Dinamani - பெங்களூரு - http://www.dinamani.com/all-editions/edition-bangalore/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2794365 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு இன்று குடிநீர் குறைதீர் முகாம் DIN DIN Monday, October 23, 2017 02:29 AM +0530 நகர தெற்கு நான்காம் துணை மண்டலத்தில் திங்கள்கிழமை குடிநீர் குறைதீர்வு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தெற்கு நான்காம் துணை மண்டலத்தில் உள்ள எச்.எஸ்.ஆர் லேஅவுட், கோடிசிக்கனஹள்ளி, பி.டி.எம் லேஅவுட் 2-வது ஸ்டேஜ் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9.30 மணி முதல் 11 மணி வரை குடிநீர் குறை தீர் முகாம் துணை செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
தண்ணீர் ரசீது, குடிநீர் விநியோகத் தாமதம், கழிவுநீர் இணைப்பு மற்றும் வியாபார இணைப்புகளை குடியிருப்பு இணைப்புகளாக மாற்றுவது போன்ற குறைகளை அதிகாரிகளிடம் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். இதுகுறித்து மேலும் தகவல் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்- 22945143.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/23/இன்று-குடிநீர்-குறைதீர்-முகாம்-2794365.html
2794364 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு "பெங்களூரில் போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் ஒரு கோடியைத் தொட்டுவிடும் வாய்ப்பு' DIN DIN Monday, October 23, 2017 02:29 AM +0530 பெங்களூரில் நிகழாண்டின் இறுதிக்குள் போக்குவரத்து விதிமீறல் வழக்குகளின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தொட்டுவிடும் வாய்ப்புள்ளதாக பெங்களூரு மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
பெங்களூரில் நாளுக்கு நாள் வாகனங்களின் பெருக்கம் ஒருபுறம், வாகன நெரிசல் மறுபுறம் என்ற நிலையில், போக்குவரத்து விதிமீறல்களும் அதிகரித்த வண்ணம் உள்ளது. நிகழாண்டின் இறுதிக்குள் பெங்களூரில் போக்குவரத்து விதிமீறல் வழக்குகளின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தொட்டுவிடும் வாய்ப்பு அதிகம் காணப்படுகிறது. செப்டம்பர் 30-ஆம் தேதி வரையில் 80,93,719 வழக்குகளை போலீஸார் பதிவு செய்துள்ளனர். அதாவது ஒவ்வொரு விநாடிக்கும் 21 போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் பதிவான வண்ணம் உள்ளன. 2015-ஆம் ஆண்டில் 76,26,671 வழக்குகளாக இருந்த போக்குவரத்து விதிமீறல்கள்,  2016-ஆம் ஆண்டில் 91,80,438 ஆக உயர்ந்திருந்தது. இதன்படி, 2015-இல் விநாடிக்கு 15,  2016-இல் விநாடிக்கு 18 வழக்குகளும் பதிவாகியிருந்தன.
இந்த எண்ணிக்கை வழக்கமாக பெங்களூரில் நடந்துவரும் போக்குவரத்து விதிமீறல்களை பிரதிபலிப்பதாக இல்லை. உண்மையில் போக்குவரத்து விதிமீறல்கள் இதைவிட அதிகமாக நடந்து வருகின்றன என்று காவல் துறை தெரிவிக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்கீழ் பதிவான வழக்குகளின் எண்ணிக்கை 9 மடங்கு அதிகரித்துள்ளன. 2007-ஆம் ஆண்டில் 14.44 லட்சம் வழக்குகள் பதிவாகியிருந்தால்,  நிகழாண்டின் இறுதியில் வழக்குகளின் எண்ணிக்கை 1.08 கோடியாக உயரும் என்று போக்குவரத்து போலீஸார் மதிப்பிட்டுள்ளனர்.
செப்.30-ஆம் தேதி வரையில் பெங்களூரு போக்குவரத்து போலீஸார் பதிவு செய்த வழக்குகளில், தவறான இடங்களில் வாகனங்களை நிறுத்தி செல்வது தொடர்பான வழக்குகள் தான் அதிகமாகும்.
2015-இல் 21.12 லட்சமாக இருந்த இந்த வழக்குகள், 2016-இல் 22.01 லட்சமாக உயர்ந்துள்ளதோடு, 2017-இல் செப்.30-ஆம் தேதியுடன் 18.14 லட்சமாக உள்ளது. நிகழாண்டின் இறுதிக்குள் இது 24 லட்சம் வழக்குகளாக உயரும் வாய்ப்பிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்த நிலையில், தலைக்கவசம் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகள் மீது பதிவான வழக்குகளாகும். 2015-இல் 17.78 லட்சமாக இருந்த இந்த வழக்குகள், 2016-இல் 18.86 லட்சமாக அதிகரித்தது. நிகழாண்டில் செப்.30-ஆம் தேதி வரை 16.63 லட்சமாக இருந்தது. பின்னிருக்கை பயணி தலைக்கவசம் அணியாததால் 2016-இல் 17.34 லட்சம், நிகழாண்டில் இதுவரை 13.78 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிக்னலை மீறியது தொடர்பாக 2015-இல் 5,67,201, 2016-இல் 7,22,738, நிகழாண்டில் இதுவரை 5,97,,138 வழக்குகள் பதிவாகியுள்ளன. வாகனவாரியாக பதிவான வழக்குகள்: இருசக்கர வாகனங்கள்-48,88,166, இலகு ரக கார்கள்-14,95,300, ஆட்டோ-5,91,538, டெம்போ-5,30,278, சரக்கு வாகனங்கள்-2,90,787, பேருந்துகள்-94,611.
இதுகுறித்து பெங்களூரு மாநகர காவல் கூடுதல் ஆணையர்(போக்குவரத்து) ஆர்.ஹிதேந்திரா கூறியது:  பெங்களூரு மாநகர போக்குவரத்துக் காவல்துறை பதிவு செய்துள்ள வழக்குகள் உண்மையான போக்குவரத்து விதிமீறல்களை பிரதிபலிக்கவில்லை. உண்மையான போக்குவரத்து விதிமீறலுக்கும்,  வழக்குப் பதிவுக்கும் இடையிலான வித்தியாசம் தெரியவில்லை. அதுகுறித்து இதுவரை ஆய்வு செய்யவில்லை. ஆனால் வழக்கு எண்ணிக்கை பெருகியுள்ளதற்கு, காவல் துறை சீராகக் கடமையாற்றிவருவதே காரணமாகும். போக்குவரத்து விதிகளை அனைவரும் சீராகக் கடைப்பிடித்தால், போக்குவரத்து நெரிசல் கணிசமாகக் குறையும் என்றார் அவர்.
போக்குவரத்து வல்லுநர் எம்.என்.ஸ்ரீஹரி கூறுகையில்," போக்குவரத்து விதிமீறல்களில் 5-10 சதம் மட்டும் வழக்காகப் பதிவாகியுள்ளன. பெங்களூரில் 14 ஆயிரம் கிமீ நீள சாலைகள் உள்ளன. இதில் 70 லட்சம் வாகனங்கள் சென்று வருகின்றன. எனவே, அனைத்து போக்குவரத்து விதிமீறல்களையும் வழக்காகப் பதிய முடியவில்லை. வழக்குப் பதிவுகளின் எண்ணிக்கை பெருகியுள்ளது, காவல் துறையினர் தீவிர கண்காணிப்பை வெளிப்படுத்துகிறது. ஆனால் மக்கள் ஒத்துழைக்காவிட்டால், எந்த விதியையும் திறம்பட செயல்படுத்த இயலாது" என்றார் அவர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/23/பெங்களூரில்-போக்குவரத்து-விதிமீறல்-வழக்குகள்-ஒரு-கோடியைத்-தொட்டுவிடும்-வாய்ப்பு-2794364.html
2794363 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு குமாரசாமியுடன் பெங்களூரு மேயர் சம்பத்ராஜ் சந்திப்பு DIN DIN Monday, October 23, 2017 02:28 AM +0530 மஜத மாநிலத் தலைவர் குமாரசாமியை பெங்களூரு மேயர் சம்பத்ராஜ் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். அப்போது மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளில் உள்ள குழிகளை விரைந்து மூடுமாறு குமாரசாமி கேட்டுக் கொண்டார்.
பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ள மஜத மாநிலத் தலைவர் குமாரசாமியின் இல்லத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற மேயர் சம்பத்ராஜ்,  அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.  அப்போது மேயரிடம் குமாரசாமி, அண்மையில் கன மழையால் பெங்களூரில் உள்ள சாலைகள் பரவலாக பாதிக்கப்பட்டு,  குண்டும், குழியுமாகியுள்ளன.  இதனால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.  பல இடங்களில் விபத்துகள் நிகழ்ந்து ஒரு சிலர் உயிரிழக்கும் நிகழ்ச்சி தொடர்ந்த வண்ணம் உள்ளது.  இதை முழுமையாகத் தடுக்க வேண்டும்.  எனவே,  மழையால் ஏற்பட்ட சாலைக் குழிகளை விரைந்து மூட வேண்டும்.
மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சியுடன் மஜத கூட்டணி வைத்துள்ளது.  மக்கள் பிரச்னைகளைத் தீர்ப்பதில் காங்கிரஸ் மெத்தனம் காட்டினால்,  அதனால் மஜதவுக்கு கெட்ட பெயர் ஏற்படும்.  எனவே, குப்பை அள்ளுவதில் தொடங்கி,  மழை பாதிப்புகளைத் தடுப்பது குறித்து முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மேயர் சம்பத்ராஜ்,  மஜத மாநிலத் தலைவர் குமாரசாமியை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தேன்.  சந்திப்பின்போது, மாநகர வளர்ச்சி குறித்து அவர் பல்வேறு ஆலோசனைகளைத் தெரிவித்தார்.  எனது பதவிக் காலத்தில் அவரது ஆலோசனைகளை ஏற்று, வளர்ச்சிப் பணிகளைச் செய்து முடிப்பதாக உறுதி அளித்துள்ளேன் என்றார் அவர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/23/குமாரசாமியுடன்-பெங்களூரு-மேயர்-சம்பத்ராஜ்-சந்திப்பு-2794363.html
2794362 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு கத்தி முனையில் மிரட்டி பணம், பற்று அட்டை பறிப்பு DIN DIN Monday, October 23, 2017 02:28 AM +0530 காரில் டிராப் தருவதாகக் கூறி, இளைஞரை ஏற்றிச் சென்று, கத்திமுனையில் பணம், பற்று அட்டை, செல்லிடப்பேசியைப் பறித்துச் சென்றனர்.
பெங்களூரு ராஜகோபால்நகர் லக்கெரேவைச் சேர்ந்தவர் சந்தோஷ் (38). தனியார் நிறுவன ஊழியரான இவர், சனிக்கிழமை மாலை கோயிலுக்குச் செல்ல மகாலட்சுமி லேஅவுட் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தாராம். அப்போது காரில் வந்த 3 பேர், அவரை டிராப் செய்வதாகக் கூறி, காரில் ஏற்றிச் சென்றுள்ளனர். காரில் ஏறியவுடன் கத்தி முனையில் மிரட்டி, சந்தோஷிடமிருந்த பற்று அட்டை, செல்லிடப்பேசியைப் பறித்துக் கொண்டுள்ளார்.
பின்னர் வழியிலிருந்த ஏடிஎம் மையத்தில் அவரது கணக்கிலிருந்து ரூ. 14 ஆயிரம் ரொக்கப் பணத்தை எடுத்துக் கொண்டு, இரவு 8.30 மணியளவில் ஹெப்பாள் அருகே சந்தோஷை காரிலிருந்து வெளியே தள்ளிவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து மகாலட்சுமி லேஅவுட் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/23/கத்தி-முனையில்-மிரட்டி-பணம்-பற்று-அட்டை-பறிப்பு-2794362.html
2794361 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரில் காய்கறிகளின் விலை இரட்டிப்பாக உயர்வு DIN DIN Monday, October 23, 2017 02:28 AM +0530 பெங்களூரில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில் தக்காளி, மிளகாய், கொத்தமல்லி உள்ளிட்ட காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்து, இரட்டிப்பாகியுள்ளது. கடந்த இரு மாதங்களில் மாநிலம் முழுவதும் பெய்த கன மழை காரணமாக, காய்களின் விலை உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு கிலோ தக்காளி விலை சில்லரை சந்தையில் ரூ.20-இல் இருந்து ரூ.40 ஆக உயர்ந்திருந்தால், அரசின் ஹாப்காம்ஸ் அங்காடியில் ரூ.22-இல் இருந்து ரூ.49 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல, மிளகாய் விலை ஒரு கிலோவுக்கு ரூ.40-இல் இருந்து ரூ.80 ஆகவும், கொத்தமல்லியின் விலை ரூ.25-இல் இருந்து ரூ.50 ஆகவும் அதிகரித்துள்ளது.  காய்கறிகளின் விலை உயர்வு மேலும் 15 நாள்களுக்கு காணப்படும் என்று வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள். பெங்களூரு மட்டுமல்லாது, மைசூரு, ஹுப்பள்ளி, மங்களூரு நகரங்களிலும் காய்கறி உயர்ந்துள்ளது.
இதுகுறித்து அரசின் ஹாப்காம்ஸ் அங்காடி முன்னாள் தலைவர் ஜி.ஆர்.சீனிவாஸ் கூறுகையில்," எங்கெல்லாம் மழை அதிகமாக பெய்ததோ, அங்கெல்லாம் பயிர்கள் நாசமாகியுள்ளன. அதனால் சந்தைக்கு காய்கறிகளின் வரத்து குறைந்து, விலை உயர்ந்துள்ளது. சீரான அறுவடை நடைபெற்று காய்கறிகளின் விலை சீரடைய இன்னும் 2-3 மாதங்கள் ஆகலாம். அதுவரை காய்கறிகளின் விலை ஏறுமுகமாக தான் காணப்படும்" என்றார் அவர்.
ரஸ்சல் சந்தை வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் இத்ரீஸ் செளத்ரிகூறுகையில்," காய்கறிகளின் வரத்து அடுத்த 15 நாள்களுக்கு சீராகக் காணப்படாது. எனவே, காய்கறிகளின் விலை கூடியுள்ளது. இதனால் ஒரு கிலோ வாங்கியவர்கள், கால் கிலோ  வாங்குவதால் வியாபாரம் சரிந்துள்ளது" என்றார் அவர்.

காய்கறிகளின் விலை (கிலோ)
காய்கறி              அக்டோபர் தொடக்க விலை  தற்போதைய விலை
தக்காளி                  ரூ.20                             ரூ.40
வெங்காயம்              ரூ.27                             ரூ.35
பச்சை மிளகாய்            ரூ.40                             ரூ.80
கொத்தமல்லி (கொத்து)        ரூ.25                         ரூ.50
புதினா (கொத்து)            ரூ.25                           ரூ.50
பசலைக் கீரை (கொத்து)         ரூ.15                          ரூ.25

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/23/பெங்களூரில்-காய்கறிகளின்-விலை-இரட்டிப்பாக-உயர்வு-2794361.html
2794359 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு மாற்றத்துக்கான பேரணியில் மாநில அரசின் ஊழல்கள் அம்பலப்படுத்தப்படும்: பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர்ராவ் DIN DIN Monday, October 23, 2017 02:27 AM +0530 மாற்றத்துக்கான பேரணியில் மாநில அரசின் ஊழல்கள் அம்பலப்படுத்தப்படும் என்று, பாஜக தேசிய பொதுச் செயலாளரும், மாநிலப் பொறுப்பாளருமான கே. முரளிதர்ராவ் தெரிவித்தார்.
பெங்களூரு தும்கூரு சாலையில் ஞாயிற்றுக்கிழமை பாஜக கட்சியின் சார்பில் நடைபெறவுள்ள மாற்றத்துக்கான பேரணி பந்தல் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியது:  தும்கூரு சாலையில் உள்ள பெங்களூரு சர்வதேச மாநாட்டு அரங்கில் நவம்பர் 2-ஆம் தேதி மாற்றத்துக்கான பேரணி தொடங்க உள்ளது. இதனையொட்டி பந்தல் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. மாற்றத்துக்கான பேரணியில் நவீன கர்நாடகத்தின் கட்டமைப்புக்கான விழிப்புணர்வு மக்களிடத்தில் ஏற்படுத்தப்படும்.
பாஜக தலைமையில் புதிய அரசை ஆட்சியில் அமர்த்துவதற்கான பணியை பேரணியில் தொடங்கப்படும்.  அதே நேரத்தில் மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியின் ஊழல்களும் பேரணியில் அம்பலப்படுத்தப்படும். முதல்வர் சித்தராமையா தலைமையிலான மாநில அரசு அனைத்துத் துறைகளிலும் தோல்வி அடைந்துள்ளது. காங்கிரஸ் அல்லாத கர்நாடகத்தை உருவாக்கவும் பேரணி உதவிகரமாக இருக்கும்.  
சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சியைப் பிடித்தால் விவசாயிகள், மகளிருக்கு உதவும் வகையில் அரசு செயல்படும். விவசாயிகளின் தற்கொலைகள் தடுக்கப்படும்.  ஜாதி, மத அரசியலில் பாஜக ஈடுபடாது என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறோம். பாஜக சார்பில் பெங்களூரில் தொடங்கும் மாற்றத்துக்கான பேரணியில் மாநிலத் தலைவர் எடியூரப்பா உள்ளிட்ட கட்சியின் அனைத்து மூத்த தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என்றார்.
நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் சதானந்த கெளடா, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.அசோக், மக்களவை உறுப்பினர்கள் ஷோபாகரந்தலஜே, பி.சி.மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/23/மாற்றத்துக்கான-பேரணியில்-மாநில-அரசின்-ஊழல்கள்-அம்பலப்படுத்தப்படும்-பாஜக-தேசிய-பொதுச்செயலாளர்-முரளித-2794359.html
2794357 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு ஆற்றில் கார் கவிழ்ந்ததில் குழந்தை சாவு DIN DIN Monday, October 23, 2017 02:27 AM +0530 ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஆற்றில் கவிழ்ந்ததில் ஒரு வயது குழந்தை உயிரிழந்தது. 5 பேர் காயமடைந்தனர்.
கர்நாடக மாநிலம், தும்கூருவைச் சேர்ந்தவர் மதன். அவரது மனைவி மமதா, தந்தை வசந்த்குமார், தாய் பார்வதி, மாமனார் சாந்தகுமார். தனது ஒரு வயது குழந்தையுடன் குலதெய்வக் கோயிலுக்கு காரில் சென்றுவிட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனராம். குப்பி வட்டம் சி.எஸ்.புரா அருகே ஹேமாவதி ஆற்றில் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்தது. ஆற்றில் குறைந்த அளவே தண்ணீர் ஓடியதால், படுகாயமடைந்து ஒரு வயது குழந்தை உயிரிழந்தது. மற்றவர்கள் காயமடைந்தனர். காயமடைந்த பார்வதி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  மற்ற 4 பேரும் பெங்களூரு நிமான்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சி.எஸ்.புரா போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/23/ஆற்றில்-கார்-கவிழ்ந்ததில்-குழந்தை-சாவு-2794357.html
2794356 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு மனைவி கொலை: கணவர் தப்பியோட்டம் DIN DIN Monday, October 23, 2017 02:27 AM +0530 மனைவியை கொலை செய்த வழக்கில் கணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம், கலபுர்கி மாவட்டம், சித்தாபுரா வட்டம், ஷகாபாத்தைச் சேர்ந்தவர் நாகப்பா. இவரது மனைவி சிவம்மா (30). கடன் சுமையால் தனது நிலத்தை நாகப்பா வேறு ஒருவருக்கு விற்பனை செய்தார். நிலத்தை விற்பனை செய்ய விரும்பாத சிவம்மா பத்திர பதிவின் போது கையெழுத்திட மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக நாகப்பா, சிவம்மா இடையே சனிக்கிழமை இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நாகப்பா, சிவம்மாவை கோடாரியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு, தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிந்த ஷகாபாத் போலீஸார், தப்பியோடி தலைமறைவாக உள்ள நாகப்பாவை தேடி வருகின்றனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/23/மனைவி-கொலை-கணவர்-தப்பியோட்டம்-2794356.html
2794355 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு லாரி மீது கார் மோதல்: தந்தை, மகன் சாவு DIN DIN Monday, October 23, 2017 02:26 AM +0530 லாரி மீது கார் மோதியதில் தந்தை, மகன் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.
கர்நாடக மாநிலம், விஜயபுரா மாவட்டம், ஹொர்த்தி பகுதியைச் சேர்ந்தவர் ஹுசேன்சாப் (50). இவரது மகன் அஜீஸ் அகமது (18). இவர்கள் இருவரும் சனிக்கிழமை நள்ளிரவு உறவினர்களுடன் காரில் ஹொர்த்தியிலிருந்து ஜலகிக்கு சென்றுகொண்டிருந்தனராம். ஜகனாலா அருகே எதிரே சென்ற லாரி மீது கார் மோதியது. இதில் படுகாயமடைந்த ஹுசேன்சாப், அஜீஸ் அகமது நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஜலகி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/23/லாரி-மீது-கார்-மோதல்-தந்தை-மகன்-சாவு-2794355.html
2794353 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பொன்னையாறு-பாலாறு இணைப்புத் திட்டம்: பெங்களூரில் உருவாகும் கழிவுநீரை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி மறுப்பு DIN DIN Monday, October 23, 2017 02:26 AM +0530 கர்நாடகத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு பொன்னையாறு மற்றும் பாலாறு நதிகளை இணைக்கும் திட்டத்தில் பெங்களூரில் உருவாகும் கழிவுநீரைப் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளதால்,  அந்த கழிவுநீரை சுத்திகரிக்கும் திட்டத்தை ரூ.1000 கோடியில் அமல்படுத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
பெங்களூரில் விநியோகிக்கப்படும் குடிநீரில் இருந்து உருவாகும் கழிவுநீர் தமிழகத்தில் உள்ள கிருஷ்ணகிரி அணைக்கு பாய்ந்தோடும் பொன்னையாறு மற்றும் பாலாறு நதிகளை இணைக்க முன்மொழியப்பட்ட முன்-சாத்தியக்கூறு அறிக்கையை ஏற்றுக் கொண்டிருந்த தேசிய நீர் மேம்பாட்டு முகமை (என்டபிள்யூடிஏ), இத் திட்டத்துக்காக பெங்களூரு கழிவுநீரில் இருந்து 9.57 டிஎம்சி நீரை எடுத்துக்கொள்ள அனுமதித்திருந்தது.
இந் நிலையில்,  தேசிய நீர் மேம்பாட்டு முகமைக் கூட்டத்தில் இந்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்த கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல்,"  காவிரி ஆற்றுப் படுகையில் மேற்கொள்ளப்படும் நீர்ப்பாசனத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள கர்நாடகத்தின் பங்கு நீரில் இருந்து பாசனத்துக்கான தண்ணீரைக் குறைத்துக் கொண்டு பெங்களூரின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்து வருகிறோம்.  கர்நாடகத்துக்கு ஒதுக்கப்பட்ட நீரில் இருந்து பெங்களூருக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் இருந்து உருவாகும் கழிவுநீரை சுத்திகரித்துப் பயன்படுத்திக் கொள்ளும் உரிமை மற்றும் தேவைப்படும்போது அதன் பயனை அனுபவிக்கும் உரிமை கர்நாடகத்துக்கு உள்ளது" என்று வாதிட்டார்.
 கர்நாடகத்தின் வாதத்தை ஏற்றுக்கொண்ட தேசிய நீர் மேம்பாட்டு முகமை,  பொன்னையாறு-பாலாறு நதிகள் இணைப்புக்கு 9.57 டிஎம்சி கழிவு நீரைப் பயன்படுத்திக் கொள்ள வழங்கியிருந்த அனுமதியை திரும்பப் பெற்றுள்ளது.
இதைத்தொடர்ந்து, பெங்களூரில் உருவாகும் கழிவுநீரை சுத்திகரித்து வறட்சியான கோலார் மற்றும் சிக்பளாப்பூர் மாவட்டங்களில் உள்ள ஏரிகளில் நிரப்ப ரூ.1000 கோடியில் வகுத்திருந்த கர்நாடக அரசின் திட்டத்துக்கு இருந்த தடை  நீங்கியுள்ளது. இந்த திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ஏற்கெனவே சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு,  சுத்திகரிக்கப்பட்ட  நீரை கோலார் மற்றும் சிக்பளாப்பூர் மாவட்டங்களுக்குக் கொண்டு செல்ல குழாய்களும் பதிக்கப்பட்டுள்ளன.  தேசிய நீர் மேம்பாட்டு முகமையின் ஒப்புதல் கிடைத்துள்ளதால்,  இந்த திட்டத்தை கர்நாடக அரசு அமல்படுத்தத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் கூறியது:  பொன்னையாறு-பாலாறு நதிகள் இணைப்புத் திட்டத்தில் பெங்களூரில் விநியோகிக்கப்படும் குடிநீரில் இருந்து உருவாகும் கழிவு நீரை முழுமையான திட்ட  விவர அறிக்கையில் (டிபிஆர்)சேர்க்க வேண்டாம் என்று மத்திய நீர்வளத் துறையிடம் கோரிக்கை விடுத்திருந்தோம்.  எங்கள் ஆட்சேபணையை ஏற்றுக் கொண்டுள்ள மத்திய அரசு,  பெங்களூரில் உருவாகும் கழிவுநீரை சுத்திகரித்து பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்துள்ளது என்றார் அவர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/23/பொன்னையாறு-பாலாறு-இணைப்புத்-திட்டம்-பெங்களூரில்-உருவாகும்-கழிவுநீரை-பயன்படுத்த-மத்திய-அரசு-அனுமதி-ம-2794353.html
2794352 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு வீடு புகுந்து தங்க நகை திருட்டு DIN DIN Monday, October 23, 2017 02:26 AM +0530 பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்த மர்மநபர் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள தங்க நகையை திருடிச் சென்றுள்ளனர்.
பெங்களூரு பீன்யா சுந்தரநகரைச் சேர்ந்தவர் மஞ்சுளா. இவர் கடந்த அக். 19-ஆம் தேதி வீட்டைப் பூட்டிக் கொண்டு, குடும்பத்தினருடன் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டுக்கு திரும்பினார். இதற்கிடையே, அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்,  ரூ. 1 லட்சம் மதிப்புள்ள தங்க நகையை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து பீன்யா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/23/வீடு-புகுந்து-தங்க-நகை-திருட்டு-2794352.html
2794351 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு "வயதான மாமியார்களை குழந்தைகளாக பாவித்துப் பாதுகாக்க வேண்டும்' DIN DIN Monday, October 23, 2017 02:26 AM +0530 வயதான மாமியார்களை குழந்தைகளாகப் பாவித்துப் பாதுகாக்க வேண்டும் என்று சுமங்கலி சேவா ஆஸ்ரமத்தின் தலைவர் சுசிலம்மா தெரிவித்தார்.
பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை மாமியார்கள் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியது:  தேசிய அளவில் மாமியார்கள் மருமகளையும், மருமகள்கள் மாமியார்களையும் கொடுமை படுத்துவது தடுக்கப்பட வேண்டும்.  வயதான மாமியார்களை மருமகள்கள் ஊதாசினப்படுத்துவதால், பலர் முதியோர் இல்லத்தை நாட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதனை முழுமையாக தடுக்கப்பட வேண்டும். மருமகள்களை கொடுமைப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்பதில் இருவேறு கருத்தில்லை. அதேவேளையில் வயதான மாமியார்களை குடும்பத்திலிருந்து பிரித்து, முதியோர் இல்லத்தில் சேர்ப்பது தடுக்கப்பட வேண்டும். இதுகுறித்து விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த அரசு முன்வர வேண்டும். வயதான மாமியார்களை குழந்தைகளாகப் பாவித்துப் பாதுகாக்க மருமகள்கள் முன் வரவேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் கிரிஸ்ப் அமைப்பின் தலைவர் குமார் ஜாகிர்தார், கர்நாடக மாமியார்கள் சங்கத் தலைவர் ராணிநாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/23/வயதான-மாமியார்களை-குழந்தைகளாக-பாவித்துப்-பாதுகாக்க-வேண்டும்-2794351.html
2794349 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரில் சிறிதளவு உயர்ந்துள்ள சொத்துப்பதிவு DIN DIN Monday, October 23, 2017 02:25 AM +0530 கர்நாடகத்தில் சொத்துப் பதிவு எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ள நிலையில், பெங்களூரில் மட்டும் சிறிதளவு உயர்ந்து காணப்பட்டது.
பண மதிப்பிழப்பு,  மனைத் தொழில் ஒழுங்குமுறை சட்டம், சரக்கு மற்றும் சேவை வரி முறை ஆகியவை அமல்படுத்தப்பட்டதால், கர்நாடகத்தில் சொத்துப் பதிவுகள் கணிசமாகக் குறைந்துள்ளன. கடந்த நிதியாண்டில் மாநிலம் முழுவதும் 17.39 லட்சம் சொத்துப் பதிவுகள் நடந்திருந்த போதும், நிகழ் நிதியாண்டில் ஆக.30-ஆம் தேதி வரையில் 7.76 லட்சம் சொத்துக்கள் மட்டும் பதிவாகியுள்ளன. இது மனைத் தொழிலில் ஈடுபட்டுள்ளோரை கவலையடையச் செய்துள்ளது. 2016-17-ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் கர்நாடகத்தில் சொத்துப் பதிவு 7.79 லட்சமாக இருந்தன. நிகழ் நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் இது 7.76 லட்சமாக சரிந்துள்ளது. அதாவது 0.4 சதம் அளவுக்கு சொத்துப் பதிவு சரிந்துள்ளது. எனினும், பெங்களூரில் மட்டும் சொத்துப் பதிவுகள் சிறிதளவு உயர்ந்து காணப்பட்டன. பெங்களூரில் கடந்த ஆண்டை காட்டிலும் சொத்துப் பதிவு 5 சதம் உயர்ந்துள்ளது. எளிதாக வீட்டுவசதிக் கடன் கிடைப்பதும்,  நடுத்தர மற்றும் அடிநிலை வருவாய்க் குழுவினர் சொத்து வாங்கினால் மத்திய அரசு ஊக்கத்தொகை வழங்குவதும் பெங்களூரில் சொத்துக்களை பதிவு செய்வதன் எண்ணிக்கை சிறிதளவு உயர்ந்துள்ளதாக மனைத் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் தெரிவிக்கிறார்கள்.
இதுபற்றி பிரிகேட் குழுவின் மூத்தத் துணைத் தலைவர் விஸ்வ பிரதாப்தேசு கூறுகையில்," மனைத்தொழில் ஒழுங்குமுறை சட்டம் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்ட பிறகும், பெங்களூரில் சொத்துக்கள் பதிவு லேசாக உயர்ந்துள்ளது. ஆயத்தநிலை வீடுகளுக்கான அதாவது அடுக்குமாடி கட்டடங்களில் உள்ள வீடுகளை வாங்குவதற்கு மட்டுமே வாடிக்கையாளர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். மனைகளை வாங்குவதில் யாருக்கும் ஆர்வமில்லை. குடியேறுவதற்கு தயாரான வீடுகளில் மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இதுபோன்ற வீடுகள் பெங்களூரில் அதிகம் என்பதால், சொத்துப் பதிவுகளும் உயர்ந்து காணப்படுகின்றன" என்றார் அவர்.
இந்திய மனைத் தொழில் மேம்பாட்டாளர் கூட்டமைப்பு துணைத் தலைவர் சுரேஷ் ஹரி கூறுகையில், "சொத்துக்களின் பதிவு பெங்களூரில் கொஞ்சம் உயர்ந்திருந்தாலும், கர்நாடக அளவில் சொத்துக்களை வாங்குவதும், விற்பதும் வெகுவாகப் பாதிக்கப்பட்டு சொத்துப் பதிவு குறைந்துள்ளது. மனைத் தொழில் ஒழுங்குமுறை சட்டம் அமலுக்கு வந்துள்ளதால், பதிவு செய்வதில் சொல்ல முடியாத அளவுக்கு காலதாமதம் ஆவதால், சொத்துக்களை விற்பது தொடர்பாக விளம்பரம் செய்யவும், சந்தைப்படுத்துவதிலும் இத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் யாருக்கும் ஆர்வமில்லை. அதனால் சொத்துக்களை விற்கமுடியாமல் தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது. சொத்து விற்பனை சீரடையும் வரை சொத்துப் பதிவுகள் மந்தகதியில் தான் இருக்கும். தொடர்ந்து மழை பெய்தது, அடிக்கடி விடுமுறைகள் வந்ததும் சொத்துப் பதிவில் சரிவு ஏற்பட முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது" என்றார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/23/பெங்களூரில்-சிறிதளவு-உயர்ந்துள்ள-சொத்துப்பதிவு-2794349.html
2794348 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு "நவோதயா பள்ளிகள் மூலம் மாநில அரசுகளின் கல்வி உரிமை பறிக்கப்படுகிறது' DIN DIN Monday, October 23, 2017 02:25 AM +0530 நவோதயா பள்ளிகளை தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் திறப்பதன் மூலம் மாநில அரசுகளின் கல்வி உரிமை பறிக்கப்படுகிறது என்று முதுபெரும் சிந்தனையாளரும், அனைத்திந்திய தமிழ்ச் சங்கக் கூட்டமைப்புத் தலைவருமான மு.மீனாட்சிசுந்தரம் தெரிவித்தார்.
கர்நாடக மாநில திராவிடர் கழகத்தின் சார்பில் பெங்களூரில் உள்ள பெரியார் மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நவோதயா பள்ளி எதிர்ப்பு கருத்தரங்கத்தை தொடக்கிவைத்து அவர் பேசியது: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, சம்ஸ்கிருதம் மற்றும் ஹிந்தியைத் திணிப்பதற்கு ஆரம்பத்தில் இருந்தே முயற்சித்து வருகிறது. அதற்காக அண்மையில் கொண்டுவந்துள்ள திட்டம்தான் நவோதயா பள்ளிகள். தரமான கல்வியை வழங்குவதற்காக தொடங்கப்படுவதாகக் கூறப்படும் நவோதயா பள்ளிகளை திறப்பதன் மூலம் இதர மாநில அரசு பள்ளிகள் தரமற்றவை என்பதை மறைமுகமாக ஒப்புக்கொண்டிருக்கிறோம்.
நவோதயா பள்ளிகளை திறக்க மத்திய அரசு மிகுந்த அக்கறையையும் கவனத்தையும் செலுத்துவது ஏன்? தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க வேண்டியதன் அவசியம் என்ன? இந்தியாவிலேயே 1200 நவோதயா பள்ளிகளை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தின் கல்வித் தரத்தை,  ஒரே ஒரு நவோதயா பள்ளி கூட இல்லாத தமிழகத்துடன் ஒப்பிட இயலுமா? அரசுப் பள்ளிகளில் கல்வி தரமானதாக இல்லை என்றால்,  அதை சீராக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே. அதை விடுத்து,  நவோதயா பள்ளிகளை தொடங்குவதன் மூலம் சம்ஸ்கிருதம், ஹிந்தியைத் திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. சில ஆயிரம் மாணவர்களின் நலனுக்காக அரசுப் பள்ளிகளின் நலனை கைகழுவும் நிலையை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். திராவிட இயக்கத்தின் ஆளுமையை மட்டுப்படுத்துவதற்காகவே நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் தொடங்கப்படுகின்றன.
எம்ஜிஆர், ஜெயலலிதா எதிர்த்த நவோதயா பள்ளிகளை திறக்க தற்போதைய அதிமுக அரசு அனுமதிஅளித்துள்ளது வியப்பளிக்கிறது. 1975-ஆம் ஆண்டு மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி, பொதுப்பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்பிறகுதான் தனியார் பள்ளிகள் புற்றீசல் போல பரவின. இதன்பிறகும் கொஞ்சம் நஞ்சம் மிச்சமிருந்த கல்வி உரிமையை நவோதயா பள்ளிகள் மூலம் மாநில அரசுகள் இழக்கவிருக்கின்றன. கீழடியில் தமிழர்களின் தொன்மையை குழியில் புதைத்ததுபோல, தமிழக வரலாறு, மொழி, பண்பாடு, இலக்கிய வளத்தையும் தமிழர்களிடம் அந்நியப்படுத்தவே நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் இறக்குமதி செய்யப்படுகின்றன. இது காலத்தால் அழிக்க முடியாத இழிவை உருவாக்கும் என்பதை காலம் உணர்த்தும்.
நவோதயா பள்ளிகளால் மாநில அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும். இது ஆபத்தான எதிர்காலத்துக்கு வித்திடும் என்பதில் ஐயமில்லை என்றார் அவர்.
கர்நாடக மாநில திராவிடர் கழகத்தின் மாநிலத் தலைவர் மு.சானகிராமன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் வீ.மு.வேலு, தங்கம் இராமசந்திரா, பு.ர.கஜபதி, ஜெயகிருட்டிணன், இரா.இராசாராம் முன்னிலை வகிக்க, இரா.முல்லைக்கோ வரவேற்புரை ஆற்றினார். கருத்தரங்கில் முத்துச்செல்வன், சே.குணவேந்தன் ஆகியோர் பேசினர். முடிவில் வே.நடவரசன் நன்றி கூறினார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/23/நவோதயா-பள்ளிகள்-மூலம்-மாநில-அரசுகளின்-கல்வி-உரிமை-பறிக்கப்படுகிறது-2794348.html
2793850 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு நிலக்கரி முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: எடியூரப்பா DIN DIN Sunday, October 22, 2017 04:36 AM +0530 நிலக்கரி முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கர்நாடக பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா தெரிவித்தார்.

இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:  கர்நாடகத்தில் உள்ள அனல்மின் நிலையங்களில் மின்சாரம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கர்நாடக மின்சாரக் கழகம் (கேபிசிஎல்) முதல்வர் சித்தராமையா தலைமையில் இயங்கி வருகிறது.  மேலும் மின்துறையை டி.கே.சிவக்குமார் நிர்வகித்து வருகிறார்.
இந் நிலையில், கர்நாடக மின்சாரக் கழகத்துக்கு மத்திய அரசிடம் இருந்து நிலக்கரி தொகுதிகளை வழங்குவதற்காக எம்டா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டிருந்தது.  இந்நிறுவனத்தின் தவறு காரணமாக,  அபராதம் செலுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால்,  இந்த நிறுவனம் செலுத்தவேண்டிய அபராதத் தொகையான ரூ.447 கோடியை மத்திய அரசுக்கு கர்நாடக மின்சாரக் கழகம் செலுத்தியுள்ளது.  இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளது.  தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக முதல்வர் சித்தராமையா,  மின்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் நடந்துகொண்டுள்ளனர்.  இதில் ஊழல் நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது.
எனவே,  இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மத்திய அரசுக்கு பாஜக கடிதம் எழுதும்.
உச்ச நீதிமன்றம் மற்றும் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அபராதத் தொகையை தனியார் நிறுவனம் தான் மத்திய அரசுக்குச் செலுத்தியிருக்க வேண்டும்.  ஆனால்,  தனியார் நிறுவனத்தின் சார்பில் அபராதத் தொகையை கர்நாடக மின்சாரக் கழகம் செலுத்த வேண்டிய அவசியமென்ன?
11 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ள முதல்வர் சித்தராமையாவுக்கு இதுக்கூடத் தெரியாதா?  சட்டத்துக்கு எதிராக அபராதத் தொகையை கர்நாடக மின்சாரக் கழகம் செலுத்தியுள்ளது.  தனியார் நிறுவனத்தில் கர்நாடக மின்சாரக் கழகத்தின் பங்கு வெறும் 26 சதவீதம் தான்.  இந்நிலையில், தனியார் நிறுவனத்தின் மீது விதிக்கப்பட்ட அபராதத் தொகைக்கு கர்நாடக மின்சாரக் கழகம் எப்படி பொறுப்பாக முடியும்?   24 மணி நேரத்தில் அவசர கதியில் அபராதம் செலுத்தியதேன்? தனியார் நிறுவனத்துடன் செய்துகொண்ட ரகசிய ஒப்பந்தம் என்ன?  என்பதை வெளியே கொண்டுவர இந்த விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்றார் அவர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/22/நிலக்கரி-முறைகேடு-குறித்து-சிபிஐ-விசாரணைக்கு-உத்தரவிட-வேண்டும்-எடியூரப்பா-2793850.html
2793849 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு, மைசூரில் பெய்த மழையால் தமிழகத்துக்கு 25 டி.எம்.சி. தண்ணீர்: கர்நாடக நீர்வளத் துறை DIN DIN Sunday, October 22, 2017 04:35 AM +0530 பெங்களூரு, மைசூரில் பெய்த பலத்த மழையால், காவிரி ஆறு தவிர பிற ஆறுகள் வழியாக தமிழகத்துக்கு 25 டி.எம்.சி. தண்ணீர் சென்றுள்ளதாக நீர்வளத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் முதல் கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக காணப்பட்டது. குறிப்பாக, ஆக.14-ஆம் தேதி முதல் பெங்களூரு, மைசூரில் பலத்த மழை பெய்துவந்தது. காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதியான குடகு மாவட்டத்தில் எதிர்பார்த்த மழை பெய்யாவிட்டாலும், நிகழ் மழை ஆண்டில் அக்.16-ஆம் தேதி வரையில் கர்நாடகத்தில் இருந்து காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு 91.52 டி.எம்.சி. தண்ணீர் சென்றுள்ளது. இது மேட்டூர் அணை பாசனத்தை நம்பியிருக்கும் தமிழக விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை தந்திருக்கும் என்று கூறப்படுகிறது.
கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி அணை திறக்கப்பட்டால், அந்த தண்ணீர் பிலிகுண்டுலு நீர் அளவிடும் மையத்தின் வழியாக மேட்டூர் அணையை சென்றடைவது வழக்கம். அதன்படி, பிலிகுண்டுலு வழியாக கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு செப்டம்பரில் 37 டி.எம்.சி, அக்டோபர் 15-ஆம் தேதி வரையில் 26.85 டி.எம்.சி. தண்ணீர் சென்றுள்ளது.
இதுதவிர, கர்நாடகம்-தமிழகத்தின் எல்லையில் அமைந்துள்ள பிலிகுண்டுலுவைக் கடந்து அமைந்துள்ள கர்நாடகத்தின் பிற பகுதிகளில் இருந்தும் காவிரி ஆற்றுக்கு தண்ணீர் சென்றுள்ளது. குறிப்பாக, மாதேஸ்வரா மலை, பாலாறு, காவிரி பறவைகள் சரணாலயத்தில் இருந்து சுமார் 10 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு சென்றுள்ளதாக கர்நாடக நீர்வளத் துறை தெரிவித்துள்ளது. இதுதவிர, பெங்களூரில் இருந்து காவிரி ஆற்றில் நேரடியாக பாயும் அர்க்காவதி ஆற்றில் இருந்து 11 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு சென்றுள்ளதாகவும் நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  இதேபோல, கர்நாடகத்தின் தென்கிழக்கில் அமைந்துள்ள கோலார் மாவட்டத்தில் பங்கார்பேட்,  மாலூர், கோலார் தங்கவயல் உள்ள ஏரிகள் நிரம்பி, அதிலிருந்து 4 டி.எம்.சி. உபரிநீர் தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு பாய்ந்து, ஓகேனக்கல் பகுதியில் காவிரி ஆற்றில் கலந்துள்ளதாக நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குடகு மாவட்டத்தில் போதுமான மழை பெய்யாததால், அக்டோபர் மாத இறுதியிலும் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் மொத்த கொள்ளளவான 124.80 அடியில் 114 அடி மட்டுமே தண்ணீர் நிரம்பியுள்ளது.
கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி அணைகளின் மொத்த கொள்ளளவு 114 டி.எம்.சி. தண்ணீர் ஆகும். ஆனால், இவற்றில் அக்.21-ஆம் தேதி வரை 74 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளதாக நீர்வளத் துறை அதிகாரிகள் கூறுகிறார்கள். இந்த அணைகளில் இருக்கும் தண்ணீர், அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரையில் குடிநீர் பிரச்னை எழாது என்று கூறப்படுகிறது.
காவிரி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள மைசூரு, சாமராஜ்நகர், மண்டியா, ஹாசன் மாவட்டங்களில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பியுள்ளதும் இதற்கு முக்கியக் காரணமாகும் என்று நீர்வளத் துறை தெரிவிக்கிறது.
இதனிடையே, கோடை பயிர்களுக்கு கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடும்படி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காவிரி நீர்ப்பாசன நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சிவசங்கர் கூறுகையில், "அண்மையில் பெய்த பலத்த மழையால் காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டிய தண்ணீரின் அளவை குறைக்க நேர்ந்துள்ளது. அணைகளில் இருப்புள்ள தண்ணீரை முதலில் குடிநீருக்கு பயன்படுத்த முன்னுரிமை அளிப்போம். அணைகளின் நீர் இருப்பை கருத்தில்கொண்டு பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவது குறித்து முடிவுசெய்வோம்" என்றார் அவர்.

காவிரி ஆற்றுப்படுகை அணைகளின் நீர்மட்டம்
அணை                           அதிகபட்ச நீர் இருப்பு     தற்போதைய இருப்பு
கிருஷ்ணராஜசாகர்                  45.05டிஎம்சி            31.54டிஎம்சி
ஹாரங்கி                                8.07டிஎம்சி             7.65டிஎம்சி
கபினி                                     15.67டிஎம்சி            14.5டிஎம்சி
ஹேமாவதி                             35.76டிஎம்சி            9.88டிஎம்சி

அணை நீர்மட்டம்
மைசூர் கேஆர்எஸ்
மொத்த உயரம்:                  124.80 அடி
நீர்மட்டம்:                114.20 அடி
நீர்வரத்து                                  2,110 கன அடி
வெளியேறும் நீர்:             611 கன அடி


கபினி
மொத்த உயரம்:             2,284 அடி
                                                      (கடல்மட்ட அளவு)
நீர்மட்டம்:        2,282.30 அடி
நீர்வரத்து:                  785 கன அடி
வெளியேறும் நீர்:        300 கன அடி

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/22/பெங்களூரு-மைசூரில்-பெய்த-மழையால்-தமிழகத்துக்கு-25-டிஎம்சி-தண்ணீர்-கர்நாடக-நீர்வளத்-துறை-2793849.html
2793848 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு அடுத்த மாதத்தில் 3 நாள்கள் கர்நாடகத்தில் ராகுல் காந்தி முகாம் DIN DIN Sunday, October 22, 2017 04:34 AM +0530 அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, அடுத்த மாதத்தில் 3 நாள்கள் கர்நாடகத்தில் முகாமிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள திட்டமிட்டிருக்கிறார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற இருப்பதால், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு திரட்டும் வகையில் நவம்பர் மாதத்தில் 3 நாள்கள் கர்நாடகத்தில் முகாமிட்டு பிரசாரத்தில் ஈடுபட அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி திட்டம் வகுத்திருக்கிறார்.
நவ.19-ஆம் தேதி கர்நாடகத்துக்கு வரும் ராகுல் காந்தி, அன்று சிக்மகளூருவில் நடைபெறும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்கிறார். நவ.20-ஆம் தேதி கடூர், பீரூரில் நடைபெறும் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்கிறார். அன்று மாலை 4 மணி அளவில் சிவமொக்காவில் நடைபெறும் காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றுகிறார்.
சுற்றுப் பயணத்தின் கடைசி நாளான நவ.21-ஆம் தேதி வட கன்னட மாவட்டத்தின் கும்டாவில் நடைபெறும் மீனவர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசுகிறார்.
முன்னதாக, கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து மலைநாடு மற்றும் கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த காங்கிரஸ் முன்னணியினர் கலந்துகொள்ளும் கூட்டத்தில் பங்கேற்று ராகுல்காந்தி ஆலோசனை நடத்துகிறார். இதற்கான ஏற்பாடுகளை கர்நாடக காங்கிரஸ் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
இதுதவிர, முதல்வர் சித்தராமையாவும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட திட்டம் வகுத்திருக்கிறார். வெகுவிரைவில் கர்நாடகத்தின் தென்கோடி மாவட்டமான சாமராஜ்நகரில் தனது பிரசாரத்தை தொடங்கி, 224 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சுற்றுப் பயணம் செய்து, பீதர் மாவட்டத்தில் தனது பிரசாரத்தை நிறைவுசெய்கிறார்.
ஒரு மாத காலம் செல்லவிருக்கும் இந்த பயணத்தில் ஆங்காங்கே நடக்கும் பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார். இதற்கு முன், மாவட்டவாரியான மாநாடுகளை நடத்தவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதிலும் முதல்வர் சித்தராமையா கலந்துகொள்ள முடிவுசெய்திருக்கிறார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/22/அடுத்த-மாதத்தில்-3-நாள்கள்-கர்நாடகத்தில்-ராகுல்-காந்தி-முகாம்-2793848.html
2793847 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு விதானசெளதா வைர விழா: விளம்பரம், திரைப்படத்துக்கு நிதி குறைப்பு DIN DIN Sunday, October 22, 2017 04:34 AM +0530 விதானசெளதா வைர விழாவை கொண்டாட முடிவுசெய்துள்ள கர்நாடக அரசு, அதற்கான செலவை குறைத்துள்ளதால் விளம்பரம், திரைப்படத்துக்கான நிதி ஒதுக்கீடும் குறைக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தின் அரசியல் சின்னமாக பெங்களூரில் நிமிர்ந்து நிற்கும் விதானசெளதா கட்டடம் கட்டி 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதைத் தொடர்ந்து, 2 நாள்களுக்கு ரூ.26.87 கோடி செலவில் இருநாள்கள் விழா நடத்த சட்டப்பேரவை மற்றும் சட்டமேலவை செயலகங்கள் முடிவுசெய்திருந்தன.
ஆனால், விழாவுக்கான செலவை ரூ.10 கோடியாக குறைக்க முதல்வர் சித்தராமையா முடிவு செய்ததால், 2 நாள்களுக்கு பதிலாக ஒருநாள் நிகழ்ச்சியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அக்.25-ஆம் தேதி விதானசெளதா வைர விழாவை முன்னிட்டு நடைபெறும் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.
இதைத் தொடர்ந்து, விதானசெளதாவின் படிக்கட்டுகளில் கன்னடம் மற்றும் கலாசாரத் துறையின் சார்பில் பிரமாண்டமான கலை விழா நடைபெறுகிறது. இதற்கான நிதி கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.
விதானசெளதா வைர விழாவுக்கு ஊடகங்களில் அளிக்கவிருந்த விளம்பரச் செலவையும் குறைக்க அரசு முடிவுசெய்துள்ளது. விதானசெளதா குறித்து திரைப்படங்கள் எடுக்கும் பணி திரைப்பட இயக்குநர்கள் டி.என்.சீத்தாராம், கிரீஷ்காசரவள்ளி, கிஷன் ஆகியோருக்கு ஒப்படைக்கப்பட்டிருந்தது. டி.என்.சீத்தாராமுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிதி ரூ.1.58 கோடியில் இருந்து ரூ.50 லட்சமாகவும், கிரீஷ்காசரவள்ளிக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிதி ரூ.1 கோடியில் இருந்து ரூ.30 லட்சமாகவும், கிஷனுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிதி ரூ.1.02 கோடியில் இருந்து ரூ.40 லட்சமாகவும் குறைக்கப்பட்டுள்ளது

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/22/விதானசெளதா-வைர-விழா-விளம்பரம்-திரைப்படத்துக்கு-நிதி-குறைப்பு-2793847.html
2793846 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரில் நிரந்தர காவலர் நினைவிடம் அமைக்கப்படும்: முதல்வர் சித்தராமையா DIN DIN Sunday, October 22, 2017 04:33 AM +0530 பெங்களூரில் நிரந்தரமான காவலர் நினைவிடம் அமைக்கப்படும் என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

பெங்களூரு, கோரமங்களாவில் உள்ள கர்நாடக மாநில அதிரடிப்படை மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற காவலர் வீரவணக்கநாள் நிகழ்ச்சியில் பங்கேற்று, பணியின் போது வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு தாற்காலிக காவலர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்திய பிறகு அவர் பேசியது: சமுதாயத்தில் அமைதி நிலைத்திருக்க காவலர்களின் பங்களிப்பை மறந்துவிட முடியாது. சட்டம்-ஒழுங்கை பராமரிக்க காவலர்கள் தினந்தோறும் கடுமையான இன்னல்களை எதிர்கொண்டு திறமையாக பணியாற்றி வருகிறார்கள். பணியின்போது உயிர்த் தியாகம் செய்த காவலர்களை நினைத்துப் பார்க்க நாம் தவறக் கூடாது.
காவலர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன், அயராமல் கடமையாற்றுவதால் தான் நாம் அனைவரும் நிம்மதியாக வாழ முடிகிறது. நிகழ் ஆண்டில் நாடுமுழுவதும் 370 காவலர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். கடினமான சூழலில் பணியாற்றும்போது தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். பணியின்போது வீரமரணம் அடைந்த காவலர்களின் நினைவாக நிலையான நினைவிடம் எதுவும் இதுவரைஇல்லை.
எனவே, பெங்களூரில் நிரந்தரமான காவலர் நினைவிடம் அமைக்கப்படும். அதேபோல, காவலர்கள் பயிற்சி பெறுவதற்காக விளையாட்டுத் திடலும் வெகுவிரைவில் நிறுவப்படும்.
காவலர்களின் நலனுக்காக எனது அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. அண்மையில் காவலர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டது, பணி உயர்வும் அளிக்கப்பட்டது. ஏஎஸ்ஐ பதவிக்கும் மேல்நிலையில் உள்ள அதிகாரிகளுக்கும் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.
பெலகாவியில் சட்டப்பேரவைக் கூட்டம் நடக்கும்போது காவல் துறை அதிகாரிகள், காவலர்கள் தங்குவதற்கு வசதிக்குறைவான சூழல் இருப்பதை அரசு உணர்ந்துள்ளது. எனவே, நிகழ் ஆண்டில் பெலகாவியில் சட்டப்பேரவைக் கூட்டம் நடக்கும்போது காவலர்களுக்கு குடியிருப்பு வசதி செய்துதர ஏற்பாடு செய்யப்படும்.
காவலர்களின் நலனுக்காக மலிவுவிலை காவலர் அங்காடி, வீட்டுவசதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். காவலர்களின் நலனில் அரசு எப்போதும் அக்கறையோடு செயல்படும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, டிஜிபி ஆர்.கே.தத்தா, உள்துறை அமைச்சரின் ஆலோசகர் கெம்பையா, அரசு தலைமைச் செயலர் சுபாஷ்சந்திர குன்ட்டியா, பெங்களூரு மாநகர காவல் ஆணையர் சுனில்குமார உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/22/பெங்களூரில்-நிரந்தர-காவலர்-நினைவிடம்-அமைக்கப்படும்-முதல்வர்-சித்தராமையா-2793846.html
2793845 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு நிலக்கரி முறைகேடு குற்றச்சாட்டில் சிபிஐ விசாரணைக்கு தயார்: கர்நாடக மின்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் DIN DIN Sunday, October 22, 2017 04:33 AM +0530 நிலக்கரி முறைகேடு குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணைக்கு தயாராக இருப்பதாக மின்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து புது தில்லியில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கர்நாடக மின்சாரக் கழகம், தனியார் நிறுவனத்தின் சார்பில் மத்திய அரசுக்கு அபராதத் தொகை செலுத்தியதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளதோடு,  அதுகுறித்து சிபிஐ விசாரணை கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுத இருப்பதாகவும் பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வரான எடியூரப்பா,  இதுபோன்ற பொறுப்பற்ற முறையில் குற்றம்சாட்டியுள்ளது வருத்தமளிக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு எடியூரப்பா கேட்டிருப்பதை வரவேற்கிறோம்.  சிபிஐ உள்ளிட்ட எந்த விசாரணைக்கும் நாங்கள் தயார்.  இந்த விவகாரம் தொடர்பாக எந்த விவாதத்துக்கும் நான் தயார்.
மத்திய அரசின் சட்ட திட்டங்களுக்குள்பட்டே தனியார் நிறுவனத்துடன் நிலக்கரிக்காக ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது.  உச்சநீதிமன்றத்தின் உத்தரவு காரணமாகவே நமது நிலக்கரி தொகுதி ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து,  கர்நாடகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் அனைவரும் மத்திய அமைச்சரை சந்தித்து கர்நாடகத்துக்கு நிலக்கரி தொகுதியை ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தோம்.
இந் நிலையில், நிலக்கரி ஒதுக்கீட்டுக்காக தனியார் நிறுவனத்துடன் ரகசிய ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டிய அவசியம் கர்நாடக அரசுக்கு இல்லை. ரகசிய ஒப்பந்தம் செய்துகொள்வதெல்லாம் பாஜகவுக்கும், எடியூரப்பாவுக்கும் தான் கைவந்த கலையாகும்.
ஆண்டுதோறும் கூடுதல் தொகையை அளித்து மத்திய அரசு நிறுவனங்களிடம் இருந்து நிலக்கரியை வாங்கி வந்தோம். இதனால் மாநில அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டது.  எனவே,  நிலக்கரி தொகுதி ஒதுக்கீட்டுக்கு கர்நாடக அரசு தகுதிபெற வேண்டுமென்பதற்காகவே கேஇசிஎம்எல் நிறுவனத்துக்கு பணம் ஒதுக்கியிருந்தோம்.
எனவே,  மக்களைத் திசைதிருப்புவதற்காக கர்நாடக அரசு மீது பாஜக பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் நலனைப் பாதுகாக்கவும்,  இழப்பை ஈடு செய்யவும் நிறுவனத்துக்கு நிதி வழங்கியுள்ளோம். இது மத்திய அரசுக்கும் தெரிந்துள்ளது.  இந்த விவகாரத்தில் உண்மையைத் தெரிந்துகொள்ளாமல் எடியூரப்பா குற்றம்சாட்டியுள்ளார்.  இந்த விவகாரத்தில் தனிப்பட்ட முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் எனக்கும் முதல்வர் சித்தராமையாவுக்கும் எவ்வித உள்நோக்கமும் இல்லை என்றார் அவர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/22/நிலக்கரி-முறைகேடு-குற்றச்சாட்டில்-சிபிஐ-விசாரணைக்கு-தயார்-கர்நாடக-மின்துறை-அமைச்சர்-டிகேசிவக்குமா-2793845.html
2793844 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு இன்று ஜெயம் கலை அரங்கம் திறப்பு DIN DIN Sunday, October 22, 2017 04:33 AM +0530 பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை ஜெயம் கலை அரங்கம் திறக்கப்படுகிறது.
இதுகுறித்து ஜெயம் கலை அரங்கம் வெளியிட்டுள்ள செய்தி: பழம்பெரும் ஓவியக் கலைஞர் கே.என்.ராமசந்திரனின் நினைவாக, அவரது குடும்பத்தினர் சார்பாக பெங்களூரு, பசவேஸ்வரா நகரில் உள்ள அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (அக்.22) காலை 11 மணிக்கு ஜெயம் கலை அரங்கம் திறக்கப்படுகிறது.
இந்த கலை அரங்கில் ஓவியர் கே.என்.ராமசந்திரனின் கலைப் படைப்புகள் அனைத்தும் காட்சிக்கு வைக்கப்படும். கலை அரங்கை முன்னாள் கூடுதல் தலைமைச் செயலர் சிரஞ்சீவ்சிங் திறந்து வைக்கிறார்.
விழாவில், கலை ஆய்வாளர் கே.வி.சுப்பிரமணியன், மூத்த ஓவியர் ஜே.எஸ்.கண்டேராவ் உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை கே.என்.ராமசந்திரனின் மகள் எழில் அரசி, சி.வி.அம்பாஜி, யஷ்வந்த் ஹிபாரே, கே.ஜி.லிங்கதேவரு உள்ளிட்டோர் செய்துவருகிறார்கள்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/22/இன்று-ஜெயம்-கலை-அரங்கம்-திறப்பு-2793844.html
2793843 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு மத்திய பல்கலைக்கழகத்தில் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் DIN DIN Sunday, October 22, 2017 04:32 AM +0530 பெங்களூரு மத்திய பல்கலைக்கழகத்தில் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.
இதுகுறித்து பெங்களூரு மத்திய பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி: பெங்களூரு பல்கலைக்கழகத்தை மூன்றாக பிரித்து கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவு படி, 2015 ஆக.13-ஆம் தேதி முதல் பெங்களூரு மத்திய பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு, பெங்களூரில் உள்ள சென்ட்ரல் கல்லூரியில் 2017 ஜூலை 1-ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது.
2018-19-ஆம் கல்வியாண்டு முதல் பெங்களூரு மத்திய பல்கலைக்கழகம் முழுவீச்சில் செயல்படும் என்பதால், பெங்களூரு நகர மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தி நகர், பேட்ராயனபுரா, எலஹங்கா, மல்லேஸ்வரம், ஹெப்பாள், சிவாஜி நகர், காந்தி நகர், சாமராஜ்பேட், சிக்பேட், பசவனகுடி, பிடிஎம் லேஅவுட், ஜெய நகர், ராஜாஜி நகர் ஆகிய 13 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.
இதன்படி, அங்கீகாரம் தேவைப்படும் கல்லூரிகள் அதற்கான விண்ணப்பங்களை அளிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/22/பெங்களூரு-மத்திய-பல்கலைக்கழகத்தில்-கல்லூரிகளுக்கு-அங்கீகாரம்-2793843.html
2793842 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு பல்கலைக்கழகத்தில் பட்டயப் படிப்பு DIN DIN Sunday, October 22, 2017 04:32 AM +0530 பெங்களூரு பல்கலைக்கழகத்தில் பட்டயப் படிப்புகளில் சேர்ந்து படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து பெங்களூரு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி: பெங்களூரு, ஞானபாரதி வளாகத்தில் அமைந்துள்ள பெங்களூரு பல்கலைக்கழகம் மற்றும் அதன் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் 2017-18-ஆம் கல்வியாண்டில் முதுநிலை பட்டயம், பட்டயம், சான்றிதழ் படிப்புகளில் சேர்ந்து படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பெங்களூரு பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் படிப்புகள் வருமாறு:
முதுநிலை பட்டயப் படிப்பு-அம்பேத்கர் சிந்தனை, கிளினிக்கல் எம்ப்ரையாலஜி அண்ட் அஸ்சிஸ்டட் ரீபுரடெக்டிவ் டெக்னாலஜி, மதநல்லிணக்கம் மற்றும் சமூக அமைதி, பயன்பாட்டு இந்தி, திரைப்பட நடிப்பு, காந்திய சிந்தனைகள், புவிசார் தகவலியல், இந்தி மொழியாக்கம், சுவடியியல், மனநலவியல் ஆலோசனை, ஊரக மேலாண்மை, சுற்றுலா மற்றும் அருங்காட்சியகவியல், காண்கலை, யோகா சிந்தனைகள்; பட்டயப் படிப்புகள்- சமஸ்கிருதம், உருது; சான்றிதழ் படிப்புகள்-தாழ்த்தப்பட்டோர் இயக்கம், காந்திய சிந்தனைகள், யோகா பயிற்றுநர்.
ஒவ்வொரு படிப்பிலும் 20 மாணவர்கள் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்படுவர். மாணவர்களுக்கு தங்கும் விடுதி வசதி உண்டு.
ஒவ்வொரு படிப்புக்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். தகுதி, இட ஒதுக்கீடு, கட்டணம் குறித்து அறியவும், விண்ணப்பப் படிவங்களை தரவிறக்கம் செய்துகொள்ளவும் w‌w‌w.​b​a‌n‌g​a‌l‌o‌r‌e‌u‌n‌i‌v‌e‌r‌s‌i‌t‌y.​a​c.‌i‌n என்ற இணையதளத்தை அணுகலாம்.
விண்ணப்பப் படிவக் கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ.200, தாழ்த்தப்பட்டோர்/பழங்குடியினருக்கு ரூ.100 வசூலிக்கப்படும்.
விண்ணப்பங்களை அபராதமின்றி அக்.23-ஆம் தேதிக்குள், ரூ.200 அபராதத்துடன் அக்.25-ஆம் தேதிக்குள் செலுத்தலாம். தகுதியான மாணவர்களின் பட்டியல் அக்.27-ஆம் தேதி வெளியிடப்பட்டு, அக்.28-ஆம் தேதி இடங்கள் ஒதுக்கப்பட்டு, அக்.30-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படுகின்றன.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/22/பெங்களூரு-பல்கலைக்கழகத்தில்-பட்டயப்-படிப்பு-2793842.html
2793841 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு "திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா அழைப்பிதழில் என் பெயர் வேண்டாம்' DIN DIN Sunday, October 22, 2017 04:31 AM +0530 திப்புசுல்தான் பிறந்த நாள் விழா அழைப்பிதழில் தனது பெயரை சேர்க்க வேண்டாம் என கர்நாடக அரசுக்கு மத்திய அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே அறிவுறுத்தியுள்ளார்.
கர்நாடகத்தின் மைசூரு மாகாணத்தை 18-ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த திப்புசுல்தானின் பிறந்த நாள்விழாவை அரசு விழாவாக நடத்த 2015-ஆம் ஆண்டு கர்நாடக அரசு முடிவுசெய்து, அதன்படி நவ.10-ஆம் தேதி விழா நடத்தியது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.
தனது ஆட்சிக்காலத்தின் போது தற்போதைய குடகு மாவட்டத்தில் ஆட்சி செய்து வந்த கொடவா அரசாட்சியை வீழ்த்தியதோடு, அம்மக்களை கடுமையாக துன்புறுத்தியதாகவும் பாஜக குற்றம்சாட்டியது.
மேலும், கன்னடமொழி, இந்து மதத்துக்கு எதிராகவும் திப்புசுல்தான் செயல்பட்டதால், அவரது பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடக் கூடாது என வலியுறுத்திய பாஜக, முதலாமாண்டில் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டது. குடகு மாவட்டத்தில் திப்புசுல்தான் பிறந்த நாள்விழா நடத்த எதிர்ப்புத் தெரிவித்து பாஜகவினர் ஊர்வலம் நடத்தியபோது ஏற்பட்ட குழப்பத்தில் இருவர் இறந்தனர். இதையடுத்து, 2016-ஆம் ஆண்டு நவ.10-ஆம் தேதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திப்புசுல்தான் பிறந்த நாள் விழா அமைதியாக நடந்து முடிந்தது.
 இந்நிலையில், அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், வரும் நவ.10-ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ள திப்புசுல்தான் பிறந்த நாள் விழாவை எதிர்க்க பாஜக முடிவுசெய்துள்ளது.
இந்நிலையில், வட கன்னட மாவட்டத்தில் நடைபெறும் திப்புசுல்தான் பிறந்த நாள்விழாவுக்கான அழைப்பிதழில் தனது பெயரை சேர்க்க வேண்டாமென கர்நாடக அரசு அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே அறிவுறுத்தியுள்ளார். மேலும், திப்புசுல்தான் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். மக்களின் எதிர்ப்பையும் மீறி திப்புசுல்தான் பிறந்த நாள்விழாவை நடத்த அவசியமேன்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/22/திப்பு-சுல்தான்-பிறந்த-நாள்-விழா-அழைப்பிதழில்-என்-பெயர்-வேண்டாம்-2793841.html
2793840 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு மாநகராட்சி நிலைக் குழுக்களின் தலைவர்கள் தேர்தல்: அக்.27-க்கு ஒத்திவைப்பு DIN DIN Sunday, October 22, 2017 04:31 AM +0530 பெங்களூரு மாநகராட்சி நிலைக் குழுக்களின் தலைவர்கள் தேர்தல் அக். 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி: கர்நாடக அரசு சார்பில் பெங்களூரில் அக்.25-ஆம் தேதி விதானசெளதா கட்டடத்தின் வைர விழா நடைபெறுகிறது.
இந்த விழாவை முன்னிட்டு நடைபெறும் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொள்கிறார்.
இந்நிலையில், பெங்களூரு மாநகராட்சியின் 12 நிலைக் குழுக்களின் தலைவர்களை தேர்ந்தெடுக்க அக். 25-ஆம் தேதி தேர்தல் நடத்த ஏற்கெனவே திட்டமிட்டு அறிவிக்கை வெளியிடப்பட்டிருந்தது. விதானசெளதாவின் வைர விழாவை முன்னிட்டு தேர்தலை தள்ளிவைக்குமாறு சட்டப்பேரவைச் செயலகம் கேட்டுக்கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து, அக்.25-ஆம் தேதி நடக்கவிருந்த நிலைக் குழுக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் தேர்தல் அக். 27-ஆம் தேதி காலை 11.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எனினும், ஏற்கெனவே அறிவித்தவாறு வேட்புமனு தாக்கல் உள்ளிட்டவை தொடர்பாக தேர்தல் அட்டவணையில் எவ்வித மாற்றமும் இல்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/22/பெங்களூரு-மாநகராட்சி-நிலைக்-குழுக்களின்-தலைவர்கள்-தேர்தல்-அக்27-க்கு-ஒத்திவைப்பு-2793840.html
2793839 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு கப்பன் பூங்காவில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள் DIN DIN Sunday, October 22, 2017 04:30 AM +0530 சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக கப்பன் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை (அக். 22) சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு தோட்டக்கலைத் துறை ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை வெளியிட்டுள்ள செய்தி: கப்பன் பூங்காவில் உள்ள சாலைகளில் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பூங்காவுக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும், பொதுமக்கள் மற்றும் நடைப் பயிற்சியாளர்களை மகிழ்விக்கவும் ஞாயிற்றுக்கிழமை தோறும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, அக். 22-ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
காலை 6 மணி முதல் காலை 7 மணி வரை கன்னடம் மற்றும் கலாசாரத் துறை சார்பில் பேண்ட் ஸ்டாண்ட் அரங்கில் பூங்காவில் உதயராகம் என்ற நிகழ்ச்சியும், காலை 8 மணி முதல் காலை 9 மணி வரை கர்நாடக மாநில அதிரடிப்படை சார்பில் போலீஸ் பேண்ட் நிகழ்ச்சியும், மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை சந்தியாராகம் இசை நிகழ்ச்சியும் நடைபெறும்.
போக்குவரத்துத் துறை சார்பில் கட்டணமில்லா சைக்கிள் சவாரி சேவை வழங்கப்படும். இயற்கை வேளாண்மை சங்கத்தின் சார்பில் இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்பட்ட தானியங்கள், காய்கறிகள், பழங்கள் விற்பனைக்கு வைக்கப்படும். அதேபோல, லால்பாக் பூங்கா சார்பில் அலங்காரச் செடிகள், மூலிகைச் செடிகள் விற்பனைக்கு கிடைக்கும். நூலகத் துறை சார்பில் புத்தகக் கண்காட்சியும் இடம்பெறும். மேலும், வீட்டுத் தோட்டங்கள் குறித்த பயிற்சியும் வழங்கப்படும்.
சுகாதாரத் துறை சார்பில் காலை 5.30 மணி முதல் நண்பகல் 1 மணி வரை தொற்றுநோய்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும். மேலும் இலவச ரத்த பரிசோதனையும் நடத்தப்படும். காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை சஹாயா ஒருங்கிணைந்த மருத்துவமனை சார்பில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும். சாமராஜேந்திர உடையார் சிலை அருகே காலை 7 மணி முதல் காலை 8 மணி வரை யுனிவர்ஸ் கலை அறக்கட்டளை சார்பில் பரதநாட்டிய விழா நடத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/22/கப்பன்-பூங்காவில்-இன்றைய-சிறப்பு-நிகழ்ச்சிகள்-2793839.html
2793838 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு? DIN DIN Sunday, October 22, 2017 04:30 AM +0530 பெங்களூரில் வரும் டிசம்பர் மாதத்தில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2019-ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தல் மற்றும் அடுத்தாண்டு நடைபெற இருக்கும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு, பெங்களூரில் வரும் டிசம்பர் மாதத்தில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடத்த திட்டமிட்டு வருவதாக கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டை நடத்துவதற்கு வாய்ப்பளிக்குமாறு கர்நாடகம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களை ஆளும் காங்கிரஸ் நிர்வாகிகள் கேட்டுள்ளனர். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பெங்களூரில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடத்த கட்சி மேலிடம் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடத்துவதன் மூலம் கட்சியின் செல்வாக்கு உயரும் என்று கர்நாடக காங்கிரஸ் கருதுகிறது. இதுதவிர, சட்டப்பேரவைத் தேர்தலுக்கு கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தவும் இம்மாநாடு உதவும் என்று கருதப்படுகிறது. பெங்களூரில் நடைபெறும் அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியை முறைப்படி தேர்ந்தெடுக்க கர்நாடக காங்கிரஸ் விரும்பியது.
ஆனால், இந்த விழாவை தில்லியில் நடத்தவே கட்சி மேலிடம் விரும்புகிறது. அதன் காரணமாக, நவம்பர் மாத இறுதியில் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பதவியேற்றுக்கொண்ட பிறகு, டிசம்பர் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் பெங்களூரில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/22/பெங்களூரில்-அகில-இந்திய-காங்கிரஸ்-மாநாடு-2793838.html
2793419 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் அரசியல் கட்சிகள் ந.முத்துமணி DIN Saturday, October 21, 2017 07:58 AM +0530 அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய கட்சிகள் தீவிர களப்பணியாற்றி
வருகின்றன.
கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் முயற்சியில் பாஜக- காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.  இரு தேசிய கட்சிகளிடம் போராடி  ஆட்சியைப் பிடிக்க மஜதவும் பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது. தேர்தல் நடப்பதற்கு 6 மாத காலம் உள்ள நிலையில்,  மூன்று கட்சிகளும் தேர்தலை நோக்கி நகரத் தொடங்கியுள்ளன. வேட்பாளர் தேர்வு,  பிரசார வியூகம்,  பிரசாரத்தில் கையில் எடுக்க வேண்டிய பிரச்னை உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும் மூன்று கட்சிகளும் கவனிக்கத் தொடங்கியுள்ளன.
காங்கிரஸ்: முதல்வர் சித்தராமையா தலைமையில் ஆட்சியைத் தக்கவைக்கத் திட்டமிட்டுள்ள காங்கிரஸ் கட்சி,  அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் வழிகாட்டுதலின் பேரில்,  தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால்,  மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஸ்வர் ஆகியோர் மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த அக்.15-ஆம் தேதி வரை தொகுதி வாரியாக வீட்டுக்கு வீடு காங்கிரஸ் பிரசார பயணத்தை மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியினர்,  அடுத்ததாக வாக்குச்சாவடி அளவில் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.  கர்நாடகத்தில் நடந்துவரும் தேர்தல் பணிகளை ஆய்வு செய்வதற்காக  நவ.10-ஆம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி,  பெங்களூரில் முகாமிடத் திட்டமிட்டுள்ளார்.  அப்போது, தேர்தல் பணிகளுக்கு புதிய வேகம் கொடுக்கவும் ராகுல் காந்தி முற்படுவார் என்று கூறப்படுகிறது.
பாஜக: வாக்குச்சாவடி அளவில் கட்சியைப் பலப்படுத்தத் திட்டமிட்டுள்ள பாஜக,  முதல்வர் சித்தராமையா ஆட்சிக்கு எதிராக மக்கள் கருத்துகளைக் கட்டமைக்க வியூகம் அமைத்துள்ளது.  மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜாவடேகர்,  பியூஷ் கோயல் ஆகியோர் தலைமையில் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ள பாஜக,  அக்.29-ஆம் தேதி பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு எழுச்சியை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
நவ.1-ஆம் தேதி முதல் புதிய கர்நாடக எழுச்சிப் பயணத்தைத் தொடக்கி வைக்கவிருக்கும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா,  அடுத்தடுத்த நாள்களில் கர்நாடகத்துக்கு வந்து மக்களின் ஆதரவைப் பெற திட்டமிட்டிருக்கிறார்.  எப்படியும் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதால்,  காங்கிரஸ் மற்றும் மஜதவில் அதிருப்தி அடைந்துள்ள 10 முதல் 15 எம்எல்ஏக்களை பாஜகவுக்கு இழுக்கவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருகிறது.  காங்கிரஸ் மற்றும் மஜதவில் அதிருப்தி அடைந்து ஒதுங்கியிருக்கும் அனைவரையும் பாஜகவுக்கு ஈர்க்க அக் கட்சி முனைப்பாகச் செயல்பட்டு
வருகிறது.
மஜத காங்கிரஸ்,  பாஜக ஆகிய தேசிய கட்சிகளுக்கு எதிராக மாநில பிரச்னைகளை முன்வைத்து பிரசாரம் செய்யத் திட்டமிட்டுள்ள மஜத,  மாநிலக் கட்சியை ஆட்சி அமைக்க ஆசி வழங்க வேண்டும் என்ற பிரசாரத்தை தீவிரப்படுத்தவுள்ளது.  மாநிலக் கட்சிகளால்தான் மாநில பிரச்னைகளைத் தீர்க்க முடியும் என்று பிரசாரம் செய்துவரும் எச்.டி. தேவெ கெளடா,  இதற்காக முன்னாள் முதல்வர் குமாரசாமியை முன்வைத்து பிரசார வியூகம்  அமைத்துள்ளார்.
குறிப்பாக,  வட கர்நாடகத்தில் அதிக கவனம் செலுத்தவிருக்கும குமாரசாமி,  அங்கு அதிக இடங்களைக் கைப்பற்றவும் முயற்சி மேற்கொண்டுள்ளார்.  நவ.1-ஆம் தேதிமுதல் மாநில சுற்றுப்பயணத்தை தொடங்கவிருக்கும் குமாரசாமி, 224 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய முடிவுசெய்து, அதற்கேற்ப திட்டம் வகுத்துள்ளார்.
தேசிய கட்சிகளை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்ந்துள்ள குமாரசாமி, வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களைக் களமிறக்க தகுதியானவர்களையும் அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/21/கர்நாடக-சட்டப்பேரவைத்-தேர்தலுக்கு-ஆயத்தமாகும்-அரசியல்-கட்சிகள்-2793419.html
2793418 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு தேர்தல் பரப்புரைக்கு அதிநவீன சொகுசுப் பேருந்து: மஜத திட்டம் DIN DIN Saturday, October 21, 2017 07:58 AM +0530 அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் முதல்வரும், மஜத மாநிலத் தலைவருமான எச்.டி.குமாரசாமி பரப்புரை மேற்கொள்ள அதிநவீன சொகுசுப் பேருந்து தயாராகி வருகிறது.
கர்நாடக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கவிருக்கிறது. இத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக மற்றும் மஜத ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு தேசிய கட்சிகளை வீழ்த்தி ஆட்சிக்கட்டிலில் அமர ஆர்வமாக இருக்கும் மஜத, அதற்கான வியூகங்களை அமைத்து செயல்பட்டுவருகிறது.
இதற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டிருந்த மஜத மாநிலத் தலைவரும், முன்னாள் முதல்வருமான எச்.டி.குமாரசாமிக்கு திடீரென இதயநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, இதய அறுவைச்சிகிச்சையும் செய்துகொண்டு, ஒரு மாத காலமாக ஓய்வில் இருந்துவருகிறார்.
அடுத்த 3 மாதங்களுக்கு முழுமையான ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தாலும், தேர்தல் பரப்புரையில் ஈடுபடவேண்டியதன் அவசியத்தை மருத்துவர்களிடம் குமாரசாமி எடுத்துரைத்திருக்கிறார். இதனையடுத்து, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவதற்காக ரூ.1கோடி செலவில் அனைத்து வசதிகளும் கொண்ட சொகுசுப் பேருந்தை தயார் செய்யும் பணி நடந்துவருகிறது.
நவ.1-ஆம் தேதி முதல் இந்த சொகுசு வாகனத்தில் பிரசாரத்தில் ஈடுபடவிருக்கும் குமாரசாமியின் உடல்நிலை மற்றும் தேவையை கருத்தில் கொண்டு பேருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. பட்டுமெத்தையுடன் கூடிய படுக்கையறை, கழிப்பறை மற்றும் குளியலறை, சிறு சமையலறை, சிறு கூட்ட அரங்கம் ஆகியவை அமைந்துள்ளன.
வாகனம் முழுவதும் குளிரூட்டப்பட்டுள்ளது. மஜத தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவெ கெளடாவை தவிர்த்து குமாரசாமியை தவிர, மக்களை ஈர்க்கும் தலைவர்கள் யாரும் இல்லை. வயதின் காரணமாக தேவெ கெளடாவால் நெடுந்தூரம் பயணித்து தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட இயலாது.
எனவே, மஜதவின் வெற்றிக்கு தான் பிரசாரம் செய்வதை தவிரவேறு வழியில்லை என்பதால், குமாரசாமி பிரசாரம் செய்வதற்காக சொகுசுப் பேருந்து யோசனையை மஜத தயாரித்துள்ளது. தமிழகத்தில் கரூரில் உள்ள ஒரு பேருந்து நிறுவனம் இந்த சொகுசுப் பேருந்தை தயாரித்துவருகிறது.
இதுகுறித்து மாநில மஜத சிறுபான்மை அணித் தலைவர் சையது அல்தாப் கூறியது: குமாரசாமிக்காக தயாரிக்கப்பட்டுள்ள சொகுசுப் பேருந்து, வருகிற அக்.22-ஆம் தேதி பெங்களூருக்கு வரவிருக்கிறது. குமாரசாமி பார்வையிட்ட பிறகு அவர் தெரிவிக்கும் மாற்றங்களும் பேருந்தில் செய்யப்படும். அசோக் லேலண்ட் சேசிஸ் மீது கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்த பேருந்தின் செலவு ரூ.1கோடியாகும்.
இந்த வாகனத்தில் இருந்தபடியே நின்றுகொண்டு குமாரசாமி பேசுவதற்கு தகுந்தவாறு மின்தூக்கியுடன்கூடிய மேடையும் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன் நவீன ஒலிபெருக்கியும் இணைக்கப்பட்டுள்ளது. அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் மஜதவை ஆட்சிக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதால், அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்ய குமாரசாமி திட்டமிட்டிருக்கிறார்.
கட்சிக் கொடியை பிரதிபலிக்கும் வகையில் வாகனத்தின் வெளிப்புறம் பச்சை, வெள்ளை நிறத்தில் வண்ணம் பூசப்பட்டுள்ளது. வாகனத்தில் மிகச்சிறந்த ஏர்-சஸ்பென்ஷன் பொருத்தபட்டுள்ளதால், பயணம் செய்வதால் குமாரசாமிக்கு களைப்பு, உடல்நலிவு ஏற்படாது என்றார்.
முன்னாள முதல்வரான குமாரசாமி, இதுபோன்ற சொகுசுப் பேருந்துகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது முதல்முறையல்ல. 2013-ஆம் ஆண்டு நடந்த தேர்தலின்போது, அவரது நண்பர் கொடுத்த டொயோட்டா சொகுசு வாகனத்தில் பிரசாரம் செய்தார்.
தேர்தல் முடிந்த பிறகு அந்த வாகனம் நண்பரிடமே திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இம்முறை தயாரித்துள்ள வாகனம் மஜதவின் சொந்த செலவில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளதால், அடுத்தடுத்த தேர்தல்களிலும் இந்த சொகுசு வாகனம் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/21/தேர்தல்-பரப்புரைக்கு-அதிநவீன-சொகுசுப்-பேருந்து-மஜத-திட்டம்-2793418.html
2793416 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு தமிழ் திரைப்பட பதாகைகள் கிழிப்பு விவகாரம்: தடுப்புக் காவலிலிருந்த இருவர் விடுவிப்பு DIN DIN Saturday, October 21, 2017 07:57 AM +0530 பெங்களூரில்  தமிழ் திரைப்பட பதாகைகள் கிழிக்கப்பட்ட விவகாரத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த இருவரை போலீஸார் விடுவித்தனர்.
பெங்களூரு  மல்லேஸ்வரம் சம்பிகே சாலையில் உள்ள சம்பிகே திரையரங்கில் நடிகர் விஜய் நடித்த "மெர்சல்' தமிழ் திரைப்படம் திரையிடப்பட்டிருந்தது. நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தினர் சிலர் திரையரங்கின் முன் நடிகர் விஜயின் பதாகைகள், கட்-அவுட்கள் வைத்திருந்தனர். இதனிடையே, ஆட்டோவை பின்னால் இருந்து வந்த பைக் மோதிய சம்பவத்தில் ஆட்டோ ஓட்டுநர் அருண் மற்றும் பைக்கில் வந்தவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதலில் முடிந்தது. அப்போது, பைக்கில் வந்தவரை  அருண் சரமாரியாக அடித்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், ஆட்டோவிலிருந்த அருணின் நண்பர்களான மகேந்திரா, கார்த்திக் இருவரும் சேர்ந்து தாக்கினர். அப்போது, கன்னடரை நடிகர் விஜய் ரசிகர்கள் அடித்துவிட்டதாக கன்னட தொலைக்காட்சியில் காணொலி ஒலிபரப்பப்பட்டதால் சம்பிகே திரையரங்கம் முன் திரண்ட கன்னட அமைப்பினர், அங்கு வைக்கப்பட்டிருந்த பதாகைகளை கிழித்தெறிந்தனர்.
இதேபோல, பெங்களூரில் உள்ள ராதாகிருஷ்ணா, முகுந்த், மைசூருவின் சங்கம் திரையரங்குகள் முன் வைக்கப்பட்டிருந்த பதாகைகளையும் கன்னட அமைப்பினர் கிழித்து எறிந்ததோடு, திரைப்படத்தை பார்க்கவிடாமல் பாதியில் நிறுத்தினர்.
இந்தவிவகாரத்தை ஒருசில கன்னட தொலைக்காட்சிகள், பெங்களூரில் கன்னடர்-தமிழர் கலவரம் நடந்திருப்பது போல பூதாகரமாக்கின. இதைத் தொடர்ந்து தமிழ் திரைப்படங்கள் ஓடிய திரையரங்குகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன.
இதனிடையே, கைகலப்பில் ஈடுபட்ட சம்பவத்தில் வழக்கை பதிவுசெய்யாமல் விசாரணை நடத்திய மல்லேஸ்வரம் போலீஸார், ஆட்டோவில் அமர்ந்திருந்த மகேந்திரா, கார்த்திக் இருவரையும் அக்.18-ஆம் தேதி தடுப்புக் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
இதனால் வேதனை அடைந்த அவர்களது குடும்பத்தார் வெள்ளிக்கிழமை காவல் நிலையம் முன் திரண்டு அழுதபடி இருந்தனர்.
இந்த நிலையில், பெங்களூரு தமிழ்ச்சங்கத்தலைவர் தி.கோ.தாமோதரன் உள்துறை அமைச்சர் ராமலிங்கரெட்டியிடம் தொலைபேசியில் பேசி தடுப்புக்காவலில் வைத்திருக்கும் இரு தமிழ் இளைஞர்களை விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அப்போது தகுந்த நடவடிக்கையை எடுப்பதாக ராமலிங்கரெட்டி உறுதி அளித்துள்ளார். தமிழ்ச்சங்கத்தலைவர் தி.கோ.தாமோதரனின் வழிகாட்டுதலின்பேரில் பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் துணைச்செயலாளர் எஸ்.சுந்தரவேலு, செயற்குழு உறுப்பினர் ராமசந்திரன் ஆகியோர் காவல்நிலையம் சென்று தடுப்புக்காவலில் வைத்திருப்போரைவிடுவிக்க முறையிட்டனர். அதேபோல, கர்நாடக தமிழ்மக்கள் இயக்கத்தின் தலைவர் சி.இராசன், அரசு, சண்முகம், பாலு, மாரி, செளரி, தமிழார்வலர் தமிழடியான், வழக்குரைஞர்கள் இளவரசு, நிலவன் உள்ளிட்டோரும் காவல் ஆய்வாளரை சந்தித்து தடுப்புக்காவலில் வைத்துள்ளோரை விடுவிக்கக்கோரிக்கைவிடுத்தனர்.
இந்த சம்பவம் குறித்து மகேந்திரன், கார்த்திக் இருவரிடமும் வாக்குமூலம் பெற்றுக்கொண்ட போலீஸார், தினமும் காவல்நிலையத்திற்கு வந்து கையெழுத்து போடுமாறு அறிவுறுத்தியுள்ளனர். தமிழ் அமைப்புகளின் கோரிக்கையை தொடர்ந்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த மகேந்திரா, கார்த்திக்கை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு 8 மணி அளவில் விடுவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தகராறில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர் அருண், பைக் ஓட்டிச் சென்றவரை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.


கர்நாடகத் தமிழ் மக்கள் இயக்கம் கண்டனம்
பெங்களூரு, மைசூரில் தமிழ்த் திரைப்பட பதாகைகள் கிழிக்கப்பட்டதற்கு கர்நாடகத் தமிழ் மக்கள் இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் தலைவர் சி.இராசன் வெளியிட்ட அறிக்கை: பெங்களூரு, மைசூரில் தமிழ்த் திரைப்பட பதாகைகள் கிழிக்கப்பட்டு தமிழர்களை சமூக எதிரிகளாக காட்ட முனைந்த "பிரஜா' கன்னடத் தொலைக்காட்சியின் செயல் கண்டனத்திற்குரியது. அதனடிப்படையில் சில கன்னட அமைப்புகள் கர்நாடக தமிழர்களுக்கு எதிராகவும், தமிழ்த் திரைப்படங்கள் கர்நாடகத்தில் திரையிடுவதற்கு எதிராகவும் போராட்டம் நடத்திய நிகழ்வை கர்நாடகத்தமிழ் மக்கள் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. "பிரஜா' தொலைக்காட்சி கர்நாடகத்தில் தமிழர்-கன்னடர் இடையே நிலவிவரும் தோழமை, அமைதியை சீர்குலைக்க முயற்சித்துள்ளது. கர்நாடகத்தில் மொழிச் சிறுபான்மையினராக வாழும் தமிழர்களை பெரும்பான்மையினரான கன்னடர்கள் தங்கள் மொழிகாப்பு என்ற பெயரில் வன்மத்தை தூண்டி வருவது கண்டிக்கத்தக்கதாகும்.
1991-இல் நிகழ்ந்த காவிரிக் கலவரத்தில் ஒருகோடி கர்நாடகத் தமிழர்கள் பாதிக்கப்பட்டு உயிர், உடைமைகளைஇழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளான நிகழ்வு கர்நாடக வரலாற்றுக்கு பெரும் இழுக்கு என்பதோடு, கன்னடர்களின் பெருந்தன்மை மற்றும் பண்பட்ட வாழ்வியல் முறைக்கு எதிரானதாகும்.  இதேபோல, அமைதியை விரும்பி வாழும் சிறுபான்மை தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வாழ்வியல், சமூகவியல் ஒடுக்குமுறையாகும். இதுபோன்ற நிகழ்வை மீண்டும் நிகழ்த்திக்காட்டுவதாக கன்னட அமைப்புகள் கூறுவதும், அதை கர்நாடக காவல் துறை வேடிக்கை பார்ப்பதும் வெட்கக்கேடானதாகும்.
கன்னடர்-தமிழர் நல்லுறவை சீர்குலைக்க முயற்சிக்கும் ஒருசில கன்னட  அமைப்புகளை கன்னட பெருங்குடி மக்கள் புறக்கணித்து, தமிழர்களோடு நிலையான நட்புறவை வளர்த்தெடுக்க பாடுபட வேண்டும் என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/21/தமிழ்-திரைப்பட-பதாகைகள்-கிழிப்பு-விவகாரம்-தடுப்புக்-காவலிலிருந்த-இருவர்-விடுவிப்பு-2793416.html
2793415 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரில் 90 சத சாலைக் குழிகள் மூடப்பட்டுள்ளன: அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் DIN DIN Saturday, October 21, 2017 07:56 AM +0530 பெங்களூரில் மழையால் சேதமடைந்த  சாலைக் குழிகள் 90 சதவீதம் மூடப்பட்டுள்ளதாக பெங்களூரு வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் தெரிவித்தார்.
பெங்களூரில் அண்மையில் பெய்த பலத்த மழையால் பல்வேறு இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளன.  இதனால் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன.  இதைத் தொடர்ந்து சேதமடைந்த சாலைகளை விரைந்து மூட வேண்டும் என முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார்.
இந்த நிலையில்,  சேதமடைந்த சாலைகளைச் சரிசெய்து குழிகளை மூடும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.  வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை சாலைகளைச் சீரமைக்கும் பணிகளை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ்,  மேயர் சம்பத்ராஜ்,  மாநகராட்சி ஆணையர் மஞ்சுநாத் பிரசாத் உள்பட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சாளுக்கியா சதுக்கம்,  வின்சர் மேம்பாலம்,  கங்கொண்டஹள்ளி,  பிஇஎல் சதுக்கம்,  ஹெப்பாள்,  சஞ்சய்நகர் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வுசெய்த பின்னர்,  செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் கூறியது:
பெங்களூரில் வரலாறு காணாத மழையால் பெரும்பாலான சாலைகள் சேதமடைந்துள்ளன.  தற்போது மழை நின்றுள்ள நிலையில்,  முதல்வரின் உத்தரவின்பேரில்,  போர்க்கால அடிப்படையில் குழிகளை மூடும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
 90 சதவீதம் சாலைக் குழிகளை மூடும் பணி நிறைவடைந்துள்ளது.  எஞ்சியுள்ள பணிகள் ஒரு வாரத்துக்குள் முடிக்கப்படும்.  சாலைக் குழிகளை மூடுவதில் ஒப்பந்ததாரர்கள் அலட்சியம் காட்டினால்,  அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.  அதேபோல்,  அதிகாரிகள் பணியில் அலட்சியம் காட்டினாலும்,  அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/21/பெங்களூரில்-90-சத-சாலைக்-குழிகள்-மூடப்பட்டுள்ளன-அமைச்சர்-கேஜேஜார்ஜ்-2793415.html
2793414 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு லாரி மோதியதில் தம்பதி சாவு DIN DIN Saturday, October 21, 2017 07:56 AM +0530 மோட்டார் சைக்கிள் மீது சமையல் எரிவாயு டேங்கர் லாரி மோதியதில் தம்பதி உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டம், துத்தா பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராம். இவரது மனைவி அனிதா. இவர்கள் இருவரும் வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று கொண்டிருந்தனராம்.
தேசிய நெடுஞ்சாலை 75-இல் ஆலூர் அருகே பாளையாவில் எதிரே வந்த சமையல் எரிவாயு டேங்கர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த ஜெயராம், அனிதா ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இது குறித்து ஆலூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/21/லாரி-மோதியதில்-தம்பதி-சாவு-2793414.html
2793413 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு கணவரை கொலை செய்த வழக்கில் மனைவி உள்பட 2 பேர் கைது DIN DIN Saturday, October 21, 2017 07:56 AM +0530 கணவரை கொலை செய்த வழக்கில் மனைவி உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூரு செளடேஸ்வரிநகர் இந்திரா பிரியதர்ஷினி நகரைச் சேர்ந்தவர் மதுசூதன் (35). இவரது மனைவி நீலா (30). ஆயத்த ஆடை நிறுவனங்களில் இயந்திரங்களை பழுது நீக்கும் பணியை செய்து வந்த மதுசூதனன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நீலாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.  
இவர்களுக்கு திருமணத்திற்கு பிறகு 8 வயதில் ஒரு பெண் குழந்தையும், 4 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வீட்டின் அருகே வசிக்கும் லாரி ஓட்டுநர் பிரதீப்புக்கும், நீலாவுக்கும் இடையே உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மதுசூதனுக்கும், நீலாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடந்து கடந்த வாரம் முதல் மதுசூதன் காணவில்லையாம். இதுகுறித்து நீலா ராஜகோபால்நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் நீலாவை விசாரித்தனர்.
இதில் காதலர் பிரதீப்பின் துணையுடன், கணவர் மதுசூதனை கழுத்தை நெறித்து கொலை செய்து, ரிஷபாவதி ஆற்றில் சடலத்தை வீசியதாக ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து நீலா, பிரதீப்பைக் கைது செய்து, ராஜகோபால்நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர். 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/21/கணவரை-கொலை-செய்த-வழக்கில்-மனைவி-உள்பட-2-பேர்-கைது-2793413.html
2793412 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு விமானத்தில் கடத்திவரப்பட்ட தங்கம் பறிமுதல்: பெண் கைது DIN DIN Saturday, October 21, 2017 07:55 AM +0530 துபையிலிருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட  ரூ. 14 லட்சம் மதிப்புள்ள 466 கிராம் தங்கக் கட்டிகளை சுங்க வரித் துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பெண் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு கெம்பேகெளடா சர்வதேச விமான நிலையத்திற்கு வியாழக்கிழமை துபையிலிருந்து வந்த தனியார் விமான பயணிகளை சுங்க வரித் துறையினர் சோதனை செய்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நடந்து கொண்ட பெண் பயணி ஒருவரை சுங்க வரித் துறையின் சோதனை செய்தனர். அவர் விதிகளை மீறி, ரூ. 14 லட்சம் மதிப்புள்ள 466 கிராம் எடையுள்ள 4 தங்கக்கட்டிகளைக் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவரிடமிருந்த தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த சுங்க வரித் துறையினர் அப் பெண்ணை கைது செய்து  பெங்களூரு சர்வதேச விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் திண்டிவனத்தைச் சேர்ந்த பொன்செல்வி (48) எனத் தெரியவந்தது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/21/விமானத்தில்-கடத்திவரப்பட்ட-தங்கம்-பறிமுதல்-பெண்-கைது-2793412.html
2793411 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பேருந்து நிறுத்தத்துக்குள்  கார் புகுந்ததில் 5 பேர் பலி DIN DIN Saturday, October 21, 2017 07:55 AM +0530 பேருந்து நிறுத்தத்துக்குள் கார் புகுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.
பெங்களூரு நாகவராவைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் 5 பேர் காரில் ஸ்ரவணதுர்காவுக்கு வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தனராம். மாகடி வட்டம், தேசிய நெடுஞ்சாலை 75-இல் பைரசந்திரா கிராமம் லக்கனஹள்ளி அருகே  கட்டுப்பாட்டை இழந்த கார், பேருந்து நிறுத்தத்துக்குள் புகுந்தது.
இதில் பேருந்து நிறுத்தத்துக்குள் நின்று கொண்டிருந்த கெம்பராஜ் (40), அவரது குழந்தைகள் லாவண்யா (11), சஞ்சய் (2) ஆகியோரும், காரில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் சாஜன், நவநீதி உபாத்யாயா ஆகிய 5 பேரும்  நிகழ்விடத்திலே உயிரிழந்தனர்.
காயமடைந்த கெம்பராஜின் மனைவி மம்தா, அப்துல் ரகுமான், சுபம் உள்ளிட்ட மற்றொருவர் சிகிச்சைக்காக நெலமங்கலா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து நெலமங்கலா ஊரக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/21/பேருந்து-நிறுத்தத்துக்குள்--கார்-புகுந்ததில்-5-பேர்-பலி-2793411.html
2793410 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு வாகனங்கள் மோதல்: இளைஞர் கொலை DIN DIN Saturday, October 21, 2017 07:55 AM +0530 ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதியது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை செய்யப்பட்டார்.
பெங்களூரு கே.ஜி.ஹள்ளி பாரத்மாதா லேஅவுட்டைச் சேர்ந்தவர் சையத் யூசுப் (25). ஆட்டோ ஓட்டுநரான இவர், வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் தனது சகோதரர் சையத் ஹுசேனுடன் பள்ளி வாசலுக்கு சென்று தொழுகையில் ஈடுபட்டுவிட்டு, மோட்டார் சைக்கிளில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தாராம்.
வழியில் சாலையோரம் நிறுத்திருந்த நதீம் என்பவருக்கு சொந்தமான ஆட்டோ மீது, மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. இதுதொடர்பாக சையத் யூசுப், நதீமிற்கு தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறில் நதீமின் தலையில் சையத் யூசுப் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நதீம், தனது ஆட்டோவில் மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த யூசுப், சிகிச்சைப்பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். தலையில் காயமடைந்த நதீம், சையத் யூசுப்பின் சகோதரர் சையத் ஹுசேன் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கே.ஜி.ஹள்ளி போலீஸார் விசாரிக்கின்றனர்.  

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/21/வாகனங்கள்-மோதல்-இளைஞர்-கொலை-2793410.html
2793409 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு லிப்ட் அறுந்து விழுந்ததில் தொழிலாளி சாவு DIN DIN Saturday, October 21, 2017 07:54 AM +0530 பெங்களூரில் வணிக வளாகத்தில் லிப்ட் அறுந்து கீழே விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தார்.
பெங்களூரு பின்னிப்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இந்த வணி வளாகத்தில் கடை நிலை ஊழியராக பணியாற்றி வந்தவர் கே.பி. அக்ரஹாராவைச் சேர்ந்த சீனிவாஸ். இவர் வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் சக ஊழியர்கள் 3 பேருடன் லிப்ட்டில் பொருள்களை இறக்கி கொண்டிருந்தராம். அப்போது திடீரென லிப்ட் அறுந்து கீழே விழுந்துள்ளது. தகவல் அறிந்த போலீஸார், லிப்டை திறந்து உள்ளே இருந்த 4 பேரையும் மீட்டுள்ளனர். அதற்குள் மூச்சுத் திணறி சீனிவாஸ் உயிரிழந்தார். இதுகுறித்து கே.பி.அக்ரஹாரா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.   

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/21/லிப்ட்-அறுந்து-விழுந்ததில்-தொழிலாளி-சாவு-2793409.html
2793408 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு மெமு ரயில் சேவை நிறுத்தம்; மீண்டும் சுவர்ணா ரயில் இயக்கம் DIN DIN Saturday, October 21, 2017 07:54 AM +0530 மக்கள் போராட்டம் காரணமாக கோலார் தங்கவயலின் மாரிகுப்பத்தில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்பட்டுவந்த சுவர்ணா ரயில் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட மெமு ரயில்சேவை திரும்பப் பெறப்பட்டது. இதை மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
கோலார் தங்கவயலின் மாரிகுப்பத்தில் இருந்து பெங்களூருக்கு கடந்த 35 ஆண்டுகளாக 19 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வந்த சுவர்ணா ரயில்சேவை திடீரென அக்.19-ஆம் தேதி நிறுத்திய தென்மேற்கு ரயில்வே, அன்று முதல் 12 பெட்டிகளுடன் கூடிய மெமு ரயில்சேவையை அறிமுகம் செய்தது.
இது கோலார் தங்கவயல் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, கோலார் தங்கவயலின் மாரிகுப்பத்தில் இருந்து வியாழக்கிழமை புறப்பட்ட மெமு ரயிலை காங்கிரஸ்,மஜத, சிபிஎம் உள்ளிட்ட கட்சியின் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து, மாரிகுப்பம்-பெங்களூரு இடையே புதிதாக அறிமுகம் செய்த மெமு ரயில்சேவையை வெள்ளிக்கிழமைமுதல் திரும்பப் பெற்றுள்ள தென்மேற்கு ரயில்வே நிர்வாகம், வழக்கம்போல 19 பெட்டிகளுடன் கூடிய ரயில் எண்-56507/56508-மாரிகுப்பம்-பெங்களூரு சுவர்ணாரயிலை இயக்கியது. மாரிகுப்பத்தில் காலை 6.25 மணிக்கு புறப்பட்ட சுவர்ணாரயிலை காங்கிரஸ் தொண்டர்கள் வரவேற்றனர்.
மேலும் ரயிலில் பயணம் செய்த பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கி  மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். முன்னாள் மத்திய அமைச்சர் கே.எச்.முனியப்பா மற்றும் அவரது மகள் ரூபாசசிதரின் முயற்சியால்தான் சுவர்ணாரயில் மீண்டும் இயக்கப்பட்டதாக காங்கிரஸ் தொண்டர்கள் தெரிவித்தனர்.
இதேபோல, ஊரிகம் ரயில் நிலையத்தில் சுவர்ணா ரயிலை உற்சாகம் பொங்க வரவேற்ற முன்னாள் எம்எல்ஏ மு.பக்தவத்சலம் தலைமையிலான மஜதவினர், பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். முன்னாள் பிரதமர் தேவெ கெளடா, ரயில்வே அதிகாரிகளிடம் பேசியதால் தான் சுவர்ணா ரயில் மீண்டும் இயக்கப்பட்டதாக மஜதவினர் தெரிவித்தனர்.
மெமு ரயிலுக்குப் பதிலாக மீண்டும் சுவர்ணா ரயில் இயக்கப்பட்டதால் கோலார் தங்கவயல் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இது தங்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று மக்கள் தெரிவித்தனர். மேலும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த தென்மேற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/21/மெமு-ரயில்-சேவை-நிறுத்தம்-மீண்டும்-சுவர்ணா-ரயில்-இயக்கம்-2793408.html
2793407 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு "பாஜக மீதான தனிப்பட்ட விமர்சனங்களை ராகுல் விரும்பவில்லை' DIN DIN Saturday, October 21, 2017 07:54 AM +0530 பாஜக மீதான தனிப்பட்ட விமர்சனங்களை அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விரும்பவில்லை என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
கடந்த அக்.12-ஆம் தேதி தில்லியில் முதல்வர் சித்தராமையா, கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால், கட்சியின் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ஆஸ்கர்பெர்ணான்டஸ், பி.கே.ஹரிபிரசாத் உள்ளிட்ட தலைவர்கள் ராகுல் காந்தியை சந்தித்து பேசினோம்.
அப்போது, கர்நாடக அரசியல் நிலைமை, சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து விவாதித்தோம். மேலும், அடுத்த தேர்தலில் ஆட்சியை தக்கவைப்பதற்கான வியூகம் குறித்தும் விவாதித்தோம். அதேபோல, கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு கடந்த நான்கரை ஆண்டுகளில் செய்துள்ள சாதனைகள், செயல்படுத்தியுள்ள மக்கள் நலத்திட்டங்களை மக்களிடம் பரப்புரை செய்து, அவர்களின் ஆசியை பெற முயற்சிக்க வேண்டும் என்றும் ராகுல்காந்தி எங்களுக்கு அறிவுரை கூறினார்
பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் யார் மீதும் தனிப்பட்டமுறையில் விமர்சனங்களை வைப்பதை தவிர்த்து, அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் தேசிய மற்றும் உள்ளூர் பிரச்னைகளை மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக காங்கிரஸ் தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மத்திய பாஜக ஆட்சியின் தோல்விகளை மக்களிடம் கொண்டு செல்லவும் அவர் எங்களை கேட்டுக் கொண்டுள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் கட்சி வேட்பாளர்கள் குறித்து முரண்பட்ட கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் என்று முதல்வர் சித்தராமையா மற்றும் எனக்கும் ராகுல் காந்தி வழிகாட்டுதல் வழங்கியுள்ளார்.
முதல்வர் சித்தராமையாவுடன் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை என்று ராகுல் காந்தியிடம் தெரிவித்திருக்கிறேன். இதே கருத்தை முதல்வர் சித்தராமையாவும் தெரிவித்துள்ளார். எனக்கும், முதல்வர் சித்தராமையாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக எதிர்க்கட்சிகள் தவறான தகவலை வெளியிட்டு வருகின்றனர். இதில் உண்மையில்லை என்றார் அவர்.    

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/21/பாஜக-மீதான-தனிப்பட்ட-விமர்சனங்களை-ராகுல்-விரும்பவில்லை-2793407.html
2793406 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு அக்.29-இல் காங்கிரஸ் பேரவைத் தேர்தல் அறிக்கை குழுக் கூட்டம் DIN DIN Saturday, October 21, 2017 07:53 AM +0530 அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் சார்பில் வாக்குறுதிகளைத்  தயாரிக்க அமைக்கப்பட்டுள்ள குழு, வரும் 29-ஆம் தேதி பெங்களூரில் கூடுகிறது.

வரும் பேரவைத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் காங்கிரஸ் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. 2013-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு பேருதவியாக இருந்தது அக்கட்சி வெளியிட்டிருந்த தேர்தல் அறிக்கையாகும்.
எனவே, அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தலிலும் மக்களை கவரும் வகையில் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க முன்னாள் மத்திய அமைச்சர் எம்.வீரப்ப மொய்லி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் துணைத் தலைவராக பி.எல்.சங்கர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் பெங்களூரில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக்.29-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடக்கவிருக்கிறது. இக்கூட்டத்தில் தேர்தல் அறிக்கை தயாரிப்பில் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
எந்தெந்த விவகாரங்களை தேர்தல் அறிக்கையில் சேர்ப்பது என்பதை முடிவு செய்து, அது குறித்து விரிவாக ஆராய்ந்து கருத்தளிக்க துணைக் குழுக்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கை குழுவின் உறுப்பினர்கள், மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு காணப்படும் முக்கிய பிரச்னைகள் குறித்து ஆராயவிருக்கிறது.
அந்தந்த மாவட்ட அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து கருத்தறிவதோடு, 2013-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யவிருக்கிறது.
2013-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டிருந்த 165 வாக்குறுதிகளில் 160-ஐ நிறைவேற்றியுள்ளதாகவும் எஞ்சியுள்ள 5 வாக்குறுதிகளையும் செயல்படுத்தவிருப்பதாகவும் முதல்வர் சித்தராமையா, பல்வேறு சந்தர்ப்பங்களில் கூறி வந்துள்ளார். எனவே, செயல்பாட்டுக்கு உகந்த வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையில் சேர்க்க தேர்தல் அறிக்கைக்குழு திட்டமிட்டுள்ளது.
இதனிடையே, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரும், கர்நாடக மேலிடப் பொறுப்பாளருமான கே.சி.வேணுகோபால், 'வீட்டுக்கு வீடு காங்கிரஸ்' என்ற பரப்புரை திட்டத்தின்கீழ் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
இதன்மூலம் மக்களிடையே கட்சியை நெருக்கமாக கொண்டு செல்ல முயற்சி மேற்கொண்டுவருகிறார். இதுதவிர, முகநூல், சுட்டுரை உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தளங்களிலும் பரப்புரையை தீவிரமாக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இளம் தலைமுறையினரோடு கட்சியின் கொள்கைகளை கொண்டு செல்ல சமூக வலைத்தளங்கள் உதவும் என்று காங்கிரஸ் கருதுகிறது.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/21/அக்29-இல்-காங்கிரஸ்-பேரவைத்-தேர்தல்-அறிக்கை-குழுக்-கூட்டம்-2793406.html
2793405 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு "கைவினைப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி விலக்களிக்க வேண்டும்' DIN DIN Saturday, October 21, 2017 07:53 AM +0530 கைவினைப்பொருள்கள் மீதான பொருள் மற்றும் சேவை வரியை முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கு முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியிருக்கிறார்.
இதுகுறித்து முதல்வர் சித்தராமையா எழுதியுள்ள கடிதம்:
கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கூட்டமைப்புகள் மூலம் தயாரிக்கப்படும் கைவினைப் பொருள் மீதான பொருள் மற்றும் சேவை வரியை முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டுமென்று ஆசிஸ் நாந்தி, உஸ்ரம்மா, ஷியாம் பெனகல் தலைமையிலான கிராம சேவா சங்கத்தினர் மனு அளித்திருந்தனர்.
பல்வேறு வகையான கைவினைப் பொருள்கள் தயாரிப்பில் லட்சக்கணக்கான கைவினைக் கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்தவர்களாகவும், பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.
கைவினைப்பொருள்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை கைவிடக் கோரி கடந்த சில நாள்களாக பெங்களூரில் நாடகக் கலைஞர் பிரசன்னா உண்ணாவிரதம் மேற்கொண்டார்.  கைவினைப்பொருள்கள் என்பது எது? என்பதை வரையறுக்க வேண்டும். சுய உதவிக்குழுக்கள் மற்றும் தனிநபர்கள் ரூ.50 லட்சம் வரையில் தயாரிக்கும் கைவினைப்பொருள்களை சரக்கு மற்றும் சேவை வரிக்காக பதிவு செய்யவேண்டியதில் இருந்தும் விலக்கு அளிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
கைவினைக் கலைஞர்களின் நலன் மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கைவினைப்பொருள்கள் மீதான சரக்கு மற்றும் சேவைவரியை முழுமையாகவிலக்கிக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இது ஊரகப்பகுதியின் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதோடு, வேலைவாய்ப்பு மற்றும் நிலையான வருமானத்திற்கும் வழிவகுக்கும். எனவே, இந்தவிவகாரம் குறித்து அடுத்த சரக்குமற்றும் சேவைவரி பேரவையில் விவாதித்து, ஊரககைவினைக் கலைஞர்களின் நலனுக்காக கைவினைப்பொருள்கள் மீதான சரக்குமற்றும் சேவை வரியை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில்  குறிப்பிட்டுள்ளார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/21/கைவினைப்-பொருள்களுக்கு-ஜிஎஸ்டி-விலக்களிக்க-வேண்டும்-2793405.html
2791613 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு தீபாவளி திருநாள்: கர்நாடகத்தில் கோலாகலம்...! DIN DIN Tuesday, October 17, 2017 09:45 AM +0530 கர்நாடகத்தில் தீபாவளி புதன்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
நாடெங்கும் அனைவராலும் உற்சாகமாகக் கொண்டாடப்படும் பண்டிகையே தீபாவளியாகும்.  இந்துக்கள்,  சமணர்கள், சீக்கியர்கள் உள்ளிட்டோரும்,   உலகெங்கும் வாழும் இந்தியர்களும் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடுகின்றனர்.

இருந்தாலும், கொண்டாட்டத்துக்கான காரணங்களும் முறைகளும் மாநிலத்துக்கு  மாநிலம் மாறுகின்றன.  

தீப ஒளி,  நேர்மையின் வெற்றிச் சின்னமாகவும், ஆன்ம இருள் அகலுவதை குறிப்பதாகவும் நம்பப்படுகிறது.

புராணம்கூறுவது என்ன?
14 ஆண்டு வன வாசத்தை முடித்துகொண்டு ராமர் மீண்டும் அயோத்திக்கு திரும்புவதை கொண்டாடுவதற்காக தெருவெங்கும் தீபம் ஏற்றி கொண்டாடியதையே தீபாவளி என்றும் கொடிய அரக்கன் நரகாசூரனை வதம் செய்து கொன்று,  அதிதி தேவதையின் காதணியையும்,  சிறைபிடிக்கப்பட்டிருந்த திருமணமாகாத இளநங்கைகளையும் அவனிடமிருந்து மீட்டு திரும்பியதை வெற்றிதிருவிழாவாக கருதி தீபாவளியே என்றும் கூறி கொண்டாடப்படுகிறது.

கன்னடர் தீபாவளி: ஆனால், கர்நாடகத்தில் தீபாவளியை மக்கள் பலிபாட்யமியாக கொண்டாடி மகிழ்கிறார்கள்.

'நீரு தும்புவா ஹப்பா' எனப்படும் நீர் நிரப்பும் விழா, 'நரகாசதுர்தஷி' எனப்படும் நரகாசுரனை கிருஷ்ணர் கொன்று வென்ற விழா,  'லட்சுமி பூஜை'எனப்படும் செல்வம் வேண்டும் விழா,  'பலிபாட்யமி'எனப்படும் அகம்பாவம் கொண்ட அரசன் பலி சக்ரவர்த்தியை விஷ்ணு பகவான் வீழ்த்தியதை கொண்டாடும் திருநாள் என 4 விதமாக, 4 நாள்களுக்கு  கர்நாடகத்தில் தீபாவளி கொண்டாடப்படுகிறது.

போளி, அதிரசம், கோட்பேலே போன்ற பலகாரங்கள், வண்ணக்கோலங்கள், அகல்விளக்குகள், பட்டாசுகள் போன்றவையும் தீபாவளி கொண்டாட்டத்தில் உள்ளது.

அஸ்வினி மாதத்தின் கடைசி மூன்றாவது நாளில் நீர்நிரப்பும் விழாவுடன் கன்னடர்கள் தீபாவளியைத் தொடங்குவார்கள். சுண்ணாம்பு, பூவிதழ்கள், கோலமாவு கொண்டு குளியலறைகள் சுத்தம் செய்யப்படும். குளியலறையில் வைக்கப்பட்டுள்ள அண்டா, குண்டாக்களில் தண்ணீர் நிரப்படும்.  இதன் மீது விநாயகர் சிலைகள் வைத்து பூஜிக்கப்படும். அடுத்த 3 நாள்களுக்கான பண்டிகையின் தொடக்கவிழாவாக இது அமையும்.

இரண்டாவது நாள், நரகாசூரனை கிருஷ்ணபகவான் வதம் செய்து கொன்றது நரகாசதுர்தஷியாக கொண்டாடப்படுகிறது. சூரியோதயத்திற்கு முன்பு எழுந்து, வீடு மற்றும் முற்றத்தை சுத்தப்படுத்தி, வாசலில் வண்ணக்கோலமிடுவார்கள். தலையில் எண்ணெய் தேய்த்து குளிப்பார்கள். கங்கை நதியில் மூழ்கியதற்கு நிகரானதாக எண்ணெய் குளியல் கருதப்படுகிறது. எண்ணெய் குளியலுக்கு முன்பு வீட்டு உறுப்பினர்கள் அனைவரும் பாய் மீது வரிசையாக அமர்ந்திருப்பார்கள்.

குடும்பத்தலைவர், குடும்ப உறுப்பினர்களுக்கு எண்ணெய் சடங்குகளை செய்து, எண்ணெய் பூசிவிடுவார். உறுப்பினர்களின் நெற்றியில் திலகமிட்டு, தங்கவிரலால் எண்ணெய் எடுத்து தலை, கை,கால்களில் தடவிவிடுவார். எண்ணெய் குளியலுக்கு முன்பாக அனைவருக்கும் ஆரத்தி எடுக்கப்படும். மூத்தவர்களை வணங்கிவிட்டு எண்ணெய் குளியல் எடுத்துகொள்வார்கள். அதன்பிறகு, புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடிப்பார்கள்.  பாயாசம்,  எலுமிச்சைசாதம் (சித்ரன்னா), பாசிப்பயறுடன் நறுக்கிய பச்சைக்காய்கறிகள் (கோசம்பரி),  கூட்டு, பொரியல் (பல்யா), போளி (ஹோலிகே), வடை(ஆமவடே)ஆகியவை படைக்கப்பட்டு, பரிமாறப்படும்.

மூன்றாம் நாள், அமாவாசை தினம். செல்வச்செழிப்பை வேண்டி லட்சுமிபூஜை செய்து கொண்டாடப்படுகிறது. புதியதொழில் மற்றும் புதிய கணக்கு தொடங்குவதற்கு, புதியவாகனம் வாங்குவதற்கு, பொதுவில் புதியன செய்வதற்கு இந்தநாள் புனிதநாளாக கருதப்படுகிறது.

நான்காம் நாள், கார்த்திகை மாதத்தின் முதல் நாள். இந்நாள் பலிபாட்யமியாக கொண்டாடப்படுகிறது. ஆணவம் தலைக்கேறி, கர்வம் கொழுத்திருந்த பலி சக்ரவர்த்தியை வாமன அவதாரம்  எடுத்து விஷ்ணுபகவான் அதலபாதாளத்தில் தள்ளியதை கொண்டாடுவதே பலிபாட்யமி.  இதற்காக சாணியை பிடித்துவைத்து, அதன்மீது செண்டுமல்லி செருகி பூஜை அறையில் வைத்து வணங்குவார்கள்.

இதற்கு முன்பு,'பலிந்திரா பூஜை'செய்ய வேண்டும். தட்டில் அரிசியை கொட்டி,  அதில் ஸ்வஸ்திக் சின்னம் வரைந்து, அதன் மீது கலசம் வைக்க வேண்டும். கலசத்தின் முன்பு கிருஷ்ணபகவானின் விக்கிரகம் வைத்து பூஜிக்க வேண்டும். தீபாவளியின் இறுதிநாளான பலிபாட்யமி அன்று வானம் வண்ணவண்ண வெடிகளின் வசப்படும். வானத்தில் மின்னும் வானவேடிக்கைகள் சிறுவர் உள்ளிட்ட அனைவரையும் கவரும். இல்லத்தின் மூலைமுடுக்குகளில் வைக்கப்பட்டிருக்கும் அகல்விளக்குகளில் இருந்து ஒளிவெள்ளம் பாய்ந்து, பரவி படரும்.

கார்த்திகை மாதத்தின் பன்னிரண்டாம் நாள் தீபாவளி பண்டிகை முடிவுக்கு வரும். இந்த நன்னாளில், துளசிக்கு திருமணம் செய்து வைத்து கொண்டாடப்படும்.

துளசி விருட்சத்துக்கு அருகில் கிருஷ்ணரின் சிலை வைத்து வணங்கப்படும். பூஜையில் நெல்லிச்செடி வைத்திருப்பது அவசியம். ஐந்து நெல்லிகனிகளுடன் கிருஷ்ணருக்கு ஆரத்தி எடுக்கப்படும். இதை காண வருகைதரும் விருந்தினர், உறவினருக்கு சுண்டல்(உசிலி) அல்லது பாசிப்பயிறு உடன் நறுக்கிய காய்கறிகள்(கோசம்பரி)பரிமாறப்படும்.

அன்பும், பண்பும் பறைச்சாற்றும் மகிழ்ச்சிப்பூக்கும் இன்ப வானமன்றோ தீபாவளி என்ற மக்கள் குதூகலித்து தீபாவளி திருநாளை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2012/11/12/22/w600X390/DiWali_WISH.jpg http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/17/தீபாவளி-திருநாள்-கர்நாடகத்தில்-கோலாகலம்-2791613.html
2791618 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு ஹுக்கா பார்களை மூட நடவடிக்கை: அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் DIN DIN Tuesday, October 17, 2017 06:21 AM +0530 ஹுக்கா பார்களை( புகைப்பதற்கான மையங்கள்) மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெங்களூரு வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் தெரிவித்தார்.
புகையில்லாத நகர திட்டத் தொடக்க விழா பெங்களூரு மாநகராட்சி தலைமை அலுவலத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்டு,  ஜார்ஜ் பேசியது:-
பெங்களூரு போன்ற நகரங்களில் பல்வேறு நாடுகள்,  மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் குடியேறி வசித்து வருகின்றனர். அவர்களின் வாழ்க்கை முறைகள் வித்தியாசமாக உள்ளன.  ஒரு சிலர் புகைப்பதைப் பெருமையாகக் கருதுகின்றனர். புகைப்பதால் புற்றுநோய் உள்ளிட்டவை பரவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  எனவே புற்றுநோயால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க புகைப்பதை தடுப்பது அவசியம்.
பெங்களூரில் பல்வேறு இடங்களில் ஹுக்கா மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் இளைஞர்கள் புகைத்துவிட்டு தங்களது உடல் நலத்தை பாழ்படுத்திக் கொண்டு வருகின்றனர்.  எனவே அவற்றை மூடுமாறு தொண்டு நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளன. இதன்படி, சுகாதாரத் துறை அமைச்சர் ரமேஷ்குமாரிடம் தெரிவித்து,  அவரின் உதவியுடன் ஹூக்கா பார்களை மூட நடவடிக்கை எடுக்கப்படும்.
கர்நாடகத்தில் உள்ள ஆறரை கோடி பேரில் 2 கோடி பேர் புகைப்பதற்கு அடிமையாகி உள்ளனர். இதில் 30 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருவது வேதனை அளிக்கிறது என்றார். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் மஞ்சுநாத் பிரசாத்,  புற்றுநோய் மருத்துவர்கள் விஷால்ராவ், திரிவேணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/17/ஹுக்கா-பார்களை-மூட-நடவடிக்கை-அமைச்சர்-கேஜேஜார்ஜ்-2791618.html
2791617 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு அரசியல் எதிரிகளால் பலம் பெருகும்: சித்தராமையா DIN DIN Tuesday, October 17, 2017 06:21 AM +0530 அரசியல் எதிரிகளால் அரசியல் பலம் பெருகும் என்று முதல்வர் சித்தராமையா கூறினார்.
மைசூரு  நகர்ப்புற வளர்ச்சி ஆணையத்தின் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில்,  பயனாளிகளுக்கு வீட்டுமனைகளை வழங்கி அவர் பேசியது:-
கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் என்னை (சித்தராமையா) தோற்கடிக்க அரசியல் எதிரிகள் ஒன்றாகியுள்ளதும்  ஒருவகையில் நல்லதுதான்.  அவர்களால் அரசியல் பலம்தான் பெருகும். இதுகுறித்து கவலைப்படவில்லை. அவர்களின் கனவு பலிக்காது.   தனிப்பட்டமுறையில் யார் மீதும் கோபமில்லை.  ஆனால், அரசியல் ரீதியாக எதிரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அரசியலில் இவை இயல்பானதாகும்.   
சாமுண்டீஸ்வரி சட்டப் பேரவைத் தொகுதி அரசியல் மறுவாழ்வு அளித்த தொகுதியாகும்.  இந்தத் தொகுதி மக்கள் 5 முறை வெற்றிபெற வைத்திருக்கிறார்கள்.  
அடுத்த ஆண்டு நடக்கும் சட்டப் பேரவை தேர்தல், அரசியல் வாழ்க்கையின்கடைசித் தேர்தலாகும்.  அதனால் அரசியல் வாழ்க்கையை அளித்த தொகுதியில் இருந்தே போட்டியிடுவேன்.  சாமுண்டீஸ்வரி தொகுதி மக்களின் ஆசி இருப்பதால், அவர்கள் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன்.
வீட்டுமனைகள் வழங்குவதில் அரசியல் தலையீடு இல்லை: மைசூரில் உள்ள நல்ல லேஅவுட்களில் ஒன்றான ஆர்.டி.நகரில் இதுவரை 1683 வீட்டுமனைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.  
ஆர்.டி. நகரில் நிகழாண்டின் இறுதிக்குள் 5 ஆயிரம் வீட்டுமனைகள் விநியோகிக்கப்படும்.
வீட்டுமனைகளை ஒதுக்குவதில் ஏழைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.  குலுக்கல் முறையில் வீட்டுமனைகள் ஒதுக்கப்படும்.  இதில் அரசியல் தலையீடுஎதுவுமில்லை.
அண்மைக்காலமாக பெய்த பலத்த மழையில் பெங்களூரு தத்தளித்து கொண்டுள்ளது.  ஆனால் மைசூரில் எந்தவொரு தொந்தரவும் ஏற்படவில்லை.  எனவே, மைசூரில் மக்கள் நிம்மதியுடன் வாழலாம்.
மைசூரில் விரைவில் இந்திரா உணவகங்கள்: மைசூரில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் 12 இந்திரா உணவகங்கள் தொடங்கப்படும்.   மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் இந்திரா உணவகங்கள் தொடங்கப்படும்.  கர்நாடகத்தில் 500 இந்திரா உணவகங்களை திறந்து மலிவான விலையில் உணவு வழங்குவோம்.
பட்டினியில்லா கர்நாடகத்தை உருவாக்குவதே காங்கிரஸின் நோக்கமாகும்.  எனவே,  ஏழைகள் உள்பட அனைத்துத் தரப்பு மக்களுக்கும் மலிவான விலையில் தரமான உணவு வழங்கி வருகிறோம் என்றார் அவர்.
விழாவில்,  அமைச்சர்கள் எச்.சி.மகாதேவப்பா,  தன்வீர்சேட்,  ரோஷன் பெய்க்,  ஆணையத் தலைவர் துருவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/17/அரசியல்-எதிரிகளால்-பலம்-பெருகும்-சித்தராமையா-2791617.html
2791616 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பட்டாசு வெடிக்கும்போது கவனிக்க வேண்டியவை என்ன? தீயணைப்புத் துறை விளக்கம் DIN DIN Tuesday, October 17, 2017 06:20 AM +0530 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு,  பட்டாசுகள் வெடிக்கும்போது கவனத்துடன் இருக்க வேண்டும் என்று கர்நாடக மாநில தீயணைப்பு,  அவசரச் சேவைத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து அந்தத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தீபாவளிக்கு புத்தாடை உடுத்துவது,  பலகாரங்கள் செய்து உறவினர்களுக்கு விருந்தளித்து உண்பது போன்ற கொண்டாட்டங்களுக்கு இடையே பட்டாசு வெடித்து மகிழ்வது  குழந்தைகளுக்கு மட்டுமன்றி,  பெரியவர்களுக்கும் குதூகலத்தை
அளிப்பதாகும்.
தீபாவளி என்ற சம்பிரதாயங்களுக்காகவாவது பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற விருப்பம் காணப்படுகிறது.  பட்டாசு வெடிப்பது அவசியமா? அதனால் விளையும் நன்மை என்ன?  சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளை அறிந்திருக்கிறோமா? என்பதைவிட பட்டாசுகளைப் பாதுகாப்பாக வெடிப்பதால் அன்றைக்கு இல்லத்தில் பூத்துக்குலுங்கும் மகிழ்ச்சிக்கு எல்லையிருக்காது.
எனவே,  பட்டாசுகளை வெடிக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.  குறிப்பாக, குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்கும்போது,  பெரியவர்கள் உடனிருக்க வேண்டும்.  தனியாக பட்டாசு வெடிக்க குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது.
வெட்டவெளியில் பட்டாசு கொளுத்துவதுதான் பாதுகாப்பானதாகும்.
எந்தக் காரணத்தைமுன்னிட்டு வீட்டுக்குள் பட்டாசுகளை பற்ற வைக்கக் கூடாது.  கூடுமானவரை உடம்பில் படும்படியாக இறுக்கமான ஆடைகளை அணிய வேண்டும். மத்தாப்புகளைக் கொளுத்தும்போது உடம்பில் இருந்து தூரத்தில் வைத்து
கொள்ளவேண்டும்.
பட்டாசுகளை பக்கவாட்டில் இருந்து கொளுத்த வேண்டும்.  பாத்திரங்கள் அல்லது குறுகிய இடங்களில் வைத்து பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.  பட்டாசுகளை சட்டை அல்லது கால்சட்டை பையில் வைக்கக் கூடாது.  வெப்பமான இடங்களில் பட்டாசுகளை சேமிக்கக் கூடாது.
பற்ற வைத்த பட்டாசுகள் வெடிக்காவிட்டால் அதன் அருகில் சென்று சோதிக்கக் கூடாது.  பூந்தொட்டிகளை கையில் வைத்தப்படி பற்ற வைக்கக் கூடாது.  ராக்கெட்களை பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது.
வீண்பெருமைக்காக பட்டாசுகளை கவனக்குறைவாக வெடிக்க வைக்கக் கூடாது.  பட்டாசு வெடிக்கும்போது அருகில் தண்ணீரை வைத்துகொண்டு, எதேச்சையாக காயம் ஏற்பட்டால், அதன்மீது தண்ணீரை ஊற்ற வேண்டும்.
சிசுக்கள்,  முதியோர்,  நோயாளிகளை கவனத்தில்கொண்டு மருத்துவமனை, முதியோர் இல்லங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் அதிகம் ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்காமல் தவிர்க்கவேண்டும்.
பட்டாசுகளைப் பாதுகாப்பாக வெடிப்போம். பண்டிகையை இனிமையாக்குவோம் என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/17/பட்டாசு-வெடிக்கும்போது-கவனிக்க-வேண்டியவை-என்ன-தீயணைப்புத்-துறை-விளக்கம்-2791616.html
2791615 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு தன்வந்திரி சாலையில் இன்று தனியார் வாகனங்களை நிறுத்தத் தடை DIN DIN Tuesday, October 17, 2017 06:20 AM +0530 தீபாவளியையொட்டி,   தன்வந்திரி சாலையில் தனியார் வாகனங்களை நிறுத்த செவ்வாய்க்கிழமை (அக். 17)  தடை விதிக்கபட்டுள்ளது.
இதுகுறித்து  பெங்களூரு மாநகர போக்குவரத்து போலீஸார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தீபாவளியையொட்டி,  அக்டோபர் 17-ஆம் தேதி வெளியூர் பயணிகள் அதிக அளவில் மெஜஸ்டிக் பேருந்து நிலையத்துக்கு வருகை புரிவார்கள்.  இதனால்,  ரயில் நிலையச் சாலை,  தன்வந்திரி சாலை,  பிளாட்பாரச் சாலை,  கோடேஸ் சதுக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனை கருத்தில் கொண்டு அக்.  17-ஆம் தேதி தன்வந்திரி,  பிளாட்பாரம் சாலைகளில் தனியார் பேருந்துகளை நிறுத்தத் தடை விதிக்கபட்டுள்ளது.
மைசூரு,  குடகு மாவட்டங்களுக்கும்,  கேரளா மாநிலத்துக்குச் செல்லும் பேருந்துகள், தமிழக அரசின் சாதாரணப் பேருந்துகள் மைசூரு சாலையில் உள்ள சேட்டிலைட் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.  தமிழகத்துக்குச் செல்லும் சொகுசு பேருந்துகள் சாந்தி நகர் பேருந்து நிலையத்திலிருந்து
இயக்கப்படும்.
தாவணகெரே மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் சிக்லால்பாக் அருகிலிருந்து இயக்கப்படும்.  சிவமொக்கா மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் யஸ்வந்தபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க பயணிகள் கே.ஜி.சாலை, சேஷாத்ரிசாலை, சுபேதார் சத்திரம்சாலை, பிளாட்பாரம்சாலை, கிருஷ்ணாமில்சாலை உள்ளிட்ட சாலைகளில் செல்லாமல் மாற்றுச் சாலையில் செல்ல வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/17/தன்வந்திரி-சாலையில்-இன்று-தனியார்-வாகனங்களை-நிறுத்தத்-தடை-2791615.html
2791614 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு "தமிழ் கற்பதில் இருந்த தடையை தமிழ்ச் சங்கம் போக்கியுள்ளது' DIN DIN Tuesday, October 17, 2017 06:20 AM +0530 தமிழ் மொழியை கற்பதில் காணப்பட்ட தடையை பெங்களூரு தமிழ்ச் சங்கம் போக்கியுள்ளது என்று குழந்தை இயேசு திருத்தலத்தின் அருள்தந்தை கில்பர்ட் ராஜ் தெரிவித்தார்.
பெங்களூரு வண்ணாரப்பேட்டையில் உள்ள குழந்தை இயேசு திருத்தலத்தில், சங்கத்தின் சார்பில் நடைபெற்று வந்த இனிமைத் தமிழ் வகுப்பின் நிறைவு விழாவும்,  புதிய வகுப்பு தொடக்க விழாவும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.  இதில், கில்பட்ராஜ் பேசியது:-
உலகின் மூத்த மொழியாக தமிழை பெருமை கொள்கிறோம்.  பல மொழிகளைக் கற்றாலும் தாய் மொழியை கற்கும்போது,  மகிழ்ச்சி அடைய முடிகிறது. தாய் மொழியில் இறைவனை வணங்கும்போது,  உண்மையான அன்பும்  பாசமும்  பக்தியும் கிடைக்கின்றன.  கர்நாடக வாழ் தமிழ் குழந்தைகளுக்கு தமிழைக் கற்க முடியாமல் இருந்த தடையை பெங்களூரு தமிழ்ச்சங்கம் போக்கி,  தமிழ் கற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திகொள வேண்டும்.  மேலும்,  தமிழ் வகுப்பு தொடர குழந்தை இயேசு திருத்தலம் ஏற்பாடு செய்யும் என்றார்.
இதையடுத்து,  அருட்தந்தை ஆல்பெண்லியோ பேசியது:-
கர்நாடகத்தில் வாழும் தமிழ் குழந்தைகளுக்கு வீட்டில் தமிழில் பேச தெரிந்திருக்கிறது. ஆனால்,   எழுதவும்,  படிக்கவும் தெரியாமல் இருந்தது.  இந்தக் குறை தற்போது நீக்கப்பட்டுள்ளது.  தமிழ் மொழி புதையலைப் போன்றது.  தமிழை கற்க, கற்க அறிவு விரிவடைந்துகொண்டே இருக்கும்.
இன்றைய கணினி உலகத்தில் காணப்படும் எல்லா ஆங்கிலச் சொற்களுக்கும் நிகரான தமிழ்ச்சொற்கள் தமிழிலே இருக்கின்றன.  புதிய ஆங்கிலச் சொல் வரும்போதும்,  அதற்கு ஏற்றத் தமிழ்ச் சொல் தோன்றிகொண்டே இருக்கிறது.  இதுதான் தமிழின் சிறப்பு. எனவே, தமிழ்க் குழந்தைகள் தவறாமல் தமிழ் பயில வேண்டும் என்றார்.
விழாவில் கர்நாடகத் தமிழ் கிறித்துவ முன்னணி இயக்கத் தலைவர் சகாயராஜ்,  செயலர் ஆரோக்கியதாஸ்,  பொருளாளர் பாஸ்கரன்,  அவைத்தலைவர் தாமஸ்,  பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் இனிமைத் தமிழ் அறக்கட்டளையின் துணைத் தலைவர் ராமசுப்பு,  வகுப்பின் பொறுப்பாளர் கார்த்தியாயினி,  சங்கத் துணைச்செயலாளர் அமுதபாண்டியன் உள்ளிட்டோர்
கலந்துகொண்டனர்.
முன்னதாக,  பயிற்சியை நிறைவு செய்த 50 பேருக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/17/தமிழ்-கற்பதில்-இருந்த-தடையை-தமிழ்ச்-சங்கம்-போக்கியுள்ளது-2791614.html
2791612 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு கர்நாடகத்தில் விரைவில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: அதிமுக முடிவு DIN DIN Tuesday, October 17, 2017 06:19 AM +0530 எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை விரைவில் கொண்டாட கர்நாடக மாநில அதிமுக (புரட்சித் தலைவி அம்மா- அம்மா அணி) எம்ஜிஆர் இளைஞர் அணி தீர்மானித்துள்ளது.
பெங்களூரு திலக் நகரில் உள்ள  தலைமை அலுவலகத்தில், அணியின் மாநிலச் செயலர் ஆர்.அன்புவேல் தலைமையில் கட்சியின் ஆலோசனைக் கூட்டம்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உருவாக்கி தந்துள்ள அதிமுக ஆட்சியை அவரது  வழியில் நடத்திவரும் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பாராட்டு தெரிவிப்பது,
கட்சியின் நிறுவனர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை கர்நாடகத்தில் கொண்டாடுவது,  விழாவுக்கு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை அழைப்பது,  ஜெயலலிதா அறிவித்த நிர்வாகிகளை நீக்கியதாக அறிவிப்பு வெளியிட்டு வரும்  டிடிவி தினகரன்,  வா.புகழேந்தி ஆகியோருக்கு கண்டனம் தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கட்சியின் மாநில அவைத்தலைவர் கே.முனுசாமி,  ஜெயலலிதா பேரவை செயலர் பி.சுப்பிரமணி,  முன்னாள் செயலர் கே.ராஜசேகர்,  மாணவர் அணிச் செயலர் எம்.நெடுஞ்செழியன்,  இலக்கிய  அணிச் செயலர் ஓம்சக்தி ஜெயபால், பெங்களூரு மாவட்ட  அவைத்தலைவர் என்.கே.காசிராஜ்,  தலைமைபொதுக்குழு உறுப்பினர்கள் எம்.மஞ்சுளா,  எம்ஜிஆர் சம்பா,  டி.சந்திரசேகர்,  இளைஞர் அணி துணைச் செயலாளர் எம்.குமார்,  ஜெய நகர் தொகுதிச் செயலர் தேவதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/17/கர்நாடகத்தில்-விரைவில்-எம்ஜிஆர்-நூற்றாண்டு-விழா-அதிமுக-முடிவு-2791612.html
2791611 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு மக்கள்தொகைக்கு ஏற்ப உணவுப் பொருள்கள் உற்பத்தி: ஓய்வு பெற்ற நீதிபதி வலியுறுத்தல் DIN DIN Tuesday, October 17, 2017 06:18 AM +0530 மக்கள் தொகைக்கு ஏற்ப உணவுப் பொருள்கள் உற்பத்தியாக வேண்டும் என்று ஓய்வு பெற்ற நீதிபதி எம்.வெங்கடாசலய்யா கூறினார்.
உலக உணவு பாதுகாப்பு தின விழா பெங்களூரு ஹெப்பாளில் திங்கள்கிழமை நடைபெற்றது.  இதில் பங்கேற்று அவர் பேசியது:-
சர்வதேச அளவில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது.  இதற்கு ஏற்ப உணவுப் பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டும். அறிவியல் விஞ்ஞானிகள் உணவு உற்பத்திக்கான நவீன தொழில்ட்பங்களைக் கண்டறிந்து வருகின்றனர். அதனை பயன்படுத்தி, விவசாயிகள் பயனடைய வேண்டும்.
விவசாயிகள் தட்பவெட்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப விவசாயம் செய்ய வேண்டும்.  பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்து காய்கனிகளின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்றார் அவர்.  நிகழ்ச்சியில் தேஜஸ்வினி அனந்த்குமார்,  தேசிய ஆராய்ச்சி மையத்தின் ஓய்வு பெற்ற மேலாண் இயக்குநர் ஐயப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/17/மக்கள்தொகைக்கு-ஏற்ப-உணவுப்-பொருள்கள்-உற்பத்தி-ஓய்வு-பெற்ற-நீதிபதி-வலியுறுத்தல்-2791611.html
2791610 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு "முதுகெலும்பு பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை உயர்வு' DIN DIN Tuesday, October 17, 2017 06:18 AM +0530 பெங்களூரில் முதுகெலும்பு பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது என்று முதுகெலும்பு வல்லுநர் கரிமா அனாதனி கூறினார்.
பெங்களூரில் திங்கள்கிழமை நடைபெற்ற முதுகெலும்பு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியது:-
பெங்களூரு,  மும்பை,  தில்லி, புணே உள்ளிட்ட பெரும் நகரங்களில் முதுகெலும்பு பிரச்னையால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இந்த 4 நகரங்களிலும் 16 வயது முதல் 34 வயதுக்குள்பட்டோர் முதுகெலும்பு பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 சதவீதமாக உள்ளது.  இதற்கு வாகனங்களை ஓட்டுவதும், நீண்ட நேரம் இருக்கையில் அமர்ந்து பணியாற்றுவதும் முக்கிய காரணங்களாகும்.
முதுகெலும்பு பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் ஆரம்பக் கட்டத்திலேயே அதற்கான சிகிச்சை பெறுவது அவசியம். அதனை நீட்டிக்க விட்டால் அது பல பிரச்னைகளுக்கும் முக்கிய காரணமாகிவிடும் என்றார் அவர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/17/முதுகெலும்பு-பிரச்னையால்-பாதிக்கப்பட்டுள்ளவர்களின்-எண்ணிக்கை-உயர்வு-2791610.html
2791609 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு ஏரியில் பரிசல் கவிழ்ந்து 2 பேர் சாவு DIN DIN Tuesday, October 17, 2017 06:18 AM +0530 ஏரியில் பரிசல் கவிழ்ந்ததில்,  மீன் பிடிக்கச் சென்ற 2 பேர் நீரில் மூழ்கி  இறந்தனர்.
ராம் நகர் மாவட்டத்துக்குள்பட்ட  அவரக்கெரே பகுதியைச் சேர்ந்தவர்கள் உமேஷ் (28), ரவிக்குமார் (19).  இருவரும் சனிக்கிழமை மாலை பிடதி அருகே உள்ள நெல்லகுட்டே ஏரியில் பரிசலில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.
அப்போது பரிசல் கவிழ்ந்ததில், இருவரும், நீரில் மூழ்கினர்.  தகவலறிந்த போலீஸார்,  தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.  இதையடுத்து,  இருவரும் இறந்த நிலையில் சடலங்களாக ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டனர்.
இதுகுறித்து பிடதி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/17/ஏரியில்-பரிசல்-கவிழ்ந்து-2-பேர்-சாவு-2791609.html
2791608 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு சிதிலமடைந்துள்ள கட்டடங்கள் குறித்து அறிக்கை: மாநகராட்சி அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவு DIN DIN Tuesday, October 17, 2017 06:17 AM +0530 பெங்களூரு மாநகராட்சிக்குள்பட்ட 198 வார்டுகளிலும் சிதிலமடைந்துள்ள கட்டடங்களை அடையாளம் கண்டு, அறிக்கை அளிக்குமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது என்று மேயர் ஆர்.சம்பத்ராஜ் தெரிவித்தார்.
பெங்களூரு, ஈஜிபுராவில்எரிவாயு உருளை வெடித்ததில் இடிந்துவிழுந்த 2 மாடி கட்டடத்தை திங்கள்கிழமை அவர் பார்வையிட்ட பின்னர்,  செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:
சிதிலமடைந்துள்ள கட்டடங்களை அடையாளம் கண்டு,  அதுகுறித்து அறிக்கை அளிக்கும்படிஅதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். குறிப்பாக,  ஏழைகள் வாழக் கூடிய பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளேன். சிதிலமடைந்துள்ள கட்டடங்களை இடித்து தரைமட்டமாக்கி,  24.75 சதவீதத் திட்டத்தின்கீழ் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்.  இதற்கு முன்பும் சிதிலமடைந்த வீடுகள் கண்டறியப்பட்டு,  புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோல, மீண்டும் ஒருமுறை சிதிலமடைந்த கட்டடங்கள் கண்டறியப்படும்.
ஈஜிபுராவில் அடிக்கடி வீடுகள் இடிந்துவிழும் சம்பவங்கள் நடக்கின்றன.  இதுகுறித்து அறிக்கை அளிக்கும்படி அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளேன் என்றார் அவர்.
இதையடுத்து, சம்பவ இடத்தைப் பார்வையிட்ட பின்னர் அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ், செய்தியாளர்களிடம் கூறியது:-
ஈஜிபுராவில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சமும்,  காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் அளிக்கப்படும்.
இந்தச் சம்பவத்தில் உயிரோடு மீட்கப்பட்டுள்ள குழந்தை சஞ்சனாவின் கல்விச் செலவு முழுவதையும் அரசே ஏற்கும்.  கட்டடம் சமையல் எரிவாயு உருளை வெடித்து நடந்ததா?  அல்லது கட்டடம் இடிந்து நடந்ததா? என்பதை ஆராய்ந்துஅறிக்கைஅளிக்குமாறும்  அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/17/சிதிலமடைந்துள்ள-கட்டடங்கள்-குறித்து-அறிக்கை-மாநகராட்சி-அதிகாரிகளுக்கு-மேயர்-உத்தரவு-2791608.html
2791607 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு இளைஞர் வெட்டிக் கொலை DIN DIN Tuesday, October 17, 2017 06:17 AM +0530 இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை வழிமறித்து, வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
பெலகாவி மாவட்டத்துக்குள்பட்ட ராயபாக வட்டம் தெய்வாபுராஹட்டியைச் சேர்ந்தவர் மல்லப்பா கெய்க்வாட் (32). இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார்.  அவரை வழிமறித்த மர்ம நபர்கள்,  அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்தனர். பின்னர், அவர்கள் தப்பிச் சென்றனர்.
தகவலின்பேரில் போலீஸார் அங்கு சென்று, மல்லப்பாவின் சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து ராயபாகா போலீஸார் நடத்திய விசாரணையில்,  நிலத்தகராறில் முன் விரோதம் காரணமாக மல்லப்பா கெய்க்வாட் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/17/இளைஞர்-வெட்டிக்-கொலை-2791607.html
2791606 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு "நில விடுவிப்பு குற்றச்சாட்டில் பாஜகவால் ஆதாரங்களை வெளியிட முடியவில்லை' DIN DIN Tuesday, October 17, 2017 06:16 AM +0530 தன் மீது சுமத்தப்பட்ட நில விடுவிப்பு குற்றச்சாட்டு தொடர்பாக பாஜகவால் ஆதாரங்களை வெளியிட முடியவில்லை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
மைசூரில் அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:-
கையகப்படுத்திய நிலங்களை கர்நாடக அரசு  சட்ட விரோதமாக விடுவித்துள்ளதாகவும்,  அதுதொடர்பான ஆதாரங்களை வெளியிடத்  தவறினால் விதானசெளதா முன்பு தற்கொலை செய்துகொள்வதாகவும் பாஜக எம்எல்சி பி.ஜே.புட்டசாமி அண்மையில் சவால்விட்டிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக புட்டசாமியால் ஆதாரங்களை வெளியிடமுடியவில்லை. அப்படியானால் அவர் சொன்னபடியே நடந்துகொள்வாரா?
மனித நேயத்தின் அடிப்படையில் தற்கொலை செய்துகொள்ளுமாறு புட்டசாமியை கேட்கமாட்டேன்.  குற்றச்சாட்டை நிரூபிக்க பாஜகவால் முடியவில்லை.  யார் மீது குற்றம்சுமத்தினாலும் அதன் உண்மைத்தன்மையை அறிந்துகொண்டு புட்டசாமி பேச வேண்டும். ஆதாரங்கள் இல்லாமல் யார் மீதும் குற்றம் சுமத்துவது சரியல்ல.
கர்நாடகத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழையால் பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக நிவாரண உதவிகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் முறைகேடு,  ஊழலில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவதேகருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
பெங்களூரில் சட்ட விரோதமாக மாட்டிறைச்சியை விற்றுவந்தது குறித்து காவல்துறைக்கு புகார் அளித்த பெண்மணியை ஒருசிலர் கும்பலாக சேர்ந்து தாக்கியுள்ளனர்.  இந்த விவகாரத்தில் தவறிழைத்தவர்களை கைது செய்து தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் சித்தராமையா.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/17/நில-விடுவிப்பு-குற்றச்சாட்டில்-பாஜகவால்-ஆதாரங்களை-வெளியிட-முடியவில்லை-2791606.html
2791605 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு "பீங்கான் பொருள் உற்பத்தியில் சீனாவை முந்துவோம்' DIN DIN Tuesday, October 17, 2017 06:16 AM +0530 பீங்கான் பொருள் உற்பத்தியில் சீனாவை முந்துவோம் என வைபரன்ட் செராமிக்ஸ் கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர் நிலேஷ்ஜெட் பிரியா தெரிவித்தார்.
குஜராத் மாநிலத்துக்குள்பட்ட காந்தி நகரில் டவுன் ஹால் அருகேயுள்ள மாநாட்டு அரங்கத்தில் வைபரன்ட் செராமிக்ஸ் கண்காட்சி  நவம்பர் 16-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை 4 நாள்கள் நடைபெறுகிறது. இதன் அறிமுக விழா  பெங்களூரில்  திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று நிலேஷ்ஜெட் பிரியா
பேசியது:-
பீங்கான் பொருள் உற்பத்தியில் சீனா முதலிடத்தில் உள்ளது.  அண்மைக்காலமாக அதற்கு நிகராக இந்தியாவும்  பீங்கான் பொருள் உற்பத்தியில் முன்னேறி வருகிறது.  பீங்கான் பொருள் உற்பத்தியில் சீனாவை விரைவில் முந்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
மக்கள் அன்றாடம் பயன்படுத்து பீங்கான் பொருள்கள் முதல் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்டு வரும் பீங்கான் பொருள்கள் கண்காட்சியில் இடம்பெற உள்ளன .  கண்காட்சியில் பீங்கான் உற்பத்தியாளர்கள் சந்திந்து வரும் பிரச்னைகள், சவால்கள் குறித்து விவாதிக்கப்படும். உலக பீங்கான் பொருள் உற்பத்தியில் இந்தியா 2-ஆவது இடத்தில் 12.9 சதவீதத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.  2020-ஆம் ஆண்டுக்குள் பீங்கான் பொருள்களின் விற்றுமுதல் ரூ. 50 ஆயிரம் கோடியாக உயரும் என்றார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/17/பீங்கான்-பொருள்-உற்பத்தியில்-சீனாவை-முந்துவோம்-2791605.html
2791604 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு "கர்நாடகத்தில் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி அமைக்கும் காலம் மலரும்' DIN DIN Tuesday, October 17, 2017 06:16 AM +0530 கர்நாடகத்தில் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி அமைக்கும் காலம் மலரும் என்று அந்தக் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும், கர்நாடக மாநிலப் பொறுப்பாளருமான  தாரிக் ரகுமான் கூறினார்.
பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பேசியது: -
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடகத்தில் ஐக்கிய ஜனதா தளம் பலம் வாய்ந்த கட்சியாக விளங்கியது.  அதுபோன்றதொரு காலத்தை மீண்டும் உருவாக்க வேண்டும்.  கர்நாடகத்தில் ஐக்கிய ஜனதா தளத்தின் பழம்பெருமைகளை மீட்க வேண்டும்.
கட்சியின் தலைவரான நிதீஷ்குமார், பிகாரில் முதல்வராக இருந்து நல்லாட்சியை நடத்திவருகிறார்.  கடும் எதிர்ப்புக்கு இடையே மதுபானத்தை நிதீஷ்குமார் தடைசெய்து, அதை வெற்றிகரமாக அமல்படுத்திவருகிறார்.
பிகார் மாநிலத்தைத் தொடர்ந்து இதரமாநிலங்களிலும் மதுபானத்துக்குத் தடைவிதிக்க வேண்டும்.  நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்தை கர்நாடகத்தில் பலம்வாய்ந்த அரசியல் கட்சியாக மாற்ற இளைஞர்கள் அதிக அளவில் கட்சியில் சேரவேண்டும்.
ஐக்கிய ஜனதா தளத்தின் நல்லாட்சி கர்நாடகத்தில் காலம் வெகுவிரைவில் மலரும். அதற்காக கட்சி நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும். அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் கணிசமான இடங்களில் ஐக்கியஜனதாதளம் வெற்றிபெறும்.
கர்நாடகத்தில் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளும் மக்களை தொடர்ந்து ஏமாற்றிவருகின்றன. இந்தக் கட்சிகளுக்கு மாற்றுக்கட்சியாக ஐக்கிய ஜனதா தளம் உயர வேண்டும் என்றார்.
விழாவில் கட்சியின் மாநில இளைஞர் அணித் தலைவர் கே.வி.சிவராம்,  டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் சட்டக் கல்லூரி முதல்வர் சி.இராமமூர்த்தி,  கன்னட சங்கத் தலைவர் எம்.சுப்பிரமணி,  சிறுபான்மைப் பிரிவின் மாநிலத் தலைவர் ஹைதர் அலி, பிரமானந்த சுவாமிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக,  பெங்களூரு தமிழ்ச்சங்கத் துணைச்செயலர் எஸ்.சுந்தரவேலு தலைமையில் பலர் ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/17/கர்நாடகத்தில்-ஐக்கிய-ஜனதா-தளம்-ஆட்சி-அமைக்கும்-காலம்-மலரும்-2791604.html
2791011 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு தீபாவளி: 22 ரயில்களில் தாற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைப்பு DIN DIN Monday, October 16, 2017 06:30 AM +0530 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கர்நாடகத்துக்குள் இயக்கப்படும் 22 ரயில்களில் தாற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.
இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்.17 முதல் 22-ஆம் தேதி வரையில் கர்நாடகத்துக்குள் இயக்கப்படும் 22 ரயில்களில் தாற்காலிகமாக கூடுதலாக இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.
ரயில்கள், இணைக்கப்படும் பெட்டிகள் வருமாறு: ரயில் எண்:17317-மைசூரு-பாகல்கோட் ரயிலில் 3, ரயில் எண்:16535-மைசூரு-சோலாப்பூர் ரயிலில் 1, ரயில் எண்:16592-மைசூரு-ஹுப்பள்ளி ரயிலில் 1, ரயில் எண்:17301-மைசூரு-தார்வாட் ரயிலில் 3 பெட்டிகள் அக்.17-ஆம் தேதி இணைக்கப்படுகின்றன.
ரயில் எண்:17307-மைசூரு-பாகல்கோட் ரயிலில் 2, ரயில் எண்:17308-பாகல்கோட்-மைசூரு ரயிலில் 3, ரயில் எண்:16592-மைசூரு-ஹுப்பள்ளி ரயிலில் 1, ரயில் எண்:17301-மைசூரு-தார்வாட் ரயிலில் 2, ரயில் எண்:16592-மைசூரு-ஹுப்பள்ளி ரயிலில் 1 பெட்டி அக்.18-ஆம் தேதி இணைக்கப்படுகின்றன.
ரயில் எண்:17308-பாகல்கோட்-மைசூரு  ரயிலில் 2, ரயில் எண்:17307-மைசூரு-பாகல்கோட் ரயிலில் 1 பெட்டி அக்.19-ஆம் தேதி இணைக்கப்படுகின்றன.
ரயில் எண்:17308-பாகல்கோட்-மைசூரு ரயிலில் 1, ரயில் எண்:17307-மைசூரு-பாகல்கோட்ரயிலில் 2, ரயில் எண்:16535-மைசூரு-சோலாப்பூர் ரயிலில் 1 பெட்டி அக்.20-ஆம் தேதி இணைக்கப்படுகின்றன.
ரயில் எண்:17308-பாகல்கோட்-மைசூரு ரயிலில் 2, ரயில் எண்:16591-ஹுப்பள்ளி-மைசூரு ரயிலில் 1, ரயில் எண்:17302-தார்வாட்-மைசூரு ரயிலில் 2, ரயில் எண்:17307-மைசூரு-பாகல்கோட் ரயிலில் 2, ரயில் எண்:16535-மைசூரு-சோலாப்பூர் ரயிலில் 1 பெட்டி அக்.21-ஆம் தேதி இணைக்கப்படுகின்றன.
ரயில் எண்:17302-தார்வாட்-மைசூரு ரயிலில் 3, ரயில் எண்:16591-ஹுப்பள்ளி-மைசூரு ரயிலில் 1, ரயில் எண்:17308-பாகல்கோட்-மைசூரு ரயிலில் 2 பெட்டிகள் அக்.22-ஆம் தேதி இணைக்கப்படுகின்றன.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/16/தீபாவளி-22-ரயில்களில்-தாற்காலிகமாக-கூடுதல்-பெட்டிகள்-இணைப்பு-2791011.html
2791010 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தாய்,  மகள் சடலங்களாக மீட்பு DIN DIN Monday, October 16, 2017 06:30 AM +0530 பெங்களூரில் வெள்ளிக்கிழமை பெய்த கன மழையால் ஏற்பட்ட  வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட  தாய்,  மகள் ஆகிய இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது.  இதனால் பல சாலைகளில் வெள்ள நீர் தேங்கி,  குளம்போல் காட்சி அளிக்கிறது.   இதன்காரணமாக,  போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் வீடுகளில் புகுந்துள்ளதால், பொதுமக்கள் ஏராளமானோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில்,  பெங்களூரில் கடந்த சில தினங்களால் பெய்து வரும் கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  இந்தச் சூழ்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு பெய்த கனமழைக்கு குருபரஹள்ளியைச் சேர்ந்த வாசுதேவ் பட்,  லக்கெரேவைச் சேர்ந்த நிங்கம்மா,  அவரது மகள் புஷ்பா ஆகியோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.  இவர்களை தேடும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டனர்.
இந்த நிலையில்,  வசுதேவ்பட் இறந்த நிலையில் அவரது சடலம் சும்மனஹள்ளி பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில்  சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டது.  மற்ற இருவரைத் தேடும் பணி ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்றது.  இதில் நிங்கம்மா, புஷ்பா ஆகியோரும் இறந்த நிலையில்,  அவர்களது சடலங்கள் மீட்கப்பட்டன. இதேபோல்,  மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வேறு சிலரையும் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/16/பெங்களூரில்-வெள்ளத்தில்-அடித்துச்-செல்லப்பட்ட-தாய்--மகள்-சடலங்களாக-மீட்பு-2791010.html
2791009 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு துப்பாக்கியால் சுட்டு இளைஞர் கைது DIN DIN Monday, October 16, 2017 06:30 AM +0530 காவலரைத்  தாக்கிவிட்டு தப்பியோடிய இளைஞரை துப்பாக்கியால் சுட்டு போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூரு அல்சூர் கேம்பிரிட்ஜ் லேஅவுட்டில் போலீஸார் சனிக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ரெளடி பட்டியலில் இடம்பெற்றுள்ள கார்த்திக் (27) என்பவரை போலீஸ் காவலர் பசவராஜ், தடுத்து நிறுத்தியுள்ளார்.
அப்போது பசவராஜை கத்தியால் குத்திவிட்டு கார்த்திக்  தப்பிச் சென்றார்.  இதையடுத்து, அவரை அல்சூர் காவல் நிலைய ஆய்வாளர் சுப்பிரமணி தலைமையிலான போலீஸார்  தேடும் பணியில் ஈடுபட்டனர்.  அல்சூர் ஏரிகரையில் குருத்துவாரா அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் மோட்டார் சைக்கிளில்  கார்த்திக் செல்வதை அறிந்து, அவரை போலீஸார் பிடிக்க முயன்றனர். அப்போது,  அவர்களையும் கார்த்திக் கத்தியால் குத்த முயன்றுள்ளார். இதைபார்த்த ஆய்வாளர் சுப்பிரமணி,   தனது கைத் துப்பாக்கியால் வானத்தை நோக்கி ஒரு முறை சுட்டு எச்சரித்துள்ளார். இதைத் தொடர்ந்தும்,  போலீஸாரை கார்த்திக் தாக்க முயன்றதால்,  அவரது காலில் சுட்டுள்ளனர். காயம் அடைந்து கீழே விழுந்த கார்த்திக் போலீஸார் பிடித்து,  கைது செய்துள்ளனர்.  இதையடுத்து,  கார்த்திக்,  காவலர் பசவராஜ் ஆகிய இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து அல்சூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/16/துப்பாக்கியால்-சுட்டு-இளைஞர்-கைது-2791009.html
2791007 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு கர்நாடகத்தில் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட இளைஞர் DIN DIN Monday, October 16, 2017 06:29 AM +0530 மழை வெள்ளத்தை செல்லிடப்பேசியில் படம்  எடுக்கச் சென்ற இளைஞர், வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.  அவரை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.
கர்நாடக மாநிலம், ராம்நகர் ஊரகப் பகுதியான ஹரளுமரதொட்டியைச் சேர்ந்தவர் நந்தேஷ் (38).  மேளேஹள்ளிகேட் அருகே உள்ள பள்ளத்தில் மழை நீர் நிரம்பி வெள்ளமாகச் செல்வதை அறிந்த நந்தேஷ்,   தனது செல்லிடப்பேசியில் படம் எடுக்க ஞாயிற்றுக்கிழமை சென்றார்.
அப்போது பள்ளத்தின் அருகே மண் சரிந்து,  மழை வெள்ளத்தில் அவர் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.  தகவலறிந்த ராம்நகர் ஊரக போலீஸார்,   தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று,   நந்தேஷை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/16/கர்நாடகத்தில்-வெள்ளத்தில்-இழுத்து-செல்லப்பட்ட-இளைஞர்-2791007.html
2791008 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரில் வரலாறு காணாத மழை DIN DIN Monday, October 16, 2017 06:29 AM +0530 பெங்களூரில் கடந்த 115 ஆண்டு காலத்தில் வரலாறு காணாத  அளவில்,  மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
உலக அளவில் புகழ்பெற்று விளங்கும் பெங்களூரில் கடந்த இரு ஆண்டுகளாக கடும் வறட்சி நிலவி வந்தது.  பூங்கா நகரமெனப் போற்றப்படும் பெங்களூரில் மரங்கள் உலர்ந்துவிடும் அபாயம் ஏற்பட்டது.
மடிவாளா,  ஹெப்பாள்,  அல்சூர்,  சாங்கே,  பெலந்தூர்,  லால்பாக்,  வர்த்தூர்,  இஸ்ரோ லேஅவுட்,  சாரக்கி,  விபூதிபுரா, நாகவரா,  தொட்டனகுண்டி, முன்னேகொல்லால,  அகரா,  கெம்பாம்பூதி,  புட்டேனஹள்ளி,  கொத்தனூர், ஹொரமாவு, அல்லசந்திரா,  அத்தூர்,  பிடிஎம், சின்னப்பனஹள்ளி,   கல்கெரே,  கெளடேனஹள்ளி,  கெரவனஹள்ளி, கரிதிம்மன்னஹள்ளி,  கைகொண்டனஹள்ளி,  அக்ஷ்ய்நகர்,  கெங்கேரி,  கொடிகேனஹள்ளி,  மகாதேவபுரா,  உத்தரஹள்ளி, தொரைகெரே,  தீபாஞ்சலி,  மால்கன்,  வீரசாகரா,  வீரசந்திரா,  எலஹங்கா உள்ளிட்ட ஏரிகள் வறண்டு போகும் நிலை ஏற்பட்டது.   இதோடு, பெரும்பாலான ஏரிகளில் சாக்கடைநீர் தேங்கி மாசடைந்தது.
இந்த நிலையில், நிகழாண்டில் ஜூன் 1-ஆம் தேதி முதல் தென் மேற்கு பருவ மழை கர்நாடகத்தில்பெய்யத் தொடங்கியது. ஆனாலும், பெங்களூரில் எதிர்பார்த்த அளவுக்கு தென்மேற்கு பருவமழை தொடக்கத்தில் இல்லை.  இருப்பினும்,  ஆகஸ்ட் 14-ஆம் தேதி இரவு பெய்த மழை பெங்களூரை புரட்டி போட்டது.  இதையடுத்து,  கடந்த 60 நாள்களில் 46 நாள்கள் தொடர்ந்து மழை பெய்துவருகிறது.
115 ஆண்டு காலத்தில் பெய்த மழை புள்ளிவிவரங்கள் பெங்களூரு வானிலை ஆய்வு மையத்தில் உள்ளது.  ஓராண்டில் ஜனவரி  1-ஆம் தேதி முதல் வழக்கமாக 980 மி.மீ. மழை பெய்யும்.   ஆனால்,  1991-ஆம் ஆண்டில் அதிகப்படியாக 1350.5 மி.மீ., 1998-இல் 1431.8 மி.மீ.,  2005-இல் 1606.8 மி.மீ.,  2007-இல் 1248.4 மி.மீ.,  2008-இல் 1286.6 மி.மீ.,  மழை பதிவாகியுள்ளது.
இதன்படி,  அக்டோபர் 13-ஆம் தேதி பெய்த பலத்த மழையை தொடர்ந்து, கடந்த 115 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிகழ் ஆண்டில் அக்.15-ஆம் தேதி அன்று 1660 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
2005-ஆம் ஆண்டு தான் அதிகப்படியாக ஜன.1 முதல் டிச.31-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் 1606.8 மி.மீ. மழை பெய்திருந்தது. ஆனால் நிகழாண்டில் இன்னும் 2 மாதங்கள் எஞ்சியுள்ள நிலையில்,  2005-ஆம் ஆண்டில் பெய்த மழை அளவை விஞ்சும் வகையில் நிகழாண்டில் மழை பெய்துள்ளது.
நிகழாண்டில் ஆகஸ்ட் மாதத்தில் வழக்கமாக பெய்யும் 147 மிமீ மழையை காட்டிலும் 351.8மிமீ மழையும், செப்டம்பர் மாதத்தில் வழக்கமாக பெய்யும் 212.8 மி.மீ. மழையைக் காட்டிலும்  513.8 மி.மீ. மழையும், அக்டோபர் மாதத்தில் வழக்கமாக பெய்யும் 168.3 மி.மீ. மழையைக் காட்டிலும் அக்.15-ஆம் தேதி நிலவரப்படி 386 மி.மீ. மழையும் பெய்துள்ளது. இதன்மூலம் கடந்த 115 ஆண்டுகளில் 2017-ஆம் ஆண்டு அதிகமாக ஈரமாக இருந்த ஆண்டாகக் கருதப்படுகிறது.


மழை தொடரும்...
இதுகுறித்து பெங்களூரு வானிலை  ஆய்வு மையத்தின்
இயக்குநர் (பொறுப்பு)  எல்.ரமேஷ்பாபு கூறியதாவது:-
கடந்த அக்.13-ஆம் தேதி பெய்த பலமான மழையைத்  தொடர்ந்து நிகழாண்டின் மழை அளவில் புதிய வரலாறு உருவாகியுள்ளது.   இன்னும் நிகழாண்டில் இரண்டரை மாதங்கள் எஞ்சியுள்ள நிலையில்,  மழையின் அளவு வரலாற்றில் மைல் கல்லாகவே கருதப்படுகிறது.
நிகழாண்டில் செப்.30-ஆம் தேதியுடன் நிறைவடைய வேண்டிய தென்மேற்கு பருவமழை விரிவடைந்துள்ளது.  இதன் முடிவில், வடமேற்கு பருவமழை வெகு விரைவில் தொடங்கும்.  அரபுக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாகவும்,  தென்மேற்கு பருவமழை நீடிப்பதாலும்,  கர்நாடகத்தின் உள்பகுதி மற்றும் பெங்களூரில் தீவிரமான மழை பெய்துவருகிறது.  நீண்ட கால வறட்சி அல்லது கடுமையான கோடை காலத்துக்குப் பிறகு இப்படிப்பட்ட மழை பெய்யும். அதுபோல,  பெங்களூரில் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான வறட்சி காணப்பட்டது.  இதனால் வெப்பத் தீவாக பெங்களூரு மாறிவந்தது.  இதுபோன்ற பல வானிலை காரணங்களால் பெங்களூரில் மழை பெய்துவருகிறது" என்றார் அவர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/16/பெங்களூரில்-வரலாறு-காணாத-மழை-2791008.html
2791006 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு "மஞ்சள் காமாலை குறித்து விழிப்புணர்வு தேவை' DIN DIN Monday, October 16, 2017 06:28 AM +0530 கல்லீரல் அழற்சி பாதிப்பால் ஏற்படும் மஞ்சள் காமாலை நோய் குறித்து மக்களிடத்தில் விழிப்புணர்வு தேவை என்று குழந்தை நல மருத்துவர் நவீன் கெனி கூறினார்.
கல்லீரல் அழற்சி,   மஞ்சள் காமாலை நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில்,  நவீன் கெனி பேசியது:-
பெரியவர்கள் மட்டுமின்றி,  சிறுவர்களும் மஞ்சள் காமாலை நோயால் அண்மைக்காலமாகப் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.  இதற்கு கல்லீரல் அழற்சியும் முக்கிய காரணம்.  எனவே,  ஈரல், கல்லீரலை பாதிக்கப்படாமல் தடுப்பது மிகவும் முக்கியம்.
ஈரல், கல்லீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டு,  சிகிச்சை எடுப்பதற்கு காலதாமதம் செய்தால், மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்படுவதற்கு அதிக அளவில் வாய்ப்பு உள்ளது.  இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்.  விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே நோய்களைத் தடுப்பது சாத்தியமாகும் என்றார்.
நிகழ்ச்சியில் மூத்த மருத்துவர் பாஸ்கர் ஷெனாய் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/16/மஞ்சள்-காமாலை-குறித்து-விழிப்புணர்வு-தேவை-2791006.html
2791005 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு "கர்நாடகத்தில் கன்னடர்களுக்கு கொடி அத்தியாவசியம்' DIN DIN Monday, October 16, 2017 06:28 AM +0530 கர்நாடகத்தில் கன்னடர்களுக்கு கன்னடக் கொடி அத்தியாவசியமாகும் என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
பெங்களூரு, அரண்மனை மைதானத்தில் அண்மையில் கர்நாடக ரக்ஷனவேதிகே அமைப்பின் கன்னடர்களின் மாநாட்டை தொடக்கி வைத்து அவர் பேசியது: கன்னட மொழி போராட்டங்களில் ஈடுபட்டோர் மீது பதிவாகியுள்ள வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும்.
இது கன்னடர்களின் மாநாடு. கன்னட மொழி சார்ந்த மாநாட்டில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
நான் ஒரு கன்னடன். கன்னட மொழிக்காக தொடர்ந்து குரல்கொடுத்து வருகிறேன். கடந்த 65 ஆண்டுகளாக கன்னடக் கொடி வேண்டும் என்ற பேச்சுவார்த்தைகள் நடந்தவண்ணம் உள்ளன.
இதுகுறித்து ஆலோசனை வழங்குவதற்காக காங்கிரஸ் அரசு கன்னடக் கொடி குழு அமைத்துள்ளது. கன்னடனாக கூறுகிறேன், கர்நாடகத்தில் கன்னடர்களுக்கு கன்னடக் கொடி இருப்பது அத்தியாவசியமாகும். மெட்ரோ ரயிலில் இருந்த இந்தித் திணிப்பு அகற்றப்பட்டுள்ளது. காவிரி, மகதாயி ஆற்றுநீர்ப் பங்கீட்டு விவகாரத்தில் கர்நாடகத்துக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தாலும், தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வருகிறோம்.
கன்னடக் கவிஞர் குவெம்பூ கூறியதுபோல, நீ எங்கிருந்தாலும், எப்படியிருந்தாலும், எதுவாக இருந்தாலும் கன்னடனாக இரு என்பதை அனைவரும் மனதில் வைக்க வேண்டும் என்றார் அவர்.
விழாவில், அமைச்சர்கள் டி.கே.சிவக்குமார், ராமலிங்க ரெட்டி, எச்.ஆஞ்சநேயா, அமைப்புத் தலைவர் நாராயண கெளடா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/16/கர்நாடகத்தில்-கன்னடர்களுக்கு-கொடி-அத்தியாவசியம்-2791005.html
2791004 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு "சுகாதாரத் துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்க வேண்டும்' DIN DIN Monday, October 16, 2017 06:28 AM +0530 சுகாதாரத் துறையில் தனியாரின் பங்களிப்பை ஊக்குவிக்க வேண்டும் என்று எம்எல்ஏ ஹாரீஸ் கூறினார்.
பெங்களூரில் நாராயணா மருத்துவ மையத்தை சனிக்கிழமை தொடக்கிவைத்து,  அவர் பேசியது:-
சர்வதேச அளவில் பெரும் நகரமாக வளர்ந்து வரும் பெங்களூரில்  மக்கள் தொகை அதிகரித்து வருகிறது.  ஆனால்,  மக்கள் தொகையை ஏற்ற சுகாதார வசதிகளை அரசு மட்டுமே செய்து தருவது இயலாத காரியம். எனவே,  சுகாதாரத் துறையில் தனியாரும் தங்களது பங்களிப்பை அளிக்க முன் வர வேண்டும்.  தனியார் உயர்தர மருத்துவமனைகளில் நடுத்தர,  ஏழை மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சிகிச்சை வழங்குவதும் அதிகரிக்க வேண்டும்.
தனியார் மருத்துவமனைகள் என்றாலே கட்டணம் அதிகம் என்ற சூழல் உள்ளது.  இந்த எண்ணத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
சுகாதாரத் துறையில் தனியாரின் பங்களிப்பை ஊக்குவிப்பது அவசியம்.  கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் அரசு இதற்கான அனைத்து உதவிகளை மேற்கொண்டு வருகிறது என்றார் அவர். நிகழ்ச்சியில் நாராயணா மருத்துவக் குழுமத் தலைவர் தேவி ஷெட்டி, மருத்துவர் ராம்மோகன்பட் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர். 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/16/சுகாதாரத்-துறையில்-தனியார்-பங்களிப்பை-ஊக்குவிக்க-வேண்டும்-2791004.html
2791003 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு மக்களுக்கு பயன்தரும் திட்டங்களுக்கு வரவேற்பு: சந்தோஷ் ஹெக்டே DIN DIN Monday, October 16, 2017 06:27 AM +0530 பரவலாக மக்களுக்கு பயன் தரும் திட்டங்களை வரவேற்கிறேன் என்று  லோக் ஆயுக்த முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே  கூறினார்.
பெங்களூரில் உருக்கு பாலம் அமைவது குறித்த கருத்து கேட்பு கருத்தரங்கம்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று அவர் பேசியது:-
உருக்கு பாலம் அமைக்க வேண்டாம் என பல அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.  
தனி ஒரு மனிதரின் விருப்பத்துக்காகக் கொண்டு வரும் அனைத்து திட்டங்களையும் எதிர்ப்பதில் தவறில்லை.  ஆனால் பரவலாக மக்களுக்கு பயன் தரும் திட்டங்களுக்கு வரவேற்பு அளிக்கிறேன்.
அண்மைக்காலமாக சிலரின் நன்மைக்காகத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவது வேதனை அளிக்கிறது.  இதுபோன்ற செயல்கள் ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கிவிடும்.  தனிப்பட்ட விருப்பு,  வெறுப்புகளுக்கு ஆட்சியை தலைமை ஏற்று நடத்துவர்கள் ஆளாகக் கூடாது.
உருக்குப்பாலம் அமைப்பதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும்.  இதனால் தட்பவெட்ப நிலை மாறும். இதனை கருத்தில் கொண்டு உரிய முடிவு எடுக்கப்பட வேண்டும்.
ஊழல் புரிவதையும்,  சிறைக்குச் செல்வதையும் அரசியல்வாதிகள் பெருமையாக கூறிக் கொள்ளும் அளவுக்குத் தரம் தாழ்ந்து வருவது வேதனையாக உள்ளது.  மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை கண்டித்து எதிர்க்கட்சியினர் குரல் எழுப்புவதை விட்டுவிட்டு, தங்களின் சொந்த பிரச்னைகளுக்காக குரல் எழுப்பு வருவதும் ஏமாற்றளிக்கிறது என்றார் அவர்.
நிகழ்ச்சியில் சமூக போராளி பிரகாஷ் பெலவாடி,  பின்னணி பாடகி எம்.டி.பல்லவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/16/மக்களுக்கு-பயன்தரும்-திட்டங்களுக்கு-வரவேற்பு-சந்தோஷ்-ஹெக்டே-2791003.html
2791002 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு சாமுண்டீஸ்வரி தொகுதியில் தன்னை தோற்கடிக்க முடியாது: முதல்வர் சித்தராமையா DIN DIN Monday, October 16, 2017 06:27 AM +0530 சாமுண்டீஸ்வரி சட்டப்பேரவைத் தொகுதியில் தன்னை தோற்கடிக்க முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
மைசூரு  விமான நிலையத்தில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:-
கர்நாடக சட்டப் பேரவைக்கு அடுத்த ஆண்டில் நடைபெறும் தேர்தலில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட உள்ள  என்னை (சித்தராமையா) தோற்கடிக்க எனது அரசியல் எதிரிகள் கைகோர்த்திருக்கிறார்கள்.   அவர்களின் கனவு பலிக்காது.
தோல்வி மன நிலையில் பேசிவரும் பாஜகவின் மூத்தத் தலைவர் சீனிவாஸ் பிரசாத் குறித்து கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை.  எதிரியின் எதிரி நண்பன் என்று அரசியல் எதிரிகள் ஒன்றாகக் கைகோர்த்து தோற்கடிக்க முற்பட்டிருப்பதற்காக  அஞ்ச மாட்டேன்.
2006-ஆம் ஆண்டில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் என்னை (சித்தராமையா) தோற்கடிக்க அரசியல் எதிரிகள் ஒன்றாகியிருந்தனர்.   முன்னாள் பிரதமர் தேவெ கெளடா,  அன்றைய முதல்வர் குமாரசாமி,  அன்றைய துணைமுதல்வர் எடியூரப்பா உள்ளிட்டோர் 15 நாள்கள் தொகுதியில் முகாமிட்டு,  தேர்தல் பணியாற்றியும் வெற்றி பெற்றேன்.  அதுபோன்ற சூழ்நிலையிலும் மக்கள் என்னை கைவிடவில்லை.  மக்கள் மீது எப்போதும் நம்பிக்கை வைத்திருப்பேன்.
சமுதாயத்தைப் பிளவுபடுத்தவும்,  ஜாதிகளுக்கு இடையே தகராறை ஏற்படுத்தவும் பாஜகவினர் மறுமலர்ச்சிப் பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார்கள்.   ஒரு மதத்துக்கு எதிராக மற்றொரு மதத்தைத் தூண்டி விடுகிறார்கள்.  ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் குறித்து பாஜகவினர் பேசுவதேயில்லை.  சமூக நீதியில் பாஜகவினருக்கு நம்பிக்கையே இல்லை.
மழை விவகாரத்தில்
பாஜக அரசியல் செய்யலாமா?
பெங்களூரில் 46 நாள்கள் தொடர்ந்து மழை பெய்து வருவதால்,  ஒருசில அசம்பாவிதங்கள் நடந்துள்ளன.   850 கி.மீ.  நீளத்தில் உள்ள ராஜகால்வாய்  ஆக்கிரமிப்புகளை முந்தைய ஆட்சியாளர்கள் அகற்றவில்லை.   தூரும் வாரப்படவில்லை. காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்தபிறகு 350 கி.மீ. நீளத்துக்கு ராஜகால்வாயை சீர்படுத்தியுள்ளோம்.  இதற்காக ரூ.800கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.  
மழையில் உயிரிழந்தவர்களை வைத்துக்கொண்டு அரசியல் நடத்தும் பாஜகவினர் ஆட்சியில் இருந்தபோது இதை சரிசெய்ய முடியவில்லை. அளவுக்கு அதிகமான மழை பெய்ததற்கு அரசு  காரணமாக முடியுமா?
பெங்களூரில் டெண்டர் ஷ்யூர் சாலைகள், கான்கிரீட் சாலைகளை அமைத்தது காங்கிரஸ் அரசு.   ஆனால்,  ஆட்சியில் இருந்தபோது,  பெங்களூரு மேம்பாட்டுக்கு பாஜகவினர் எதையும் செய்யவில்லை.
விதான செளதா கட்டடத்தின் வைரவிழாவுக்கான ஏற்பாடுகளில் மாநில அரசின் பங்கு எதுவுமில்லை.  அது முழுக்க முழுக்க சட்டப் பேரவை,  மேலவைத் தலைவர்களின் ஏற்பாடாகும்.
கேரளத்தைப் போல,  கர்நாடகத்திலும் கோயில்களில் தாழ்த்தப்பட்டோரை அர்ச்சகர்களாக நியமிப்பதில் எவ்விதத் தடையும் இல்லை.
எனவே,  அந்தத் திட்டத்தை விரைவில் செயல்படுத்துவோம் என்றார் அவர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/16/சாமுண்டீஸ்வரி-தொகுதியில்-தன்னை-தோற்கடிக்க-முடியாது-முதல்வர்-சித்தராமையா-2791002.html
2791001 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு-காமாக்கிய இடையே சிறப்பு ரயில் சேவை DIN DIN Monday, October 16, 2017 06:27 AM +0530 கூட்டநெரிசலை குறைப்பதற்காக பெங்களூரில் இருந்து காமாக்கியாவுக்கு சிறப்பு ரயில் சேவை இயக்கப்படுகிறது.
இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி: கூட்ட நெரிசலை குறைப்பதற்காக பெங்களூரு (யஷ்வந்த்பூர்)-காமாக்கியா இடையே குளிரூட்டப்பட்ட அதிவிரைவு ரயில் ஒருநடைக்கு மட்டும் இயக்கப்படுகிறது.
ரயில் எண்:02551-பெங்களூரு ((யஷ்வந்த்பூர்-காமாக்கியா அதிவிரைவு ரயில் அக்.14-ஆம் தேதி காலை 8.30 மணிக்கு பெங்களூரு (யஷ்வந்த்பூர்) ரயில்நிலையத்தில் இருந்து புறப்பட்டு, அக்.16-ஆம் தேதி நண்பகல் 2 மணிக்கு காமாக்கியா ரயில்நிலையம் சென்றடையும்.
இந்த ரயில் ஜோலார்பேட்டை, காட்பாடி, சென்னை சென்ட்ரல், கூடூர், விஜயவாடா, சாமல்கோட், விஜயநகரம், பெர்ஹம்பூர், குர்தாசாலை, புவனேஸ்வர், கட்டக், பாலசோர், ஹிஜிலி, மிட்னாப்பூர், பங்குரா, அத்ரா, அசன்சோல், துர்காப்பூர், ராம்பூர், மல்டா, பர்சாய், கிஷன்கஞ்ச், நியூ ஜல்பைகுரி, நியூ கோச்பெஹர்ம், நியூ அலிபுதூர், நியூ பங்கைகாவ்ன், ரங்கியா ஆகிய ரயில்நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலில் ஒரு ஈரடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி, 2 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட பெட்டிகள் உள்பட 15 பெட்டிகள் இடம்பெற்றிருக்கும்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/16/பெங்களூரு-காமாக்கிய-இடையே-சிறப்பு-ரயில்-சேவை-2791001.html
2789577 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு மாநகராட்சி மருத்துவமனைகளில் மன அழுத்த சிகிச்சை: மேயர் சம்பத்ராஜ் DIN DIN Friday, October 13, 2017 07:15 AM +0530 மாநகராட்சி மருத்துவமனைகளில் மன அழுத்தத்திற்கான சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என பெங்களூரு மேயர் சம்பத்ராஜ்
தெரிவித்தார்.
பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை உலக மனநல சுகாதாரத்தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியது:  நவீன வாழ்க்கை முறையால் பலர் மன அழுத்ததிற்கு ஆளாகின்றனர். மன அழுத்திற்கு ஆளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க, மாநகராட்சி மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.
மனஅழுத்தத்திற்கு சிகிச்சை அளிக்க பயிற்சி பெரும் மருத்துவர்கள், தங்களிடம் வரும் நோயாளிக்கு, மன அழுத்தம் போக்குவதற்கான சிகிச்சை அளிப்பார்கள் என்றார். நிகழ்ச்சியில் துணை மேயர் பத்மாவதி நரசிம்மமூர்த்தி, மனநல மருத்துவர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/13/மாநகராட்சி-மருத்துவமனைகளில்-மன-அழுத்த-சிகிச்சை-மேயர்-சம்பத்ராஜ்-2789577.html
2789576 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு தேவெ கெளடாவின் அரசியல் பாதை நூல் வெளியீடு DIN DIN Friday, October 13, 2017 07:14 AM +0530 தான் கடந்து வந்த அரசியல் பாதை குறித்த நூலை வெளியிட  முன்னாள் பிரதமர் தேவெ கெளடா திட்டமிட்டுள்ளார்.
கர்நாடகத்தின் மூத்த அரசியல்வாதி  எச்.டி.தேவெ கெளடா, ஹாசன் மாவட்டத்தின் ஹரதனஹள்ளி கிராமத்தில் இருந்து தில்லி வரை பயணித்து அதிகாரத்தின் உச்சாணிக் கொம்பை அலங்கரித்தவர். கர்நாடகத்தின் முதல்வராகவும், இந்தியாவின் பிரதமராகவும் பதவி வகித்ததோடு, வரலாற்றில் அழிக்க முடியாத தடங்களைப் பதித்தவர். அரசியலில் தனது ஆரம்பம் முதல் தில்லி அதிகாரமையத்தை கைப்பற்றியது வரையிலான சுவையான நிகழ்வுகளைத் தொகுத்திருக்கும் எச்.டி.தேவெ கெளடா, அதை தன் வரலாறாக தொகுத்திருக்கிறார்.
சவாலான காலக் கட்டத்தின் இந்தியாவின் பிரதமராகப் பதவிவகித்து ஆற்றியிருக்கும் பல சாதனைகளை தொகுக்கும் பணியில் கடந்த 5 ஆண்டுகளாக ஈடுபட்டிருந்த தேவெ கெளடா, அந்நூலை அடுத்த நவம்பர் மாதத்தின் இறுதியில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார். இந்த நூலில் இந்திய அரசியலில் திருப்பங்களை உருவாக்க காரணமாக அமைந்த பல சுவையான நிகழ்வுகளை பதிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், கர்நாடகத்தில் தனது மகன் எச்.டி.குமாரசாமி காங்கிரஸுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறி, கூட்டணியை முறித்துக் கொண்டு, பாஜகவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்ததற்கான சூழல், பிறகு அந்த கூட்டணி ஆட்சியும் கவிழ்ந்ததற்கான பின்னணி நிகழ்வுகளையும் தேவெ கெளடா தனதுநூலில் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுதவிர, தேவெ கெளடா 11 மாதங்கள் பிரதமராக இருந்தகாலத்தில் செய்த சாதனைகள், எடுத்த முக்கியமான முடிவுகள் குறித்து அவரது நெருங்கிய நண்பரும், மஜத எம்எல்ஏவுமான ஒய்.எஸ்.வி.தத்தாதொகுத்திருக்கிறார். இவர் தனது மகள் ஷைலஜாவுடன் இணைந்து இந்த நூலை தயாரித்திருக்கிறார்.
இந்த நூலையும் நவம்பர் மாத இறுதியில் வெளியிட  தத்தா திட்டமிட்டிருக்கிறார். இந்த இருநூல்களும் முதலில் கன்னடத்தில் வெளியிடப்படுகிறது. அதன்பிறகு, ஆங்கிலம், ஹிந்தியில் வெளியாக இருக்கிறது. ஒவ்வொரு நூலும் 500 பக்கங்கள் கொண்டதாக அமைந்துள்ளது என்று தத்தா தெரிவித்தார். இந்த இரு நூல்களும் சட்டப்பேரவைத் தேர்தலில் மஜதவுக்கு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/13/தேவெ-கெளடாவின்-அரசியல்-பாதை-நூல்-வெளியீடு-2789576.html
2789575 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பட்டாசு அங்காடிகள் திறக்க விண்ணப்பிக்கலாம் DIN DIN Friday, October 13, 2017 07:14 AM +0530 தீபாவளியை முன்னிட்டு பட்டாசு அங்காடிகள் திறக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து பெங்களூரு மாநகரக் காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பெங்களூரு மாநகராட்சி ஆணையர், ஊர்க்காவல் படையின் டைரக்டர் ஜெனரல் மற்றும் கட்டளை அதிகாரி, தீயணைப்புப் படை இயக்குநர் ஆகியோர் பரிசீலித்து பட்டாசு விற்பனைக்கு அனுமதி அளிப்பார்கள்.
பெங்களூரு மாநகராட்சி அதிகாரவரம்புக்குள்பட்ட ஒருசில விளையாட்டுத் திடல்களில் மட்டும் பட்டாசு விற்பதற்காக அங்காடிகள் திறக்க அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த இடங்களில் பட்டாசு அங்காடிகளைத் திறக்க விரும்புவோரிடம் இருந்துவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறைவுசெய்த விண்ணப்பங்களை மாநகர உதவி காவல் ஆணையர் அலுவலகம், சிஏஆர் மையம், மைசூரு சாலை, பெஙளூரு-560018 என்ற முகவரியில் அளிக்கலாம். பெங்களூரு மாநகராட்சியின் வேண்டுகோளின்படி, மல்லேஷ்பாளையா முதன்மைச் சாலையில் உள்ள ராஜ்குமார் திறந்தநிலை நாடக மன்றத்தில் பட்டாசு அங்காடி திறக்க அனுமதி அளிக்கப்பட மாட்டாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.  

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/13/பட்டாசு-அங்காடிகள்-திறக்க-விண்ணப்பிக்கலாம்-2789575.html
2789574 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு தீபாவளி: 1,500 சிறப்பு பேருந்துகள் இயக்கம் DIN DIN Friday, October 13, 2017 07:14 AM +0530 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கர்நாடகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் 1,500 சிறப்பு பேருந்துகளை இயக்க  மாநில சாலை போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பெங்களூரிலிருந்து மாநிலத்தின் பல்வேறு நகரங்களுக்கு அக்.17 முதல் அக்.19-ஆம் தேதி வரை கூடுதலாக 1,500 சிறப்பு பேருந்துகள் இயக்க கர்நாடகமாநில சாலை போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.
இந்த சிறப்பு பேருந்துகள் பெங்களூரில் உள்ள கெம்பே கெளடா பேருந்துநிலையம், மைசூரு சாலை பேருந்துநிலையம், சாந்திநகர் பேருந்துநிலையம் உள்ளிட்ட பல்வேறு பேருந்துநிலையங்களில் இருந்து இயக்கப்படுகின்றன. இதுதவிர, மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து அக்.22 முதல் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படவிருக்கின்றன.
வெளிமாவட்டங்கள்
கெம்பே கெளடா பேருந்து நிலையத்தில் இருந்து தர்மஸ்தலா, குக்கேசுப்ரமணியா, சிவமொக்கா, ஹாசன், மங்களூரு, குந்தாபுரா, சிருங்கேரி, ஹொரநாடு, தாவணகெரே, ஹுப்பள்ளி, தார்வாட், பெலகாவி,விஜயபுரா, கோகர்ணா, சிர்சி, கார்வாட், ராய்ச்சூரு, கலபுர்கி,பெல்லாரி, கொப்பள், யாதகிரி, பீதர், திருப்பதி உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்படவிருக்கின்றன.
மைசூரு சாலை துணை பேருந்து நிலையத்தில் இருந்து மைசூரு, ஹுன்சூர், பிரியாப்பட்டணா, விராஜ்பேட், குஷால்நகர்,மடிக்கெரி நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
வெளியூர் பேருந்துகள்
மதுரை, கும்பகோணம், திருச்சி, சென்னை, கோயமுத்தூர், திருப்பதி, விஜயவாடா, ஹைதராபாத் உள்பட தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களின் பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு சொகுசுப் பேருந்துகள் சாந்திநகர் பேருந்துநிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.
விஜயநகர், ஜே.பி.நகர், ஜெயநகர் 4-ஆவது பிளாக், 9-ஆவதுபிளாக், ஜாலஹள்ளி குறுக்குத்தெரு, நவரங்(ராஜாஜிநகர்),மல்லேஸ்வரம் 18-ஆவது குறுக்குத்தெரு, கெங்கேரி சாட்டிலைட் பேருந்துநிலையங்களில் இருந்தும் சிவமொக்கா, தாவணகெரே, திருப்பதி, மங்களூரு, குந்தாபுரா, சிருங்கேரி, ஹொரநாடு, குக்கேசுப்ரமணியா, தர்மஸ்தலா உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்புபேருந்துகள் இயக்கப்படுகின்றன. முன்பதிவு செய்யாத பயணிகளுக்கும் கெம்பேகெளடா பேருந்துநிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முன்பதிவு வசதி
சிறப்பு பேருந்துகளில் பயணிக்க முன்பதிவுசெய்து கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. w‌w‌w.‌k‌s‌r‌t​c.‌i‌n  என்ற இணையதளம் வழியே முன்பதிவு செய்துகொள்ளலாம். பெங்களூரில் உள்ள 115, மைசூரில் உள்ள 17, மங்களூரில் உள்ள 75 உள்ளிட்ட 286 முன்பதிவு மையங்களில் சிறப்பு மற்றும் வழக்கமான பேருந்துகளுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ஒரே பயணச்சீட்டில் 4 பேருக்கு மேற்பட்டோருக்கு முன்பதிவு செய்தால் 5 சத தள்ளுபடியும், மறு பயணம் மேற்கொண்டால் 10 சத தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. பெங்களூரு தவிர, மாநிலத்தின் இதர நகரங்களில் இருந்தும் வெவ்வேறு நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த வசதியை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/13/தீபாவளி-1500-சிறப்பு-பேருந்துகள்-இயக்கம்-2789574.html
2789573 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு தும்கூரில் ரயில்கள் நிறுத்தம் DIN DIN Friday, October 13, 2017 07:13 AM +0530 தென்மேற்கு ரயில்வே மண்டலத்தின் கட்டுப்பாட்டில் தும்கூரு வழியாக செல்லும் ரயில்கள் அனைத்தும் தும்கூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ரயில் எண்-14805/14806-யஷ்வந்த்பூர்-பர்மர்-யஷ்வந்த்பூர் விரைவுரயில் மற்றும் ரயில் எண்-12777/ 12778-கொச்சுவேலி-ஹுப்பள்ளி வாராந்திர விரைவு ரயில் இனி தும்கூரு ரயில் நிலையத்தில் தொடர்ந்து நிறுத்தப்படும். ரயில் எண்-14805-யஷ்வந்த்பூர்-பர்மர் விரைவுரயில் தும்கூரு ரயில் நிலையத்திற்கு தினமும் காலை 11.18 மணிக்கு வந்து, காலை 11.20 மணிக்குப் புறப்படும்.
ரயில் எண்-14806-பர்மர்-யஷ்வந்த்பூர் விரைவு ரயில் தும்கூரு ரயில் நிலையத்திற்கு தினமும் காலை 1.53 மணிக்கு வந்து, காலை 1.55 மணிக்குப் புறப்படும். ரயில் எண்-12777-ஹுப்பள்ளி-கொச்சுவேலி வாராந்திர விரைவுரயில் தும்கூரு ரயில் நிலையத்திற்கு பிற்பகல் 1.15 மணிக்கு வந்து, பிற்பகல் பிற்பகல் 1.27 மணிக்குப் புறப்படும்.
ரயில் எண்-12778-கொச்சுவேலி-ஹுப்பள்ளி வாராந்திர விரைவு ரயில் தும்கூருக்கு காலை 5.50 மணிக்கு வந்து, காலை 5.52 மணிக்குப் புறப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/13/தும்கூரில்-ரயில்கள்-நிறுத்தம்-2789573.html
2789572 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைப்பதில் காங்கிரஸ் அரசு தோல்வி: எடியூரப்பா DIN DIN Friday, October 13, 2017 07:12 AM +0530 பெங்களூரில் மழையால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைப்பதில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு தோல்வியடைந்துள்ளதாக கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா குற்றஞ்சாட்டினார்.
பெங்களூரில் வியாழக்கிழமை மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய பின்னர், செய்தியாளர்களிடம் எடியூரப்பா கூறியது:
பெங்களூரில் பெய்த பலத்த மழையால் சாலைகள் அனைத்து சேதமடைந்துள்ளன. அவற்றை சரிசெய்வதில் அரசு மெத்தனமாகச் செயல்படுகிறது. இதுவே காங்கிரஸ் அரசின் தோல்விக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. மாநகரில் உள்ள அனைத்து சாலைகளிலும் சுமார் 16 ஆயிரம் குழிகள் ஏற்பட்டுள்ளதாக பெங்களூரு வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜே உறுதிபடுத்தியுள்ளார்.
சாலைகளை மேம்படுத்த அரசு ஆயிரம் கோடிகளைச் செலவிட்டும் மழைக்கு பெங்களூரு முழுவதும்  உள்ள சாலைகள் சேதமடைந்துள்ளன.
இந்த சாலைகளில் பயணித்த  7 பேர் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர். இதற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும். நிர்வாக திறன் இல்லாத, முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசை மக்கள் தூக்கி எறிய வேண்டும் என்றார்.
பேட்டியின் போது, எதிர்க்கட்சித் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், துணைத் தலைவர் ஆர்.அசோக், சட்ட மேலவை எதிர்க்கட்சித் தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/13/மழையால்-சேதமடைந்த-சாலைகளை-சீரமைப்பதில்-காங்கிரஸ்-அரசு-தோல்வி-எடியூரப்பா-2789572.html
2789571 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு தொடர் மழையால் உடையும் நிலையில் இருப்பநாயக்கன் ஏரி DIN DIN Friday, October 13, 2017 07:12 AM +0530 தொடர் மழையால் தேன்கனிக்கோட்டை இருப்பநாயக்கன் ஏரி உடையும் நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, வருவாய்த் துறையினர் மண்கொட்டி சீர் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே இருப்பநாயக்கன் ஏரி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மழையின்றி வறண்டு கிடந்த இந்த ஏரி தொடர் மழையால் நிரம்பி வந்தது. புதன்கிழமை இரவு 104 மி.மீ. பெய்த மழைக்கு ஏரிக்கு அதிகளவில் தண்ணீர் வந்தது.
ஏரியின் உபரி நீர் செல்லும் பகுதியில் ஏற்கெனவே தடுப்புச் சுவர் வலுவிழந்து காணப்பட்ட நிலையில், ஏரியிலிருந்து வெள்ளம் அதிகரித்ததால் தடுப்புச் சுவர் பகுதி வழுவிழந்து உடையும் நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து விவசாயிகள் வருவாய்த் துறை அதிகாரிகளிடம் புகார் செய்ததையடுத்து, வட்டாட்சியர்  மணிமொழி ஏரியை ஆய்வு செய்து உடனடியாக சீர்செய்ய நடவடிக்கை எடுத்தார். இதைத் தொடர்ந்து, வருவாய்த் துறை ஊழியர்கள் மண்ணை கொட்டி சரி செய்தனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/13/தொடர்-மழையால்-உடையும்-நிலையில்-இருப்பநாயக்கன்-ஏரி-2789571.html
2789570 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு கர்நாடக தேர்தல் பிரசாரக் குழுத் தலைவர் பதவி பறிப்பு: சதானந்த கெளடா அதிருப்தி DIN DIN Friday, October 13, 2017 07:11 AM +0530 பாஜகவின் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவர் பதவியிலிருந்து மத்திய அமைச்சர் சதானந்த கெளடா நீக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாஜக தேர்தல்பிரசாரக் குழுத் தலைவராக மத்திய அமைச்சர் சதானந்த கெளடா நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இப்பதவியில் இருந்து வெள்ளிக்கிழமை சதானந்த கெளடா நீக்கப்பட்டுள்ளார். அதன் பின்னணியில் பாஜக எம்.பி. ஷோபாகரந்தலஜே இருப்பதாக சதானந்த கெளடா குற்றம்சாட்டினார்.
மத்திய அமைச்சராக இருக்கும் சதானந்த கெளடாவுக்கு தேர்தல் பிரசாரக் குழுத் தலைவர் பதவி தேவையா? என்று பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பாவிடம் ஷோபாகரந்தலஜே கேள்வி எழுப்பினாராம்.
இதுகுறித்து கர்நாடக பாஜக மேலிடப் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜாவடேகரிடம் எடியூரப்பா விவாதித்துள்ளார். அதன்பேரில், தேர்தல் பிரசாரக் குழுத் தலைவர் பதவியில் இருந்து சதானந்த கெளடா நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, கர்நாடக பாஜகவில் ஓய்ந்திருந்த கோஷ்டிபூசல் மீண்டும் தலைதூக்கியுள்ளது.
கஞ்சா விற்ற மூவர் கைது
பெங்களூரு, அக். 12: பெங்களூரில் கஞ்சா விற்றதாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூரு யாரப்நகரைச் சேர்ந்தவர் சாதிக்பாஷா (27), யாசீன் (19). இவர்கள் இருவரும் பெங்களூரில் உள்ள கல்லூரிகளுக்கு அருகில் கஞ்சா விற்பனை செய்து வந்தனராம். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸார், சாதிக்பாஷா, யாசீனைக் கைது செய்து, ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள 900 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது குறித்து பனசங்கரி போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
இதேபோல் எலஹங்காவில் உள்ள தனியார் கல்லூரி அருகே கஞ்சா விற்பனை செய்த, அக்ரஹாரா லேஅவுட்டைச் சேர்ந்த தாயிப்பாஷாவைக் (27) கைது செய்த போலீஸார், 250 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து எலஹங்கா போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/13/கர்நாடக-தேர்தல்-பிரசாரக்-குழுத்-தலைவர்-பதவி-பறிப்பு-சதானந்த-கெளடா-அதிருப்தி-2789570.html
2789569 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு ஒயிட்பீல்டு, கெங்கேரியில் ரயில்கள் நிறுத்தம் DIN DIN Friday, October 13, 2017 07:11 AM +0530 ஒயிட்பீல்டு, கெங்கேரி ரயில் நிலையங்களில் சோதனை முயற்சியாக ரயில்கள் நின்று செல்லும் என்று தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: ரயில் எண்-16315/16316-பெங்களூரு-கொச்சுவேலி-பெங்களூரு விரைவுரயில் ஒயிட்பீல்டு ரயில் நிலையத்திலும், ரயில் எண்-12613/12614-மைசூரு-பெங்களூரு-மைசூரு திப்பு விரைவு ரயில் கெங்கேரி ரயில் நிலையத்திலும் அக்.19 முதல் அடுத்த ஆண்டு ஏப்.18-ஆம் தேதி வரை 6 மாதங்களுக்கு சோதனைமுயற்சியாக நின்று செல்லும்.
ரயில் எண்-16315-பெங்களூரு-கொச்சுவேலி விரைவுரயில் ஒயிட்பீல்டு ரயில் நிலையத்திற்கு தினமும் மாலை 5.34 மணிக்கு வந்து, மாலை 5.35 மணிக்குப் புறப்பட்டு செல்லும். ரயில் எண்-16316-கொச்சுவேலி-பெங்களூரு விரைவுரயில் ஒயில்பீல்டு ரயில் நிலையத்திற்கு தினமும் காலை 7.16 மணி வந்து, காலை 7.27 மணிக்குப் புறப்படும்.
ரயில் எண்-12613-மைசூரு-பெங்களூரு திப்பு விரைவுரயில் கெங்கேரி ரயில் நிலையத்தில் நண்பகல் 1.34 மணிக்கு வந்து, நண்பகல் 1.35 மணிக்குப் புறப்படும். ரயில் எண்-12614-பெங்களூரு-மைசூரு திப்பு விரைவு ரயில் கெங்கேரி ரயில் நிலையத்திற்கு தினமும் மாலை 3.17 மணிக்கு வந்து, மாலை 3.18 மணிக்குப் புறப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.   

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/13/ஒயிட்பீல்டு-கெங்கேரியில்-ரயில்கள்-நிறுத்தம்-2789569.html
2789568 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு வெள்ளத்தில் அடித்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநரைத் தேடும் பணி தீவிரம் DIN DIN Friday, October 13, 2017 07:11 AM +0530 பெங்களூரில் மழை வெள்ளத்தில் ஆட்டோவுடன் அடுத்துச் செல்லப்பட்ட ஓட்டுநரைத் தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பெங்களூரு பனசங்கரியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சந்தோஷ்,  தனது வாகனத்துடன் செவ்வாய்க்கிழமை இரவு கனகபுரா பிரதான சாலையில் உள்ள கன்டகதொட்டி  பகுதியில் சென்று கொண்டிருந்தார். ஆட்டோவில் விஜய் என்பவரும் அமர்ந்திருந்தார்.
பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் ஆட்டோ அடித்துச் செல்லப்பட்டது. இதில் ஆட்டோவிலிருந்த விஜய், அங்கிருந்த மரக் கிளையைப் பிடித்து மரத்தில் ஏறிக் கொண்டார். ஆனால், ஓட்டுநர் சந்தோஷ் கால்வாய் நீரில் ஆட்டோவுடன் இழுத்துச் செல்லப்பட்டார்.
கக்லிபுரா போலீஸார், தீயணைப்பு, பேரிடர் மீட்புப் படையினர் கால்வாயில் இழுத்துச் செல்லப்பட்ட சந்தோஷை தேடி வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/13/வெள்ளத்தில்-அடித்துச்-சென்ற-ஆட்டோ-ஓட்டுநரைத்-தேடும்-பணி-தீவிரம்-2789568.html
2789567 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு சிற்றிதழ்களின் வளர்ச்சிக்கு அரசு உதவும்: அமைச்சர் ஆஞ்சநேயா DIN DIN Friday, October 13, 2017 07:11 AM +0530 சிற்றிதழ்களின் வளர்ச்சிக்கு அரசு உதவும் என கர்நாடக  சமூக நலத் துறை அமைச்சர் எச்.ஆஞ்சநேயா தெரிவித்தார்.
பிற்படுத்தப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் இதழாளர்கள் சங்கத்தின் சார்பில் பெங்களூரில் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா சங்கத் தலைவர் எம்.எஸ்.மணி தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட போக்குவரத்துத் துறை அமைச்சர் எச்.எம்.ரேவண்ணா, சமூக நலத் துறை அமைச்சர் எச்.ஆஞ்சநேயா ஆகியோர் பல்துறை சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி கெளரவித்தனர்.
அம்பேத்கர் விருது ஐ.எச்.சங்கமதேவாவுக்கு, வி.பி.சிங் விருது என்.லட்சுமிநாராயணாவுக்கு, பி.பி.மண்டல்விருது ஆர்.எச்.நடராஜுக்கு, நாராயண குரு விருது டி.எச்.கம்பளிக்கு, பெரியார்விருது பி.என்.ரமேஷுக்கு, தேவராஜ் அர்ஸ் விருது கொ.ந.மஞ்சுநாத்துக்கு வழங்கப்பட்டது.
காமராஜர் விருது ஜி.ஆர்.முனிவீரண்ணாவுக்கு, எல்.ஜி.ஹாவனூர் விருது நீலகண்டாவுக்கு, டி.மரியப்பா விருது ஜி.நி.புருஷோத்தமுக்கு, டிவிஜி விருது கே.எஸ்.சோமசேகருக்கு, கே.ஏ.நெட்டகலப்பா விருது ஜெயகுமாருக்கு, சந்திரசேகர் கம்பாரா விருது ஜி.இந்திரகுமாரிக்கு, டி.நாகராஜ் விருது கே.எச்.சிவராஜூக்கு, ஸ்ரீதர் ஆச்சார் விருது எம்.எம்.சுவாமிக்கு, பா.சு.மணி விருது இ.புருஷோத்தமுக்கு, நந்தனார் விருது கேஷவவிட்லாவுக்கு, செல்லையாநாடார் விருது மெளனேஷ்விஸ்வகர்மாவுக்கு வழங்கப்பட்டது.
விழாவில் பேசிய அமைச்சர் எச்.எம்.ரேவண்ணா: அண்மைக்காலமாக ஊடகத் துறையில் பிற்படுத்தப்பட்டோர் அதிகளவில் பங்காற்றி வருகிறார்கள். இதுபோன்றதொரு வளர்ச்சி அனைத்து துறைகளிலும் நிகழ வேண்டும். பிற்படுத்தப்பட்டோருக்கு மாநில அரசு வழங்கும் நலத் திட்டங்களை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய ஊடகங்கள் பாலமாக இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மாநில அரசு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என்றார்.
அமைச்சர் எச்.ஆஞ்சநேயா பேசியது: தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் பத்திரிகையாளர்களை போல பிற்படுத்தப்பட்டசமுதாய பத்திரிகையாளர்களுக்கு எழுது பொருள்கள், பை அடங்கிய பரிசுப்பொருள் நவம்பர் மாதத்திற்குள் வழங்கப்படும்.
மாநில அளவிலான பெரிய பத்திரிகைகளைக் காட்டிலும், கிராமப்புறங்கள், சிற்றூர்களைச் சென்றடையும் சிற்றிதழ்கள் அதிகளவில் பெருக வேண்டும். அப்போதுதான் ஊடகத் துறையின் வீச்சு மேலும் பரவலாகும் என்றார். முடிவில் சங்கத்தின் பெங்களூரு நகர மாவட்டத் தலைவர் கே.சீனிவாஸ் நன்றி கூறினார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/13/சிற்றிதழ்களின்-வளர்ச்சிக்கு-அரசு-உதவும்-அமைச்சர்-ஆஞ்சநேயா-2789567.html
2789566 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு குற்றவாளியைப் பிடிக்க முயன்ற காவலருக்கு கத்திக் குத்து DIN DIN Friday, October 13, 2017 07:10 AM +0530 திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்தவரை பிடிக்க முயன்ற காவலருக்கு கத்தி குத்து விழுந்தது.

பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருபவர் அலாவுதீன் (23). இவர் திருட்டு, வழிப்பறி, தங்கச் சங்கிலி பறிப்பு உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்டு வந்த, முகமது அலி (29),  பெங்களூரு யஸ்வந்தபுரம் ஷெரீப்நகரில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து, புதன்கிழமை மாலை அங்குச் சென்ற அலாவுதீன், தப்பியோட முயன்ற முகமது அலியைப் பிடிக்க முயன்றார்.
அப்போது கத்தியால், அலாவுதீனை குத்திவிட்டு முகமது அலி தப்பினார். காயமடைந்த அலாவுதீன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து யஸ்வந்தபுரா போலீஸார் வழக்கு பதிந்து, முகமது அலியைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.   

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/13/குற்றவாளியைப்-பிடிக்க-முயன்ற-காவலருக்கு-கத்திக்-குத்து-2789566.html
2789565 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு தெருக்கூத்து ஆராய்ச்சிக்கு நிதியுதவி DIN DIN Friday, October 13, 2017 07:10 AM +0530 யக்ஷகானா, தெருக்கூத்து சார்ந்த ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுவதற்காக கர்நாடக யக்ஷகானா தெருக்கூத்து அகாதெமி நிதியுதவி வழங்குகிறது.
இதுகுறித்து கர்நாடக யக்ஷகானா தெருக்கூத்து அகாதெமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கர்நாடக யக்ஷகானா தெருக்கூத்து அகாதெமி சார்பில் 2017-18-ஆம் ஆண்டுக்கான சிறப்புத் திட்டம் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு துணைத் திட்டத்தில் நாட்டுப்புறக்கலை சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.
கர்நாடக யக்ஷகானா மற்றும் தெருக்கூத்து போன்ற நாட்டுப்புறக் கலையின் தொன்மை, பன்மை, வளமை குறித்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள ஆர்வமுள்ள மாணவர்கள் அல்லது நாட்டுப்புறக் கலைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
6 மாதங்கள் நடக்க வேண்டிய ஆய்வுப் பணிக்கு நிதிஉதவி அளிக்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை அக்.31-ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். பழங்குடியினர் சமுதாயத்தினர் மட்டும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 45 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும். இதற்கான உறுதிச்சான்றிதழை அளிக்க வேண்டும்.
யக்ஷகானா மற்றும் தெருக்கூத்து குறித்து ஆய்வு மெற்கொள்ள விண்ணப்பிப்போர் கன்னடமொழி,மொழி அறிவியல், நாட்டுப்புறக்கலை, சமூகவியல், அரசியல் அறிவியல், பொருளாதாரம், மகளிர் ஆய்வு, வரலாறு, இலக்கியவரலாறு, மனிதகுல வரலாறு, இதழியல், நூலகவியல், தகவல்தொழில்நுட்பம், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பிரிவுகளில் முதுநிலைப் பட்டம் மற்றும் எம்பி அல்லது பிஎச்.டி படித்திருக்க வேண்டியது கட்டாயமாகும்.
நேர்காணல் மூலம் ஆராய்ச்சியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த ஆய்வுப் பணியில் ஈடுபட ரூ.90 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும். ஆய்வுப் பணியின் முடிவில் 100 பக்கங்களுக்கு குறையாமல் ஆய்வறிக்கையை அளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு பெங்களூரு,ஜே.சி.சாலை, கன்னட மாளிகையில் உள்ள கர்நாடக யக்ஷகானா தெருக்கூத்து அகாதெமியின் பதிவாளரை நேரில் அல்லது 080-22113146 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/13/தெருக்கூத்து-ஆராய்ச்சிக்கு-நிதியுதவி-2789565.html
2789564 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு "பாஜகவின் குற்றச்சாட்டுகள்  ஆதாரமற்றவை' DIN DIN Friday, October 13, 2017 07:08 AM +0530 எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பாஜக தெரிவித்து வருவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரு, கிருஷ்ணா அரசு இல்லத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
பெங்களூருக்கு அருகே பூபசந்திரா கிராமத்தில் மாநில அரசு ஏற்கெனவே கையகப்படுத்திய ரூ.300 கோடி மதிப்புள்ள நிலத்தை விடுவித்து உத்தரவிட்டுள்ளதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது அடிப்படை ஆதாரமற்றதாகும். உண்மைகளை மறைத்து, அரசியல் நோக்கத்தோடு குற்றம்சாட்டியுள்ளனர்.
 எனது அரசியல் செல்வாக்கு மற்றும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக பாஜகவினர் பொய்யை உண்மையை போல கூறி வருகிறார்கள். இந்த விவகாரத்தில் பாஜக பிற்படுத்தப்பட்டோர் அணித் தலைவர் பி.ஜே.புட்டசாமிக்கு எதிராக வழக்குத் தொடர்வது குறித்து ஆலோசித்து வருகிறேன்.
இதுபோன்ற குற்றச்சாட்டுகள் மூலம் பாஜக அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறது. அடிப்படை ஆதாரமற்ற இக் குற்றச்சாட்டை மக்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள். நான் முதல்வராகப் பதவியேற்றபிறகு எந்தவொரு நிலத்தையும் விடுவித்து உத்தரவிடவில்லை. நிலவிடுவிப்பு சம்பந்தமான மனுவில் நான்,'பரிசீலித்து, விவாதியுங்கள்' என்று எழுதியுள்ளதால் என்மீது பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ வசந்த்பங்காரா, நான்கு வருவாய் நிலங்களை ஒழுங்குமுறைப்படுத்துவதற்காக கொடுத்த கோரிக்கை மனுவில் 'பரிசீலித்து, விவாதியுங்கள்' என்று எழுதியிருந்தேன்.
என்னை சந்தித்து யாராவது மனு அளித்தால், அந்த சமயத்தில் என்னிடம் எல்லா தகவல்களும் இருக்காது என்பதால் அம்மனு மீது 'பரிசீலித்து, விவாதியுங்கள்' என்று அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் வழங்குவது இயல்பானது என்றார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/13/பாஜகவின்-குற்றச்சாட்டுகள்--ஆதாரமற்றவை-2789564.html
2789563 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு மகளிர் சுய உதவிக் குழு மூலம் பெங்களூரில் நடமாடும் உணவகம் DIN DIN Friday, October 13, 2017 07:08 AM +0530 மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பெங்களூரில் வரும் நவ.1-ஆம் தேதிமுதல் சோதனை முயற்சியாக நடமாடும் உணவகம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கர்நாடக மாநில மகளிர் வளர்ச்சிக் கழகத் தலைவர் பாரதி சங்கர் தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
 2017-18-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் மாவட்ட கூட்டமைப்பின் நிர்வாகத்தின்கீழ் நடமாடும் உணவகம் தொடங்கப்படும் என்று முதல்வர் சித்தராமையா அறிவித்திருந்தார். அதன்படி, சோதனைமுயற்சியாக பெங்களூரு நகரம் மற்றும் பெங்களூரு ஊரக மாவட்டங்களில் நவ.1-ஆம் தேதி முதல் நடமாடும் உணவகங்கள் தொடங்கப்படும்.
 இதுதொடர்பாக சுய உதவிக்குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான பயிற்சி முகாம் அக்.9-ஆம் தேதிமுதல் 3 நாள்கள் நடந்தது. மகளிரிடையே தொழில்முனைப்பாற்றலை ஊக்குவிக்கவும், உணவு தயாரிப்பு முறைகளை தொழில் வாய்ப்பாக மாற்றிக் கொள்ளும் திறனை வளர்த்தெடுக்கவும், சுகாதார பாதுகாப்புக்கான வழிமுறைகளை விளக்கவும் இம்முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்கு ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே,மாவட்ட சுய உதவிக்குழுக்களின்கூட்டமைப்புக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கி நடமாடும் உணவகம் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த நிதியில் வாகனம், சமையல், உணவு தானியங்கள் அனைத்தையும் வாங்கிக் கொள்வதோடு, நடமாடும் உணவகத்தைத் தொடர்ந்து நடத்துவதற்கான நடைமுறை செலவினங்களையும் கவனித்துக் கொள்ளவேண்டும்.
மாவட்டத் தலைநகரங்கள் மட்டுமல்லாது, வட்டத் தலைநகரங்களிலும் நடமாடும் உணவகம் திட்டம் தொடங்கப்படும். இதற்கு ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படுகிறது.  மாதந்தோறும் ரூ.18,500 வீதம் நான்கரை ஆண்டுகளில் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்கான தொடக்க விழா பெங்களூரு சுதந்திரப் பூங்காவில் நவ.19-ஆம் தேதி நடைபெறுகிறது. விழாவில் முதல்வர் சித்தராமையா பங்கேற்று திட்டத்தைத் தொடக்கிவைக்கிறார் என்றார்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/13/மகளிர்-சுய-உதவிக்-குழு-மூலம்-பெங்களூரில்-நடமாடும்-உணவகம்-2789563.html
2789562 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு சமச்சீர் சொத்து வரி: கர்நாடக சிறு தொழில் சங்கம் வலியுறுத்தல் DIN DIN Friday, October 13, 2017 07:08 AM +0530 ஊரகங்களில் தொழில் தொடங்குபவர்களிடமிருந்து சமச்சீர் சொத்து வரியை வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக சிறுதொழில் சங்கத்தின் தலைவர் ஆர்.ஹனுமந்தே கெளடா கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
மாநிலத்தில் சிறு தொழில் துறை வளர்ச்சி அடைவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. சிறு, குறு, நடுத்தரத் தொழில்சாலைகளில் 92 சத அளவில் அமைப்புசாரா தொழிலாகவே நடைபெற்று வருகிறது. இதனை அமைப்புசார்ந்த தொழில்சாலைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதல்வர் சித்தராமையாவின் தலைமையிலான அரசு, மகளிர் தொழில் முனைவோர்களுக்கு 10 சத மானியத்தில், 4 சத வட்டியில் ரூ. 2 கோடி வரை கடன் வழங்கி வருகிறது. தேசிய அளவில் வேறு எந்த மாநிலத்திலும் இது போன்று மகளிர் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதில்லை.
சிறு தொழில் துறையினரை ஊக்குவிக்கும் முதல்வர் சித்தராமையாவைப் பாராட்டி, கெளரவிக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (அக்.13) விஜயநகர் காசியா அரங்கத்தில் மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் அமைச்சர்கள் மோகனகுமாரி, எம்.கிருஷ்ணப்பா, எச்.ஆர்.ரேவண்ணா, பிரியாகிருஷ்ணா எம்.எல்.ஏ உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.  மேலும், நவ.23,24-ஆம் தேதிகளில் பெங்களூரு சர்வதேச மாநாட்டு அரங்கத்தில் கொள்முதல் செய்வோர் வளர்ச்சி கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில் 500 க்கும் மேற்பட்ட அரங்கங்கள் இடம்பெற உள்ளன. இதில் சிறுதொழில் துறையினர் தங்களின் உற்பத்தி பொருள்களைக் காட்சிப்படுத்தலாம். இதற்கான அரங்கம் இலவசமாக முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.  இதில் மாநில அளவிலான தொழில்துறையினர் பங்கேற்க வேண்டும் என்றார்.
பேட்டியின் போது கர்நாடக சிறுதொழில் சங்கத்தின் துணைத் தலைவர் பசவராஜ் ஜவளி, செயலாளர் உமாசங்கர், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, லதாகிரிஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/13/சமச்சீர்-சொத்து-வரி-கர்நாடக-சிறு-தொழில்-சங்கம்-வலியுறுத்தல்-2789562.html
2789058 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு நவ.2-முதல் தோட்டக்கலை பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் DIN DIN Thursday, October 12, 2017 09:51 AM +0530 பெங்களூரில் நவ.2-ஆம் தேதி முதல் தோட்டக்கலை பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தோட்டக்கலைத் துறை சார்பில் பெங்களூரில் நவ.2 முதல் 27-ஆம் தேதி வரை தோட்டக்கலை பயிற்சி முகாம் நடக்கவிருக்கிறது. இந்த பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் குறைந்தது ஐந்தாம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். கன்னடம் படிக்கவும், எழுதவும், பேசவும் தெரிந்திருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் சமுதாயத்தைச் சேர்ந்தோருக்கு 18 முதல் 35 வயதாகியிருக்க வேண்டும். இதர வகுப்பினர் 18 முதல்
33 வயதாகியிருக்கவேண்டும்.
இப்பயிற்சியில் சேர்ந்து படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பெங்களூரு,லால்பாக்பூங்காவில் உள்ள பயிற்சிமையத்தில் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநரிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டு, அங்கேயே அதை அளிக்கலாம். இதுதவிர, அக்.16 முதல் 25-ஆம் தேதிவரை w‌w‌w.‌h‌o‌r‌t‌i​c‌u‌l‌t‌u‌r‌e.‌k​a‌r.‌n‌i​c.‌i‌n  என்ற இணையதளத்தில் இருந்தும் விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விண்ணப்பங்களை அக்.25-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 080 - 26564538, 9071280906 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/12/நவ2-முதல்-தோட்டக்கலை-பயிற்சிக்கு-விண்ணப்பிக்கலாம்-2789058.html
2789055 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் DIN DIN Thursday, October 12, 2017 09:50 AM +0530 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கர்நாடக அரசு வெளியிட்ட உத்தரவு:
ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள பொறுப்புகள் வருமாறு(பழைய பொறுப்பு அடைப்புக்குறிக்குள்) :  பி.ரவிக்குமார்-கூடுதல் தலைமைச் செயலாளர், மின் துறை(கூடுதல் தலைமைச் செயலாளர், வனத் துறை), ரஜ்னீஷ்கோயல்-கூடுதல் தலைமைச் செயலாளர், இளைஞர் நலம்மற்றும் விளையாட்டுத் துறை (கூடுதல் தலைமைச்செயலாளர், மின் துறை).
 அஜய்சேத்-கூடுதல் தலைமைச் செயலாளர், குடும்பநலம் மற்றும் சுகாதாரத் துறை(கூடுதல் தலைமைச்செயலாளர், கல்வித்துறை), ஷாலினி ரஜ்னீஷ்-முதன்மைச்செயலாளர், கல்வித்துறை(முதன்மைச்செயலாளர், குடும்பநலம் மற்றும் சுகாதாரத்துறை), ஜி.சி.பிரகாஷ்-மேலாண் இயக்குநர், மைசூரு விற்பனை மற்றும் பன்னாட்டு நிறுவனம்(ஆணையர், மூங்கிவளர்ச்சித்துறை; இயக்குநர், சர்க்கரைத் துறை).
கே.எஸ்.மஞ்சுநாத்-மேலாண் இயக்குநர், கர்நாடக கைத்தறி வளர்ச்சிக் கழகம்(பணி காத்திருப்பு), ரித்விக் ரஞ்சனம் பாண்டே-நிதித்துறை(ஆணையர், வணிகவரித்துறை), ஸ்ரீகர்-ஆணையர், வணிகவரித்துறை(மேலாண் இயக்குநர், கர்நாடக குடிபானங்கள் கழகம்), ஜெகதீஷா-இயக்குநர், சுரங்கம் மற்றும் நில அமைப்பியல்துறை(தென்கன்னட மாவட்ட ஆட்சியர்), எஸ்.சசிகாந்த் செந்தில்-தென் கன்னட மாவட்ட ஆட்சியர்(இயக்குநர், சுரங்கம் மற்றும் நில அமைப்பியல்துறை) என்றுஅதில் கூறப்பட்டுள்ளது.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/12/ஐஏஎஸ்-அதிகாரிகள்-பணியிட-மாற்றம்-2789055.html
2789053 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு "சேதமடைந்த சாலைகளால் மட்டுமே விபத்து ஏற்படுவதில்லை DIN DIN Thursday, October 12, 2017 09:49 AM +0530 சேதமடைந்த சாலைகளால் மட்டுமே விபத்துகள் ஏற்படுவதில்லை என பெங்களூரு வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் தெரிவித்தார்.
பெங்களூரு அண்மையில் பெய்த பலத்த மழையால் சாலைகள் குண்டும்,குழியுமாகியுள்ளன. இதனால் சாலைகளில் விபத்துகள் அதிகம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. இது முற்றிலும் உண்மையல்ல. சாலை விபத்துகளில் உயிரிழப்பு ஏற்படுவது துக்கம் அளித்தாலும், விபத்துகள் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
மழை வெள்ளதால் ஏற்பட்டுள்ள குழிகளாலேயே விபத்துகள் ஏற்படுகின்றன என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. பெங்களூரு கடந்த 10 ஆண்டுகளில் நிகழாண்டு வரலாறு காணாத அளவில் மழை பெய்துள்ளது. மழை நின்றவுடன் சாலைகளில் ஏற்பட்டுள்ள குழிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும்.
முதல்வர் சித்தராமையா 15 நாள்களில் சாலைக் குழிகளை மூட உத்தரவிட்டுள்ளார். 3 மாதங்களுக்குள் சேதமடைந்த சாலைகள் அனைத்து சீரமைக்கப்படும் என்றார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/12/சேதமடைந்த-சாலைகளால்-மட்டுமே-விபத்து-ஏற்படுவதில்லை-2789053.html
2789051 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு பல்கலை. எம்.பி.ஏ. தேர்வு முடிவுகள் அறிவிப்பு DIN DIN Thursday, October 12, 2017 09:49 AM +0530 பெங்களூரு பல்கலைக்கழகம் நடத்திய எம்.பி.ஏ., எம்.பிஎட்., எம்.சி.ஏ. தேர்வுமுடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து பெங்களூரு பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு பல்கலைக்கழகம் சார்பில் கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட எம்பிஏ முதுநிலைப் பட்டப்படிப்பின் 4-ஆவது செமஸ்டர், எம்சிஏ முதுநிலைப் பட்டப்படிப்பின் 6-ஆவது செமஸ்டர் மற்றும் எம்பிஎட் முதுநிலைப் பட்டப் படிப்பின் 4-ஆவது செமஸ்டர் தேர்வு முடிவுகள்
அறிவிக்கப்பட்டுள்ளன.
சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்கள், பெங்களூரு பல்கலைக்கழகத்தின் தேர்வுமையத்தில் இருந்து தேர்வுமுடிவுகளை பெற்றுச் சென்று மாணவர்களுக்கு அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விடைத்தாள்களின் நகல் பெறவும், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கவும் அக்.31-ஆம் தேதி கடைசிநாளாகும்.
இதற்கான பட்டியலை தயார் செய்து கல்லூரிகள் பல்கலைக்கழகத்திற்கு அக்.25-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும். இந்த தேர்வு முடிவுகளை w‌w‌w.​b​a‌n‌g​a‌l‌o‌r‌e‌u‌n‌i‌v‌e‌r‌s‌i‌t‌y.​a​c.‌i‌n என்ற இணையதளத்தில் காணலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/12/பெங்களூரு-பல்கலை-எம்பிஏ-தேர்வு-முடிவுகள்-அறிவிப்பு-2789051.html
2789048 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு இன்று தில்லி செல்கிறார்: சித்தராமையா DIN DIN Thursday, October 12, 2017 09:48 AM +0530 ஒருநாள் பயணமாக முதல்வர் சித்தராமையா வியாழக்கிழமை தில்லி செல்கிறார்.
தில்லியில் வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர் ஆலோசனைக் கூட்டம் அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடக்கவிருக்கிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் சித்தராமையா, வியாழக்கிழமை காலை 10 மணிக்கு விமானம் மூலம் தில்லிக்குப் புறப்பட்டு செல்கிறார்.
இக் கூட்டத்தில் கலந்து கொண்டபிறகு, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானைச் சந்திக்கும் முதல்வர் சித்தராமையா, தனது ஒருநாள் பயணத்தை முடித்துக் கொண்டு பெங்களூரு திரும்புகிறார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/12/இன்று-தில்லி-செல்கிறார்-சித்தராமையா-2789048.html
2789046 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரில் பலத்த மழை: வாகன போக்குவரத்து பாதிப்பு DIN DIN Thursday, October 12, 2017 09:47 AM +0530 பெங்களூரில் பலத்த மழை பெய்து வருவதால், மாநகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிப்புக்குள்ளானது.
கடந்த சில நாள்களாக பெங்களூரு உள்பட கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், புதன்கிழமை மாலை 5 மணியளவில் தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் சாந்திநகர், சிவாஜிநகர், ராஜாஜிநகர், மல்லேஸ்வரம், பிடிஎம் லேஅவுட், எச்எஸ்ஆர் லேஅவுட், மெஜஸ்டிக், காந்திநகர், மடிவாளா, மகாலட்சுமிலேஅவுட், கோரமங்களா, வில்சன்கார்டன், மாகடிசாலை, பசவவேஸ்வரநகர், எச்.ஏ.எல் சாலை உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் சாலைகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.
சாலைகளில் தண்ணீர் தேங்கின. இதனால், வேலைமுடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர். சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன போக்குவரத்து தடைபட்டது. பெரும்பாலான சாலைகளில் வாகனங்கள் மணிக்கணக்கில் காத்திருந்து ஊர்ந்து சென்றன.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/12/பெங்களூரில்-பலத்த-மழை-வாகன-போக்குவரத்து-பாதிப்பு-2789046.html
2789044 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு "கல்வி கற்பதற்கு பசி தடையாக இருக்கக் கூடாது' DIN DIN Thursday, October 12, 2017 09:47 AM +0530 கல்வி கற்பதற்கு பசி ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று சிஸ்கோ நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் வி.சி.கோபாலரத்னம் தெரிவித்தார்.
பெங்களூரில் புதன்கிழமை அக்ஷயபாத்திரா அறக்கட்டளையுடன் எண்ம சமையலறை திட்டத்தைத் தொடக்கிவைத்து அவர் பேசியது:
இந்தியாவில் பசியால் பள்ளிக்கு செல்லாமல் வேலைக்குச் செல்லும் சிறுவர்களின் எண்ணிக்கை மக்கள்தொகையில் 30 சதமாக உள்ளது. எனவே, இதை சரிசெய்யும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. அக்ஷயபாத்திரா தொண்டு நிறுவனம், தேசிய அளவில் 12 மாநிலங்களில் 13,958 அரசு பள்ளிகளில் 16 லட்சத்திற்கு அதிகமான மாணவர்களுக்கு மதிய உணவை வழங்கி வருகிறது.
அந்த தொண்டு நிறுவனத்துடன் கடந்த 10 ஆண்டுகளாக இணைந்து பள்ளிக்கு செல்லும் ஏழை மாணவர்களுக்கு உணவு வழங்குவதில் உதவி செய்து வருகிறோம். பெங்களூரு உள்ளிட்ட 7 சமையறைகளில் முதல் கட்டமாக எண்ம சமையலறை திட்டத்தைத் தொடங்கியுள்ளோம்.
இதன்மூலம் மாணவர்களுக்கு சிறந்த மதிய உணவை சமைத்து வழங்க முடியும். கல்வி கற்பதற்கு பசி ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதே எங்கள் நோக்கம். பேரிடர் காலத்தில் பாதிக்கப்படும் மக்களுக்கு உணவு வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளோம்.
2020-ஆம் ஆண்டுகளுக்கும் 50 லட்சம் அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க வேண்டும் என்பதே அக்ஷயபாத்திராவின் இலக்காக உள்ளது. அதற்கு தேவையான உதவிகளை செய்வதை பெருமையாக கருதுகிறோம் என்றார்.
பேட்டியின் போது, அக்ஷயபாத்திரா அறக்கட்டளையின் மூத்த செயல் அதிகாரி ஸ்ரீதர்வெங்கட், சிஸ்கோ பெரு நிறுவனங்களின் விவகாரத் துறை மூத்த துணைத் தலைவர் டேயிஹு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/12/கல்வி-கற்பதற்கு-பசி-தடையாக-இருக்கக்-கூடாது-2789044.html
2789042 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு-பெலகாவி இடையே சிறப்பு ரயில் இயக்கம் DIN DIN Thursday, October 12, 2017 09:47 AM +0530 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெங்களூரு(யஷ்வந்த்பூர்)- பெலகாவி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டநெரிசலை குறைப்பதற்காக பெங்களூரில்(யஷ்வந்தபூர்) இருந்து பெலகாவிக்கு சிறப்பு தத்கல் விரைவுரயில் இயக்கப்படுகிறது. ரயில் எண்-06581-பெங்களூரு(யஷ்வந்த்பூர்)-பெலகாவி சிறப்பு தத்கல் சிறப்பு விரைவு ரயில் அக்.17-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 8.15 மணிக்கு பெங்களூரு-யஷ்வந்த்பூர் ரயில்நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அக்.18-ஆம் தேதி காலை 8.10 மணிக்கு பெலகாவி ரயில்நிலையத்தைச் சென்றடைகிறது.
மறு மார்க்கத்தில், ரயில் எண்-06582-பெலகாவி-பெங்களூரு(யஷ்வந்த்பூர்)சிறப்பு தத்கல் சிறப்பு விரைவுரயில் அக்.22-ஆம்தேதி(ஞாயிற்றுக்கிழமை) இரவு 5.20 மணிக்கு பெலகாவி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அக்.23-ஆம் தேதி காலை 5 மணிக்கு பெங்களூரு (யஷ்வந்தபூர்) ரயில்நிலையம் வந்தடைகிறது.
இந்த ரயில் இரு மார்க்கத்திலும் தும்கூரு, அரசிகெரே, பீரூர், தாவணகெரே, ஹரிஹரா, ஹாவேரி, ஹுப்பள்ளி, தாட்வாட், லோண்டா ஆகிய ரயில்நிலையங்களில் நின்று செல்லும். ரயிலில் மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட 2 பெட்டிகள், இரண்டாம் வகுப்பு படுக்கைவசதி கொண்ட 19 பெட்டிகள், இரண்டாம் வகுப்பு பொதுவகுப்பு 2 பெட்டிகள் இடம்பெற்றிருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/12/பெங்களூரு-பெலகாவி-இடையே-சிறப்பு-ரயில்-இயக்கம்-2789042.html
2789041 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு சிற்பக் கலை கண்காட்சி: விண்ணப்பிக்க கால அவகாசம் DIN DIN Thursday, October 12, 2017 09:46 AM +0530 பெங்களூரில் நடக்கவிருக்கும் சிற்பக்கலை கண்காட்சியில் பங்கேற்க விரும்பும் சிற்பிகள் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கர்நாடக சிற்பக்கலை அகாதெமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கர்நாடக சிற்பக்கலை அகாதெமி சார்பில் ஆண்டுதோறும் மரபு மற்றும் தற்கால சிற்பக்கலை கண்காட்சியை நடத்திவருகிறது. இந்த கண்காட்சியில் சிற்பிகளின் சிற்பக்கலைகள் காட்சிக்கு வைக்கப்படுவதுவழக்கம். இந்த கண்காட்சியில் பங்கேற்று தங்கள் சிற்பங்களை காட்சிப்படுத்த விரும்பும் சிற்பிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கண்காட்சியில் இடம்பெறக்கூடிய சிற்பம், உலோகம், மரம்,கல், கலவைகளான 2 அடி உயரம் கொண்டதாக இருக்க வேண்டும். கண்காட்சியில் பங்கேற்கும் சிறந்த 6 சிற்பங்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் பரிசு வழங்கப்படும்.
இக்கண்காட்சியில் பங்கேற்க விரும்பும் சிற்பி கர்நாடகத்தைச் சேர்ந்தவராகவோ, 5 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடகத்தில் குடியேறியவராகவோ, 18 முதல் 45 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
சிற்பங்கள் குறித்த விவரங்களுடன் விண்ணப்பங்களை அக்.10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. தற்போது விண்ணப்பிக்கும் காலக்கெடு அக்.23-ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை பெங்களூரு, ஜே.சி.சாலை, கன்னடமாளிகையில் அமைந்துள்ள அகாதெமியின் அலுவலகத்தில் நேரடியாக வழங்க வேண்டும். நுழைவுக்கட்டணமாக ரூ.300வசூலிக்கப்படும். விண்ணப்பப்படிவங்களை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் அல்லது ‌w‌w‌w.‌k​a‌r‌n​a‌t​a‌k​a‌s‌h‌i‌l‌p​a‌k​a‌l​a​a‌v​a‌d‌e‌m‌y.‌o‌r‌g என்ற இணையதளத்தில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 080-22278725 என்ற தொலைபேசியை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/12/சிற்பக்-கலை-கண்காட்சி-விண்ணப்பிக்க-கால-அவகாசம்-2789041.html
2789037 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு ஜன.1-முதல் மாவட்ட தலைநகரங்களில் "இந்திரா' உணவகம்: கர்நாடக அமைச்சரவையில் முடிவு DIN DIN Thursday, October 12, 2017 09:46 AM +0530 கர்நாடகத்தின் அனைத்து மாவட்டம்,  வட்டத் தலைநகரங்களில் ஜன.1-ஆம் தேதி முதல் இந்திரா உணவகத்தைத் தொடங்க அந்த மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
 பெங்களூரு விதான செளதாவில் புதன்கிழமை முதல்வர் சித்தராமையா தலைமையில்  நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டத் துறை அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா,  செய்தியாளர்களிடம் கூறியது: பொருளாதாரத்தில் நலிவுற்ற,   உழைக்கும் மக்களுக்கு மலிவு விலையில் உணவு வழங்குவதற்காக பெங்களூரு மாநகராட்சியில் தொடங்கப்பட்ட இந்திரா உணவகங்கள்,  ஜன.1-ஆம் தேதி முதல் மாநிலத்தின் அனைத்து மாவட்டம்,   வட்டத் தலைநகரங்கள் மற்றும் ஒரு லட்சத்துக்கும் மிகுதியான எண்ணிக்கையில் மக்கள்தொகை இருக்கும் இடங்களில் தொடங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நவம்பர் இறுதிக்குள் இந்திரா உணவகம் அமைப்பதற்கான இடத்தைக் கண்டறிந்து,  டிசம்பர் இறுதிக்குள் அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை நிறுவும் பணியை முடிக்க வேண்டும் என்று அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மருத்துவமனை,  பேருந்து நிலையம்,  ரயில் நிலையம் அருகில் இந்திரா உணவகங்கள் தொடங்க வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் 171 நகரங்களில் உள்ள 246 இடங்களில் வரும் ஜன.1-ஆம் தேதி முதல் இந்திரா உணவகங்கள் செயல்படத் தொடங்கும்.  இதற்காக நாளொன்றுக்கு ரூ.29 லட்சம் வீதம் மாதந்தோறும் ரூ.9 கோடி நிதியை விடுவிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சமையல் எரிவாயுத் திட்டம்
பெலகாவியில் நவ.13-ஆம் தேதி முதல் 10 நாள்களுக்கு சுவர்ண செளதாவில் சட்டப்பேரவை குளிர்காலக் கூட்டத்தொடர் நடத்த அமைச்சரவை அனுமதித்துள்ளது.
மத்திய அரசின் சுடரொளித் திட்டத்தின்(உஜ்வலா) வரம்புக்குள் வரும் பயனாளிகளுக்கு முதல்வரின் எரிவாயுத் திட்டத்தின்கீழ் ரூ.4040 செலவில் இரண்டு அடுப்புகள் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  மாநிலத்தில் 28 லட்சம் பயனாளி குடும்பங்களுக்கு இந்தத் திட்டத்தின்கீழ் அடுப்புகள் வழங்கப்படும் என்றாலும்,  முதல்கட்டமாக அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 10 லட்சம் பேருக்கு அடுப்புகள் அளிக்கப்படும்.  இந்தத் திட்டத்துக்கு ரூ.1137கோடி விடுவிக்க அமைச்சரவை அனுமதி
அளித்துள்ளது.
இதேபோல, மண்ணெண்ணெயைப் பயன்படுத்திவரும் குடும்பங்களுக்கு இலவசமாக எல்.இ.டி. விளக்குகளை வழங்கவும் அமைச்சரவை சம்மதித்துள்ளது.  சுகாதார பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் பழைய 95 அதிநவீன உயிர் காப்புக் கருவிகள், 276 அடிப்படை உயிர் காப்புக் கருவிகள் கொண்ட ஆம்புலன்ஸ் வாகனங்களை மாற்றி புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களை கொள்முதல் செய்ய ரூ.61.78 கோடி வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மாணவர்களுக்கு உதவி
அரசு,  அரசு மானியம் பெறும்,  தனியார் தொழில் பயிற்சி மையங்களில் பயின்றுவரும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு மைசூரு விற்பனை மற்றும் பன்னாட்டு நிறுவனத்தின் மூலம் எழுதுபொருள்கள் கொள்முதல் செய்து விநியோகிக்க நிர்வாக ரீதியான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் உள்ள 46 அரசு தொழில் பயிற்சி மையங்களை தரம் உயர்த்த ரூ.20.27 கோடி செலவில் 26 வெவ்வேறு வகையான கருவிகளைக் கொள்முதல் செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.  அதேபோல, இம் மையங்களில் ரூ.16.30கோடி செலவில் 127 வெவ்வேறு வகையான மின்சார மற்றும் மின்னணுக் கருவிகளைக் கொள்முதல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/12/ஜன1-முதல்-மாவட்ட-தலைநகரங்களில்-இந்திரா-உணவகம்-கர்நாடக-அமைச்சரவையில்-முடிவு-2789037.html
2789035 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு "ஒப்பந்ததாரர்களுக்கு அழுத்தம் தரக் கூடாது' DIN DIN Thursday, October 12, 2017 09:45 AM +0530 ஒப்பந்ததாரர்கள் மீது அழுத்தம் தருவதை அரசியல்வாதிகள் கைவிட வேண்டும் என்றார் கர்நாடக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஜெகதீஷ்ஷெட்டர்.
பெங்களூரு அரண்மனைத் திடலில் புதன்கிழமை மாநில ஒப்பந்ததாரர் சங்க மாநாட்டின் நிறைவு விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியது:
தேசிய அளவில் அடிப்படை கட்டுமானப் பணிகளில் தூணாக விளங்குபவர்கள் ஒப்பந்ததாரர்கள். அவர்கள் மீது அரசியல்வாதிகள் அழுத்தம் தருவதால், பல நேரங்களில் கட்டுமானப் பணிகள் தரமற்றதாகிவிடுகின்றன. இதற்கு ஒப்பந்ததார்களை மட்டுமே குறைகூறுவதை ஏற்க முடியாது.
ஆட்சியில், அதிகாரத்தில் இருப்பவர்கள் ஒப்பந்ததாரர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். அதன் மூலம் மட்டுமே முறைகேடு இல்லாத கட்டுமானப் பணிகள் செய்வது சாத்தியமாகும் என்றார்.
வீட்டு வசதித் துறை அமைச்சர் எம்.கிருஷ்ணப்பா பேசியது: ஒப்பந்ததாரர் சங்க மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானங்களை பரிசீலித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். ஒப்பந்ததாரர்கள் பல்வேறு சவால்களையும், பிரச்னைகளை எதிர்கொள்வதை உணர்ந்தவன் என்ற முறையில் அவர்களின் பிரச்னைகளை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் சித்தராமையாவிடம் வலியுறுத்துவேன் என்றார்.
நிகழ்ச்சியில் மேயர் சம்பத்ராஜ், மாநில ஒப்பந்ததாரர் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணா ரெட்டி, துணைத் தலைவர் ரவீந்திரா, செயலாளர் கெம்பண்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/12/ஒப்பந்ததாரர்களுக்கு-அழுத்தம்-தரக்-கூடாது-2789035.html
2789033 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு கொலை வழக்கில் இளைஞர் கைது DIN DIN Thursday, October 12, 2017 09:45 AM +0530 பொறியாளரைக் கொலை செய்த வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்டார்.
ஒடிஸா மாநில புவனேசுவரத்தைச் சேர்ந்த மென் பொறியாளர் பிரணாய் மிஸ்ரா (25). இவர் பெங்களூரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த அக்.9-ஆம் தேதி மடிவாளா அருகே உள்ள தாவரகெரேவில் மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்டது தொடர்பாக பிரணாய் மிஸ்ராவிற்கும், 2 இளைஞர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையயடுத்து, தகராறில் ஈடுபட்டவர்கள் பிரணாய் மிஸ்ராவை பின்தொடர்ந்து சென்று கத்தியால் குத்தினர். இதில் பலத்த காயமடைந்த மிஸ்ரா நிகழ்விடத்திலே உயிரிழந்தார்.
இதுதொடர்பாக வழக்குப் பதிந்த மடிவாளா போலீஸார், கொலையாளிகளைத் தேடி வந்தனர். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை ஹுஸ்கூர் கேட் அருகே நண்பருக்காக காத்திருந்த கொலையில் தொடர்புடைய கார்த்திக்கை போலீஸார் பிடிக்க முயன்றனர்.
அப்போது, போலீஸாரை நோக்கி கல்களை வீசி தாக்குதல் நடத்திய கார்த்திக், அங்கிருந்த தப்பிக்க முயன்றார். இதையடுத்து, அவரை காலில் துப்பாக்கியால் சுட்டு போலீஸார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய அருணை போலீஸார் தேடி வருகின்றனர்.   

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/12/கொலை-வழக்கில்-இளைஞர்-கைது-2789033.html
2789031 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு இரு சக்கர வாகனங்கள் ஏலம் DIN DIN Thursday, October 12, 2017 09:44 AM +0530 கோரமங்களா காவல் நிலையத்தில் வரும் 15-ஆம் தேதி பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது.
இதுகுறித்து பெங்களூரு மாநகரக் காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெங்களூரு கோரமங்களா காவல் நிலையத்தில் அக். 15-ஆம் தேதி காலை 10 மணி அளவில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, வாரிசுதாரர்கள் இல்லாத இரு சக்கர வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது. ஆர்வம் உள்ளவர்கள் வாகன ஏலத்தில் பங்கு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 080 22942570 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/12/இரு-சக்கர-வாகனங்கள்-ஏலம்-2789031.html
2789030 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு லாரி மோதியதில் இளைஞர் சாவு DIN DIN Thursday, October 12, 2017 09:44 AM +0530 கெங்கேரி போக்குவரத்து காவல் சரகத்தில் டிப்பர் லாரி மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
பெங்களூரு பனசங்கரியைச் சேர்ந்தவர் தேஜஸ்விகெளடா (22). இவர் புதன்கிழமை காலை  7.15 மணியளவில் உத்தரஹள்ளி பிரதானசாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
 நிர்மலாகிரி மருத்துவமனை அருகே உள்ள வேகத்தடையில் கட்டுப்பாட்டை இழந்த தேஜஸ்விகெளடா, மோட்டார் சைக்கிளிருந்து கீழே விழுந்தார். அப்போது, பின்புறத்திலிருந்து வேகமாக வந்த டிப்பர் லாரி, அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து கெங்கேரி போக்குவரத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/12/லாரி-மோதியதில்-இளைஞர்-சாவு-2789030.html
2789029 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு கோபுரத்திலிருந்து கீழே விழுந்து மின் வாரிய ஊழியர் சாவு DIN DIN Thursday, October 12, 2017 09:44 AM +0530 பணியின் போது கால் தவறி கீழே விழுந்து மின் வாரிய ஊழியர் உயிரிழந்தார்.
ராம்நகர் மாவட்டம், பரவதாபுராவைச் சேர்ந்தவர் நாராயணசாமி (25). இவர் பெங்களூரு ஊரகம் நெலமங்களாவில் மின் வாரிய ஊழியராகப் பணியாற்றி வந்தார். செவ்வாய்க்கிழமை ஹரேபொம்மனஹள்ளி ஏரி அருகே உள்ள உயரழுத்த மின் கோபுரத்தில் பழுதை நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாராம்.
அப்போது, கால் தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த நாராயணசாமி நிகழ்விடத்திலே உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீஸார், நாராயணசாமியில் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுமதித்தனர். இதுகுறித்து நெலமங்களா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/12/கோபுரத்திலிருந்து-கீழே-விழுந்து-மின்-வாரிய-ஊழியர்-சாவு-2789029.html
2789027 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு கள்ள ரூபாய் நோட்டுகள் விநியோகம்: ஒருவர் கைது DIN DIN Thursday, October 12, 2017 09:43 AM +0530 பெங்களூரில் கள்ள ரூபாய் நோட்டுகளை விநியோகம் செய்ய முயன்றவரை போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூரு கமர்ஷியல்சாலை தொப்ப முதலியார் தெருவில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் காரில் வந்த  ஒருவர் கள்ள ரூபாய் நோட்டுகளை மாற்ற முயற்சிப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் ரூ. 2 ஆயிரம்,
500 ரூபாய் மதிப்பு கொண்ட கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற பாஸ்கரை (35)  கைது செய்தனர்.
அவரிடமிருந்து ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள 37 கள்ள ரூபாய் நோட்டுகள், ரூ. 500  மதிப்புள்ள 19 நோட்டுகள், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பாஸ்கரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/12/கள்ள-ரூபாய்-நோட்டுகள்-விநியோகம்-ஒருவர்-கைது-2789027.html
2789025 அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு நேரு கோளரங்கில் அறிவியல் பயிலரங்கம் DIN DIN Thursday, October 12, 2017 09:43 AM +0530 பெங்ளூரில் உள்ள ஜவாஹர்லால் நேரு கோளரங்கத்தில் மாணவர்களுக்கு அறிவியல் பயிலரங்கம் வெள்ளிக்கிழமை நடக்கவிருக்கிறது.
இதுகுறித்து கோளரங்கம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு, ஹைகிரவுண்ட்ஸ், டி.செளடையா சாலையில் அமைந்துள்ள ஜவாஹர்லால் நேரு கோளரங்கத்தில் அக்.13-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணி முதல் மாலை 3.30 மணிவரை மாணவர்களுக்கான அறிவியல் பயிலரங்கம் நடக்கவிருக்கிறது. 40 மாணவர்கள் மட்டும் அனுமதிக்கப்படும் இந்த பயிலரங்கத்தில் 8 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் யாரும் கலந்துகொள்ளலாம்.  இந்த பயிலரங்கில் காப்புவிதி குறித்துபயிற்சி அளிக்கப்படும். முதலில் வருவோருக்கு முதலில் வாய்ப்பு என்ற அடிப்படையில் பங்கேற்பு வாய்ப்பு அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு w‌w‌w.‌t​a‌r​a‌l​a‌y​a.‌o‌r‌g என்ற இணையதளம் அல்லது 080-22379725 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/12/நேரு-கோளரங்கில்-அறிவியல்-பயிலரங்கம்-2789025.html