Dinamani - திருநெல்வேலி - http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2925919 திருநெல்வேலி திருநெல்வேலி தூத்துக்குடி சம்பவம் நெல்லையில் அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் DIN DIN Thursday, May 24, 2018 05:45 AM +0530 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்ததைக் கண்டித்து, திருநெல்வேலி சிந்துபூந்துறையில் பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டாக புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தின.
ஆர்ப்பாட்டத்தில், மக்களின் நியாயமான கோரிக்கையை பரிசீலனை செய்யாமல் போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி, துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; மக்களைப் பாதிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூட மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் கே.ஜி. பாஸ்கரன் தலைமை வகித்தார். மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் கே.எஸ். ரசூல்மைதீன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மதிமுக மாவட்டச் செயலர் தி.மு. ராஜேந்திரன், அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் கல்லத்தியான், மாநில சட்டப் பிரிவு செயலர் அரசு அமல்ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வீ. பழனி, சிஐடியூவின் ஆர். கருமலையான், ஆர். மோகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எஸ். காசிவிஸ்வநாதன், ஏஐடியூசி பொதுச்செயலர் சடையப்பன், தமுமுக மாவட்டத் தலைவர் பிலால், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்டச் செயலர் தௌ. அப்துல்ஜப்பார், ஆதித்தமிழர் பேரவை மாவட்டச் செயலர் கு.க. கலைக்கண்ணன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ரமேஷ் மற்றும் பல்வேறு கட்சியினர் கலந்துகொண்டனர்.
ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு:
இந்த அமைப்பின் சார்பில் பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் செ. பால்ராஜ், சோ. பால்துரை ஆகியோர் தலைமை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தை மூட்டா அமைப்பின் மாநிலத் தலைவர் சுப்பாராஜ் தொடங்கிவைத்தார். அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் ந.குமாரவேல், தமிழ்நாடு அரசு ஆரம்பப் பள்ளி கூட்டணியின் மாநிலச் செயலர் சோ. முருகேசன், மாவட்டத் தலைவர் பி. ராஜ்குமார், வருவாய்த் துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலர் க. சுப்பு, உடற்கல்வி ஆசிரியர் இயக்குநர் சங்கத் தலைவர் பெரியதுரை, அமைப்பின் நிதிக்காப்பாளர் கற்பகம் உள்பட 100 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மேலும், இந்த அமைப்பினர் திருநெல்வேலி, ஆலங்குளம், செங்கோட்டை, சங்கரன்கோவில், அம்பாசமுத்திரம், திருவேங்கடம், சிவகிரி ஆகிய 7 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தாழையூத்தில் நூதன போராட்டம்:
திருநெல்வேலி அருகேயுள்ள கங்கைகொண்டானைச் சேர்ந்தவர் கங்கை முருகன் (50). இவர், தாழையூத்து-தென்கலம் சாலையோரம் உள்ள ஒரு தனியார் செல்லிடப்பேசி கோபுரத்தில் புதன்கிழமை ஏறியபடி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கமிட்டார்.
இத்தவலறிந்த தாழையூத்து போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தி அவரை மீட்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/24/தூத்துக்குடி-சம்பவம்-நெல்லையில்-அரசியல்-கட்சிகள்-ஆர்ப்பாட்டம்-2925919.html
2925918 திருநெல்வேலி திருநெல்வேலி துப்பாக்கிச்சூட்டில் காயமுற்றோருக்கு கண்காணிப்பு அலுவலர்கள் ஆறுதல் DIN DIN Thursday, May 24, 2018 05:45 AM +0530 தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை, தமிழக அரசின் கண்காணிப்பு அலுவலர்கள் புதன்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினர்.
தூத்துக்குடியில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த மாவட்டத்தில் அமைதியை நிலைநாட்டும் வகையில் அரசின் போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலர் பி.டபிள்யூ. சி. டேவிதார், வேளாண்துறை முதன்மை செயலர் சுகன்தீப்சிங்பேடி ஆகியோரை கண்காணிப்பு அலுவலர்களாக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நியமித்துள்ளார்.
இதையடுத்து, தூத்துக்குடிக்கு புதன்கிழமை வந்த அவர்கள், ஆட்சியர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி விஜயகுமார், தென்மண்டல காவல்துறைத் தலைவர் சைலேஷ்குமார் யாதவ், ஆட்சியர் என். வெங்கடேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ. மகேந்திரன், அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினர்.
பின்னர், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினர். தொடர்ந்து மருத்துக் கல்வி இயக்குநர் எட்வின்ஜோ, தென்மண்டல டிஐஜி பிரதீப் யாதவ், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மு. ராஜராஜன், மருத்துவக் கல்லூரி முதல்வர் லலிதா, அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவர் சைலேஷ் உள்ளிட்டோருடன் ஆய்வு நடத்தி ஆலோசனைகள் வழங்கினர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/24/துப்பாக்கிச்சூட்டில்-காயமுற்றோருக்கு-கண்காணிப்பு-அலுவலர்கள்-ஆறுதல்-2925918.html
2925917 திருநெல்வேலி திருநெல்வேலி மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி DIN DIN Thursday, May 24, 2018 05:45 AM +0530 திருநெல்வேலி வருவாய் மாவட்டத்தின் கீழ் உள்ள மூன்று கல்வி மாவட்டங்களிலும் மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன. திருநெல்வேலி கல்வி மாவட்டத்தில் தேர்வு எழுதிய 7,545 மாணவர்களில் 7,041 பேரும், 7,555 மாணவிகளில் 7,420 பேரும் தேர்ச்சி பெற்றனர். சேரன்மகாதேவி கல்வி மாவட்டத்தில் 6,918 மாணவர்களில் 6,501 பேரும், 7,054 மாணவிகளில் 6,872 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தென்காசி கல்வி மாவட்டத்தில் 6,938 மாணவர்களில், 6,647 பேரும், 7,242 மாணவிகளில் 7,104 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். சேரன்மகாதேவி கல்வி மாவட்டம் 95.71 சதவிகிதமும், தென்காசி, திருநெல்வேலி கல்வி மாவட்டங்கள் முறையே 96.97, 95.77 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளன.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/24/மாணவிகள்-அதிகளவில்-தேர்ச்சி-2925917.html
2925916 திருநெல்வேலி திருநெல்வேலி நெல்லையில் இன்று முதல் மே 31வரை டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் DIN DIN Thursday, May 24, 2018 05:45 AM +0530 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) துறைத் தேர்வுகள் வியாழக்கிழமை (மே 24) முதல் இம் மாதம் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் துறைத் தேர்வுகள் இம் மாதம் 24 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை (முற்பகல் மற்றும் பிற்பகல்) இருவேளைகளிலும் நடைபெற உள்ளன.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளி, மேரி சார்ஜென்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் தேர்வுகள் நடைபெறும். தேர்வின்போது, தடைபடாத மின்சாரம் வழங்கவும், பேருந்துகளை தேர்வு மையத்திற்கு சீராக இயக்கவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு அறைக்குள் செல்லிடப்பேசிகளை கொண்டு செல்ல அனுமதி இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/24/நெல்லையில்-இன்று-முதல்-மே-31வரை-டிஎன்பிஎஸ்சி-தேர்வுகள்-2925916.html
2925915 திருநெல்வேலி திருநெல்வேலி நெல்லையில் நாளை திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்: வைகோ பங்கேற்பு DIN DIN Thursday, May 24, 2018 05:44 AM +0530 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்து திருநெல்வேலியில் திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் வெள்ளிக்கிழமை (மே 25) ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
திருநெல்வேலி மாவட்ட திமுக செயலர்கள் இரா. ஆவுடையப்பன் (கிழக்கு), மு.அப்துல்வஹாப் (மத்திய மாவட்டம்), சிவ. பத்மநாதன் (மேற்கு) ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தூத்துக்குடியில் மக்களைப் பாதிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது, காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு தமிழக அரசே காரணம் என கண்டனம் தெரிவித்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்; ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தியும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையில் முன் வெள்ளிக்கிழமை (மே 25) காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ தலைமை வகிக்கிறார். இந்தப் போராட்டத்தில் திமுகவினர், கூட்டணிக் கட்சியினர், ஒத்த கருத்துடைய அமைப்பினர், பொதுமக்கள் கலந்துகொள்ள வேண்டுகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/24/நெல்லையில்-நாளை-திமுக-கூட்டணி-ஆர்ப்பாட்டம்-வைகோ-பங்கேற்பு-2925915.html
2925914 திருநெல்வேலி திருநெல்வேலி தமிழக மக்கள் மேடை அமைப்பினர் ஆர்ப்பாட்டம் DIN DIN Thursday, May 24, 2018 05:44 AM +0530 தமிழக மக்கள் மேடை அமைப்பினர், திருநெல்வேலியில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை முறையாக வழங்க வேண்டும். ரயில்வே, பாதுகாப்பு, நிதித்துறை, கல்வி, சுகாதாரம் போன்ற அனைத்து துறைகளிலும் தனியார்மயத்தை ஆதரிக்கும் நிலையை மத்திய அரசு கைவிட வேண்டும். தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டச் செயலர் ஆர்.மோகன் தலைமை வகித்தார். ஏஐடியூசி நிர்வாகி நல்லதம்பி, ஏஐசிசிடியூ நிர்வாகி கே.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எஸ்.காசிவிஸ்வநாதன், மாதர் சங்க மாவட்டச் செயலர் கே.கற்பகம், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் ரமேஷ், ராஜகுரு, சந்தர்ராஜன், வி.கருப்பசாமி, சி.ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/24/தமிழக-மக்கள்-மேடை-அமைப்பினர்-ஆர்ப்பாட்டம்-2925914.html
2925913 திருநெல்வேலி திருநெல்வேலி மானூர் அருகே மகன் மீது தாக்குதல்: ரத்தத்தை பார்த்து மயங்கிய தாய் சாவு DIN DIN Thursday, May 24, 2018 05:44 AM +0530 மானூர் அருகே தாக்கப்பட்ட மகனின் ரத்தத்தை பார்த்து மயங்கி விழுந்த தாய் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார்.
மானூர் அருகேயுள்ள மாவடியைச் சேர்ந்த பிச்சையா மனைவி சண்முகத்தாய் (56). இவரது மகன் ராமர் (21). மும்பையில் வேலை செய்து வந்த ராமர், கடந்த சில நாள்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்தார். அவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த செல்வகுமாருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில் அதே பகுதியில் உள்ள உச்சினிமாகாளியம்மன் கோயில் கொடைவிழாவுக்குச் சென்ற ராமருக்கும், செல்வக்குமாருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டதாம். இதில் கல்லால் தாக்கப்பட்டதில் ராமர் பலத்த காயமடைந்தார். தகவலறிந்து வந்த சண்முகத்தாய், ரத்தம் வடிந்தபடி நின்ற மகனைப் பார்த்து மயங்கி விழுந்தாராம். இருவரையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து மானூர் போலீஸார் வழக்குப்பதிந்து செல்வக்குமார், மாடசாமி ஆகியோரிடம் விசாரித்து வருகிறார்கள்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/24/மானூர்-அருகே-மகன்-மீது-தாக்குதல்-ரத்தத்தை-பார்த்து-மயங்கிய-தாய்-சாவு-2925913.html
2925912 திருநெல்வேலி திருநெல்வேலி 52 அரசுப் பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சி DIN DIN Thursday, May 24, 2018 05:44 AM +0530 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நெல்லை மாவட்டத்தில் 52 அரசுப் பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளன.
தமிழகம் முழுவதும் புதன்கிழமை வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளின்படி திருநெல்வேலி வருவாய் மாவட்டத்தில் மொத்தம் 52 பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளன. திருநெல்வேலி நகரம் பாரதியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளி, கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சேரன்மகாதேவி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, நடுக்கல்லூர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி, அயோத்தியாபட்டணம் அரசு உயர்நிலைப் பள்ளி, தேவர்குளம் அரசு உயர்நிலைப் பள்ளி, கம்மாளன்குளம் அரசு உயர்நிலைப் பள்ளி, காவல்கிணறு அரசு உயர்நிலைப் பள்ளி, காவூர் அரசு உயர்நிலைப் பள்ளி, குத்துக்கல் அரசு உயர்நிலைப் பள்ளி, மாடம்பிள்ளைதர்மம் அரசு உயர்நிலைப் பள்ளி, மதகனேரி அரசு உயர்நிலைப் பள்ளி, வடக்கு விஜயநாராயணம் அரசு உயர்நிலைப் பள்ளி, பள்ளமடை அரசு உயர்நிலைப் பள்ளி, சீவலப்பேரி அரசு உயர்நிலைப் பள்ளி, தருவை அரசு உயர்நிலைப் பள்ளி, தெற்கு கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆகியவை 100 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளன.
இதேபோல திருவேங்கடநாதபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி, அயன்குரும்பலாப்பேரி அரசு மேல்நிலைப் பள்ளி, தென்மலை அரசு மேல்நிலைப் பள்ளி, முன்னீர்பள்ளம் அரசு உயர்நிலைப் பள்ளி, வலசை அரசு உயர்நிலைப் பள்ளி, கங்கைகொண்டான் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி, பத்தமடை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, அத்துக்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளி, சத்திரம்குடியிருப்பு அரசு உயர்நிலைப் பள்ளி, செட்டிக்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளி, காரியாண்டி அரசு உயர்நிலைப் பள்ளி, கோழியன்குளம் அரசு உயர்நிலைப் பள்ளி, குலையனேரி அரசு உயர்நிலைப் பள்ளி, மணிமுத்தாறு அரசு உயர்நிலைப் பள்ளி, மேலபிள்ளையார்குளம் அரசு உயர்நிலைப் பள்ளி, பழபத்திரராமபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி, பெரியகோவிலான்குளம் அரசு உயர்நிலைப் பள்ளி, பொய்கை அரசு உயர்நிலைப் பள்ளி, பொட்டல்புதூர் அரசு உயர்நிலைப் பள்ளி, வெள்ளப்பனேரி அரசு உயர்நிலைப் பள்ளி, காசிதர்மம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவை 100 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளன.
இதேபோல கூடங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி, மேலகரம் அரசு மேல்நிலைப் பள்ளி, பழவூர் அரசு மேல்நிலைப் பள்ளி, பூலாங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி, சுந்தரபாண்டியபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி, சுத்தமல்லி அரசு மேல்நிலைப் பள்ளி, வடகரை அரசு மேல்நிலைப் பள்ளி, வெள்ளங்குளி அரசு மேல்நிலைப் பள்ளி, வேலாயுதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி, திருநெல்வேலி நகரம் ஜவாஹர் மேல்நிலைப் பள்ளி, நெல்கட்டும்செவல் மாவீரன் பூலித்தேவன் அரசு மேல்நிலைப் பள்ளி, பேட்டை நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி, சமூகரெங்கபுரம் எஸ்.எம்.ஆர். அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளன.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/24/52-அரசுப்-பள்ளிகள்-100-சதவிகித-தேர்ச்சி-2925912.html
2925911 திருநெல்வேலி திருநெல்வேலி நெல்லை கைலாசநாத சுவாமி கோயில் தேரோட்டம் DIN DIN Thursday, May 24, 2018 05:30 AM +0530 திருநெல்வேலி சந்திப்பு அருகே கைலாசபுரத்தில் உள்ள அருள்மிகு கைலாசநாத சுவாமி கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
பழமை வாய்ந்த இக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருந்திருவிழா சிறப்பாக நடைபெறும். நிகழாண்டுக்கான விழா கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சிறப்பு யாகசாலை பூஜைகள், அபிஷேகம், அலங்காரம் ஆகியவை நடைபெற்றன. பூங்கோயில், வெள்ளி ரிஷப வாகனம் உள்ளிட்டவற்றில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி வீதியுலா வந்தனர். ஏழாம் திருநாளான கடந்த 21 ஆம் தேதி செப்பு சப்பரத்தில் சிவகாமி அம்பாள் சமேத ஆனந்த நடராஜர் சிவப்பு சாத்தி திருவீதியுலா வந்தார்.
விழாவின் சிகர நிகழ்வாக தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி காலையில் யாகசாலை பூஜை நடைபெற்றது. சிறப்பு அபிஷேகத்திற்கு பின்பு மலர் அலங்காரத்துடன் சுவாமி-அம்பாள் தேருக்கு எழுந்தருளினர். நமச்சிவாய முழக்கத்துடன் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். பஞ்சவாத்தியங்களை பக்தர்கள் இசைத்தனர். நீர்மோர், குளிர்பானங்கள் ஆகியவை பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. திருநெல்வேலி சந்திப்பு, கைலாசபுரம், சிந்துபூந்துறை, சி.என்.கிராமம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இரவு பூங்கோயில் சப்பரத்தில் சுவாமி-அம்பாள் திருவீதியுலா நடைபெற்றது.
பத்தாம் திருநாளான வியாழக்கிழமை (மே 24) காலை 7 மணிக்கு யாகசாலை பூஜையும், காலை 8 மணிக்கு தீர்த்தவாரியும், 9.30 மணிக்கு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் திருவீதியுலா நடைபெறுகிறது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/24/நெல்லை-கைலாசநாத-சுவாமி-கோயில்-தேரோட்டம்-2925911.html
2925114 திருநெல்வேலி திருநெல்வேலி தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு இடிந்தகரையில் போராட்டம்; டாஸ்மாக் கடைக்கு தீவைப்பு DIN DIN Wednesday, May 23, 2018 03:46 AM +0530 தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து, இடிந்தகரையில் மீனவர்கள் பேரணியாகச் சென்றனர். அப்போது ஊருக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடையை அடித்து உடைத்து தீ வைத்தனர்.
தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அறிந்ததும் இடிந்தகரையில் மீனவர்கள் திரண்டனர். பின்னர், அவர்கள் நாகர்கோவிலிலிருந்து இடிந்தகரை வழியாக தூத்துக்குடிக்கு சென்ற அரசுப் பேருந்தை சிறைபிடித்தனர். பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்திய அவர்கள், பேரணியாக சென்று இடிந்தகரையை அடுத்த வைராவிகிணறு அருகே உள்ள டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கினர்.
அதிலிருந்த மதுபாட்டில்கள் உடைத்து சேதப்படுத்தப்பட்டன. பின்னர், கடைக்கும் தீவைக்கப்பட்டது. இதையடுத்து கூட்டப்புளி, கூத்தங்குழி மீனவக் கிராமங்களிலும் மீனவர்கள் கோயில்முன் கூடி போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசித்தனர். புதன்கிழமை ஒட்டுமொத்த மீனவர்களும் கடலுக்குச் செல்லாமல் பேரணியாகச் சென்று தாமஸ்மண்டபத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்தனர்.
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்தி குமார் கூடங்குளம் காவல் நிலையத்தில் முகாமிட்டு கண்காணித்து வருகிறார். தாமஸ்மண்டபம், கூடங்குளம் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/23/தூத்துக்குடி-துப்பாக்கிச்சூடு-இடிந்தகரையில்-போராட்டம்-டாஸ்மாக்-கடைக்கு-தீவைப்பு-2925114.html
2925113 திருநெல்வேலி திருநெல்வேலி நெல்லையில் ஆர்ப்பாட்டம் DIN DIN Wednesday, May 23, 2018 03:46 AM +0530 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை இரவு போராட்டங்கள் நடைபெற்றன.
புரட்சிகர இளைஞர் கழகம் சார்பில் மாவட்ட அமைப்பாளர் சுந்தர்ராஜ் தலைமையில் திருநெல்வேலி சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; மரணமடைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி நிவாரண உதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் மாரிமுத்து, பேச்சிமுத்து, கணேசன், முத்துக்குமார், ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
வாலிபர் சங்கம்: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருநெல்வேலி நகரத்தில் காந்தி சிலை முன் போராட்டம் நடைபெற்றது. மாதர் சங்க மாவட்டச் செயலர் கற்பகம் தலைமை வகித்தார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட துணைச் செயலர் வை.ராஜேஷ், வழக்குரைஞர் பழனி, முருகன், அசோக், பிரபாகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/23/நெல்லையில்-ஆர்ப்பாட்டம்-2925113.html
2925112 திருநெல்வேலி திருநெல்வேலி மின் நுகர்வோர் விழிப்புணர்வுக் கருத்தரங்கு DIN DIN Wednesday, May 23, 2018 03:46 AM +0530 பாளையங்கோட்டையில் மின் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
மின் நுகர்வோர் சேவை மையம் சார்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு அதன் இயக்குநர் க. வெங்கடாசலம் தலைமை வகித்தார். ஆலோசகர் எஸ். சண்முகம், ஒருங்கிணைப்பாளர் எஸ். முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருங்கால வைப்புநிதி அலுவலக மண்டல ஆணையர் ஆர். ரமேஷ், உதவி ஆணையர் ஜி.ஆர். வீரேஸ், மாவட்ட பெட்காட் ஒருங்கிணைப்பாளர் கோ. கணபதி சுப்பிரமணியன், மனமகிழ் மன்ற பொறுப்பாளர்கள் எம். சிவகாமிநாதன், மின் நுகர்வோர் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்தரங்கில், பொதுமக்களுக்கு மின்சாரம் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு கையேடு வழங்கப்பட்டது. மனமகிழ் மன்ற பொறுப்பாளர் சுபநித்தியகல்யாணி வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் நன்றி கூறினார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/23/மின்-நுகர்வோர்-விழிப்புணர்வுக்-கருத்தரங்கு-2925112.html
2925111 திருநெல்வேலி திருநெல்வேலி பிராஞ்சேரியில் விபத்து: தொழிலாளி சாவு DIN DIN Wednesday, May 23, 2018 03:45 AM +0530 திருநெல்வேலி அருகேயுள்ள பிராஞ்சேரியில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்.
பிராஞ்சேரியைச் சேர்ந்த இசக்கிபாண்டியன் மகன் மாடசாமி (35). தொழிலாளியான இவர், தனது மோட்டார்சைக்கிளில் பிராஞ்சேரி குளம் அருகே திருநெல்வேலி-அம்பாசமுத்திரம் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது மோட்டார் சைக்கிளும், லாரியும் மோதிக் கொண்டதாம். இதில் பலத்த காயமடைந்த மாடசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/23/பிராஞ்சேரியில்-விபத்து-தொழிலாளி-சாவு-2925111.html
2925110 திருநெல்வேலி திருநெல்வேலி நெல்லை நகரத்தில் நாளை மின் விநியோகம் நிறுத்தம் DIN DIN Wednesday, May 23, 2018 03:45 AM +0530 திருநெல்வேலி நகரத்தில் வியாழக்கிழமை (மே 24) மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் திருநெல்வேலி நகர்ப்புறம் செயற்பொறியாளர் த.ஐசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பழையபேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை (மே 24) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் மின்சாரம் இருக்காது. அதன்படி திருநெல்வேலி நகரம் ரதவீதிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள், பழையபேட்டை, காந்திநகர், திருப்பணிகரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூர், பேட்டை, தொழில்பேட்டை, பாட்டப்பத்து, அபிஷேகப்பட்டி பகுதிகளில் மின்சாரம் இருக்காது என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/23/நெல்லை-நகரத்தில்-நாளை-மின்-விநியோகம்-நிறுத்தம்-2925110.html
2925109 திருநெல்வேலி திருநெல்வேலி நெல்லையில் பொது நூலக தின விழா DIN DIN Wednesday, May 23, 2018 03:45 AM +0530 பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் பொது நூலக தினம் கொண்டாடப்பட்டது.
ராஜாராம் மோகன்ராய் பிறந்த தினமானது பொதுநூலக தினமாக மே 22 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. பாளையங்கோட்டையிலுள்ள மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் வட்டம் சார்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு அதன் தலைவர் அ. மரியசூசை தலைமை வகித்தார். மாவட்ட நூலக அலுவலர் தி. முனியப்பன், உதவி நூலகர் ரா. வயலட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்க மாவட்டத் தலைவர் இரா. நாறும்பூநாதன் பங்கேற்றுப் பேசினார். வாசகர் வட்ட துணைத் தலைவர் சந்திரபாபு, இணைச் செயலர் ஆர். பாலசுப்பிரமணி யன் மற்றும் நூலகர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். வாசகர் வட்ட இணைச் செயலர் சு. முத்துசாமி வரவேற்றார். நூலகர் அ. முத்துகிருஷ்ணன் நன்றி கூறினார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/23/நெல்லையில்-பொது-நூலக-தின-விழா-2925109.html
2925108 திருநெல்வேலி திருநெல்வேலி கோஷ்டி மோதல்: 3 பேர் கைது DIN DIN Wednesday, May 23, 2018 03:45 AM +0530 பாவூர்சத்திரம் அருகே ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாவூர்சத்திரம் அருகேயுள்ள மருதடியூரில் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையடுத்து மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. இதையொட்டி கோயிலில் அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் குடும்பத்தினர் செய்துகொண்டிருந்தனராம். இந்நிலையில், இவருக்கும், வைத்திலிங்கம் என்ற கண்ணன் குடும்பத்தினருக்கும் இடையே ஏற்கெனவே உள்ள நிலத்தகராறு தொடர்பாக மோதல் ஏற்பட்டதாம்.
அப்போது, வைத்திலிங்கம் என்ற கண்ணன், அவரது தாயார் ராஜபுஸ்பம் மற்றும் ஆறுமுகத்தின் மகன் மகேஷ் உள்ளிட்டோர் காயமடைந்தனராம். இதுகுறித்து இரு தரப்பினரும் தனித்தனியே அளித்த புகாரின் பேரில் பாவூர்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து, வைத்திலிங்கம் என்ற கண்ணன், முத்துசாமி மற்றும் மகேஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/23/கோஷ்டி-மோதல்-3-பேர்-கைது-2925108.html
2925107 திருநெல்வேலி திருநெல்வேலி நெல்லை மாவட்டத்தில் அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்தம்: தபால் சேவை முடக்கம் DIN DIN Wednesday, May 23, 2018 03:45 AM +0530 அஞ்சல் ஊழியர்களுக்காக அமைக்கப்பட்ட கமலேஷ் சந்திரா பரிந்துரையை அமல்படுத்தக் கோரி அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் இந்தப் போராட்டத்தில் 2400 ஊழியர்கள் கலந்து கொண்டனர். குறைந்த ஊழியர்களை கொண்டு அஞ்சலகங்கள் இயங்கி வருவதால் அஞ்சல் தொடர்பான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்காக அமைக்கப்பட்ட கமலேஷ் சந்திரா குழு தனது பரிந்துரையை 24.112016இல் மத்திய அரசிடம் அளித்துள்ளது. அதன்படி, அஞ்சல் ஊழியர்களுக்கு புள்ளி அடிப்படையிலான சம்பளம் நிர்ணயிக்கும் முறையை ரத்து செய்தல், குறைந்தபட்ச வேலை நேரம் 4 மணி நேரம், அதிகபட்சம் 5 மணி நேரம், 4 மணி நேரம் பணி செய்வோருக்கு ரூ. 12,000-ரூ. 29,300, ரூ. 10,000- ரூ. 24,475 எனவும், 5 மணி நேரம் பணி செய்வோருக்கு ரூ. 14,500-36,480, ரூ. 12,000- ரூ. 29,380 எனவும் ஊதியம் நிர்ணயம் செய்யலாம். 31.12.2015 ஊதியத்தை 2.57 மடங்காக பெருக்கி நிர்ணயம் செய்ய வேண்டும். ஆண்டுக்கு 3 சதவீதம் உயர்வு, குழந்தைகள் படிப்புக்கு வருடத்துக்கு ரூ. 6,000, ஜி.டி.எஸ். பெண் ஊழியர்களுக்கு 26 வாரம் மகப்பேறு விடுப்பு, 180 நாள் வரை ஈட்டிய விடுப்பினை சேமிக்கலாம் என்பன உள்ளிட்ட 15 அம்சங்களை பரிந்துரை செய்துள்ளது.
இப்பரிந்துரையை மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அனைத்திந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் கூட்டுப் போராட்டக் குழு சார்பில் செவ்வாய்க்கிழமை முதல் நாடு முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், தென்காசி ஆகிய தலைமை அஞ்சலகங்கள், 110 துணை அஞ்சலகங்கள், 180 கிராமிய அஞ்சலகங்களில் பணி செய்து வரும் 2370 ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் 80 சதவீத ஊழியர்கள் பங்கேற்றுள்ளதால் அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்குகளில் வரவு செலவு, தபால் பட்டுவாடா போன்ற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறைந்த ஊழியர்களை கொண்டு அஞ்சலகங்கள் இயங்கி வருகின்றன.
ஆர்ப்பாட்டம்: கோரிக்கையை வலியுறுத்தி பாளையங்கோட்டையில் தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பி 3 அஞ்சல் ஊழியர்கள் சங்க கோட்டச் செயலர் ஜேக்கப்ராஜ் தலைமை வகித்தார். பி 3அஞ்சல் ஊழியர் சங்கத் தலைவர் அழகுமுத்து, பி 4 அஞ்சல் ஊழியர்கள் சங்கத் தலைவர் சீனிவாசக சொக்கலிங்கம், கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க கோட்டச் செயலர் ஐ. ஞான பாலசிங் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். சங்கரன்கோவில், அம்பாசமுத்திரம், தென்காசி, வள்ளியூர், திசையன்விளை உள்பட பல மையங்களில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம், தர்னாவில் ஈடுபட்டனர்.
இன்று ஊர்வலம்: கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தின் 2ஆவது நாளான புதன்கிழமை (மே 23) வள்ளியூரில் அஞ்சல் ஊழியர்கள் பங்கேற்கும் பேரணி நடைபெறுகிறது. தினமும் ஒரு மையத்தில் போராட்டம் நடைபெறும் என பி 3 அஞ்சல் ஊழியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/23/நெல்லை-மாவட்டத்தில்-அஞ்சல்-ஊழியர்கள்-வேலைநிறுத்தம்-தபால்-சேவை-முடக்கம்-2925107.html
2925106 திருநெல்வேலி திருநெல்வேலி கலைப் பொருள்கள் தயாரிக்க மாணவர்களுக்கு பயிற்சி DIN DIN Wednesday, May 23, 2018 03:44 AM +0530 பாளையங்கோட்டையில் மாணவர்களுக்கு வண்ணக் காகிதத்தில் கலைப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
பள்ளிக் கல்வித் துறை சார்பில், அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட நூலகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடைக் கால சிறப்புபப் பயிற்சி நடைபெற்று வருகிறது. இம்மாதம் 7ஆம் தேதி தொடங்கிய இந்த முகாமில் ஓவியம் வரைதல், கதை சொல்லுதல், சிலம்பு பயிற்சி, கேரம், சதுரங்கம் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
பாளையங்கோட்டையில் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்று வரும் இப்பயிற்சி முகாமில், தென்காசி, மானூர், வள்ளியூர், சங்கரன்கோவில், பாளையங்கோட்டை, விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி உள்பட மாவட்டத்தில் பல்வேறு பகுதியிலிருந்து தினமும் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
செவ்வாய்க்கிழமை வண்ணக் காகிதத்திலிருந்து கலைப்பொருள்கள் உருவாக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. சிவராம் கலைக்கூட ஓவிய ஆசிரியர்கள் இ. கோவிந்தராஜ், தேவி சிவராம் ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். இந்த முகாமில், நூலகர் அ. முத்து கிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/23/கலைப்-பொருள்கள்-தயாரிக்க-மாணவர்களுக்கு-பயிற்சி-2925106.html
2925105 திருநெல்வேலி திருநெல்வேலி தூத்துக்குடி சம்பவம்: அனைத்துக் கட்சி கூட்டத்தில் கண்டனம் DIN DIN Wednesday, May 23, 2018 03:44 AM +0530 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
பாளையங்கோட்டை அருகே ரெட்டியார்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலர் பாஸ்கரன் தலைமை வகித்தார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாநகர் மாவட்டச் செயலர் கல்லூர் இ.வேலாயுதம், பச்சைத்தமிழகம் கட்சி ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாரன், காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் கே.சங்கரபாண்டியன், கிழக்கு மாவட்டச் செயலர் எஸ்.கே.எம்.சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தீர்மானங்கள்: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூடு நடத்திய போலீஸாரின் செயலுக்கு கண்டனம் தெரிவிப்பது; புதன்கிழமை (மே 23) கண்டன கூட்டம் நடத்துவது; கூடங்குளத்தில் அணு உலை பூங்கா திட்டத்தைக் கைவிடக் கோருவது; சங்கரன்கோவில் விசைத்தறி தொழிலாளர்களின் கூலி உயர்வு தொடர்பான கோரிக்கையை நிறைவேற்ற கோருவது; பாளையங்கோட்டை ஜவாஹர் திடலில் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோருவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மதிமுக அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் கல்லத்தியான், தமிழர் தேசிய முன்னணி முத்துக்குமரன், மக்கள் நீதி மய்யம் பொறுப்பாளர் மகேஷ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி நடராஜன், எஸ்.டி.பி.ஐ. கிழக்கு மாவட்டத் தலைவர் கனி உள்பட பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/23/தூத்துக்குடி-சம்பவம்-அனைத்துக்-கட்சி-கூட்டத்தில்-கண்டனம்-2925105.html
2925104 திருநெல்வேலி திருநெல்வேலி காயமடைந்த 15 போலீஸாருக்கு நெல்லையில் சிகிச்சை DIN DIN Wednesday, May 23, 2018 03:44 AM +0530 தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த வன்முறையைக் கட்டுப்படுத்த முயன்றதில் காயமடைந்த 10 பெண் காவலர்கள் உள்பட 15 காவலர்கள் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேரணியில் போராட்டக்குழுவினருக்கும், போலீஸாருக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது நிகழ்ந்த கல்வீச்சு சம்பவங்களால் போலீஸார் பலர் காயமடைந்தனர். இதில், தூத்துக்குடி ஆயுதப்படையைச் சேர்ந்த காவலர்கள் பகவதியம்மாள் (31), சண்முகநிஷா (25), சுபலதா (29), மாரியம்மாள் (28), அமுதசூரியா (27), சசிகலா (25), கலைச்செல்வி (31), மகேஷ்வரி (24), கற்பகவள்ளி (28), முருகேஸ்வரி (31), பாலகிருஷ்ணன் (32), முருகேசன் (33), ராபின்ராஜ் (31), பாலமுருகன் (28), ஆறுமுகம் (30) ஆகியோர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/23/காயமடைந்த-15-போலீஸாருக்கு-நெல்லையில்-சிகிச்சை-2925104.html
2925102 திருநெல்வேலி திருநெல்வேலி திருச்செந்தூரில் மறியல்: 12 பேர் கைது DIN DIN Wednesday, May 23, 2018 03:43 AM +0530 ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் கண்டித்து திருச்செந்தூரில் சாலை மறியலில் ஈடுபட்ட 12 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையம் முன் செவ்வாய்கிழமை மாலையில், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி ஒன்றியச் செயலர் சங்கத்தமிழன் தலைமையில், மாநில கருத்தியல் பரப்பு மைய துணைச் செயலர் இர.பு.தமிழ்க்குட்டி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி ஒன்றியச் செயலர் அ.ரவிக்குமார், மதிமுக ஒன்றிய இளைஞரணிச் செயலர் நசீர் உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 12 பேரை காவல் துணைக் கண்காணிப்பாளர் தீபு, காவல் ஆய்வாளர்கள் ரெகுராஜன், ஸீஜாராணி உள்ளிட்டோர் கைது செய்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/23/திருச்செந்தூரில்-மறியல்-12-பேர்-கைது-2925102.html
2925101 திருநெல்வேலி திருநெல்வேலி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 1 கோடி வழங்க வேண்டும்' DIN DIN Wednesday, May 23, 2018 03:43 AM +0530 ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 1 கோடி வழங்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வலியுறுத்தினார்.
திருச்செந்தூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஸ்டெர்லைட் பிரச்னை தொடர்பாக தூத்துக்குடி மத்திய மாவட்டம் சார்பில் கடந்த 3 நாள்களாக கடையடைப்பு செய்து வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
ஆனால் 100 நாள்களாக இந்தப் போராட்டத்தை வேடிக்கை பார்த்துவிட்டு, தற்போது துப்பாக்கி சூடு நடத்தியதில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததற்கு அரசின் கவனக்குறைவே காரணம்.
போராட்டத்திற்கு அனுமதியளித்திருந்தால் இச்சம்பவம் ஏற்பட்டிருக்காது என எண்ணத் தோன்றுகிறது.
துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களில் வணிகர்களும் உள்ளனர். ராஜா (27) என்ற வணிகர் தலையில் குண்டுபாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். எனவே இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு தலா ரூ. 1 கோடி வழங்க வேண்டும். முறை தவறி நடந்த காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் நிறுவனத்தை ஒட்டுமொத்தமாக அரசு கையகப்படுத்தி, அப்பழுக்கில்லாத அதிகாரிகள் கொண்டு குழு அமைத்து முழுமையான ஆய்வு செய்ய வேண்டும். அந்த ஆலையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகத் தெரியவந்தால் ஆலையை உடனடியாக மூடுவதற்கு அரசு தயங்கக் கூடாது.
முதற்கட்டமாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் புதன்கிழமை ஒரு நாள் அடையாள கடையடைப்பு நடத்தப்படும் என்றார் அவர்.
அப்போது, அமைப்பின் மாநில துணைத் தலைவர் ராமச்சந்திரன், தெற்கு மாவட்டத் தலைவர் ரெ.காமராசு, வடக்கு மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன், மத்திய மாவட்டத் தலைவர் சோலையப்பராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/23/உயிரிழந்தவர்களின்-குடும்பத்தினருக்கு-தலா-ரூ-1-கோடி-வழங்க-வேண்டும்-2925101.html
2925100 திருநெல்வேலி திருநெல்வேலி பெரியதாழையில் அரசுப் பேருந்து சிறைபிடிப்பு DIN DIN Wednesday, May 23, 2018 03:43 AM +0530 சாத்தான்குளம் அருகே பெரியதாழைக்குச் சென்ற அரசுப் பேருந்தின் கண்ணாடியை கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை அடித்து சேதப்படுத்தி, பேருந்தை சிறைபிடித்தனர்.
தூத்துக்குடியில் நடைபெற்ற கலவரம், துப்பாக்கிச் சூடு போன்றவற்றைக் கண்டித்து, பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழைக்கு செவ்வாய்க்கிழமை மாலை திருச்செந்தூரில் இருந்து வந்த அரசு நகரப் பேருந்து தடம் 9ஐ அக்கிராம மக்கள் கல்லெறிந்து தாக்கினர். இதில், பேருந்தின் முன் பக்க கண்ணாடி சேதமடைந்தது. மேலும், பேருந்தை சிறைபிடித்த மக்கள் அங்குள்ள கிறிஸ்தவ ஆலயம் முன் நிறுத்தினர். பின், சில மணி நேரத்துக்குப் பிறகு அவர்கள் பேருந்தை விடுவித்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/23/பெரியதாழையில்-அரசுப்-பேருந்து-சிறைபிடிப்பு-2925100.html
2924630 திருநெல்வேலி திருநெல்வேலி மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனங்கள்: மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார் DIN DIN Tuesday, May 22, 2018 05:19 AM +0530 திருநெல்வேலியில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், 5 மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனங்களை மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம் வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில், மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மூலம் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.5,000 மதிப்பிலான மூன்று சக்கர நாற்காலிகளையும், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சேரன்மகாதேவி வட்டத்தைச் சேர்ந்த ஒரு மாற்றுத்திறனாளிக்கு உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.1000 பெறுவதற்கான உத்தரவையும் மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.
மேலும், பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, முதிர்கன்னி உதவித் தொகை, விபத்து மரண உதவித் தொகை, குடிநீர், சாலை வசதிகள் வேண்டி பல்வேறு மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய்அலுவலர் உத்தரவிட்டார்.
இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி கோட்டாட்சியர் மைதிலி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் விஜயகுமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாந்திகுளோரி எமரால்ட், மாவட்ட ஆய்வுக் குழு அலுவலர் தனலெட்சுமி, சேரன்மகாதேவி சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் வெங்கட்ராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/22/மாற்றுத்-திறனாளிகளுக்கு-3-சக்கர-வாகனங்கள்-மாவட்ட-வருவாய்-அலுவலர்-வழங்கினார்-2924630.html
2924629 திருநெல்வேலி திருநெல்வேலி ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் மாற்றம் அதிர்ச்சியளிக்கிறது DIN DIN Tuesday, May 22, 2018 05:19 AM +0530 ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது என மதிமுக பொதுச்செயலர் வைகோ குறிப்பிட்டார்.
திருநெல்வேலியில், பைந்தமிழ் மன்றம் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் பங்கேற்க வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியது: பிரதமராக நரேந்திர மோடி பதவிக்கு வந்த பிறகு ஜனநாயகத்தைச் சீர்குலைக்கும் வகையில் பல்வேறு தவறான முடிவுகளை எடுத்து வருகிறார். கல்வியை மத்திய அரசின் பொதுப்பட்டியலுக்கு கொண்டு சென்றதால் நீட் தேர்வு போன்ற பல்வேறு தேர்வுகளை எழுத வேண்டிய நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர். இது சமூக நீதிக்கு எதிரான செயலாகும்.
இந்திய அளவில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பதவிகளுக்கான தேர்வுகள் இதுவரை நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற்று வருகின்றன. ஆனால், இந்தத் தேர்வு முறையில் புதிய நடைமுறையை மத்திய அரசு கொண்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது.
தற்போது, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தப்பட்டிருப்பது ஏழை- எளிய நடுத்தர மக்களை பெரிதும் பாதித்துள்ளது. கர்நாடகத்தில் ஆட்சி மாறினாலும் தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்கப்போவதில்லை. காவிரி மேலாண்மை வாரியம் என்பதை ஆணையம் என பெயர் மாற்றி அதிகாரமற்ற ஆணையமாக கொண்டு வருகின்றனர்.
காவிரி நடுமன்றத்தின் முக்கிய சரத்துக்களை மத்திய அரசு எடுத்து விட்டது. காவிரி பிரச்னையில் தமிழக மக்களின் குரல்வளையை நெரிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தோல்வியை சந்திக்கும்.
காவிரி உரிமைக்காக போராட வேண்டிய தமிழக அரசு புகழ் மாலை சூட்டிக் கொண்டிருக்கிறது. காவிரி பிரச்னையைத் தீர்க்க ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்க வேண்டும் என்றார் வைகோ.
பேட்டியின்போது, கட்சியின் மாவட்டச் செயலர்கள் கே.எம்.ஏ. நிஜாம், தி.மு. ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. சதன்திருமலைக்குமார், எழுத்தாளர் செ. திவான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/22/ஐஏஎஸ்-ஐபிஎஸ்-தேர்வில்-மாற்றம்-அதிர்ச்சியளிக்கிறது-2924629.html
2924628 திருநெல்வேலி திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் உண்டியல் வசூல் ரூ.15.77 லட்சம் DIN DIN Tuesday, May 22, 2018 05:19 AM +0530 திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதியம்மன் திருக்கோயில் உண்டியல்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. அதில், ரூ.15.77 லட்சம் வசூலாகியிருந்தது.
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயில் வளாகத்தில் 21 உண்டியல்கள் உள்ளன. இவற்றை 2 மாதங்களுக்கு ஒருமுறை திறந்து எண்ணுவது வழக்கம்.
அதன்படி, கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. அப்போது ரூ.10 லட்சத்து 17 ஆயிரத்து 315 வசூலாகியிருந்தது. தொடர்ந்து ஏப்.27 ஆம் தேதி திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
அதனால் கோயில் உண்டியல்கள் நிரம்பிய நிலையில் திங்கள்கிழமை 21 உண்டியல்களும் திறக்கப்பட்டு எண்ணும் பணி நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் செல்வக்குமாரி தலைமையில் ஆய்வாளர் முருகன், கண்காணிப்பாளர் ரவீந்திரன் முன்னிலையில் உண்டியல் பணத்தை கோயில் பணியாளர்களும், பக்தர்களும் எண்ணினர். 88 கிராம் தங்கம், 578 கிராம் வெள்ளி, ரூ.15 லட்சத்து 77 ஆயிரத்து 218 ரொக்கம் ஆகியவை வசூலாகியிருந்தன. உண்டியல் பணம் எண்ணும்போது தக்கார் அருணாசலம், கோயில் செயல் அலுவலர் பா.ரோஷினி ஆகியோர் உடனிருந்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/22/நெல்லையப்பர்-கோயில்-உண்டியல்-வசூல்-ரூ1577-லட்சம்-2924628.html
2924627 திருநெல்வேலி திருநெல்வேலி விவேகானந்தர் மன்றக் கூட்டம் DIN DIN Tuesday, May 22, 2018 05:18 AM +0530 விவேகானந்தர் மன்றத்தின் 184ஆவது கூட்டம் பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது.
பாளையங்கோட்டையில் உள்ள மாநிலத் தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு பேராசிரியர் சிவ.சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். பா.வளன்அரசு முன்னிலை வகித்தார். திருக்குறள் பிரபா இறைவேண்டல் பாடினார். விவேகானந்தரின் பொன்மொழிகளும் நுண்ணிய கருத்துகளும் என்ற தலைப்பில் கிருஷ்ணாபுரம் ராசு சொற்பொழிவாற்றினார்.
வரலாற்று ஆய்வாளர் செ.திவான், பொன்.வேலுமயில், பாண்டியன், வெள்ளத்துரை, ராசகோபால், கிருஷ்ணன், முத்துசாமி, குமார், கோதைமாறன் உள்பட பலர் கலந்துகொண்டனர். எஸ்.முத்துசாமி நன்றி கூறினார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/22/விவேகானந்தர்-மன்றக்-கூட்டம்-2924627.html
2924626 திருநெல்வேலி திருநெல்வேலி கூட்டுப் பண்ணைய விவசாயிகளுக்கு மானிய விலையில் இயந்திரங்கள் DIN DIN Tuesday, May 22, 2018 05:18 AM +0530 கூட்டுப் பண்ணைய விவசாயிகளுக்கு மானியத்திலான பண்ணை இயந்திரங்களை சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆகாஷ் வழங்கினார்.
தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண்மைத் துறை மூலமாக கூட்டுப் பண்ணைய திட்டத்தின் கீழ் சேரன்மகாதேவி, கூனியூர், மேலச்செவல் கிராம விவசாயிகளுக்கு மானியத்தில் பண்ணை இயந்திரங்கள் வழங்கப்பட்டன. தோட்டக் கலைத்துறை மூலமாக வாழை விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பவர் டில்லர், குழியெடுக்கும் கருவி, களையெடுக்கும் கருவிகள் வழங்கப்பட்டன. வேளாண் துறை மூலமாக ரூ.5 லட்சம் மதிப்பில் நெல் நடவு இயந்திரம் மற்றும் பவர் டில்லர்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி இயக்குநர் ராஜசிங், தோட்டக்கலை உதவி இயக்குநர் சுபாவாசுகி, வேளாண்மை அலுவலர் சிவகுருநாதன், துணை வேளாண் அலுவலர் கந்தன், உதவி தோட்டக்கலை அலுவலர் பாஸ்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/22/கூட்டுப்-பண்ணைய-விவசாயிகளுக்கு-மானிய-விலையில்-இயந்திரங்கள்-2924626.html
2924625 திருநெல்வேலி திருநெல்வேலி நீதிபதி ராஜேந்திர சச்சார் நினைவுக் கூட்டம்ஸ் DIN DIN Tuesday, May 22, 2018 05:18 AM +0530 எஸ்டிபிஐ கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் சார்பில் நீதிபதி ராஜேந்திர சச்சார் நினைவுக் கூட்டம் மேலப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்டச் செயலர் கே.ஹயாத் முகம்மது தலைமை வகித்தார். கிழக்கு மாவட்டத் தலைவர் எஸ்.எஸ்.ஏ.கனி வரவேற்றார். வழக்குரைஞர்கள் ரமேஷ், பிரிட்டோ, தெ.பீட்டர் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். கட்சியின் மாநில துணைத் தலைவர் நெல்லை முபாரக் பேசியது: நீதிபதியாக மட்டுமன்றி சமூக செயல்பாட்டாளராகவும் திகழ்ந்த நீதிபதி ராஜேந்திர சச்சார், கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி மறைந்தார். அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டார். அரசாங்கத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்துவதே அவருக்கு அஞ்சலி செலுத்தும் சிறந்த வழியாக இருக்கும் என்றார்.
கூட்டத்தில் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர்கள் கே.எஸ்.சாகுல் உஸ்மானி, செய்யது அகமது சலபி, மாவட்டச் செயலர் கே.சேக் மஜித், மாவட்டப் பொருளாளர் எல்.சேக் சாலி, அலாவுதீன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/22/நீதிபதி-ராஜேந்திர-சச்சார்-நினைவுக்-கூட்டம்ஸ்-2924625.html
2924624 திருநெல்வேலி திருநெல்வேலி நெல்லையில் ராஜீவ்காந்தி நினைவு தினம் DIN DIN Tuesday, May 22, 2018 05:18 AM +0530 முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி திருநெல்வேலியில் காங்கிரஸார் அவரது உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.
திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்டத் தலைவர் கே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தார். முன்னாள் மத்திய இணையமைச்சர் ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். முன்னாள் மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ்.ராமசுப்பு, மாநில பொதுச்செயலர் எஸ்.வானமாமலை, மேற்கு மாவட்டப் பொருளாளர் எஸ்.பி.முரளிராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/22/நெல்லையில்-ராஜீவ்காந்தி-நினைவு-தினம்-2924624.html
2924623 திருநெல்வேலி திருநெல்வேலி பாலாமடையில் மணல் திருட்டு: ஒருவர் கைது DIN DIN Tuesday, May 22, 2018 05:16 AM +0530 சீவலப்பேரி அருகேயுள்ள பாலாமடையில் தாமிரவருணி ஆற்றில் மணல் திருடியதாக ஒருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மணல் திருட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கடந்த ஒரு வாரத்தில் 15-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாமிரவருணி, கருமேனியாறு, நம்பியாறு, சிற்றாறு கரையோர பகுதிகளில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சீவலப்பேரி அருகேயுள்ள பாலாமடையில் போலீஸார் ரோந்து சென்றபோது அங்கு மூட்டைகளாக கட்டி மணலை ஒருவர் திருட முயன்றது தெரியவந்ததாம். விசாரணையில் அவர், பாலாமடையைச் சேர்ந்த கோமு (44) என்பது தெரியவந்ததாம். அவரை கைது செய்த போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/22/பாலாமடையில்-மணல்-திருட்டு-ஒருவர்-கைது-2924623.html
2924622 திருநெல்வேலி திருநெல்வேலி திசையன்விளையில் பைக் விபத்தில் காயமடைந்த விவசாயி சாவு DIN DIN Tuesday, May 22, 2018 05:16 AM +0530 திசையன்விளையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமுற்ற விவசாயி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
திசையன்விளை அருகில் உள்ள சவேரியர்புரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் தேவசகாயம் (48). விவசாயி. இவர், மோட்டார் சைக்கிளில் திசையன்விளைக்கு வெள்ளிக்கிழமை சென்றுவிட்டு ஊர் திரும்பியபோது மன்னார்புரம் பகுதியில் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் திங்கள் கிழமை உயிரழந்தார். திசையன்விளை காவல் உதவி ஆய்வாளர் சத்யா வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/22/திசையன்விளையில்-பைக்-விபத்தில்-காயமடைந்த-விவசாயி-சாவு-2924622.html
2924621 திருநெல்வேலி திருநெல்வேலி கொங்கந்தான்பாறையில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு DIN DIN Tuesday, May 22, 2018 05:16 AM +0530 திருநெல்வேலி அருகேயுள்ள கொங்கந்தான்பாறையில் வீட்டின் பூட்டை உடைத்து பணத்தைத் திருடிச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.
கொங்கந்தான்பாறையைச் சேர்ந்த பொன்னுதுரை மகன் ஸ்டேன்லிபாஸ்கர். இவரது மனைவியின் வீடு அதே பகுதியில் உள்ளதாம். இவர்கள் மும்பையில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தனராம். இந்நிலையில், இத்தம்பதியின் வீட்டில் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த ரூ.30 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றது திங்கள்கிழமை காலையில் தெரியவந்ததாம். இதுகுறித்த புகாரின்பேரில் முன்னீர்பள்ளம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/22/கொங்கந்தான்பாறையில்-வீட்டின்-பூட்டை-உடைத்து-திருட்டு-2924621.html
2924620 திருநெல்வேலி திருநெல்வேலி சுத்தமல்லி அருகே பெண்ணிடம் 7.5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு DIN DIN Tuesday, May 22, 2018 05:16 AM +0530 சுத்தமல்லி அருகே பெண்ணிடம் 7.5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.
திருநெல்வேலி சந்திப்பு அருகேயுள்ள மேகலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் சிவபாலன். இவரது மனைவி சரஸ்வதி (40). இத்தம்பதி, முக்கூடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். சுத்தமல்லி அருகே திருவள்ளுவர்நகர் பகுதியில் சேரன்மகாதேவி-பேட்டை சாலையோரம் மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு சிவபாலன் செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் சரஸ்வதி கழுத்தில் அணிந்திருந்த 7.5 பவுன் தங்கச்சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியோடினராம். இதுகுறித்த புகாரின்பேரில் சுத்தமல்லி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/22/சுத்தமல்லி-அருகே-பெண்ணிடம்-75-பவுன்-தங்கச்-சங்கிலி-பறிப்பு-2924620.html
2924618 திருநெல்வேலி திருநெல்வேலி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இலக்கிய நிகழ்ச்சிகள்: வைகோ DIN DIN Tuesday, May 22, 2018 04:48 AM +0530 தமிழகத்தில் இலக்கிய உணர்வு குறைந்து வருவதாகவும், அதை மீட்டெடுக்க பைந்தமிழ் இலக்கிய அமைப்பு சார்பில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்படும் எனவும் மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார்.
திருநெல்வேலியில், பைந்தமிழ் மன்றத்தில் சார்பில், சிலப்பதிகார விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு மன்றத்தின் தலைவரும், மதிமுக பொதுச்செயலருமான வைகோ தலைமை வகித்து பேசியது:
தமிழ் வளர்த்த, தலை சிறந்த எழுத்தாளர்கள், தமிழறிஞர்களை தந்த திருநெல்வேலியில் பைந்தமிழ் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இலக்கிய உணர்வு அருகி வரும் இச்சூழலில் இலக்கிய உணர்வை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மன்றம் தொடங்கப்பட்டுள்ளது.
உலகில் தலை சிறந்த காப்பியங்கள் தமிழ் இலக்கியத்தில்தான் உள்ளன. சென்னையில் முதல் இலக்கிய விழா நடத்தப்பட்டது. இனி 3 மாதங்களுக்கு ஒரு முறை இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றார் அவர்.
விழாவில், வைகோவின் இலக்கிய சொற்பொழிவு அடங்கிய 3ஆவது தொகுதியான செந்தமிழ்ப் பூம்பொழில் எனும் நூலை பேராசிரியர் கு. ஞானசம்பந்தம் வெளியிட, முதல் பிரதியை பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தாளாளரும், பைந்தமிழ் மன்றத்தின் புரவலருமான த.இ.செ. பத்ஹூர் ரப்பானி பெற்றுக் கொண்டார்.
எழுத்தாளர் மதுரா உள்பட பலர் பேசினர்.
சித்திரச் சிலம்பு எனும் தலைப்பில் பேராசிரியர் கு. ஞானசம்பந்தம் பேசினார். விழாவில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர் சதன்திருமலைக்குமார், மதிமுக மாவட்டச் செயலர்கள் தி.மு. ராஜேந்திரன், கே.எம்.ஏ. நிஜாம், அரவிந்த் கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் ராமக்கிருஷ்ணன், தமிழ் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய அமைப்பினர் திரளாகக் கலந்துகொண்டனர்.
அமைப்பின் செயலர் செ. திவான் வரவேற்றார். பொருளாளர் குட்டி என்ற சண்முக சிதம்பரம் நன்றி கூறினார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/22/மூன்று-மாதங்களுக்கு-ஒருமுறை-இலக்கிய-நிகழ்ச்சிகள்-வைகோ-2924618.html
2924617 திருநெல்வேலி திருநெல்வேலி பிளஸ்-2 மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் DIN DIN Tuesday, May 22, 2018 04:47 AM +0530 திருநெல்வேலி மாவட்டத்தில் பிளஸ்-2 முடித்த மாணவர்-மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் திங்கள்கிழமை விநியோகிக்கப்பட்டன.
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 312 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் 123 தேர்வு மையங்களில் தேர்வை எழுதினர். 16 ஆயிரத்து 242 மாணவர்களும், 21 ஆயிரத்து 461 மாணவிகளும் என மொத்தம் 37 ஆயிரத்து 703 பேர் தேர்வு எழுதினர். அவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த 16 ஆம் தேதி வெளியானது.
இம் மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்களில் 15 ஆயிரத்து 103 மாணவர்களும், 20 ஆயிரத்து 769 மாணவிகளும் என மொத்தம் 35 ஆயிரத்து 872 பேர் தேர்ச்சி பெற்றனர். இதைத் தொடர்ந்து தேர்வில் தேர்ச்சி பெற்ற மற்றும் தோல்வியடைந்த மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண்சான்றிதழ்கள் அவர்கள் பயின்ற பள்ளியில் திங்கள்கிழமை விநியோகிக்கப்பட்டன. புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள், தங்களது பெற்றோருடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/22/பிளஸ்-2-மாணவர்களுக்கு-தற்காலிக-மதிப்பெண்-சான்றிதழ்கள்-2924617.html
2924616 திருநெல்வேலி திருநெல்வேலி நெல்லையில் தகிக்கும் வெயில் தர்பூசணி விலை கடும் உயர்வு DIN DIN Tuesday, May 22, 2018 04:47 AM +0530 திருநெல்வேலியில் மேகமூட்டங்களையும் தாண்டி சூரியனின் வெப்பம் தகித்ததால் பொதுமக்கள் திங்கள்கிழமை பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். உள்மாவட்ட வரத்து குறைந்ததால் தர்பூசணி பழங்களின் விலை கிலோவுக்கு ரூ.10 வரை உயர்ந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் கடந்த 8 வாரங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. அக்னி நட்சத்திர காலத்தில் ஒரு சில நாள்கள் கோடை மழை பெய்தாலும்கூட வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. திருநெல்வேலியில் திங்கள்கிழமை காலை முதல் மேகமூட்டம் காரணமாக நேரடியாக வெயில் பாதிப்பு இல்லாவிட்டாலும், கடுமையான வெப்பம் நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனர். பதநீர், இளநீர், தர்பூசணி, பழச்சாறு, கரும்புச்சாறு விற்பனை அதிகரித்தது.
சுரண்டை, தென்காசி, கடையம், கடையநல்லூர் பகுதிகளில் இருந்து திருநெல்வேலிக்கு இளநீர் அதிகளவில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளன. இவை ரூ.15 முதல் ரூ.30 வரையும், கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள செவ்விளநீர் ரூ.25 முதல் ரூ.40 வரையும் விற்கப்படுகின்றன. சீவலப்பேரி, செங்குளம், இளையாமுத்தூர், தருவை பகுதிகளில் இருந்து பதநீர் விற்பனையாளர்கள் திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் ஒரு சிறிய சொம்பு அளவு பதநீரை ரூ.15-க்கு விற்பனை செய்கிறார்கள்.
தர்பூசணி விலை உயர்வு: ராதாபுரம், சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்த தர்பூசணி முற்றிலும் விற்றுத் தீர்ந்துவிட்ட நிலையில் இப்போது திண்டுக்கல், திண்டிவனம் பகுதிகளில் இருந்து தர்பூசணி பழங்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. வழக்கமாக கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனையான தர்பூசணி பழங்கள் திங்கள்கிழமை கிலோ ரூ.30-க்கு விற்பனையானது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/22/நெல்லையில்-தகிக்கும்-வெயில்-தர்பூசணி-விலை-கடும்-உயர்வு-2924616.html
2924615 திருநெல்வேலி திருநெல்வேலி குடிநீர் வழங்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் குறிஞ்சாகுளம் மக்கள் முற்றுகை DIN DIN Tuesday, May 22, 2018 04:47 AM +0530 வி.கே.புதூர் அருகேயுள்ள குறிஞ்சாகுளத்தைச் சேர்ந்த மக்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் ஆட்சியர்அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது, ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட குறிஞ்சாகுளம் மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
மருதப்பபுரம் ஊராட்சிக்குள்பட்ட குறிஞ்சாகுளம் குறிஞ்சிநகர், இந்திரா நகர், காளியம்மன் கோயில் தெரு, கிழக்கு காலனி ஆகிய பகுதியில் 150 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் குடிநீர் தொட்டி இருக்கிறது. ஆனால் குடிநீர் வழங்கப்படுவதில்லை. இதுகுறித்து மருதப்பபுரம் ஊராட்சியில் முறையிட்டால், கிணற்றிலும், ஆழ்துளை கிணற்றிலும் தண்ணீர் இல்லை என கூறிவிட்டனர். அதன்பிறகு ஆலங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் தெரிவித்ததன் எதிரொலியாக குறிஞ்சி நகர் பகுதியில் ஒரு குடிநீர் குழாய் அமைத்தார்கள். அதிலும் போதிய அளவில் தண்ணீர் வரவில்லை.
காளியம்மன் கோயில் தெருவில் உள்ள கிணறு சுற்றுச் சுவரின்றி ஆபத்தான நிலையில் உள்ளது. அந்தக் கிணற்றில் உள்ள மோட்டாரும் செயல்படாமல் உள்ளது. எனவே புதிய மோட்டாரை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/22/குடிநீர்-வழங்கக்-கோரி-ஆட்சியர்-அலுவலகத்தில்-குறிஞ்சாகுளம்-மக்கள்-முற்றுகை-2924615.html
2924614 திருநெல்வேலி திருநெல்வேலி தொல்காப்பியருக்கு பொதிகை மலையில் நினைவு மண்டபம்: தமிழ்ச் சங்கம் வலியுறுத்தல் DIN DIN Tuesday, May 22, 2018 04:47 AM +0530 பொதிகை மலையில் தொல்காப்பியருக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என பொதிகைத் தமிழ்ச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பாளையங்கோட்டையில் பொதிகைத் தமிழ்ச் சங்கம் சார்பில் மே மாத சொற்பொழிவு, கவிப்பொழிவு சைவ சபை அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு, அமைப்பின் தலைவர் கவிஞர் பே. ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில், தற்கால இலக்கியமும் வாசிப்பும் எனும் தலைப்பில் மனோன்மணீயம் சுந்தனார் பல்கலைக் கழக உதவிப் பேராசிரியர் மு. குருநாதன், குழந்தைகள் வளர்ப்பு ஒரு கலை எனும் தலைப்பில் அகில இந்திய வானொலி நிலைய அறிவிப்பாளர் ஆ. சந்திரபுஷ்பம், தமிழ் இன்பத் தமிழ் எனும் தலைப்பில் மருதகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் காருண்ய சீலாவதி, கவிப்பொழிவு நிகழ்ச்சியில் கவிஞர்கள் பி. மஞ்சுளா, மூக்குப் பேறி தேவதாசன், பாப்பாக்குடி முருகன், கோதைமாறன் ஆகியோர் பேசினர்.
தொடர்ந்து நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில், தொல்காப்பியருக்கு பொதிகை மலையில் நினைவு மண்டபம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
கவிஞர் பாப்பாக்குடி இரா. செல்வமணி வரவேற்றார். அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ. சத்தியவள்ளி நன்றி கூறினார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/22/தொல்காப்பியருக்கு-பொதிகை-மலையில்-நினைவு-மண்டபம்-தமிழ்ச்-சங்கம்-வலியுறுத்தல்-2924614.html
2924613 திருநெல்வேலி திருநெல்வேலி நெல்லையில் மே 24இல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் DIN DIN Tuesday, May 22, 2018 04:46 AM +0530 திருநெல்வேலியில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் 24 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோருக்கு ஏற்படும் காலதாமதம், முறைகேடுகள் உள்ளிட்ட குறைகளைத் தீர்க்கும் வகையில், எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் மே 24 ஆம் தேதி மாலை 4 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.
அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர், எரிவாயு நுகர்வோர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இதில் எரிவாயு நுகர்வோர் தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/22/நெல்லையில்-மே-24இல்-எரிவாயு-நுகர்வோர்-குறைதீர்-கூட்டம்-2924613.html
2924612 திருநெல்வேலி திருநெல்வேலி ஆசிரியர் தகுதித் தேர்வு பார்வையற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு இலவசப் பயிற்சி DIN DIN Tuesday, May 22, 2018 04:46 AM +0530 பார்வையற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவச பயிற்சியளிக்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆசிரியர் பட்டப்படிப்பு (ஆ.உக்), பட்டயப்படிப்பு (ஈ.ப.உக்) முடித்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி பட்டதாரிகளுக்கு அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.
இப்பயிற்சியில் பங்கேற்க விரும்பும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தங்களின் தேசிய அடையாள அட்டை, கல்விச் சான்றிதழ்களுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் வளாகம், திருநெல்வேலி, தொலைபேசி எண்: 0462-250157 என்ற முகவரிக்கு தங்களது விண்ணப்பத்தை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ வரும் 29ஆம் தேதிக்குள் அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/22/ஆசிரியர்-தகுதித்-தேர்வு-பார்வையற்ற-பட்டதாரி-ஆசிரியர்களுக்கு-இலவசப்-பயிற்சி-2924612.html
2924611 திருநெல்வேலி திருநெல்வேலி சங்கரன்கோவிலில் விசைத்தறித் தொழிலாளர்கள் 23-வது நாளாக வேலைநிறுத்தம் DIN DIN Tuesday, May 22, 2018 04:46 AM +0530 திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் விசைத்தறித் தொழிலாளர்கள் கூலி உயர்வு கோரி, திங்கள்கிழமை 23 ஆவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ரூ. 9.20 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
சங்கரன்கோவிலில் 5000-க்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் சுமார் 10 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். விசைத்தறித் தொழிலாளர்கள் மற்றும் வீடுசார்ந்த சிறு விசைத்தறியாளர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்படும். அதன்படி, கடந்த 2016 ஆம் ஆண்டு போடப்பட்ட கூலி உயர்வு ஒப்பந்தம் கடந்த 28.04.2018 அன்றுடன் முடிந்துவிட்டது.
இதனால், விசைத்தறித் தொழிலாளர்கள் 60 சதவீத கூலி உயர்வு மற்றும் தேசிய விடுப்புச் சம்பளம் ரூ. 300 வழங்கக் கோரி, கடந்த 30ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திங்கள்கிழமையுடன் 23 ஆவது நாளாக வேலைநிறுத்தத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, ஆர்ப்பாட்டம், சாலை மறியல், பேரணி போன்ற போராட்டங்களை நடத்தி வரும் இவர்கள், புதன்கிழமை குடும்பத்துடன் பேரணியாகச் சென்று சாலை மறியலில் ஈடுபடவுள்ளனர்.
இதனிடையே, கூலி உயர்வு தொடர்பாக சங்கரன்கோவில் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் திருநெல்வேலி தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற 3 கட்டப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. தொடர் வேலைநிறுத்தம் காரணமாக ரூ. 9.20 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத் தொழிலாளர்களுக்கு சுமார் ரூ. 6.90 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், விசைத்தறித் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வருமானம் இல்லாததால், தாங்கள் வாங்கிய கடனை செலுத்த முடியாமலும், வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியாமலும் சிரமப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். எனவே, அரசு உடனடியாக இதில் தலையிட்டு, கூலி உயர்வு குறித்து நடைபெறவுள்ள 4 ஆம் கட்ட பேச்சுவார்த்தையிலாவது தீர்வுகாண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/22/சங்கரன்கோவிலில்-விசைத்தறித்-தொழிலாளர்கள்-23-வது-நாளாக-வேலைநிறுத்தம்-2924611.html
2924608 திருநெல்வேலி திருநெல்வேலி ஆலங்குளம் அருகே கிராம மக்கள் திடீர் சாலை மறியல் DIN DIN Tuesday, May 22, 2018 04:44 AM +0530 ஆலங்குளம் அருகே நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று செல்லாததைக் கண்டித்து, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஆலங்குளம் - திருநெல்வேலி சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆலங்குளம் அருகேயுள்ள கீழக் கரும்புளியூத்து கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் கடந்த சில மாதங்களாக சாதாரண பேருந்துகள் மற்றும் எஸ்.எப்.எஸ். பேருந்துகள் நிற்காமல் சென்று விடுகின்றனவாம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இந்நிலையில், திங்கள்கிழமை காலையில் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர், ஆலங்குளம் - திருநெல்வேலி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அனைத்து பேருந்துகளும் கீழக் கரும்புளியூத்தில் நின்று செல்ல வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். தகவல் அறிந்து ஆலங்குளம் வட்டாட்சியர் பிரபாகரன் அருண்செல்வம், காவல் ஆய்வாளர் அய்யப்பன், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தென்காசி பணிமனை மேலாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுதொடர்பாக வட்டாட்சியர் தலைமையில் சமாதானக் கூட்டம் நடத்தி தீர்வு காணப்படும் எனக் கூறியதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. கிராம மக்களின் திடீர் போராட்டத்தால் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/22/ஆலங்குளம்-அருகே-கிராம-மக்கள்-திடீர்-சாலை-மறியல்-2924608.html
2924607 திருநெல்வேலி திருநெல்வேலி வள்ளியூரில் மனைவி அடித்து கொலை: கணவர் கைது DIN DIN Tuesday, May 22, 2018 04:44 AM +0530 திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் நரிக்குறவர் காலனியில் மனைவியை அடித்துக் கொன்ற கணவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
வள்ளியூர் நரிக்குறவர் காலனியைச் சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மனைவி கெüசல்யா (20).
இவர்கள் ஊர்ஊராகச் சென்று ஊசி, பாசி வியாபாரம் செய்து வந்தனர்.
நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை பாசி, ஊசி வியாபாரம் செய்தபோது, முத்துராஜ் வியாபாரம் செய்த பணத்தை மனைவியிடம் கொடுக்காமல், வீணாக செலவு செய்தாராம்.
இதை அவரது மனைவி கெüசல்யா தட்டிக்கேட்டுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த முத்துராஜ் மனைவியை அடித்துக் கொலை செய்தாராம்.
பிறகு, மனைவியின் சடலத்தை பாரம் ஏற்றும் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு வள்ளியூர் நரிக்குறவர் காலனிக்கு வந்துள்ளார்.
அங்கு மனைவியின் சடலத்தை இறக்குவதைப் பார்த்த நரிக்குறவர்கள் வள்ளியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, வள்ளியூர் காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ்குமார் மற்றும் காவலர்கள் அங்கு சென்று முத்துராஜை கைது செய்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/22/வள்ளியூரில்-மனைவி-அடித்து-கொலை-கணவர்-கைது-2924607.html
2924439 திருநெல்வேலி திருநெல்வேலி ஆலங்குளம் அருகேகாற்றாலையில் மின்மாற்றி வெடித்து 2 ஊழியர்கள் சாவு DIN DIN Tuesday, May 22, 2018 02:34 AM +0530 திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் அருகே காற்றாலையில் மின்மாற்றி வெடித்ததில் 2 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.
ஆலங்குளம் அருகேயுள்ள குறிப்பன்குளம் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான காற்றாலை இயங்கி வருகிறது. இங்குள்ள மின்மாற்றி ஒன்றில் நவீன மோடம் அமைக்கும் பணியில் ஒப்பந்த ஊழியர்களான, தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறைச் சேர்ந்த செல்லத்துரை மகன் முத்துப்பாண்டி(25), குறிப்பன்குளத்தைச் சேர்ந்த பால்துரை மகன் கிங்ஸ்டன் (22) ஆகியோர் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனர். அப்போது, மோடத்தைப் பொருத்தியதும் சோதனை முயற்சியாக மின்மாற்றியை கிங்ஸ்டன் இயக்கினாராம். இதில், எதிர்பாராமல் மின்மாற்றி வெடித்துச் சிதறி இருவர் மீதும் தீப்பற்றி எரிந்துள்ளது. அங்கு, வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் இதை பார்த்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், ஆலங்குளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நிலைய அலுவலர்(பொ) தங்கசாமி தலைமையில் வீரர்கள் வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்து, இளைஞர்கள் இருவரையும் பலத்த காயத்துடன் மீட்டனர்.
பின்னர், அவர்களை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும்போது, வழியில் கிங்ஸ்டனும், மருத்துவமனையில் முத்துப்பாண்டியும் உயிரிழந்தனர்.
இதை அறிந்த மின்வாரிய துணை இயக்குநர் குத்தாலிங்கம், திருநெல்வேலி மாவட்ட தீயணைப்பு அலுவலர் மகாலிங்கமூர்த்தி ஆகியோர் நேரில் சென்று விசாரித்தனர். இதுகுறித்து, ஆலங்குளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/22/ஆலங்குளம்-அருகேகாற்றாலையில்-மின்மாற்றி-வெடித்து-2-ஊழியர்கள்-சாவு-2924439.html
2923998 திருநெல்வேலி திருநெல்வேலி நெல்லையில் 14 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு: 2724 பேர் பங்கேற்பு DIN DIN Monday, May 21, 2018 07:39 AM +0530 திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வில் 2724 பேர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வு திருநெல்வேலி மாவட்டத்தில் 14 மையங்களில் முற்பகல், பிற்பகல் என இரு பிரிவாக நடைபெற்றது. பாளையங்கோட்டையில் கதீட்ரல் மேல்நிலைப் பள்ளி, மேரி சார்ஜென்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தூய இக்னேஷியஸ் மேல்நிலைப் பள்ளி, கிறிஸ்துராஜா மேல்நிலைப் பள்ளி, சாராள் தக்கர் பெண் மேல்நிலைப் பள்ளி, மு.ந. அப்துல்ரஹ்மான் மேல்நிலைப் பள்ளி, மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி, செயின்ட் தாமஸ் பள்ளி, ஆதித்தியா வித்யா நிகேதன் மெட்ரிக் பள்ளி, டி.டி.டி.ஏ. ஜெயராஜ் அன்னபாக்கியம் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட மையங்களில் நடைபெற்ற தேர்வை வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் நிலையில் 3 சுற்றுக் குழுவினர் கண்காணித்தனர்.
தேர்வு நடைபெற்ற மையங்களில் தடையின்றி மின்சாரம், மையங்களுக்கு பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பாளையங்கோட்டை கிறிஸ்துராஜா பள்ளி மையத்தில் தேர்வினை மாவட்ட வருவாய் அலுவலர் பூ. முத்துராமலிங்கம் பார்வையிட்டார். இத்தேர்வை எழுதுவதற்கு 4135 பேருக்கு அனுமதிச் சீட்டு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதில், 2724 பேர் பங்கேற்றனர். 1411 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/21/நெல்லையில்-14-மையங்களில்டிஎன்பிஎஸ்சி-தேர்வு-2724-பேர்-பங்கேற்பு-2923998.html
2923997 திருநெல்வேலி திருநெல்வேலி சிவந்திபுரத்தில் மாவட்ட, மாநில அளவிலான கபடி போட்டி DIN DIN Monday, May 21, 2018 07:39 AM +0530 சிவந்திபுரத்தில் மாவட்டம் மற்றும் மாநில அளவிலான கபடி போட்டி மே 23 முதல் 25 வரை நடைபெறுகிறது.
விக்கிரமசிங்கபுரம் அருகே சிவந்திபுரத்தில் பி.ஆர்.சி. விளையாட்டுக் கழகம் மற்றும் இசக்கி ஸ்போர்ட்ஸ் அகாதெமி இணைந்து நடத்தும் 27ஆவது மாவட்ட மற்றும் மாநில அளவிலான கபடி போட்டி  சிவந்திபுரம் நாடார் விளையாட்டுக் கழக மைதானத்தில் மே 23இல் தொடங்கி மே 25 வரை நடைபெறுகிறது. 
மே 23 புதன்கிழமை மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெறுகிறது. மே 24 மற்றும் 25 தேதிகளில் மாநில அளவிலான போட்டிகள் நடைபெறுகின்றன. மாநில அளவிலானப் போட்டிகளில் சென்னையிலிருந்து ஐ.சி.எப்., அஞ்சல்துறை, வருமானவரித்துறை, தமிழ்நாடு காவல்துறை, டி.பி.ஜெயின் கல்லூரி மற்றும் சாய் அணிகளும்,  நாகபட்டினம்,  கடலூர், மயிலாடுதுறை,  மதுரை,  சேலம்,  அளத்தங்கரை பகுதிகளிலிலிருந்தும் கபடி அணிகள் கலந்து கொள்கின்றன. 
போட்டிகளைக் காண அனுமதி இலவசம்.  மாவட்ட அளவிலானப் போட்டியில் முதல் பரிசு ரூ. 11 அயிரம்,  இரண்டாம் பரிசு ரூ.8 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ. 5 ஆயிரம்,  நான்காம் பரிசு ரூ. 3 ஆயிரம் ரொக்கப் பரிசு மற்றும் கோப்பை வழங்கப்படுகிறது.  மாநில அளவிலானப் போட்டியில் முதல் பரிசு ரூ.50 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.30 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.15 ஆயிரம், நான்காம் பரிசு ரூ.15 ஆயிரம் ரொக்கப் பரிசு மற்றும் கோப்பை வழங்கப்படுகிறது. 
போட்டிக்கான ஏற்பாடுகளை பிஆர்சி விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/21/சிவந்திபுரத்தில்-மாவட்ட-மாநில-அளவிலான-கபடி-போட்டி-2923997.html
2923996 திருநெல்வேலி திருநெல்வேலி காவல்துறை அதிகாரிகளை மிரட்டும்  ஒலி தொகுப்பு வெளியீடு: இளைஞர் கைது DIN DIN Monday, May 21, 2018 07:39 AM +0530 திருநெல்வேலி மாவட்டத்தில் காவல் துறை அதிகாரிகளை மிரட்டும் வகையில் ஒலி தொகுப்பை சமூக வலைதளங்களில் பரவ விட்டதாக ஆவரைக்குளத்தைச் சேர்ந்த இளைஞர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டத்தின் சில பகுதிகளில் சமூக வலைதளங்களில் காவல்துறை அதிகாரிகளை குறிப்பிட்டு மிரட்டும் வகையில் பேசப்பட்ட ஒலி தொகுப்பு பரவியது. இதுதொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், சம்பந்தப்பட்டவர் பழவூர் அருகேயுள்ள ஆவரைக்குளத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் அரசன் (19) என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக பழவூர் போலீஸார் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 294(பி), 353, 506 (2) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து அரசனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/21/காவல்துறை-அதிகாரிகளை-மிரட்டும்-ஒலி-தொகுப்பு-வெளியீடு-இளைஞர்-கைது-2923996.html
2923995 திருநெல்வேலி திருநெல்வேலி பெண்ணிடம் நகை பறிப்பு DIN DIN Monday, May 21, 2018 07:38 AM +0530 பாளையங்கோட்டை அருகே கடையில் பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டுள்ளது.
பாளையங்கோட்டை அருகே உள்ள கே.டி.சி.  நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (50). இவர், தனது வீட்டின் முன்புறம் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். ஆனந்தராஜ் வெளியே சென்ற நேரத்தில் கடையில் அவரது மனைவி அமராவதி வியாபாரத்தை கவனித்து வந்தாராம். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர், பொருள்கள் வாங்குவது போன்று அமராவதியிடம் பேச்சு கொடுத்தனர். கண் இமைக்கும் நேரத்தில் அமராவதி அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு அவர்கள் தப்பிவிட்டனர். இது குறித்த  புகாரின்பேரில், பாளையங்கோட்டை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/21/பெண்ணிடம்-நகை-பறிப்பு-2923995.html
2923994 திருநெல்வேலி திருநெல்வேலி திமுக விவசாய அணி  கூட்டம் DIN DIN Monday, May 21, 2018 07:38 AM +0530 திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் விவசாய அணி, ஆதிதிராவிட நல உரிமைக்குழு அணி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அணிகளின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மகாராஜ நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்டச் செயலர் இரா.ஆவுடையப்பன் தலைமை வகித்தார். விவசாய அணி அமைப்பாளர் இரா.ரவிச்சந்திரன், ஆதிதிராவிட நல உரிமைக்குழு அணி அமைப்பாளர் எம்.ஆறுமுக பெருமாள், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அணி அமைப்பாளர் கி.கணேசன் உள்ளிட்டோர் பேசினர். துணை அமைப்பாளர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது, பொதுக்கூட்டங்கள், தெருமுனை பிரசார கூட்டங்கள் நடத்துவது, மூன்று மாதத்திற்கு ஒரு முறை அணி கூட்டம் நடத்துவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/21/திமுக-விவசாய-அணி--கூட்டம்-2923994.html
2923993 திருநெல்வேலி திருநெல்வேலி அகஸ்தியர் அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் DIN DIN Monday, May 21, 2018 07:38 AM +0530 விடுமுறை நாளை முன்னிட்டு சுற்றுலாத் தலமான அகஸ்தியர் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தினருடன் குளித்து மகிழ்ந்தனர்.  
கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாளை முன்னிட்டு,  சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு குறிப்பாக நீர்நிலைகளைத் தேடி குடும்பத்தினருடன் செல்கின்றனர். 
திருநெல்வேலி மாவட்டத்தின் வற்றாத அருவியான அகஸ்தியர் அருவி மற்றும்  மணிமுத்தாறு அருவிக்கும் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தினருடன் சென்று குதூகலமடைந்தனர். 
திருநெல்வேலி மற்றும் அண்டை மாவட்டங்களிலிலிருந்து மட்டுமன்றி சென்னை,  தஞ்சாவூர்,  திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அதிகாலை முதல் குவியத் தொடங்கினர்.
 அகஸ்தியர் அருவி மற்றும் அருவியின் அருகில் உள்ள சிறு தடாகத்தில் குழந்தைகளுடன் குளித்து மகிழ்ந்தனர்.  காவலர்கள், வனத்துறையினர் பாதுகாப்பு போதிய அளவில் இல்லாததால் இளைஞர்கள் அருவியின் மேல் பகுதிக்கு சென்று ஆபத்தான இடத்தில் குளித்தனர். 
மேலும் அருவிக்குச் செல்லும் நடைபாதை சீரமைக்கப்படாததால் முதியவர்கள், குழந்தைகள் மிகுந்த சிரமத்துடன் அதை தாண்டி அருவி பகுதிக்கு சென்றனர்.  
அருவியில் குளிப்பவர்கள் கட்டுப்பாட்டை மீறி ஷாம்பு, சோப்பு போட்டுக் குளிப்பதாலும், பாலிதீன், ஷாம்பு பாக்கெட்டுகள், பழைய துணிகளை ஆங்காங்கே விட்டுச் செல்வதாலும் அருவி கரைப் பகுதிகள் குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றன.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது,  அருவியில் நுழைவுக் கட்டணம் பெற்று சுற்றுலாப் பயணிகளை வனத்துறையினர் அனுமதிக்கின்றனர்.  மேலும் தற்போது சூழல் சுற்றுலா என்ற  திட்டத்தைத் தொடங்கி சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பல திட்டங்களை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் பகுதியில் செயல்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அகஸ்தியர் அருவிப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கு அடிப்படை  மற்றும் சுகாதார வசதிகள் எதுவும் செய்துத் தரப்படவில்லை.  மேலும் அருவிப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் விட்டுச் செல்லும் பாலிதீன், ஷாம்பு பாக்கெட்டுகள்,  துணிகள் போன்றவற்றை அப்புறப்படுத்தாமல் அங்கேயே தீ வைத்து எரிக்கின்றனர்.   இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது  என்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/21/அகஸ்தியர்-அருவியில்-குவிந்த-சுற்றுலாப்-பயணிகள்-2923993.html
2923810 திருநெல்வேலி திருநெல்வேலி 2 முதியவர்கள் மயங்கி விழுந்து சாவு DIN DIN Monday, May 21, 2018 02:39 AM +0530 திருநெல்வேலியில் முதியவர்கள் இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தனர்.
பாளையங்கோட்டை சாந்தி நகரைச் சேர்ந்த லட்சுமணன் மகன் உலகநாதன் (60). இவர், பாளையங்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் உணவகம் ஒன்றில் பணி செய்து வந்தார். சனிக்கிழமை பணியில் இருந்த உலகநாதன் திடீரென மயங்கி விழுந்தாராம். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இறந்தார். இது தொடர்பாக, மனைவி அருணா கல்யாணி அளித்த புகாரின்பேரில் மேலப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
விடுதியில்... திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை சேர்ந்தவர் லட்சுமிகாந்தன் (60). திருநெல்வேலியில் தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குடும்பத்தினருடன் வந்தாராம். தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த லட்சுமிகாந்தன், மயங்கி விழுந்ததில் இறந்ததாக கூறப்படுகிறது.
அவரது மகள் சாந்தி அளித்த புகாரின்பேரில் திருநெல்வேலி சந்திப்பு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/21/2-முதியவர்கள்-மயங்கி-விழுந்து-சாவு-2923810.html
2923809 திருநெல்வேலி திருநெல்வேலி பாளை அருகே பொதுமக்கள் திடீர் மறியல் DIN DIN Monday, May 21, 2018 02:39 AM +0530 பாளையங்கோட்டையில் தனியார் நிலம் தொடர்பான தகராறில் ஒரு தரப்பினர் ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பாளையங்கோட்டை அருகே அரியகுளம் உத்தமபாண்டியபுரத்தில் 15 ஏக்கர் நிலம் தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில் ஒரு தரப்பினர், சர்ச்சைக்குரிய இடத்தில் நிலத்தை ஞாயிற்றுக்கிழமை சமன் செய்யும் பணியை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கு மற்றொரு தரப்பினர் ஆட்சேபம் தெரிவித்தனராம்.
இதையடுத்து அப்பகுதியில் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பினரிடமும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இதனிடையே, பாதிக்கப்பட்ட சிலர் இப்பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, திருநெல்வேலி-தூத்துக்குடி பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் டி.எஸ்.பி. பொன்னரசன் பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த மறியல் போராட்டத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இதையடுத்து, போலீஸார் முன்னிலையில் இரு தரப்பினர் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/21/பாளை-அருகே-பொதுமக்கள்-திடீர்-மறியல்-2923809.html
2923808 திருநெல்வேலி திருநெல்வேலி அமமுக ஆட்சிக்கு வந்தால் கல்வி, மருத்துவம் செம்மையாக்கப்படும்: தங்கதமிழ்ச்செல்வன் DIN DIN Monday, May 21, 2018 02:39 AM +0530 அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தால் கல்வியும், மருத்துவமும் செம்மையாக்கப்பட்டு அதன்மூலம் தமிழகம் முதன்மை மாநிலமாக மாறும் என்றார் அமமுக கொள்கை பரப்புச் செயலர் தங்கதமிழ்ச்செல்வன்.
தச்சநல்லூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரைச் சொல்லிக்கொண்டு ஆளுங்கட்சியினர் முறையற்ற நிர்வாகம் செய்து வருகிறார்கள். தமிழக மக்கள் துரோகத்தை ஒருபோதும் அங்கீகரிக்கமாட்டார்கள். உண்மையை மட்டுமே பேசி வருவதால் எங்கள் கட்சி மீதான நம்பிக்கை மக்களிடம் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 18 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் காலம் தாழ்த்துவது சரியானதல்ல. கர்நாடகத்தில் பாஜக பேரங்களை பேச முடியாத இக்கட்டான நிலைக்கு ஆளானதால்தான் ஆட்சியை இழந்துள்ளது. காலஅவகாசம் கொடுத்திருந்தால் பணத்தால் ஆட்சியைத் தக்க வைக்க முயன்றிருப்பார்கள்.
தமிழகத்தில் மக்கள் பிரச்னைகளுக்காக குரல் கொடுக்கவோ, போராட்டங்கள் நடத்தவோ அனுமதி மறுக்கப்படுகிறது. போலித்தனமான நிர்வாகத்தால் ஆளுங்கட்சியினர் அதிமுக சேர்த்து வைத்த புகழை பாழாக்குகிறார்கள். அமமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் கல்வி, மருத்துவம், பொதுப்பணித் துறை, வேளாண் துறை ஆகியவை செம்மைப்படுத்தப்படும். அதன்மூலம் ஏழை-எளிய மக்கள் பயனடைவதோடு நாட்டில் முதன்மை மாநிலமாக தமிழகம் மாறும். வரும் தேர்தல்களில் அமமுகவிற்கு பொதுமக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்றார் அவர்.
கூட்டத்திற்கு மாநகர் மாவட்டச் செயலர் கல்லூர் இ.வேலாயுதம் தலைமை வகித்தார். அவைத் தலைவர் ஆர்.பி.ஆதித்தன், பொருளாளர் பால்கண்ணன், நிர்வாகிகள் பேச்சிமுத்துப்பாண்டியன், பரமசிவ ஐயப்பன், எம்.சி.ராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/21/அமமுக-ஆட்சிக்கு-வந்தால்-கல்வி-மருத்துவம்-செம்மையாக்கப்படும்-தங்கதமிழ்ச்செல்வன்-2923808.html
2923807 திருநெல்வேலி திருநெல்வேலி தென்மண்டல சுருக்கெழுத்து தட்டச்சர் சங்கக் கூட்டம் DIN DIN Monday, May 21, 2018 02:38 AM +0530 சங்கரன்கோவிலில் தென்மண்டல ஒருங்கிணைந்த அரசு சுருக்கெழுத்து தட்டச்சர்கள் மற்றும் உதவியாளர்கள் நலச்சங்ககத்தின் சிறப்புக் கூட்டம்  வணிக வைசிய சங்கப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தென்மண்டல சங்கத் தலைவர் கா.கனகரத்னா தலைமை வகித்தார். செயலர் க.வி.ஞா.நாகலட்சுமி,  பொருளாளர் ஆர்.திருமலைச்செல்வி,  துணைத் தலைவர் வே.முப்பிடாதி(எ)பேச்சியப்பன், துணைச் செயலர் ஜி.சூர்யா,  துணைப் பொருளாளர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  
கூட்டத்தில்,  தில்லி தமிழ்நாடு இல்லம், சென்னை,  மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி,  திருச்சி, ராமநாதபுரம், கன்னியாகுமரி,விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அரசு சுருக்கெழுத்து தட்டச்சர்கள் மற்றும் உதவியாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதைத்தொடர்ந்து கூட்டத்தில் சுருக்கெழுத்து தட்டச்சர்கள் மற்றும் உதவியாளர்களின் ஊதிய முரண்பாடு, பதவி உயர்வில் இழைக்கப்படுகிற பாரபட்சம் உள்ளிட்ட அத்தியாவசிய பிரச்னைகளை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/21/தென்மண்டல-சுருக்கெழுத்து-தட்டச்சர்-சங்கக்-கூட்டம்-2923807.html
2923806 திருநெல்வேலி திருநெல்வேலி மாணவர்களுக்கு கேரம், சதுரங்கப் பயிற்சி DIN DIN Monday, May 21, 2018 02:38 AM +0530 பாளையங்கோட்டையில் மாணவர்களுக்கு கேரம், சதுரங்க விளையாட்டுக்கான பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பள்ளி கல்வித் துறை சார்பில் கோடை விடுமுறையில் மாணவர்களுக்கு மாவட்ட மைய நூலங்களில் யோகா, சிலம்பம், ஓவியம், பாரம்பரிய விளையாட்டு, கதை சொல்லுதல் போன்றவற்றுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இம்மாதம் 7 ஆம் தேதி தொடங்கிய இப்பயிற்சி முகாமில் தினமும் 100 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கேரம், சதுரங்கம் குறித்து பாளையங்கோட்டை புஷ்பலதா மெட்ரிக் பள்ளி ஆசிரியர் விஜயராம் பயிற்சி அளித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 60 க்கும் மேற்பட்ட மாணவர், மாணவிகள் கலந்து கொண்டனர். இம்மாதம் 31 ஆம் தேதி வரை இப்பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/21/மாணவர்களுக்கு-கேரம்-சதுரங்கப்-பயிற்சி-2923806.html
2923805 திருநெல்வேலி திருநெல்வேலி சாந்தி நகரில் ரேஷன் கடைக்கு அடிக்கல் DIN DIN Monday, May 21, 2018 02:38 AM +0530 பாளையங்கோட்டை சாந்தி நகரில் ரூ. 7.50 லட்சம் மதிப்பில் ரேஷன் கடை கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பாளையங்கோட்டை பேரவைத் தொகுதிக்குள்பட்ட சாந்தி நகர் 16 ஆவது வார்டில் பொதுமக்களின் வசதிக்காக ரேஷன் கடை கட்டடம் கட்டுவதற்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 7.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் ரேஷன் கடை கட்டடம் கட்டும் பணிக்கு டி.பி.எம். மைதீன்கான் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார். மக்கள் நலச் சங்கத் தலைவர் தங்கையா, செயலர் மதன், பொருளாளர் தங்கவேலு, செயற்குழு உறுப்பினர்கள் கன்னையா, பாலகுரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/21/சாந்தி-நகரில்-ரேஷன்-கடைக்கு-அடிக்கல்-2923805.html
2923804 திருநெல்வேலி திருநெல்வேலி நான்குனேரியில் துப்புரவு தொழிலாளி மர்மச் சாவு DIN DIN Monday, May 21, 2018 02:37 AM +0530 நான்குனேரியில் காணாமல் போன துப்புரவு  தொழிலாளியின் சடலம் கழிவுநீர் கால்வாயில்  ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டாரா? குடிபோதையில் கழிவுநீர் கால்வாயில் விழுந்து இறந்தாரா? என்பது குறித்து நான்குனேரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
நான்குனேரி பெருந்தெருவைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன்(44).  இவர் நான்குனேரி பேரூராட்சியில் துப்புரவுத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.  இவர் கடந்த 17ஆம் தேதி வேலைக்கு சென்றவர் மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லையாம்.  
இதையடுத்து அவரது  மனைவி மற்றும் குழந்தைகள் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லையாம்.  இது தொடர்பாக அவரது  மனைவி வைரமணி நான்குனேரி போலீஸில்  புகார் தெரிவித்தார்.  உதவி-ஆய்வாளர் முருகன் வழக்குப் பதிந்து,  விசாரணை நடத்தி வந்தார்.  
இந்நிலையில் நான்குனேரியில் அவரது வீட்டின் பின்புறம் உள்ள கழிவுநீர் கால்வாயில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு வந்த தகவலை அடுத்து, அங்கு சென்ற போலீஸார்  கழிவுநீர் கால்வாயில் கிடந்த சடலத்தை மீட்டு பார்த்தபோது அது காணாமல் போன முத்துகிருஷ்ணன் என்பது தெரியவந்தது.  இதையடுத்து போலீஸார் முத்துகிருஷ்ணன் சடலத்தை நான்குனேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு  அனுப்பி வைத்தனர். 
காணாமல் போன முத்துகிருஷ்ணன்  குடிபோதையில் கழிவுநீர் கால்வாயில் விழுந்து இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   இறந்த முத்துகிருஷ்ணனுக்கு வைரமணி என்ற மனைவி,  கோமதி செல்வி(14), சரண்யா(9) ஆகிய இரு மகள்களும், சரவணபெருமாள்(9), தாஸ் பிரகாஷ்(7) என்ற மகன்களும் உள்ளனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/21/நான்குனேரியில்-துப்புரவு-தொழிலாளி-மர்மச்-சாவு-2923804.html
2923712 திருநெல்வேலி திருநெல்வேலி இலங்குளம் ஆரோக்கியமாதா ஆலயத் திருவிழா: 23 இல் தேர் பவனி DIN DIN Monday, May 21, 2018 01:29 AM +0530 நான்குனேரி அருகே உள்ள இலங்குளம் ஆரோக்கியமாதா ஆலயத் திருவிழாவையொட்டி  23-ஆம் தேதி தேர் பவனி நடைபெறுகிறது.
இலங்குளம் ஆரோக்கியமாதா ஆலயத் திருவிழா கடந்த 15-ஆம் தேதி மன்னார்புரம் பங்குத் தந்தை விக்டர் அடிகளார் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா 10 நாள்கள் கொண்டாடப்படுகிறது.  திருவிழா நாள்களில் தினமும் காலை திரியாத்திரை திருப்பலியும், இரவு மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெறுகிறது. 22-ஆம் தேதி எட்டாம் திருவிழாவில் காலை நடைபெறுகின்ற திருப்பலியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புதுநன்மை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு தெற்குகள்ளிகுளம் ஹெலன்ப்ளாரிட்டி  மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையத்தின் இயக்குநர் ஒய்.தேவராஜன் அடிகளார் தலைமையில் நற்கருணைப்பவனி நடைபெறுகிறது. அதன் பின்னர் மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர்வாதம் நடைபெறுகிறது.  23-ஆம் தேதி ஒன்பதாம் திருவிழாவில் காலை திரியாத்திரை திருப்பலியும், இரவு சாத்தான்குளம் மறைவட்ட முதன்மை குருவானவர் ரெமிஜியுஸ்  அடிகளார் தலைமையில் ஆடம்பர  மாலை ஆராதனையும் நடைபெறுகிறது.  அதனைத் தொடர்ந்து அசன விருந்தும், பின்னர் இரவு 10.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட  தேரில் ஆரோக்கிய அன்னையின்  தேர் பவனியும் நடைபெறுகிறது. 24-ஆம் தேதி பத்தாம் திருவிழாவில் காலை 6 மணிக்கு  ஆடம்பர கூட்டுத்திருப்பலியும்,  மாலை 3 மணிக்கு மீண்டும் அன்னையின் தேர் பவனியும் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து கொடியிறக்கமும் நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை பங்குத் தந்தை சேகரன் அடிகளார் தலைமையில் அருட்சகோதரிகள், பங்கு மக்கள் செய்துள்ளனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/21/இலங்குளம்-ஆரோக்கியமாதா-ஆலயத்-திருவிழா-23-இல்-தேர்-பவனி-2923712.html
2923710 திருநெல்வேலி திருநெல்வேலி சேரன்மகாதேவியில் தாமிரவருணி புஷ்கரணி விழா தொடக்க பூஜை DIN DIN Monday, May 21, 2018 01:29 AM +0530 சேரன்மகாதேவி வியாச தீர்த்தக் கட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை தாமிரவருணி மஹா புஷ்கரணி தொடக்க பூஜை நடைபெற்றது.
உலக நன்மைக்காகவும், தாமிரவருணி நதியை ஆத்மா பாரத்திலிருந்து புனிதப்படுத்தவும் மகா புஷ்கரன் தாமிரவருணி நதியில் உதயமாக உள்ளதையடுத்து தாமிரவருணி நதியில் அக்.12 முதல் 23 வரை மகா புஷ்கரணி திருவிழா நடைபெற உள்ளது. இதை வரவேற்கும் விதமாக சேரன்மகாதேவி தாமிரவருணி கரையில் உள்ள பக்தவத்சல பெருமாள் கோயில் அருகில் வியாச முனிவர் தவம் புரிந்த இடமாகக் கருதப்படும் வியாச தீர்த்தக் கட்டத்தில் தாமிரவருணி நதிக்கு தொடக்க பூஜைகள் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.  இதை முன்னிட்டு மங்கள ஆரத்தி எடுத்து துதிப் பாடலுடன் தீப மிதவைகளை தாமிரவருணி நதியில் பக்தர்கள் சமர்ப்பித்தனர். 
பூஜை ஏற்பாடுகளை மகா புஷ்கர விழா சேவா கமிட்டி மற்றும் சேரன்மகாதேவி வட்டார பொதுமக்கள் செய்திருந்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/21/சேரன்மகாதேவியில்-தாமிரவருணி-புஷ்கரணி-விழா-தொடக்க-பூஜை-2923710.html
2923708 திருநெல்வேலி திருநெல்வேலி பழங்கால பொருள்கள் கண்காட்சி: 5 ஆயிரம் பேர் பார்வையிட்டனர் DIN DIN Monday, May 21, 2018 01:29 AM +0530 திருநெல்வேலியில் மூன்று நாள்கள் நடைபெற்ற பழங்கால பொருள்கள் கண்காட்சியை 5 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்.
சர்வதேச அருங்காட்சியக தினத்தையொட்டி திருநெல்வேலியில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் பழங்கால பொருள்கள் மூலமாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்ற தலைப்பில் சிறப்புக் கண்காட்சி கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி மூன்று நாள்கள் நடைபெற்றது.  இக் கண்காட்சியில் பழங்கால ரேடியோக்கள், வெற்றிலைப்பெட்டி, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த டைப்ரைட்டிங் இயந்திரங்கள், அரிக்கேன் விளக்கு, பாக்குவெட்டி, கூஜா, தொலைபேசிகள்,  அளவை பொருள்கள் உள்பட ஏராளமானவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பல்வேறு நாடுகளின் நாணயங்கள், அஞ்சல் தலைகளும் இடம்பெற்றிருந்தன. பல்வேறு நாடுகளின் நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், இருசக்கர, நான்குசக்கர வாகனங்கள் ஆகியவை கவரும் வகையில் இருந்தன.
மூன்று நாள்கள் நடைபெற்ற இக் கண்காட்சியை மொத்தம் 5 ஆயிரம் பேர் பார்வையிட்டனர். நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட அறிவியல் அலுவலர் எஸ்.எம்.குமார் தலைமை வகித்தார். மாவட்ட அறிவியல் மைய கல்வி உதவியாளர் மாரிலெனின் வரவேற்றார். 
இதில் திருநெல்வேலி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் வி.பி.சந்திரசேகரன் பேசியது: இந்தியர்களின் பாரம்பரியம், பண்பாடு ஆகியவற்றை இளம்தலைமுறையினருக்கு தெரியப்படுத்த வேண்டும். அறிவியலின் வளர்ச்சியால் பயன்படும் பொருள்களிலும் மாற்றங்கள் வந்துவிட்டன. ஆனாலும், நம் முன்னோர்களின் பழக்கவழக்கத்தை நினைவூட்டும் பொருள்களை பாதுகாத்து வைக்க வேண்டியது அவசியம் என்றார் அவர். கண்காட்சியில் பொருள்களைக் காட்சிப்படுத்தியவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/21/பழங்கால-பொருள்கள்-கண்காட்சி-5-ஆயிரம்-பேர்-பார்வையிட்டனர்-2923708.html
2923608 திருநெல்வேலி திருநெல்வேலி நெல்லை மாவட்டத்தில் 18 கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 5 பேர் கைது: 92 பவுன் நகைகள், 2 கார், ரூ.7 லட்சம் பறிமுதல் DIN DIN Monday, May 21, 2018 12:42 AM +0530 திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோவில், புளியங்குடி, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 18 இடங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாக 5 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.26 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், வெள்ளி,  பணம், கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோவில், புளியங்குடி, அம்பாசமுத்திரம் உள்பட பல இடங்களில் மர்ம நபர்கள் வீடு புகுந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டனர். கடந்த மாதம் 18ஆம் தேதி சங்கரன்கோவில் அம்மா நகரில் வசித்து வரும் வியாகப்பன் மகன் பாலமுருகன் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து சுமார் 50 பவுன் நகை, ரூ.5.50 லட்சம் ரொக்க பணத்தை திருடிச் சென்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் உத்தரவின்பேரில், டி.எஸ்.பி.ராஜேந்திரன் ஆலோசனைப்படி, தாலுகா ஆய்வாளர் ஜோசப் ஜெட்சன் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் சோலையப்பன், கோபி, அருள், சுப்பையா, சின்னத்துரை, கிருஷ்ணன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தத் தனிப் படையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இதில், தெற்கு பனவடலிசத்திரத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் கொடுங்குசாமிக்குச் சொந்தமான ஒரு தோப்பில் சந்தேகத்துக்குரிய நபர்கள் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. 
இதையடுத்து, போலீஸார் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அங்கு சென்று தோப்பில் பதுங்கியிருந்த தெற்கு பனவடலிசத்திரத்தைச் சேர்ந்த மாடசாமி மகன் கொடுங்குசாமி(50), வாசுதேவநலலூரைச் சேர்ந்த வனராஜ் மகன் செல்வக்குமார் (28), உத்தமபாளையத்தைச் சேர்ந்த ராசையா மகன் மூர்த்தி (எ) மாரிச்சாமி (30), திருக்கரன்குடி அருகே நம்பித்தலைவன்பட்டயத்தைச் சேர்ந்த சிவபெருமாள் மகன் சுரேஷ் (28), ,திண்டுக்கல்லைச் சேர்ந்த மருதையா மகன் கார்த்திகேயன்(39) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர்களுக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் 18 இடங்களில் நடந்த கொள்ளை சம்பவங்களில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. 
அவர்களிடமிருந்து 92 பவுன் நகைகள், 2 கிலோ வெள்ளி, 2 கார், ரூ. 7 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். வாகன சோதனையின்போது போலீஸாரிடமிருந்து தப்பிப்பதற்காக ஒரு காரில் "பிரஸ்' என்ற ஸ்டிக்கர் ஒட்டி பயன்படுத்தி வந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, கைதான 5 பேரையும் சங்கரன்கோவில் குற்றவியல் நீதித்துறை நடுவர் முன் போலீஸார் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதித்துறை நடுவர் அகிலாதேவி உத்தரவிட்டார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/21/நெல்லை-மாவட்டத்தில்-18-கொள்ளை-வழக்குகளில்-தொடர்புடைய-5-பேர்-கைது-92-பவுன்-நகைகள்-2-கார்-ரூ7-லட்ச-2923608.html
2923242 திருநெல்வேலி திருநெல்வேலி அம்பை கிருஷ்ணன் கோயிலில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா கொடியேற்றம் DIN DIN Sunday, May 20, 2018 02:28 AM +0530 அம்பாசமுத்திரம் ருக்மணி சத்யபாமா சமேத கிருஷ்ணசுவாமி கோயிலில் வைகாசிப் பெருந்திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இக்கோயிலில் கொடியேற்றத்தை முன்னிட்டு சனிக்கிழமை காலை கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து பகல் 11 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.
விழா நாள்களில் கிருஷ்ணசுவாமி சிம்மம், அனுமன், ஆதிசேஷன், யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் வீதிஉலா நடைபெறும். புதன்கிழமை விசேஷ திருமஞ்சனமும், இரவில் ஐந்து கருட சேவையும் நடைபெறும்.
வைகாசி விசாக தினமான திங்கள்கிழமை (மே 28) சிறப்பு அபிஷேக ஆராதனையும், இரவில் சுவாமி வீதி உலாவும் நடைபெறும். நாள்தோறும் மாலையில் பக்தி சொற்பொழிவு நடைபெறும்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் உபயதாரர்கள் செய்துள்ளனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/20/அம்பை-கிருஷ்ணன்-கோயிலில்-வைகாசி-விசாகப்-பெருந்திருவிழா-கொடியேற்றம்-2923242.html
2923241 திருநெல்வேலி திருநெல்வேலி மனோ கல்லூரிகளில் கல்வி  கட்டணத்தை குறைக்க வலியுறுத்தல் DIN DIN Sunday, May 20, 2018 02:28 AM +0530 மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மனோ கல்லூரிகளில் கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அமைப்பின் திருநெல்வேலி மாவட்டக் கிளைத் தலைவர் சி. திருமலைநம்பி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வி பெறும் வகையில், திருநெல்வேலி மனோன் மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தால் 2000 இல் மனோ கல்லூரி மற்றும் உறுப்புக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டன. இப்பல்கலைக்கழகத்தின் கீழ் 4 உறுப்பு கல்லூரிகளும், 6 மனோ கல்லூரிகளும் இயங்கி வருகின்றன.
திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோவில், சேரன்மகாதேவி அருகே கோவிந்தபேரி, பணகுடி, திசையன்விளை, கடையநல்லூர், புளியங்குடி, தூத்துக்குடி மாவட்டத்தில் நாகலாபுரம், நாகம்பட்டி, சாத்தான்குளம், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு கல்லூரி உள்பட 10 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
கிராமப்புற மாணவர்களுக்கு உயர்கல்வி எட்டாக் கனியாக இருந்த நிலையில்தான் இந்தக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன.
இதன் மூலம் ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வி பெறும் சூழல் உருவானது. இக்கல்லூரிகளில் இளங்கலை பாடப்பிரிவுக்கான கட்டணம் தனியார் சுயநிதி கல்லூரிகளை விட கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஆகவே, கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும். இல்லையெனில் அமைப்பின் சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/20/மனோ-கல்லூரிகளில்-கல்வி--கட்டணத்தை-குறைக்க-வலியுறுத்தல்-2923241.html
2923240 திருநெல்வேலி திருநெல்வேலி சங்கரநாராயணசுவாமி கோயிலில் தரிசனக் கட்டண உயர்வுக்கு அமமுக எதிர்ப்பு DIN DIN Sunday, May 20, 2018 02:28 AM +0530 சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் வழிபாடு மற்றும் தரிசன முறைகளுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இக் கோயிலில் கோமதி அம்பாளுக்கு தங்கப் பாவாடை சாத்துதல், அபிஷேகக் கட்டணம், சிறப்பு தரிசனக் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்த ஆட்சேபனை இருந்தால் 30 நாள்களுக்குள் தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தக் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோயில் கண்காணிப்பாளர் கோமதியிடம் அமமுகவினர் அளித்துள்ள மனு:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இக்கோயிலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து வழிபட்டு செல்கிறார்கள். பிற மதத்தினரும் விரும்பி இக்கோயிலுக்கு வந்து வழிபட்டுச்செல்கின்றனர். சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த ஏழை, எளிய, நடுத்தர மக்கள், சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் தங்களது வேண்டுதலை நிறைவேற்றிச் செல்கின்றனர்.
தாங்கள் உயர்த்த உத்தேசித்துள்ள கட்டண உயர்வு ஏழை, எளிய பக்தர்களை கடுமையாகப் பாதிக்கும். எனவே, தற்போதுள்ள கட்டணங்களே வசூலிக்கவேண்டும் எனவும், கட்டணத்தை உயர்த்தினால் மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்துவோம் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/20/சங்கரநாராயணசுவாமி-கோயிலில்-தரிசனக்-கட்டண-உயர்வுக்கு-அமமுக-எதிர்ப்பு-2923240.html
2923239 திருநெல்வேலி திருநெல்வேலி சிந்தாமணி சொக்கலிங்கசுவாமி கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றம் DIN DIN Sunday, May 20, 2018 02:28 AM +0530 புளியங்குடி-சிந்தாமணி அருள்மிகு சொக்கலிங்கசுவாமி கோயிலில் வைகாசி திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாள்களில் ஒவ்வொரு மண்டகப்படிதாரர் சார்பில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேக , தீபாராதனை நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியாக மே 27 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
காலை 8.30 மணிக்கு சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளுதல், 10.30 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/20/சிந்தாமணி-சொக்கலிங்கசுவாமி-கோயில்-வைகாசி-திருவிழா-கொடியேற்றம்-2923239.html
2923238 திருநெல்வேலி திருநெல்வேலி மனோ கல்லூரிகளில் கல்வி கட்டணத்தை குறைக்க வலியுறுத்தல் DIN DIN Sunday, May 20, 2018 02:27 AM +0530 மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மனோ கல்லூரிகளில் கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அமைப்பின் திருநெல்வேலி மாவட்டக் கிளைத் தலைவர் சி. திருமலைநம்பி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வி பெறும் வகையில், திருநெல்வேலி மனோன் மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தால் 2000 இல் மனோ கல்லூரி மற்றும் உறுப்புக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டன. இப்பல்கலைக்கழகத்தின் கீழ் 4 உறுப்பு கல்லூரிகளும், 6 மனோ கல்லூரிகளும் இயங்கி வருகின்றன.
திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோவில், சேரன்மகாதேவி அருகே கோவிந்தபேரி, பணகுடி, திசையன்விளை, கடையநல்லூர், புளியங்குடி, தூத்துக்குடி மாவட்டத்தில் நாகலாபுரம், நாகம்பட்டி, சாத்தான்குளம், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு கல்லூரி உள்பட 10 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
கிராமப்புற மாணவர்களுக்கு உயர்கல்வி எட்டாக் கனியாக இருந்த நிலையில்தான் இந்தக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன.
இதன் மூலம் ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வி பெறும் சூழல் உருவானது. இக்கல்லூரிகளில் இளங்கலை பாடப்பிரிவுக்கான கட்டணம் தனியார் சுயநிதி கல்லூரிகளை விட கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஆகவே, கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும். இல்லையெனில் அமைப்பின் சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/20/மனோ-கல்லூரிகளில்-கல்வி-கட்டணத்தை-குறைக்க-வலியுறுத்தல்-2923238.html
2923237 திருநெல்வேலி திருநெல்வேலி திருட்டை தடுக்கதிருக்குறுங்குடி அருகே கிராமத்தில் கண்காணிப்பு கேமரா அமைப்பு DIN DIN Sunday, May 20, 2018 02:27 AM +0530 திருக்குறுங்குடி அருகே தொடர் திருட்டு சம்பவங்களைத் தடுக்கும் விதமாக கிராம மக்கள் சார்பில் வடுகச்சிமதிலில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது.
திருக்குறுங்குடி காவல்நிலைய எல்கைக்குள்பட்டது வடுகச்சிமதில் கிராமத்தில் உள்ள இசக்கியம்மன் கோயிலில் அண்மையில் இரு முறை திருட்டு சம்பவங்கள் நடைபெற்றன. இதையடுத்து, கிராம மக்கள்சார்பில் நிதி வசூலிக்கப்பட்டு, இசக்கியம்மன்கோயில், சுடலைமாடசுவாமி கோயில் பகுதியில் 3 கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிப்புசெய்து வருகின்றனர்.
இந்நிலையில், காவல்துறையினரின்அறிவுறுத்தலின்பேரில் முக்கியமான வீதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்கவும் முடிவு செய்தனர். அதன்படி வீதிகளில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள 5 கண்காணிப்பு கேமராக்களின் கண்காணிப்புஅறையை நான்குனேரி காவல் உதவி கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் திறந்துவைத்தார்.
இக்கிராமத்தில் இதுவரை 8 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பொதுமக்களின் ஒத்துழைப்பால் ஊரில் உள்ள பிற கோயில்களிலும், ஊரைச்சுற்றியுள்ள பிரதான பகுதிகளிலும் கூடுதல் கேமராக்கள் அமைக்கவும் ஊர் மக்கள் முடிவு செய்துள்ளனர். பொதுமக்களின் இந்த முயற்சியை காவல்துறையினர் பாராட்டியுள்ளனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/20/திருட்டை-தடுக்கதிருக்குறுங்குடி-அருகே-கிராமத்தில்-கண்காணிப்பு-கேமரா-அமைப்பு-2923237.html
2923236 திருநெல்வேலி திருநெல்வேலி அம்பாசமுத்திரத்தில் பள்ளி வாகனங்கள் தணிக்கை DIN DIN Sunday, May 20, 2018 02:27 AM +0530 அம்பாசமுத்திரம் வட்டத்துக்குள்பட்ட பகுதியில் உள்ள பள்ளி வாகனங்களுக்கான தணிக்கை சனிக்கிழமை நடைபெற்றது.
தென்காசி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சசி உத்தரவின் பேரில் அம்பாசமுத்திரம் வட்டத்துக்குள்பட்ட பகுதியில் உள்ள பள்ளி வாகனங்களுக்கான தணிக்கை, அம்பாசமுத்திரம் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் அலுவலக மைதானத்தில் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. அம்பாசமுத்திரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகப் பகுதிக்குள்பட்ட 106 பள்ளி வாகனங்கள் தணிக்கைக்கு உள்படுத்தப்பட்டன.
தணிக்கையின் போது, பேருந்தில் அவசர வழி, முதலுதவிப் பெட்டி, தரைதளம், இயந்திர இயங்கும் தன்மை, தீயணைப்பான் உள்ளிட்டவை தகுதியாக உள்ளனவா என்று சோதனை செய்து பார்க்கப்பட்டது.
106 வாகனங்களில் 10 வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டுக் கருவி முறையாக இயங்காததாலும், தீயணைப்புக் கருவி, தரைத்தளம் உள்ளிட்டவை தரமாக இல்லாததாலும் அவற்றின் தகுதிச் சான்று ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ஒரு வாரகால அவகாசத்தில் குறைகளை சரி செய்து கொண்டு வந்தால் தகுதிச் சான்று வழங்கப்படும் என்று போக்குவரத்து ஆய்வாளர் தெரிவித்தார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/20/அம்பாசமுத்திரத்தில்-பள்ளி-வாகனங்கள்-தணிக்கை-2923236.html
2923235 திருநெல்வேலி திருநெல்வேலி அரசுப் பேருந்து எரிப்பு வழக்கில் மேலும் ஒருவர் கைது DIN DIN Sunday, May 20, 2018 02:27 AM +0530 திருநெல்வேலியை அடுத்த வடக்கு தாழையூத்து பகுதியில் அரசுப் பேருந்தை எரித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 15-ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து வடக்கு தாழையூத்துக்கு சென்ற அரசுப் பேருந்தை மர்ம நபர்கள் தீ வைத்து கொழுத்தினர். இதில் பேருந்து முற்றிலுமாக எரிந்து நாசமானது. மேலும், பேருந்து எரிக்கப்பட்ட இடத்தில் ராக்கெட் ராஜாவுக்கு ஆதரவான துண்டுப் பிரசுரங்களையும் மர்ம நபர்கள் விட்டுச் சென்றனர். இது தொடர்பாக தாழையூத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக அண்மையில் ஜோசப், ஆனந்த் ஆகியோரை கைது செய்த போலீஸார், சனிக்கிழமை வடக்கு தாழையூத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் சிவராமனை (25) கைது செய்தனர். மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/20/அரசுப்-பேருந்து-எரிப்பு-வழக்கில்-மேலும்-ஒருவர்-கைது-2923235.html
2923234 திருநெல்வேலி திருநெல்வேலி பாளை. அருகே பால் வியாபாரி தற்கொலை DIN DIN Sunday, May 20, 2018 02:27 AM +0530 பாளையங்கோட்டை அருகே பால் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பாளையங்கோட்டையை அடுத்த திருமால் நகரைச் சேர்ந்த சேர்முகம் மகன் கிருஷ்ணன் (31). பால் வியாபாரி. இவருடைய மனைவி இந்துமதி, தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இவருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். கிருஷ்ணன் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வெள்ளிக்கிழமை கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கிருஷ்ணன் தூக்கிட்டதாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த கிருஷ்ணனின் மனைவி மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக பெருமாள்புரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/20/பாளை-அருகே-பால்-வியாபாரி-தற்கொலை-2923234.html
2923233 திருநெல்வேலி திருநெல்வேலி அனந்தபுரி, குருவாயூர் ரயில்கள் தாமதம் DIN DIN Sunday, May 20, 2018 02:26 AM +0530 சென்னை செல்லும் அனந்தபுரி மற்றும் குருவாயூர் விரைவு ரயில்கள் சனிக்கிழமை தாமதமாக இயக்கப்பட்டன.
திருவனந்தபுரத்தில் இருந்து திருநெல்வேலி, மதுரை வழியாக சென்னைக்கு இயக்கப்படும் அனந்தபுரி விரைவு ரயில் இரவு 7.40 மணிக்கு சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்தடையும். சனிக்கிழமை இரவு 7.40 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பு நிலையத்துக்கு வர வேண்டிய குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் 45 நிமிடங்கள் தாமதமாக வந்ததால், திருநெல்வேலியில் இருந்து 7.45 மணிக்கு புறப்பட வேண்டிய அனந்தபுரி விரைவு ரயில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/20/அனந்தபுரி-குருவாயூர்-ரயில்கள்-தாமதம்-2923233.html
2923232 திருநெல்வேலி திருநெல்வேலி கடையநல்லூர் திமுக செயலர் மகன் விபத்தில் பலி DIN DIN Sunday, May 20, 2018 02:26 AM +0530 கடையநல்லூர் அருகே சனிக்கிழமை இரவு நடைபெற்ற விபத்தில் திமுக நகரச் செயலர் மகன் இறந்தார்.
கடையநல்லூரைச் சேர்ந்தவர் மு.க.சேகனா. திமுக நகரச் செயலர். இவரது மனைவி சைபுன்னிஷா. முன்னாள் நகர்மன்றத் தலைவர். இவர்களது மகன் முகமது சகீல்(15). இவர், சனிக்கிழமை இரவு கடையநல்லூர் , கண்மணியாபுரம் சாலையில் நண்பர்களுடன் பைக்கில் சென்றபோது , ஆட்டோ மோதியதாம். இதில் சம்பவ இடத்திலேயே முகமது சகீல் இறந்தார். இதுகுறித்து கடையநல்லுôர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/20/கடையநல்லூர்-திமுக-செயலர்-மகன்-விபத்தில்-பலி-2923232.html
2923231 திருநெல்வேலி திருநெல்வேலி பாளை. அருகே பால் வியாபாரி தற்கொலை DIN DIN Sunday, May 20, 2018 02:26 AM +0530 பாளையங்கோட்டை அருகே பால் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பாளையங்கோட்டையை அடுத்த திருமால் நகரைச் சேர்ந்த சேர்முகம் மகன் கிருஷ்ணன் (31). பால் வியாபாரி. இவருடைய மனைவி இந்துமதி, தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இவருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். கிருஷ்ணன் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வெள்ளிக்கிழமை கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கிருஷ்ணன் தூக்கிட்டதாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த கிருஷ்ணனின் மனைவி மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக பெருமாள்புரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/20/பாளை-அருகே-பால்-வியாபாரி-தற்கொலை-2923231.html
2923230 திருநெல்வேலி திருநெல்வேலி நெல்லையில் கல்வித் திருவிழா DIN DIN Sunday, May 20, 2018 02:26 AM +0530 அம்பேத்கர் கல்வி நூற்றாண்டு இயக்கம்-அகம் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரிய அம்பேத்கர் எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில், திருநெல்வேலியில் கல்வித் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ., எஸ்.சி. கிறிஸ்துவ மாணவர்களுக்கு உயர் கல்வி குறித்து வழிகாட்டுவதற்காக நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அகம் பவுண்டேசன் மாவட்ட அமைப்பாளர் சி. பாலசுந்தரம் தலைமை வகித்தார். குமரி மாவட்ட ஜிஎஸ்டி மாநில வரிவிதிப்பு அலுவலக உதவி ஆணையர் கோ. கோபிரஞ்சித் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மின்சார வாரிய அம்பேத்கர் எம்ப்ளாயீஸ் யூனியன் மாநில துணைப் பொதுச் செயலர் வி. சிவகுமார் வரவேற்றார்.
பன்னாட்டு பெளத்த இளைஞர் சங்க மாவட்ட செயலர் கே. கவிசுப்பையா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அகம் பவுண்டேசன் மாநில அமைப்பாளர் மா. பரதன் உயர்கல்வி குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.
மருத்துவக் கல்வி குறித்து பாலம் அமைப்பைச் சேர்ந்த ராம்நாத், வேளாண்மை கல்வி குறித்து வேளாண் துறையைச் சேர்ந்த செல்வபிரபு, ஜெயசுந்தர் ஆகியோரும், பொறியியல் கல்வி குறித்து அண்ணா பல்கலை.யைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன், பேராசிரியர்கள் முருகேசன் (டிடிஎம்என்எஸ் கல்லூரி), முருகன் (மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்) ஆகியோரும் கருத்துரை வழங்கினர்.
தலித் பெண்கள் எழுச்சி இயக்க மாவட்டச் செயலர் சி. வேலம்மாள் நன்றி கூறினார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/20/நெல்லையில்-கல்வித்-திருவிழா-2923230.html
2923229 திருநெல்வேலி திருநெல்வேலி துப்புரவு தொழிலாளர் குழந்தைகளுக்கு தொழிற்பயிற்சி: 23-ஆம் தேதி முன்பதிவு DIN DIN Sunday, May 20, 2018 02:25 AM +0530 திருநெல்வேலி மாவட்டத்தில் புராஜெக்ட் நியூவிங்ஸ்' திட்டத்தின் கீழ் துப்புரவு தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 23 ஆம் தேதி முன்பதிவு செய்யப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களுடைய குழந்தைகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக மாவட்ட நிர்வாகத்தால் புராஜெக்ட் நியூவிங்ஸ்' என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் உயர்கல்வி பயில, சுயதொழில் தொடங்க ஆலோசனை, கடன் வசதி, மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தில், தனித்திறன் பயிற்சிகளும் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் ஏற்கெனவே பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு, அதனால் பலர் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். மேலும், இதன் தொடர்ச்சியாக இக்குடும்பங்களில் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்துள்ள, 18 முதல் 23 வயது வரையுள்ளவர்களுக்கு கேட்டர்பில்லர் (சென்னை) நிறுவனம் மூலம் 3 ஆண்டுகால உற்பத்தி தொழில்நுட்பப் பட்டயப்படிப்பு வழங்கப்படவுள்ளது.
பயிற்சிக் காலத்தில் 2 வேளை உணவு மற்றும் உதவித்தொகை வழங்கப்படும். முதலாமாண்டில் ரூ. 9,000, 2-ஆவது ஆண்டில் ரூ.10,000, 3-ஆவது ஆண்டில் ரூ. 11,000 உதவித்தொகை வழங்கப்படும்.
ஐசிஐசிஐ ஸ்கில்ஸ் அகாதெமி சார்பில் மின்சாதன பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், குளிர்சாதனப் பெட்டி, ஏசி, மோட்டார், இருசக்கர வாகனம் ஆகியவற்றில் பழுது நீக்குதல் மற்றும் சர்வீஸ் செய்யும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பயிற்சிக்காலம் 2 மாதம். உணவு, தங்குமிடம் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் மூலம் மேற்கண்ட பயிற்சிகளில் சேர்ந்து பயிற்சி பெற விரும்பும் துப்புரவு பணியாளர்களின் குழந்தைகள் வரும் 23 ஆம் தேதி மாலை 3 மணியளவில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று விவரங்களை தெரிந்துகொள்வதோடு, பயிற்சிக்கும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/20/துப்புரவு-தொழிலாளர்-குழந்தைகளுக்கு-தொழிற்பயிற்சி-23-ஆம்-தேதி-முன்பதிவு-2923229.html
2923228 திருநெல்வேலி திருநெல்வேலி நெல்லையில் மின்கழக தொழிலாளர் சங்க ஆலோசனைக் கூட்டம் DIN DIN Sunday, May 20, 2018 02:25 AM +0530 தமிழ்நாடு மின்கழகத் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் திருநெல்வேலி வட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை வண்ணார்பேட்டையில் நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, கோட்டச் செயலர் டி. ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் க. ராஜூ, சி. அந்தோணிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், ஊரக கோட்டச் செயலர் திரவியம் சுந்தரம், கடையநல்லூர் இசக்கி, கல்லிடைக்குறிச்சி கோட்டச் செயலர் பி. சீதாராமன், சங்கரன்கோவில் கோட்டச் செயலர் மகராஜன், வள்ளியூர் நிர்வாகி சி. மோகன், திட்டத் துணைத் தலைவர்கள் இ. அருணன், சஷ்டிக்குமார் மற்றும் ஆத்திபாண்டியன், சீனிவாசசங்கரசுப்பு, அ. சத்தியராஜ், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தீர்மானங்கள்: அமைப்பின் திருநெல்வேலி மின்திட்டப் பொதுக்குழு, திட்டச் சங்க பொறுப்பாளர் தேர்வினை ஜனநாயக முறைப்படி தலைவர், செயலர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு நிர்வாகிகள் தேர்வு செய்ய வேண்டும்.
வரும் ஜூன் 3 ஆம் தேதி கட்சித் தலைவர் கருணாநிதியின் 95 ஆவது பிறந்த தினத்தை அனைத்துக் கோட்டங்களிலும் சிறப்பாக கொண்டாடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/20/நெல்லையில்-மின்கழக-தொழிலாளர்-சங்க-ஆலோசனைக்-கூட்டம்-2923228.html
2923226 திருநெல்வேலி திருநெல்வேலி மாவட்ட நூலகத்தில் சிலம்பப் பயிற்சி DIN DIN Sunday, May 20, 2018 02:25 AM +0530 பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் கோடைக் கொண்டாட்டத்தின் 11 ஆவது நாளான சனிக்கிழமை மாணவர்களுக்கு சிலம்பப் பயிற்சி அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன் தலைமை வகித்தார். கோகுல் சிலம்பம் கலைக்கூடத்தின் சிலம்பு ஆசிரியர் ப. சுப்பையா பங்கேற்று, தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலைகளில் ஒன்றான சிலம்பாட்ட பயிற்சியை அளித்தார். இதில் சுமார் 100 மாணவர்கள் பங்கேற்றனர். நூலகர் முத்துக்கிருஷ்ணன் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை முதன்மை நூலகர் வயலட் செய்திருந்தார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/20/மாவட்ட-நூலகத்தில்-சிலம்பப்-பயிற்சி-2923226.html
2923225 திருநெல்வேலி திருநெல்வேலி இன்று டிஎன்பிஎஸ்சி தேர்வு: வட்டாட்சியர் நிலையில் கண்காணிப்பு குழு DIN DIN Sunday, May 20, 2018 02:25 AM +0530 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் (டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த பொறியியல் வாரிய போட்டித் தேர்வு (சிஇஎஸ்இ) ஞாயிற்றுக்கிழமை (மே 20) நடைபெறுகிறது. தேர்வை கண்காணிக்க வட்டாட்சியர் நிலையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் மற்றும் பிற்பகலில் ஒருங்கிணைந்த பொறியியல் வாரிய போட்டித் தேர்வு (சிஇஎஸ்இ) திருநெல்வேலி மாவட்டத்தில் 12 கல்வி நிலையங்களில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை 4,135 பேர் எழுதவுள்ளனர். தேர்வை கண்காணிக்க வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் நிலையில் 3 சுற்றுக்குழு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தேர்வை விடியோ கேமரா மூலம் பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தேர்வு மையங்களுக்கு தடைபடாத மின்சாரம் வழங்கவும், சீராக பேருந்துகளை இயக்கவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் கல்வி நிலையங்களுக்கு காவல் துறை மூலம் போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்வு எழுதுவோர் தங்களின் தேர்வு மையங்களை கண்டறிந்து முன்கூட்டியே வரவேண்டும். தேர்வு அறையினுள் செல்லிடப் பேசிகளை எடுத்துச் செல்ல அனுமதியில்லை. தேர்வு எழுதுவோரைத் தவிர, இதர நபர்கள் தேர்வு மைய வளாகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/20/இன்று-டிஎன்பிஎஸ்சி-தேர்வு-வட்டாட்சியர்-நிலையில்-கண்காணிப்பு-குழு-2923225.html
2923224 திருநெல்வேலி திருநெல்வேலி அண்ணா பல்கலை.யில் மாணவர்களுக்கான சிறப்பு முகாம்: மே 25 இல் தொடக்கம் DIN DIN Sunday, May 20, 2018 02:25 AM +0530 மாணவர்களுக்கு திறமையைத் தேடி' எனும் தலைப்பில் திருநெல்வேலியில் அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் நடைபெறும் சிறப்பு முகாம் 25 இல் தொடங்கி 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
திருநெல்வேலி அண்ணா பல்கலைக் கழக டீன் ஜி. சக்திநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அண்ணா பல்கலைக் கழக திருநெல்வேலி மண்டலம் முதுநிலை பொறியியல் மற்றும் ஆராய்ச்சி பட்டப் படிப்பை அனைத்துப் பொறியியல் பிரிவுகளிலும் வழங்கி வருகிறது. வரும் கல்வியாண்டு முதல் இளங்கலை பொறியியல் பாடத்தினை 4 துறைகளில் வழங்க உள்ளது. இப்பல்கலைக்கழகம் மே 2017 முதல் வட்டார மையமாக செயல்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக 9 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயின்ற பள்ளி மாணவர்களுக்கு திறமையைத் தேடி எனும் தலைப்பில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. மாணவர்களின் திறமையை மேம்படுத்தும் வகையில் நடைபெறும் இந்த முகாம் இம்மாதம் 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி 30 ஆம் தேதி வரை 6 தினங்கள் நடைபெறுகிறது.
முகாம் நாள்களில் தினமும் காலை 7 மணிக்கு யோகா பயிற்சியுடன் 4 பகுதியாக விரிவுரைகள், பல்வேறு செயல்பாடுகளுடன் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்கள், தொழில்துறையில் வெற்றி பெற்றவர்கள், அவர்கள் கையாண்ட யுக்திகள் போன்றவை பகிர்ந்து கொள்ளப்படும்.இதன் மூலம் இளம் வயது மாணவர்கள் தங்களது திறமையை மேம்படுத்துவதுடன், எதிர்காலத்தில் சரியான திசையில் தங்களது செயல்பாடுகளை அமைத்துக் கொள்ளவும், வாழ்க்கையில் தங்களை செம்மைப்படுத்தவும் உதவும்.
இம்முகாமில் 50 மாணவர்கள் பங்கேற்கலாம். முதலில் விண்ணப்பம் செய்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். முகாமில் பங்கேற்க கட்டணம் எதுவும் கிடையாது. ஆர்வமுள்ள மாணவர்கள் ரரர.அமபபயக.அஇ.ஐச என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஈஉஅசஅமபயகஃஅசசஅமசஐய.உஈம என்ற மின்னஞ்சலுக்கு மே 23ஆம் தேதிக்கு முன்னர் வந்து சேரும் வகையில் அனுப்ப வேண்டும்.
முகாமில், பங்கேற்கும் மாணவர்கள் குறித்து இம்மாதம் 24ஆம் தேதி அன்று மின்னஞ்சல் மூலம் உறுதி செய்யப்படும். அனைத்து தகவல் பரிமாற்றங்களும் மின்னஞ்சல் மூலமாகவே மேற்கொள்ளப்படும். மேலும் விவரங்களுக்கு டீன், அண்ணா பல்கலைக் கழக மண்டல அலுவலகம், திருநெல்வேலி-627007 என்ற முகவரியிலும், 0462 2554055 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/20/அண்ணா-பல்கலையில்-மாணவர்களுக்கான-சிறப்பு-முகாம்-மே-25-இல்-தொடக்கம்-2923224.html
2923222 திருநெல்வேலி திருநெல்வேலி நெல்லை கிழக்கு திமுக ஆலோசனைக் கூட்டம் DIN DIN Sunday, May 20, 2018 02:24 AM +0530 திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக தொண்டரணி, சிறுபான்மை அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பாளையங்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலர் இரா. ஆவுடையப்பன் தலைமை வகித்தார். மாநில தொண்டரணி துணை அமைப்பாளர் ஆவின் ஏ. ஆறுமுகம், மாவட்ட துணைச் செயலர் எஸ்.கே. சித்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் கே. செல்வகருணாநிதி, துணை அமைப்பாளர்கள் எஸ்.என். முருகன், பி.கே. முத்துராமலிங்கம், டி. தனபால், சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு அமைப்பாளர் எஸ்.எம்.கே. சிந்தாமதார், துணை அமைப்பாளர்கள் பி. ஷேக் முகைதீன், டி.எம். மைதீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தீர்மானங்கள்: கட்சியின் தலைவர் கருணாநிதியின் 95 ஆவது பிறந்த தினத்தையொட்டி வரும் ஜூன் 1 ஆம் தேதி திருவாரூரில் நடைபெறும் பிறந்த தினக் கூட்டத்தில் பங்கேற்பது. பிறந்த தினமான ஜூன் 3 ஆம் தேதி கட்சி கொடியேற்றுதல், நலத்திட்ட உதவிகள் வழங்குவது.
மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கை குறித்து மக்களை சந்தித்து பிரசாரம் செய்வது, 3 மாதங்களுக்கு ஓர்முறை சார்பு அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/20/நெல்லை-கிழக்கு-திமுக-ஆலோசனைக்-கூட்டம்-2923222.html
2923221 திருநெல்வேலி திருநெல்வேலி தென்காசி பகுதியில் வாகன சிறப்பு சோதனை DIN DIN Sunday, May 20, 2018 02:24 AM +0530 தென்காசி, ஆலங்குளம், செங்கோட்டை, கடையநல்லூர், வீ.கே.புதூர் வட்டப் பகுதிகளில் வாகன சிறப்பு சோதனை நடைபெற்றது.
தென்காசி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சசி அறிவுறுத்தலின்படி, வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் ஆனந்த் தலைமையில், தென்காசி வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் வாகன சிறப்பு சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, வாகனங்களில் அதிக பாரம் ஏற்றியது, சொந்த உபயோகத்திற்கான வாகனத்தை வாடகை வாகனமாக இயக்கியது, அனுமதி சீட்டு இல்லாமல் இயக்கியது, வரி செலுத்தாத கிரேன் வாகனம், அதிவேகமாக சென்ற வாகனம், ஆம்னி பேருந்து ஆகியவைகளுக்கு சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், 5 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டது. தகுதிச் சான்று இல்லாமல் வாகனம் ஓட்டிய 4 வாகனங்கள், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டிய இரண்டு வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டு மேல்நடவடிக்கைக்காக காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, இதுபோன்று வாகன சிறப்பு சோதனை நடைபெறும் என மோட்டார் வாகன ஆய்வாளர் ஆனந்த் தெரிவித்தார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/20/தென்காசி-பகுதியில்-வாகன-சிறப்பு-சோதனை-2923221.html
2922736 திருநெல்வேலி திருநெல்வேலி ரேஷன்கடை ஊழியர்கள் போராட்டம் DIN DIN Saturday, May 19, 2018 05:56 AM +0530 திருநெல்வேலியில் ரேஷன் கடை ஊழியர்கள் வெள்ளிக்கிழமை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலப்பாளையம் சாயன்தரகு தெருவில் உள்ள ரேஷன் கடையில் வியாழக்கிழமை பொருள்கள் வாங்குவது தொடர்பாக கடை ஊழியருக்கும், மேலக்கருங்குளத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் தகராறு ஏற்பட்டதாம்.  இதில் ரேஷன் கடை பெண் ஊழியர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மானூர் வட்டத்தில் உள்ள 480 ரேஷன் கடைகளின் ஊழியர்கள் பணிகளுக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  திருநெல்வேலி சந்திப்பில் உள்ள கூட்டுறவு பேரங்காடி முன்பு ஊழியர்கள் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்ததும் போலீஸார் அங்கு சென்று ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.  கடை ஊழியரைத் தாக்கியவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  ரேஷன் கடைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.  பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து தர்னாவை கைவிட்ட ஊழியர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/19/ரேஷன்கடை-ஊழியர்கள்-போராட்டம்-2922736.html
2922735 திருநெல்வேலி திருநெல்வேலி அமமுக ஆலோசனைக் கூட்டம் DIN DIN Saturday, May 19, 2018 05:55 AM +0530 அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உறுப்பினர் சேர்க்கை ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கட்சியின் மாநகர் மாவட்டச் செயலர் கல்லூர் இ.வேலாயுதம் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலர் எம்.சி.ராஜன், மாவட்டப் பொருளாளர் பால்கண்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.  கூட்டத்தில், கட்சியில் இளைஞர்கள், பெண்களை அதிகளவில் உறுப்பினர்களாக சேர்ப்பது; முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிறந்த திட்டங்களை மக்களிடம் வீடு வீடாக எடுத்துக்கூறி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவு அளிக்கக் கூறுவது என்பன  உள்ளிட்ட தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன. பகுதிச் செயலர்கள் சுப்பையா, பேச்சிமுத்து, முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் முத்துப்பாண்டி, முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/19/அமமுக-ஆலோசனைக்-கூட்டம்-2922735.html
2922734 திருநெல்வேலி திருநெல்வேலி பாளை அருகே மின்னல் பாய்ந்ததில் தொழிலாளி சாவு DIN DIN Saturday, May 19, 2018 05:55 AM +0530 பாளையங்கோட்டை அருகே மின்னல் பாய்ந்ததில் மாடு மேய்க்கும் தொழிலாளி வெள்ளிக்கிழமை இறந்தார்.
பாளையங்கோட்டை சிவந்திப்பட்டி அருகேயுள்ள ஆலங்குளம் கிராமம் தெற்குத் தெருவைச் சேர்ந்த முத்தையா மகன் ஆறுமுகம் (26).  மாடு மேய்க்கும் தொழிலாளி. இவர் தினமும் காட்டுப்பகுதிக்குச் சென்று மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.
வெள்ளிக்கிழமை மாலையில் அங்கு மாடுகளை மேய்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது,  மின்னல் பாய்ந்ததில் மயங்கி விழுந்தார்.  உடனடியாக அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஆறுமுகம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  இறந்த ஆறுமுகத்திற்கு மனைவி, ஒரு குழந்தை உள்ளனர்.   இதுகுறித்து சிவந்திப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/19/பாளை-அருகே-மின்னல்-பாய்ந்ததில்-தொழிலாளி-சாவு-2922734.html
2922733 திருநெல்வேலி திருநெல்வேலி பைக்குகள் மோதல்: இளைஞர் சாவு; இருவர் காயம் DIN DIN Saturday, May 19, 2018 05:55 AM +0530 களக்காடு அருகே வெள்ளிக்கிழமை இரு பைக்குகள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் இளைஞர் உயிரிழந்தார். இருவர் காயமடைந்தனர்.
களக்காடு அருகேயுள்ள கீழப்பத்தையைச் சேர்ந்தவர் சுடலையாண்டி மகன் உச்சிமாகாளி (34). இவரது நண்பர் முத்துராமலிங்கம் மகன் சிவன்பாண்டி (35). இருவரும் மோட்டார் சைக்கிளில் சேரன்மகாதேவி சென்று கொண்டிருந்தனர். பைக் பத்மனேரி பாலத்திற்கு வடபுறம் சென்றபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்குநேர் மோதியது. இதில், உச்சிமாகாளி அந்த இடத்திலேயே இறந்தார். சிவன்பாண்டி, எதிர் வாகனத்தில் வந்த வள்ளியூரை அடுத்த அழகப்பபுரத்தைச் சேர்ந்த  மாயமுத்து மகன் கண்ணன் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். இவர்களை களக்காடு போலீஸார் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக சேர்த்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/19/பைக்குகள்-மோதல்இளைஞர்-சாவு-இருவர்-காயம்-2922733.html
2922732 திருநெல்வேலி திருநெல்வேலி சுத்தமல்லியில் ஆர்ப்பாட்டம் DIN DIN Saturday, May 19, 2018 05:54 AM +0530 மருத்துவ முடித்திருத்தும் தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் சுத்தமல்லியில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சவரத் தொழில் குறித்து ஆட்சேபகரமான கருத்துகளைத் தெரிவித்த தமிழக அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.  ஆர்ப்பாட்டத்துக்கு கிளைத் தலைவர் குமார் தலைமை வகித்தார்.  மாவட்ட பொதுச்செயலர் பண்டாரசிவன்,  மாநிலத் தலைவர் காளியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/19/சுத்தமல்லியில்-ஆர்ப்பாட்டம்-2922732.html
2922731 திருநெல்வேலி திருநெல்வேலி சிவகிரி அருகே அரசுப் பேருந்து மோதியதில் தாய், 3 வயது குழந்தை சாவு DIN DIN Saturday, May 19, 2018 05:54 AM +0530 சிவகிரி அருகே அரசுப் பேருந்து மோதியதில் மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்ற பெண்,  அவரது 3 வயது குழந்தையும் வெள்ளிக்கிழமை இறந்தனர்.
சிவகிரி அருகேயுள்ள ராயகிரி காமராஜர் தெருவைச் சேர்ந்த மாரிமுத்து (28).   இவரது மனைவி சிவசக்தி (23). இத்தம்பதிக்கு துர்கேஷ் (3), யோகேஷ் (2) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
வாசுதேவநல்லூர் அருகே சுப்பிரமணியபுரத்திலுள்ள  உறவினர் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை காலை மோட்டார் சைக்கிளில் மனைவி, குழந்தைகளுடன் சென்றாராம்.  இரவு மோட்டார் சைக்கிளில் மாரிமுத்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாராம்.
பட்டக்காடு விலக்கு அருகே வந்தபோது, முன்பு சென்று கொண்டிருந்த லாரியை மாரிமுத்து முந்தி சென்றாராம்.  அப்போது, மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்தும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் மாரிமுத்து, சிவசக்தி, குழந்தைகளும் தூக்கி வீசப்பட்டனர்.  இதில் பலத்த காயமடைந்த சிவசக்தி, 3 வயது மகன் துர்கேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 
யோகேஷ் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.  பலத்த காயமடைந்த மாரிமுத்து தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  இந்த விபத்தின் காரணமாக மதுரை-தென்காசி பிரதான சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  
விபத்து குறித்து, வாசுதேவநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/19/சிவகிரி-அருகே-அரசுப்-பேருந்து-மோதியதில்-தாய்-3-வயது-குழந்தை-சாவு-2922731.html
2922730 திருநெல்வேலி திருநெல்வேலி சுருக்க முறை திருத்தப் பணி தொடக்கம்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாய்ப்பு DIN DIN Saturday, May 19, 2018 05:53 AM +0530 திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப்பணி தொடங்கியுள்ளதால், 1-1-2019ஐ தகுதி நாளாகக் கொண்டு தகுதியானவர்கள் தங்களது பெயர்களைச் சேர்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:  1-1-2019ஐ தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு சுருக்கமுறை திருத்தம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 
அதன்படி இதற்கான பணிகள் கடந்த 11 ஆம் தேதி தொடங்கியுள்ளது.  முதல்கட்டமாக இம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியை கடந்த 15 ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளனர். இம் மாதம் 20 ஆம் தேதி வரை இப் பணி நடைபெறும். 
இந்த ஆய்வின்போது,  வாக்காளர் விவரங்கள் அடங்கிய பதிவேட்டில் குடும்பத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் விவரங்களை சரிபார்க்க வேண்டும்.  இந்த ஸ்தல ஆய்வின்போது தகுதியானவர்கள் தங்கள் பெயரை புதிதாக சேர்த்திட படிவம் 6 மனு அளிக்கலாம்.  
புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6,  பெயர் நீக்கம் செய்ய படிவம் 7,  பெயர் மற்றும் இதர திருத்தங்கள் செய்திட படிவம் 8 ஏ மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் பெயர் சேர்க்க படிவம் 6ஏ இல் விண்ணப்பங்கள் அளிக்கலாம்.  வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/19/சுருக்க-முறை-திருத்தப்-பணி-தொடக்கம்-வாக்காளர்-பட்டியலில்-பெயர்-சேர்க்க-வாய்ப்பு-2922730.html
2922729 திருநெல்வேலி திருநெல்வேலி கோயில் நிலம் ஆக்கிரமிப்பு: வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை DIN DIN Saturday, May 19, 2018 05:53 AM +0530 திருநெல்வேலி மாவட்டம் சீதபற்பநல்லூர் அருகேயுள்ள புதூரில் கோயில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகக் கூறி அப்பகுதி மக்கள் திருநெல்வேலி வட்டாட்சியர் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் திருநெல்வேலி வட்டாட்சியர் அலுவலகத்தில் அளித்த புகார் மனு:  எங்களுக்கு பாத்தியப்பட்ட புதூர் நடுத்தெருவில் உள்ள ஸ்ரீ சூட்சமுடையார் சாஸ்தா கோயிலைச் சுற்றி ஒரு சிலர் ஆக்கமிரப்பு செய்து வீடு மற்றும் மாட்டுத் தொழுவம் கட்டி பராமரித்து வருகிறார்கள்.  அவர்களிடம் நாங்கள் பலமுறை பேச்சுவார்த்தை  நடத்தியும் கோயிலுக்கு இங்கு இடமில்லை எனக் கூறுகிறார்கள். 
இதையடுத்து கடந்த 14-ஆம் தேதி சீதபற்பநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். அதைத் தொடர்ந்து நில அளவையர் மூலம் அளந்தபோது, அரசு அலுவலர் ஒருவரின் தூண்டுதலின் பேரில் ஒரு தலைபட்சமாக அளக்கப்பட்டது.  எனவே, ஆக்கிரமிப்பை அகற்றி கோயில் நிலத்தை மீட்டுத் தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் உறுதியளித்ததைத்  தொடர்ந்து புதூர் கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/19/கோயில்-நிலம்-ஆக்கிரமிப்பு-வட்டாட்சியர்-அலுவலகம்-முற்றுகை-2922729.html
2922728 திருநெல்வேலி திருநெல்வேலி நெல்லையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் காவல் துறை வங்கிக் கணக்கில் அபராதம் செலுத்தும் திட்டம் அமல் DIN DIN Saturday, May 19, 2018 05:52 AM +0530 திருநெல்வேலி மாநகர பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் காவல் துறையின் வங்கிக் கணக்கில் நேரடியாக அபராதம் செலுத்தும் திட்டம் வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்தது.
மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது, அதிவேகமாக ஓட்டுவது, தலைக்கவசம் அணியாமல் செல்வது உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் திருநெல்வேலி மாநகர போலீஸார் சம்பவ இடத்திலேயே அபராதம் வசூலித்து வருகிறார்கள். 
இந்நிலையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராத தொகையை, மின்னணு பண பரிவர்த்தனை முறையில் வசூலிக்க மாநகர காவல் ஆணையர் கபில்குமார் சராட்கர் உத்தரவிட்டார். அதன்படி இந்தத் திட்டம் வெள்ளிக்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டது. இதற்காக போக்குவரத்து போலீஸாருக்கு 6 ஸ்வைப்பிங் இயந்திரங்களும், சட்டம்-ஒழுங்கு போலீஸாருக்கு 8 இயந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன. அதன் மூலம் அபராதம் செலுத்துவோர் நேரடியாக காவல் துறையின் வங்கிக் கணக்குக்கு செலுத்த வழி செய்யப்பட்டது.
இதுகுறித்து காவல் துறை வட்டாரங்கள் கூறியது: 78 வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்கு சம்பவ இடத்திலேயே இயந்திரம் மூலம் ரசீது வழங்கி அபராதம் வசூலிக்கும் முறை உள்ளது. இப்போது பணமற்ற பரிவர்த்தனையை முன்னிறுத்தி புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. விதிமீறுவோர் தங்களது கடன்அட்டைகள், பற்றுஅட்டைகள் மூலம் அபராதம் செலுத்தலாம். இப்போது ரசீதுக்கு ஓர் இயந்திரமும், பணம் செலுத்த தனி இயந்திரமும் பயன்படுத்தப்படுகிறது. அடுத்தகட்டமாக இரு வசதியையும் கொண்ட ஒரே இயந்திரத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/19/நெல்லையில்-போக்குவரத்து-விதிகளை-மீறுபவர்கள்-காவல்-துறை-வங்கிக்-கணக்கில்-அபராதம்-செலுத்தும்-திட்டம்-அ-2922728.html
2922727 திருநெல்வேலி திருநெல்வேலி புதிய தமிழகம் படைக்க வாருங்கள்: இளைஞர்களுக்கு கமல்ஹாசன் அழைப்பு DIN DIN Saturday, May 19, 2018 05:52 AM +0530 புதிய தமிழகம் படைக்க வாருங்கள் என இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.
திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்ட கமல்ஹாசன், பாளையங்கோட்டை, மேலப்பாளையம், திருநெல்வேலி நகரம் ஆகிய இடங்களில் திறந்த வேனில் நின்றபடி பேசினார். திருநெல்வேலி நகரத்தில் வாகையடி முனை பகுதியில் கமல்ஹாசன் பேசியதாவது: 
வழிப்போக்கனாக இப்பகுதிக்கு வந்து போயிருக்கிறேன். ஆனால் சரித்திர பிரசித்தி பெற்ற இந்த இடத்தில், பல பெருந்தலைவர்கள் நின்று பேசிய இடத்தில் இன்று நானும் பேசிக்கொண்டிருக்கிறேன். 
பாரதி நடந்த வீதி, எழுதிய வீதி, நடந்துகொண்டே சிந்தித்த வீதி, இந்தப் பெரு வீதியில் அரசியலில் புதிதாய்ப் புகுந்திருக்கும் நான் வந்து பேசிக்கொண்டிருப்பது காலத்தின் கட்டாயம். 
இங்கே மக்கள் நீதி மய்யம் வந்திருப்பது உங்களை படிப்பதற்காக, உங்கள் மனங்களையும், உங்கள் கவலைகளையும் படித்து புரிந்து கொள்வதற்காக. 
ஒவ்வொரு ஊருக்கும் போகிறபோது, அந்தந்த ஊர் மக்களின் அன்பை பார்க்கும்போது, அங்கேயே  தங்கிவிடலாமா என்று தோன்றுகிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர்.
இதுவரை பேசிய வசனங்கள் சம்பளத்துக்காக பேசியவை. இப்போது பேசுவது வசனமல்ல.  நீங்கள் காட்டும் அன்பினால் வரும் வெளிப்பாடு. என் அம்மா கொடுத்த மாதிரியான அன்பை அல்லவா இவர்கள் கொடுக்கிறார்கள்? அதற்கு நான் பதிலுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்ய வேண்டும் என்பதை ஒரு தமிழனாக, இந்தியனாக புரிந்துகொண்டு கட்சியைத் தொடங்கியிருக்கிறேன். சரியாக சொல்வதானால், நீங்கள் என்னை தொடங்க வைத்திருக்கிறீர்கள்.
நாங்கள் 30 ஆண்டுகளுக்கு முன்னால் சொன்னது, நற்பணி இயக்கத்தாருக்கு ஞாபகம் இருக்கும். சாதனை என்பது சொல் அல்ல செயல். அந்த செயலை ஒரு செயலியுடன் தொடங்கிவிட்டது மக்கள் நீதி மய்யம். 
இதைத் தொடர்ந்து செய்வதற்கு ஏற்கெனவே இருந்தவர்கள் இருந்து கொண்டேயிருக்கிறார்கள். இனி வருபவர்களையும் வரவேற்கிறோம். வாருங்கள், வாருங்கள் புதிய தமிழகம் படைக்கும் இந்தப் பொறுப்பில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள் என்றார். 
மேலப்பாளையத்தில்...
முன்னதாக மேலப்பாளையத்தில் கமல்ஹாசன் பேசியதாவது: மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கியுள்ள நான் மக்களின் மனநிலையை அறியவே வந்துள்ளேன். நோன்பு காலத்தில் வந்து தொந்தரவு செய்வதாக கருதிவிட வேண்டாம். உங்களை சந்திக்கும் ஆசையில் நேரம் காலம் பார்க்காமல் வந்துள்ளேன். எனது கட்சி அனைத்து தரப்பினரிடமும் பேசப்படுவது ஊக்கப்படுத்துவதாக உள்ளது.
அடுக்கு மொழியில் பேசி மக்களைக் கவர்வதைவிட மக்களுக்கான அடுத்தகட்ட வேலையை செய்வது குறித்து எங்கள் கட்சி சிந்தித்து வருகிறது. தமிழகத்தை புதிய இடத்திற்கு கொண்டு செல்ல அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

விசிலுக்கு பறந்த விசில்...
வாகையடி முனை பகுதியில் கமல்ஹாசன் பேசுகையில், "மக்கள் நீதி மய்யம் உருவாக்கிய "மய்யம் விசில்' என்ற செயலி உறுப்பினர்களுக்காக மட்டுமே வழங்கப்படுவது. அது இங்கே எத்தனை பேரிடம் இருக்கிறது?' என்று கேள்வியெழுப்பினார். அப்போது அங்கு கூடியிருந்த அனைவரும் விசில் அடித்து தங்களிடம் "விசில் மையம் செயலி' இருப்பதை உறுதி செய்தார்கள்.
அதைத் தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், "இதுவே மனதிற்கு இதமான ஒரு செய்தி. நம்பிக்கையூட்டும் செய்தி. இந்த செயலி செல்லிடப்பேசியில் இருக்கும் சாதாரண செயலி அல்ல. தமிழகத்தை நாம் செதுக்கும் உளி. அதை நீங்கள் பயன்படுத்த வேண்டும். அது உங்கள் பயனுக்காக உருவாக்கப்பட்டது. அதைவிட முக்கிய கடமை ஒன்று இருக்கிறது உங்களுக்கு. அதை பயன்படுத்துவதும், எங்களுக்கு தெரிவிப்பதும் உறுப்பினர்களின் கடமை' என்றார்.


புத்தகம் பரிசளித்த தொண்டர்!
1.      மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் சுற்றுப் பயணத்தையொட்டி திருநெல்வேலி மாநகர பகுதிகளில் கட்சிக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. பாளையங்கோட்டை, திருநெல்வேலி நகரம் உள்ளிட்ட பகுதிகளில் மக்களையும், தொண்டர்களையும் கவரும் வகையில் ஒயிலாட்டக் குழுவினர் உறுமி மேளத்துடன் நடனமாடினர். 
2.      பாளையங்கோட்டை நேருஜி திடல் அருகே கட்சியினர் எதிர்பார்த்ததைவிட பெண்கள், இளைஞர்கள் கூட்டம் அதிகளவில் திரளாததால் மக்கள் மத்தியில் சுமார் 2 நிமிடம் மட்டுமே பேசிய கமல்ஹாசன்,  உங்களை மீண்டும் சந்திக்க வருவேன் எனக் கூறி புறப்பட்டார்.
3.  மேலப்பாளையத்தில் கமல்ஹாசன் பேசிமுடித்ததும் தொண்டர் ஒருவர்  "ஜ்ர்ழ்ப்க் ஸ்ரீழ்ண்ள்ண்ள் ல்ங்ஹஸ்ரீங்' என்ற புத்தகத்தை பரிசளித்தார். திருநெல்வேலி நகரத்தில் தொண்டர் ஒருவர் தனது ஓவியத்தைக் காட்டியபோது அதனைப் பெற்ற கமல்ஹாசன் "ஆட்டோ கிராப்' போட்டு கொடுத்தார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/19/புதிய-தமிழகம்-படைக்க-வாருங்கள்-இளைஞர்களுக்கு-கமல்ஹாசன்-அழைப்பு-2922727.html
2922726 திருநெல்வேலி திருநெல்வேலி ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் DIN DIN Saturday, May 19, 2018 05:52 AM +0530 திருநெல்வேலியில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஊரக  வளர்ச்சித்துறை பணியாளர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாரத பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் இலக்கு நிர்ணயித்து திட்டத்தை நிறைவேற்றாமல், தகுதியான நபர்களை அடையாளம் கண்டு வீடுகள் வழங்க வேண்டும்.  அதற்கு  கிராம சபையின் ஒப்புதல் பெற்று வழங்க வேண்டும்.
தனிநபர் இல்ல கழிப்பறை திட்டத்திற்கான மானியத் தொகையை ரூ. 20 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். வேலைவாய்ப்பின்றி நகரத்தை நோக்கி செல்லும் கிராமப்புற மக்களுக்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் கொண்டு வரப்பட்டு ஆண்டுக்கு 100 நாள்கள் வேலை வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் வேலையின் தன்மை மாறுபட்டுள்ளது. ஆகவே, இப்பணியினை ஆய்வு செய்து கண்மாய் தூர் வாருதல், நீர்வரத்து கால்வாய் தூர்வாருதல் போன்ற பணிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் முன்பு நடைபெற்ற  இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் தலைவர் வெ. சண்முகசுந்தரம் தலைமை  வகித்தார். 
மாவட்டச் செயலர் க. சுப்பிரமணியன், மாவட்ட துணைத் தலைவர் சு. பார்த்தசாரதி,  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் வீ. பார்த்தசாரதி,  மாவட்டப் பொருளாளர் லோகிதாசன், மாவட்ட இணைச் செயலர் ராஜாராம் உள்பட 100- க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தை அரசு ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் ந. குமாரவேல் முடித்து வைத்தார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/19/ஊரக-வளர்ச்சித்துறை-பணியாளர்கள்-ஆர்ப்பாட்டம்-2922726.html
2922725 திருநெல்வேலி திருநெல்வேலி நெல்லையில் பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் DIN DIN Saturday, May 19, 2018 05:51 AM +0530 ஆசிரியர்களின் பொது மாறுதல் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்த வலியுறுத்தி,  திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
ஆசிரியர்களின் பொதுமாறுதல் கலந்தாய்வை ஒளிவு மறைவில்லாமல் வெளிப் படையாக நடத்த வேண்டும்.  கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளுக்கு அரசு வழங்கும் நிதியை நிறுத்த வேண்டும்.
பள்ளி மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் பணி நிரவலை முழுமையாக கைவிட வேண்டும்.  பள்ளிகளில் ஆசிரியர்-மாணவர்கள் விகிதத்தை 1 க்கு 20 என்ற அடிப்படையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் திருநெல்வேலியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாநில மகளிரணித் தலைவர் டி. ஜேனட் பொற்செல்வி தலைமை வகித்தார்.
மாநிலப் பொருளாளர் எஸ். செல்லையா ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தார்.  நிர்வாகிகள் சு. மெய்யப்பன், வி. பூஜைதுரை,  ராமச்சிந்திரன்,  வேல்முருகன்,  ஜெராபின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/19/நெல்லையில்-பட்டதாரி-ஆசிரியர்கள்-ஆர்ப்பாட்டம்-2922725.html
2922724 திருநெல்வேலி திருநெல்வேலி நெல்லையில் பெண்களுக்கான இலவச வாகன ஓட்டுநர் பயிற்சி DIN DIN Saturday, May 19, 2018 05:51 AM +0530 ஐஓபி கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் சார்பில் பெண்களுக்கான இலவச நான்குசக்கர வாகன ஓட்டும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக ஐஓபி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் வி.குணசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  எங்கள் நிறுவனம் சார்பில் இம் மாதம் 28 ஆம் தேதி முதல் 30 நாள்களுக்கு இலவச நான்குசக்கர வாகன ஓட்டும் பயிற்சி தொடங்கப்பட உள்ளது. 
குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 21 முதல் 35 வயதுக்குள்பட்டவர்கள் பயிற்சியில் சேரலாம்.  கிராமப்புற வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும்.  பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் இயக்குநர், ஐஓபி கிராமிய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம்,  மகாராஜநகர், திருநெல்வேலி-11 என்ற முகவரிக்கு இம் மாதம் 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.  
இதுகுறித்த விவரங்களுக்கு 0462-2574265 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/19/நெல்லையில்-பெண்களுக்கான-இலவச-வாகன-ஓட்டுநர்-பயிற்சி-2922724.html
2922723 திருநெல்வேலி திருநெல்வேலி மணல் கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை: எஸ்.பி. எச்சரிக்கை DIN DIN Saturday, May 19, 2018 05:51 AM +0530 திருநெல்வேலி மாவட்டத்தில் மணல் கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.வே. அருண்சக்திகுமார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியது:
மாவட்டத்தில் மணல் கடத்தல் தொடர்பாக இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மணல் கடத்திய 4 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், சிலரை இந்த சட்டத்தில் கைது செய்வது தொடர்பான பட்டியல் தயார்செய்யப்பட்டு வருகிறது.
மணல் கடத்தல் கும்பலால் கொலைசெய்யப்பட்ட போலீஸ் தலைமைக்காவலர் ஜெகதீஷ் துரை மனைவி, போலீஸார் மீது கூறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மணல் கடத்தலைத் தடுக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. மணல் கடத்தலில் ஈடுபடுவோர், திருட்டு மணலை விற்பவர்கள், முகவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வடக்கு தாழையூத்தில் பேருந்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சிலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் அவர்.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/19/மணல்-கடத்துவோர்-மீது-கடும்-நடவடிக்கை-எஸ்பி-எச்சரிக்கை-2922723.html
2922722 திருநெல்வேலி திருநெல்வேலி நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் பழங்கால பொருள்கள் கண்காட்சி DIN DIN Saturday, May 19, 2018 05:50 AM +0530 திருநெல்வேலியில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் பழங்கால பொருள்கள் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை வரை (மே 20) இக்கண்காட்சி நடைபெறுகிறது. 
சர்வதேச அருங்காட்சியக தினத்தையொட்டி, திருநெல்வேலியில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில், பழங்காலத்து பொருள்கள் மூலமாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்ற தலைப்பிலான இந்த சிறப்புக் கண்காட்சியின் தொடக்க விழாவுக்கு, மாவட்ட அறிவியல் அலுவலர் எஸ்.எம். குமார் தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.வே. அருண்சக்திகுமார் தொடங்கி வைத்தார். 
இக்கண்காட்சியில் இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்து ராணுவத்தில் பயன்படுத்தப்பட்ட தகவல் சேகரிப்பு ரேடியோ, 1900 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் பயன்படுத்தப்பட்ட டிபன்கேரியர், உரிமங்களுடன் கூடிய ரேடியோக்கள், வெற்றிலைப்பெட்டி, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த டைப்ரைட்டிங் இயந்திரங்கள், அரிக்கேன் விளக்கு, பாக்குவெட்டி, கூஜா, மரத்தால் செய்யப்பட்ட பணப்பெட்டி, வெற்றிலைப்பெட்டி, 1663 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட கத்திகள், பித்தளை வாள், தொலைபேசி, நாழி, உழக்கு உள்ளிட்ட அளவை பொருள்கள் உள்பட ஏராளமானவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பல்வேறு நாடுகளின் நாணயங்கள், அஞ்சல் தலைகளும் இடம்பெற்றுள்ளன. பல்வேறு நாடுகளின் 100 ரூபாய் நாணயங்கள், நோட்டுகள் கவரும் வகையில் உள்ளன. பித்தளை, இரும்பால் செய்யப்பட்ட கலைப்பொருள்கள் வியக்கவைக்கின்றன. 
இதுகுறித்து அறிவியல் மைய அலுவலர்கள் கூறுகையில், இம்மாதம் 20 ஆம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாள்கள் கண்காட்சி நடைபெற உள்ளது. பழங்கால கார்கள்,  மோட்டார் சைக்கிள்கள், கடிகாரங்கள், தொலைக்காட்சிகள், மிதிவண்டிகளையும் மக்கள் காட்சிப்படுத்த வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இளம்தலைமுறையினருக்கு பழங்கால கருவிகளை காட்சிப்படுத்தவும், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இக்கண்காட்சி நடத்தப்படுகிறது என்றனர்.
மாவட்ட அறிவியல் மைய கல்வி உதவியாளர் மாரிலெனின் நன்றி கூறினார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/19/நெல்லை-மாவட்ட-அறிவியல்-மையத்தில்-பழங்கால-பொருள்கள்-கண்காட்சி-2922722.html
2922721 திருநெல்வேலி திருநெல்வேலி தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் கோபுரத்தின் மீது ஏறியவர் கைது DIN DIN Saturday, May 19, 2018 05:50 AM +0530 தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் கோபுரத்தின் உச்சியில் ஏறிச்சென்று பதுங்கியவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைதுசெய்தனர்.
தென்காசி மலையான்தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் மணிகண்டன் (29). இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது.  வெள்ளிக்கிழமை அதிகாலை பணியில் இருந்த காவலர்களின் காவலையும் மீறி கோபுரத்தின் உச்சிக்கு சென்றுள்ளார். அதோடு, கோபுரத்தின் உச்சிக்கு வேறு யாரும் வரமுடியாதவாறு கதவை பூட்டிக்கொண்டு கோபுரத்தின் உச்சியில் அமர்ந்துகொண்டார்.
இதையடுத்து, அங்கு விரைந்து வந்த தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன், மணிகண்டனுடன் பேசி அவரை கீழே அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டார். 
இதில், மணிகண்டன் மனநிலை சரியில்லாதவர் என்றும், கடந்த சில தினங்களுக்கு முன்பு இதேபோல, தென்காசியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தின் மணிக்கூண்டின் உச்சியில் ஏறிச்சென்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து கோயில் அலுவலர் அளித்த புகாரின் பேரில், தென்காசி போலீஸார் வழக்குப் பதிந்து மணிகண்டனை கைதுசெய்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/19/தென்காசி-காசிவிஸ்வநாதர்-கோயில்-கோபுரத்தின்-மீது-ஏறியவர்-கைது-2922721.html
2921949 திருநெல்வேலி திருநெல்வேலி பாளை. மண்டல அலுவலகத்தில் சிறப்பு முகாம்: 241 பேருக்கு ஆணை DIN DIN Friday, May 18, 2018 06:37 AM +0530 பாளையங்கோட்டை மண்டல அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் 241 பேருக்கு ஆணைகள் வழங்கப்பட்டன.
திருநெல்வேலி மாநகராட்சியில் தச்சநல்லூர், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மேலப்பாளையம் பகுதிகளுக்கு உள்பட்ட பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் சொத்துவரி பெயர்மாற்றம், காலிமனை வரிவிதிப்பு, பாதாளசாக்கடை இணைப்பு அனுமதி, கட்டட வரைபட அனுமதி போன்ற கோப்புகளுக்கான ஆணைகள் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி, திருநெல்வேலி, தச்சநல்லூர், மேலப்பாளையம் மண்டல அலுவலகங்களில் முகாம் நடைபெற்றது.
தொடர்ந்து, பாளையங்கோட்டை மண்டல அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற முகாமை, மண்டல உதவி ஆணையர் எஸ்.அய்யப்பன் தொடங்கி வைத்தார். சொத்துவரி பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பித்த 25 பேர் உள்பட மொத்தம் 241 பேருக்கு ஆணைகள் வழங்கப்பட்டன.
செயற்பொறியாளர் (திட்டம்) என்.நாராயணன், துணை இயக்குநர் (மக்கள் தொடர்பு அலுவலர்) எஸ்.கண்ணதாசன், உதவி செயற்பொறியாளர் எல்.கே.பாஸ்கர், நிர்வாக அலுவலர் சங்கரி, சுகாதார அலுவலர் ஏ.சுப்பிரமணியன், கண்காணிப்பாளர் எஸ்.சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/18/பாளை-மண்டல-அலுவலகத்தில்-சிறப்பு-முகாம்-241-பேருக்கு-ஆணை-2921949.html
2921948 திருநெல்வேலி திருநெல்வேலி மாவட்ட மைய நூலகத்தில் கழிவுப் பொருள்களில் இருந்து கலைப்பொருள் தயாரிக்கும் பயிற்சி DIN DIN Friday, May 18, 2018 06:37 AM +0530 பாளையங்கோட்டையில் உள்ள திருநெல்வேலி மாவட்ட மைய நூலகத்தில், கோடை கொண்டாட்டம் என்ற பெயரில் கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இதில், 10-ஆவது நாளான வியாழக்கிழமை கழிவுப் பொருள்களில் இருந்து கலைப்பொருள்களை உருவாக்குவது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. 
பாளையங்கோட்டை கவின் ஆர்ட் ஆனந்த பெருமாள்,  ஐஸ் கிரீம் குச்சியில் சிறுசிறு ரோஜாக்களை இணைத்து சுவரில் மாட்டும் கலைப் பொருளாக மாற்றுவது, குளிர்பான பாட்டில்களை சிறுசிறு துண்டுகளாய் நறுக்கி கலைப் பொருள்களாக மாற்றுவது என பல்வேறு பயிற்சிகளை குழந்தைகளுக்கு அளித்தார். குழந்தைகள் ஆர்வத்துடன் அவற்றை கற்றுக்கொண்டனர்.  
குழந்தைகளை பரவசப்படுத்த நாகரீக கோமாளியாக வந்து கதை சொன்னார் ஆசிரியர் சங்கர்ராம். வால் உள்ள கோமாளியை குழந்தைகள் ஆர்வத்துடன் பார்த்தனர். அவர், குழந்தைகளுக்கு கத்தரிக்காய் கதை ஒன்றை கூறினார். கதை சொல்லி முடித்தவுடன், எல்லா குழந்தைகளும் கோமாளியை தோளுக்குமேல் தூக்கி கொண்டாடினர்.  
இன்றைய நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்த எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன் பேசும்போது, கதைகள் சொல்லும்போது சொல்பவரின் கற்பனை திறன் அதிகமாகிறது. மதிப்பெண்கள் பின்னால் மாணவர்கள் ஓடாமல், வாழ்க்கைக்கு தேவையான கல்வியை புரிந்து படிக்கும் கல்வியே சிறந்தது என உணர வேண்டும். மன அழுத்தம் குறைந்து, உற்சாகம் மேலிட வேண்டும் எனில், கதைகள் படிக்க வேண்டும். ஆச்சி, தாத்தாக்களிடம் கதைகள் கேட்க வேண்டும் என்றார்.
நூலகர் முத்துகிருஷ்ணன் மற்றும் பணியாளர்கள் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/18/மாவட்ட-மைய-நூலகத்தில்கழிவுப்-பொருள்களில்-இருந்து-கலைப்பொருள்-தயாரிக்கும்-பயிற்சி-2921948.html