Dinamani - திருவாரூர் - http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2827709 நாகப்பட்டினம் திருவாரூர் திருத்துறைப்பூண்டியில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு: காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டம் DIN DIN Sunday, December 17, 2017 12:29 AM +0530 அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக ராகுல்காந்தி பதவியேற்றதைத் தொடர்ந்து, திருத்துறைப்பூண்டியில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
முன்னதாக, காமராஜர் சிலைக்கு நகர காங்கிரஸ் தலைவர் பி.எழிலரசன் தலைமையில் மாலைஅணித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், கட்சியின் மாவட்டச் செயலர் க.ரா. ரமேஷ், சட்டப்பேரவை தொகுதி இளைஞர் காங்கிரஸ் ஆர். கோகுலவசந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதேபோல், முத்துப்பேட்டையில் நகரத் தலைவர் ஜெகபர்அலி தலைமையில், இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். மூத்த உறுப்பினர் முகமது மைதீன், மாவட்டச் செயலாளர் சுந்தரராமன், பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் மெட்ரோ மாலிக் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் உப்பூர் வீரசேகரன் கட்சிக்கொடியேற்றினார்.
இதில், மாநில சிறுபான்மைப் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் சேக்பரீத், , முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் சுப்பையன், மாவட்ட விவசாய பிரிவுத் தலைவர் இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வடுகநாதன், மீனவர் அணி மாவட்டத் தலைவர் நிஜாம்மைதீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/17/திருத்துறைப்பூண்டியில்-காமராஜர்-சிலைக்கு-மாலை-அணிவிப்பு-காங்கிரஸ்-கட்சியினர்-கொண்டாட்டம்-2827709.html
2827708 நாகப்பட்டினம் திருவாரூர் மனைவி தற்கொலை வழக்கில் கணவர் கைது DIN DIN Sunday, December 17, 2017 12:28 AM +0530 திருத்துறைப்பூண்டி அருகே இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக அவரது கணவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
கள்ளிக்குடி கீழத்தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (30). விவசாயி. இவரது மனைவி அம்பிகாராணி (27). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள்ஆகின்றன. இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், குடும்பத்தகராறு காரணமாக அம்பிகாராணி டிச. 14-ஆம் தேதி தீக்குளித்தார். அவரை, திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை இறந்தார்.
இதுதொடர்பாக, எடையூர் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தினர்.
இதற்கிடையில், மன்னார்குடி கோட்டாட்சியர் செல்வசுரபி விசாரணை மேற்கொண்டு, அறிக்கை அளித்தார். அதில், கணவர் தற்கொலைக்கு தூண்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என தெரிகிறது. இந்த அறிக்கையின் பேரில், சதீஷ்குமாரை எடையூர் போலீஸார் கைது செய்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/17/மனைவி-தற்கொலை-வழக்கில்-கணவர்-கைது-2827708.html
2827707 நாகப்பட்டினம் திருவாரூர் தடையை மீறிஆர்ப்பாட்டம்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 100 பேர் கைது DIN DIN Sunday, December 17, 2017 12:28 AM +0530 திருத்துறைப்பூண்டி அருகே காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 100 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை அடுத்த ஆலத்தம்பாடியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையினரிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்தனர். ஆனால், ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் வி.த. செல்வம் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக பட்டுகோட்டை நாடாளுமன்றத் தொகுதி செயலாளர் இளந்தென்றல் மற்றும் என்.டி. இடிமுரசு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/17/தடையை-மீறிஆர்ப்பாட்டம்-விடுதலைச்-சிறுத்தைகள்-கட்சியினர்-100-பேர்-கைது-2827707.html
2827706 நாகப்பட்டினம் திருவாரூர் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை DIN DIN Sunday, December 17, 2017 12:28 AM +0530 திருவாரூரில் மழை காரணமாக சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என பாமக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நகர பாமக தலைவர் எஸ்.வி. இளங்கோராஜ் வெளியிட்ட அறிக்கை: சமீபத்தில் பெய்த மழையில் திருவாரூரில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறிவிட்டன. குறிப்பாக கொடிக்கால்பாளையம் வழியாக மயிலாடுதுறை செல்லும் சாலையை இணைக்கும் தைக்கால் சாலையில் மிகப்பெரிய பள்ளங்கள் உருவாகியுள்ளன. இந்த சாலை இன்னமும் சீரமைக்கப்படவில்லை. இதனால் இந்த பாதையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் பெருமளவு பாதிப்பை சந்திக்கின்றனர்.
குறிப்பாக, இரவு நேரங்களில் இவ்வழியே செல்லும்போது விபத்துகளைச் சந்திக்க நேரிடுகிறது. இதேபோல், நாகை செல்லும் சாலையில் கிடாரங்கொண்டான், ஆண்டிப்பாளையம், விளமல் உள்ளிட்ட இடங்களில் சாலைகள் மிகவும் மோசமாக காணப்படுகின்றன. மழை நின்றபிறகும் இந்த சாலைகளின் பாதிப்புகள் இன்னமும் சரிசெய்யப்படவில்லை. எனவே, இந்த சாலைகளை சீரமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/17/பழுதடைந்த-சாலைகளை-சீரமைக்கக்-கோரிக்கை-2827706.html
2827705 நாகப்பட்டினம் திருவாரூர் புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டம் DIN DIN Sunday, December 17, 2017 12:28 AM +0530 ஒக்கி புயலில் பாதிக்கப்பட்ட மீனவர்கள், விவசாயிகள் அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்கக் கோரி திருவாரூரில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருவாரூர் ரயில் நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணைப் பொதுச் செயலர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். இதில், முன்னாள் துணைப் பொதுச் செயலர் நா. சிவசுப்ரமணியன் பங்கேற்று பேசினார். இதில், மாவட்டச் செயலர்கள் ஐயப்பன், சண்முகம், நகரத் தலைவர் இளங்கோராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஒக்கி புயலில் பாதிக்கப்பட்ட மீனவர்கள், விவசாயிகள் ஆகியோருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். காணாமல் போன மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/17/புயலில்-பாதிக்கப்பட்டவர்களுக்கு-நிவாரணம்-கோரி-ஆர்ப்பாட்டம்-2827705.html
2827516 நாகப்பட்டினம் திருவாரூர் காசிவிசுவநாதர் கோயிலில் 19-இல் சனிப் பெயர்ச்சி வழிபாடு DIN DIN Saturday, December 16, 2017 05:34 AM +0530 நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோயிலில் டிச. 19-ஆம் தேதி சனிப் பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது.
நவகிரகங்களில் சனீஸ்வர பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு டிச.19-ஆம் தேதி பெயர்ச்சி அடைவதை முன்னிட்டு அன்று காலை 8 மணிக்கு மேல் 11 மணிக்குள் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பரிகார ஹோமம், அபிஷேக- ஆராதனைகள் நடைபெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை நீடாமங்கலம் சந்தானராம சுவாமி கைங்கர்ய சபாவினர் மற்றும் பிரதோஷ கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/16/காசிவிசுவநாதர்-கோயிலில்-19-இல்-சனிப்-பெயர்ச்சி-வழிபாடு-2827516.html
2827515 நாகப்பட்டினம் திருவாரூர் வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம் DIN DIN Saturday, December 16, 2017 05:24 AM +0530 கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் திருவாரூர் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஜி. மனோகரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் கே. சந்திரசேகரன், மாநில செயற்குழு உறுப்பினர் எம். தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலர் எம். செளந்தரராஜன் பங்கேற்று, போராட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதில் மாநில துணைத் தலைவர் த. முருகையன் பங்கேற்று கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார்.
கிராம உதவியாளர்களுக்கு, அலுவலக உதவியாளர்களுக்கு இணையான அடிப்படை ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வு பெறும் கிராம உதவியாளர்களுக்கு கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் அடிப்படை ஓய்வூதியமாக வழங்க வேண்டும். கிராம உதவியாளர்களின் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/16/வருவாய்த்துறை-கிராம-உதவியாளர்கள்-உண்ணாவிரதப்-போராட்டம்-2827515.html
2827514 நாகப்பட்டினம் திருவாரூர் திருத்துறைப்பூண்டியில் இன்று மின் தடை DIN DIN Saturday, December 16, 2017 05:23 AM +0530 திருத்துறைப்பூண்டியில் சனிக்கிழமை (டிச.16) மின் விநியோகம் இருக்காது என திருத்துறைப்பூண்டி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வி. அழகேசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருத்துறைப்பூண்டி உட்கோட்டத்தில் உள்ள பள்ளங்கோயில் துணை மின் நிலையத்தில், சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 6 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.
இதனால், இந்தத் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும், திருத்துறைப்பூண்டி நகர், வேளூர், பாண்டி, குன்னலூர், எடையூர், சங்கேந்தி, உதயமார்த்தாண்டபுரம், கோட்டூர், விளக்குடி, பள்ளங்கோயில், ஆலிவலம், ஆண்டாங்கரை, குன்னூர், பாமணி, கொறுக்கை, கொக்காலடி உள்ளடங்கியப் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. இதேபோல், பெருகவாழ்ந்தான் துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/16/திருத்துறைப்பூண்டியில்-இன்று-மின்-தடை-2827514.html
2827513 நாகப்பட்டினம் திருவாரூர் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் DIN DIN Saturday, December 16, 2017 05:23 AM +0530 திருவாரூரில் அரசுக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லூரி வளாகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மாணவர் சங்கத்தின் கல்லூரித் தலைவர் அருண் தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செயலர் பிரகாஷ் பங்கேற்று கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார். போராட்டத்தில் ஒன்றியச் செயலர் மதன், நகரச் செயலர் சுர்ஜித், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கவிதா, சத்தியசீலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
டிஎன்பிஎஸ்ஸி மூலமாக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் வெளிமாநிலத்தவர் பங்கேற்கும் முடிவை ரத்து செய்ய வேண்டும், ஒக்கி புயலில் உயிரிழந்த மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், அத்துடன் காணாமல்போன மீனவர்களைத் தேடும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும், தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வுகளில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த போராட்டம் நடைபெற்றது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/16/கல்லூரி-மாணவர்கள்-வகுப்புகளை-புறக்கணித்து-ஆர்ப்பாட்டம்-2827513.html
2827512 நாகப்பட்டினம் திருவாரூர் போக்குவரத்துத் தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம் DIN DIN Saturday, December 16, 2017 05:23 AM +0530 திருவாரூர் போக்குவரத்து அலுவலகம் முன்பு போக்குவரத்துத் தொழிலாளர்கள் சார்பில் காத்திருப்புப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
போராட்டத்துக்கு சிஐடியு கிளைச் செயலர் மோகன் தலைமை வகித்தார். இதில் கிளைத் தலைவர் ராமச்சந்திரன், தொமுச நிர்வாகிகள் மாரிமுத்து, சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போக்குவரத்து கழகங்களுக்கு வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்க வேண்டும், ஓய்வு பெற்றவுடன் பணப்பலன்கள், ஓய்வூதிய நிலுவைகளை உடனடியாக வழங்க வேண்டும், பிறதுறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த போராட்டம் நடைபெற்றது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/16/போக்குவரத்துத்-தொழிலாளர்கள்-காத்திருப்புப்-போராட்டம்-2827512.html
2827511 நாகப்பட்டினம் திருவாரூர் மருந்தாளுநர் பணியிடங்கள் நிரப்பக் கோரி டிச. 23-இல் போராட்டம் DIN DIN Saturday, December 16, 2017 05:23 AM +0530 திருவாரூர் மாவட்டத்தில் மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்பக் கோரி டிச. 23-ஆம் தேதி ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்க மாவட்டத் தலைவர் டி. மணிவண்ணன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: காலியாகவுள்ள 1,000 மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பதவி உயர்வு தேக்க நிலையைப் போக்க மருந்தாளுநர்களுக்கு கூடுதலாக மூன்று கட்ட பதவி உயர்வு வழங்க வேண்டும், 42 துணை இயக்குநர் அலுவலக மருந்துக் கிடங்குக்கு தலைமை மருந்தாளுநர் பணியிடம் உருவாக்க வேண்டும், கூடுதல் மருந்தாளுநர் பணியிடம் உருவாக்க வேண்டும், தலைமை அலுவலகம் மற்றும் மாவட்ட மருந்துக் கிடங்குக்கு மருந்துக் கிடங்கு அலுவலர் பணியிடம் உருவாக்க வேண்டும், நகரஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருந்தாளுநர்களை பணிவரன்முறை செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், தலைமை மருந்தாளுநர், மருந்துக் கிடங்கு அலுவலர் தரஊதியம் ரூ. 5,400/ 6,000 ஆக உயர்த்தி பிறகு ஊதியக்குழு ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காச நோய்ப் பிரிவில் பணியாற்றும் மற்ற பிரிவு ஊழியரைப் போல் ஒரு மாதம் கட்டாய விடுப்பு வழங்க வேண்டும், மருந்துகள் சேவைக் கழகத்திலிருந்து மருத்துவமனைகளுக்கு மருந்துகள் நேரடியாக டோர்டெலிவரி செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் டிச. 23-ஆம் தேதி மருந்தாளுநர் சங்கத்தினர் ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதில், அரசு மருத்துவக் கல்லூரி, அரசு மருத்துவமனைகள், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை மருந்தாளுநர்கள் போராட்டத்தில் பங்கேற்கவுள்ளனர் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/16/மருந்தாளுநர்-பணியிடங்கள்-நிரப்பக்-கோரி-டிச-23-இல்-போராட்டம்-2827511.html
2826749 நாகப்பட்டினம் திருவாரூர் கூத்தாநல்லூர் அருகே புதிய மருத்துவமனை திறப்பு DIN DIN Friday, December 15, 2017 03:31 AM +0530 கூத்தாநல்லூர் வட்டம், லெட்சுமாங்குடியில், 'டாக்டர் 4 யூ' என்ற மருத்துவமனையின் புதிய கிளை தொடக்க விழா மற்றும் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவாரூர்- லெட்சுமாங்குடி பிரதான சாலையில் அமைக்கப்பட்டுள்ள இம்மருத்துவமனை கிளையை சமூக ஆர்வலர் ராமதாஸ் திறந்து வைத்து, இலவச மருத்துவ ஆலோசனை முகாமையும் தொடங்கி வைத்தார்.
இம்முகாமில், மருத்துவர்கள் ராபர்ட் திவான், ஹரிபாபு மற்றும் செவிலியர்கள் உள்ளிட்டோர் மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கினர். இதில் ஒருங்கிணைப்பாளர் விஜய் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மருத்துவமனையின் புதிய கிளை குறித்து, ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன் கூறியது:
'டாக்டர் 4 யூ' மருத்துவமனைத் தலைவர் சுந்தரபரிபூரணம், துணைத் தலைவர் மருத்துவர் பாலாஜி சுப்ரமணியன் ஆகியோரின் ஆலோசனைப்படி, திட்டத் தலைவர் சங்கர் வழிகாட்டுதலோடு, தமிழகத்தில் மணல்மேடு, நீடூர், சங்கரன்பந்தல், வைத்தீஸ்வரன்கோயில், செம்பனார்கோயில், குறிஞ்சிப்பாடி, கடலூர் ஓ.டி, பரங்கிப்பேட்டை, வேப்பந்தட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், குறிப்பாக கிராமப்புறங்களில் மருத்துவமனை கிளைகள் அமைக்கப்பட்டுள்ளன.
திருவாரூர் மாவட்டத்தில், லெட்சுமாங்குடி, கொரடாச்சேரி மற்றும் திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட மூன்று இடங்களில் வியாழக்கிழமை தொடங்கப்பட்டுள்ளன.
இம்மருத்துவமனைக்கு முதல் முறையாக வருவோர் ரூ.50 செலுத்தி விட்டால், ஒரு மாதத்துக்கு பணம் செலுத்த வேண்டியதில்லை. மேலும், மாதாந்திர மருந்துகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. தொலைபேசியில் அழைப்பு விடுத்தால், வீட்டிற்கே வந்து ரத்தப் பரிசோதனை செய்யப்படும் என்றார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/15/கூத்தாநல்லூர்-அருகே-புதிய-மருத்துவமனை-திறப்பு-2826749.html
2826750 நாகப்பட்டினம் திருவாரூர் பசுமை வீடு திட்டம்: நகராட்சிப் பகுதிக்கு அமல்படுத்த வலியுறுத்தல் DIN DIN Friday, December 15, 2017 03:31 AM +0530 பசுமை வீடு, நூறு நாள் வேலைத் திட்டத்தை நகராட்சிப் பகுதிகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மன்னார்குடி நகராட்சி வார்டு கிளை பேரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. பூக்கொல்லை சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு நகரக் குழு உறுப்பினர் எஸ். ராஜூ தலைமை வகித்தார். கூட்டத்தில், கிராமப் புறங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும், பசுமை வீடு கட்டும் திட்டம், தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் ஆகியவற்றை நகராட்சிப் பகுதிகளுக்கு விரிவுப்படுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துவது.
நகராட்சி 30-ஆவது வார்டில் குடியிருப்பவர்களுக்கு, குடிமனை பட்டா வழங்க வேண்டும். பழுதடைந்துள்ள சாலைகளை மேம்படுத்த வேண்டும். அந்தோணியார் கோவில் தெருவில் உள்ள மயானசாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில், கட்சிக் கொடியை, மாதர் சங்க மாநில துணைச் செயலர் மாலாபாண்டின் ஏற்றிவைத்தார். தியாகிகள் நினைவு ஸ்தூபியை, முன்னாள் நகரச் செயலர் ஏ. பார்த்திபன் திறந்து வைத்தார். செயல்திட்டங்களை நகரக்குழு உறுப்பினர் எம். சின்னக்கண்ணு வாசித்தார். கூட்டத்தில், நகரச் செயலர் வி. கலைச்செல்வன், துணைச் செயலர் என். தனிக்கோடி, கிளைச் செயலர் ஏ. செல்வராஜ், துணைச் செயலர் காத்தான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/15/பசுமை-வீடு-திட்டம்-நகராட்சிப்-பகுதிக்கு-அமல்படுத்த-வலியுறுத்தல்-2826750.html
2826747 நாகப்பட்டினம் திருவாரூர் மீன் மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய பாஜக வலியுறுத்தல் DIN DIN Friday, December 15, 2017 03:30 AM +0530 திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஆசாத் நகரில் போக்குவரத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள மீன் மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது.
தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து அளித்த மனு விவரம்: முத்துப்பேட்டை ஆசாத் நகர் பாலம்தான் வேதாரண்யம் சாலையை முத்துப்பேட்டையுடன் இணைக்கும் பிரதான வழித்தடமாகும்.
இந்த சாலையில் காலை நேரத்தில் பள்ளிக்கூடங்களுக்குச் செல்லும் மாணவ, மாணவியர், அலுவலர்கள் வியாபார நோக்கங்களுக்கு வெளியூர் செல்ல முத்துப்பேட்டைக்கு வரும் முக்கிய வழித்தடமாகும்.
இந்த பாலத்தின் வடபுறத்தில் மீன் மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு மீன் வாங்குவதற்கு வருபவர்கள் காலை 11 மணி வரை அதிகளவில் கூடுவதால், போக்குவரத்து ஸ்தம்பித்து பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும், அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகின்றன.
இந்த மீன் மார்க்கெட்டை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை.
எனவே, மாவட்ட ஆட்சியர் தனிக் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுத்து ஆசாத்நகர் மீன் மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/15/மீன்-மார்க்கெட்டை-இடமாற்றம்-செய்ய-பாஜக-வலியுறுத்தல்-2826747.html
2826746 நாகப்பட்டினம் திருவாரூர் தைக்கால் சாலையை சீரமைக்க வலியுறுத்தல் DIN DIN Friday, December 15, 2017 03:30 AM +0530 திருவாரூர் அருகேயுள்ள தைக்கால் சாலையை சீரமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருவாரூர் அருகேயுள்ள கொடிக்கால்பாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 7-ஆவது வார்டு கிளை ஆண்டு பேரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், திருவாரூர் தைக்கால் சாலை மிக மோசமாகவும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் உள்ளதால் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், கொடிக்கால்பாளையம் வடிகால் வாய்க்கால் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கட்சி நிர்வாகி, ஏ. முகம்மது இஷாக் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநிலக் குழு உறுப்பினர் பி.எஸ். மாசிலாமணி, நகரச் செயலர் மாரியப்பன், துணைச் செயலர் செல்வம், நகரச் செயற்குழு உறுப்பினர் செல்வமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/15/தைக்கால்-சாலையை-சீரமைக்க-வலியுறுத்தல்-2826746.html
2826744 நாகப்பட்டினம் திருவாரூர் சாலை பள்ளத்தில் விழுந்து காயமடைந்தவர் சாவு: உறவினர்கள் சாலை மறியல் DIN DIN Friday, December 15, 2017 03:30 AM +0530 திருவாரூர் அருகே சாலை பள்ளத்தில் விழுந்து காயமடைந்தவர் மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தார். இதுதொடர்பாக, அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவாரூர் அருகேயுள்ள பெரும்புகளூர் பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ் (40). விவசாயத் தொழிலாளியான இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், 2 மகள்கள், ஓர் மகன் உள்ளனர்.
இந்நிலையில், பால்ராஜ் கடந்த நவ. 26 -ஆம் தேதி இரவு திருவாரூர் வந்துவிட்டு, பின்னர் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது சாலைகளில் இருந்த பள்ளம் காரணமாக தவறி விழுந்தவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அருகிலிருந்தவர்கள் பால்ராஜை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது சடலம் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு, அமரர் ஊர்தி வாகனத்தில் ஏற்றப்பட்டது. அப்போது அந்த வாகனத்தை பால்ராஜின் உறவினர்கள் மறித்து, சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறுகையில், சாலை சீரமைக்கப்பட்டிருந்தால், இந்த விபத்து நேரிட்டிருக்காது. எனவே, உயிரிழந்த பால்ராஜின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/15/சாலை-பள்ளத்தில்-விழுந்து-காயமடைந்தவர்-சாவு-உறவினர்கள்-சாலை-மறியல்-2826744.html
2826743 நாகப்பட்டினம் திருவாரூர் புகையிலைத் தோட்டம் பகுதியில் வடிகால் வசதி ஏற்படுத்தப்படுமா ? சி. ராஜசேகரன் DIN Friday, December 15, 2017 03:29 AM +0530 திருவாரூர் அருகே புகையிலைத் தோட்டம் பகுதியில் குப்பைத் தொட்டிகள், வடிகால் வசதி இல்லாததால், சாக்கடை மற்றும் குப்பைகள் தேங்கி, உருவாகியுள்ள சுகாதாரமற்ற சூழ்நிலையை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருவாரூர் நகராட்சி 29-ஆவது வார்டுக்குள்பட்ட புகையிலைத் தோட்டம் குடியிருப்புப் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்கள், அரசு ஊழியர்கள் அதிகம் உள்ள இக்குடியிருப்புகளுக்கு மத்தியில் காலி மனைகள் உள்ளன.
இப்பகுதியில் பிரதான சாலையும், அதிலிருந்து இருபுறத்தில் பிரியக்கூடிய 8 குறுக்கு சாலைகளும் உள்ளன. 2012-13 ஆம் நிதியாண்டில் 4 குறுக்கு சாலைகள் தார்ச் சாலைகளாக மாற்றப்பட்டன. மீதமுள்ள சாலைகளில் எவ்விதப் பணிகளும் செய்யாததால் அச்சாலைகள் மழைக் காலங்களில் சேதமடைகின்றன.
இப்பகுதியில், குப்பைத் தொட்டி வசதி, வீட்டுக் கழிவுநீர் செல்ல வடிகால் வசதியில்லை. இதனால், இப்பகுதி குடியிருப்புகளில் சேரும் குப்பைகள், காலி மனைகளில் கொட்டப்படுகின்றன. இந்நிலையில், காலி மனைகளில் தேங்கும் கழிவு நீரில் பிளாஸ்டிக் கழிவுகள், வீணான பொருள்கள் கொட்டப்பட்டு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
அண்மையில் பெய்த மழையின்போது, குப்பைக் கழிவுகள் சாலையில் பரவி மக்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. சாக்கடை கலந்த கழிவுநீராக இருப்பதால் இங்கு கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி மக்களுக்கு பல்வேறு நோய்களை உண்டாக்கி வருகிறது. மேலும், சாக்கடை உள்ள பகுதிகளில் பன்றிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. உடலில் கழிவு சேற்றுடன் சாலையில் நடமாடும் பன்றிகளால் மக்கள் பெரிதும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
திருவாரூர் நகராட்சிக்குள்பட்ட பெரும்பாலான வார்டுகளிலும் புதைச் சாக்கடை பணிகள் முடிவடைந்த நிலையில், இப்பகுதியில் எவ்வித பணிகளும் தொடங்கவில்லை என புகார் தெரிவிக்கும் பகுதி மக்கள், புதைச் சாக்கடைக்கான உரியத் தொகையை நகராட்சியில் செலுத்தியிருப்பதாகவும் கூறுகின்றனர்.
இதுகுறித்து புகையிலைத் தோட்டம் குடியிருப்போர் தெரு நலச் சங்கத் தலைவர் எம். ராமகிருஷ்ணன் கூறியது:
இப்பகுதியில் குப்பைத் தொட்டிகள் வைத்து, நாள்தோறும் குப்பைகளை எடுத்துச் செல்ல வேண்டும், கழிவுநீர் செல்ல புதைச் சாக்கடை பணிகளை நிறைவேற்ற வேண்டும், குடிநீர் வசதி இல்லாமல் பெரும்பாலானோர் சொந்த செலவில் அடி குழாய் அமைத்துள்ளதால், கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அகல ரயில் பாதை பணிகள் நடைபெற்றபோது, நிறுத்தப்பட்ட பணிகள் இதுவரை தொடங்கவில்லை. எங்கள் பகுதியில் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்றார்.
இதுகுறித்து அச்சங்கத்தின் பொருளாளர் எஸ். பன்னீர்செல்வம் கூறியது: இங்கு வசிக்கும் குடும்பத்தினருக்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பான்கார்டு, மின் பயனீட்டு கட்டண அட்டை ஆகியவற்றில் புகையிலை தோட்டம் என்று உள்ளது. ஆனால் நகராட்சி அலுவலகம் வழங்கும் வீட்டுவரி ரசீதுகளில் ரயில்வே காம்பெளண்ட் என்று உள்ளது. எனவே இப் பெயரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களது கோரிக்கைகளை பலமுறை மனுவாக அளித்துள்ளோம்.
ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார்.நகர்ப்புறங்களை மட்டுமல்ல கடைகோடி பகுதிகளையும் சுத்தப்படுத்தினால்தான் தூய்மை இந்தியா சாத்தியமாகும். புகையிலைத் தோட்டம் பகுதியில் தேவையான இடங்களில் குப்பைத் தொட்டிகள் வைத்து, கழிவுநீர் செல்ல வசதியாக வடிகால்கள் அமைத்து தர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின்
எதிர்பார்ப்பு.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/15/புகையிலைத்-தோட்டம்-பகுதியில்-வடிகால்-வசதி-ஏற்படுத்தப்படுமா--2826743.html
2826106 நாகப்பட்டினம் திருவாரூர் திருவாரூர் மாவட்டத்தில் டிச.17-இல் கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் DIN DIN Thursday, December 14, 2017 03:29 AM +0530 திருவாரூர் மாவட்டத்தில் டிச. 17 -ஆம் தேதி கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருவாரூர் மாவட்டப் பிரிவு சார்பில் டிச. 17 -இல் முத்துப்பேட்டை ஒன்றியம், விளாங்காடு கிராம பஞ்சாயத்தில் உள்ள கரையன்காடு ஸ்ரீ கற்பகநாதர் ஆலய மைதானத்தில் ஆடவர் மற்றும் மகளிருக்கான கடற்கரை கால்பந்து, கடற்கரை வாலிபால் மற்றும் கடற்கரை கபடி விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
போட்டிகளில் கலந்துகொள்ள வயது வரம்பு கிடையாது. வாலிபால் விளையாட்டில் இரண்டு பேர், கால்பந்து விளையாட்டில் ஐந்து பேர், கபடி விளையாட்டில் ஆறு பேர் மட்டுமே ஒவ்வொரு அணியிலும் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ. 500, 2 -ஆம் பரிசு ரூ. 350, 3 -ஆம் பரிசு ரூ. 200 வழங்கப்படும்.பரிசுத்தொகை அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். எனவே, போட்டிகளுக்கு வருவோர் வங்கி கணக்குப் புத்தகத்தின் நகலை எடுத்து வர வேண்டும். போட்டிகள் காலை 8 மணிக்கு தொடங்கும். காலை 7.30 மணிக்கு அணிகளை நேரடியாக பதிவு செய்து கொள்ளவேண்டும். கூடுதல் தகவல் பெற விரும்புவோர் மாவட்ட விளையாட்டு அலுவலக தொலைபேசி எண். 04366- 227158 -இல் தொடர்பு கொண்டு விவரங்கள் பெறலாம்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/14/திருவாரூர்-மாவட்டத்தில்-டிச17-இல்-கடற்கரை-விளையாட்டுப்-போட்டிகள்-2826106.html
2826105 நாகப்பட்டினம் திருவாரூர் காவல் உதவி ஆய்வாளரிடம் தகராறு செய்த மூவர் மீது வழக்கு DIN DIN Thursday, December 14, 2017 03:29 AM +0530 திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளரிடம் தகராறில் ஈடுபட்ட மூவர் மீது போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.
முத்துப்பேட்டை அருகேயுள்ள ஜாம்பவானோடை தியாகி சிவராமன் நினைவிடம் அருகே முத்துப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் ராஜாராம் தலைமையிலான போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த அதே பகுதியைச் சேர்ந்த ஐயப்பன், செந்தில், மனோஜ்குமார் ஆகிய மூவரும் உதவி ஆய்வாளர் ராஜாராமிடம் தகராறு செய்துவிட்டு, தப்பியோடிவிட்டனராம். இதுகுறித்து உதவி ஆய்வாளர் ராஜாராம் அளித்த புகாரின்பேரில், அவர்கள் மூவர் மீதும் முத்துப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/14/காவல்-உதவி-ஆய்வாளரிடம்-தகராறு-செய்த-மூவர்-மீது-வழக்கு-2826105.html
2826104 நாகப்பட்டினம் திருவாரூர் காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட் DIN DIN Thursday, December 14, 2017 03:29 AM +0530 வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து திருவாரூர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
திருச்சி காவல் ஆய்வாளராக இருப்பவர் சிவவடிவேல் (50). இவர் 2014 -இல் திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணிபுரிந்தார். அப்போது, மணல் திருட்டு, பணம் கையாடல் உள்ளிட்ட வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்தார். இந்த வழக்குகளின் விசாரணை திருவாரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு தொடர்பாக ஆஜராகுமாறு இருமுறை அவருக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.
இதையடுத்து அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து திருவாரூர் குற்றவியல் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/14/காவல்-ஆய்வாளருக்கு-பிடிவாரண்ட்-2826104.html
2826103 நாகப்பட்டினம் திருவாரூர் தனித்திறன் தேர்வு எழுதிய கள்ளிக்குடி அரசுப் பள்ளி மாணவர்கள் DIN DIN Thursday, December 14, 2017 03:29 AM +0530 திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை அடுத்த கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் 6, 7, 8 -ஆம் வகுப்பு மாணவர்கள் தேசிய திறனறி இணைய வழித்தேர்வை அண்மையில் எழுதினர்.
மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் வித்தியார்த்தி விஞ்ஞான் மந்தன் என்ற தேசிய இணையவழி திறனறிதல் தேர்வு 2017 அண்மையில் நடைபெற்றது. இதற்கான அறிவிப்பு கடந்த ஜூன் 1 -ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் முன்னின்று நடத்தியது. நிகழாண்டு இத்தேர்வானது இணைய வழியாக நடைபெற்றது.
இந்தத் தேர்வில் திருவாரூர் மாவட்டம், கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் 6, 7, 8 -ஆம் வகுப்பு மாணவர்கள் 32 பேர், நாகப்பட்டினம் மாவட்டம், ஹாஜி ஷேக் இஸ்மாயில் பொறியியல் கல்லூரியின் உதவியுடன் கல்லூரியின் கணினி ஆய்வகத்தில் இத்தேர்வை எழுதினர்.
இதுகுறித்து பள்ளி ஆசிரியர் சுரேஷ் கூறியது: இந்திய அளவில் தனியார் பள்ளிகள் மட்டுமே எதிர்கொள்கின்ற இதுபோன்ற தேர்வை கிராமப்புறப் பகுதியில் உள்ள எங்கள் பள்ளியும் எதிர்கொண்டிருப்பதை பெருமையாகக் கருதுகின்றோம். இதில் தேசிய, மாநில, மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ரொக்கப் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படும்.
அந்தச் சான்றிதழானது எதிர்காலத்தில் ஆராய்ச்சிப் படிப்புகளைப் படிக்கும்போது மாணவர்களுக்கு உதவியாக இருக்கும். இந்தத் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதை விட மாணவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கவும் கணினி வழி தேர்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒரு உந்துதலாக இருப்பதுடன், திருவாரூர் மாவட்டத்திலேயே கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மட்டும்தான் இத்தேர்வை எழுதியுள்ளதுஎன்றார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/14/தனித்திறன்-தேர்வு-எழுதிய-கள்ளிக்குடி-அரசுப்-பள்ளி-மாணவர்கள்-2826103.html
2826102 நாகப்பட்டினம் திருவாரூர் முத்துப்பேட்டையை தனி வட்டமாக அறிவித்ததை நடைமுறைப்படுத்த பாஜக வலியுறுத்தல் DIN DIN Thursday, December 14, 2017 03:28 AM +0530 முத்துப்பேட்டையை தனி வட்டமாக அறிவித்ததை நடைமுறைப்படுத்த வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கருப்பு (எ) முருகானந்தம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜை நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
முத்துப்பேட்டை தேர்வு நிலை பேரூராட்சி சுமார் 30 ஆயிரம் மக்கள் தொகையை கொண்டதாகும். இங்கு முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம், இரண்டு அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் மூன்று தனியார் மேல்நிலைப்பள்ளிகள், வனச்சரக அலுவலகம், பள்ளிக் கல்வித்துறை அலுவலகம், கடலோர காவல் பிரிவு காவல் நிலையம், சுங்கத்துறை அலுவலகம் என மிக அதிகளவில் அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
அதேபோல், முத்துப்பேட்டை ஒன்றியத்தில் அதிகளவு மக்கள் தொகை உள்ள 29 ஊராட்சிகள் உள்ளன. இதில் மொத்தம் 75 ஆயிரம் மக்கள் முத்துப்பேட்டையைச் சுற்றி வசதித்து வருகின்றனர். இந்த விவரங்களை அறிந்து கடந்த 2011-ஆம் ஆண்டு அப்போதைய அரசு முத்துப்பேட்டையை திருத்துறைப்பூண்டியிலிருந்து பிரித்து தனி வட்டமாக அறிவித்தது. ஆனால், அந்த அறிவிப்பை இதுநாள் வரை நடைமுறைப் படுத்தாமல் உள்ளது. எனவே, முத்துப்பேட்டையை தனி வட்டமாக இயங்க ஆவண செய்ய வேண்டுகிறேன் என அதில் கூறப்பட்டுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/14/முத்துப்பேட்டையை-தனி-வட்டமாக-அறிவித்ததை-நடைமுறைப்படுத்த-பாஜக-வலியுறுத்தல்-2826102.html
2826101 நாகப்பட்டினம் திருவாரூர் எலிகளை ஒழித்து கூடுதல் மகசூல் பெற ஆலோசனை DIN DIN Thursday, December 14, 2017 03:28 AM +0530 எலி ஒழிப்பு முறையைக் கையாண்டு சம்பாவில் கூடுதல் மகசூல் பெற விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்படுகிறது என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளிட்ட செய்திக் குறிப்பு: நெற் சாகுபடியில் எலிகளால் 25 சதவீதம் மகசூல் இழப்பும், சேமிப்புக் கிடங்குகளில் 30 சதவீதம் சேதமும் ஏற்படுகிறது. வயல் எலிகள் இளம் நாற்றுகளைக் கடித்து சேதப்படுத்தும், இவைகளால் ஏற்படும் சேதம் வரப்பு ஓரங்களில் தெரியாது. வயல் நடுவில் அல்லது வரப்பிலிருந்து 4 மீட்டர் உள்புறத்தில் இருக்கும்.
எலிகள் நெற்பயிரின் தூர்களை தண்ணீர் மட்டத்திலிருந்து 10 செ.மீ. அளவுக்கு மேல்பகுதியில் சாய்வாக ஆங்காங்கே திட்டுத் திட்டாக வெட்டியிருக்கும். நெல்மணிகள் உருவாகும்போது இவற்றின் தாக்கம் மிக அதிகமாகக் காணப்படுவதுடன் ஒரு வலையில் 4 கிலோ வரையிலான தானியங்களை பொதித்து வைத்திருக்கும். ஒரு ஏக்கரில் 3 எலி நடமாட்டமுள்ள வலைகள் இருந்தாலோ அல்லது 15 சதவீத குத்துகள் சேதமடைந்திருந்தாலோ அவ்வயலில் சேதம் பொருளாதார சேத நிலையைக் கடந்து விட்டதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மாதங்களில் எலிகளின் உற்பத்தி அதிமாகும் இருக்கும் என்பதால் எலி மேலாண்மை அவசியம். வயலில் உழுவதற்கு முன்பு எலி வலைகள் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் நிறுத்தி சில நாள்கள் தொடர்ந்து எலிகள் இறந்த பிறகு பின் உழவுப் பணிகளை செய்யலாம். நடவுக்கு முன்பு வரப்புகளிலுள்ள எலி வலைகளை வெட்டி அழித்து, வரப்பின் உயரத்தை குறைத்து ஒடுக்கமாக வைத்து எலி வலைத் தோண்டவிடாமல் தடுக்க வேண்டும்.
வயல் வரப்புகளில் காணப்படும் களைகள், புதர் செடிகளை அழித்து, வாய்க்கால் ஓரங்களை செதுக்கி சுத்தப்படுத்தி எலி பெருக்கத்தைக் குறைக்கலாம். தஞ்சாவூர் கிட்டி எனப்படும் மூங்கில் பொறிகளை ஏக்கருக்கு 100 பொறிகள் வரை வயல்களில் பொருத்தி எலிகளை அழிக்கலாம். கோட்டான் எனப்படும் வெள்ளை ஆந்தைகள் இரவில் வயல்களில் அமர ஆந்தைப்பந்தம் அமைத்து எலிகளை பிடிக்க வழிவகை ஏற்படுத்தலாம்.
வயல்வெளிகளில் சிலுவை வடிவிலான குச்சிகளை அமைத்து, அதன் நுனியில் வைக்கோலை சுற்றி வைக்க வேண்டும். ஆந்தைகள் இக்குச்சிகளில் அமர்ந்து எலிகளை எளிதாக கவ்வி செல்ல உதவியாக இருக்கும். ப்ரமோடைலான் 0.2 சதவீதம் என்ற எலிக்கொல்லி 5 கிராமுடன் அரிசி 250 கிராம் மற்றும் 5 கிராம் தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து தயாரிக்கப்பட்ட இந்த விஷ உணவை 10 கிராம் கொண்ட காகித பொட்டலங்களாகத் தயாரித்து எலி வலைகளில் இட வேண்டும். ஒரு முறை உட்கொண்டாலே எலியின் ரத்தத்தை உறையவிடாமல் ரத்தக்கசிவு உண்டாக்கி திறந்த வெளியில் இறந்துவிடும். இந்த முறையை சரியாக கையாளும் போது 90 சதவீத எலிகள் கொல்லப்பட்டுவிடும் என்பதால், விவசாயிகள் இந்த முறையை கடைப்பிடித்து கூடுதல் மகசூல் பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/14/எலிகளை-ஒழித்து-கூடுதல்-மகசூல்-பெற-ஆலோசனை-2826101.html
2826099 நாகப்பட்டினம் திருவாரூர் முத்துப்பேட்டையை தனி வட்டமாக அறிவித்ததை நடைமுறைப்படுத்த பாஜக வலியுறுத்தல் DIN DIN Thursday, December 14, 2017 03:28 AM +0530 முத்துப்பேட்டையை தனி வட்டமாக அறிவித்ததை நடைமுறைப்படுத்த வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கருப்பு (எ) முருகானந்தம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜை நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
முத்துப்பேட்டை தேர்வு நிலை பேரூராட்சி சுமார் 30 ஆயிரம் மக்கள் தொகையை கொண்டதாகும். இங்கு முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம், இரண்டு அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் மூன்று தனியார் மேல்நிலைப்பள்ளிகள், வனச்சரக அலுவலகம், பள்ளிக் கல்வித்துறை அலுவலகம், கடலோர காவல் பிரிவு காவல் நிலையம், சுங்கத்துறை அலுவலகம் என மிக அதிகளவில் அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
அதேபோல், முத்துப்பேட்டை ஒன்றியத்தில் அதிகளவு மக்கள் தொகை உள்ள 29 ஊராட்சிகள் உள்ளன. இதில் மொத்தம் 75 ஆயிரம் மக்கள் முத்துப்பேட்டையைச் சுற்றி வசதித்து வருகின்றனர். இந்த விவரங்களை அறிந்து கடந்த 2011-ஆம் ஆண்டு அப்போதைய அரசு முத்துப்பேட்டையை திருத்துறைப்பூண்டியிலிருந்து பிரித்து தனி வட்டமாக அறிவித்தது. ஆனால், அந்த அறிவிப்பை இதுநாள் வரை நடைமுறைப் படுத்தாமல் உள்ளது. எனவே, முத்துப்பேட்டையை தனி வட்டமாக இயங்க ஆவண செய்ய வேண்டுகிறேன் என அதில் கூறப்பட்டுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/14/முத்துப்பேட்டையை-தனி-வட்டமாக-அறிவித்ததை-நடைமுறைப்படுத்த-பாஜக-வலியுறுத்தல்-2826099.html
2825343 நாகப்பட்டினம் திருவாரூர் ஹனுமன் ஜயந்தி விழா DIN DIN Wednesday, December 13, 2017 02:31 AM +0530 திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள சங்கடஹர மங்களமாருதி 32 அடி உயர ஆஞ்சநேயர் கோயிலில் ஹனுமன் ஜயந்தி விழா  டிச. 15, 16, 17 ஆகிய மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது.
விழாவின் முதல் நாள்காலை 10.30  மணிக்கு மேல் ஆஞ்சநேயருக்கு அபிஷேக ஆராதனைகளும், 16-ஆம் தேதி கோதண்டராமருக்கு அபிஷேகமும், 17-ஆம் தேதி ஹனுமன் ஜயந்தியையொட்டி ஆஞ்சநேயருக்கு அபிஷேக, ஆராதனைகளும், அன்னதானமும் நடைபெறும்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/13/ஹனுமன்-ஜயந்தி-விழா-2825343.html
2825342 நாகப்பட்டினம் திருவாரூர் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர் கைது DIN DIN Wednesday, December 13, 2017 02:30 AM +0530 மன்னார்குடி அருகே, மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். 
மன்னார்குடி அருகேயுள்ள செருமங்கலம் கக்கன்தெருவைச் சேர்ந்த குப்புசாமி மகன் செந்தில்குமாருக்கும் (40), சோழப்பாண்டி, சந்தைக்கொல்லைத் தெருவைச் சேர்ந்த உலகநாதன் மகள் சிந்துவுக்கும் (35) கடந்த 2003-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். குடும்பப் பிரச்னை காரணமாக செந்தில்குமாரிடம் மனவருத்தம் ஏற்பட்டு சிந்து குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், 2013-ஆம் ஆண்டு சிந்துவுக்கு தெரியாமல்,செந்தில்குமார் 2-ஆவது திருமணம் செய்துகொள்ளப்போவதாக செய்தி அறிந்து கணவர் வீட்டுக்குச் சென்று இதுகுறித்து கேட்டபோது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, செந்தில்குமார், அவரது சகோதரிகள் ஆர். மாலதி, எஸ். அமுதா ஆகியோர் சிந்துவை தாக்கி, துன்புறுதி, கொலை மிரட்டல் விடுத்ததாக மன்னார்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2013-ஆம் ஆண்டு சிந்து புகார் அளித்திருந்தார். 
இப்புகார் மீது நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது போலீஸார் செந்தில்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/13/மனைவிக்கு-கொலை-மிரட்டல்-விடுத்த-கணவர்-கைது-2825342.html
2825340 நாகப்பட்டினம் திருவாரூர் மின்நுகர்வோர் குறை தீர் கூட்டம்: நாளை நடக்கிறது DIN DIN Wednesday, December 13, 2017 02:30 AM +0530 வலங்கைமான், ஆலங்குடி உள்ளிட்ட கும்பகோணம் கோட்டம் மின்வாரியத்துக்குள்பட்ட பகுதி மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம் வியாழக்கிழமை (டிச.14) நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக, கும்பகோணம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் (இயக்குதலும், பராமரித்தலும்) மு. நளினி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கும்பகோணம் கோட்டம் மின்வாரிய  செயற்பொறியாளர் அலுவலகத்தில் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள்கூட்டம், தஞ்சாவூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் என். சங்கரன்  தலைமையில் வியாழக்கிழமை காலை 11 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளதால், கும்பகோணம் நகரம், கும்பகோணம் புறநகர், பாபநாசம், கபிஸ்தலம், அய்யம்பேட்டை, திருக்கருகாவூர், வலங்கைமான், ஆலங்குடி பிரிவு அலுவலகம் பகுதிகளைச் சேர்ந்த மின் நுகர்வோர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் கூட்டத்தில் பங்கேற்று தெரிவிக்கலாம் என அதில் தெரிவித்துள்ளார்.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/13/மின்நுகர்வோர்-குறை-தீர்-கூட்டம்-நாளை-நடக்கிறது-2825340.html
2825339 நாகப்பட்டினம் திருவாரூர் கடைசி சோமவாரத்தையொட்டி சங்காபிஷேகம் DIN DIN Wednesday, December 13, 2017 02:30 AM +0530 மன்னார்குடி காசி விஸ்வநாதர் கோயில், மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் கார்த்திகை கடைசி சோமவாரத்தையொட்டி திங்கள்கிழமை இரவு சங்காபிஷேகம் நடைபெற்றது.
 திருப்பாற்கடல் தெருவில் உள்ள காசி விஸ்வநாதர்கோயில் பிராகாரத்தில் 108 சங்குகள் வைத்து, அதில் புனிதநீர் தெளித்து, மலர்கள் வைத்து பூஜை செய்யப்பட்டது. அதன் அருகில் அமைக்கப்பட்டிருந்த ஹோம குண்டத்தில் மங்களப் பொருள்கள் இட்டு யாகம் செய்யப்பட்டது. பின்னர், சங்குகளிலிருந்த புனிதநீர் கொண்டு காசி விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதேபோல், 3-ஆம் தெருவில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோவில் பிராகாரத்தில் 1,008 சங்குகளை வைத்து, இதில் புனிதநீர், மலர்களை வைத்து பூஜை செய்து பின் மங்களப் பொருள்கள் இட்டு யாகம் வளர்க்கப்பட்டது. தொடர்ந்து, சொக்கநாதர், மீனாட்சிக்கு பால், பன்னீர், தயிர் போன்ற திரவியங்களால் அபிஷேக ஆராதனையும், ஹோம குண்டத்தில் வைக்கப்பட்டிருந்த புனிதநீரைக் கொண்டு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டன. 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/13/கடைசி-சோமவாரத்தையொட்டி-சங்காபிஷேகம்-2825339.html
2825338 நாகப்பட்டினம் திருவாரூர் தார்ச் சாலை அமைக்கக் கோரி மண் சாலையில் நாற்று நடும் போராட்டம் DIN DIN Wednesday, December 13, 2017 02:30 AM +0530 திருவாரூர் அருகே தார்ச் சாலை அமைக்கக் கோரி, மண் சாலையில் நாற்று நடும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவாரூர் அருகேயுள்ள நடப்பூர் ஊராட்சிக்குள்பட்ட உக்கடை கிராமத்தில் 100 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பிரதான சாலைக்கு வரவேண்டுமெனில் அப்பகுதியில் உள்ள வெட்டாற்றை கடந்துதான் செல்ல வேண்டும். ஆற்றில் தண்ணீர் வரும் காலங்களில் சுமார் 5 கி.மீ. தொலைவுக்கு சுற்றிச் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் சாலையும் தார்ச் சாலையாக இல்லாமல் மண் சாலையாக உள்ளது.
இதனால் வெட்டாற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் எனவும், தார்ச் சாலை அமைக்க  வேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த கோரிக்கையை வலியுறுத்தி மண் சாலையில் நற்று நடும் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். இதுகுறித்து போராட்டக் குழுவினர் கூறுகையில், இந்த கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/13/தார்ச்-சாலை-அமைக்கக்-கோரி-மண்-சாலையில்-நாற்று-நடும்-போராட்டம்-2825338.html
2825336 நாகப்பட்டினம் திருவாரூர் ரயிலில் அடிபட்டு விவசாய தொழிலாளி சாவு   DIN DIN Wednesday, December 13, 2017 02:29 AM +0530 நீடாமங்கலம்-மன்னார்குடி ரயில்வே தண்டவாளப் பகுதியில் விவசாயத் தொழிலாளி ரயிலில் அடிபட்டு  உயிரிழந்தார்.
நீடாமங்கலம் வட்டம், பூவனூர் தட்டித் தெருவில் வசித்து வந்தவர் பன்னீர்செல்வம் (40). விவசாயத் தொழிலாளியான இவர், செவ்வாய்க்கிழமை அதிகாலை வீட்டின் அருகில் உள்ள ரயில்வே தண்டவாளப் பகுதியில்,  ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். தஞ்சாவூர் ரயில்வே போலீஸார்,  பன்னீர்செல்வம்  உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/13/ரயிலில்-அடிபட்டு-விவசாய-தொழிலாளி-சாவு-2825336.html
2825334 நாகப்பட்டினம் திருவாரூர் டிஎன்பிஎஸ்ஸி தேர்வில் வெளி மாநிலத்தவர் பங்கேற்கும் அறிவிப்பை திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டம் DIN DIN Wednesday, December 13, 2017 02:29 AM +0530 தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தும் தேர்வுகளில் வெளி மாநிலத்தவர் பங்கேற்கலாம் என்ற அறிவிப்பை திரும்பப் பெறக்கோரி, திருவாரூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவாரூர் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பெருமன்றத்தின் மாநிலத் தலைவர் பெ. முருகேசு தலைமை வகித்தார். இதில் மாவட்டத் தலைவர் எம்.ஏ. முகமதுஹசன்பசாரி,  மாணவர் பெருமன்ற ஒருங்கிணைப்பாளர் துரை. அருள்ராஜன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ். பாலசுப்ரமணியன்,  மாவட்டப் பொருளாளர் கோவி. அறிவழகன்,  நிர்வாகிகள் வி. பாக்யராஜ், ஜெ. கணேஷ், எம்.எஸ். ராஜராஜன்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தும் தேர்வுகளில் வெளி மாநிலத்தவர் பங்கேற்கலாம் என்ற  அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் மற்றும் குரூப் 4 தேர்வுகளை தனித்தனியே நடத்த வேண்டும். மக்கள் தொகைக்கு ஏற்ப அரசுப் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும். அனைத்துத் துறைகளிலும் காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/13/டிஎன்பிஎஸ்ஸி-தேர்வில்-வெளி-மாநிலத்தவர்-பங்கேற்கும்-அறிவிப்பை-திரும்பப்-பெறக்-கோரி-ஆர்ப்பாட்டம்-2825334.html
2825332 நாகப்பட்டினம் திருவாரூர் பாரதியார் பிறந்த நாள் விழா: பள்ளிகளில் கொண்டாட்டம் DIN DIN Wednesday, December 13, 2017 02:28 AM +0530 பாரதியார் பிறந்த நாள் விழா பள்ளி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் திங்கள்கிழமை கொண்டாடப் பட்டது.
திருவாரூரில்...
திருவாரூர் விஜயபுரம் வர்த்தக சங்கம், தமிழ்ச் சங்கம் ஆகியவை இணைந்து பாரதியும், வர்த்தகமும் என்ற சிறப்பு நிகழ்ச்சியை நடத்தின. நிகழ்ச்சிக்கு, தமிழ்ச் சங்கத்தின் தலைவர் இரா. சண்முகவடிவேல் தலைமை வகித்தார். இதில் பாரதி சுடர் கோவை மகேஸ்வரி சற்குரு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசினார். இதில் தமிழ்ச் சங்கத்தின் செயலர் சி. செல்வதுரை, ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் தலைவர் எஸ்விடி ஜே. கனகராஜன், வர்த்தகர் சங்கத்தின் பொதுச் செயலர் சி. குமரேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூத்தாநல்லூரில்...
கூத்தாநல்லூர் வட்டம், அரிச்சந்திரபுரம்  ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பாரதியார் பிறந்த நாள் விழாவுக்கு,  தலைமையாசிரியர் தி. கனகசபை  தலைமை வகித்தார். ஆசிரியர் அ. முரளி  "பாதகம் செய்பவரைக் கண்டால்...' என்ற தலைப்பில் பேசினார்.  தொடர்ந்து,  மாணவர்கள் குழுவாக  பாரதியாரின் பாடல்களையும், மாணவிகள் கும்மிப்பாட்டுகளையும் பாடினர். 8-ஆம் வகுப்பு மாணவி ர. அபிநயா குழுவினர்கள்  பாரதியாரின்  வாழ்க்கை   வரலாற்றை வில்லுப்பாட்டு நிகழ்ச்சியாக  நடத்தினர்.  விழாவில், பங்கேற்ற  மாணவ, மாணவிகளுக்கு பாரதியார்  புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டன.
மன்னார்குடியில்...
மன்னர்குடி பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற பாரதியார் பிறந்தநாள் விழாவுக்கு பள்ளி முதல்வர் ஜெ. அசோகன் தலைமை வகித்தார். தாளாளர் கி. அன்பழகன், மகாகவி பாரதியார் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பாரதியாரின் வாழ்க்கை வரலாறு குறித்து தமிழாசிரியர் பி. சந்திரசேகரன் பேசினார். தமிழாசிரியர் பி.தேவி, பாரதியாரின் கவிதைகளை தொகுத்து பாடினார். விழாவையொட்டி, மாணவ, மாணவிகளுக்கு கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டன.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/13/பாரதியார்-பிறந்த-நாள்-விழா-பள்ளிகளில்-கொண்டாட்டம்-2825332.html
2825331 நாகப்பட்டினம் திருவாரூர் கூட்டமில்லாத பயணிகள் ரயிலை ரத்து செய்யக் கூடாது: தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் DIN DIN Wednesday, December 13, 2017 02:27 AM +0530 கிளைத் தடங்களில் ஓடும், கூட்டம் இல்லாத பயணிகள் ரயில்களை ரத்து செய்யும் திட்டத்தை, ரயில்வே அமைச்சகம் கைவிட வேண்டும் என, தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் துணைப் பொதுச் செயலாளர் மனோகரன், நீடாமங்கலத்தில் நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
70 சதவீதம் காலியாக ஓடும் ரயில்களை ரத்து செய்ய வேண்டும் என்பது  ரயில்வே விதி. கடந்த ஆண்டு இந்திய தலைமை கணக்கு தணிக்கை ஆய்வாளர் தாக்கல் செய்த அறிவிக்கையில், போபால்- இந்தூர் இரட்டை அடுக்கு ரயில்கள் முப்பது சதவீதத்துக்கு குறைவான பயணிகளுடன் இயக்கப்படுவதால் ஆண்டுக்கு ரூ. 37 கோடியே 74 லட்சம் ரயில்வே துறைக்கு நஷ்டம் ஏற்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார். இதன் தொடர் நடவடிக்கையாக, 50 சதவீதத்துக்கு மேல் காலியாக ஓடும் ரயில்களை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டு, அதற்கான கணக்கெடுப்பும் நடத்தப்பட்டுள்ளது. 
பயணிகள் ரயில்களை 90 கிளைத் தடங்களில் சமூகத் தேவைகளுக்காக மட்டுமே ரயில்வே துறை தற்போது இயக்கி வருகிறது. இதற்காக, ஆண்டுக்கு ரூ.1,895 கோடி மான்யம் வழங்கப்படுகிறது. இதில், மூன்றில் ஒரு பங்கு கிளைப் பாதையில்  ரயில்களில் பாதி பெட்டிகள் காலியாகவே ஓடி வருகின்றன. இவைகளை ரத்து செய்வதால் ஆண்டுக்கு ரூ. 600 கோடி மான்யத் தொகை மிச்சமாகும்.  ஆனால், இதில் பயணம் செய்யும் ஏழை-எளியோர் பாதிக்கப்படுவர். எனவே, கூட்டமில்லாத பயணிகள் ரயிலை ரத்து செய்யும் திட்டத்தை ரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும் என்றார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/13/கூட்டமில்லாத-பயணிகள்-ரயிலை-ரத்து-செய்யக்-கூடாது-தட்சிண-ரயில்வே-எம்ப்ளாயிஸ்-யூனியன்-2825331.html
2825330 நாகப்பட்டினம் திருவாரூர் மாணவர்களுக்கான வாசிப்பு மேம்பாட்டு கருத்தரங்கம் DIN DIN Wednesday, December 13, 2017 02:27 AM +0530 கொரடாச்சேரி ஒன்றியம், கீரங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் வகையில், விழிப்புணர்வுக் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவாரூர் இலக்கிய வளர்ச்சிக் கழகம் மற்றும் திருவாரூர் அரசு பொது நூலகத் துறை இணைந்து நடத்திய இக்கருத்தரங்குக்கு கொரடாச்சேரி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ந. கிருபா தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை சுகந்தி, தமிழக அரசு பொது நூலகத் துறை நூலகர் ஆசைத்தம்பி, இலக்கிய வளர்ச்சிக் கழகப் பொருளாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், கொரடாச்சேரி கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் புருசோத்தமன், மாவட்ட நூலக அலுவலர் செல்வராசு, இலக்கிய வளர்ச்சிக் கழகப் புரவலர் மோகன்தாசு, துணைத் தலைவர் சா. அறிவழகன், தணிக்கையாளர் தருமையன், மாவட்ட மைய நூலக முதல்நிலை நூலகர் ஆண்டாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக, கீரங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, பல்வேறு தலைப்புகளுடைய புத்தகங்கள் கொடுக்கப்பட்டு, அவர்களை வாசிக்க வைத்து, அதிலிருந்து படித்தவற்றை மாணவர்கள் விழா மேடையில் பேசினர்.
வாசிப்பு போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு, சான்றிதழ்களும், புத்தகங்களும் வழங்கப்பட்டன.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/13/மாணவர்களுக்கான-வாசிப்பு-மேம்பாட்டு-கருத்தரங்கம்-2825330.html
2825328 நாகப்பட்டினம் திருவாரூர் ஜாக் ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டம் DIN DIN Wednesday, December 13, 2017 02:27 AM +0530 திருவாரூரில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக் ஜியோ) சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவாரூர் நகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு ஜாக் ஜியோ அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் கே. ராஜா தலைமை வகித்தார். அமைப்பின் மாநிலத் தலைவர் பி.கே.எஸ். சிவகுமார் பங்கேற்று, உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
மத்திய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக அனைத்துப் படிகளையும் வழங்க வேண்டும், 8-ஆவது ஊதியக்குழு நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், சிறப்பு காலமுறை ஊதிய விகிதம், ஒப்பந்த ஊதியம், தொகுப்பூதியம், நிலையான ஊதியம் பெற்று வரும் அனைவருக்கும் நிரந்தர காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அவுட்சோர்சிங் நியமனங்களை ரத்து செய்ய வேண்டும், ஏஜென்சி மற்றும் சுய உதவிக்குழுக்கள் மூலம் நியமனம் செய்யப்பட்டவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/13/ஜாக்-ஜியோ-அமைப்பினர்-உண்ணாவிரதப்-போராட்டம்-2825328.html
2825327 நாகப்பட்டினம் திருவாரூர் நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா DIN DIN Wednesday, December 13, 2017 02:27 AM +0530 திரைப்பட நடிகர் ரஜினிகாந்த பிறந்த நாளையொட்டி, மாவட்ட தலைமை ரஜினிகாந்த நற்பணி மன்றம் சார்பில், பள்ளி விடுதி மாணவர்களுக்கு செவ்வாய்க்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது.
மன்னார்குடி, உப்புக்காரத் தெரு புனித சூசையப்பர் உயர்நிலைப் பள்ளிவிடுதியில் தங்கி படிக்கும் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, ரஜினிகாந்த் நற்பணி மன்ற மாவட்டத் தலைவர் கோ. தாயுமானவன் தலைமை வகித்தார். இதில், மாவட்டச் செயலர் பாலசுப்பிரணியன், ஒன்றியத் தலைவர் ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/13/நடிகர்-ரஜினிகாந்த்-பிறந்தநாள்-விழா-2825327.html
2825326 நாகப்பட்டினம் திருவாரூர் சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரிக்கை DIN DIN Wednesday, December 13, 2017 02:26 AM +0530 திருவாரூர் மாவட்டத்தில் வசித்துவரும் மலைக்குறவர் இன மக்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மலைக்குறவர் இன மக்கள், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜிடன் திங்கள்கிழமை அளித்த கோரிக்கை மனு: 30 ஆண்டுகளுக்கு முன் சிதம்பரம், திருநாகூர், அரியலூர் உள்ளிட்டப் பகுதிகளிலிருந்து வந்த மலைக்குறவர் இன மக்கள், திருவாரூர் மாவட்டத்தின் மன்னார்குடி, சித்தமல்லி, கோட்டூர், அம்மையப்பன் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வருகின்றனர். தற்போது, ஆதார்  அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.  ஆனால்,  சாதிச்சான்றிதழ்  இன்னமும்  வழங்கப்படவில்லை.  எனவே,  மலைக்குறவர்  இன மக்களுக்கு சாதிச் சான்றிதழ்  வழங்க  நடவடிக்கை  எடுக்கவேண்டும்  என  அதில் கோரப்பட்டுள்ளது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/13/சாதிச்-சான்றிதழ்-வழங்கக்-கோரிக்கை-2825326.html
2825325 நாகப்பட்டினம் திருவாரூர் மின்வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் DIN DIN Wednesday, December 13, 2017 02:26 AM +0530 திருவாரூரில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மின்கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவாரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மின் கழகத் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
மின்வாரியத் தொழிலாளர்களுக்கு 2015 முதல் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். களத்  தொழிலாளர்களின் பதவி உயர்வை விரைந்து வழங்க வேண்டும். களப்பிரிவில் உள்ள காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/13/மின்வாரிய-தொழிலாளர்கள்-ஆர்ப்பாட்டம்-2825325.html
2825324 நாகப்பட்டினம் திருவாரூர் தீக்காயத்துடன் பணி நீக்கம் செய்யப்பட்ட பெண் அலுவலர் DIN DIN Wednesday, December 13, 2017 02:26 AM +0530 மன்னார்குடி அருகே கையாடல் புகாரில் பணி நீக்கம் செய்யப்பட்ட பெண் அலுவலர், செவ்வாய்க்கிழமை மர்மமான முறையில் தீக்காயத்துடன் வீட்டில் இருந்து மீட்கப்பட்டார்.
கோட்டூர் அருகேயுள்ள ஈசனங்குடியைச் சேர்ந்தவர் அம்மையப்பன். இவர் அரசுப் பேருந்து ஓட்டுநராக உள்ளார். இவரது மனைவி இந்திராதேவி (42). இவர், நாகை மாவட்டம், கீழ்வேளுரில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் விற்பனையாளராகப் பணியாற்றி வந்துள்ளார். அலுவலக பணம் ரூ. 82,000 கையாடல் செய்யப்பட்டது தொடர்பாக, கடந்த நவ. 27-ஆம் தேதி இந்திராதேவி தாற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. 
இதுதொடர்பாக, கணவன்-மனைவி இடையே பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை தீக்காயத்துடன் இந்திராதேவி வீட்டின் சமையல் அறையில், மயங்கிய நிலையில் கிடப்பதைப் பார்த்தவர்கள் உடனடியாக மீட்டு  சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பிறகு தீவிர சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இந்திராதேவி கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இதுகுறித்து கோட்டூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து, இந்திராதேவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாரா அல்லது வேறு ஏதும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/13/தீக்காயத்துடன்-பணி-நீக்கம்-செய்யப்பட்ட-பெண்-அலுவலர்-2825324.html
2825323 நாகப்பட்டினம் திருவாரூர் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலைய பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்: பாமக வலியுறுத்தல் DIN DIN Wednesday, December 13, 2017 02:26 AM +0530 திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி, திருத்துறைப்பூண்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற திருவாரூர் மாவட்ட பாமக நிர்வாகிகள் ஆலோசனைக்  கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்துக்கு கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஜெ. ராஜாராம் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் டி.எஸ்.ஆர்.எம். சுப்பிரமணிய ஐயர், மாநில செயற்குழு உறுப்பினர் வி. கணேசக்கவுண்டர், மாவட்டச் செயலர் எஸ். மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருத்துறைப்பூண்டி நகரில் தொடங்கப்படாமல் உள்ள புறவழிச்சாலைத் திட்டத்தை உடனே தொடங்க வேண்டும், திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதைத் திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்றி, ரயில் சேவையைத் தொடங்க வேண்டும், திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும்,  திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில்  உள்ள 32 குளங்களில் பெரும்பாலான குளங்களில் நீர்வரும் வழிப்பாதைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலையில், நீர் வர வழியின்றி உள்ள குளங்களில் ஆக்கிரமிப்பை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இதில் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஏ.சி. பாலு, சுப. சேகர், ஓவரூர் ஐயப்பன், அன்பு ராமகிருஷ்ணன், ஆர். சித்திரவேல் உள்ளிட்டோர்  கலந்துகொண்டனர். நகரச் செயலர் எம். கல்விப்பிரியன் நீதிராஜா நன்றி கூறினார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/13/திருத்துறைப்பூண்டி-புதிய-பேருந்து-நிலைய-பகுதியில்-டாஸ்மாக்-கடையை-அகற்ற-வேண்டும்-பாமக-வலியுறுத்தல்-2825323.html
2825322 நாகப்பட்டினம் திருவாரூர் அனுமதியின்றி மணல் அள்ளிய 3 லாரிகள் பறிமுதல்: இருவர் கைது DIN DIN Wednesday, December 13, 2017 02:25 AM +0530 வலங்கைமான், நீடாமங்கலம் பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 3 லாரியை போலீஸார் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 
வலங்கைமான் காவல் ஆய்வாளர் மஞ்சுளா,  உதவி ஆய்வாளர் சிவகுகன் மற்றும் போலீஸார் செவ்வாய்க்கிழமை அதிகாலை வலங்கைமான் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும் வகையில் இரு லாரிகளை நிறுத்தி சோதனை செய்தபோது, வீரமங்கலம் கிராமம் வெட்டாற்றில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்ததும், மணல் லாரி என்பது தெரியாமல் இருக்க சிமென்ட் ஏற்றி வருவது போல் தார்ப்பாய்கள் கட்டி வந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக, லாரி ஓட்டுநகள் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரன் (34), சேலம்  மாதேசன் (35) ஆகிய இருவரையும் கைது செய்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 
மற்றொரு லாரி பறிமுதல்: இதேபோல், நீடாமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையிலான போலீஸார் செவ்வாய்க்கிழமை அதிகாலை ரோந்து பணியில் இருந்தபோது, நரசிங்கமங்கலம் பகுதியில் வெண்ணாற்றில் லாரியில் மணல் அள்ளுவதையறிந்து அங்கு சென்ற போது லாரியை பறிமுதல் செய்து, தப்பியோடிய லாரி ஓட்டுநர் மற்றும் உதவியாளர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/13/அனுமதியின்றி-மணல்-அள்ளிய3-லாரிகள்-பறிமுதல்-இருவர்-கைது-2825322.html
2825320 நாகப்பட்டினம் திருவாரூர் இந்திய கம்யூனிஸ்ட் பேரவைக் கூட்டம் DIN DIN Wednesday, December 13, 2017 02:25 AM +0530 கூத்தாநல்லூர் நகராட்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பேரவைக் கூட்டம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில், கூத்தாநல்லூர்  நகராட்சியில் 13 வார்டு  அமைப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதில் 9  வார்டுகளுக்கான   பேரவைக் கூட்டம்  கடந்த  2- ஆம் தேதி தொடங்கியது.  6-ஆவது  வார்டில்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரவைக் கூட்டத்துக்கு மாவட்ட  நிர்வாகக் குழு உறுப்பினர்  கே. தவபாண்டியன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் எம். சுதர்ஸன் முன்னிலை வகித்தார். வார்டு துணைச் செயலாளர் எஸ்.விக்னேஷ்  வரவேற்றார். வார்டு செயலாளர் ஆர். கணேசன்  வரவு, செலவு  கணக்குகளை சமர்ப்பித்தார். நகர செயற்குழு உறுப்பினர்கள்  டி. காட்டுராஜன்,  டி. கன்னையன் உள்ளிட்டோர்  பங்கேற்றனர்.
இதேபோல், 1  ஏ கிளையில் நடைபெற்ற கூட்டத்துக்கு கிளை செயலாளர்  ஜெ. வரதராஜன்,  நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் சிவதாஸ், விவசாயத் தொழிலாளர் சங்க  நிர்வாகி வி. ராஜேந்திரன், கிளை துணைச் செயலாளர்   ஆர். துரை, 3 -ஆவது வார்டில்  ஆர். மனோகரன்,  நகர செயற்குழு உறுப்பினர்  ஆர். மணிமாறன், 13 -ஆவது  வார்டில் நகர செயற்குழு உறுப்பினர்கள்  கே. ராமதாஸ்,  ஆர். ராமாமிர்தம், வார்டு செயலாளர் ஜி. குமார், 14 -ஆவது வார்டில்  நகர செயற்குழு உறுப்பினர் ஏ. பன்னீர்செல்வம்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அனைத்து வார்டுகளிலும்  நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள்: கூத்தாநல்லூர்  நகராட்சியில் சரியில்லாத பெரும்பாலான சாலைகளை  பழுது பார்க்க வேண்டும். 1 -ஆவது வார்டில்  உள்ள 18 குடிநீர்  பம்புகளில் 11 குடிநீர் பம்புகள் பழுதாகியுள்ளது. எனவே, அவற்றை உடனே பழுது  நீக்க வேண்டும்.  அனைவருக்கும் பட்டா  வழங்கிட வேண்டும்  உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/13/இந்திய-கம்யூனிஸ்ட்-பேரவைக்-கூட்டம்-2825320.html
2825319 நாகப்பட்டினம் திருவாரூர் போர்வெல் குழாயில் உடைப்பை சீரமைக்க வலியுறுத்தல் DIN DIN Wednesday, December 13, 2017 02:25 AM +0530 நீடாமங்கலம் ஒன்றியம் கற்கோயில் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட போர்வெல் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீடாமங்கலம் ஒன்றியம் கீழாளவந்தசேரி பஞ்சாயத்து கற்கோயில் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வசதிக்காக கடந்த மாதம்  அப்பகுதியில் போர்வெல் அமைக்கப்பட்டது. 
இந்நிலையில், கடந்த 10 நாள்களுக்கு முன்பு  இப்போர்வெல் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, சரிசெய்யப்படாமல் உள்ளது. இதனால், குடிநீர் வீணாக வெளியேறி அருகில் உள்ள பகுதியில் குட்டைபோல் தேங்கியுள்ளது. எனவே, குடிநீர் குழாயில் உடைப்பை சரிசெய்ய  ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/13/போர்வெல்-குழாயில்-உடைப்பை-சீரமைக்க-வலியுறுத்தல்-2825319.html
2825317 நாகப்பட்டினம் திருவாரூர் தேசிய அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கு ஆலங்கோட்டை அரசுப் பள்ளி ஆய்வறிக்கை தேர்வு DIN DIN Wednesday, December 13, 2017 02:24 AM +0530 தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டில், மன்னார்குடியை அடுத்த ஆலங்கோட்டை அரசு திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆய்வறிக்கை சிறப்பிடம் பெற்று, தேசிய மாநாட்டுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையும், தேசிய அறிவியல் பரிமாற்றக் குழுமமும் இணைந்து, தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை நடத்தி வருகின்றன.
நிகழாண்டுக்கு, மாற்றுத் திறனாளிகளின் செயல்பாட்டுக்கு உதவும் அம்சங்களுடன் கூடிய நிலை புரு மேம்பாட்டுக்கான அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள் என்ற மைய பொருளின் கீழ், இயற்கை வளங்கள் மற்றும் வேளாண்மை என்ற துணைத் தலைப்பில் ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்க அறிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த அக்டோபர் மாதம் மன்னார்குடியில் நடைபெற்ற வட்டார அளவிலான அறிவியல் ஆய்வறிக்கை மாநாட்டில், ஆலங்கோட்டை அரசு திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி மாணவியர் கலந்துகொண்டு, ஆலங்கோட்டை கிராமத்தில் வீடுகளுக்குள் காற்று மேலாண்மை ஓர் ஆய்வு என்ற தலைப்பில் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரை மாவட்ட அறிவியல் மாநாட்டுக்கு தேர்வு பெற்றது. இதையடுத்து, நவ. 11-ஆம் தேதி திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற மாவட்ட அறிவியல் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த ஆய்வு கட்டுரை, மாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தது. 
இதைத் தொடர்ந்து, டிச. 8 முதல் 10-ஆம் தேதி வரை சென்னை சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான குழந்தைகள் மாநாட்டில் ஆலங்கோட்டை அரசு திருவள்ளுவர் பள்ளி மாணவி ரா. ஆர்த்தி தலைமையில் மாணவியர் ஆர்.பிருந்தா, பா. சத்தியா, இ. இளங்கனி, அ. அபர்னா, தி. மதுமிதா ஆகியோர் அறிவியல் ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்து விளக்கம் அளித்தனர். 
மாநாட்டின் நிறைவில் அகில இந்திய அளவில் நடைபெறவுள்ள தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கு, தமிழ்நாட்டின் சார்பில்  ஆலங்கோட்டை அரசு திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி மாணவியர் சமர்ப்பித்த அறிவியல் ஆய்வறிகை உள்பட 30 ஆய்வறிக்கைகள் தேர்வு செய்யப்பட்டன.
ஆய்வறிக்கைக்கான வழிக்காட்டி ஆசிரியர் ஜி. மனோகரன், தேசிய அறிவியல் மாநாட்டுக்கு தேர்வு பெற்ற  மாணவியரையும், பிரசார் விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன், அறிவியல் இயக்க மாநில பொதுச் செயலர் அ. அமல்ராஜன், மாவட்டச் செயலர் யு.எஸ். பொன்முடி, பள்ளி தலைமை ஆசிரியர் கே. புனிதா உள்ளிட்டோர் பாராட்டினர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/13/தேசிய-அளவிலான-குழந்தைகள்-அறிவியல்-மாநாட்டுக்குஆலங்கோட்டை-அரசுப்-பள்ளி-ஆய்வறிக்கை-தேர்வு-2825317.html
2825316 நாகப்பட்டினம் திருவாரூர் பரக்கலக்கோட்டை ஸ்ரீபொதுவுடையார் கோயிலில் கடைசி சோமவார திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் DIN DIN Wednesday, December 13, 2017 02:24 AM +0530 திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகேயுள்ள பரக்கலக்கோட்டை  ஸ்ரீ பொதுவுடையார் கோயிலில் கார்த்திகை கடைசி சோமவாரத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
பரக்கலக்கோட்டை ஸ்ரீ பொதுவுடையார் கோயில்  ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட மக்களிடையே பிரசித்தி பெற்ற கோயிலாகும்.
தென் சிதம்பரம் , தென் தில்லை என்றழைக்கப்படும் இத்தலத்தில் சிவனடியார்கள் ஸ்ரீவானுகோபர்,  ஸ்ரீமகாகோபர் ஆகிய இருவரிடையே இறைநிலையை அடைய இல்லறம் சிறந்தா? துறவறம் சிறந்ததா? என பிரச்னை எழுந்தபோது, தில்லை ஸ்ரீநடராஜர் சிதம்பரத்தில் அர்த்தஜாம பூஜையை முடித்துக்கொண்டு, இத்தலத்துக்கு எழுந்தருளி இருவரிடையே இறைநிலையை அடைய இல்லறம், துறவறம் இரண்டுமே சிறந்தவழிதான் என மத்தியஸ்தம் செய்து வைத்ததால், இத்தலத்து சுவாமி ஸ்ரீமத்தியபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
இக்கோயிலில் பிரதி வாரம் திங்கள்கிழமை நள்ளிரவில் மட்டுமே நடைதிறக்கப்பட்டு, நள்ளிரவு பூஜை நடைபெறுவது வழக்கம். பகல் நேரங்களில் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் கோயிலின் பிரதான வாசலில் உள்ள கதவில் மாலைகளை சார்த்திவிட்டு, வெளியில் நின்று வழிபடுவார்கள்.
தைத்திங்கள் முதல் நாள் பொங்கல் தினத்தன்று  மட்டும் கோயில் பகலில் தரிசனத்துக்காக திறக்கப்படும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் நிகழாண்டு நவ. 20-ஆம் தேதி முதல் சோமவாரத்திருவிழா நடைபெற்றது.  தொடர்ந்து,  நவ.27, டிச.4 ஆகிய நாள்களில் சோமவார வழிபாடு நடைபெற்றது. பிரதான விழாவான கடைசி சோமவாரத் திருவிழா டிச.11-ஆம் தேதி நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலையில் இருந்தே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். திங்கள்கிழமை நள்ளிரவு 12  மணிக்கு சுயம்பு வடிவில் அருள்பாலிக்கும் மத்தியபுரீசுவரருக்கு திரவிய அபிஷேகங்களுடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையொட்டி, கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழகத்தின் நாகப்பட்டினம் மண்டலம் சார்பில்  திருவாரூர் , நாகப்பட்டினம், பட்டுக்கோட்டை, வேதாரண்யம்,  திருத்துறைப்பூண்டி , திருவாரூர் ஆகிய பகுதிகளிலிருந்து 200-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
விழாவுக்கான ஏற்பாடுகளை தஞ்சை மண்டல இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை இணைஆணையர் க. தென்னரசு,  உதவி ஆணையர் செ.சிவராம்குமார்ஆகியோர் மேற்பார்வையில் பரம்பரை அறங்காவலர் சடகோபராமானுஜம், இணை அறங்காவலர் ராமானுஜம் , கோயில் செயல் அலுவலர் சம்பத்குமார்,  மேலாளர் பாலசுப்பிரமணியன், கிராம கமிட்டி தலைவர் ஜெ.நாயகம்  உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/13/பரக்கலக்கோட்டை-ஸ்ரீபொதுவுடையார்-கோயிலில்-கடைசி-சோமவார-திருவிழா-ஆயிரக்கணக்கான-பக்தர்கள்-சுவாமி-தரிசன-2825316.html
2824507 நாகப்பட்டினம் திருவாரூர் முத்துப்பேட்டை தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசலுக்கு சீல் DIN DIN Tuesday, December 12, 2017 12:45 AM +0530 திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி, பேரூராட்சியின் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் கட்டப்பட்ட பள்ளிவாசல் கட்டடத்துக்கு பேரூராட்சி அலுவலர்கள் திங்கள்கிழமை சீல் வைத்தனர்.
முத்துப்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை தலைவர் அப்துல் அஜீஸ், பொருளாளர் சாதிக் பாட்சா ஆகியோர் முத்துப்பேட்டை ஆசாத் நகரில் 2,400 சதுர அடி நிலத்தை வாங்கினர். பின்னர், அங்கு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தொழுகைக் கூடம்  கட்டுவதற்கு அனுமதி வழங்கக் கோரி, முத்துப்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளித்தனர்.
மனுவைப் பரிசீலித்த செயல் அலுவலர் கட்டடம் கட்ட அனுமதி வழங்கி கடந்த 7.6.2013 -இல் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கட்டடப் பணிகள் தொடங்கின.
இந்நிலையில், அந்த கட்டடத்தைக் கட்ட தனிப்பட்ட முறையில்தான் அனுமதி பெறப்பட்டுள்ளது எனவும், தவ்ஹீத் ஜமாஅத் மூலம் எந்த மனுவும் தரப்படவில்லை எனவும் செயல் அலுவலருக்கு பல புகார் கடிதங்கள் வந்தன.  இதையடுத்து, மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்பேரில் அந்த கட்டடப் பணியை ஆய்வு செய்த செயல் அலுவலர், கட்டடப் பணியை நிறுத்துமாறு உத்தரவிட்டதுடன், கட்டட அனுமதியையும் கடந்த 12.8.2013 -இல் ரத்து செய்தார்.
மேலும், பேரூராட்சி நிர்வாகத்தின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி எஸ். வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் அரசு வழக்குரைஞர் வாதிடும்போது, குடியிருப்பு கட்டுவதற்காகத்தான் கட்டட அனுமதி பெறப்பட்டது. ஆனால், தொழுகைக் கூடம் (பள்ளிவாசல்) கட்டத் தொடங்கியுள்ளனர். பொது வழிபாட்டுத் தலங்கள் கட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம்தான் அனுமதி பெற வேண்டும் என வாதிட்டார்.
இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரர்கள் குடியிருப்பு கட்டுவதற்காக கட்டட அனுமதி வாங்கிவிட்டு வழிபாட்டுத் தலத்தை கட்டியுள்ளனர். எனவே, அனுமதி மீறி கட்டப்பட்ட கட்டடத்தை இடிக்க வேண்டும். இந்த நடவடிக்கையை முத்துப்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் மேற்கொள்ள வேண்டும் என கடந்த 20.10.2017 -இல் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, கடந்த வாரம் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள், நீதிமன்றத்தில் உத்தரவை நிறுத்தி வைக்கும்படி முறையிட்டனர். அப்போது, விதிமீறி கட்டப்பட்ட தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசலை பூட்டி சீல் வைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், பேரூராட்சி செயல் அலுவலர் மணிமொழியன் முன்னிலையில் அலுவலர்கள் ராஜேந்திரன், செல்வகுமார் ஆகியோர் தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசலின் முன்பக்க இரண்டு கதவுகளையும் பூட்டி திங்கள்கிழமை சீல் வைத்தனர். இதற்கு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அங்கு பதற்றமான சூழல் நிலவியதால் பாதுகாப்பு பணிக்காக முத்துப்பேட்டை டிஎஸ்பி இனிக்கோதிவ்யன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/12/முத்துப்பேட்டை-தவ்ஹீத்-ஜமாஅத்-பள்ளிவாசலுக்கு-சீல்-2824507.html
2824506 நாகப்பட்டினம் திருவாரூர் காலபைரவாஷ்டமி வழிபாடு DIN DIN Tuesday, December 12, 2017 12:45 AM +0530 நீடாமங்கலம் வட்டம், பூவனூர் கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி சமேத சதுரங்கவல்லப நாதர், சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் காலபைரவாஷ்டமி  வழிபாடு ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
திருநாவுக்கரசரால் தேவாரப்பதிகம் பாடப்பெற்ற இக்கோயில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தாற்போல் சாமுண்டீஸ்வரி அம்மன் தனி சன்னிதியில் அருள்பாலித்து வருகிறார்.  இக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை தோறும் சாமுண்டீஸ்வரி அம்மன் சன்னிதியில் எலிக்கடி போன்ற விஷக்கடிகளுக்கு வேர் கட்டப்படுகிறது. வரலாற்றுச்சிறப்பு மிக்க இக்கோயிலில் காலபைரவாஷ்டமி ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது. 
இதையொட்டி, காலபைரவர் சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து, காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக- ஆராதனைகள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/12/காலபைரவாஷ்டமி-வழிபாடு-2824506.html
2824505 நாகப்பட்டினம் திருவாரூர் பொறுப்பேற்பு DIN DIN Tuesday, December 12, 2017 12:45 AM +0530 குடவாசல் எம்.ஜி.ஆர். கல்லூரியின் புதிய முதல்வராக க. பூங்கோதை திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.
குடவாசல் ஓகையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 28- ஆம் தேதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. அப்போது, கல்லூரியின் முதல்வராக (பொ) பேராசிரியர் ஜான்பீட்டர் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிலையில்,  இக்கல்லூரிக்கு டாக்டர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி என கடந்த செப்டம்பர் மாதம் 20- ஆம் தேதி பெயர் மாற்றம் செய்யப்பட்டது.  
இந்நிலையில், இக்கல்லூரியின் புதிய முதல்வராக க. பூங்கோதை திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.  இவர், சென்னை நந்தனம் அரசினர் கல்லூரியில் வேதியல் துறை இணைப் பேராசிரியராக பணியாற்றி வந்தார். பதவி உயர்வு வழங்கப்பட்டு, தற்போது குடவாசலில் உள்ள டாக்டர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/12/பொறுப்பேற்பு-2824505.html
2824504 நாகப்பட்டினம் திருவாரூர் எண்ணெய் எடுக்கும் பணிகளுக்கு எதிர்ப்பு: கைது நடவடிக்கையைக் கண்டித்து மறியல் DIN DIN Tuesday, December 12, 2017 12:44 AM +0530 திருவாரூர் அருகே  நன்னிலம்  பகுதியில் எண்ணெய் எடுக்கும் பணிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, போராட முயன்ற மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்புத் தலைவர் ஜெயராமன் உள்ளிட்டோர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் ஒஎன்ஜிசி நிறுவனம் புதிய எண்ணெய் கிணறு அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களின் கருத்துக்களை கேட்காமல், இந்தப் பணிகள் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். 
  இந்நிலையில், இந்தப் பணிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நன்னிலம் அருகேயுள்ள மாப்பிள்ளைக்குப்பம் பகுதியில் திங்கள்கிழமை போராட்டம் நடத்த முயன்ற மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்புத் தலைவர் ஜெயராமன், அவரது மனைவி சித்ரா உள்ளிட்டோரை நன்னிலம் போலீஸார் கைது செய்தனர். 
 இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நன்னிலம் பேருந்து நிலையம், சோங்கனூர் கடை வீதி உள்ளிட்ட இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் பங்கேற்ற 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/12/எண்ணெய்-எடுக்கும்-பணிகளுக்கு-எதிர்ப்பு-கைது-நடவடிக்கையைக்-கண்டித்து-மறியல்-2824504.html
2824503 நாகப்பட்டினம் திருவாரூர் ஆலங்குடி கோயிலில் சங்காபிஷேகம் DIN DIN Tuesday, December 12, 2017 12:44 AM +0530 நவக்கிரக தலங்களில் ஒன்றான வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் குரு பரிகார கோயிலில் கார்த்திகை கடைசி சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, ஆபத்சகாயேசுவரருக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல், பூவனூர் சதுரங்கவல்லபநாதர்கோயில், நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோயில், கோகமுகேஸ்வரர் கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களில் கார்த்திகை சோமவார சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/12/ஆலங்குடி-கோயிலில்-சங்காபிஷேகம்-2824503.html
2824502 நாகப்பட்டினம் திருவாரூர் மீன்வளப் பல்கலைக்கழகத்தை சென்னைக்கு மாற்றும் முடிவைக் கைவிடக் கோரிக்கை DIN DIN Tuesday, December 12, 2017 12:44 AM +0530 நாகையில் செயல்பட்டுவரும் மீன்வளப் பல்கலைக்கழகத்தை சென்னைக்கு இடமாற்றம் செய்யும் முடிவை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலர் பி.எஸ். மாசிலாமணி வெளியிட்ட அறிக்கை:  நாகை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் மீன்வளப் பல்கலைக்கழகத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில் ரூ. 32 கோடி ஒதுக்கப்பட்டு, நிரந்தர கட்டடப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள்  மாவட்ட மீனவர்களுக்கும்,  விவசாயிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளன. 
இந்நிலையில், இந்த பல்கலைக்கழகம் சென்னைக்கு இடமாற்றம் செய்யவிருப்பது கண்டிக்கத்தக்கது.  நாகை,  திருவாரூர்,  தஞ்சாவூர், கடலூர்,  காரைக்கால் மாவட்டங்களின் மீனவர்களுக்கும்,  மீன் வளர்ப்பு விவசாயிகளுக்கும்,  பொதுமக்களுக்கும் பயன்படும் வகையில் உள்ள இந்த பல்கலைக்கழகத்தை சென்னைக்கு மாற்றினால்,  இப்பகுதிகளின் எதிர்கால வளர்ச்சி சிதைந்துவிடும். எனவே, மீன்வளப் பல்கலைக்கழகத்தை சென்னைக்கு  மாற்றும்  முடிவை  கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/12/மீன்வளப்-பல்கலைக்கழகத்தை-சென்னைக்கு-மாற்றும்-முடிவைக்-கைவிடக்-கோரிக்கை-2824502.html
2824501 நாகப்பட்டினம் திருவாரூர் சட்டப் பேரவை தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் நியமனம் DIN DIN Tuesday, December 12, 2017 12:43 AM +0530 திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி சட்டப் பேரவை தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவராக ஆர். கோகுலவசந்த்  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவராக ஆர். கோகுலவசந்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ். திருநாவுக்கரசர், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன் ஆரூண்  ஒப்புதலுடன், திருவாரூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி.எஸ். ராஜ் நியமித்துள்ளார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/12/சட்டப்-பேரவை-தொகுதி-இளைஞர்-காங்கிரஸ்-தலைவர்-நியமனம்-2824501.html
2824500 நாகப்பட்டினம் திருவாரூர் ராமபுரத்தில் கிராம நிர்வாக அலுவலகம் அமைக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் தீர்மானம் DIN DIN Tuesday, December 12, 2017 12:43 AM +0530 மன்னார்குடி வருவாய் வட்டத்துக்கு உள்பட்ட ராமபுரத்தில் கிராம நிர்வாக அலுவலகம் அமைத்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
கட்சியின் ராமபுரம் கிளை மாநாடு, மாரியம்மன் கோயில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாநாட்டுக்கு கட்சியின் மூத்த உறுப்பினர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.
ராமபுரத்திலிருந்து வடக்கட்டளை வழியாக மன்னார்குடி நகராட்சி எல்லையான ஐவர்சமாது வரை செல்லும், பிரதான சாலை நீண்ட காலமாக சேதமடைந்திருப்பதுடன், பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இந்த சாலையை தரம் உயர்த்திட வலியுறுத்தி, டிச. 29-ஆம் தேதி ராமபுரத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது,
வருவாய் கிராமமான ராமபுரத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள மன்னார்குடியில் ராமபுரம் கிராம நிர்வாக அலுவலம் செயல்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள், கர்ப்பிணிகள், முதியோர் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருவதைக் கவனத்தில் கொண்டு, கிராம நிர்வாக அலுவலகத்தை ராமபுரத்தில் அமைத்திட மாவட்ட நிர்வாகம் உடனடியாக  நடவடிக்கை எடுக்க வேண்டும்,
சுற்றுவட்ட ஊராட்சிகளை உள்ளடக்கி ராமபுரத்தை மையமாகக் கொண்டு, அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட மாநாட்டில்  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கட்சிக் கொடியை ஒன்றியத் துணைச் செயலர் எஸ். ராகவன் ஏற்றி வைத்தார். தியாகிகள் நினைவு ஸ்தூபியை  விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலர் என். மகேந்திரன் திறந்து வைத்தார்.
இதில் கட்சியின் மாவட்டச் செயலர் வை. செல்வராஜ், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி. நாகேஷ், துரை. அருள்ராஜன், ஊராட்சி முன்னாள் தலைவர் வி. சாந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/12/ராமபுரத்தில்-கிராம-நிர்வாக-அலுவலகம்-அமைக்க-வேண்டும்-இந்திய-கம்யூனிஸ்ட்-தீர்மானம்-2824500.html
2824499 நாகப்பட்டினம் திருவாரூர் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 344 மனுக்கள் DIN DIN Tuesday, December 12, 2017 12:43 AM +0530 திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் 344 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல்,   கல்விக்கடன்,  வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி  344 மனுக்கள் அளிக்கப்பட்டன. இந்த மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், தகுதியான மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு  உத்தரவிட்டார். 
 கூட்டத்தில்  மாவட்ட வருவாய் அலுவலர் க. சக்திமணி,  தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்)  ஏ. மலர்கொடி,  துணை ஆட்சியர் (நிலம்) குருமூர்த்தி உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/12/மக்கள்-குறைதீர்-கூட்டத்தில்-344-மனுக்கள்-2824499.html
2824498 நாகப்பட்டினம் திருவாரூர் திருவாரூர் மாவட்டத்தில் பாரதியார் பிறந்த நாள் விழா DIN DIN Tuesday, December 12, 2017 12:43 AM +0530 திருவாரூர் மாவட்டத்தில், திருவாரூர், மன்னார்குடி, நீடாமங்கலம், கூத்தாநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
திருவாரூரில் ...
திருவாரூரில் மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் வட்டம் சார்பில் நடைபெற்ற விழாவுக்கு வாசகர் வட்டத் தலைவர் ராஜ.நீதிதாசன் தலைமை வகித்தார். மைய நூலகர் ஆண்டாள் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மகாகவி பாரதியாரின் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தி, வாசகர் வட்டத் தலைவர் ராஜ. நீதிதாசன் பேசுகையில்,   பாதுகாக்கப்பட வேண்டிய கவிஞர் என மகாத்மா காந்தியால் பாராட்டப்பட்ட பாரதியாரின் பிறந்த நாளை கவிஞர்கள் தினமாக கொண்டாட வேண்டும் என்றார்.  
விழாவில்,  திரளான  வாசகர்கள்  பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை  நூலகர்கள் வ. அன்பரசு, ஐ. அன்னப்பழம், மா. ஆசைத்தம்பி  உள்ளிட்டோர்  செய்திருந்தனர்.
மன்னார்குடியில்...
மகாகவி பாரதியார் பிறந்த நாளையொட்டி, மன்னார்குடியை அடுத்த மேலநாகையில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து, மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில், பாரதியாரை ஆங்கிலேய அரசு தேடி வந்த காலகட்டத்தில், அவர் மாறுவேடத்தில் தலைமறைவு வாழ்க்கையை சிறிது காலம், மன்னார்குடி கே.வி. ரெங்கசாமி ஐயங்காருக்குச் சொந்தமான மேலநாகையில் உள்ள பங்களாவில் தங்கியிருந்தார்.
அந்த இடத்தில் தற்போது மகாகவி பாரதியார் நினைவு அறக்கட்டளையின் சார்பில், பாரதியார் சிலையுடன் கூடிய நினைவு மண்டபமாக அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
பிறந்த நாளை முன்னிட்டு, நினைவு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அறக்கட்டளைத் தலைவர் இரா. பாரதி பூமிநாதன் தலைமையில் பாரதியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
பாரதியார் நினைவு அறக்கட்டளை, மன்னை மன்னார்குடி லயன் சங்கம், மன்னார்குடி டெம்பிள் சிட்டி சங்கம் ஆகியவை இணைந்து திங்கள்கிழமை பொது மருத்துவ முகாம், சக்கரை நோய் விழிப்புணர்வு முகாமை அறக்கட்டளை வளாகத்தில் நடத்தின. முகாமில் மருத்துவர்கள் நாகராஜன், ஸ்ரீவிந்த் ஆகியோர் கலந்துகொண்டு, 142 பயனாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். சர்க்கரை நோய்க்கு ஆய்வகப் பரிசோதனை செய்து, நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு மருத்துவ ஆலோசனையும், உணவு, உடற்பயிற்சி பற்றிய விழிப்புணர்வு தகவல்களையும் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, 136 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டதுடன், மேலநாகையில் உள்ள ஊராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவியருக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மன்னை மன்னார்குடி லயன்ஸ் சங்கத் தலைவர் நாராயணசாமி படேல், டெம்பிள் சிட்டி சங்கத் தலைவர் ஜெகதீசன், லயன்ஸ் மாவட்ட நிர்வாகி மருத்துவர் சி. அசோக்குமார், தொழிலதிபர் குமுட்டிதிடல் கோவிந்தராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மன்னார்குடி நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் சார்பில், அதன் பொதுச் செயலர் எஸ். சம்பத் தலைமையில் துணைத் தலைவர் டி. இளங்கோவன், இணைச் செயலர் வீ. காந்திலெனின் ஆகியோர் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
நீடாமங்கலத்தில்...
நீடாமங்கலத்தில் மகாகவி பாரதியார் பிறந்த தின விழா 10,11- ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட்டது. முதல் நாள் பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற ஓவியம் வரைதல், பாரதியார் கவிதை வாசித்தல் போட்டிகளை நீடாமங்கலம் வட்டாட்சியர் குணசீலி தொடங்கி வைத்தார்.
இரண்டாம் நாள் விழாவில், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளை பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் எஸ். ராகவேந்திரராவ் வழங்கினார். விழாவில், ஆசிரியர் கி. சேதுரத்தினம், வர்த்தகர் சங்கத் தலைவர் பி.ஜி.ஆர். ராஜாராமன், வருவாய் கிராம உதவியாளர்சங்க மாநிலப் பொதுச் செயலாளர் எஸ். தமிழ்ச்செல்வன், தலைமையாசிரியை தேவிலெட்சுமி, பாஜக நகரத் தலைவர் ஜெயகுமார், டி.கே.வி.பேரவைத் தலைவர் பாபு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு பேசினர்.
பாரத ஆன்மீக கல்வி பயிலக நிர்வாகி எஸ்.ஸ். குமார் வரவேற்றார். ராஜன்ரமேஷ் நன்றி கூறினார்.
கூத்தாநல்லூர் பள்ளிகளில்....
கூத்தாநல்லூர் வட்ட பள்ளிகளில், மகாகவி  பாரதியார் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
பாரதியார் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு,  லெட்சுமாங்குடி லிட்டர் ப்ளவர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு,  தாளாளர் எஸ். பாலசுப்ரமணியன் தலைமை வகித்து, கொடியேற்றி வைத்தார். ஆசிரியை வி. பவித்ரா வரவேற்றார். மாணவி யாசினி பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றையும்,  மாணவி மகாலெட்சுமி பாரதியாரின் படைப்புகளும், பட்டங்களும் என்ற தலைப்பிலும், ஜாஸ்மின் பாரதியாரின் கவிதைகளையும்  வாசித்தனர். தலைமையாசிரியை  டி. மதி நன்றி கூறினார். ஆசிரியர் கே. அருணா உள்ளிட்ட  ஆசிரியர்கள்,  மாணவர்கள் பங்கேற்றனர்.
கூத்தாநல்லூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தலைமையாசிரியர்  எம். பாலசுப்ரமணியன் தலைமையில்,  உதவி தலைமையாசிரியர் கே. ராமலிங்கம்,  முதுகலை ஆசிரியர் கா. இளம்பரிதி மற்றும்  ஆசிரியர்கள், மாணவர்கள்,   ஊழியர்கள்  உள்ளிட்ட  அனைவரும்  உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கூத்தாநல்லூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற   விழாவுக்கு தலைமையாசிரியர்  டி.எஸ்.ஆர். கருணாநிதி தலைமை  வகித்தார்.   உதவி தலைமையாசிரியர் எஸ். மணிமொழி முன்னிலை வகித்தார். முதுகலை ஆசிரியர் எஸ். கண்ணதாசன் வரவேற்றார். தமிழாசிரியை ஜெ. வசந்த கோகிலம், பாரதியாரின் முக்கிய நிகழ்வுகளை எடுத்துரைத்தார். மாணவியர்   ஆய்ஷா  நஸ்ரீன்,  மர்ஜீகா பர்வீன்,  நிவேதா, ராஷிதா பர்கீன், அனுசுயாதேவி,  ஆயிஷா நிஸ்டிமா,  தனஸ்ஸ்ரீ,  சிவனிகா உள்ளிட்டவர்கள் பாரதியார்  எழுதிய  கவிதைகளையும், கட்டுரைகளையும்  விளக்கிப் பேசினர்.
தொடர்ந்து,  மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பாரதியார்  உருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினர்.
முத்துப்பேட்டையில்...
முத்துப்பேட்டை அருகே  ஓஎம்ஏ பள்ளியில் மகாகவி பாரதியாரின் பிறந்த நாள்விழா பள்ளித் தாளாளர் ரெங்கசாமி தலைமையில் நடைபெற்றது. பள்ளி முதல்வர் சாமிநாதன் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியில், மகாகவி பாரதியாரின்  திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 
பின்னர், மாணவ மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. பள்ளிதுணை முதல்வர் புஷ்பா நன்றி கூறினார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/12/திருவாரூர்-மாவட்டத்தில்-பாரதியார்-பிறந்த-நாள்-விழா-2824498.html
2823905 நாகப்பட்டினம் திருவாரூர் குடவாசல்: மயில்களின் நடமாட்டம் அதிகரிப்பு DIN DIN Monday, December 11, 2017 12:44 AM +0530 குடவாசல் வட்டம், அரசவணங்காடு, மணக்கால் அய்யம்பேட்டை, எண்கண் உள்ளிட்ட பகுதிகளில் மயில்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, மணக்கால் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் கூறியது: குடவாசல் வட்டம், அரசவணங்காடு, மணக்கால் அய்யம்பேட்டை, எண்கண், காப்பணாமங்கலம், பெரும்பண்ணையூர் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த 5 ஆண்டுகளாக தேசிய பறவையான மயில்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.  இதற்கு காரணம் இப்பகுதிகளில் உள்ள காடுகள், முப்போம் விளையக்கூடிய நெல் வயல்கள் மயிலுக்கு உணவுக் கிடைக்கும் பகுதியாக இருந்தது.
இந்நிலையில், கடந்தாண்டு இப்பகுதியில் வறட்சி காரணமாக மயில்கள் உணவுக் கிடைக்காமல் தவித்து வந்தன. தற்போது, இப்பகுதிகளில், கனமழை பெய்ததாலும், குளிர்நிலை நிலவுவதாலும் மயில்களின் வரத்து அதிகரித்துள்ளது என்றார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/11/குடவாசல்-மயில்களின்-நடமாட்டம்-அதிகரிப்பு-2823905.html
2823904 நாகப்பட்டினம் திருவாரூர் புதுக்குடி கோயிலில் காலபைரவாஷ்டமி வழிபாடு DIN DIN Monday, December 11, 2017 12:44 AM +0530 குடவாசல் அருகே புதுக்குடியில், தான்தோன்றீஸ்வரர் கோயிலில் காலபைரவாஷ்டமி வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம்,  குடவாசல் அருகேயுள்ள புதுக்குடியில் தான்தோன்றீஸ்வரர் கோயில் உள்ளது.  பழைமையான இக்கோயிலில், காலபைரவர் அருள்பாளித்து வருகிறார்.  
இக்கோயிலில், ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் ஜன்மாஷ்டமி எனும் காலபைரவாஷ்டமி விழா நடைபெறும். அதன்படி, நிகழாண்டு, காலபைரவாஷ்டமி  அஷ்டபைரவ ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, காலை யாகபூஜைகள் நடைபெற்று பிற்பகல் பூர்ணாஹுதி, பைரவருக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு சகஸ்ர நாமார்ச்சனை நடைபெற்றது.  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/11/புதுக்குடி-கோயிலில்காலபைரவாஷ்டமி-வழிபாடு-2823904.html
2823902 நாகப்பட்டினம் திருவாரூர் அதிமுகவுக்கு அகில இந்திய குலாளர் முன்னேற்றக் கழகம் ஆதரவு DIN DIN Monday, December 11, 2017 12:43 AM +0530 ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு அகில இந்திய குலாளர் முன்னேற்றக் கழகம் ஆதரவு அளித்து பிரசாரத்தில் ஈடுபடவுள்ளது என்றார் சங்க மாநிலத் தலைவர் தியாகராஜன். 
திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற, அகில இந்திய குலாளர் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:  ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு அகில இந்திய குலாளர் முன்னேற்றக் கழகம் ஆதரவு அளிக்கிறது. அதிமுக வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து திங்கள்கிழமை (டிச.11) முதல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளோம் என்றார் அவர். 
முன்னதாக, திருவாரூர் நீலகண்டேஷ்வரர் கோயிலில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ரவி தலைமை வகித்தார். கூட்டத்தில், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த  உதவித் தொகையை ரூ.  5,000 உயர்த்தி வழங்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/11/அதிமுகவுக்கு-அகில-இந்திய-குலாளர்-முன்னேற்றக்-கழகம்-ஆதரவு-2823902.html
2823901 நாகப்பட்டினம் திருவாரூர் மோதலில் 3 பேர் காயம்: ஒருவர் கைது DIN DIN Monday, December 11, 2017 12:43 AM +0530 மன்னார்குடி அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட மோதலில் 3 பேர் காயமடைந்தனர். ஒருவர் கைது செய்யப்பட்டார். 
மேலநத்தம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சாமிக்கண்ணு, துரைமாணிக்கம். உறவினர்களான இவர்களுக்குள் கடந்த 6 மாதத்துக்கு முன்பு பரசபுரம் என்ற இடத்தில் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் சீர்செய்வது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில்  முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், பிரச்னை குறித்து வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்ற போது, இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட வாய்த்தகராறில் ஒருவரையொருவர் உருட்டுக் கட்டைகளால் தாக்கிக் கொண்டனர்.  இதில், காயமடைந்த சாமிக்கண்ணு மகன்கள் சுரேஷ் (35), ராஜேஸ் (32) ஆகியோர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், துரைமாணிக்கம் மகன் செல்லப்பாண்டி (25) மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  
இதுதொடர்பாக, இருதரப்பினரும் தனித்தனியே திருமக்கோட்டை காவல் நிலையத்தில் சனிக்கிழமை அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து, துரைமாணிக்கத்தின் மற்றொரு மகன் ராமச்சந்திரனை (30) கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/11/மோதலில்-3-பேர்-காயம்-ஒருவர்-கைது-2823901.html
2823899 நாகப்பட்டினம் திருவாரூர் சாலையை சீரமைக்க வலியுறுத்தி மறியல் நடத்த இந்திய கம்யூ. முடிவு DIN DIN Monday, December 11, 2017 12:43 AM +0530 மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சவளக்காரனில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.
 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. மூத்த உறுப்பினர் கே. பெத்தபெருமாள் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் ஆர். வீரமணி மாநாட்டை தொடங்கி வைத்தார். துணைச் செயலர் எஸ். ராகவன், தியாகிகள் நினைவு ஸ்தூபியை திறந்துவைத்தார்.
இதில்,  சவளக்காரன் கிராமத்தில் குண்டும், குழியுமாக உள்ள  கீழத்தெரு சாலையை சீரமைக்க வலியுறுத்தி டிச.19-ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்துவது. சவளக்காரனில் செயல்படும் ஆதிதிராவிடர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு புதிய வகுப்பறை கட்டடமும், விளையாட்டு மைதானமும், மாணவியர் விடுதிக்கு சுற்றுச்சுவரும் அமைத்து தர வலியுறுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
இம்மாநாட்டில், சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாவட்டச் செயலர் வை. செல்வராஜ் கலந்துகொண்டார். தீர்மானங்களை விளக்கி இளைஞர் பெருமன்ற ஒன்றியச் செயலர் எஸ். பாப்பையன் பேசினார். கிளைச் செயலர் கே. ராஜேந்திரன ஆண்டறிக்கை வாசித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.நகேஷ், எஸ். ராஜாங்கம், துரை.அருள்ராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/11/சாலையை-சீரமைக்க-வலியுறுத்தி-மறியல்-நடத்த-இந்திய-கம்யூ-முடிவு-2823899.html
2823897 நாகப்பட்டினம் திருவாரூர் சிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல் DIN DIN Monday, December 11, 2017 12:42 AM +0530 மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு கல்வி பயிற்றுவிக்கும் சிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும் என உள்ளடங்கிய கல்விப் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் சேதுராமன் கூறினார். 
மன்னார்குடியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மத்திய அரசு அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு சம்பந்தப்பட்ட ஒன்றியத்திலுள்ள வட்டார வளமையத்தில் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, மாநிலம் முழுதும் 3,000 சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், அந்த மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு பிசியோதரபிஸ்டு சிகிச்சை அளித்து, கல்வி பயிற்றுவித்து வருகின்றனர்.
தற்போது பணியாற்றி வரும் அனைத்து உள்ளடங்கிய கல்வி ஆசிரியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் அல்லது தாற்காலிக பணியாளர் என்ற நிலையை உறுதிப்படுத்த வேண்டும். இக்கோரிக்கையை நீண்ட காலமாக   வலியுறுத்தியும் இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அடுத்த 10 நாள்களுக்குள் கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை என்றால், மாநில திட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றார் அவர். 
பேட்டியின் போது, சிறப்பு கல்வியாளர் நடராஜன், ஓய்வுபெற்ற அரசு அலுவலர் சங்க நிர்வாகி இரவீந்திரன், சங்க மாவட்டத் தலைவர் வைரவேலன், மாவட்டச் செயலர் ஜானகிராம், மாவட்ட பொருளாளர் அன்பரசன், ஒருங்கிணைப்பாளர் ராம்கணேஷ் ஆகியோர் உடனிருந்தனர். 
முன்னதாக, திருவாரூர் மாவட்ட உள்ளடங்கிய கல்விப் பணியாளர் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/11/சிறப்பு-ஆசிரியர்களைபணி-நிரந்தரம்-செய்ய-வலியுறுத்தல்-2823897.html
2823896 நாகப்பட்டினம் திருவாரூர் உலக கராத்தே போட்டியில் திருவாரூர் மாவட்ட வீராங்கனைக்கு தங்கம் DIN DIN Monday, December 11, 2017 12:42 AM +0530 கோலாலம்பூரில் நடைபெற்ற உலக அளவிலான கராத்தே போட்டியில் திருவாரூர் மாவட்ட வீராங்கனை முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் பெற்றார். 
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் டிச. 2,3 ஆகிய தேதிகளில் நடைபெற்ற, உலக அளவிலான கராத்தே போட்டியில் 12 நாடுகளிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரிகளிலிருந்து 750 வீரர்கள் பங்கேற்றனர். இந்திய அணியில் இடம் பெற்ற திருவாரூர் மற்றும் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வீரர்களில், திருவாரூர் வீராங்கனை எஸ். சுவாதிஸ்ரீ, காரைக்கால் வீரர் சிவராமன் ஆகியோர் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் பெற்றனர். 
மன்னார்குடி டி. நித்திஷ், ஆர். நிலேஷ், திருவாரூர் எஸ். சிவஸ்ரீ, எஸ். சந்தோஷ்குமார், நீடாமங்கலம் சி. விக்னேஷ், காரைக்கால் ஸ்ரீஹரிணி, ஸ்ரீவிசாகன், சபரிகாந்தன்ஆகியோர் 2-ஆம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கம் பெற்றனர். மன்னார்குடி எஸ். பூபதி, எஸ். ஸ்ரீபாலாஜி, எம். மகிம்தேவ், நீடாமங்கலம் எஸ். சாந்தவர்ஷினி, துளேந்திரபுரம் ஆர். சுதர்சன், திருவாரூர் ஜி. சபரிகாந்தன், கே. தியாகசுந்தர், வி. ரோகன்ஆகியோர் 3-ஆம் இடம் பெற்று வெண்கலப் பதக்கம் பெற்றனர். 
போட்டியில் சிறப்பிடம் பெற்று வெள்ளிக்கிழமை இரவு மன்னார்குடிக்கு வந்த திருவாரூர் மாவட்ட வீரர்களுக்கும், பயிற்சியாளர்கள் வி. செல்லப்பாண்டியன், கே. ராஜகோபால், வி.ஆர்.எஸ். கோபால் ஆகியோருக்கு விளையாட்டு வீரர்கள், ஆர்வலர்கள், வீரர்களின் பெற்றோர், உறவினர்கள் சார்பில் மாலை அணிவித்து வரவேற்பு அளித்து இனிப்புகள் வழங்கப்பட்டன. 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/11/உலக-கராத்தே-போட்டியில்-திருவாரூர்-மாவட்ட-வீராங்கனைக்கு-தங்கம்-2823896.html
2823895 நாகப்பட்டினம் திருவாரூர் மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 1.86 கோடிக்கு தீர்வு DIN DIN Monday, December 11, 2017 12:41 AM +0530 திருவாரூரில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 1.86 கோடி அளவுக்கு  தீர்வு  காணப்பட்டது.                                      
திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி கலைமதி தொடங்கி வைத்தார்.  மக்கள் நீதிமன்றத்தில் குடும்பப் பிரச்னை, நிலப்பிரச்னை, விபத்து வழக்குகள் உள்ளிட்ட 1,847 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், விபத்து வழக்குகள் 69, காசோலை வழக்குகள் 8, விவாகரத்து வழக்குகள் 9, உரிமை வழக்குகள் 46 என 132 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு, ரூ. 1.86 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/11/மக்கள்-நீதிமன்றத்தில்-ரூ-186-கோடிக்கு-தீர்வு-2823895.html
2823894 நாகப்பட்டினம் திருவாரூர் உலக அமைதிக்காக சிறப்பு யாகம் DIN DIN Monday, December 11, 2017 12:41 AM +0530 திருத்துறைப்பூண்டியை அடுத்த அம்மளூர் காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோயிலில்,  உலக அமைதி வேண்டியும், விவசாயம் தழைக்க வேண்டியும் ஏகாதச ருத்ராபிஷேக மஹா யாகம் சனிக்கிழமை நடைபெற்றது.
அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார் சேவா சங்க திருவாரூர் மாவட்ட அமைப்பு சார்பில்  நடைபெற்ற இந்த யாகத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.  தொடர்ந்து, அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார் சேவா சங்க நிர்வாகி ஸ்ரீசுவாமிநாதன் சிவாச்சாரியார் சிறப்பு சொற்பொழிவாற்றினார். பின்னர், பல்வேறு சிறப்பு வழிபாடுகளை நடத்தினார்.
பின்னர்,  புனித நீரால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில், திருத்துறைப்பூண்டிசட்டப் பேரவை உறுப்பினர் ப. ஆடலரசன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/11/உலக-அமைதிக்காக-சிறப்பு-யாகம்-2823894.html
2823892 நாகப்பட்டினம் திருவாரூர் சுகாதாரம் குறித்த புத்தாக்கப் பயிற்சி   DIN DIN Monday, December 11, 2017 12:41 AM +0530 மன்னார்குடி வட்டார தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ், சுகாதாரம் குறித்து ஊராட்சி அளவிலான புத்தாக்கப் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு உதவி திட்ட அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். இதில், மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 51 ஊராட்சிகளைச் சேர்ந்த சுகாதார ஊக்குவிப்பாளர்கள், சமூக வல்லுநர்கள், குழுக் கூட்டமைப்பு பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். முகாமில், 2017-ஆம் ஆண்டுக்குள் தனி நபர் இல்லக் கழிவறைகள் அமைப்பது, திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் நோய்கள் குறித்தும், கழிவறை அமைப்பதன் அவசியம், அதன் பயன்பாடு, தன்சுத்தம் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டதுடன், சுகாதார உறுதிமொழியை அனைவரும் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து, கர்ணாவூர் ஊராட்சிக்குச் சென்று தனிநபர் கழிவறை கட்டும் முறை குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (திட்ட இயக்குநர்) அ. தியாகராஜன், (செயற்பொறியாளர்) செல்வராஜ் ஆகியோர் பயிற்சி அளித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள்கமலராஜன், எஸ். சிவக்குமார்,  திட்ட ஒருங்கிணைப்பாளர் (மாவட்டம்) அன்பரசன், (வட்டம்) மோகன், உதவிப் பொறியாளர்கள் மணிமேகலை, வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/11/சுகாதாரம்-குறித்த-புத்தாக்கப்-பயிற்சி-2823892.html
2823891 நாகப்பட்டினம் திருவாரூர் வேளாண்மை கல்லூரி மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி DIN DIN Monday, December 11, 2017 12:40 AM +0530 திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கிரியேட் இயற்கை வேளாண் பயிற்சி மையத்தில், தஞ்சாவூர் ஈச்சங்கோட்டை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மைய மாணவிகளுக்கு, இயற்கை இடுபொருள் தயாரிப்பு மற்றும் பயன்பாடு குறித்த பயிற்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இப்பயிற்சியில், பாலம் தொண்டு நிறுவனச் செயலாளர் செந்தில்குமார் கலந்துகொண்டு, இயற்கை  முறையில் நெல் பயிரில் பூச்சியைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும், நன்மை செய்யும், தீமை செய்யும் பூச்சிகளை கண்டறியும் முறைகள் குறித்தும், பூச்சிகளைக் கட்டுப்படுத்த இயற்கை முறையிலான வழிமுறைகள், மூலிகை பூச்சி விரட்டி தயார் செய்தல் போன்றவை குறித்தும் விளக்கமளித்தனர்.
 மேலும், எலியைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டியவை குறித்து களப் பயிற்சி நடைபெற்றது. தென்னை, காய்கறிகள், பயிர் வகைகளிலும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விளக்கமளித்தனர். தொடர்ந்து, மாணவிகளின் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. முடிவில் பயிற்சி மாணவி அனுசுயா நன்றி கூறினார். 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/11/வேளாண்மை-கல்லூரிமாணவிகளுக்கு-சிறப்பு-பயிற்சி-2823891.html
2823889 நாகப்பட்டினம் திருவாரூர் சமுதாய வளைகாப்பு DIN DIN Monday, December 11, 2017 12:40 AM +0530 திருத்துறைப்பூண்டியில் ஞாயிற்றுக்கிழமை சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. 
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா மாவட்ட திட்ட அலுவலர் ராஜம் தலைமையில் நடைபெற்றது. இதில், திருத்துறைப்பூண்டி திட்ட அலுவலர் மோகனா, வட்டார மேற்பார்வையாளர் மகேஸ்வரி, அங்கன்வாடிப் பணியாளர் இந்திராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில், 52 கர்ப்பிணிகள் பங்கேற்றனர். கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு செய்து பூ, மஞ்சள், குங்குமம், பழங்கள் அடங்கிய தாம்பூலத் தட்டு வழங்கப்பட்டன. 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/11/சமுதாய-வளைகாப்பு-2823889.html
2823702 நாகப்பட்டினம் திருவாரூர் போட்டித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி முகாம் DIN DIN Sunday, December 10, 2017 02:48 AM +0530 திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தில் போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது.
இதுகுறித்து, மாவட்ட நூலக அலுவலர் பெ. செல்வராசு தெரிவித்திருப்பது:
மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் நடைபெறுகிறது. இதில் கணிதம், தமிழ், அறிவியல், வரலாறு நடப்பு நிகழ்வுகள், பொது அறிவு, நுண்ணறிவு தொடர்பான வகுப்புகள் சிறந்த பாட வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக மாலையில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த இப்பயிற்சி வகுப்புகள், இரண்டாம் கட்டமாக தற்போது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது.
போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி கையேடு வழங்கப்படுகிறது என்றார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/10/போட்டித்-தேர்வுக்கான-இலவசப்-பயிற்சி-முகாம்-2823702.html
2823078 நாகப்பட்டினம் திருவாரூர் வாக்காளர் பட்டியல் திருத்த ஆலோசனைக் கூட்டம் DIN DIN Saturday, December 9, 2017 05:46 AM +0530 திருவாரூரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பார்வையாளர் சி. முனியநாதன் பங்கேற்று அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். 
பின்னர் அவர் கூறியது:
 இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் குறித்த விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு 8,735 விண்ணப்பங்கள் பெறப்பட்டு பெயர் சேர்க்கப்பட்டுள்ளன. பெயர் நீக்குவதற்கு 19,844 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பெயர் நீக்கப்பட்டுள்ளன.  இடமாறுதலுக்காக 1,207 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, இடமாற்றப்பட்டுள்ளன. 
 வாக்காளர் பட்டியல் தொடர்பாக வீடு, வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி,  டிச.15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  18  வயது நிறைவடைந்தவர்கள் அதாவது 1999 டிச.31-ஆம் தேதி வரை பிறந்தவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம்-6-ஐ பெற்று, அதைப் பூர்த்தி செய்து, விண்ணப்ப படிவத்துடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வயதுக்கான ஆதாரம், இருப்பிடத்துக்கான ஆதாரம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.
 வாக்காளர் பெயரை நீக்கம் செய்ய படிவம் 7-லும்,  திருத்தம் செய்ய படிவம்-8-ஐயும்,  ஒரே சட்டப்பேரவை தொகுதிக்குள் இடமாற்றம் செய்ய படிவம் 8 ஏ-வையும், அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில்,  இதற்கென நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலரிடம் டிச.15 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும் வாக்காளர் பட்டியல்களை e‌l‌e​c‌t‌i‌o‌n.‌t‌n.‌g‌o‌v.‌i‌n என்ற வலை தளத்திலும் காணலாம். ‌w‌w‌w.‌n‌v‌s‌p.‌i‌n  என்ற இணையதள முகவரியிலும் சேர்த்தல், நீக்கல்,  திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம்.
  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் குறித்து வரும் இணையதள புகார்களை உடனடியாக பரிசீலித்து அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். 
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் க. சக்திமணி,  வருவாய்க் கோட்டாட்சியர்கள் முத்துமீனாட்சி, செல்வசுரபி, தனி வட்டாட்சியர் (தேர்தல்) சொக்கநாதன் மற்றும் அனைத்து வட்டாட்சியர்கள், நாகராட்சி ஆணையர்கள் கலந்து கொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/09/வாக்காளர்-பட்டியல்-திருத்த-ஆலோசனைக்-கூட்டம்-2823078.html
2823077 நாகப்பட்டினம் திருவாரூர் அரசுப் பள்ளியில் தகவல் அறியும் உரிமை சட்ட கருத்தரங்கம் DIN DIN Saturday, December 9, 2017 05:43 AM +0530 திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசுப் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கில் பங்கேற்ற வழக்குரைஞர் சத்யராஜ் பேசியது: 2005-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் மத்திய, மாநில அரசின் கீழ் இயங்கும் அலுவலகங்களில் நடைபெறும் திட்டப் பணிகள் மற்றும் சீர்கேடுகள் குறித்த தகவல்களை பெற முடியும். இதனால் அரசுகள் ஒரு திறந்த புத்தகமாக திகழ வாய்ப்பு உள்ளது. தகவல் கேட்டு பொதுத் தகவல் தரும் அலுவலருக்கு அனுப்பி 30 நாள்களுக்குள் பதில் வரவில்லையென்றால் மாவட்ட அல்லது மாநில தகவல் தரும் அலுவலருக்கு மேல்முறையீடு செய்யலாம். ராணுவ ரகசியங்கள், அரசுகளின் ராஜிய ரகசியங்கள் குறித்த தகவல் இச்சட்டத்தில் பெற முடியாது என்றார் அவர். 
பள்ளித் தலைமையாசிரியர் மு.ச. பாலு தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் சி. சந்திரசேகரன், பட்டதாரி ஆசிரியர் பா. ரகு, முதுகலை ஆசிரியர் செ. முகுந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/09/அரசுப்-பள்ளியில்-தகவல்-அறியும்-உரிமை-சட்ட-கருத்தரங்கம்-2823077.html
2823076 நாகப்பட்டினம் திருவாரூர் திருத்துறைப்பூண்டியில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம் DIN DIN Saturday, December 9, 2017 05:42 AM +0530 திருத்துறைப்பூண்டியில் வழக்குரைஞரைத் தரக்குறைவாகப் பேசியதாக, காவல்துறை சார்பு ஆய்வாளரைக் கண்டித்து வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்,  திருத்துறைப்பூண்டி வழக்குரைஞர் சங்கத் தலைவர்ஆர்.பி.அருள்செல்வன், பொருளாளர் உமர் ஆகியோர் தலைமை வகித்தனர். 
 திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த வழக்குரைஞர் கார்த்தியை கடந்த நவ. 25-ஆம் தேதி ஆலிவலம் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் தரக்குரைவாகப் பேசியதாகவும், இதைக் கண்டித்தும் இப்போராட்டம் நடைபெற்றது. இதில், வழக்குரைஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/09/திருத்துறைப்பூண்டியில்-வழக்குரைஞர்கள்-ஆர்ப்பாட்டம்-2823076.html
2823075 நாகப்பட்டினம் திருவாரூர் மணல் லாரி பறிமுதல் DIN DIN Saturday, December 9, 2017 05:42 AM +0530 வெண்ணாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய லாரியை போலீஸார் பறிமுதல் செய்து ஓட்டுநரை வியாழக்கிழமை கைது செய்தனர். 
நீடாமங்கலம் காவல் ஆய்வாளர் பழனிச்சாமி, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சந்திரஹாசன் உள்ளிட்ட போலீஸார் வியாழக்கிழமை அதிகாலை ஒளிமதி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, வெண்ணாற்றில் ஒரு லாரியில் சிலர் மணல் ஏற்றிக்கொண்டிருந்தது தெரியவந்தது. போலீஸார் அங்கு சென்று விசாரித்தபோது அனுமதியின்றி மணல் எடுத்தது தெரியவந்ததையடுத்து லாரியை பறிமுதல் செய்து, ஓட்டுநர் கமலதாசனை (30) கைது செய்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/09/மணல்-லாரி-பறிமுதல்-2823075.html
2823074 நாகப்பட்டினம் திருவாரூர் கறவை மாட்டுக் கடன் வழங்கும் முகாம் DIN DIN Saturday, December 9, 2017 05:42 AM +0530 மன்னார்குடியில் கறவை மாட்டுக் கடன் வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 தமிழ்நாடு அரசு பால்வளத் துறை சார்பில், தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், பாண்டியன் கிராம வங்கி இணைந்து  இம்முகாமை நடத்தியது.
இம்முகாமுக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர். இதனால், முகாம் நடைபெற்ற திருமண மண்டபத்தில் இடமின்றி வெளியே நூற்றுக்கணக்கானோர் கூடி நின்றனர். இதனால் முகாம் நடைபெற்ற காந்திஜீ சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த முகாமில், கடன் வழங்குவதற்காக 1500 பேரிடம் மட்டும், குடும்ப அட்டை, ஆதார் அட்டை நகல் உள்ளிட்ட ஆவணங்கள் பெறப்பட்டன. மற்றவர்கள் தங்கள் பகுதியில் உள்ள பால் கொள்முதல் செய்யும் இடத்தில் தேவையான நகல்களை அளித்திடுமாறு தெரிவித்தனர். ஆனால், இதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 
இதையடுத்து, வங்கி மண்டல மேலாளர் கண்ணன், பால்வளத் துறை துணைப் பதிவாளர் ஆறுமுகம், கால்நடைதுறை மருத்துவர் விஜயா, கூட்டுறவு பால் வழங்கும் சங்கத் தலைவர் எம்.கே. கலியபெருமாள் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, அதிகாரிகள் தெரிவித்ததை ஏற்றுக்கொண்டு கலைந்து சென்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/09/கறவை-மாட்டுக்-கடன்-வழங்கும்-முகாம்-2823074.html
2823073 நாகப்பட்டினம் திருவாரூர் கற்றல் திறனை மேம்படுத்த பயிற்சி முகாம் DIN DIN Saturday, December 9, 2017 05:41 AM +0530 திருவாரூர் அருகே அடியக்கமங்கலம் மேல்நிலைப்பள்ளியில் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், வாசிக்கலாம் வாங்க பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.
 திருவாரூர் மாவட்ட மைய நூலக வாசிப்பு வளர்ச்சி மன்றம் மற்றும் அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியின் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தின. நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியர் அருளாளன் தலைமை வகித்தார். மன்ற நெறியாளர் தமிழ்க்காவலன் முன்னிலை வகித்தார். திருவாரூர் மாவட்ட மைய நூலகர் மா. ஆசைத்தம்பி பங்கேற்று,  6,7,8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது நூலகத்தை பற்றியும், நூல்கள் வாசிப்பு பயன்களை விளக்கியும் கூறினார்.  நிகழ்ச்சியில் புத்தகங்கள் படித்து சிறப்பாக திறனை வெளிப்படுத்திய மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. 
முன்னதாக, ஆசிரியர் சரவணன் வரவேற்றார். மைய நூலக கணினிப் பணியாளர் சு.வீரச்செல்வம் நன்றி கூறினார்.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/09/கற்றல்-திறனை-மேம்படுத்த-பயிற்சி-முகாம்-2823073.html
2823072 நாகப்பட்டினம் திருவாரூர் "உலக அளவில் இந்தியாவின் விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறது DIN DIN Saturday, December 9, 2017 05:41 AM +0530 'உலக அளவில் இந்தியாவின் விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறது என, மஞ்சக்குடி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விஞ்ஞானி ரவி மார்கசகாயம் கூறினார்.
குடவாசல் அருகேயுள்ள மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், "இன்றைய மாணவர்களே எதிர்காலத்தில் பல துறைத் தலைவர்கள்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு  கல்லூரித் தாளாளர் எம்.ஜி. சீனிவாஸன் தலைமை வகித்தார். அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் சிறப்பு விருந்தினர்களின் வழிகாட்டியும் விஞ்ஞானியுமான முனைவர் ரவி மார்கசகாயம் சிறப்புரையாற்றினார். 
அப்போது அவர் பேசியது: 
கழுகின் கூரிய பார்வையோடு வெற்றி பெறுவதற்குரிய மன உறுதி மாணவர்களுக்கு வேண்டும்.  இதற்கு விடாமுயற்சி, கடின உழைப்பு தேவை.  தலைமைப் பண்பை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.  அவற்றை உருவாக்க மாணவர்கள் முன்வர வேண்டும். பலதரப்பட்ட அறிவு சார்ந்த விஷயங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். உலக அரங்கில் இந்தியாவின் விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறது.  அது மேலும் வளர மாணவர்கள் உறுதி பூணவேண்டும்.  கோள்கள் சம்பந்தப்பட்ட விஷங்களை அந்த காலங்களில் எந்த ஒரு கருவியும் இல்லாமல் நம் முன்னோர்கள் கணித்ததை கண்டு  நாசா விஞ்ஞானிகள் வியந்துள்ளனர் என்றார்.
மஞ்சக்குடி விப்ரோ மேலாளர் எம்.ஆர். ராஜகோபால் நன்றி கூறினார்.  ஆங்கிலத் துறைத் தலைவர் ரமேஷ்குமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.  

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/09/உலக-அளவில்-இந்தியாவின்-விஞ்ஞானம்-வளர்ந்திருக்கிறது-2823072.html
2823071 நாகப்பட்டினம் திருவாரூர் வாய்க்கால்களை விவசாயிகளே தூர்வாரியதால் கனமழைக்கு தப்பிய சம்பா பயிர்கள் DIN DIN Saturday, December 9, 2017 05:41 AM +0530 குடவாசல் வட்டம், ஆலத்தூரில் தாங்களே ஒன்று சேர்ந்து வாய்க்கால்களை தூர்வாரியதால், கன மழையிலும் நெற்பயிருக்கு பாதிப்பு ஏற்படவில்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம் ஆலத்தூரில் சுமார் 100 ஏக்கரில் விவசாயிகள் சம்பா நெல் சாகுபடி செய்துள்ளனர்.  கடந்த சில நாள்களாக பெய்த கன மழையிலும் இப் பகுதி வயல்களில் தண்ணீர் தேங்கவில்லை. இதனால், பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை, அப்பகுதி விவசாயிகள் களை எடுப்பது, உரமிடுவது ஆகிய பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். 
 இதுகுறித்து ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணேசன்  கூறியது:
 எங்கள் ஊரில் உள்ள  விவசாயிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து, அவரவர்கள் வைத்திருக்கும் நிலங்களின் அளவுக்கு தகுந்தாற்போல, ஒரு நிதியை பெற்று, சுமார் ரூ.2.50 லட்சம் செலவில் இங்குள்ள வாஞ்சாறு, நூலாறு வாய்க்கால்கள், கொட்டூர் வடிகால் என அனைத்து சிறு வாய்க்கால்களையம் தூர்வாரினோம்.   இதனால், இப்பகுதியில் கனமழை பெய்தபோதும் தண்ணீர் தடையின்றி வடிந்ததால்,  வயல்களில் தண்ணீர் தேங்கவில்லை.  இதனால், பயிர்கள் நல்லபடியாக உள்ளது.  தற்போது, வயல்களில் களை எடுப்பது, உரமிடுவது போன்ற பணிகளை கவனித்து வருகிறோம் என்றார். அரசு செய்ய வேண்டியப் பணிகளை விவசாயிகளே முன்வந்து செய்திருப்பது பாராட்டத்தக்கதாக உள்ளதாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/09/வாய்க்கால்களை-விவசாயிகளே-தூர்வாரியதால்-கனமழைக்கு-தப்பிய-சம்பா-பயிர்கள்-2823071.html
2823070 நாகப்பட்டினம் திருவாரூர் மறியலில் ஈடுபட்ட 25 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு DIN DIN Saturday, December 9, 2017 05:40 AM +0530 மழையில் பாதித்த நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 25 விவசாயிகள் மீது வடபாதிமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
கூத்தாநல்லூர் அருகேயுள்ள கமலாபுரத்தில் அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில், கடுஉருட்டி ஆற்றுப்பாசனம் மூலம் சாகுபடி செய்யப்பட்டு மழையில் பாதித்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், கடுஉருட்டி ஆற்றில் 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு தூர்வார வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். உரிய அனுமதியின்றியும், போக்குவரத்துக்கு இடையூறாக மறியலில் ஈடுபட்டதாக வடபாதிமங்கலம் போலீஸார் சி.டி.எஸ்  . நடராஜன்,  டி. சமரசம், ஆர். பால்ராஜ், ஆர். இராஜேந்திரன், பி.கே.எஸ். ராஜமாணிக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலர் எம். திருஞானம் உள்ளிட்ட 25 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/09/மறியலில்-ஈடுபட்ட-25-விவசாயிகள்-மீது-வழக்குப்-பதிவு-2823070.html
2823069 நாகப்பட்டினம் திருவாரூர் பொது விநியோகத் திட்ட  குறை தீர்க்கும் கூட்டம்: இன்று நடக்கிறது DIN DIN Saturday, December 9, 2017 05:40 AM +0530 திருவாரூர் மாவட்டத்தில், பொது விநியோகத் திட்ட குடிமைப் பொருள் குறை தீர்க்கும் கூட்டம்  சனிக்கிழமை  (டிச.9)  நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாரூர் மாவட்டத்தில், பொது விநியோகத் திட்டத்தை மேம்படுத்தும் வகையில், திருவாரூர் வட்டம் கல்யாணமகாதேவி, நன்னிலம் வட்டம்  கூத்தனூர், குடவாசல் வட்டம் குளிக்கரை, வலங்கைமான் வட்டம் கோவிந்தகுடி, நீடாமங்கலம் வட்டம் மேலாழவந்தசேரி, மன்னார்குடி வட்டம் திருமக்கோட்டை, திருத்துறைப்பூண்டி வட்டம் பேட்டை, கூத்தாநல்லூர் வட்டம் மேலராதாநல்லூர் ஆகிய இடங்களில் பொது விநியோகத் திட்ட சிறப்பு பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் டிச.9 ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பொது விநியோகத் திட்ட அங்காடிகளின் செயல்பாடுகள் குறித்தும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் போன்றவைகள் குறித்தும் கடை மாற்றம், முகவரி மாற்றம் போன்றவை குறித்த தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து தீர்வு பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/09/பொது-விநியோகத்-திட்ட--குறை-தீர்க்கும்-கூட்டம்-இன்று-நடக்கிறது-2823069.html
2823068 நாகப்பட்டினம் திருவாரூர் உலக எய்ட்ஸ் தினம் கடைப்பிடிப்பு DIN DIN Saturday, December 9, 2017 05:39 AM +0530 மன்னார்குடி அருகேயுள்ள வடுவூரில் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி பொது சுகாதாரத்துறை சார்பில் எய்ட்ஸ் தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
வடுவூர் அண்ணாசிலை அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வடுவூர் ஆரம்ப சுகாதார நிலைய ஆலோசகர் ராமஜெயம் பங்கேற்று எச்.ஐ.வி., எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தார். மேலவாசல் மாவட்ட அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மாரியப்பன் தலைமையில் மாணவ, மாணவியர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தியும், பொதுமக்கள், வியாபாரிகளிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கினர். நிகழ்ச்சியைத் தொடர்ந்து விழிப்புணர்வு உறுதிமொழியை அனைவரும்  எடுத்துக்கொண்டனர். 


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/09/உலக-எய்ட்ஸ்-தினம்-கடைப்பிடிப்பு-2823068.html
2823067 நாகப்பட்டினம் திருவாரூர் கல்வி உதவித்தொகை  தாமதமின்றி வழங்க வலியுறுத்தல்  DIN DIN Saturday, December 9, 2017 05:39 AM +0530 நலவாரியம் மூலம் வரும் கல்வி உதவித்தொகை காலதாமதமின்றி வழங்கக்கோரி கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 
மன்னார்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற, தமிழ் மாநில கீற்று வேலை பந்தல் கட்டுமானத் தொழிலாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
சங்கத்தின் நீண்டநாள் கோரிக்கையான இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ. 17,000 லிருந்து ரூ. 25,000 ஆக உயர்த்தி வழங்க உத்தரவு பிறப்பித்த தமிழக அரசுக்கு நன்றி, நலவாரியம் மூலம் வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும், கன்னியாகுமரி மாவட்டதில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் இழப்பீட்டுத்தொகை வழங்கிஅவர்களின் வாழ்வாதாரத்துக்கு அனைத்து உதவிகளையும் தாமதமின்றி  வழங்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் 
நிறைவேற்றப்பட்டன. 
சங்க மாவட்டத் தலைவர் மு. செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சங்க மாவட்டச் செயலர் வீ. கீதா, மாவட்ட பொருளாளர் சி.பி. ராமானுஜம், நகரப் பொறுப்பாளர்கள் மகபுநிஷா ஜெபகர், ஜி. சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/09/கல்வி-உதவித்தொகை--தாமதமின்றி-வழங்க-வலியுறுத்தல்-2823067.html
2822952 நாகப்பட்டினம் திருவாரூர் உருவபொம்மை எரிப்பு வழக்கு: திமுகவினர் விடுதலை DIN DIN Saturday, December 9, 2017 02:57 AM +0530 உருவ பொம்மை எரிப்பு வழக்கில், திருவாரூர் திமுக மாவட்டச் செயலர் பூண்டி கலைவாணன் உள்ளிட்ட 5 பேரை விடுதலை செய்து, மாவட்டகுற்றவியல் நடுவர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
 எடப்பாடி கே. பழனிசாமி முதல்வரான பிறகு சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது, திமுகவினர் வெளியேற்றப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூரில் திமுக மாவட்டச் செயலர் பூண்டி கலைவாணன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.  இந்த போராட்டத்தில் சபாநாயகர் தனபால்  உருவ பொம்மை எரிக்கப்பட்டதாக திமுக மாவட்டச் செயலர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
  இந்த வழக்கு திருவாரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மாவட்டச் செயலர் பூண்டி கலைவாணன், ஒன்றியச் செயலர் தேவா, நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் செந்தில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரஜினிசின்னா, மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு அமைப்பாளர் தாஜூதீன் ஆகிய 5 பேரை விடுதலை செய்து நீதிபதி குமார் தீர்ப்பளித்தார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/09/உருவபொம்மை-எரிப்பு-வழக்கு-திமுகவினர்-விடுதலை-2822952.html
2822951 நாகப்பட்டினம் திருவாரூர் மருந்தாளுநர்களுக்கு பயிற்சி முகாம் DIN DIN Saturday, December 9, 2017 02:56 AM +0530 திருவாரூர் மாவட்ட காசநோய் மையம், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி அரசுக் கல்லூரி செஞ்சுருள் சங்கம் ஆகியவை இணைந்து மருந்தாளுநர்களுக்கான பயிற்சி முகாமை வியாழக்கிழமை நடத்தின.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் (பொ) ரவி தலைமை வகித்தார். இதில் மருந்தாளுநர்களுக்கான கணினி பயிற்சி மற்றும் காசநோய்க்கான புதிய மாத்திரைகளைக் கொண்டு சிகிச்சை அளிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முகாமில், மாவட்டம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மருந்தாளுநர்கள் கலந்துகொண்டனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட காசநோய் மைய துணை இயக்குநர் மருத்துவர் யு. புகழ் கலந்துகொண்டு, கணினி பயிற்சி குறித்தும், புதிய சிகிச்சை முறை பற்றியும் விளக்கம் அளித்தார்.
கல்லூரி கணினியியல் துறைத் தலைவர் பேராசிரியர் சா.வெ. நேதாஜி, கணினி பயிற்சி அளித்தார்.
நிகழ்ச்சியில், கல்லூரி துணை முதல்வர் க. தனராசன், நுண்ணுயிரியல் துறைத் தலைவர் முனைவர் ஆனந்தராஜ், துணைப் பேராசிரியர் பன்னீர்செல்வம், சுகாதாரப் பார்வையாளர் மங்களகணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/09/மருந்தாளுநர்களுக்கு-பயிற்சி-முகாம்-2822951.html
2822950 நாகப்பட்டினம் திருவாரூர் 26, 27-இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு DIN DIN Saturday, December 9, 2017 02:56 AM +0530 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட மாநாடு டிச. 26 , 27- ஆம் தேதிகளில் நடைபெறுவதையொட்டி அதற்கான ஆயத்தப் பணிகள் துரிதமாக நடைபெற்றுவருவதாக அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் ஐ.வி. நாகராஜன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, அவர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட 22-ஆவது மாநாடு டிச.26 மற்றும் 27-ஆ ம் தேதிகளில் வலங்கைமான் ஒன்றியம் ஆலங்குடியில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் பி.சண்முகம்,  மூத்த தலைவர் ஜி. வீரையன், மாநிலக் குழு உறுப்பினர் வி. மாரிமுத்து உள்பட பலரும் கலந்து கொள்கின்றனர்.
பொதுநிகழ்ச்சி நடைபெறும் டிச. 26-ஆம் தேதியன்று தியாகிகள் நினைவாக வரும்  கொடிமரத்துக்கு வரவேற்பு அளிக்கப்படும்.தொடர்ந்து மாநாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த மாநாடுக்கான ஆயத்தப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்டச் செயலாளர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பி. கந்தசாமி, ராதா, சுப்பிரமணியன் உள்ளிட்டோர் செய்துவருகின்றனர் என்றார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/09/26-27-இல்-மார்க்சிஸ்ட்-கம்யூனிஸ்ட்-கட்சி-மாநாடு-2822950.html
2822949 நாகப்பட்டினம் திருவாரூர் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு DIN DIN Saturday, December 9, 2017 02:55 AM +0530 திருவாரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு முகாமில் 260 பேர் பங்கேற்றனர்.
திருவாரூர் மாவட்ட ஊர்க்காவல் படை பிரிவில் காலியாக உள்ள 29 பணியிடங்களுக்கு டிச.8-ஆம் தேதி திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் ஆள்கள் தேர்வு நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி, 317 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களில் 260 பேர் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்வுக்கு வந்திருந்தனர். இதில் 243 ஆண்கள், 17 பெண்கள் ஆவர். இவர்களில் 21 ஆண்களும், 8 பெண்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
 விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்களின் எடை, உயர அளவுகள் சரிபார்க்கப்பட்டன.
  கூடுதல் கண்காணிப்பாளர் ஆர். ஜான்ஜோசப், மாவட்ட குற்ற ஆவண காப்பகத்தின் டிஎஸ்பி முகம்மது பலுலுல்லாஹ், ஊர்க்காவல் படை தளபதி கி. அரவிந்தன் ஆகியோர் முன்னிலையில் இத்தேர்வு நடைபெற்றது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/09/ஊர்க்காவல்-படைக்கு-ஆட்கள்-தேர்வு-2822949.html
2822948 நாகப்பட்டினம் திருவாரூர் துளஜ மன்னர் கட்டிய கோட்டை: புராதனச் சின்னமாக அறிவிக்க வலியுறுத்தல் DIN DIN Saturday, December 9, 2017 02:52 AM +0530 மகாதேவப்பட்டணத்தில் துளஜ மன்னர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கோட்டையை புராதன சின்னமாக அறிவிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. 
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மகாதேவப்பட்டணத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளை மாநாட்டில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தஞ்சையை மராட்டிய மன்னர்கள் ஆட்சி செய்தபோது  மகாதேவப்பட்டணத்தில் துளஜ மகாராஜாவால் கட்டப்பட்ட பழைமையான கோட்டை தற்போது பராமரிப்பின்றி சிதிலமடைந்து வருகிறது. இதை அழிவிலிருந்து பாதுகாக்கும் வகையில் துளஜ மன்னர் கட்டிய கோட்டையை புராதன சின்னமாக அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
 மகாதேவப்பட்டணம், கருவாக்குறிச்சிக்கு இடையே காட்டாற்றில் இணைப்பு பாலம் அமைக்க வேண்டும், மனைப்பட்ட இல்லாதவர்களை வருவாய்த்துறையினர் கண்டறிந்து மனைப்பட்ட வழங்க வேண்டும், மேலப்பேட்டை ஊராட்சி தொடக்கப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து தரவேண்டும், அங்கன்வாடி மையத்தை முறையாக பராமரிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
கட்சியின் மூத்த உறுப்பினர் ஜாபர்உசேன் தலைமையில் நடைபெற்ற கிளை மாநாட்டில், மாவட்ட குழு உறுப்பினர் துரை. அருள்ராஜன், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலர் என். மகேந்திரன், முன்னாள் கிளைச் செயலர் ஹரிராமச்சந்திரன், விவசாய சங்க ஒன்றியச் செயலர் ஆர். சதாசிவம், ஒன்றிய நிர்வாகி ஆர். திரவியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் கிளைச் செயலராக ஜி. ஞானசிகாமணி, துணைச் செயலர்களாக பக்கிரிசாமி, சார்லஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/09/துளஜ-மன்னர்-கட்டிய-கோட்டை-புராதனச்-சின்னமாக-அறிவிக்க-வலியுறுத்தல்-2822948.html
2822947 நாகப்பட்டினம் திருவாரூர் நீடாமங்கலத்தில் சமுதாய வளைகாப்பு DIN DIN Saturday, December 9, 2017 02:52 AM +0530 நீடாமங்கலம் வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட வட்டார அலுவலர் வேதநாயகி தலைமை வகித்தார். நீடாமங்கலம் ஒன்றிய ஆணையர் ஜூலியட்ஜெயசிந்தாள், அரசு ஊழியர் சங்க செயலாளர் கௌதமன் உள்ளிட்ட பலரும் வாழ்த்திப் பேசினர்.
40 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளையல் அணிவித்து, மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/09/நீடாமங்கலத்தில்-சமுதாய-வளைகாப்பு-2822947.html
2822946 நாகப்பட்டினம் திருவாரூர் கொலை மிரட்டல் விடுத்தவர் கைது DIN DIN Saturday, December 9, 2017 02:52 AM +0530 மன்னார்குடி அருகே முன்விரோதம் காரணமாக முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் வெள்ளிக் கிழமை கைது செய்யப்பட்டார்.
ஆவுடைதேவன்குளத்தைச் சேர்ந்தவர் காசிநாதன்(70). அதே பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன்(58). இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில், வியாழக்கிழமை காசிநாதன் பிரதான சாலையில் நடந்து சென்றபோது அவரை வழிமறித்த சுந்தர்ராஜன் பிரச்னை குறித்து பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட வாய்த்தகராறில் ஆத்திரமடைந்த சுந்தர்ராஜன், காசிநாதனுக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து காசிநாதன் பெருகவாழ்ந்தான் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து சுந்தர்ராஜனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/09/கொலை-மிரட்டல்-விடுத்தவர்-கைது-2822946.html
2822944 நாகப்பட்டினம் திருவாரூர் கொரடாச்சேரி ஏடிஎம் மையத்தில் காவலாளியைத் தாக்கி கொள்ளை முயற்சி DIN DIN Saturday, December 9, 2017 02:49 AM +0530 திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில் வியாழக்கிழமை இரவு ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயன்ற இரு மர்ம நபர்கள், பாதுகாவலரைத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.
கொரடாச்சேரி ரயில்வே கேட் அருகில் உள்ள சிட்டி யூனியன் வங்கி முன்பு ஏ.டி.எம். மையம் செயல்படுகிறது. இந்த வங்கியில் கொரடாச்சேரி வட்டம், தேவர்கண்ட நல்லூரைச் சேர்ந்த சாமிநாதன் (65) பாதுகாவலராகப் பணியாற்றிவருகிறார். இவர், திருவாரூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பின்னர்,  கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பாதுகாவலராகப் பணியாற்றி வருகிறார். 
 இவர், வியாழக்கிமை நள்ளிரவில் பணியில் இருந்தபோது, அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள்  ஏ.டி.எம். மையத்துக்கு வந்தனர். அவர்கள், கொள்ளையடிக்க முயற்சிப்பதையறிந்த பாதுகாவலர் சாமிநாதன் அவர்களை தடுத்தார். அப்போது, மர்ம நபர்கள் இருவரும் சாமிநாதனை இரும்புக் கம்பியால் தாக்கினர்.  இதில், சாமிநாதனுக்கு தலை, முகம், கண்ணில் பலத்த காயமேற்பட்டது. 
மர்ம நபர்களால் ஏ.டி.எம். இயந்திரத்திலிருந்து பணத்தை கொள்ளையடிக்க முடியவில்லை. இதனால், அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கொரடாச்சேரி போலீஸார் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று, படுகாயமடைந்திருந்த சாமிநாதனை மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.  மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். வங்கி ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்ம நபர்களின் உருவங்களை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/09/கொரடாச்சேரி-ஏடிஎம்-மையத்தில்-காவலாளியைத்-தாக்கி-கொள்ளை-முயற்சி-2822944.html
2822303 நாகப்பட்டினம் திருவாரூர் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு DIN DIN Friday, December 8, 2017 07:06 AM +0530 குடவாசல், கொரடாச்சேரி பகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் குறித்து  திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் வியாழக்கிழமை  ஆய்வு செய்தார்.
இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு இயக்கம் 2018-இன்படி   வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் குறித்து விண்ணப்பித்துள்ள விண்ணப்பங்கள் அடிப்படையில் விண்ணப்பதாரரின் விவரங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
குடவாசல்  வட்டம், சேங்காலிபுரம் கிராமத்துக்குள்பட்ட வடக்குத்தெரு, கொரடாச்சேரி பேரூராட்சிக்குள்பட்ட சிவன் கோவில் தெரு, மங்களாபுரம்,  ஆகிய பகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் குறித்து விண்ணப்பத்துள்ள விண்ணப்பங்கள் அடிப்படையில் விண்ணப்பதாரரின் விவரங்களை நேரில் ஆய்வு செய்தார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் கூறியது:
18 வயது நிறைவடைந்து இதுநாள் வரை உள்ளவர்களும், அதாவது 31.12.1999 வரை பிறந்தவர்களும் தங்களது பெயரை  வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு படிவம் 6-ஐ பெற்று அதை பூர்த்தி செய்து விண்ணப்பப் படிவத்துடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வயதுக்கான ஆதாரம், இருப்பிடத்துக்கான ஆதாரம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.
வாக்காளரது பெயரை நீக்கம் செய்வதற்கு படிவம் 7-லும் திருத்தம் செய்வதற்கு படிவம் 8-ம், ஒரே சட்டப்பேரவை  தொகுதிக்குள் இடமாற்றம் செய்வதற்கு படிவம் 8யு-விலும் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் இதற்கென நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலரிடம் 15.12.2017 வரை காலை 10 முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
வாக்காளர் பட்டியல்களை w‌w‌w.‌n‌v‌s‌p.‌i‌n என்ற வலை தளத்திலும் காணலாம். இணையதள முகவரியிலும் சேர்த்தல், நீக்கல், திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம் என்றார்
ஆட்சியர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/08/வாக்காளர்-பட்டியல்-பெயர்-சேர்த்தல்-நீக்கல்-மாவட்ட-ஆட்சியர்-ஆய்வு-2822303.html
2822302 நாகப்பட்டினம் திருவாரூர் பாமணியில் இந்து எழுச்சி நாள் கொண்டாட்டம் DIN DIN Friday, December 8, 2017 07:05 AM +0530 மன்னார்குடியை அடுத்த கர்ணாவூர் ஊராட்சி, பாமணி கிராமத்தில் அம்பேத்கர் பேரவையின் சார்பில் இந்து எழுச்சி நாள் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, பேரவையின் அமைப்பாளர் முருகானந்தம் தலைமை வகித்தார். 
சிறப்பு அழைப்பாளராக மன்னார்குடி செண்டலங்கார ராமானுஜ ஜீயர் கலந்துகொண்டார். டிச. 6-ஆம் தேதி இந்து எழுச்சி நாளாக கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, பொதுமக்களுக்கு அவர் இனிப்புகள் வழங்கினார்.
இதில் உத்தரப் பிரசேத மாநிலம், அயோத்தி ராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட பாஜக பொதுச் செயலர் வி.கே. செல்வம், அகில பாரத விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி விக்னேஷ்ராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/08/பாமணியில்-இந்து-எழுச்சி-நாள்-கொண்டாட்டம்-2822302.html
2822301 நாகப்பட்டினம் திருவாரூர் "மூன்றாவது பாலினத்தவர்களுக்கான சலுகைகள் தொடர ரயில்வே வாரியம் உத்தரவிட வேண்டும்' DIN DIN Friday, December 8, 2017 07:04 AM +0530 மூன்றாவது பாலினத்தவர்களுக்கான சலுகைகள் தொடர ரயில்வே வாரியம் உத்தரவிட வேண்டும் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் துணைப் பொதுச் செயலாளர் மனோகரன் கூறினார்.
இதுகுறித்து நீடாமங்கலத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
இந்தியாவில் 4.87 லட்சம் திருநங்கைகள் வசிக்கின்றனர். மூன்றாவது பாலினமாக இவர்களை அறிவித்து உச்சநீதிமன்றம் 2014, ஏப்ரலில் தீர்ப்பு வழங்கியது. ஆதார், வாக்காளர் அட்டை போன்றவற்றில் மூன்றாவது பாலினமாக இவர்கள் ஏற்கப்பட்டார்கள். முன்பதிவு ரயில் பெட்டிகளில் பயணத்துக்கான ஆவணங்களாக இவைகள் ஏற்கப்படுவதால், கடந்த 2016 -ஆம் ஆண்டு முதல் முன்பதிவு விண்ணப்பங்களில் இவர்களுக்கு தனிக் காலம் ஒதுக்கி அடைப்புக்குள் ஆணா/பெண்ணா எனக் கோரியது. இதனால் கடும் விமர்சனங்கள் தொடர்ந்து வந்தன. சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகம் ஆண்/பெண் என கோருவதைக் கைவிட ரயில்வேயை  வலியுறுத்தியது. அதை ஏற்று ரயில்வே அமைச்சகம் கடந்த மாதம் முதல் மூன்றாவது பாலினமா என மட்டும் விண்ணப்பத்தில் கோருகிறது.
முன்பதிவில் இவர்கள் பெற்று வந்த மூத்த குடிமகன்களுக்கான 50 சதவீத கட்டண சலுகை, ராணுவம் மற்றும் காவல்துறையில் விதவைகள் சலுகை போன்ற பெண்கள் பிரிவு சலுகைகள் பெற முடியவில்லை.
மேலும், ஒவ்வொரு முன்பதிவு பெட்டியிலும் நான்கு கீழ் படுக்கைகள் 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கென கோட்டா உள்ளது. அந்த கோட்டாவில் இதுவரை முன்னுரிமை பெற்று முன்பதிவு பயணச்சீட்டு பெற்று வந்தார்கள். அந்த சலுகையும் கிடைக்காமல் போய்விட்டது.
58 வயதுக்கு மேற்பட்ட  மூன்றாம் பாலினத்தவர்கள் முன்பதிவு இல்லாத விரைவு ரயில்களில் மூத்த குடிமகன்களுக்கான கட்டணச் சலுகையில் பயணிக்க இதுவரை உத்தரவு வெளியாகவில்லை.
இதனால் டிக்கெட் பரிசோதனை மற்றும் டிக்கெட் முன்பதிவின்போதும் கடும் சர்ச்சைகள் ஏற்படுகின்றன. உச்சநீதிமன்றம் இவர்களின் சலுகைகளைப் பறிக்கக் கூடாது என 2014 ஆம் ஆண்டு தீர்ப்பில் சுட்டிகாட்டி இருக்கிறது.
தனி பாலின அறிவிப்பால் கிடைத்து வந்த அனைத்து ரயில்வே சலுகைகளும் மூன்றாவது பாலினத்தவர்களுக்கு தற்போது பறிபோய் விட்டது. சர்ச்சைகளுக்கு தீர்வாக சலுகைகள் தொடர ரயில்வே வாரியம் உத்தரவிட வேண்டும் என்றார் அவர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/08/மூன்றாவது-பாலினத்தவர்களுக்கான-சலுகைகள்-தொடர-ரயில்வே-வாரியம்-உத்தரவிட-வேண்டும்-2822301.html
2822300 நாகப்பட்டினம் திருவாரூர் சந்தானராமர் கோயிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் DIN DIN Friday, December 8, 2017 07:04 AM +0530 நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வியாழக்கிழமை விஸ்வக்சேனர், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
இதையொட்டி,  ஆஞ்சநேயருக்கு வெண்ணெய்க்காப்பு சாற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/08/சந்தானராமர்-கோயிலில்-ஆஞ்சநேயருக்கு-சிறப்பு-அபிஷேகம்-2822300.html
2822299 நாகப்பட்டினம் திருவாரூர் 19-இல் ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் DIN DIN Friday, December 8, 2017 07:04 AM +0530 திருவாரூரில் ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் டிச.19-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பிரதான கூட்ட அரங்கில், டிச.19-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் சென்னை நிதித்துறை அரசு கூடுதல் செயலர் மற்றும் ஓய்வூதிய இயக்குநர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
 திருவாரூர் மாவட்டத்தில் பணியாற்றிய மாநில அரசு  ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள், ஓய்வூதியம் தொடர்பான குறைகள் இருந்தால், அது தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்), மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருவாரூர் என்ற முகவரிக்கு டிச.15 க்குள் அனுப்ப வேண்டும்.
மனுக்களோடு இணைத்து அனுப்ப வேண்டியவை:  விண்ணப்பதாரர் பெயர் மற்றும் முகவரி (தொலைபேசி மற்றும் செல்லிடப்பேசி எண்ணுடன்),  ஓய்வூதியப் புத்தக எண், இறுதியாக பணிபுரிந்த அலுவலகம் மற்றும் பதவி, ஓய்வுபெற்ற நாள், ஓய்வூதியரின் கோரிக்கை, கோரிக்கை எந்த அலுவலரிடம் எவ்வளவு நாள்களாக நிலுவையில் உள்ளது, ஓய்வூதியம் பெறுபவராயின் ஓய்வூதியம் பெறும் கருவூலத்தின் பெயர் உள்ளிட்ட தகவல்களை இரண்டு பிரதிகளுடன் அனுப்ப வேண்டும். இவ்வாறு அனுப்பப்படும் மனுக்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம், போக்குவரத்துக்கழகம் ஆகியவற்றில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியர்கள், தங்கள் விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/08/19-இல்-ஓய்வூதியர்-குறைதீர்க்கும்-கூட்டம்-2822299.html
2822298 நாகப்பட்டினம் திருவாரூர் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்கள் விளைச்சலைத் தருமா? விவசாயிகள் கவலை சி. ராஜசேகரன் DIN Friday, December 8, 2017 07:03 AM +0530 திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்கள் விளைச்சலைத் தருமா என கவலையில் ஆழ்ந்துள்ளனர் இரண்டாம் முறையாக பயிர்களுக்கு உயிர்ப்பூட்டும் பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகள். 
திருவாரூர் மாவட்டம் விவசாயத்தை பிரதானமாகக் கொண்ட மாவட்டம். ஆற்றுப் பாசனத்தை அதிகமாக நம்பியிருக்கும் இங்கு இதர பயிர்களை விட நெல் சாகுபடி அதிகமாக நடைபெறுகிறது.  குறுவை, சம்பா, தாளடி என சாகுபடி நடைபெறுவது வழக்கம். மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-இல் தண்ணீர் திறக்கப்பட்டால், குறுவை, சம்பா சாகுபடிகள் தடையின்றி நடைபெறும். அதே நேரம் தண்ணீர் திறப்பு தள்ளிப்போனால் சாகுபடியில் குழப்பமும், குளறுபடிகளும் ஏற்பட்டு, அந்த ஆண்டு விவசாயம் தள்ளாடும் நிலை ஏற்படும்.
 நிகழாண்டு மேட்டூர் அணை ஜூன் 12-இல் திறக்கப்படாததால் பல விவசாயிகள் குறுவை சாகுபடி செய்ய தயக்கம் காட்டினர். எனினும், ஆழ்குழாய் கிணறு வசதியுள்ள விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை தொடங்கினர். இதையடுத்து 23,324 ஹெக்டேரில் குறுவை சாகுபடி நடைபெற்றிருப்பதாக வேளாண்துறை தெரிவிக்கிறது. 
 சாகுபடி...
சாகுபடிக்காக அக்.2-இல் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதையடுத்து ஆற்றுப்பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள், சாகுபடி பணிகளை தொடங்கினர்.  ஜூன் மாதத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டிருந்தால், 150 நாள்களை உடைய நீண்ட கால ரகங்களைப் பயிரிடும் விவசாயிகள்,  தாமதமான தண்ணீர் திறப்பு காரணமாக குறுகிய கால மற்றும் மத்திய கால ரகங்களைப் பயிரிட்டனர். வேளாண்துறை கணக்கெடுப்பின்படி தற்போது வரை சம்பா மற்றும் தாளடி சாகுபடி 1,48,651 ஹெக்டேரில் நடைபெற்றுள்ளது.
இதில் சம்பா சாகுபடி, திருந்திய நெல் சாகுபடி முறையில் 20,079 ஹெக்டேரிலும், இயல்பான நடவு முறையில் 11,516 ஹெக்டேரிலும், நேரடி நெல் விதைப்பு முறையில் இதுவரை 96,119 ஹெக்டேரிலும் ஆக மொத்தம் 1,27,714 ஹெக்டேரில் சம்பா நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தாளடியில் திருந்திய நெல் சாகுபடி முறையில் 12,562 ஹெக்டேரிலும், இயல்பான நடவு முறையில் 8,199 ஹெக்டேரிலும், நேரடி நெல் விதைப்பு முறையில் 176 ஹெக்டேரிலும் என மொத்தம் 20,937 ஹெக்டேரில் தாளடி நெல் பயிர் செய்யப்பட்டுள்ளது.
 மழையால் பாதிப்பு...
தாமதமான சாகுபடி காரணமாக,  பயிரிடப்பட்ட குறைந்த கால ரகங்கள் வளரத்தொடங்கியபோது, அக். மாத இறுதியில் மழை தொடங்கியது. சுமார் 1 வாரத்துக்கும் மேலாக பெய்த மழை, இந்த பயிர்களின் வளர்ச்சியைப் பாதித்துள்ளது. பிறகு மழை சற்று இடைவெளி விட்டபோது, பாதிக்கப்பட்ட பயிர்களை உயிர்ப்பூட்டும் வேலைகளை விவசாயிகள் தொடங்கினர். மாவட்ட நிர்வாகமும் பயிர்கள் வளர்ச்சி பெறவும், தண்ணீரில் மூழ்கியுள்ள பயிர்களை காக்கவும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியது. ஆனால், வடிகால்கள் சரியில்லாததால் சராசரியாக பெய்த மழையால் கூட  வெள்ள நீர் வெளியேற வழியில்லாமல் விளைநிலங்களிலேயே தேங்கும் நிலை ஏற்பட்டதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதேபோல் தட்டுக்கிளி அல்லது வெட்டுக்கிளி தாக்குதல் காரணமாக பயிர்கள் பாதிப்படைந்துள்ளதாகவும், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் பகுதிகளில் இந்த நிலை உள்ளதாகவும் விவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலர் பி.எஸ். மாசிலாமணி கூறியது: தற்போது சராசரி மழையே பெய்துள்ளது. எனினும், சாகுபடி அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இளம் பயிர்கள் அதிகம் சேதமடைந்து விட்டன. திருவாரூர் பகுதியில் நாற்றுகள் பாதிக்கப்பட்டதால், நாற்றுகளுக்காக பல்வேறு இடங்களில் அலையும் நிலை ஏற்பட்டு விட்டது. தற்போது 2 ஏக்கர் நிலத்தில் 6 வகையான நாற்றுகளை வாங்கி நட்டுள்ளேன். நிகழாண்டு விதைகளில் முளைப்புத் திறனும் மிகவும் குறைவாகவே உள்ளது என்றார்.
ஒவ்வொரு கிராமங்களிலும் கோட்டம் எனப்படும் பள்ளமான பகுதிகள் உண்டு. அதிகமான மழைநீர் இந்த பகுதியில் தேங்கும். தொடக்கத்தில் எவ்வித பயன்பாடும் இல்லாமல் இருந்த இந்த பகுதிகளில் தற்போது சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த கோட்டப் பகுதிகளில் இருந்து மழைநீர் மெல்ல வடிந்து வருகிறது. குறிப்பாக வலங்கைமான், குடவாசல், திருத்துறைப்பூண்டி பகுதிகளில் இந்த நிலை உள்ளது.
இதுகுறித்து அம்மனூர் விவசாயி முத்துக்குமரசாமி கூறியது:
 முதல் முறையில் பயிர்கள் பாதிக்கப்பட்டதையடுத்து இரண்டாவது முறையாக சாகுபடி பணிகளை செய்துள்ளோம். ஒருவேளை பயிர்கள் வளர்ந்தால் 50 சதவீத மகசூல் மட்டுமே வர வாய்ப்புள்ளது. ஆனால், இந்த 50 சதவீத பயிர்களை காக்க மீண்டும், உரமிடுவது, பாதுகாப்பது என 100 சதவீத பணிகளை நாங்கள் செய்தாக வேண்டும் என்றார்.
 விவசாயிகளின் ஆபத்பாந்தவனாக விளங்கும் மழை, சாகுபடி பயிர்களின் வேர்களை ஆட்டம் காண வைத்ததன் மூலம், விவசாயிகளின் நம்பிக்கையை அசைத்து விட்டது. ஆனால் இன்னமும் நம்பிக்கையோடு, களையெடுப்பது, உரமிடுவது, தண்ணீரை பாதுகாப்பது என விவசாயப் பணிகளை செவ்வனே செய்து வருகின்றனர் விவசாயிகள்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/08/மழையால்-பாதிக்கப்பட்ட-சம்பா-பயிர்கள்-விளைச்சலைத்-தருமா-விவசாயிகள்-கவலை-2822298.html
2822297 நாகப்பட்டினம் திருவாரூர் காவல் உதவி ஆய்வாளர்கள் இடையே மோதல்: ஒருவர் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் DIN DIN Friday, December 8, 2017 07:03 AM +0530 திருவாரூர் மாவட்டம், குடவாசலில் காவல் உதவி ஆய்வாளர்கள் இருவரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, ஒருவர் திருவாரூர் ஆயுதப்படை பிரிவுக்கு வியாழக்கிழமை மாற்றப்பட்டார்.
குடவாசலில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் முருகானந்தம் (53). இதே ஊரில் சிறப்பு உதவி ஆய்வாளராக சேகரன் (53) பணியாற்றி வருகிறார். இருவருக்கும் முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. தினமும் ஆஜர் அணிவகுப்பில் உதவி ஆய்வாளர் சேகரன் கலந்துகொண்டும்,  அவர் அணிவகுப்புக்கு வரவில்லை என உதவி ஆய்வாளர் முருகானந்தம் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இதுதொடர்பாக புதன்கிழமை இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முருகானந்தம், சேகரனை தாக்கினராம். இதில் காயமடைந்த சேகரன் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.
இதனிடையே, குடவாசல் காவல் உதவி ஆய்வாளர் பணியிலிருந்து முருகானந்தம் வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டு, திருவாரூர் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/08/காவல்-உதவி-ஆய்வாளர்கள்-இடையே-மோதல்-ஒருவர்-ஆயுதப்படை-பிரிவுக்கு-மாற்றம்-2822297.html
2822296 நாகப்பட்டினம் திருவாரூர் இடிந்து விழும் நிலையில் தொடக்கப்பள்ளி சோ.தெட்சிணாமூர்த்தி. DIN Friday, December 8, 2017 07:03 AM +0530 கூத்தாநல்லூர் வட்டம்,  மேலக்கொண்டாழி கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளி இடிந்துவிழும் நிலையில் உள்ளதால், அருகிலுள்ள  அம்மன்  கோயிலில் பாட வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இப்பள்ளி கட்டடத்தைப் புதுப்பிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
மேலக்கொண்டாழி  ஊராட்சியில், அனைவருக்கும்  கல்வி  இயக்கம் சார்பில், கடந்த  2002- ஆம் ஆண்டு தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. 
இப்பள்ளிக்கு  புதிய கட்டடம் கட்டப்பட்டு, 2005- ஆம்  ஆண்டு, ஆகஸ்ட்  மாதம்  9 -ஆம்  தேதி, அப்போதைய  முதல்வர்  ஜெயலலிதாவால்  திறந்து வைக்கப்பட்டது.  
5-ஆம் வகுப்பு  வரையுள்ள  இப்பள்ளியில், மேலக்கொண்டாழி கிராமத்தைச் சேர்ந்த 26   மாணவ, மாணவியர்  பயின்று வருகின்றனர்.  தலைமையாசிரியை,  உதவி தலைமையாசிரியை என  இரண்டு பேர் மட்டுமே இப்பள்ளியில் பணியாற்றி வருகின்றனர். முறையான பராமரிப்பு இல்லாமல் இப்பள்ளி கட்டடம் தற்போது பழுதடைந்து காணப்படுகிறது. ஆங்காங்கே விரிசல் விழுந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளதால், பாதுகாப்பு கருதி இக்கட்டடத்தில் பாட வகுப்புகள் நடைபெறவில்லை. அருகில் உள்ள அம்மன் கோயில்  வளாகத்தில் பாட வகுப்பு நடத்தப்படுகிறது. 
இதுகுறித்து,  தலைமையாசிரியை  அ. அருள்மேரி விநோலின்  கூறியது:
தொடக்கத்தில்  இப்பள்ளியில் 32  மாணவர்கள்  படித்து வந்தனர். தற்போது  26 மாணவர்கள் படிக்கிறார்கள். பள்ளி கட்டடம் இடிந்து விழக்கூடிய நிலையில் மோசமாக உள்ளது.  ஆண்டுதோறும் கட்டடப் பராமரிப்புக்காக  ரூ. 5 ஆயிரம் கொடுப்பார்கள். அந்தப்  பணத்துடன் , ஆசிரியர்களான  எங்களின்   பணத்தையும்  சேர்த்து, பராமரிப்பு  பணிகளை மேற்கொள்வோம். தற்போது, இடியும்  நிலையில் விரிசல்  உள்ளதால் பராமரிப்பு பணி மேற்கொண்டாலும் பயனில்லை. 
எனவே, கட்டடத்தைப் புதுப்பித்துத் தரும்படி, மன்னார்குடி  யூனியனில் நேரில் சென்று கடிதம் கொடுத்தோம். ஆனால், அவர்கள் இப்பள்ளி கூத்தாநல்லூர் நகராட்சி எல்லையில் இருப்பதால்,  நகராட்சிதான் கட்டடத்தைப் புதுப்பிக்கும் பணியை மேற்கொள்ளவேண்டும் என
கூறிவிட்டனர்.  
இதுகுறித்து கூத்தாநல்லூர்  நகராட்சி  ஆணையரிடம்  தெரிவித்தால்,  அவர்,  கூத்தாநல்லூர்  நகராட்சிக்குள்பட்டு,  பள்ளிக்கூடம்  கிடையாது என்றும், அந்தப்  பள்ளி ஊராட்சி ஒன்றிய  தொடக்கப்பள்ளி  என்றுதான்  உள்ளது என கூறிவிட்டார். இதனால், மீண்டும்,  மன்னார்குடி  யூனியனுக்கு, கூடுதல் தொடக்கக் கல்வி  அலுவலர், உதவி  தொடக்கக் கல்வி  அலுவலர், வட்டார வளமைய  மேற்பார்வையாளர்  உள்ளிட்டோருடன் சென்று முறையிட்டும்  இதுவரை நடவடிக்கை  எடுக்கப்படவில்லை. 
இதனால், கிராம மக்கள் அனுமதியோடு, அருகில்  உள்ள அம்மன் கோயில் வளாகத்தில் பாட வகுப்புகளை நடத்திவருகிறோம். இந்த இடம் போதுமானதாக இல்லாததால், கோயிலை ஒட்டியுள்ள மாட்டுத் தொழுவத்தை சீரமைத்து அங்கும் பாட வகுப்பு நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம் என்றார்.
இப்பள்ளி மன்னார்குடி ஒன்றிய நிர்வாகத்தில் உள்ளதா அல்லது கூத்தாநல்லூர் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ளதா என்பதில் குழப்பம் உள்ளதால், மாணவ, மாணவியர்களின் நலன் கருதி இப்பிரச்னையில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய தீர்வுகாண வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி 
வருகின்றனர்.
ஒரு  நாடு வளர்ச்சியடைய  வேண்டும் என்றால் கிராமம்  வளர்ச்சி பெறவேண்டும் என கிராமத்துக்கு முக்கியத்துவம்  கொடுத்த  மகாத்மா காந்தி, கல்விக்கண்  திறந்த கர்மவீரர்  காமராசர்,  மாணவர்கள்தான் நாட்டின்  எதிர்காலம் என சூளுரைத்த அப்துல் கலாம்  வாழ்ந்த  நாட்டில்,  இதுபோன்ற பள்ளிக்கூடத்தின் நிலை பரிதாபத்துக்குரியது என கல்வியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/08/இடிந்து-விழும்-நிலையில்-தொடக்கப்பள்ளி-2822296.html
2822295 நாகப்பட்டினம் திருவாரூர் ஆலங்குடி கோயிலில் குருபகவானுக்கு சிறப்பு வழிபாடு DIN DIN Friday, December 8, 2017 07:02 AM +0530 வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயிலில் குருபகவானுக்கு வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதை முன்னிட்டு கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சாகயேசுவரர், ஏலவார்குழலியம்மன், மூலவர் குருபகவான், உத்ஸவர் குருதெட்சிணாமூர்த்தி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், கஜலெட்சுமி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட அனைத்து சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மூலவர் குருபகவானுக்கு தங்க கவசம் சாற்றப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/08/ஆலங்குடி-கோயிலில்-குருபகவானுக்கு-சிறப்பு-வழிபாடு-2822295.html
2822294 நாகப்பட்டினம் திருவாரூர் திருக்கொடியலூரில் 19-இல் சனிப்பெயர்ச்சி விழா DIN DIN Friday, December 8, 2017 07:02 AM +0530 திருவாரூர் மாவட்டம், திருப்பாம்புரம் அருகேயுள்ள திருக்கொடியலூரில் வரும் 19-ஆம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது.
திருக்கொடியலூரில் உள்ளது அகத்தீஸ்வரர் கோயில். இக்கோயில் சனீஸ்வர பகவான் பிறந்த தலமாக கருதப்படுகிறது.
அகத்தியர் சிவபூஜை செய்த தலமாக இருப்பதால், இங்கு வரும் பக்தர்களும், சிவனடியார்களும் ஸ்ரீ சனீஸ்வர பகவானின் கடுமையான பார்வையிலிருந்து நீங்க அகத்தீஸ்வரரே பைரவர் கோலத்தில் ஸ்ரீ சனீஸ்வர பகவானின் எதிரே நின்று தோஷத்தை நீக்கி நற்பலன்களை பெருகச் செய்யும் தலமாக விளங்குகிறது.
 ஏழரைநாட்டு சனி, அஷ்டமத்து சனி, சனிதோஷம் இருப்பவர்கள் இவ்வாலயத்தில் இருக்கும் ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு ஹோமம், அபிஷேகம், கருப்பு வஸ்திரம் சாற்றி, தீபம் ஏற்றி, எள் சாதம் நைவேத்தியம் செய்து அர்ச்சனை செய்தால் சகல தோஷங்களும் நீங்கி நன்னை ஏற்படும் என்பது ஐதீகம். 
ஸ்ரீ சனீஸ்வர பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு வரும் 19-ஆம் தேதி காலை 10.01 மணிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார். இதையொட்டி, இக்கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/08/திருக்கொடியலூரில்-19-இல்-சனிப்பெயர்ச்சி-விழா-2822294.html
2822293 நாகப்பட்டினம் திருவாரூர் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம் DIN DIN Friday, December 8, 2017 07:02 AM +0530 திருவாரூர் புகையிலைத் தோட்டம் பகுதியில் குடியிருப்போருக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு புகையிலைத் தோட்டம் குடியிருப்போர் தெரு நலச் சங்கத்தின் தலைவர் எம். ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில் மாற்றத்துக்கான மக்கள் களத்தின் தலைவர் ஜி. வரதராஜன், மக்கள் அதிகாரத்தின் தலைவர் ஆசாத், பாரதி மக்கள் மன்றத்தின் தலைவர் சுபாஷ்காந்தி, நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
 பொது சாலை, குறுக்குச் சாலை உள்ளிட்ட வசதிகள் செய்து தர வேண்டும். குடிநீர் வசதி செய்து தர வேண்டும். புதை சாக்கடைத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தெருக்களை துப்புரவு செய்து குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/08/அடிப்படை-வசதிகளை-மேம்படுத்தக்-கோரி-ஆர்ப்பாட்டம்-2822293.html
2822292 நாகப்பட்டினம் திருவாரூர் அம்பேத்கர் நினைவு நாள் DIN DIN Friday, December 8, 2017 07:01 AM +0530 நீடாமங்கலத்தில் டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, நீடாமங்கலம் பெரியார் சிலை பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த டாக்டர் அம்பேத்கர் திருவுருவப் படத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் நடேச. தமிழார்வன் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர்கள் மணலி ஜி. நேதாஜி, ராதா, நகரச் செயலாளர் யு. சந்துரு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/08/அம்பேத்கர்-நினைவு-நாள்-2822292.html