Dinamani - தேனி - http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2946708 மதுரை தேனி கண்டமனூரில் ஜூன் 26 மின்தடை DIN DIN Monday, June 25, 2018 08:00 AM +0530 கண்டமனூர் துணை மின் நிலையத்தில் ஜூன் 26 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற  உள்ளன.
    எனவே, அன்றைய தினம் காலை 9.45 மணி முதல் மாலை 4.45 மணி வரை கண்டமனூர், அம்பாசமுத்திரம், ஸ்ரீரங்கபுரம், தப்புக்குண்டு, கோவிந்தநகரம், வெங்கடாச்சலபுரம், எம்.சுப்புலாபுரம், ஜி.உசிலம்பட்டி, சித்தார்பட்டி, கணேசபுரம், ஜி.ராமலிங்காபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று, தேனி மின்வாரியச் செயற்பொறியாளர் சி. பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/25/கண்டமனூரில்-ஜூன்-26-மின்தடை-2946708.html
2946707 மதுரை தேனி "தமிழக வளர்ச்சிக்கு முக்கியமானது சேலம்-சென்னை 8 வழிச் சாலை திட்டம்' DIN DIN Monday, June 25, 2018 08:00 AM +0530 தமிழக வளர்ச்சிக்கு முக்கியமான சேலம்-சென்னை எட்டு வழிச்சாலைத் திட்டத்தை விவசாயிகளுக்கு பாதிப்பில்லாத வகையில் நிறைவேற்ற வேண்டும் என, மனிதநேய மக்கள் கட்சி மாநிலப் பொதுச் செயலர் தமீமுன் அன்சாரி தெரிவித்தார்.
      தேனி மாவட்டம், கம்பத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான தமீமுன் அன்சாரி ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடையே மேலும் கூறியதாவது:   தேனி மாவட்டம் அம்பரப்பர் மலையில் அமையவுள்ள நியூட்ரினோ திட்டம்  தென்மாவட்ட மக்களையே பீதியில் ஆழ்த்தியுள்ளது என்பதால், அத்திட்டத்தை தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். 
     திண்டுக்கல் - லோயர் கேம்ப் அகல ரயில்பாதைத் திட்டம் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானது என்பதால், இந்தத் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்.    தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு  உள்ளபோது, அரசுக்கு போட்டியாக ஆளுநர் ஆய்வுகள் மேற்கொள்வது கண்டிக்கத்தக்கது. இது, மாநிலங்களுக்கான உரிய அதிகாரங்களை கேலி செய்வதாக உள்ளது.    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறவேண்டும்.
    விமான நிலையங்கள், சாலைகள்  போன்றவை நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானவை. எனவே, நாட்டின் நலனைக் கருத்தில்கொண்டு, எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் இத்திட்டங்களை வரவேற்கிறோம். அதேநேரம், விவசாயிகளை கண்ணீரில் தவிக்கவிட்டு, திட்டங்களை செயல்படுத்துவது விரும்பத்தகாதது. விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்கிய பின்னரே சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். 
   புதிய கட்சியைத் தொடங்கியுள்ள கமல்ஹாசன், தேசிய அளவில் கவனம் பெறுவதற்காக பல்வேறு தலைவர்களை சந்தித்து வருகிறார். ராகுல்காந்தி சந்திப்பும் அதுபோல்தான் என்றார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/25/தமிழக-வளர்ச்சிக்கு-முக்கியமானது-சேலம்-சென்னை-8-வழிச்-சாலை-திட்டம்-2946707.html
2946706 மதுரை தேனி போடி அருகே கண்மாய் தூர்வாரும் பணி DIN DIN Monday, June 25, 2018 07:59 AM +0530 குடிமராமத்து திட்டத்தின் கீழ், போடி அருகே கண்மாய் தூர்வாரும் பணிகளை, கம்பம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தார்.
போடி அருகே டி.சிந்தலைச்சேரி கிராமத்தில் உள்ள நல்லுகுளம் கண்மாய், 18 ஆம் கால்வாய் மூலம் நீர்ப்பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில், இந்த கண்மாய் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில், இக்கிராமத்தினர் நிலத்தடி நீர்வள மேம்பாட்டுக் குழு என்ற பெயரில் அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி, விவசாயிகளே நிதி திரட்டி குடிமராமத்து திட்டத்தின் கீழ் இக்கண்மாயை தூர்வார நடவடிக்கை எடுத்தனர். இதற்காக, ரூ. 3 லட்சம் மதிப்பீட்டில் கண்மாய் தூர்வாருதல் மற்றும் கரைகள் மேம்படுத்தும் பணி நடைபெற உள்ளது.
இதற்கு, மாவட்ட நிர்வாகமும் அனுமதியளித்துள்ள நிலையில், இதற்கான பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதனை, கம்பம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.டி.கே. ஜக்கையன் தொடக்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ச. கந்தசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுரேஷ், சாந்தி, தமிழக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தேனி மாவட்டச் செயலர் அ. திருப்பதிவாசகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை, டி.சிந்தலைச்சேரி பங்குத்தந்தை மைக்கேல்ராஜ், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் சலேத்து, ராமராஜ், தங்கராஜ் மற்றும் விவசாயிகள் செய்துள்ளனர்.
இதேபோல், பண்ணைப்புரம் பகுதியில் வேர்கள் அமைப்பு சார்பில் 3 இடங்களில் நடைபெறும் கசிவு நீர்க் குட்டைகள் மராமத்துப் பணிகளையும், கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பார்வையிட்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/25/போடி-அருகே-கண்மாய்-தூர்வாரும்-பணி-2946706.html
2946705 மதுரை தேனி இடுக்கி மாவட்டத்தில் இன்று வேலைநிறுத்தம்: காங்கிரஸ் கட்சி அறிவிப்பு DIN DIN Monday, June 25, 2018 07:59 AM +0530 கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்து, காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் திங்கள்கிழமை வேலை நிறுத்தத்தை  அறிவித்துள்ளன.
       தேனி மாவட்டத்தில், தமிழக - கேரள எல்லைக்குள் உள்ளது இடுக்கி மாவட்டம். இங்கு, மத்திய அரசின் எரிபொருள்கள் விலை உயர்வைக் கண்டித்தும், மாநில அரசு இடுக்கி மாவட்டத்தில் வழங்கிய இலவச பட்டாவில் முறைகேடுகள் செய்ததைக் கண்டித்தும், திங்கள்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது.
     இதன் எதிரொலியாக, இடுக்கி மாவட்டம் முழுவதும் போக்குவரத்து இயங்காது. தமிழகத்திலிருந்து கேரளம் செல்லும் வாகனங்கள், தமிழக எல்லையான குமுளி, கம்பம்மெட்டு பகுதியிலேயே நிறுத்தப்படும். வர்த்தக நிறுவனங்கள் செயல்படாது. ஏலத் தோட்டத் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லக் கூடாது என்றும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் தொழிற் சங்கங்கள் அறிவித்துள்ளன.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/25/இடுக்கி-மாவட்டத்தில்-இன்று-வேலைநிறுத்தம்-காங்கிரஸ்-கட்சி-அறிவிப்பு-2946705.html
2946704 மதுரை தேனி ஊதிய உயர்வு கோரி மூணாறில் ஜூன் 27-இல் தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம் DIN DIN Monday, June 25, 2018 07:58 AM +0530 ஊதிய உயர்வு வழங்கக் கோரி, கேரள மாநிலம் மூணாறில் ஜூன் 27 ஆம் தேதி (புதன்கிழமை) போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, தென்னிந்திய தோட்டத் தொழிலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
மூணாறில் உள்ள தனியார் தேயிலை தோட்டங்களில் 20 ஆயிரம் நிரந்தர தொழிலாளர்கள் உள்பட மொத்தம் 3 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு, எஸ்டேட் நிர்வாகம் சார்பில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 2014-ஆம் ஆண்டுடன் ஊதிய உயர்வு ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையில், புதிய ஊதிய உயர்வு வழங்க எஸ்டேட் நிர்வாகம் மற்றும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால், மூணாறில் கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெண் தொழிலாளர்கள் 20 நாள்கள் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து, தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சம்பளம் 232 ரூபாயிலிருந்து ரூ.301 ஆக உயர்த்தி எஸ்டேட் நிர்வாகம் அறிவித்தது.
இந் நிலையில், 3 ஆண்டுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் கடந்த 2017 டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. அதையடுத்து, ஊதிய ஒப்பந்த நிர்ணயக் கூட்டமைப்பு சார்பில் புதிய ஊதிய உயர்வு குறித்து தற்போது வரை பேச்சுவார்த்தை எதுவும் நடத்தப்படவில்லை. 
இதனால், தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மூணாறில் ஜூன் 27-ஆம் தேதி உதவி தொழிலாளர் நல அலுவலர் அலுவலகம் முன்பாக, ஐ.என்.டி.யு.சி. தென்னிந்திய தோட்டத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக, அச் சங்கத்தின் தலைவர் மணி, துணைத் தலைவர் குமார், பொதுச் செயலர் முனியாண்டி ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/25/ஊதிய-உயர்வு-கோரி-மூணாறில்-ஜூன்-27-இல்-தோட்டத்-தொழிலாளர்கள்-போராட்டம்-2946704.html
2946703 மதுரை தேனி ஹைவேவிஸ் மலைச் சாலையில் சுற்றுலா வேன் பாறை மீது மோதியதில் 17 பேர் காயம் DIN DIN Monday, June 25, 2018 07:58 AM +0530 தேனி மாவட்டம், சின்னமனூர் அருகேயுள்ள ஹைவேவிஸ் மலைக்கு ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா சென்ற வேன் பாறை மீது மோதியதில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரைச் சேர்ந்த  17 பேர் காயமடைந்தனர்.
      மேற்குத் தொடர்ச்சி மலையில் 4000 அடி உயரத்தில்  ஹைவேவிஸ்  - மேகமலை அமைந்துள்ளது.  18 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட இந்த மலைப் பகுதியானது, சமீபகாலமாக சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்து வருகிறது. இங்கு, தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஏராளான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இருப்பினும், மலைப் பகுதியில் பல இடங்களில் தடுப்புகள் இல்லாமல் ஆபத்தான சாலையாகவும் உள்ளது. 
     இந்நிலையில்,  ஞாயிற்றுக்கிழமை நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியைச் சேர்ந்த 15 பேர் சுற்றுலா வேன் மூலமாக ஹைவேவிஸ் -மேகமலைக்கு வந்தனர். பின்னர், மாலையில் ஊர் திரும்பினர். அப்போது, மலைச் சாலையில்  6 ஆவது கொண்டை ஊசி வளைவில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர பாறை மீது மோதியது. 
இதில், ஈரோடு முத்துச்சாமி காலனி பாரதி நகரைச் சேர்ந்த ஓட்டுநரான மூர்த்தி மகன் முருகேசன் (45) மற்றும் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் கபிலர் மலை கோபால் (60), சேடர்பாளையம் பாலசுப்பிரமணியன் (33), சின்னமருவூர் வாசுதேவன், பெரியசோலிபாளையம் குணசேகரன் (45), பழனிச்சாமி (45), சண்முகம்(40), சின்ன சோலிபாளையம் ரவிசேகர் (35), இருப்பம்பாளையம் சுந்தரராஜன் (47), கருங்கம்பள்ளம் மோகன்ராஜ் (30) உள்பட 17 பேர் காயமடைந்தனர். 
      இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற ஹைவேவிஸ் மற்றும் சின்னமனூர் போலீஸார், சின்னமனூர் சரக வனத் துறையினர், உத்தமபாளையம் தீயணைப்பு மீட்புக் குழுவினர் ஆகியோர், காயமடைந்தவர்களை மீட்டு சின்னமனூர் அரசு மருத்துவனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
     இது குறித்து ஹைவேவிஸ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/25/ஹைவேவிஸ்-மலைச்-சாலையில்-சுற்றுலா-வேன்-பாறை-மீது-மோதியதில்-17-பேர்-காயம்-2946703.html
2946702 மதுரை தேனி மரிக்குண்டு ஊராட்சியில் குடிநீரை சீராக விநியோகிக்க பொதுமக்கள் கோரிக்கை DIN DIN Monday, June 25, 2018 07:58 AM +0530 ஆண்டிபட்டி அருகே மரிக்குண்டு ஊராட்சியில் குடிநீரை சீராக விநியோகிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஒன்றியம் மரிக்குண்டு ஊராட்சியில், மரிக்குண்டு, வீர சின்னம்மாள்புரம், எம்.சுப்புலாபுரம், காலனி, எரதிம்மக்காள்பட்டி, பழனித்தேவன்பட்டி, ஜெ.ஜெ. நகர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சிக்கு, குன்னூர் வைகை ஆற்றில் உறை கிணறுகளில் இருந்து வள்ளல் நதி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.  கடந்த சில மாதங்களாக மழை இல்லாமல் வைகை ஆறு வறண்டு போய் குடிநீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டது. மேலும், இங்குள்ள ஆழ்துளைக் கிணறுகளிலும் நீர் சுரப்பு இல்லாமல் போனதால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
 இந்நிலையில்,  தற்போது தென்மேற்குப் பருவமழை தொடங்கி உள்ளதாலும், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவதாலும் வைகை ஆற்றில் நீர்வரத்து சீராக உள்ளது. இதனால், வள்ளல் நதி கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் பல்வேறு பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஆனால், மரிக்குண்டு ஊராட்சி கிராமங்களுக்கு மட்டும் தண்ணீர் வருவதில்லை என்றும், கடந்த 20 நாள்களாக குடிநீருக்காக பல கிலோ மீட்டர் நடந்து சென்றும், தோட்டங்களில் விலை கொடுத்தும் தண்ணீர் எடுத்து வருவதாகப் பெண்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும், வள்ளல் நதி கூட்டுக் குடிநீர்த் திட்ட விநியோகத்தில் மரிக்குண்டு ஊராட்சியை புறக்கணிப்பதாகவும், பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
எனவே, பாரபட்சமின்றி குடிநீர் விநியோகம் செய்ய மாவட்ட நிர்வாகம்  நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/25/மரிக்குண்டு-ஊராட்சியில்-குடிநீரை-சீராக-விநியோகிக்க-பொதுமக்கள்-கோரிக்கை-2946702.html
2946701 மதுரை தேனி காவலர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி DIN DIN Monday, June 25, 2018 07:57 AM +0530 தேனி காவலர் பயிற்சிப் பள்ளியில் ஆயுதப் படை மற்றும் பயிற்சிக் காவலர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், காவலர்களின் மன அழுத்தத்தை போக்குவது, பணிகளை பகிர்ந்தளிப்பது, மனம் மற்றும் உடலுக்கு புத்துணர்வு அளிக்கும் உடற்பயிற்சிகள் ஆகியன குறித்து, மதுரை மனோதத்துவ நிபுணர் ராஜேந்திரன் ஆயுதப் படை காவலர்கள் மற்றும் பயிற்சிக் காவலர்களுக்கு பயிற்சி அளித்தார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/25/காவலர்களுக்கு-புத்தாக்கப்-பயிற்சி-2946701.html
2946700 மதுரை தேனி ஆண்டிபட்டிக்கு குடிநீர் செல்லும் பிரதானக் குழாய் சேதம்: வீணாகி வரும் தண்ணீர் DIN DIN Monday, June 25, 2018 07:57 AM +0530 ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு குடிநீர் வரும் பிரதானக் குழாயில்  உடைப்பு ஏற்பட்டுள்ளதால், குடிநீர் வீணாக வெளியேறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
       தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பேரூராட்சிப் பகுதிக்கு குன்னூர் வைகை ஆற்றிலிருந்தும், ஆண்டிபட்டி-சேடபட்டி கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலமும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
      இதில், குன்னூர் வைகை ஆற்றில் உறை கிணறுகள் அமைத்து, நீரேற்று நிலையம் மூலம் மேல்நிலைத் தொட்டிகளில் ஏற்றி மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலை மார்க்கமாக வரும் குழாய்கள் மூலம் பொதுமக்களுக்கு 15 நாள்களுக்கு ஒருமுறை  குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.
      தற்போது, வைகை ஆற்றில் நீரவரத்து உள்ளதால், ஆண்டிபட்டி பேரூராட்சிப் பகுதிக்கு குடிநீர் சீராக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குன்னூரில் இருந்தும் தண்ணீர் வரும் பிரதானக் குழாய்களில் சமூக விரோதிகள் ஓட்டைபோட்டு தண்ணீரை திருடி வந்தனர். சிலர் விவசாயத்துக்குப் பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. இதையறிந்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு, திருட்டுத்தனமாக தண்ணீர் எடுத்த குழாய்களை அடைத்து சீர்செய்தது.
      இருப்பினும், மர்ம நபர்கள் சனிக்கிழமை எஸ்.எஸ்.புரம் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் மர்ம நபர்கள் குழாயை சேதப்படுத்தியதால், தண்ணீர் பெருமளவில் வீணாகி வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் குழாயை சேதப்படுத்திய மர்ம நபர்களை கைது செய்வதுடன், குழாயை விரைவில் சரிசெய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/25/ஆண்டிபட்டிக்கு-குடிநீர்-செல்லும்-பிரதானக்-குழாய்-சேதம்-வீணாகி-வரும்-தண்ணீர்-2946700.html
2946168 மதுரை தேனி 9 பேரைக் கொன்ற மக்னா யானையைப் பிடிக்க சிறப்புக் குழுவினர் தேவாரத்தில் முகாம்: இரவு, பகலாக கண்காணிப்பு DIN DIN Sunday, June 24, 2018 02:54 AM +0530 தேனி மாவட்டம் தேவாரத்தில் 9 பேரை கொன்ற மக்னா யானையை பிடிக்க சிறப்பு குழுவினர் ஊட்டியிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
தேவாரம் பகுதியில் கடந்த சில வருடங்களாக மக்னா யானை தாக்கி 9 பேர் வரை இறந்துள்ளனர். அதனால் மக்னா யானையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து மாவட்ட வனத்துறை அலுவலர் கெளதமன் உத்தரவின் பேரில், உதவி வன பாதுகாப்பு அலுவலர் மகேந்திரன், உத்தமபாளையம் வன அலுவலர் ஜீவனா மற்றும் 13 பேர் கொண்ட குழுவினர் இப்பகுதியில் முகாமிட்டு யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் பகல் நேரத்தில் அடர்ந்த காட்டுப் பகுதியில் பதுங்கிவிடும் யானை இரவு நேரத்தில் மட்டுமே தோட்டங்களில் புகுந்து சேதம் ஏற்படுத்துகிறது. இதனிடையே வெள்ளிக்கிழமை இரவு பிரம்புவெட்டி ஓடை புலத்தில் புகுந்த மக்னா யானை தவம் என்பவரது தோட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தியுள்ளது. இதனையடுத்து ஊட்டி ஆனைமலை பகுதியை சேர்ந்த பழங்குடியினத்தை சேர்ந்த ஜெயக்குமார், சுரேஷ் உள்ளிட்ட 5 பேர் கொண்ட சிறப்பு குழுவினர் வரவழைக்கப்பட்டனர். இவர்கள் இப்பகுதியில் முகாமிட்டு யானைகளை பிடிக்க திட்டமிட்டுள்ளனர்.
கொடைக்கானல்: கொடைக்கானல் அருகேயுள்ள பள்ளங்கி,கோம்பை ஆகிய பகுதி தனியார் தோட்டங்களில் புகுந்த காட்டு யானைகள் அங்கிருந்த விவசாயப் பயிர்களை சேதப்படுத்தியுள்ளன. இவற்றையறிந்த பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஒலி எழுப்பி காட்டு யானைகளை விரட்டும் பணியில் பணியில் ஈடுபட்டனர். இப்பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
பழனியில் எச்சரிக்கை: பழனியை அடுத்த கொடைக்கானல் மலையடிவார பகுதிகளில் யானைகள் விளைநிலங்களுக்குள் வராதவாறு வனத்துறையினர் அலாரம், அகழிகள் அமைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துள்ளனர். கத்தாலம்பாறை, செக் கோடம்பாறை, புளியமரத்து செட், தேக்கம் தோட்டம் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் உள்ளதால் அப்பகுதி மக்களிடம் சனிக்கிழமை வனத்துறையினர் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியோடு, வனப் பணியாளர்களின் தொலைபேசி எண்கள் அச்சடிக்கப்பட்ட விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை வனச்சரகர் கணேஷ்ராம் தலைமையில் வனத்துறையினர் வழங்கினர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/24/9-பேரைக்-கொன்ற-மக்னா-யானையைப்-பிடிக்க-சிறப்புக்-குழுவினர்-தேவாரத்தில்-முகாம்-இரவு-பகலாக-கண்காணிப்ப-2946168.html
2946167 மதுரை தேனி வைகை அணை நீர்மட்டம் சீராக உயர்வு: திண்டுக்கல், மதுரை முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு DIN DIN Sunday, June 24, 2018 02:53 AM +0530 முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மூலம் வைகை அணை நீர்மட்டம் சீராக உயர்ந்து வருவதால் இங்கிருந்து திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் உள்ள 45 ஆயிரத்து 41 ஏக்கர் பரப்பளவிலான இருபோக சாகுபடி நிலங்களுக்கு, முதல் போக நெல் சாகுபடிக்கு விரைவில் தண்ணீர் திறக்கும் வாய்ப்புள்ளது.
கடந்த 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் பருவமழை பொய்த்ததால், முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணைகளில் இருந்து தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களின் முதல் போக நெல் சாகுபடிக்கு உரிய காலத்தில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்த ஆண்டு கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன் கூட்டியே தொடங்கி, பெய்து வருவதால் முல்லைப் பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளது.
தண்ணீர் திறப்பு: இந்நிலையில், கடந்த ஜூன் 9-ஆம் தேதி முதல் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 900 கன அடிக்கும் மேல் அதிகரிக்கப்பட்டது. இந்த அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து 127.20 அடியாக இருந்த நிலையில், கடந்த ஜூன் 17-ஆம் தேதி தேனி மாவட்ட முதல் போக நெல் சாகுபடிக்கு இங்கிருந்து முறைப்படி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன்மூலம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் 14,707 ஏக்கர் பரப்பளவில் உள்ள இருபோக நெல் சாகுபடி நிலங்களில், முதல் போக நெல் சாகுபடி தொடங்கியுள்ளது.
நீர்வரத்தில்லாத மூல வைகை: இதனிடையே நீர்பிடிப்புப் பகுதிகளில் போதிய மழை இல்லாததால், கடந்த சில ஆண்டுகளாக மூல வைகை ஆறு மூலம் வைகை அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. மேலும், ஆக்கிரமிப்பால் நீர்வழித் தடம் மாற்றப்பட்டுள்ள கொட்டகுடி ஆறு, கிளை ஆறுகள் மற்றும் காட்டாற்று ஓடைகள் மூலமும் வைகை அணைக்கு நீர்வரத்து இல்லை. இதனால் கடந்த 2011-ஆம் ஆண்டுக்குப் பின் தற்போது வரை வைகை அணை நீர்மட்டம் மொத்த உயரத்தை எட்டவில்லை.
தண்ணீர் திறக்க வாய்ப்பு: தற்போது, பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், வைகை அணையின் நீர்மட்டம் 46.16 அடியை எட்டியுள்ளது. வைகை அணையில் தற்போது 1,529 மில்லியன் கன அடி நீர் உள்ளது. இதனிடையே இங்கு நீர் இருப்பு 2,000 மில்லியன் கன அடிக்கும் மேல் உயரும் போது, திண்டுக்கல், மதுரை மாவட்ட பெரியாறு பிரதான கால்வாய் பகுதிகளில் 45 ஆயிரத்து 41 ஏக்கர் பரப்பளவிலான இருபோக சாகுபடி நிலங்களுக்கு, முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கும் வாய்ப்புள்ளது என்று பெரியாறு- வைகை அணை பொதுப் பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கால்வாய் பாசனப் பரப்புகளுக்கு பாதிப்பு: மூல வைகை ஆறு மற்றும் கொட்டகுடி ஆற்றில் நீர் வரத்தில்லாத நிலையில், தற்போது முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மட்டுமே வைகை அணையின் நீராதாரமாக உள்ளது. இந்நிலையில் பருவ மழையின் தீவிரம் குறைந்து முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் சரியும் நிலையில், பெரியாறு மற்றும் வைகை அணைகளில் இருந்து தொடர்ந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்படும் என்று விவசாயிகள் கூறுகின்றனர். மேலும், முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் சரிந்தால், தேனி மாவட்டத்தில் பி.டி.ராஜன் கால்வாய், தந்தைப் பெரியாறு கால்வாய், 18-ஆம் கால்வாய் பாசனப் பரப்புகளுக்கு தண்ணீர் திறப்பதிலும் சிக்கல் ஏற்படும் என்று கால்வாய் ஆயக்கட்டு விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
அணைகளின் நீர்மட்டம்: முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் சனிக்கிழமை 127.10 அடியாக இருந்தது. அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 1,408 கன அடியாகவும், நீர் இருப்பு 4,072 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 1,400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வைகை அணை நீர்மட்டம் 46.16 அடியாகவும், நீர் இருப்பு 1,529 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 916 கன அடியாக உள்ள நிலையில், இங்கிருந்து மதுரை, ஆண்டிபட்டி-சேடபட்டி குடிநீர் திட்டங்களுக்கு விநாடிக்கு 60 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/24/வைகை-அணை-நீர்மட்டம்-சீராக-உயர்வு-திண்டுக்கல்-மதுரை-முதல்-போக-நெல்-சாகுபடிக்கு-தண்ணீர்-திறக்க-வாய்ப-2946167.html
2945863 மதுரை தேனி தேனியில் 197 பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம்: துணை முதல்வர் வழங்கினார் DIN DIN Sunday, June 24, 2018 12:37 AM +0530 தேனியில் அரசு சார்பில் 197 பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை வழங்கினார்.
தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் தலைமையில் நடைபெற்றது. இதில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு ஆணையம் சார்பில் 197 பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்களை வழங்கினார்.
ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 56 பேருக்கு பசுமை வீடுகள் கட்டுவதற்கு அரசாணை வழங்கப்பட்டது. இதேபோல், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், 47 பேருக்கும், நகராட்சி நிர்வாகம் மற்றும் பேரூராட்சித் துறை சார்பில் 227 பேருக்கும் வீடுகள் கட்டித் தருவதற்கு அரசாணைகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தேனி மக்களவை உறுப்பினர் ரா.பார்த்திபன், கம்பம் சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பா.திலகவதி, மகளிர் திட்ட அலுவலர் கல்யாணசுந்தரம், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் சேதுராமன், அதிமுக மாவட்டச் செயலர் எம். சையதுகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/24/தேனியில்-197-பெண்களுக்கு-மானிய-விலையில்-இருசக்கர-வாகனம்-துணை-முதல்வர்-வழங்கினார்-2945863.html
2945861 மதுரை தேனி ஒட்டன்சத்திரம் மதுக்கூடங்களில் அதிகாரிகள் திடீர் சோதனை DIN DIN Sunday, June 24, 2018 12:36 AM +0530 ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள அரசு, தனியார் மதுபானக் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனையிட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள அரசு, தனியார் மதுபானக்கடைகள் மற்றும் வெண்ணெய், நெய்க் கடைகளில் சுகாதாரமற்ற முறையில் உணவு பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவுத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் மாவட்ட உணவுத்துறை அதிகாரிகள் செல்வம் மற்றும் நடராஜன் தலைமையில் தனிப்படையினர் ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள 6 அரசு மதுபானக்கடை, 2 தனியார் மதுபானக்கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
அங்கு பிளாஸ்டிக் பைகளில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பாக்கெட்டுகள், சோடா மற்றும் மீன் உள்ளிட்ட உணவுப் பொருள்களை கைப்பற்றி அழித்தனர்.
அதேபோல வெண்ணெய், நெய் கடைகளில் மாதிரிகளை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். அதில் கொழுப்பு சதவீதம் குறைவாக இருந்ததால் அந்த கடைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/24/ஒட்டன்சத்திரம்-மதுக்கூடங்களில்-அதிகாரிகள்-திடீர்-சோதனை-2945861.html
2945860 மதுரை தேனி ஆண்டிபட்டி நகரில் போக்குவரத்து நெரிசல்: புறவழிச்சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை DIN DIN Sunday, June 24, 2018 12:35 AM +0530 ஆண்டிபட்டியில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கு புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆண்டிபட்டி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. காலை, மாலை நேரங்களிலும், சுபமுகூர்த்த நாட்களிலும் அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள், மாணவ, மாணவியர் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.
நகரின் முக்கிய இடங்களான வேலப்பர் கோயில் சாலைப் பிரிவு, வைகை அணை சாலைப் பிரிவு, பழைய மகளிர் காவல் நிலையம், தக்காளி சந்தை ஆகிய பகுதிகளில் சாலை மிகவும் குறுகலாக
இருப்பதாலும், சாலை ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பதாலும் நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆண்டிபட்டியில் புறவழிச்சாலை அமைக்க கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் திட்டமிட்டனர். அதன்படி டி.ராஜகோபாலன்பட்டி முதல் கொண்டமநாயக்கன்பட்டி, வைகை அணை சாலை, சக்கம்பட்டி, முத்துக்கிருஷ்ணாபுரம் வழியாக சண்முகசுந்தரபுரம் வரையில் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் புறவழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்கான நில அளவையும் நடைபெற்றது. பின்னர் அரசு ஒப்புதல் கிடைக்கவில்லை எனறு கூறி புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்தை நெடுஞ்சாலைத்துறை கைவிட்டது.
ஆண்டிபட்டி நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, தற்போது உள்ள சாலையை அகலப்படுத்திடவும், புறவழிச்சாலையை அமைத்திட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/24/ஆண்டிபட்டி-நகரில்-போக்குவரத்து-நெரிசல்-புறவழிச்சாலை-அமைக்க-பொதுமக்கள்-கோரிக்கை-2945860.html
2945859 மதுரை தேனி ஒட்டன்சத்திரம் அருகே கூலித்தொழிலாளி தற்கொலை DIN DIN Sunday, June 24, 2018 12:34 AM +0530 ஒட்டன்சத்திரம் அருகே கொடுத்த பணத்தை உறவினர் தர மறுத்ததால், மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற கூலித்தொழிலாளி சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார்.
ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சக்கம்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சிதம்பரசாமி (45). இவரது மனைவி ராஜேஸ்வரி. இந்நிலையில் இருவரும் கூலி வேலைக்கு சென்று சிறிது சிறிதாக சேமித்த பணத்தை உறவினர் காளிமுத்துவிடம் கொடுத்து வைத்திருந்தார்களாம்.
கடந்த ஜூன் 14 ஆம் தேதி காளிமுத்துவிடம் சென்று, கொடுத்த பணத்தை சிதம்பரசாமி கேட்டுள்ளார். அதற்கு காளிமுத்து பணத்தை தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சிதம்பரசாமி விஷம் குடித்துள்ளார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து அம்பிளிக்கை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/24/ஒட்டன்சத்திரம்-அருகே-கூலித்தொழிலாளி-தற்கொலை-2945859.html
2945858 மதுரை தேனி உத்தமபாளையத்தில் மீண்டும் மதுக்கடை திறப்பு: பொதுமக்கள் அதிருப்தி DIN DIN Sunday, June 24, 2018 12:34 AM +0530 உத்தமபாளையம் பேரூராட்சியில் வெள்ளிக்கிழமை மதுக்கடை மீண்டும் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.
அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, தமிழகம் முழுவதும் 500 மதுக்கடைகள் மூடப்பட்டன. அதன்படி, உத்தமபாளையம் பேரூராட்சி எல்லைக்குள் இருந்த மதுக்கடை, மதுபானக் கூடம் மூடப்பட்டது. இதற்கு இப்பகுதி மக்கள் பெரிதும் வரவேற்பு தெரிவித்தனர். இந்நிலையில், உத்தமபாளையத்தில் பி.டி.ஆர் காலனி பகுதி தோட்டத்தில் மீண்டும் மதுக்கடை வர இருப்பதாக தகவல் வெளியானது. இதற்கு பல்வேறு அமைப்பினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால் அதனை பொருட்படுத்தாமல், வெள்ளிக்கிழமை உத்தமபாளையத்தில் மீண்டும் மதுக்கடை கடை திறக்கப்பட்டது. இதனால் இப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/24/உத்தமபாளையத்தில்-மீண்டும்-மதுக்கடை-திறப்பு-பொதுமக்கள்-அதிருப்தி-2945858.html
2945857 மதுரை தேனி குழாயில் தண்ணீர் பிடிப்பதில் தகராறு: இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை DIN DIN Sunday, June 24, 2018 12:34 AM +0530 ஆண்டிபட்டி அருகே பொதுக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து மனமுடைந்த இளம்பெண் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆண்டிபட்டி அருகே பிராதுக்காரன்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி பாபு. இவருடைய மனைவி சசிகலா(30). இவர்களுக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். வெள்ளிக்கிழமை பிராதுக்காரன்பட்டியில் உள்ள ஒரு பொதுக்குழாயில் சசிகலா தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் அக்கம்பக்கத்தை சேர்ந்த சில பெண்கள் சசிகலாவை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சசிகலா வீட்டிற்கு சென்று தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த க.விலக்கு போலீஸார் சசிகலாவின் சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக க.விலக்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக பெரியகுளம் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/24/குழாயில்-தண்ணீர்-பிடிப்பதில்-தகராறு-இளம்பெண்-தூக்கிட்டுத்-தற்கொலை-2945857.html
2945856 மதுரை தேனி கிராம முதலீட்டாளர்கள் விழிப்புணர்வு முகாம் DIN DIN Sunday, June 24, 2018 12:34 AM +0530 பெரியகுளம் அருகே ஜி.கல்லுப்பட்டியில் கிராம முதலீட்டாளர்கள் விழிப்புணர்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு தேனி மாவட்ட பொது சேவை மைய ஒருங்கிணைப்பாளர் மு.ஆனந்தராஜ் தலைமை வகித்தார். கிளை தபால் அலுலவர் பாண்டி, காப்பீடு ஆலோசகர் பாலமுருகன் ஆகியோர் தபால் நிலைய சேவை மற்றும் காப்பீடு குறித்து பேசினர்.
சேமிப்பின் முக்கியத்துவம் குறித்த குறும்படம் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளாமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜி.கல்லுப்பட்டி பொதுசேவை மைய நிர்வாகி இரா.செல்வம் செய்திருந்தார்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/24/கிராம-முதலீட்டாளர்கள்-விழிப்புணர்வு-முகாம்-2945856.html
2945854 மதுரை தேனி கல்வி, ஒழுக்கத்தில் முன்மாதிரியாக விளங்கும் சில்வார்பட்டி அரசு பள்ளி: நடப்பாண்டில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு DIN DIN Sunday, June 24, 2018 12:33 AM +0530 தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள முன்மாதிரியாக செயல்படும் சில்வார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டுவதால் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. இங்கு மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி மரங்கள் நடுதல், மாணவர் தேர்தல் என பல்வேறு வகையில் சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர்.
பெரியகுளம் அருகே 7 கி.மீ தூரத்தில் சில்வார்பட்டி உள்ளது. விவசாயக்கூலிகள் அதிகம் வசிக்கும் இந்த கிராமத்தில், கடந்த 2002-ஆம் ஆண்டு உயர்நிலைப்பள்ளி உருவானது. அதன்பின் அப்பள்ளி 2005ம் ஆண்டு மேல்நிலைப்பள்ளியாக நிலை உயர்த்தப்பட்டது. கடந்த 2016ம் ஆண்டு முதல் இப்பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதமும், 12 ஆம் வகுப்பில் 99 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளனர். அதேபோல்
கடந்த கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பில் 99 சதவீதமும், 12 ஆம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சியடைந்து சாதனை புரிந்துள்ளனர்.
மரங்கள் பராமரிப்பு: இப்பள்ளியில் மாணவ, மாணவிகள் காலை 8 மணிக்கு பள்ளிக்கு வந்து விடுகின்றனர். பள்ளியில் நடப்பட்ட மரக்கன்றுகளையும், மாடியில் உள்ள தோட்டத்தையும் பராமரிக்கின்றனர். காலை இறை வணக்கத்தின் போது, நாளிதழில் வரும் முக்கிய செய்திகளை மாணவர்கள் வாசிக்கின்றனர். இதுதவிர நாள்தோறும் ஒரு பொன்மொழியும் வாசிக்கப்படுகிறது. மேலும் புதியதாக பள்ளியில் சேரும் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் மரக்கன்று ஒன்று நட்டு அதனை பராமரிக்க வேண்டும். பள்ளியில் மாடித்தோட்டத்தில் விளைவிக்கும் காய்கறிகள், மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவில் சேர்த்து வழங்கப்படுகிறது.
மாணவர் தேர்தல்: இப்பள்ளியில் மாணவர்கள் தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் 11 மாணவ, மாணவியர்கள் தலைவர் பதவிக்கும் 3 மாணவிகள் துணைத்தலைவர் பதவிக்கும் போட்டியிட்டனர். தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் பள்ளி வளர்ச்சிக்கு எவ்வாறு பாடுபடுவேன் என்பதை பள்ளியில் உள்ள மேடையில் மாணவர்கள் முன் தெரிவித்தனர். வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் அனைத்து மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
சேர்வதில் ஆர்வம்: மாணவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவர் விதைப்பந்து தயாரித்தல், மரக்கன்றுகள் நடுதல், பிளாஸ்டிக் விழிப்புணர்வு, தனிநபர் கழிப்பறைகள் கட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பொது சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2 ஆண்டாக நடைபெறும் தேர்தல் முறை மாணவர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது. இப்பள்ளியின் வளர்ச்சியை பார்த்து உள்ளூர் மக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது. அதனால் இப்பகுதியில் தனியார் பள்ளிகளில் பயின்ற 36 மாணவர்கள் அங்கிருந்து விலகி, சில்வார்பட்டி அரசு பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அரசு பள்ளி ஆசிரியர்கள் பெருமிதத்துடன் தெரிவிக்கின்றனர்.
சேர்க்கை அதிகரிப்பு: இதுகுறித்து தலைமையாசிரியர் மோகன் கூறியது: இப்பள்ளியில் பணியாற்றுவதை பெருமையாக நினைக்கிறேன். இப்பள்ளி மாணவர்கள் படிப்பு, ஒழுக்கம், விளையாட்டு மற்றும் பொது சேவையில் சிறந்து விளங்க வேண்டும் என்பதை ஊக்குவித்து வருகிறோம். அதனால் தான் இப்பள்ளியில் வருடத்திற்கு வருடம் மாணவ, மாணவிகளின் சேர்க்கை அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு 503 மாணவ, மாணவிகள் உள்ளனர். நிகழாண்டில் 573 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர் என்றார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/24/கல்வி-ஒழுக்கத்தில்-முன்மாதிரியாக-விளங்கும்-சில்வார்பட்டி-அரசு-பள்ளி-நடப்பாண்டில்-மாணவர்கள்-சேர்க்க-2945854.html
2945852 மதுரை தேனி ஒட்டன்சத்திரம் பள்ளி மாணவர் சதுரங்கப் போட்டியில் சாதனை DIN DIN Sunday, June 24, 2018 12:33 AM +0530 சதுரங்க போட்டியில் சாதனை படைத்த ஒட்டன்சத்திரம் அக்ஷயா பள்ளி மாணவரை ஆசிரியர்கள் பாராட்டினர்.
ஒட்டன்சத்திரம் அக்ஷயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் தனுஷ்ராகவ் என்ற மாணவர் சதுரங்க போட்டியில் கடந்த 2015-ம் ஆண்டு தமிழ்நாடு அணிக்கு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு, தேசிய அளவில் வெள்ளி பதக்கம் பெற்றார். அதே போல தேசிய அளவில் திருவாரூரில் நடைபெற்ற பிடோ' போட்டியில் முதல் பரிசு பெற்று சாதனை படைத்தார். 2016-ஆம் ஆண்டு 15 வயதுக்கு உட்பட்ட தமிழ்நாடு போட்டியில் வெற்றி பெற்று தேசிய போட்டியில் பங்கு பெற்றார். 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு பள்ளி மாணவர்களுக்கான போட்டியில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து சாதனைபடைத்தார்.
அதனைத்தொடர்ந்து மும்பை, புவனேஸ்வர், பெங்களூர், டில்லி உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்ற பிடோ' போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார். தற்போது ஒரே மாதத்தில் சர்வதேச தர ரேட்டிக் புள்ளிகள் 1741-ல் இருந்து 1873 ம் இடத்திற்கு உயர்ந்துள்ளார். அவரை பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரிய,ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/24/ஒட்டன்சத்திரம்-பள்ளி-மாணவர்-சதுரங்கப்-போட்டியில்-சாதனை-2945852.html
2945849 மதுரை தேனி குற்றச் செயல்களைத் தடுப்பது குறித்து போடியில் ஆலோசனைக் கூட்டம் DIN DIN Sunday, June 24, 2018 12:32 AM +0530 போடி பகுதியில் குற்றச் செயல்களை தடுக்கவும், குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை எளிதில் கண்டறியும் வகையில் ஆலோசனை கூட்டம் போடி காவல் துணை கண்காணிப்பாளர் டி.ஈஸ்வரன் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதற்கு காவல் ஆய்வாளர்கள் போடி நகர் பா.சேகர், போடி தாலுகா வெங்கடாசலபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக் கூட்டத்தில் போடி நகர், போடி தாலுகா, குரங்கணி, சின்னமனூர், தேவாரம், கோம்பை ஆகிய காவல் நிலையங்களுக்குட்பட்ட நிதி நிறுவனங்கள், நகை அடகு கடைகள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றின் நிர்வாகிகள், பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை எளிதில் கண்டறியும் வகையில் நிதி நிறுவனங்கள், நகை அடகுக் கடைகள், தங்கும் விடுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். அங்கு வரும் வாடிக்கையாளர்களிடம் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, புகைப்படம், அலைபேசி எண், கையெழுத்து, கைரேகை ஆகியவற்றை பெற்று அதற்கான ஆவணங்கள் பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் இந்த நிறுவனங்களில் காவல் துணை கண்காணிப்பாளர்,
காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் ஆகியோரின் அலைபேசி எண்கள், காவல் நிலையங்கள், ஹலோ போலீஸ் தொலைபேசி எண்கள் ஆகியவற்றை அனைவரும் பார்க்குமிடத்தில் எழுதி வைக்க வேண்டும். சந்தேகப்படும்படியான நபர்கள் குறித்த விபரங்களை உடனுக்குடன் காவல் நிலையங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
இக் கூட்டத்தில் சார்பு ஆய்வாளர்கள், சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/24/குற்றச்-செயல்களைத்-தடுப்பது-குறித்து-போடியில்-ஆலோசனைக்-கூட்டம்-2945849.html
2945847 மதுரை தேனி திமுகவினர் சாலை மறியல் போராட்டம்: திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 1,071 பேர் கைது DIN DIN Sunday, June 24, 2018 12:32 AM +0530 திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து சனிக்கிழமை திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மறியலில் ஈடுபட்ட 1,071 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தேனி, நேருசிலை சிலை அருகே திமுக நகரச் செயலர் முருகேசன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 40 பேர் கைது செய்யப்பட்டனர். பெரியகுளத்தில் திமுக இளைஞரணி நகர அமைப்பாளர் குமரேசன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 14 பேர், பெரியகுளம் தென்கரை காந்தி சிலை அருகே திமுக மாநில விவசாயிகள் அணி அமைப்பாளர் எல்.மூக்கையா தலைமையில் மறியலில் ஈடுபட்ட 40 பேர் கைது செய்யப்பட்டனர். ஆண்டிபட்டியில் எம்.ஜி.ஆர்.,சிலை அருகே திமுக ஒன்றிய செயலர் மகாராஜன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 23 பேர், கடமலைக்குண்டுவில் திமுக ஒன்றிய செயலர் ஓ.சுப்பிரமணி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 29 பேர் கைது செய்யப்பட்டனர்.
போடியில் திமுக முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.லட்சுமணன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 62 பேர், கம்பத்தில் திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் மறியிலில் ஈடுபட்ட 53 பேர், உத்தமபாளையத்தில் திமுக ஒன்றியச் செயலர் குமரன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 25 பேர், சின்னமனூரில் திமுக நகரச் செயலர் முத்துக்குமார் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 20 பேர், கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் சனிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு மாநில துணைப் பொதுச் செயலர் ஐ.பெரியசாமி எம்எல்ஏ தலைமை வகித்தார். பழனி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 250 பேரை போலீஸார் கைது செய்தனர். இதேபோல், நத்தம், பழனி, தொப்பம்பட்டி உள்பட மொத்தம் 7 இடங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 8 பெண்கள் உள்பட 515 பேரை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/24/திமுகவினர்-சாலை-மறியல்-போராட்டம்-திண்டுக்கல்-தேனி-மாவட்டங்களில்-1071-பேர்-கைது-2945847.html
2945845 மதுரை தேனி தேனியில் கோயில் நிலத்தில் வணிக வளாகம் கட்ட எதிர்ப்பு DIN DIN Sunday, June 24, 2018 12:31 AM +0530 தேனியில் கோயில் நிலத்தில் வணிக வளாக கட்டடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சனிக்கிழமை இந்து எழுச்சி முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி அல்லிநகரம் நகராட்சி நிர்வாகம் சார்பில் செயல்பட்டு வரும் வாரச் சந்தை வளாகத்தில் இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் சந்தை மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் அருகே நகராட்சி நிர்வாகம் சார்பில் வணிக வளாக கடைகள் கட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சந்தை மாரியம்மன் கோயில் நிர்வாகத்திற்குச் சொந்தமான இடத்தில் நகராட்சி நிர்வாகம் அத்துமீறி கட்டடம் கட்டுவதாக புகார் தெரிவித்து, இந்து எழுச்சி முன்னணி மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் தலைமையில் நிர்வாகிகள் கட்டுமானப் பணி நடைபெறும் இடத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த தகவலறிந்து வந்த தேனி காவல் நிலைய ஆய்வாளர் அசோக், நகராட்சி மேலாளர் சுரேஷ் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதில், கடை கட்டுமானப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது, ஜூன் 26-ம் தேதி நில அளவையை சரிப்பார்த்து கோயில் நிலமாக இருந்தால் கட்டுமானப் பணிகளை விலக்கிக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/24/தேனியில்-கோயில்-நிலத்தில்-வணிக-வளாகம்-கட்ட-எதிர்ப்பு-2945845.html
2945843 மதுரை தேனி லாட்டரி சீட்டுகள்விற்பனையை தடுக்க கோரிக்கை DIN DIN Sunday, June 24, 2018 12:31 AM +0530 தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் தடைசெய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டு விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனை தடை இருக்கும் நிலையில், தேனி மாவட்டத்தில் அதிகளவில் தடைசெய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனையாகி வருகிறது. கேரளத்திலிருந்து லாட்டரி சீட்டுகளை சில சமூக விரோத கும்பல் ஏஜென்டுகள் மூலமாக , தேனி மாவட்டத்தில் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். உத்தமபாளையம், அம்மாபட்டி, எல்லப்பட்டி,கோகிலாபுரம், சின்னமனூர் ஆகிய ஊர்களில் விற்பனையாளர்கள் மூலமாக நேரடி விற்பனையில் ஈடுபட்டுகின்றனர். இதனால் தமிழகத்தில் கூலித்தொழிலாளிகள் மீண்டும் லாட்டரி சீட்டுக்கு அடிமையாகும் சூழ்நிலை ஏற்படுள்ளது.
எனவே கேரள லாட்டரி சீட்டுகளை விற்கும் ஏஜென்டுகள் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/24/லாட்டரி-சீட்டுகள்விற்பனையை-தடுக்க-கோரிக்கை-2945843.html
2945842 மதுரை தேனி லாட்டரி சீட்டுகள்விற்பனையை தடுக்க கோரிக்கை DIN DIN Sunday, June 24, 2018 12:31 AM +0530 தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் தடைசெய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டு விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனை தடை இருக்கும் நிலையில், தேனி மாவட்டத்தில் அதிகளவில் தடைசெய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனையாகி வருகிறது. கேரளத்திலிருந்து லாட்டரி சீட்டுகளை சில சமூக விரோத கும்பல் ஏஜென்டுகள் மூலமாக , தேனி மாவட்டத்தில் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். உத்தமபாளையம், அம்மாபட்டி, எல்லப்பட்டி,கோகிலாபுரம், சின்னமனூர் ஆகிய ஊர்களில் விற்பனையாளர்கள் மூலமாக நேரடி விற்பனையில் ஈடுபட்டுகின்றனர். இதனால் தமிழகத்தில் கூலித்தொழிலாளிகள் மீண்டும் லாட்டரி சீட்டுக்கு அடிமையாகும் சூழ்நிலை ஏற்படுள்ளது.
எனவே கேரள லாட்டரி சீட்டுகளை விற்கும் ஏஜென்டுகள் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/24/லாட்டரி-சீட்டுகள்விற்பனையை-தடுக்க-கோரிக்கை-2945842.html
2945840 மதுரை தேனி ஜவுளி வியாபாரி விஷம் குடித்து தற்கொலை DIN DIN Sunday, June 24, 2018 12:31 AM +0530 தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கடன் பிரச்னையில் ஜவுளி வியாபாரி சனிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டி சத்யாநகரைச் சேர்ந்தவர் குப்புசாமி (40). இவர் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு, கடன் தொல்லையால் குப்புசாமி அவதியுற்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த குப்புசாமி, வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குப்புராஜ் உயிரிழந்தார். இதுதொடர்பாக ஆண்டிப்பட்டி காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/24/ஜவுளி-வியாபாரி-விஷம்-குடித்து-தற்கொலை-2945840.html
2945101 மதுரை தேனி தேனியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் DIN DIN Saturday, June 23, 2018 12:44 AM +0530 தேனியில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு சி.பி.ஐ. விவசாரணைக்கு உத்தரவிடக் கோரி தேனியில் வெள்ளிக்கிழமை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  தேனி, பங்களாமேடு திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தேனி கிழக்கு மாவட்டச் செயலர் ப.நாகரத்தினம் தலைமை வகித்தார். தேனி மேற்கு மாவட்டச் செயலர் சு.சுருளி முன்னிலை வகித்தார்.
    இதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த காவல் துறையை கண்டித்தும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தியும் மாநில அமைப்புச் செயலர் எல்லாளன் பேசினார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/23/தேனியில்-விடுதலைச்-சிறுத்தைகள்-கட்சியினர்-ஆர்ப்பாட்டம்-2945101.html
2945100 மதுரை தேனி தாயை தாக்கிய  மகன் கைது DIN DIN Saturday, June 23, 2018 12:43 AM +0530 போடியில் சொத்து பிரச்னையில் தாயை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த மகனை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
 போடி தங்கமுத்தம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சாந்தி (57). இவரது மகன் விஜயராமன் (33). இவர், தனது தாய் சாந்தியிடம் சொத்தில் பங்கு கேட்டு தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தகராறில் சாந்தியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
 இதுகுறித்த புகாரின்பேரில் போடி நகர் காவல் சார்பு ஆய்வாளர் நடராஜ், போலீஸார் வழக்குப்பதிந்து, விஜயராமனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/23/தாயை-தாக்கிய--மகன்-கைது-2945100.html
2945099 மதுரை தேனி ஹைவேவிஸ் மலைச்சாலையில் கார் கவிழ்ந்து விபத்து: 3 பேர் காயம் DIN DIN Saturday, June 23, 2018 12:43 AM +0530 தேனி மாவட்டம், சின்னமனூர் அடுத்த ஹைவேவிஸ் மலைப்பாதையில் வெள்ளிக்கிழமை கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் காயமடைந்தனர்.  
 ஹைவேவிஸ் மலைப்பகுதியில் வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாட்டம் செக்போஸ்ட் மலைப் பகுதியில் 150 அடி பள்ளத்தில் கார் ஒன்று விழுந்து கிடப்பதை பார்த்தனர். இதையடுத்து, ஹைவேவிஸ்,  சின்னமனூர் போலீஸார் மற்றும் தீயணைப்பு மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அவர்கள் உதவியுடன் அங்கு சென்ற பார்த்தனர்.
 கார் மட்டும் உருக்குலைந்த நிலையில் கிடந்தது. அதில் யாரும் இல்லை. இதனால் போலீஸார், வனத்துறையினர் குழப்பமடைந்தனர். அதையடுத்து, காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். இதில், அந்த கார் ஹைவேவிஸ் மலைக்கிராமமான இரவங்கலாறை சேர்ந்த செல்வத்தினுடையது என்பதும், அவர் தனது தந்தை குருசாமிக்கு கல்லறை அமைப்பதற்காக வியாழக்கிழமை காரில் மேலும் இருவருடன் புறப்பட்டு வந்ததும் தெரியவந்தது.
 இதுகுறித்து மலைக்கிராமத்துக்கு சென்று போலீஸார் விசாரித்தனர். அப்போது, வெள்ளிக்கிழமை மதியம் விபத்து நேரிட்டதும், அதில் செல்வம் என்பவர் ஹைவேவிஸ் தனியார் மருத்துவமனையிலும், மேலும் இருவர் தேனிக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளதும் தெரியவந்தது. இதுதொடர்பாக ஹைவேவிஸ் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/23/ஹைவேவிஸ்-மலைச்சாலையில்-கார்-கவிழ்ந்து-விபத்து-3-பேர்-காயம்-2945099.html
2945098 மதுரை தேனி தொழிலாளியிடம் செல்லிடப்பேசி  பறிப்பு: 2 இளைஞர்கள் கைது DIN DIN Saturday, June 23, 2018 12:43 AM +0530 தேனி மாவட்டம் கம்பத்தில் கூலித் தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி, மிரட்டி செல்லிடப்பேசியை பறித்துச் சென்ற 2 இளைஞர்களை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
 கம்பம் வனத்துறை அலுவலக சாலையைச் சேர்ந்த ஈஸ்வரன் மகன் பால்பாண்டி (24). இவர் மர அறுவை மில்லில், கூலித் தொழிலாளியாக உள்ளார். கடந்த புதன்கிழமை,  வேலையை முடித்துவிட்டு, இரவு வீட்டுக்கு வரும் வழியில், காந்தி சிலை அருகே எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 இளைஞர்கள், இவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி செல்லிடப்பேசியை பறித்துச் சென்றார்களாம்.
   இதுபற்றி, பால்பாண்டி கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து, போலீஸார், காமயகவுண்டன்பட்டி கள்ளர் பள்ளி தெருவைச் சேர்ந்த சேகர் மகன் சுரேஷ் (24), கூத்தனாட்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முத்து மகன் நந்தகுமார் (24) ஆகியோரை கைது செய்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/23/தொழிலாளியிடம்-செல்லிடப்பேசி--பறிப்பு-2-இளைஞர்கள்-கைது-2945098.html
2945096 மதுரை தேனி முல்லைப் பெரியாற்றில் மாட்டு வண்டிகளில் மணல் திருட்டு DIN DIN Saturday, June 23, 2018 12:42 AM +0530 தேனி மாவட்டத்தில் முல்லைப்பெரியாற்றில் மாட்டு வண்டி மூலம் மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என  பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 முல்லைப்பெரியாறு லோயர் கேம்ப் , கூடலூர், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், வீரபாண்டி வழியாக சென்று வைகை அணையில் சங்கமிக்கிறது. மாவட்டத்தில்   80 கி.மீ. செல்லும் முல்லைப் பெரியாற்றில் மணல் அள்ளுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், உத்தமபாளையம் வட்டாரத்தில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக மார்க்கையன்கோட்டை, எல்லப்பட்டி, கோகிலாபுரம் உள்ளிட்ட ஆற்றுப்பகுதிகள் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள ஓடைகள்,  குளங்களில் மணல் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 
 முல்லைப் பெரியாற்றில் உயிரை பணயம் வைத்து தண்ணீரில் மூழ்கி டிராக்டர், மாட்டு வண்டிகளில் 24 மணி நேரமும் மணல் அள்ளி வருகின்றனர். மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுபவர்கள், அதிக நீரில் வண்டியை இறக்கி, அவற்றை இழுக்கத் திணறும் மாடுகளையும் அடித்து துன்புறுத்துகின்றனர். மணல் திருட்டால், கனிம வளம், நீராதாரங்களும் பாதிக்கப்படுகிறது. இதுதொடர்பாக வருவாய், காவல் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
  இதுகுறித்து வட்டாட்சியர் பால சண்முகம் கூறுகையில், "ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்வதால் மணல் அள்ள வாய்ப்பு இல்லை. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பகுதியிலுள்ள கிராம நிர்வாக அலுவலர் மூலமாக  கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
 எனவே, முல்லைப் பெரியாற்றில் மணல் திருட்டை தடுக்க இனியாவது காவல்துறை, மாவட்ட  நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/23/முல்லைப்-பெரியாற்றில்-மாட்டு-வண்டிகளில்-மணல்-திருட்டு-2945096.html
2945097 மதுரை தேனி பெரியகுளம் ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக விழா தொடக்கம் DIN DIN Saturday, June 23, 2018 12:42 AM +0530 தேனி மாவட்டம், பெரியகுளம் அறம் வளர்த்த நாயகி உடனுறை ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேக விழா, யாகசாலை பூஜைகளுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
 பெரியகுளத்தில் சோத்துப்பாறை அணை செல்லும் சாலையில் ராஜேந்திரசோழீஸ்வரர் கோயில் உள்ளது.  இக்கோயிலில் புதிதாக 71 அடி உயரத்தில் ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. மேலும், அனைத்து சந்நிதிகளும் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
 இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு மகா கணபதி ஹோமத்துடன் முதல் நாள் யாக சாலை பூஜை தொடங்கியது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்துடன் பங்கேற்றார். வரும் திங்கள்கிழமை காலை 9 மணிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ராஜகோபுர மகா கும்பாபிஷேகமும், 9.25 மணிக்கு ராஜேந்திர சோழீஸ்வரர், அறம்வளர்த்த நாயகி, பாலசுப்பிரமணியன் மூலவர் சந்நிதிகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
 இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பணிக்குழுத் தலைவர் எல்.சசிதரன், பி.சி.சிதம்பரசூரியவேலு மற்றும் முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஓ.ராஜா ஆகியோர் செய்து வருகின்றனர்.

உள்ளூர் விடுமுறை விடக் கோரிக்கை
பெரியகுளம் மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பான கோயில் புதிய ராஜகோபுரம் கட்டப்பட்டு, வரும் திங்கள்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதனால், பெரியகுளம் பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. கோயில் அருகே நீதிமன்றம், வட்டாட்சியர் அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம் மற்றும் பள்ளிகள் உள்ளன.  எனவே, பொதுமக்கள் அனைவரும் விழாவில் கலந்து கொள்ளும் வகையிலும், இடையூறு இல்லாத வகையில் கும்பாபிஷேக நடைபெறுவதற்கு வசதியாகவும் வரும் திங்கள்கிழமை பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை விட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/23/பெரியகுளம்-ராஜேந்திர-சோழீஸ்வரர்-கோயிலில்-கும்பாபிஷேக-விழா-தொடக்கம்-2945097.html
2945095 மதுரை தேனி கவரிங் நகையை அடகு வைத்து ரூ.1.14 லட்சம் மோசடி: நிதி நிறுவன  ஊழியர் மீது வழக்குப்பதிவு DIN DIN Saturday, June 23, 2018 12:41 AM +0530 தேனி மாவட்டம், கம்பத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கவரிங் நகையை அடகு வைத்து, ரூ.1.14 லட்சம் மோசடி செய்தவர் மீது போலீஸார் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
 கம்பம் ஓடைக்கரைத் தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். கம்பத்தில் உள்ள தனியார் நிதி நிறுவன கிளை மேலாளராக பணியாற்றி வருகிறார். இதே நிறுவனத்தில் மும்பை கிளையில் பணிபுரிந்து வரும் கூடலூர் மசூதி தெருவைச் சேர்ந்த மிசாத்தீன், கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி மற்றும் மார்ச் 8 ஆகிய தேதிகளில் 55.9 கிராம் எடையுள்ள வளையல்களை ரூ.1.14 லட்சத்துக்கு அடகு வைத்தார்.
   பின்னர் நகை மதிப்பீட்டாளர் மூலம் அந்த நகைகளை சோதனை செய்தபோது 4 வளையல்களும் தங்கமுலாம் பூசப்பட்ட கவரிங் நகைகள் என தெரியவந்தது. 
      இதுகுறித்து ஜெயக்குமார் அளித்த புகாரின் பேரில், மிசாத்தீன் மீது கம்பம் தெற்கு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/23/கவரிங்-நகையை-அடகு-வைத்து-ரூ114-லட்சம்-மோசடி-நிதி-நிறுவன--ஊழியர்-மீது-வழக்குப்பதிவு-2945095.html
2945094 மதுரை தேனி அங்காள ஈஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் DIN DIN Saturday, June 23, 2018 12:41 AM +0530 உத்தமபாளையத்தில் அங்காள ஈஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
உத்தமபாளையம் கருப்பணசாமி, அங்காள ஈஸ்வரி அம்மன் கோயில் மிகவும் பழமையான கோயிலாகும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப் பாட்டிலுள்ள இக்கோயில் பல ஆண்டுகளாக பராமரிப்பு செய்யாத நிலையில் சிதிலமடைந்து காணப்பட்டது. 
இதனை அடுத்து அப்பகுதி ஆன்மிக  பெரியோர்கள், இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள்  கோயிலை புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்தி பக்தர்கள் வழிபாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து, உத்தமபாளையம் ஞானாம்பிகை கோயில் செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றும் ஊர் பொதுமக்கள், ஆன்மிக பெரியோர்கள் கோயிலை பராமரிப்பு பணிகள் செய்து  கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தனர்.  அதனை தொடர்ந்து ஜூன் 17 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து புதன், வியாழக்கிழமைகளில் கலச பூஜைகள் நடைபெற்றன. பின்னர் வெள்ளிக்கிழமை அதிகாலை முதலே கணபதி ஹோமத்துடன்  கும்பாபிஷேகத்திற்கான பல்வேறு  பூஜைகள் தொடங்கின. காலை 10.15 மணி அளவில் கோயில் கோபுரத்திலுள்ள கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். விழாவை முன்னிட்டு கருப்பணசாமி கோயிலில்   அன்னதானம் நடைபெற்றது. உத்தமபாளையம்  காவல் துணைக்காணிப்பாளர் சீமைச்சாமி தலைமையில் போலீஸார் மற்றும் தீயணைப்பு மீட்பு குழுவினர்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/23/அங்காள-ஈஸ்வரி-அம்மன்-கோயில்-கும்பாபிஷேகம்-2945094.html
2945093 மதுரை தேனி வியாபாரிகளை "கருப்புப் பணம் வைத்திருப்போர்' என விமர்சனம்: போடியில் ஏலக்காய் ஏல நிறுவனத்தைக் கண்டித்து போராட்டம் DIN DIN Saturday, June 23, 2018 12:40 AM +0530 போடியில், வியாபாரிகளை "கருப்புப் பணம் வைத்திருப்போர்' என விமர்சித்த ஏல நிறுவனத்தை கண்டித்து, ஏலக்காய் வியாபாரிகள் வெள்ளிக்கிழமை ஏலத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 கேரள மாநிலம், கொச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மத்திய அரசின்  நறுமண பொருள்கள் வாரியத்துக்கு போடியில் கிளை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் மின்னணு முறையிலான ஏலக்காய் ஏல மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் வாரத்தில் மூன்று நாள்கள் ஏலக்காய் ஏலம் நடைபெறும். இதில், விவசாயிகள் பதிவு செய்யும் ஏலக்காய்களை ஏல நிறுவனங்கள் ஏலம் விடும். வியாபாரிகள் கலந்து கொண்டு அவற்றை வாங்கிச் செல்வார்கள். இந்நிலையில்  நறுமண பொருள்கள் வாரியம், ஏலக்காய் ஏல வர்த்தகத்தில் 'எஸ்குரோ' என்ற புதிய முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த முறையில் ஏலக்காய் ஏலம் எடுத்த வியாபாரி, அதற்கான பணத்தை உடனே செலுத்த வேண்டும். மேலும், விவசாயிகளின் வங்கிக் கணக்கில் உடனடியாக ஏலக்காய் விற்பனை செய்ததற்கான பணம் வரவு வைக்கப்பட்டு விடும். 
 பழைய முறையில் வியாபாரிகள் பணம் செலுத்த ஒரு வாரம் முதல் 15 நாள் வரை காலக்கெடு இருந்தது. புதிய திட்டம் குறித்து நறுமண பொருள்கள் வாரியம் கருத்து கேட்டதில், வியாபாரிகள் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். சில ஏல நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்திருந்தன.      இந்நிலையில் கேரள மாநிலம், வண்டன்மேடு பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு ஏல நிறுவனம், புதிய திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளது. அதில், ஏலக்காய் வியாபாரிகளை 'கருப்புப் பணம் வைத்திருப்போர்' என எழுதியிருந்ததாகக் கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை  ஏலம் நடத்த வந்த இந்த ஏல நிறுவன அதிகாரிகளிடம் இதுகுறித்து வியாபாரிகள் கேட்டபோது, மேற்படி கருத்தை மாற்ற மறுப்பு தெரிவித்தனராம். இதனால், வியாபாரிகளுக்கும், அந்த நிறுவனத்தினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
 அதையடுத்து கருப்புப் பணம் வைத்திருப்போர் என கூறியதற்கு கண்டனம் தெரிவித்து வியாபாரிகள் வெள்ளிக்கிழமை நடக்க இருந்த ஏலத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் மேற்படி ஏல நிறுவனத்தின் சார்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், போராட்டத்தால் காலதாமதம் ஏற்பட்டதால், வெள்ளிக்கிழமை நடக்கவிருந்த ஏலம் ரத்து செய்யப்பட்டு, வரும் செவ்வாய்க்கிழமைக்கு (ஜூன் 26) ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்தும், கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் வந்திருந்த ஏல வியாபாரிகள் திரும்பிச் சென்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/23/வியாபாரிகளை-கருப்புப்-பணம்-வைத்திருப்போர்-என-விமர்சனம்-போடியில்-ஏலக்காய்-ஏல-நிறுவனத்தைக்-கண்டித்த-2945093.html
2945092 மதுரை தேனி வைகை அணையிலிருந்து புள்ளிமான்கோம்பை பாசனத்துக்கு தண்ணீர் திறக்க கோரிக்கை DIN DIN Saturday, June 23, 2018 12:40 AM +0530 வைகை அணையில் இருந்து புள்ளிமான்கோம்பை பகுதி விவசாய நிலங்களின் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவிடம் விவசாயிகள் வியாழக்கிழமை கோரிக்கை விடுத்தனர்.
 ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்,  வட்டார அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ச.கந்தசாமி முன்னிலை வகித்தார்.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசியது: வைகை அணையில் இருந்து புள்ளிமான் கோம்பை வரையுள்ள விவசாயிகளுக்கு மாதம் 2 நாள்கள் 800 கனஅடி தண்ணீர் திறக்கும் நடைமுறை இருந்தது.  கடந்த சில ஆண்டுகளாக வைகை அணையில் இருந்து புள்ளிமான்கோம்பை பகுதி பாசனத்துக்கு  தண்ணீர் திறக்கப்படாததால் விவசாய நிலங்கள் தரிசாக விடப்பட்டுள்ளன.
 இப் பகுதியில் உள்ள விவசாயிகளின் வாழ்வதாரம் கருதி, வைகை அணையில் இருந்து புள்ளிமான் கோம்பை பகுதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும்.  அரசு மானிய உதவி பெறுவதற்கு சிறு, குறு விவசாயிகள் என்பதற்கான வருவாய் துறை சான்றிதழ் பெறுவதற்கு விவசாயிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர். 
அரசு மானியத்தில் வழங்கப்படும் சொட்டுநீர் பாசன உபகரணங்கள் தரமற்றவையாக உள்ளது. ஆண்டிப்பட்டி வட்டாரத்தில் மூல வைகை ஆறு மற்றும் ஓடைகளில் தொடர்ந்து  மணல் திருட்டு நடந்து வருகிறது. இதை தடுக்கும் விவசாயிகள் மிரட்டப்படுகின்றனர் என்றனர்.
இதற்கு பதிலளித்து ஆட்சியர் பேசியது: புள்ளிமான்கோம்பை பகுதி விவசாயிகள் கோரிக்கை பரிசீலனை செய்து, வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். வருவாய்த் துறை சான்றிதழ்களை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு மானியத்தில் தரமற்ற சொட்டுநீர் பாசன உபகரணங்கள் வழங்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மணல் திருட்டை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
இந்நிகழ்ச்சியில் வேளாண்மைதுறை இணைஇயக்குநர் அப்துல் முகமது நசீர், ஆட்சியரின் (வேளாண்மை) நேர்முக உதவியாளர் சந்திரசேகர், வட்டாட்சியர் செந்தில் ஆகியோர் உடனிருந்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/23/வைகை-அணையிலிருந்து-புள்ளிமான்கோம்பை-பாசனத்துக்கு-தண்ணீர்-திறக்க-கோரிக்கை-2945092.html
2945091 மதுரை தேனி கம்பத்தில் துளிர் இல்லங்கள் திறப்பு DIN DIN Saturday, June 23, 2018 12:40 AM +0530 தேனி மாவட்டம், கம்பம் நகரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், வெள்ளிக்கிழமை இரண்டு துளிர் இல்லங்கள் திறக்கப்பட்டன.
குழந்தைகளிடையே அறிவியல் ஆர்வத்தை வளர்க்கவும், மேம்படுத்தவும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கடந்த பல ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் விஞ்ஞானிகளின் பெயரில் துளிர் இல்லங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டம் கம்பம், ஸ்ரீமுத்தையா பிள்ளை உயர்நிலைப்பள்ளியில் கணிதமேதை ராமானுஜம் துளிர் இல்லம் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் த.சாரதா தலைமை வகித்தார். அறிவியல் இயக்கத்தின் கம்பம் கிளைத் தலைவர் மா.சிவக்குமார் முன்னிலை வகித்தார். ஆசிரியர் பாண்டி வரவேற்றார். அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் தே.சுந்தர் துளிர் இல்லத்தைத் தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு காகித மடிப்புக் கலை பயிற்சியளித்தார். 
இதேபோல், மணிநகர் குடியிருப்புப் பகுதியில் அப்துல் கலாம் துளிர் இல்லம் தொடங்கப்பட்டது. அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவர் ஜி.பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/23/கம்பத்தில்-துளிர்-இல்லங்கள்-திறப்பு-2945091.html
2945090 மதுரை தேனி சூறைக்காற்று, மழையால் பயிர்கள் சேதம்: ஏலக்காய் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க கேரள அரசுக்கு கோரிக்கை DIN DIN Saturday, June 23, 2018 12:38 AM +0530 சூறாவளி காற்று, மழையால் பாதிக்கப்பட்ட ஏலக்காய் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் இழப்பீட்டை கேரள அரசும், மத்திய அரசின் நறுமணப்பொருள்கள் வாரியமும்  வழங்க வேண்டும் என அகில இந்திய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் கடந்த வாரம் வீசிய சூறாவளிக் காற்று, மழையால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் ஏலக்காய் தோட்டங்கள் சேதமடைந்தன. இதனால், விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இதில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.  
இந்நிலையில், அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் கம்பத்தில் வியாழக்கிழமை ஏலக்காய் விவசாயிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: ஏலக்காய் சாகுபடி செய்ய ஏக்கருக்கு ரூ. 2.50 லட்சம் வரை செலவாகிறது. சூறாவளி காற்று மற்றும் மழையால் ஏலச்செடிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. கடன் வாங்கியே விவசாயம் செய்து வருகிறோம். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில்  ஏலக்காய் சீசன் தொடங்க உள்ள நிலையில் சேதம் ஏற்பட்டுள்ளது.
உரம், பூச்சிமருந்துகள், இடுபொருள்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் ஹெக்டேருக்கு ரூ.18 ஆயிரம் மட்டுமே, நிவாரணம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது. நறுமணப்பொருள்கள் வாரியம் மூலம் தரமான ஏலக்காய் நாற்றுகள் கிடைக்கவும், தமிழக அரசு மூலம் விவசாயிகளுக்கு மானியம் மற்றும் கடனுதவி, கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
விவசாயிகள் சங்க அகில இந்திய இணை செயலர் விஜூகிருஷ்ணன் பேசுகையில், பாஜக அரசு விவசாயிகளை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கிறது. விவசாயிகளின் பொதுவான பிரச்னை குறித்து கேரள முதல்வரிடம் பேச உள்ளேன். இடுக்கி மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டிய பணிகளை அந்த மாவட்ட பொறுப்பாளர்களின் உதவியுடன் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். நறுமணப் பொருள்களின், வாரியத்தை வலுப்படுத்த வேண்டும் என்றார்.
மாநில பொதுச்செயலர் பெ.சண்முகம் பேசுகையில், "பாதிக்கப்பட்ட ஏலக்காய் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். வங்கிக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றார். 
இக்கூட்டத்தில் 10 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது. மாநிலக்குழு உறுப்பினர் கே.ராஜப்பன், மாவட்ட செயலர் டி.கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/23/சூறைக்காற்று-மழையால்-பயிர்கள்-சேதம்-ஏலக்காய்-விவசாயிகளுக்கு-ஏக்கருக்கு-ரூ1-லட்சம்-இழப்பீடு-வழங்க-2945090.html
2945089 மதுரை தேனி பெரியகுளம் உழவர் சந்தை இடம்மாற்றப்படுமா? DIN DIN Saturday, June 23, 2018 12:37 AM +0530 பெரியகுளத்தில் பயன்பாடற்ற நிலையில் உள்ள உழவர் சந்தையை கம்பம் சாலையில் உள்ள கூட்டுறவு விற்பனை மையத்துக்கு மாற்றி புத்துயிர் அளிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இடைத்தரகர்களால் காய்கனியை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு போதிய விலை கிடைப்பதில்லை என்பதற்காக கடந்த 10 வருடங்களுக்கு முன் தமிழக அரசு தமிழகம் முழுவதும் உழவர் சந்தைகளை அமைத்தது. இதில் விவசாயிகள் தாங்களே நேரிடையாக காய்கனிகளைக் கொண்டு வந்து விற்பனை செய்யது கொள்ள முடியும். இத்திட்டத்தின் மூலம் தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட உழவர் சந்தைகள் நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றன.
   பெரியகுளத்தில் வடகரையில் உழவர் சந்தை தொடங்கப்பட்டு 3 வருடங்கள் நல்ல நிலையில் செயல்பட்டது . அதன் பின் பொதுமக்கள் வருகை குறைந்ததால் விவசாயிகள் கடை அமைக்க விரும்பவில்லை. இதனால் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக உழவர்சந்தை பயன்பாடற்ற நிலையில் காணப்படுகிறது. 
  மேலும் பெரியகுளம் பகுதியில் ஊருக்கு மத்தியில் ஒரு  காய்கனி சந்தை உள்ளதால்  பொதுமக்கள் ஊருக்கு வெளியே 2 கி.மீ. தூரத்தில் உள்ள உழவர் சந்தைக்கு செல்வதை தவிர்த்தனர்.  எனவே பொதுமக்கள் வந்து செல்லும் வகையில் உழவர் சந்தையை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து விவசாய சங்கத்தை சேர்ந்த பரமேஸ்வரன் கூறியதாவது: பெரியகுளம் உழவர் சந்தைக்கு பொதுமக்கள் வருகை குறைந்ததால் விவசாயிகள் கடை அமைக்கவில்லை.  
பொதுமக்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் மாற்று இடத்தில் அமைக்கவேண்டும் என ஆட்சியர் தலைமையில் பெரியகுளத்தில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் தெரிவித்தோம். அதனை ஆட்சியர் கேட்டறிந்தார்.  மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார் என்றார். 
 பெரியகுளம், கம்பம் சாலையில் கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான நெல் கிட்டங்கி  உள்ளது. இங்கு நெல் கொள்முதல் செய்து சேமிக்கப்படவில்லை. இதனால் இந்த கிட்டங்கி கடந்த 15 வருடங்களுக்கு மேலாக பயன்பாடின்றி   உள்ளது.  இந்த கிட்டங்கியில் உழவர் சந்தை அமைக்ககூடிய அளவில் இட வசதி உள்ளது. 
உழவர் சந்தையை இங்கு மாற்றினால் பொதுமக்கள் எளிதில் வந்து செல்ல வசதியாக இருக்கும் மேலும் விவசாயிகளுக்கு விற்பனையும்  அதிகரிக்கும். எனவே கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான நெல் கிட்டங்கியில் உழவர் சந்தையை அமைக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/23/பெரியகுளம்-உழவர்-சந்தை-இடம்மாற்றப்படுமா-2945089.html
2944685 மதுரை தேனி அகமலை ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம்: ரூ.4.15 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல் DIN DIN Friday, June 22, 2018 07:21 AM +0530 பெரியகுளம் அருகே உள்ள அகமலை ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 23 பயனாளிகளுக்கு ரூ.4.15 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் வழங்கினார்.
 விழாவில், ஆட்சியர் பேசியதாவது:
 தமிழக அரசு நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ், செட்டு நீர் பாசனம் அமைத்திட சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியமும், கூட்டுப்பண்ணைத் திட்டத்தின் கீழ் விவசாய ஆர்வலர் குழுக்கள் மற்றும் விவசாய உற்பத்தியாளர்கள் குழுக்கள் உருவாக்கப்பட்டு வேளாண் பணிக்கான இடுபொருள்களும் வழங்கப்பட்டு வருகிறது. புதிய தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்களுக்கு வங்கிகளே தனியாக பயிற்சியளித்து, வங்கி கடனாக நீட்ஸ் திட்டத்தின் மூலம் ரூ.5 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை 25 சதவீதம் மானியத்தில் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. 
  படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு மகளிர் திட்டம் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் தனியார் நிறுவனங்களை ஒருங்கிணைத்து மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு, வருகிறது என்றார். 
 முகாமில் மாவட்ட வன அலுவலர் கௌதம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலர் திலகவதி, வேளாண்மை இணை இயக்குநர் முகம்மது அப்துல் நசீர், போடிநாயக்கனூர் வட்டாட்சியர் ஆர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/22/அகமலை-ஊராட்சியில்-மக்கள்-தொடர்பு-முகாம்-ரூ415-லட்சம்-மதிப்பில்-நலத்திட்ட-உதவிகள்-வழங்கல்-2944685.html
2944684 மதுரை தேனி கம்பம் பகுதியில் கண்மாய், குளங்களின் கரைகளில் செம்மண் பரப்ப விவசாயிகள் கோரிக்கை DIN DIN Friday, June 22, 2018 07:21 AM +0530 தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் உள்ள கண்மாய், குளங்களின் கரைகள் சீரமைக்கப்பட்டது. ஆனால், செம்மண் பரப்பி பணியை நிறைவு செய்யாமல் விட்டுச் சென்றுள்ளனர்.
 கம்பம், கூடலூர் பகுதிகளில் உள்ள கண்மாய், குளங்களின் கரைகளை அகலப்படுத்தி, பலப்படுத்தும் பராமரிப்பு பணிகள் கோடைகாலத்தில் நடைபெற்றது. ஆனால், கரைகளின் சாலை சீராக இல்லாததால், விவசாய பணிகளுக்காக இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்வது சிரமமாக உள்ளது.
           கரையை சீரமைத்த பிறகு செம்மண் நிரவ வேண்டும். ஆனால், இப்பணியை மேற்கொண்டவர்கள் சீரமைப்பு பணியோடு நிறுத்தியுள்ளனர்.  தற்போது, முதல் போக சாகுபடி தொடங்கியுள்ளது. இதே நிலை நீடித்தால் கண்மாய், குளத்துக் கரைகளை பயன்படுத்தமுடியாமல் விவசாயப் பணிகள் பாதிக்கும். 
  எனவே, கண்மாய் மற்றும் குளத்துக்கரைகளின் மீது செம்மண் பரப்பி சாலைகளை சீரமைக்க வேண்டும் என கம்பம், கூடலூர் விவசாயிகள் மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/22/கம்பம்-பகுதியில்-கண்மாய்-குளங்களின்-கரைகளில்-செம்மண்-பரப்ப-விவசாயிகள்-கோரிக்கை-2944684.html
2944683 மதுரை தேனி மாற்றுத் திறனாளிகளுக்கு நல உதவிகள்: ஜூலை 20 வரை சிறப்பு முகாம்கள் DIN DIN Friday, June 22, 2018 07:20 AM +0530 தேனி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு சலுகைகள், உதவி உபகரணங்கள், மருத்துவம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளுக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 22) முதல், வரும் ஜூலை 20 ஆம் தேதி வரை 8 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
  இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
  இம்முகாமில் மாற்றுத் திறனாளிகள் மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை, பார்வையற்றோருக்கு வாசிப்பாளர் உதவித் தொகை, நல வாரிய உதவித் தொகை, இலவச பேருந்து பயண அட்டை, மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு பகல் நேர காப்பகம், சிறப்புப் பள்ளி மற்றும் விடுதி சேர்க்கை ஆகியவற்றுக்கு விண்ணப்பங்கள் பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மாற்றுத் திறனாளிகள் மத்திய அரசின் ஒரே மாதிரியான அடையாள அட்டை (மஈஐஈ) பெறுவதற்கும், அரசுத் துறை சார்பில் உதவிகள் பெறவும் முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.
முகாம் நடைபெறும் இடங்கள்: ஜூன் 22-இல் ஜி.உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ஜூன் 23 இல் ஏ.வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ஜூன் 29 இல் காமாட்சிபுரம் இந்து நாடார் மேல்நிலைப் பள்ளி, ஜூன் 30இல் ஆணைமலையன்பட்டி ஆர்.சி.நடுநிலைப் பள்ளி, ஜூலை 6 இல் பழனிசெட்டிபட்டி பழனியப்பா மேல்நிலைப் பள்ளி, ஜூலை 7 இல் வாரிப்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ஜூலை 13 இல் குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ஜூலை 20 இல் போ.அம்மாபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் முகாம்கள் நடைபெறவுள்ளன.
   எனவே, சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் தங்களது அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் முகாமில் கலந்து கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/22/மாற்றுத்-திறனாளிகளுக்கு-நல-உதவிகள்-ஜூலை-20-வரை-சிறப்பு-முகாம்கள்-2944683.html
2944682 மதுரை தேனி தேனியில் சர்வதேச யோகா தினம்: மாணவ, மாணவிகள் பயிற்சி DIN DIN Friday, June 22, 2018 07:20 AM +0530 தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை நடைபெற்ற யோகா பயிற்சி முகாமில் அரசு அலுவலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 
யோகா பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் தொடங்கி வைத்து பார்வையிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் ச.கந்தசாமி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சுப்புராஜ், மாவட்ட தொழில் மைய மேலாளர் ராமசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கல்லூரியில் யோகா தினம்: தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கல்லூரி இணை செயலர் காசிபிரபு தலைமையில் சர்வதேச யோகான தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மதளை சுந்தரம், தேனி மனவளக் கலை மன்றத் தலைவர் பி.சீனிவாசன், செயலர் சிந்தாமணி, பெரியகுளம் உணவு பாதுகாப்பு அலுவலர் ஜனகர் ஜோதிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
   தேனி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறைத் தலைவர் ஆர்.முருகன் தலைமையில் யோகா தின விழா நடைபெற்றது. மாணவிகள் தாமரை வடிவில் மனிதக் கோலம் அமைத்து யோகா தினத்தை கொண்டாடினர். கல்லூரி முதல்வர் சித்ரா, செயலர் ஆர்.மகேஸ்வரன், இணைச் செயலர் காளிராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பெரியகுளம்: பெரியகுளம் பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் உலக யோக தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. சில்வார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு பள்ளித் தலைமையாசிரியர் மோகன் தலைமை வகித்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மேலும் மாணவர்களுக்கு யோகாசனம் செய்து காட்டினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர்.
 அதே போல் மேரிமாதா கல்லூரியில் நடைபெற்ற விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர்  கந்தசாமி தலைமையேற்று நிகழ்ச்சியை துவக்கிவைத்தார். மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் எ.சுந்தரமகாலிங்கம் வரவேற்புரையாற்றினார்.
  கல்லூரி முதல்வர் பி.ஜே.ஐசக், கல்லூரி நிதி நிர்வாக அலுவலர் பிஜே.ஜோபிஅலெக்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நேரு யுவகேந்திரா கணக்காளர் கே.ராம்பாபு நன்றிகூறினார்.  
     மேலும் பெரியகுளம் தலைமை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற விழாவிற்கு மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர் சரஸ்வதி தலைமை வகித்தார்.  மருத்துவமனை கண்காணிப்பாளர் குமார் முன்னிலை வகித்தார். இயற்கை மருத்துவர் லட்சுமி யோக முத்திரை குறித்து செய்து  காட்டினார். இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
போடி: போடி பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் ஆர். ஜெயக்குமார் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் யோகா பயிற்சி செய்வதால் மன வலிமையும், உடல் வலிமையும் பெறும் முறைகள் குறித்தும், யோகா என்பது எளிய உடற்பயிற்சி என்றும் விளக்கப்பட்டது.
 மேலும் மாணவர்களுக்கு ஞாபக சக்தியையும், ஜீரண சக்தியையும் அதிகரிக்கும் பாதஹஸ்தாசனம், கால்களை வலுப்படுத்தும் வஜ்ராசனம் மற்றும் உட்கட்டாசனம், பாலாசனம் உள்ளிட்ட ஆசனங்களை செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
     ஒவ்வொரு வகுப்பாசிரியருக்கும் எளிய உடற்பயிற்சி குறித்த கையேடு வழங்கப்பட்டு, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வலியுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் பங்கேற்று யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/22/தேனியில்-சர்வதேச-யோகா-தினம்-மாணவ-மாணவிகள்-பயிற்சி-2944682.html
2944681 மதுரை தேனி தேனி நகராட்சியில் மாசு கலந்த குடிநீர் விநியோகிப்பதாக புகார் DIN DIN Friday, June 22, 2018 07:20 AM +0530 தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உள்பட்ட 22-ஆவது வார்டு, குட்ஷெட் தெருவில் மாசு கலந்த குடிநீரை விநியோகம் செய்வதாக பொதுமக்கள் வியாழக்கிழமை மாவட்ட வருவாய் அலுவலர் ச.கந்தசாமியிடம் மனு அளித்தனர்.
   இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் பொதுமக்கள் அளித்த மனு விபரம்: 
  தேனி, ரயில்வே நிலையம் செல்லும் குட்ஷெட் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். இப் பகுதியில் சாக்கடை வசதியின்றி வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மற்றும் மழைநீர் சாலையிலேயே தேங்கி நிற்கிறது. இந்த நிலையில், தற்போது வீடுகளில் உள்ள குடிநீர் குழாய்கள்  மற்றும் பொது குடிநீர் குழாய்களில் கடந்த சில நாள்களாக மாசு கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தேனி, குட்ஷெட் தெருவில் உள்ள வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீரை தர ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யவும், குடியிருப்பு பகுதிகளைச் சுற்றியும் தேங்கியுள்ள கழிவு நீர் மற்றும் குப்பைகளை அப்புறப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/22/தேனி-நகராட்சியில்-மாசு-கலந்த-குடிநீர்-விநியோகிப்பதாக-புகார்-2944681.html
2944680 மதுரை தேனி உத்தமபாளையத்தில் நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு DIN DIN Friday, June 22, 2018 07:19 AM +0530 தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் நெடுஞ்சாலை யோர ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால்  அடிப்படை வசதிகளுக்கான பணிகளைக்  கூட செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    உத்தமபாளையம் நகர் பகுதி திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால்  தமிழக, கேரள வாகனங்கள் போக்குவரத்து அதிகம் உள்ளது.
   இந்நிலையில் மதுரை சாலை, பேருந்து நிலையம், புறவழிச்சாலை, போடி  மாநில நெடுஞ்சாலை, கிராமச்சாவடி, மாரியம்மன் கோயில், கோட்டைமேடு என  உத்தமபாளையம் வழியாகச்  செல்லும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை பகுதிளில் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது.
    50 அடி அகலம்  கொண்ட சாலைகள்  ஆக்கிமிப்பு கடைகளால்  10 அடியாக குறைந்துள்ளன.  கிராமச்சாவடி, பேருந்து நிலையம், மோட்டை மேடு, பூக்கடை வீதிகள்  போன்ற  இடங்களில் அடிக்கடி  வாகன   நெரிசல் ஏற்படுகிறது. 
   மின்கம்பம் அமைத்தல், சாக்கடை மற்றும்  குடிநீர் குழாய் என பொதுமக்களுக்கு தேவையான  அடிப்படை  வசதியை  மேற்கொள்ள   முடியாத அளவுக்கு  ஆக்கிரமிப்புகள் அதிகமாகிவிட்டது.   
 பேரூராட்சி சார்பில்  குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது. கிராமச்சாவடி,  அரசு மருத்துவமனை,  புற வழிச்சாலை ஆகிய இடங்களில் ஆக்கிரமிப்பு அதிகரித்து விட்டதால் சாலையிலே பள்ளம்  தோண்டி பணிகள் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக பொதுமக்கள் புகார்  தெரிவித்தனர்.   
 எனவே, உத்தமபாளையம்  புறவழிச்சாலை உள்பட    நெடுஞ்சாலை பகுதிகளில் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் . 
 மேலும் கண்துடைப்பு  நடவடிக்கையாக இல்லாமல்  நிரந்தர நடவடிக்கையாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை  விடுத்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/22/உத்தமபாளையத்தில்-நெடுஞ்சாலையோர-ஆக்கிரமிப்புகள்-அதிகரிப்பு-2944680.html
2944679 மதுரை தேனி தேனி ஆயுதப்படை காவலரை  கத்தியால் குத்திய 2 பேர்  கைது DIN DIN Friday, June 22, 2018 07:19 AM +0530 தேனி ஆயுதப்படை காவலரை கத்தியால் குத்திய இருவரை தென்கரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
    பெரியகுளம், தென்கரையை சேர்ந்தவர் அனீஸ் (27). தேனி ஆயுதப்படை காவலராக பணியாற்றி வரும் இவர் விடுமுறையில் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த  முத்தையா (22) மற்றும் அருண் (24) இருவரும் மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்தனராம்.  இந்த நிலையில் புதன்கிழமை மாலை அனீஸின் உறவினர் வீட்டின் முன் முத்தையா மற்றும் அருண் ஆகிய இருவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது அனீஸுக்கும் முத்தையா தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் அனீஸ் கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.    அவர் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.இச்சம்பவம் குறித்து அனீஸ் தென்கரை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் தென்கரை காவல் ஆய்வாளர் மதனகலா வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து விசாரித்து வருகிறார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/22/தேனி-ஆயுதப்படை-காவலரை--கத்தியால்-குத்திய-2-பேர்--கைது-2944679.html
2944678 மதுரை தேனி உத்தமபாளையத்தில் குடிநீர்  விநியோகிக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் DIN DIN Friday, June 22, 2018 07:17 AM +0530 தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் வியாழக்கிழமை  குடிநீர்  விநியோகிக்க வலியுறுத்தி பொதுமக்கள்சாலை மறியலில் ஈடுபட்டனர்.  
   உத்தமபாளையம் பேரூராட்சியில் கடந்த சில மாதங்களாக பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் விநியோகம் செய்வதில் தொடர்ந்து  பிரச்சனை இருந்து வருகிறது. குடிநீர் பற்றாக்குறை காரணமாக  பேரூராட்சியிலுள்ள  குடிநீர் இணைப்புகளுக்கு முறையாக குடிநீரை விநியோகம் செய்ய முடியவில்லை. பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்ததை அடுத்து பேரூராட்சியில் குடிநீர் திட்டத்தை அபிவிருத்தி செய்ய  ரூ.1  கோடி நிதியில் பணிகள் நடைபெற்று வருகிறது. 
  தற்போது பேரூராட்சியில் பி.டி.ஆர் காலனியில்  குழாய் பதிக்கும் பணி நிறைவு பெற்ற நிலையில் பிற பகுதிகளிலும் அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. 
 இதற்கிடையை 7 ஆவது வார்டான திருவள்ளுவர் காலனி, போஸ்ட் ஆபிஸ் தெரு  போன்ற பகுதிகளில் கடந்த 10  நாள்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால்  அப்பகுதிக்கு உடனே தண்ணீர் விநியோகிக்க வலியுறுத்தி வியாழக்கிழமை அங்குள்ள  தலைமை தபால் நிலையம் முன்பாக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 சம்பவயிடத்திற்கு வந்த உத்தமபாளையம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேரூராட்சியில் மற்ற பகுதிகளை போல் தங்களுக்கும் முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர். அதற்கு போலீஸார், குடிநீர் விநியோகம் செய்வதற்காக குழாய் பதிக்கும்  பணிகள் நடைபெறுவதால் விரைவில் அனைத்துப் பணிகளும் முடிந்து குடிநீர் பிரச்னை  இருக்காது என  தெரிவித்தை அடுத்து பொதுமக்கள்  சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
 இந்த சாலை மறியலால் உத்தமபாளையம் - போடி இடையே சிறிது நேரம் போக்குவரத்து போதிக்கப்பட்டது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/22/உத்தமபாளையத்தில்-குடிநீர்--விநியோகிக்க-வலியுறுத்தி-பொதுமக்கள்-சாலை-மறியல்-2944678.html
2944677 மதுரை தேனி திராட்சை வியாபாரிகளை முறைப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல் DIN DIN Friday, June 22, 2018 07:17 AM +0530 கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் அரசு சார்பில் திராட்சை விற்பனை நிலையம் அமைக்கப்படாத நிலையில், உற்பத்திப் பொருளை விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் வியாபாரிகளை முறைப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
     இது குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை சுருளிப்பட்டி திராட்சை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கி.முகுந்தன் மற்றும் நிர்வாகிகள், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கந்தசாமியிடம் அளித்த மனு விபரம்: 
  கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் 5,000 ஏக்கர் பரப்பளவில் திராட்சை விவசாயம் நடைபெறுகிறது. இங்கு தினமும் 40 டன் திராட்சை பழங்கள் அறுவடை செய்யப்பட்டு மதுரை, திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும் கேரளத்திற்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. திராட்சை பழத்திற்கு அரசு சார்பில் விற்பனை நிலையம் அமைத்துத் தரப்படாத நிலையில், விவசாயிகள் வியாபாரிகள் மூலமே திராட்சை பழங்களை விற்பனை செய்து வருகின்றனர். 
விவசாயிகளிடம் கொள்முதல் செய்த திராட்சை பழங்களை விற்பனை செய்த பின்னரே, சந்தை நிலவரப்படி வியாபாரிகள் விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்கின்றனர். இந்த நிலையில், தற்போது புற்றீசல் போல திராட்சை கொள்முதலில் ஈடுபட்டு வரும் வியாபாரிகளால், விவசாயிகள் தாங்கள் விற்பனை செய்த விளைபொருளுக்கு உரிய தொகையை பெறுவதில் காலதாமதமும், உத்தரவாதமற்ற நிலையும் ஏற்பட்டுள்ளது. கொள்முதல் பதிவேடு, ரசீது, ஆவணம் போன்ற ஆதாரங்களின்றி திராட்சை பழங்களை விற்பனை செய்வதால், வியாபாரிகளால் ஏமாற்றப்படும் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து விவசாயத்தை கைவிடும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
            இந்த நிலையில், திராட்சை  கொள்முதலில் உற்பத்திப் பொருளுக்கான விற்பனைத் தொகை விவசாயிகளுக்கு கிடைக்க சட்டபூர்வ உத்தரவாதம் அளிக்கும் வகையிலும், திராட்சை கொள்முதல் மற்றும் பணப் பட்டுவாடாவை முறைப்படுத்தும் வகையிலும் திராட்சை வியாபாரிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கவும், திராட்சை வியாபாரிகளை முறையாக பதிவு செய்து உரிமம் வழங்கவும், உரிமம் பெறாத வியாபாரிகள் திராட்சை கொள்முதலில் ஈடுபடுவதை தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/22/திராட்சை-வியாபாரிகளை-முறைப்படுத்த-விவசாயிகள்-வலியுறுத்தல்-2944677.html
2944676 மதுரை தேனி வங்கியில் அடமானம் வைத்த நிலத்தை விற்றவர் கைது DIN DIN Friday, June 22, 2018 07:16 AM +0530 தேனியில் வங்கியில் அடமானம் வைத்த நிலத்தை வீட்டுமனையாக்கி விற்பனை செய்த  முதியவரை வியாழக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
    போடி அருகே குப்பிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணுச்சாமி மகன் ஜெயமணி(65). இவர், தற்போது தேனியில் பாரத ஸ்டேட் வங்கி கிளையாக செயல்பட்டு வரும்,  திருவாங்கூர்  ஸ்டேட் வங்கி கிளையில் கடந்த 2013 இல் மேலச்சொக்கநாதபுரத்தில் உள்ள தனது 6 ஏக்கர் 58 சென்ட் நில ஆவணத்தை அடமானமாக வைத்து ரூ.10 லட்சம் விவசாயக் கடன் பெற்றிருந்தாராம். ஆனால், ஜெயமணி வங்கி நிர்வாகத்திற்குத் தெரியாமல் வங்கியில் அடமானம் வைத்திருந்த நில ஆவணத்திற்குரிய 2 ஏக்கர் நிலத்தை வீட்டடி மனையாக மாற்றி, 72 பேருக்கு விற்பனை செய்து விட்டாராம். 
 தற்போது ஜெயமணி வங்கிக்கு அசல் மற்றும் வட்டியாக ரூ.19 லட்சம் செலுத்த வேண்டியுள்ளதாம். இது குறித்து வங்கி நிர்வாகம்  ஜெயமணிக்கு நோட்டீஸ் அனுப்பியும் அவர் பதிலளிக்கவில்லை என்றும், வங்கியை ஏமாற்றி நிலத்தை விற்பனை செய்து மோசடி செய்துள்ளதாகாவும் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் தேனி பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் ஜாபர்சாதிக் புகார் அளித்தார். இந்தப் புகாரின் மீது போலீஸார் வழக்கு பதிந்து ஜெயமணியை கைது செய்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/22/வங்கியில்-அடமானம்-வைத்த-நிலத்தை-விற்றவர்-கைது-2944676.html
2944675 மதுரை தேனி வீரபாண்டியில் கந்து வட்டி: 5 பேர் மீது வழக்கு DIN DIN Friday, June 22, 2018 07:16 AM +0530 வீரபாண்டியில் கந்துவட்டி தடுப்புச் சட்டத்தில்  5 பேர் மீது போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர். 
    வயல்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டி மகன் பாண்டித்துரை(27).  பால் வியாபாரம் செய்து வரும் இவர் தனது தொழிலுக்காக வீரபாண்டியைச் சேர்ந்த  அம்சம்மாள், நாகராஜ், மலர், சிவன்யம்மாள், திருமலாபுரத்தைச் சேர்ந்த ரவி ஆகியோரிடம், கடந்த  ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ரூ.2.60 லட்சம் கடன் பெற்றிருந்தாராம். இந்தக் கடனை வட்டியுடன் சேர்த்து செலுத்தி விட்ட நிலையில்,  அம்சம்மாள் உள்ளிட்ட 5 பேரும் கடன் தொகைக்கு அதிக வட்டி கேட்டு தன்னை மிரட்டி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரனிடம் புகார் அளித்தார்.
 இதையடுத்து இந்தப் புகாரின் அடிப்படையில், அம்சம்மாள் உள்ளிட்ட  5 பேர் மீதும் வீராபாண்டி காவல் நிலைய போலீஸார் கந்து வட்டி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/22/வீரபாண்டியில்-கந்து-வட்டி-5-பேர்-மீது-வழக்கு-2944675.html
2944674 மதுரை தேனி போடியில் அமைச்சரை கண்டித்து போராட்டம் DIN DIN Friday, June 22, 2018 07:16 AM +0530 போடியில் வியாழக்கிழமை தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசனைக் கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர்  போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து தவறான தகவல்களை அமைச்சர் பேசியதாகக் கூறி போடி தேவர் சிலை திடலில் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அக்கட்சியின் நகர நிர்வாகி போதுமணி தலைமை வகித்தார். கட்சியினர் பலர் பங்கேற்று அமைச்சரைக் கண்டித்து கோஷமிட்டதுடன், அவரது உருவ படத்தை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/22/போடியில்-அமைச்சரை-கண்டித்து-போராட்டம்-2944674.html
2944673 மதுரை தேனி போடியில் ஏலக்காய் விலை குறைவு DIN DIN Friday, June 22, 2018 07:16 AM +0530 போடியில் வியாழன் கிழமை நடைபெற்ற ஏலத்தில் ஏலக்காய் விலை குறைந்து காணப்பட்டது.
     போடியில் மத்திய அரசின் நறுமணப் பொருள்கள் வாரியம் ( நல்ண்ஸ்ரீங்ள் ஆர்ஹழ்க்) சார்பில் மின்னணு முறையிலான ஏலக்காய் ஏல விற்பனை மையம் செயல்பட்டு வருகிறது. வியாழக்கிழமை ஹெட்டர் நிறுவனம் ஏலம் நடத்தியது. அப்போது ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 909 கிலோ  ஏலக்காய் விற்பனைக்காக பதிவு செய்யப்பட்டது. இதில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 177 கிலோ விற்பனை செய்யப்பட்டது. அதிகபட்ச விலையாக கிலோவுக்கு ரூ. ஆயிரத்து 252 க்கு விற்பனையானது. சராசரி விலையாக ரூ.964 -க்கு விற்பனையானது. முந்தைய நாள் ஏலத்தை விட ரூ.30 முதல் ரூ.40 வரை விலை குறைவாகும். அதேபோல் மிளகு கிலோ ரூ.356-க்கு விற்பனையானது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/22/போடியில்-ஏலக்காய்-விலை-குறைவு-2944673.html
2943788 மதுரை தேனி கம்பம் மகளிர் கல்லூரியில் பேராசிரியைகளுக்கு யோகா பயிற்சி வகுப்பு DIN DIN Thursday, June 21, 2018 01:18 AM +0530 தேனி மாவட்டம், கம்பம் ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை பேராசிரியைகளுக்கு யோகக் கலை பயிற்சி அளிக்கப்பட்டது.
    ஜூன் 21 ஆம் தேதி யோகா தினத்தை முன்னிட்டு, இக் கல்லூரி கூட்ட அரங்கில் பேராசிரியைகளுக்கு யோகக் கலை கற்றுத் தரப்பட்டது. இதில், கல்லூரிச் செயலரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான என். ராமகிருஷ்ணன் தலைமை வகித்துப் பேசினார். 
    இதில், ஈஷா யோகா மைய ஆசிரியைகள் லதா, கணினி மூலம் யோகா பயிற்சிகளை செய்வது பற்றி விளக்கினார். வகுப்பில், யோகா ஆசிரியைகள் வசந்தி, ஜெயந்தி ஆகியோர் செய்முறை பயிற்சியளித்தனர். முன்னதாக,  முதல்வர் ஜி. ரேணுகா வரவேற்றுப் பேசினார். நாட்டு நலப்பணித் திட்ட பேராசிரியை தமிழ்செல்வி நன்றி கூறினார்.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/21/கம்பம்-மகளிர்-கல்லூரியில்-பேராசிரியைகளுக்கு-யோகா-பயிற்சி-வகுப்பு-2943788.html
2943786 மதுரை தேனி உத்தமபாளையம் அருகே கிடப்பில் போடப்பட்ட  சாலைப் பணிகள் மீண்டும் தொடக்கம் DIN DIN Thursday, June 21, 2018 01:18 AM +0530 தேனி மாவட்டம், உத்தமபாளையம் அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கிடப்பில் போடப்பட்ட சாலைப்  பணிகள், தினமணி செய்தி எதிரொலியாக செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
       மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கோம்பை, உத்தமபாளையம் வழியாக கம்பம் வரையில் ராணிமங்கம்மாள் சாலை உள்ளது. இச்சாலை, பல ஆண்டுகளாகப் பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக சேதமடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்றதாக மாறியது.     இதனால், விவசாயப் பணிகள் மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வந்தனர். எனவே, உத்தமபாளையம் மற்றும் கோம்பை பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் ராணிமங்கம்மாள் சாலைய சீரமைக்க வலியுறுத்தினர். 
  இதையேற்று, கோம்பை பேரூராட்சி நிர்வாகம் ரூ.2.37 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, சாலைப் பணிகளை தொடங்கியது. பின்னர், சாலையில் சரளைக் கற்களை பரப்பியதோடு பணிகள் கிடப்பில் போடப்பட்டன.     
    இதுகுறித்து  தினமணியில்  கடந்த 16 ஆம் தேதி செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக,  நிறுத்தப்பட்ட பணிகள் செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கியுள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/21/உத்தமபாளையம்-அருகே-கிடப்பில்-போடப்பட்ட--சாலைப்-பணிகள்-மீண்டும்-தொடக்கம்-2943786.html
2943785 மதுரை தேனி கெங்குவார்பட்டி மோதல் வழக்கில் கைது நடவடிக்கை வேண்டாம்:  எஸ்.பி.யிடம்  பொதுமக்கள் கோரிக்கை DIN DIN Thursday, June 21, 2018 01:18 AM +0530 பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டியில் கடந்த ஜூன் 16-ஆம் தேதி இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் குறித்த வழக்கில், கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டாம் என்று, அப்பகுதி பொதுமக்கள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரனிடம் செவ்வாய்க்கிழமை  மனு அளித்தனர்.
    இது குறித்து கெங்குவார்பட்டிதேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த பொதுமக்கள் காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த மனு விவரம்: கெங்குவார்பட்டியில் கடந்த ஜூன் 16-ஆம் தேதி ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தேவதானப்பட்டி காவல் நிலைய போலீஸார் 42 பேர் மீது வழக்குப் பதிந்து, இது வரை 8 பேரை கைது செய்துள்ளனர்.
   தற்போது, இப் பிரச்னையில் இரு தரப்பினரிடையே சமரசப் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலையில், போலீஸார் இந்த வழக்குக்கு தொடர்பில்லாத சிலரையும் சேர்த்து கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், கிராம மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
   எனவே, இந்த வழக்கு தொடர்பாக போலீஸார் கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டாம் என்றும், வழக்குக்கு தொடர்பில்லாதவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/21/கெங்குவார்பட்டி-மோதல்-வழக்கில்-கைது-நடவடிக்கை-வேண்டாம்-எஸ்பியிடம்--பொதுமக்கள்-கோரிக்கை-2943785.html
2943784 மதுரை தேனி கூடலூர் அருகே வாழைத் தோட்டங்களில் யானைகள் புகுந்து அட்டகாசம்: தொழிலாளர்கள் அச்சம் DIN DIN Thursday, June 21, 2018 01:17 AM +0530 கூடலூர் வெட்டுக்காடு பகுதியில் வாழைத் தோட்டங்களுக்குள் செவ்வாய்க்கிழமை இரவு புகுந்த காட்டு யானைகள், மரங்களை சாய்த்து, அட்டகாசம் செய்தன. இதனால், தோட்ட வேலைக்கு செல்லும் விவசாயத் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
 தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ளது வெட்டுக்காடு. சுருளியாறு மலை தொடர்ச்சி அடிவாரத்தில் உள்ள  இப்பகுதியில் தென்னை, வாழை, மா, பலா உள்ளிட்ட தோட்டப் பயிர்கள் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளன. கடந்த 5 நாள்களுக்கு முன்னர் சுருளியாறு மலையிலிருந்து, யானைகள் இறங்கி, வாழைத் தோட்டங்களில் புகுந்து மரங்களை சாய்த்து நாசம் செய்தன. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு ஜீவா, மனோகரன் ஆகியோரின்  வாழைத் தோட்டங்களுக்குள் மீண்டும் காட்டு யானைகள் புகுந்தன. 
 அவை, வாழை மரங்களை சாய்த்தும், வாழைப் பழ தார்களை பாதி சாப்பிட்டும், மீதியை நிலத்தில் போட்டு மிதித்தும் அட்டகாசம் செய்தன. காலையில் மக்கள் நடமாட்டம் வரும் வரை யானைகள் வாழைத் தோட்டத்துக்குள் இருந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர். இந்நிலையில், பயிர்கள் சேதமானதால் தங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கும், யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தேனி மாவட்ட ஆட்சியருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/21/கூடலூர்-அருகே-வாழைத்-தோட்டங்களில்-யானைகள்-புகுந்து-அட்டகாசம்-தொழிலாளர்கள்-அச்சம்-2943784.html
2943782 மதுரை தேனி ராசிங்காபுரத்தில் ஜூன் 22 மின் தடை DIN DIN Thursday, June 21, 2018 01:17 AM +0530 ராசிங்காபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூன் 22), காலை 9 மணி முதல் மாலை 4.45 மணி வரை மின்சாரம் இருக்காது. 
மின்தடை ஏற்படும் பகுதிகள்: ராசிங்காபுரம், சிலமலை, டி.ரங்கநாதபுரம், சங்கராபுரம், நாகலாபுரம், சூலப்புரம், பொட்டிப்புரம், சில்லமரத்துப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகள். இத்தகவலை தேனி மின்வாரிய செயற்பொறியாளர் சி.பாலமுருகன் தெரிவித்தார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/21/ராசிங்காபுரத்தில்-ஜூன்-22-மின்-தடை-2943782.html
2943779 மதுரை தேனி கிணற்றில் தவறி விழுந்து காயமடைந்த தொழிலாளி சாவு DIN DIN Thursday, June 21, 2018 01:16 AM +0530 ஆண்டிபட்டி அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்ததில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கூலித்தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தார்.
            ஆண்டிபட்டி அருகே உள்ள ராஜேந்திரா நகரை சேர்ந்தவர் விஜயகுமார் (எ) விஜயராஜன் (36). கூலி வேலை செய்து வந்த இவர் கடந்த திங்கள்கிழமை அப்பகுதியில் உள்ள கிணற்றின் அருகே இருந்த தேன்கூட்டில் தேன் எடுக்க சென்றபோது தவறி கிணற்றுக்குள் விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரைஅருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் புதன்கிழமை காலை உயிரிழந்தார். 
 இதுகுறித்து கண்டமனூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/21/கிணற்றில்-தவறி-விழுந்து-காயமடைந்த-தொழிலாளி-சாவு-2943779.html
2943777 மதுரை தேனி கம்பத்தில் ரூ.5 லட்சம் மதிப்பில் தடைசெய்யப்பட்ட புகையிலை பறிமுதல் DIN DIN Thursday, June 21, 2018 01:16 AM +0530 தேனி மாவட்டம் கம்பத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை போலீஸார் புதன்கிழமை பறிமுதல் செய்தனர். 
     கம்பம் நகரில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன. அதன்பேரில், தெற்கு போலீஸார் மணிநகரம் கிளப் சாலையில் உள்ள ஒரு கிட்டங்கியை புதன்கிழமை சோதனை செய்தனர். 
            அங்கு மூட்டை மூட்டையாக ரூ.5 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், கிட்டங்கியின் உரிமையாளரான வெங்கடேசன் (53) மீது வழக்குப் பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/21/கம்பத்தில்-ரூ5-லட்சம்-மதிப்பில்-தடைசெய்யப்பட்ட-புகையிலை-பறிமுதல்-2943777.html
2943776 மதுரை தேனி வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி இளைஞரிடம் ரூ.3.20 லட்சம் மோசடி: 6 பேர் மீது வழக்கு DIN DIN Thursday, June 21, 2018 01:16 AM +0530 தேனி மாவட்டம், கூடலூரைச் சேர்ந்த இளைஞரிடம் அமெரிக்காவில் வேலை வாங்கித் தருவதாக கூறி, ரூ.3.20 லட்சம் மோசடி செய்த வெளி மாநிலங்களைச் சேர்ந்த 6 பேர் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்தனர்.
 கூடலூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் பிலால் ரகுமான் (35). கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், மலேசியாவில் பணியாற்றிவிட்டு சொந்த ஊருக்கு வந்தார். தற்போது மீண்டும் வெளிநாட்டு வேலை தேடி வந்தார்.
    இந்நிலையில் கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி இவரை தொடர்பு கொண்ட பெங்களூரு, மேகாலயா மாநிலங்களை சேர்ந்த சிலர், அமெரிக்காவில் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளனர். இதனை நம்பிய பிலால் ரகுமான் ஆன்லைனில் விவரங்களை பதிந்து, இரு தவணைகளில் ரூ.3.20 லட்சம் பணம் செலுத்தினாராம்.    ஆனால், அவர்கள் கூறியபடி வேலை வாங்கி தரவில்லையாம்.  இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பிலால் ரகுமான், இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில், லலிதா ஸ்ரீவாலா, எலிஜா வல்லால், டியா, நாங்லுத், சால் சண்டினோ டெங், ஆப்ரின் மெகமூத் ஷேக் ஆகிய 6 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/21/வெளிநாட்டில்-வேலை-வாங்கித்-தருவதாக-கூறி-இளைஞரிடம்-ரூ320-லட்சம்-மோசடி-6-பேர்-மீது-வழக்கு-2943776.html
2943775 மதுரை தேனி கல்லூரி மாணவர்களுக்கு ஜூன் 28-இல் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி DIN DIN Thursday, June 21, 2018 01:15 AM +0530 தேனி அரசு மருத்துவக் கல்லூரி கூட்ட அரங்கில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஜூன் 28-ஆம் தேதி மாவட்ட அளவில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டி நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
தமிழ்நாடு பொன் விழா ஆண்டை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற உள்ள கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் மாவட்டத்துக்கு உள்பட்ட கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் சம்மந்தப்பட்ட கல்லூரி முதல்வரின் பரிந்துரை கடிதத்துடன் கலந்து கொள்ளலாம்.
போட்டிக்கான தலைப்புகள் தமிழ் மொழியின் பெருமையை உலகிற்கு எடுத்துரைத்த பேரறிஞர் அண்ணா, பாரதிதாசன், திரு.வி.க., பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோரின் படைப்புகளை சார்ந்தவையாக இருக்கும். போட்டியில் வெற்றி பெரும் மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசு ரூ.5,000, 2-ஆம் பரிசு ரூ.3,000, 3-ஆம் பரிசு ரூ.2,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவில் நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/21/கல்லூரி-மாணவர்களுக்கு-ஜூன்-28-இல்-கவிதை-கட்டுரை-பேச்சுப்-போட்டி-2943775.html
2943773 மதுரை தேனி போடியில் ராகுல்காந்தி பிறந்த நாள் விழா DIN DIN Thursday, June 21, 2018 01:15 AM +0530 காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியின் 48ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, போடியில் செவ்வாய்க்கிழமை அக்கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இந் நிகழ்ச்சிக்கு, போடி காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவர் முசாக் மந்திரி தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் சன்னாசி, மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் தர்மர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையொட்டி, போடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. தொடர்ந்து, அக்கட்சியினர் பொதுமக்கள், மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினர்.  நிகழ்ச்சியில், நகர துணைத் தலைவர் செல்வராஜ், நகர பொருளாளர் கோபால், நிர்வாகிகள் அரசகுமார், கனகராஜ், காளிமுத்து உள்பட பலர் பங்கேற்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/21/போடியில்-ராகுல்காந்தி-பிறந்த-நாள்-விழா-2943773.html
2943772 மதுரை தேனி ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டம் DIN DIN Thursday, June 21, 2018 01:15 AM +0530 தேனி மாவட்டத்தில் ஊராட்சி செயலர்களுக்கு பதிவுறு எழுத்தர் பணிக்கு நிகராக ஊதியம் வழங்கக் கோரி, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், ஊராட்சி செயலர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் சார்பில் ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் வட்டார வளர்ச்சி அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், உதவியாளர், இளநிலை உதவியாளர் நிலையில் பணியாற்றி வரும் 174  பேர் செவ்வாய்க்கிழமை விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்றனர் என்று, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாவட்டத் தலைவர் ரெங்கராஜன் கூறினார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/21/ஊரக-வளர்ச்சித்-துறை-அலுவலர்கள்-விடுப்பு-எடுத்து-போராட்டம்-2943772.html
2943770 மதுரை தேனி தேனியில் மின் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் DIN DIN Thursday, June 21, 2018 01:15 AM +0530 தேனியில் மின் வாரிய ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மின் ஊழியர்கள் மத்திய சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தேனி மின் வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட திட்டத் தலைவர் பி. முருகேசன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் எஸ். ராமச்சந்திரன், சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலர் எம். ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
இதில், மின் வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ரூ.380 தினக் கூலி வழங்க வேண்டும், விரிவாக்கப் பணிகளை ஒப்பந்தத் தொழிலாளர்கள் மூலம் மேற்கொள்ளவேண்டும், ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்தவர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும், அவர்களை தினக் கூலி ஊழியர்களாகப் பணியமர்த்த வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/21/தேனியில்-மின்-வாரிய-ஊழியர்கள்-ஆர்ப்பாட்டம்-2943770.html
2943125 மதுரை தேனி போடி அருகே காட்டெருமை முட்டியதில்  மூதாட்டி சாவு DIN DIN Wednesday, June 20, 2018 06:36 AM +0530 போடி அருகே காட்டெருமை முட்டியதில், பெண் விவசாயி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். 
      போடி தேரடி தெரு மின்வாரிய அலுவலகம் பின்புறம் வசித்து வந்தவர் முத்துமாயத் தேவர் மனைவி மாயக்காள் (67). இவருக்குச் சொந்தமான மா, இலவு தோட்டம் போடி அருகே முத்துக்கோம்பை புலத்தில் உள்ளது. தற்போது, மா சீசன் என்பதால், மாயக்காள் குடும்பத்துடன் தோட்டத்தில் உள்ள வீட்டில் தங்கியிருந்துள்ளார்.
     அதன்பின்னர், குடும்பத்தினர் போடிக்கு வந்து விட்ட நிலையில், மாயக்காள் மட்டும் தோட்டத்திலேயே இருந்துள்ளார். செவ்வாய்க்கிழமை அதிகாலையில் தோட்டத்தில் சத்தம் கேட்டு  வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார். அப்போது, அங்கு நின்றிருந்த காட்டெருமை முட்டியதில், மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
    இந்நிலையில், காலையில் மீண்டும் தோட்டத்துக்குச் சென்ற அவரது குடும்பத்தினர், மாயக்காள் காட்டெருமை முட்டி இறந்தது தெரியவந்துள்ளது. 
  இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போடி குரங்கணி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இது சம்பந்தமாக, போடி வனத் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/20/போடி-அருகே-காட்டெருமை-முட்டியதில்--மூதாட்டி-சாவு-2943125.html
2943124 மதுரை தேனி பெண்ணை ஏமாற்றிய ராணுவ வீரர் கைது DIN DIN Wednesday, June 20, 2018 06:36 AM +0530 ஆண்டிபட்டி அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பெண்ணை ஏமாற்றியதாக ராணுவ வீரரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
ஆண்டிபட்டி அருகே மயிலாடும்பாறை, தென்பழனி காலனியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது மனைவி பாண்டீஸ்வரி (25). இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராகப் பணியாற்றி வரும் முத்துப்பாண்டியின் உறவினர் செல்வம் (23) என்பவர், விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த போது பாண்டீஸ்வரியுடன் நெருங்கிப் பழகி வந்தாராம்.
இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தன்னுடன் நெருங்கி பழகி வந்த செல்வம், தற்போது தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்து ஏமாற்றி விட்டதாக மயிலாடும்பாறை காவல் நிலையத்தில் பாண்டீஸ்வரி புகார் அளித்தார். இதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து செல்வத்தை கைது செய்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/20/பெண்ணை-ஏமாற்றிய-ராணுவ-வீரர்-கைது-2943124.html
2943123 மதுரை தேனி சாலைப் பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் DIN DIN Wednesday, June 20, 2018 05:33 AM +0530 ஆண்டிப்பட்டி மற்றும் ஒட்டன்சத்திரத்தில் சாலைப் பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
       ஆண்டிபட்டி நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன்பாக, நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாவட்டச் செயலர் பரமேஸ்வரன் தலைமை வகித்தார். மாநிலச் செயலர் பி. முத்தையா சிறப்புரையாற்றினார். 
     ஆர்ப்பாட்டத்தில், நெடுஞ்சாலைத் துறை பணியாளருக்கு சம்பளத்தில் பிடிக்கும் இ.பி.எப். மூலம் கடன் வழங்கும் முறையில் பணம் தராமல் இழுத்தடிக்கும் நிர்வாகத்தை கண்டித்தும், புதுக்கோட்டையில் பணியாற்றிய 15 பணியாளர்களை வேறு பகுதிக்கு மாற்றியதை கண்டித்தும், மீண்டும் அவர்களை அதே இடத்தில் பணியமர்த்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. 
      இதில், ஆண்டிபட்டி வட்ட அனைத்து  நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் கலந்துகொண்டனர். வட்டத் தலைவர் நாகராஜ் நன்றி கூறினார். 
ஒட்டன்சத்திரம்: தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் சங்கம் ஒட்டன்சத்திரம் உட்கோட்டம் சார்பில், ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், வட்டக் கிளை தலைவர் கு. காளியப்பன் தலைமை வகித்தார். பழனி கோட்டச் செயலர் மு. மணிமாறன், அரசு ஊழியர் சங்க வட்டக் கிளை துணைத் தலைவர் பி. ஆண்டவன், சாலை ஆய்வாளர் சங்க கோட்டப் பொருளாளர் தே. மாசிலாமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 
கோட்ட துணைத் தலைவர் பெ.செல்வம் உள்பட சாலைப் பணியாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். முன்னதாக, வட்டக் கிளை துணைச் செயலர் சி.தண்டபாணி வரவேற்றார். முடிவில், வட்டக் கிளை பொருளாளர் தே. கார்த்திகேயன் நன்றி கூறினார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/20/சாலைப்-பணியாளர்கள்-கண்டன-ஆர்ப்பாட்டம்-2943123.html
2943122 மதுரை தேனி கம்பத்திலிருந்து கேரளத்துக்கு  கம்பம், ஜூன் 19: தேனி மாவட்டம், கம்பத்திலிருந்து கேரளத்துக்கு 7 கிலோ கஞ்சா கடத்திய கேரள இளைஞரை, தமிழக - கேரள எல்லையில் குமுளி கலால் துறையினர் செவ்வாய்க்கிழமை  கைது செய்தனர்.       கம்பத்திலிருந்து குமுளிக்குச் சென்ற பேருந்தில் பயணிகள் இறங்கி, தமிழக-கேரள எல்லை சோதனைச் சாவடி வழியாக குமுளிக்கு நடந்து சென்றனர். அப்போது, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் கையில் பையுடன் சென்ற இளைஞரை கலால் துறையினர் நிறுத்தி சோதனையிட்டனர். அதில், DIN DIN Wednesday, June 20, 2018 05:32 AM +0530 தேனி மாவட்டம், கம்பத்திலிருந்து கேரளத்துக்கு 7 கிலோ கஞ்சா கடத்திய கேரள இளைஞரை, தமிழக - கேரள எல்லையில் குமுளி கலால் துறையினர் செவ்வாய்க்கிழமை  கைது செய்தனர்.
      கம்பத்திலிருந்து குமுளிக்குச் சென்ற பேருந்தில் பயணிகள் இறங்கி, தமிழக-கேரள எல்லை சோதனைச் சாவடி வழியாக குமுளிக்கு நடந்து சென்றனர். அப்போது, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் கையில் பையுடன் சென்ற இளைஞரை கலால் துறையினர் நிறுத்தி சோதனையிட்டனர். அதில், போதைப் பொருளான 7 கிலோ கஞ்சா காக்கி காகிதத்தில் மடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
    அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கஞ்சா கடத்திய இளைஞர் அல்அமீன் (27)  என்றும், சம்பளத்துக்காக கம்பத்தில் கஞ்சாவை வாங்கி திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு வியாபாரிக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து, கேரள  மாநில கலால் துறையினர் அல்அமீனை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/20/கம்பத்திலிருந்து-கேரளத்துக்கு--கம்பம்-ஜூன்-19-தேனி-மாவட்டம்-கம்பத்திலிருந்து-கேரளத்துக்கு-7-கிலோ-2943122.html
2943121 மதுரை தேனி தேனியில் இரு சக்கர வாகனம்  மோதி தொழிலாளி சாவு DIN DIN Wednesday, June 20, 2018 05:31 AM +0530 தேனியில் திங்கள்கிழமை இரவு சாலையை கடக்க  முயன்ற  கூலித்தொழிலாளி இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்தார்.
தேனி அல்லிநகரம், அழகர்சாமி காலனியைச் சேர்ந்தவர் சின்னு மகன் மாரியப்பன் (40). இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இவர் தேனியில் பந்தல் அமைக்கும் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில், அல்லிநகரம் பேருந்து நிறுத்தம் அருகே தேனி-பெரியகுளம் சாலையை நடந்து சென்று கடக்க முயன்ற மாரியப்பன் மீது, தேனியில் இருந்து அல்லிநகரம் நோக்கிச் சென்ற இருசக்கர வாகனம் மோதியது. இதில், மாரியப்பன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த அம்மாபுரத்தைச் சேர்ந்த மகேந்திரன் (40) என்பவர் மீது அல்லிநகரம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/20/தேனியில்-இரு-சக்கர-வாகனம்--மோதி-தொழிலாளி-சாவு-2943121.html
2943120 மதுரை தேனி போடியில் தனியார் பள்ளி ஆசிரியையை கத்தியால் குத்திய இளைஞர் கைது DIN DIN Wednesday, June 20, 2018 05:31 AM +0530 போடியில் தனியார் பள்ளி ஆசிரியையை கத்தியால் குத்திய இளைஞரை, போலீஸார் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.
      போடி சந்தைப்பேட்டை தெருவில் கிறிஸ்தவர் சந்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சங்கரநாராயணன் மனைவி மாலதி (42). இவர், திருமலாபுரத்தில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார்.
     திங்கள்கிழமை காலை, மாலதி பள்ளிக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, வீட்டின் கதவு தட்டப்பட்டதை அடுத்து, மாலதி கதவைத் திறந்துள்ளார். உடனே, இளைஞர் ஒருவர் மாலதியை கத்தியால் குத்தியுள்ளார். அவர் அலறியவுடன், இளைஞர் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். 
     இது குறித்து போடி நகர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மாலதி வீட்டினருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.    அதன்மூலம், குற்றச் செயலில் ஈடுபட்ட இளைஞர், போடி செந்திவிநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த இளங்கோ மகன் மணி (23) என்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவரைப் பிடித்து போலீஸார் விசாரணை செய்தனர். அதில், வீட்டில் திருடுவதற்காக ஆசிரியையை கத்தியால் குத்தியது தெரியவந்துள்ளது. போலீஸார் அவரைக் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/20/போடியில்-தனியார்-பள்ளி-ஆசிரியையை-கத்தியால்-குத்திய-இளைஞர்-கைது-2943120.html
2943119 மதுரை தேனி கம்பத்தில் காவல் துறை கண்காணிப்பு கேமரா சேதம்: இளைஞர் கைது DIN DIN Wednesday, June 20, 2018 05:30 AM +0530 தேனி மாவட்டம் கம்பத்தில் காவல் துறையின் கண்காணிப்புக் கேமராவை சேதப்படுத்திய இளைஞரை  போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
கம்பத்தில் முக்கிய இடங்களில், வடக்கு காவல்துறையின் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 
கடந்த 16 ஆம் தேதி அமராவதி திரையரங்கம் - பேருந்துநிலையம் செல்லும் சாலையில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்புக் 
கேமரா சேதப்படுத்தப்பட்டிருந்தது.
இது குறித்து வடக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கேமராவை சேதப்படுத்திய நபரை தேடி வந்தனர். கம்பம் உலகத்தேவர் தெருவைச் சேர்ந்த சின்னன் மகன் சிவமாயன் (33) என்பவர் கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்தியது தெரியவந்தது. 
இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். இவர் மீது ஏற்கெனவே பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/20/கம்பத்தில்-காவல்-துறை-கண்காணிப்பு-கேமரா-சேதம்-இளைஞர்-கைது-2943119.html
2943118 மதுரை தேனி சிங்கராஜபுரம் அரசு பள்ளிக்கு பூட்டு போட்டு  மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டம் DIN DIN Wednesday, June 20, 2018 05:29 AM +0530 ஆண்டிபட்டி வட்டாரம், சிங்கராஜபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி பள்ளியில் படிக்கும்  மாணவர்களின் பெற்றோர்கள் செவ்வாய்க்கிழமை பள்ளிக்கு  பூட்டுப் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிங்கராஜபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 120 மாணவ-மாணவியர் படித்து வருகின்றனர். ஒரு தலைமையாசிரியர், 7 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளியில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை. பள்ளிக்கு அரசு ஒதுக்கும் நிதி முறையாக செலவிடப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து பெற்றோர்-ஆசிரியர் கழகம் சார்பில் பள்ளி நிர்வாகம் மற்றும் தொடக்கக் கல்வித் துறை அலுவலர்களிடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லையாம்.
இதனால் பள்ளியில் மாணவர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர வலியுறுத்தி மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு பூட்டுப் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த கடமலைக்குண்டு போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இப்பிரச்னை மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/20/சிங்கராஜபுரம்-அரசு-பள்ளிக்கு-பூட்டு-போட்டு--மாணவர்களின்-பெற்றோர்கள்-போராட்டம்-2943118.html
2943117 மதுரை தேனி வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் கழுத்தை அறுத்து தாலி சங்கிலி பறிப்பு DIN DIN Wednesday, June 20, 2018 05:29 AM +0530 பெரியகுளத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் கழுத்தை அறுத்து, அவரது தாலி சங்கிலியை மர்ம நபர் பறித்துச் சென்றுவிட்டார்.
      பெரியகுளம் ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்த குமார் என்பவரின் மனைவி மணிமாலா (41). இவர், செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் வீட்டில் சமையல் செய்துகொண்டிருந்தாராம். அப்போது, பேப்பர் வேண்டுமா எனக் கேட்டு 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் அங்கு வந்துள்ளார். மணிமாலா வேண்டாமென்று கூறி அனுப்பி விட்டாராம்.
     சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்த அதே நபர், தண்ணீர் வேண்டும் எனக் கேட்டுள்ளார். பின்னர், வீட்டுக்குள் புகுந்து மணிமாலா அணிந்திருந்த 5 பவுன் தாலி சங்கிலியைப் பறிக்க முயன்றுள்ளார். ஆனால், மணிமாலா அந்த நபரிடம் போராடியுள்ளார். அப்போது, இளைஞர் தான் வைத்திருந்த கத்தியால் மணிமாலாவின் கழுத்து, முகம், கை மற்றும் மார்பில் குத்தியுள்ளார்.  இதனால், நிலை குலைந்து அவர் கீழே விழுந்துள்ளார். அப்போது, அவரின் கழுத்தில் இருந்த தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு அந்த நபர் தப்பியோடி விட்டாராம்.
      அதையடுத்து, அப்பெண் பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து பெரியகுளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/20/வீட்டில்-தனியாக-இருந்த-பெண்ணின்-கழுத்தை-அறுத்து-தாலி-சங்கிலி-பறிப்பு-2943117.html
2943116 மதுரை தேனி அங்கீகாரமற்ற மனைப்பிரிவுகளை முறைப்படுத்த சிறப்பு முகாம் DIN DIN Wednesday, June 20, 2018 05:29 AM +0530 தேனி  மாவட்டத்தில் அங்கீகாரமற்ற மனைப் பிரிவுகளை வரன்முறை படுத்துவதற்கு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த 2016, அக்.20-ம் தேதிக்கு முன் உருவான அங்கீகாரமற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்தவும், அதிலுள்ள தனி மனைகளை முறைப்படுத்தவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்  திட்டத்தை செயல்படுத்துவதற்கு மதுரை நகர் ஊரமைப்புத் துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி மற்றும் பேரூராட்சி சார்பில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
இதன்படி, தேனி மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் ஜூன் 20 மற்றும் ஜூலை 25-ஆம் தேதி, போடி நகராட்சி அலுவலகத்தில் ஜூன் 27-ம் தேதி, உத்தமபாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் ஜூலை 4-ஆம் தேதி, பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் ஜூலை 11-ஆம் தேதி, கம்பம் நகராட்சி அலுவலகத்தில் ஜூலை 18-ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் அங்கீகாரமற்ற தனி மனைகளின் உரிமையாளர்கள் கலந்து கொண்டு, தங்களது மனைகளை முறைப்படுத்த இணைய தளம் மூலம் விண்ணப்பித்து, அதற்கான சான்று மற்றும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து தங்களது மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/20/அங்கீகாரமற்ற-மனைப்பிரிவுகளை-முறைப்படுத்த-சிறப்பு-முகாம்-2943116.html
2943115 மதுரை தேனி ஆண்டிபட்டி அருகே புதுக்குளம் கண்மாய் தூர்வாரும் பணிகள் தீவிரம்: விவசாயிகள் மகிழ்ச்சி DIN DIN Wednesday, June 20, 2018 05:28 AM +0530 தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 60 ஏக்கர் பரப்பளவில் உள்ள புதுக்குளம் கண்மாய் தூர் வாரும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
  ஆண்டிபட்டி தாலுகா கண்டமனூரிலிருந்து  கணேசபுரம் செல்லும் சாலையில் புதுக்குளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய்க்கு கண்டமனூர் வனசரகத்திற்கு உள்பட்ட  மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளான ஊசி மலை கரடு, சன்னாசியப்பன் கோவில் மலை பகுதிகளில் இருந்து நீர்வரத்து இருக்கிறது.
கடந்த 30 ஆண்டுகளாக இந்த கண்மாய் தூர்வாரப்படாமல் மணல் மேவி, முள்புதர்கள் மண்டி கிடந்தது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாமல் போனது. இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் கண்மாயை தூர்வார உத்தரவிட்டார். 
இதனையடுத்து இப்பகுதி கிராம மக்களும், விவசாயிகளும் இணைந்து  இரண்டு பொக்லைன் இயந்திரங்கள் மூலம் கண்மாயை தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 
இதன் மூலம் கிடைக்கும்  சத்து மிக்க வண்டல் மண்ணை விவசாயிகள் வயல்களில் பயன்படுத்த கொண்டு செல்கின்றனர். ஒரு விவசாயிக்கு 25 லோடு  வீதம் வண்டல் மண் கொடுக்கப்பட்டு வருகிறது. 
இந்த கண்மாய் பணிகள் நிறைவடைந்து தண்ணீர் நிற்கும் பட்சத்தில் அருகாமையில் உள்ள கண்டமனூர், கணேசபுரம், வேலாயுதபுரம், தேக்கம்பட்டி, புதுராமசந்திராபுரம், ஜி.உசிலம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 500-க்கும் மேற்பட்ட  ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். 
மேலும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து குடிநீர் பஞ்சம் ஏற்படாது. கண்மாய் தூர்வாரும் பணிகளை சமூக ஆர்வலர்கள் அய்யனார், பழனிவேல் ஆகியோர் ஒருங்கிணைத்து செய்து வருகிறார்கள்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/20/ஆண்டிபட்டி-அருகே-புதுக்குளம்-கண்மாய்-தூர்வாரும்-பணிகள்-தீவிரம்-விவசாயிகள்-மகிழ்ச்சி-2943115.html
2943114 மதுரை தேனி பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு: கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல்போக சாகுபடி பணிகள் தீவிரம் DIN DIN Wednesday, June 20, 2018 05:28 AM +0530 முல்லைப் பெரியாறு அணையிலிருந்து முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், கம்பம் பாசனப் பரப்பு பகுதிகளில் விவசாயப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல்போக சாகுபடிக்கு 200 கன அடி மற்றும் குடிநீருக்கு 100 கன அடி என மொத்தம் 300 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதன்மூலம், முதல் கட்டமாக கம்பம் ஏழரசு களம் அருகே உள்ள நிலங்கள், ஊமையன் வாய்க்கால் பாசனப் பரப்பில் அண்ணாபுரம் கீழ் பகுதியிலிருந்து க.புதுப்பட்டி சன்னாசியப்பன் கோயில் வரையிலான நிலங்களில் நாற்று பாவப்பட்டிருந்த நிலையில், தற்போது தண்ணீர் திறப்பால் விவசாயிகள் விவசாயப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கம்பம் சின்னவாய்க்கால் பாசனப் பரப்பு பகுதிகளில், குறிப்பாக தொட்டம்மன் துறை தடுப்பு அணை பகுதி வாய்க்கால் பாசனப் பரப்பில் உள்ள நிலங்களுக்கு தண்ணீர் மட்டும் பாய்ச்சப்படுகிறது. ஏற்கெனவே, இந்த நிலங்களில் நாற்றாங்கால் அமைத்துள்ளனர். நிலத்தைப் பண்படுத்தி, நாற்று நடவு வேலைகளை தொடங்க வேண்டும். அதுவரை தண்ணீர் திறப்பில் மாறுபாடு இல்லாமல் இருக்கவேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
முதல் மடையாகிய கூடலூர் பகுதியிலேயே விவசாயப் பணிகளை தொடங்காமல், தண்ணீரை எதிர்பார்த்து நன்செய் நிலத்தை பண்படுத்தி வருகின்றனர்.
இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவைக் குறைத்தும், ஆற்றில் செல்லும் தண்ணீர் திருட்டை தடுத்தாலே முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது என்றார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/20/பெரியாறு-அணையிலிருந்து-தண்ணீர்-திறப்பு-கம்பம்-பள்ளத்தாக்கு-பகுதியில்-முதல்போக-சாகுபடி-பணிகள்-தீவிரம-2943114.html
2943113 மதுரை தேனி பெரியகுளத்தில் நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் DIN DIN Wednesday, June 20, 2018 05:27 AM +0530 பெரியகுளத்தில் மாநில நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை மதிய உணவு இடைவேளையின்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     ஆர்ப்பாட்டத்துக்கு, வட்ட பொறுப்பாளர் வீராச்சாமி தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க வட்டக் கிளைச் செயலர் கணேஷ்குமார் முன்னிலை வகித்தார்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியாற்றிய 15 ஊழியர்களை காரணமின்றி 100 கி.மீ. தொலைவில் பணியிட மாற்றம் செய்ததைக் கண்டித்தும், அவர்களுக்கு மீண்டும் அதே இடத்தில் பணி வழங்கக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     இதில், பெரியகுளம் வட்ட நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக, நெடுஞ்சாலைத் துறை பணியாளர் சங்க மாவட்டச் செயலர் எம். பரமேஸ்வரன் சிறப்புரையாற்றினார். வட்டக் கிளை இணைச் செயலர் மாரிமுத்து நன்றி கூறினார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/20/பெரியகுளத்தில்-நெடுஞ்சாலைத்-துறை-பணியாளர்கள்-ஆர்ப்பாட்டம்-2943113.html
2942377 மதுரை தேனி தனியார் பள்ளி ஆசிரியைக்கு கத்திக் குத்து DIN DIN Tuesday, June 19, 2018 01:53 AM +0530 போடியில் திங்கள்கிழமை, தனியார் பள்ளி ஆசிரியை கத்தியால் குத்தப்பட்டார்.
போடி சந்தைப்பேட்டை தெரு, கிருஸ்துவர் சந்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சங்கரநாராயன். மதுரையில் உள்ள ஒரு பள்ளியில் வேலை பார்த்து வருகிறார். இவரது  மனைவி மாலதி (42). இவர் போடி திருமலாபுரத்தில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். 
கணவர் மதுரையில் வேலைபார்ப்பதால் மாலதி, அவரது மகள் ஆகியோர் மட்டும் போடியில் வசித்து வந்துள்ளனர்.திங்கள்கிழமை காலை மாலதியின் மகள் பள்ளிக்கு சென்றுவிட்ட நிலையில், மாலதி பள்ளிக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தார். 
அப்போது 22 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் வீட்டின் கதவை தட்டியுள்ளார். மாலதி கதவை திறந்தவுடன் இளைஞர் கத்தியால் மாலதியின் இடது புருவத்திற்கும் மேலும், முதுகிலும் குத்திவிட்டு ஓடிவிட்டாராம்.    மாலதியின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  அவர் சேர்க்கப்பட்டார். 
இதுகுறித்து, போடி நகர் காவல் நிலைய ஆய்வாளர் காயத்ரி,  வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார். மாலதி ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து பெற்று தற்போது இரண்டாவது திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/19/தனியார்-பள்ளி-ஆசிரியைக்கு-கத்திக்-குத்து-2942377.html
2942376 மதுரை தேனி போடியில் ஜூன் 20 மின்தடை DIN DIN Tuesday, June 19, 2018 01:53 AM +0530 போடி பகுதியில் ஜூன் 20 ஆம் தேதி (புதன்கிழமை) மின் விநியோகம் நிறுத்தப்படும். 
  போடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் அன்றைய தினம் காலை 9.45 மணி முதல் பிற்பகல் 4.45 மணி வரை போடி, போ.அணைக்கரைப்பட்டி, போ.மீனாட்சிபுரம், குரங்கனி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மின் பகிர்மானக்கழக தேனி செயற்பொறியாளர் சி.பாலமுருகன் இதனைத் தெரிவித்தார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/19/போடியில்-ஜூன்-20-மின்தடை-2942376.html
2942375 மதுரை தேனி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் முற்றுகை: 75 பேர் கைது DIN DIN Tuesday, June 19, 2018 01:52 AM +0530 தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்  கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 75 பேரை போலீஸார் கைது செய்தனர்.
  சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் எம்.குருசாமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் சி.முருகன், செயலர் ஜெயபாண்டி, பொருளாளர் சுப்பிரமணி, சி.ஐ.டி.யு.,மாவட்டச் செயலர் எம்.ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் குடிநீர் தொட்டி ஆபரேட்டர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை வழங்க அரசாணை பிறப்பிக்க வேண்டும், குடிநீர் தொட்டி ஆபரேட்டர்களுக்கு ரூ.11,075, துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.9,725 மாதச் சம்பளம் வழங்க வேண்டும், சம்பள உயர்வு நிலுவைத் தொகை வழங்க வேண்டும், துப்புரவு பணியாளர்கள் மற்றும் குடிநீர் தொட்டி ஆபரேட்டர்களை மருத்துக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடைபெறது. முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 75 பேரை அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக தேனி காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/19/தேனி-மாவட்ட-ஆட்சியர்-அலுவலகத்தை-ஊராட்சி-துப்புரவு-பணியாளர்கள்-முற்றுகை-75-பேர்-கைது-2942375.html
2942374 மதுரை தேனி மின்னாக்கி பழுதால் லோயர்கேம்ப் மின் நிலையத்தில் உற்பத்தி பாதிப்பு DIN DIN Tuesday, June 19, 2018 01:52 AM +0530 தேனி மாவட்டம் லோயர் கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் மின்னாக்கி பழுது காரணமாக  மின்சார உற்பத்தி  94 மெகா வாட் ஆக குறைந்தது.
    லோயர்கேம்ப்பில் நான்கு மின்னாக்கிகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். கடந்த சில நாள்களாக  மின்சார உற்பத்தி 126 மெகாவாட் வரை இருந்தது. கடந்த சனிக்கிழமை புதிதாக அமைக்கப்பட்டுள்ள நான்காவது மின்னாக்கி திடீரென பழுதடைந்தது. 
  இதனால் மற்ற மூன்று மின்னாக்கிகள் மட்டும் இயங்கின. இதற்கிடையில் ஞாயிற்றுக்கிழமை கம்பம் பள்ளத்தாக்கு பகுதி, முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்படுவதை முன்னிட்டு அணையிலிருந்து மின் நிலையத்துக்கு வரும் தண்ணீர்  ஞாயிற்றுக்கிழமை காலையில் முற்றிலுமாக அடைக்கப்பட்டது. இதனால் சுமார் ஒரு மணிநேரம் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டது. 
  தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி தொடங்கியவுடன் மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டு மூன்று மின்னாக்கிகள் மட்டும் செயல்பட்டன. இவற்றில் தலா 26, 26, 42, என மொத்தம் 94  மெகாவாட் மின்சாரம் உற்பத்தி நடைபெற்று வருகிறது. முன்பு நான்கு மின்னாக்கிகள் மூலம் 126 மெகாவாட் வரை, மின்சார உற்பத்தி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.  புதிதாக உள்ள நான்காவது மின்னாக்கியையும், மின்நிலைய பொறியாளர்கள் சரி செய்து, கூடுதலாக மின்சார உற்பத்தி செய்யும், நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/19/மின்னாக்கி-பழுதால்-லோயர்கேம்ப்-மின்-நிலையத்தில்-உற்பத்தி-பாதிப்பு-2942374.html
2942373 மதுரை தேனி தேனியில் காசநோய் கண்டறிய நடமாடும் வாகனம் தொடக்கம் DIN DIN Tuesday, June 19, 2018 01:52 AM +0530 தேனி மாவட்டத்தில் மருத்துவ நலப் பணிகள் துறை சார்பில் நடமாடும் ஆய்வக வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் முகாம் திங்கள்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது. இந்த முகாம் ஜூன் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காசநோய் கண்டறியும் நவீன நடமாடும் ஆய்வக வாகனம் மூலம், காசநோய் கண்டறியும் முகாமை தொடங்கி வைத்து ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் கூறியது: 
பொதுமக்களுக்கு காசநோய் பாதிப்பு உள்ளதை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்காக நடமாடும் ஆய்வக வாகனம் மூலம் திங்கள்கிழமை போடி ஒன்றியம் டொம்புச்சேரியிலும், இன்று (ஜூன் 19) சின்னமனூர் ஒன்றியம் ஓடைப்பட்டி, உத்தமபாளையம் ஒன்றியம் கோம்பை ஆகிய இடங்களிலும், ஜூன் 20-ஆம் தேதி பெரியகுளம் ஒன்றியம் தேவதானப்பட்டியிலும், ஜூன் 21-ஆம் தேதி கம்பம் ஒன்றியம் கூடலூரிலும், ஜூன் 22-ஆம் தேதி ஆண்டிபட்டி ஒன்றியம் எம்.சுப்புலாபுரம், க.மயிலை ஒன்றியம் கண்டமனூர் ஆகிய இடங்களிலும், ஜூன் 23-ஆம் தேதி தேனி ஒன்றியம் வீரபாண்டியிலும் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு காசநோய் பாதிப்பு பரிசோதனை செய்து சிகிச்சை பெறலாம் என்றார். மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநர் சரஸ்வதி, காசநோய் பிரிவு துணை இயக்குநர் முருகன், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவ காசநோய் பிரிவு மருத்துவ அலுவலர் பிரவீண்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/19/தேனியில்-காசநோய்-கண்டறிய-நடமாடும்-வாகனம்-தொடக்கம்-2942373.html
2942372 மதுரை தேனி தேனியில் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து இளைஞர் சாவு DIN DIN Tuesday, June 19, 2018 01:51 AM +0530 தேனியில் ஞாயிற்றுக்கிழமை இரவு இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து இளைஞர் உயிரிழந்தார்.
தேனி, கருவேல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் முருகன் மகன் அருண்குமார் (19), தேனி காவலர் பயிற்சி நிலைய பயிற்சிக் காவலர்கள் கமுதியைச் சேர்ந்த திருமுருகன் (26), ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் (23). இவர்கள் தேனி நகராட்சி கர்னல் பென்னிகுவிக் பேருந்து நிலையத்தில் இருந்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் செல்லும் சாலையில் நடந்து சென்றுள்ளனர்.
அப்போது, இவர்களுக்கு பின்னால் தேனி கருவேல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் தினேஷ் (24) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், கட்டுப்பாட்டை இழந்து அருண்குமார், திருமுருகன், மற்றொரு திருமுருகன் ஆகியோர் மீது மோதி சாலையில் விழுந்தது. இதில், நிலைதடுமாறி விழுந்து பலத்த காயமடைந்த தினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அருண்குமார், திருமுருகன் மற்றொரு திருமுருகன் ஆகியோர் லேசான காயமடைந்தனர். விபத்து குறித்து தேனி காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/19/தேனியில்-இருசக்கர-வாகனத்திலிருந்து-தவறி-விழுந்து-இளைஞர்-சாவு-2942372.html
2942371 மதுரை தேனி தேனி ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற விவசாயி கைது DIN DIN Tuesday, June 19, 2018 01:51 AM +0530 தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் விவசாய நிலத்தை அரசு  கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை குடும்பத்துடன் சேர்ந்து தீக்குளிக்க முயன்ற விவசாயியை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
 ஆண்டிபட்டி வட்டாரம், மேக்கிழார்பட்டியைச் சேர்ந்த சங்கையன் மகன் பால்சாமி(70). இவருக்கு ஆண்டிபட்டி வருவாய் கிராமத்தில் பூர்வீகமாக 2.52 ஏக்கர் விவசாய நிலம் உள்ளதாம். இந்த நிலத்தில், பால்சாமி விவசாயம் செய்து வருவதாக கூறப்படுகிறது. 
   இந்த நிலையில், பால்சாமிக்குச் சொந்தமான நிலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நிலங்கள், நில உரிமையாளர்களால் ஆதி திராவிடர் நலத் துறைக்கு வழங்கப்பட்டு விட்டதாக கூறி, வருவாய் துறை, நில அளவைத் துறை மற்றும் ஆதி திராவிடர் நலத் துறை அதிகாரிகள் நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தனக்கு பூர்வீகமாக சொந்தமான நிலத்தை தனது ஒப்புதலின்றி அரசு கையகப்படுத்துவதற்கு முயற்சிப்பதாகவும், இதனால் தனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவித்து தனது மனைவி ராமுத்தாய், மகன் செல்வராஜ், மருமகள் நாகரத்தினம், மகள் சந்திரகலா, பேரன் ஆதிகேசவன் ஆகியோருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த பால்சாமி, அங்கு தனது உடலில் மண்ணெண்ணை ஊற்றிக் கொண்டு தீக் குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தேனி காவல் நிலைய போலீஸார் பால்சாமியை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/19/தேனி-ஆட்சியர்-அலுவலகம்-முன்-தீக்குளிக்க-முயன்ற-விவசாயி-கைது-2942371.html
2942370 மதுரை தேனி உத்தமபாளையம் அருகே விபத்து: கூட்டுறவு வங்கி  நகை மதிப்பீட்டாளர் சாவு DIN DIN Tuesday, June 19, 2018 01:51 AM +0530 உத்தமபாளையம் அருகே கோவிந்தன்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை இரவு இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில்  கூட்டுறவு வங்கியின் நகை மதிப்பீட்டாளர் உயிரிழந்தார்.
    உத்தமபாளையம் அடுத்த உ.அம்மாபட்டியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பூமிநாதன்(36). இவர் தேனி கூட்டுறவு வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றினார். இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு கம்பம் அடுத்த சுருளிப்பட்டிக்கு மகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். உத்தமபாளையம் அடுத்த கோவிந்தன்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது தேனியை நோக்கி சென்ற லாரி மோதியது. இதில் பூமிநாதன் பலத்த காயமடைந்து சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகள்  காயங்களுடன் உயிர் தப்பினர்.     இது குறித்து உத்தமபாளையம் காவல் சார்பு ஆய்வாளர் பிருந்தா வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுநரான ஆண்டிபட்டி கதிர்நரசிங்காபுரத்தை சேர்ந்த முருகானந்தனிடம்   விசாரித்து வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/19/உத்தமபாளையம்-அருகே-விபத்து-கூட்டுறவு-வங்கி--நகை-மதிப்பீட்டாளர்-சாவு-2942370.html
2942369 மதுரை தேனி தேனியில் மருத்துவருக்கு கொலை மிரட்டல்: பெண் கைது DIN DIN Tuesday, June 19, 2018 01:50 AM +0530 தேனி அல்லிநகரத்தில் மருத்துவருக்கு செல்லிடபேசி மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக அல்லிநகரத்தைச் சேர்ந்த பெண்ணை திங்கள்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
  தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்த மருத்துவர் பிரவீன்குமார். அல்லிநகரத்தில் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவரது தந்தை முருகேசன் என்பவர் ஆர்.ஹெச்.எம்.பி., படித்து விட்டு அல்லிநகரம்,  பகவதியம்மன்கோயில் தெருவில் கிளினிக்  நடத்தி வருகிறார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் அல்லிநகரத்தைச் சேர்ந்த பழனிச்சாமி மனைவி ரேவதி (28) என்பவர், முருகேசனிடம் சிகிச்சை பெற வந்தபோது,  அவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக அவதூறு பரப்பி வந்தாராம். இது குறித்து அல்லிநகரம் காவல் நிலையத்தில் பிரவீன்குமார் புகார் அளித்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், முன் விரோதம் காரணமாக ரேவதி தன்னை செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு தரக்குறைவாக பேசி  கொலை மிரட்டல் விடுத்ததாக, அல்லிநகரம் காவல் நிலையத்தில் பிரவீன்குமார் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் ரேவதி மீது போலீஸார் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/19/தேனியில்-மருத்துவருக்கு-கொலை-மிரட்டல்-பெண்-கைது-2942369.html
2942368 மதுரை தேனி உத்தமபாளையத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டாத  பொதுமக்கள்! DIN DIN Tuesday, June 19, 2018 01:50 AM +0530 தேனி மாவட்டம் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமைகளில் நடைபெறும்  மக்கள் குறை தீர்க்கும் நாளில் கலந்துகொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டாததால்  பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
    உத்தமபாளையம், போடி, ஆண்டிபட்டி, பெரியகுளம் மற்றும் தேனி ஆகிய வட்டாரங்களிலிருந்து திங்கள் கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்களுடைய குறைகள் மற்றும் தேவைகளை தெரிவிக்க குவிந்து வந்தனர்.  அதிளவில் கூட்டம் வருவதை தவிர்க்க மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் போடி, உத்தமபாளையம் வட்டாரத்தை சேர்ந்தவர்கள் உத்தமபாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், பெரியகுளம் வட்டாரத்தை   சேர்ந்தவர்கள்  அங்குள்ள கோட்டாட்சியர் அலுவலகத்திலும், தேனி மற்றும் ஆண்டிபட்டி வட்டாரத்தை சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாளில் கலந்துகொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்  என  கடந்த மாதம் அறிவித்தார். 
  ஆனால், உத்தமபாளையம் கோட்டாட்சியர் அலுவகத்தில் நடைபெறும் இக்கூட்டத்திற்கு போடி, உத்தமபாளையம்  பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறையை தெரிவிக்க முன்வருதில்லை. மாறாக இதே பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பழைய நிலையிலே தொடர்ந்து  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனுக் கொடுக்கின்றனர். இதனால்   உத்தமபாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில்   உத்தமபாளையம்  மற்றும் போடி  வட்டாரத்திலுள்ள அனைத்துறை  அலுவலர்கள்  கலந்து கொண்ட நிலையில்  24 மனுக்களே வந்துள்ளன.  இதனால் அதிகாரிகள் பல மணி நேரத்தை வீணாக    கழிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். 
 விழிப்புணர்வு தேவை:   நீண்ட தொலைவில் இருந்துவரும்   பொதுமக்களின்  அலைச்சல் மற்றும் நேரத்தை  குறைக்கும் வகையிலே உத்தமபாளையம் உள்பட மூன்று இடங்களில் மக்கள் குறை தீர்க்கும் நாள்   நடைபெறுகிறது. அதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கும்  என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படுகிறதோ அதே நடவடிக்கை தான் தற்போது மற்ற  இடங்களில் பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற  விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/19/உத்தமபாளையத்தில்-மக்கள்-குறைதீர்-கூட்டத்தில்-கலந்து-கொள்ள-ஆர்வம்-காட்டாத--பொதுமக்கள்-2942368.html
2942367 மதுரை தேனி சுருளிப்பட்டி அரசு ஆரம்பப் பள்ளியில் டார்வின் அறிவியல் மன்றம் தொடக்கம் DIN DIN Tuesday, June 19, 2018 01:47 AM +0530 தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளிப்பட்டி அரசு கள்ளர் ஆரம்பப் பள்ளியில் டார்வின் அறிவியல் மன்றம்  திங்கள்கிழமை  துவங்கப்பட்டது.
  தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிபட்டி அரசு கள்ளர் ஆரம்ப பள்ளியில் மாணவ, மாணவியர்களின் அறிவியல் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் விதமாக டார்வின் அறிவியல் மன்றம் தொடங்கப்பட்டது. துவக்க நிகழ்ச்சிக்கு பள்ளித்தலைமை ஆசிரியை மூ.மேகலா தலைமை வகித்தார். மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி அதிகாரமிக்க விஞ்ஞான் பிரச்சார் அமைப்பின் கீழ் இயங்கும் அகில இந்திய அளவில் உள்ள அறிவியல் மன்றங்களின் கூட்டமைப்பான விப்நெட்- ன் பதிவுச் சான்றிதழை அறிவியல் மன்ற ஒருங்கிணைப்பாளர் தே.சுந்தர் தலைமை ஆசிரியரிடம் வழங்கினார். 
மேலும் முதல் நிகழ்வாக மடிப்பு நுண்ணோக்கி மூலம் சிற்றுயிர்களைப் பார்க்கச் செய்து குழந்தைகளுக்கு விளக்கமளித்தார். 
 எறும்பின் உருவத்தை ஏறக்குறைய 100 மடங்கு பெரிதாக்கிக் காட்டிய மடிப்பு நுண்ணோக்கியை குழந்தைகள் வியப்புடன் பார்த்து மகிழ்ந்தனர்.  என்ன பூச்சி வைக்கப்பட்டுள்ளது என்பதை முதலில் கூறவில்லை.  குழந்தைகள் பல பூச்சிகளின் பெயர்களைக் கூறினர். இறுதியாக விடையைக் கூறும் போது ஆச்சரியத்தில் மூழ்கினர். 
  சிறியதாக பார்த்த உயிரினத்தை உருப்பெருக்கியின் மூலம் மிகவும் பெரிதாகப் பார்த்து வியப்படைந்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/19/சுருளிப்பட்டி-அரசு-ஆரம்பப்-பள்ளியில்-டார்வின்-அறிவியல்-மன்றம்-தொடக்கம்-2942367.html
2941660 மதுரை தேனி பழனியில் அடுத்தடுத்து கார் கண்ணாடிகள் உடைப்பு DIN DIN Monday, June 18, 2018 01:22 AM +0530 பழனியில் ஞாயிற்றுக்கிழமை இரவு, அடுத்தடுத்து சுமார் பத்து கார்களின் கண்ணாடிகளை மர்ம நபர்கள் உடைத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
 பழனியில் ஞாயிற்றுக்கிழமை இரவு மர்மநபர்கள் சிலர் இருசக்கர வாகனத்தில் சண்முகபுரம், அண்ணாநகர், ஆர்.எப்.சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கார்களின் கண்ணாடிகள் மீது கற்களை வீசி உடைத்துள்ளனர்.  சண்முகபுரத்தில் சென்று கொண்டிருந்த ஒரு கார் மீது கல் வீசியதில் அதில் பயணித்தவர்கள் காயமடைந்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு பழனி டிஎஸ்பி., முத்துராஜன், போலீஸார் வந்து விசாரணை மேற்கொண்டனர்.  
 குடிபோதையில் இதுபோன்ற தகாத செயல்களில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பழனி நகரில் உள்ள 20-க்கும் மேற்பட்ட காவல்துறை சிசிடிவி கேமராக்கள் பழுதடைந்துள்ளன. இதனால் கல்வீசிய நபர்களை கண்டறிய வீடுகள், தனியார் நிறுவனங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து போலீஸார் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/18/பழனியில்-அடுத்தடுத்து-கார்-கண்ணாடிகள்-உடைப்பு-2941660.html
2941659 மதுரை தேனி "ஆண்டிபட்டி தொகுதியில் இடைத்தேர்தல் வந்தால் மீண்டும் போட்டியிட மாட்டேன்' DIN DIN Monday, June 18, 2018 01:22 AM +0530 ஆண்டிபட்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தால் போட்டியிட மாட்டேன் என தகுதிநீக்கம் செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினரும்,  டிடிவி தினகரன் ஆதரவாளருமான தங்க தமிழ்ச்செல்வன் கூறினார். 
இதுதொடர்பாக தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள கடமலைக்குண்டுவில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது:
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு மீது ஏற்பட்ட அதிருப்தியால்தான்  வழக்கை வாபஸ் பெறும் முடிவை எடுத்துள்ளேன். எந்த தவறும் செய்யாத எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்கள் மத்திய, மாநில அரசின் சொல்படிதான் செயல்படுகின்றன.  ஆண்டிபட்டி தொகுதியில் மீண்டும் தேர்தல் நடத்தி, எம்எல்ஏவை தேர்வு செய்யுங்கள். 
ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏக்கள் மனம் திருந்தி வந்ததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறுகிறார். 
இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் மனம் திருந்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆண்டிபட்டி தொகுதிக்கு உள்பட்ட கிராமங்களுக்கு சென்றபோது, என்னுடைய முடிவு சரியானது என மக்கள் பாராட்டுகின்றனர். தங்கள் தொகுதிக்கு உடனடியாக எம்.எல்.ஏ. வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர். 
தொகுதிக்கு உள்பட்ட கிராமங்களின் பிரச்னைகளை தீர்க்க, விரைவில் இடைத்தேர்தல் நடத்தி எம்எல்ஏவை தேர்வு செய்ய வேண்டும். நான் மீண்டும் தேர்தலில் நிற்க விரும்பவில்லை. 
இந்த ஆட்சியில் நான் எம்எல்ஏவாக ஆகி, எந்த காரியமும் சாதிக்க முடியாது. எதுவும் நடக்காது. வழக்கை திரும்பப் பெறுவது குறித்து திங்கள்கிழமை வழக்குரைஞர்களிடம் ஆலோசனை நடத்திவிட்டு முடிவை சொல்கிறேன் என்றார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/18/ஆண்டிபட்டி-தொகுதியில்-இடைத்தேர்தல்-வந்தால்-மீண்டும்-போட்டியிட-மாட்டேன்-2941659.html
2941658 மதுரை தேனி தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே ஹைவேவிஸ் மலையில் 500 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து: 34 பேர் காயம் DIN DIN Monday, June 18, 2018 01:21 AM +0530 தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே ஹைவேவிஸ் மலைச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா வேன் 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 34 பேர் காயமடைந்தனர்.
வெளி மாவட்டங்களில் வசிக்கும் உத்தமபாளையம் பகுதி இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்தனர். அவர்கள், தனித் தனி வாகனங்களில் ஞாயிற்றுக்கிழமை ஹைவேவிஸ், மேகமலை பகுதிக்கு சுற்றுலா சென்றனர். அங்கு பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு, மாலையில் வீடு திரும்பினர். அப்போது அடுக்கம்பாறை (3000 அடி உயரம்) பகுதியில் வந்தபோது, ஒரு சுற்றுலா வேன் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. அந்த வேன் சுமார் 500 அடியில் இருந்த  பாறையின் மீது மோதி நின்றது.
இதுகுறித்த தகவலின்பேரில், சின்னமனூர், உத்தமபாளையம் பகுதி அரசு மருத்துவமனைகளில் இருந்து சுமார் 10 ஆம்புலன்ஸ் வாகனங்கள் அங்கு விரைந்து வந்தன. மேலும், ஹைவேவிஸ் போலீஸார், சின்னமனூர் வனத்துறையினர், அப்பகுதி மக்கள் இணைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில், உத்தமபாளையம் மீரான் மகன் முகமது அப்துல் (11), அஜ்மல்கான் மகன் ரியாஸ் அகமது (14), சாதிக் அகமது மனைவி மரியம் (38), மீரான் (40), முத்தலீப் மனைவி கையர் நிஷா (65), மதுரை பீர்முகமது (65), உடுமலைப்பேட்டை சையது மனைவி, நிஷா (43), மணப்பாறை முகமது இப்ராஹிம் மகன் முகமது ரியாஸ் (15) உள்பட 34 பேர் காயத்துடன் மீட்கப்பட்டனர்.
 அவர்கள், சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து ஹைவேவிஸ் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
விழிப்புணர்வு தேவை: ஹைவேவிஸ் மலைச்சாலை பல இடங்களில் செங்குத்தாக இருக்கும். இதனால் புதிதாக வரும் வாகன ஓட்டிகளுக்கு பிற மலைப்பாதைகளான கொடைக்கானல், ஊட்டி போல் இல்லாமல் மிகவும் ஆபத்தான பகுதியாக அமைந்திருக்கும். எனவே, ஹைவேவிஸ் மலைச்சாலையில் செல்லும் சுற்றுலா வேன் ஓட்டுநர்கள் மிகவும் கவனமுடன் வாகனங்களை இயக்க  விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
மேலும், ஹைவேவிஸ் செல்லும் சுற்றுலா வாகனங்கள் மாலை 6 மணிக்குள் கீழ்பகுதிக்கு வந்து விட வேண்டும் என்பதால் சுற்றுலா சென்று திரும்பும் வாகனங்கள் வேகமாக வருகின்றன. இதனாலும், விபத்துகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, ஹைவேவிஸ் மலைக்கு சுற்றுலா வரும் வாகனங்களுக்கு வனத்துறையினர் இதுபோன்ற கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/18/தேனி-மாவட்டம்-சின்னமனூர்-அருகே-ஹைவேவிஸ்-மலையில்-500-அடி-பள்ளத்தில்-வேன்-கவிழ்ந்து-விபத்து-34-பேர்-2941658.html
2941657 மதுரை தேனி அனுமதியின்றி செம்மண் அள்ளிய பொக்லைன் இயந்திரம் பறிமுதல் DIN DIN Monday, June 18, 2018 01:20 AM +0530 பெரியகுளம் பகுதியில் அனுமதியின்றி செம்மண் அள்ளுவதற்கு பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரத்தை போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
 பெரியகுளம், தென்கரை போலீஸார் கைலாசபட்டி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கைலாசபட்டியைச் சேர்ந்த சேகரன், அதே பகுதியைச் சேர்ந்த சதீஸ், வெற்றிசெல்வம், முத்து ஆகியோர் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பெரியகுளம் புறவழிச்சாலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் இரு டிராக்டர்களில் செம்மண் எடுத்துக் கொண்டிருந்தனர். 
இதனைக் கண்ட போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்றனர். போலீஸாரை பார்த்ததும் செம்மண் அள்ளிக்கொண்டிருந்தவர்கள் டிராக்டர்களில் தப்பிச் சென்றுவிட்டனராம். இதையடுத்து, போலீஸார் பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்து, தப்பியோடியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/18/அனுமதியின்றி-செம்மண்-அள்ளிய-பொக்லைன்-இயந்திரம்-பறிமுதல்-2941657.html
2941656 மதுரை தேனி அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு: ஒருவர் கைது DIN DIN Monday, June 18, 2018 01:20 AM +0530 பெரியகுளம் அருகே அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்தவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 தேவதானப்பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ் (43). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் பெரியகுளம் கிளையில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் சனிக்கிழமை மாலை ஆண்டிபட்டி - பெரியகுளம் சாலையில் பேருந்தை ஒட்டி வந்தார். அப்போது மேல்மங்கலம் அருகே செல்லும் போது பெரியகுளத்தை சேர்ந்த பசீர்அகமது (18) பேருந்தில் ஏறி தகராறு செய்தார். பின்னர் கீழே இறங்கிய அவர் மதுபாட்டிலால் பேருந்தின் பின்பக்க கண்ணாடியை உடைத்தாராம். 
இதுகுறித்து ஜெயமங்கலம் காவல்நிலையத்தில் சுரேஷ் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து பசீர்அகமதுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/18/அரசுப்-பேருந்து-கண்ணாடி-உடைப்பு-ஒருவர்-கைது-2941656.html
2941655 மதுரை தேனி மருத்துவ உதவியாளர் பணிக்கு இன்று நேர்முகத் தேர்வு DIN DIN Monday, June 18, 2018 01:20 AM +0530 தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பணிக்கு திங்கள்கிழமை (ஜூன் 18) காலை 10 மணிக்கு நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது.
இப்பணிக்கு பிளஸ் 2 தேர்ச்சி, ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.பார்ம்., பி.எஸ்சி., நர்சிங், விலங்கியல், தாவரவியல், உயிர் வேதியியல், மைக்ரோ பயாலஜி, பிளான்ட் பயாலஜி ஆகிய ஏதேனும் ஒரு படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க  வேண்டும். 20 முதல் 30 வயதுக்கு உள்பட்ட ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம்.இப்பணிக்கு மாதம் ரூ.11,860 சம்பளமாக வழங்கப்படும். பணி குறித்த மேலும் விவரங்களுக்கு 98403 65462 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும், 044-8888060 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
தகுதியுடையவர்கள் உரிய சான்றிதழ்களுடன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்ட அரங்கில் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம் என 108 ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/18/மருத்துவ-உதவியாளர்-பணிக்கு-இன்று-நேர்முகத்-தேர்வு-2941655.html
2941654 மதுரை தேனி உத்தமபாளையம் அங்காள ஈஸ்வரி கோயிலில் ஜூன் 22இல் கும்பாபிஷேகம் DIN DIN Monday, June 18, 2018 01:19 AM +0530 தேனி மாவட்டம் உத்தமபாளையம் அங்காள ஈஸ்வரி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் 22 ஆம் தேதி நடைபெறுகிறது. 
  70 ஆண்டுகள் பழைமைவாய்ந்த இக்கோயிலில் உத்தமபாளையம் நகர் பகுதியை சேர்ந்த ஆன்மிக பெரியோர், பக்தர்கள் கோயிலை புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என இந்து சமய அறநிலைத்துறையை வலியுறுத்தி வந்தனர். அதன்பேரில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 22) கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. இதற்காக கோயில் செயல் அலுவலர் செந்தில் குமார், பக்தர்கள், பொதுமக்கள் இணைந்து, ஞாயிற்றுக்கிழமை முகூர்த்தக்கால் ஊன்றினர். தொடர்ந்து, புதன்கிழமை மாலை கணபதி பூஜையும், வியாழக்கிழமை அணுக்கிரஹா கலச பூஜை, பிம்ப சுத்தி கலச பூஜைகளும்  நடைபெற உள்ளன.
வெள்ளிக்கிழமை காலை 5.30 மணி முதல் கணபதி ஹோமம், அதிவாசத்தில் பூஜை, பிரசாத பூஜை, மணடல பூஜைகள் நடைபெறுகின்றன. அன்று காலை 10 மணி அளவில் மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/18/உத்தமபாளையம்-அங்காள-ஈஸ்வரி-கோயிலில்-ஜூன்-22இல்-கும்பாபிஷேகம்-2941654.html
2941653 மதுரை தேனி தேனியில் நாளை மின்நுகர்வோர்  குறைதீர் கூட்டம் DIN DIN Monday, June 18, 2018 01:19 AM +0530 தேனி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 19)  காலை 11 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
தேனி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தேனி, போடி, ராசிங்காபுரம் ஆகிய துணை மின் நிலையங்கள் மூலம் மின் விநியோகம் பெறும் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மின் விநியோகத்தில் உள்ள குறைபாடு, புதிய மின் இணைப்பு பெறுவதில் உள்ள சிரமம் ஆகியவை குறித்து மனு அளித்து தீர்வு பெறலாம்.
 இத்தகவலை தேனி மின்வாரிய செயற்பொறியாளர் சி.பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/18/தேனியில்-நாளை-மின்நுகர்வோர்--குறைதீர்-கூட்டம்-2941653.html
2941257 மதுரை தேனி பெரியகுளம் வங்கியில் போலி நகை அடகு வைத்து ரூ.4.50 லட்சம் மோசடி DIN DIN Sunday, June 17, 2018 01:26 AM +0530 பெரியகுளத்தில் உள்ள வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.4.50 லட்சம் பணம் மோசடி செய்ததாக வெள்ளிக்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரியகுளத்தில் உள்ள வடகரையில் தேசியமயமாக்கப்பட்ட பாரத ஸ்டேட் வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு போலி நகைகள் அடமானமாக வைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து வங்கி மேலாளர் அஜய் சீனிவாசன் வங்கியில் அடமானமாக வைக்கப்பட்டிருந்த நகைகளை ஆய்வு செய்தார். அப்போது பெரியகுளத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் 239 கிராம் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ 4.50 லட்சம் விவசாய கடனாக பெற்றது தெரியவந்தது. இதனையடுத்து வங்கி மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் பெரியகுளம் போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/17/பெரியகுளம்-வங்கியில்-போலி-நகை-அடகு-வைத்து-ரூ450-லட்சம்-மோசடி-2941257.html
2941256 மதுரை தேனி மணல் கடத்திய லாரிகள் உள்பட 3 வாகனங்கள் பறிமுதல் DIN DIN Sunday, June 17, 2018 01:26 AM +0530 போடி அருகே வெள்ளிக்கிழமை மாலை அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற லாரிகள் மற்றும் டிராக்டரை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.
போடி அருகே பாலார்பட்டி பகுதியில் மணல் கடத்துவதாக கிடைத்த தகவலையடுத்து வட்டாட்சியர் கே.ஆர்த்தி, ராசிங்காபுரம் வருவாய் ஆய்வாளர் சுந்தரராஜ், கூழையனூர் கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் ஆகியோர் இப்பகுதியில் கண்காணித்தனர். அப்போது அங்கு வந்த இரண்டு டிப்பர் லாரிகள், ஒரு டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர்.
இவற்றில் மணல் கொண்டு செல்வது தெரிந்தது. ஆனால் அதற்கான அனுமதிச் சீட்டு பெறப்படவில்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து 3 வாகனங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/17/மணல்-கடத்திய-லாரிகள்-உள்பட-3-வாகனங்கள்-பறிமுதல்-2941256.html
2941255 மதுரை தேனி தேனி மாவட்டத்தில் ரமலான் சிறப்புத் தொழுகை DIN DIN Sunday, June 17, 2018 01:26 AM +0530 தேனி, உத்தமபாளையம், சின்னமனூர் பகுதிகளில் சனிக்கிழமை ரமலான் திருநாளைமுன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை நடத்தினர்.
தமிழகத்தில் இஸ்லாமியர்கள் சனிக்கிழமை ரமலான் திருநாளை வெகு சிறப்பாகக் கொண்டாடினர். இதையொட்டி உத்தமபாளையம், சின்னமனூர் கம்பம், கூடலூர், குமுளி, காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி உள்ளிட்டப் பகுதிகளில் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன.
தேனி: அல்லிநகரத்தில் இருந்து பெரியகுளம் சாலை வழியாக ஜமாத் தலைவர் ஜியாவுதீன் தலைமையில் ஊர்வலமாகச் சென்று, பள்ளிவாசல் தெருவில் உள்ள முகைதீன் ஆண்டவர் பள்ளி வாசலில் சிறப்புத் தொழுகை நடத்தினர். தேனி, பங்களாமேடு பகுதியில் இருந்து மதுரை சாலை வழியாக ஜமாத் தலைவர் சர்புதீன் தலைமையில் ஊர்வலமாகச் சென்று, சுப்பன்தெருவில் உள்ள புதுப் பள்ளிவாசலில் சிறப்புத் தொழுகை நடத்தினர்.
உத்தமபாளையம்: உத்தமபாளையத்தில் களிமேட்டுப்பட்டி, பாதர்கான் பாளையம், கிழக்கு முஸ்லிம் தெரு, பி.டி.ஆர் காலனி, இந்திரா காலனி மற்றும் வடக்குத் தெருவிலுள்ள பெரிய பள்ளி வாசல் உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட இடங்களில் காலை முதலே சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து நீதிமன்றம் அருகே அமைக்கப்பட்ட ஈத்கா மைதானத்தில் காலை 10 மணி அளவில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் சுமார் 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கம்பம் பள்ளத்தாக்கு ஜமாத் கமிட்டி தலைவர் எம்.தர்வேஸ் முகைதீன் தலைமையில் பெரியபள்ளி வாசலிருந்து வடக்கு தெரு, கோட்டை மேடு, கிராமச்சாவடி, புறவழிச்சாலை, பி.டி.ஆர் காலனி வழியாக சிறப்பு தொழுகை நடைபெறும் ஈத்கா மைதானம் வரையில் ஊர்வலமாக சென்றனர். இதையொட்டி உத்தமபாளையத்தில் நுற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சின்னமனூர்: அதே போல் சின்னமனூர் கருங்கட்டான் குளம் பெரியபள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். மேலும் கோம்பை, குச்சனூர், சீலையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் ரமலான் திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
போடி: ரமலான் பண்டிகை போடியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு போடி பகுதியை சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் காட்டுப் பள்ளிவாசலில் தொடங்கி டி.வி.கே.கே.நகர், கீழத்தெரு வழியாக பெரிய பள்ளிவாசல் வரை பேரணியாகச் சென்றனர். பின்னர் புதூர் காட்டுப்பள்ளிவாசலில் நடைபெற்ற கூட்டு சிறப்புத் தொழுகையில் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல், காதர் அவுலியா தர்க்கா, ஜூம்மா பள்ளிவாசல், மதினா பள்ளிவாசல், காட்டுப் பள்ளிவாசல் ஆகியவற்றை சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் ஒருவருக்கு ஒருவர் ரமலான் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் பரிமாறிக் கொண்டனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் புத்தாடை அணிந்து, இனிப்பு உள்ளிட்ட உணவுகளை ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்ந்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/17/தேனி-மாவட்டத்தில்-ரமலான்-சிறப்புத்-தொழுகை-2941255.html
2941253 மதுரை தேனி தேவாரத்தில் நாளை மின்தடை DIN DIN Sunday, June 17, 2018 01:25 AM +0530 தேவாரம் துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை (ஜூன் 18) மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது.
எனவே, அன்றைய தினம் காலை 9.45 மணி முதல் பிற்பகல் 4.45 மணி வரை தேவாரம், மீனாட்சிபுரம், மூணாண்டிபட்டி, போ.ரங்கநாதபுரம், லட்சுமிநாயக்கன்பட்டி, தே.சிந்தலைச்சேரி, பொம்மிநாயக்கன்பட்டி, தம்மிநாயக்கன்பட்டி, தே.சொக்கலிங்கபுரம், செல்லாயிபுரம், மேட்டுப்பட்டி, கிருஷ்ணம்பட்டி, ஓவுலாபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தேனி மின் வாரிய செயற்பொறியாளர் சி.பாலமுருகன் தெரிவித்தார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/jun/17/தேவாரத்தில்-நாளை-மின்தடை-2941253.html