Dinamani - நாகப்பட்டினம் - http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2883512 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் பார‌ம்​ப​ரிய நெ‌ல் ரக‌ங்​க​ளு‌க்கு உயி​ரோ‌ட்​ட‌ம் கொடு‌க்​கு‌ம் சி‌த்த மரு‌த்​து​வ‌ர் கே.பி. அம்பிகாபதி DIN DIN Monday, March 19, 2018 08:54 AM +0530 பாரம்பரிய நெல் ரகங்களுக்கு உயிரோட்டம் கொடுக்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் கிடைக்கும் பல ரக நெல் விதைகளை வாங்கி வந்து மறுசுழற்சிக்கு சாகுபடி செய்து வருகிறார் சித்த மருத்துவர் சரவணகுமரன். 
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள குரவப்புலம் மேலக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ப. பரஞ்ஜோதி (60). இவரது மகன் சித்த மருத்துவர் ப. சரவணகுமரன். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வேலுமயிலு சித்த மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இயற்கை முறை சாகுபடி, பாரம்பரிய நெல் ரகங்கள் மீது ஆர்வம் கொண்டுள்ள இவர், படிப்பு, பணி சார்ந்து வெளியூர் செல்லும் பயண வாய்ப்புகளைப் பயன்படுத்தி அரிய வகை நெல்ரக விதைகளை சேகரிப்பது, பாதுகாப்பது, அதுதொடர்பான தகவல் மற்றும் சிறப்புகளை சேகரித்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். சரவணகுமரனின் ஆர்வத்துக்கு, தந்தை பரஞ்சோதியும், மாமனார் சிவாஜியும் பாரம்பரிய விவசாயத்தில் முனைப்பு காண்பித்து வருவதும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. 
விதைகளை சேகரிப்பது, பாதுகாப்பது மட்டுமன்றி இவற்றை மறுஉற்பத்திக்கான சாகுபடியையும் சரவணகுமரனின் குடும்பத்தினர் செய்து வருகின்றனர். குரவப்புலத்தில் பரஞ்ஜோதிக்கு சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் நிலத்தில் சிறுசிறு பாத்திகளாக வடிவமைத்து 204 ரக விதைகளை நடவு மற்றும் நேரடி விதைப்பு முறையில் சாகுபடி செய்துள்ளனர். பயிர்கள் பூக்கும் தருணத்தில் அயல் மகரந்த சேர்க்கையால் கலப்பு விதைகள் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் ஒத்த வயதுடைய ரகங்களை இடம்மாற்றி பயிரிட்டுள்ளனர்.
பாரம்பரிய ரக நெல்லை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சரவணகுமரன், தாம் செய்திருக்கும் பாரம்பரிய ரக நெல் சாகுபடியில் ரசாயன இடுபொருள்களைத் தவிர்த்து கால்நடை சாணம் உள்ளிட்ட இயற்கை உரங்களை பயன்படுத்தி வருகின்றார். பூச்சி, நோய்க் கட்டுப்பாட்டு மேலாண்மையிலும் இயற்கை முறையே கையாளப்பட்டுள்ளது. சுமார் 5 அடி உயரம் வரை வளரக்கூடிய ரகங்கள், பச்சை, கருப்பு, கருநீல தோகைகள், சிவப்புத் தண்டுகள் என பல வண்ணங்களில் பயிர்களை பார்ப்பது வியப்பளிக்கிறது. 
இதுகுறித்து விவசாயி பரஞ்ஜோதி கூறியது: பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்தால் மட்டும் போதாது. அவற்றை மறு சுழற்சி முறைக்கு கொண்டுவந்தால்தான் அந்த ரகங்கள் அழிவதைத் தடுக்க முடியும். புதிய ரகங்களுக்கு ஈடாக தூர் கட்டுவது, மகசூல் தரும் ரகங்களும் உள்ளன. தனக்குத் தானே நோய் எதிர்ப்புத் திறனை கொண்டுள்ள பல ரகங்கள், மனிதர்களுக்கும் அந்த தன்மையோடு பயனளிக்கிறது.
சர்க்கரை நோயாளிகள் என எந்த நோயால் பாதிக்கப்பட்டவருக்கும் பாரம்பரிய ரக அரிசியால் பாதிப்பு ஏற்படுவதில்லை. மனிதர்களின் வாழ்நாளைப் பாதுகாப்பாக அதிகரிக்கச் செய்யும் பாரம்பரிய ரகங்கள் குறித்த விழிப்புணர்வு அனைவரிடமும் வரவேண்டும் என்பதுதான் எனது மகன் சரவணகுமாரின் முயற்சியாகும். அதற்கு உதவும் வகையில் விதைகளை மறுசுழற்சி செய்யும் பணிக்கு உதவியாக இருந்து வருகிறேன் என்றார். 
பாரம்பரிய முறை முன்னோடி விவசாயி சிவாஜி கூறியது: சேகரிக்கப்பட்ட விதைகளை காட்சிப்படுத்தி விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். கார் நெல் போன்ற ரகங்கள் சத்து மிகுந்தது. இந்த ரக நெல் சாகுபடி செய்வது அரிதாகிவிட்டது. கார் நெல்லில் அவல் தயாரித்து விற்பது மூலமும் விழிப்புணர்வை செய்கிறோம். எங்களது பணியைப் பாராட்டி கரூர் மாவட்டம், கடவூரில் உள்ள இயற்கை வேளாண் விஞ்ஞானி மறைந்த கோ. நம்மாழ்வாரின் வானகம் சுற்றுச்சூழல் மையம், மரபு நெல் விதைக் காப்பாளர் 2017-ஆம் ஆண்டுக்கான நம்மாழ்வார் விருது வழங்கியுள்ளது என்றார் அவர்.
இயந்திரமயமாகிவிட்ட நவீன விவசாயத்தில் அதிக மகசூல், கூடுதல் லாபம் என்ற பெயரில் ரசாயன உரம், பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி போன்ற பயன்பாடுகள் அதிகரித்து, அது தவிர்க்க முடியாததாகி வருகிறது. இந்நிலையிலும், சேகரித்த விதை ரகங்களையும், தகவல்களையும் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்ல ஏதுவாக மறுசுழற்சிக்கான முயற்சியில் ஈடுபடும் சரவணகுமரன் குடும்பத்தினரின் பணி, பாரம்பரிய ரகங்களின் சிறப்புகளைப்போல வியப்பாக உள்ளது. இவர்களது முயற்சி இயற்கை ஆர்வலர்களின் பாராட்டைப் பெற்று வருகிறது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/19/பார‌ம்​ப​ரிய-நெ‌ல்-ரக‌ங்​க​ளு‌க்கு-உயி​ரோ‌ட்​ட‌ம்-கொடு‌க்​கு‌ம்-சி‌த்த-மரு‌த்​து​வ‌ர்கேபி-அம்பிகா-2883512.html
2883507 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற 2 டிராக்டர்கள் பறிமுதல் DIN DIN Monday, March 19, 2018 08:51 AM +0530 மணல்மேடு அருகே உரிய அனுமதியின்றி  மணல் ஏற்றிச் சென்ற 2  டிராக்டர்களை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை மணலுடன் பறிமுதல் செய்தனர். 
நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், மணல்மேடு காவல் ஆய்வாளர் மற்றும்  போலீஸார், முடிகண்டநல்லூர் மாதவன் தெரு பகுதியில், ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு மணல் ஏற்றிக் கொண்டுச் சென்ற 2 டிராக்டர்களை மடக்கி சோதனை செய்ததில், அதில் உரிய அனுமதியின்றி மணல் ஏற்றப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, டிப்பருடன் கூடிய 2  டிராக்டர்களையும் மணலுடன் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து, டிராக்டர்களின் ஓட்டுநர்களான உத்திரங்குடி காலனித் தெருவைச் சேர்ந்த பன்னீர் மகன் மனோஜ்குமார்(21) கடலங்குடி வடக்குத் தெருவைச் சேர்ந்த வீரபாண்டியன் மகன் விக்னேஷ் (22) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/19/அனுமதியின்றி-மணல்-ஏற்றிச்-சென்ற-2-டிராக்டர்கள்-பறிமுதல்-2883507.html
2883505 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் குதிரை வண்டி பந்தயம்;  சிறப்பிடம் பிடித்தவர்களுக்குப் பரிசு DIN DIN Monday, March 19, 2018 08:51 AM +0530 நாகை அருகேயுள்ள திட்டச்சேரியில் தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் 70- ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் குதிரை வண்டி பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த குதிரை வண்டி பந்தயமானது,  பெரிய குதிரை, கரிச்சாண் குதிரை, புதிய குதிரை ஆகிய பிரிவுகளில் நடைபெற்றன. ஒவ்வொரு பிரிவிலும் தலா 15 வண்டிகள் பங்கேற்றன. வாஞ்சூரிலிருந்து ப.கொந்தகை வரை பந்தய தூரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 
 இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி அதிமுக பேரூர் செயலர் டி.எஸ். அப்துல் பாஸித் தலைமையில் நடைபெற்றது. திருமருகல் ஒன்றியச் செயலர் ஆர். ராதாகிருட்டிணன், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ். ஆசைமணி, நாகை ஒன்றிய முன்னாள் செயலர் தங்க. கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற குதிரை வண்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த திரளானோர் பங்கேற்று, பந்தயத்தை கண்டு ரசித்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/19/குதிரை-வண்டி-பந்தயம்--சிறப்பிடம்-பிடித்தவர்களுக்குப்-பரிசு-2883505.html
2883504 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் நாகை செளந்தரராஜப் பெருமாள் கோயில் பங்குனி பெருவிழா: 22-இல் கொடியேற்றம் DIN DIN Monday, March 19, 2018 08:50 AM +0530 நாகப்பட்டினத்தில் அருள்மிகு செளந்தரராஜப் பெருமாள் கோயிலில் பங்குனி பெருவிழா வியாழக்கிழமை (மார்ச் 22) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
நாகப்பட்டினத்தில் உள்ள அருள்மிகு செளந்தரராஜப் பெருமாள் கோயிலில் பங்குனி பெருவிழா ஆண்டு தோறும்  சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான பெருவிழா, வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.  இதையொட்டி, செளந்தரராஜப் பெருமாளுக்கு புதன்கிழமை திருமஞ்சனம் நடைபெறுகிறது. விழா நாள்களில் பெருமாள் தினசரி காலையில்  வெள்ளிப் பல்லக்கிலும்,  மாலையில்  வெவ்வேறு வாகனங்களிலும்  வீதியுலா எழுந்தருளுகிறார். மார்ச் 29 -இல்  வெள்ளிப்  பல்லக்கில் வெண்ணைத்தாழி சேவையும், 30-இல்  திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது.  31-ஆம் தேதி இரவு கொடியிறக்கத்துடன்  விழா  நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/19/நாகை-செளந்தரராஜப்-பெருமாள்-கோயில்-பங்குனி-பெருவிழா-22-இல்-கொடியேற்றம்-2883504.html
2883502 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் சாலை விதிகளை மீறும் வாகனங்களால் விபத்து அபாயம்: பொதுமக்கள் அச்சம் DIN DIN Monday, March 19, 2018 08:50 AM +0530 சீர்காழி அருகேயுள்ள எருக்கூர் ரவுண்டானாவில் வேகத் தடைகளை தவிர்ப்பதற்காக விதிமுறைகளை மீறி வாகனங்கள் செல்வதால், விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
சீர்காழி செங்கமேட்டிலிருந்து எருக்கூர் வரை சுமார் 8 கி.மீட்டர் தொலைவுக்கு புறவழிச்சாலை உள்ளது. இதில், எருக்கூர் பகுதியில் சீர்காழி, சிதம்பரம், மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வகையில் மூன்று சாலைகள் சந்திப்பில் ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வந்ததால், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில், சிதம்பரத்திலிருந்து -சீர்காழி வரும் சாலையில் அடுத்தடுத்து வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வேகத் தடைகளின் வழியாக செல்வதை தவிர்க்கும் வகையில் பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் அனைத்தும் எதிர் திசையில் பயணம் செய்கின்றன. இதனால், எதிரில் வரும் வாகனங்கள் நிலை தடுமாறி விபத்தில் சிக்குகின்றன. மேலும், ஒன்றுக்கொன்று மோதி பெரும் விபத்து ஏற்படும் அபாயமும் நிலவுகிறது. எனவே, எருக்கூர் ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து காவலரை பணியில் அமர்த்தி, வாகனப் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/19/சாலை-விதிகளை-மீறும்-வாகனங்களால்-விபத்து-அபாயம்-பொதுமக்கள்-அச்சம்-2883502.html
2883501 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் குடமுழுக்கு நடத்த கமிட்டி நிர்வாகிகள் தேர்வு DIN DIN Monday, March 19, 2018 08:50 AM +0530 மயிலாடுதுறை அருகேயுள்ள சியாமளாதேவி கோயில் குடமுழுக்கு விழா நடத்த புதிய கமிட்டி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 
மயிலாடுதுறை அருகே இசை வேளாளர் சமூதாயத்தினருக்குச் சொந்தமான அருள்மிகு சியாமளாதேவி கோயில் உள்ளது.  இக்கோயிலை அச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 3 பிரிவாக பிரிந்து நிர்வகித்து வந்தநிலையில், ஒரு பிரிவை சேர்ந்தவர்கள் கோயில் குடமுழுக்கு நடத்த முன்னேற்பாடுகள் செய்தனர். இதில், 3 தரப்பினருக்கும் பிரச்னை ஏற்படும் சூழல் உருவானது. இதையறிந்த மயிலாடுதுறை வட்டாட்சியர் து. விஜயராகவன் சட்ட ஒழுங்கு பிரச்னையை தவிர்க்கும் வகையில், கோயிலுக்கு உரிமைக் கோரும் முத்தரப்பினைச் சேர்ந்தவர்களை அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினார். 
இதில், கோயிலை நிர்வகிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டிருந்த அறக்கட்டளை மற்றும்  நிர்வாக்குழு  கமிட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, கோயில் குடமுழுக்கு விழா நடத்துவதற்காக 19 பேர் கொண்ட புதிய கமிட்டி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அமைதிப் பேச்சுவார்த்தையில், மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் பி. அழகேசன், வருவாய் ஆய்வாளர் இளம்பரிதி, இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் உத்திராபதி, மயூரநாதர் கோயில் துணைக் கண்காணிப்பாளர் கணேசன், பாஜக நாகை மாவட்டப் பொதுச் செயலர் நாஞ்சில். பாலு  இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/19/குடமுழுக்கு-நடத்த-கமிட்டி-நிர்வாகிகள்-தேர்வு-2883501.html
2883499 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மன்னார்குடியில் இந்திய கம்யூ. மாநில மாநாடு: கீழையூர் ஒன்றியத்திலிருந்து 1000 பேர் பங்கேற்க முடிவு DIN DIN Monday, March 19, 2018 08:49 AM +0530 மன்னார்குடியில்  மார்ச் 28-ஆம் தேதி தொடங்கும் இந்திய  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் கீழையூர் ஒன்றியத்திலிருந்து 1000 பேர் பங்கேற்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கீழையூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு பேரவைக் கூட்டம்  சனிக்கிழமை  நடைபெற்றது.  கூட்டத்துக்கு  ஒன்றிய துணைச் செயலர் சுப்பிரமணியன்  தலைமை வகித்தார்.  ஒன்றியச் செயலர்  டி. செல்வம் மன்னார்குடியில்  நடைபெற உள்ள மாநில மாநாடு   குறித்துப்  பேசினார்.
 கூட்டத்தில், கட்சியின் மாவட்டச் செயலர் ஏ. சீனிவாசன்,  தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் டி. கண்ணையன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலர் கே. சீனிவாசன், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியத் தலைவர் ஆர். பரமானந்தம்  உள்ளிட்ட  பலர்  பங்கேற்றனர்.
 தீர்மானங்கள்: 
2016 - 17 ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டு தொகையை கீழையூர் ஒன்றியத்தில் விடுப்பட்டுள்ள விவசாயிகளுக்கு காலம் தாழ்த்தாமல்  வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் நாகையில் உள்ள தனியார் காப்பீட்டு நிறுவனம் முன்பு தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது. 
விவசாயிகளின்  உரிமைகளை  நிலைநாட்டவும்,  காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழுவை  அமைக்க  வலியுறுத்தியும்  மன்னார்குடியில்   மார்ச் 28 முதல் 31- ஆம் தேதி வரை  நடைபெற  உள்ள மாநில மாநாட்டில் கீழையூர்  ஒன்றியத்திலிருந்து  1000  பேர்  பங்கேற்பது  உள்ளிட்ட  தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/19/மன்னார்குடியில்-இந்திய-கம்யூ-மாநில-மாநாடு-கீழையூர்-ஒன்றியத்திலிருந்து-1000-பேர்-பங்கேற்க-முடிவு-2883499.html
2883497 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் "அறிவியல் அதிசயங்களை புரியும் வகையில் கூற வேண்டும்' DIN DIN Monday, March 19, 2018 08:49 AM +0530 அறிவியல் அதிசயங்களை எளிதில் புரியும் வகையில் கூறினாலே சிறந்த ஆராய்ச்சியாளராகலாம் என்றார் தென்கொரியாவின் சோன்பாக் தேசியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஏ. மதிவாணன். 
நாகை அருகேயுள்ள பாப்பாகோவில் சர் ஐசக் நியூட்டன் கலை அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தினத்தையொட்டி,   அண்மையில் நடைபெற்ற பன்னாட்டு கருத்தரங்கில் மேலும் பேசியது: அறிவியல் துறையை தேர்ந்தெடுத்து படிப்பவர்கள் நிறைய அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகள் செய்து பல சாதனைகள் செய்யலாம். அறிவியல் கட்டுரைகள் எழுதுவது என்பது அனைவருக்கும் கைவருவதில்லை. அவற்றை எழுதுவோருக்கு அறிவியல் துறையில் ஆழ்ந்த ஞானம் இருக்க வேண்டும்.
மேலும், அறிவியல் துறைகளில் நிகழ்ந்து வரும் வளர்ச்சிகள் மற்றும் மாற்றங்கள் குறித்த தெளிந்த அறிவும் மிகுந்த அறிவுடன் அவற்றை புரிந்து கொள்ளும் ஆற்றல் இருக்க வேண்டும். அத்துடன் தாம் பயின்றுள்ள அறிவியல் துறையை அறிந்து கொண்டதுடன் நின்று விடாமல், மற்ற அறிவியல் துறைகளை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். தற்போதைய சூழலில் நிகழும் அறிவியல் அதிசயங்களை அனைவருக்கும் புரியும் வகையில் எளிய நடையில் கூறுவதோடு, முறையாக ஆராய்ந்து வெளிப்படுத்தினாலே மிகச் சிறந்த ஆராய்ச்சியாளராகலாம் என்றார் மதிவாணன். 
கருத்தரங்கில், கோவை பாரதியார் பல்கலைக்கழக விலங்கியல் துறைப் பேராசிரியர் வி. சுப்பிரமணியன், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேதியியல் துறைப் பேராசிரியர் எம். கோபாலகிருஷ்ணன், விலங்கியல் துறைப் பேராசிரியர் டி.எஸ்.டி. செர்ப், இளம் அறிவியல் விஞ்ஞானி எம். கோவிந்தராஜன், புதுச்சேரி பல்கலைக்கழக கணினி அறிவியல் பேராசிரியர் பி. சாந்திபாலா, சர்ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் த. ஆனந்த், கலை அறிவியல் கல்லூரி முதல்வர் செ. நிறைமதி,  கல்வி நிறுவனங்ளைச் சேர்ந்த  த. மகேஸ்வரன், த. சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/19/அறிவியல்-அதிசயங்களை-புரியும்-வகையில்-கூற-வேண்டும்-2883497.html
2883495 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் இளையோர் நாடாளுமன்ற கருத்தரங்கம் DIN DIN Monday, March 19, 2018 08:49 AM +0530 நாகையில் மாவட்ட நேரு யுவகேந்திரா,  அன்பு மகளிர் மன்றம் சார்பில் இளையோர் நாடாளுமன்ற கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
நாகை அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் நடைபெற்ற கருத்தரங்குக்கு வழக்குரைஞர் அரசு தாயுமானவர் தலைமை வகித்தார். நாகை நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஏ.டி. அன்பழகன் பங்கேற்று உணவுப் பாதுகாப்பு, ஆரோக்கியம், சமூகத் தொண்டு ஆகிய தலைப்புகளிலும், கொரிய தற்காப்புக்கலை பயிற்றுநர் எஸ். நசீர்அலி பங்கேற்று இளைஞர் நலம் என்ற தலைப்பிலும் பேசினர்.
 நிகழ்ச்சியில், அன்பு அறக்கட்டளை நிறுவனர் டி. சித்ரா வரவேற்றார். நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் எம். தினேஷ் நன்றி கூறினார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/19/இளையோர்-நாடாளுமன்ற-கருத்தரங்கம்-2883495.html
2883494 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மாயமான கல்லூரி மாணவி சடலமாக மீட்பு DIN DIN Monday, March 19, 2018 08:48 AM +0530 நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் காணாமல்போன கல்லூரி மாணவி, அவரது வீட்டருகே உள்ள குளத்தில் சடலமாக ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டார்.
வேதாரண்யம் முதலியார்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகள் கலையரசி (18). இவர், வேதாரண்யத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.ஏ. முதலாமாண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில்,  சனிக்கிழமை வீட்டிலிருந்த கலையரசியைக் காணவில்லை. உறவினர்கள் தேடிப்பார்த்தும் அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை. இதையடுத்து, வேதாரண்யம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில், கலையரசி வீட்டருகே உள்ள குளத்தில் சடலமாக மிதப்பது தெரியவந்தது. இதையடுத்து, கலையரசியின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/19/மாயமான-கல்லூரி-மாணவி-சடலமாக-மீட்பு-2883494.html
2883492 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் ஆன்லைன் பத்திரப் பதிவைக் கண்டித்து சென்னையில் போராட்டம்: நாகையில் இருந்து 200 ஆவண எழுத்தர்கள் பங்கேற்பு DIN DIN Monday, March 19, 2018 08:48 AM +0530 ஆன்லைன் பத்திரப் பதிவைக் கண்டித்து சென்னையில் திங்கள்கிழமை நடைபெறும் போராட்டத்தில், நாகை மாவட்டத்திலிருந்து 200-க்கும் மேற்பட்ட ஆவண எழுத்தர்கள் பங்கேற்கின்றனர். 
தமிழகத்தில் உள்ள 583 பத்திரப்பதிவு அலுவலங்களிலும் பத்திரப்பதிவு, திருமணச் சான்று, வில்லங்கச் சான்றுகள் என அனைத்தும் ஆன்லைன் மூலம் மட்டுமே பதிவுச் செய்ய வேண்டும் என தமிழக அரசு கடந்த மாதம் உத்தரவிட்டது. இந்தக் கட்டாய ஆன்லைன் பத்திரப்பதிவு முறையில் உள்ள சிரமங்களை அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்லவும், ஏற்கனவே நடைமுறையில் இருந்த நேரடி பத்திரப் பதிவு முறையை தொடர்ந்து நடைமுறைப்படுத்தவும் வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள ஆவண எழுத்தர்கள் சென்னை சேப்பாக்கத்தில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இதையொட்டி, நாகை மாவட்டம் மயிலாடுதுறை வருவாய்க் கோட்டத்துக்கு உள்பட்ட சீர்காழி, குடவாசல், நன்னிலம், கொள்ளிடம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பத்திரப்பதிவு அலுவலக ஆவண எழுத்தர்கள், தரங்கம்பாடி, வேதாரண்யம் உள்ளிட்ட 67 பத்திரப்பதிவு அலுலகத்தின் ஆவண எழுத்தர்கள் உள்பட  200-க்கும் மேற்பட்டோர் 20 வாகனங்களில் ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னைக்குப் புறப்பட்டனர்.
இதன் காரணமாக நாகை மாவட்டம் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/19/ஆன்லைன்-பத்திரப்-பதிவைக்-கண்டித்து-சென்னையில்-போராட்டம்நாகையில்-இருந்து-200-ஆவண-எழுத்தர்கள்-பங்கேற-2883492.html
2883491 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் தமாகா இளைஞரணி கூட்டம் DIN DIN Monday, March 19, 2018 08:48 AM +0530 சீர்காழியில் தமாகா இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தமாகா நாகை வடக்கு மாவட்டத் தலைவர் பூம்புகார் எம். சங்கர் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர்கள் நாகராஜ், தம்பிதுரை உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி தலைவர் வரதராஜன் வரவேற்றுப் பேசினார். மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் எம்.எஸ். கார்த்தி சிறப்புரையாற்றினார்.
தீர்மானங்கள்: காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும்.விவசாய சங்க கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். கரும்பு நிலுவைத் தொகை மற்றும் விடுபட்டுள்ள விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைக் கட்டவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், நாகப்பட்டினத்தில் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 20) நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்பது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/19/தமாகா-இளைஞரணி-கூட்டம்-2883491.html
2883489 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் நியாய விலைக்கடை கட்டுமானப் பணி: எம்எல்ஏ பாரதி ஆய்வு DIN DIN Monday, March 19, 2018 08:47 AM +0530 திருவெண்காட்டில் சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், கட்டப்பட்டு வரும் நியாய விலைக் கடை கட்டுமானப் பணியை பேரவை உறுப்பினர் பாரதி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
திருவெண்காடு பகுதியில் நியாய விலைக் கடை தற்போது வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு நிரந்தர கட்டடம் வேண்டுமென அப்பகுதி மக்கள் சட்டப்பேரவை உறுப்பினர் பாரதியிடம் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ரூ.9 லட்சம் மதிப்பீட்டில், புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தார்.
இதைத்தொடர்ந்து, கட்டுமானப் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதை சட்டப் பேரவை உறுப்பினர் பாரதி நேரில் ஆய்வு செய்தார். அவர் கூறுகையில், வருகிற நிதியாண்டில் சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ், மற்றொரு நியாய விலைக் கடை, நூலகம் மற்றும் தென்பகுதியில் புதியதாகப் பேருந்து நிலையம் ஆகியவை கட்டப்படும் என்றார்.
ஆய்வின்போது ஒன்றிய ஆணையர் ஞானசெல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) ரெஜினாமேரி, ஒன்றிய அதிமுக செயலாளர் ராஜமாணிக்கம், ஒன்றியப் பொறியாளர் கனகராஜ், அதிமுக நிர்வாகிகள் திருமாறன். அமிர்தலிங்கம், அகோரம், ரவி, ராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/19/நியாய-விலைக்கடை-கட்டுமானப்-பணி-எம்எல்ஏ-பாரதி-ஆய்வு-2883489.html
2882875 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் கூட்டுறவு சங்கத் தேர்தல் பிற துறை ஊழியர்களையும் பணியில் ஈடுபடுத்த வலியுறுத்தல் DIN DIN Sunday, March 18, 2018 02:55 AM +0530 கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல்கள் நியாயமாக நடைபெற, கூட்டுறவுத் துறை ஊழியர்களோடு பிறதுறை ஊழியர்களையும் தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் நாகை மாவட்டப் பேரவைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு நாகை மாவட்டத் தலைவர் ப. அந்துவன்சேரல் தலைமை வகித்தார். மாநிலச் செயலர்கள் சி.ஆர். ராஜ்குமார், எம். செளந்தர்ராஜன், பொதுச்செயலர் மு. அன்பரசு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்று பேசினர்.
இதில், செயலர் ஏ.டி. அன்பழகன், பொருளாளர் பா. ராணி, மாநில செயற்குழு உறுப்பினர் சி. குருபிரசாத், நாகை வட்டச் செயலர் எம். தமிழ்வாணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தீர்மானங்கள்: 21 மாத ஊதியக்குழு நிலுவைகளை உடனடியாக வழங்கவேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம், குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும்.
கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் நியாயமாக நடைபெற, கூட்டுறவுத் துறை ஊழியர்களோடு பிறதுறை ஊழியர்களையும் தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும். நாகை கடற்கரையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/18/கூட்டுறவு-சங்கத்-தேர்தல்-பிற-துறை-ஊழியர்களையும்-பணியில்-ஈடுபடுத்த-வலியுறுத்தல்-2882875.html
2882874 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் ஒன்றிய அலுவலர்களுடன் எம்எல்ஏ பி.வி. பாரதி ஆலோசனை DIN DIN Sunday, March 18, 2018 02:54 AM +0530 சீர்காழி, கொள்ளிடம் ஒன்றிய அலுவலர்களுடன் சட்டப் பேரவை உறுப்பினர் பி.வி. பாரதி சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
கோடைக்காலம் தொடங்குவதை முன்னிட்டு, பொதுமக்களுக்குத் தடையின்றி குடிநீர் விநியோகிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி. பாரதி தலைமையில் நடைபெற்றது. இதில் ஒன்றிய ஆணையர்கள் ஞானசெல்வி (சீர்காழி), நக்கீரன் (கொள்ளிடம்), வட்டார வளர்ச்சி அலுலர் (ஊராட்சி) ரெஜினாமேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி.பாரதி பேசியது:
கோடைக்காலம் தொடங்க இருப்பதால் சீர்காழி ஒன்றியத்தில் 37 பஞ்சாயத்துக்கள், கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ள 42 பஞ்சாயத்துக்களிலும் பொதுமக்களுக்கு தடையின்றிக் குடிநீர் கிடைப்பதை அதிகாரிகள் உறுதிச்செய்ய வேண்டும். கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படாத கிராமங்களில் ஊராட்சி மூலம் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி மூலம் சீராகக் குடிநீர் வினியோகம் நடைபெறுவதை அதிகாரிகள் உறுதிப்படுத்தவேண்டும். ஊராட்சிகளில் உள்ள அடிபம்பு, திருகுவிசைகள் பழுது ஏற்பட்டிருந்தால் பழுது நீக்கி சீரமைக்கவேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் ஜெயராமன், கூட்டுறவு வங்கித் தலைவர் ராஜமாணிக்கம், ஒன்றியப் பொறியாளர்கள் கனகராஜ், முத்துக்குமார், அருமைநாதன், தாரா, மற்றும் பணிமேற்பார்வையாளர்கள் பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/18/ஒன்றிய-அலுவலர்களுடன்-எம்எல்ஏ-பிவி-பாரதி-ஆலோசனை-2882874.html
2882872 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் காவலர்களுக்கான மருத்துவ முகாம் DIN DIN Sunday, March 18, 2018 02:54 AM +0530 நாகப்பட்டினத்தில் காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்துக்கான சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
நாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்த முகாமை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் தொடங்கிவைத்தார். நாகை, வேதாரண்யம் பகுதிகளைச் சேர்ந்த காவலர்களுக்கு இந்த முகாம் நடைபெற்றது.
இதில் 400-க்கும் மேற்பட்ட காவலர் குடும்பத்தினர் கலந்துகொண்டு மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/18/காவலர்களுக்கான-மருத்துவ-முகாம்-2882872.html
2882871 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் இந்திய கம்யூ. மாநில மாநாட்டுக்கு நிதியளிப்பு DIN DIN Sunday, March 18, 2018 02:54 AM +0530 வேதாரண்யம் அருகே சனிக்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியப் பேரவைக் கூட்டத்தில், கட்சியின் மாநில மாநாட்டுக்காக ரூ. 2.5 லட்சம் நிதி வழங்கப்பட்டது.
பஞ்சநதிக்குளம் மேற்கு ஸ்ரீ ராமசாமி பெருமாள் கோயில் அரங்கத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேதாரண்யம் ஒன்றிய அளவிலான பேரவைக் கூட்டம் நடைபெற்றது.
கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர் காசி. அருள்ஒளி தலைமை வகித்தார்.
கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், மக்களவை முன்னாள் உறுப்பினருமான எம். செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர் த. நாராயணன், இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலாளர் பாஸ்கர், ஒன்றியச் செயலாளர் சிவகுரு பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், மன்னார்குடியில் நடைபெறவுள்ள கட்சியின் மாநில மாநாட்டுக்காகவும், கட்சியின் வளர்ச்சிக்காகவும் கட்சி உறுப்பினர்கள், பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட ரூ. 2.5 லட்சம் நிதியை கட்சிக்கு வழங்கப்பட்டது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/18/இந்திய-கம்யூ-மாநில-மாநாட்டுக்கு-நிதியளிப்பு-2882871.html
2882869 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் திருவெண்காடு அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி: எம்எல்ஏ திறந்து வைத்தார் DIN DIN Sunday, March 18, 2018 02:54 AM +0530 திருவெண்காடு அருகே மங்கைமடம் ஊராட்சியில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட குடிநீர்த்தொட்டியை சட்டப் பேரவை உறுப்பினர் பி.வி. பாரதி சனிக்கிழமை திறந்து வைத்தார்.
மங்கைமடம் ஊராட்சி ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதியில் சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.12லட்சம் மதீப்பீட்டில் கட்டப்பட்ட 2000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு சீர்காழி ஒன்றிய ஆணையர் ஞானசெல்வி தலைமைத் தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) ரெஜினாமேரி, ஒன்றியப் பொறியாளர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பால்ராஜ் வரவேற்றார். சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி. பாரதி கலந்துகொண்டு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் சீர்காழி ஒன்றிய அதிமுக செயலாளர் ராஜமாணிக்கம், மாவட்டக் கூட்டுறவுச் சங்க இயக்குநர் நடராஜன், கூட்டுறவுச் சங்கத் தலைவர்கள் பாலா, திருமாறன், கட்டடச் சங்க தலைவர் ராஜ்மோகன், யூனியன் ஒவர்ஸியர் சரவணன், கட்சி நிர்வாகிகள் நாடிமாமல்லன், அமிர்தலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஒப்பந்ததாரர் ராஜதுரை நன்றி கூறினார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/18/திருவெண்காடு-அருகே-மேல்நிலை-நீர்த்தேக்க-தொட்டி-எம்எல்ஏ-திறந்து-வைத்தார்-2882869.html
2882868 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் அமைச்சர் ஓ.எஸ். மணியன் வாகனம் முற்றுகை DIN DIN Sunday, March 18, 2018 02:53 AM +0530 நாகை மாவட்டம் ஆக்கூர் அருகே குடிநீர் கேட்டு அமைச்சர் ஓ.எஸ். மணியன் வாகனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
சின்னங்குடி சுனாமி குடியிருப்பில் 200-க்கும் மேற்பட்ட மீனவ மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் 5 ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர் முறையாக வராததால், இப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் தண்ணீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இந்நிலையில் சின்னங்குடியில் அரசு விழா ஒன்றில் பங்கேற்று விட்டு திரும்பிய தமிழக ஜவுளி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன், நாடாளுமன்ற உறுப்பினர் பாரதி மோகன், மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், பூம்புகார் சட்டப் பேரவை உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் ஆகியோரது வாகனங்களை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறித்து, முறையாக தண்ணீர் வழங்குமாறு கோஷம் எழுப்பினர்.
இதைத்தொடர்ந்து, அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து முற்றுகை போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/18/அமைச்சர்-ஓஎஸ்-மணியன்-வாகனம்-முற்றுகை-2882868.html
2882866 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் அரிய வகை மூலிகைச் செடிகளை வளர்க்கும்பட்டதாரி இளைஞர் DIN DIN Sunday, March 18, 2018 02:53 AM +0530 சீர்காழி அருகேயுள்ள திருவெண்காட்டில் பட்டதாரி இளைஞர் ஒருவர் அரிய வகை மூலிகைச் செடிகளை வளர்த்து அதன் மகத்துவத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
உணவே மருந்து என்பது திருமூலரின் கூற்று. மனிதர்கள் சரிவிகித உணவு உட்கொள்ளாமல், அதிக ரசாயன கலப்பு உரங்கள் மூலம் விளைவிக்கப்படும் தானியங்களை உட்கொள்வதால் இன்றைய காலகட்டத்தில் கண்டுபிடிக்க முடியாத புதிய புதிய நோய்கள் உருவாகின்றன.
ஆங்கில மருத்துவத்தால் தீர்க்க முடியாத பல வியாதிகளுக்கு இயற்கை செடிகள், மூலிகைகள் மூலம் தீர்வு காணமுடியும் என சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். எந்த வியாதிக்கு எந்த மூலிகையை எந்த விதத்தில் பயன்படுத்தவேண்டும் ? அந்த மூலிகை எங்கு கிடைக்கும் ? என்பது தெரிந்தால் அனைவரும் நோயின்றி பல ஆண்டுகள் வாழலாம்.
சித்தர்கள் அருளிய மூலிகையின் மகத்துவத்தை அறிந்த நாகை மாவட்டம், சீர்காழி அருகேயுள்ள திருவெண்காடு கிராமத்தைச் சேர்ந்த சிவா (36) என்கிற பட்டதாரி இளைஞர் தனது வீட்டுத் தோட்டத்தில் கொல்லிமலை, இமயமலை உள்ளிட்ட மலைப் பிரதேசங்களில் வளரும் 150-க்கும் மேற்பட்ட அரிய வகை மூலிகைச் செடிகளை வளர்த்து வருகிறார்.
மூலிகை வகைகள்: மலைப் பிரதேசங்களில் மட்டுமே வளரும் தேவதாது செடி, செல்வ செழிப்பைத் தரும் சவுகந்திகா செடி, ஜோதி விருட்சம், ராஜசஞ்சீவி, அமிர்த சஞ்சீவி, நாராயண சஞ்சீவி ஆகிய மூலிகை செடி, அரிய வகை விருட்சங்களான மகாவில்வம், ருத்ராட்சம், ஏகமுக ருத்ராட்சம், சௌகந்தி, கல்காரம், பிரம்மகமலம், கிருஷ்ணகமலம், சர்க்கரைவில்வம் போன்ற பல வகை மூலிகைகளை வளர்த்து வருகிறார்.
இதய நோயைக் கட்டுப்படுத்தும் சஞ்சீவி, மூட்டு வலியைக் குணப்படுத்தும் மிருதங்க சஞ்சீவி, புற்றுநோயைக் குணப்படுத்தும் சிவப்பு கற்றாழை, கோமா நிலையைப் போக்கும் கபால மூலிகை, எலும்பு முறிவை சேர்க்கும் வெட்டி- ஒட்டி மூலிகை, சுவாசக் கோளாறைப் போக்கும் மகாவில்வம் போன்ற வியாதிகளைக் குணப்படுத்தும் மூலிகைகளையும் வளர்த்து வருகிறார். பட்டை - மசாலா போன்ற செடிகள், பான்பீடா ருசி, வாசத்தைத் தரும் செடிகள், சென்ட் நறுமணத்தைத் தரும் செடிகள், வெண்ணிலா ஐஸ்கிரீம் போன்ற நறுமணத்தைத் தரும் தாவரங்கள் என உள்ளே நுழைந்தால் ஆச்சரியப்படுத்தும் பல தாவரச் செடிகள் உள்ளன.
தவிர, மனோரஞ்சிதம், சவுகந்தி, பாரி ஜாதம், முல்லை, மல்லி, காஷ்மீர் ரோஜா ஆகிய மலர்ச் செடிகளும் சிவாவின் மூலிகைத் தோட்டத்தில் இடம்பிடித்துள்ளன. 27 நட்சத்திரங்களுக்கு உண்டான விருட்சங்கள், 12 ராசிகளுக்கு உண்டான விருட்சங்கள், நவகிரகங்களுக்கு உண்டான விருட்சங்கள், 4 திசைகளுக்கு உண்டான விருட்சங்களும் உள்ளன. சந்தன மரமும் இவரது தோட்டத்தில் அனுமதியுடன் வளர்க்கப்படுகிறது. இவ்வாறு சுமார் 150 வகைகளுக்கு மேல் செடி, கொடிகளை சிவா நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று சேகரித்து தனது வீட்டில் தோட்டம் அமைத்து பராமரிக்கிறார்.
பட்டதாரி இளைஞர் சிவாவின் மூலிகைத் தோட்டத்தைக் காண உள்ளூர், வெளியூர்களிலிருந்து பலர் வந்து பார்த்துச் செல்கின்றனர். இங்கு அரிய, வியாதிகளைத் தீர்க்கும் மூலிகைச் செடிகள் விற்பனை செய்யப்படுகின்றன.
மூலிகைச் செடிகள் விற்பனை மூலம் கிடைக்கும் தொகையை கிராமத்தில் பராமரிப்பின்றி உள்ள கோயில் திருப்பணிக்கு நிதியுதவி செய்து வருகிறார். வீட்டுக் கொல்லையில் அரிய வகை மூலிகைச் செடிகளைப் பராமரித்து வரும் சிவா போன்ற பட்டதாரி இளைஞர்கள் மூலிகையின் மகத்துவத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துக் கூறும் வகையில் உருவாக வேண்டும்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/18/அரிய-வகை-மூலிகைச்-செடிகளை-வளர்க்கும்பட்டதாரி-இளைஞர்-2882866.html
2882864 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் சின்னங்குடியில் மீன்பிடி இறங்கு தளம் அமைக்கும் பணி: அமைச்சர் ஓ.எஸ். மணியன் தொடங்கி வைத்தார் DIN DIN Sunday, March 18, 2018 02:53 AM +0530 நாகை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே உள்ள சின்னங்குடியில் மீன்பிடி இறங்குதளம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.
சின்னங்குடி கிராமத்தில் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை சார்பில் ரூ.5.50 கோடி மதிப்பில் மீன் இறங்குதளம் அமைக்கும் பணிக்கான பூமிபூஜையை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தலைமையில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். இவ்விழாவில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் பேசியது:
இந்த மீன்பிடி இறங்குதளத்தில் மீன்பிடிக் கலன்களை நிறுத்த வசதியாக 60 மீட்டர் நீளத்திற்கு படகு அணையும் சுவர், மீன் ஏலக்கூடம், வலைபின்னும் கூடம், படகு அணையும் சுவருக்கு அணுகு சாலை, மின்வசதி, தண்ணீர் வசதிகள் செய்யப்படவுள்ளன. மேலும் மீன்பிடிக் கலன்கள் சிரமமின்றி சென்றுவரும் வகையில் அம்மானாறு ஆழப்படுத்தப்படவுள்ளது.
சின்னங்குடி கிராமத்தில் மீன்பிடி இறங்குதளம் அமைக்கப்படுவதால், சுற்றியுள்ள மீனவ கிராமங்களில் சுமார் 350 கண்ணாடி நாரிழைப் படகுகளும், 200 கட்டுமரங்களும் நிறுத்திவைக்க முடியும். இத்திட்டம் பயன்பாட்டுக்கு வரும்போது 2000 மீனவர்கள் நேரடியாகவும், 4000 பேர் மறைமுகமாகவும் பயனடைவார்கள் என்றார் ஓ.எஸ். மணியன்.
இந்நிகழ்ச்சியில், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.கே. பாரதிமோகன், பூம்புகார் சட்டப் பேரவை உறுப்பினர் எஸ். பவுன்ராஜ், மீன்வளத்துறை இணை இயக்குநர் ரீனா செல்வி, செயற்பொறியாளர் ராமநாதன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ. செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/18/சின்னங்குடியில்-மீன்பிடி-இறங்கு-தளம்-அமைக்கும்-பணி-அமைச்சர்-ஓஎஸ்-மணியன்-தொடங்கி-வைத்தார்-2882864.html
2882863 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் இளையோர் நாடாளுமன்ற கருத்தரங்கு DIN DIN Sunday, March 18, 2018 02:53 AM +0530 வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலத்தில் இளையோர் நாடாளுமன்ற கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
நேரு யுவகேந்திரா, நேதாஜி சமூக நலச் சங்கம், சர்வதேச இந்திய சுந்தர்ஜி சமூக நல அறக்கட்டளை சார்பில் ஆயக்காரன்புலம் நாடிமுத்து உதவி தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியர் அ. மதியரசு தலைமை வகித்தார். அறக்கட்டளையின் நிறுவனர் எம்.எஸ்.சி. சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தார்.
இளையோருக்கான விளையாட்டுத் துறை தொடர்பான விழிப்புணர்வு குறித்து நாகை மாவட்ட விளையாட்டு அலுவலர் பி.சிவா, இளையோருக்கான சட்ட விழிப்புணர்வு தொடர்பாக வழக்குரைஞர் வைரமணி ஆகியோர் பேசினார். நிகழ்ச்சியில் கல்லூரி, பள்ளி மாணவ- மாணவியர் பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/18/இளையோர்-நாடாளுமன்ற-கருத்தரங்கு-2882863.html
2882862 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் குரவலூர் உக்கிர நரசிம்மர் கோயிலில் சிறப்பு வழிபாடு DIN DIN Sunday, March 18, 2018 02:52 AM +0530 பங்குனி அமாவாசையை முன்னிட்டு குரவலூர் உக்கிர நரசிம்மர் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடை
பெற்றது.
நாகை மாவட்டம் திருவெண்காடு பகுதியில் பஞ்ச (ஐந்து ) நரசிம்மர் கோயில்கள் உள்ளன.
இதில் குரவலூர் உக்கிர நரசிம்மர் கோயில் முதன்மையானதாக விளங்குகிறது. பங்குனி அமாவாசையை முன்னிட்டு இக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பால், திரவியங்கள், இளநீர், தயிர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. மேலும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு, அர்ச்சனைகள் நடைபெற்றன.
தீபாராதனை காட்டப்பட்டது. இதில் கோயில் பரம்பரை அறங்காவலர் கிருஷ்ணமுர்த்தி பிள்ளை, உபயதாரர் நடராஜன், கோயில் அர்ச்சகர்கள் பார்த்தசாரதி பட்டர், ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/18/குரவலூர்-உக்கிர-நரசிம்மர்-கோயிலில்-சிறப்பு-வழிபாடு-2882862.html
2882861 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் பங்குனி உத்திரத் திருவிழா: அமைதியை குலைப்போர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை DIN DIN Sunday, March 18, 2018 02:52 AM +0530 கொள்ளிடத்தில் நடைபெறவுள்ள பங்குனி உத்திர திருவிழாவின்போது, அமைதியை குலைக்கும் முயற்சியில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துணைக் கண்காணிப்பாளர் அருள்செல்வன் எச்சரித்துள்ளார்.
நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கொள்ளிடத்தைச் சேர்ந்த சமூக சேவகர் பிரபு, அண்மையில் அனுப்பியிருந்த கோரிக்கை மனுவில், கொள்ளிடம் புலீஸ்வரி அம்மன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா மார்ச் 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 30-ஆம் தேதி நடைபெறும் விழாவில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள். அப்போது, சமூக விரோதிகளால் அமைதியை குலைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இதற்கு, நாகப்பட்டினம் குற்றப்பதிவேடுகள் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் அருள்செல்வன், சமூக சேவகர் பிரபுவுக்கு பதில் அனுப்பியுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: கொள்ளிடம் புலீஸ்வரி அம்மன் கோயிலில் நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழாவில் அமைதியைக் குலைக்கும் வகையில் யாரேனும் நடந்து கொண்டால் அவர்கள் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். சந்தேகப்படும் நபர்கள் தொடர்ந்து காவல் துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். விழாவுக்கான பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டு, எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமலிருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/18/பங்குனி-உத்திரத்-திருவிழா-அமைதியை-குலைப்போர்-மீது-குண்டர்-சட்டத்தில்-நடவடிக்கை-2882861.html
2882817 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் தயானந்த சரஸ்வதி சுவாமிகளின் மணிமண்டபத் திறப்பு விழா: நாளை நடக்கிறது DIN DIN Sunday, March 18, 2018 02:37 AM +0530 குடவாசல் அருகேயுள்ள மஞ்சக்குடியில் பூஜ்யஸ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமிகளின் மணிமண்டபத் திறப்பு விழா திங்கள்கிழமை (மார்ச் 19) நடைபெறுகிறது.
ஆன்மிக ஞானியாகவும், சமுதாய மேன்மைக்காகவும், அடித்தட்டு மக்களின் கல்விக்காகவும் பாடுபட்டவர் பத்மபூஷன் பூஜ்யஸ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமிகள். இவரது வேதாந்தப் பேச்சால் ஈர்க்கப்பட்ட பலர் இன்று இவரது சீடர்களாக இருந்து, அவர் இட்டுச்சென்ற ஆன்மிக மற்றும் சமுதாயப் பணிகளைச் செய்துவருகின்றனர். சுவாமியின் கல்விப் பணியால் எண்ணற்ற கிராமப்புற ஏழை மக்கள் கல்வி பெற்று வாழ்வில் உயர்ந்த நிலையை அடைந்துள்ளனர்.
உலகில் வாழ்ந்து மறைந்தவர் பலர். ஆனால், காலத்தை வென்று நிலைத்து நிற்பவர்கள் ஒருசிலரே. அந்த வகையில் சிறந்து விளங்கும் தயானந்த சரஸ்வதி சுவாமிகளுக்கு, அவர் பிறந்த ஊரான மஞ்சக்குடியில் அழகிய மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 18) தொடங்கி, திங்கள்கிழமை ஆகிய இரு நாள்கள் நடக்கிறது.
முதல்நாள் நிகழ்வாக சுவாமிஜிக்கு குருவந்தனம் செலுத்தும் விதமாக ரேவதி ராமச்சந்திரன் மற்றும் குமாரி மானஸ்வினி குழுவினரின் நாட்டியம் நடைபெறவுள்ளது. இரண்டாவது நாள் திங்கள்கிழமை காலை 9 மணிக்கு சுவாமிஜியின் நினைவு மணிமண்டபம் திறக்கப்பட உள்ளது.
இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக சுவாமிஜியின் முதன்மைச் சீடர் பரமானந்த சுவாமி கலந்துகொண்டு, மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார். சுவாமி தயானந்தா கல்வி அறக்கட்டளையின் செயலர் ஷீலாபாலாஜி வரவேற்புரையாற்றுகிறார்.
இந்த நிகழ்ச்சியில் அமெரிக்கா, ஜப்பான், கனடா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுவாமியின் சீடர்கள் பெருமளவில் கலந்துகொள்ளவுள்ளனர். மேலும், சுவாமி தயானந்தா கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர்கள் சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர் எம்.ஜி. சீனிவாஸன், முதல்வர் என். கனகசபேசன், துணை முதல்வர் வி. ஹேமா, மஞ்சக்குடி சுவாமி தயானந்தா மேல்நிலைப் பள்ளித் தாளாளர் சாந்தி ரெங்கநாதன், மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயக்குநர் ஜூடி, மஞ்சக்குடி விப்ரோ மேலாளர் ராஜகோபால் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள், பள்ளித் தலைமையாசிரியர்கள், மாணவ மாணவியர், பொதுமக்கள் கலந்துகொள்கின்றனர்.
நிகழ்ச்சியன்று காலை கர்நாடக இசைப்பாடகி பாம்பே ஜெயஸ்ரீ ராம்நாத்தின் இசைக்கச்சேரி நடைபெறுகிறது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/18/தயானந்த-சரஸ்வதி-சுவாமிகளின்-மணிமண்டபத்-திறப்பு-விழா-நாளை-நடக்கிறது-2882817.html
2882673 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் கார் மீது மினி லாரி மோதி தாய், மகன் உள்பட 3 பேர் சாவு DIN DIN Sunday, March 18, 2018 01:05 AM +0530 நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே கார் மீது மினி லாரி மோதிய விபத்தில் கேரளத்தைச் சேர்ந்த தாய், மகன் உள்பட 3 பேர் சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு அருகேயுள்ள சித்தூரைச் சேர்ந்தவர் பகவதீஸ்வரன் (60). இவரது மகன் திலீப் (30). கடந்த 10 நாள்களுக்கு முன்பு புதிய கார் வாங்கியிருந்த திலீப், அந்த காரில் தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல முடிவு செய்தார். அதன்படி, தந்தை பகவதீஸ்வரன், தாய் கிருஷ்ணவேணி (50), பகவதீஸ்வரனின் தம்பி மகள் தரணி (30), உறவினர் சாமி (55) ஆகியோருடன் வியாழக்கிழமை இரவு கேரளத்திலிருந்து புறப்பட்டார்.
இவர்கள், வெள்ளிக்கிழமை தஞ்சையில் சுற்றிப்பார்த்து விட்டு, அன்று இரவு வேளாங்கண்ணிக்கு வந்து தங்கினர். பின்னர், சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு திருநள்ளாறுக்கு செல்வதற்காக காரில் புறப்பட்டனர். காரை திலீப் ஓட்டினார்.
வேளாங்கண்ணி அருகே கிழக்கு கடற்கரை சாலை வழியாக கார் சென்றது. அப்போது, சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் இருந்து வேளாங்கண்ணிக்கு இறால் ஏற்றிக்கொண்டு மினி லாரி வந்து கொண்டிருந்தது. இந்த லாரியின் பின்னால் ஒரு சுமை ஆட்டோ சென்றது.
மாத்தான்காடு என்னுமிடத்தில் கார் செல்லும்போது, காருக்கு முன்னால் மாட்டு வண்டி சென்றதாகக் கூறப்படுகிறது. அதிகாலை நேரம் என்பதால் மாட்டு வண்டி செல்வது தெரியாமல் கார் அதன் அருகில் சென்றது. அருகில் சென்றபோது சுதாரித்த திலீப், காரை வலது புறம் திருப்பினார். அப்போது, எதிரில் வந்து கொண்டிருந்த மினி லாரி மீது கார் மோதி, சாலையோரத்தில் கவிழ்ந்தது. மேலும், மினி லாரியின் பின்னால் வந்த சுமை ஆட்டோ மினி லாரியின் பின்புறம் மோதியது.
இந்த விபத்தில் காரை ஓட்டிவந்த திலீப், அருகில் அமர்ந்திருந்த அவரது தாயார் கிருஷ்ணவேணி, உறவினர் சாமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து வந்த வேளாங்கண்ணி போலீஸார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காரிலிருந்த தரணி, பகவதீஸ்வரன், சுமை ஆட்டோ ஓட்டுநர் கோவிந்தசாமி, மினி லாரி ஓட்டுநர் ரவிச்சந்திரன் ஆகிய 4 பேரும் காயங்களுடன் மீட்கப்பட்டு, நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/18/கார்-மீது-மினி-லாரி-மோதி-தாய்-மகன்-உள்பட-3-பேர்-சாவு-2882673.html
2882672 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் வேளாண் விழிப்புணர்வு கருத்தரங்கம் DIN DIN Sunday, March 18, 2018 01:05 AM +0530 நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தாவர ரகங்கள் பாதுகாப்பு மற்றும் உழவர்களின் உரிமைச் சட்டம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
வேளாண் பொறியியல் செயற்பொறியாளர் கா.ப. பன்னீர்செல்வம் கருத்தரங்குக்கு தலைமை வகித்து கையேட்டை வெளியிட்டார். வேளாண்மை துணை இயக்குநர் ப. கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார். நபார்டு உதவிப் பொது மேலாளர் பேட்ரிக் ஜாஸ்பர் சிறப்புரையாற்றினார்.
நீடாமங்கலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வே. தேவேந்திரன் வாழ்த்திப் பேசினார். நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் சாகுபடி முறைகள் குறித்து எடுத்துக்கூறினார். ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியர் ரா. சுரேஷ் தொழில்நுட்ப உரையாற்றினார். உதவிப் பேராசிரியர் எம். செந்தில்குமார் புதிய வகை விதை நேர்த்தித் தொழில்நுட்பம் குறித்து விளக்கமளித்தார்.
பெட்ரோலிய சிக்கன ஆராய்ச்சி அமைப்பின் அலுவலர் கண்ணன், வேளாண்மையில் பெட்ரோலிய பொருட்களின் சிக்கனம் குறித்து எடுத்துரைத்தார். வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் ராஜா. ரமேஷ் திட்ட விளக்க உரையாற்றினார்.
மேலும், தில்லியில் நடைபெற்ற தேசிய வேளாண்மை அறியவியல் நிலைய கருத்தரங்கு மற்றும் 25 புதிய வேளாண்ண்மை அறிவியல் நிலைய அடிக்கல் நாட்டு விழாவில் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கப் பிரதமரின் காணொளி காட்சியுரை காட்டப்பட்டது.
முன்னதாக பண்ணை மேலாளர் துரை. நக்கீரன் வரவேற்றார். திட்ட உதவியாளர் சகுந்தலா நன்றிகூறினார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/18/வேளாண்-விழிப்புணர்வு-கருத்தரங்கம்-2882672.html
2882671 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் ஓய்வூதியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க கோரிக்கை DIN DIN Sunday, March 18, 2018 01:05 AM +0530 நிறுத்தப்பட்டுள்ள ஓய்வூதியர்களுக்கான பொங்கல் போனஸை மீண்டும் வழங்க வேண்டும் என, தமிழ்நாடு ஓய்வுபெற்ற ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு ஓய்வுபெற்ற ஆசிரியர் சங்கக் கூட்டம், மயிலாடுதுறை குருமூர்த்தி நடுநிலைப்பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. சங்கத் தலைவர் ஜி. முருகையன் தலைமை வகித்தார். கெளரவத் தலைவர் டி.எஸ். தியாகராஜன்முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், சங்க உறுப்பினர்கள் மாணிக்கம், கோவிந்தசாமி ஆகியோர்களுக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
தீர்மானங்கள்: ஏழாவது ஊதியக் குழுவின் அறிக்கையை தமிழக அரசுவெளியிடவேண்டும். ஓய்வூதியர்களுக்கு நிறுத்தப்பட்ட பொங்கல் போனஸை மீண்டும் வழங்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைக் கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .
சங்க செயலாளர் மு. கண்ணன், பொருளாளர் ரத்தின. தியாகராஜன், நிர்வாகிகள் மாலதி, சி. சண்முகம் ஆகியோர் பேசினர். ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/18/ஓய்வூதியர்களுக்கு-பொங்கல்-போனஸ்-வழங்க-கோரிக்கை-2882671.html
2882670 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் கூட்டுறவு சங்கத் தேர்தல் : பிற துறை ஊழியர்களையும் பணியில் ஈடுபடுத்த வலியுறுத்தல் DIN DIN Sunday, March 18, 2018 01:05 AM +0530 கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல்கள் நியாயமாக நடைபெற, கூட்டுறவுத் துறை ஊழியர்களோடு பிறதுறை ஊழியர்களையும் தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் நாகை மாவட்டப் பேரவைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு நாகை மாவட்டத் தலைவர் ப. அந்துவன்சேரல் தலைமை வகித்தார். மாநிலச் செயலர்கள் சி.ஆர். ராஜ்குமார், எம். செளந்தர்ராஜன், பொதுச்செயலர் மு. அன்பரசு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்று பேசினர்.
இதில், செயலர் ஏ.டி. அன்பழகன், பொருளாளர் பா. ராணி, மாநில செயற்குழு உறுப்பினர் சி. குருபிரசாத், நாகை வட்டச் செயலர் எம். தமிழ்வாணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தீர்மானங்கள்: 21 மாத ஊதியக்குழு நிலுவைகளை உடனடியாக வழங்கவேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம், குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும்.
கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் நியாயமாக நடைபெற, கூட்டுறவுத் துறை ஊழியர்களோடு பிறதுறை ஊழியர்களையும் தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும். நாகை கடற்கரையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/18/கூட்டுறவு-சங்கத்-தேர்தல்--பிற-துறை-ஊழியர்களையும்-பணியில்-ஈடுபடுத்த-வலியுறுத்தல்-2882670.html
2882669 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் வடுவூர், கட்டக்குடியில் புதிய மின்மாற்றி இயக்கிவைப்பு DIN DIN Sunday, March 18, 2018 01:04 AM +0530 மன்னார்குடியை அடுத்த வடுவூர் துணை மின்நிலையத்துக்குள்பட்ட வடுவூர், கட்டக்குடி ஆகிய கிராமங்களில் புதிய மின்மாற்றிகள் சனிக்கிழமை இயக்கிவைக்கப்பட்டன.
இக்கிராமங்களில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக விவசாய மின் மோட்டார்கள் இயங்கவில்லை எனவும், எனவே சீரான மின் விநியோம் செய்திடும் வகையில் புதிய மின்மாற்றிகள் அமைக்க வேண்டும் என விவசாயிகள் மின்வாரியத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, இரு கிராமங்களிலும் ஆய்வு மேற்கொண்ட மின்வாரிய அதிகாரிகள், சீரான மின் விநியோகம் அளிக்கும் வகையில் இரண்டு கிராமங்களிலும் புதிய மின்மாற்றிகள் அமைக்க நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து, கடந்த சில நாள்களாக புதிய மின் மாற்றிகள் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
இப்பணி நிறைவடைந்ததைத் தொடர்ந்து வடுவூர், கட்டக்குடி ஆகிய இரு கிராமங்களிலும் புதிய மின்மாற்றிகள் சனிக்கிழமை இயக்கிவைக்கப்பட்டன. மன்னார்குடி செயற்பொறியாளர் (பொ) சம்பத் இவற்றை இயக்கிவைத்தார். நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் ச. அருள்ராஜ், உதவிப் பொறியாளர் சா. ராமச்சந்திரன் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/18/வடுவூர்-கட்டக்குடியில்-புதிய-மின்மாற்றி-இயக்கிவைப்பு-2882669.html
2882668 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் DIN DIN Sunday, March 18, 2018 01:04 AM +0530 மன்னார்குடியை அடுத்த கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஒரத்தூர், குறிச்சி ஊராட்சிகளில் கால்நடைத்துறை சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
கால்நடைத்துறையின் சார்பில் மாட்டினங்களுக்கு தீவிர கோமாரி நோய்க் கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ், 14-ஆவது சுற்றாக இம்முகாம் நடைபெற்றது. மன்னார்குடி கோட்ட உதவி இயக்குநர் ஹமீது அலி தலைமை வகித்தார். கால்நடை உதவி மருத்துவர்கள் செந்தில்குமார், எஸ். விஷ்வேந்தர் தலைமையிலான மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். மொத்தம் 850 மாடுகளுக்குத் தடுப்பூசி போடப்பட்டது.
கால்நடை ஆய்வாளர் மனோகரன், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கலைவாணி, பாரதிமோகன், ராஜேஸ்வரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/18/கோமாரி-நோய்-தடுப்பூசி-முகாம்-2882668.html
2882667 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் வெள்ளி சேஷ வாகனத்தில் ஸ்ரீ ராஜகோபால சுவாமி வீதியுலா DIN DIN Sunday, March 18, 2018 01:04 AM +0530 மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் நடைபெறும் பங்குனித் திருவிழாவின் 11- ஆம் நாளான சனிக்கிழமை வெள்ளி சேஷ வாகனத்தில் ராஜகோபாலசுவாமி எழுந்தருளினார்.
மன்னார்குடி கோபிநாதன் திருக்கோயிலிருந்து வெள்ளி சேஷ வாகனத்தில் பரமபத சேவையில் எழுந்தருளிய ராஜகோபாலசுவாமி,பின்னர் முதல்தெரு, இரண்டாம்தெரு, புதுத்தெரு, கீழராஜவீதி, பெரியக்கடைத்தெரு, மேலராஜவீதி வழியாக திருக்கோயிலின் நான்கு வெளிபிராகாரங்களைச் சுற்றி கோயிலை வந்தடைந்தார். இதற்கான ஏற்பாடுகளைக் கோயில் அலுவலர்கள், சிங்கப்பூர் வி.சீதாராமன், சென்னை வி.ஸ்ரீராம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/18/வெள்ளி-சேஷ-வாகனத்தில்-ஸ்ரீ-ராஜகோபால-சுவாமி-வீதியுலா-2882667.html
2882666 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் வலங்கைமான் மாரியம்மன் கோயில் திருவிழா இன்று தொடங்குகிறது DIN DIN Sunday, March 18, 2018 01:03 AM +0530 வலங்கைமான் மாரியம்மன் கோயிலில் பங்குனிப் பெருந்திருவிழா இன்று தொடங்குகிறது.
இதை முன்னிட்டு கடந்த 9-ஆம் தேதி பூச்சொரிதல் விழாவும், 11-ஆம் தேதி காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றன. வருகிற 25-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பாடைக்காவடித் திருவிழாவும், ஏப்ரல் 1-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை புஷ்பப் பல்லக்கு விழாவும், ஏப்ரல் 8-ஆம் தேதி கடைஞாயிறு விழாவும் நடைபெறவுள்ளது. விழா நாட்களில் நாள்தோறும் அம்பாள் வீதியுலா, பட்டிமன்றம், இன்னிசைக் கச்சேரி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார், ஆய்வாளர் எஸ். தமிழ்மணி, செயல் அலுவலர் க. சிவக்குமார், உபயதாரர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/18/வலங்கைமான்-மாரியம்மன்-கோயில்-திருவிழா-இன்று-தொடங்குகிறது-2882666.html
2882665 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மன்னார்குடி: நீர் நிலைகளை இணைக்க சிறப்புத் திட்டம்: மத்திய அமைச்சரிடம் எம்எல்ஏ கோரிக்கை DIN DIN Sunday, March 18, 2018 01:03 AM +0530 மன்னார்குடி சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட அனைத்து நீர் நிலைகளையும் இணைக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்த வலியுறுத்தி மத்திய நீர்வளம், சாலைப் போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா கோரிக்கை மனு அளித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
புதுதில்லியில் மத்திய நீர்வளம், சாலைப் போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை அண்மையில் அவரது அலுவலகத்தில், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழியுடன் சென்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தேன்.
அதில், காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தமிழகத்துக்கான நீர் பங்கீடு காவிரி டெல்டா பகுதி விவசாயத்துக்கு போதுமானதாக இருக்காது. எனவே, கோதாவரியிலிருந்து கடலில் கலக்கும் ஏறத்தாழ 3000 டிஎம்சி தண்ணீரில் கணிசமான அளவு காவிரியில் கலக்கும் வகையில் இரு ஆறுகளையும் இணைக்க வேண்டும். இதற்காக பூமிக்கடியில் ராட்சத குழாய்கள் பதித்தால் நில எடுப்பு தேவைப்படாது.
டெல்டா பகுதியின் மையமாக விளங்கும் மன்னார்குடி தொகுதியை தேர்வு செய்து, இத்தொகுதியில் அனைத்து பெரிய, சிறிய நீர் நிலைகளையும் முழுமையாக தூர்வாரி அவற்றை குழாய்கள் அல்லது வாய்க்கால்கள் மூலமாக முழுமையாக இணைத்து தர வேண்டும். வடுவூர் ஏரியை தூர்வார ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லை என்பதால், இத்திட்டம் கிடப்பில் போட்டப்படுள்ளது. எனவே, வடுவூர் ஏரியை முழுமையாக தூர்வார கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். இல்லையென்றால் வடுவூர் ஏரியில் பொறுக்கு மண்ணை, தொகுதியைச் சேர்ந்த விவசாயிகளே ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் தூர்வாரி அவர்களது விளைநிலங்களுக்கு கொண்டு செல்ல மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடமிருந்து ஒப்புதல் பெற்றுத்தர வேண்டும்.
வடுவூர், எடகீழையூர், திருமேணி போன்ற பெரிய ஏரி மற்றும் சிறிய ஏரிகளை தூர்வாரி அவற்றுடன் மன்னார்குடி நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் 90 குளங்களையும் மற்றும் கிராமங்களில் உள்ள அனைத்து குளங்களையும் இணைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் இப்பகுதியில் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்.
மேலும், நெடுஞ்சாலைத் துறை மூலம் தஞ்சாவூர்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாகவும், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் உறுதியளித்துள்ளார் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/18/மன்னார்குடி-நீர்-நிலைகளை-இணைக்க-சிறப்புத்-திட்டம்-மத்திய-அமைச்சரிடம்-எம்எல்ஏ-கோரிக்கை-2882665.html
2882664 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் நீடாமங்கலம் சந்தானராமசுவாமி கோயில் ராமநவமி பிரம்மோத்ஸவம் 25-ஆம் தேதி தொடங்குகிறது DIN DIN Sunday, March 18, 2018 01:03 AM +0530 நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் ராமநவமி பிரம்மோத்ஸவம் வரும் 25-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5-ஆம் தேதி முடிவடைகிறது.
தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் பிரதாப சிம்மரால் கி.பி. 1761-இல் இக்கோயில் கட்டப்பட்டது. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துச்சாமி தீட்சதரால் பாடப்பெற்றது. புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் இக்கோயிலில் சந்தானகோபால ஜெபம் செய்து சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமரை வழிபட்டால் அப்பேற்றினை அடைவார்கள் என்பது ஐதீகம். வரலாற்றுச்சிறப்புமிக்க இக்கோயிலில் ஆண்டுதோறும் ராமநவமி பிரம்மோத்ஸவம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வருகிற 25-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி ஏப்ரல் 5-ஆம் தேதி வியாழக்கிழமை வரை 11 நாட்கள் விழா நடைபெறவுள்ளது. இதையொட்டி நாள்தோறும் சுவாமி வீதியுலா நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாக அதிகாரி மற்றும் உபயதாரர்கள், கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/18/நீடாமங்கலம்-சந்தானராமசுவாமி-கோயில்-ராமநவமி-பிரம்மோத்ஸவம்-25-ஆம்-தேதி-தொடங்குகிறது-2882664.html
2882107 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் அம்மா திட்ட சிறப்பு முகாம்: பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் அளிப்பு DIN DIN Saturday, March 17, 2018 02:49 AM +0530 மயிலாடுதுறை வட்டம், மகாராஜபுரம் கிராமத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் சபிதாதேவி தலைமையில் நடைபெற்ற முகாமில், கிராம மக்கள் பங்கேற்று குடும்ப அட்டையில் பெயர் மாற்றம், வீட்டு மனைப் பட்டா, பட்டா பெயர் மாற்றம் மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளித்தனர். இதில், தகுதியுடைய மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
வருவாய் ஆய்வாளர் இளம்பரிதி, கிராம நிர்வாக அலுவலர்அருள்ராஜ், புவனேஸ்வரி, கெளசல்யா மற்றும் கிராம உதவியாளர்கள்,பொதுமக்கள் முகாமில் பங்கேற்றனர்.
பொறையாறில்...
பொறையாறு அருகேயுள்ள திருக்கடையூரை அடுத்த பிள்ளைபெருமாள்நல்லூர் ஊராட்சியில் சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் பி. நாகலெட்சுமி தலைமையில் அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம், முதியோர் ஓய்வூதியம், பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிள்ளைபெருமாள் நல்லூர், தாழம்பேட்டை, வேப்பஞ்சேரி, திருமெய்ஞானம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர்.
முகாமில் வருவாய் ஆய்வாளர் சுமதி, கிராம நிர்வாக அலுவலர் சுதாகர் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதேபோல், காலமநல்லூர் ஊராட்சிக்குள்பட்ட குமாரக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அம்மா திட்ட சிறப்பு முகாம், தேர்தல் துணை வட்டாட்சியர் டி. பாபு தலைமையில் நடைபெற்றது. வருவாய் ஆய்வாளர் கவிதா, கிராம நிர்வாக அலுவலர் பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில், அப்பகுதி மக்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மனுக்கள் அளித்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/17/அம்மா-திட்ட-சிறப்பு-முகாம்-பொதுமக்கள்-கோரிக்கை-மனுக்கள்-அளிப்பு-2882107.html
2882106 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் DIN DIN Saturday, March 17, 2018 02:48 AM +0530 மயிலாடுதுறை அருகேயுள்ள பட்டவர்த்தியில், திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினின் 66-ஆவது பிறந்த நாள் பொதுக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
மயிலாடுதுறை வடக்கு ஒன்றிய திமுக சார்பில், அக்கட்சியின் ஒன்றியச் செயலாளர் என். இளையபெருமாள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பங்கேற்ற திமுக தலைமை நிலையப் பேச்சாளர் பழ. கருப்பையா பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியது:
தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளாதால், பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்துக்கழகத்தில் உள்ள குளறுபடிகளை நீக்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளாமல் பேருந்து கட்டணத்தை உயர்த்தியிருப்பது கண்டனத்துக்குரியது. அதிமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையால் அரசுப் பேருந்து கழகங்களில் ஏற்பட்டுள்ள நஷ்டம் மக்கள் தலையில் சுமத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறவேண்டுமெனில் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் வழித்தோன்றலான மு.க. ஸ்டாலின் தமிழகத்தை ஆளவேண்டுமென்றார் அவர்.
நிகழ்ச்சியில், மாற்றுத் திறனாளி ஒருவருக்கு 3 சக்கர மிதிவண்டி மற்றும் ஏழை எளியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள், மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
இதில், திமுக மாநிலத் தேர்தல் பணிக்குழுச் செயலர் குத்தாலம் பி. கல்யாணம், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் கி. சத்தியசீலன், நாகை மாவட்ட பொறுப்பாளர் நிவேதா எம். முருகன், மயிலாடுதுறை தெற்கு ஒன்றியச் செயலர் எம். மூர்த்தி, விவசாய அணி மாநிலச் செயலர் ஆர். அருட்செல்வன், நாகை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மகா. அலெக்ஸாண்டர் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/17/ஸ்டாலின்-பிறந்த-நாளையொட்டி-நலத்திட்ட-உதவிகள்-2882106.html
2882105 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் கண் அறுவைச் சிகிச்சை அரங்கம் திறப்பு DIN DIN Saturday, March 17, 2018 02:48 AM +0530 சீர்காழி அரசு மருத்துவமனையில் கண் அறுவைச் சிகிச்சை அரங்கம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
சீர்காழியில் அரசு தலைமை மருத்துவமனையில் சீர்காழி மற்றும் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாகவும், 150-க்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாகவும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இங்கு கண் சிகிச்சைப் பிரிவு இல்லாததால் கண் குறைபாடுகள் உள்ளவர்கள் சிதம்பரம் அல்லது மயிலாடுதுறைக்குச் சென்று சிகிச்சைப் பெறும் நிலை இருந்து வருகிறது.
இந்நிலையில், சீர்காழி ஜெயின் சங்கம், ஜெயின் இளைஞரணி, அரசு மருத்துவமனை இணைந்து மருத்துவமனை வளாகத்தில் புதிதாக புனரமைக்கப்பட்ட கண் சிகிச்சை பகுதி மற்றும் அறுவைச் சிகிச்சை அரங்கம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா தலைமை மருத்துவர் கே. தேவலதா தலைமையில் நடைபெற்றது. மருத்துவ நலப்பணிகள் மாவட்ட இணை இயக்குநர் ரா. மகேந்திரன் புனரமைக்கப்பட்ட கட்டடத்தை திறந்து வைத்தார். இதில், ஜெயின் சங்க இளைஞரணி தலைவர் பி. மணிஷ் குமார், நிர்வாகிகள் ஜி. விமல்சந்த்ஜெயின், கியான்சந்த், சுபம் லிட்டில் ஏஞ்சல் பள்ளித் தாளாளர் சுதேஷ், மருத்துவர் பூபேஷ்தர்மேந்திரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/17/அரசு-மருத்துவமனையில்-கண்-அறுவைச்-சிகிச்சை-அரங்கம்-திறப்பு-2882105.html
2882104 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் சீர்காழி அருகே பூட்டியே கிடக்கும் மகளிர் சுயநிதி குழுக் கட்டடம் DIN DIN Saturday, March 17, 2018 02:48 AM +0530 நாகை மாவட்டம், சீர்காழி அருகே பாலடைந்த நிலையில் பூட்டியே கிடக்கும் மகளிர் சுயநிதி குழுக் கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி அருகேயுள்ள ஓலையாம்புத்தூர் கிராமத்தில் மகளிர் சுயநிதி குழுக் கட்டடம் கட்டப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிறது. தொடர்ந்து, இக்கட்டடத்தில் மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கான பயிற்சி மற்றும் கூட்டங்கள் நடைபெற்று வந்தது. மேலும், ஊராட்சிகள் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்தப்படும் இடமாகவும் இருந்து வந்தது.
இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக எந்தக் காரணமும் இன்றி கட்டடம் பூட்டப்பட்டதால் பாழடைந்து கிடக்கிறது. கட்டடத்தின் உள்பகுதியில் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தப்படும் பழைமையான இரும்பு கம்பிகள் இருப்பு வைக்கப்பட்டு துருப்பிடித்துள்ளன.
எனவே, பூட்டியே கிடக்கும் இந்த மகளிர் சுயநிதி குழுக் கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர ஊரக வளர்ச்சித் துறை சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/17/சீர்காழி-அருகே-பூட்டியே-கிடக்கும்-மகளிர்-சுயநிதி-குழுக்-கட்டடம்-2882104.html
2882103 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் நாகையில் மருத்துவ அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் DIN DIN Saturday, March 17, 2018 02:48 AM +0530 மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வலியுறுத்தி, நாகப்பட்டினத்தில் தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அதன் ஒருங்கிணைப்பாளர்கள் திலீபன், அருண் ஆகியோர் தலைமை வகித்தனர். முதுநிலை மருத்துவப் பட்டப்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். மாநில அரசின் கீழ் பணிபுரியும் மருத்துவர்களுக்கு, மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். தேசிய மருத்துவ ஆணைய சட்ட மசோதாவை திரும்ப பெறவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/17/நாகையில்-மருத்துவ-அலுவலர்-சங்கத்தினர்-ஆர்ப்பாட்டம்-2882103.html
2882102 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் அம்மா திட்ட முகாம் DIN DIN Saturday, March 17, 2018 02:47 AM +0530 சீர்காழி அருகேயுள்ள உமையாள்பதி ஊராட்சியில் அம்மா திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு சீர்காழி வட்டாட்சியர் பாலமுருகன் தலைமை வகித்தார். முகாமில் முதியோர், விதவை உதவித்தொகை, இலவச மனைப்பட்டா, உழவர் பாதுகாப்பு அட்டை கோருவது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 59 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 35 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. முகாமில் வருவாய் ஆய்வர் க. சக்திவேல், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/17/அம்மா-திட்ட-முகாம்-2882102.html
2882100 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மனுநீதி முகாம் DIN DIN Saturday, March 17, 2018 02:47 AM +0530 குத்தாலம் வட்டத்தில் 3 கிராமங்களில் வாராந்திர மனுநீதி முகாம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் கலந்துகொண்டு குடும்ப அட்டைப் பெயர் சேர்த்தல், நீக்குதல், வீட்டுமனைப் பட்டா, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை போன்ற விண்ணப்பங்களை பரிசீலனை செய்து பெற்றுக் கொண்டனர். தகுந்த ஆவணங்கள் இல்லாத மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
குத்தாலம் சரகம் ஆலங்குடி வருவாய் கிராமத்தில் நடைபெற்ற முகாமில் வட்டாட்சியர் திருமாறன், வருவாய் ஆய்வாளர் பாரதி, கிராம நிர்வாக அலுவலர் முபீர் அஹமது ஆகியோர் கலந்துகொண்டனர்.
பாலையூர் சரகம் பழையகூடலூர் வருவாய் கிராமத்தில் நடைபெற்ற முகாமில் வட்ட வழங்கல் அலுவலர் என். ராகவன், வருவாய் ஆய்வாளர் அனிதா, கிராம நிர்வாக அலுவலர் சுவாமிநாதன், ஊராட்சி எழுத்தர் சேகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மங்கநல்லூர் சரகம் செங்குடி வருவாய் கிராமத்தில் நடைபெற்ற முகாமில் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் சாந்தி, வருவாய் ஆய்வாளர் செளந்தரநாயகி, கிராம நிர்வாக அலுவலர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/17/மனுநீதி-முகாம்-2882100.html
2882099 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் திருவிடைக்கழி ஊராட்சியில் பகுதி வயலில் வேளாண் உதவி இயக்குநர் ஆய்வு DIN DIN Saturday, March 17, 2018 02:47 AM +0530 நாகை மாவட்டம், திருவிடைக்கழி ஊராட்சி பகுதியில் வயலில் நடவு செய்யப்பட்டுள்ள தென்னங்கன்றுகளையும், அதே வயலில் ஊடு பயிராக உள்ள உளுந்து, பச்சைப் பயறுகளையும் வேளாண்மை உதவி இயக்குநர் தாமஸ் அண்மையில் ஆய்வு செய்தார்.
திருவிடைக்கழி ஊராட்சியில் விவசாயி தமிழழகன் என்பவர் தனது 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட வயலில் 250-க்கும் மேற்பட்ட தென்னங்கன்றுகளை நடவு செய்துள்ளார். மேலும், அதே வயலில் ஊடு பயிராக உளுந்து, பச்சைப் பயறுகளையும் பயிரிட்டுள்ளார்.
இந்நிலையில், செம்பனார்கோவில் வேளாண்மை உதவி இயக்குநர் தாமஸ், விவசாயி தமிழழகனுக்குச் சொந்தமான வயல் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அவருக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
இதையடுத்து, கோட்டகம் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பாமாயில் சாகுபடி விவசாயியை சந்தித்து தொழில்நுட்ப ஆலோசனை வழங்கினார்.
ஆய்வின்போது, வேளாண்மை அலுவலர் ரவிச்சந்திரன் உடனிருந்தார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/17/திருவிடைக்கழி-ஊராட்சியில்-பகுதி-வயலில்-வேளாண்-உதவி-இயக்குநர்-ஆய்வு-2882099.html
2882098 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்தக் கோரிக்கை DIN DIN Saturday, March 17, 2018 02:46 AM +0530 சீர்காழி நகரப் பகுதியில் சாலைகளில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் சுற்றித்திரிவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி நகரில் பெரும்பாலான பிரதான சாலைகளில் ஆடு, மாடுகள் சுற்றித்திரிவது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பசு மாடுகள் வளர்ப்போர் பால் கறக்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் பசுமாட்டை அவிழ்த்து விடுகின்றனர்.
இதனால், அந்த மாடுகள் இரை தேடி சாலைகளில் சுற்றித்திரிகின்றன. கடை வீதியில் உள்ள பழக்கடைகள், உணவகங்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை உண்பதற்காக மாடுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்கின்றன. இதனால், சாலைகளில் நடந்து செல்வோரும், இருசக்கர வாகனங்களில் செல்வோரும் அச்சத்துடன் செல்லவேண்டியுள்ளது.
சில நேரங்களில் மாடுகள் திடீரென சாலையில் குறுக்கிடுவதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் நிலைதடுமாறி கீழே விழும் நிலையும் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் சாலையின் நடுவில் கால்நடைகள் படுத்துவிடுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
எனவே, நகராட்சி நிர்வாகம் சாலைகளில் கால்நடைகளை அவிழ்த்து விடும் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/17/சாலைகளில்-சுற்றித்திரியும்-கால்நடைகளை-கட்டுப்படுத்தக்-கோரிக்கை-2882098.html
2882097 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் திருக்கடையூர் பேருந்து நிலையம் அருகே வேகத்தடை: பொதுமக்கள் கோரிக்கை DIN DIN Saturday, March 17, 2018 02:46 AM +0530 நாகை மாவட்டம், திருக்கடையூர் பேருந்து நிலையம் அருகே வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்கடையூரில் பிரசித்திப் பெற்ற அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. மேலும் அரசு உயர்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி ஆகியவை நான்கு வழிச் சந்திப்பின் அருகில் அமைந்துள்ளது.
இதனால் தேசிய நெடுஞ்சாலை வழியாகப் பேருந்துகள், சுற்றுலா வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் செல்வதாலும், பள்ளி மாணவ- மாணவியர் மற்றும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சாலையைக் கடக்கும்போதும், விபத்து நேரிடும் அபாயம் நிலவுகிறது. இதைத் தவிர்க்க நான்கு வழிச்சாலையில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/17/திருக்கடையூர்-பேருந்து-நிலையம்-அருகே-வேகத்தடை-பொதுமக்கள்-கோரிக்கை-2882097.html
2882096 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் முன்னறிவிப்பின்றி புதிய பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது DIN DIN Saturday, March 17, 2018 02:46 AM +0530 சீர்காழி அருகேயுள்ள கொள்ளிடமுக்கூட்டு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தின் வழியாக முன்னறிவிப்பின்றி வெள்ளிக்கிழமை முதல் போக்குவரத்து தொடங்கியது.
சீர்காழி - சிதம்பரம் நெடுஞ்சாலையில் கொள்ளிடமுக்கூட்டு அருகே கழுமலையாற்றின் பிரிவு வாய்க்காலான பெரம்பன்னை பாசன வாய்க்காலின் குறுகிய பாலத்தால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால் இவ்வழித்தடத்தை பயன்படுத்தி வந்த பேருந்து உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிகொள்வது வாடிக்கையாக இருந்து வந்தது. நெடுஞ்சாலைத் துறையின் நடவடிக்கையால் குறுகிய பாலம் இடிக்கப்பட்டு ரூ. 13.5 லட்சம் மதிப்பில் புதிய பாலம் கட்டும் பணி கடந்த பிப்.20-ஆம் தேதி தொடங்கியது. இப்பணிக்காக இவ்வழித் தடத்தில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு, பேருந்து உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் புறவழிச் சாலையை பயன்படுத்தி புதிய பேருந்து நிலையத்துக்கு வந்து செல்ல அறிவிப்பு செய்யப்பட்டது.
பாலப்பணி தொடங்கியது முதல் பெரும்பாலான பேருந்துகள் நகரத்துக்குள் வராமல் புறவழிச் சாலையில் கோயில்பத்து, செங்கமேடு, பனமங்கலம் ஆகிய சந்திப்புகளில் நடுவழியில் பயணிகளை பேருந்திலிருந்து இரவு, பகல் பாராமல் இறக்கிவிட்டு சென்றனர். இதனால் பள்ளி மற்றும் தேர்வுக்கு செல்லும் மாணவ-மாணவியர் நகரத்துக்கு வரும் பெண்கள், முதியோர்கள் உள்ளிட்டோர் கடும் சிரமத்துகுள்ளாகினர்.
சுமார் 25 நாள்களுக்குப் பிறகு பாலப் பணிகள் 90 சதவீதம் முடிக்கப்பட்டுவிட்டன. மீதமுள்ள 10 சதவீத பணிகளான பாலத்தின் இருபக்கங்களிலும் இணைப்புச் சாலை அமைக்கும் பணி முழுமைபெறாமல் இருந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் திடிரென புதிய பாலத்தின் வழியாக அனைத்து வாகனங்களும் இயக்கப்பட்டன. பாலத்திற்கும், சாலைக்கும் இடையே உள்ள பள்ளத்தில் மண் கொட்டி இணைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்த நிலையில் அதில் வாகனங்கள் செல்ல நேரிட்டதால் கடும் சிரமங்களுக்கு இடையே வாகன ஓட்டிகள் புதிய பாலத்தை கடந்து சென்று வருகின்றனர்.
பாலம் திறக்கப்பட்டதால் பொதுமக்கள், மாணவர்கள் நிம்மதியடைந்தாலும் பாலத்தை கடக்கும்போது ஏற்படும் புழுதியில் பாதிப்புக்குள்ளாகின்றனர். எனவே, பாலத்தின் முழுபணிகளையும் முடிக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததுள்ளனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/17/முன்னறிவிப்பின்றி-புதிய-பாலத்தில்-போக்குவரத்து-தொடங்கியது-2882096.html
2882095 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: நாகை மாவட்டத்தில் 21,929 பேர் எழுதினர் DIN DIN Saturday, March 17, 2018 02:46 AM +0530 நாகப்பட்டினத்தில் 10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வை 21,929 பேர் வெள்ளிக்கிழமை எழுதினர்.
நாகப்பட்டினத்தில் சிஎஸ்ஐ மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் பார்வையிட்டார்.
பின்னர் அவர் கூறியது:
தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் பொதுத் தேர்வுகள் மார்ச் 16- இல் தொடங்கி ஏப். 20-ஆம் தேதி முடிகின்றன. நாகை மாவட்டத்தில் 10, 712 மாணவர்கள் மற்றும் 11,217 மாணவிகள் என மொத்தம் 21,929 பேர் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு எழுதுகின்றனர். இதில் 293 மாணவர்கள், 198 மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்களில் 26 ஆண்கள் மற்றும் 16 பெண்கள் உள்பட மொத்தம் 533 பேர் முதல் நாள் தேர்வெழுதவரவில்லை.
நாகப்பட்டினம் கல்வி மாவட்டத்தில் 126 பள்ளிகளிலிருந்து 40 மையங்களிலும், மயிலாடுதுறை கல்வி மாவட்டத்தில் 152 பள்ளிகளிலிருந்து 46 மையங்களிலும் தேர்வு எழுதுகின்றனர். நாகப்பட்டினம் கல்வி மாவட்டத்தில் 2 மையங்களில் 312 தனித் தேர்வர்களும், மயிலாடுதுறை கல்வி மாவட்டத்தில் 3 மையங்களில் 517 தனித் தேர்வர்களும் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, இருக்கை வசதி, காற்றோட்டம், வெளிச்சம், கழிப்பறை வசதி, தடையில்லா மின்சாரம், போக்குவரத்து வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் தேர்வு எழுதுவதற்கு அனைத்து விதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
கண்காணிப்பு...
நாகப்பட்டினம் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகள் பணியில் தலைமையாசிரியர்கள் பணி நிலையில் 97 நபர்களும், ஆசிரியர்கள் பணி நிலையில் 1,174 நபர்களும், அலுவலகப் பணியாளர்கள் நிலையில் 344 நபர்களும், காவல் துறை சார்பில் 156 காவலர்களும் என மொத்தம் 1,771 பேர் ஈடுபட்டுள்ளனர்.
தேர்வுப் பணிகளை கண்காணிப்பதற்காக 64 நிலையான படைகளும், 18 ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
மாற்றுத் திறனாளிகளுக்கு...
நாகப்பட்டினம் மாவட்டத்தில் டிஸ்லெக்சியா பாதிக்கப்பட்ட மாணவர்கள், கண்பார்வையற்றோர், காதுகேளாதோர், வாய் பேசமுடியாதோர் மற்றும் இதர மாற்றுத் திறனாளித் தேர்வர்கள் என 50 தேர்வர்களுக்கு தேர்வு மையங்களில் தரைதளத்தில் தேர்வெழுதும் வகையில் தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கண்பார்வையற்ற 65 தேர்வர்களுக்கு சொல்வதை எழுதுபவர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 22 மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கு சொல்வதை எழுதுபவர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
ஆய்வின்போது, முதன்மைக் கல்வி அலுவலர் கஸ்தூரிபாய், வட்டாட்சியர் ராகவன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/17/பத்தாம்-வகுப்பு-பொதுத்-தேர்வு-நாகை-மாவட்டத்தில்-21929-பேர்-எழுதினர்-2882095.html
2882094 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் அலையாத்திக் காடுகள் அமைக்க எதிர்ப்பு DIN DIN Saturday, March 17, 2018 02:45 AM +0530 சீர்காழி அருகேயுள்ள கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் அலையாத்திக் காடுகள் அமைக்க மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வு ஏற்பட்டது.
சீர்காழி அருகேயுள்ள பழையார் அருகில் உள்ளது கொடியம்பாளையம் தீவு கிராமம். இக்கிராமம் மூன்று புறம் கடலாலும், ஒரு புறம் கொள்ளிடம் ஆற்றினாலும் சூழப்பட்டுள்ளது. கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் மீனவர்கள் ஆவர். கொடியம்பாளையத்திலிருந்து 60 பைபர் படகுகள், 120 கன்னாதோணி, 10 மோட்டார் வைத்த கட்டுமரம் ஆகியவற்றின் உதவியுடன் பழையார் துறைமுகம் மூலம் மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நாகை மாவட்டம் முழுவதும் வனத்துறை சார்பில் கடற்கரையோரங்களில் கடல் அரிப்பு மற்றும் கடல் சீற்றத்தைத் தடுக்கும் வகையில் அலையாத்திக் காடுகள் அமைக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதன்படி, கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் அலையாத்திக் காடுகள் அமைக்க கடற்கரையிலிருந்து 100 மீட்டர் தூரத்தில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு 6 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டி காடுகள் அமைக்கும் பணி கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கியது.
இவ்வாறு கடற்கரையோரம் பெரிய அளவில் பள்ளம் தோண்டினால் கடல்நீர் பள்ளத்தில் உட்புகுந்து நிலத்தடிநீர் உப்பு நீராக மாறிவிடும். இதனால், கிராமத்தில் வரும் காலங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் எனக்கூறி கிராமமக்கள் அலையாத்திக் காடுகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பணியை நிறுத்தவேண்டும் எனக்கூறி கடந்த ஒரு வாரமாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் தொழில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் பாலமுருகன் தலைமையில், கொடியம்பாளையம் கிராம மக்கள், வனத்துறையினர், புதுப்பட்டினம் போலீஸார் பங்கேற்ற அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், குடிநீர் பிரச்னையை ஏற்படுத்தி பொதுமக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது என வட்டாட்சியர் பாலமுருகன் வனத்துறையினரிடம் அறிவுறுத்தினார். இதில் சுமூகத் தீர்வு ஏற்பட்டதால் மீனவர்கள் தொழில் மறியலை விலக்கிக்கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/17/கொடியம்பாளையம்-தீவு-கிராமத்தில்-அலையாத்திக்-காடுகள்-அமைக்க-எதிர்ப்பு-2882094.html
2882093 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் முறைகேடாக டிராக்டர் விற்பனை: விவசாயிகள் ஆர்ப்பாட்டம் DIN DIN Saturday, March 17, 2018 02:45 AM +0530 நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே முறைகேடாக கூடுதல் விலைக்கு டிராக்டர்களை விற்பனை செய்யும் தனியார் நிறுவனத்தைக் கண்டித்தும், இதுதொடர்பான புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் விவசாயிகள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம் அருகேயுள்ள ஆயக்காரன்புலம் கடைவீதியில் தனியார் டிராக்டர் நிறுவன விற்பனை முகமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் அரசு மானியம் மற்றும் வங்கிக் கடன் பெற்றுத் தருவதாக விவசாயிகளிடம் கூறி கூடுதல் விலைக்கு டிராக்டர்களை விற்பனை செய்வதாகக் கூறப்படுகிறது.
இதைக் கண்டித்து அந்த அலுவலகம் எதிரே விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வட்டார விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் ஒளிச்சந்திரன் தலைமை வகித்தார். சங்கத்தின் வட்டாரத் தலைவர் ராஜன், பொருளாளர் ஆர். அருண்குமார், ஊராட்சி முன்னாள் தலைவர் அன்புவேலன், வாய்மேடு விவசாயிகள் சேவை மைய செயலாளர் பரமேஸ்வரன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
இதில், அரசு நிர்ணயித்துள்ள விலையைக் காட்டிலும் கூடுதல் விலைக்கு டிராக்டர்களை விற்பனை செய்வதாகவும், உரிய ரசீது வழங்கப்படுவதில்லை என்றும், வெளி மாநில விவசாயிகள் பெயரில் அரசின் மானியத்தை முறைகேடாகப் பெறுவதாகவும் குற்றம்சாட்டி கோஷமிடப்பட்டது.
மேலும், இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளிக்கப்பட்ட புகார் மீது காவல் துறை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொள்ளவும், டிராக்டர்கள் விற்பனையில் ஏ.பி.சி. என கிரேடுகள் நிர்ணயம் செய்து, அதற்கேற்றார்போல் விலை நிர்ணயம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/17/முறைகேடாக-டிராக்டர்-விற்பனை-விவசாயிகள்-ஆர்ப்பாட்டம்-2882093.html
2882092 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் வேணுகோபாலன் அலங்காரத்தில் ராஜகோபாலசுவாமி DIN DIN Saturday, March 17, 2018 02:44 AM +0530 மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் நடைபெறும் பங்குனித் திருவிழாவின் 10-ஆம் நாளான வெள்ளிக்கிழமை தங்க சூரியபிரபையில் வேணுகோபாலன் அலங்காரத்தில் ராஜகோபாலசுவாமி எழுந்தருளினார்.
மன்னார்குடி காந்திஜீ சாலையில் உள்ள யானை வாகன மண்டபத்தில் தங்க சூரியபிரபையில் வேணுகோபாலன் அலங்காரத்தில் எழுந்தருளிய ராஜகோபாலசுவாமி, பின்னர், பெரியக்கடைத்தெரு, மேலராஜவீதி வழியாக திருக்கோயிலின் நான்கு வெளி பிராகாரங்களை சுற்றி கோயிலை வந்தடைந்தார். இதற்கான ஏற்பாடுகளை கோயில் அலுவலர்கள், உபயதாரர்களான அகமுடையார் சமூகத்தினர் செய்திருந்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/17/வேணுகோபாலன்-அலங்காரத்தில்-ராஜகோபாலசுவாமி-2882092.html
2882091 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் முடித் திருத்தும் கட்டணம் ஏப்ரலில் உயர்வு DIN DIN Saturday, March 17, 2018 02:44 AM +0530 நீடாமங்கலம் பகுதியில் முடித் திருத்தும் கட்டணம் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் உயர்த்த முடித் திருத்தும் தொழிலாளர் நலச் சங்கம் முடிவெடுத்துள்ளது.
நீடாமங்கலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சங்க கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மின் கட்டண உயர்வு, அழகு சாதனப் பொருள்கள் விலை உயர்வு, பண மதிப்பிழப்பு போன்ற காரணங்களால் முடித் திருத்தும் கட்டணம் உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கட்டண உயர்த்தப்படுகிறது, எனவே, இக்கட்டண உயர்வுக்கு அனைவரும் ஆதரவளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்க மூத்த உறுப்பினர் டி. ஜோதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தலைவர் ஜெயபால், பொருளாளர் எம். பாலு, துணைத் தலைவர் எம். ராதா, செயலர் பிரதீப், சங்க நிர்வாகிகள் டி. கருணாகரன், ஜெ. முத்து, பி. தமிழ், பி. துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/17/முடித்-திருத்தும்-கட்டணம்-ஏப்ரலில்-உயர்வு-2882091.html
2882090 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மலையேற்றப் பயிற்சி ரத்து: ரயில்வே ஊழியர்கள் ஏமாற்றம் DIN DIN Saturday, March 17, 2018 02:44 AM +0530 மலையேற்றப் பயிற்சி ரத்து செய்யப்பட்டதால், ரயில்வே ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே ரயில்வே நிர்வாகம் மாற்று ஏற்பாடு செய்யுமாறு தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் துணைப் பொதுச்செயலாளர் மனோகரன் விடுத்துள்ள அறிக்கை:
மலையேற்றப் பயிற்சிக்காக ரயில்வே ஊழியர்களை தெற்கு ரயில்வே பாலக்காடு கோட்ட நிர்வாகம் அழைத்துச் செல்வது வழக்கம்.
இதையொட்டி, 107 பேர் கொண்ட குழு தற்போது குலுமணாலியில் முகாமிட்டுள்ளது. இந்த நிலையில், தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ துயர சம்பவம் காரணமாக ஜீன் மாதம் வரை மேற்குத் தொடர்ச்சி மலையில் மலையேற்றப் பயிற்சிக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
மேலும், பல ரயில்வே கோட்டங்கள் இதில் போதிய ஆர்வம் காட்டாததால், மலையேற்றப் பயிற்சி கைவிடப்படுவதாகவும், குலுமணாலியில் இருந்து "ட்ரக்கிங் லீடர்கள்" திரும்பி வந்த பிறகு இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு ஒரு சில தினங்களில் வெளியாகும் என்றும் கேரளப் பத்திரிக்கைகளிடம் பாலக்காடு கோட்டப் பணியாளர் அலுவலர் கடந்த 15-ஆம் தேதி தெரிவித்திருக்கிறார்.
மலையேற்றப் பயிற்சி கைவிடப்படுவது உறுதியானதால் ரயில்வே ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே, ரயில்வே நிர்வாகம் மாற்று ஏற்பாட்டை விரைவில் அறிவிக்க வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/17/மலையேற்றப்-பயிற்சி-ரத்து-ரயில்வே-ஊழியர்கள்-ஏமாற்றம்-2882090.html
2882089 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் கூத்தாநல்லூரில் நிரந்தர சுடுகாடு பிரச்னை: வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை DIN DIN Saturday, March 17, 2018 02:43 AM +0530 கூத்தாநல்லூரில் நிரந்தர சுடுகாடு அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள், வட்டாட்சியரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன்பேரில், வட்டாட்சியர் அலுவலகத்தில் இரு தரப்பினருக்கிடையே வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது.
கூத்தாநல்லூர் வட்டம், மேலபனங்காட்டாங்குடி, தமிழர் தெருவில் வசிக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கென நிரந்தர சுடுகாடு இல்லை. இதனால், அப்பகுதியில் இறப்பு நிகழும்போது, பிரேதத்தை எடுத்துச் செல்வதில் தகராறு ஏற்படுகிறது. எனவே, தங்களுக்கென நிரந்தமாக சுடுகாடு அமைத்துத் தர நடவடிக்கை எடுக்குமாறு வட்டாட்சியர் செல்வியிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதன்பேரில், வட்டாட்சியர் செல்வி தலைமையில், மண்டல துணை வட்டாட்சியர் செந்தில், வருவாய் ஆய்வாளர் ராஜேஸ்வரி, கிராம உதவியாளர் ரவி உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ஆதிதிராவிடர் நலப் பிரிவைச் சேர்ந்த வல்லரசு, சதீஸ், முருகையன், ரகுபதி, துரைமுருகன், பிற்படுத்தப்பட்டோர் நலப் பிரிவைச் சேர்ந்த பாலசுப்ரமணியன், சண்முகவேல், குணசேகரன், வீரமணி, ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து, வட்டாட்சியர் செல்வி கூறியது:
ஆதிதிராவிடர் பிரிவினரின் சுடுகாட்டை நேரில் பார்வையிட்டோம். தற்போது உள்ள சுடுகாட்டின் பரப்பளவை அளந்துப் பார்த்துவிட்டு, சுடுகாட்டுக்கென ஏற்கெனவே எவ்வளவு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதோ அதன்படி ஒதுக்கிவிட்டு மீதியுள்ள இடத்துடன் புறம்போக்கு இடத்தையும் சேர்த்து பிற்படுத்தப்பட்டப் பிரிவினருக்கு நிரந்தர சுடுகாடு ஒதுக்கித் தரப்படும் என பேச்சுவார்த்தையில் தெரிவிக்கப்பட்டது என்றார் அவர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/17/கூத்தாநல்லூரில்-நிரந்தர-சுடுகாடு-பிரச்னை-வட்டாட்சியர்-தலைமையில்-பேச்சுவார்த்தை-2882089.html
2882088 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இன்று விழிப்புணர்வு கருத்தரங்கம் DIN DIN Saturday, March 17, 2018 02:43 AM +0530 நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் சனிக்கிழமை (மார்ச் 17) நடைபெறுகிறது.
இதுகுறித்து வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆ. பாஸ்கரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாரூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் "தாவர ரகங்கள் பாதுகாப்பு மற்றும் உழவர்களின் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் சனிக்கிழமை காலை 9 மணிக்கு
நடைபெறுகிறது.
இதில், ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குநர், திருவாரூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் மற்றும் வேளாண்மை துறை, தோட்டக் கலைத் துறை, வேளாண்மை வணிகத் துறை மற்றும் இதரத் துறை அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.
மேலும், பாரதப் பிரதமரின் காணொலி காட்சியுரை, பாரம்பரிய நெல் ரகங்கள் கண்காட்சி, செயல் விளக்கம் உள்ளிட்டவை நடைபெறவுள்ளன. எனவே, இக்கருத்தரங்கில் விவசாயிகள் பங்கேற்று பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/17/வேளாண்மை-அறிவியல்-நிலையத்தில்-இன்று-விழிப்புணர்வு-கருத்தரங்கம்-2882088.html
2882087 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் உலக நுகர்வோர் உரிமைகள் தின கருத்தரங்கம் DIN DIN Saturday, March 17, 2018 02:43 AM +0530 உலக நுகர்வோர் உரிமைகள் தின விழாவையொட்டி, ஜேசிஐ மன்னை அமைப்பு சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மன்னார்குடி ராஜகோபாலசுவாமி அரசுக் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஜேசிஐ மன்னை அமைப்பின் தலைவர் வி. அஞ்சறைபெட்டி ராஜேஷ் தலைமை வகித்தார். விழிப்புணர்வு கருத்தரங்கை கல்லூரி முதல்வர் சோ. ரவி தொடங்கி வைத்தார்.
"நுகர்வோர் உரிமை' என்ற தலைப்பில் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஆ. சரவணரமேஷ், "உணவு பாதுகாப்பு' என்ற தலைப்பில் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் க. மணாழகன் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து நுகர்வோர் மன்ற வட்ட இணைச் செயலர் டி. இளங்கோவன்ஆகியோர் பேசினர்.
நுகர்வோர் விழிப்புணர்வு பிரசார கையேட்டை ஜேசிஐ முன்னாள் தலைவர் எஸ். ராஜகோபாலன் வெளியிட, தமிழ்த் துறைத் தலைவர் நா. தனராசன் பெற்றுக்கொண்டார். விழாவில் முன்னாள் தலைவர் ஜி. செல்வக்குமார், பொருளாளர் எம். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/17/உலக-நுகர்வோர்-உரிமைகள்-தின-கருத்தரங்கம்-2882087.html
2882086 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் விவசாயி தற்கொலை DIN DIN Saturday, March 17, 2018 02:43 AM +0530 மன்னார்குடி அருகே விவசாயி விஷம் குடித்து வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.
எடகீழையூர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் கே. சங்கர் என்கிற முத்துக்குமார் (40). விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், முத்துக்குமார் நீண்ட நாள்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தாராம். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றும் குணமாகவில்லை. இதனால், விரக்தியடைந்த முத்துக்குமார் விஷம் குடித்ததாகக் கூறப்படுகிறது. அவரை, மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறிது நேரத்தில் முத்துக்குமார் உயிரிழந்தார். இதுகுறித்து, வடுவூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/17/விவசாயி-தற்கொலை-2882086.html
2882085 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் கூத்தாநல்லூர் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு எஸ். தெட்சிணாமூர்த்தி DIN Saturday, March 17, 2018 02:42 AM +0530 கூத்தாநல்லூரில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாடின்றி உள்ள பேருந்து நிலையத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூத்தாநல்லூரில், திருவாரூர்- மன்னார்குடி பிரதான சாலையில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு, கடந்த 1994-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இங்கு11 கடைகள் உள்ளன. மேலும், பயணிகள் தங்குமிடம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதியும் செய்யப்பட்டிருந்தது. ஆனால், ஒரு சில மாதங்களே இந்த பேருந்து நிலையத்துக்கு அனைத்துப் பேருந்துகளும் வந்து சென்றன.
பின்னர், பயன்படுத்தப்படாமல், பராமரிப்பின்றி உள்ளது. தற்போது, இந்த பேருந்து நிலையத்தைச் சுற்றிலும், குப்பைகள் கொட்டப்பட்டு, குப்பை மேடாக காட்சியளிக்கிறது. ஒரு சில தனியார் பேருந்துகள் மட்டும் இங்கு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கட்டடத்தில், பெரும்பாலான பகுதிகள் உடைந்து, மேல்பகுதியின் சிமென்ட் காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. சமூக விரோதிகள் இங்கு மது குடித்துவிட்டு, பாட்டில்களை அங்கேயே உடைத்துப் போட்டுள்ளனர்.
இந்த பேருந்து நிலையத்தை சீரமைத்து மீண்டும், பயன்பாட்டுக்கு கொண்டுவந்தால், நகராட்சிக்கும் வருமானம் கிடைப்பதுடன், லெட்சுமாங்குடி பாலத்தில், போக்குவரத்து நெருக்கடியும் குறையும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
நகராட்சி ஆணையர் புவனேஸ்வரன் கூறியது: கடந்த 1994- ஆம் ஆண்டு, ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிலைய கட்டடம் கட்டப்பட்டது. தற்போது பயன்பாடின்றி உள்ளதால், பொறியாளர் உதவியுடன் ஆய்வு செய்து, சீரமைப்புப் பணிகளைச் செய்ய வேண்டும்.
புதிய பேருந்துகள் இயக்குவது குறித்து போக்குவரத் துறை அதிகாரிகளிடம் பேச வேண்டும். அதன் பிறகுதான், பேருந்து நிலையத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றார்.
"இந்த பேருந்து நிலையத்தைசுற்றிலும், குப்பைகள்
கொட்டப்பட்டு, குப்பை மேடாக காட்சியளிக்கிறது. கட்டடத்தில், பெரும்பாலான பகுதிகள் உடைந்து, மேல்பகுதியின் சிமென்ட் காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியேதெரிகின்றன. சமூக விரோதிகள் இங்கு மது குடித்துவிட்டு, பாட்டில்களை அங்கேயே உடைத்துபோட்டுள்ளனர்.
இந்த பேருந்து நிலையத்தைசீரமைத்து மீண்டும், பயன்பாட்டுக்கு கொண்டுவந்தால், நகராட்சிக்கும் வருமானம் கிடைக்கும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் எம். சுதர்ஸன்:
கடந்த 15 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள இந்த பேருந்து நிலையத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும். இங்குள்ள கடைகள் திறக்கப்பட வேண்டும். அனைத்து பேருந்துகளும், பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இங்கிருந்து மன்னார்குடி, திருவாரூர், கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். அப்போதுதான், புதிய பேருந்து நிலையத்திற்குள் மக்கள் வருவார்கள் என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்நகரச் செயலாளர் தாஜூதீன்:
கூத்தாநல்லூரில், வெளியூர்களுக்குச் செல்லும் பயணிகள், ஒதுங்க இடம் இல்லாமல் வெயிலிலும், மழையிலும், பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, புதிய பேருந்து நிலையத்தை சீரமைத்து, அனைத்துப் பேருந்துகளும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இங்கிருந்து திருத்துறைப்பூண்டி, வடபாதிமங்கலம், கொரடாச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்க வேண்டும் என்றார்.
திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பொறுப்பாளர் எஸ்.எம். சமீர்:
சின்ன சிங்கப்பூர் என்ற பெயர் பெற்ற கூத்தாநல்லூர் வட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். திருவாரூரிலிருந்து வரக்கூடிய அனைத்துப் பேருந்துகளும், இந்த பேருந்து நிலையத்துக்குள், சென்றுவர வேண்டும். கூத்தாநல்லூரிலிருந்து, சென்னைக்கு செல்லக்கூடிய அரசு பேருந்துகளை காலையிலும், இரவிலும் இயக்க வேண்டும் என்றார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/17/கூத்தாநல்லூர்-பேருந்து-நிலையம்-பயன்பாட்டுக்கு-கொண்டுவரப்படுமாபொதுமக்கள்-எதிர்பார்ப்பு-2882085.html
2882084 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் DIN DIN Saturday, March 17, 2018 02:42 AM +0530 மன்னார்குடியை அடுத்த கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட விக்கிரபாண்டியம், புழுதிக்குடி ஊராட்சியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கால்நடைத் துறையின் சார்பில் தீவிர கோமாரி நோய் கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ்,14 -ஆவது சுற்றாக இம்முகாம் நடைபெற்றது. கால்நடைத் துறை கோட்ட உதவி இயக்குநர் மருத்துவர் ஹமீதுஅலி முகாமைத் தொடங்கி வைத்தார்.
கால்நடை உதவி மருத்துவர்கள் கங்காசூடன், விஷ்வேந்தர், செந்தில்குமார், தேன்மொழி ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் விக்கிரபாண்டியம், புழுதிக்குடி உள்ளிட்டப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் தங்கள் கால்நடைகளுக்கு இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொண்டனர். மொத்தம் 1,200 மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது.
முகாமில் கால்நடை ஆய்வாளர்கள் கனிமொழி, மனோகரன், சரபோஜி, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கலைவாணி, பாரதிமோகன், ராஜேஸ்வரி, பிரேமா, சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/17/கோமாரி-நோய்-தடுப்பூசி-முகாம்-2882084.html
2882083 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் திமுக மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் DIN DIN Saturday, March 17, 2018 02:42 AM +0530 ஈரோட்டில் நடைபெறவுள்ள திமுக மாநாடு குறித்து, கூத்தாநல்லூரில் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூத்தாநல்லூர் நகர திமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கே. கலைவாணன் பங்கேற்று, ஈரோடு மாநாட்டில் பங்கேற்பது குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
பின்னர், அவர் கூறியதாவது: திமுக தலைவர் கருணாநிதியின் ஆலோசனைப்படி, ஈரோட்டில் மார்ச் 24, 25-ஆம் தேதிகளில், செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் நடத்தும் மண்டல மாநாட்டில், திருவாரூர் மாவட்டத்திலிருந்து கட்சியின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மட்டுமின்றி, அனைத்து மக்களும் பங்கேற்க வேண்டும். இம்மாநாடு 4 தலைமுறைகளை இணைக்கும் மாநாடு என்றார்.
ஆலோசனைக் கூட்டத்தில் திமுக நகரச் செயலாளர் எஸ்.எம். காதர்உசேன், கிழக்கு ஒன்றியச் செயலாளர் அய்.வி. குமரேசன், மாவட்ட பிரதிநிதி செல்வம், ஹெச்.ஏ. ரசாக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/17/திமுக-மாநாடு-குறித்து-ஆலோசனைக்-கூட்டம்-2882083.html
2881572 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு DIN DIN Friday, March 16, 2018 07:52 AM +0530 நாகை ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்  திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
நாகப்பட்டினம் ஒன்றியம், முட்டம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (2017-18) கீழ் ரூ.5 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் மரக்கன்று நடும் பணிகள்,  பிரதம மந்திரி நினைவு குடியிருப்புத் திட்டத்தின் (2016-17) கீழ் ரூ.1.70 லட்சம் மதிப்பில்   கட்டப்பட்டு வரும் வீடுகளின் கட்டுமானப் பணிகள்,  பசுமை வீடுகள் திட்டத்தின் (2016-17) கீழ் ரூ.2.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பசுமை வீட்டின் கட்டுமானப் பணிகள்,  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.1.19  கோடி  மதிப்பில் நடைபெற்று வரும் மண்புழு உரம் தயாரிக்கும் கொட்டகை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார். 
மேலும் தெத்தி ஊராட்சியில் தனிநபர் கழிவறைத் திட்டத்தின் (2017-18) கீழ் ரூ.12 ஆயிரம் மதிப்பீட்டில் நடைபெற்றுள்ள பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள்,  ரூ.30 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி நிலையத்தின் கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டார்.
மேலும் குறிச்சி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பில்  நடைபெற்று வரும் ஊராட்சி அலுவலகக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுள்ள மண்புழு உரம் தயாரிக்கும் கொட்டகை அமைக்கும் பணிகள்,  மகாதானம் ஊராட்சியில் பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்  கீழ் ரூ.21.40 லட்சம் மதிப்பில் நடைபெற்றுள்ள கங்காஒரத்தூர்-ஆலங்குடி சாலை அமைக்கும் பணிகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
  ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர்கள் பிரபுதாஸ்,  கவிதாராணி, வட்டார வளர்ச்சி அலுவலர்  கஸ்தூரி உள்ளிட்டோர்  உடனிருந்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/16/வளர்ச்சித்-திட்டப்-பணிகள்-ஆட்சியர்-ஆய்வு-2881572.html
2881570 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: நாகை மாவட்டத்தில் 21,929 பேர் எழுதுகின்றனர் DIN DIN Friday, March 16, 2018 07:52 AM +0530 நாகை மாவட்டத்தில் 10,712 மாணவர்கள் மற்றும் 11,217 மாணவியர் என  மொத்தம் 21,929  பேர் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு எழுதவுள்ளனர் என, நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
 தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் பத்தாம் வகுப்பு  பொதுத் தேர்வுகள் மார்ச் 16 முதல் ஏப். 20-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. நாகை மாவட்டத்தில்  10,712 மாணவர்கள்,  11,217 மாணவிகள் என மொத்தம் 21, 929  பேர் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு எழுதுகிறார்கள்.
 நாகை கல்வி மாவட்டத்தில் 126 பள்ளிகளிலிருந்து 40 மையங்களிலும்,  மயிலாடுதுறை கல்வி மாவட்டத்தில் 152 பள்ளிகளிலிருந்து 46 மையங்களிலும் தேர்வு எழுத உள்ளனர். 
தேர்வு மையங்களில் குடிநீர் வசதி,  இருக்கை வசதி,  காற்றோட்டம், வெளிச்சம்,  கழிவறை வசதி,  தடையில்லா மின்சாரம், போக்குவரத்து வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
 நாகப்பட்டினம் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி.  பொதுத் தேர்வுகள் பணியில் தலைமையாசிரியர்கள் பணி நிலையில் 97 பேரும், ஆசிரியர்கள் பணி நிலையில் 1,174 பேரும், அலுவலகப் பணியாளர்கள் நிலையில் 344 பேரும்,  156 காவலர்களும் என மொத்தம் 1771 பேர்  இப்பணியில் ஈடுபட உள்ளனர். தேர்வு பணிகளை கண்காணிப்பதற்காக 64 நிலையான படைகளும், 18 ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
 நாகப்பட்டினம் மாவட்டத்தில் டிஸ்லெக்சியா பாதிக்கப்பட்ட மாணவர்கள்,  கண்பார்வையற்றோர்,  காதுகேளாதோர்,  வாய் பேச முடியாதவர்கள் மற்றும் இதர மாற்றுத் திறனாளித் தேர்வர்கள் 50  பேருக்கு  தேர்வு மையங்களில் தரைதளத்தில் தேர்வெழுதும் வகையில் தனி  அறைகள் ஒதுக்கிட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. கண்பார்வையற்ற 65 தேர்வர்களுக்கு சொல்வதை எழுதுபவர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 22 மாற்றுத் திறனாளி மாணவ-மணவியருக்கும் சொல்வதை எழுதுபவர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
 தேர்வு மைய வளாகத்திற்குள் அலைபேசியை எடுத்து வருதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.    அத்துடன் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் தேர்வறையில் அலைபேசியை வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வறிவுரைகளை மீறி தேர்வர்களோ அல்லது ஆசிரியர்களோ அலைபேசி, இதர தகவல் தொடர்பு சாதனங்களை வைத்திருப்பதாக கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
 நாகப்பட்டினம் மாவட்டத்தின் தேர்வுப் பணி கண்காணிப்பாளராக பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) எஸ். சுகன்யா நியமிக்கப்பட்டு, தேர்வுப் பணி தொடர்பான அனைத்து கண்காணிப்பு பணிகளையும் அவர் மேற்கொண்டு வருகிறார் என  தெரிவித்துள்ளார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/16/இன்று-பத்தாம்-வகுப்பு-பொதுத்-தேர்வு-நாகை-மாவட்டத்தில்-21929-பேர்-எழுதுகின்றனர்-2881570.html
2881569 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் பூம்புகாரில் ஆக்கிரமிப்பு அகற்றம் DIN DIN Friday, March 16, 2018 07:52 AM +0530 பூம்புகார் அருகேயுள்ள தருமகுளத்தில் போக்குவரத்துக்கு இடையூராக உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. 
போக்குவரத்து நெரிசல் மிகுந்த தருமகுளம் பகுதியில் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. இப்பகுதியில் நெடுஞ்சாலைக்குச் சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளால் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் இளம்வழுதி மேற்பார்வையில் தருமகுளம் கடைவீதியில் ஆக்கிரமைப்புகள் அகற்றப்பட்டன. அப்போது, பூம்புகார் சார்பு ஆய்வாளர் கவிதா தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பணியின்போது, மின் வாரிய ஊழியர்கள் மற்றும் தொலைத்தொடர்பு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/16/பூம்புகாரில்-ஆக்கிரமிப்பு-அகற்றம்-2881569.html
2881568 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் "விழிப்புணர்வு மூலம் தொழுநோய் பாதிப்பு குறைந்துள்ளது' DIN DIN Friday, March 16, 2018 07:51 AM +0530 தொழுநோய் விழிப்புணர்வு மூலம் நோய் பாதிப்பு குறைந்துள்ளது என நாகை மாவட்ட  மருத்துவப் பணிகள் (தொழு நோய்) துணை இயக்குநர் சங்கரி தெரிவித்தார்.
சீர்காழி அருகேயுள்ள  புத்தூர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய தொழுநோய் விழிப்புணர்வு தின முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் சிந்தியா செல்வி, மாவட்ட சுகாதார மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் முகம்மது இஸ்மயில்,  டாக்டர் விக்னேஷ்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்த் துறை உதவிப்பேராசிரியர் சசிக்குமார் வரவேற்றார்.
மாவட்ட மருத்துவப் பணிகள் (தொழுநோய்) துணை இயக்குநர் சங்கரி பங்கேற்று, தொழுநோய் விழிப்புணர்வு பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசுகள் வழங்கிப் பேசியது:
நிகழாண்டு, தொழுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சிறுமி சொப்னா என்ற விளம்பரத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், வெள்ளிக்கிழமை தோறும் தொழுநோய் தொடர்பான சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும். நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை விழிப்புணர்வு மூலம் மிகவும் குறைந்துள்ளது.
10 ஆயிரம் பேரில் 600 பேருக்கு என்று இருந்த தொழுநோய் பாதிப்பு தற்போது 1 லட்சம் பேருக்கு 6 பேர் என்ற விகிதத்தில் குறைந்துள்ளது என்றார்.
சுகாதார ஆய்வாளர்கள் கருணாகரன், சதீஷ், உதவி பேராசிரியர்கள் சண்முகசுந்தரம், அசோகன், கார்த்திகேயன் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர். மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் சந்தானகிருஷ்ணன் நன்றி கூறினார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/16/விழிப்புணர்வு-மூலம்-தொழுநோய்-பாதிப்பு-குறைந்துள்ளது-2881568.html
2881567 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் விளைநிலங்களில் பெட்ரோலியம் குழாய் பதிக்க திட்டம்: கிராம நிர்வாக அலுவலகங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் விவசாயிகள் அதிருப்தி DIN DIN Friday, March 16, 2018 07:51 AM +0530 விளைநிலங்களில் கெயில் நிறுவனம் பெட்ரோலியம் குழாய் பதிக்க திட்டமிட்டு கிராம நிர்வாக அலுவலகங்களில் நோட்டீஸ் ஒட்டியதால் விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே பழையபாளையம் கிராமத்தில் விளைநிலங்களுக்கு மத்தியில் கடந்த 2013-ஆம் ஆண்டு எண்ணை மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (ஓஎன்ஜிசி), மாதானம் திட்டம் என்ற பெயரில் ஆழ்துளை கிணறுகளை அமைத்து எண்ணை துறப்பன பணியை மேற்கொண்டு வருகிறது. தற்போது இருவக்கொல்லை, தாண்டவன்குளம் உள்ளிட்ட கிராமங்களில் கூடுதலாக 7 கிணறுகளை உருவாக்கியுள்ள அந்நிறுவனம், நாள்தோறும் 20-க்கும் மேற்பட்ட லாரிகளில் எண்ணை எடுக்கிறது. இதற்கான ரசாயன கலவைகளை பூமிக்குள் செலுத்துவதால் நிலத்தடிநீர் பாதிக்கப்பட்டுள்ளது.
அதோடு சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் விளைநிலங்களில் சாகுபடி செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள், விவசாயச் சங்கங்கள் ஒன்றிணைந்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
இந்நிலையில் பழையபாளையம், அகரவட்டாரம், வேட்டங்குடி, எடமணல், திருநகரி ஆகிய பகுதிகளில் உள்ள விளைநிலங்கள் வழியாக பெட்ரோலியம் மற்றும் கனிமங்கள் குழாய் அமைக்க திட்டமிட்டு, அதற்கான நிலத்தை கையகப்படுத்துவதற்கான நோட்டீஸை பொதுமக்கள் பார்வையில் படும்படி மேற்கண்ட கிராம நிர்வாக அலுவலங்களில்  கெயில் நிறுவனம் ஒட்டியுள்ளது. இது விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து நஞ்சை, புன்செய் விவசாய மாவட்ட சங்கத் தலைவர் வில்வநாதன் கூறுகையில், விவசாயிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் பழையபாளையத்திலிருந்து விவசாய நிலம் வழியாக தரங்கம்பாடிக்கு செல்லும் வகையில் எண்ணைக் குழாய்கள் பதிக்க திட்டமிட்டு நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். அதுமட்டுமம் அல்லாமல் குழாய் அமைக்க விவசாயிகளிடம் கையெழுத்து கேட்டு அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர். விளைநிலங்களை எண்ணை நிறுவனம் கையகப்படுத்த நினைத்தால் பொதுமக்கள், விவசாயிகள் ஒன்றுதிரண்டு தொடர் போராட்டம் நடத்துவோம் என்றார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/16/விளைநிலங்களில்-பெட்ரோலியம்-குழாய்-பதிக்க-திட்டம்-கிராம-நிர்வாக-அலுவலகங்களில்-நோட்டீஸ்-ஒட்டப்பட்டதால-2881567.html
2881566 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மொழிப்போர் தியாகி சாரங்கபாணி நினைவு பொதுக் கூட்டம் DIN DIN Friday, March 16, 2018 07:51 AM +0530 செம்பனார்கோவில் முக்கூட்டு கடைவீதியில் மொழிப்போர் தியாகி மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவு பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
 நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு அக்கட்சியின் நாகை மண்டலச் செயலாளர் சு. கலியபெருமாள் தலைமை வகித்தார்.  தொகுதி செயலாளர்கள் சீலன், செந்தில், குமார், மு. கலைசூரியன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 
நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கைப் பரப்பு செயலாளர் வெற்றிசீலன், நாகை வடக்கு மாவட்டச் செயலாளர் காளிதாஸ், மாநில மாணவர் பாசறை செயலாளர் கார்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர். 
இக்கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. கலை இலக்கியப் பண்பாட்டு பாசறை மூலம் இசைக்கச்சேரி நடைபெற்றது.  

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/16/மொழிப்போர்-தியாகி-சாரங்கபாணி-நினைவு-பொதுக்-கூட்டம்-2881566.html
2881565 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் லாப பங்கீட்டுத் தொகை வழங்கும் விழா DIN DIN Friday, March 16, 2018 07:50 AM +0530 மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய ஆசிரியர்கள் கூட்டுறவு சங்கம் சார்பில் லாப பங்கீட்டுத் தொகை வழங்கும் விழா திருவிழந்தூர் நகராட்சித் தொடக்கப்பள்ளியில் அண்மையில்  நடைபெற்றது.
சங்கத் தலைவர் ஜெக. மணிவாசகம் தலைமையில் நடைபெற்ற விழாவில், ஊராட்சி முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர்கள் நிவேதா எம். முருகன் (செம்பனார்கோவில்), எம். மூர்த்தி (மயிலாடுதுறை), சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்று சங்க  உறுப்பினர்களாகிய ஆசிரியர்களுக்கு லாப பங்கீட்டு ஈவுத் தொகை மற்றும் பரிசுகளை வழங்கினர்.
இதில், சங்க இயக்குநர் ரா. சுரேஷ்,  செயலர் சக்திவடிவேல், துணைத் தலைவர் பிச்சைப்பிள்ளை, இயக்குநர் வை. மணிமாறன் 
திமுக நகரச் செயலர் என். செலவராஜ், பொருளர் பிரபா, மயிலாடுதுறை பொதுத் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் அப்பர்சுந்தரம், சுவாமிநாதன், குருசங்கர் மற்றும் ஆசிரியர்கள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். 


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/16/லாப-பங்கீட்டுத்-தொகை-வழங்கும்-விழா-2881565.html
2881564 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் பயிர்க் காப்பீடு: விவசாயிகள் ஆர்ப்பாட்டம் DIN DIN Friday, March 16, 2018 07:50 AM +0530 சீர்காழி அருகே ஆச்சாள்புரத்தில் பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்காததைக் கண்டித்து விவசாயிகள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆச்சாள்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலம் ஆச்சாள்புரம், ஆலாலசுந்தரம், மாணிக்கவாசல் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 882 விவசாயிகளுக்குக் கடந்த 2016 -17 -ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 341 விவசாயிகளுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு மார்ச் 15-ஆம் தேதிக்குள் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று அதிகாரிகள் ஏற்கெனவே உறுதியளித்திருந்தனர்.
ஆயினும், காப்பீட்டுத் தொகை வழங்காததைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக்குழு உறுப்பினர் விஜய் தலைமையில் வட்டச் செயலாளர் தமிழ்வேந்தன், விவசாய சங்கச் செயலாளர் பாக்யராஜ் மற்றும் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வட்டாட்சியர் பாலமுருகன், டிஎஸ்பி சேகர், கொள்ளிடம் காவல் ஆய்வாளர் செல்வம், உதவி ஆய்வாளர் சூர்யா, கள மேலாளர் சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
மார்ச் 21-ஆம் தேதி அதிகாரிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் சென்னையில் உள்ள காப்பீட்டு நிறுவனத்திற்குச் சென்று, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பிரச்னைக்குத் தீர்வு காண்பது என்று முடிவு செய்யபட்டது. இதைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/16/பயிர்க்-காப்பீடு-விவசாயிகள்-ஆர்ப்பாட்டம்-2881564.html
2881563 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் திருவெண்காடு கோயில் முக்குளங்களில் அஸ்திரதேவர் தீர்த்தவாரி DIN DIN Friday, March 16, 2018 07:50 AM +0530 திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு,  வியாழக்கிழமை அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது.
திருவெண்காட்டில் உள்ள சுவேதாரண்யேஸ்வரர் கோயில், காசிக்கு இணையான ஆறு கோயில்களில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோயிலில் உள்ள ருத்ரபாதத்தில் மூதாதையர் நினைவாக தர்ப்பணம் செய்து வழிபட்டால், 21 தலைமுறைகளில் நாம் செய்த பாவங்கள் நீங்குவதாக ஐதீகம்.
மேலும் சிவனின் முக்கண்ணிலிருந்த மூன்று பொறிகள் விழுந்ததால் அக்னி, சந்திரன் மற்றும் சூரியன் ஆகிய முக்குளங்கள் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. அமாவாசை மற்றும் தமிழ் மாத பிறப்பன்று முக்குளங்களில் அஸ்திரதேவர் தீர்த்தவாரிக் கொடுப்பது வழக்கம். அதன்படி, பங்குனி மாத முதல் நாளான வியாழக்கிழமை, அஸ்திரதேவர் சிலை முக்குளங்களுக்கும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பால், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகமும், தீர்த்தவாரியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோயில் நிர்வாக அதிகாரி பாஸ்கரன், வினோத் குருக்கள், பட்டாபிராம குருக்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/16/திருவெண்காடு-கோயில்-முக்குளங்களில்-அஸ்திரதேவர்-தீர்த்தவாரி-2881563.html
2881562 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கான பயிற்சி வகுப்பு DIN DIN Friday, March 16, 2018 07:49 AM +0530 நாகப்பட்டினத்தில் கூட்டுறவு தேர்தலுக்கானப் பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்டத்தில் உள்ள 167 வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு முதற்கட்டமாக 4 நிலையில் நிர்வாகக்குழு தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து, அலுவலர்களுக்கு தேர்தல் குறித்த பயிற்சி வகுப்பு நாகப்பட்டினத்தில் நடைபெற்றது. பயிற்சி வகுப்புக்கு நாகை மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் கா. ஜெயம்  தலைமை வகித்தார்.  
இதில் மாவட்ட தேர்தல் அலுவலர்கள், வாக்காளர் பட்டியல் அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் பயிற்சி தொடர்பான கையேடுகள் அனைவருக்கும் வழங்கப்பட்டன.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/16/கூட்டுறவு-சங்கத்-தேர்தலுக்கான-பயிற்சி-வகுப்பு-2881562.html
2881561 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் DIN DIN Friday, March 16, 2018 07:49 AM +0530 நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜாவை கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்குக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் வ. நாவேந்தன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர்கள் வேங்கைத் தமிழ், ரவிச்சந்திரன், நகரச் செயலாளர் வை. குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிர்வாகிகள் வீரா. பொதிகை அரசு, அ. பன்னீர்செல்வம், அண்ணாதுரை, முத்துச்சாமி, சிவகுமார், சந்திரமோகன், மாரியப்பன், குமரவேல், செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பெரியார் சிலையை அவமதிக்கும் வகையில் பேசிய பாஜக தேசியச் செயலர் ஹெச். ராஜாவை கண்டித்தும், விவசாயச் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தாக்கப்பட்டதைக் கண்டித்தும் முழக்கமிட்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/16/விடுதலைச்-சிறுத்தைகள்-கட்சியினர்-ஆர்ப்பாட்டம்-2881561.html
2881560 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் சீர்காழி சட்டநாதர் கோயிலில் கோ பூஜை DIN DIN Friday, March 16, 2018 07:49 AM +0530 சீர்காழி சட்டைநாதர் கோயிலில் பங்குனி மாதப் பிறப்பையொட்டி, கோ பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
சீர்காழியில் தருமபுரம் ஆதினத்துக்குச் சொந்தமான சட்டைநாதர் தேவஸ்தானம் உள்ளது. இக்கோயிலில் திருநிலைநாயகிஅம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர்சுவாமி அருள்பாலிக்கிறார். இங்கு தமிழ் மாத பிறப்பையொட்டி கோ பூஜை நடைபெற்றது. முன்னதாக கொடிமரத்து விநாயகருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து கோ சாலையில் உள்ள பசு மற்றும் கன்றுகளுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து வஸ்திரம், மாலை அணிவித்து வழிபாடுகள் செய்யப்பட்டன. பின்னர் பசுவுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று பசு, கன்றுக்கு அகத்திக்கீரை, வாழைப்பழம், வெள்ளம், அரிசி ஆகியவற்றை கொடுத்து வலம் வந்து வழிபட்டனர்.
இதில் கோயில் கண்காணிப்பாளர் தியாகராஜன் மற்றும் கோ பூஜை வழிபாட்டு குழு பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இதேபோல் இக்கோயிலில் பங்குனி மாதப் பிறப்பையொட்டி, பிரம்ம தீர்த்தக்குளத்தில் அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. முன்னதாக மேளதாளங்கள் முழங்க அஸ்திரதேவர் தீர்த்தக்குளம்
எழுந்தருளினார்.
இதைத்தொடர்ந்து அங்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டித் தீர்த்தவாரி நடைபெற்றது. 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/16/சீர்காழி-சட்டநாதர்-கோயிலில்-கோ-பூஜை-2881560.html
2881559 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் நியமனம் DIN DIN Friday, March 16, 2018 07:48 AM +0530 நாகை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம் திருமணஞ்சேரியைச் சேர்ந்தவர் அருண்மனோகரன்  . 
இவரை மயிலாடுதுறை சட்டப் பேரவைத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளராக நாகை மாவட்ட திமுக பொறுப்பாளர் நிவேதா எம்.முருகன், மாநிலச் செயலர் பி.டி.ஆர். பழனிவேல்தியாகராஜன் ஆகியோரின் பரிந்துரையின்பேரில், திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் ஒப்புதலில் பொதுச் செயர் க. அன்பழகன் நியமனம் செய்துள்ளார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/16/நியமனம்-2881559.html
2881558 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மீன் பொருள்கள் தொடர்பான இலவசப் பயிற்சி முகாம்: மார்ச் 21 முதல் மூன்று நாள்கள் நடக்கிறது DIN DIN Friday, March 16, 2018 07:48 AM +0530 நாகை அருகே கீச்சாங்குப்பத்தில் உள்ள மீன்பதன தொழிற் கூடத்தில் மீன்வளப் பொறியியல் கல்லூரி சார்பில்   மதிப்புக் கூட்டப்பட்ட மீன் பொருள்கள் தயாரித்தல், சந்தைப்படுத்துதல் மற்றும் மீன்பதன தொழில் காப்பகம்  நிறுவுதல் தொடர்பான இலவச 3 நாள் பயிற்சி முகாம் மார்ச் 21 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதுகுறித்து, நாகையில் உள்ள தமிழ்நாடு ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் மீன்வளப் பொறியியல் கல்லூரி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
 நாகை அருகே கீச்சாங்குப்பம்  மீன்பதன தொழிற் கூடத்தில் மீன்வளப் பொறியியல் கல்லூரி சார்பில்  மதிப்பு கூட்டப்பட்ட மீன் பொருள்கள் தயாரித்தல், சந்தைப்படுத்துதல் மற்றும் மீன்பதன தொழில் காப்பகம் நிறுவுதல் தொடர்பான இலவச 3 நாள் பயிற்சி முகாம் மார்ச் 21 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 
தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் உதவியோடு நடத்தப்படும் இப்பயிற்சி முகாமில் மீன்களின் பயன்கள், மீன்களை சுகாதாரமாக கையாளும் முறைகள், மதிப்புக் கூட்டலின் அவசியம் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட மீன்பொருள்கள் தயாரிக்கும் முறைகள் பற்றி 30 மகளிருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 
இந்த பயிற்சியில் கலந்துகொள்பவர்களுக்கு சான்றிதழ், பயிற்சிக் கையேடு மற்றும் அவர்கள் தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகள் வழங்கப்படும். நாகை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மீனவ மகளிர் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், இல்லத்தரசிகள் தொழில் தொடங்க ஆர்வமாக உள்ள கல்லூரி மாணவிகள் இப்பயிற்சி முகாமில் பங்கேற்கலாம். 
கூடுதல் விபரங்களுக்கு 9597832836, 9994358736, 9790869252 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/16/மீன்-பொருள்கள்-தொடர்பான-இலவசப்-பயிற்சி-முகாம்-மார்ச்-21-முதல்-மூன்று-நாள்கள்-நடக்கிறது-2881558.html
2881557 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் கோடியக்கரை:  தரைப் பரப்பில் கண்காணிப்பு கப்பல் நிறுத்தப்பட்டு ஆய்வு DIN DIN Friday, March 16, 2018 07:48 AM +0530 நாகை மாவட்டம், கோடியக்கரை படகுத் துறை தரைப் பரப்பில் கடலோர பாதுகாப்பு படை கண்காணிப்பு கப்பல் வியாழக்கிழமை மாலை நிறுத்தப்பட்டு, பாதுகாப்பு குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முதல் நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை வரையில் கடலோரப் பாதுகாப்பு படையினர் கண்காணிப்புக்கு பயன்படுத்தும், தண்ணீரிலும் தரையிலும் செல்லும் ரோவர் கிராப்ட் கப்பல், நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை படகுத் துறைக்கு கொண்டுவரப்பட்டு, தரைப் பரப்பில் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த கண்காணிப்பு (ரோவர் கிராப்ட்) கப்பல் கடலிலும் நிலத்திலும் செல்லக்கூடியது. வழக்கமாக இந்த கப்பல் மண்டபம் முதல் கோடியக்கரை வரையிலான கடல் பரப்பில் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படும்.
இந்த நிலையில், கோடியக்கரை படகுத் துறையின் நிலப்பரப்புக்கு வியாழக்கிழமை மாலை கொண்டுவரப்பட்டது. 
இந்த கப்பலில், பாதுகாப்பு படை வீரர்களும், கோடியக்கரை விமானப்படை முகாம் வீரர்களும் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த கப்பல் வெள்ளிக்கிழமை மீண்டும் கடலுக்குள் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/16/கோடியக்கரை--தரைப்-பரப்பில்-கண்காணிப்பு-கப்பல்-நிறுத்தப்பட்டு-ஆய்வு-2881557.html
2881556 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் ஏவிசி பொறியியல் கல்லூரியின் தரம் உயர்வு DIN DIN Friday, March 16, 2018 07:48 AM +0530 மயிலாடுதுறை ஏவிசி பொறியியல் கல்லூரியின் தரம் உயர்வு பெற்றிருப்பதாக கல்லூரியின் செயலர் கே. கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஐஎஸ்ஓ 9001:2008 என்ற தரத்துடன் செயல்பட்டு வந்த ஏவிசி பொறியியல் கல்லூரியில், நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த டிஎன்வி-ஜிஎல் என்ற நிறுவனம் தர ஆய்வு மேற்கொண்டு ஐஎஸ்ஓ 9001: 2015 என்ற சான்றிதழை வழங்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/16/ஏவிசி-பொறியியல்-கல்லூரியின்-தரம்-உயர்வு-2881556.html
2881555 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் திருவெண்காட்டில் அடையாளம் தெரியாத முதியவர் சடலம் DIN DIN Friday, March 16, 2018 07:47 AM +0530 சீர்காழியை அடுத்த திருவெண்காட்டில் அடையாளம் தெரியாத முதியவர் வியாழக்கிழமை சடலமாகக் கிடந்தார்.
திருவெண்காட்டில் உள்ள அங்காளம்மன் திருமண மண்டபம் எதிர்புறம் 65 வயது மதிக்கத்தக்க முதியவர்,   வெள்ளைச் சட்டை, லுங்கி அணிந்திருந்த நிலையில் சாலையோரம் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து வந்த போலீஸார், அவரது சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரித்து
வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/16/திருவெண்காட்டில்-அடையாளம்-தெரியாத-முதியவர்-சடலம்-2881555.html
2880873 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் திருட்டு DIN DIN Thursday, March 15, 2018 07:24 AM +0530 நாகை மாவட்டம்,  சீர்காழி அருகேயுள்ள மன்னன்கோயில் கிராமத்தில் பூட்டியிருந்த வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 15 பவுன் நகைகளைத் திருடிச் சென்றது புதன்கிழமை காலை தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:  நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்த மன்னன்கோயில் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயந்தி(49). இவரது கணவர் கலியபெருமாள் சென்னையில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இதனிடையே, ஜெயந்தி மன்னன்கோயிலில் உள்ள நிலங்களைக் கவனித்து வந்தார். கடந்த டிசம்பர் மாதம் கலியபெருமாள் இறந்ததை அடுத்து ஜெயந்தியும், அவரது மகனும் சென்னைக்குச் சென்று அங்குள்ள வீட்டில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக தங்கியிருந்தனர்.
இந்நிலையில், புதன்கிழமை காலை மன்னன்கோயிலில் உள்ள உறவினர்கள் ஜெயந்தியை செல்லிடப்பேசி மூலம் தொடர்புகொண்டு, உங்களது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டுள்ளது என தகவல் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, சென்னையில் இருந்து சீர்காழிக்கு வந்த ஜெயந்தி, வீட்டினுள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 15 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ஜெயந்தி அளித்த புகாரின் பேரில், சீர்காழி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/15/வீட்டின்-கதவை-உடைத்து-15-பவுன்-திருட்டு-2880873.html
2880872 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் அரசின் திட்டங்கள் மக்களைச் சேர அரசு அலுவலர்கள் தமிழில் கோப்புகளை எழுத வேண்டும்: ஆட்சியர் DIN DIN Thursday, March 15, 2018 07:24 AM +0530 அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைய அரசு அலுவலர்கள் அனைவரும் தமிழில் கோப்புகளை எழுத வேண்டும் என  நாகை  மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் கூறினார்.
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சிமொழி பயிலரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் பங்கேற்று பேசியது: தமிழ் மொழி, மற்ற மொழிகளைக் காட்டிலும் மேன்மையானது.  அரசுப் பணியாளர்களுக்கு அலுவலகத் தமிழைப் பயிற்றுவிக்க ஆண்டுதோறும் ஆட்சிமொழிப் பயிலரங்கம் - கருத்தரங்கம் நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு ஆட்சிமொழிச் சட்டத்தின்படி தமிழ்நாட்டில் தமிழ் மட்டுமே ஆட்சிமொழியாகும். நிர்வாகத்தில் மக்களுக்குத் தெரிந்த மொழியான தமிழில் நிர்வாக நடவடிக்கைகள் அமைய வேண்டும். ஆட்சி மொழிச் செயலாக்கம் என்பது நிர்வாகத்தில் கையொப்பம்,  பதிவேடுகள்,  கடிதங்கள்,  முத்திரைகள்,  பட்டிகள், கோப்புகள் ஆகியவற்றில் தமிழில் எழுதுவதும்,  பராமரிப்பதும் ஆகும்.
அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைய அரசு அலுவலர்கள் அனைவரும் தமிழில் கோப்புகளை எழுத வேண்டும்.  தமிழ் ஆட்சி மொழித் திட்டச் செயலாக்கத்தை அனைத்துத் துறைகளிலும் முழுமையாகச் செயல்படுத்துவது தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கிற நம் அனைவரின் கடமையாகும்.  மேலும், தமிழ் பேசும் மக்களின் வரிப்பணத்திலிருந்து ஊதியம் பெறும் அரசுப் பணியாளர்கள் அனைவரும் அவர்களுக்குத் தெரிந்த மொழியான தமிழில் நிர்வாகத்தை நடத்த வேண்டும் என்பதே ஆட்சிமொழித் திட்டத்தின் நோக்கமாகும்.
மைய அரசு அலுவலகங்கள்,  பிற மாநில அலுவலகங்கள்,  உயர் நீதிமன்றங்கள்,  உச்ச நீதிமன்றங்கள் ஆகியவற்றுக்கு எழுதப்படும் கடிதங்கள்,  மேல்முறையீட்டுக்குள்பட்ட சட்டத் தொடர்புடைய ஆணைகள்,  வெளிநாட்டு நிறுவனங்கள்,  தூதரகங்கள்,  ஆங்கிலத்திலேயே தொடர்பு வைத்துக் கொள்ளும் தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றுடன் தொடர்பு கொள்ளும்போது  மட்டும் ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம். இவை மட்டுமே ஆட்சிமொழித் திட்டத்திலிருந்து விலக்களிக்கப்பட்டவை ஆகும்.  இவை தவிர்த்த அனைத்து இடங்களிலும் தமிழை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
குழந்தைகளுக்கு தமிழின் மீது ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் குழந்தைகளுக்குத் தமிழைக் கற்பிக்க வேண்டும். அரசு அலுவலர்கள் பிழையில்லாமல் தமிழைப் பயன்படுத்த பயிற்சி பெற வேண்டும்.  நூல்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழ் வளர்ச்சிக்காக அரசு ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.  ஆட்சிமொழிச் செயலாக்கத்தில் சிறந்து விளங்கும் மாவட்ட நிலை அலுவலகத்துக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகின்றன. மேலும்,  தமிழில் சிறந்த வரைவுகள்,  குறிப்புகள் எழுதும் அரசுப் பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. 1330 குறள்களையும் ஒப்பிக்கும் மாணவர்களுக்கு திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசாக  ரூ. 10,000  வழங்கப்படுகிறது.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே தமிழில் பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் விதமாக கவிதை,  கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன   என்றார் ஆட்சியர்.
முன்னதாக, தமிழில் சிறந்த வரைவுகள் எழுதிய 21 பேருக்கு ரூ. 44,000 மதிப்பிலான பரிசுகளையும்,  ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தில் சிறந்து விளங்கும் 2 அலுவலகங்களுக்கு கேடயங்களையும்,  திருக்குறள் முற்றோதலை ஊக்குவிக்கும் வகையில் 7 மாணவர்களுக்கு பொன்னாடைகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
நிகழ்ச்சியில், உலக தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (பொ)  கோ.விசயராகவன்,  நாகப்பட்டினம் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் கா. இராசேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/15/அரசின்-திட்டங்கள்-மக்களைச்-சேர-அரசு-அலுவலர்கள்-தமிழில்-கோப்புகளை-எழுத-வேண்டும்-ஆட்சியர்-2880872.html
2880871 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் வேதாரண்யம் பேருந்து நிலைய நுழைவுப் பகுதியில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தல் DIN DIN Thursday, March 15, 2018 07:24 AM +0530 நாகை மாவட்டம், வேதாரண்யம் பேருந்து நிலைய நுழைவுப் பகுதி நான்குவழிச் சந்திப்பாக அமைந்துள்ளதால் வேகமாகச் செல்லும் வாகனங்களால் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்க வேகத்தடை அமைக்க  வேண்டுமென  பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வேதாரண்யம் பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் பயணியர் செல்லும் முகப்புப் பகுதியில் வளைவுத் தூண்கள் அமைக்கப்பட்ட நுழைவு வாயிலாக உள்ளது. இதன் ஒருபக்கவாட்டில் பொதுமக்களுக்கான கட்டண கழிப்பறையும், மறுபக்கத்தில் பீடத்துடன் கூடிய சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் சிலையும் அமைந்துள்ளது.
பேருந்து உள்ளிட்ட அனைத்து வாகனங்களின் போக்குவரத்தும் வடக்கு வீதியின் பிரதான சாலையின் வழியே நடைபெறுகிறது. இதிலிருந்து மூன்றாக பிரியும் வழிகளாக முறையே (நுழைவு வாயில்) பேருந்து நிலையம்,  மருத்துவமனை (அம்பேத்கர் சிலை பக்கவாட்டில் நேர் சாலையாகவும்), நுழைவு வாயிலின் மற்றொரு பக்கமாக வேதாரண்யேசுவரர் கோயிலுக்குச் செல்லும் சாலையாகவும் செல்கிறது.
தேரோட்டத்தையொட்டி, மூன்று வழி சாலைகளும் மேம்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், வாகனங்களில் செல்வோர் வேகமாக வந்து செல்வது அதிகரித்துள்ளது.
சாலைகளில் வழக்கமாக மெதுவாகவே வரும் சில பேருந்துகள் பயணிகளின் கவனத்தை ஈர்க்க நுழைவுப் பகுதியில் மட்டும் வேகமாகச் செல்வதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், கோயிலுக்குச் செல்லும் சாலையில் இருந்து வேகமாக வரும் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் பேருந்து நிலையத்துக்குள் நுழையும் வாகனங்களுடன் சில நேரங்களில் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் நிலை ஏற்படுகிறது. இதனால் நுழைவுப் பகுதியின் எதிர் மையம் சிறிய அளவிலான விபத்துகள் நேரும் பகுதியாக மாறி வருகிறது.
இது குறித்து சமூக ஆர்வலர் பி.எஸ். ரகமத்துல்லா கூறியது:
நகரத்தின் முக்கிய பகுதியாக இருப்பதால் வாகனங்கள் அதிகமாகச் செல்கிறது. இருசக்கர வாகனங்கள் மோதிக்கொள்வதும் அல்லது பேருந்து நிலையத்துக்குள் வரும் பேருந்துகளில் மோதுவதுமாக உள்ளது. பல முறை அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். அவசியமாக இந்த இடத்தில் வேகத்தடை அமைத்தால் எதிர்காலத்தில் விபத்துகள் தவிர்க்கப்படும் என்றார்.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/15/வேதாரண்யம்-பேருந்து-நிலைய-நுழைவுப்-பகுதியில்-வேகத்தடை-அமைக்க-வலியுறுத்தல்-2880871.html
2880870 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் விழிப்புணர்வுப் பயிற்சி முகாம் DIN DIN Thursday, March 15, 2018 07:23 AM +0530 சீர்காழி மற்றும் கொள்ளிடத்தில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வுப் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
சீர்காழியை அடுத்த மேலச்சாலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த முகாமுக்கு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் லெட்சுமி தலைமை வகித்தார். கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பூவராகன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் புகழேந்தி சிறப்புரையாற்றினர். கருத்தாளர்கள் ராஜேஸ்வரி, கலைச்செல்வி ஆகியோர் பேசினர். 60 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இதேபோல், கொள்ளிடம் அருகே புத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் மற்றும் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான வட்டார அளவிலான பயிற்சி முகாம் தலைமையாசிரியர் சண்முகவேல் தலைமையில் நடைபெற்றது. 
ஆசிரியர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு அமைப்பு மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் பேசினார்.
பயிற்சியில், இன்றைய சூழ்நிலையில் மாணவர்களுக்குத் தேவையான கல்வியை வழங்கும் முறை, மத்திய அரசின் கல்வி உரிமைப் பாதுகாப்புச் சட்ட செயல்முறை, இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது உள்ளிட்ட விழிப்புணர்வு கருத்துக்கள் பற்றி விளக்கிக் கூறப்பட்டது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/15/விழிப்புணர்வுப்-பயிற்சி-முகாம்-2880870.html
2880869 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் தரங்கம்பாடியில் மகளிர் தினவிழா DIN DIN Thursday, March 15, 2018 07:23 AM +0530 நாகை மாவட்டம், தரங்கம்பாடியில் தமிழ்நாடு பெண்கள் கூட்டமைப்பு சார்பில் மகளிர் தினவிழா செவ்வாய்க்கிழமை மாலை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 
இவ்விழாவுக்கு வேப்பஞ்சேரி அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் கலைச்செல்வி தலைமை வகித்தார்.  சமூகப் பணி ஆலோசகர் அருட்சகோதரி பேபி முன்னிலை வகித்தார். 
பெண்களின் சாதனை, உணவின் மாண்பை காப்போம் என்ற தலைப்பில் ஆயர் செல்வராஜ், அருட்சகோதரிகள் ரீட்டா, சேவியர் செல்வி, பிலோமினாள்,  திட்ட அலுவலர் சூசைமைக்கேல், திருக்கடையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர் ரேவதி, பட்டிமன்ற பேச்சாளர் சங்கமித்திரை, மாவட்டத் தலைவர் கவிதா, வட்டார ஒருங்கிணைப்பாளர் அருட்சகோதரி வைலட் ஆகியோர் உரையாற்றினர். மதங்களைக் கடந்து பொறையாறு, திருக்கடையூர், தரங்கம்பாடி பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/15/தரங்கம்பாடியில்-மகளிர்-தினவிழா-2880869.html
2880868 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் பல்பொருள் அங்காடியில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு DIN DIN Thursday, March 15, 2018 07:22 AM +0530 நாகை வெளிப்பாளையத்தில் உள்ள பல்பொருள் அங்காடியில் உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
நாகப்பட்டினம் வெளிப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல பல்பொருள் அங்காடியில் வாங்கப்பட்ட குல்பி ஐஸ், காலாவதியாக இருந்ததாக நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் பணிபுரியும் உயர் அலுவலர் சார்பில் உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து   அந்த  நிறுவனத்தில் உள்ள ஐஸ்கள் விற்பனை பகுதியை, நாகை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் ஏ.டி. அன்பழகன் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, நாகை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஆர். மஹாராஜன் உடனிருந்தார்.
அப்போது, தயாரிப்பு நிறுவனத்துக்கு திரும்ப அனுப்ப வேண்டிய காலாவதியான ஐஸ் மற்றும் குளிர்பானங்கள்,  பிளாஸ்டிக் கவரில் அடைக்கப்பட்டு,  நுகர்வோர் வாங்கிச் செல்லும் பொருள்களோடு சேர்த்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
பின்னர் அவற்றை அகற்ற உத்தரவிடப்பட்டதோடு,  அங்கு "காலாவதியான பொருள்கள், திரும்ப ஒப்படைப்பதற்காக' எனக் குறிப்பிட்டு, பொதுமக்கள் எடுக்காத வகையில் வைக்க அறிவுறுத்தப்பட்டது. அங்கிருந்த பொதுமக்களிடம், உணவு விற்பனை தொடர்பான புகார்களை மாநில உணவு பாதுகாப்பு ஆணையருக்கு 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/15/பல்பொருள்-அங்காடியில்-உணவு-பாதுகாப்பு-அலுவலர்கள்-ஆய்வு-2880868.html
2880867 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் பள்ளியில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் DIN DIN Thursday, March 15, 2018 07:22 AM +0530 நாகை அருகேயுள்ள ஒரத்தூர் சிதம்பரனார் உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சி. சிவா தலைமை வகித்தார். நாகை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் ஏ.டி. அன்பழகன் பங்கேற்று, உணவு பாதுகாப்பு குறித்த மாணவர்களின் சந்தேகங்களுக்குப் பதிலளித்துப் பேசினார். நாகை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஆர். மகாராஜன் பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார். முன்னதாக, உணவு பாதுகாப்பு என்னும் தலைப்பில் கட்டுரைப் போட்டியும், ஓவியப் போட்டியும் நடைபெற்றன. நிகழ்ச்சியில், பள்ளி உதவி ஆசிரியர் பால சண்முகம்  மற்றும்  மாணவர்கள்  பங்கேற்றனர்.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/15/பள்ளியில்-உணவு-பாதுகாப்பு-விழிப்புணர்வு-கூட்டம்-2880867.html
2880866 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மீன்வளப் பல்கலைக்கழகத்தில் ரத்த தான முகாம் DIN DIN Thursday, March 15, 2018 07:05 AM +0530 நாகை அருகேயுள்ள பனங்குடியில் தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் உறுப்புக் கல்லூரியான மீன்வளப் பொறியியல் கல்லூரி,  அரசு மருத்துவமனை மற்றும் லயன்ஸ் கிளப் இணைந்து ரத்த தான முகாமை செவ்வாய்க்கிழமை நடத்தின.
முகாமுக்கு கல்லூரி முதல்வர் சி. பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். கல்லூரியின் மாணவ சங்கத்தின் துணைத் தலைவர் கு. ரத்னகுமார் முகாமை தொடங்கி வைத்துப் பேசினார்.
தொடர்ந்து நடைபெற்ற முகாமில் மாணவ, மாணவியர், பேராசிரியர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள் அனைவரும் பங்கேற்று, ரத்த தானம் அளித்தனர். முகாமுக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் ரத்த தான அமைப்பின் செயலர்  ராஜசேகர்,  உதவிப் பேராசிரியர் ரகுபதி ஆகியோர் செய்திருந்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/15/மீன்வளப்-பல்கலைக்கழகத்தில்-ரத்த-தான-முகாம்-2880866.html
2880864 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் கட்டுமாவடியில் மக்கள் தொடர்பு முகாம்: 54 பயனாளிகளுக்கு  ரூ. 5 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் DIN DIN Thursday, March 15, 2018 07:04 AM +0530 நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், கட்டுமாவடி ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் புதன்கிழமை  நடைபெற்றது.
முகாமுக்கு மாவட்ட  ஆட்சியர்  சீ.  சுரேஷ்குமார்  தலைமை  வகித்துப் பேசியது: மக்கள் தொடர்பு முகாம், 1969 முதல் தமிழகம் முழுவதும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் மாதந்தோறும் ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு,  மாவட்ட ஆட்சியர்  தலைமையில் மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று,  அவர்களது குறைகள் நிவர்த்தி செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் துறை சார்ந்த பல திட்டங்கள் பற்றி தொடர்புடைய அலுவலர்களே மக்களுக்குத் தெரியப்படுத்துகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலும் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை அளித்து, அதன் மூலமும் பொதுமக்கள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
இந்த முகாமுக்கு முன்னரே 120 மனுக்கள் பெறப்பட்டு, 120 மனுக்களுக்கும் பதில் அறிக்கைகள் வரப்பெற்றுள்ளன. இவற்றில் 48 மனுக்கள் ஏற்கப்பட்டு,  72 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த  முகாமில் பெறப்பட்டுள்ள 86 மனுக்களும்,  உரிய அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு,  முடிவான பதில் விரைவில் தெரிவிக்கப்படும்  என்றார் ஆட்சியர்.
முகாமில், வருவாய்த் துறை சார்பில் 27 பயனாளிகளுக்கு ரூ. 3.97 லட்சம் மதிப்பிலான விலையில்லா வீட்டுமனைப் பட்டா,  சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் சார்பில் மாதாந்திர உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் 22 பயனாளிகளுக்கு தலா ரூ. 1,000 வீதம் மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணை,  வேளாண்மைத்துறை சார்பில் 5 பேருக்கு ரூ. 51,454 மதிப்பிலான நுண்ணீர்ப் பாசனத் திட்டக் கருவிகள் என  மொத்தம் 54 பயனாளிகளுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார்   வழங்கினார். 
முகாமில் தோட்டக்கலைத்துறை,  சுகாதாரத்துறை,  ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட துறைகளின் சார்பில் சிறுகண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு, அரசின் திட்டங்கள் குறித்தும் அதனை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் பொதுமக்களுக்கு விளக்கமளித்தனர். முகாமில் அமைக்கப்பட்டிருந்த நலத்திட்ட உதவிகள் தொடர்பான கண்காட்சியை ஆட்சியர் பார்வையிட்டார்.
இதில் சார் ஆட்சியர் கே.பி. கார்த்திகேயன், தனித்துணை ஆட்சியர்(சமூகப் பாதுகாப்புத் திட்டம்) எம். வேலுமணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ. செல்வகுமார்,   வட்டாட்சியர் ராகவன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/15/கட்டுமாவடியில்-மக்கள்-தொடர்பு-முகாம்-54-பயனாளிகளுக்கு--ரூ-5-லட்சம்-மதிப்பில்-நலத்திட்ட-உதவிகள்-2880864.html
2880863 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் புங்கனூர் - ரெட்டிகோடங்குடி இடையே ரூ. 27 லட்சத்தில் தார்ச் சாலை DIN DIN Thursday, March 15, 2018 07:03 AM +0530 சீர்காழி அருகேயுள்ள புங்கனூர் - ரெட்டிகோடங்குடி இடையே ரூ. 27 லட்சம் செலவில் புதிய தார்ச் சாலை அமைக்கும் பணியை சீர்காழி சட்டப் பேரவை உறுப்பினர் பி.வி. பாரதி புதன்கிழமை தொடங்கி வைத்தார். 
சீர்காழி ஒன்றியம் புங்கனூர் ஊராட்சிக்குள்பட்ட ரெட்டிக்கோடங்குடி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 
இக்கிராமத்துக்கு செல்லும் சாலை சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் கடுமையாக பாதிக்கப்பட்டு பள்ளமும், மேடாக காணப்பட்டு போக்குவரத்துக்கு தகுதியற்ற சாலையாக இருந்து வருகிறது. இச்சாலையை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கிராம மக்கள் எம்எல்ஏ. பி.வி. பாரதியை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். 
பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டதன் அடிப்படையில், 1,427 மீட்டர் நீளத்துக்கு ரூ. 27லட்சம்  செலவில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ பாரதி தொடங்கி வைத்து, ஊராட்சியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கூடுதலாக குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். 
அப்போது, அதிமுக ஒன்றியச் செயலர் ராஜமாணிக்கம், ஒன்றிய ஆணையர் ஞானசெல்வி ஆகியோர் உடனிருந்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/15/புங்கனூர்---ரெட்டிகோடங்குடி-இடையே-ரூ-27-லட்சத்தில்-தார்ச்-சாலை-2880863.html
2880862 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மஞ்சளாற்றில் ரூ 10.80 கோடியில் சீரமைப்பு பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்  DIN DIN Thursday, March 15, 2018 07:02 AM +0530 செம்பனார்கோவில் அருகே மஞ்சாற்றில் நடைபெறவுள்ள சீரமைப்புப் பணிகளை எம்எல்ஏ. எஸ். பவுன்ராஜ் புதன்கிழமை தொடங்கி வைத்தார். 
தமிழக பொதுப்பணித் துறை, நீர்வள ஆதாரத்துறை சார்பில், தரங்கம்பாடி வட்டம், செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மேமாத்தூர், கீழ்மாத்தூர், வாழ்க்கை, பரசலூர், இளையாலூர், அரும்பூர், சாத்தனூர் மற்றும் மயிலாடுதுறை வட்டம் நெடுமருதூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவுள்ள விளைநிலங்கள் பாசனம் பெறுவதற்கு  ஏற்ற வகையில் மஞ்சளாற்றில் 10 தலைப்பு வாய்க்கால் மதகுகள் மற்றும் நீரொழுங்கிகள், கழங்கிகள் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளும், ஆற்றின் கரைகள் பலப்படுத்தும் பணி ரூ.10.80 கோடி செலவில் நடைபெறவுள்ளது.
இப்பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி மேமாத்தூர் மஞ்சளாறு ரெகுலேட்டர் அருகே புதன்கிழமை நடைபெற்றது. 
பணியை பூம்புகார் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை காவிரி வடிநிலக் கோட்ட உதவி செயற்பொறியாளர்கள் பி. செந்தில்குமரன்(மயிலாடுதுறை), எம்.ஜி. ராஜேந்திரன்( சீர்காழி) உதவிப் பொறியாளர்கள் எஸ். விஜயபாஸ்கர் ஜி.சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/15/மஞ்சளாற்றில்-ரூ-1080-கோடியில்-சீரமைப்பு-பணி-எம்எல்ஏ-தொடங்கி-வைத்தார்-2880862.html
2880861 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் டால்பின் மீன்களின் உறுப்புகள் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைப்பு DIN DIN Thursday, March 15, 2018 07:02 AM +0530 சீர்காழி தொடுவாய் கடற்கரையில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட டால்பின் மீன்களின் உடல் உறுப்புகள் உடற்கூறு ஆய்வுக்கு புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
நாகை மாவட்டம் தொடுவாய் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை கடற்கரையோரம் 10-க்கும் மேற்பட்ட அரிய வகை "டால்பின் மீன்கள்' இறந்த நிலையில் கரை ஒதுங்கின. அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதால், டால்பின்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, வனசரக அலுவலர் கோபிநாத் தலைமையில் வனக்காப்பாளர்கள், டால்பின்களின் உடல் உறுப்புகளை சேகரித்து உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். அவற்றின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/15/டால்பின்-மீன்களின்-உறுப்புகள்-உடற்கூறு-ஆய்வுக்கு-அனுப்பி-வைப்பு-2880861.html
2880860 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் சீர்காழியில் 2 கூரை வீடுகள் தீக்கிரை DIN DIN Thursday, March 15, 2018 07:01 AM +0530 சீர்காழி திருக்கோலக்கா தெருவில் செவ்வாய்க்கிழமை இரவு இரண்டு கூரை வீடுகள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
திருக்கோலக்கா ஜெகநாதபுரம் தெருவில் வசிப்பவர் நாராயணன். இவரது கூரை வீட்டின் மறு பகுதியில் வாடகைக்குக் குடியிருப்பவர் தினேஷ்(27). இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு இருவரது வீடும் தீப்பிடித்து எரிந்தது. 
தகவலறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இந்தத் தீ விபத்தில் இரு வீடுகளிலும் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இது குறித்து போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சட்டப் பேரவை உறுப்பினர் பி.வி. பாரதி, வட்டாசியர் பாலமுருகன் ஆகியோர் நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசின் நிவாரண நிதி மற்றும் அரிசி, வேட்டி, சேலை, மண்ணெண்ணை ஆகியவற்றை வழங்கி ஆறுதல் கூறினார். அப்போது அதிமுக நகரச் செயலர் பக்கிரிசாமி, ஜெ.பேரவை செயலர் ஏ.வி. மணி, வார்டு செயலர் ராமு உடனிருந்தனர்.


வீடு புகுந்து முதியவருக்கு அரிவாள் வெட்டு
தீ விபத்தில் வீடு எரிந்து பாதிக்கப்பட்ட தினேஷின் எதிர்வீட்டில் வசிப்பவர்  சம்பந்தம்(60) கொத்தனார். இருவருக்கும் தகராறு இருந்து வந்தது. தீ விபத்து நடந்த இரவு தினேஷ், சம்பந்தத்திடம் சென்று விபத்துக்கு அவர் தான் காரணம் என்று தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் புதன்கிழமை மதியம் 3 மணியளவில் சம்பந்தம் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக புறப்பட்டார். அப்போது அரிவாளுடன் அவரது வீட்டுக்குள் வந்த தினேஷ், சம்பந்தத்தின் தலை, கைகள் என பல்வேறு இடங்களில் சராமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சம்பந்தம், சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரது மனைவி ராணி அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து தினேஷை கைது செய்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/15/சீர்காழியில்-2-கூரை-வீடுகள்-தீக்கிரை-2880860.html
2880859 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற 5 லாரிகள் பறிமுதல் DIN DIN Thursday, March 15, 2018 07:00 AM +0530 மயிலாடுதுறையில் உரிய அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற 5 லாரிகளை போலீஸார் புதன்கிழமை பறிமுதல் செய்தனர். 
மயிலாடுதுறை போலீஸார் திருவாரூர் சாலை, சீனிவாசபுரம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, மணல் ஏற்றி வந்த 5 லாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, உரிய அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்ததை அடுத்து அனைத்து லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து, லாரி ஓட்டுநர்கள் காஞ்சிபுரம் மாவட்டம், சிறுதாம்பூர் கோ. பிரகாஷ், படாளம் மா. சுரேஷ், பழையானூர் பி. செந்தில், திருவண்ணாமலை மாவட்டம் காந்தி நகரைச் சேர்ந்த வ. அன்பரசு மற்றும் வே. நாகராஜ் ஆகிய 5 பேர்  மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/15/அனுமதியின்றி-மணல்-ஏற்றிச்-சென்ற-5-லாரிகள்-பறிமுதல்-2880859.html
2880858 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் DIN DIN Thursday, March 15, 2018 07:00 AM +0530 சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர், 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பேரூராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் அமலநாதன் தலைமை வகித்தார். இதில் 8 மணி நேர வேலையை உறுதிப்படுத்த வேண்டும். தேவையான துப்புரவுப் பணியாளர்களை நியமித்து பேரூராட்சி பகுதிகளில் தூய்மைப்படுத்த வேண்டும். 
துப்புரவுத் தொழிலாளர்களுக்கு பணி வரன்முறை செய்ய வேண்டும். அரசு உத்தரவுப்படி உள்ள மாத ஊதியத்தை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை அமல்படுத்திட வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் துப்புரவுத் தொழிலாளார் சங்க பொறுப்பாளர்கள் கண்ணன், ராஜேந்திரன், ராஜகோபால், ராமாயி, லெட்சுமி, சீதா, அஞ்சம்மாள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/15/ஊரக-வளர்ச்சி-உள்ளாட்சித்துறை-ஊழியர்-சங்கத்தினர்-ஆர்ப்பாட்டம்-2880858.html
2880857 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மூதாட்டி கொலை: கணவன்- மனைவி கைது DIN DIN Thursday, March 15, 2018 06:59 AM +0530 நாகை மாவட்டம் பெரம்பூர் சரகம் அகரகீரங்குடி கிராமத்தில் மூதாட்டி கொலை சம்பவத்தில், கணவன்- மனைவியை போலீஸார் கைது செய்தனர்.
அகரகீரங்குடி கிராமம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி மனைவி பொன்னம்மாள்(60). அதே தெருவைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (35). இவரது மனைவி சரிதா(28). இவர்களது மகளைப் பற்றி பொன்னம்மாளின் மகள் பரிமளா அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது.  
இதைத்தொடர்ந்து கடந்த சனிக்கிழமை பொன்னம்மாள் வீட்டுக்கு தமிழ்ச்செல்வன், சரிதா ஆகிய இருவரும் சென்று பரிமளாவிடம் கேட்டனர். அப்போது தகராறு முற்றியதில், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனராம். தகராறின்போது குறுக்கே வந்த பொன்னம்மாள், தமிழ்ச்செல்வன், சரிதா ஆகியோரால்  தாக்கப்பட்டு காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார். கொலை பிரிவின்கீழ், பெரம்பூர் காவல் ஆய்வாளர் நாகரத்தினம் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து தமிழ்செல்வன், சரிதா ஆகியோரை கைது செய்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/15/மூதாட்டி-கொலை-கணவன்--மனைவி-கைது-2880857.html
2880173 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் வாய்க்காலில் குப்பைகளை அகற்றிய வர்த்தகர் சங்கம் DIN DIN Wednesday, March 14, 2018 07:32 AM +0530 அதிகாரிகளின் அலட்சியத்தால், சீர்காழியை அடுத்த புதுப்பட்டினத்தில் வாய்க்காலில் தேங்கிய குப்பைகளை வர்த்தகர் சங்கத்தினரே செவ்வாய்க்கிழமை அகற்றினர்.
புதுப்பட்டினம் கடைத் தெருவையொட்டி செல்லும் புதுமண்ணியாறு, பாசன வாய்க்கால் பழையார் மீன்பிடித் துறைமுகம் அருகே கடலில் கலக்கிறது. இந்நிலையில், கடந்த மூன்று மாதகாலமாக, வாய்க்காலில் தண்ணீர் வற்றிப்போய் விட்டதால், அப்பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் தேங்கியது. இதில் சுமார் 50 மீட்டர் தூரத்துக்குக் குப்பைகளும், பிளாஸ்டிக் பொருள்களும் கழிவு நீரில் கலந்து நின்றதால், துர்நாற்றம் வீசியதுடன், கொசுக்களின் உற்பத்தியும் அதிகரித்தது.
இதனால் சுற்றுப்புறச் சுகாதாரம் பாதிக்கப்படுவதுடன், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பலமுறை புகார் தெரிவித்தும், அவர்கள் கண்டுகொள்ளவில்லையாம். இதைத்தொடர்ந்து, புதுப்பட்டினம் வர்த்தகர்கள் சங்கத் தலைவர் குபேந்திரன் தலைமையில், வியாபாரிகள் ஆலோசனை நடத்தி, வாய்க்காலில் தேங்கியக் குப்பைகளை அகற்ற முடிவு செய்தனர். அதன்படி, வாய்க்காலில் தேங்கிக் கிடந்த குப்பைகளை கூலித் தொழிலாளர்கள் மூலம் அகற்றும் பணியை மேற்கொண்டனர். இதுகுறித்து குபேந்திரன் கூறுகையில், சுத்தம் செய்யப்பட்ட வாய்க்காலை பொதுப்பணித்துறையினர், தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்றார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/14/வாய்க்காலில்-குப்பைகளை-அகற்றிய-வர்த்தகர்-சங்கம்-2880173.html
2880172 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் குழாயிலிருந்து வீணாக வெளியேறும் குடிநீர் DIN DIN Wednesday, March 14, 2018 07:32 AM +0530 சீர்காழி அருகேயுள்ள வெள்ளக்குளம் கிராமத்தில் கூட்டுக் குடிநீர் குழாயிலிருந்து குடிநீர் வீணாக வெளியேறுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெள்ளக்குளம் மெயின்ரோடு பகுதியில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு  குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 
இதற்காக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழாயில் திறந்து மூடும் வசதி செய்து தரப்படாததால், வெள்ளக்குளம் கிராமத்தில் 5 இடங்களில் உள்ள குடிநீர் குழாய்களிலிருந்து குடிநீர் வீணாக வெளியேறுகிறது. இதனால், இந்த குடிநீர் குழாய்களில் திறந்து மூடும்  வசதியை ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/14/குழாயிலிருந்து-வீணாக-வெளியேறும்-குடிநீர்-2880172.html
2880171 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்  உருவப் படத்துக்கு புஷ்பாஞ்சலி DIN DIN Wednesday, March 14, 2018 07:32 AM +0530 சித்தியடைந்த காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் உருவப் படத்துக்கு புஷ்பாஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மயிலாடுதுறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காஞ்சி சங்கர மடத்தின் 69 -ஆவது பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கடந்த மாதம் 28 -ஆம் தேதி சித்தியடைந்தார். இதையொட்டி, ஸ்ரீ ஜயேந்திர  சரஸ்வதி சுவாமிளுக்கு புஷ்பாஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மயிலாடுதுறை காஞ்சி சங்கரா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு, பள்ளி வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட நிலையில்  வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் உருவப் படத்துக்கு, பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள், பக்தர்கள் திரளானோர் புஷ்பாஞ்சலி செலுத்தி, வழிபாடு செய்தனர். மேலும், ஸ்ரீ ஜயேந்திரரைப் போற்றி பஜனைகள் பாடப்பட்டன.
நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தாளாளர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். காஞ்சி வேத பாடசாலையின் நிர்வாகி பூம்புகார் சேகர், பள்ளி செயலர்  தியாகராஜன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ரமணி, வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன், சிட்டி யூனியன் வங்கி துணைப் பொது மேலாளர் ராமசாமி, கிளை மேலாளர் சக்கரபாணி, மருத்துவர் ராமமூர்த்தி, சமூக ஆர்வலர் அப்பர் சுந்தரம், நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் வெங்கட்ராமன், பதஞ்சலி யோகா மைய இயக்குநர் கணேசன், பள்ளி முதல்வர் வேம்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காஞ்சி சங்கரா மெட்ரிக் பள்ளி நிர்வாகத்தினர்  செய்திருந்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/14/ஜயேந்திர-சரஸ்வதி-சுவாமிகள்-உருவப்-படத்துக்கு-புஷ்பாஞ்சலி-2880171.html
2880170 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் திருநகரி பெருமாள் கோயில் கொடி மரத்துக்கு ஐம்பொன் கவசம் பிரதிஷ்டை DIN DIN Wednesday, March 14, 2018 07:31 AM +0530 நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்த திருநகரி கல்யாணரெங்கநாத பெருமாள் கோயிலில் உள்ள கொடி மரத்துக்கு ஐம்பொன்னால் ஆன கவசம் பிரதிஷ்டை செய்யும் விழா அண்மையில் நடைபெற்றது.
சீர்காழியை அடுத்த திருநகரி கிராமத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அமிர்தவள்ளி தாயார் சமேத கல்யாணரெங்கநாத பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் பெருமாள் தேவியர்களுடன் அமர்ந்த நிலையில் கல்யாண கோலத்தில் அருள்பாலித்து வருகிறார்.
இக்கோயிலில் கடந்த ஆண்டு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கொடி மரத்துக்கு ஐம்பொன்னால் ஆன கவசங்கள் பிரதிஷ்டை செய்யும் விழா அண்மையில் நடைபெற்றது.
முன்னதாக,  2 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து பூர்ணாஹூதி நடைபெற்று புனிதநீரால் கொடி மரத்துக்கு அபிஷேகம், ஆராதனைகள், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/14/திருநகரி-பெருமாள்-கோயில்கொடி-மரத்துக்கு-ஐம்பொன்-கவசம்-பிரதிஷ்டை-2880170.html
2880168 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் வானிலை எச்சரிக்கை: ஆழ்கடல் மீன்பிடிப்பைக் கைவிட்டு கரை திரும்பும் மீன்பிடி படகுகள் DIN DIN Wednesday, March 14, 2018 07:30 AM +0530 வங்கக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் இடையே காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதைத் தொடர்ந்து, மீன்பிடி படகுகள் ஆழ்கடல் மீன்பிடிப்பை கைவிட்டு கரை திரும்பி வருகின்றன.
இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலின் நடுப் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி வெள்ளிக்கிழமை உருவானது. இந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. இதையடுத்து, ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்றுள்ள மீன்பிடி படகுகளை உடனடியாக கரை திரும்ப வருவாய்த் துறை மற்றும் மீன்வளத் துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. நாகை மாவட்ட மீன்வளத் துறை சார்பில், மீனவக் கிராம பஞ்சாயத்தார்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டு,  ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீன்பிடி விசைப் படகுகள் கரை திரும்ப வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதன்படி, ஞாயிற்றுக்கிழமை முதல் மீன்பிடி விசைப் படகுகள் கரை திரும்பத் தொடங்கியுள்ளன. மேலும், கடந்த 2 நாள்களாக நாகை மாவட்ட மீன்வளத் துறை மூலம், விசைப் படகுகளுக்கான மீன்பிடி டோக்கன் வழங்கும் பணியும், மானிய விலையிலான டீசல் விற்பனையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நாகையிலிருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்றிருந்த விசைப் படகுகளில் சுமார் 80 -க்கும் அதிகமான படகுகள் கரை திரும்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதேபோல, மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்ற விசைப் படகுகள் கரை திரும்பி வரும் நிலையில்,  தகவல் தொடர்பு நிலைக்கு அப்பால் உள்ள படகுகளுக்கு, கடலோரக் காவல் படை மூலம் தகவல் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மீன்வளத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/14/வானிலை-எச்சரிக்கை-ஆழ்கடல்-மீன்பிடிப்பைக்-கைவிட்டு-கரை-திரும்பும்-மீன்பிடி-படகுகள்-2880168.html
2880169 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் சாலை மேம்பாட்டுப் பணி: மாவட்ட ஆட்சியர் ஆய்வு DIN DIN Wednesday, March 14, 2018 07:30 AM +0530 மயிலாடுதுறை வருவாய்க் கோட்டத்திற்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டுப் பணிகளை நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். 
மயிலாடுதுறை வருவாய் கோட்டத்திற்குள்பட்ட கும்பகோணம்- சீர்காழி சாலையில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் சாலை சந்திப்புகளை சீர்படுத்தும் பணி, தரங்கம்பாடி- மங்கநல்லூர்- ஆடுதுறை சாலையில் ரூ 1.20 கோடியிலும், மாப்படுகை- கடலங்குடி சாலையில் ரூ 1.60  கோடியிலும், மாப்படுகை- கடலங்குடி சாலையிலும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் ஆய்வு செய்தார். அப்போது, சாலைப் பணியை விரைந்து முடிக்குமாறு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை அறிவுறுத்தினார். நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் ஜெ. இளம்வழுதி, உதவி கோட்டப் பொறியாளர் (மயிலாடுதுறை) ராஜேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/14/சாலை-மேம்பாட்டுப்-பணி-மாவட்ட-ஆட்சியர்-ஆய்வு-2880169.html
2880166 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மீன்வள கணினி மென்பொருள் வடிவமைப்புப் பயிற்சி DIN DIN Wednesday, March 14, 2018 07:29 AM +0530 நாகை மீன்வளப் பொறியியல் கல்லூரியில், மீன்வள மேம்பாட்டுக்கான கணினி மென்பொருள் வடிவமைப்புப் பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
மீன்வளப் பொறியியல் கல்லூரி முதல்வர் சி. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்து, மீன்பிடித் துறையின் முக்கியத்துவம், அதிகப்படியான மீன்பிடிப்பு, மீன்களின் வசிப்பிட அழிவு, உவர் மற்றும் நன்நீர் வளங்களின் மீதான அச்சுறுத்தல்கள், தீர்வுகள் குறித்து விளக்கிப் பேசினார்.
உதவி பேராசிரியர்கள் ம. சிவகுமார், முகமது தன்வீர், பொறியாளர் ரகுபதி ஆகியோர் மீன்வள மேம்பாட்டு மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட மீன்பொருள்கள் தயாரிப்புக்கான உபகரணங்கள் உள்ளிட்டவைகளுக்கான கணினி மென்பொருள் வடிவமைப்பு குறித்துப் பயிற்சி அளித்தனர்.
நீர்வாழ் உயிரினங்களின் வாழ்வியல் சூழல் முக்கியத்துவம், துறை சார்ந்த  இன்னல்கள், பொறியியல் தலையீடுகள் மற்றும் தொழில்நுட்பங்களை மாணவர்களிடையே கொண்டு செல்லும் வகையில் இந்தப் பயிற்சி பட்டறை நடைபெற்றது. முன்னதாக, பயிற்சி கையேடு வெளியிடப்பட்டு, விநியோகிக்கப்பட்டது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/14/மீன்வள-கணினி-மென்பொருள்வடிவமைப்புப்-பயிற்சி-2880166.html
2880167 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் கீழ்வேளூரில் மார்ச் 16 -இல் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் DIN DIN Wednesday, March 14, 2018 07:29 AM +0530 தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களின் உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம் நாகை மாவட்டம், கீழ்வேளூரில் மார்ச் 16 -ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து நாகை சமூகப் பாதுகாப்புத் திட்ட தொழிலாளர் அலுவலர் ம. ஸ்ரீதர் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், தொழிலாளர் துறை மூலம் நலவாரிய உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், கீழ்வேளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் மார்ச் 16 -ஆம் தேதி நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது. காலை 10 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 4 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், தகுதியான தொழிலாளர்கள் பங்கேற்று,  நலவாரிய உறுப்பினர்களாகப் பதிவு பெற முனைப்புக் காட்டுமாறு அவர் தனது செய்திக் குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/mar/14/கீழ்வேளூரில்-மார்ச்-16--இல்நலவாரிய-உறுப்பினர்-சேர்க்கை-முகாம்-2880167.html