Dinamani - பெரம்பலூர் - http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2869838 திருச்சி பெரம்பலூர் பிறர் மீதான அக்கறை தான் நல்ல தலைமையை உருவாக்கும்: சுகி.சிவம் DIN DIN Sunday, February 25, 2018 02:18 AM +0530 பிறர் மீதான அக்கறை தான் ஒரு நல்ல தலைமையை உருவாக்கும் என்றார் பேச்சாளர் சுகி. சிவம்.
பெரம்பலூர் நகராட்சி மைதானத்தில் புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் ஆதரவுடன், மக்கள் பண்பாட்டு மன்றம் சார்பில் கடந்த 16-ஆம் தேதி முதல் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
இக்கண்காட்சியில், வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் சொல் வேந்தர் சுகி.சிவம் பங்கேற்று, மேலும் பேசியது:
ஒரு நல்ல தலைமைப் பண்புக்கு வருபவர்கள் பிறர் நன்றாக வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக இருக்க வேண்டும். அவரவர் தங்களது திறமைக்கேற்ற எல்லையை வரையறுத்துக்கொள்ள வேண்டும். பிறரை வென்றவர் முழுமையான தலைவர் அல்ல. எவர் ஒருவர் தன்னை வென்றவராகத் திகழ்கிறாரோ, அவரே சரியான தலைமைப் பண்புக்கு உரியவர். அத்தகைய தலைமைப் பண்புகளை நமக்கு வழங்கும் வல்லமையுடையவை புத்தகங்களே என்றார் சுகி. சிவம்.
தொடர்ந்து, "அன்பிற் சிறந்த தவமில்லை' எனும் தலைப்பில் கவிதா ஜவஹர் பேசியது:
இனம், மொழி, மதம் என்ற வேறுபாடுகளால் பிரிந்து கிடக்கிற மனித சமூகத்தை, ஒரே பாதைக்குள் பிணைத்து கட்டுகிறது என்பதால், புத்தகங்களுக்கு நூல் என பெயர் வந்தது என்று கூறலாம். வெடி குண்டுகளுக்கு தடையில்லாத பல நாடுகளில் கூட, புத்தகங்களுக்கு தடையிருக்கிறது. ஏனென்றால், அணு குண்டால் விளையும் நிகழ்வைக் காட்டிலும் புத்தகங்கள் அதிக அளவிலான புரட்சியை ஏற்படுத்தவல்லது.
அணுகுண்டு ஒருமுறை தான் வெடிக்கும். புத்தகம் புரட்டப்படும்போதெல்லாம் வெடிக்கும். ஒரு படை சாதிக்க முடியாததை, வீரர்களின் கூட்டம் சாதிக்க முடியாததை ஒற்றைப் புத்தகம் சாதிக்கும். நிறையபேர் புத்தகங்களை வாங்கி படிக்காமலேயே வீட்டில் வைத்திருக்கிறீர்கள். ஒரு புத்தகத்தை எரிப்பதை க்காட்டிலும் கொடுமையானது, அதை படிக்காமல் அலமாரியில் வைத்திருப்பது. எனவே, ஒவ்வொருவரும் புத்தகங்களைப் படியுங்கள். புத்தககள் அன்பை போதிக்கின்றன. அறிவை தருகின்றன. ஆற்றலை நமக்குள் அளிக்கின்றன.
நாம் வாழ்வது கொஞ்ச காலம் என்றாலும், பிறரிடம் நாம் செலுத்தும் அன்பானது நம்மை பல நாள்களில் அவர்களின் உள்ளங்களில் வாழ வைக்கும் வல்லமை கொண்டது. எனவே, அனைவரையும் நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள் என்றார் அவர்.
முன்னதாக, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஞாயிற்றுக்கிழமை (பிப். 25) மாலை நடைபெறும் நிகழ்ச்சியில், அனைவருக்கும் கல்வித்திட்ட மாநில இயக்குநர் க. நந்தகுமார், தேசிய சுகாதார இயக்குநர் தரேஸ் அஹமது, சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர் சு. வெங்கடேசன், கவிஞர் கவிதாசன், பட்டிமன்ற பேச்சாளர் தா.கு. சுப்ரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/25/பிறர்-மீதான-அக்கறை-தான்-நல்ல-தலைமையை-உருவாக்கும்-சுகிசிவம்-2869838.html
2869837 திருச்சி பெரம்பலூர் வேலைவாய்ப்பு முகாம்: 35 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கல் DIN DIN Sunday, February 25, 2018 02:18 AM +0530
பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 35 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
இந்த வேலைவாய்ப்பு முகாமில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திருச்சி, சென்னை, கோவை, கரூர், திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள 31 நிறுவனங்கள் பங்கேற்று, தங்களது நிறுவனங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்தன. சுமார் 850- க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இம்முகாமில், 35 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி, மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா பேசியது:
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் எனும் அடிப்படையில், இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அனைத்து இளைஞர்களுக்கும், வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையிலும், பல்வேறு நிறுவனங்களுக்கு தகுதியான இளைஞர்களை பணிக்கு தேர்வு செய்யும் வகையிலும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் இளைஞர்களுக்கு தேவையான அடிப்படை பயிறசிகள் அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
இதைத்தொடர்ந்து, பெரம்பலூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ஆர்.பி. மருதராஜா பேசியது:
படிக்கும் காலத்தில் இளைஞர்கள் அனைவரும் கல்வியுடன் தொழிற்கல்வியும் பயிலும் பட்சத்தில், வேலைவாயப்பை உருவாக்கும் தகுதி பெறுவர். படிப்புடன் தொழிற்கல்வியும் பயிலும் வகையில் மத்திய அரசின் திட்டங்கள் கொண்டுவரத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். மிகவும் பின்தங்கிய மாவட்டமான பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து, குடிமைப் பணிகளில் பணியாற்றும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பை இளைஞர்கள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
இந்நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் இரா. தமிழ்ச்செல்வன் (பெரம்பலூர்), ஆர்.டி. ராமச்சந்திரன் (குன்னம்), வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மண்டல இணை இயக்குநர் அனிதா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொறுப்பு) மணிவேல், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/25/வேலைவாய்ப்பு-முகாம்-35-பேருக்கு-பணி-நியமன-ஆணை-வழங்கல்-2869837.html
2869836 திருச்சி பெரம்பலூர் ஜெயலலிதா பிறந்த நாள்: அதிமுகவினர் கொண்டாட்டம் DIN DIN Sunday, February 25, 2018 02:17 AM +0530 மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அரியலூர் மாவட்டத்தில் அதிமுகவினர் சனிக்கிழமை இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் உத்தரவின்பேரில், அரியலூர் அதிமுக நிர்வாகிகள் ஊர்வலமாகச் சென்று பேருந்து நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து எம்.எல்.ஏ அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா படத்துக்கு, அரசு கொறடா சகோதரரும், அதிமுக உறுப்பினருமான கணேசன் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதன் பின்னர், எம்எல்ஏ அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மாவட்ட மாணவரணிச் செயலர் சங்கர், நிர்வாகி கள்ளங்குறிச்சி பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல், அரியலூர் பெருமாள் கோயில், ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. லிங்கத்தடிமேடு வள்ளலார் கல்வி நிலையத்திலும் அன்னதானம் வழங்கப்பட்டது.
செந்துறை: செந்துறையில் நடைபெற்ற விழாவில் ஒன்றியச் செயலர் சுரேஷ் தலைமையில் அதிமுகவினர் ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
திருமானூரில்: இதேபோல் கீழப்பழுவூரில் முன்னாள் ஊராட்சித் தலைவர் ஹரிச்சந்திரன் தலைமையிலும், திருமானூரில் ஒன்றியச் செயலர் குமரவேல் தலைமையிலும் நடைபெற்றது. ஜயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர், மீன்சுருட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிமுகவினர் ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பெரம்பலூரில்:
பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள ஜெயலலிதா உருவ சிலைக்கு, அதிமுக மாவட்ட செயலரும், குன்னம் தொகுதி எம்எல்ஏவுமான ஆர்.டி. ராமச்சந்திரன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், கட்சி கொடியேற்றி தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
தொடர்ந்து, மாவட்ட தொழில்நுட்ப பிரிவு சார்பில் துறைமங்கலத்தில் உள்ள அன்பகம் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளியிலும், வழக்குரைஞர் அணி சார்பில் கெளதமபுத்தர் அறக்கட்டளையில் உள்ள முதியோர்களுக்கும் உணவு வழங்கப்பட்டது.
மேலும், துறைமங்கலம் டி.இ.எல்.சி நடுநிலைப் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் நோட்டு புத்தகம், ஜமான்ட்ரி பாக்ஸ், பேனா, பென்சில் வழங்கப்பட்டது.
முன்னதாக, எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில், பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சனிக்கிழமை பிறந்த 3 குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளில், பெரம்பலூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ஆர்.பி. மருதராஜா, எம்எல்ஏ இரா. தமிழ்ச்செல்வன், நகர செயலர் ஆர். ராஜபூபதி, ஒன்றியச் செயலர்கள் என்.கே. கர்ணன், சிவப்பிரசாகம், மாவட்ட நிர்வாகிகள் ராணி, பூவை த. செழியன், மாவட்ட அணி செயலர்கள் எம்.என். ராஜாராம், ராஜேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/25/ஜெயலலிதா-பிறந்த-நாள்-அதிமுகவினர்-கொண்டாட்டம்-2869836.html
2869339 திருச்சி பெரம்பலூர் அறிவோடு, அன்பையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் DIN DIN Saturday, February 24, 2018 04:10 AM +0530 அறிவாடு, அன்பையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்  என்றார் பட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் எம். ராமச்சந்திரன். 
பெரம்பலூர் புகர் பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சி மைதானத்தில், கடந்த 16 ஆம் தேதி தொடங்கிய 7-வது புத்தகக் கண்காட்சி பிப். 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 
இக் கண்காட்சியின் 7-வது நாளான வியாழக்கிழமை இரவு பங்கேற்ற அவர் அன்பும்- அறிவும் எனும் தலைப்பில் மேலும் பேசியது:   புத்தகங்கள் யாவும் காட்சிப்பொருள்கள் அல்ல. ஒவ்வொன்றும் கருத்துப்பொருள்கள். புத்தகங்களால் நமக்குள் கருத்துக் குவியல்கள் வளர வேண்டும். புத்தகங்களின் நோக்கம் அன்பை வளர்ப்பதாகவே இருக்க வேண்டும். எந்த எழுத்தும், பேச்சும் சமூகம் தழுவியதாக, மானுடம் தழுவியதாக இருக்கிறதோ, அந்த எழுத்தும் பேச்சும் அன்பும், அறிவும் ஒன்றிணைந்த விஷயமாக கருதப்படும். எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பது அல்லாமல், வேறொன்றும் அறியேன் பராபரமே என்னும் வார்த்தைகள் அன்பை வெளிப்படுத்துதலின் உச்சம். 
இன்றைய காலகட்டத்தில் எந்தப்பக்கம் திரும்பினாலும்  பட்டதாரிகள் இருக்கிறார்கள். ஆனால், அன்பு எங்கே இருக்கிறது என்று தேடும் நிலைதான் உள்ளது. நாம், அறிவியலை முறையாகப் பயன்படுத்துவதில்லை. அறிவியல் கடவுளுக்குச் சமமான ஆற்றலை நமக்கு வழங்கியிருக்கிறது. அன்புள்ளவர்கள் அறிஞர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அன்பர்களாக இருந்தாலே போதுமானது. இது, அறிவியல் யுகம். அனைவரும் அறிவைப் பெருக்கிக்கொள்ளுங்கள். ஆனால், அறிவு சம்பளத்துக்கானது, அன்பு சமாதானத்திற்கானது. அன்பில்லாத எந்த செயலும் முற்றுபெறாது என்றார் பேராசிரியர் ராமச்சந்திரன்.
தொடர்ந்து, பூச்சிகளின் தேசம் எனும் தலைப்பில் சூழலியலாளர் கோவை. சதாசிவம், எண்ணுவ உயர்வு எனும் தலைப்பில் அரிமா சங்க மாவட்ட முதல் துணை ஆளுநர் எச். ஷேக்தாவூத் ஆகியோர் பேசினர். முன்னதாக, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.அரிமா சங்க நூற்றாண்டுத் தலைவர் ஒஜீர் அஹமது பாஷா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சனிக்கிழமை (பிப். 24) மாலை நடைபெறும் நிகழ்ச்சியில், தேசாந்திரி எஸ். ராமகிருஷ்ணன், செங்கல்பட்டு சார் ஆட்சியர் வீ.ப. ஜெயசீலன், எழுத்தாளர் கவிஞர் சுமதி சிரி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/24/அறிவோடு-அன்பையும்-வளர்த்துக்-கொள்ள-வேண்டும்-2869339.html
2869338 திருச்சி பெரம்பலூர் பெரம்பலூர் விவசாயிகளுக்கு இதுவரை  ரூ.109 கோடி பயிர்க் கடன் அளிப்பு DIN DIN Saturday, February 24, 2018 04:10 AM +0530 பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு ரூ. 109.22 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி. 
பெரம்பலூர் ஆட்சியரகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
இக்கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்க வேண்டும். தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் விவசாயக் கடன்களை விரைவாக வழங்க வேண்டும். கால்நடைப் பராமரிப்புத் துறை மூலம் மானிய விலையில் வைக்கோல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நுண்ணீர் பாசனத் திட்டத்தில் விவசாயிகளின் பயிர்களுக்கேற்ப மானியம் வழங்க வேண்டும். மின்வாரியத்தின் மூலமாக மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். மின்சார இணைப்பு இலக்கை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். 
தொடர்ந்து, விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளித்து மாவட்ட வருவாய் அலுவலர் பேசியது:
விவசாயிகளுடைய கோரிக்கைகளுக்கு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் விவசாயிகளின் கேள்விகளுக்கு உரிய பதிலளிக்க வேண்டும். விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள் இருப்பில் உள்ளது. 
பெரம்பலூர் மாவட்டத்தில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய பயிர்க் கடன் இலக்கீடான ரூ. 112.50 கோடியில், இதுவரை ரூ. 109.22 கோடி  வழங்கப்பட்டுள்ளன என்றார் அவர்.    
கூட்டத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் துணை மண்டல மேலாளர் (பொ) பிரேமலதா, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் பெரியசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) செ. கலைவாணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/24/பெரம்பலூர்-விவசாயிகளுக்கு-இதுவரை--ரூ109-கோடி-பயிர்க்-கடன்-அளிப்பு-2869338.html
2869337 திருச்சி பெரம்பலூர் பிப். 27- இல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் DIN DIN Saturday, February 24, 2018 04:10 AM +0530 பெரம்பலூர் ஆட்சியரகக் கூட்டரங்கில், பிப். 27 ஆம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது எனத் தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா. 
எரிவாயு உருளைகளை நிரப்பி வழங்குவதில் காணப்படும் குறைகள், நுகர்வோர் பதிவு செய்த குறைகளின் மீது நடவடிக்கை எடுப்பதில் எரிவாயு முகவர்களின் மெத்தனப்போக்கு தொடர்பாக பெறப்படும் புகார்களை பெற்று உரிய நடவடிக்கைகள் எடுத்து, எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்குள்பட்டு எரிவாயு உருளை விநியோகத்தை சீர்படுத்துவது தொடர்பாக எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பிப். 27 பிற்பகல் 3 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற உள்ளது. 
இக்கூட்டத்தில், எரிவாயு முகவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவன விற்பனை அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர். எனவே, எரிவாயு நுகர்வோர்கள் எரிவாயு சம்பந்தமாக குறைகள் இருந்தால் இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கலாம். மேலும், எரிவாயு விநியோகம் தொடர்பாக காணப்படும் குறைகள் களைவது தொடர்பான ஆலோசனைகளும் அளிக்கலாம் என்றார் அவர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/24/பிப்-27--இல்-எரிவாயு-நுகர்வோர்-குறைதீர்-கூட்டம்-2869337.html
2869336 திருச்சி பெரம்பலூர் அரியலூரில் நாளை கையுந்து பந்து போட்டி DIN DIN Saturday, February 24, 2018 04:09 AM +0530 அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கையுந்து பந்து விளையாட்டை ஊக்கப்படுத்தும் விதமாக ஒருங்கிணைந்த பெரம்பலூர், அரியலூர் கையுந்துப் பந்து கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கையுந்துப் பந்துப் போட்டி ஞாயிற்றுக்கிழமை ( பிப்.25) காலை 9 மணிக்கு அரியலூர் மாவட்ட விளையாட்டரங்கில் தொடங்குகிறது.
இதில் பெரம்பலூர், அரியலூர் மாவட்ட வீரர்,வீராங்கனை அணிகள் கலந்து கொள்ளலாம். 
இதில் முதல் நான்கு இடம் பெறும் ஆண்,பெண் அணிக்கு பரிசுத்தொகையும், முதல் இடங்கள் பெறும் அணிக்கு பரிசு மற்றும் கோப்பையும் வழங்கப்படும் என ஒருங்கிணைந்த பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட கையுந்து பந்து கழகச் செயலர் டி. சண்முகசுந்தரம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/24/அரியலூரில்-நாளை-கையுந்து-பந்து-போட்டி-2869336.html
2869335 திருச்சி பெரம்பலூர் பலாத்கார முயற்சி: முதியவர் கைது DIN DIN Saturday, February 24, 2018 04:09 AM +0530 பெரம்பலூர் அருகே, வியாழக்கிழமை இரவு 6 வயது பெண் குழந்தையை பலாத்காரம் செய்ய முயன்ற முதியவரை, பெரம்பலூர் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  
பெரம்பலூர் அருகேயுள்ள எளம்பலூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த  தம்பதியின் 6 வயது பெண் குழந்தை அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 1 ஆம் வகுப்பு படித்து வந்தது. இந்நிலையில், வியாழக்கிழமை இரவு அதே பகுதியில் உள்ள கடைக்கு அக்குழந்தை தின்பண்டம் வாங்க சென்றபோது, பெட்டிக்கடை வைத்துள்ள தர்மலிங்கம் (65), கடைக்கு உள்ளே அழைத்து சென்றாராம். 
இதைப்பார்த்த அப்பகுதியை சேர்ந்த ரெங்கதுரை மனைவி லெட்சுமி கடைக்குள் சென்று பார்த்தபோது குழந்தையை முதியவரம் பலாத்காரம் செய்ய முயன்றது தெரியவந்தது. 
இதுகுறித்து குழந்தையின் தாய் அளித்த புகாரின் பேரில், பெரம்பலூர் மாவட்ட அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிந்து தர்மலிங்கத்தை கைது செய்து, பெரம்பலூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/24/பலாத்கார-முயற்சி-முதியவர்-கைது-2869335.html
2869334 திருச்சி பெரம்பலூர் இந்திய செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் தேர்வு DIN DIN Saturday, February 24, 2018 04:09 AM +0530 பெரம்பலூர் ஆட்சியரகக் கூட்டரங்கில், இந்தியன் செஞ்சிலுவை சங்க மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சேதுராமன் முன்னிலையில் நடைபெற்ற  தேர்தலில், மாவட்ட கிளை மேலாண் துணை தலைவர் டாக்டர் தங்கராஜ், பொறுப்பாளர்களின் பணிகள் குறித்து விளக்கினார். 
தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில், புதிய நிர்வாகிகளாக மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா தலைவராகவும், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் துணை தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். 
மேலும், மேலாண் தலைவராக வரதராஜன், மேலாண் துணை தலைவராக டாக்டர் தங்கராஜ், கெளரவ செயலராக என். ஜெயராமன், கெளரவ பொருளாளராக வீ. ராதாகிருஷ்ணன், இணை செயலர்களாக சூசைராஜ், ஜோதிவேல், பேரிடர் மேலாண்மை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக செந்தில்நாதன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/24/இந்திய-செஞ்சிலுவை-சங்க-நிர்வாகிகள்-தேர்வு-2869334.html
2869333 திருச்சி பெரம்பலூர் பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வான மாற்றுத் திறனாளிகளுக்கு நிதியுதவி DIN DIN Saturday, February 24, 2018 04:08 AM +0530 தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் தடகளப் போட்டிகளில் 19 பதக்கங்களை வென்று, தேசியளவிலான பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வான மாற்றுதிறனாளி வீரர்களுக்கு நிதியுதவி அளித்துப் பாராட்டினார் பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏ இரா. தமிழ்ச்செல்வன். 
மதுரை ரேஸ் கோர்ஸ் எம்.ஜி.ஆர் விளையாட்டு மைதானத்தில் மாநில அளவில் அண்மையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான 14-வது தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் தடகளப் போட்டிக பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 36 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். 
நீளம் தாண்டுல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல், நீச்சல் ஆகிய போட்டிகளில் ரமேஷ், அம்பிகாபதி, கலைச்செல்வன், சூர்யா, தீபா, கிருபாகரன், கரிகாலன், முத்துக்குமார் ஆகிய 8 மாற்றுத்திறனாளிகள் முதல் 3 இடங்கள் பெற்று 9 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலம் ஆகிய 19 பதக்கங்களை வென்று,  தேசியளவிலான பாரா ஒலிம்பிக் தடகளப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இப் போட்டிகள் மார்ச் 9, 10-களில் நடைபெற உள்ளது.  இந்த மாற்றுத்திறனாளிகளை பாராட்டி, தேசியளவிலான போட்டிக்கு செல்வதற்காக வெள்ளிக்கிழமை நிதியுதவி அளித்தார் பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா. தமிழ்ச்செல்வன்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/24/பாரா-ஒலிம்பிக்-போட்டிக்கு-தேர்வான-மாற்றுத்-திறனாளிகளுக்கு-நிதியுதவி-2869333.html
2869332 திருச்சி பெரம்பலூர் நெல் கொள்முதல் நிலையங்களில்  லஞ்சம் கேட்டால் புகார் அளிக்கலாம் DIN DIN Saturday, February 24, 2018 04:08 AM +0530 பெரம்பலூர் மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் கேட்டால் புகார் அளிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா. 
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 2017-2 018 ஆம் ஆண்டில் காரீப் பருவத்தில் 8 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக கொள்முதல் நடைபெற்று வருகிறது. மேலும், விவசாயிகளின் நெல்லுக்கான ஆதார விலையாக மத்திய அரசு அறிவித்துள்ள கிரேடு ஏ ரகத்துக்கு குவிண்டாலுக்கு ரூ. 1,590, பொது ரகத்துக்கு ரூ. 1,550, தமிழக அரசின் பங்களிப்பு ஊக்கத் தொகையாக குவிண்டாலுக்கு ஏ கிரேடு ரூ. 70, பொது ரகத்துக்கு ரூ. 5 வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, மொத்தம் ஏ கிரேடு ரகத்துக்கு குவிண்டால் விலை ரூ. 1,660, பொது ரக நெல்லுக்கு ரூ. 1,600 வழங்கப்படுகிறது.  பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 202 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்குரிய தொகையை, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மின்னணு பணப் பரிவர்த்தனை மூலம் வரவு வைக்கப்பட்டு, கொள்முதல் நிலையங்களில் பணப் பரிமாற்றம் இல்லாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.  எனவே, நெல் கொள்முதல் நிலைய பணியாளர்களுக்கு பணமோ அல்லது நெல்லோ கொடுக்கத் தேவையில்லை. கையூட்டு கேட்கும் அலுவலர்கள் மீது புகார் அளித்தால், சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். புகாரை, துணை மண்டல மேலாளர் (94431-39926), துணை மேலாளர் (தரக் கட்டுப்பாடு) (98940-48098) ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/24/நெல்-கொள்முதல்-நிலையங்களில்--லஞ்சம்-கேட்டால்-புகார்-அளிக்கலாம்-2869332.html
2869331 திருச்சி பெரம்பலூர் பெரம்பலூர் பகுதியில் பிப்ரவரி 25 மின் தடை DIN DIN Saturday, February 24, 2018 04:07 AM +0530 பெரம்பலூர் கோட்டத்துக்குள்பட்ட எசனை, கிருஷ்ணாபுரம், மங்களமேடு, கழனிவாசன், அந்தூர் ஆகிய துணை மின் நிலையங்களுக்குள்பட்ட கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 25) மின்சாரம் இருக்காது. 
இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளர் சி. தேவராஜ், வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூர் கோட்டத்துக்குள்பட்ட எசனை, கிருஷ்ணாபுரம், மங்களமேடு, கழனிவாசல், அந்தூர் ஆகிய துணை மின் நிலையங்களில், அவசர கால பராமரிப்பு நடைபெற உள்ளதால், மேற்கண்ட துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சாரம் இருக்காது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/24/பெரம்பலூர்-பகுதியில்-பிப்ரவரி-25-மின்-தடை-2869331.html
2868835 திருச்சி பெரம்பலூர் மொழி மனிதனுக்கு விழி மட்டுமல்ல; ஆன்மாவாகவும் விளங்குகிறது: தமிழ் பல்கலை. பேராசிரியர் காமராசு DIN DIN Friday, February 23, 2018 09:23 AM +0530 மொழி மனிதனுக்கு விழி மட்டுமல்ல; ஆன்மாவாகவும் விளங்குகிறது என தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பேராசிரியர் இரா. காமராசு பேசினார்.
 பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி மைதானத்தில், 7-ஆவது புத்தகக் கண்காட்சி கடந்த 16-ஆம் தேதி முதல் தொடங்கியது. வரும் 26-ஆம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியின் 6-ஆவது நாளான புதன்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியது:
மொழி அல்லது இலக்கியம் என்றால், ஒரு செம்மார்ந்த செவ்விதழ் மொழி தான். மொழி என்கிற உணர்ச்சி பல நிலைகளிலும் உள்ளது. மொழியினுடைய தோற்றுவாய் எது, அதனுடயை ஆண்டு, வயதை தீர்மானிக்க முடியுமா என்றால் முடியாது.
மனிதனுடைய தோற்றத்தோடு, உயிர்களின் தோற்றத்தோடு மொழியினுடைய தோற்றத்தையும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். அறிவியல் என்பது நிரூபிக்கப்பட்ட, மெய்ப்பிக்கப்பட்ட உண்மை. மொழி என்பது இலக்கணம் சார்ந்தது மட்டுமல்ல. எனவே தான், உலக தாய்மொழி தினம் என்பது, உலகெங்கிலும் இருக்கக்கூடிய வட்டார மொழிதினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 
 தமிழ் மொழியானது நீண்ட வரலாறு கொண்டது. ஆனால், தற்போது எந்த நிலையில் உள்ளது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். அண்டை மாநிலங்களில் அந்தந்த வட்டார மொழிகளில் பாடம் கற்பிக்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் இந்த நிலை உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.  குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் ஆகிய நிலங்கள் தற்போது பாலைவனமாக காட்சியளிக்கிறது. எனவே, மொழியை பேசும்போது, நிலத்தையும் பார்க்க வேண்டும். மொழி மனிதனுக்கு விழி மட்டுமல்ல, ஆன்மாவாகவும் இருக்கிறது என்றார் அவர்.  தொடர்ந்து, "சொல்லாமல் சாகும் சொற்கள்' எனும் தலைப்பில் எழுத்தாளர் கண்மணி குணசேகரன் பேசியது:
கிராமப்புறங்களில் நடைபெறும் கோயில் திருவிழாக்களில் ஒவ்வொரு ஆண்டும், ஏதாவது ஒரு பொருள் வாங்கி வந்து பாதுகாக்கப்படும். அதேபோல், ஆண்டுதோறும் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் தங்களால் முடிந்த புத்தகங்களை வாங்கி வந்து படித்து, அவற்றைப் பாதுகாக்க வேண்டும். திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் புத்தகங்களை வெளிப்படையாக வழங்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும். தற்போதுள்ள காலகட்டத்தில் நம்மிடம் பேசும் வாய்ப்பு குறைந்துவிட்டது. பாசங்களை பகிர்ந்துகொள்ளும் வட்டார வழக்கு சொற்களையும் மறந்துவிட்டோம். நம் கலாசாரத்தை பாதுகாக்க நமது பாரம்பரிய சொற்களையும், வட்டார சொற்களையும் மறக்கக்கூடாது என்றார் அவர்.
இவ்விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதர் உள்பட பலர் பங்கேற்றனர்.
 வெள்ளிக்கிழமை (பிப். 23) மாலை நடைபெறும் நிகழ்ச்சியில், "வாழ்க்கை ஒரு தவம்' எனும் தலைப்பில் சுகி. சிவம், "அன்பிற் சிறந்த தவமில்லை' எனும் தலைப்பில் பட்டிமன்ற பேச்சாளர் கவிதா ஜவகர் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/23/மொழி-மனிதனுக்கு-விழி-மட்டுமல்ல-ஆன்மாவாகவும்-விளங்குகிறது-தமிழ்-பல்கலை-பேராசிரியர்-காமராசு-2868835.html
2868833 திருச்சி பெரம்பலூர் போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி DIN DIN Friday, February 23, 2018 09:23 AM +0530 தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் நடத்தும் போட்டித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பில்  ஆர்வமுள்ள இளைஞர்கள் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள படித்த இளைஞர்களுக்கு பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பயின்ற பலர் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று, அரசுப் பணிகளில் சேர்ந்துள்ளனர். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 2-ஆம் நிலைக் காவலர், 2-ஆம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட 6,140 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த எழுத்துத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு மற்றும் உடல்திறன் பயிற்சி, பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 26-ஆம் தேதி முதல் நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தேர்வுக்கு விண்ணப்பித்த நகலுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/23/போட்டித்-தேர்வுக்கு-இலவச-பயிற்சி-2868833.html
2868831 திருச்சி பெரம்பலூர் உதவித்தொகை பெறுவோர் வங்கி கணக்கில்  ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்தல் DIN DIN Friday, February 23, 2018 09:22 AM +0530 வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெறுவோர், தங்களது வங்கி கணக்கில் ஆதார் எண்ணை இணைத்து, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா அறிவுறுத்தியுள்ளார். 
 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு (மாற்றுத்திறனாளிகள் உள்பட), பள்ளி இறுதி வகுப்பில் தோல்வியடைந்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 200-ம், பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 300-ம், பிளஸ் 2, டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 400-ம், பட்டதாரிகளுக்கு ரூ. 600-ம் வழங்கப்பட்டு வருகிறது. 
இந்த உதவித்தொகையானது, ஒவ்வொரு பயனாளிகளுக்கும் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. 3 மாதங்களுக்கு ஒருமுறை 3 மாதத்துக்கான தொகையும் சேர்த்து, வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. தற்போது, அரசின் உதவித்தொகை பெறுவதற்கு ஆதார் எண் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக உதவித்தொகை பெற்று வரும் பயணாளிகள் அனைவரும், கணக்கு வைத்திருக்கும் வங்கியை தொடர்புகொண்டு, தங்களது வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். மேலும், வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்த விவரத்தை பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும். மார்ச் 15-ஆம் தேதிக்குள் இப்பணியை முடித்தால் மட்டுமே, அடுத்த காலாண்டுக்கு உதவித்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள இயலும் என அதில் கூறப்பட்டுள்ளது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/23/உதவித்தொகை-பெறுவோர்-வங்கி-கணக்கில்--ஆதார்-எண்ணை-இணைக்க-அறிவுறுத்தல்-2868831.html
2868830 திருச்சி பெரம்பலூர் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் DIN DIN Friday, February 23, 2018 09:22 AM +0530 நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் அமைப்பினர் சார்பில் பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்துக்கு, திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளர் முருகேசன் தலைமை வகித்தார். நகர செயலர் எம். பிரபாகரன், மாவட்டப் பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக மாவட்ட செயலர் சி. ராஜேந்திரன், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கிப் பேசினார். இதில், மதிமுக மாவட்டச் செயலர் எஸ். துரைராஜ், மாவட்டப் பொருளாளர் ஜெயசீலன், விவசாயிகள் சங்க தலைவர் ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/23/நீட்-தேர்வை-ரத்து-செய்யக்-கோரி-ஆர்ப்பாட்டம்-2868830.html
2868828 திருச்சி பெரம்பலூர் கால்நடை கிளை மருத்துவமனை திறப்பு DIN DIN Friday, February 23, 2018 09:22 AM +0530 பெரம்பலூர் அருகே உள்ள ரெங்கநாதபுரத்தில் கால்நடை கிளை மருத்துவமனை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 
பெரம்பலூர் ஒன்றியம், ரெங்கநாதபுரம் கிராமத்தில் அதிக அளவிலான கால்நடைகளை விவசாயிகள் வளர்த்து வருகின்றனர். இந்த கால்நடைகள் நோய்வாய்ப்பட்டால், வேலூர் அல்லது பெரம்பலூரில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். இதனால் காலதாமதம் ஏற்பட்டு கால்நடைகள் உயிரிழக்க நேரிட்டது. இதையடுத்து ரெங்கநாதபுரத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் பெரம்பலூர் எம்.பி., ஆர்.பி. மருதராஜாவிடம் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கை தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து, ரெங்கநாதபுரத்தில் கால்நடை கிளை மருத்துவமனை அமைக்க அரசு உத்தரவிட்டது.
அதன்படி, ரெங்கநாதபுரத்தில் நடைபெற்ற கால்நடை கிளை மருத்துவமனை திறப்பு விழாவுக்கு, எம்.பி., ஆர்.பி. மருதராஜா தலைமை வகித்தார். சிதம்பரம் தொகுதி எம்.பி., மா. சந்திரகாசி, பெரம்பலூர் எம்எல்ஏ இரா. தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதிமுக மாவட்டச் செயலரும், குன்னம் தொகுதி எம்எல்ஏவுமான ஆர்.டி. ராமச்சந்திரன் கால்நடை கிளை மருத்துவமனையை திறந்து வைத்துப் பேசினார். இதில், அதிமுக நகரச் செயலர் ஆர். ராஜபூபதி, கட்சி நிர்வாகி பன்னீர்செல்வம், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர். 
கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் செங்கோட்டையன் வரவேற்றார். கால்நடை உதவி மருத்துவர் ஜவஹர் நன்றி கூறினார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/23/கால்நடை-கிளை-மருத்துவமனை-திறப்பு-2868828.html
2868826 திருச்சி பெரம்பலூர் சாரணர் இயக்கம் சார்பில் உலக சிந்தனை நாள் விழா DIN DIN Friday, February 23, 2018 09:21 AM +0530 பெரம்பலூர் மாவட்ட பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் சார்பில் உலக சிந்தனை நாள் விழா, மாவட்ட சாரண பயற்சி மையத்தில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
  சாரண இயக்கத் தந்தையான பேடன் பவல் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற இவ்விழாவுக்கு மாவட்டச் செயலர் க. செல்வராசு தலைமையில் சர்வ சமய வழிபாடு நடத்தப்பட்டு, தேசிய தலைமையகம் வகுத்துள்ள நெறிப்படியிலான பாடல்களுடன் இந்து, கிறிஸ்துவ, இஸ்லாமிய வழிபாட்டுப் பாடல்கள் பாடப்பட்டன. பகவத்கீதை, பைபிள், திருக்குரான் ஆகிய புனித நூல்களில் உள்ள சிறந்த பகுதிகள் வாசிக்கப்பட்டதோடு, பேடன் பவலாரின் வரலாறு திரையிட்டுக் காட்டப்பட்டது. 
இதைத்தொடர்ந்து, சாரண, சாரணியர்களுக்கு 2018-ஆம் ஆண்டுக்குரிய ராஜ்புரஸ்கார் விருதுக்கான ஆயத்தப் பயிற்சி  அளிக்கப்பட்டது. ராஜ்யபுரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கும் முறை, மேற்கொள்ள வேண்டிய செயல் திட்டங்கள், பராமரிக்க வேண்டிய பதிவேடுகள், தேர்வுக்கான பாடப்பகுதிகள், தேசிய ஒருமைப்பாட்டுப் பாடல்கள், சாரண இயக்கப் பாடல்கள் ஆகிய தலைப்புகளில், மாவட்ட பயிற்சி ஆணையர் இரா. தனலட்சுமி, மாவட்ட அமைப்பு ஆணையர் ஜி. சரோஜா, மாவட்ட உதவிச் செயலர் டி. தனபால் ஆகியோர் பயிற்சி அளித்தனர். 
விழா மற்றும் பயிற்சிக்கான ஏற்பாடுகளை சாரண ஆசிரியர்கள் குணாளன், பாபி ராபர்ட், சுரேஷ், தேவனேசன், சாரணிய ஆசிரியைகள் கல்பனா, அருட்சகோதரி ஜெம்மா, மோனிகா வெர்ஜின்மேரி, ரேவதி, கலையரசி, அமுதா ஆகியோர்  செய்திருந்தனர். இதில், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 27 பள்ளிகளிலிருந்து 142 சாரணர்களும், 82 சாரணியர்களும் என மொத்தம் 224 பேர் கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/23/சாரணர்-இயக்கம்-சார்பில்-உலக-சிந்தனை-நாள்-விழா-2868826.html
2868825 திருச்சி பெரம்பலூர் "நகராட்சியை தூய்மையாக பராமரிக்க  பொதுமக்கள் முன்வர வேண்டும்' DIN DIN Friday, February 23, 2018 09:21 AM +0530 "ஸ்வச்சதா' செயலி மூலம் பெரம்பலூர் நகராட்சியை தூய்மையாக பராமரிக்க அனைத்துத் தரப்பு மக்களும் முன்வர வேண்டும் என பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 பெரம்பலூரில் தூய்மை இந்தியா இயக்கத்தின் சார்பில், தூய்மைப் பணிகள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில்  "ஸ்வச்சதா' செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை பயன்படுத்துவதன் நோக்கம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரசார வாகனத்தை தொடங்கி வைக்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், வாகனத்தை தொடங்கி வைத்து மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.அழகிரிசாமி பேசியது:
தூய்மை இந்தியா இயக்கத்தின் சார்பில் "ஸ்வச்சர்வக்ஷன் - 2018' எனும் அடிப்படையில், இந்திய அரசு தூய்மையான நகரங்களை தரவரிசை அடிப்படையில் பட்டியலிட உள்ளது.  மேலும், இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு "ஸ்வச்சதா' செயலியை அறிமுகம் செய்துள்ளது.  இதனை கூகுள் பிளே ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
 இச்செயலி மூலம் பெரம்பலூர் நகராட்சியில் தூய்மை குறைபாடு சம்பந்தமாக புகார் அளிக்கலாம். பொதுமக்கள் தங்கள் பகுதியில் நிலவும் தூய்மை குறைபாடுகளை புகைப்படம் எடுத்து, இடத்தையும் பதிவு செய்து, இச்செயலி மூலம் அனுப்பினால் குறைகள் நிவர்த்தி செய்யப்படும்.  
இதன் மூலம், பொது இடத்தில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்வது, வடிகால் அடைப்பு, பொது கழிப்பிடத்தில் தண்ணீர் வராதது, மின்வசதி மற்றும் சுத்தம் செய்வது உள்ளிட்ட புகார்களுக்கு 12 மணி நேரத்துக்குள்ளும், பொது இடத்தில் உயிரிழந்த விலங்குகளை அப்புறப்படுத்தி சுத்தம் செய்வதற்கு 24 மணி நேரத்துக்குள்ளும் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  
எனவே, பொதுமக்கள் இச்செயலியை பயன்படுத்தி பெரம்பலூர் நகராட்சியை தூய்மையான நகரங்களின் பட்டியலில் சிறப்பிடம் பெற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் அவர்.
இந்நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) பிரகாஷ், துப்புரவு ஆய்வாளர்கள் பன்னீர்செல்வம், கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/23/நகராட்சியை-தூய்மையாக-பராமரிக்க--பொதுமக்கள்-முன்வர-வேண்டும்-2868825.html
2868252 திருச்சி பெரம்பலூர் நாளை அம்மா திட்ட முகாம் DIN DIN Thursday, February 22, 2018 10:19 AM +0530 பெரம்பலூர் மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (பிப். 23) நடைபெறுகிறது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், மேட்டுப்பாளையம் (தெ), குன்னம் வட்டம், பேரளி (தெ), ஆலத்தூர் வட்டம், ஆதனூர் (தெ) ஆகிய வருவாய் கிராமங்களில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இந்த முகாம்களில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, உரிய ஆணைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இங்கு பெறப்படும் மனுக்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டு ஒப்புகை ரசீது வழங்கப்படும். உடனடியாக தீர்வுகாண இயலாத விண்ணப்பங்கள் குறித்து மனுதாரருக்கு 30 நாள்களுக்குள் பதில் தெரிவிக்கப்படும். எனவே, சம்பந்தப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/22/நாளை-அம்மா-திட்ட-முகாம்-2868252.html
2868251 திருச்சி பெரம்பலூர் ரூ. 3,812 கோடி முன்னுரிமைக் கடன் வழங்க வாய்ப்பு DIN DIN Thursday, February 22, 2018 10:19 AM +0530 பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ. 3,812 கோடி முன்னுரிமைக் கடன் வழங்க வாய்ப்புள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா. 
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், வங்கியாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில், 2018- 2019 ஆம் ஆண்டுக்கான செறிவுசார் கடன் திட்ட அறிக்கையை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஆட்சியர் மேலும் பேசியது: 
மாவட்டத்தில் தற்போதுள்ள அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், விரிவாக்கச் சேவை மையங்களின் செயல்பாடு, பெருகிவரும் தொழில்நுட்ப பரிமாற்றம், வங்கிகளின் நிதி ஆதாரம் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு ஆண்டுதோறும் செறிவுசார் கடன் திட்ட அறிக்கையை ஒரு புத்தகமாக நபார்டு வெளியிடுகிறது. அந்த வகையில், அடுத்தாண்டு பயிர் கடன்களுக்கு ரூ. 2,203 கோடி, விவசாயம் சார்ந்த இதர தொழில்களுக்கு ரூ. 635 கோடி, பண்ணை சாரா தொழில்களுக்கு ரூ. 212.18 கோடி, இதர முன்னூரிமை கடன்களுக்கு ரூ. 478.30 கோடி என மொத்தம் ரூ. 3,812 கோடி முன்னுரிமை வங்கிக் கடன்களாக வழங்க வாய்ப்புள்ளது. 
இத் திட்ட அறிக்கை மாவட்டத்தின் வளர்ச்சியை மட்டுமே முன்னிறுத்தி தயாரிக்கப்படுகிறது.  எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளும், இத் திட்ட அறிக்கையை பின்புலமாகக் கொண்டு அடுத்த ஆண்டுக்கான கடன் திட்டங்கைளை தயாரிக்கும். மாவட்டத்தின் முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, அத் திட்டங்களை ஓழுங்குமுறை படுத்தி மாவட்ட கடன் திட்டமாக வெளியிடும்.
இதேபோல, ஒவ்வொரு மாவட்டத்திலும் செறிவுசார் கடன் திட்ட அறிக்கைகளை தயாரித்து அவற்றை ஒன்றிணைத்து, மாநில திட்டமாக்கி மாநில அளவில் உயர் வங்கி அதிகாரிகளோடு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளதால்,, வங்கிக் கடன்கள் அதிகாரிப்புக்கு தடையாக இருக்கும் இடர்பாடுகள் விரிவாக விவாதிக்கப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்க வசதியாக இருக்கும். 
எனவே, நபார்டின் செறிவுசார் கடன் திட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளப்படி பயிர் கடன்கள், விவசாயம் சார்ந்த மற்ற தொழில்கள் மற்றும் பண்ணை சாரா தொழில் வளர்ச்சிக்கு உதவும் வகையில், மேற்கண்ட கடன் திட்டங்களுக்கு அனைத்து வங்கிகளும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார் ஆட்சியர் சாந்தா. 
கூட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ஸ்ரீதர், நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் என். கோதண்டபாணி, மண்டல முதன்மை அலுவலர் என். முருகன், மகளிர் திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாலர் பி. அருள்தாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/22/ரூ-3812-கோடி-முன்னுரிமைக்-கடன்-வழங்க-வாய்ப்பு-2868251.html
2868250 திருச்சி பெரம்பலூர் நீட் தேர்வு விழிப்புணர்வுக் கருத்தரங்கம் DIN DIN Thursday, February 22, 2018 10:18 AM +0530 பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்ட ரங்கில், தனலட்சுமி சீனிவாசன் அகாதெமி மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கேரியர் பாயின்ட் கோட்டா சார்பில் நீட் தேர்வை எதிர்கொள்வது தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது. 
கருத்தரங்கை தொடக்கி வைத்து கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன் பேசியது:  மாணவர்கள் தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் பயில வேண்டும். இந்த இரண்டும் இருந்தால், நீட் தேர்வு மட்டுமன்றி, வாழ்க்கையிலும் வெற்றி பெறலாம் என்றார் அவர்.   தொடர்ந்து, கேரியர் பாயின்ட் நிர்வாகிகள் நித்தின் தாசித், உத்தம் ஜாஷ்வால், சமீர் ஆகியோர் நீட் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது, நீட்டின் அவசியம் குறித்து விளக்கினர். 
கருத்தரங்கில், கல்வி நிறுவனங்களின் செயலர் நீல்ராஜ், கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் எஸ்.எச். அப்ரோஸ், பள்ளி முதல்வர்கள் கோவிந்தசாமி, மாலா, மரிய புஷ்பா தீபா மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.கல்வி நிறுவனங்களின் வேலைவாய்ப்பு அலுவலர் கிரீஸ் வரவேற்றார். கல்லூரி விரிவுரையாளர் செளத்ரி நன்றி கூறினார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/22/நீட்-தேர்வு-விழிப்புணர்வுக்-கருத்தரங்கம்-2868250.html
2868249 திருச்சி பெரம்பலூர் மனுநீதி நிறைவு நாள் முகாமில் உதவிகள் DIN DIN Thursday, February 22, 2018 10:18 AM +0530 கூத்தனூர் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நிறைவு நாள் முகாமில் 99 பயனாளிகளுக்கு, ரூ. 55.7 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அளித்தார் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி.  
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்துக்குள்பட்ட கூத்தனூர் கிராமத்தில் நடைபெற்ற முகாமுக்கு தலைமை வகித்து, மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி பேசியது: 
தமிழக அரசு கிராமப்புறங்களில் உள்ள ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறை கொண்டு, பல்வேறு துறைகளின் மூலமாக நலத்திட்டங்கள் வழங்கி வருகிறது. கிராமப்புற மக்களின் குறைகளையும், அவர்களின் தேவைகளையும் கேட்டறிந்து இதுபோன்ற முகாம்கள் நடத்தப்படுகின்றன. எனவே, கிராமங்களில் உள்ள அடித்தட்டு மக்கள் அனைவரும் அரசின் திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும். முகாமில், 62 மனுக்கள் பெறப்பட்டு, தகுதியுடைய 43 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்த மனுக்கள் மீது  உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்றார் அவர். 
தொடர்ந்து பல்வேறு துறைகள் மூலம் 99 பயனாளிகளுக்கு ரூ. 55,07,450 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார் மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி. 
நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இருதயமேரி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் மனோகரன், வட்டாட்சியர்கள் ந. சீனிவாசன், ஷாஜஹான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/22/மனுநீதி-நிறைவு-நாள்-முகாமில்-உதவிகள்-2868249.html
2868248 திருச்சி பெரம்பலூர் கல்லூரிப் பேருந்து வயலில் இறங்கி  7 மாணவர்கள் காயம் DIN DIN Thursday, February 22, 2018 10:18 AM +0530 பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே புதன்கிழமை தனியார் கல்லூரிப் பேருந்து வயலில் இறங்கி 7 மாணவர்கள் காயமடைந்தனர்.
கடலூர் மாவட்டம், தொழுதூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், பெரம்பலூர், அரியலூர் மாவட்ட மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். இங்குள்ள மாணவர்கள் நாள்தோறும், கல்லூரி பேருந்தில் சென்று வருவர். இந்நிலையில், புதன்கிழமை காலை சுமார் 30 மாணவர்களுடன் கல்லூரிக்கு சென்றுகொண்டிருந்த பேருந்து, கீழப்பெரம்பலூர் அருகே ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து, சாலையோரத்தில் இருந்த வயலில் இறங்கியது
இதில், பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவர்களான விஜய், சரிதா, கஸ்தூரி, புனிதவதி, பூவரசன், தர்மதுரை ராயப்பன் ஆகியோர் காயமடைந்தனர். தகவலறிந்த குன்னம் போலீஸார் மாணவ, மாணவிகளை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து சிறப்பு உதவி ஆய்வாளர் கண்ணன் வழக்குப் பதிந்து, கல்லூரி பேருந்து ஓட்டுநர் மாரிமுத்துவை கைது செய்து விசாரிக்கிறார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/22/கல்லூரிப்-பேருந்து-வயலில்-இறங்கி--7-மாணவர்கள்-காயம்-2868248.html
2868247 திருச்சி பெரம்பலூர் இளைஞரிடம் வழிப்பறி செய்ய முயன்றவர் கைது DIN DIN Thursday, February 22, 2018 10:17 AM +0530 பெரம்பலூர் பழைய பேருந்து நிலைய வளாகத்தில், இளைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்ய முயன்றவரை பெரம்பலூர் போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், துறையூர் அருகேயுள்ள செங்காட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கவிபாலன் (23). இவர், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நின்றிருந்தாராம். அப்போது, அங்கு வந்த பெரம்பலூர் ராஜாநகரை சேர்ந்த ரவிசங்கர் (43), கத்தியை காட்டி மிரட்டி கவிபாலனிடம் பணம் பறிக்க முயன்றாராம். 
இதுகுறித்து கவிபாலன் அளித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து ரவிசங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/22/இளைஞரிடம்-வழிப்பறி-செய்ய-முயன்றவர்-கைது-2868247.html
2868246 திருச்சி பெரம்பலூர் மருத்துவர்களுக்கு பயிற்சி வகுப்பு DIN DIN Thursday, February 22, 2018 10:17 AM +0530 பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் நட்சத்திர உணவகத்தில் உள்ள கூட்டரங்கில், குடும்ப நல நிகிச்சை மேற்கொள்ளும் அரசு,  தனியார் மருத்துவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது. 
இந்த பயிற்சி வகுப்புக்கு தலைமை வகித்து, இணை இயக்குநர் (பொ) சசிகலா பேசியது: அளவான குடும்பமே மகிழ்ச்சியான குடும்பம் என்பதால், அனைத்துத் தரப்பு மக்களும் குடும்ப நல அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். குடும்ப நல நிகிச்சை மேற்கொள்ள வருவோருக்கு குடும்ப நல சிகிச்சை மேற்கொள்வதில் உள்ள சிக்கல்களை தீர்க்கும் வகையில் தற்போதுள்ள நவீன தொழில்நுட்பங்களை மருத்துவர்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அறுவை சிகிச்சை மேற்கொள்வதில் உள்ள இடர்களைக் களைவதற்கும், குடும்ப நல அறுவை சிகிச்சையின் தரத்தை உயர்த்துவதற்கும் இதுபோன்ற பயிற்சி வகுப்புகள் மிகவும் உதவியாக இருக்கும் என்றார் அவர். நிகழ்ச்சியில், மருத்துவப் பணிகள் துணை இயக்குநர் சம்பத் உள்பட அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/22/மருத்துவர்களுக்குபயிற்சி-வகுப்பு-2868246.html
2868245 திருச்சி பெரம்பலூர் களையிழந்து வரும் பெரம்பலூர்  புத்தகக் கண்காட்சி DIN DIN Thursday, February 22, 2018 10:17 AM +0530 பெரம்பலூர் நகராட்சி மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சி மாவட்ட நிர்வாகத்தின் பங்களிப்பு, போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாததால் களையிழந்து வருகிறது. இதனால், விற்பனையாளர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். 
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடையே வாசிப்புத் திறனை அதிகப்படுத்தவும், பொதுமக்களிடையே புத்தகம் வாங்கும் பழக்கத்தை ஏற்படுத்தவும் தொடங்கப்பட்டதே இந்த புத்தகக் கண்காட்சி.
இந்த மாவட்ட மக்களை பொருத்தவரை திருச்சி, சென்னை, தஞ்சாவூர், ஈரோடு உள்ளிட்ட நகரங்களில் நடைபெறும் புத்தகக் கண்காட்சிக்கு சென்று, தங்களுக்குத் தேவையான புத்தகங்களை வாங்கி வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இந்நிலையில், பெரம்பலூரில் கடந்த 2012-ல் முதன்முதலாக புத்தகக் கண்காட்சி தொடங்கப்பட்டது. 
கண்காட்சி தொடங்கப்பட்ட ஆண்டில் ரூ. 28,81,626 மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையானது. சிறிய நகரமான, பெரம்பலூரில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் விற்பனையாகும் நூல்களின் எண்ணிக்கையும், பொது மக்களின் வருகையும் ஆச்சரியம் தரக்கூடிய விஷயம் என்றாலும், புத்தகப் பதிப்பாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் இது ஊக்கமளிக்கும் வகையில் அமைந்தது.         
அதைத்தொடர்ந்து, ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி நடத்த முடிவெடுக்கப்பட்டு, 2-வது முறையாக 2013-ல்  நடைபெற்ற கண்காட்சியில் ரூ. 97 லட்சம் மதிப்பிலான புத்தகங்களும், 2014-இல் நடைபெற்ற கண்காட்சியில் ரூ. 1 கோடியே 9 லட்சத்து 82 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களும், 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் ரூ. 1.60 கோடி மதிப்பிலான புத்தகங்களும், 2016-இல் ரூ. 1.81 கோடி மதிப்பிலான புத்தகங்களும், 2017-இல் நடைபெற்ற கண்காட்சியில் ரூ. 1.70 கோடி மதிப்பிலான புத்தகங்களும் விற்பனையானது.
இந்நிலையில், பெரம்பலூர் நகராட்சி மைதானத்தில் தொடங்கிய 7-வது புத்தகக் கண்காட்சி பிப். 16 முதல் 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 
இக் கண்காட்சியில், 100 அரங்குகளில் தலைசிறந்த 90 பதிப்பகங்களை சேர்ந்த சுமார் 10 லட்சத்துக்கும் மேலான நூல்கள் இடம்பெற்றுள்ளன. 
இங்கு, மொபைல் ஏ.டி.எம், சிறுதானிய உணவு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. நாள்தோறும் மதியம் 1 மணி, மாலை 4 மணி, இரவு 7 மணிக்கு உலக திரைப்பட விழா நடத்தப்படுகிறது. அதோடுமட்டுமன்றி, பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களின்  பட்டிமன்றமும் நடைபெற்று வருகிறது. 
அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கும் விதம் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளதால், பதிப்பாளர்கள் ஆர்வமுடன் இப் புத்தகக் கண்காட்சியில் பங்கேற்றுள்ளனர். ஆனால், கடந்த ஆண்டுகளை விட தற்போது நடைபெறும் கண்காட்சியில் பொதுமக்கள் மற்றும் புத்தகப் பிரியர்களின் வருகை மிகவும் குறைந்துள்ளதாக விற்பனையாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. 
கடந்த 6 ஆண்டுகளாக நடத்தப்பட்ட புத்தகக் கண்காட்சியில் மாவட்ட நிர்வாகத்தின் பங்களிப்பு இருந்தது. இதனால், ஆட்சியர் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்களும் இரவு 10 மணி வரை அரங்குகளில் வலம் வந்ததோடு, நூல்களின் விற்பனையை அதிகப்படுத்த ஆலோசனை மேற்கொண்டனர். ஆனால், நிகழாண்டு எவ்வித ஒத்துழைப்பும் இல்லாததால், அலுவலக உதவியாளர்கள் கூட வரவில்லை. பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் தங்களது கல்லூரிகளில் பயிலும் மாணவர்களை புத்தகக் கண்காட்சியில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளிலோ, புத்தகங்களை வாங்குவதற்கோ அறிவுறுத்தவில்லை. 
இதனால் கலை நிகழ்ச்சிகள், சிறப்பு பட்டிமன்றம் நடைபெறும் நேரங்களில் கூட்டம் குறைந்தே காணப்படுகிறது. 
அதேபோல, புத்தகக் கண்காட்சி நடைபெறுவது தொடர்பாக போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தாததும் பொதுமக்களின் வருகை குறைந்ததற்கு காரணம் என கூறப்படுகிறது. கடந்த 5 நாள்களாக நடைபெற்ற கண்காட்சியில், இதுவரை சுமார் 25 ஆயிரத்துக்கும் குறைவான நபர்களே வந்துள்ளதால், நூல்களின் விற்பனையும் குறைந்துள்ளது. 
இதுகுறித்து, விற்பனையாளர் ஒருவர் கூறியது:
கடந்த 5 நாள்களாக ரூ. 6 ஆயிரத்துக்கு மட்டுமே நூல்கள் விற்பனையாகி உள்ளது. ஆனால், ரூ. 9 ஆயிரம் வாடகை செலுத்தியுள்ளேன், வாகன ஏற்றுக்கூலி, இறக்கு கூலி, தங்கும் அறை, உணவு உள்பட சுமார் 15 ஆயிரம் செலவாகும். கடந்த ஆண்டைப்போல விற்பனை கிடையாது. பொதுமக்களின் வருகை மிகவும் குறைந்துள்ளது. இங்கு வரும் ஒன்றிரண்டு மாணவர்கள் 10 ரூபாய் மதிப்பிலான புத்தகங்களை மட்டுமே வாங்கிச் செல்கின்றனர். இதேநிலை நீடித்தால், செலவிட்ட தொகையைக்கூட எடுக்க முடியாது என்றார் அவர்.
சமூக ஆர்வலர் ஒருவர் கூறியது:
வழக்கம்போல, ஜனவரி மாத இறுதியில் தொடங்கி இருந்தால் மாணவர்களின் வருகை அதிகரித்திருக்கும். தற்போது, அரசுப் பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ளதால் மாணவர்கள் வரவில்லை. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் கவனக் குறைவால் புத்தகக் கண்காட்சி வலுவிழந்து வருகிறது. இக் கண்காட்சி தொடர்ந்து நடைபெற வேண்டுமானால், மாவட்ட நிர்வாகத்தின் பங்களிப்பு மிகவும் முக்கியம் என்றார் அவர். 
பெரம்பலூர் மாவட்ட மக்கள் வாசிப்பை நேசிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடங்கப்பட்ட இந்தப் புத்தகக் கண்காட்சி, தற்போது களையிழந்து வருவது பதிப்பாளர்களிடமும், விற்பனையாளர்களிடமும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/22/களையிழந்து-வரும்-பெரம்பலூர்--புத்தகக்-கண்காட்சி-2868245.html
2867575 திருச்சி பெரம்பலூர் காய்கறி மூட்டைகளை திருடிய இளைஞர் கைது DIN DIN Wednesday, February 21, 2018 08:30 AM +0530 பெரம்பலூர் காய்கறி தினசரி சந்தையில் திங்கள்கிழமை இரவு காய்கறி மூட்டைகளை திருடிய இளைஞரை பெரம்பலூர் போலீஸார் கைது செய்தனர். 
பெரம்பலூர் ஜமாலியா நகரைச் சேர்ந்தவர் யுவராஜா (26). இவர், பெரம்பலூர் தினசரி சந்தையில் காய்கறி வியாபாரம் செய்கிறார். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு யுவராஜா கடையிலிருந்த காய்கறி மூட்டைகளை மர்ம நபர் ஒருவர் திருடிச் செல்வதை பார்த்த அப்பகுதி மக்கள், அவரை பிடித்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.  விசாரணையில் அவர் பெரம்பலூர் அருகேயுள்ள அருமடல் கிராமத்தைச் சேர்ந்த செங்கமலை (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது வழக்குப் பதிந்த போலீஸார் பெரம்பலூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/21/காய்கறி-மூட்டைகளை-திருடிய-இளைஞர்-கைது-2867575.html
2867574 திருச்சி பெரம்பலூர் பெரம்பலூர் அருகே தீ விபத்து DIN DIN Wednesday, February 21, 2018 08:30 AM +0530 பெரம்பலூர் அருகே திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருள்கள் எரிந்து நாசமானது.
பெரம்பலூர் அருகேயுள்ள நொச்சியம் கிராமம், தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் மருதமுத்து (56). இவரது வீட்டில் திங்கள்கிழமை நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையறிந்த முருதமுத்து உள்பட வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் வெளியே ஓடினர். தகவலறிந்து  சென்ற பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் வீட்டிலிருந்த டி.வி, பிரிட்ஜ், மிக்ஸி, கிடைண்டர், கட்டில், மெத்தை, பீரோ உள்பட ரூ. 1 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருள்கள் எரிந்து நாசமானதாம். தீ விபத்துக்கான காரணம் குறித்து, பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/21/பெரம்பலூர்-அருகே-தீ-விபத்து-2867574.html
2867572 திருச்சி பெரம்பலூர் உணவுப்பொருள்கள் புகாரை கட்செவி அஞ்சலில் தெரிவித்தால் 24 மணி நேரத்தில் நடவடிக்கை DIN DIN Wednesday, February 21, 2018 08:29 AM +0530 உணவுப்பொருள்கள் குறித்த புகாரை வாட்ஸ் அப்பில் தெரிவித்தால் 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா. 
உணவுப்பொருள்கள் குறித்த புகார் இருந்தால், அதை வாட்ஸ் அப் மூலம் தெரிவிக்கும் வகையிலான தொலைபேசி எண் உணவுப் பாதுகாப்புத் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
பெரம்பலூர் ஆட்சியரகக் கூட்டரங்கில், அந்த வாட்ஸ் அப் எண் குறித்த அறிவிப்பு அடங்கிய விழிப்புணர்வு பதாகையை திங்கள்கிழமை வெளியிட்டு மாவட்ட ஆட்சியர் மேலும் பேசியது: 
பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள், உணவக உரிமையாளர்கள், மளிகைக் கடை உரிமையாளர்கள், சில்லரை வியாபாரிகள், மொத்த விற்பனையாளர்கள், காய்கறி மற்றும் பழக்கடை உரிமையாளர்கள், சாலையோரக் கடைகள், பால் விற்பனையாளர்கள், நியாயவிலைக் கடைகள், தள்ளுவண்டிக் கடைகள் ஆகிய உணவு வணிக நிறுவனங்களில் உணவுப்பொருள்களில் கலப்படம், தடைசெய்யப்பட்ட பான் மசாலா மற்றும் குட்கா விற்பனை செய்வது, உணவு தரம் குறைவாக இருத்தல், 
காலாவாதியான உணவுப்பொருள்கள் விற்பனை செய்வது, உணவு பொட்டலத்தில், இந்திய உணவுப் பாதுகாப்புத் துறையின் பதிவு, உரிமம் எண், தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி அச்சிடப்படாத பொருள்கள் விற்பனை செய்தல், அதுகுறித்த புகார்களை 94440-42322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம். 
நுகர்வோர் அளிக்கப்பட்ட புகார்களுக்கு 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்,டு புகார் அளித்த நபருக்கு உரிய பதில் அளிக்கப்படும். 
தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை ஆணையர், அனைத்து உணவு நிறுவனங்களிலும் தனியார் மற்றும் அரசு விடுதிகள் உள்பட வாட்ஸ் அப் எண் ஒட்டுவதற்கு உத்தரவிட்டுள்ளார். உணவு பாதுகாப்புத்துறை உரிமம், பதிவு சான்றிதழ் ஏராளமானோர் பெற்றுள்ளனர். உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெற்றவர்கள் சான்றிதழை கடையின் முன்பகுதியில் நுகர்வோர் மற்றும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும். உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிமம், பதிவு சான்றிதழ் பெறாதவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பெற  வேண்டும். 
பெரம்பலூர் மாவட்டத்தில் அம்மா உணவகம், ஆவின் நிறுவனங்கள், உணவுப்பொருள்கள் விற்பனை மற்றும் கொள்முதல் அதிகம் செய்பவர்கள் உணவு பாதுகாப்புத்துறையில் உரிமம் பெறுவது அவசியமாகும்.     
உணவுப் பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவுச்சான்றிதழ் குறித்த விளக்கங்களுக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 2 ஆம் தளத்தில் இயங்கும் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலரை 04328-224033 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார். நிகழ்ச்சியில், மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் செளமியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/21/உணவுப்பொருள்கள்-புகாரை-கட்செவி-அஞ்சலில்-தெரிவித்தால்-24-மணி-நேரத்தில்-நடவடிக்கை-2867572.html
2867571 திருச்சி பெரம்பலூர் 100% தேர்ச்சிக்கு ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும் : ஆட்சியர்  DIN DIN Wednesday, February 21, 2018 08:29 AM +0530 அரசு பொதுத்தேர்வில், பெரம்பலூர் மாவட்டம் 100 சதவீத தேர்ச்சி பெற ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும் எந வலியுறுத்தியுள்ளார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா. 
நடைபெற உள்ள அரசு பொதுத் தேர்வுகளை நடத்துவது குறித்து, பெரம்பலூர் ஆட்சியரகக் கூட்டரங்கில், அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
இக்கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியர் மேலும் பேசியது:  மார்ச் மாதம் முதல் 10 ஆம் வகுப்பு மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு வகுப்புகளுக்கு அரசு பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. அதையொட்டி, தேர்வுகளை சிறப்பாக நடத்துவதற்காக அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நடப்பு கல்வியாண்டில் மார்ச் 1 முதல் ஏப். 6 ஆம் தேதி வரை நடைபெற உள்ள மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வில் 4,403 மாணவர்களும், 4,528 மாணவிகளும் என மொத்தம் 70 பள்ளிகளைச் சேர்ந்த 8,931 நபர்கள் 27 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.  
மார்ச் 7 முதல் ஏப். 16 ஆம் தேதி வரை நடைபெற உள்ள மேல்நிலை முதலாமாண்டு தேர்வில் 4,284 மாணவர்களும், 4,318 மாணவிகளும் என மொத்தம் 72 பள்ளிகளைச் சேர்ந்த 8,602 நபர்கள் 27 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.  
மார்ச் 16 முதல் ஏப். 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ள 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 4,947 மாணவர்களும், 4,234 மாணவிகளும் என மொத்தம் 135 பள்ளிகளைச் சேர்ந்த 9,181 நபர்கள் 37 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர். 
அரசு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளின் வசதிக்காக, தேவையான அளவில் தேர்வு மையங்களுக்கு சென்று வர பேருந்துகள் இயக்குவதற்கும், தேர்வு நடைபெறும்போது மின் தடை நிகழாமல் இருப்பதற்கும், தேர்வு  மையங்களில் மாணவ, மாணவிகளுக்குத் தேவையான கழிவறை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.  எனவே, அரசு தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகள் படிப்பில் முழு கவனம் செலுத்தி, 100 சதவீத தேர்ச்சி என்ற நிலையை அடைய, அனைத்து ஆசிரியர்களும் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்றார் ஆட்சியர் சாந்தா. 
முதன்மைக் கல்வி அலுவலர் தி. அருள்மொழிதேவி, வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், கூடுதல் கண்காணிப்பாளர் ஞான. சிவக்குமார், மாவட்ட கல்வி அலுவலர் பிருத்திவிராஜன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ரோஸ்நிர்மலா, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் பிரேம்குமார், மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/21/100-தேர்ச்சிக்கு-ஆசிரியர்கள்-ஒத்துழைக்க-வேண்டும்--ஆட்சியர்-2867571.html
2867570 திருச்சி பெரம்பலூர் பிப். 23- இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் DIN DIN Wednesday, February 21, 2018 08:29 AM +0530 பெரம்பலூர் ஆட்சியரகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் பிப். 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் பிப். 23 ஆம் தேதி காலை 10 மணியளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. 
இக்கூட்டத்தில், வேளாண்மை சம்பந்தமான நீர்ப்பாசனம், கடனுதவிகள், வேளாண் இடுபொருள்கள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டுக்கான நலத்திட்டங்கள் மற்றும் முறையீடுகள் குறித்து விவாதிக்கப்படும்.
எனவே, பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள், விவசாயிகள் சங்கப் பிரமுகர்கள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/21/பிப்-23--இல்-விவசாயிகள்-குறைதீர்-கூட்டம்-2867570.html
2867569 திருச்சி பெரம்பலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆண்டு விழா DIN DIN Wednesday, February 21, 2018 08:28 AM +0530 பெரம்பலூர் புதிய மதனகோபாலபுரத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியின் 6- வது ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா, கடந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை 
பெற்ற மாணவிகளுக்கும், 100 சதவீத தேர்ச்சி பெற்றுத்தந்த ஆசிரியர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.  பள்ளி முதல்வர் கல்யாணராமன் ஆண்டறிக்கை வாசித்தார். தொடர்ந்து, கேந்திரியா வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகளின் பரத நாட்டியம், கரகம், ஒயிலாட்டம், ஆங்கில நாடகம், ஹிந்தி நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
விழாவில், அகில இந்திய வானொலி நிலையத்தின் நிர்வாக இயக்குநர் நடராஜன் உள்பட ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/21/கேந்திரிய-வித்யாலயா-பள்ளி-ஆண்டு-விழா-2867569.html
2867568 திருச்சி பெரம்பலூர் வாகனம் மோதி புள்ளிமான் சாவு DIN DIN Wednesday, February 21, 2018 08:28 AM +0530 பெரம்பலூர் அருகே, செவ்வாய்க்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழந்தது. 
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நெடுவாசல் பிரிவு சாலை அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை ஒன்றரை வயது புள்ளி மான் ஒன்று சாலையைக் கடக்க முயன்றபோது, அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம்  மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. தகவலறிந்த வனத்துறையினர் மானை மீட்டு கால்நடை மருத்துவர்களின் உதவியுடன் பரிசோதனை மேற்கொண்டு, சித்தளி வனப்பகுதியில் புதைத்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/21/வாகனம்-மோதி-புள்ளிமான்-சாவு-2867568.html
2866619 திருச்சி பெரம்பலூர் பெரம்பலூர், அரியலூரில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு DIN DIN Tuesday, February 20, 2018 01:27 AM +0530 பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க் கூட்டத்தில் நிவாரண உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
பெரம்பலூர் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க் கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியர் வே. சாந்தா, பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுதாரருக்கு குறித்த காலத்தில் உரிய பதில் அளிக்குமாறு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், கீழப்புலியூர் (தெற்கு) கிராம நிர்வாக அலுவலர் சோலைமுத்து, பணியின்போது உயிரிழந்ததால், அவரது வாரிசு எஸ்.எஸ். ராஜதுரைக்கு, கருணை அடிப்படையில் பெரம்பலூர் கோட்டத்தில் கிராம நிர்வாக அலுவலராகப் பணிபுரிவதற்கான பணி நியமன ஆணை, கிணற்றில் இருந்து தவறி விழுந்த வாலிகண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்த சர்தார்கான் மகன் ரியாஸ் அகமது குடும்பத்தினருக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 50 ஆயிரத்துக்கான காசோலை ஆகியவற்றை வழங்கினார் ஆட்சியர் சாந்தா.
கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப் பட்டா என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொது மக்களிடமிருந்து 169 மனுக்கள் பெறப்பட்டன.
இதில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதர், வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் மனோகரன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் பாரதிதாசன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
அரியலூரில்...
அரியலூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 19 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சத்து 65 ஆயிரத்து 958 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் க.லட்சுமிபிரியா வழங்கினார்.
கூட்டத்துக்கு அவர் தலைமை வகித்து,பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அளித்த 340 கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில், கலப்பு திருமண நிதியுதவி திட்டம் மற்றும் முதலவரின் ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் பட்டம் பெற்ற 5 நபர்களுக்கு தலா ரூ.50,000 வீதம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலைகள் மற்றும் தலா 4 கிராம் தங்க நாணயம் வீதம் 20 கிராம் தங்க நாணயங்கள், பட்டம் அல்லாதோர் 12 நபர்களுக்கு தலா ரூ.50,000 வீதம் ரூ.6 லட்சத்திற்கான காசோலையினை மற்றும் தலா 4 கிராம் தங்க நாணயம் வீதம் 48 கிராம் தங்க நாணயங்கள்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.14,870 மதிப்பில் செயற்கை அவயங்கள், 1 பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு ரூ.1,088 மதிப்பில் பிரெய்லி கை கடிகாரம் என மொத்தம் 19 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சத்து 65 ஆயிரத்து 958 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
கூட்டத்தில், மாவட்ட சமூக அலுவலர் ப.பூங்குழலி,சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் ஜெ.பாலாஜி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ஆர்.பாலாஜி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/20/பெரம்பலூர்-அரியலூரில்-நலத்திட்ட-உதவிகள்-அளிப்பு-2866619.html
2866617 திருச்சி பெரம்பலூர் அரசுப் பள்ளியில் தமிழ்த் தாத்தா உ.வே.சா பிறந்தநாள் விழா DIN DIN Tuesday, February 20, 2018 01:27 AM +0530 பெரம்பலூர் பகுதியில் சில காலம் தங்கித் தமிழ் பயின்ற தமிழ்த் தாத்தா உ.வே.சா 164 -வது பிறந்த நாள் விழா, பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம், காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில், தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள உத்தமதானபுரம் எனும் கிராமத்தில் வேங்கட சுப்பையர் - சரசுவதி அம்மையார் தம்பதிக்கு புதல்வராக கடந்த 19.2.1855-இல் உ.வே.சாமிநாத அய்யர் பிறந்தார்.
தமிழகத்தின் பல பகுதிகளில் பழந்தமிழ் இலக்கண, இலக்கியங்கள் ஓலைச்சுவடிகளைத் தேடித் தேடி சேகரித்து, விடுபட்ட இலக்கண, இலக்கிய பகுதிகளை சீர்படுத்தி அவற்றை முழுமையாக அச்சிட்டார்.
இவ்வாறு, தம் வாழ்நாள் முழுவதும் தமிழ் மொழிக்காக உழைத்தவர் தமிழ்த்தாத்தா என்றழைக்கப்படும் உ.வே.சாமிநாத அய்யர். உ.வே.சா, தமது இளமைக்காலத்தில் பெரம்பலூர், குன்னத்தில் சிதம்பரம்பிள்ளை, காருகுடி கஸ்தூரி ஐயங்கார், செங்குணம் விருத்தாசல ரெட்டியார் ஆகியோரிடம் முறைப்படி தமிழ் இலக்கண, இலக்கியங்களை கற்றறிந்ததாக தனது என் சரித்திரம் நூலில் தெரிவித்துள்ளார்.
இத்தகைய தமிழ் அறிஞருக்கு, 6 மாத காலம் தொடர்ச்சியாக தங்கியிருந்த
காருகுடி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் அவரது பிறந்தநாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் பேச்சு போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி ஆகியவை நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நூல்கள், துணிப்பைகள் பரிசாக வழங்கப்பட்டன.
தமிழ்க்காடு அமைப்பு சார்பில், அரசுப் பள்ளிக்கு உ.வே.சா உருவப்படம் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) வரதராசன் தலைமை வகித்தார். இதில், ஊரக வளர்ச்சித்துறை முன்னாள் உதவி இயக்குநர் ச. அசன் முகம்மது, சூழலியலாளர் ரமேசு கருப்பையா, தமிழ்க்களம் இளவரசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தமிழ் இலக்கிய மன்றத் தலைவர் ஆ. ராஜேந்திரன் வரவேற்றார். ஆசிரியர் ச. பிரபு நன்றி கூறினார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/20/அரசுப்-பள்ளியில்-தமிழ்த்-தாத்தா-உவேசா-பிறந்தநாள்-விழா-2866617.html
2866616 திருச்சி பெரம்பலூர் கூலித்தொழிலாளி மீது குண்டர் சட்டம்: குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு DIN DIN Tuesday, February 20, 2018 01:27 AM +0530 பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே, கூலித்தொழிலாளி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய போலீஸார் நடவடிக்கை எடுப்பதை நிறுத்தக்கோரி, அவரது குடும்பத்தினர் பெரம்பலூர் ஆட்சியர் வே. சாந்தாவிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
இதுகுறித்து பெரம்பலூர் மாவட்டம், பென்னக்கோணம் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மனைவி கமலம், தனது குழந்தைகளுடன் அளித்த மனு:
எனக்கு 4 குழந்தைகள் உள்ளனர். கூலித்தொழிலாளியான எனது கணவர் பன்னீர்செல்வம், கடந்த 4 ஆம் தேதி குடும்பத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்காக, அரசு மதுபானக் கடையிலிருந்து 10 மதுபாட்டில்களை வாங்கி வந்தபோது, மங்கலமேடு போலீஸார் வழிமறித்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது, அவர் மீது கள்ளச்சாராயம் வைத்திருந்ததாக வழக்கு பதிந்து, குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
எனது கணவர் போலீஸாரால் கைது செய்யப்பட்ட நாள் முதல், அவரது தாய் அஞ்சலம் உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே, உரிய விசாரணை மேற்கொண்டு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் வழக்கு பதிவு செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
சட்ட விரோதமாக மது அருந்தும் கூடம்:
பெரம்பலூர் மாவவட்டம், குன்னம் அருகேயுள்ள பெருமத்தூர் கிராமத்தைச் சேர்ந்த குள்ளன் மகன் ஜோதி உள்ளிட்டோர் அளித்த மனு:
லப்பைக்குடிகாடு செல்லும் பாதையில், தனியார் பேருந்து உரிமையாளருக்குச் சொந்தமான இடத்தில், அரசு மதுபானக் கடை கண்காணிப்பாளர் ரமேஷ் மற்றும் அழகு துரை, முத்தையா, மணிவாசகம், துரை ஆகியோர், அரசு அனுமதியின்றி, அரசு மதுபானக் கடைக்கு அருகே மது அருந்தும் கூடம் நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருகிறது. எனவே, அனுமதியின்றி செயல்பட்டு வரும் மது அருந்தும் கூடத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/20/கூலித்தொழிலாளி-மீது-குண்டர்-சட்டம்-குடும்பத்தினர்-ஆட்சியரிடம்-மனு-2866616.html
2866615 திருச்சி பெரம்பலூர் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு DIN DIN Tuesday, February 20, 2018 01:27 AM +0530 கடந்த 2009 ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதலைக் கண்டித்து, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் திங்கள்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
கடந்த 2009 ஆம் ஆண்டு பிப். 19 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் தமிழகப் போலீஸார் அத்துமீறி நுழைந்து வழக்குரைஞர்கள், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதில் பலர் பலத்த காயமடைந்தனர். நீதிமன்றப் பொருள்கள், நீதிமன்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் ஆகியவற்றை சேதப்படுத்தியதோடு, நீதிபதிகளையும் தாக்கினர். எனவே, அந்த நாளை வழக்குரைஞர்கள் ஆண்டுதோறும் கருப்பு தினமாக அனுசரித்து வருகின்றனர்.
அதன்படி, பெரம்பலூரில் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் திங்கள்கிழமை ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்ட பார் அசோசியேசன் தலைவர் இ. வள்ளுவன் நம்பி, பெரம்பலூர் மாவட்ட அட்வகேட் அசோசியேசன் தலைவர் சுந்தர்ராஜன் ஆகியோர் தலைமையில், சுமார் 300-க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால், பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீதிமன்றப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/20/வழக்குரைஞர்கள்-நீதிமன்றப்-பணி-புறக்கணிப்பு-2866615.html
2866613 திருச்சி பெரம்பலூர் ஆன் லைன் பதிவில் குளறுபடி :பத்திரப் பதிவு எழுத்தர்கள் வேலைநிறுத்தம் DIN DIN Tuesday, February 20, 2018 01:26 AM +0530 பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சார் பதிவு அலுவலகங்களில் ஆன் லைன் பதிவில் உள்ள குளறுபடிகளைக் களையக் கோரி, பத்திரப் புதிவு எழுத்தர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
தமிழகத்தில் உள்ள 154 சார் பதிவு அலுவலகங்களிலும் கடந்த ஜூலை 17 ஆம் தேதி முதல் பரிசோதனை முயற்சியாக ஆன் லைன் மூலம் பத்திரப்பதிவு மேற்கொள்ளப்பட்டது.
இந்த அலுவலகங்களில், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது இருந்த நடைமுறை சிக்கல்கள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதற்காக மண்டலம், மாவட்டம் வாரியாக கருத்துகேட்புக் கூட்டமும் நடத்தப்பட்டது. இதன்மூலம் பொதுமக்கள் வைக்கும் கருத்துகளை வைத்து சில மாற்றங்கள் செய்யப்பட்டது.
தொடர்ந்து, சார் பதிவாளர் அலுவலகத்தில் மென்பொருள் திட்டத்தின் கீழ் ஆன் லைன் பத்திரப்புதிவு முறையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 12 ஆம் தேதி தொடக்கி வைத்தார். இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் ஆன் லைன் பத்திரப்பதிவு முறை அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், ஆன் லைன் மூலம் பதிவு செய்யப்படும் பத்திரங்களில் ஏற்படும் குளறுபடிகளை களைய வலியுறுத்தி, பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர் ஆகிய இடங்களில், பத்திரப் பதிவு எழுத்தர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/20/ஆன்-லைன்-பதிவில்-குளறுபடி-பத்திரப்-பதிவு-எழுத்தர்கள்-வேலைநிறுத்தம்-2866613.html
2866339 திருச்சி பெரம்பலூர் ஆளுமை மிக்க சமுதாயத்தை உருவாக்க வேண்டும் DIN DIN Monday, February 19, 2018 08:25 AM +0530 மகத்தான ஆளுமை மிக்க சமுதாயத்தை உருவாக்க வேண்டும்  என்றார் திரைப்பட நடிகர் ஜோ. மல்லூரி. 
பெரம்பலூர் புறநகர்ப் பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சி மைதானத்தில், கடந்த 16 ஆம் தேதி தொடங்கிய 7-வது புத்தகக் கண்காட்சி பிப். 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 
இக் கண்காட்சியில், சனிக்கிழமை இரவு பங்கேற்று, தமிழ் எங்கள் உயிர் மூச்சு என்னும் தலைப்பில் மேலும் அவர் பேசியது: 
நம் சமூகம், சீனர்கள், யூதர்களைப் போல் மிகப்பெரிய ஆளுமைகளாக வர வேண்டும் என்பது என் ஆசை. 
நல்ல ஆளுமைமிக்க ஒரு குழந்தையை வளர்ப்பது கோயில் கட்டுவதற்கு சமம். குழந்தைகளை நல்லவிதமாக வளர்க்க 7 விஷயங்கள் அவசியம். ஆண்டுக்கு ஒருமுறை முதியோர், அனாதை இல்லங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள். 6 மாதத்துக்கு ஒருமுறை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள். 3 மாதத்துக்கு ஒருமுறை குடும்பத்துடன் தொலைதூரப் பயணம் செல்லுங்கள். 2 மாதத்துக்கு ஒருமுறை ஒரு நல்ல புத்தகம் வாங்கிக் கொடுத்து வாசிக்கச் சொல்லுங்கள். மாதம் ஒருமுறை உங்கள் குழந்தைகளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மெளன விரதம் இருக்கச் சொல்லுங்கள். 
வாரம் ஒருமுறை உங்கள் வீட்டுக் கழிவறையை சுத்தம் செய்யச் சொல்லுங்கள். நாள்தோறும் ஒருமுறை மூதாதையரை நினைக்கச் சொல்லுங்கள். 
இந்த 7 விஷயங்களுக்குள் மனிதனின் மகத்தான சிந்தனை ஒளிந்திருக்கிறது. இதைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தால், ஒரு மகத்தான ஆளுமைமிக்க சமூகத்தை உருவாக்க முடியும். 
தாய்மொழிப் பற்றை என்றைக்கு ஒரு சமூகம் கையில் எடுக்கிறதோ, உயிர் மூச்சாகக் கருதி போற்றுகிறதோ அன்றுதான் அந்த சமூகம் அடுத்தக் கட்டத்துக்கு உயர முடியும். 
போராட்டங்களைத் தாங்கி வெற்றி பெறும் மனிதர்களாக நமது வருங்காலச் சமூகம் உருவாக வேண்டும். வருங்கால தலைமுறை நன்றாகப் படிக்க வேண்டும். நல்ல படைப்புகளை உருவாக்க வேண்டும். வாசிக்கும்போது குறைந்த நேரமும், வாசித்து முடித்தவுடன் அதிக நேரம் யோசிக்கவும் செய்வதே மிகச்சிறந்த படைப்பு. 
தனக்கு எழுந்த சிந்தனைகளை வரிகளாகவும், எழ வேண்டிய சிந்தனைகளை வரிகளுக்கு இடையேயும் வைக்கும் சூட்சுமம் தெரிந்தவர்தான் மிகச் சிறந்த படைப்பாளியாக இருக்க முடியும். உலகில் 84 நாடுகளில்தான் ஆங்கிலேயர் வசிக்கின்றனர். 
ஆனால், 152 நாடுகளில் தமிழ் சமூகம் விரவியிருக்கிறது. இந்த பூமியில் ஆதிக்குடிகளாக உருவானவன் தமிழன். நிலத்தை 5 ஆகவும், காற்றை 4 ஆகவும், மொழியை 3 ஆகவும், வாழ்க்கையை இரு கூறுகளாகவும் பிரித்தவன் தமிழன். 
இப்படி பழம்பெரும் பாரம்பரியமிக்க தமிழ் மொழியை இன்றைய தலைமுறை தங்கள் கைகளில் வைத்திருக்கவில்லையே என்பது கவலையளிக்கிறது. வருங்காலச் சந்ததியினர் தாய்மொழியை மறக்கக் கூடாது. தாய்மொழிப் பற்றுடன் பீடு நடைபோட்டு இந்த சமூகத்தை உயர்த்த வேண்டும் என்றார் நடிகர் மல்லூரி.
தொடர்ந்து, கவிஞர் நந்தலாலா தலைமையில் கலையும்- இலக்கியமும் மக்களுக்கு மருந்தா, விருந்தா எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.  முன்னதாக, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/19/ஆளுமை-மிக்க-சமுதாயத்தை-உருவாக்க-வேண்டும்-2866339.html
2866338 திருச்சி பெரம்பலூர் மனநிலையை மாற்றும் ஆற்றல் இலக்கியங்களுக்கு உண்டு DIN DIN Monday, February 19, 2018 08:25 AM +0530 மனித மனநிலையை மாற்றுகிற ஆற்றல் இலக்கியங்களுக்கு உண்டு என்றார் அரியலூர் அரசு கலைக் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் க. தமிழ்மாறன்.
பெரம்பலூரில், பதியம் இலக்கியச் சங்கமம் சார்பில் நான் ரசித்த இலக்கியக் காட்சி எனும் தலைப்பில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேச்சரங்கிற்கு தலைமை வகித்த அவர் மேலும் பேசியது: 
மக்களின் மாண்பிற்குரிய உயிர்த்துடிப்பான ஒன்று இலக்கியமாகும். விளக்கின் எண்ணெயும், திரியும், தீபமுமாக இலக்கியம் விளங்குவதோடு, மனித வாழ்வைப் பண்படுத்தும் ஆற்றல் பெற்றுள்ளது. நன்மை, தீமைகளை மனித மாண்புடன் பதியமிடச் செய்வது இலக்கியங்களே. மனித மனநிலையை சட்டென்று மாற்றுகிற ஆற்றல் இலக்கியங்களுக்கு உண்டு. 
நிறைய இலக்கியங்கள் புரட்சிக்கு வித்திட்டன. சில இலக்கியங்கள் பிரமிப்பை ஏற்படுத்தியதுண்டு. நம் சங்க இலக்கியங்கள் தேன் துளிகள், நீதி இலக்கியங்கள் நல்ல ஆசிரியர்கள். காப்பியங்கள் சிறந்த கதை சொல்லிகள். நாட்டுப்புறவியல் தெம்மாங்குடன் விரல்களைத் தாளமிடச் செய்கின்றன. எந்த வடிவில் இருந்தாலும், இலக்கியங்கள் மிகுந்த ரசனைக்குரியன. இலக்கியம் படிப்போம், படைப்போம் என்றார் அவர்.   
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திருச்சி அன்பில் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியர் மா. சரவணவேல், இலக்கியங்களின் இயல்புகள் மற்றும் கவிஞர் அறிவுமதியின் நட்புக் காலம் நூலின் சிறப்புகள் குறித்து பேசினார்.  
அரியலூர் அரசு கலைக் கல்லூரியின் தமிழாய்வுத் துறை முனைவர் பட்ட ஆய்வாளர் த. தர்மராஜ் முன்னிலையில், வரலாற்று ஆய்வாளர் ஜெயபால், ஆசிரியர் பயிற்றுநர் பொன்மலர், கவிஞர்கள் தேவன்பு, அரியலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ஜான்சிராணி, கதிர்மதி, அஞ்சுகம், பிரசாந்த், துரைமுருகன், மயில்வாகனன், நிகில் ஆகியோர் நான் ரசித்த இலக்கியக் காட்சி எனும் தலைப்பில் பேசினர். 
அரியலூர் அரசு கலைக் கல்லூரி முதுகலைத் தமிழ் மாணவர் சிவாஜி வரவேற்றார். முனைவர் பட்ட ஆய்வாளர் மதன்ராஜ் நன்றி கூறினார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/19/மனநிலையை-மாற்றும்-ஆற்றல்-இலக்கியங்களுக்கு-உண்டு-2866338.html
2866337 திருச்சி பெரம்பலூர் கூடுதல் காவல் நிலையங்களை அமைக்க வலியுறுத்தல் DIN DIN Monday, February 19, 2018 08:24 AM +0530 பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்க கூடுதலாக காவல் நிலையங்கள் அமைக்க வேண்டுமென வணிகர் நலச்சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பெரம்பலூரில், அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பான வணிகர் நலச்சங்க ஆலோசனைக் கூட்டம், மாவட்டத் தலைவர் எஸ்.பி. நடராஜன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட பொதுச்செயலர் எஸ். நல்லதம்பி, துணைப் பொதுச் செயலர் பி. சண்முகம், பொருளாளர் பி. ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மே 5 ஆம் தேதி வணிகர் தினத்தை முன்னிட்டு பெரம்பலூரில் சங்க மாநாடு நடத்துவது. பெரம்பலூர் நகருக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் வாரத்துக்கு 2 நாள்கள் மட்டுமே கொள்ளிடம் கூட்டு குடிநீர் வழங்கப்படுகிறது. 
தட்டுபாடின்றி குடிநீர் வழங்குவதற்காக, அரியலூர் மாவட்டம், திருமழப்பாடியில் இருந்து பெரம்பலூர் நகருக்கு மட்டும் பிரத்யேகமாக குடிநீர் வழங்குவதற்காக கொண்டுவரப்பட்ட ரூ. 85 கோடி மதிப்பிலான குடிநீர் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.  பெரம்பலூர் ரோவர் நூற்றாண்டு வளைவு அருகே சிக்னலை திறந்து, போக்குவரத்து காவலர்களை பணியில் அமர்த்தி, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வரும் மாவட்ட காவல் துறைக்கு நன்றி தெரிவிப்பது. பெரம்பலூர், துறைமங்கலம் நான்கு சாலை சந்திப்பு மற்றும் பெரம்பலூர் சுற்றுப்புற கிராமங்களில் அடிக்கடி நிகழும் திருட்டு சம்பவங்களை தடுக்கவும், சட்டம், ஒழுங்கை பராமரிக்கவும் கூடுதலாக காவல் நிலயங்கள் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  
வணிகர்களின் நலனுக்காக மத்திய ஜி.எஸ்.டி. வரி அலுவலகத்தையும், மாவட்ட பதிவு அலுவகத்தையும் பெரம்பலூரில்  திறக்க வேண்டும்.  பெரம்பலூர்- வடக்குமாதவி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, வடக்குமாதவி சாலையை ஒருவழி சாலையாக மாற்றியமைத்து,. உழவர் சந்தை மைதானத்தின் வடக்குப் பகுதியில் தார்சாலை அமைத்து எளம்பலூர்- வடக்குமாதவி சாலைகளை இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  வணிகர் நலச்சங்கத்தினர் பங்கேற்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/19/கூடுதல்-காவல்-நிலையங்களை-அமைக்க-வலியுறுத்தல்-2866337.html
2866336 திருச்சி பெரம்பலூர் தமிழகப் பெண்களே அழகு: நடிகர் சந்தானம் DIN DIN Monday, February 19, 2018 08:24 AM +0530 கேரளப் பெண்களை விட தமிழகப் பெண்களே அழகு என்றார் திரைப்பட நடிகர் சந்தானம்.
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்கள் சார்பில், கல்லூரி வளாகத்தில் நட்சத்திர கலை விழா வியாழக்கிழமை தொடங்கியது. 
விழாவில், திரைப்படப் பின்னணி பாடகர்கள் கார்த்திக், வேல்முருகன், பாடகி சக்தி சிரீ ஆகியோரின் இன்னிசை நிகழ்ச்சிகளும், வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற விழாவில், நடன இயக்குநர் ஷெரீப் மற்றும் குழுவினரின் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 
விழாவின் நிறைவாக சனிக்கிழமை இரவு நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சந்தானம் மேலும் பேசியது:
பாலிடெக்னிக் வரை படித்த நான், எனது நகைச்சுவை திறமையால் தொலைக்காட்சி மற்றும் திரைத் துறைக்கு வந்தேன். அண்மையில் கேரள நடிகையின் கண்ணசைவைக்கொண்டு, அந்த மாநிலப் பெண்களே அழகு எனக் கூறி வருகின்றனர். ஆனால், தமிழக பெண்களின் அழகுக்கு ஈடு இணை யாரும் கிடையாது என்றார் சந்தானம்.
தொடர்ந்து, திரைப்பட நடிகைகள் ஆண்ட்ரியா, அஸ்னா ஜாவேரி ஆகியோர், கல்லூரி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினர். தொடர்ந்து, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில், கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன், கல்வி நிறுவனங்களின் செயலர் பி. நீல்ராஜ் மற்றும் கல்லூரி முதல்வர்கள், துணை முதல்வர்கள், பேராசிரியர்கள் உள்பட சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/19/தமிழகப்-பெண்களே-அழகு-நடிகர்-சந்தானம்-2866336.html
2866335 திருச்சி பெரம்பலூர் வளாக தேர்வில் 50 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை DIN DIN Monday, February 19, 2018 08:24 AM +0530 வளாக நேர்முகத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் அளிக்கப்பட்டது.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக நேர்முகத் தேர்வு லூகாஸ் டி.வி.எஸ் நிறுவனத்தால் அண்மையில் நடத்தப்பட்டது.  நேர்காணலை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் முனைவர் ம. சிவசுப்ரமணியம் தொடக்கி வைத்தார், கல்வி நிறுவனங்களின் செயலர் எம்.எஸ். விவேகானந்தன், கல்லூரி முதல்வர் அ. ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  
இந்த வளாக நேர்காணலில், மின்னியியல் மற்றும் மின்னணுவியல் துறையில் பயிலும் 68 மாணவர்களுக்கு நேர்காணல் மற்றும் கலந்தாய்வு நடத்தப்பட்டு, 50 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தொடர்ந்து, நேர்முகத் தேர்வில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார் லூகாஸ் டி.வி.எஸ் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டுத் துறை அலுவலர் விஸ்வநாதன். 
நிகழ்ச்சியில், துறைத் தலைவர் மற்றும் எலக்ட்ரிக்கல் துறை விரிவுரையாளர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/19/வளாக-தேர்வில்-50-மாணவர்களுக்கு-பணி-நியமன-ஆணை-2866335.html
2866334 திருச்சி பெரம்பலூர் தக்காளிக்கு குறைந்தபட்ச ஆதார விலை தேவை DIN DIN Monday, February 19, 2018 08:23 AM +0530 தக்காளி விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
பெரம்பலூர் மாவட்டத்தில் நொச்சியம், சத்திரமனை, வேலூர், பொம்மனப்பாடி, அன்னமங்கலம், அனுக்கூர் உள்ளிட்ட பல கிராமங்களில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் கிணற்று பாசனம் மற்றும் பசுமைக்குடில், சொட்டுநீர் பாசனத்தை பயன்படுத்தி ஆண்டு முழுவதும் தக்காளி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
ஆடி, தை பட்டங்களில் மகரந்தச் சேர்க்கை அதிகரித்து பூக்கள் அதிகளவில் காணப்படும். இதனால், காய்கள் நன்கு பிடித்து மகசூலும் அதிகரிக்கும்போது,  காய்களும் பெரிதாகி, தரமானதாக இருக்கும். ஏக்கருக்கு குறைந்தபட்சம் சுமார் 12 முதல் 15 டன் வரை மகசூல் கிடைக்கும். இந்நிலையில், அண்மையில் பெய்த மழையால், விவசாயிகளுக்கு கூடுதலாக மகசூல் கிடைத்துள்ளது. கோடைக்காலங்களில் ஒரு பெட்டி தக்காளி ரூ. 1,000 வரை விற்பனையாகிறது. மகசூல் அதிகரித்துள்ளதோடு, வெளி மாநிலங்களில் இருந்து வரத்தும் அதிகளவில் உள்ளதால் விலை குறைந்து 15 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ. 90-க்கு விற்கப்படுகிறது. இதனால் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ள விவசாயிகள் வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளனர். 
கடந்த 2 மாதங்களுக்கு முன் ஒரு கிலோ தக்காளி ரூ. 120 வரை விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது விவசாயிகளிடமிருந்து ரூ. 3-க்கும் குறைவாக கொள்முதல் செய்யப்பட்டு நுகர்வோரிடம் ரூ. 6-க்கு விற்கப்படுகிறது. தக்காளி விலை குறைந்திருப்பது நுகர்வோரிடையே வரவேற்பைப் பெற்றிருந்தாலும், விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 
எனவே, விலையில் உள்ள ஏற்ற, இறக்கங்களைக் கட்டுப்படுத்த நிலையான விலை நிர்ணயிக்க வேண்டும். கொப்பரைத் தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதைப் போல, தக்காளிக்கும் ஒரு பெட்டிக்கு ரூ. 100 என குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
மேலும், வியாபாரிகள் வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்து தமிழகத்துக்கு விற்பனைக்கு கொண்டு வருவதால் இயற்கையாகவே விலை உயர்கிறது. இதனால், தக்காளிக்கு நிலையான விலை நிர்ணயிக்க முடியவில்லை. தக்காளிக்கு மதிப்புக் கூட்டல் மற்றும் பதப்படுத்தும் தொழிற்கூடங்கள் இல்லாதது, மக்களின் உணவுப்பழக்க வழக்கங்களில் உலர் தக்காளி, தக்காளி பவுடர் இல்லாததும் விலை உயர்வு, வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகும். 
தக்காளி ஊறுகாய் தயாரிப்பு போல, மதிப்புக் கூட்டுப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அமைக்கவோ அல்லது குடிசைத் தொழில் அமைக்கவோ விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும். விவசாயிகளை ஒன்றிணைத்து, அந்தந்தப் பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் குளிரூட்டும் கிடங்குகள் அமைத்து, அதன்மூலம் தக்காளியை இருப்பு வைக்க வழிவகை செய்தால் மட்டுமே தக்காளி சாகுபடியில் ஏற்படும் இழப்பை குறைத்து, பரப்பளவை அதிகரிக்க முடியும்.
இதுகுறித்து பெரம்பலூர் மாவட்டத்தில் தக்காளி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் சிலர் கூறியது: 
மாற்றுப் பயிராக பெரும்பாலான விவசாயிகள் பசுமைக்குடில் உள்ளிட்ட நவீன யுக்திகளை கையாண்டு பல பகுதிகளில் ஆண்டு முழுவதும் தக்காளி சாகுபடி செய்து வருகிறோம். கோடை காலத்தில் அதிகரிக்கும் விலை, தற்போது ஒரு பெட்டி தக்காளி ரூ. 80-க்கும் குறைவாக விற்கும் நிலை ஏற்படுகிறது.
இதனால், சாகுபடி செலவு, அறுவடைக்கூலி, வாகன ஏற்றுமதி செலவுக்கு கூட கிடைக்காததால் பெரும்பாலான விவசாயிகள் தக்காளிகளை கீழே கொட்டிச் செல்கின்றனர். ஒருசில விவசாயிகள் அறுவடை செய்யாமல் செடிகளிலேயே விட்டு விடுகின்றனர். ஆனால், விலை அதிகரிக்கும்போது மகசூல் இல்லாததால் விவசாயிகளுக்கு எந்த லாபமும் கிடைப்பதில்லை.
இதுபோன்ற ஏற்ற, இறக்கங்களைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்தபட்சமாக பெட்டிக்கு ரூ. 100 என விலை நிர்ணயித்தாலே போதுமானதாகும். ஏக்கருக்கு 12 முதல் 15 டன் கிடைக்கும்போது, ஒரு பெட்டி ரூ. 100-க்கு விற்றால் லாபம் கிடைப்பதோடு, விவசாயிகள் பாதிப்படுவதையும் தடுக்க முடியும். தற்போது வரத்து அதிகரித்துள்ளதால் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது என்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/19/தக்காளிக்கு-குறைந்தபட்ச-ஆதார-விலை-தேவை-2866334.html
2865513 திருச்சி பெரம்பலூர் வி. சி.க நிர்வாகிகள் ஆலோசனை DIN DIN Sunday, February 18, 2018 02:33 AM +0530 பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியம் (கிழக்கு), பிம்பலூர் கிராமத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.  கூட்டத்துக்கு, ஒன்றிய செயலாளர் மா. இடிமுழக்கம் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் சி. தமிழ்மாணிக்கம்,  மாவட்ட நெறியாளர் சு.  திருமாறன், மாநில செயலாளர் வீர. செங்கோலன் ஆகியோர் கட்சி செயல்பாடுகள் குறித்து பேசினர்.  கூட்டத்தில், மறைந்த மூத்த முன்னோடி வழக்குரைஞர் பாண்டிய அரசன் குடும்பத்தினருக்கு நிதி வழங்க வேண்டும். அனைத்து கிளைகளிலும் கல்வெட்டுடன் கொடியேற்ற வேண்டும். அனைத்து சமுதாயத்தினரையும், கட்சியில் இணைக்க வேண்டும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விடுபட்ட பொருப்புகளை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மாவட்ட செய்தித் தொடர்பாளர் மு. உதயகுமார், தொகுதி செயலர் வழக்குரைஞர் ரத்தினவேல் மக்களவை தொகுதி துணைச் செயலர் ச. மன்னர் மன்னன், மாநில துணைச் செயலர்கள் பெரியசாமி, இரா. சீனிவாசராவ், சு. ராசித் அலி உள்பட கலந்துகொண்டனர். ஒன்றிய துணை அமைப்பாளர் பெ. கிருஷ்ணன் வரவேற்றார். பிம்பலூர் கிளை செயலர் மருதமுத்து நன்றி கூறினார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/18/வி-சிக-நிர்வாகிகள்-ஆலோசனை-2865513.html
2865512 திருச்சி பெரம்பலூர் மாநில அளவில் பாலிடெக்னிக்  கல்லூரிகளுக்கான கண்காட்சி DIN DIN Sunday, February 18, 2018 02:33 AM +0530 பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி கூட்ட அரங்கில், மாநில அளவில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான திட்டக் கண்காட்சி - 2018 சனிக்கிழமை நடைபெற்றது. 
விழாவுக்கு, ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம். சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார். செயலாளர் எம்.எஸ். விவேகானந்தன் முன்னிலை வகித்தார்.  அண்ணா பல்கலைக்கழக அமைப்பியல் துறை பேராசிரியர் டாக்டர் வி. ராஜகோபாலன், திருச்சி சேஷசாயி  தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூத்த பேராசிரியர் விஜயகுமார், துவாக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி மின்னணுவியல் துறைத் தலைவர் வி. தமிழரசி ஆகியோர் நடுவர்களாகப் பங்கேற்று, ஆய்வின் முக்கியத்துவம், அரசு மாணவர்களின் ஆய்வுக்கு ஒதுக்கப்படும் நிதி மற்றும் அதன் செயல்பாடு குறித்துப் பேசினர்.   கண்காட்சியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 22-க்கும் மேற்பட்ட பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களின் 69-க்கும் மேற்பட்ட படைப்புகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், சிறந்த படைப்புகளுக்கு துறை வாரியாக முதல் பரிசு ரொக்கம் ரூ. 10 ஆயிரம், 2 ஆம் பரிசு ரூ. 5 ஆயிரம், 3 ஆம் பரிசாக ரூ. 3 ஆயிரம் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. 
தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், தனியார் டயர் தொழிற்சாலை நிறுவனத்தின் முதன்மை மேலாளர் ஜி. ரவிக்குமார், கம்காட்சியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் கேடயம் ஆகியவற்றை வழங்கிப் பாராட்டினார்.  
இதில், மின்ணுவியல் துறைத் தலைவர் இ. சர்மிளா,  சிவில் துறைத்தலைவர் முத்துக்குமார்,  மெக்கானிக் துறைத்தலைவர் அருண்குமார், கணினி துறைத்தலைவர் எம். சரவணன் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் வி. தர்மலிங்கம் நன்றி கூறினார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/18/மாநில-அளவில்-பாலிடெக்னிக்--கல்லூரிகளுக்கான-கண்காட்சி-2865512.html
2865511 திருச்சி பெரம்பலூர் ஊர்ப்புற நூலகத்தில் கருத்தரங்கம் DIN DIN Sunday, February 18, 2018 02:32 AM +0530 பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், கொளக்காநத்தம் ஊர்ப்புற நூலகத்தின் சார்பில் சிந்தனை முற்றம் எனும் தலைப்பிலான கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. 
பள்ளி புத்தகத்திற்கு அப்பால் மாணவர்களின் வாசிப்புத் திறனை வளர்க்கும் நோக்கில், பெரம்பலூர் மாவட்டம், கொளக்காநத்தம் ஊர்ப்புற நூலகத்தின் சார்பாக "வாசிப்பை நேசிப்போம் இயக்கம்' ஏற்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, நடைபெற்ற இந்த கருத்தரங்கத்தில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பேராசிரியர் வைரமணி, "வாசிப்பை சுவாசிப்போம்' எனும் தலைப்பில் பேசினார்.  
 தொடர்ந்து, ஆசிரியர் ராசேந்திரன், "என்னை செதுக்கிய நூல்கள்' எனும் தலைப்பிலும், சமூக ஆர்வலர் சக்கரபாணி "நம்ம ஊர் நூலகம்' எனும் தலைப்பிலும், வாசகர் வட்டத் தலைவரும், ஓய்வுபெற்ற நல்லாசிரியருமான தங்கம் "வாசிப்பால் வளமானேன்' எனும் தலைப்பிலும் பேசினர்.    தொடர்ந்து, இந் நிகழ்ச்சியில் பங்கேற்ற வாசகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு துணிப் பையும், தமிழ் நாள்காட்டியும் இலவசமாக  வழங்கப்பட்டது.  நூலகர் ராசா வரவேற்றார். ஊராட்சி செயலர் ராம்குமார் நன்றி கூறினார்.         

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/18/ஊர்ப்புற-நூலகத்தில்-கருத்தரங்கம்-2865511.html
2865192 திருச்சி பெரம்பலூர் அரசுப் பேருந்து கண்ணாடியை சேதப்படுத்திய 2 பேர் கைது DIN DIN Saturday, February 17, 2018 08:55 AM +0530 பெரம்பலூரில் அரசுப் பேருந்து கண்ணாடியை சேதப்படுத்திய 2 பேரை பெரம்பலூர் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
பெரம்பலூர் திருநகரை சேர்ந்தவர் தமிழரசன் மகன் பன்னீர்செல்வம் (34), கடந்த 14 ஆம் தேதி கொல்லப்பட்டார். 
இவரது இறுதி ஊர்வலம்  பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் சென்றபோது ஊர்வலத்தில் சென்ற 2 பேர், அவ்வழியே சென்ற 2 அரசுப் பேருந்துகளின் கண்ணாடியை கல் வீசி தாக்கி சேதப்படுத்தினர். 
இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து, அரசுப் பேருந்து கண்ணாடியை சேதப்படுத்திய பெரம்பலூர் அன்பு நகரை சேர்ந்த ஏழுமலை மகன் மருதுதுரை (30), சமத்துவபுரத்தை சேர்ந்த செல்லதுரை மகன் கலியமூர்த்தி (32) ஆகியோரை வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/17/அரசுப்-பேருந்து-கண்ணாடியை-சேதப்படுத்திய-2-பேர்-கைது-2865192.html
2865190 திருச்சி பெரம்பலூர் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை DIN DIN Saturday, February 17, 2018 08:54 AM +0530 பெரம்பலூரில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மாவட்டத் தலைவர் சாமி. இளங்கோவன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. 
மாநில செயற்குழு உறுப்பினர் சி. சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். 
திருச்சி கோட்டப் பொறுப்பாளர் எம். சிவசுப்ரமணியம், கோட்ட இணை பொறுப்பாளர்கள் கண்ணன், சிவசாமி, கோட்ட அமைப்பு பொதுச் செயலர் பெரியசாமி ஆகியோர் கட்சியின் செயல்பாடுகள் குறித்து பேசினர். 
தொடர்ந்து, பிப். 23 ஆம் தேதி மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் மாநில அமைப்பு பொதுச் செயலர் கேசவவிநாயகன் ஆகியோர் வருவதையொட்டி முன்னேற்பாடு மற்றும் கூட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 
கூட்டத்தில், மாவட்ட பொதுச் செயலர்கள் சாமிநாதன், இளங்கோவன், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், வழக்குரைஞர் சிவசங்கரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  நகரத் தலைவர் முருகேசன் வரவேற்றார். ஆலத்தூர் ஒன்றிய துணைத் தலைவர் மகாமூர்த்தி நன்றி கூறினார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/17/பாஜக-நிர்வாகிகள்-ஆலோசனை-2865190.html
2865188 திருச்சி பெரம்பலூர் சிறு, குறு தொழில் வளர்ச்சியால் சமுதாயம் மேம்படும் DIN DIN Saturday, February 17, 2018 08:54 AM +0530 சிறு குறு தொழில் வளர்ச்சி சமுதாயத்தின் மேம்பாட்டுக்கு வழி வகுக்கும் என்றார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா. 
பெரம்பலூரில், தமிழ்நாடு சிறு, குறு தொழில் சங்கம் மற்றும் பெரம்பலூர் மாவட்ட சிறு மற்றும் குறு தொழில் சங்கம் சார்பில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு மத்திய, மாநில அரசின் திட்டங்கள் குறித்த விளக்கக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
இக்கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் மேலும் பேசியது:  தொழில் முனைவோராக மாற விரும்பும் அனைவரும் தம்மைப் பற்றியும், தமது திறமை குறித்தும் முழுமையாக தெரிந்துகொள்வது அவசியம். 
அதன் மூலம், நாம் செய்ய விரும்பும் தொழிலை வெற்றிகரமாகவும், மிகச்சிறப்பாகவும் செய்ய முடியும். கிராமப்புறங்களில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பல்வேறு வகையான தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதில், சிறு, குறு தொழில் துறைகள் பங்கேற்றுள்ளன.   சிறு மற்றும் குறு தொழில்களின் வளர்ச்சிக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வகையான திட்டங்களைச் செயல்படுத்துவதுடன், இளைஞர்களுக்கு அரசு வழங்கும் மானிய உதவியுடன் வங்கிக் கடன் பெறவதற்கும் நடவடிக்கை மேற்கொள்கின்றன. 
எனவே, இளைஞர்கள் அனைவரும் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி சமுதாய மேம்பாட்டுக்கு வழிவகை செய்யும் வகையில் சிறு, குறு தொழில்களை சிறப்பாக மேற்கொண்டு, நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்குப் பங்காற்ற வேண்டும் என்றார் ஆட்சியர்.  கூட்டத்தில், தொழில் வணிகத் துறை இணை இயக்குநர் ஜெகதீசன், சிட்கோ கிளை மேலாளர் ஜெயலெட்சுமி, மாவட்டத் தொழில் மைய பொது மேலாளர் ரவீந்திரன், தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய துணை இயக்குநர் மணிகண்டன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ப. அருள்தாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/17/சிறு-குறு-தொழில்-வளர்ச்சியால்-சமுதாயம்-மேம்படும்-2865188.html
2865186 திருச்சி பெரம்பலூர் இலவச வீட்டுமனைப் பட்டா பெற்றுத் தரக் கோரி மனு DIN DIN Saturday, February 17, 2018 08:54 AM +0530 பெரம்பலூர் அருகேயுள்ள வடக்குமாதவி கிராமத்தில், அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா பெற்றுத்தர  வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏ இரா. தமிழ்ச்செல்வனிடம் அண்மையில் மனு அளித்தனர். 
இதுகுறித்து அக்கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அளித்த  மனு:
வடக்குமாதவி கிராமம், அருந்ததியர் தெருவில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் புதிய காலனியில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து, மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்து வருகிறோம். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. 
எனவே, வறுமையில் வாழும் எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட எம்எல்ஏ இலவச வீட்டுமனை பட்டா பெற்றுத்தர உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/17/இலவச-வீட்டுமனைப்-பட்டா-பெற்றுத்-தரக்-கோரி-மனு-2865186.html
2865185 திருச்சி பெரம்பலூர் மின் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் DIN DIN Saturday, February 17, 2018 08:54 AM +0530 பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மின் ஊழியர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
ஊதிய உயர்வில் அதிகாரிகள், ஊழியர்கள் என்ற பகுபாட்டை புகுத்தக்கூடாது. ஊதிய உயர்வில் 2.57 கணக்கீட்டு காரணியை உத்திரவாதப்படுத்த வேண்டும். நிலுவையை முழுமையாக வழங்க வேண்டும். 2 சர்வீஸ் வெயிட்டேஜ் வழங்குவதோடு, கால நிலை பதவி உயர்வை உத்தரவாதப்படுத்த வேண்டும். 
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மின்வாரிய பிரிப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும். 45 ஆயிரம் காலியிடங்களை நிரப்ப வேண்டும். ஒப்பந்த ஊழியர்களையும், ஐ.டி.ஐ படித்தவர்களையும் பணியமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால், பெரம்பலூர் நகர்ப்புற உதவி மின் செயற்பொறியாளர் அலுவலகம் மூடப்பட்டிருந்தது. 
மேலும் மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம், செயற்பொறியாளர் அலுவலகம் மற்றும் இதர பகுதிகளில் உள்ள மின் அலுவலகங்கள் வெறிச்சோடின. 
பெரம்பலூர் மாவட்டத்தில் 155 மின் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் எதிரே, 
மின் ஊழியர்கள் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
மின் ஊழியர் மத்திய அமைப்புச் செயலர் எஸ். அகஸ்டின் தலைமையில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்தில், வட்டார நிர்வாகிகள் கண்ணன், தமிழ்ச்செல்வன், கோட்டத் தலைவர் அண்ணாதுரை, கோட்டச் செயலர் பன்னீர்செல்வம், அரியலூர் கோட்ட பொருளாளர் சார்லஸ், 
மாவட்ட பொருளாளர் தமிழ்வாணன், நிர்வாகிகள் சரவணன், ராஜகுமாரி உள்பட பலர் பங்கேற்றனர்.
அரியலூரில்... பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்டத்தில் மின் ஊழியர்கள் வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்
ஊதிய உயர்வு வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்சார வாரியத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு அறிவித்தபடி தமிழகம் முழுவதும் மின் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூரில் மாவட்டத்தில் 81 மின் ஊழியர்கள் பணிக்குச் செல்லவில்லை. 
இதனால் மின்வாரிய அலுவலகங்கள் வெறிச்சோடின. மின் கட்டணம் செலுத்த வந்த மின் நுகர்வோர் கட்டண செலுத்த முடியாமல் திரும்பிச் சென்றனர். மேலும் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிக்க வந்தவர்களுக்கும் திரும்பிச் சென்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/17/மின்-ஊழியர்கள்-வேலைநிறுத்தப்-போராட்டம்-2865185.html
2865183 திருச்சி பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் நட்சத்திரக் கலை விழா DIN DIN Saturday, February 17, 2018 08:53 AM +0530 பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்கள் சார்பில், கல்லூரி வளாகத்தில் நட்சத்திர கலை விழா வியாழக்கிழமை தொடங்கியது. 
தொடக்க விழாவில், திரைப்பட பின்னணி பாடகர்கள் கார்த்திக், வேல்முருகன், பாடகி சக்தி சிரீ ஆகியோரின் இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  கல்லூரி முதல்வர்கள்,  மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  தொடர்ந்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில், நடன இயக்குநர் ஷெரீப் மற்றும் குழுவினரின் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  முன்னதாக நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில், ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் எம்.  முருகானந்தத்துக்கு, மாற்றத்தை உருவாக்கும் விருதும், ஏ.ஜி. கண் மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குநர் மருத்துவர் ஜி. குமாரராஜாவுக்கு மருத்துவச் செம்மல் விருதும், அரிமா சங்க மாவட்ட ஆளுநர் எச். ஷேக் தாவூத்துக்கு சேவை செம்மல் விருதும் வழங்கினார் புதுக்கோட்டை வெஸ்ட்லி கல்லூரித் தாளாளர் கருப்பையா. விழாவில், கல்லூரி முதல்வர்கள், பேராசியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/17/தனலட்சுமி-சீனிவாசன்-கல்லூரியில்-நட்சத்திரக்-கலை-விழா-2865183.html
2865182 திருச்சி பெரம்பலூர் ரத்ததான விழிப்புணர்வு கருத்தரங்கு DIN DIN Saturday, February 17, 2018 08:53 AM +0530 பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள ஸ்ரீசாரதா மகளிர் கலை ற்றும் அறிவியல் கல்லூரியில் ரத்ததான விழிப்புணர்வுக் கருத்தரங்கம் கல்லூரி அரங்கில் அண்மையில் நடைபெற்றது.
 ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம். சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார். செயலர் எம்.எஸ். விவேகானந்தன் முன்னிலை வகித்தார்.  
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நீரழிவு நோய் சிறப்பு மருத்துவர் கே. கோபி பேசியது:
உலக சுகாதார இயக்கத்தின் கணக்கீட்டின் படி, பல நோய்களுக்கு மூலக் காரணம் காலை உணவு உண்ணாதது எனக் கண்டறியப்பட்டது. 
அதனால், நாம் அனைவரும் காலை உணவு கட்டாயம் உண்ண வேண்டும். நாம் ஆரோக்கியமாக இருந்தால் தான் மற்றவருக்கு ரத்ததானம் செய்ய இயலும். ஒருவர் 3 மாதங்களுக்கு ஒருமுறை ரத்ததானம் செய்ய முடியும். ரத்ததானம் செய்யாவிட்டாலும், ரத்தத்திலுள்ள செல்கள் அழிந்து புதிய செல்கள் உற்பத்தியாகி கொண்டே இருக்கும். எனவே, அனைவரும் ரத்ததானம் செய்ய முன் வர வேண்டும் என்றார் அவர்.  
கல்லூரி முதல்வர் எம். சுபலட்சுமி உள்பட 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். 
ஏற்பாடுகளை, கணினி அறிவியல் துறை பேராசிரியை பி. கவிதா, இயற்பியல் துறை பேராசிரியை டி. அபிராமி ஆகியோர் செய்திருந்தனர். 
முதுகலை கணினி அறிவியல்துறை மாணவி கனிமொழி வரவேற்றார். இளங்கலை கணினி அறிவியல் துறை மாணவி எஸ்.பி. ஜீவிதா நன்றி கூறினார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/17/ரத்ததான-விழிப்புணர்வு-கருத்தரங்கு-2865182.html
2865181 திருச்சி பெரம்பலூர் பெரம்பலூரில் புத்தகக் கண்காட்சி தொடக்கம் DIN DIN Saturday, February 17, 2018 08:53 AM +0530 பெரம்பலூர் நகராட்சி மைதானத்தில் புத்தகக் கண்காட்சி தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் ஆதரவுடன், பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம் சார்பில், 7-வது ஆண்டாக நடைபெற்ற கண்காட்சியை தொடக்கி வைத்து மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா பேசியது: 
புத்தகங்கள் மூலமே புத்தம் புதிய உலகம் உருவாகும். புத்தகங்கள் வாசிக்கும் அனுபவம் மட்டுமே நமது ஆயுள் வரை நீடிக்கும். புதிய வழிமுறைகளை உருவாக்கித் தரும் வல்லமை புத்தகங்களுக்கு மட்டுமே உள்ளது. புத்தக வாசிப்பின் மூலம் முன்னேற்றம் வரும், நினைவுத் திறன், புத்திக்கூர்மை அதிகரிக்கும், புதிய புதிய அனுபவங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும். இதுவரை வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்களும் இனிமேல் புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றார் அவர். தொடக்க விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி, மகளிர் திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, ரோவர் கல்வி நிறுவனங்களின் மேலாண் தலைவர் கே. வரதராஜன், புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் எஸ். வைரவன், துணைத் தலைவர் மயிலவேலன் உள்பட மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கண்காட்சியில் 100 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 70- க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் பல லட்சம் புத்தகங்கள், தமிழ், ஆங்கில புத்தகங்கள் மற்றும் மல்டி மீடியா (குறுந்தகடுகள்) கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
கலை, இலக்கியம், சங்க இலக்கியம், சமூக நாவல்கள், சரித்திர நாவல்கள், மருத்துவம், சமையல், தன்னம்பிக்கை, சுய முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு வகை புத்தகங்கள், அரசு வேலைவாய்ப்புக்கான தகுதித்தேர்வு புத்தகங்கள், நீட் தேர்வுகள் உள்ளிட்ட அனைத்துத் தேர்வுகளுக்கான புத்தகங்கள் ரூ. 10 முதல் ரூ. 1,000 வரையில் இடம்பெற்றுள்ளன.
கண்காட்சியில் வாங்கும் அனைத்துப் புத்தகங்களுக்கும், 10 சத தள்ளுபடி வழங்கப்படுகிறது. பிப்.26 வரை  காலை 10.30 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் கண்காட்சிக்கு அனுமதி இலவசம். நாள்தோறும் சிறப்புச் சொற்பொழிவுகள் மற்றும் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/17/பெரம்பலூரில்-புத்தகக்-கண்காட்சி-தொடக்கம்-2865181.html
2864253 திருச்சி பெரம்பலூர் காகன்னை ஈஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி விழா DIN DIN Friday, February 16, 2018 07:58 AM +0530 பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் உள்ள காகன்னை ஈஸ்வரர் கோயிலில் மகாசிவராத்திரி விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 
பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷிமலை அடிவாரத்தில் உள்ள நளினாம்பிகை உடனுறை காகன்னை ஈஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி விழா புதன்கிழமை இரவு கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ வழிபாடு மற்றும் ருத்ர பூஜைகளுடன் தொடங்கியது. நிகழ்ச்சிக்கு, அன்னை சித்தர் எஸ். ராஜ்குமார் சுவாமி தலைமை வகித்தார். விழாவையொட்டி, மலை உச்சியில் அதிர்வேட்டுகள், வானவேடிக்கைகள் முழங்க 2 மகா தீபங்கள் ஏற்றப்பட்டு 210 சித்தர்கள் வேள்வி நடைபெற்றது.  
இதைத் தொடர்ந்து, காகன்னை ஈஸ்வரர் கோயிலில் ருத்ரஜெபம், ருத்ரவேள்விகள், பன்னிரு திருமுறைகள், சிவ புராண பாராயணத்துடன் நடத்தப்பட்டது. பூரண கும்பம் வைக்கப்பட்டு கலச வழிபாடும், 108 சங்காபிசேகமும், ஒவ்வொரு கால  யாகசாலை பூஜை முடிந்தவுடன் மூலவருக்கு அபிஷேகங்கள், மகாதீப ஆராதனை, கோ பூஜை, அஸ்வபூஜை, கஜ பூஜை ஆகியவை நடைபெற்றன.  பூஜைகளில் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி விஜயகாந்த், கூடுதல் கண்காணிப்பாளர் ஞான. சிவக்குமார், சென்னை தொழிலதிபர்கள் சென்னை ராம்ஜி, டாக்டர் கோவிந்தராஜ்,  ராஜன், சன்மார்க்க சங்க மாவட்டச் செயலர் சுந்தர்ராஜன், சிவத்தொண்டர் நடராஜன், இலங்கை ராதா மாதாஜி உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.  
விழா ஏற்பாடுகளை, மகாசித்தர்கள் அறக்கட்டளை இணை நிறுவனர் ரோகினிமாதாஜி, இயக்குநர்கள் ஆர். சுந்தரமகாலிங்கம், ஆர். தவசிநாதன் மற்றும் குருகடாட்சம் மெய்யன்பர்கள் செய்திருந்தனர்.  
விழாவில், சிவராத்திரியின் மகிமையையும், சிவபெருமானின் திருவிளையாடல்களை விளக்கும் புராண சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 
இதேபோல, வடக்குமாதவி சாலை சமத்துவபுரம் அருகேயுள்ள மகாலிங்க சித்தர் சுவாமிகள் அதிஷ்டானத்திலும், காகபுஜண்டர் தலையாட்டி சித்தர் சுவாமிகளின் மடத்திலும் சிவராத்திரியை முன்னிட்டு ருத்ர வேள்விகள், ருத்ர ஜெப வழிபாடு நடத்தப்பட்டது. 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/16/காகன்னை-ஈஸ்வரர்-கோயிலில்-மகா-சிவராத்திரி-விழா-2864253.html
2864252 திருச்சி பெரம்பலூர் அரும்பாவூர் கோயிலில் மயானக் கொள்ளை திருவிழா DIN DIN Friday, February 16, 2018 07:58 AM +0530 பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள பிரசித்தி பெற்ற அரும்பாவூர் அங்காள பரமேஸ்வரி திருக்கோயிலில் மயானக் கொள்ளை திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. 
வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூர் தூதன் ஆற்றங்கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற இக்கோயிலில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மயானக் கொள்ளை திருவிழா நடைபெறும்.
அதன்படி, நிகழாண்டு திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, பால்குடம் எடுத்தல், மூலஸ்தான சந்தனக் காப்பு அலங்காரம் நடைபெற்றது. மாசி அமாவாசையான வியாழக்கிழமை காலை காளி புறப்பாடு, குடல்
 பிடுங்கி மாலை, வள்ளாளராஜன் கோட்டை இடிப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து,  கோயிலில் இருந்து அங்காளபரமேஸ்வரி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, அருகில் உள்ள மயானத்துக்கு ஊர்வலமாக சென்றார்.
பின்னர், அங்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு உதிரச் சோற்றை தெளித்தனர். இந்த உதிரச் சோற்றை, அங்கு திரண்டிருந்த ஏராளமான பெண்கள் மடியேந்தி பெற்றுக்கொண்டனர். இத்திருவிழாவில் பங்கேற்று,
 உதிரச் சோறு வாங்கினால், குழந்தை இல்லாத தம்பதியினருக்கு குழந்தை பேறு, திருமணத் தடை உள்ளிட்டவை நீங்கும் என்ற ஐதீகத்தால் பெரம்பலூர், அரியலூர், சேலம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/16/அரும்பாவூர்-கோயிலில்-மயானக்-கொள்ளை-திருவிழா-2864252.html
2864251 திருச்சி பெரம்பலூர் பத்திரப் பதிவுப் பணி பாதிப்பு; சாலை மறியல் DIN DIN Friday, February 16, 2018 07:58 AM +0530 பத்திரப்பதிவு செய்யும்போது இணையம் சரிவர செயல்படாததால் பணி பாதிக்கப்பட்டதால் வேப்பந்தட்டை அருகே பொதுமக்கள் சாலை மறியலில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் கடந்த 3 நாள்களாக ஆன்லைன் மூலம்  பத்திரப்பதிவு நடைபெறுகிறது. இதில், பல்வேறு பதிவு அலுவலகங்களில் இணையம் சரிவர செயல்படாததால் பத்திரப்பதிவு பணி வெகுவாக பாதிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 2 நாள்களாக இணையம் மூலம் பத்திரப் பதிவு செய்யும் பணி நடைபெறவில்லை. 3-வது நாளான வியாழக்கிழமையும் இணையம் மூலம் பதிவு செய்யும் பணி பாதித்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் சார் பதிவாளர் அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்து  சென்ற வேப்பந்தட்டை துணை வட்டாட்சியர் சரவணன் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியலை கைவிட்டு சென்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/16/பத்திரப்-பதிவுப்-பணி-பாதிப்பு-சாலை-மறியல்-2864251.html
2864250 திருச்சி பெரம்பலூர் அம்மாபாளையம் சுகாதார நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு DIN DIN Friday, February 16, 2018 07:57 AM +0530 பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையத்தில் உள்ள அரசு முதன்மை ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார் ஆட்சியர் வே. சாந்தா. 
இந்த ஆய்வில், வெளிப்புற, உள்புற நோயாளிகள் பிரிவு, பிரசவத்துக்கு பின் தாய்மார்கள் அனுமதிக்கப்படும் பிரிவு, மருந்து வாங்கும் இடம், ரத்தப் பரிசோதனை செய்யும் ஆய்வுக்கூடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் சாந்தா, சிகிச்சைக்கு வந்த நோயாளிகளிடம் மருத்துவர்களின் வருகை, அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், ஆரம்ப சுகாதார நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டு, மருந்துகளின் இருப்பு விவரம், வெளிப்புற நோயாளிகளின் வருகை குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்த ஆட்சியர், வெளிப்புற நோயாளிகளுக்காக ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள இடத்தைப் பார்வையிட்டார்.   ஆய்வின்போது, சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் (பொ) சசிகலா, மாவட்ட கொள்ளைநோய் தடுப்பு அலுவலர் அரவிந்தன், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் வசந்தா, சுரேஷ், பெரம்பலூர் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/16/அம்மாபாளையம்-சுகாதார-நிலையத்தில்-ஆட்சியர்-ஆய்வு-2864250.html
2864249 திருச்சி பெரம்பலூர் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் DIN DIN Friday, February 16, 2018 07:57 AM +0530 பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடு உருவச் சிலையை மறைத்து வைத்துள்ள விளம்பரப் பதாகையை அகற்றக்கோரி, தமிழக விவசாயிகள் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள நாராயணசாமி நாயுடு சிலையை மறைத்து வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகையை அகற்றக்கோரி மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் அகற்றப்படவில்லையாம். 
இதையடுத்து, தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஆர். ராஜா சிதம்பரம் தலைமையிலான விவசாயிகள்  நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, விளம்பரப் பதாகைகளை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். தகவலறிந்த, பெரம்பலூர் போலீஸார் அங்கு சென்று, விளம்பர பதாகைகளை அகற்றுவதற்கு மறுப்பு தெரிவிக்கவே, 
விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
பின்னர், அங்கு வந்த நகராட்சிப் பணியாளர்கள் சிலையை மறைத்து வைத்திருந்த விளம்பரப் பதாகைகள் அகற்றியதையடுத்து, விவசாய சங்கத்தினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/16/விவசாயிகள்-சங்கத்தினர்-ஆர்ப்பாட்டம்-2864249.html
2864248 திருச்சி பெரம்பலூர் ரெளடி கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது DIN DIN Friday, February 16, 2018 07:57 AM +0530 பெரம்பலூரில் புதன்கிழமை இரவு பிரபல ரெளடி வெட்டிக்கொல்லப்பட்ட செய்த வழக்கில் மேலும் 3 பேரை பெரம்பலூர் போலீஸார் கைது செய்தனர். 
பெரம்பலூர் திருநகரை சேர்ந்த பிரபல ரெளடி பன்னீர்செல்வத்தை (34), பெரம்பலூர் அங்காளம்மன் கோயில் அருகே புதன்கிழமை இரவு மர்ம கும்பல் ஒன்று வெட்டி கொன்றுவிட்டு தப்பியது. புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இதனிடையே பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் கே.கே.நகரை சேர்ந்த ரத்தினம் மகன் கதிரவன் (23), வினோத் (23), தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்த விக்னேஷ் (23)  ஆகியோர் புதன்கிழமை இரவு பெரம்பலூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.  இந்நிலையில், இக்கொலை வழக்கில் தொடர்புடையோரை போலீஸார் தேடி வந்த நிலையில், பெரம்பலூர் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த சற்குணராஜா மகன் நகுலேஸ்வரன் (25), தமிழ்ச்செல்வன் மகன் யேசுதாஸ் (25), மணிகண்டன் (250 ஆகியோரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 
விசாரணையில், கொலை செய்யப்பட்ட பன்னீர்செல்வம் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும், முன் விரோதம் காரணமாக வினோத் தனது நண்பர்களுடன் சேர்ந்து பன்னீர்செல்வத்தை கொலை செய்ததும் தெரியவந்தது.  
கொலை செய்யப்பட்ட பன்னீர்செல்வத்தின் பிரேத பரிசோதனை முடிந்து, இறுதி ஊர்வலம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இதையொட்டி, அசம்பாவித சம்பங்கள் நிகழாமல் தடுக்கும் விதமாக போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/16/ரெளடி-கொலை-வழக்கில்-மேலும்-3-பேர்-கைது-2864248.html
2864246 திருச்சி பெரம்பலூர் கல் குவாரிகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் DIN DIN Friday, February 16, 2018 07:56 AM +0530 கல் குவாரி ஏலம் விடுவதை ரத்துசெய்ய வலியுறுத்தி, பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 28 இடங்களில் புதிதாக கல் குவாரிகள் அமைத்து, தனியாருக்கு குத்தகை விடுவதற்கு மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 
அதன்படி, அதற்கான ஏலம் நடத்த நாளிதழ்களில் அண்மையில் விளம்பரம் வெளியிடப்பட்டது. 
சுற்றுச்சூழல் சீர்கேடு, விவசாய நிலங்கள், குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், கல் குவாரி அமைக்கும் முடிவை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்ய வலியுறுத்தி, புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் பி. அருள் தலைமை வகித்தார். திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் பிரபு கோரிக்கையை வலியுறுத்திப் பேசினார். 
பெரம்பலூர் தொகுதி செயலாளர் அருண் குமார், ஒன்றிய செயலாளர்கள் அன்பரசன், ராயர், முத்துக்குமார், பெரியசாமி, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
ஆர்ப்பாட்டத்தில், கல் குவாரிகளுக்கான ஏலத்தை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி முழக்கமிடப்பட்டது. இதில், 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கட்சிப் பொறுப்பாளர் நூர் முகமது நன்றி கூறினார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/16/கல்-குவாரிகள்-அமைக்க-எதிர்ப்பு-தெரிவித்து-ஆர்ப்பாட்டம்-2864246.html
2864245 திருச்சி பெரம்பலூர் சத்துணவு ஊழியர்கள் மறியல் : 257 பேர் கைது DIN DIN Friday, February 16, 2018 07:56 AM +0530 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சாலை மறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்ட 205 சத்துணவு ஊழியர்களை பெரம்பலூர் போலீஸார் கைது செய்தனர். 
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பொன். ஆனந்தராசு தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் ஜி. வெங்கடாஜலபதி, எம். சின்னதுரை, எம். வசந்தி, பி. மணிமேகலை, எஸ். வள்ளியம்மை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டச் செயலாளர் ஆர். சவிதா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கி. ஆளவந்தார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். 
ஆர்ப்பாட்டத்தில், சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணி ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பணிக்கொடை ரூ. 5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கும் பொங்கலுக்கு ஊக்கத்தொகை அளிக்க வேண்டும். சமையலர், உதவியாளர், அமைப்பாளர் ஆகியோருக்கு தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. 
தொடர்ந்து, மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாலக்கரை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட 14 ஆண்கள் உள்பட 205 பேரை பெரம்பலூர் போலீஸார் கைது செய்தனர். பெரம்பலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
அரியலூரில்...
 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூர் பேருந்து நிலையம் முன்பு வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர்  சங்கத்தினர் 52 பேர் கைது செய்யப்பட்டனர்.
காலமுறை ஊதியம், மாதாந்திர ஓய்வூதியம், ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு ஒட்டுமொத்த பணிக்கொடை ரூ. 3 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூர் அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர், அங்கிருந்து பேரணியாகச் சென்று பேருந்து  நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். 
அப்போது அங்கு பாதுகாப்புப்  பணியில் ஈடுபட்டிருந்த அரியலூர் போலீஸார், 4 ஆண்கள் உள்பட 52 பேரைக் கைது செய்து மாலையில் விடுவித்தனர். போராட்டத்துக்கு மாவட்ட துணைத் தலைவர்கள்  குணசேகரன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் சுமதி முன்னிலை வகித்தார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/16/சத்துணவு-ஊழியர்கள்-மறியல்--257-பேர்-கைது-2864245.html
2863638 திருச்சி பெரம்பலூர் இன்று முதல் தனித்தேர்வர்கள்  தேர்வுக்கூட அனுமதி சீட்டு  பதிவிறக்கம் செய்யலாம் DIN DIN Thursday, February 15, 2018 02:33 AM +0530 மார்ச், ஏப்ரல்- 2018 எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வெழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தத்கல் உள்பட) தங்களது தேர்வுக்கூட அனுமதி சீட்டுகளை வியாழக்கிழமை (பிப்.15) மதியம் முதல்  ‌w‌w‌w.‌d‌g‌e.‌t‌n.‌g‌o‌v.‌i‌n எனும் இணையதளத்தில் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 
அறிவியல் பாட செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தை தனித்தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்துகொள்ள வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தி. அருள்மொழிதேவி புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/15/இன்று-முதல்-தனித்தேர்வர்கள்--தேர்வுக்கூட-அனுமதி-சீட்டு--பதிவிறக்கம்-செய்யலாம்-2863638.html
2863635 திருச்சி பெரம்பலூர் பெரம்பலூரில் ரெளடி வெட்டிக்கொலை DIN DIN Thursday, February 15, 2018 02:32 AM +0530 பெரம்பலூரில், பிரபல ரெளடியை புதன்கிழமை இரவு வெட்டிக்கொலை செய்த 3 இளைஞர்கள், பெரம்பலூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். 
பெரம்பலூர் திருநகரை சேர்ந்தவன் மார்க்கெட் பன்னீர் (எ) பன்னீர்செல்வம் (34). பிரபல ரெளடியான இவர் மீது, 2 கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் பெரம்பலூர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. 
இந்நிலையில், பெரம்பலூர் அங்காளம்மன் கோயில் அருகே புதன்கிழமை இரவு மர்ம கும்பல் ஒன்று, பன்னீர்செல்வத்தை அரிவாளால் வெட்டி கொன்றுவிட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, அவரது உடலை மீட்டு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினர். 
புகாரின்பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிந்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் கே.கே. நகரை சேர்ந்த ரத்தினம் மகன் கதிரவன் (23), வினோத் (23), தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்த விக்னேஷ் (23)  ஆகிய 3 பேரும் பெரம்பலூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இக்கொலையில் ஈடுபட்ட மேலும் ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.  
உயிரிழந்த பன்னீர்செல்வம், கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதால் பழிக்குப்பலியாக இந்தக் கொலை நடந்திருக்காலம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரிக்கின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/15/பெரம்பலூரில்-ரெளடி-வெட்டிக்கொலை-2863635.html
2863634 திருச்சி பெரம்பலூர் ரேஷன் பொருள்களை முறையாக வழங்காத விற்பனையாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: பெரம்பலூர் ஆட்சியர் எச்சரிக்கை DIN DIN Thursday, February 15, 2018 02:32 AM +0530 ரேஷன் பொருள்களை முறையாக வழங்காத நியாயவிலை அங்காடி விற்பனையாளர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆட்சியர் வே. சாந்தா.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், பொது விநியோகத் திட்ட உணவுப்பொருள் வழங்கல் தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினர் மா. சந்திரகாசி முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் மேலும் பேசியது: 
உணவு பாதுகாப்பு விதிகளின் படி, பெரம்பலூர் மாவட்டத்தில் நியாய விலை அங்காடிகளில் அத்தியாவசியப் பொருள்கள் வழங்குவதில் பெறப்படும் புகார் மீது நடவடிக்கை மேற்கொள்வதற்கு வட்ட, மாவட்ட மற்றும் நியாய விலைக்கடைகள் வாரியாக கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
பொது விநியோகத்திட்ட பொருள்கள் எவ்வித சுணக்கமும் இன்றி, முறையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பணிகளை வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் கூட்டுறவு சார்-பதிவாளர்கள் கண்காணித்து, ரேஷன் பொருள்களை முறையாக வழங்காத விற்பனையாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். 
மாவட்ட கண்காணிப்புக் குழுக் கூட்டம் காலாண்டுக்கு ஒருமுறை கூட்டி ஆய்வு செய்ய வேண்டும். மேலும், பொது விநியோகத் திட்ட பொருள்கள் வழங்குவதில் பாதிக்கப்பட்ட நபர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் அல்லது மாவட்ட குறைதீர் அலுவலரிடம் நேரடியாக எழுத்து வடிவில், மின்னஞ்சல், உதவி மையம் அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமாக புகாரைத் தெரிவிக்கலாம். மேற்கண்ட புகார் பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாள்களுக்குள், அதற்கான தீர்வை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அளிக்க வேண்டும் என்றார் ஆட்சியர் சாந்தா.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி, வருவாய் கோட்டாட்சியர் (பொ) ச. மனோகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் (பொ)) எல். விஜயலட்சுமி, கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் த. பாண்டிதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/15/ரேஷன்-பொருள்களை-முறையாக-வழங்காத-விற்பனையாளர்கள்-மீது-ஒழுங்கு-நடவடிக்கை-பெரம்பலூர்-ஆட்சியர்-எச்சரிக்-2863634.html
2863632 திருச்சி பெரம்பலூர் அன்னை மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா DIN DIN Thursday, February 15, 2018 02:32 AM +0530 பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அன்னை மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
விழாவுக்கு தலைமை வகித்த பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தி. அருள்மொழிதேவி, 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சிக்கு உழைத்த ஆசிரியர்களை பாராட்டி, நினைவு பரிசுகள் வழங்கினார். 
தொடர்ந்து, சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஞான. சிவக்குமார், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். பள்ளி தலைமை ஆசிரியர் மீனா ஆண்டறிக்கை வாசித்தார். விழாவையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. 
விழாவில், மாவட்ட கல்வி அலுவலர் பிருதிவிராசன், பாடாலூர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜ்குமார், அரிமா சங்கத் தலைவர் ஞானசேகர், பொருளாளர் தியாகராஜன், முன்னாள் ஊராட்சி தலைவர் வேல். சரவணன், திருச்சி அரிமா சங்கத் தலைவர் ரமேஷ்பாபு, செயலர் உதயக்குமார் உள்பட பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பள்ளி தாளாளர் மாணிக்கம் வரவேற்றார். தமிழாசிரியர் கலைவாணன் நன்றி கூறினார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/15/அன்னை-மேல்நிலைப்பள்ளி-ஆண்டு-விழா-2863632.html
2863631 திருச்சி பெரம்பலூர் பெரம்பலூரில் நாளை புத்தகக் கண்காட்சி: பணிகளில் சுணக்கம்? DIN DIN Thursday, February 15, 2018 02:31 AM +0530 பெரம்பலூரில் 7 ஆவது புத்தகக் கண்காட்சி நகராட்சி மைதானத்தில் வெள்ளிக்கிழமை (பிப். 16) மாலை தொடங்குகிறது. 
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதன்முதலாக புத்தகக் கண்காட்சி தொடங்கப்பட்டது. இப்புத்தகக் கண்காட்சியானது பதிப்பாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்தது. 
ஒவ்வொரு புத்தகக் கண்காட்சிக்கும் ஜூலை மாதம் முதலே முன்னேற்பாட்டு பணிகள், ஆலோசனைக் கூட்டங்கள் ஆட்சியர் தலைமையில் நடைபெறும்.  
ஆனால், நிகழாண்டுக்கான புத்தகக் கண்காட்சிக்கான முன்னேற்பாட்டு பணிகள் டிசம்பர் மாதம் வரை நடத்தப்படவில்லை. சமூக ஆர்வலர்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, ஜனவரி மாத தொடக்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, வழக்கம்போல் ஜன. 26-இல் புத்தகக் கண்காட்சி நடத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. 
இருப்பினும், எவ்வித பணிகளும் நடைபெறவில்லை. பின்னர், மக்கள் பண்பாட்டு மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் மீண்டும் ஆலோசித்து, பிப். 16 முதல் 26 ஆம் தேதி வரை புத்தகக் கண்காட்சி நடத்துவதாக அறிவித்தது. அன்றிலிருந்தே புத்தக கண்காட்சிக்கான முன்னேற்பாட்டு பணிகளில் சுணக்கம் காணப்பட்டது. 
இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை தொடங்கப்பட உள்ள புத்தகக் கண்காட்சிக்காக புதன்கிழமை அழைப்பிதழ் அச்சிடப்பட்டதாகத் தெரிகிறது. 
அவற்றை இதுவரை யாருக்கும் வழங்கவில்லை. அதேபோல், கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக பள்ளி, கல்லூரிகளில் இதுவரை ஒத்திகை நிகழ்ச்சிகளும் நடைபெறவில்லை. விளம்பர பதாகைகளும் வைக்கவில்லை. விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தவில்லை.  
எனவே, பெயரளவில் நடத்தப்படும் இப்புத்தகக் கண்காட்சியில் எதிர்பார்த்த அளவில் நூல்களின் விற்பனை, பொதுமக்களின் எண்ணிக்கை குறையும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/15/பெரம்பலூரில்-நாளை-புத்தகக்-கண்காட்சி-பணிகளில்-சுணக்கம்-2863631.html
2863628 திருச்சி பெரம்பலூர் வேப்பந்தட்டை அருகே அறுவடை இயந்திரம் தீயில் எரிந்து நாசம் DIN DIN Thursday, February 15, 2018 02:31 AM +0530 பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே மக்காச்சோள அறுவடை இயந்திர வாகனம் தீயில் எரிந்து புதன்கிழமை நாசமானது. 
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள உடும்பியம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமணி (35). இவரது வயலில் சாகுபடி செய்யப்பட்டிருந்து மக்காச்சோளப் பயிர்களை அறுவடை செய்யும் பணி நடைபெறுகிறது. இந்த அறுவடை பணிகள் சேலம் மாவட்டம், வெள்ளையூரைச் சேர்ந்த முத்துசாமிக்கு (52) சொந்தமான மக்காச்சோளம் அறுவடை எந்திர வாகனத்தைக் கொண்டு நடைபெற்று வருகிறது. அறுவடை இயந்திரத்தை சேலம் மாவட்டம், நாவலூரைச் சேர்ந்த குமார் (34) இயக்கினார். புதன்கிழமை காலை வயலில் அறுவடை பணியில் ஈடுபட்டிருந்தபோது, சிறிது நேரத்தில் அறுவடை இயந்திரம் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. 
இதையறிந்த குமார் வாகனத்தில் இருந்து தப்பியோடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். 
தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் அறுவடை எந்திரம் மற்றும் வாகனம் முற்றிலும் எரிந்து நாசமானது. அரும்பாவூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.    

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/15/வேப்பந்தட்டை-அருகே-அறுவடை-இயந்திரம்-தீயில்-எரிந்து-நாசம்-2863628.html
2863135 திருச்சி பெரம்பலூர் பெரம்பலூரில் ஏப். 10 முதல் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்: 15 மாவட்ட இளைஞர்களுக்கு அழைப்பு DIN DIN Wednesday, February 14, 2018 08:33 AM +0530 15 மாவட்டங்களுக்கான ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் பெரம்பலூர் ஆட்சியரக விளையாட்டு மைதானத்தில் ஏப். 10 முதல் நடைபெற உள்ளது என்றார்  மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.  
இதுகுறித்து ஆட்சியரகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை அவர் மேலும் கூறியது:
திருச்சி, பெரம்பலூர், அரியலூர்,   தஞ்சாவூர், கரூர், புதுக்கோட்டை,  திருவாரூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி , ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், காரைக்கால் ஆகிய 15 மாவட்ட இளைஞர்களுக்கான ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்  ஏப். 10 முதல் 23 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முகாமுக்குத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்படும் என்றார்.  
தொடர்ந்து திருச்சி மண்டல இயக்குநர் கர்னல் ரஜனீஷ் லால் கூறியது: முகாமில்  சோல்ஜர் டெக்னிக்கல், சோல்ஜர் டெக்னிக்கல் (அம்யூனிசன் மற்றும் ஏவியேசன்), சோல்ஜர் நர்சிங் அசிஸ்டண்ட், சோல்ஜர் ஜெனரல் டியூட்டி, சோல்ஜர் கிளர்க், ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல், சோல்ஜர் டிரேட்ஸ்மேன் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வு நடைபெற உள்ளது. பிப். 24 முதல் மார்ச் 25  வரை w‌w‌w.‌j‌o‌i‌n‌i‌n‌d‌i​a‌n​a‌r‌m‌y.‌n‌i​c.‌i‌n  என்னும் இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
முகாமில் பங்கேற்போர் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு மதிப்பெண் பட்டியல், குடியுரிமைச் சான்று, சாதிச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ்களின் அசல், நகல்களைக் கொண்டுவர வேண்டும்.  இறுதியாக படித்த கல்வி நிறுவனத்தில் வழங்கப்பட்ட படிப்பு மற்றும் நன்னடத்தைச் சான்றிதழ் (6 மாதத்துக்குள் பெற்றது), பள்ளி மாற்றுச் சான்றிதழ்களையும் கொண்டுவர வேண்டும். என்.சி.சி, விளையாட்டு, கணினி படிப்பு உள்ளிட்ட இதர கூடுதல் சான்றிதழ்கள் இருந்தாலும் கொண்டு வரலாம் என்றார் அவர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் தி. ஸ்ரீதர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஞான. சிவகுமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/14/பெரம்பலூரில்-ஏப்-10-முதல்-ராணுவ-ஆள்சேர்ப்பு-முகாம்-15-மாவட்ட-இளைஞர்களுக்கு-அழைப்பு-2863135.html
2863030 திருச்சி பெரம்பலூர் பிளஸ் 2  தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கலாம் DIN DIN Wednesday, February 14, 2018 07:52 AM +0530 மேல்நிலை 2 ஆம் ஆண்டு தனித்தேர்வர்கள் பொதுத் தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதி சீட்டுகளை இணையதளம் மூலம் பதிவிறக்கலாம் எனத் தெரிவித்துள்ளார் முதன்மைக் கல்வி அலுவலர் தி. அருள்மொழிதேவி. 
பெரம்பலூர் மாவட்டத்தில், நடைபெறவுள்ள மார்ச், ஏப்ரல்- 2018 மேல்நிலை 2 ஆம் ஆண்டு பொதுத்தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தட்கல் உள்பட) செவ்வாய்க்கிழமை (பிப். 13) முதல் w‌w‌w.‌d‌g‌e.‌t‌n.‌g‌o‌v.‌i‌n  என்னும் இணையதளத்தின் மூலம் நுழைவுச்சீட்டுகளை பதிவிறக்கலாம். மேற்காணும் இணையதள முகவரிக்கு சென்று  விண்ணப்ப எண், பிறந்த தேதியை பதிவு செய்தால், அவர்களுடைய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு திரையில் தோன்றும்.  அதைப் பதிவிறக்கிக் கொள்ளலாம். மொழிப்பாடங்களில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு, சிறப்பு மொழி (தமிழ்) பாடத்தில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தைத் தனித்தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்துகொள்ள வேண்டும். உரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டின்றி தேர்வெழுத அனுமதிக்கமாட்டார்கள். பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையை மேற்கண்ட எனும் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் அவர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/14/பிளஸ்-2--தனித்தேர்வர்கள்-தேர்வுக்கூட-அனுமதிச்-சீட்டை-பதிவிறக்கலாம்-2863030.html
2863029 திருச்சி பெரம்பலூர் பெரம்பலூர் கல்வி மாவட்ட  தடகளப் போட்டிகள் DIN DIN Wednesday, February 14, 2018 07:51 AM +0530 2017- 2018 ஆம் ஆண்டுக்கு, பெரம்பலூர் கல்வி மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் பெரம்பலூர் மாவட்ட பாரத ரத்னா புரட்சித் தலைவர்  எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
இதில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 6, 7, 8 ஆம் வகுப்பு வரை பயிலும் 350 மாணவர்களும், 290 மாணவிகளும் பங்கேற்றனர். 100 மீ, 200 மீ, 400 மீ, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகள், வகுப்பு வாரியாக மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டன.
இதில், 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 100 மீ ஓட்டத்தில் கார்த்திகேயன், 200 மீ ஓட்டத்தில் ச. சச்சின், 400 மீ ஓட்டத்தில் எம். அபினா, நீளம் தாண்டுதலில் இசாக் அகமத், உயரம் தாண்டுதலில்  அருண்குமார், குண்டு எறிதலில் எம். சரவணவேல் ஆகியோர் முதலிடம் பெற்றனர். மாணவிகளுக்கான 100 மீ ஓட்டத்தில் தக்க்ஷயா, 200 மீ ஓட்டத்தில் அ. தர்ஷினி, 400 மீ ஓட்டத்தில் இரா. கல்பனா, நீளம் தாண்டுதலில் செல்வநாயகி, உயரம் தாண்டுதலில் பாவனா, குண்டு எறிதலில் கவிப்பிரியா ஆகியோர் முதலிடம் பெற்றனர்.  
7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 100 மீ ஓட்டத்தில் வாகிசன், 200 மீ ஓட்டத்தில் அ. ரஞ்சித், 400 மீ ஓட்டத்தில் எம். அருண், நீளம் தாண்டுதலில் பால்ராஜ், உயரம் தாண்டுதலில் தீபக், குண்டு எறிதலில் எம். ஆகாஷ் ஆகியோர் முதலிடம் பெற்றனர்.
மாணவிகளுக்கான 100 மீ ஓட்டத்தில் தீபிகா, 200 மீ ஓட்டத்தில் கே. கமலா, 400 மீ ஓட்டத்தில் மஞ்சு, நீளம் தாண்டுதலில் கிரிஜா, உயரம் தாண்டுதலில் ஜனனி, குண்டு எறிதலில் பவித்ரா ஆகியோர் முதலிடம் பெற்றனர். 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 100 மீ ஓட்டத்தில் கேசவ பிரசாத், 200 மீ ஓட்டத்தில் ஆர். ரமேஷ், 400 மீ ஓட்டத்தில் தர்மராஜ், நீளம் தாண்டுதலில் சூர்யா, உயரம் தாண்டுதலில் அறிவுமதி, குண்டு எறிதலில் ஹரிவெங்கடேஷ் ஆகியோர் முதலிடம் பெற்றனர்.  மாணவிகளுக்கான 100 மீ ஓட்டத்தில் காவியா, 200 மீ ஓட்டத்தில் எம். தினா, 400 மீ ஓட்டத்தில் தாரணி, நீளம் தாண்டுதலில் ஸ்ரீ கண்மனி, உயரம் தாண்டுதலில் சிவசங்கரி, குண்டு எறிதலில் அப்சரா ஆகியோர் முதலிடம் பெற்றனர்.
தொடர்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார் பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தி. ஸ்ரீதர்.   தடகளப் பயிற்றுநர் க. கோகிலா உள்பட உடற்கல்வி ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர். 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/14/பெரம்பலூர்-கல்வி-மாவட்ட--தடகளப்-போட்டிகள்-2863029.html
2863028 திருச்சி பெரம்பலூர் மாநில அளவில் தேர்வான அரசுப் பள்ளிக்கு பரிசளிப்பு DIN DIN Wednesday, February 14, 2018 07:50 AM +0530 செயல்திட்ட ஆய்வறிக்கை காட்சிப்படுத்துதலில் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட அரும்பாவூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு திங்கள்கிழமை பரிசு வழங்கினார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தி. அருள்மொழிதேவி.
பெரம்ப்லூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில் செயல்திட்டம் காட்சிப்படுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், ஏற்ககெனவே ஒன்றிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 
ஆங்கிலம், கணிதல் தலா 8, அறிவியல், சமூக அறிவியல் தலா 16 என பாடம் மற்றும் ஒன்றியம் வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது. 
இந்நேர்காணலில், ஒவ்வொரு பாடத்துக்கும் தலா ஒரு முதுகலை ஆசிரியர்கள் நடுவர்களாக பணியாற்றினர். அதன்படி, ஆங்கில பாடத்தில் அரும்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் மாநில அளவிலான ஆய்வறிக்கை காட்சிப்படுத்துதல் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். 
இதையடுத்து, மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசு அளித்தார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தி. அருள்மொழிதேவி. 
இந்நிகழ்ச்சியின்போது, அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மா. அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/14/மாநில-அளவில்-தேர்வான-அரசுப்-பள்ளிக்கு-பரிசளிப்பு-2863028.html
2863027 திருச்சி பெரம்பலூர் ஆன்லைன் பதிவு முறையால் பத்திரப் பதிவு பாதிப்பு DIN DIN Wednesday, February 14, 2018 07:50 AM +0530 பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சார் பதிவு அலுவலகங்களில் ஆன்லைன் பத்திரப்பதிவு முறையால், புதிவு மேற்கொள்ளும் பணிகள் செவ்வாய்க்கிழமை முற்றிலும் பாதிக்கப்பட்டது. 
தமிழகத்தில் உள்ள 154 சார் பதிவு அலுவலகங்களிலும் கடந்த ஜூலை 17 ஆம் தேதி முதல் பரிசோதனை முயற்சியாக ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு மேற்கொள்ளப்பட்டது. 
இந்த அலுவலகங்களில் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது இருந்த நடைமுறை சிக்கல்கள் குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது. இதற்காக மண்டலம், மாவட்டம் வாரியாக கருத்து கேட்புக் கூட்டமும் நடத்தப்பட்டது. இதன்மூலம் பொதுமக்கள் வைக்கும் கருத்துகளை வைத்து சில மாற்றங்கள் செய்யப்பட்டது. 
தொடர்ந்து, சார் பதிவாளர் அலுவலகத்தில் ஸ்டார் 2.0 எனும் மென்பொருள் மூலம் ஆன்லைன் பத்திரப்புதிவு முறையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை தொடக்கி வைத்தார். இதையடுத்து, மாநிலம் முழுவதும் சார் பதிவாளர் அலுவலகங்களில் ஆன்லைன் பத்திரப்பதிவு முறை செவ்வாய்க்கிழமை அமல்படுத்தப்பட்டது.  
அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், செட்டிக்குளம், வேப்பந்தட்டை, வாலிகண்டபுரம் சார் பதிவாளர் அலுவலகங்களில், பத்திரப்பதிவு செய்ய மக்கள் அதிகளவில் வந்தனர். ஆனால், ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு செய்வதில் நீண்டநேரம் தாமதம் ஏற்பட்டது. 
ஒரு அலுவலகத்தில் நாள் ஒன்றுக்கு தலா 20 முதல் 25 பத்திரங்கள் பதிவாகும். ஆனால், இந்த ஆன்லைனில் பத்திரம் பதிவு செய்ய நீண்ட நேரம் ஆன்தோடு, 3 பத்திரங்கள் மட்டுமே பதிவானது. சாப்ட்வேர் பிரச்னையால் பலர் பல மணி நேரம் காத்திருந்தும், பத்திரப்பதிவு செய்யமுடியாமல் திரும்பிச் சென்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/14/ஆன்லைன்-பதிவு-முறையால்-பத்திரப்-பதிவு-பாதிப்பு-2863027.html
2863026 திருச்சி பெரம்பலூர் திருட்டுகளில் ஈடுபட்ட பள்ளி மாணவர் உள்பட 4 பேர் கைது DIN DIN Wednesday, February 14, 2018 07:49 AM +0530 பெரம்பலூர் அருகே பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட பள்ளி மாணவர் உள்பட 4 இளைஞர்களை பெரம்பலூர் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்து, திருச்சியில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.
பெரம்பலூர்நகர், தீரன்நகர் உள்ளிட்ட பல இடங்களில் வீடுகள் மற்றும் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் அவ்வப்போது இரும்புக் கம்பிகள், வீடுகளில் உள்ள பொருள்கள் திருடப்பட்டன. மேலும், கோயில்கள், பேருந்து நிலையங்களில் பிச்சை எடுப்பவர்களிடமும் திருடப்பட்டது குறித்து பெரம்பலூர் போலீஸாருக்கு புகார் அளிக்கப்பட்டது. 
இந்நிலையில், பெரம்பலூர் தீரன்நகர் எதிரேயுள்ள சாய்பாபா கோயிலில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த, சித்தளி கிராமத்தைச் சேர்ந்த பார்வையிழந்த பொன்னுசாமியிடம் (45), இருந்த 60 ரூபாயை, மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த இளைஞர்கள் 4 பேர் பறித்துக்கொண்டு தப்பிக்க முயன்றனராம். 
இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள், இளைஞர்களை பிடித்து பெரம்பலூர் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அப்பகுதிக்கு சென்ற போலீஸார் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் பெரம்பலூர் சங்குப்பேட்டையை சேர்ந்த சுப்ரமணி மகன் ராஜா (18), பெரம்பலூர்- ஆலம்பாடி சாலையில் உள்ள சமத்துவபுரத்தைச் சேர்ந்த ராஜா மகன் சந்த்ரு (17), போதிநாத் மகன் அருண் (16), பெரம்பலூர் பெரியார் சிலை அருகேயுள்ள குடியிருப்புப் பகுதியை சேர்ந்த பாண்டியன் மகன் வெங்கடேஷ் (13) என்பதும், இவர் பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருவதும் தெரியவந்தது. 
இதையடுத்து, பொன்னுசாமி அளித்த புகாரின்பேரில், மேற்கண்ட 4 பேரையும் கைது செய்த போலீஸார் பெரம்பலூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சியில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/14/திருட்டுகளில்-ஈடுபட்ட-பள்ளி-மாணவர்-உள்பட-4-பேர்-கைது-2863026.html
2863025 திருச்சி பெரம்பலூர் வேப்பந்தட்டை அருகே  கொத்தனார் கொலை DIN DIN Wednesday, February 14, 2018 07:49 AM +0530 பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே கொத்தனாரை கொலை செய்த கள்ளக்காதலியை, அரும்பாவூர் போலீஸார் தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் அருகேயுள்ள எளம்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் திருப்பதி (43),  கொத்தனார். இவருக்கு திருமணமாகி 3 பெண் மற்றும் ஒரு ஆண் பிள்ளைகள் உள்ளனர். கருத்து வேறுபாட்டால் மனைவியை பிரிந்து வசித்து வந்த இவருக்கும், செஞ்சேரி கிராமத்தை சேர்ந்த விதவையான அமுதாவுக்கும் (40) தொடர்பு இருந்ததாம்
இந்நிலையில், வேப்பந்தட்டை அருகேயுள்ள பூலாம்பாடி சித்தேரிக் கரையில்  உடலில் பலத்த காயங்களுடன் திருப்பதி கொலையாகி கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. 
இதுகுறித்து, அரும்பாவூர் போலீஸார் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், திருப்பதியை அவரது கள்ளக்காதலி அமுதா வேறு சில நபர்களுடன் சேர்ந்து கொலை செய்து விட்டு தலைமறைவானது தெரியவந்தது. இதையடுத்து, அமுதா உள்ளிட்டோரை போலீஸார் தேடி வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/14/வேப்பந்தட்டை-அருகே--கொத்தனார்-கொலை-2863025.html
2863024 திருச்சி பெரம்பலூர் செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் DIN DIN Wednesday, February 14, 2018 07:49 AM +0530 திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோயிலில் அரசு செவிலியரை தற்கொலைக்கு தூண்டிய மருத்துவ அலுவலர்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க கோரி, பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோயில் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிமாலா, அங்கு பணிபுரியும் அரசு மருத்துவர்கள், மருத்துவ அலுவலர்கள் ஆகியோர் கொடுத்த பணிச்சுமை நெருக்கடியால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டார்.  இந்நிலையில், அரசு செவிலியரை தற்கொலைக்கு தூண்டிய மருத்துவ அலுவலர்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க கோரி, பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை எதிரே, மருத்துவ தேர்வாணைய செவிலியர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளர் விஷ்ணு தலைமை வகித்தார். பொறுப்பாளர் ஆனந்த் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்கம் மாவட்டத் தலைவர் கி. ஆளவந்தார் கோரிக்கைகளை விளக்கினார்.   அரசு ஊழியர் சங்க பொறுப்பாளர் குமரி உள்பட செவிலியர் சங்கத்தினர் மற்றும் அரசு அலுவலர்கள் சங்கத்தினர் கலந்துகொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/14/செவிலியர்-சங்கத்தினர்-ஆர்ப்பாட்டம்-2863024.html
2863023 திருச்சி பெரம்பலூர் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநாட்டு கொடிக்கு வரவேற்பு DIN DIN Wednesday, February 14, 2018 07:48 AM +0530 தூத்துக்குடியில் நடைபெறவுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டு கொடிக்கு, பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22-வது மாநில மாநாடு பிப். 17 ஆம் தேதி தூத்துக்குடியில் தொடங்குகிறது. இந்த மாநாட்டில் ஏற்றவுள்ள கட்சிக்கொடி, சென்னையிலிருந்து காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல்,  மதுரை வழியாக தூத்துக்குடிக்கு கொண்டுசெல்லப்படுகிறது. இந்த கொடியைக்கொண்டு செல்லும் பயணக் குழுவினருக்கு, பெரம்பலூர் புகர் பேருந்து நிலைய வளாகத்தில் பெரம்பலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என். செல்லதுரை தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது.
தொடர்ந்து, தூத்துக்குடியில் நடைபெறும் மாநில மாநாட்டை விளக்கி பயணக்குழுவைச் சேர்ந்த மாநிலக் குழு உறுப்பினர் ஆனந்தன் பேசியது: 
தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 -வது மாநில மாநாடு 17 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், அகில இந்திய பொதுச்செயலர் சீத்தாராம் எச்சூரி, கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், பிருந்தா காரத், மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர் என்றார் அவர். 
மாவட்ட செயலர் மணிவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர். அழகர்சாமி, பி. ரமேஷ், கலையரசி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.பி.டி. ராஜாங்கம், முருகேசன், அகஸ்டின், கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/14/மார்க்சிஸ்ட்-கம்யூ-மாநாட்டு-கொடிக்கு-வரவேற்பு-2863023.html
2862404 திருச்சி பெரம்பலூர் மந்திரவாதி மீது  நடவடிக்கை கோரி  ஆட்சியரிடம் மனு DIN DIN Tuesday, February 13, 2018 08:26 AM +0530 பண மோசடியில் ஈடுபட்ட மந்திரவாதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வேலூர் இளைஞர் ஆட்சியர் வே. சாந்தாவிடம் திங்கள்கிழமை மனு அளித்தார். 
இதுகுறித்து, வேலூர் மாவட்டம், புங்கனூர் தென்னாண்டைத் தெருவைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் கோபிநாத் (29) அளித்த மனு: 
எனது நிலத்தில் உள்ள பிரச்னையைத் தீர்த்து வைப்பதாகக் கூறி, என்னிடம் இருந்து ரூ. 5.12 லட்சம் பெற்றுக்கொண்டார். இதுவரையில், பிரச்னையைத் தீர்க்கவும் இல்லை; பெற்ற பணத்தைத் திருப்பித்தரவும் இல்லை. இதனிடையே, கடந்த 10.3.2017 ஆம் தேதி பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம் அருகே அழுகிய பெண் சடலத்துடன் பூஜையில் ஈடுபட்டிருந்த கார்த்திகேயனை பெரம்பலூர் போலீஸார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இதையறிந்த பிறகு, பெரம்பலூர் காவல் நிலையத்தில் எனது புகார் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/13/மந்திரவாதி-மீது--நடவடிக்கை-கோரி--ஆட்சியரிடம்-மனு-2862404.html
2862403 திருச்சி பெரம்பலூர் திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர் DIN DIN Tuesday, February 13, 2018 08:26 AM +0530 பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில், பாமகவினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.  
இதில், கலந்து கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா மேலும் பேசியது:
மிகவும், பின்தங்கிய மக்களான வன்னியர் சமுதாய மக்களின் மேம்பாட்டுக்காக  டாக்டர் ராமதாஸ் கட்சி தொடங்கினார். தனக்கு அதிகாரம் வந்ததும் அதை சமுதாயத்துக்காக பயன்படுத்தவில்லை. அவ்வப்போது, கட்சி மாறி, அதிகாரம் பெற்று அதை சுயநலத்துக்காகவே பயன்படுத்திக் கொண்டார். தனது சுயநலத்துக்காக தங்களது இன மக்களை அடிமையாக வைத்துள்ளார். தமிழகத்தில் யார் முதல்வர், அமைச்சர் எனத் தெரியவில்லை. எந்தவொரு புதிய திட்டங்களும் கொண்டுவரவில்லை. தமிழக அரசு செயலற்றுள்ளது என்றார் ராசா.
முன்னதாக, முன்னாள் வேப்பூர் ஒன்றியக்குழுத் தலைவரும், பாமக மாவட்டத் தலைவருமான நீலமேகம் தலைமையில், 500-க்கும் மேற்பட்ட பாமகவினர் திமுகவில் இணைந்தனர். 
இதில், மாவட்ட செயலாளர் சி. ராஜேந்திரன், ஒன்றிய செயலர்கள் அண்ணாதுரை, நல்லதம்பி, ஜெகதீஸ்சன், மதியழகன், கிருஷ்ணமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.எஸ். சிவசங்கர் உள்பட பலர் பேசினர். நகர செயலாளர் எம். பிரபாகரன் வரவேற்றார். வேப்பூர் ஒன்றிய செயலர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/13/திமுகவில்-இணைந்த-மாற்றுக்கட்சியினர்-2862403.html
2862402 திருச்சி பெரம்பலூர் ஊதிய திருத்த நிலுவை கோரி  ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் DIN DIN Tuesday, February 13, 2018 08:26 AM +0530 ஊதிய திருத்த நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர்   கோரிக்கைகள் விளக்க ஆர்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர். 
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் பி. மாயவேலு தலைமை வகித்தார். நிர்வாகிகள் செ. மகேஸ்வரன், பொன். மனோகர், பி. நீலமேகம், டி. விஜயராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாவட்டச் செயலாளர் ஆர். முருகேசன் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், சி மற்றும் பி பிரிவு ஓய்வூதியர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க அரசாணை வெளியிடப்பட்டு, ஒரு மாதம் நிறைவடைந்தும் இதுவரை வழங்கப்படவில்லை.  எனவே, உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி, ஊராட்சிகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்கள், தணிக்கைத் துறை மூலம்  ஓய்வூதியம் பெறுபவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் திருத்தப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும். 21 மாத ஊதிய திருத்த நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.  இதில், சங்க பொறுப்பாளர்கள் ஆர். பரமசிவம், ஆர். ராஜேந்திரன், ஆர். பெரியசாமி, எம். நாகராஜன், கே. முருகையன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாவட்டத் தலைவர் ஏ. கணேசன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் கே. இளவரசன் நன்றி கூறினார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/13/ஊதிய-திருத்த-நிலுவை-கோரி--ஓய்வூதியர்கள்-ஆர்ப்பாட்டம்-2862402.html
2862401 திருச்சி பெரம்பலூர் கல் குவாரியைத் திறக்கக் கோரி பெரம்பலூர் ஆட்சியரிடம் மனு DIN DIN Tuesday, February 13, 2018 08:25 AM +0530 பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே கடந்த 10 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள கல் குவாரியைத் திறந்து, பணி வழங்க வேண்டுமெனக் கோரி கல்லுடைக்கும் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தாவிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
இதுகுறித்து, பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், இரூர் ஊராட்சிக்குள்பட்ட பெருமாள்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட கல் உடைக்கும் தொழிலாளர்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் முயற்சியால் கடந்த 1988 ஆம் ஆண்டு,  மத்திய பிரதேச மாநிலத்தில் கொத்தடிமைகளாக இருந்த நாங்கள் மீட்கப்பட்டு, பெருமாள்பாளையத்தில் அரசால் வழங்கப்பட்ட இலவச வீடுகளில் வசித்து வருகிறோம். மேலும், அப்போதைய ஆட்சியர் 2001 முதல் 2012 வரை அப்பகுதியில் கல் உடைக்க உரிமம் வழங்கினார். 
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக கல் உடைக்க உரிமம் வழங்காததால், எங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 
எனவே, மூடப்பட்டுள்ள கல் குவாரியைத் திறந்து எங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வழிவகை காண வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவுநேர செவிலியர் தேவை: பெரம்பலூர் மாவட்டம், அனுக்கூர் கிராமத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் செவிலியர்கள் பணியில் இருப்பதில்லை. இதனால், இரவு நேரங்களில் நிகழும் சிறு விபத்துகள், விஷக்கடி உள்ளிட்டவற்றுக்கு முதலுதவி பெற முடியாமல் உள்ளோம்.  அனுக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவுநேர செவிலியர்களை நியமிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/13/கல்-குவாரியைத்-திறக்கக்-கோரி-பெரம்பலூர்-ஆட்சியரிடம்-மனு-2862401.html
2862400 திருச்சி பெரம்பலூர் நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவரின் குடும்பத்துக்கு நிதியுதவி DIN DIN Tuesday, February 13, 2018 08:25 AM +0530 பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த மாணவனின் குடும்பத்துக்கு ரூ. 50 ஆயிரம் நிதியுதவி அளித்தார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர், பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் குறித்த காலத்துக்குள் மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதில் அளிக்குமாறு அறிவுறுத்தினார்.
மேலும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது தனிக் கவனம் செலுத்தி, அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடையுமாறு பணியாற்ற வேண்டுமென அரசுத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் வெங்கடேஷ் (12) . கடந்த 2015 ஆம் ஆண்டு அங்குள்ள பொன்னேரியில் மூழ்கி உயிரிழந்தார். இந்த மாணவனின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து பெறப்பட்ட ரூ. 50 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார் ஆட்சியர் சாந்தா.  கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப் பட்டா என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொது மக்களிடமிருந்து 203 மனுக்கள் பெறப்பட்டன. 
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் மனோகரன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் பாரதிதாசன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/13/நீரில்-மூழ்கி-உயிரிழந்த-மாணவரின்குடும்பத்துக்கு-நிதியுதவி-2862400.html
2862399 திருச்சி பெரம்பலூர் குறைதீர்க் கூட்டத்தில் மனு அளிக்க வந்த மூதாட்டிக்கு அனுமதி மறுத்ததால் பரபரப்பு DIN DIN Tuesday, February 13, 2018 08:25 AM +0530 மனு அளிக்க வந்த மூதாட்டிக்கு அனுமதி மறுத்து காவல் துறையினர், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிற்கதவை இழுத்து மூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், நன்னை கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு மனைவி நல்லம்மாள் (65). நன்னை கிராமத்தில் உள்ள சாம்பான் குளத்தை 60-க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமித்துள்ளதை அகற்றக்கோரி, ஆட்சியர் உள்ளிட்டோரிடம் நல்லம்மாள் பலமுறை மனு அளித்தும் பலனில்லை. இதையடுத்து நல்லம்மாள் தொடர்ந்த வழக்கில், கடந்த 2013 இல் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரையில் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. கடந்த 7 ஆண்டுகளாக இதுதொடர்பாக போராடி வரும் நல்லம்மாள், திங்கள்கிழமை வழக்கமாக நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்தார். மூதாட்டி நல்லம்மாளுக்கு அனுமதி மறுத்த போலீஸார் அவர் உள்ளே செல்லாத வகையில், அலுவலக கூட்ட அரங்கின் வாயிற்கதவை மூடினர். மூதாட்டியும் பதிலுக்கு ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கைத் தாழிட்டார்.   
இதைத்தொடர்ந்து, அங்கு தர்னா போராட்டத்தில் ஈடுபட்ட மூதாட்டி நல்லம்மாளிடம் பெரம்பலூர் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸார்  பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இதையடுத்து, மூதாட்டி நல்லம்மாளின் மனுவை வருவாய்த்துறையினர் பெற்றுக் கொண்டனர். இதனால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/13/குறைதீர்க்-கூட்டத்தில்-மனு-அளிக்க-வந்தமூதாட்டிக்கு-அனுமதி-மறுத்ததால்-பரபரப்பு-2862399.html
2862398 திருச்சி பெரம்பலூர் நிலுவைத் தொகை வழங்கக்கோரி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் DIN DIN Tuesday, February 13, 2018 08:24 AM +0530 பெரம்பலூர் மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் எதிரே நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மின் ஊழியர்கள் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர். 
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மற்றும் பாரதிய மின் தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மின் ஊழியர் மத்திய அமைப்பு செயலாளர் எஸ். அகஸ்டின் தலைமை வகித்தார். 
ஆர்ப்பாட்டத்தில், ஊதிய உயர்வில் அதிகாரிகள், ஊழியர்கள் என்ற பாகுபாட்டைக் களைந்து, 2.57 கணக்கீட்டு காரணியை உத்திரவாதப்படுத்த வேண்டும். நிலுவைத் தொகையை முழுமையாக வழங்க வேண்டும். இரண்டு சர்வீஸ் வெயிட்டேஜ் வழங்க வேண்டும். காலநிலை பதவி உயர்வை உத்திரவாதப் படுத்த வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மின்வாரிய பிரிப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும். 45 ஆயிரம் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஒப்பந்த ஊழியர்களையும், ஐ.டி.ஐ படித்தவர்களையும் பணிக்கு அமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
இதில், கோட்டத் தலைவர் அண்ணாதுரை, கோட்ட செயலாளர் பன்னீர் செல்வம், கோட்ட துணைத் தலைவர் சதீஸ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/13/நிலுவைத்-தொகை-வழங்கக்கோரி-மின்-ஊழியர்கள்-ஆர்ப்பாட்டம்-2862398.html
2861765 திருச்சி பெரம்பலூர் திறனறித் தேர்வு: 1,690 பேர் பங்கேற்பு DIN DIN Monday, February 12, 2018 02:50 AM +0530 பெரம்பலூர் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கான திறனறித் தேர்வில் 1,690 பேர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளி மற்றும் டெல்லி பாட்ஸ் இந்தியா அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான திறனறித் தேர்வு நடத்தி வருகிறது. அதன்படி, 3ஆவது ஆண்டாக நடைபெற்ற இத்தேர்வில், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் 1,690 பேர் பங்கேற்றனர்.
பள்ளித் தாளாளர் ஆ. ராம்குமார் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் டாக்டர் சிவகாமி முன்னிலை வகித்தார். லெவல் 1 தேர்வில் பங்கேற்றவர்களில் 30 பேர் 2 ஆம் கட்டத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 2 ஆம் கட்டத் தேர்வு பிப்ரவரி 18 இல்(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இரு கட்டத் தேர்வுகளிலும் அதிக மதிப்பெண் பெறுபவருக்கு முதல் பரிசாக ஆப்பிள் ஐ பேட், கைக் கடிகாரம் மற்றும் அறிவியல் அகராதி உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்படும் என பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஊக்குவிப்பு பயிற்சியாளர் வைரமணி தேர்வு குறித்து விளக்க உரையாற்றினார். இதில், பள்ளி துணை முதல்வர் சாரதா செந்தில்குமார், பங்குதாரர்கள் மோகனசுந்தரம், சங்கீதா முத்துக்குமார், கோபிநாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/12/திறனறித்-தேர்வு-1690-பேர்-பங்கேற்பு-2861765.html
2861764 திருச்சி பெரம்பலூர் பெரம்பலூரில் ஆசிரியர்களுக்கு பரிசளிப்பு DIN DIN Monday, February 12, 2018 02:50 AM +0530 பெரம்பலூரில், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் 44 ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா மற்றும் பாராட்டு விழா மாவட்டத் தலைவர் பெ. ராஜ்குமார் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் பெ. மணி, மாவட்டப் பொருளாளர் வெ. துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மக்களவை உறுப்பினர்கள் ஆர்.பி. மருதராஜா, மா. சந்திரகாசி, எம்எல்ஏக்கள் ஆர்.டி. ராமச்சந்திரன், இரா. தமிழ்ச்செல்வன், தமிழ்ச்சங்க செயலாளர் கோ. கலைச்செல்வன், பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் கி. மகேந்திரன் ஆகியோர் விழாவில் பேசினர்.
தொடர்ந்து, சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், 10 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுத்தந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும், பணி ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.
விழாவில், முதன்மை கல்வி அலுவலர் தி. அருள்மொழிதேவி, மாவட்ட கல்வி அலுவலர் வெ. பிருதிவிராஜன், முன்னாள் மாநில துணைத் தலைவர் வி.பி. தங்கராஜ், கெளரவத் தலைவர் ஏ.வி.இ. பாபுவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட மகளிரணி செயலாளர் க. பைரவி வரவேற்றார். மாவட்ட இணை செயலாளர் ம. அருண்குமார் நன்றி கூறினார்.
மருத்துவக் கல்லூரி தொடங்கக்கோரி அமைச்சரிடம் மனு
பெரம்பலூர் மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தின் தலைமை நிலைய செயலாளர் கே. மணி அளித்த மனு: பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட தலைமை மருத்துவமனைக்காக அறநிலையத் துறையினரிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட இடத்தில் விரிவாக்கப் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளன. போதிய நிதி ஒதுக்கி மேற்கண்ட திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/12/பெரம்பலூரில்-ஆசிரியர்களுக்கு-பரிசளிப்பு-2861764.html
2861763 திருச்சி பெரம்பலூர் தொழுநோய் சிறப்பு சிகிச்சை முகாம் DIN DIN Monday, February 12, 2018 02:49 AM +0530 பெரம்பலூர் மாவட்ட பொது சுகாதாரத் துறை சார்பில் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் தொழுநோய் மற்றும் தோல் சார்ந்த வியாதிகளுக்கான சிறப்பு சிகிச்சை முகாம் அண்மையில் நடைபெற்றது.
அம்மாபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவர் வசந்தா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தொழுநோய் மருத்துவர் சுதாகர், முகாமைத் தொடங்கி வைத்து, தொழுநோயின் அறிகுறிகள், அவற்றை குணப்படுத்தும் வழிமுறைகள், துப்புரவு பணியாளர்கள் தங்களது உடலை பராமரித்து தோல் சார்ந்த வியாதிகள் வராமல் தடுப்பது குறித்து விளக்கம் அளித்தார்.
முகாமில், தோல் சம்பந்தமான வியாதிகளுடைய 150 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், தொழுநோயாளிகளுக்கு ஊனத் தடுப்பு உபகரணப் பெட்டிகளும், ஆடைகளும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், மருத்துவத் துறை அலுவலர்கள் சுரேஷ், தமிழ்ச்செல்வன், அறிவு, செல்வபாண்டியன், சம்பத், பாலசுப்ரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/12/தொழுநோய்-சிறப்பு-சிகிச்சை-முகாம்-2861763.html
2861762 திருச்சி பெரம்பலூர் பெரம்பலூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம் DIN DIN Monday, February 12, 2018 02:49 AM +0530 பெரம்பலூர் மாவட்டம், துறைமங்கலத்தில் பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா, உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட அவைத்தலைவர் இரா. துரை தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட நிர்வாகிகள் பூவை த. செழியன், ஒன்றிய செயலாளர்கள் என்.கே. கர்ணன், பி. கிருஷ்ணசாமி, டி.என். சிவப்பிரகாசம், ஆர். சுரேஷ், பேரூர் செயலாளர்கள் வி. செல்வராஜ், ஆ. வினோத், சி. ரெங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பங்கேற்று, புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வழங்கி, உறுப்பினர் சேர்க்கையை தொடக்கி வைத்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேசியது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளான பிப். 24 ஆம் தேதி, அனைத்து கிராமங்களிலும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். மேலும், அதிமுகவில் இளைஞர்கள், இளம்பெண்களை அதிகளவில் உறுப்பிராகச் சேர்க்க வேண்டும் என்றார் அவர். இதில், குன்னம் தொகுதி எம்எல்ஏவும், மாவட்ட செயலாளருமான ஆர்.டி. ராமச்சந்திரன், எம்.பிக்கள் ஆர்.பி. மருதராஜா, மா. சந்திரகாசி, பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏ இரா. தமிழ்ச்செல்வன், சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவர் அ. அருணாசலம், மாநில மீனவரணி இணை செயலாளர் பி. தேவராஜன், மாவட்ட அணி செயலாளர்கள் எம்.என். ராஜாராம், க. ராஜேஸ்வரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாவட்ட இணை செயலாளர் எம். ராணி வரவேற்றார். நகர செயலாளர் ஆர். ராஜபூபதி நன்றி கூறினார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/12/பெரம்பலூர்-மாவட்ட-அதிமுக-நிர்வாகிகள்-கூட்டம்-2861762.html
2861761 திருச்சி பெரம்பலூர் பேரூராட்சி தினக்கூலி பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு அளிக்க வேண்டும் DIN DIN Monday, February 12, 2018 02:49 AM +0530 பேரூராட்சிகளில் பணியாற்றும் தினக்கூலி பணியாளர்களுக்கு உத்தரவாத பணி பாதுகாப்பு அளிக்க வேண்டுமென, மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே, உள்ளாட்சி பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம், மாவட்டத் தலைவர் பி. மணி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, சங்க நிர்வாகிகள் ந. மஞ்சுளா, எம். செல்லமுத்து, பி. ரமேஷ், எம். ஜாபர் சாதிக், என். ராமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஏஐடியூசி மாவட்டத் தலைவர் வீ. ஞானசேகரன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரும்பாவூர், பூலாம்பாடி, லப்பைக்குடிகாடு, குரும்பலூர் ஆகிய பேரூராட்சிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றும் தினக்கூலி பணியாளர்களை காலமுறை ஊதியப் பணியாளர்களாக உயர்த்த வேண்டும். லப்பைக்குடிகாடு, குரும்பலூர் பேரூராட்சிகளில் ஆள் பற்றாக்குறையால் தலா துப்புரவுப் பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும். சுகாதாரப் பணியாளர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படுவதைத் தவிர்க்க கையுறை, காலணி, முகமூடி, சோப்பு, மழைத்தடுப்பு சாதனங்கள் வழங்குவதோடு, மருத்துவ காப்பீட்டுத் திட்டமும் வழங்க வேண்டும். அரும்பாவூர் பூலாம்பாடி ஆகிய பேரூராட்சிகளில் தினக்கூலி பணியாளர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்யப்பட்டுள்ளதை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாவட்ட கெளரவத் தலைவர் ஆ. தங்கவேல், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் வீ. ஜெயராமன், ஏஐடியூசி நிர்வாகி அ. ராஜேந்திரன், சட்ட ஆலோசகர் இரா. சங்கர், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க நிர்வாகி காப்பியன் உள்பட 100-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பங்கேற்றனர்.
மாவட்ட பொருளாளர் மா. செல்வக்குமார் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் ஏ. அன்வர் பாஷா நன்றி கூறினார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/12/பேரூராட்சி-தினக்கூலி-பணியாளர்களுக்கு-பணி-பாதுகாப்பு-அளிக்க-வேண்டும்-2861761.html
2861130 திருச்சி பெரம்பலூர் அடுத்த கல்வியாண்டு முதல் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடை DIN DIN Sunday, February 11, 2018 12:58 AM +0530 தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அடுத்த கல்வியாண்டு முதல் சீருடைகளில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது என்றார் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்.
பெரம்பலூர் அருகேயுள்ள குரும்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் அமைப்பு சார்பில் 15 ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா அமைப்புத் தலைவர் எஸ்.பி. சண்முகதேவன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் பங்கேற்ற அமைச்சர் மேலும் பேசியது:
மாணவர்களின் வாழ்க்கைத் தரம் உயர முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் பள்ளிக்கல்வித் துறையில் எண்ணற்ற நலத் திட்டங்களை வகுத்தனர்.
அதனடிப்படையில், தமிழக முதல்வரும், துணை முதல்வரும் பள்ளிக் கல்வித் துறையை மேலும் வலுப்படுத்த பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து செயல்படுத்தி வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தி ஏழை வீட்டுப் பிள்ளைகளுக்கும் மடிக்கணினிகளை வழங்கினார். மாணவ, மாணவிகளுக்கு தேர்வு முடிவுகளால் ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில், ரேங்கிங் சிஸ்டம் திட்டம் மாற்றப்பட்டுள்ளது. அலைபேசியில் குறுந்தகவல் வாயிலாக பொதுத்தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள வழிசெய்யப்பட்டுள்ளது.
மேலும், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அடுத்த ஆண்டு முதல் புதிய வண்ணச் சீருடைகள் வழங்கப்பட உள்ளன. விரைவில் அனைத்துப் பள்ளிகளிலும் உயர்கல்விகள் குறித்து விளக்கும் வகையில் எத்தனை வகையான படிப்புகள் உள்ளது என்பது குறித்து மாணவ, மாணவிகளுக்கு தெளிவுபடுத்தும் வகையில் விளம்பர பதாகைகள் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அடுத்த கல்வியாண்டு முதல் பெரம்பலூரில் மாணவிகளுக்கான மேல்நிலைப்பள்ளி உருவாக்கப்படும். மாணவ-மாணவிகளின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக்கொண்டு, சமுதாயத்தில் சிறந்த மனிதர்களாக தங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
தொடர்ந்து, தமிழக அரசால் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வண்ணப் பென்சில்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வண்ணப் பென்சில்களும், அனைத்து வகையிலும் சிறந்து விளங்கிய 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு காமராசர் சிறப்பு விருது வழங்கும் திட்டத்தின் கீழ், 30 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 3 லட்சம் மதிப்பிலான காசோலைகளும், காமராசர் விருதுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
முன்னதாக, பெரம்பலூரில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் நடைபெற்ற 44-வது பரிசளிப்பு, பாராட்டு விழாவில் பங்கேற்றார் அமைச்சர் செங்கோட்டையன்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா, மக்களவை உறுப்பினர்கள் ஆர்.பி. மருதராஜா (பெரம்பலூர்), மா. சந்திரகாசி (சிதம்பரம்), சட்டப்பேரவை உறுப்பினர்கள் இரா. தமிழ்செல்வன் (பெரம்பலூர்), ஆர்.டி. ராமசந்திரன் (குன்னம்), முதன்மைக் கல்வி அலுவலர் தி. அருள்மொழிதேவி, மாவட்டக் கல்வி அலுவலர் பிரிதிவிராஜன் உள்பட முன்னாள் மாணவர் அமைப்பு நிர்வாகிகள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அமைப்பின் கெளரவத் தலைவர் மு. கிருஷ்ணசாமி வரவேற்றார். செயலர் டி. குப்புசாமி நன்றி கூறினார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/11/அடுத்த-கல்வியாண்டு-முதல்-அரசுப்பள்ளி-மாணவர்களுக்கு-புதிய-சீருடை-2861130.html
2861129 திருச்சி பெரம்பலூர் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,020 வழக்குகளுக்கு தீர்வு DIN DIN Sunday, February 11, 2018 12:58 AM +0530 பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,020 வழக்குகளுக்கு ரூ. 3.61 கோடியில் தீர்வு காணப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்துக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எஸ். பாலராஜமாணிக்கம் தலைமை வகித்தார். மகிளா நீதிமன்ற நீதிபதி என். விஜயகாந்த், தலைமை நீதித்துறை நடுவர் எம். சஞ்சீவிபாஸ்கர், சார்பு நீதிபதி எஸ். ஜெயந்தி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் எம். வினோதா, கூடுதல் மகிளா நீதிமன்ற கூடுதல் நீதிபதி கே. மோகனப்பிரியா, குற்றவியல் நடுவர் சி. கருப்புசாமி, ஓய்வு பெற்ற நீதிபதிகள் மணிவேல், ராஜகோபால் ஆகியோர் கொண்ட அமர்வானது, நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு வழங்கியது.
இதில், 73 மோட்டார் வாகன வழக்குகளும், 11 சிவில் வழக்குகளும், 870 சிறு, குறு வழக்குகளும், 66 வங்கி வழக்குகளும் என மொத்தம் 1,020 வழக்குகளுக்கு ரூ. 3 கோடியே 60 லட்சத்து, 89 ஆயிரத்து 772 மதிப்பில் தீர்வு காணப்பட்டது. ஏற்பாடுகளை, மாவட்ட நீதிமன்ற மேலாளர் தனலட்சுமி, சிரஸ்தர் வீரவிஜயன், சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாக அலுவலர் வெள்ளைச்சாமி ஆகியோர் செய்திருந்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/11/தேசிய-மக்கள்-நீதிமன்றத்தில்-1020-வழக்குகளுக்கு-தீர்வு-2861129.html
2861128 திருச்சி பெரம்பலூர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் DIN DIN Sunday, February 11, 2018 12:57 AM +0530 பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலை எதிரே மத்திய அரசைக் கண்டித்து சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் ஏ. முஹம்மது ரபிக் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலர் எம். ஷாஜகான், மாவட்டப் பொருளாளர் எம். ஜியாவுதீன் அஹமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர் என். பாத்திமா பர்வீன், மாணவர் அமைப்பு உறுப்பினர் ஏ. சுமையா பேகம் ஆகியோர் மத்திய அரசை கண்டித்துப் பேசினர். தொடர்ந்து, முஸ்லிம் பெண்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்தை கண்டித்து முழக்கமிடப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜே. முஹமது பிலால், எம். அஹமது இக்பால், எப். சையது அபுதாஹீர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மாவட்ட துணைத் தலைவர் ஏ. முஹம்மது பாரூக் வரவேற்றார். மாவட்ட செயலர் ஏ. அப்துல் கனி நன்றி கூறினார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/11/மத்திய-அரசை-கண்டித்து-ஆர்ப்பாட்டம்-2861128.html
2861127 திருச்சி பெரம்பலூர் பாடாலூரில் ரத்த வகை கண்டறிதல் முகாம் DIN DIN Sunday, February 11, 2018 12:57 AM +0530 பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அரிமா சங்கம், அன்னை தெரசா கல்வி நிறுவனம் சார்பில் பாடாலூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ரத்த வகை கண்டறிதல் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரிமா சங்கத் தலைவர் ஞானசேகரன் தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் கீதா முன்னிலை வகித்தார். முகாமை, முன்னாள் மாவட்ட அமைப்புச் செயலர் மதியழகன், முன்னாள் மாவட்டத் தலைவர் குணசந்திரன் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.
அன்னை தெரசா இன்ஸ்டியூட் நிறுவன அலுவலர் சரவணன் தலைமையிலான அலுவலர்கள் 240 மாணவ, மாணவிகளுக்கு ரத்த வகை கண்டறிந்தனர். முகாமில், அரிமா சங்கப் பொறுப்பாளர் தர்மஜோதி, ஆசிரியர்கள் குமார், அகவி விநாயகமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/11/பாடாலூரில்-ரத்த-வகை-கண்டறிதல்-முகாம்-2861127.html
2861126 திருச்சி பெரம்பலூர் திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆய்வுக் கூட்டம் DIN DIN Sunday, February 11, 2018 12:57 AM +0530 பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள திமுக அலுவலகத்தில், அக்கட்சியின் இளைஞரணி நிர்வாகிகள் ஆய்வுக் கூட்டம் மாவட்ட செயலர் சி. ராஜேந்திரன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹரிபாஸ்கர் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாநில இளைஞரணி இணை செயலர் சுபா. சந்திரசேகர் பேசினார். தொடர்ந்து, உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
நகரச் செயலர் எம். பிரபாகரன், முன்னாள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.ஜி. மாரிக்கண்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் காட்டுராசா, கரிகாலன், அன்பழகன், ரசூல் அகமது, நகர இளைஞரணி செயலர் யுவராஜா, மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/11/திமுக-இளைஞரணி-நிர்வாகிகள்-ஆய்வுக்-கூட்டம்-2861126.html
2861125 திருச்சி பெரம்பலூர் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம் DIN DIN Sunday, February 11, 2018 12:57 AM +0530 தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பெரம்பலூர் கிளை மாவட்ட செயற்குழுக் கூட்டம், மாவட்டத் தலைவர் சந்திரசேகரன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
சங்க நிர்வாகிகள் இளவழகன், விஜயா, கார்த்திகேயன், புஷ்பாமேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் ராஜேந்திரன் தீர்மானங்களை விளக்கினார்.
கூட்டத்தில், ஆசிரியர்களை அலுவலகப் பணிகளில் ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும். ஆசிரியர்களின் வருமான வரியை சம்பளத்தில் பிடித்தம் செய்து, வருமானவரி அலுவலகத்திலிருந்து வரி பாக்கி நிலுவையில் உள்ளதாக கேட்பு கடிதம் வருவது ஆசிரியர்களுக்கு மிகவும் மனவருத்தம் ஏற்படுகிறது. இதை நீக்கிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈ.எம்.ஐ.எஸ், ஆதார், மாணவர்கள் ஸ்மார்ட் கார்டு ஆகிய புள்ளி விவரங்களுக்காக தொடர்ந்து கூட்டங்கள் நடத்துவதும், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதும் ஆகிய நடவடிக்கையால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் தனியார் மூலம் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணைச் செயலர் ரவிச்சந்திரன், மாவட்டத் துணைத் தலைவர்கள் அண்ணாவு, பாலச்சந்திரன், வட்டாரச் செயலர்கள் செல்வம், மணிவண்ணன், மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்டப் பொருளாளர் புகழேந்தி நன்றி கூறினார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/11/தொடக்கப்பள்ளி-ஆசிரியர்-கூட்டணி-செயற்குழு-கூட்டம்-2861125.html
2860704 திருச்சி பெரம்பலூர் மாநில ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் தொடக்கம் DIN DIN Saturday, February 10, 2018 02:35 AM +0530 பெரம்பலூரில் மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள ரோலர் ஸ்கேட்டிங் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொடக்க விழாவுக்கு, ரோலர் ஸ்கேட்டிங் அசோசிஷேயன் மாநில பொதுசெயலர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் அன்புதுரை, பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெரம்பலூர் ரோவர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கே. வரதராஜன் போட்டியைத் தொடக்கி வைத்தார்.
இதில், 200, 400, 600 மீட்டர் போட்டிகளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், கடலூர், கரூர், பெரம்பலூர், அரியலூர்
உள்பட 22 மாவட்டங்களிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோலர் ஸ்கேட்டிங் வீரர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் போட்டியில் வெல்வோருக்கு அன்று மாலை நடைபெறும் விழாவில் பரிசு அளிக்கப்பட உள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/10/மாநில-ரோலர்-ஸ்கேட்டிங்-போட்டிகள்-தொடக்கம்-2860704.html
2860702 திருச்சி பெரம்பலூர் ஈஷா ரத யாத்திரை பெரம்பலூர் வருகை DIN DIN Saturday, February 10, 2018 02:34 AM +0530 கோவை ஈஷா யோக மையம் சார்பில் வலம் வரும் மகா சிவராத்திரி ஈஷா ரத யாத்திரை பெரம்பலூருக்கு வெள்ளிக்கிழமை வந்தடைந்தது.
கோவை ஈஷா யோகா மையம் சார்பில், மகா சிவராத்திரியின் மகத்துவத்தையும், அருளையும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் ஈஷா ரத யாத்திரை வலம் வருகிறது. இந்த ரத யாத்திரை, கோவை மாவட்டத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பிப். 13 ஆம் தேதி ஈஷா யோகா மையத்துக்கு சென்றடைகிறது.
இந்நிலையில், அரியலூர் வழியாக வலம் வந்த மகா சிவராத்திரி ஈஷா ரத யாத்திரை பெரம்பலூருக்கு வந்தது.
பெரம்பலூர் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் தன்னார்வ தொண்டர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, பெரம்பலூர் புகர் மற்றும் பழைய பேருந்து நிலையம், காமராஜ் வளைவு உள்ளிட்ட நகரின் பிரதான பகுதிகளுக்கு சென்ற ரத யாத்திரைக்கு பொதுமக்கள் மலர் தூவி வழிபட்டனர். பின்னர், வேப்பந்தட்டை வழியாக ரத யாத்திரை ஆத்தூருக்கு சென்றது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/10/ஈஷா-ரத-யாத்திரை-பெரம்பலூர்-வருகை-2860702.html
2860701 திருச்சி பெரம்பலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் DIN DIN Saturday, February 10, 2018 02:34 AM +0530 பெரம்பலூர் மாவட்ட தி.மு.க செயற்குழுக் கூட்டம், பாலக்கரையில் உள்ள கட்சி அலுவலகத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் மு. அட்சயகோபால் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னாள் எம்எல்ஏ ம. ராஜ்குமார், பொதுக்குழு உறுப்பினர் ந. ஜெகதீஸ்வரன், மாவட்ட துணை செயலர்கள் டி.சி. பாஸ்கர், நூருல் ஹிதா இஸ்மாயில், ஒன்றிய செயலர்கள் என். கிருஷ்ணமூர்த்தி, எஸ். அண்ணாதுரை, தி. மதியழகன், எஸ். நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலர் சி. ராஜேந்திரன் தீர்மானங்களை விளக்கினார்.
இக்கூட்டத்தில், செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி மார்ச் 1 ஆம் தேதி முதல் கொடியேற்றி, இனிப்புகள் வழங்குதல், மரக்கன்று நடுதல், தெருமுனைப் பிரசாரக் கூட்டங்கள் நடத்துவது, பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் நடத்துவது.
பேருந்து கட்டணம் உயர்த்தியதை கண்டித்து, பிப். 13-ல் நடைபெறும் அனைத்துக் கட்சி கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்பது. பிப். 14 ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் மாவட்ட ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய பொறுப்பாளர்கள் வீ. ஜெகதீசன், சோமு. மதியழகன், சி. ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் செ. ரவிச்சந்திரன், நகரச் செயலர் எம். பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஆர். சரவணன் நன்றி கூறினார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/feb/10/மாவட்ட-திமுக-செயற்குழு-கூட்டம்-2860701.html