Dinamani - விருதுநகர் - http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2792673 மதுரை விருதுநகர் திருத்தங்கல் அருகே  இரு சக்கர வாகனங்கள் மோதல்: 2 குழந்தைகள் சாவு DIN DIN Friday, October 20, 2017 05:29 AM +0530 திருத்தங்கல் அருகே புதன்கிழமை இரவு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கொண்டதில், 2 குழந்தைகள் உயிரிழந்தன.
      விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள வெள்ளையாபுரத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (38). இவர், தனது மனைவி காளீஸ்வரி (33) மற்றும் மகள்கள் சுபிக்ஷா (11), நிதஷா (4) ஆகியோருடன் இரு சக்கர வாகனத்தில் புதன்கிழமை சிவகாசி நோக்கிச் சென்றுள்ளார்.
  பின்னர், அங்கிருந்து தனது ஊருக்குத் திரும்பியுள்ளார். திருத்தங்கல் அருகேயுள்ள வளைவில் சிவக்குமார் திரும்பியபோது, எதிரே திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த அருள்ராஜ் (19), அருண்குமார் (18) ஆகியோர் வந்த இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியுள்ளது.
   இதில், குழந்தை நிதிஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி சுபிக்ஷா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேநேரம், காயமடைந்த தாய், தந்தை இருவரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    இந்த விபத்து தொடர்பாக, திருத்தங்கல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/20/திருத்தங்கல்-அருகே--இரு-சக்கர-வாகனங்கள்-மோதல்-2-குழந்தைகள்-சாவு-2792673.html
2792604 மதுரை விருதுநகர் சாத்தூர் அருகே குடியிருப்பு பகுதியில் குப்பைகள் தேக்கம் DIN DIN Friday, October 20, 2017 04:20 AM +0530 சாத்தூர் அருகேயுள்ள பெரியகொல்லபட்டி கிராமத்தில் குடியிருப்புகள் அருகே தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள பெரியகொல்லபட்டி கிராமத்தில்  500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை.
    இந்நிலையில், இப்பகுதியில் குப்பைகள் தேங்கி சுகாதாரக் கேடு நிலவுகிறது.
  மேலும், வாருகால்களில் குப்பைகள் தேங்கி கழிவுநீர் செல்லமுடியாமல் சாலையில் செல்கிறது.
    இந்தப் பகுதியில் கொசுத் தொல்லை அதிகரித்துள்ளதால், பலரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, ஊராட்சி நிர்வாகம் குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை தினமும் அள்ளவேண்டும். வாருகாலில் கழிவுநீர் தேங்காதவாறு சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/20/சாத்தூர்-அருகே-குடியிருப்பு-பகுதியில்-குப்பைகள்-தேக்கம்-2792604.html
2792603 மதுரை விருதுநகர் சிவகாசியில் பட்டாசு விபத்து: சிறுவன் சாவு DIN DIN Friday, October 20, 2017 04:20 AM +0530 சிவகாசியில் புதன்கிழமை நிகழ்ந்த பட்டாசு விபத்தில் சிறுவன் உயிரிழந்தான்.
     விருதுநகர் மாவட்டம், சிவகாசி முனங்கி தெருவைச் சேர்ந்த முருகன் மகன் ரகு நந்தன் (6). இவர், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதன்கிழமை வீட்டு முன்பு பல்வேறு வெடிகள் அடங்கிய பெட்டியிலிருந்து (கிப்ட் பாக்ஸ்) கம்பி மத்தாப்பை பொருத்திக் கொண்டிருந்துள்ளார். அப்போது, எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தி பட்டாசு பெட்டியில் விழுந்ததில், அனைத்துப் பட்டாசுகளும் ஒரே நேரத்தில் வெடித்து சிதறியுள்ளன. இதில், அருகில் நின்று கொண்டிருந்த சிறுவனின் உடல் முழுவதும் காயமேற்பட்டு, சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
    ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் ரகுநந்தன் உயிரிழந்தான். இது குறித்து சிவகாசி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/20/சிவகாசியில்-பட்டாசு-விபத்து-சிறுவன்-சாவு-2792603.html
2792602 மதுரை விருதுநகர் பட்டாசு ஆலை உரிமையாளர் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு DIN DIN Friday, October 20, 2017 04:20 AM +0530 விருதுநகர் அருகே புதன்கிழமை பட்டாசு ஆலை உரிமையாளர் வீட்டில் ரூ. 3 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
      விருதுநகர் அருகே உள்ள வெங்கால்நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் தனசேகரன் (45). பட்டாசு ஆலை உரிமையாளரான இவர், சிவகாசியில் பட்டாசுக் கடை வைத்துள்ளார். தீபாவளி திருநாளையொட்டி, தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கி விட்டு, மீதமுள்ள ரூ.50 ஆயிரத்தை பீரோவில் வைத்து விட்டு, சென்னைக்கு பட்டாசு வியாபாரம் செய்ய சென்றுவிட்டாராம்.
     இதனிடையே, இவரது மனைவி இந்துராணி அக்டோபர் 16 ஆம் தேதி பட்டாசு வியாபாரம் செய்த ரூ.3 லட்சம் பணத்தை அதே பீரோவில் வைத்து விட்டு, வெளியூர் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து, புதன்கிழமை இந்துராணி வீட்டுக்கு வந்து பார்த்தபோது, ஜன்னல் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ. 3 லட்சம் பணம் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.     இது குறித்து இந்துராணி அளித்த புகாரின்பேரில், வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/20/பட்டாசு-ஆலை-உரிமையாளர்-வீட்டில்-ரூ3-லட்சம்-திருட்டு-2792602.html
2792601 மதுரை விருதுநகர் விருதுநகரில் இளைஞரை கத்தியால் குத்திய 6 பேர் மீது வழக்கு DIN DIN Friday, October 20, 2017 04:20 AM +0530 விருதுநகரில் புதன்கிழமை முன்விரோதத்தில் இளைஞரை கத்தியால் குத்திய 6 பேரை தேடி வருகின்றனர்.
     விருதுநகர் யானைக் குழாய் தெருவைச் சேர்ந்த காளிமுத்து மகன் ஆறுமுகச் செல்வம் (23). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் கடந்த ஆண்டு மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா அக்கினிச் சட்டி எடுத்துவரும் நிகழ்ச்சியின்போது தகராறு ஏற்பட்டுள்ளது.
     இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்ததால், வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆறுமுகச் செல்வம் யானைக் குழாய் தெரு வழியே புதன்கிழமை இரவு நடந்து வந்தாராம். அப்போது, பிரபாகரன், மாரிச்சாமி, கவுதமன், சூர்யா, முத்துச்செல்வன், சுந்தர் ஆகிய 6 பேரும் சேர்ந்து, ஆறுமுகச் செல்வத்திடம் தகராறு செய்துள்ளனர். பின்னர், அவர்கள் ஆறுமுகச் செல்வத்தை கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.
    அதையடுத்து, அவர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து ஆறுமுகச் செல்வம் அளித்த புகாரின்பேரில், மேற்கு போலீஸார் வழக்குப் பதிந்து 6 பேரையும் தேடி வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/20/விருதுநகரில்-இளைஞரை-கத்தியால்-குத்திய-6-பேர்-மீது-வழக்கு-2792601.html
2792600 மதுரை விருதுநகர் நெசவாளர் கூட்டுறவு சங்க மகாசபை கூட்டம் DIN DIN Friday, October 20, 2017 04:19 AM +0530 ராஜபாளையம் அருகே சேத்தூர் மேட்டுப்பட்டியில் உள்ள பாரதி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தின் மகாசபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
     சங்கத் தலைவர் ராஜகுரு தலைமை வகித்தார். இதில், சங்கப் பணியாளர் மாரிமுத்து வரவேற்றார். கூட்டத்தில், முன்னாள் எம்.பி. லிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.    இதில், கடந்த ஆண்டு கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டு, போனஸ் மற்றும் கூட்டுறவு வளர்ச்சி நிதி, கல்வி நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/20/நெசவாளர்-கூட்டுறவு-சங்க-மகாசபை-கூட்டம்-2792600.html
2792598 மதுரை விருதுநகர் ஆவியூர் பகுதியில் அக்டோபர் 20 மின்தடை DIN DIN Friday, October 20, 2017 04:19 AM +0530 ஆவியூர் துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.
     எனவே, காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, இங்கிருந்து மின் விநியோகம் பெறும் ஆவியூர், காரியாபட்டி, புல்வாய்க்கரை, அரசகுளம், குரண்டி, மாங்குளம், கரிசல்குளம், கம்பிக்குடி, முஷ்டக்குறிச்சி, திம்மாபுரம், அ.முக்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என,  அருப்புக்கோட்டை மின்பகிர்மானக் கழக கோட்டச் செயற்பொறியாளர் ஆர். கண்ணன் தனது அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/20/ஆவியூர்-பகுதியில்-அக்டோபர்-20-மின்தடை-2792598.html
2792597 மதுரை விருதுநகர் ராஜபாளையம் அருகே கார் மரத்தில் மோதி ஆடை விற்பனையாளர் சாவு DIN DIN Friday, October 20, 2017 04:18 AM +0530 விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில் வியாழக்கிழமை ஒருவர் உயிரிழந்தார்.
      ராஜபாளையம் அருகே சங்கரபாண்டியபுரத்தைச் சேர்ந்த நித்தியா என்பவருக்கும், உசிலம்பட்டியைச் சேர்ந்த பிரசன்ன குமார் (34)என்பவருக்கும்,  6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. தற்போது, இவர்களுக்கு ஷிவானி என்ற 4 வயது பெண் குழந்தை உள்ளது. மேலும், நித்யா தற்போது நிறை மாதக் கர்ப்பிணியாக உள்ளார்.      பிரசன்ன குமார், கேரள மாநிலம் மூணாறில் தங்கியிருந்து வெளி மாநிலங்களுக்கு ஆடைகள், துணி ரகங்கள் விற்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்காக சங்கரபாண்டியபுரத்தில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு வந்துள்ளார்.
     குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய பிரசன்ன குமார், வியாழக் காலை தளவாய்புரத்துக்கு வியாபார நிமித்தமாக தனது காரில் சென்றுள்ளார். தென்காசி சாலையில் அரசு மருத்துவமனையை அடுத்துள்ள தனியார் நட்சத்திர தங்கும் விடுதியை கடந்து சென்றபோது,  எதிர்பாராத விதமாக அவரது கார் சாலையோர மரத்தில் மோதியது.
    இதில், காரின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்தது. இந்த விபத்தில், பிரசன்ன குமார் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் பிரசன்ன குமாரின் சடலத்தை மீட்கமுடியவில்லை. பின்னர், தீ அணைப்புத் துறையினர் மற்றும் தனியார் மீட்பு வாகனத்தின் உதவியுடன் சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு பிரசன்ன குமாரின் சடலம் மீட்கப்பட்டது.      இது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/20/ராஜபாளையம்-அருகே-கார்-மரத்தில்-மோதி-ஆடை-விற்பனையாளர்-சாவு-2792597.html
2792596 மதுரை விருதுநகர் கடன் தொல்லை: விஷம் குடித்து ஒருவர் தற்கொலை DIN DIN Friday, October 20, 2017 04:18 AM +0530 அருப்புக்கோட்டையிலுள்ள விடுதி ஒன்றில், கடன் தொல்லை காரணமாக விருதுநகரைச் சேர்ந்தவர் வியாழக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
       விருதுநகர் அருகே கட்டையாபுரத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவரது மகன் ஜேசுராஜ் (45). இவருக்கு மனைவியும் மற்றும் 10 வயது பெண் குழந்தையும், 8 வயது ஆண் குழந்தையும் உள்ளனர்.      இந்நிலையில், ஜேசுராஜ் வேலைக்குச் சரிவர செல்லாததால், அவரது  மனைவி தனது இரு குழந்தைகளுடன் ஓராண்டுக்கு முன்பே பிரிந்து சென்றுவிட்டராம். இதனால், தனியாக வசித்து வந்த ஜேசுராஜ், மனமுடைந்த நிலையில் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.
     இதனிடையே, கடன் தொல்லையும் அதிகமானதால், அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்துத் தங்கியிருந்த ஜேசுராஜ், வியாழக்கிழமை வெகுநேரமாகியும் அறைக் கதவை திறக்கவில்லையாம். இதனால் சந்தேகமடைந்த  விடுதி மேலாளர், அருப்புக்கோட்டை நகர் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில், போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து ஜேசுராஜ் தங்கியிருந்த அறைக் கதவை உடைத்துத் திறந்து பார்த்தபோது, ஜேசுராஜ் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்துள்ளார்.
     அதையடுத்து, அவரது சடலத்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸார்,  இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/20/கடன்-தொல்லை-விஷம்-குடித்து-ஒருவர்-தற்கொலை-2792596.html
2792595 மதுரை விருதுநகர் திருத்தங்கல் அருகே இரு சக்கர வாகனங்கள் மோதல்: 2 குழந்தைகள் சாவு DIN DIN Friday, October 20, 2017 04:17 AM +0530 திருத்தங்கல் அருகே புதன்கிழமை இரவு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கொண்டதில், 2 குழந்தைகள் உயிரிழந்தன.
      விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள வெள்ளையாபுரத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (38). இவர், தனது மனைவி காளீஸ்வரி (33) மற்றும் மகள்கள் சுபிக்ஷா (11), நிதஷா (4) ஆகியோருடன் இரு சக்கர வாகனத்தில் புதன்கிழமை சிவகாசி நோக்கிச் சென்றுள்ளார்.
  பின்னர், அங்கிருந்து தனது ஊருக்குத் திரும்பியுள்ளார். திருத்தங்கல் அருகேயுள்ள வளைவில் சிவக்குமார் திரும்பியபோது, எதிரே திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த அருள்ராஜ் (19), அருண்குமார் (18) ஆகியோர் வந்த இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியுள்ளது.
   இதில், குழந்தை நிதிஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி சுபிக்ஷா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேநேரம், காயமடைந்த தாய், தந்தை இருவரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    இந்த விபத்து தொடர்பாக, திருத்தங்கல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/20/திருத்தங்கல்-அருகே-இரு-சக்கர-வாகனங்கள்-மோதல்-2-குழந்தைகள்-சாவு-2792595.html
2792593 மதுரை விருதுநகர் விருதுநகரில் மின் கசிவால் வீட்டில் தீ விபத்து DIN DIN Friday, October 20, 2017 04:17 AM +0530 விருதுநகரில் வீட்டில் மின் கசிவு காரணமாக, வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
     விருதுநகர் வாடியான் தெரு அருகே உள்ள சின்னையா பள்ளிக்கூடத் தெருவில் சோமசுந்தரம் (70) என்பவருக்குச் சொந்தமான வீடு உள்ளது. அதில், அவர் பழைய துணிகள், பிளாஸ்டிக் பொருள்கள், அட்டைப்பெட்டிகள் உள்ளிட்ட பழைய பொருள்களை வாங்கி வைத்துள்ளார்.
     இந்நிலையில், வியாழக்கிழமை மதியம் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில்,  பழைய பொருள்கள் பற்றி எரிந்தன. தகவலின்பேரில், அங்கு சென்ற தீயணைப்புத் துறையினர், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
  இது குறித்து விருதுநகர் மேற்கு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/20/விருதுநகரில்-மின்-கசிவால்-வீட்டில்-தீ-விபத்து-2792593.html
2792592 மதுரை விருதுநகர் ரயில் முன் பாய்ந்து உணவகத் தொழிலாளி சாவு DIN DIN Friday, October 20, 2017 04:17 AM +0530 விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே புதன்கிழமை இரவு சரக்கு ரயில் முன் பாய்ந்து உணவகத் தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.
         சிவகாசியைச் சேர்ந்தவர் ஜெயந்தன் (32). உணவகத் தொழிலாளியான இவர், விருதுநகர் நரிக்குடி அருகே உள்ள விடத்தகுளத்தில் ரஞ்சிதம் (27) என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்துக்குப் பின்னர், அவர் மனைவியுடன் விடத்தகுளத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், குடும்பப் பிரச்னை காரணமாக, புதன்கிழமை இரவு அவ்வழியே சென்ற சரக்கு ரயில் முன் ஜெயந்தன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
    இது குறித்து ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/20/ரயில்-முன்-பாய்ந்து-உணவகத்-தொழிலாளி-சாவு-2792592.html
2792591 மதுரை விருதுநகர் சாத்தூர் அருகே சமுதாயக் கூடத்தை சீரமைக்க கோரிக்கை DIN DIN Friday, October 20, 2017 04:16 AM +0530 சாத்தூர் அருகே சமுதாயக் கூடத்தைச் சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
    விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள வாழவந்தாள்புரம் பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன் சமுதாயக் கூடம் கட்டப்பட்டது. இப்பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
     இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ரூ. 2 லட்சம் செலவில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இந்த சமுதாயக் கூடம் கட்டப்பட்டது. ஆனால், அதன்பின்னர் சமுதாயக் கூடத்தை முறையாகப் பராமரிக்காததால்,  தற்போது பயன்பாடற்று இடியும் நிலையில் உள்ளது.
     பயன்பாடற்ற நிலையில் இருப்பதால்,  சமூக விரோதச் செயல்களும் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
    இது குறித்து இப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடமும், ஆதிதிராவிடர் நலத் துறையிலும் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இந்த சமுதாயக் கூடக் கட்டடத்தை உடனடியாக மராமத்து செய்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/20/சாத்தூர்-அருகே-சமுதாயக்-கூடத்தை-சீரமைக்க-கோரிக்கை-2792591.html
2792590 மதுரை விருதுநகர் அருப்புக்கோட்டை பெரிய கண்மாயை ஆக்கிரமித்துள்ள ஆகாயத் தாமரையை அகற்றக் கோரிக்கை DIN DIN Friday, October 20, 2017 04:16 AM +0530 அருப்புக்கோட்டை நகரின் முக்கிய நிலத்தடி நீராதாரமான பெரிய கண்மாயை முற்றிலும் ஆக்கிரமித்து வளர்ந்துள்ள ஆகாயத் தாமரையை அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
      அருப்புக்கோட்டையின் முக்கிய நீர்நிலையான பெரிய கண்மாயை,  நகரின் மையப் பகுதிகளிலிருந்தும், மணிநகரம், புதிய பேருந்து நிலையம், தெற்குத் தெரு, குமரன் புதுத்தெரு, பெரிய புளியம்பட்டி, வெள்ளைக்கோட்டை, வடுகர்கோட்டை, கஞ்சநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து ஓடைகள் மூலம் வரும் மழை நீர் அடைகிறது. இக்கண்மாய் நகரின் முக்கிய நிலத்தடி நீராதாரமாக உள்ளது.
    மேலும், கஞ்சநாயக்கன்பட்டி, வடுகர்கோட்டை, ராமசாமிபுரம், செட்டிகுறிச்சி, சுக்கிலநத்தம் மற்றும் கண்மாயை ஒட்டியுள்ள நகர்ப் பகுதி மானாவாரி நிலங்கள் என 200 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன.
     இந்நிலையில், முக்கியமான இக்கண்மாயை முற்றிலும் ஆக்கிரமித்து ஆகாயத் தாமரைகள் வளர்ந்துள்ளன. இதனால், நீர் உறிஞ்சப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் குறைவதுடன், விவசாய நிலங்களும் பாதிக்கப்படுகின்றன. எனவே,  இக்கண்மாயில் உள்ள ஆகாயத் தாமரைகளை உடனடியாக அகற்றி தூர்வார வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/20/அருப்புக்கோட்டை-பெரிய-கண்மாயை-ஆக்கிரமித்துள்ள-ஆகாயத்-தாமரையை-அகற்றக்-கோரிக்கை-2792590.html
2792126 மதுரை விருதுநகர் ஸ்ரீவிலி.யில் அதிமுக 46 ஆம் ஆண்டு கொண்டாட்டம் DIN DIN Wednesday, October 18, 2017 01:40 AM +0530 அதிமுக தோற்றுவிக்கப்பட்டு 46 ஆண்டுகளாவதையொட்டி,  ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுகவினர் செவ்வாய்க்கிழமை கொண்டாடினர்.
தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் மு. சந்திரபிரபா மற்றும் முன்னாள் மாவட்டக் கவுன்சிலர் த. முத்தையா ஆகியோர்  தலைமையில் ஏராளமான அதிமுக தொண்டர்கள், பேருந்து நிலையத்தில் உள்ள கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்கினர்.    
மேலும், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர், ஒன்றியம், வத்திராயிருப்பு ஒன்றியப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரபிரபா  கட்சிக் கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில், கட்சியின் ஒன்றியச் செயலர் எஸ்.கே. மயில்சாமி, கூட்டுறவு நகர வங்கித் தலைவர் எஸ்.எம். பாலசுப்பிரமணி, நகர் பொருளாளர் கருமாரி எஸ். முருகன், வத்திராயிருப்பு ஒன்றியச் செயலர் சுப்புராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/18/ஸ்ரீவிலியில்-அதிமுக-46-ஆம்-ஆண்டு-கொண்டாட்டம்-2792126.html
2792125 மதுரை விருதுநகர் பள்ளியில் தீபாவளி கலை நிகழ்ச்சிகள் DIN DIN Wednesday, October 18, 2017 01:40 AM +0530 தீபாவளி திருநாளை முன்னிட்டு, அருப்புக்கோட்டை சந்திரா நேஷனல் பள்ளியில் செவ்வாய்க்கிழமை மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சிக்கு, பள்ளிச் செயலர் பி.சி. சரவணன் மற்றும் சங்கீதா சரவணன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில்,  செயலர் சரவணன் பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் வெடிக்கும் முறைகள் குறித்து மாணவர்களுக்கு  விளக்கினார். பள்ளி முதல்வர் கனிமொழி  தீபாவளியை பற்றி மாணவர்களுக்கு  விளக்கமளித்தார்.
பின்னர், மாணவ, மாணவியர் நரகாசுர வதம் எனும் நாடகத்தை நடத்தினர். மேலும், பலவிதமான கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. விழா ஏற்பாடுகளை, பள்ளி முதல்வர் கனிமொழி மற்றும் ஆசிரியைகள் அன்புநியா, சந்திரபாண்டி மற்றும் ஆசிரியர் சதீஷ் ஆகியோர் செய்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/18/பள்ளியில்-தீபாவளி-கலை-நிகழ்ச்சிகள்-2792125.html
2792124 மதுரை விருதுநகர் சிந்தபள்ளி கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை DIN DIN Wednesday, October 18, 2017 01:39 AM +0530 சாத்தூர் அருகே சிந்தபள்ளி கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சிக்குள்பட்ட சிந்தபள்ளி கிராமத்தில் சுமார்  500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்தினர் அனைவரும் கூலி தொழில் செய்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில், 7 ஆண்டுகளுக்கு முன் வாருகால் வசதி, சாலை உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டன. தற்போது, வாருகால், சாலை, குடிநீர்த் தொட்டிகள் அனைத்தும் சேதமடைந்துள்ளன.இதனால், இந்த பகுதியில் சுகாதாரக்கேடு நிலவுகிறது.
முறையான குடிநீர் வசதி இல்லாததால், குடம் ரூ.12-க்கு விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இங்குள்ள தொடக்கப் பள்ளி சமையலறை இடியும் நிலையில் உள்ளது. மேலும், சுகாதார வளாகம் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது.
இது குறித்து கிராமத்தினர் பலமுறை முறையிட்டும், ஊராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, கிராமத்தில் வாருகால், குடிநீர், கழிப்பிடம், சுகாதார வளாகம், சமையலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/18/சிந்தபள்ளி-கிராமத்தில்-அடிப்படை-வசதிகள்-செய்து-தர-கோரிக்கை-2792124.html
2792122 மதுரை விருதுநகர் ஏ.ஐ.டி.யூ.சி. சங்க சிறப்பு பேரவைக் கூட்டம் DIN DIN Wednesday, October 18, 2017 01:39 AM +0530 விருதுநகர் மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. ஆலைத் தொழளிலாளர்கள் சங்க சிறப்பு பேரவைக் கூட்டம், ராஜபாளையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, விருதுநகர் மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. ஆலைத் தொழளிலாளர்கள் சங்கத் தலைவர் பி.எம். ராமசாமி தலைமை வகித்துப் பேசியதாவது:
ராஜபாளையத்தில் பணிபுரியும் ஆலைத் தொழிலாளர்களுக்கு உரிய காலத்தில் தீபாவளி போனஸ் வழங்கிய நிறுவனங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆலைத் தொழிலாளர்களின் நீண்ட காலப் பிரச்னைகளை தமிழக அரசு தீர்த்து, அவர்களுக்கு மாத ஊதியம், மாத ஓய்வூதியம் போன்றவை கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
கூட்டத்தில், ராஜபாளையம் நரில் பரவி வரும் காய்ச்சலை கட்டுப்படுத்தவும், ராஜபாளையம் அரசு மருத்துவமனைகளில் கூடுதல் மருத்துவர்கள் நியமிக்கவும், ஆலைத் தொழிலாளர்கள் நலன் கருதி தமிழக அரசு விரைவான நடவடிக்கை எடுக்கவும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில்,  தென்காசி மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் பொ. லிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. தி. ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர். கூட்டத்தில், சங்க நிர்வாகிகள் வீராச்சாமி,விஜயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சங்கப் பொதுச் செயலர் ரவி நன்றி கூறினார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/18/ஏஐடியூசி-சங்க-சிறப்பு-பேரவைக்-கூட்டம்-2792122.html
2792121 மதுரை விருதுநகர் கல்லூரியில் தீபாவளி கொண்டாட்டம் DIN DIN Wednesday, October 18, 2017 01:39 AM +0530 சிவகாசி பெல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்கனாலஜி கல்லூரியில், திங்கள்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.
   இந் நிகழ்ச்சிக்கு, கல்லூரி நிர்வாகி ராஜாசிங் தலைமை வகித்தார். இதை முன்னிட்டு, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. மாணவர்கள் பட்டாசு வெடித்து மகிழந்தனர்.
    வீட்டில் பட்டாசு வெடிக்கும்போது, பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என, மாணவர்களிடம் கூறப்பட்டது. இதில், கல்லூரி முதல்வர் லியோராபட், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/18/கல்லூரியில்-தீபாவளி-கொண்டாட்டம்-2792121.html
2792119 மதுரை விருதுநகர் பட்டாசு பாதுகாப்புப் பயிற்சியால் இந்த ஆண்டு விபத்து பெருமளவு குறைந்துள்ளது: அதிகாரி DIN DIN Wednesday, October 18, 2017 01:39 AM +0530 பட்டாசு பாதுகாப்புப் பயிற்சியினாலும், பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்களினாலும், இந்த ஆண்டு பட்டாசு ஆலைகளில் பெருமளவு விபத்து குறைந்துள்ளதாக, சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை துணை முதன்மை அதிகாரி கி. சுந்தரேசன் தெரிவித்துள்ளார்.  
      இது குறித்து அவர் செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 870 பட்டாசு ஆலைகள் உள்ளன. இதில், நேரடியாக சுமார் 1.50 லட்சம் பேர் வேலை செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஆலையிலும் கண்காணிப்பாளர், போர்மென் உள்ளிட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
    தமிழ்நாடு அரசு, பட்டாசுத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்புப் பயிற்சி மையம் அமைத்து, அதில் இணை இயக்குநர் அளவில் அதிகாரியை நியமித்து, பட்டாசு ஆலை போர்மென்கள், கண்காணிப்பாளர், மேலாளர் மற்றும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி அளித்து வருகிறது. இதன்மூலம், இதுவரை சுமார் 25 தொகுதி பயிற்சி வகுப்புகள் நடைபெற்றுள்ளன.
     வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள், பட்டாசு ஆலைகளில் அடிக்கடி ஆய்வு செய்து குறைகளை நிவர்த்தி செய்யும்படி அறிவுறுத்தி வந்தனர். விதியை மீறி செயல்பட்ட பட்டாசு ஆலைகளில் வேலை செய்யும் போர்மென், கண்காணிப்பாளர், மேலாளர் மற்றும் அனைத்துத் தொழிலாளர்களுக்கு உரிய பயிற்சியும், அறிவுரையும் வழங்கப்பட்டு வருகிறது.
    மாவட்ட வருவாய்த்துறையினர் 4 குழுக்களை அமைத்து, பட்டாசு ஆலைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், குறைபாடுள்ள ஆலைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதையடுத்து, அந்த ஆலைகளில் குறைபாடுகள் நீக்கப்பட்டன. பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம்களை நடத்தினர்.
    இதுபோன்ற பல நடவடிக்கைகளால் 2016-2017 ஆம் தீபாவளி ஆண்டு விபத்துகள் பெருமளவு குறைந்துள்ளன.
  வரும் காலங்களில் இதுபோன்று அனைத்துத் தரப்பினரும் முழு முயற்சியுடன் செயல்பட்டு, விபத்தே இல்லா தீபாவளியை கொண்டாடவேண்டும் என்பதே வெடிபொருள்கட்டுப்பாட்டுத் துறையின் விருப்பமாகும் என்றார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/18/பட்டாசு-பாதுகாப்புப்-பயிற்சியால்-இந்த-ஆண்டு-விபத்து-பெருமளவு-குறைந்துள்ளது-அதிகாரி-2792119.html
2792118 மதுரை விருதுநகர் அதிமுக 46-ஆவது ஆண்டு விழா கொண்டாட்டம் DIN DIN Wednesday, October 18, 2017 01:37 AM +0530 ராஜபாளையத்தில் அதிமுக  46 ஆவது ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
      ராஜபாளையம் நகர அதிமுக சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, நகரச் செயலர் என். பாஸ்கரன் தலைமை வகித்தார். விருதுநகர் மாவட்ட முன்னாள் செயலர் ஆர். விநாயகமூர்த்தி எம்.ஜி.ஆர்.உருவச் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.
  அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
     இதில், மேற்கு ஒன்றியச் செயலர் குருசாமி, கிழக்கு ஒன்றியச் செயலர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜெயலலிதாபேரவைச்செயலர் வழக்குரைஞர் முருகேசன், தொகுதிச் செயலர் வனராஜ், அண்ணா தொழிற்சங்க நிர்வாகி குருசாமி மற்றும் நகர, ஒன்றிய மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/18/அதிமுக-46-ஆவது-ஆண்டு-விழா-கொண்டாட்டம்-2792118.html
2792117 மதுரை விருதுநகர் விருதுநகர் அருகே பள்ளியில் தீபாவளி கொண்டாட்டம் DIN DIN Wednesday, October 18, 2017 01:37 AM +0530 விருதுநகர் அருகே பெரியவள்ளிக்குளத்தில் உள்ள நோபிள் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை தீபாவளி திருநாளை கொண்டாடினர்.
     இப் பள்ளியில், தீபாவளி சிறப்புக் கொண்டாட்டம் பள்ளியின் தலைவர் மற்றும் முதுநிலைத் முதல்வர் ஜெரால்டு ஞானரத்தினம் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, பள்ளியின் செயலர் மற்றும் முதல்வர் வெர்ஜின் இனிகோ முன்னிலை வகித்தார்.
     இந்த விழாவில், மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர், தீபாவளியை முன்னிட்டு புகையில்லாத, காற்று மாசுபடாமல் மற்றும் பாதுகாப்பான வகையில் தீபாவளியை கொண்டாடுவோம் என அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில், ஆசிரியர்கள், அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/18/விருதுநகர்-அருகே-பள்ளியில்-தீபாவளி-கொண்டாட்டம்-2792117.html
2792116 மதுரை விருதுநகர் சிவகாசி அரசு பள்ளிக்கு தூய்மை விருது DIN DIN Wednesday, October 18, 2017 01:36 AM +0530 சிவகாசியில் உள்ள அரசு பள்ளிக்கு தூய்மை விருது கிடைத்துள்ளது.
      இது குறித்து அப் பள்ளியின் தலைமை ஆசிரியை எம். ராஜலட்சுமி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
     சிவகாசி ரிசர்வ் லயனில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, மாவட்ட அளவிலான தூய்மை விருது கிடைத்துள்ளது. பள்ளியில் குடிநீர், சுத்தம் மற்றும் சுகாதாரம் உள்ளிட்டவை  சிறப்பாக பராமரிக்கப்பட்டு  வருவதைப் பாராட்டி, தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை, மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம்,  அண்மையில் 2016-2017 ஆம் ஆண்டுக்கான தூய்மை விருதினை வழங்கினார்.
    இந்த விருதுபெற உழைத்த பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் எனது பாராட்டினை தெரிவித்துக் கொள்கிறேன் என தலைமையாசிரியை அதில் தெரிவித்துள்ளார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/18/சிவகாசி-அரசு-பள்ளிக்கு-தூய்மை-விருது-2792116.html
2792115 மதுரை விருதுநகர் விருதுநகர் தெப்பக்குளத்தை தூர்வாரும் பணி: எலும்பு, மாந்திரீகப் பொருள்களால் அதிர்ச்சி DIN DIN Wednesday, October 18, 2017 01:36 AM +0530 விருதுநகரின் மையப் பகுதியில் மாரியம்மன் கோயிலுக்கு பாத்தியப்பட்ட 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான தெப்பக்குளத்தை தூர்வாரும் போது,  எலும்புக்கூடுகள் மற்றும் மாந்திரீகப் பொருள்கள் எடுக்கப்பட்டுள்ளன.
      விருதுநகரின் மையப் பகுதியில் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் உள்ளது. நூறாண்டுகளுக்கு மேற்பட்ட இந்த தெப்பம், சுமார் 330 அடி நீளம், 290 அடி அகலம், 40 அடி ஆழம் கொண்டது. மேலும், தெப்பத்தின் உள்ளே 3 கிணறுகளும் உள்ளன.
     சின்ன பேராலி, சத்திரரெட்டியபட்டி கண்மாயிலிருந்து நிரம்பி வழியும் மழை நீர் மற்றும் ரோசல்பட்டி ஊராட்சி வயல் பகுதியில் பெய்யும் மழை நீரானது, தானாக இந்த தெப்பத்தை வந்தடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மழை இல்லாத காலங்களிலும் கூட இத்தெப்பத்தில் தண்ணீர் வற்றுவதில்லை. இதனால், தெப்பத்தைச் சுற்றிலும் 2 கி.மீ. தொலைவுக்கு நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தே  காணப்படும்.
     15 ஆண்டுகளுக்கு முன் கடுமையான வறட்சி ஏற்பட்ட போது, இந்த தெப்பம் தூர்வாரப்பட்டது. அதையடுத்து, தற்போது தெப்பக்குளம் தண்ணீர் பச்சை நிறமாக பாசி படர்ந்து காணப்படுவதால், அவற்றை நவீன முறையில் சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
    இதில், தெப்பத்திலிருந்து மதுபாட்டில்கள், சைக்கிள் டயர்கள், பழைய ஆடைகள், மண் விளக்குகள், சுடுமணலால் செய்யப்பட்ட சிலைகள் உள்ளிட்ட பலவகையான பொருள்களுடன்,  மனித எலும்பு மற்றும் மாந்திரீகப் பொருள்கள் கிடைத்துள்ளன.
    இதைக் கண்ட தெப்பக்குளத்தை நிர்வகிக்கும் பலசரக்குக் கடை மகமையினர் அதிர்ச்சியடைந்தனர்.  
   இது குறித்து பஞ்சுக் கடை மகமைச் செயலர் சுதர்சன் கூறியது: 15 ஆண்டுகளுக்குப் பின்னர், தற்போது நவீன முறையில் தெப்பத்தை தூர்வாரி வருகிறோம். மேலும்,  ரூ.50 லட்சம் செலவில் புதிய குழாய்கள் பதிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. தெப்பத்தில் உள்ள நீரில் மழைக் காலங்களில் பாசி பிடிக்கிறது. எனவே, கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் உதவியுடன், தண்ணீரை குளிர்விக்க முடிவு செய்துள்ளோம்.
    எனவே, தெப்பத்தின் தண்ணீரை சுத்தப்படுத்த  நாணல் முறை பயன்படுத்தப்பட உள்ளது. மேலும், தெப்பக்குளத்தில் சிலர் மண் சிலைகள், ஆடைகள், எலும்பு, மாந்திரீகப் பொருள்களை கொட்டி வைத்துள்ளனர். நமது முன்னோர்கள் நமக்கு வழங்கிச் சென்ற நீர் நிலைகளை மாசுபடச்  செய்யும் செயலாகும். தெப்பக்குளத்தைப் பாதுகாக்க அனைத்து   தரப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/18/விருதுநகர்-தெப்பக்குளத்தை-தூர்வாரும்-பணி-எலும்பு-மாந்திரீகப்-பொருள்களால்-அதிர்ச்சி-2792115.html
2792114 மதுரை விருதுநகர் விருதுநகரில் கனகாம்பரம் கிலோ ரூ.2 ஆயிரம் DIN DIN Wednesday, October 18, 2017 01:36 AM +0530 தீபாவளித் திருநாளை முன்னிட்டு, விருதுநகரில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து, செவ்வாய்க்கிழமை கனகாம்பரம் கிலோ ரூ. 2 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது.
      விருதுநகர் தேசபந்து மைதானம், வெயிலுகந்தம்மன் கோயில் அருகே உள்ள பூ சந்தையில், மொத்தமாகவும், சில்லறையாகவும் பலவகையான பூக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இங்கு, மதுரை, தேனி, நெல்லை, நிலக்கோட்டை, திண்டுக்கல், அருப்புக்கோட்டை பகுதிகளிலிருந்து கொண்டு வரப்படும் பூக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
      தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அனைத்து வகையான பூக்களும் இரண்டு மடங்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டன.
    செவ்வாய்க்கிழமை பூக்கள் விலை விவரம் (கிலோவில்): மல்லிகை ரூ.1,600, பிச்சி ரூ.800, வெள்ளை பிச்சி ரூ.1200, முல்லை ரூ.1200, கேந்தி ரூ.400, செவ்வரளி ரூ.300, செவ்வந்தி ரூ.300, ரோஜா ரூ.350, கனகாம்பரம் ரூ. 2,000 என விற்கப்பட்டதால், பொதுமக்கள் குறைந்த அளவே பூக்களை வாங்கிச் சென்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/18/விருதுநகரில்-கனகாம்பரம்-கிலோ-ரூ2-ஆயிரம்-2792114.html
2792113 மதுரை விருதுநகர் பள்ளி, கல்லூரிகளில் டெங்கு விழிப்புணர்வு பிரசாரம் DIN DIN Wednesday, October 18, 2017 01:35 AM +0530 தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அதைத் தடுக்கும் வகையில் ராஜபாளையத்தில் பள்ளி, கல்லூரிகளில் டெங்கு விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொண்டு மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது.
      ராஜபாளையம் கேசா டி மிர் மெட்ரிக். பள்ளியில் திங்கள்கிழமை நடந்த டெங்கு விழிப்புணர்வுக் கூட்டத்துக்கு, அதன் தாளாளர் திருப்பதி செல்வன் தலைமை வகித்தார். முதுநிலை முதல்வர் அருணா முன்னிலை வகித்தார். மாணவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படாமல் இருப்பதற்குரிய வழிமுறைகள் குறித்து, முதல்வர் செல்வக்குமார் பேசினார்.
   அதைத் தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
   ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் செஞ்சிலுவைச் சங்கமும், நாட்டு நலப்பணித் திட்டமும் இணைந்து நடத்திய டெங்கு விழிப்புணர்வு கூட்டத்துக்கு, கல்லூரி ஆட்சிமன்றக் குழுத் தலைவர் சந்திரசேகர் ராஜா தலைமை வகித்தார். டாக்டர் கோதண்டராமன், முதல்வர் வெங்கட்ராமன் ஆகியோர், ராஜபாளையத்தை  டெங்கு இல்லாத பகுதியாக மாற்றுவது குறித்து பேசினர்.
    செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் குமார் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் அழகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/18/பள்ளி-கல்லூரிகளில்-டெங்கு-விழிப்புணர்வு-பிரசாரம்-2792113.html
2792112 மதுரை விருதுநகர் விருதுநகர் நகராட்சிக்கு ரூ.6.50 கோடி நிலுவை: மேம்பாட்டுப் பணிகள் முடக்கம் DIN DIN Wednesday, October 18, 2017 01:35 AM +0530 விருதுநகர் நகராட்சி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பல்வேறு திட்டப் பணிகளுக்காக தமிழக அரசு சார்பில் ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதில், ரூ. 6.50 கோடி நிதி இதுவரை நகராட்சிக்கு வழங்கப்படாததால், கட்டுமானப் பணிகள் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
     விருதுநகர் நகராட்சி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கடந்த 2014-15 இல் பல்வேறு திட்டப் பணிகளுக்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், நகராட்சி அலுவலகத்தில் புதிய கட்டடம் அமைக்க ரூ. 2 கோடி, சாலைகள் சீரமைக்க ரூ.14.70 கோடி, ஆட்டுச் சந்தை பகுதியில் புதிய கட்டடம் கட்ட ரூ.1 கோடி, வி.என்.பி.ஆர். பூங்கா சீரமைக்க ரூ.1 கோடி மற்றும் 3 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்ட ரூ. 5 கோடி,  நினைவுத் தூண் அமைக்க ரூ. 70 லட்சம், சுகாதார வளாகங்கள் அமைக்க ரூ. 60 லட்சம் என மொத்தம் ரூ.25 கோடியில் பணிகள் மேற்கொள்ள ஒப்பந்தம் விடப்பட்டது.
      இதில், சாலை மற்றும் சுகாதார வளாகம் ஆகிய பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளன. மேலும், 2 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டுதல், நினைவுத் தூண் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. ஆனால், நகராட்சி அலுவலகத்தில் புதிய கட்டடம் கட்டும் பணி இதுவரை தொடங்கப்பட வில்லை.
    இங்கு, புதிய கட்டடம் கட்டுவதற்காக ஏற்கெனவே இருந்த பழைய கட்டடத்தை அரைகுறையாக இடித்துவிட்டனர். இதனால், அக்கட்டடம்  பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.
      மேலும், பூங்கா, நினைவுத் தூண், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, நகராட்சியில் புதிய கட்டடம் ஆகியவற்றுக்கு ரூ. 6.50 கோடி வரை இன்னும் வழங்கப்படவில்லை. இதனால், ஏற்கெனவே பணிபுரிந்த பணிகளுக்கு நிதி விடுவிக்கப்படாமல் உள்ளது.
     இந்நிலையில், நிதி இல்லாமல் பணிகள் செய்ய முடியவில்லை என, ஒப்பந்ததாரர்கள் பணியை தாற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
  எனவே, அனைத்துப் பணிகளும் விரைந்து முடிக்க, விருதுநகர் நகராட்சிக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை தமிழக அரசு உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/18/விருதுநகர்-நகராட்சிக்கு-ரூ650-கோடி-நிலுவை-மேம்பாட்டுப்-பணிகள்-முடக்கம்-2792112.html
2791508 மதுரை விருதுநகர் மாநில அறிவியல் கருத்தரங்கில் ராஜபாளையம் பள்ளிக்கு விருது DIN DIN Tuesday, October 17, 2017 02:05 AM +0530 ராஜபாளையம் கேசா டி மிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாநில அளவில்  நடைபெற்ற அறிவியல் கருத்தரங்கில் சிறந்த பள்ளிக்கான கலாம் விருதினைப் பெற்றது.
 ஸ்ரீவில்லிப்புத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகம் மற்றும் எல்லையில்லா பொறியாளர் சங்கம் இணைந்து  நடத்திய கருத்தரங்கில் 32 க்கும் மேலான தலைப்புகளில் அறிவியல் தொடர்பான திட்டங்கள்  சமர்ப்பிக்கப்பட்டன. மாணவர்களின் அறிவியல் ஆர்வம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் ஈடுபாடு இவற்றை அதிகரிக்கும் வண்ணம் இக்கருத்தரங்கம் நடத்தப்பட்டது.இதில் ராஜபாளையம் கேசா டி மிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி  கலந்து கொண்டு சிறந்த பள்ளிக்கான கலாம் விருதினைப் பெற்றது. மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களை திங்கள்கிழமை பள்ளித்தாளாளர்  திருப்பதி செல்வன் மற்றும் முதுநிலை முதல்வர்அருணா திருப்பதி செல்வன் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர். பள்ளி முதல்வர்செல்வகுமார் மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்த குழு ஆசிரியர்களைப் பாராட்டிப் பேசினார்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/17/மாநில-அறிவியல்-கருத்தரங்கில்-ராஜபாளையம்-பள்ளிக்கு-விருது-2791508.html
2791507 மதுரை விருதுநகர் பள்ளியில் தீபாவளி  கொண்டாட்டம் DIN DIN Tuesday, October 17, 2017 02:05 AM +0530 ராஜபாளையம் சத்யா வித்யாலயா பள்ளியில் தீபாவளித் திருநாள் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு பள்ளித் தாளாளர் குமரேசன் தலைமை வகித்தார். பள்ளி முதன்மை நிர்வாக அதிகாரி அரவிந்த், பள்ளி மேனேஜிங் டிரஸ்டி சித்ரா குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை அனிதா பங்கேற்று விழாவை தொடக்கி வைத்தார். பள்ளித் தலைமை ஆசிரியை கலாதேவி,  உதவி தலைமை ஆசிரியை ஷர்மிளா முன்னிலையில்  மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  மாணவி  நித்யஸ்ரீ  வரவேற்றார். இதில் தீபாவளித்தினத்தன்று மாணவர்கள் பட்டாசு வெடிக்கும் போது பாதுகாப்பாக வெடிக்குமாறு அறிவுரை வழங்கப்பட்டது. மாணவர் சந்தோஷ்குமார் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பள்ளி நிர்வாக அதிகாரி அமுதா தலைமையில் பள்ளி ஆசிரியைகள் செய்திருந்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/17/பள்ளியில்-தீபாவளி--கொண்டாட்டம்-2791507.html
2791506 மதுரை விருதுநகர் சிவகாசியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சிறப்பு மருத்துவ முகாம்: அமைச்சர் தொடக்கி வைத்தார் DIN DIN Tuesday, October 17, 2017 02:04 AM +0530 சிவகாசியில் வரும் 23 ஆம் தேதி எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா நடைபெறுவதையொட்டி , ஞாயிற்றுக்கிழமை சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றது.

 இங்குள்ள முஸ்லிம்  மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் தலைமை வகித்தார். பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குத்து விளக்கேற்றி முகாமினைத் தொடக்கி வைத்தார்.
முகாமில் ரத்த அழுத்தம் பரிசோதனை,  ரத்தத்தில் சர்க்கரை அளவு , இ.சி.ஜி., இருதய பரிசோதனை, எலும்பு , காது,மூக்கு, தொண்டை, கண் பரிசோதனை செய்யப்பட்டது.  
இதில் மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டவர்களுக்கு மருந்து மாத்திரை வழங்கப்பட்டது. சிகிச்சை தேவைப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.   
மேலும் நிலவேம்புகுடிநீர் வழங்கப்பட்டது.
இதில் விருதுநகர் மக்களவைத்
தொகுதி உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் மு.சந்திரபிரபா, சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர்(மருத்துவம்) மனோகரன், துணை இயக்குநர் (சுகாதாரம்) பழனிச்சாமி ,சித்தா மருத்துவர் மணிமேகலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/17/சிவகாசியில்-எம்ஜிஆர்-நூற்றாண்டு-விழா-சிறப்பு-மருத்துவ-முகாம்-அமைச்சர்-தொடக்கி-வைத்தார்-2791506.html
2791505 மதுரை விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் பள்ளியில் தீபாவளி DIN DIN Tuesday, October 17, 2017 02:04 AM +0530 ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பிள்ளையார்குளம், சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பான தீபாவளி கொண்டாட்டம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் செ.குமரேசன் தலைமை வகித்தார்.
நிர்வாக அறங்காவலர்கள் டாக்டர் எஸ்.சித்ரா, கு.அரவிந்த், ஆலோசகர் எஸ்.பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் எஸ்.சத்தியமூர்த்தி வரவேற்றார்.  முதல்வர் பி.முருகதாசன், பாதுகாப்பான தீபாவளி குறித்தும், பிளாஸ்டிக் பொருள்களை தவிர்ப்பது குறித்தும், டெங்கு காய்ச்சல் குறித்தும் கருத்துரையாற்றினார். நிகழ்ச்சியில் மாணவ மாணவியர் பட்டாசு வெடித்து பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாடினர்.
ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் விழாவில் கலந்து கொண்டனர். நிர்வாக அதிகாரி பி.அமுதா விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/17/ஸ்ரீவில்லிபுத்தூர்-பள்ளியில்-தீபாவளி-2791505.html
2791504 மதுரை விருதுநகர் ஷீரடி சாய்பாபா கோயிலில் மண்டல பூஜை DIN DIN Tuesday, October 17, 2017 02:04 AM +0530 விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் அமைந்துள்ள ஷீரடி சாய்பாபா கோயி மண்டல பூஜை மற்றும் 108 குத்து
விளக்கு பூஜை நடைபெற்றது.  
இவ்விழாவில்  பிற்பகலில் சாய்பாபா பக்தைகளின் கோலாட்டம், கும்மியாட்டம் மற்றும் சிறுவர்,சிறுமிகளின் ஆடல்,பாடல் கலை
நிகழ்ச்சிகளும்  நடைபெற்றன. சென்னையைச் சேர்ந்த கோணிச்சித்தர் தலைமையில் கோயிலின் அறக்கட்டளைத் தலைவர் வி.சுந்தரமூர்த்தி பள்ளி,கல்லூரி மாணவ,மாணவியர்க்கான  சிறப்புப் பரிசுப்பொருள்களை வழங்கினார்.  
அதனைத்தொடர்ந்து  பந்தல்குடி,சேதுராஜபுரம்,பெரியநாயகிபுரம், வாழ்வாங்கி மற்றும் ,அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சாய்பாபா பக்தைகள் கலந்து கொண்ட சிறப்பு 108 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. 5000க்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து ஷீரடி சாய்பாபாவை வழிபட்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/17/ஷீரடி-சாய்பாபா-கோயிலில்-மண்டல-பூஜை-2791504.html
2791503 மதுரை விருதுநகர் அருப்புக்கோட்டை நகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை: திமுக எம்எல்ஏ ஆய்வு DIN DIN Tuesday, October 17, 2017 02:03 AM +0530 அருப்புக்கோட்டை நகராட்சிப் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் பற்றி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் திங்கள்கிழமை ஆய்வு  மேற்கொண்டார்.
அருப்புக்கோட்டை நகராட்சிக்கு உள்பட்ட 36 வார்டு பகுதிகளிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த சிறப்பு டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வுக் கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சட்டப்பேரவை உறுப்பினர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். நகர் நல அலுவலர் இந்திரா, நகராட்சிப் பொறியாளர் மற்றும் ஆணையாளர் (பொறுப்பு)முத்து, சுகாதார ஆய்வாளர்கள், சித்த மருத்துவர் திலகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
   நகராட்சியில் நடைபெறும் பல்வேறு வித டெங்கு ஒழிப்புப் பணிகள் மற்றும் சிகிச்சைகள்  பற்றி நேரில் கேட்டறிந்த எம்.எல்.ஏ. பேசியதாவது:
 திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி அருப்புக்கோட்டை  நகராட்சியில்  ஆய்வு மேற்கொள்கிறேன். நகரின் அனைத்து பகுதிகளிலும் இரண்டு நாள்களுக்குமேல் காய்ச்சல் உள்ளவர்களை அடையாளம் கண்டு நில வேம்புக்குடிநீர் வழங்குதல்,டெங்கு பரிசோதனை செய்தல் மற்றும் உரிய சிகிச்சைகளை வழங்க மருத்துவ அலுவலர்கள்,  சுகாதாரப் பணியாளர்கள்,
ஆய்வாளர்கள்  அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தீபாவளியை அடுத்துள்ள வாரத்தில் நகரின் முக்கிய மழைநீர் ஓடைகளான பிறமடை, குழந்தைவேல்புரம், பட்டாபி ராமர் கோவில் பின்புறம், தெற்குத்தெரு,காந்தி திடல்,பெரிய புளியம்பட்டி கம்மவார் பகுதி ஆகிய அனைத்து முக்கிய மழைநீர் ஓடைகளிலும், மேலும் கழிவுநீர்க் கால்வாய்களிலும் குப்பைகள் அடைப்பை  நீக்கி தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள சுகாதாரப் பணியாளர்களை அறிவுறுத்தியுள்ளேன் என அவர் கூறினார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/17/அருப்புக்கோட்டை-நகராட்சியில்-டெங்கு-காய்ச்சல்-தடுப்பு-நடவடிக்கை-திமுக-எம்எல்ஏ-ஆய்வு-2791503.html
2791502 மதுரை விருதுநகர் விபத்தில்லா தீபாவளி குறித்து மாணவர்கள் ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி DIN DIN Tuesday, October 17, 2017 02:03 AM +0530 சாத்தூரில், விபத்தில்லா தீபாவளி குறித்தும், டெங்கு காய்ச்சலை தடுப்பது குறித்தும் பள்ளி மாணவர்கள் ஸ்கேட்டிங் மூலம் ஞாயிற்றுக்கிழமை விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
 தனியார் அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த  பேரணியை,சாத்தூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் நாராயணன் தொடக்கி வைத்தார். சாத்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தொடங்கிய இந்த பேரணி, மதுரை பேருந்து நிறுத்தம், பேருந்து நிலையம், பிரதான சாலை வழியாக முக்குராந்தல் வரை சென்றது.
பேரணியின் போது ஸ்கேட்டிங் செய்தபடி மாணவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள். மேலும் இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் சாத்தூர் காவல்துறை சார்பில் பரிசுகளும் வழங்கப்பட்டன.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/17/விபத்தில்லா-தீபாவளி-குறித்து-மாணவர்கள்-ஸ்கேட்டிங்-விழிப்புணர்வு-பேரணி-2791502.html
2791501 மதுரை விருதுநகர் சாத்தூரில் காரச்சேவு, சீனி மிட்டாய் விற்பனை அமோகம் DIN DIN Tuesday, October 17, 2017 02:02 AM +0530 தீபாவளியை  முன்னிட்டு சாத்தூரில் காரச்சேவு விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.
      சாத்தூர் காரச்சேவு பலகார பிரியர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. இதற்கு காரணம் சாத்தூர் பகுதியில் ஓடும் வைப்பாறு ஆற்று நீர் மற்றும் சாத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விளையும் மிளகாய் வற்றல் ஆகியவை தான்.  காரச்சேவு வகைகளில் நயம் சேவு, நடப்பு சேவு, காரச்சேவு, சீரக சேவு, மிளகு சேவு, பட்டர் சேவு, சர்கரை சேவு, குச்சி சேவு, கருப்பட்டி சேவு என பல வகைகள் உள்ளன.  நடப்புச் சேவு சிறு குழந்தைகளுக்கு பிடிக்கும் விதமாகவும், காரச்சேவு எனப்படும் காரம் ஓரளவு கொண்ட சேவு ரகம் பெரியவர்கள் விரும்பி உண்ணும் வகையிலும் தயாரிக்கபடுகிறது. சற்று தடிமனுடன் கடுமையான காரத் தன்மையுடன் தயாரிக்கப்படும், காரச்சேவு வகைகள் சாப்பாட்டுடன் சேர்த்து உண்ணுவதற்கானதாகும்.  சாத்தூர் சேவு வகைகள் தனித்தன்மை வாய்ந்ததாக கருதப்படுவதால் தமிழக அளவில் சாத்தூருக்கு வந்து வாங்கி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
 இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு சாத்தூரில் சேவு தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் சேவு வாங்க கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. தலை தீபாவளி கொண்டாடும் திருமண தம்பதிகளுக்கும் சீர் பலகாரமாக இனிப்புகளுடன், சாத்தூர் காரச் சேவுகளையும் வாங்கி செல்கின்றனர். சாத்தூர் சேவு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. மேலும் இனிப்பு வகைகளில் பழைமை மாறாத கருப்பட்டி மற்றும் சீனி மிட்டாய்களும் அதிகமாக விற்பனை செய்யபடுகின்றன. சென்ற ஆண்டை விட இந்த தீபாவளிக்கு சேவு தயாரிப்பு அதிகரித்துள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.  
 இதுகுறித்து சாத்தூர் சேவு கடை உரிமையாளர்கள் கூறியது: சாத்தூரில் நூறு ஆண்டுகளாக காரச்சேவு தயாரிப்பில் துளி அளவுகூட ருசி மாறாமல் கண்ணும் கருத்துமாக தயாரிக்கிறோம். இதனால் சாத்தூர் காரச்சேவுக்கு மவுசு அதிகம். மற்ற இடங்களில் எல்லாம் சேவு,மிக்சர்,பக்கேடா,காரம் போன்ற எல்லா வகைகளும் ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயில் ஒரு வாரத்திற்க்கு பலகாரங்கள் செய்வார்கள். ஆனால் சாத்தூரில் சேவு மற்ற வகைகளுக்கு ஒரு தடவை பயன்படுத்திய எண்ணெய்யை மறுமுறை பயன்படுத்த மாட்டோம். அதனால் சேவு கெட்டு போகாமலும், மொறு மொறுப்பு தன்மை குறையாமலும் இருக்கும். மேலும் சாத்தூர் பகுதியில் விளையும் மிளகாய் வத்தலுக்கு காரம் அதிகம் என்பதாலும், எத்தனை பாஸ்புட் கடைகள் வந்தாலும் வெளியூரிலிருந்து வந்து சாத்தூரில் சேவு வாங்கி செல்வது அதிகம். மேலும் சென்னை,புதுதில்லி, பெங்களூரில் போன்ற பெரும் நகரங்களில் வசிக்கும் முக்கிய பிரமுகர்களுக்கும் இங்கிருந்து காரச்சேவு மற்றும் சீனி மிட்டாய் அனுப்பி வைக்கபடுகிறது என்று கூறினர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/17/சாத்தூரில்-காரச்சேவு-சீனி-மிட்டாய்-விற்பனை-அமோகம்-2791501.html
2791500 மதுரை விருதுநகர் "கிப்ட் பாக்ஸ்'  தயாரிப்பு: சிவகாசியில் 41 பட்டாசு கடைகளின் உரிமம் ரத்து DIN DIN Tuesday, October 17, 2017 02:02 AM +0530 விருதுநகர் மாவட்டத்தில் பட் டாசு கடையில் "கிப்ட் பட்டாசு பாக்ஸ்' தயாரித்த 41 பட்டாசு கடைகளின் உரிமம் தாற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
   சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை துணை முதன்மை வெடி பொருள் கட்டுப்பாட்டு அதிகாரி கி.சுந்தரேசன் திங்கள்கிழமை கூறியதாவது:
    விருதுநகர் மாவட்டத்தில் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையில் உரிமம் பெற்றுள்ள பட்டாசு கடைகள் 480 உள்ளன. கடந்த மாதம் வெடிபொருள்கட்டுப்பாட்டுத்துறை சார்பில் பட்டாசு வியாபாரிகளுக்கு பட்டாசு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. அதில் கடைகளில் வைத்து கிப்ட் பாக்ஸ் தயாரிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டது. மேலும் பட்டாசு கடை உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு கையேடு, வெளியிடப்பட்டு, அந்த கையேடு அனைத்து பட்டாசு கடைஉரிமையாளர்களிடம் வழங்கப்பட்டது. அந்த கையேட்டிலும் கடைகளில் கிப்ட் பாக்ஸ் தயாரிக்ககூடாது. பட்டாசு தயாரிக்கும் ஆலையில் பேக்கிங் செக்சனில் மட்டுமே பட்டாசு கிப்ட் பாக்ஸ் தயாரிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
 இந்நிலையில் வெடிபொருள்கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் கடந்த சிலநாள்களாக , பட்டாசு கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.இந்த ஆய்வின் போது, கடைகளில் "கிப்ட் பாக்ஸ்' தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. இப்படி கடைகளில் "கிப்ட் பாக்ஸ்' தயாரித்த 41 பட்டாசு கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்ப்பட்டுள்ளது. கடைகளில் வைக்கப்பட்டிருந்த சில பட்டாசுகளில் , பட்டாசு தயாரித்த நிறுவனத்தின் பெயர், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, அந்த பட்டாசில் உள்ள மூலப்பொருள்கள் உள்ளிட்ட குறியீடுகள் இல்லாதது அதிகாரிகளால் கண்டறியப்பட்டது. இந்த குறியிடூ இல்லாத பட்டாசு வைத்திருந்த 69 பட்டாசு கடைகளுக்கு விளக்கம் கேட்டு நேட்டீஸ் அனுப்பபட்டுள்ளது என்றார் அவர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/17/கிப்ட்-பாக்ஸ்--தயாரிப்பு-சிவகாசியில்-41-பட்டாசு-கடைகளின்-உரிமம்-ரத்து-2791500.html
2791499 மதுரை விருதுநகர் "மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினால் வாழ்வில் வெற்றி பெறலாம்' DIN DIN Tuesday, October 17, 2017 02:02 AM +0530 மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினால் வாழ்வில் வெற்றி பெறலாம் என சென்னை மனோதத்துவ நிபுணர் ரகுநாத் கூறினார்.
சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும், கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை ஆளுமைத்திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தாளாளர் ஆர்.சோலைச்சாமி தலைமை வகித்தார்.
இதில் மனோத்துவ நிபுணர் ரகுநாத் பேசியதாவது: கல்லூரி படிப்பு என்பது வாழ்வின் திருப்புமுனையாகும். எனவே கல்லூரி படிப்பில் முழு கவனம் செலுத்தி படித்தால் வாழ்வில் வெற்றி பெறலாம்.
தற்போது நம்முடைய கவனத்தை திசைதிருப்ப தொலைக்காட்சி மற்றும் இணையதளம் உள்ளிட்டபல சாதனங்கள் உள்ளன. அவற்றை அளவோடு பயன்படுத்த வேண்டும். அதிலேயே மூழ்கி விடக்கூடாது.
எனெனில் படிப்பு மிகவும் முக்கியமானதாகும். வாசித்துவிட்டு தேர்வு எழுதுவது மட்டுமல்ல படிப்பு. கல்வி என்பது நம்மை பட்டைதீட்டும் கருவியாகும். இதன்மூலம் நாம் ஜொலிக்க வேண்டும்.  
உயர் கல்வியை பயன்படுத்து நீங்கள் வாழ்வில் வெற்றி பெற வேண்டும். பெற்றோர்கள்,  ஆசிரியர்கள் ஆகியோருக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும்.
 சமூகத்தில் நீங்களும் ஒரு பிரதிநிதி. எனவே நீங்கள் சமூகத்திற்கும் உங்களால் முடிந்த அளவு சேவை செய்ய வேண்டும் என்றார்.
 முன்னதாக முதல்வர் கே.சுப்பிரமணியன் வரவேற்றார். டீன் பி.மாரிச்சாமி நன்றி கூறினார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/17/மாணவர்கள்-படிப்பில்-மட்டுமே-கவனம்-செலுத்தினால்-வாழ்வில்-வெற்றி-பெறலாம்-2791499.html
2791498 மதுரை விருதுநகர் மயானம் அமைத்து தரக் கோரி கிராமத்தினர் ஆட்சியரிடம் மனு DIN DIN Tuesday, October 17, 2017 02:02 AM +0530 எரிச்சநத்தம் அருகே கொத்தநேரி கிராமத்தில் புதிதாக மயானம் அமைத்துத் தர வேண்டும் என மாவட்ட  ஆட்சியர் அ. சிவஞானத்திடம்,  அருந்ததியர் சமுதாயத்தினர் மனு அளித்தனர்.
 அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: கொத்தநேரி கிராமத்தில் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த 20 குடும்பங்கள் வசித்து வருகிறோம். இங்குள்ள மயானத்தில் மற்றொரு சமுதாயத்தினரும்,  நாங்களும் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்து வந்தோம். இந்நிலையில், ஒரு சமுதாயத்தை சேர்ந்த சிலர் அவர்கள் தெரு வழியாக சடலங்களை கொண்டு வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால், பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், ஏற்கெனவே உள்ள  மயானத்தில் சாலை உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால்,  சடலங்களை விளைநிலங்கள் வழியாக கொண்டு செல்லும் நிலையுள்ளது. எனவே,  எங்களது தெருவுக்கு கிழக்கே வெள்ளூர்- ஆமத்தூர் சாலையில் உள்ள இடத்தில் எங்களது சமுதாயத்தைச்  சேர்ந்தவர்களை அடக்கம் செய்ய புதிய மயானம் அமைத்து தர வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/17/மயானம்-அமைத்து-தரக்-கோரி-கிராமத்தினர்-ஆட்சியரிடம்-மனு-2791498.html
2791497 மதுரை விருதுநகர் சென்னை - செங்கோட்டை சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை DIN DIN Tuesday, October 17, 2017 02:01 AM +0530 சென்னையில் இருந்து செங்கோட்டை க்கு தீபாவளிக்கு முன்தினமான செவ்வாய்க்கிழமை முன்பதிவு இல்லாத பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க தென்னக ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 தீபாவளி பண்டிகையையொட்டி தென் மாவட்டங்களுக்கு வரும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு முடிந்து விட்டது.
இதனால் சென்னையில் உள்ள தென் மாவட்டத்தினர் தீபாவளி பண்டிகைக்கு வருவதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர். ஆம்னி பேருந்துகளிலும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு தென்னக ரயில்வே நிர்வாகம் தீபாவளிக்கு முன்தினம் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு முன்பதிவு இல்லாத பகல் நேர சிறப்பு ரெயில்களை இயக்கியது.
இதே போன்று தீபாவளிக்கு மறுநாள் தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பகல் நேர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. அதே போல்  இந்த ஆண்டும் தீபாவளிக்கு முன்தினம் செவ்வாய்க்கிழமை சென்னையில் இருந்து செங்கோட்டைக்கும், தீபாவளிக்கு மறுநாள் வியாழக்கிழமை செங்கோட்டையில் இருந்து சென்னைக்கும் பகல் நேர முன்பதிவு இல்லாத விரைவு ரெயில்களை இயக்க
தென்னக ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து ராஜபாளையம் தென்காசி வழி நெல்லைக்கு கூடுதலாக சிறப்பு ரெயில் இயக்க வேண்டியதும் அவசியம் ஆகும். இதனால் விருதுநகர் மற்றும் நெல்லை மாவட்ட பயணிகள் பெரிதும் பலனடைவர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/17/சென்னை---செங்கோட்டை-சிறப்பு-ரயில்-இயக்க-கோரிக்கை-2791497.html
2791496 மதுரை விருதுநகர் மம்சாபுரத்தில் புதிய மதுக்கடை திறக்க  எதிர்ப்பு DIN DIN Tuesday, October 17, 2017 02:01 AM +0530 மம்சாபுரத்தில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலையில் விதிகளை மீறி மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள், மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானத்திடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
 அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:  ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் மம்சாபுரத்தில் 2 மதுக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதனிடையே மம்சாபுரம் மாநில நெடுஞ்சாலையில் இருந்த மதுக்கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தியதால் அக்கடை அகற்றப்பட்டது. இந்நிலையில், நீதிமன்ற தீர்ப்பையும் மீறி, நெடுஞ்சாலைத் துறை சாலையில் மீண்டும மதுக்கடை திறக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். இதனால், இப்பகுதியில் வசிக்கும் பெண்கள், குழந்தைகள் மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவார்கள். மேலும் மது அருந்துபவர்கள், பாட்டில் உள்ளிட்ட பொருள்களை அருகில் உள்ள விவசாய நிலங்களில் வீசிச் சென்றால் வயல்களில் பணி செய்ய முடியாத நிலை ஏற்படுவதுடன்,  போக்குவரத்து நெருக்கடியும் குற்றச்சம்பவங்களும் நடைபெற வாய்ப்புள்ளது.
 எனவே, அந்த முக்கிய சாலையில் மதுக்கடை திறக்க  மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கக் கூடாது என அதில் குறிப்பிட்டுள்ளனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/17/மம்சாபுரத்தில்-புதிய-மதுக்கடை-திறக்க--எதிர்ப்பு-2791496.html
2791495 மதுரை விருதுநகர் பெட்டிக்கடைகளில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் வைத்திருந்த 5 பேர் கைது DIN DIN Tuesday, October 17, 2017 02:01 AM +0530 சிவகாசிப் பகுதியில் சட்ட விரோதமாக பெட்டிக்கடைகளில் மதுபாட்டில்கள் வைத்திருந்த 5 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
 சிவகாசிப் பகுதியில் பெட்டிக்கடைகளில் மது விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் போலீஸார் சோதனை நடத்தினர்.
அப்போது சித்துராஜபுரத்தில் ராமர்(52),  கவிதா நகரில் பொன்ராஜ் (37),  ஆத்தூர் சுப்பிரமணியபுரத்தில் கருப்பசாமி (56), பாரதி நகரில் செல்வக்குமார் (27),  கூடமுடையார் கோயில் பகுதியில் தெய்வம் (45) ஆகியோர் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பெட்டிக்கடைகளில் வைத்திருப்பது தெரியவந்தது.
 இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து அவர்களை கைது செய்து அவரிகளிடமிருந்து 46 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/17/பெட்டிக்கடைகளில்-சட்ட-விரோதமாக-மதுபாட்டில்கள்-வைத்திருந்த-5-பேர்-கைது-2791495.html
2791494 மதுரை விருதுநகர் விருதுநகரில் நிதி பற்றாக்குறையால் உள்விளையாட்டு அரங்க கட்டுமான பணி முடக்கம் DIN DIN Tuesday, October 17, 2017 02:00 AM +0530 விருதுநகர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ரூ.1.90 கோடி மதிப்பில் கட்டப்பட்ட  உள் விளையாட்டு அரங்கம், தரைத் தளத்தில் மரப்பலகை அமைக்க மேலும்  ரூ. 40 லட்சம் தேவைப்படுவதால்,  திறக்கப்படாமல் முடங்கிக்கிடக்கிறது.
       விருதுநகர் மாவட்ட விளையாட்டு மைதானம் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இதில்,  ஹாக்கி, கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து போன்றவற்றிற்கான மைதானங்கள் உள்ளன. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக நீச்சல்குளம் கட்டப்பட்டு, குறைந்த கட்டணத்தில் ஆண், பெண் இருவருக்கும் தனித்தனியான நேரங்களில் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, கால்பந்து மைதானம் மற்றும் அதை சுற்றிய பகுதிகளில் முள்புதர்கள் அடர்ந்து காணப்படுவதால், விளையாட்டு வீரர்கள் அச்சத்துடனே மைதானத்தில் விளையாடி வருகின்றனர். இந்நிலையில், விளையாட்டு வீரர், வீராங்கணைகளின் நீண்ட நாள் கோரிக்கையைத் தொடர்ந்து மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்க தமிழக அரசு ரூ.1.90 கோடி நிதி ஒதுக்கியது. இதையடுத்து, கடந்த ஓராண்டாக நடைபெற்ற கட்டுமான பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. ஆனால், உள் விளையாட்டு அரங்கில் தரைதளம் மரப்பலகையால் அமைக்க வேண்டும். ஆனால், அதற்கு ரூ. 40 லட்சம் தேவைப்படுகிறது. இந்த நிதியை தனியார் நிறுவனஙகளில் பெறுவதற்காக விளையாட்டு அலுவலர்கள் முயற்சித்தும் எந்த பயனும் இல்லை என கூறப்படுகிறது. மேலும், சட்டப்பேரவை உறுப்பினர், மக்களவை உறுப்பினரிடமும் நிதி கிடைக்கவில்லையாம்.  இதனால், உள் விளையாட்டு அரங்க கட்டுமான பணிகள் நிறைவடைந்தும், தரைதளத்தில் மரப்பலகை அமைக்கப்படாத காரணத்தால் விளையாட்டு வீரர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உரிய நிதி வழங்கி உள் விளையாட்டு அரங்கை பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/17/விருதுநகரில்-நிதி-பற்றாக்குறையால்-உள்விளையாட்டு-அரங்க-கட்டுமான-பணி-முடக்கம்-2791494.html
2790924 மதுரை விருதுநகர் தீபாவளி சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை DIN DIN Monday, October 16, 2017 05:22 AM +0530 சென்னையில் இருந்து செங்கோட்டை க்கு தீபாவளிக்கு முன்தினமான செவ்வாய்க்கிழமை முன்பதிவு இல்லாத பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க தென்னக ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 தீபாவளி பண்டிகையையொட்டி தென் மாவட்டங்களுக்கு வரும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு முடிந்து விட்டது. இதனால் சென்னையில் உள்ள தென் மாவட்டத்தினர் தீபாவளி பண்டிகைக்கு வருவதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர். ஆம்னி பேருந்துகளிலும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு தென்னக ரயில்வே நிர்வாகம் தீபாவளிக்கு முன்தினம் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு முன்பதிவு இல்லாத பகல் நேர சிறப்பு ரெயில்களை இயக்கியது. இதே போன்று தீபாவளிக்கு மறுநாள் தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பகல் நேர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. அதே போல்  இந்த ஆண்டும் தீபாவளிக்கு முன்தினம் செவ்வாய்க்கிழமை சென்னையில் இருந்து செங்கோட்டைக்கும், தீபாவளிக்கு மறுநாள் வியாழக்கிழமை செங்கோட்டை யில் இருந்து சென்னைக்கும் பகல் நேர முன்பதிவு இல்லாத விரைவு ரெயில்களை இயக்க தென்னக ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து ராஜபாளையம் தென்காசி வழி நெல்லைக்கு கூடுதலாக சிறப்பு ரெயில் இயக்க வேண்டியதும் அவசியம் ஆகும். இதனால் விருதுநகர் மற்றும் நெல்லை மாவட்ட பயணிகள் பெரிதும் பலனடைவர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/16/தீபாவளி-சிறப்பு-ரயில்-இயக்க-கோரிக்கை-2790924.html
2790923 மதுரை விருதுநகர் மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினால் வாழ்வில் வெற்றி பெறலாம் DIN DIN Monday, October 16, 2017 05:22 AM +0530 மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினால் வாழ்வில் வெற்றி பெறலாம் என சென்னை மனோதத்துவ நிபுணர் ரகுநாத் கூறினார்.
சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும், கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை ஆளுமைத்திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தாளாளர் ஆர்.சோலைச்சாமி தலைமை வகித்தார்.
இதில் மனோத்துவ நிபுணர் ரகுநாத் பேசியதாவது: கல்லூரி படிப்பு என்பது வாழ்வின் திருப்புமுனையாகும். எனவே கல்லூரி படிப்பில் முழு கவனம் செலுத்தி படித்தால் வாழ்வில் வெற்றி பெறலாம்.
தற்போது நம்முடைய கவனத்தை திசைதிருப்ப தொலைக்காட்சி மற்றும் இணையதளம் உள்ளிட்டபல சாதனங்கள் உள்ளன. அவற்றை அளவோடு பயன்படுத்த வேண்டும். அதிலேயே மூழ்கி விடக்கூடாது.
எனெனில் படிப்பு மிகவும் முக்கியமானதாகும். வாசித்துவிட்டு தேர்வு எழுதுவது மட்டுமல்ல படிப்பு. கல்வி என்பது நம்மை பட்டைதீட்டும் கருவியாகும். இதன்மூலம் நாம் ஜொலிக்க வேண்டும்.  
உயர் கல்வியை பயன்படுத்து நீங்கள் வாழ்வில் வெற்றி பெற வேண்டும். பெற்றோர்கள்,  ஆசிரியர்கள் ஆகியோருக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும்.
 சமூகத்தில் நீங்களும் ஒரு பிரதிநிதி. எனவே நீங்கள் சமூகத்திற்கும் உங்களால் முடிந்த அளவு சேவை செய்ய வேண்டும் என்றார்.
 முன்னதாக முதல்வர் கே.சுப்பிரமணியன் வரவேற்றார். டீன் பி.மாரிச்சாமி நன்றி கூறினார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/16/மாணவர்கள்-படிப்பில்-மட்டுமே-கவனம்-செலுத்தினால்-வாழ்வில்-வெற்றி-பெறலாம்-2790923.html
2790922 மதுரை விருதுநகர் மில் தொழிலாளர்கள் சிறப்பு  பேரவைக்கூட்டம் DIN DIN Monday, October 16, 2017 05:22 AM +0530 ராஜபாளையம் மில் தொழிலாளர் சங்க சிறப்பு பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 இக்கூட்டத்துக்கு விருதுநகர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. தலைவர் பி.எம்.ராமசாமி தலைமை வகித்து மில் தொழிலாளர்கள் நலன் குறித்து  விளக்கிப் பேசினார்.
முன்னாள் எம்.பி பொ.லிங்கம் முன்னாள் எம்.எல்.ஏ தி.ராமசாமி முன்னிலை வகித்துப் பேசினர்.
கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பஞ்சாலை தொழிலாளர்களுக்கு மாதம் ரூ18 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட வேண்டும்.
பணி நிரந்தரம் செய்யப்பட்டு நிரந்தர வேலை வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற பஞ்சாலை தொழிலாளர்களுக்கு மாதம் ரூ7ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விஜயன் நன்றி கூறினார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/16/மில்-தொழிலாளர்கள்-சிறப்பு--பேரவைக்கூட்டம்-2790922.html
2790921 மதுரை விருதுநகர் பந்தல்குடியில் புதிய பயணிகள் நிழற்குடை அமைத்துத் தர கோரிக்கை DIN DIN Monday, October 16, 2017 05:22 AM +0530 அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடியில் இடிந்து விழும் அபாயத்தில் உள்ள சேதமடைந்த பயணிகள் நிழற்குடைக்கு பதிலாக புதிய நிழற்குடை அமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பந்தல்குடியின் மையப் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் உள்ள இந்த சிறிய நிழற்குடை 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இது தற்போது முற்றிலும் சேதமடைந்து விட்டது.
இதனால் வெயிலுக்கோ, மழைக்கோ ஒதுங்க  இடமின்றி  பயணிகளும், பொதுமக்களும் அவதியடைந்து வருகின்றனர். எனவே இங்குள்ள சேதமடைந்த நிழற்குடைக்குப் பதிலாக புதிய நிழற்குடையை விரைவில் அமைத்துத் தர வேண்டும் என பொதுமக்களும், சமூக நலஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/16/பந்தல்குடியில்-புதிய-பயணிகள்-நிழற்குடை-அமைத்துத்-தர-கோரிக்கை-2790921.html
2790920 மதுரை விருதுநகர் விருதுநகர் கடை வீதியில் தீபாவளி பொருள்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர் DIN DIN Monday, October 16, 2017 05:21 AM +0530 விருதுநகர் பிரதான பஜார்,  மதுரை சாலை மற்றும் தேசபந்து மைதானத்தில் தீபாவளி பொருள்கள் வாங்குவதற்காக ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் குவிந்தனர்.
 இதையொட்டி ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
 வரும் புதன்கிழமை (அக். 18)  தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில்  விருதுநகர் பஜார் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை புத்தாடை மற்றும் மளிகை பொருள்கள் வாங்குவதற்காக கிராமப் பகுதிகள் மற்றும் நகர் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் விருதுநகர் பஜாருக்கு வந்து குவிந்தனர். பலர் குடும்பத்துடன் வந்திருந்தனர்.  
இதனால்,  மதுரை சாலை,  பிரதான பஜார், தேசபந்து மைதானம்,  பழைய பேருந்து நிலையப் பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் வழக்கத்தை விட மிக அதிகமாக இருந்தது.
இதையடுத்து அங்கு குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கவும்,  போக்குவரத்தை சீரமைக்கவும் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/16/விருதுநகர்-கடை-வீதியில்-தீபாவளி-பொருள்கள்-வாங்க-பொதுமக்கள்-குவிந்தனர்-2790920.html
2790919 மதுரை விருதுநகர் ராஜபாளையத்தில் நிலவேம்பு குடிநீர் வழங்கல் DIN DIN Monday, October 16, 2017 05:21 AM +0530 ராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி சார்பில்  நிலவேம்பு குடிநீர் சனிக்கிழமை வழங்கப்பட்டது.
அரசு மகப்பேறு மருத்துவமனை முன்புநடந்த இந்நிகழ்ச்சிக்கு நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் தலைமை வகித்தார். அரசு தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் பாபுஜி, முதுநிலை மயக்கவியல் மருத்துவர் மாரியப்பன் முன்னிலை வகித்தனர். ராஜபாளையம் தெற்கு காவல்நிலைய  ஆய்வாளர் பவுல் ஏசுதாசன் தொடக்கி வைத்தார்.
 ராஜபாளையம் டாக்சி வேன் ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஜவகர் மைதானத்தில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. சங்கத் தலைவர்விஜயகுமார் தலைமை வகித்தார். செயலர் கண்ணன் முன்னிலையில் மருத்துவர் பாபுஜி தொடக்கி வைத்தார். சித்த மருத்துவர் கீதா,  சி.பி.எம்., நகரச் செயலர் மாரியப்பன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ராஜபாயைம் சத்யா வித்யாலயா பள்ளியில் மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீரை தாளாளர் குமரேசன், முதன்மை நிர்வாக அதிகாரி அரவிந்த் ஆகியோர் வழங்கினர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/16/ராஜபாளையத்தில்-நிலவேம்பு-குடிநீர்-வழங்கல்-2790919.html
2790913 மதுரை விருதுநகர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நான்கு வழிச் சாலையில் அகற்றப்பட்ட தடுப்பு வேலியை மீண்டும் அமைக்க கோரிக்கை DIN DIN Monday, October 16, 2017 05:19 AM +0530 விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் அருகே நான்கு வழிச் சாலையில் தடுப்பு வேலி அகற்றப்பட்டதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதால், அவற்றை மீண்டும் வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நான்கு வழி சாலை போடப்பட்டதாலும்,  டோல்கேட் தவிர வேறு எந்த இடங்களிலும் வேகத்தடை இல்லாததாலும் கார், பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள் அதிவேகத்தில் செல்கின்றன.
அப்போது விபத்துகளை தடுப்பதற்காக குடியிருப்பு பகுதிகள் உள்ள நான்கு வழிச் சாலையில்  மைய தடுப்பு சுவரில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.  அதே போல் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மாடர்ன் நகர் மற்றும் ஆயுதப்படை குடியிருப்பு பகுதிகளுக்கு எதிர்புறம் நான்கு வழிச்சாலையில்  தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன.
இதை சிலர் குறுக்கே எளிதாக கடந்து செல்ல வேண்டும் என்பதற்காக அகற்றி விட்டனர். இதனால்  மிதிவண்டியில் செல்வோரும், நடந்து செல்லும் மாணவ, மாணவிகளும் எதிர்திசைக்கு செல்வதற்காக சாலையை குறுக்கே கடந்து செல்லும் போது வேகமாக வரும்  வாகனங்கள் அவர்கள் மீது மோதும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அகற்றப்பட்ட தடுப்பு வேலியை மீண்டும் நிறுவ மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/16/விருதுநகர்-மாவட்ட-ஆட்சியர்-அலுவலகம்-அருகே-நான்கு-வழிச்-சாலையில்-அகற்றப்பட்ட-தடுப்பு-வேலியை-மீண்டும்-2790913.html
2790912 மதுரை விருதுநகர் விருதுநகர் ஆயுதப்படை குடியிருப்பில் சேதமடைந்து  வரும் வீடுகளால் காவலர் குடும்பங்கள் அச்சம் DIN DIN Monday, October 16, 2017 05:18 AM +0530 விருதுநகர் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் சேதமடைந்த வீடுகளால், அதில் குடியிருக்கும் காவலர் குடும்பங்கள் அச்சத்தில் உள்ளனர்.
பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட  இந்த குடியிருப்புகள் முறையான பராமரிப்பு இல்லாததால் பக்கவாட்டு சுவர்கள் பெயர்ந்து இடிந்து விழுகின்றன. மேலும், சுவர் பகுதிகளில் செடிகள் வளர்ந்து விரிசல் ஏற்படுகிறது. அதேபோல், மாடியில் பதிக்கப்பட்ட தட்டோடுகள் உடைந்து விட்டதால் மழைநீர் கசிந்து வீட்டிற்குள் விழுகிறது.  
இதனால், குழந்தைகளுடன் தங்கியிருக்கும் காவலர் குடும்பங்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். மேலும், ஆயுதப்படை குடியிருப்பு பகுதியைச் சுற்றிலும்,  ஆங்காங்கு செடி கொடிகள் வளர்ந்து புதர்மண்டிக் கிடக்கிறது.  இதிலிருந்து விஷ பூச்சிகள் வெளி வருவதால், இரவு நேரத்தில் வெளியே வர முடியாமல் அவர்கள் சிரமப்படுகின்றனர். அதே போல், கொசு மருந்து அடிக்காததால் பலர் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கர மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவலர் குடும்பங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/16/விருதுநகர்-ஆயுதப்படை-குடியிருப்பில்-சேதமடைந்து--வரும்-வீடுகளால்-காவலர்-குடும்பங்கள்-அச்சம்-2790912.html
2790911 மதுரை விருதுநகர் பிளஸ் 2 மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி : தினமணி மாணவர் மலர் இலவசமாக விநியோகம் DIN DIN Monday, October 16, 2017 05:18 AM +0530 அன்னை ஸ்ரீசாரதா சேவா அறக்கட்டளை சார்பில், பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி பிள்ளையார்குளம், சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் செ.குமரேசன் தலைமை வகித்தார்.  முதல்வர் பி.முருகதாசன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக பெங்களூரிலிருந்து வந்திருந்த கல்வி ஆலோசகர் ஆர்.சீனிவாசன், சுறா பப்ளிகேஷன்ஸ் வி.கே.சுப்புராஜ்,  மருத்துவர் ஆர்.சுரேஷ்குமார், ஆர்.விஜயராகவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் அன்னை ஸ்ரீசாரதா சேவா அறக்கட்டளையின் தலைவர் இ.டி.சி. எல்.ராஜாராம்  முன்னிலை வகித்துப்  பேசியதாவது:  மத்திய அரசு பிளஸ் 2 முடித்த மாணவர்களின் மேல்படிப்புக்காக 142 வகையான பட்ட மற்றும் பட்ட மேற்படிப்புகளுக்கு கல்வி உதவித் தொகையுடன் குறிப்பிட்ட கல்லூரிகளில் படிக்க ஏற்பாடு செய்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாததால், இந்த ஒதுக்கீட்டில் கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநில மாணவர்கள் தமிழகத்தில் வந்து தங்கி இங்குள்ள முகவரியைப் பயன்படுத்தி படித்து பயனடைந்துள்ளனர்.  கடந்த 2014-15-ஆம் கல்வியாண்டில் மட்டும் தமிழகத்திற்கு வந்த கல்வி உதவித் தொகை ரூ.80 கோடி மத்திய அரசுக்கு திரும்ப அனுப்பப்பட்டுள்ளது. இதே கல்வியாண்டில் தமிழக மாணவர்கள் நால்வர் மட்டுமே இந்த ஒதுக்கீட்டில் சேர்ந்து படிக்கிறார்கள். இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் 12 பள்ளிகளில் இருந்து வந்திருந்த 50 மாணவர்களுக்கு தினமணி மாணவர் மலர் இலவசமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளியின் துணை முதல்வர் எஸ்.சத்தியமூர்த்தி, நிர்வாகி பி.அமுதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/16/பிளஸ்-2-மாணவர்களுக்கான-கல்வி-வழிகாட்டி-நிகழ்ச்சி--தினமணி-மாணவர்-மலர்-இலவசமாக-விநியோகம்-2790911.html
2790910 மதுரை விருதுநகர் விருதுநகர் விளையாட்டு மைதானத்தில் உள்ள சீரமைக்கப்பட்ட கூடைப்பந்து மைதானத்தில் மழைநீர் தேக்கம் DIN DIN Monday, October 16, 2017 05:18 AM +0530 விருதுநகர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், ரூ.11.80 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்ட கூடைப்பந்து மைதானத்துக்குள் மழைநீர் தேங்கியுள்ளதால் பயிற்சி பெற முடியாமல் வீரர்கள் தவித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நான்கு வழிச் சாலையில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், மேஜைப்பந்து அரங்கம், கையுந்து பந்து, கால்பந்து, கோ-கோ, கைப்பந்து, ஹாக்கி,  கூடைப்பந்து, இறகுப் பந்து, டென்னிக்காய்ட், பூப்பந்து ஆகியவற்றுக்கு மைதானங்கள் உள்ளன. அத்துடன் 400 மீட்ட தடகள ஓடுபாதை,  குத்துச்சண்டை அரங்கம், உடற்பயிற்சி மையம், ஸ்குவாஷ் உள்அரங்கம், கபடி மைதானம் ஆகியவையும் உள்ளன.
இந்நிலையில், கூடைப்பந்து மைதானத்தின் கான்கிரீட் தரை தளம் சேதமடைந்ததையடுத்து அங்கு பயிற்சி பெறும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அவதியடைந்து வந்தனர். இதையடுத்து இந்த மைதானத்தை சீரமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து தமிழக அரசு, இந்த மைதானத்தை சீரமைக்க ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்தது. மேலும், தனியார் நிறுவனங்கள் பங்கு தொகையாக ரூ.1.80 லட்சம் வரை வசூல் செய்யப்பட்டது. இதன்பின், ரூ.11.80 மதிப்பில் கான்கிரீட் தரைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், பணிகள் தரமில்லாத காரணத்தால், தற்போது பெய்த மழைநீர் கூடைப்பந்து மைதானத்துக்குள் தேங்கிக் கிடக்கிறது.  இதனால், தரைதளம் மீண்டும் சேதமடைந்து வீரர்கள் பயிற்சி பெறமுடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.  எனவே, இந்த தரைதளத்தை மீணடும் சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/16/விருதுநகர்-விளையாட்டு-மைதானத்தில்-உள்ள-சீரமைக்கப்பட்ட-கூடைப்பந்து-மைதானத்தில்-மழைநீர்-தேக்கம்-2790910.html
2790656 மதுரை விருதுநகர் கம்பத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள்: அதிகாரிகள் ஆய்வு DIN DIN Sunday, October 15, 2017 05:12 AM +0530 கம்பம் நகராட்சிப் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிகளை வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தேனி மாவட்டம், கம்பம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் பணிகளில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தேனி மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் உத்தரவின்பேரில், வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய 2 நாள்கள் சிறப்பு முகாமாக, தேனி மாவட்ட ஊராட்சி செயலர் மோகன் தலைமையில் வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, வீடு, கடைகள், தொழிற்சாலை மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் கண்காணித்தல், காய்ச்சல் வந்தால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுதல் உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கினார். மேலும், நகராட்சி குடிநீர் விநியோகம் செய்யும் நேரத்தில், தண்ணீரை ஆய்வு செய்தனர். சுகாதாரக் குழுக்கள் மூலம் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை வழங்கினர்.
மாவட்ட ஊராட்சி செயலருடன், உத்தமபாளையம் வருவாய் வட்டாட்சியர் ஜெ. பாலசண்முகம், கம்பம் நகராட்சி ஆணையர் ந. சங்கரன், சுகாதார அலுவலர் சுருளிநாதன் உடன் சென்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/15/கம்பத்தில்-டெங்கு-காய்ச்சல்-தடுப்பு-பணிகள்-அதிகாரிகள்-ஆய்வு-2790656.html
2790655 மதுரை விருதுநகர் விருதுநகரில் சொத்து வரியை அதிகரிக்க வீடு, வீடாக அளவிடும் பணி தொடக்கம் DIN DIN Sunday, October 15, 2017 05:11 AM +0530 விருதுநகர் நகராட்சி பகுதிகளில் சொத்து வரியை உயர்த்திட வீடு, வீடாக அளவிடும் பணியில் 11 குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயம், நிலுவைத் தொகையுடன் வரி வசூலிக்க நகராட்சி ஊழியர்களுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் 128 நகராட்சிகள் உள்ளன. இதற்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள வீடு, தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான வரிகள் சொத்து வரியாக வசூலிக்கப்பட்டு வருகிறது. சொத்து வரியானது, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்தப்படுவது வழக்கம்.
இந்நிலையில், சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாக ஆணையர், அனைத்து நகராட்சிகளிலும் உள்ள வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஆகியவற்றை அளந்து அதற்கேற்றாற் போல வரியை நிர்ணயம் செய்து வசூலிக்க உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், சொத்து வரிகளை முன் தேதியிட்டு, அதாவது மூன்றரை ஆண்டுகளுக்கு, அதாவது 7 அரையாண்டு கட்டணங்களை நிலுவையுடன் சேர்த்து வசூலிக்க கடந்த 2017 ஜூலை 1 இல் உத்தரவிட்டுள்ளாராம்.
இதையடுத்து, அனைத்து நகராட்சிகளிலும் வரித் தண்டலர்கள் தலைமையிலான பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு கட்டடங்களை அளக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி, விருதுநகர் நகராட்சியில் 11 குழுக்கள், 60 சதவீத கட்டடங்களை அளக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
"விருதுநகரில் வீடு, ஓட்டல், வணிக நிறுவனம் என மொத்தம் 26 ஆயிரம் வரி விதிப்பு எண்கள் உள்ளன. அதன்படி, தற்போது ஆண்டுக்கு ரூ.8 கோடி வசூல் கிடைக்கும்.
ஆனால், முறையாக வசூல் செய்யாததால், ஒரு கோடிக்கு மேல் பலர் வரி பாக்கி செலுத்தாமல் இருந்து வருகின்றனர். இப்புதிய வரி மற்றும் நிலுவைத் தொகை வசூலானால் ஆண்டுக்கு ரூ.10 கோடி வரை கிடைக்கும் நிலையுள்ளது.
ஆனால், வீடுகளை அளக்கச் செல்லும் போது திடீரென நிலுவைத் தொகையை பணியாளர்கள் கேட்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனால், விருதுநகர் நகராட்சி பணியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது. எனவே, வரி உயர்வு மற்றும் நிலுவை தொகை வசூல் முதலானவற்றை அரசு உத்தரவாக முன்னரே பொதுமக்களுக்கு அறிவுறுத்தாததே இப்பிரச்னைக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/15/விருதுநகரில்-சொத்து-வரியை-அதிகரிக்க-வீடு-வீடாக-அளவிடும்-பணி-தொடக்கம்-2790655.html
2790654 மதுரை விருதுநகர் டெங்குவை தடுக்கக்கோரி வத்திராயிருப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் DIN DIN Sunday, October 15, 2017 05:11 AM +0530 டெங்கு, வைரஸ் காய்ச்சலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வத்திராயிருப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வத்திராயிருப்பு அரசு மருத்துவமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகரச் செயலாளர் என்.கோவிந்தன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.பாண்டியம்மாள் ஆகியோர் தலைமை வகித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான தி.ராமசாமி உரையாற்றினார்.
இதில், டெங்கு, வைரஸ் காய்ச்சலை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும். இந்த மருத்துவமனையில் ஸ்கேன் வசதி மற்றும் தண்ணீர் வசதி செய்து தர வேண்டும். தேவையான மருந்து மாத்திரை வழங்க வேண்டும். சுகாதார வசதி செய்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
மாவட்ட பொருளாளர் என்.முருகேசன், ஒன்றியச் செயலாளர் ஆர்.சரவணன், மாவட்டக் குழு உறுப்பினர் எம்.சி.ராமச்சந்திரபாபு உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/15/டெங்குவை-தடுக்கக்கோரி-வத்திராயிருப்பில்-இந்திய-கம்யூனிஸ்ட்-கட்சியினர்-ஆர்ப்பாட்டம்-2790654.html
2790653 மதுரை விருதுநகர் சிவகாசி லாரி "செட்'களில் நூதன மோசடி: பட்டாசு வியாபாரிகள் அதிர்ச்சி DIN DIN Sunday, October 15, 2017 05:11 AM +0530 சிவகாசியில் உள்ள லாரி செட்டுகளில் நடைபெற்று வரும் நூதன மோசடியால், பட்டாசுத் தயாரிப்பாளர்கள் மற்றும் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சிவகாசியிலிருந்து லாரி மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் பட்டாசு மற்றும் அச்சுப் பொருள்கள் உள்ளிட்டவை அனுப்பப்பட்டு வருகின்றன. பட்டாசுத் தயாரிப்பாளர் ஒருவர் வெளியூரில் உள்ள தனது வாடிக்கையாளருக்கு லாரி மூலம் பார்சலில் பட்டாசுகளை அனுப்பும்போது, ஜி.எஸ்.டி. பில்லுடன், பெறுநர் முகவரி, அவரது செல்லிடப்பேசி எண் உள்ளிட்டவற்றையும் குறிப்பிடுகிறார்.
இந்நிலையில், சில லாரி போக்குவரத்து நிறுவன மேலாளர் மற்றும் உரிமையாளர்களுடன் நெருக்கமாக உள்ள சிலர், பார்சல்களில் உள்ள முகவரி மற்றும் செல்லிடப்பேசிக்கு தொடர்பு கொண்டு, தாங்கள் குறைந்த விலைக்கு பட்டாசு தருவதாக பேசுகின்றனர். இதனால், அந்த வாடிக்கையாளர் இவரிடம் சரக்கு வாங்கத் தொடங்குகிறார்.
இவ்வாறு, லாரி செட்களில் உள்ளவர்கள் பிறரிடம் முகவரி, செல்லிடப்பேசியை கொடுத்து விடுவதால், நம்பி பார்சல் அனுப்புபவர்கள் தங்களது வாடிக்கையாளர்களை இழந்து, வியாபாரத்திலும் நஷ்டமடைகின்றனர். இந்த நூதன மோசடியால், பட்டாசு விற்பனையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து ஒரு பட்டாசு தயாரிப்பாளர் கூறியது: தமிழகத்தில் உள்ள ஒரு பகுதிக்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 20 லட்சம் வரை பட்டாசு அனுப்பி விற்பனை செய்து வந்தேன். கடந்த சில ஆண்டுகளாக, அந்த ஊரிலிருந்து எந்த வியாபாரியும் எங்களிடம் பட்டாசு வாங்க வரவில்லை. இதற்குக் காரணம் லாரி செட்டில் நடைபெறும் நூதன மோசடி என்பது இப்போதுதான் தெரியவந்துள்ளது என்றார்.
கேரள கோயில்களில் வெடிவழிபாடு நிகழ்ச்சிக்கு சிவகாசியிலிருந்து மூலப்பொருள் அனுப்பி வியாபாரம் செய்யும் ஒருவர் கூறுகையில், சரக்கு அனுப்பும் போது, பெறுநரின் முகவரி மற்றும் செல்லிடப்பேசி எண்ணை லாரி செட்டில் உள்ளவர்கள் வேறு ஒரு மூலப்பொருள் வியாபாரிக்கு கொடுத்து விடுகின்றனர். இதனால், எனக்கு வியாபாரம் பெருமளவு பாதித்தது. எனவே, இப்போது நான் சரக்கு அனுப்பும் போது மிகவும் கவனமாக அனுப்புகிறேன். எனது செல்லிடப்பேசி எண்ணை பில்லில் இணைத்துவிடுகிறேன் என்றார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/15/சிவகாசி-லாரி-செட்களில்-நூதன-மோசடி-பட்டாசு-வியாபாரிகள்-அதிர்ச்சி-2790653.html
2790652 மதுரை விருதுநகர் ரௌடி கொலை வழக்கு: 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது DIN DIN Sunday, October 15, 2017 05:11 AM +0530 விருதுநகரில் ரௌடி பாண்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, இரு பெண்கள் உள்பட 4 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
விருதுநகர் மல்லி கிட்டங்கி தெருவை சேர்ந்தவர் கணேசன் மகன் பாண்டி (28). இவரை, வெள்ளிக்கிழமை மாலை ஏரயநாயக்கனூர் ஊருணி அருகே மர்ம நபர்கள் கட்டை மற்றும் அரிவாளால் தாக்கியும் கொலை செய்தனர்.
கொலை செய்யப்பட்ட பாண்டியின் தாய் முனியம்மாள் விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில், எனது மகன் பாண்டியும், மணிகண்டனும் நண்பர்கள். இவர்கள் மீது விருதுநகர் பஜார், மேற்கு, பாண்டியன் நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் ஏற்கெனவே வழக்குகள் உள்ளன.
இந்நிலையில், கடந்த வாரம் வாரண்ட் தொடர்பாக விசாரிப்பதற்காக பாண்டியன் நகர் காவல் நிலையத்திற்கு எனது மகன் பாண்டி மற்றும் மணிகண்டனை போலீஸார் அழைத்து சென்றனர். அங்கு, பாண்டி மீது வாரண்ட் இல்லாததால் அவரை வீட்டுக்கு திரும்ப அனுப்பி விட்டனர். அப்போது அங்கிருந்த மணிகண்டன் மனைவி ராமலெட்சுமி, அவரது சகோதரி செல்வி, கணவர் அசோக், உறவினர்களான கார்த்திகை செல்வம், கிருஷ்ணன், கனகராஜ் ஆகியோர்
மணிகண்டன் கைதுக்கு நீதான் காரணம் என பாண்டியை மிரட்டினர். இந்நிலையில், அசோக் உள்ளிட்டோர் எனது மகன் பாண்டியை கொலை செய்து விட்டனர் என அதில் குறிப்பிட்டுள்ளார். அதன் பேரில், பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்த அசோக்(26), அவரது மனைவி செல்வி (24), மணிகண்டன் மனைவி ராமலெட்சுமி(27), அவரது சகோதரர் கார்த்திகை செல்வம் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/15/ரௌடி-கொலை-வழக்கு-2-பெண்கள்-உள்பட-4-பேர்-கைது-2790652.html
2790651 மதுரை விருதுநகர் தொழிலாளியிடம் கத்தியை காட்டி பணம் பறித்தவர் கைது DIN DIN Sunday, October 15, 2017 05:10 AM +0530 சிவகாசி அருகே சனிக்கிழமை பட்டாசுத் தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவரை, போலீஸார் கைது செய்தனர்.
சிவகாசி போஸ் காலனியை சேர்ந்த பட்டாசுத் தொழிலாளி கார்த்திக் (22). இவர், சிவகாசி-நாரணாபுரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, மர்ம நபர் ஒருவர் அவரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி ஆயிரம் ரூபாயை பறித்துக்கொண்டு ஓடியுள்ளார். உடனே, கார்த்திக் சத்தம் போட்டதில், அப்பகுதியினர் வந்து அந்த நபரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், அந்த நபர் நாரணாபுரம் புதூரைச் சேர்ந்த ராஜ்குமார் (25) எனத் தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில், சிவகாசி கிழக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/15/தொழிலாளியிடம்-கத்தியை-காட்டி-பணம்-பறித்தவர்-கைது-2790651.html
2790650 மதுரை விருதுநகர் ராஜபாளையம் அருகே உயர் மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்து விபத்து:கண்டித்து சாலை மறியல் DIN DIN Sunday, October 15, 2017 05:10 AM +0530 விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உயர் மின் அழுத்தக் கம்பி சனிக்கிழமை அறுந்து விழுந்ததில் வீட்டில் இருந்த மின் உபகரணங்கள் சேதமாகின. அடிக்கடி நிகழும் இந்த விபத்தை கண்டித்து அப் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.
ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியை அடுத்த விநாயகா நகர் பகுதியில் 40-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மேலும் 10-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் மற்றும் சைசிங் ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளுக்குத் தேவையான உயர் மின்சாரம் விநாயகா நகர் வழியாக கொண்டு செல்லப்படுகிறது.
கடந்த 3 நாள்களுக்கு முன்பு பலமான காற்று வீசியதால் மின் கம்பிகளில் உராய்வு ஏற்பட்டு, அங்கிருந்த 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த டி.வி., மிக்ஸி உள்ளிட்ட மின் உபகரணங்கள் சேதமாகின.
மின் மீட்டர் பெட்டிகளும் சேதமானதால் கடந்த 2 நாள்களும் மின் இணைப்பு கிடைக்காமல் பொது மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகினர்.
வேலை இழந்து விசைத்தறி தொழிலாளர்களும் பாதிக்கப் பட்டனர். வெள்ளிக்கிழமை மாலை மின் இணைப்பு கொடுக்கப் பட்ட நிலையில், சனிக்கிழமை காலை 7 மணியளவில் உயர் மின் அழுத்த கம்பியில் தீ விபத்து ஏற்பட்டது.
இதனால் இதனால் சனிக்கிழமையும் பல வீடுகளில் மின் உபகரணங்கள் சேதமாகி உள்ளன. மேலும் உயர் அழுத்த மின் கம்பி அறுந்து அருகே இருந்த வீட்டின்
வளாகத்தில் விழுந்துள்ளது. அப்போது அங்கு ஆள் இல்லாததால் உயிரிழப்பு ஏதும் இல்லை. இதனை அறிந்த அப் பகுதி பொது மக்கள் சரியான முறையில் மின் கம்பிகள் இணைப்பு கொடுக்காமல் மின்சார வாரிய ஊழியர்கள் அலட்சியம் காட்டுவதாக கூறி ஆலங்குளம் செல்லும் சாலையில், நத்தம் பட்டி விலக்கு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப் பட்டது. தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் பொது மக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப் போது காவல் துறையினருக்கும் பொது மக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மின்சார வாரிய அதிகாரிகளிடம் பேசி பிரச்னைக்கு தீர்வு எட்டப்படும் என்ற காவல்துறை அதிகாரிகளின் சமரசத்தை ஏற்று பொது, சுமார் அரை மணி நேரத்திற்கு பின்னர் பொதுமக்கள் போராட்டத்தை கை விட்டு கலைந்து சென்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/15/ராஜபாளையம்-அருகே-உயர்-மின்-அழுத்த-கம்பி-அறுந்து-விழுந்து-விபத்துகண்டித்து-சாலை-மறியல்-2790650.html
2790649 மதுரை விருதுநகர் செல்லிடபேசி கோபுரத்தில் பேட்டரிகள் திருட்டு DIN DIN Sunday, October 15, 2017 05:10 AM +0530 விருதுநகர் அருகே தனியார் செல்லிடப்பேசி கோபுரத்தில் 32 பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர். நகர், ரோசல்பட்டி, ராஜபாளையம் பகுதியில் தனியார் செல்லிடப்பேசி நிறுவனத்துக்குச் சொந்தமான
கோபுரம் உள்ளது. இந்நிலையில், அக். 12 ஆம் தேதி ஆர்.ஆர். நகர் கோபுரத்தில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை என தகவல் கிடைத்ததாம். அதன் பேரில் அந்நிறுவன ஊழியர் கண்ணன் என்பவர், வெள்ளிக்கிழமை ஆர்.ஆர்.நகர் வந்து பார்த்தபோது, அறையின் பூட்டு உடைக்கப்பட்டி ருப்பது தெரிந்தது.
இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது வயர்களை துண்டித்து 32 பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரிந்தது. இது குறித்து கண்ணன் அளித்த புகாரின் அடிப்படையில் வச்சகாரபட்டி போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/15/செல்லிடபேசி-கோபுரத்தில்-பேட்டரிகள்-திருட்டு-2790649.html
2790648 மதுரை விருதுநகர் கத்தாளம்பட்டி வீதிகளில் தேங்கும் கழிவு நீர் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் DIN DIN Sunday, October 15, 2017 05:09 AM +0530 விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் ம.ரெட்டியபட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த கத்தாளம்பட்டியில் வீதிகளில் கழிவு நீர் தேங்குவதால் நோய்த்தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.
கல்லுமடம் ஊராட்சிக்கு உட்பட்ட கத்தாளம்பட்டி கிராமத்தில் சுமார் 800-க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இக்கிராமத்தில் பெரும்பான்மையினர் விவசாயத்தொழில் செய்து வருகின்றனர். தற்போது டெங்கு ஒழிப்புப் பிரசாரம் தீவிரமாக நடைபெறும் நிலையில் இக்கிராமத்திலோ அனைத்துத் தெருக்களிலும் கழிவுநீர் வாய்க்கால் இல்லாததால் வீதிகளில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
இதுதொடர்பாக இக்கிராமத்து இளைஞர் குமார்(35) கூறியதாவது: எங்கள் கிராமத்தில் தெருக்களில் கழிவுநீர்க் கால்வாய் வசதி இல்லாததால் வீதிகளில் கழிவுநீர் தேங்குகிறது. மழைக் காலமாதலால் மழை நீரும் சேர்ந்து அதிக நீர் தேங்குகிறது.இதனால் கொசுக்கள் அதிகம் பெருகுவதுடன் சுகாதாரக்கேட்டுடன் நோய்த்தொற்று ஏற்பட்டுகிறது.
கிராமத்தில் மர்மக்காய்ச்சல், வாந்தி, பேதி என பொதுமக்கள் அல்லல்படுகின்றனர் என அவர் கூறினார்.எனவே அனைத்து வீதிகளிலும் கழிவுநீர் தேங்காதபடி உரிய கழிவுநீர் வாய்க்கால்கள் கட்டப்பட வேண்டுமெனவும் கொசுக்கள் பெருகுவதைத்தடுக்க வேண்டுமெனவும் இக்கிராம பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/15/கத்தாளம்பட்டி-வீதிகளில்-தேங்கும்-கழிவு-நீர்-நோய்த்தொற்று-ஏற்படும்-அபாயம்-2790648.html
2790647 மதுரை விருதுநகர் மாநில அளவிலான கண்காட்சி போட்டி: சிவகாசி பள்ளி மாணவர்களுக்கு இளம் விஞ்ஞானி விருது DIN DIN Sunday, October 15, 2017 05:09 AM +0530 விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், வி.பி.எம்.எம். மகளிர் கல்வி நிறுவனங்கள் சார்பில் நடைபெற்ற இரு நாள் அறிவியல் கண்காட்சி போட்டியில் சிவகாசி, விநாயகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இருவருக்கு இளம் விஞ்ஞானி 2017 விருது வழங்கப்பட்டது.
வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் "இளம் விஞ்ஞானி 2017" என்ற மாநில அளவிலான பள்ளிகளுக்கிடையேயான அறிவியல் கண்காட்சி போட்டி நடைபெற்றது.
கண்காட்சிக்கு 58 பள்ளிகள் கலந்து கொண்டு 200-க்கும் மேற்பட்ட அறிவியல் நுட்பம் சார்ந்த செய்முறைப் படைப்புகளை சமர்ப்பித்தனர். கண்காட்சியினை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த 3500 மாணவர்கள் வந்து கண்டு ரசித்தனர். இக்கண்காட்சியில் வைக்கப்பட்ட செய்முறைகளில், சிவகாசி, விநாயகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர்கள் எஸ்.ஜெயசூர்யா மற்றும் ஏ.ஆரோக்கிய ராஃபின் ஆகியோர் முதல் பரிசு பெற்றனர். இரு மாணவர்களுக்கும் இளம் விஞ்ஞானி 2017 பட்டம் மற்றும் விருது வழங்கப்பட்டது.
இரண்டு, இரண்டாம் பரிசினை கே.பாப்புநாயக்கன்பட்டி, ஸ்ரீகந்தசாமி வித்யாலயா மேல்நிலைப்பள்ளியின் பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் வி.வி.பாலமுருகன், எம்.ரோகித், ஜி.அருண்பாண்டியன் மற்றும் இதே பள்ளியைச் சேர்ந்த எஸ்.செல்வலட்சுமி, எஸ்.ஆதித்யா, பி.செந்தமிழ்செல்வி ஆகியோர் பெற்றனர்.
மூன்றாம் பரிசினை ஸ்ரீவில்லிபுத்தூர் திரு இருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் சி.ஹரிதா, டி.ராஜாத்தி மற்றும் சீல்நாயக்கன்பட்டி அரசு மேல் நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவன் எம்.முனீஸ்வரன் மற்றும் டி.குண்ணத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் எஸ்.பிரியதர்ஷினி, சி.சரஸ்வதி ஆகிய மூன்று பள்ளிகள் பெற்றனர். சனிக்கிழமை நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் வி.பி.எம்.எஸ்.தங்கபிரபு தலைமை வகித்தார்.
தாளாளர் பழனிச்செல்வி சங்கர், இயக்குநர் டாக்டர் ரா.சபரிமாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்வி நிறுவனங்களின் தலைவர் வி.பி.எம்.சங்கர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.
கண்காட்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் இயக்குநர் டாக்டர் ரா.சபரிமாலா மற்றும் பள்ளி முதல்வர் சுபிமோள் ஆகியோர் செய்திருந்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/15/மாநில-அளவிலான-கண்காட்சி-போட்டி-சிவகாசி-பள்ளி-மாணவர்களுக்கு-இளம்-விஞ்ஞானி-விருது-2790647.html
2790134 மதுரை விருதுநகர் ராஜபாளையம் பள்ளியில் உலக கை கழுவும் நாள் விழா DIN DIN Saturday, October 14, 2017 05:39 AM +0530 உலக கை கழுவும் தின விழா அக்டோபர் 15 ஆம் தேதி அனுசரிக்கப்படுவதையொட்டி, ராஜபாளையம் சத்யா வித்யாலயா பள்ளியில் கை கழுவும் நிகழ்ச்சி மற்றும் டெங்கு விழிப்புணர்வு பற்றிய கருத்துரையாடல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
      பள்ளித் தாளாளர் கு. குமரேசன் தலைமை வகித்தார். பள்ளி முதன்மை நிர்வாக அதிகாரி அரவிந்த், பள்ளி மேனேஜிங் டிரஸ்டி டாக்டர் சித்ரா குமரேசன், பள்ளித் தலைமை ஆசிரியை கலாதேவி, உதவித் தலைமை ஆசிரியை ஷர்மிளா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக, அரசு மருத்துவர் நூர்தீன் மற்றும் சத்யா வித்யாலயா பள்ளி ஆலோசகர் பாரதி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். ஆசிரியை நிவேதா நன்றி கூறினார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/14/ராஜபாளையம்-பள்ளியில்-உலக-கை-கழுவும்-நாள்-விழா-2790134.html
2790133 மதுரை விருதுநகர் காவல் சார்பு-ஆய்வாளரை தாக்கியவர் கைது DIN DIN Saturday, October 14, 2017 05:39 AM +0530 ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பணியில் இருந்த காவல் சார்பு- ஆய்வாளரைத் தாக்கியவரை போலீஸார் கைது செய்தனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்-சிவகாசி சாலையில் உள்ள வேண்டுராயபுரத்தில் பொங்கல் விழாவையொட்டி, வியாழக்கிழமை அதிகாலை ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இங்குள்ள தேவர் சிலை முன்பு மல்லி காவல் நிலைய சார்பு- ஆய்வாளர் மு. சத்தியராஜ் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மது போதையில் இரு சக்கர வாகனத்தில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த மா. திருப்பதி (22) என்பவர், சார்பு-ஆய்வாளர் சத்தியராஜிடம் தகராறு செய்து, ஆபாசமாகப் பேசினாராம். மேலும், சார்பு-ஆய்வாளரை பணி செய்ய விடாமல் அவரது சட்டையைப் பிடித்து இழுத்து அடித்து கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
     இது குறித்து மல்லி காவல் நிலையத்தில் சார்பு-ஆய்வாளர் புகார் செய்தார். அதன்பேரில், ஆய்வாளர் மூக்கன் வழக்குப் பதிவு செய்து திருப்பதியை கைது செய்தார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/14/காவல்-சார்பு-ஆய்வாளரை-தாக்கியவர்-கைது-2790133.html
2790132 மதுரை விருதுநகர் விருதுநகரில் தியாகி சங்கர லிங்கனாருக்கு மரியாதை DIN DIN Saturday, October 14, 2017 05:38 AM +0530 விருதுநகரில் தியாகி சங்கரலிங்கனாரின் 61 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு வெள்ளிக்கிழமை நாடார் மகாஜன சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
     தமிழ்நாடு என பெயர் சூட்டக் காரணமாக இருந்தவர் தியாகி சங்கரலிங்கனார். இவரது சொந்த ஊரான விருதுநகரில், தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.
    இந்நிலையில், இவரது 61 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது சிலைக்கு நாடார் மகாஜன சங்கத்தின் துணைத் தலைவர் கனகரத்தினம் தலைமையில் ஏராளமானோர்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னதாக,  காலையில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், சங்கரலிங்கனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/14/விருதுநகரில்-தியாகி-சங்கர-லிங்கனாருக்கு-மரியாதை-2790132.html
2790131 மதுரை விருதுநகர் தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள்: போக்குவரத்து பொது மேலாளர் தகவல் DIN DIN Saturday, October 14, 2017 05:38 AM +0530 விருதுநகர்  மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்  என,
விருதுநகர் மண்டலப் பொது மேலாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
    இது குறித்து  அவர் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை, கோவை, திருப்பூர், சேலம், திருச்சி உள்ளிட்ட   நகரங்களிலிருந்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம்,  ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்வோரின் வசதிக்காக, மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் அக்டோபர் 15, 16, 17 ஆகிய தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
    அதேபோல்,  தீபாவளி முடிந்த பின்னர், மீண்டும் பணி காரணமாக வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக அக்டோபர் 19, 20, 21, 22 ஆகிய தேதிகளில் விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, ராஜபாளையம், கோவில்பட்டி ஆகிய நகரங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
   எனவே, பொது மக்கள் சிரமமின்றி பேருந்துகளில் பயணம் செய்யலாம் என்றார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/14/தீபாவளிக்கு-சிறப்பு-பேருந்துகள்-போக்குவரத்து-பொது-மேலாளர்-தகவல்-2790131.html
2790130 மதுரை விருதுநகர் அருப்புக்கோட்டை கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் DIN DIN Saturday, October 14, 2017 05:38 AM +0530 அருப்புக்கோட்டை ஸ்ரீ செளடாம்பிகா பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் மாணவர்கள் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு பெற்றனர்.
       இம்முகாமில், கல்லூரி முதல்வர் சிவக்குமார் முன்னிலை வகித்து, அறிமுக உரையாற்றினார். இதில் பங்கேற்ற பல்வேறு பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த ஏராளமாணவர்கள் பங்கேற்றனர். நேர்முகத் தேர்வில் தேர்வாகி வேலைவாய்ப்பு பெற்ற மாணவ, மாணவிகளை, கல்லூரி முதல்வர் சிவக்குமார் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/14/அருப்புக்கோட்டை-கல்லூரியில்-வேலைவாய்ப்பு-முகாம்-2790130.html
2790129 மதுரை விருதுநகர் ஸ்ரீவிலி.யில் சிறுமி மாயம் DIN DIN Saturday, October 14, 2017 05:37 AM +0530 விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் 3 வயது சிறுமியைக் காணவில்லை என, காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகார் செய்யப்பட்டுள்ளது.
     ஸ்ரீவில்லிபுத்தூர், ரைட்டன்பட்டி திருப்பதி காம்பவுண்டில் குடியிருந்து வருபவர் செந்தில்குமார். இவர், ராஜபாளையத்தில் உள்ள பெட்ரோல் பல்க்கில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி முனீஸ்வரி (25). இவர்களுக்கு பிரியதர்ஷினி (3), வீரமணிகண்டன் (2) ஆகிய இரு குழந்தைகள்.
    வியாழக்கிழமை மாலை, முனீஸ்வரி வீட்டில் வீரமணிகண்டனை தூங்க வைத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது விளையாடிக் கொண்டிருந்த பிரியதர்ஷினி காணாமல் போய்விட்டாராம். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் முனீஸ்வரி புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/14/ஸ்ரீவிலியில்-சிறுமி-மாயம்-2790129.html
2790128 மதுரை விருதுநகர் விருதுநகரில் பொதுமக்களுக்கு எம்.எல்.ஏ. நிலவேம்பு குடிநீர் வழங்கல் DIN DIN Saturday, October 14, 2017 05:37 AM +0530 விருதுநகரில் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் தலைமையில், திமுகவினர் பொதுமக்களுக்கு வெள்ளிக்கிழமை நிலவேம்பு குடிநீர் வழங்கினர்.
     விருதுநகர்  மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று  வருகின்றனர்.
     எனவே, டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சலை தடுக்கும் வகையில், விருதுநகர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் தலைமையில்,  அக்கட்சியினர் தேசபந்து மைதானத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினர்.
நிகழ்ச்சியில், திமுக நகரத் தலைவர் தனபால் உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/14/விருதுநகரில்-பொதுமக்களுக்கு-எம்எல்ஏ-நிலவேம்பு-குடிநீர்-வழங்கல்-2790128.html
2790127 மதுரை விருதுநகர் தில்லியில் பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்க வேண்டும்: முன்னாள் எம்.பி. DIN DIN Saturday, October 14, 2017 05:36 AM +0530 தில்லியில் பட்டாசு விற்பனை செய்யவும், வெடிக்கவும் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதை நீக்குவதற்கு மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் என, விருதுநகர் மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கோரிக்கை விடுத்துள்ளார்.
       இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பட்டாசு தொழிலை பாதுகாத்திடவும், அத்தொழிலை மேம்படுத்திடவும் மத்திய அரசு தவறி விட்டது. தில்லியில் பட்டாசு விற்பனை செய்யவும், வெடிப்பதற்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதற்கு, மத்திய அரசு கண்டுகொள்ளாமல் விட்டதே காரணமாகும்.
       இதேபோல், வேறு மாநிலங்களிலும் பட்டாசுக்கு தடை வரலாம். பட்டாசுத் தொழில் தமிழகத்துக்கே உரிய தொழிலாகும். இதில், பல லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை செய்து வருகின்றனர்.மத்திய அரசு பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி.யை நடைமுறைப்படுத்திய காரணத்தினால், பட்டாசு தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பட்டாசு தொழிலை மீட்டு எடுத்துவர, தொழில்முனைவோர் போராடி வருகின்றனர்.
       இந்துக்களின் முக்கியப் பண்டிகையான தீபாவளிக்கு, வழக்கம்போல் தில்லியில் பட்டாசு விற்பனை செய்யவும், பட்டாசு வெடிக்கவும் உச்ச நீதிமன்றத்தின் தடை உத்தரவை நீக்கிட மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் என அதில் வலியுறுத்தியுள்ளார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/14/தில்லியில்-பட்டாசு-வெடிக்க-உச்ச-நீதிமன்றம்-விதித்துள்ள-தடையை-நீக்க-வேண்டும்-முன்னாள்-எம்பி-2790127.html
2790126 மதுரை விருதுநகர் சாத்தூரில் பேரிடர் தணிக்கும் நாள் கருந்தரங்கம், விழிப்புணர்வு பேரணி DIN DIN Saturday, October 14, 2017 05:36 AM +0530 விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் வருவாய்த் துறை சார்பில், தீபாவளியை முன்னிட்டும், பேரிடர் தணிக்கும் நாளை முன்னிட்டும், விழிப்புணர்வு பேரணி மற்றும் கருந்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    சாத்தூர் அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள மதுரை காமராஜர் உறுப்புக் கல்லூரியில் நடைபெற்ற இந்தக் கருந்தரங்குக்கு, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, விழாவை துவக்கி வைத்தார்.
    இந்நிகழ்ச்சியில், இயற்கை பேரிடர் விபத்து மற்றும் தீ விபத்தை தடுப்பது குறித்தும், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்தும், ஆட்சியர் மாணவர்களிடையே விளக்கினார்.
    அதையடுத்து, தீயணைப்புத் துறை பேரிடர் மீட்புப் படையினர், வெள்ளத்தில் சிக்கியவர்கள் மற்றும் தீ விபத்திலிருந்து தங்களை காத்துக்கொள்வது, தீ விபத்தை தடுப்பது குறித்தும், கல்லூரி மாணவர்களுக்கு செயல்விளக்கம் அளித்தனர்.
     இந்த நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் மகேந்திரன், சாத்தூர் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமரன், சாத்தூர் கேட்டாட்சியர் மங்களபாலசுப்பிரமணியன், வட்டாட்சியர் முத்துலட்சுமி, சாத்தூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் நாராயணன், காவல் துறையினர், சாத்தூர் தீயணைப்புத் துறையினர் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளும், வருவாய்த் துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
    இதேபோன்று, பொதுமக்களிடையே இயற்கை பேரிடர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வுப் பேரணியும் நடைபெற்றது. ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய இப் பேரணியை, வட்டாட்சியர் முத்துலட்சுமி துவக்கி வைத்தார். இப் பேரணியில், ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/14/சாத்தூரில்-பேரிடர்-தணிக்கும்-நாள்-கருந்தரங்கம்-விழிப்புணர்வு-பேரணி-2790126.html
2790125 மதுரை விருதுநகர் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் DIN DIN Saturday, October 14, 2017 05:36 AM +0530 ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில், டெங்கு கொசுக்கள் உற்பத்திக்கான காரணங்களை விளக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியும், செயல்முறை விளக்க முகாமும் வியாழக்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையம் நகராட்சி ஆணையர் சசிகலா தலைமையில், டாக்டர் பாபுஜி முன்னிலையில், ராஜபாளையம் முகநூல் நண்பர்கள் இணைந்து, டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாமை நடத்தினர். இதில், ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.
இதில், வீடுகளையும், சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாக வைத்திருக்கவும், டெங்கு காய்ச்சலை ஒழிக்கவும் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/14/டெங்கு-காய்ச்சல்-விழிப்புணர்வு-முகாம்-2790125.html
2790124 மதுரை விருதுநகர் சிவகாசியில் மாரத்தான் போட்டி: அமைச்சர் தொடக்கி வைத்தார் DIN DIN Saturday, October 14, 2017 05:36 AM +0530 சிவகாசியில் அக்டோபர் 23 ஆம் தேதி நடைபெற உள்ள எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாரத்தான் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
      இதில், ஆண்களுக்கு 6.4 கி.மீ. தொலைவும், பெண்களுக்கு 3.5. கி.மீ. தொலைவும் இலக்காக நிர்ணயம் செய்யப்படிருந்தது. இங்குள்ள அண்ணாமலை நாடார்-உண்ணாமலையம்மாள் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் தலைமையில், பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி போட்டியை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
     இதில், ஆண்கள் பிரிவில் சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி மாணவர் எஸ். குணாளன் முதலிடத்தையும், அதே கல்லூரி மாணவர் க. ராஜேந்திர கோகுல் இரண்டாமிடமும், மீனாட்சிபுரம் பெருந்தலைவர் காமராஜர் மேல்நிலைப் பள்ளி மாணவர் மாரிசரஸ் மூன்றாமிடமும் பெற்றனர்.
    பெண்கள் பிரிவில், சிவகாசி எஸ்.ஹெச்.என்.வி. மேல்நிலைப் பள்ளி மாணவி கார்த்தீஸ்வரி முதலிடமும், சாட்சியாபுரம் எஸ்.சி.எம்.எஸ். பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி மகேஸ்வரி இரண்டாமிடமும், எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரி மாணவி பாக்கியலட்சுமி மூன்றாமிடமும் பெற்றனர். இவர்களுக்கு, அக்டோபர் 23 ஆம் தேதி நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பரிசு  வழங்கப்படும்.
    அதையடுத்து, அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, விழா மேடைஅமைக்கும் பணியை பார்வையிட்டார். அதிகாரிகளிடம், பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். இதில், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் மு. சந்திரபிரபா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மு. ராசராசன், மாவட்ட வருவாய் அலுவலர் சி. முத்துக்குமாரன், சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் தினகரன், வட்டாட்சியர் ஸ்ரீதரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/14/சிவகாசியில்-மாரத்தான்-போட்டி-அமைச்சர்-தொடக்கி-வைத்தார்-2790124.html
2790123 மதுரை விருதுநகர் அருப்புக்கோட்டையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி DIN DIN Saturday, October 14, 2017 05:35 AM +0530 அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியும், வருவாய்த் துறையும் இணைந்து, வெள்ளிக்கிழமை வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணியை நடத்தின.
     இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரிச் செயலர் ராமசாமி முன்னிலை வகித்தார். சுமார் 500-க்கும் மேற்பட்ட  மாணவ, மாணவியர் கலந்துகொண்ட இப்பேரணியை, வருவாய்க் கோட்டாட்சியர் செல்வி தலைமை வகித்து தொடக்கி வைத்தார். கல்லூரி வாசல் முன்பாக தொடங்கிய இப்பேரணியில், வாக்காளர் விழிப்புணர்வுப் பதாகைகளை ஏந்தியபடி கல்லூரி மாணவ, மாணவியர், ஜனநாயகக் கடமையான வாக்களிப்பின் அவசியத்தை வலியுறுத்தியும், நூறு சதவீத வாக்களிப்புக்கு பொதுமக்கள் உறுதியேற்கவும்  முழக்கமிட்டபடி சென்றனர். இப்பேரணியானது, நகரின் முக்கிய வீதிகளின் வழியே சென்றது.  ஏற்பாடுகளை, கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/14/அருப்புக்கோட்டையில்-வாக்காளர்-விழிப்புணர்வு-பேரணி-2790123.html
2790122 மதுரை விருதுநகர் விருதுநகரில் ரௌடி வெட்டிக்கொலை DIN DIN Saturday, October 14, 2017 05:35 AM +0530 விருதுநகரில் வெள்ளிக்கிழமை பாண்டி (29) என்ற ரௌடியை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிவிட்டனர்.
       விருதுநகர், மல்லி கிட்டங்கித் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் மகன் பாண்டி (29). இவர் மீது 6 கொலை வழக்குகள் உள்ளிட்ட 23 வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. இதனால்,  இவரது பெயர் ரௌடி பட்டியலில் காவல் நிலையத்தில் உள்ளது.
     இந்நிலையில், முன்விரோதம் காரணமாக பாண்டியை கருப்பசாமி நகர் அருகே உள்ள எரயநாயக்கனூர் ஊருணிப் பகுதியில் மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்து சாலையில் வீசிச் சென்றனர். தகவலறிந்த விருதுநகர் துணைக் காவல் கண்காணிப்பா ளர் லெட்சுமணன் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டார்.
     அதன்பின்னர், பாண்டியின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார்,  விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து, விருதுநகர் கிழக்கு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/14/விருதுநகரில்-ரௌடி-வெட்டிக்கொலை-2790122.html
2790121 மதுரை விருதுநகர் பேரிடர் தடுப்பு விழிப்புணர்வு: மாணவர்கள் பங்கேற்பு DIN DIN Saturday, October 14, 2017 05:35 AM +0530 விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் வெள்ளிக்கிழமை  நடைபெற்ற பேரிடர் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
     தேசிய பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், ராஜபாளையம் வருவாய்த் துறை மற்றும் தீயணைப்புத் துறை சார்பில்,  அரசுப் பள்ளி மாணவர்கள் 200 பேர் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    அரசுப் பள்ளி மைதானத்திலிருந்து புறப்பட்ட மாணவர்கள் பேரணியானது, ரயில்வே பீடர் சாலை, டி.பி. மில்ஸ் சாலை, காமராஜர் நகர், பழைய பேருந்து நிலையம், தென்காசி சாலை
வழியாக அரசு மகப்பேறு மருத்துவமனை வளாகத்தை அடைந்தது.
    அங்கு, தீயணைப்புத் துறை சார்பில் மழைக் காலங்களில் வெள்ளம் ஏர்படும் போது எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்,  தண்ணீரில் சிக்கிக் கொண்டால் தப்பிக்கும் வழிமுறைகள், அத்தியாவசியமான உணவுப் பொருள்களை இருப்பு வைக்கும் முறைகள் குறித்தும் தீயணைப்பு நிலைய அதிகாரி விளக்கமளித்தார்.
    தொடர்ந்து,  தீ விபத்து ஏற்படும் நேரத்தில் காயமடைந்தவர்களை பாதுகாப்பாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பல்வேறு வழிமுறைகள் குறித்து தீயணைப்புத் துறை வீரர்கள் மாணவர்களுக்கு செயல்விளக்கம் அளித்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/14/பேரிடர்-தடுப்பு-விழிப்புணர்வு-மாணவர்கள்-பங்கேற்பு-2790121.html
2790120 மதுரை விருதுநகர் மது அருந்த பணம் தர தாய் மறுப்பு: இளைஞர் உடலில் பிளேடால் கீறி காயம் DIN DIN Saturday, October 14, 2017 05:34 AM +0530 சிவகாசி -வெம்பக்கோட்டை சாலையில் சித்துராஜபுரத்தைச் சேர்ந்த பட்டாசு வியாபாரி உதயக்குமார். இவரது மகன் ஜெகதீசன் (18). இவர், மதுப் பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டதால், மதுரையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வியாழக்கிழமை வீடு திரும்பியுள்ளார். அதையடுத்து, மாலையில் தனது தாய் மாரியம்மாளிடம் மது அருந்த பணம் கேட்டாராம்.
     மாரியம்மாள் பணம் கொடுக்க மறுத்ததை அடுத்து, ஜெகதீஸன் வீட்டில் உள்ள ஒரு அறைக்குச் சென்று கதவை பூட்டிக் கொண்டாராம்.  சிறிதுநேரம் கழித்து ஜெகதீஸன் கதவை திறந்து வெளியே வந்தபோது, அவர் தனது உடலில் பிளேடால் கீறி ரத்தம் சிந்துவதைக் கண்டு தாயார் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
     உடனே, அவர் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து சிவகாசி நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/14/மது-அருந்த-பணம்-தர-தாய்-மறுப்பு-இளைஞர்-உடலில்-பிளேடால்-கீறி-காயம்-2790120.html
2790119 மதுரை விருதுநகர் சிவகாசி பள்ளியில் பழங்கால கலைப்பொருள்கள் கண்காட்சி DIN DIN Saturday, October 14, 2017 05:34 AM +0530 சிவகாசி அரிமா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை பழங்கால கலைப் பொருள்கள் மற்றும் நாணயங்கள் கண்காட்சி நடைபெற்றது.
    அக்டோபர் 14 ஆம் தேதி வரை நடைபெறும் இக் கண்காட்சியை, பள்ளி முதல்வர் அய்யாவு தங்கமணி தொடக்கி வைத்தார். சிவகாசியைச் சேர்ந்த நாணய சேகரிப்பாளர்  ஐ.கே. ராஜராஜன் தான் சேகரித்திருந்த பழங்கால விளக்கு, அலங்காரப் பொருள்கள், உலோக தீர்த்த செம்பு, கலயம், மன்னர்கள் பயன்படுத்திய மர உண்டியல், வளையல்கள், வீட்டு உபயோகப் பொருகள், சிறிய ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை இக் கண்காட்சியில் வைத்திருந்தார்.
    மேலும், மௌரிய பேரரசின் முதல் வெள்ளி நாணயம், அசோக சக்கரவர்த்தி, ராஜராஜசோழன், ராஜேந்திர சோழன் உள்ளிட்ட மன்னர்கள் காலத்தில் உபயோகத்திலிருந்த நாணயங்கள், வெளிநாட்டு ரூபாய் தாள்களும் இடம்பெற்றிருந்தன.
     இந்த கண்காட்சியில் உள்ள பொருள்களின் விவரம் குறித்து பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களிடம் விளக்கினர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/14/சிவகாசி-பள்ளியில்-பழங்கால-கலைப்பொருள்கள்-கண்காட்சி-2790119.html
2790118 மதுரை விருதுநகர் விருதுநகர் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு இல்லை: அமைச்சர் DIN DIN Saturday, October 14, 2017 05:33 AM +0530 விருதுநகர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை என, பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
     சிவகாசியில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாரத்தான் போட்டியைத் தொடக்கி வைத்த அமைச்சர், பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: விருதுநகர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிக்காத அளவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
     அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏதாவது ஒரு பகுதியில் டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டால்,  உடனடியாக அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்து மாத்திரைகள் இருப்பு உள்ளன என்றார்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/14/விருதுநகர்-மாவட்டத்தில்-டெங்கு-பாதிப்பு-இல்லை-அமைச்சர்-2790118.html
2790117 மதுரை விருதுநகர் வி.பி.எம்.எம். கல்வி நிறுவனத்தில் மாநில அளவில் அறிவியல் கண்காட்சி தொடக்கம் DIN DIN Saturday, October 14, 2017 05:33 AM +0530 விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் வி.பி.எம்.எம். மகளிர் கல்வி நிறுவனங்களின் சார்பில், இளம் விஞ்ஞானி-2017 என்ற மாநில அளவில் பள்ளிகளுக்கிடையேயான அறிவியல் கண்காட்சிப் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
     இக் கண்காட்சியை, வி.பி.எம்.எம். மகளிர் கல்விக் குழுமத்தின் தலைவர் வி.பி.எம்.சங்கர் தலைமையில், தாளாளர் பழனிச்செல்வி சங்கர் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். அறிவியல் கண்காட்சியில், 58 பள்ளிகளிலிருந்து வந்துள்ள மாணவ-மாணவியர் 200-க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.
     இக்கண்காட்சியை, மாவட்டம் முழுவதுமிருந்து வந்திருந்த பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 2,500 மாணவ-மாணவியர் கண்டு ரசித்தனர். வி.பி.எம்.எம். கட்டட நுண்கலைக் கல்லூரியின் சார்பாக, மாணவியர்கள் நமது கலாசாரம், பாரம்பரியம், ஓவியம் மற்றும் கட்டடவியல் சார்ந்த படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.
      கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள 6 தரமான படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. முதல் பரிசாக ஒரு படைப்புக்கு  ரூ.20,000, இரண்டாம் பரிசாக இரு படைப்புகளுக்கு தலா ரூ.10,000 மற்றும் மூன்றாம் பரிசாக 3 படைப்புகளுக்கு தலா  ரூ. 5,000 வழங்கப்பட உள்ளது.
    மேலும், மிகச் சிறந்த படைப்பை அளித்துள்ள ஒரு மாணவர் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு இளம் விஞ்ஞானி-2017 என்ற பட்டம் வழங்கப்படும். வி.பி.எம்.எம். கல்வி நிறுவனம் சார்பில் மாணவ, மாணவியர் கண்காட்சியை கண்டு களிக்க இலவச கல்லூரி பேருந்து மாவட்டம் முழுவதும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்படுகிறது.
     விழாவுக்கான ஏற்பாடுகளை, நிறுவனங்களின் கல்வி இயக்குநர் டாக்டர் ரா. சபரிமாலா, பள்ளி முதல்வர் சுபிமோள் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி பேராசிரியர்கள் செய்து வருகின்றனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/14/விபிஎம்எம்-கல்வி-நிறுவனத்தில்-மாநில-அளவில்-அறிவியல்-கண்காட்சி-தொடக்கம்-2790117.html
2789558 மதுரை விருதுநகர் மண்டல அளவில் ஜிம்னாஸ்டிக் போட்டிகள்: அருப்புக்கோட்டை பள்ளி மாணவர்கள் முதலிடம் DIN DIN Friday, October 13, 2017 06:59 AM +0530 ராமநாதபுரம் மண்டல அளவில் பள்ளிகளுக்கிடையிலான ஜிம்னாஸ்டிக் போட்டிகளில், அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர்.
     ராமநாதபுரம் மண்டலத்துக்கு உள்பட்ட விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, சிவகங்கை, தேவகோட்டை, பரமக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 7 கல்வி மாவட்ட பள்ளிகளுக்கிடையிலான ஜிம்னாஸ்டிக் போட்டிகள், விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் நடைபெற்றன.
    இதில், அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 14 வயதுக்குள்பட்டோர் பிரிவில் கே. அழகர் மற்றும் பி. சரண்சரத், 17 வயதுக்குள்பட்டோர்  பிரிவில் ஜே. மாதவன் மற்றும் எஸ். ஹேமச்சந்திரன், 19 வயதுக்குள்பட்டோர் பிரிவில் பி. சந்தோஷ் ஆகிய மாணவரும் முதலிடங்களைப் பிடித்து,  மாநில அளவில் சேலத்தில் நடைபெற உள்ள இறுதிப் போட்டிகளில் பங்கேற்க தேர்வாகியுள்ளனர்.
 வெற்றி பெற்று மாநில போட்டிக்குத் தேர்வாகியுள்ள இம்மாணவர்களையும் மற்றும் இரண்டாமிடம், மூன்றாமிடம்  பெற்ற மாணவர்களையும், அவர்களின் வெற்றிக்குத் துணையாயிருந்த உடற்கல்வி இயக்குநர் செளந்தரபாண்டியன் உள்ளிட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் அனைவரையும், அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறைத் தலைவர் எம். சுதாகர், பள்ளிச்
செயலர் என்.வி. காசிமுருகன், பள்ளித் தலைவர் ஜே. ஜெயகணேசன் மற்றும் பள்ளி நிர்வாகக் குழுவினரும் , தலைமை ஆசிரியர் ஏ. ஆனந்தராஜன் ஆகியோரும் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/13/மண்டல-அளவில்-ஜிம்னாஸ்டிக்-போட்டிகள்-அருப்புக்கோட்டை-பள்ளி-மாணவர்கள்-முதலிடம்-2789558.html
2789557 மதுரை விருதுநகர் தொல்லியல் கருத்தரங்கம் DIN DIN Friday, October 13, 2017 06:59 AM +0530 ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் தொல்லியல் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரி வரலாற்றுத் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். தமிழக தொல்லியல் துறை முன்னாள் இணை இயக்குநர் சந்திரவாணன் , முன்னாள் பேராசிரியர் சந்திசேகரன் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்று பேசினர்.
முன்னதாக, வரலாற்று மன்றச் செயலர் ரமேஷ் குமார் வரவேற்றார். வரலாற்றுத் துறைப் பேராசிரியர் வெங்கடேஸ்வரன் நன்றி கூறினார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/13/தொல்லியல்-கருத்தரங்கம்-2789557.html
2789556 மதுரை விருதுநகர் மானியத்தில் "அசோலா' தீவனப் பயிர் வளர்க்க விவசாயிகளுக்கு அழைப்பு DIN DIN Friday, October 13, 2017 06:59 AM +0530 ம.ரெட்டியபட்டி வட்டார விவசாயிகள், வேளாண் விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் மூலம், அரசு மானியத்தில் அசோலா தீவனப் பயிர் வளர்த்தல் மற்றும் சூரிய மின்விளக்குப் பொறியை அமைத்துப் பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
     இது குறித்து வட்டார  வேளாண் உதவி இயக்குநர் சோ. துரைக்கண்ணம்மாள் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள தகவல்: அசோலா தீவனப் பயிரானது ஒரு கிலோ கடலைப் புண்ணாக்குக்கு  இணையான சத்து கொண்டது. இப்பயிரை குறைந்த செலவில் வளர்த்து 15 நாள்கள் இடைவெளியில் அறுவடை செய்து பயன்படுத்தலாம்.
    இத் தீவனத்தைப் பயன்படுத்தினால் பால் மாடுகள் 10 முதல் 20 சதவீதம் அதிகம் பால் சுரப்பதுடன், அதிகம் கொழுபில்லாத சத்தான பால் கிடைக்கிறது. கோழித் தீவனமாகப் பயன்படுத்தினால், அதிக கணம் கொண்ட மஞ்சள் கருவுடன் கூடிய முட்டைகளின் எண்ணிக்கையும் அதிகமாகக் கிடைக்கும்.
    எனவே, வட்டார விவசாயிகள் தங்கள் நிலத்தில் அரசு மானியத்தில் (தலா ரூ.4000 மட்டும் )அசோலா தீவனப் பயிர் திடல் அமைத்தல் மற்றும் சூரியமின்சக்தி பூச்சிப்பொறி அமைத்தல் ஆகியவற்றுக்கு, வட்டார வேளாண் அலுவலகத்தை
அணுகுமாறு அதில் தெரிவித்துள்ளார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/13/மானியத்தில்-அசோலா-தீவனப்-பயிர்-வளர்க்க-விவசாயிகளுக்கு-அழைப்பு-2789556.html
2789555 மதுரை விருதுநகர் விருதுநகர் நகராட்சியில் இணையதளம் செயல்படாததால் பணிகள் பாதிப்பு DIN DIN Friday, October 13, 2017 06:58 AM +0530 விருதுநகர் நகராட்சியில் கடந்த சில நாள்களாக இணையதள சேவை பாதிப்புக்குள்ளாகி இருப்பதால், வரி வசூல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
      விருதுநகர் நகராட்சியில் கடந்த மார்ச் மாதம் முதல் ஒருங்கிணைந்த இணையதள சேவை மையம்  தொடங்கப்பட்டது. இதன் மூலம், சொத்துவரி, குடிநீர் வரி, தொழில்வரி செலுத்துதல், பிறப்பு மற்றும் இறப்பு சான்று பெறுதல், சொத்துவரி மற்றும் குடிநீர் வரி பெயர் மாற்றம் செய்தல் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் இணையதளம் வாயிலாக கட்டணம் வசூலிக்கப்பட்டு ரசீது வழங்கப்பட்டன.
        இந்நிலையில், கடந்த சில நாள்களாக இணையதள பாதிப்பு மற்றும் சர்வர் பிரச்னை காரணமாக வீட்டுவரி, சொத்துவரி மற்றும் தண்ணீர் கட்டணம் செலுத்த முடியவில்லை. இதனால், தினந்தோறும் பொது மக்கள் நகராட்சிக்கு வந்து திரும்பிச் செல்கின்றனர். இதன் காரணமாக, பொது மக்களுக்கும், நகராட்சி ஊழியரகளுக்கும் இடையே தேவையற்ற பிரச்னை ஏற்படுகிறது.
    இதேபோல், விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகளை பிரசவிக்கும் தாய்மார்கள், தங்களது குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் பெற முடியாமல் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
    எனவே, இணையதள பாதிப்பு மற்றும் சர்வரை சரிசெய்ய நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/13/விருதுநகர்-நகராட்சியில்-இணையதளம்-செயல்படாததால்-பணிகள்-பாதிப்பு-2789555.html
2789554 மதுரை விருதுநகர் டெங்கு ஒழிப்புப் பணியில் பொதுமக்களின் ஒத்துழைப்பு வேண்டும்: ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் DIN DIN Friday, October 13, 2017 06:58 AM +0530 சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கும், டெங்கு ஒழிப்புப் பணிக்கும், பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்று, மம்சாபுரம் அரசு ஆரம்ப
சுகாதார நிலைய தலைமை மருத்துவர் எஸ். கலா தெரிவித்துள்ளார்.
      மம்சாபுரம் பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று, பொதுமக்களிடையே அவர் கூறியதாவது:
     மாணவர்களுக்கு தொடக்க நிலையில் இருந்து பாடங்களில் தன் சுத்தம், சுற்றுப்புற சுகாதாரம் குறித்த கருத்துகள் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. மாணவர்கள் இது குறித்து கிராமப்புறங்களில் உள்ள தங்களது பெற்றோருக்கு எடுத்துக் கூறி, முன்மாதிரியாக தங்களது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
     இதனைக் கண்டு பக்கத்தில் உள்ளவர்களும் தங்களது வீடு, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வர். இதனால், பல்வேறு நோய் தொற்றுகளைத் தடுக்கலாம்.
   அரசு எவ்வளவுதான் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், பொதுமக்கள் ஒத்துழைக்கவில்லை என்றால் சுகாதாரப் பணியை முழுமையாக நிறைவு செய்ய இயலாது. சுகாதாரப் பணியாளர்கள் துப்புரவு செய்துவிட்டு சென்ற உடனே மீண்டும் மீண்டும் பல இடங்களில் தேவையற்ற குப்பைகளை குவித்து வைப்பது, திறந்தவெளியில் மலம் கழிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதால்தான், பல்வேறு நோய்த் தொற்றுகள் ஏற்படுகின்றன.
     அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் குப்பைகளை கொட்ட வேண்டும். அரசு கட்டி வைத்துள்ள சுகாதார வளாகங்களை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும். தங்களது வீட்டு கழிவு நீரை, வீட்டில் தோட்டம் அமைத்து அதற்கு பாய்ச்சலாம் என்றார் அவர்.
பின்னர், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், சித்த மருத்துவர் ஆரோக்கியராஜ், மம்சாபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/13/டெங்கு-ஒழிப்புப்-பணியில்-பொதுமக்களின்-ஒத்துழைப்பு-வேண்டும்-ஆரம்ப-சுகாதார-நிலைய-தலைமை-மருத்துவர்-2789554.html
2789553 மதுரை விருதுநகர் விருதுநகர் ஓனாண் ஓடையில் வெள்ளம்: பாலம் சேதத்தால் பொதுமக்கள் அவதி DIN DIN Friday, October 13, 2017 06:37 AM +0530 விருதுநகர் பகுதியிலுள்ள ஓனாண் ஓடையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால்,  ஏற்கெனவே ஓடையை கடக்க உதவும் பாலம் சேதமடைந்திருப்பதால், பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குச் செல்ல முடியாமல்  தவிக்கின்றனர்.
விருதுநகர் ஆத்துப்பாலம் கவுசிகா ஆற்றின் அருகே ஓனாண் ஓடை உள்ளது. இந்த ஓடை வழியாக, கருப்பம்பட்டி, பாவாலி, குமாரலிங்கபுரம் மற்றும் சிவகாசி சாலையில் பெய்யும் மழை நீரானது, கவுசிகா ஆற்றை வந்தடைகிறது. கடந்த 2 நாள்களாக, விருதுநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால்,  ஓனாண் ஓடையில் மழை நீரானது பெருக்கெடுத்து ஓடுகிறது. கவுசிகா ஆறு மற்றும் ஓனாண் ஓடை இணையும் இடத்தில், கூரைக்குண்டு ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. மேலும், இங்குள்ள தூய ஜெபமாலை அன்னை தேவாலயத்துக்கு, முத்துராமலிங்கம் நகர், சிவகாசி சாலை, பாலம்மாள் நகர், எம்.ஜி.ஆர். சாலை, சாத்தூர் சாலை பகுதியைச் சேர்ந்தவர்கள் வழிபாட்டுக்காக வந்து செல்கின்றனர்.
   ஏற்கெனவே, சில ஆண்டுகளுக்கு முன் பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், ஓனாண் ஓடையின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலம் உடைந்தது. அதையடுத்து, பாலம் சீரமைக்கப்படவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் சிறு மழைக்குக் கூட சிரமப்பட்டு வந்தனர்.தற்போது பெய்த தொடர் மழையால், ஓனாண் ஓடையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அப்பகுதி துண்டிக்கப்பட்டு, பொதுமக்கள் வெளியே வர முடியாமலும், அப்பகுதிக்குச் செல்ல முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.
    எனவே, ஓனாண் ஓடையில் உடைந்த பாலத்தை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/13/விருதுநகர்-ஓனாண்-ஓடையில்-வெள்ளம்-பாலம்-சேதத்தால்-பொதுமக்கள்-அவதி-2789553.html
2788916 மதுரை விருதுநகர் ரூ 2,500 லஞ்சம்: சிவகாசியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கைது DIN DIN Thursday, October 12, 2017 08:49 AM +0530 அரசு மானிய காசோலை வழங்க ரூ. 2,500 லஞ்சம் பெற்றதாக சிவகாசி ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலரை  லஞ்ச ஒழிப்பு போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
சிவகாசி வட்டம்,  மீனம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம்.  ஊராட்சி ஒன்றிய ஒப்பந்ததாரர். ஊராட்சி ஒன்றியப் பகுதியில் 14 இடங்களில் தனிநபர் கழிப்பிடங்கள் கட்ட செல்வம் ஒப்பந்தம் பெற்றுள்ளார்.  முதல் கட்டமாக 4 இடங்களில் பணிகளை
முடித்துள்ளார்.
ஒரு கழிப்பிடம் கட்ட அரசு ரூ. 12 ஆயிரம் மானியம்  வழங்குகிறது.  அதன்படி 4 கழிப்பிடங்களுக்கு ரூ. 48ஆயிரம் மானியம் செல்வத்துக்கு வழங்கப்பட வேண்டும்.  இந்த பணத்துக்கான காசோலையைத் தருவதற்கு ரூ. 3,000 லஞ்சம் வேண்டும் என துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார் செல்வத்திடம் கேட்டுள்ளார். இதற்கு இடைத்தரகராக ஓய்வு பெற்ற அரசு ஊழியர் மீனாட்சி காலனியைச் சேர்ந்த மார்டின் (62) செயல்பட்டாராம். இதையடுத்து ரூ. 2,500 லஞ்சம் கொடுப்பதாக பேசி முடிக்கப்பட்டதாம். இதைத் தொடந்து செல்வம் விருதுநகரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் செய்தார். அவர்கள் ரசாயனம் தடவிய பணத்தாள்களை செல்வத்திடம் கொடுத்தனுப்பினர்.  
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்த சிவகுமாரிடம் புதன்கிழமை பிற்பகல் 12.30 மணிக்கு அந்தப் பணத்தை செல்வம் கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் சீனிவாசபெருமாள், ஆய்வாளர்கள் விஜயகாண்டீபன், பூமிநாதன் ஆகியோர் சிவகுமாரையும்,  உடனிருந்த இடைத்தரகர் மார்டினையும் கைது செய்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/12/ரூ-2500-லஞ்சம்-சிவகாசியில்-துணை-வட்டார-வளர்ச்சி-அலுவலர்-கைது-2788916.html
2788839 மதுரை விருதுநகர் விடுதியில் தூக்கிட்டு மாணவர் தற்கொலை DIN DIN Thursday, October 12, 2017 07:54 AM +0530 அருப்புக்கோட்டையிலிருந்து சுக்கில் நத்தம்  செல்லும் சாலையில் ஆதிதிராவிடர் நலத் துறை கல்லூரி மாணவர் விடுதி உள்ளது. இங்கு சுமார் 50 மாணவர்கள் தங்கியுள்ளனர்.  இங்கு தங்கியிருந்தவர், விளாத்திகுளம் அருகே உள்ள குலயம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகன் முத்துராமச்சந்திரன்(19). அருப்புக்கோட்டை -திருச்சுழி சாலையில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் விடுதியின் சமையலறையில் தூக்கிட்ட நிலையில் புதன்கிழமை சடலமாகத் தொங்கினார்.  மாணவர் இறப்புக்கான காரணங்கள் குறித்து நகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/12/விடுதியில்-தூக்கிட்டு-மாணவர்-தற்கொலை-2788839.html
2788838 மதுரை விருதுநகர் "வாய்ப்புக்களை கண்டறிந்தால் வெற்றி' DIN DIN Thursday, October 12, 2017 07:53 AM +0530 வணிக வாய்ப்புகளை கண்டறிந்தால் தொழிலில் வெற்றி பெறலாம் என சென்னை லயோலா கல்லூரி வணிகவியல்துறை பேராசிரியர் எஸ்.இளங்கோவன் கூறினார்.
சிவகாசி எஸ்.எப்.ஆர்.மகளிர் கல்லூரியில் வணிகவியல் சுயநிதிப்பிரிவு சார்பில் புதன்கிழமை வணிகம் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது.நி கழ்ச்சிக்கு முதல்வர் த.சசிரேகா தலைமை வகித்தார்.
இதில் இளங்கோவன்  பேசியதாவது: வியாபாரத்தில் தேடுதல் இருக்க வேண்டும். வேலைகளை பகிர்ந்தளிக்க வேண்டும். நம்மிடம் வேலை பார்க்கும் ஊழியர்களின் அறிவாற்றலையும்,  உழைப்பையும் பயன்படுத்தும் விதத்துக்கு ஏற்ப நிறுனவத்தின் வளர்ச்சிஇருக்கும். வணிக வாய்ப்புக்களை கண்டறிந்தால் தொழிலில் வெற்றி பெறலாம். உண்மையான உழைப்புக்கு களைப்புத் தெரியாது என்றார்.
முன்னதாக உதவிப் பேராசியர் ஜீவப் பிரியா வரவேற்றார். எஸ்.காயத்திரி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாட்டுகளை ஒருங்கிணைப்பாளர் மீ.ஜெயலட்சுமி செய்திருந்தார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/12/வாய்ப்புக்களை-கண்டறிந்தால்-வெற்றி-2788838.html
2788837 மதுரை விருதுநகர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் DIN DIN Thursday, October 12, 2017 07:53 AM +0530 ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக பாஜக தலைவர் அமித்ஷா மகனை கைது செய்யக் கோரி ராஜபாளையத்தில் புதன்கிழமை விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில பொதுக்குழு உறுப்பி னர் ராஜலிங்கராஜா தலைமை வகித்தார். காங்கிரஸ் தலைவர் தளவாய்பாண்டியன் ஆர்ப் பாட்டத்தை தொடக்கி வைத்தார். நிர்வாகிகள் குமாரசாமிராஜா, சக்திமோகன், சங்குத்துரை முன்னிலை வகித்தனர். நகரத் தலைவர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/12/காங்கிரஸ்-ஆர்ப்பாட்டம்-2788837.html
2788836 மதுரை விருதுநகர் உணவுப் பொருள் தயாரிப்பாளர்கள் உரிமம் பெற அறிவுறுத்தல் DIN DIN Thursday, October 12, 2017 07:53 AM +0530 பண்டிகைக்காக சிறப்பாக தயாரிக்கப்படும் இனிப்புகள் உள்பட உணவு பொருள்கள் தயாரிப்பாளர்கள் உரிமம் பெற வேண்டும்  என மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா தெரிவித்தார்.  
அவர் கூறியதாவது: தற்போது பண்டிகை காலம் தொடங்கியுள்ளது. பண்டிகைக் காலத்தில் விதவிதமான இனிப்பு பலகாரங்கள், காரங்கள் மற்றும் கேக் போன்ற உணவுப் பொருள்களை மக்கள் விரும்பி வாங்குவர். தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு மற்றும் கார பண்டங்களுக்கு சீட்டு நடத்துபவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவுப் பாதுகாப்பு துறையில் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும்.
இனிப்பு மற்றும் பேக்கரி தயாரிப்பவர்கள் தரமான மூலப்பொருள்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து வழங்க வேண்டும். கலப்பட பொருகளையோ, அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான நிறமிகளையோ உபயோகிக்கக் கூடாது. பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருள்களுக்கு, விவரச் சீட்டு வைத்து அதில் தயாரிப்பாளரின் முழுமுகவரி,  உணவுப் பொருளின் பெயர்,  தயாரிக்கப்பட்ட, பேக்கிங் செய்யப்பட்ட தேதி, காலவதியாகும் காலம், சைவ மற்றும் அசைவ குறியீடு ஆகியவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும்.
மேலும், உணவுப் பொருள்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் பொது மக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். பொதுமக்களும் பண்டிகை காலங்களில் பலகாரங்கள் வாங்கும்போது, உணவுப் பாதுகாப்பு துறையில் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டும் வாங்க வேண்டும்.  இது தொடர்பாக புகார்கள் இருந்தால் விருதுநகர் மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை நியமன அலுவலரி டமோ அல்லது மாநில உணவுப் பாதுகாப்பு துறை அலுவலக கட்செவி அஞ்சல் 94440 42322 என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம் என்றார் அவர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/12/உணவுப்-பொருள்-தயாரிப்பாளர்கள்-உரிமம்-பெற-அறிவுறுத்தல்-2788836.html
2787538 மதுரை விருதுநகர் வியாபாரியிடம் பணம் பறித்தவர் கைது DIN DIN Tuesday, October 10, 2017 05:47 AM +0530 சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த நபரை போலீஸார் கைது செய்தனர்.
சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரம் பகுதியைச் சேர்ந்த வியாபாரி அழகர்சாமி(30). இவர் தனது மோட்டார் சைக்கிளில் சிவகாசி-விளாம்பட்டி சாலையில் சென்றுள்ளார்.  
கல் மண்டபம் அருகே மர்மநபர் ஒருவர் வழி வழி மறித்து கத்தியை காட்டிமிரட்டி ,அவர் பையில் இருந்த பணம் ரூ.3 ஆயிரத்தை
பறித்துக்கொண்டு தப்பியோட முயற்சித்தாராம். அப்போது,
அக்கம் பக்கம் உள்ளவர்களின் உதவியுடன், அந்த நபரை பிடித்து அழகர்சாமி போலீஸில் ஒப்படைத்தார். விசாரணையில் அந்த
நபர் பராசக்தி காலனி கருப்பசாமி(29) என தெரியவந்தது. சிவகாசி நகர் போலீஸார் அவரை கைது செய்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/10/வியாபாரியிடம்-பணம்-பறித்தவர்-கைது-2787538.html
2787537 மதுரை விருதுநகர் அச்சக உரிமையாளர் மனைவியிடம் தாலிச் சங்கிலி பறிப்பு DIN DIN Tuesday, October 10, 2017 05:47 AM +0530 சிவகாசியில் அச்சக உரிமையாளர் மனைவியிடம் 16 பவுன் தாலிச் சங்கிலியை பறித்து சென்ற இருவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
சிவகாசி-வெம்பக்கோட்டை சாலையில் உள்ள கோபால்நகரில் வசித்து வருபவர் உமாசங்கர். இவர் நாரணாபுரத்தில் ஆப் செட் அச்சகம் நடத்தி வருகிறார்.
இவரது மனைவி சந்திரகலா(42). இவர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் , அம்மன்கோவில் பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்கு வீட்டிருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றுள்ளார்.
ஜக்கம்மாள் கோயிலருகே வேன் நிறுத்தம் அருகே சென்றபோது,  பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், சந்திரகலா கழுத்தில் அணிந்திருந்த 16 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிவிட்டனராம். சிவகாசி நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/10/அச்சக-உரிமையாளர்-மனைவியிடம்-தாலிச்-சங்கிலி-பறிப்பு-2787537.html
2787536 மதுரை விருதுநகர் பன்றிகள் விஷம் வைத்து கொலை 4 பேர் மீது வழக்கு DIN DIN Tuesday, October 10, 2017 05:46 AM +0530 ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பன்றிகளை விஷம் வைத்துக் கொன்றதாக நால்வர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோட்டையூர் கிழக்கு காலனியைச் சேர்ந்தவர் கோ.சின்ன முனியாண்டி (55). இவர் வீட்டின் அருகே தாழ்வாரம் அமைத்து பன்றிகள் வளர்த்து வந்துள்ளார். திங்கள்கிழமை அனைத்து பன்றிகளும் இறந்து கிடந்துள்ளன.
இது குறித்து வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் சின்ன முனியாண்டி புகார் செய்தார். இதே இடத்தைச் சேர்ந்த கோடாங்கி மகன் முனியாண்டி, இவரது மனைவி சுந்தரம்மாள், ஊக்காளி மகன் சுந்தரராஜ், குண்டன் மனைவி மகாலட்சுமி ஆகியோர் சேர்ந்து  பன்றிகளை விஷம் வைத்து கொன்றுவிட்டதாக புகாரில் தெரிவித்திருந்தார். இதன் பேரில் அவர்கள் 4 பேர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/10/பன்றிகள்-விஷம்-வைத்து-கொலை-4-பேர்-மீது-வழக்கு-2787536.html
2787535 மதுரை விருதுநகர் கலை இலக்கியப் போட்டிகளில் தேவாங்கர் கல்லூரி 2-ஆமிடம் DIN DIN Tuesday, October 10, 2017 05:45 AM +0530 கலை மற்றும் அறிவியல்  கல்லூரிகளுக்கிடையிலான பல்வேறு கலை இலக்கியப்போட்டிகளில் மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்று அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி மாணவ, மாணவியர் சாதனை படைத்துள்ளனர்.
  சிவகாசியில் ஜேசிஐ சார்பாக நடைபெற்ற போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு கலைக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ,மாணவியர் பங்கேற்றனர். இதில் அனைத்துப் போட்டிகளிலும் அதிக வெற்றி பெற்றதில் தேவாங்கர் கலைக் கல்லூரி மாணவ, மாணவியர் இரண்டாமிடம் பெற்றனர்.
   மேலும் சாத்தூர் கிருஷ்ணசாமி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கலை இலக்கியப்போட்டிகளில் தனி நபர் நாடகம், நாட்டுப்புற நடனம், குழு நாடகம், பாட்டுப் போட்டி ஆகியவற்றிலும் தேவாங்கர் கலைக் கல்லூரி மாணவ,மாணவியர் பல்வேறு பரிசுகள் பெற்றனர்.
 இம்மாணவ, மாணவியரை கல்லூரி முதல்வர் முனைவர் பி.ரவிக்குமார், கல்லூரி நிர்வாகிகள் மற்றும் இளைஞர் நலத்துறைப் பேராசிரியர்கள் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/10/கலை-இலக்கியப்-போட்டிகளில்-தேவாங்கர்-கல்லூரி-2-ஆமிடம்-2787535.html
2787534 மதுரை விருதுநகர் செங்கோட்டை ரயில் நேரம் மாற்றம் DIN DIN Tuesday, October 10, 2017 05:44 AM +0530 தாம்பரம்-செங்கோட்டை விரைவு ரயில்நேரம் மாற்றப்பட்டுள்ளது.
தாம்பரத்திலிருந்து - செங்கோட்டைக்கு பகல் நேர விரைவு ரயில் கடந்த மாதம் முதல் இயக்கப்படுகிறது. தாம்பரத்தில் காலை 5 மணிக்கு புறப்பட்ட இந்த ரயில்  திங்கள்கிழமை முதல் காலை 7 மணிக்கு புறப்படுகிறது. அருப்புக்கோட்டைக்கு மாலை 6.37,  விருதுநகருக்கு இரவு 7.02 திருத்தங்கலுக்கு 7.20, சிவகாசிக்கு 7.25, ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு 7.42, ராஜபாளையம் 8 மணி,
தென்காசிக்கு 9.15க்கு சென்றடையும் என ரயில்வே அறிவித்துள்ளது.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/10/செங்கோட்டை-ரயில்-நேரம்-மாற்றம்-2787534.html
2787533 மதுரை விருதுநகர் சிவகாசி பேருந்து நிலையத்தில் ரூ. 3 லட்சம் திருட்டு DIN DIN Tuesday, October 10, 2017 05:44 AM +0530 சிவகாசி பேருந்து நிலையத்தில் ரூ.3 லட்சம் பணத்தை காணவில்லை என போலீஸில் திங்கள்கிழமை புகார் செய்யப்பட்டுள்ளது.
சிவகாசி அருகே உள்ள எம்.துரைச்சாமிபுரத்தைச் சேர்ந்தவர் கண்ணபிரான்(37).  இவர் சேலத்தில் தறி பயன்பாட்டிற்கு நூல் வியாபாரம் செய்து வருகிறார்.
 ஒரு பையில் ரூ.3 லட்சம் பணத்துடனும், மற்றொரு பையில் பட்டாசும் வைத்துக்கொண்டு  சிவகாசியில் இருந்து மதுரை செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்துள்ளார். பேருந்து நடத்துநர் பட்டாசு கொண்டு செல்ல அனுமதி கிடையாது எனக்கூறி இறங்கிக் கொள்ளுமாறு கூறினாராம்.
 இதையடுத்து அவர் பேருந்திலிருந்து இறங்கிய பின்னர் பார்த்தபோது, பையில் வைத்திருந்த பணம் ரூ. 3 லட்சத்தை காணவில்லையாம்.
 இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/10/சிவகாசி-பேருந்து-நிலையத்தில்-ரூ-3-லட்சம்-திருட்டு-2787533.html
2787532 மதுரை விருதுநகர் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு DIN DIN Tuesday, October 10, 2017 05:43 AM +0530 ராஜபாளையத்தில் பூட்டிய வீட்டில் கதவு, பீரோவை உடைத்து நகை ரொக்கபணம் திருடியது குறித்து போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
ராஜபாளையம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச்சேர்ந்தவர் லலிதா(47). தனியார் பள்ளி ஆசிரியை.
 இவர் வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவை உடைத்து அதிலிருந்த 14.5 பவுன் தங்க நகைகள் ரூ. 40ஆயிரம் ரொக்கப்பணம், ஒரு கைக் கடிகாரம் ஆகியன திருடு போயிருந்தன.
 இது குறித்து ராஜபாளையம் தெற்கு காவல்நிலைய போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்துவருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/10/பூட்டை-உடைத்து-நகை-பணம்-திருட்டு-2787532.html
2787531 மதுரை விருதுநகர் இலுப்பன் ஊரணிக்கு மழைநீர் கால்வாய் அமைக்கக் கோரி மனு DIN DIN Tuesday, October 10, 2017 05:43 AM +0530 காரியபட்டி வட்டம், கீழத்துலுக்கன்குளத்தில் உள்ள இலுப்பன் ஊரணிக்கு மழை நீரை கொண்டு செல்லும் வகையில் கால்வாய் அமைக்க வேண்டும் என அக்கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் கிராமத்தின் வடக்கே இலுப்பன் ஊரணி உள்ளது. இதன் அருகே உள்ள ஓடை ஊரணிக்கு தண்ணீர் வரும் வகையில் உள்ளது. கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக இந்த ஊரணி அருகே ஆழ்குழாய் கிணறு, இரண்டு சமுதாய கிணறு உள்ளன. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளாக பருவ மழை பொய்த்ததால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில், இலுப்பன் ஊரணிக்கு நீர்வரத்து ஓடையிலிருந்து மழைநீர் வருவதற்காக கிராம மக்கள் சார்பில் சிமெண்ட் குழாய் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், பத்தில் ஒரு பங்கு தண்ணீர் மட்டுமே ஊரணிக்கு வருகின்றது. எனவே, கிராம மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை நிரந்தரமாக நீக்கவும், மழைநீர் சேகரிப்பு திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற இந்த ஊரணிக்கு ஓடையிலிருந்து வரும் மழைநீரை முழுமையாக கொண்டு கால்வாய் (வழித்தடம்) அமைக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.   
திருச்சுழி, ஆனைக்குளம் அருகே உள்ள நத்தகுளம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் அளித்த மனு: நாங்கள் 145 பேர் நெல் பயிருக்கு செம்பொன்நெருஞ்சி கூட்டுறவு கடன் சங்கத்தில் காப்பீடு செலுத்தினோம். இந்நிலையில், எங்கள் கிராமத்தின் அருகே உள்ள விவசாயிகளுக்கு நெல் பயிருக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், நந்தகுளம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் யாருக்கும் இதுவரை வழங்கப்பட வில்லை.  அதற்கான காரணமும் தெரியவில்லை. எனவே, எங்களுக்கும் இழப்பீடு கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனர்.
அதேபோல், வீரசோழன் அருகே உள்ள வரிசையூர் கிராமமக்கள் அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:  எங்கள் கிராமத்தை சேர்ந்த 96 விவசாயிகள் கடந்தாண்டு நெல் பயிருக்கான காப்பீட்டு தொகையை நரிக்குடி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் செலுத்தினோம். ஆனால், இதுவரை இவப்பீடு கிடைக்க வில்லை. இது குறித்து ஏற்கனவே, 18.09.2017 இல் மனு அளித்தோம். ஆனாலும், இதுவரை எங்களுக்கு பணமோ, வேறு தகவலோ வரவில்லை. எனவே, பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/10/இலுப்பன்-ஊரணிக்கு-மழைநீர்-கால்வாய்-அமைக்கக்-கோரி-மனு-2787531.html
2787530 மதுரை விருதுநகர் தேநீர் கடைக்காரர் வீட்டில் பணம் திருடிய இருவர் கைது DIN DIN Tuesday, October 10, 2017 05:43 AM +0530 சிவகாசியில் தேநீர் கடைக்காரர் வீட்டில் பணம் திருடிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.
சிவகாசி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன்(42). இவர் சிவகாசியில் டீக்கடை வைத்துள்ளார். வீட்டைப் பூட்டிவிட்டு சாவியை வீட்டின் ஒரு பகுதியில் மறைத்து வைத்துவிட்டு செல்வாராம். பின்னர் அவரது மனைவி வந்து சாவியை எடுத்துக்கொள்வாராம்.இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இவர் தனது வீட்டைப்பூட்டிவிட்டு சாவியை மறைவு பகுதியில் வைத்துவிட்டு சென்றாராம். மாலையில் வியாபாரத்தை முடித்துவிட்டு, வீட்டில் உள்ள பூஜை அறையில் பெட்டியில் பணத்தை வைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது பெட்டியில் ஏற்கெனவே வைத்திருந்த பணம் ரூ.50 ஆயிரத்தை காணவில்லையாம். இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த வீரமணி(18), வைரமுத்து(19) ஆகியோர்,  சீனிவாசன் வீட்டுச் சாவியை எடுத்து திறந்து பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் திங்கள்கிழமை அவர்களை கைது செய்து, அவர்களிடமிருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/oct/10/தேநீர்-கடைக்காரர்-வீட்டில்-பணம்-திருடிய-இருவர்-கைது-2787530.html