Dinamani - மதுரை - http://www.dinamani.com/all-editions/edition-madurai/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2909044 அனைத்துப் பதிப்புகள் மதுரை மே தினம்: மதுபான கடைகளை மூட உத்தரவு DIN DIN Saturday, April 28, 2018 08:30 AM +0530 மே தினத்தையொட்டி மதுபானக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் உத்தரவிட்டுள்ளார்.
 டாஸ்மாக் நிறுவனம் நடத்தும் அனைத்து விற்பனை கடைகள், மதுக் கூடங்கள், தேசிய மாணவர் படை மற்றும் படை வீரர்களுக்கான மது விற்பனையகம் மற்றும் உரிமம் பெற்ற மதுக் கூடங்கள் மே 1-ஆம் தேதி மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/2018/apr/28/மே-தினம்-மதுபான-கடைகளை-மூட-உத்தரவு-2909044.html
2909043 அனைத்துப் பதிப்புகள் மதுரை கடையின் பூட்டை உடைத்து ரூ.8 லட்சம் செல்லிடப்பேசிகள் திருட்டு DIN DIN Saturday, April 28, 2018 08:30 AM +0530 மதுரையில் செல்லிடப்பேசி விற்பனை நிலையத்தில் பூட்டை உடைத்து  ரூ. 8 லட்சம் மதிப்புள்ள செல்லிடப்பேசிகளை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றதாக வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
  மதுரை வடக்குவெளிவீதியில் செல்லிடப்பேசி நிறுவனத்தின் விற்பனைக்கிளை இயங்கி வருகிறது. இங்கு வியாழக்கிழமை இரவு விற்பனை முடிந்த நிலையில் ஊழியர்கள் விற்பனை நிலையத்தை அடைத்துவிட்டு சென்று விட்டனர். காலையில் விற்பனை நிலையத்தை திறக்க வந்தபோது முன்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.  இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது விலை உயர்ந்த 83 செல்லிடப்பேசிகளை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. திருடுபோன செல்லிடப்பேசிகளின் மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும்.
சம்பவம் தொடர்பாக நிறுவனத்தின் மேலாளர் உசிலம்பட்டியைச் சேர்ந்த செல்வேந்திரன்(27) அளித்தப்புகாரின்பேரில் திலகர்திடல் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/2018/apr/28/கடையின்-பூட்டை-உடைத்து-ரூ8-லட்சம்-செல்லிடப்பேசிகள்-திருட்டு-2909043.html
2909042 அனைத்துப் பதிப்புகள் மதுரை சிறுமி பாலியல் வழக்கு: ஆசிரியரை தற்காலிக பணிநீக்கம் செய்ய நடவடிக்கை DIN DIN Saturday, April 28, 2018 08:29 AM +0530 சிறுமி பாலியல் வழக்கில் அரசுப் பள்ளி ஆசிரியரை தற்காலிக பணிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
 பெருங்குடி அரசு பள்ளியில் ஆங்கிலப் பாட ஆசிரியராக இருப்பவர் பிரேம்நசீர். மாற்றுத்திறனாளியான இவர் சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான புகார் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் துறைரீதியான விசாரணையை மேற்கொண்டுள்ளது. அதனடிப்படையில் அவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படவுள்ளதாகவும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/2018/apr/28/சிறுமி-பாலியல்-வழக்கு-ஆசிரியரை-தற்காலிக-பணிநீக்கம்-செய்ய-நடவடிக்கை-2909042.html
2909041 அனைத்துப் பதிப்புகள் மதுரை "ஸ்பீக்' மனநல ஆலோசனை அமைப்பு தொடக்கம் DIN DIN Saturday, April 28, 2018 08:29 AM +0530 மதுரையில் எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை சார்பில் மனநல ஆலோசனை வழங்கும் "ஸ்பீக்' அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
    அமெரிக்கன் கல்லூரியில் வெள்ளிக்கிழமை தொடக்க விழா நடைபெற்றது. இதில் அமெரிக்கன் கல்லூரி முதல்வர் எம்.தவமணி கிறிஸ்டோபர்  அமைப்பைத் தொடக்கி வைத்தார். 
  நிகழ்ச்சியில் மனநல மருத்துவர் நந்தினி முரளி பேசுகையில்,  மன அழுத்தத்தால் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 8 லட்சம் பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர். அவர்களில் 15 வயது முதல் 29 வயது வரையிலானவர்கள் அதிகம்.  இந்தியாவில் மகாராஷ்டிரம், தமிழகம், மேற்குவங்கம் ஆகிய 3 மாநிலங்களில் தற்கொலை விகிதம் அதிகம் உள்ளது. மேலும் சென்னை, பெங்களூரு, புதுதில்லி, மும்பை ஆகிய நகரங்களிலும் தற்கொலைகள் அதிகம் நடக்கின்றன என்ற தேசிய குற்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன. தற்கொலைக்கான பிரதான காரணமாக மனஅழுத்தம் உள்ளது. மனஅழுத்தத்தை போக்குவதற்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளன. முதலில் மனஅழுத்தத்துக்கு ஆளானவர்களிடம் அன்பான பேச்சுவார்த்தை மூலம் தற்கொலை எண்ணத்தை தடுக்க முடியும். எனவே தற்கொலை எண்ணத்துடன் இருப்பவர்களுக்கு போதுமான மனநல ஆலோசனை வழங்கி அவர்களது தற்கொலையை தடுப்பதற்காக ஸ்பீக் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்கள் உள்பட மனஅழுத்தத்தால் பாதிக்கப்படும் அனைத்துதரப்பினருக்கும் தேவையான மனநல ஆலோசனகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
    நிகழ்ச்சியில் அபராஜிதா குழும தலைவர் பரத் கிருஷ்ண சங்கர், கல்லூரி கல்வி இணை இயக்குநர் கே.கூடலிங்கம், எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை நிர்வாகி எம்.ராமசுப்ரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/2018/apr/28/ஸ்பீக்-மனநல-ஆலோசனை-அமைப்பு-தொடக்கம்-2909041.html
2909040 அனைத்துப் பதிப்புகள் மதுரை இருக்கன்குடி மாரியம்மன் கோயில் காணிக்கை முடி திருட்டு வழக்கு: குற்றப்பத்திரிகை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள உயர்நீதிமன்றம் தடை DIN DIN Saturday, April 28, 2018 08:29 AM +0530 விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் காணிக்கை முடி திருடப்பட்ட வழக்கில்  குற்றப்பத்திரிகை அடிப்படையில் மேல்நடவடிக்கை மேற்கொள்ள தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
  இருக்கன்குடியைச் சேர்ந்த எஸ்.கதிரேசன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
 இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் முடி சேகரித்து வைக்கப்பட்டு ஆண்டுக்கு ஒரு முறை ஏலத்தில் விடப்படும். இரு ஆண்டுகளாக முடி ஏலம் நடைபெறாததால் காணிக்கை முடி சாக்கு மூட்டையில் கட்டி கோயிலில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 2016 இல் 15 மூட்டைகளில் இருந்த முடி திருடப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1 கோடிக்கும் அதிகமாகும். ஆனால், ரூ.45 லட்சம் மதிப்புள்ள முடி திருடப்பட்டதாக அறநிலையத்துறை சார்பில்  புகார் அளிக்கப்பட்டது. இருக்கன்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து அறங்காவலர் குழு தலைவராக இருந்த ராமமூர்த்தி உள்பட 4 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் நான் ஒரு சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தேன். போலீஸாரிடம் ரூ.1 கோடி மதிப்புள்ள முடி திருடப்பட்டதாக சாட்சியளித்தேன். ஆனால், அதை பதிவு செய்யாமல் திருடப்பட்ட முடியின் மதிப்பு ரூ.1.55 லட்சம் மட்டுமே என சாத்தூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் காவல் ஆய்வாளர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். இதை எதிர்த்து அறநிலைத்துறை சார்பில் இதுவரை நீதிமன்றத்தில் முறையீடு செய்யவில்லை.
 கடந்த ஆண்டுகளில் காணிக்கை முடி ரூ.3.60 கோடிக்கு ஏலம் போயுள்ளது. இதனால் திருடப்பட்ட முடியின் மதிப்பு ரூ.1 கோடிக்கு மேல் இருக்கும். ஆனால் அறநிலையத்துறையினர் வேண்டும் என்றே திருடப்பட்ட முடியின் மதிப்பை குறைத்து புகார் அளித்துள்ளனர். 
 எனவே முடியின் மதிப்பை குறைத்து சாத்தூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும். அந்த குற்றப்பத்திரிகை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும். முடி திருட்டு வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
 இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, முடி திருட்டு வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை அடிப்படையில் மேல் நடவடிக்கை மேற்கொள்ள தடை விதித்து உத்தரவிட்டார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/2018/apr/28/இருக்கன்குடி-மாரியம்மன்-கோயில்-காணிக்கை-முடி-திருட்டு-வழக்கு-குற்றப்பத்திரிகை-அடிப்படையில்-நடவடிக்க-2909040.html
2909039 அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரையில் இன்று முதல் 5 நாள்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் DIN DIN Saturday, April 28, 2018 08:28 AM +0530 மதுரையில் சித்திரைத் திருவிழாவுக்காக சனிக்கிழமை முதல் (ஏப்.28) வரும் மே 2 ஆம் தேதி வரை ஐந்து நாள்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து மதுரை மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 
   மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட வார்டு பகுதிகளில் கடந்த 9 -ஆம் தேதி முதல் நான்கு நாள்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது. தற்போது சித்திரைத் திருவிழா நடந்துவருவதால் அமைச்சர் உள்ளிட்டோரின் ஆலோசனைப்படி மக்கள் வசதிக்காக சனிக்கிழமை (ஏப்.28) முதல் வரும் மே 2-ஆம் தேதி புதன்கிழமை வரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் அனைத்துப் பகுதிகளிலும் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  மதுரை மாநகராட்சிக்குத் தேவையான குடிநீரில் பெரும்பகுதி வைகை அணையிலிருந்தே பெறப்படுகிறது.        கடந்த ஆண்டு கடும் வறட்சி காரணமாக வைகை அணை நீர் மட்டம் 25 அடிக்கும் குறைவாகவே இருந்தது. அணையில் 20 அடிவரையே போதுமான தண்ணீரைப் பெற முடியும் என்ற நிலையும் உள்ளது. ஆகவே மதுரையில் குடிநீர் தேவையை ஈடுகட்ட ஆழ்துளைக்கிணறுகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதனடிப்படையில் வறட்சிக்கால குடிநீர் தேவை சமாளிக்கப்பட்டது.     நடப்பாண்டில் வைகை அணை நீர் மட்டம் 37 அடிக்கும் அதிகமாக உள்ளது. ஆனாலும், கோடை காலத்தை கருத்தில் கொண்டு மதுரை நகரில் கடந்த ஏப்ரல் முதல் நான்கு நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/2018/apr/28/மதுரையில்-இன்று-முதல்-5-நாள்களுக்கு-ஒரு-நாள்-விட்டு-ஒரு-நாள்-குடிநீர்-விநியோகம்-2909039.html
2909038 அனைத்துப் பதிப்புகள் மதுரை உயர்நீதிமன்றத்தில் சிஐஎஸ்எப் வீரரை தாக்கிய காவலர் கைது DIN DIN Saturday, April 28, 2018 08:28 AM +0530 உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரை தாக்கியதாக சிவகங்கை மாவட்ட காவலரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
   சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வழக்குரைஞர்கள், மனுதாரர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் அடையாள அட்டை சரிபார்க்கப்பட்டு கடும் சோதனைகளுக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்  புவனேஷ்குமார் வியாழக்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை காவல் நிலையத்தைச் சேர்ந்த  காவலர்  ஹாரூண் ரசீத்(33) ஒரு வழக்குத்தொடர்பாக வந்துள்ளார். அப்போது நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு  பணியில் இருந்த புவனேஷ்குமார், காவலருக்கான அடையாள அட்டையை காட்டும்படி கூறியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 
  இதில் ஆத்திரம் அடைந்த ஹாருண்ரசீத், புவனேஷ்குமாரை தாக்கியுள்ளார். இதுதொடர்பாக புவனேஷ்குமார் அளித்தப்புகாரின்பேரில் கோ.புதூர் போலீஸார் ஹாரூண் ரசீத்தை கைது செய்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/2018/apr/28/உயர்நீதிமன்றத்தில்-சிஐஎஸ்எப்-வீரரை-தாக்கிய-காவலர்-கைது-2909038.html
2909037 அனைத்துப் பதிப்புகள் மதுரை மின்சாரம் பாய்ந்து வயர்மேன் சாவு DIN DIN Saturday, April 28, 2018 08:28 AM +0530 திருமங்கலம் அருகே வெள்ளிக்கிழமை வயர்மேன் மின் கம்பத்தில் பழுது பார்த்த போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். 
  திருமங்கலத்தை அடுத்த செங்குளத்தைச் சேர்ந்தவர் பாண்டி(37). திருமங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் வயர்மேனாக உள்ளார். இவர் கரடிக்கல் அருகே சின்னமூலக்கரை பகுதியில் வெள்ளிக்கிழமை மின் கம்பத்தில் பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது திடீர்என மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீஸார் பாண்டி உடலை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த பாண்டிக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். விபத்து குறித்து திருமங்கலம்  நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/2018/apr/28/மின்சாரம்-பாய்ந்து-வயர்மேன்-சாவு-2909037.html
2909036 அனைத்துப் பதிப்புகள் மதுரை தனி நபர் ஓவியக் கண்காட்சி: படைப்புகள் அனுப்பலாம் DIN DIN Saturday, April 28, 2018 08:27 AM +0530 கலை பண்பாட்டு மையம் சார்பில் நடத்தப்படும் தனிநபர் ஓவியக் கண்காட்சிக்கு, ஓவியக் கலைஞர்கள் தங்களது படைப்புகள் குறித்த விவரத்தை அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  மதுரை மண்டல கலைப் பண்பாட்டு மையம் சார்பில் மதுரை, ராமநாதபுரம், தேனி, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓவிய, சிற்பக் கலைக் கண்காட்சி விரைவில் நடைபெற உள்ளது. இதில், ஓவியர்கள் தங்களது மரபு வழி, நவீன பாணி ஓவியங்கள்,  தஞ்சாவூர் ஓவியங்கள், ஆயில் பெயிண்டிங், வாட்டர் கலர் பெயிண்டிங் படைப்புகள், சிற்பங்களை தனிநபர் கண்காட்சியாக வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
   இந்த கண்காட்சிக்கான படைப்புகளைத் தேர்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஓவியக் கண்காட்சியில் முதல் பரிசாக 10 பேருக்கு தலா ரூ.3500, 2-ஆம் பரிசாக 10 பேருக்கு தலா ரூ.2500, மூன்றாம் பரிசாக 10 பேருக்கு தலா ரூ.1500 காசோலையாக வழங்கப்படும்.
 மதுரை மண்டல கலைப் பண்பாட்டு மையத்தின்கீழ் உள்ள மதுரை, ராமநாதபுரம், தேனி, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த ஓவிய மற்றும் சிற்பக் கலைஞர்கள் தங்களது ஓவியப் படைப்புகளை தனிநபர் கண்காட்சியாக வைக்க தன்விவரக் குறிப்பு மற்றும் படைப்புகளின் எண்ணிக்கை விவரங்களை மே 10 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
   இந்த விவரங்கள் உதவி இயக்குநர், மண்டலக் கலை பண்பாட்டு மையம், பாரதி உலா முதல் தெரு, தல்லாகுளம், மதுரை -2 என்ற முகவரிக்கு வந்து சேர வேண்டும். கலைப் பண்பாட்டுத் துறை உதவி இயக்குநர் மு.க.சுந்தர் இத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/2018/apr/28/தனி-நபர்-ஓவியக்-கண்காட்சி-படைப்புகள்-அனுப்பலாம்-2909036.html
2909035 அனைத்துப் பதிப்புகள் மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் DIN DIN Saturday, April 28, 2018 08:27 AM +0530 திருப்பரங்குன்றம் பகுதியில் வெள்ளிக்கிழமை மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாண வைபவங்கள் நடைபெற்றன.
  திருப்பரங்குன்றத்தை அடுத்த விளாச்சேரி அக்ரஹாரம் பகுதியில் உள்ள காசிவிஸ்வநாதர் திருக்கோயிலில் காசி விஸ்வநாதர் சமேத விசாலாட்சி அம்மனுக்கு வெள்ளிக்கிழமை காலை 9.10 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.  
  அவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் பாலமீனாம்பிகை, கல்யாண சுந்தரேஸ்வரர் திருக் கல்யாணம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக் கான பக்தர்கள் பங்கேற்றனர். கோயில் சார்பில் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா விற்கான ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலர் சுரேஷ்கண்ணன் செய்திருந்தார்.
ஆனையூர்: ஆனையூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை அடுத்த தமிழ்நகர் செல்வ விநாயகர் ஆலயத்தில் மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை வெகுவிமர்சையாக  நடைபெற்றது. தமிழ்நகர் 40 வீடு பகுதியில் உள்ள இக்கோயிலில் திருக்கல்யாண வைபவத்தையொட்டி காலை 7 மணிக்கு கணபதி ஹோமம், ருத்ர ஜெபம், கோ பூஜை நடைபெற்றன. மூலவர் சொக்கநாதர் மீனாட்சி அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து சுவாமி, அம்மனுக்கு திருமண சீர்வரிசை பொருள்களை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
 பின்னர் சுவாமி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. காலை 9.20 மணியளவில் மீனாட்சிஅம்மன் சொக்கநாதருக்கு திருக்கல்யாண வைபம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். தொடர்ந்து பக்தர்களுக்கு திருமண விருந்து நடைபெற்றது. மாலை 6 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/2018/apr/28/திருப்பரங்குன்றம்-பகுதியில்-மீனாட்சி-சொக்கநாதர்-திருக்கல்யாணம்-2909035.html
2909034 அனைத்துப் பதிப்புகள் மதுரை திருநகர் கூட்டுறவு சங்கத் தேர்தல்: யாரும் வாக்களிக்காததால் ஒத்திவைப்பு DIN DIN Saturday, April 28, 2018 08:27 AM +0530 திருநகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற  நகர கூட்டுறவு கடன் சங்க இயக்குநர்களுக்கான தேர்தலில் யாரும் வாக்களிக்க வராததால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. 
    திருநகர் 5 -ஆவது பேருந்து நிறுத்தம் பகுதியில் திருநகர் நகர கூட்டுறவு கடன் சங்கத்தில் இயக்குநர் பதவிக்கு கடந்த சில நாள்களுக்கு முன் வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் சங்கத்தின் முன்னாள் தலைவரும், அதிமுக வார்டு செயலருமான என்.எஸ்.பாலமுருகன் தலைமையில் 11 பேரும், அமமுக சார்பில் 10 பேர்களும் மனுத்தாக்கல் செய்திருந்தனர். 
  யாரும் வேட்பு மனுவை வாபஸ் வாங்காத நிலையில் 21 பேர் போட்டியிட்டனர். இந்நிலையில் இச்சங்கத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 முதல் மாலை 5 மணிவரை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.   
    அதன்படி தேர்தல் அலுவலர் ராஜசேகரன் தலைமையில் 5 பேர் வாக்கு மையம் அமைத்து காத்திருந்தனர். சுமார் 16 ஆயிரம் உறுப்பினர்கள் கொண்ட கூட்டுறவு வங்கியில் காலை முதல் மாலை வரை ஒருவர் கூட வந்து வாக்களிக்கவில்லை. இதையடுத்து மறு தேதி அறிவிக்கப்படாமல் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/2018/apr/28/திருநகர்-கூட்டுறவு-சங்கத்-தேர்தல்-யாரும்-வாக்களிக்காததால்-ஒத்திவைப்பு-2909034.html
2909033 அனைத்துப் பதிப்புகள் மதுரை மொய் எழுத அலைமோதிய கூட்டம் DIN DIN Saturday, April 28, 2018 08:26 AM +0530 திருக்கல்யாணம் முடிந்ததும் ஆடி, சித்திரை வீதிகளில் கோயில் சார்பில் அமைக்கப்பட்டிருந்த மொய் எழுதுமிடத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோயில் சார்பில் பிரசாத பைகள் அமைச்சர்கள், மாவட்ட அதிகாரிகள் என குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டன.
  திருக்கல்யாணம் முடிந்ததும் மேடையில் இருந்த பூக்களை பறிக்கவும், சிவாச்சாரியாரிகளிடமிருந்து தாலிக் கயிறு, மஞ்சள் பாக்கெட்டைப் பெறவும் கூட்டம் அலைமோதியது. கோயில், சித்திரை வீதி, மாசி வீதிகள் என அனைத்துப் பகுதியிலும் சமூக அமைப்புகள் உள்ளிட்டவைகளால் குளிர்பானம், பொங்கல் மற்றும் விசிறிகள்  உள்ளிட்டவை பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.  சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் பழமுதிர்ச்சோலை திருவருள் முருகன் பக்த சபை சார்பில் திருக்கல்யாண விருந்து நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/2018/apr/28/மொய்-எழுத-அலைமோதிய-கூட்டம்-2909033.html
2909032 அனைத்துப் பதிப்புகள் மதுரை திருவிழாவில் தொலைந்தவர்களை கண்டறிய நவீன தொழில்நுட்பம் அறிமுகம் DIN DIN Saturday, April 28, 2018 08:26 AM +0530 மதுரை அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவில் தொலைந்தவர்களை கண்டறிய மதுரை காவல்துறை, தனியார் செல்லிடப்பேசி நிறுவனத்துடன் இணைந்து புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
      திருவிழாக்கள் நடைபெறும் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள காவல் உதவி மையங்களுக்கு தடையில்லாத இணைய இணைப்பை செல்லிடப்பேசி நிறுவனம் வழங்குகிறது. மேலும் காவல் உதவி மையங்களில் புகைப்படங்கள் எடுக்கும் வசதி மற்றும் புகைப்படங்களை காட்டும் எல்இடி திரைகளும் வழங்கப்பட்டுள்ளன. 
 இதன்மூலம் திருவிழாக் கூட்டத்தில் குடும்பத்தை விட்டு பிரிந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, தங்களது குடும்பத்தினரை கண்டறிய அருகில் உள்ள காவல் உதவி மையங்களை அணுகலாம். அங்கு பணியில் உள்ள காவலர்கள், தொலைந்து போனவரை படமெடுத்து அனைத்து காவல் உதவி மையங்களிலும் வைக்கப்பட்டுள்ள எல்இடி திரை மூலம் புகைப்படத்தை திரையிடுவார்கள். இதன்மூலம், தொலைந்து போனவர்களை குடும்பத்தினர் பார்த்து அவர்களை கண்டறிய முடியும். மேலும் திருவிழா கூட்டத்தை பறக்கும் கேமராக்கள் மூலமும் படமெடுத்து கண்காணிக்கும் ஏற்பாடுகளையும் நிறுவனம் வழங்கியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/2018/apr/28/திருவிழாவில்-தொலைந்தவர்களை-கண்டறிய-நவீன-தொழில்நுட்பம்-அறிமுகம்-2909032.html
2909030 அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை சித்திரைத் திருவிழா: மீனாட்சியம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் DIN DIN Saturday, April 28, 2018 08:26 AM +0530 மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்வான மீனாட்சியம்மன்- சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது அங்கு குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். பெண்கள் தாலிக்கயிறை புதிதாக மாற்றி வணங்கினர். 
 மதுரை சித்திரைத் திருவிழா கடந்த ஏப். 18 ஆம் தேதி மீனாட்சிசுந்தரேசுவரர் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளான பட்டாபிஷேகம் புதன்கிழமையும், திக் விஜயம் வியாழக்கிழமையும் நடைபெற்ற நிலையில், திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 திருக்கல்யாணத்தையொட்டி சுவாமி, அம்மன் அதிகாலை 4 மணிக்கு கோயிலில் அழகர்சாமி நாயுடு, சூறாவளி சுப்பையர், கல்யாணசுந்தர முதலியார் மண்டகப்படிகளில் எழுந்தருளினர். பின்னர் சித்திரை வீதியில் அருள்பாலித்தனர். அதன்பின் கோயில் முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாகினர்.
 திருக்கல்யாணத்துக்காக திருப்பரங்குன்றத்திலிருந்து வந்த பவளக்கனிவாய் பெருமாள் மற்றும் சுப்பிரமணியர், தெய்வானையுடன், மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் எழுந்தருளினர். மீனாட்சிசுந்தரேசுவரர் கோயிலின் மேல- வடக்கு ஆடி வீதி சந்திப்பில் அமைக்கப்பட்ட திருக்கல்யாண மேடை மல்லிகை, முல்லை, பவளம், ரோஜா என பல்வேறு வகை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மலர் தோரணங்களில் கிளி வடிவமும் தொங்கவிடப்பட்டிருந்தன.
 காலை 8.45 மணிக்கு திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி, தெய்வானை ஆடி வீதியில் மேல கோபுர வாசல் முன்பு வந்தனர். அவர்களைத் தொடர்ந்து சுவாமி, பிரியாவிடை மற்றும் அம்மன், பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோர் வரிசையாக வந்தனர். கட்டியம் கூறுவோரும், திருமண சடங்குகளை நடத்தும் சிவாச்சாரியார்களும் காலை 8.48 மணிக்கு மேடைக்கு வந்தனர். அவர்களைத் தொடர்ந்து சுவாமி, அம்மன் என அனைத்து தெய்வங்களும் திருக்கல்யாண மேடையில் எழுந்தருளினர். 
 மேடையின் வலது புறத்திலிருந்து பவளக்கனிவாய் பெருமாள், மீனாட்சியம்மன், சுவாமி, பிரியாவிடை, சுப்பிரமணியர், தெய்வானை என அமர்ந்து அருள்பாலித்தனர்.
  மீனாட்சியம்மன் கிளிப்பச்சை பட்டுடுத்தி, ராயர் வைரக்கிரீடம், வைர மூக்குத்தி, பவளக்கல் பொதிந்த  மாலைகள் அணிந்திருந்தார். சுந்தரேசுவரர் வெண்பட்டும், ஊதா நிற கல் பதித்த வைரக்கிரீடம் அணிந்திருந்தார். பிரியாவிடை பச்சைநிற பட்டு அணிந்திருந்தார். சுப்பிரமணியசுவாமி வெண்பட்டும், தெய்வானை சிவப்பில் மஞ்சள் கலந்த பட்டும் அணிந்திருந்தனர்.
 சுந்தரேசுவரர் பிரதிநிதியாக செந்தில்பட்டரும், மீனாட்சியம்மன் பிரதிநிதியாக கணேஷ்பட்டரும் வேடமணிந்து பூஜைகளை செய்தனர். ராஜா பட்டரும், உக்கிரபாண்டி பட்டரும் பூஜைகளை ஒருங்கிணைத்து நடத்தினர். காலை 9 மணிக்கு திருக்கல்யாண பூஜைக்கு அனுமதி கோரும் சடங்கு நடந்தது. ராஜா பட்டர் பழக்கூடையில் திருமாங்கல்யம் உள்ளிட்டவற்றை வைத்து கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன், இணை ஆணையர் என்.நடராஜன் ஆகியோரிடம் தொட்டு பூஜை செய்தார். 
பின்னர் யாகசாலை பூஜை தொடங்கியது.
 விநாயகர் பூஜை, காப்புக்கட்டுதல், பாலிகை பூஜை, தாரைவார்த்தல், தங்க, வெள்ளி பன்னீர் செம்புகள் மூலம் பன்னீர் தெளித்தல், கொன்றை மலர் மாலையுடன் ஆடை சாத்துதல், சுவாமி, அம்மன் பிரதிநிதிகள் மாலை மாற்றுதல் ஆகிய பூஜைகள் நடைபெற்றன. 
 காலை 9.16 மணிக்கு மல்லிகை மலர்களால் சுற்றப்பட்ட தங்கத்தில் வைரம் பதித்த மங்களநாண் பக்தர்களிடம் காட்டப்பட்டதுடன், சுவாமி, அம்மன், பிரியாவிடை முன்பும் மூன்று முறை காட்டப்பட்டது. 
அதன்பின்னர் வேதமந்திரம் முழங்க, மேள தாளம் இசைக்க பக்தர்களின் சுந்தரேசுவரா...மீனாட்சியம்மன் என பக்தர்கள் முழக்கமிட காலை 9.19 மணிக்கு மீனாட்சியம்மன் கழுத்தில் மங்களநாண் அணிவிக்கப்பட்டது. அப்போது மேடையின் மேற்புறத்திலிருந்து ரோஜாப் பூ இதழ்கள் அம்மன், சுவாமி மீது தூவப்பட்டது.
 மீனாட்சியம்மனுக்கு மங்கள நாண் அணிவிக்கப்பட்டதும், அங்கிருந்த பெண்கள் தங்களது தாலிக்கயிறை புதிதாக மாற்றி அதில் குங்குமம் இட்டு கண்களில் ஒற்றி வழிபட்டனர். அம்மனைத் தொடர்ந்து பிரியாவிடைக்கும் மங்கள நாண் அணிவிக்கப்பட்டது.
 திருக்கல்யாணத்தையடுத்து  அக்னி வலம் வருதல், சுவாமி, அம்மன் பிரதிநிதிகள் மேடை வலம் வருதல், திருமாங்கல்யத்தில் குங்குமம் இடுதல், திருமலைநாயக்கரின் தங்கபன்னீர் சொம்பில் பன்னீர் தெளித்தல், நெய்வேத்யம், ஆசீர்வாதம் என பூஜைகள் நடந்து காலை 9.42 மணிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. முக்கியப் பிரமுகர்களுக்கு திருக்கல்யாண பிரசாதப்பைகள் வழங்கப்பட்டன. 
 அதன்பின்னர் சுவாமி, அம்மன் உள்ளிட்ட தெய்வங்கள் திருக்கல்யாண மேடையிலிருந்து காலை 10.10 மணிக்கு புறப்பாடாகி பழைய திருக்கல்யாண மஹாலுக்குச் சென்றனர். மாலையில் சுவாமி பிரியாவிடை யானை வாகனத்திலும், மீனாட்சியம்மன் ஆனந்தராயர் பூப்பல்லக்கிலும் மாசி வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தனர்.
இன்று தேரோட்டம்: திருக்கல்யாணத்தை அடுத்து மாசி வீதிகளில் சனிக்கிழமை காலை தேரோட்டம் தொடங்குகிறது. முன்னதாக சுவாமி, அம்மன் கோயிலில் இருந்து காலை 5 மணிக்கு புறப்பாடாகி, கீழமாசி வீதியில் உள்ள திருத்தேர்களில் எழுந்தருள்கின்றனர். 
பிரமுகர்கள்:  திருக்கல்யாணத்தில் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார்,  நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், எஸ்.வைத்தியநாதன், ஆர்.சுரேஷ்குமார், எம்.வி.முரளிதரன், எம்.எஸ்.ரமேஷ் உள்ளிட்டோரும், ஆட்சியர் கொ.வீரராகவராவ், மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர்,  சட்டப்பேரவை உறுப்பினர்கள் வி.வி.ராஜன்செல்லப்பா,  பழனிவேல்தியாகராஜன், எஸ்.எஸ். சரவணன் மற்றும் தொலைக்காட்சி நிலைய இயக்குநர் ஆண்டாள்பிரியதர்ஷினி,  பேராசிரியர்கள் மு.அருணகிரி, அம்பை மணிவண்ணன், விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன்  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/2018/apr/28/மதுரை-சித்திரைத்-திருவிழா-மீனாட்சியம்மன்-சுந்தரேசுவரர்-திருக்கல்யாணம்-2909030.html
2909029 அனைத்துப் பதிப்புகள் மதுரை அழகர்கோயிலில் சுவாமி எழுந்தருளினார் DIN DIN Saturday, April 28, 2018 08:25 AM +0530 அழகர்கோவில் கள்ளழகர் சுந்தரராஜப் பெருமாள் திருக்கோயில் சித்திரை விழாவில் வெள்ளிக்கிழமை திருக்கல்யாண மண்டபத்தில் பெருமாள்  எழுந்தருளினார்.
    இவ்விழாவில் வியாழக்கிழமை கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில்  தோளுக்கினியனாக பெருமாள் எழுந்தருளினார்.  வெள்ளிக்கிழமையும் திருக்கல்யாண மண்பத்தில் பெருமாள் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். பின்னர், இரவு கோயிலுக்குள் திரும்பினார்.
   அழகர்கோவிலில் இருந்து சுந்தரராஜப் பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் கண்டாங்கி பட்டு உடுத்தி கைகளில் வளைத்தடியுடன் சர்வ அலங்காரத்தில் சனிக்கிழமை மாலை 5.15 மணிக்கு புறப்படுகிறார். 
   இத்திருவிழாவையொட்டி மதுரை, மேலூர் மற்றும் நத்தத்திலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/2018/apr/28/அழகர்கோயிலில்-சுவாமி-எழுந்தருளினார்-2909029.html
2909028 அனைத்துப் பதிப்புகள் மதுரை கள்ளழகர் வருகை: ஊரகப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் DIN DIN Saturday, April 28, 2018 08:25 AM +0530 மதுரையில்  அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்துக்கு கள்ளழகர் வருகையை முன்னிட்டு மதுரை ஊரகப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
   இதுதொடர்பாக காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 
    சித்திரை திருவிழாவை முன்னிட்டு அழகர்கோவிலில் இருந்து சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் கோலத்தில் மதுரைக்கு சனிக்கிழமை மாலை புறப்படுகிறார். இதன் காரணமாக, அழகர்கோவிலில் இருந்து மதுரை வரும் வழித்தடங்களில் சனிக்கிழமை காலை 6 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.  
 அதன்படி நத்தத்தில் இருந்து அழகர்கோவில் வழியாக மேலூர் செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் ஊமச்சிகுளம், மதுரை, ஒத்தக்கடை நான்கு வழிச்சாலை வழியாக மேலூர் செல்ல வேண்டும். மேலூரில் இருந்து அழகர்கோவில் வழியாக நத்தம் செல்லும் வாகனங்கள் ஒத்தக்கடை நான்கு வழிச்சாலை,  ஊமச்சிகுளம் வழியாக நத்தம் செல்ல வேண்டும். மேலூரில் இருந்து அழகர்கோவில் வழியாக மதுரை செல்லும் வாகனங்கள் மேலூர்,  ஒத்தக்கடை நான்கு வழிச்சாலை வழியாக மதுரை சென்றடைய வேண்டும். மதுரையில் இருந்து அழகர்கோவில் வழியாக மேலூர் செல்லும் வாகனங்கள் ஒத்தக்கடை, மேலூர் நான்கு வழிச்சாலை வழியாக மேலூர் சென்றடைய வேண்டும்.
  இதோபோல,  மதுரையில் இருந்து அழகர்கோவிலுக்கு செல்லும் அரசு பேருந்துகள் வழக்கமான வழித்தடமான கடச்சனேந்தல், அப்பன் திருப்பதி வழியாக சென்று சி.ஆர். பொறியியல் கல்லூரி அருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்துக்கு செல்லவேண்டும். மேலும் மேலூரில் இருந்து அழகர்கோவில் செல்லும் அரசுப்பேருந்துகள் வழக்கமான வழித்தடமான வெள்ளாளப்பட்டி, கிடாரிபட்டி வழியாக மகாத்மா பள்ளி அருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்துக்கு செல்ல வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/2018/apr/28/கள்ளழகர்-வருகை-ஊரகப்-பகுதியில்-போக்குவரத்து-மாற்றம்-2909028.html
2909027 அனைத்துப் பதிப்புகள் மதுரை இன்று மதுரைக்கு புறப்பாடாகிறார் கள்ளழகர்: நாளை எதிர்சேவை DIN DIN Saturday, April 28, 2018 08:25 AM +0530 மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு அழகர் மலையிலிருந்து மதுரை நோக்கி சனிக்கிழமை மாலை கள்ளழகர் புறப்பாடாகிறார். அவருக்கு ஞாயிற்றுக்கிழமை காலை மூன்று மாவடியில் மக்கள் வரவேற்பளிக்கும் எதிர்சேவை நடைபெறுகிறது.
   மதுரை சித்திரைத் திருவிழா மீனாட்சிசுந்தரேசுவரர் கோயில் மற்றும் அழகர்மலை கள்ளழகர் கோயிலை இணைத்து நடத்தப்பட்டுவருகிறது. அழகர்மலையில் உள்ள கள்ளழகர் கோயில் விழாவானது கடந்த 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் கொட்டகை முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியோடு  தொடங்கியது.
 மீனாட்சிசுந்தரேசுவரர் கோயில் தேரோட்டம் சனிக்கிழமை காலையில் நடைபெற்ற நிலையில், மாலையில் கள்ளழகர் மதுரை நோக்கி புறப்படுகிறார். அவர் அப்பன்திருப்பதி, கள்ளந்திரி, கண்ணனேந்தல் வழியாக ஞாயிற்றுக்கிழமை காலையில் மூன்றுமாவடி வந்தடைகிறார். அங்கு  எதிர்சேவை நடைபெறுகிறது. 
   மூன்றுமாவடியில் இருந்து புறப்பாடாகும் கள்ளழகர் சர்வேயர் காலனி, புதூர், டி.ஆர்.ஓ.காலனி, புதுநத்தம் சாலை, ரிசர்வ்லைன் ஆயுதப்படை மாரியம்மன் கோயில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,  மதுரை அரசு மருத்துவக் கல்லூரி டீன் அலுவலகம் உள்ளிட்ட மண்டகப்படிகள் வழியாக ஞாயிற்றுக்கிழமை மாலை மதுரை மாநகராட்சி பிரதான அலுவலகப் பகுதி மண்டபகப்படிகளில் எழுந்தருள்கிறார். அழகர்கோவில் முதல் மதுரை வரை சுமார் 453 மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருள்கிறார்.  
  மதுரை வரும் கள்ளழகருக்கு மாநகராட்சி பிரதான அலுவலகப் பகுதியிலும் (அவுட்போஸ்ட்)  பக்தர்கள் வரவேற்பு அளிக்கின்றனர். அதன்பின் ஒவ்வொரு மண்டகப்படியாக எழுந்தருளும் கள்ளழகர் ஞாயிற்றுக்கிழமை இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலில் எழுந்தருளி தங்கக்குதிரை வாகனத்தில் அருள்பாலிப்பார்.
 திங்கள்கிழமை அதிகாலை பெருமாள் கோயிலில் இருந்து புறப்படும் கள்ளழகர் தல்லாகுளம், கோரிப்பாளையம் வழியாக ஆழ்வார்புரம் பகுதி வைகை ஆற்றில் உள்ள மண்டகப்படியில் எழுந்தருள்கிறார். பின்னர் மதிச்சியம் ராமராயர் மண்டகப்படிக்கு செல்கிறார். அங்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது.  பின்னர் அண்ணாநகர் வழியாக இரவு வண்டியூர்வீரராகவப் பெருமாள் கோயிலில் எழுந்தருள்கிறார்.  
 செவ்வாய்க்கிழமை (மே 1)  காலை சேஷ வாகனத்தில் வண்டியூர் வீரராகவப்பெருமாள் கோயிலில் இருந்து புறப்படும் கள்ளழகர் வைகை ஆற்றில் உள்ள தேனூர் மண்டபத்தில் எழுந்தருள்வார். அங்கு மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கும் பூஜைகள் நடைபெறும். 
 தேனூர் மண்டபத்திலிருந்து புறப்பாடாகும் கள்ளழகர் செவ்வாய்க்கிழமை இரவு ராமராயர்மண்டபத்தில் எழுந்தருளியதும் விடிய விடிய தசாவதாரம் நடைபெறுகிறது. புதன்கிழமை (மே 2) ராமராயர் மண்டபத்தில் இருந்து மோகன அவதாரத்தில் புறப்பாடாகும் கள்ளழகர் வைகை ஆற்றில் மீண்டும் இறங்கி பின்னர் ஆழ்வார்புரம், கோரிப்பாளையம் வழியாக தமுக்கம் பகுதியில் உள்ல ராமநாதபுரம் ராஜா  சேதுபதி மண்டபத்தில் எழுந்தருள்வார். அன்றிரவு அங்கு பூப்பல்லக்கில் எழுந்தருளுயதும்,  வியாழக்கிழமை (மே 3) அதிகாலை மலைக்குப் புறப்பாடாகிறார். அன்று இரவில் அப்பன்திருப்பதில் தங்கி அருள்பாலிக்கிறார்.  வெள்ளிக்கிழமை (மே 4) அழகர்கோவிலை அடைகிறார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-madurai/2018/apr/28/இன்று-மதுரைக்கு-புறப்பாடாகிறார்-கள்ளழகர்-நாளை-எதிர்சேவை-2909027.html