Dinamani - தூத்துக்குடி - http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3037474 திருநெல்வேலி தூத்துக்குடி கோவில்பட்டி ரயில் நிலையத்தில் இளைஞரை தாக்கி பணம் பறிப்பு DIN DIN Tuesday, November 13, 2018 01:06 AM +0530  

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நடைமேடை அருகே நடந்து சென்று கொண்டிருந்த பட்டதாரி இளைஞரை தாக்கி பணம் பறித்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கோவில்பட்டியையடுத்த முடுக்கலாங்குளம் நடுத் தெருவைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் சமுத்திரப்பாண்டியன் (21). பி.எஸ்.சி. பட்டதாரியான இவர், தூத்துக்குடியில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் அரசுத் தேர்வுக்காக படித்து வருகிறாராம். இந்நிலையில் திங்கள்கிழமை மைசூர் - தூத்துக்குடி ரயிலில் செல்வதற்காக கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நடைமேடையில் நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது அவரை வழிமறித்த 3 மர்ம நபர்கள் அவரை தாக்கி அவரிடமிருந்த ரூ.2ஆயிரத்தை பறித்தனர். இதில் காயமடைந்த சமுத்திரப்பாண்டியன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/13/கோவில்பட்டி-ரயில்-நிலையத்தில்-இளைஞரை-தாக்கி-பணம்-பறிப்பு-3037474.html
3037473 திருநெல்வேலி தூத்துக்குடி கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினர் ஆய்வு DIN DIN Tuesday, November 13, 2018 01:06 AM +0530
கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினரின் ஆய்வு திங்கள்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்றிதழ் பெறுவதற்கான அனைத்துப் பணிகளையும் மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன் தலைமையில், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், ஆய்வக உதவியாளர்கள் உள்ளிட்டோர் சில தினங்களாகவே மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் விபத்து சிகிச்சை நிபுணர் அமித்லத்வால், கேரள மாநிலம் சாலக்குடி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் சிவதாஸ், உலக சுகாதார மைய ஆலோசகர் அன்கூர்சூடன் ஆகியோர் கொண்ட குழுவினர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் திங்கள்கிழமை தனது ஆய்வை தொடங்கினர்.
ஆய்வுக்குழுவினர் மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு சிகிச்சை பிரிவு, ஆய்வகம், ஆண்கள் மற்றும் பெண்கள் சிகிச்சை பெறும் உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவு, நிர்வாக அலுவலகத்தை திங்கள்கிழமை ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வு செவ்வாய் மற்றும் புதன்கிழமையும் தொடரும். முன்னதாக, ஆய்வுக் குழுவினரை மருத்துவ நலப் பணி இணை இயக்குநர் பரிதாசெரீன் தலைமையில், மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன், துணை இயக்குநர்கள் போஸ்கோராஜா (சுகாதாரப் பணி), யமுனா (தொழுநோய்), சுந்தரலிங்கம் (காசநோய்), பத்மநாபபுரம் அரசு மருத்துவர் ரியாஷ் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்தில், மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் சேவைகள் குறித்தும், இயங்கி வரும் பிரிவுகள், எதிர்கொள்ளும் சவால்களையும் எடுத்துக்கூறினார்.
தொடர்ந்து, தேசிய தரச்சான்றிதழ் வழங்குவதற்காக ஆய்வு செய்ய வந்துள்ள தர மதிப்பீட்டுக் குழுவினருக்கு நன்றி தெரிவித்தார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/13/கோவில்பட்டி-அரசு-தலைமை-மருத்துவமனையில்-தேசிய-தர-மதிப்பீட்டுக்-குழுவினர்-ஆய்வு-3037473.html
3037472 திருநெல்வேலி தூத்துக்குடி கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் DIN DIN Tuesday, November 13, 2018 01:06 AM +0530
கோவில்பட்டி, கயத்தாறு, சாத்தான்குளத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராம நிர்வாக அலுவலர்களுக்கு இணையதள வசதிகளை உடனடியாக வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை உடனே செய்ய வேண்டும். கூடுதல் பொறுப்பூதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க வட்டத் தலைவர் அமர்ராஜ் தலைமை வகித்தார். செயலர் மந்திரசூடாமணி, பொருளாளர் லிங்கராஜ் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
இதுபோல, கயத்தாறு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநில முதன்மை பொதுச்செயலர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். வட்டத் தலைவர் நெல்லையப்பன், செயலர் சுப்பையா, பொருளாளர் கல்யாணகுமார் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
சாத்தான்குளம்: வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க வட்டத் தலைவர் சுரேஷ்ராஜன் தலைமை வகித்தார். துணைச் செயலர் கந்தவள்ளிக்குமார், துணைத் தலைவர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சங்க வட்டத் தலைவர் பொன்சேகர், வருவாய்த் துறை அலுவலர்கள் சங்க வட்டத் தலைவர் சுவாமிநாதன் ஆகியோர் பேசினர். கிராம நிர்வாக அலுவலர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/13/கிராம-நிர்வாக-அலுவலர்கள்-ஆர்ப்பாட்டம்-3037472.html
3037471 திருநெல்வேலி தூத்துக்குடி கோவில்பட்டி ரயில் நிலையத்தில் இளைஞரை தாக்கி பணம் பறிப்பு DIN DIN Tuesday, November 13, 2018 01:06 AM +0530
கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நடைமேடை அருகே நடந்து சென்று கொண்டிருந்த பட்டதாரி இளைஞரை தாக்கி பணம் பறித்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கோவில்பட்டியையடுத்த முடுக்கலாங்குளம் நடுத் தெருவைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் சமுத்திரப்பாண்டியன் (21). பி.எஸ்.சி. பட்டதாரியான இவர், தூத்துக்குடியில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் அரசுத் தேர்வுக்காக படித்து வருகிறாராம். இந்நிலையில் திங்கள்கிழமை மைசூர் - தூத்துக்குடி ரயிலில் செல்வதற்காக கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நடைமேடையில் நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது அவரை வழிமறித்த 3 மர்ம நபர்கள் அவரை தாக்கி அவரிடமிருந்த ரூ.2ஆயிரத்தை பறித்தனர். இதில் காயமடைந்த சமுத்திரப்பாண்டியன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/13/கோவில்பட்டி-ரயில்-நிலையத்தில்-இளைஞரை-தாக்கி-பணம்-பறிப்பு-3037471.html
3037470 திருநெல்வேலி தூத்துக்குடி விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை DIN DIN Tuesday, November 13, 2018 01:05 AM +0530
தூத்துக்குடி மாவட்டத்தில் விடுபட்ட விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டு நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி, பாரதிய கிசான் சங்கத்தினர் திங்கள்கிழமை கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2016-17ஆம் ஆண்டுக்குரிய பயிர்க் காப்பீட்டு நிவாரணத் தொகையை அனைத்து விவசாயிகளுக்கும் முறையாக வழங்கவேண்டும், வெங்கடாசலபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க விவசாயிகள் 70 பேருக்கு மேல் பயிர்க் காப்பீட்டு நிவாரணத் தொகை தற்போது வரை வழங்கப்படவில்லை. இதுகுறித்து பலமுறை மனுக்கள் அளித்தும் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.
மேலும், கோவில்பட்டி வட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் விடுபட்ட விவசாயிகள் அனைவருக்கும் எவ்வித காலதாமதமுமின்றி உடனடியாக பயிர்க் காப்பீட்டு நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய கிசான் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் ரெங்கநாயகலு தலைமையில், மாவட்ட துணைத் தலைவர் பரமேஸ்வரன், இளையரசனேந்தல் குறுவட்ட உரிமை மீட்புக் குழுத் தலைவர் முருகன் உள்பட விவசாயிகள் திரளானோர் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன் மண்டியிட்டு கையில் துணி ஏந்தி பிச்சை எடுக்கும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் கோரிக்கை மனுவை கோட்டாட்சியர் விஜயாவிடம் அளித்துவிட்டு போராட்டக் குழுவினர் கலைந்து சென்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/13/விவசாயிகளுக்கு-பயிர்க்-காப்பீட்டுத்-தொகையை-வழங்கக்-கோரி-கோட்டாட்சியர்-அலுவலகம்-முற்றுகை-3037470.html
3037469 திருநெல்வேலி தூத்துக்குடி ஆறுமுகனேரியில் ஒப்பந்ததாரர் தற்கொலை DIN DIN Tuesday, November 13, 2018 01:05 AM +0530
ஆறுமுகனேரியில் ஒப்பந்ததாரர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஆறுமுகனேரியை சேர்ந்த ஆறுமுகம் மகன் கணேச சுப்பிரமணியன் (45). தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்ததாரர். இவரது மனைவி ஜானகி. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஓராண்டுக்கு முன்பு கணவரை பிரிந்து சென்றுவிட்டார். இதில், மனமுடைந்த இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ஆறுமுகனேரி போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/13/ஆறுமுகனேரியில்-ஒப்பந்ததாரர்-தற்கொலை-3037469.html
3037468 திருநெல்வேலி தூத்துக்குடி குடிநீர் வசதி, கால்வாய் தூர்வார வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு DIN DIN Tuesday, November 13, 2018 01:05 AM +0530
தூத்துக்குடியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், குடிநீர் வசதி செய்துதர வலியுறுத்தியும், நீர்வரத்து கால்வாயை தூர்வார வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், ஆட்சியர் சந்தீப் நந்தூரி கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
அப்போது, தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், மேல தட்டப்பாறை கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் அளித்த மனு விவரம்:
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், மேல தட்டபாறை ஊராட்சிக்குள்பட்ட கேம்ப் தட்டப்பாறை, மேல தட்டப்பாறை, எஸ்எஸ் காலனி, செட்டியூரணி ஆகிய கிராமங்களில் ஏறத்தாழ 650- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
தற்போது, மேல தட்டப்பாறை, கேம்ப் தட்டப்பாறை, எஸ்எஸ் காலனி, செட்டியூரணி ஆகிய கிராமங்களுக்கு தேவையான குடிநீர் வசதியை உமரிக்கோட்டையில் உள்ள கிணற்றில் இருந்து பம்பிங் செய்து வழங்கி வருகின்றனர்.
அந்தத் தண்ணீர் அதிக உப்புத்தன்மை உடையதாகவும், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தகுதியற்ற நிலையிலும் இருந்து வருகிறது. எனவே, எங்களது கிராமத்துக்கு அருகே செல்லும் சீவலப்பேரி கூட்டுக் குடி நீர் திட்டத்தின் கீழ் செல்லும் குழாயில் இருந்து மேலத்தட்டப்பாறை , உமரிக்கோட்டை ஆகிய ஊராட்சிப் பகுதிகளுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் மனு: தாமிரவருணி ஸ்ரீவைகுண்டம் வடகால் மடை எண் 1, விவசாயிகள் அபிவிருத்தி சங்கத்தினர் ஆட்சியரிடம் அளித்த மனு: கால்வாயை சீரமைக்கும் பணிகளை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தினர் செய்து வந்தனர். அதனால் எங்கள் பகுதி விவசாயிகளும் பயன் அடைந்து வந்தனர். கால்வாயை மீண்டும் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கால்வாயை தூர்வார உதவும் வகையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்ணீரை அகற்ற வலியுறுத்தல்: தூத்துக்குடி கோரம்பள்ளம் சேகரகுரு தனசிங் தலைமையில் அந்தப் பகுதி மக்கள் ஆட்சியரிடம் அளித்த மனு: கடந்த சில நாள்களாக பெய்த கனமழை காரணமாக மழைநீர் மற்றும் கழிவுநீர் சேர்ந்து ஊரை சுற்றிலும் தண்ணீர் தேங்கி சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. கோரம்பள்ளம் வடக்குதெரு, கோயில் தெரு, பிஎஸ்பி நகர் 1,2,3 அன்னை ஸ்கொயர் தெரு, பரிபூரண காலனி உள்பட அனைத்து தெருக்களில் தண்ணீர் தேங்கி புழுக்கள் நிறைந்து காணப்படுகிறது. எனவே, மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு மழைநீரை அகற்ற வடிகால் வசதியும், அந்தப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநங்கைகள் மனு: தூத்துக்குடியைச் சேர்ந்த திருநங்கைகள் பலர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: தூத்துக்குடி பகுதியில் பிளஸ் 2 முதல் பட்டப்படிப்பு வரை பயின்ற திருநங்கைகள் பலர் உள்ளனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தி பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
எனவே, பிற மாவட்டங்களில் செயல்படுத்துவது போல் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு, இலவச வீட்டு மனை திட்டம் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/13/குடிநீர்-வசதி-கால்வாய்-தூர்வார-வலியுறுத்தி-ஆட்சியரிடம்-மனு-3037468.html
3037467 திருநெல்வேலி தூத்துக்குடி அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி முற்றுகை DIN DIN Tuesday, November 13, 2018 01:04 AM +0530
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி தாமஸ் நகர் பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
இலுப்பையூரணி ஊராட்சிக்கு உள்பட்ட தாமஸ் நகர் பகுதியில் சேதமடைந்த நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சீரமைக்க வேண்டும், பழுதடைந்த நிலையில் உள்ள நியாயவிலைக் கடை கட்டடத்தை சீரமைக்க வேண்டும், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு உடனடியாக அடையாள அட்டை வழங்க வேண்டும், கழிவு நீர் ஓடையை முறையாக சுத்தம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இலுப்பையூரணி ஆதிதிராவிடர் சமூக சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் சிவசாமி தலைமையில், தாமஸ் நகர் பகுதி பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் போராட்டக்குழுவினர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் கிரியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட அவர் தங்கள் கோரிக்கை குறித்து முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து போராட்டக் குழுவினர் கலைந்து சென்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/13/அடிப்படை-வசதிகளை-செய்து-தரக்-கோரி-முற்றுகை-3037467.html
3037466 திருநெல்வேலி தூத்துக்குடி கஜா புயல்: முன்னேற்பாடுகள் தயார் DIN DIN Tuesday, November 13, 2018 01:04 AM +0530
கஜா புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது என்று ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அவர் கூறியது:
கஜா புயலால் வட தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 15ஆம் தேதி வரை தூத்துக்குடி மாவட்டத்தில் மழை பெய்யக் கூடும் என்பதால் அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. எந்தவித கனமழை வந்தாலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அதை எதிர்கொள்ள தயார் நிலையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சுழல் காற்று மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில், அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு மற்றும் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வீசக்கூடும். தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும். எனவே, மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம். ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்பவும் ஏற்கெனவே எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம்.
டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றிக் காய்ச்சல் தொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் பெரிய அளவில் எந்தவித பாதிப்பும் இல்லை. டெங்கு காய்ச்சல் தொடர்பாக மூவரும், பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டம் முழுவதும் துப்புரவு பணியாளர்கள் முகாமிட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றார் அவர்.
தொடர்ந்து, சிறப்பாக பசுமைப் பள்ளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிய ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/13/கஜா-புயல்-முன்னேற்பாடுகள்-தயார்-3037466.html
3037465 திருநெல்வேலி தூத்துக்குடி கழுகுமலை கோயிலில் தாரகாசூர சம்ஹாரம் DIN DIN Tuesday, November 13, 2018 01:03 AM +0530
கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு தாரகாசூர சம்ஹாரம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலின் கந்தசஷ்டி திருவிழா இம்மாதம் 8ஆம் தேதி தொடங்கியது. விழா நாள்களில் மண்டகப்படிதாரர்கள் சார்பில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
சுவாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள், தீபாராதனை நடைபெற்றன. 5ஆம் திருநாளான திங்கள்கிழமை கழுகாசலமூர்த்தி திருக்கோயிலில் மட்டுமே தாரகாசூரன் வதம் நடைபெறும். இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து கழுகாசலமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னர், கழுகாசலமூர்த்தி வெள்ளிச்சப்பரத்தில் திருவீதியுலா நடைபெற்றது. பின்னர் முருகன் தாரகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி பகல் 12.15 மணிக்கு கோயில் வாசல் முன் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், கோயில் நிர்வாக அலுவலர் கார்த்தீஸ்வரன், பிரதோஷக் குழுத் தலைவர் முருகன் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். 6ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை காலை சுவாமி பல்லக்கிலும், வள்ளி, தெய்வானை பூஞ்சப்பரத்திலும் திருவீதியுலா வருதலும், பிற்பகல் 3 மணிக்கு சுவாமி வீரவேல் ஏந்தி மயில் வாகனத்தில் எழுந்தருளி போர்க்களம் வருதலும், பின்னர் 4.30 மணிக்கு சூரசம்ஹாரம் செய்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
9ஆம் திருநாளான நவம்பர் 16ஆம் தேதி இரவு 7 மணிக்கு மேல் திருக்கல்யாணமும், 17ஆம் தேதி இரவு பட்டணப்பிரவேசமும் நடைபெறும். 11ஆம் திருநாளான நவம்பர் 18ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/13/கழுகுமலை-கோயிலில்-தாரகாசூர-சம்ஹாரம்-3037465.html
3037464 திருநெல்வேலி தூத்துக்குடி தேசிய நூலக வார விழா நாளை தொடக்கம் DIN DIN Tuesday, November 13, 2018 01:03 AM +0530
தூத்துக்குடி மாவட்ட மைய நூலகத்தில் 51ஆவது தேசிய நூலக வார விழா புதன்கிழமை (நவ.14) தொடங்குகிறது.
இதுகுறித்து மாவட்ட நூலக அலுவலர் மா. ராம்சங்கர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேசிய நூலக வார விழாவின் முதல் நிகழ்ச்சியாக தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள மாவட்ட மைய நூலக வளாகத்தில் புதன்கிழமை முற்பகல் 11 மணிக்கு இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறுகிறது. தொடர்ந்து நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் மதுரை கருவூலத் துறை கூடுதல் இயக்குநர் கணேசன் கலந்து கொண்டு பேசுகிறார்.
நவ. 15ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு மாவட்ட மைய நூலகத்தில் முதியோர்களின் இனிமையான மலரும் நினைவுகள் என்ற தலைப்பில் முதியோர்களுக்கான அனுபவ உரையாடல் நிகழ்ச்சியும், தியானப் பயிற்சியும் நடைபெறுகிறது. நவ. 16ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பொது அறிவு விநாடி-வினா நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நவ. 17ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கான புத்தாக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நவ. 18ஆம் தேதி மாலை 3 மணிக்கு வாசிப்போம் நேசிப்போம் என்ற தலைப்பில் பார்வையற்றோருக்கான நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நவ. 19 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு மகளிருக்கான மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தேசிய நூலக வார விழாவின் நிறைவு நிகழ்ச்சி நவ. 20 ஆம் தேதி மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. மாவட்ட அளவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு இளம் படைப்பாளர் விருது வழங்கப்படுகிறது. விழாவில், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கலந்துகொண்டு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்குகிறார் என செய்திக்குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/13/தேசிய-நூலக-வார-விழா-நாளை-தொடக்கம்-3037464.html
3037463 திருநெல்வேலி தூத்துக்குடி ஊர் பெயர் ஆங்கிலத்தில் மாற்றம்: கருத்து தெரிவிக்க ஆட்சியர் அழைப்பு DIN DIN Tuesday, November 13, 2018 01:03 AM +0530
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பெயர் தமிழ் உச்சரிப்பில் ஒன்றும், ஆங்கில உச்சரிப்பில் ஒன்றும் என இருப்பதை ஒரே மாதிரியாக மாற்றும் வகையில் கருத்துகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் உள்ள ஊர்ப் பெயர்கள் தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் உதாரணமாக திருவல்லிக்கேணி என்பதை டிரிப்ளிகேன் (பதஐடகஐஇஅசஉ) என்று ஆங்கிலத்தில் குறிப்பிடாமல் திருவல்லிக்கேணி (பஏஐதமயஅககஐஓஉசஐ) என்றே அமையவும், இதுபோன்று எண்ணற்ற ஊர்களின் பெயர்கள் தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் அமைக்க தமிழ் வளர்ச்சித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
அந்த அரசாணையில் தமிழகத்தில் உள்ள ஊர்ப் பெயர்கள் தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் அமைத்திட ஆவணங்களின் அடிப்படையிலும், ஊர்ப் பொதுமக்களின் தீர்மானங்கள், கோரிக்கைகளின் அடிப்படையிலும், ஊர்ப் பெயர்களைப் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியரின் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்த ஆணையை செயற்படுத்தும் வகையில் ஊர் பொதுமக்கள், தமிழறிஞர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கில உச்சரிப்பும் அமையப் பெறாத ஊர்களின் பெயர்ப் பட்டியலை தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ, அஞ்சல் மூலமாகவோ விரைவில் அளித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/13/ஊர்-பெயர்-ஆங்கிலத்தில்-மாற்றம்-கருத்து-தெரிவிக்க-ஆட்சியர்-அழைப்பு-3037463.html
3036902 திருநெல்வேலி தூத்துக்குடி "குறு, சிறு தொழில் நிறுவனங்கள் புத்தாக்க பற்றுச்சீட்டு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்' DIN DIN Monday, November 12, 2018 01:15 AM +0530 தூத்துக்குடி மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் புத்தாக்க பற்றுச்சீட்டு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு:  தமிழக அரசு புதியதாக புத்தாக்க பற்றுச்சீட்டு என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 
இந்தத் திட்டம் 400 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொழில் முனைவோருக்கு ஆண்டுதோறும் ரூ. 20 கோடி வரவு செலவு திட்டத்தில் சென்னையில் உள்ள தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் ஆண்டு 2018-19 முதல் செயல்படுத்தப்படும்.
இந்தத் திட்டம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கண்டுபிடிப்பு திறனை அதிகரிக்கவும், புதுமையான தயாரிப்புகள் வணிக ரீதியாக செயல்படுத்தக் கூடியதாகும். விஞ்ஞானம் மற்றும் கண்டுபிடிப்புகளில் விழிப்புணர்வு மற்றும் பங்கு பெறுதலை அதிகரித்தல், தொழில்துறை, கல்வியியல் மற்றும் அரசு ஆகியவற்றிற்கு இடையில் ஒத்துழைப்பை ஊக்குவித்தல் மற்றும் நிலைப்படுத்துதல் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். 
இந்தத் திட்டத்தில் ஆண்டுதோறும் தொழில் மற்றும் வணிக துறை இணையதளம் W​W​W.​I​N​D​C​O​M.​T​N.​G​O​V.​I​N/​I​VP     மூலம் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யலாம். இந்த விண்ணப்பங்களை தொழில்நுட்பக் குழு ஆய்வு செய்து, வழிகாட்டு குழுவின் மூலம் தேர்வு செய்யப்படும். 
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிலை சேர்ந்தவர்கள் இந்தத் திட்டத்தின் மூலமாக பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட தொழில் மைய பொதுமேலாளாரை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/12/குறு-சிறு-தொழில்-நிறுவனங்கள்-புத்தாக்க-பற்றுச்சீட்டுதிட்டத்தில்-பயன்பெற-விண்ணப்பிக்கலாம்-3036902.html
3036900 திருநெல்வேலி தூத்துக்குடி குரூப்-2 தேர்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் 11,752 பேர் எழுதினர் DIN DIN Monday, November 12, 2018 01:14 AM +0530 தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப்-2 தேர்வை 11 ஆயிரத்து 752 பேர் எழுதினர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப்- 2 பதவிக்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், கோவில்பட்டி ஆகிய 4 வட்டங்களில் 57 மையங்களில் தேர்வு நடைபெற்றது. 
தேர்வு எழுதுவதற்கு மொத்தம் 15,621 பேர் விண்ணப்பித்திருந்தனர். இருப்பினும், 11 ஆயிரத்து 752 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 3869  பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. 
தூத்துக்குடியில் 27 மையங்களில் நடைபெற்ற தேர்வில் பங்கேற்க 7,636 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 5,735 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். ஸ்ரீவைகுண்டத்தில் 3 மையங்களில் நடைபெற்ற தேர்வில் பங்கேற்க 784 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 606 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.
கோவில்பட்டியில் 18 மையங்களில் நடைபெற்ற தேர்வில் பங்கேற்க 4,917 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 3,718 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். திருச்செந்தூரில் 9 மையங்களில் நடைபெற்ற தேர்வில் பங்கேற்க 2,252 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1,693 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். கோவில்பட்டியில் தேர்வு மையங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலராக நியமனம் செய்யப்பட்ட சண்முகசுந்தரம் முன்னிலையில், அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், 18  மையங்களில் நடைபெற்ற தேர்வுகளை கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் பரமசிவன் ஆகியோர் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.  
அனைத்து மையங்களிலும் தேர்வு விடியோ மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 4 வட்டங்களிலும் வட்டாட்சியரின் ஒருங்கிணைப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். துணை ஆட்சியர் நிலையில் 7 பறக்கும்'படை குழுக்களும், துணை வட்டாட்சியர் தலைமையில் 10 குழுக்களும் நியமிக்கப்பட்டு, தேர்வு மையங்களை கண்காணித்தனர். தேர்வு மையங்களைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/12/குரூப்-2-தேர்வு-தூத்துக்குடி-மாவட்டத்தில்-11752-பேர்-எழுதினர்-3036900.html
3036899 திருநெல்வேலி தூத்துக்குடி "இலவச கறவைப்பசுக்கள் பெற விரும்பும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்' DIN DIN Monday, November 12, 2018 01:14 AM +0530 தூத்துக்குடி மாவட்டத்தில் இலவச கறவைப் பசுக்கள் வழங்க பெண் பயனாளிகள் நவ. 16ஆம் தேதி நடைபெறும் சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு விண்ணப்பம் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு வழங்கும் சிறப்பு திட்டமான இலவச கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டத்தில் 2018-2019ஆம் ஆண்டுக்கு டிசம்பர் 2018 மற்றும் ஜனவரி 2019 மாதத்துக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி கோட்டத்தில்  கொடியன்குளம், மீனாட்சிபுரம், தெற்குகல்மேடு, அருண்குளம், தலைக்கட்டுபுரம் ஆகிய 5 கிராமங்களில் பயனாளிகள் தேர்வு செய்திடும் வகையில் நவ. 16ஆம் தேதி சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.
எனவே, இலவச கறவைப் பசு பெற்றிட விரும்பும் பெண் பயனாளிகள் நவ. 16ஆம் தேதி அந்தந்த ஊராட்சி  சிறப்பு கிராம சபைகளில் கலந்துகொண்டு உரிய விண்ணப்பங்கள் அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அவ்வாறு அளிக்கப்பட்ட விண்ணப்பங்களில் இருந்து நவ. 23ஆம் நடைபெறும் சிறப்பு கிராம சபையில் தேர்வுக் குழுவினரால் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/12/இலவச-கறவைப்பசுக்கள்-பெற-விரும்பும்பெண்கள்-விண்ணப்பிக்கலாம்-3036899.html
3036897 திருநெல்வேலி தூத்துக்குடி தூத்துக்குடி ரத வீதிகளில் நாமத்வார் அமைப்பினர் துப்புரவுப் பணி DIN DIN Monday, November 12, 2018 01:13 AM +0530 பொதுமக்கள் மத்தியில் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், காட் இந்தியா அமைப்பு மற்றும் நாமத்வார் அமைப்பு நிர்வாகிகள் தூத்துக்குடி சிவன் கோயில் நான்கு ரத வீதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை துப்புரவுப் பணியில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி வடக்கு ரதவீதியில் உள்ள நாமத்வார் பிரார்த்தனை மையத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் துப்புரவுப் பணியில் ஈடுபட்டு குப்பைகளை சேகரித்தனர். பின்னர், மாநகாரட்சி குப்பை வண்டிகளில் அந்த குப்பைகளை ஏற்றி அங்கிருந்து அகற்றினர்.
இதுகுறித்து, நாமத்வார் அமைப்பு நிர்வாகி மால்ராஜ்  கூறுகையில்,  ஸ்ரீ முரளிதர ஸ்வாமிஜியின் ஆசியுடன் 8 ஆவது  ஆண்டாக  தூத்துக்குடியில் பொதுமக்களிடம் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூய்மை  பணிகளை மேற்கொண்டோம் என்றார் அவர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/12/தூத்துக்குடி-ரத-வீதிகளில்-நாமத்வார்-அமைப்பினர்-துப்புரவுப்-பணி-3036897.html
3036896 திருநெல்வேலி தூத்துக்குடி திருச்செந்தூரில் பாமக செயற்குழுக் கூட்டம் DIN DIN Monday, November 12, 2018 01:13 AM +0530 திருச்செந்தூரில் தெற்கு மாவட்ட பாமக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயற்குழுக் கூட்டம், திருச்செந்தூர் கீழரத வீதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. 
தெற்கு மாவட்டச் செயலர் பரமகுரு தலைமை வகித்தார். தெற்கு மாவட்டத் தலைவர் செட்டி ஆறுமுகம், மாவட்ட அமைப்பு செயலர் சிவபெருமாள், மாவட்ட அமைப்பு தலைவர் பார்வதிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கூட்டத்தில், டெங்கு பரவாமல் தடுக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்படவேண்டும். திருச்செந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அனைத்து பாடப் பிரிவுக்கும் ஆசிரியர்களை நியமனம் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 
இதில்,  மாநில அமைப்பு துணைத் தலைவர் வள்ளிநாயகம், மாநில இளைஞரணி துணைச் செயலர் முகம்மது மெய்தின், மாவட்ட இளைஞரணிச் செயலர் ரமேஷ், மாவட்ட துணைத் தலைவர் மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக நகரச் செயலர் செந்தில்முருகன் வரவேற்றார். திருச்செந்தூர் ஒன்றியச் செயலர் பிரபாகர் நன்றி கூறினார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/12/திருச்செந்தூரில்-பாமக-செயற்குழுக்-கூட்டம்-3036896.html
3036895 திருநெல்வேலி தூத்துக்குடி கோவில்பட்டி பள்ளியில் மொழியியல், உயிரியியல் ஆய்வகம் திறப்பு DIN DIN Monday, November 12, 2018 01:12 AM +0530 கோவில்பட்டி காமராஜ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட மொழியியல் மற்றும் உயிரியியல் ஆய்வக கட்டடம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.  
இப்பள்ளிக்கு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ரூ. 5 லட்சம் நன்கொடையாக வழங்கியது. இதனையடுத்து, அந்த நிதியின் மூலம் பள்ளி வளாகத்தில் மொழியியல் ஆய்வகம், உயிரியியல் ஆய்வகம், மழலையர் வகுப்பறை, பெண்களுக்கான பசுமை கழிப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டன. 
அதன் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் ஏ.பி.கே. பழனிசெல்வம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் செல்வராஜ், செயலர் ஜெயபாலன், பொருளாளர் சுரேஷ்குமார், தொழிலதிபர் திலகரத்தினம், பள்ளிச் செயலர் செந்தில்கனிராஜா, பொருளாளர் வழக்குரைஞர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிர்வாக இயக்குநர் ராமமூர்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, புதிய கட்டடத்தை திறந்து வைத்துப் பேசினார். 
விழாவில், வங்கி இயக்குநர்கள் நாகராஜன், அசோக், பொதுமேலாளர் ரவீந்திரன், மண்டல மேலாளர் ராமநாதன், கோவில்பட்டி வங்கிக் கிளை மேலாளர்கள் செந்தில்குமார், கென்னடி மற்றும் பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கணேசமூர்த்தி, ரவிமாணிக்கம், சுவாமிராஜன், நீதிராஜன், வள்ளுவன், கண்ணன், பள்ளிச் செயலர்கள் கண்ணப்பன் (காமராஜ் இண்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளி), கண்ணன் (நாடார் நடுநிலைப் பள்ளி), ராஜேந்திரபிரசாத் (ஐசிஎம் நடுநிலைப் பள்ளி)  மற்றும் பள்ளி ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பள்ளி முதல்வர் ஜோதிலட்சுமி வரவேற்றார். பள்ளியின் தொடக்கப் பள்ளி ஒருங்கிணைப்பாளர் உமாதேவி நன்றி கூறினார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/12/கோவில்பட்டி-பள்ளியில்-மொழியியல்-உயிரியியல்-ஆய்வகம்-திறப்பு-3036895.html
3036894 திருநெல்வேலி தூத்துக்குடி விஜயராமபுரம் பள்ளியில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம் DIN DIN Monday, November 12, 2018 01:12 AM +0530 சாத்தான்குளம் அருகே உள்ள விஜயராமபுரம் ஸ்ரீமுத்தாரம்மன் இந்து நடுநிலைப் பள்ளியில் டெங்கு  தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது. 
பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெகதீசபாண்டி தலைமை வகித்து, மாணவர்களுக்கு சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். கொசு உற்பத்தியாகும்  தேங்காய் சிரட்டை, உரல், டயர் போன்றவற்றை அப்புறப்படுத்தவேண்டும். குடிநீரை பாதுகாப்பான முறையில் சேமித்து பயன்படுத்தவேண்டும் என அறிவுறுத்தினார். தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது. இதில், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். உதவி ஆசிரியர் சண்முகராஜ் நன்றி கூறினார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/12/விஜயராமபுரம்-பள்ளியில்-டெங்கு-தடுப்பு-விழிப்புணர்வுக்-கூட்டம்-3036894.html
3036893 திருநெல்வேலி தூத்துக்குடி ஆறுமுகனேரியில் முதியோருக்கு நல உதவி DIN DIN Monday, November 12, 2018 01:12 AM +0530 ஆறுமுகனேரி லைட் முதியோர் இல்லத்தில் திருச்செந்தூர் உதவும் உள்ளங்கள் அமைப்பு சார்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கபட்டன.
நிகழ்ச்சிக்கு அமைப்பின் நிறுவனர் கோடீஸ்வரன் தலைமை வகித்தார். அமைப்பாளர்  முருகேசன், கௌரவ ஆலோசகர்  பால்ராஜ்,  ராஜசேகர் மற்றும் அருணாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்செந்தூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் சுரேஷ்பாபு சிறப்புரை ஆற்றினார். முதியோர்களுக்கு தேவையான பொருள்கள் மற்றும் இனிப்பு வகைகள் வழங்கப்பட்டன. கார்த்திகேயன், முத்துகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முதியோர் இல்ல நிறுவனர் பிரேம்குமார் நன்றி கூறினார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/12/ஆறுமுகனேரியில்-முதியோருக்கு-நல-உதவி-3036893.html
3036892 திருநெல்வேலி தூத்துக்குடி தேரிக்குடியிருப்பில் விழிப்புணர்வுப் பேரணி DIN DIN Monday, November 12, 2018 01:11 AM +0530 திருச்செந்தூர்  ஒன்றியம், காயாமொழி அருகேயுள்ள தேரிக்குடியிருப்பு கிராமத்தில், வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
காமராசர் மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கிய பேரணியில் மருத்துவ அலுவலர் அஜய் கலந்து கொண்டு மாணவ, மாணவியருக்கு டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் குறித்தும், வட்டார மேற்பார்வையாளர் சுப்பிரமணியன் காய்ச்சல் தடுப்பு பற்றியும் விளக்கமளித்தனர். பேரணியில் திரளான மாணவர்கள் பங்கேற்றனர். சுகாதார ஆய்வாளர் கு.ஜெய்சங்கர் நன்றி கூறினார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/12/தேரிக்குடியிருப்பில்விழிப்புணர்வுப்-பேரணி-3036892.html
3036891 திருநெல்வேலி தூத்துக்குடி நவ. 15 இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் DIN DIN Monday, November 12, 2018 01:11 AM +0530 தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் நவ. 15ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கான நவம்பர் மாதத்துக்கான குறைதீர் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 15ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு ஆட்சியர் தலைமையில் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் கலந்துகொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/12/நவ-15-இல்-விவசாயிகள்-குறைதீர்-கூட்டம்-3036891.html
3036890 திருநெல்வேலி தூத்துக்குடி மது விற்பனை: இருவர் கைது; 293 மதுபாட்டில்கள் பறிமுதல் DIN DIN Monday, November 12, 2018 01:11 AM +0530 கோவில்பட்டியில் இரு வெவ்வேறு இடங்களில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இருவரை கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்த 293  மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். 
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது எட்டயபுரம் சாலையில் உள்ள திரையரங்கு அருகே சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் ராஜ்குமாரை(49)  கைது செய்த போலீஸார் அவரிடமிருந்த 250 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். 
இதுபோல, கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள தினசரி சந்தை நுழைவுவாயில் அருகே அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்ட செல்லப்பாண்டியன் நகரைச் சேர்ந்த வெள்ளைப்பாண்டி மகன் காந்தாரிமுத்துவை (28) கைது செய்த போலீஸார் அவரிடமிருந்த 43 மதுபாட்டில்கள் மற்றும் ரொக்கப்பணம் ரூ. 750-யை பறிமுதல் செய்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/12/மது-விற்பனை-இருவர்-கைது-293-மதுபாட்டில்கள்-பறிமுதல்-3036890.html
3036889 திருநெல்வேலி தூத்துக்குடி தூத்துக்குடி பேராசிரியைக்கு விருது DIN DIN Monday, November 12, 2018 01:10 AM +0530 தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி பேராசிரியைக்கு சர்வதேசக் கல்வி ஆராய்ச்சிக்கான  சிறப்பு விருது அண்மையில் வழங்கப்பட்டது.
இந்திய கல்வி அறக்கட்டளையின் சர்வதேச கல்வி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையமும், குருக்குள் இன்ஸ்டிடியூட் ஆப் என்ஜீனியரிங் டெக்னாலஜி நிறுவனமும் இணைந்து,  இந்திய அளவில் உயர்கல்வி ஆராய்ச்சி, வளர்ச்சி நடவடிக்கைகளில் சிறந்து விளங்கும் கல்வியாளர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி கோவா மாநிலம், பன்ஜிம் நகரில் உள்ள சர்வதேச மையத்தில் நடைபெற்றது.
விழாவில், தாய்லாந்து நாட்டின் சர்வதேச தொழில்நுட்பக் கல்வி ஆலோசகர் ஜிடப்பா தாவரிட் கலந்துகொண்டு சர்வதேச கல்வி ஆராய்ச்சிக்கான சிறப்பு விருதை தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரிப் பொருளாதாரத் துறை பேராசிரியை டி. அமுதாவுக்கு வழங்கினார்.
பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியை டி. அமுதா, பொருளாதாரம் குறித்து ஆங்கிலத்தில் 16 ஆராய்ச்சி நூல்களும், சர்வதேச அளவிலான பத்திரிகைகளில் 248 ஆராய்ச்சிக் கட்டுரைகளும் எழுதி உள்ளார். தமிழக அளவில் அதிக எண்ணிக்கையில் ஆய்வு நூல்களும்,ஆய்வுக் கட்டுரைகளும் எழுதி இருக்கும் பொருளாதாரத் துறை பேராசிரியர் என்ற தகுதியின் அடிப்படையில் அவருக்கு விருது வழங்கப்பட்டதாக விழாவில் அறிவிக்கப்பட்டது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/12/தூத்துக்குடி-பேராசிரியைக்கு-விருது-3036889.html
3036886 திருநெல்வேலி தூத்துக்குடி தொழிலில் நஷ்டம்: சாத்தூரில் பெண் உள்பட இருவர் தற்கொலை DIN DIN Monday, November 12, 2018 01:08 AM +0530 விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே தொழில் நஷ்டத்தால் பெண் உள்பட இருவர் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டனர். 
தூத்துக்குடி மாவட்டம், நாலுமாவடி பகுதியைச் சேர்ந்தவர் முத்து. விவசாயியான இவருக்கு சுந்தர், பாஸ்கர் ஆகிய 2 மகன்கள். இருவரும்  திருமணமாகி தனித்தனியே வசித்து வந்தனர்.
இந்நிலையில், சுந்தரின் மனைவி உஷா (36), பாஸ்கர் (40) ஆகிய இருவரும் சேர்ந்து நாலுமாவடி பகுதியில் ஏலச் சீட்டு நடத்தி வந்துள்ளனர். ஏலத்தில் பணம் எடுத்தோர் சரியாக பணம் கட்டாததால், தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரின் வீட்டிலும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில்,  சாத்தூர் அருகேயுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில்  உஷாவும், பாஸ்கரும் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்துள்ளனர். பின்னர், கோயில் அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
இதைப் பார்த்த அப்பகுதியினர் இருவரையும் மீட்டு, சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலின்பேரில் இருக்கன்குடி போலீஸார் மருத்துவமனைக்குச் சென்று, இருவரிடமும் விசாரித்துள்ளனர். அப்போது,  தொழில் நஷ்டத்தால் மனமுடைந்து இருவரும் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இந்நிலையில், இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.  போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/12/தொழிலில்-நஷ்டம்-சாத்தூரில்-பெண்-உள்பட-இருவர்-தற்கொலை-3036886.html
3036884 திருநெல்வேலி தூத்துக்குடி சாத்தான்குளம் அருகே செக்கால் ஓடை அடைப்பு: விவசாயிகள் புகார் DIN DIN Monday, November 12, 2018 01:07 AM +0530 சாத்தான்குளம் அருகே செட்டிக்குளம், இளமால்குளம், நார்த்தன்குறிச்சி குளங்களுக்கு தண்ணீர் வரவிடாமல் செக்கால் ஓடை அடைக்கப்பட்டுள்ளது என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
சாத்தான்குளம் வட்டம், செட்டிக்குளம், நார்த்தன்குறிச்சி, இளமால்குளம் குளங்கள் மூலம் நேரடி மற்றும் மறைமுகமாக சுமார் 1500 ஏக்கர் விவசாய நிலங்கள்  பாசன வசதி பெறுகின்றன. இந்தக் குளங்கள் மழையை நம்பியே உள்ளதால் இந்த குளங்களுக்கு மழைக் காலங்களில் செக்கால் ஓடை வழியாக இளமால்குளத்துக்கு தண்ணீர் வந்து பின்னர் மற்ற இரு குளங்களுக்கு வந்து சேரும் நிலை உள்ளது. 
இந்நிலையில், கருங்கடல் கிராம எல்லையில் செக்கால் ஓடையில்  தண்ணீர் வரும் பாதையை சிலர் சேதப்படுத்தி, தடுப்பு அணை போல்  கட்டி தண்ணீரை வேறு பாதைக்கு திருப்பி விட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து செட்டிக்குளம் குடிமராமத்து விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூறியது: எங்களது  பகுதி குளங்களை எங்களது சங்கம் சார்பில் மராமத்து செய்ய முடிவு செய்துள்ளோம். ஆனால் இந்த குளங்களுக்கு தண்ணீர் வர விடாமல் சில விஷமிகள் தடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டால் இதுபற்றிய தகவல் வரவில்லை; நேரில் பார்வையிட்டு இக்குளங்களுக்கு முறையாக தண்ணீர் வர நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். இதை நிலை  தொடர்ந்தால்  இந்த மழை காலத்தில் எங்கள் குளங்களுக்கு தண்ணீர் வராமல் விவசாயம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. ஆதலால் சேதப்படுத்தப்பட்டுள்ள செக்கால் ஓடையைச் சீரமைத்து குளங்களுக்கு முறையாக தண்ணீர் விட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர். 
மேலும், இதுகுறித்து தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/12/சாத்தான்குளம்-அருகே-செக்கால்-ஓடை-அடைப்பு-விவசாயிகள்-புகார்-3036884.html
3036882 திருநெல்வேலி தூத்துக்குடி அரசுப் பள்ளிக்கு உதவிய சாகுபுரம் கமலாவதி பள்ளி DIN DIN Monday, November 12, 2018 01:07 AM +0530 சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்-மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளி கருணா சங்கம், டேலன்ட் குவெஸ்ட் ஃபார் இந்தியா அமைப்பு ஆகியவற்றின் சார்பில் "கொடுத்தலிலில் மகிழ்ச்சி' வார விழாவை கொண்டாடினர். இதையொட்டி, சக மாணவ- மாணவியரிடமிருந்து சேகரிக்கப்பட்ட பேனா, பென்சில், ரப்பர் போன்ற கல்வி உபகரணங்களை,  பள்ளி முதல்வர் சண்முகானந்தன், தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ஸ்டீபன் பாலாசிங், கருணா சங்க ஆசிரியை மிக்காமேரி, மாணவர்-மாணவிகள் ஆகியோர் வரண்டியவேல் இந்து நடுநிலைப் பள்ளி, தெற்கு ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, தலைவன்வடலிலி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, ஆறுமுகனேரி செல்வராஜபுரம் ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப் பள்ளி, வாலவிளை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, இந்து சரஸ்வதி நடுநிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளுக்குச் சென்று மாணவர்-மாணவிகளிடம் வழங்கினர்.  அவற்றைப் பெற்றுக்கொண்ட மாணவர்- மாணவிகள் நன்றி தெரிவித்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/12/அரசுப்-பள்ளிக்கு-உதவிய-சாகுபுரம்-கமலாவதி-பள்ளி-3036882.html
3036881 திருநெல்வேலி தூத்துக்குடி காயல்பட்டினத்தில் சுகாதார பராமரிப்பு பணிகள் DIN DIN Monday, November 12, 2018 01:06 AM +0530 வடகிழக்குப் பருவமழைக் காலத்தையொட்டி, காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் தனித்தும், பொதுநல அமைப்புகளுடன் இணைந்தும்  சுகாதாரப் பராமரிப்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோமான் நற்பணி மன்றத்துடன் இணைந்து, அருணாச்சலபுரம் தேசிய துவக்கப் பள்ளியில் பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பரவல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ் விழிப்புணர்வுரையாற்றினார். பின்னர், அப்பகுதி மக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது.
காயல்பட்டிம் நகராட்சி வளாகம், பேருந்து நிலைய வளாகத்தில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதோடு, கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாமல் தடுப்பதற்கான சோதனைப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. உச்சினிமாகாளியம்மன் கோவில் தெருவிலும், ஸீகஸ்டம்ஸ் சாலையிலுள்ள இளைஞர் ஐக்கிய முன்னணி (ஒய்யுஎப்) நூலக வளாகத்திலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு, நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது. கொசுக்களை ஒழிப்பதற்காக நகராட்சி சார்பில் நகரின் அனைத்து தெருக்களிலும் கொசு ஒழிப்புப் புகை அடிக்கப்பட்டது. 
சின்ன நெசவுத் தெரு - பெரிய நெசவுத் தெரு இடைச்சாலையிலும், அங்குள்ள மூப்பனார் ஓடையிலும் பழுதுகள் சரி செய்யப்பட்டன.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/12/காயல்பட்டினத்தில்-சுகாதார-பராமரிப்பு-பணிகள்-3036881.html
3036708 திருநெல்வேலி தூத்துக்குடி வைரஸ் காய்ச்சல்: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 182 பேர் அனுமதி DIN DIN Sunday, November 11, 2018 08:57 AM +0530 வைரஸ் காய்ச்சல் பாதிப்பு காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 182 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அதிகாரி சோமசுந்தரம் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு குறித்தும், அதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்வதற்காக மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அதிகாரியாக பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநரான மருத்துவர் சோமசுந்தரம் நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து, அவர் தலைமையிலான குழுவினர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, தனியார் மருத்துவமனைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மாவட்டத்தில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு குறித்தும், அதற்கான முன்னேற்பாடுகள் பணிகள் குறித்தும் ஆய்வு செய்த குழுவினர் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை மேற்கொண்டனர்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டபோது பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் இருவர் சிகிச்சை பெற்று வருவதாகவும், டெங்கு பாதிப்பு இல்லை என்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு காரணமாக 182 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க சிறப்பு கண்காணிப்பு குழு அதிகாரி உத்தரவிட்டார்.
ஆய்வின்போது, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கீதாராணி, மருத்துவர் ராமசுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/11/வைரஸ்-காய்ச்சல்-தூத்துக்குடி-அரசு-மருத்துவமனையில்-182-பேர்-அனுமதி-3036708.html
3036707 திருநெல்வேலி தூத்துக்குடி "வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்' DIN DIN Sunday, November 11, 2018 08:57 AM +0530 தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ம. பேச்சியம்மாள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எந்தவித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவருக்கு  ரூ.200, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 300, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400, பட்டதாரிகளுக்கு ரூ.600 என 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை  வழங்கப்படுகிறது. இந்தத் தொகை நேரடியாக மனுதாரர்களது (ஆதார் இணைக்கப்பட்ட) வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
இதற்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து  5 ஆண்டுகளுக்குமேல் காத்திருப்பவராகவும்,  பதிவை தொடர்ந்து புதுப்பித்து வருபவராகவும் இருக்க வேண்டும். வயது வரம்பு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45-க்கு மிகாமலும், மற்றவர்கள் 40-க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50,000-க்குள் இருக்க வேண்டும்.
 உதவித்தொகை பெற தகுதியுடையோர் அனைத்துக் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் தூத்துக்குடி ஆசிரியர் காலனி, முதல்தெருவில் பாண்டியன் கிராம வங்கியின் பின்புறம் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நவ. 28ஆம் தேதிக்குள் நேரில் இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் அனைத்து வேலைநாள்களிலும் வழங்கப்படும். மேலும் உதவித் தொகை பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. உதவித்தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு பரிந்துரைத்தலுக்கு எந்தவித தடையும் ஏற்படாது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/11/வேலைவாய்ப்பற்ற-இளைஞர்கள்உதவித்தொகைக்கு-விண்ணப்பிக்கலாம்-3036707.html
3036706 திருநெல்வேலி தூத்துக்குடி தட்டார்மடம் சாலையில் ஆபத்தான மின்கம்பங்கள் DIN DIN Sunday, November 11, 2018 08:57 AM +0530 சாத்தான்குளம் ஒன்றியம், சிறப்பூர் விலக்கு பகுதியில் இருந்து தட்டார்மடம் வரையிலான சாலையில் மின்கம்பங்கள் மிகவும் பழுதடைந்து காணப்படுகின்றன. 
சிறப்பூர் விலக்கு - தட்டார்மடம் சாலை விவசாய நிலங்கள் சூழ்ந்ததாகும். இந்த விவசாய நிலங்களுக்கு அருகிலுள்ள கிராமங்களில் இருந்து மின் இணைப்பு பெறும் வகையில் சாலையோரம் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் உயர் அழுத்த மின் கம்பிகளும் இந்த மின்கம்பத்தின் வழியாக செல்கின்றன.
இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் கம்பங்களில் உள்ள சிமென்ட் பூச்சு பெயர்ந்து  மிகவும் அபாய நிலையில் காட்சியளிக்கிறது. அவை எந்த நேரத்திலும் கீழே சாய்ந்து விழும் அபாயம் உள்ளது. சிறப்பூர் விலக்கில் இருந்து தட்டார்மடம் வரை சாலையோரம் பல மின்கம்பங்கள் பழுதடைந்த நிலையிலேயே உள்ளன. 
இது அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும், மக்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மின்கம்பங்களை மாற்றும்படி விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/11/தட்டார்மடம்-சாலையில்-ஆபத்தான-மின்கம்பங்கள்-3036706.html
3036705 திருநெல்வேலி தூத்துக்குடி மண்டல சிலம்பாட்டம்: நாலாட்டின்புத்தூர் கே.ஆர். சாரதா அரசுப் பள்ளி சிறப்பிடம் DIN DIN Sunday, November 11, 2018 08:56 AM +0530 கயத்தாறில் நடைபெற்ற மண்டல அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் நாலாட்டின்புத்தூர் கே.ஆர். சாரதா அரசு மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம் பெற்று மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளது.  
திருநெல்வேலி மண்டல அளவிலான சிலம்பாட்டப் போட்டி கயத்தாறு மதர் தெரசா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இரு நாள்கள் நடைபெற்றது. 
மாணவிகளுக்கான போட்டியில் 5  கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த 300  பேரும், மாணவர்களுக்கான போட்டியில் 500 பேரும் கலந்துகொண்டனர். 
இதில், நாலாட்டின்புத்தூர் கே.ஆர். சாரதா அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர், மாணவிகள் 40 பேர் கலந்துகொண்டதில் 30 பேர் வெற்றி பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர்.  
மேலும், இப்போட்டியில் முதலிடம் பெற்ற 7 மாணவிகள் மற்றும் 5 மாணவர்கள் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். 
வெற்றி பெற்ற மாணவர், மாணவிகளையும், உடற்கல்வி ஆசிரியர் கணேசவேல், பயிற்றுநர் மாரிக்கண்ணன் ஆகியோரையும், பள்ளித் தலைமையாசிரியை சண்முகவடிவு, உதவித் தலைமையாசிரியர் செந்தில்வேல்முருகன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சுப்பாராஜ் உள்ளிட்டோர் பாராட்டினர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/11/மண்டல-சிலம்பாட்டம்-நாலாட்டின்புத்தூர்கேஆர்-சாரதா-அரசுப்-பள்ளி-சிறப்பிடம்-3036705.html
3036704 திருநெல்வேலி தூத்துக்குடி திருச்செந்தூர் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் DIN DIN Sunday, November 11, 2018 08:56 AM +0530 திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை, மாவட்டக் கல்வித்துறை ஆகியவை இணைந்து, திருச்செந்தூர் கல்வி மாவட்டத்தில் உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்காக இப்பயிற்சி முகாமை நடத்தின.
இம்முகாமை பொது சுகாதாரத் துறை மாவட்ட பயிற்சி மருத்துவ அலுவலர் விமோனிஷ் தலைமை வகித்து, தொடங்கிவைத்தார். மாவட்டக் கல்வி அலுவலர் லட்சுமணசாமி முன்னிலை வகித்தார். டெங்கு, பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பள்ளி முதல்வர் செல்வ வைஷ்ணவி வரவேற்றார். சோனகன்விளை ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் ஆனந்த்ராஜ் நன்றி கூறினார்.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/11/திருச்செந்தூர்-பள்ளியில்டெங்கு-விழிப்புணர்வு-முகாம்-3036704.html
3036703 திருநெல்வேலி தூத்துக்குடி மாநில ஓவியப் போட்டி: ஸ்ரீகரா பள்ளி மாணவி சிறப்பிடம் DIN DIN Sunday, November 11, 2018 08:56 AM +0530 கன்னியாகுமரியில் நடைபெற்ற மாநில அளவிலான ஓவியப் போட்டியில் ஸ்ரீகரா சிபிஎஸ்இ வித்யா மந்தீர் பள்ளி மாணவி சிறப்பிடம் பிடித்தார். 
விவேகானந்தா கேந்திரம் சார்பில் இம்மாதம் 4ஆம் தேதி நடைபெற்ற இப்போட்டியில் பங்கேற்ற, கோவில்பட்டியையடுத்த சிவனணைந்தபுரம் ஸ்ரீகரா வித்யா மந்தீர் பள்ளி மாணவி பிரியதர்ஷினி, ஓவியப் போட்டியில் 15 வயதுக்குள்பட்ட பிரிவில் 2ஆம் இடம் பிடித்தார். 
வெற்றி பெற்ற மாணவியை பள்ளித் தலைவர் செந்தில்குமார், தாளாளர் ஷியாமளா செந்தில்குமார், செயல் இயக்குநர் டென்சிங் பால்ராஜன், நிர்வாக இயக்குநர் கண்ணன், பள்ளி முதல்வர் ராதாமுரளி உள்ளிட்டோர் பாராட்டினர்.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/11/மாநில-ஓவியப்-போட்டிஸ்ரீகரா-பள்ளி-மாணவி-சிறப்பிடம்-3036703.html
3036702 திருநெல்வேலி தூத்துக்குடி நாசரேத்தில் டெங்கு விழிப்புணர்வு முகாம் DIN DIN Sunday, November 11, 2018 08:55 AM +0530 நாசரேத் சாலமோன் மெட்ரிக்  உயர்நிலைப் பள்ளியில்  டெங்கு, பன்றிக் காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
நாசரேத் தேர்வு நிலைப் பேரூராட்சி,  உடையார்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை இணைந்து  நடத்திய இம்முகாமுக்கு  பேரூராட்சி செயல் அலுவலர் ம. ரெங்கசாமி தலைமை  வகித்தார். பள்ளித் தாளாளர் ஜமீன் சாலமோன், பள்ளித் தலைவர் சத்தியவதி மனோகரன், பள்ளி முதல்வர் அனிஜெரால்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் பால் ஆபிரகாம் வரவேற்றார். 
முகாமில்,  டெங்கு - பன்றிக் காய்ச்சல் வராமல் தடுப்பது குறித்து விளக்கப்பட்டது. ஓய்வுபெற்ற வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  மாணவர்-மாணவிகள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். 
 பேருந்து நிலையத்தில் நடைபெற்ற முகாமுக்கு நாசரேத் காவல் ஆய்வாளர் வே. ராஜ் தலைமை வகித்தார். தென்திருப்பேரை வட்டார மருத்துவ அலுவலர் பார்த்தீபன், உடையார்குளம் மருத்துவ அலுவலர் விஜயகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இதில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் தடுப்பு,  கைகழுவும் முறை குறித்து விளக்கப்பட்டு, உறுதிமொழி ஏற்கப்பட்டது.  
நாசரேத் வணிகர் சங்கச் செயலர் வே. செல்வன், நாசரேத் பேரூராட்சி  சுகாதார  மேற்பார்வையாளர் முருகன், சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தென்திருப்பேரை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வடிவேல் நன்றி கூறினார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/11/நாசரேத்தில்-டெங்கு-விழிப்புணர்வு-முகாம்-3036702.html
3036701 திருநெல்வேலி தூத்துக்குடி உடன்குடி ராமகிருஷ்ணா பள்ளியில் கந்த சஷ்டி விழா DIN DIN Sunday, November 11, 2018 08:55 AM +0530 உடன்குடி தேரியூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரர் பள்ளியில் கந்த சஷ்டி விழா சனிக்கிழமை நடைபெற்றது.
தலைமையாசிரியர் (பொ) சி.லிங்கேஸ்வரன் தலைமை வகித்தார். ஆசிரியை திலகவதி முன்னிலை வகித்தார்.சிவந்தி கல்வியியல் கல்லூரி பேராசிரியர் க.மாரியப்பன், ஆன்மிக அமுதம் என்ற தலைப்பில் பேசினார். 
தொடர்ந்து சிவன், சக்தி, முருகன் நாமாவளிகள், பக்தி பாடல், கந்த சஷ்டி கவசம் பாடப்பட்டது. கந்த சஷ்டி விரதத்தின் நன்மை, முருகப்பெருமான் அசுரனை அழித்ததன் தத்துவம் ஆகியவை குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/11/உடன்குடி-ராமகிருஷ்ணா-பள்ளியில்-கந்த-சஷ்டி-விழா-3036701.html
3036700 திருநெல்வேலி தூத்துக்குடி கோவில்பட்டியில் உலக சிக்கன நாள் விழா DIN DIN Sunday, November 11, 2018 08:55 AM +0530 கோவில்பட்டி நகராட்சி தொடக்கப் பள்ளியில் உலக சிக்கன நாள் கடைப்பிடிக்கப்பட்டது.  
கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, சங்கத் தலைவர் ஆசியா ஃபார்ம்ஸ் பாபு தலைமை வகித்தார். சங்கச் செயலர் ரவிமாணிக்கம், தலைமையாசிரியை ராஜசரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  
மாணவர்களுக்கு பல்வேறு வடிவிலான மண் உண்டியல்கள் வழங்கப்பட்டு,  அதில் நாணயங்களை ரோட்டரி சங்கத் தலைவர் வழங்கி சேமிப்புப் பழக்கத்தை தொடங்கிவைத்தார். தொடர்ந்து, மாணவர், மாணவிகள்  உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 
நிகழ்ச்சியில், சங்க நிர்வாகிகள் லட்சுமணப்பெருமாள், விக்னேஷ், பிரபாகரன், முத்துமுருகன்,  ஆசிரியர்கள் வசந்தகுமாரி, பத்மாவதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆசிரியர் கலைவாணி வரவேற்றார். தேவிகா நன்றி கூறினார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/11/கோவில்பட்டியில்-உலக-சிக்கன-நாள்-விழா-3036700.html
3036699 திருநெல்வேலி தூத்துக்குடி பிரகாசபுரம் அங்கன்வாடியில் இடவசதியின்றி குழந்தைகள் தவிப்பு DIN DIN Sunday, November 11, 2018 08:54 AM +0530 பிரகாசபுரத்தில் வாடகைக் கட்டடத்தில் நெருக்கடியில் அங்கன்வாடி மையம்  செயல்படுவதால் குழந்தைகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். 
சாத்தான்குளம் ஒன்றியம் நடுவக்குறிச்சி ஊராட்சி, பூவுடையார்புரம் அங்கன்வாடி மையத்தில், பிரகாசபுரம் பகுதி குழந்தைகள் 15-க்கும் மேற்பட்டோர் பயின்று வந்தனர்.
இந்நிலையில் பூவுடையார்புரத்தில் உள்ள குழந்தைகள் இந்த அங்கன்வாடி மையத்துக்கு வராததால், பிரகாசபுரத்தில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பிருந்து  தனியாருக்குச் சொந்தமான வாடகைக் கட்டடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டடத்தில் குழந்தைகளுக்கு ஏற்ற அளவு இடம் வசதியின்மையால் நெருக்கடியால் குழந்தைகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். 
ஆதலால் பிரகாசபுரத்தில் உள்ள  அரசுக்கு சொந்தமான இடத்தில் புதிய அங்கன்வாடி கட்டடம்  கட்ட நடவடிக்கை எடுக்க  வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக சமூக ஆர்வலர் ஜேசுகோபின் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/11/பிரகாசபுரம்-அங்கன்வாடியில்இடவசதியின்றி-குழந்தைகள்-தவிப்பு-3036699.html
3036698 திருநெல்வேலி தூத்துக்குடி உடன்குடியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் DIN DIN Sunday, November 11, 2018 08:54 AM +0530 மெஞ்ஞானபுரம் வட்டார சுகாதார நிலையம் சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் உடன்குடியில் நடைபெற்றது.
உடன்குடி பேருந்து நிலையம், வில்லிகுடியிருப்பு, சுல்தான்புரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற இம்முகாமுக்கு, வட்டார மருத்துவ அலுவலர் சு.அனிபிரிமின் தலைமை வகித்து பேசினார். தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர், சுகாதார விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. குடிநீரை நன்கு காய்ச்சி அருந்துமாறு பொதுமக்களிடம் வலியுறுத்தப்பட்டது.
இதில், வட்டார மருத்துவ அலுவலர்(சித்தா)எஸ்.ஜெகதீஷ்குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜெ. அருள்ராஜ், சுகாதார ஆய்வாளர்கள் ஆழ்வார், சுப்பையா, சேதுபதி, ஜெயாம்பிகை, சித்திக் ஹசன், நம்பிக்கை மைய ஆற்றுப்படுத்துநர் பி.சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/11/உடன்குடியில்-டெங்கு-விழிப்புணர்வு-முகாம்-3036698.html
3036697 திருநெல்வேலி தூத்துக்குடி கோவில்பட்டியில் காவலர்களுக்கு... DIN DIN Sunday, November 11, 2018 08:54 AM +0530 கோவில்பட்டி காவல் துணை சரகத்துக்குள்பட்ட காவல் நிலையங்களில் உள்ள அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு நிலவேம்புக் குடிநீர் சனிக்கிழமை வழங்கப்பட்டது. 
ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், டி.எஸ்.பி. ஜெபராஜ்  நிலவேம்புக் குடிநீர் வழங்குவதை தொடங்கிவைத்தார். 
இதில், காவல் ஆய்வாளர்கள் ஆவுடையப்பன் (கயத்தாறு), ஜூடி (நாலாட்டின்புத்தூர்), முத்துலட்சுமி (கழுகுமலை), விநாயகம் (கோவில்பட்டி மேற்கு), ஸ்டெல்லாபாய் (அனைத்து மகளிர் காவல் நிலையம்), போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சுடலைமுத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
இதுபோல், கோவில்பட்டி பயணியர் விடுதி முன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பிலும், கோவில்பட்டியையடுத்த தோட்டிலோவன்பட்டி எம்.எம். வித்யாஷ்ரம் பள்ளியில் பள்ளி மாணவர், மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கும் சனிக்கிழமை நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/11/கோவில்பட்டியில்-காவலர்களுக்கு-3036697.html
3036696 திருநெல்வேலி தூத்துக்குடி சாத்தான்குளத்தில் இலவச பிஸியோதெரபி மருத்துவ முகாம் DIN DIN Sunday, November 11, 2018 08:54 AM +0530 சாத்தான்குளம் மிக்கேல் அறக்கட்டளை சார்பில் மிக்கேல் மாற்றுத் திறனுடைய குழந்தைகள் மறுவாழ்வு மையத்தில் பிஸியோதெரபி மருத்துவமனை திறப்பு விழா மற்றும் இலவச பிஸியோதெரபி மருத்துவ முகாம் நடைபெற்றது. 
முகாமுக்கு நட்சத்திர அரிமா சங்கத்தைச் சேர்ந்த ஆர். ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார். பேரூராட்சி முன்னாள் தலைவர் ஏ.எஸ்.ஜோசப் முன்னிலை வகித்தார். வழக்குரைஞர் ஆ.க.வேணுகோபால் வரவேற்றார். சாத்தான்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் பொன்முருகேசன் முகாம் மற்றும் மருத்துவமனையை தொடங்கிவைத்தார். ஜெயலட்சுமிஅசோகன், பரிமளா ஜெயபிரகாஷ், திவ்யா, டாக்டர் லட்சுமி ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். 
இதில், பிஸியோதெரபிஸ்ட் மருத்துவ சங்கத் தலைவர் வள்ளிசுப்பிரமணியன், மனித நேய நல்லிணக்க பெருமன்றச் செயலர் மகா.பால்துரை, மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாக்கியராஜ், நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரித் தாளாளர் ஏ.ஆர். சசிகரன், தொழிலதிபர்கள் சுப்பையா, சிவராமகிருஷ்ணன், ஓய்வுபெற்ற கூட்டுறவு கடன் சங்கச் செயலர் சாமுவேல், புதுக்குளம் முன்னாள் ஊராட்சித் தலைவர் பாலமேனன் ஆகியோர் பேசினர்.முகாமில் பிஸியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. 
இதில், மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு இல்ல ஆசிரியர்கள் ஈஸ்வரி, சுபாஷினி, தமிழ்ச்செல்வி, உதவியாளர்கள் இசக்கிமுத்து, மகராசி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மறுவாழ்வு மைய நிர்வாகி சுசிலா மைக்கேல் நன்றி கூறினார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/11/சாத்தான்குளத்தில்-இலவச-பிஸியோதெரபி-மருத்துவ-முகாம்-3036696.html
3036695 திருநெல்வேலி தூத்துக்குடி சுத்தியலால் தாக்கப்பட்ட இளைஞர் சாவு DIN DIN Sunday, November 11, 2018 08:53 AM +0530 தூத்துக்குடியில் சுத்தியலால் தாக்கப்பட்ட இளைஞர் சனிக்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து, கொலை வழக்காக பதிவு செய்த போலீஸார், அவரது சகோதரரை கைது செய்தனர்.
தூத்துக்குடி கேடிசி நகரைச் சேர்ந்தவர் நடராஜன் (36). வர்ணம் பூசும் தொழிலாளி. கடந்த 6ஆம் தேதி மது அருந்திவிட்டு வீட்டுக்குச் சென்ற நடராஜனுக்கும், அவரது சகோதரரான நாராயணனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, வீட்டில் இருந்த சுத்தியலால் நடராஜனை நாராயணன் தாக்கினாராம்.
காயமடைந்த நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடராஜன், சனிக்கிழமை உயிரிழந்தார். இதுதொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த சிப்காட் போலீஸார் நாராயணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/11/சுத்தியலால்-தாக்கப்பட்ட-இளைஞர்-சாவு-3036695.html
3036694 திருநெல்வேலி தூத்துக்குடி கடலில் தவறி விழுந்து மீனவர் சாவு DIN DIN Sunday, November 11, 2018 08:53 AM +0530 ஆத்தூரை அடுத்துள்ள புன்னைக்காயல் அருகில் கடலில் தவறி விழுந்து மீனவர் உயிரிழந்தார்.
புன்னைக்காயல் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ஜான்சன் (65). மீனவரான இவருக்கு மனைவியும் 6 மகள்களும் உள்ளனர். வெள்ளிக்கிழமை கட்டு மர படகில் மீன் பிடிக்க ஜான்சன் சென்றாராம். அவருடன் படகின் உரிமையாளரான அதே பகுதியைச் சேர்ந்த ஜோமனும் சென்றுள்ளார். 10 கடல் மைல் தொலைவில் சென்ற போது ஜான்சன் படகில் இருந்து தவறி விழுந்து விட்டாராம். இது குறித்து ஜோமன் கரையிலுள்ள மீனவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்கள் வந்து ஜான்சனின் உடலை மீட்டு இரவு கரைக்கு கொண்டு வந்தனர்.
தகவலறிந்த தருவைக்குளம் கடலோர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/11/கடலில்-தவறி-விழுந்து-மீனவர்-சாவு-3036694.html
3036693 திருநெல்வேலி தூத்துக்குடி கோவில்பட்டி அரசு மருத்துவமனை முன் சாலை மறியல் முயற்சி DIN DIN Sunday, November 11, 2018 08:53 AM +0530 விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை, உடனடியாக பிரேத பரிசோதனை செய்து சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைக்க வலியுறுத்தி அவரது உறவினர்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். 
எட்டயபுரம் வட்டம், இளம்புவனத்தைச் சேர்ந்த கருப்பசாமி - அங்கம்மாள் தம்பதி மகள் கவிதா(26). இவருக்கும், விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், முள்ளிசேவலைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் கட்டடத் தொழிலாளி கண்ணன்(30) என்பவருக்கும், கடந்த 10 நாள்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றதாம். 
இந்நிலையில் கவிதா முள்ளிசேவல் மேலத் தெருவில் உள்ள வீட்டில் வைத்து வியாழக்கிழமை தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டாராம். இதில் பலத்த காயமடைந்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சனிக்கிழமை உயிரிழந்தார். 
திருமணமாகி சுமார் 10 நாள்களே ஆவதால், கோட்டாட்சியர் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், இரவு  7 மணி வரை கவிதாவின் சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைக்காததையடுத்து, அங்கிருந்த அவரது உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் சடலத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். 
தகவலறிந்து வந்த டி.எஸ்.பி. ஜெபராஜ் மற்றும் போலீஸார் அவர்களுடன் பேச்சுவார்ததை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/11/கோவில்பட்டி-அரசு-மருத்துவமனை-முன்-சாலை-மறியல்-முயற்சி-3036693.html
3036692 திருநெல்வேலி தூத்துக்குடி வெள்ளரிக்காயூரணி  ஆலய பிரதிஷ்டை விழா DIN DIN Sunday, November 11, 2018 08:53 AM +0530 நாசரேத்-வெள்ளரிக்காயூரணி சகல பரிசுத்தவான்களின் ஆலய 69ஆவது பிரதிஷ்டை, அசனப் பண்டிகை விழா 6 நாள்கள் நடைபெற்றது.
முதல் நாள்ஆயத்த ஜெப பவனி நடைபெற்றது.  2, 3ஆவது நாள்களில் கன்வென்ஷன் கூட்டங்கள் நடைபெற்றன. 4ஆம் நாள் ஓய்வுநாள் மாணவர், மாணவிகள் மற்றும் இளம் பெண்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. 5ஆவது நாள் மாலையில் பண்டிகை ஆயத்த ஆராதனை மூக்குப்பீறி சேகரகுரு என்.ஜெரேமியா தலைமையில் நடைபெற்றது. 
இதில், பிரையன்ட்நகர் சேகர குரு கே.டேனியல் எட்வின் தேவ செய்தி வழங்கினார். நிறைவு நாள் அதிகாலை பண்டிகை ஆராதனையில் திருமறையூர் ஐ.எம்.எஸ்.மிஷனெரி பயிற்சி மையப் பொறுப்பாளர் ஹென்றி சுவாமிநாதன் தேவசெய்தி வழங்கினார்.
மூக்குப்பீறி சேகர குரு என்.ஜெரேமியா ஜெபித்து அசன விருந்தை தொடங்கிவைத்தார். பின்னர், ஸ்தோத்திர ஆராதனை சபை ஊழியர் ஜான் வில்சன் தலைமையில் நடைபெற்றது.
ஏற்பாடுகளை சேகரத் தலைவர் என்.ஜெரேமியா தலைமையில் சபை ஊழியர் ஜி.ஜான் வில்சன், ஆலய பரிபாலன கமிட்டி தலைவர் மா.சிம்சோன், செயலர் ஜெ.நிக்சன், பொருளாளர் ம.பொன்ராஜ் ஆகியோர் முன்னிலையில் சேகரச் செயலர் ஜே.ஜெயஷீபா, சேகர கமிட்டி உறுப்பினர்கள் கோ.செல்வராஜ், ஜெ.அலெக்ஸ்  ஆகியோர் செய்திருந்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/11/வெள்ளரிக்காயூரணி-ஆலய-பிரதிஷ்டை-விழா-3036692.html
3036691 திருநெல்வேலி தூத்துக்குடி மது விற்ற தொழிலாளி கைது DIN DIN Sunday, November 11, 2018 08:53 AM +0530 கோவில்பட்டி கடலையூர் சாலையில் மதுவை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட கூலித் தொழிலாளியை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். 
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிமாறன் கடலையூர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் உள்ள திருமண மண்டபம் முன் மதுவை பதுக்கிவைத்து விற்பனையில் ஈடுபட்ட, இலுப்பையூரணி மறவர் காலனியைச் சேர்ந்த மாடசாமி மகன் கூலித் தொழிலாளி கணேசனை(40) கைது செய்த போலீஸார், அவரிடமிருந்த 6  மதுபாட்டில்கள் மற்றும் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/11/மது-விற்ற-தொழிலாளி-கைது-3036691.html
3035980 திருநெல்வேலி தூத்துக்குடி கயத்தாறு அருகே விபத்தில் காயமுற்ற பொறியியல் மாணவர் சாவு DIN DIN Saturday, November 10, 2018 08:14 AM +0530 தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே சாலை விபத்தில் காயமடைந்த பொறியியல் கல்லூரி மாணவர்  மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை இறந்தார். 
கயத்தாறை அடுத்த திருமங்கலக்குறிச்சி, வடக்குத் தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் சுபாஷ் சந்திரபோஸ் (17). திருநெல்வேலியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. மெக்கானிக்கல் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வந்த இவர், வியாழக்கிழமை கல்லூரிக்குச் சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் தந்தையுடன் ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.
தேவர்குளம் விலக்கை நெருங்கியபோது, எதிரே வந்த கார் எதிர்பாராமல் இவர்களது வாகனத்தின் மீது மோதியதாம். இதில்,  பின்னால் அமர்ந்திருந்த சுபாஷ் சந்திரபோஸ் பலத்த காயமடைந்தார். இதையடுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், வெள்ளிக்கிழமை இறந்தார். 
இதுகுறித்து கயத்தாறு போலீஸார் வழக்குப் பதிந்து, கார் ஓட்டுநர் கயத்தாறு பாரதி நகரைச் சேர்ந்த வே.மணிகண்டன்(36) என்பவரை கைது செய்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/10/கயத்தாறு-அருகே-விபத்தில்-காயமுற்ற-பொறியியல்-மாணவர்-சாவு-3035980.html
3035935 திருநெல்வேலி தூத்துக்குடி குலசை முத்தாரம்மன் கோயில்  உண்டியல் காணிக்கை ரூ. 2.60 கோடி DIN DIN Saturday, November 10, 2018 07:54 AM +0530 தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை அருள்தரும் முத்தாரம்மன் கோயிலில் தசரா உண்டியல் காணிக்கை ரூ. 2.60 கோடியைத் தாண்டியது. இது கடந்த ஆண்டைவிட ரூ.38 லட்சம் அதிகம் ஆகும்.
இக்கோயிலில் தசரா திருவிழா அக். 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, அக்.19ஆம் தேதி சூரசம்ஹாரம், 20 ஆம் தேதி காப்பு அவிழ்த்தலுடன் விழா நிறைவு பெற்றது. 11 நாள்கள் நடைபெற்ற இத்திருவிழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
பக்தர் கள் பல்வேறு வேடங்கள் அணிந்து அம்மனுக்கு சேகரித்த காணிக்கைகள் அனைத்தையும் கோயிலில் செலுத்துவதற்கு வசதியாக கோயில் நிர்வாகம் சார்பில் 57 தற்காலிக உண்டியல்கள் வைக்கப்பட்டிருந்தன. இதனுடன் நிரந்தரமாக உள்ள 13 உண்டியல்களிலும் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி அக். 24ஆம் தேதி தொட ங்கியது.
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் துணை ஆணையர் க. செல்லத்துரை, பண்பொழி குமாரசாமி திருக்கோயில் உதவி ஆணையர் அருணாசலம், குற்றாலநாதர் திருக்கோயில் உதவி ஆணையர் சு. செல்வகுமாரி, திருநெல்வேலி உதவி ஆணையர் தி. சங்கர், நாகர்கோவில் உதவி ஆணையர் து. ரெத்தினவேல் பாண்டியன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இப்பணி நவ. 8ஆம் தேதி நிறைவு பெற்றது. இதில் பக்தர்கள் உண்டியலில் ரொக்கமாக ரூ. 2 கோடியே 60 லட்சத்து 92 ஆயிரத்து 496-ஐ காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும், 200 கிராம் தங்கம், 2.951 கிலோகிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. கடந்த ஆண்டைவிட ரூ. 38 லட்சம் காணிக்கை அதிகமாக கிடைத்துள்ளது.
உண்டியல் எண்ணும் பணியில் தூத்துக்குடி இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் சு. ரோஜாலி சுமதா, கோயில் செயல் அலுவலர் இரா. ராமசுப்பிரமணியன், கோயில் ஆய்வாளர் பகவதி மற்றும் பல்வேறு திருக்கோயில் செயல் அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/10/குலசை-முத்தாரம்மன்-கோயில்--உண்டியல்-காணிக்கை-ரூ-260-கோடி-3035935.html
3035934 திருநெல்வேலி தூத்துக்குடி திருச்செந்தூரிலிருந்து ஸ்ரீவைகுண்டம் வரை செல்ல நீராவி ரயில் தயார்: நாளை பயணம் செய்யலாம்: கட்டணம் ரூ.500 DIN DIN Saturday, November 10, 2018 07:54 AM +0530 திருச்செந்தூரில் இருந்து ஸ்ரீவைகுண்டத்திற்கு நீராவி ரயில் என்ஜின் வெள்ளிக்கிழமை சோதனை முறையில் இயக்கப்பட்டது . ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த இந்த ரயில் என்ஜின் மூலம், வரும் 11ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. அதற்கு பயணிகள் ரூ.500 கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டு ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. மீட்டர்கேஜ் ரயில் பாதையாகவே இருந்து வந்த இந்த ரயில் வழித்தடம், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அகலப் பாதையாக மாற்றப்பட்டது.
திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, கொல்லம் ஆகிய பகுதிகளுக்கு நாள்தோறும் பயணிகள் ரயில்களும், திருச்செந்தூரில் இருந்து தினமும் சென்னைக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருச்செந்தூர்-திருநெல்வேலி ரயில் வழித்தடத்தில் பயணம் செய்யும் ரயில் பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், ஆங்கிலேயேர் ஆட்சிக் காலத்தில் இயக்கப்பட்ட நீராவி ரயில் என்ஜினை குறிப்பிட்ட நாள்கள் மட்டும் சிறப்பு ரயிலாக இயக்க தெற்கு ரயில்வே முன்வந்துள்ளது.
இதற்கான சோதனை ஓட்டத்துக்காக கடந்த 1855ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டு இயக்கப்பட்ட நீராவி ரயில் என்ஜின் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட குளிர்சாதன வசதி கொண்ட பிரத்யேகமான ரயில் பெட்டி புதுச்சேரியில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக திருச்செந்தூருக்கு தனி ரயில் என்ஜின் மூலமாக கொண்டுவரப்பட்டது.
இந்த நீராவி ரயில் என்ஜினின் சோதனை ஓட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருச்செந்தூரில் இருந்து ஸ்ரீவைகுண்டம் வரை இயக்கப்பட்ட நீராவி ரயில் என்ஜினை பயணிகள் உற்சாகமாக வரவேற்றனர்.
இதையடுத்து,  நவ.11ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நீராவி ரயில் திருச்செந்தூரில் இருந்து ஸ்ரீவைகுண்டத்துக்கு பிரத்யேகமாக இயக்கப்படுகிறது. இதில் பயணம் செய்ய விரும்புவோர் திருச்செந்தூர் ரயில் நிலைய மேலாளரிடம் ரூ.500 கட்டணம் செலுத்தி தங்களது பெயரை முன்பதிவு செய்ய வேண்டும். இந்த ரயிலில் ஒரே நேரத்தில் சுமார் 40 பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பின் அதற்கேற்ப நீராவி ரயில் குறிப்பிட்ட நேரங்களில் இதே வழித்தடத்தில் நவ.11ஆம் தேதி மட்டும் இயக்கப்படுகிறது. இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை தெற்கு ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது.

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற என்ஜின்
இங்கிலாந்தைச் சேர்ந்த சிட்சன், தாம்சன், ஹெவிட்சன் ஆகியோர் 1855இல் உருவாக்கிய நீராவி ரயில் என்ஜின் இந்தியாவுக்கு வழங்கப்பட்டு, இங்கு 55 ஆண்டுகள் தனது பணியை நீராவி ரயில் ஆற்றியது. 
இந்த ரயிலில் எலிசபெத் மகாராணி பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த நீராவி ரயிலில் இந்திய மக்களும் பயணம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப் படுத்தினர்.
1909ஆம் ஆண்டு இந்த இந்த நீராவி என்ஜின் தனது சேவையை நிறுத்தி ஜமால்பூர் மற்றும் ஹெளராவில் உள்ள பணிமனைக்கு அனுப்பப்பட்டு காட்சிப் பொருளானது. 101 ஆண்டுகளுக்கு பின்னர் இயற்கை அழிவினாலும், அதிக அளவு சிதிலமடைந்தததாலும் இயக்குவதற்கு தகுதியற்றதாக ஆனது. பின்னர், இந்த நீராவி என்ஜின் 2010ஆம் ஆண்டு சென்னை பெரம்பூர் பணிமனைக்கு கொண்டுவரப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.
உலகிலேயே பழைமையான நீராவி என்ஜின் என்ற சாதனையுடன் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இந்த சாதனை இயந்திரத்தின் மீள் ஓட்டம் 2010ஆம் ஆண்டு சென்னை சென்ட்ரலுக்கும்-ஆவடிக்கும் இடையே இயக்கப்பட்டது. அதன்பின்னர் புதுச்சேரியிலும் இயக்கப்பட்டது. தற்போது திருச்செந்தூர் முதல் ஸ்ரீவைகுண்டம் வரை 33 கி.மீ. தொலைவுக்கு இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு, அதன் வெள்ளோட்டமாகத்தான்  வெள்ளிக்கிழமை இயக்கப்பட்டது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/10/திருச்செந்தூரிலிருந்து-ஸ்ரீவைகுண்டம்-வரை-செல்ல-நீராவி-ரயில்-தயார்-நாளை-பயணம்-செய்யலாம்-கட்டணம்-ரூ-3035934.html
3035933 திருநெல்வேலி தூத்துக்குடி விபத்தில் காயமடைந்த முன்னாள் கிராம உதவியாளர் சாவு DIN DIN Saturday, November 10, 2018 07:53 AM +0530 கழுகுமலை அருகே விபத்தில் காயமடைந்த முன்னாள் கிராம உதவியாளர் வெள்ளிக்கிழமை இறந்தார். 
கழுகுமலை ஆறுமுக நகரைச் சேர்ந்த அழகிரி மகன் ராமச்சந்திரன்(62). முன்னாள் கிராம உதவியாளரான இவர், கழுகுமலை வின்சென்ட் நகரில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்த போது, முன்னால் நடந்து சென்று கொண்டிருந்த வின்சென்ட் நகரைச் சேர்ந்த நாகராஜ் மனைவி குற்றாலம் என்ற மல்லிகாவின் மீது மோதி  விபத்து நேரிட்டதாம். 
இதில் காயமடைந்த இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.  இதில்,ராமசந்திரன் மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் வெள்ளிக்கிழமை இறந்தார். இதுகுறித்து கழுகுமலை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/10/விபத்தில்-காயமடைந்த-முன்னாள்-கிராம-உதவியாளர்-சாவு-3035933.html
3035932 திருநெல்வேலி தூத்துக்குடி கோவில்பட்டியில் பிஎஸ்என்எல் அதிவேக இணைய சேவை தொடக்கம் DIN DIN Saturday, November 10, 2018 07:53 AM +0530 பி.எஸ்.என்.எல். நிறுவனம் சார்பில் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மூலமாக அதிவேக இணைய சேவை தொடக்க விழா கோவில்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  
இவ்விழாவுக்கு, பிஎஸ்என்எல் மாவட்ட தொலைத்தொடர்பு பொதுமேலாளர் சஜிகுமார் தலைமை வகித்து பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினத்துக்குப் பிறகு இங்கு தொடங்கப்பட்டுள்ள அதிவேக இணைய சேவைத் திட்டத்தின் மூலம் தெற்கு திட்டங்குளம், சிட்கோ மற்றும் இளம்புவனம் பகுதி மக்கள் பயனடையலாம்.  விரைவில் கோவில்பட்டி நகரம் முழுவதும் தொடங்கப்படும். ரூ.777, ரூ.1,277  என பல்வேறு மாதக் கட்டணங்கள் அடிப்படையில் இந்தச் சேவை வழங்கப்படவுள்ளது. 10  மாதங்களுக்கான கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தினால் 2 மாதங்களுக்கு கட்டணமில்லாமல் இலவச சேவையைப்பெறலாம். இச்சேவை மூலம் பாதுகாப்பு கேமராக்களை இயக்க முடியும்.  ஸ்மார்ட் போன், லேப்டாப் அனைத்தையும் "வை-பை'இல் இணைத்துக் கொள்ளலாம் என்றார்.   தொடர்ந்து, கண்ணாடி இழை கேபிள் மூலமாக அதிவேக இணைய சேவை பெற பதிவு செய்த, முதல் வாடிக்கையாளரான தொழிலதிபர் ஆர்.செல்வமோகனுக்கு "மோடம் பாக்ஸ்' ஒன்றை அவர்  வழங்கினார்.  
நிகழ்ச்சியில், துணைப் பொதுமேலாளர்கள் சிவசைலம், சேவியர்வலூர்துசாமி, கனகவேல் மற்றும் தொலைத் தொடர்பு அதிகாரிகள், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.  கோட்டப் பொறியாளர் கோமதி நன்றி கூறினார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/10/கோவில்பட்டியில்-பிஎஸ்என்எல்-அதிவேக-இணைய-சேவை-தொடக்கம்-3035932.html
3035931 திருநெல்வேலி தூத்துக்குடி கயத்தாறு அருகே விவசாயி மீது தாக்குதல்: கட்டடத் தொழிலாளி கைது DIN DIN Saturday, November 10, 2018 07:52 AM +0530 கயத்தாறு அருகே சொத்துத் தகராறு காரணமாக விவசாயியை தாக்கியதாக, கட்டடத் தொழிலாளியை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். 
கயத்தாறையடுத்த பனிக்கர்குளம் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோமதி மகன் விவசாயி பால்சாமி. இவருக்கும், அதே பகுதி கீழத் தெருவைச் சேர்ந்த ராமையா மகன் கட்டடத் தொழிலாளி பூலையாவுக்கும் (44)  இடையே சொத்துத் தகராறு இருந்து வந்ததாம். இந்நிலையில், பால்சாமி பனிக்கர்குளம் அம்மன் கோயில் தெருவில் உள்ள நண்பர் காசிப்பாண்டி வீட்டருகே புதன்கிழமை நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த பூலையா, பால்சாமியை அவதூறாகப் பேசி, ஆயுதங்களால் தாக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த அவர், திருநெல்வேலி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், கயத்தாறு போலீஸார் வழக்குப் பதிந்து, பூலையாவை வியாழக்கிழமை கைது செய்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/10/கயத்தாறு-அருகே-விவசாயி-மீது-தாக்குதல்-கட்டடத்-தொழிலாளி-கைது-3035931.html
3035930 திருநெல்வேலி தூத்துக்குடி குடும்பத் தகராறில் தீக்குளித்த ஆசிரியர் சாவு DIN DIN Saturday, November 10, 2018 07:52 AM +0530 திருச்செந்தூர் அருகேயுள்ள வீரபாண்டியன்பட்டணத்தில் குடும்பத் தகராறு காரணமாக தீக்குளித்த ஆசிரியர் உயிரிழந்தார்.
வீரபாண்டியன்பட்டணம் செந்தில் வீதியைச் சேர்ந்த துரைராஜ் மகன் முத்துக்குமார் (33). இவரது மனைவி சுந்தரி (26). தம்பதிக்கு ஒரு மகன் 2 மகள் உள்ளனர். முத்துக்குமார் நத்தகுளம் ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் ஆசிரியராக வேலைபார்த்து வந்தார். இதனால் குடும்பத்துடன் அடைக்கலாபுரம் சுனாமி நகரில் வசித்து வந்தார்.  இந்நிலையில் குடும்பத் தகராறு காரணமாக அவர் கடந்த 5ஆம் தேதி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். 
இதையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், அங்கு வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார். இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/10/குடும்பத்-தகராறில்-தீக்குளித்த-ஆசிரியர்-சாவு-3035930.html
3035929 திருநெல்வேலி தூத்துக்குடி மருத்துவ காலிப் பணியிடங்கள்: ஆட்சியரிடம் தமாகாவினர் மனு DIN DIN Saturday, November 10, 2018 07:52 AM +0530 கோவில்பட்டி அரசு  மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவர்கள், பணியாளர்கள், ஆய்வக தொழில்நுட்ப உதவியாளர்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமாகா வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம், அக்கட்சியின் நகரத் தலைவர் ராஜகோபால் அளித்த மனு:   கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் 40-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், 25-க்கும் குறைவான மருத்துவர்கள் மட்டுமே தினமும் பணிக்கு வருவதாகவும்,  சிலர் மாற்றுப்பணிக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. 
தற்போது நிலவி வரும் மர்மக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் காரணமாக மருத்துவமனையில் ஏற்படும் நெரிசலைத் தவிர்க்க, போதுமான மருத்துவர்களை உடனே நியமிக்க வேண்டும். மாலை நேரமும் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு முறையாக செயல்பட வேண்டும். மருத்துவமனை வளாகத்தில் மூடிய நிலையிலான கழிவுநீர் ஓடை அமைக்கப்பட வேண்டும். 
அவசர சிகிச்சை பிரிவில் வெளிநோயாளிகள் அனுமதிச்சீட்டு பெற தனியாக அறை அமைக்க வேண்டும். அவசர சிகிச்சை பிரிவில் 24 மணி நேரமும் குறைந்தது 2 பணியாளர்கள் மற்றும் எக்ஸ்ரே, ஸ்கேன், ரத்தப் பரிசோதனை செயல்படுதலை உறுதிப்படுத்த வேண்டும்.  வெளிநோயாளிகள் அமருவதற்கு இருக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/10/மருத்துவ-காலிப்-பணியிடங்கள்-ஆட்சியரிடம்-தமாகாவினர்-மனு-3035929.html
3035928 திருநெல்வேலி தூத்துக்குடி விடுதலைச் சிறுத்தைகள் நிர்வாகிகள் கூட்டம் DIN DIN Saturday, November 10, 2018 07:51 AM +0530 கோவில்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
கட்சியின் வடக்கு மாவட்டச் செயலர் கதிரேசன் தலைமை வகித்தார். மாநில வழக்குரைஞரணியைச் சேர்ந்த பெஞ்சமின் பிராங்க்ளின், மாவட்ட பொருளாளர் சமுத்திரப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கூட்டத்தில், கட்சியின் மாநிலத் துணைச் செயலர் சிந்தனைசெல்வன், மண்டலப் பொறுப்பாளர் தமிழினியன், ஐகோர்ட் பாண்டியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு, திருச்சியில் டிச. 10ஆம் தேதி நடைபெறும் தேசம் காப்போம் மாநாடு குறித்து பேசி, மாநாட்டில் திரளாக பங்கேற்குமாறு கேட்டுக் கொண்டார். 
தொடர்ந்து, கூட்டத்தில், திருச்சியில் நடைபெறும் தேசம் காப்போம் மாநாட்டில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் இருந்து 100 வாகனங்களில் செல்வது என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதில் மாவட்ட, நகர, ஒன்றிய கிளை பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். மாவட்ட துணைச் செயலர் பாஸ்டர் மோகன் வரவேற்றார். மாவட்ட செய்தித் தொடர்பாளர் மனுவேல் நன்றி கூறினார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/10/விடுதலைச்-சிறுத்தைகள்-நிர்வாகிகள்-கூட்டம்-3035928.html
3035927 திருநெல்வேலி தூத்துக்குடி மத்திய அரசைக் கண்டித்து தூத்துக்குடி, கோவில்பட்டியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் DIN DIN Saturday, November 10, 2018 07:51 AM +0530 மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டு 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில்,  2016இல் அதற்கான அறிவிப்பு வெளியான நவ. 8ஆம் தேதியை கருப்பு தினமாக அனுசரித்து, காங்கிரஸ் கட்சியினர்  தூத்துக்குடி, கோவில்பட்டியில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
தூத்துக்குடியில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாநகர் மாவட்டத் தலைவர் சி.எஸ். முரளிதரன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் ஏ.பி.சி.வீ. சண்முகம், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் ரவி அருணன், எஸ். டேனியல்ராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட வர்த்தக அணித் தலைவர் டேவிட் பிரபாகரன், மண்டலத் தலைவர்கள் சேகர், தங்கராஜ், செந்தூர் பாண்டி, ஐசன் சில்வா, மகளிர் காங்கிரஸ் தலைவி முத்து விஜயா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கோவில்பட்டி தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு,  அதன் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார்.  துணைத் தலைவர் திருப்பதிராஜா, நகரத் தலைவர் சண்முகராஜ், ஒன்றியத் தலைவர் ரமேஷ்மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை தொடங்கிவைத்தார். 
இதில், நகரத் துணைத் தலைவர் பங்காருசாமி,  எஸ்.சி. பிரிவு தலைவர் மாரிமுத்து, மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் மகேஷ்குமார், சுப்புராயலு, பிரேம்குமார், உமாசங்கர், வழக்குரைஞரணி மாவட்டத் தலைவர் அய்யலுசாமி, கயத்தாறு நகரத் தலைவர் பாடலிங்கம், கருங்குளம் வட்டாரத் தலைவர் நடராஜன், கயத்தாறு ஒன்றியத் தலைவர் செல்லத்துரை, மாவட்ட மகளிரணியைச் சேர்ந்த மாரியம்மாள், நகர மகளிரணியைச் சேர்ந்த நல்லமதி உள்பட கட்சி நிர்வாகிகள் திரளானோர் கருப்புப் பட்டை அணிந்து கலந்துகொண்டனர்.
ஸ்ரீவைகுண்டம்: தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், ஸ்ரீவைகுண்டம் ஸ்டேட் வங்கி முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு,  அதன் பொறுப்பாளர் ஸ்ரீராமன் தலைமை வகித்தார். இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெயசீலன் துரை, மாவட்ட பொதுச்செயலர் இசை சங்கர், மாவட்டச் செயலர் சிவனணைந்தப்பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதி ஊடகப் பிரிவுப் பொறுப்பாளர் மரியராஜ் வரவேற்றார். 
இதில், தெற்கு மாவட்ட மகளிரணித் தலைவி அன்புராணி, வட்டாரத் தலைவர்கள் நல்லகண்ணு,  ஜனார்த்தனன், ஜோசப் துரைராஜ், சற்குரு,  தெற்குமாவட்ட துணைத் தலைவர் சங்கர், மாவட்ட பஞ்சாயத்துராஜ் பொறுப்பாளர் லூர்துமணி, ஸ்ரீவைகுண்டம் நகரத் தலைவர் சித்திரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேற்கூறிய 3 இடங்களிலும் ஆர்ப்பாட்டத்தின்போது,  பெட்ரோல்- டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, பண மதிப்பிழப்பால் ஏற்பட்ட பாதிப்புகளை கூறி, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/10/மத்திய-அரசைக்-கண்டித்து-தூத்துக்குடி-கோவில்பட்டியில்-காங்கிரஸ்-ஆர்ப்பாட்டம்-3035927.html
3035926 திருநெல்வேலி தூத்துக்குடி இலுப்பையூரணி அருகே உரக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு DIN DIN Saturday, November 10, 2018 07:50 AM +0530 கோவில்பட்டி அடுத்த இலுப்பையூரணி பகுதியில் உரக்கிடங்கு அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி அப்பகுதி மக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர். 
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், இலுப்பையூரணி ஊராட்சி பகுதிகளான மறவர் காலனி, செண்பகா நகர், இலுப்பையூரணி, சிந்தாமணி நகர், சண்முகா நகர் ஆகிய பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். 
இந்நிலையில், அப்பகுதியில் நகராட்சிக்குப் பாத்தியப்பட்ட இடத்தில் குப்பைகளை சேகரித்து வருகிறார்களாம். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுத் தொல்லையும் அதிகரித்துள்ளதாம். மேலும் இப்பகுதியில் குப்பைகளை சேகரித்து உரக்கிடங்குகளாக அமைக்கும் திட்டம் உள்ளதாகக் கூறப்படுகிறது. 
இந்நிலையில், உரக்கிடங்கு அமைத்தால் மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படும் எனக் கூறி, அத்திட்டத்தை கைவிடுமாறும், அப்பகுதியில் குவிந்துள்ள குப்பைகளை  உடனடியாக அகற்ற வேண்டும் எனவும், சிறுவர் பூங்கா, விளையாட்டு மைதானம், நீச்சல்குளம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்துதர வேண்டுமென்றும் வலியுறுத்தி அப்பகுதி  மக்கள்   நகராட்சி மேலாளர் முத்துச்செல்வனிடம் மனு அளித்தனர்.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/10/இலுப்பையூரணி-அருகே-உரக்கிடங்கு-அமைக்க-எதிர்ப்பு-3035926.html
3035925 திருநெல்வேலி தூத்துக்குடி டெங்கு, பன்றிக் காய்ச்சல் தடுப்பு: ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் DIN DIN Saturday, November 10, 2018 07:50 AM +0530 தூத்துக்குடி மாவட்டத்தில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கி 2 நாள்கள் நடைபெற்றது.
பொதுசுகாதாரத் துறை மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில்,  பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்காக தூத்துக்குடியில் இந்த பயிற்சி முகாம்  நடைபெற்றது.
நிறைவுநாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற பயிற்சி முகாமில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கீதாராணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்( பொறுப்பு) வசந்தா, மாவட்ட பயிற்சி மருத்துவர் விமோனிஷ், மாவட்ட பூச்சியியல் வல்லுநர் ஆனந்தன் ஆகியோர் கலந்துகொண்டு பல்வேறு தலைப்புகளில் பேசினர்.
முகாமின்போது, பள்ளி மாணவ, மாணவிகளிடையே பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்கும் பொருட்டு கை கழுவும் முறைகளை வழக்கப்படுத்தவும் காய்ச்சல், இருமல் போன்ற உபாதைகள் உள்ள மாணவர்களின் விவரம் பள்ளி கல்வித்துறையின் மூலம் தினமும் சேகரித்து பொது சுகாதாரத்துறைக்கு வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது.
தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தொடக்கப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் பயிற்சி முகாமில் கலந்துகொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/10/டெங்கு-பன்றிக்-காய்ச்சல்-தடுப்பு-ஆசிரியர்களுக்கு-பயிற்சி-முகாம்-3035925.html
3035924 திருநெல்வேலி தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டத்தில் எரிவாயு உருளை விலை ரூ.1000-ஐ தாண்டியது DIN DIN Saturday, November 10, 2018 07:49 AM +0530 தூத்துக்குடி மாவட்டத்தில் சமையல் எரிவாயு உருளை விலை ரூ.1025வரை உயர்ந்துள்ளது.
இந்தியன் ஆயில் நிறுவனம் வழங்கும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை தூத்துக்குடியில் ரூ.1008.50 ஆகவும், கோவில்பட்டியில் ரூ.1007.00 ஆகவும், கழுகுமலையில் ரூ.1015 ஆகவும், கயத்தாறில் ரூ.1010 ஆகவும், எட்டையபுரத்தில் ரூ.1007 ஆகவும்,  சாத்தான்குளம் பகுதிக்கு ரூ.1025 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், தூத்துக்குடி மாவட்டத்துக்கான வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை விலையை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் ரூ.1008.50 எனவும், இந்துஸ்தான் பெட்ரோலியம்  ரூ.1008.50 எனவும் நிர்ணயம் செய்துள்ளன.    
எரிவாயு முகவர்களிடம் இருந்து வாங்கும் வீட்டு உபயோக எரிவாயு உருளைக்கு (14.2 கிலோ) மேற்கூறிய  தொகைக்கு அதிகமாக, நுகர்வோர் பணம் செலுத்த வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/10/தூத்துக்குடி-மாவட்டத்தில்-எரிவாயு-உருளை-விலை-ரூ1000-ஐ-தாண்டியது-3035924.html
3035923 திருநெல்வேலி தூத்துக்குடி வாழ்விடங்களில் கொசு உற்பத்திக்கு காரணமானால் அபராதம்: ஆட்சியர் எச்சரிக்கை DIN DIN Saturday, November 10, 2018 07:49 AM +0530 தூத்துக்குடி மாவட்டத்தில் கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.
வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள், தொற்றா நோய் தடுப்புப் பணிகள் குறித்து,  தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் ஆட்சியர் பேசியது:
வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்துத் துறை அலுவலர்களால் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தனியார் கல்வி நிறுவனத்தினர் தங்கள் மாணவ, மாணவிகளுக்கு மழைக்காலங்களில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 
மேலும், தங்கள் நிறுவனத்திலுள்ள மின் இணைப்புகள் சரியாக உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். கழிவு நீர் கால்வாய்களில் தேங்கும் குப்பைகளை அகற்றி, மூடிவைக்க வேண்டும். பள்ளியின் அனைத்து கட்டடங்களின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய வேண்டும்.
தனியார் மருத்துவமனைகளில் அவசர காலங்களில் போதிய ஆக்சிஜன் உருளை, மின் ஆக்கி (ஜெனரேட்டர்), டீசல் போன்றவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும். எண்ணெய் நிறுவனங்கள்  டீசல், பெட்ரோலை போதிய அளவு இருப்பு வைக்க வேண்டும். தொலைதொடர்பு நிறுவனங்கள் தடையின்றி தொலைபேசி சேவையை வழங்க வேண்டும். 
டெங்கு கொசு அதிகமாக உற்பத்தியாகும் வாய்ப்புள்ளதால் மக்கள் தங்கள் பகுதியில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்வதோடு, பயன்படுத்தாத பொருள்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். கொசு உற்பத்தியாகும் வகையில் பொருள்களை சேமித்து வைத்திருந்தால் சம்பந்தப்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றார் அவர்.
கூட்டத்தில்,  மாவட்ட வருவாய் அலுவலர் மு. வீரப்பன், மாநகராட்சி ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ், சார் ஆட்சியர் சிம்ரான் ஜித் சிங் கலோன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநர் பரிதா செரின், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கீதாராணி மற்றும் துறை அலுவலர்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், எண்ணெய் நிறுவனங்கள், தொலைபேசி நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/10/வாழ்விடங்களில்-கொசு-உற்பத்திக்கு-காரணமானால்-அபராதம்-ஆட்சியர்-எச்சரிக்கை-3035923.html
3035922 திருநெல்வேலி தூத்துக்குடி தச்சமொழி கோயிலில் கந்தசஷ்டி விழா தொடக்கம் DIN DIN Saturday, November 10, 2018 07:49 AM +0530 சாத்தான்குளம் தச்சமொழி அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் கந்தசஷ்டி விழா வியாழக்கிழமை தொடங்கியது.
இதையொட்டி ஸ்ரீமுத்துமாரியம்மன், ஸ்ரீமுத்தாரம்மன், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகன், வள்ளி, தெய்வானை மற்றும் ஸ்ரீபெருமாளுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. பின்னர், கந்தசஷ்டி தொடக்க நிகழ்ச்சியாக  பக்தர்கள் கந்தசஷ்டி கவசம் பாடி விரதத்தை தொடங்கினர். 
தொடர்ந்து கோயிலில் நவ.13ஆம் தேதி வரை சிறப்பு பூஜைகள், யாக சாலை பூஜை மற்றும் பல்வேறு அலங்காரங்களில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். கந்தசஷ்டி நிறைவு நாளான நவ. 14ஆம் தேதி  மாலையில் கோயில் வளாகத்தில் ஸ்ரீமுருகன் - ஸ்ரீவள்ளி தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை  கோயில் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/10/தச்சமொழி-கோயிலில்-கந்தசஷ்டி-விழா-தொடக்கம்-3035922.html
3035921 திருநெல்வேலி தூத்துக்குடி விளாத்திகுளத்தில் மகளிருக்கு தொழிற்பயிற்சி DIN DIN Saturday, November 10, 2018 07:48 AM +0530 வேம்பு மக்கள் சக்தி இயக்கம் மற்றும் நிப்பான் பெயிண்ட் நிறுவனம் சார்பில் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு மகளிர் தொழில் முனைவோர்களுக்கு பெயிண்டிங் தொழில்நுட்பம் குறித்த 15 நாள் பயிற்சி முகாம் விளாத்திகுளத்தில் நடைபெற்றது.
வேம்பு மக்கள் சக்தி இயக்க இயக்குநர் ஆரோக்கியம் தலைமை வகித்தார். உதவி இயக்குநர் ஆரோக்கிய மான்சிங் முன்னிலை வகித்தார். பயிற்சி முகாமில் பெயிண்டிங் தொழில்நுட்பம், பெயிண்ட் அடிக்கும் நவீன உத்திகள், செய்முறை பயிற்சிகள் ஆகியன வழங்கப்பட்டன. 
இதில் விளாத்திகுளம் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 30 பெண்கள் பயிற்சி பெற்றனர்.  அனைவருக்கும் ஊக்கத்தொகை, பெயிண்ட் தொழிலுக்கு தேவையான பொருள்கள் அடங்கிய பெட்டகம், சான்றிதழ்கள், பெண் தொழில் முனைவோருக்கான அடையாள அட்டை ஆகியன வழங்கப்பட்டன.
இதில் வேம்பு மக்கள் சக்தி இயக்கத்தை சேர்ந்த விஜய், முரளி, வீரலட்சுமி, மாரீஸ்வரி,  பெயின்ட் நிறுவனத்தை சேர்ந்த சத்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/10/விளாத்திகுளத்தில்-மகளிருக்கு-தொழிற்பயிற்சி-3035921.html
3035920 திருநெல்வேலி தூத்துக்குடி தூத்துக்குடியில் கழிவு சாம்பல் ஏற்றிய லாரியில் தீ விபத்து DIN DIN Saturday, November 10, 2018 07:48 AM +0530 தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் இருந்து கழிவு சாம்பல் ஏற்றிச் சென்ற லாரியில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின்நிலையத்தில் இருந்து முத்தையாபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு கழிவு சாம்பல் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றது. சென்னையைச் சேர்ந்த சுடலையாண்டி  லாரியை ஓட்டிச் சென்றார். துறைமுகச் சாலையில் திருச்செந்தூர் ரவுண்டானா அருகே லாரி சென்று கொண்டிருந்தபோது திடீரென என்ஜினில் இருந்து தீ பரவியதால் லாரியை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு ஓட்டுநர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, தெர்மல்நகர் தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், லாரியின் முன்பக்க கேபின் முழுவதும் தீயில் எரிந்து சேதமடைந்தது. தீ விபத்துக்கான காரணம் குறித்து தெர்மல் நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/10/தூத்துக்குடியில்-கழிவு-சாம்பல்-ஏற்றிய-லாரியில்-தீ-விபத்து-3035920.html
3035320 திருநெல்வேலி தூத்துக்குடி திருச்செந்தூரில் 12 கால் மண்டபத்தின் மேற்கூரை இடிந்தது: பக்தர்கள் தப்பினர்  DIN DIN Friday, November 9, 2018 07:30 AM +0530 திருச்செந்தூர் சன்னதித் தெருவில் பழைமை வாய்ந்த 12 கால் மண்டபத்தின் மேற்கூரை புதன்கிழமை திடீரென இடிந்து விழுந்தது . அப்போது யாரும் அந்த வழியாக வராததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் வசதிக்காக சன்னதித் தெருவில் இருபக்க தூண்கள் மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரையால் நிழல்பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தெருவில் உள்ள அகஸ்தியர் கோயில் அருகில் பழைமையான செங்குந்தர் 12 கால் மண்டபம் உள்ளது. இந்த மண்டபம் பலமிழந்து காணப்பட்ட நிலையில், கடந்த இரு தினங்களாக அப்பகுதியில் பெய்த மழையால் மண்டபத்தின் மேற்கூரை ஈரப்பதம் தாங்காமல் புதன்கிழமை இடிந்து விழுந்தது. அந்த நேரத்தில் பக்தர்கள் யாரும் அவ்வழியாக வராததால் விபரீதம் தவிர்க்கப்பட்டது.
இதையடுத்து, அப்பகுதியில் யாரும் செல்லாதவாறு கயிறு கட்டப்பட்டுள்ளது. பக்தர்கள் நடமாட்டம் மிகுந்த பகுதி என்பதால், மண்டபம் மேலும் இடிந்து விழுவதற்குள் உரிய  நடவடிக்கை எடுக்க  அதிகாரிகள் முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/09/திருச்செந்தூரில்-12-கால்-மண்டபத்தின்-மேற்கூரை-இடிந்தது-பக்தர்கள்-தப்பினர்-3035320.html
3035056 திருநெல்வேலி தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டத்தில் 236 மி.மீ. மழை DIN DIN Friday, November 9, 2018 02:55 AM +0530 தூத்துக்குடி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு வரை 236 மி.மீ. மழை பெய்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக, தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளில் அதிகளவு தண்ணீர் தேங்கியுள்ளது. அதை அகற்றும் பணியில் மாவட்ட நிர்வாகமும், உள்ளாட்சி நிர்வாகமும் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக சாத்தான்குளம் பகுதியில் 68.4 மி.மீ. மழை பெய்துள்ளது. பிற இடங்களில் பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்): ஸ்ரீவைகுண்டம் - 65.5, காயல்பட்டினம்- 22, கயத்தாறு- 20, குலசேகரன்பட்டினம்-17, ஓட்டப்பிடாரம்-16, விளாத்திகுளம்-12.
மாவட்டம் முழுவதும் புதன்கிழமை மாலை 4 மணி முதல் வியாழக்கிழமை மாலை 4 மணி வரை 236.10 மி.மீ. மழை பெய்துள்ளது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/09/தூத்துக்குடி-மாவட்டத்தில்-236-மிமீ-மழை-3035056.html
3035054 திருநெல்வேலி தூத்துக்குடி கோவில்பட்டியில் நவ.30க்குள் புற்றுநோயாளிகள் ஆதரவு மையம்: ஆட்சியர் தகவல் DIN DIN Friday, November 9, 2018 02:55 AM +0530 கோவில்பட்டி அரசு  மருத்துவமனையில் புற்றுநோயாளிகளுக்கான ஆதரவு சிகிச்சை மையம் இம்மாதம் தொடங்கப்படவுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.
கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பல்வேறு  வார்டுகளையும்  வியாழக்கிழமை ஆய்வு செய்த ஆட்சியர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
தூத்துக்குடி மாவட்டத்தில் பருவமழை காரணமாக காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. இதையொட்டி, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவில்பட்டியில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இல்லை. டெங்கு பாதிப்பால் ஒரு குழந்தை மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமாக உள்ளது.  இம்மருத்துவமனையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆதரவு சிகிச்சை மையம் இந்த மாதம் தொடங்கப்படவுள்ளது. மேலும்,  இந்த மருத்துவமனையை  தேசிய தரக்கட்டுப்பாட்டு குழுவினர் 3  நாள்கள் ஆய்வு நடத்த உள்ளனர். அதன்பின்,  மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்றிதழ் கிடைக்கும் என நம்புகிறேன்.  இம்மாவட்டத்தைப் பொருத்தவரை, பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் 5  பேரும், டெங்கு பாதிப்பால் 3 பேரும்  சிகிச்சை பெற்று வருகின்றனர். 
இத்தகைய  காய்ச்சல்களைத் தடுக்கும் பணியில் 1,400  பேர் ஈடுபட்டு வருகின்றனர்.  மேலும், மருத்துவர்கள், மருத்துவக் குழுவினர், உள்ளாட்சித் துறை ஊழியர்கள் தொடர்ந்து இதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர். மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட  விளம்பர பதாகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டு வருகிறது.  கை கழுவும் முறையை முறையாக மக்கள் கையாள வேண்டும் என்றார் அவர். 
ஆய்வின் போது, மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் பரிதாசெரின், துணை இயக்குநர்கள் போஸ்கோராஜா (சுகாதாரப் பணி), யமுனா (தொழுநோய்), பத்மநாபபுரம் மருத்துவர் ரியாஷ்,  கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் பரமசிவன், வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/09/கோவில்பட்டியில்-நவ30க்குள்-புற்றுநோயாளிகள்-ஆதரவு-மையம்-ஆட்சியர்-தகவல்-3035054.html
3035053 திருநெல்வேலி தூத்துக்குடி கோவில்பட்டி ஒன்றிய அலுவலகம் முற்றுகை DIN DIN Friday, November 9, 2018 02:54 AM +0530 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அண்ணல் அம்பேத்கர் சமூக நல இயக்கத்தினர் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனர். 
இலுப்பையூரணி கிராமத்தில் கடந்த அக். 24இல் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடத்தப்பட்டதாக இணையதளத்தில் பொய் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்தும், முறையாக சிறப்பு கிராமசபைக் கூட்டத்தை நடத்த வேண்டும்;  தாமஸ் நகர் பகுதியில் உள்ள சமுதாய நலக் கூடத்தை தனி நபர் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு வழிவகை செய்ய வேண்டும்; கண்மாயில் கொட்டப்படும் கழிவுகளை தடுத்து நிறுத்தி, நீராதாரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தியும் இப்போராட்டம் நடைபெற்றது.
பின்னர்,  அலுவலக மேலாளர் சிவராமகிருஷ்ணனிடம் மனு அளித்துவிட்டு, அவர் அளித்த உறுதிமொழியை ஏற்று கலைந்து சென்றனர். 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/09/கோவில்பட்டி-ஒன்றிய-அலுவலகம்-முற்றுகை-3035053.html
3035052 திருநெல்வேலி தூத்துக்குடி திருச்செந்தூரில் சேறும், சகதியுமான சாலை: பக்தர்கள் அவதி DIN DIN Friday, November 9, 2018 02:54 AM +0530 திருச்செந்தூரில் மழையினால் சேதமடைந்து சேறும், சகதியுமாக காட்சியளிக்கும் சாலைகளைக் கடக்க முடியாமல்  பக்தர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
    வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தென் கடலோரப் பகுதியான திருச்செந்தூரில் கடந்த சில தினங்களாக மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் சாலையோரங்களில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது.
திருச்செந்தூரில்  பேரூராட்சி அலுவலகம் முன் சாலை சேதமடைந்து மேடு, பள்ளங்களாக மாறியுள்ளது. அந்தப் பள்ளங்களில் மழை நீர் தேங்கி கிடக்கிறது. மேலும், பள்ளங்களில் சிறு சிறு கற்களைப் போட்டு நிரப்பினாலும் அவை பயனற்று  குளம் போல தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகளும், யாத்திரை பக்தர்களும் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர்.
இதேபோல், திருச்செந்தூர் தெற்குரதவீதியிலும் மழையால் சாலை சேதமடைந்து சேறும், சகதியும் நிறைந்து காணப்படுகிறது. இதனால் பக்தர்கள், பொதுமக்கள் மட்டுமன்றி பள்ளிக் குழந்தைகளும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது, கந்த சஷ்டி விழா தொடங்கியுள்ள நிலையில்,  பக்தர்களின் நலன் கருதி சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/09/திருச்செந்தூரில்-சேறும்-சகதியுமான-சாலை-பக்தர்கள்-அவதி-3035052.html
3035050 திருநெல்வேலி தூத்துக்குடி அனுமதியின்றி விளம்பரப் பலகை: மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் 4 பேர் மீது வழக்கு DIN DIN Friday, November 9, 2018 02:53 AM +0530 காயல்பட்டினத்தில் காவல் துறை அனுமதியின்றி டிஜிட்டல் விளம்பரப் பலகை வைத்ததாக மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் 4 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் பேருந்து நிலையம் கிழக்குப் பகுதியில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து, விளம்பரப் பலகை வைக்கப்பட்டிருந்ததாம். இதற்கு காவல் துறையின் அனுமதி பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தப் பலகை போக்குவரத்துக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக இருந்ததாம். இதையடுத்து ஆறுமுகனேரி காவல் துறையினர் அந்த விளம்பரப் பலகையை அகற்றினர். இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளான காயல்பட்டினம் மங்களவாடியைச் சேர்ந்த செந்தூர்பாண்டி மகன் மந்திரம் (44), அதே பகுதியைச் சேர்ந்த சிவபெருமாள் மகன் பொன்ராஜ் (40), கீழ நெய்னார்தெரு மீரான் மகன் இதயத்துல்லா (50), அழகாபுரியை சேர்ந்த ஐகோட்டான் மகன் சக்திவேல் (35) ஆகியோர் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/09/அனுமதியின்றி-விளம்பரப்-பலகை-மக்கள்-நீதி-மய்யம்-நிர்வாகிகள்-4-பேர்-மீது-வழக்கு-3035050.html
3035049 திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்ட மைய நூலகம் சார்பில் குரூப் -2 மாதிரி தேர்வு DIN DIN Friday, November 9, 2018 02:52 AM +0530 தூத்துக்குடி மாவட்ட மைய நூலகம் சார்பில் குரூப்-2 மாதிரி தேர்வு அண்மையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட மைய நூலகம் மற்றும் சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி இணைந்து நடத்திய குரூப்-2 தேர்வுக்கான மாதிரி தேர்வு சுப்பையா வித்யாலயம் பள்ளியில் நடைபெற்றது.  தேர்வில் கலந்து கொண்டவர்களுக்கு மாவட்ட நூலக அலுவலர் ராம்சங்கர் வினாத்தாளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட மைய நூலகர் கொ. சங்கரன், நூலகர் ஜெ. லதா, சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி ஒருங்கிணைப்பாளர் பாவேந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தத் தேர்வில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மாதிரி தேர்வை எழுதினர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/09/மாவட்ட-மைய-நூலகம்-சார்பில்-குரூப்--2-மாதிரி-தேர்வு-3035049.html
3035048 திருநெல்வேலி தூத்துக்குடி தூத்துக்குடியில் வீடு புகுந்து மூதாட்டியிடம் 18 பவுன் நகை பறிப்பு DIN DIN Friday, November 9, 2018 02:52 AM +0530 தூத்துக்குடியில் வீட்டில் தனியாக இருந்த ஓய்வுபெற்ற செவிலியரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 18 பவுன் தங்க நகைகளைப் பறித்துச்சென்ற 4 பேரை போலீஸார் தேடிவருகின்றனர்.
தூத்துக்குடி, மடத்தூர் சாலையைச் சேர்ந்த வின்சென்ட் மனைவி கமலா (80). அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், தனது வீட்டில் வியாழக்கிழமை தனியாக இருந்தாராம். அதிகாலையில் 4 மர்ம நபர்கள் இவரது வீட்டுக்குள் திடீரென புகுந்து,  கத்தியைக் காட்டி மிரட்டி,  கமலா அணிந்திருந்த 18 பவுன் தங்க நகைகளைப் பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டனராம். அவர்கள் சென்றதும் கமலா கூச்சலிட்டதால் அக்கம்பக்கத்தினர் கூடினர். இதுதொடர்பாக கமலாவின் மருமகள் கிறிஸ்டிலா சிப்காட் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/09/தூத்துக்குடியில்-வீடு-புகுந்து-மூதாட்டியிடம்-18-பவுன்-நகை-பறிப்பு-3035048.html
3035047 திருநெல்வேலி தூத்துக்குடி ஆறுமுகனேரி கோயிலில் மஞ்சள் நீராட்டு DIN DIN Friday, November 9, 2018 02:52 AM +0530 ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் ஐப்பசித் திருக்கல்யாணத்தையொட்டி, சுவாமி - அம்பாளுக்கு மஞ்சள் நீராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த இக்கோயிலில், ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா கடந்த 3ஆம் தேதி தொடங்கியது. 4ஆம் தேதி தவசுக் காட்சி, தோள் மாலை மாற்றுதல், திருக்கல்யாணம் நடைபெற்றது. 5,  6, 7 ஆகிய 3 நாள்கள் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை, இரவில் திருப்பொன்னூஞ்சல் தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. நிறைவு நாளான வியாழக்கிழமை காலை 7 மணிக்கு பஞ்சமூர்த்திகள் விசேஷ அபிஷேகம், அலங்கார தீபாராதனை, பின்னர் சுவாமி- அம்பாளுக்கு மஞ்சள் நீராட்டு விழா, இரவில் சுவாமி-அம்பாள் பூஞ்சப்பரத்தில் வீதியுலா, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகளை சு. அய்யப்ப பட்டர், ரா.சு. சண்முகபட்டர் ஆகியோர் நடத்திவைத்தனர். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/09/ஆறுமுகனேரி-கோயிலில்-மஞ்சள்-நீராட்டு-3035047.html
3035046 திருநெல்வேலி தூத்துக்குடி கோவில்பட்டியில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி DIN DIN Friday, November 9, 2018 02:51 AM +0530 கோவில்பட்டியில் காமராஜ் இண்டர்நேஷனல் அகாதெமி பள்ளி மாணவர்-மாணவிகள் சார்பில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. 
பள்ளி வளாகம் முன்பிருந்து புறப்பட்ட பேரணிக்கு நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் ஏ.பி.கே. பழனிசெல்வம் தலைமை வகித்து, பேரணியை கொடியசைத்துத் தொடக்கிவைத்தார். பள்ளிச் செயலர் கண்ணப்பன், பொருளாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
பேரணி, பல்வேறு பகுதிகள் வழியாக மீண்டும் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்ற மாணவர்-மாணவிகள் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை வீடுகளில் விநியோகித்தனர். மேலும், வீடுகளில் உள்ள நீர்த்தொட்டிகளை மாணவர்கள் சோதனையிட்டு, கொசு ஒழிப்பு மருந்து ஊற்றினர். ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பாஸ்கர், கண்ணன், சண்முகசுந்தரம், பள்ளி முதல்வர் சுனிதா, ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/09/கோவில்பட்டியில்-டெங்கு-தடுப்பு-விழிப்புணர்வுப்-பேரணி-3035046.html
3035045 திருநெல்வேலி தூத்துக்குடி குடிசைமாற்று வாரிய வீடுகள்: வட்டாட்சியரிடம் கோரிக்கை DIN DIN Friday, November 9, 2018 02:51 AM +0530 கோவில்பட்டி அருகே குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்பட்டு வரும் வீடுகளில் மாற்றுத் திறனாளிகள், இளம் விதவைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வட்டாட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
கோவில்பட்டியை அடுத்த இனாம்மணியாச்சி ஊராட்சி, கிருஷ்ணா நகரில் குடிசைமாற்று வாரியம் மூலம் வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வீடுகளில் இளம் விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்தி பகத்சிங் மன்றத்தின் சார்பில் அதன் மாவட்டத் தலைவர் உத்தண்டுராமன் தலைமையில் பயனாளிகள் திரண்டு சென்று வட்டாட்சியர் பரமசிவனிடம் மனு அளித்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/09/குடிசைமாற்று-வாரிய-வீடுகள்-வட்டாட்சியரிடம்-கோரிக்கை-3035045.html
3035044 திருநெல்வேலி தூத்துக்குடி திருச்செந்தூரில் பக்தர்களுக்கு சுத்தமானகுடிநீர் வழங்க இந்து முன்னணி ஏற்பாடு DIN DIN Friday, November 9, 2018 02:50 AM +0530 திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் இந்து முன்னணி சார்பில் பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா வியாழக்கிழமை தொடங்கி, 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தற்போது கோயில் வளாகத்தில் தங்கி விரதமிருந்து வருகின்றனர். அவர்களுக்கு தெற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் இலவச சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான தொடக்க விழாவுக்கு, இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார் தலைமை வகித்தார். பாஜக மாநில வர்த்தக அணித் தலைவர் ஏ.என். ராஜகண்ணன் பக்தர்களுக்கு குடிநீரை வழங்கினார். இந்து முன்னணி கோட்டச் செயலர் பெ. சத்திவேலன், திருச்செந்தூர் நகர பொதுச் செயலர் எம். முத்துராஜ், ஒன்றியத் தலைவர் கே. ஜெயசிங், நகர துணைத் தலைவர் பட்டு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/09/திருச்செந்தூரில்-பக்தர்களுக்கு-சுத்தமானகுடிநீர்-வழங்க-இந்து-முன்னணி-ஏற்பாடு-3035044.html
3035043 திருநெல்வேலி தூத்துக்குடி கோவில்பட்டி, கழுகுமலையில் கந்த சஷ்டி திருவிழா தொடக்கம் DIN DIN Friday, November 9, 2018 02:50 AM +0530 கோவில்பட்டி சொர்ணமலை கதிரேசன் திருக்கோயில், பழனி ஆண்டவர் கோயில், மார்க்கெட் சாலை முருகன் கோயில், கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் உள்ளிட்ட  கோயில்களில் கந்தசஷ்டி திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது. 
கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலுடன் இணைந்த சொர்ணமலை கதிரேசன் திருக்கோயிலில்  6 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், சண்முகர் ஜெபம் ஆகியவை  நடைபெற்றன.  காலை 8 மணிக்கு மூலவர் கதிர்வேல் முருகனுக்கு லட்சார்ச்சனை தொடங்கியது. 10.30 மணிக்கு அருள்மிகு பழனி ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மாலை 5  மணிக்கு லட்சார்ச்சனை தொடங்கியது. இரவு 7  மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை ஹரி பட்டர், சுப்பிரமணிய பட்டர், அரவிந்த் பட்டர் ஆகியோர் செய்திருந்தனர்.  இம்மாதம் 15ஆம் தேதி வரை தினமும் காலை 8 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 5  முதல் 7 மணி வரையும் லட்சார்ச்சனை நடைபெறும். 
புதன்கிழமை (நவ. 14)  மாலை 6.30 மணிக்கு அருள்மிகு கார்த்திகேயர், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறும்.
செண்பகவல்லி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள  மூலவர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சண்முகர் சன்னதியில் காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம்,  தீபாராதனை, முற்பகல் 11 மணிக்கு சண்முகர் சன்னதியில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு திருவீதியுலா நடைபெற்றது. நவ. 13ஆம் தேதி மாலை 6  மணிக்கு சூரசம்ஹாரமும், 14ஆம் தேதி இரவு 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் திருக்கல்யாணமும் நடைபெறும். 
இதுபோல, கோவில்பட்டி பழனி ஆண்டவர் கோயில், ஜோதி நகர் ஜோதி விநாயகர் கோயில் முருகர் சன்னதி, மார்க்கெட் சாலை முருகன் கோயில், வீரவாஞ்சி நகர் புற்றுக்கோயில் கல்யாண முருகர் சன்னதியிலும் கந்தசஷ்டி சிறப்பு பூஜைகள் தினமும் நடைபெறும். 
கழுகுமலை: கழுகாசலமூர்த்தி கோயிலில் அதிகாலை 6  மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகளும்,  சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனையும் நடைபெற்றன. 
இரவு சுவாமி வள்ளி, தெய்வானை பிராட்டியார்களுடன் பூச்சப்பரத்தில்  வீதியுலா வந்தார். விழாவில் தினமும் காலை, இரவில் சுவாமி வள்ளி, தெய்வானையுடன் பூச்சப்பரம், பூத வாகனத்தில்  வீதியுலா நடைபெறும். 
5ஆம் திருநாளான நவ. 12இல் நண்பகல் 12 மணிக்கு முருகப்பெருமான் தாரகாசூரனை சம்ஹாரம் செய்கிறார்.  நவ.13இல் மாலை 4.30  மணிக்கு சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. நவ.16 இல்  இரவு 7 மணிக்கு மேல் 8  மணிக்குள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சேர்ந்தபூமங்கலம், ஆறுமுகனேரி கோயில்களில்...
சேர்ந்தபூமங்கலம், ஆறுமுகனேரி கோயில்களில் கந்தசஷ்டி விழா வியாழக்கிழமை தொடங்கியது.
ஆத்தூர் அருகேயுள்ள நவகைலாயத் தலத்தின் 9ஆவது ஸ்தலமும் சுக்ர ஸ்தலமுமாகிய சேர்ந்தபூமங்கலம் அருள்மிகு கைலாசநாதர் கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவையொட்டி, அதிகாலையில் கணபதி ஹோமம் நடைபெற்றது. பின்னர், சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் மூலவருக்கும் உற்சவருக்கும் கும்ப பூஜை, சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார,  தீபாராதனை நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த அருள்மிகு சோமசுந்தரி அம்மன்  சமேத சோமநாத சுவாமி கோயிலில்  வள்ளி - தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு வியாழக்கிழமை மாலை பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து, சிறப்பு  தீபாராதனை, கிரி வீதியுலா நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/09/கோவில்பட்டி-கழுகுமலையில்-கந்த-சஷ்டி-திருவிழா-தொடக்கம்-3035043.html
3035042 திருநெல்வேலி தூத்துக்குடி அண்ணா பிறந்த தின போட்டி: மாணவ- மாணவியருக்கு அழைப்பு DIN DIN Friday, November 9, 2018 02:49 AM +0530 அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் நவ. 18 ஆம் தேதி நடத்தப்படும் பேச்சு, கட்டுரை மற்றும் கவிதை ஒப்புவித்தல் போட்டிகளில் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: 
தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 110ஆவது பிறந்த தினத்தையொட்டி, திமுக இளைஞரணி அறக்கட்டளை சார்பில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதை ஒப்பித்தல் போட்டி ஆகியவை நடத்தப்படுகின்றன. அதன்படி, தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில், நவ.18 ஆம் தேதி தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள கீதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போட்டிகள் நடைபெறும்.  9 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவிகள் போட்டிகளில் பங்கேற்கலாம்.
பேச்சுப் போட்டியில்  மொழிப்போர் களத்தில் "அய்யாவும், அண்ணாவும், கலைஞரும்' அல்லது "பெரியார் - அண்ணா - கலைஞர் - ஸ்டாலின்' என்ற தலைப்பில் 5 நிமிடத்துக்கு மிகாமல் பேச வேண்டும்.
 கட்டுரைப் போட்டியில் திராவிட இயக்கமும், இட ஒதுக்கீடும் அல்லது  காலத்தால் அழியாத கலைஞரின் வார்த்தைகள்  என்ற தலைப்பில்  100 வரிகளுக்கு மிகாமல் எழுத வேண்டும். பேப்பர் போட்டி நடைபெறும் அறையில் தரப்படும்.
 கவிதை ஒப்புவித்தல் போட்டியாளர்கள் தங்களது பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள  கலைஞரின் இரண்டு கவிதைகளில் ஏதேனும் ஒரு கவிதையை போட்டியில் ஒப்பித்தல் வேண்டும். கவிதை விவரம் கிடைக்கப்பெறாதவர்கள் மாவட்ட திமுக அலுவலகமான தூத்துக்குடி கலைஞர் அரங்கில் பெற்றுக்கொள்ளளாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/09/அண்ணா-பிறந்த-தின-போட்டி-மாணவ--மாணவியருக்கு-அழைப்பு-3035042.html
3034820 திருநெல்வேலி தூத்துக்குடி விளாத்திகுளம் அருகே கண்மாயில் மூழ்கி தந்தை, மகன் சாவு DIN DIN Thursday, November 8, 2018 05:09 AM +0530
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே கண்மாயில் மூழ்கி தந்தை, மகன் இறந்தனர்.
விளாத்திகுளம் அருகேயுள்ள அயன்செங்கல்படை கிராமத்தைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி பொய்யாழி (47). இவரது மனைவி குருலட்சுமி (38). தம்பதிக்கு மலையரசன் என்ற மருது (17) என்ற மகனும், 2 மகள்களும் இருந்தனர். மலையரசன் ஆந்திர மாநிலத்தில் உள்ள இனிப்பகம் ஒன்றில் வேலை பார்த்துவந்தாராம். தீபாவளி பண்டிகைக்காக 3 நாள்களுக்கு முன்பு அவர் சொந்த ஊருக்கு வந்துள்ளார். செவ்வாய்க்கிழமை காலையில் பொய்யாழியும் மலையரசனும் அங்குள்ள கண்மாயில் குளிக்கச் சென்றனர். வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால், குருலட்சுமியும் உறவினர்களும் அவர்களைத் தேடினர்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை கண்மாயில் பொய்யாழி, மலையரசன் ஆகியோரின் சடலங்கள் மிதப்பதாக, அப்பகுதி மக்கள் விளாத்திகுளம் காவல் நிலையத்துக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சென்று சடலங்களை மீட்டனர். அவற்றை பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் போலீஸார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/08/விளாத்திகுளம்-அருகே-கண்மாயில்-மூழ்கி-தந்தை-மகன்-சாவு-3034820.html
3034484 திருநெல்வேலி தூத்துக்குடி டெங்கு ஒழிப்பு: திருமண மண்டபம், திரையரங்கு உரிமையாளர்களுடன் ஆணையர் ஆலோசனை DIN DIN Thursday, November 8, 2018 01:22 AM +0530
டெங்கு ஒழிப்பு நடவடிக்கை குறித்து, தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுடன் ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார்.
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில், டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் போன்ற நோய்கள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் சுகாதாரத்தை பேணுவது தொடர்பாக திருமண மண்டபங்கள் மற்றும் திரையரங்குகள் உரிமையாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை வகித்து பேசியது:
டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் பரவும் முறை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும். குறிப்பாக தரைகளை ஒவ்வொரு நிகழ்வின் போதும் சுத்தம் செய்ய வேண்டும், பொது மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொருள்களான கதவின் கைப்பிடிகள், மாடி கைப்பிடிகள், இருக்கைகள், மேஜைகள் போன்றவற்றை சுத்தம் செய்ய வேண்டும்.
சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் கூடிய பணியாளர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டாம். வளாகங்களில் பொதுமக்கள் பார்வைக்குத் தெரியும் வகையில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்க வேண்டும் என்றார் அவர்.
கூட்டத்தில், திருமண மண்டபம், திரையரங்குகளின் உரிமையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/08/டெங்கு-ஒழிப்பு-திருமண-மண்டபம்-திரையரங்கு-உரிமையாளர்களுடன்-ஆணையர்-ஆலோசனை-3034484.html
3034483 திருநெல்வேலி தூத்துக்குடி திருச்செந்தூரில் டெங்கு தடுப்பு நடவடிக்கை DIN DIN Thursday, November 8, 2018 01:22 AM +0530
திருச்செந்தூரில் திமுக சார்பில் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக பள்ளி மாணவிகளுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது.
அருள்மிகு செந்தில் முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை ராஜலட்சுமி முன்னிலை வகித்தார். திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி மாணவிகளுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்குவதை தொடங்கிவைத்தார். தொடர்ந்து பேருந்து நிலையத்திலும் பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலர் செங்குழி ஏ.பி.ரமேஷ், மாநில மாணவரணி துணை அமைப்பாளர் எஸ்.ஆர்.எஸ். உமரிசங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர் வி.எஸ்.கருணாகரன், மாநில இளைஞரணி துணைச் செயலர் துரை, நகரச் செயலர் சுடலை, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் ஸ்ரீதர் ரொட்ரிக்கோ, ஒன்றிய இளைஞரணிச் செயலர் எடிசன், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் தங்கபாண்டியன், மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் லதா, மாவட்ட ஆதிதிராவிட நல துணை அமைப்பாளர் ரவி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/08/திருச்செந்தூரில்-டெங்கு-தடுப்பு-நடவடிக்கை-3034483.html
3034482 திருநெல்வேலி தூத்துக்குடி கோயில் உண்டியலை உடைத்து திருடியவர் கைது DIN DIN Thursday, November 8, 2018 01:21 AM +0530
கோவில்பட்டியில் கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியதாக ஒருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
கோவில்பட்டி கதிரேசன் கோயில் சாலையில் உள்ள மேட்டுக்காளியம்மன் கோயிலில் உள்ள 3 உண்டியல்களை உடைத்து மர்ம நபர்கள் அண்மையில் திருடிச் சென்றனர். இதேபோல், கோவில்பட்டி காந்தி நகரில் உள்ள காளியம்மன் கோயிலில் உள்ள உண்டியலையும் உடைத்து மர்ம நபர்கள் திருடிச்சென்றனராம். இச்சம்பவங்கள் குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் புதன்கிழமை கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் அருகே சந்தேகத்துக்குரிய இடத்தில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து போலீஸார் விசாரித்த போது, அவர் மற்றொருவருடன் சேர்ந்து கோவில்பட்டியில் உள்ள கோயில்களில் உண்டியல்களை உடைத்து திருடியதாக தெரியவந்துள்ளது.
விசாரணையில் அவர், தருமபுரி மாவட்டம் சிட்லாங்-கைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (43) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்த ரூ.7,150-ஐ போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் நடராஜன் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/08/கோயில்-உண்டியலை-உடைத்து-திருடியவர்-கைது-3034482.html
3034481 திருநெல்வேலி தூத்துக்குடி மது விற்பனை: இளைஞர் கைது DIN DIN Thursday, November 8, 2018 01:21 AM +0530
கயத்தாறு அருகே மதுவை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
கயத்தாறு காவல் உதவி ஆய்வாளர் முத்துமாரி தலைமையிலான போலீஸார், செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கழுகுமலை சாலை இலந்தைகுளம் விலக்கு அருகே மதுவை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த கொம்பையா மகன் பால்பாண்டியனை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 13 மது பாட்டில்கள் மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/08/மது-விற்பனை-இளைஞர்-கைது-3034481.html
3034480 திருநெல்வேலி தூத்துக்குடி மேம்பால தடுப்புச் சுவரில் பைக் மோதி இளைஞர் சாவு DIN DIN Thursday, November 8, 2018 01:21 AM +0530
கயத்தாறு கட்டபொம்மன் சிலை அருகேயுள்ள மேம்பால தடுப்புச் சுவரில் பைக் மோதியதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கயத்தாறையடுத்த பருத்திகுளம் மேலத் தெருவைச் சேர்ந்த பூல்பாண்டி மகன் சின்னராஜா (27). இவர் செவ்வாய்க்கிழமை கயத்தாறில் உள்ள உறவினரை பார்த்துவிட்டு பைக்கில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாராம். அப்போது பைக் கயத்தாறு கட்டபொம்மன் சிலை பகுதியில் மேம்பாலத் தடுப்புச் சுவரில் மோதியதில் காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சென்ற போலீஸார் சடலத்தை கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கயத்தாறு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலை விபத்தில் சமையலர் சாவு
உடன்குடி அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் சமையலர் உயிரிழந்தார்.
உடன்குடி முருகன் காலனியைச் சேர்ந்தவர் சி.காங்கேயன்(56). சமையலர்.ùளùள இவரும், சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த சேகர் மகன் முத்துசெல்வமும் (14) பைக்கில் கொட்டங்காட்டில் இருந்து உடன்குடிக்கு வந்து கொண்டிருந்தனராம். இதேபோல் உடன்குடி அருகே படுக்கப்பத்தைச் சேர்ந்த சி.தங்கத்துரையும் கொட்டங்காட்டில் இருந்து உடன்குடிக்கு வந்து கொண்டிருந்தனராம். அப்போது எதிரே வந்த கார் இவர்கள் பைக்குகள் மீது மோதியதில் காங்கேயன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பலத்த காயமடைந்த முத்து செல்வம், தங்கத்துரை ஆகியோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிந்து காரை ஓட்டி வந்த இடைச்சிவிளையைச் சேர்ந்த ஆ.முருகனை (24) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/08/மேம்பால-தடுப்புச்-சுவரில்-பைக்-மோதி-இளைஞர்-சாவு-3034480.html
3034479 திருநெல்வேலி தூத்துக்குடி உச்சநீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாக 10 பேர் மீது வழக்கு DIN DIN Thursday, November 8, 2018 01:20 AM +0530
உச்சநீதிமன்ற உத்தரவை மீறி, அனுமதிக்கப்படாத நேரத்தில் பட்டாசு வெடித்ததாக கோவில்பட்டி சாத்தான்குளம் பகுதிகளில் 10 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நாலாட்டின்புத்தூர் காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் 3 பேர், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் 2 பேர், கழுகுமலை பகுதியில் 2 பேர் என 7 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், சாத்தான்குளம் பகுதியில் 2 பேர், தட்டார்மடம் பகுதியில் ஒருவர் என 3 பேர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/08/உச்சநீதிமன்ற-உத்தரவை-மீறி-பட்டாசு-வெடித்ததாக-10-பேர்-மீது-வழக்கு-3034479.html
3034478 திருநெல்வேலி தூத்துக்குடி பைக் விபத்தில் இளைஞர் சாவு DIN DIN Thursday, November 8, 2018 01:20 AM +0530
சாத்தான்குளம் அருகே பைக் விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.
சாத்தான்குளம் வடுகச்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சு.தண்டபாணி (30). இவர் கோவையில் காய்கனி வியாபாரம் செய்து வந்தார். தீபாவளியையொட்டி செவ்வாய்க்கிழமை ஊருக்கு வந்திருந்த அவர், பைக்கில் சாத்தான்குளம் அடுத்துள்ள தோப்புவளத்துக்கு அவரது சகோதரியை பார்க்க சென்றாராம். அப்போது சாலையோர வளைவில் திரும்புகையில், பைக் அவரது கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் உள்ள சுவரில் மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த தண்டபாணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பாலத்தில் பைக் மோதி இளைஞர் சாவு
 எட்டயபுரம் அருகே பாலத்தின் தடுப்புச் சுவரில் பைக் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
கீழஈரால் ஆர்.சி. தெருவைச் சேர்ந்த மரிய மைக்கேல் மகன் சூசை ஜெகன் (23). இவர் அதே பகுதியைச் சேர்ந்த நண்பர் பொன் கருப்பசாமியுடன் (21) புதன்கிழமை பைக்கில் கோவில்பட்டிக்கு சென்றுகொண்டிருந்தனராம். எட்டயபுரத்தை அடுத்த இளம்புவனம் பகுதியை கடந்து சென்ற போது, பைக் பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த சூசை ஜெகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த பொன் கருப்பசாமி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவலறிந்து வந்த எட்டயபுரம் போலீஸார் சூசை ஜெகனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/08/பைக்-விபத்தில்-இளைஞர்-சாவு-3034478.html
3034477 திருநெல்வேலி தூத்துக்குடி சிந்தலக்கரையில் அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் DIN DIN Thursday, November 8, 2018 01:20 AM +0530
விளாத்திகுளம் தொகுதி அதிமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் நியமனம் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் சிந்தலக்கரையில் புதன்கிழமை நடைபெற்றது.
ஒன்றியச் செயலர் அய்யாத்துரை பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சி.த. செல்லப்பாண்டியன், மாவட்ட துணைச் செயலர் தங்க மாரியம்மாள் தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன் வரவேற்றார். விளாத்திகுளம் தொகுதி இடைத்தேர்தல் பணிக்குழு பொறுப்பாளரும், அமைச்சருமான கடம்பூர் செ. ராஜு, ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தல் பணிக்குழு பொறுப்பாளரும், ஆதி திராவிடர் நலத் துறை அமைச்சருமான ராஜலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
இதே போல் புதூர் ஒன்றியத்துக்குள்பட்ட சிவலார்பட்டியிலும், விளாத்திகுளம் ஒன்றியத்துக்குள்பட்ட குளத்தூரிலும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டங்களில், முன்னாள் எம்.எல்.ஏ. மோகன், நெல்லை தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவர் சின்னத்துரை, ஒன்றியச் செயலர்கள் ஞானகுருசாமி, பால்ராஜ், வாசுதேவன், நகரச் செயலர்கள் ஆழ்வார் உதயகுமார், ஆண்டி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலர் தெய்வேந்திரன், புதூர் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் தனஞ்செயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/08/சிந்தலக்கரையில்-அதிமுக-வாக்குச்சாவடி-முகவர்கள்-ஆலோசனை-கூட்டம்-3034477.html
3034476 திருநெல்வேலி தூத்துக்குடி உடன்குடி ராமகிருஷ்ணா பள்ளியில் மருத்துவ முகாம் DIN DIN Thursday, November 8, 2018 01:20 AM +0530
உடன்குடி தேரியூர் ராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரர் பள்ளியில் தமிழக முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
வட்டார மருத்துவ அலுவலர் அனி பிரிமின் முகாமைத் தொடங்கிவைத்தார். பள்ளித் தலைமையாசிரியை (பொ)திலகவதி முன்னிலை வகித்தார்.
முகாமில் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டன. அனைத்து விதமான உடல் பரிசோதனைகளும் இலவசமாக செய்யப்பட்டன. கண் நோய் சிகிச்சை பெற்றவர்களுக்கு இலவசமாக ரூ.1000 மதிப்புள்ள லென்ஸ்கள் பொருத்தப்பட்டன. முகாமில் 871 பயனாளிகள் பங்கேற்றனர்.
இதில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் சேதுபதி, ஆழ்வார், அருள்ராஜ், சுப்பையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை பள்ளி முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் ஜீவானந்தம், சுயம்பு, ஸ்டாலின், கதிர், முத்துக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/08/உடன்குடி-ராமகிருஷ்ணா-பள்ளியில்-மருத்துவ-முகாம்-3034476.html
3034475 திருநெல்வேலி தூத்துக்குடி நீர்நிலைகளில் பாதுகாப்புடன் குளிக்க ஆட்சியர் வேண்டுகோள் DIN DIN Thursday, November 8, 2018 01:19 AM +0530
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் குளிப்போர் பாதுகாப்புடனும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஆறு, குளங்கள், ஊருணிகள் போன்ற நீர் நிலைகளில் தண்ணீர் நிரம்பி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு அரசுத் திட்டங்களின் மூலம் குளம், கண்மாய்கள், கால்வாய்கள் மற்றும் நீர் நிலைகள் தூர்வாரப்பட்டு ஆழப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், சிறுவர்கள், நீச்சல் தெரியாதவர்கள் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் நீர் நிலைகளில் குளிக்கச் செல்லுகையில், ஏதேனும் அசம்பாவிதம், உயிர்ச் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, பெற்றோர் குழந்தைகளுடன் நீர் நிலைகளுக்கு குளிக்கச் செல்லும் போது, தங்களது நேரடி மேற்பார்வையில் முன்னெச்சரிக்கையுடனும் தேவையான பாதுகாப்புடனும் இருக்க வேண்டும்.
மேலும் பிற இடங்களில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், பொது நீர் நிலைகளில் குளிக்கும் போதும், பயன்படுத்தும் போதும் மிகுந்த முன்னெச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/08/நீர்நிலைகளில்-பாதுகாப்புடன்-குளிக்க-ஆட்சியர்-வேண்டுகோள்-3034475.html
3034474 திருநெல்வேலி தூத்துக்குடி கோவில்பட்டி பள்ளியில் தேசிய ஒற்றுமை தின விழா DIN DIN Thursday, November 8, 2018 01:19 AM +0530
கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தேசிய ஒற்றுமை தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, சங்கத் தலைவர் ஆசியா ஃபார்ம்ஸ் பாபு தலைமை வகித்தார். செயலர் ரவிமாணிக்கம், நகராட்சி சுகாதார ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையர் அச்சையா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
தொடர்ந்து, மாணவர், மாணவிகளுக்கு வண்ணம் தீட்டும் போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தலைமையாசிரியர் சுப்பாராயன் வரவேற்றார். ஆசிரியை மீனா நன்றி கூறினார்.
இதுபோல், கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளி மற்றும் கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரிகளிலும் தேசிய ஒருமைப்பாட்டு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/08/கோவில்பட்டி-பள்ளியில்-தேசிய-ஒற்றுமை-தின-விழா-3034474.html
3034473 திருநெல்வேலி தூத்துக்குடி 10 இடங்களில் நாளை அம்மா திட்ட முகாம் DIN DIN Thursday, November 8, 2018 01:19 AM +0530
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் வெள்ளிக்கிழமை (நவ. 9) அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் அம்மா திட்ட முகாம், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் அந்தந்த வட்டாட்சியர்கள் தலைமையில் வெள்ளிக்கிழமை (நவ. 9) நடைபெறுகிறது.
அதன்படி, தூத்துக்குடி வட்டம் மீளவிட்டான் பகுதி - 1, ஸ்ரீவைகுண்டம் வட்டம் ஆழ்வார்கற்குளம், திருச்செந்தூர் வட்டம் மணப்பாடு, சாத்தான்குளம் வட்டம் பள்ளகுறிச்சி, கோவில்பட்டி வட்டம் பிச்சைத்தலைவன்பட்டி, விளாத்திகுளம் வட்டம் நடுக்காட்டூர், எட்டயபுரம் வட்டம் சிந்தலக்கரை, ஓட்டப்பிடாரம் வட்டம் மேலஅரசடி, கயத்தாறு வட்டம் காலங்கரைப்பட்டி, ஏரல் வட்டம் சிவகளை ஆகிய கிராமங்களில் நடைபெறுகிறது.
முகாமின்போது, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு - இறப்பு சான்றுகள், சாதிச் சான்றுகள் மற்றும் வருவாய்த் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளதால் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/08/10-இடங்களில்-நாளை-அம்மா-திட்ட-முகாம்-3034473.html
3034472 திருநெல்வேலி தூத்துக்குடி ஆறுமுகனேரியில் 100 சதவீத குடிநீர் கட்டண உயர்வு: பாஜக கண்டனம் DIN DIN Thursday, November 8, 2018 01:18 AM +0530
ஆறுமுகனேரி பேரூராட்சி பகுதியில் குடிநீர்க் கட்டணம் 100 சதவீதம் உயர்வுக்கு நகர பாரதிய ஜனதா கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆறுமுகனேரி நகர பாரதிய ஜனதா கட்சி செயற்குழு கூட்டம் நகரத் தலைவர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் சந்திரசேகரன், பிரசார பிரிவு மாவட்டத் தலைவர் ராமமூர்த்தி, மகளிர் அணி தலைவர் ராஜகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரப் பொதுச் செயலர் சண்முகம் வரவேற்றார். மாவட்ட ஓபிசி பிரிவு பொதுச் செயலர் தங்கப்பாண்டியன், சமூக வலைதள பிரிவு மாவட்டச் செயலர் சிவகுமார் ஆகியோர் பேசினர்.
ஆறுமுகனேரி பேரூராட்சி பகுதியில் குடிநீர் வீட்டு இணைப்புக்கான கட்டணம் ரூ.50இல் இருந்து ரூ.100 ஆக உயர்த்தப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
வீட்டுக் குடிநீர்இணைப்புக்கு வைப்புத் தொகை கட்டி காத்திருப்போருக்கு உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். ஆறுமுகனேரி மின்பகிர்மான வட்டத்தில் போதுமான வயர்மேன்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், ராமசேகரன், செல்வகுமார், லிதங்கம், வரதராஜன், பொன்ராஜ், ஆர்த்தி, துரை, எலிசபெத்ராணி, ராஜவேலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 12ஆவது கிளைத் தலைவர் சரவணன் நன்றி கூறினார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/08/ஆறுமுகனேரியில்-100-சதவீத-குடிநீர்-கட்டண-உயர்வு-பாஜக-கண்டனம்-3034472.html
3034471 திருநெல்வேலி தூத்துக்குடி என்சிசி மாணவர்கள் ஊழல் தடுப்பு உறுதிமொழி ஏற்பு DIN DIN Thursday, November 8, 2018 01:18 AM +0530 ஆறுமுகனேரி கா.ஆ.மேல்நிலைப் பள்ளியில் காயல்பட்டினம் மற்றும் ஆறுமுகனேரி பள்ளி என்.சி.சி. மாணவர்கள் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர் .
ஊழல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, ஆறுமுகனேரி கா.ஆ.மேல்நிலைப் பள்ளி மற்றும் காயல்பட்டினம் எல்.கே.மேல்நிலைப் பள்ளி என்.சி.சி. மாணவர்கள் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.
நிகழ்ச்சியில், கா.ஆ.மேல்நிலைப் பள்ளி என்.சி.சி. ஆசிரியர் அரிச்சந்திரராஜ், ஷேக் பீர்முகமது காமில் ஆகியோர் தலைமை வகித்தனர். கா.ஆ.மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை சோமசுந்தரி முன்னிலை வகித்தார். இதில், 100 என்.சி.சி. மாணவர்கள் பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/08/என்சிசி-மாணவர்கள்-ஊழல்-தடுப்பு-உறுதிமொழி-ஏற்பு-3034471.html
3034470 திருநெல்வேலி தூத்துக்குடி சாத்தான்குளத்தில் ஓய்வூதியர்கள் சங்க செயற்குழு கூட்டம் DIN DIN Thursday, November 8, 2018 01:17 AM +0530
சாத்தான்குளத்தில், தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க வட்டச் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு வட்ட துணைத் தலைவர் வேல்கனி தலைமை வகித்தார். வட்டச் செயலர் தேவசமாதானம் வரவேற்றார். மாவட்ட இணைச் செயலர் ஜெயபால் பேசினார்.
சாத்தான்குளம் பேரூராட்சிப் பகுதியில் மர்மக் காய்ச்சல் வருவதை தடுக்கும் வகையில், குப்பைகள் மற்றும் மழைநீர் தேங்காமல் இருக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், சங்க நிர்வாகிகள் ஜோசப் துரைராஜ், நாராயணன், சித்திரைவேல், பாப்புராஜ், மேரிபாப்பா, முத்துலட்சுமி, நிர்மலா, பகவதி, ரேணுகா, கல்யாணி, இசக்கிமுத்து, வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னாள் வட்டச் செயலர் நடராஜன் நன்றி கூறினார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/08/சாத்தான்குளத்தில்-ஓய்வூதியர்கள்-சங்க-செயற்குழு-கூட்டம்-3034470.html
3034469 திருநெல்வேலி தூத்துக்குடி தேசியப் போட்டி: கோவில்பட்டி கல்லூரி மாணவர்கள் சிறப்பிடம் DIN DIN Thursday, November 8, 2018 01:17 AM +0530
சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான கிளிக்ட்ரிக்ஸ் 2019 செயலி உருவாக்கும் போட்டியில் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.
சென்னை ஜோகோ நடத்திய இப்போட்டியில் இக்கல்லூரியின் தகவல்தொழில்நுட்பத் துறை இறுதியாண்டு மாணவர்கள் சோ. பிரதீப்குமார், ர. மனோஜ்சபரீஷ் ஆகியோர் கலந்துகொண்டு உருவாக்கிய எப்.ஏ.கியூ. எனும் அறிவுபரிமாற்ற செயலிக்கு, முதல் பரிசாக ரூ. 1 லட்சம் மற்றும் சான்றிதழ், கோப்பை வழங்கப்பட்டது.
போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு ஜோகோ குழுமத்தின் உயரதிகாரி மணிவேம்பு பரிசுகளை வழங்கினார்.
இம்மாணவர்களை கே.ஆர். கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் கே.ஆர். அருணாசலம், நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநர் சொக்கலிங்கம், முதல்வர் சண்முகவேல், தகவல் தொழில்நுட்பத் துறை தலைவர் மணிமேகலை உள்ளிட்டோர் பாராட்டினர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/08/தேசியப்-போட்டி-கோவில்பட்டி-கல்லூரி-மாணவர்கள்-சிறப்பிடம்-3034469.html
3034468 திருநெல்வேலி தூத்துக்குடி நாகம்பட்டி கல்லூரியில் தேசிய ஒருமைப்பாட்டு நாள் விழா DIN DIN Thursday, November 8, 2018 01:17 AM +0530
நாகம்பட்டி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் தேசிய ஒருமைப்பாட்டு நாள் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் பெ. சேர்மக்கனி தலைமை வகித்தார். தேசிய ஒருமைப்பாட்டு நாளை முன்னிட்டு பனை மர விதைகள் நடப்பட்டன. பின்னர், மாணவர், மாணவிகள் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியை எடுத்தனர். இதில், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் சுரேஷ், வேல்ராஜ், பேராசிரியர்கள் சேதுராமன், ஈசுவரன், கிருஷ்ணமூர்த்தி, வினோத், வின்சன்ட், ரவி அலெக்ஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/08/நாகம்பட்டி-கல்லூரியில்-தேசிய-ஒருமைப்பாட்டு-நாள்-விழா-3034468.html
3034109 திருநெல்வேலி தூத்துக்குடி "தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ. 600 கோடியில் விரிவாக்கப் பணிகள்' DIN DIN Tuesday, November 6, 2018 08:08 AM +0530 தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ. 600 கோடியில் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார் விமான நிலையங்கள் ஆணைய குழும இயங்குநர் ஸ்ரீகுமார்.
தூத்துக்குடியில் உள்ள அகில இந்திய வர்த்தக சங்க அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற விமான நிலைய விரிவாக்கம் தொடர்பான கலந்துரையாடல் கூட்டத்தில் அவர் பேசியது:
தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிதாக பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏ321 ரக விமானங்கள் தரையிறங்கும் வகையில் ஓடுதளம் மற்றும் விமானங்களை நிறுத்தும் வசதி, புதிய முனையம் உள்ளிட்டவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான முதல் கட்ட திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ரூ. 600 கோடி மதிப்பில் விமான நிலைய விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதில் 3,115 மீட்டர் நீளம்,  45 மீட்டர் அகலம் கொண்ட விமான ஓடுதளம்,  இரவில் விமானங்கள் தரையிறங்குவதற்கான வசதிகள்,  5 விமானங்களை நிறுத்துவதற்கான வசதி,  தீயணைப்பு நிலையம், பயணிகள் வசதிக்காக புதிய கட்டடங்கள்,  கார் மற்றும்  பேருந்து நிறுத்தும் இடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கப்பட உள்ளன.
விமான நிலைய விரிவாக்கத்துக்காக தமிழக அரசு இதுவரை ஒப்படைத்துள்ள இடத்தை சுற்றி 4.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அந்தப் பணிகள் அனைத்தும் முடிவடையும் போது தூத்துக்குடி விமான நிலையத்தில் ஏ321 ரக பெரிய விமானங்கள் தரையிறங்கும். தொலைவில் உள்ள பல்வேறு நகரங்களுக்கு நேரடியாக விமான சேவை தொடங்கப்படும் என்றார் அவர்.
கூட்டத்தில்,  சென்னை விமான நிலைய பொது மேலாளர் (சிவில்) ராஜசேகர், தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் என். சுப்பிரமணியன், வர்த்தக சங்க செயலர் கோடீஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/06/தூத்துக்குடி-விமான-நிலையத்தில்-ரூ-600-கோடியில்-விரிவாக்கப்-பணிகள்-3034109.html
3034009 திருநெல்வேலி தூத்துக்குடி பண்பாட்டு போட்டி: விஜயராமபுரம் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் DIN DIN Tuesday, November 6, 2018 06:48 AM +0530 விவேகானந்த கேந்திரம் சார்பில் சாத்தான்குளம் ஒன்றிய அளவில் நடைபெற்ற பண்பாட்டு போட்டியில் பல்வேறு போட்டிகளில் விஜயராமபுரம் ஸ்ரீமுத்தாரம்மன் இந்து நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர். 
சாத்தான்குளம் ஸ்ரீமாரியம்மன் இந்து தொடக்கப்பள்ளியில் விவேகானந்த கேந்திரம் சார்பில் கிராமப்புற தொடக்கப்பள்ளி மாணவர்,  மாணவிகளுக்கான ஒன்றிய அளவிலான பண்பாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில்  சாத்தான்குளம் அருகே உள்ள விஜயராமபுரம் ஸ்ரீமுத்தாரம்மன் இந்து நடுநிலைப்பள்ளியிலிருந்து 44  மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அதில் பேச்சுப்போட்டி,  உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில்  30  மாணவர்,  மாணவிகள் முதல் 3 இடங்களை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.    6ஆம் வகுப்பிற்கான பேச்சு, ஒப்பித்தல்,  நினைவாற்றல் போட்டியில் மாணவர்கள்  ஐ.வரதராஜ், எஸ்.சங்கமித்ரா, ஏ.வசுமிதா, கே. லோகேஸ்வரி  ஆகியோர் முதல் பரிசு பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பயிற்று வித்த ஆசிரியை ஆர். பார்வதி ஆகியோரை பாராட்டி தலைமை ஆசிரியர் சி. ஜெகதீசபாண்டி பரிசு வழங்கினார்,

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/06/பண்பாட்டு-போட்டி-விஜயராமபுரம்-பள்ளி-மாணவர்கள்-சிறப்பிடம்-3034009.html
3034008 திருநெல்வேலி தூத்துக்குடி பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் DIN DIN Tuesday, November 6, 2018 06:47 AM +0530 நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு  குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
தாளாளர் டாக்டர் கமலி ஜெயசீலன் தலைமை வகித்தார். முதல்வர்  ஜெயராணி பிரேம்குமார் முன்னிலை வகித்தார்.
ஆசிரியர் மரியா வரவேற்றார் விழாவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  ஏ.டி.கே. ஜெயசீலன், நாசரேத் காவல் ஆய்வாளர் வே.ராஜ், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து   பேசினர். மாணவி பொன்னாச்சியார் ஹெலன் நன்றி கூறினார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/06/பிளாஸ்டிக்-ஒழிப்பு-விழிப்புணர்வு-கூட்டம்-3034008.html
3034007 திருநெல்வேலி தூத்துக்குடி திருச்செந்தூர் கோயில் வளாகத்தை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும்:  இந்து முன்னணி கோரிக்கை DIN DIN Tuesday, November 6, 2018 06:47 AM +0530 திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வியாழக்கிழமை (நவ. 8) கந்த சஷ்டி விழா தொடங்க உள்ள நிலையில் கழிப்பறைகள் மற்றும் தேங்கியுள்ள மழைநீரினால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதுடன், நோய் பரவும் அபாயம் உள்ளதாக இந்து முன்னணி குற்றஞ்சாட்டி உள்ளது.
இது குறித்து இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் கூறியது:   தமிழகம் முழுவதிலும் டெங்கு காய்ச்சல் மற்றும் மர்மக்காய்ச்சல்கள் பரவி வரும் சூழ்நிலையில் தனியார் இடங்களுக்குச் சென்று சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பிற அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இது வரவேற்கத்தக்கதே, ஆனால் அதே அக்கறை அரசு சம்பந்தப்பட்ட கட்டடங்களிலும், கோயில் போன்ற பக்தர்கள் கூடும் இடங்களிலும் இருந்தால் சிறப்பாக இருக்கும். 
  திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் உள்ள கழிப்பறைகள் சுத்தமானதாகவும், சுகாதாரமானதாகவும் இல்லை. மேலும் கோயிலின் வெளிப்பிரகாரத்தில் உள்ள பல இடங்களில் மழைநீர் தேங்கி காணப்படுவதால், கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி வருகின்றன. இதனால் நோய் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது கந்த சஷ்டி விழா தொடங்க இருப்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருவார்கள். எனவே சம்பந்தப்பட்ட அறநிலையத்துறை மற்றும்  சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து,  பக்தர்களுக்கு நோய் தொற்றாமல் காக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/06/திருச்செந்தூர்-கோயில்-வளாகத்தை-சுகாதாரமாக-பராமரிக்க-வேண்டும்--இந்து-முன்னணி-கோரிக்கை-3034007.html
3034006 திருநெல்வேலி தூத்துக்குடி கோவில்பட்டி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் ஆய்வு DIN DIN Tuesday, November 6, 2018 06:47 AM +0530 கோவில்பட்டி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் பயணிகள் ரயில்களில் பட்டாசு உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை எடுத்துச் செல்கிறார்களா என்பது குறித்து  ஆய்வில் திங்கள்கிழமை ஈடுபட்டனர். 
 கோவில்பட்டி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் அரியநாயகம், மதுரை கோட்ட வெடிகுண்டு நிபுணர் டேனியல்சிலோகரன் மற்றும் போலீஸார் மோப்ப நாய் ரோவர் உதவியுடன் ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் தீபாவளியை முன்னிட்டு, பட்டாசுகளை ரயிலில் கொண்டு வருகிறார்களா என்பது குறித்தும்,  எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை ரயிலில் கொண்டு வருகிறார்களா என்பது குறித்தும் ஆய்வில் ஈடுபட்டனர். 
மேலும், ரயில் நிலையத்தில் இருந்து உள்ளே மற்றும் வெளியே செல்லும் பயணிகள் மற்றும் அவரது உறவினர்கள் வைத்திருக்கும் பைகள் மற்றும் உடைமைகளை  சோதனை செய்தனர்.  தொடர்ந்து விழிப்புணர்வு  வாசகங்கள் அடங்கிய   துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர். 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/nov/06/கோவில்பட்டி-ரயில்-நிலையத்தில்-ரயில்வே-பாதுகாப்புப்-படை-போலீஸார்-ஆய்வு-3034006.html