Dinamani - திண்டுக்கல் - http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2869254 மதுரை திண்டுக்கல் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுத்துத் தருவதாக  பெண்ணிடம் ரூ.20 ஆயிரம் திருட்டு DIN DIN Saturday, February 24, 2018 02:22 AM +0530 வடமதுரையில் ஏடிஎம் அட்டை மூலம் பணம் எடுக்கச் சென்ற பெண்ணிடம் ரூ. 20ஆயிரத்தை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார். 
 திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அடுத்துள்ள காணப்பாடியைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மனைவி தனம் (38), தனியார் ஆலையில் கூலித் தொழிலாளியாக உள்ளார். இவர், கடந்த செவ்வாய்க்கிழமை வடமதுரை ரயில் நிலைய சாலையில்  உள்ள வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் எடுப்பதற்காகச் சென்றுள்ளார்.  
ஏடிஎம் அட்டை மூலம் இயந்திரத்தில் பணம் எடுக்கத் தெரியாததால், அங்கு நின்றிருந்த  ஒருவரிடம் ரூ.500 எடுத்து தரும்படி கூறினாராம்.  ஆனால், சிறிது நேரம் முயற்சித்த அந்த நபர், பின்னர் பணம் வரவில்லை எனக் கூறி ஏடிஎம் அட்டையை தனத்திடம் திருப்பி கொடுத்துவிட்டு சென்றுவிட்டாராம். அதையடுத்து, இவர் பணம் எடுப்பதற்காக கணக்கு புத்தகத்துடன் வங்கிக் கிளைக்கு வியாழக்கிழமை சென்றுள்ளார். அப்போது, அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 20 ஆயிரம் ஏடிஎம் அட்டை மூலம் எடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. 
இதனால் அதிர்ச்சி அடைந்த தனம், வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
  அதன்பேரில், ஏடிஎம் இயந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமரா பதிவுகளை ஆய்வு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/24/ஏடிஎம்-இயந்திரத்தில்-பணம்-எடுத்துத்-தருவதாக-பெண்ணிடம்-ரூ20-ஆயிரம்-திருட்டு-2869254.html
2869253 மதுரை திண்டுக்கல் பழனி அருகே கட்டி முடிக்கப்பட்டு 8 மாதங்களாகியும் திறக்கப்படாத புதிய பள்ளி கட்டடம் ந. அங்குபாபு DIN Saturday, February 24, 2018 02:22 AM +0530 பழனியை அடுத்துள்ள பெரிச்சிபாளையத்தில் ரூ.1.60 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய உயர்நிலைப் பள்ளிக் கட்டடத்தை, முதல்வர்  காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்து 8 மாதங்களாகியும், இன்னும் மாணவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை.
     திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த கோட்டத்துறை ஊராட்சிக்கு உள்பட்ட பெரிச்சிபாளையத்தில், ஆரம்பப் பள்ளி, தொடக்கப் பள்ளி இரண்டும் ஒரே இடத்தில் செயல்பட்டு வந்தன. இது, சில ஆண்டுகளுக்கு முன் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
      இந்த ஊரைச் சுற்றிலும் அதிக அளவில் விவசாயக் குடும்பங்களே இருப்பதாலும், இப்பள்ளியில் தரமான கல்வி வழங்கப்படுவதாலும், மாணவ, மாணவியர் சேர்க்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இங்கு தற்போது, 6ஆம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சுமார் 150 மாணவ, மாணவியர் பயில்கின்றனர். 
     இந்நிலையில், சுமார் 100 ஆண்டுகள் பழமையான இப்பள்ளிக் கட்டடம் சேதமடைந்து, மழைக் காலத்தில் ஒழுகுவதால் புதிய கட்டடம் கட்டித் தரவேண்டும்  என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதையடுத்து, கல்வித் துறை சார்பில் ரூ. 1.65 கோடி மதிப்பீட்டில் பள்ளிக்கான புதிய கட்டடம் கட்டித் தரப்பட்டது.      
ஆனால், பள்ளியைச் சுற்றி மூன்று புறங்களில் சுற்றுச் சுவர் இல்லை. குடிநீர் வசதியும் ஏற்படுத்தப்படவில்லை. இந்நிலையில், கடந்தாண்டு ஜூன் 24 ஆம் தேதி முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இப்பள்ளிக் கட்டடத்தை காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார். 
    புதிய கட்டடம் திறந்துவைக்கப்பட்டு 8 மாதங்களாகியும், இன்னும் மாணவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாததால், வழக்கம்போல் மரத்தடியில் வகுப்புகள் தொடர்கின்றன. மேலும், புதிய கட்டடத்துக்கு மாணவர்கள் அமர்வதற்கான இருக்கைகள் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் பொருள்கள் துருப்பிடித்து வீணாகி வருகின்றன. புதிய கட்டடம் மக்காச்சோளம் காயவைக்கப் பயன்படுத்தப்படுகிறது. கட்டடத்தின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டு சேதமடைந்துள்ளன.
     இது குறித்து பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகப் பொருளாளரும், கோட்டத்துறை ஊராட்சி முன்னாள் தலைவருமான சாமிதுரை கூறியது: பொதுமக்களின் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு பள்ளிக்காக புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், பொதுப்பணித் துறை அலட்சியப்போக்கால் புதிய கட்டடம் இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. ஆரம்பத்தில் மின் இணைப்புக்கு தாமதமானது. தற்போது, தண்ணீரை மேலேற்றுவதில் சிக்கல் உள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
    இது தொடர்பாக மாவட்டக் கல்வி அலுவலருக்கும் பலமுறை தெரிவித்து விட்டோம். எனவே, புதிய கட்டடத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்தார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/24/பழனி-அருகே-கட்டி-முடிக்கப்பட்டு-8-மாதங்களாகியும்-திறக்கப்படாத-புதிய-பள்ளி-கட்டடம்-2869253.html
2869252 மதுரை திண்டுக்கல் கொடைக்கானலில் திடக்கழிவு மேலாண்மை கருத்தரங்கு DIN DIN Saturday, February 24, 2018 02:22 AM +0530 கொடைக்கானல் பகுதிகளில் உள்ள விடுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பற்றிய பயிற்சி பட்டறை கருத்தரங்கு திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்றது.
பாம்பார்புரத்தில் உள்ள தனியார் விடுதியில் தொடங்கிய இந்நிகழ்ச்சிக்கு கொடைக்கானல் உணவகம் மற்றும் விடுதி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஜெயதிலகர் தலைமை வகித்தார். கொடைக்கானல் இண்டர்நேஷனல் பள்ளி முதல்வர் கோரி, தனியார் விடுதியைச் சேர்ந்த பிரியங்கா ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்துப் பேசினர். நிகழ்ச்சியில் கொடைக்கானலைச் சேர்ந்த 30 உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். 
அவர்களுக்கு நிலையான நீடித்த திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் திட்டமிட்டு செயல்படுத்துதல் தொடர்பான செயல்முறை விளக்கங்களை திடக்கழிவு மேலாண்மை துறை ஒருங்கிணைப்பாளர் ராஜமாணிக்கம் மற்றும் அத்துறையாச் சேர்ந்த கிளாரன்ஸ் மெலோனி, லட்சுமி, சதீஷ்குமார் மற்றும் ராஜாமுகமது ஆகியோர் செய்து காட்டினர். இப்பயிற்சி பட்டறை செவ்வாய்க்கிழமையும் நடைபெற்றது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/24/கொடைக்கானலில்-திடக்கழிவு-மேலாண்மை-கருத்தரங்கு-2869252.html
2869251 மதுரை திண்டுக்கல் கொடைக்கானலில் வேளாண்  விரிவாக்க திட்ட ஆலோசனைக் கூட்டம் DIN DIN Saturday, February 24, 2018 02:21 AM +0530 கொடைக்கானலில் வேளாண் விரிவாக்க திட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மாநில வேளாண் விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டம், 2018-19-ம் ஆண்டிற்கான மாநில அளவிலான கலந்தாய்வு மற்றும் செயல்திட்ட பணிமனை நிகழ்ச்சி கொடைக்கானலிலுள்ள தனியார் ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வேளாண்மை துணை இயக்குனர் மற்றும் அட்மா திட்டத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சண்முகம் வரவேற்றார் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் நிகழ்ச்சியை தொடக்கி வைத்துப் பேசியதாவது: 
  திண்டுக்கல் மாவட்டத்தில் அட்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது மேலும் விவசாய நிலங்களில் தூர்வாரும் வண்டல் மண் எடுத்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு எப்படி இந்த திட்டங்கள் தனியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிதியாண்டில் தமிழக அரசின் முக்கிய திட்டங்களான பிரதம மந்திரி காப்பீட்டுத் திட்டம், கூட்டுப் பண்ணையம்,நீடித்த நிலையான கரும்பு சாகுபடி,மானவாரி தரிசு நில மேம்பாட்டுத் திட்டம், நூண்ணீர் பாசனம் போன்ற முக்கிய திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்கிறது என்றார்.
இந் நிகழ்ச்சியில் மாநில வேளாண் மேலாண்மை மற்றும் விரிவாக்க பயிற்சி மைய இயக்குநர் சங்கரலிங்கம், வேளாண்மை இணை இயக்குநர் சேகர் மற்றும் தமிழகத்திலுள்ள அனைத்து துணை இயக்குனர்கள்,உதவி இயக்குனர்கள்,வேளாண் அதிகாரிகள் மற்றும் அட்மா திட்ட மேலாளர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த கலந்தாய்வு மற்றும் செயல்திட்ட பணிமனை நிகழ்ச்சியானது தொடர்ந்து 3-நாள்கள் நடைபெறுகிறது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/24/கொடைக்கானலில்-வேளாண்-விரிவாக்க-திட்ட-ஆலோசனைக்-கூட்டம்-2869251.html
2869249 மதுரை திண்டுக்கல் பொதுத் தேர்வு மைய கண்காணிப்பு பணியில் 1,259 அலுவலர்கள் DIN DIN Saturday, February 24, 2018 02:21 AM +0530 திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு பொதுத் தேர்வு நடைபெறும் 73 தேர்வு மையங்களில் 1,259 அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தெரிவித்தார்.
      மார்ச் 1 முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெறுகிறது. அதேபோல், மார்ச் 7 முதல் ஏப்ரல் 16ஆம் தேதி வரை 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், மார்ச் 15 முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வும் நடைபெற உள்ளது. 
     இதையொட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுத் தேர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் வேலு, முதன்மைக் கல்வி அலுவலர் ச. கோபிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
    கூட்டத்தில் ஆட்சியர் தெரிவித்ததாவது:  12 ஆம் வகுப்பு தேர்வினை திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 11,809 மாணவர்கள், 10,325 மாணவிகள் என மொத்தம் 22,134 பேர் எழுதுகின்றனர். 11ஆம் வகுப்பு தேர்வினை 11,854 மாணவர்கள், 10,907 மாணவிகள் என மொத்தம் 22,761 பேரும், பத்தாம் வகுப்பு தேர்வினை 13,267 மாணவர்கள், 12,535 மாணவிகள் என மொத்தம் 25,802 பேரும் எழுதுகின்றனர்.
    திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் 41 தேர்வு மையங்களும், பழனி கல்வி மாவட்டத்தில் 32 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
    மாவட்ட வருவாய் அலுவலர், சார்-ஆட்சியர், கோட்டாட்சியர்கள் தலைமையின் கீழ் 300 பறக்கும்படை அலுவலர்களும், 1,156 அறை கண்காணிப்பாளர்கள், 77 துறை அலுவலர்கள், கூடுதல் அலுவலர்களும் மற்றும் 26 விடைத்தாள் காப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், தேர்வுகளில் எவ்வித ஒழுங்கீனச் செயல்கள் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
    மேலும், தேர்வு நடைபெறும் மையங்களுக்கு முழு பாதுகாப்பு வசதி ஏற்படுத்தவும், வினாத்தாள் கட்டுக் காப்பு மையங்களுக்கு 24 மணி நேர ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
    தேர்வு எழுதும் மாணவர்கள், குறித்த நேரத்தில் மையங்களுக்குச் செல்லும் வகையில் பேருந்து வசதி ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தேர்வாளர்கள் செல்லிடப்பேசி, அதிநவீன கை கடிகாரம், கால்குலேட்டர் போன்ற உபகரணங்களை தேர்வு மையங்களுக்குள் எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆர். சத்திவேல், திண்டுக்கல் மற்றும் பழனி கல்வி மாவட்ட அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/24/பொதுத்-தேர்வு-மைய-கண்காணிப்பு-பணியில்-1259-அலுவலர்கள்-2869249.html
2868509 மதுரை திண்டுக்கல் பழனி அருகே ரயில்வே கடவுப் பாதையில் நின்ற வேன்: ரயிலை நிறுத்தியதால் குழந்தைகள் உயிர் தப்பினர் DIN DIN Friday, February 23, 2018 10:12 AM +0530 பழனியருகே ஆயக்குடி பொன்னாபுரத்தில் ஆளில்லா ரயில்வே கடவுப்பாதையில் பள்ளிவேன் குறுக்கே வந்த நிலையில் ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு குழந்தைகள் உயிர் தப்பினர். 

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பொன்னாபுரத்தில் ஆளில்லா ரயில்வே கடவுப்பாதை உள்ளது. இந்த வழியில் நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் ஏராளமான வாகனங்கள் ரயில்வே தண்டவாளத்தை கடப்பதால் இங்கு ஆட்கள் நியமிக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அதற்கான ஏற்பாடுகள் ஏதும் செய்யப்படவில்லை. இந்நிலையில் வியாழக்கிழமை காலை தனியார் பள்ளி வேன் ஒன்று குழந்தைகளை ஏற்றிக்கொண்டு ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளது. 

வேகத்தடையைக் கடந்து தண்டவாளம் அருகே சென்றபோது சரக்கு ரயில் வருவதை பார்த்த வேன் ஓட்டுநர் பயந்து வேனை நிறுத்தி விட்டு குதித்து ஓடிவிட்டார். அதே வேளை கடவுப்பாதையில் வேன் நிற்பதை பார்த்த ரயில் ஓட்டுநர் சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தினார். இதனால் வேனில் பயணம் செய்த குழந்தைகள் உயிர்தப்பினர். 

இதையடுத்து அப்பகுதியில் குவிந்த பொதுமக்கள் வேனை தண்டவாள பகுதியில் இருந்து கீழே தள்ளி இறக்கினர். இதனால் சரக்கு ரயில் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக கிளம்பி சென்றது. ரயிலை நிறுத்தி விபத்தை தவிர்த்த ரயில் ஓட்டுநரை பொதுமக்கள் பாராட்டினர். ஆனால் இதுகுறித்து எந்த புகாரும் வராததால் ரயில்வே போலீஸார் வழக்குப் பதியவில்லை என்றும் புகார் வந்தால் பள்ளி நிர்வாகம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்வோம் என தெரிவித்தனர்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/23/w600X390/school_van.jpg http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/23/பழனி-அருகே-ரயில்வே-கடவுப்-பாதையில்-நின்ற-வேன்-ரயிலை-நிறுத்தியதால்-குழந்தைகள்-உயிர்-தப்பினர்-2868509.html
2868512 மதுரை திண்டுக்கல் கொடைக்கானலில் காச நோய் ஒழிப்பு நடவடிக்கை தொடக்கம் DIN DIN Friday, February 23, 2018 01:45 AM +0530 கொடைக் கானலில் காசநோய் நோயாளிகள் இல்லாத நகரமாக மாற்றுவது குறித்த நிகழ்ச்சி நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இதில் திண்டுக்கல் மாவட்ட காசநோய் இணை இயக்குநர் ராமச்சந்திரன்  உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். 
முன்னதாக கொடைக்கானலில் சுற்றுலாவை மேம்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம்  மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமையில் நடைபெற்றது. இதில் கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் ஆனந்த், மாவட்ட வனஅலுவலர் முருகன், நகராட்சி ஆணையாளர் முருகன் உள்ளிட்டஅனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். 
 பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியதாவது: கொடைக்கானல் மலைப் பகுதியை வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத நகராக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக நகராட்சி,ஊராட்சி, மற்றும் ஆரம்ப சுகாதார பணியாளர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.  வீடு வாரியாக இந்தப் பணியாளர்கள் சென்று காசநோய் பாதிப்பு உள்ளதா என்பது குறித்து விரைவில் ஆய்வு நடத்துவார்கள். பாதிப்புக்குள்ளானவர்களுக்கு தொடர்ந்து 6-மாதங்கள் சிகிச்சை அளிக்கப்படும்.    
கொடைக்கானல் ஏரியைச் சுற்றி 3-நவீன கழிப்பறைகளும், சுற்றுலா இடங்களில் 2-நவீன (இ-டாய்லெட்) கழிப்பறைகள் ரூ.30-லட்சம் செலவிலும் அமைக்கப்பட உள்ளன. கொடைக்கானலில் முக்கிய பிரச்சனையான வாகனங்கள் நிறுத்துவதற்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது என்றார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/23/கொடைக்கானலில்-காச-நோய்-ஒழிப்பு-நடவடிக்கை-தொடக்கம்-2868512.html
2868511 மதுரை திண்டுக்கல் திண்டுக்கல் தலைமை தபால் நிலையத்தில் உள்நாட்டு அஞ்சல் உறை தட்டுபாடு DIN DIN Friday, February 23, 2018 01:44 AM +0530 திண்டுக்கல் தலைமை தபால் நிலையத்தில் உள்நாட்டு அஞ்சல் உறைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தனியார் கடைகளில் கூடுதல் விலைக்கு மாணவர்கள் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தனியார் கடை உரிமையாளர்கள், அஞ்சல் அலுவலகங்களிலிருந்து அதிக அளவில் உள்நாட்டு தபால் உறைகளைப் பெற்று விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். தபால் நிலையங்களில் ரூ.2.50-க்கு விற்பனை செய்யப்படும் உள்நாட்டு அஞ்சல் உறை, வெளியிடங்களில் ரூ.5-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொலைவில் உள்ள தபால் நிலையங்களுக்கு செல்ல விரும்பாத பலர், கூடுதல் விலை கொடுத்து பெற்றுக் கொள்கின்றனர். 
 ஆனால், திண்டுக்கல் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பள்ளிக்கு அருகிலேயே தலைமை தபால் நிலையம் அமைந்திருந்தும், பொதுமக்களுக்கு பயனில்லை என பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். 2017-18 கல்வி ஆண்டு விரைவில் முடிவடைய உள்ள நிலையில், மாணவர்களிடம் உள்நாட்டு அஞ்சல் வழங்கும்படி பல்வேறு பள்ளி நிர்வாகங்களும் கேட்டு வருகின்றன. 
 இதற்காக தலைமை தபால் நிலையத்திற்கு செல்லும் பெற்றோர்கள், உள்நாட்டு அஞ்சல் கிடைக்காமல் கடந்த 3 நாள்களாக திரும்பிச் செல்வதாக கூறுகின்றனர்.
 இதுதொடர்பாக கோபால் நகரைச் சேர்ந்த கே.சாந்தி கூறுகையில், வங்கி சேவை, சேமிப்பு பத்திரம், தங்க முதலீடு என மாற்றுப் பாதையில் பயணிக்க தொடங்கியுள்ள தபால் நிலையங்கள், பிரதான பணியான அஞ்சல் சேவையிலிருந்து விலகிச் சென்றுவிட்டன. ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் உள்நாட்டு அஞ்சல் உறை அதிக அளவில் விற்பனையாகும் என்பது தபால் ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவருக்கும் தெரியும். ஆனாலும், கடந்த 3 நாள்களாக தலைமை தபால் நிலையத்தில் உள்நாட்டு அஞ்சல் உறை கிடைக்கவில்லை என்றார்.
இதுகுறித்து தலைமை தபால் நிலைய அலுவலர் ஒருவர் கூறியது: பள்ளி மாணவர்களை கருத்தில் கொண்டு தேவைப்பட்டியலை (இண்டன்ட்) அனுப்பி இருந்தால் தட்டுபாடு ஏற்பட்டிருக்காது. மதுரை அல்லது திருச்சி மண்டல அலுவலகத்திலிருந்து உடனடியாக உள்நாட்டு அஞ்சல் உறைகளைப் பெற்று விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/23/திண்டுக்கல்-தலைமை-தபால்-நிலையத்தில்-உள்நாட்டு-அஞ்சல்-உறை-தட்டுபாடு-2868511.html
2868510 மதுரை திண்டுக்கல் திண்டுக்கல் அருகே நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றுவதில் சிக்கல் நீடிப்பு: வருவாய்த்துறையினர் மீது புகார் DIN DIN Friday, February 23, 2018 01:44 AM +0530 திண்டுக்கல் அருகே நீர்நிலை மற்றும் நீரோடை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு மூலம் தெரிவித்தும், வருவாய்த்துறையினர் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.
       திண்டுக்கல் அடுத்துள்ள ஜம்புளியம்பட்டி வன்னியப்பாறைப்பட்டி பகுதிகளுக்கு இடையே சிறுமலை ஓடை அமைந்துள்ளது. இந்த ஓடை வழியாக செல்லும் மழைநீர், அந்த பகுதியில் 15 ஏக்கர் பரப்பிலான சின்னக்குளம், 12 ஏக்கர் மந்தைக்குளம், 18 ஏக்கர் பிரான்குளம் ஆகியவற்றை நிரப்பிய பின், சந்தானவர்த்தினி ஆற்றுடன் இணைந்து கொடகனாற்றில் சேர்கிறது.
 இந்நிலையில், சின்னக்குளத்திற்கு மேற்கு பகுதியில் உள்ள சிறுமலை ஓடையில் தடுப்பணை அமைத்து 9 ஏக்கரில் தண்ணீர் தேக்கப்பட்டு வந்தது. மர ஷட்டர்களுடன் கூடிய மதகு அமைத்து, அங்கிருந்து வன்னியப்பாறைப்பட்டி பாறைக்குளத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அந்த தடுப்பணை சேதப்படுத்தப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நீர்பிடிப்பு பகுதி முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும், 18 ஏக்கர் பரப்பிலான பிரான்குளத்திற்கு தண்ணீர் செல்லும் பாதை முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது. 8 அடிக்கு தண்ணீர் தேங்கும் ஒரு பகுதி, தண்ணீர் திறப்பதற்கான மர ஷட்டர் பகுதிகள் கம்பி வேலி மூலம் தனியார் தோட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், ஓடையாக சுருங்கி விட்ட வாய்க்காலின் மீது அனுமதியின்றி பெரிய பாலமும் கட்டப்பட்டுள்ளது. 
 ஆக்கிரமிப்பு மட்டுமின்றி, இரவு நேரங்களில் டிராக்டர் மற்றும் லாரிகள் மூலம் அதிக அளவில் மணல் திருட்டு நடப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. 
 இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 6 ஆண்டுகளாக மனு அளித்து வருகின்றனர்.கடந்த 2016ஆம் ஆண்டு ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகார் மனு குறித்து விசாரணை நடத்த திண்டுக்கல் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்பேரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சிறுமலை ஓடை மற்றும் தண்ணீர் தேங்கும் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால், ஆக்கிரமிப்பு பகுதிகளை நில அளவை செய்வதற்கு வருவாய்த்துறையினர் ஒத்துழைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், ஓராண்டுக்கும் மேலாக பொதுமக்களின் முக்கியமான நீராதார பிரச்னைக்கு தீர்வு காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
இதுதொடர்பாக ஜம்புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியது: 
 நீரோடை ஆக்கிரமிப்பு காரணமாக, ஜம்புளியம்பட்டி பகுதியைச் சுற்றியுள்ள குளங்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக தண்ணீர் வரத்து இல்லை. இதனால், மந்தைக்குளம் மற்றும் பிரான்குளத்தைச் சுற்றியுள்ள சுமார் 100 ஏக்கர் விவசாய நிலங்களில் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு குடிநீராதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் நீர்நிலைகளை பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் அளித்து வரும் மாவட்ட நிர்வாகம், ஜம்புளியம்பட்டி பகுதியையும் கருத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.

அதிகாரி விளக்கம்
இதுதொடர்பாக திண்டுக்கல் கோட்டாட்சியர்(பொ) இ.ஜான்சன் கூறியது:
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் முன்னுரிமை அளித்து, நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 2 சி பட்டா மூலம் நீர் நிலைகளில் தண்ணீர் சேமிப்புக்கு இடையூறாக உள்ள விவசாயிகள் கூட வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அதனால், ஜம்புளியம்பட்டி பகுதியில் நீரோடை ஆக்கிரமிப்பினை அகற்றுவதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/23/திண்டுக்கல்-அருகே-நீர்நிலை-ஆக்கிரமிப்பு-அகற்றுவதில்-சிக்கல்-நீடிப்பு-வருவாய்த்துறையினர்-மீது-புகார்-2868510.html
2868508 மதுரை திண்டுக்கல் வேடசந்தூர் பகுதியில் பிப்ரவரி 24 மின்தடை DIN DIN Friday, February 23, 2018 01:43 AM +0530 வேடசந்தூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி சனிக்கிழமை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 இதன் காரணமாக, வேடசந்தூர், நாகம்பட்டி, காளனம்பட்டி, நத்தப்பட்டி, தட்டாரப்பட்டி,  சுள்ளெறும்பு, நவாலூத்து, பூவாய்பாளையம், பூத்தாம்பட்டி, குருநாதநாயக்கனூர், அம்மாபட்டி, மாரம்பாடி,  முருநெல்லிக்கோட்டை, சேனான்கோட்டை, ஒட்டநாகம்பட்டி, கோடாங்கிபட்டி  மற்றும் சுற்றுப்புற கிராமங்களில்  காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரையிலும் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர்  காளிமுத்து தெரிவித்துள்ளார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/23/வேடசந்தூர்-பகுதியில்-பிப்ரவரி-24-மின்தடை-2868508.html
2868507 மதுரை திண்டுக்கல் விபத்துகளை தவிர்க்க காவல்துறை விழிப்புணர்வு பிரசாரம் DIN DIN Friday, February 23, 2018 01:42 AM +0530 திண்டுக்கல் மாவட்டம்  நத்தத்தில்  காவல்துறை சார்பில் வியாழக்கிழமை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்  நடைபெற்றது. 
   நத்தம் பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தனியார் பேருந்து மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நத்தம் காவல் ஆய்வாளர் ராம நாராயணன் பேசியதாவது:  
    தனியார் பேருந்து உரிமையாளர்கள், அதிவேகமாக பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள்களை உடனடியாக வேலையை விட்டு நிறுத்த வேண்டும். அதிகவேகமாக இயக்கப்படும் பேருந்து ஓட்டுநர்கள் மீது புகார் அளிப்பதற்கு, பேருந்தின் உரிமையாளரின் செல்லிடப்பேசி எண் பயணிகளுக்கு தெரியும் வகையில் குறிப்பிட்டிருக்க வேண்டும். 
 வேகமாக செல்வதால் விபத்து ஏற்பட்டு பயணிகள் பாதிக்கப்பட்டால், பேருந்து உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும். ஆட்டோக்களில் அனுமதிக்கப்படும் எண்ணிக்கையை மீறி, பயணிகளை அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். கடந்த 2017 ஆம் ஆண்டு அரசு மற்றும் தனியார் பேருந்துகளினால் ஏற்பட்ட விபத்தில் 627 பேர் உயிரிழந்துள்ளனர். எதிர்காலத்தில் சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்ப்பதற்கான முயற்சிகளை பேருந்து ஓட்டுநர்கள் மட்டுமின்றி, அனைத்து வகையான வாகன ஓட்டுநர்களும்மேற்கொள்ள வேண்டும் என்றார்.
  அப்போது சார்பு ஆய்வாளர்கள் வேல்முருகன், சேக்அப்துல்லா உள்ளிட்ட நத்தம் காவல் துறையினர் உடனிருந்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/23/விபத்துகளை-தவிர்க்க-காவல்துறை-விழிப்புணர்வு-பிரசாரம்-2868507.html
2868506 மதுரை திண்டுக்கல் வத்தலகுண்டு பகுதியில் ஆசிரியர் வீடுகளில் தொடரும் திருட்டு DIN DIN Friday, February 23, 2018 01:41 AM +0530 வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் வீடுகளில் தொடர்ந்து நகை மற்றும் பணம் திருடு போகும் நிலையில், குற்றவாளிகளை பிடிக்காத போலீசாருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவா. இவர், விராலிப்பட்டி அடுத்துள்ள பண்ணைப்பட்டி அரசு பள்ளயில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், பள்ளியிலிருந்து புதன்கிழமை வீட்டிற்கு சென்ற ஜீவா, பீரோவை உடைத்து 10 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றதை கண்டறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.இதுகுறித்து வத்தலகுண்டு காவல் நிலையத்தில் ஜீவா அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
 இதனிடையே தலைமையாசிரியர் வீட்டில் நடைபெற்ற திருட்டு சம்பவத்திற்கு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி அசிரியர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அச்சங்கத்தின் மாநில அமைப்பு செயலர் க.ஜெயராமன் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாக வத்தலக்குண்டு பகுதியில் உள்ள ஆசிரியர்கள் வீடுகளை குறி வைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் செல்கின்றனர். குறிப்பாக, காந்திநகர் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ரவிச்சந்திரன் என்பவரது வீட்டில் 65 பவுன் நகை திருடு போன சம்பவத்தில், போலீசார் இதுவரை குற்றவாளிகளை கைது செய்துவில்லை. அதன் தொடர்ச்சியாக, பள்ளி செல்லும் ஆசிரியர்களின் வீடுகளை குறி வைத்து தொடர்ந்து பல திருட்டுச் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.
 தலைமையாசிரியர் வீட்டில் பணம் மற்றும் நகைகளை திருடிய குற்றவாளிகளை போலீசார் துரிதமாக கைது செய்யவில்லை எனில், ஆசிரியர்களை ஒன்றிணைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/23/வத்தலகுண்டு-பகுதியில்-ஆசிரியர்-வீடுகளில்-தொடரும்-திருட்டு-2868506.html
2868505 மதுரை திண்டுக்கல் ஸ்ரீராகவேந்திரர் ஜயந்தி விழா DIN DIN Friday, February 23, 2018 01:41 AM +0530 ஸ்ரீராகவேந்திரர் ஜயந்தியை முன்னிட்டு வத்தலகுண்டு மடத்தில், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வேத பாராயண நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
   காலை 8 முதல் இரவு 7 மணி வரை ஆச்சாரியர்கள் வேத பாராயணம் செய்தனர்.  முன்னதாக ராகவேந்திரர் பிருந்தாவனத்திற்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதணை நடைபெற்றது. 
வேத பாராயணத்தை தொடர்ந்து, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக சிறப்புக் கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அக்ராஹார வீதியில் ராகவேந்திரர் படத்துடன் திருவீதியுலா நடைபெற்றது. 
நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு வி.கோபாலன் சார்பில் எழுது பொருள்கள் வழங்கப்பட்டன. சிறப்பு வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை மடத்தின் நிறுவனர் பிஎஸ்.கோபிநாதன் செய்திருந்தார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/23/ஸ்ரீராகவேந்திரர்-ஜயந்தி-விழா-2868505.html
2868504 மதுரை திண்டுக்கல் முதல் முறையாக மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம் DIN DIN Friday, February 23, 2018 01:40 AM +0530 திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் முறையாக மாற்றுத் திறனாளிகளுக்காக நடைபெற்ற சிறப்பு குறைதீர் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
    திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற முகாமிற்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜி.வினய் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது:
  மாற்றுத் திறனாளிகள் துறை சார்பில், பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது, பிற துறைகள் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கும் வகையில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் மாதந்தோறும்  நடைபெறவுள்ளது. மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெறப்படும் மனுக்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு பரிந்துரை செய்து துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
   மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விருப்ப நிதியிலிருந்து தலா ரூ.61 ஆயிரம் மதிப்பீட்டில் 14 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர், மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவ அடையாள அட்டைகள் வழங்க ரூ.1 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
 மாற்றுத் திறனாளிகளுக்கான முதல் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் 4 பேருக்கு தலா ரூ.15 ஆயிரம் மதிப்பிலான செயற்கை கால்களை ஆட்சியர் வினய் வழங்கினார். முகாமில் 500-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு மனு அளித்தனர்.
  கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் இந்திரவள்ளி, மாநகராட்சி ஆணையாளர் ந.மனோகர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/23/முதல்-முறையாக-மாற்றுத்-திறனாளிகளுக்கான-சிறப்பு-குறைதீர்-முகாம்-2868504.html
2868171 மதுரை திண்டுக்கல் திண்டுக்கல் பிரியாணி உணவகத்தில் வருமானவரித்துறை  சோதனை DIN DIN Thursday, February 22, 2018 09:36 AM +0530 திண்டுக்கல்லில் பிரபல பிரியாணி உணவகத்தில், தேனி மற்றும் திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் தெற்குமாசி வீதியில் தனியார் பிரியாணி உணவகம் அமைந்துள்ளது. இந்த உணவகத்திற்கு, தேனி மற்றும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் புதன்கிழமை சோதனையிட வந்தனர். உணவகத்திற்குள் நுழைந்த அதிகாரிகள், வாடிக்கையாளர்கள் யாரையும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அதே நேரத்தில், உணவகத்தைச் சேர்ந்த ஊழியர்களும் வெளியேற அனுமதிக்கப்படவில்லை. உணவுப் பண்டங்களுக்கு ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் நிலையில், அந்த தொகையில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்துள்ள நிலையில், திண்டுக்கல் பிரியாணி உணவகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள், ரசீது அச்சிடும் இயந்திரத்தை நீண்ட நேரமாக ஆய்வு செய்தனர்.  சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடைபெற்றதை அடுத்து, தெற்கு மாசி வீதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதே போல், திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை பிரானுர் பார்டரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வருமானவரித்துறையினர் புதன்கிழமை சோதனை நடத்தினர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/22/திண்டுக்கல்-பிரியாணி-உணவகத்தில்-வருமானவரித்துறை--சோதனை-2868171.html
2868170 மதுரை திண்டுக்கல் ஆன்லைன் முறையில் தினமும் 1000 பத்திரங்கள் பதிவு: மதுரை மண்டல அதிகாரி தகவல் DIN DIN Thursday, February 22, 2018 09:36 AM +0530 மதுரை மண்டலத்தில் ஆன்லைன் முறையில் நாள் ஒன்றுக்கு சராசரியாக சுமார் ஆயிரம் பத்திரப் பதிவுகள் நடைபெற்றுள்ளன என பதிவுத்துறை மதுரை மண்டல அதிகாரி சிவக்குமார் தெரிவித்தார்.
பழனி ஒருங்கிணைந்த பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் உள்ள மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் புதன்கிழமை அவர் ஆய்வு மேற்கொண்டார். 
ஆய்வுக்குப் பின் பொதுமக்களுக்கான பத்திரப்பதிவுகளில் மேற்கொண்டுள்ள மாற்றங்கள் குறித்து மாவட்டப் பதிவாளர் அருள்ஜோதி மற்றும் அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.  
அப்போது அவர் கூறியது: தமிழகத்தில் ஆன் லைனில் புதிய முறையில் பத்திரப்பதிவு துவங்கிய முதல் நாள் சர்வர் கோளாறு காரணமாக தமிழகம் முழுவதும் சுமார் 700 பத்திரங்கள் மட்டுமே பதிவானது.  இதையடுத்து பதிவுத்துறைத் தலைவர் தலைமையில் தொழில்நுட்ப நிபுணர்கள் குழு ஒரேநாள் இரவில் கோளாறை சரி செய்தனர்.  இதையடுத்து தற்போது பத்திரப்பதிவு சீராக உள்ளது. தமிழகத்திலேயே மதுரை மண்டலத்தில் புதிய முறை அமலுக்கு வந்தபின் நாள் ஒன்றுக்கு சராசரியாக சுமார் ஆயிரம் பத்திரப் பதிவுகள் நடைபெற்றுள்ளன. அலுவலக நடைமுறைகளில் மட்டுமே தாமதமாகி வருகிறது.  
ஆனால் இதற்கும் பொதுமக்கள் பதிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  சில மணி நேரங்களிலேயே பணி முடிவது பத்திரப்பதிவுத்துறையில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இதை சில இடைத்தரகர்கள் வேண்டுமென்றே பூதாகரமான பிரச்னையாக கூறி வருகின்றனர்.  
 பழனி பத்திரப்பதிவு அலுவலகத்தின் லிப்ட்டை சரி செய்ய ரூ.75 ஆயிரம் நிதியை பொதுப்பணித்துறை ஒதுக்கீடு செய்துள்ளது.  விரைவில் பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/22/ஆன்லைன்-முறையில்-தினமும்-1000-பத்திரங்கள்-பதிவு-மதுரை-மண்டல-அதிகாரி-தகவல்-2868170.html
2868125 மதுரை திண்டுக்கல் பழனி மலைக்கோயிலில் கமாண்டோ வீரர்கள் ஆய்வு DIN DIN Thursday, February 22, 2018 09:26 AM +0530 பழனி மலைக்கோயிலில் சென்னை கமாண்டோ படை வீரர்கள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
 தமிழக திருக்கோயில்களில் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சென்னை கமாண்டோ படை வீரர்கள் திருக்கோயில்கள் தோறும் சென்று ஆய்வு மேற்கொள்கின்றனர். மதுரை மீனாட்சியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களுக்கும் சென்று வந்த இந்த வீரர்கள் புதன்கிழமை பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வந்தனர். கோயிலின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்ட வீரர்கள் சுவாமி தரிசனம் செய்து விட்டு கிளம்பினர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/22/பழனி-மலைக்கோயிலில்-கமாண்டோ-வீரர்கள்-ஆய்வு-2868125.html
2868123 மதுரை திண்டுக்கல் ஆன்லைன் முறையில் தினமும் 1000 பத்திரங்கள் பதிவு: மதுரை மண்டல அதிகாரி தகவல் DIN DIN Thursday, February 22, 2018 09:26 AM +0530 மதுரை மண்டலத்தில் ஆன்லைன் முறையில் நாள் ஒன்றுக்கு சராசரியாக சுமார் ஆயிரம் பத்திரப் பதிவுகள் நடைபெற்றுள்ளன என பதிவுத்துறை மதுரை மண்டல அதிகாரி சிவக்குமார் தெரிவித்தார்.
பழனி ஒருங்கிணைந்த பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் உள்ள மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் புதன்கிழமை அவர் ஆய்வு மேற்கொண்டார். 
ஆய்வுக்குப் பின் பொதுமக்களுக்கான பத்திரப்பதிவுகளில் மேற்கொண்டுள்ள மாற்றங்கள் குறித்து மாவட்டப் பதிவாளர் அருள்ஜோதி மற்றும் அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.  
அப்போது அவர் கூறியது: தமிழகத்தில் ஆன் லைனில் புதிய முறையில் பத்திரப்பதிவு துவங்கிய முதல் நாள் சர்வர் கோளாறு காரணமாக தமிழகம் முழுவதும் சுமார் 700 பத்திரங்கள் மட்டுமே பதிவானது. இதையடுத்து பதிவுத்துறைத் தலைவர் தலைமையில் தொழில்நுட்ப நிபுணர்கள் குழு ஒரேநாள் இரவில் கோளாறை சரி செய்தனர்.  இதையடுத்து தற்போது பத்திரப்பதிவு சீராக உள்ளது. 
தமிழகத்திலேயே மதுரை மண்டலத்தில் புதிய முறை அமலுக்கு வந்தபின் நாள் ஒன்றுக்கு சராசரியாக சுமார் ஆயிரம் பத்திரப் பதிவுகள் நடைபெற்றுள்ளன. அலுவலக நடைமுறைகளில் மட்டுமே தாமதமாகி வருகிறது.  
ஆனால் இதற்கும் பொதுமக்கள் பதிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  சில மணி நேரங்களிலேயே பணி முடிவது பத்திரப்பதிவுத்துறையில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இதை சில இடைத்தரகர்கள் வேண்டுமென்றே பூதாகரமான பிரச்னையாக கூறி வருகின்றனர்.  
 பழனி பத்திரப்பதிவு அலுவலகத்தின் லிப்ட்டை சரி செய்ய ரூ.75 ஆயிரம் நிதியை பொதுப்பணித்துறை ஒதுக்கீடு செய்துள்ளது.  விரைவில் பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/22/ஆன்லைன்-முறையில்-தினமும்-1000-பத்திரங்கள்-பதிவு-மதுரை-மண்டல-அதிகாரி-தகவல்-2868123.html
2868122 மதுரை திண்டுக்கல் சேமிப்பு கிடங்குகளை பயன்படுத்துவதில் திண்டுக்கல், தேனி விவசாயிகள் முன்னிலை DIN DIN Thursday, February 22, 2018 09:25 AM +0530 திண்டுக்கல் மண்டலத்திற்குள்பட்ட சேமிப்பு கிடங்குகளில் விளைப் பொருள்களை சேமித்து வைப்பதில், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்ட விவசாயிகள் முன்னிலையில் இருப்பதாக மண்டல மேலாளர் சிவஜோதி தெரிவித்தார்.
 விவசாயிகளின் விளை பொருள்களை, தமிழ்நாடு சேமிப்பு கிடங்குகளில் சேமிப்தற்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் திண்டுக்கல்லில் புதன்கிழமை நடைபெற்றது. தனியார் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் திண்டுக்கல் மண்டல மேலாளர் எம்.சிவஜோதி தலைமை வகித்தார். வேளாண்மை அலுவலர் லலிதா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 250 விவசாயிகள் கலந்து கொண்டனர். 
கூட்டத்தில் மண்டல மேலாளர் சிவஜோதி பேசியதாவது:  திண்டுக்கல் மண்டலத்தில் 6 மாவட்டங்களில் சேமிப்புக் கிடங்குகள் உள்ளன. இதில், அதிகப்டசமாக திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் நெல், மக்காச்சோளம், பயறு வகைகள், மிளகு உள்ளிட்ட விளை பொருள்களை 10ஆயிரம் டன்களுக்கு மேல் சேமித்து வைத்து பயன் பெற்றுள்ளனர்.  சேமிப்பு கிடங்குகளில் விளை பொருள்களை வைத்தற்கான ரசீது இருந்தால் வங்கிகளில் கடனுதவி பெற முடியும். தனியார் சேமிப்பு கிடங்குகளில் இந்த வாய்ப்பு கிடைக்காது என்பதால், விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
 முகாமில் பங்கேற்ற விவசாயிகளை ஊக்கப்படுத்துவதற்காக மருந்து தெளிப்பதற்கான ரூ.1200 மதிப்பிலான கைத் தெளிப்பான் கருவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் தேனி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சேமிப்பு கிடங்கு மற்றும் வேளாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/22/சேமிப்பு-கிடங்குகளை-பயன்படுத்துவதில்-திண்டுக்கல்-தேனி-விவசாயிகள்-முன்னிலை-2868122.html
2868120 மதுரை திண்டுக்கல் பழனி சங்கராலயத்தில் 4 நாள்கள் மகா யாகம் DIN DIN Thursday, February 22, 2018 09:25 AM +0530 பழனி அடிவாரம் சங்கராலயத்தில் 51-ஆவது ஆண்டாக உலக நலன் வேண்டி மஹாருத்ர மஹாயக்ஞம் வரும் பிப்.26 ஆம் தேதி துவங்கி நான்கு நாள்கள் நடைபெறுகிறது. 
யாக பூஜை நடை பெறும் நாள்களில் தெய்வீக சொற்பொழிவு நடைபெறுகிறது. வேள்வி நாள்கள் முழுக்க சங்கராலயத்தில் மூன்று வேளை அன்னதானம் நடைபெறுகிறது.  விழா ஏற்பாடுகளை மஹாருத்ரயாக கமிட்டி தலைவர் சகஸ்ரநாமம், செயலாளர் முருனடிமை பாலசுப்பிரமணியம் ஆகியோர் தலைமையில் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/22/பழனி-சங்கராலயத்தில்-4-நாள்கள்-மகா-யாகம்-2868120.html
2868118 மதுரை திண்டுக்கல் பழனி பகுதியில் நெல் விலை சரிவால் விவசாயிகள் கவலை:  அரசு நெல் கொள்முதல் மையம் அமைக்க கோரிக்கை DIN DIN Thursday, February 22, 2018 09:25 AM +0530 பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நெல்விலை மிகவும் சரிந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.  தமிழக அரசு கூட்டுறவு சங்கங்கள் மூலமாக நெல் கொள்முதல் மையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
     திண்டுக்கல் மாவட்டம் பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர் போதிய அளவு இருப்பதாலும், பழனியை சுற்றி மூன்று அணைக்கட்டுகள் இருப்பதாலும் பாலசமுத்திரம், ஆயக்குடி, நெய்க்காரபட்டி உள்ளிட்ட பல கிராமங்களிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது.  
 கோ 45, கோ.43, சி.56, ஐ.ஆர்.20, சாவித்ரி, கல்ச்சர் பொன்னி எபல்வேறு ரகங்களிலும் பயிர் செய்யப்பட்டுள்ள இவை 120 முதல் 130 நாட்களில் அறுவடைக்கு வரும் நெல் ரகங்களாகும்.  கடந்த மழைக்காலத்தின்போது நடவு செய்யப்பட்ட இந்த நெற்பயிர்கள்  தற்போது அறுவடைக்கு தயாராகியுள்ளன.  பல விவசாய நிலங்களில் அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.  
  இந்நிலையில் நெல் வாங்கும் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து மிகவும் குறைந்த விலையை நிர்ணயம் செய்து விவசாயிகளிடம் நெல் வாங்குவதால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர்.   ஒரு ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட விதை நெல், நெற்பயிர் நாற்று விடுதல், நடுதல் மற்றும் களைக்கொல்லி மருந்தடித்தல், பயிர் விளைந்த பின்பு உரத்துக்கான செலவு செய்தது போக விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரையில் மட்டுமே லாபம் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  இதுகுறித்து பழைய ஆயக்குடியை சேர்ந்த முத்து என்ற விவசாயி கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயம் செய்ய தண்ணீர் இல்லாத நிலையில் இந்த ஆண்டு மழை பெய்ததால் நெல் பயிரிட்டோம்.  அதுவும் அறுவடை நேரத்தில் மழை பெய்ததால் ஏக்கருக்கு ஐந்தாயிரம் வரை இழப்பு ஏற்பட்டது.  இந்நிலையில் நெல்லை மிக குறைந்த விலைக்கு வியாபாரிகள் கேட்பதால் என்ன செய்வது என தெரியவில்லை. ஒரு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்த நிலையில் 150 கிலோ கொண்ட மூட்டைக்கு ரூ.2, 300 வரையே விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.  ஒரு ஏக்கருக்கு 13 மூட்டை கிடைக்கும் நிலையில் 120 நாள் உழைப்புக்கு ஏக்கருக்கு ரூ. 8 ஆயிரம் மட்டுமே கிடைக்கிறது என தெரிவித்தார்.  கடந்த வறட்சி காலத்தின் போது வைக்கோல் மட்டுமே ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வரை விற்ற நிலையில் தற்போது நெல் விலையே ஏக்கருக்கு 20 ஆயிரம் தான் விற்கிறது.  
 அதிலும் கடைக்கோடி நிலங்களில் உள்ள வைக்கோல் கேட்பாரற்று உள்ளது.  இதனால் அடுத்த முறை விவசாயம் செய்யவே விவசாயிகள் யோசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  நெல் அறுவடை காலங்களில் அரசு கொள்முதல் மையங்கள் அமைக்கப்பட்டு அரசே விவசாயிகளிடம் நேரடியாக நெல் கொள்முதல் செய்தது.  ஆனால் இந்த முறை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  ஆகவே, பழனி சுற்றுவட்டார பகுதிகளில் அரசு நெல்கொள்முதல் மையம் அமைத்தால் குறைந்த பட்சம் விவசாயிகள் பட்ட உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும் என்பதால் மாவட்ட நிர்வாகம் இதற்கான நடவடிக்கையை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/22/பழனி-பகுதியில்-நெல்-விலை-சரிவால்-விவசாயிகள்-கவலை--அரசு-நெல்-கொள்முதல்-மையம்-அமைக்க-கோரிக்கை-2868118.html
2867985 மதுரை திண்டுக்கல் ஆசிரியர், மாணவர் அலட்சியத்தால் தமிழ் பாட தேர்ச்சி விகிதம் குறைவு: முதன்மைக்கல்வி அலுவலர் குற்றச்சாட்டு DIN DIN Thursday, February 22, 2018 08:19 AM +0530 தாய்மொழியாக இருந்தபோதிலும் தமிழ் பாடத்தில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவதற்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் அலட்சியமே காரணம் என முதன்மை கல்வி அலுவலர்  கூறினார்.
     திண்டுக்கல் நேருஜி நகரவை மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் உலகத் தமிழ் சங்கம் சார்பில் தமிழாசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் பெ.சந்திரா தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ச.கோபிதாஸ் முன்னிலை வகித்துப் பேசியது:
  தமிழ் பாடத்தில் தான் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைகிறது. தாய்மொழியாக இருந்தபோதிலும், மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களின் அலட்சியம் காரணமாகவே இது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையை மாற்றுவதற்கு ஆசிரியர்கள் முயற்சிக்க வேண்டும் என்றார்.
  சிறப்பு அழைப்பாளராக காந்தி கிராம கிராமியப் பல்கலைக் கழக தமிழ்த்துறைத் தலைவர் பா.ஆனந்தகுமார் கலந்து கொண்டு பேசியதாவது:
  பண்பாட்டு கருவூலமாக விளங்குவது மொழிகள். இனப் படுகொலைக்கு இணையாக, மொழி படுகொலைகளும் நிகழ்ந்து வருகின்றன. உலகம் முழுவதும் 2500 மொழிகள் ஆபத்தில் உள்ளதாக யுனெஸ்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஹிந்தி மொழியின் வளர்ச்சிக்காக 50 மொழிகள் அழிக்கப்பட்டுள்ளன. 
அதேபோல் உலகம் முழுவதும் ஆங்கில மொழியின் தாக்கத்தால் பல்வேறு மொழிகள் ஒழிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக அழிவின் விழிம்பில் உள்ளதாக பட்டியலிப்பட்ட 43 சதவீத மொழிகளில், தமிழும் இடம் பெற்றிருந்தது. 
இன்றைக்கு அந்த நிலையிலிருந்து தமிழ் மீண்டுள்ளது. 1990-இல் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் அச்சு வடிவ புத்தகங்கள் அழிந்து விடும் என கணக்கிடப்பட்டது. 
ஆனால், அந்த கணிப்பு பொய்யாக்கப்பட்டு இலக்கியங்கள் வளர்ச்சி அடைந்துள்ளன. 
உலக அளவில் செம்மொழி பட்டியலில் உள்ள 6 மொழிகளில், தமிழ் மற்றும் சீன மொழிகள் மட்டுமே தொடர்ச்சியும், நீட்சியும் பெற்றுள்ளன. பிற மொழிகள் அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாக மட்டுமே உள்ளன. 
 நிகழ்ச்சியில் சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் தா.செல்வராஜ், உள்ளூர் தமிழறிஞர் துரை தில்லான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/22/ஆசிரியர்-மாணவர்-அலட்சியத்தால்-தமிழ்-பாட-தேர்ச்சி-விகிதம்-குறைவு-முதன்மைக்கல்வி-அலுவலர்-குற்றச்சாட்-2867985.html
2867984 மதுரை திண்டுக்கல் புத்துணர்ச்சியுடன் திரும்பியது: பழனி கோயில் யானை கஸ்தூரி DIN DIN Thursday, February 22, 2018 08:19 AM +0530 தேக்கம்பட்டியில் முகாமில் இருந்து  பழனி பெரியநாயகியம்மன் திருக்கோயில் யானை கஸ்தூரி புதன்கிழமை திரும்பி வந்தது. 90 கிலோ எடை குறைந்து புத்துணர்ச்சியுடன் காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
      51 வயது நிரம்பிய கோயில் யானை கஸ்தூரி தமிழக அரசின் யானைகள் புத்துணர்வு முகாமிற்காக கடந்த ஜன.3 -ஆம் தேதி மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தது. பிப்.20-ஆம் தேதி முகாம் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து புதன்கிழமை காலை 9 மணியளவில்
மீண்டும் பெரியநாயகியம்மன் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டது. கோயிலுக்கு வந்த யானை கஸ்தூரிக்கு மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. மாலை அணிவிக்கப்பட்டு பூசணிக்காய் சுற்றப்பட்டு கோயிலுக்குள் அழைத்து வரப்பட்டு சர்க்கரை பொங்கல், கரும்பு, வாழைப்பழம் ஆகியன வழங்கப்பட்டது. 
  பின்னர் இணை ஆணையர் செல்வராஜ் தெரிவித்ததாவது: 
பழனிக்கோயில் யானை கஸ்தூரி முகாமிற்கு செல்லும் போது 4,750 கிலோ இருந்தது. தற்போது முகாம் முடித்து திரும்புகையில் 90 கிலோ குறைந்து 4,660 கிலோ எடையுள்ளது. 
முகாமில் கஸ்தூரி யானை கயிறு இழுக்கும் போட்டியில் முதல்பரிசு பெற்றுள்ளது. 
பாகன்கள் பிரசாந்த், குட்டன் ஆகியோருக்கும் நற்பராமரிப்புக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. 
இயற்கையான சூழலில்நடைப்பயிற்சி, நல்ல பராமரிப்பு வழங்கப்பட்டுள்ளதால் யானை நல்ல மனநிலையுடன் புத்துணர்ச்சியுடன் உள்ளது என தெரிவித்தார். 
  நிகழ்ச்சியில் துணை ஆணையர் மேனகா, கண்காணிப்பாளர் முருகேசன், கால்நடை உதவி மருத்துவர் முருகன், மணியம் சேகர், நளபாகம் மகேஷ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/22/புத்துணர்ச்சியுடன்-திரும்பியது-பழனி-கோயில்-யானை-கஸ்தூரி-2867984.html
2867983 மதுரை திண்டுக்கல் கடன் வட்டி கொடுக்காததால் மிரட்டல் : ஒட்டன்சத்திரத்தில் பெண் தற்கொலை DIN DIN Thursday, February 22, 2018 08:18 AM +0530 ஒட்டன்சத்திரத்தில்  கடன்தொகைக்கு  வட்டிக்கேட்டு மிரட்டியதால் செவ்வாய்க்கிழமை பெண்  தற்கொலை செய்து கொண்டார்.
 ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு உள்பட்ட காந்திநகர் 6-ஆவது வார்டைச் சேர்ந்தவர் பூபதி (40).இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.இவருடைய மனைவி விமலாதேவி (31).இவர் குடும்ப தேவைக்காக சின்னையகவுண்டன்வலசு கிராமத்தைச் சேர்ந்த வள்ளிமுத்து (45) என்பவரிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கினராம். அதற்கு மாதந்தோறும் வட்டி கொடுத்து வந்துள்ளார்.இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வட்டி கொடுக்க முடியவில்லையாம். இதனால் பணம் கொடுத்த வள்ளிமுத்து தொலைபேசி மூலமும், நேரில் வந்தும் வட்டிக்கேட்டு மிரட்டினராம். இந்நிலையில், விமலாதேவி செவ்வாய்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷ மாத்திரை சாப்பிட்டு உயிருக்கு போராடியுள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து அவருடைய கணவர் பூபதி ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வட்டிக்கேட்டு மிரட்டிய வள்ளிமுத்து மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/22/கடன்-வட்டி-கொடுக்காததால்-மிரட்டல்--ஒட்டன்சத்திரத்தில்-பெண்-தற்கொலை-2867983.html
2867982 மதுரை திண்டுக்கல் தொழில்நெறி வழிகாட்டி கருத்தரங்கம் DIN DIN Thursday, February 22, 2018 08:18 AM +0530 திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிர் கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டி கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
 திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர்(நிலம் எடுப்பு) லதா தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ப.பார்வதி முன்னிலை வகித்தார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தி.சு.ஜெகதீஸ் சிறப்புரை நிகழ்த்தினார்.
 கண்காட்சி திறப்புக்கு பின் வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேடு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து வேலைவாய்ப்பு அலுவலர் ஜெகதீஸ் பேசியதாவது: 
 அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. அதேபோல் தன்னார்வலர் பயிலும் வட்டத்தில் உள்ள போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களையும் பயன்படுத்திக் கொள்ளும் வசதியும் உள்ளது. இதுபோன்ற வாய்ப்புகளை பயன்படுத்தி, மாணவிகள் போட்டித் தேர்வில் பங்கேற்று அரசு மற்றும் பொதுத் துறை நிறுனங்களில் பணிபுரியும் வாய்ப்பினை பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும் என்றார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/22/தொழில்நெறி-வழிகாட்டி-கருத்தரங்கம்-2867982.html
2867298 மதுரை திண்டுக்கல் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி DIN DIN Wednesday, February 21, 2018 01:46 AM +0530
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிளை, ஊர்புறம் மற்றும் மைய நூலகங்களில் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 உலக புத்தகத் தினத்தை முன்னிட்டு பொது நூலகத் துறை சார்பில் மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி நடத்துவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்ட  மைய நூலகம், 63 கிளை நூலகங்கள், 76 ஊர்புற நூலகங்களில் திங்கள்கிழமை கட்டுரைப் போட்டி நடைபெற்றது. "என்னை செதுக்கிய நூல்கள்' என்ற தலைப்பில், 6 முதல் 8ஆம் வகுப்பு வரையில் ஒரு பிரிவு, 9 முதல் 12ஆம் வகுப்பு வரை மற்றொரு பிரிவு என 2 நிலைகளில் இப்போட்டி நடத்தப்பட்டது.
 சிறப்பான கட்டுரை அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் தலா 1 மாணவர் வீதம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதிலிருந்து, திண்டுக்கல், நத்தம், ஒட்டன்சத்திரம், பழனி, வத்தலகுண்டு, வேடசந்தூர் ஆகிய 6 ஊதிய மையங்கள் சார்பிலும், ஒவ்வொரு நிலையிலும் தலா 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன் பின்னர், மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படும் 2 மாணவர்களுக்கு, சென்னையில் நடைபெறும் உலக புத்தகத் தின விழாவில் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்படுகிறது. 
அதேபோல் ஊதிய மையங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு மாவட்ட மைய நூலகத்தில் உலக புத்தகத்தினத்தன்று நடைபெறும் நிகழ்ச்சியில் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வழங்கப்படும் என மாவட்ட மைய நூலகர்(பொறுப்பு) இரா.சரவணக்குமார் தெரிவித்தார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/21/பள்ளி-மாணவர்களுக்கு-கட்டுரைப்-போட்டி-2867298.html
2867293 மதுரை திண்டுக்கல் கொடைக்கானலில் வனத் துறையைக் கண்டித்து கடைகள் அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு DIN DIN Wednesday, February 21, 2018 01:45 AM +0530 வனத் துறையைக் கண்டித்து, கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சியினர், சங்கத்தினர், வியாபாரிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோர் ஊர்வலம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     கொடைக்கானல் கவுஞ்சி பகுதியில் கடந்த 12 ஆம் தேதி, தனியார் காட்டேஜ் பணியாளர்களுக்கும், வனத் துறையினருக்கும் மோதல் ஏற்பட்டது. அதில்,  காட்டேஜ் பணியாளர்களை பல்வேறு இடங்களில் அடைத்து வைத்து தாக்கி, 36 மணி நேரம் கழித்து வனத் துறையினர் விடுவித்துள்ளனர். மேலும், அவர்களுக்கு ரூ. 75 ஆயிரம் அபராதமும் விதித்தனர்.
    பாதிக்கப்பட்ட காட்டேஜ் பணியாளர்கள், கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக  9 பேர் தேனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 
    அதன்பின்னர், பணியாளர்களை தாக்கிய வனத் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. அதையடுத்து, வனக் காப்பாளர் டேவிட், வனவர் சிங்காரவேல் ஆகிய இருவரையும் பணியிட மாற்றம் செய்தும் மற்றும் சூழல் காவலர்கள் 3 பேர் பணி நீக்கம் செய்தும், மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவிட்டார்.
    இருப்பினும், வனத்துறை அதிகாரிகள் மீதும், மாவட்ட வன அலுவலர் மீதும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி, கொடைக்கானல் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொடைக்கானல் கலையரங்கம் பகுதியிலிருந்து கருப்புப் பட்டை அணிந்து நகரின் முக்கிய பகுதிகளின் வழியே ஊர்வலமாக வந்தனர்.     இதில், வனத் துறையைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர், மூஞ்சிக்கல் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
    ஆர்ப்பாட்டத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வழங்கவும், தாக்குதல் நடத்திய வனத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், வனப் பகுதிகளில் சுற்றுலா வாகனங்கள் செல்வதற்கு அனுமதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். 
     இதில், திமுக நகரச் செயலர் முகமது இப்ராஹிம், காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலர் அப்துல்கனிராஜா, அதிமுக தினகரன் அணி நகரச் செயலர் கோவிந்தன், பா.ம.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
போலீஸ் பாதுகாப்பு: கொடைக்கானல் கடையடைப்பு போராட்டத்தையொட்டி, வத்தலகுண்டு, திண்டுக்கல் ஆகிய பகுதிகளிலிருந்து வந்திருந்த 150-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், நகர்ப் பகுதியில் உள்ள வனத் துறை அலுவலகத்துக்கும் காவல் துறையினர் பாதுகாப்பு அளித்தனர். 
    இந்த போராட்டத்தால், கொடைக்கானலில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு மேல் வழக்கம்போல் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/21/கொடைக்கானலில்-வனத்-துறையைக்-கண்டித்து-கடைகள்-அடைப்பு-இயல்பு-வாழ்க்கை-பாதிப்பு-2867293.html
2867290 மதுரை திண்டுக்கல் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே மேலாண்மையின் நோக்கம்: துணைவேந்தர் சு.நடராசன் DIN DIN Wednesday, February 21, 2018 01:43 AM +0530 மேலாண்மைத் துறையின் நோக்கம் வேலைகளைத் தேடுவதாக அல்லாமல் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக இருக்க வேண்டும் என காந்தி கிராம கிராமியப் பல்கலை. துணைவேந்தர் சு.நடராஜன் தெரிவித்தார்.
மேலாண்மை நடைமுறைகளில் காணப்படும் சமகால வாய்ப்புகளும் சவால்களும் என்ற தலைப்பிலான 2 நாள் தேசியக் கருத்தரங்கின் தொடக்க விழா காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கை தொடக்கி வைத்து துணைவேந்தர் சு.நடராசன் பேசியது:  1991ஆம் ஆண்டு பொருளாதாரத் தாராளமயமாக்கத்திற்குப் பின் மேலாண்மைத் துறை பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. மேலாண்மை சார்ந்த பல்வேறு துறைகள் புதிதாக உருவாகி வருகின்றன. உற்பத்தி தரம் மட்டுமின்றி, விற்பனை மேலாண்மை முறைகளே தொழில்களின் வெற்றிக்கு இன்றைக்கு அடிப்படைத் தேவையாக உள்ளது.  இந்தியாவில் மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் அதிகமாக இருந்தாலும், வேலைவாய்ப்புகள் மிகக் குறைவாகவே உள்ளன. இந்த இடைவெளி குறித்து ஆசிரியர்களும் மாணவர்களும் ஆய்வு நடத்த வேண்டும். 
மேலாண்மைத் துறைகளில் தங்களுக்கான இலக்குகளை நிர்ணயித்து அதனை அடைவதற்கான செயல்பாடுகளை மாணவர்கள் திட்டமிட வேண்டும். இன்றைய சூழலில் விளம்பர மேலாண்மை பெரிய அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது. அதில் மாணவர்கள் தீவிரமாக ஈடுபட வேண்டும். மேலாண்மைத் துறையின் நோக்கம் வேலைகளைத் தேடுவதாக அல்லாமல், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக இருக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் கேரளப் பல்கலைக்கழக மேலாண்மைத் துறைப் பேராசிரியர் கே.எஸ்.சந்திரசேகர், காந்திகிராம பல்கலை. போராசிரியர்கள் எம்.சௌந்தரபாண்டியன், எஸ்.ராமசாமி, ஆர்.ஸ்ரீரங்கராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/21/வேலைவாய்ப்புகளை-உருவாக்குவதே-மேலாண்மையின்-நோக்கம்-துணைவேந்தர்-சுநடராசன்-2867290.html
2867286 மதுரை திண்டுக்கல் ஸ்ரீராகவேந்திரர் ஜயந்தி: வேத பாராயணத்தில்  மாணவர்கள் பங்கேற்க அழைப்பு DIN DIN Wednesday, February 21, 2018 01:41 AM +0530 ஸ்ரீராகவேந்திரர் ஜயந்தியை முன்னிட்டு, வத்தலகுண்டில் வியாழக்கிழமை (பிப்.22) நடைபெறும் வேத பாராயண நிகழ்ச்சியில், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகவேந்திரர் ஜயந்தியையொட்டி, திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு ஸ்ரீராகவேந்திரர் மடத்தில் ஏக தின ரிக்வேத ஷாகல ஷாகை பாராயணம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. காலை 9 முதல் மாலை 6 மணி வரை தொடர்ந்து நடைபெறும் இந்த வேத பாராயணத்தில்,  10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக சிறப்புக் கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெறுகிறது.
மாலை 6.30 மணிக்கு ராகவேந்திரர் திருவீதியுலா நடைபெறும். அதனைத் தொடர்ந்து, ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெறும்.  
இதில், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களும், மாணவர்களின் பெற்றோரும், பொதுமக்களும் பங்கேற்று, ஸ்ரீராகவேந்திரரின் அருள் பெறலாம் என, வத்தலகுண்டு மடத்தின் நிறுவனர் பிஎஸ். கோபிநாதன் தெரிவித்துள்ளார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/21/ஸ்ரீராகவேந்திரர்-ஜயந்தி-வேத-பாராயணத்தில்-மாணவர்கள்-பங்கேற்க-அழைப்பு-2867286.html
2867283 மதுரை திண்டுக்கல் பேருந்து மீது ஆம்னி வேன் மோதல்: 2 பேர் பலி DIN DIN Wednesday, February 21, 2018 01:40 AM +0530 திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் அருகே பேருந்து மீது ஆம்னி வேன் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். இதில், 5 பேர் காயமடைந்தனர்.
  திண்டுக்கல் மாவட்டம்,  உசிலம்பட்டி அருகே உள்ள பெரியகட்டளையைச் சேர்ந்தவர் சின்னக்கருப்பன் (65). இவரது மனைவி பழனியம்மாள் (60).  இவர்களுடைய மகன் ரமேஷ் (30). இவரது மனைவி ஜெயகனி (25). இவர்களது  குழந்தைகள் ஹேமா (4), அகிலேஷ் (3).    இவர்கள் 6 பேரும் உறவினர் வீட்டு விழாவில் பங்கேற்பதற்காக ஆம்னி வேனில் உசிலம்பட்டிக்குச் சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் திருப்பூர் மாவட்டம்,  காங்கயத்துக்கு வரும் வழியில் மூலனூர் - தாராபுரம் சாலையில் கோனேரிப்பட்டி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்ட பேருந்தின் பின்புறம் ஆம்னி வேன் மோதியது. இதில், சின்னக்கருப்பன், பழனியம்மாள் இருவரும் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆம்னி வேனை ஓட்டிவந்த கணேசன் (28) உள்பட ஐந்து பேர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/21/பேருந்து-மீது-ஆம்னி-வேன்-மோதல்-2-பேர்-பலி-2867283.html
2867281 மதுரை திண்டுக்கல் டோக்கன் லாட்டரி விற்ற இருவர் கைது DIN DIN Wednesday, February 21, 2018 01:40 AM +0530 பழனியில் டோக்கன் அச்சிட்டு லாட்டரி விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
      பழனியில் போலி லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக, நகர் காவல் நிலையத்துக்கு கிடைத்த தகவலை அடுத்து, போலீஸார் திங்கள்கிழமை பேருந்து நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பழனியை அடுத்த காவலப்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் மணிகண்டன் (25), ராஜாஜி சாலையைச் சேர்ந்த பழனியப்பன் மகன் நாகப்பன் (55) ஆகியோர், டோக்கன் மூலம் லாட்டரி விற்பனை செய்தது தெரியவந்தது. அதையடுத்து, இருவரையும் போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து 100 டோக்கன்களையும் பறிமுதல் செய்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/21/டோக்கன்-லாட்டரி-விற்ற-இருவர்-கைது-2867281.html
2867217 மதுரை திண்டுக்கல் நுண்கலை மன்றப் போட்டிகள் DIN DIN Wednesday, February 21, 2018 01:15 AM +0530 திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிர் கல்லூரியில், மாணவிகளுக்கான நுண்கலைப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
     கல்லூரியின் நுண்கலை மன்றம் சார்பில் மேடை அல்லாத பல்வேறு போட்டிகள் 2 நாள்களுக்கு முன்பு நடைபெற்ன. அதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற  மேடை போட்டிகளை, கல்லூரி முதல்வர் ப. பார்வதி தொடக்கி வைத்தார்.     இதில், நடனம், பாட்டு, மாறுவேடம், தனி நடிப்பு, இந்திய கலாசார உடை, பல குரலில் பேசுதல் மற்றும் விளம்பரப் போட்டிகள் நடைபெற்றன. பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவிகளும் பங்கேற்று, தங்களது தனித் திறன்களை வெளிப்படுத்தினர்.     போட்டிக்கான ஏற்பாடுகளை, விலங்கியல் துறைத் தலைவர் ப. சத்தியபாமா மற்றும் துறை ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/21/நுண்கலை-மன்றப்-போட்டிகள்-2867217.html
2867203 மதுரை திண்டுக்கல் கோழி கழிவு: வத்தலகுண்டு சாலையில் சுகாதாரச் சீர்கேடு DIN DIN Wednesday, February 21, 2018 01:10 AM +0530 வத்தலகுண்டு சாலையில் கொட்டப்படும் கோழி கழிவுகளால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாக, அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
     திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பகுதியில் செயல்படும் கோழி இறைச்சிக் கடை கழிவுகள், தினமும் மயான சாலையோரத்தில் கொட்டப்படுகின்றன. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதாரச் சீர்கேடு பரவுகிறது. 
   மேலும், இந்த சாலை வழியாக ஆடுசாபட்டி, கண்ணன் நகர், ராஜாநகர் பகுதி பொதுமக்கள் சென்று வருகின்றனர். இரு சக்கர வாகனத்தில் செல்வோர் கோழி கழிவுகளை தின்பதற்காகச் செல்லும் நாய்களால் பல்வேறு விபத்துகளை சந்தித்து வருகின்றனர்.
     இது தொடர்பாக வத்தலகுண்டு பேரூராட்சி நிர்வாகத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, பெரிய விபத்துகள் நிகழும் முன் பேருராட்சி நிர்வாகம் துரித  நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், இல்லையெனில் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/21/கோழி-கழிவு-வத்தலகுண்டு-சாலையில்-சுகாதாரச்-சீர்கேடு-2867203.html
2867198 மதுரை திண்டுக்கல் பூட்டிய வீட்டை உடைத்து 25 பவுன் நகை திருட்டு DIN DIN Wednesday, February 21, 2018 01:08 AM +0530 கொடைக்கானல் அருகே தாண்டிக்குடி பகுதியில் பூட்டிய வீட்டை உடைத்து, 25 பவுன் நகை திருடப்பட்டுள்ளது.
    கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான தாண்டிக்குடியைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவர், தாண்டிக்குடி கூட்டுறவு வங்கியின் செயலராகப் பணிபுரிந்து வருகிறார். இந் நிலையில், இவரது மகளின் பிரசவத்துக்காக வத்தலகுண்டு பகுதிக்கு தனது குடும்பத்துடன் சென்றிருந்துள்ளார். மூன்று நாள்கள் கழித்து மீண்டும் தனது வீட்டுக்கு வந்து பார்த்தபோது,  கதவின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. வீட்டினுள்ளே சென்று பார்த்துபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 25 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 15 ஆயிரம் திருடப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
    இது குறித்து இளங்கோவன் தாண்டிக்குடி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில், போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டு, விசாரணை நடத்தினர். மேலும், தடயவியல் நிபுணர்கள் சென்று கைரேகைகளை சேகரித்தனர். காவல் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/21/பூட்டிய-வீட்டை-உடைத்து-25-பவுன்-நகை-திருட்டு-2867198.html
2867196 மதுரை திண்டுக்கல் நத்தம் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா: காப்பு கட்டி பக்தர்கள் விரதம் DIN DIN Wednesday, February 21, 2018 01:08 AM +0530 திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மாரியம்மன் திருக்கோயில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு, ஒரே நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் தொடங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக் கோயில் மாசித் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக, உலுப்பகுடி கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் புனித நீராடிய பக்தர்கள், தீர்த்தக் குடங்களுடன் சந்தனக் கருப்பு கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். அங்கிருந்து, கோயில் நிர்வாகத்தினர், பூசாரிகள் மற்றும் கிராம மக்கள் சார்பில் மேள தாளத்துடனும், சிங்கார வர்ணக்குடையுடனும் விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு, கோயிலுக்கு அழைத்துச் சென்றனர்.பின்னர், 15 நாள் விரதம் தொடங்குவதற்காக மஞ்சள் காப்புக் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒரே நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்புக் கட்டி விரதம் தொடங்கிய நிகழ்ச்சியில், திண்டுக்கல், மதுரை, சிவங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். 
அம்மன் குளத்திலிருந்து எடுத்துவரப்பட்ட கம்பம், மாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடப்பட்டது. மாசித் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் அலங்கரிக்கப்பட்ட மின் ரதத்தில் மயில், சிம்மம், அன்னம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் எழுந்தருளி, நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா மார்ச் 6ஆம் தேதி நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, திருக்கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/21/நத்தம்-மாரியம்மன்-கோயில்-மாசித்-திருவிழா-காப்பு-கட்டி-பக்தர்கள்-விரதம்-2867196.html
2867194 மதுரை திண்டுக்கல் குஜிலியம்பாறை அருகே கோயிலில் கும்பாபிஷேகம் DIN DIN Wednesday, February 21, 2018 01:07 AM +0530 குஜிலியம்பாறை அடுத்துள்ள வீரக்கவுண்டன்பட்டியில் அமைந்துள்ள கருப்பசாமி, கன்னிமார், மதுரைவீரன், பட்டவன் கோயில்களின் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதனையொட்டி, கரூர் காவிரி ஆற்றிலிருந்து 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை தீர்த்தம் எடுத்து வந்தனர். கரூர் சிவாச்சாரியார் எம். முரளி தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க, கருப்பசாமி, கன்னிமார், மதுரைவீரன், பட்டவன் கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 
அதனைத் தொடர்ந்து, ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை, திருப்பணிக் குழுவினர் ப. செம்ப கவுண்டர், ஜி.எஸ். வீரப்பன், பாளையம் பேரூராட்சி முன்னாள் தலைவர் ஏ. பெருமாள் உள்ளிட்டோர் செய்திருந்தனர். 
கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்த 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/21/குஜிலியம்பாறை-அருகே-கோயிலில்-கும்பாபிஷேகம்-2867194.html
2867193 மதுரை திண்டுக்கல் பழனி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: மார்ச் 28 இல் தேரோட்டம் DIN DIN Wednesday, February 21, 2018 01:07 AM +0530 பழனி அருள்மிகு மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது.  பிப்ரவரி 27 ஆம் தேதி திருக்கல்யாணமும், பிப்ரவரி 28 இல் திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது. 
பழனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் பிரசித்தி பெற்ற பழனி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில், மூலவர் லிங்க வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி இரவு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.  
தொடர்ந்து, பிப்ரவரி 13 ஆம் தேதி திருக்கம்பம் அலங்கரித்து எடுக்கப்பட்டு, கோயில் முன்பு நிறுத்தப்பட்டு கம்பம் சாட்டுதல் நடைபெற்றது. பழனிக் கோயிலில் நீண்ட காலமாகவே திரிசூல வடிவில் கம்பம் கிடைக்கப் பெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.
கம்பம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கம்பத்துக்கு பால், பன்னீர், மஞ்சள் நீர் ஊற்றி வழிபாட்டை நடத்தி வருகின்றனர். செவ்வாய்க்கிழமை கொடியேற்றம் மற்றும் பூவோடு வைத்தல் நடைபெற்றது. இதை முன்னிட்டு, கொடிக் கம்பத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மாரியம்மன், சிம்மவாகனம், பூஜைப் பொருள்கள் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறக்கொடிக்கு கொடிபூஜை நடைபெற்றது. பின்னர், கொடி கோயிலை வலம் வரச் செய்யப்பட்டு,  தங்கக் கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.
கொடிக் கம்பத்துக்கு தர்ப்பை, மாலைகள், மாவிலைகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு, புனித நீரால் கழுவப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, கம்பத்தடிக்கு சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளிய அருள்மிகு மாரியம்மனுக்கும், கொடி மரத்துக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
விழாவைத் தொடர்ந்து, கோயில் முன்புள்ள திருக்கம்பத்தில் பூவோடு வைக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சூடச்சட்டி, தீச்சட்டி எடுத்து வந்து நேர்ச்சை செலுத்தினர். கொடியேற்ற நிகழ்ச்சியில், பழனி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் (பொறுப்பு) மேனகா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
 பிப்ரவரி 28 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு மாசித் தேரோட்டம் நடத்தப்பட்டு, மார்ச் 1 ஆம் தேதி இரவு 10 மணிக்கு கொடியிறக்கப்பட்டு கம்பம் கங்கையில் சேர்க்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/21/பழனி-மாரியம்மன்-கோயில்-மாசித்-திருவிழா-கொடியேற்றத்துடன்-தொடக்கம்-மார்ச்-28-இல்-தேரோட்டம்-2867193.html
2867191 மதுரை திண்டுக்கல் கொடைக்கானல் அருகே தனியார் நிலத்தில் தீ DIN DIN Wednesday, February 21, 2018 01:07 AM +0530 கொடைக்கானல்-பழனி மலைச் சாலையிலுள்ள தனியார் விவசாய நிலத்தில், திங்கள்கிழமை இரவு திடீரென தீப்பிடித்து எரிந்து வருகிறது.  
    கொடைக்கானல்-பழனி மலைச் சாலையில் வடகவுஞ்சிப் பகுதியில் கிருஷ்ண மோகன் என்பவருக்குச் சொந்தமாக சுமார் 35 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் யூக்காலிப்டஸ், மலை வேம்பு உள்ளிட்ட மரங்கள் உள்ளன. தற்போது, காடுகளில் உள்ள மரங்கள், இலைகள், சருகுகள், புற்கள் காய்ந்துள்ளன. இதனால், எளிதில் தீ பிடிப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
     இந்நிலையில், திடீரென தீப்பற்றி எரிகிறது. வனப் பகுதியில் தீ பரவாமல் தடுக்கும் வகையில், வனத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 
    ஏற்கெனவே, கொடைக்கானல் வனப் பகுதிகளையொட்டியுள்ள விவசாய நிலங்களில் தீ பரவாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என, வனத் துறையினர் எச்சரிக்கை செய்திருந்தனர். இந்நிலையில், கடந்த 2 நாள்களாக பல்வேறு வனப் பகுதிகள் மற்றும் தனியார் நிலங்களில் தீப் பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/21/கொடைக்கானல்-அருகே-தனியார்-நிலத்தில்-தீ-2867191.html
2867185 மதுரை திண்டுக்கல் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசிப் பெருவிழா கொடியேற்றம் DIN DIN Wednesday, February 21, 2018 01:03 AM +0530 திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசிப் பெருந்திருவிழாவையொட்டி, கொடியேற்ற நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
      திண்டுக்கல்லில் பிரசித்திப் பெற்ற கோட்டை மாரியம்மன் கோயிலில் மாசிப் பெருவிழா, கடந்த வியாழக்கிழமை பூத்தமலர் பூ அலங்காரத்துடன் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக, வெள்ளிக்கிழமை பூந்தேரில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
     இந்நிலையில், மாசிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கொடியேற்ற நிகழ்ச்சி, செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காலை 11 மணிக்கு, திண்டுக்கல் விஸ்வகுல மகாஜன சபையினரால் கொண்டுவரப்பட்ட திருமாங்கல்யம் மற்றும் மஞ்சள் புடவை அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு, சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
     பின்னர் 11.30 மணிக்கு குமரன் தெருவைச் சேர்ந்த சாம்பான் குல சபையினர் கொண்டு வந்த பாலகொம்பு, கோயில் கொடிமரத்தின் முன்பு ஊன்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அம்மன் உருவம் வரையப்பட்ட கொடி அம்மன் சன்னதியிலிருந்து எடுத்து வரப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.
    கொடியில் உள்ள அம்மனுக்கு கண் திறக்கும் நிகழ்ச்சிக்குப் பின், தீபாராதனை நடத்தப்பட்டு, பக்தர்களின் குலவை மற்றும் துதி பாடல்களோடு கொடிக் கம்பத்தில் ஏற்றப்பட்டது. அப்போது, அங்கு திரண்டிருந்த பக்தர்கள் திருக்கொடி மீது பூக்கள் தூவி வழிபட்டனர். பின்னர், உச்சிகால பூஜையைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/21/திண்டுக்கல்-கோட்டை-மாரியம்மன்-கோயில்-மாசிப்-பெருவிழா-கொடியேற்றம்-2867185.html
2866789 மதுரை திண்டுக்கல் நத்தம் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம் DIN DIN Tuesday, February 20, 2018 02:38 AM +0530 நத்தம் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா ஆண்டுதோறும் 15 நாள்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டுக்கான மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக அம்மன் உருவம் பொறிக்கப்பட்ட திருக்கொடி மேளதாளம் முழங்க கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, உலுப்பகுடி அருகிலுள்ள கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் எடுத்து
வந்து, விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் காப்பு கட்டும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. மயில், அன்னம், சிம்மம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் நகர்வலம் வரும் நிகழ்ச்சி தினமும் இரவு நடைபெறுகிறது.
மேலும், அரண்மனை பொங்கல் வைத்தல், மாவிளக்கு, காவடி எடுத்தல், கரும்பு தொட்டில் கட்டுதல் போன்ற நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வுகளும் நாள்தோறும் நடைபெறும்.
முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்குதல் மார்ச் 6ஆம் தேதி (செவவாய்க்கிழமை) நடைபெறுகிறது. பூக்குழி இறங்கும் முன்பு அக்கினிச் சட்டி எடுத்தல் மற்றும் கழுகு மரம் ஏறுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறும். மார்ச் 7ஆம் தேதி மஞ்சள் நீராடுதல், அம்மன் பூப்பல்லக்கில் நகர்வலம் வரும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/20/நத்தம்-மாரியம்மன்-கோயில்-மாசித்-திருவிழா-கொடியேற்றத்துடன்-தொடக்கம்-2866789.html
2866788 மதுரை திண்டுக்கல் கிறிஸ்தவர்கள் தவக்கால யாத்திரை DIN DIN Tuesday, February 20, 2018 02:38 AM +0530 கொடைக்கானலில் தவக்காலத்தை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை திருயாத்திரை மேற்கொண்டனர்.
கிறிஸ்தவர்களுக்கு கடந்த புதன்கிழமை (சாம்பல் புதன்) முதல் தவக்காலம் தொடங்கியுள்ளது. 40-நாள்கள் உண்ணாநோன்பும், ஜெபம், சிலுவைப்பாதை வழிபாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இதனைத் தொடர்ந்து கொடைக்கானல் செண்பகனூர் புனித சவேரியார் ஆலயப் பங்கு இறை மக்கள் சார்பில் திருயாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ மக்கள் 8 கி.மீ., தூரம் நடந்தே சென்று சிலுவை வழிபாடு நிகழ்ச்சியில் மேற்கொண்டு பெருமாள்மலை அருகேயுள்ள புனித வனத்துச் சின்னப்பர் குருசடிக்கு சென்றனர். அங்கு நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் திருப்பலி நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர்.
தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/20/கிறிஸ்தவர்கள்-தவக்கால-யாத்திரை-2866788.html
2866786 மதுரை திண்டுக்கல் தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணி ஆலோசனைக் கூட்டம் DIN DIN Tuesday, February 20, 2018 02:38 AM +0530 பழனி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாவட்ட விவசாய அணி சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட விவசாய அணித் தலைவர் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர் சுந்தர்ராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர்கள் திருஞானசம்பந்தம், தங்கவேல், சுப்பிரமணியன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
கூட்டத்தில் மாநிலங்களிடையே பாயும் நதிகள் மீது மாநிலங்கள் தனிப்பட்ட முறையில் உரிமை கொண்டாட முடியாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பாராட்டும், கடந்த 2007 ஆம் ஆண்டு காவிரி நடுவர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி 192 டிஎம்சி தண்ணீர் தமிழகத்துக்கு வழங்க வேண்டும்.
பழனி வையாபுரி குளத்தில் அரசு மருத்துவமனை, தனியார் விடுதிகள், திருமண மண்டபங்கள் என அனைத்து பகுதிகளின் கழிவுநீர் கலப்பதால் தொற்றுநோய் அபாயம் இருப்பதால் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். வாகனத் தணிக்கை என்ற பெயரில் போக்குவரத்து அதிகாரிகள் பொதுமக்களிடம் கடுமை காட்டுவதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநில எஸ்சி., எஸ்டி., பிரிவு துணைத் தலைவர் அய்யனார், நகரச் செயலாளர் காதர்முகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/20/தமிழ்-மாநில-காங்கிரஸ்-விவசாய-அணி-ஆலோசனைக்-கூட்டம்-2866786.html
2866785 மதுரை திண்டுக்கல் செம்பட்டி அருகே நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு DIN DIN Tuesday, February 20, 2018 02:38 AM +0530 செம்பட்டி அருகே நடந்து சென்ற பெண்ணிடம் மர்ம நபர் நகையைப் பறித்து தப்பியோடிவிட்டார்.
செம்பட்டி அடுத்துள்ள வீரக்கல் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் மனைவி சங்கீதா (36). இவர், கடந்த ஜனவரி
14-ஆம் தேதி அருகிலுள்ள தனது தந்தை வீட்டுக்கு மகனுடன் நடத்து சென்றுள்ளார். அப்போது, மர்ம நபர் சங்கீதா அணிந்திருந்த 4.5 பவுன் தாலிச் சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார். ஆனால், சங்கீதா சங்கிலியை கெட்டியாகப் பிடித்துக்
கொண்டதால், ஒன்றரை பவுனை மட்டுமே மர்ம நபர் பறித்துக்கொண்டு தப்பியோடி விட்டாராம்.இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை செம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/20/செம்பட்டி-அருகே-நடந்து-சென்ற-பெண்ணிடம்-நகை-பறிப்பு-2866785.html
2866783 மதுரை திண்டுக்கல் நகராட்சி அலுவலகத்துக்கு பிளாஸ்டிக் குப்பைத் தொட்டிகள் DIN DIN Tuesday, February 20, 2018 02:37 AM +0530 பழனியில் நகராட்சி நிர்வாகத்துக்கு மக்கும் குப்பையை பிரிக்க ஏதுவாக ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள 10 பிளாஸ்டிக் குப்பைத் தொட்டிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம், பழனி நகராட்சி சார்பில் அலுவலகம், உழவர்சந்தை, நகராட்சி பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மின்சாரம் தயாரிக்க மக்கும் குப்பைகள் தனியே சேகரம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு ஏதுவாக, ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 10 பிளாஸ்டிக் குப்பைத் தொட்டிகளை, பழனியிலுள்ள ஈக்விடாஸ் வங்கி நிர்வாகம் சார்பில் மண்டல மேலாளர் மகேந்திரன், நகராட்சி ஆணையர் ஜோதிக்குமாரிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில், நகர்நல அலுவலர் விஜயராஜ், கிளை மேலாளர் ரகுபதி, நகராட்சி சுகாதார ஆய்வாளர் மணிகண்டன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/20/நகராட்சி-அலுவலகத்துக்கு-பிளாஸ்டிக்-குப்பைத்-தொட்டிகள்-2866783.html
2866782 மதுரை திண்டுக்கல் தேசிய பூப்பந்தாட்டப் போட்டியில் வெற்றி: திண்டுக்கல் மாவட்ட மாணவர்களுக்குப் பாராட்டு DIN DIN Tuesday, February 20, 2018 02:37 AM +0530 தேசிய அளவிலான பூப்பந்தாட்டப் போட்டியில் வெற்றி பெற்ற திண்டுக்கல் மாவட்ட மாணவர்களுக்கு, ஆட்சியர் டி.ஜி. வினய் திங்கள்கிழமை பாராட்டு தெரிவித்தார்.
சமீபத்தில், 37ஆவது தேசிய சப்-ஜூனியர் பூப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள், ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் நடைபெற்றன. இந்தப் போட்டியில், தமிழக அணிக்காக திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இதில், ஐவர் போட்டி பிரிவில் தமிழக பெண்கள் அணி முதலிடம் பெற்று, தங்கப் பதக்கம் வென்றது. ஆண்கள் அணி 2ஆம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றது.
கலப்பு இரட்டையர் போட்டியில், திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார்பட்டியைச் சேர்ந்த சுவாமி விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி மாணவர் அபிமன்யு, மறவப்பட்டி குழந்தை இயேசு உயர்நிலைப் பள்ளி மாணவி ஜெனிபர் மெடில்டா ஆகியோர் முதலிடம் பெற்றனர். அதேபோல் ஆண்கள் இரட்டையர் போட்டியிலும் அபிமன்யு தங்கப் பதக்கம் வென்றார். மேலும், சிலுக்குவார்பட்டி பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், அருண்குமார், கதிரேசன் ஆகியோருடன் இணைந்து விளையாடிய அபிமன்யு, ஐவர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்நிலையில், தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தின்போது, மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் பாராட்டுத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் செ. சௌந்தரராஜன், தமிழக பூப்பந்தாட்டக் கழக மாநில துணைத் தலைவர் ஏ. சீனிவாசன், செயலர் ஜெ. விஜய் ஆகியோர் பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/20/தேசிய-பூப்பந்தாட்டப்-போட்டியில்-வெற்றி-திண்டுக்கல்-மாவட்ட-மாணவர்களுக்குப்-பாராட்டு-2866782.html
2866780 மதுரை திண்டுக்கல் முன்னாள் சர்வேயர் பணம் மோசடி செய்ததாக ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி DIN DIN Tuesday, February 20, 2018 02:37 AM +0530 ரூ.5 லட்சம் மோசடி செய்த முன்னாள் சர்வேயர் உள்பட 5 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்திருந்த மூதாட்டி திடீரென தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் அடுத்துள்ள தோட்டனூத்துப் பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பொண்ணு (70). திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்திருந்தார். அப்போது, திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார், அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர்.
இது குறித்து மூதாட்டி சின்னப்பொண்ணு கூறியது: எனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை, வருவாய்த் துறையில் சர்வேயராக பணியாற்றிய ரத்தினம் உள்பட 5 பேர் சேர்ந்து, கடந்த 1996ஆம் ஆண்டு ரூ. 5 லட்சத்துக்கு கிரையம் பேசினர். அதற்காக என்னிடம் பத்திரத்திலும் கையொப்பம் பெற்றனர். பத்திரப்பதிவு செய்துகொண்ட அவர்கள், எனக்கு பணத்தை தராமல் ஏமாற்றிவிட்டனர்.
இது தொடர்பாக பலமுறை அவர்களிடம் கேட்டும் பயனில்லாததால், திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன்.
இதனால் என்னுடன்
சமரசம் பேசிய ரத்தினம் உள்பட 5 பேரும், உடனடியாக பணத்தை வழங்குவதாக உறுதி அளித்தனர். அதற்கு முன்னதாக, சமரசமாகப் பேசி முடித்துக் கொள்வதாக
நீதிமன்றத்தில் தெரிவித்து வழக்கை திரும்பப் பெறவேண்டும் என்றும் வற்புறுத்தினர். பணம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் வழக்கை திரும்பப் பெற்றேன்.
ஆனால், பணத்தை தராமல் மீண்டும் என்னை ஏமாற்றிவிட்டனர். அவர்களிடமிருந்து பணத்தை பெற முடியாத அதிருப்தியில், தற்கொலைக்கு முயற்சித்தேன். சம்பந்தப்பட்ட 5 பேர் மீதும் நடவடிக்கை எடுத்து, எனது பணத்தை மீட்டுக் கொடுக்கவேண்டும் என்றார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/20/முன்னாள்-சர்வேயர்-பணம்-மோசடி-செய்ததாக-ஆட்சியர்-அலுவலகத்தில்-மூதாட்டி-தீக்குளிக்க-முயற்சி-2866780.html
2866779 மதுரை திண்டுக்கல் ஒட்டன்சத்திரம்கால்நடை சந்தைக்கு மாடுகள் வரத்து குறைவு: விலை உயர்வு DIN DIN Tuesday, February 20, 2018 02:37 AM +0530 ஒட்டன்சத்திரம் கால்நடைச் சந்தைக்கு மாடுகளின் வரத்து குறைந்ததால், அவற்றின் விலை உயர்ந்தது.
ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குச் சொந்தமான மாட்டுச்சந்தை 1-ஆவது வார்டு சங்குபிள்ளைபுதூரில் உள்ளது. வாரந்தோறும் திங்கள்கிழமை கூடும் இச்சந்தையில், திண்டுக்கல், தேனி, திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஜெர்சி, சிந்து, நாட்டுமாடுகள், வளர்ப்பு கன்றுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
இவற்றை வாங்க, கேரள வியாபாரிகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் வருகின்றனர். அதேபோல், ஜல்லிக்கட்டு காளைகளும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த நிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகளின் வரத்து வெகுவாகக் குறைந்து காணப்பட்டது. இதனால், நாட்டு இன காளைகள் ஒரு ஜோடி ரூ.1 லட்சம் முதல் ரூ.1.50 வரையிலும், ஜெர்சி மற்றும் சிந்து இன மாடுகள் ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. 60 ஆயிரம் வரையிலும், வளர்ப்பு கன்றுகள் ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரையிலும் என விற்பனையானது.
வரத்து குறைவின் காரணமாக, வழக்கத்தை விட ஒரு மாட்டுக்கு ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 5 ஆயிரம் வரை கூடுதலாக விலை கொடுத்து விவசாயிகளும்,வியாபாரிகளும் வாங்கிச் சென்றனர். வயது முதிர்ந்த மாடுகள் மற்றும் விவசாயத்துக்கு பயன்படாத மாடுகளை கேரள வியாபாரிகள் இறைச்சிக்காக வாங்கி சென்றனர்.
அந்த வகை மாடுகள் சுமார் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இங்கு, வாரந்தோறும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/20/ஒட்டன்சத்திரம்கால்நடை-சந்தைக்கு-மாடுகள்-வரத்து-குறைவு-விலை-உயர்வு-2866779.html
2866778 மதுரை திண்டுக்கல் வனத் துறையினரைக் கண்டித்து கொடைக்கானலில் இன்று கடையடைப்பு DIN DIN Tuesday, February 20, 2018 02:36 AM +0530 வனத் துறையினரைக் கண்டித்து, கொடைக்கானலில் பல்வேறு கட்சிகள், சங்கங்கள் சார்பில் செவ்வாய்க்கிழமை கடையடைப்பு மற்றும் ஊர்வலம் நடைபெறுகிறது.
கொடைக்கானலில் தனியார் காட்டேஜ் பணியாளர்களுக்கும்-வனத் துறையினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், இரு தரப்பினரும் காயமடைந்தனர். இதில், தனியார் காட்டேஜ் பணியாளர்கள் 9 பேர் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, தனியார் காட்டேஜ் பணியாளர்களைத் தாக்கியதாக, இருவரை பணியிடை நீக்கமும், 3 தாற்காலிகப் பணியாளர்களை பணிநீக்கமும் செய்து வனத் துறை உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், வனத் துறையினரைக் கண்டித்து, கொடைக்கானல் பகுதியிலுள்ள அனைத்துக் கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. அதில், செவ்வாய்க்கிழமை கடையடைப்பு, ஊர்வலம் மற்றும் பொதுக் கூட்டம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. அதனடிப்படையில், பல்வேறு சங்கங்கள் சார்பில் நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இதையடுத்து, கொடைக்கானல் காவல் நிலையத்தில் டி.எஸ்.பி. சந்திரன் தலைமையில், திங்கள்கிழமை இரவு பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள், பல்வேறு வர்த்தக சங்க நிர்வாகிகளுடன் காவல் துறையினர் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அதில் உடன்பாடு ஏற்படாததால், செவ்வாய்க்கிழமை கொடைக்கானலில் கடையடைப்பு, ஊர்வலம் மற்றும் மூஞ்சிக்கல் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெறும் என, போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/20/வனத்-துறையினரைக்-கண்டித்து-கொடைக்கானலில்-இன்று-கடையடைப்பு-2866778.html
2866776 மதுரை திண்டுக்கல் சாலை வசதி இல்லாத கிராமத்துக்கு மாட்டு வண்டி வழங்கக் கோரி நூதன மனு DIN DIN Tuesday, February 20, 2018 02:36 AM +0530 திண்டுக்கல் அருகே சாலை வசதி இல்லாத கிராமத்துக்கு மாட்டு வண்டி வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை நூதன மனு வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், அம்பாத்துரை அடுத்துள்ள பெருமாள்கோயில்பட்டி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. திண்டுக்கல்-மதுரை நான்குவழிச் சாலையிலிருந்து சுமார் 2 கி.மீட்டர் தொலைவில் உள்ள இந்த கிராமத்துக்கு முறையான சாலை வசதி இல்லை எனக் கூறப்படுகிறது. அதேபோல், தெரு விளக்குகளும் இல்லாததால், குண்டும் குழியுமான சாலையில் இருளில் பயணிக்க முடியாத நிலை இருப்பதாக, அப்பகுதியினர் புகார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக ஊராட்சி செயலர், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக திங்கள்கிழமை வந்தனர். சாலை வசதி இல்லாத தங்கள் கிராமத்துக்கு மாட்டு வண்டி வழங்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக் கோரி நூதன முறையில் கோஷமிட்டனர். இது குறித்த கோரிக்கை மனுவினை, மாவட்ட ஆட்சியரிடமும் வழங்கினர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/20/சாலை-வசதி-இல்லாத-கிராமத்துக்கு-மாட்டு-வண்டி-வழங்கக்-கோரி-நூதன-மனு-2866776.html
2866775 மதுரை திண்டுக்கல் குடிநீர் வழங்கக் கோரி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு DIN DIN Tuesday, February 20, 2018 02:36 AM +0530 ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கிராம மக்கள் குடிநீர் வசதி ஏற்படுத்தித் தரக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், செம்மடைப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட கள்ளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், குடிநீர் வசதி கோரி காலிக் குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்திருந்தனர். இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் கூறுகையில், ஆழ்துளைக் கிணறு மூலம் எங்கள் பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், ஆழ்துளைக் கிணற்றுக்கான குழாய்களை சமூக விரோதிகள் சிலர் சேதப்படுத்திவிட்டனர். இதனால், எங்கள் பகுதிக்கு குடிநீர் விநியோகம் பாதிப்படைந்தது.
குடிநீர் அல்லாத பயன்பாட்டுக்கு ஒரு குடம் ரூ. 5, குடிநீர் ரூ. 10 வீதம் செலவு செய்து தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் நிலை உள்ளது. மேலும், சுமார் 1 கி.மீட்டர் தொலைவில் உள்ள ஆலமரத்துப்பட்டி பகுதி விவசாயக் கிணற்றிலிருந்தும் தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்துகிறோம். எனவே, ஆழ்துளைக் கிணறு மூலம் தண்ணீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/20/குடிநீர்-வழங்கக்-கோரி-கிராம-மக்கள்-ஆட்சியரிடம்-மனு-2866775.html
2866774 மதுரை திண்டுக்கல் கொடைக்கானலில் காட்டெருமைகள் உலா: பயணிகள் ஓட்டம் DIN DIN Tuesday, February 20, 2018 02:36 AM +0530 கொடைக்கானலில் காட்டெருமைகள் தனது குட்டியுடன் திங்கள்கிழமை மாலை உலாவியதால், பயணிகள் ஓட்டம் பிடித்தனர்.
கொடைக்கானல் நகர்ப் பகுதியிலும், விவசாயப் பகுதியிலும் காட்டெருமைகள் அடிக்கடி கூட்டமாகத் திரிகின்றன. இந் நிலையில், கொடைக்கானல் பேருந்து நிலையம் மற்றும் அண்ணாசாலைப் பகுதியில் தனது குட்டியுடன் காட்டெருமைகள் திரிந்ததால், அப் பகுதியிலிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். சிலர் புகைப்படம் மற்றும் சுயப்படம் எடுத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினர், காட்டெருமைகளை பேருந்து நிலையத்தின் அருகிலுள்ள புதருக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/20/கொடைக்கானலில்-காட்டெருமைகள்-உலா-பயணிகள்-ஓட்டம்-2866774.html
2866222 மதுரை திண்டுக்கல் கொடைக்கானலில் வனவர், வனக்காப்பாளர் பணியிட மாற்றம்; 3 சூழல் காவலர்கள் நீக்கம் DIN DIN Monday, February 19, 2018 03:45 AM +0530 கொடைக்கானலில் வனத்துறையினர் மற்றும் தனியார் விடுதி ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக வனவர், வனக்காப்பாளர் பணியிட மாற்றமும்,  3 சூழல் காவலர்களை பணி நீக்கம் செய்தும் மாவட்ட வன அலுவலர் முருகன் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார்.
கொடைக்கானலில் சுற்றுலா சென்ற தனியார் விடுதி ஊழியர்கள் 12 பேரை வனத்துறையினர் தாக்கியதாக புகார் கூறப்பட்டது. 
முதல்கட்ட விசாரணையில் அடிப்படையில் மன்னவனூர் வனச்சரக வனவர் டேவிட், வனக்காப்பாளர் சிங்காரவேல் ஆகியோரை பழனி, வந்தரேகு வனச்சரகப் பகுதிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் சூழல் காவலர்களான கொடைக்கானலைச் சேர்ந்த அந்தோணி பெர்ணான்டோ (25), சுரேஷ்  (21), மன்னவனூரைச் சேர்ந்த விக்னேஷ்வரன் (24) ஆகிய 3 பேரையும் பணி நீக்கம் செய்து கொடைக்கானல் மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவிட்டுள்ளார்.
உரிய விசாரணை நடத்தப்படும்: 
திண்டுக்கல் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சீலப்பாடி, பெரியக்கோட்டை பகுதி கிராமங்களில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில்  பங்கேற்ற வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியது: 
கிராமப்புறங்களுக்குச் சென்று மனுக்களைப் பெறுவதன் மூலம் பொதுமக்களின் பிரச்னைகளை நேரடியாக அறிந்து விரைவில் தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நடைமுறை தொகுதியின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். 
கொடைக்கானலில் வனத்துறையினர் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மோதல் குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
 இந்த விசாரணையை நேர்மையான முறையில் நடத்தி தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/19/கொடைக்கானலில்-வனவர்-வனக்காப்பாளர்-பணியிட-மாற்றம்-3-சூழல்-காவலர்கள்-நீக்கம்-2866222.html
2866075 மதுரை திண்டுக்கல் பழனியில் மாநில யோகா போட்டிகள் DIN DIN Monday, February 19, 2018 01:48 AM +0530 பழனியில் திண்டுக்கல் மாவட்ட யோகா ஸ்போர்ட்ஸ் சங்கம் சார்பில் 21ஆவது ரேங்கிங் சாம்பியன்சிப், மற்றும் 2ஆவது பசிபிக் ஆசியா யோகா சாம்பியன்சிப் தேர்வுக்கான யோகாசனப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றது.
 பழனி - திண்டுக்கல் சாலையில் உள்ள தனியார் பள்ளி கலையரங்கில் திண்டுக்கல் மாவட்ட யோகா ஸ்போர்ட்ஸ் சங்கம் மற்றும் நெய்க்காரபட்டி அரிமா சங்க அறக்கட்டளை சார்பில் 41ஆவது மாவட்ட யோகா ஸ்போர்ட்ஸ் சாம்பியன் மற்றும் 21ஆவது ரேங்கிங் சாம்பியன்சிப்,  2ஆவது பசிபிக் ஆசியா யோகா சாம்பியன்சிப் தேர்வுக்கான  போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மாவட்ட யோகா ஸ்போர்ட்ஸ் சங்க மாவட்ட தலைவர் சுப்புராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கரிகாலன் வரவேற்புரை வழங்கினார்.  மாணவிகளுக்கான போட்டிகளை கந்தவிலாஸ் பாஸ்கரன், மாணவர்களுக்கான போட்டிகளை ஜெயம் குரூப்ஸ் தலைவர் சரவணன் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.  
போட்டிகளில் திண்டுக்கல், மதுரை, கோவை, திருப்பூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு பள்ளிகளில் இருந்து சுமார் 600 பேர் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். 
வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் சான்றிதழ்கள், பதக்கம் மற்றும் பரிசுகளை வழங்கினர். நிகழ்ச்சியில் ஒப்பந்தகாரர் நேரு, அரிமா மாவட்ட தலைவர் மயில்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/19/பழனியில்-மாநில-யோகா-போட்டிகள்-2866075.html
2866074 மதுரை திண்டுக்கல் அரசு மருத்துவமனைகளால் ஆதாயம் பெறும் தனியார் மருத்துவமனைகள் DIN DIN Monday, February 19, 2018 01:47 AM +0530 ஆரம்ப நிலை நோய் கண்டறிதல் மையத்தின் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு குறைபாடுகள் கண்டறியப்பட்டாலும், ஊழியர்களின் திட்டமிட்ட பரப்புரையால் 65 சதவீதம் பேர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறும் நிலை உள்ளது.
திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், மாவட்ட ஆரம்ப நிலை நோய் கண்டறிதல் மையம் (D​E​I​C) செயல்பட்டு வருகிறது. கடந்த 2016 ஏப்ரல் மாதம் இந்த மையம் தொடங்கப்பட்டாலும் அக்டோபர் முதலே தீவிர செயல்பட்டிற்கு வந்தது. திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு சத்து குறைபாடு, உடல் உறுப்பு குறைபாடு, நோய் அறிகுறி ஆகியவற்றை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க ஆரம்ப நிலை நோய் கண்டறிதல் மையத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 
குழந்தைகள் நலம், பல், காது, வாய் உள்ளிட்ட உறுப்புப் பாதிப்பு, மனநலம், மூடநீக்கியல் ஆகிய பிரிவுகளின் கீழ் 6 தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்த மையத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். 
கடந்த 2016 அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 1516 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் 1492 குழந்தைகளை பரிசோதித்த தொழில்நுட்ப வல்லுநர்கள், 45 குழந்தைளின் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக கண்டறிந்துள்ளனர். அதில் 11 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு முழு உடல் ஆரோக்கியம் பெற்றுள்ளனர். 
அதேபோல் கடந்த 2017ஆம் ஆண்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பிறந்துள்ள 8,041 குழந்தைகளில் 7,937 பேரை பரிசோதித்ததில், 278 பேருக்கு குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. அதில் 90 குழந்தைகளுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 
 அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு ஆரம்ப நிலையில் பாதிப்பு கண்டறியப்பட்ட போதிலும், சுமார் 65 சதவீதம் பேர் தனியார் மருத்துவமனைகளை நோக்கிச் செல்வதாகக் கூறப்படுகிறது. அரசு மருத்துவமனையிலேயே பெரும்பாலான சிகிச்சை வசதிகள் உள்ளன. ஆனாலும் அலைக்கழிப்பு, சிகிச்சை குறைவு,  மருத்துவரின் கவனிப்பு முழுமையாக இருக்காது என்பன போன்ற அச்சத்தால் பெரும்பாலான பெற்றோர், தனியார் மருத்துவமனைக்கு செல்லும் நிலை உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த அச்சம் மருத்துவமனை ஊழியர்கள் மூலமாகவே பரப்புரை செய்யப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை பரிசோதிக்கும் மருத்துவர்கள், அறுவைச் சிகிச்சை, தொடர் சிகிச்சை தேவைப்படுவோரை தங்களது கிளினிக்குகளுக்கு வரவழைத்து சிகிச்சை அளிப்பதாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புகார் எழுந்தது. இதனை அடுத்து குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அறுவைச் சிகிச்சைகளை திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலேயே செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட மருத்துவர்களுக்கு மாதாந்திர இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதேபோன்று ஆரம்ப நிலை நோய் கண்டறிதல் மையம் சார்பில் பரிந்துரைக்கப்படும் குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெறுவதற்கான வாய்ப்பினை உறுதி செய்யும் வகையில் மாதாந்திர இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/19/அரசு-மருத்துவமனைகளால்-ஆதாயம்-பெறும்-தனியார்-மருத்துவமனைகள்-2866074.html
2866073 மதுரை திண்டுக்கல் கொடைக்கானல் மோயர்பாயிண்ட்  வனப்பகுதியில் தீ விபத்து DIN DIN Monday, February 19, 2018 01:46 AM +0530 கொடைக்கானல் வனப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கொடைக்கானலில் தொடர்ந்து பனியின் தாக்கமும் பகலில் நல்ல வெயிலும் நிலவி வருகிறது. இதனால் வனப் பகுதியில் உள்ள இலைகள், சருகுகள், காய்ந்த மரக்கிளைகள் போன்றவை எளிதில் தீப்பிடிக்கும் சூழல் உள்ளது. இந்நிலையில் திடீரென மோயர்பாயிண்ட் வனப் பகுதி மற்றும் சாலையோரங்களில் தீப் பிடித்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு 10-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சென்று தண்ணீர் ஊற்றியும், இலை, செடிகளைக்  கொண்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் மேலும் தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது. 
இதையடுத்து மோயர் பாயிண்ட் பகுதிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள்  ஏமாற்றமடைந்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/19/கொடைக்கானல்-மோயர்பாயிண்ட்--வனப்பகுதியில்-தீ-விபத்து-2866073.html
2866072 மதுரை திண்டுக்கல் தவசிமடையில் ஜல்லிக்கட்டு: 16 பேர் காயம் DIN DIN Monday, February 19, 2018 01:45 AM +0530 திண்டுக்கல் அருகே தவசிமடை கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 16 மாடு பிடி வீரர்கள் காயமடைந்தனர்.  
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அடுத்துள்ள தவசிமடை புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இந்த  ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக திண்டுக்கல், திருச்சி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 450 காளைகள் அழைத்து வரப்பட்டன. அதேபோல் காளைகளைப் பிடிப்பதற்காக 400 மாடு பிடி வீரர்களும் கலந்து கொண்டனர். 
வாடிவாசலிலிருந்து சீறிப் பாய்ந்து வெளியேறிய காளைகளை, பிடிக்க முயன்றபோது 16 மாடு பிடிவீரர்கள் காயம் அடைந்தனர். அதில் 6 பேர் தீவிர சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். ஜல்லிக்கட்டில் வெற்றிப் பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், மாடு பிடி வீரர்களுக்கும் தங்க காசு, கட்டில், பீரோ, சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/19/தவசிமடையில்-ஜல்லிக்கட்டு-16-பேர்-காயம்-2866072.html
2866071 மதுரை திண்டுக்கல் பழனி அருகே அனுமதியின்றி மணல் அள்ளி வந்த லாரி பறிமுதல் DIN DIN Monday, February 19, 2018 01:45 AM +0530 பழனியருகே அனுமதியின்றி மணல் அள்ளி வந்த லாரி ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
பழனியை அடுத்த ஆயக்குடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை திண்டுக்கல் மாவட்ட கனிமவளத்துறை உதவி ஆணையர் சதீஷ்குமார் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஆயக்குடி பிரதான சாலையில் மணல் ஏற்றி வந்த லாரியை சோதனை செய்தபோது அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. 
இதையடுத்து அந்த லாரியை கைப்பற்றிய அதிகாரிகள் அபராதம் விதித்து லாரியை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஒப்படைத்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/19/பழனி-அருகே-அனுமதியின்றி-மணல்-அள்ளி-வந்த-லாரி-பறிமுதல்-2866071.html
2865647 மதுரை திண்டுக்கல் மலர்க் கண்காட்சிக்கு தயாராகும் பிரையண்ட் பூங்கா: 25 ஆயிரம் செடிகள் நடவு DIN DIN Sunday, February 18, 2018 07:41 AM +0530 கொடைக்கானலில் மலர்க் கண்காட்சிக்காக பிரையண்ட் பூங்காவில் சனிக்கிழமை இறுதிக் கட்ட மலர்ச் செடிகள் நடவும் பணி நடைபெற்றது.
கொடைக்கானலில் வரும் ஏப்ரல்,மே மாதங்களில் பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு நடைபெற உள்ள 57-ஆவது மலர்க் கண்காட்சிக்காக மலர் படுக்கைகள் அமைத்தல், உரமிடுதல், களையெடுத்தல், தண்ணீர் தெளித்தல், நிழல் வலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பிரையண்ட் பூங்காவில் நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான மலர்ச் செடிகள் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்டு நடவு செய்யப்பட்டுள்ளது. 
ஊட்டியிலிருந்து வரவழைக்கப்பட்ட மேரி கோல்ட், ஆண்டேனியம், ஆஸ்டர், கேலண்டுலா,டயந்தேஸ், சால்வியா உள்ளிட்ட 25 வகையான 25-ஆயிரம் மலர்ச் செடிகள் இறுதி கட்டமாக நடவு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் புல்வெளிகள் அமைத்தல், செடிகளுக்கு மருந்து தெளித்தல் போன்ற பணிகளும் நடைபெற்று வருகிறது.
 இது குறித்து பிரையண்ட் பூங்கா மேலாளர் பிரியதர்சன் கூறியதாவது:
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடைபெற உள்ள மலர்க் கண்காட்சிக்காக ஏற்கெனவே இரண்டு கட்டங்களாக ஆயிரக்கணக்கான மலர்ச் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன.  தற்போது இறுதி கட்டமாக ஊட்டியிலிருந்து வரவழைக்கப்பட்ட 25-வகைக 25-ஆயிரம் மலர்ச் செடிகள் நடவு செய்யப்பட்டு வருகின்றன. 
இந்த மலர்ச் செடிகளில் மே மாதம் லட்சக்கணக்கான மலர்கள் பூத்துக் குலுங்கும். 
இவற்றை வரும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் பார்த்து ரசிப்பார்கள் என்றார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/18/மலர்க்-கண்காட்சிக்கு-தயாராகும்-பிரையண்ட்-பூங்கா-25-ஆயிரம்-செடிகள்-நடவு-2865647.html
2865619 மதுரை திண்டுக்கல் வையாபுரி குளத்தில் வெங்காயத் தாமரை செடிகள்: ஆட்சியருக்கு வேண்டுகோள் DIN DIN Sunday, February 18, 2018 07:31 AM +0530 பழனி வையாபுரி குளத்தில் உள்ள வெங்காயத்தாமரை செடிகளை அகற்ற மாவட்ட ஆட்சியருக்கு முன்னாள் நகர்மன்ற தலைவர் ராஜமாணிக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 அவர் விடுத்துள்ள அறிக்கை: பழனி நகரின் மையத்தில் சுமார் நூறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வையாபுரி குளம் முழுவதும் வெங்காயத்தாமரை எனப்படும் அமலைச்செடிகள் படர்ந்து உள்ளன. இந்த குளத்தின் நீரை கொண்டு பாசன வசதி செய்யப்பட்டுள்ள நிலங்கள் அடுத்த முறையும் விவசாயம் செய்யும் அளவிற்கு நீர் இருந்தும் இந்த அமலைச்செடிகளால் வேகமாக வற்றி வருகிறது. இதனால் விவசாயம் முற்றிலும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பழனியில் உள்ள தனியார் மற்றும் நகராட்சி ஆழ்குழாய்களுக்கும் நீர்வற்றி கோடைகாலத்தில் பெரும் குடிநீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீர் வற்றும் காலத்தில் அமலைசெடிகள் அழுகி துர்நாற்றமும், சுற்றுச்சூழல் மாசடையும் நிலையும் வந்துவிடும். இதுகுறித்து பொதுப்பணித்துறைக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளாத நிலை நீடித்து வருகிறது. 
ஆகவே, மாவட்ட ஆட்சியர் இந்த விஷயத்தில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நலன்கருதி பொதுப்பணித்துறைக்கு உத்திரவிட்டு அமலைச்செடிகளை அகற்றி நிலத்தடி நீர் ஆதாரத்தை காக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/18/வையாபுரி-குளத்தில்-வெங்காயத்-தாமரை-செடிகள்-ஆட்சியருக்கு-வேண்டுகோள்-2865619.html
2865618 மதுரை திண்டுக்கல் திருடப்பட்ட கார் மீட்பு; இளைஞர் கைது DIN DIN Sunday, February 18, 2018 07:31 AM +0530 ஒட்டன்சத்திரத்தில் கார் திருடிய இளைஞரை சனிக்கிழமை போலீஸார் கைது செய்து, திருடப்பட்ட காரை மீட்டனர். 
 ஒட்டன்சத்திரம் கே.கே.நகரைச் சேர்ந்த ஆறுமுகம். இவர் ஜன.7-ஆம் தேதி இரவு தனது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த கார் திருடுபோனது. அதன் மதிப்பு ரூ.6 லட்சம். இது குறித்து அவர் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். 
 அதன் பேரில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்திவேல் உத்தரவின் பேரில், ஒட்டன்சத்திரம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஆறுமுகம் ஆலோசனையின் பேரில், ஒட்டன்சத்திரம் காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைத்து திருடு போன காரை தேடி வந்தனர். 
 இந்த நிலையில் சனிக்கிழமை ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலை அப்பியம்பட்டி நால்ரோடு சோதனை சாவடியில் போலீஸார் வாகனச்சோதனையில் ஈடுப்பட்டிருந்தனர்.அப்போது அவ்வழியேதிருடு போன காரை ஒட்டி வந்த இளைஞரைப் பிடித்து விசாரணை செய்தனர். 
 அவர் கரூர் மாவட்டம் மயிலம்பட்டியைச் சேர்ந்த அக்பர்ஷெரிப் மகன் அன்வர் அலி (28) என்பது விசாரணையில் தெரியவந்தது. 
 அவரை கைது செய்து காரை மீட்டனர். இதில் தொடர்புடைய கோவை போத்தனூரைச் சேர்ந்த இப்ராகீம் சதாம் உசேன் மற்றும் ஜாபர் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/18/திருடப்பட்ட-கார்-மீட்பு-இளைஞர்-கைது-2865618.html
2865617 மதுரை திண்டுக்கல் மலர்க் கண்காட்சிக்கு தயாராகும் பிரையண்ட் பூங்கா: 25 ஆயிரம் செடிகள் நடவு DIN DIN Sunday, February 18, 2018 07:30 AM +0530 கொடைக்கானலில் மலர்க் கண்காட்சிக்காக பிரையண்ட் பூங்காவில் சனிக்கிழமை இறுதிக் கட்ட மலர்ச் செடிகள் நடவும் பணி நடைபெற்றது.
கொடைக்கானலில் வரும் ஏப்ரல்,மே மாதங்களில் பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு நடைபெற உள்ள 57-ஆவது மலர்க் கண்காட்சிக்காக மலர் படுக்கைகள் அமைத்தல், உரமிடுதல், களையெடுத்தல், தண்ணீர் தெளித்தல், நிழல் வலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பிரையண்ட் பூங்காவில் நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான மலர்ச் செடிகள் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்டு நடவு செய்யப்பட்டுள்ளது. 
ஊட்டியிலிருந்து வரவழைக்கப்பட்ட மேரி கோல்ட், ஆண்டேனியம், ஆஸ்டர், கேலண்டுலா,டயந்தேஸ், சால்வியா உள்ளிட்ட 25 வகையான 25-ஆயிரம் மலர்ச் செடிகள் இறுதி கட்டமாக நடவு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் புல்வெளிகள் அமைத்தல், செடிகளுக்கு மருந்து தெளித்தல் போன்ற பணிகளும் நடைபெற்று வருகிறது.
 இது குறித்து பிரையண்ட் பூங்கா மேலாளர் பிரியதர்சன் கூறியதாவது:
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடைபெற உள்ள மலர்க் கண்காட்சிக்காக ஏற்கெனவே இரண்டு கட்டங்களாக ஆயிரக்கணக்கான மலர்ச் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. 
தற்போது இறுதி கட்டமாக ஊட்டியிலிருந்து வரவழைக்கப்பட்ட 25-வகைக 25-ஆயிரம் மலர்ச் செடிகள் நடவு செய்யப்பட்டு வருகின்றன. இந்த மலர்ச் செடிகளில் மே மாதம் லட்சக்கணக்கான மலர்கள் பூத்துக் குலுங்கும். இவற்றை வரும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் பார்த்து ரசிப்பார்கள் என்றார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/18/மலர்க்-கண்காட்சிக்கு-தயாராகும்-பிரையண்ட்-பூங்கா-25-ஆயிரம்-செடிகள்-நடவு-2865617.html
2865616 மதுரை திண்டுக்கல் பழனி அருங்காட்சியகம் சார்பில் பிப். 28 -இல் அறிவியல் கண்காட்சி: மாணவர்கள் பங்கேற்கலாம் DIN DIN Sunday, February 18, 2018 07:30 AM +0530 பழனியில் அரசு அருங்காட்சியகம் சார்பில் வரும் பிப்.28-ஆம் தேதி அறிவியல் கண்காட்சி நடைபெறவுள்ளது.
 தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அருங்காட்சியகம் மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் சார்பில் இக் கண்காட்சி நடைபெறவுள்ளது. 
அடிவாரம் குடமுழுக்கு நினைவரங்கில் நடைபெறும் இந்த கண்காட்சியில் சிறந்த அறிவியல் படைப்புக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது. இதில் 
பங்கேற்க விரும்பும் 6-ஆம் வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர் தங்கள் பெயர்களை காப்பாட்சியர், அரசு அருங்காட்சியகம், சன்னதி வீதி, பழனி என்ற முகவரிக்கோ அல்லது 94436-71084, 04545-241990 என்ற எண்ணுக்கோ பிப்ரவரி-25 ஆம் தேதிக்குள் தொடர்பு கொள்ளுமாறு காப்பாட்சியர் கிருஷ்ணம்மாள் தெரிவித்துள்ளார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/18/பழனி-அருங்காட்சியகம்-சார்பில்-பிப்-28--இல்-அறிவியல்-கண்காட்சி-மாணவர்கள்-பங்கேற்கலாம்-2865616.html
2865615 மதுரை திண்டுக்கல் வாகரை பகுதிகளில் பிப்ரவரி 19 மின்தடை DIN DIN Sunday, February 18, 2018 07:30 AM +0530 பழனியை அடுத்த வாகரை பகுதியில் பிப். 19-இல் (திங்கள்கிழமை) மின்தடை ஏற்படும். 
வாகரை துணை மின் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் அப்பனூத்து, புங்கமுத்தூர், திருவாண்டபுரம், அப்பிபாளையம், மேட்டுப்பட்டி, வேப்பன்வலசு, வாகரை, பூலாம்பட்டி, மரிச்சிலம்பு, பூசாரிக்கவுண்டன்வலசு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. செயற்பொறியாளர் சந்திரசேகர் இதனை தெரிவித்துள்ளார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/18/வாகரை-பகுதிகளில்-பிப்ரவரி-19-மின்தடை-2865615.html
2865614 மதுரை திண்டுக்கல் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் ஆலோசனை DIN DIN Sunday, February 18, 2018 07:29 AM +0530 ஒட்டன்சத்திரத்தில் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
 இந்த கூட்டத்திற்கு  நல்லசாமி தலைமை வகித்தார். ஜ.ஆர்.சந்திரன், சண்முகவேல், தங்கத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், தகுதிநீக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் கலந்து கொண்டு பேசுகையில், ஒட்டன்சத்திரம் தொகுதி முழுவதும் கிளைக் கழகம் உருவாக்க வேண்டும். 
அதே போல அரசு போக்குவரத்து கழகங்களில் ஒட்டுநர் மற்றும் நடத்துநரை கொண்டு தொழிற்சங்கம் அமைக்க வேண்டும் என்றார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/18/டிடிவி-தினகரன்-ஆதரவாளர்கள்-ஆலோசனை-2865614.html
2865613 மதுரை திண்டுக்கல் வன விலங்குகளுக்கு நோய் பரவாமல் தடுக்க ஆடு, மாடுகளுக்கு சிகிச்சை DIN DIN Sunday, February 18, 2018 07:29 AM +0530 பழனியை அடுத்த குதிரையாறு அணை மற்றும் தேக்கன் தோட்டம் பகுதிகளில் வனத்துறை சார்பில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.  
 மலையடிவார கிராமங்களில் வளர்க்கப்படும் கால்நடைகள் மூலம் வன விலங்குகளுக்கு நோய்கள் பரவாமல் தடுப்பதற்காக புலிகள் மற்றும் யானைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இம்முகாம்கள் நடைபெற்றன. 
வெள்ளிக்கிழமை குதிரையாறு அணை கிராமத்திலும், சனிக்கிழமை தேக்கன்தோட்டம் சோதனைச்சாவடி பகுதியிலும் முகாம்கள் நடைபெற்றன.  இந்நிகழ்ச்சிக்கு ரேஞ்சர் கணேஷ்ராம் வரவேற்றார். 
பாப்பம்பட்டி உதவி கால்நடை மருத்துவ அலுவலர் முருகன், பாலசமுத்திரம் உதவி கால்நடை மருத்துவர் மருதபாண்டியன் ஆகியோர் சிகிச்சைகளை வழங்கினார். 2 நாள்கள் நடைபெற்ற முகாம்களில் கால்நடைகளுக்கு கோமாரி நோய்க்கான தடுப்பூசி போடப்பட்டது. 
மேலும் கால்நடைகளின் பல்வேறு நோய்களுக்கும் 
சிகிச்சை அளிக்கப்பட்டது. இம்முகாமில் மொத்தம் 1,046 ஆடுகள், 507 மாடுகள், 370 எருமைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
 பல கி.மீ. சென்று கால்நடைகளுக்கு சிகிச்சை பெறுவதை காட்டிலும் மலையடிவாரத்திலேயே நடைபெற்ற இந்த முகாமில் ஏராளமான கிராமத்தினர் ஆர்வத்துடன் தங்கள் கால்நடைகளை அழைத்து வந்து சிகிச்சை பெற்று சென்றனர். 
முகாமில் ஏராளமான வனத்துறை அலுவலர்கள், யானை வாட்ச்சர்களும் பங்கேற்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/18/வன-விலங்குகளுக்கு-நோய்-பரவாமல்-தடுக்க-ஆடு-மாடுகளுக்கு-சிகிச்சை-2865613.html
2865612 மதுரை திண்டுக்கல் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்: வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் DIN DIN Sunday, February 18, 2018 07:28 AM +0530 கொடைக்கானலில் சுற்றுலா சென்ற காட்டேஜ் பணியாளர்களைத் தாக்கிய வனத்துறை ஊழியர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
 கொடைக்கானலில் கடந்த திங்கள்கிழமை தனியார் காட்டேஜ் பணியாளர்கள், பெண்கள் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டவர்கள் மேல்மலைக் கிராமமான வடகவுஞ்சிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப் பகுதியிலுள்ள இடத்தில் அவர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்துள்ளனர். 
 அந்தப் பகுதிக்கு வனத்துறையைச் சேர்ந்த வனவர் சிங்காரவேலர் மற்றும் அவரது உதவியாளர் விஜயகுமார் ஆகியோர் வந்து இந்த இடம் வனப் பகுதிக்குச் சொந்தமானது, யார் உங்களுக்கு அனுமதி கொடுத்தது எனக் கேட்டுள்ளனர். அப்போது சுற்றுலா வந்தவர்களுக்கும் வனத்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் வனவர் சிங்காரவேலர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  
  இதனைத் தொடர்ந்து சக வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து காட்டேஜ் பணியாளர்களை விசாரணைக்காக வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதன்பின் அவர்களுக்கு ரூ. 75 ஆயிரம் அபராதம் விதித்து புதன்கிழமை அதிகாலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.  
   இந்நிலையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 12 பேரில் 5 பேர் சிகிச்சைக்காக தேனி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இதனைத் தொடர்ந்து காட்டேஜ் பணியாளர்களை தாக்கிய வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 
 இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: 
 கொடைக்கானல் அருகே கவுஞ்சி பகுதிக்கு சுற்றுலா சென்ற காட்டேஜ் பணியாளர்களை தாக்கிய வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் கொடைக்கானலில் போராட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/18/கொடைக்கானலில்-சுற்றுலா-பயணிகள்-மீது-தாக்குதல்-வனத்துறையினர்-மீது-நடவடிக்கை-எடுக்க-வலியுறுத்தல்-2865612.html
2865611 மதுரை திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்ட பள்ளிகளுக்கு 3,177 விலையில்லா மின்விசிறிகள் DIN DIN Sunday, February 18, 2018 07:28 AM +0530 திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மின்விசிறி வழங்கப்பட்டுள்ளன.
 தமிழகத்தில் கடந்த 2011-2016 ஆண்டு அதிமுக ஆட்சியின்போது, குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா மின்விசிறி, கிரைண்டர், மிக்சி ஆகிய பொருள்கள் வழங்கப்பட்டன. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திலும் விலையில்லா பொருள்கள் வழங்கப்பட்டன. அதில், மிஞ்சிய விலையில்லா மின் விசிறிகள், வேடசந்தூர் ஒட்டன்சத்திரம் சாலையில் உள்ள அரசு கிட்டங்கியில் வைக்கப்பட்டிருந்தன. 
 இந்நிலையில், அந்த மின் விசிறிகளை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளுக்கு விநியோகம் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி மொத்தம் 3,177 மின் விசிறிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 
இதில், பழனி கல்வி மாவட்டத்திற்கு 876, திண்டுக்கல் கல்வி மாவட்டத்திற்கு 1,260 என மொத்தம் 2,136 மின் விசிறிகள் அந்தந்த பள்ளி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 1,041 மின் விசிறிகள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 
 கல்வி அலுவலகங்களின் தேவையைவிட கூடுதலாக உள்ள மின்விசிறிகள், பள்ளிக்களின் தேவைக்கு ஏற்ப வழங்கப்படும் என கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மாணவர்கள் பயன்படுத்துவதில் சிக்கல்: பள்ளி மாணவர்களுக்கு மேலே தொங்கவிடும் மின்விசிறிகள் தான் பயனுள்ளதாக இருக்கும். விலையில்லா மின்விசிறிகளை மேஜையில் வைத்து பயன்படுத்த வேண்டியிருப்பதால், ஒரு வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் பயன்படுமா என்பது கேள்விக்குறி. மேலும், பல மின்விசிறிகள் பழுதடைந்து இருப்பதாலும், அவற்றை பயன்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/18/திண்டுக்கல்-மாவட்ட-பள்ளிகளுக்கு-3177-விலையில்லா-மின்விசிறிகள்-2865611.html
2865610 மதுரை திண்டுக்கல் நீலமலைக்கோட்டை நீர் நிலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தாமதம்: நில அளவையர்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை DIN DIN Sunday, February 18, 2018 07:27 AM +0530 நீலமலைக்கோட்டை நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள நில அளவையர்கள், ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் எச்சரித்துள்ளார்.
ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட நீலமலைக் கோட்டையில் அமைந்துள்ளது சோத்தாளன் நாயக்கர் அணை. சோத்தாளநாயக்கர் மலையிலிருந்து வரும் மழைநீர், சொட்டூத்து ஓடை, வாழக்கொடை ஓடை, புல்லான்முடக்கு ஓடை, செல்லிக்கவுண்டன் ஓடை, வெள்ளுருண்டான் பாறை ஓடை, மொழுகு ஊத்துக்குளி ஓடை உள்பட 14 ஓடைகளின் வழியாக கோம்பை அணைக்கு வந்து சேருகிறது. மலை அடிவாரத்தில் 70 அடியிலிருந்து அணைப் பகுதியில் சுமார் 150 அடி அகலமாக இருந்த இந்த ஓடைகள், கடந்த பல ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டு விவசாயத் தோட்டங்களாக மாற்றப்பட்டிருந்தன. இதுதொடர்பாக கடந்த 25ஆம் தேதி தினமணியில் செய்தி வெளியானதை அடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டது. 
 இதனிடையே உயர்நீதிமன்ற மதுரை கிளையில், ஆக்கிரமிப்பாளர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும், மாவட்ட நிர்வாகத்தின் முயற்சிக்கு பின் தள்ளுப்படி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அணை, நீர் வரத்து வாய்க்கால் ஆகியவற்றை அளவீடு செய்யும் பணி துரிதமாக நடைபெற்றது. 13 சர்வேயர்கள், கிராம உதவியாளர்கள்(தலையாரி) 8 பேர், வருவாய் ஆய்வாளர், பொதுப்பணித்துறை, மின்வாரியம், வட்டார வளர்ச்சி உள்ளிட்ட துறைகள் சார்பில் 10 அலுவலர்கள் இந்த பணியில் களம் இறக்கப்பட்டுள்ளனர். அரசு அலுவலர்களுக்கு ஆதரவாக, பொதுமக்கள் 30 பேரும் நேரடியாக களத்தில் இறங்கி ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.
காலம் தாழ்த்துவதாக புகார்: இந்த நிலையில், வாழக்கொடை ஓடை, புல்லான்முடக்கு ஓடை ஆகிய பகுதியில் அளவீடு செய்யும் பணி துரிதமாக நடைபெறவில்லை என புகார் எழுந்தது. ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக உள்ளூர் நில அளவையர்கள் காலம் கடத்துவதாக, நீலமலைக்கோட்டை மக்கள் தரப்பில் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, ஆக்கிரமிப்பு அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள அலுவர்களை வெள்ளிக்கிழமை நேரில் அழைத்த ஆட்சியர் வினய், கடுமையாக எச்சரித்துள்ளார். ஆக்கிரமிப்பு அளவீடு செய்யும் பணியில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படும் நில அளவையர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அவர், வாழக்கொடை ஓடை, புல்லான்முடக்கு ஓடை பகுதியில் வேலை செய்து வந்தவர்கள் வேறு பகுதியில் வேலை செய்யவும் அறிவுறுத்தியுள்ளார். மேலும், ஒவ்வொரு நில அளவையர் மேற்கொள்ளும் பணி விவரங்கள் குறித்து நாள்தோறும் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.ஆட்சியரின் எச்சரிக்கையால் அதிர்ச்சி அடைந்த அலுவலர்கள், சனிக்கிழமை பணியில் துரிதம் காட்டியதாகவும், அளவீடு பணி முழு வீச்சில் நடைபெறுவதாகவும் நீலமலைக்கோட்டை பகுதி மக்கள் தெரிவித்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/18/நீலமலைக்கோட்டை-நீர்-நிலை-ஆக்கிரமிப்பு-அகற்றும்-பணி-தாமதம்-நில-அளவையர்களுக்கு-ஆட்சியர்-எச்சரிக்கை-2865610.html
2865609 மதுரை திண்டுக்கல் தாமரைப்பாடி, முள்ளிப்பாடியில் இன்று சிறப்பு குறைதீர்க்கும் முகாம் DIN DIN Sunday, February 18, 2018 07:27 AM +0530 திண்டுக்கல் அடுத்துள்ள தாமரைப்பாடி மற்றும் முள்ளிப்பாடி ஊராட்சிகளில் வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.18) சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெறவுள்ளது.
 இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
 தாமரைப்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட தம்பிநாயக்கன் பாறைபட்டி, சாலையூர், வடக்கு கல்லாத்துப்பட்டி, கோவில் யாகப்பன்பட்டி, தாமரைப்பாடி, தன்னாச்சி பாறைப்பட்டி, நாகம்பட்டி மற்றும் முள்ளிப்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட எம்.செட்டியபட்டி, கமளபட்டி, பாறையூர், காமளாபுரம், முள்ளிப்பாடி, அணைப்பட்;டி, ஆத்துமரத்துப்பட்டி, ஆரோக்கியசாமி நகர், குழிப்பட்டி, கருதளம்பட்டி, உத்தனம்பட்டி, குழந்தைப்பட்டி, கோடாங்கிபட்டி, ஏடிகாலனி, எம்.காப்ளியப்பட்டி, மொண்டியப்பட்டி, எம்.எம்.கோவிலூர் ஊராட்சி, வன்னியப்பட்டி, பெரியகோட்டை ஆகிய கிராமங்களில் வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன் தலைமையில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறவுள்ளது.
பொதுமக்களிடம் மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை மூலமாக துரிதமாக தீர்வுகாணும் வகையில் நடைபெறும் இந்த முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/18/தாமரைப்பாடி-முள்ளிப்பாடியில்-இன்று-சிறப்பு-குறைதீர்க்கும்-முகாம்-2865609.html
2865608 மதுரை திண்டுக்கல் குட்டத்து ஆவரம்பட்டி ஜல்லிக்கட்டு: 20 பேர் காயம் DIN DIN Sunday, February 18, 2018 07:27 AM +0530 திண்டுக்கல் அடுத்துள்ள குட்டத்து ஆவரம்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில், காளைகள் முட்டி 20 பேர் காயம் அடைந்தனர்.
  புனித அந்தோணியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கு திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 460 காளைகள் அழைத்து வரப்பட்டன. 
 வாடி வாசலிலிருந்து வெளியேறிய காளைகளை பிடிப்பதற்கு 300 வீரர்கள் களம் இறங்கினர். 
 காளைகள் தாக்கியதில் மாடு பிடி வீரர்கள், பார்வையாளர் என மொத்தம் 20 பேர் காயமடைந்தனர். ஜல்லிக்கட்டில் பிடிபடாத காளைகளுக்கும், காளைகளை பிடித்த வீரர்களுக்கும் வெள்ளிக்காசு, கட்டில், பீரோ, மின்விசிறி, சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/18/குட்டத்து-ஆவரம்பட்டி-ஜல்லிக்கட்டு-20-பேர்-காயம்-2865608.html
2865002 மதுரை திண்டுக்கல் திண்டுக்கல் அரசு மகளிர் கல்லூரியில் சுய உதவிக்குழு பொருள்கள் விற்பனைக் கண்காட்சி DIN DIN Saturday, February 17, 2018 07:12 AM +0530 திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிர் கல்லூரியில், 5 மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக் குழுவினர் அமைத்துள்ள கல்லூரிச் சந்தையில், பல்வேறு வகையான பொருள்களின் விற்பனைக் கண்காட்சி நடைபெற்றது. 
      திண்டுக்கல், மதுரை, நெல்லை, ஈரோடு, கோவை ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த 17 மகளிர் சுய உதவிக் குழுவினரின் பல்வேறு வகையான தயாரிப்பு பொருள்கள், திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிர் கல்லூரி வளாகத்தில் விற்பனைக்காக கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.  இக்கல்லூரி சந்தையின் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, திண்டுக்கல் மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் சிவக்குமார் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ப. பார்வதி முன்னிலை வகித்தார். கண்காட்சியில், சேலை, கைவினைப் பொருள்கள், காலனி, பை,  பாசி உள்ளிட்ட பல்வேறு வகையான பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.    கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள், கண்காட்சியைப் பார்வையிட்டு, பொருள்களை கொள்முதல் செய்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/17/திண்டுக்கல்-அரசு-மகளிர்-கல்லூரியில்-சுய-உதவிக்குழு-பொருள்கள்-விற்பனைக்-கண்காட்சி-2865002.html
2865001 மதுரை திண்டுக்கல் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் கூட்டம் DIN DIN Saturday, February 17, 2018 07:12 AM +0530 திண்டுக்கல்லில் தனியார் அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தகுதி நீக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர் தங்கத் தமிழ்செல்வன் பேசியதாவது:
 காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. ஒரு டிஎம்சி தண்ணீரில் 4 ஏக்கரில் சாகுபடி செய்ய முடியும். தமிழகத்திற்கு 14 டிஎம்சி தண்ணீர் குறைப்பு என்பது, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களை கடுமையாக பாதிக்கும்.  மறைந்த முதல்வர் ஜெயலலிதா, காவிரி நீரில் தமிழகத்தின் உரிமைக்காக கடுமையாக போராடினார். 
ஆனால், தற்போதைய முதல்வர் எடிப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அரசு, தமிழகத்தின் நியாயமான கோரிக்கைகளை உச்சநீதிமன்றத்தில் முறையாக வலியுறுத்தவில்லை என்றார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/17/டிடிவி-தினகரன்-ஆதரவாளர்கள்-கூட்டம்-2865001.html
2865000 மதுரை திண்டுக்கல் பழனியில் பிப்ரவரி 17 மின்தடை  DIN DIN Saturday, February 17, 2018 07:12 AM +0530 பழனி துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை (பிப்.17) பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.
    எனவே,  காலை 9 மணி முதல் மாலை5  மணி வரை இங்கிருந்து மின்விநியோகம் பெறும், பழனி நகர், பாலசமுத்திரம், நெய்க்காரபட்டி, ஆயக்குடி மற்றும் சின்னக்கலையம்புத்தூர் ஆகிய பகுதிகளுக்கு மின்விநியோகம் நிறுத்தப்படும் என, பழனி மின்வாரியச் செயற்பொறியாளர் சந்திரசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/17/பழனியில்-பிப்ரவரி-17-மின்தடை-2865000.html
2864999 மதுரை திண்டுக்கல் திருநெல்வேலி-மயிலாடுதுறை பயணிகள் ரயில் திண்டுக்கல்லில் புறப்படும் நேரம் மாற்றம் DIN DIN Saturday, February 17, 2018 07:11 AM +0530 திருநெல்வேலி-மயிலாடுதுறை பயணிகள் ரயில், திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ஒரு மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு வந்த நிலையில், தினமணி செய்தி எதிரொலியாக 40 நிமிடங்களுக்கு முன்பாக புறப்படும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.
       திருநெல்வேலியிலிருந்து ஈரோடு மற்றும் மயிலாடுதுறைக்கு தினசரி பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. திருநெல்வேலி முதல் திண்டுக்கல் வரை 20 பெட்டிகளுடன் (கோச்) ஒரே வண்டியாக வரும் இந்த ரயில், அதன்பின்னர், 2 ரயில்களாக ஈரோடு மற்றும் மயிலாடுதுறை மார்க்கமாக பிரித்து இயக்கப்படுகிறது.     காலை 5.30 மணிக்கு திருநெல்வேலியிலிருந்து புறப்படும் இந்த ரயில், காலை 10.50 முதல் 11 மணிக்குள்ளாக திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு வந்து சேர்கிறது. பின்னர், முதல் பாதி பெட்டிகளுடன் ஈரோடு மார்க்கமாகச் செல்லும் ரயில், சுமார் 10 நிமிடங்களில் புறப்படுகிறது. ஆனால், திருச்சி, தஞ்சாவூர் வழியாக மயிலாடுதுறை வரை செல்ல வேண்டிய மீதி பெட்டிகள் கொண்ட ரயில், சுமார் 1 மணி நேரம் திண்டுக்கல் ரயில் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்படுகிறது.  மயிலாடுதுறை ரயிலுக்கான என்ஜின் இணைப்பதற்கு 10 முதல் 20 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில், 1 மணி நேரம் இந்த ரயில் நிறுத்தி வைக்கப்படுவதால், தென் மாவட்டங்களிலிருந்து வரும் பயணிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளதாக, தினமணியில் கடந்த 2 மாதங்களுக்கு முன் செய்தி வெளியானது.
      இதன் எதிரொலியாக, திண்டுக்கல்  ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 12.05 மணிக்கு புறப்பட்டு வந்த மயிலாடுதுறை ரயில் பிப்ரவரி 18ஆம் தேதி முதல் காலை 11.25 மணிக்கு  புறப்பட்டுச் செல்லும் என, மதுரை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால், சுமார் 40 நிமிடங்கள் பயண நேரம் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/17/திருநெல்வேலி-மயிலாடுதுறை-பயணிகள்-ரயில்-திண்டுக்கல்லில்-புறப்படும்-நேரம்-மாற்றம்-2864999.html
2864998 மதுரை திண்டுக்கல் மாசிப் பெருவிழா: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் பூந்தேரில் வலம் DIN DIN Saturday, February 17, 2018 07:11 AM +0530 மாசிப் பெருவிழாவை முன்னிட்டு பூந்தேரில் வலம் வந்த கோட்டை மாரியம்மன் பூச்சொரிதலுக்காக பக்தர்கள் சார்பில் பூக்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசிப் பெருவிழா பூத்தமலர் பூ அலங்காரத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது. இத்திருவிழாவில் முக்கிய நிகழ்வான பூச்சொரிதலுக்காக அம்மன் பூந்தேரில் வலம் வரும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காலை 11 மணிக்கு அம்மன் எழுந்தருளிய பூந்தேர் சிறப்புப் பூஜைகளுக்கு பின் கோயிலிலிருந்து வீதி உலா புறப்பட்டது. 
  பால்குடம் எடுத்து வந்த பக்தர்களைத் தொடர்ந்து, விநாயகர், முருகன், ஐயப்பன், மகாலட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வங்களின் ரதங்கள் சென்றன. அதன் பின் கோட்டை மாரியம்மனின் பூந்தேர் மேற்குரத வீதி வழியாக வலம் வந்தது. கலைக்கோட்டு விநாயகர் கோயில், பென்சனர் தெரு, கோபாலசமுத்திர குளம் தெரு, கிழக்கு ரதவீதி, தெற்குரத வீதி வழியாக சென்ற பூந்தோர், மாலை 4 மணிக்கு மேல் மீண்டும் கோயிலை அடைந்தது.
நான்கு ரத வீதிகளிலும் பூ காணிக்கை மண்டபங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், பக்தர்கள் சார்பில் வழிநெடுகிலும் அம்மனுக்கு உதிரிப்பூக்கள் காணிக்கையாக வழங்கப்பட்டன. அந்த பூக்கள், லாரிகள் மூலம் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மாரியம்மன் சந்நிதி முழுவதும் நிரப்பப்பட்டு, தரிசிக்க வந்த பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.
பூந்தேரில் எழுந்தருளி வலம் வந்த அம்மனை தரிசிப்பதற்காக, திண்டுக்கல் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில், பூந்தேர் வலம் வரும் பாதையில் நீர், மோர் இலவசமாக வழங்கப்பட்டது.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/17/மாசிப்-பெருவிழா-திண்டுக்கல்-கோட்டை-மாரியம்மன்-பூந்தேரில்-வலம்-2864998.html
2864997 மதுரை திண்டுக்கல் பழனி மலைக்கோயிலில்  தீத்தடுப்பு செயல் விளக்கம் DIN DIN Saturday, February 17, 2018 07:10 AM +0530 பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் வெள்ளிக்கிழமை மலைக்கோயில் வளாகத்தில் தீத்தடுப்பு குறித்து செயல்முறை விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் கோயில் தீவிபத்தைத் தொடர்ந்து பழனிக்கோயிலிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை மலைக்கோயிலில் தீத்தடுப்பு குறித்து செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது. நிகழ்ச்சிக்கு பழனிக்கோயில் இணை ஆணையர் செல்வராஜ் தலைமை வகித்தார். துணை ஆணையர்(பொறுப்பு) மேனகா முன்னிலை வகித்தார். திண்டுக்கல் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அதிகாரிகள், குழுவினர் தீத்தடுப்பு நிகழ்ச்சியை செய்து காட்டினர்.
நிகழ்ச்சியில் பழனி மலைக்கோயில் மற்றும் உபகோயில்களின் மடப்பள்ளி சமையலர்கள், அன்னதானக் கூடத்தின் சமையலர்கள் மற்றும் உதவியாளர்கள், திருக்கோயில் பாதுகாவலர்கள், பழனியாண்டவர் கல்லூரிகளின் விடுதி அலுவலர்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். 
எரிவாயு உருளையில் தீப்பற்றினால் பதறாமல் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தீயின் வகைகள் குறித்தும் தீயணைப்பு அதிகாரிகள் விளக்கியதோடு மட்டுமன்றி எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் செயல்முறை விளக்கம் செய்து காட்டினர். மேலும், காயமடைந்தவர்களை அவர்களின் காயத்துக்கு ஏற்ப மீட்கும் வழி முறைகள் குறித்தும், பொதுஇடங்களில் ஏற்படும் தீவிபத்தை தீயணைப்பு குழாய்கள் மூலம் அணைப்பது குறித்தும் வீரர்கள் விளக்கினர். நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட தீயணைப்பு அலுவலர் சந்திரகுமார், மாவட்ட அலுவலர் சக்திவேல், தீத்தடுப்பு குழு அலுவலர்கள் சக்திவேல், கணேசன், பழனி நிலைய அலுவலர் மோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்களும் பார்த்து பயனடைந்தனர். 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/17/பழனி-மலைக்கோயிலில்--தீத்தடுப்பு-செயல்-விளக்கம்-2864997.html
2864996 மதுரை திண்டுக்கல் பழனியில் வெறிநாய் கடித்து 5 பேர் காயம் DIN DIN Saturday, February 17, 2018 07:10 AM +0530 பழனியில் வெறிநாய் கடித்ததில் மூன்று பெண்கள், ஒரு சிறுவன் உள்ளிட்ட ஐந்து பேருக்கு காயம் ஏற்பட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
 திண்டுக்கல் மாவட்டம் பழனி தட்டான்குளத்தை சேர்ந்தவர் அழகர்சாமி. இவர் வெள்ளிக்கிழமை தனது ஒன்பது வயது மகன் சூர்யபிரகாஷை மோட்டார் சைக்கிளின் பின் பகுதியில் அமர வைத்து பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது தெருவில் இருந்த வெறிநாய் மோட்டார் சைக்கிளை துரத்தி வந்து சூர்யபிரகாஷ் காலில் கடித்துள்ளது. இதனால் அவர் சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து அவ்வழியே சென்ற நாகராஜன் மகள் ஜோதி(20), மாரிமுத்து மனைவி மகுடீஸ்வரி(35) உள்ளிட்டோர் நாய் மீது கற்களை வீசி விரட்டியுள்ளனர். இதையடுத்து அந்த நாய் சூர்யபிரகாஷை விட்டு விட்டு ஜோதி, மகுடீஸ்வரி உள்ளிட்ட 4 பேரை துரத்தி, துரத்தி கடித்து விட்டு தப்பி ஓடிவிட்டது.  காயமடைந்த அனைவரும் உடனடியாக பழனி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். இதில் இருவர் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்ற நிலையில் அழகர்சாமி, ஜோதி, மகுடீஸ்வரி ஆகியோர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பழனி நகரெங்கும் தெரு நாய்கள் நூற்றுக்கணக்கில் உள்ள நிலையில் உடல்நிலை குன்றியுள்ள நாய்களையும், வெறி நாய்களையும் நகராட்சி, ஊராட்சி நிர்வாகங்கள் மாவட்ட ஆட்சியரிடம் சிறப்பு அனுமதி பெற்று 
அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், திண்டுக்கல் மாவட்ட அளவில் உள்ள விலங்குகள் நல வாரிய அலுவலர்கள் குறைந்த பட்சம் தெருவில் சுற்றி வரும் நாய்களுக்கு கருத்தடை செய்ய ஏற்பாடு செய்வது அவசியமாகும். 


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/17/பழனியில்-வெறிநாய்-கடித்து-5-பேர்-காயம்-2864996.html
2864995 மதுரை திண்டுக்கல் திருவிழா கூட்ட நெரிசலில் 3 பெண்களிடம் 12 பவுன் நகை பறிப்பு DIN DIN Saturday, February 17, 2018 07:10 AM +0530 மாசித் திருவிழாவுக்கு வந்த பெண்களிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 12 பவுன் நகை பறிக்கப்பட்டுள்ளதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, பூந்தேரில் அம்மன் வலம் வரும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதனையொட்டி திண்டுக்கல் நகரில் 4 ரத வீதிகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி, திருவிழாவுக்கு வந்த 3 பெண்களிடம் 12 பவுன் தங்க சங்கிலிகளை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுவிட்டனர்.  இதுதொடர்பாக திண்டுக்கல் ஆர்வி.நகரைச் சேர்ந்த பாப்பாத்தி, தெற்கு காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் தனது 5.5 பவுன் சங்கிலியை காணவில்லை என தெரிவித்துள்ளார். 
அதேபோல் மேலும் 2 பெண்கள் தங்களது 6.5 பவுன் நகைகளை காணவில்லை என பாதுகாப்புக்கு நின்ற போலீசாரிடம் முறையிட்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையிலும், ஆண்டுதோறும் மாசித் திருவிழாவை முன்னிட்டு சங்கிலி பறிகொடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/17/திருவிழா-கூட்ட-நெரிசலில்-3-பெண்களிடம்-12-பவுன்-நகை-பறிப்பு-2864995.html
2864994 மதுரை திண்டுக்கல் பெண்ணை தாக்கி நகை பறிப்பு DIN DIN Saturday, February 17, 2018 07:10 AM +0530 பழனி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிள் திருடர்கள் செயினை பறித்ததோடு மட்டுமன்றி தாக்கியதால் கண்ணில் பலத்த காயமடைந்தார்.
 திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பூலாம்பட்டியை சேர்ந்த விவசாயி சிவராஜ். இவரது மனைவி கவிதா (38) வெள்ளிக்கிழமை காலையில் கீரனூரில் உள்ள கோயிலுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
 தேவதாகுடிவலசு என்ற இடத்தில் பின்புறம் இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த இருவர் கவிதாவின் கழுத்தில் இருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துள்ளனர். இதில் கவிதா சங்கிலியைப் பிடித்துக் கொண்டு நிலைதடுமாறி வாகனத்தில் இருந்து விழுந்துள்ளார். எனினும் மர்ம நபர்கள் அவரை சரமாரியாக தாக்கி அவரிடம் இருந்த சங்கிலியை
பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். கவிதாவின் அலறல் சத்தம் கேட்டு அருகே இருந்த தோட்டத்தில் வேலை செய்தவர்கள் அவரை காப்பாற்றி பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். கண்ணின் அருகே பலத்த காயம் உள்ளதால் மருத்துவர்கள் பரிந்துரையின்பேரில் மதுரைக்கு அழைத்து செல்லப்பட்டார். 
இதுகுறித்து கீரனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பழனியில் நகர பகுதிகளில் நடைபெற்று வந்த நகை பறிப்பு தற்போது குக்கிராமங்களிலும் பரவியுள்ளதால் கிராமங்களில் தனியே வசிப்பவர்கள் அச்சத்தில் உள்ளனர். 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/17/பெண்ணை-தாக்கி-நகை-பறிப்பு-2864994.html
2864993 மதுரை திண்டுக்கல் ஓட்டுநரைத் தாக்கிவிட்டு கார் கடத்தல்: கொடைக்கானலில் 2 பேர் கைது, கார் மீட்பு DIN DIN Saturday, February 17, 2018 07:09 AM +0530 திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வாடகைக் கார் ஓட்டுநரைத் தாக்கி காரை கடத்திச் சென்ற சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை கொடைக்கானலில் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். கார் மீட்கப்பட்டது.
 மதுரை மாவட்டம் நாகமலைப்புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் கணேசன் (52). வாடகைக்கு கார் ஓட்டி வருகிறார். கடந்த பிப்.11-ஆம் தேதி சேலத்திற்கு செல்ல வேண்டும் என கூறி 4 பேர் கணேசனை அழைத்துள்ளனர். அந்த கார், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சென்றபோது, ஓட்டுநர் கணேசனை தாக்கி பின் இருக்கையில் அமர வைத்துவிட்டு, காரை செம்பட்டி, வத்தலகுண்டு வழியாக கொடைக்கானலுக்கு கடத்திச் சென்றுள்ளார். இதனிடையே, செம்பட்டி அடுத்துள்ள ஜெ.புதுக்கோட்டை பகுதியில் கணேசனை இறக்கிவிட்டு சென்றுள்ளனர். உயிர் தப்பிய கணேசன் புகார் அளிக்கச் சென்றபோது, சின்னாளப்பட்டி மற்றும் செம்பட்டி காவல் நிலைய போலீஸார் எல்லை பிரச்னை காரணமாக வழக்குப் பதிவு செய்யாமல் இருந்துள்ளனர். இதனை அடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கணேசன் அளித்த புகாரின் பேரில், பிப்.13ஆம் தேதி செம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கத் தொடங்கினர். 
 காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான தனிப்படை போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், கொடைக்கானலிலிருந்து பழனிக்கு வந்து கொண்டிருந்த கார் அய்யம்புள்ளி அருகே மீட்கப்பட்டது. காரை ஓட்டி வந்தவரிடம் நடத்திய விசாரணையில், பழனியில் ஒப்படைப்பதற்காக கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளார். அவர் கொடுத்த தகவலின் பேரில், கொடைக்கானலில் தங்கியிருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த மகேந்திரன் (34), பட்டுக்கோட்டையைச் சேர்ந்த கார்த்தி(23) ஆகியோரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் இருவர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/17/ஓட்டுநரைத்-தாக்கிவிட்டு-கார்-கடத்தல்-கொடைக்கானலில்-2-பேர்-கைது-கார்-மீட்பு-2864993.html
2864992 மதுரை திண்டுக்கல் மின் வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தம்: 22 சதவீதம் பேர் பங்கேற்பு DIN DIN Saturday, February 17, 2018 07:09 AM +0530 திண்டுக்கல் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மின்வாரியஉழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் 400 பேர் (22 சதவீதம்) பங்கேற்றனர்.
  தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கோரி, வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன. அதன்படி, வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் குறிப்பிட்ட சில சங்கங்கள் மட்டுமே பங்கேற்றதால் பெரும் அளவில் பணிகள் பாதிக்கப்படவில்லை.  திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தமுள்ள 148 மின்சார வாரிய அலுவலகங்களில் சுமார் 1,800 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இதில், ஊதிய உயர்வு கேட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் 400 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். போராட்டத்தில் 22 சதவீதம் பேர் மட்டுமே பங்கேற்றனர்.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/17/மின்-வாரிய-ஊழியர்கள்-வேலை-நிறுத்தம்-22-சதவீதம்-பேர்-பங்கேற்பு-2864992.html
2864991 மதுரை திண்டுக்கல் பழனி கோவில் நடைபாதை கடை வியாபாரிகளுக்கு வேறு இடம் ஒதுக்கித் தர உயர்நீதிமன்றம் உத்தரவு DIN DIN Saturday, February 17, 2018 07:09 AM +0530 பழனி கோவிலைச் சுற்றி பக்தர்களுக்கு இடையூறாக உள்ள நடைபாதைக் கடைகளை அகற்றி அவர்களுக்கு வேறு இடம் வழங்கக்கோரி ஷேக் மீரான் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், பக்தர்கள் செல்லும் பாதையில் கடைகள் வைத்துள்ள நடைபாதை வியாபாரிகளுக்கு பழனி நகராட்சி ஆணையரும், கோவில் நிர்வாகமும் இணைந்து குறிப்பிட்ட இடத்தை ஒதுக்க வேண்டும். அந்த இடங்களில் நடைபாதை வியாபாரிகள் தங்கள் கடைகளை வைத்துக்கொள்ள உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/17/பழனி-கோவில்-நடைபாதை-கடை-வியாபாரிகளுக்கு-வேறு-இடம்-ஒதுக்கித்-தர-உயர்நீதிமன்றம்-உத்தரவு-2864991.html
2864578 மதுரை திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசிப் பெருவிழா: பூத்தமலர் பூ அலங்காரத்துடன் தொடக்கம் DIN DIN Friday, February 16, 2018 09:53 AM +0530 திண்டுக்கல் அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோயில் மாசிப் பெருவிழா பூத்தமலர் பூ அலங்காரத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.
       திண்டுக்கல் அருள்மிகு கோட்டைமாரியம்மன் கோயில் மாசிப் பெருவிழா, பிப்ரவரி 15 முதல் மார்ச் 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது. திருவிழாவின் தொடக்கமாக, அம்மனுக்கு வியாழக்கிழமை காலை சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, மாலை 6 மணிக்கு பூத்தமலர் பூ அலங்காரத்துடன் அருள்பாலித்த அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். வெள்ளிக்கிழமை பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது.
மாசிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் விவரம்: பிப்.18 இல் சாட்டுதல் நிகழ்ச்சி, பிப்.20 இல் திருக்கொடியேற்றம், மார்ச் 2 இல் பூக்குழி மற்றும் அம்மன் திருத்தேர் உலா, மார்ச் 3 இல் தசாவதாரம், மார்ச் 5 இல் ஊஞ்சல் உற்சவம், மார்ச் 6 இல் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.
     ஒவ்வொரு நாளும் இரவு 7 முதல் 12 மணி வரை, மண்டகப்படிதாரர்கள் சார்பில் அம்மன் வீதி உலா நடைபெறுகிறது. அதேபோல், திருக்கோயில் கலையரங்கில் இரவு 9 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, கோயில் நிர்வாகப் பரம்பரை அறங்காவலர் சண்முக முத்தரசப்பன் தெரிவித்துள்ளார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/16/கோட்டை-மாரியம்மன்-கோயில்-மாசிப்-பெருவிழாபூத்தமலர்-பூ-அலங்காரத்துடன்-தொடக்கம்-2864578.html
2864576 மதுரை திண்டுக்கல் திண்டுக்கல்லில் ஆக்கிரமிப்பு அகற்றம் DIN DIN Friday, February 16, 2018 09:53 AM +0530 திண்டுக்கல் பேருந்து நிலையப் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
 திண்டுக்கல் ஏஎம்சி சாலையில் நடைபாதையை ஆக்கிரமித்து, சாலையோர வியாபாரிகள் கடை வைத்துள்ளனர். இதனால், பாதசாரிகளும், வாகன ஓட்டிகளுக்கும் அவதியடைந்து வந்தனர். இதுகுறித்து பல்வேறு தரப்பில் புகார் தெரிவித்த போதிலும், மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. 
 இந்நிலையில் திடீர் நடவடிக்கையாக நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் ஏஎம்சி சாலை முழுவதும், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி அலுவலர்கள், அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகளை அகற்றினர். மேலும், ஆக்கிரமிப்பில் இருந்த 20 கடைகள்  அப்புறப்படுத்தப்பட்டன. இதுதொடர்பாக மாநகர அமைப்பு அலுவலர் ல.கோபாலகிருஷ்ணன் கூறுகையில், நகரின் பிற பகுதியிலும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடரும். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடங்களில் கயிறு கட்டி மீண்டும் கடைகளை அமைக்கப்படுவது தடுக்கப்படும் என்றார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/16/திண்டுக்கல்லில்-ஆக்கிரமிப்பு-அகற்றம்-2864576.html
2864575 மதுரை திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் சாக்கடையில் விழுந்து சுமைதூக்கும் தொழிலாளி சாவு DIN DIN Friday, February 16, 2018 09:53 AM +0530 ஒட்டன் சத்திரம் அடுத்துள்ள அரசப்பபிள்ளைபட்டியைச் சேர்ந்த முருகன் மகன் விக்னேஷ்குமார் (25). இவர், ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் சுமைதூக்கும் தொழிலாளியாக இருந்து வந்தார். இவர், கடந்த ஜனவரி 29-ஆம் தேதி சந்தையில் மூட்டை தூக்கி வரும்போது, கால் இடறி சாக்கடையில் விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர், கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார்.
    இது குறித்து ஒட்டன் சத்திரம் காவல் நிலையத்தில் உறவினர் பாபு அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
இதனிடையே, புதன்கிழமை இரவு காய்கறி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளிகள் திரண்டு, இறந்த விக்னேஷ்குமாருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். அதில், காய்கறி சங்கத்தினருடன் உடன்பாடு ஏற்பட்டதால், போராட்டம் கைவிடப்பட்டது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/16/ஒட்டன்சத்திரம்-காய்கறி-சந்தையில்-சாக்கடையில்-விழுந்து-சுமைதூக்கும்-தொழிலாளி-சாவு-2864575.html
2864573 மதுரை திண்டுக்கல் மதுபானக் கடை ஊழியரை தாக்கி ரூ.1.54 லட்சம் வழிப்பறி DIN DIN Friday, February 16, 2018 09:53 AM +0530 திண்டுக்கல்லில் அரசு மதுபானக் கடை பணியாளரை தாக்கி ரூ.1.54 லட்சத்தை மர்ம நபர்கள் பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டதாக புதன்கிழமை புகார் அளிக்கப்பட்டுள்ளது. 
      திண்டுக்கல் பாறைமேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ஆ. சங்கிலி (36). இவர், வேடசந்தூர் அடுத்துள்ள சீத்தமரம் நால்ரோடு பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையில் விற்பனையாளராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், திண்டுக்கல் அடுத்துள்ள காமுபிள்ளை சத்திரம் மதுபானக் கடைக்கு புதன்கிழமை ஒரு நாள் மட்டும் தாற்காலிக விற்பனையாளராகச் சென்றுள்ளார்.
     இவர், புதன்கிழமை இரவு பணி முடிந்து, தனது இரு சக்கர வாகனத்தில் திண்டுக்கல் நோக்கிச் சென்றுள்ளார். அப்போது, விற்பனை பணம் ரூ.1.54 லட்சத்தையும் எடுத்துச் சென்றாராம். அவரைத் தொடர்ந்து, அதே கடையில் பணியாளராக உள்ள குமரேசன் மற்றும் பழனிச்சாமி ஆகிய இருவரும் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.
    வத்தலகுண்டு புறவழிச் சாலையைக் கடந்து, தோல் சுத்திகரிப்பு நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது, சாலையோரம் நின்று கொண்டிருந்த மர்ம நபர்கள் சங்கிலியை தாக்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர், அவரிடமிருந்த பணப் பையை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டனராம். பின்னால் வந்த பழனிச்சாமி, குமரேசன் ஆகிய இருவரும் காயமடைந்த சங்கிலியை மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
   இது குறித்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் சங்கிலி அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/16/மதுபானக்-கடை-ஊழியரை-தாக்கிரூ154-லட்சம்-வழிப்பறி-2864573.html
2864571 மதுரை திண்டுக்கல் காலமுறை ஊதியம்  வழங்கக் கோரி சத்துணவுப் பணியாளர்கள்  சாலை மறியல்: 430 பேர் கைது DIN DIN Friday, February 16, 2018 09:52 AM +0530 வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கக் கோரி, திண்டுக்கல்லில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவுப் பணியாளர்கள் 430 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில், திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இப் போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் பி.எம். ராமு தலைமை வகித்தார். முன்னதாக, திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியச் சாலையில் போராட்ட பேரணி தொடங்கும் முன், மாவட்டச் செயலர் வி. வேலுச்சாமி கோரிக்கை விளக்கவுரை நிகழ்த்தினார். 
    அதனைத் தொடர்ந்து, 
கடந்த 34 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு குடும்ப பாதுகாப்புடன் கூடிய வரையறுக்கப்ட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியப் பயனாக பணிக்கொடையை ரூ. 5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
பின்னர், இவர்கள் பேரணியாகச் சென்று எம்ஜிஆர் சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அடுத்து, அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்ட 370 பெண்கள் உள்ளிட்ட 430 பேரை கைது செய்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/16/காலமுறை-ஊதியம்--வழங்கக்-கோரி-சத்துணவுப்-பணியாளர்கள்-சாலை-மறியல்-430-பேர்-கைது-2864571.html
2864570 மதுரை திண்டுக்கல் கொடைக்கானலில் காட்டேஜ் பணியாளர்கள் - வனத் துறையினர் மோதல்: போலீஸார் விசாரணை DIN DIN Friday, February 16, 2018 09:52 AM +0530 கொடைக்கானலில் தனியார் காட்டேஜ் பணியாளர்கள் மற்றும் வனத் துறையினரிடையே ஏற்பட்ட தகராறு குறித்து, டி.எஸ்.பி. தலைமையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
     கொடைக்கானலில்  சீனிவாசபுரம் பகுதியில் உள்ள தனியார் காட்டேஜ் பணியாளர்களுக்கும், வனத் துறை யினருக்குமிடையே ஏற்பட்ட தகராறில், இரு தரப்பினருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இந் நிலையில், இச் சம்பவம் குறித்து டி.எஸ்.பி. சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, டி.எஸ்.பி. சந்திரன், மகளிர் காவல் ஆய்வாளர் ஜெயராணி ஆகியோர் வியாழக்கிழமை சீனிவாசபுரத்தில்  உள்ள தனியார் உணவகம் மற்றும் கவுஞ்சி பகுதியிலுள்ள காட்டேஜ் பணியாளர்கள் இருந்த இடங்களையும் பார்வையிட்டனர்.
     இது குறித்து டி.எஸ்.பி. சந்திரன் வியாழக்கிழமை இரவு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
   கொடைக்கானல் சீனிவாசபுரம் பகுதியிலுள்ள தனியார் காட்டேஜ் பணியாளர்கள் கவுஞ்சி பகுதிக்கு சுற்றுலா சென்ற இடத்தையும்,  அவர்கள் நடத்தி வரும் காட்டேஜையும் பார்வையிட்டு ஆய்வு நடத்தியுள்ளோம். இதில், தனியார் காட்டேஜ் பணியாளர்கள் சார்பில் வனராஜ் என்பவர் வனத் துறை அதிகாரிகள் மற்றும் வனப் பணியாளர்கள் 30-க்கும் மேற்பட்டோர் மீது புகார் அளித்துள்ளார். 
    அதேபோல், வனத் துறையினர் சார்பில் வனவர் சிங்காரவேலர்,  தனியார் காட்டேஜ் பணியாளர்கள் 12 பேர் மீது புகார் அளித்துள்ளார். இரு தரப்பினரும் அளித்த புகாரைத் தொடர்ந்து, தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் குறித்து உயர் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு,  நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
    இச்சம்பவம் குறித்து, மாவட்ட வனத் துறை முதன்மை அலுவலர் நாகநாதன், கொடைக்கானல் மாவட்ட வன அலுவலர் முருகன் மற்றும் வனத் துறை அதிகாரிகளுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
     பின்னர்,  மாவட்ட வனத் துறை முதன்மை அலுவலர் நாகநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தனியார் காட்டேஜ் பணியாளர்களுக்கும், வனத் துறையினருக்கும் ஏற்பட்ட பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதில் யார் தவறு செய்திருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/16/கொடைக்கானலில்-காட்டேஜ்-பணியாளர்கள்---வனத்-துறையினர்-மோதல்-போலீஸார்-விசாரணை-2864570.html
2864568 மதுரை திண்டுக்கல் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம்: பழனி அருகே ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை DIN DIN Friday, February 16, 2018 09:52 AM +0530 பழனியை அடுத்த சின்னக்கலையமுத்தூரில், விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தில் ஆளும் கட்சியினர் முறைகேடாக பயனாளிகளைத் தேர்வு செய்வதாகப் புகார் கூறிய பொதுமக்கள், ஊராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனர். 
       திண்டுக்கல் மாவட்டம், பழனியில் பல்வேறு ஊராட்சிகளிலும் தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்துக்காக பயனாளிகள் தேர்வு நடைபெற்று வருகிறது.  இதற்காக, வட்டார வளர்ச்சி அலுவலர், கால்நடைத் துறை அதிகாரிகள் என 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
     ஆனால், இந்த குழுவினரை ஆளும் கட்சியினர் செயல்படவிடாமல், தங்கள் உறவினர்களுக்கு ஆடுகளை வழங்க நிர்ப்பந்தப்படுத்துவதாக புகார் கூறப்படுகிறது. 
பழனியை அடுத்த சின்னக்கலையமுத்தூர் ஊராட்சிக்கு 143 பயனாளிகளுக்கான பட்டியல் தற்போது தயார் செய்யப்பட்டு வருகிறது. ஒரு பயனாளிக்கு 3 பெண் ஆடுகள், 1 ஆண் ஆடு வழங்கப்படுகிறது.
     இந்நிலையில், சின்னக்கலையமுத்தூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாகிகள் சிலர் தங்களுக்கு வேண்டிய நபர்களுக்கு மட்டும் ஆடுகள் வழங்க ஏதுவாக பட்டியலை தயார் செய்து வருவதாக, அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் வியாழக்கிழமை சின்னக்கலையமுத்தூர் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார் தெரிவித்தனர். 
    மேலும், ஒரே வீட்டில் 2 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், வசதி படைத்தவர்கள் மற்றும் முன்னரே பயனடைந்தவர்களின் பெயரும் பட்டியலில் இடம் பெற்றிருப்பதாகவும், அவர்கள் தெரிவித்தனர். 
      இது குறித்து முன்னாள் ஊராட்சிக் கவுன்சிலர் மயில்சாமி என்பவர் கூறியது: விலையில்லா ஆடுகளுக்கான பயனாளிகள் தேர்வில், ஆளும் கட்சியினர் தலையிட்டு முறைகேடுகளை செய்து வருகின்றனர். 
முறையாக வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், விதவைகளுக்கு முன்னுரிமை வழங்குவதை விடுத்து, கட்சியில் உள்ள வசதியானவர்களுக்கும், முன்னரே ஆடுகளை பெற்றவர்களுக்கும் வழங்க ஏற்பாடு செய்து வருகின்றனர். 
    எனவே, தற்போது தயார் செய்து வரும் பட்டியலை ரத்து செய்துவிட்டு, உண்மையாகக் கஷ்டப்படும் பயனாளிகளுக்கு ஆடுகளை வழங்கவேண்டும் எனத் தெரிவித்தார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/16/விலையில்லா-ஆடுகள்-வழங்கும்-திட்டம்-பழனி-அருகே-ஊராட்சி-அலுவலகத்தை-பொதுமக்கள்-முற்றுகை-2864568.html
2863512 மதுரை திண்டுக்கல் பழனி பெரியாவுடையார் கோயிலில் நாட்டியாஞ்சலி DIN DIN Thursday, February 15, 2018 01:03 AM +0530 பழனி அருள்மிகு பெரியாவுடையார் கோயிலில் செவ்வாய்க்கிழமை மகா சிவராத்திரியை முன்னிட்டு, நூற்றுக்கணக்கான பரதக் கலைஞர்கள் பங்கேற்ற நாட்டியாஞ்சலி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு, பழனி கோயில் இணை ஆணையர் செல்வராஜ் தலைமை வகித்தார். போகர் பழனி ஆதீனம் சீர்வளர் சீர் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், திண்டுக்கல் மாவட்டக் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் சீனிவாசன், கோவை பீளமேடு குமரகுரு நாட்டியாலயா தாரணி சாய்ராம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரை நிகழ்த்தினர். துணை ஆணையர் மேனகா, சாய்கிருஷ்ணா மருத்துவமனை மருத்துவர் கீதா சுப்புராஜ் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றினர். மங்கள வாத்தியத்தைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட மேடையில் பரதக் கலைஞர்களின் நாட்டியம் நடைபெற்றது. 
ராஜகுமாரம்பாள்புரம் சுந்தர அய்யப்பன் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும், மீனா கல்ச்சுரல் அகாதெமி மாணவ, மாணவியரின் பரதநாட்டியமும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, குருகுலம் சபா, சென்னை சித்ரா, கோவை போத்தனூர் ஆராதனா பள்ளி மாணவ, மாணவியரின் பரதநாட்டியம் நடைபெற்றது.  திருப்பூர் கவிநயா நாட்டியாலயா சார்பில் சூரசம்ஹார நாட்டிய நாடகம் பலரையும் ஈர்த்தது.  
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/15/பழனி-பெரியாவுடையார்-கோயிலில்-நாட்டியாஞ்சலி-2863512.html
2863510 மதுரை திண்டுக்கல் கொடைக்கானலில் நிலவும் பனிப் பொழிவால் பூண்டு பயிரில் நுனிகருகல் நோய் DIN DIN Thursday, February 15, 2018 01:03 AM +0530 கொடைக்கானலில் தொடர்ந்து நிலவும் பனிப் பொழிவால் வெள்ளைப் பூண்டு பயிரில் நுனிகருகல் நோய் ஏற்படுவதால், விவசாயிகள் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.
    கொடைக்கானலில் பூம்பாறை, மன்னவனூர், வில்பட்டி, பள்ளங்கி, கிளாவரை, பூண்டி, கூக்கால், பழம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெள்ளைப் பூண்டு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, பூண்டு பயிரில்நுனிகருகல் நோய் ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் பாதிப்பு அடைந்துள்ளனர்.     இது குறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியது: கொடைக்கானல் மலைக் கிராமங்களில் தற்போது அதிகமான பனிப் பொழிவு நிலவுவதால், பூண்டு பயிரில் நுனிகருகல் நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் பூச்சி தாக்குதலும் ஏற்படும். பனியின் பாதிப்பை தடுக்க அதிகாலை நேரங்களில் தெளிப்பு நீர் பாசனம் மூலம் தண்ணீர் தெளிக்கவேண்டும்.
    அதைத் தொடர்ந்து, அமிஸ்டர் அல்லது கஸ்டோடியா மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீரில் 1-மில்லி வீதம் கலந்து கைதெளிப்பான் மூலம் அல்லது ஒரு லிட்டர் தண்ணீரில் 2-மில்லி வீதம் கலந்து விசை தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
    போலியார் கோல்டு மருந்தினை 1-லிட்டர் தண்ணீரில் 1.5 மில்லி வீதம் கலந்து கைதெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். மேலும், மருந்துடன் 1-லிட்டர் தண்ணீருக்கு 1-மில்லி ஒட்டு பசை கலந்து இலைகளில் நன்கு தெளிக்கவேண்டும். இவ்வாறு இருமுறை 12 நாள்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும். விவசாயிகள் இவ்வாறு செய்தால், பூண்டு பயிரில் ஏற்படும் நுனிகருகல் நோயை கட்டுப்படுத்தலாம் என்றார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/15/கொடைக்கானலில்-நிலவும்-பனிப்-பொழிவால்-பூண்டு-பயிரில்-நுனிகருகல்-நோய்-2863510.html
2863509 மதுரை திண்டுக்கல் நத்தம் பகுதியில் பிப்ரவரி 15 மின்தடை DIN DIN Thursday, February 15, 2018 01:02 AM +0530 நத்தம் பகுதியில் வியாழக்கிழமை (பிப். 15) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து நத்தம் உதவி செயற்பொறியாளர் உஷாபிரியன் சூரியநாத் தெரிவித்திருப்பதாவது: நத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி வியாழக்கிழமை (பிப். 15) நடைபெறுகிறது. இதனால், நத்தம், கோவில்பட்டி,  சேத்தூர், அரவங்குறிச்சி, கோட்டையூர், சிறுகுடி, பூசாரிபட்டி, பூதகுடி, பன்னியாமலை, உலுப்பகுடி, காட்டுவேலம்பட்டி, ஆவிச்சிபட்டி, தேத்தாம்பட்டி மற்றும் ஒடுகம்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனதெரிவித்துள்ளார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/15/நத்தம்-பகுதியில்-பிப்ரவரி-15-மின்தடை-2863509.html
2863508 மதுரை திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் அருகே மணல் மூட்டைகளால் விபத்து அபாயம் DIN DIN Thursday, February 15, 2018 01:02 AM +0530 ஒட்டன்சத்திரம்-பழனி சாலையில் விருப்பாச்சி கணவாய் மேட்டில், பழனி பாதயாத்திரை பக்தர்கள் பாதுகாப்பாக நடத்து செல்வதற்காக  வைக்கப்பட்ட மணல் மூட்டைகளை அகற்றாததால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து பழனிக்கு பாதயாத்திரையாகச் சென்ற பக்தர்களுக்காக ரூ. 6  கோடி செலவில் தேசிய நெடுஞ்சாலையின் தெற்கு பகுதியில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த நடைப்பாதையில் பக்தர்கள் நடத்து சென்று வருகின்றனர். இந்நிலையில், விருப்பாச்சி கணவாய் மேட்டில் இருந்து வீரலப்பட்டி பிரிவு வரை பாதயாத்திரை பக்தர்கள் பாதுகாப்பாக நடந்து செல்ல காவல்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர், சாலையில் மணல் மூட்டைகளை வரிசையாக அடுக்கி வைத்தனர். கடந்த ஜனவரி 31-ஆம் தேதி தைப்பூசம் நிறைவடைந்து விட்டது. ஆனாலும், விருப்பாச்சி கணவாய் மேட்டிலிருந்து வீரலப்பட்டி பிரிவு வரை அடுக்கி வைக்கப்பட்ட மணல் மூட்டைகள் அகற்றப்படவில்லை. இதனால், இரவு நேரங்களில் வாகனங்களில் செல்லுவோர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, சாலையின் நடுவேயுள்ள இந்த மணல் மூட்டைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, பொதுமக்கள், வாகன ஓட்டிகள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/15/ஒட்டன்சத்திரம்-அருகே-மணல்-மூட்டைகளால்-விபத்து-அபாயம்-2863508.html
2863507 மதுரை திண்டுக்கல் கொடைக்கானலில் கொய்மலர்கள் விளைச்சல் அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி DIN DIN Thursday, February 15, 2018 01:01 AM +0530 கொடைக்கானல் பகுதியில் கொய்மலர்கள் நன்கு விளைச்சல் கண்டுள்ளதாலும் நல்ல விலை கிடைப்பதாலும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கொடைக்கானல் பகுதிகளான மன்னவனூர், கூக்கால், வடகவுஞ்சி, பண்ணைக்காடு, தாண்டிக்குடி, பூண்டி, செண்பகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடில்கள் அமைத்து, விவசாயப் பயிர்களுக்கு அடுத்தபடியாக கொய்மலர்கள் உற்பத்தி செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். 
இந்த ஆண்டு கொய்மலர் நல்ல விளைச்சல் இருந்ததால், கடந்த ஒரு மாதமாக அவற்றை அறுவடை செய்து தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களுக்கும் அனுப்பும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து கொய்மலர்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கூறியது: 
கொடைக்கானலில் பல்வேறு கிராமப் பகுதிகளில் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற இடத்தில் குடில் அமைத்து, கொய்மலர்களான காரனேன் மலர்கள், ரோஜாக்கள் மஞ்சள், சிவப்பு, வெள்ளை உள்ளிட்ட பல்வேறு வண்ண மலர்கள் வளர்க்கப்படுகின்றன. தற்போது, அவற்றை அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
 மேலும், விற்பனை நன்றாக இருப்பதால், தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், கோவா  உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். ஒரு பூவின் விலை ரூ. 7 முதல் ரூ.10 வரை விற்பனை செய்யப்படுகிறது. இது மார்க்கெட்டில் ரூ. 15 வரை விற்கப்படுகிறது. இந்தாண்டு நல்ல விளைச்சல்  கிடைத்தும், வெளிச் சந்தையில் நல்ல லாபம்  கிடைத்துளளது. 
தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வருவோம். அதன்பின்னர், மொத்த சந்தையிலும், சில்லறை விற்பனை மையங்களுக்கும் அனுப்புவோம். தற்போது நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும், விழாக்களிலும் கொய்மலர்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருவதால், தொடர்ந்து எங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது என்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/15/கொடைக்கானலில்-கொய்மலர்கள்-விளைச்சல்-அதிகரிப்பு-விவசாயிகள்-மகிழ்ச்சி-2863507.html
2863506 மதுரை திண்டுக்கல் திண்டுக்கல் அருகே லாரி ஓட்டுநர் குடும்பத்தோடு தற்கொலை முயற்சி: மனைவி சாவு DIN DIN Thursday, February 15, 2018 01:01 AM +0530 திண்டுக்கல் மாவட்டம் செங்குறிச்சியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் விஷம் குடித்து குடும்பத்தோடு புதன்கிழமை தற்கொலைக்கு முயன்றார். இதில், அவரது மனைவி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
 திண்டுக்கல் மாவட்டம், செங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (35). லாரி ஓட்டுநர். இவரது மனைவி மாலதி (26). அங்கன்வாடி ஊழியர். இவர்களது மகள் கன்னிகா (10), மகன் கார்த்தி (7).  இந்நிலையில், புது வீடு கட்டுவதற்காக செந்தில்குமார் முயற்சி மேற்கொண்டார். கட்டுமானப் பணிகள் பாதியில் நிற்கும் நிலையில், மேலும் பணிகளை தொடருவதற்கு பணம் இல்லாததால் மனமுடைந்த செந்தில்குமார் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தாராம். 
இதைத் தொடர்ந்து மனைவி மற்றும் குழந்தைகளுக்கு  விஷ விதையை அரைத்துக் கொடுத்து விட்டு, தானும் விஷம் குடித்தார். 
இதையடுத்து, செங்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட 4 பேரும், தீவிர சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.  அங்கு, மாலதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். செந்தில்குமார், கன்னிகா, கார்த்தி ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  வடமதுரை போலீஸார் விசாரிக்கின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/15/திண்டுக்கல்-அருகே-லாரி-ஓட்டுநர்-குடும்பத்தோடு-தற்கொலை-முயற்சி-மனைவி-சாவு-2863506.html
2863505 மதுரை திண்டுக்கல் "மக்கள் நலம் பெற மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் தேவை' DIN DIN Thursday, February 15, 2018 01:01 AM +0530 மக்கள் நலமுடன் வாழ மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் எம்பி. பீட்டர் அல்போன்ஸ் பேசினார். 
தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து, திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்துக்கு எம்எல்ஏக்கள் அர.சக்கரபாணி, பெ.செந்தில்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற காங்கிரஸ் முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ் பேசியதாவது: இந்திய அளவில் தமிழகம் சார்பில் தான் அதிகமான வருமான வரி, கலால் வரி செலுத்தப்படுகிறது. ஆனால், மத்திய அரசு தமிழகத்தை புறக்கணித்து வருகிறது. இந்திய அளவில் அதிகமான மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கியது தமிழகம். ஆனால், இன்றைக்கு கொண்டு வரப்பட்டுள்ள நீட் தேர்வு மூலம் நமது இளைஞர்கள் அங்கு படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.20ஆயிரம் கோடி நிதி இதுவரை கிடைக்கவில்லை. அதனை வற்புறுத்தி கேட்டு பெறுவதற்கான துணிச்சல் தற்போதைய தமிழக ஆட்சியாளர்களுக்கு இல்லை. 
 வட மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் பாஜக தனது மதவாத கொள்கைகளை புகுத்த முயற்சிக்கிறது. அதனை நாம் தடுக்கத் தவறினால், தமிழ்மொழி, இனம், பாரம்பரியம் உள்ளிட்ட அனைத்தையும் பாதுகாக்க முடியாத நிலை உருவாகும். மக்கள் நலம் பெற, மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்றார்.
 இதில் திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது: திமுக ஆட்சியின் போது போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டபோது கூட, பேருந்து கட்டணம் உயர்த்தப்பட வில்லை. ஆனால், இன்றைக்கு ஆட்சியில் உள்ள அதிமுக, மக்களைப் பற்றி சிந்திக்காமல் பேருந்து கட்டணத்தை உயர்த்தியுள்ளது. தமிழகத்தில்  மே மாதம் உள்ளாட்சி தேர்தல் உறுதியாக நடைபெறும். ஆர்.கே.நகரில் ரூ.20 நோட்டைப் பார்த்து ஏமாந்த மக்கள், இனி விழிப்புடன் இருப்பார்கள். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே மக்களுக்கு விடிவு கிடைக்கும் என்றார். கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி, அப்துல்கனிராஜா (காங்.), செல்வராகவன் (மதிமுக), சந்தானம் (இ.கம்யூ) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/15/மக்கள்-நலம்-பெற-மத்தியிலும்-மாநிலத்திலும்-ஆட்சி-மாற்றம்-தேவை-2863505.html
2863503 மதுரை திண்டுக்கல் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைக்க அரசு மருத்துவர்களுக்கு சிறப்பு பயிற்சி DIN DIN Thursday, February 15, 2018 01:00 AM +0530 குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைக்க, திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது. 
 தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி அல்லாத 30 அரசு தலைமை மருத்துவமனைகளில் ரூ.112 கோடி செலவில், குழந்தைகள் அவசர சிகிச்சைப் பிரிவு தொடங்க தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
ஒரு  மாதம் முதல் 12 வயதுள்ள குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைப் பிரிவு 
(டதஉங - டங்க்ண்ஹற்ழ்ண்ஸ்ரீ தங்ள்ன்ள்ஸ்ரீண்ற்ஹற்ண்ர்ய் உம்ங்ழ்ஞ்ங்ய்ஸ்ரீஹ் ஙங்க்ண்ஸ்ரீண்ய்ங்) 4 முதல் 6 படுக்கை வசதிகளுடன் தனிப் பிரிவாக தொடங்கப்பட்டுள்ளது. 
 திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள குழந்தைகள் அவசர சிகிச்சைப் பிரிவில், செயற்கை சுவாசக் கருவி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் 6 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு நலப் பணிகள் இணை இயக்குநர் ஜெ.மாலதி பிரகாஷ் தலைமை வகித்தார். கண்காணிப்பாளர் சிவக்குமார், குழந்தைகள் நலப் பிரிவு தலைமை மருத்துவர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
 முகாமில், குழந்தைகள் நல மருத்துவர்கள் மட்டுமின்றி பொது மருத்துவர்கள், செவிலியர்கள் என 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர்கள் எஸ்.இந்துமதி சந்தானம், எஸ்.சாந்தி, மதுரை மருத்துவர் சந்தன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். 
 இதுகுறித்து மருத்துவர் எஸ்.இந்துமதி சந்தானம் கூறியதாவது: கடந்த 1997ஆம் ஆண்டு முதல் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு செயல்பட்டு வருகிறது. அப்போது முதல் மருத்துவர்கள் மேற்கொண்ட சிகிச்சை முறைகளால், 50 சதவீதமாக இருந்த குழந்தைகளின் இருப்பு விகிதம் 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே, தமிழகத்தின் பிற பகுதிகளிலும் குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைப் பிரிவை ஏற்படுத்த தேசிய சுகாதார திட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
 உடல் நல குறைவினால் மருத்துவமனைக்கு வரும் குழந்தைகளுக்கு, அனுமதி சீட்டு பெறும் முன்பே உடனடி சிகிச்சை அளிக்க வேண்டும். தாமதம் இல்லாத சிகிச்சையின் மூலம் குழந்தைகளின இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்த முடியும். அந்தந்த மாவட்டங்களில் அளிக்கப்படும் முதல் கட்ட பயிற்சிகளுக்கு பின், விரும்பமுள்ள மருத்துவர்களை சென்னைக்கு வரவழைத்து அரசு செலவில் 3 மாத பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/15/குழந்தைகளின்-இறப்பு-விகிதத்தை-குறைக்க-அரசு-மருத்துவர்களுக்கு-சிறப்பு-பயிற்சி-2863503.html
2863501 மதுரை திண்டுக்கல் இணைய வழி பத்திரப்பதிவு முடக்கம்: பொதுமக்கள் அதிருப்தி DIN DIN Thursday, February 15, 2018 01:00 AM +0530 இணைய வழிப் பத்திரப் பதிவு,  புதன்கிழமை இணைய தள முடக்கத்தால் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.
 தமிழகம் முழுவதும் பிப்.1 ஆம் தேதி முதல் இணைய வழியில் பத்திரப்பதிவு  நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதற்காக புதிய மென்பொருள் மூலம் இணைய தள வசதியுடன் அனைத்து பத்திரப் பதிவு அலுவலகங்களும் நவீனப்படுத்தப்பட்டன. இந்நிலையில், இணைய தள முடக்கம் காரணமாக, புதன்கிழமை நண்பகல் முதல் தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவுகள் முடங்கின.
 திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பத்திரப் பதிவு அலுவலகத்தில் இணைய வழிப் பத்திரப்பதிவு கடந்த 5 மாதங்களுக்கு முன் சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டது. 
அதன்படி, பத்திரப் பதிவு செய்த சிறிது நேரத்திலேயே, 3 பயனாளிகளுக்கான பத்திரங்களை, வத்தலகுண்டு சார் பதிவாளர் விவேகானந்தன் உடனடியாக வழங்கினார். அதனைத் தொடர்ந்து அங்கு பத்திரப் பதிவுக்காக 20-க்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர். 
ஆனால், நண்பகல் 12 மணிக்குப் பின் இணைய தள சேவை முடக்கத்தால் புதன்கிழமை முழுவதும் பத்திரப் பதிவு நடைபெறவில்லை. இதனால் பத்திரப்பதிவுக்கு வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/15/இணைய-வழி-பத்திரப்பதிவு-முடக்கம்-பொதுமக்கள்-அதிருப்தி-2863501.html
2863500 மதுரை திண்டுக்கல் பாறைக்குளத்தில் பெண் மர்மச் சாவு DIN DIN Thursday, February 15, 2018 01:00 AM +0530 பழனி அருகே புதன்கிழமை பாறைக்குளத்தில் பெண் மர்மமான முறையில் சடலமாக மிதந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
பழனி அருகே அமரபூண்டி எவிக்சன் நகரைச் சேர்ந்தவர் தாளிமான் மனைவி அங்காளஈஸ்வரி (45). கடந்த ஒரு வருடம் முன் தாளிமான் இறந்த நிலையில் அங்காளஈஸ்வரி மனமுடைந்து காணப்பட்டாராம். இந்நிலையில் கடந்த 3 நாள்களாக அவரைக் காணாமல் உறவினர்கள் தேடி வந்துள்ளனர். இதனிடையே புதன்கிழமை மாலை அவர் அமரபூண்டி பாறைக்குளத்தில் சடலமாக மிதந்தார். அப்போது உடலில் பல இடங்களிலும் காயங்கள் இருந்துள்ளன. 
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு ஆய்வாளர் முத்துலட்சுமி வந்து விசாரணை நடத்தினார். பின்னர் சடலம் பழனி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.  இதுகுறித்து ஆயக்குடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/15/பாறைக்குளத்தில்-பெண்-மர்மச்-சாவு-2863500.html
2863499 மதுரை திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தில் சாலை விபத்தில் சிறுவன் சாவு DIN DIN Thursday, February 15, 2018 01:00 AM +0530 ஒட்டன்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதியதில் கீழே விழுந்தவர்கள் மீது லாரி மோதியதில் சிறுவன் உயிரிழந்தார்.
 பழனி பெரியபள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்ஹக் (52). இவர், தனது மனைவி அபிநிஷா (38) மகன் ஹைதர் அலி (11)  ஆகியோருடன் செவ்வாய்க்கிழமை மோட்டார் சைக்கிளில் ஒட்டன்சத்திரம் நோக்கி வந்தார். 
பழனி- ஒட்டன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலை ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள தன்னாசியப்பன் கோயில் அருகே வந்த போது மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதியதில் நிலைதடுமாறி மூவரும் சாலையில் விழுந்தனர். 
அப்போது பழனியில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி வந்த மினி லாரி அவர்கள் மீது மோதியதில் சிறுவன் ஹைதர் அலி  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
பலத்த காயமடைத்த அப்துல்ஹக், அபிநிஷா ஆகியோர் பழனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/15/ஒட்டன்சத்திரத்தில்-சாலை-விபத்தில்-சிறுவன்-சாவு-2863499.html