Dinamani - திருநெல்வேலி - http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2821726 அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலியில் ஆளுநரிடம் மனு அளித்த பொதுமக்கள் DIN DIN Thursday, December 7, 2017 08:09 AM +0530 திருநெல்வேலியில் புதன்கிழமை மாலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பொதுமக்களை சந்தித்தார். அப்போது 150-க்கும் மேற்பட்டோர் அவரிடம் மனு அளித்தனர். 

சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற ஆளுநர், மாலையில் வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் பொதுமக்களை சந்தித்தார். அவரிடம் 150-க்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் நின்று மனு அளித்தனர். அவற்றை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பவும்,  அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவும் ஆளுநர் உத்தரவிட்டார்.

வேதிக் வித்யாஷ்ரம், ஜயேந்திரா வெள்ளி விழா பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்- மாணவிகள் ஆளுநரைச் சந்தித்தனர். அவர்களுடன் கலந்துரையாடிய ஆளுநர், அனைவரும் சிறப்பாக செயல்பட வாழ்த்து தெரிவித்தார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/7/w600X390/governor.jpg http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/2017/dec/07/ஆளுநரிடம்-மனு-அளித்த-பொதுமக்கள்-2821726.html