Dinamani - மதுரை - http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3007424 மதுரை மதுரை செலாவணி முறிச் சட்டத்தின் கீழ் விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்வதை ரத்து செய்யக்கோரி மனு: மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு DIN DIN Tuesday, September 25, 2018 08:34 AM +0530 கடன் பெற்ற விவசாயிகளுக்கு எதிராக செலாவணி முறிச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்வதை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக, மத்திய அரசு பதிலளிக்குமாறு, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
 தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பி.அய்யாக்கண்ணு, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
 தமிழகத்தில் உள்ள தேசிய, தனியார் வங்கிகளில் விவசாயிகள் தங்களுக்கு தேவையான விவசாய உபகரணங்கள் வாங்கவும், விவசாயம் செய்வதற்கும் கடன் பெறுகிறார்கள். இதற்காக விவசாயிகளிடம் இருந்து வெற்று காசோலைகளை வங்கிகள் பெற்றுக் கொள்கின்றன. விவசாயிகள் தாங்கள் வாங்கிய கடனை பல நேரங்களில் உரிய நேரத்தில் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதையடுத்து அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 
 சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். சமரச பேச்சு நடத்தலாம். ஆனால் கடன்தொகைக்காக விவசாயிகளை வங்கிகள், பல்வேறு வகையில் தொந்தரவு செய்து வருகின்றன. குறிப்பாக, கடந்த 2015 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட செலாவணி முறிச் சட்டத்தின்படி, தமிழகத்தில் உள்ள வங்கியில் பெறப்பட்ட கடனுக்கு, கொல்கத்தா நீதிமன்றத்தில் வங்கி சார்பில் வழக்கு தொடரப்படுகிறது. இதனால் கடன் பெற்ற விவசாயிகள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.
 எந்த வங்கிக் கிளையில் கடன் பெறப்பட்டதோ, அந்த வங்கிக் கிளைக்கு அருகில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடருவது தான் முறை. எனவே, செலாவணி முறிச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்வது செல்லாது என்று உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
 இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. 
மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக மத்திய நிதித்துறைச் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/25/செலாவணி-முறிச்-சட்டத்தின்-கீழ்-விவசாயிகள்-மீது-வழக்குப்பதிவு-செய்வதை-ரத்து-செய்யக்கோரி-மனு-மத்திய-அ-3007424.html
3007422 மதுரை மதுரை தபால் ஊழியர்கள் தூய்மைப் பணி DIN DIN Tuesday, September 25, 2018 08:33 AM +0530 தூய்மையே சேவை இயக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுரையில் தபால் ஊழியர்கள் திங்கள்கிழமை தூய்மைப் பணிகளில் ஈடுபட்டனர்.
 மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தூய்மையே சேவை இயக்கத்தின் சார்பில் அஞ்சல்துறை பல்வேறு கோட்டங்களிலும் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
 அதன் ஒரு பகுதியாக மதுரை தல்லாகுளம் நேரு சிலையில் இருந்து மெயில் மோட்டார் சேவையகம் வரையிலும் உள்ள இடங்களில் தபால் ஊழியர்கள் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர்.
 மதுரைக் கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளர் என்.ஸ்ரீஹர்ஷா, உதவிக் கோட்ட கண்காணிப்பாளர் கே.எஸ்.உமாராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/25/தபால்-ஊழியர்கள்-தூய்மைப்-பணி-3007422.html
3007420 மதுரை மதுரை மாடக்குளம் கண்மாய்க்கு வரும் தண்ணீரை தடுப்பதாக புகார் DIN DIN Tuesday, September 25, 2018 08:33 AM +0530 மாடக்குளம் கண்மாய்க்கு வரும் தண்ணீரைத் தடுக்கும் முயற்சியாக, ஷட்டர் உடைக்கப்பட்டு கான்கிரீட் கலவையால் தடுப்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக மாடக்குளம், பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர். பின்னர் அவர்கள் கூறியது:
மதுரை மாடக்குளம் கண்மாய்க்கு நீர் திறக்கப்படும் இரு ஷட்டர்களில் ஒரு ஷட்டர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இதனால் கண்மாய்க்கு குறைவான அளவிலேயே தண்ணீர் வருகிறது. இதுதொடர்பாக பொதுப்பணித் துறை அலுவலர்களிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், வடிவேல்கரை மதகு வழியாக மாடக்குளம் கண்மாய்க்கு வந்து சேரும் நீரை தடுக்கும் வகையில் சில தனிநபர்கள், ஷட்டரை உடைத்து கான்கிரீட் கலவையைக் கொட்டி அடைத்துள்ளனர். இதுகுறித்து மதுரை மேற்கு வட்டாட்சியர் தலைமையில் பொதுப்பணித் துறையினர், காவல் துறையினர்  முன்னிலையில் மாடக்குளம் மற்றும் வடிவேல்கரை கிராமத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருப்பினும்  இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
மதுரை நகரின் பெரும்பாலான பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாக இருககும் மாடக்குளம் கண்மாயில் நீர் நிரப்புவதற்கு, 2 ஷட்டர்கள் வழியாகவும் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/25/மாடக்குளம்-கண்மாய்க்கு-வரும்-தண்ணீரை-தடுப்பதாக-புகார்-3007420.html
3007418 மதுரை மதுரை கருக்கலைப்பின்போது உயிரிழந்த பெண்ணின் கணவர், குழந்தைகள் ஆட்சியரிடம் மனு DIN DIN Tuesday, September 25, 2018 08:33 AM +0530 உசிலம்பட்டியில் கருக்கலைப்பின்போது உயிரிழந்த பெண்ணின் கணவர், 3 குழந்தைகள் அரசு நலத்திட்ட உதவிகள் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
உசிலம்பட்டி அருகே உள்ள உத்தபுரத்தைச் சேர்ந்த ராமரின், மனைவி ராமுத்தாய். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நான்காவது முறையாக கர்ப்பமடைந்த ராமுத்தாய், தனது வயிற்றில் வளருவது பெண் குழந்தையெனக் கருதி கருக்
கலைப்புக்காக உசிலம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையை அணுகினார். ஆனால், ராமுத்தாய் 7 மாத கர்ப்பிணியாக இருந்ததால் மருத்துவமனை நிர்வாகத்தினர் அதற்கு மறுத்துவிட்டனர். இந்நிலையில் அந்த மருத்துவமனையில் பணியாற்றிய தொட்டப்பநாயக்கனூரைச் சேர்ந்த செவிலியர், அவரது வீட்டில் வைத்து ராமுத்தாய்க்கு கருக்கலைப்பு செய்துள்ளார். அப்போது,  ராமுத்தாய் இறந்துவிட்டார். பிரேத பரிசோதனையில் ராமுத்தாயின் வயிற்றில் இருந்தது ஆண் குழந்தை என தெரியவந்தது.  
இந்நிலையில், தாயை இழந்து தவிக்கும் 3 குழந்தைகளையும் காப்பாற்ற, அரசின் நலத்திட்ட உதவி வழங்கக் கோரியும், கருக்கலைப்பு செய்த செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமர், தனது குழந்தைகளுடன், மாவட்ட ஆட்சியர் ச.நடராஜனிடம் திங்கள்கிழமை மனு அளித்தார்.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/25/கருக்கலைப்பின்போது-உயிரிழந்த-பெண்ணின்-கணவர்-குழந்தைகள்-ஆட்சியரிடம்-மனு-3007418.html
3007416 மதுரை மதுரை தமிழ் வளர்ச்சித்துறைச் செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி மனு: விசாரணை ஒத்திவைப்பு DIN DIN Tuesday, September 25, 2018 08:33 AM +0530 தமிழ் வளர்ச்சித்துறைச் செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
பிற மொழிகளை தாய் மொழியாக கொண்டவர்களுக்கு, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அஞ்சல் வழி தொடர் கல்வி மையம் வழியாக தமிழ் கற்பிக்க போதிய நிதி ஒதுக்கக்கோரி மதுரையை சேர்ந்த பாரதியார் சிந்தனையாளர்கள் மன்றத்தின் பொதுச்செயலர் லட்சுமிநாராயணன் கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்,  மனுதாரரின் கோரிக்கையை ஏற்று, அஞ்சல் வழி தமிழ் கல்விக்காக தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு ரூ.37 லட்சத்து 36 ஆயிரத்து 300 அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை 3 மாதத்தில் தமிழக அரசு ஒதுக்க வேண்டும் என்று 2016 ஆம் ஆண்டு உத்தரவிட்டது.  இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் அஞ்சல் வழி தமிழ் கல்விக்கு தமிழ் வளர்ச்சித்துறை நிதி ஒதுக்கவில்லை. இதனால் தமிழ் வளர்ச்சித்துறை செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி, லட்சுமிநாராயணன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மற்றொரு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை வரும் அக்டோபர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/25/தமிழ்-வளர்ச்சித்துறைச்-செயலர்-மீது-நீதிமன்ற-அவமதிப்பு-நடவடிக்கை-கோரி-மனு-விசாரணை-ஒத்திவைப்பு-3007416.html
3007414 மதுரை மதுரை மதுரை - நத்தம் 4 வழிச் சாலைக்கு ஆர்ஜிதம் செய்த நிலங்களுக்கு இழப்பீடு நிர்ணயித்ததில் முரண்பாடு: விவசாயிகள் புகார் DIN DIN Tuesday, September 25, 2018 08:32 AM +0530 மதுரை - நத்தம் நான்கு வழிச் சாலைக்கு ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலங்களுக்கான இழப்பீடு முரண்பாடாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
மதுரை - நத்தம் இடையே தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் நான்கு வழிச் சாலை அமைக்கப்படுகிறது. மதுரை பாண்டியன் ஹோட்டல் அருகே தொடங்கி நத்தம் வரை இச் சாலை அமைக்கப்படுகிறது. இதில் செட்டிகுளம் வரை 11 கி.மீ. தூரத்துக்கு உயர்மட்ட பாலம் அமைகிறது. இப் பகுதியில் இரண்டு அடுக்கு சாலையாக இருக்கும். இச் சாலைக்காக 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாய நிலங்கள், மனைகள் ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலங்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகை முரண்பாடாக இருப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இழப்பீட்டுத் தொகை நிர்ணயத்தில் உள்ள முரண்பாடுகளைத் தவிர்க்கக் கோரி மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் கண்ணன் தலைமையில் விவசாயிகள், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
பின்னர் அவர்கள் கூறியது: 
மதுரையை அடுத்த மந்திகுளம், பெரியபட்டி, சின்னபட்டி, காவனூர், மஞ்சம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இழப்பீடு முரண்பாடாக இருக்கிறது. ஒரே புல எண்ணுக்குரிய நிலத்தில், ஒருவருக்கு சதுரமீட்டருக்கு ரூ.2600 
எனவும், அருகே இருக்கும் மற்றொருவருக்கு சதுர மீட்டருக்கு ரூ.130 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. 
அதிலும் புஞ்சை நிலத்துக்கு ரூ.40 மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நிலஆர்ஜிதம் தொடர்பான கருத்துக்கேட்புக் கூட்டத்தில், பதிவுத் துறையின் மதிப்பீடு அடிப்படையில் இழப்பீடு வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதன்படி இழப்பீட்டுத் தொகை நிர்ணயம் செய்யப்படவில்லை. 
விவசாய நிலங்கள் தான் வாழ்வாதாரமாக இருக்கும் நிலையில், அதை ஆர்ஜிதம் செய்வதோடு அதற்குரிய இழப்பீட்டுத் தொகையையும் முறையாக வழங்கவில்லையெனில் விவசாயிகள் நிலை மிகவும் வேதனைக்குரியதாகிவிடும். எனவே, ஆர்ஜிதம் செய்யும் நிலங்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/25/மதுரை---நத்தம்-4-வழிச்-சாலைக்கு-ஆர்ஜிதம்-செய்த-நிலங்களுக்கு-இழப்பீடு-நிர்ணயித்ததில்-முரண்பாடு-விவசா-3007414.html
3007413 மதுரை மதுரை திருப்பாலை பகுதியில் செப்டம்பர் 25 மின்தடை DIN DIN Tuesday, September 25, 2018 08:32 AM +0530 மதுரை திருப்பாலை, அய்யர்பங்களா பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து மதுரை மின்பகிர்மான வட்டம் (வடக்கு) செயற்பொறியாளர் ஜீ.மலர்விழி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 
 திருப்பாலை துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (செப்.25) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. 
எனவே, திருப்பாலை, நாராயணபுரம், அய்யர்பங்களா, வள்ளுவர் காலனி, விஸ்வநாதபுரம், குலமங்கலம், கண்ணனேந்தல், சூரியா நகர், ஊமச்சிகுளம், அலங்காநல்லூர் தேசிய சர்க்கரை ஆலை, வலையபட்டி, கடச்சனேந்தல், மகாலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/25/திருப்பாலை-பகுதியில்-செப்டம்பர்-25-மின்தடை-3007413.html
3007412 மதுரை மதுரை திருமங்கலத்தில் பல்கலை. உறுப்பு கல்லூரியில் மாணவர்கள் போராட்டம் DIN DIN Tuesday, September 25, 2018 08:31 AM +0530 திருமங்கலம் காமராஜர் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் மாணவ, மாணவிகள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திங்கள்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இக்கல்லூரியில் இளங்கலைப் பயிலும் மாணவ, மாணவிகள் 70 பேர் திடீரென வகுப்புகளில் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க புறநகர் மாவட்ட தலைவர் பிருந்தா தலைமையில் கல்லூரி வாயிலின் முன் அமர்ந்து, தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். 
அவர்களிடம் கல்லூரி முதல்வர் சோமசுந்தரம் பேச்சுவார்த்தை நடத்தி, வகுப்புகளுக்கு அனுமதித்தார். இதுகுறித்து கல்லூரி பேராசிரியர்கள் கூறியது:
இக்கல்லூரியில் பல்கலைக்கழக விதிகளுக்கு மாறாக 60 மாணவர்கள் இருக்க வேண்டிய வகுப்பில் நூறு மாணவர்கள் உள்ளனர். அவர்கள் அமர நாற்காலி இல்லை. கீழே அமர்ந்து படிக்கும் நிலை உள்ளது. இது மாணவர்களிடையே தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும்.
மேலும் கடந்த மூன்று மாதங்களாக வருகைப்பதிவேடு இல்லாமலேயே வகுப்புகள் நடைபெறுகின்றன. எனவே, பல்கலைக்கழக நிர்வாகம் இப்பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/25/திருமங்கலத்தில்-பல்கலை-உறுப்பு-கல்லூரியில்-மாணவர்கள்-போராட்டம்-3007412.html
3007411 மதுரை மதுரை பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் DIN DIN Tuesday, September 25, 2018 08:31 AM +0530 பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணமான  மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து உசிலம்பட்டியில்  அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். உசிலம்பட்டி பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் ஐ.ராஜா தலைமை வகித்தார். மாநில மாணவரணி செயலாளர் பாஸ்கர பாண்டியன் முன்னிலை வகித்தார். கிழக்கு மாவட்டபொதுச் செயலாளர் மோகன் கண்டன உரையாற்றினார்.  மாவட்டச் செயலர்கள்  மலர்க்கொடி, ஆதிசேடன், பால்பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/25/பார்வர்டு-பிளாக்-கட்சியினர்-ஆர்ப்பாட்டம்-3007411.html
3007410 மதுரை மதுரை இளைஞர் சடலத்தை பிரேதப் பரிசோதனை செய்ய எதிர்ப்பு DIN DIN Tuesday, September 25, 2018 08:31 AM +0530 மதுரை அரசு மருத்துவமனையில் இளைஞரின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்புத் தெரிவித்து, அவரது உறவினர்கள், பிணவறையின் ஜன்னல் கண்ணாடிகளை திங்கள்கிழமை உடைத்தனர்.இதுதொடர்பாக போலீஸார் ஒருவரை கைது செய்து விசாரித்து வருகினறனர். 
மதுரை சிம்மக்கல் தைக்கால் தெருவை சேர்ந்தவர் சரத்குமார் (23). இவர் வைகை ஆற்றில் சிம்மக்கல் பேச்சியம்மன்படித்துறையையும் செல்லூரையும் இணைக்கும் உயர்மட்ட பாலத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு கீழே விழுந்து இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்த போலீஸார் சரத்குமாரின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
 இந்நிலையில், அரசு மருத்துவமனை பிணவறை பகுதியில் திங்கள்கிழமை திரண்ட சரத்குமாரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள், இந்த சம்பவத்தை விபத்து என வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தினர். அவ்வாறு வழக்குப்பதிவு செய்தால் தான் பிரேதப் பரிசோதனைக்கு அனுமதிப்போம் எனக் கூறி, வாக்குவாதத்தில்  ஈடுபட்டனர். அப்போது சிலர், பிணவறையின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர். அதையடுத்து அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த மாநகரக் காவல் துணை ஆணையர் சசிமோகன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 
பின்னர், சரத்குமாரின் சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் அரசு மருத்துவமனை ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டது தொடர்பாக சிவக்குமார் (29) என்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/25/இளைஞர்-சடலத்தை-பிரேதப்-பரிசோதனை-செய்ய-எதிர்ப்பு-3007410.html
3007409 மதுரை மதுரை பாலியல் பேர வழக்கு: உதவிப் பேராசிரியர்களின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு DIN DIN Tuesday, September 25, 2018 08:30 AM +0530 கல்லூரி மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசிய வழக்கில், உதவிப் பேராசிரியர்கள் நிர்மலாதேவி, முருகன் உள்ளிட்டோரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி. இவர், கல்லூரி மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசியதாக கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
இந்த வழக்கில் நிர்மலா தேவிக்கு உதவியதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 
இந்நிலையில் நிர்மலாதேவியும், முருகனும், ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.  இந்த மனுக்கள், நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு, திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. 
அரசுத் தரப்பில் அவகாசம் கோரியதையடுத்து, விசாரணையை வரும் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/25/பாலியல்-பேர-வழக்கு-உதவிப்-பேராசிரியர்களின்-ஜாமீன்-மனு-மீதான-விசாரணை-ஒத்திவைப்பு-3007409.html
3007408 மதுரை மதுரை கேரம் விளையாட்டில் வெற்றிபெற்ற 12 பேர்  மாநிலப் போட்டிக்கு தகுதி DIN DIN Tuesday, September 25, 2018 08:30 AM +0530 மதுரை மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டில் முதலிடம் பிடித்த 12 பேர் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றனர்.
மதுரை மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவியருக்கான கேரம் விளையாட்டுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. போட்டியில் இணையம் மூலம் விண்ணப்பித்த 68 பேர் கலந்து கொண்டனர்.
மதுரை டாக்டர் எம்.ஜி.ஆர்.விளையாட்டு மைதானத்தில் (ரேஸ்கோர்ஸ்) நடைபெற்ற இப்போட்டியை மாவட்ட கேரம் சங்கத் தலைவர் எம்.சிவானந்தம் தொடங்கி வைத்தார். இதில் 38 மாணவர்களும், 30 மாணவியரும் பங்கேற்றனர். 
 ஜூனியர், சீனியர் பிரிவில் ஒற்றையர், இரட்டையர் என்ற வகைகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் ஆர்.கே.தேவஸ்வர், எம்.கே.வெற்றிவேலன், எஸ்.வீரபாலமுருகன், ஏ.ஜே.கெளதம், எஸ்.ரோஷினிஸ்ரீ, ஜே.அபிநயா, ஆர்.ராதிகா, ஏ.எஸ்.ஸ்ரீபத்ரிநாத், என்.ஜெய்மாதேஷ், எஸ்.கிருத்திகா, கே.ஆர்.லேகா, டி.நித்யவள்ளி ஆகியோர் முதலிடம் பிடித்து, மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில் தொழிலதிபர் ஸ்ரீராம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். மாவட்ட விளையாட்டு அலுவலர் கி.த.ராஜகுமார், 
கேரம் சங்கச் செயலர் வெங்கடேஷ்வரன் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும், பாராட்டுச் சான்றுகளையும் வழங்கினர். கேரம் பயிற்சியாளர் குமரேசன் உள்ளிட்டோர் போட்டிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/25/கேரம்-விளையாட்டில்-வெற்றிபெற்ற-12-பேர்--மாநிலப்-போட்டிக்கு-தகுதி-3007408.html
3007407 மதுரை மதுரை அக்.2 முதல் கிராம வளர்ச்சிக்கான  பிரசார இயக்கம் DIN DIN Tuesday, September 25, 2018 08:30 AM +0530 மதுரை மாவட்டத்தில் கிராம வளர்ச்சிக்கான சிறப்பு பிரசார இயக்கம் வரும் அக்டோபர் 2 முதல் தொடங்குகிறது.
டிசம்பர் 31 வரை நடைபெறும் இந்த முகாமில், ஒவ்வொரு ஊராட்சியின் தேவை,  அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல்,  கிராம வளர்ச்சித் திட்டம் தயாரித்து அதைச் செயல்படுத்துதல்,  ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை மறுஆய்வு செய்வது என்பதை உள்ளடக்கி பிரசார இயக்கம் நடத்தப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் இந்த பிரசார இயக்கம் நடத்துவது தொடர்பான முதல்கட்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூடுதல் ஆட்சியர் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.பி.அம்ரித், மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.குணாளன், மகளிர் திட்ட இயக்குநர் மதுமதி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர். 
கிராம ஊராட்சிகளின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான திட்டத்தை, கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்களிடம் கருத்துக் கேட்டு, அதன் அடிப்படையில் துறைவாரியாக ஒவ்வொரு ஊராட்சிக்கும் அறிக்கை தயாரிக்க ஆட்சியர் அறிவுறுத்தினார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/25/அக்2-முதல்-கிராம-வளர்ச்சிக்கான--பிரசார-இயக்கம்-3007407.html
3007405 மதுரை மதுரை மண்டலம்-4 அலுவலகத்தில் இன்று குறைதீர்க்கும் முகாம் DIN DIN Tuesday, September 25, 2018 08:29 AM +0530 மதுரை மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு) அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (செப்.25) சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. 
இதுகுறித்து மாநகராட்சி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலக வளாகத்தில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் செவ்வாய்க்கிழமை (செப்.25) காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை  நடைபெறுகிறது. முகாமுக்கு ஆணையர் அனீஷ்சேகர் தலைமை வகிக்கிறார். 
இதில், பொதுமக்கள் தங்களுக்கான குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய வரி விதிப்பு, கட்டட வரைபட அனுமதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட தேவைகளுக்கு மனு அளித்து பயன் பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/25/மண்டலம்-4-அலுவலகத்தில்-இன்று-குறைதீர்க்கும்-முகாம்-3007405.html
3006733 மதுரை மதுரை மதுரை மாவட்டத்தில் 1531 பேர் திறனறித் தேர்வில் பங்கேற்பு DIN DIN Monday, September 24, 2018 08:37 AM +0530 மதுரை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசியத் திறனறித் தேர்வில் 1,531 பேர் எழுதியுள்ளனர். 
  எட்டாம் வகுப்பு முடித்தவர்களில் சிறந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு தேசியத் திறனறித் தேர்வு நடத்தப்பட்டுவருகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்று, 60 மதிப்பெண்களுக்கு மேலாக பெறுபவர்களுக்கு ஊக்கத் தொகையாக ஆண்டு தோறும் நிதி வழங்கப்படுகிறது.  மதுரை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பி.கே.என். பள்ளி, மதுரை மகபூப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மதுரைக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் தேசியத் திறனறித் தேர்வுகள் நடைபெற்றன.
 இரு பிரிவுகளாக நடைபெற்ற தேர்வில் பங்கேற்க பதிவு செய்தவர்களில் 1,531 பேர் தேர்வை எழுதினர். 273 பேர் வரவில்லை. தேர்வுகளுக்குரிய மையங்களில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ச.கோபிதாஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/24/மதுரை-மாவட்டத்தில்1531-பேர்-திறனறித்-தேர்வில்-பங்கேற்பு-3006733.html
3006732 மதுரை மதுரை வணிக வரித்துறை துணை ஆணையர் வீட்டில் தங்கம், வைர நகைகள் திருட்டு DIN DIN Monday, September 24, 2018 08:37 AM +0530 மதுரையில் வணிகவரித்துறை துணை ஆணையர் வீட்டில் 6 பவுன் தங்கம், வைர நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்தை மர்ம நபர்கள் சனிக்கிழமை இரவு திருடிச்சென்றதாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். 
மதுரை எஸ்.எஸ்.காலனி அருணாச்சலம் தெருவைச் சேர்ந்தவர் இளங்கோவன் (42). எல்ஐசி அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சாந்தி(38), வணிகவரித்துறையில் துணை ஆணையராக பணிபுரிந்து வருகிறார். 
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இவர்களுக்கு சொந்தமான தோட்ட வீடு உள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை அரசு விடுமுறையை முன்னிட்டு குடும்பத்தினருடன் தோட்ட வீட்டுக்கு சென்று விட்டார். 
அங்கிருந்து சனிக்கிழமை இரவு வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 6 பவுன் தங்க நகைகள், 8 காரட் வைர நகை மற்றும் ரூ.1 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. 
சம்பவம் தொடர்பாக இளங்கோவன் அளித்தப் புகாரின்பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/24/வணிக-வரித்துறை-துணை-ஆணையர்-வீட்டில்-தங்கம்-வைர-நகைகள்-திருட்டு-3006732.html
3006731 மதுரை மதுரை தாயை கொல்ல முயன்ற மகன் கைது DIN DIN Monday, September 24, 2018 08:37 AM +0530 மதுரை அருகே மோதலை விலக்கி விடச்சென்ற தாயை கட்டையால் தாக்கி கொலை செய்ய முயன்ற மகனை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் பேரையூர் சுப்ரமணியசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் முனியாண்டி(48). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் இரண்டாவது மகன் வெள்ளைச்சாமி மதுப்பழக்கத்துக்கு ஆளாகி வேலைக்கு செல்லாமல் இருந்து வருகிறார். இதை மூன்றாவது மகன் கார்த்திக் அடிக்கடி தட்டிக்கேட்டுள்ளார். இதனால் சகோதரர்களுக்கிடையே தகராறு இருந்து வந்துள்ளது. 
இந்நிலையில் வெள்ளைச்சாமி சனிக்கிழமை மாலை குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கார்த்திக்கும், வெள்ளைச்சாமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இருவரும் மோதிக்கொண்டனர். அப்போது வீட்டில் இருந்த அவர்களது தாய் முத்து (42) மகன்களுக்கிடையே ஏற்பட்ட மோதலை, விலக்கி விட முயன்றுள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த கார்த்திக், வெள்ளைச்சாமிக்கு அதிக சலுகை கொடுப்பதாகக்கூறி தாய் முத்துவை உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை செய்ய முயன்றார். இதில் பலத்த காயமடைந்த முத்துவை குடும்பத்தினர் மற்றும் அப்பகுதியினர் மீட்டு பேரையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின்பு, முத்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பாக முத்து அளித்தப் புகாரின்பேரில் பேரையூர் போலீஸார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து மகன் கார்த்திக்கை கைது செய்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/24/தாயை-கொல்ல-முயன்ற-மகன்-கைது-3006731.html
3006730 மதுரை மதுரை தமிழ்நாடு பொன்விழாவில் அமைச்சர் உள்பட 7 பேருக்கு விருது DIN DIN Monday, September 24, 2018 08:36 AM +0530 உலகத் தமிழ்ச்சங்கம், தமிழர் கலை இலக்கிய மையம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு பொன்விழா நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ உள்ளிட்ட 7 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய பொன் விழாக்கள் தற்போது பல்வேறு அமைப்புகளால் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழர் கலை இலக்கிய மையம் சார்பில் மதுரை உலகத் தமிழ்ச்சங்க பெருந்திட்ட வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு பொன்விழாவானது கவியரங்கம், நூல்கள் வெளியீடு, பாராட்டரங்கம் என முப்பெரும் விழாவாக நடைபெற்றது.
இலக்கிய மையத்தின் தலைவர் பாரதிசுகுமாரன் தலைமையில் எங்கள் தமிழ்நாடு எனும் தலைப்பில் நடைபெற்ற கவியரங்கில் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த 186 பேர் கவிதை பாடினர். பின்னர் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு பொன்விழா மற்றும் தர்ஷினிமாயா எழுதிய அமிர்த துளசி ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன. தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் கோ.விசயராகவன் தலைமை வகித்து நூல்களை வெளியிட, தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் க.பசும்பொன் நூல்களின் முதல் பிரதிகளைப் பெற்றுக்கொண்டார்.
மாலையில் நடைபெற்ற நாட்டியரங்கத்துக்கு பின்னர் உலகத்தமிழ்ச்சங்க இயக்குநர் கா.மு.சேகர் தமிழ் இலக்கியம் குறித்து சிறப்புரையாற்றினார். பின்னர் நடைபெற்ற பாராட்டரங்கத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, கவிதைப் போட்டியில் வென்ற 5 பேருக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றுகளை வழங்கினார்.
 நிகழ்ச்சியில் தமிழர் கலை இலக்கிய மையம் சார்பில் அதன் தலைவர் பாரதிசுகுமாரன் சிறப்பு விருதுகளை வழங்கினார். அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு அம்மா விருதும், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் கோ.விசயராகவனுக்கு பேரறிஞர் அண்ணாவிருதும், ஆவடிக்குமாருக்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., உலகத்தமிழ்ச்சங்க இயக்குநர் கா.மு.சேகருக்கு நற்றமிழ் நாயகர், தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் க.பசும்பொன்னிற்கு உலகத்தமிழர் தியாகதுருகம் மற்றும் எழுத்தாளர் தர்ஷிணிமாயாவுக்கு தமிழ்க்கதை செம்மல் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன. 
விருது வழங்கும் நிகழ்ச்சியில் விழாக்குழு கவிஞர்கள் ஜீவா காசிநாதன், நா.பாண்டுரங்கன், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க துணைத் தலைவர் சோலை எம்.ராஜா மற்றும் மதுரை மத்திய கூட்டுறவு சங்கத் தலைவர் தங்கம், எம்.எஸ்.பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/24/தமிழ்நாடு-பொன்விழாவில்-அமைச்சர்-உள்பட-7-பேருக்கு-விருது-3006730.html
3006729 மதுரை மதுரை உசிலம்பட்டியில் வாக்காளர் சேர்க்கை முகாம் DIN DIN Monday, September 24, 2018 08:36 AM +0530 உசிலம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை புதிய வாக்காளர் சேர்த்தல் முகாம் நடைபெற்றது.
 இந்த முகாமில் 18 முதல் 19 வயது வரையிலான புதிய வாக்காளருக்கான புதிய மனுக்கள் ஆண்களிடம் 537மனுக்களும், பெண்களிடம்  402 மனுக்களும்  பெறப்பட்டன. இதே போல் 19 வயதிற்கும் மேற்பட்ட வயதுடையவர்கள் ஆண்களிடம் 283 மனுக்களும், பெண்களிடம் 276 மனுக்களும்  பெறப்பட்டன. மேலும் நீக்கம் செய்ய 60 மனுக்களும், திருத்தம் செய்ய 114 மனுக்களும், முகவரி மாற்றம் செய்ய 52 மனுக்களும் ஆக மொத்தம் 1,724 மனுக்கள் பெறப்பட்டன. 
இந்த முகாம் நடைபெறும் வாக்குசாவடி மையங்களை உசிலம்பட்டி கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் வட்டாட்சியர் நவநீதகிருஷ்ணன், துணைவட்டாட்சியர் மணிகண்டன், உள்ளிட்ட அதிகாரிகள் மேற்பார்வையிட்டனர்.
இதுதொடர்பாக தேர்தல் அதிகாரியும், துணை வட்டாட்சியருமான மணிகண்டன் கூறியது: புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம்  உள்ளிட்ட முகாம்  அக்டோபர் 7  மற்றும் 10 ஆம் தேதிகளில் அந்தந்த வாக்குசாவடி மையங்களில் நடைபெறும். மேலும் மற்ற தினங்களில் தாலுகா அலுவலகத்திலுள்ள தேர்தல் பிரிவில் தங்களது மனுக்களை கொடுக்கலாம் என்றார். 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/24/உசிலம்பட்டியில்-வாக்காளர்-சேர்க்கை-முகாம்-3006729.html
3006728 மதுரை மதுரை "சட்ட நடவடிக்கையில் யாருக்கும் பாரபட்சம் காட்டப்படவில்லை' DIN DIN Monday, September 24, 2018 08:35 AM +0530 தமிழகத்தில் சட்டப்படியான நடவடிக்கைகளில் யாருக்கும் பாரபட்சம் காட்டப்படவில்லை என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.
 மதுரையில் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாமை ஞாயிற்றுக்கிழமை காளவாசல் பகுதியில் உள்ள பள்ளியில் தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் சட்டம் தன் கடமையை சரியாகச் செய்துவருகிறது என முதல்வரே கூறியுள்ளார். 
இதில் யாருக்கும் பாரபட்சம் காட்டப்படவில்லை. சட்டத்துக்கு உள்பட்டே அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கருணாஸ் எம்.எல்.ஏ. மீதான வழக்கிலும் சட்டம் தனது கடமையைச் செய்திருக்கிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைப் பிரச்னையில் அதை திறக்கக் கூடாது என்பதுதான் தமிழக அரசின் முடிவாக உள்ளது. மக்களின் உணர்வுகளுக்கே மதிப்பளித்து அதிமுக அரசு துணை நிற்கும். ஆனால், ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது என எதிர்க்கட்சிகள் ஏன் வழக்குத் தொடுக்கவில்லை? குறிப்பாக, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த ஆய்வுக்குழுவை எதிர்த்து திமுக சார்பில் வழக்குத் தொடரவில்லை என்பதையும் பார்க்கவேண்டும். 
ஸ்டெர்லைட் ஆலை பிரச்னையில் திமுகவின் அணுகுமுறை சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்றார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/24/சட்ட-நடவடிக்கையில்-யாருக்கும்பாரபட்சம்-காட்டப்படவில்லை-3006728.html
3006727 மதுரை மதுரை மக்களை திசை திருப்பும் வகையில் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார்: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றச்சாட்டு DIN DIN Monday, September 24, 2018 08:35 AM +0530 தமிழக அரசின் சாதனைகளை இருட்டடிப்பு செய்ய மக்களை திசை திருப்பும் வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செயல்படுவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்.  
 திருப்பரங்குன்றம் பூங்கா அருகே அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டச் செயலர் கோபால் தலைமை வகித்தார். 
கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பங்கேற்று பேசியது :திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தல் அதிமுகவிற்கு முக்கியமானது. இத்தேர்தலில் யார் வெற்றி பெறப்போகின்றனர் என அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். பெண்களுக்கு தாலிக்கு தங்கம், மானிய விலையில் இருசக்கர வாகனம், கண்மாய்களில் குடிமராமத்து பணி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக  அரசின் சாதனைகளை இருட்டடிப்பு செய்ய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார். அதுமக்களிடம் எடுபடவில்லை. 
அதனால் தற்போது அமைச்சர்கள் மீது பொய்யான ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்து மக்களை திசைதிருப்பும் வகையில் செயல்பட்டு வருகிறார். திமுகவின் கொள்கை பரப்பு செயலர் ஆ.ராசா, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் ஊழலுக்காக திகார் ஜெயிலில் இருந்தவர்கள். திமுக ஆட்சி தமிழகத்தில் ஊழலுக்காக கலைக்கப்பட்டது. 
இதுகுறித்து மக்களிடம் நாம் திண்ணைப் பிரச்சாரம் செய்ய வேண்டும். 
அதிமுகவில் மட்டுமே சாதாரண தொண்டர்களும் தலைவராக முடியும். அப்படித்தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தலைவரானார்கள். எனவே அனைவரும் உண்மையாக உழைத்தால் உங்களைத்தேடி பதவி வரும் என்றார்.  
கூட்டத்தில் வழக்குரைஞர் சேகர், நிர்வாகிகள் துரைப்பாண்டியன், தங்கம், எம்.எஸ்.பாண்டியன், ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/24/மக்களை-திசை-திருப்பும்-வகையில்-முகஸ்டாலின்-செயல்படுகிறார்-அமைச்சர்-செல்லூர்-கேராஜூ-குற்றச்சாட்டு-3006727.html
3006726 மதுரை மதுரை முக்குலத்தோர் புலிப்படை கட்சியினர் 11 பேர் கைது DIN DIN Monday, September 24, 2018 08:35 AM +0530 சட்டப்பேரவை உறுப்பினர் கருணாஸை கைது செய்ததை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை  உசிலம்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்ட 11பேரை போலீஸார் கைது செய்தனர்.
 மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முக்குலத்தோர் புலிப்படையினர்  கருணாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து, உசிலம்பட்டி பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் மறியலில் ஈடுபட்ட  புலிப்படை கட்சியைச் சேர்ந்த மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் திரவியம் தலைமையிலான 11பேரை   உசிலம்பட்டி போலீஸார் கைது செய்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/24/முக்குலத்தோர்-புலிப்படை-கட்சியினர்-11-பேர்-கைது-3006726.html
3006724 மதுரை மதுரை இருவேறு விபத்துக்களில் பெண் உள்பட இருவர் சாவு DIN DIN Monday, September 24, 2018 08:34 AM +0530 மேலூர்  அருகே இரு வேறு விபத்துக்களில் பெண் உள்பட 2 பேர்   ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.
மேலூர் அருகே வண்ணாம்பாறைப்பட்டியைச் சேர்ந்த பாண்டி மனைவி பாண்டியம்மாள் (60). இவர் வண்ணாம்பாறைப்பட்டி விலக்கில் சாலையைக் கடக்க முயன்ற போது, அவ்வழியாக சென்ற கார் மோதியதில் பலத்த காயமடைந்தார். அவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு, மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு  செல்லும் வழியில் உயிரிழந்தார்.
மேலூர் கூத்தப்பன்பட்டி அருகேயுள்ள உலகநாதபுரத்தைச் சேர்ந்தவர் மதயானை (42). இவர் தனது நண்பர் மலைக்கொழுந்து உடன் மோட்டார் சைக்கிளில் நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சிதம்பரத்திலிருந்து  திருநெல்வேலிக்குச் சென்று கொண்டிருந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவரும் மேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மதயானை உயிரிழந்தார். இந்த இரு விபத்துக்கள் குறித்தும் மேலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/24/இருவேறு-விபத்துக்களில்-பெண்-உள்பட-இருவர்-சாவு-3006724.html
3006723 மதுரை மதுரை மதுரையில் சேதமடைந்த  காந்தி சிலை சீரமைக்கப்படுமா? DIN DIN Monday, September 24, 2018 08:34 AM +0530 மதுரையில் மேலாடையைத் துறந்து அரையாடை விரதம் பூண்ட காந்தியடிகளின் நினைவாக வைக்கப்பட்டிருந்த சிலை சேதமடைந்துள்ளது. இந்தச் சிலையை சீரமைக்க  மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  
மதுரைக்கு கடந்த 1921-இல் வருகை தந்த காந்தியடிகள் அரையாடை விரதம் பூண்டு மேலாடையைத் துறந்தார். இதைத்தொடர்ந்து 1921 செப்டம்பர் 22-ஆம் தேதி மதுரை காமராஜர் சாலை மைனா தெப்பக்குளம் பகுதியில் உள்ள திறந்த வெளித்திடலில் மேலாடையை துறந்து துண்டு போர்த்திய நிலையில் உரையாற்றினார். மேலும் தன்னுடைய அரையாடை விரதம் குறித்தும் மக்களுக்கு விளக்கமளித்தார். அந்த இடம் காந்தியடிகள் நினைவாக காந்தி பொட்டல் என்றழைக்கப்பட்டது. 
மேலும் அதே  இடத்தில் கடந்த 1984 ஆம் ஆண்டில் காந்தி சிலை ஒன்று நிறுவப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. இச்சிலையை அமைக்க நடிகர் சிவாஜிகணேசன் உதவி செய்திருந்தார். அப்போதைய மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஏ.ஜி.சுப்பராமன், காந்தியடிகள் சிலையைத் திறந்து வைத்தார். காந்தி சிலையைச்சுற்றி சிறிய பூங்காவும் அமைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாள்களாக காந்தியடிகளின் சிலையில் வலது கை சேதமடைந்த நிலையில் உள்ளது. சமூக விரோதிகள் சிலர் காந்தி சிலையை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. சேதமடைந்த சிலையை  சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் அக்டோபர் 2-ஆம் தேதி நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி கொண்டாடப்படும் வேளையில், இந்த காந்தி சிலையை உடனடியாக சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/24/மதுரையில்-சேதமடைந்த--காந்தி-சிலை-சீரமைக்கப்படுமா-3006723.html
3006722 மதுரை மதுரை எழுவர் விடுதலையை அரசியலாக்காமல், மனிதாபிமான கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும்: ஓய்வுபெற்ற நீதிபதி து.அரிபரந்தாமன் DIN DIN Monday, September 24, 2018 08:34 AM +0530 முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் 7 பேரின் விடுதலையை மேலும் அரசியலாக்காமல், மனிதாபிமான கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி து.அரிபரந்தாமன் கூறினார்.
ஏழு தமிழர் விடுதலை இயக்கம் சார்பில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் ஏழு பேரை விடுவிக்க வலியுறுத்தி மதுரை கோ.புதூரில் ஞாயிற்றுக்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது. 
இதில் அரிபரந்தாமன் பேசியது: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையில் இந்த ஏழு பேரும் நேரடியாக ஈடுபடவில்லை. நேரடியாக கொலை செய்து ஆயுள் தண்டனை பெற்று வரும் பலரை தமிழக அரசு தலைவர்கள் பிறந்தநாள்களை முன்னிட்டு விடுவித்து வருகின்றனர். ஆனால், இவர்களை விடுவிப்பதில் மட்டும் தொடர்ந்து அரசியல் லாபத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.
சிறையில் இருக்கும் ஏழு பேரின் குடும்பத்தினரும் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது பெற்றோர்கள் தங்களது கடைசிக் காலத்தை பிள்ளைகளுடன் கழிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். இதை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை. ராஜீவ் காந்தி கொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 15 பேரின் குடும்பத்தினர் எழுவர் விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இது அரசியல் கட்சியினரின் தூண்டுதலினால் தொடரப்பட்ட வழக்கு என்பது என்னுடைய கருத்து. அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்றால், செய்யாத குற்றத்துக்காக சிறையில் இருக்கும் எழுவரின் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டவர்கள் தான். அவர்களது தரப்பு நியாயத்தையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.
இதை மேலும் அரசியலாக்காமல் மனிதாபிமான கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும். எனவே தமிழர்கள் அனைவரும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து எழுவர் விடுதலை தொடர்பாக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருப்பவர் ரவிச்சந்திரன். இவரது  தாய் இந்த கருத்தரங்கில் பேசியது: எனது மகன் ரவிச்சந்திரன் தனது வாழ்நாளில் பாதி நாள்களை சிறையில் கழித்து விட்டார். விதவையான நானும் தற்போது தனிமையில் உள்ளேன்.  தனது கடைசி காலத்தை மகன் ரவிச்சந்திரனுடன் கழிக்க விரும்புகிறேன். எழுவர் விடுதலை தொடர்பாக ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியும் காலம்தாழ்த்த கூடாது என்றார்.
வழக்குரைஞர் லஜபதிராய், பேராசிரியர் இரா.முரளி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/24/எழுவர்-விடுதலையை-அரசியலாக்காமல்-மனிதாபிமான-கண்ணோட்டத்துடன்-அணுக-வேண்டும்-ஓய்வுபெற்ற-நீதிபதி-துஅரி-3006722.html
3006721 மதுரை மதுரை கால்வாயில் மூழ்கி கட்டடத் தொழிலாளி சாவு DIN DIN Monday, September 24, 2018 08:34 AM +0530 திருப்பரங்குன்றத்தை அடுத்த விளாச்சேரியில் கால்வாயில் மூழ்கி கட்டடத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை இறந்தார். 
பைக்காரா பாலநாகம்மாள் கோயில் தெருப் பகுதியைச் சேர்ந்தவர் பாபு(35). கட்டடத் தொழிலாளி. இவர் தனது நண்பர்களுடன் ஞாயிற்றுக்கிழமை மதியம் வடிவேல்கரையில் உள்ள நிலையூர் கால்வாயில் குளிக்கச் சென்றுள்ளார். அங்கு ஆழமான பகுதியில் குளித்தபோது பாபு நீரில் மூழ்கிவிட்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுரை தீயணைப்புப் படையினர் பாபுவின் சடலத்தை மீட்டனர். இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீஸார்  விசாரிக்கின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/24/கால்வாயில்-மூழ்கி-கட்டடத்-தொழிலாளி-சாவு-3006721.html
3006720 மதுரை மதுரை மதுரையில் புகையிலைப் பொருள்கள் விற்ற 12  பேர் கைது DIN DIN Monday, September 24, 2018 08:33 AM +0530 மதுரையில் தடை செய்யப்பட்ட  புகையிலை பொருள்கள் விற்ற 12 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து 1,200 பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் பான்பராக், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மதுரையில்  புகையிலைப்பொருள்களின் விற்பனை சட்டவிரோதமாக நடைபெற்று வருவதாக மாநகரக்காவல் ஆணையர் எஸ்.டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு தகவல் கிடைத்தது. 
அவரது உத்தரவின் பேரில்  திருப்பரங்குன்றம், திருநகர், அவனியாபுரம், சுப்ரமணியுபரம், எஸ்.எஸ்.காலனி, கரிமேடு, அண்ணாநகர், தல்லாகுளம், திலகர் திடல் உள்ளிட்ட காவல்நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் போலீஸார் கடந்த இரு நாள்களாக சோதனை மேற்கொண்டனர். இதில் பல்வேறு பகுதிகளில் கடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பான்பராக், குட்கா மற்றும் புகையிலை பொருள்கள் 1,200 பொட்டலங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் சட்டவிரோதமாக புகையிலை பொருள்கள் விற்ற 12 பேரையும் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/24/மதுரையில்-புகையிலைப்-பொருள்கள்-விற்ற-12--பேர்-கைது-3006720.html
3006719 மதுரை மதுரை வைகை ஆற்றில் மூழ்கி மாணவர் சாவு DIN DIN Monday, September 24, 2018 08:33 AM +0530 மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவர் நீரில் மூழ்கி சனிக்கிழமை இறந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலைச் சேர்ந்த ஐயப்பன் மகன் சுஜித்குமார் (15). மதுரை மாவட்டம் திருவேடகம் பகுதியில் உள்ள பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 1 படித்து வந்தார். இந்நிலையில் சமயநல்லூர் அருகே உள்ள தேனூர் பகுதியில் பள்ளி சார்பில் நடைபெற்ற நாட்டு நலப்பணித்திட்ட முகாமில்,  ஐயப்பனும்  பங்கேற்றார். 
இந்நிலையில் சனிக்கிழமை இரவு முகாம் முடிந்ததையடுத்து இதர மாணவர்களுடன் சுஜித்குமார் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது ஆற்றில் ஆழமான பகுதிக்குச் சென்ற ஐயப்பன் நீரில் மூழ்கினார். இதையடுத்து தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் சுஜித்குமாரின் சடலத்தை சனிக்கிழமை இரவு மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக பள்ளித் தலைமையாசிரியர் விவேகானந்தன் அளித்தப் புகாரின்பேரில் சமயநல்லூர் போலீஸார்  வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/24/வைகை-ஆற்றில்-மூழ்கி-மாணவர்-சாவு-3006719.html
3006718 மதுரை மதுரை கல்லூரிகளில் கூடுதலாக வாக்காளர் சேர்ப்பு முகாம்கள்: பட்டியல் பார்வையாளர் மகேசன் காசிராஜன் DIN DIN Monday, September 24, 2018 08:33 AM +0530 மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மகேசன் காசிராஜன் கூறினார்.
மதுரையில் வாக்காளர் சேர்க்கை குறித்த அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கலந்தாய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு தலைமை வகித்து, மதுரை மாவட்டத்துக்கான வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மகேசன் காசிராஜன் பேசியது: அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் கோரிக்கைக்கு ஏற்ப மூன்றாம் பாலினத்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க தனிக்கவனம் செலுத்தவேண்டும்.
கல்லூரி மாணவர்களில் 18 வயது நிறைவடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க தனிக்கவனம் செலுத்தவேண்டும். அனைத்துக் கல்லூரிகளிலும் சிறப்பு கூடுதல் வாக்காளர் சேர்ப்பு முகாம்களை நடத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். பட்டியலில் பெயர், பாலினம், வயது, முகவரி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு தகவல் மாறியிருந்தாலும் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரின் வீட்டிற்கு அலுவலர்கள் நேரில் சென்று விசாரித்து சரியான தகவல்களை சேர்க்க வேண்டும்.
அந்தந்த பகுதி வாக்குச்சாவடி மையங்களிலும், வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பணி நாள்களில் வாக்காளர் சேர்க்கை உள்ளிட்ட விண்ணப்பங்களைப் பெறலாம். 
வாக்காளர் சேர்க்கை மற்றும் தகவல் மாற்ற சிறப்பு முகாம்கள் வரும் அக்டோபர் 7 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. அதனை பொதுமக்கள் பயன்படுத்திடவேண்டும் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.குணாளன், மாநகராட்சி துணை ஆணையர் ப.மணிவண்ணன்,  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/24/கல்லூரிகளில்-கூடுதலாக-வாக்காளர்-சேர்ப்பு-முகாம்கள்-பட்டியல்-பார்வையாளர்-மகேசன்-காசிராஜன்-3006718.html
3006717 மதுரை மதுரை நீர் நிறைந்த தெப்பத்தில் எழுந்தருளிய தல்லாகுளம் பெருமாள் DIN DIN Monday, September 24, 2018 08:33 AM +0530 மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலப் பெருமாள் கோயிலின் புரட்டாசிப் பெருந்திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை நீர் நிறைந்த தெப்பத்தில் சுவாமி பிராட்டியருடன் எழுந்தருளி அருள்பாலித்தார். 
 மதுரை அழகர்மலையில் உள்ள கள்ளழகர் திருக்கோயிலின் உபகோயிலாக தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் உள்ளது. இக்கோயிலின் புரட்டாசிப் பெருந்திருவிழா கடந்த 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி பிராட்டியருடன் சிறப்பு வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். 
 விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக கடந்த 16 ஆம் தேதி கஜேந்திர மோட்சம், 18 ஆம் தேதி காளிங்க நர்த்தனம், யானை வாகனத்தில் எழுந்தருளல், 19 ஆம் தேதி புஷ்ப விமானத்தில் எழுந்தருளல் ஆகியவை நடைபெற்றன. கடந்த 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலையில் திருத்தேரோட்டமும், இரவில் பூப்பல்லக்கும் நடைபெற்றன.  
சனிக்கிழமை (செப்.22) சப்தாவரணம், பூச்சப்பரம் நடைபெற்றது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலையில் கோயிலின் தெப்பத்தில் அன்ன வடிவில் அமைக்கப்பட்டிருந்த தெப்பத்தில் சுவாமி, பிராட்டியருடன் எழுந்தருளினார்.  
சுவாமி எழுந்தருளியதும் பக்தர்கள் தெப்ப வடத்தை இழுத்து தெப்பக்குளத்து நீரில் மூன்று முறை வலம் வந்தனர். மாலையிலும், சுவாமி பிராட்டியருடன் தெப்பத்தில் எழுந்தருளி மூன்று முறை வலம் வந்து அருள்பாலித்தார். அப்போது வாணவேடிக்கைகளுடன் சுவாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. 
 தெப்போற்சவத்தை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். மேலும், தெப்பத்தின் மேற்குப் பகுதியில் அமைக்கப்பட்ட மேடையில் எழுந்தருளிய சுவாமியை ஏராளமானோர் தரிசனம் செய்தனர். தெப்போற்சவத்தை அடுத்து திங்கள்கிழமை பெருவிழாவின் உற்சவ சாந்தி நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் ஆர்.வெங்கடாசலம், துணை ஆணையர் செ.மாரிமுத்து ஆகியோர் செய்திருந்தனர். 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/24/நீர்-நிறைந்த-தெப்பத்தில்-எழுந்தருளிய-தல்லாகுளம்-பெருமாள்-3006717.html
3006245 மதுரை மதுரை கருத்துரிமையைத் தடுப்பது ஜனநாயக விரோதம்: கேரள சட்டப் பேரவைத் தலைவர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன் DIN DIN Sunday, September 23, 2018 05:37 AM +0530 மதத்தின் பெயரால் கருத்துரிமையை தடுப்பது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என கேரள சட்டப் பேரவைத் தலைவர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
காமராஜர் பவுண்டேஷன் ஆஃப் இந்தியா மற்றும் காந்தி பாலகேந்திரா ஆகியவை சார்பில் மதுரையில் காந்தியடிகள் அரையாடைக் கோலத்துக்கு மாறிய தினத்தை நினைவு கூரும் வகையிலான கருத்தரங்கம் காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கேரள முன்னாள் அமைச்சர் ஏ.நீலலோகிததாசன் தலைமை வகித்தார். வி.சுதாகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கேரள சட்டப் பேரவைத் தலைவர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன் பேசியதாவது: நமது நாட்டின் சுதந்திரத்துக்காக போராடியவர்களில் தனித்துவமிக்க தலைவர்கள் சிலரே. அதில் காந்தியடிகளின் உண்மையான முதல்நிலைத் தொண்டராக காமராஜர் விளங்கினார். அவரைப் போல கேரளத்தில் நம்பூதிரிபாட் போன்றோர் திகழ்ந்தனர். தமிழர் என்ற அடையாளத்தை மக்களுக்கு கொடுத்ததில் ஈ.வெ.ராமசாமி பெரியாருக்கு பெரும்பங்குண்டு.
தற்போது ஆன்மிகத்தை மதம் எனும் பெயரில் சிலர் தவறாகப் பயன்படுத்துகின்றனர். மத நம்பிக்கை எனும் பெயரில் உத்தரப் பிரதேசத்தில் பசுக்களை பாதுகாப்பதாகக் கூறி பல அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
தொழில்நுட்ப வளர்ச்சியில் நாம் எந்தத் தகவலை வேண்டுமானாலும், எப்போதும் பெறக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், நமக்குத் தேவையானது சமூக ஒற்றுமையில் வளர்ச்சி என்பதாகும். அதைப் பெறுவதற்கு காந்தியடிகள், காமராஜர் போன்றோரின் சமத்துவக் கொள்கைகள் முக்கியமாகும். ஒவ்வொருவரும் தமது விருப்பத்துக்கு ஏற்ப கலாசாரம், மொழி, பண்பாடு போன்றவற்றை பின்பற்றவும், அதுகுறித்து விவாதிக்கவும் உரிமை உண்டு. அதைத் தடுப்பது சரியல்ல. மதத்தின் பெயரில் கருத்துரிமையை தடுக்கும் வகையில் சிலர் செயல்படுவது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என்றார்.
அமர்வுக்கு தலைமை வகித்து உயர்நீதிமன்ற வழக்குரைஞர் ஆர்.காந்தி பேசியது: காந்தியக் கொள்கைகளை கட்சியிலும், ஆட்சியிலும் சிறப்பாக செயல்படுத்தியவர் காமராஜர். தற்கால உலகத் தேவையாக காந்தியடிகளின் அகிம்சை அத்தியாவசியமாகிறது. அமைதி வளர்ச்சிக்கு காந்தியம் அவசியமாகிறது என்றார்.
நிகழ்ச்சியில் நாடார் மகாஜனசங்க பொதுச் செயலர் ஜி.கரிக்கோல்ராஜ், தேசிய நீர்வழிச்சாலை அமைப்பாளர் ஏ.சி.காமராஜ், காந்தி நினைவு அருங்காட்சியகச் செயலர் எம்.பி.குருசாமி, பேராசிரியர் ஆர்.பொண்ணு, கே.ஜான்குமார் உள்ளிட்டோர் பேசினர். முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் ஜமீலாபிரகாசம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். காமராஜர் மத நல்லிணக்க பேரவை டி.பிரபாகர் வரவேற்றார். இ.அருண்குமார் நன்றி கூறினார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/23/கருத்துரிமையைத்-தடுப்பது-ஜனநாயக-விரோதம்-கேரள-சட்டப்-பேரவைத்-தலைவர்-பிஸ்ரீராமகிருஷ்ணன்-3006245.html
3006162 மதுரை மதுரை புரட்டாசி முதல் சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் DIN DIN Sunday, September 23, 2018 03:35 AM +0530
புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை என்பதால், மதுரை மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
தமிழ் மாதமான புரட்டாசி பெருமாளுக்கு உகந்த மாதமாகும். புரட்டாசி முதல் சனிக்கிழமை (செப்.22) மதுரை கூடலழகர் பெருமாள் கோயில், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் மற்றும் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் என அனைத்துக் கோயில்களிலும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
கூடலழகர் பெருமாள் கோயில், தல்லாகுளம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி பெருந்திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். கோயில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
கூட்டம் அதிகமாக இருந்ததால், கூடலழகர் பெருமாள் கோயில் முன்பாக தடுப்புக் கம்புகள் கட்டப்பட்டு பக்தர்கள் வரிசையாக அனுமதிக்கப்பட்டனர். பெருமாள் சந்நிதி முன்புள்ள மண்டபத்தில் உற்சவர் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்கள் கொண்டுவந்த துளசி மாலைகள் அணிவிக்கப்பட்டு, அர்ச்சனைகள் நடைபெற்றன. அதேபோல், தல்லாகுளம் பெருமாள் கோயிலுக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த தடுப்புக் கம்புகள் வழியாக பக்தர்கள் வரிசையாக அனுப்பிவைக்கப்பட்டனர். சக்கரத்தாழ்வார் சக்கர சந்நிதியில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. மதுரை அருகேயுள்ள திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயிலிலும் கூட்டம் அலைமோதியது. இங்குள்ள சக்கரத்தாழ்வார் சந்நிதியில் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்தது. புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைதோறும் பக்தர்கள் பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்துவர். பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/23/புரட்டாசி-முதல்-சனிக்கிழமை-பெருமாள்-கோயில்களில்-பக்தர்கள்-கூட்டம்-3006162.html
3006161 மதுரை மதுரை சுற்றுச்சூழல் குறும்பட போட்டிக்கு படைப்புகளை அனுப்பலாம்: ஆட்சியர் DIN DIN Sunday, September 23, 2018 03:35 AM +0530
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் குறும்பட போட்டிக்கு படைப்புகளை அனுப்பலாம் என, மாவட்ட ஆட்சியர் ச. நடராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி: சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பொது ஊடகங்களில் விளம்பரப் படங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட உள்ளன. இதற்காக, நிலம், நீர், காற்று, வனம், தொழிற்சாலை நடவடிக்கைகள், தாவரங்கள், விலங்குகள் உள்ளிட்ட ஏதாவது ஒரு தலைப்பில் குறும்படங்கள் தேர்வு செய்யப்பட உள்ளன.
தேர்வு செய்யப்படும் 3 குறும்படங்களுக்கு முறையே ரூ.7 லட்சம், ரூ.6 லட்சம், ரூ.5 லட்சம் பரிசுத் தொகை மற்றும் தமிழக முதல்வரின் பாராட்டுச் சான்றும் வழங்கப்படும். இது தொடர்பான விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
விளம்பரப் படம் தயாரிக்கும் நிறுவனங்கள், தனிநபர்கள், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறும்படத்தை டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் இயக்குநர், சுற்றுச்சூழல் துறை, சென்னை -15 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/23/சுற்றுச்சூழல்-குறும்பட-போட்டிக்கு-படைப்புகளை-அனுப்பலாம்-ஆட்சியர்-3006161.html
3006160 மதுரை மதுரை உசிலை.யில் செப்.25 இல் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் DIN DIN Sunday, September 23, 2018 03:34 AM +0530
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் செப்டம்பர் 25 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.
இது குறித்து மதுரை மின்பகிர்மான வட்டம் மேற்பார்வைப் பொறியாளர் ஜா.பிரீடா பத்மினி விடுத்துள்ள செய்திக் குறிப்பு: உசிலம்பட்டி கோட்டத்தைச் சேர்ந்த மின்நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, உசிலம்பட்டி செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. மதுரை மின்பகிர்மான வட்டம் மேற்பார்வைப் பொறியாளர் தலைமையில் நடைபெறும் இக் கூட்டத்தில், மின்நுகர்வோர்கள் கலந்துகொண்டு தங்களது குறைகளை நேரிலோ, மனு மூலமோ கூறி நிவாரணம் பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/23/உசிலையில்-செப்25-இல்-மின்நுகர்வோர்-குறைதீர்-கூட்டம்-3006160.html
3006159 மதுரை மதுரை வண்டியூர் பூங்காவில் தூய்மைப் பணி: மாநகராட்சி ஆணையர் பங்கேற்பு DIN DIN Sunday, September 23, 2018 03:34 AM +0530
மதுரை மாநகராட்சி வண்டியூர் பூங்காவில் தூய்மையே சேவை திட்ட பணிகள் சனிக்கிழமை நடைபெற்றன. இதில், மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர் பங்கேற்று தூய்மை சேவையில் ஈடுபட்டார்.
மதுரை மாநகராட்சியில் கடந்த 19 ஆம் தேதி முதலே தூய்மை இந்தியா திட்டத்தின் கீழான தூய்மையே சேவை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில், சனிக்கிழமை மாநகராட்சிப் பகுதியில் உள்ள முக்கிய பூங்காக்களை தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்றன.
அதில், மதுரை கே.கே. நகர் பகுதியில் வண்டியூர் கண்மாய் கரையோரம் உள்ள பூங்காவை தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்றன. யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியும், மதுரை மாநகராட்சியும் இணைந்து தூய்மைப் பணியை மேற்கொண்டன.
இதையடுத்து, மதுரை மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர் மற்றும் யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் மண்டல மேலாளர் ஸ்ரீநிவாஸ் ஆகியோர் தலைமையில் தூய்மைப் பணிகள் நடைபெற்றன.
அப்போது, பூங்காவில் புல் தரைகளில் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள், குளிர்பான பாட்டில்கள் உள்ளிட்ட குப்பைகளை அப்புறப்படுத்தினர்.
மேலும், யூனியன் பேங்க் ஆப் இந்தியா சார்பில் பூங்காக்களில் குப்பைகளைத் தரம் பிரித்து சேகரிக்கும் வகையில் நீலம் மற்றும் பச்சை நிற 14 சிறிய குப்பைக் கூடைகளும் வழங்கப்பட்டன.
பூங்கா தூய்மைப் பணியில், வங்கியின் துணை மண்டல மேலாளர் பென்னி ஸ்டீபன் மற்றும் வங்கிப் பணியாளர்கள், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் இளையராஜா, சுகாதாரப் பிரிவினர் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/23/வண்டியூர்-பூங்காவில்-தூய்மைப்-பணி-மாநகராட்சி-ஆணையர்-பங்கேற்பு-3006159.html
3006158 மதுரை மதுரை வைகை ஆற்றில் மூழ்கி சிறுவன் சாவு DIN DIN Sunday, September 23, 2018 03:34 AM +0530  

வைகை ஆற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மதுரை அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் நவீன் (10). இச்சிறுவன், வெள்ளிக்கிழமை மாலை தனது நண்பர்களுடன் வைகை ஆற்றுப் பகுதியில் குளித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது, நவீனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கிய அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
அதையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் சிறுவனை மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து மணிகண்டன் அளித்த புகாரின்பேரில், அண்ணா நகர் போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/23/வைகை-ஆற்றில்-மூழ்கி-சிறுவன்-சாவு-3006158.html
3006157 மதுரை மதுரை குடும்பத் தகராறில் தீக்குளித்த பெண் சாவு DIN DIN Sunday, September 23, 2018 03:34 AM +0530
குடும்பத் தகராறு காரணமாக, பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக, போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மதுரை சக்கிமங்கலம் அருகே உள்ள கல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி ஜெயலட்சுமி (28). இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாம். இந்நிலையில், சில நாள்களுக்கு முன் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து, மனமுடைந்த ஜெயலட்சுமி வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது, இதைத் தடுக்க முயன்ற ராமச்சந்திரன், அவரது உறவினர் குருசாமி ஆகியோருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.
அதையடுத்து, மூவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி ஜெயலட்சுமி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். மற்ற இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சிலைமான் போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/23/குடும்பத்-தகராறில்-தீக்குளித்த-பெண்-சாவு-3006157.html
3006156 மதுரை மதுரை புதூர் அல்-அமீன் பள்ளி தலைமை ஆசிரியருக்கு அரிமா சங்க விருது DIN DIN Sunday, September 23, 2018 03:33 AM +0530
மதுரை புதூரில் உள்ள அல் அம்ன் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஷேக் நபிக்கு நல்லாசிரியர் விருதை, சென்னை அரிமா சங்கத்தின் சார்பில் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஜெகதீசன் வழங்கினார்.
மெட்ராஸ் கோல்டன் சிட்டி அரிமா சங்கம் சார்பில், ஆசிரியர் தின விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இதில், தமிழகம் முழுவதிலுமிருந்து தேர்வான 27 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன. இதில், மதுரையிலிருந்து தேர்வான புதூர் அல்-அமீன் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஷேக் நபிக்கு, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஜெகதீசன் நல்லாசிரியர் விருதுக்கான கேடயம், பாராட்டுச் சான்றுகளை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு, அரிமா சங்க மாவட்ட ஆளுநர் குலாம் ஹூசைன் தலைமை வகித்தார். அரிமா சங்க சென்னை மாவட்டத் தலைவர் முருகன், மண்டலத் தலைவர் வெங்கடசுப்பிரமணியன், வட்டாரத் தலைவர் இளங்கோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/23/புதூர்-அல்-அமீன்-பள்ளி-தலைமை-ஆசிரியருக்கு-அரிமா-சங்க-விருது-3006156.html
3006155 மதுரை மதுரை கரும்பு நிலுவை தொகையை வழங்கக் கோரி அலங்காநல்லூரில் அக்.1-இல் போராட்டம் DIN DIN Sunday, September 23, 2018 03:33 AM +0530
கரும்பு விவசாயிகளுக்குத் தரவேண்டிய நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை முன்பாக அக்டோபர் 1 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த, கரும்பு விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மதுரையில் அரசு ஊழியர் சங்க அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் என். பழனிச்சாமி தலைமை வகித்தார்.
கூட்டத்தில், அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை நிர்வாகம் கடந்த 2015-2016 முதல் 2017-2018 வரை கரும்புக்கான மாநில அரசின் பரிந்துரை விலையில் ரூ. 7.5 கோடியை விவசாயிகளுக்கு நிலுவை வைத்துள்ளது.
இத் தொகையை, செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் வழங்கவேண்டும். இல்லையெனில், அக்டோபர் 1 ஆம் தேதி அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை முன் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இதில், கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் போஸ், பெருமாள், முனியாண்டி, ராமராஜ், கதிரேசன், பிச்சை, சோலைமலை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/23/கரும்பு-நிலுவை-தொகையை-வழங்கக்-கோரி-அலங்காநல்லூரில்-அக்1-இல்-போராட்டம்-3006155.html
3006154 மதுரை மதுரை ரூ.4 லட்சம் மோசடி பெண் உள்பட இருவர் மீது வழக்கு DIN DIN Sunday, September 23, 2018 03:33 AM +0530
தொழிலில் முதலீடு செய்தால் அதிக லாபத்துடன் பணம் தருவதாகக் கூறி ரூ. 4 லட்சம் மோசடி செய்த பெண் உள்பட இருவர் மீது போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மதுரை அருகேயுள்ள பூலாம்பட்டியைச் சேர்ந்தவர் பிரபு. இவர், கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவரது தொழிலில் முதலீடு செய்தால், அதிக லாபம் தருவதாகத் தெரிவித்துள்ளார். இதை நம்பிய மதுரை பெத்தானியாபுரம் பாத்திமா நகரைச் சேர்ந்த அய்யாவு (48) பல்வேறு தவணைகளில் பிரபுவிடம் ரூ. 4 லட்சம் வழங்கியுள்ளார்.
இந்நிலையில், பல மாதங்களாகியும் பணத்தை திருப்பித் தராமல் பிரபு இழுத்தடித்துள்ளார். மேலும், அய்யாவுவை மிரட்டினாராம்.
இது குறித்து அய்யாவு அளித்த புகாரின்பேரில், பிரபு மற்றும் அவரது சகோதரி பிரமிளா ஆகியோர் மீது கரிமேடு போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/23/ரூ4-லட்சம்-மோசடி-பெண்-உள்பட-இருவர்-மீது-வழக்கு-3006154.html
3006153 மதுரை மதுரை சிறப்பு கிராம சபைக் கூட்டம்: பொதுமக்கள் முன்னிலையில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு DIN DIN Sunday, September 23, 2018 03:32 AM +0530
மதுரை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை பொதுமக்கள் சரிபார்த்துக் கொண்டனர்.
ஜனவரி 1-ஆம் தேதியை தகுதியேற்பு நாளாகக் கொண்டு, புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, செப்டம்பர் 15-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதைத் தெரிந்து கொள்வதற்காகவும், விடுபட்ட நிலையில் விண்ணப்பம் அளிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், கிராமத்தினர் தங்களது பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொண்டனர். திருமங்கலம் ஒன்றியம் கரிசல்பட்டியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக, மாவட்ட ஆட்சியர் ச. நடராஜன் பங்கேற்றார்.
இக் கூட்டத்தில் ஆட்சியர் பேசியது: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக்டோபர் 31 வரை விண்ணப்பங்கள் பெறப்படும். இதற்காக அனைத்து வாக்குச் சாவடிகளிலும் ஞாயிற்றுக்கிழமையும் (செப்.23), அக்டோபர் 7 மற்றும் அக்டோபர் 14 ஆம் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்கான தடை அமலுக்கு வருகிறது. எனவே, பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும். கிராமத்தை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்றார்.
இதில், ஊராட்சிகள் உதவி இயக்குநர் லெட்சுமி, திருமங்கலம் வட்டாட்சியர் நாகரெத்தினம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தர்மராஜ், உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பிளாஸ்டிக் பொருள்களைத் தவிர்ப்பது குறித்து ஆட்சியர் தலைமையில் கிராமத்தினர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/23/சிறப்பு-கிராம-சபைக்-கூட்டம்-பொதுமக்கள்-முன்னிலையில்-வாக்காளர்-பட்டியல்-சரிபார்ப்பு-3006153.html
3006152 மதுரை மதுரை திருமங்கலம் அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு DIN DIN Sunday, September 23, 2018 03:32 AM +0530
திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை ஆய்வு செய்த ஆட்சியர், மருத்துவமனை வளாகத்தை தூய்மையாகப் பராமரிக்க அறிவுறுத்தினார்.
திருமங்கலம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ச. நடராஜன் ஆய்வு மேற்கொண்டனர். நகராட்சியால் பராமரிக்கப்படும் திடக்கழிவு மேலாண்மைக் கிடங்கு, இயற்கை உரம் தயாரிப்பு, குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.784 கோடியில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையம், நகராட்சி அலுவலக கூடுதல் கட்டடம் கட்டுமானப் பணி ஆகியவற்றைப் பார்வையிட்டார்.
பின்னர், திருமங்கலம் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த அவர், அவசர சிகிச்சை, குழந்தைகள் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைப் பிரிவுகளைப் பார்வையிட்டார். அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுமாறு மருத்துவர்களிடம் அறிவுறுத்தினார்.
கிராமப்புறங்களிலிருந்து வரும் மக்களுக்கு மருத்துவர்களும், செவிலியர்களும் நோய் குறித்து சரியான விளக்கத்தை அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து, மருத்துவமனை பதிவேடுகள், மருந்துகள் இருப்பு குறித்து ஆய்வு செய்தார். ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி வெளிநோயாளிகள் பிரிவையும் பார்வையிட்டார்.
அதன்பின்னர், பேருந்து முனையம் (பஸ் போர்ட்) அமைப்பதற்காகத் தேர்வு செய்யப்பட்ட இடங்களில் ஒன்றான திருமங்கலம் அருகே உள்ள கரடிக்கல் பகுதியையும் ஆட்சியர் பார்வையிட்டார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/23/திருமங்கலம்-அரசு-மருத்துவமனையில்-ஆட்சியர்-ஆய்வு-3006152.html
3006151 மதுரை மதுரை வெள்ளலூர் கடைமடைப் பகுதி விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியல் DIN DIN Sunday, September 23, 2018 03:32 AM +0530
பெரியாறு பிரதானக் கால்வாய் பாசனத்தில் கடைமடைப் பகுதியான வெள்ளலூர் 9-ஆம் பிரிவு கால்வாயில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி, விவசாயிகள் மேலூர்-சிவகங்கை சாலையில் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
பெரியாறு -வைகை பாசனத்துக்குள்பட்ட மேலூர் ஒருபோக சாகுபடி பகுதிகளுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதியிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆனால், வெள்ளலூர், கோட்டநத்தம்பட்டி, உறங்கான்பட்டி மற்றும் கொட்டகுடி சி-வாய்க்கால் பகுதிகளுக்கு போதிய தண்ணீர் வரவில்லை. விவசாயிகள் தற்போது நாற்றங்கால் தயார் செய்து உழவுப் பணிகளை தொடங்க இருக்கின்றனர்.
இந்நிலையில், கடைமடைப் பகுதி கிளை கால்வாய்களுக்கு போதிய தண்ணீர் வராததால், உழவுப் பணிகளை தொடங்க இயலவில்லை. இது குறித்து மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகளைச் சந்தித்து மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவேதான், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலூர்-சிவகங்கை சாலையில் கோட்டநத்தம்பட்டி விலக்கில் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மேலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி, விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், பொதுப்பணித் துறை அதிகாரிகளையும் வரவழைத்துப் பேசினார். திங்கள்கிழமை முதல் கூடுதல் தண்ணீர் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்பேரில், விவசாயிகள் கலைந்துசென்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/23/வெள்ளலூர்-கடைமடைப்-பகுதி-விவசாயத்துக்கு-தண்ணீர்-திறக்கக்-கோரி-விவசாயிகள்-சாலை-மறியல்-3006151.html
3006150 மதுரை மதுரை தாமிரவருணி புஷ்கர விழாவுக்கு தடைவிதிப்பது வருத்தமானது: சிவப்பிரகாசர் ஆய்வு மையம் அறிக்கை DIN DIN Sunday, September 23, 2018 03:32 AM +0530
திருநெல்வேலியில் நடைபெறவுள்ள தாமிரவருணி புஷ்கர விழாவுக்கு தடை விதிப்பது வருத்தமளிப்பதாக, மதுரை ஞானப்பிரகாசர் மற்றும் சிவப்பிரகாசர் ஆய்வு மைய இயக்குநர் அ. ஞானஸ்கந்தன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மதுரையில் அவர் சனிக்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு: திருநெல்வேலியில் தாமிரவருணி புஷ்கர விழா நடைபெறவுள்ளது. ஆனால், பல்வேறு இடங்களில் புஷ்கர விழா நடைபெறும் நிலையில், இரண்டு இடங்களில் மட்டுமே மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அது சரியல்ல. தடை விதிக்கப்பட்ட இடங்கள் திருநெல்வேலி மாநகரத்தின் முக்கிய தீர்த்தங்களாகும்.
முக்கியமான தீர்த்தக் கட்டங்களில் தடை விதித்திருப்பதன் மூலம், திருநெல்வேலியில் எங்கும் புஷ்கர விழா நடத்த இயலாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு காவிரியில் நடைபெற்ற புஷ்கர விழாவில், பத்து நாள்களும் சுவாமி எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது. அதை முன்னுதாரணமாகக் கொண்டே திருநெல்வேலியிலும் சுவாமி எழுந்தருள ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.
கங்கையில் நீரோட்டத்தை கணிக்க முடியாத நிலையிலும் உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டு, பக்தர்கள் புனிதநீராட அங்குள்ள நிர்வாகம் அனுமதித்துள்ளது. ஆனால், அபாய நீரோட்டம் இல்லாத தாமிரவருணியில் உரிய பாதுகாப்பு அளித்து, புஷ்கர விழா நடத்த அனுமதி அளிக்கவேண்டியது அவசியம்.
நமது பண்பாடு, சமயம், வழிபாடு, புராணம் தொடங்கி சங்க காலம், தற்காலம் வரை நீர்நிலைகளை வணங்குவதும், புனித நீராடலும், சுவாமி எழுந்தருளி தீர்த்தவாரி நடத்தப்படுவதும் தொன்று தொட்ட நிகழ்வாகும்.
எனவே, அரசு அதிகாரிகள், சமயத் தலைவர்கள், பக்தர்களோடு தண்டவாளத்தில் செல்லும் ரயிலைப் போல இணைந்து செயல்படுவது அவசியம்.
அதுபோன்ற நிலையானது, திருநெல்வேலியில் இல்லை என்பது வருத்தமானதாகும். அரசியலுக்கு இடமின்றி அதிகாரிகள் நடுநிலையுடன் செயல்படவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/23/தாமிரவருணி-புஷ்கர-விழாவுக்கு-தடைவிதிப்பது-வருத்தமானது-சிவப்பிரகாசர்-ஆய்வு-மையம்-அறிக்கை-3006150.html
3006149 மதுரை மதுரை பக்கவாத நோய் குறித்த அடிப்படை புரிதலும், விழிப்புணர்வும் அவசியம் DIN DIN Sunday, September 23, 2018 03:31 AM +0530
பக்கவாத நோய் குறித்த அடிப்படைப் புரிதலும், விழிப்புணர்வும் அனைவருக்கும் அவசியம் என்று மருத்துவர் கே. சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
வடமலையான் மருத்துவமனை சார்பில், ஒருங்கிணைந்த பக்கவாத மருத்துவப் பிரிவு சனிக்கிழமை தொடங்கப்பட்டது. இப்பிரிவை, நரம்பியல் துறை மூத்த மருத்துவர்கள் கே. சீனிவாசன், டி. ராமசுப்பிரமணியன், வி. நாகராஜன் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தனர்.
பின்னர், மருத்துவர் கே. சீனிவாசன் பேசியது: இந்தியாவில் பக்கவாதம், மாரடைப்பு, புற்றுநோய் போன்ற நோய்களினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளைத் தடுக்க கடுமையாகப் போராடப்பட்டு வருகிறது. இதில் விரைவில் வெற்றி காணப்படும்.
இவைகளில் பக்கவாதம் எனும் மூளை ரத்தக் குழாய் அடைப்பினால் வரும் நோயானது, உயிரிழப்பின் சதவீதத்திலும் மற்ற உடல் பாகங்களைச் செயலிழக்கச் செய்து மனிதர்களின் செயல்பாடுகளை முடக்கும் சதவீதத்திலும், மற்ற நோய்களை விட மோலோங்கி நிற்கிறது. இதைக் கருத்தில்கொண்டு, உலகெங்கிலும் பல்வேறு மருத்துவ ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பக்கவாதத்தை குணப்படுத்த ஒரு சில உத்திகள் மட்டும் போதாது. அது ஒருங்கிணைந்த அணுகுமுறைக்கு உள்பட்டது. பாதிக்கப்பட்ட நபரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உரிய நேரத்தில் சிகிச்சை அளித்தால், பக்கவாதப் பாதிப்புகளின் சதவீதம் குறையும். பக்கவாதம் ஏற்பட்டவுடன் பாதிக்கப்பட்ட நபரைக் கையாளும் முறைகள் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பக்கவாதம் குறித்த அடிப்படைப் புரிதலும், விழிப்புணர்வும் அனைவருக்கும் அவசியம். உணவுக் கட்டுப்பாடு, தினசரி உடற்பயிற்சி உள்ளிட்டவற்றைப் பின்பற்ற வேண்டும் என்றார்.
வடமலையான் மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் வி.புகழகிரி, பக்கவாதப் பாதிப்புகளை குணப்படுத்துவதில் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் ஏற்பட்டுள்ள கட்டிகளைக் கரைக்கும் முறை முதற்கொண்டு, புதிய மேம்பட்ட நுண்துளை மூலம் ரத்தக் கட்டிகளை அகற்றி, ரத்தக் குழாய்களை சீரமைக்கும் முறை வரை இந்த மருத்துவப் பிரிவில் அறிமுகப்படுத்தியுள்ளோம்.
மேலும், அறுவைச் சிகிச்சை மூலமாகவும், இயன்முறை சிகிச்சைகள் மூலமாகவும் பக்கவாதத்தால் செயலிழந்த பகுதிகளைச் செயல்படச் செய்தல் போன்ற வசதிகளும் இதில் அடங்கும் என்றார்.
மேலும், மருத்துவர்கள் சி. ஜஸ்டின், எஸ். முபாரக் சஜீரா, ஜி. சதீஷ்குமார், எஸ். கணபதிவேல் கண்ணன் உள்ளிட்டோர் பக்கவாத நோய்களின் வகைகள் மற்றும் அதற்கான மருத்துவ முறைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
இதில், சந்திரா புகழகிரி, மருத்துவர்கள் என். சுந்தரி, வி.டி. பிரேம்குமார், கே. ராஜேஷ்குமார், பி. ஸ்ரீதரன், எம்.ஆர். மணிவண்ணன், ஆர். பாலாஜிநாதன், டி. அறம், வி. பப்புநாதன், என். முத்துவீரன், ஆர். வீரபாண்டியன், பரணிகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/23/பக்கவாத-நோய்-குறித்த-அடிப்படை-புரிதலும்-விழிப்புணர்வும்-அவசியம்-3006149.html
3006147 மதுரை மதுரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் இளைஞர்கள் இருவர் கைது DIN DIN Sunday, September 23, 2018 03:31 AM +0530  

மதுரையில் இளைஞர்கள் இருவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
மதுரை அனுப்பானடியைச் சேர்ந்தவர் கார்த்திக் என்ற ஆக்டர் கார்த்திக் (22). அனுப்பானடி சௌராஷ்டிரா காலனியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (23). இவர்கள் இருவர் மீதும் மதுரையின் பல்வேறு காவல் நிலையங்களிலும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், இவர்கள் இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய, மாநகரக் காவல் ஆணையர் எஸ். டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டார். அதன்பேரில், இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/23/குண்டர்-தடுப்புச்-சட்டத்தில்-இளைஞர்கள்-இருவர்-கைது-3006147.html
3006146 மதுரை மதுரை மதுரை ரயில் நிலையத்தில் புதிய நடைமேடை பாலம், பிரீ-பெய்டு ஆட்டோ சேவை: தென்னக ரயில்வே பயணிகள் நலச் சங்கம் வலியுறுத்தல் DIN DIN Sunday, September 23, 2018 03:31 AM +0530
மதுரை ரயில் நிலையத்தின் புதிய நடைமேடை பாலத்தை விரைவில் திறக்கவும், பிரீ-பெய்டு ஆட்டோ சேவையை மீண்டும் செயல்படுத்தவும், தென்னக ரயில்வே பயணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக தென்னக ரயில்வே பயணிகள் நலச்சங்க பொதுச்செயலர் கே. பத்மநாதன் வெளியிட்ட செய்தி:
மதுரை ரயில் நிலையத்துக்கு தினசரி 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர்.
ஆனால், இங்குள்ள குறைகளைப் போக்கக் கோரி, ரயில்வே அதிகாரிகளுக்கு மனு செய்தும் நடவடிக்கை இல்லை.
தற்போது, இங்குள்ள இரு முக்கிய அடிப்படைப் பிரச்னைகளான, முதல் நடைமேடை முதல் ஆறாம் நடைமேடை வரை இணைக்கும் புதிய பாலத்தின் பணிகள் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.
இந்த புதிய பாலத்தின் பணிகள் விரைவில் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வந்தால், பயணிகள் கூட்டம் பெருமளவில் குறையும் வாய்ப்புள்ளது.
எனவே, இந்தப் பணியை அதிகாரிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இதேபோல், மதுரை முக்கிய ஆன்மிக சுற்றுலாத் தலமாக இருப்பதால், வெளிமாநிலப் பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.
இவர்களிடம் ரயில் நிலையத்துக்கு வெளியே உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் அதிகளவில் கட்டணம் வசூலிக்கின்றனர்.
இதனால், பெரும்பாலான பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இங்கு பிரீ-பெய்டு ஆட்டோ சேவையை மீண்டும் செயல்படுத்தவேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/23/மதுரை-ரயில்-நிலையத்தில்-புதிய-நடைமேடை-பாலம்-பிரீ-பெய்டு-ஆட்டோ-சேவை-தென்னக-ரயில்வே-பயணிகள்-நலச்-சங்-3006146.html
3005441 மதுரை மதுரை கொட்டாம்பட்டி அருகே வடமாடு மஞ்சுவிரட்டு: 9 பேர் காயம் DIN DIN Saturday, September 22, 2018 07:56 AM +0530 கொட்டாம்பட்டி அருகே தேத்தாம்பட்டி கிராமத்தில் உள்ள கருப்பணசுவாமி கோயில் பொங்கல் திருவிழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
   நீண்டகாலத்துக்குப் பின்னர் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 16 காளைகள் பங்கேற்றன. சிறந்த காளைகளுக்கும், காளைகளைப் பிடிக்க முயன்ற வீரர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. காளைகளைப் பிடிக்க முயன்றதில் 9 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு திடல் அருகிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/22/கொட்டாம்பட்டி-அருகே-வடமாடு-மஞ்சுவிரட்டு-9-பேர்-காயம்-3005441.html
3005440 மதுரை மதுரை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை வாக்காளர் சேர்க்கை முகாம் DIN DIN Saturday, September 22, 2018 07:55 AM +0530 மதுரை மாவட்டத்தில் உள்ளஅனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர் சேர்க்கை முகாம் ஞாயிற்றுக்கிழமை (செப். 23) நடைபெறுகிறது.
    வரும் 2019 ஜனவரி 1 ஆம் தேதியை தகுதியேற்பு நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி செப்டம்பர் 15-இல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இப் பட்டியல் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி உதவி ஆணையர் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
 பதினெட்டு வயது பூர்த்தி அடைந்த வாக்காளர்கள், பட்டியலில் விடுபட்டவர்கள் பெயர் சேர்க்கவும், நீக்கம், திருத்தம் செய்யவும், சட்டப்பேரவைத் தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்வதற்கும்  வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி உதவி ஆணையர் அலுவலகங்கள், வாக்குச்சாவடிகளில் விண்ணப்பங்கள் அளிக்கலாம்.
 மேலும், வாக்காளர் சேர்க்கை தொடர்பாக மாவட்டத்தில் உள்ள 420 ஊராட்சிகளிலும்,  சனிக்கிழமை (செப்.22) சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் வாக்காளர்கள் தங்களது பெயர்  பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம். அதைத்தொடர்ந்து அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஞாயிற்றுக்கிழமை (செப். 23) வாக்காளர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது.  இதில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றத்துக்கான விண்ணப்பங்கள் அளிக்கலாம்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/22/அனைத்து-வாக்குச்சாவடிகளிலும்-நாளை-வாக்காளர்-சேர்க்கை-முகாம்-3005440.html
3005439 மதுரை மதுரை ஸ்டெர்லைட் ஆலையை மூட சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றியிருக்க வேண்டும்: வைகோ DIN DIN Saturday, September 22, 2018 07:55 AM +0530 ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றியிருக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார். 
   சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை மதுரை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:       
   தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என தமிழக அரசு,  கொள்கை அளவில் முடிவு எடுத்து சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றியிருக்க வேண்டும்.  அப்படி செய்திருந்தால் மீண்டும் ஆலையைத் திறப்பதற்கான முயற்சிகள் நடந்திருக்காது. இதைத் தான் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வழக்கு விசாரணையின்போது கேட்டனர். அவ்வாறு நிறைவேற்றி இருந்தால் தேசிய பசுமை தீர்ப்பாயம், நியமித்த குழு ஆய்வுக்கு வருவதை தடை செய்திருக்கலாம். மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்க முயற்சிகள் நடக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டால்,  ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் அரசியல் கட்சிகளின் ஒருமித்த போராட்டமாக மாற வாய்ப்புள்ளது என்றார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/22/ஸ்டெர்லைட்-ஆலையை-மூட-சட்டப்பேரவையில்-மசோதா-நிறைவேற்றியிருக்க-வேண்டும்-வைகோ-3005439.html
3005438 மதுரை மதுரை "ஸ்டெர்லைட் விவகாரத்தில் அரசு முறையாக செயல்படுகிறது' DIN DIN Saturday, September 22, 2018 07:54 AM +0530 ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு முறையாக செயல்படுகிறது என தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். 
     சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை மதுரை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: 
  ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு முறையாக செயல்படவில்லை என மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறியது சரியல்ல. அவர் தன் மனதில் தோன்றியதை கூறியுள்ளார். ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு முறையாக செயல்படுகிறது. அரசு என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமோ அவற்றை மேற்கொண்டு வருகிறது. ஏற்கெனவே ஆலையைமூட அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தாமிரவருணி புஷ்கரணி விழா குறித்து ஆலோசனை செய்யப்படும். 18 சட்டப் பேரவை உறுப்பினர்கள் தீர்ப்பு பற்றி அமமுக துணைபொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் கூறியது அவரது சொந்த கருத்து. அது குறித்து பதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/22/ஸ்டெர்லைட்-விவகாரத்தில்-அரசு-முறையாக-செயல்படுகிறது-3005438.html
3005437 மதுரை மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் நீதிபதி ஆய்வு DIN DIN Saturday, September 22, 2018 07:54 AM +0530 மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் பக்தர்களுக்கான வசதிகள், கோயில்  பராமரிப்பு தொடர்பாக மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி எஸ்.கார்த்திகேயன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
    தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் உள்ள கோயில்களில் பக்தர்களுக்கான வசதிகள், கோயில் வளாகம் பராமரிப்பு, அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மாவட்ட நீதிபதிகளுக்கு உத்தரவிட்டிருந்தது.
 இதன்படி, மதுரையில் பல்வேறு கோயில்களிலும் நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி எஸ்.கார்த்திகேயன், கூடலழகர் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.  சுவாமி சன்னதி, யாகசாலை, சுற்றுப் பிரகாரம், நந்தவனம், ஜெனரேட்டர் அறை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளையும் நீதிபதி ஆய்வு செய்தார். அப்போது கோயிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து, உதவி ஆணையர் அனிதா விளக்கம் அளித்தார். 
  கோயில் வளாகத்தில் தற்போது 18 சிசிடிவி காமிராக்கள் இருப்பதாகவும்,  மேலும் ரூ.25 லட்சத்தில் கூடுதலாக காமிராக்கள் அமைக்க உள்ளதாகவும் தெரிவித்தார். அதோடு, ரூ.3 கோடியில் பல்வேறு புனரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கான அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
  கோயிலின் அனைத்துப் பகுதிகளையும் ஆய்வு செய்த நீதிபதி, கோயில் வளாகத்தை சுகாதாரமாகப் பராமரிக்க அறிவுரை வழங்கினார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/22/கூடலழகர்-பெருமாள்-கோயிலில்-நீதிபதி-ஆய்வு-3005437.html
3005436 மதுரை மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் ரூ.1.17 கோடியில் நலத்திட்ட உதவிகள் DIN DIN Saturday, September 22, 2018 07:54 AM +0530 திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உள்பட்ட இடங்களில் வெள்ளிக்கிழமை ரூ.1.17 கோடியில்  நலத்திட்ட உதவிகளை  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். 
     தனக்கன்குளம், நிலையூர் கைத்தறி நகர், சூரக்குளம், வளையபட்டி, வளையங்குளம் ஆகிய கிராமங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு  மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் வி.வி.ராஜன்செல்லப்பா, பெரியபுள்ளான், சரவணன்ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
  நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பனாளிகளுக்கு ரூ.1.17 கோடிக்கு  நலத்திட்ட உதவிகள் வழங்கினார். 
   149 பேருக்கு இலவச வீட்டு மனைபட்டா, 109 பேருக்கு  முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டது. வேளாண்மைத்துறை, தோட்டக்கலை துறை, பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் 397 பேருக்கு ரூ.1 கோடியே 17 லட்சத்து  79 ஆயிரத்து 683-க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.  
   நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் குணாளன் வரவேற்றார். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ம.முத்துராமலிங்கம், அரசு வழக்குரைஞர் எம்.ரமேஷ், முன்னாள் வாரிய தலைவர் பூமிபாலகன், கூட்டுறவு சங்க தலைவர்கள் நிலையூர் முருகன், பாலமுருகன், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் எஸ்.முனியாண்டி, முத்துக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/22/திருப்பரங்குன்றம்-தொகுதியில்-ரூ117-கோடியில்-நலத்திட்ட-உதவிகள்-3005436.html
3005435 மதுரை மதுரை வைகையாற்றில் இறங்கி போராட்டம்: 81 பேர் கைது DIN DIN Saturday, September 22, 2018 07:54 AM +0530 மதுரை நகரில் வைகையாற்றில் தடுப்பணைகள் கட்ட வலியுறுத்தி ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்திய தென்னிந்திய பார்வர்டு பிளாக் அமைப்பினர் 81 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
    வைகையாற்றில் கல்பாலம் பகுதியில் அந்த அமைப்பின் நிறுவனர் கே.சி.திருமாறன் தலைமையில் ஊர்வமலாகச் சென்று வைகையாற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மதுரை நகரில் பாதாளத்தில் உள்ள நிலத்தடி நீராதாரத்தை உயர்த்தும் வகையில் மதுரை வழியாக செல்லும் வைகையாற்றில் நகர் எல்லைக்குள் 5 தடுப்பணைகள் கட்ட வேண்டும். வைகையாற்றை  தூய்மைப்படுத்த மத்திய அரசு ஒதுக்கிய ரூ.120 கோடி தொடர்பான விவரம் தெரிவிக்க வேண்டும். வைகையாற்றை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும். வைகையாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மதுரை மாவட்டத்தில் சிமெண்ட் சாலைகள் அமைக்க தடை விதிக்க வேண்டும். சாலைகளில் மழை நீர் சேமிப்புத்தொட்டி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டன.  இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட 7 பெண்கள் உள்பட 81 பேரை கைது செய்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/22/வைகையாற்றில்-இறங்கி-போராட்டம்-81-பேர்-கைது-3005435.html
3005434 மதுரை மதுரை "ஹெச்.ராஜா, கருணாஸை கைது செய்ய நடவடிக்கை' DIN DIN Saturday, September 22, 2018 07:53 AM +0530 பாஜக தேசியச் செயலர் ஹெச்.ராஜா, அதிமுக எம்எல்ஏ கருணாஸ் ஆகியோரை கைது செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கூறினார்.
 தமிழ்நாடு பெயர் சூட்டல் 50 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு தமிழ் வளர்ச்சி துறை மற்றும் நான்காம் தமிழ் சங்கம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசளிக்கும் விழா செந்தமிழ்க் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  
  இவ்விழாவில் பங்கேற்ற அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் செய்தியாளர்களிடம்  கூறியது: 
        கீழடி அகழ்வாராய்ச்சியின் நான்காம் கட்ட பணிகள் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் முடிவடையும்.  கீழடி அகழாய்வின் அறிக்கையும்,  15 ஆண்டுகளாக வெளிவராமல் உள்ள ஆதிச்சநல்லூர் அகழாய்வின் அறிக்கையையும் வெளியிட மத்திய தொல்லியல்துறையிடம் கேட்டுள்ளோம். கீழடி, ஆதிச்சநல்லூர், அழகன்குளம் உள்ளிட்ட இடங்களில் அருங்காட்சியகங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  மதுரையில் உள்ள உலகத் தமிழ்ச் சங்க கட்டடத்தில் விரிசல் விழுந்து விட்டது என்பது தேவையற்ற வதந்தி.  அதை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பாஜக தேசியச் செயலர் ஹெச்.ராஜா, கருணாஸ் உள்ளிட்டவர்களை கைது செய்ய அமைக்கப்பட்டுள்ள தனிப்படை போலீஸார் விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள். சட்டப்படி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/22/ஹெச்ராஜா-கருணாஸை-கைது-செய்ய-நடவடிக்கை-3005434.html
3005433 மதுரை மதுரை பெண் வீட்டார் பொய் புகார்: இளைஞர் மீதான போக்சோ வழக்கு ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு DIN DIN Saturday, September 22, 2018 07:53 AM +0530 பெண் வீட்டார் அளித்தப் பொய்ப் புகாரின் பேரில் மதுரை இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
    மதுரையைச் சேர்ந்த இளைஞர் தினேஷ்குமார். இவர் ஒரு பெண்ணைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ்  (போக்சோ) கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு மதுரை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.   
   இந்நிலையில் தன் மீதான  வழக்கை ரத்து செய்யக்கோரி தினேஷ்குமார் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.  இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பந்தப்பட்ட பெண் நீதிமன்றத்தில் ஆஜராகி,  தினேஷ்குமாரும் நானும் விரும்பியது உண்மை. ஆனால், அவர் என்னை பாலியல் ரீதியான துன்புறுத்தவில்லை. எனது பெற்றோரின் வற்புறுத்தலின்பேரில் அவர் மீது புகார் அளித்தேன். தற்போது எனக்கு திருமணத்துக்கான ஏற்பாடுகளை பெற்றோர்கள் கவனித்து வருகின்றனர். எனவே இந்த வழக்கை முடிக்க விரும்புவதாக தெரிவித்தார். 
 இதைப் பதிவு செய்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
 நீதிமன்றத்தில் ஆஜராகிய பெண் தான் தற்போது 20 வயதை எட்டியுள்ளதாகவும் பெற்றோர் விருப்பப்படி திருமணம் செய்துகொண்டு புது வாழ்வைத் துவங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.  போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை நீதிமன்றம் இவ்வாறாக கையாளுவதில்லை. ஆனால், இந்த வழக்கு முற்றிலும் மாறுபாடானது. இதில் மனுதாரர் மீது சம்பந்தப்பட்ட பெண் தனது பெற்றோரின் வற்புறுத்தலின்பேரில் புகார் அளித்துள்ளார். எனவே மனுதாரர் மீதான போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்வதில் தவறில்லை என்ற முடிவை இந்த நீதிமன்றம் எடுத்துள்ளது. இதன்படி மதுரை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் மனுதாரருக்கு எதிராக நடைபெற்று வரும் வழக்கு விசாரணை ரத்து செய்யப்படுகிறது. தலைமை நீதிபதி நிவாரண நிதிக் கணக்கில் மனுதாரர் ரூ.ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/22/பெண்-வீட்டார்-பொய்-புகார்-இளைஞர்-மீதான-போக்சோ-வழக்கு-ரத்து-உயர்நீதிமன்றம்-உத்தரவு-3005433.html
3005432 மதுரை மதுரை சீர்மரபினர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் DIN DIN Saturday, September 22, 2018 07:53 AM +0530 மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டியில் பட்டியலிடப்பட்ட பூர்வீக பழங்குடியினர்  (டி.என்.டி.) சான்றிதழ் வழங்கக்கோரியும், பாப்பாபட்டியை பொதுத் தொகுதியாக மாற்றக்கோரியும் சீர்மரபினர் நலச் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
   பாப்பாபட்டியில் உள்ள  மூக்கையாத்தேவர் சிலை அருகே  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்றக்கழக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன், மதுரை புறநகர் மாவட்டச் செயலர் மகேந்திரன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.  
பின்னர் தங்க. தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் கூறியது: எங்கள் கட்சி ஆட்சிக்குவந்தால் டி.என்.டி. சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுப்போம். ஹெச்.ராஜா, போன்றோர் மீது தமிழக ரசால் மத்திய அரசுக்கு பயந்து வழக்குப்பதிவு செய்யமட்டுமே முடியும். கைது செய்யமுடியாது என்றார். 
நடிகர் கருணாஸ் சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் கூற மறுத்து விட்டார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/22/சீர்மரபினர்-நலச்சங்கத்தினர்-ஆர்ப்பாட்டம்-3005432.html
3005431 மதுரை மதுரை வைகையாற்றில்  தொழிலாளி சடலம் மீட்பு DIN DIN Saturday, September 22, 2018 07:52 AM +0530 மதுரை வைகையாற்றில் தொழிலாளியின் சடலத்தை போலீஸார் வெள்ளிக்கிழமை மீட்டனர்.
மதுரை வண்டியூர் தெப்பக்குளத்தைச் சேர்ந்தவர் செல்வபூபதி(48).  தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவரை கடந்த புதன்கிழமை காணவில்லை என்று தெப்பக்குளம் காவல் நிலையத்தில் குடும்பத்தினர் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் ஐராவதநல்லூர் பகுதியில் வைகையாற்றில் ஆண் சடலம் மிதப்பதாக அப்பகுதியினர் தெப்பக்குளம் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்குச்சென்ற போலீஸார் சடலத்தை மீட்டனர்.  இது குறித்து செல்வபூபதி குடும்பத்தினருக்கு போலீஸார் தகவல் அளித்தனர். இதையடுத்து ஆற்றுக்குச் சென்ற அவரது குடும்பத்தினர் சடலத்தை பார்த்து அது செல்வபூபதி என்பதை உறுதி செய்தனர். தெப்பக்குளம் பகுதியில் உள்ள வைகையாற்றுக்கு குளிக்கச் சென்றபோது ஆற்றுநீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக தெப்பக்குளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/22/வைகையாற்றில்--தொழிலாளி-சடலம்-மீட்பு-3005431.html
3005430 மதுரை மதுரை வரதட்சிணை புகார்: கணவர் உள்பட 7 பேர் மீது வழக்கு DIN DIN Saturday, September 22, 2018 07:52 AM +0530 மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கூடுதல் வரதட்சிணை கேட்டு மனைவியை தொந்தரவு செய்ததாக கணவர் உள்ளிட்ட 7 பேர் மீது  போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
திருமங்கலம் முகமதுஷா புரத்தைச் சேர்ந்த இஸ்மாயில் மகள் செமினாபேகம் (32). இவருக்கும் பரமக்குடியைச் சேர்ந்த ஜின்னா மகன் சையதுஅலி(35) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு  முன் திருமணம் நடைபெற்றுள்ளது. வெளிநாட்டில் பணிபுரியும் சையதுஅலி கடந்த சில நாள்களுக்கு முன் ஊருக்கு வந்தாராம்.
தனது மனைவி செமினாபேகத்திடம் 50 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் பணம்  கேட்டு தொந்தரவு செய்தாராம். இது குறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் செமினாபேகம் கொடுத்த புகாரின்பேரில், சையது அலி, அவரது தந்தை ஜின்னா உள்ளிட்ட 7 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/22/வரதட்சிணை-புகார்-கணவர்-உள்பட-7-பேர்-மீது-வழக்கு-3005430.html
3005429 மதுரை மதுரை இ-சேவை மையங்கள் மூலம் 4 ஆண்டுகளில் 9 லட்சம் பேருக்கு சான்றிதழ் DIN DIN Saturday, September 22, 2018 07:52 AM +0530 மதுரை மாவட்டத்தில் உள்ள இணையதள சேவை மையங்கள் மூலமாக கடந்த 4 ஆண்டுகளில் 8 லட்சத்து 99 ஆயிரத்து 603 பேருக்கு வருவாய்த் துறையின் பல்வேறு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
சாதிச்சான்று, வருமானம், இருப்பிடச் சான்று, முதல் பட்டதாரி, கணவரால் கைவிடப்பட்டவர் என்பதற்கான சான்றுகள் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில்,  தற்போது 15 வகையான சான்றிதழ்கள் இ.சேவை மையங்கள் மூலமாகப் பெறமுடியும். அதுதவிர கடவுச்சீட்டு, அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளுக்கு விண்ணப்பித்தல்,  ஆதார் விவரங்கள் பதிவு, வாக்காளர் அடையாள அட்டை திருத்தம், குடும்ப அட்டைகள் தொடர்பான சேவை உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இ.சேவை மையங்களில் வழங்கப்படுகின்றன.
மதுரை மாவட்டத்தில் அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் மூலமாக 18 மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் 132 மையங்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலமாக 144 மையங்கள், கிராமப்புற தொழில் முனைவோர் மையம் சார்பில் 8 மையங்கள் என மொத்தம் 302 இ.சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. வருவாய்த் துறையால் வழங்கப்படும் சான்றிதழ்கள் தேவைப்படுவோர் இ.சேவை மையங்களில் ரூ.60 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப எண்ணுடன் ஒப்புகைச்சீட்டு குறுஞ்செய்தியாக சம்பந்தப்பட்டவர்களின் செல்லிடப்பேசிக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த விண்ணப்பத்தின் நிலவரத்தை 155250 என்ற எண்ணிற்கு விண்ண எண்ணை குறுஞ்செய்தியாக அனுப்பி தெரிந்து கொள்ளலாம். கடந்த 2014 முதல் தற்போது வரை மதுரை மாவட்டத்தில் உள்ள 302 இ. சேவை மையங்கள் மூலமாக  8 லட்சத்து 99 ஆயிரத்து 603 பேருக்கு வருவாய்த்  துறையின் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/22/இ-சேவை-மையங்கள்-மூலம்4-ஆண்டுகளில்-9-லட்சம்-பேருக்கு-சான்றிதழ்-3005429.html
3005428 மதுரை மதுரை காமராஜர் பல்கலை. மண்டல கால்பந்து போட்டி: எஸ்.என். கல்லூரி சாம்பியன் DIN DIN Saturday, September 22, 2018 07:51 AM +0530 மதுரை காமராஜர் பல்கலைக்கழக பி மண்டல கால்பந்து போட்டியில் சரசுவதி நாராயணன் கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 
மதுரை மாவட்டம் பெருங்குயில் உள்ள இக்கல்லூரி மைதானத்தில் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் அரை இறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் நடைபெற்றன. 
அரை இறுதியில் சரசுவதி நாராயணன் கல்லூரி,  விவேகானந்தா கல்லூரி அணியை 5 -0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
 இறுதிப்போட்டியில் மன்னர்  திருமலை நாயக்கர் கல்லூரி அணியுடன் மோதி 3-0 என்ற கோல் கணக்கில், சரசுவதி நாராயணன் கல்லூரி அணி வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றியது. 
வெற்றிபெற்ற அணிக்கு கல்லூரி முதல்வர் மு.கண்ணன் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில் கல்லூரி துணை முதல்வர் கே.கிருஷ்ணன் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/22/காமராஜர்-பல்கலை-மண்டல-கால்பந்து-போட்டி-எஸ்என்-கல்லூரி-சாம்பியன்-3005428.html
3005427 மதுரை மதுரை "கால்நடை வளர்ப்பு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்' DIN DIN Saturday, September 22, 2018 07:51 AM +0530 திருப்பரங்குன்றத்தில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் கால்நடை வளர்ப்பு பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். 
இங்கு கறவைமாடு, வெள்ளாடு, நாட்டுக் கோழி வளர்ப்பது குறித்து பல்கலைக் கழகத்தின் சான்றிதழுடன் ஒரு மாத பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியில் சேர விரும்பும் விவசாயிகள், சுயதொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்கள் வரும் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். 
இது தொடர்பான விவரங்களுக்கு பயிற்சி மையத்தை நேரிலோ, 0452-2483903 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என ஆய்வு மையத்தின் தலைவர் ரா.உமாராணி  தெரிவித்துள்ளார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/22/கால்நடை-வளர்ப்பு-பயிற்சி-பெற-விண்ணப்பிக்கலாம்-3005427.html
3005426 மதுரை மதுரை மதுரை மத்திய சிறையில்  16 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை DIN DIN Saturday, September 22, 2018 07:51 AM +0530 எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மத்திய சிறையில் 3 பெண்கள் உள்பட 16 ஆயுள் தண்டனை கைதிகள் வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.
எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு தமிழக சிறைகளில் 10 ஆண்டு சிறைத்தண்டனை கழிந்த நன்னடத்தையுள்ள  ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து சிறைகளில் 10 ஆண்டு சிறைத்தண்டனை கழித்த ஆயுள் தண்டனை கைதிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றனர். 
இந்நிலையில் மதுரை மத்தியச்சிறையில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை கழித்த நன்னடத்தை கைதிகள் பட்டியலை சிறை நிர்வாகம் அரசுக்கு அனுப்பியுள்ளது. அதன்பேரில் அரசு அனுமதி வழங்கப்படும் கைதிகள் விடுவிக்கப்படுகின்றனர். 
இதில் மதுரை மத்திய சிறை வளாகத்தில் உள்ள பெண்கள் சிறப்பு சிறையில் 10 ஆண்டுகளை கழித்த 3 பெண் கைதிகள் மற்றும் மத்தியச் சிறையில் உள்ள 13 ஆயுள் தண்டனை கைதிகள் உள்ளிட்ட 16 பேரை விடுவிக்க அரசு உத்தரவிட்டது. 
இதையடுத்து பெண் கைதிகள் மூவர் உள்பட 16 கைதிகளும் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து சிறை வளாகத்தில் காத்திருந்த கைதிகளின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டவர்களை வரவேற்று அழைத்துச் சென்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/22/மதுரை-மத்திய-சிறையில்-16-ஆயுள்-தண்டனை-கைதிகள்-விடுதலை-3005426.html
3005425 மதுரை மதுரை அக்.4 இல் கோட்டை முற்றுகை போராட்டம்: போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் அறிவிப்பு DIN DIN Saturday, September 22, 2018 07:51 AM +0530 அரசுப் போக்குவரத்துக்கழகத்தை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் அக்.4-இல் கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளதாக போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கங்கள் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளன. 
    அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்கவேண்டும். 
போக்குவரத்துக்கழகங்களை பாதுகாக்க வேண்டும். போக்குவரத்துத் தொழிலாளர்கள், ஓய்வு பெற்றவர்களுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கவேண்டும். தினக்கூலி, ரிசர்வ் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 
2003-க்கும் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு போக்குவரத்துக் கழகம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. இதையொட்டி மதுரை போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் முன்பு வாயில் ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
இதில் பேசிய சங்க நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 4-இல் சென்னை கோட்டையை முற்றுகையிட  அனைத்து போக்குவரத்துத் தொழிலாளர் சங்கங்களும் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து போராட்ட ஆயத்தக் கூட்டம் நடைபெற்றது.  இதில் மேலூர் அல்போன்ஸ் (எல்பிஎப்),  எல்பிஎப் மாநிலப் பொருளாளர் நடராஜன், மாநிலத் துணைத் தலைவர் வி.பிச்சை(சிஐடியு), டி.திருமலைச்சாமி (டிடிஎஸ்எப்),  சுப்பிரமணியன் (எச்எம்எஸ்) , நந்தாசிங் (ஏஐடியுசி) ஆகியோர் சிறப்புரையாற்றினர். 
மதுரை அரசு போக்குவரத்து தொழிலாளர் (சிஐடியு) சங்க மாவட்டப்  பொதுச்செயலர் கனகசுந்தர் உள்பட 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/22/அக்4-இல்-கோட்டை-முற்றுகை-போராட்டம்-போக்குவரத்து-தொழிலாளர்-சங்கங்கள்-அறிவிப்பு-3005425.html
3004685 மதுரை மதுரை தே.கல்லுப்பட்டி, பேரையூரில் ரூ.5.5 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகள் தொடக்கம் DIN DIN Friday, September 21, 2018 07:24 AM +0530 தே.கல்லுப்பட்டி மற்றும் பேரையூர் பேரூராட்சிகளில் ரூ.5.5 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகளை வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
 தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கமைப்பு நிதி திட்டத்தில் தே.கல்லுப்பட்டி பேரூராட்சிக்கு ரூ. 3 லட்சமும், பேரையூர் பேரூராட்சிக்கு ரூ.2.5 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகளை அமைச்சர் ஆர்பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: மதுரை மாவட்டம் பேரையூர் பேரூராட்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புறவழிச் சாலையை மேம்படுத்த ரூ.2.5 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் வேறெந்த பேரூராட்சியிலும் இல்லாத வகையில் சாலை மேம்பாட்டுக்காக இத்தகைய பெரும் நிதி ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது. இப்படியிருக்க தமிழக அரசு மீதும், மத்திய அரசு மீதும் எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுமென்றே குற்றஞ்சாட்டி வருகிறார். இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்தது மத்தியில் ஆட்சியில் இருந்த முந்தைய காங்கிரஸ் அரசும்,  அவர்களுடன் கூட்டணி வைத்திருந்த திமுகவும் தான். போர் நிறுத்தம் என ஏமாற்றி அப்பாவித் தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவிக்க உறுதுணையாக இருந்தது அவர்கள் தான். வரும் 25-ஆம் தேதி நடைபெறும் கண்டனக் கூட்டத்தில் இவற்றையெல்லாம் மக்களிடம் எடுத்துச் செல்ல உள்ளோம் என்றார்.
 நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன், மதுரை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் லட்சுமி, பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் சுரேஷ்குமார்,  பேரையூர் வட்டாட்சியர் இளமுருகன்,  பேரூராட்சி செயல்அலுவலர்கள் சின்னசாமி பாண்டியன் (தே.கல்லுப்பட்டி), முருகேசன் (பேரையூர்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/21/தேகல்லுப்பட்டி-பேரையூரில்-ரூ55-கோடியில்-சாலை-மேம்பாட்டுப்-பணிகள்-தொடக்கம்-3004685.html
3004684 மதுரை மதுரை விருது வழங்கக் கோரி மாற்றுத்திறனாளி வீரர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு DIN DIN Friday, September 21, 2018 07:23 AM +0530 விளையாட்டு வீரர்களுக்கு தேசிய அளவில் வழங்கப்படும் தயான்சந்த்விருது வழங்கக் கோரி மதுரை மாற்றுத்திறனாளி வீரர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவுக்கு பதில் அளிக்க மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை செயலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 மதுரை கோ.புதூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ரஞ்சித் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு விவரம்:  நான் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரராக இருந்துவருகிறேன். கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளேன்.  சர்வதேச அளவில் 10 தங்கப்பதக்கம், 6 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கங்களையும் பெற்றுள்ளேன்.
 கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு பயிற்சியாளராகவும் உள்ளேன். விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் தாயன்சந்த் சாதனை விருதுக்கு விண்ணப்பித்தேன். எனது விண்ணப்பம் ஏற்கப்படவில்லை. அனைத்துத் தகுதியிருந்தும் எனது பெயர் விருதுக்கு தேர்வாகவில்லை.  
 இந்நிலையில் செப்டம்பர் 25 ஆம் தேதி விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது. அதில் 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த விழாவுக்குத் தடை விதித்தும், எனக்கு விருது வழங்கவும் உத்தரவிடவேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 மனுவானது நீதிபதி பார்த்திபன் முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அதன்படி மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர்நலத்துறை செயலர் பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/21/விருது-வழங்கக்-கோரி-மாற்றுத்திறனாளி-வீரர்உயர்நீதிமன்ற-மதுரைக்-கிளையில்-மனு-3004684.html
3004683 மதுரை மதுரை உசிலம்பட்டியில் திருமண மண்டப உரிமையாளர்கள், போலீஸார் ஆலோசனைக் கூட்டம் DIN DIN Friday, September 21, 2018 07:22 AM +0530 உசிலம்பட்டியில் திருமண மண்டபங்கள் முன் அதிக அளவில் பட்டாசுகள் வெடிப்பதை தடுப்பது குறித்து திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் காவல் துறையினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
 இக்கூட்டம் உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையத்தில் ஆய்வாளர் மாடசாமி தலைமையில் நடைபெற்றது. சார்பு ஆய்வாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் உசிலம்பட்டி மற்றும்  சுற்று வட்டாரத்தில் உள்ள திருமண மண்டப உரிமையாளர்கள் 34 பேர் கலந்து கொண்டனர்.
     கூட்டத்தில் காவல் ஆய்வாளர் மாடசாமி பேசியது: அனைத்து மண்டபங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். உசிலம்பட்டியில் அதிக அளவில் பட்டாசு வெடிப்பதை குறைக்க வேண்டும். இதற்கு மண்டப உரிமையாளர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். நிகழ்ச்சி நடத்துபவர்களிடம் உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் சுப நிகழ்ச்சி தேதி குறிப்பிட்டு அதற்கான அனுமதி சான்று பெற்று வரச் சொல்லுங்கள். 
        அவர்கள் காவல் நிலையத்திற்கு வரும்போது நிகழ்ச்சி நடைபெறும் அன்று பட்டாசு வெடிக்கக் கூடாது. விளம்பர பதாகை வைக்க அனுமதி இல்லை என்பதை எடுத்துக் கூறி அவர்களிடம் ஒப்புதல்  கையெழுத்து வாங்கி கொண்டு அனுமதி சீட்டு கொடுக்கப்படும். அதன் பின்னர் மண்டப உரிமையாளர்கள் முன்பணம் வாங்கிக் கொள்ளுங்கள். இதனையும் மீறி மண்டபம் முன் பட்டாசு வெடித்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/21/உசிலம்பட்டியில்-திருமண-மண்டப-உரிமையாளர்கள்போலீஸார்-ஆலோசனைக்-கூட்டம்-3004683.html
3004682 மதுரை மதுரை தூய்மை விழிப்புணர்வு ஊர்வலம் DIN DIN Friday, September 21, 2018 07:22 AM +0530 தெற்கு ரயில்வே மதுரைக் கோட்டம் சார்பில் தூய்மை விழிப்புணர்வு ஊர்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
 பிரதமரின் தூய்மை இந்திய இயக்கம் குறித்த விழிப்புணர்வை சுற்றுலாப் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட இந்த ஊர்வலத்தை  மதுரைக் கோட்ட மேலாளர் நீனு இட்டியேரா தொடங்கி வைத்தார். தெற்கு ரயில்வே மதுரை கோட்ட அதிகாரிகள் ஓ.பி.ஷா,  கூடுதல் கோட்ட மேலாளர் ஜி.சாஹூ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ரயில்வே மேல்நிலைப் பள்ளி சாரண, சாரணீயர் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளுடன் ஊர்வலத்தில் பங்கேற்றனர். மேலும் பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/21/தூய்மை-விழிப்புணர்வு-ஊர்வலம்-3004682.html
3004681 மதுரை மதுரை செப்.27-இல் எரிவாயு உருளை நுகர்வோர் குறைதீர் கூட்டம் DIN DIN Friday, September 21, 2018 07:22 AM +0530 மதுரை மாவட்ட எரிவாயு உருளை நுகர்வோர் குறைதீர் கூட்டம்  ஆட்சியர் அலுவலகத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெறுகிறது.
 மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் வழங்கல் துறை அலுவலர்கள், எண்ணெய் நிறுவனங்களின் மேலாளர்கள், எரிவாயு உருளை விநியோகஸ்தர்கள் கலந்து கொள்கின்றனர். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த எரிவாயு உருளை நுகர்வோர் இக்கூட்டத்தில் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவித்துப் பயன்பெறலாம் என மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயபாலசுப்பிரமணி தெரிவித்துள்ளார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/21/செப்27-இல்-எரிவாயு-உருளைநுகர்வோர்-குறைதீர்-கூட்டம்-3004681.html
3004680 மதுரை மதுரை அச்சுறுத்திய காளை மாட்டை போராடி பிடித்த தீயணைப்பு வீரர்கள் DIN DIN Friday, September 21, 2018 07:21 AM +0530 மதுரை ஜீவாநகர் பகுதியில் வியாழக்கிழமை பொதுமக்களை அச்சுறுத்திய கோயில் காளையை அதன் உரிமையாளர்கள் துணையுடன் பல மணிநேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்.
  மதுரை ஜீவாநகர் ரமணாகார்டன் பகுதியில் கோயில் காளை ஒன்று முட்டி  ஒருவரை காயமடைந்ததாகவும், அது பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாகவும் ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலையத்திலிருந்து திடீர்நகர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
 இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் வியாழக்கிழமை அப்பகுதிக்குச் சென்றனர். அப்போது அந்த காளைமாடு சீமைக்கருவேல முள் புதர்களில் பதுங்கியபடி அங்குமிங்கும் ஓடியது. இதனால் அதை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து காளையை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோயிலுக்கு என விட்டுச்சென்ற அப்பகுதியில் வசிக்கும் முனியாண்டி தரப்பினரை தீயணைப்புத்துறையினர் உதவிக்கு அழைத்து வந்தனர். அவர்கள் வந்தும் அதை பிடிக்கமுடியவில்லை. இதனையடுத்து 4 மணி நேரம் போராடி கயிறு மூலம் காளையை மடக்கிப் பிடித்தனர். இதன் பின் அந்த காளை மாடு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/21/அச்சுறுத்திய-காளை-மாட்டைபோராடி-பிடித்த-தீயணைப்பு-வீரர்கள்-3004680.html
3004679 மதுரை மதுரை நடிகர்கள் ரஜினி, கமல் பகுதிநேர அரசியல்வாதிகளாக இருக்கக் கூடாது DIN DIN Friday, September 21, 2018 07:21 AM +0530 புதிதாக கட்சி தொடங்கிய நடிகர் கமல்ஹாசன், கட்சி தொடங்க உள்ள நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் பகுதிநேர அரசியல்வாதிகளாக இருக்கக் கூடாது என நாடாளும் மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான கார்த்திக் தெரிவித்தார்.
 சென்னையிலிருந்து வியாழக்கிழமை மதுரை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் பகுதிநேர அரசியல்வாதிகளாக இல்லாமல் முழுநேர அரசியல்வாதிகளாக செயல்பட வேண்டும். இனி நானும் முழுநேர அரசியல்வாதியாக செயல்படுவேன். எனது கட்சியில் தவறுசெய்தவர்கள் அவர்களாகவே ஒதுங்கிக் கொள்ள வேண்டும். இல்லை எனில் நான் விலக்க நேரிடும். திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் நாங்கள் போட்டியிடுவோம். அதே சமயத்தில் திருவாரூர் தொகுதி மிகப்பெரிய தலைவர் போட்டியிட்ட இடம் என்பதால் அதில் போட்டியிட வில்லை. மக்களவை தேர்தலில் போட்டியிடுவோம். மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்க வேண்டும். ஆளும் கட்சி மக்களுக்கு எதிராக இருந்தால் அதற்கு எனது ஆதரவில்லை என்றார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/21/நடிகர்கள்-ரஜினி-கமல்-பகுதிநேரஅரசியல்வாதிகளாக-இருக்கக்-கூடாது-3004679.html
3004678 மதுரை மதுரை மத்திய, மாநில அரசுகள் குறித்து பேச மு.க.ஸ்டாலினுக்கு தகுதியில்லை DIN DIN Friday, September 21, 2018 07:21 AM +0530 மத்திய, மாநில அரசுகள் குறித்து பேச திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். 
திருமங்கலத்தில் வியாழக்கிழமை அவர் செய்தியாளர்களிடம்  கூறியதாவது: இலங்கையில் தமிழினம் அழிய காரணமானவர்கள் திமுக, காங்கிரஸ் கட்சியினர். இந்த போரில் சுமார் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா இலங்கை ராணுவத்துக்கு, இந்தியா, ராணுவ தளவாடங்கள் கொடுத்து உதவுகிறது எனக் கூறினார். இதனை சமீபத்தில் இந்தியா வந்த இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ஷேவும் தெரிவித்துள்ளார். எனவே இதற்கு அன்றைய துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும். இதை மக்களிடம் நாங்கள் எடுத்துச் செல்ல உள்ளோம்.
 திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அரசு குறித்தும், பிரதமர் மோடி அரசு குறித்தும் பேச எந்த தகுதியும் இல்லை. ஊழலுக்காக சிறை சென்றவர்களும் அவர்களே. அதற்காக கலைக்கப்பட்டதும் திமுக அரசே. எனவே அதிமுக பற்றி பேச திமுகவினருக்கு தகுதியில்லை.
 முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை சம்பவத்தில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வது குறித்து ஆளுநர், தமிழ்மக்கள் எதிர்பார்க்கும் தீர்ப்பை வழங்குவார் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/21/மத்திய-மாநில-அரசுகள்-குறித்து-பேசமுகஸ்டாலினுக்கு-தகுதியில்லை-3004678.html
3004677 மதுரை மதுரை மேலவளவு அருகே ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மயானத்தில் போராட்டம் DIN DIN Friday, September 21, 2018 07:20 AM +0530 மேலவளவு அருகே சுந்தரராஜபுரம் கிராமத்தில் உள்ள மயானத்துக்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்து விவசாயம் செய்வதை தடுத்து நிறுத்தக் கோரி அக்கிராமத்தினர் மயானத்தில் அமர்ந்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த மயானத்துக்குச் செல்லும் பாதை வயல் வெளியில் உள்ளது. இப்பாதையை ஆக்கிரமித்து ஒருவர் விவசாயப் பணிகளை செய்து வருகிறாராம். இதனால் சடலங்களை எடுத்துச் செல்ல வழியில்லை என்றும்,  அந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் எனவும் கோரி அப்பகுதி பொதுமக்கள் மயானத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மேலவளவு போலீஸார் மற்றும் வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்பை அகற்றுவதாக கூறியதையடுத்து அவர்கள் கலைந்துச் சென்றனர். இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மேலவளவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/21/மேலவளவு-அருகே-ஆக்கிரமிப்பை-அகற்றக்-கோரிமயானத்தில்-போராட்டம்-3004677.html
3004676 மதுரை மதுரை சத்துணவு ஊழியர்கள் பேரணி DIN DIN Friday, September 21, 2018 07:20 AM +0530 காலமுறை ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மதுரையில் கவன ஈர்ப்பு பேரணியை வியாழக்கிழமை நடத்தினர்.
 ராஜா முத்தையா மன்றம் அருகே இப்பேரணியை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஜெயராஜராஜேஸ்வரன் தொடங்கி வைத்தார். சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் சோலையன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் செல்வகுருசாமி, மாநிலச் செயலர் அய்யம்மாள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
 சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியர்களாக்கி காலமுறை ஊதியம் வழங்குவது, ஓய்வூதியம், காலிப் பணியிடங்களைப் பூர்த்தி செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீண்ட காலமாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தபோதும், அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த பேரணி நடத்தப்பட்டது.
 மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சத்துணவு ஊழியர்கள் ஏராளமானோர் பேரணியில் பங்கேற்றனர். இந்த பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நிறைவடைந்தது. பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/21/சத்துணவு-ஊழியர்கள்-பேரணி-3004676.html
3004675 மதுரை மதுரை மார்க்சிஸ்ட் கம்யூ. ஆர்ப்பாட்டம் DIN DIN Friday, September 21, 2018 07:20 AM +0530 கருத்துரிமை, பேச்சுரிமைக்கு எதிராக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை கண்டித்து மேலூரில் மார்க்சிஸ்ட் கம்யூ,னிஸ் கட்சி சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.
 மேலூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டச் செயலர் சி.ராமகிருஷ்ணன், மாவட்டக் குழு உறுப்பினர் அடக்கிவீரணன், தாலுகா செயலர் எம்.கண்ணன் உள்ளிட்ட பலர் கருத்துரிமை, பேச்சுரிமையை பாதுகாப்பது குறித்து விளக்கிப் பேசினர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/21/மார்க்சிஸ்ட்-கம்யூஆர்ப்பாட்டம்-3004675.html
3004674 மதுரை மதுரை மதுரையில் 15 மையங்களில் "நீட்' தேர்வு பயிற்சி வகுப்புகள் DIN DIN Friday, September 21, 2018 07:19 AM +0530 மதுரை மாவட்டத்தில் திங்கள்கிழமை (செப் 24)  முதல் 28 ஆம் தேதி வரை நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.
 ஏற்கெனவே அரசால் நீட் தேர்வு பயிற்சிக்கு என அமைக்கப்பட்ட பள்ளிகளின் வகுப்பறைகளில் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. சேதுபதி மேல்நிலைப் பள்ளி, ஓ.சி.பி.எம்.மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட 15 இடங்களில் நீட் தேர்வுக்கான பயிற்சிகள் நடைபெறவுள்ளன. 
இந்த பயிற்சி வகுப்பில் கடந்த ஆண்டு மருத்துவக் கல்விக்கான பாடங்கள் மட்டுமே நடத்தப்பட்ட நிலையில், வரும் 24 ஆம் தேதி முதல் பொறியியல் படிப்புக்கான பாடங்களும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வகுப்புகள் தினமும் காலை 8.30 மணிக்குத் தொடங்குகின்றன. மாதிரித் தேர்வுகள், செயல்முறைகள், கலந்துரையாடல் என்ற அடிப்படையில் வகுப்புகள் நடத்தப்படவுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஒரு பாடத்துக்கு ஒன்றரை மணி நேரம் என தினமும் நேரம் ஒதுக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்படும் என்றும், அதற்கான பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் கல்வித்துறை அலுவலர்கள் கூறினர்.
 மதுரை மாவட்டத்தில் இந்த வகுப்புகளில் ஒரு மையத்தில் 100 முதல் 130 மாணவர்கள் வரை சேர்க்கப்பட்டு பயிற்சி அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ச.கோபிதாஸ், நேர்முக உதவியாளர் சின்னதுரை ஆகியோர் செய்துள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/21/மதுரையில்-15-மையங்களில்-நீட்-தேர்வு-பயிற்சி-வகுப்புகள்-3004674.html
3004673 மதுரை மதுரை உலக சுற்றுலா தின கலை நிகழ்ச்சிகள் மதுரையில் இன்று தொடக்கம் DIN DIN Friday, September 21, 2018 07:19 AM +0530 உலக சுற்றுலா தினத்தையொட்டி கலை நிகழ்ச்சிகள் மதுரையில் வெள்ளிக்கிழமை (செப். 21) தொடங்குகின்றன.
 இதுகுறித்து மதுரை மாவட்ட சுற்றுலா அலுவலர் ஸ்ரீபாலமுருகன் கூறியதாவது: மதுரையில் மாநில அளவிலான சுற்றுலா தின நிகழ்ச்சிகள் வரும் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. முன்னதாக 26 ஆம் தேதி சுற்றுலா வளர்ச்சி கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.
 சுற்றுலா தினத்தையொட்டி மதுரை தெப்பக்குளம் பகுதியில் பதினாறு கால் மண்டபம் அருகே வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு கலை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பாடகர்கள் சின்னப்பொண்ணு, மதிச்சியம் பாலா ஆகியோர் பங்கேற்கின்றனர். மறுநாள் சனிக்கிழமை (செப். 22) மாலையில் கோவிந்தராஜூ குழுவினரின் கிராமிய நடனங்கள், பாடல்கள் நிகழ்ச்சியும், ஞாயிற்றுக்கிழமை (செப். 23) ஸ்ரீவாணி இசைக்குழுவினரின் தொலைக்காட்சிகளில் சிறப்பு பரிசுகள் பெற்ற குழந்தைப் பாடகர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 
 திங்கள்கிழமை (செப். 24) மாலையில் மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் கோயில் அருகே பரதநாட்டியம், கிராமிய நடனங்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. சுற்றுலாத்துறை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளாக நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு, மாசில்லா மதுரை போன்றவையும் வலியுறுத்தப்படும் என்றார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/21/உலக-சுற்றுலா-தின-கலை-நிகழ்ச்சிகள்மதுரையில்-இன்று-தொடக்கம்-3004673.html
3004672 மதுரை மதுரை எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: ஜெ. பேரவை நிர்வாகிகள் ஆலோசனை DIN DIN Friday, September 21, 2018 07:19 AM +0530 சென்னையில் செப்டம்பர் 30-இல் நடைபெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் மதுரை மாவட்டத்தில் இருந்து 50 ஆயிரம் பேரை பங்கேற்க வைப்பது என அதிமுகவின் ஜெயலலிதா பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
  மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்துக்கு பேரவையின் மாநிலச் செயலரும், வருவாய்த் துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமை வகித்தார். மதுரை மாநகர் மாவட்ட ஜெ. பேரவைச் செயலர் எஸ்.எஸ்.சரவணன் எம்எல்ஏ,  புறநகர் மாவட்டச் செயலர் கே.தமிழரசன்,  மாநில இணைச் செயலர் எம்.இளங்கோவன், துணைச் செயலர் பா.வெற்றிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 சென்னையில் செப். 30 ஆம் தேதி நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவை 7 லட்சம் பேர் பங்கேற்கும் சாதனை நிகழ்வாக, நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதில் மதுரை மாவட்டத்தில் இருந்து 50 ஆயிரம் பேர் பங்கேற்கச் செய்வது என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
 மேலும் இலங்கைத் தமிழர்களுக்குத் துரோகம் இழைத்த காங்கிரஸ் மற்றும் திமுகவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் செப். 25 ஆம் தேதி நடைபெறும் பொதுக் கூட்டத்தை ஏராளமானோர் பங்கேற்கும் வகையில் நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/21/எம்ஜிஆர்-நூற்றாண்டு-விழாஜெ-பேரவை-நிர்வாகிகள்-ஆலோசனை-3004672.html
3004671 மதுரை மதுரை உசிலம்பட்டியில் வீட்டுக்குள் புகுந்து 35 பவுன் நகைகள், பணம் திருட்டு DIN DIN Friday, September 21, 2018 07:19 AM +0530 உசிலம்பட்டி அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் வீட்டுக்குள் புதன்கிழமை இரவு மர்ம நபர்கள் புகுந்து 35 பவுன் நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்றனர்.
       உசிலம்பட்டி அருகே வாலாந்தூரை சேர்ந்த சீனித்தேவர் மகன் வீரகுமார் (48). இவர் உசிலம்பட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டீசல் ஆபரேட்டராக பணியாற்றி வருவதுடன், பணிமனை பின்புறம் உள்ள மாருதி நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில் புதன்கிழமை தனது தாயாருடன் மதுரைக்கு சென்று விட்டு வந்து இரவில் வீட்டில் தனியாக தூங்கினார். பின்னர் வியாழக்கிழமை காலையில் எழுந்து பார்த்த போது பீரோ மற்றும் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. 
       அப்போது பீரோவில் இருந்த 35 நகை, ரொக்கம் ரூ. 1 லட்சத்து 67 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தது தெரிய வந்தது.
     இதுகுறித்து உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/21/உசிலம்பட்டியில்-வீட்டுக்குள்-புகுந்து35-பவுன்-நகைகள்-பணம்-திருட்டு-3004671.html
3004670 மதுரை மதுரை மதுரையில் நிலத்தடி நீர்மட்டம் குறைவதால் மழைநீர் சேமிப்பு திட்டத்தை செயல்படுத்துவது அவசியம்: மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர் DIN DIN Friday, September 21, 2018 07:18 AM +0530 மதுரையில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து வருவதால் வீடுகளில் மழை நீர் சேமிப்புத் திட்டத்தை அனைவரும் செயல்படுத்துவது அவசியம் என மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர் கூறினார்.
மதுரை மாநகராட்சி மற்றும் இந்திய களவிளம்பரத்துறை சார்பில் தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் அனுப்பானடி பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது: மதுரை மாநகராட்சியானது மத்திய அரசால் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. குப்பைகளை கையாளும் திடக்கழிவு மேலாண்மையில் பொதுமக்கள் ஒத்துழைப்பு முக்கியமாகும். மக்குபவை, மக்காதவை என தரம் பிரித்து குப்பைகளை வழங்குவதுடன், அந்தந்தப் பகுதியில் மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிப்பது உள்ளிட்ட பயனுள்ள திட்டங்களைச் செயல்படுத்தவேண்டும்.  தொண்டு நிறுவனங்களும் மக்கும் குப்பைகளில் இருந்து உரம், எரிவாயு தயாரிப்பதற்கு பொதுமக்களுக்கு உதவிடமுன்வரவேண்டும். 
பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதை உணர்ந்து அவற்றை பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும். மதுரை பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துவருகிறது. எனவே பொதுமக்கள் தங்களது வீடுகளில் மழைநீர் சேமிப்புத் திட்டத்தை செயல்படுத்துவது அவசியம் என்றார்.
 இதில் பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியருக்கு பாராட்டுச் சான்றுகள், மற்றும் பரிசுகளை ஆணையர் வழங்கினார். பிளாஸ்டிக் தவிர்ப்புக்காக சில்வர்பாத்திரம், துணிப்பைகளையும் அவர் வழங்கினார். 
 நிகழ்ச்சியில் நகர்நல அலுவலர் சதீஷ்ராகவன், உதவி ஆணையர் (மண்டலம் 3) நாராயணன், மக்கள் தொடர்பு அலுவலர் என்.சித்திரவேல் ஆகியோர் பங்கேற்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/21/மதுரையில்-நிலத்தடி-நீர்மட்டம்-குறைவதால்-மழைநீர்-சேமிப்பு-திட்டத்தை-செயல்படுத்துவது-அவசியம்-மாநகராட்-3004670.html
3004669 மதுரை மதுரை நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.6 லட்சம் திருட்டு DIN DIN Friday, September 21, 2018 07:18 AM +0530 மதுரையில் நகைக்கடை உரிமையாளரிடம் ரூ. 6 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
  மதுரை முனிச்சாலை இஸ்மாயில்புரத்தைச் சேர்ந்தவர் மோகன் (53). அப்பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவர், ஆர்டரின் பேரில் வெளி மாவட்டங்களில் உள்ள நகைக்கடைகளுக்கு நகைகள் செய்து கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி தென்காசியில் உள்ள நகைக் கடைகளில் ரூ.6 லட்சத்தை வசூலித்துக் கொண்டு காரில் மதுரை நோக்கி வந்துள்ளார். பல இடங்களுக்குச் சென்று விட்டு மதுரை கிருஷ்ணாபுரம் 2-ஆவது குறுக்குத் தெருவில் செல்லும்போது கையில் வைத்திருந்த பையை பார்த்தபோது அதில் இருந்த ரூ.6 லட்சத்தை காணவில்லை.  இதுகுறித்து மோகன் அளித்தப் புகாரின் பேரில் விளக்குத்தூண் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/21/நகைக்கடை-உரிமையாளரிடம்ரூ6-லட்சம்-திருட்டு-3004669.html
3004668 மதுரை மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் நீதிபதிகள் ஆய்வு: கோயில்  குளத்தை தூய்மையாக வைத்திருக்க அறிவுறுத்தல் DIN DIN Friday, September 21, 2018 07:18 AM +0530 திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வியாழக்கிழமை ஆய்வு செய்த நீதிபதிகள்,  கோயில் குளத்தை தூய்மையாக வைத்திருக்க கோயில் அதிகாரிகளை அறிவுறுத்தினர். 
தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பக்தர்களின் பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்து மாவட்ட நீதிபதிகள் ஆய்வு செய்து அறிக்கை தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் முதன்மை மாவட்ட நீதிபதி ஏ.நஸிமா பானு, மாவட்ட குற்றவியல் தலைமை நீதிபதி இல.சொ.சத்தியமூர்த்தி ஆகியோர் திருப்பரங்குன்றம் கோயிலில் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர். கோயில் வளாகத்தில் அமைந்துள்ள லட்சுமி தீர்த்தக்குளத்தை ஆய்வு செய்த அவர்கள் தண்ணீர் அசுத்தமாக இருப்பதை சுட்டிக்காட்டி தூய்மையாக வைத்திருக்க அறிவுறுத்தினர். கோயிலில் மேலும் சில இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். தொடர்ந்து அனுமதிச்சீட்டு வழங்கும் முறை, பக்தர்கள் தரிசனம் செய்ய செல்லும் வழி, கோயில் பணியாளர்கள் விவரம்,  அன்னதானக் கூடம், கழிப்பறை வசதி, இருசக்கர , நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், யானை இருக்கும் இடம், அதற்கு சிகிச்சையளிக்கும் விவரங்கள் குறித்து கேட்டனர். 
அதற்கு கோயில் துணைஆணையர் (பொறுப்பு) எஸ்.மாரிமுத்து பதிலளிக்கும் போது, பக்தர்களுக்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. வாகனங்கள் நிறுத்துவதற்கு சரவணப் பொய்கை அருகே இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு அரசிடம் நிதி கேட்டுள்ளோம். வந்தவுடன் கட்டுமான பணிகள் தொடங்கும். மேலும் இக்கோயில் குடவறைக்கோயில் என்பதால் குறிப்பிட்ட அளவில் மட்டுமே பக்தர்களை அனுப்ப முடியும். அத்துடன் குடிநீர் வசதியும் செய்து கொடுத்து, குளத்தை தூய்மைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/21/திருப்பரங்குன்றம்-கோயிலில்-நீதிபதிகள்-ஆய்வு-கோயில்--குளத்தை-தூய்மையாக-வைத்திருக்க-அறிவுறுத்தல்-3004668.html
3004667 மதுரை மதுரை வங்கிக்கணக்கில் தவறுதலாக ரூ.2 லட்சம் வரவு: பெண்ணை கைது செய்ய தடை DIN DIN Friday, September 21, 2018 07:17 AM +0530 தூத்துக்குடியில் வங்கிக்கணக்கில் தவறுதலாக ரூ.2 லட்சம் வரவு வைக்கப்பட்ட  சம்பவத்தில் பெண்ணை போலீஸார் கைது செய்யவோ, துன்புறுத்தவோ கூடாது. முறைப்படி விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. 
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள புத்தன்தருவையைச் சேர்ந்த வளர்மதி தாக்கல் செய்த மனு: எங்கள் பகுதியில் மகளிர் சுயஉதவிக் குழுவில் உறுப்பினராக உள்ளேன். கடந்த 8.11.2016 அன்று உயர் மதிப்புடைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இந்த காலகட்டத்தில் மகளிர் குழுத் தலைவி என்னிடம் வங்கியில் பெருவிரல் ரேகை பதிவு செய்யக் கோரினார். 
இதை ஏற்று பெருவிரல் கைரேகையை பதிவு செய்தவுடன் ரூ.2 லட்சம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அதன்பிறகு இந்த தொகையை எனது சொந்த செலவுக்கு எடுக்கவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பண நெருக்கடியாக இருந்த நிலையில் ரூ.3 ஆயிரத்தை எனது வங்கிக்கணக்கில் இருந்து எடுத்தேன். அடுத்த நாளில் திசையன்விளையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள், போலீஸாருடன் எனது வீட்டுக்கு வந்தனர். 2016-இல் வங்கியில் இருந்து தவறுதலாக எனது கணக்கில் ரூ.2 லட்சம் வரவு வைக்கப்பட்டதாகவும், அதை திருப்பிச் செலுத்துமாறும் வலியுறுத்தினர். மேலும் தினசரி வங்கி அதிகாரிகள், போலீஸார் என்னிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வருகின்றனர். அத்துடன் போலீஸார் என்னை கைது செய்யவும் தயாராக உள்ளனர். எனவே போலீஸார் என்னை கைது செய்யக் கூடாது என்று உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். 
இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர் மீது முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யலாம் அல்லது வழக்கை முடித்துவைக்க வேண்டும். மேலும் செப்டம்பர் 24 ஆம் தேதி வரை மனுதாரரை கைது செய்யவோ, துன்புறுத்தவோ கூடாது. விசாரணைக்கு முறைப்படி அழைத்துச் சென்று  விசாரிக்கலாம். விசாரணை அறிக்கையை சாத்தான்குளம் டிஎஸ்பி செப்டம்பர் 24-ஆம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/21/வங்கிக்கணக்கில்-தவறுதலாக-ரூ2-லட்சம்-வரவுபெண்ணை-கைது-செய்ய-தடை-3004667.html
3004666 மதுரை மதுரை வாகனங்களில் அவசர கால வழியில் இருக்கைகள்: போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலர் பதிலளிக்க உத்தரவு DIN DIN Friday, September 21, 2018 07:17 AM +0530 மோட்டார் வாகனச் சட்டப்படி வாகனங்களில் அவசர கால வழி உள்ள இடத்தில் பொருத்தப்பட்டுள்ள இருக்கைகளை அகற்றக் கோரிய மனுவுக்கு, தமிழக போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலர் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
திருச்சியை சேர்ந்த வழக்குரைஞர் ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழ்நாடு மோட்டார் வாகனச் சட்டம் 1989-இன் படி ஒன்பது இருக்கைகளுக்கு மேல் உள்ள பயணிகள் வாகனத்தில் அவசரகால வழி இருக்க வேண்டும். தற்போது பள்ளி வாகனங்கள், தனியார் வாகனங்கள், அரசு வாகனங்கள் மற்றும் ஆம்னி பேருந்துகள் அனைத்திலும் அவசரகால வழி உள்ளது. 
அந்த வழி எங்குள்ளது என்று வாகனத்தில் எழுதியும் உள்ளனர். ஆனால் அவசர கால வழி உள்ள இடத்தில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு போக்குவரத்து அலுவலர் அனுமதி கொடுத்துள்ளார். 
இது போன்று அவசரகால வழி உள்ள இடத்தில் இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளதால் வாகன விபத்து ஏற்படும் போது பயணிகள் வெளியே செல்ல முடியாமல் சிக்கிக் கொள்கின்றனர். கடந்த 2016-இல் சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற பேருந்து தீப்பிடித்ததில் பயணிகள் பலர் இறந்தனர்.
எனவே மோட்டார் வாகனச் சட்டம்1989-இன் படி ஒன்பது இருக்கைகளுக்கு மேல் உள்ள வாகனங்களில் அவசர கால வழி உள்ள இடத்தில் பொருத்தப்பட்டுள்ள இருக்கைகளை அகற்ற உத்தரவிட வேண்டும். 
இந்த இருக்கைகள் அகற்றப்படுவதை உறுதி செய்யும் வகையில் புதிய வாகனங்களுக்கு அனுமதி கொடுப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழக போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலர் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/21/வாகனங்களில்-அவசர-கால-வழியில்-இருக்கைகள்-போக்குவரத்துத்-துறை-முதன்மைச்-செயலர்-பதிலளிக்க-உத்தரவு-3004666.html
3004665 மதுரை மதுரை ஸ்ரீகாஞ்சி மடம் சார்பில்  செப்.23-இல் சிறப்பு ஹோமம் DIN DIN Friday, September 21, 2018 07:17 AM +0530 ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் மதுரை கிளை மடம் சார்பில் ஸ்ரீ ஸ்வயம்வரா பார்வதீ மஹாமந்த்ர ஹோமம் (திருமணத்தடை நீங்கி திருமணம் நடைபெற) ஞாயிற்றுக்கிழமை (செப். 23) நடைபெறுகிறது.
 மதுரை சொக்கிகுளம் பெசன்ட் சாலையில் உள்ள மதுரை கிளை மடத்தில் காலை 8 மணி முதல் ஹோமம் நடைபெறும். 
  ஹோமம் தொடர்பான விவரங்களுக்கு மடத்தின் செயலர் ஏ.பி.சுந்தர் (செல்லிடப்பேசி எண் 9884713592), பூஜகர் ராதாகிருஷ்ண சாஸ்திரிகள் (செல்லிடப்பேசி எண் 9551656869) ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/21/ஸ்ரீகாஞ்சி-மடம்-சார்பில்--செப்23-இல்-சிறப்பு-ஹோமம்-3004665.html
3004664 மதுரை மதுரை குடிநீர் குழாய் இணைப்புக் கோரி மதுரை மாநகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை DIN DIN Friday, September 21, 2018 07:16 AM +0530 குடிநீர் குழாய் இணைப்புக் கோரி மதுரை மாநகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
    மதுரை மாநகராட்சி 55, 56 ஆவது வார்டுகளை உள்ளடக்கிய பாபுநகர், கணேஷ்நகர், மேல அனுப்பானடி,  ஹவுசிங்போர்டு காலனி, சூசை மைக்கேல் தெரு ஆகிய பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாகவே குடிநீர் குழாய் இணைப்புக் கோரி பொதுமக்கள் போராடி வருகின்றனர். கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் அப்பகுதிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பிறகும் கூட லாரிகள் மூலமே குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் அனைவருக்கும் குடிநீர் கிடைக்காத நிலை நீடிப்பதாகவும் அவர்கள் கூறினர்.
    எனவே குடிநீர் சீராக கிடைக்க குழாய்கள் இணைப்பு கோரி மதுரை மாநகராட்சி மண்டலம் 3 அலுவலகத்தை சில நாள்களுக்கு முன்பு அப்பகுதியினர் மார்க்சிஸ்ட் கட்சியினருடன் இணைந்து முற்றைகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்நிலையில், வியாழக்கிழமை காலை அனுப்பானடி பகுதிக்குழு மார்க்சிஸ்ட் செயலர் ஜே.லெனின் தலைமையில் மாநகராட்சி அலுவலகமான அண்ணா மாளிகையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதில் மார்க்சிஸ்ட் மதுரை மாநகர் மாவட்டச் செயலர் ஆர்.விஜயராகவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர். இதையடுத்து அவர்களை காவல்துறையினர் சமரசம் செய்து, மாநகராட்சி ஆணையரைச் சந்திக்க வைத்தனர். கோரிக்கை குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர் கூறினார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்துசென்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/21/குடிநீர்-குழாய்-இணைப்புக்-கோரி-மதுரை-மாநகராட்சி-அலுவலகத்தை-பொதுமக்கள்-முற்றுகை-3004664.html
3004663 மதுரை மதுரை மேலூர் அருகே பேருந்தில் மாணவர்களிடையே மோதல் DIN DIN Friday, September 21, 2018 07:16 AM +0530 மேலவளவு சென்ற அரசுப் பேருந்தில் மாணவர்களிடையே வியாழக்கிழமை ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்தார்.
   பட்டூரைச் சேர்ந்தவர்கள் சிவன்ராசு, ஆதாளி, சின்னன். இவர்கள் மேலவளவு அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகின்றனர். இவர்களுக்கும், அதேபகுதியைச் சேர்ந்த அழகுராஜா, கார்த்திக், தீபன் ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், மேலவளவு அரசு நகரப் பேருந்தில் பயணம் செய்த இவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில், சிவன்ராசு, ஆதாளியும் தாக்கப்பட்டு காயமடைந்தனர். 
    இதையடுத்து இவர்கள் மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து மேலவளவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/21/மேலூர்-அருகே-பேருந்தில்-மாணவர்களிடையே-மோதல்-3004663.html
3004662 மதுரை மதுரை முன்னாள் ஊராட்சித் தலைவரின் கணவருக்கு கொலை மிரட்டல்: ஒருவர் கைது DIN DIN Friday, September 21, 2018 07:16 AM +0530 கூத்தியார்குண்டு ஊராட்சி மன்ற தலைவரின் கணவருக்கு கொலைமிரட்டல் விடுத்தவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். 
  திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கூத்தியார்குண்டு ஊராட்சி முன்னாள் தலைவர் சிவகாமி. இவரது கணவர் முத்துராமன். கடந்த 17 ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த ரகு (23) மற்றும் அவரது நண்பர்கள் முத்துராமனின் வீட்டுக்கு வந்து பொருள்களை சேதப்படுத்தி, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து முத்துராமன் அளித்த புகாரின்பேரில் ஆஸ்டின்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து ரகுவை கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/21/முன்னாள்-ஊராட்சித்-தலைவரின்-கணவருக்குகொலை-மிரட்டல்-ஒருவர்-கைது-3004662.html
3003938 மதுரை மதுரை குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தக் கோரி மதுரையில் எஸ்ஆர்எம்யு ஆர்ப்பாட்டம் DIN DIN Thursday, September 20, 2018 07:55 AM +0530 மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.26 ஆயிரம் ஆக உயர்த்துவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்ஆர்எம்யு) சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 மதுரை ரயில் நிலையம் மேற்கு நுழைவாயில் அருகே நடந்த, இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எஸ்ஆர்எம்யு மேற்கு கிளைச் செயலர் ரவீந்திரன் தலைமை வகித்தார்.
கோட்டச் செயலர் வி.ராம்குமார், கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.  ரயில்வே ஓடும் தொழிலாளர் பிரிவு கோட்டச் செயலர் முருகானந்தம், உதவி கோட்டச் செயலர் சபரிவாசன், நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், அருண் பிரசாத், செந்தில் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.26 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.
 புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ரயில்வேத் துறையில் தனியார்மயத்தை அனுமதிக்கக் கூடாது. ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தின் போது நிர்வாகிகள் பேசினர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/20/குறைந்தபட்ச-ஊதியத்தை-உயர்த்தக்-கோரி-மதுரையில்-எஸ்ஆர்எம்யு-ஆர்ப்பாட்டம்-3003938.html
3003937 மதுரை மதுரை ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் முறைகேடு நடப்பதாக பாஜக புகார் DIN DIN Thursday, September 20, 2018 07:55 AM +0530 மதுரை மாவட்டம் கருப்பாயூரணி பகுதியில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டத்தில் முறைகேடு நடப்பதாகக் கூறி பாஜகவினர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதன்கிழமை புகார் மனு அளித்தனர்.
மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கருப்பாயூரணி பகுதியில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பங்கு பெறாதவர்களின் அடையாள அட்டையைப் பயன்படுத்தி பல லட்ச ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக பாஜகவினர் புகார் கூறியுள்ளனர். அதன்படி சட்டப்பேரவை உறுப்பினர், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக புறநகர் மாவட்டத் தலைவர் சுசீந்திரன், செயலர் ஜெயச்சந்திரன் ஆகியோர் தலைமையில் ஏராளமானோர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்து புகார் மனு அளித்தனர். 
இந்தநிலையில், அங்கு திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பி.மூர்த்தி ஆதரவாளர்களுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் தன்மீதான புகாரை மறுத்து பொதுமக்களிடம் விளக்கமளித்தாகவும் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/20/ஊரக-வேலைவாய்ப்புத்-திட்டத்தில்-முறைகேடு-நடப்பதாக-பாஜக-புகார்-3003937.html
3003936 மதுரை மதுரை ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் முறைகேடு நடப்பதாக பாஜக புகார் DIN DIN Thursday, September 20, 2018 07:54 AM +0530 மதுரை மாவட்டம் கருப்பாயூரணி பகுதியில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டத்தில் முறைகேடு நடப்பதாகக் கூறி பாஜகவினர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதன்கிழமை புகார் மனு அளித்தனர்.
மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கருப்பாயூரணி பகுதியில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பங்கு பெறாதவர்களின் அடையாள அட்டையைப் பயன்படுத்தி பல லட்ச ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக பாஜகவினர் புகார் கூறியுள்ளனர். அதன்படி சட்டப்பேரவை உறுப்பினர், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக புறநகர் மாவட்டத் தலைவர் சுசீந்திரன், செயலர் ஜெயச்சந்திரன் ஆகியோர் தலைமையில் ஏராளமானோர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்து புகார் மனு அளித்தனர். 
இந்தநிலையில், அங்கு திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பி.மூர்த்தி ஆதரவாளர்களுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் தன்மீதான புகாரை மறுத்து பொதுமக்களிடம் விளக்கமளித்தாகவும் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/20/ஊரக-வேலைவாய்ப்புத்-திட்டத்தில்-முறைகேடு-நடப்பதாக-பாஜக-புகார்-3003936.html
3003935 மதுரை மதுரை கருணாநிதி மறைவால் அதிர்ச்சியில் இறந்த 5 பேரின் குடும்பத்துக்கு நிவாரணம் DIN DIN Thursday, September 20, 2018 07:54 AM +0530 திமுக தலைவர் மு.கருணாநிதி காலமான போது, அவரது மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியில் இறந்த 5 பேரின் குடும்பங்களுக்கு திமுக சார்பில் தலா ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.
 திமுக தலைவர் மு.கருணாநிதி ஆகஸ்ட் 7 ஆம் தேதி காலமானார். அவரது மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியில் இறந்த மதுரை வடக்கு மாசி வீதியைச் சேர்ந்த ஞானசேகரன்,  கருணாநிதியின் இறுதிச் சடங்கில் பங்கேற்கச் சென்றபோது நெரிசலில் சிக்கி இறந்த துரை உள்பட மதுரை மாவட்டத்தில் 5 பேருக்கு திமுக சார்பில் தலா ரூ.2 லட்சம் நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது. 
அதற்கான வரைவோலையை திமுக மாநகர் மாவட்ட பொறுப்புக்குழுத் தலைவர் கோ.தளபதி, இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் புதன்கிழமை வழங்கினார். பொறுப்புக் குழு உறுப்பினர்கள் வ.வேலுசாமி, பெ.குழந்தைவேல், ஜெயராமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/20/கருணாநிதி-மறைவால்-அதிர்ச்சியில்-இறந்த-5-பேரின்-குடும்பத்துக்கு-நிவாரணம்-3003935.html
3003934 மதுரை மதுரை இபிஎப் ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றுசமர்ப்பிக்க வங்கிகளில் சிறப்பு வசதி DIN DIN Thursday, September 20, 2018 07:54 AM +0530 தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஓய்வூதியர்கள் தங்களது உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்க, ஓய்வூதியம் பெறும் வங்கிகளில் சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.
மதுரை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகம் மூலமாக மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம்,  விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 88 ஆயிரம் பேர் வருங்கால வைப்புநிதி ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். 
இவர்களுக்கான ஓய்வூதியம் வங்கிகள் மூலம் பட்டுவாடா செய்யப்படுகின்றன. ஓய்வூதியதாரர்களில் பெரும்பாலானோர் தங்களது மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்காமல் உள்ளனர். இதனால் வருங்கால வைப்புநிதி அலுவலகத்தின் மூலம் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க முடியவில்லை.
இப்பிரச்னையைத் தீர்க்க வங்கிகளில் உயிர்வாழ் சான்றிதழ் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 
ஆகவே, இதுவரை உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்காத ஓய்வூதியர்கள் தாங்கள் ஓய்வூதியம் பெறும் வங்கிகளில் இந்த வசதியைப் பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம். 
கடந்த ஜனவரி முதல் ஓய்வூதியம் பெறாதவர்கள், தங்களது உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்க சம்பந்தப்பட்ட வங்கிக் கிளையை  ஆதார் அட்டை, ஆதார் அட்டையில் பதிவு செய்துள்ள தொடர்பு எண்ணுக்குரிய செல்லிடப்பேசியுடன் அணுகலாம். 
மதுரை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/20/இபிஎப்-ஓய்வூதியர்கள்-உயிர்வாழ்-சான்றுசமர்ப்பிக்க-வங்கிகளில்-சிறப்பு-வசதி-3003934.html
3003933 மதுரை மதுரை ஆள்கொணர்வு மனுவில் காவல்துறை கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைகள்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு DIN DIN Thursday, September 20, 2018 07:53 AM +0530 ஆள்கொணர்வு மனுவில் காவல்துறையினர் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
விருதுநகரைச் சேர்ந்தவர் கே.சுகுமாரி. இவர் தன் கணவர் மாயமானது தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்கவும், சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றவும் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார். மனுவில் அவர் குறிப்பிட்டிருப்பது: எனது கணவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. அவரை கடந்த 18.01.2012 முதல் காணவில்லை. காவல்துறையினர் வழக்குப் பதிந்தும் கணவரை கண்டறிய முடியவில்லை என வழக்கை முடித்து சிவகாசி நீதித்துறை நடுவர் மன்றத்தில் காவல்துறையினரின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக மனுவில் கூறப்பட்டிருந்தது.
 இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு விவரம்: ஆள்கள் மாயமான வழக்கில் மாயமான நபரை கண்டறிய முடியவில்லை எனக்கூறி வழக்கை முடிப்பது தொடர்பாக உயர்நீதிமன்றம்  12.9.2004 -ல் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் ஆள்கள் மாயம் உள்பட ஏழு விதமான வழக்குகளைக் கையாள்வது தொடர்பாக டிஜிபி கடந்த 31.01.2005 -ல் அனைத்துக் காவல்துறை அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். 
அந்த  அறிக்கையில், காவல்துறை கணினிப் பிரிவினர் மாயம், கடத்தல், ஓடுதல், தேடப்படும் நபர், தப்பித்தவர், அடையாளம் தெரியாத நபர், அடையாளம் தெரியாத உடல் விண்ணப்பங்களை அனைத்து மாநகர் காவல் ஆணையர்கள், கண்காணிப்பாளர் அலுவலகங்களுக்கும், காவல் நிலையங்களுக்கும் அனுப்பவேண்டும். வழக்குப் பதிந்தவுடனே விசாரணை அதிகாரி வழக்கு விவரங்களை துணைக் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.), காவல் கணினிப் பிரிவு மற்றும் டிசிஆர்பி ஆகிய பிரிவுக்கு தகவல் தெரிவிக்கவேண்டும்.  அத்துடன் மாயமான நபர்களின் புகைப்படமும் அனுப்ப வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆள் மாயம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் தகவல்களைச் சேகரிக்க ஒரு சார்பு ஆய்வாளர், இரு தலைமைக் காவலர்கள், இரு காவலர்கள் அடங்கிய சிறப்புப் படை அமைக்க வேண்டும். 
ஆள்கள் மாயமான வழக்குகளையும், அடையாளம் தெரியாத உடல்கள் தொடர்பான வழக்குகளையும் உடனுக்குடன், மாவட்ட குற்றப்பிரிவு, குற்ற ஆவணப்பிரிவு ஆகியவற்றுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். அந்தத் தகவல்களை பொது மக்கள் சுலபமாக தெரிந்துகொள்ளும் வசதியுடன், காவல்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும். 
 குற்றப்பிரிவு போலீஸார் மாயமான நபர்களின் புகைப்படம் மற்றும் அடையாளம் தெரியாத நபர்களின் உடல்களின் புகைப்படத்துடன் ஒப்பிட்டு முடிவெடுக்க வேண்டும் என டி.ஜி.பி.உத்தரவில் பல்வேறு வழிகாட்டல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் போலீஸார் இதை நடைமுறைப்படுத்தாமல் அனைத்து வழக்குகளிலும் தவறு செய்கின்றனர்.
 ஆள்கள் மாயமான வழக்குகளில் மாயமான நபரை கண்டுபிடிக்கமுடியவில்லை என இறுதி அறிக்கை தாக்கல் செய்து வழக்கை முடிக்க முடியாது. விசாரணை நிலையில் தான் கண்டுபிடிக்க முடியவில்லை என அறிக்கை தாக்கல் செய்யமுடியும். குற்றவியல் நடைமுறைச்சட்டம் 173 (2) படி இறுதி அறிக்கை தாக்கல் செய்யும் வரை விசாரணை தொடர வேண்டும். இந்த உத்தரவை போலீஸார் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கும் வகையில் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என கூறியுள்ளார். 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/20/ஆள்கொணர்வு-மனுவில்-காவல்துறை-கடைப்பிடிக்கவேண்டிய-வழிமுறைகள்-உயர்நீதிமன்ற-மதுரைக்-கிளை-உத்தரவு-3003933.html
3003932 மதுரை மதுரை கலைத்திறன் போட்டிகளில் குயின்மீரா சர்வதேசப் பள்ளி தொடர் வெற்றி DIN DIN Thursday, September 20, 2018 07:53 AM +0530 மதுரையில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான கலைத்திறன் போட்டிகளில் குயின்மீரா சர்வதேசப் பள்ளி 9 பிரிவுகளில் வெற்றி பெற்று முதலிடம் வகித்துள்ளது. 
மதுரையில் தனியார் வானொலியும், போத்தீஸ் நிறுவனமும் இணைந்து  நடத்திய போட்டிகளில்  125 பள்ளிகளின் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில் 13 போட்டிகள் நடைபெற்றன. இதில் 9 பிரிவுகளில் மதுரை குயின்மீரா சர்வதேசப் பள்ளி மாணவ, மாணவியர் வெற்றி பெற்று அதிகப் புள்ளிகளையும் பெற்று  முதலிடம் வகித்தது. கடந்த 7 ஆண்டுகளாக நடந்த போட்டிகளிலும் குயின்மீரா சர்வதேசப் பள்ளி அணியானது தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முதலிடம் வகித்த குயின்மீரா சர்வதேசப்பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகை கிடைத்தது. அதனை மதுரை மாநகராட்சிப் பள்ளிகளின் கட்டமைப்பு வளர்ச்சி நிதிக்கு அன்பளிப்பாக குயின்மீரா சர்வதேசப் பள்ளி நிர்வாகம் வழங்கியுள்ளது. தொடர் வெற்றி பெற்ற அணியினரை குயின்மீரா சர்வதேசப்பள்ளியின் தலைவர் சந்திரன், இளம் கல்வியாளரான இயக்குநர் அபிநாத் ஆகியோர் பாராட்டினர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/20/கலைத்திறன்-போட்டிகளில்-குயின்மீரா-சர்வதேசப்-பள்ளி-தொடர்-வெற்றி-3003932.html
3003931 மதுரை மதுரை ஆற்றில் மூழ்கியவர் சடலம் மீட்பு DIN DIN Thursday, September 20, 2018 07:53 AM +0530 மதுரை மதிச்சியம் பகுதியில் வைகையாற்றில் மூழ்கியவர் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.
மதுரை மதிச்சியம் ராமராயர் மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன்(48). இவர் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் வைகையாற்றில் குளிக்கச் சென்ற போது தண்ணீரில் மூழ்கினார். இவரை உறவினர்கள் மற்றும் தீயணைப்புத்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் தெப்பக்குளம் பகுதியில் பிடிஆர் பாலம் அருகே வைகையாற்றில் தியாகராஜன் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக மதிச்சியம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/20/ஆற்றில்-மூழ்கியவர்-சடலம்-மீட்பு-3003931.html
3003930 மதுரை மதுரை கலைத்திறன் போட்டிகளில் குயின்மீராசர்வதேசப் பள்ளி தொடர் வெற்றி DIN DIN Thursday, September 20, 2018 07:53 AM +0530 மதுரையில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான கலைத்திறன் போட்டிகளில் குயின்மீரா சர்வதேசப் பள்ளி 9 பிரிவுகளில் வெற்றி பெற்று முதலிடம் வகித்துள்ளது. 
மதுரையில் தனியார் வானொலியும், போத்தீஸ் நிறுவனமும் இணைந்து  நடத்திய போட்டிகளில்  125 பள்ளிகளின் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில் 13 போட்டிகள் நடைபெற்றன. இதில் 9 பிரிவுகளில் மதுரை குயின்மீரா சர்வதேசப் பள்ளி மாணவ, மாணவியர் வெற்றி பெற்று அதிகப் புள்ளிகளையும் பெற்று  முதலிடம் வகித்தது. கடந்த 7 ஆண்டுகளாக நடந்த போட்டிகளிலும் குயின்மீரா சர்வதேசப் பள்ளி அணியானது தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முதலிடம் வகித்த குயின்மீரா சர்வதேசப்பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகை கிடைத்தது. அதனை மதுரை மாநகராட்சிப் பள்ளிகளின் கட்டமைப்பு வளர்ச்சி நிதிக்கு அன்பளிப்பாக குயின்மீரா சர்வதேசப் பள்ளி நிர்வாகம் வழங்கியுள்ளது. தொடர் வெற்றி பெற்ற அணியினரை குயின்மீரா சர்வதேசப்பள்ளியின் தலைவர் சந்திரன், இளம் கல்வியாளரான இயக்குநர் அபிநாத் ஆகியோர் பாராட்டினர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/20/கலைத்திறன்-போட்டிகளில்-குயின்மீராசர்வதேசப்-பள்ளி-தொடர்-வெற்றி-3003930.html
3003929 மதுரை மதுரை மேலூரில் இன்று மின்நுகர்வோர் குறைதீர்கூட்டம் DIN DIN Thursday, September 20, 2018 07:52 AM +0530 மேலூரில் கிழக்குக் கோட்ட மின்நுகர்வோர்களின் குறைதீர்க்கும் கூட்டம்  வியாழக்கிழமை (செப்.20) நடைபெறுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழக மதுரை மேற்பார்வையாளர் ஜா.பிரீடா பத்மினி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 
மதுரை கிழக்குக் கோட்டத்தைச் சேர்ந்த மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், மதுரை மின்பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் தலைமையில் மேலூர் மின்வாரிய அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.  ஆகவே சம்பந்தப்பட்ட மதுரை கிழக்குக் கோட்டத்துக்கு உள்பட்ட மின்நுகர்வோர்கள் அனைவரும் தங்களது மின்சாரம் தொடர்பான குறைகளை நேரில் தெரிவிக்கலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/20/மேலூரில்-இன்று-மின்நுகர்வோர்-குறைதீர்கூட்டம்-3003929.html
3003928 மதுரை மதுரை படிப்பைத் தொடர அனுமதிக்காததால் இளம்பெண் விஷம் குடித்துத் தற்கொலை DIN DIN Thursday, September 20, 2018 07:52 AM +0530 கொட்டாம்பட்டி அருகே கல்லூரி படிப்பைத் தொடர அனுமதிக்காததால் இளம்பெண் விஷம் குடித்த நிலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார்.
  மதுரை மாவட்டம் தர்காகுடியைச் சேர்ந்த முருகேசன் மகள் அனு (22). சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் அனுவை, அவரது தாய்மாமனுக்கு 6 மாதம் முன்பு திருமணம் செய்து வைத்தனர். இந்நிலையில் அனு, தனது கல்லூரி படிப்பைத் தொடர பெற்றோரிடம் விருப்பம் தெரிவித்துள்ளார். கணவர் குடும்பத்தினர் கல்லூரி படிப்பைத் தொடர சம்மதிக்கவில்லையாம். இதனால் மனமுடைந்த அவர், ஞாயிற்றுக்கிழமை விஷம் சாப்பிட்டு மயக்கமடைந்தார். சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.  மேலூர் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகிறார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/20/படிப்பைத்-தொடர-அனுமதிக்காததால்-இளம்பெண்-விஷம்-குடித்துத்-தற்கொலை-3003928.html
3003927 மதுரை மதுரை கருமாத்தூரில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி DIN DIN Thursday, September 20, 2018 07:52 AM +0530 உசிலம்பட்டி அருகே கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியின் தேசிய மாணவர் படை மற்றும் சமூக கல்வித் திட்டம்(அரைஸ்)இணைந்து தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணியை புதன்கிழமை நடத்தின.
கல்லூரியின் முதல்வர் பேசில் சேவியர் தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார். பேரணி கல்லூரியிலிருந்து கருமாத்தூர் கரிசல்பட்டி வரை சென்றடைந்தது. பின்னர் கரிசல்பட்டி கிராமத்தை தேசிய மாணவர் படை மாணவ, மாணவிகள் தூய்மைப்படுத்தினர். மேலும் திண்டுக்கல் பட்டாலியன்  ஹவில்தார் வெங்கடேஷ் , ராஜ்பகதூர் யாதவ் மற்றும் உசிலம்பட்டி தேசிய மாணவர் படை அதிகாரி ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ,மாணவிகளை ஊக்கப்படுத்தினர். முன்னதாக அரைஸ் விரிவாக்கத்துறை ஒருங்கிணைப்பாளர் நிர்மல் ராஜ்குமார் வரவேற்றார். தேசிய மாணவர் படை அதிகாரி ஆரோக்கிய மரிய மைக்கேல் ராஜா நன்றி கூறினார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/sep/20/கருமாத்தூரில்-தூய்மை-இந்தியா-விழிப்புணர்வு-பேரணி-3003927.html