Dinamani - கன்னியாகுமரி - http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3038302 திருநெல்வேலி கன்னியாகுமரி குமரியில் ஐயப்ப பக்தர்கள் சீசன்: தற்காலிக கடைகள் அமைக்கும் பணி தீவிரம் DIN DIN Wednesday, November 14, 2018 08:28 AM +0530 கன்னியாகுமரியில் ஐயப்ப பக்தர்கள் சீசன் தொடங்கவுள்ள நிலையில், கடற்கரைச் சாலையில் தற்காலிக கடைகள் அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்களில் பெரும்பாலானோர் கன்னியாகுமரிக்கு வந்து செல்வது வழக்கம். 
ஆண்டுதோறும் நவம்பர் 17ஆம் தேதி தொடங்கி ஜனவரி 20ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். 
இந்நிலையில், பேரூராட்சி நிர்வாகம் வருவாயைப் பெருக்கிக் கொள்ளும் வகையில் சன்னதி தெரு, கடற்கரைச் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஏலம் மூலம் தற்காலிக சீசன் கடைகளை அமைத்து வருகிறது. நிகழாண்டு 569 சீசன் கடைகளை ஏலம் மூலம் வியாபாரிகளுக்கு வழங்க பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுவரை 300-க்கும் மேற்பட்ட கடைகளை வியாபாரிகள் ஏலம் எடுத்துள்ள நிலையில், 4 ஆவது நாளாக புதன்கிழமை (நவ. 14) ஏலம் நடைபெறுகிறது.
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் மு.வெங்கடேசன் கூறியது: நிகழாண்டு 569 தற்காலிக கடைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சீசன் தொடங்க சில நாள்களே உள்ள நிலையில் பக்தர்களுக்குத் தேவையான தற்காலிக கழிப்பறைகள், குடிநீர் வசதி மற்றும் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.
இதனிடையே, கடற்கரைச் சாலையில் கடைகளை ஏலத்தில் எடுத்த வியாபாரிகள் தற்காலிக கடைகளை அமைக்கும் பணியை செவ்வாய்க்கிழமை தொடங்கினர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/14/குமரியில்-ஐயப்ப-பக்தர்கள்-சீசன்தற்காலிக-கடைகள்-அமைக்கும்-பணி-தீவிரம்-3038302.html
3038301 திருநெல்வேலி கன்னியாகுமரி லட்சத்தீவு அருகே கடலில் தத்தளித்த குமரி மீனவர்கள் உள்பட 13 பேர் மீட்பு DIN DIN Wednesday, November 14, 2018 08:28 AM +0530 லட்சத்தீவு அருகே படகு பழுதாகி நடுக்கடலில் தத்தளித்த குமரி மீனவர்கள் உள்பட 13 பேர் செவ்வாய்க்கிழமை பத்திரமாக மீட்கப்பட்டனர்.
குமரி மாவட்டம், தூத்தூரை சேர்ந்த கிளிட்டஸ் என்பவருக்குச் சொந்தமான "லூமானுஸ்' என்ற விசைப்படகில் நீரோடி, தூத்தூர், மற்றும் கேரள மாநிலம் கருங்குளம், வடமாநில மீனவர்கள் உள்பட 13 பேர், கடந்த அக்டோபர் 15ஆம் தேதி  தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
கர்நாடக மாநிலம், மங்களாபுரம் கடல் பகுதியில்  மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, கடந்த 9ஆம் தேதி விசைப்படகு பழுதானது. பின்னர், காற்றில் அடித்துச் செல்லப்பட்ட விசைப்படகு லட்சத்தீவு பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டது.
இதுகுறித்து தெற்காசிய மீனவ தோழமை பொதுச்செயலர் சர்ச்சிலிடம், லட்சத்தீவு கடலில் தவித்த மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். அவர், அந்த  மீனவர்களை மீட்குமாறு  மும்பையிலுள்ள இந்திய கடலோரக் காவல்படை, தமிழக, கேரள முதல்வர் உள்ளிட்டோருக்கு மனு அனுப்பினார்.
இதைத் தொடர்ந்து, இந்திய கடலோரக் காவல்படை "விக்ரம்' என்ற கப்பல் உதவியுடன், மீனவர்கள் 13 பேரையும் பத்திரமாக மீட்டனர். மேலும், பழுதாகி நின்ற விசைப்படகை, லட்சத்தீவில் உள்ள வித்ரா என்ற தீவில் நிறுத்திவைத்தனர். இதனிடையே, தங்களையும், படகையும்  மீட்டவர்களுக்கு மீனவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/14/லட்சத்தீவு-அருகே-கடலில்-தத்தளித்த-குமரி-மீனவர்கள்-உள்பட-13-பேர்-மீட்பு-3038301.html
3038277 திருநெல்வேலி கன்னியாகுமரி குமரி மாவட்டத்தில் 4 வழிச்சாலைப் பணி நிறைவுற்ற பகுதிகளில் ஜனவரி முதல் போக்குவரத்து தொடங்கும்: பொன்.ராதாகிருஷ்ணன் DIN DIN Wednesday, November 14, 2018 08:21 AM +0530 கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்குவழிச் சாலைப் பணிகள் நிறைவு பெற்ற இடங்களில் ஜனவரி மாதம் முதல் போக்குவரத்து தொடங்கும் என்றார் மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.
நாகர்கோவிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தென்னை விவசாயம் ஊக்குவிப்பு மற்றும் மேம்பாட்டுக்கான மாநில அளவிலான கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று அவர் மேலும் பேசியது:
குமரி மாவட்டத்தில் முக்கிய விவசாயப் பயிராக தேங்காய் உள்ளது. தேங்காய் இருதயத்துக்கும், உடலுக்கும் நல்லது. கடந்த 30 ஆண்டுகளாக குமரி மாவட்டத்தின் வளர்ச்சியை தடுத்துவருகிறார்கள். மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இந்த கண்காட்சியில் குமரி மாவட்ட விளைபொருள்கள் எதுவும் இடம்பெறாதது வருத்தமளிக்கிறது. அடுத்த ஆண்டு நமது விவசாயப் பொருள்களும் இதில் இடம்பெற வேண்டும். குமரி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் இடம்தான் பிரச்னையாக  உள்ளது. தென்னை பூங்கா அமைக்க ரூ. 14 கோடி நிதி ஏற்கெனவே தயாராக உள்ளது. செண்பகராமன்புதூரில் 7 ஏக்கர் நிலமும் பார்வையிடப்பட்டது. வேறு இடமும் தேர்வு செய்துவருகிறோம். நாகர்கோவில் ரயில் நிலையம் விரிவாக்கத்துக்கு 60 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும்.
தமிழகத்தில் 4 இடங்களில் "பஸ் ஃபோர்ட்' எனப்படும் பேருந்து முனையம் அமைக்கப்பட உள்ளது. அதில் ஒன்று, குமரி மாவட்டத்தில் அமையும். அதேபோல, குமரி மாவட்டத்தில் துறைமுகம் அமைந்தே தீரும். விமான நிலையம் அமைக்கவும், தில்லி அதிகாரிகளை சந்தித்து, மீண்டும் ஆய்வுசெய்யுமாறு கூறியுள்ளேன். பார்வதிபுரம் மேம்பாலப் பணிகள் 75 சதவீதம் நிறைவுபெற்றுவிட்டன. கோட்டாறு, செட்டிகுளத்திலும் பாலப்பணிகள் விரைவில் தொடங்கும். நான்குவழிச் சாலைப் பணி  70 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்று வருகிறது. இதில் 12 கி.மீ. அளவுக்கு சாலைப் பணிகள் முடிந்துள்ளன. பணி முடிந்த இடங்களில் ஜனவரி மாதம் போக்குவரத்து தொடங்கும்  என்றார் அவர். 
கருத்தரங்குக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே முன்னிலை வகித்தார். இதில், தென்னை வாரிய அதிகாரிகள் அனந்தராமகிருஷ்ணன், மோகன்ராஜ், ராமராஜூ, நிஜாமுதீன், தென்னை விவசாயிகள், தொழில்முனைவோர் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/14/குமரி-மாவட்டத்தில்-4-வழிச்சாலைப்-பணி-நிறைவுற்ற-பகுதிகளில்-ஜனவரி-முதல்-போக்குவரத்து-தொடங்கும்-பொன்ர-3038277.html
3038276 திருநெல்வேலி கன்னியாகுமரி பேச்சிப்பாறை அணையில் கூடுதல் மறுகால் மதகுகள் தயார்: வெள்ளப் பாதுகாப்பு கருதி 48 வீடுகளுக்கு நோட்டீஸ் ஜே. லாசர் DIN Wednesday, November 14, 2018 08:21 AM +0530 பேச்சிப்பாறை அணையில், பேரிடர் கால பாதுகாப்பு  கருதி கூடுதலாக 8 மறுகால் மதகுகள்  அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.  மேலும், மறுகால் மதகுகள் வழியாக தண்ணீர் பாய்ந்து செல்லும் பொதுப்பணித்துறை நிலத்திலுள்ள 48 வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 
தமிழக  அரசு பேச்சிப்பாறை அணையை புனரமைத்துப் பலப்படுத்த முடிவு செய்து, உலக வங்கியின் அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 61.30 கோடியில் பணிகளை மேற்கொண்டுள்ளது.
இப்பணிகளில் முக்கிய அம்சமாக  அணையின் முன்பகுதியில் சாய்வு அணை அமைத்தல், அணையின் உள்சுவரில்  ரசாயனம் கலந்த சிமென்ட் கலவை பூசுதல், கூடுதல் மறுகால் மதகுகள் அமைத்தல், பிரதான மதகு சீரமைத்தல்,  மண் அணை சீரமைத்தல்,  ஆய்வு மாளிகை சீரமைத்தல், தானியங்கி நீர்மட்டக் கருவி அமைத்தல்,  மழை நீர் மானி அமைத்தல்,  அபாயச் சங்கு  அமைத்தல் உள்ளிட்டவை அடங்கும். 
 இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அவ்வப்போது பெய்துவரும் மழையால்  சாய்வு அணை கட்டும் பணியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதே வேளையில் இதரப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  
கூடுதல் மதகுகள்: தற்போது மத்திய நீர்வள அமைப்பு ஒவ்வொரு அணையிலும், பேரிடர் காலங்களில் அதன் பாதுகாப்பு கருதி கூடுதல் மறுகால் மதகுகள் அமைக்க பரிந்துரை செய்து வருகிறது. இதையொட்டி பேச்சிப்பாறை அணையிலும் பேரிடர் காலங்களில் அணையிலிருந்து கூடுதல் தண்ணீரை வெளியேற்றி அணையைப் பாதுகாக்கும் வகையில் கூடுதல் மறுகால் மதகுகள்  அமைக்கப்படுகின்றன. இந்த அணையில் தற்போது  40 அடி அகலம் 15 அடி உயரம் கொண்ட 6 மறுகால் மதகுகள், அணையின் 33 அடி மட்டத்தில்  உள்ளன. 
இவற்றின்  அதிக பட்ச நீர் வெளியேற்றும் திறன் விநாடிக்கு 39 ஆயிரம் கன அடியாகும். இந்நிலையில்  இந்த அணையில் 8 மறுகால் மதகுகள் கூடுதலாக அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, தற்போது அந்தப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. இந்த மதகுகள் ஒவ்வொன்றும் தலா   16.5 அடி அகலம், 9 அடி உயரம் கொண்டது. மதகுகளின் மூலம் விநாடிக்கு மொத்தமாக 17,500 கன அடி தண்ணீரை வெளியேற்ற முடியும். இந்த மதகுகள் அணையின் 39  ஆவது அடி மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளன.  இந்த மதகுகள்  இயந்திரத்தின் மூலமாகவும், கையாலும் இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. 
 இதனிடையே, மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேறும்  பகுதியான பொதுப்பணித்துறை நிலத்தில் அமைந்துள்ள  கான்கிரீட் வீடுகள்  உள்பட  48 வீடுகளில் வசிப்பவர்கள் வீடுகளை  விட்டு வெளியேற வேண்டுமென்று  பொதுப்பணித் துறையினர் நோட்டீஸ் அளித்துள்ளனர். ஆனால்,  இம்மக்களுக்கு சரியான மாற்று இடமும், வீடுகளும் வழங்காததால் அவர்கள் வீடுகளை காலி செய்யாமல் உள்ளனர்.
நவ. 22ஆம் தேதி வரை கெடு: இது குறித்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வேத அருள் சேகர் கூறியதாவது:
பேச்சிப்பாறை அணையில் நடைபெற்று வரும் பணிகளில் பிரதானப் பணிகளில் ஒன்றான கூடுதல் மதகுகள் அமைக்கும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. இதில் மதகுகளில் வர்ணம் பூசும் பணிகள் மட்டுமே மீதம் உள்ளன. 
மத்திய நீர்வள ஆதார அமைப்பின் பரிந்துரையின் பேரில்  கூடுதல் மறுகால் மதகுகள் அமைக்கப்பட்டுள்ளதால், வெள்ளப் பெருக்கு காலங்களில் அணைக்குள்  திடீரென்று அதிகரித்து  வரும் தண்ணீரை அணைக்குப் பாதிப்பில்லாமல் வெளியேற்ற முடியும். 
மறுகால் மதகுகளிலிருந்து வெளியேறும் தண்ணீர் பாய்ந்து செல்லும் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டியுள்ளவர்களிடம்  தமிழ்நாடு ஏரிகள் மற்றும் குளங்கள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றுதல் சட்டம் 2007- இன்படி  வரும் 22 ஆம் தேதிக்குள் வீடுகளை விட்டு வெளியேறும் படி நோட்டீஸ்  வழங்கப்பட்டுள்ளது  என்றார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/14/பேச்சிப்பாறை-அணையில்-கூடுதல்-மறுகால்-மதகுகள்-தயார்-வெள்ளப்-பாதுகாப்பு-கருதி-48-வீடுகளுக்கு-நோட்டீஸ்-3038276.html
3038275 திருநெல்வேலி கன்னியாகுமரி கந்த சஷ்டி விழா: குமரி முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம் DIN DIN Wednesday, November 14, 2018 08:20 AM +0530 கந்த சஷ்டி திருவிழாவையொட்டி,  கன்னியாகுமரி மாவட்ட முருகன் திருக்கோயில்களில் சூரசம்ஹார நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
முருகப்பெருமானின் திருவிழாக்களுள் மிக முக்கியமானது கந்த சஷ்டி திருவிழாவாகும். தேவர்களுக்கு இன்னல் இழைத்து வந்த  அரக்கன் சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்து, தனது வாகனமாகவும், கொடியாகவும் வைத்துக்கொண்டது புராண வரலாறு.
சஷ்டி திருவிழாவின் தொடக்க நாள் முதல் முருக பக்தர்கள் விரதமிருந்து சூரசம்ஹாரத்தை பார்த்த பின்னர் முருகனை தரிசனம் செய்ததும் தங்கள் விரதத்தை நிறைவு செய்வார்கள்.
 நாகர்கோவில் நாகராஜா கோயிலில் அமைந்துள்ள பாலமுருகன் கோயிலில் 41 ஆவது ஆண்டு கந்த சஷ்டி விழா கடந்த 8  ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கால்நாட்டு நிகழ்ச்சியும்,  பக்தர்கள் காப்புகட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.  தினமும் பக்தி சொற்பொழிவு, முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. 
6  ஆம் நாள் திருவிழாவான  செவ்வாய்க்கிழமை (நவ.13)  காலையில் சுவாமிக்கு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெற்றது.  பிற்பகல் 1.30 மணிக்கு தீபாராதனையும், 1.45  மணிக்கு சுவாமி அம்பாளுக்கு சீர்செய்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றன.   2 மணிக்கு முருகப்பெருமான், அம்பாளிடம்  வேல் வாங்குவதற்குப் புறப்படுதல் நிகழ்ச்சியும், மாலை 4.30 மணிக்கு சுவாமி சூரனை வதம் செய்ய புறப்படுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றன.
 மாலை 6.30  மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும், தொடர்ந்து வாணவேடிக்கையும், பின்னர் சுவாமி  4 ரதவீதிகளிலும்  பவனி வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றன. இதில் நாகர்கோவில் நகரம் மட்டுமன்றி சுற்றுவட்டார கிராமங்களிலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபாடு செய்தனர். 
7  ஆம் நாள் நிகழ்ச்சியாக புதன்கிழமை (நவ.14)  காலை 10 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், கோட்டவிளை என்.தங்கசுவாமியின் ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. பின்னர் மங்கள தீபாராதனையை தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு திருக்கல்யாண விருந்து நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 
நாகர்கோவில் அருகேயுள்ள மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுப்பிரமணியசுவாமி வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி சூரனை வதம் செய்ய புறப்பட்டார். பின்னர் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதே போல்  மாவட்டத்தில் பல முருகன் கோயில்களில் சூரசம்ஹார விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

குமார கோவிலில்...
குமாரகோவில் அருள்மிகு  குமாரசுவாமி கோயிலில்  கந்தசஷ்டி விழாவையொட்டி, சூரசம்ஹாரம்   நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் அருள்மிகு குமாரசுவாமிக்கு  காலை 4 மணிக்கு நிர்மால்ய பூஜையும் , உஷபூஜையும் நடைபெற்றன. தொடர்ந்து  வேல்முருகன் சேவா சங்கத்தின் சார்பில்  காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை அகண்டநாம பூஜை நடைபெற்றது. முற்பகல் 11 மணிக்கு அபிஷேகமும், மாலை 5 மணிக்கு  சுவாமி சூரனை  சம்ஹாரம் செய்ய  அலங்கரிக்கப்பட்ட வெள்ளிகுதிரையில்  எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. தொடர்ந்து சூரசம்ஹாரம் நடைபெற்றது.  விரதம் இருந்துவந்த பக்தர்கள் தெப்பகுளத்தில் நீராடி சுவாமியை வணங்கி  விரதத்தை முடித்துக் கொண்டனர். 
வெள்ளிமலை அருள்மிகு  பாலசுப்பிரமண்யசுவாமி திருக்கோயிலில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மாலை 4 மணிக்கு  சுவாமி சூரசம்ஹாரத்திற்கு  குதிரை வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6.15 மணிக்கு சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. பத்மநாபபுரம் அருள்மிகு பாலசுப்ரமண்ய சுவாமி கோயில், களியங்காடு சிவபுரம் சிவன்கோயில்  உள்ளிட்ட பல்வேறு  முருகன் கோயில்களில் சூரசம்ஹார விழா நடைபெற்றது.

குமரி முருகன் குன்றத்தில்...
கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி வேல்முருகன் குன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
கன்னியாகுமரி முருகன் குன்றத்தில் நடைபெற்ற சூரசம்ஹாரத்தையொட்டி, தேரிவிளை குண்டல் ஸ்ரீ முருகன் கோயிலில் அதிகாலையில் கணபதி ஹோமம் நடைபெற்றது. பிற்பகலில் சூரன் பவனி வரும் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து, முருகன் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். விவேகானந்தபுரம், சுவாமிநாதபுரம், பழத்தோட்டம் வழியாக மாலை 6.30 மணிக்கு முருகன் குன்றத்தில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/14/கந்த-சஷ்டி-விழா-குமரி-முருகன்-கோயில்களில்-சூரசம்ஹாரம்-3038275.html
3038274 திருநெல்வேலி கன்னியாகுமரி "கன்னியாகுமரி விரைவு ரயிலை கொச்சுவேலிக்கு நீட்டிக்க கூடாது' DIN DIN Wednesday, November 14, 2018 08:20 AM +0530 கன்னியாகுமரி அதிவிரைவு ரயிலை கொச்சுவேலிவரை நீட்டித்தால் பொதுமக்களை திரட்டிப் போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சியினர் அறிவித்துள்ளனர். 
இதுகுறித்து, குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் கருப்புச் சட்டை அணிந்தபடி, நாகர்கோவில் ரயில் நிலைய மேலாளரிடம் அளித்துள்ள மனு: 
கன்னியாகுமரி அதிவிரைவு ரயிலை கொச்சுவேலி வரை நீட்டிக்கும் முடிவு குமரி மாவட்ட மக்களின் உரிமையைப் பறிக்கும் செயல். இதை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் ஏற்காது. குமரி  மாவட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் கன்னியாகுமரி ரயிலை கொச்சுவேலி வரை நீட்டித்தால் குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சி மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தும்.
மேலும், இக்கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ்  கட்சியின் சார்பில் புதன்கிழமை (நவ. 14) கோட்டாறு ரயில் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  அப்போது, மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் மகேஷ்லாசர், வட்டாரத் தலைவர்கள் ராஜஜெகன், வைகுண்டதாஸ், நிர்வாகிகள் ஜெயசிங், டாக்டர் மெல், பிரியதர்ஷினி  உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/14/கன்னியாகுமரி-விரைவு-ரயிலை-கொச்சுவேலிக்கு-நீட்டிக்க-கூடாது-3038274.html
3038273 திருநெல்வேலி கன்னியாகுமரி ஹோமியோபதி மருத்துவ விழிப்புணர்வு கருத்தரங்கு DIN DIN Wednesday, November 14, 2018 08:19 AM +0530 குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் சேவா பாரதி தொண்டர்களுக்கு ஹோமியோபதி மருத்துவம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு கல்லூரி துணை மருத்துவக்  கண்காணிப்பாளர்  என்.வி. சுகதன் தலைமை வகித்தார். சேவா பாரதி மாவட்ட அமைப்பாளர் பாகுலேயன் முன்னிலை வகித்தார். இதில், மருத்துவர்கள்  சதீஷ் குமார், வின்ஸ்டன் வர்க்கீஸ், சிசிர், கிரிஜா, சஜீவ்  ஆகியோர் பேசினர். கருத்தரங்கில் திரளான சேவா பாரதி தொண்டர்கள் பங்கேற்றனர்.  சேவா பாரதி மாவட்ட பொதுச்செயலர் கிருஷ்ணன் குட்டி நன்றி கூறினார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/14/ஹோமியோபதி-மருத்துவவிழிப்புணர்வு-கருத்தரங்கு-3038273.html
3038272 திருநெல்வேலி கன்னியாகுமரி நாகர்கோவிலில் நவ.16இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் DIN DIN Wednesday, November 14, 2018 08:19 AM +0530 நாகர்கோவிலில் வெள்ளிக்கிழமை (நவ.16)  தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து, குமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் மூ. காளிமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகர்கோவில் கோணத்தில்  உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை( நவ.16) காலை 10.30 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.  கன்னியாகுமரி  மாவட்டம் மற்றும் பிற மாவட்ட தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் நேரில் வருகை தந்து தங்களது நிறுவனங்களுக்கு தேவையான தகுதியுள்ள நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். 
இம்முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு,  டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினிப் பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் கலந்து கொள்ளலாம். பணிக்கு தேர்வு செய்யப்படுவோரது வேலைவாய்ப்பு பதிவுமூப்பு விவரங்கள் ரத்து செய்யப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/14/நாகர்கோவிலில்-நவ16இல்தனியார்-வேலைவாய்ப்பு-முகாம்-3038272.html
3038271 திருநெல்வேலி கன்னியாகுமரி திருவட்டாறு கோயிலில்  இன்று ஆறாட்டு  உற்சவம் DIN DIN Wednesday, November 14, 2018 08:19 AM +0530 திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில்  ஆறாட்டு உற்சவம் புதன்கிழமை (நவ.14)  நடைபெறுகிறது.
 இக்கோயிலில் ஐப்பசி திருவிழாகடந்த 5 ஆம்  தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின்  9 ஆவது நாளான செவ்வாய்க்கிழமை பள்ளி வேட்டை நடைபெற்றது. தொடர்ந்து புதன்கிழமை (நவ.14) சுவாமிக்கு ஆறாட்டு உற்சவம் நடைபெறுகிறது. இதனையொட்டி  இரவு 7 மணிக்கு சுவாமி கருட வாகனத்தில் ஆறாட்டுக்கு எழுந்தருளுகிறார்.   தொடர்ந்து  பரளியாற்றில்  திருவட்டாறு  தளியல் படித்துறைத் துறை பகுதியில் ஆறாட்டு நடத்தப்படுகிறது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/14/திருவட்டாறு-கோயிலில்-இன்று-ஆறாட்டு--உற்சவம்-3038271.html
3038270 திருநெல்வேலி கன்னியாகுமரி இளம் மாணவ விஞ்ஞானிகளுக்கு அறிவியல் தொழில்நுட்ப பயிற்சி DIN DIN Wednesday, November 14, 2018 08:19 AM +0530 குமரி அறிவியல் பேரவை சார்பில், இளம் விஞ்ஞானிகள் பயிற்சிக்காக தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியருக்கு அறிவியல் தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வுப் பயிற்சி முகாம் லெவிஞ்சிபுரம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
இப்பயிற்சி முகாமுக்கு கல்லூரி துணைத் தலைவர் ஐயப்ப கார்த்திக் தலைமை வகித்தார்.  மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆய்வு மைய செமிகிரையோ திட்ட துணை இயக்குநர் ரமேஷ் தொடங்கிவைத்தார். குமரி அறிவியல் பேரவை அமைப்பாளர் முள்ளஞ்சேரி மு. வேலையன் அறிமுகவுரையாற்றினார். கல்லூரி முதன்மை நிர்வாக அலுவலர் சசி வாழ்த்திப் பேசினார்.
இதில், சுற்றுச்சூழல் விஞ்ஞானி சோபனராஜ், சமூக விஞ்ஞானி எட்வின்சாம், தக்கலை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் சுஜின் ஹெர்பர்ட், விஞ்ஞானி பெருமாள்பிள்ளை, கல்வியாளர்கள் தீபா, ஜாண் ரபிகுமார், பாலகிருஷ்ணன், மார்த்தாண்டம் விபுரோ டெக்னாலஜிஸ் நிறுவன இயக்குநர் வி.வி. வினோத் உள்ளிட்டோர் பேசினர். தொடர்ந்து, இந்திய விண்வெளி தொழில்நுட்பம், நிலம், வாழ்வுக்கான பயன்பாடுகள் குறித்து மகேந்திரகிரி இஸ்ரோ மைய விஞ்ஞானி பென்சிகர்ராஜன் பேசினார். 
நிறைவு விழாவில் மாணவர்களின் திறன் மேம்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. இளம் மாணவ விஞ்ஞானிகளான காவ்யா, அனூப் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/14/இளம்-மாணவ-விஞ்ஞானிகளுக்குஅறிவியல்-தொழில்நுட்ப-பயிற்சி-3038270.html
3038269 திருநெல்வேலி கன்னியாகுமரி பிஎஸ்என்எல் மறு இணைப்பு முகாம் இன்று தொடக்கம் DIN DIN Wednesday, November 14, 2018 08:18 AM +0530 குமரி மாவட்டத்தில் பிஎஸ்என்எல்  தரைவழி தொலைபேசி மறு இணைப்பு முகாம் புதன்கிழமை (நவ.14)  முதல் தொடங்குகிறது.
இது குறித்து, நாகர்கோவில் தொலைத்தொடர்பு மாவட்ட பொது  மேலாளர்  சஜிகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பி.எஸ்.என்.எல் தரைவழி இணைப்புகளில் இருந்து இரவு 10.30 மணி முதல் காலை 6 மணி வரையிலும் மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் 24 மணி நேரமும் இந்தியாவின் எந்த ஒரு பகுதிக்கும் எந்த ஒரு நெட்வொர்க்கிற்கும் அளவில்லா அழைப்புகள் பேசும் வசதி முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் ஏற்கனவே லேன்ட் லைன் இணைப்புகளைப் பெற்று தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ள வாடிக்கையாளர்கள் மீண்டும் பி.எஸ்.என்.எல் உடன் இணைந்து இந்த சலுகையை பயன்படுத்தி கொள்ளும் வகையில் பி.எஸ்.என்.எல் நிறுவன  நாகர்கோவில் மாவட்ட நிர்வாகம் சிறப்பு மறு இணைப்பு மேளாக்களை நவ. 14 ஆம் தேதி முதல் 28  ஆம் தேதி வரை, காலை 10.30  மணி முதல் மாலை 5  மணி வரை நடத்துகிறது. 
அதன்படி, நவ.14 மற்றும் 17  ஆம் தேதிகளில் தக்கலை வாடிக்கையாளர் சேவை மையத்திலும், 16  ஆம் தேதி நெய்யூர் வாடிக்கையாளர் சேவை மையத்திலும், 20   ஆம் தேதி  கொல்லங்கோடு அருகேயுள்ள கண்ணநாகம் தொலைபேசி நிலையத்திலும், 28 ஆம் தேதி குளச்சல் வாடிக்கையாளர் சேவை மையத்திலும் இம்முகாம்கள் நடைபெறுகின்றன.
தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ துண்டிக்கப்பட்ட தொலைபேசி எண்களுக்கு பாக்கி தொகை இருந்தால் , பொருத்தமான சலுகை முறையில் தள்ளுபடி பெற்றுக் கொண்டு, மறு இணைப்பு பெறுவதற்கோ, பாக்கி தொகையைச் செலுத்தி கணக்கை முடித்து கொள்வதற்கோ இந்த முகாம்களை பயன்படுத்திக்கொள்ளாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/14/பிஎஸ்என்எல்-மறு-இணைப்புமுகாம்-இன்று-தொடக்கம்-3038269.html
3037862 திருநெல்வேலி கன்னியாகுமரி இரணியல் அருகே பன்றிக் காய்ச்சலால் பெண் சாவு DIN DIN Tuesday, November 13, 2018 05:25 AM +0530
கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் அருகே பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் ஞாயிற்றுக்கிழமை இரவு இறந்தார்.
குமரி மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த சிறப்பு வார்டில் 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் தனியார் மருத்துவமனைகளிலும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இரணியல் அருகே உள்ள கண்டன்விளை பகுதியைச் சேர்ந்த டாஸ்மாக் மேற்பார்வையாளர் ஜோசப்கிங் மனைவி எஸ்தர்கிங் (46). இவர் கடந்த ஒரு வாரமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ரத்த பரிசோதனை மேற்கொண்டபோது, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை உறவினர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி எஸ்தர்கிங் ஞாயிற்றுக்கிழமை இரவு இறந்தார்.
இதைத் தொடர்ந்து, குமரி மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே நாகர்கோவிலைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியை தெரசா, தக்கலை பருத்திவிளையைச் சேர்ந்த 7 மாத கர்ப்பிணி சுகன்யா, தெங்கம்புதூரைச் சேர்ந்த வழக்குரைஞர் ரவிச்சந்திரன், தக்கலை திருவிதாங்கோடு புதுப்பள்ளியைச் சேர்ந்த சக்ரியா ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
மர்மக் காய்ச்சலால் இருவர் சாவு: தக்கலை அருகே பாலப்பள்ளி பகுதியைச் சேர்ந்த முந்திரி ஆலை தொழிலாளி ரெத்தினபாய் (45). கடந்த ஒரு வாரமாக காய்ச்சலால் அவதிப்பட்ட நிலையில், தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவர் திங்கள்கிழமை காலை இறந்தார்.
அஞ்சுகிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சண்முகவேல் (68). காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அஞ்சுகிராமத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனின்றி அவர் திங்கள்கிழமை பிற்பகல் உயிரிழந்தார்.
ரெத்தினபாய் மற்றும் சண்முகவேல் பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்ததாக தகவல் பரவியது. ஆனால், அவர்கள் மர்மக் காய்ச்சலால் இறந்ததாக மாவட்ட சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், மருத்துவத் துறையின் அறிக்கையை பார்த்த பின்னரே பன்றிக் காய்ச்சல் பாதிப்பு குறித்து உறுதியாகக் கூற முடியும் என்றும் தெரிவித்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/13/இரணியல்-அருகே-பன்றிக்-காய்ச்சலால்-பெண்-சாவு-3037862.html
3037636 திருநெல்வேலி கன்னியாகுமரி தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 6,500 வழங்க வலியுறுத்தல் DIN DIN Tuesday, November 13, 2018 01:44 AM +0530
ஓய்வுபெற்ற தோட்டத்தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதிமூலம் குறைந்தபட்ச ஓய்வூதிய தொகையாக ரூ. 6,500 வழங்கவேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகர்கோவில், வருங்கால வைப்புநிதி மண்டல அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சிஐடியூ மாவட்ட துணைத் தலைவர் பி. நடராஜன் தலைமை வகித்தார். தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதியில்
வழங்கப்படும் ஓய்வூதிய தொகை குறைந்தபட்சம் ரூ. 6500 வழங்கவேண்டும். ஏற்கெனவே ஓய்வூதியத்தில் முன்பணம் வாங்கியவர்கள் அந்த தொகையை 100 மாதங்களில் தவணையாக திருப்பி செலுத்திய பிறகும், 220 மாதங்களுக்கும் மேலாக தவணையாக பிடித்தம் செய்கின்றனர். அதனை நிறுத்துவதுடன், பிடித்தம் செய்த அதிக தொகையை தொழிலாளர்களுக்கு திருப்பி வழங்கவேண்டும்.
அரசு குறைந்தபட்ச ஓய்வூதிய தொகையாக ரூ. 1,000 அறிவித்த பிறகும், பலருக்கு இன்னும் ரூ. 200, 300 தான் ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. அவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதிய தொகையை ஓய்வூதியமாக வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் கே. செல்லப்பன் தொடக்க உரையாற்றினார். சிஐடியூ மாவட்ட துணைச் செயலர் வல்சகுமார், மாவட்ட துணைத் தலைவர் சந்திரபோஸ் ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினர். மாவட்டச் செயலர் கே. தங்கமோகன் நிறைவுரையாற்றினார். இதில், நிர்வாகிகள் எஸ். அந்தோணி, எம். லட்சுமணன், ஜான்செளந்தர்ராஜ் உள்பட திரளான தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/13/தோட்டத்-தொழிலாளர்களுக்கு-குறைந்தபட்ச-ஓய்வூதியமாக-ரூ-6500-வழங்க-வலியுறுத்தல்-3037636.html
3037634 திருநெல்வேலி கன்னியாகுமரி கவிஞர் ஏ. சந்திரசேகரன் நாயர் நினைவேந்தல் DIN DIN Tuesday, November 13, 2018 01:44 AM +0530  

குலசேகரம் அருகே கவிஞர் தும்பகோடு ஏ. சந்திரசேகரன் நாயரின் 10 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கவிஞர் தும்பகோடு ஏ. சந்திரசேகரன் நாயர், மலையாள மொழியில் ஏராளமான கவிதைகளும், சிறுகதைகளும் எழுதி புகழ் பெற்றவர். இவரது 10 ஆவது ஆண்டு நினைவேந்தலும், இவரது பேரன் ஷெமின் பாலசந்திரன் நாயர் இயக்கியுள்ள டைட் ஆப் லைஸ் என்ற ஆங்கிலப் படத்தின் சுவரொட்டி வெளியீட்டு விழாவும் திருநந்திக்கரை நேதாஜி நினைவு நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நேதாஜி நினைவு நூலகத் தலைவர் ஆர். சுந்தரேஷன் தலைமை வகித்தார். கவிஞர் ஏ. சந்திரசேகரன் நாயர் படத்திற்கு சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி தலைவர் சி.கே. மோகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கேரள மொழியியல் துறை ஆராய்ச்சி அலுவலர் பிஜு பாலகிருஷ்ணன் நினைவேந்தல் உரையாற்றினார்.திரைப்பட சுவரொட்டியை ஓவியரும், கலை இயக்குநருமான மார்த்தாண்டம் ராஜசேகரன் வெளியிட்டார்.
எழுத்தாளர் பொன்மனை வல்சகுமார், தமுஎகச மாவட்டத் தலைவர் ஜெயகாந்தன், மாவட்டச் செயலர் ஜே.எம்.ஹசன், திருநந்திக்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ். சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பேசினர். கிராம வளர்ச்சி மைய செயலர் பி. ஷீஜா சந்திரன் வரவேற்றார். தமுஎகச கிளைத் தலைவர் ஆர். வினோத் நன்றி கூறினார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/13/கவிஞர்-ஏ-சந்திரசேகரன்-நாயர்-நினைவேந்தல்-3037634.html
3037633 திருநெல்வேலி கன்னியாகுமரி நாகர்கோவிலில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்: ரூ. 6.25 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் DIN DIN Tuesday, November 13, 2018 01:44 AM +0530
குமரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ. 6 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில், பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத் திறனாளி நல உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி பொதுமக்களிடமிருந்து 299 மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்களை மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, கடந்த 13.6.2018 அன்று மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கல்குளம் வட்டம், வியன்னூர் கிராமத்தைச் சேர்ந்த மிக்கேல்ராஜின் மனைவி வின்சி ராஜபாய், கொல்லங்கோடு கிராமத்தைச்சேர்ந்த ஜெயகுமார் மனைவி கிறிஸ்டல் ராஜம் ஆகியோருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து, தலா ரூ. 3 லட்சத்துக்கான காசோலையையும், இதய அறுவை சிகிச்சைக்காக விஜின் என்பவருக்கு தமிழ்நாடு மாநில நோயாளர் நல நிதியிலிருந்து ரூ. 25 ,ஆயிரத்துக்கான காசோலையையும் என மொத்தம் ரூ. 6 லட்சத்து 25 ஆயிரத்துக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா. ரேவதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரகுபதி மற்றும் அனைத்துத்துறை அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/13/நாகர்கோவிலில்-மக்கள்-குறைதீர்-நாள்-கூட்டம்-ரூ-625-லட்சம்-மதிப்பில்-நலத்-திட்ட-உதவிகள்-3037633.html
3037631 திருநெல்வேலி கன்னியாகுமரி கேரளத்திலிருந்து மீன் கழிவுகள் ஏற்றி வந்த லாரி பறிமுதல் DIN DIN Tuesday, November 13, 2018 01:43 AM +0530
கேரளத்திலிருந்து மீன் கழிவுகளை ஏற்றி வந்த லாரி சுருளகோடு அருகே பழுதாகி நின்ற நிலையில் போலீஸார் அதனை பறிமுதல் செய்தனர்.
கேரளத்தில் இருந்து குமரி மாவட்டப் பகுதிகளுக்கும், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட பகுதிகளுக்கும் அடிக்கடி மீன் மற்றும் இறைச்சிக் கழிவுகள் லாரிகளில் ஏற்றி வந்து கொட்டப்படுகின்றன. இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கேரளத்தில் இருந்து மீன் கழிவுகளை ஏற்றி வந்த லாரி ஒன்று சுருளகோடு அருகே செல்லன்திருத்தி பகுதியில் பழுதாகி நின்றது. இந்த லாரியிலிருந்து வீசிய துர்நாற்றம் காரணமாக அப்பகுதி வழியாக மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, லாரி ஓட்டுநர் லாரியை விட்டு தலைமறைவாகிவிட்டார். தகவலறிந்து வந்த குலசேகரம் போலீஸார், லாரியின் உரிமையாளரைத் தொடர்பு கொண்டு பேசி, அவர்கள் அனுப்பிய லாரியில் மீன் கழிவுகள் ஏற்றப்பட்டு, மீண்டும் கேரளத்துக்கே கொண்டு செல்லப்பட்டது. மேலும் பழுதான லாரி பறிமுதல் செய்யப்பட்டு குலசேகரம் காவல் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/13/கேரளத்திலிருந்து-மீன்-கழிவுகள்-ஏற்றி-வந்த-லாரி-பறிமுதல்-3037631.html
3037630 திருநெல்வேலி கன்னியாகுமரி நாகர்கோவில் நகரச் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு DIN DIN Tuesday, November 13, 2018 01:43 AM +0530
மழையால் சேதமடைந்த நாகர்கோவில் நகர்ப்பகுதி சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி குமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரேவிடம் சமத்துவ மக்கள் கட்சியினர் மனு அளித்தனர்.
குமரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், சமத்துவ மக்கள் கட்சியின் நாகர்கோவில் நகரச் செயலர் ஜெயகுமார் தலைமையில் மாவட்ட அவைத்தலைவர் பால்ராஜ், மாவட்ட வழக்குரைஞரணிச் செயலர் செண்பகவல்லி மற்றும் திரளானோர் ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனு:
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் புதைச் சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இது போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக உள்ளது. குறிப்பாக நாகர்கோவில் நகரப் பகுதியில் இருசக்கர வாகனங்களில் செல்வோரும், நடந்து செல்வோரும் சேதமடைந்த சாலைகளில் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே நாகர்கோவில் நகரம், மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
நாகர்கோவில் வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை நாகம்மாள் அளித்த புகார் மனு விவரம்: பழமை வாய்ந்த வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப் பள்ளியில் சுமார் 3 ஆயிரம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் அருகே இருந்த டாஸ்மாக் மதுக்கடையை, தொடர் போராட்டங்கள் நடத்தி மூடினோம். தற்போது அந்த கடையை மீண்டும் திறப்பதற்கான முயற்சி நடைபெற்று வருவதாக தெரிகிறது.
எனவே மாணவ, மாணவியர், மற்றும் பொதுமக்கள் நலன் கருதி பள்ளி அருகே டாஸ்மாக் மதுகடையை மீண்டும் திறக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆதிவாசி கிரிவற்க காணிக்கார் சமுதாய சங்கச் செயலர் முருகானந்தம் காணிக்காரன் என்பவர் தலைமையில் அளித்த மனு விவரம்:
குமரி மாவட்டத்தில் திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மாவினால் காணி இன மக்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தை மீண்டும் காணி இன மக்களிடமே ஒப்படைக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/13/நாகர்கோவில்-நகரச்-சாலைகளை-சீரமைக்க-வலியுறுத்தி-ஆட்சியரிடம்-மனு-3037630.html
3037629 திருநெல்வேலி கன்னியாகுமரி மத்திய அமைச்சர் மறைவுக்குபொன். ராதாகிருஷ்ணன் இரங்கல் DIN DIN Tuesday, November 13, 2018 01:43 AM +0530
மத்திய அமைச்சர் அனந்தகுமார் மறைவுக்கு, மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவரது நாகர்கோவில் முகாம் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய ரசாயனம் மற்றும் உரம், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் அனந்தகுமார் திங்கள்கிழமை மறைந்தார் என்ற செய்தி மிகுந்த மன வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
மிகவும் வேகமாகவும், துடிப்புடனும் செயல்படக்கூடிய அவரின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவிப்பதோடு, கர்நாடக பாஜக தலைவர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்களின் வருத்தத்தில் நானும் பங்கு கொள்கிறேன். அனந்தகுமாரின் ஆன்மா நற்கதி அடைய எல்லாம் வல்ல அன்னை சக்தியை பிரார்த்திக்கிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/13/மத்திய-அமைச்சர்-மறைவுக்குபொன்-ராதாகிருஷ்ணன்-இரங்கல்-3037629.html
3037628 திருநெல்வேலி கன்னியாகுமரி குமரி அரசுப் பழத்தோட்டத்தில் பண்ணைச் சுற்றுலா அறிமுகம் DIN DIN Tuesday, November 13, 2018 01:43 AM +0530
கன்னியாகுமரி அரசுப் பழத்தோட்டத்தில் பண்ணைச் சுற்றுலா அறிமுகம் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு ஒருநாள் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
கன்னியாகுமரி அரசுப் பழத்தோட்டம் சுமார் 35 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. திருவிதாங்கூர் மகாராஜா காலத்தில் அரண்மனைக்குத் தேவையான பழங்கள் இங்கிருந்து அனுப்பட்டு வந்தன. இதனால், இங்கு ஏராளமான மா ரகங்கள் பராமரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், அண்மையில் ரூ. 4 கோடியில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இப்பூங்கா சுற்றுலா பயணிகளிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. சிறுவர் பூங்கா, மூலிகைத் தோட்டம், அலங்கார நீருற்று, அலங்கார நடைபாதை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, பண்ணைச் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், மா, சப்போட்டா உள்ளிட்ட பலன்தரும் மரக்கன்றுகளை குறைவான இடங்களில் அதிகமாக நட்டு பராமரிப்பது குறித்தும், மாடித்தோட்டம் மற்றும் இயற்கை உரங்கள் தயாரிப்பது குறித்தும் விவசாயிகளுக்கு ஒருநாள் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு 40 பேர் வீதம் பயிற்சி அளிக்கப்படும். முதல்கட்டமாக 1200 பேருக்கு பயிற்சியளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில், வேளாண் துறை இணை இயக்குநர் அசோக் மேக்ரின், உதவி இயக்குனர் ஷீலா ஜான், பேச்சிப்பாறை தோட்டக்கலை ஆராய்ச்சி மைய பேராசிரியை சொர்ணப்ரியா, அகஸ்தீசுவரம் வட்டார வேளாண்மை அலுவலர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/13/குமரி-அரசுப்-பழத்தோட்டத்தில்-பண்ணைச்-சுற்றுலா-அறிமுகம்-3037628.html
3037627 திருநெல்வேலி கன்னியாகுமரி 100 நாள் வேலை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம் DIN DIN Tuesday, November 13, 2018 01:43 AM +0530
அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கிராம ஊராட்சி பகுதியில் வசிக்கும் பயனாளிகளுக்கு 100 நாள் வேலை வழங்க வலியுறுத்தி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது.
அகஸ்தீசுவரம் ஒன்றியக் குழுச் செயலர் கே.எஸ். லட்சுமி தலைமை வகித்தார். நிர்வாகிகள் எம். வாசுகி, எம். ஜான்மேரி, எம். சுதாராணி, எம். குமாரி, கே. இசக்கிமுத்து உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் மலைவிளை பாசி போராட்டத்தை தொடங்கிவைத்தார்.
மாவட்ட, வட்டார நிர்வாகிகள் எஸ்.எஸ். சந்திரன், ஏ. பழனி, எம். சுரேஷ், எஸ். தர்மலிங்கம், பி. மணிகண்டன், எம். சிவதாணு, பாலகிருஷ்ணன், எம். அய்யப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கிராம ஊராட்சிகளில் வேலை அட்டை பெற்றுள்ள அனைத்துப் பணியாளர்களுக்கும் உடனடியாக 100 நாள் வேலை வழங்கவேண்டும். அவர்களுக்கு அரசு அறிவித்துள்ள தினக்கூலி ரூ. 224 வழங்க வேண்டும். இப்பணியாளர்களுக்கு நீர்நிலைகளை பராமரித்தல், குளங்களை ஆழப்படுத்துதல், வாய்க்கால்களை தூர்வாருதல், மரம் நடுதல், மண் சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட வேலைகள் வழங்கப்படவேண்டும். கடைவரம்புப் பகுதிகளில் தண்ணீர் தடையின்றி செல்ல அனைத்துக் கால்வாய்களையும் தூர்வார வேண்டும். தனியார் தோட்டங்களில் வேலைசெய்யும் ஆண் தொழிலாளர்களின் வேலைகளைப் பறிக்கக்கூடாது. தூய்மைத் திட்டப் பணியாளர்களுக்கு மாதம் ரூ. 5,000 ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. மாவட்டத் தலைவர் என்.எஸ். கண்ணன் நன்றி கூறினார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/13/100-நாள்-வேலை-வழங்க-வலியுறுத்தி-விவசாயிகள்-சங்கத்தினர்-போராட்டம்-3037627.html
3037626 திருநெல்வேலி கன்னியாகுமரி ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரி மாணவர்களுக்கு முதலுதவிப் பயிற்சி DIN DIN Tuesday, November 13, 2018 01:42 AM +0530
நாகர்கோவில் ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரி சுகாதார ஆய்வாளர் பயிற்சி மாணவர்களுக்கு முதலுதவி பயிற்சி, கல்லூரி துணைத் தலைவர் அருள்ஜோதி தலைமையில் நடைபெற்றது.
டாக்டர் ஜெயசேகரன் மருத்துவமனை மருத்துவர் ரேணு தேவபிரசாத் முன்னிலை வகித்து மாணவர்களுக்கு சாலை விபத்து, தீ விபத்து, இருதயக் கோளாறு போன்ற ஆபத்தான காலங்களில் எவ்வாறு முதலுதவி சிகிச்சை அளிக்கவேண்டும் என விளக்கமளித்தார். செவிலியர் கல்லூரிப் பேராசிரியை ஜெயலட்சுமி பாம்புக்கடி, பக்கவாதம், தண்ணீரில் மூழ்கியவர்களுக்கு உயிர் காக்கும் முதலுதவி அளிப்பது குறித்து பயிற்சி அளித்தார்.
ஜெயசேகரன் நினைவு டிரஸ்ட் மருத்துவமனை மருத்துவர் தேவபிரசாத் முதலுதவி குறித்து செயல் விளக்கமளித்து, பயிற்சி பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கினார்.
ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரி முதுநிலை பேராசிரியர் டாக்டர் அருணாசலம் பயிற்சி குறித்து அறிமுக உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் அய்யப்பன், துரைராஜ், சிவதாணுபிள்ளை, மரியஜான், பகவதிபெருமாள், சாம்ஜெபா, லிட்வின் லூசியா, அலுவலக செயலர் சுஜின், மாணவர் ஆலோசகர் டால்பின் ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/13/ரோஜாவனம்-பாராமெடிக்கல்-கல்லூரி-மாணவர்களுக்கு-முதலுதவிப்-பயிற்சி-3037626.html
3037625 திருநெல்வேலி கன்னியாகுமரி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் மீது வழக்கு DIN DIN Tuesday, November 13, 2018 01:42 AM +0530
மார்த்தாண்டம் அருகே பள்ளி மாணவியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த இளைஞர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.
மார்த்தாண்டம் அருகேயுள்ள ஆற்றூர் பகுதியைச் சேர்ந்தவர் ரெதீசன் (28). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த, அரசு உதவிபெறும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வரும் 17 வயது மாணவிக்கும் இடையே பழக்கம் இருந்து வந்ததாம்.
இந்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் ரெதீசன், மாணவியை தனது பாட்டி வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்தாராம். அதன் பின்னர் வீட்டுக்கு வந்த மாணவிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாம். இதையடுத்து மாணவியிடம், அவரது தாயார் விசாரித்தபோது ரெதீசன் தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து மாணவியின் தாயார் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி, மாணவியை மருத்துவப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிந்து தலைமறைவாகவுள்ள ரெதீசனை தேடி வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/13/பள்ளி-மாணவிக்கு-பாலியல்-தொல்லை-இளைஞர்-மீது-வழக்கு-3037625.html
3037624 திருநெல்வேலி கன்னியாகுமரி அருமனை அருகே மர்மக் காய்ச்சலுக்கு தொழிலாளி பலி DIN DIN Tuesday, November 13, 2018 01:42 AM +0530
அருமனை அருகே மர்மக் காய்ச்சலால் ரப்பர் தோட்டத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
காரோடு பகுதியைச் சேர்ந்தவர் புவனசந்திரன்(65). ரப்பர் தோட்டத் தொழிலாளியான அவர் கடந்த சில நாள்களாக காய்ச்சல் காரணமாக அருமனையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார். இதில் காய்ச்சல் குணமடையாததால் கேரள மாநிலம், காரணக்கோணத்திலுள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாராம்.
இந்நிலையில் காய்ச்சல் மேலும் அதிகரித்ததால், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த சுகாதாரத் துறையினர், காரோடு பகுதிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் சுகாதாரப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/13/அருமனை-அருகே-மர்மக்-காய்ச்சலுக்கு-தொழிலாளி-பலி-3037624.html
3037623 திருநெல்வேலி கன்னியாகுமரி மார்த்தாண்டம் அருகே தொழிலாளி தற்கொலை DIN DIN Tuesday, November 13, 2018 01:42 AM +0530
மார்த்தாண்டம் அருகே செங்கல்சூளை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திக்குறிச்சி விளாச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ஜஸ்டின்ராஜ் (42). செங்கல்சூளை தொழிலாளி. இவருக்கு சாந்தி என்ற மனைவியும், 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவருக்கு மதுஅருந்தும் பழக்கம் உள்ளதாம். ஞாயிற்றுக்கிழமை மது அருந்திவிட்டு வந்தாராம். இதை அவரது மனைவி கண்டித்தாராம்.
இதையடுத்து ஜஸ்டின்ராஜ் தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டாராம். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததையடுத்து, அறையில் சென்று பார்த்த போது ஜஸ்டின்ராஜ் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டாராம். உறவினர்கள் அவரை மீட்டு, அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து சாந்தி அளித்த புகாரின்பேரில் மார்த்தாண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/13/மார்த்தாண்டம்-அருகே-தொழிலாளி-தற்கொலை-3037623.html
3037121 திருநெல்வேலி கன்னியாகுமரி விசைப்படகு பழுது: குமரி மீனவர்கள் உள்பட 13 பேர் லட்சத்தீவில் சிக்கித் தவிப்பு DIN DIN Monday, November 12, 2018 08:08 AM +0530 குமரி மாவட்டத்திலிருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற 13 மீனவர்கள் விசைப்படகு பழுதானதால் லட்சத்தீவில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
குமரி மாவட்டம்,  தூத்தூரைச்  சேர்ந்த கிளிட்டஸ் என்பவருக்குச் சொந்தமான லூமானுஸ் என்ற விசைப்படகில்,  நீரோடி, தூத்தூர் மற்றும் கேரள மாநிலம் கருங்குளம்,  வடமாநில மீனவர்கள் உள்பட 13 பேர் கடந்த அக். 15 ஆம் தேதி  தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
கர்நாடக மாநிலம், மங்களாபுரம் கடல் பகுதியிலிருந்து  200 கடல் மைல் தொலைவில் கடந்த 9ஆம் தேதி அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, விசைப்படகின் இயந்திரம் பழுதாகியுள்ளது. 
இதனால் மீனவர்கள் கரை திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், விசைப்படகு காற்றில் அடித்துச் செல்லப்பட்டு, லட்சத்தீவு அருகே 13 மீனவர்களும் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து தெற்காசிய மீனவ தோழமை பொதுச் செயலர் சர்ச்சிலி கூறியதாவது:  
லட்சத்தீவில் 13 மீனவர்களும் தவித்து வருவது குறித்து மும்பையிலுள்ள இந்திய கடலோரக் காவல்படை மற்றும் மீட்பு  அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடலோரக் காவல்படையினர் கடல் பகுதியில்  சனிக்கிழமை மேற்கொண்ட ஆய்வில், லட்சத்தீவு பகுதியில் மீனவர்கள் விசைப்படகுடன் தத்தளிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களை இந்திய கடலோரக் காவல் படையினர் கப்பல் மூலம் மீட்டு பாதுகாப்பாக கரைசேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/12/விசைப்படகு-பழுது-குமரி-மீனவர்கள்-உள்பட-13-பேர்-லட்சத்தீவில்-சிக்கித்-தவிப்பு-3037121.html
3036876 திருநெல்வேலி கன்னியாகுமரி நாகர்கோவில் அருகே  பைக் தீ வைத்து எரிப்பு DIN DIN Monday, November 12, 2018 01:05 AM +0530 நாகர்கோவில் அருகே பெண்ணின் பைக்கை தீ வைத்து  எரித்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
நாகர்கோவில் பட்டகசாலியன் விளை பகுதியைச் சேர்ந்தவர் ரேகா (28).  இவர், வழக்கம்போல சனிக்கிழமை இரவு தனது பைக்கை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். 
இந்நிலையில் நள்ளிரவில் பைக் திடீரென்று தீப்பிடித்து  எரிந்து கொண்டிருந்ததாம்.  இதையடுத்து ரேகா மற்றும் அவரது வீட்டிலிருந்தவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர்.  மேலும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.  இதற்குள் பைக் முற்றிலுமாக எரிந்து விட்டது. 
இதுகுறித்து நேசமணிநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து குடும்பத் தகராறு காரணாக பைக் எரிக்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/12/நாகர்கோவில்-அருகே-பைக்-தீ-வைத்து-எரிப்பு-3036876.html
3036875 திருநெல்வேலி கன்னியாகுமரி ஒழுகினசேரியில் மின்மாற்றியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற  தொழிலாளியால் பரபரப்பு DIN DIN Monday, November 12, 2018 01:05 AM +0530 நாகர்கோவில் ஒழுகினசேரியில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மின் மாற்றியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற தொழிலாளியால்  சனிக்கிழமை இரவு பரபரப்பு ஏற்பட்டது.
சுங்கான்கடை பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (40).  மதுப்பழக்கம் கொண்ட இவர்,  அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபடுவாராம்.  இதை அவரது மனைவி கண்டித்தாராம். 
இந்நிலையில் ஒழுகினசேரியிலுள்ள ஒரு மின்மாற்றியில் ஏறிய சுரேஷ் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறியுள்ளார். 
மின்மாற்றியில் மின்சாரம் இருந்த நிலையில்,  மின்சார வாரியத்தினருக்கும், தீய ணைப்புத் துறையினரும், போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் விரைந்து வந்து சுரேஷிடம் பேச்சு நடத்தினார். இதில் அவர் மின்மாற்றியிலிருந்து கீழே இறங்க அடம் பிடித்த நிலையில், மின் வாரியத்தினர் மின்சாரத்தை தடை செய்து, சுரேஷை வலுக்கட்டாயமாக கீழே இறக்கினர். தொடர்ந்து போலீஸார் அவரை எச்சரித்து வீட்டுக்கு அனுப்பினர்.  இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/12/ஒழுகினசேரியில்-மின்மாற்றியில்-ஏறி-தற்கொலைக்கு-முயன்ற-தொழிலாளியால்-பரபரப்பு-3036875.html
3036874 திருநெல்வேலி கன்னியாகுமரி நாகர்கோவிலில் தொலைபேசி ஆலோசனைக் குழு கூட்டம் DIN DIN Monday, November 12, 2018 01:04 AM +0530 நாகர்கோவிலில் நடைபெற்ற  தொலைபேசி ஆலோசனைக் குழு கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் பிஎஸ்என்எல் தொலைபேசி மற்றும் இணைய சேவைகளை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.   
இந்தக் கூட்டத்துக்கு  மாநிலங்களவை உறுப்பினரும், தொலைபேசி ஆலோசனைக் குழுத் தலைவருமான  ஏ. விஜயகுமார் தலைமை வகித்தார்.  
மாவட்ட பொதுமேலாளர் ஆர். சஜிகுமார் முன்னிலை வகித்தார்.  துணைப் பொது மேலாளர்கள் எல்.  டெல்பின் மேரி, கே. ராஜன், எஸ். அனிதா மற்றும் கோட்டப் பொறியாளர்,  உப கோட்டப் பொறியாளர்கள்,  தொலைபேசி ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். 
கூட்டத்தில், மாநிலங்களவை உறுப்பினர் ஏ. விஜயகுமார் பேசியதாவது:
மாவட்டத்தில் தொலைத்தொடர்பு சேவைகளை மேம்படுத்துவதற்கு அனைத்து முயற்சிகளும் செய்யப்பட வேண்டுமென்றும்,  குறிப்பாக கால் டிராப்,  கால் கிடைக்காமை மற்றும் மொபைல் இன்டர்நெட்டின் வேகம் குறைவு போன்றவற்றை சரி செய்ய வேண்டுமென்றும், மாவட்டத்தில் தொலைத்தொடர்பு சேவைகளை மேம்படுத்தும் வகையில் போதிய உபகரணங்களைப் பெற்றுத் தருதல், சாலை பராமரிப்பு, முக்கிய இடங்களில் நடைபெறும் மேம்பால பணிகளால் தொலைத் தொடர்பில் ஏற்படும் பழுதுகளை சரி செய்வதற்கும்,  மேற்கொண்டு தவிர்ப்பதற்கும் முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/12/நாகர்கோவிலில்-தொலைபேசி-ஆலோசனைக்-குழு-கூட்டம்-3036874.html
3036872 திருநெல்வேலி கன்னியாகுமரி திருவட்டாறு கோயிலில் விஷ்ணு சகஸ்ரநாப ஜெபம் தொடக்கம் DIN DIN Monday, November 12, 2018 01:04 AM +0530 திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில்  விஷ்ணு சகஸ்ரநாப ஜெபம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் அனைத்து ஏகாதசி நாள்களிலும் விஷ்ணு சகஸ்ரநாப ஜெபம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  
இந்நிலையில் கோயிலில் நடைபெற்று வரும் ஐப்பசித் திருவிழாவின் 5 ஆம் நாளான சனிக்கிழமை இந்த ஜெபம் தொடங்கியது. திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த அஸ்வதி திருநாள் கெளரி லட்சுமி பாய் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். 
நிகழ்ச்சியில் அன்னபூரணி சேவா சங்க நிர்வாகிகள்  சி. அனந்தகிருஷ்ணன், டாக்டர் சந்திரமோகன், ஜெயஸ்ரீ, பரமேஸ்வரன் நாயர், விஸ்வமம்பரன், அனில்குமார், சுகுமாரன் நாயர் மற்றும் கோயில் மேலாளர் மோகன்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/12/திருவட்டாறு-கோயிலில்-விஷ்ணு-சகஸ்ரநாப-ஜெபம்-தொடக்கம்-3036872.html
3036871 திருநெல்வேலி கன்னியாகுமரி அனுமதியின்றி சரணகோஷ யாத்திரை: இந்து மகா சபையினர்  121 பேர் கைது DIN DIN Monday, November 12, 2018 01:04 AM +0530 சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து,  நாகர்கோவிலில் இருந்து திருவனந்தரபுரத்துக்கு சரணகோஷ யாத்திரை செல்ல முயன்ற அகில பாரத இந்து மகா சபையினர் 121 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை  கைது செய்தனர்.
சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவில் நாகராஜா கோயிலிருந்து திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் வரை இருசக்கர வாகனத்தில் சரணகோஷ யாத்திரை நடத்தும் வகையில்,  அகில பாரத இந்து மகா சபை மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நாகராஜா கோயில் வளாகத்தில் திரண்டு யாத்திரைக்கு தயாராகினர். இதையடுத்து அங்கு வந்த போலீஸார் யாத்திரைக்கு அனுமதியில்லையெனக் கூறி யாத்திரை நடத்த முயன்ற பாலசுப்பிரமணி உள்பட 121 பேரை கைது செய்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/12/அனுமதியின்றி-சரணகோஷ-யாத்திரைஇந்து-மகா-சபையினர்--121-பேர்-கைது-3036871.html
3036870 திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்ட அளவிலான போட்டி: அருணாச்சலா பள்ளி மாணவர்கள் சாதனை DIN DIN Monday, November 12, 2018 01:03 AM +0530 வெள்ளிச்சந்தை அருகே  காட்டுவிளை  அருணாச்சலா மெட்ரிக் பள்ளியில் பயிலும் மாணவர்,  மாணவிகள்  பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு  மாவட்டம் மற்றும் கல்வி மாவட்ட அளவில் சாதனை  படைத்துள்ளனர்.
உலக சிக்கன நாளை முன்னிட்டு,   மாவட்ட அளவில்  நாகர்கோவில் ஜோசப் கான்வென்டில்  சிக்கனம் மற்றும் சேமிப்பு  என்னும் தலைப்பில்  கட்டுரைப் போட்டி நடைபெற்றது. 
இப்போட்டியில் அருணாச்சலா பள்ளியைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி  ஆஷிகா கலந்துகொண்டு  இரண்டாம் பரிசு பெற்றுள்ளார்.  மேலும் தக்கலை  கல்வி மாவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையேயான  நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில்    இப்பள்ளி  ஒன்பதாம் வகுப்பு மாணவர் கௌதம்,  தகவல் வழங்கும் தானியங்கி  குப்பைத்தொட்டி  என்னும் கருவியுடன் கலந்து கொண்டு  மூன்றாம் இடத்தை  பெற்றுள்ளார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/12/மாவட்ட-அளவிலான-போட்டி-அருணாச்சலா-பள்ளி-மாணவர்கள்-சாதனை-3036870.html
3036869 திருநெல்வேலி கன்னியாகுமரி மாநில அளவிலான கலைப் போட்டிகள் என்.ஐ. கலைக் கல்லூரிக்கு சுழற்கோப்பை DIN DIN Monday, November 12, 2018 01:03 AM +0530 மாநில அளவில் கல்லூரிகளிடையே  நடைபெற்ற  கலைப்போட்டிகளில், குமாரகோவில் என்.ஐ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி  ஒட்டுமொத்த  சாம்பியன் பட்டத்தை பெற்று சுழற்கோப்பையை வென்றது. 
மாநில அளவில் கல்லூரிகளுக்கிடையேயான  கலைப்போட்டிகள் திருநெல்வேலி மாவட்டம், தென்காசி ஜெ.பி. கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில்  என்.ஐ. கல்லூரி காட்சி  தொடர்பியல்துறை மாணவர்கள் சுழற்கோப்பையை வென்றுள்ளனர். 
குறும்பட போட்டியில்  என்.ஐ. கல்லூரியைச் சேர்ந்த  வனிஷா முதல் பரிசு,  திரைப்பட பாடல் போட்டியில் ஆதில் முதல் பரிசு,  ஊமை நாடக போட்டியில் அபிநயா, சோனியா, செல்வா, கிஷோர், ஜெப்ரின்  மற்றும் ரஹீம்லால் ஆகியோர் முதல்  பரிசு பெற்றுள்ளனர்.  
மெகந்தி போட்டியில் அல்லமீன்,  வன்ஷா,  ஓவியப்போட்டியில்  அபிலாஷ் ஆகியோருக்கு முதல் பரிசு,  முக ஓவியப்போட்டியில்  யோகி, முகம்மது  நாஷிக் இரண்டாம் பரிசு,  விளம்பர  போட்டியில் செல்வா,  வனிஷா,  வரைதல் போட்டியில்  கௌதம்,  கேளிக்கை விளம்பர போட்டியில்  மனோஜ்,  சித்தார்த் , குழு நடனப் போட்டிகளில்  வன்ஷா, அனிஷா, லிவின்  மார்க்லீன்  மற்றும் விக்னேஷ்  ஆகியோர் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றுள்ளனர். 
வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரித் தாளாளர் ஏ.பி.மஜீத்கான்,  கல்லூரி முதல்வர் எஸ்.பெருமாள்,  துறைத் தலைவர்  சிபி.எஸ்.குமார்,  பேராசிரியர்கள் அருண்சிதம்பரம்,  பா.புஷ்பலதா,  ஷைனி,  சலீம் தாஸ், மற்றும்  பொன்னி ,  அனிதா,  மாணவர்,  மாணவிகள் பாராட்டினர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/12/மாநில-அளவிலான-கலைப்-போட்டிகள்என்ஐ-கலைக்-கல்லூரிக்கு-சுழற்கோப்பை-3036869.html
3036868 திருநெல்வேலி கன்னியாகுமரி மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் பாஜகவினர் முற்றுகை DIN DIN Monday, November 12, 2018 01:03 AM +0530 மார்த்தாண்டம் மேம்பாலம் பகுதியில் பாஜக கோட்டப் பொறுப்பாளரை தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், பாஜக பிரமுகர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தியும் அக்கட்சியினர் மார்த்தாண்டம் காவல் நிலையம் முன் ஞாயிற்றுக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிதாக கட்டப்பட்டுள்ள மார்த்தாண்டம் மேம்பாலம் பொதுமக்கள் பார்வையிடுவதற்காக சனிக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறக்கப்பட்டிருந்தது. இந்த நேரத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மேம்பாலத்தைப் பார்வையிட்டனர். இந்நிலையில், பாஜக கோட்ட பொறுப்பாளர் சி. தர்மராஜ் இரவு 7.30 மணியளவில் கட்சி நிர்வாகிகளை சந்திக்க மேம்பாலத்தின் மீது செல்ல முயன்றார். அப்போது மார்த்தாண்டம் காந்தி மைதானம் பகுதியில் மேம்பாலத்தின் நுழைவு வாயில் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மார்த்தாண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தரலிங்கம் அவரை உள்ளே செல்லக் கூடாது எனக் கூறி அவரது சட்டையை பிடித்தாராம். இதனால் அதிர்ச்சியடைந்த தர்மராஜ் கையை எடுக்குமாறு கூறினாராம். இதையடுத்து, உதவி ஆய்வாளர் அவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மேம்பாலத்திலிருந்து கீழே வந்து அமைதிப்படுத்தினார். தொடர்ந்து தக்கலை டிஎஸ்பி கார்த்திகேயனும் அங்கு வந்து விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில் அரசுப் பணியை செய்யவிடாமல் தடுத்ததாக உதவி ஆய்வாளர் சுந்தரலிங்கம் அளித்த புகாரின்பேரில், பாஜக கோட்ட பொறுப்பாளர் தர்மராஜ் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
இதையடுத்து, பாஜக நிர்வாகி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை திரும்பப் பெற வேண்டும்; சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்த்தாண்டம் காவல் நிலையத்தை முற்றுகையிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை காவல் நிலையம் அருகே பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் திரண்டனர். அப்பகுதியில் ஏராளமான போலீஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர். 
இதைத் தொடர்ந்து, பாஜக மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பம்மம் பகுதியிலிருந்து காவல் நிலையம் வரை பேரணியாக வந்து, காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, காவல் நிலையத்தில் இருந்த தக்கலை டிஎஸ்பியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பாஜக நிர்வாகிகளுடன் டிஎஸ்பி பேச்சு நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
இப் போராட்டத்தில் பாஜக மாவட்டச் செயலர் கே.எஸ். முருகன், கட்சியின் களியக்காவிளை மண்டல தலைவர் சரவணவாஸ் நாராயணன், பொதுச் செயலாளர் திலீப்குமார், முன்னாள் ராணுவ வீரர்கள் பிரிவு மாவட்டத் தலைவர் கோபகுமார், மாவட்ட கூட்டுறவுப் பிரிவு தலைவர் ரெத்தினமணி, மாவட்ட வழக்குரைஞர் அணி தலைவர் விஜயபிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/12/மார்த்தாண்டம்-காவல்-நிலையத்தில்-பாஜகவினர்-முற்றுகை-3036868.html
3036867 திருநெல்வேலி கன்னியாகுமரி மனைவி, மகளை தாக்கியவர் மீது வழக்கு DIN DIN Monday, November 12, 2018 01:02 AM +0530 திருவட்டாறு அருகே மனைவி மற்றும் மகளை தாக்கியவர் மீது வழக்குப் பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.
சித்திரங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ் (51).  இவரது மனைவி வனஜா (46). இத்தம்பதியினருக்கு அனீஷ் என்ற மகனும்  அனிதா என்ற மகளுக்கு உள்ளனர். ராணுவத்தில் பணி செய்து வந்த அனீஷ் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தார். 
 இதையடுத்து அனீஷின் குடும்பத்துக்கு நிவாரணமாக 3 கட்டங்களாக அரசிடமிருந்து ரூ. 50 லட்சம் வரை வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.  இந்நிலையில் முதலில் வந்த ரூ. 15 லட்சத்தை தர்மராஜ் செலவு செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.  
இதையடுத்து அனிதாவின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று கருதி இதர தவணைகளில் வந்த பணத்தை வனஜா,  தனது மகள் அனிதாவின் பெயரில் வங்கியில் நிரந்தரவைப்பாக வைத்துள்ளார்.  
இந்நிலையில் தர்மராஜ்  அந்தத் தொகையைக் கேட்டு வனஜாவை தொந்தரவு செய்துள்ளார்.  இதற்கு வனஜாவும், அனிதாவும்  ஒத்துக்கொள்ளாததால் அவர்கள் இருவரையும் தர்மராஜ்  தாக்கினாராம்.  இதில் காயமடைந்த வனஜா, அனிதா இருவரும்   நாகர்கோவிலிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 
இதுகுறித்து திருவட்டாறு போலீஸார் வழக்குப் பதிந்து தர்மராஜை தேடி வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/12/மனைவி-மகளை-தாக்கியவர்-மீது-வழக்கு-3036867.html
3036865 திருநெல்வேலி கன்னியாகுமரி கிள்ளியூர் ஒன்றியத்தில் திருமண உதவித்தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தல் DIN DIN Monday, November 12, 2018 01:02 AM +0530 கிள்ளியூர் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் திருமண உதவித்தொகைக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் உடனடியாக நிதி வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமணநிதி உதவித்திட்டம் மூலம் 10, 12ஆம் வகுப்பு படித்து 18 வயது பூர்த்தியான பெண்களுக்கு திருமணத்தின்போது ரூ.25 ஆயிரம், 4 கிராம் தங்கம் மற்றும் பட்டயப்படிப்பு, பட்டதாரி பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் 4 கிராம் தங்கம் அரசு வழங்கி வருகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் பெருதும் பயன்பெற்று வருகின்றனர்.
கிள்ளியூர் ஒன்றியத்தில் 2016 செப்டம்பர் முதல்  விண்ணப்பித்த 1400- க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை இந்நாள்வரை வழங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
எனவே, தமிழக அரசு இத் திட்டத்தில் விண்ணப்பித்து தகுதியுள்ள அனைவருக்கும் உடனடியாக உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/12/கிள்ளியூர்-ஒன்றியத்தில்-திருமண-உதவித்தொகையை-உடனடியாக-வழங்க-வலியுறுத்தல்-3036865.html
3036863 திருநெல்வேலி கன்னியாகுமரி பொதுமக்களிடம் முதலீடுகளை பெற்று திரும்ப வழங்காத தனியார் நிதி நிறுவனத்தின் சொத்துகள் நவ. 15 இல் ஏலம் DIN DIN Monday, November 12, 2018 01:02 AM +0530 வாடிக்கையாளர்களின் வைப்பு நிதியை திருப்பி வழங்காத தனியார் நிறுவனத்தின் சொத்துகள் நாகர்கோவிலில் நவ.15 இல் ஏலம் விடப்படுகிறது. 
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கன்னியாகுமரி மாவட்டம்,  கல்குளம் வட்டம்,  தக்கலை அழகியமண்டபத்தில் செயல்பட்டு வந்த தனியார் நிதி நிறுவனம் பொதுமக்களின் முதலீடுகளை பெற்று திரும்ப வழங்காதது தொடர்பாக,  மேற்படி நிறுவன உரிமையாளருக்கு உரிமைப்பட்ட தக்கலை மற்றும் திருவிதாங்கோடு கிராமத்திலுள்ள அசையா சொத்துகளை நவ.15 ஆம் தேதி முற்பகல் 10.30 மணிக்கு மாவட்ட வருவாய் அலுவலரால்  மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்ட அரங்கில் வைத்து பொதுஏலம் நடத்தப்பட உள்ளது.  
எனவே மேற்படி பொது ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவோர், சொத்துகளின் விவரம்,  ஏலத்தில் கலந்து கொள்வதற்கான நிபந்தனைகள் மற்றும் விண்ணப்பப் படிவம்  கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலிருந்து பெற்று தெரிந்து கொள்ளலாம் எனஅந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/12/பொதுமக்களிடம்-முதலீடுகளை-பெற்று-திரும்ப-வழங்காததனியார்-நிதி-நிறுவனத்தின்-சொத்துகள்-நவ-15-இல்-ஏலம்-3036863.html
3036862 திருநெல்வேலி கன்னியாகுமரி மார்த்தாண்டத்தில் கருத்தரங்கம் DIN DIN Monday, November 12, 2018 01:01 AM +0530 மார்த்தாண்டத்தில் அருள்பணியாளர் எம். சேவியர் ராஜமணி அடிகளாரின் 12 ஆவது  நினைவு தின கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக் கருத்தரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம், ஓய்வுபெற்ற பேராசிரியர் மனோகர ஜஸ்டஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, கருத்துரிமை குறித்து பேசினர்.  
இஸ்ரோ விண்வெளி மைய ஓய்வுபெற்ற பொறியாளர் பி. மோகன் பரிசு வழங்கிப் பேசினார்.  கோ. முரளீதரன் நன்றி கூறினார்.  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டச் செயலர் ஜெ.எம். ஹசன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
இந் நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. பெல்லார்மின்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  மாவட்டச் செயலர் ஆர். செல்லசுவாமி,  மாவட்ட முன்னாள் செயலர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/12/மார்த்தாண்டத்தில்-கருத்தரங்கம்-3036862.html
3036715 திருநெல்வேலி கன்னியாகுமரி தமிழர்களின் வரலாற்று சாதனைகளை விளக்க உருவாகிறது "லெமூரியா' திரைப்படம்: இயக்குநர் ரவீந்திரா பேட்டி DIN DIN Sunday, November 11, 2018 09:30 AM +0530 தமிழர்களின் வரலாற்று சாதனைகளை விளக்கும் "லெமூரியா' திரைப்படம் உருவாகி வருகிறது என்றார் இயக்குநர் டாக்டர் ரவீந்திரா.
இது குறித்து நாகர்கோவிலில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: எஸ்.ஆர்.சாய் புரொடக்ஷன்ஸ் சார்பில் இத் திரைப்படம் உருவாகிறது. 
தமிழ் நாகரிகம், சிவலிங்க வழிபாடு, அறிவியல் சாஸ்திரங்கள் போன்றவை இன்று உலகம் முழுவதும் பரந்து விரிந்தது லெமூரியா கண்டத்தில் இருந்துதான் என்பதை அடிப்படையாகக் கொண்டு, இன்றைய இளைஞர்களையும் கவரும் வகையில் இந்த திரைப்படத்தை தயாரித்து வருகிறோம்.
உலக அரங்கில் இந்திய ஆக்க சக்தி சாஸ்திரங்களை திருடிப்போய் அழிவு சக்திக்கு பயன்படுத்தி வரும் சில நாடுகளிடமிருந்து அந்த சாஸ்திரங்களை மீண்டும் இந்தியாவுக்கு மீட்டு வந்து இந்தியாவின் ஆக்க சக்திக்கு பயன்படுத்துவதே இத்திரைப்படத்தின் கருவாகும்.
தமிழர்கள் தொடக்கத்தில் கடல்வழி பயணம் மேற்கொள்ள ஆமைகளை பயன்படுத்தியுள்ளனர். அதனை விளக்கும் வகையிலும், தமிழர்களின் களரி,  ஏறுதழுவுதல் உள்ளிட்ட வீர விளையாட்டுகளை விளக்கும் வகையிலும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பாகுபலி திரைப்படத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட முன்னணி கலைஞர்கள் இத்திரைப்படத்தில் நடிக்கின்றனர். வரும் தமிழ்ப் புத்தாண்டுக்கு திரைப்படத்தை உலகெங்கும் திரையிட திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/11/தமிழர்களின்-வரலாற்று-சாதனைகளை-விளக்க-உருவாகிறது-லெமூரியா-திரைப்படம்-இயக்குநர்-ரவீந்திரா-பேட்டி-3036715.html
3036714 திருநெல்வேலி கன்னியாகுமரி புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி DIN DIN Sunday, November 11, 2018 09:29 AM +0530 மருங்கூர் பேரூராட்சி குமாரபுரம் தோப்பூரில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள், பள்ளி மாணவர்கள் பங்கேற்ற புகையிலை பொருள்கள் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர் அமுதா ஆணைப்படி, குமரி ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே ஆலோசனையின்பேரில், குமரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் நிக்கோடின் கலந்த உணவுப் பொருள்கள் விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி, குமாரபுரம் தோப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. 
பேரணியை மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் ஆர். கருணாகரன் கொடியசைத்து தொடங்கி வைத்துப் பேசினார். 
இதில், பள்ளித் தலைமை ஆசிரியர் கிஷோர், உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் பிரவீன் ரகு, சிதம்பரதாணுபிள்ளை, பொன்ராஜ் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, வியாபாரிகளுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/11/புகையிலை-ஒழிப்பு-விழிப்புணர்வுப்-பேரணி-3036714.html
3036713 திருநெல்வேலி கன்னியாகுமரி திக்கணங்கோட்டில் அதிமுக பொதுக்கூட்டம் DIN DIN Sunday, November 11, 2018 09:29 AM +0530 குமரி மாவட்டம், திக்கணங்கோட்டில் தக்கலை ஒன்றிய அதிமுக சார்பில் 47ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தக்கலை ஒன்றிய அதிமுக பொறுப்பாளர் மெர்லியண்ட்தாஸ் தலைமை வகித்தார். சடையமங்கலம் ஊராட்சி சிவனிசதீஷ் வரவேற்றார்.
திக்கணங்கோடு ஊராட்சிச் செயலர் ரெதீஸ்குமார், வாள்வச்சகோஷ்டம் பேரூராட்சிச் செயலர் மோகன்தாஸ், இரணியல் பேரூர் செயலர் பரமேஷ் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். 
அதிமுக சிறுபான்மை நலப்பிரிவுத் தலைவரும், ஆட்சிமன்றக் குழு உறுப்பினருமான ஏ. ஜஸ்டின் செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.
கூட்டத்தில், மாவட்ட நிர்வாகிகள் நாஞ்சில் ஜின்னா, பி.சி.என். திலக்குமார், ரெத்தினசாமி, மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர். தக்கலை ஒன்றிய விவசாய அணிச் செயலர் கே. வின்சென்ட் அமல்ராஜ் நன்றி கூறினார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/11/திக்கணங்கோட்டில்-அதிமுக-பொதுக்கூட்டம்-3036713.html
3036712 திருநெல்வேலி கன்னியாகுமரி மார்த்தாண்டம் புதிய மேம்பாலம்:  ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டனர் DIN DIN Sunday, November 11, 2018 09:28 AM +0530 மார்த்தாண்டம் மேம்பாலத்தில் பொதுமக்கள் நடந்து சென்று பார்வையிட சனிக்கிழமை மாலை சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதையடுத்து இம்மேம்பாலத்தை ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டனர்.
மார்த்தாண்டம் மேம்பாலத்தின் மேற்பகுதி சாலைப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து சனிக்கிழமை பிற்பகல் 4 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் மேம்பாலத்தின் மேல் நடந்து சென்று பார்வையிட வசதியாக மேம்பாலம் திறந்து விடப்பட்டது. 
இதையடுத்து ஆயிரக்கணக் கான பொதுமக்கள் மேம்பாலத்தின் மீது சென்று பார்வையிட்டனர்.  மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மதச்சார்பற்ற ஜனதாதளம் மாநில தலைவர் முகமது இஸ்மாயில், சுவாமித்தோப்பு பாலபிரஜாபதி அடிகளார் உள்ளிட்டோரும் பொதுமக்களுடன் மேம்பாலத்தின் மீது நடந்து சென்று பார்வையிட்டனர்.
மேம்பாலத்தில் லேசான அதிர்வு? மேம்பாலம் தொடங்கும் வெட்டுவெந்நி பகுதி அருகே உயரமான தூண்கள் அமைக்கப்பட்டு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அதிகளவு பொதுமக்கள் இப் பகுதியை கடந்து சென்றபோது லேசான அதிர்வு ஏற்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. 
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் ஒருவர் கூறியதாவது: இப்பாலம் தரமான முறையில் அமைக்கப்பட்டு, 400 டன் எடை கொண்ட கற்களை வைத்து எடை தாங்கும் திறன் குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இப் பாலத்தின் தூண்கள் மேல் பகுதியை இணைக்கும் இடம் நவீன தொழில்நுட்பம் மூலம் அமைக்கப்பட்டுள்ளது. 
ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் ஒரே இடத்தில் கூடும்போது ஏற்பட்ட பாரம் காரணமாக லேசான அதிர்வு உணரப்பட்டிருக்கலாம். இதனால் பாலத்தின் உறுதித்தன்மையில் எந்தவித ஐயமும் ஏற்பட தேவையில்லை. ஆகவே பாலத்தின் தரம் குறித்து யாரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/11/மார்த்தாண்டம்-புதிய-மேம்பாலம்-ஆயிரக்கணக்கானோர்-பார்வையிட்டனர்-3036712.html
3036711 திருநெல்வேலி கன்னியாகுமரி குமரியில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு அதிகாரிகளிடம் வலியுறுத்தல் DIN DIN Sunday, November 11, 2018 09:27 AM +0530 கன்னியாகுமரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைப்பது குறித்து தில்லியில் மத்திய அரசு அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார் குமரி மகா சபா தலைவர் ராவின்சன்.
குமரி மகாசபா நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், அதன் தலைவர் ராவின்சன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் செயலாளர் சுப்பிரமணியத்தை குமரி மகாசபா சார்பில் கடந்த மாதம் சந்தித்தோம். குமரி மாவட்டத்தில் சுவாமி விவேகானந்தர் பெயரில் மத்திய பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று அவரிடம் வலியுறுத்தினோம். 
குமரி மாவட்டத்துக்கான விமான நிலையம் மாவட்டத்துக்குள்தான் அமைக்கப்பட வேண்டும்  என்று மத்திய அமைச்சர் சுரேஷ்பிரபுவை சந்தித்து வலியுறுத்தினோம்.
குமரி மகாசபாவின் 6 ஆவது ஆண்டு விழா அடுத்த மாதம் 29 ஆம் தேதி இலவுவிளை மார்எப்ரேம் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே.சிக்ரி கலந்து கொள்கிறார். 
குமரி மாவட்ட மாணவ, மாணவிகளின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில், கலை,  விளையாட்டு, மற்றும் கலாசார போட்டிகள் குமரி மகாசபாவின் சார்பில் மாவட்டம் முழுவதும் நடத்தப்படும் என்றார் அவர்.
பேட்டியின்போது செயலாளர் ஜான்சன்,  பொருளாளர் ஜெயநேசகுமார், கெளரவ தலைவர்கள் பத்மநாபன், சொக்கலிங்கம்,  துணைத் தலைவர்கள் ஜெசர் ஜெபநேசர், தம்பிராஜ், சந்திரமோகன், இணைச்செயலர்கள்  பழனி, அலெக்சாண்டர், ஜீவநாயகம், மேலாளர் அருண் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/11/குமரியில்-விமான-நிலையம்-அமைக்கமத்திய-அரசு-அதிகாரிகளிடம்-வலியுறுத்தல்-3036711.html
3036710 திருநெல்வேலி கன்னியாகுமரி குமரி மேற்கு மாவட்ட திமுக தேர்தல் பார்வையாளர்கள்,  நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் DIN DIN Sunday, November 11, 2018 09:27 AM +0530 அழகியமண்டபத்திலுள்ள திமுக தலைமை அலுவலகத்தில் மேலிட தேர்தல் பார்வையாளர்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 
மக்களவைத் தேர்தலை கருத்தில்கொண்டு தேர்தலில் வெற்றி பெறுவதற்கான  வியூகங்களை வகுக்கும் வழிமுறைகள்,  கட்சியின் களப் பணி,  குமரி மேற்கு மாவட்டத்தில் முடுக்கிவிடப்பட்டுள்ளது. 
இதையடுத்து, திமுக தேர்தல் பார்வையாளர்கள், நிர்வாகிகள் சந்திப்பு மேற்கு மாவட்ட தலைமை அலுவலகமான  அழகியமண்டபத்தில் நடைபெற்றது.  மேற்கு மாவட்டத் தலைவரும்,  பத்மநாபபுரம் எம்.எல்.ஏ.யுமான  மனோதங்கராஜ்  தலைமை வகித்தார். தேர்தல் பார்வைக் குழு உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் தங்கவேலு,  முன்னாள் எம்.பி. தாமரைசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில்  திமுக ஒன்றிய , நகர, பேரூர் கழகச் செயலர்கள், அணி அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். 
வரும் மக்களவைத் தேர்தலில் திமுக முழு வெற்றிபெற வலுவான பூத் கமிட்டிகள் அமைத்து சிறப்பாக தேர்தல் பணியாற்றவேண்டும். மக்களின் உள்ளூர் பிரச்னைகளை  கழக பொறுப்பாளர்கள் , தொண்டர்கள் கண்டறிந்து,  அதனை சீர் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/11/குமரி-மேற்கு-மாவட்ட-திமுக-தேர்தல்-பார்வையாளர்கள்--நிர்வாகிகள்-ஆலோசனைக்-கூட்டம்-3036710.html
3036709 திருநெல்வேலி கன்னியாகுமரி மாநில யோகாசனப் போட்டி:  சுங்கான்கடை பள்ளி மாணவர் சிறப்பிடம் DIN DIN Sunday, November 11, 2018 08:58 AM +0530 மாநில அளவில் நடைபெற்ற யோகாசனப் போட்டியில் குமரி மாவட்டம்,  சுங்கான்கடை வின்ஸ் சிபிஎஸ்இ பள்ளி மாணவர் தங்கப் பதக்கம் வென்று ஓபன் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றுள்ளார். 
தமிழ்நாடு ஒலிம்பிக் அசோசியேஷன் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட  இந்திய யோகா  பெடரேஷன் சார்பில் தமிழ்நாடு மாநில யோகா  ஓபன் சாம்பியன்ஷிப் 2018  போட்டி மதுரையில் நடைபெற்றது. இதில், 8 வயது முதல் 11 வயதுக்குள்பட்டோருக்கான பொதுப்பிரிவு போட்டியில் வின்ஸ் சிபிஎஸ்இ மாணவர் பபின்குமார் தங்கப் பதக்கம் வென்று, சாம்பியன்ஷிப் 2018  பட்டத்தை பெற்றுள்ளார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/11/மாநில-யோகாசனப்-போட்டி-சுங்கான்கடை-பள்ளி-மாணவர்-சிறப்பிடம்-3036709.html
3035993 திருநெல்வேலி கன்னியாகுமரி திற்பரப்பில் கோரிக்கைகளை நிறைவேற்ற பொதுமக்கள் வலியுறுத்தல் DIN DIN Saturday, November 10, 2018 08:22 AM +0530 திற்பரப்பு பேரூராட்சி அலுவலக த்தில் கோரிக்கைகளை  வலியுறுத்தி வெள்ளிக்கிழமை  பொதுமக்கள் திரண்டு வந்து  மனு அளித்தனர்.  
திற்பரப்பு பேரூராட்சிக்கு உள்பட்ட கோட்டூர்கோணம் உற்றனாதலைவிளை,  சாத்தனா விளை, தேரிவிளை, திட்டவிளை செல்லும்  பகுதியில் சாலை சீரமைக்கப்படாததாலும், வடிகால்கள் சீரமைக்கப்படாதலும் சாலையில் கழிவு நீர் கலந்து மழை பாய்வதால் பெரும் சுகாதரக் கேடு ஏற்பட்டு வருவதாகவும், இப்பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீர் குடியிருப்புகளுக்குள் புகுவதாகவும் பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர். 
  இந்நிலையில் இங்குள்ள வடிகால்களை சீரமைக்கவும், சாலையில் பக்கச்சுவர் கட்டவும், சாலையை சீரமைக்கவும் வலியுறுத்தி ஊர்பொதுமக்கள் வெள்ளிக்கிழமை திற்பரப்பு பேரூராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்து செயல் அலுவலர் ரெமாதேவியிடம் மனு அளித்தனர்.   மனுவைப் பெற்றுக் கொண்ட அவர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/10/திற்பரப்பில்-கோரிக்கைகளை-நிறைவேற்ற-பொதுமக்கள்-வலியுறுத்தல்-3035993.html
3035992 திருநெல்வேலி கன்னியாகுமரி வீட்டு வரி உயர்வைக் கண்டித்து பொன்மனையில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் DIN DIN Saturday, November 10, 2018 08:22 AM +0530 வீட்டு வரி, சொத்து வரி உயர்வைக் கண்டித்தும்  உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்தக் கேட்டும் பொன்மனை பேரூராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்டாரக் குழு உறுப்பினர் ஜெயராஜ் தலைமை வகித்தார். இதில் கட்சி நிர்வாகிகள் வல்சகுமார், சுரேந்திரன், தங்கமணி,   விக்ரமன், கமலாசனன், பால்ராஜ், சந்தோஷ், ஜேம்ஸ், ரமணி, மாதவன்குட்டி, ஜெயச்சந்திரன், ராபிதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
 இதில்,  பொன்மனை பேரூராட்சி உள்பட அனைத்து பேரூராட்சிகளிலும்  உயர்த்தப்பட்ட வீட்டு வரி மற்றும் சொத்து வரியை உடனே வாபஸ் பெற வேண்டும். தமிழத்தில் உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/10/வீட்டு-வரி-உயர்வைக்-கண்டித்து-பொன்மனையில்-மார்க்சிஸ்ட்-ஆர்ப்பாட்டம்-3035992.html
3035991 திருநெல்வேலி கன்னியாகுமரி நாகர்கோவில் டெரிக் சந்திப்பு - கோட்டாறு இடையே ரூ.400  கோடியில் புதிய பாலம் DIN DIN Saturday, November 10, 2018 08:21 AM +0530 நாகர்கோவில் டெரிக் சந்திப்பு - கோட்டாறு இடையே  ரூ. 400  கோடி மதிப்பில் புதிய இரும்புப் பாலம் அமைக்கப்படும் என்றார் மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
நாகர்கோவிலில் மத்திய இணைஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை கோட்டாறு வணிகர் சங்கப் பிரதிநிதிகள் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினர். கோட்டாறில் அமைக்கப்பட  உள்ள மேம்பாலம் குறித்து அவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. 
பின்னர் அமைச்சர்  அளித்த பேட்டி:    நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் இருந்து இடலாக்குடி நாயுடு மருத்துவமனை வரையுள்ள மூன்றரை கி.மீ.  தொலைவுக்கு இரும்புப் பாலம் அமைக்கப்பட உள்ளது.  இந்த பாலம் அமைக்க ரூ.400  கோடியில்  திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த பாலம் இருவழிப்பாதையாக,  9 மீட்டர் அகலத்தில்  அமைக்கப்படும். பார்வதிபுரம் மேம்பாலப்பணிகள் நிறைவடைந்ததும் கோட்டாறு பாலத்துக்கான பணிகள் தொடங்கப்படும்.  இந்த பாலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து டதி பள்ளி செல்லும் சாலையிலும்,  கோட்டாறில் ரயில் நிலையம் செல்லும் சாலையிலும் அணுகுசாலை அமைக்கப்படும்.  இந்த சாலைக்காக பெரிய அளவில் நிலம் கையகப்படுத்த தேவையில்லை. பார்வதிபுரம், மற்றும் மார்த்தாண்டம் பாலப்பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.  
மார்த்தாண்டம் பாலத்தினை நவ.10  ஆம் தேதி பொதுமக்கள் சென்று பார்வையிடலாம். இந்த 2 பாலங்களிலும் டிச.10  ஆம் தேதி முதல் போக்குவரத்து தொடங்கும்.   நரிக்குளம் பாலம்,  ஈத்தங்காட்டில் இருந்து ஆசிரமம் செல்லும் புறவழிச் சாலை  பணிகளும் நிறைவடையும் நிலையில் உள்ளது.  டிச.10  ஆம் தேதி இந்த சாலையில் போக்குவரத்து தொடங்கப்படும்.
  குமரி மாவட்டத்தில் நான்குவழிச்சாலைப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. காவல்கிணறில் இருந்து தோவாளை வரையுள்ள 15 கி.மீ. தொலைவு வரையுள்ள சாலைப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.  மற்ற இடங்களில்  பணிகள் நடைபெற்று வருகின்றன.  இப்பணிகள் நடைபெறும் இடங்களில் குளங்கள் இருந்தால் அந்த இடங்களில் பாலங்கள் அமைக்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 
இவ்வாறு பாலங்கள் அமைக்க வேண்டியுள்ளதால் திட்ட மதிப்பீடு அதிகரித்துள்ளது.  நான்கு வழிச் சாலைக்கு ஏற்கெனவே திட்டமிட்டதை விட ரூ. 500 கோடி  அதிகமாகும். நான்கு வழிச்சாலைப்பணிகள் நடைபெறும் ஒரு சில இடங்களில் மணல் தட்டுப்பாடு  உள்ளது. அதுவும் விரைவில் சரி செய்யப்படும் என்றார் அவர்.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/10/நாகர்கோவில்-டெரிக்-சந்திப்பு---கோட்டாறு-இடையே-ரூ400--கோடியில்-புதிய-பாலம்-3035991.html
3035990 திருநெல்வேலி கன்னியாகுமரி திருவட்டாறு ஒன்றியத்தில் பிளாஸ்டிக் பொருள்களை தடை செய்தல் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் DIN DIN Saturday, November 10, 2018 08:20 AM +0530 ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருள்களை தடைசெய்தல் தொடர்பான வட்டார அளவிலான ஆய்வுக் கூட்டம் திருவட்டாறில் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவட்டாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மண்டல அலுவலரும், மாவட்ட ஆட்சியரின்  நேர்முக உதவியாளருமான (சத்துணவு) வில்சன் தலைமை வகித்தார். இதில்  ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்  கீதா,  வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார்  (கிராம ஊராட்சிகள்), வருவாய் துறை அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிச் செயலர்கள், சுகாதாரத் துறை பணியாளர்கள்  உள்ளிடோடர் பங்கேற்றனர். 
கூட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கண்காணிக்கும் வகையில்,  ஊராட்சி ஒன்றிய ஆணையாளரை   தலைவராகவும், வட்டார வளர்ச்சி அலுவலரை  (கிராம ஊராட்சிகள்) துணைத் தலைவராகவும், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர், வட்டாட்சியர் கல்குளம் ஆகியோரை உறுப்பினர்களாவும்  கொண்ட குழு அமைக்கப்பட்டது.  
 இதில்,  தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் குறித்த விவரங்கள் ஒவ்வொருவருக்கும் தெரிவிக்கப்பட்டது. மேலும் கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம்,  ஒவ்வொரு அலுவலகத்திலும்,   இந்த அலுவலகத்தில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தப்படவில்லையென்ற ஸ்டிக்கர் ஒட்டப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டது.  ஒவ்வொரு அரசுத் துறை அலுவலர்களும் அவரது அலுவலகத்திலும், வீட்டிலும், பயன்படுத்தும் வாகனங்களிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தக் கூடாது என கேட்டுக் கொள்ளப்பட்டது. 
  அனைத்துப் பொது இடங்கள்,  கடைகள் மற்றும் அலுவலகங்களில் ஆய்வு நடத்தி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டில் இல்லை என்ற விவரத்தை  உறுதிப்படுத்தி தெரிவிக்க வேண்டும்,   பிளாஸ்டிக் பொருள்களால்  ஏற்படும் விளைவுகள் குறித்து  பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.   
   ஜனவரி  மாதம் முதல் தூய்மைக் காவலர்கள் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரிக்கமாட்டார்கள் என்ற விவரம் தெரிவிக்கப்பட்டது.  நவ. 22 ஆம் தேதி உள்ளாட்சிப் பகுதிகளிலுள்ள விற்பனையாளர்கள் அனைவரையும்  அழைத்து  அந்தந்த ஊராட்சிகளில் விழிப்புணர்வு கூட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. டிசம்பர் மாதம் முதல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் கடைகளில் பயன்படுத்தினால் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கவும் தீர்மானிக்கப்பட்டது. 
 தொடர்ந்து, கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் பிளாஸ்டிக்  தவிர்ப்பு உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/10/திருவட்டாறு-ஒன்றியத்தில்-பிளாஸ்டிக்-பொருள்களை-தடை-செய்தல்-தொடர்பாக-ஆய்வுக்-கூட்டம்-3035990.html
3035989 திருநெல்வேலி கன்னியாகுமரி எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டாலும் 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும்: பொன். ராதாகிருஷ்ணன் DIN DIN Saturday, November 10, 2018 08:20 AM +0530 எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டாலும் வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
   மார்த்தாண்டத்தில் ரூ. 142 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்  பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதால், சனிக்கிழமை (நவ. 10) மாலையில் இப் பாலத்தின் மீது பொதுமக்கள் நடந்து சென்று பார்வையிட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை இரவு   மார்த்தாண்டம் மேம்பாலம் தொடங்கும் வெட்டுவெந்நி பகுதிக்கு வந்து, மேம்பாலப் பணிகளை பார்வையிட்டார்.
இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:  மார்த்தாண்டம் மேம்பாலம் தமிழகத்தின் முதல் இரும்பு பாலமாகவும், தென்னிந்தியாவில் மிக நீளமான இரும்பு பாலமாகவும் அமைகிறது. இப் பாலம் தரம் வாய்ந்ததாக அமைக்கப்பட்டுள்ளது. இப் பாலப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதால், பொதுமக்கள் மேம்பாலத்தின் மேல் நடந்து சென்று பார்வையிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது .  பொதுமக்கள் 10 ஆயிரம் பேர் வரை பாலத்தை பார்வையிட வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அவர்.
   ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபுநாயுடு,  திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்தது குறித்து கேட்ட போது,   எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டாலும் அடுத்து வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கும். 
விஜய்  நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படத்தில் பயன்படுத்தப்படும் கோமளவல்லி என்ற பெயரை முந்தைய காலத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிகம் பயன்படுத்தி வந்தார்.  சர்கார் திரைப்படத்துக்கு எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் குறிப்பிட்ட சில காட்சிகளை மாற்றுவதாக சம்பந்தப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டும், அதிமுகவினர் தகராறில் ஈடுபடுவது கண்டனத்துக்குரியது என்றார் அவர்.
மத்திய இணை அமைச்சருடன் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் ஆர். ஜெயசீலன்,  குழித்துறை நகரத் தலைவர் பக்தசிங் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/10/எதிர்க்கட்சிகள்-ஓரணியில்-திரண்டாலும்-2019-மக்களவைத்-தேர்தலில்-பாஜக-வெற்றி-பெறும்-பொன்-ராதாகிருஷ்ணன-3035989.html
3035988 திருநெல்வேலி கன்னியாகுமரி மலையோரப் பகுதி அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு சிறப்புப் பயிற்சி DIN DIN Saturday, November 10, 2018 08:19 AM +0530 குமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளிலுள்ள அரசுப்  பள்ளி மாணவ, மாணவியருக்கு  வழிகாட்டுதல் மற்றும் உளவியல் சிறப்பு  பயிற்சி முகாம் திற்பரப்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியரின்  அறிவுறுத்தல் படி வருவாய்த் துறையினர் மற்றும்  பள்ளிக் கல்வித் துறையினரின் ஏற்பாட்டின் படி மாவட்டத்தில் மலைப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளிலுள்ள   வாழைத்துவயல், மணலோடை, பேச்சிப்பாறை, குற்றியாறு, பத்துகாணி, கோதையாறு  உள்ளிட்ட அரசுப் பள்ளி  பள்ளி மாணவ, மாணவியருக்கு வழிகாட்டுதல் மற்றும் உளவியல் பயிற்சி "அவையர் இந்தியா' என்ற தனியார் அமைப்பு மூலம்  வழங்குவதற்காக திட்டமிடப்பட்டது. 
அதன் அடிப்படையில்,  இப்பள்ளிகளின் மாணவ, மாணவியருக்கு  நிலைகளின் அடிப்படையில் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.  இதில் அவையர் இந்தியா அமைப்பைச் சேர்ந்த காவ்யா, மாணவ, மாணவியருக்கு பயிற்சிகள் அளித்தார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/10/மலையோரப்-பகுதி-அரசுப்-பள்ளி-மாணவ-மாணவியருக்கு-சிறப்புப்-பயிற்சி-3035988.html
3035987 திருநெல்வேலி கன்னியாகுமரி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து நாகர்கோவில், குலசேகரம், தக்கலையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் DIN DIN Saturday, November 10, 2018 08:17 AM +0530 மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து நாகர்கோவில், குலசேகரம்,  தக்கலையில்  காங்கிரஸார் வெள்ளிக்கிழமை கருப்பு தின ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டு 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில்,  காங்கிரஸார் அந்த தினத்தை கருப்பு தினமாக அறிவித்து  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  நாகர்கோவில் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த  ஆர்ப்பாட்டத்துக்கு,  கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் வசந்தகுமார்,  பிரின்ஸ்,  முன்னாள் மாவட்டத் தலைவர் அசோகன் சாலமன்,  நாகர்கோவில் நகரத் தலைவர் அலெக்ஸ்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
 இதில்,   வட்டாரத் தலைவர்கள் அசோக்ராஜ்,   முருகானந்தம்,  செல்வராஜ்,  வைகுண்டதாஸ்,  ஜெரால்டு,  கென்ன,டி  முன்னாள் கவுன்சிலர் சேவியர்,  அகில இந்திய காங்கிரஸ்  கமிட்டி  உறுப்பினர்கள் சாந்தி ரோஸ்லின்,  கிறிஸ்டிரமணி,  மாவட்ட நிர்வாகிகள் சிவகுமார், மகேஷ்லாசர், பாபு ஆன்றனி,   உதயம்,  எர்னல்ராஜ், ஜோசப்மணி, பேராசிரியர் சுந்தர்ராஜ்,   முன்னாள் நகரத் தலைவர்கள் ஐயப்பன், யூஜின்தாஸ், டாக்டர் அனிதா,  வடலி மகாலிங்கம்,  சுயம்பு , வழக்குரைஞர்கள் பாலசந்திரன், சீனிவாசன், தேவ், வக்கீல் ஜெயசிங், டான்போஸ்கோ, நடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குலசேகரம்:   குலசேகரம் சந்தை சந்திப்பில் மெழுகுவர்த்தி ஏந்தி   நடைபெற்ற இந்க ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் காஸ்டன் கிளிட்டஸ் தலைமை வகித்தார். இதில் கிள்ளியூர் பேரவைத் தொகுதி எம்எல்ஏ ராஜேஷ் குமார் பேசினார். நகர காங்கிரஸ் தலைவர்கள் விமல் ஷெர்லின் சிங், எட்வின், அகஸ்டின், வினோத்ராய், பர்ணபாஸ், மாவட்டப் பொதுச் செயலர் மோகன் தாஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.  
தக்கலை :  தக்கலை தலைமை அஞ்சல அலுவலகம் முன்பு  நடைபெற்று ஆர்ப்பாட்டத்திற்கு  மேற்கு மாவட்டத்  தலைவர் ராஜேஷ்குமார் எம்எல்ஏ தலைமை வகித்தார்.  பத்மநாபபுரம் நகரத் தலைவர் ஹனுகுமார் முன்னிலை வகித்தார். இதில்,  மாநில பொதுக்குழு உறுப்பினர் லாரன்ஸ்,   நிர்வாகிகள் டாக்டர்கள்  டி.சி.ஜோசப்,  தம்பி விஜயகுமார். ஜாண் கிறிஸ்டோபர்,  ஜோன்ஸ் இம்மானுவேல்,  ஜாண் இக்னேசியஸ், ரத்தினகுமார்,  மலுக்கு முகம்மது,  பால்மணி, ஜேக்கப் சுதா  ராஜேஷ்குமார்  உள்பட பலர்  பங்கேற்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/10/பணமதிப்பிழப்பு-நடவடிக்கையை-கண்டித்து-நாகர்கோவில்-குலசேகரம்-தக்கலையில்-காங்கிரஸ்-ஆர்ப்பாட்டம்-3035987.html
3035986 திருநெல்வேலி கன்னியாகுமரி நாகர்கோவிலில் 15 இல் மாதாந்திர விளையாட்டு போட்டிகள் DIN DIN Saturday, November 10, 2018 08:16 AM +0530 குமரி மாவட்ட பள்ளி மாணவர்,  மாணவிகளுக்கான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் நாகர்கோவிலில் வியாழக்கிழமை (நவ.15)  நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கன்னியாகுமரி மாவட்ட பிரிவின் சார்பில்  12  ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர், மாணவிகளுக்கான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் நவ.15  ஆம் தேதி நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில்  நடைபெறவுள்ளது.  இதில் ஆண்களுக்கு குழு விளையாட்டுப் போட்டிகளாக கூடைப்பந்து, வாலிபால் ஆகியவையும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தடகளம் மற்றும்   நீச்சல் போட்டிகளும், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல்,  மும்முறை தாண்டுதல்,  வட்டு எறிதல், குண்டு எறிதல்  உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன.
ஒரு போட்டியாளர் ஏதாவது ஒரு பிரிவில் மட்டுமே கலந்து கொள்ளலாம். போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் போட்டி நடைபெறும் நாளன்று காலை 8.30 மணிக்குள் விளையாட் டு அரங்கத்திற்கு வந்து பெயரினை பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்தப்  போட்டிகளில் மாணவர்,  மாணவிகள் அதிக அளவில் கலந்து கொண்டு பயன்  பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/10/நாகர்கோவிலில்-15-இல்-மாதாந்திர-விளையாட்டு-போட்டிகள்-3035986.html
3035985 திருநெல்வேலி கன்னியாகுமரி அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் :  47 பேர் மீது வழக்கு DIN DIN Saturday, November 10, 2018 08:16 AM +0530 தக்கலை அருகே  அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக இளைஞர் காங்கிரஸார் 47 பேர் மீது  போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அமல்படுத்திய மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து, நவம்பர் 8  ஆம் தேதியை கருப்பு தினமாக, எதிர்க்கட்சிகள் கடைப்பிடித்து வருகின்றன. அதன்படி, வியாழக்கிழமை (நவ.8),   தக்கலையை அடுத்த அழகியமண்டபம் சந்திப்பில் இளைஞர் காங்கிரஸார் கருப்பு தின கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  இந்த ஆர்ப்பாட்டத்தின் போது,  மண்வெட்டி,  கலப்பைகள் ஏந்தியும்,  உடலில் கரிபூசியும்,  மத்திய அரசுக்கு எதிரான கண்டன வாசகத்தை உடலில் எழுதியவாறும் வேடம் அணிந்து இளைஞர் காங்கிரஸார் பங்கேற்றனர்.
  இந்நிலையில், உரிய அனுமதியின்றி பொதுமக்களை தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் லாரன்ஸ் உள்பட 47 பேர் மீது தக்கலை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/10/அனுமதியின்றி-ஆர்ப்பாட்டம்---47-பேர்-மீது-வழக்கு-3035985.html
3035984 திருநெல்வேலி கன்னியாகுமரி கொட்டாரத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுக் கூட்டம் DIN DIN Saturday, November 10, 2018 08:15 AM +0530 கொட்டாரம் பேரூராட்சி அலுவலகத்தில் அனைத்து வியாபாரிகள் பங்கேற்ற  பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
செயல் அலுவலர் சுந்தரேசன் தலைமை வகித்தார். கொட்டாரம் அனைத்து வியாபாரிகள் தொழில் முனைவோர் சங்கத் தலைவர் எட்வர்ட், செயலர் ராமச்சந்திரன், பொருளாளர் முத்து, துணைத் தலைவர்கள் ரவீந்திரன், பாலமுருகன், செயற்குழு உறுப்பினர் துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பங்கேற்ற கடை வியாபாரிகள் தமிழக அரசின் உத்தரவின் அடிப்படையில் அனைத்து கடைகளிலும் பிளாஸ்டிக் பயன்படுத்தமாட்டோம் என உறுதியளித்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/10/கொட்டாரத்தில்-பிளாஸ்டிக்-ஒழிப்பு-விழிப்புணர்வுக்-கூட்டம்-3035984.html
3035983 திருநெல்வேலி கன்னியாகுமரி தமிழகத்தில் இடைத்தேர்தல் நடப்பது கேள்விக்குறி DIN DIN Saturday, November 10, 2018 08:15 AM +0530 தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக  உள்ளது என்றார் தமாகா தலைவர் ஜி.கே. வாசன்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அரசின் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் போதுமான அளவில் இல்லை.
மத்திய அரசு  பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்ததால் பொதுமக்களுக்கு பெரும் நஷ்டம்.  இந்தப் பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வரவில்லை. பண மதிப்பிழப்பு மூலம் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் தேசிய அளவில் பாஜகவை வீழ்த்துவதற்கான ஒரு தொடக்கம்தான். 
திரைப்படங்களை பொழுதுபோக்காக பார்க்க வேண்டும். நல்ல விஷயங்கள் குறித்து திரைப்படத்தில் காட்டலாம். தேவையில்லாத விஷயங்களை தவிர்க்க வேண்டும். பொதுவாக மத்திய, மாநில அரசுகள் திரைப்படத் துறையாக இருந்தாலும், வேறு துறையாக இருந்தாலும் பிரச்னையை  அதிகாரத்தின் மூலம் அணுகக் கூடாது.
தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. தேர்தல் ஆணையம் முறையாக தேர்தல் அறிவிக்கும்போது அரசியல் கூட்டணி நிலைப்பாடு குறித்து த.மா.கா. முடிவெடுக்கும். வரும் 25ஆம் தேதி அரியலூரில் தமாகா தொடக்க விழா பொதுக்கூட்டம்  மிகப்பெரிய அளவில் நடைபெற உள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட வனப் பகுதிகளை புலிகள் சரணாலயத்தோடு இணைக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். மாத்தூர் தொட்டிப் பாலத்தை உலக சுற்றுலாத் தலமாக மாற்றி, அதற்கு காமராஜர் பெயரைச் சூட்ட வேண்டும்  என்றார் அவர்.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/10/தமிழகத்தில்-இடைத்தேர்தல்-நடப்பது-கேள்விக்குறி-3035983.html
3035982 திருநெல்வேலி கன்னியாகுமரி பலாத்கார புகார்: பொறியாளர் கைது DIN DIN Saturday, November 10, 2018 08:15 AM +0530 குளச்சல் அருகே பலாத்கார புகாரில் பொறியாளர் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் பகுதியைச் சேர்ந்தவர் சகாய பிரதீஷ்டன் (22). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். குளச்சல் பகுதியில் இவரது வீடு அருகே திருமணமான இளம்பெண் வசித்துவருகிறார். அவரது கணவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். அந்தப் பெண்ணுக்கு சகாய பிரதீஷ்டன் சிறு சிறு உதவிகள் செய்ததன் மூலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில், அண்மையில் சொந்த ஊருக்கு வந்த சகாய பிரதீஷ்டன், அந்தப் பெண்ணை சந்திக்கச் சென்றார். அப்போது, அந்தப் பெண் குளியலறையில் இருந்து வெளியே வந்தபோது தனது செல்லிடப்பேசியில் படம் பிடித்த அவர், அதைக் காட்டி மிரட்டி அவரை பலமுறை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.  கடந்த 7 ஆம் தேதி மீண்டும் சொந்த ஊருக்கு வந்த சகாய பிரதீஷ்டன், அந்தப் பெண்ணை வற்புறுத்தினாராம். அவர் மறுத்ததால், தன்னிடம் இருந்த ஆபாச படங்களை அந்தப் பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பினாராம்.
இதையடுத்து குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீஸார், சகாய பிரதீஷ்டன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/10/பலாத்கார-புகார்-பொறியாளர்-கைது-3035982.html
3035981 திருநெல்வேலி கன்னியாகுமரி குமரி மாவட்டத்தில் தொடர் மழை: கொள்ளளவை எட்டும் முக்கடல் அணை DIN DIN Saturday, November 10, 2018 08:15 AM +0530 கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக, நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டுகிறது.
கன்னியாகுமரி கடல் பகுதி மற்றும்  இலங்கை பகுதியில்  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியும் அதே இடத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும்  நிலவுவதால், குமரி மாவட்டத்தில் கடந்த 2  நாள்களாக பரவலாக  மழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை இரவு மழை பெய்தது. அதிகபட்சமாக நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணைப் பகுதியில் 16.30 மி.மீ. மழை பதிவானது. தொடர் நீர்வரத்தால்  முக்கடல் அணை தனது முழு கொள்ளளவான 25 அடியை எட்டவுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி முக்கடல் அணையின் நீர்மட்டம் 24.90 அடியாக இருந்தது. இதனால் நாகர்கோவில் நகரப் பகுதி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாகர்கோவில் நகரில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணியில் இருந்து கனமழை கொட்டியது.  மழை காரணமாக கோட்டாறு, மகளிர் கிறிஸ்தவகல்லூரி சாலை, வடசேரி உள்ளிட்ட நகரின் பிரதான பகுதிகளில் சாலையில் மழைநீர் வெள்ளமாக பாய்ந்து ஓடியது. இதனால் மாலை நேரத்தில் பள்ளி, கல்லூரிகளில் இருந்து மாணவ, மாணவிகள் வீடு திரும்ப பெரும் சிரமத்திற்குள்ளானார்கள்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/10/குமரி-மாவட்டத்தில்-தொடர்-மழை-கொள்ளளவை-எட்டும்-முக்கடல்-அணை-3035981.html
3035321 திருநெல்வேலி கன்னியாகுமரி குமரி மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் சாவு DIN DIN Friday, November 9, 2018 07:31 AM +0530 குமரி  மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் புதன்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து, பன்றிக் காய்ச்சலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.
குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் இருந்து வருகிறது. இதில் பலர் டெங்கு, பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளோடு அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவற்றை கட்டுப்படுத்தும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தக்கலை அருகே திருவிதாங்கோடு புதுப்பள்ளியை சேர்ந்தவர் சக்ரியா (50). காய்ச்சல் காரணமாக திருவிதாங்கோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் புதன்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். ஏற்கெனவே குமரியில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் தெரஷா பிரைட், கர்ப்பிணி பெண் சுகன்யா, தெங்கம்புதூரைச் சேர்ந்த வழக்குரைஞர் ரவிச்சந்திரன் ஆகிய 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/09/குமரி-மாவட்டத்தில்-பன்றிக்-காய்ச்சலுக்கு-மேலும்-ஒருவர்-சாவு-3035321.html
3035039 திருநெல்வேலி கன்னியாகுமரி கருங்கல்லில் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் DIN DIN Friday, November 9, 2018 02:47 AM +0530 கருங்கல்லில் கிள்ளியூர் வட்டார காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கிள்ளியூர் வட்டார காங்கிரஸ் தலைவர் டென்னிஸ் தலைமை வகித்தார். தமிழக காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் டைட்டஸ் முன்னிலை வகித்தார். மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும் கிள்ளியூர் எம்எல்ஏவுமான ராஜேஷ்குமார் பங்கேற்றுப் பேசினார். பூத் கமிட்டியை அகில இந்திய காங்கிரஸ் கட்சிச் செயலர் முகுல் வாஸ்னிக் ஆய்வுசெய்ய வரும்போது நிர்வாகிகள் ஒத்துழைக்க வேண்டும். மேற்கு மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
தொடர்ந்து, புதிய நிர்வாகிகள் அறிமுகம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசிய செயற்குழு உறுப்பினர் ஜோர்தான், மேற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் பால்மணி, கிள்ளியூர் பேரவை இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜோபின் சிறில் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/09/கருங்கல்லில்-காங்கிரஸ்-ஆலோசனைக்-கூட்டம்-3035039.html
3035037 திருநெல்வேலி கன்னியாகுமரி களியக்காவிளை அருகே டெங்கு விழிப்புணர்வுப் பேரணி DIN DIN Friday, November 9, 2018 02:47 AM +0530 களியக்காவிளை அருகேயுள்ள கூட்டப்புளி பகுதியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
கூட்டப்புளி நோபிள் பப்ளிக் பள்ளி வளாகத்திலிருந்து தொடங்கிய பேரணி சுற்றுவட்டாரப் பகுதிகள் வழியாக பள்ளியை அடைந்தது. இதில், முன்சிறை வட்டார வளர்ச்சி அலுவலர் டேவிட் ஜெயசிங், பள்ளித் தாளாளர் ஆர். ஸ்டுவர்ட்,  வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சதீஷ், சுகாதார ஆய்வாளர்கள் எம். சத்தியநேசன், விஜு, பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/09/களியக்காவிளை-அருகே-டெங்கு-விழிப்புணர்வுப்-பேரணி-3035037.html
3035034 திருநெல்வேலி கன்னியாகுமரி அறிவியல் கண்காட்சி: குமரி அமிர்தா வித்யாலயம் மாணவர்கள் சிறப்பிடம் DIN DIN Friday, November 9, 2018 02:46 AM +0530 பள்ளிக் கல்வித் துறை சார்பில் மார்த்தாண்டம் மார் எபரேம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் கன்னியாகுமரி அமிர்தா வித்யாலயம் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர்.
இப்பள்ளியின் 9ஆம் வகுப்பு மாணவர்கள் எஸ்.பத்மகுமார், பி.ஐ.சூரியபிரகாஷ், எம்.நிதிஷ் ஆகியோர் கழிவு நீர் மேலாண்மை-2030 என்ற தலைப்பில் வீட்டில் வீணாகும் தண்ணீரை மீண்டும் பாசன நீராக மாற்றுவது குறித்து செய்முறை விளக்கம் அளித்தனர். மாணவர்களின் புதிய முயற்சிக்கு ரூ. 25 ஆயிரம் ரொக்கம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. இதை அலெக்ஸ் குமார் வழங்கினார். சிறப்பிடம் பெற்ற மாணவர்களை பள்ளி முதல்வர் பிரதீஸ் பாராட்டினார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/09/அறிவியல்-கண்காட்சி-குமரி-அமிர்தா-வித்யாலயம்-மாணவர்கள்-சிறப்பிடம்-3035034.html
3035032 திருநெல்வேலி கன்னியாகுமரி தமிழக அரசின் பரிசு பெற்ற குறளக மாணவிகளுக்கு பாராட்டு DIN DIN Friday, November 9, 2018 02:45 AM +0530 திருக்குறள் ஒப்பித்தமைக்காக தமிழக அரசின் பரிசு பெற்ற நாகர்கோவில் குறளக மாணவிகளுக்கு பாராட்டு விழா ராசகோகிலம் அரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, தெ.தி. இந்துக் கல்லூரி நிர்வாகக்குழுத் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். குறளக நிறுவனர் தமிழ்க்குழவி வரவேற்றார்.  இந்துக் கல்லூரி முன்னாள் முதல்வர்  நாகலிங்கம்,  அண்ணா கல்லூரி முன்னாள் முதல்வர் பத்மநாபன், விஸ்வ ஹிந்து பரிஷத் மாநிலத் தலைவர் ரத்தினசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சென்னை தமிழறிஞர் கு.காந்தி சிறப்புரையாற்றினார். செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முன்னாள் பதிவாளர் முகிலை.ராசபாண்டியன்,  மாணவிகளுக்கு பரிசு வழங்கிப் பாராட்டினார்.
மாணவிகள் அல்போன்சா பள்ளி ஆஷிகா, ரேணுகா, அக்ஷயா, செயின்ட்ஜோசப் பள்ளி அருள்சாஸ்த்ரா, அருள்நிஷா, சூர்யா, சிஎம்சி பள்ளி சுமிதா, வல்லன்குமாரன்விளை அரசுப் பள்ளி மீனா, எக்செல் பள்ளி காயத்ரி ஆகியோர் பரிசு பெற்றனர். நிகழ்ச்சியில் மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி முன்னாள் முதல்வர் சிந்திகேயாள்  தலைமையில், "திருக்குறளில் பெரிதும் வலியுறுத்தப்படுவது  அன்புடைமையா, அறிவுடைமையா'  என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில், சத்யபாமா, கவிதா, வைஷ்ணவா, கனகாபிரதாப்,  உமாகண்ணன், சிவ ஸ்ரீ ஆகியோர் பேசினர்.
இதில், எழுத்தாளர் கலப்பை சுவாமிநாதன், பட்டத்தி மைந்தன், மாணவி லட்சரா ஆகியோர் பேசினர். பன்னாட்டு தமிழுறவு மன்றத்தைச் சேர்ந்த தியாகி முத்துக்கருப்பன், செந்தமிழ் அருள்நெறிப் பேரவையின் புலவர் ராமசாமி, கவிமணி நற்பணி மன்றத்தின் புலவர் சிவதாணு, திருத்தமிழ்த்தேவனார்,  கோபால், காவடியூரார், தெய்வநாயகப்பெருமாள், சுப்பிரமணியபிள்ளை, பிதலிஸ்  உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேராசிரியர் நாராயணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.  ஆபிரகாம்லிங்கன் நன்றி கூறினார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/09/தமிழக-அரசின்-பரிசு-பெற்ற-குறளக-மாணவிகளுக்கு-பாராட்டு-3035032.html
3035031 திருநெல்வேலி கன்னியாகுமரி மார்த்தாண்டம் மேம்பாலம்: பொதுமக்கள் பார்வையிட நாளை சிறப்பு ஏற்பாடு DIN DIN Friday, November 9, 2018 02:44 AM +0530 மார்த்தாண்டம் மேம்பாலத்தில் பொதுமக்கள் நடந்து சென்று பார்வையிட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  
தேசிய நெடுஞ்சாலையில், வெட்டுவெந்நி குழித்துறை ஆற்றுப் பாலம் முடியும் இடத்தில் தொடங்கி மார்த்தாண்டம் அருகே பம்மம் பகுதி வரை 2.4 கி.மீ. தொலைவுக்கு ரூ. 142 கோடியில் மார்த்தாண்டம் மேம்பாலம் அமைக்கப்படுகிறது. 
இப்பாலம் தமிழகத்தின் முதல் இரும்பு பாலமாகவும், தென்னிந்தியாவின் மிக நீளமான இரும்பு பாலமாகவும் அமைகிறது. இந்த மேம்பாலத்துக்காக 112 ராட்சத பில்லர்கள் (தூண்கள்) அமைக்கப்பட்டுள்ளன. இதில் 21 தூண்கள் கான்கிரீட்டால் ஆனவை. மற்ற தூண்கள் அனைத்தும் இரும்பால் ஆனவை. 
பெரும்பாலான பணிகள் முடிந்து விட்ட நிலையில், பாலத்தின் அடிப்பகுதி தரைத்தளம் பகுதியில் தரைவழி மின் இணைப்புக்கான மின்மாற்றிகள் பொருத்தும் பணி உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாலை சீரமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளன.
இதற்கிடையே மேம்பாலத்தின் மேற்பகுதி சாலைப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து சனிக்கிழமை (நவ. 10) மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் மேம்பாலத்தின் மேல் நடந்து சென்று பார்வையிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 
இதில், அதிகளவு பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் மார்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாகனப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வாகனப் பிரசாரத்தை பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் ஆர். ஜெயசீலன் வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தார். சமூக ஆர்வலர் பி.பி.கே. சிந்துகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/09/மார்த்தாண்டம்-மேம்பாலம்-பொதுமக்கள்-பார்வையிட-நாளை-சிறப்பு-ஏற்பாடு-3035031.html
3035030 திருநெல்வேலி கன்னியாகுமரி பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை: விடுதிகள், உணவகங்களை தூய்மையாகப் பராமரிக்க அறிவுறுத்தல் DIN DIN Friday, November 9, 2018 02:44 AM +0530 கன்னியாகுமரி, நாகர்கோவிலில் உள்ள தங்கும் விடுதிகள், உணவகங்கள், திரையரங்குகள், மருத்துவமனைகள் போன்ற இடங்களுக்கு வருவோருக்கு பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்க, அந்த இடங்களை சுத்தமாக வைத்திருக்குமாறு அதன் உரிமையாளர்களுக்கு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சல், டெங்கு, வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  நோய் பரவுவதை தடுக்க சுகாதாரத் துறை அதிகாரிகளும், நகராட்சி அலுவலர்களும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், கன்னியாகுமரி, நாகர்கோவில் மற்றும் மாவட்டத்தில் முக்கியப் பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள், உணவகங்கள், திரையரங்குகள்,  மருத்துவமனைகள், வர்த்தக நிறுவன உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் சுகாதாரத் துறை சார்பில் நாகர்கோவில் நகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் மதுசூதனன் பேசியது: பன்றிக் காய்ச்சல் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் பரவி வருகிறது. மழைக் காலம், குளிர் காலங்களில் வைரஸ் தாக்குதல் அதிகமாக இருக்கும். பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து 3 அடி தள்ளி நின்றுதான் பேச வேண்டும்.
சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் தங்கும் விடுதி, உணவகம் போன்றவற்றுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகை புரிகின்றனர். 
இதேபோல் நாகர்கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகள், உணவகங்களையும் ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், மருத்துவமனைகளுக்கும் பலதரப்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். அதிகமானோர் கூடும் வர்த்தக நிறுவனங்கள், கடைகள் போன்றவற்றிலும் இதே நிலை உள்ளது. 
இவற்றின் இருக்கைகளில் இருந்து கதவு மற்றும் பயன்படுத்தும் பொருள்களில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எச்1என்1 வைரஸ் இருந்தால், அவற்றின் மூலம் பலருக்கு நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இவற்றை தினமும் சுத்தமாக வைத்திருந்தாலே பன்றிக் காய்ச்சல் மற்றும் மர்மக் காய்ச்சல் நோயின் தாக்கத்தைக் குறைக்கலாம்.
பொதுமக்கள் அதிகமானோர் பயன்படுத்தும் இருக்கைகள், கதவுகள், கழிப்பறை மற்றும் பயன்படுத்தும் பொருள்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அவற்றில் வைரஸ்கள் பரவாமல் இருக்கும் வகையில் கிருமி நாசினி கொண்டு தினமும் சுத்தப்படுத்த வேண்டும் என்றார் அவர்.
நாகர்கோவில் நகராட்சி நகர்நல அலுவலர் கிங்சால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/09/பன்றிக்-காய்ச்சல்-தடுப்பு-நடவடிக்கை-விடுதிகள்-உணவகங்களை-தூய்மையாகப்-பராமரிக்க-அறிவுறுத்தல்-3035030.html
3035029 திருநெல்வேலி கன்னியாகுமரி பிஎஸ்என்எல் தள்ளுபடி திட்டம்: நவ. 23வரை நீட்டிப்பு DIN DIN Friday, November 9, 2018 02:44 AM +0530 பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் பில் தொகை செலுத்துவதற்கான தள்ளுபடி திட்டம் வெள்ளிக்கிழமை (நவ. 23) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, பிஎஸ்என்எல் நாகர்கோவில் பொதுமேலாளர் சஜிகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிஎஸ்என்எல் நிறுவனம் அளிக்கும் தனலட்சுமி தள்ளுபடி திட்டம் நவ. 23ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  அதன்படி,  நவ. 7ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை தங்கள் தற்போதைய தொலைபேசி, பிராட்பேண்ட் மற்றும் செல்லிடப்பேசி பில்களை செலுத்தும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் செலுத்தும் தொகையில் 1 சதவீதம் தள்ளுபடியாக கணக்கிடப்பட்டு அடுத்து வரும் பில்லில் கழித்துக்கொள்ளப்படும். பிஎஸ்என்எல் எண்டர்பிரைஸ் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு 2 சதவீதம் மற்றும் முன்கூட்டியே பணம் செலுத்துவோருக்கு 3 சதவீதம் ஆகிய தள்ளுபடி சலுகைகள் தொடரும். அனைத்து வாடிக்கையாளர்களும் இந்த தள்ளுபடி சலுகையின் மூலம் பயனடையலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/09/பிஎஸ்என்எல்-தள்ளுபடி-திட்டம்-நவ-23வரை-நீட்டிப்பு-3035029.html
3035028 திருநெல்வேலி கன்னியாகுமரி நாளை பொது விநியோக குறைதீர் முகாம் DIN DIN Friday, November 9, 2018 02:43 AM +0530 கன்னியாகுமரி மாவட்டத்தில் சனிக்கிழமை (நவ.10) பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொது விநியோகத் திட்ட செயல்பாட்டில் காணப்படும் குறைகளை களைவதற்கும், மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்வதற்கும், சிறப்பு மக்கள் குறைதீர் முகாம்கள் சனிக்கிழமை (நவ.10) மாவட்டத்தில் உள்ள 4 வட்டங்களிலும் நடைபெற உள்ளது.
அதன்படி, அகஸ்தீசுவரம் வட்டம் புத்தேரி ஊராட்சி அலுவலகம், தோவாளை வட்டம் காட்டுபுதூர் ஊராட்சி அலுவலகம், கல்குளம் வட்டம் ஆற்றூர் பேரூராட்சி அலுவலகம், விளவங்கோடு வட்டம் அருமனை பேரூராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில், வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1மணி வரை இம்முகாம் நடைபெறவுள்ளது. 
மேற்கண்ட ஊராட்சி, பேரூராட்சி பகுதிக்குள்பட்ட குடும்ப அட்டைதாரர்களில் மின்னணு குடும்ப அட்டை புகைப்படம் மற்றும் தேவையான ஆவணங்கள் இல்லாமல் இதுவரை மின்னணு குடும்ப அட்டை பெற முடியாமல் ரேஷன் கடையில்  ஒட்டப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள குடும்பஅட்டைதாரர்கள் தங்களது குடும்பத் தலைவரின் புகைப்படம், செல்லிடப்பேசி எண், ஆதார் எண் பதிவு செய்தல் போன்ற திருத்தங்கள் செய்து மின்னணு குடும்ப அட்டை பெற மனு அளிக்கலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/09/நாளை-பொது-விநியோக-குறைதீர்-முகாம்-3035028.html
3035027 திருநெல்வேலி கன்னியாகுமரி "குமரி மாவட்ட கோயில்களில் டிசம்பரில் கீதை பாராயணம்' DIN DIN Friday, November 9, 2018 02:43 AM +0530 கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்துக் கோயில்களிலும்,  வரும் டிசம்பர் மாதத்தில் கீதை பாராயணம் நிகழ்ச்சி நடத்துவது என விசுவ ஹிந்து பரிஷத் முடிவு செய்துள்ளது.
விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் குமரி மாவட்ட கமிட்டி கூட்டம் குமாரகோவில் சின்மயா மிஷன் மடத்தில்  நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர்  ஆர்.குமரேசதாஸ் தலைமை வகித்தார்.  மாவட்டச் செயலர் என்.அஜீ  அறிக்கை வாசித்தார். 
கூட்டத்தில், "கீதா ஜெயந்தியை முன்னிட்டு  வரும் டிசம்பர் மாதம்  அனைத்துக் கிராம கோயில்களிலும் கீதை பாராயணம் நடத்துவது; அயோத்தியில் ராமர் கோயில் கட்ட கோரி டிச.16  ஆம் தேதி  நாகர்கோவிலில் மாநாடு நடத்துவது;  மாவட்டம் முழுவதும் அனைத்து ஒன்றியங்களிலும் ஆதரவாளர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது' என்பன  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், விசுவ ஹிந்து பரிஷத் திருக்கோயில்கள், திருமடங்கள்  மாநில அமைப்பாளர் இறச்சகுளம் காளியப்பன்சிறப்புரையாற்றினார்.  கண்ணன், செல்வராஜ், ராஜேஷ், சதீஷ் உள்ளிட்ட  நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மாவட்ட இணைச் செயலர் கார்த்திக்  நன்றி கூறினார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/09/குமரி-மாவட்ட-கோயில்களில்-டிசம்பரில்-கீதை-பாராயணம்-3035027.html
3035026 திருநெல்வேலி கன்னியாகுமரி நாகர்கோவிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம் DIN DIN Friday, November 9, 2018 02:42 AM +0530 நாகர்கோவில் அருள்மிகு நாகராஜா கோயிலில் உள்ள பாலமுருகன் சன்னதியில் கந்த சஷ்டி திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.
இவ்விழாவையொட்டி முருக பக்தர்கள் 6 நாள்கள் விரதமிருந்து, முருகனை வழிபட்டு நிறைவு நாளான சூரசம்ஹாரத்தன்று விரதத்தை நிறைவு செய்வர்.  நிகழாண்டு கந்த சஷ்டி திருவிழா வியாழக்கிழமை காலை 5 மணிக்கு மஹா கணபதி ஹோமத்துடன்  தொடங்கியது. காலை 6 மணிக்கு கால்நாட்டு விழாவும், காப்புக் கட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் காப்புக்கட்டி விரதத்தை தொடங்கினர். தொடர்ந்து தன்வந்திரி ஹோமம் நடைபெற்றது.
பின்னர், முருகருக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், திரவியம், தேன் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.  தொடர்ந்து மஹா தீபாராதனை நடைபெற்றது. 
மாலையில், சமயச்  சொற்பொழிவு,  அலங்கார தீபாராதனை,  உற்சவமூர்த்தி மூலவரையும், அம்பாளையும் இறை இசைப் பாடல்களுடன் மும்முறை வலம் வருதல், இரவில் தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.
2ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை (நவ. 9) திருவிளக்கு பூஜை, பால்குட ஊர்வலம், 4ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை (நவ. 11) அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற உள்ளன. தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகளும் அபிஷேகங்களும் நடைபெற உள்ளன.
6ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை (நவ.13) மாலை 6.30  மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 
புதன்கிழமை (நவ.14) காலை 10 மணிக்கு திருக்கல்யாணம், மங்கள தீபாராதனையைத் தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு  திருக்கல்யாண விருந்துடன் விழா நிறைவடைகிறது.
ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத் துறை மாவட்ட   திருக்கோயில்கள் இணை ஆணையர் ம. அன்புமணி தலைமையில், கண்காணிப்பாளர் வி.என்.சிவகுமார், ஸ்ரீகாரியம் பி.எஸ்.செந்தில்குமரன், விழாக் குழுத் தலைவர் செ.பாலகணேசன் உள்ளிட்டோர் செய்துவருகின்றனர்.

 

 

குமரி வேல்முருகன் குன்றத்தில்...
கன்னியாகுமரி அருள்மிகு வேல்முருகன் குன்றத்தில் கந்த சஷ்டி விழா வியாழக்கிழமை தொடங்கியது.
இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 6 மணிக்கு கலச பூஜை, காலை 7.30 மணிக்கு அபிஷேகம், காலை 8.30 மணிக்கு சிறப்பு வழிபாடு, காலை 9 மணிக்கு யாகசாலை பூஜை, காலை 10 மணிக்கு பூர்ணாஹுதி, தீபாராதனை, காலை 10.45 மணிக்கு சிறப்பு அபிஷேகம், நண்பகல் 12 மணிக்கு வெள்ளி அங்கி சாத்தி வழிபாடு, தொடர்ந்து அன்னதானம், மாலை 3.30 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, மாலை 5.30 மணிக்கு கந்த கிரிவலம், இரவு 7.30 மணிக்கு சிறப்பு வழிபாடு ஆகியவை நடைபெற்றன.
விழா நாள்களில் விஸ்வரூப தரிசனம், அபிஷேகம், சிறப்பு வழிபாடு, சமய உரை, பஜனை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறுகின்றன. 7ஆம் நாளான 14ஆம் தேதி காலை 7 மணிக்கு கலச பூஜை, காலை 9.15 மணிக்கு சீர்வரிசை எடுத்தல், காலை 10 மணிக்கு திருக்கல்யாணம், முற்பகல் 11 மணிக்கு திருக்கல்யாண பட்டணப்பிரவேசம், நண்பகல் 12 மணிக்கு மங்கள தீபாராதனை தொடர்ந்து திருக்கல்யாண விருந்து, மாலை 6.30 மணிக்கு சிறப்பு வழிபாடு ஆகியன நடைபெறும்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/09/நாகர்கோவிலில்-கந்த-சஷ்டி-விழா-தொடக்கம்-3035026.html
3035025 திருநெல்வேலி கன்னியாகுமரி குமரியில் 187 தற்காலிக சீசன் கடைகள்: ரூ. 1.07 கோடிக்கு ஏலம் DIN DIN Friday, November 9, 2018 02:41 AM +0530 கன்னியாகுமரியில் ஐயப்ப பக்தர்கள் சீசனை முன்னிட்டு, பேரூராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கடைகளில், முதல் நாளான வியாழக்கிழமை 187 கடைகள் ரூ. 1 கோடியே 7 லட்சத்து 90 ஆயிரத்து 650-க்கு ஏலம் போனது.
கன்னியாகுமரியில் ஆண்டுதோறும் நவ.15ஆம் தேதி முதல் ஜன.17ஆம் தேதி வரையிலான காலத்தில் சபரிமலைக்குச் செல்லும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த சீசனில் பேரூராட்சி நிர்வாகம் தனது வருவாயைப் பெருக்கும் வகையில் தற்காலிக கடைகளை அமைத்து வருகிறது.
நிகழாண்டு சன்னதி தெரு, கடற்கரைச் சாலை, காந்தி மண்டபச் சாலை, சிலுவைநகர் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 569 கடைகளை அமைக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதையடுத்து தற்காலிக கடைகளுக்கான ஏலம் வியாழக்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெற்றது. வருவாய் ஆய்வாளர் திவான், கிராம நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன், பேரூராட்சி செயல் அலுவலர் மு.வெங்கடேசன், அகஸ்தீசுவரம் பேரூராட்சி அலுவலர் அகஸ்திலிங்கம், சுகாதார ஆய்வாளர் முருகன், இளநிலை உதவியாளர் பி.சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் இந்த ஏலம் நடைபெற்றது.
முதல் நாளன்று சன்னதி தெரு, கடற்கரைச் சாலை ஆகிய இடங்களில் மொத்தம் 187 கடைகள் ரூ. 1 கோடியே 7 லட்சத்து 90 ஆயிரத்து 650-க்கு ஏலம் போனது. கார் பார்க்கிங் ஏலம் பேரூராட்சி நிர்வாகம் நிர்ணயித்த தொகையை விட ஏலதாரர்கள் குறைந்த தொகைக்கு ஏலம் கேட்டதால், ஏலம் மறு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
ஏலம் நடைபெற்றதைத் தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமலிருக்க பேரூராட்சி வளாகத்தில் 25-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 2ஆவது நாளாக வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு ஏலம் நடைபெற உள்ளது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/09/குமரியில்-187-தற்காலிக-சீசன்-கடைகள்-ரூ-107-கோடிக்கு-ஏலம்-3035025.html
3035024 திருநெல்வேலி கன்னியாகுமரி அழகியமண்டபத்தில் காங்கிரஸ் நூதனப் போராட்டம் DIN DIN Friday, November 9, 2018 02:41 AM +0530 மத்திய அரசு மேற்கொண்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து, அழகியமண்டபத்தில் இளைஞர் காங்கிரஸார் வியாழக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்துக்கு இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவர் லாரன்ஸ் தலைமை வகித்தார். இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர்கள் ஆனந்த் கார்ல் மாக்ஸ், ராபர்ட், காங்கிரஸ் நிர்வாகிகள் ஜோன்ஸ் இமானுவேல், தம்பி விஜயகுமார், ஜான் இக்னேசியஸ், ஹனுகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மண்வெட்டி, கலப்பைகள் ஏந்தி உடலில் கரிபூசியும், கண்டன வாசகத்தை உடலில் எழுதியவாறும் வேடம் புனைந்து பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக கோஷமிட்டனர். இதில் திரளான காங்கிரஸார் கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/09/அழகியமண்டபத்தில்-காங்கிரஸ்-நூதனப்-போராட்டம்-3035024.html
3035023 திருநெல்வேலி கன்னியாகுமரி குலசேகரத்தில் புதுப்பிக்கப்பட்ட நிழலகம் திறப்பு DIN DIN Friday, November 9, 2018 02:41 AM +0530 குலசேகரத்தில் பராமரிப்பின்றி காணப்பட்ட பயணிகள் நிழலகம், டர்போ விளையாட்டு கழகத்தினரால் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது.
குலசேகரம் கான்வென்ட் சந்திப்பில் அரிமா சங்கத்தினரால் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் நிழலகம் அமைக்கப்பட்டு பேரூராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. 
அண்மைக்காலமாக இந்த நிழலகம் பராமரிப்பின்றி இருந்த நிலையில், குலசேகரம் டர்போ விளையாட்டு கழகத்தினரால் சீரமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.  இதையடுத்து திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு டர்போ விளையாட்டு கழகத் தலைவர் கோபிநாதன் தலைமை வகித்தார். செயலர் அலெக்ஸ், பொருளாளர் ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிழலகத்தின் ஆண்கள் பகுதியை குருசப்பன், பெண்கள் பகுதியை குலசேகரம் காவல் உதவி ஆய்வாளர் சரவண குமார் ஆகியோர் திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில், விளையாட்டுக் கழக மற்றும் சமூக நல ஆர்வலர்கள் ராகுல், இன்பராஜ், நோபிள், சுபாஷ், ஜெயராஜ், ஹெலன், சதீஷ்,  மகேஷ், பெக்ஸ், ஸ்டீபன், வால்டர், சங்கரன், அஷ்ரப் மற்றும் தென்றல் கலை கழகத்தினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/09/குலசேகரத்தில்-புதுப்பிக்கப்பட்ட-நிழலகம்-திறப்பு-3035023.html
3035022 திருநெல்வேலி கன்னியாகுமரி குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 4 பேர் தற்கொலை DIN DIN Friday, November 9, 2018 02:40 AM +0530 குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 4 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
தக்கலை பகுதியைச் சேர்ந்தவர் ஜெட் வினோராஜ் (36). கூலித் தொழிலாளி. இவரது மனைவி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டாராம். இதைத்தொடர்ந்து மதுப்பழக்கத்துக்கு அடிமையான இவர், புதன்கிழமை வீட்டு அருகே மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இதேபோன்று மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தவர் கீழமறவன்குடியிருப்பைச் சேர்ந்த கண்ணன் (50). மதுப்பழக்கம் உடையவரான இவர், புதன்கிழமை அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு வீட்டில் தூங்கினாராம். நீண்ட நேரமாகியும் எழுந்திருக்காததால், உறவினர்கள் அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 
மேலும், வீட்டை அடமானம் வைத்து திருப்ப முடியாத நிலையில் இருந்த திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்த சஜின்ராஜ் (31) தூக்கிட்டும்,  குடும்ப கோயிலில் தீச்சட்டி எடுக்கும் போது தீக்காயம் ஏற்பட்டதில் வருத்தம் அடைந்த பறக்கை பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (25) விஷம் குடித்தும் தற்கொலை செய்துகொண்டனர். 
இந்த தற்கொலை சம்பவங்கள் குறித்து தக்கலை, கோட்டாறு, கருங்கல் மற்றும் சுசீந்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/09/குமரி-மாவட்டத்தில்-ஒரே-நாளில்-4-பேர்-தற்கொலை-3035022.html
3035021 திருநெல்வேலி கன்னியாகுமரி தாழக்குடியில் திமுக ஆர்ப்பாட்டம் DIN DIN Friday, November 9, 2018 02:39 AM +0530 தோவாளை ஒன்றிய திமுக சார்பில் தாழக்குடி பேரூராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக அரசு குடிநீர்க் கட்டணம், வீட்டு வரி உள்ளிட்டவற்றை உயர்த்தியதைக் கண்டித்தும், குமரி மாவட்டத்தில் நிலவும் சுகாதாரச் சீர்கேட்டை கண்டித்தும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, பேரூர் செயலர் சிவகுமார் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் நெடுஞ்செழியன்,  பேரூர் செயலர்கள் சுப்பிரமணியம், அலிவர்தாஸ், பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் ரவிபிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர் அவைத் தலைவர் செல்வேந்திரன் வரவேற்றார். கன்னியாகுமரி எம்.எல்.ஏ. ஆஸ்டின் கலந்துகொண்டு பேசினார். 
போராட்டத்தில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பூதலிங்கம் பிள்ளை, ஊராட்சி செயலர்கள் கல்யாணசுந்தரம், மாவட்டப் பிரதிநிதிகள் லாரன்ஸ், ராஜேஷ், மணிக்குமார், மாநிலப் பேச்சாளர்கள் செல்வகுமார், ரகுமான், மாவட்ட தொண்டரணியைச் சேர்ந்த கோபி,  சுந்தர், துணைச் செயலர்கள் மோசஸ் ராய், சபரிகிரிஷன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/09/தாழக்குடியில்-திமுக-ஆர்ப்பாட்டம்-3035021.html
3035020 திருநெல்வேலி கன்னியாகுமரி கார் கண்ணாடியை உடைத்து செல்லிடப்பேசி, பணம் திருட்டு DIN DIN Friday, November 9, 2018 02:39 AM +0530 திற்பரப்பு அருவிக்கு சுற்றுலாப் வந்தவர்களின் காரை உடைத்து செல்லிடப்பேசிகள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திற்பரப்பு அருவியில் தற்போது மிதமான அளவில் தண்ணீர் கொட்டும் நிலையில் இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர். 
இந்நிலையில் வியாழக்கிழமை நாகர்கோவில் தொழிலதிபர் உள்பட 3 பேர் வந்தனர். அவர்கள் தங்களது உடைகள், செல்லிடப்பேசிகள்,  ரூ. 5,500 ரொக்கம் உள்ளிட்டவற்றை காரில் வைத்து விட்டு, அருவியில் குளிக்கச் சென்றுள்ளனர். 
பின்னர் குளித்து விட்டு திரும்பி வந்த போது, காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு, அவர்களின் 3 செல்லிடப்பேசிகள் மற்றும் ரூ.5,500 ரொக்கம் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து குலசேகரம் போலீஸார் வழக்குப் பதிந்து, கார் கண்ணாடியை உடைத்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/09/கார்-கண்ணாடியை-உடைத்து-செல்லிடப்பேசி-பணம்-திருட்டு-3035020.html
3034500 திருநெல்வேலி கன்னியாகுமரி இளம் விஞ்ஞானிகள் பயிற்சிக்கு 60 மாணவர்கள் தேர்வு DIN DIN Thursday, November 8, 2018 01:28 AM +0530
குமரி அறிவியல் பேரவை இளம் விஞ்ஞானிகள் பயிற்சிக்காக தேர்வு செய்யப்பட்ட 60 மாணவர்கள் பட்டியல் வெளியீட்டு விழா மார்த்தாண்டம் அருகேயுள்ள சாங்கை சிக்மா அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்றது.
சமூக விஞ்ஞானி எட்வின்சாம் தலைமை வகித்தார். கேப்டன் பென்னட்சிங், சுனில்குமார், பேராசிரியை தன்யா, சிபின்றாட், வி.வி. வினோத், ஜான்சன், தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஜே. ஜோபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மூடோடு சிக்மா ஆர்க்கிடெக்சர் கல்லூரித் தலைவர் ஜேம்ஸ் வில்சன் தேர்வு பட்டியலை வெளியிட, குமரி அறிவியல் பேரவை அமைப்பாளர் முள்ளஞ்சேரி மு. வேலையன் பெற்றுக்கொண்டார்.
தேர்வான மாணவர்களுக்கு ஏற்கெனவே எட்டு கட்ட தேர்வு முறைகள் நிறைவு பெற்றுள்ளதாகவும், மேலும் பல கட்ட தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாகவும் பேரவை அமைப்பாளர் தெரிவித்தார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/08/இளம்-விஞ்ஞானிகள்-பயிற்சிக்கு-60-மாணவர்கள்-தேர்வு-3034500.html
3034499 திருநெல்வேலி கன்னியாகுமரி நாகர்கோவிலில் சோவியத் புரட்சி தினம் DIN DIN Thursday, November 8, 2018 01:27 AM +0530
நாகர்கோவிலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சோவியத் புரட்சி தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
101ஆவது ஆண்டு சோவியத் புரட்சி தினத்தையொட்டி, நாகர்கோவில் நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், கிருஷ்ணன்கோவில் நகரக் குழு அலுவலகத்தில் வட்டாரக்குழுச் செயலர் மோகன் தலைமையில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.அகமதுஉசேன் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினார். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.அந்தோணி, வட்டாரக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் மரியஸ்டீபன், அசீஸ், மீனாட்சிசுந்தரம், பெஞ்சமின், லட்சுமிபாய், நீலகண்டன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/08/நாகர்கோவிலில்-சோவியத்-புரட்சி-தினம்-3034499.html
3034498 திருநெல்வேலி கன்னியாகுமரி டெங்கு ஒழிப்பு: குமாரபுரம் பேரூராட்சியில் அதிகாரி ஆய்வு DIN DIN Thursday, November 8, 2018 01:27 AM +0530
குமாரபுரம் பேரூராட்சியில் குமரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
குமரி மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்தது, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் அதிகாரிகள் அதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். மேலும், நேரில் ஆய்வு செய்து பணியாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, குமாரபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கண்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மஸ்தூர் பணியாளர்கள் , பரப்புரையாளர்கள் , பேரூராட்சி பணியாளர்கள் ஆகியோருக்கு டெங்கு ஒழிப்புப் பணிகள் தொடர்பாக அறிவுரை வழங்கினார். இதில், செயல் ஆலுவலர் சுருளிவேல் மற்றும் சுகாதார ஆய்வாளர், மேற்பார்வையாளர் ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து, அவர் கொற்றிகோடு காவல் நிலையம் மற்றும் சுற்றுபுறப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டதையடுத்து அப்பகுதிகளில் ஒழிப்பு புகை மருந்து அடிக்கப்பட்டது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/08/டெங்கு-ஒழிப்பு-குமாரபுரம்-பேரூராட்சியில்-அதிகாரி-ஆய்வு-3034498.html
3034497 திருநெல்வேலி கன்னியாகுமரி தோவாளை ஒன்றிய அ.தி.மு.க. செயலர நியமனம் DIN DIN Thursday, November 8, 2018 01:27 AM +0530
தோவாளை ஒன்றிய அ.தி.மு.க. செயலராக கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டுள்ளார் .
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், அ.தி.மு.க. கிழக்கு மாவட்டச் செயலர் எஸ்.ஏ.அசோகன் ஆகியோரின் பரிந்துரையின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளஅவர், ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவராக தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/08/தோவாளை-ஒன்றிய-அதிமுக-செயலர-நியமனம்-3034497.html
3034496 திருநெல்வேலி கன்னியாகுமரி களியக்காவிளை அருகே கோழிக் கழிவுகளுடன் மினிலாரி பறிமுதல் DIN DIN Thursday, November 8, 2018 01:26 AM +0530
கேரளத்திலிருந்து கோழிக் கழிவுகளுடன் வந்த மினிலாரி களியக்காவிளை அருகே போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
களியக்காவிளை அருகேயுள்ள செம்மான்விளை பகுதியில் செவ்வாய்க்கிழமை மினிலாரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அதிலிருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து அப்பகுதியினர் சென்று பார்த்தபோது, வாகனத்தில் கோழிக் கழிவுகள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து களியக்காவிளை போலீஸாருக்கு மக்கள் தகவல் தெரிவித்தனர். போலீஸார் அங்கு சென்று கழிவுகளை அருகில் உள்ள தோட்டத்தில் குழி தோண்டி புதைத்தனர். தொடர்ந்து மினிலாரியை கைப்பற்றி காவல் நிலையம் கொண்டுவந்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/08/களியக்காவிளை-அருகே-கோழிக்-கழிவுகளுடன்-மினிலாரி-பறிமுதல்-3034496.html
3034495 திருநெல்வேலி கன்னியாகுமரி வெட்டுவெந்நியில் ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல்: இருவர் கைது DIN DIN Thursday, November 8, 2018 01:26 AM +0530
மார்த்தாண்டம் அருகே ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கியதாக இருவரை போலீஸார் கைது செய்தனர்.
கரவிளாகம் பகுதியைச் சேர்ந்தவர் பாபு (35). வெட்டுவெந்நி பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர், இரு தினங்களுக்கு முன்பு, அப்பகுதியில் ஆட்டோ ஓட்டிச் சென்றபோது, எதிரில் மோட்டார் சைக்கிளில் வந்த காரவிளை பகுதியைச் சேர்ந்த சதீஷ் (29), வினோ (28) ஆகியோருக்கும், இவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம்.
இதில், பாபுவை இருவரும் சேர்ந்து தாக்கினராம். பலத்த காயமடைந்த அவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில், மார்த்தாண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து சதீஷ், வினோ இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/08/வெட்டுவெந்நியில்-ஆட்டோ-ஓட்டுநர்-மீது-தாக்குதல்-இருவர்-கைது-3034495.html
3034494 திருநெல்வேலி கன்னியாகுமரி திருவட்டாறில் சாலைகளைச் சீரமைக்க காங்கிரஸ் வலியுறுத்தல் DIN DIN Thursday, November 8, 2018 01:26 AM +0530
திருவட்டாறு பகுதியில் சேதமடைந்துள்ள சாலைகளைச் சீரமைக்க வேண்மென்று நகர காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
திருவட்டாறில் நகர காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் தலைவர் ஆர். சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது. வட்டார காங்கிரஸ் தலைவர்கள் ஜெகன்ராஜ், காஸ்டன் கிளிட்டஸ், நகரப் பொறுப்பாளர் வர்கீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேற்கு மாவட்டத் தலைவர் ராஜேஷ்குமார் எம்எல்ஏ சிறப்புரையாற்றினார்.
இதில், திருவட்டாறு நகர இளைஞரணி தலைவர் ஜாக்சன், மாணவரணி தலைவர் ரிச்சர்டு, தொகுதி பொதுச் செயலர் ராஜேஷ், முன்னாள் நகரத் தலைவர் ராஜா சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மத்திய- மாநில அரசுகளின் மக்கள் விரோத செயல்களை வார்டு வாரியாக மக்களிடம் விளக்கி துண்டுப் பிரசுரங்கள் வழங்குவது; பேரூராட்சிக்குள்பட்ட பழுதடைந்த சாலைகளை சீரமைக்கவும், பழுதான மின் விளக்குகளை மாற்றி புதிய மின்விளக்குளை பொருத்தவும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/08/திருவட்டாறில்-சாலைகளைச்-சீரமைக்க-காங்கிரஸ்-வலியுறுத்தல்-3034494.html
3034493 திருநெல்வேலி கன்னியாகுமரி களியக்காவிளை அருகே பைக் மோதி காவலர் காயம் DIN DIN Thursday, November 8, 2018 01:26 AM +0530
களியக்காவிளை அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் காவலர் காயமடைந்தார்.
கருங்கல் அருகேயுள்ள கம்பளார் பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ் (45). இவர் கொற்றிக்கோடு காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், படந்தாலுமூடு பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் பணியாற்ற மோட்டார் சைக்கிளில் செவ்வாய்க்கிழமை மாலையில் சென்றுகொண்டிருந்தார். அவர், குழித்துறை கல்லுக்கட்டி பகுதியை அடைந்தபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதாம். இதில், நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்த அவரை, அப்பகுதியினர் மீட்டு மார்த்தாண்டத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மோட்டார் சைக்கிளில் வந்தவர் வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு தப்பிவிட்டார். இதுகுறித்து களியக்காவிளை போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/08/களியக்காவிளை-அருகே-பைக்-மோதி-காவலர்-காயம்-3034493.html
3034492 திருநெல்வேலி கன்னியாகுமரி திருவட்டாறு பெருமாள் கோயிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றம் DIN DIN Thursday, November 8, 2018 01:25 AM +0530
திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் 10 நாள் ஐப்பசி திருவிழா திங்கள்கிழமை (நவ.5) கொடியேற்றத்துடன் தொடங்கியது. நவ. 13ஆம் தேதி கருட வாகனத்தில் பெருமாள் பள்ளிவேட்டைக்கு எழுந்தருளுகிறார்.
108 வைணவ திருத்தலங்களில் ஒன்று குமரி மாவட்டம், திருவட்டாறில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோயிலாகும். பாரம்பரிய பெருமையும், புராதனச் சிறப்பும் பெற்ற கோயிலாக இக்கோயில் விளங்குகிறது. குமரி மாவட்டத்தில் உள்ள வைணவக் கோயில்களில் பெரிய கோயிலான இக்கோயிலில் ஐப்பசி மாத திருவிழா கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தந்திரி சங்கர நாராயணரு கொடியேற்றி வைத்தார். கோயில் மேலாளர் மோகன குமார், கண்காணிப்பாளர் ஆனந்தன் மற்றும் நிர்வாகிகள், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
விழாவை முன்னிட்டு தினமும் ராமாயண பாராயணம், சிறப்பு பூஜை, தீபாராதனை, இரவு 9 மணிக்கு சுவாமி வாகன பவனி ஆகியவை நடைபெற்று வருகின்றன. முக்கிய விழாவான 9 ஆம் திருவிழா 13 ஆம் தேதி நடக்கிறது. அன்று காலை 8 மணிக்கு பாகவத பாராயணம், முற்பகல் 11 மணிக்கு சுவாமி பவனி வருதல், மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 9 மணிக்கு கருட வாகனத்தில் சுவாமி பள்ளி வேட்டைக்கு எழுந்தருளல் ஆகியவை நடைபெறும்.
நிறைவு நாளான 14 ஆம் தேதி காலை 6 மணிக்கு ராமாயண பாராயணம், முற்பகல் 11 மணிக்கு திருவிளக்குடன் சுவாமி எழுந்தருளல், மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணிக்கு கருட வாகனத்தில் சுவாமிக்கு ஆறாட்டு ஆகியவை நடைபெறுகின்றன.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/08/திருவட்டாறு-பெருமாள்-கோயிலில்-ஐப்பசி-திருவிழா-கொடியேற்றம்-3034492.html
3034491 திருநெல்வேலி கன்னியாகுமரி சுவாதி நட்சத்திர வழிபாடு: லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு பூஜை DIN DIN Thursday, November 8, 2018 01:25 AM +0530
சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, நாகர்கோவிலில் லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றன.
சுவாதி நட்சத்திரம் லட்சுமிநரசிம்மருக்கு உகந்த நட்சத்திரமாகும்.இதை முன்னிட்டு, நாகர்கோவில் நாகராஜா கோயில் மேலரதவீதி மகாராஜ கணபதி கோயிலில் உள்ள லட்சுமி நரசிம்மருக்கு மாலையில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனையும், அன்னதானமும் நடைபெற்றன.
இதில் குமரி மாவட்ட வள்ளலார் பேரவைத் தலைவர் பத்மேந்திரா சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஸ்ரீ அனந்தகிருஷ்ண பக்த சேவா அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/08/சுவாதி-நட்சத்திர-வழிபாடு-லட்சுமி-நரசிம்மருக்கு-சிறப்பு-பூஜை-3034491.html
3034490 திருநெல்வேலி கன்னியாகுமரி செக்கர்கிரி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவ.13இல் சூரசம்ஹாரம் DIN DIN Thursday, November 8, 2018 01:25 AM +0530
தோவாளை செக்கர்கிரி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவ.13ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
இக்கோயில் கந்தசஷ்டி விழா வியாழக்கிழமை காலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது. காலை 10 மணிக்கு அபிஷேகங்களும், நண்பகல் 12.30 மணிக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், பிற்பகல் 1 மணிக்கு அன்னதானமும் நடைபெறுகிறது.
விழாவில் 7 நாள்களும் சிறப்பு அபிஷேகங்களும் சிறப்பு பூஜைகளும் , அன்னதானமும் நடைபெறுகிறது. 12ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு மங்கள இசையும், இரவு 7.30 மணிக்கு நகைச்சுவை பட்டிமன்றமும் நடைபெறுகின்றன. 13ஆம் தேதி மாலை 3 மணிக்கு 10 வகை கிராமிய கலை நிகழ்ச்சியுடன் சூரசம்ஹார வைபவம் தொடங்குகிறது.
மாலை 4 மணிக்கு செக்கர்கிரி வேலவன் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளுதலும், முருகன் கோயில் அடிவாரத்தில் மாலை 6.30 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. தொடர்ந்து வாணவேடிக்கை நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு கலக்கல்' கலைநிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 9 மணிக்கு வெற்றிவேலன் மயில்வாகனத்தில் பவனி வருதல் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.
14ஆம் தேதி புதன்கிழமை காலை 9 மணிக்கு செக்கர்கிரி வேலவன் ஆறாட்டுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், காலை 10 மணிக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனையும், முற்பகல் 11 மணிக்கு செக்கர்கிரி வேலவன் பச்சை சாத்தி எழுந்தருளல் நிகழ்ச்சியும், முற்பகல் 11.30 மணிக்கு செக்கர்கிரி மலையில் சிறப்பு அன்னதானமும், இரவு 7 மணிக்கு திரைப்பட மெல்லிசை விருந்தும் நடைபெறுகிறது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/08/செக்கர்கிரி-சுப்பிரமணிய-சுவாமி-கோயிலில்-நவ13இல்-சூரசம்ஹாரம்-3034490.html
3034489 திருநெல்வேலி கன்னியாகுமரி நாகர்கோவிலில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் DIN DIN Thursday, November 8, 2018 01:25 AM +0530
நாகர்கோவிலில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (நவ.9) நடைபெறுகிறது.
இதுகுறித்து, நாகர்கோவில் வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் மூ. காளிமுத்து வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாகர்கோவில் கோணத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (நவ.9) காலை 10.30 மணிக்கு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில், கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் பிற மாவட்ட தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் வந்து அவர்களது நிறுவனங்களுக்கு தேவையான தகுதியுள்ள நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இதில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் கலந்துகொள்ளலாம்.
தனியார் துறையில் வேலைக்கு தேர்வு செய்யப்படும் பதிவுதாரர்களது வேலைவாய்ப்பு பதிவுமூப்பு விவரங்கள் ரத்து செய்யப்பட மாட்டாது என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/08/நாகர்கோவிலில்-நாளை-தனியார்-வேலைவாய்ப்பு-முகாம்-3034489.html
3034488 திருநெல்வேலி கன்னியாகுமரி தோவாளை முருகன் கோயிலில் கந்த சஷ்டி இன்று தொடக்கம் DIN DIN Thursday, November 8, 2018 01:24 AM +0530
குமரி மாவட்டம், தோவாளை அருள்மிகு திருமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா வியாழக்கிழமை (நவ.8) தொடங்குகிறது.
இதையொட்டி, கோயிலில் முதல் நாள் முருகப்பெருமான் ஆறுமுகப்பெருமான் அலங்காரத்திலும், 9 ஆம் தேதி சிவபெருமான் அலங்காரத்திலும், 10 ஆம் தேதி சங்கரநாராயணர் அலங்காரத்திலும், 11 ஆம் தேதி சிவசக்தி அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். நவ. 12 ஆம் தேதி சக்தி வேல் கொடுத்தல் நிகழ்ச்சியும், நவ.13 ஆம் தேதி சூரசம்ஹார விழாவும் நடைபெறுகிறது.
மேலும், கோயிலில் தினமும் காலை 9 மணி முதல் 10.30 மணி வரை கம்பபாதசேகரன் இ. சங்கரன் வழங்கும் ஆன்மிகத் தொடர் சொற்பொழிவும், இரவு 7 மணி முதல் 8 மணி வரைஸ்ரீ கிருஷ்ணபக்த பஜன் மண்டலி சார்பில் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. நவ.13 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை, கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறையினரும், திருமலை முருகன் பக்தர்கள் சங்கத்தினரும் செய்து வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/08/தோவாளை-முருகன்-கோயிலில்-கந்த-சஷ்டி-இன்று-தொடக்கம்-3034488.html
3034487 திருநெல்வேலி கன்னியாகுமரி ஆதிபராசக்தி கோயிலில் தீபாவளி கொண்டாட்டம் DIN DIN Thursday, November 8, 2018 01:24 AM +0530
நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, கோயிலில் அதிகாலை 4.30 மணிக்கு ஆதிபராசக்திக்கு சிறப்பு அபிஷேகமும், கூட்டு வழிபாடும் நடைபெற்றன. காலை 6.30 மணிக்கு அன்னதானம், ஆடைதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, சக்திபீடத் தலைவர் சின்னத்தம்பி தலைமை வகித்து தொடங்கிவைத்தார். புளியடி மனவளர்ச்சி குன்றியோர் மையம், திருப்பதி சாரம் மனவளர்ச்சி குன்றியோர் மையம், வெள்ளமடம் ஆயர் லியோன் மாணவர் இல்லம், வசந்தம் சிறுமியர் இல்லம் ஆகியவற்றுக்கு இனிப்பும் காலை உணவும் வழங்கப்பட்டன.
பின்னர், மழலையர் இல்லம், பொன்னப்பநாடார் காலனி சாரதாதேவி இல்லம், இருளப்பபுரம் காமராஜ் பால மந்திர் ஆகியவற்றுக்கும் இனிப்பு, அரிசி, ஊழியர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன. ஆடைகளை சக்தி பீட துணைத்தலைவர் அருணாசலம் வழங்கினார். பிற்பகலில், சீதப்பால் திருவள்ளுவர் அறக்கட்டளை முதியோர் இல்லம், முக்கடல் சாந்தி ஆசிரமத்தில் முதியோர்களுடன் பட்டாசு வெடித்து விழா கொண்டாடப்பட்டது. முதியோர்களுக்கு, ஓய்வுபெற்ற நெடுஞ்சாலைத்துறை தலைமைப்பொறியாளர் சிவதாணு, கண்ணன்கலா ஆகியோர் ஆடைகள் மற்றும் அன்னதானம் வழங்கினர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/08/ஆதிபராசக்தி-கோயிலில்-தீபாவளி-கொண்டாட்டம்-3034487.html
3034486 திருநெல்வேலி கன்னியாகுமரி 4 வட்டங்களில் நாளை அம்மா திட்ட சிறப்பு முகாம் DIN DIN Thursday, November 8, 2018 01:23 AM +0530
கன்னியாகுமரி மாவட்டத்தில் அம்மா திட்டத்தின் 5 ஆம் கட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (நவ.9) 4 வட்டங்களில் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அகஸ்தீசுவரம் வட்டத்தில் குலசேகரபுரம் வருவாய் கிராமத்துக்கு அரசு உயர்நிலைப் பள்ளியிலும், தோவாளை வட்டத்தில் அழகியபாண்டியபுரம் வருவாய் கிராமத்துக்கு, அரசு தொடக்கப் பள்ளியிலும், கல்குளம் வட்டத்தில், மணவாளக்குறிச்சி வருவாய் கிராமத்துக்கு, பாபுஜி உயர்நிலைப் பள்ளியிலும், விளவங்கோடு வட்டத்தில் குழித்துறைக்கு, அரசு மேல்நிலைப் பள்ளியிலும் நவ.9 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு முகாம் நடைபெறவுள்ளது.
இம்முகாமில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள், பட்டா மாறுதல், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், குடும்ப அட்டை, வருவாய் வட்டாட்சியர் அதிகாரத்திற்குள்பட்ட நில பிரச்னைகள், குடிநீர் மற்றும் சாலை வசதி போன்ற பொதுவான மனுக்களை பொதுமக்கள் அளித்து தீர்வு காணலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/08/4-வட்டங்களில்-நாளை-அம்மா-திட்ட-சிறப்பு-முகாம்-3034486.html
3034485 திருநெல்வேலி கன்னியாகுமரி நரிக்குளம் புதிய பாலத்தில் போக்குவரத்து தொடக்கம் DIN DIN Thursday, November 8, 2018 01:23 AM +0530  

கன்னியாகுமரி நரிக்குளம் வழியாக செல்லும் நான்குவழிச் சாலை இணைப்பு பாலப் பணிகள் நிறைவடைந்து, தற்காலிகமாக வாகனப் போக்குவரத்து தொடங்கியுள்ளது.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நான்குவழிச் சாலை திட்டப் பணி 2004இல் தொடங்கியது. தமிழகத்தில் 99 சதவீதம் இத்திட்டம் நிறைவடைந்த நிலையில், குமரி மகாதானபுரம் பகுதியில் நரிக்குளத்தின் குறுக்கே பாலம் அமைப்பது தொடர்பாக விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததால் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் பணி முடங்கியிருந்தது.
இந்நிலையில், வழக்கு முடிவுற்று குளத்தின்மேல் பாலம் அமைத்து சாலைப் பணியை நிறைவேற்ற ரூ. 21 கோடியை அரசு ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து, கடந்த 13.1.2017இல் பணிகள் தொடங்கி 500 மீட்டர் நீளம் கொண்ட இப்பாலத்தில் 102 மீட்டரில் உயர்நிலை பாலம், 10 மீட்டர் நீளம் கொண்ட இரண்டு சிறு பாலங்கள், 1500 மீட்டர் நீளத்தில் நடைபாதை ஆகியவை அமைக்கப்பட்டன.
இந்தப் பாலப்பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், கடந்த 6ஆம் தேதி முதல் நான்குவழிச் சாலையில் வாகனப் போக்குவரத்து தற்காலிகமாக தொடங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விரைவில் இந்தச் சாலை முறைப்படி திறக்கப்படும் என தெரிகிறது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/08/நரிக்குளம்-புதிய-பாலத்தில்-போக்குவரத்து-தொடக்கம்-3034485.html
3033991 திருநெல்வேலி கன்னியாகுமரி நவ. 8இல் வெள்ளிமலை கோயிலில் கந்த சஷ்டி திருவிழா தொடக்கம் DIN DIN Tuesday, November 6, 2018 06:41 AM +0530 வெள்ளிமலை அருள்மிகு  பாலசுப்பிரமணியசுவாமி  திருக்கோயில்  60ஆவது கந்த சஷ்டி திருவிழா  நவ. 8ஆம் தேதி தொடங்கி, 13 ஆம் தேதி சூரசம்ஹாரம் நிகழ்ச்சியுடன் நிறைவடைகிறது. 
கந்த சஷ்டி திருவிழா தொடக்கமாக  வியாழக்கிழமை காலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெறுகிறது.  5.30 மணிக்கு கிரிவலத்தை வெள்ளிமலை ஹிந்து தர்ம வித்யாபீடம் தவத்திரு சுவாமி கருணானந்தஜி மகராஜ் தொடங்கிவைக்கிறார். 6.30 மணிக்கு அகண்டநாம ஜெப மகாயக்ஞத்தை ஹிந்து தர்ம வித்யா பீட தலைவர் தவத்திரு சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ், சுவாமி கருணானந்தஜி மகராஜ் தொடங்கிவைக்கிறார்கள். காலை 7.30 மணிக்கு காப்புக்கட்டும் நிகழ்ச்சி  நடைபெறுகிறது.  11மணிக்கு அபிஷேகமும், தொடர்ந்து நண்பகல் 1 மணிக்கு தீபாராதனையும் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும், 6.30 மணிக்கு தீபாராதனையும் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு அருணாச்சலா மேல்நிலைப் பள்ளி மாணவ,  மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது.  
13ஆம் தேதி மாலை  4 மணிக்கு  சுவாமி சூரசம்ஹாரத்திற்கு குதிரை வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, 6.15-க்கு சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. மாலை 6.30-க்கு  அபிஷேகம், 7.30-க்கு புஷ்பாபிஷேகம், 8 மணிக்கு தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.  இதனைத் தொடர்ந்து சுவாமி மயில் வாகனத்தில் உலா வரும் நிகழ்ச்சியோடு கந்தசஷ்டி விழா  நிறைபெறுகிறது. 
ஏற்பாடுகளை ஆலய முன்னேற்ற சங்க ஒருங்கிணைப்பாளர் ப. குற்றாலம்பிள்ளை, துணை ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.  ராஜரெத்தினம், மோகனன் தம்பி, கே. பத்மதாஸ், மத்திய அரசு வழக்குரைஞர் சிவகுமார் சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/06/நவ-8இல்-வெள்ளிமலை-கோயிலில்-கந்த-சஷ்டி-திருவிழா-தொடக்கம்-3033991.html
3033990 திருநெல்வேலி கன்னியாகுமரி திருவட்டாறு பெருமாள் கோயிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றம் DIN DIN Tuesday, November 6, 2018 06:41 AM +0530 திருவட்டாறு  ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
இதனையொட்டி  அதிகாலையில்  ஹரி நாம கீர்த்தனையைத்  தொடர்ந்து, கோயில் தந்திரி சஜித் சங்கரநாராயணரு கொடியேற்றினார். இதில், தேவசம் போர்டு கண்காணிப்பாளர் ஆனந்த், கோயில் மேலாளர் மோகன்குமார் மற்றும் ஆதிகேசவா சேவா சங்கத் தலைவர் சி. அனந்தகிருஷ்ணன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். 
திருவிழா நாள்களில் தினசரி காலை பாகவத பாராயணம், சுவாமி பவனி வருதல்,  தீபாராதனை, மாலையில் ராமாயண பாராயணம், இரவு கதைகளி உள்ளிட்டவை  நடைபெறுகின்றது. 
5 ஆம் நாள் திருவிழாவில் இரவு 7 மணிக்கு  கோயில் வளாகத்திலுள்ள திருவம்பாடியில் கொடியேற்றம் நடைபெறுகிறது. 9ஆம் நாள் காலை பாகவத பாராயணம், சுவாமி பவனி வருதல், மாலை 6 மணிக்கு தீபாராதனை, நாகஸ்வரக் கச்சேரி, இரவு 9 மணிக்கு கருட வாகனத்தில் சுவாமி, பள்ளி வேட்டைக்கு எழுந்தருளல் நடைபெறுகிறது.  
நிறைவு நாளான 14ஆம் தேதி காலை ராமாயண பாராயணத்தை தொடர்ந்து, திருவிலக்கு எழுந்தருளல், மாலை தீபாரதனை, இரவு 7 மணிக்கு சுவாமி கருட வாகனத்தில் ஆறாட்டுக்கு எழுந்தருளல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/06/திருவட்டாறு-பெருமாள்-கோயிலில்-ஐப்பசி-திருவிழா-கொடியேற்றம்-3033990.html
3033989 திருநெல்வேலி கன்னியாகுமரி நூல் வாசித்தல், ஆய்வு: மார்த்தாண்டத்தில் பயிற்சி முகாம் DIN DIN Tuesday, November 6, 2018 06:40 AM +0530 மார்த்தாண்டத்தில் நூல் வாசித்தல் மற்றும் நூல் ஆய்வு செய்தல் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
மார்த்தாண்டம் விபுரோ டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் குமரி அறிவியல் பேரவை இளம் விஞ்ஞானி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட இப்பயிற்சி முகாமுக்கு கல்வியாளர் கோபாலன் தலைமை வகித்தார். சமூக விஞ்ஞானி எட்வின்சாம், தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஜே. ஜோபிரகாஷ், கேப்டன் பென்னட்சிங், ஆசிரியர் பெர்ஜின் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர்.  சஜீவ், பேராசிரியை தன்யா, ஆசிரியை தீபா, விபுரோ நிறுவன இயக்குநர் வி.வி. வினோத், நிர்வாக அலுவலர் ஜாண்சன் மற்றும் சுனில்குமார், சிவநந்து, இனிதா, நிபியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/06/நூல்-வாசித்தல்-ஆய்வு-மார்த்தாண்டத்தில்-பயிற்சி-முகாம்-3033989.html
3033988 திருநெல்வேலி கன்னியாகுமரி சுசீந்திரத்தில் பைக்குகள் மோதல்: இளைஞர் சாவு DIN DIN Tuesday, November 6, 2018 06:40 AM +0530 சுசீந்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை பைக்குகள் மோதி நேரிட்ட விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.
சுசீந்திரம் அக்கரை பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் (23).  இவர், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது பைக்கில் வெளியே சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். சுசீந்திரம் அஞ்சலகம் அருகே வந்தபோது, சுசீந்திரம் ஆசிரமம் பகுதியைச் சேர்ந்த  அருணாசலம் (32)  வந்த பைக்கும்,  மகேஷ் பைக்கும் மோதிக் கொண்டனவாம். இதில், பலத்த காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு மகேஷ் உயிரிழந்தார். அருணாசலத்துக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  
விபத்து குறித்து சுசீந்திரம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/06/சுசீந்திரத்தில்-பைக்குகள்-மோதல்-இளைஞர்-சாவு-3033988.html
3033987 திருநெல்வேலி கன்னியாகுமரி குமரி மாதா திருத்தலத்தில் பார்க்கும், படியும் நிகழ்வு DIN DIN Tuesday, November 6, 2018 06:40 AM +0530 கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் டிசம்பர் மாத 10 நாள் திருவிழாவை சிறப்பிக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை பார்க்கும், படியும் நிகழ்வு நடைபெற்றது.
இத்திருத்தலத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் 10 நாள் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு திருவிழா டிச. 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10ஆம் திருநாளான டிச. 16ஆம் தேதி இரு தங்கத் தேர் பவனி நடைபெறும். இதை முன்னிட்டு திருவிழாவைச் சிறப்பிக்கும் அனைவருக்கும் பார்க்கும், படியும் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் பங்குமக்கள், பங்குத்தந்தை ஜோசப் ரொமால்டு, இணை பங்குத்தந்தையர் மற்றும் பங்குப்பேரவை துணைத் தலைவர் நாஞ்சில் ஏ. மைக்கேல், செயலர் சந்தியா வில்லவராயர், பொருளாளர் பெனி, இணைச் செயலர் தினகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/06/குமரி-மாதா-திருத்தலத்தில்-பார்க்கும்-படியும்-நிகழ்வு-3033987.html
3033986 திருநெல்வேலி கன்னியாகுமரி நாகர்கோவிலில் திமுக கூட்டணிக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் DIN DIN Tuesday, November 6, 2018 06:40 AM +0530 குமரி மாவட்ட கூட்டுறவு தேர்தல் குறித்து நாகர்கோவிலில் திமுக கூட்டணிக் கட்சிகள்  ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை திமுக கூட்டணிக் கட்சிகள்  இணைந்து சந்திக்க முடிவு செய்துள்ளன. இதுகுறித்து ஆலோசிப்பதற்கான அவசரக் கூட்டம்  ஒழுகினசேரியில் உள்ள குமரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, திமுக மாவட்டச் செயலர் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ தலைமை வகித்தார். குமரி மேற்கு மாவட்டச் செயலர் மனோ தங்கராஜ் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். 
கூட்டத்தில், கூட்டுறவு சங்கத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர், கூட்டுறவு வங்கித் தலைவர் பதவிக்கு திமுகவின் லிவிங்ஸ்டனை நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டது. திமுக கூட்டணி வேட்பாளரின் வெற்றிக்கு கூட்டணிக் கட்சியினர் ஒத்துழைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. 
கூட்டத்தில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பிரின்ஸ், ராஜேஸ்குமார், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், திமுக நகரச் செயலர் மகேஷ்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் செல்லசாமி, இந்தியக் கம்யூனிஸ்ட்  கட்சி   மாவட்டச் செயலர் இசக்கிமுத்து,  மதிமுக மாவட்டச் செயலர் வெற்றிவேல்  உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/06/நாகர்கோவிலில்-திமுக-கூட்டணிக்-கட்சிகள்-ஆலோசனைக்-கூட்டம்-3033986.html
3033985 திருநெல்வேலி கன்னியாகுமரி நாகர்கோவிலில் சமத்துவ தீபாவளி கொண்டாட்டம் DIN DIN Tuesday, November 6, 2018 06:39 AM +0530 கன்னியாகுமரி   மாவட்ட திருவருள் பேரவையின் சார்பில் சமய சமூக நல்லிணக்க  சமத்துவ  தீபாவளி  நாகர்கோவிலில் நடைபெற்றது.
திருவருள் பேரவைத்  தலைவர் டாக்டர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை வகித்தார். பேரவை  அமைப்பாளர்கள்   பாலபிராஜாபதி அடிகளார்,  வழக்குரைஞர் அகமதுகான்,  துணைத் தலைவர் கொடிக்கால் சேக் அப்துல்லா, செயலர்கள் முகமது அலி,  நடராஜன், ரோஜாவனம் கல்லூரி முதல்வர் டாக்டர் லியாகத் அலி ஆகியோர் முன்னிலை  வகித்தனர்.
பேரவை  ஒருங்கிணைப்பாளர்  மரியவின்சென்ட் அடிகளார் வரவேற்றார். கோட்டாறு மறைமாவட்ட  குருகுல முதல்வர் கிலேரியஸ் ஆசியுரை வழங்கினார்.
திருவருள் பேரவை பொதுச்செயலர் டாக்டர் ஜேம்ஸ் ஆர். டேனியல் புதிதாக தொடங்கப்பட்ட  திருவருள் பேரவை இளையோர் அவை ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரி கிளை மாணவர்களுக்குஅவையின் நோக்கம் குறித்தும், சமய நல்லிணக்க தீபாவளி குறித்து கருத்துரை வழங்கி கல்லூரி மாணவர்களுக்கு  உறுதிமொழி ஏற்க செய்து பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பேரவையின்  ஒருங்கிணைப்பாளர் சுவாமி மரியவின்சென்ட் அடிகளார் எழுதிய மனிதம் மலர மார்க்க வழிகள் என்ற நூலினை பாலபிரஜாபதி அடிகளார் வெளியிட, வழக்குரைஞர் அகமது கான் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, ரோஜாவனம் பாராமெடிக்கல் சுகாதாரஆய்வாளர் பயிற்சி  கல்லூரி  மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.   
திருவருள் பேரவைசெயற்குழுஉறுப்பினர்கள் டேவிட்சன், சாகுல்ஹமீது, சுவாமி பணியன்பன் வின்சென்ட், புலவர் ரத்தினசுவாமி, வேலுபிள்ளை,  டாக்டர் அருணாசலம், ராஜகோபால், முகமதுஅன்சார் உள்ளிட்டோர் வாழ்த்தினர். 
பின்னர் நடைபெற்ற பொதுக் குழுக் கூட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய கிளைகளைப் போன்று ஊராட்சி பகுதிகளிலும் கிளைகளை தொடங்கவும், டிச. 10-ஆம் தேதி மனித உரிமை தினம் கொண்டாடவும் முடிவு  செய்யப்பட்டது. ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரி துணைத் தலைவர் அருள்ஜோதி நன்றி கூறினார்.

ரோஜாவனம் முதியோர் இல்லத்தில்...
நாகர்கோவில் ரோஜாவனம் முதியோர் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம், இல்லத்தின் இயக்குநர் அருள்ஜோதி  தலைமையில்  நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு  ரோஜாவனம் தலைவர் புலவர் ரத்தினசாமி முன்னிலை வகித்தார். மேலாளர் சில்வஸ்டர் வரவேற்றார். சிறப்பு  விருந்தினராக கலந்துகொண்ட  அருமனை பங்குத்தந்தை சுவாமி மரிய வின்சென்ட் அடிகளார் முதியோர்களுக்கு ஆசி வழங்கி இனிப்புகள் வழங்கினார்.  நிகழ்ச்சியில், ரோஜாவனம் கல்லூரி நிர்வாக அலுவலர் நடராஜன் தீபாவளி குறித்து சிறப்புரையாற்றினார். பின்னர் முதியோர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பட்டாசுகள் வெடித்து,   பரிசுப்  பொருள்கள் பெற்று முதியோர்கள்  தீபாவளியை கொண்டாடினர்.  
நிகழ்ச்சியில், ரோஜாவனம் இல்ல மருத்துவக் குழுவினர், சேவையாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இல்ல மேலாளர் ராஜன் நன்றி கூறினார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/06/நாகர்கோவிலில்-சமத்துவ-தீபாவளி-கொண்டாட்டம்-3033985.html
3033540 திருநெல்வேலி கன்னியாகுமரி மார்த்தாண்டம் அருகே நிதி நிறுவன உரிமையாளர் தற்கொலை DIN DIN Monday, November 5, 2018 07:52 AM +0530 மார்த்தாண்டம் அருகே தனியார் நிதி நிறுவன உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மார்த்தாண்டம் வடக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அனில்சேகர் (47). அப்பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்த அவர், அதன் காரணமாக கடந்த சில காலமாக மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சனிக்கிழமை மாலையில் விஷம் குடித்து வீட்டில் மயங்கிக் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், அனில்சேகர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து மார்த்தாண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/05/மார்த்தாண்டம்-அருகே-நிதி-நிறுவன-உரிமையாளர்-தற்கொலை-3033540.html
3033539 திருநெல்வேலி கன்னியாகுமரி நாகர்கோவிலில் வேன் ஓட்டுநர் வெட்டிக் கொலை DIN DIN Monday, November 5, 2018 07:52 AM +0530 நாகர்கோவிலில் வேன் ஓட்டுநரை  வெட்டிக் கொன்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
நாகர்கோவில் இருளப்புரத்தைச் சேர்ந்தவர் ரெகு (24 ) , வேன் ஓட்டுநரான இவர் குளச்சல் பகுதியைச் சேர்ந்த அபிஷாவை (24) காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவருடனான தகராறில் அபிஷா தன் தாய் வீட்டில் வசித்து வந்தார். ரெகு தன் தாய் எழிலரசியுடன் வசித்து வந்தார். இந்நிலையில், சனிக்கிழமை இரவு வெளியே சென்று வருவதாகக் கூறிச் சென்ற ரெகு வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை இருளப்பபுரம் பகுதியில் சாலையோரத்தில் ரெகு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.  அவரது உடலில் பல இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன.
இதுகுறித்து நாகர்கோவில் காவல் துணைக் கண்காணிப்பாளர்  இளங்கோவன், கோட்டாறு காவல் நிலைய ஆய்வாளர் அன்புபிரகாஷ், உதவி ஆய்வாளர் அருளப்பன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று  விசாரணை நடத்தினர். கோட்டாறு போலீஸார் வழக்குப் பதிந்து,  ரெகுவை கொலை செய்தவர்கள் யார் என்பதுகுறித்து விசாரிக்கின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/05/நாகர்கோவிலில்-வேன்-ஓட்டுநர்-வெட்டிக்-கொலை-3033539.html
3033407 திருநெல்வேலி கன்னியாகுமரி இரணியல் அருகே ஆற்றில் மூழ்கியவர் சாவு DIN DIN Monday, November 5, 2018 07:11 AM +0530 இரணியல் அருகே ஆற்று நீரில் மூழ்கியவர் உயிரிழந்தார்.
இரணியல் வள்ளியாற்றின்கரையைச் சேர்ந்தவர் விஜயகுமார் (52). இவர் சனிக்கிழமை மாலை வள்ளியாற்றுக்கு குளிக்கச் சென்றாராம். தொடர் மழை காரணமாக ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்ததால் விஜயகுமாரை வெள்ளம் இழுத்துச் சென்றதில் அவர் நீரில் மூழ்கினார். அவரை மீட்க அப்பகுதியில் உள்ளவர்கள் போராடினர். ஆனால் மீட்க முடியவில்லை.   இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை போலீஸாரும், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரும் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவரது சடலத்தை மீட்டனர். இச்சம்பவம் குறித்து இரணியல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/nov/05/இரணியல்-அருகே-ஆற்றில்-மூழ்கியவர்-சாவு-3033407.html