Dinamani - புதுதில்லி - http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2824497 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ஒத்திவைத்தால் மக்கள் நம்பிக்கை இழப்பர்: இல.கணேசன் DIN DIN Tuesday, December 12, 2017 12:42 AM +0530 சென்னை ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் மீண்டும் ஒரு முறை ஒத்திவைக்கப்பட்டால், ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவர் என்று  மாநிலங்களவை பாஜக உறுப்பினர் இல. கணேசன் தில்லியில் திங்கள்கிழமை தெரிவித்தார்.
சென்னை ஆர்.கே. நகர் சட்டப்பேரவையிலிருந்து உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்ததைத் தொடர்ந்து, அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. 
ஏற்கெனவே, சில மாதங்களுக்கு முன் இடைத் தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு பணப்பட்டுவாடா புகார் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், அத்தொகுதிக்கு மீண்டும் இடைத் தேர்தல்  டிசம்பர் 21-ஆம் தேதி நடத்தப்படும் என்று சில தினங்களுக்கு முன் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், தில்லி வந்திருந்த மாநிலங்களவை பாஜக உறுப்பினர் இல.கணேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆர்.கே. நகர் சட்டப்பேரவை இடைத் தேர்தலை இன்னொரு முறை ரத்துச் செய்வதில் பா.ஜ.க.விற்கு உடன்பாடு இல்லை. தோல்வி பயத்தால் சிலர் தேர்தலை ரத்து செய்வதற்கான காரணங்களை உருவாக்க முயற்சிக்கின்றனர்.  தேர்தலை  ஒத்திவைத்தால்,  சாதாரண மக்களுக்கு தண்டனை வழங்குவது போல் ஆகிவிடும்.  ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் முறைகேடுகளில் ஈடுபடுவோரை கண்டறிந்து அவர்கள் மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், தேர்தலை  நிறுத்துவது அதற்கான வழியாக அமையாது. தேர்தல் தொடர்பாக  தேர்தல் ஆணையம் தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும். ஆனால்,  இன்னொரு முறை தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டால், ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவர். தேசிய அளவிலான எங்களின் செயல்பாடுகளைக் கூறி ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் வாக்கு கேட்போம். 
ஒக்கி புயல் ஒரு விபத்து:  ஒக்கி புயலில் சிக்கிய தமிழக மீனவர்கள் பலர் காற்றின் சீற்றத்தால் சிதறடிக்கப்பட்டு வேறு இடங்களில் கரை ஒதுங்கியுள்ளனர்.  அவர்களை  முழு மூச்சுடன் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் களத்தில் இறங்கி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.  காணாமல் போன மீனவர்கள் அனைவரும் விரைவில் மீட்கப்படுவர். இந்த விவகராத்தில் அரசுக்கு எதிராக நடத்தப்படும் ஆர்பாட்டங்களின் பின்னணியில் அரசியல் நோக்கங்கள் உள்ளன என்றார் அவர். 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/12/ஆர்கேநகர்-இடைத்தேர்தலை-ஒத்திவைத்தால்-மக்கள்-நம்பிக்கை-இழப்பர்-இலகணேசன்-2824497.html
2824496 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி "சிமெண்ட் கலவை மையங்களை அனுமதியின்றி இயக்க கூடாது' DIN DIN Tuesday, December 12, 2017 12:41 AM +0530 நொய்டாவில் செயல்பட்டு வரும் கட்டுமான இடங்களில் சிமெண்ட் கலவை மையங்கள் அனுமதியின்றி இயக்கக் கூடாது என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தவிட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவரும் நீதிபதி ஸ்வதந்தர் குமார் தலைமையிலான அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது, "சிமெண்ட் கலவை மையங்களால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் இருப்பதை உத்தரப் பிரதேச மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டது. மேலும், கட்டுமான பணிகளின்போதும், கட்டுமான பொருள்களை ஏற்றிச் செல்லும்போதும் தூசு ஏற்படுவதைத் தடுக்காத கட்டுமான நிறுவனங்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததற்கு தீர்ப்பாயம் கண்டனம் தெரிவித்தது.
இதையடுத்து, உத்தரப் பிரதேச மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், "கட்டுமானப் பகுதிகளில் சிமெண்ட் கலவை மையம் அமைக்க அனுமதி கோருபவர்களுக்கு மட்டும் வாரியம் அனுமதி அளிக்கும்' என்று உறுதி அளித்தார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/12/சிமெண்ட்-கலவை-மையங்களை-அனுமதியின்றி-இயக்க-கூடாது-2824496.html
2824495 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி தென்னாப்பிரிக்கர் சடலம் கண்டுபிடிப்பு DIN DIN Tuesday, December 12, 2017 12:41 AM +0530 தில்லி எம்.ஜி. ரோட்டில் அடையாளம் தெரியாத தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஒருவரின் சடலம் கிடந்தது திங்கள்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடலின் வெளிப்பகுதியில் எந்தவித காயமும் இல்லை. கொலை நடந்ததற்கான சந்தேகங்களும் இல்லை. 30 வயது மதிக்கத்தக்க அவரது சடலம், எம்.ஜி. ரோட்டில் உள்ள  டிடிஏவுக்கு சொந்தமான காட்டுப் பகுதியில் கிடந்தது. தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/12/தென்னாப்பிரிக்கர்-சடலம்-கண்டுபிடிப்பு-2824495.html
2824494 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி டயர் வெடித்து லாரி கவிழ்ந்ததில் நடைபாதையில் படுத்திருந்த இருவர் சாவு DIN DIN Tuesday, December 12, 2017 12:41 AM +0530 வடக்கு தில்லி, சிவில் லைன்ஸ் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை டயர் வெடித்து லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், நடைபாதையில் படுத்திருந்த இருவர் உயிரிழந்தனர்.
இது குறித்து தில்லி காவல் துறையினர் கூறியதாவது: சிவில் லைன்ஸ் புறவட்டச் சாலைப் பகுதியில் சுவாமி நாராயண் மந்திர் உள்ளது. இந்த மந்திர் அருகே உள்ள நடைபாதையில் சம்பவத்தன்று இரவு இருவர் படுத்திருந்தனர். இந்நிலையில்,  அவ்வழியாக நரேலா மண்டிக்கு நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வந்த லாரியின் முன்பக்க சக்கரம் ஒன்று திடீரென வெடித்தது.  இதையடுத்து, கட்டுப்பாட்டை இழந்த லாரி  சாலையின் தடுப்பில் மோதி நடைபாதையில் கவிழ்ந்தது.
 அப்போது, நடைபாதையில் படுத்திருந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க இருவர் சிக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர்களை அருகில் இருந்தவர்கள் சுஸ்ருதா விபத்து சிகிச்சை மருத்துவமனையில்  அனுமதித்தனர் ஆனால், அவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர்கள் யார், எந்த ஊர் என்ற விவரம் உடனடியாகத் தெரியவில்லை. சம்பவம் நிகழ்ந்த பிறகு லாரியின் ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/12/டயர்-வெடித்து-லாரி-கவிழ்ந்ததில்-நடைபாதையில்-படுத்திருந்த-இருவர்-சாவு-2824494.html
2824493 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி தில்லியில் அஸ்ஸாம் இளைஞர் மர்மச் சாவு:  மாடியில் இருந்து தள்ளிவிடப்பட்டதாக புகார் DIN DIN Tuesday, December 12, 2017 12:40 AM +0530 தில்லியில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த இரு இளைஞர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் தாக்கப்பட்டு இறந்தார். அவரை மாடியில் இருந்து தள்ளிவிட்டதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து தில்லி காவல் துறையினர் கூறியதாவது: அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிஜய் ராய் (32).  தென் கிழக்கு தில்லி, சன்லைட் காலனியில் வசித்து வந்த அவர், 
கால் சென்டர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.  அவருடன் சகோதரி மற்றும் நண்பர் சேர்ந்து வசித்து வருவதாகக் கூறப்படுகிறது.  அவர் வசிக்கும் வீட்டின் கீழ் தளத்தில் தீபக் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில்,  சம்பவத்தன்று நள்ளிரவு குடியிருப்பின் நுழைவு வாயிலைத் திறப்பது தொடர்பாக பிஜய் ராய்க்கும்,  தீபக், அவரது நண்பர் சுஜீத் ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில்,   தில்லி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நள்ளிரவு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், பிஜய் ராய் அவரது  வீட்டு மாடியின் பால்கனியில் இருந்து விழுந்துவிட்டதாகக் கூறப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற  போலீஸார்,  பிஜய் ராயை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பிஜய் ராயின் வீட்டில் ரத்தக் கறைகள் இருந்தது தெரிய வந்தது. இதனால்,  அவருக்கும் மற்றவர்களுக்கும் இடையே மோதல் நிகழ்ந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்திற்குப் பின்னர் தீபக், சுஜீத் இருவரும் சம்பவ இடத்தில் இருந்து தலைமறைவாகிவிட்டனர். தனிப்படை அமைக்கப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டனர். பிஜய் ராய் தானாக விழுந்து இறந்தாரா அல்லது கொலை செய்து தூக்கி வீசப்பட்டரா என்பது குறித்து இருவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது போலீஸார் தெரிவித்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/12/தில்லியில்-அஸ்ஸாம்-இளைஞர்-மர்மச்-சாவு--மாடியில்-இருந்து-தள்ளிவிடப்பட்டதாக-புகார்-2824493.html
2824492 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி ஆள்கடத்தல், கொள்ளை வழக்குகளில் உ.பி. போலீஸாரால் தேடப்பட்ட இளைஞர் கைது DIN DIN Tuesday, December 12, 2017 12:40 AM +0530 ஆள் கடத்தல்,  கொள்ளை, கொலை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு உ.பி. போலீஸாரால் தேடப்பட்டு வந்த  இளைஞரை தில்லி குற்றப் பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.
இது குறித்து தில்லி காவல் துறையின் குற்றப் பிரிவு துணை ஆணையர் டாக்டர் ஜாய் டிர்க்கி செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:  
உத்தரப் பிரதேச மாநிலம்,  ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜிதேந்தர் சௌத்ரி (24).  இவர் மாநிலம் விட்டு மாநிலம் சென்று பல்வேறு ஆள்கடத்தல், கொள்ளை,  கொலைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தலைமறைவாக இருந்த இவரைப் பிடிப்பதற்கு துப்புக் கொடுப்போருக்கு ரூ.50 ஆயிரம் வெகுமதி அளிக்கப்படும் என்று உத்தரப் பிரதேச காவல் துறையால் அறிவிக்கப்பட்டிருந்தது.  மேலும்,  ஜான்சியைச் சேர்ந்த இரு நகைக் கடைக்காரர்களைக் கடத்திய வழக்கிலும் ஜிதேந்தர் சௌத்ரி தேடப்பட்டு வந்தார்.
இந்நிலையில், ரோஹிணி குற்றப் பிரிவு போலீஸாருக்கு ஜிதேந்தர் குறித்த துப்புக் கிடைத்தது.  இதையடுத்து,  டிசம்பர் 9-ஆம் தேதி ரோஹிணி கஞ்சாவ்லா சாலை, சிஎன்ஜி பம்ப் அருகே ஜிதேந்தரை தனிப் படை போலீஸார் கைது செய்தனர்.  முன்னதாக, போலீஸாரிடம் இருந்து தப்பிக்க தன்னுடைய துப்பாக்கியை ஜிதேந்தர் பிரயோகப்படுத்தினார். எனினும், போலீஸார் அவரை மடக்கிப் பிடித்தனர். அவரிடமிருந்து துப்பாக்கி, 2 தோட்டா ரவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.  
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது,  ஏற்கெனவே உத்தரப் பிரதேச மாநிலத்தில் கொலை, கொள்ளை,  ஆள்கடத்தல் போன்ற ஏழு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.  2016, டிசம்பரில்  சிறையில் இருந்து வெளியே வந்தார். பின்னர்,  அஜய் ஜடேஜா சட்டவிரோத கும்பலுடன் சேர்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். 
நிகழாண்டு ஜூலையில் ஆக்ரா பகுதியில் இருந்து ஒரு காரை தனது கூட்டாளிகள் வினோத் ஜாட்,  லோகேந்தர், நரேந்தர் சர்மா ஆகியோருடன் சேர்ந்து கொள்ளையடித்தார். பின்னர், அந்தக் காரை பயன்படுத்தி ஜான்சியில் தொழிலதிபர்களைக் கடத்தினார்.  இதுபோன்று பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஜிதேந்தர் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல் துறை உயரதிகாரி ஜாய் டிர்க்கி தெரிவித்தார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/12/ஆள்கடத்தல்-கொள்ளை-வழக்குகளில்-உபி-போலீஸாரால்-தேடப்பட்ட-இளைஞர்-கைது-2824492.html
2824491 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி டிடிஇஏ பள்ளிகளில் பாரதி பிறந்த நாள் விழா DIN DIN Tuesday, December 12, 2017 12:40 AM +0530 தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ)   பள்ளிகளில் மகாகவி பாரதியாரின் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. 
இதை முன்னிட்டு அந்தந்த பள்ளிகளில் மாணவர்கள் பாரதியார் போல் வேடமணிந்து 
வந்து, அவர் பாடிச் சென்ற கவிதைகளை உணர்ச்சி பொங்க வாசித்தனர். 
தவிர,  பாடலாகவும் இசையுடன் பாடினர்.  பாரதியின்  சிறப்புகளை ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் மாணவர்கள் எடுத்துக் கூறினர்.
 அவரது கவிதைகளை பதாகைகள் மூலம் காட்சிப்படுத்தினர்.  பள்ளி முதல்வர்கள்  சித்ரா வாசகம் (ராமகிருஷ்ணபுரம்),   ஹரி கிருஷ்ணன் (மோதிபாக்),  ராஜி கமலாசனன் (ஜனக்புரி), காயத்ரி(மந்திர்மார்க்), சித்ரா ராதாகிருஷ்ணன்(முதல்வர் பொறுப்பு,  பூசா சாலை),  மீனா சகானி (இலக்ஷ்மிபாய் நகர்),  ரஞ்சன் குப்தா (துணை  முதல்வர், லோதி எஸ்டேட்)  ஆகியோர் அவரவர் பள்ளிகளில் பாரதியின் நாட்டுப் பற்றையும் மொழிப்பற்றையும் எடுத்துக் கூறினர்.  விழாவில் கலந்துகொண்ட அனைவரையும் டிடிஇஏ செயலர்  ரா. ராஜு  பாராட்டினார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/12/டிடிஇஏ-பள்ளிகளில்-பாரதி-பிறந்த-நாள்-விழா-2824491.html
2824490 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி சங்கிலி பறிப்பை தடுத்த பெண் மீது கொள்ளையர்கள் துப்பாக்கிச்சூடு DIN DIN Tuesday, December 12, 2017 12:40 AM +0530 தில்லியில் தன்னிடம் இருந்து தங்கச் சங்கிலியைப் பறித்த போது எதிர்ப்புத் தெரிவித்த இளம் பெண்ணை கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டனர். அதில் அவரது இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து தில்லி காவல் துறையினர் கூறியதாவது: தில்லியைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது நண்பர் புன்ட்டி என்பவருடன் சேர்ந்து குருகிராமில் உள்ள சைபர் சிட்டிக்கு சனிக்கிழமை மாலை சென்றனர். அங்கு நண்பர் ஒருவரின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் இருவரும் பங்கேற்றனர். பின்னர்,  அங்கிருந்து காரில் இருவரும் புறப்பட்டு அதிகாலை சுமார் 5.30 மணியளவில் தௌலகுவான் பகுதி அருகே வந்து கொண்டிருந்தனர்.  அப்போது, சாலையோரம் இருந்த கழிப்பறைக்கு செல்வதற்காக புன்ட்டி காரை நிறுத்தினார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட பெண் காரில் இருந்து கழிப்பறையை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது,  மர்ம நபர்கள் நான்கு பேர் அவரை வழிமறித்து அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றனர்.  இதற்கு அந்தப் பெண் எதிர்ப்புத் தெரிவித்து கூச்சலிட்டார். இதையடுத்து, காரில் இருந்து அவரது நண்பர் இறங்கினார். அதற்குள் கொள்ளையர்களில் ஒருவர் அந்தப் பெண்ணை துப்பாக்கியால் சுட்டார். பிறகு நகையைப் பறித்துக்கொண்டு நால்வரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதில் அந்தப் பெண்ணின் காலில் குண்டு காயம் ஏற்பட்டது.
 இதையடுத்து,  தௌலகுவான் காவல் நிலையத்திற்கும், தில்லி கண்டோன்மென்ட் காவல் நிலையத்திற்கும் தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.  காயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/12/சங்கிலி-பறிப்பை-தடுத்த-பெண்-மீது-கொள்ளையர்கள்-துப்பாக்கிச்சூடு-2824490.html
2824489 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கக் கோரி தில்லியில் ஆர்ப்பாட்டம் DIN DIN Tuesday, December 12, 2017 12:39 AM +0530 தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கக் கோரி தமிழ்நாடு அனைத்திந்திய மக்கள் உரிமைப் பாதுகாப்புக் கழகம், தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் சேவை சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவை சார்பில்  தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் சேவை சங்கங்கள் கூட்டமைப்பின்  தலைவர் எம். சேகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இடம் தேர்வுக்காக மத்திய அரசு நிபுணர் குழு ஒன்றை அமைத்தது.  அந்த நிபுணர் குழு தமிழகத்தில் 5 இடங்களைத் தேர்வு செய்தது. இவற்றில், தகுதியின்  அடிப்படையில் ஓர் இடம் தேர்வு செய்யப்படும் என நிபுணர் குழு உறுதியளித்தது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள செங்கிப்பட்டியை தமிழக அரசு   கடந்த மார்ச் மாதம்  பரிந்துரை செய்தது. அதை பிரதமர் அலுவலகமும் உறுதி செய்தது. 
ஆனால், செங்கிப்பட்டியில் மருத்துவமனை அமைப்பதைத் தடுக்கும் வகையில் சில அரசியல் சக்திகள் இயங்கி வருகின்றன. எய்ம்ஸ் மருத்துவமனையை வேறு இடத்தில் கட்டுவதற்கான முயற்சிகளில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் மையப் பகுதியில் உள்ள செங்கிப்பட்டி,  அனைத்துப் பகுதி மக்களாலும் இலகுவாக அணுகக் கூடிய தூரத்தில் உள்ளது. 
அரசியல் காரணங்களுக்காக ஒட்டுமொத்த தமிழர்களின் நலனை மத்திய அரசு புறக்கணிக்கக் கூடாது. எனவே, தகுதியின் அடிப்படையில்  செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி பொது நல வழக்குத் தொடுக்க உள்ளோம் என்றார் அவர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/12/செங்கிப்பட்டியில்-எய்ம்ஸ்-மருத்துவமனை-அமைக்கக்-கோரி-தில்லியில்-ஆர்ப்பாட்டம்-2824489.html
2823878 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி டேங்க் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு DIN DIN Monday, December 11, 2017 12:30 AM +0530 தில்லியில் ஜவுளிக் கடைகள் நிறைந்த டேங்க் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது; அவற்றை உடனடியாக அகற்றுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் (என்ஜிடி) மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக உள்ளூர்வாசியான குணால் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
டேங்க் சாலையில் உரிய அனுமதி பெறாமல் ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளின் உரிமையாளர்கள், சாலையோரத்தை ஆக்கிரமித்து, இரும்பு கதவுகள் உள்ளிட்ட பல்வேறு கட்டுமானங்களை ஏற்படுத்தியுள்ளனர். இதன் காரணமாக, சாலையில் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த விவகாரத்தில், அதிகாரிகளிடம் ஏற்கெனவே பல முறை புகார் அளித்துவிட்டோம். ஆனால், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே, டேங்க் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், அந்தப் பகுதியில் காற்று, ஒலி மாசுபாட்டை கண்காணிக்கவும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு, தீர்ப்பாயத் தலைவரும் நீதிபதியுமான ஸ்வதந்தர் குமார் தலைமையிலான அமர்வு முன் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/11/டேங்க்-சாலையில்-ஆக்கிரமிப்புகளைஅகற்றக்-கோரி-பசுமைத்-தீர்ப்பாயத்தில்-மனு-2823878.html
2823876 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் அருகே சட்டவிரோத மதக் கட்டுமானங்கள்: நிலவர அறிக்கை தாக்கல் உத்தரவு DIN DIN Monday, December 11, 2017 12:29 AM +0530 மெட்ரோ ரயில் நிலையங்கள் அருகே சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள மதக் கட்டுமானங்களை அப்புறப்படுத்தக் கோரும் பொது நல மனு மீது நிலவர அறிக்கை தாக்கல் செய்யுமாறு தில்லி வளர்ச்சி ஆணையம் (டிடிஏ) மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தில்லி உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தில்லியைச் சேர்ந்த  "ஃபைட் ஃபார் ஹியூமன் ரைட்ஸ்' எனும் தன்னார்வ அமைப்பு தில்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளது.
வழக்குரைஞர் கே.ஆர். சித்ரா மூலம் தாக்கல் செய்யபட்டுள்ள இந்த மனுவில், "தில்லியில் நிர்மாண் விஹார், சரிதா விஹார் மெட்ரோ ரயில் நிலையங்களின் கீழ் பகுதியில் உள்ள பொது இடத்தில் சட்டவிரோதமாக மதக் கட்டுமானங்கள் எழுப்பப்பட்டுள்ளது. இதை அப்புறப்படுத்தவோ அல்லது இடித்து அகற்றவோ சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிடப்பட வேண்டும். அதேபோல, டிஃபன்ஸ் காலனியில் உள்ள டிடிசி பஸ் நிறுத்தத்தை ஒட்டியுள்ள பகுதியில் பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடைபாதையை ஒட்டி கோயில் கட்டப்பட்டுள்ளது. இதையும் அகற்ற உத்தரவிட வேண்டும்' என அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மிட்டல்,  நீதிபதி சி.ஹரி சங்கர் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.  மனுவை விசாரித்த நீதிபதிகள், "இந்த விவகாரம் குறித்த நிலவர அறிக்கையை, தில்லி வளர்ச்சி ஆணையம், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ஆம் தேதிக்கு முன்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.  மேலும்,  மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது போல பொது இடங்களிலோ அல்லது மெட்ரோ ரயில் நிலையங்கள் அருகிலோ ஆக்கிரமிப்புகள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என்று  நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/11/மெட்ரோ-ரயில்-நிலையங்கள்-அருகே-சட்டவிரோத-மதக்-கட்டுமானங்கள்-நிலவர-அறிக்கை-தாக்கல்-உத்தரவு-2823876.html
2823875 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டவர்கள் கைது DIN DIN Monday, December 11, 2017 12:29 AM +0530 போலீஸார் மீது துப்பாக்கியால் சுட்டதாக சட்டவிரோத கும்பலைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு துணை ஆணையர் பிரமோத் சிங் குஷ்வாஹா ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
வடகிழக்குத் தில்லியில் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் சட்டவிரோத கும்பல் குறித்து சிறப்பு பிரிவு போலீஸார் கண்காணித்து வந்தனர். இந்நிலையில், போலீஸாருக்கு சனிக்கிழமை கிடைத்த ரகசிய தகவலில்,  ஒரு கும்பலைச் சேர்ந்தவர்கள் வெல்கம் காவல் நிலையத்தில் பாதுகாவலில் வைக்கப்பட்டுள்ள ஒரு நபரை கொலை செய்யத் திட்டமிட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சிறப்புப் பிரிவு போலீஸார் வெல்கம் காவல் நிலையப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். 
இந்நிலையில், கிழக்கு தில்லி மாநகராட்சி அலுவலகம் அருகே ஜீல் பார்க் பகுதி அருகே  தில்லியில் வசிக்கும் சட்டவிரோத கும்பலைச் சேர்ந்த  ஷா ஃபைஸல் (எ) அனாஸ் (24),   டானிஸ்  (19) ,  அமான் உள்ளிட்டோர் கூடுவதாக தகவல் கிடைத்தது. மேலும், இக்கும்பல் நாசிர் கேங்கை சேர்ந்த நன்ஹே (எ) ஃபர்மன் என்பவரைக் கொலை செய்யவும் திட்டமிட்டிருப்பதாக தெரியவந்தது. 
இவர் ஒரு கொலை வழக்கு தொடர்பாக வெல்கம் காவல் நிலையத்தில் காவலில் இருந்து வருகிறார்.   இதையடுத்து, போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.  பின்னர்,  அங்கிருந்த சட்டவிரோத கும்பலை சரணடையுமாறு போலீஸார் கேட்டுக்கொண்டனர். 
சரணடைவதற்கு மாறாக  அனாஸ்,  அவருடைய சகோதரர் அமான் ஆகியோர் போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.  மேலும், டேனிஸ், அவரது கூட்டாளிகள் சிலரும் போலீஸார் மீது துப்பாக்கியால் சுட்டனர்.  இந்நிலையில்,  குண்டு துளைக்காத கவச உடைகள் அணிந்திருந்த போலீஸார், கிரிமினல்களை விரட்டிச் சென்றனர்.  அப்போது, அனாஸ்,  டேனிஸ் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.  அமான் உள்ளிட்டோர் தப்பியோடிவிட்டனர்.  பிடிபட்டவர்களிடமிருந்து 0.32 ரக துப்பாக்கி, நாட்டுத் துப்பாக்கி, 7 தோட்டாக்கள் மீட்கப்பட்டன. இது தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர். 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/11/போலீஸாரை-நோக்கி-துப்பாக்கியால்-சுட்டவர்கள்-கைது-2823875.html
2823873 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி ஃபோர்டிஸ் விவகாரம்: உயிரிழந்த சிறுமியின் தந்தை காவல்துறையில் புகார் DIN DIN Monday, December 11, 2017 12:28 AM +0530 குருகிராமில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 7 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில், அந்த மருத்துவமனை குழுமத்துக்கு எதிராக சிறுமியின் தந்தை காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
முன்னதாக, தனது மகளின் சிகிச்சையில் அலட்சியத்துடன் செயல்பட்டதாகவும், சிகிச்சைக்கு மிக அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும் ஃபோர்டிஸ் மருத்துவமனைக்கு எதிராக சிறுமியின் தந்தை ஜெயந்த் சிங் அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால், மேற்கண்ட குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்துமாறு, ஹரியாணா அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. அதன்பேரில், விசாரணை குழுவை ஹரியாணா அரசு அமைத்தது.
இந்நிலையில், சிறுமி மரணம் தொடர்பாக குருகிராம் சுஷாந்த் லோக் பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் அவரது தந்தை முறைப்படி புகார் அளித்துள்ளார். அதில், "குருகிராம் ஃபோர்டிஸ் மருத்துவமனையின் அலட்சியத்தால்தான், எனது மகள் உயிரிழக்க நேரிட்டது. இதனால், அந்த மருத்துவமனை குழுமத்தின் தலைவர், துணைத் தலைவர், 9 மருத்துவர்கள் உள்பட 18 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் இதுவரை வழக்குப் பதிவு செய்யவில்லை. இதுகுறித்து சுஷாந்த் லோக் காவல் நிலைய அதிகாரி கூறுகையில்,  "இந்த விவகாரத்தில் முதல்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், அரசால் அமைக்கப்பட்ட விசாரணை குழுவின் அதிகாரப்பூர்வ அறிக்கையின் நகலுக்காக காத்திருக்கிறோம். அது கிடைக்கப் பெற்றதும், அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/11/ஃபோர்டிஸ்-விவகாரம்-உயிரிழந்த-சிறுமியின்-தந்தை-காவல்துறையில்-புகார்-2823873.html
2823872 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி தூய்மை நகரங்கள் பட்டியலில் இடம்பெற என்டிஎம்சியில் தூய்மை இயக்கம் தொடக்கம் DIN DIN Monday, December 11, 2017 12:28 AM +0530 2018-ஆம் ஆண்டுக்கான தூய்மை நகரங்கள்  பட்டியலில் இடம்பெறுவதை நோக்கமாகக் கொண்டு புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) சார்பில் தூய்மை இயக்கம் ஞாயிற்றுக்கிழமை  தொடங்கப்பட்டது. 
இது குறித்து என்டிஎம்சி உயர் அதிகாரி கூறியதாவது: 2018-ஆம் ஆண்டு தூய்மை நகரங்கள்  பட்டியலில் இடம்பெறும் நோக்கத்தில் என்டிஎம்சி பகுதியில் தூய்மை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இயக்கம் 2018,  ஜனவரி 2-ஆம் தேதி வரை நடைபெறும். 
இதையொட்டி, கோல் மார்க்கெட், காலிபாரி மார்கில் உள்ள குடிசைப் பகுதிகளில் நடைபெற்ற கண்காட்சியை என்டிஎம்சி மருத்துவ அலுவலர் பி.கே.சர்மா தொடங்கி வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது:
தூய்மையை வலியுறுத்தும் இதுபோன்ற கண்காட்சிகளும், நாடகம், பாடல்கள் உள்ளிட்ட  விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வுகளும் மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறையின் உதவியுடன் ஏற்பாடு செய்யப்படும். இதுதவிர, புது தில்லியில் உள்ள குடிசைப் பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டம் குறித்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படும். 
மக்கும், மக்காத குப்பைகள் ஆரம்ப நிலையிலேயே பிரிக்கப்படும். தூய்மை இயக்கத்தில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.
கோல் மார்க்கெட் அலுவலர் குடியிருப்பு, பிலாஞ்சி கிராமம், சஞ்சய் கேம்ப், பி.ஆர். கேம்ப் - ரேஸ் கோர்ஸ், வால்மீகி பஸ்தி - மந்திர் மார்க், பெங்காலி மார்க்கெட்,  காகா மற்றும் பாபா நகர் பகுதிகளில் நடைபெறும்.  இந்த இயக்கத்தின்போது, குடியிருப்போர் நலச் சங்கம்,  வணிகர் நலச் சங்கம்,  அரசு,  தனியார் குடியிருப்புகளில் வசிப்போர் ஆகியோரிடம் உரையாடல் நடத்தப்படும் என்றார் அவர்.
நிகழாண்டு தூய்மை நகரங்கள் பட்டியலில்,  வடக்கு மண்டலத்தில் முதலாவது இடத்தையும், தேசிய அளவில் 7-ஆவது இடத்தையும் என்டிஎம்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/11/தூய்மை-நகரங்கள்-பட்டியலில்-இடம்பெற-என்டிஎம்சியில்-தூய்மை-இயக்கம்-தொடக்கம்-2823872.html
2823870 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி விபத்தில் இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.92 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு DIN DIN Monday, December 11, 2017 12:27 AM +0530 சாலை விபத்தில் உயிரிழந்த 46 வயது பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.92 லட்சம் இழப்பீடு வழங்குமாறு தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு தில்லியில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுக் கோரல் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு விவரம் வருமாறு: தில்லியைச் சேர்ந்தவர் சாத்னா சச்தேவா (46). இவர் தில்லியில் உள்ள நீதிமன்றத்தில் முதுநிலை தனி உதவியாளராக வேலை செய்து வந்தார்.  2015,  ஜூலையில் சாணக்கியபுரியில் நிகழ்ந்த சாலை விபத்தில் சாத்னா சச்தேவா,  அவரது கணவர் சுஷில் குமார் சச்தேவா ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து, இருவரும் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர். ஒரு வாரம் கழித்து சிகிச்சை பலனின்றி சாத்னா உயிரிழந்தார். இதையடுத்து, விபத்துக்குக் காரணமான கார் ஓட்டுநர், காருக்கு காப்பீடு செய்த நிறுவனம் ஆகியோர் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி தில்லியில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுக் கோரல் தீர்ப்பாயத்தில் சாத்னா சச்தேவா குடும்பத்தினர் வழக்குத் தொடர்ந்தனர்.
அதில் "2015, ஜூலையில் தில்லி ஜண்டேன்வாலன் கோயில் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சாத்னா, அவரது கணவர் சுஷில் குமார் சச்தேவா ஆகியோர் வந்துகொண்டிருந்தனர். சாணக்கியாபுரி பகுதியில் வந்தபோது அவ்வழியாக வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி வரப்பட்ட கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த சாத்னா பலத்த காயமடைந்து உயிரிழந்தார். அவரது கணவர் சுஷில் குமார் பலத்த காயமடைந்தார். விபத்துக்கு கார் ஓட்டுநரின் அஜாக்கிரதையும், அசுரத்தனமான வேகமும்தான் காரணம். இந்த விபத்தில் சாத்னா உயிரிழந்துவிட்டதால் அவர் ஈட்டி வந்த வருவாயும் முற்றிலும் நின்றுவிட்டது. 
ஆகவே, விபத்துக் காரணமான கார் ஓட்டுநர், காருக்கு காப்பீடு செய்த நிறுவனம் ஆகியோர் சாத்னாவுக்கும், அவரது கணவருக்கும் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது.
இந்த மனுவின் போது ஆஜரான பிரதிவாதிகள்,  "விபத்து நிகழக் காரணம் மோட்டார் சைக்கிளை அஜாக்கிரதையாக ஓட்டி வந்ததுதான்' என்று முறையிட்டனர்.  இரு தரப்பு விசாரணைக்குப் பிறகு மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுக் கோரல் தீர்ப்பாயத்தின் தலைமை அதிகாரி எம்.கே. நாக்பால் பிறப்பித்த உத்தரவு:
இந்த விபத்தில் சாத்னா உயிரிழந்ததற்கும்,  அவரது கணவர் காயமடைந்ததற்கும் கார் அஜாக்கிரதையாகவும், வேகமாகவும் ஓட்டிவரப்பட்டதுதான் காரணம் என்பது பிரேதப் பரிசோதனை அறிக்கை, காவல் துறையினரின் குற்றப்பத்திரிகை ஆகியவை மூலம் தெரியவருகிறது. 
ஆகவே, விபத்தில் உயிரிழந்த சாத்னா சச்தேவாவின் குடும்பத்துக்கு ரூ.92 லட்சத்து 36 ஆயிரத்தை காருக்கு காப்பீடு செய்த ராயல் சுந்தரம் அலையான்ஸ் காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும். அதேபோல்,  விபத்தில் காயமடைந்த அவரது கணவர் சுஷில் குமார் சச்தேவாவுக்கு ரூ.4.04 லட்சம் தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/11/விபத்தில்-இறந்த-பெண்ணின்-குடும்பத்துக்கு-ரூ92-லட்சம்-இழப்பீடு-வழங்க-உத்தரவு-2823870.html
2823503 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி தவறிழைக்கும் தனியார் மருத்துவமனைகள் மீதான நடவடிக்கை தொடரும்: கேஜரிவால் எச்சரிக்கை DIN DIN Sunday, December 10, 2017 12:48 AM +0530 "தவறிழைக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டோம்' என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை எச்சரித்தார்.
முன்னதாக, உயிரோடிருந்த குழந்தை இறந்துவிட்டதாக தவறாக அறிவிக்கப்பட்ட விவகாரத்தில், ஷாலிமார் பாக்கில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையின் உரிமத்தை தில்லி அரசு வெள்ளிக்கிழமை ரத்து செய்த நிலையில், கேஜரிவால் இவ்வாறு கூறியுள்ளார்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி), ரயில்வே ஆள்தேர்வு வாரியம் (ஆர்ஆர்பி) உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை எழுதும் தாழ்த்தப்பட்டோர் (எஸ்சி), பழங்குடியினர் (எஸ்டி), இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) மற்றும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இலவசமாகப் பயிற்சி பெற உதவும் வகையில் ஜெய் பீம் திறன் மேம்பாட்டு திட்டத்தை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை தொடங்கி வைத்தார். தில்லி தால்கடோரா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திட்டத்தை தொடக்கி வைத்து அவர் பேசியதாவது:
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் உள்ளிட்ட கடையோனுக்கும் தரமான கல்வி என்ற அம்பேத்கரின் கனவை தில்லி அரசு நனவாக்கி வருகிறது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் ஆகியோருக்கு இதுபோன்ற திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் தில்லி அரசு ஆம் ஆத்மியின் (எளியோரின்) ஆட்சியாக திகழ்கிறது. பிற மாநிலங்களின் ஆட்சி, பெரு நிறுவனங்களின் பாக்கெட்டில் உள்ளது.
தயங்கமாட்டோம்: தில்லி அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு எதிரானதல்ல. ஆனால், மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளிடம் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டாலோ, சிகிச்சையில் அலட்சியத்துடன் செயல்பட்டாலோ, சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க இந்த அரசு தயங்காது' என்றார் முதல்வர் கேஜரிவால்.
நிகழ்ச்சியில், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகளுக்கான நிதி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஎஸ்எஃப்டிசி) சார்பில் பயனாளர்களுக்கான கடன் உதவித் தொகைக்கான காசோலைகளை முதல்வர் வழங்கினார்.
இதுதொடர்பாக தில்லி அரசின் உயரதிகாரி கூறுகையில், "ஜெய் பீம் திட்டத்தில், ஆண்டு வருவாய் 6 லட்சத்துக்கும் மிகாத குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் பயன் பெற முடியும். போட்டித் தேர்வுகளுக்கும், பொறியியல், மருத்துவ நுழைவுத் தேர்வுகளுக்கும் இத்திட்டத்தின் கீழ் இலவசப் பயிற்சி வழங்கப்படும். இத்திட்டம் தகுதி வாய்ந்த கல்வி நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும். பயிற்சிக் கட்டணம் அதிகபட்சமாக ரூ. 40 ஆயிரம் வரை அளிக்கப்படும். இத்துடன் தில்லி அரசின் சார்பில் மாதந்தோறும் ரூ. 2,500 உதவித் தொகையும் வழங்கப்படும்' என்றார் அந்த அதிகாரி.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/10/தவறிழைக்கும்-தனியார்-மருத்துவமனைகள்-மீதான-நடவடிக்கை-தொடரும்-கேஜரிவால்-எச்சரிக்கை-2823503.html
2823502 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி பயணிகள் எண்ணிக்கை: டிஎம்ஆர்சியில் சரிவு! டிடிசியில் உயர்வு! DIN DIN Sunday, December 10, 2017 12:48 AM +0530 தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆர்சி), மெட்ரோ ரயில் பயணிகள் எண்ணிக்கையில் சரிவைச் சந்தித்து வரும் நிலையில், தில்லி போக்குவரத்து நிறுவன (டிடிசி) பேருந்துகளில் பயணம் செய்வோர் எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அதிகரித்துள்ளது.
தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் இந்த ஆண்டு மே 10, அக்டோபர் 10-ஆம் தேதி என இரு முறை மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தியது. கடந்த மே மாதத்துக்கு முன்பு இருந்த கட்டணத்துடன் ஒப்பிடுகையில், இப்போதுள்ள கட்டணம் இரு மடங்கு உயர்ந்துள்ளது.
மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டண உயர்வு, முதல் முறை அமலுக்கு வந்த போது, கடந்த ஜூன் மாதம் அதில் பயணம் செய்தோர் எண்ணிக்கை நாளொன்று 1.5 லட்சம் குறைந்தது. இதையடுத்து, கடந்த அக்டோபரில் இரண்டாவது முறை டிக்கெட் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, மெட்ரோ ரயில் பயணிகள் எண்ணிக்கை தினமும் சராசரியாக 3.2 லட்சம் குறைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
பயணிகள் எண்ணிக்கையில் டிஎம்ஆர்சிக்கு ஏற்பட்டுள்ள சரிவு, தில்லி போக்குவரத்து நிறுவனத்துக்கு சாதகமாக மாறியுள்ளது என்பது புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. மெட்ரோ ரயில்களில் பயணம் செய்தவர்கள், தற்போது அதிகக் கட்டணம் செலுத்துவதைத் தவிர்த்து குறைந்த கட்டணம் உள்ள போக்குவரத்து சேவையைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளனர் எனத் தெரிகிறது. இதன் காரணமாக அவர்களில் பெரும்பாலானோர் தில்லி போக்குவரத்து நிறுவனப் பேருந்துகளில் பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர்.
கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி, டிடிசி பேருந்துகளில் நாளொன்றுக்கு பயணம் செய்தோர் எண்ணிக்கை சராசரியாக 30.80 லட்சம் என இருந்தது. இது அக்டோபரில் 31.30 லட்சம் என உயர்ந்தது. மேலும், கடந்த நவம்பர் மாத நிலவரப்படி டிடிசி பேருந்துகளில் தினமும் பயணம் செய்தோர் எண்ணிக்கை 33.50 லட்சமாக உயர்ந்துள்ளது. அதாவது செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான 3 மாத காலத்தில் டிடிசியில் பயணம் செய்தோர் எண்ணிக்கை நாளொன்று சராசரியாக 2.7 லட்சம் என உயர்ந்துள்ளது.
அதே சமயம் கடந்த ஆகஸ்டில் டிஎம்ஆர்சி வெளியிட்ட புள்ளி விவரத்தில் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்தோர் எண்ணிக்கை நாளொன்றுக்கு சராசரியாக 3.2 லட்சம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தில்லி மெட்ரோ ரயிலில் தினமும் பயணம் செய்தோர் எண்ணிக்கை ஆகஸ்டில் 27 லட்சம், செப்டம்பரில் 27.40 லட்சம், அக்டோபரில் 24.20 லட்சம் என இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த நவம்பர் மாதத்தில் இருந்த மெட்ரோ ரயில் பயணிகள் எண்ணிக்கை குறித்த தகவலை டிஎம்ஆர்சி வெளியிடவில்லை.
மொத்தத்தில் புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால், டிஎம்ஆர்சி இழந்த சுமார் 3.2 லட்சம் பயணிகளில் 2.70 லட்சம் பேர் டிடிசி பேருந்து சேவையைப் பயன்படுத்துவதாகக் கணக்கில் கொள்ளலாம்.
டிடிசி பயணிகள் எண்ணிக்கை உயர்ந்தது குறித்து அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி கூறியதாவது: கடந்த அக்டோபர் முதல் டிடிசி பேருந்துகளில் பயணம் செய்வோர் எண்ணிக்கை கணிசமான அளவு உயர்ந்துள்ளது.
குறிப்பாக கடந்த மே மாதம் மெட்ரோ ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டதிலிருந்தே டிடிசியில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதிலிருந்து பயணிகளின் தேவைப்பாட்டை உணரமுடிகிறது.
அதே சமயம் தில்லி சாலைகளில் இயக்கப்படும் டிடிசி பேருந்துகளின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 3,944 ஆகக் குறைந்துள்ளது. இதிலும் சில பேருந்துகளை இயக்க முடியாத சூழல் நிலவுகிறது. பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தினமும் 300 முதல் 400 பேருந்துகள் வரை இயக்கப்படாமல் உள்ளன. தற்போது பயணிகள் எண்ணிக்கை உயர்வதற்கு தகுந்தாற்போல டிடிசி பேருந்து சேவையை அதிகரிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. இதனால், தில்லியில் மேலும் கூடுதலாக 4,000 பேருந்துகளை இயக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில், குறைந்தபட்சம் 90 சதவீதம் பேருந்துகளை தினமும் சேவையில் ஈடுபடுத்தப்படுவதை உறுதிப்படுத்த முயற்சித்து வருகிறோம். மேலும், தினமும் பேருந்துகளின் சேவையையும் கூடுதலாக்க முயன்று வருகிறோம். கடந்த மே மாதம் வரையிலும் ஒவ்வொரு மாதமும் சராசரியாக சுமார் 1 லட்சம் டிராவல் பாஸ்கள் விநியோகிக்கப்பட்டு வந்தன. அந்த எண்ணிக்கை இப்போது 1.5 லட்சமாக உயர்ந்துள்ளது.
மேலும், பஸ் பாஸ் விநியோகமும் உயர்ந்துள்ளது. மெட்ரோ ரயில் கட்டணத்தை டிஎம்ஆர்சி உயர்த்தியதால் மெட்ரோ ரயில் பயணிகளில் பலர் டிடிசி பேருந்து சேவைக்கு மாறியுள்ளனர் என்பது தெளிவாகிறது. இது இயல்பான ஒன்றுதான் என்றார் அந்த அதிகாரி.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/10/பயணிகள்-எண்ணிக்கை-டிஎம்ஆர்சியில்-சரிவு-டிடிசியில்-உயர்வு-2823502.html
2823500 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி தாய், தங்கையைக் கொடூரமாக கொன்ற சிறுவன் கைது: படிக்கச் சொல்லி திட்டியதால் கொலை செய்ததாக வாக்குமூலம் DIN DIN Sunday, December 10, 2017 12:47 AM +0530 நொய்டாவில் உள்ள கௌர் சிட்டியில் வசித்து வந்த 15 வயது சிறுவன் தனது தாய், தங்கையை கிரிக்கெட் மட்டை, கத்திரிக்கோல், பீட்சாவை வெட்டும் கத்திரி ஆகியவற்றைக் கொண்டு கொடூரமாக கொலை செய்துள்ளார்.
தன்னை படிக்கச் சொல்லி திட்டியதால் ஏற்பட்ட கோபத்தால் இந்தச் கொலை செயலைச் செய்ததாக ஒப்புதல் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக போலீஸார் கூறினர். இந்தச் சம்பவம் தொடர்பாக நொய்டா காவல் துறையினர் மேலும் தெரிவித்ததாவது:
நொய்டாவில் உள்ள கௌர் சிட்டியில் உள்ள குடியிருப்பில் அஞ்சலி அகர்வால் (42), கனிக்கா (12) ஆகிய இருவர் கடந்த திங்கள்கிழமை இரவு கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அந்த வீட்டில் இருந்த சிறுவன் மட்டும் காணாமல் போய்யிருந்தார். அவரை தேடி வந்த போலீஸார் வாராணசியில் கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், கடந்த திங்கள்கிழமையன்று சரியாக படிக்கவில்லை என்று கூறி அவரது தாய் அஞ்சலி திட்டியதாகவும், இதனால் கோபமடைந்து அன்றைய தினம் இரவு 11 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்த தாயையும், தங்கையையும் கொலை செய்துவிட்டு, பின்னர் ரத்தக் கறை படிந்த துணிகளை மாற்றிக் கொண்டு, வீட்டில் இருந்த நகை, பணத்தை எடுக்துக் கொண்டு காஸ் டாக்ஸியில் சென்றதாக தெரிவித்தார். மேலும், கிரிக்கெட் மட்டை, கத்திரிக்கோல், பீட்சாவை வெட்டும் கத்திரி ஆகியவற்றைக் கொண்டு இருவரையும் கொலை செய்ததாக சிறுவன் ஒப்புக் கொண்டார்.
வீட்டில் இருந்து புது தில்லி ரயில் நிலையத்துக்கு சென்று, அங்கிருந்து சண்டீகர், சிம்லாவுக்கு சென்றுவிட்டு, வெள்ளிக்கிழமை முகல் சராய்க்கு திரும்பி, அங்கிருந்து வாராணசிக்கு சென்றதாகவும், அங்கு போலீஸார் தன்னை கைது செய்ததாகவும் அவர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
தனது தாயின் செல்லிடப்பேசியை சிறுவன் வைத்திருந்ததால் அதன் சிக்னலை வைத்து பிடித்தோம் என்று போலீஸார் தெரிவித்தனர்.
மேலும் போலீஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், அந்த சிறுவன் கொலைக் கும்பல் கேம்களை செல்லிடப்பேசிகளில் விளையாடி வந்ததாகவும், வீட்டிலும் இதுபோன்ற விளையாட்டு சாதனங்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
உயிரிழந்த அஞ்சலியின் தலையில் 7 பலத்த காயங்களும், கனிக்காவின் தலையில் 5 பலத்த காயங்களும் இருந்ததாக உடல்கூறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தலைமறைவாக இருந்த சிறுவனை வீடு திரும்ப அவரது உறவினர்கள் அழைப்பு விடுத்ததுடன், அவர் யாரையும் கொலை செய்யமாட்டார் என்று தெரிவித்திருந்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/10/தாய்-தங்கையைக்-கொடூரமாக-கொன்ற-சிறுவன்-கைது-படிக்கச்-சொல்லி-திட்டியதால்-கொலை-செய்ததாக-வாக்குமூலம்-2823500.html
2823499 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி நரேலா சம்பவம்: உயர்நிலை விசாரணைக்கு உதவ குடியரசுத் தலைவரிடம் ஸ்வாதி மாலிவால் கோரிக்கை DIN DIN Sunday, December 10, 2017 12:47 AM +0530 நரேலா சம்பவம் தொடர்பாக உயர்நிலை விசாரணைக்கு உதவ வேண்டும் எனக் கோரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் தில்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் ஞாயிற்றுக்கிழமை கோரிக்கை விடுத்தார்.
வட மேற்கு தில்லியில் உள்ள நரேலாவில் சட்டவிரோத சாராய விற்பனையைத் தடுக்க தில்லி மகளிர் ஆணையத்திற்கு (டிசிடபிள்யு) உதவிய பெண் பிரவீண் (30) மீது ஒரு கும்பல் இரும்புக் கம்பியால் கொடூரமாகத் தாக்கி, ஆடைகளைக் கிழித்து அவமானப்படுத்தியது. இது தொடர்பாக போலீஸார் 6 பெண்களை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தலைநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நரேலா சம்பவம் தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை தில்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் சனிக்கிழமை சந்தித்தார். இதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தில்லி மகளிர் காவல் ஆணையத்திற்கு (டிசிடபிள்யு) உதவிய பெண் பிரவீண், போலீஸார் முன்னிலையில் தாக்கப்பட்டு, ஆடைகள் கிழிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டது குறித்து குடியரசுத் தலைவரிடம் எடுத்துரைத்தேன். சட்டவிரோதமாகச் செயல்படும் சாராய கும்பலைக் கண்டு தில்லி காவல்துறை அஞ்சி வருகிறது. தலைநகர் தில்லியில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து வருவதையும் எடுத்துரைத்தேன். நரேலா சம்பவம் தொடர்பாக உயர்நிலைக் குழுவை அமைக்க உதவிடுமாறும் கோரிக்கை விடுத்தேன். கோரிக்கையை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகத் குடியரசுத் தலைவர் தெரிவித்தார் என்றார் ஸ்வாதி மாலிவால்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/10/நரேலா-சம்பவம்-உயர்நிலை-விசாரணைக்கு-உதவ-குடியரசுத்-தலைவரிடம்-ஸ்வாதி-மாலிவால்-கோரிக்கை-2823499.html
2823498 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி முகர்பா சௌக் மேம்பாலத்தை அழகுபடுத்த தில்லி அரசு முடிவு DIN DIN Sunday, December 10, 2017 12:47 AM +0530 தில்லியில் ஜிடி கர்னால் ரோடு - புற வளைவுச் சாலை சந்திப்பில் உள்ள எப்போதும் மிகவும் பரபரப்பாகக் காணப்படும் முகர்பா செளக் மேம்பாலத்தை அழகுபடுத்த தில்லி அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து தில்லி அரசின் பொதுப்பணித் துறை துணைச் செயலாளர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: முகர்பா செளக் மேம்பாலத்தை மேம்படுத்துவது தொடர்பாக பொதுப்பணித் துறையின் செயலாளாரிடம் இருந்து கடந்த 29-ஆம் தேதி பரிந்துரை கிடைக்கப் பெற்றுள்ளது. இதன்படி, முகர்பா மேம்பாலத்தில் உள்ள சாலையின் மேற்பகுதியை மீண்டும் வேயவும், நடைபாதை, மேம்பாலத்தின் தடுப்புகள், பெயர்ப் பலகைகள், பூங்கா ஆகியவற்றை சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு ரூ. 6.9 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக எழுத்துப்பூர்வமான தகவல் வடக்கு மண்டலத் தலைமைப் பொறியாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார் அவர்.
முகர்பா செளக் மேம்பாலம்: ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் முகர்பா செளக் மேம்பாலம் கட்டப்பட்டு 2013-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. தில்லியில் மிகவும் பரபரப்புடன் காணப்படும் இந்த மேம்பாலம் ஹரியாணா, பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலை எண்-1 மூலம் தலைநகரை இணைக்கும் நுழைவாயிலாக உள்ளது. மேலும், நரேலா உள்ளிட்ட நகரின் கிராமப்புறங்களையும் இந்த மேம்பாலம் இணைக்கிறது.
விகாஸ்புரி தொடங்கி வாஜிராபாத் வரையிலான சிக்னலற்ற மேம்பாலத் திட்டத்தின் ஒரு பகுதியாக புற வளைவுச் சாலையில் மதுபன் செளக் முதல் முகர்பா செளக் வரையில் 3.8 கி.மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்ட "எலிவேட்டட் காரிடார்' சாலையை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கடந்த ஆண்டு தொடக்கத்தில் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, பிரசாந்த் விஹார், ஷாலிமார் பாக் கிராசிங், பாத்லி ஆகிய பகுதிகளுக்கு செல்வோர் மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்நிலையில், முகர்பா செளக் மேம்பாலத்தை அழகுப்படுத்தி மேம்படுத்த தில்லி அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/10/முகர்பா-சௌக்-மேம்பாலத்தை-அழகுபடுத்த-தில்லி-அரசு-முடிவு-2823498.html
2823497 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி ஓடும் காருக்குள் பலாத்கார முயற்சி: வழிப்பறி புகாராக அளிக்க நிர்பந்தித்ததாக பெண் குற்றச்சாட்டு DIN DIN Sunday, December 10, 2017 12:47 AM +0530 குருகிராமில் ஓடும் காருக்குள் தன்னை 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக இளம் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். மேலும், பாலியல் புகாருக்கு பதிலாக வழிப்பறி புகார் அளிக்கும்படி காவல்துறையினர் தன்னை கட்டாயப்படுத்தியதாகவும் அவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஹிமாசலப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவரான அந்த இளம்பெண், குருகிராமின் சங்கர் சௌக் பகுதியிலுள்ள நிறுவனமொன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தொடர்பாக அந்த பெண் கூறியதாவது:
கடந்த வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் பணி முடிந்து, ஹீரோ ஹோண்டா சௌக் பகுதிச் செல்வதற்காக வாடகை காருக்கு காத்திருந்தேன். அப்போது, ஒரு கார் எனது அருகே வந்து நின்றது. அதில், ஓட்டுநர் தவிர பின்னிருக்கையில் இருவர் அமர்ந்திருந்தனர். தாங்களும் ஹீரோ ஹோண்டா சௌக் பகுதிக்குதான் செல்வதாக அவர்கள் கூறியதை நம்பி, காரில் ஏறினேன். குருகிராம் - தில்லி விரைவுச் சாலையில் ஜார்சா சௌக் அருகே சென்றபோது, 3 பேரும் என்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கத் தொடங்கினர். நான் எதிர்ப்பு தெரிவித்ததால், எனது கை, கால் கட்டிப் போட்டு, என்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர்.
இதனிடையே, மோட்டார் சைக்கிளில் இரண்டு காவலர்கள் வருவதை பார்த்த அவர்கள், ராஜீவ் சௌக் பகுதியை நோக்கி காரை வேகமாக ஓட்டிச் சென்றனர். பின்னர், எனது செல்லிடப்பேசி, பணப்பையை பறித்துக் கொண்டு, காரிலிருந்து வெளியே தள்ளிவிட்டு தப்பினர்.
அந்த வழியாக சென்ற ஒருவரின் உதவியால் எனது கணவரைத் தொடர்பு கொண்டு வரவழைத்தேன். பின்னர், சம்பவம் தொடர்பாக புகார் அளிப்பதற்காக, செக்டர் 40 பகுதி காவல் நிலையத்துக்கு இருவரும் சென்றோம். அங்கிருந்த காவலர்கள், எங்களை 2 மணி நேரம் காக்க வைத்தனர். அத்துடன், பாலியல் பலாத்கார புகாரை தவிர்த்துவிட்டு, வழிப்பறி புகாரை மட்டும் அளிக்கும்படி கட்டாயப்படுத்தியதுடன், பாலியல் பலாத்கார முயற்சி நடைபெற்றதற்கான ஆதாரத்தை காட்டும்படி என்னிடம் கேட்டனர். பின்னர், வழிப்பறி புகாரை மட்டும் அளிக்க வைத்து, அதன் பேரில் வழக்குப் பதிவு செய்தனர் என்று அந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக குருகிராம் காவல்துறை செய்தித் தொடர்பாளர் மணீஷ் சேகல் கூறுகையில், "அந்த பெண், வழிப்பறி புகார் மட்டுமே அளித்துள்ளார். பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகாரில் குறிப்பிடவில்லை. எனினும், சம்பவம் தொடர்பாக அந்த பெண்ணிடம் கேட்டறிவதற்காக காவல்துறை அதிகாரி ஒருவரும், பெண் மனநல ஆலோசகர் ஒருவரும் அந்த பெண்ணை அணுகியுள்ளனர். இச்சம்பவத்தில் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும்' என்றார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/10/ஓடும்-காருக்குள்-பலாத்கார-முயற்சி-வழிப்பறி-புகாராக-அளிக்க-நிர்பந்தித்ததாக-பெண்-குற்றச்சாட்டு-2823497.html
2823496 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி ரத்த தானம் செய்ய வடக்கு தில்லி மக்களுக்கு மேயர் அழைப்பு DIN DIN Sunday, December 10, 2017 12:46 AM +0530 வடக்கு தில்லியில் உள்ள மக்கள் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என்று மாநகராட்சி மேயர் ப்ரீத்தி அகர்வால் அழைப்பு விடுத்தார். ரோஹிணி செக்டர் 10-இல் தனியார் வங்கி ஏற்பாடு செய்த ரத்ததான முகாமில் கலந்து கொண்டு பேசுகையில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
அவர் மேலும் பேசுகையில், மனித குலத்திற்கு நாம் ஆற்றக் கூடிய மகத்தான பணிகளில் ரத்த தானமும் ஒன்றாகும். ரத்த தான முகாம்களில் ஒவ்வொரு குடிமகனும் கலந்து கொள்ள வேண்டும். வடக்கு தில்லி மக்களை முழு மூச்சுடன் ரத்த தானம் செய்ய முன்வருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார். இந்த நிகழ்வில் வங்கியின் மூத்த அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/10/ரத்த-தானம்-செய்ய-வடக்கு-தில்லி-மக்களுக்கு-மேயர்-அழைப்பு-2823496.html
2823495 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி தெற்கு தில்லி மாநகராட்சியில் புதிய வரிகளுக்கு வாய்ப்பில்லை DIN DIN Sunday, December 10, 2017 12:46 AM +0530 தெற்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்பட வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. தெற்கு தில்லி மாநகராட்சியின் 2017-18 நிதியாண்டின் திருத்தப்பட்ட நிதிநிலை மதிப்பீட்டு அறிக்கை, 2018-19 நிதியாண்டுக்கான உத்தேச நிதி நிலை மதிப்பீட்டு அறிக்கை ஆகியவற்றை அதன் ஆணையர் புனீத் கோயல் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார் அந்த அறிக்கையில் புதிதாக எந்த வரியும் விதிக்கப்படவில்லை. ஆனால், சொத்து வரி சிறிதளவு உயரும் எனத் தெரிகிறது.
கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த நிதி நிலைஅறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
2018-19 நிதியாண்டு உத்தேச நிதி நிலை மதிப்பீடு ரூ.3,160 கோடியாகும். வகுப்பு-ஏ மற்றும் வகுப்பு-பி சொத்துகளுக்கு சொத்து வரியை 12 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மேலும், வகுப்பு சி, டி, இ சொத்துகளுக்கு 11 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும், எஃப், ஜி, எச் வகுப்பு சொத்துகளுக்கு 7 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாகவும் சொத்துவரியை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
சொத்து வரியில் 1 சதவீதம் கல்வி செஸ் வரியாக வசூலிக்கப்படவுள்ளது. இது தெற்கு தில்லி மாநகராட்சியின் பள்ளிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த பயன்படுத்தப்படவுள்ளது. காற்று மாசுவைக் கருத்தில் கொண்டு, தெற்கு தில்லி அலுவலகத் தேவைகளுக்காக 50 மின்சார வாகனங்கள் கொள்முதல் செய்து பயன்படுத்தப்படவுள்ளன. இதன் மூலம் பிரதமர் மோடியின் மின் - வாகனத் திட்டத்தில் இணையும் முதல் மாநகராட்சி என்ற பெருமையை தெற்கு தில்லி மாநகராட்சி பெறவுள்ளது.
77 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் கட்டப்படவுள்ளன. 465 வகுப்பறைகளில் பசும் பலகைகள் அமைக்கப்படவுள்ளன. கல்வித் துறைக்கெனத் தனியாக இணையச் செயலித் தளம் அமைக்கப்படும். சீருடை மானியம் ரூ.600-இல் இருந்து ரூ. 1,100 ஆக அதிகரிக்கப்படும். கணினி மூலம் கற்கக் கூடிய ஆய்வகங்கள் பள்ளிகளில் அமைக்கப்படும். அனைத்துப் பள்ளிகளிலும் மழலையர் பிரிவுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள 10 பள்ளிகளில் விளையாட்டு வளாகங்கள் அமைக்கப்படவுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/10/தெற்கு-தில்லி-மாநகராட்சியில்-புதிய-வரிகளுக்கு-வாய்ப்பில்லை-2823495.html
2823493 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி செங்கோட்டை, சாந்தினி செளக் பகுதியில் துணைநிலை ஆளுநர் ஆய்வு: தூய்மைப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு DIN DIN Sunday, December 10, 2017 12:46 AM +0530 வடக்கு தில்லி மாநகராட்சிக்கு உள்பட்ட செங்கோட்டை, சாந்தினி செளக், ஜாமா மசூதி ஆகிய இடங்களில் தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் சனிக்கிழமை ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வில் வடக்கு தில்லி மாநகராட்சி, பொதுப்பணித் துறை, தொல்பொருள் ஆய்வுத் துறை, தில்லி அரசு, எம்.டி.என்.எல்., பி.எஸ்.இ.எஸ். ஜமுனா பவர் லிமிடெட் ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வில் செங்கோட்டையின் முகப்பு பகுதியை மேம்படுத்துவதோடு அருகில் உள்ள பூங்காக்களைத் தூய்மையாகப் பேணவும், பூங்காக்களில் பூச்செடிகளை வளர்க்கவும் தொல்பொருள் ஆய்வுத் துறைக்கு துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டார்.
ஜாமா மசூதி, சாந்தினி சௌக், செங்கோட்டை ஆகியவற்றுக்குச் செல்லும் சாலைகளை மேம்படுத்த பொதுப்பணித் துறை,
தில்லி தேசியத் தலைநகர் பகுதி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
மேலும், இப்பகுதிகளில் ஒரு நாளைக்கு இரண்டு முறை துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளவும் சாந்தினி செளக், மீனா பஜார், தரம்புரா ஆகிய இடங்களில் உள்ள கடைகளுக்கு அங்குள்ள வணிக அமைப்புகளுடன் இணைந்து பெயர்ப் பலகை
வைக்கவும் வடக்கு தில்லி மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இப்பகுதிகளில் அலங்கோலமாகத் தொங்கிக் கொண்டுள்ள மின்சாரம் மற்றும் தொலைபேசி கேபிள்களை இம்மாதம் 31- ஆம் தேதிக்குள் அகற்ற எம்.டி.என்.எல்., தனியார் மின்விநியோக நிறுவனமான பி.எஸ்.இ.எஸ். யமுனா பவர் லிமிடெட் ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டார். மேலும், ஜாமா மசூதி நுழைவு வாயில் எண் 3-இல் உள்ள தேவையற்ற
பதாகைகள், சுவரொட்டிகள் போன்றவற்றை அகற்றுமாறும் வடக்கு தில்லி மாநகராட்சிக்கு துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டார்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/10/செங்கோட்டை-சாந்தினி-செளக்-பகுதியில்-துணைநிலை-ஆளுநர்-ஆய்வு-தூய்மைப்படுத்த-அதிகாரிகளுக்கு-உத்தரவு-2823493.html
2823491 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி பார்வையற்றோர் நிவாரண சங்கம் அருகே சட்டவிரோதமாக நிறுத்தப்படும் வாகனங்கள்: அறிக்கை கேட்கிறது உயர் நீதிமன்றம் DIN DIN Sunday, December 10, 2017 12:46 AM +0530  தில்லியின் லால் பகதூர் சாஸ்திரி மார்க் பகுதியில் உள்ள பார்வையற்றோர் நிவாரண சங்கம் அருகே வாகனங்கள் சட்டவிரோதமாக நிறுத்திவைக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து நிலவர அறிக்கை தாக்கல் செய்யும்படி, புது தில்லி முனிசிபல் கவுன்சிலுக்கும் (என்டிஎம்சி), காவல்துறைக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக மூத்த வழக்குரைஞர் துஷ்யந்த் தவே, தில்லி உயர் நீதிமன்றத்துக்கு கடந்த அக்டோபர் மாதம் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், "லால் பகதூர் சாஸ்திரி மார்க் பகுதியிலுள்ள பார்வையற்றோர் நிவாரண சங்கம், பார்வையற்றோருக்கு கல்வி மற்றும் தொழிற்பயிற்சிகளை அளித்து வருகிறது. இதனால், ஏராளமானோர் பார்வையற்றோர், அந்த சங்கத்துக்கு வந்து செல்கின்றனர். ஆனால், அப்பகுதி சாலையின் நடைபாதைகளில் சட்டவிரோதமாக இரு சக்கர வாகனங்கள் நிறுத்திவைக்கப்படுகின்றன. இதனால், பார்வையற்றோர் மிகுந்த அவதிக்கு ஆளாகின்றனர். மேலும், சாலையோரத்தில் மேற்கொள்ளப்படும் வர்த்தக நடவடிக்கைகளாலும், அதிவேகமாக பயணிக்கும் வாகனங்களாலும் அவர்கள் சாலையை கடப்பதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்' என்று குற்றம்சாட்டியிருந்தார்.
அந்தக் கடிதத்தை பொதுநல வழக்காக உயர் நீதிமன்றம் பதிவு செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மிட்டல், நீதிபதி சி.ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணை நடைபெற்றது. அப்போது, என்டிஎம்சிக்கும், காவல்துறைக்கும் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:
பார்வையற்றோர் நிவாரண சங்கம் அமைந்துள்ள சாலையில் வர்த்தக நடவடிக்கைகளை அனுமதிக்க கூடாது. பார்வையற்றோர் சிரமமின்றி சென்று வரும் வகையில், அந்தப் பகுதியை ஒழுங்குபடுத்த வேண்டும். மேற்கண்ட கடிதத்தில் எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக என்டிஎம்சியும் காவல்துறையும் நிலவர அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை ஜனவரி 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/10/பார்வையற்றோர்-நிவாரண-சங்கம்-அருகே-சட்டவிரோதமாக-நிறுத்தப்படும்-வாகனங்கள்-அறிக்கை-கேட்கிறது-உயர்-நீதி-2823491.html
2823490 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி மேக்ஸ் மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்யப்பட்டது சர்வாதிகார நடவடிக்கை: தில்லி மருத்துவ சங்கம் விமர்சனம் DIN DIN Sunday, December 10, 2017 12:45 AM +0530 உயிரோடிருந்த பச்சிளம் குழந்தை இறந்துவிட்டதாக தவறாக அறிவிக்கப்பட்ட விவகாரத்தில், ஷாலிமார் பாக் பகுதியிலுள்ள மேக்ஸ் மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்த தில்லி அரசின் நடவடிக்கை சர்வாதிகாரமானது என்று தில்லி மருத்துவ சங்கம் (டிஎம்ஏ) விமர்சித்துள்ளது.
முன்னதாக, மேற்கண்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதற்காக, 3 வல்லுநர்கள் அடங்கிய குழுவை, தில்லி அரசு அமைத்திருந்தது. அந்த குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில், ஷாலிமார் பாக்கிலுள்ள மேக்ஸ் மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்து, தில்லி அரசு வெள்ளிக்கிழமை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி, புதிதாக நோயாளிகளை அனுமதிப்பதையும், புறநோயாளிகளுக்கான மருத்துவ சேவையையும் உடனடியாக நிறுத்தும்படி அந்த மருத்துவமனைக்கு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், தில்லி அரசின் இந்த நடவடிக்கை சர்வாதிகாரமானது; நியாயமற்றது என்று தில்லி மருத்துவ சங்கம் விமர்சித்துள்ளது.
இதுதொடர்பாக அச்சங்கத்தின் அஸ்வினி கோயல் சனிக்கிழமை கூறியதாவது: தில்லியில் 80 சதவீத மருத்துவ சேவையை தனியார் மருத்துவமனைகள்தான் வழங்குகின்றன. மேற்கண்ட விவகாரத்தில், இந்திய மருத்துவ கவுன்சிலின் விசாரணை அறிக்கை ஓரிரு நாளில் வெளியாக உள்ளது. அதுவரைகூட காத்திருக்காமல், மேக்ஸ் மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்த தில்லி அரசின் நடவடிக்கை சர்வாதிகாரமானது. அந்த நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று அரசை கேட்டுக் கொள்கிறோம். தேவைப்பட்டால், வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்படும்.
தவறிழைத்த மருத்துவர் அல்லது ஊழியர்களுக்கு எதிராகவே விசாரணை நடத்தப்பட வேண்டும். அதனைவிடுத்து, ஒட்டுமொத்த மருத்துவமனையின் செயல்பாட்டை முடக்கியது தவறானது என்றார் அவர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/10/மேக்ஸ்-மருத்துவமனையின்-உரிமம்-ரத்து-செய்யப்பட்டது-சர்வாதிகார-நடவடிக்கை-தில்லி-மருத்துவ-சங்கம்-விமர்-2823490.html
2823489 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி முஸ்லிம் தொழிலாளி படுகொலையை கண்டித்து மனிதச் சங்கிலி போராட்டம் DIN DIN Sunday, December 10, 2017 12:45 AM +0530 ராஜஸ்தானில் முஸ்லிம் தொழிலாளி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, தில்லியில் சனிக்கிழமை மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
முகமது அஃப்ரசுல் கான் (48) என்ற அந்த தொழிலாளி, மேற்கு வங்க மாநிலத்தின் மால்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர், ராஜஸ்தான் மாநிலம், ராஜ்சமந்த் மாவட்டத்துக்கு கூலி வேலைக்காக சென்றிருந்தார்.
இந்நிலையில், முகமது அஃப்ரசுலை சரமாரியாக வெட்டியும், தீ வைத்து எரித்தும் ஒருவர் கொடூரமாக கொலை செய்யும் காட்சிகள் அடங்கிய விடியோ, சமூக வலைதளங்களில் சில தினங்களுக்கு முன் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. "லவ் ஜிகாத்'தில் இருந்து ஒரு பெண்ணை காப்பாற்றுவதற்காக இக்கொலையை தாம் செய்ததாகவும், பெரும்பான்மை சமூகத்தினருக்கு எதிராக செயல்பட்டால், இந்த முடிவுதான் ஏற்படும் என்றும் அந்த விடியோவில் கொலையாளி பேசியுள்ளார். இதுதொடர்பாக, ரேகர் என்பவரை, காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், அஃப்ரசுல் படுகொலை சம்பவத்தைக் கண்டித்து, தில்லியின் கனாட் பிளேஸ் பகுதியில் சனிக்கிழமை மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள், சமூக நல ஆர்வலர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மனித சங்கிலியில் பங்கேற்ற தில்லி பல்கலைக்கழக பேராசிரியர் அபூர்வானந்த் கூறுகையில், "மதத்தின் பெயரில் எவரையும் கொலை செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இச்சம்பவத்துக்கு எதிராக அரசியல் கட்சிகள் போராட வேண்டும்' என்றார்.
இதேபோல, தில்லியில் உள்ள ராஜஸ்தான் மாநில அரசு இல்லத்துக்கு வெளியே பல்வேறு முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், மாணவ அமைப்பினரும் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, அஃப்ரசுல் படுகொலை சம்பவத்துக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அஃப்ரசுலின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்று மம்தா பானர்ஜி வெள்ளிக்கிழமை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/10/முஸ்லிம்-தொழிலாளி-படுகொலையை-கண்டித்து-மனிதச்-சங்கிலி-போராட்டம்-2823489.html
2823488 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி ஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: நேர்மையான தேர்வர்களுக்கு நீதி கிடைக்கும் : விஜேந்தர் குப்தா DIN DIN Sunday, December 10, 2017 12:45 AM +0530 தொடக்கப்பள்ளி ஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலருக்கு துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து,
பாதிக்கப்பட்ட நேர்மையான தேர்வர்களுக்கு நீதி கிடைக்கும் என்று சட்டப்பேரவைத் தலைவர் விஜேந்தர் குப்தா தெரிவித்தார்.
கோரிக்கை: தேர்வு வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படும் புகாரைத் தொடர்ந்து, தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு தில்லி சார் நிலை அரசு பணியாளர்கள் தேர்வாணையம் (டி.எஸ்.எஸ்.எஸ்.பி. ) அக்டோபர் மாதம் 29- ஆம் தேதி நடத்திய தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக மத்திய புலனாய்வு துறை (சி.பி.ஐ.)விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரி தில்லி சட்டப்பேரவை பாஜக உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான விஜேந்தர் குப்தா தலைமையில் அக்கட்சிஎம்எல்ஏக்கள் ஓ.பி.சர்மா, ஜெகதீஷ் பிரதான் ஆகியோர் துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜாலை கடந்த 5-ஆம் தேதி சந்தித்து மனு அளித்தனர்.
உத்தரவு: இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு தில்லி தலைமைச் செயலருக்கு துணைநிலை ஆளுநர் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
இது தொடர்பான தகவல் சட்டப்பேரவை எதிர்க் கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தாவுக்கும் துணைநிலை ஆளுநர் அலுவலத்திலிருந்து கடிதம் வாயிலாகத் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, விஜேந்தர் குப்தா ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், "எதிர்க்கட்சியின் கோரிக்கையை ஏற்று வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலருக்கு துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். எனவே, இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நேர்மையான தேர்வர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது' என்றார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/10/ஆசிரியர்-தகுதித்-தேர்வு-வினாத்தாள்-கசிந்த-விவகாரம்-நேர்மையான-தேர்வர்களுக்கு-நீதி-கிடைக்கும்--விஜேந-2823488.html
2823487 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி என்டிஎம்சியில் பார்க்கிங் மாஃபியாக்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை தேவை: மேயர் DIN DIN Sunday, December 10, 2017 12:44 AM +0530 வடக்கு தில்லி மாநகராட்சியில் உரிய அனுமதியின்றி பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் பார்க்கிங் மாஃபியாக்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வடக்கு தில்லி மாநகராட்சி மேயர் ப்ரீத்தி அகர்வால் கேட்டுக் கொண்டுள்ளார்.
வடக்கு தில்லி மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவதற்குப் போதுமான வாகன நிறுத்துமிடங்கள் இல்லை. வாகனங்களைப் பாதுகாப்பாக நிறுத்த முடியாமல் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். பார்க்கிங் என்ற பெயரில் இயங்கி வரும் மோசடிக் கும்பல்கள் மக்களிடம் அதிகக் கட்டணம் வசூலித்து வருகின்றனர். மாநகராட்சிப் பார்க்கிங் வசதிகள் போதுமான அளவு இல்லாததால் இந்தச் சட்டவிரோதக் கும்பல்கள் தலைதூக்கக் காரணம் என மக்கள் கூறுகின்றனர். வடக்கு தில்லி மாநகராட்சியின் ஆணையர் மதூப் வியாஸ் 2018-19 நிதியாண்டுக்கான உத்தேச நிதிநிலை அறிக்கையை அண்மையில் தாக்கல் செய்தார். அதில், பீதம்புரா, ராணி பார்க் ஆகிய இடங்களில் பல அடுக்கு கார் நிறுத்துமிடங்கள் நிறுவப்படும் என்றும், காந்தி மைதானம், சாந்தினி சௌக் ஆகிய இடங்களில் உள்ள கார் நிறுத்துமிடங்கள் விரிவாக்கம் செய்யப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
வடக்கு தில்லியில் உள்ள கார்கள் நிறுத்துமிடங்கள் பெரும்பாலானவை மாஃபியாக்களின் கட்டுப்பாட்டில் உள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில், தொழிற்சங்கங்கள் என்ற பெயரில் இயங்கி வரும் பார்க்கிங் மாஃபியாக்களை ஒழிக்காமல், வடக்கு தில்லியில் நிலவும் வாகன நிறுத்துமிட பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர முடியாது என்று வடக்கு தில்லி மாநகராட்சி மேயர் ப்ரீத்தி அகர்வால் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தினமணி நிருபரிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: தில்லியில் பார்க்கிங் மாஃபியாக்களின் செயல்பாடுகள் அபாயகரமானதாக உள்ளது. நான் மேயராகத் தேர்வாகியதில் இருந்தே இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறேன். இவர்கள் மாநகராட்சியின் அனுமதியைப் பெறாமலேயே பல்வேறு இடங்கள், சாலைகள் போன்றவற்றை வாகன நிறுத்துமிடங்களுக்குப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், வடக்கு தில்லி மாநகராட்சிப் பகுதிக்குள்பட்ட முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த மாஃபியாக்கள் தங்களுக்குள் தொழிற்சங்கங்களை அமைத்து கிரிமினல் ராஜ்ஜியம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு எதிராகப் போராடி வருகிறேன்.
அனைவரின் ஒத்துழைப்புக் கிடைத்தால் வடக்கு தில்லியில் இருந்து பார்க்கிங் மாஃபியாக்களை முழுமையாக ஒழிக்க முடியும் என்றார் மேயர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/10/என்டிஎம்சியில்-பார்க்கிங்-மாஃபியாக்களுக்கு-எதிராகக்-கடும்-நடவடிக்கை-தேவை-மேயர்-2823487.html
2822931 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி சாராய விற்பனையைத் தடுக்க உதவிய பெண் மீது கொடூர தாக்குதல்: 6 பெண்கள் கைது DIN DIN Saturday, December 9, 2017 02:44 AM +0530 தில்லி நரேலாவில் சட்டவிரோத சாராய விற்பனையைத் தடுக்க தில்லி மகளிர் காவல் ஆணையத்திற்கு (டிசிடபிள்யு)  உதவிய  பெண் மீது ஒரு கும்பல் இரும்புக் கம்பியால் கொடூரமாகத் தாக்கி,  ஆடைகளைக் கிழித்து அவமானப்படுத்தியது. இது தொடர்பாக போலீஸார் 6 பெண்களை கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து கூறப்படுவதாவது: புறநகர் தில்லி நரேலா, ஜே.ஜே.  கிளஸ்டர் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீண் (30). இப்பெண் அப்பகுதியில் சட்டவிரோதமாக நடைபெற்று வந்த சாராய விற்பனைக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.  இந்நிலையில்,  அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சாராயம் விற்கப்படுவது குறித்து தில்லி மகளிர் ஆணையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து,  தில்லி மகளிர் ஆணையத்தின் குழுவினர் புதன்கிழமை  இரவு நரேலா பகுதிக்கு வந்தனர். அவர்களுடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு பிரவீண் சென்றார். போலீஸாரும் அங்கு சென்றனர்.  அப்போது,   ஆஷா, ராகேஷ் தம்பதி வீட்டில் சாராயம் சட்டவிரோதமாக விற்கப்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து,  வீட்டிலிருந்த சுமார் 300 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீஸார் வழக்கும் பதிவு செய்தனர். 
இந்நிலையில்,  வியாழக்கிழமை பிரவீணை சாராயம் விற்பனையாளர்களுடன் தொடர்புடைய ஆண், பெண்கள் அடங்கிய கும்பல் இரும்புக் கம்பியால் கொடூரமாகத் தாக்கியதாகவும்,  தகாத வார்த்தைகளால் திட்டி  அவரது ஆடைகளைக் கிழித்ததாகவும் கூறப்படுகிறது.  
இதில் காயமடைந்த பிரவீண் சிகிச்சைக்காக எல்என்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  
இச்சம்பவம் குறித்து பிரவீண் கூறுகையில், "எங்கள் காலனி பகுதியில் ஒளிவுமறைவின்றி சாராயம் விற்கப்படுகிறது. யாரும் இதை எதிர்த்துக் குரல் எழுப்பவில்லை.  இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த என்னைத் தண்டித்துவிட்டனர்' என்றார்.
6 பேர் கைது: தில்லி மகளிர் ஆணையத்திற்கு உதவிய பிரவீண் தாக்கப்பட்ட சம்பவத்தில் 6 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக  தில்லி காவல் துறையின் ரோஹிணி துணை ஆணையர் ரஜ்னீஷ் குப்தா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.  
மேலும்,  பாதிக்கப்பட்ட பெண்ணை நிர்வாணமாக யாரும் அழைத்துச் செல்லவில்லை என்றும் தெரிவித்தார்.

மகளிர் ஆணையம் கண்டனம்
பிரவீண் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு தில்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.  அவர் கூறுகையில், "சட்டவிரோத சாராய விற்பனையைத் தடுக்க மகளிர் ஆணையத்திற்கு உதவிய பெண்ணுக்கும்,  சோதனையில் ஈடுபட்ட மளிர் ஆணையத்தின் குழுவுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. 
ஆனால்,  பெண்ணை நிர்வாணப்படுத்தி தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. நரேலா பகுதி காவல் நிலைய சாவடி அருகே சட்டவிரோத மதுபானம் விற்பனை நடைபெற்று வந்ததாகவும்,  இந்த விற்பனை எல்லோருக்கும் தெரிந்தே நடைபெறுவதாகவும் மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெண்ணே வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்த விவகாரத்தை பெண்களிடையே நிகழ்ந்த சண்டை என்று தள்ளுபடி செய்வது மிகவும் அவமானமாகும்.  பிரவீண் உடம்பில் இரும்புக் கம்பியால் தாக்கிய அடையாளம் உள்ளது. சாராயம் விற்பனையில் ஈடுபட்டவர்கள்தான் அப்பெண்ணை கும்பலாகச் சென்று வியாழக்கிழமை தாக்கியுள்ளனர்' என்றார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தில்லி மகளிர் ஆணையத்தில் ரோஹிணி காவல் துணை ஆணையர் ரஜ்னீஷ் குப்தா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஆணையம் கேட்டுக் கொண்
டுள்ளது.

அதிர்ச்சியாக உள்ளது: முதல்வர் 
இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் கேஜரிவால் வெளியிட்டுள்ள சுட்டுரை (டுவிட்டர்) பதிவில், "இந்தியாவில் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்து கொண்டிருப்பது அதிர்ச்சியாக உள்ளது. மேலும்,  அவமானம் தரக்கூடிய விஷயமாகவும் உள்ளது.  இந்த விவகாரத்தில் துணைநிலை ஆளுநர் உடனடியாக தலையிட்டு உள்ளூர் காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.  ஒவ்வொருவரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

போலீஸார் மீதும் நடவடிக்கை: துணைநிலை ஆளுநர்
தில்லி  துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் இது தொடர்பாக தனது சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில், "நரேலா சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மீதும்,  கவனக் குறைவாக போலீஸார் செயல்பட்டிருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு தில்லி காவல் ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தேன். 
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  
விரைவான விசாரணையை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டிருக்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக இந்தச் சம்பவம் குறித்து முதல்வர் கேஜரிவால் துணைநிலை ஆளுநரைச் சந்தித்து கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியிருந்தார். 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/09/சாராய-விற்பனையைத்-தடுக்க-உதவிய-பெண்-மீது-கொடூர-தாக்குதல்-6-பெண்கள்-கைது-2822931.html
2822930 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி செல்விக்கு எதிரான மோசடி வழக்கு: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு DIN DIN Saturday, December 9, 2017 02:43 AM +0530 திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி, அவரது மருமகன் வி.எம். ஜோதிமணி ஆகியோருக்கு எதிரான மோசடி  தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பை மறுதேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒத்திவைத்தது. 
இது தொடர்பாக வி. நெடுமாறன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,  "திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி, அவரது மருமகன் வி.எம். ஜோதிமணி ஆகியோர் சென்னை அருகேயுள்ள தாழம்பூர் கிராமத்தில் ரூ. 5.14 கோடி மதிப்புள்ள 2.94 ஏக்கர் நிலத்தை விற்பதாகக் கூறினர். ஆனால், ரூ. 3.5 கோடியை முன்பணமாகப் பெற்றுவிட்டு நிலத்தை விற்க இல்லை. முன்பணத்தை திருப்பித் தரவும் இல்லை. திரும்பக் கேட்டதற்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. பூந்தமல்லி முதலாவது நீதித் துறை நடுவர் மன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார். இந்த மனுவை 2015-ஆம் ஆண்டு விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 6 மாதங்களுக்குள் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று பூந்தமல்லி முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்துக்கு உத்தரவிட்டது. 
இந்நிலையில், தன் மீது தவறாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி செல்வி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை கடந்த ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி விசாரித்த நீதிபதி சி.டி. செல்வம்,  வழக்கில் இருந்து செல்வியை விடுவித்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இது தொடர்பான மனு மீது கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது.  இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா,  மோகன் எம். சந்தான கெளடர் ஆகியோர் அடங்கியஅமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது,  தமிழக அரசு சார்பில் வழக்குரைஞர் யோகேஷ் கண்ணா ஆஜரானார். அப்போது நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது எனத்  தெரிவித்தனர்.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/09/செல்விக்கு-எதிரான-மோசடி-வழக்கு-தீர்ப்பு-தேதி-குறிப்பிடாமல்-ஒத்திவைப்பு-2822930.html
2822929 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி டேக்வாண்டோ போட்டி: தமிழக மாணவிகள் 5 பேருக்கு பதக்கம் DIN DIN Saturday, December 9, 2017 02:42 AM +0530 தில்லியில் நடைபெற்றடேக்வாண்டா போட்டியில் தமிழக மாணவிகள் 5 பேர் சிறப்பிடம் பெற்று பதக்கம் வென்றனர்.
தில்லி மாநில அரசின் கல்வி மற்றும் விளையாட்டுத் துறை சார்பில், 63-ஆவது தேசிய அளவில்பள்ளிக்களுக்கிடையேயான டேக்வாண்டா போட்டி செவ்வாய்க்கிழமை தியாகராஜர் உள்விளையாட்டரங்கில் தொடங்கியது. இதில் தமிழகம், ஆந்திரம், மேற்கு வங்கம், தில்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் பங்கேற்றன. இதில் பெண்களுக்கு தனியாகவும், ஆண்களுக்கு தனியாகவும் போட்டிகள் பல்வேறு பிரிவுகளின் கீழ் நடைபெற்றன. 
இதில் தமிழகம் சார்பில் பல்வேறு மாவட்டத்திலிருந்து டேக்வாண்டோ பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள் 26 பேர், மேலாளர்கள் எம். சாந்தி, கே.டி. மாதேஷ், பயிற்சியாளர் என். தர்மராஜன் ஆகியோர் தலைமையில் பங்கேற்றனர். இதில் 17 வயதுக்குள்பட்டோருக்கான போட்டியில் 32 கிலோ எடை பிரிவில் மாணவி ஜி. நிமிஷா தங்கம் வென்றார். மேலும், 35 கிலோ எடை பிரிவில் ஆர். சுஜித், 68 கிலோ எடை பிரிவில் வி. ஐஸ்வர்யா ஆகியோர் வெள்ளி பதக்கமும், 49 கிலோ எடை பிரிவில் கே. நேஹா, 52 கிலோ எடை பிரிவில் வி.எஸ். அஜிதாஸ்ரீ ஆகியோர் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/09/டேக்வாண்டோ-போட்டி-தமிழக-மாணவிகள்-5-பேருக்கு-பதக்கம்-2822929.html
2822928 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி பயிர்க்கழிவுகள் எரிப்பு விவகாரம்: பஞ்சாப் அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் கண்டனம் DIN DIN Saturday, December 9, 2017 02:42 AM +0530 பயிர்க்கழிவுகள் எரிக்கப்படாமல் இருப்பதை ஊக்குவிப்பதற்கு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று பஞ்சாப் அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, பசுமைத் தீர்ப்பாய தலைவரும் நீதிபதியுமான ஸ்வதந்தர் குமார், நீதிபதிகள் ஜாவத் ரஹீம், ஆர்.எஸ்.ரத்தோர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது, பஞ்சாபில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்படும் பிரச்னையை கையாள்வது தொடர்பாக கடந்த 2015-ஆம் ஆண்டில் பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த தீர்ப்பை செயல்படுத்த இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததற்கு, அந்த மாநில அரசுக்கு தீர்ப்பாய அமர்வு கண்டனம் தெரிவித்தது.
இதுதொடர்பாக நீதிபதிகள் கூறியதாவது: பயிர்க்கழிவு எரிப்பு பிரச்னையை கையாள்வது தொடர்பாக 2015-ஆம் ஆண்டில் விரிவான தீர்ப்பை வழங்கியிருந்தோம். அதனை செயல்படுத்த இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
பயிர்க்கழிவுகளை எரிக்காமல் இருக்க விவசாயிகளை ஊக்குவிப்பதற்கு உறுதியான நடவடிக்கைகளை பஞ்சாப் அரசு மேற்கொள்ளவில்லை. பயிர்க்கழிவுகளில் இருந்து மின் உற்பத்தி செய்யும் ஆலைகள் அமைக்க ஏதேனும் ஒப்பந்தம் கோரப்பட்டதா? பயிர்க்கழிவுகளைப் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய நிறுவனங்களுடன் பஞ்சாப் அரசு ஏதேனும் ஒப்பந்தம் மேற்கொண்டதா? பயிர்க்கழிவுகளை எரிக்காத விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டதா?
பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இதுவரை ஒரு விளம்பரத்தைக் கூட பஞ்சாப் அரசு வெளியிடவில்லை. இப்பிரச்னையை தீர்க்க, அரசுக்கு துளியும் ஆர்வமில்லாதது போல தெரிகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, பயிர்க்கழிவுகளை பயன்படுத்திக் கொள்வதற்காக சில ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் அரசு தெரிவித்தது.
எனினும், இந்த விவகாரத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு, பஞ்சாப் அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை வரும் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
முன்னதாக, பயிர்க்கழிவுகளை அனல் மின் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தெளிவான நடைமுறையை உருவாக்கும்படி, தில்லி, ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநில அரசுகளுக்கு பசுமைத் தீர்ப்பாயம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/09/பயிர்க்கழிவுகள்-எரிப்பு-விவகாரம்-பஞ்சாப்-அரசுக்கு-பசுமைத்-தீர்ப்பாயம்-கண்டனம்-2822928.html
2822927 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி டிடிஇஏ பள்ளிகளில் மனித உரிமைகள் தின விழா DIN DIN Saturday, December 9, 2017 02:42 AM +0530 தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் மனித உரிமைகள் தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
1950-ஆம் ஆண்டு முதல், உலக முழுவதும் டிசம்பர் 10-ஆம் தேதி  மனித உரிமைகள் தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, தில்லி 
தமிழ்க் கல்விக் கழகப் பள்ளிகளில் மாணவர்கள் மனித உரிமைகள் குறித்து வெள்ளிக்கிழமை உரை நிகழ்த்தினர். 
மேலும், மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மாணவர்கள் பதாகைகளையும் காட்சிப்படுத்தியிருந்தனர்.
அந்தந்தப் பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, பள்ளி முதல்வர்கள் சித்ரா வாசகம் (ராமகிருஷ்ணாபுரம்), ராஜி கமலாசனன் (ஜனக்புரி), ஹரி கிருஷ்ணன் (மோதிபாக்), மீனா சகானி (லக்ஷ்மிபாய் நகர்), ரஞ்சன் குப்தா (முதல்வர் பொறுப்பு-லோதி எஸ்டேட்), காய்த்ரி (மந்திர் மார்க்) ஆகியோர் மனித உரிமைகள் குறித்த விவரங்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/09/டிடிஇஏ-பள்ளிகளில்-மனித-உரிமைகள்-தின-விழா-2822927.html
2822926 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி சுங்கக் கட்டண வசூல் சாவடி பெண் ஊழியர் மீது தாக்குதல்: கார் ஓட்டுநருக்கு வலைவீச்சு DIN DIN Saturday, December 9, 2017 02:41 AM +0530 தில்லியில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் சாவடியின் பெண் ஊழியரைத் தாக்கிய கார் ஓட்டுநரை போலீஸார் தேடி வருகின்றனர். 
இதுகுறித்து தில்லி காவல் துறையினர் கூறியதாவது: தில்லி கேர்க்கி தௌலா பகுதியில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் சாவடி உள்ளது.  இந்தச் சாவடியில் உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவைச் சேர்ந்த பெண் வேலை செய்து வருகிறார். 
வியாழக்கிழமை காலை வழக்கம் போல இந்த ஊழியர் அவ்வழியாக வரும் வானங்களின் ஓட்டுநர்களிடம் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். 
அப்போது,  நுழைவு வாயில் எண் 23 பகுதிக்கு காரில் ஒருவர் வந்தார். அவரிடம் சம்பந்தப்பட்ட பெண் ஊழியர் சுங்கக் கட்டணம் செலுத்துமாறு கேட்டார். அதற்கு சுங்கக் கட்டணம் செலுத்த மறுத்த கார் ஓட்டுநர்,  வெளியேறும் வாயில் கதவைத் திறந்து விடுமாறு கேட்டார்.
 இதை ஏற்க மறுத்த பெண் ஊழியரை அந்த கார் ஓட்டுநர் கடுமையான வார்த்தைகளால் திட்டினார். மேலும், அவரைத் தாக்கவும் முற்பட்டார். அப்போது, அங்கிருந்த ஆண் ஊழியர்கள் அவரைத் தடுத்து நிறுத்தினர். 
இதையடுத்து,  சுங்கக் கட்டணம் செலுத்தாமல் அந்த ஓட்டுநர் சென்றுவிட்டார்.
 முன்னதாக, அவரிடம் பெறப்பட்ட ஆவணத்தில் அவர் சிகோபூர் பகுதியைச் சேர்ந்த குல்தீப் யாதவ் என்பது தெரிய வந்தது. மேலும்,  இச்சம்பவம் முழுவதும் சுங்கக் கட்டணச் சாவடியில் உள்ள சிசிடிவி கண்காணிப்புப் கேமராவில் பதிவாகியிருந்தது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில், "காரில் இருந்து இறங்கிய ஓட்டுநர், என்னைத் தகாத வார்த்தைகளால் திட்டினார். பிறகு தடுப்புகளைத் தள்ளிவிட்டார்.  கண்ணியமான முறையில் பேசுமாறு அவரிடம் நான் கூறினேன்.  
அப்போது, என்னைக் கொன்று விடுவதாக மிரட்டினார்.  மேலும், என்னைக் கடத்திச் சென்று,  என் முகத்தை யாரும் பார்க்க முடியாத நிலைக்கு சென்று விடுவதாவும் மிரட்டினார். மேலும், நான் இருந்த அறையின் ஜன்னல் பகுதிக்குள் கையைவிட்டு எனது நெஞ்சில் தாக்கினார்' என்று  தெரிவித்துள்ளார்.
 இது குறித்து கேர்க்கி தௌலா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாகவும்,  அதன் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர். 
இது குறித்து தில்லி காவல் துறையினர் கூறுகையில், "இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.  சம்பந்தப்பட்ட வாகனத்தின் விவரங்கள், அதன் உரிமையாளரின் முகவரி அடையாளம் காணப்பட்டுள்ளது. விரைவில் குற்றம்சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்படுவார்' என்றார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/09/சுங்கக்-கட்டண-வசூல்-சாவடி-பெண்-ஊழியர்-மீது-தாக்குதல்-கார்-ஓட்டுநருக்கு-வலைவீச்சு-2822926.html
2822924 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி ஏடிஎம் மோசடி வழக்குகள்: நெறிமுறைகள் வகுக்க தில்லி உயர் நீதிமன்றம் அறிவுரை DIN DIN Saturday, December 9, 2017 02:41 AM +0530 தில்லியில் நடைபெறும் ஏடிஎம் மோசடி வழக்குகளை விசாரிக்க புதிய நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்று தில்லி போலீஸ், ரிசர்வ் வங்கி, தில்லி அரசு, சிபிஐ ஆகியவற்றுக்கு தில்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக வழக்குரைஞர் கம்லேஷ் குமார் மிஸ்ரா,  தாக்கல் செய்திருந்த மனுவில், "ஏடிஎம் மோசடி சம்பவ குற்றவாளிகள் கைது செய்யப்படாததால் அவர்கள் மீண்டும் அதே ஏடிஎம்களில் மோசடி குற்றங்களைச் செய்கின்றனர். இதற்கு அந்தப் பகுதி காவல் நிலையத்தில் உள்ள போலீஸாருக்கும், ஏடிஎம் மோசடி வழக்குகளை விசாரிக்கும் காவல் துறை அதிகாரிகளுக்கும் இடையே ஒத்துழைப்பு இல்லாததே காரணம். இதனால் ஏடிஎம் மோசடி குற்றவாளிகளை கைது செய்ய முடியாத நிலை உள்ளது' என்று தெரிவித்திருந்தார்.
இந்த மனு தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மிட்டல், நீதிபதி சி. ஹரி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவின் விவரம்: இந்த மனுவில் கூறப்பட்டுள்ளதைப்போல் ஏடிஎம் மோசடி வழக்குகளைக் கையாள நெறிமுறைகளை வகுப்பது சாத்தியமா என்பது குறித்து தில்லி அரசு, ரிசர்வ் வங்கி, தில்லி போலீஸ், சிபிஐ ஆகியவை வழிகாண வேண்டும்.
மேலும், இதுபோன்ற புகார்களை தில்லி போலீஸின் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாருக்கு மாற்றம் செய்வது குறித்தும் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று கூறி இந்த மனுவை முடித்து வைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/09/ஏடிஎம்-மோசடி-வழக்குகள்-நெறிமுறைகள்-வகுக்க-தில்லி-உயர்-நீதிமன்றம்-அறிவுரை-2822924.html
2822922 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி நஜஃப்கரில் மூதாட்டி படுகொலை: போலீஸ் விசாரணை தீவிரம் DIN DIN Saturday, December 9, 2017 02:40 AM +0530 நஜஃப்கரில்  வீட்டில் இருந்த 70 வயது மூதாட்டி படுகொலை செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இது குறித்து துவாரகா காவல் சரக  துணை ஆணையர் ஷிபேஷ் சிங் வெள்ளிக்கிழமை கூறியதாவது:  நஜஃப்கர் தரம்புரா காலனியில் வசித்து வந்தவர் முக்தியாரி தேவி (70). அவர் தனது மகன், மருமகள், பேரன் ஆகியோருடன் வீட்டின் முதல் தளத்தில் வசித்து வந்தார். கீழ் தளத்தில் உள்ள வீடுகளில் மூன்று குடும்பங்கள் வாடகைக்கு வசித்து வருகின்றன. இந்நிலையில், முக்தியாரி தேவியின் மகன் வியாழக்கிழமை மாலை 5 மணியளவில்  அலுவலகப் பணி முடித்து வீட்டுக்கு வந்தார். அப்போது தனது தாய்  ஓர் அறையில் கழுத்தில்  காயங்களுடன் கிடந்ததைக்  கண்டார்.
இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று முதாட்டியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அந்த வீட்டின் அறையில் உள்ள ஸ்லாப் மீது வைக்கப்பட்டிருந்த மின்சார வயரை பயன்படுத்தி  மூதாட்டியின் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.  வீட்டில் விலையுயர்ந்த பொருள்கள் ஏதும் காணாமல் போகவில்லை. முன்விரோதம் காரணமாக இக்கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிகப்படுகிறது. சம்பவம் நடந்த போது வீட்டில் அவர் மட்டும் தனியாக இருந்துள்ளார். அவருக்கு அறிமுகமானவர்கள்தான் இக்கொலையை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மூதாட்டியின் வீட்டுக்கு யாரும் வந்து சென்றதாகத் தெரியவில்லை என்றும் கீழ் தளத்தில் குடியிருப்பவர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக  கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார் ஷிபேஷ் சிங்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/09/நஜஃப்கரில்-மூதாட்டி-படுகொலை-போலீஸ்-விசாரணை-தீவிரம்-2822922.html
2822921 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி பள்ளி கட்டண உயர்வை திரும்ப பெறும் குழுவின் பதவிக்காலத்தை நீட்டித்தது தில்லி உயர் நீதிமன்றம் DIN DIN Saturday, December 9, 2017 02:40 AM +0530 தனியார் பள்ளிகளில் அதிகமாக வசூலிக்கப்பட்ட கட்டணங்களைத் திரும்பப் பெற அமைக்கப்பட்ட நீதிபதி அனில் குமார் குழுவின் பதவிக்காலத்தை ஓராண்டுக்கு நீட்டித்து தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்தக் குழுவின் பதவிக்காலம் வரும் டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. பதவிக்காலத்தை நீட்டிக்ககோரி இந்தக் குழு தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், தில்லி உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
நீதிபதி அனில் குமார் குழு தாக்கல் செய்திருந்த மனுவில், "இதுவரை தங்கள் குழு 1200-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணங்களை ஆய்வு செய்துள்ளதாகவும், அதில் 565 பள்ளிகள் ரூ. 154 கோடிக்கும் மேல், கூடுதல் கல்விக் கட்டணம் வசூலித்திருந்தது தெரியவந்தது. அந்தக் கட்டணத்தை சம்பந்தப்பட்ட பள்ளிகள் திருப்பித் தர உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தக் குழுவின் பரிந்துரைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சில பள்ளிகள் தாக்கல் செய்த மனுக்களையும் பரிசீலித்து வருகிறோம். சில பள்ளிகள் தங்கள் கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்ய நீண்ட அவகாசம் எடுத்துக் கொண்டன. அவற்றை குழு பரிசீலித்து வருகிறோம். ஆகையால், இந்தக் குழுவின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டு நீட்டிக்க வேண்டும்' என்று தெரிவித்திருந்தது.
இந்த மனு தில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் சித்தார்த் மிர்துல், எஸ்.பி. கர்க் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது,  நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
அதிக கட்டணத் தொகையாக வசூலிக்கப்பட்ட ரூ. 150 கோடி தில்லி உயர் நீதிமன்றத்திடம் உள்ளது. அதை செலுத்திய பெற்றோர்களின் ஒப்படைக்கப்பட வேண்டும். 
இந்தத் தொகையை செலுத்திய பெற்றோர்களின் பட்டியலை தில்லி கல்வி இயக்ககம் தயாரிக்க வேண்டும். இந்தக் கட்டணத்தைச் செலுத்திய சில மாணவர்கள் தற்போது பள்ளியை விட்டுச் சென்று இருந்தாலும், அவர்களின் முகவரியைப் பெற்று அந்தத் தொகை அவர்களிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டும். இந்தக் குழுவின் பதவிக்காலம் 2018, டிசம்பர் வரை நீட்டிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.
முன்னதாக, தில்லி அபிபவக் மஹாசங் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தாக்கல் செய்திருந்த மனுவில், "500-க்கும் மேற்பட்ட பள்ளிகள் வசூலித்த அதிக கட்டங்களை இன்னுமும் திருப்பிச் செலுத்தவில்லை; ஆகையால் அவற்றின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க அனுமதிக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேபோல், நீதிபதி அனில் குமார் குழுவின் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதிக கட்டணங்களை திருப்பித்தராத பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று கடந்த மே 29-ம் தேதி தில்லி அரசு வெளியிட்ட அறிவிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்களை பரிசீலித்த நீதிபதிகள், "சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது எந்தவித நடவடிக்கைகளும் பாயாமல் இருக்க அதிகமாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தின் 75 சதவீத தொகையை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.
இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி, 75 சதவீத தொகையை செலுத்திவிட்டதாக கடந்த செப்டம்பர் 25-ம் தேதி பல பள்ளிகள் நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/09/பள்ளி-கட்டண-உயர்வை-திரும்ப-பெறும்-குழுவின்-பதவிக்காலத்தை-நீட்டித்தது-தில்லி-உயர்-நீதிமன்றம்-2822921.html
2822919 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி கட்டுமானப் குதியில் இளம்பெண் சடலம் DIN DIN Saturday, December 9, 2017 02:39 AM +0530 தில்லி புறநகர்ப் பகுதியான ஷாஹ்பாத் டெய்ரி  பகுதியில் நடைபெற்று வரும்  கட்டட கட்டுமான இடத்தில் 28 வயது மதிக்கத்தக்க இளம்பெண் சடலம் 
கிடந்தது புதன்கிழமை இரவு கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து போலீஸார் கூறியதாவது:  அந்தக் கட்டுமானப் பகுதிக்கு அப்பெண், அவரது கணவர், இரண்டு வயது குழந்தையுடன் புதன்கிழமை மாலை வந்துள்ளார்.  இரவில் தங்குவதற்கு இடம் இல்லாத காரணத்தால் அவர்கள் அந்தக் கட்டுமானப் பகுதிக்கு வந்ததாகத் தெரிகிறது. 
இந்நிலையில், கட்டுமானப் பகுதியில் குழந்தையின் அழுகுரல் சப்தம் கேட்டு அங்கிருந்த காவலாளி சென்று பார்த்துள்ளார். அப்போது இளம்பெண்ணின் சடலம் அருகே அக்குழந்தை அழுது கொண்டிருந்ததைக் கண்டார். இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு போலீஸார் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
அவர் யார் என்று அடையாளம் தெரியவில்லை. அவருடன் அங்கு வந்திருந்த அவரது கணவரை அன்று இரவிலிருந்து காணவில்லை. அப்பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் அதில் கணவருக்கு தொடர்பு இருக்கக்கூடும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. 
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/09/கட்டுமானப்-குதியில்-இளம்பெண்-சடலம்-2822919.html
2822918 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி பாலியல் புகார்:  எஸ்ஐ உள்பட  2 பேர் கைது DIN DIN Saturday, December 9, 2017 02:39 AM +0530 இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக தில்லியைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் (எஸ்ஐ) உள்பட இருவரை போலீஸார் கைது செய்தனர்.
இது குறித்து தில்லி காவல் துறையினர் கூறியதாவது:
தில்லியைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் நாங்லாய் பகுதியில் தனக்கு குடியிருக்க வாடகைக்கு வீடு தேடினார். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் ஒருவரைத் தொடர்பு கொண்டு இது தொடர்பாக பேசினார். அப்போது, வாடகைக்கு வீடு பார்க்க வருமாறு சம்பவத்தன்று அப்பெண்ணை அவர் அழைத்தார்.
ரியல் எஸ்டேட் உரிமையாளரைச் சந்திக்க அப்பெண் சென்ற போது,  அங்கு அவரும், தில்லி காவல் துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் அதிகாரியும் சேர்ந்து அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. 
இதையடுத்து, அவர்களிடமிருந்து தப்பித்த அப்பெண் போலீஸாரிடம் தொடர்பு கொண்டு புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.  புகாருக்குள்ளான ரியல் எஸ்டேட் உரிமையாளர், காவல் உதவி ஆய்வாளர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/09/பாலியல்-புகார்--எஸ்ஐ-உள்பட--2-பேர்-கைது-2822918.html
2822917 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி போலி கல்வி வாரியம் நடத்தி மோசடி: 6 பேர் கைது: நாடு முழுவதும் 20 ஆயிரம் பேருக்கு போலி சான்றிதழ் விநியோகம் DIN DIN Saturday, December 9, 2017 02:38 AM +0530 போலி கல்வி வாரியம் நடத்தி மோசடியில் ஈடுபட்டதாக 6 பேரை தில்லியில் காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 17,000 போலி கல்விச் சான்றிதழ்,  மதிப்பெண் சான்றிதழ், பட்டச் சான்றிதழ்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
மேலும்,  நாடு முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு போலி மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கி இக்கும்பலைச் சேர்ந்தவர்கள் மோசடியில் ஈடுபட்டிருந்தது போலீஸார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
போலி கல்வி வாரியம்: இது குறித்து தில்லி கிழக்கு சரக காவல் இணை ஆணையர் ரவீந்திர யாதவ் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 
"தில்லி மேல்நிலை கல்வி வாரியம்' எனும் பெயரில் செயல்படும் கல்வி அமைப்பால் வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் போலியாக இருப்பது தெரிய வந்ததாக காவல் துறைக்கு நவம்பர் மாதம் 11-ஆம் தேதி ஒரு புகார் வந்தது.  இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.  அப்போது,  அந்தக் கல்வி வாரியம் போலியானது எனத்  கண்டுபிடிக்கப்பட்டது.  இது குறித்து கீதா காலனி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 
தனிப்படை அமைப்பு:  போலி கல்வி வாரியம் நடத்திய கும்பலைப் பிடிக்க ஷாதரா சரக காவல் துணை ஆணையர் நுபுர் பிரசாத் தலைமையில் போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது.  இப்படையினர் நடத்திய விசாரணையில்,  புகார்தாரருக்கு போலிச் சான்றிதழைப் பர்ஷந்த் சோலங்கி என்பவர் வழங்கியிருப்பது தெரிய வந்தது.
கைது: இதையடுத்து, கோகுல்புரி,  வஜிராபாத் சாலைப் பகுதியில் சோலங்கி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,  போலி கல்வி வாரியத்தில் அவர் கணினி உபயோகிப்பாளராக பணியாற்றியதாக ஒப்புக் கொண்டார்.  மேலும், பல்ஜீத் என்பவரிடம் இருந்து போலிச் சான்றிதழ்களைப் பெற்று வந்ததாகவும் கூறினார். இதைத் தொடர்ந்து,  புராரி பகுதியில் இருந்து பல்ஜீத் சிங் கைது செய்யப்பட்டார். அவர் போலி கல்வி வாரியத்தின் இயக்குநராகச் செயல்பட்டது தெரிய வந்தது.  இந்த மோசடியில் தில்லியைச் சேர்ந்த  மாங்கே ராம் ஆச்சார்யா (எ) மணிஷ் பிரதாப் முக்கிய மூளையாக செயல்பட்டுள்ளது தெரிய வந்தது.  அவர் ஒரு வழக்கில் ராஜஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததும்,  தில்லி விகாஷ்புரியில் போலி கல்விச் சான்றிதழ் தயாரிக்கப்பட்டதும் தெரிய வந்தது. 
அதிரடி சோதனை:   இதைத் தொடர்ந்து,  விகாஷ்புரி போலி கல்வி வாரியத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.  இதன்தொடர்ச்சியாக,  அல்தாஃப் ரஸா,  ராம்தேவ் சர்மா,  லக்ஷய ரத்தோர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  விசாரணையில் அவர்கள் மூவரும் போலி கல்வி வாரியத்தில் ஊழியர்களாக வேலை செய்து வந்தது கண்டறியப்பட்டது.  
இந்த வாரியத்தின் தலைவராக உத்தர பிரதேச மாநிலம்,  பிரதாப் கர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷிவ் பிரசாத் பாண்டே  (65) இருப்பதும்,  லக்னௌவில் இருந்து அவர் செயல்பட்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. அவர் கைது செய்யப்பட்டார்.  இக் கும்பலிடம் விசாரணை நடத்தப்பட்டது. 
நூதன விளம்பரம்:  10, 12-ஆம் வகுப்பு சான்றிதழ்களை அளிப்பதாகவும்,  கல்வி வாரியத்திற்கு ஆள்களைத் தேர்வு செய்வதாகவும்  உள்ளூர் நாளிதழ்களில் போலி கல்வி வாரியத்திற்கு விளம்பரம் செய்து வந்துள்ளனர். இதற்காக போலி மேல்நிலைக் கல்வி வாரியத்தின் பெயரில் இணையதள முகவரியையும் தயாரித்து செயல்படுத்தி வந்துள்ளனர்.  இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இதன் அலுவலகத்தை நடத்தி வந்துள்ளனர். 
தனியார் பள்ளிகளிடம் வசூல்: இணைவிப்பு அங்கீகாரம் வழங்குவதற்காக தனியார் பள்ளிகளிடமிருந்து ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை வசூலித்துள்ளனர். 
பிரசாத் பாண்டேவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, அவர் 2012-ஆம் ஆண்டில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு போலி மதிப்பெண் சான்றிதழ்களை அளித்திருப்பதும், இச்சான்றிதழ்களைப் பயன்படுத்தி பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகங்களில் இருந்து இந்திய பாஸ்போர்ட்  பெற்றிருப்பதும், வெளிநாடுகளில் வேலைவாய்ப்புப் பெற்றிருப்பதும் தெரிய வந்துள்ளது.
17 ஆயிரம் சான்றிதழ்:  கைதான கும்பலிடம் இருந்து 17 ஆயிரம் போலி மதிப்பெண்,  பட்டம்,  நுழைவுச்சீட்டு சான்றிதழ்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.  பல்வேறு போலி பள்ளிகளின் பெயர்களைக் கொண்ட 53 ரப்பர் ஸ்டாம்புகள், 2 ஸ்கேனர் கருவிகள்,  2 மானிட்டர்கள், 2 சிபியு கருவிகள்,  6 ஏடிஎம் அட்டைகள், பல்வேறு வங்கிக் கணக்குகளின் பாஸ் புத்தகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.  
இக்கும்பலுடன் கல்வித் துறையினர் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் இணை ஆணையர் ரவீந்திர யாதவ்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/09/போலி-கல்வி-வாரியம்-நடத்தி-மோசடி-6-பேர்-கைது-நாடு-முழுவதும்-20-ஆயிரம்-பேருக்கு-போலி-சான்றிதழ்-விநிய-2822917.html
2822316 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி கொலை வழக்கு: சாட்சியை ஆஜர்படுத்தாததால் இருவர் விடுதலை DIN DIN Friday, December 8, 2017 07:31 AM +0530 சாட்சியம் இல்லாததால் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவரை வழக்கில் இருந்து விடுதலை செய்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பான வழக்கு விவரம் வருமாறு:  நிகழாண்டு ஜனவரி 21-ஆம் தேதி புது தில்லி ரயில் நிலையம் அருகே உள்ள  கோயில் ஒன்றின் கூரைப் பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். அவரைக் கொலை செய்த இருவரை நேரில் பார்த்ததாகவும்,  கல், கத்தியால் தாக்கி கொன்றதாகவும் 16 வயது மைனர் சிறுவன் போலீஸில் வாக்கு மூலம் அளித்தார்.
இதையடுத்து, போலீஸார் தில்லியைச் சேர்ந்த இருவரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பிரதேப் பரிசோதனை அறிக்கையிலும் கல்லால் தாக்கி கொல்லப்பட்டதற்கான தடயம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தில்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான குற்றம்சாட்டப்பட்ட இருவரும் தங்கள் மீது போலீஸார் பொய் வழக்குப் புனைந்துள்ளனர் எனத் தெரிவித்தனர்.  நேரில் கண்ட சாட்சியத்தை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை.
இதுகுறித்து போலீஸார் நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், "வழக்கில் தொடர்புடைய சாட்சி, ஒரு நாடோடி என்பதால்  அவரது முகவரியைக் கண்டறிய முடியவில்லை' எனக் கூறினர்.  இந்நிலையில், இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு தில்லி நீதிமன்ற சிறப்பு நீதிபதி நரீந்தர் குமார் பிறப்பித்த உத்தரவு:  இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவர் மீதான குற்றத்தை நிரூபிக்கும் வகையில் போலீஸ் தரப்பில் போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. 
வழக்குக்கு வலுசேர்க்கும் முக்கிய ஆதாரமான கொலைச் சம்பவத்தை நேரில் கண்ட  சாட்சியை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தத் தவறிவிட்டனர்.  குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் போலீஸ் தரப்பில் நிரூபிக்கப்படவில்லை என்பதால் இருவரும் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர் என நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/08/கொலை-வழக்கு-சாட்சியை-ஆஜர்படுத்தாததால்-இருவர்-விடுதலை-2822316.html
2822315 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி கிழக்கு தில்லி மாநகராட்சியில் சொத்து வரி அதிகரிக்க வாய்ப்பு! DIN DIN Friday, December 8, 2017 07:30 AM +0530 கிழக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சொத்து வரி, முன்னேற்ற வரி ஆகியவை உயரும் என்று தெரிய வந்துள்ளது. 
கிழக்கு தில்லி மாநகராட்சியின்  2017-18 நிதியாண்டின் திருத்தப்பட்ட  நிதி நிலை மதிப்பீட்டு அறிக்கை, 2018-19 நிதியாண்டுக்கான உத்தேச நிதிநிலை மதிப்பீட்டு அறிக்கை ஆகியவற்றை அதன் ஆணையர் ரன்வீர் சிங்  வியாழக்கிழமை தாக்கல் செய்தார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: சொத்து வரியை 5 சதவீதம் அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது கல்வி செஸ் வரியாக வசூலிக்கப்படவுள்ளது. 
மேலும், சொத்து வரியில் 15 சதவீதம் முன்னேற்ற வரியாக வசூலிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.  ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கும் மேல் உள்ளவர்களிடம் தொழில் வரி வசூலிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. 
சொத்து வரியை அதிகரிப்பதன்  மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.10 கோடி, முன்னேற்ற வரியை அதிகரிப்பதன் மூலம் ஆண்டுக்கு ரூ.10 கோடி, தொழில் வரி மூலம் ஆண்டுக்கு ரூ.5 கோடி என  கூடுதலாக வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
கிருஷ்ணா நகர்ப் பகுதியில் பல அடுக்கு கார் நிறுத்துமிடம் ரூ. 23 கோடியில் நிறுவப்படவுள்ளன. ஆதித்யா ஆர்கேட் ப்ரீத் விஹார், கீதா காலனி, பாபர்பூர், நந்த் லகரி ஆகிய பகுதிகளில் பல அடுக்கு கார் நிறுத்துமிடம் உருவாக்கப்படவுள்ளன. இவை தவிர  கிழக்கு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் 30 இடங்களில் கார் நிறுத்துமிடங்கள் உருவாக்கப்படவுள்ளன. 
சுவாமி தயானந்த்  மருத்துவமனையில் (எஸ்.டி.என்.) அவசர சிகிச்சைக்காக 100 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. எஸ்.டி.என். மருத்துவமனையில் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், நடைபாதை அமைக்கப்படவுள்ளது. எஸ்.டி.என். மருத்துவமனையில் ரூ.1 கோடியில் சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன. மேலும், தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் மருத்துவ உதவியாளர்கள் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. 
15 மாநகராட்சிப் பள்ளிகளில் சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன. மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விபத்துக் காப்புறுதித் திட்டத்தை  செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சிப் பள்ளிகளில் 228 புதிய வகுப்பறைகள் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாநகராட்சிக்குள்பட்ட அலுவலகங்கள், பள்ளிகள், நிறுவனங்கள் ஆகியவற்றில் பயோமெட்ரிக் முறை செயல்படுத்தப்படவுள்ளது. மேலும், துப்பரவுப் பணிகளுக்காக பல்வேறு புதிய திட்டங்கள் கொண்டுவரப்படவுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு எதிரானது: ஆம் ஆத்மி
கிழக்கு தில்லி மாநகராட்சியின் உத்தேச பட்ஜெட் மக்களுக்கு எதிராக உள்ளது என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் திலீப் பாண்டே செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது: ஏற்கெனவே வசூலிக்கப்படும் வரியை திறமையாகக் கையாளாததும், புதிய வரிகளை அறிமுகப்படுத்தியிருப்பதும் கிழக்கு தில்லி மாநகராட்சியை ஆளும் பாஜகவின் தோல்வியை வெளிப்படுத்துகிறது. மாநகராட்சியில் உள்ள நிதிசார் ஊழல்,  தவறான நிர்வாகம் ஆகியவற்றை சரி செய்ய கிழக்கு தில்லி மாநகராட்சி தவறிவிட்டதையும் இது காட்டுகிறது.  மாநகராட்சிகளுக்கு தலைநகரில் குப்பை மேலாண்மையும் தெரியவில்லை,  நிதி மேலாண்மையும் தெரியவில்லை.  அனைத்து நிலைகளிலும் மாநகராட்சிகள் தோல்வி கண்டுள்ளன.
தில்லி சட்டப்பேரவையில் மணீஷ் சிசோடியா கூடுதல் வரிகள் இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.  மக்களுக்கு ஏற்ற பட்ஜெட்டை தாக்கல் செய்ததன் மூலம்,  பாஜகவைவிட ஆம் ஆத்மி கட்சி நல்ல நிர்வாகத்தை அளிக்க முடியும் என்பது உண்மையாகியுள்ளது. கல்வி என்ற பெயரில் சொத்து வரியை 5 சதவீதம் உயர்த்தியுள்ளனர். மாநகராட்சிப் பள்ளிகளில் கல்வியின் தரத்தை சீரழித்துவிட்டு, சொத்துவரியை உயர்த்தியுள்ளனர். மாநகராட்சிகள் தில்லி நிதியமைச்சரிடமிருந்தும், அவர் தாக்கல் செய்யும் நிதிநிலை அறிக்கையிலிருந்தும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார் திலிப் பாண்டே. ஆம் ஆத்மி எம்எல்ஏ அனில் வாஜ்பேயி கூறுகையில், "தில்லி மாநகராட்சிகளில் சிறப்பு வரிஅறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சிகளின் மேம்பாட்டுக்கு இதுவரை அதன்  தலைவர்கள் செய்தது என்ன?  கடந்த காலங்களில் மாநகராட்சிகளின் மேம்பாட்டுக்கு ஒன்றும் செய்யாமல், வரிகளை தற்போது உயர்த்துவது ஏன்? மாநகராட்சிகளை நிர்வகிக்க பாஜகவுக்கு தெரிவில்லையென்றால், ஆம் ஆத்மியிடம் ஒப்படைக்க வேண்டும்' என்றார்.
கிழக்கு தில்லி மாநகராட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் அப்துல்  ரஹ்மான் கூறுகையில், "ஆம் ஆத்மி கட்சி மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வருகிறது. கிழக்கு தில்லி மாநகராட்சி உத்தேசித்துள்ள பட்ஜெட் பாமர மக்களைக் கடுமையாகப் பாதிக்கக்கூடியது. மக்களுக்கு எதிரானது. வரி உயர்வை திரும்பப் பெறும் வரை மாநகராட்சிக்குள்ளேயும், வெளியேயும் நாங்கள் போராடுவோம்' என்றார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/08/கிழக்கு-தில்லி-மாநகராட்சியில்-சொத்து-வரி-அதிகரிக்க-வாய்ப்பு-2822315.html
2822314 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி கன்னியாகுமரி மாவட்டத்தில் 80% மின் விநியோகம்: தில்லியில் அமைச்சர் தங்கமணி பேட்டி DIN DIN Friday, December 8, 2017 07:30 AM +0530 "ஒக்கி' புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்டு, 80 சதவீதம் மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது என்று தமிழக மின்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.
புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற மின்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்ற பிறகு  செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
 அனைத்து மாநில மின்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், 24 மணி நேரமும் மின்சாரம்  விநியோகம்  செய்வது, அனைத்து வீடுகள், கிராமங்களுக்கு மின் விநியோகம் அளிப்பதுஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டது. தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தின் போதே அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் மின்விநியோகம் அளிக்கப்பட்டிருந்தது. 
சென்னை மாநகரைப் பொருத்தவரையில்  அடிக்கடி தாக்கும் புயலால் மின் கம்பங்கள் பழுதாகின்றன. இதனால், மாநகரில்  மேல்வழி மின்கம்பிகளை புதைவட கம்பிகளாக மாற்றுவதற்கு ரூ.3,200 கோடியை மத்திய அரசிடம் கேட்டிருந்தோம்.  அதைத் தருவதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.  பல்வேறு கட்டங்களாக இப்பணிகள் நிறைவேற்றப்படும்.
நவம்பர் 29-ஆம் தேதி "ஒக்கி' புயலின் தாக்கம் காரணமாக  கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மரங்கள் பெயர்ந்து விழுந்தன. 11 ஆயிரம் மின்கம்பங்களும் சாய்ந்துள்ளன. 
முதல்வர் பழனிசாமி உத்தரவின் பேரில் குமரி மாவட்டத்தில் நான்கு நாள்கள் துரிதமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டன.  தற்போது மின்வாரியத் தலைவர், உயரதிகாரிகள் அங்கு முகாமிட்டுள்ளனர்.  வெளி மாவட்டங்களில் இருந்து 8 ஆயிரம் பணியாளர்கள் மின் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  தற்போதைய நிலவரப்படி குமரி மாவட்டத்தில் 80 சதவீதம் அளவுக்கு மின் விநியோகம் அளிக்கப்பட்டு வருகிறது. ஓரிரு தினங்களில் முழுமையாக மின்சாரம் வழங்கப்படும்.
மின்சார சேத மதிப்பு குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.  மத்திய அரசிடம் நிவாரண நிதி கோரும் போது மின்வாரியத்திற்கான ஒதுக்கீடு குறித்து கோரப்படும்.  மின் பராமரிப்புப் பணியின் போது உயிரிழந்த ஒருவரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம்  நிதி வழங்கப்பட்டுள்ளது.  அதுதவிர, முதல்வரின் நிவாரண நிதியில் இருந்தும் உதவி பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமைச்சர்.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/08/கன்னியாகுமரி-மாவட்டத்தில்-80-மின்-விநியோகம்-தில்லியில்-அமைச்சர்-தங்கமணி-பேட்டி-2822314.html
2822313 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி மானசரோவர் பார்க் 5 பேர் கொலைச் சம்பவம்: தேடப்பட்ட 7 பேரும் கைது: கொள்ளைத் திட்டத்தை காவலாளி வகுத்தது அம்பலம் DIN DIN Friday, December 8, 2017 07:30 AM +0530 மானசரோவர் பார்க்கில் வசித்து வந்த முதாட்டி, அவரது 3 மகள்கள், காவலாளி ஆகிய 5 பேரை கொன்று, வீட்டில் இருந்த பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த  7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொள்ளைத் திட்டத்தை வகுத்துக் கொடுத்தவர் கொலையுண்ட காவலாளி என்பது விசாரணையில் தெரிய வந்ததாக  போலீஸார் கூறினர்.
இது குறித்து காவல் துறை உயரதிகாரி வியாழக்கிழமை கூறியதாவது:  
வடகிழக்கு தில்லி மானசரோவர் பார்க் பகுதியில் வசித்து வந்தவர் உர்மிளா ஜிண்டால் (82). அவரது மகள்கள் சங்கீதா (56), அஞ்சலி (38), நுபுர் (48). அந்த வீட்டின் காவலாளியாக கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றியவர் ராகேஷ் (42). 
இந்நிலையில், கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி உர்மிளா ஜிண்டால் உள்பட 5 பேரும் கொல்லப்பட்டு  வீட்டில் இருந்த நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். இக்கொலைக்கு சொத்துப் பிரச்னை காரணமாக இருக்கலாம் என்று முதலில் சந்தேகிக்கப்பட்டது. ஆனால், தீவிர விசாரணைக்குப் பிறகு, வீட்டில் உள்ள நகை, பணத்தை கொள்ளை அடிக்க இக்கொலை நடந்துள்ளதாகத் தெரிய வந்தது. இதையடுத்து,  கொள்ளையர்களை பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.  அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளும் ஆய்வுக்குள்படுத்தப்பட்டன. ஆனால், அதில் உருவங்கள் சரிவர பதிவாகாததால்  இந்த வழக்கில் துப்புத் துலக்குவது போலீஸாருக்கு  பெரும் சவாலாக இருந்து வந்தது. இந்நிலையில், இக்கொள்ளைக்கு அந்த வீட்டில் கவாலாளியாக பணியாற்றி வந்த ராகேஷ் முக்கிய மூளையாகச் செயல்பட்டது தனிப் படையினருக்குத் தெரிய வந்தது. 
அவர் அந்த வீட்டில் சுமார் 15 ஆண்டுகளாக காவலாளியாகப் பணியாற்றி வந்ததால் அந்த வீட்டில் உள்ள பணம், நகை குறித்து அறிந்து வைத்துள்ளார். மேலும், அந்தக் குடும்பத்தினருக்கு சொத்து விற்பனையிலும் கணிசமான அளவு பணம் கிடைத்துள்ளது என்பதையும் அறிந்துள்ளார்.  இது குறித்து தனது மகன் அனுஜ், மருமகன் விகாஸ் ஆகிய இருவரிடமும் தெரிவித்த ராகேஷ்,  நகை, பணத்தை கொள்ளையடிக்கலாம் என்றும் திட்டத்தை வகுத்துக் கொடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து ,  ராகேஷின்  மருமகன்  விகாஸிடம் தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது,  5 பேரைக் கொன்று நகை, பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்ததை அவர்கள் ஒப்புக் கொண்டார். இக்கொள்ளைக்கு முக்கிய மூளையாகச்  ராகேஷ் செயல்பட்டதாகவும்,  சம்பவத்தை நேரில் பார்த்தார்  என்பதால் அவரை  கொன்றுவிட்டதாக  வாக்குமூலத்தில் விகாஸ் தெரிவித்தார்.
ராகேஷ் வகுத்த சதித்திட்டத்தின்படி  அனுஜ், மருமகன் விகாஸ் ஆகிய இருவரும் உர்மிளா ஜிண்டால் வீட்டில் கொள்ளையை நடத்த முடிவு செய்தனர். கொள்ளைத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற சரியான ஆள்களையும் தேடி வந்தனர். முதலில்  நீரஜ், தீபக் ஆகியோரை அனுஜ் தனது வலையில் விழவைத்துள்ளார். பின்னர், சன்னி, விக்கி, நிதின் ஆகிய மூவரையும் கொள்ளைச் சம்பவத்துக்கு விகாஸ் சம்மதிக்கவைத்துள்ளார்.  இதையடுத்து, அவர்கள் ஏழு பேரும் சேர்ந்து கொள்ளையை நிறைவேற்ற முடிவெடுத்தனர்.  தங்களது திட்டத்தின்படி, கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி ஏழு பேரும் லோனி பகுதியில் கூடினர். அப்போது தங்களது செல்லிடப்பேசிகளை அணைத்து வைத்தனர்.  இதைத் தொடர்ந்து,  அவர்கள் உர்மிளா ஜிண்டால் வீட்டிற்கு  அன்று நள்ளிரவு சென்றுள்ளனர்.  அவர்களை காவலாளி ராகேஷ் தனது அறையில் தங்க வைத்துள்ளார்.
பின்னர் வீட்டின் பிரதான கதவை ராகேஷ் தட்டிய போது உர்மிளாவின் மகள் நுபர் கதவைத் திறந்துள்ளார். தன்னைப் பார்ப்பதற்காக தனது குடும்பத்தினர் வந்திருப்பதாக அவரிடம் ராகேஷ் தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த நுபர், அவர்களை காவலாளி அறையிலேயே தங்க வைத்துக் கொள்ளும்படி ராகேஷிடம் கூறியுள்ளார். அந்தச் சமயத்தில் ராகேஷின் மருமகன் விகாஸ், நுபுரை பின்பக்கமாக கட்டிப்பிடித்து வீட்டினுள் கொண்டு சென்று கழுத்தை அறுத்துள்ளார்.  இதைத் தொடர்ந்து, மற்றவர்கள் வீட்டினுள் நுழைந்து வீட்டில் இருந்த உர்மிளா ஜிண்டால் உள்பட மூவரையும் குத்திக் கொலை செய்தனர். பின்னர் வீட்டில் இருந்த பணம், நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு வந்த போது,  வீட்டில் காவல் பணியில் இருந்த  ராகேஷை அவரது மகன் அனுஜ், மருமகன் விகாஸ் ஆகிய இருவரும் சேர்ந்து  கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு அனைவரும் தப்பிச் சென்றனர். பின்னர் அவர்கள் ஜிடிபி மருத்துவமனைக்கு பின்புறம் கூடி கொள்ளையடித்த நகைகளையும், பணத்தை தலா ரூ.2 லட்சம் வீதம் பிரித்துக் கொண்டுள்ளனர். மொத்தம் ரூ.30-ரூ.40 லட்சம் மதிப்புள்ள நகைகள், ரொக்கம் ரூ.14 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது  விசாரணையில் தெரிய வந்தது.
இதில் முதலில் கைது செய்யப்பட்ட ராகேஷின் மருமகன் விகாஸிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, ராகேஷின் மகன் அனுஜ், அவரது கூட்டாளிகள் சன்னி (22), விகாஸ் (எ) விக்கி, நீரஜ் (37) ஆகியோர் இரு தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற இருவர்களான நிதின் (30), தீபக் (30) ஆகியோர் தேடப்பட்டு வந்தனர். இந்நிலையில்,  அவர்களும்  புதன்கிழமை மாலை 4 மணியளவில் கைது செய்யப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/08/மானசரோவர்-பார்க்-5-பேர்-கொலைச்-சம்பவம்-தேடப்பட்ட-7-பேரும்-கைது-கொள்ளைத்-திட்டத்தை-காவலாளி-வகுத்தது-2822313.html
2822312 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி காற்று மாசு தடுப்பு செயல் திட்டம்: ஹரியாணா, பஞ்சாபுக்கு பசுமைத் தீர்ப்பாயம் கண்டிப்பு DIN DIN Friday, December 8, 2017 07:29 AM +0530 காற்று மாசு தடுப்பு தொடர்பாக ஹரியாணா, பஞ்சாப் மாநில அரசுகள் தாக்கல் செய்துள்ள அறிக்கைகளுக்கு பசுமைத் தீர்ப்பாயம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், காற்று மாசு தொடர்பாக செயல்படுத்தக் கூடிய தீர்வை தில்லி, பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் , ராஜஸ்தான் மாநிலங்களின் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் நேரில் ஆஜராகி அளிக்க வேண்டும் என்றும் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
தில்லி காற்று மாசு தொடர்பான வழக்கு பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவரும், நீதிபதியுமான ஸ்வதந்தர் குமார் தலைமையிலான அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணை நடைபெற்றது.
அப்போது, பஞ்சாப், ஹரியாணா அரசுகள் சார்பில், "காற்று மாசு தொடர்ந்து 48 மணி நேரத்திற்கு கடுமையான அளவில் நீடித்தால், கட்டுமான நடவடிக்கைகளை நிறுத்துதல், குப்பைகள் எரிக்கப்படுவது தடுத்தல், பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தல், தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் மாசுவைக் கண்காணித்தல் ஆகியவை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன' என்று கூறப்பட்டது.
இதற்கு கண்டனம் தெரிவித்த தீர்ப்பாய அமர்வு, "காற்று மாசு கடுமையான அளவில் நீடித்தால், 48 மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏன்? காற்று மாசுவைக் கட்டுப்படுத்த நீங்கள் தெரிவித்திருக்கும் செயல் திட்டத்தில் புதிதாக ஒன்றும் இல்லை. உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட காற்று மாசு கட்டுப்பாட்டு ஆணையத்தின் பரிந்துரைகளை மட்டுமே பஞ்சாப், ஹரியாணா அரசுகள் தங்கள் செயல்திட்டங்களாக கூறுகின்றன. புதிதாக எதையும் தெரிவிக்கவில்லை' என்று கூறியது.
இதையடுத்து, தனியார் வாகன கட்டுப்பாடு திட்டம் தொடர்பாக தில்லி அரசின் நிலை என்ன என்று தீர்ப்பாய அமர்வு கேள்வி எழுப்பியது. 
அதற்கு, தில்லி அரசின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், "சில சலுகைகளுடன் தில்லி அரசு இந்தத் திட்டத்தை செயல்படுத்த விரும்புகிறது. இதுதொடர்பாக மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது' என்றார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/08/காற்று-மாசு-தடுப்பு-செயல்-திட்டம்-ஹரியாணா-பஞ்சாபுக்கு-பசுமைத்-தீர்ப்பாயம்-கண்டிப்பு-2822312.html
2822311 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி அடிப்படை வசதிகளை மேம்படுத்த துணைநிலை ஆளுநர் உத்தரவு  DIN DIN Friday, December 8, 2017 07:29 AM +0530 ஆனந்த் விஹார், கெளசாம்பி பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் ஆகியவற்றில் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆனந்த் விஹார், கெளசாம்பி ஆகிய  பகுதிகளில் பேருந்து நிலையம், ரயில் நிலையம், மெட்ரோ ரயில் நிலையம் ஆகிய மூன்றும் அமைந்துள்ளன.  இப்பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய போக்குவரத்து, சுற்றுச்சூழல் மேலாண்மை குறித்தும், போக்குவரத்து நெரிசல்,  சுகாதாரம் ஆகியவை குறித்தும்  தில்லி துணைநிலை ஆளுநர் (எல்ஜி) அனில் பய்ஜால் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டம் துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.   இது தொடர்பாக விளக்கங்களை சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் புரி லால் அளித்தார். 
ஆனந்த் விஹார், கெளசாம்பி பேருந்து நிலையங்கள், ரயில், மெட்ரோ ரயில் நிலையங்கள் ஆகியவற்றில் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவும்,  காற்று மாசுவைத் தடுக்க தண்ணீர் தெளிக்கவும்,  பொது இடங்களில் குப்பைகளை எரிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டார். 
இக்கூட்டத்தில்  தில்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கைலாஷ் கெலாட்,   தில்லி அரசின் தலைமைச் செயலாளர், போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர்,  உத்தர பிரதேச மாநில போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர், நொய்டாவின்  தலைமை செயல் அதிகாரி,  சுற்றுச்சூழல் ஆர்வலர் சுனிதா நரெய்ன்,  தில்லி மாநகராட்சிகளின் ஆணையர்கள்,  தில்லி போக்குவரத்துக் காவல் துறை சிறப்பு ஆணையர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/08/அடிப்படை-வசதிகளை-மேம்படுத்த-துணைநிலை-ஆளுநர்-உத்தரவு-2822311.html
2822310 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி மின் திருட்டை தடுக்க கடும் நடவடிக்கை  காவல் துறையினருக்கு தில்லி உயர் நீதிமன்றம் அறிவுரை DIN DIN Friday, December 8, 2017 07:29 AM +0530 தில்லியில் மின் திருட்டு சம்பவங்களைத் தடுக்க போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
தில்லியில் நடைபெறும் மின் திருட்டு சம்பவங்களால் ஏற்படும் இழப்பை சரிகட்ட, வாடிக்கையாளர்களுக்கு மின் கட்டணத்தை மின் விநியோக நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. 
இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமன் சூரி என்பவர் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
இந்தக் குற்றச்சாட்டை மின் விநியோக நிறுவனங்கள் மறுத்துன. இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மிட்டல், நீதிபதி சி. ஹரி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணை நடைபெற்றது.
அப்போது, தில்லி காவல் துறை சார்பில் ஆஜரான வழக்குரைஞர், மின் திருட்டு புகார்கள் மீது வழக்குப் பதிவு செய்து பலரை கைது செய்துள்ளோம். 
நிகழாண்டு செப்டம்பர் 30-ம் தேதி வரை 3,853 புகார்களை மின் விநியோக நிறுவனங்கள் அளித்துள்ளன. அதில், 2,897 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 461 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மின் திருட்டு வழக்குகளை விசாரிக்க தனி காவல் நிலையம் அமைப்பது நிர்வாக ரீதியாக சாத்தியமல்ல. எனினும், மின் திருட்டு சம்பவங்கள் குறித்து அனைத்து காவல் நிலையங்களும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "இந்த விவகாரத்தில் நீங்கள் அதிக வழக்குகளைப் பதிவு செய்ய வேண்டியிருக்கும். 
மேலும் கடும் நடவடிக்கையும் எடுக்க வேண்டியிருக்கும்' என்று நீதிபதிகள் தெரிவித்ததனர். இந்த வழக்கை ஜனவரி 24-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/08/மின்-திருட்டை-தடுக்க-கடும்-நடவடிக்கை--காவல்-துறையினருக்கு-தில்லி-உயர்-நீதிமன்றம்-அறிவுரை-2822310.html
2822309 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி துப்பாக்கிகள் விற்றதாக உ.பி. இளைஞர் கைது: 28 துப்பாக்கிகள் பறிமுதல் DIN DIN Friday, December 8, 2017 07:28 AM +0530 தில்லி, தேசியத் தலைநகர் வலயப் பகுதிகளில் சட்டவிரோதமாக துப்பாக்கிகளைக் கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக உத்தர பிரதேச மாநிலத்தைச்  கும்பலைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 28  துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து  தில்லி துவாரகா மாவட்டக் காவல் துறைத் துணை ஆணையர் ஷிபேஷ் சிங் வியாழக்கிழமை கூறியதாவது: 
துவாரகா பகுதியில் அண்மைக் காலமாக கிரிமினல்கள்,  கொள்ளைக் கும்பல்கள் சட்டவிரோத ஆயுதங்களைப் பயன்படுத்தி துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட சம்பவங்கள் நிகழ்ந்தன. இது தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில் சட்டவிரோத ஆயுத சப்ளை நடைபெறுவது தெரிய வந்தது.
மேலும், பல்வேறு ஆயுத விற்பனைக் கும்பல் மூலம் மேற்கு உத்தர பிரதேச பகுதியில் இருந்து தேசியத் தலைநகர் வலயப் பகுதி, ஹரியாணாவுக்கு ஆயுதங்கள் கடத்தி வந்து விற்கப்படுவதும் தெரியவந்தது.  இதையடுத்து, துவாரகா காவல் துறையின் மூலம் குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.  இந்தப் படையினர் பல்வேறு இடங்களில் நடைபெறும் சட்டவிரோத ஆயுத சப்ளை குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.  இந்நிலையில், புதன்கிழமை தனிப்படை போலீஸாருக்கு ஒரு தகவல் வந்தது.  அதில்,  உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சட்டவிரோத ஆயுத கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒருவர் துவாரகா பகுதியில் ஆயுதங்களை சிலருக்கு விற்பதற்காக வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அவரிடம் துப்பாக்கி வாங்குவது போல் ஒரு போலியான நபர் அனுப்பிவைக்கப்பட்டார்.  அவர் துப்பாக்கி வைத்திருந்த நபரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஏராளமான துப்பாக்கிகள் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, அந்த நபர் உத்தம் நகர் சாலையில் உள்ள நஜஃப்கர் பகுதிக்கு வரவழைக்கப்பட்டார். அங்கு காரில் வந்த அவரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில்,  அவர் உத்தர பிரதேச மாநிலம்,  மீரட்,  கித்வாய் நகர் பகுதியைச் சேர்ந்த முகம்மது இந்தேஜார் (28) என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்து ஒரு 01 ரக துப்பாக்கி,  27 நாட்டு கைத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த 6 மாதங்களாக துப்பாக்கிகளை அவர் தலைமையிலான கும்பல் சட்டவிரோதமாக விற்று வந்தது தெரிய வந்தது. இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் தில்லி,  ஹரியாணா, உத்தர பிரதேசம், தேசியத் தலைநகர் வலயம் ஆகிய பகுதிகளில் சுமார் 350 துப்பாக்கிகளை சட்டவிரோதமாக விற்றுள்ளது தெரியவந்துள்ளதாக காவல் அதிகாரி ஷிபேஷ் சிங் தெரிவித்தார்.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/08/துப்பாக்கிகள்-விற்றதாக-உபி-இளைஞர்-கைது-28-துப்பாக்கிகள்-பறிமுதல்-2822309.html
2822308 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி கொள்ளையைத் தடுக்க முயன்றவருக்கு கத்திக்குத்து DIN DIN Friday, December 8, 2017 07:27 AM +0530 நொய்டாவில் கொள்ளையைத் தடுக்க முயன்ற இனிப்பு கடை பணியாளரை கொள்ளையர்கள் கத்தியால் குத்திவிட்டு தப்பினர். 
இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் கூறியதாவது:
நொய்டா செக்டார் 18-இல் உள்ள மின் நிலையம் அருகில் புதன்கிழமை இரவு, அப்பகுதியில் இனிப்புகடையில் பணியாற்றும் அப்சல் என்பவர் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 3 பேர் அப்சலை தாக்கி, அவரிடம் இருந்த செல்லிடப்பேசி, பர்ஸ் ஆகியவற்றைப் பறித்தனர். இதைத் தடுக்க முயன்ற அப்சலை அந்தக் கும்பல் கத்தியால் தாக்கியுள்ளது. காயமடைந்த அப்சல் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார் என்று போலீஸார் தெரிவித்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/08/கொள்ளையைத்-தடுக்க-முயன்றவருக்கு-கத்திக்குத்து-2822308.html
2822307 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி தில்லி மாநகராட்சிகள் வீட்டு வரியை உயர்த்தத் தேவையில்லை: முதல்வர் கேஜரிவால் DIN DIN Friday, December 8, 2017 07:27 AM +0530 தில்லி மாநகராட்சிகள் வீட்டு வரியை உயர்த்தத் தேவையில்லை என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார். வடக்கு, கிழக்கு தில்லி மாநகராட்சிகளின் 2017-18ஆம் ஆண்டு திருத்தப்பட்ட நிதி நிலை மதிப்பீட்டு அறிக்கை, 2018-19 நிதியாண்டுக்கான உத்தேச நிதி நிலை மதிப்பீட்டு அறிக்கை ஆகியவை  முறையே செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து, தில்லி மாநகராட்சிகளின் பட்ஜெட்டில் உத்தேசித்துள்ள வரி உயர்வுக்கு ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களும்,கவுன்சிலர்
களும், மாநகராட்சிகளின் எதிர்க் கட்சித் தலைவர்களும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். 
இந்நிலையில், தில்லி மாநகராட்சிகளின் வீட்டு வரி உயர்வு குறித்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சுட்டுரை பக்கத்தில்  வியாழக்கிழமை தெரிவித்துள்ளதாவது: 
தில்லி மாநகராட்சிகளில் வீட்டு வரியை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை.  ஊழலை மட்டுப்படுத்த வேண்டியதே தற்போதைய தேவை.  
ஊழலை ஒழித்தாலே, ஏராளமான நிதியைச் சேமிக்க முடியும்.  
வீட்டு வரியை உயர்த்த வேண்டியிருக்காது எனத் தெரிவித்துள்ளார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/08/தில்லி-மாநகராட்சிகள்-வீட்டு-வரியை-உயர்த்தத்-தேவையில்லை-முதல்வர்-கேஜரிவால்-2822307.html
2822306 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி தலைநகரில் காற்றின் தரத்தில் சிறிதளவு மேம்பாடு! DIN DIN Friday, December 8, 2017 07:27 AM +0530 தலைநகரில் காற்றின் தரம் சிறிதளவு மேம்பாடு அடைந்துள்ளது.  எனினும்,  மிகவும் மோசமான பிரிவிலேயே காற்றின் தரம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
தீபாவளிக்கு பின்பு தலைநகரில் காற்றின் தரம் மோசமான நிலையில் இருந்து வருகிறது. அவ்வப்போது இதன் போக்கில் சில மாற்றங்கள் தென்பட்டபோதிலும் வாகனப் புகை,  அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் பயிர்க் கழிவுகள், சாலையோர, கட்டடப் பகுதிகளில் உருவாகும் தூசிகள், குப்பைகள் எரிப்பு போன்ற காரணிகளால் காற்றின் தரம் மோசமான நிலையில் இருந்து வருகிறது. 
எனினும்,  பசுமைத் தீர்ப்பாயம், நீதிமன்றங்கள் அறிவுறுத்தலின் காரணமாக அரசுகள் மாசுத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில்,  தில்லி, தேசியத் தலைநகரில்  வியாழக்கிழமை காற்றின் தரம் சற்று மேம்பாட்டுடன் காணப்பட்டது. எனினும், காற்றின் தரம் "மிகவும் மோசமான' பிரிவில்தான் உள்ளது. காற்றின் தரக் குறியீடு புள்ளிவிவரத் தகவலின்படி,  தில்லி லோதி ரோடு பகுதியில் நுண்துகள் பிஎம் 2.5 மாசுவானது மிகவும் மோசமான பிரிவில் காணப்பட்டது.
நவம்பர் 7-ஆம் தேதி முதல் நவம்பர் 13-ஆம் தேதி வரையிலான ஏழு நாள்கள் காலத்தில் தலைநகரில் காற்றின் தரக் குறியீடு மோசமான பிரிவில் இருந்தது. இதுகுறித்து, தில்லி அரசின் அதிகாரி கூறுகையில், "காற்றின் தரக் குறியீடு குறிப்பிட்ட அளவைக் கடந்தால் மாசுக் கட்டுப்பாடு நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கொள்ளுமாறு கேட்டு "வாட்ஸ் அப்' மூலம் தில்லி சுற்றுச்சூழல் துறையின் செயலர் எச்சரிக்கை அளிப்பார்' என்றார்.
இது தொடர்பாக சுற்றுச்சூழல் துறை வெளியிட்ட தகவலில், "காற்றின் தரக் குறீயீடு அடிப்படையில் தில்லி அரசின் வாட்ஸ் அப்பின் மூலம் சுற்றுச்சூழல் செயலரால் உஷார்படுத்தப்படும்.  தாமதமின்றி சம்பந்தப்பட்ட துறையினரால் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் மாசுவைக் கட்டுப்படுத்த தண்ணீர் தெளிப்பு நடவடிக்கைகள், உயிரி பொருள்கள் எரிக்கப்படுவதைத் தடுத்தல்,  மாசுபடுத்தும் வாகனங்கள், டீசல் ஜெனரேட்டர்கள் பயன்பாட்டைத் தடுத்தல் போன்றவற்றை மேற்கொள்ளுமாறு தில்லி பொதுப் பணித்துறை, தில்லி மேம்பாட்டு ஆணையம்,  மாநகராட்சிகளை அறிவுறுத்தும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் (எஸ்ஓபி) உள்ளன. 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/08/தலைநகரில்-காற்றின்-தரத்தில்-சிறிதளவு-மேம்பாடு-2822306.html
2822305 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதிய தமிழகம் மாநாட்டில் நிதீஷ் குமார்,  ஹார்திக் படேல் பங்கேற்பர்: கிருஷ்ணசாமி தகவல் DIN DIN Friday, December 8, 2017 07:26 AM +0530 2018, ஜனவரியில் மதுரையில்  புதிய தமிழகம் கட்சி  நடத்தும் சாதி ஒருங்கிணைப்பு மாநாட்டில் பிகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார், பட்டிதார் அனாமத் அந்தோலன் சமிதியின் தலைவர் ஹார்திக் படேல் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி வியாழக்கிழமை தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: தமிழகத்தின் தேவேந்திர குல வேளாளர், பிகாரின் குறுமி இனம், குஜராத்தின் படேல் இனம், உத்தர பிரதேசத்தின் மள்ளார் இனம், ஆந்திர பிரதேசத்தின் காபூர் இனம் ஆகியவை ஒத்த இயல்புடைய ஆதி வேளாண் குடி இனங்களாகும். இவர்கள் மொழியால் வேறுபட்டிருந்தாலும், கலாசாரப் பண்பாட்டு ரீதியில் இவர்கள் ஒரே இனமாகும். ஒத்த கலாசாரக் கூறுகளைக் கொண்ட இந்த இன மக்களை ஒருங்கிணைத்து, அவர்களை ஒரே குரலாக ஒலிக்க வைக்கும் வகையில் மதுரையில் மாநாட்டை 2018, ஜனவரியில்  புதிய தமிழகம் கட்சி நடத்தவுள்ளது. 
இம்மாநாட்டில் குறுமி இனத்தைச் சேர்ந்த பிகார் மாநில  முதல்வர் நிதீஷ் குமார், குஜராத் படேல் சமூகத்தின் தலைவர் ஹார்திக் படேல்  சிறப்புப் பேச்சாளர்களாகக் கலந்து கொள்ளவுள்ளனர். மேலும், உத்தர பிரதேசத்தின் மள்ளார் இனம், ஆந்திர பிரதேசத்தின் காபூர் இனத் தலைவர்கள்  இதில் கலந்து கொள்ளவுள்ளனர். 
இந்தியா முழுவதும் உள்ள தேவேந்திர குல வேளாளர்களின் வேரைத் தேடிக் கண்டறியும் வகையில் இந்த மாநாடு  நடத்தப்படுகிறது. அகில இந்திய அளவில் சாதிய ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் சாத்தியக் கூறுகள் தொடர்பாகவும் மாநாட்டில் விவாதிக்கவுள்ளோம் என்றார் கே. கிருஷ்ணசாமி. 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/08/புதிய-தமிழகம்-மாநாட்டில்-நிதீஷ்-குமார்--ஹார்திக்-படேல்-பங்கேற்பர்-கிருஷ்ணசாமி-தகவல்-2822305.html
2822304 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி வாடகைக் கார்களில் சவாரிப் பகிர்வு: பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கேஜரிவால் வலியுறுத்தல் DIN DIN Friday, December 8, 2017 07:26 AM +0530 வாடகைக் கார்களில் சவாரிப் பகிர்வில் (RIDE SHARING) பங்கேற்கும் பெண் பயணிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை தெரிவித்தார்.  "நகர டாக்ஸி-2017' திட்டம் தில்லி அரசால் மிக  விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.  இத்திட்டம் வாடகைக் கார்களில் சவாரிப் பகிர்வு அனுமதிக்கப்படமாட்டாது எனத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் முதல்வர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார். 
இது தொடர்பாக  தனது சுட்டுரையில் (ட்விட்டர்) கேஜரிவால் கூறியிருப்பதாவது:  "சவாரிப் பகிர்வு நல்லதொரு திட்டமாகும்.  இது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறோம். அறிமுகமில்லாத பயணிகளுடன் பயணிப்பது பெண் பயணிகளுக்கு பாதுகாப்பானதா என்பது தொடர்பாக ஆராய்ந்து வருகிறோம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/08/வாடகைக்-கார்களில்-சவாரிப்-பகிர்வு-பெண்களின்-பாதுகாப்பை-உறுதிப்படுத்த-கேஜரிவால்-வலியுறுத்தல்-2822304.html
2821504 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி அனைத்து கிராமங்களிலும் மருத்துவ மையம்: அரவிந்த் கேஜரிவால் தகவல் DIN DIN Thursday, December 7, 2017 01:25 AM +0530 அனைத்து கிராமங்களிலும்  மருத்துவ மையம் (கிளினிக்) திறக்கப்படும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.
நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் 93 சதவீதம் தனியாருக்குச் சொந்தமாக உள்ளன. இந்நிலையில், 2030-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் சுகாதாரம் என்ற இலக்கை ஐக்கிய நாடுகள் சபை நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை அடைவதற்கு கிராமங்கள்தோறும் அரவிந்த் கேஜரிவால் கிளினிக் அமைக்க வேண்டும் என்று முதல்வரை குறிப்பிட்டு, தனது சுட்டுரையில் எழுத்தாளர் தேவேந்தர் சர்மா கருத்துத் தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதில் அளித்த தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், "தில்லியில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் மருத்துவ மையத்தை அமைக்க முடிவு செய்துள்ளோம்' எனத் தெரிவிதுள்ளார்.
ஆம் ஆத்மி அரசின் முதன்மைத் திட்டங்களில் ஒன்றான மொஹல்லா கிளினிக் திட்டத்தின் கீழ், தில்லி முழுவதும் இதுவரை 158 கிளினிக்குள் அமைக்கப்பட்டுள்ளன. 
நிகழாண்டு இறுதிக்குள் மேலும் 1,000 மொஹல்லா கிளினிக்குகளை அமைக்க அரசு இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது.  இந்நிலையில், கிராமங்கள்தோறும் மருத்துவ மையம் அமைக்கப்படும் என்று  கேஜரிவால் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/07/அனைத்து-கிராமங்களிலும்-மருத்துவ-மையம்-அரவிந்த்-கேஜரிவால்-தகவல்-2821504.html
2821502 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி உத்தேச சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு: ஆம் ஆத்மி கவுன்சிலர்கள், எம்எல்ஏக்கள் ஆர்ப்பாட்டம் DIN DIN Thursday, December 7, 2017 01:24 AM +0530 வடக்கு தில்லி மாநகராட்சியில்  சொத்து வரியை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து  ஆம் ஆத்மி கவுன்சிலர்கள், எம்எல்ஏக்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
வடக்கு தில்லி மாநகராட்சியின் 2017-18ஆம் ஆண்டு திருத்தப்பட்ட நிதி நிலை மதிப்பீட்டு அறிக்கை, 2018-19 நிதியாண்டுக்கான உத்தேச நிதி நிலை மதிப்பீட்டு அறிக்கை ஆகியவை செவ்வாய்கிழமை தாக்கல் செய்யப்பட்டன. 
அதில், சொத்து வரியை எளிமைப்படுத்துவதற்காக, குடியிருப்பு சொத்துகளுக்கான வரி 15 சதவீதம், குடியிருப்பு அல்லாத சொத்துகளுக்கான வரி 20 சதவீதம் என விதிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து  வடக்கு தில்லி மாநகராட்சி அலுவலகம் உள்ள சிவிக் சென்டர் வளாகத்தில் ஆம் ஆத்மி கவுன்சிலர்கள், எம்எல்ஏக்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
அப்போது வடக்கு தில்லி மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் ராகேஷ் குமார் பேசுகையில், "வரிகளை உயர்த்தாமல், மாற்று  நிதி ஆதாரங்களை  மாநகராட்சி பெருக்க வேண்டும். சரக்கு, சேவை வரியால் பொதுமக்கள் ஏற்கெனவே அவதியுற்று வருகின்றனர்.  
இதுபோன்ற சூழலில்,  வருவாயை சமநிலைப்படுத்தல் என்ற பெயரில், வடக்கு தில்லி மாநகராட்சி  சொத்து வரி, சிறப்புத் தொழில் வரி ஆகியவற்றை உயர்த்த உத்தேசித்துள்ளது. இது மேலும் நிலைமையை மோசமாக்கும். 
உத்தேச வரி உயர்வைத் திரும்பப் பெறும் வரை மாநகராட்சி அவையிலும், வெளியிலும் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து போராடும்' என்றார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/07/உத்தேச-சொத்து-வரி-உயர்வுக்கு-எதிர்ப்பு-ஆம்-ஆத்மி-கவுன்சிலர்கள்-எம்எல்ஏக்கள்-ஆர்ப்பாட்டம்-2821502.html
2821499 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி வேட்புமனுவை சரியாக நிரப்பத் தெரியாத விஷால் அரசியலுக்கு வர ஆசைப்படக் கூடாது: எச்.ராஜா DIN DIN Thursday, December 7, 2017 01:23 AM +0530 வேட்பு மனுவை சரியாக நிரப்பத் தெரியாத விஷால், அரசியலுக்கு வர ஆசைப்படக் கூடாது. முதலில் அவர் வேட்பு மனுவை சரியாக நிரப்பப் பழகிக் கொள்ள வேண்டும். பிறகு அரசியலுக்கு  வர அவர் ஆசைப்படலாம் என்று  பாஜக தேசிய செயலரும் தமிழக பாஜக மூத்த தலைவருமான எச்.ராஜா தெரிவித்தார்.
 இது தொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் கூறியதாவது:  தீபாவாக இருந்தாலும் சரி; விஷாலாக இருந்தாலும் சரி. அவர்கள் இன்னும் கொஞ்சம் அரசியல் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அரசியலில் அங்கீகாரம் பெறுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. அது விடாப்பிடியாகப் போராடி பெற வேண்டிய விஷயம். 
ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் மிரட்டியதாலேயே விஷாலின் வேட்புமனுவை முன்மொழிந்தவர்களில் இருவர் தாங்கள் கையெழுத்திடவில்லை என மறுத்ததாகச் சொல்வது தவறு. யாருடைய மிரட்டல்களுக்கும் தேர்தல் ஆணையம் அடிபணியாது. 
தேர்தல் ஆணையம் தீர விசாரித்து மனுக்களை ஆராய்ந்த பிறகே, விஷாலை முன்மொழிந்தவர்களாகச் சொல்லப்படும் இருவரின் கையெழுத்துகள் போலியானவை  எனக் கண்டறிந்துள்ளது. 
தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டதாக குற்றம் சொல்வதும் தவறாகும். உண்மையில் நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது அவருக்கு மிகப் பெரிய ஆறுதலாக இருக்கும். இல்லையென்றால் விஷால் சம்பந்தப்பட்ட மற்ற பிரச்னைகள் கிளம்பி அவரைப் பாடாய்படுத்தி இருக்கும். 
ஆர்.கே.நகரில் பாஜக வைப்புத் தொகையை பெறுமா எனக் கேள்வி கேட்க ஊடகங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. ஆர்.கே.நகர் தொகுதியில் பாஜக வெற்றி பெறுவது உறுதி. அதற்காக நாங்கள் கடினமாக உழைத்து வருகிறோம் என்றார் அவர். 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/07/வேட்புமனுவை-சரியாக-நிரப்பத்-தெரியாத-விஷால்-அரசியலுக்கு-வர-ஆசைப்படக்-கூடாது-எச்ராஜா-2821499.html
2821498 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி தில்லியில் இடதுசாரிக் கட்சிகள் பேரணி DIN DIN Thursday, December 7, 2017 01:23 AM +0530 நாட்டில் மாதவாதம் அதிகரித்து வருவதாகக் கூறி அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து  இடதுசாரிக் கட்சிகள் தில்லியில் புதன்கிழமை பேரணி நடத்தின.
மண்டி ஹவுஸில் இருந்து நாடாளுமன்றச் சாலை வரை நடைபெற்ற இப்பேரணியில், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட்,  மார்க்ஸிஸ்ட்-லெலினிஸ்ட், இந்திய சோசலிச ஒற்றுமை மையம் (எஸ்.யூ.சி.ஐ.), புரட்சிகர சோசலிஸ்ட் (ஆர்.எஸ்.பி.), அகில இந்திய ஃபார்வர்டு பிளாக்  ஆகிய 6 இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.  பேரணியின் முடிவில் நாடாளுமன்றச் சாலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 
பேரணியில் கலந்து கொண்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா எம்.பி.  தினமணி செய்தியாளரிடம் கூறியதாவது:  
இன்றைய நாள் பாபர் மசூதி இடிக்கப்பட்டு, இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மைக்கு நிரந்தர அபாயத்தை ஏற்படுத்திய நாளாகும். இந்த தினத்தை அகில இந்தியக் கறுப்பு தினமாக கம்யூனிஸ்ட் கட்சிகள் கடைப்பிடிக்கின்றன.  
மீண்டும் அயோத்தி பிரச்னையை கையில் எடுத்து மதவாத அரசியலை ஆளும் கட்சி செய்கிறது. இதனால், இந்தியாவின் ஜனநாயகத்திற்கும், பண்பாட்டிற்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  
இந்தியாவின் ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்ட சவாலாக பாபர் மசூதி இடிப்பை இந்தியர்கள் உணர வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்கப்படும்.  இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை வலியுறுத்தியும், அயோத்தி பிரச்னை  மீண்டும் எழுப்பப்படுவதை முறியடிக்கவுமே இப்பேரணி நடத்தப்படுகிறது என்றார் டி.ராஜா.  
இந்த ப்பேரணியில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத், அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலர் ஜி. தேவராஜன்,  முன்னாள் பொதுச் செயலர் தேபபிரதா பிஸ்வாஸ், மார்க்ஸிஸ்ட் லெலினிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கவிதா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/07/தில்லியில்-இடதுசாரிக்-கட்சிகள்-பேரணி-2821498.html
2821496 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி "நல்ல மனிதனாக உருவாக விளையாட்டு உதவும்'  DIN DIN Thursday, December 7, 2017 01:23 AM +0530 சமூகத்தில் நல்ல மனிதனாக உருவாக விளையாட்டு உதவும் என்று மத்திய இளையோர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை இணையமைச்சர் (பொறுப்பு) கர்னல் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் கூறினார்.
இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (ஐஐசி) சார்பில் புது தில்லியில் 6-ஆவது "பிக் பிக்சர்' மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் பேசியதாவது:
விளையாட்டானது ஊடகம், சுற்றுலா, சுகாதாரம் என இதர துறைகளுடன் வலுவான தொடர்புடையது.  விளையாட்டு என்பது மகிழ்ச்சியுடன் தொடர்புடையதுமாகும்.   ஒருவர் நல்ல தொழில் முறையாளனாகவும், நல்ல மனிதராகவும் உருவாக விளையாட்டு உதவும்.  விளையாட்டு மீதான மனோபாவம் மாற வேண்டும்.  சுகாதாரம்,  உணவுக் கட்டுப்பாடு ஆகியவை குறித்து  சரியான போதனையை வழங்குவதற்கான முனைப்பை கல்வி அமைப்புகள் காட்ட வேண்டும்.  செல்லிடப்பேசி செயலிகள் மூலம் பரவலான அறிவு பரப்பப்பட வேண்டும்.
விளையாட்டு உள்கட்டமைப்பு தொடர்புடைய தகவல்களை மட்டும் செயலி கொண்டிருக்கக் கூடாது. மாறாக, ஒரு குறிப்பிட்ட விளையாட்டை எவ்வாறு விளையாட வேண்டும்.  உரிய பயிற்சியாளர்களை எப்படித் தொடர்பு கொள்ளச் செய்வது என்பதையும் கொண்டிருக்க வேண்டும்.  விளையாட்டுகளை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.  
மணிப்பூரில் விளையாட்டுப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது. விளையாட்டு அறிவியல் மையங்களுக்கான 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு நிதியுதவி அளித்து வருகிறது.  விளையாட்டு ஆராய்ச்சிக்காக 6 பல்கலைக்கழகங்களுக்கும் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், விளையாட்டுக்கென 10 சிறப்பு மையங்களும்  அமைக்கப்பட உள்ளன.
விளையாட்டை பிரபலப்படுத்துவதில் ஊடகங்களின் பங்களிப்பு அளப்பரியது.  "கேலோ இந்தியா' பிரசாரம்  மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் விரைவில் மேற்கொள்ளபட உள்ளது.  இதைத் தொடர்ந்து, "கேலோ இந்தியா' வினாடி -  வினா போட்டியும் நடத்தப்பட உள்ளது. பள்ளி விளையாட்டு தினத்தில் வெற்றி பெறும் நபர்கள், பள்ளிச் சாம்பியன்களில் இருந்து பிராந்திய அளவிலும், தேசிய அளவிலும் சிறந்த வீரர்களாக உருவாக்கப்பட்டு சர்வதேச அளவிலும் சிறந்த வீரர்களாகப் பரிணமிக்க உருவாக்கப்பட வேண்டும் என்றார் அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்.
இந்நிகழ்வில் இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் ஊடக, பொழுதுபோக்குப் பிரிவு தேசிய குழுவின் தலைவர் சுதான்ஷு வாட்ஸ் பேசுகையில், "இதர பொருளாதாரத் துறைகளுடன் விளையாட்டு தொடர்புடையதாக இருப்பதால் இத்துறை அதிக திறனைக் கொண்டுள்ளது' என்றார். 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/07/நல்ல-மனிதனாக-உருவாக-விளையாட்டு-உதவும்-2821496.html
2821495 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி தனியார் மருத்துவமனைகளில் நேரடி ஆய்வை தீவிரப்படுத்த வேண்டும்: விஜேந்தர் குப்தா DIN DIN Thursday, December 7, 2017 01:22 AM +0530 கட்டணக் கொள்ளை, சிகிச்சையில் மெத்தனப் போக்கு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் வகையில்,  தனியார் மருத்துவமனைகளில் தில்லி அரசு நேரடி ஆய்வை தீவிரப்படுத்த வேண்டும் என்று சட்டப்பேரவை பாஜக உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான விஜேந்தர் குப்தா தெரிவித்தார்.
இது குறித்து புதன்கிழமை அவர் கூறியதாவது:  தனியார்  மருத்துவமனைகளின் மெத்தனப்போக்கு, மக்கள் ஏமாற்றப்படுவது ஆகியவற்றைத்  தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தில்லி அரசு தற்போது கூறி வருகிறது.  
ஆனால், தில்லி அரசிடம் போதுமான அரசியல் வேட்கையும், போதுமான உள்கட்டமைப்பும் இல்லை.  தனியார் மருத்துவமனைகளுக்கு உரிமங்கள் அளித்த பிறகு,  அதில் தெரிவித்துள்ளபடி விதிமுறைகள், கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை சுகாதாரச் சேவைகள் இயக்குநர் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும். 
விதிகளின்படி மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆய்வு நடத்தப்பட வேண்டும்.  மத்திய அரசின் கிளினிக் எஸ்டாபிலிஷ்மன்ட் (பதிவு, முறைப்படுத்துதல்) சட்டத்தை அமல்படுத்தவும் தில்லி அரசு தவறிவிட்டது. 
முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நேர்மையாக இருக்கும்பட்சத்தில், தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் நிலவும் கட்டணக் கொள்ளை, மெத்தனப்போக்கு ஆகியவற்றைத் தடுக்க சட்ட விதிகளை உருவாக்க வேண்டும்.  
கிளினிக்கல் எஸ்டாபிலிஷ்மென்ட் சட்டத்தை (2010) அமல்படுத்தி தனியார் மருத்துவமனைகளில்  நேரடி ஆய்வை மீண்டும் தீவிரப்படுத்த வேண்டும் என்றார் விஜேந்தர் குப்தா.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/07/தனியார்-மருத்துவமனைகளில்-நேரடி-ஆய்வை-தீவிரப்படுத்த-வேண்டும்-விஜேந்தர்-குப்தா-2821495.html
2821493 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி "ஓபிசி' பட்டியலில் சேர்க்கக் கோரிக்கை: தில்லியில் புதிய தமிழகம் கட்சியினர் பேரணி DIN DIN Thursday, December 7, 2017 01:22 AM +0530 தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் உள்ள தேவேந்திர குல வேளாளர்களை இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி தில்லியில் புதிய தமிழகம் கட்சியினர் புதன்கிழமை பேரணி நடத்தினர்.
அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில் தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கலந்து கொண்டார். மண்டி ஹவுஸில் தொடங்கி நாடாளுமன்றச் சாலை வரை இப்பேரணி நடைபெற்றது. 
மண்டி ஹவுஸில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
இழந்துபோன தேவேந்திர குல வேளாளர்களின் அடையாளத்தை மீட்கவும்,  தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து தேவேந்திர குல வேளாளர்களை நீக்கக் கோரியும் பிரதமர் மோடியின் அலுவலகம் நோக்கி இப்பேரணி நடத்தப்பட்டுள்ளது.  
தமிழகத்தின் மூத்த வேளாண் குடிகளான பள்ளர், குடும்பர், பண்ணாடி, கடையர், காலடி, தேவேந்திர குலத்தார்,  வாதிரியார்  ஆகியோர் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும், அவர்கள் அனைவரும் ஒரே இனம்தான். எனவே, அவர்களை  தேவேந்திர குல வேளாளர் என்று அறிவித்து அரசாணை பிறப்பிக்க வேண்டும். 
1924- ஆம் ஆண்டு அன்றைய ஆங்கிலேய அரசு தேவேந்திர குல வேளாள இனத்தின் பூர்விக மரியாதை தெரியாமல், ஏழ்மையை மட்டும் கணக்கில் கொண்டு அவர்களை பட்டியல் இனத்தில் சேர்த்தது. அன்றில் இருந்தே  தேவேந்திர குல வேளாளர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து நீக்கக் கோரி போராட்டம் நடத்தி வருகிறோம். 
தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருப்பதால் சில இடஒதுக்கீட்டு நன்மைகள் கிடைத்தாலும்,  நாங்கள் சமூக ஒடுக்கு முறை, அநீதிகளை எதிர்கொள்கிறோம். இந்த அவல நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டது வரலாற்றுத் தவறாகும்.  மேலும்,  தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் உள்ள தேவேந்திர குல வேளாளர்களால் சமூக அந்தஸ்தைப் பெற முடியவில்லை. எனவே எங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பட்டியலில் சேர்க்குமாறு கோருகிறோம். பிரதமர் மோடியைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளோம்.
தாழ்த்தப்பட்டவர் பட்டியலில் இருப்பதால் கிடைக்கும் இட ஒதுக்கீட்டுச் சலுகைகள் எங்களுக்கு வேண்டாம்; கௌரவமே வேண்டும்.  கடந்த 10 ஆண்டுகளாக களத்தில் மக்களுடன் கலந்தாலோசித்தே இந்தக் கோரிக்கையை முன்வைக்கிறேன். சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த போதும் இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளேன். இதைப் புதிய தமிழகம் கட்சியின் கோரிக்கையாக மட்டும் பார்க்க்கக் கூடாது. இதை ஒட்டுமொத்த தேவேந்திர குல வேளாள மக்களின் கோரிக்கையாகப் பார்க்க வேண்டும் என்றார் அவர்.
பேரணியில் கலந்து கொண்ட தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேசுகையில், "இது சலுகை தொடர்பான பிரச்னை அல்ல; இது தன்மானம் தொடர்பான பிரச்னை. இதற்கு  பாஜக ஆதரவு அளிக்கிறது' என்றார். 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/07/ஓபிசி-பட்டியலில்-சேர்க்கக்-கோரிக்கை-தில்லியில்-புதிய-தமிழகம்-கட்சியினர்-பேரணி-2821493.html
2821492 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி காற்று மாசு விவகாரம்: விரிவான செயல் திட்டத்தை இன்று தாக்கல் செய்ய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு DIN DIN Thursday, December 7, 2017 01:22 AM +0530 காற்று மாசுவை கட்டுப்படுத்துவது  தொடர்பாக  விரிவான  செயல் திட்ட அறிக்கையை வியாழக்கிழமை (டிசம்பர் 7) தாக்கல் செய்ய வேண்டும் என்று தில்லி,  ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
தில்லி காற்று மாசு தொடர்பான வழக்கு தீர்ப்பாயத்தின் தலைவரும், நீதிபதியுமான ஸ்வதந்தர் குமார் தலைமையிலான அமர்வு முன் கடந்த திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.  
அப்போது, தில்லியில் கடுமையான காற்று மாசு நிலவியபோது, தில்லியில் இந்தியா - இலங்கை கிரிக்கெட் போட்டி நடத்தியிருக்கக் கூடாது என்று தெரிவித்தது. மேலும்,  காற்று மாசுவைத் தடுப்பது தொடர்பாக உறுதியான செயல் திட்ட அறிக்கையைத்  தாக்கல் செய்யாத தில்லி அரசுக்கு   கண்டனம் தெரிவித்த தீர்ப்பாயம்,  இந்த விவகாரம் தொடர்பாக உறுதியான செயல் திட்ட அறிக்கையை 48 மணி நேரத்திற்குள் செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பாய அமர்வு உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பான மனு தேசிய பசுமைத் தீர்ப்பாயத் தலைவரும், நீதிபதியுமான ஸ்வதந்தர் குமார் தலைமையிலான அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. 
அப்போது, தில்லி அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர், தலைநகரில்  மாசுவைக் கட்டுப்படுத்த தில்லி அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தீர்ப்பாயத்தில் அறிக்கையைத் தாக்கல் செய்தார்.  அதில், காற்று மாசு அளவு மிக மோசமான அளவைத் தொடும் போது, கட்டுமானப் பணிகளை முற்றிலும் நிறுத்த வேண்டும். தில்லிக்குள்  லாரிகள் வருவதற்குத்  தடை விதிக்க வேண்டும்.  தனியார் வாகனக் கட்டுப்பாடு திட்டத்தில் யாருக்கும் விதிவிலக்கு அளிக்கக் கூடாது. காற்று மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை மூட வேண்டும். குப்பைகளை எரிப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
உத்தரவு: அப்போது நீதிபதி ஸ்வந்தர் குமார்,  "தலைநகர் தில்லியில் காற்றின் தரம் இயல்பாக இருந்ததில்லை.  மாசுவை தடுக்க  மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன? மாசு அளவைப் பொருத்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என்ன? ஆகியவை குறித்து பஞ்சாப்,  ஹரியாணா ஆகிய மாநிலங்கள் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டும். இது தொடர்பான விரிவான செயல் திட்ட அறிக்கையை வியாழக்கிழமைக்குள் (டிசம்பர் 7) தாக்கல் செய்ய வேண்டும். தில்லியில் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள தனியார் வாகனக் கட்டுப்பாடு திட்டம் குறித்தும் விரிவான அறிக்கையை தில்லி அரசு தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக கடந்த மாதம் 28-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, தில்லியில் காற்று மாசுவை தடுப்பது தொடர்பாக தில்லி அரசும், பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் செயல் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று  தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தில்லி, ஹரியாணா, பஞ்சாப்  ஆகிய மாநிலங்களுக்கு இப்போது மீண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/07/காற்று-மாசு-விவகாரம்-விரிவான-செயல்-திட்டத்தை-இன்று-தாக்கல்-செய்ய-பசுமைத்-தீர்ப்பாயம்-உத்தரவு-2821492.html
2821491 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி சம்ஸ்கிருத அகாதெமி மாற்றியமைப்பு: தில்லி அரசு நடவடிக்கை DIN DIN Thursday, December 7, 2017 01:21 AM +0530 சம்ஸ்கிருத அகாதெமியை மாற்றியமைத்து தில்லி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதையடுத்து,  சம்ஸ்கிரு அகாதெமி குழுவில் புதிதாக மொழியியில் வல்லுநர்கள், கல்வியாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தில்லி அரசின் மூத்த அதிகாரி புதன்கிழமை கூறியதாவது: 
புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ள சம்ஸ்கிருத அகாதெமி குழுவில் இடம் பெற்றுள்ள பகுதியளவு உறுப்பினர்கள் மகளிர் ஆவர். அகாதெமியின் துணைத் தலைவராக தில்லி பல்கலை.யின் பேராசிரியரும் கல்வியாளருமான டாக்டர் கன்டா ராணி பாஷியா சேர்க்கப்பட்டுள்ளார். 
அதேபோன்று,  புனித ஸ்டீபன் கல்லூரி பேராசிரியர் ஆஷுதோஷ் தயாள் மாத்துர்,  பாரசீக கல்வியாளர் டாக்டர் பல்ராம் சுக்லா, பெருமாட்டி ஸ்ரீராம் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் பங்கஜ காய் கௌசிக், ஆகாஷ்வாணியின் சம்ஸ்கிருத செய்திவாசிப்பாளர் டாக்டர் பால்தேவானந்த் சாகர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
அகாதெமி மூலம் நகர் முழுவதும் 70 சம்ஸ்கிருத மையங்கள் அமைக்கப்பட உள்ளன.  சம்ஸ்கிருதத்தை சமகாலப்படுத்தவும்,  சமூக வலைத்தள ஊடகம் மூலம் அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார் அந்த அதிகாரி.
தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறுகையில், "சம்ஸ்கிருதம் முற்றிலும் ஒரு மதிப்புமிக்க மொழி மட்டுமின்றி, பாரம்பரிய அறிவு,  தத்துவம், மதிப்பீடுகளின் ஆதரமாகவும் உள்ளது. இந்த மொழியை உயிரோட்டத்துடன் வைத்திருக்கும் வகையில் அனைவரும் இதன் விஷயங்களைப் பெற வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். இதற்கு சம்ஸ்கிருத அகாதெமி உதவியாக இருக்கும்.  மொழியின் வளர்ச்சிக்கு உகந்த பங்களிப்பை தில்லி அரசு  வழங்கும் என்றார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/07/சம்ஸ்கிருத-அகாதெமி-மாற்றியமைப்பு-தில்லி-அரசு-நடவடிக்கை-2821491.html
2821490 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி நெற்றியில் குண்டுக் காயத்துடன் ஹாக்கி வீரர் மர்மச் சாவு: போலீஸார் தீவிர விசாரணை DIN DIN Thursday, December 7, 2017 01:21 AM +0530 நெற்றிப் பொட்டில் குண்டுக் காயத்துடன் ஹாக்கி வீரர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.  அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.  எனினும், கொலைக்கான வாய்ப்பு இருப்பதாக அவரது பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.  இச்சம்வம் குறித்து  கூறப்படுவதாவது:
 தில்லி திகார் காவ்ன் பகுதியைச் சேர்ந்தவர் ரிஸ்வான் கான் (20).  ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் பி.ஏ. படித்து வந்தார்.  ஹாக்கி விளையாட்டு வீரர்.  இவரது சகோதரர் ரியாஜுதின். பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். 
இந்நிலையில், சம்பவத்தன்று மாலை வாடிக்கையாளர் ஒருவருக்கு தருவதற்காக வீட்டில் இருந்து ரூ.2 லட்சம் பணத்துடன் காரில் ரிஸ்வான் கான் சென்றார். அதன் பிறகு இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. 
இந்நிலையில், சரோஜினி நகர் பகுதியில் உள்ள அவரது பெண் நண்பரின் வீட்டில் இருந்து ரிஸ்வான் குடும்பத்திற்கு தொலைபேசி அழைப்பு வந்தது.  தங்களது வீட்டில் பணத்தையும், செல்லிடப்பேசியையும் ரிஸ்வான் விட்டுச் சென்றுவிட்டதாகவும், அவற்றைப் பெற்றுச் செல்லுமாறும் கூறப்பட்டது. இதையடுத்து,  ரிஸ்வான் கானின் குடும்பத்தினர் மறுநாள் காலை சரோஜினி நகரில் உள்ள ரிஸ்வான் கானின் பெண் நண்பரின் வீட்டுக்குச் சென்றனர்.
அப்போது, அந்த வீடு அருகே ரிஸ்வானின் கார் நிறுத்தப்பட்டிருந்தது தெரிய வந்தது. அங்கு சென்று பார்த்த போது அவர் காருக்குள் இறந்த நிலையில் கிடப்பது தெரிய வந்தது. இதையடுத்து, காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  சம்பவ இடத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, ரிஸ்வானின் வலது நெற்றிப் பொட்டில் குண்டுக் காயம் இருந்தது.  அவரது வலது கையில் நாட்டுத் துப்பாக்கியும் இருந்தது. இதனால், அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
எனினும்,  ரிஸ்வான் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவரது குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.  சம்பவத்தன்று ஹாக்கி வீராங்கனையான பெண் நண்பரை ரிஸ்வான் எதற்காக சந்திக்கச் சென்றார்?  அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/07/நெற்றியில்-குண்டுக்-காயத்துடன்-ஹாக்கி-வீரர்-மர்மச்-சாவு-போலீஸார்-தீவிர-விசாரணை-2821490.html
2821489 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி தில்லி சட்டப்பேரவையில்  அம்பேத்கர் நினைவு நாள் DIN DIN Thursday, December 7, 2017 01:21 AM +0530 டாக்டர்  அம்பேத்கரின்  62-ஆவது நினைவு நாள் "மகாபரிநிர்வான் திவஸ்' என்ற பெயரில் தில்லி சட்டப்பேரவையில்' புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி, தில்லி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கும், உருவப் படத்துக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. 
இதில், தில்லி சட்டப்பேரவைத் தலைவர் ராம் நிவாஸ் கோயல், துணைத் தலைவர் ராக்கி பிர்லா,  முதல்வர் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர்  மணீஷ் சிசோடியா,  அமைச்சர்கள் சத்யேந்தர் ஜெயின்,   இம்ரான் ஹுசேன்,  ராஜேந்திர பால் கெளதம், கைலாஷ் கெலாட்,  எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா,  சட்டப்பேரவைச் செயலாளர் பிரசன்ன குமார் தேவரா, 
சுதந்திர போராட்ட தியாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
முன்னதாக, அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, தில்லி முதல்வர் டிவிட்டரில், "பாபா சாகேப் அம்பேத்கரின் நினைவு நாளில் கோடான கோடி வந்தனங்கள்' என தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா, "நவீன இந்தியாவின் கட்டமைப்பில் சுதந்திரப் போராட்ட வீரராகவும்,  சமூகச் செயல்பாட்டாளராகவும், இந்திய அரசியல் அமைப்பு சாசனத்தின் தந்தையாகவும் பாபா சாகேபின் பங்களிப்பு ஈடுசெய்ய இயலாத வகையில் உள்ளன' எனத் தெரிவித்துள்ளார். 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/07/தில்லி-சட்டப்பேரவையில்--அம்பேத்கர்-நினைவு-நாள்-2821489.html
2821488 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி கட்டுமானங்களுக்கு தடை கோரும் "ஈடிஎம்சி' மனு மீது நாளை விசாரணை DIN DIN Thursday, December 7, 2017 01:20 AM +0530 கட்டுமானங்களைத் தடை செய்யக் கோரி தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் (என்ஜிடி) கிழக்கு தில்லி மாநகராட்சி  (ஈடிஎம்சி) தாக்கல் செய்த மனு மீது வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெறவுள்ளது.
கிழக்கு தில்லி மாநகராட்சியில் புதிதாக குப்பை சேமிப்பு கிடங்கு  தேர்வு செய்யப்படும் வரை,  கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தில்லி வளர்ச்சி ஆணையம் (டிடிஏ),  தில்லி மாநில  தொழில்,  உள்கட்டமைப்பு வளர்ச்சி நிறுவனம் (டிஎஸ்ஐஐடிசி) ஆகியவற்றுக்குத் தடை விதிக்கக் கோரி தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் அந்த மாநகராட்சி சார்பில் அண்மையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த ஆணையத்தின் தலைவரும், நீதிபதியுமான ஸ்வதந்தர் குமார்  இந்த விவகாரம் தொடர்பாக வெள்ளிக்கிழமைக்குள் (டிசம்பர் 8)  பதில் அளிக்க தில்லி வளர்ச்சி ஆணையம் (டிடிஏ),  தில்லி மாநில  தொழில்,  உள்கட்டமைப்பு வளர்ச்சி நிறுவனம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அளிக்க உத்தரவிட்டார். 
மேலும், இந்த விவகாரம் தொடர்பான மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்  எனவும் அவர் தெரிவித்தார். 
கிழக்கு தில்லியில் உள்ள காஜிப்பூர் குப்பை சேமிப்பு கிடங்கில் கடந்த அக்டோபர் மாதம் தீ விபத்து ஏற்பட்டது.  இதைத் தொடர்ந்து,  புதிதாக குப்பை சேமிப்பு கிடங்கை தேர்வு செய்யும் பணியை கிழக்கு தில்லி  மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.  
இதனிடையே, புதிதாக குப்பை சேமிப்பு கிடங்கை கோண்டா குஜரன் பகுதியில்  அமைக்கும் கிழக்கு தில்லி மாநகராட்சியின் முன்மொழிவை தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் கடந்த செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் நிராகரித்தது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/07/கட்டுமானங்களுக்கு-தடை-கோரும்-ஈடிஎம்சி-மனு-மீது-நாளை-விசாரணை-2821488.html
2821486 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி சிகிச்சைப் பெற்று வந்த மற்றொரு குழந்தையும் மரணம் DIN DIN Thursday, December 7, 2017 01:20 AM +0530 இறந்ததாக மேக்ஸ் மருத்துவமனை மருத்துவர்களால் அறிவிக்கப்பட்ட நிலையில், உயிருடன் இருந்ததால் வேறொரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பச்சிளம் குழந்தை செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தது.
இதுகுறித்து மேக்ஸ் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "23 வார குறைப்பிரசவ குழந்தை காற்றுசுவாசக் கருவி ஆதரவுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இறந்துவிட்ட செய்தி தெரிய வந்துள்ளது. இதற்காக குழந்தையின் பெற்றோருக்கும்,  அதன் குடும்ப உறுப்பினர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தை உயிர்பிழைப்பது மிகவும் அரிதானது என்பதை உணர்கிறோம்.  குழந்தையின் இறப்பானது அதன் பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் மிகவும் வேதனை தரும் நிகழ்வாகும்.  இந்த இழப்பை தாங்கும் வலிமையை அவர்களுக்கு கிடைக்க வாழ்த்துகிறோம்' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் மரணத்தை வடமேற்கு தில்லி காவல் துறையின் துணை ஆணையர் அஸ்லம் கான் உறுதிப்படுத்தினார்.  மேக்ஸ் மருத்துவமனையில் நிகழ்ந்ததாகக் கூறப்படும்  மருத்துவ அலட்சியம்  தொடர்பாக விசாரிக்க தில்லி அரசால் அமைக்கப்பட்ட குழுவானது,  பிறந்த குழந்தைகளுக்கு கையாளப்படும் மருத்துவ விதிகளை மேக்ஸ் மருத்துவமனை கடைப்பிடிக்கவில்லை எனக் கண்டறிந்துள்ளது. 
பின்னணி:  வடமேற்கு தில்லி, ஷாலிமார் பாகில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் பிரசவத்திற்காக பஸ்சிம் விஹாரைச் சேர்ந்த வர்ஷா என்ற பெண் அண்மையில் சேர்க்கப்பட்டார்.  அவருக்கு நவம்பர் 30-ஆம் தேதி ஆண், பெண் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. இந்நிலையில், அக்குழந்தைகள் இறந்தே பிறந்ததாக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர், இரு குழந்தைகளையும் பாலித்தீன் பையில் அடைத்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில்,  இறுதிச் சடங்கு செய்வதற்காக மதுபன் சௌக்கிற்கு குழந்தைகளின் பெற்றோர்களும்,  உறவினர்களும் குழந்தைகளை எடுத்து சென்றனர். அப்போது,  ஆண் குழந்தை உயிருடன் இருப்பது தெரிய வந்தது.  இதையடுத்து, அக்குழந்தையை பீதம்புரா மருத்துவமனையில் அனுமதித்தனர்.  அக்குழந்தைக்கு அங்கு உயிர்காக்கும் வசதியுடன்கூடிய மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  இந்நிலையில், அக்குழந்தை சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தது.
  இதனிடையே,   மேக்ஸ் மருத்துவமனை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் மேக்ஸ் மருத்துவமனை மீது விசாரணையின் போது  தவறு நிரூபிக்கப்பட்டால் அதன் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்திருந்தார்.
 மேலும், இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு மேக்ஸ் மருத்துவமனைக்கு தில்லி காவல் துறையினர் நோட்டீஸ்  அனுப்பினர்.  ஷாலிமார் பாக் மேக்ஸ் மருத்துவமனையில்  நிகழ்ந்த குழந்தை இறப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஒரு வல்லுநர் குழு மேக்ஸ் ஹெல்த்கேர் குழுமம் சார்பில்  அமைக்கப்பட்டது. இக்குழுவில் இந்திய மருத்துவச் சங்கத்தின் (ஐஎம்ஏ) நெறிகள் குழுவின் தலைவர் டாக்டர் அருண் அகர்வால்,  ஐஎம்ஏ இணைச் செயலர் டாக்டர் ரமேஷ் தத்தா ஆகியோர் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

மேக்ஸ் மருத்துவமனை விவகாரம்: குற்றப்பிரிவுக்கு மாற்றம்
மேக்ஸ் மருத்துவமனையில் இரட்டை குழந்தைகள் இறப்பு விவகார வழக்கை தில்லி மாவட்ட காவல் துறையிடம் இருந்து குற்றப் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி கூறுகையில், "இந்த வழக்கில் தில்லி அரசின் சுகாதாரத் துறைக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் கடிதங்கள் எழுதி விளக்கம் பெற வேண்டியுள்ளது. இந்த வழக்கில் தீவிர மருத்துவ விசாரணைகள் நடத்தப்பட வேண்டியுள்ளதால் தில்லி காவல் துறையின் குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது' என்றார்.


இறுதி அறிக்கை 2 நாள்களில் கிடைக்கும்
மேக்ஸ் மருத்துவமனையில் உயிருடன் இருந்த பிறந்த குழந்தை, இறந்ததாக அறிவிக்கப்பட்ட விவகாரம் குறித்த இறுதி விசாரணை அறிக்கை இரண்டு நாள்களில் கிடைக்கப் பெறும் என்று தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்தார்.
அந்த அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
பீதம்புராரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மற்றொரு குழந்தை புதன்கிழமை உயிரிழந்ததையடுத்து, செய்தியாளர்களிடம் சத்யேந்தர் ஜெயின் கூறியதாவது:
மேக்ஸ் மருத்துவமனை விவகாரம் தொடர்பாக கிடைக்கப்பட்ட முதல் கட்ட விசாரணை அறிக்கையில், சில விவகாரங்களில் அந்த மருத்துவமனை தவறு செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இறுதி விசாரணை அறிக்கை இன்னும் இரண்டு நாள்களில் வந்துவுடன் தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு சிகிச்சை அளிக்கும் விவகாரத்தில் மேக்ஸ் மருத்துவமனை விதிகளை மீறி வருகிறது என்று கடந்த மாதம் 22-ம் தேதி தில்லி அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 
இந்த விவகாரம் குறித்தும் இரட்டை குழந்தைகள் உயிரிழப்பு விவகாரம் குறித்தும் மேக்ஸ் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/07/சிகிச்சைப்-பெற்று-வந்த-மற்றொரு-குழந்தையும்-மரணம்-2821486.html
2821485 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி லாரி மீது ஆட்டோ மோதி விபத்து: ஒருவர் சாவு;  5 பேர் படுகாயம் DIN DIN Thursday, December 7, 2017 01:19 AM +0530 தென்கிழக்கு தில்லியில் உள்ள லால் கௌன் பகுதியில் நின்றுகொண்டிருந்த லாரி மீது ஆட்டோ மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்; 5 பேர் படுகாயமடைந்தனர்.
இதுதொடர்பாக தில்லி போலீஸார் கூறுகையில், "செவ்வாய்க்கிழமை அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சங்கம் விஹார் பகுதியில் ஆட்டோவிற்கு காத்திருந்தவர்களை ராகுல் என்ற ஆட்டோ ஓட்டுநர் தனது ஆட்டோவில் ஏற்றி கொண்டு வந்துள்ளார். ஆட்டோவின் பின்புறத்தில் மூவரும், ராகுல் அருகே இருவரும் அமர்ந்துள்ளனர். இந்த ஆட்டோவை ஓட்டுநர் வேகமாக ஓட்டியதாகவும், மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, சாலையோரத்தில் இருந்த லாரியை கவனிக்காமல் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் உதய குமார் என்ற பயணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த ஓட்டுநர் ராகுல் உள்பட 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் நடைபெற்றபோது ஓட்டுநர் ராகுல் குடிபோதையில் இருந்துள்ளார் என்று போலீஸார் தெரிவித்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/07/லாரி-மீது-ஆட்டோ-மோதி-விபத்து-ஒருவர்-சாவு--5-பேர்-படுகாயம்-2821485.html
2821025 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் செல்லிடப்பேசி திருடிய இளைஞர் கைது DIN DIN Wednesday, December 6, 2017 01:44 AM +0530 தில்லி யமுனா மெட்ரோ ரயில் நிலையத்தில் இருவரிடம் செல்லிடப்பேசிகளை திருடியதாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
யமுனா பேங்க் மெட்ரோ ரயில் நிலையப் பகுதியில் சந்தேகப்படும் வகையில் சுற்றித் திரிந்த இளைஞரிடம் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் மணீஷ் சோதனை நடத்தினார். அவரிடம் இரு செல்லிடப்பேசிகள் இருந்தன. அவை திருட்டுப்போன செல்லிடப்பேசிகள் என விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் பட்பட்கஞ்ச் சசி கார்டன் பகுதியைச் சேர்ந்த ஷாஹித் என்பது தெரிய வந்தது.  அவரிடமிருந்து செல்லிடப்பேசிகள் மீட்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/06/மெட்ரோ-ரயில்-நிலையத்தில்-செல்லிடப்பேசி-திருடிய-இளைஞர்-கைது-2821025.html
2821024 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி வணிகரை மிரட்டி ரூ.50 லட்சத்தை பறிக்க முயற்சி: 2 பேர் கைது DIN DIN Wednesday, December 6, 2017 01:44 AM +0530 வணிகரை மிரட்டி ரூ.50 லட்சத்தைப் பறிக்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல் துறையினர் தெரிவித்தனர்.
இது குறித்து தில்லி காவல் துறையினர் கூறியதாவது: 
தில்லியைச் சேர்ந்த 53 வயதுடைய ஆயத்த ஆடை மொத்த விற்பனை வணிகருக்கு டிசம்பர் 3-ம் தேதி ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.  அதில் பேசிய மர்ம நபர்,  வணிகரின் மகனின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் ரூ.50 லட்சம் பணம் தர வேண்டும் என்று மிரட்டிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டார்.  இது குறித்து தில்லி காவல் துறையினரிடம் வணிகர் புகார் அளித்தார். 
இதையடுத்து,  சம்பந்தப்பட்ட செல்லிடப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது, அது அணைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும்,  கடைசியாக பல்ஜீத் நகரில் இருந்து அந்த தொலைபேசி எண் பயன்படுத்தப்பட்டிருந்தது தெரிய வந்தது.  மேலும், செல்லிடப்பேசியில் நபர் சில ஆண்டுகளுக்கு முன்பு தனது முகவரியில் இருந்து காலியானது தெரிய வந்தது.  இதைத் தொடர்ந்து,  தீவிர விசாரணை பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது.
 அப்போது,  இச்சம்பவத்தில் தொடர்புடைய பிரவேஷ் குமார் (31), அமன் (22) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  இவர்களில் பிரவேஷ் ஏற்கெனவே சம்பந்தப்பட்ட வணிகரிடம் வேலை செய்திருப்பது தெரிய வந்தது.  11 மாதங்களுக்கு முன்பு  வேலையில் இருந்து விலகினார்.  பிரவேஷும்,  அமனும் நிதி நெருக்கடியில் இருந்ததால் வணிகரை மிரட்டி குறுகிய காலத்தில் பணக்காரராக ஆசைப்பட்டது விசாரணையில் தெரிய வந்ததாக போலீஸார் கூறினர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/06/வணிகரை-மிரட்டி-ரூ50-லட்சத்தை-பறிக்க-முயற்சி-2-பேர்-கைது-2821024.html
2821023 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி குடும்ப வன்முறை வழக்கு: குழந்தைகளைச் சந்திக்க சிறையில் உள்ள தந்தைக்கு அனுமதி DIN DIN Wednesday, December 6, 2017 01:44 AM +0530 குடும்ப வன்முறை வழக்கில் சிறை தண்டனையில் உள்ள தந்தை தனது இரண்டு குழந்தைகளைச் சந்திப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தாய், தந்தை ஆகிய இருவரிடமும் இருந்து குழந்தைகள் பிரிந்து இருந்தால் அது அவர்களது மனதில் நிரந்தர வடுவாக தங்கிவிடும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் தொடுத்திருந்த வழக்கின் விவரம்: எனக்கு 2002ஆம் ஆண்டு திருமணமாகியது. அதன் பின்னர் எனது கணவர் என்னை வீட்டை விட்டு அனுப்பி விட்டார். எனது மகளையும் அவர் கொடூரமாக தாக்கியுள்ளார். ஆகையால், எனது இரண்டு குழந்தைகளையும் என்னுடனே வாழ அனுமதிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில், இரண்டு குழந்தைகளும் தனது தாயுடனே வாழ வேண்டும் என்று கடந்த மார்ச் 27-ம் தேதி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. மேலும், தந்தைக்கு சிறைத் தண்டனை வழங்கியது. இதையடுத்து, 12 வயது மகனும், 9 வயது மகளும் தன்னை சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் தந்தை மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தின் நீதிபதி சஞ்சீவ் ஜெயின் செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவு:
குழந்தைகளுக்கு இந்த வளரும் பருவத்தில் தந்தையின் அன்பும், அரவணைப்பும் கிடைக்க வேண்டியது அவசியம். தாய், தந்தை ஆகிய இருவரிடமும் இருந்து குழந்தைகள் பிரிந்து இருந்தால் அது அவர்களது மனதில் நிரந்தர வடுவாக தங்கிவிடும். ஆகையால் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டும், தந்தையை குழந்தைகள் மறந்துவிடாமல் இருக்கவும் மாதந்தோறும் இரண்டாவது மற்றும் நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு குழந்தைகளையும் தந்தை சந்திக்கலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/06/குடும்ப-வன்முறை-வழக்கு-குழந்தைகளைச்-சந்திக்க-சிறையில்-உள்ள-தந்தைக்கு-அனுமதி-2821023.html
2821022 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி போலீஸார் முககவசம் அணிய மருத்துவர்கள் அறிவுரை DIN DIN Wednesday, December 6, 2017 01:40 AM +0530 தில்லியின் காற்று மாசு தொடர்ந்து மோசமான அளவிலேயே இருந்து வரும் நிலையில், பணியின்போது போலீஸார் முககவசம் அணிய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தில்லி காவலர்களுக்கான மூன்று நாள் உடல் நல பரிசோதனை முகாம் திங்கள்கிழமை தொடங்கியது. தினந்தோறும் சுமார் 500 காவலர்கள் இந்த மையத்திற்கு வந்து தங்களது உடல் நிலையை பரிசோதித்து செல்கின்றனர். 
திங்கள்கிழமை சுமார் 516 காவலர்கள் இந்த முகாமுக்கு வந்து பரிசோதனையில் பங்கேற்றனர்.
அதில், ஏராளமான காவலர்கள் பணி நிமித்தமான மன உலைச்சலாலும், மூச்சுச் திணறல் பிரச்சனையாலும், உயர் ரத்த அழுத்த பிரச்னையாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
காவலர்கள் தங்கள் பணியின்போது முககவசம் அணிவது, பிரானயம் செய்வது, சுவாச பயிற்சிகள் மேற்கொள்வது, ஊட்டச்சத்து உணவுகளை சாப்பிடுவது போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/06/போலீஸார்-முககவசம்-அணிய-மருத்துவர்கள்-அறிவுரை-2821022.html
2821021 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்ய ஆளுநரிடம் பாஜக கோரிக்கை DIN DIN Wednesday, December 6, 2017 01:40 AM +0530 தேர்வு வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படும் புகாரைத் தொடர்ந்து, தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு தில்லி சார் நிலைப் பணியாளர்கள் தேர்வாணையம்    (டி.எஸ்.எஸ்.எஸ்.பி. ) அக்டோபர் மாதம் 29- ஆம் தேதி நடத்திய தேர்வை ரத்துச் செய்யக் கோரி,  துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜாலுக்கு பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தில்லி சட்டப் பேரவை பாஜக உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான விஜேந்தர் குப்தா தலைமையில் அக்கட்சி  எம்எல்ஏக்கள் ஓ.பி.சர்மா, ஜெகதீஷ் பிரதான் ஆகியோர்  செவ்வாய்கிழமை துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜாலை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
 இது தொடர்பாக பின்னர் விஜேந்தர் குப்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது:  தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு  டி.எஸ்.எஸ்.எஸ்.பி. தேர்வு அக்டோபர் மாதம் 29- ஆம் தேதி தில்லியில் 200-க்கு மேற்பட்ட தேர்வு மையங்களில்  நடைபெற்றது. ஆனால், தேர்வு வினாத் தாள் கசிந்ததாக புகார் கூறப்பட்டது. இதையொட்டி, தேர்விற்கு சிறிது நேரம் முன்பாக விகாஷ் புரி, பிரகலாத் புரி தேர்வு மையங்களில்  நடைபெற்ற அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது,   ப்ளூடுத் கருவிகள், செல்லிடப்பேசிகள், தேர்வு வினாத்தாள்கள் கைப்பற்றப்பட்டன.  இது தொடர்பாக பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், தேர்வுக் கண்காணிப்பாளர்கள் உள்பட 20 பேரை தில்லி போலீஸ் கைது செய்தனர். மேலும், தேர்வு மையங்களில்  ப்ளூடுத் கருவியைப் பயன்படுத்தியவர்களும் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டனர். 
தேர்வு நடைபெறும் போதே முகநூல், கட்செவி அஞ்சல் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் தேர்வு வினாத்தாள் வேகமாகப் பரவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. தேர்வெழுதியவர்களில் பலரது நுழைவுச் சீட்டுகளில் தவறான முகவரி அச்சடிக்கப்பட்டிருந்ததாகவும், இதனால், பலர்  தேர்வை எழுத முடியாத நிலை ஏற்பட்டதாகவும் புகார் கூறப்பட்டது.  இந்த வகையில் மாணவர்கள் பலர்  பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.  எனவே, தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வை ரத்துச் செய்ய வேண்டும். மீண்டும் புதிதாக தேர்வு நடத்தப்பட வேண்டும். தேர்வு முறைகேடுகள் தொடர்பாக மத்திய புலனாய்வு துறை (சி.பி.ஐ.)  விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரி தில்லி துணைநிலை ஆளுநரைச் சந்தித்து மனுக் கொடுத்துள்ளோம் என்றார் விஜேந்தர் குப்தா. 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/06/தொடக்கப்பள்ளி-ஆசிரியர்-பணியிடங்களுக்கு-நடத்தப்பட்ட-தேர்வை-ரத்து-செய்ய-ஆளுநரிடம்-பாஜக-கோரிக்கை-2821021.html
2821020 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி குருகிராம் எஸ்டிஎம் அலுவலகத்தில் புகுந்த விஷப் பாம்பு மீட்பு DIN DIN Wednesday, December 6, 2017 01:39 AM +0530 தேசியத் தலைநகர் வலயம், குருகிராமில் உள்ள உதவி கோட்டாட்சியர் (எஸ்டிஎம்) அலுவலகத்தில் புகுந்த நான்கு அடி நீள விஷப் பாம்பை வனத் துறையினர் லாவகமாக பிடித்து காட்டுப் பகுதியில் விட்டனர்.
இச்சம்பவம் குறித்த விவரம் வருமாறு:  குருகிராமில் உள்ள சிறிய தலைமைச் செயலகத்தில் உதவிக் கோட்டாட்சியர் பாரத் பூஷண் கோஜியா அலுவலகம் அமைந்துள்ளது.  இந்த அலுவலகத்திற்குள்  பாம்பு ஒன்று திங்கள்கிழமை நண்பகலில் புகுந்துவிட்டதாக வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து,  சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு வனத் துறையின் மீட்புக் குழுவினர் வந்தனர்.  அங்கு கணினி கருவியின் வயரில் புகுந்திருந்த பாம்பை லாவகமாகப் பிடித்து பெட்டிக்குள் அடைத்தனர்.  பின்னர், அந்தப் பாம்பு பத்திரமாக வனப் பகுதியில் விடப்பட்டது.
இது குறித்து வனத் துறை பாதுகாப்பாளர் வினோத் குமார் கூறுகையில், "பிடிபட்ட பாம்பு மூன்று வயதான பொதுவான கட்டுவிரியன் வகையைச் சார்ந்த விஷப் பாம்பாகும்.  இந்த விஷப் பாம்பு இந்தியாவைச் சேர்ந்த நான்காவது பெரிய விஷப் பாம்பு வகையைச் சேர்ந்ததாகும்' என்றார்.  ஏற்கெனவே  அக்டோபர் மாதத்தில் குருகிராமில் மலைப்பாம்பு திருமணக் கூடத்தில் பிடிபட்டது. அதேபோன்று, ஆகஸ்ட் மாதத்தின் போது சோன்ஹா பகுதியில் 8 அடி நீள பாம்பு பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/06/குருகிராம்-எஸ்டிஎம்-அலுவலகத்தில்-புகுந்த-விஷப்-பாம்பு-மீட்பு-2821020.html
2821019 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி வடக்கு தில்லி மாநகராட்சிப் பகுதியில் சொத்து வரி அதிகரிக்க வாய்ப்பு! DIN DIN Wednesday, December 6, 2017 01:39 AM +0530 வடக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில்  சொத்து வரியை அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
வடக்கு தில்லி மாநகராட்சியின் 2017-18ஆம் ஆண்டு திருத்தப்பட்ட நிதி நிலை மதிப்பீட்டு அறிக்கை, 2018-19 நிதியாண்டுக்கான உத்தேச நிதி நிலை மதிப்பீட்டு அறிக்கை ஆகியவற்றை அதன் ஆணையர் மதூப் வியாஸ் செவ்வாய்கிழமை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சொத்து வரியை எளிமைப் படுத்துவதற்காக, குடியிருப்பு சொத்துகளுக்கான வரி 15 சதவீதம், குடியிருப்பு அல்லாத சொத்துகளுக்கான வரி 20 சதவீதம்  என விதிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.  இரண்டாவது,  மூன்றாவது தில்லி நிதிக் குழுவின் பரிந்துரைப்படி , சிறப்புத் தொழில் வரி வசூலிக்கப்படவுள்ளது. அதே சமயம், வணிக வரியை ஆண்டுக்கு  ரூ.1,200,  ரூ 2,400,  ரூ 2,500  என நிர்ணயிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் முன்னேற்ற வரி ரூ.450 கோடி, வணிக வரி  ரூ.100 கோடி வசூலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.   
வடக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட  பகுதிகளில் குற்றச் செயல்களைக் தடுக்கும் வகையில்,  பதற்றம் உருவாகக்கூடிய  இடங்கள் கண்டறியப்பட்டு மத்திய அரசின் நிதியுதவியுடன் சுமார் 20,000 சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. தில்லி மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விபத்துக் காப்புறுதி திட்டம் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.  மாநகராட்சிப் பள்ளிகளில்  53 புதிய வகுப்பறைகளும், 16 கழிப்பறை தொகுதிகள் உருவாக்கப்படவுள்ளன. 
பீதம்புரா பகுதியில் 500 கார்களை நிறுத்தும் வகையிலும், ராணி பார்க் பகுதியில் ரூ.74.4 கோடி மதிப்பீட்டில் 3,950 சது மீட்டர் பரப்பளவில் பல அடுக்கு கார் நிறுத்துமிடம் நிறுவப்படவுள்ளன. காந்தி மைதான், சாந்தினி சௌக் பகுதிகளில் உள்ள கார் நிறுத்துமிடம், 2,338 கார்களை நிறுத்தக் கூடிய அளவுக்கு  விரிவாக்கம் செய்யப்படும்.
ராணி ஜான்சி மேம்பாலத் திட்டப் பணிகள்   84 சதவீதம் முடிவடைந்து விட்டன. இந்த மேம்பாலம் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக மிக விரைவில் திறக்கப்படும். இதே போல  கிஷன் கஞ்ச் ரயில்வே தரைப்பாலப் பணிகள் 95 சதவீதம் முடிவடைந்துள்ளன. இந்தப் பாலமும்  விரைவில் திறந்துவைக்கப்படும். வடக்கு தில்லி  மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் துப்புரவுப் பணிகளுக்காக பல்வேறு புதிய திட்டங்கள் கொண்டுவரப்படவுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/06/வடக்கு-தில்லி-மாநகராட்சிப்-பகுதியில்-சொத்து-வரி-அதிகரிக்க-வாய்ப்பு-2821019.html
2821018 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி தவறிழைக்கும் மருத்துவமனைகளுக்கு எதிராக சட்ட ரீதியில் நடவடிக்கை: முதல்வர் கேஜரிவால் உறுதி DIN DIN Wednesday, December 6, 2017 01:39 AM +0530 தில்லியில் தனியார் மருத்துவமனைகளில் குற்ற அலட்சியத்தைத் தடுக்கும் வகையில், தேவையான சட்ட விதிகளை உருவாக்க தில்லி அரசு நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உறுதிபடத் தெரிவித்தார்.
தில்லி மௌலானாஆசாத் பல் அறிவியல் மருத்துவ நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை "தில்லி ஸ்மைல்ஸ்- டென்டல் ஹெல்த் உத்ஸவ், 2017' எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கலந்து கொண்டார்.
அப்போது, தில்லியில் அண்மையில் மருத்துவமனையில் குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தை இறந்ததாகக் கூறப்பட்ட சம்பவம், டெங்கு நோயாளியிடம் ரூ.15 லட்சம் மருத்துவக் கட்டணத்தை செலுத்துமாறு கூறிய தனியார் மருத்துவமனை ஆகியவற்றைக் குறிப்பிட்டு முதல்வர் பேசியதாவது:
தில்லியில் தனியார் பள்ளிகள் தன்னிச்சையாக கல்விக் கட்டணம் வசூலிப்பதை தடுக்க தில்லி அரசு நடவடிக்கை எடுத்து அதில் வெற்றியும் பெற்றது. அதேபோன்று, சுகாதாரத் துறையில் தவறிழைக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டவிதிகள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் மருத்துவமனைகளின் செயல்பாட்டில் தலையிட நாங்கள் விரும்பவில்லை. ஆனால், நோயாளிகளிடமிருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டால், ஏமாற்றப்பட்டால் ஒரு பொறுப்புள்ள அரசு தலையிட வேண்டியிருக்கும். அந்த வகையில் குற்ற அலட்சியத்தில் ஈடுபடும் தனியார் மருத்துவமனைகளுக்கு எதிராக தில்லி அரசு நடவடிக்கை எடுக்கும். இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் சட்ட விதிகளை உருவாக்குவதற்கு தில்லி அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார் அவர்.
இந்நிகழ்ச்சியில் தில்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் பேசுகையில், "மொஹல்லா கிளினிக் போன்று தில்லியில் 100 பல் மருத்துவ கிளினிக்குகளை தில்லி அரசு அமைக்கும்' என்றார்.
வடமேற்கு தில்லி, ஷாலிமார் பாகில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் பிரசவத்திற்காக பஸ்சிம் விஹாரைச் சேர்ந்த வர்ஷா என்ற பெண் அண்மையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு நவம்பர் 28-ஆம் தேதி ஆண், பெண் என இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அதில் ஒரு குழந்தைக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் இறந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். பின்னர், இரு குழந்தைகளையும் பாலித்தீன் பையில் வைத்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், அக்குழந்தைகளில் ஆண் குழந்தை உயிருடன் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, மேக்ஸ் மருத்துவமனை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் மேக்ஸ் மருத்துவமனை மீதான விசாரணையின்போது தவறு நிரூபிக்கப்பட்டால் அதன் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/06/தவறிழைக்கும்-மருத்துவமனைகளுக்கு-எதிராக-சட்ட-ரீதியில்-நடவடிக்கை-முதல்வர்-கேஜரிவால்-உறுதி-2821018.html
2821017 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி சுகேஷ் சந்திரசேகரின் ஜாமீன் மனு மீதான விசாரணை டிச.18-க்கு ஒத்திவைப்பு DIN DIN Wednesday, December 6, 2017 01:38 AM +0530 இரட்டை இலை தேர்தல் சின்னத்தைப் பெறுவதற்காக தலைமைத் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட விவகாரத்தில் கைதான சுகேஷ் சந்திரசேகரின் மேல்முறையீட்டு ஜாமீன் மனு மீதான விசாரணையை டிசம்பர் 18-ஆம் தேதிக்கு தில்லி உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
 இந்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் ஏப்ரல் 16-ஆம் தேதி  கைது செய்யப்பட்டார். அவர், தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த  வழக்கு தில்லி மாவட்ட தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் நீதிபதி பூனம் செளத்ரி  முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி பல முறை சுகேஷ் சந்திரசேகர் மனு தாக்கல் செய்தார். அதை  தீஸ் ஹஜாரி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, அவரது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது.  அண்மையில் இந்த வழக்கில்  சுகேஷ் சந்திரசேகரின் நீதிமன்றக் காவல்  டிசம்பர்  14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே,  தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சுகேஷ் சந்திரசேகர் தரப்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வழக்கு தொடர்பான விவரங்களை தாக்கல் செய்யுமாறு முந்தைய விசாரணையின் போது நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில்,  இந்த  மனு  நீதிபதி முக்த குப்தா முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது,  சுகேஷ் சந்திரசேகரின் தரப்பில் வழக்குரைஞர் தீபா ஆஜராகி சுகேஷ் சந்திரசேகருக்கு ஜாமீன் வழங்குமாறு வாதாடினார்.  இதற்கு காவல் துறை சார்பில் ஆஜரான அரசுத் தரப்பு வழக்குரைஞர் எதிர்ப்புத் தெரிவித்தார்.
 இதையடுத்து,  இந்த வழக்கில் இதுவரை நடைபெற்ற விசாரணைகள் குறித்து நிலவர அறிக்கையை ஒரு வாரத்திற்குள்  காவல் துறையினர் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதி,  மனு மீதான விசாரணையை  டிசம்பர் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/06/சுகேஷ்-சந்திரசேகரின்-ஜாமீன்-மனு-மீதான-விசாரணை-டிச18-க்கு-ஒத்திவைப்பு-2821017.html
2821015 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி தில்லியில் பார்வையாளர்களைக் கவர்ந்த ஓவியக் கண்காட்சி! DIN DIN Wednesday, December 6, 2017 01:37 AM +0530 தில்லியில் நடைபெற்று வரும் கேரள மாநிலத்தைப்  பூர்விகமாகக் கொண்ட  காலஞ்சென்ற பிரபல ஓவியர் கே.ஜி.சுப்ரமணியனின் ஓவியக் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
 தில்லி திரிவேணி கலா சங்கத்தில் உள்ள ஆர்ட் ஹெரிட்டேஜ் அரங்கில் நடைபெற்று வரும் இக்கண்காட்சியை இளம் தலைமுறையினர் மிகுந்த ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.
ஓவியர், கவிஞர், காந்தியவாதி, சுதந்திர விடுதலைப் போராளி, ஆசிரியர் எனப் பன்முக ஆற்றலைக் கொண்ட கே.ஜி. சுப்ரமணியன்,  2016- ஆம் ஆண்டு காலமானார்.  அவரதுஅரசியல் ஓவியங்கள்  மிகவும் பிரபலமானவை. அவரது ஓவியங்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு, தில்லி திரிவேணி கலா சங்கத்தில் உள்ள ஆர்ட் ஹெரிட்டேஜ் அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவருடைய அரசியல் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்படுவது இதுவே முதல் முறை என்று கண்காட்சி ஏற்பாட்டாளர் தெரிவித்தார்.
இந்தியா -  பாகிஸ்தான் பிரிவினை, வங்கதேச விடுதலைப் போர், 1969-ஆம் ஆண்டு குஜராத் இந்து முஸ்லிம் கலவரம், 1993 மும்பைக் கலவரம் போன்றவற்றின் போதும் அவசரநிலைப் பிரகடன  காலத்தின் போதும் அவர் வரைந்த ஓவியங்கள் உள்பட பல்வேறு ஓவியங்கள் இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 
இந்த ஓவியங்கள் காட்டன், கேன்வாஸ், பேப்பர், களி மண் போன்றவற்றில் வரையப்பட்டுள்ளன.வங்க தேச விடுதலைப் போரின் போது நடைபெற்ற படுகொலைகள் தொடர்பாக, களி மண்ணில் அவர் வரைந்த ஓவியங்கள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளன. "களி மண்ணிற்கு மனித சதை போல வளையக் கூடிய, உருகக் கூடிய தன்மை உள்ளது. அதனால்தான் மனித வரலாற்றில் நிகழ்ந்த பெருங் குற்றங்களில் ஒன்றான வங்கதேசப்  படுகொலைகளை, களிமண்ணில் வரைந்துள்ளேன்' என அவர் கூறியுள்ள தகவலும்  கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 
"அவசரநிலைப் பிரகடன காலத்தில் ஜனநாயகத்தின் குரல்வளை நசுக்கப்பட்ட போது,  அடக்குமுறை தொடர்பாக அவர் 43 ஓவியங்களை வரைந்தார். அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட 16 ஓவியங்கள் இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என்று கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் பெருமையுடன் தெரிவித்தனர்.
எந்த மதமும் சாராதவராக இருந்த  கே.ஜி.சுப்பிரமணியன், துர்கா, இயேசு கிறிஸ்து ஆகிய கடவுள்களை மிக அழகான ஓவியங்களாக வரைந்துள்ளார். துர்கையை   பெண் சக்தியின்  அடையாளமாக அவர் பார்க்கிறார். இயேசுவை அகிம்சையின் அடையாளமாகப் பார்க்கிறார். அதனால்தான் அவர்களை வரைந்தார் என்று கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இந்த ஓவியக் கண்காட்சி பார்வையாளர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்துள்ளது என்றால்  மிகையல்ல.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/06/தில்லியில்-பார்வையாளர்களைக்-கவர்ந்த-ஓவியக்-கண்காட்சி-2821015.html
2821012 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி தில்லி போலீஸார் மீது  புகார் அளிக்க விரைவில் ஆணையம்: உயர் நீதிமன்றத்தில் மத்திய, தில்லி அரசு தகவல் DIN DIN Wednesday, December 6, 2017 01:35 AM +0530 சட்டத்தை மீறும் தில்லி போலீஸார் மீது புகார் அளிக்கும் ஆணையத்தை அமைக்கும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது என்று தில்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசும், தில்லி அரசும் தெரிவித்தன.
தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மிட்டல், நீதிபதி சி. ஹரி சங்கர்ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கின் விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அப்போது, தில்லி அரசின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், "இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 2006ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதிபடுத்த தில்லி அரசு முழு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 
போலீஸாருக்கு எதிராக புகார் அளிக்க ஆணையம் அமைக்க வேண்டும் என்பதற்கு தில்லி அரசு ஏற்கெனவே ஒப்புதல் அளித்துவிட்டது. இந்த விவகாரம் தில்லி துணைநிலை ஆளுநரிடம் உள்ளது' என்றார்.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின் கூறுகையில், "போலீஸார் மீது புகார் அளிக்க ஆணையம் அமைக்கும் பணி சம்பந்தப்பட்ட துறையில் இறுதிக் கட்டத்தில் உள்ளது. இதுகுறித்து முடிவு எடுக்க மேலும் கால அவகாசம் தேவை' என்று தெரிவித்தார்.
இருவரது வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 31-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
எனினும், இந்த விவகாரம் குறித்து தற்போதைய நிலை அறிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/06/தில்லி-போலீஸார்-மீது--புகார்-அளிக்க-விரைவில்-ஆணையம்-உயர்-நீதிமன்றத்தில்-மத்திய-தில்லி-அரசு-தகவல்-2821012.html
2821011 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி காற்றின் தரத்தைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: அரசு துறைகளுக்கு தில்லி அமைச்சர் உத்தரவு DIN DIN Wednesday, December 6, 2017 01:35 AM +0530 தலைநகரில் காற்றின் தரத்தை பாதிக்கும் உள்ளூர் காரணிகளைத் தடுக்க சம்பந்தப்பட்ட துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் இம்ரான் ஹுசேன் உத்தரவிட்டார்.
தில்லியில் காற்றின் தர நிலவரம் குறித்த மீளாய்வுக் கூட்டம் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் இம்ரான் ஹுசேன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் காற்றின் தரத்தை பராமரிக்க நடவடிக்கை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வருவாய்,  பொதுப்பணி, போக்குவரத்து உள்ளிட்ட துறைகள், தில்லியில் உள்ள மூன்று மாநகராட்சிகள்,  புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி),  தில்லி கன்டோன்மென்ட் வாரியம்,  தில்லி  மாசுக் கட்டுப்பாட்டுக் குழு, தில்லி போக்குவரத்துக் காவல் துறைப் பிரிவைச் சேர்ந்த தொடர்புடைய அதிகாரிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தின் போது கட்டுமான இடங்களில் தூசியைக் கட்டுப்படுத்தவும்,  திறந்தவெளியில் கழிவுகளை எரிப்பதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ள துறைகளின் செயல்பாடுகள் குறித்து மீளாய்வு செய்யப்பட்டது.
தில்லியில் தற்போது ஏற்பட்டுள்ள பனிப்புகைக்கு காரணமான தாழ்வு வெப்பநிலை,  குறைந்த காற்றின் வேகம்,  அதிக ஈரப்பதம் ஆகியவை குறித்து சுற்றுச்சூழல் துறை மற்றும் தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு அதிகாரிகள் அமைச்சரிடம் எடுத்துரைத்தனர்.
அப்போது, மாசுவைக் ஏற்படுத்தும் உள்ளூர் காரணிகளைத் தடுக்க சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டார். மேலும்,  காற்று மாசுக் கட்டுப்பாட்டுக்கான சாத்தியப்படக்கூடிய செயல் திட்டங்களுடன் தில்லி அரசை அணுகினால் காற்று சுற்றுப்புற நிதியில் இருந்து மாநகராட்சிகள்,  தில்லி வளர்ச்சி ஆணையம் ஆகியவற்று நிதி உதவி அளிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
திறந்தவெளியில் குப்பைகள், கழிவுகள் எரிக்கப்படும் சம்பவங்களைத் தடுப்பதற்காக அனைத்து மாநகராட்சிகளும்,  வருவாய்த் துறையும் மேற்கொண்ட  நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்குமாறு உத்தரவிட்டார்.   மேலும்,  கட்டுமான இடங்களில் தூசி ஏற்படுவது,  திறந்தவெளியில் கழிவுகள் எரிக்கப்படுவது ஆகியவை குறித்த புகார்கள் மீது சம்பந்தப்பட்ட துறைகள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/06/காற்றின்-தரத்தைக்-கட்டுப்படுத்த-ஒருங்கிணைந்து-செயல்பட-வேண்டும்-அரசு-துறைகளுக்கு-தில்லி-அமைச்சர்-உத்-2821011.html
2821010 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி தில்லியில் மீண்டும் பனிப்புகை மூட்டம்! DIN DIN Wednesday, December 6, 2017 01:34 AM +0530 தலைநகர் தில்லியில் செவ்வாய்க்கிழமை மீண்டும் நச்சுப்புகையுடன் கூடிய பனிமூட்டத்தின் தாக்கம் காணப்பட்டது. இதன் காரணமாக இரு சக்கர வாகனங்களில் செல்வோர், பாதசாரிகள் உள்ளிட்டோர் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.
கடந்த சில நாள்களுக்கு முன் தில்லியில் காற்றின் தரம் மிகமோசமான நிலைக்கு சென்றது. காற்று மாசு பிரச்னையை சமாளிக்க தில்லி அரசு, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்டவை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தன.   காலை, மாலை நேரங்களில் நடைப் பயிற்சி உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று மருத்துவர்களும் அவ்வப்போது அறிவுறுத்தியிருந்தனர்.  
மேலும், காற்று மாசு பிரச்னை அதிகரித்த போது, பள்ளிகளுகளுக்கு தில்லி அரசு விடுமுறை அறிவித்திருந்தது. அதன் பிறகு காற்றின் தரத்தில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தில்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தின் போது மைதானத்தில் காற்றின் தரம் மோசமான நிலையில் இருப்பதாக இலங்கை அணி புகார் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, ஆட்டம் சற்று நேரம் நிறுத்தப்பட்டது. 
தொடர்ந்து நடைபெற்று வரும் இப்போட்டியில் திங்கள், செவ்வாய் ஆகிய இருதினங்களிலும் இலங்கை அணி வீரர்கள் சிலர் முககவசம் அணிந்து விளையாடியதைக் காண முடிந்தது. இதேபோல, நகரிலும் பாத சாரிகள், ரு சக்கர வாகனங்களில் செல்வோர்களில் பலர் செவ்வாய்க்கிழமையும் முக கவசம் அணிந்து சென்றதைக் காண முடிந்தது.
காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட மூன்று டிகிரி உயர்ந்து 13.7  டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தாலும், காற்றின் தரம் மோசமாக இருந்ததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும், காலை 5.30 மணிக்கு 1,200 மீட்டராக இருந்த காண்பு திறன், காலை 8.30 மணியளவில் 700 மீட்டராகக் குறைந்தது. வானம் நச்சுப் புகையுடன் கூடிய பனிமூட்டத்துடன் காணப்பட்டது. 
காற்றில் ஈரப்பதம் காலை 8.30 மணியளவில் 84 சதவீதம் என்ற அளவில் இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 
திங்கள்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 8.3 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 23.5 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. 
இதற்கிடையே, புதன்கிழமை (டிசம்பர் 6) வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஆங்காங்கே சில இடங்களில் மழைத் தூறல் இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 
மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியாகவும் இருக்க வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/06/தில்லியில்-மீண்டும்-பனிப்புகை-மூட்டம்-2821010.html
2820415 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி திறமையான விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி: கொள்கைத் திட்டம் வகுத்தது தில்லி அரசு DIN DIN Tuesday, December 5, 2017 01:48 AM +0530 விளையாட்டில் திறமையான மாணவர்களுக்கு நிதி உதவியும் சிறப்புப் பயிற்சியும் வழங்கும் கொள்கைத் திட்டத்தை தில்லி அரசும் கல்வித் துறையும் உருவாக்கியுள்ளது.
விளையாட்டில் திறமையான பள்ளி மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு நிதி உதவியும் சிறப்புப் பயிற்சியும் இக் கொள்கைத் திட்டம் மூலம் வழங்கப்படவுள்ளன.
தில்லி முதல்வர் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா முன்னிலையில் திங்கள்கிழமை தலைமைச் செயலகத்தில் இக்கொள்கைத் திட்டம் முன்வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், வல்லுனர்கள், பள்ளி மாணவர்கள், கல்வித் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தில்லியில் கடந்த மூன்று ஆண்டுகளாக வசிக்கும் மாணவர்கள் இக்கொள்கைத் திட்டத்தின் மூலம் பயன்பெறவுள்ளனர். சிறந்த விளையாட்டுப் பின்னணி உடைய ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழு மூலம் இக்கொள்கைத் திட்டம் கண்காணிக்கப்படவுள்ளது.
இத் திட்டம் மூலம் 14- வயதுக்குட்பட்ட மாணவர்கள் ஆண்டுதோறும் ரூ. 2 லட்சம் நிதியுதவியும், 14- வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் ஆண்டுதோறும் ரூ.3 லட்சம் நிதியுதவியும் பெறவுள்ளனர். நிதி உதவிகள் யாருடைய தலையீடும் இன்றி மாணவர்களுக்கு நேரடியாக வழங்கப்படவுள்ளன. மேலும், இத் திட்டம் மூலம் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி உதவி, மருத்துவ உதவி, காப்பீட்டு உதவி ஆகியனவும் வழங்கப்படவுள்ளன.
இந்த நிதி உதவி இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படவுள்ளன. அதன் பிறகு, விளையாட்டு வீரர்களின் திறமை மதிப்பிடப்பட்டு உதவித்தொகை தொடர்பாக முடிவெடுக்கப்படவுள்ளது.
விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு மையங்கள்: இத் திட்டக் கொள்கை மூலம், தில்லி முழுவதும் விளையாட்டு வீரர்களுக்காக சிறப்பு மையங்கள் அமைக்கப்படவுள்ளன. இச் சிறப்பு மையங்களில் பயிற்சியாளர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள், பிசியோதெரபிஸ்ட் ஆகியோர் இடம்பெறவுள்ளனர். இக்கொள்கைத் திட்டம் அமைச்சரவை ஒப்புதலுக்காக மிக விரைவில் அனுப்பப்படவுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/05/திறமையான-விளையாட்டு-வீரர்களுக்கு-நிதி-உதவி-கொள்கைத்-திட்டம்-வகுத்தது-தில்லி-அரசு-2820415.html
2820414 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி காற்று மாசு: தில்லி அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் கண்டனம் DIN DIN Tuesday, December 5, 2017 01:47 AM +0530 தில்லி காற்று மாசுவைத் தடுப்பது தொடர்பானஉறுதியான செயல்திட்டம் தாக்கல் செய்யாத தில்லி அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடும் கண்டனம் தெரிவித்தது.
மேலும், தில்லியில் கடுமையான காற்று மாசு நிலவும் போது தில்லியில் இந்தியா- இலங்கை கிரிக்கெட் போட்டி நடத்தி இருக்கக் கூடாது என்றும் பசுமைத் தீர்ப்பாயம் கருத்து தெரிவித்துள்ளது.
தில்லி காற்று மாசு தொடர்பான வழக்கு தீர்ப்பாயத்தின் தலைவரும், நீதிபதியுமான ஸ்வதந்தர் குமார் தலைமையிலான அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணை நடைபெற்றது.
அப்போது, தில்லி அரசின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், "தில்லியின் தலைமைச் செயலர், சுற்றுச்சூழல் துறை செயலர் ஆகியோர் அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆகையால், உறுதியான செயல்திட்டம் தாக்கல் செய்ய அவகாசம் தேவை' என்று முறையிட்டார்.
அப்போது, தீர்ப்பாய அமர்வு, "தில்லி அரசு உயர் அதிகாரிகளைத் தொடர்ந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு வந்தால், அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்.
காற்று மாசு தொடர்பாக தில்லி அரசு தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறது. ஆனால், காற்று மாசுவைத் தடுக்க கடந்த 4 நாள்களில் ஒரு நடவடிக்கையாவது எடுக்கப்பட்டதா?
தில்லியில் காற்று மாசு ஏற்கெனவே மோசமான அளவுக்கு சென்றுவிட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் தில்லி அரசு மென்மையானபோக்கைக் கடைப்பிடித்து வருகிறது. தில்லியில் காற்று மாசு நடப்பு வாரத்தில் அதிகமாக இருக்கும் என்று செய்தித்தாள்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் காற்று மாசுவைத் தடுக்க தில்லி அரசு எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இந்தியா - இலங்கை கிரிக்கெட் போட்டியில் வீரர்ரகள் முகக்கவசங்களை அணிந்து விளையாடியுள்ளனர். காற்று மாசு மோசமாக இருந்ததால், இந்தப் போட்டியை நடத்தி இருக்கக் கூடாது.
தில்லியில் காற்று மாசு அதிகமாக இருக்கும் இந்த நேரத்தில் வாகனக் கட்டுப்பாடு திட்டத்தை தில்லி அரசு ஏன் அமல்படுத்தவில்லை. இந்தத் திட்டத்தில் இருந்து இரு சக்கர வாகனங்களுக்கு விலக்க அளிக்க வேண்டும் என்று தில்லி அரசு கோருகிறது. ஆனால், தில்லியில் உள்ள 60 லட்சம் இருசக்கர வாகனங்கள்தான் காற்று மாசுவுக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன என்பது தெரியவில்லையா?
தில்லியின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 4000 அரசு பேருந்துகள் இயக்கப்படும் என்று தில்லி அரசு வாக்குறுதி அளித்து 3 ஆண்டுகள் ஆகிய பிறகும் ஒரு பேருந்துகூட புதிதாக இயக்கப்படவில்லை. காற்று மாசு தடுப்பு தொடர்பான உறுதியான செயல்திட்டத்தை 48 மணி நேரத்திற்குள் தில்லி தாக்கல் செய்ய வேண்டும் என்று தீர்ப்பாய அமர்வு உத்தரவிட்டது.
தில்லி காற்று மாசுவைத் தடுப்பது தொடர்பாக தில்லி அரசும், பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் காற்று மாசு தடுப்பு செயல்திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று கடந்த நவம்பர் 28-ம் தேதி தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
வெள்ளை அறிக்கையை வெளியிட்டது காங்கிரஸ்
இதனிடையே, தில்லி காற்று மாசு தொடர்பாக வெள்ளை அறிக்கையை தில்லி காங்கிரஸ் கட்சி திங்கள்கிழமை வெளியிட்டது. இந்த அறிக்கையை காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினரும் மூத்த தலைவருமான சசி தரூர் திங்கள்கிழமை வெளியிட்டு கூறியதாவது:
சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டியது தில்லிவாசிகளின் உரிமையாகும். ஆனால் இந்த உரிமையை நிலைநாட்ட தில்லி அரசும், மத்திய அரசும் தவறிவிட்டன. காற்று மாசு தொடர்பாக இந்த ஆண்டு தொடக்கத்தில் நான் நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினேன். இதுதொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சருக்கு கடிதமும் எழுதியுள்ளேன். அதில், தில்லியின் பொதுப் போக்குவரத்தை அதிகரிக்க வேண்டும். மின்சாரப் பேருந்துகளின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். பயிர்க்கழிவுகள் எரிப்பதைத் தடுக்க வேண்டும். சூரிய மின் சக்தி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தேன். இதற்காக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தேன் என்றார். தில்லி காங்கிரஸ் வெளியிட்ட வெள்ளை அறிக்கையின் அட்டைப் படத்தில் தில்லியில் இந்தியா- இலங்கை கிரிக்கெட் போட்டியில் கிரிக்கெட் வீரர்கள் முகக்கவசம் அணிந்து விளையாடிய படமும் இடம் பெற்றிருந்தது.
தில்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு
தில்லியில் காற்றின் தரம் மோசமாக இருந்த காரணத்தால் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை முகக்கவசங்களை அணிந்து விளையாடியிருந்த நிலையில், திங்கள்கிழமையும் தில்லியில் காற்றின் மாசு அதிகரித்து காணப்பட்டது.
காற்றில் நுண்துகள்களான பி.எம். 2.5, பி.எம்.10 ஆகியவற்றின் அளவு 276, 455-ஆக மாலை 3 மணி அளவில் பதிவாகியது என்று மத்திய காற்று மாசு கட்டுப்பாடு மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/05/காற்று-மாசு-தில்லி-அரசுக்கு-பசுமைத்-தீர்ப்பாயம்-கண்டனம்-2820414.html
2820381 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி இரு மருத்துவர்களை பணி நீக்கம் செய்ய தனியார் மருத்துவமனை முடிவு: இறந்ததாக கூறப்பட்ட குழந்தை உயிருடன் இருந்த சம்பவம் DIN DIN Tuesday, December 5, 2017 01:09 AM +0530 குறைப்பிரசவத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள் இறந்ததாக கூறப்பட்ட பிறகு அதில் ஒரு குழந்தை உயிருடன் இருந்த சம்பவத்தில் தொடர்புடைய இரு மருத்துவர்களை பணியில் இருந்து நீக்கம் செய்ய மேக்ஸ் ஹெல்த்கேர் மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
வடமேற்கு தில்லி, ஷாலிமார் பாகில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் பிரசவத்திற்காக பஸ்சிம் விஹாரைச் சேர்ந்த வர்ஷா என்ற பெண் அண்மையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு நவம்பர் 28-ஆம் தேதி ஆண், பெண் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.
இந்நிலையில், அக்குழந்தைகளில் பெண் குழந்தை இறந்துவிட்டதாகவும், ஆண் குழந்தைக்கு அவசர சிகிச்சை தேவைப்படுவதாக கூறி, சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் ஆண் குழந்தையும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு, இரு குழந்தைகளையும் பாலித்தீன் பையில் வைத்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், இறுதிச் சடங்கு செய்வதற்காக மதுபன் சௌக் அருகே குழந்தைகளின் பெற்றோர்களும், உறவினர்களும் சென்று கொண்டிருந்தபோது, ஆண் குழந்தை உயிருடன் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அக்குழந்தையை பீதம்புரா மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர். அக்குழந்தைக்கு அங்கு உயிர்காக்கும் வசதியுடன்கூடிய மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, தவறிழைத்த மருத்துவமனையின் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி மருத்துவமனைப் பகுதியில் குழந்தையின் பெற்றோர், உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மேக்ஸ் மருத்துவமனை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தில் மேக்ஸ் மருத்துவமனை மீது விசாரணையின்போது தவறு நிரூபிக்கப்பட்டால் அதன் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு மேக்ஸ் மருத்துவமனைக்கு தில்லி காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.
இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஒரு வல்லுநர் குழுவை மேக்ஸ் குழுமம் அமைத்தது. இக்குழுவில் இந்திய மருத்துவச் சங்கத்தின் (ஐஎம்ஏ) நெறிகள் குழுவின் தலைவர் டாக்டர் அருண் அகர்வால், ஐஎம்ஏ இணைச் செயலர் டாக்டர் ரமேஷ் தத்தா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இக்குழு, பிரசவம் நிகழ்ந்தபோது இருந்த சந்தர்ப்ப சூழல், மருத்துவ சிகிச்சையில் கடைப்பிடிக்கப்பட்ட வழிமுறைகள் ஆகியவை குறித்து விசாரணை நடத்தி வருகிறது. இக்குழு தனது அறிக்கையை விரைவில் அளிக்கும் என்று கூறப்படுகிறது.
இதனிடையே, குழந்தைக்கு சிகிச்சை அளித்த ஷாலிமார் பாக் பகுதி மேக்ஸ் மருத்துவமனை டாக்டர் ஏ.பி.மேத்தா, டாக்டர் விஷால் ஆகியோரை பணியில் இருந்து நீக்குவது என மேக்ஸ் ஹெல்த்கேர் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக நவம்பர் 30-ஆம் தேதி மேக்ஸ் ஹெல்த்கேர் நிர்வாகத்தின் கூட்டம் நடைபெற்ற நிலையில், மருத்துவர்களை பணியில் இருந்து நீக்கும் முடிவு ஞாயிற்றுக்கிழமை எடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக மேக்ஸ் ஹெல்த்கேர் நிர்வாகத் தரப்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியிடப்பட்ட அறிக்கையில், " இந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட வல்லுநர்கள் குழுவின் விசாரணை இன்னும் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய மருத்துவர்கள் ஏ.பி.மேத்தா, விஷால் ஆகியோரை பணியில் இருந்து நீக்குவது
என முடிவு செய்திருக்கிறோம்' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/05/இரு-மருத்துவர்களை-பணி-நீக்கம்-செய்ய-தனியார்-மருத்துவமனை-முடிவு-இறந்ததாக-கூறப்பட்ட-குழந்தை-உயிருடன்-2820381.html
2820380 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி அயோத்தி ராமர் கோயிலுக்காக உயிர்நீத்த ஹிந்துகளுக்கு தில்லியில் நினைவிடம்: ஐக்கிய ஹிந்து முன்னணி நிர்வாகி தகவல் DIN DIN Tuesday, December 5, 2017 01:09 AM +0530 அயோத்தி ராம ஜென்ம பூமியின் பெயரால் உயிர்நீத்த ஹிந்துக்களுக்கு "பலிதானி ஸ்மாரக்' எனும் உயிர்த்தியாக நினைவிடம் அமைப்பதற்கான பணிகள் டிசம்பர் 6- ஆம் தேதி தில்லியில் தொடங்கப்படும் என்று ஐக்கிய இந்து முன்னணி (யுனைட்டட் ஹிந்து ஃபரன்ட்) அமைப்பின் சர்வதேச பொதுச் செயலாளர் ஜெய் பகவான் கோயல் தெரிவித்தார்.
இது தொடர்பாக தில்லியில் அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
1528-ஆம் ஆண்டு, ராமர் பிறந்த புனித இடத்தை அழித்து அங்கே பாபர் மசூதி கட்டப்பட்டது. அன்றுமுதல் ராம ஜென்ம பூமியை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து காக்க சுமார் 5 லட்சம் ஹிந்துக்கள் உயிர்நீத்து உள்ளனர்.
அவர்களின் நினைவாக, தில்லி மந்திர் மார்க்கில் உள்ள பாரத் ஹிந்து மகா சபா அலுவலகத்தில் "பலிதானி ஸ்மாரக்' என்ற உயிர்த்தியாக நினைவிடம் அமைப்பதற்கான பணிகளை டிசம்பர் மாதம் 6- ஆம் தேதி தொடங்கவுள்ளோம். இந்த நினைவிடம் மிகப் பிரமாண்டமாகவும், உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பிரார்த்தனை செய்யக் கூடிய வகையிலும் அமைக்கப்படவுள்ளது.
உலகெங்கும் வாழும் ஹிந்துக்களின் பங்களிப்புடன் இந்த நினைவிடம் அமைக்கப்படும். அயோத்தியில் இருந்து கொண்டுவரப்படும் ஒளிதீபம் இந்த நினைவிடத்தில் ஏற்றப்படும். இந்நிகழ்ச்சியில் தில்லி, என்சிஆர் பகுதிகளில் இருந்து பங்கேற்பவர்களுக்கு சிறப்பு பேருந்து வசதி ஏற்படுத்தப்படும் என்றார் ஜெய் பகவான் கோயல்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/05/அயோத்தி-ராமர்-கோயிலுக்காக-உயிர்நீத்த-ஹிந்துகளுக்கு-தில்லியில்-நினைவிடம்-ஐக்கிய-ஹிந்து-முன்னணி-நிர்வ-2820380.html
2820379 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி மாற்றுத்திறனாளியிடம் ரூ. 3.50 லட்சம் திருட்டு: வங்கிக்குள்ளேயே திருடிய 3 பெண்களுக்கு வலைவீச்சு DIN DIN Tuesday, December 5, 2017 01:09 AM +0530 தில்லியில் பொதுத் துறை வங்கிக்குள் பட்டப் பகலில் நுழைந்து வங்கி வாடிக்கையாளர் ஒருவரின் ரூ.3.50 லட்சம் பணத்தை அவரது கண் முன்னே நூதன முறையில் திருடிச் சென்ற மூன்று பெண்கள் உள்ளிட்ட மர்ம கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து தில்லி காவல் துறையினர் கூறியதாவது:
சங்கம் விஹார் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திர குமார் (44). இவர் மதர் டையரி மற்றும் டிஎம்எஸ் நிறுவனத்தின் பால் பொருள்களை மொத்தமாக விநியோகம் செய்து வருகிறார். கால் பாதித்த மாற்றுத் திறனாளியான இவர், தினமும் தனது கடையில் வசூலாகும் பணத்தை சாகேத் பகுதியில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் வங்கியில் செலுத்த செல்வது வழக்கம்.
இந்நிலையில், சம்பவத்தன்று வங்கியில் பணம் செலுத்துவதற்காக தனது நண்பருடன் மகேந்திர குமார் சென்றார். வங்கியில் பணம் செலுத்தும் பிரிவில் காசாளர் இல்லாததால் கவுன்ட்டரின் உள்பகுதியில் ரூ.2 ஆயிரம், ரூ.500 மதிப்பிலான தாள்கள் கொண்ட ரூ.3.50 லட்சம் பணக் கட்டுக்களை வைத்துவிட்டு அருகே இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தார்.
அப்போது, மூன்று பெண்களுடன் ஒரு இளைஞர் அந்தக் கவுன்ட்டர் பகுதிக்கு பணம் செலுத்த வருவதுபோல் வந்து வரிசையில் நின்றார். பின்னர் சிறிது நேரத்தில் அந்தப் பெண்கள் மூவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர். இதையடுத்து, கவுன்ட்டர் பகுதிக்கு மகேந்திர குமார் வந்தார். அப்போது, தான் கட்டுக்கட்டாக வைத்திருந்த பணம் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து வங்கி அதிகாரியிடம் மகேந்திர குமார் தெரிவித்தார். இதையடுத்து, வங்கியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகள் பார்க்கப்பட்டது. அப்போது, மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, இச்சம்பவம் குறித்து மகேந்திர குமார் போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். வங்கியில் வாடிக்கையாளர் போல நுழைந்து கும்பலாக திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/05/மாற்றுத்திறனாளியிடம்-ரூ-350-லட்சம்-திருட்டு-வங்கிக்குள்ளேயேதிருடிய-3-பெண்களுக்கு-வலைவீச்சு-2820379.html
2820378 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி மகள் பலாத்காரம்: தந்தை கைது DIN DIN Tuesday, December 5, 2017 01:08 AM +0530 கிழக்கு தில்லியில் தனது மகளை பலாத்காரம்
செய்த தந்தை கைது செய்யப்பட்டார். தாயின் புகாரின் பேரில் அவரைக் கைது செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து தில்லி காவல் துறையினர் கூறியதாவது:
தில்லி ஜகத்புரி பகுதியைச் சேர்ந்தவர் தனது 14 வயது மகளை ஓராண்டுக்கும் மேலாக பாலியல் துன்புறுத்தல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று சிறுமியின் வீட்டில் ரூ.1000 திருட்டுப் போனது.
இதையடுத்து, சிறுமியை அவரது தாய் கேள்வி கேட்டுள்ளார். அப்போது, தனது தந்தை தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்தது குறித்து கூறினார்.
இதுதொடர்பாக போலீஸில் சிறுமியின் தாய் தனது கணவர் மீதே புகார் அளித்தார்.
இதையடுத்து, சிறுமியின் தந்தை மீது பாலியல் துன்புறுத்தல் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்து விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/05/மகள்-பலாத்காரம்-தந்தை-கைது-2820378.html
2820377 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி மாநில அறிவியல் கண்காட்சிப் போட்டிக்கு டிடிஇஏ பள்ளி மாணவர்கள் தேர்வு DIN DIN Tuesday, December 5, 2017 01:08 AM +0530 தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) இரு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் மாநில அறிவியல் கண்காட்சிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு வருடமும் கல்வி இயக்குனரகம் நடத்தும் அறிவியல் கண்காட்சிப் போட்டிகளில் டிடிஇஏ பள்ளிகள் கலந்து கொள்வது வழக்கம். இந்த ஆண்டு மண்டலம் 19-இல் இடம்பெற்றுள்ள பள்ளிகள் இடையேயான மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சி போட்டிகள் செப்டம்பர் 8, 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெற்றன.
இதில் டிடிஇஏ லட்சுமிபாய் நகர், ராமகிருஷ்ணபுரம், மோதிபாக் ஆகிய தமிழ்ப் பள்ளிகளின் மாணவர்கள் மத்திய அளவிலான போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்நிலையில், நவம்பர் 28 ,29,30 ஆகிய தினங்களில் ராமகிருஷ்ணபுரம் செக்டார் நான்கில் உள்ள அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளியில் நடத்தப்பட்ட மத்திய அளவிலான அறிவியல் கண்காட்சிப் போட்டிகளில் சுமார் 50 பள்ளிகள் கலந்துகொண்டன.
இதில் லட்சுமிபாய் நகர்த் தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர்கள் குஷால் குமார், சூர்யா ஆகியோர் "உடல் நலம் மற்றும் மூலிகைகள்' என்ற தலைப்பில் பல்வேறு மாதிரித் தாவரங்களைக் காட்சிப்படுத்தி விளக்கினர். மோதிபாக் தமிழ்ப் பள்ளியைச் சார்ந்த 12- ஆம் வகுப்பு மாணவர்கள் சிவம் மிஷ்ரா, அஷ்மிதா டோகாஸ் ஆகியோர் "அல்ட்ரா ஃபில்ட்ரேஷன் ட்ரை ரிமூவர்' என்ற தலைப்பில் மாதிரியைக் காட்சிப்படுத்தியிருந்தனர்.
இந்த இரு பள்ளிகளைச் சேர்ந்த நான்கு மாணவர்களும் மாநில அளவில் நடைபெறும் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இப்போட்டிகள் டிசம்பர் 12,13,14 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. மாநிலப் போட்டியில் பங்கேற்க உள்ள டிடிஇஏ பள்ளி மாணவர்களுக்கு டிடிஇஏ செயலர் ஆர்.ராஜு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/05/மாநில-அறிவியல்-கண்காட்சிப்-போட்டிக்கு-டிடிஇஏ-பள்ளி-மாணவர்கள்-தேர்வு-2820377.html
2820376 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி ஒரேவாரத்தில் 176 பேருக்கு டெங்கு: இதுவரை 9,072 பேர் பாதிப்பு DIN DIN Tuesday, December 5, 2017 01:08 AM +0530 தில்லியில் கடந்த ஒரே வாரத்தில் மட்டும் டெங்கு நோய்க்கு 176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நிகழாண்டில் இதுவரை இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,072-ஆக அதிகரித்துள்ளது.
இதுதெடர்பாக தெற்கு தில்லி மாநகராட்சி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட 9,072 பேரில் 4,645 பேர் தில்லியைச் சேர்ந்தவர்கள் மீதமுள்ள 4,427 பேர் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். கங்கா ராம் மருத்துவமனையில் டெங்குவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 12 வயது சிறுவன் உயிரிழந்தார். இதுதான் இந்த ஆண்டின் டெங்குவுக்கு முதல் உயிரிழப்பாகும்.
கடந்த அக்டோபர் மாதம் 2,022 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். நவம்பர் மாதம் 800 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். நிகழாண்டில் மலேரியாவுக்கு 1,132 பேரும், சிக்குன்குன்யாவுக்கு 917 பேரும் பாதிக்கப்பட்டிருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஜூலை மற்றும் நவம்பர் மாதம் இறுதியில் தான் டெங்கு, சிக்குன்குன்யா போன்ற நோய்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே இந்த நோய்களின் தாக்கம் அதிகரித்துக் கொண்ட இருந்தது.
கொசுப் பெருக்கம் செய்வதைக் கட்டுப்படுத்த தவறியதாக தில்லியில் கடந்த 2-ம் தேதி வரை 2,09,637 வீடுகளில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று தெற்கு தில்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது.
வடக்கு தில்லியில் 704 வீடுகளும், தெற்கு தில்லியில் 704 வீடுகளும், கிழக்கு தில்லியில் 412 வீடுகளும் அடங்கும். 2,825 வீடுகள் வேறு பகுதிகளைச் சேர்ந்தவையாகும்.
கடந்த ஆண்டுதான் தில்லியில் வரலாறு காணாத அளவுக்கு சிக்குன்யாநோய் பாதிப்பு இருந்தது. டிசம்பர் 24-ம் தேதி வரை 12,221 பேர் சிக்குன்குன்யாவால் பாதிக்கப்பட்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/05/ஒரேவாரத்தில்-176-பேருக்கு-டெங்கு-இதுவரை-9072-பேர்-பாதிப்பு-2820376.html
2820375 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி திருட்டு வழக்கில் தண்டனை குறைப்பு DIN DIN Tuesday, December 5, 2017 01:08 AM +0530 நகைத் திருட்டு வழக்கில் ஒருவருக்கு 6 மாதம் விதிக்கப்பட்டிருந்த சிறைத் தண்டனையை 15 நாள்களாக குறைத்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இது குறித்த விவரம் வருமாறு:
தில்லியைச் சேர்ந்தவர் கமல் கிஷோர் (44). இவர் 2014, ஏப்ரல் 17-ஆம் தேதி மேற்கு தில்லி உத்தம் நகரில் ஒரு பெண்ணிடம் பணப் பையைத் திருடினார். அதில் வைக்கப்பட்டிருந்த 27 கிராம் தங்க நகை, ரூ.6 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடியதாக கமல் கிஷோர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
இது தொடர்பான வழக்கு தில்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் 2016-இல் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் கமல் கிஷோரின் தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம், அவருக்கு 6 மாதம் சிறைத் தண்டனையும், ரூ.600 அபராதமும் விதித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து கிஷோர் தரப்பில் தில்லி நீதித் துறை நடுவர் மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. அதில், தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை என்று கமல் கிஷோர் முறையிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த கூடுதல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி குர்வீந்தர் பால் சிங், கமல் கிஷோருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்ய மறுத்தார்.
எனினும், அவர் ஏற்கெனவே சிறையில் இருந்ததையும், அவரது குடும்ப சூழ்நிலை ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு அவருக்கு 6 மாதம் விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை 15 நாள்களாக குறைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/05/திருட்டு-வழக்கில்-தண்டனை-குறைப்பு-2820375.html
2819785 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி தில்லி மெட்ரோவில் ஸ்மார்ட் கார்டு விற்பனையிலும் சரிவு! DIN DIN Monday, December 4, 2017 12:32 AM +0530 கடந்த ஓராண்டில் தில்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோர் பயன்படுத்தும் "ஸ்மார்ட் கார்டு' விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ) மூலம் பெறப்பட்ட தகவலில் தெரிய வந்துள்ளது. எனினும், இது வழக்கமான ஏற்றம், இறக்கம்தான் என்று தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆர்சி) விளக்கமளித்துள்ளது.
இது தொடர்பாக ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட தகவலில், கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நாளொன்றுக்கு தினமும் 15,650 ஸ்மார்ட் கார்டுகளை தில்லி மெட்ரோ விற்பனை செய்துள்ளது.
இந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் தினசரி விற்பனையான ஸ்மார்ட் கார்டுகளின் எண்ணிக்கை 12,250 ஆகக் குறைந்துள்ளது. அதிகமான மக்கள் ஸ்மார்ட் கார்டுகளை வாங்கி வருவதால் படிப்படியாக இதன் எண்ணிக்கை குறைய வாய்ப்பிருப்பதாக ஒருவர் கருத முடியும் என்றாலும், கடந்த ஓராண்டில் ஸ்மார்ட் கார்டுகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை சாதாரண அளவிலேதான் உள்ளது.
அதாவது, கடந்த அக்டோபர் 2016-இல் 69.94 சதவீதமாக இருந்த ஸ்மார்ட் கார்டு பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 2017, அக்டோபரில் 70.84 சதவீதமாக மட்டுமே உயர்ந்துள்ளது. எனினும், தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் "ஸ்மார்ட் கார்டு' பயன்பாட்டாளர்கள், விற்பனை அதிகரித்துள்ளது என்று தெரிவித்தது.
மேலும், ஏப்ரலில் இருந்து ஸ்மார்ட் கார்டுக்கு பணம் திருப்பி அளிக்கப்படாது என்ற புதிய விதிகளும் ஸ்மார்ட் கார்டு விற்பனையில் சரிவு ஏற்பட ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. இது குறித்து டிஎம்ஆர்சி வெளியிட்ட அறிக்கையில், "2016-இல் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் முறையே 16,000, 16,500, 15,200, 14,900 ஸ்மார்ட் கார்டுகள் விற்பனையாகின. இந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் முறையே 12,900, 12,400, 11,700, 12,000 என்றஅளவில் ஸ்மார்ட் கார்டுகள் விற்பனையாகியுள்ளன.
இதன் மூலம் நாளொன்றுக்கு ஸ்மார்ட் கார்டு விற்பனையில் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் கார்டுகள் தோராயமாக மாறுபடுகிறது. இந்த ஏற்றம், இறக்கம் மேலே கூறப்பட்டுள்ள எந்தவொரு மாதத்திலும் வழக்கமானதாகும் என டிஎம்ஆர்சி தெரிவித்துள்ளது.
நிகழாண்டு மே, அக்டோபர் மாதங்களில் மெட்ரோ ரயில் கட்டணங்கள் இருமுறை உயர்த்தப்பட்டன. இரண்டாவது கட்டமாக மெட்ரோ கட்டணங்கள் உயர்த்தப்பட்ட பிறகு மெட்ரோ ரயில்களில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாளொன்றுக்கு மூன்று லட்சமாகக் குறைந்தது. எனினும், அக்டோபர் மாதத்தில் வந்த கூடுதல் ஞாயிற்றுக்கிழமை, தீபாவளி, சத்பூஜை உள்ளிட்டவற்றால் பயணிகள் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டதாக டிஎம்ஆர்சியும், மத்திய அரசும் தெரிவித்தன.
மெட்ரோவில் தற்போது 2 கிலோ மீட்டர் தூரப் பயணத்திற்கு ரூ.10, 2-5 கி.மீ. தூரத்திற்கு ரூ.20, 5-12 கி.மீ. தூரத்திற்கு ரூ.30, 12 -21 கி.மீ. தூரத்திற்கு ரூ.40, 21-32 கி.மீ. தூரத்திற்கு ரூ.50, 32 கி.மீ. தூரத்திற்கு மேல் ரூ.60 என கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/04/தில்லி-மெட்ரோவில்-ஸ்மார்ட்-கார்டு-விற்பனையிலும்-சரிவு-2819785.html
2819784 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி கத்புத்லி காலனி இடிப்பால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவி DIN DIN Monday, December 4, 2017 12:31 AM +0530 மேற்கு தில்லியிலுள்ள கத்புத்லி காலனி இடிப்பால் புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்டவற்றை இழந்த மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்; அந்த மாணவர்கள், பள்ளி படிப்பை பாதியில் விட்டுவிடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
மேற்கு தில்லியில் குடிசை வீடுகள் நிறைந்த கத்புத்லி காலனி, தில்லியின் மிகப் பழைமையான காலனியாகும். இந்த காலனியை மேம்படுத்தும் திட்டத்தை, தில்லி வளர்ச்சி ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அங்கு புதிய குடியிருப்புகள் கட்டுவதற்காக குடிசை வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அனைத்து பள்ளிகளுக்கும் தில்லி கல்வித் துறை இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், "கத்புத்லி காலனியில் இருந்து ஏராளமான குடும்பங்கள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. அந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், தங்களது புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்டவற்றை இழந்திருக்க வாய்ப்புள்ளது. அதுபோன்ற மாணவர்களுக்கு உதவ வேண்டும்.
கத்புத்லி காலனியை முகவரியாக கொண்ட மாணவர்கள், தங்களது பள்ளியில் ஏற்கெனவே பயின்று வரும் பட்சத்தில், அந்த மாணவர்கள் தொடர்பான விவரங்களை கல்வித் துறை இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். அந்த மாணவர்களுக்கு சீருடை, புத்தகங்கள் கிடைப்பதையும், அவர்கள் பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்டு விடாமல் தடுப்பதையும் பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/04/கத்புத்லி-காலனி-இடிப்பால்-பாதிக்கப்பட்ட-மாணவர்களுக்கு-உதவி-2819784.html
2819783 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி ஆம் ஆத்மி கட்சியிலிருந்து அழிவு சக்திகளை வெளியேற்ற வேண்டும்: மூத்த தலைவர் குமார் விஸ்வாஸ் DIN DIN Monday, December 4, 2017 12:31 AM +0530 ஆம் ஆத்மி கட்சியில் இருந்து அழிவு சக்திகளை வெளியேற்ற வேண்டும் என்று அக்கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான குமார் விஸ்வாஸ் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கட்சியின் தில்லி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: கட்சிக்கு மக்களின் ஆதரவு ராம் லீலா மைதானத்தில் தொடங்கியது. ஜந்தர் மந்தர், தில்லி சட்டப்பேரவைத் தேர்தலும் தொடர்ந்து இருந்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு கட்சியை மேலும் பலப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. கட்சியின் அடிப்படை பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக தொடங்கப்பட்ட அரசியல் இயக்கத்தை மீண்டும் உயிர்ப்பிக்கச் செய்ய வேண்டும். ஆம் ஆத்மி கட்சியின் முதலாவது பாகம் ராம்லீலா மைதானத்தில் தொடங்கப்பட்டது. சாதி, மதங்கள் பெயரில் அரசியல் செய்ய மாட்டோம் என தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் இரண்டாவது பாகத்தை தொடங்க வேண்டிய நேரம் தற்போது வந்துவிட்டது. இதனால், கட்சியில் சிலருக்கு கோபம் ஏற்பட்டுள்ளது.
ராம்லீலா மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற நிறுவன நாள் விழாவில் பங்கேற்ற கட்சித் தொண்டர்களின் கனவு அதைவிட மேலானது. தில்லியில் பாஜகவுக்கு எதிரான வாக்குகளைப் பெறுவதற்கு முயற்சிப்போம். 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில், தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சியை வெற்றிப் பெறச் செய்வோம்.
ஆம் ஆத்மியில் முன்பு இருந்த யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண், மயாங் காந்தி போன்றவர்களையும், கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களையும், வெளியேறியவர்களையும் மீண்டும் கட்சியில் சேர்க்க கட்சியின் விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த விவகாரத்தில் கட்சியின் தவறு ஏதாவது இருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்ளப்படும். கட்சியில் ஜனநாயகச் சக்திகளும், விலகிச் சென்ற தலைவர்களும் ஒன்றிணைய வேண்டும். இல்லை என்றால், வரலாறு மன்னிக்காது. கட்சியின் உயர்நிலைத் தலைவர்கள் தொண்டர்களின் உணர்வைப் புரிந்து கொள்ள வேண்டும்.
கட்சியை ராம்லீலா மைதானத்தில் தொடங்கிய போது சுமார் 5 லட்சம் தொண்டர்கள் வந்திருந்தனர். அண்மையில் அதே ராம் லீலா மைதானத்தில் நடைபெற்ற கட்சியின் நிறுவன நாள் விழாவுக்கு 5 ஆயிரம் பேர் மட்டுமே வந்திருந்தனர்.
கட்சியின் மீதுள்ள அதிருப்தியாலும், அழிவு சக்திகளாலும் தொண்டர்கள் கட்சியிலிருந்து வெளியேறியுள்ளனர். அவர்களை மீண்டும் கட்சியில் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதே சமயத்தில் கட்சியில் உள்ள அழிவு சக்திகளை வெளியேற்ற வேண்டும் என்றார் குமார் விஸ்வாஸ்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/04/ஆம்-ஆத்மி-கட்சியிலிருந்து-அழிவு-சக்திகளை-வெளியேற்ற-வேண்டும்-மூத்த-தலைவர்-குமார்-விஸ்வாஸ்-2819783.html
2819781 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி தொழில்நுட்பத் துறையில் மூன்று ஆண்டுகளில் வேலைவாய்ப்புத் திறன் 40 சதவீதமாக அதிகரிப்பு: ஏஐசிடிஇ தலைவர் தகவல் DIN DIN Monday, December 4, 2017 12:31 AM +0530 கடந்த மூன்று ஆண்டுகளில் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்புத் திறன் 40 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தலைவர் டாக்டர் அனில் சகஸ்ரபுத்தே தெரிவித்தார்.
இது தொடர்பாக புது தில்லியில் அவர் கூறியதாவது: கடந்த மூன்று ஆண்டுகளாக நாட்டில் தொழில்நுட்ப நிறுவனங்களின் கல்வித் தரம் உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக பொறியியல் மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறன் 25 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக அதிகரித்துள்ளது. எனினும், இது மேலும் அதிகரிக்கப்பட வேண்டும். மாணவர் சேர்க்கைக்கு முன்பாக மாணவர்களுக்கு உதவிடும் வகையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொழில்நுட்பக் கல்வித் துறையில் வேலைவாய்ப்புத் திறன் 25 சதவீதம் என்ற அளவில் இருந்தது. இந்நிலையில், கல்வித் தரத்தின் மீது காட்டப்பட்ட முனைப்பு நடவடிக்கையின் காரணமாக தற்போது இந்த விகிதம் 40 சதவீதமாகியுள்ளது. தொழில்துறை மற்றும் கல்வித் துறை ஆகியவற்றின் பங்களிப்பு, தொழில்துறை நிறுவனங்களில் மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சி ஆகியவையே இதற்குக் காரணமாகும்.
அடுத்து வரும் மூன்று ஆண்டுகளில் 60 சதவீதம் மாணவர்கள் வேலைவாய்ப்புத் திறன் தகுதியைப் பெறுவர். இந்தக் கல்வி நிறுவனங்களில் 30 முதல் 35 சதவீதம் வரை ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தக் காலிப் பணியிடங்களை நிரப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில், தற்போது மூன்று மாத கட்டாய ஆசிரியர் பயிற்சித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 10 ஆயிரம் கல்வி நிறுவனங்கள் அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் (ஏஐசிடிஇ) மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
போபால், சண்டீகர், சென்னை, கொல்கத்தா போன்ற இடங்களில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
மேலும், இணையதளம் மூலமாகவும் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐஐடி போல ஏஐசிடிஇ மாணவர்களும் தங்களது சேர்க்கைக்கு முன்பாக சிறப்பு முகாம்களில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முகாம்களின்போது புதிதாக சேரும் மாணவர்கள் தங்களது சக மாணவர்களையும், ஆசிரியர்களையும் தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பு ஏற்படும். மாணவர்களின் மொழிசார் தயக்கமும் தீர்க்கப்படும் என்றார் அவர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/04/தொழில்நுட்பத்-துறையில்-மூன்று-ஆண்டுகளில்-வேலைவாய்ப்புத்-திறன்-40-சதவீதமாக-அதிகரிப்பு-ஏஐசிடிஇ-தலைவர்-2819781.html
2819780 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி விசாரணை கைதிகள் விவகாரம்: திகார் சிறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கண்டனம் DIN DIN Monday, December 4, 2017 12:31 AM +0530 விசாரணைக் கைதிகளை நடத்தும்விதம் தொடர்பாக திகார் சிறை அதிகாரிகளுக்கு தில்லி நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணை கைதிகள் சிலர், தங்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சை, உணவு அளிக்கப்படுவதில்லை என்றும், இந்த விவகாரத்தில் சிறை அதிகாரிகள் மிகவும் அலட்சியத்துடன் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டி, கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனு மீதான விசாரணை, நீதிபதி அஜய் பாண்டே முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, விசாரணைக் கைதிகளை நடத்தும்விதம் தொடர்பாக திகார் சிறை அதிகாரிகளுக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், "நீதித் துறையின் சார்பில் விசாரணை கைதிகளுக்கான பாதுகாவலர்களாக செயல்பட வேண்டியவர்கள், சிறை அதிகாரிகள்.
அந்த வகையில், விசாரணை கைதிகளுக்கு முறையான சிகிச்சை, உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு உள்ளது. ஆனால், தங்களுக்கு சிகிச்சை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அளிக்கப்படுவதில்லை என்று விசாரணை கைதிகளிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவுகளை சிறை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும்' என்றார்.
முன்னதாக, திகார் சிறையில் கைதிகளின் பாதுகாப்பு குறித்து உயர் நீதிமன்றமும் கவலை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/04/விசாரணை-கைதிகள்-விவகாரம்-திகார்-சிறை-அதிகாரிகளுக்கு-நீதிமன்றம்-கண்டனம்-2819780.html
2819779 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி மருத்துவத்தில் அலட்சியம்: மேக்ஸ் மருத்துவமனைக்கு காவல் துறை நோட்டீஸ் DIN DIN Monday, December 4, 2017 12:30 AM +0530 மேக்ஸ் மருத்துவமனை சிகிச்சையின்போது அலட்சியத்துடன் நடந்து கொண்டதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக அந்த மருத்துவமனையின் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு தில்லி காவல் துறை ஞாயிற்றுக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் விரிவான தகவல்களையும் அளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
வடமேற்கு தில்லி, ஷாலிமார் பாக்கில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் பிரசவத்திற்காக வர்ஷா என்ற பெண் அண்மையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
அவருக்கு நவம்பர் 28-ஆம் தேதி ஆண், பெண் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அதில் முதலில் பிறந்த ஆண் குழந்தைக்கு அவசரச் சிகிச்சை தேவைப்படுவதாகவும் பெண் குழந்தை இறந்துவிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், ஆண் குழந்தையும் இறந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இறந்த குழந்தைகளுக்கு இறுதிச் சடங்கு செய்வதற்காக மதுபன் சௌக் பகுதிக்கு குழந்தைகளின் பெற்றோர்களும், உறவினர்களும் சென்று கொண்டிருந்த போது, ஆண் குழந்தைக்கு மூச்சு இருப்பது கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து, அந்த குழந்தையை பீதம்புராவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மேலும், தவறிழைத்த மருத்துவமனையின் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி மருத்துவமனைப் பகுதியில் குழந்தையின் பெற்றோர், உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, மேக்ஸ் மருத்துவமனை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தில் மேக்ஸ் மருத்துவமனை மீது விசாரணை நடத்த தில்லி அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், தவறு நிரூபிக்கப்பட்டால் அந்த மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தில்லி காவல் துறையினர் மேக்ஸ் மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில், குழந்தை இறந்ததாகக் கூறப்படும் தினத்தில் மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர்கள், பணியாளர்கள் குறித்த விவரத்தை தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவமனையின் நிர்வாகிகள் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/04/மருத்துவத்தில்-அலட்சியம்-மேக்ஸ்-மருத்துவமனைக்கு-காவல்-துறை-நோட்டீஸ்-2819779.html
2819778 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி கடந்த கல்வியாண்டில் தேர்ச்சி விகிதம் குறைந்தது ஏன்?: தில்லி அரசுக்கு விஜேந்தர் குப்தா கேள்வி DIN DIN Monday, December 4, 2017 12:30 AM +0530 கடந்த கல்வியாண்டில் தில்லி அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைந்தது ஏன்? என்று தில்லி அரசுக்கு சட்டப் பேரவை பாஜக உறுப்பினரும், எதிர்க் கட்சித் தலைவருமான விஜேந்தர் குப்தா கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: தில்லி அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்தி வருவதாக அரசு கூறி வருகிறது. இந்த விஷயத்தில் பல்வேறு கேள்விகளும், சந்தேகங்களும் உள்ளன. இது தொடர்பாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு கடிதம் எழுதியுள்ளேன். 2012-13 கல்வியாண்டைக் காட்டிலும், கடந்த கல்வியாண்டில் (2016-17) அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைந்தது ஏன்? 1,300 முதல் 1,700 வரை மாணவர்கள் பயிலும் அரசுப் பள்ளிகளில் இரண்டரை மணி நேரம் அடிப்படையில் 4 ஷிப்ட்கள் செயல்படுகின்றன. உலகத்தில் வேறெங்காவது இதுபோன்று பள்ளிகள் இயக்கப்படுமா?
புதிய பள்ளிகளைக் கட்டுவதற்கு போதிய இடம் இல்லை என்று துணை முதல்வர் தொடர்ந்து கூறி வருகிறார். அரசிடம் 29 பிளாட்டுகள் இருக்கிறது. அவற்றில் ஒன்றில்கூட புதிய பள்ளியைக் ஏன் கட்டவில்லை? 8 ஆயிரம் வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாக தில்லி அரசு கூறி வருகிறது. வெயிலையும், குளிரையும் தாங்காத தாற்காலிக கட்டுமானங்களை ஏற்படுத்தியிருப்பது உண்மையில்லையா? அரசுப் பள்ளிகளில் முதல்வர் பணியிடங்கள் 75 சதவீதம் காலியாகவுள்ளன. மேலும், 27 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களும் காலியாகவுள்ளன. இதுபோன்ற சூழலில் 82 பள்ளி முதல்வர்கள் தில்லி அரசின் பள்ளி இயக்ககத்துக்கு அலுவல் பணிக்காக மாற்றப்பட்டுள்ளனர். இது அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரத்தை பாதிக்காதா? என்னுடைய கடிதத்துக்கு அரசு பதில் அளிக்கும் என நம்புகிறேன் என்றார் விஜேந்தர் குப்தா.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/04/கடந்த-கல்வியாண்டில்-தேர்ச்சி-விகிதம்-குறைந்தது-ஏன்-தில்லி-அரசுக்கு-விஜேந்தர்-குப்தா-கேள்வி-2819778.html
2819777 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி மீட்கப்படும் குழந்தைகள் விவகாரம்: குழந்தைகள் நல ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் DIN DIN Monday, December 4, 2017 12:30 AM +0530 காவல்துறையினரால் மீட்கப்படும் குழந்தைகள் தவறாக நடத்தப்படுவதாக எழுந்துள்ள புகாரில், குழந்தைகள் நல ஆணையத்துக்கு தில்லி உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "தில்லி கால்காஜி பகுதியில் செயல்படும் குழந்தைகள் நல ஆணையம், சிறார் நீதி சட்டத்தின்படி முறையாக பணியாற்றுவதில்லை. காவல்துறையினரால் மீட்கப்படும் குழந்தைகள், இங்கு ஆஜர்படுத்தப்படும்போது, நீதிபதிகளின் முன்னிலையிலேயே காவல்துறையினரால் தாக்கப்படுகின்றனர்.
குழந்தைகள் மீதான காவல்துறையினரின் இத்தகைய செயல்களுக்கு நீதிபதிகள் எந்த எதிர்ப்பும் தெரிவிப்பதில்லை. காவல்துறையினர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை' என்று குற்றம்சாட்டப்பட்டது.
இந்த மனு மீது நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பிரதீபா எம் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணை நடைபெற்றது. அப்போது, நீதிபதிகள் கூறுகையில், "குழந்தைகள் நல ஆணையத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தீவிரமானவை. குழந்தைகள் தவறாக நடத்தப்படுவதை குழந்தைகள் நல ஆணையம் வேடிக்கை பார்க்க கூடாது. காவல்துறையினரும் குழந்தைகளை தவறாக நடத்தக்கூடாது. இந்த விவகாரத்தில், தில்லி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். எனினும், குழந்தைகள் நல ஆணையத்தில் சிசிடிவி கண்காணிப்பில் குழந்தைகளிடம் விசாரணை நடத்த வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/04/மீட்கப்படும்-குழந்தைகள்-விவகாரம்-குழந்தைகள்-நல-ஆணையத்துக்கு-உயர்-நீதிமன்றம்-கண்டனம்-2819777.html
2819776 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி ரூ.40 லட்சம் நகைகள் கொள்ளை DIN DIN Monday, December 4, 2017 12:30 AM +0530 தில்லியில் நகைக் கடையின் "ஷட்டர்' பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ரூ.40 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகளை 12 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்துச் சென்றதாக போலீஸார் தெரிவித்தனர். இக்கும்பலைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
இது குறித்து தில்லி காவல் துறை உயர் அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
மேற்கு தில்லி, ரோஹிணி பகுதியில் நகைக்கடை நடத்தி வருபவர் பிரவீண் அகர்வால். இவர் சம்பவத்தன்று வழக்கம் போல் கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார். இந்நிலையில், நள்ளிரவில் இவரது கடைக்கு 10 முதல் 12 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் வந்துள்ளது.
அக்கும்பலில் இருவர் அப்பகுதி தெருவில் பாதுகாவல் பணியில் ஈடுபட்டிருந்த காவலாளியை மிரட்டிப் பிடித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
மற்றவர்கள் கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர், கடைக்குள் இருந்த 25 கிலோ வெள்ளி, 350 கிராம் தங்க நகைகள் ஆகியவற்றைக் கொள்ளயடித்துச் சென்றுவிட்டனர்.
இச்சம்பவம் குறித்து கடைக்கு அருகே வசிப்போர் கடையின் உரிமையாளர் பிரவீண் அகர்வாலுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் போலீஸில் அளித்த புகாரின்பேரில் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
மேலும், அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களின் மூலம் குற்றவாளிகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் சுபாஷ், கொள்ளையர்களைப் பிடிக்க தனது மோட்டார் சைக்கிள் மூலம் விரட்டிச் சென்றார். ஆனால், கொள்ளையர்கள் தப்பிவிட்டனர். குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்றார் அந்த அதிகாரி.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/04/ரூ40-லட்சம்-நகைகள்-கொள்ளை-2819776.html
2819774 அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி செல்லிடப்பேசி வழிப்பறி: 2 மணிநேரத்தில் இருவர் கைது DIN DIN Monday, December 4, 2017 12:29 AM +0530 செல்லிடப்பேசி வழிப்பறியில் ஈடுபட்ட திருடர்கள் இருவரை இரண்டு மணிநேரத்தில் கைது செய்ததாக தில்லி காவல் துறையினர் தெரிவித்தனர்.
இது குறித்து ரோஹிணி மாவட்டக் காவல் துறை துணை ஆணையர் ரஜ்னீஷ் குப்தா ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: சனிக்கிழமை மாலை 4 மணியளவில் தில்லி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், ரோஹிணி எம்டூகே அருகே தனது செல்லிடப்பேசி வழிப்பறி செய்யப்பட்டதாக புகார் தெரிவித்தார்.
தான் ரோஹிணி விஜய் விஹார் பகுதியைச் சேர்ந்த மணிஷ் என்றும், மைக்ரோமேக்ஸ் செல்லிடப்பேசி ஷோரூமில் பண்டகக் காப்பாளராக வேலை செய்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும், தனது செல்லிடப்பேசியை இளைஞர்கள் இருவர் வழிப்பறி செய்துவிட்டு காளி மாதா மந்திர் நோக்கி ஓடிச் சென்றுவிட்டதாகவும் கூறினார். மேலும், தாம் எறிந்த கல் ஒன்று திருடர்களில் ஒருவர் மீது பட்டுவிட்டதாகவும் கூறினார்.
இதையடுத்து, தெற்கு ரோஹிணி போலீஸார் காளி மாதா மந்திர் பகுதிக்கு விரைந்து சென்று குற்றத்தில் ஈடுபட்ட இருவரையும் இரண்டு மணிநேரத்தில் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மைக்ரோமேக்ஸ் கான்வாஸ் செல்லிடப்பேசி மீட்கப்பட்டது. விசாரணையில் இருவரும் மங்கோல்புரியைச் சேர்ந்த மணீஷ் குமார் (28) , நவீன் (32) ஆகியோர் என்பது தெரிய வந்தது. அவர்கள் வேறு திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் அவர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/04/செல்லிடப்பேசி-வழிப்பறி-2-மணிநேரத்தில்-இருவர்-கைது-2819774.html