோட்டில் உள்ள மளிகை கடை முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனமும் காணாமல் போயின. இதுகுறித்து உறையூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், போலீஸார் 14-ஆம் தேதி ராமலிங்க நகரில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை பிடித்து விசாரித்தபோது, அவர் குமாரவயலூர் அரிஜன தெருவைச் சேர்ந்த மருதை மகன் மூர்த்தி (37) என்பதும், அவர் ஓட்டிவந்தது உறையூரில் திருடப்பட்ட மோட்டார்சைக்கிள் என்பதும் தெரியவந்தது.
மேலும், மூர்த்தி மீது சோமரசம்பேட்டை, திருச்சி நீதிமன்ற காவல் நிலையங்களில்  6 வழக்குகள் நிலுவையில் உள்ளதும், மேற்கண்ட 2 மோட்டார்சைக்கிள்களை அவர் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸார்,  2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/17/இருசக்கர-வாகனங்களை-திருடியவர்-கைது-2791781.html
2791780 திருச்சி திருச்சி குண்டர்சட்டத்தில் இருவர் கைது DIN DIN Tuesday, October 17, 2017 07:35 AM +0530 திருச்சியில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
அரியமங்கலம் நேருஜி நகர் பிரதான சாலையில் கடந்த 1-ஆம் தேதி முரளி என்பவரிடம் 2 பேர் அரிவாளை காட்டி ரூ. 20 ஆயிரம் கேட்டு மிரட்டினராம். இதுகுறித்து அரியமங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து, அரியமங்கலம் மலையப்ப நகர் பஞ்சநாதன் மகன் ராஜ் (33), கீழஅம்பிகாபுரம் நெப்போலியன் (40) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இதில், நெப்போலியன் மீது அரியமங்கலம், காந்திமார்க்கெட், பொன்மலை, கே.கே. நகர், கோட்டை,  திருவெறும்பூர் காவல் நிலையங்களில் 26 வழக்குகளும், ராஜ் மீது அரியமங்கலம், திருவெறும்பூர் காவல் நிலையங்களில் 8 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இவர்கள் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு, பொதுமக்களின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதால், திருச்சி மாநகரக் காவல் ஆணையர் ஆ. அருண், வழிப்பறியில் ஈடுபட்ட ராஜ், நெப்போலியன் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/17/குண்டர்சட்டத்தில்-இருவர்-கைது-2791780.html
2791779 திருச்சி திருச்சி திருச்சி வந்த ரயிலில் மதுரை முதியவர் சாவு DIN DIN Tuesday, October 17, 2017 07:35 AM +0530 மதுரையைச் சேர்ந்த முதியவர் மயிலாடுதுறை செல்லும் வழியில் ரயிலில் மாரடைப்பால் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார்.
மதுரை திருமங்கலம் கே.வெள்ளக்குளம் பெரியதெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜபாண்டியன் (87). இவர் ஞாயிற்றுக்கிழமை நெல்லையிலிருந்து மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரயிலில் தனது மனைவி ராமுதாயுடன் சென்றார். ஞாயிற்றுக்கிழமை இரவு ரயில் திருச்சி ரயில் நிலையத்தை நெருங்கியபோது திடீரென ராஜபாண்டியனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. மயங்கி விழுந்த அவருக்கு சக பயணிகள் முதலுதவி அளித்தனர்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில், திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் அவருக்கு சிசிச்சை அளிக்க மருத்துவக் குழுவினர் தயாராக இருந்தனர். ரயில் திருச்சி வந்தவுடன் அவரை மருத்துவ மையத்துக்கு கொண்டு சென்று சோதனை மேற்கொண்டதில் அவர் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து ரயில்வே போலீஸார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/17/திருச்சி-வந்த-ரயிலில்-மதுரை-முதியவர்-சாவு-2791779.html
2791778 திருச்சி திருச்சி பால் உற்பத்தியாளர்களிடம் கட்டாய  பட்டாசு விற்பனை என புகார் DIN DIN Tuesday, October 17, 2017 07:35 AM +0530 பால் உற்பத்தியாளர்களிடம் ஆவின் நிறுவனம் கட்டாயப்படுத்தி பட்டாசு விற்பனை செய்வதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் மாநில சம்மேளனம் புகார் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்த சம்மேளனத்தின் மாநில அமைப்பாளர் அயிலை சிவ. சூரியன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் ஏறத்தாழ 12,000-த்துக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களில் 5 லட்சத்துக்கும் அதிகமான பால் உற்பத்தியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் மூலம் தமிழகத்தில் 1.80 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 17 ஆவின் கூட்டுறவு ஒன்றியங்கள் பாதுகாப்பு உள்கட்டமைப்பு வசதி இல்லாததால், வெறும் 30 லட்சம் முதல் 33 லட்சம் லிட்டர் வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. உற்பத்தியாகும் அதிகப்படியான பாலை தனியார் நிறுவனங்கள் உற்பத்தியாளர்களிடம் குறைந்த விலையில் கொள்முதல் செய்து அதிக லாபம் பெற்று வருகின்றன. ஆவின் பால் கொள்முதல் விலையை தமிழக அரசே முடிவு செய்து அறிவிக்கிறது. 2013, நவம்பர் மாதம் பசும்பால் லிட்டருக்கு ரூ. 5-ம், எருமைப்பால் லிட்டருக்கு ரூ. 7-ம் கொள்முதல் விலையில் கூடுதலாக அறிவித்து, பசும்பால் லிட்டருக்கு ரூ. 28-ம், எருமைப்பால் லிட்டருக்கு ரூ. 37-ம் விலை நிர்ணயம் செய்த நிலையில், கொழுப்புச் சத்து மற்றும் இதரச் சத்துகளைக் காரணம் காட்டி பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ. 24 முதல் ரூ. 26 வரைதான் விலை வழங்கப்படுகிறது.
கால்நடை தீவனங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், 4 ஆண்டுகளாக கொள்முதல் விலையும் உயர்த்தப்படவில்லை.
பால் உற்பத்தியாளர்களிடம் ஒவ்வோர் ஆண்டுக்கும் 500 கிராம், 1 கிலோ பால்கோவா போன்ற பால் பொருள்களை விற்பனை செய்து வந்த ஆவின் நிர்வாகம், நிகழாண்டில் யாரோ லாபம் பெற, குறைந்தளவிலான பட்டாசு ரகங்களைப் பெட்டியில் வைத்து, ரூ. 400 விலையில் உற்பத்தியாளர்களிடம் விற்பனை செய்து தரவேண்டும் என்று சங்கங்களுக்கு பட்டாசுப் பெட்டிகளை அனுப்பி உள்ளது.
ஆவின் நிர்வாகத்தின் இந்த செயலை பால் உற்பத்தியாளர்கள் சம்மேளனம் வன்மையாகக் கண்டிக்கிறது. உடனடியாக இந்த முடிவை கைவிட வேண்டும்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/17/பால்-உற்பத்தியாளர்களிடம்-கட்டாய--பட்டாசு-விற்பனை-என-புகார்-2791778.html
2791141 திருச்சி திருச்சி டெங்கு கொசு ஆதாரங்களை அகற்றாத குடியிருப்புகளுக்கு அபராதம் DIN DIN Monday, October 16, 2017 07:35 AM +0530 திருச்சி மாநகரில் டெங்கு கொசு ஆதாரங்களை அகற்றாத 11 குடியிருப்புகளுக்கு ரூ.1,46,500 அபராதம் வசூலிக்கப்பட்டது.
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பொன்மலை கோட்டம் 34, 35, 37 ஆகிய வார்டுகளில் வயர்லஸ் சாலை, குழாப்பட்டி சாலை, காவேரி நகர், அன்பிலார் நகர் ,ஜே.கே.நகர், வசந்த நகர், அண்ணாநகர், அமலாபுரி காலனி, ஆர்.எஸ்.புரம், பட்டத்தம்மாள் தெரு, வி.எம்.டி. காலனி உள்ளிட்ட 146 தெருக்களில் உள்ள10,043 வீடுகளில் 422 தூய்மைப் பணியாளர்கள், 160 தாற்காலிக கொசு ஒழிப்புப் பணியாளர்களை கொண்டு ஞாயிற்றுக்கிழமை டெங்கு கொசு ஒழிப்புப் பணி நடைபெற்றது. மேலும், அப்பகுதிகளின் காலிமனைகளில் உள்ள குப்பைகள் 6 ஜே.சி.பி இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது.
இப்பணிகளை மாநகராட்சி ஆணையர்  ந. ரவிச்சந்திரன், நகரப்பொறியாளர் அமுதவள்ளி, செயற்பொறியாளர்கள், சுகாதார அலுவலர்களுடன் அப்பகுதி முழுவதும் வீடு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது 35-ஆவது வார்டு பகுதிகயில் திருமுருகன் நகரில் இருவீடுகள், ஜே.கே. நகரில் இருவீடுகள், லூர்து நகரில் ஒரு வீடு, 37-ஆவது வார்டு அமாலாபுரி நகரில் 3 வீடுகள், 34-ஆவது வார்டு சுப்ரமணியபுரத்தில் ஒரு ஹோட்டல் ஆகிய கட்டடங்களில் மாநகராட்சி அலுவலர்கள் ஆய்வு செய்ததில், அங்கு டெங்கு கொசுக்கள் உருவாக காரணமான ஆதாரங்கள் கண்டறியப்பட்டது.
இதையடுத்து மேற்கண்ட குடியிருப்புகளுக்கு ரூ. 46,000 அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோல, அரியமங்கலம் கோட்டம் 27-ஆவது வார்டு மகாலட்சுமி நகரில் ஒரு வீட்டிலும், சென்னை பிரதான சாலையில் புதிதாக கட்டப்பட்ட கட்டங்களிலும் டெங்கு கொசுக்கள் ஆதாரங்கள் அகற்றப்படாததும் தெரியவந்தது. இதையடுத்து மேற்கண்ட கட்டடங்களுக்கு ரூ.1,00,500 அபராதம் விதிக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் டெங்கு கொசு ஆதாரங்களை அகற்றாத 11 குடியிருப்புகளுக்கு ரூ.1,46,500 அபராதம் விதிக்கப்பட்டு, மாநகராட்சி அலுவலர்களால் வசூல் செய்யப்பட்டது.
தெருக்களில் வீடு வீடாக
ஆய்வு...: தொடர்ந்து, மாநகரின் பல்வேறு தெருக்களில் நகரப்பொறியாளர், நகர் நல அலுவலர் ஆர். சித்ரா, செயற்பொறியாளர், உதவி ஆணையர்கள், சுகாதார அலுவலர்கள் உள்ளிட்டோர் கொண்ட குழு டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளை மேற்பார்வை செய்ததுடன், பொதுமக்களுக்கு டெங்கு பாதிப்பு குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தினர்.
டெங்கு கொசு ஆதாரங்களை வீடுகள், தொழில் நிறுவனங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றிலிருந்து அகற்றாவிட்டால் அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும் என்றும், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/16/டெங்கு-கொசு-ஆதாரங்களை-அகற்றாத-குடியிருப்புகளுக்கு-அபராதம்-2791141.html
2791140 திருச்சி திருச்சி வெளிநாட்டு வேலைக்கு அனுப்பியதில் பல லட்சம் மோசடி: 6 பேர் மீது வழக்கு DIN DIN Monday, October 16, 2017 07:35 AM +0530 திருச்சியில் வெளிநாடு அனுப்பி வைப்பதாகக் கூறி பல லட்சம் மோசடி செய்ததாக ஈக்வேடார் நாட்டைச் சேர்ந்தவர் உள்பட 6 பேர் மீது திருச்சி போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
 திருச்சி மாவட்டம், துவாக்குடி வாழவந்தான்கோட்டை கனகவேல் அவென்யூவைச் சேர்ந்த காணிக்கை மகன் ரீகன் (33). இவர் கனடா நாட்டுக்கு வேலைக்குச் செல்வதற்காக திருச்சி கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தை அணுகியுள்ளார்.
 டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மகேஸ்வரன், அவரது மனைவி ராகிணி, தம்பி சண்முகசுந்தரம், நண்பர்கள் ராஜாராம், தினகரன் ஆகிய 5 பேரும் சேர்ந்து, ரீகனை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி, ரூ.10 லட்சம் பணத்தை சிறுக சிறுக வாங்கியதாகக் கூறப்படுகிறது.
 தொடர்ந்து, கடந்த 2015 செப்டம்பர் 8-ஆம் தேதி ரீகனை கனடாவுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி, ஈக்வேடார் நாட்டுக்கு அனுப்பியுள்ளனர். அங்கு, அதே நாட்டைச் சேர்ந்த பாஸ்கல் போஸ் என்பவர் ரீகனின் பாஸ்போர்ட்டை பிடுங்கி வைத்துக் கொண்டு, 2016-ஆம் ஆண்டு மே மாதம் வரையில் 6 மாத காலம்  கடினமான வேலைகளை வாங்கியதுடன், குறைந்த சம்பளத்தையே கொடுத்தாகக் கூறப்படுகிறது.
 இதையடுத்து அங்கிருந்து தப்பித்து திருச்சி வந்த ரீகன், மகேஸ்வரன் உள்ளிட்டோரிடம், தான் செலுத்திய பணத்தை திருப்பித் தருமாறு கூறியுள்ளார். ஆனால் மகேஸ்வரன் உள்ளிட்டோர், ரீகனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன், அவரது பணத்தையும் திருப்பித் தரவில்லையாம். இதே போல, திருச்சியைச் சேர்ந்த அன்புராஜ், சேகர் உள்ளிட்ட பலரிடம் பல லட்சம் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.
 இதுகுறித்து ரீகன் மாநகர குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகாரளித்தார். அவர்கள் புகாரை வாங்காமல் அலைக்கழித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர், திருச்சி மாநகர காவல் ஆணையர் ஆ. அருணிடம் புகாரளித்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட காவல் ஆணையர், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாநகர குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
 இதையடுத்து மாநகர குற்றப்பிரிவு போலீஸார், மகேஸ்வரன், ஈக்வேடார் நாட்டைச் சேர்ந்த பாஸ்கல் போஸ் உள்ளிட்ட 6 பேர் மீது, வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி ஏமாற்றியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/16/வெளிநாட்டு-வேலைக்கு-அனுப்பியதில்-பல-லட்சம்-மோசடி-6-பேர்-மீது-வழக்கு-2791140.html
2791139 திருச்சி திருச்சி சுபாஷ்சந்திரகபூரிடம் சிலைக்கடத்தல்: தடுப்புப் பிரிவு ஐஜி விசாரணை DIN DIN Monday, October 16, 2017 07:34 AM +0530 சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள,  சிலைக்கடத்தல் கும்பலின் தலைவன் சுபாஷ்சந்திரகபூரிடம், சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் சனிக்கிழமை 5 மணி நேரத்துக்கு மேல் விசாரணை மேற்கொண்டார்.
தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கோயில்களில் சிலைகள் திருடப்பட்ட வழக்குகள் தொடர்பாக, சிலை கடத்தல் கும்பலின் தலைவன் என அழைக்கப்படும் சுபாஷ்சந்திரகபூர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெர்மனியில் கைது செய்யப்பட்டு, தமிழகம் கொண்டு வரப்பட்டார். தற்போது கும்பகோணம் நீதிமன்றத்தில் சிலை கடத்தல் வழக்குகள் விசாரிக்கப்படுவதால், சென்னை புழல் சிறையிலிருந்து, சுபாஷ் சந்திரகபூர் திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் அண்மைக்காலமாக சிலை கடத்தல் வழக்குகள் அதிகமாக நடைபெற்று வருவதையடுத்து அதற்கும் , சுபாஷ் சந்திரகபூருக்கும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம், சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸாருக்கு ஏற்பட்டுள்ளது.
அதன்பேரில், சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் சனிக்கிழமை காலை 10 மணிக்கு திருச்சி மத்திய சிறைக்கு வந்து சுபாஷ்சந்திரகபூரிடம் சுமார் 5 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/16/சுபாஷ்சந்திரகபூரிடம்-சிலைக்கடத்தல்-தடுப்புப்-பிரிவு-ஐஜி-விசாரணை-2791139.html
2791138 திருச்சி திருச்சி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட இழப்பை முதல்வர் சரிசெய்வார்: ஆசிரியர்  கூட்டணி நம்பிக்கை DIN DIN Monday, October 16, 2017 07:34 AM +0530 ஊதிய உயர்வின்போது இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை  சரிசெய்ய,  தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் ந. ரெங்கராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் மேலும் தெரிவித்தது:
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர்கள் கூட்டணி மற்றும் அரசு ஊழியர் சங்கங்கள் சார்பில் (ஜேக்டோ ஜியோ) பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு, அக். 15ஆம் தேதிக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி  அக். 11-ஆம் தேதி நடைமுறைப்படுத்தும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில்  6-ஆவது ஊதியக்குழுபடியே  ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அளிக்கப்பட்ட ஊதிய உயர்வில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ. 5,500 இழப்பீடு ஏற்பட்டு பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்தது.  தற்போது அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வில் ரூ. 15,000 இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து முதல்வரை சந்தித்து உடன் சரிசெய்ய கோரிக்கை விடுத்தோம்.  மேலும்  21 மாத நிலுவை வழங்காதது ஏமாற்றம் அளித்துள்ளது.
இவற்றின் காரணமாக இடைநிலை ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், நிலுவைத் தொகையை இரு அல்லது 3 தவணைகளில் வழங்க வேண்டும் என விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையை ஏற்றுள்ள முதல்வர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக ஆசிரியர் கூட்டணி சார்பில் சென்னையில் விரைவில் கூட்டம் நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும். கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம் என்றார்.  பேட்டியின் போது மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/16/இடைநிலை-ஆசிரியர்களுக்கு-ஏற்பட்ட-இழப்பை-முதல்வர்-சரிசெய்வார்-ஆசிரியர்--கூட்டணி-நம்பிக்கை-2791138.html
2791137 திருச்சி திருச்சி தலமலையில் இருந்து தவறி  விழுந்தவர் சடலமாக மீட்பு DIN DIN Monday, October 16, 2017 07:34 AM +0530 திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள தலமலைப் பெருமாள் கோயிலில் கிரிவலம் சுற்றி வந்துபோது, மலையிலிருந்து தவறி விழுந்த இளைஞர் ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டார்.
தொட்டியம் அருகே சுமார் 5000 அடி உயரமுள்ள தலமலையின் உச்சியில் சஞ்சீவிராய பெருமாள் கோயில் உள்ளது. இங்கு சிலர் கோயிலின்  வெளிப்புற சுவரில் சுமார் 4 அங்குல பாதையில் கிரிவலம் வந்து நேர்த்திக்கடனை செலுத்துவர். இதேபோல் சனிக்கிழமை முசிறி அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள பெரியார் நகரை சேர்ந்த தங்கராசு மகன் ஆறுமுகம் (37) மினி ஆட்டோ ஓட்டுநர்  தனது நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக கோயிலை வலம்வந்தபோது,  5,000 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார்.
தகவலறிந்து வந்த நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி போலீஸார், வனத்துறையினர் புளியம்பட்டி மற்றும் கள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்த சிலருடன் இளைஞரை தேடும்பணியில் ஈடுபட்டனர். ஆனால், இரவு நேரமானதால் தேடும்பணியை நிறுத்தினர். இந்நிலையில்,  ஞாயிற்றுக்கிழமை தேடுதல் பணியை தொடங்கிய தீயணைப்புத் துறையினர் ஆறுமுகத்தை சடலமாக மாலையில் மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/16/தலமலையில்-இருந்து-தவறி--விழுந்தவர்-சடலமாக-மீட்பு-2791137.html
2791136 திருச்சி திருச்சி அண்ணா பல்கலை. மருந்தாக்கவியல் துறை பேராசிரியருக்கு தமிழக விஞ்ஞானி விருது DIN DIN Monday, October 16, 2017 07:33 AM +0530 அண்ணா பல்கலைக்கழகத்தின் திருச்சி வளாக,  பாரதிதாசன் தொழில்நுட்ப பொறியியல் கல்லூரி மருந்தாக்கவியல் துறை பேராசிரியர் ருக்மணிக்கு மருத்துவத்துறை ஆராய்ச்சிக்கான தமிழக விஞ்ஞானி விருது அண்மையில் வழங்கப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழக பாரதிதாசன் தொழில்நுட்ப பொறியியல் கல்லூரி,  திருச்சி வளாகத்தை சேர்ந்த மருந்தாக்கவியல் துறை தலைவராக இருப்பவர் க. ருக்மணி. இவருக்கு மருத்துவத் துறையில் மருந்து விநியோக அமைப்பு சார்ந்த ஆராய்ச்சிக்காக,  தமிழக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றத்தால் 2014-ஆம் ஆண்டிற்கான தமிழக விஞ்ஞானி விருது வழங்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பை அரசு அறிவித்துள்ளது.  இதுதொடர்பாக கடந்த செப். 25-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விருதும், ரூ. 50,000  ரொக்கம் ஆகியவற்றை தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வழங்கினார்.
இவர்  தமிழகத்தில் மருந்தியல் துறையில் முதலில் முனைவர் பட்டம் பெற்ற பெண் என்ற பெருமைக்குரியவர் என்பதுடன் தொடர்ந்து மருத்துவத்துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
கடந்த 1991-இல் இந்திய மருந்து உற்பத்தியாளர் சங்கம் வழங்கும் ஜி. பி. நாயர் விருதையும், 2006-இல் மருந்தாக்கவியல் துறையில் தமழ்நாடு இளம் பெண் விஞ்ஞானி விருதையும் (முதன் முதலில்) பெற்றவர். 2009-இல் இந்தியன் அசோசியேசன் ஆஃப் பையோ மெடிக்கல் சையின்டிஸ்ட் சார்பில், உயிர் மருத்துவவியல் துறையில் மிக சிறந்த காப்புரிமைக்காக பேராசிரியர் எஸ். பி. தியாகராஜன் மற்றும் பேராசிரியர் எஸ். இராஜராஜன் அறநிலையத்துறை விருதை வழங்கி கௌரவித்துள்ளது. 2011-இல் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் வெற்றி பெண்மணி என்ற உயர் விருதையும் இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
130 ஆராய்ச்சிக் கட்டுரைகள்:  இவர் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக ரூ. 9.5 கோடிக்கும் அதிகமாக மத்திய ஆராய்ச்சி நிறுவனங்களிலிருந்து நிதி பெற்றவர். இவர் 130 ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்பித்துள்ளார். இவரது மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலில் 14 முனைவர் பட்டதாரிகளும், மூன்று முனைவர் பட்டதாரிகளும் மற்றும் 12 ஆராய்ச்சி மாணவர்களும் பயிற்சி பெற்று வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/16/அண்ணா-பல்கலை-மருந்தாக்கவியல்-துறை-பேராசிரியருக்கு-தமிழக-விஞ்ஞானி-விருது-2791136.html
2791135 திருச்சி திருச்சி சுபாஷ்சந்திரகபூரிடம் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி விசாரணை DIN DIN Monday, October 16, 2017 07:33 AM +0530 சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள,  சிலைக்கடத்தல் கும்பலின் தலைவன் சுபாஷ்சந்திரகபூரிடம், சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் சனிக்கிழமை 5 மணி நேரத்துக்கு மேல் விசாரணை மேற்கொண்டார்.
தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கோயில்களில் சிலைகள் திருடப்பட்ட வழக்குகள் தொடர்பாக, சிலை கடத்தல் கும்பலின் தலைவன் என அழைக்கப்படும் சுபாஷ்சந்திரகபூர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெர்மனியில் கைது செய்யப்பட்டு, தமிழகம் கொண்டு வரப்பட்டார். தற்போது கும்பகோணம் நீதிமன்றத்தில் சிலை கடத்தல் வழக்குகள் விசாரிக்கப்படுவதால், சென்னை புழல் சிறையிலிருந்து, சுபாஷ் சந்திரகபூர் திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் அண்மைக்காலமாக சிலை கடத்தல் வழக்குகள் அதிகமாக நடைபெற்று வருவதையடுத்து அதற்கும் , சுபாஷ் சந்திரகபூருக்கும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம், சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸாருக்கு ஏற்பட்டுள்ளது.
அதன்பேரில், சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் சனிக்கிழமை காலை 10 மணிக்கு திருச்சி மத்திய சிறைக்கு வந்து சுபாஷ்சந்திரகபூரிடம் சுமார் 5 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/16/சுபாஷ்சந்திரகபூரிடம்-சிலைக்-கடத்தல்-தடுப்புப்-பிரிவு-ஐஜி-விசாரணை-2791135.html
2791134 திருச்சி திருச்சி தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை DIN DIN Monday, October 16, 2017 07:33 AM +0530 தொழிலாளர் நல வாரியத்துக்கு நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின், பிளஸ் 1 வகுப்பு முதல் முதுகலைப் பட்டப்படிப்பு வரை பயிலும் குழந்தைகள் புத்தகங்கள் வாங்க நிதியுதவியும்,  10, 12 ஆம் வகுப்புகளில் அரசு பொதுத்தேர்வில் கல்வி மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற முதல் 10 மாணவர்களுக்கு என கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
மேற்கண்ட கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் மற்றும் விவரங்கள் பெற செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், தபால்பெட்டி எண் 718, தேனாம்பேட்டை, சென்னை - 6 என்ற முகவரிக்கு சுயவிலாசமிட்ட தபால் தலை ஒட்டப்பட்ட உறையுடன் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பங்களை வரும் 31-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும்  044 - 24321542  என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தொரிவிக்கப்பட்டுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/16/தொழிலாளர்-நலவாரிய-உறுப்பினர்களின்-குழந்தைகளுக்கு-கல்வி-உதவித்தொகை-2791134.html
2791133 திருச்சி திருச்சி மத்தியக் குழுவினர் தமிழக அரசை பாதுகாக்க பேசுவது ஏற்புடையதல்ல DIN DIN Monday, October 16, 2017 07:32 AM +0530 தமிழகத்துக்கு வந்துள்ள மத்தியக் குழுவினர் டெங்கு பாதிப்பின் உண்மை நிலையை வெளிப்படுத்தாமல், தமிழக அரசை பாதுகாப்பது போல பேசுவது ஏற்புடையதல்ல என்றார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன்.
 இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:
  தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் மத்தியில் டெங்கு குறித்த அச்சமும், பீதியும் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்திற்கு வந்துள்ள மத்தியக் குழுவினர், தமிழகத்தின் உண்மை நிலையை வெளிப்படுத்தாமலும், விழிப்புணர்வு ஏற்படுத்தாமலும் தமிழக அரசை பாதுகாப்பது போல பேசுவது எந்தவிதத்திலும் ஏற்புடையதல்ல.
டெங்கு உயிரிழப்பைக் காணும் தமிழக அரசு விழித்துக் கொள்ள வேண்டும். சுகாதாரப் பிரச்னையாக இருக்கும் டெங்கு பிரச்னையில் அரசு 100 சதவீதம் கவனம் செலுத்தி, மக்களுக்கு நம்பிக்கை தந்து, டெங்குவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.  டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என எங்களது கட்சி சார்பில் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளோம். டெங்கு காய்ச்சலால் இறந்தவர்களின் கணக்கெடுப்பை, முறையாக, சரியாக எடுக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு, டெங்குவால் உயிரிழந்தவர்களின் கணக்கெடுப்பை மறைக்கிறது என்றார் வாசன்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/16/மத்தியக்-குழுவினர்-தமிழக-அரசை-பாதுகாக்க-பேசுவது-ஏற்புடையதல்ல-2791133.html
2791132 திருச்சி திருச்சி டெங்கு கொசு ஆதாரங்களை அகற்றாத குடியிருப்புகளுக்கு ரூ.1.46 லட்சம் அபராதம் DIN DIN Monday, October 16, 2017 07:32 AM +0530 திருச்சி மாநகரில் டெங்கு கொசு ஆதாரங்களை அகற்றாத 11 குடியிருப்புகளுக்கு ரூ.1,46,500 அபராதம் வசூலிக்கப்பட்டது.
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பொன்மலை கோட்டம் 34, 35, 37 ஆகிய வார்டுகளில் வயர்லஸ் சாலை, குழாப்பட்டி சாலை, காவேரி நகர், அன்பிலார் நகர் ,ஜே.கே.நகர், வசந்த நகர், அண்ணாநகர், அமலாபுரி காலனி, ஆர்.எஸ்.புரம், பட்டத்தம்மாள் தெரு, வி.எம்.டி. காலனி உள்ளிட்ட 146 தெருக்களில் உள்ள10,043 வீடுகளில் 422 தூய்மைப் பணியாளர்கள், 160 தாற்காலிக கொசு ஒழிப்புப் பணியாளர்களை கொண்டு ஞாயிற்றுக்கிழமை டெங்கு கொசு ஒழிப்புப் பணி நடைபெற்றது. மேலும், அப்பகுதிகளின் காலிமனைகளில் உள்ள குப்பைகள் 6 ஜே.சி.பி இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது.
இப்பணிகளை மாநகராட்சி ஆணையர்  ந. ரவிச்சந்திரன், நகரப்பொறியாளர் அமுதவள்ளி, செயற்பொறியாளர்கள், சுகாதார அலுவலர்களுடன் அப்பகுதி முழுவதும் வீடு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது 35-ஆவது வார்டு பகுதிகயில் திருமுருகன் நகரில் இருவீடுகள், ஜே.கே. நகரில் இருவீடுகள், லூர்து நகரில் ஒரு வீடு, 37-ஆவது வார்டு அமாலாபுரி நகரில் 3 வீடுகள், 34-ஆவது வார்டு சுப்ரமணியபுரத்தில் ஒரு ஹோட்டல் ஆகிய கட்டடங்களில் மாநகராட்சி அலுவலர்கள் ஆய்வு செய்ததில், அங்கு டெங்கு கொசுக்கள் உருவாக காரணமான ஆதாரங்கள் கண்டறியப்பட்டது. இதையடுத்து மேற்கண்ட குடியிருப்புகளுக்கு ரூ. 46,000 அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோல, அரியமங்கலம் கோட்டம் 27-ஆவது வார்டு மகாலட்சுமி நகரில் ஒரு வீட்டிலும், சென்னை பிரதான சாலையில் புதிதாக கட்டப்பட்ட கட்டங்களிலும் டெங்கு கொசுக்கள் ஆதாரங்கள் அகற்றப்படாததும் தெரியவந்தது. இதையடுத்து மேற்கண்ட கட்டடங்களுக்கு ரூ.1,00,500 அபராதம் விதிக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் டெங்கு கொசு ஆதாரங்களை அகற்றாத 11 குடியிருப்புகளுக்கு ரூ.1,46,500 அபராதம் விதிக்கப்பட்டு, மாநகராட்சி அலுவலர்களால் வசூல் செய்யப்பட்டது.
தெருக்களில் வீடு வீடாக ஆய்வு...: தொடர்ந்து, மாநகரின் பல்வேறு தெருக்களில் நகரப்பொறியாளர், நகர் நல அலுவலர் ஆர். சித்ரா, செயற்பொறியாளர், உதவி ஆணையர்கள், சுகாதார அலுவலர்கள் உள்ளிட்டோர் கொண்ட குழு டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளை மேற்பார்வை செய்ததுடன், பொதுமக்களுக்கு டெங்கு பாதிப்பு குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தினர். டெங்கு கொசு ஆதாரங்களை வீடுகள், தொழில் நிறுவனங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றிலிருந்து அகற்றாவிட்டால் அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும் என்றும், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/16/டெங்கு-கொசு-ஆதாரங்களை-அகற்றாத-குடியிருப்புகளுக்கு-ரூ146-லட்சம்-அபராதம்-2791132.html
2791131 திருச்சி திருச்சி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: 444 பேருக்கு நியமன ஆணை DIN DIN Monday, October 16, 2017 07:31 AM +0530 திருச்சி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமில் 67 வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களைச் சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்று, 8-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டயம், பட்டம் படித்த இளைஞர், இளைஞிகள் உள்ளிட்டோரை நேர்காணல் மூலம் தேர்வு செய்தனர். இதில் பல்வேறு கல்வித்தகுதிகளைக் கொண்ட சுமார் 2234-க்கும் மேற்பட்ட வேலைநாடுநர்கள் கலந்து கொண்டனர். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 444 வேலைநாடுநர்களுக்கு பணிநியமன ஆணைகள் உடனடியாக வழங்கப்பட்டது.  பணிநியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் வி. வாசுதேவன், மண்டல வேலைவாய்ப்பு இணை இயக்குநர் ஆ. அனிதா, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநர் பி. பாபு,  ஜமால் முகம்மது கல்லூரி செயலர் ஏ.கே. காஜா நஜிமுதீன், கல்லூரி முதல்வர் எஸ். இஸ்மாயில் முகைதீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/16/தனியார்-துறை-வேலைவாய்ப்பு-முகாம்-444-பேருக்கு-நியமன-ஆணை-2791131.html
2791130 திருச்சி திருச்சி "டெங்குவால் இறந்தவர்களின் விவரம் மறைக்கப்படுகிறது' DIN DIN Monday, October 16, 2017 07:31 AM +0530 டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் விவரங்களை முழுமையாக வெளியிடாமல் தமிழக அரசு மறைக்கிறது என அதிமுக (அம்மா) அணியின் துணை பொதுச்செயலர் டி.டி.வி.தினகரன் கூறினார்.
ஸ்ரீரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கிய அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  மரணமடைந்த போது ஓ.பன்னீர் செல்வத்தின் நடவடிக்கை சந்தேகத்திற்கு இடமாக இருந்ததால் அவர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டார். சுயநலமாக செயல்படும் ஓ. பன்னீர்செல்வம் அவருடன் இருந்தவர்களை ஏமாற்றிவிட்டார். அவரை அம்மாவின் ஆன்மாவும் உண்மையான அதிமுக தொண்டர்களும் மன்னிக்கமாட்டார்கள். கட்சிக்கும் ஆட்சிக்கும் துரோகம் செய்துவருகிறார்கள் ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி. கடந்த 10 ஆண்டுகளில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் ஆட்சியை காப்பாற்ற வேண்டும் என்ற குறிக்கோளோடு எடப்பாடி அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. அண்டை மாநிலங்களில் டெங்குவைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் சுகாதார துறை அமைச்சரும், உள்ளாட்சி துறை அமைச்சரும் டெங்குவிற்காக எந்த வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கையை அரசு மூடி மறைக்கிறது. எடப்பாடி அரசு விரைவில் கவிழும். ஆர்.கே நகர் தொகுதியில் கட்சியின் பொதுச்செயலரின் தலைமையில் ஆட்சி மன்ற குழு முடிவு செய்தால் மீண்டும் போட்டியிடுவேன் என்றார். பேட்டியின் போது மாவட்டச் செயலர்கள் ஆர். மனோகரன், ஜெ. சீனிவாசன், ராஜசேகரன், சாருபால தொண்டைமான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/16/டெங்குவால்-இறந்தவர்களின்-விவரம்-மறைக்கப்படுகிறது-2791130.html
2791129 திருச்சி திருச்சி ரயில் டிக்கெட் அச்சுக்கூடத்தை மூடும் முடிவை அரசு கைவிடக் கோரிக்கை DIN DIN Monday, October 16, 2017 07:31 AM +0530 ரயில் பயணச்சீட்டு உள்ளிட்ட ரயில்வே ஆவணங்கள் அச்சிடும் அச்சுக்கூடத்தை  மூடக்கூடாது என ரயில்வே தொழிற்சங்கமான டிஆர்இயு கோரிக்கை விடுத்துள்ளது.
ரயில்வே துறையில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட காகித ஆவணங்கள் புழக்கத்தில் உள்ளன. ரயில்வே துறைக்கு  தேவையான கோப்புகள், பதிவு ஏடுகள், புத்தகங்கள், விண்ணப்பங்கள் மற்றும் ரயில் பயணச்சீட்டுகள் உள்ளிட்டவை அச்சிடுவதற்கென தெற்கு மற்றும் தென்மேற்கு ரயில்வேகளுக்கான  பிரத்யேக அச்சுக்கூடம் சென்னை ராயபுரத்தில் இயங்கி வருகின்றது.  இங்கு நாள்தோறும் சுமார் 15 லட்சம் முன்பதிவில்லா டிக்கெட்டுகள், மூன்று லட்சத்து 50 ஆயிரம் முன்பதிவு டிக்கெட்டுகள் மற்றும் ரயில்வேதுறை  செயல்பாடுகளுக்கு தேவையான ஆவணங்கள் அச்சிடப்படுகின்றன.
இங்கு ஸ்பெயினில் இருந்து ரூ. 15 கோடி மதிப்பில் நவீன அச்சு இயந்திரம் இறக்குமதி செய்யப்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் அதிக டிக்கெட்டுகள் கையிருப்பு வைத்திருக்கும் அச்சுக்கூடம் இதுவே. இங்கு சுமார் 150 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், கணினி மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் காட்டி, ரயில்வே அமைச்சகம் இந்த அச்சகத்தை மூட முடிவு செய்திருக்கிறது. பாதுகாப்பான அச்சிடுதல் மற்றும் வழங்கல் முறைகளால் போலி ரயில்வே டிக்கெட்டுகள் இந்தியாவில் புழக்கத்தில் இல்லை. ரயில்வே நிலையங்கள், பணிமனைகள், அலுவலகங்கள் அனைத்தும் முற்றிலும்  கணினி மயமாக்கப்படவில்லை. தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படும் நிலையில் அவை காகித ஆவணங்கள் மூலம்தான் இயக்கப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
மேலும் தனியார்மயமாக்கல் அதிகரித்து வரும் வேளையில், அச்சுக்கூடத்தையும் தனியார் வசம் விட ரயில்வே வாரியம் முடிவெடுத்துள்ளதாக அறியவருகின்றது. தனியார் நிறுவனங்கள் மூலம் ரயில் பயணச்சீட்டு மற்றும் ஆவணங்கள் அச்சிடுவது பாதுகாப்பற்றது. எனவே ரயில்வே பயணச்சீட்டு மற்றும் ஆவணங்களை அச்சிட்டு வரும்  அச்சுக் கூடம் மூடும் முடிவை ரயில்வே அமைச்சகம் கைவிட வேண்டும் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் வலியுறுத்தியுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/16/ரயில்-டிக்கெட்-அச்சுக்கூடத்தை-மூடும்-முடிவை-அரசு-கைவிடக்-கோரிக்கை-2791129.html
2791128 திருச்சி திருச்சி மண்ணச்சநல்லூர் பகுதியில்  3500 ஹெக்டேரில் நெல் சாகுபடி DIN DIN Monday, October 16, 2017 07:31 AM +0530 தொடர் மழையால் மண்ணச்சநல்லூர் பகுதியில் விவசாயிகள் 3500 ஹெக்டேரில் நெல் பயிரிட்டுள்ளார்.
மண்ணச்சநல்லூர் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. விட்டு விட்டு பெய்தாலும் பல ஊர்களில் உள்ள ஏரிகள், குளங்களில் தண்ணீர் நிறைந்துள்ளன. கிணறுகளில் ஊற்று பெருகி தண்ணீர் நிரம்பி வருகிறது.
காவிரியில் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் முக்கொம்பு வந்தவுடன் மண்ணச்சநல்லூர் பகுதிக்கு பாசன வசதி அளிக்கும் அய்யன் வாய்க்கால், பெருவளை வாய்க்கால், பங்குனி வாய்க்கால் ஆகிய வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளன.  வாய்க்கால்களில் தண்ணீர் அதிக அளவு வருவதால் உற்சாகம் அடைந்துள்ள விவசாயிகள் தங்களது வயல்களில் நெற்பயிர் நட்டுள்ளனர். புள்ளம்பாடி வாய்க்காலில் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் மண்ணச்சநல்லூர் வழியாகச் சென்றாலும் அந்த வாய்க்காலால் புள்ளம்பாடி பகுதி பாசன வசதி பெற்று அங்கு நெல் நடவு நடைபெற்று வருகிறது.   
மண்ணச்சநல்லூர் வட்டத்தில் வாய்க்கால் பாசனம் மூலம் சுமார் 2500 ஹெக்டேர்(6175 ஏக்கர்) பரப்பளவிலும், கிணற்றுப் பாசனம் மூலம் சுமார் 1000 ஹெக்டேர் (2470 ஏக்கர்) பரப்பளவிலும் என நெல் பயிரிடப்பட்டுள்ளது. பல இடங்களில் உழவு ஓட்டி நாற்று நடப்பட்டுள்ளது.   
வயல்களில் பி.பி.டி. 5204 ஆந்திரா பொன்னி, என்.எல்.ஆர். 34449, ஏ.டி.டி. 49, டி.கே.எம். 13 ஜெ.ஜி.எல். 1798 கர்நாடகா பொன்னி, கோ 43, கோ.ஆர். 50, திருச்சி 3 ஆகிய நெல் ரகங்கள் பயிரிடப்பட்டுள்ளன.  மண்ணச்சநல்லூர் வேளாண்மை விரிவாக்க மையத்தின் மூலம் ஏ.டி.டி. 49, திருச்சி 3 ஆகிய நெல் ரகங்களுக்கு ஒரு கிலோவுக்கு ரூ. 10 மானியத்துடன் விதை நெல் வழங்கப்படுகிறது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/16/மண்ணச்சநல்லூர்-பகுதியில்--3500-ஹெக்டேரில்-நெல்-சாகுபடி-2791128.html
2791127 திருச்சி திருச்சி பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்கத்தினர் எம்பி சிவாவிடம்  மனு DIN DIN Monday, October 16, 2017 07:30 AM +0530 அகில இந்திய பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை திருச்சி மாநிலங்களவை எம்பி சிவாவிடம் அண்மையில் வழங்கினர்.
 சங்கத்தின் மாநில துணைத் தலைவர் காமராஜ், மாவட்ட செயலாளர் மோகன், முன்னாள் துணைச் செயலாளர் கணேஷ் உள்ளிட்டோர் அளித்த மனு:  தொடர்ந்து 3 ஆண்டுகளாக லாபம் ஈட்டாத பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கிடையாது என ஊதியக்குழு பரிந்துரை செய்திருப்பது, கிராமப்புறங்களில் சேவை வழங்கும் பிஎஸ்என்எல்-லுக்கு பொருந்தாது. எனவே, இதிலிருந்து விதிவிலக்கு அளித்து, ஊதிய உயர்வு வழங்க வேண்டும் .

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/16/பிஎஸ்என்எல்-அதிகாரிகள்-சங்கத்தினர்-எம்பி-சிவாவிடம்--மனு-2791127.html
2791126 திருச்சி திருச்சி 10 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காத இரு கிராம மக்கள் DIN DIN Monday, October 16, 2017 07:30 AM +0530 திருச்சி அருகே வெளவால்களுக்கு தொந்தரவு தரக்கூடாது என்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இரு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பட்டாசு வெடிப்பதை தவிர்த்து வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள சாம்பட்டி கிராமத்தில் ஆர்ய பெருமாள் கோயில் உள்ளது. சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த இந்த கோயிலில் தற்போது வழிபாடுகள் நடப்பது இல்லை. அந்த கோயில் வளாகத்தில் உள்ள ஆலமரத்துக்கு 10 ஆண்டுக்கு முன் வெளவால்கள் வரத்தொடங்கின. பின்னர் அப்படியே தங்கி விட்டன.  அந்த வெளவால்களுக்கு தொந்தரவு தரக்கூடாது என்பதற்காக, தீபாவளி,  மற்றும் கோயில் திருவிழா காலங்களில் பட்டாசு வெடிப்பதை கடந்த 10 ஆண்டுகளாக தவிர்த்து வருகின்றனர் கிராமமக்கள்.
இதுகுறித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த பால்ராஜ் கூறுகையில், ""வெளவால்கள் 10 ஆண்டுக்கு முன்பு எங்கள் ஊருக்கு வந்தன.
தினமும் மாலை நேரத்தில் உணவு தேடி புறப்படும் வெளவால்கள்,  காலை ஆலமரத்துக்கு திரும்பி விடும்.  இந்த வெளவால்கள்  வந்து தங்கிய பின்னரே சாம்பட்டி கிராமத்தில் வேளாண் தொழில் சிறந்து மக்கள் நலமுடன் வாழ்வதாக உணர்ந்துள்ளோம். எனவே அவைகளை எங்கள் கிராம மக்கள் தெய்வங்களாகவே  பார்த்து வருகிறோம்.   எனவே அவற்றுக்கு எந்த தொந்தரவும் தரக்கூடாது என்று முடிவு செய்துள்ளோம். அதற்காக கடந்த 10 ஆண்டுகளாக தீபாவளி மற்றும்  கோயில்  திருவிழா காலங்களில் பட்டாசு வெடிப்பதில்லை.  இங்கு  சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளவால்கள் இருக்கும்,'' என்றார்.  
அதேபோல், மணப்பாறை அருகேயுள்ள தோப்புப்பட்டியில் உள்ள பழமை வாய்ந்த முனியப்பன் கோயிலில் உள்ள ஆலமரங்களில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக வெளவால்கள் வசிக்கின்றன. ஆகையால், இந்த கிராம மக்களும் வெளவால்களுக்கு தொந்தரவாக இருக்கும் என்பதால், தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதில்லை. இதை ஊர்க்கட்டுப்பாடாகவே பாவித்து வருகின்றனர். தீபாவளி என்றாலே பட்டாசுகள் தான் நம் நினைவுக்கு வரும் நிலையில், வெளவால்களுக்கு தொந்தரவு தரக்கூடாது என்பதற்காக, மணப்பாறை அருகே சாம்பட்டி, தோப்புப்பட்டி கிராம மக்கள் பட்டாசு வெடிக்காமல் இருந்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/16/10-ஆண்டுகளாக-பட்டாசு-வெடிக்காத-இரு-கிராம-மக்கள்-2791126.html
2790575 திருச்சி திருச்சி விளையாட்டுத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு: அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன் DIN DIN Sunday, October 15, 2017 02:49 AM +0530 விளையாட்டுத் துறைக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடுசெய்கிறது என்றார் மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா திருச்சியில் அக்டோபர் 26 ஆம் தேதி நடைபெறஉள்ளது. இதையொட்டி திருச்சி அண்ணா விளையாட்டரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளைத் தொடக்கி வைத்து மேலும் அவர் பேசியது:
விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் தமிழக அரசு, விளையாட்டுத் துறைக்கென அதிக நிதியை ஒதுக்கீடு செய்து வருகிறது. உலக அளவில் எப்பகுதியிலும் விளையாட்டுக்கு ஏகோபித்த வரவேற்பு இருக்கிறது.
விளையாடுவதன் மூலம் தன்னனம்பிக்கை என்னும் ஒளி விளையாட்டு வீரர், வீராங்கனைகள் உள்ளத்தில் மிளிர்கிறது. எச்செயலையும் அச்சமின்றி எதிர்கொள்ள ஏதுவாகிறது. எனவேதான் தமிழக அரசு விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்துவதும் வகையில் இதுபோன்ற போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்குகிறது. விளையாட்டு வீரர்கள் மகிழ்ச்சியுடனும், தன்னம்பிக்கையுடனும் அனைத்துப் போட்டிகளிலும் பங்கேற்று வெற்றி பெற வேண்டும்என்றார் அமைச்சர்நடராஜன். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சீ. வளர்மதி பேசியது: போட்டிகள் நிறைந்த உலகமாக இருப்பதால் ஒவ்வொருவரும் விடா முயற்சியுடன் கடினமான உழைப்பின் வாயிலாகத்தான் எங்கும், எதிலும் வெற்றியடைய இயலும். இதை கருத்தில் கொண்டு விளையாட்டுப் போட்டிகளில் மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பங்கேற்று வெற்றி பெற வேண்டும் என்றார் அமைச்சர்.
விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மக்களவை உறுப்பினர் ப. குமார், மாநிலங்களவை உறுப்பினர் டி. ரத்தினவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி ஆணையர் ந.ரவிச்சந்திரன், கூட்டுறவு ஒன்றியத் தலைவர் பத்மநாதன், மாவட்ட அரசு வழக்குரைஞர் ராஜ்குமார், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்அலுவலர் சி. புண்ணியமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற தடகளம், நீளம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ôட்டி எறிதல், நீச்சல், தேக்வாண்டோ, கபடி, கோகோ, வாலிபால், ஹாக்கி, கூடைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றனர்., ஞாயிற்றுக்கிழமையும் போட்டி நடைபெறுகிறது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/15/விளையாட்டுத்-துறைக்கு-அதிக-நிதி-ஒதுக்கீடு-அமைச்சர்-வெல்லமண்டி-என்-நடராஜன்-2790575.html
2790574 திருச்சி திருச்சி திருச்சியில் கலாமின் நினைவு மினி மாரத்தான் DIN DIN Sunday, October 15, 2017 02:48 AM +0530 திருச்சி ஜெகன்மாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் குடியரசு முன்னாள் தலைவர் ஆ.பெ.ஜெ. அப்துல்கலாமின் நினைவை போற்றும் வகையில் திருச்சியில் சனிக்கிழமை மினிமாரத்தான் நடைபெற்றது.
திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் மினிமாரத்தானை யுகா பெண்கள் அமைப்பின் தலைவர் அல்லிராணி பாலாஜி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில், 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் பங்கேற்று ஓடினர். உழவர் சந்தை மைதானத்தில் தொடங்கிய மினிமாரத்தான், ஜெகன்மாதா பள்ளியில் நிறைவுற்றது.
பின்னர், பள்ளி வளாகத்தில் "கலாம் எங்களம் கலாம்' என்றத் தலைப்பில் கவிதைகள், சொற்பொழிவுகள், நாடகம், அறிவியல் மற்றும் விண்வெளி அறிஞர்களைப் பற்றிய விநாடி வினா போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில், பள்ளியின் தாளாளர் அருள்தந்தை சகாயராஜ், முதல்வர் சின்னப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/15/திருச்சியில்-கலாமின்-நினைவு-மினி-மாரத்தான்-2790574.html
2790545 திருச்சி திருச்சி 75% பள்ளிக் குழந்தைகள் சரிவிகித உணவை எடுத்துக் கொள்வதில்லை: மருத்துவர் கு.சிவராமன் DIN DIN Sunday, October 15, 2017 02:41 AM +0530 நம் நாட்டில் 75% சதவிகித பள்ளிக் குழந்தைகள் தினமும் தேவைப்படும் சரிவிகித உணவை எடுத்துக் கொள்வதில்லை என்று யுனிசெப் ஆய்வு தெரிவிக்கிறது என்றார் மருத்துவர் கு.சிவராமன்.
திருச்சி சமயபுரம் எஸ்.ஆர்.வி. மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற பெற்றோரியல் நிகழ்ச்சியில் பங்கேற்று, அவர் மேலும் பேசியது: உணவு குறித்து நாம் தெரிந்து வைத்திருக்கும் தகவல்கள் எல்லாம் முன்னோர்கள் வழி வழியாகவே நம்மிடம் வந்திருக்கிறது. மற்ற நாடுகளைவிட அதிக சத்து நிறைந்த உணவு நம் நாட்டு உணவு என்று மருத்துவ ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சிவப்பரிசி சோறும், சிறுதானியங்களும் உணவில் அதிகம் சேர்ப்பது அவசியம்.
தவறான உணவுப் பழக்கத்தால் அனீமியா, இரும்புச்சத்து குறைபாடு மட்டுமல்ல, நாம் யோசித்து பார்க்காத பிரச்னைகள் கூட ஏற்படலாம்.
நம் நாட்டில் 75% பள்ளிக் குழந்தைகள் தினமும் தேவைப்படும் சரிவிகித உணவை எடுத்துக் கொள்வதில்லை என்று யுனிசெப் ஆய்வு தெரிவிக்கிறது. இதில் குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் பங்கு இருக்கிறது.
கீரைகள், காய்கறிகள், பழங்கள் உண்பதை குழந்தைகளிடம் ஆறுமாதத்திலிருந்தே தொடங்க வேண்டும். சாக்லேட், டப்பாக்களில் குளிர்ச்சி ஊட்டப்பட்டப் பழச்சுவை நிறைந்த ரசம் போன்றவைகளில் அதிகளவுரசாயன உப்பும், சர்க்கரையும் கலக்கப்பட்டுள்ளதால் அவை உடலுக்கு கேடு விளைவிக்கின்றன.
மணமூட்டி, நிறமூட்டிஅதிகம் சேர்க்கப்படும் திண்பண்டங்கள், உணவு வகைகள் மூளைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வகை திண்பண்டங்கள் சிறிது சிறிதாக நம்மை கொல்லும். சீரகம், பூண்டு, பெருங்காயம், வெங்காயம், கறிவேப்பில்லை, இஞ்சி போன்றவற்றை உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொண்டால் புற்றுநோயைத் தவிர்க்கலாம்.
தேசிய உணவுக்கழக ஆய்வின்படி, பளபளப்பான பழங்களைத் தவிர்த்து, நம் நாட்டு கொய்யா, நெல்லி, அத்திப்பழம் போன்றவற்றையும், பேரிட்சையையும் அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உணவு என்பது ருசிக்கானது மட்டுமல்ல, பண்பாடும், கலாசாரம் சார்ந்து ஆரோக்கியத்தை தருவதாகவும் இருக்கிறது. சரியான உணவை குழந்தைகளுக்குப் பழக்கப்படுத்தி, வளரும் தலைமுறையை ஆரோக்கியமான தலைமுறையாக உருவாக்குங்கள். ஆரோக்கியமான வாழ்க்கையே வீட்டையும், நாட்டையும் பாதுகாக்கும் என்றார் சிவராமன்.
நிகழ்வில், ஏ.எஸ்.பத்மாவதியின் சிந்தனை செய் மனமே என்ற வாழ்க்கைத்திறன் நூல் வெளியிடப்பட்டது.
எழுத்தாளர் ஞாநி, பள்ளிப் பொருளாளர் ந.செல்வராஜன், முதல்வர் க. துளசிதாசன், வாழ்க்கைத்திறன் பயிற்றுநர் ஏ.எஸ்.பத்மாவதி, மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/15/75-பள்ளிக்-குழந்தைகள்-சரிவிகித-உணவை-எடுத்துக்-கொள்வதில்லை-மருத்துவர்-குசிவராமன்-2790545.html
2790544 திருச்சி திருச்சி திருச்சியில் கலாம் நினைவு மினி மாரத்தான் DIN DIN Sunday, October 15, 2017 02:40 AM +0530 திருச்சி ஜெகன்மாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் குடியரசு முன்னாள் தலைவர் ஆ.பெ.ஜெ. அப்துல்கலாமின் நினைவை போற்றும் வகையில் திருச்சியில் சனிக்கிழமை மினிமாரத்தான் நடைபெற்றது.
திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் மினிமாரத்தானை யுகா பெண்கள் அமைப்பின் தலைவர் அல்லிராணி பாலாஜி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் பங்கேற்று ஓடினர். உழவர் சந்தை மைதானத்தில் தொடங்கிய மினிமாரத்தான், ஜெகன்மாதா பள்ளியில் நிறைவுற்றது. பின்னர், பள்ளி வளாகத்தில் "கலாம் எங்களம் கலாம்' என்றத் தலைப்பில் கவிதைகள், சொற்பொழிவுகள், நாடகம், அறிவியல் மற்றும் விண்வெளி அறிஞர்களைப் பற்றிய விநாடி வினா போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில், பள்ளியின் தாளாளர் அருள்தந்தை சகாயராஜ், முதல்வர் சின்னப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/15/திருச்சியில்-கலாம்-நினைவு-மினி-மாரத்தான்-2790544.html
2790543 திருச்சி திருச்சி இருசக்கர வாகன திருடன் கைது: 3 பைக்குகள் பறிமுதல் DIN DIN Sunday, October 15, 2017 02:40 AM +0530 திருச்சி மாநகரில் இருசக்கர வாகனங்கள் திருடியவரை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர். அவரிடமிருந்து 3 பைக்குள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி மாநகரப் பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வரும் திருடர்களை பிடிக்க திருச்சி மாநகர காவல் ஆணையர் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். இப்படையினர் பைக் திருடர்களைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், தனிப்படையினர் ஸ்ரீரங்கம் அழகிரிபுரம் சுங்கச்சாவடி அருகில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை நிறுத்தினர். அவர் காவலர்களைப் பார்த்தவுடன் தப்பிச் செல்ல முயற்சித்த போது, அவரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் ஸ்ரீரங்கம் வடக்குத் தெரு குழுமன் மகன் ஆண்டவர் (50) என்பதும், அவர் மீது மண்ணச்சநல்லூர், வாய்த்தலை, முசிறி, துறையூர் ஆகிய காவல் நிலையங்களில் 15 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. தொடர் விசாரணையில் அவர், ஸ்ரீரங்கம் சுங்கச்சாவடி, அழகிரிபுரம் நடுத்தெரு மந்தை, அழகிரிபுரம் டாஸ்மாக் அருகில் ஆகிய 3 இடங்களில் 3 பைக்குகளைத் திருடியதை ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து போலீஸார், ஆண்டவரைக் கைது செய்ததுடன், அவரிடமிருந்து 3 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/15/இருசக்கர-வாகன-திருடன்-கைது-3-பைக்குகள்-பறிமுதல்-2790543.html
2790491 திருச்சி திருச்சி டெங்கு உயிரிழப்புகளுக்குபோதிய முன்னேற்பாடுகளை மேற்கொள்ளாததுதான் காரணம் DIN DIN Sunday, October 15, 2017 02:29 AM +0530 தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு தமிழக அரசு போதிய முன்னேற்பாடுகளை மேற்கொள்ளாததுதான் காரணம் என்றார் அதிமுக (அம்மா அணி) துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன்.
தினமலர் பங்குதாரரும், திருச்சி, வேலூர் பதிப்புகளின் ஆசிரியருமான ஆர்.ராகவன் அண்மையில் காலமான நிலையில், திருச்சியிலுள்ள அவரது இல்லத்தில் அவரது உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டி:
டெங்கு காய்ச்சல் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குவதாக முதல்வர் கூறியிருக்கிறார். முதல்வர் பழனிசாமி டெங்கு விஷயத்தில் எதிர்க்கட்சிகளையும், நீதிமன்றத்தையும் வேண்டுமானாலும் ஏமாற்றலாம்.
ஆயிரக்கணக்கான மக்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் உயிரிழந்திருக்கின்றனர். ஆனால், இறந்தோர் விவரத்தை வேறு காய்ச்சல் என மாற்றிக் கூறி வருகின்றனர்.
டெங்கு காய்ச்சலைத்தடுக்க தமிழக அரசு போதிய முன்னேற்பாடுகளை செய்யாததுதான் உயிரிழப்புகளுக்கு காரணம்.
டெங்க காய்ச்சல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்த மத்தியக் குழு , அரசின் பணிகளில் திருப்தி தெரிவித்திருப்பதை மக்களின் கவனத்துக்கு விட்டுவிடுகிறேன். டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்வுகளும், நிலவேம்பு கசாயம் வழங்குதலும் அதிமுக சார்பில் நடைபெறுகிறது. இரட்டை இலை சின்னம் எங்களுக்குத்தான் கிடைக்கும். அது எங்கள் சொத்து. ஆர்.கே.நகர் தொகுதிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வருமா அல்லது பொதுத் தேர்தல் வருமா என்பதை நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவில் தெரிய வரும். டிசம்பர் மாதத்துக்குள் சட்டப்பேரவையைக் கூட்ட வேண்டும் என்பதால், நிச்சயம் வாக்கெடுப்பு நடக்கும். இந்த ஆட்சி வீட்டுக்குச் செல்லும்.
எங்கள் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்றார் தினகரன்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/15/டெங்கு-உயிரிழப்புகளுக்குபோதிய-முன்னேற்பாடுகளை-மேற்கொள்ளாததுதான்-காரணம்-2790491.html
2790415 திருச்சி திருச்சி தொட்டியம் அருகே தலமலையில் 5 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞர் DIN DIN Sunday, October 15, 2017 01:24 AM +0530 திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே 5,000 அடிக்கு மேல் உள்ள தலமலை பெருமாள் கோயிலில் சனிக்கிழமை கிரிவலம் சென்ற இளைஞர் மலையிலிருந்து தவறி கீழே விழுந்தார்.
தொட்டியம் அருகே சுமார் 5000 அடி உயரமுள்ள தலமலையின் உச்சியில் சஞ்சீவிராய பெருமாள் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வந்து தரிசனம் செய்துவிட்டு, சிலர் கோயிலின் வெளிப்புற சுவற்றில் சுமார் 4 அங்குல பாதையில் கிரிவலம் வந்து நேர்த்திக்கடனை செலுத்துவர்.
இதேபோல் சனிக்கிழமை முசிறி அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள பெரியார் நகரை சேர்ந்த தங்கராசு மகன் ஆறுமுகம் (37) மினி ஆட்டோ ஓட்டுநர் தனது நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக வந்தார்.
அவர் கோயில் சுவற்றில் இரண்டுமுறை வலம் வந்தார். மூன்றாவது முறை சென்றபோது தவறி கீழே உள்ள 5,000 அடி பள்ளத்தில் விழுந்தார்.
இதையடுத்து தகவலறிந்து வந்த நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி போலீஸார், வனத்துறையினர் புளியம்பட்டி மற்றும் கள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்த சிலருடன் இளைஞரை தேடும்பணியில் ஈடுபட்டனர்.
ஆனால், இரவு நேரமானதால் தேடும்பணியை நிறுத்தினர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை தீயணைப்புத் துறையினரை கொண்டு தேடும் பணி தொடரும் எனத் தெரிகிறது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/15/தொட்டியம்-அருகே-தலமலையில்-5-ஆயிரம்-அடி-உயரத்தில்-இருந்து-தவறி-விழுந்த-இளைஞர்-2790415.html
2789872 திருச்சி திருச்சி தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் மீது வழக்கு DIN DIN Saturday, October 14, 2017 01:42 AM +0530 திருச்சியில் பொதுஇடத்தில் அனுமதியின்றி நிலவேம்பு கசாயம் கொடுத்ததாக தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ் மீது திருச்சி மாநகர போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தேமுதிக சார்பில் வியாழக்கிழமை பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதனை தேமுதிகவின் மாநில துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ் தொடங்கி வைத்து, அனைவருக்கும் வழங்கினார்.
இதற்கு அனுமதி பெறவில்லை எனக் கூறி, காந்திமார்க்கெட் உதவி ஆய்வாளர் லாரன்ஸ், அனுமதியின்றி பொதுமக்களைக் கூட்டி, பொது அமைதிக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தினார் என புகாரளித்தார்.
இதன் பேரில் காந்திமார்க்கெட் போலீஸார், எல்.கே. சுதீஷ், திருச்சி மாநகரச் செயலாளர் டி.கே. கணேஷ், நிர்வாகிகள் அன்புராஜ், நியூட்டன் ராஜ், நூர்முகம்மது, வெல்டிங் சிவா உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/14/தேமுதிக-துணைச்-செயலாளர்-சுதீஷ்-மீது-வழக்கு-2789872.html
2789871 திருச்சி திருச்சி விரைவில் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் DIN DIN Saturday, October 14, 2017 01:42 AM +0530 தங்களுக்கு மிக விரைவில் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்றார் மக்களவைத் துணைத் தலைவர் மு. தம்பிதுரை.
திருச்சியில் அண்மையில் உடல்நலக் குறைவால் காலமான தினமலர் ஆசிரியர் ஆர். ராகவனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பறவைகள் சாலையிலுள்ள அவரது இல்லத்துக்கு வெள்ளிக்கிழமை சென்று ஆறுதல் கூறிய பின்னர் அவர் அளித்த பேட்டி:
பிரதமர் நரேந்திரமோடியை தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்த நிலையில், முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் கருத்து வேறுபாடு உள்ளதாகக் கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, தான் பிரதமரைச் சந்தித்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை, தங்களுக்குள் கருத்து வேறுபாடும் இல்லை என்று துணை முதல்வரே தெரிவித்திருக்கிறார். இரட்டை இலை சின்னம் பெற ஜெயலலிதாவின் கைவிரல் ரேகை பெற்றது தொடர்பாக விசாரணையும், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அரசுக்கு எதிராக வாக்களித்த 12 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இவ்விரு வழக்குகளின் விசாரணை நீதிமன்றத்தில் உள்ளதால் கருத்துக் கூற விரும்பவில்லை. அதிமுகவில் மீண்டும் தினகரன் சேர்த்துக் கொள்ளப்படுவார் என நீங்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு தனிபட்ட நபர் யார் பெயரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. தங்கள் அணிக்கு விரைவில் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்றார் தம்பிதுரை.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/14/விரைவில்-இரட்டை-இலை-சின்னம்-கிடைக்கும்-2789871.html
2789280 திருச்சி திருச்சி உலக மன நலன் தின மனிதச்சங்கிலி DIN DIN Friday, October 13, 2017 03:27 AM +0530 உலக மனநல தினத்தையொட்டி திருச்சியில்  கல்லூரி மாணவ, மாணவிகள், செவிலியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற மனிதச்சங்கிலி  வியாழக்கிழமை நடைபெற்றது.
திருச்சி  ஆத்மா மருத்துவமனைகள் மற்றும் இளையோர் எக்ஸ்னோரா இண்டர்நேஷல் ஆகியவை இணைந்து நடத்திய இந்த மனிதச்சங்கிலி பாரதியார் சாலையில் தொடங்கியது. நிகழ்வுக்கு ஆத்மா மருத்துவமனைகளின் இயக்குநர் டாக்டர் கே. ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.  இளையோர் எக்ஸ்னோரா இண்டர்நேஷனல் நிறுவனர் பி. மோகன்,  மாவட்ட நூலக அலுவலர் அ. பொ.சிவகுமார்,  குழந்தைகள் நலக்குழுத் தலைவர் இந்திராகாந்தி ஆகியோர் மனிதச்சங்கிலியைத் தொடக்கி வைத்தனர். பாரதியார் சாலை, எல்ஐசி, ஆர்.சி. மேல்நிலைப் பள்ளி,  ஜென்னி பிளாசா, தலைமை அஞ்சல் நிலையம்  வரையிலான பகுதி வரை மாணவ, மாணவிகள் மனிதச்சங்கிலியில் நீண்டவரிசையில் கைகோர்த்து  நின்றனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/13/உலக-மன-நலன்-தின-மனிதச்சங்கிலி-2789280.html
2789279 திருச்சி திருச்சி பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் காத்திருப்புப் போராட்டம் DIN DIN Friday, October 13, 2017 03:27 AM +0530 பணி நேரத்தை அதிகரிக்க வேண்டும், நிலுவைத் தொகைகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்தத் தொழிலாளர்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி முதன்மைப் பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு, தொலைத் தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் சுந்தர்ராஜ் தலைமை வகித்தார். இதில் ஒப்பந்தப் பணியாளர்களின் பணி நேரத்தை 6-லிருந்து 8 மணி நேரமாக உயர்த்த வேண்டும். பிரதி மாதம் 7-ஆம் தேதி ஊதியம் வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள பணப்பயன்களை வழங்க வேண்டும். ரூ. 7,000 போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் தேவராஜ், தொலைத் தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கச் செயலாளர் விஸ்வநாதன், பொருளாளர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/13/பிஎஸ்என்எல்-ஒப்பந்த-ஊழியர்கள்-காத்திருப்புப்-போராட்டம்-2789279.html
2789278 திருச்சி திருச்சி திருச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் முறைகேடு: 9 பேர் மீது வழக்கு DIN DIN Friday, October 13, 2017 03:26 AM +0530 திருச்சி மற்றும் ஸ்ரீரங்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் புதன்கிழமை மேற்கொண்ட சோதனையில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் புதன்கிழமை அதிரடி சோதனை நடத்தினர்.
திருச்சியில் திருச்சி கிழக்கு மற்றும் ஸ்ரீரங்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் ஸ்ரீரங்கத்தில் ரூ. 1,03,160, திருச்சி கிழக்கு அலுவலகத்தில் ரூ. 43,000 என கணக்கில் வராத ரொக்கம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  
இது தொடர்பாக போலீஸார் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து  ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி உரிமையாளர்கள் ஆர். யோகராஜ் (மண்ணச்சநல்லூர்),  டி. மருதப்பா (ராம்ஜிநகர்), ஸ்ரீரங்கம் வட்டார அலுவலகத்தில் எல்காட் கணினி பிரிவு பணியாளர் ஜென்சிராணி மற்றும் தனியார் பேருந்து நிறுவனப் பணியாளர்கள் எஸ். குணசேகரன், ஜெ. ஜெயக்குமார், பி. இளஞ்செழியன், எம். அமிருதீன், எஸ். மகேஸ்வரன் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/13/திருச்சியில்-வட்டாரப்-போக்குவரத்து-அலுவலகங்களில்-முறைகேடு-9-பேர்-மீது-வழக்கு-2789278.html
2789277 திருச்சி திருச்சி நகைப்பறிப்பில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது DIN DIN Friday, October 13, 2017 03:26 AM +0530 திருச்சியில் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டவரை போலீஸார் குண்டர் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனர்.
 கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ராமலிங்க நகர் கார்மல் கார்டனைச் சேர்ந்த தேவிகா என்பவர், தனது வீட்டின் அருகே நடந்து சென்ற போது,  மர்ம நபர் ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டி 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர்.  இதுகுறித்து உறையூர் போலீஸார் வழக்குப் பதிந்து,  நகை பறிப்பில் ஈடுபட்ட திருச்சி மாவட்டம், குமாரவயலூர் பாரதி நகரைச் சேர்ந்த தங்கராஜ் மகன் ஜம்புகேஸ்வரன் (29) என்பவரை கடந்த ஜூன் 10-ஆம் தேதி கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். ஜம்புகேஸ்வரன் மீது ஸ்ரீரங்கம், கண்டோன்மென்ட், பொன்மலை, அரியமங்கலம், விமான நிலையம், அரசு மருத்துவமனை, பாலக்கரை, காந்திமார்க்கெட், உறையூர், கோட்டை, நவல்பட்டு காவல்நிலையங்களில் 15 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.  இவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டதால், திருச்சி மாநகர காவல் ஆணையர் ஆ.  அருண், ஜம்புகேஸ்வரனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க புதன்கிழமை இரவு ஆணை பிறப்பித்தார்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/13/நகைப்பறிப்பில்-ஈடுபட்டவர்-குண்டர்-சட்டத்தில்-கைது-2789277.html
2788793 திருச்சி திருச்சி திருச்சி, கும்பகோணம், அறந்தாங்கியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை DIN DIN Thursday, October 12, 2017 07:25 AM +0530 திருச்சி, ஸ்ரீரங்கம், கும்பகோணம், அறந்தாங்கியில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுலவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் புதன்கிழமை சோதனை நடத்தினர்.
ஸ்ரீரங்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புதன்கிழமை மாலை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. ராமசந்திரன், ஆய்வாளர் சேவியர் ராணி, ஆய்வுக்குழு ஆய்வாளர் பாலு ஆகியோர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது அங்கு இருந்த 5 இடைத்தரகர்கள் மற்றும் நிரந்தர ஊழியர்களிடம் அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அங்கு ரொக்கப் பணத்தை சரிபார்த்த போது கணக்கில் வராத ரூ. 1, 03,120 ஐ  லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் திருச்சி கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் சக்திவேல் தலைமையிலான போலீஸார்  சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை புதன்கிழமை இரவு வரை நீடித்தது. இதில், கணக்கில் வராத ரூ. 43ஆயிரம், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கும்பகோணம்: கும்பகோணத்தை அடுத்த தென்னூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்  புதன்கிழமை மதியம் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களின் ஆய்வுக்குழு அதிகாரி மகேஸ்வரன் மற்றும் லஞ்சம், ஊழல் தடுப்பு டிஎஸ்பி ராமதாஸ் மற்றும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.  அப்போது, அலுவலகத்தின் கதவுகளைஅடைத்து யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.   இதனால் உரிமம் புதுப்பிக்க வந்தோர், புதிதாக உரிமம் எடுக்க வந்தோர் பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து, டி.எஸ்.பி. ராமதாஸ் கூறுகையில், கும்பகோணம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில்  நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ. 15 ஆயிரம் பணமும்,  ஒரு மூட்டை ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்றார்.
அறந்தாங்கி:  புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் அதிகளவில் முறைகேடுகள் நடைபெறுவதாக பொதுமக்களிடமிருந்து வந்த தகவலின்அடிப்படையில்,  புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் ரகுபதி தலைமையில்  ஆய்வாளர்கள் சார்லஸ் மற்றும் பங்கஜம் உள்ளிட்ட 7 போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சோதனை நடைபெற்றபோது,  அலுவலக மாடியிலிருந்து கீழே வீசி எறியப்பட்ட ரூபாய் நோட்டுகளை போலீஸார் கைப்பற்றினர். இதனால், அலுவலகத்தின் கதவு, ஜன்னல்களை போலீஸார் மூடிவிட்டு சோதனை மேற்கொண்டனர்.  மேலும், வாகன பதிவுக்கு வந்தவர்கள்,  வாகன விற்பனையக உரிமையாளர்கள் உள்ளிட்டோர் அலுவலகத்திலிருந்து வெளியேற அனுமதி மறுக்கப்பட்டது.
ரூ. 1.35லட்சம் பறிமுதல்:  அறந்தாங்கி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு காவல் துணை கண்காணிப்பாளர் ரகுபதி தலைமையில்  ஆய்வாளர்கள் சார்லஸ் மற்றும் பங்கஜம் உள்ளிட்ட 7 பேர் 7 மணி நேரம் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1லட்சத்து 35 ஆயிரம் ரொக்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.
திண்டுக்கல்:    திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு  புதன்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு வந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனர். மேலும், அனைத்துப் பகுதியிலும் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அலுவலகத்தில் உள்ள பீரோவுக்கு பின்புறம், கோப்புகள் வைக்க பயன்படும் ரேக்குகளுக்கு இடையில்,  அடியில், அலுவலக மாடியில் என பல்வேறு பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் மீட்கப்பட்டது.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கூறுகையில், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் முறைகேடாக பொதுமக்களிடம் பணம் வசூலிக்கப்படுவதாகவும், அந்த பணம் உரிமம் பெற்றுக் கொடுக்கும் முகவர்கள் மூலம் பெறப்படுவதாகவும் தகவல் கிடைத்தது.
அதன்பேரில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில், அலுவலகத்தில் பல்வேறு பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2,10,405 பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக, அலுவலக தலைமை அலுவலர் என்ற முறையில் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் உரிய விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மூலம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றனர்.
ராமநாதபுரம்:  ராமநாதபுரம் பாரதிநகரில் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்துக்கு அருகிலேயே வட்டாரப் போக்குவரத்துத்துறை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் புதன்கிழமை லஞ்ச ஒழிப்பு  காவல் ஆய்வாளர்கள் ஜானகி,விமலா ஆகியோர் தலைமையிலான குழுவினர் திடீரென சோதனை நடத்தினர்.  
அப்போது வட்டாரப் போக்குவரத்து அலுவலர் செல்வக்குமார் வெளியில் சென்றிருந்தார். அங்கு பணியில் இருந்த வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் விஸ்வநாதன், அலுவலக கண்காணிப்பாளர் கோபிராஜன் ஆகியோரிம் விசாரணை நடத்தினர்.
பின்னர் அலுவலகத்தில் இருந்த பணியாளர்கள், முகவர்களாக செயல்பட்டவர்கள் மற்றும் பொதுமக்கள் சிலரிடமும் விசாரணை மேற்கொண்டனர். இந்த சோதனையில்  கணக்கில் காட்டப்படாத ரூ. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொகை பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.


சோதனையில் சிக்கியது எவ்வளவு?
ஸ்ரீரங்கத்தில்    ரூ. 1, 03,120
திருச்சி கிழக்கு     ரூ. 43,000
கும்பகோணத்தை அடுத்த தென்னூரில்    ரூ. 15, 000
அறந்தாங்கியில்     ரூ. 1,35,000
திண்டுக்கல்    ரூ.2,10,405
ராமநாதபுரம்    ரூ. 50,000

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/12/திருச்சி-கும்பகோணம்-அறந்தாங்கியில்-உள்ள-வட்டார-போக்குவரத்து-அலுவலகங்களில்-லஞ்ச-ஒழிப்பு-போலீஸார்-சோ-2788793.html
2788792 திருச்சி திருச்சி திருச்சி இஎஸ்ஐ மருத்துவமனையில் இன்று மூட்டு வலிக்கான சிறப்பு முகாம்: மற்ற இடங்களில் அக்.17-ல் முகாம் DIN DIN Thursday, October 12, 2017 07:24 AM +0530 திருச்சி இஎஸ்ஐ மருத்துவமனையில் மூட்டு வலிக்கான சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமையும், பிற மருத்துவமனைகளில் அக். 17-ஆம் தேதியும்  நடைபெறவுள்ளது என மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் எஸ். காமாராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17ஆம் தேதி தேசிய ஆயுர்வேத தினம் இந்திய அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆயுர்வேத மருத்துவம் என்பது பஞ்ச பூதங்களின் (நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம்) அடிப்படையில் வாதம், பித்தம், கபம் போன்ற மூக்குற்றங்களின் அடிப்படையில் நோய்களை கணித்து மருந்துகள் வழங்கும் இந்திய மருத்துவ முறையாகும்.
ஒருங்கிணைந்த திருச்சி,  கரூர்,  பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் தலைமை மருத்துவமனைகளிலும், திருச்சியில் இஎஸ்ஐ மருத்துவமனை மற்றும்  காட்டூர், அன்பில், ஒரத்தூர், அழுந்தலைப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கரூர் மாவட்டம் சேங்கல், பெரம்பலூர் மாவட்டம் அனுக்கூர் உள்ளிட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆயுர்வேத மருத்துவப் பிரிவுகளும் இயங்கி வருகிறது.
இவற்றில் அக். 17-இல் மூட்டு வலிக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் காலை 8 முதல் பகல் 12 வரையிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலை 9 முதல் பகல் 1 மணி வரையிலும் நடைபெறுகின்றது.
திருச்சி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் இன்று:
திருச்சி பெரிய மிளகுபாறையில் உள்ள இ.எஸ்.ஐ  மருத்துவமனையில் இச்சிறப்பு முகாம் வியாழக்கிழமை (அக். 12)  காலை 8.00 முதல் பகல்  1.00 மணி வரை நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம். ஆங்கில மருந்துகள் பயன்படுத்தி வருவோரும் தயக்கமின்றி இந்த முகாமில் பங்கேற்று ஆயுர்வேத மருந்துகளை பயன்படுத்தலாம். பக்கவிளைவுகள் குறித்த பயம் வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/12/திருச்சி-இஎஸ்ஐ-மருத்துவமனையில்-இன்று-மூட்டு-வலிக்கான-சிறப்பு-முகாம்-மற்ற-இடங்களில்-அக்17-ல்-முகாம்-2788792.html
2788789 திருச்சி திருச்சி போலி மருத்துவர்களை நம்ப வேண்டாம் DIN DIN Thursday, October 12, 2017 07:23 AM +0530 டெங்கு காய்ச்சல் பீதியை பயன்படுத்தி விளம்பரம் தேடும் போலி மருத்துவர்களை நம்ப வேண்டாம் என ஒருங்கிணைந்த மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் எஸ். காமராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெயிட்டுள்ள செய்திக்குறிப்பு:
டெங்கு காய்ச்சல் குறித்த பயம் பொதுமக்களிடத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனை அறிந்து கொண்ட போலி சித்த மருத்துவர்கள், போலி ஆயுர்வேத, போலி ஹோமியோபதி, போலி இயற்கை மருத்துவர்கள் உள்ளிட்டோர் டெங்கு காய்ச்சலை தடுக்கும் சிறப்பு மருந்துகள் இருப்பதாகவும், ஓரிருநாளில் நோயை குணப்படுத்துவதாகவும் பத்திரிக்கை வாயிலாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் தகவல் பரப்பி வருகின்றனர்.
இதை பொதுமக்கள் நம்ப வேண்டாம். மேலும் தங்கள் வீடுகள், அலுவலகங்கள்,  பள்ளி, கல்லூரிகள், தொழிற்சாலைகளுக்கு பாரம்பரிய மருத்துவர்கள் என்று கூறிக்கொண்டு வந்து சிகிச்சை அளிப்பதாக கூறும் நபர்களையும் நம்ப வேண்டாம். அவர்களிடம்மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் அல்லது  மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஒப்புதல் உள்ளதா என விவரம் கேளுங்கள்.
அவ்வாறு ஒப்புதல் இல்லாத நபர்கள் குறித்து  சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட சித்த மருத்துவ அலுவலரை 7708068802 என்ற எண்ணிலும் அல்லது, சுகாதாரத்துறை  இணை இயக்குநரை  9842482209 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/12/போலி-மருத்துவர்களை-நம்ப-வேண்டாம்-2788789.html
2788788 திருச்சி திருச்சி திருச்சியில் சிறுவன் உள்பட இருவர் சாவு DIN DIN Thursday, October 12, 2017 07:23 AM +0530 திருச்சி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 10 வயது சிறுவன் உள்பட இருவர், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தனர்.
 திருச்சி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த, கரூர் மாவட்டம் மணவாசியைச் சேர்ந்த பூஜா (5), திருச்சி மாவட்டம் துவாக்குடியைச் சேர்ந்த இனியா (4), சோமரசம்பேட்டையைச் சேர்ந்த கலாராணி (55) ஆகியோர் கடந்த 6-ஆம் தேதி  உயிரிழந்தனர். இதே போல, கடந்த 8-ஆம் தேதி முசிறி கோடியாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அருள் பிரசாத் (24), 9-ஆம் தேதி  துறையூரை அடுத்த மாராடியைச் சேர்ந்த புவனேஸ்வரி (47) என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
 இந்நிலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் மற்றும் ஒரு பெண் ஆகிய இருவரும் புதன்கிழமை உயிரிழந்தனர்.
 திருச்சி விமான நிலையப் பகுதி அந்தோணியார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார். துப்பாக்கித் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கனிமொழி (24) . இவர்களுக்கு 6 மாதக் குழந்தை ஒன்று உள்ளது.
கனிமொழிக்கு கடந்த சில நாள்களாக காய்ச்சலும், மூச்சுத்திணறலும் இருந்துள்ளது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டெங்கு அறிகுறி இருந்ததது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 2 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், புதன்கிழமை காலை உயிரிழந்தார்.  இதேபோல, நவலூர்குட்டப்பட்டு அருவங்கால்பட்டியைச் சேர்ந்த மின்வாரியப் பணியாளர் பழனிசாமி - கலாராணி தம்பதியின் மகன் லோகேஷ் (10). இவர் அருகிலுள்ள பள்ளியில் 5-ஆம் வகுப்பு பயின்று வந்தார். இவர் கடந்த சில நாள்களாக சோர்வாகக் காணப்பட்டுள்ளார். தொடர்ந்து இவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, பெற்றோர் அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக புதன்கிழமை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லோகேஷ் உயிரிழந்தார்.  இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த சில நாள்களாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/12/திருச்சியில்-சிறுவன்-உள்பட-இருவர்-சாவு-2788788.html
2788765 திருச்சி திருச்சி மணப்பாறை அருகே டேங்கர் லாரி மீது கார் மோதி பெண் சாவு DIN DIN Thursday, October 12, 2017 07:16 AM +0530 திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே செவ்வாய்கிழமை நள்ளிரவு டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 5 பேர் காயமடைந்தனர்.
வேலூர் மாவட்டத்தில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருபவர் தங்கப்பெருமாள்(32). இவருக்கு திருநெல்வேலி கீழராமநேரி பூர்வீகம். சொந்த ஊருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு தனது மனைவி சந்தனகுமாரி(28) மற்றும் உறவினர்களுடன் வந்த தங்கப்பெருமாள் செவ்வாய்க்கிழமை இரவு வாடகை காரில் வேலூருக்கு புறப்பட்டார். காரை ராஜா கிருஷ்ணன் என்பவர் ஓட்டிவந்தார். மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சி அருகே உள்ள செவந்தாம்பட்டி விளக்குப் பகுதியில் வந்த போது,  கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி எதிரே வந்த டேங்கர் லாரி மீது மோதியது. இதில் தங்கப்பெருமாளின் மனைவி சந்தனகுமாரி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
 மேலும் காரில் பயணம் செய்த தங்கப்பெருமாள், நிவேதா (25), தன்சிகா(5), மேகலா (4) மற்றும் ஓட்டுநர் ராஜா கிருஷ்ணன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/12/மணப்பாறை-அருகே-டேங்கர்-லாரி-மீது-கார்-மோதி-பெண்-சாவு-2788765.html
2788764 திருச்சி திருச்சி கல்லூரிப் பேராசிரியைக்கு சிறந்த கல்வெட்டறிஞர் விருது DIN DIN Thursday, October 12, 2017 07:16 AM +0530 திருச்சி மாவட்டம், முசிறி அறிஞர் அண்ணா அரசுக் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியை முனைவர்அர. அகிலாவின் 30ஆவது ஆண்டுக் காலக் கல்வெட்டாய்வுப் பணிகளையும், புதிய கண்டுபிடிப்புகளைப் பாராட்டும் வகையில் முசிறியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் அவருக்கு சிறந்த கல்வெட்டறிஞர் விருது வழங்கப்பட்டது.
கல்லூரி வளாகத்தில்  நடைபெற்ற நிகழ்வுக்கு கல்லூரி முதல்வர் தா. கோலோச்சி தலைமை வகித்தார்.   மருத்துவர் சுப்பிரமணியம் பழனியாண்டி அறக்கட்டளையின் 2017 ஆம் ஆண்டுக்கான விருதை  முனைவர் அர. அகிலாவுக்கு திருச்சி டாக்டர் மா.ராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் இயக்குநர் டாக்டர் இரா. கலைக்கோவன் வழங்கி வாழ்த்திப் பேசினார்.
இதைத் தொடர்ந்து டாக்டர் மா.ராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தில்   தொல்லியல் ஆய்வறிஞர் பத்மபூஷன் கூ.ரா. சீனிவாசன் நினைவாக  கல்வெட்டறிஞர் பத்மஸ்ரீ  ஐராவதம் மகாதேவன் அமைத்துள்ள அறக்கட்டளைப் பொழிவில், பாச்சில்கோயில்கள் என்ற தலைப்பில் முனைவர் அர. அகிலா காட்சியுரை நிகழ்த்தினார்.  அவரது உரையில் கோபுரப்பட்டி, அழகியமணவாளம் பகுதிகளில் அமைந்துள்ள பல்லவர், சோழர், விஜயநகர அரசர் காலக் கோயில்களின் கட்டடக்கலை, சிற்பக் கலை, கல்வெட்டுத் தரவுகள் வழங்கும் வரலாறு ஆகியவை குறித்து எடுத்துரைத்தார்.
வரலாற்றுத் துறையில் சிறப்பு நிலை எய்திய மாணவர்கள் ரெ. ரேவதி, த. கோகிலா, பா. தமிழரசன், க. மதுபாலா ஆகியோருக்கு டாக்டர் மா. ராசமாணிக்கனார்  வரலாற்றாய்வு மையத்தின் சார்பில் மருத்துவர் சு. பழனியாண்டி பரிசுகளை வழங்கினார். நிகழ்வை பா. பெருந்தேவி ஒருங்கிணைத்தார்.
முன்னதாக, கல்லூரியின் வரலாற்றுத் துறைத் தலைவரும், இணைப் பேராசிரியருமான ம. ராஜாரவீந்திரன் வரவேற்றார்.  இரா. பரமசிவம் நன்றி கூறினார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/12/கல்லூரிப்-பேராசிரியைக்கு-சிறந்த-கல்வெட்டறிஞர்-விருது-2788764.html
2788752 திருச்சி திருச்சி முடியை சீராக்கும் கருவிக்குள் மறைத்து  மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 7 லட்சம் தங்கக் கட்டிகள் பறிமுதல் DIN DIN Thursday, October 12, 2017 06:37 AM +0530 மலேசியாவிலிருந்து பயணி ஒருவரால் முடியை சீராக்கும் கருவிகளுக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ. 7 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் திருச்சி விமான நிலையத்தில் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து  புதன்கிழமை காலை வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக, சுங்கத்துறை வான் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.  
இதையடுத்து அதிகாரிகள், விமானப் பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சோதனை செய்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த பெண் பயணி மீரா என்பவர், தலைமுடியை சீராக்கும் (ஹேர் ஸ்ட்ரைக்ட்)கருவிகளுக்குள் 230 கிராம்  தங்கக் கட்டிகளை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்தப் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கக் கட்டிகளின் மதிப்பு சுமார் ரூ. 7 லட்சமாகும்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/12/முடியை-சீராக்கும்-கருவிக்குள்-மறைத்து--மலேசியாவிலிருந்து-கடத்தி-வரப்பட்டரூ-7-லட்சம்-தங்கக்-கட்டிகள-2788752.html
2788281 திருச்சி திருச்சி தினமலர் ஆசிரியர்: ஆர்.ராகவன் காலமானார் DIN DIN Wednesday, October 11, 2017 08:38 AM +0530 தினமலர் நாளிதழின் பங்குதாரரும்,  திருச்சி, வேலூர் தினமலர் பதிப்புகளின் ஆசிரியருமான ஆர். ராகவன் (80) உடல்நலக் குறைவு காரணமாக திருச்சியில்  செவ்வாய்க்கிழமை (அக்.10) காலமானார்.
தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையரின் நான்காவது மகனான இவருக்கு மனைவி சுப்புலட்சுமி,  தினமலர் இணை ஆசிரியர்கள்   ஆர். ராமசுப்பு,  ஆர்.ஆர்.கோபால்ஜி ( தமிழ்நாடு விஷ்வ இந்து பரிஷத்தின் மாநிலப் பொதுச் செயலர்)  ஆகிய இரு மகன்களும் உள்ளனர்.
மறைந்த ராகவனின் இறுதிச்சடங்கு ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரையில் புதன்கிழமை பிற்பகலில் நடைபெறும்.   திருச்சி பறவைகள் சாலை பகுதியிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ராகவனின் உடலுக்கு  ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/11/தினமலர்-ஆசிரியர்-ஆர்ராகவன்-காலமானார்-2788281.html
2788280 திருச்சி திருச்சி திருச்சி விடுதியில் குழந்தையை கொன்று தாய் தூக்கிட்டுத் தற்கொலை DIN DIN Wednesday, October 11, 2017 08:38 AM +0530 திருச்சியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் குழந்தையை விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை சிதம்பரநாதன்பட்டியைச் சேர்ந்ததவர் ஜூடு. இவரது மனைவி தேன்மொழி (30). இவர் கோவை மாவட்டம், மதுக்கரை பாலக்காடு சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார்.  ஜூடு-வுக்கும், தேன்மொழிக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, சபரிநாத்கிரேஸ் (2) என்ற மகள் இருந்தார்.
இந்நிலையில்,  தேன்மொழி தனது மகளுடன், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில், மருத்துவ சிகிச்சை எடுப்பதற்காக வந்துள்ளதாகக் கூறி திங்கள்கிழமை பிற்பகலில் அறை எடுத்து தங்கியுள்ளார். தொடர்ந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் வரை அறைக்கதவு திறக்கப்படவில்லையாம். இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள்,  அவரது அறையின் ஜன்னல் வழியே பார்த்த போது, தேன்மொழி தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து விடுதி மேலாளர் அளித்த புகாரின் பேரில், கண்டோன்மென்ட் போலீஸார், நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று, அறைக் கதவை உடைத்து, உள்ளே தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்த தேன்மொழியையும், அவரது மகள் சபரிநாத்கிரேஸையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், தேன்மொழி தனது மகளுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக தேன்மொழியின் கணவர் ஜூடுவிடம் தொடர்பு கொண்டு போலீஸார் கேட்ட போது, அவர் பதிலளிக்காமல் துண்டித்துள்ளார். மேலும், தேன்மொழியின் பெற்றோர் வெளிநாட்டில் உள்ளதாலும், அவரது செல்லிடப்பேசியை இயக்க முடியாததாலும்,  அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார், என்ன காரணம் என்பது தெரியவில்லை.
இது குறித்து கண்டோன்மென்ட் போலீஸார் வழக்குப் பதிந்து, தேன்மொழி கணவரின் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரித்து வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/11/திருச்சி-விடுதியில்-குழந்தையை-கொன்று-தாய்-தூக்கிட்டுத்-தற்கொலை-2788280.html
2788279 திருச்சி திருச்சி துறையூர் அருகே பெண் சாவு DIN DIN Wednesday, October 11, 2017 08:37 AM +0530 துறையூர் அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மாராடி கிராமத்தைச் சேர்ந்தவர் கனராஜ் மனைவி புவனேஸ்வரி(48).  காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
 அதன்பிறகு  திருச்சி அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.  
அங்கு புவனேஸ்வரிக்கு திங்கள்கிழமை வரை முறையான சிகிச்சை அளிக்க வில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து  திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் புவனேஸ்வரியை சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/11/துறையூர்-அருகே-பெண்-சாவு-2788279.html
2788278 திருச்சி திருச்சி தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் DIN DIN Wednesday, October 11, 2017 08:37 AM +0530 டெங்கு காய்ச்சலைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஆர்.முத்தரசன்.
திருச்சியில் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி : தமிழகத்தில் மிகப்பெரிய பிரச்னையாக, கவலையளிக்கக்கூடியதாக இருப்பது டெங்கு காய்ச்சல்.  ஒவ்வொரு நாளும் காய்ச்சலால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. டெங்குவை கட்டுப்படுத்த முழுமையான நடவடிக்கை இல்லை. பல்வேறு நோய்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட மத்திய அரசு, டெங்கு காய்ச்சல் குறித்த ஆய்வு செய்யவில்லை. இதற்காக  நவீன் கண்ணா தலைமையில் அமைக்கப்பட்ட குழுவுக்கு நிதியும் ஒதுக்கீடு செய்யவில்லை.
டெங்கு காய்ச்சல் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும்,  போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளையும் மாநில அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். கேரளத்தில் பிராமணர்கள் அல்லாத 36 பேரை அந்த மாநில அரசு அர்ச்சகர்களாக நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது.  அதே போன்று தமிழகத்திலும் அனைத்து சாதியினரையும் அர்ச்சராக்கிட வேண்டும்.
காவிரி பிரச்னையில் கர்நாடக அரசும், மத்திய அரசும் செய்து துரோகத்தால்  கடந்த 6 ஆண்டுகளாக தமிழகத்தில் ஒரு போக சாகுபடி கூட செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
நிகழாண்டில் இயற்கை அன்னையால் கர்நாடக அணைகளிலிருந்து வந்த உபரி நீரால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து, தற்போது சாகுபடிக்காக திறக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், கடைமடைப் பகுதிகளுக்கு இந்த தண்ணீர் முழுமையாக சென்று சேரவில்லை. தூர்வாருவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை பயன்படுத்தவில்லை. விவசாயிகளுக்குப் பயிர்க்கடனும் வழங்குவதில்லை. பழைய கடன் தொகையைக் கட்டினால்தான் புதிய கடன் தரப்படும் என நிர்ப்பந்தம் செய்கின்றனர். எனவே விவசாயக் கடன்களை ரத்து செய்து புதியபயிர்க்கடன்களை வழங்க வேண்டும் என்றார் முத்தரசன்.
பேட்டியின் போது, மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்கள் வை. சிவபுண்ணியம், த. இந்திரஜித், மாவட்டச் செயலர் க. சுரேஷ், துணைச் செயலர் சிவா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/11/தடுப்பு-நடவடிக்கைகளை-போர்க்கால-அடிப்படையில்-மேற்கொள்ள-வேண்டும்-2788278.html
2788277 திருச்சி திருச்சி மண்ணச்சநல்லூரில் போலி மருத்துவர் உள்பட 3 பேர் கைது DIN DIN Wednesday, October 11, 2017 08:37 AM +0530 திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில்  மருத்துவம் படிக்காமல் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சையளித்த போலி மருத்துவர்  உள்பட 3 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
மண்ணச்சநல்லூர் காவல் நிலையம் எதிரில் உள்ள பாத அழுத்த சிகிச்சை நிபுணர் நிலையத்தில் மருத்துவம் படிக்காமல் டெங்கு காய்ச்சலுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக முதல்வரின் தனிப் பிரிவுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் புகார்கள் வரப்பெற்றன.  இதைத் தொடர்ந்து  போலி மருத்துவ ஒழிப்பு ஆய்வு மேற்கொள்ள ஆட்சியர்  உத்தரவிட்டார்.
இதையடுத்து,  மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் சம்சாத் பேகம் தலைமையில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர்,   காவல்துறையினர் உள்ளிட்ட பல்துறை அலுவலர்கள் அடங்கிய குழுவினர் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பாத சிகிச்சை நிபுணர் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது,  சிலர் டெங்கு காய்ச்சல் மற்றும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வந்ததன் அடிப்படையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சையளிப்பது உறுதி செய்யப்பட்டது.  அப்போது அங்கிருந்த  மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் சம்சாத் பேகம்  தனக்கு காய்ச்சல் இருப்பதாகவும், சிகிச்சையளிக்குமாறும் கோரினார்.
அவரிடம் ரத்தப் பரிசோதனை  செய்துள்ளீர்களா? என்றும்,  அப்படி செய்திருந்தால் சிகிச்சையளிக்கப்படும், ரத்தப் பரிசோதனை செய்யவில்லை எனில் அருகிலுள்ள ஆய்வகத்துக்குச் சென்று  ரத்தப் பரிசோதனை செய்து வாருங்கள் என்றும்,  டெங்கு காய்ச்சலுக்கும்,  சாதாரண காய்ச்சலுக்கும் தனித்தனியே சிகிச்சை அளிக்கப்படும் என அங்கிருந்த சங்கரும்,  அவரது மனைவி மலர்கொடியும் தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து மருத்துவக் குழுவினர் அந்த நிலையத்தில் தீவிரமாக சோதனை மேற்கொண்ட போது, சித்த மருந்துகளும், நோயாளிகளுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள் இருந்தன. மேலும், சங்கர், அவரது மனைவி மலர்கொடி, தனசீலி ஆகியோர் மருத்துவம் படித்ததற்கான எவ்வித சான்றுகளோ, ஆவணங்களோ இல்லாமல் போலி மருத்துவம் செய்தது தெரிய வந்தது.
அந்த நிலையத்தில் டெங்கு காய்ச்சலுக்கு என்று சிகிச்சையளிக்கப்பட்டு வந்த சித்த மருந்து மாத்திரைகள் ஆய்வுக்காக எடுத்து வரப்பட்டன. போலி மருத்துவர் எனக் கண்டறியப்பட்டதன் அடிப்படையில் சங்கர், அவரது மனைவி மலர்கொடி,  தனசீலி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.

ஆட்சியர் எச்சரிக்கை
மாவட்டத்தில் மருத்துவம் படிக்காமலும், தகுந்த பயிற்சி இல்லாமலும் மருத்துவச் சிகிச்சையளித்து வந்தாலும், சித்த மருத்துவம் மற்றும்அலோபதி மருத்துவமாக இருந்தாலும் போலி மருத்துவர் எனக் கண்டறியப்பட்டு நிரூபிக்கப்படுமானால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/11/மண்ணச்சநல்லூரில்-போலி-மருத்துவர்-உள்பட-3-பேர்-கைது-2788277.html
2787462 திருச்சி திருச்சி தமிழை ஆட்சி மொழியாக்க வலியுறுத்தி தமிழறிஞர்கள் குமரி முதல் தில்லி வரை ஊர்திப் பயணம் DIN DIN Tuesday, October 10, 2017 05:10 AM +0530 தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி கன்னியாகுமரி முதல் தில்லி வரை தமிழறிஞர்களின் தமிழ் ஊர்திப் பயணம் அக். 12 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
 இதுகுறித்து பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் தலைவர் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் திருச்சியில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது:
 தமிழ் மொழிப் பாதுகாப்பு, தமிழர் உரிமைப் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி எனது தலைமையில் தமிழறிஞர்கள் கடந்த 1993-ஆம் ஆண்டு கன்னியாகுமரி முதல் சென்னை வரை நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 25 ஆண்டுகளாக தமிழ் பரப்புரை ஊர்திப்பயணம் நடைபெற்றது. தற்போது 25-ஆவது ஆண்டாக கன்னியாகுமரி முதல் தில்லி வரை முதல் முறையாக தமிழ் ஊர்திப் பயணத்தை வரும் அக். 12-ஆம் தேதி தொடங்க உள்ளோம்.  இதில் செம்மொழியாம் தமிழ்மொழியை நாட்டின் ஆட்சி மொழியாக அரசு ஏற்க வேண்டும். உலகப்பொதுமறையான திருக்குறளை நாட்டின் தேதிய நூலாக அறிவிக்க வேண்டும். இந்தி, சமஸ்கிருத மொழிகளை தமிழகத்தில் புகுத்துவதைக் கைவிட்டு,  தமிழுக்குரிய சமத்துவத்தை தர வேண்டும். சங்ககால தமிழ்மொழி இலக்கியப் பண்பாட்டுக் கருத்துகளை வடஇந்திய மக்களும் அறிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் பக்தி இலக்கிய நூல்களை அனைத்து மாநில மக்களும் பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும். மதச்சார்பின்மை போல, மத்திய அரசு மொழிச்சார்பின்மைக் கொள்கையை உருவாக்கி, தமிழ்மொழிக்கு உரிமையை வழங்க வேண்டும். உலக ஒருமைப்பாடு உள்ளிட்ட 10 கொள்கைகள் வலியுறுத்தப்பட உள்ளது.
 சுமார் 3,558 கி.மீ. தூரம் நடைபெற உள்ள இந்த தமிழ் ஊர்திப் பயணத்தில் சுமார் 100 இடங்களில் மேற்கண்ட கொள்கைகளை வலியுறுத்தி தமிழறிஞர்கள் பேச உள்ளனர். அக்.22-ஆம் தேதி நிறைவடையும் இப்பயணத்தின் முடிவில் மேற்கண்ட கொள்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்க உள்ளோம் என்றார் சேதுராமன்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/10/தமிழை-ஆட்சி-மொழியாக்க-வலியுறுத்தி-தமிழறிஞர்கள்-குமரி-முதல்தில்லி-வரை-ஊர்திப்-பயணம்-2787462.html
2787461 திருச்சி திருச்சி மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 11.70 லட்சம் தங்கம் திருச்சியில் பறிமுதல் DIN DIN Tuesday, October 10, 2017 05:10 AM +0530 மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 11.70 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் திருச்சி விமான நிலையத்தில் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை மாலை 4.35 மணிக்கு ஏர் ஏசியா விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பயணிகளை மத்திய வான்நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையைச் சேர்ந்த முகம்மது அனீஸ் என்பவரது உடைமைகளை சோதனையிட்ட போது, அவர் எடுத்து வந்த பையின் சக்கரத்தில் மறைத்து எடுத்து வந்த 200 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 6 லட்சமாகும்.
 இதேபோல, அதே விமானத்தில் வந்த சென்னையைச் சேர்ந்த முகம்மது பைசல் என்பவர், தனது பையின் சக்கரத்தில் மறைத்து எடுத்து வந்த 190 கிராம் தங்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.5.70 லட்சமாகும்.
  இரு பயணிகளிடம் இருந்து திங்கள்கிழமை ஒரு நாள் மட்டும் ரூ.11.70 லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தலில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/10/மலேசியாவிலிருந்து-கடத்தி-வரப்பட்ட-ரூ-1170-லட்சம்-தங்கம்-திருச்சியில்-பறிமுதல்-2787461.html
2787460 திருச்சி திருச்சி அரசுப் பள்ளியில் பங்களிப்பு ஊடகப் பயிற்சிப் பட்டறை DIN DIN Tuesday, October 10, 2017 05:09 AM +0530 திருச்சி பெரியார் ஈ.வெ.ரா.கல்லூரியின் காட்சித்தொடர்பியல் துறையின் மூன்றாமாண்டு மாணவர்கள் கே.கே.நகர்  அரசு உயர்நிலைப் பள்ளியுடன் இணைந்து 5 நாள்கள் பங்களிப்பு ஊடகப் பயிற்சிப் பட்டறையை நடத்தினர்.
கடந்த 4  ஆம் தேதி தொடங்கிய பயிற்சிப் பட்டறையில் திரைப்படத் தயாரிப்பு, கைபாவை நிகழ்ச்சி, புகைப்படம், ஓவியம் ஆகிய 4 பிரிவுகளில்  9 ஆம் வகுப்பு பயிலும் 60 மாணவர்களுக்கு கல்லூரி மாணவர்கள் பயிற்சியளித்தனர். இப்பயிற்சியின் நிறைவில் 2 குறும்படங்கள் திரையிடப்பட்டன. பயிற்சி முகாமின் நிறைவு நாளான திங்கள்கிழமை புகைப்படங்கள் மற்றும் ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற விழாவுக்கு  கல்லூரி முதல்வர் (பொ) எம்.கே. ராஜ்குமார் தலைமை வகித்து, பயிற்சி பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கினார்.  பள்ளித் தலைமையாசிரியர் எஸ். அல்போன்ஸ்ராஜன் அறிமுகவுரையாற்றினார். துணைத் தலைமையாசிரியர் ஆர். செல்வம் பயிற்சிப் பட்டறை குறித்த உரையை வழங்கினார். நிறைவு விழாவில், பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, கல்லூரியின் காட்சித் தொடர்பியல்துறைத் தலைவர் எம். பிளசி வரவேற்றார்.  உதவிப் பேராசிரியை இரா. செந்திலா தேவி நன்றி கூறினார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/10/அரசுப்-பள்ளியில்-பங்களிப்பு-ஊடகப்-பயிற்சிப்-பட்டறை-2787460.html
2787459 திருச்சி திருச்சி "ஸ்லீப்பர் செல்': செல்லூர் ராஜூவை கூறவில்லை DIN DIN Tuesday, October 10, 2017 05:09 AM +0530 அமைச்சர் செல்லூர் ராஜூவை  "ஸ்லீப்பர் செல்' என கூறவில்லை என்றார் அதிமுக (அம்மா அணி) துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன்.
திருச்சி மாநகர் மாவட்ட  அதிமுக (அம்மா) அணிச் செயலர் ஜெ. சீனிவாசனின் தந்தை ஜெயராமன் உடல் நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை இரவு காலமானார்.  திருச்சி பாலக்கரை படையாச்சித் தெருவிலுள்ள அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர்  அவர் அளித்த பேட்டி: 18 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வழக்குரைஞர் தெரிவித்தார். கொடுக்கப்பட்ட  அவகாசத்துக்குள் தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும்.   கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூவை "ஸ்லீப்பர் செல்' என  கூறவில்லை.  அந்தப் பெயர்களை எப்படி வெளிப்படையாகக் கூறுவேன்.  மனச்சாட்சிப்படி பேசியுள்ளார் என்றே கூறினேன்.
மக்களவைத் துணைத் தலைவர் தம்பித்துரை, சட்டப்பேரவைக்கும், மக்களவைக்கும் ஒரே நேரத்தில்  தேர்தல் நடத்த வேண்டும் எனக் கூறி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருப்பது அவரது சொந்த கருத்து. இதுகுறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்.
நடராஜனுக்கு உடல் உறுப்பு  மாற்றுச் சிகிச்சையில் எந்தவித விதிமீறல்களும், முறைகேடுகளும் நடைபெறவில்லை என்றார் தினகரன். பேட்டியின் போது, மாவட்டச் செயலர்கள் திருச்சி தெற்கு ஆர். மனோகரன், திருச்சி வடக்கு எம்.ராஜசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/10/ஸ்லீப்பர்-செல்-செல்லூர்-ராஜூவை-கூறவில்லை-2787459.html
2787458 திருச்சி திருச்சி "ஸ்லீப்பர் செல்': நான் அவர் இல்லை DIN DIN Tuesday, October 10, 2017 05:09 AM +0530 நான் ஸ்லீப்பர் செல்லும் இல்லை;  ஒன்றும் இல்லை என்றார் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ.
டெல்டா மாவட்டங்களில் பயிர்க்கடன், இடுபொருள்கள், பயிர்க் காப்பீடு வழங்குவது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் கூட்டுறவுத் துறை அதிகாரிகளுடன் திங்கள்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது: நான் ஸ்லீப்பர் செல்லும் இல்லை;  ஒன்றும் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு மனசாட்சி உள்ளது.  அதன்படிதான் பேசினேன். ஆனால், ஊடகங்கள்தான் பெரிதாக எடுத்துச் சென்றுவிட்டன.
திமுகவைதான் அழிக்க வேண்டும்.  அவர்களால்தான் நாட்டுக்கு கேடு.  அவர்கள் ஆட்சிக்கு வந்தால் அதிகார துஷ்பிரயோகம் அதிகமாக இருக்கும். அதைத்தான்  நான் முன்னிலைப்படுத்தினேன்.
ஆனால், இந்த ஆட்சி அமைவதற்கு யார் காரணம் என்று செய்தியாளர்கள் கேட்டார்கள். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றுதான் நான் சொன்னேன். மற்றவர்களும் மாற்றுக்கருத்து சொல்லப்போவதில்லை. இந்த ஒரு வார்த்தைதான் சொன்னேன். சாதாரண மக்கள் கூட எளிதில் முதல்வரை சந்திக்கும் வாய்ப்பு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்துக்கு  கிடைத்திருக்கிறது. இந்த ஆட்சியையும், கட்சியையும் அடுத்த 100 ஆண்டுகளுக்கு கொண்டு செல்வதுதான் எங்கள் இலக்கு. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும் ஆட்சியையும், கட்சியையும் சிறப்பாக வழிநடத்திச் செல்கின்றனர்.  அவர்களுக்கு துணை புரிவேன் என்றுதான் சொன்னேன். ஜெயலலிதாவின் உண்மையான பக்தன். இந்த இயக்கம் இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஒன்றரை கோடி தொண்டர்களில் நானும் ஒருவன் என்றார் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ. பேட்டியின்போது, அமைச்சர்கள் வெல்லமண்டி என். நடராஜன், சி. வளர்மதி,  ஆட்சியர் கு. ராசாமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஸ்லீப்பர் செல் யாருமில்லை:  நீலகிரி மாவட்டத்தில் ரூ.5.14 கோடி செலவில் 5 நவீன பாலகங்களை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திங்கள்கிழமை திறந்துவைத்தார். இதில் உதகையிலுள்ள ஆவின் பாலகத்தை திறந்துவைத்து அவர் பேசினார். பிறகு செய்தியாளர்களிடம் கூறுகையில்,   அதிமுகவில் ஸ்லீப்பர் செல்கள்  என யாருமில்லை என்றார்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/10/ஸ்லீப்பர்-செல்-நான்-அவர்-இல்லை-2787458.html
2786748 திருச்சி திருச்சி தன்னம்பிக்கையுடன் சிகிச்சை பெற்றால் புற்றுநோயை வெல்லலாம் DIN DIN Monday, October 9, 2017 12:51 AM +0530 தன்னம்பிக்கையுடன் சிகிச்சை பெற்றால் புற்றுநோயை வெல்லலாம் என்றார் நடிகை கெளதமி.
திருச்சி ஜிவிஎன் மருத்துவமனை, டாக்டர் சாந்தா மார்பகப் புற்றுநோய் அறக்கட்டளை நடத்திய புற்றுநோயை வென்றவர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஜிவிஎன் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் கே. கோவிந்தராஜ் தலைமை வகித்தார். நிகழ்வில் பங்கேற்ற நடிகை கெளதமி தடிமல்லா பேசியது:
நீங்கள் புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த அனுபவத்தை, தன்னம்பிக்கையுடன் புற்றுநோய் தாக்கத்திலிருக்கும் நோயாளிகளுக்கு எடுத்துரைத்து, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஏனெனில், நீங்கள் அனுபவித்ததை, உங்களால்தான் உணர்ந்து கூற முடியும். இதன் மூலம் மற்றவர்களுக்கு தைரியத்தை ஏற்படுத்தி, புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்களது வாழ்க்கையை உங்களால் மீட்டுத் தரமுடியும். தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் சிகிச்சை பெற்றால் புற்றுநோயை வெல்லலாம் என்றார் கெளதமி.  தொடர்ந்து, புற்றுநோயிலிருந்து வென்றவர்களுடன் கெளதமி கலந்துரையாடல் நிகழ்த்தினார்.
முன்னதாக, ஜிவிஎன் மருத்துவமனையின் கதிரியக்க சிகிச்சை நிபுணர் கே.என். ஸ்ரீனிவாசன் அனைவரையும் வரவேற்றார். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் கே. மீனா, சேவை வரித்துறை அதிகாரி பி. யமுனாதேவி, டாக்டர் ஜெகதீஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/09/தன்னம்பிக்கையுடன்-சிகிச்சை-பெற்றால்-புற்றுநோயை-வெல்லலாம்-2786748.html
2786747 திருச்சி திருச்சி திருச்சியில் இளைஞர் சாவு DIN DIN Monday, October 9, 2017 12:50 AM +0530 டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளைஞர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 6-ஆம் தேதி ஒரு நாள் மட்டும் கரூர் மாவட்டம் மணவாசியைச் சேர்ந்த பூஜா (5), திருச்சி மாவட்டம் துவாக்குடியைச் சேர்ந்த இனியா (4) ஆகிய இரு குழந்தைகளும், சோமரசம்பேட்டையைச் சேர்ந்த கலாராணி (55) என்ற பெண்ணும் டெங்கு பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தொடர்ந்து டெங்கு அறிகுறியுடன் பலர் சிகிச்சைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு இளைஞர் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம் முசிறி கோடியாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் அருள் பிரசாத் (24). பட்டயப் படிப்பு முடித்துள்ள இவர் விவசாயத் தொழில் செய்து வந்தார். கடந்த சில நாள்களாக அதீத காய்ச்சலாலும், சிறுநீர் வெளிவராத பிரச்னையாலும் அவதிப்பட்டு வந்த இவர், அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதையடுத்து அருள் பிரசாத்தின் உறவினர்கள், அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை காலை அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர், பிற்பகலில் உயிரிழந்தார்.
14 கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை...: ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, புறநோயாளிகளாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 104 குழந்தைகள், 152 பெரியவர்கள் என 256-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளனர். உள்நோயாளிகளாக 444 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மருத்துவமனை நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/09/திருச்சியில்-இளைஞர்-சாவு-2786747.html
2786129 திருச்சி திருச்சி திருச்சி அருகே கல்குவாரியில்  பாறை பெயர்ந்து விழுந்து 2 தொழிலாளர்கள் சாவு DIN DIN Saturday, October 7, 2017 09:29 AM +0530 திருச்சி எடமலைப்பட்டிபுதூர் கல்குவாரியில் பாறை பெயர்ந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனர்.
திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் அரசுக்கு சொந்தமான 2 கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இதில் ரெட்டைமலை அருகேயுள்ள கல்குவாரியை கிராப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜோசப் மகன் போஸ்கோ ஆரோக்கியராஜ் (48) என்பவர் ஒப்பந்த அடிப்படையில் நடத்தி வருகிறார்.
இக்குவாரியில் கற்களை வெட்டி எடுக்க,  பாறைகளை வெடிவைத்து தகர்க்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இப்பணியில் 8 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இதில் புங்கனூரைச் சேர்ந்த மருதமுத்து மகன் செல்வம் (45), அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் செந்தில் (35) ஆகிய இருவரும் வெடிவைக்க வசதியாக,  துளையிடும் இயந்திரம் மூலம் பாறைகளைத் துளையிடும் பணியில் ஈடுபட்டனர்.
கல்குவாரியின் 500 அடி ஆழ பள்ளத்தில் பாறையின் ஒரு பகுதியில் இவர்கள் பாறையை துளையிட முயன்றபோது, இயந்திர அதிர்வின் காரணமாக, அங்கிருந்த பாறையின் ஒருபகுதி அப்படியே பெயர்ந்து, செந்தில், செல்வம் ஆகிய இருவர் மீதும் விழுந்தது. இதில் பாறையின் அடியில் சிக்கிய இருவரும் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இதைப் பார்த்த சக தொழிலாளர்கள், கல்குவாரி ஒப்பந்ததாரருக்கும், எடமலைப்பட்டிபுதூர் போலீஸாருக்கும் தகவல் தெரிவித்ததுடன், தொழிலாளர்கள் மீது விழுந்த பாறையை அகற்றி, செந்தில், செல்வம் ஆகியோரது சடலங்களையும் மீட்டனர்.
 தகவலறிந்து அங்கு வந்த எடமலைப்பட்டிபுதூர் போலீஸார், சடலங்களை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விபத்தால் ஏற்பட்ட மரணம் என வழக்குப் பதிந்து, கல்குவாரியின் ஒப்பந்ததாரர் போஸ்கோ ஆரோக்கியராஜ், மேலாளர் தங்கவேல் (43) ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர். இதையடுத்து கல்குவாரிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/07/திருச்சி-அருகே-கல்குவாரியில்--பாறை-பெயர்ந்து-விழுந்து-2-தொழிலாளர்கள்-சாவு-2786129.html
2785263 திருச்சி திருச்சி "தொழில்கல்வி நிறுவனங்களுக்கு தரநிர்ணய அங்கீகாரத்தை கட்டாயமாக்க பரிசீலனை' DIN DIN Friday, October 6, 2017 05:45 AM +0530 தொழில்கல்வி நிறுவனங்களுக்கு தரநிர்ணய அங்கீகாரத்தை கட்டாயமாக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்றார் தேசிய தரநிர்ணய ஆணையத்தின் தலைவர் சுரேந்திர பிரசாத்.
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்.ஐ.டி.) "தொழில்நுட்ப கல்வியில் உள்ள சவால்களும், யுக்திகளும்"எனும் தலைப்பில் தேசியக் கருத்தரங்கை வியாழக்கிழமை தொடங்கி வைத்து அவர் மேலும் பேசியது:
    இன்றைய சூழலில் மாணவர்களுக்கு ஆராய்ச்சியுடன் கூடிய கல்வி வழங்கப்பட வேண்டும். இன்றைய போட்டி நிறைந்த சூழலில் பொறியாளர்கள், பிரச்னைகளை தெளிவாகப் புரிந்து கொண்டு, சமுதாயத்துக்கு பயன்தரும் பணிகளில் ஈடுபட வேண்டும். கலை அறிவியல் கல்லூரிகளுக்கு தரநிர்ணயம் வழங்கப்படுவதைப் போல, தொழில்கல்வி நிறுவனங்களில் கற்றுத்தரப்படும் பாடப்பிரிவுகளுக்கு (என்பிஏ) தரநிர்ணயம் அங்கீகாரம் வழங்கப்படுகிறது. தற்போது, தொழிற்கல்வி நிறுவனங்கள் கட்டாயம் தர நிர்ணய அங்கீகாரம் பெற வேண்டும் என மத்திய அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடும் எனத் தெரிகிறது. இதுதொடர்பாக அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளோம். இருப்பினும் இதுகுறித்து அரசு தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்றார் சுரேந்திர பிரசாத்.
முன்னதாக, கருத்தரங்கிற்கு என்.ஐ.டி. இயக்குநர் மினி ஷாஜி தாமஸ் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் கணேசன் கண்ணபிரான் வரவேற்றார். தில்லி சமூக முன்னேற்றக் குழுவின் பேராசிரியர் ஜந்த்யலா பிஜி திலக், நாட்டில் உள்ள 15 என்.ஐ.டி. க்களைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று, தங்களது கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/06/தொழில்கல்வி-நிறுவனங்களுக்கு-தரநிர்ணய-அங்கீகாரத்தை-கட்டாயமாக்க-பரிசீலனை-2785263.html
2785262 திருச்சி திருச்சி இருசக்கர வாகனங்களை திருடியவர் கைது: 21 வாகனங்கள் பறிமுதல் DIN DIN Friday, October 6, 2017 05:44 AM +0530 திருச்சி மாநகரப் பகுதிகளில் வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்தவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். அவரிடமிருந்து 21 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மாநகர காவல் ஆணையர் ஆ. அருண் உத்தரவின்பேரில் தனிப்படை போலீஸார் வாகனத் திருட்டு சம்பவங்கள் குறித்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், போலீஸார் வியாழக்கிழமை ஓயாமரி சாலை தில்லைநாயகம் படித்துறை அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியே சந்தேகப்படும்படி பைக்கில் வந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம், பட்டினம் குறிச்சி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த வடிவேலு மகன் மலர்மன்னன் (54) என்பதும், அவர் ஓட்டி வந்தது தெப்பக்குளம் அஞ்சல் அலுவலகம் அருகே திருடப்பட்ட வாகனம் என்பதும், இவர் மீது ஆண்டிமடம், அரியலூர், கோட்டை காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார், மலர்மன்னனை கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து ரூ.6.41 லட்சம் மதிப்புள்ள 21 பைக்குகளையும் பறிமுதல் செய்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/06/இருசக்கர-வாகனங்களை-திருடியவர்-கைது-21-வாகனங்கள்-பறிமுதல்-2785262.html
2785040 திருச்சி திருச்சி உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் விதிமீறல்கள்: முறையான விசாரணை நடத்த பாஜக வலியுறுத்தல் DIN DIN Friday, October 6, 2017 01:11 AM +0530 சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு நடைபெற்ற உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் நடைபெற்ற விதிமீறல்கள் குறித்து முறையாக விசாரிக்கப்பட வேண்டும் என்றார் பாஜக  மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.
மயிலாடுதுறையில் நடைபெறும் பொதுக்கூட்ட  நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் திருச்சி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: பாஜக பல்வேறு இயக்கங்களை சார்ந்துள்ளது. இன்றைய சூழலில்  மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை தமிழக மக்களுக்கு எடுத்துச் செல்வதற்கு இணக்கமான மாநில அரசு தேவை. அந்த வகையில் மக்களுக்கான நல்ல திட்டங்களை கொண்டு வரவே இணக்கமாக உள்ளது. அதே நேரம் மாநில அரசு செய்யும் தவறுகளையும் சுட்டிக்காட்ட பாஜக தவறுவதில்லை.  
அந்த வகையில்தான்,  நடராஜனுக்கு மேற்கொண்ட உறுப்பு மாற்ற அறுவைச் சிகிச்சையில் விதிமீறல்கள் நடந்துள்ளன என்பதையும் பாஜக சுட்டிக்காட்டுகின்றது.  பல தனியார்  மருத்துவமனைகள் வியாபார நோக்கோடு உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்வதாகவே தோன்றுகின்றது. எனவே, ஏழைகளுக்கு கிடைக்கவேண்டிய பயன்கள் கிடைக்காமல் போகிறது. உறுப்பு தானம் செய்த நபருக்கு உண்மையில் மூளைச்சாவு ஏற்பட்டதா?  ஏன் அவர் சென்னைக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார்? ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த அவர்களுக்கு  அதற்கான செலவுகளை செய்தது யார் ?  என அடுக்கான கேள்விகள் எழுகிறது. அரசு மருத்துவமனைகளில் ஏன் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்வதில்லை?
டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும்.  தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் அதிகமாக இருப்பதால் பெண் ஒருவர் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அண்டை மாநிலத்தில் விபத்தில் பாதிக்கப்பட்ட வருக்கு சிகிச்சை அளிக்காததால் கால் துண்டிக்கப்
பட்டுள்ளது.
இதுபோன்ற செயல்கள் இனியும் நடைபெறாமல் இருக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.  அரசியல் கட்சிகள் ஏதாவது சம்பவத்தை முன்னிலைப்படுத்தி  போராடுவதை விடுத்து ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்காக போராட வேண்டும் என்றார்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/06/உறுப்பு-மாற்று-அறுவைச்-சிகிச்சையில்-விதிமீறல்கள்-முறையான-விசாரணை-நடத்த-பாஜக-வலியுறுத்தல்-2785040.html
2784754 திருச்சி திருச்சி காவிரி ஆற்றில் மணல் திருட்டு DIN DIN Thursday, October 5, 2017 08:30 AM +0530 திருவானைக்கா பகுதியில் உள்ள கும்பகோணத்தான் சாலையில் இரவு நேரங்களில் காவிரி ஆற்றில் இருந்து அனுமதியின்றி மாட்டுவண்டியில் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதற்காக தனியார் இடத்தில் மாட்டுவண்டி செல்லும் அளவுக்கு பாதை அமைத்துள்ளனர். சுமார் 50 க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகளில் விடிய விடிய மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.இவர்கள் காவிரி ஆற்றில் மணல் எடுத்து வருவதால் அப்பகுதியில் ஆங்காங்கே குழிகள் ஏற்படுகின்றன. மேலும், ஆற்றில் அவ்வப்போது தண்ணீர் திறந்து விடப்படும்போது, இந்தக் குழிகளில் சிக்கி சிலர் உயிரிழக்கும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. ஆகவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/05/காவிரி-ஆற்றில்-மணல்-திருட்டு-2784754.html
2784752 திருச்சி திருச்சி வெவ்வேறு சம்பவங்களில் இருவர் மர்மச் சாவு DIN DIN Thursday, October 5, 2017 08:29 AM +0530 திருச்சியில் இருவேறு சம்பவங்களில் தண்டவாளத்தில் இருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.
திருச்சி  தென்னூர் ரயில்வே மேம்பாலம் அருகே அமைந்துள்ளது குப்பாங்குளம். இப்பகுதியைச் சேர்ந்தவர் ச. மகேஸ்வரன் (35). ஆட்டோ ஓட்டுநர். இவர் அவ்வப்போது போதைப்பொருட்கள் விற்று வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் மகேஸ்வரன், புதன்கிழமை காலை தென்னூர் ரயில்வே மேம்பாலப் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் சடலமாகக் கிடந்தார்.  தகவலின் பேரில் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர். இறந்துபோன மகேஸ்வரனுக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர்.
திருவெறும்பூர் அருகே மேலும் ஒருவர் சாவு : திருவெறும்பூர் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு பகவதிபுரத்தைச் சேர்ந்த அ.சீனிவாசன் (30) என்பவர் பலத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலை இறந்தார்.  
 இதேபோல்,   திருவெறும்பூர் அருகே உள்ள ரயில் பாதையில் செவ்வாய்க்கிழமை காலை ஆலத்தூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மணிகண்டன் தண்டவாளத்தில் இறந்து கிடந்ததும் குறிப்பிடத்தக்கது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/05/வெவ்வேறு-சம்பவங்களில்-இருவர்-மர்மச்-சாவு-2784752.html
2784750 திருச்சி திருச்சி வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு DIN DIN Thursday, October 5, 2017 08:29 AM +0530 நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் அமைப்பைக் கண்டித்து, திருச்சியில் புதன்கிழமை வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், நவம்பர் மாத இறுதியில் தில்லியில் பேரணி நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.
   இது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்க கூட்டுக்குழு செயலாளர் எம்.ஆர்.ஆர் சிவசுப்பிரமணியன் திருச்சியில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது :
     கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வரும் அக். 9 ஆம் தேதியுடன் பணிஓய்வு பெற உள்ளார். அவருக்கு அடுத்த நிலையில் மூத்த நீதிபதியாக 2 ஆம் இடத்தில் உள்ள ஜெயந்த் படேல், தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றிருக்க வேண்டும். ஆனால் நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் அமைப்பு அவரை அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியாக அல்லாமல் 3 ஆவது நீதிபதியாக நியமனம் செய்தது. இதையடுத்து, ஜெயந்த் படேல் கடந்த வாரம் தனது பதவியை ராஜிநாமா செய்து, அதன் கடிதத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ளார்.
இதைக்கண்டித்து நாடு முழுவதும் வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்க கூட்டுக்குழு சார்பில் அக். 4  புதன்கிழமை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் சுமார் 1,500 வழக்குரைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே ஜெயந்த்படேலை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் நவம்பர் மாத இறுதியில், தில்லியில் கண்டனப் பேரணி நடத்தப்படும் என்றார் அவர். இதேபோல், துறையூர் வழக்குரைஞர்கள் சங்க தலைவர் எஸ். தென்னரசு தலைமையில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. துணைத் தலைவர் ஜி. விவேக்ராஜா, செயலர் கே.செல்லதுரை, பொருளர் எஸ். பி.பாஸ்கர் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் , வழக்குரைஞர்கள் பங்கேற்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/05/வழக்குரைஞர்கள்-நீதிமன்றப்-பணி-புறக்கணிப்பு-2784750.html
2783629 திருச்சி திருச்சி நன்னடத்தை காரணமாக  தண்டனை காலத்துக்கு முன்பே 776 கைதிகள் விடுவிப்பு: சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. தகவல் DIN DIN Tuesday, October 3, 2017 09:54 AM +0530 நன்னடத்தையின் அடிப்படையில், 776 கைதிகள் அவர்களின் தண்டனைக் காலம்  முடியும் முன்பே விடுதலை செய்யப்படவுள்ளனர் என்றார் சிறைத்துறை ஏ.டி.ஜி.பி.,   சி. சைலேந்திரபாபு.
திருச்சி மத்திய சிறையில் வளாகத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக  மூடிக்கிடந்த சிற்றுண்டிச்சாலை, இனிப்பகம் மற்றும் ரெடிமேட் ஆடைகள் விற்பனை மையம் ஆகியவற்றை திங்கள்கிழமை திறந்துவைத்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
சிறைவாசிகள் மீதான மக்களின் எண்ணத்தை மாற்றும்விதமாக, சிறை வளாகங்களில்  காய்கறிகள் விளைவிக்கப்படுகிறது. மேலும் குறைந்த விலையில் ரெடிமேட் ஆடைகள், பர்னிச்சர்களும் சிறைவாசிகளால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அவைகளை சந்தைப்படுத்தும் விதமாக சிற்றுண்டிச் சாலை, இனிப்பகம் மற்றும் ரெடிமேட் ஆடைகள் விற்பனையகம் திறந்து வைக்கப்படுகிறது.
அனைத்து சிறைகளிலும் கைதிகள் செல்லிடப்பேசி பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில், ஜாமர் கருவிகள் பொருத்தும் பணிகள் ரூ. 5 கோடியில் நடைபெற்று வருகின்றன. சிறைத்துறை ஏ.டி.ஜி.பி., மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு உள்ள அதிகாரத்தின் மூலம், நன்னடத்தை  விதிகள் மூலம், 22 பெண் உள்பட 776 கைதிகள் அவர்களின் தண்டனைக் காலம்  முடியும் முன்பே விடுதலை செய்யப்பட உள்ளனர் என்றார் அவர்.
தொடர்ந்து, சிறைவாசிகள் நலதினத்தையொட்டி, கைதிகளின் குறைகளைக் கேட்டறிந்தார். பேட்டியின் போது, திருச்சி சிறைத்துறை டி.ஐ.ஜி., ஜெயபாரதி, கண்காணிப்பாளர் நிகிலா நாகேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/03/நன்னடத்தை-காரணமாக--தண்டனை-காலத்துக்கு-முன்பே-776-கைதிகள்-விடுவிப்பு-சிறைத்துறை-ஏடிஜிபி-தகவல்-2783629.html
2783517 திருச்சி திருச்சி திருச்சி மாநகராட்சியில் மேலும் 2 நுண்உர செயலாக்க மையங்கள் திறப்பு DIN DIN Tuesday, October 3, 2017 08:47 AM +0530 திருச்சி மாநகராட்சியில் மேலும் 2 நுண்உர செயலாக்க மையங்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
திருச்சி மாநகராட்சியின் 4 கோட்டங்களில் உருவாகும் திடக்கழிவுகளை அந்தந்த கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளிலேயே  தரம்பிரித்து நுண்உரமாக தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டம் ஏற்கெனவே 13 இடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது கோ-அபிஷேகபுரம், அரியமங்கலம் கோட்டத்திற்குட்பட்ட கருமண்டபம் எரிவாயு தகனமேடை அருகில் ரூ. 80 லட்சம் மதிப்பீட்டிலும்,  அரியமங்கலம் கோட்டம் ஜி-கார்னர் இறைச்சிக் கூடத்தில் ரூ. 65 லட்சம் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டு திங்கள்கிழமை செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. 40, 41, 45  மற்றும் 26, 33 ஆகிய வார்டுகளில் உள்ள வீடுகளில் இருந்து 22 வாகனங்கள் மூலம் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, நுண்உர செயலாக்க மையங்களுக்கு கொண்டுவரப்பட்டு, உரமாக்கப்படும்.  இந்த மையங்களில் நுண் உரம் தயாரிக்கும் பணியை மாநகராட்சி ஆணையர் ந. ரவிச்சந்திரன், நகரப் பொறியாளர் அமுதவள்ளி ஆகியோர் பார்வையிட்டனர். இதில், செயற்பொறியாளர் செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/03/திருச்சி-மாநகராட்சியில்-மேலும்-2-நுண்உர-செயலாக்க-மையங்கள்-திறப்பு-2783517.html
2782118 திருச்சி திருச்சி மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.35.77 லட்சம் தங்கம் பறிமுதல் DIN DIN Sunday, October 1, 2017 01:10 AM +0530 மலேசியாவிலிருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.35.77 லட்சம் தங்கத்தை திருச்சி விமான நிலையத்தில் அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு வந்த மலிண்டோ ஏர்லைன்ஸ் விமானம் சனிக்கிழமை பிற்பகலில் வந்தது.
இதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். சோதனையில், தஞ்சாவூரைச் சேர்ந்த சர்மிளா பானு என்பவர், 1,200 கிராம் எடையுள்ள சுத்தம் செய்யப்படாத 12 தங்க வளையல்களை கடத்தி வந்தது தெரியவந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.35.77 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து, அப்பெண்ணை விமான நிலைய போலீஸாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். போலீஸார், தங்கம் கடத்தி வந்த பெண் குறித்தும், அவர் யாருக்காக, எதற்காக தங்கம் கடத்தி வந்தார் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.திருச்சி விமான நிலையத்தில் கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த தங்க கடத்தல், கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/01/மலேசியாவிலிருந்து-கடத்தி-வரப்பட்ட-ரூ3577-லட்சம்-தங்கம்-பறிமுதல்-2782118.html
2782085 திருச்சி திருச்சி திருச்சி ஹோட்டலில் நாட்டு வெடிகுண்டு வீச்சு: வழக்குரைஞர் சங்கத் தலைவர் உள்பட இருவர் கைது DIN DIN Sunday, October 1, 2017 01:01 AM +0530 திருச்சி ஹோட்டலில் வெடிகுண்டு வீசிய வழக்கு தொடர்பாக குற்றவியல் திருச்சி வழக்குரைஞர் சங்கத் தலைவர் உள்பட இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை மாலை கைது செய்தனர்.
திருச்சி கண்டோன்மென்ட் ஸ்டேட் வங்கி காலனியைச் சேர்ந்தவர் மகேஷ். இவர், ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே பாரதியார் சாலையில் விடுதியுடன் கூடிய ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார்.
இங்கு வெள்ளிக்கிழமை அதிகாலை இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள், ஹோட்டலின் முன்பகுதியில் வெடிகுண்டை வீசிவிட்டு தப்பினர். இதனால் ஹோட்டலின் வரவேற்பறை கண்ணாடிகள் உடைந்தது. யாருக்கும் காயமில்லை.
தகவலறிந்த மாநகர துணை ஆணையர் எஸ். சக்தி கணேசன் தலைமையிலான போலீஸார், வெடிகுண்டு நிபுணர்களின் துணையுடன் விசாரணை நடத்தினார்.
இதுகுறித்து ஹோட்டல் உரிமையாளர் மகேஷ், கண்டோன்மென்ட் காவல்நிலையத்தில் அளித்த புகார் விவரம்: திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர், என் மூலமாக திருச்சி கே.கே. நகரைச் சேர்ந்த நிதிநிறுவன அதிபர் கருப்பையாவிடமிருந்து ரூ. 14 கோடி கடன் வாங்கினார். ராஜேஷ் கடனை அடைக்க முடியாததால், பணத்துக்கு பதிலாக கொடைக்கானலில் இருந்த அவரது இடத்தை கருப்பையாவுக்கு கொடுத்து கடனை சரி செய்து கொண்டார். இந்நிலையில் ராஜேஷ் வாங்கிய கடனுக்கான வட்டி பணத்தை என்னிடம் கேட்டு, கருப்பையா கடந்த பிப்ரவரி மாதம் முதல் என்னை மிரட்டி வந்தார்.
இதனிடையே, கருப்பையாவிடம், ராஜேஷுக்கு பணம் வாங்கி கொடுத்த போது, எனது பாதுகாப்புக்காக ராஜேஷிடம் வாங்கி வைத்திருந்த சில ஆவணங்களை கேட்டும், கருப்பையாவிடம் வாங்கிய தொகைக்கான வட்டியை கட்ட வலியுறுத்தியும் திருச்சி குற்றவியல் வழக்குரைஞர் சங்கத் தலைவர் ராஜேந்திரகுமாரும், கடன்பெற்ற ராஜேஷும் அடிக்கடி என்னை மிரட்டினர். வழக்குரைஞர் ராஜேந்திரகுமார், ஹோட்டலை தரைமட்டமாக்கிவிடுவேன் என்று மிரட்டினார். இந்நிலையில் எனது ஹோட்டலில் வெடிகுண்டு வீசிச் சென்றுள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்குப் பதிவு...: இதுகுறித்து கண்டோன்மென்ட் போலீஸார், 294(பி), 436, 506 (1), பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் தடை சட்டம் 1992-இல் பிரிவு 3, வெடிபொருள்கள் தடை சட்டம் 1908-இல் பிரிவு 4(பி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, வழக்குரைஞர் ராஜேந்திரகுமார் (44), ராஜேஷ் (32) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் சிலரைத் தேடி வருகின்றனர்.
போராட்டம்...: இதையறிந்த வழக்குரைஞர்கள் சிலர், கண்டோன்மென்ட் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு, வழக்குரைஞர் ராஜேந்திரகுமாரை விடுவிக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அக். 12-ஆம் தேதி வரை காவல்...: இதையடுத்து போலீஸார், காஜாமலையில் உள்ள திருச்சி 3-ஆவது குற்றவியல் நடுவர் ரெஹானா பேகம் வீட்டில், இருவரையும் நேரில் ஆஜர்படுத்தினர். அவர், இருவரையும் அக்டோபர் 12-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மேற்கண்ட இருவரையும், போலீஸார் திருச்சி மத்திய சிறையில் வெள்ளிக்கிழமை இரவு அடைத்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/01/திருச்சி-ஹோட்டலில்-நாட்டு-வெடிகுண்டு-வீச்சு-வழக்குரைஞர்-சங்கத்-தலைவர்-உள்பட-இருவர்-கைது-2782085.html
2781728 திருச்சி திருச்சி ரயில் நிலையங்களில் நடைமேடை, பேட்டரி கார் கட்டணங்கள் குறைக்கப்படும் DIN DIN Friday, September 29, 2017 08:12 AM +0530 ரயில் நிலையங்களில் நடைமேடைக் கட்டணம், மாற்றுத்திறனாளிகள் பயணிக்கும் பேட்டரி கார்களுக்கான கட்டணம் உள்ளிட்டவை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக தேசிய செயலரும், ரயில் பயணிகள் வசதிகள் மேம்பாட்டுக்குழு தலைவருமான  எச். ராஜா  தெரிவித்தார்.
திருச்சியில்  வியாழக்கிழமை நடைபெற்ற ரயில் பயணிகள் வசதி மேம்பாட்டுக் குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியது: ரயில் நிலையங்களில் உள்ள குறைபாடுகள் மற்றும் ரயில்களில் பயணிகளுக்கு கிடைக்கும் சௌகரியங்கள், அசௌகரியங்கள் குறித்து வந்த தகவல்களின் அடிப்படையில்,  பயணிகள் நலன் மற்றும் பாதுகாப்புகள் குறித்து ரயில் பயணிகள் வசதிகள் மேம்பாட்டுக்குழு சார்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் இதுவரையில் சுமார் 150-க்கும் மேற்பட்ட  நிலையங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு,  ரயில் நிலையங்கள் மட்டுமின்றி ரயில்களிலும் பயணிகள் வசதி மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், ரயில் நிலையங்களின் ஏ, பி, எனப்படும் தரவரிசைப்படி அவற்றுக்கேற்ற வகையில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இங்கு நடைமேடைக் கட்டணம், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் பேட்டரி கார்களுக்கான கட்டணங்கள் மற்றும் வாகன நிறுத்தங்களுக்கான கட்டணங்கள்  கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன என கூறப்படுகிறது. அவை மட்டுமின்றி பயணிகளின் எவ்விதமான புகார்களாக இருந்தாலும் அவை குறித்து ரயில்வே வாரியத்துக்கு தகவல் அளித்து, கட்டணங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஆய்வின்போது, ரயில்வே கோட்ட மேலாளர் உதயகுமார் ரெட்டி உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் மற்றும் பயணிகள் வசதி மேம்பாட்டுக்குழுவினர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/sep/29/ரயில்-நிலையங்களில்-நடைமேடை-பேட்டரி-கார்-கட்டணங்கள்-குறைக்கப்படும்-2781728.html
2781726 திருச்சி திருச்சி திருச்சியில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலி DIN DIN Friday, September 29, 2017 08:11 AM +0530 திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுமி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டத்தின் மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த 10 நாள்களுக்கு மேலாக காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்தாலும், திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது அருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்தோரும்  காய்ச்சல் காரணமாக திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்., இந்த மருத்துவமனையில் காய்ச்சல் சிகிச்சைப் பிரிவில் 141 பேர் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர்களில் 10 பேருக்கு டெங்குகாய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர்கள் டெங்கு காய்ச்சல் வார்டுக்கு மாற்றப்பட்டு, தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.   இதில் 4 குழந்தைகள் அடங்குவர். கடந்த 24ஆம் தேதி  காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் டெங்கு காய்ச்சலாக உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திருச்சி மாவட்டம், மணிகண்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் மகள் கிரிஷ்கா (4) வியாழக்கிழமை முற்பகலில் உயிரிழந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்து, சிகிச்சை பலனில்லாமல் தங்கள் மகள் உயிரிழந்ததை கண்டு,  கிரிஷ்காவின் பெற்றோரும், அவரது உறவினர்களும் கதறி
அழுதனர்.
மூளைக் காய்ச்சலால் சாவு என தகவல் : சிறுமி கிரிஷ்கா  டெங்குகாய்ச்சலால் இறக்கவில்லை என்றும், அவருக்கு ஏற்பட்ட மூளைக் காய்ச்சல் காரணமாகவே அவரது இறந்துவிட்டதாக  மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/sep/29/திருச்சியில்-டெங்கு-காய்ச்சலுக்கு-4-வயது-சிறுமி-பலி-2781726.html
2781081 திருச்சி திருச்சி செப்.30-க்குள் மேட்டூர் அணையை திறக்க வேண்டும்: பி.ஆர்.பாண்டியன் DIN DIN Thursday, September 28, 2017 08:34 AM +0530 பருவமழை தொடங்கும் முன்பு நேரடி விதைப்புக்கு மேட்டூர் அணையிலிருந்து செப். 30-க்குள் பாசனத்துக்காக தண்ணீர் திறக்க வேண்டும் என்றார் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்.
திருச்சியில் பொதுப்பணித் துறை முதன்மை பொறியாளர் ரவிச்சந்திரனை புதன்கிழமை சந்தித்து மேட்டூர் அணையைத் திறக்க வலியுறுத்தி மனு அளித்த  பின், அவர் அளித்த பேட்டி:
காவிரி டெல்டா  மாவட்டங்களில் தற்போது பெய்து வரும் மழையால் பெரும்பகுதியான நிலங்களில் கோடை உழவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  ஒரு சில பகுதிகளில் நேரடி விதைப்பு நடைபெற்று வருகிறது. கிணற்றுப் பாசனம் மூலமும் விதை விடும் பணிகள் தொடங்கியுள்ளன. அக். 20 ஆம் தேதி வட கிழக்கு பருவமழை தொடங்கும் முன்பு நேரடி விதைப்புக்கான முன்னேற்பாட்டுப் பணிகளை முடிக்க வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு,  செப். 30-க்குள் மேட்டூர் அணையைத் திறக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும். அக். 1 முதல் 15 வரை 25,000 கன அடி தண்ணீரை விடுவிக்க வேண்டும்.  மேலும் காவிரி வடிநிலப் பகுதியில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியில் நடைபெறும் கட்டுமானப் பணிகளை உடனே நிறுத்த வேண்டும். ஆறுகள், வாய்க்கால்கள் தூர் வாரப்படாததால், மேட்டூரில் திறக்கும் தண்ணீர் பாசனப் பகுதிகளுக்கு சென்றடையுமா என்ற அச்சமும் உள்ளது.நபார்டு வங்கி குடிமராமத்து பணிகளுக்கு  ரூ. 400 கோடி வழங்க முன் வந்தது. ஆனால், தமிழக அரசு உரிய வழிகாட்டு முறைகளைப் பின்பற்றாததாலும், வெளிப்படையாக செயல்பட மறுத்ததாலும் பணிகள் நடைபெறாமல் தடைபட்டுள்ளது என்றார் பாண்டியன். தஞ்சை மண்டலத் தலைவர் டி.பி.கே.ராஜேந்திரன், திருச்சிமாவட்ட நிர்வாகிகள்  ஹேமநாதன், பாரூக், திருவாரூர் குருசாமி மோகன், அருண், அன்பழகன் உள்ளிட்டோர்  உடனிருந்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/sep/28/செப்30-க்குள்-மேட்டூர்-அணையை-திறக்க-வேண்டும்-பிஆர்பாண்டியன்-2781081.html
2781079 திருச்சி திருச்சி "இயற்கையை உயிரென்று உணர்ந்தால் காடுகளை அழிக்கமாட்டோம்' DIN DIN Thursday, September 28, 2017 08:33 AM +0530 இயற்கைக்கும் உயிர் உண்டென்று உணர்ந்தால் காடுகளை அழிக்க மாட்டோம்  என்றார்  சூழலியல் ஆர்வலர் குமார்.
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற  இயற்கையோடு இயல்பாக எனும் சூழலியல் விழிப்புணர்வு  நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியது:
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு குடிக்க,  குளிக்க ஏதுவாக இருந்தது நொய்யல் ஆறு. ஈரோடு , திருப்பூர் சாயப்பட்டறைக் கழிவுகள் மட்டுமன்றி வீட்டுக்கழிவுகளும் கலந்து தற்போது அந்த நதியை சீரழித்து விட்டன. இயற்கையையும், மரங்களையும் அழித்து வருகிறோம்.  அவற்றுக்கும் உயிர் உள்ளது என்று உணர்ந்தால் அழிக்க மாட்டோம்.
தேயிலைத் தோட்டத்துக்குள் யானை வரும்போது வெடி போடுகிறார்கள். இது இயற்கைக்கு எதிரான ஒருவகை போர் என்று கூறலாம். இயற்கை குறித்து கவலைப்பட்ட மலைவாழ் மக்களின் மனநிலையும் தற்போது மாறிவிட்டது.  சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு மேட்டூர் பகுதி காடுகளாக இருந்தது. அணை கட்டிய பின்பு மேட்டூர் மக்கள் வசிப்பிடமாகி விட்டது. நம்முடைய தேவைகளுக்காக இயற்கை அழிக்கிறோம். நெகிழி பைகள் பயன்படுத்துவதால் இயற்கையும், மற்ற உயிரினங்களும் பாதிப்படைகின்றன.
கொள்ளிடம் ஆற்றில் நீர் வரத்து இல்லாததால், சிதம்பரம் - சீர்காழி இடையே அமைந்துள்ள கீழ் குண்டாளப்பாடி  என்ற கிராமத்தில் நிலத்தடி நீர் முற்றிலும் உப்பாகியுள்ளது. நாம் ஒவ்வொருவரும் காவிரியின் வரலாறு , டெல்டா நிலப்பரப்பு ஆகியவை குறித்து கட்டாயம் அறிந்திருக்க வேண்டும்.  அப்போதுதான் இயற்கையை எந்த அளவுக்கு அழித்திருக்கிறோம் எனத் தெரிந்து கொள்ளவும் , மீட்கவும்  முடியும்  என்றார் அவர்.
தொடர்ந்து தண்ணீர் அமைப்பின் செயலர் கே.சி. நீலமேகம், இணைச் செயலர்கள் கி. சதீஷ்குமார், ஆர்.ஏ. தாமஸ் உள்ளிட்டோர் பேசினர். ஏற்பாடுகளை கல்லூரி  பேராசிரியர்கள் சிராஜூதீன், வே. அனு, இர. கீர்த்தனா ஆகியோர் செய்திருந்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/sep/28/இயற்கையை-உயிரென்று-உணர்ந்தால்-காடுகளை-அழிக்கமாட்டோம்-2781079.html
2781077 திருச்சி திருச்சி பெல் அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகை திருட்டு DIN DIN Thursday, September 28, 2017 08:33 AM +0530 திருச்சியில் பெல் நிறுவன அதிகாரி வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து, சுமார் 60 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வேதாந்திரி நகரைச் சேர்ந்தவர் செல்வம் (54).  பெல் நிறுவனத்தில் முதுநிலை மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது பேரக்குழந்தைக்கு புண்ணியாதின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையடுத்து வீட்டில் உள்ள அனைவரும் செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம் போல் தூங்கிவிட்டு, புதன்கிழமை காலையில் எழுந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் வைத்திருந்த 60 பவுன் நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து திருவெறும்பூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/sep/28/பெல்-அதிகாரி-வீட்டின்-பூட்டை-உடைத்து-60-பவுன்-நகை-திருட்டு-2781077.html
2780614 திருச்சி திருச்சி துறையூர் பகுதியில் மணல் கடத்திய 2 வாகனங்கள் பறிமுதல் DIN DIN Wednesday, September 27, 2017 08:51 AM +0530 துறையூர் பகுதியில் மணல் கடத்திய  இரு வாகனங்களை வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர்.
அம்மாப்பட்டியிலிருந்து  செப்டம்பர்  21ஆம் தேதி அனுமதியின்றி  மண் ஏற்றிச் சென்ற ரா. பழனியாண்டிக்கு சொந்தமான டிராக்டரை உப்பிலியபுரம் மண்டல துணை வட்டாட்சியர் எஸ்.பி. ஆறுமுகம் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்தார்.
இதேபோல், செப்டம்பர்  22ஆம் தேதி துறையூர் வட்டாட்சியர் எஸ். சந்திரகுமார் முசிறி பிரிவு சாலை அருகே  காவிரி ஆற்று மணலை  சேலம் மாவட்டம் சின்ன வீரானம் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவருக்கு சொந்தமான லாரியில் ஏற்றிச் சென்ற போது அதனை பறிமுதல் செய்தார்.  பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்குமாறு முசிறி கோட்டாட்சியர் ஆர். ராஜ்குமாருக்கு துறையூர் வருவாய்த் துறையினர் திங்கள்கிழமை பரிந்துரைத்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/sep/27/துறையூர்-பகுதியில்-மணல்-கடத்திய-2-வாகனங்கள்-பறிமுதல்-2780614.html
2780613 திருச்சி திருச்சி அக்.12 இல் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவிப்பு DIN DIN Wednesday, September 27, 2017 08:51 AM +0530 காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவை காலதாமதமின்றி அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 12 இல் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முடிவுசெய்துள்ளது.
திருச்சியில் இச்சங்கத்தின் மாநிலக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார்.  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள் : கர்நாடகத்தில் இருந்து ஒரு போக சாகுபடிக்காவது தண்ணீர் திறக்க வேண்டும். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்து, புதிய கடன்கிடைக்க வழிவகை ஏற்படுத்த வேண்டும்.  தரமான விதை நெல், உரம், பூச்சி மருந்து உள்ளிட்ட இடுபொருள்களைத் தட்டுப்பாடில்லாமல் வழங்க வேண்டும். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் அனைத்து மாவட்டங்களிலும் ஒருலட்சம் மரக்கன்றுகளை நடப்படும். வெளிநாடுகளிலிருந்து தேங்காய் எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்த வேண்டும்.  பழைய தென்னந்தோப்புகளைப் புத்தாக்கம் செய்யும் திட்டத்தை மத்திய தென்னை வளர்ச்சி வாரியம் கேரளத்தில் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தை தமிழகத்திலும் விரிவுப்படுத்த வேண்டும். பாரபட்சம் அல்லாமல்  தென்னை வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
நதிகளின் தூய்மையைப் பாதுகாக்கும் வகையில் பலவகை கழிவுகள் கலக்கப்படுவதை தகுந்த நடவடிக்கை மூலம் தடுத்து நதிகளின் தூய்மையை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கடலூர், நாகை மாவட்டக் கிராமங்களை அழித்து கொண்டு வரப்படும் பெட்ரோல் கெமிக்கல் மண்டலத் திட்டத்தை கைவிட வேண்டும் போன்ற உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 12- இல் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாநிலப் பொதுச் செயலர் வே.துரைமாணிக்கம் வேலை அறிக்கை குறித்துபேசினார். துணைத் தலைவர்கள் துளசிமணி, பெரும்படையார், துணைச் செயலர்கள் லகுமையா, மாசிலாமணி, நல்லையா, பொருளாளர் ராஜேந்திரன், மாநிலக் குழு உறுப்பினர்கள் அயிலை சிவ.சூரியன், ம.சுப்பிரமணி உள்ளிட்டோர் பேசினர். பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/sep/27/அக்12-இல்-மாவட்டத்-தலைநகரங்களில்-ஆர்ப்பாட்டம்-தமிழ்நாடு-விவசாயிகள்-சங்கம்-அறிவிப்பு-2780613.html
2780612 திருச்சி திருச்சி திருச்சியில் பைக் மோதியதில் திருமணத் தரகர் சாவு DIN DIN Wednesday, September 27, 2017 08:51 AM +0530 திருச்சியில் இருசக்கர வாகனம் மோதியதில் திருமணத் தரகர் உயிரிழந்தார்.
திருச்சி உறையூர் பாண்டமங்கலம் செட்டித் தெருவைச் சேர்ந்தவர் மாணிக்கம் (50). திருமணத் தரகர். இவர்,  கடந்த 20-ஆம் தேதி பெரிய கடைவீதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் செல்வதற்காக சைக்கிளில் மேலரண்சாலை வழியாகச் சென்று கொண்டிருந்தாராம்.
இவரது வாகனம் கம்மாளத் தெரு அருகே வந்த போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று, மாணிக்கம் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில்,  பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் உயிரிழந்தார்.
 இதுகுறித்து திருச்சி வடக்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/sep/27/திருச்சியில்-பைக்-மோதியதில்-திருமணத்-தரகர்-சாவு-2780612.html
2780611 திருச்சி திருச்சி வரலாற்றுச் சின்னங்களை அடையாளப்படுத்துவதும் அவசியம்: இன்று உலக சுற்றுலா தினம் DIN DIN Wednesday, September 27, 2017 08:51 AM +0530 திருச்சியின் பெருமையை விளக்கும் வரலாற்றுச் சின்னங்களை சரியாக அடையாளப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

தேசிய  ஒருமைப்பாட்டையும்,  பன்னாட்டு நட்புறவையும் மேம்படுத்துவதற்கு உதவியாக இருப்பது சுற்றுலாதான். நினைவுச்சின்னங்கள், பாரம்பரிய சொத்துகளை, சுற்றுச்சூழல் சரணாலயங்களைப் பாதுகாப்பதிலும், பாரம்பரிய கலைவடிவங்களை, கைவினைப் பொருள்களை, பண்பாட்டுச் சின்னங்களை  பேணிப் பாதுகாப்பதிலும் சுற்றுலா பெரும் பங்கை வகித்து வருகிறது.
நாட்டில் கிடைக்கும்  வருவாயில் சுற்றுலாவின் மூலமாகவும் குறிப்பிட்ட அளவில் வருவாய் கிடைத்து வருகிறது.
தமிழகத்துக்குச் சுற்றுலா வரும்  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் முக்கியம் இடம் பெறுவது திருச்சியும் ஒன்று. சர்வமத நல்லிணக்கத்துக்கு வழிகாட்டும் வகையில் திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில்,  நத்தஹர்வலி தர்கா,   தூய லூர்து அன்னை ஆலயம் ஆகியவை அருகருகே அமைந்திருக்கின்றன. இதைத்தவிர, திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில், திருவானைக்கா அகிலாண்டேசுவரி அம்மன் திருக்கோயில், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில், திருப்பட்டூர் பிரம்மபுரீசுவரர் திருக்கோயில் போன்ற திருக்கோயில்களும், முக்கொம்பு சுற்றுலா மையம்,  ஸ்ரீரங்கம் மேலூரில் வண்ணத்துப்பூச்சி பூங்கா,  பச்சமலை, புளியஞ்சோலை போன்ற சுற்றுலாத் தலங்களும் இந்த மாவட்டத்தில் அடங்கியிருக்கின்றன.
குறிப்பாக ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில், மலைக்கோட்டை, திருவானைக்கா கோயில்களுக்குச் செல்லும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அக்கோயில்களின் கட்டடக் கலைகளை கண்டு வியக்கின்றனர்.
தமிழகத்துக்கும், திருச்சிக்கும் வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. சுற்றுலாத் துறையும் திருச்சியில்  சுற்றுலா வளர்ச்சிக்கான மேம்பாட்டுப் பணிகளைத்தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.  மற்ற நகரங்களைக்காட்டிலும்  திருச்சியிலுள்ள உணவு விடுதிகளின் வசதிகளும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்க்கின்றன.
வரலாற்றுச் சின்னங்களை சரியாக அடையாளப்படுத்த வேண்டும் :  திருச்சி சுற்றுலாவோடு மட்டுமல்லாமல், வரலாற்றிலும் பல்வேறுஅடையாளச் சின்னங்களைப் பெற்றிருக்கின்றன.  ஆனால், அந்த அடையாளச் சின்னங்கள் பல இன்று அடையாளப்படுத்தாமலேயே போய்விட்டது. இருக்கும் அடையாளச் சின்னங்களின் பெருமைகளையும் இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்வதற்கான சூழலும் இல்லை.
திருச்சியில் சுதந்திரப் போராட்டக் காலத்தில் முக்கியமான இடத்தை பெற்ற, உப்பு சத்தியாகிரகப் போராட்டம் தொடங்கிய ராஜன் பங்களா வளாகம்,  திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியிலுள்ள மணிக்கூண்டு, பட்டர்வொர்த்சாலையில் காந்தி பூங்கா அருகிலிருந்த கொத்தளம், கீழரண்சாலையில் இருக்கும் பூலோகநாதர் திருக்கோயில்,  கோட்டையிலுள்ள ராணி மங்களம்மாள் அறை ( டவுன்ஹால்) ,  திருச்சி காந்தி மார்க்கெட் கமான் வளைவு,   கீழரண்சாலையில் நூற்றாண்டைக் கண்ட பிரம்மஞானசபைக் கட்டடம், சிங்காரத்தோப்பு யானைக்குளம் போன்ற பல்வேறு வரலாற்றுச் சிறப்புடைய இடங்களின் பெருமையை அனைத்துத் தரப்பினரும் அறிந்து கொள்ளும் வகையில் அவற்றை அடையாளப்படுத்த வேண்டும்.
  இந்த இடங்களின் சிறப்பை அனைத்துத் தரப்பினரும் அறிந்து கொள்ளும் வகையிலான நடவடிக்கையை சுற்றுலாவின் ஒரு பகுதியாக மேம்படுத்துவது அவசியமானது என்கிறார் எம்.ஜி.ஆர். மக்கள் நல்பணி மன்றத்தின் அமைப்பாளர் கண்ணன் என்கிற என்.ராமகிருஷ்ணன். திருச்சியின் வரலாற்றுச் சின்னங்களை சரியாக அடையாளப்படுத்தும் வகையில்,   முக்கிய  பகுதிகளை ஒருங்கிணைத்து பேருந்து சேவைகளைத்தொடங்கிட  வேண்டும்., வரலாற்றுச் சின்னங்களின் சிறப்பை அடுத்துத் தலைமுறையினரையும் அறிந்துகொள்ளும் வகையில் அதன் சிறப்பை வெளிப்படுத்திட  வேண்டும் என்கிறார் கண்ணன் என்கிற ராமகிருஷ்ணன்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/sep/27/வரலாற்றுச்-சின்னங்களை-அடையாளப்படுத்துவதும்-அவசியம்-இன்று-உலக-சுற்றுலா-தினம்-2780611.html
2780452 திருச்சி திருச்சி திருச்சி விமான நிலையத்தில் தங்கம், வெளிநாட்டு கரன்சி பறிமுதல் DIN DIN Wednesday, September 27, 2017 05:30 AM +0530 மலேசியாவுக்கு கடத்த முயன்ற கரன்சி  மற்றும் அங்கிருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் ஆகியவற்றை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மலேசியாவிலிருந்து திங்கள்கிழமை இரவு திருச்சி வந்த மலிண்டோ ஏர்லைன்ஸ் விமான பயணிகளையும் அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறை  வான் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.  
அப்போது,  மதுரையைச் சேர்ந்த செல்வராணி என்பவர் தனது உடைமைகளுக்குள் 400 கிராம் எடையுள்ள தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. அவற்றை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல்,  மலேசியா செல்லும் ஏர் ஏசியா விமான பயணி  சென்னையைச் சேர்ந்த ரேணுகா என்பவர் தனது ஸ்ட்ரோலர் பேக்கில், உடைமைகளுக்குள் ரூ. 3.89 லட்சம் மதிப்புள்ள  வெளிநாட்டு ரூபாய் தாள்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவற்ரை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/sep/27/திருச்சி-விமான-நிலையத்தில்-தங்கம்-வெளிநாட்டு-கரன்சி-பறிமுதல்-2780452.html
2780120 திருச்சி திருச்சி ஆடுதுறை நிதி நிறுவனம் மோசடி புகார் : உரிமையாளரிடம் போலீஸார் விசாரணை DIN DIN Tuesday, September 26, 2017 09:46 AM +0530 ஆடுதுறையைச் சேர்ந்த நிதிநிறுவனம் மோசடி புகார் குறித்து அந்நிறுவனத்தின் உரிமையாளர், அவரது  நண்பர் உள்ளிட்டோரிடம்  திருச்சி  பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.
தஞ்சை மாவட்டம் ஆடுதுறையில் சித்ரா என்ற பெயரில் ஏலச்சீட்டு மற்றும் நிதிநிறுவனம் நடத்தி வந்த ராதாகிருஷ்ணன், கடந்த ஏப்ரல் மாதம் நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவானார். இதனால் ஏமாற்றமடைந்த வாடிக்கையாளர்கள் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான ராதாகிருஷ்ணனை கடந்த மே மாதம் கைது செய்தனர். இதையடுத்து சில தினங்களில் அவர் பிணையில் வெளியே வந்தார். இந்நிலையில், இந்த வழக்கு அண்மையில்  திருச்சி பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து  திருச்சி குற்றப்பிரிவு போலீஸார் நிதிநிறுவன உரிமையாளர் ராதாகிருஷ்ணன்,  அவரது வழக்குரைஞர் ரமேஷ் ஆகியோரிடம் திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டனர். அப்போது, வழக்குரைஞர் ரமேஷ் என்பவரிடம் உள்ள ரூ. 50 கோடி சொத்துக்கள், ராதாகிருஷ்ணன் மூலம் வழங்கப்பட்டவை என்பது குறித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது.
விசாரணையின்போது, வழக்கை முடிக்கும் வகையில்  போலீஸாரின் நடவடிக்கைகளுக்கு ரமேஷ் ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரிடம் உள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிகிறது. இதுதொடர்பான விசாரணை செப். 28ஆம் தேதி மீண்டும் நடைபெறுகிறது.  அப்போது மீண்டும் இருவரும் ஆஜராகவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பான விசாரணைக்காக,  ஒரு பிரபல வார இதழ்  உரிமையாளரையும் போலீஸார்  அழைத்துள்ளதாக கூறப்படுகிறது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/sep/26/ஆடுதுறை-நிதி-நிறுவனம்-மோசடி-புகார்--உரிமையாளரிடம்-போலீஸார்-விசாரணை-2780120.html
2779969 திருச்சி திருச்சி ரயில்வே அதிகாரி மீது பாலியல் புகார்: பெண் ஊழியர்களிடம் விசாரணை DIN DIN Tuesday, September 26, 2017 08:46 AM +0530 ரயில்வே  அதிகாரி மீது பாலியல் புகார்  அளித்த பெண்களிடம் தனிக் குழுவினர்  விசாரணை  திங்கள்கிழமை விசாரணை நடத்தினர்.
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் முதுநிலை தொழில்நுட்ப பராமரிப்பு பொறியாளராக பணியாற்றி வருபவர் மணிவண்ணன். இவர் எஸ்.ஆர்.எம்.யூ. திருச்சி கோட்ட  தலைவராகவும்  உள்ளார். இவரின் கட்டுப்பாட்டில் பணியாற்றி வரும்,  பெண் ஊழியர்கள் சிலர் செப்டம்பர் 18ஆம் தேதி  திருச்சி ரயில்வே கோட்ட மேலாளரிடம், புகார் அளித்தனர். அதில், மணிவண்ணன் தங்களை பாலியல் தொந்தரவு செய்வதாக தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து புகார் குறித்து  விசாரணை நடத்த தனிக்குழு  அமைக்கப்பட்டது.  அக்குழுவினரிடம்  நேரில் ஆஜராகி விளக்கமளிக்க புகார்தாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி  திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக வளாகத்தில்  டாக்டர் லட்சுமி  தலைமையிலான குழுவினர் முன்பு பாதிக்கப்பட்டவர்களில் 9 பேர் திங்கள்கிழமை ஆஜராகினர்.
இதில், ஒரு பெண்ணிடம் மட்டும் சுமார் இரண்டரை மணிநேரம் விசாரணை நடைபெற்றது. மற்றவர்கள்  செவ்வாய்க்கிழமை ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.   பாலியல் புகார் குறித்து பெண் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில்,  அந்த அதிகாரி  தொடர்ந்து  அதே இடத்தில் பணியில் நீடிப்பதால் பெண் ஊழியர்களுக்கு மிரட்டல்கள் வருவதாக, டி.ஆர்.இ.யூ. குற்றம்சாட்டியுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/sep/26/ரயில்வே-அதிகாரி-மீது-பாலியல்-புகார்-பெண்-ஊழியர்களிடம்-விசாரணை-2779969.html
2779878 திருச்சி திருச்சி குப்பையில்லா மாநகரமாக்க  சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: ஜேம்ஸ் வசந்தன் DIN DIN Tuesday, September 26, 2017 07:58 AM +0530 திருச்சி மாநகரை குப்பையில்லா மாநகரமாக்க சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்தார்.
 திருச்சி மாநகராட்சி சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற தூய்மை இந்தியா திட்ட கணக்கெடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கில் பங்கேற்ற, திருச்சி மாநகர தூய்மை இந்தியா திட்டத்தின் தூதுவரான ஜேம்ஸ் வசந்தன் மேலும் பேசியது:
திருச்சியில் பிறந்து வளர்ந்த நான், திருச்சி மாநகராட்சி தூய்மையான நகரங்கள் பட்டியலில் இடம்பிடிக்க தூண்டுகோலாக இருக்கிறேன் எனும் போது பெருமையாக இருக்கிறது. தூய்மையான நகரமாக இருக்க அரசு முயற்சி மட்டும் போதாது, பொதுமக்களும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும். தூய்மை விழிப்புணர்வில் இளைஞர்களையும் பங்கேற்க செய்ய வேண்டும். இந்த ஒருங்கிணைப்பு சுத்தத்தில் ஆரம்பித்து, அனைத்து அடிப்படை பிரச்னைகளுக்கும் உதவ வேண்டும். குப்பையில்லா மாநகரமாக திருச்சியை உருவாக்க  சமூக வலைதளங்களை பயன்படுத்த வேண்டும். நீங்கள் செய்யும் சேவையை பிரபலபடுத்த வேண்டும். இதன் மூலம் மற்றவர்களும் விழிப்புணர்வு அடைவார்கள் என்றார் அவர்.
கருத்தரங்கிற்கு தலைமை வகித்த மாநகராட்சி ஆணையர் ந. ரவிச்சந்திரன் பேசியது:  2018-இல் திருச்சி மாநகரம் தூய்மையான நகரங்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  திறந்தவெளி கழிப்பிடமற்ற மாநகராட்சியாக திருச்சி மாநகராட்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உறுதிபடுத்தும் வகையில் நாட்டிலேயே அதிகபட்ச கழிப்பறைகள் திருச்சி மாநகராட்சியில்தான் கட்டப்பட்டுள்ளன. திருச்சி மாநகரம் தூய்மையான நகரமாக இடம்பிடிக்க பொதுமக்கள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்றார் அவர்.
முன்னதாக, மாநகராட்சி நகரப் பொறியாளர் அமுதவள்ளி வரவேற்றார்.  தில்லை நகர் 11-ஆவது குறுக்குச்சாலை 80 அடி சாலையில் மக்கும், மக்காத குப்பைகளை சேகரித்து வைக்கும் பிளாஸ்டிக் தொட்டிகள் வழங்கப்பட்டது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/sep/26/குப்பையில்லா-மாநகரமாக்க--சமூக-வலைதளங்களில்-விழிப்புணர்வு-ஏற்படுத்த-வேண்டும்-ஜேம்ஸ்-வசந்தன்-2779878.html
2779829 திருச்சி திருச்சி குடமுருட்டிப் பாலம்- அந்தநல்லூர் சாலையை சீரமைக்கக் கோரிக்கை DIN DIN Tuesday, September 26, 2017 07:41 AM +0530 திருச்சிமாவட்டம், அந்தநல்லூர் ஒன்றியத்தில் குடமுருட்டிப் பாலம் முதல் அந்தநல்லூர் வரையிலான தேசிய,  மாநில நெடுஞ்சாலை மிகவும் மோசமாக இருப்பதால், தொடர்ந்து உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகின்றன.  இதைதடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிகள், சமூக நல இயக்கங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தின் போது,   மதிமுக மாவட்ட இளைஞரணிச் செயலர் ராஜன் பன்னீர்செல்வம்,  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலர் அயிலை சிவசூரியன் மற்றும் பல்வேறு கட்சியினர் ஆட்சியர் கு. ராசாமணியிடம்   அளித்த மனுவில் கூறியிருப்பது:  அந்தநல்லூர் ஒன்றியத்துக்குள்பட்ட  குடமுருட்டிப் பாலம் முதல் பேட்டைவாய்த்தலை  வரையிலான தேசிய மற்றும்  மாநில  நெடுஞ்சாலைகளில் தினந்தோறும் நடைபெறும் பல விபத்துகளால் உயிரிழப்புகள் தொடர்ந்து நிகழ்கின்றன. எனவே,  பழுதடைந்த நிலையிலுள்ள குடமுருட்டிப் பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம்  அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்,  குடமுருட்டிப் பாலம் முதல் பேட்டைவாய்த்தலை வரையிலான சாலையின் இருபுறங்களிலும் ஒளிரும் மின் விளக்குகள் வைப்பதோடு, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.  திண்டுக்கரை முதல்  பஞ்சப்பூர் வழியாக துவாக்குடிவரையிலான அரைவட்டச் சுற்றுச்சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும். பேட்டைவாய்த்தலை, ஜீயபுரம் பகுதிகளில் 108 ஆம்புலன்ஸ்களை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று அவர்கள் கூறியுள்ளனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/sep/26/குடமுருட்டிப்-பாலம்--அந்தநல்லூர்-சாலையை-சீரமைக்கக்-கோரிக்கை-2779829.html
2779828 திருச்சி திருச்சி அறிவியல் தொழில்நுட்பத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்த வேண்டும் DIN DIN Tuesday, September 26, 2017 07:41 AM +0530 மாணவர்கள் அறிவியல் தொழிநுட்பத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும் என்றார் சென்னை கணித அறிவியல் நிறுவனப் பேராசிரியர் டாக்டர் ஆர்.ராமானுஜம்.
திருச்சி மாவட்டம், சமயபுரம் எஸ்.ஆர்.வி. மேல்நிலைப் பள்ளியில்  அண்மையில் நடைபெற்ற கனவு மெய்ப்பட நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் மேலும் பேசியது: உலகப் பார்வைஎன்பது அறிவியல்தான். இந்த பிரபஞ்சத்தை புரிந்து கொள்ள அறிவியல் உதவுகிறது. நாம் பார்க்கும் ஒவ்வொன்றையும் அறிவியல் பார்வையில் பார்க்க வேண்டும்.
கற்றல் என்பது தகவல்கள் அல்ல.  ஏன், எதற்கு, எப்படி என கேள்விகள் கேட்பது அவசியம். ஒவ்வொரு பொருளையும் விரல் தொட்டு உணர்ந்து எப்படி வந்திருக்கும் என்று சிந்திக்க வேண்டும். நாம் அன்றாட வாழ்க்கையில் இன்று பயன்படுத்தப்படும் பல்வேறு பொருள்களும், அனுபவிக்கும் தொழில்நுட்பங்களும் நூறு ஆண்டுகளுக்கு முன்பு எவரோ ஒருவர் கனவு கண்டதாகவும்,  சிந்தித்தாகவும் இருக்கலாம்.
ஒவ்வொரு படைப்பும் அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்து இருக்கிறது.  
அறிவியல் தொழில்நுட்பம் கட்டமைப்பு, தொழில்நுட்ப வசதி இருக்கிறது. ஒரு நாள் கணிதத்தில் நாம் சிந்திப்பது என்றோ ஒரு நாள் நடைபெறும்.
நூறாண்டுகளுக்கு முன்பு பார்க்க முடியாத, கண்டுபிடிக்க முடியாத விஷயமாக இருந்த பிளாஸ்டிக், இன்று இல்லாத இடம் இல்லை. மனித இனம் தன்னையும் அழித்துக் கொண்டு பிற உயிரினங்கள், பூமி, இயற்கை போன்றவற்றையும் அழித்து வருகிறது. ஒவ்வொரு தலைமுறையும் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொடுக்க வேண்டிய பொக்கிஷம் நமது பூமியாகும்.
பரந்த மனப்பான்மையுடன் பல கோடி மக்களை ஏழ்மையிலிருந்து விடுவிக்க, மாணவர்களை அறிவியல் ஆராய்ச்சி மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த வேண்டும்.
இன்னும் சில ஆண்டுகளில் தகவல்தொடர்பு இன்று இருப்பதைவிட முற்றிலும் மாறுபடப் போகிறது என்றார் ராமானுஜம்.
விழாவில், தேசிய தொழில்நுட்பக் கழகப் பேராசிரியர் பி. மாணிக்கவாசகம்,  எஸ்.ஆர்.வி. பள்ளித் தலைவர் ஏ.ராமசாமி, செயலர் பி.சுவாமிநாதன், இணைச் செயலர் பி. சத்யமூர்த்தி, பள்ளி முதல்வர் க.துளசிதாசன் , ஆசிரிய, ஆசிரியைகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/sep/26/அறிவியல்-தொழில்நுட்பத்தை-ஆக்கபூர்வமாக-பயன்படுத்த-வேண்டும்-2779828.html
2779827 திருச்சி திருச்சி மூதாட்டியிடம் நகை பறிப்பு DIN DIN Tuesday, September 26, 2017 07:40 AM +0530 திருச்சி கே.கே. நகர் சுந்தர் நகர் ஆசிரியர்கள் காலனி பகுதியைச் சேர்ந்த துவாரகன் மனைவி ஜக்குபாய். ஓய்வுபெற்ற ஆசிரியை. இவர் திங்கள்கிழமை காலை அருகிலுள்ள கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு நோக்கி திரும்பிக் கொண்டிருந்தாராம். வீட்டின் அருகே இவர் வந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள் ஜக்குபாய் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு தப்பினராம். இதுகுறித்து கே.கே. நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/sep/26/மூதாட்டியிடம்-நகை-பறிப்பு-2779827.html
2779826 திருச்சி திருச்சி மனநலம் பாதிக்கப்பட்டவர் விஷம் குடித்து சாவு DIN DIN Tuesday, September 26, 2017 07:40 AM +0530 திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை நாடார்சத்திரம் வசந்தம் நகர் பகுதியைச் சேர்ந்த இஸ்ரேல் மகன் ஜார்ஜ் எடிசன் (65). தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்துள்ளார்.
 இந்நிலையில் கடந்த 23-ஆம் தேதி வீட்டிலிருந்த தரையை சுத்தம் செய்யும் திரவத்தை குடித்து மயக்கமடைந்தார். இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, திங்கள்கிழமை மாலை உயிரிழந்தார். சோமரசம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/sep/26/மனநலம்-பாதிக்கப்பட்டவர்-விஷம்-குடித்து-சாவு-2779826.html
2779825 திருச்சி திருச்சி அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல் DIN DIN Tuesday, September 26, 2017 07:40 AM +0530 திருச்சி, கருர் மாவட்டங்களில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுவதாக உயர்நிதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் மணல் அள்ளுவதற்கு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. இதனால் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு, மணல் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதைப் பயன்படுத்தி, பலர் அனுமதியின்றி மணல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருவெறும்பூர் போலீஸார் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காட்டூர் கைலாஷ் நகர் அருகே திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் வந்த டிப்பர் லாரியை மறித்து சோதனையிட்டனர். அதில் லாரியில் அரசு அனுமதியின்றி ஓலையூர் பகுதியிலிருந்து மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதே போல, பிற்பகலில் பெல் கணேசபுரம் அருகே வாகன சோதனையின் போது,  கல்லணை கால்வாய் ஆற்றிலிருந்து திருட்டுத் தனமாக மணல் ஏற்றி வந்த லாரியையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து திருவெறும்பூர் போலீஸார் வழக்கு பதிந்து,  மணல் லாரி ஓட்டுநர்களான இலுப்பூரைச் சேர்ந்த சரவணன்(23), திருநெடுங்களத்தை சேர்ந்த வெங்கடேசன்(26) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/sep/26/அனுமதியின்றி-மணல்-ஏற்றி-வந்த-2-லாரிகள்-பறிமுதல்-2779825.html
2779226 திருச்சி திருச்சி "தமிழர்களின் பாசன மேலாண்மை உலகமே வியக்கும் வகையிலானது' DIN DIN Monday, September 25, 2017 07:14 AM +0530 தமிழர்களின் பாசன மேலாண்மை உலகமே வியக்கும் வகையிலானது என்றார் சூழலியல் அறிஞர் பாமயன்.
திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற தண்ணீர் அமைப்பின் 4-ஆவது ஆண்டு தொடக்க விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று அவர் மேலும் பேசியது:
ஓடுகின்ற நீரைத் அதன்போக்கிலேயே தேக்கி அணை கட்டுகின்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திருச்சியில் கல்லணை எழுப்பிய கரிகாலனின் நீர்மேலாண்மைக்கு தலை வணங்குகிறேன் என்று ஆங்கிலேய அறிஞர் சர் ஆர்தர் காட்டன் குறிப்பிடுகிறார். ஒரு இனத்தின் சிந்தனை மரபை அழித்தாலே அந்த இனத்தை எளிதாக அழித்து விடலாம். அத்தகைய செயல்களைத்தான் இந்தியாவில், பன்னாட்டு வணிக சந்தை நுட்பமும், அரசின் கொள்கைகளும் செயல்படுத்தி வருகின்றன. பழங்குடி மரபே சூழலோடு இணைந்த மரபு. சூழல் சார்ந்த சிந்தனை மரபை வளர்த்தெடுக்க வேண்டியது நமது காலத்தின் கட்டாயம் . சூழலியல் சார்ந்த சிந்தனை மரபில் இருந்து நம் தலைமுறைகள் வெகு தொலைவிற்கு சென்றுவிட்டனர். இது மிகவும் ஆபத்தானது.
வருங்காலத்தில் நீருக்காக 3-ம் உலகப்போர் உருவாகும் என கூறப்படுகின்றது. அவ்வாறு ஏற்பட்டால் அதனை தடுப்பதற்கான தொழில், மதிநுட்பம் இந்தியாவில் குறிப்பாக  தமிழகத்தில் மட்டுமே  உள்ளது என்று சூழலியல் அறிஞர் சான்பரா கார்சன் என்பவர் குறிப்பிடுகிறார். அந்த தொழில்நுட்பம் வேறு ஏதுமில்லை, நமது முன்னோர் நமக்கு ஏற்படுத்தி வைத்துள்ள ஏரி தொழில்நுட்பம் என்கிறார் அவர். பேரரசர் ராஜராஜன் காலத்தில் 13 வகையான நீர்மேலாண்மை கட்டுமானங்கள் பயன்பாட்டில் இருந்தன.  தமிழர்களின் பாசன மேலாண்மை உலகமே வியக்கும் வகையிலானது.  ஆனால் நாம் அவற்றை மறந்த காரணத்தால்தான் தண்ணீருக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மாற சூழலியலை பாதுகாப்பது அவசியமானது. சூழலியல் சார்ந்த சிந்தனை மரபை வளர்த்தெடுக்க நாம் அனைவரும் இணைந்து  முனைப்புடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான் தேசமும், தேச வளமும் காக்கப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் தண்ணீர் அமைப்பின் தலைவர் எம். சேகரன் தலைமை வகித்தார். தண்ணீர் அமைப்பின் செயலாளர் கே.சி. நீலமேகம் வரவேற்றார்.  இணைச் செயலர் கி. சதீஷ்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். கோவையில் நடைபெற்ற சர்வதேச நீர் மேலாண்மை கருத்தரங்கில் முதல் பரிசு பெற்ற உயிர்த்துளி என்ற குறும்படம் திரையிடப்பட்டது. படத்தின்  இயக்குநர் டென்சிங் மற்றும் குழுவினருக்கும்,  நெடுஞ்சாலையோரங்களில் அதிக மரங்களை பராமரித்து வரும் கோட்டப்பொறியாளர்  கிருஷ்ணசாமி, சூழலியல் தொடர்பாக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு  மாவட்ட வருவாய் அலுவலர் அ. பஷீர் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/sep/25/தமிழர்களின்-பாசன-மேலாண்மை-உலகமே-வியக்கும்-வகையிலானது-2779226.html
2779055 திருச்சி திருச்சி மைசூர் விரைவு ரயில் என்ஜினில் தீ விபத்து DIN DIN Monday, September 25, 2017 02:12 AM +0530 மயிலாடுதுறையிலிருந்து மைசூர் நோக்கிச் சென்ற விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை திருச்சி அருகே வந்தபோது திடீரென ரயில் என்ஜினில்  தீ விபத்து ஏற்பட்டது.  இதன் காரணமாக மாற்று என்ஜின் மூலம் ரயில் இயக்கப்பட்டு திருச்சிக்கு சுமார் 2 மணிநேரம் தாமதமாக வந்தடைந்தது.
மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம், தஞ்சை, திருச்சி வழியாக மைசூர் வரை இயக்கப்படும் மைசூர் விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை இரவு தஞ்சையைக் கடந்து திருச்சி நோக்கி வந்துகொண்டிருந்தது. தொண்டமான்பட்டி பகுதியில் வந்தபோது அதன் என்ஜின் பகுதியில் தீப்பிடித்தது. இதனையடுத்து ரயில் நிறுத்தப்பட்டு தீ அணைக்கப்பட்டது.
பின்னர் மாற்று என்ஜின் திருச்சியிலிருந்து அனுப்பப்பட்டு ரயில் இயக்கப்பட்டது. வழக்கமாக இரவு 8.30 மணிக்கு திருச்சியை வந்தடையும் இந்த ரயில் தீ விபத்து காரணமாக சுமார் 2 மணி நேரம் தாமதமாக இரவு 10.15 மணிக்கு திருச்சி ரயில் நிலையத்தை வந்தடைந்தது.  இதனால் பயணிகள் அவதிக்குள்ளாயினர்.
அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை. சம்பவம் குறித்து ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்
கொண்டுள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/sep/25/மைசூர்-விரைவு-ரயில்-என்ஜினில்-தீ-விபத்து-2779055.html
2778785 திருச்சி திருச்சி அரியலூர் மாணவி அனிதா மரணம்: 'தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிப்போம்' DIN DIN Sunday, September 24, 2017 03:50 AM +0530 அரியலூர் மாணவி அனிதா மரணம் குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிப்போம் என்றார் தமிழக காவல்துறை இயக்குநர் தே.க.ராஜேந்திரன்.
திருச்சி சுப்பிரமணியபுரத்திலுள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற காவல்துறை அலுவலர்கள், காவலர்களுக்கான குறைகேட்கும் முகாமில் பங்கேற்ற அவர் அளித்த பேட்டி:
தெற்கு மண்டலத்தில் கடந்த மாதத்தில் நடத்தப்பட்ட காவலர் குறைதீர் முகாமில் 1500க்கும் மேற்பட்டோர் மனுக்கள் அளித்தனர். அவர்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதைத் தொடர்ந்து தற்போது மத்திய மண்டல காவல்துறையினருக்கான குறைதீர் முகாமும், அடுத்து வடக்கு, மேற்கு மண்டலங்கள், சென்னை பெருநகரக் காவல்துறையின் சிறப்புப் பிரிவுகளுக்கான முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
டிசம்பர் மாதத்துக்குள் இந்த முகாம்களை நடத்தி முடிக்க முடிவு செய்துள்ளோம். காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அண்மையில் தேர்வு செய்யப்பட்ட 13,300 பேருக்கு மருத்துவப் பரிசோதனை, காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது. இவை முடிந்த பிறகுப் பயிற்சிக்கு அழைக்கப்படுவர். அடுத்து நடக்கவுள்ள காவல் தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். அரியலூர் மாணவி அனிதா மரணம் தொடர்பாக காவல்துறை மூலம் விசாரணை நடத்தப்படும் என்றார் தே.க.ராஜேந்திரன்.
முகாமில், மத்திய மண்டலத்துக்குள்பட்ட திருச்சி, பெரம்பலூர், அரியலூர்,கரூர்,புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி மாநகரம், திருச்சி இருப்புப் பாதை காவல்துறையினர், சிறப்புப் பிரிவில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகள், காவலர்கள், காவல்துறையில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்கள் தங்கள் பணியிட மாற்றம், பதவி உயர்வு, ஊதிய முரண்பாடு, கருணைஅடிப்படையில் பணி நியமனம், தண்டனை நீக்கம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக காவல்துறை இயக்குநரிடம் மனுக்களை அளித்தனர்.
முகாமில் திருச்சி மாநகரத்திலிருந்து 128 மனுக்களும், மத்திய மண்டலத்திலுள்ள 8 மாவட்டங்களிலிருந்து 381 மனுக்களும், இருப்புப் பாதை காவல்துறையினரிடமிருந்து 96 மனுக்கள் என மொத்தமாக 677 மனுக்களை காவல்துறை இயக்குநர் பெற்றுக் கொண்டார்.
மத்திய மண்டல ஐ.ஜி. மு. வரதராஜு, திருச்சி மாநகரக் காவல் ஆணையர் ஆ. அருண், டி.ஐ.ஜி.க்கள் தீபக் தாமோர் ( ஆயுதப்படை), கே. பவானீசுவரி ( திருச்சி), ஜெ. லோகநாதன் ( தஞ்சாவூர்), காவல் கண்காணிப்பாளர்கள் பி.எஸ்.சி.கல்யாண், ஆனி விஜயா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/sep/24/அரியலூர்-மாணவி-அனிதா-மரணம்-தேசிய-தாழ்த்தப்பட்டோர்-ஆணையம்-கேட்கும்-கேள்விகளுக்குப்-பதிலளிப்போம்-2778785.html
2778573 திருச்சி திருச்சி மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ஒரு கிலோ தங்கம் பறிமுதல் DIN DIN Sunday, September 24, 2017 12:51 AM +0530 மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ஒரு கிலோ தங்கக் கட்டிகளை சுங்கத்துறையினர், திருச்சி விமான நிலையத்தில் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து மலிண்டோ ஏர்லைன்ஸ் விமானம் சனிக்கிழமை காலை திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளையும் அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதில் சென்னையைச் சேர்ந்த பஷீர் கொண்டு வந்த பெட்டிக்குள் தங்கம் இருப்பது கண்டறியப்பட்டது.
டூல்ஸ் சாதனங்களுக்குள் தங்கத்தை சிறு சிறு கட்டிகளாக மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
200 கிராம் தங்கம்: இதேபோல் சனிக்கிழமை அதிகாலை ஷார்ஜாவிலிருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த சென்னையைச் சேர்ந்த ஜாபர் என்ற பயணி ரூ. 6 லட்சம் மதிப்புள்ள 200 கிராம் தங்கத்தை பேப்பர் கிளிப்ஸ் கம்பிக்கு பதிலாக தங்கக் கம்பிகளாக மாற்றி கடத்தி வந்தது தெரியவந்தது. அவற்றை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/sep/24/மலேசியாவிலிருந்து-கடத்தி-வரப்பட்ட-ஒரு-கிலோ-தங்கம்-பறிமுதல்-2778573.html
2778140 திருச்சி திருச்சி திருச்சியில்  நடந்த கொலை வழக்கு: திருத்துறைப்பூண்டியில் இளைஞர் சரண் DIN DIN Saturday, September 23, 2017 08:03 AM +0530 திருச்சியில்  நடந்த  கொலை வழக்கில் தொடர்புடைய  இளைஞர்  திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தார்.
கடந்த செப்.16-இல்  திருச்சி காவிரி ஆற்றங்கரையில் இரு குழுவினரிடையே ஏற்பட்ட மோதலில் சசிகுமார் கொலை செய்யப்பட்டார்.  இதில் தொடர்புடைய   சென்னை அசோக் நகரைச் சேர்ந்த பால்ராஜ் மகன் கெளதம் (25)  திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதிபதி வி.அச்சுதன் முன் சரணடைந்தார்.
 இவரை  வருகிற 28-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதன் பேரில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/sep/23/திருச்சியில்--நடந்த-கொலை-வழக்கு-திருத்துறைப்பூண்டியில்-இளைஞர்-சரண்-2778140.html
2778073 திருச்சி திருச்சி "தமிழரும், மலையாளியும் மொழிவழி நெருங்கிய உறவைக் கொண்டவர்கள்' DIN DIN Saturday, September 23, 2017 07:29 AM +0530 தமிழர்களும், மலையாளிகளும் மொழி வழி நெருங்கிய உறவைக் கொண்டவர்கள் என திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பா. ஆனந்தகுமார் தெரிவித்தார்.
திருச்சி உருமு தனலெட்சுமி கல்லூரியின் தமிழாய்வுத் துறையும், பாரதிதாசன் பல்கலைக்கழக உயராய்வு மையமும் இணைந்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) நிதிநல்கையுடன் நடத்தும் தமிழ், மலையாள இலக்கியங்கள் ஓர் ஒப்பீடு என்ற தலைப்பிலான தேசியக் கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் பொன்.சக்திவேல் தலைமை வகித்தார்.
இதில், திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் பா.ஆனந்தகுமார் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியது: “மலையாளத்தில் பாட்டு மரபு, மணிப்பிரவாள நடைமரபு என்ற இரு மரபுகள் உள்ளன. இவற்றுள் பாட்டுமரபு என்பது தமிழ்மொழியின் மரபைப் பின்பற்றியது.
 மணிப்பிரவாளம் என்பது சமஸ்கிருத மரபைப் பின்பற்றியது. மலையாளம், தொடக்கத்தில் தமிழ் உறவைக் கொண்டு மிளிர்ந்தாலும், பின்னர் சமஸ்கிருத உறவைப் பெரிதும் பின்பற்றியது. எனவே தான் மலையாளத்தில் 80 சதவீத சமஸ்கிருதச் சொற்களும், 20 சதவீத தமிழ்ச்சொற்களும் கலந்துள்ளன.
பழந்தமிழ் இலக்கியத்தில் இடம்பெற்ற பாணர், பறையர், துடியர் ஆகிய பூர்வ குடியினர் தற்போது தமிழகத்தில் குறைவாகவே வாழ்கின்றனர். ஆனால், கேரளத்தில் பாணத்தரா, பாணர் இடம் எனப்படும் பொருளில் பல ஊர்களின் பெயர்கள் உள்ளன. அப்பகுதிகளில் பாணர்கள் எனப்படும் பழங்குடியினர் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர்.
எனவே, தமிழர்களும், மலையாளிகளும் மொழியின் வழியே நெருங்கிய உறவைக் கொண்டவர்கள் என்றார்.
கருத்தரங்கில், ஆய்வறிஞர்களின் கட்டுரைகள் கொண்ட ஆய்வு மலரை கல்லூரியின் நிர்வாகக்குழு உறுப்பினர் ப. கிருபா சங்கர் வெளியிட்டார்.
முன்னதாக, உருமு தனலெட்சுமி கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் கோ.வீரமணி வரவேற்றார். இதில் பல்வேறு கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களைச் சேர்ந்த சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். நிறைவில், பேராசிரியர் ந. விஜயசுந்தரி நன்றி கூறினார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/sep/23/தமிழரும்-மலையாளியும்-மொழிவழி-நெருங்கிய-உறவைக்-கொண்டவர்கள்-2778073.html
2777431 திருச்சி திருச்சி திருச்சி நூலகத்தில் புதிய நிகழ்ச்சிகள், பயிற்சிகள் DIN DIN Friday, September 22, 2017 05:54 AM +0530 குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையில் பல்வேறு புதிய நிகழ்ச்சிகள், பயிற்சிகளுக்கு ஏற்பாடுசெய்திருக்கிறது திருச்சி மாவட்ட மைய நூலகம்.
திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற  மூத்த குடிமக்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியை மாவட்ட நூலக அலுவலர் அ.பொ. சிவகுமார் தொடக்கி வைத்து பேசுகையில்,  நூலகங்களை நாளிதழ்கள், வார இதழ்கள், பருவ இதழ்களைப் படிப்பதற்கு மட்டுமல்ல,   மூத்த குடிமக்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் இடமாகவும்,  முதுமைப் பருவத்தை இனிமையாக்குவதற்காகவும் ஆலோசனைகளும் இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட உள்ளது. மாதந்தோறும்  மூன்றாவது புதன்கிழமையில் இந்த நிகழ்ச்சி நடைபெறும்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் 10 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு  சதுரங்கப் பயிற்சி,  3ஆவது ஞாயிற்றுக்கிழமைமாலையில்  ஓவியப் பயிற்சி, 4ஆவது ஞாயிற்றுக்கிழமையில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
மேலும்,  வெள்ளிக்கிழமை தோறும் யோகா பயிற்சி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணிக்கு ஆங்கில மொழித்திறன் பயிற்சியும், சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் நடைபெற்ற பொன்மாலை பொழுது நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை 5 மணிக்கும்,  பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி திங்கள்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் பிற்பகல் 3 மணிக்குத் திரையிடப்படும்.
நூலகங்களை பயனுள்ள இடமாகவும், அனைத்துத் தரப்பினரையும் கவரும் இடமாகவும் மாற்றுவதற்குரிய நடவடிக்கையை மேற்கொண்டு  வருகிறோம். வாசகர் வட்டத்தோடு இணைந்த நிகழ்ச்சிகளை இணைந்து நடத்துகிறோம்  என்றார் மாவட்ட நூலக அலுவலர் சிவகுமார்.மூத்த குடிமக்களுக்கான  நிகழ்ச்சியில் வாசகர் வட்டத் தலைவர் கோவிந்தசாமி, சிந்தாமணி ப.நாகராசன், மாவட்ட மைய நூலகத்தின்முதல் நிலை நூலகர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/sep/22/திருச்சி-நூலகத்தில்-புதிய-நிகழ்ச்சிகள்-பயிற்சிகள்-2777431.html
2777430 திருச்சி திருச்சி மலேசியா, ஷார்ஜாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.36.78 லட்சம் தங்கம் பறிமுதல் DIN DIN Friday, September 22, 2017 05:54 AM +0530 மலேசியா மற்றும் ஷார்ஜாவிலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 36.78 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
 மலேசியா தலைநகர் கோலம்பூரிலிருந்து  புதன்கிழமை நள்ளிரவு திருச்சி விமான நிலையத்துக்கு வந்த ஏர் ஏசியா விமான பயணிகளை மத்திய வான்நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர்.  
இதில், விமானத்தில் பயணம் செய்த சென்னையைச்  சேர்ந்த முகம்மது ஹாரீஸ், என்பவரின் உடைமைகளை சோதனை செய்தனர்.  
அப்போது அவர் எடுத்து வந்த பிரெட் டோஸ்டர், பயணப்பையின் அடிப்பகுதியில் ரூ. 4.78 லட்சம் மதிப்புள்ள 160 கிராம் தங்கத்தை  மறைத்து எடுத்து வந்ததை கண்டறிந்தனர்.
இதே போல,  வியாழக்கிழமை அதிகாலை 3.30  மணியளவில் ஷார்ஜாவில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகளை மத்திய வான்நுண்ணறிவு  பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, தூத்துக்குடியை சேர்ந்த அப்துல் அசன், சென்னையைச் சேர்ந்த முகம்மது ஹனோபா ஆகியோர் ரூ.32 லட்சம் மதிப்புள்ள 1,100 எடையுள்ள தங்கச் செயின்களை குழந்தைகளின் காலனி, கீ செயின், மணிபர்ஸ் ஆகியவற்றில் மறைத்து கடத்தி வந்ததை கண்டறிந்தனர்.
இதையடுத்து, மேற்கண்ட தங்கத்தை பறிமுதல் செய்த வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள், தங்கத்தை கடத்தி வந்த நபர்களை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
 இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகளும், விமான நிலைய போலீஸாரும், தங்கத்தை கடத்தி வந்த நபர்கள் குறித்தும், அவர்கள் யாருக்காக தங்கம் கடத்தினார்கள் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/sep/22/மலேசியா-ஷார்ஜாவிலிருந்து-கடத்தி-வரப்பட்ட-ரூ3678-லட்சம்-தங்கம்-பறிமுதல்-2777430.html
2777429 திருச்சி திருச்சி விமான நிலைய ஓடுதள விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணியை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க நடவடிக்கை: ஆட்சியர் DIN DIN Friday, September 22, 2017 05:53 AM +0530 திருச்சி விமான நிலைய  ஓடுதள விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணி குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி.
திருச்சி விமான நிலைய புதிய முனையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஸ்மைல் வீக் எனப்படும் சிரிப்பு வாரவிழாவைத் தொடக்கி வைத்து, அவர் மேலும் பேசியது:
மாநிலத்தின் மையப்பகுதியாக  விளங்கும் திருச்சி, அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியடைவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. அதற்கான வசதிகளும் இருக்கின்றன.  திருச்சியின் வளர்ச்சிக்கு விமானப் போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதும் முக்கியமானதாகும். அதன் அடிப்படையில்தான், விமான நிலைய ஓடுதள விரிவாக்கப் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் வகையில் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஓடுதள விரிவாக்கத்துக்குத் தேவைப்படும் இடங்கள்  நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்கு முன்னதாகவே  கையகப்படுத்தப்பட்டு விமான நிலைய ஆணையத்திடம் அளிக்கப்படும்.   நிலங்கள் கையகப்படுத்துவதற்கான பணிகள் தற்போது  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் ஆட்சியர்.
விமான நிலைய  இயக்குநர் கே. குணசேகரன்  ஸ்மைல் வீக் குறித்து கூறியது:  செப்டம்பர் 21 முதல் 25 ஆம் தேதி வரை  5 நாள்களுக்கு சிரிப்பு வாரம் நடைபெறும். மத்திய தொழில் பாதுகாப்புப் படையினருக்கு  மென்திறன் பயிற்சியளிக்கப்படும்.
விமான நிலையத்துக்கு வரும் பயணிகளிடம் கனிவாக நடந்து கொள்ளுதல் உள்ளிட்டவை குறித்து அவர்களுக்குப் பயிற்சியளிக்கப்படும். இதுபோல, கார் ஓட்டுநர்கள்,  பேக்கேஜ் மற்றும் டிராலி தள்ளிவருபவர்களக்கு உடல் நலம் குறித்த பயிற்சியளிக்கப்பட உள்ளது.  விமான நிலைய அலுவலர்களுக்கு நிகழ்வில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவர் சுஜாதா பேசுகிறார், செப்டம்பர் 25 ஆம் தேதி மாலையில் நிறைவு விழா நடைபெறுகிறது என்றார் குணசேகரன்.
ஸ்மைல் வீக்  ஏன் :  விமானநிலையத்துக்கு வரும் பயணிகள், வாடிக்கையாளர்களுக்குத் திருப்தியான சேவை அளித்து திருப்திபடுத்துதல், செயல்திறன்களை மேம்படுத்துதல் மூலம் வருவாயை அதிகப்படுத்தும் திட்டம்  திஷா திட்டத்தை   ஏற்கெனவே சென்னை, கோவை,  திருவனந்தபுரம், புணே, கோவா போன்ற விமான நிலையங்களில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை செயப்படுத்தி வரும் நிலையில் அடுத்தக் கட்டமாக , திருச்சி, கோழிக்கோடு, மங்களூரு உள்ளிட்ட 12 விமான நிலையங்களில் செயல்படுத்துகிறது. விமான நிலைய கழிவறை வசதிகள்,  டிராலி சேவைகள்,  பாதுகாப்பு வசதிகள்,  குடியேற்றப் பிரிவு, சுங்கத்துறையின் செயல்பாடுகள், விமானப் பயணிகளின் திருப்தி போன்றவை கண்காணிக்கப்பட்டு அதன் அடிப்படையில் மேம்பாட்டுக்குரிய பணிகளை திஷாதிட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் என்ற விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/sep/22/விமான-நிலைய-ஓடுதள-விரிவாக்கத்துக்கு-நிலம்-கையகப்படுத்தும்-பணியை-குறிப்பிட்ட-காலத்துக்குள்-முடிக்க-நட-2777429.html
2777428 திருச்சி திருச்சி ஆசிரியையிடம் நகை பறிப்பு DIN DIN Friday, September 22, 2017 05:53 AM +0530 திருச்சி விமான நிலையம் அன்பு நகர் பாரதியார் தெருவைச் சேர்ந்த பீட்டர் மனைவி ஜான் மெடில்டா (45). இவர் பொன்மலைப்பட்டி உள்ள காதுகேளாதோர் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார்.
 இவர் வியாழக்கிழமை காலை வேலைக்குச் செல்வதற்காக வீட்டிலிருந்து தனது கணவருடன், இருசக்கர வாகனத்தில் பொன்மலைப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர்களது வாகனம், விமானநிலைய சாலை கோளரங்கம் அருகே வந்த போது, மற்றொரு பைக்கில் இவர்களுக்கு பின்புறமாக வந்த இரு மர்ம நபர்கள், மெடில்டா அணிந்திருந்த 3 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.  இதுகுறித்து ஜான் மெடில்டா அளித்த புகாரின் பேரில், திருச்சி விமான நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/sep/22/ஆசிரியையிடம்-நகை-பறிப்பு-2777428.html
2777427 திருச்சி திருச்சி வேன் மோதி எலக்ட்ரீஷியன் சாவு DIN DIN Friday, September 22, 2017 05:53 AM +0530 ஸ்ரீரங்கம் மேலூர் சாலை வடக்குவாசல் பகுதியைச் சேர்ந்தவர் நாகைய்யன் மகன் பழனிவேல் (40). எலக்ட்ரீஷியன். இவர் புதன்கிழமை மாலை திருவானைக்கா வடக்கு வாசல் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சி நோக்கிச் சென்ற வேன் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பழனிவேல் புதன்கிழமை நள்ளிரவில் உயிரிழந்தார்.  
 இதுகுறித்து திருச்சி வடக்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/sep/22/வேன்-மோதி-எலக்ட்ரீஷியன்-சாவு-2777427.html
2776672 திருச்சி திருச்சி அனிதா குடும்பத்துக்கு ஜெ. தீபா நிதியுதவி DIN DIN Thursday, September 21, 2017 01:17 AM +0530 தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்து ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச் செயலர் ஜெ.தீபா.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:
மாணவி அனிதா இறப்பு, மாணவ சமுதாயத்துக்குப் பேரிழப்பாகும். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறக்கூடாது. தமிழக மாணவர்கள் மீது எதையும் திணிக்கக் கூடாது. நாம் யாருக்கும் அடிமையும் இல்லை. நீட் தேர்வு தமிழகத்துக்குத் தேவையில்லை. கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும் என்றார் தீபா.
 பேட்டியின் போது தீபாவின் கணவர் மாதவன், முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன்உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/sep/21/அனிதா-குடும்பத்துக்கு-ஜெ-தீபா-நிதியுதவி-2776672.html
2776671 திருச்சி திருச்சி திருச்சி மண்டலத் தொழிலாளர் இணை ஆணையர் பொறுப்பேற்பு DIN DIN Thursday, September 21, 2017 01:17 AM +0530 திருச்சி மண்டலத் தொழிலாளர் இணை ஆணையராக  எம்.ராதாகிருஷ்ண பாண்டியன் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், அரியலூர், கரூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி மண்டலத் தொழிலாளர் நலத் துறை இவரது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/sep/21/திருச்சி-மண்டலத்-தொழிலாளர்-இணை-ஆணையர்-பொறுப்பேற்பு-2776671.html
2776670 திருச்சி திருச்சி காலமானார்: பி. சந்திரலோகன் DIN DIN Thursday, September 21, 2017 01:17 AM +0530 சென்னை ஆவடி அருந்ததிபுரம் நான்காவது தெருவைச் சேர்ந்த பி. சந்திரலோகன் (55) உடல் நலக்குறைவால்  புதன்கிழமை  காலமானார்.
இவருக்கு எக்ஸ்பிரஸ் பப்ளிகேஷன்ஸ் (மதுரை) லிமிடெட்  திருச்சிப் பதிப்பின் பேக்கிங் பிரிவில் பணியாற்றும் சி.  பாஸ்கரன் உள்பட 4 மகன்கள், 1 மகள் உள்ளனர்.   சந்திரலோகனின் இறுதிச்சடங்கு புதன்கிழமை மாலை அவரது இல்லத்தில் நடைபெற்றது. தொடர்புக்கு :  88389 43737,  99529 23462.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/sep/21/காலமானார்-பி-சந்திரலோகன்-2776670.html
2776669 திருச்சி திருச்சி தமிழகத்தில் நடைபெறுவது பா.ஜ.க. ஆட்சிதான்: திருச்சியில் சீமான் பேட்டி DIN DIN Thursday, September 21, 2017 01:16 AM +0530 தமிழகத்தில் நடைபெறுவது பா.ஜ.க. ஆட்சிதான், எனவேதான் இந்த ஆட்சி முற்றுப்பெறாமல் உள்ளது என்றார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் திரைப்பட இயக்குநருமான சீமான்.
திருச்சியில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க புதன்கிழமை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்துக்கு தரவேண்டிய தண்ணீரை பெற்றுத்தர, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும். ஆனால் மத்தியில் ஆண்டு வரும் பா.ஜ.க.  மேலாண்மை வாரியத்தை அமைக்காது  காலம் தாழ்த்தி வருகிறது.  தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சிதான் நடந்து வருகின்றது. எனவேதான் எப்போதோ முற்றுப்பெற்றிருக்க வேண்டிய ஆட்சி இன்னும் தொடர்கிறது.
மக்கள் சேவை செய்யாத சட்டப்பேரவை உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யலாம்.
ஆனால் தமிழகத்தில் அதிகாரத்தை பயன்படுத்தி 18 உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அப்படியானால் கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்கியிருந்தபோதே உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்திருக்கலாமே ? ஏன் அவ்வாறு செய்யவில்லை? என்றார் அவர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/sep/21/தமிழகத்தில்-நடைபெறுவது-பாஜக-ஆட்சிதான்-திருச்சியில்-சீமான்-பேட்டி-2776669.html
2775852 திருச்சி திருச்சி அதிமுகவை மீட்டெடுப்போம்: டிடிவி தினகரன் DIN DIN Tuesday, September 19, 2017 09:31 AM +0530 அதிமுகவை மீட்டெடுப்போம் என அதிமுக (அம்மா) அணியின் துணைப்பொதுச் செயலாளர்  டிடிவி தினகரன் தெரிவித்தார்.
நீட் தேர்வுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் திருச்சி தென்னூர் உழவர்சந்தை மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை பார்வையிட  திருச்சிக்கு திங்கள்கிழமை வந்த அவர் தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களிடம்  கூறியது:   எம்ஜிஆர் மறைவுக்குப்  பிறகு அன்றைய பேரவைத் தலைவர்  இதே போன்று எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தார். தற்போது  ஆட்சிக்கு எதிராக வாக்களித்தவர்களை நீக்கம் செய்யாமல் முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என,   ஆளுநரிடம் (எனது உத்தரவின் பேரில்)  மனு அளித்த எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்துள்ளார் பேரவைத் தலைவர். இது ஜனநாயகத்துக்கு எதிரானது. இது செல்லாது என நீதிமன்றத்தை நாடி நிரூபிப்போம்.
இது ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கும் செயல். வெளிப்படையாக எங்களுக்கு 21 பேர் ஆதரவளிக்கின்றனர்.  மேலும்  12 பேர் அமைதியாக இருக்கின்றனர்.   நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும்போது எங்களது பெரும்பான்மையை  காட்டுவோம்.  பொறுத்தவர்தான்வெற்றி பெறுவர். துரோகம் செல்லாது. எப்போது தேர்தல் வந்தாலும் சசிகலாவின்  தலைமையில் எந்த சின்னமாக இருந்தாலும் அஇஅதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்.  இந்த இயக்கத்தை கட்டிக்காக்கிற பொறுப்பு எனக்கும் உண்டு.
பாஜக ஜனநாயகத்தை மதிக்காமல்,  நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் தமிழக  மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.  தமிழகத்தின் ஜனநாயகம் காப்பாற்றப் படவேண்டும்.   
7 லட்சம் பேர் எங்களுக்கு ஆதரவாக அபிடவிட் தாக்கல் செய்துள்ளதால், எங்களுக்கு தான் அஇஅதிமுகவும் , இரட்டை இலை சின்னமும் கிடைக்கும் என்றார். பேட்டியின் போது,  மாவட்டச் செயலாளர் மனோகரன், மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/sep/19/அதிமுகவை-மீட்டெடுப்போம்-டிடிவி-தினகரன்-2775852.html
2775794 திருச்சி திருச்சி இளைஞரிடம் 7 பவுன் நகை பறிப்பு DIN DIN Tuesday, September 19, 2017 09:18 AM +0530 திருச்சி அருகே இளைஞரிடம் 7 பவுன் நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே காட்டூர் கணேஷ் நகர் 7ஆவது தெருவைச் சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகன் மோகன் (27) . இவர் மலேசியாவிலிருந்து கடந்த 4 நாள்களுக்கு முன்பு தான் சொந்த வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்நிலையில்,  திங்கள்கிழமை காலை கைலாஷ் நகர் மேல்நிலை தண்ணீர்தொட்டி அருகே மோகன் சென்று கொண்டிருந்தாராம்.  அப்போது எதிரே வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று, மோகனை வழிமறித்து தாக்கியதுடன், அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகைகளை பறித்துக் கொண்டு, தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
புகாரின் பேரில்,  திருவெறும்பூர் போலீஸார் வழக்குப் பதிந்து, நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம கும்பலைத் தேடி வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/sep/19/இளைஞரிடம்-7-பவுன்-நகை-பறிப்பு-2775794.html
2775793 திருச்சி திருச்சி ஆடை  விற்பனையகத்தில் திருட்டு: சிசிடிவி  பதிவை வைத்து விசாரணை DIN DIN Tuesday, September 19, 2017 09:18 AM +0530 திருச்சி மாநகர போலீஸார் திங்கள்கிழமை அதிகாலை கே.கே. நகர் சுந்தர் நகர் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு பர்னிச்சர் கடை முன் ஒரு வேன் நின்றுகொண்டிருந்தது. வேனை சோதனையிட்ட போது, அதில் யாரும் இல்லை. அருகிலிருந்த பர்னிச்சர் கடை பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
இதைப் பார்த்த போலீஸார், கடை உரிமையாளரான எல்ஐசி காலனி பகுதியைச் சேர்ந்த ஆசிக் முகம்மதுவை வரவழைத்து, கடையில் ஏதேனும் திருடப்பட்டுள்ளதா என விசாரித்தனர். விசாரணையில், அவரது கடையில் ஏதும் திருட்டு போகவில்லை எனத் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் வேனைத் திறந்து பார்த்த போது, அதனுள் இருந்த பிளாஸ்டிக் கூடைகளில் பல ஆயிரம் மதிப்புள்ள பனியன், ஜட்டி உள்ளிட்ட உள்ளாடைகள் இருந்தன.
பர்னிச்சர் கடைக்கு சில 100 மீட்டர்கள் தூரமுள்ள உள்ளாடை விற்பனையகத்தின் பூட்டை உடைத்து, மர்ம நபர்கள் உள்ளாடைகளை திருடியுள்ளனர்.
தொடர்ந்து, பர்னிச்சர் கடையில் திருட முயன்ற போது, போலீஸார் வருவதை அறிந்த அந்த மர்ம கும்பல், ஆடைகளை வேனுடன் விட்டு விட்டு தப்பியோடியது தெரியவந்தது.
இதுகுறித்து உள்ளாடை விற்பனையகத்தின் உரிமையாளரான உறையூர் பாண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார்  கே.கே. நகர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார், திருட்டு கும்பல் விட்டுச் சென்ற வேனை கைப்பற்றி, வழக்குப் பதிந்து அருகிலுள்ள சிசிடி கேமிரா பதிவுகளை வைத்து விசாரித்து வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில், வேனின் பதிவெண் போலியானது என்பது தெரியவந்துள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/sep/19/ஆடை--விற்பனையகத்தில்-திருட்டு-சிசிடிவி--பதிவை-வைத்து-விசாரணை-2775793.html
2775792 திருச்சி திருச்சி பாலத்திலிருந்து குதித்த முதியவர் சாவு DIN DIN Tuesday, September 19, 2017 09:18 AM +0530 திருச்சி டிவிஎஸ் டோல்கேட் மேம்பாலத்தில் திங்கள்கிழமை அதிகாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர்  திடீரென பாலத்திலிருந்து கீழே குதித்தார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த கே.கே. நகர் போலீஸார்,  முதியவரை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/sep/19/பாலத்திலிருந்து-குதித்த-முதியவர்-சாவு-2775792.html