Dinamani - கடலூர் - http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2903920 விழுப்புரம் கடலூர் மரத்தின் மீது கார் மோதியதில் பெண் உள்பட மூவர் சாவு   கடலூர், DIN Friday, April 20, 2018 08:51 AM +0530 கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே புதன்கிழமை நள்ளிரவில் மரத்தின் மீது கார் மோதியதில் பெண் உள்பட மூவர் உயிரிழந்தனர்.
 புவனகிரியிலுள்ள பிரதான சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (47). இவரது மனைவி ஜெயந்தி (42). இவர்களது மகன் பாலாஜி (21), உறவினர்களான காசிநாதன் மகன் விக்னேஷ் (23), காசிநாதனின் தம்பி குணசேகர் (49), வேல்முருகன் மகன் அருண்மொழி (21), முருகன் மகன் குணசீலன் (25), குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த சிதம்பரம் மகன் வெங்கடேசன் (25) ஆகியோர், ஈரோட்டில் வசிக்கும் உறவினரின் குடும்பப் பிரச்னை தொடர்பாக சமரசம் செய்வதற்காக புவனகிரியிலிருந்து காரில் சென்றனர். காரை புவனகிரியை அடுத்த பெருமாத்தூரைச் சேர்ந்த அமிர்தலிங்கம் மகன் சந்தோஷ்குமார் (39) ஓட்டிச் சென்றார்.
 ஈரோட்டுக்குச் சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி வந்துகொண்டிருந்தனர். புதன்கிழமை நள்ளிரவில் வேப்பூர் அருகே கார் வந்த போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தின் மீது மோதியது. இதில் காரின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது.
 காரை ஓட்டிய சந்தோஷ்குமார், குணசேகர் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 5 பேர் பலத்த காயமடைந்தனர்.
 தகவலறிந்த வேப்பூர் போலீஸார், சம்பவ இடத்துக்கு வந்து, பலத்த காயமடைந்த ஜெயந்தி, பாலாஜி, வெங்கடேசன், அருண்மொழி, குணசீலன் ஆகியோரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஜெயந்தி உயிரிழந்தார்.
 விபத்து குறித்து வேப்பூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/20/மரத்தின்-மீது-கார்-மோதியதில்-பெண்-உள்பட-மூவர்-சாவு-2903920.html
2903919 விழுப்புரம் கடலூர் லாரி - ஆம்புலன்ஸ் மோதல்: செவிலியர் சாவு; உறவினர்கள் தர்னா   நெய்வேலி, DIN Friday, April 20, 2018 08:50 AM +0530 கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே புதன்கிழமை நள்ளிரவு லாரி மீது "108' ஆம்புலன்ஸ் மோதியதில் செவிலியர் உயிரிழந்தார். ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பலத்த காயமடைந்தார்.
 நெய்வேலியை அடுத்துள்ள கொட்டகம் கிராமம், வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் வரலட்சுமி(30). "108' ஆம்புலன்ஸ் சேவையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்தார்.
 இவரது கணவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டாராம். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
 சேத்தியாத்தோப்பு கிராஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் சுதாகர் (35). "108' ஆம்புலன்ஸ் ஓட்டுநர். புதன்கிழமை இரவு இவர்கள் இருவரும் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் இருந்து நோயாளி ஒருவரை தீவிர சிகிச்சைக்காக "108' ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பிறகு குறிஞ்சிப்பாடியை நோக்கி திரும்பி வந்துகொண்டிருந்தனர்.
 குறிஞ்சிப்பாடியை அடுத்துள்ள கஞ்சமநாதன்பேட்டை அருகே நள்ளிரவில் வந்துகொண்டிருந்தபோது, சாலையோரத்தில் நிறுத்தி வைத்திருந்த லாரியை அதன் ஓட்டுநர் திடீரென இயக்கியுள்ளார்.
 இதையடுத்து, "108' ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்பகுதியில் மோதியது. இந்த விபத்தில்
 வரலட்சுமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
 ஓட்டுநர் சுதாகர் பலத்த காயமடைந்து கடலூர் அரசுத் தலைமை மருத்துவமனையில் கிசிச்சை பெற்று வருகிறார்.
 குறிஞ்சிப்பாடி போலீஸார் வரலட்சுமியின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 உறவினர்கள் தர்னா: விபத்தில் உயிரிழந்த வரலட்சுமியின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி, அவரது உறவினர்கள், "108' ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சடலத்தை வாங்க மறுத்து குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 
 
 
 
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/20/லாரி---ஆம்புலன்ஸ்-மோதல்-செவிலியர்-சாவு-உறவினர்கள்-தர்னா-2903919.html
2903878 விழுப்புரம் கடலூர் பள்ளி ஆண்டு விழா    சிதம்பரம் DIN Friday, April 20, 2018 08:34 AM +0530 காட்டுமன்னார்கோவில் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 38-ஆம் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
 விழாவுக்கு, பள்ளியின் நிறுவனர் முத்துக்குமரன் தலைமை வகித்தார். ஆதர்ஷ் பள்ளி நிறுவனர் நவநீதம், தாளாளர் பரணிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கலியபெருமாள் வரவேற்றார். திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்எல்ஏ பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
 அவர் பேசுகையில், இந்தக் கல்வி நிறுவனம் தனது கடின உழைப்பால் உயர்ந்துள்ளது. பல மருத்துவர்களையும், பொறியாளர்களையும் உருவாக்கியுள்ளது என்றார். பள்ளி முதல்வர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/20/பள்ளி-ஆண்டு-விழா-2903878.html
2903877 விழுப்புரம் கடலூர் அன்னபூர்ணா தின விழா    நெய்வேலி, DIN Friday, April 20, 2018 08:34 AM +0530 ரோட்டரி இயக்க நிறுவனர் பால் பி.ஹாரிஸ் பிறந்தநாளை, பண்ருட்டி ரோட்டரி சங்கத்தினர் அன்னபூர்ணா தினமாக வியாழக்கிழமை கொண்டாடினர்.
 விழாவுக்கு, ரோட்டரி சங்கத் தலைவர் கோ.காமராஜ் தலைமை வகித்தார். ரோட்டரி துணை ஆளுநர் மதன்சந்த் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பண்ருட்டி டிஎஸ்பி சுந்தரவடிவேல், அன்னதானம் வழங்கும் நிகழ்வை தொடக்கி வைத்தார்.
 முன்னாள் தலைவர்கள் ஆர்.சந்திரசேகர், முத்துசுப்பிரமணியன், ஆர்.சீனுவாசன், ஜி.சீனுவாசன், தண்டபாணி, பி.துரை, முன்னாள் துணை ஆளுநர் கே.முத்துகுமரப்பன், ரோட்டரி உறுப்பினர் கெளரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 நிகழ்வில், 600 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ரோட்டரி சங்கச் செயலர் ஏழுமலை நன்றி கூறினார்.
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/20/அன்னபூர்ணா-தின-விழா-2903877.html
2903876 விழுப்புரம் கடலூர் காட்டுமன்னார்கோவில் அரசுக் கல்லூரிக்கு விரைவில் கட்டட வசதி: நாக.முருகுமாறன் எம்எல்ஏ    சிதம்பரம் DIN Friday, April 20, 2018 08:34 AM +0530 அரசு ஒப்புதல் கிடைத்தவுடன், காட்டுமன்னார்கோவில் அரசு கலைக் கல்லூரிக்கு கட்டட வசதி செய்துதரப்படும் என நாக.முருகுமாறன் எம்எல்ஏ கூறினார்.
 காட்டுமன்னார்கோவில் அரசு கலைக் கல்லூரி தற்போது தனியார் கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியின் ஆண்டு விழா, நுண்கலை மன்ற விழா மற்றும் விளையாட்டு விழா ஆகிய முப்பெரும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
 விழாவுக்கு கல்லூரி முதல்வர் சித்ரா கலாராணி தலைமை வகித்தார். வணிகவியல் துறைத் தலைவர் அறவாழி வரவேற்றார். உடல்கல்வித் துறை இயக்குநர் எஸ்.சரவணன் விளையாட்டுத் துறை அறிக்கையும், ஆங்கிலத் துறைத் தலைவர் தென்னரசு நுண்கலை மன்ற அறிக்கையும் படித்தனர். விழாவில் காட்டுமன்னார்கோவில் தொகுதி எம்எல்ஏ நாக.முருகுமாறன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினார்.
 நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்தக் கல்லூரிக் கட்டடத்துக்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அரசு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
 அனுமதி கிடைத்தவுடன் விரைவில் அனைத்து வசதிகளுடன் கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டப்படும். அரசு தொழில்பயிற்சி நிறுவனத்துக்கு ரூ.4 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் கட்டடங்கள் கட்டப்பட உள்ளன. பாலிடெக்னிக் கல்லூரிக்கு கூடுவெளி என்ற இடத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு அரசு பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார் அவர்.
 விழாவை தமிழ்த் துறைத் தலைவர் சிற்றரசு தொகுத்து வழங்கினார். பேராசிரியர்கள் பூபாலன், ராமச்சந்திரன், வர்மன், பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், முன்னாள் பேருராட்சி மன்றத் தலைவர் எம்ஜிஆர் தாசன், நசிர் அகமது, விவசாய சங்கத் தலைவர் கே.வி.இளங்கீரன், அதிமுக நிர்வாகிகள் வாசு முருகையன், அசோகன், பாலச்சந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/20/காட்டுமன்னார்கோவில்-அரசுக்-கல்லூரிக்கு-விரைவில்-கட்டட-வசதி-நாகமுருகுமாறன்-எம்எல்ஏ-2903876.html
2903874 விழுப்புரம் கடலூர் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வுப் பேரணி   சிதம்பரம், DIN Friday, April 20, 2018 08:33 AM +0530 காட்டுமன்னார்கோவில் ஒன்றியம், மேல்புளியங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், கிராமக் கல்விக்குழு, பள்ளி மேலாண்மை உறுப்பினர்கள் இணைந்து நடத்திய மாணவர் சேர்க்கை விழிப்புணர்வுப் பேரணி மற்றும் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
 கூட்டத்தில், தலைமை ஆசிரியர் சே. குருராஜன் வரவேற்றார். முன்னாள் கிராம ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராஜ், கிராமக் கல்விக் குழு உறுப்பினர்கள் தங்கராசு, செல்லத்துரை, கல்வி மேலாண்மைக் குழுத் தலைவர் ராஜகுமாரி, சீமான், பிச்சப்பிள்ளை உள்ளிட்டோர் பங்கேற்றனர். உதவி ஆசிரியர் சிவசங்கர் நன்றி கூறினார்.
 கூட்டத்தில் 5 வயது மாணவர்களை அரசுப் பள்ளியில் சேர்க்க வலியுறுத்துவது, அரசின் புதிய கல்விக் கொள்கைகளை வீடு வீடாகச் சென்று விளக்கிக் கூறி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/20/மாணவர்-சேர்க்கை-விழிப்புணர்வுப்-பேரணி-2903874.html
2903873 விழுப்புரம் கடலூர் ஊழல் தடுப்புப் பிரிவு அலுவலகம் முற்றுகை   கடலூர், DIN Friday, April 20, 2018 08:33 AM +0530 கெடிலம் ஆற்றுச் சாலை அமைத்ததில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக விசாரிக்கக் கோரி, ஊழல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தை பொதுநல இயக்கத்தினர் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.
 கடலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள கெடிலம் ஆற்றின் கரையோரமாக கம்மியம்பேட்டை வரை சாலை உள்ளது.
 இந்தச் சாலை சில மாதங்கள் இடைவெளியில் 3 முறை அமைக்கப்பட்ட போதிலும், தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதால் விரைவில் குண்டும், குழியுமாக மாறியது.
 எனவே, இந்தச் சாலையை சீரமைக்க வேண்டுமென அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 அப்போது, சாலை அமைத்ததில் முறைகேடு நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்தப் போராட்டம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டதை அடுத்து, முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டுமென மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவிடம் அமைப்பினர் மனு அளித்தனர்.
 இதையடுத்து, இந்த மனு குறித்து கடலூரிலுள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு துறையினர் விசாரணை நடத்த வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டதாகத் தெரிகிறது.
 ஆனால், 6 மாதங்களைக் கடந்த நிலையிலும் அதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படவில்லையென கூட்டமைப்பினர் கருதினர்.
 எனவே, இந்த மனு மீதான நடவடிக்கையைத் தெரிந்துக் கொள்ளும் வகையில் வியாழக்கிழமை கடலூர் செம்மண்டலத்திலுள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலகத்தை கூட்டமைப்பினர் முற்றுகையிட்டனர்.
 கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சி.குமார், துணை ஒருங்கிணைப்பாளர்கள் எம்.குருராமலிங்கம், கே.சிவாஜிகணேசன், வழக்குரைஞர் தி.ச.திருமார்பன், ஏஐடியூசி நிர்வாகி எம்.சேகர், தமிழ்நாடு மீனவர் பேரவை மாவட்டத் தலைவர் எம்.சுப்புராயன், கூட்டமைப்பு நிர்வாகிகள் க.தர்மராஜ், சிவ.ரவிச்சந்திரன், எம்.சிவசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 அப்போது, இந்த மனு மீது விசாரணை நடத்துவதற்கான உத்தரவு தங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை எனவும், அவ்வாறு உத்தரவு கிடைத்தபின்னர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் ஊழல் தடுப்புப் பிரிவினர் தெரிவித்ததைத் தொடர்ந்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/20/ஊழல்-தடுப்புப்-பிரிவு-அலுவலகம்-முற்றுகை-2903873.html
2903872 விழுப்புரம் கடலூர் காஷ்மீர் சிறுமி கொலை விவகாரம்: நெய்வேலியில் மெளன ஊர்வலம்    நெய்வேலி, DIN Friday, April 20, 2018 08:32 AM +0530 காஷ்மீரில் 8 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, நெய்வேலியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி புதன்கிழமை மெளன ஊர்வலம் நடத்தினர்.
 நெய்வேலி எல்ஐசி அலுவலகத்தில் இருந்து மெயின் பஜார் வரை நடைபெற்ற இந்த ஊர்வலத்தை, நகரச் செயலர் ஆர்.பாலமுருகன் தலைமை வகித்து தொடக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.திருஅரசு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் வி.மேரி, எம்.மீனாட்சிநாதன், வி.முத்துவேல், நகரக்குழு உறுப்பினர்கள் ஆர்.மணி, கே.மணி, ஆர்.சீனுவாசன், பி.மணிமாறன், எம்.ராமமூர்த்தி, எஸ்.முருகன், எம்.அன்பழகன், எஸ்.கார்த்திகேயன், கே.திருவேங்கடம், வி.குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 ஆர்ப்பாட்டம்: இதே விவகாரம் தொடர்பாக, பண்ருட்டி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு நகரச் செயலர் உத்தராபதி தலைமை வகித்தார். லோகநாதன், தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் உதயகுமார் கண்டன உரை நிகழ்த்தினார். சங்கர், ராஜேந்திரன், தினேஷ், மகாலட்சுமி, குமரகுருபரன், சேகர், ஏழுமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 மேற்கண்ட நிகழ்வுகளில், காஷ்மீர் சிறுமி படுகொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தினர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/20/காஷ்மீர்-சிறுமி-கொலை-விவகாரம்-நெய்வேலியில்-மெளன-ஊர்வலம்-2903872.html
2903869 விழுப்புரம் கடலூர் வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று இடம் வழங்க பாஜக மனு   கடலூர், DIN Friday, April 20, 2018 08:32 AM +0530 கெடிலம் ஆற்றங்கரையோரம் இருந்த வீடுகள் அகற்றப்பட்டதால் பாதிக்கப்பட்டோருக்கு மாற்று இடம் வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் பாஜக வியாழக்கிழமை வலியுறுத்தியது.
 இதுகுறித்து அந்தக் கட்சியின் கடலூர் மாவட்ட பொதுச் செயலர் மு.சக்திகணபதி தலைமையில் நிர்வாகிகள், கடலூர் புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வே.ப.தண்டபாணியை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: கடலூர் நகரம் புதுப்பாளையம் கெடிலம் நதிக்கரையில் நீர்வழி புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி சுமார் 350 குடும்பத்தினர் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்தனர். ஆற்றின் கரையைப் பலப்படுத்துவதாகக் கூறி அந்தப் பகுதியினரை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அப்புறப்படுத்தி வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
 தற்போது, அவர்கள் வசிக்க வீடு இல்லாமலும், சிலர் அதேப் பகுதியில் மரத்தடியிலும் வசித்து வருகின்றனர். வீடுகளை அப்புறப்படுத்தும்போது அவர்களுக்கு பட்டாவுடன் கூடிய மாற்று இடம் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டது. ஆனால், 2 மாதங்களாகியும் மாற்று இடம் வழங்கப்படாததால் அவர்கள் மிகுந்த துயரத்தை சந்தித்து வருகின்றனர். எனவே, அரசு அளித்த வாக்குறுதியின்படி அவர்களுக்கு உடனடியாக மாற்று இடம் வழங்கி வீடு கட்டித்தர வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டது.
 நகரத் தலைவர் க.சங்கர்கணேஷ், ஒன்றிய முன்னாள் தலைவர் சோ.முருகன், நிர்வாகிகள் பழனிவேல், மகாராஜன், சிவசங்கர், திருவள்ளுவன், வீரபாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/20/வீடுகளை-இழந்தவர்களுக்கு-மாற்று-இடம்-வழங்க-பாஜக-மனு-2903869.html
2903867 விழுப்புரம் கடலூர் புதிய தொழில்நுட்பத்தில் எள் சாகுபடி   நெய்வேலி, DIN Friday, April 20, 2018 08:31 AM +0530 குறிஞ்சிப்பாடி உழவர் மன்ற விவசாயிகள் புதிய தொழில்நுட்பத்தில் (நடவு முறையில்) எள் சாகுபடி செய்துள்ளனர்.
 குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் சுமார் 2 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் எள் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் நிலம் நன்கு புளுதியாக்கப்பட்ட பின்னர் பாத்தி கட்டி எள் விதைக்கப்படும். பின்னர், களை எடுப்பின்போது, குறிப்பிட்ட இடைவெளியில் செடிகளை விட்டுவிட்டு இதர செடிகளை எடுத்து விடுவது வழக்கம். தற்போது, குறிஞ்சிப்பாடி உழவர் மன்ற விவசாயிகள் 30-க்கும் மேற்பட்டோர், தங்களது நிலத்தில் புதிய தொழில்நுட்ப முறையில் எள் நடவு செய்துள்ளனர். இதன் மூலம் ஏக்கருக்கு 8 முதல் 10 மூட்டைகள் வரை எள் மகசூல் கிடைக்கும் என உறுதிபடக் கூறுகின்றனர்.
 இதுகுறித்து குறிஞ்சிப்பாடி உழவர் மன்றத் தலைவர் ஆர்.கே.ராமலிங்கம் கூறியதாவது: குறிஞ்சிப்பாடி பகுதி விவசாயிகள் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எள் மகசூல் செய்யத் தொடங்கியுள்ளனர்.
 சாதாரண முறையில் நிலத்தை நன்கு உழுது எள் விதைக்கப்படும். இதில் ஏக்கருக்கு 4 மூட்டை எள் கிடைக்கும்.
 ஆனால், நாங்கள் 2 அடிக்கு 2 அடி பார் பிடித்து, அரை அடி இடைவெளியில் எள்ளை கையால் நடவு செய்வோம். தண்ணீர் கட்டி 3-ஆம் நாள் களைக்கொல்லி மருந்துத் தெளித்து களையை கட்டுப்படுத்துவோம். 15 நாள்களுக்குப் பின்னர் குத்துக்கு ஒரு செடியை மட்டும் விட்டு விட்டு மற்றச் செடிகளை களைந்துவிடுவோம்.
 இந்த முறையில் செடிகள் நன்கு செழித்து வளரும். ஒரு சதுர மீட்டருக்கு சராசரியாக 9 செடிகள் வரை வளரும். பூக்கும் தருணம், காய்ப் பிடிக்கும் தருணம் என இரண்டு முறை டிஏபி கரைசல் தெளிப்போம்.
 எண்ணெய்ச் சத்து அதிகரிப்பதற்காக 4 கிலோ மாங்கனீசு சல்பேட்டை அடியுரமாக எருவுடன் கலந்து இடுவோம். இந்த புதிய முறைப்படி எள் சாகுபடி செய்தால் ஏக்கருக்கு குறைந்தபட்சம் 8 முதல் 10 மூட்டைகள் வரை மகசூல் கிடைக்கும் என்றார் அவர்.
 புதிய முறையில் நன்கு செழித்து வளர்ந்துள்ள எள் பயிர்களை குறிஞ்சிப்பாடி வேளாண்மை உதவி இயக்குநர் சின்னக்கண்ணு, விதைச் சான்று அலுவலர் ஜெயஸ்ரீ, உதவி அலுவலர் ராயப்பநாதன் ஆகியோர் புதன்கிழமை நேரில் பார்வையிட்டனர். அப்போது விவசாயிகள் ஆர்.கே.ராமலிங்கம், குப்புசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/20/w600X390/agri.jpg http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/20/புதிய-தொழில்நுட்பத்தில்-எள்-சாகுபடி-2903867.html
2903863 விழுப்புரம் கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலில் சித்திரைப் பெருவிழா நாளை தொடக்கம்    கடலூர், DIN Friday, April 20, 2018 08:30 AM +0530 நடுநாட்டுத் திருப்பதிகளில் ஒன்றான திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயிலில் சித்திரை பிரம்மோத்சவ விழா சனிக்கிழமை அதிகாலை 4.10 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
 இரவில் ஹம்ஸ வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. முன்னதாக வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் அங்குரார்ப்பனமும், நித்ய உற்சவர் திருவீதியுலாவும் நடைபெறுகிறது. இதையடுத்து, ஒவ்வொரு நாளும் காலை, இரவு வேளைகளில் சூரியபிரபை, வெள்ளி ஹம்ஸம், யாளி, அனுமந்தம், சேஷம், கருடன், யானை, வெள்ளிக் குதிரை வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.
 ஏப்.25-ஆம் தேதி காலை தங்கப் பல்லக்கில் நாச்சியார் திருக்கோலமும், 26-ஆம் தேதி மஞ்சள்நீர் வசந்தோற்சவம், 27-ஆம் தேதி வெண்ணைத்தாழி உற்சவம், 28-ஆம் தேதி பேட்டை உற்சவம், 29-ஆம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் காலை 6 மணிக்கு நடைபெறுகிறது. அன்று மாலையில் மதுரகவி ஆழ்வார் உற்சவ சாத்துமுறை, இரவில் பானக பூஜை அவரோஹனம் ஆகியவை நடைபெறுகின்றன.
 30-ஆம் தேதி காலை மட்டையடி விழா, தங்கப் பல்லக்கில் சுவாமி வீதி உலா, இரவில் தெப்ப உற்சவமும், மே 1-ஆம் தேதி காலையில் கொடியிறக்கமும், மாலையில் விடையாற்றி உற்சவமும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் கி.ரேணுகாதேவி, கோயில் நிர்வாக அலுவலர் ஜெ.ராஜா சரவணக்குமார் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/20/திருவந்திபுரம்-தேவநாத-சுவாமி-கோயிலில்-சித்திரைப்-பெருவிழா-நாளை-தொடக்கம்-2903863.html
2903860 விழுப்புரம் கடலூர் மீன்பிடித் தடைக் காலத்தில் மாற்றுத் தொழிலுக்கு ஏற்பாடு: மாவட்ட ஆட்சியர் உறுதி    கடலூர், DIN Friday, April 20, 2018 08:30 AM +0530 மீன்பிடி தடைக் காலத்தில் மீனவர்கள் மாற்றுத் தொழில் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராக இருப்பதாக ஆட்சியர் வே.ப.தண்டபாணி கூறினார்.
 கடலூர் மாவட்ட மீனவர்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி தலைமை வகித்தார். சார் - ஆட்சியர் ஜானிடாம் வர்க்கீஸ், மீன்வளத் துறை உதவி இயக்குநர் கே.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 கூட்டத்தில், பல்வேறு மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். அதுகுறித்த விவரம் வருமாறு:
 பரங்கிப்பேட்டை கனகசபை: வலை மானியம் வழங்கப்படும் மீனவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
 முடசல் ஓடை ஆனந்தன்: முடசல் ஓடையில் வலைப்பின்னும் கூடம் கட்ட வேண்டும்.
 சங்கொலிக்குப்பம்
 புகழேந்தி: சிப்காட் பகுதியில் தொழில்சாலை கழிவுகளால் குடிநீர் ஆதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
 இவ்வாறு பல்வேறு தரப்பினரும் தெரிவித்த கருத்துகளுக்கு, மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி பதிலளித்துப் பேசியதாவது:
 மீன்பிடித் தடைக் காலம் 60 நாள்களுக்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தடைக் காலத்தில் பிழைப்பூதியம் வழங்கப்பட்டபோதிலும், மீனவர்கள் தங்களின் எதிர்கால நலனை கருத்தில்கொண்டு மாற்றுத் தொழில்களிலும் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக கடற்கரை மணல் பகுதியில் வெட்டிவேர் அதிகளவில் விளையும். தங்கள் பகுதியில் அரசுப் புறம்போக்கு நிலம் கண்டறியப்பட்டால் குழு அமைத்து அதைப் பயிரிடலாம்.
 55 கி.மீ. நீளமுள்ள கடற்கரைப் பகுதியில் சுமார் 1,500 இடங்களில் உரிய கட்டமைப்பை ஏற்படுத்தி மீன் வளர்ப்புப் பணியில் ஈடுபடலாம். இதனால், ஆண்டு முழுவதும் வருமானம் பெற முடியும். கடல்பாசி வளர்ப்பு போன்றவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும். இதற்குத் தேவையான மானியம், பயிற்சி, உதவிகளை வழங்கிட அரசு தயாராக உள்ளது.
 எனவே, மீனவர்கள் தங்களுக்குள் கலந்துரையாடி குழுக்களை அமைத்து வேறு தொழில்களிலும் கவனம் செலுத்தினால் அனைத்துக் காலங்களிலும் வருவாய் பெற முடியும். இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க அரசு தயாராக உள்ளது. இந்த வாய்ப்பை மீனவ இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர்.
 
 
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/20/மீன்பிடித்-தடைக்-காலத்தில்-மாற்றுத்-தொழிலுக்கு-ஏற்பாடு-மாவட்ட-ஆட்சியர்-உறுதி-2903860.html
2903297 விழுப்புரம் கடலூர் நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகி குண்டர் சட்டத்தின் கீழ் கைது DIN DIN Thursday, April 19, 2018 10:05 AM +0530 நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகி வா.கடல்தீபன் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
கடலூர் செல்லகுப்பத்தைச் சேர்ந்த வாகரன் மகன் கடல்தீபன் (37) (படம்). பொறியாளரான இவர், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு வருகிறார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது, குறிஞ்சிப்பாடி தொகுதியில் கட்சி சார்பில் போட்டியிட்டவர் இவர்.
இந்த நிலையில், காவிரி விவகாரம் தொடர்பான போராட்டத்தின் போது, கடந்த 10 -ஆம் தேதி இவரது தலைமையில் கட்சியினர் சிலர் கடலூர் தலைமைத் தபால் நிலையம் அருகே கர்நாடக மாநில அரசுப் பேருந்தை வழிமறித்து, அதன் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். இதுதொடர்பாக பேருந்தின் ஓட்டுநர் ர.பசவராஜ் அளித்த புகாரின் பேரில், கடலூர் புதுநகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். 
அதன்படி, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வா.கடல்தீபன், மாவட்டச் செயலர் சாமிரவி, கோண்டூர் ராஜா, சாமியார்பேட்டை தனசேகர், முதுநகர் நாராயணன், அழகியநத்தம் சுரேன், பச்சையாங்குப்பம் நாராயணசாமி ஆகியோரை போலீஸார் அண்மையில் கைது செய்தனர்.
இந்த நிலையில், கடல்தீபனின் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் பரிந்துரைத்தார். 
இந்தப் பரிந்துரை நிலுவையில் இருக்கும் நிலையில், கடல்தீபனின் தந்தை திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தார். அதில், தனது மகனை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவ்வாறான நடவடிக்கை அரசியலில் ஈடுபடும் இளைஞர்களுக்கு முட்டுக் கட்டையாக இருக்கும் எனவும் கூறியிருந்தார்.
எனினும், அவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி பிறப்பித்தார். 
இதனைத் தொடர்ந்து, ஏற்கெனவே கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கடல்தீபனிடம், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் ஓராண்டுக்கு சிறையில் அடைப்பதற்கான உத்தரவு நகல் புதன்கிழமை அவரிடம் வழங்கப்பட்டது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/19/நாம்-தமிழர்-கட்சியின்-மாநில-நிர்வாகி-குண்டர்-சட்டத்தின்-கீழ்-கைது-2903297.html
2903293 விழுப்புரம் கடலூர் கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டம்: கடலூரில் கருத்து கேட்புக் கூட்டத்தில் மீனவர்கள் போராட்டம் DIN DIN Thursday, April 19, 2018 10:04 AM +0530 கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்ட வரைபடம் குறித்த மக்கள் கருத்து கேட்புக் கூட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மீனவ அமைப்புகள், பொது நல அமைப்புகள் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
"வரைவு கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டம்' என்ற பெயரில் தமிழக அரசு திட்டம் ஒன்றை உருவாக்கி, அதை மாநிலம் முழுவதும் கடற்கரையோரப் பகுதிகளில் செயல்படுத்த வரைவு படம் தயாரித்துள்ளது.
இந்த வரைவு படத்தில் கடற்கரையையொட்டியுள்ள பகுதிகளில் எங்கெல்லாம் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளலாம், எங்கு மேற்கொள்ளக் கூடாது என்பதைக் குறித்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு பொதுமக்கள், மீனவர்களிடம் கருத்துக் கேட்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, கடலூர் மாவட்டத்துக்கான கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி தலைமை வகித்தார்.
சார்- ஆட்சியர் ஜானிடாம் வர்க்கீஸ், துணை ஆட்சியர் (பயிற்சி) ஜெகதீஸ்வரன், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் ராமசுப்பு ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டம் தொடங்கியதும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் வரைபட விளக்கக் காட்சிகள் மூலம் கடற்கரை மேலாண்மைத் திட்டம் குறித்து விளக்கினார்.
அப்போது, மீனவர்கள் வாழ்வுரிமை இயக்கத்தின் நிறுவனர் பெரு.ஏகாம்பரம் தலைமையில், மீனவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், மீனவக் கிராமத் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் எழுந்து நின்று "இது மீனவ கிராமங்களை வேரோடு அழிக்கக் கொண்டு வரப்பட்ட திட்டம். எனவே, இந்தத் திட்டத்தை ஏற்க மாட்டோம்' என எதிர்ப்புத் தெரிவித்தனர். தொடர்ந்து, திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று கூறி, மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர்.
இதையடுத்து, பிரதிநிதிகள் தங்களது கருத்துகளைப் பதிவு செய்யலாம்' என ஆட்சியர் கூறியும், அதை ஏற்க மறுத்து அனைவரும் வெளிநடப்பு செய்தனர். கூட்டத்தில் இருந்து வெளியேறிய அனைவரும் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூக செயல்பாட்டாளர் பால்கி தலைமையில், திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து முழக்கமிட்டனர்.
இதுகுறித்து கடற்கரை செயல்பாட்டுக் குழுவைச் சேர்ந்த காந்திமதி உள்ளிட்ட மீனவ கிராம பெண்கள் கூறியதாவது:
சாகர்மலா திட்டத்துக்காக பூர்வீக மீனவ மக்களை தங்களது வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றும் சதித் திட்டமே இந்தக் கடற்கரை மேலாண்மைத் திட்டம். இந்தத் திட்டத்தை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம் என்றனர்.
நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் மு.நிஜாமுதீன் கூறியதாவது:
கடற்கரை ஒழுங்குமுறை சட்டத்தின்படி, வரைபடம் தயாரிக்கப்படவில்லை. மீனவ மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் தமிழில் எழுத்துப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. மீனவர்களின் வாழ்விடங்கள், தொழில் செய்யும் இடம், வலைப் பின்னல் கூடம் உள்ளிட்டவை குறித்து எளிதில் புரிந்து கொள்ள முடியாத வகையில் வரைபடத்தின் அளவு உள்ளது. இதனால், மீனவ சமுதாய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இந்தத் திட்டத்தை எதிர்க்கிறோம் என்றார்.
தமிழ்நாடு மீனவர் பேரவையின் மாவட்டத் தலைவர் எம்.சுப்புராயன், மீனவர் விடுதலை வேங்கைகள் கட்சியின் இணைப் பொதுச் செயலர் வெங்கடேசன், அனைத்துக் குடியிருப்போர்கள் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் மு.மருதவணான், சுற்றுச் சூழல் செயல்பாட்டாளர் தி.அருள்செல்வன், அய்யம்பேட்டை பூபாலன், மானியார்பேட்டை நாகலிங்கம், மீனவ கிராமத் தலைவர்கள், நிர்வாகிகள் அனைவரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று வெளிநடப்பு செய்ததுடன், திட்டத்தை கைவிடவில்லையெனில் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என்று எச்சரித்தனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி கூறியதாவது:
இந்தத் திட்டமானது, அண்ணா பல்கலைக்கழமும், பல்வேறு தொழில்நுட்ப வல்லுநர்கûளையும் கொண்டு ஆய்வு செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
மீன்பிடித் தளம், குடியிருப்பு, பயன்பாட்டிலுள்ள பகுதிகள் அந்த வரைபடத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் இந்தத் திட்டம் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார் அவர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/19/கடற்கரை-மண்டல-மேலாண்மைத்-திட்டம்-கடலூரில்-கருத்து-கேட்புக்-கூட்டத்தில்-மீனவர்கள்-போராட்டம்-2903293.html
2903166 விழுப்புரம் கடலூர் வட்டாட்சியர் பொறுப்பேற்பு DIN DIN Thursday, April 19, 2018 08:38 AM +0530 பண்ருட்டி வட்டாட்சியராக எம்.ஆறுமுகம் அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்டார். பண்ருட்டி வட்டாட்சியராகப் பணியாற்றி வந்த ஜெயக்குமார் கடலூர் வட்டாட்சியராகப் பணியிட மாறுதல் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, சிதம்பரம் வட்டாட்சியராகப் பணியாற்றி வந்த எம்.ஆறுமுகம், பணியிட மாறுதல் பெற்று பண்ருட்டி வட்டாட்சியராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/19/வட்டாட்சியர்-பொறுப்பேற்பு-2903166.html
2903165 விழுப்புரம் கடலூர் தீ விபத்து: நிவாரணம் உதவி அளிப்பு DIN DIN Thursday, April 19, 2018 08:37 AM +0530 தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசின் நிவாரண உதவி வழங்கப்பட்டது. 
சிதம்பரம் அருகே உள்ள தில்லைவிடங்கன் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த சிவகாமசுந்தரி என்பவரது குடிசை வீடு, அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து சேதமுற்றது. இதையறிந்த சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன், தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து நிவாரணம் வழங்கி ஆறுதல் கூறினார். மேலும் தமிழக அரசால் வழங்கப்படும் நிதி உதவி, நிவாரண உதவிகளை வழங்கினார். 
முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலர் அசோகன், சிதம்பரம் நகரச் செயலர் செந்தில்குமார், ஜெயலலிதா பேரவை முன்னாள் செயலர் பன்னீர்செல்வம், முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினர் சிவசிங்காரவேல், முன்னாள் கதர் வாரிய உறுப்பினர் தன.ஜெயராமன், நிர்வாகிகள் சந்தர் ராமஜெயம், கீழ்சாவடி சீனு, சதிஷ், செழியன், பரமானந்தம், காளிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/19/தீ-விபத்து-நிவாரணம்-உதவி-அளிப்பு-2903165.html
2903164 விழுப்புரம் கடலூர் திமுக செயற்குழுக் கூட்டம் DIN DIN Thursday, April 19, 2018 08:37 AM +0530 வருகிற 23-ஆம் தேதி நடைபெற உள்ள மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் திமுக, தோழமைக் கட்சியினர் திரளாகப் பங்கேற்க வேண்டும் என திமுக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குறிஞ்சிப்பாடி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட திமுக அவைத் தலைவர் து.தங்கராசு தலைமை வகித்தார்.
மாவட்ட திமுக செயலரும், குறிஞ்சிப்பாடி எம்.எல்.ஏ.வுமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றினார். மாவட்ட திமுக துணைச் செயலர்கள் சக்திவேல், மனோரஞ்சிதம், பொருளாளர் குணசேகரன், ஒன்றியச் செயலர்கள் முத்துசாமி, சிவக்குமார், தங்க.ஆனந்தன், மாமல்லன், முத்து, பெருமாள், மதியழகன், ராயர், பொதுக்குழு உறுப்பினர் கே.பி.ஆர்.பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் காவிரி விவகாரம் தொடர்பாக வருகிற 23-ஆம் தேதி கடலூர் மாவட்ட திமுக, அதன் தோழமைக் கட்சிகள் சார்பில், சிதம்பரம் தெற்கு வீதியில் நடத்தப்பட உள்ள மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் திமுக, அதன் தோழமைக் கட்சியினர், விவசாயிகள், பொதுமக்கள், வியாபாரிகள் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும். ஏப். 21-ஆம் தேதி சென்னையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள கடலூர் கிழக்கு மாவட்ட கள ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் தவறாது கலந்து கொள்ள வேண்டும். திமுக தலைவர் கருணாநிதி, கனிமொழி எம்.பி. ஆகியோர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பதிவிட்ட பாஜக தேசியச் செயலர் எச்.ராஜாவை கண்டிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமையில், 100-க்கும் மேற்பட்ட திமுகவினர் பேரணியாக குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் சென்று பாஜக தேசியச் செயலர் எச்.ராஜாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/19/திமுக-செயற்குழுக்-கூட்டம்-2903164.html
2903163 விழுப்புரம் கடலூர் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி வாலிபர் சங்கத்தினர் மனு DIN DIN Thursday, April 19, 2018 08:37 AM +0530 அரசு நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கடலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தனர். 
இதுகுறித்து சங்கத்தின் திட்டக்குடி வட்டச் செயலர் எம்.பாண்டியன் மற்றும் வடகராம்பூண்டி கிராம மக்கள் அளித்த மனு: திட்டக்குடி வட்டம், வடகராம்பூண்டி கிராமத்தில் பல ஆண்டுகளாகப் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த அரசுப் புறம்போக்கு நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதுகுறித்து வட்டாட்சியர் அளவில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 
எனவே, சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட 2 போராட்டங்கள் தொடர்பாக வட்டாட்சியர், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் தலைமையில் தனித் தனியாக அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, ஆக்கிரமிப்பு அகற்றப்படுமென உறுதி அளிக்கப்பட்டது. அதில், கடந்த மார்ச் 13-ஆம் தேதிக்குள் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, அந்த இடத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் கம்பி வேலி அமைத்துத் தருவதாக உறுதியளிக்கப்பட்டும் இதுவரை நடவடிக்கை இல்லை. 
இதையடுத்து, ஏப்.12-ஆம் தேதி சவபாடை கட்டும் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், ஆக்கிரமிப்பு இடத்தை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. 
அதன்படி, அம்பேத்கர் பிறந்த நாளை அந்த இடத்தில் கொண்டாட முடிவு செய்தபோது, ராமநத்தம் காவல் ஆய்வாளர் மூலம் நிகழ்ச்சி தடுத்து நிறுத்தப்பட்டது. எனவே, இதன்மீது உரிய நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு கம்பி வேலி அமைக்க வேண்டுமென அந்த மனுவில் 
வலியுறுத்தி உள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/19/ஆக்கிரமிப்பை-அகற்றக்-கோரி-வாலிபர்-சங்கத்தினர்-மனு-2903163.html
2903162 விழுப்புரம் கடலூர் கல்லூரியில் தேசியக் கருத்தரங்கம் DIN DIN Thursday, April 19, 2018 08:36 AM +0530 காட்டுமன்னார்கோவில் எம்ஆர்கே இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில், தேசியக் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், எம்ஆர்கே தொழில்நுட்பக் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்கள், பல்வேறு பொறியியல் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, தொழில்நுட்ப அறிக்கையை சமர்ப்பித்து விவாதித்தனர். கல்லூரித் தலைவர் எம்.ஆர்.கே.பி.கதிரவன் தலைமை வகித்தார். அரியலூர் அண்ணா பல்கலைக்கழக கணிதத் துறைத் தலைவர் எஸ்.ராஜகுமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். 
அவர் பேசுகையில், படிப்பு என்பது மாணவர்கள் தேர்வு எழுதி வெற்றி பெறுவது மட்டுமல்ல. அவர்களது அறிவை வளர்த்து, வாழ்வில் வெற்றியடைய வைப்பதாகும். மாணவர்களின் விடா முயற்சியும், பயிற்சியுமே வாழ்வியல் வெற்றியை தீர்மானிக்கும் என்றார். முன்னதாக, கல்லூரி முதல்வர் வாழ்த்துரையாற்றினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/19/கல்லூரியில்-தேசியக்-கருத்தரங்கம்-2903162.html
2903161 விழுப்புரம் கடலூர் இரு சக்கர வாகனத் திட்டம்: விண்ணப்பதாரர்களின் ஆவணங்கள் சரிபார்ப்பு DIN DIN Thursday, April 19, 2018 08:36 AM +0530 அம்மா இரு சக்கர வாகனத் திட்டத்தின்கீழ் விண்ணப்பித்தவர்களின் ஆவணங்களைச் சரிபார்க்கும் பணி , குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தத் திட்டத்தில் முதல் கட்டமாக குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் உள்ள 51 ஊராட்சிகளுக்கு 269 இருசக்கர வாகனங்கள், நெய்வேலிக்கு 150 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 419 வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தில் மேற்கண்ட பகுதிகளைச் சேர்ந்த 720 பேர் விண்ணப்பித்துள்ளனர். அண்மையில் கடலூரில் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் நடைபெற்ற விழாவில் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த 7 பேர், நெய்வேலியை சேர்ந்த 4 பேருக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன. 
இதில் எஞ்சிய விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. மாவட்ட ஊராட்சி செயலர் சிவஞானபாரதி தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்மணி மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விண்ணப்பதாரர்களின் ஆவணங்களை சரி பார்த்ததாக சத்துணவு மேலாளர் மங்களேஸ்வரி தெரிவித்தார்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/23/w600X390/tvs-jupiter-classic-scooter-front.jpg http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/19/இரு-சக்கர-வாகனத்-திட்டம்-விண்ணப்பதாரர்களின்-ஆவணங்கள்-சரிபார்ப்பு-2903161.html
2903160 விழுப்புரம் கடலூர் அ.ம.வி.க. பொதுக்கூட்டம் DIN DIN Thursday, April 19, 2018 08:35 AM +0530 வடலூரில் அனைத்து மக்கள் விடுதலைக் கட்சி சார்பில், அம்பேத்கர் பிறந்த நாள் விழா, காவிரி நதிநீர் உரிமை மீட்பு, பெட்ரோலிய வேதியியல் மண்டலம், ஹெட்ரோ கார்பன், ஸ்டெர்லைட் குறித்த விளக்கப் பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. 
கூட்டத்துக்கு, கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தங்க.முருகன் தலைமை வகித்தார். திராவிடர் கழக பொதுச் செயலர் துரை.சந்திரசேகரன், மூத்த வழக்குரைஞர் கே.சுப்ரமணியன், அனைத்து மக்கள் விடுதலைக் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ்.பாட்ஷா ஆகியோர் சிறப்புரையாற்றினர். மகளிரணி ஒருங்கிணைப்பாளர் ஏ.இந்திராணி முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர்கள் டி.பாலகுரு, இளவரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பொருளாளர் சி.கே.கலியமூர்த்தி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட துணைத் தலைவர் என்.வீராசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வடலூர் நகரச் செயலர் தங்க.ஜோதிமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொகுதி பொதுச் 
செயலர் டி.வீரமணி நன்றி கூறினார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/19/அமவிக-பொதுக்கூட்டம்-2903160.html
2903159 விழுப்புரம் கடலூர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் DIN DIN Thursday, April 19, 2018 08:35 AM +0530 சிதம்பரத்தில் நாக.முருகுமாறன் எம்.எல்.ஏ.வுக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குறித்து, காட்டுமன்னார்கோவில் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நாக.முருகுமாறன் தனது தொண்டரின் தொலைபேசியில் அவதூறாகப் பேசியதாகத் தெரிகிறது. இதனைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் பெரு.திருவரசு தலைமையில், சிதம்பரம் வடக்கு முதன்மைச் சாலையில் அவரது உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநிலக் கருத்தியல் பரப்புத் துணைச் செயலர் பி.குறிஞ்சிவளவன், மாநிலத் தொழிலாளர் அணித் துணைச் செயலர் அன்பழகன், தொகுதித் துணைச் செயலர் மராந்தூர் ராஜேஷ், சிதம்பரம் நகரச் செயலர்கள் கோவி.பாவாணன், க.ஆதிமூலம், ஒன்றியச் செயலர் கோ.செ.பேரறிவாளன், புவனகிரி செல்வம், கிள்ளை வ.ராமதாஸ், சிவபுரி வ.இன்பவளவன், க.முகிலன், பெரு.சரித்திரன் 
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/19/விடுதலைச்-சிறுத்தைகள்-கட்சியினர்-ஆர்ப்பாட்டம்-2903159.html
2903158 விழுப்புரம் கடலூர் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் சார்பில் கலையரங்கம், வகுப்பறைக் கட்டடம் திறப்பு DIN DIN Thursday, April 19, 2018 08:35 AM +0530 என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ், ரூ. 4 கோடியில் கட்டப்பட்ட கலையரங்கம், வகுப்பறைக் கட்டடங்கள் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. கட்டடங்களை என்.எல்.சி. இந்தியா நிறுவனத் தலைவர் சரத்குமார் ஆச்சார்யா திறந்து வைத்தார்.
என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் கீழ், ஜவஹர் கலை, அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்காக ஆண்டுதோறும் சுமார் இரண்டரை கோடி ரூபாய் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ. 3.62 கோடியில், 9,500 சதுரடிப் பரப்பளவில், மேடை, நவீன வசதிகளுடன் 500 பேர் அமரும் வகையில் கலையரங்கம், 7,800 சதுரடிப் பரப்பளில் 8 வகுப்பறைகள், ஆசிரியர் அறை, கழிப்பறை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. 
இதேபோல, நெய்வேலி, 12-ஆவது வட்டத்தில் உள்ள நெய்வேலி முஸ்லீம் ஜமா மெட்ரிக் பள்ளி வளாகத்தில், ரூ. 41 லட்சத்தில் 1,750 சதுரடிப் பரப்பளவில் கட்டப்பட்ட 3 வகுப்பறைகள், கலையரங்கம் கட்டப்பட்டுள்ளது.
என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டடங்களையும், அதன் நிறுவனத் தலைவர் சரத்குமார் ஆச்சார்யா திறந்துவைத்தார்.
தொடர்ந்து, என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையப் பயிற்சி, வங்கிப் பணிகளுக்கான தேர்வுப் பயிற்சி ஆகியவற்றில் பங்கேற்று பயிற்சி பெற்று வரும் நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு வழிகாட்டி நூல்கள், பாட நூல்களை அவர் வழங்கினார். 
என்.எல்.சி. இந்தியா நிறுவன இயக்குநர்கள் ராக்கேஷ் குமார், பி.செல்வகுமார், ஆர்.விக்ரமன், செயல் இயக்குநர்கள் வி.சந்திரசேகரன், என்.முத்து, கல்லூரி முதல்வர் வி.டி.சந்திரசேகரன், நகர நிர்வாகத் துறை தலைமைப் பொது மேலாளர் எம்.கார்த்திகேயன், சமூகப் பொறுப்புணர்வுத் துறை பொது மேலாளர் ஜே.பீட்டர் ஜேம்ஸ், சமூகப் பொறுப்புணர்வுத் துறை தலைமைப் பொது மேலாளர் ஆர்.மோகன், ஜவகர் அறிவியல் கழகத்தின் செயலர் எம்.ஆர்.ரவிச்சந்திரன், துணைத் தலைவர் பி.ஏ.செந்தில்குமார், உதவிச் செயலர் மதிவாணன், முஸ்லீம் ஜமாத் பொறுப்பாளர்கள் உள்படப் பலர் 
பங்கேற்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/19/என்எல்சி-இந்தியா-நிறுவனத்தின்-சார்பில்-கலையரங்கம்-வகுப்பறைக்-கட்டடம்-திறப்பு-2903158.html
2903155 விழுப்புரம் கடலூர் தூய்மை பாரத விழிப்புணர்வுப் பேரணி DIN DIN Thursday, April 19, 2018 08:34 AM +0530 பண்ருட்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட கீழக்குப்பம், சேமக்கோட்டை, வீரப்பெருமாநல்லூர் ஊராட்சிகளில், தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் தூய்மைப் பணி - விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
கடலூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(நிலம்) கே.விஜயா தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில், பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வசந்தா, தங்கம், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திலகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேரணியின் போது, மேற்கண்ட ஊராட்சிப் பகுதிகளில் முழு அளவிலான தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், கழிப்பறைகள் கட்டுவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வுக் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/19/தூய்மை-பாரத-விழிப்புணர்வுப்-பேரணி-2903155.html
2903153 விழுப்புரம் கடலூர் கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் நாளை தொடக்கம் DIN DIN Thursday, April 19, 2018 08:34 AM +0530 கடலூர், விருத்தாசலம் ஆகிய பகுதிகளில் கோடை கால விளையாட்டுப் பயிற்சிகள் முகாம் வெள்ளிக்கிழமை (ஏப். 20) தொடங்குகிறது.
இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் மா.ராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், கோடை காலப் பயிற்சிகள் முகாம் கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் மே 10-ஆம் தேதி வரையிலும், விருத்தாசலத்தில் மே 4 -ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளன. 
மேலும், உலகத் திறனாளர்களுக்கான இருப்பிடமில்லாப் பயிற்சி முகாம் கடலூர் கல்வி மாவட்டத்துக்காக அண்ணா விளையாட்டரங்கிலும், விருத்தாசலம் கல்வி மாவட்டத்துக்காக விருத்தாசலத்திலுள்ள சிறு விளையாட்டரங்கத்திலும் மே 11 -ஆம் தேதி முதல் 15 -ஆம் வரை நடைபெறுகிறது.
இதனைத் தொடர்ந்து, கல்வி மாவட்ட அளவிலான உலகத் திறனாய்வாளர்கள் திட்டத்தின் கீழ் நடைபெற்ற தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற இரண்டு கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த தலா 60 மாணவ, மாணவிகளுக்கு 15 நாள்கள் உண்டு, உறைவிடப் பயிற்சி முகாம் மே 16 -ஆம் தேதி முதல் 30- ஆம் தேதி வரை கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இந்தப் பயிற்சி முகாமில் தடகளம், கால்பந்து, கையுந்துப் பந்து வளைகோல் பந்து, கூடைப் பந்து ஆகிய விளையாட்டுகளில் பயிற்சியாளர்களைக் கொண்டு சிறப்பாகப் பயிற்சி அளிக்கப்படும். மேற்கண்ட பயிற்சி முகாமில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். பயிற்சி முகாம் நிறைவு நாளன்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், பயிற்சி முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இந்தப் பயிற்சி முகாமில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/19/கோடை-கால-விளையாட்டு-பயிற்சி-முகாம்-நாளை-தொடக்கம்-2903153.html
2903152 விழுப்புரம் கடலூர் சூரிய மின்சக்தி உற்பத்தி சாதனம் பொருத்த 30 சதவீத மானியம் DIN DIN Thursday, April 19, 2018 08:34 AM +0530 சூரிய மின்சக்தி உற்பத்தி சாதனம் பொருத்த 30 சதவீதம் மானியம் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி தெரிவித்தார்.
இதுகுறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் மூலம், மரபுசாரா எரிசக்தியை மேம்படுத்தும் திட்டங்கள் மாவட்டம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 
அதன்படி, மத்திய அரசு சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யும் சாதனங்களை கட்டடங்களின் மேற்கூரையில் நிறுவுவதற்கு 30 சதவீத மானியம் அறிவித்துள்ளது. அவ்வாறு அமைக்கப்படும் சூரிய ஒளி மின் சாதனம் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், அமைப்பவர்கள் உபயோகித்தது போக, மீதமுள்ள மின்சாரம் மின்வாரியத்துக்கு நிகர அளவி ( சங்ற் ஙங்ற்ங்ழ்) மூலம் அனுப்பப்படுவதால், மின் கட்டணம் செலுத்துவது முற்றிலும் குறைக்கப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ், பயனாளியின் மின்சார உபயோகத் தேவைக்கேற்ப ஒரு கிலோ வாட் ( ந்ஜ்) முதல் 500 வரை பயன் பெறலாம். இந்த மானியம் பெறுவதற்கு அனைத்து தனி நபர் குடியிருப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகள், கான்கிரிட் கட்டடங்களில் இயங்கும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், அறக்கட்டளைகள், மருத்துவமனைகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் கல்விக் கூடங்கள், விடுதிகள் போன்றவை தகுதியானவை ஆகும்.
இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தனி நபர் - நிறுவனங்கள் கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் இயங்கி வரும் பஉஈஅ பிரிவில் உரிய ஆலோசனைகள் பெறலாம். 
மேலும், உதவிப் பொறியாளரை 77080 64703, 77080 64612, 77080 64610 ஆகிய செல்லிடப்பேசி எண்கள் வழியாகவும் அல்லது ஸ்ரீன்க்ஃற்ங்க்ஹ.ண்ய் என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/19/சூரிய-மின்சக்தி-உற்பத்தி-சாதனம்-பொருத்த-30-சதவீத-மானியம்-2903152.html
2903149 விழுப்புரம் கடலூர் அரசுப் பள்ளியில் தீ விபத்து தடுப்பு விழிப்புணர்வு DIN DIN Thursday, April 19, 2018 08:34 AM +0530 குறிஞ்சிப்பாடி தீயணைப்பு - மீட்புப் பணிகள் நிலையம், வடக்குத்து ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய தீ விபத்து தடுப்பு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆயிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வடக்குத்து ரோட்டரி சங்கத்தின் தலைவர் எஸ்.தனசேகரன் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் டேவிட் முன்னிலை வகித்தார். குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து) எஸ்.மணிவேல் பங்கேற்று பேசியதாவது:
தீ விபத்துகளைத் தடுக்க தீத்தடுப்புக் கருவிகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தீ விபத்தின் போது, உயிரைக் காப்பாற்றுவது முக்கியம். உடைமைகளையும் மீட்க வேண்டும். தீயை நாம் அடக்கி ஆளாவிட்டால், அது நம்மை அழித்துவிடும். விழிப்புடன் இருந்து தீ விபத்துகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும். குழந்தைகளை அடுப்பின் அருகிலும், தீப்பெட்டியுடனும் விளையாட அனுமதிக்கக் கூடாது. எளிதில் தீப்பற்றக் கூடிய பெட்ரோல், டீசல் வெடி பொருள்கள் போன்றவற்றை சேமித்து வைக்கக் கூடாது. கூரை வீட்டுக்கு அருகில் குப்பைகளைச் சேமிக்கவோ, வைக்கோல் போர்களை அமைக்கவோ கூடாது என்றார் அவர்.
நிகழ்வின் போது, சமையல் எரிவாயு உருளை திடீரென்று தீப்பற்றிக் கொண்டால் வீட்டில் உள்ள பெண்கள் அதனை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை செயல்முறை விளக்கத்தின் முலம் விளக்கினர்.
நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், ஆயிப்பேட்டை ஊர் மக்கள் உள்படப் பலர் கலந்து கொண்டனர். ரோட்டரி சங்கத்தின் செயலர் அழகுசெல்வம் நன்றி கூறினார்.
ஞானகுரு மெட்ரிக் பள்ளியில்...
அதேபால, திட்டக்குடி ஸ்ரீ ஞானகுரு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான தீத்தடுப்புப் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது. பள்ளித் தாளாளர் எம்.கோடிப்பிள்ளை தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ஜெயசீலன் முன்னிலை வகித்தார். திட்டக்குடி தீயணைப்பு - மீட்புப் பணிகள் துறை நிலைய அலுவலர் செ.முனியாண்டி தலைமையில், தீயணைப்புத் துறை வீரர்கள் பங்கேற்று, தீ விபத்து ஏற்பட்டால் எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எவ்வாறு அவசர உதவிகளை மேற்கொள்ள வேண்டும். எரிவாயு உருளைகளை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விளக்கினர். பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சு.பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/19/அரசுப்-பள்ளியில்-தீ-விபத்து-தடுப்பு-விழிப்புணர்வு-2903149.html
2903148 விழுப்புரம் கடலூர் திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு DIN DIN Thursday, April 19, 2018 08:33 AM +0530 தேசிய வருவாய் திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயாப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா வடலூரில் உள்ள ஓபிஆர் கல்வி நிறுவன வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ், மழவந்தாங்கலில் கஸ்தூர்பா தொழுநோய் நிவாரண நிலையம், கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளி ஆகியவை தொண்டு நிறுவனத்தால் நடத்தப்பட்டு வருகின்றன.
கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயாப் பள்ளி மாணவிகள் திருநாவலூர் வி.விஜயலட்சுமி, வி.பிரீத்தி, சேந்தநாடு வி.சுவேதா, கள்ளக்குறிச்சி ஒன்றியம், பெரியசிறுவத்தூர் ஜி.யமுனா ஆகியோர், தேசிய வருவாய் திறனாய்வுத் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற்றனர். இந்த மாணவிகளை தொண்டு நிறுவனத்தின் செயலர் ரா.செல்வராஜ் பாராட்டி நினைவுப் பரிசாக புத்தகமும், பரிசுத் தொகையாக தலா ரூ. 500 ஆகியவற்றை வழங்கினார். பள்ளியின் ஆசிரியர்கள் பி.சத்தியா, எம்.குணாதேவி, வி.குமரேஸ்வரி, ஏ.ஷீலா ஆகியோர் உடனிருந்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/19/திறனாய்வுத்-தேர்வில்-தேர்ச்சி-பெற்ற-மாணவிகளுக்கு-பாராட்டு-2903148.html
2903146 விழுப்புரம் கடலூர் பல்கலை. வேளாண் கல்லூரி ஆண்டு விழா DIN DIN Thursday, April 19, 2018 08:33 AM +0530 சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழக வேளாண் கல்லூரி ஆண்டு விழா வேளாண் புல வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. 
விழாவுக்கு வேளாண் புல முதல்வர் எம்.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினார். பல்கலை. துணைவேந்தர் எஸ். மணியன் சிறப்புரையாற்றினார். 
பதிவாளர் கே.ஆறுமுகம் வாழ்த்திப் பேசினார்.
பல்கலை. ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்களான சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.பாண்டியன், மொழியியல் புல முதல்வர் வீ. திருவள்ளுவன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். தொடர்ந்து, கலை, இலக்கியம் , விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று, சிறப்பிடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மாணவி ஜி.மஞ்சு பிரியா வரவேற்றார். மாணவி பி.கமலி ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். பல்கலை. தொலைதூரக் கல்வி இயக்குநர் எம்.அருள், வேளாண் புல ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், பல்வேறு துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ - மாணவிகள் பங்கேற்றனர். மாணவர் எம்.குறளரசன் நன்றி கூறினார். 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/19/பல்கலை-வேளாண்-கல்லூரி-ஆண்டு-விழா-2903146.html
2903145 விழுப்புரம் கடலூர் கடலூர் மாவட்டத்தில் 164 புகையில்லா கிராமங்களை உருவாக்கத் திட்டம்: ஆட்சியர் DIN DIN Thursday, April 19, 2018 08:33 AM +0530 கடலூர் மாவட்டத்தில் கிராம சுயராஜ்ஜிய அபியான் திட்டத்தின் கீழ், 164 கிராமங்கள் புகையில்லாக் கிராமங்களாக அறிவிக்கும் வகையில், சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட உள்ளதாக ஆட்சியர் வே.ப.தண்டபாணி கூறினார்.
இதுதொடர்பாக ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு சமையல் எரிவாயு உருளை வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசால் உஜ்வாலா திட்டம் 2016 -ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வருகிற ஏப்ரல் 20- ஆம் தேதி 35 கிராமங்களில் உஜ்வாலா தினம் கொண்டாடப்படுகிறது. அப்போது, ஒவ்வோர் கிராமத்திலும் பொதுமக்களுக்கு சமையல் எரிவாயு உருளை பயன்படுத்துவதால் ஏற்படும் பயன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
இதன் தொடர் நிகழ்வாக மாவட்டத்தில் 164 கிராமங்களை புகையில்லாக் கிராமமாக அறிவிக்கும் வகையில், அங்குள்ள அனைத்துக் குடும்பத்தினருக்கும் சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படவுள்ளது. இந்தத் திட்டம் வருகிற மே 5 -ஆம் தேதி வரை மாவட்டத்திலுள்ள 35 எரிவாயு முகவர்கள் மூலமாக நடத்தப்படுகிறது. 
கடலூர் மாவடத்தில் 164 ஊராட்சிகளில் உள்ள 17,640 குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக, துணை ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது. எரிவாயு உருளை இணைப்புக்கான தொகை ரூ. 1,600-ஐ மத்திய அரசே வழங்கும். எரிவாயு இணைப்பு, எரிவாயு உருளைக்கான பணத்தைப் பயனாளிகள் தவணை முறையில் செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
இதுகுறித்து பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தஞ்சை வட்டார மேலாளர் அரிகிருஷ்ணன் கூறியதாவது: உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வின்படி, உலகெங்கும் வீட்டிலுள்ள காற்று மாசுபாட்டினால் 15 லட்சம் பெண்கள் ஆண்டுதோறும் உயிரிழப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மட்டும் 5 லட்சம் பேர் இறக்கின்றனர். இதனைத் தடுக்க வகையில், புகையில்லா சமையலுக்காக எரிவாயு உருளைகள் வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கிவைத்தார். இந்தத் திட்டத்தின் கீழ், கடந்த மார்ச் மாதம் வரை 3.86 கோடி எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 4.51 கோடி பேர் சமையல் எரிவாயு கோரி விண்ணப்பித்துள்ளனர் என்றார் அவர்.
செய்தியாளர்கள் சந்திப்பின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பெ.ஆனந்ராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார் உள்ளிட்ட அரசு உயரதிகாரிகள் உடனிருந்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/19/கடலூர்-மாவட்டத்தில்-164-புகையில்லா-கிராமங்களை-உருவாக்கத்-திட்டம்-ஆட்சியர்-2903145.html
2903143 விழுப்புரம் கடலூர் நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகி குண்டர் சட்டத்தின் கீழ் கைது DIN DIN Thursday, April 19, 2018 08:31 AM +0530 நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகி வா.கடல்தீபன் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
கடலூர் செல்லகுப்பத்தைச் சேர்ந்த வாகரன் மகன் கடல்தீபன் (37) (படம்). பொறியாளரான இவர், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு வருகிறார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது, குறிஞ்சிப்பாடி தொகுதியில் கட்சி சார்பில் போட்டியிட்டவர் இவர்.
இந்த நிலையில், காவிரி விவகாரம் தொடர்பான போராட்டத்தின் போது, கடந்த 10 -ஆம் தேதி இவரது தலைமையில் கட்சியினர் சிலர் கடலூர் தலைமைத் தபால் நிலையம் அருகே கர்நாடக மாநில அரசுப் பேருந்தை வழிமறித்து, அதன் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். இதுதொடர்பாக பேருந்தின் ஓட்டுநர் ர.பசவராஜ் அளித்த புகாரின் பேரில், கடலூர் புதுநகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். 
அதன்படி, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வா.கடல்தீபன், மாவட்டச் செயலர் சாமிரவி, கோண்டூர் ராஜா, சாமியார்பேட்டை தனசேகர், முதுநகர் நாராயணன், அழகியநத்தம் சுரேன், பச்சையாங்குப்பம் நாராயணசாமி ஆகியோரை போலீஸார் அண்மையில் கைது செய்தனர்.
இந்த நிலையில், கடல்தீபனின் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் பரிந்துரைத்தார். 
இந்தப் பரிந்துரை நிலுவையில் இருக்கும் நிலையில், கடல்தீபனின் தந்தை திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தார். அதில், தனது மகனை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவ்வாறான நடவடிக்கை அரசியலில் ஈடுபடும் இளைஞர்களுக்கு முட்டுக் கட்டையாக இருக்கும் எனவும் கூறியிருந்தார்.
எனினும், அவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி பிறப்பித்தார். 
இதனைத் தொடர்ந்து, ஏற்கெனவே கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கடல்தீபனிடம், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் ஓராண்டுக்கு சிறையில் அடைப்பதற்கான உத்தரவு நகல் புதன்கிழமை அவரிடம் வழங்கப்பட்டது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/19/நாம்-தமிழர்-கட்சியின்-மாநில-நிர்வாகி-குண்டர்-சட்டத்தின்-கீழ்-கைது-2903143.html
2903129 விழுப்புரம் கடலூர் கடலூரில் கருத்து கேட்புக் கூட்டத்தில் மீனவர்கள் போராட்டம் DIN DIN Thursday, April 19, 2018 08:29 AM +0530 கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்ட வரைபடம் குறித்த மக்கள் கருத்து கேட்புக் கூட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மீனவ அமைப்புகள், பொது நல அமைப்புகள் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
"வரைவு கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டம்' என்ற பெயரில் தமிழக அரசு திட்டம் ஒன்றை உருவாக்கி, அதை மாநிலம் முழுவதும் கடற்கரையோரப் பகுதிகளில் செயல்படுத்த வரைவு படம் தயாரித்துள்ளது.
இந்த வரைவு படத்தில் கடற்கரையையொட்டியுள்ள பகுதிகளில் எங்கெல்லாம் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளலாம், எங்கு மேற்கொள்ளக் கூடாது என்பதைக் குறித்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு பொதுமக்கள், மீனவர்களிடம் கருத்துக் கேட்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, கடலூர் மாவட்டத்துக்கான கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி தலைமை வகித்தார்.
சார்- ஆட்சியர் ஜானிடாம் வர்க்கீஸ், துணை ஆட்சியர் (பயிற்சி) ஜெகதீஸ்வரன், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் ராமசுப்பு ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டம் தொடங்கியதும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் வரைபட விளக்கக் காட்சிகள் மூலம் கடற்கரை மேலாண்மைத் திட்டம் குறித்து விளக்கினார்.
அப்போது, மீனவர்கள் வாழ்வுரிமை இயக்கத்தின் நிறுவனர் பெரு.ஏகாம்பரம் தலைமையில், மீனவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், மீனவக் கிராமத் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் எழுந்து நின்று "இது மீனவ கிராமங்களை வேரோடு அழிக்கக் கொண்டு வரப்பட்ட திட்டம். எனவே, இந்தத் திட்டத்தை ஏற்க மாட்டோம்' என எதிர்ப்புத் தெரிவித்தனர். தொடர்ந்து, திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று கூறி, மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர்.
இதையடுத்து, பிரதிநிதிகள் தங்களது கருத்துகளைப் பதிவு செய்யலாம்' என ஆட்சியர் கூறியும், அதை ஏற்க மறுத்து அனைவரும் வெளிநடப்பு செய்தனர். கூட்டத்தில் இருந்து வெளியேறிய அனைவரும் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூக செயல்பாட்டாளர் பால்கி தலைமையில், திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து முழக்கமிட்டனர்.
இதுகுறித்து கடற்கரை செயல்பாட்டுக் குழுவைச் சேர்ந்த காந்திமதி உள்ளிட்ட மீனவ கிராம பெண்கள் கூறியதாவது:
சாகர்மலா திட்டத்துக்காக பூர்வீக மீனவ மக்களை தங்களது வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றும் சதித் திட்டமே இந்தக் கடற்கரை மேலாண்மைத் திட்டம். இந்தத் திட்டத்தை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம் என்றனர்.
நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் மு.நிஜாமுதீன் கூறியதாவது:
கடற்கரை ஒழுங்குமுறை சட்டத்தின்படி, வரைபடம் தயாரிக்கப்படவில்லை. மீனவ மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் தமிழில் எழுத்துப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. மீனவர்களின் வாழ்விடங்கள், தொழில் செய்யும் இடம், வலைப் பின்னல் கூடம் உள்ளிட்டவை குறித்து எளிதில் புரிந்து கொள்ள முடியாத வகையில் வரைபடத்தின் அளவு உள்ளது. இதனால், மீனவ சமுதாய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இந்தத் திட்டத்தை எதிர்க்கிறோம் என்றார்.
தமிழ்நாடு மீனவர் பேரவையின் மாவட்டத் தலைவர் எம்.சுப்புராயன், மீனவர் விடுதலை வேங்கைகள் கட்சியின் இணைப் பொதுச் செயலர் வெங்கடேசன், அனைத்துக் குடியிருப்போர்கள் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் மு.மருதவணான், சுற்றுச் சூழல் செயல்பாட்டாளர் தி.அருள்செல்வன், அய்யம்பேட்டை பூபாலன், மானியார்பேட்டை நாகலிங்கம், மீனவ கிராமத் தலைவர்கள், நிர்வாகிகள் அனைவரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று வெளிநடப்பு செய்ததுடன், திட்டத்தை கைவிடவில்லையெனில் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என்று எச்சரித்தனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி கூறியதாவது:
இந்தத் திட்டமானது, அண்ணா பல்கலைக்கழமும், பல்வேறு தொழில்நுட்ப வல்லுநர்கûளையும் கொண்டு ஆய்வு செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
மீன்பிடித் தளம், குடியிருப்பு, பயன்பாட்டிலுள்ள பகுதிகள் அந்த வரைபடத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் இந்தத் திட்டம் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார் அவர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/19/கடலூரில்-கருத்து-கேட்புக்-கூட்டத்தில்-மீனவர்கள்-போராட்டம்-2903129.html
2902491 விழுப்புரம் கடலூர் ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுக்க வந்தவரிடம் ரூ.ஒரு லட்சம் மோசடி   DIN DIN Wednesday, April 18, 2018 08:49 AM +0530 கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுக்க வந்தவரிடம் உதவி செய்வதுபோல நடித்து, ரூ.ஒரு லட்சம் மோசடி செய்தவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
 பண்ருட்டி ஒன்றியம், பலாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ரங்கசாமி (58). இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பண்ருட்டி - கும்பகோணம் சாலையில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க அதே பகுதியைச் சேர்ந்த சசிதரனுடன் சென்றாராம்.
 இவர்கள் இருவருக்கும் இயந்திரத்தில் பணம் எடுக்கத் தெரியாத நிலையில், அருகிலிருந்த நபரிடம் ஏடிஎம் அட்டையை வழங்கி பணம் எடுத்தனராம். பின்னர், அந்த நபர் திரும்ப அளித்த ஏடிஎம் அட்டையை பெற்றுச் சென்றனராம்.
 கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மீண்டும் பணம் எடுக்கச் சென்றபோது, ஏடிஎம் அட்டை வேலை செய்யவில்லையாம். இதுகுறித்து வங்கி நிர்வாகத்திடம் கேட்டபோது, அது போலியான அட்டை எனக் கூறினராம். இதையடுத்து, வங்கிக் கணக்கைச் சரிபார்த்தபோது, அவரது ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி பல்வேறு பகுதிகளில் இருந்து ரூ.1 லட்சம் வரை மோசடியாக பணம் எடுக்கப்பட்டது தெரிய வந்தது.
 அந்த மோசடி நபர் ரங்கசாமியின் ஏடிஎம் அட்டையை வைத்துக்கொண்டு, போலி ஏடிஎம் அட்டையை அவரிடம் கொடுத்து இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
 இதுகுறித்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீஸார் மோசடி நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/18/ஏடிஎம்-மையத்துக்கு-பணம்-எடுக்க-வந்தவரிடம்-ரூஒரு-லட்சம்-மோசடி-2902491.html
2902464 விழுப்புரம் கடலூர் தொழிலாளர் நல வாரியத்துக்கு நிதி ஒதுக்கக் கோரி சிஐடியூ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்    கடலூர், DIN Wednesday, April 18, 2018 08:39 AM +0530 தொழிலாளர் நலவாரியத்துக்கு நிதி ஒதுக்கக் கோரி கடலூரில் சிஐடியூ தொழில்சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 நல வாரியத்தில் பதிவு செய்துள்ள அமைப்பு சாரா மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு எங்கு விபத்து நடந்தாலும் அவர்களின் மரணத்துக்கு ரூ.5 லட்சமும், இயற்கை மரணத்துக்கு ரூ.1 லட்சமும் வழங்கிட வேண்டும். கருவுற்றவர்களுக்கு வழங்கப்படும் மகப்பேறு நிதி ரூ.18 ஆயிரத்தை பல்வேறு தவணைகளாகப் பிரித்து வழங்காமல் ஒரே தவணையாக வழங்க வேண்டும்.
 குழந்தைகளுக்கு 1-ஆம் வகுப்பு முதல் கல்வி உதவித் தொகை வழங்கிட வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதிலிருந்தே ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
 நலவாரிய அட்டையில் உள்ள வயதையே கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். ரூ.500 கோடி நிதி ஒதுக்கி தேங்கி கிடக்கும் மனுக்களுக்கு பணப் பலன்களை உடனடியாக வழங்கிட வேண்டும். ஆட்சியர் தலைமையிலான கண்காணிப்புக் குழுகூட்ட முடிவுகளை அமலாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூர் தலைமை தபால் நிலையம் முன் சிஐடியூ தொழில்சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைத் தலைவர் ஆர்.ஆளவந்தார் தலைமை வகித்தார். மாநில உதவி பொதுச் செயலர் வி.குமார், மாவட்டச் செயலர் பி.கருப்பையன், மாநிலக்குழு உறுப்பினர் வி.கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர் கே.சாவித்திரி, இணைச் செயலர்கள் ஏ.பாபு, வி.திருமுருகன், வி.சுப்புராயன், எஸ்,தட்சணாமூர்த்தி உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்கள்.
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/18/தொழிலாளர்-நல-வாரியத்துக்கு-நிதி-ஒதுக்கக்-கோரி-சிஐடியூ-சங்கத்தினர்-ஆர்ப்பாட்டம்-2902464.html
2902463 விழுப்புரம் கடலூர் தீத் தொண்டு நாள் விழா    நெய்வேலி DIN Wednesday, April 18, 2018 08:39 AM +0530 நெல்லிக்குப்பம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சார்பில், பெரியசோழவல்லி கிராமத்தில் தீ தொண்டு நாள் விழா (படம்) திங்கள்கிழமை நடைபெற்றது.
 தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில், ஒவ்வோர் ஆண்டும் ஏப்.14 முதல் 20-ஆம் தேதி வரை ஒரு வார காலம் தீ தொண்டு நாள் விழா நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு விபத்துகளில் மீட்புப் பணியின்போது உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
 அதன்படி, நெல்லிக்குப்பம் அடுத்துள்ள பெரியசோழவல்லி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, முன்னாள் கவுன்சிலர் செ.புலிக்கொடியன் தலைமை வகித்தார். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குநர் சகா.பிரசாத் வரவேற்றார். முன்னணி தீயணைப்போர் என்.செல்வம் முன்னிலை வகித்தார். கே.எஸ்.விஜயன், எம்.ஆறுமுகம், பி.அழகு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
 நிகழ்ச்சியில் நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலைய அலுவலர் தே.வீரபாகு சிறப்புரையாற்றினார். தீயணைப்பு வீரர்கள் விபத்து தடுப்பு குறித்து செயல் விளக்கம் அளித்தனர். சு.சாமிநாதன் நன்றி கூறினார்.
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/18/தீத்-தொண்டு-நாள்-விழா-2902463.html
2902462 விழுப்புரம் கடலூர் விநாயகர் கோயிலில் திருவிளக்கு பூஜை   சிதம்பரம், DIN Wednesday, April 18, 2018 08:38 AM +0530 சிதம்பரம் மெய்காவல் தெருவில் உள்ள ஸ்ரீபொற்பாத விநாயகர் கோயிலில் திங்கள்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
 இந்தக் கோயிலில் சித்திரைப் பெருவிழா கடந்த 14-ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, வீதிஉலா நடைபெற்று வருகிறது.
 இந்த நிலையில், உலக நன்மை வேண்டி திங்கள்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 400 பெண் பக்தர்கள் பங்கேற்று திருவிளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினர்.
 
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/18/விநாயகர்-கோயிலில்-திருவிளக்கு-பூஜை-2902462.html
2902461 விழுப்புரம் கடலூர் அரசுத் திட்டங்கள் கிராம மக்களைச் சென்றடைய தனிக் குழுக்கள் அமைக்கப்படும்: ஆட்சியர்   DIN DIN Wednesday, April 18, 2018 08:38 AM +0530 அரசுத் திட்டங்கள் கிராம மக்களைச் சென்றடையும் வகையில் தனிக் குழுக்கள் அமைக்கப்படுமென மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி கூறினார்.
 கடலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் செயல்படுத்தப்படும் பாரத பிரதமரின் கிராம சுயராச்சிய இயக்கத்தின் கீழ் அரசின் திட்டங்களை கிராமங்கள்தோறும் அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்லும் வகையில் அனைத்துத் துறை அலுவலர்களுக்கான விளக்கக் கூட்டம் கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
 கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி பேசியதாவது: அரசின் திட்டங்கள் கிராமங்கள்தோறும் அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும். இதற்காக, மக்கள் தொகை கணக்கீட்டின்படி கிராமங்கள்தோறும் 200 குடும்பங்களுக்கு ஒரு குழு வீதம் நியமிக்கப்படும். அந்தக் குழுவில் உள்ள உறுப்பினர்கள் ஒவ்வொரு வீட்டிலும் சமையல் எரிவாயு இணைப்பு, தனிநபர் கழிப்பிடம், அவரவர்களின் நிலங்களில் சொட்டு நீர்ப் பாசன வசதி, குடும்பத்தில் உள்ள தாய்மார்கள், குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்ட விவரம், மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை பெறப்பட்ட விவரம், படித்த இளைஞர்களுக்கான தொழில்பயிற்சி தேவை உள்ளிட்ட விவரங்களை கணக்கீடு செய்து மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டும். இந்த விவரங்களின் அடிப்படையில் அரசின் அனைத்துத் திட்டங்களும் கடைக்கோடியில் உள்ள கிராம மக்களுக்கு சென்றடைந்து பயன்பெற ஏதுவாக இருக்கும்.
 பாரதப் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் மின்சார சிக்கனமுள்ள விளக்குகள், உபகரணங்கள் பயன்பாட்டை ஊக்குவிப்பது, செüபாக்கியா யோஜனா திட்டத்தின்கீழ் 2018-ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு கிடைக்கச் செய்வது. பாரதப் பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம், சுரஷா பீமா யோஜனா திட்டம் போன்ற திட்டங்களின் கீழ் அரசு நலத் திட்ட உதவிகளைப் பெறுவதற்கு இந்தக் குழுவினர் மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார் ஆட்சியர்.
 கூட்டத்தில், சார்-ஆட்சியர் ஜானிடாம் வர்க்கீஸ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ.ஆனந்ராஜ், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஆனந்தன், உதவி இயக்குநர் (வேளாண்மை) சு.பூவராகன், உதவி இயக்குநர்(தோட்டக்கலை) ராமலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அ.குர்ஷித்பேகம், சாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/18/அரசுத்-திட்டங்கள்-கிராம-மக்களைச்-சென்றடைய-தனிக்-குழுக்கள்-அமைக்கப்படும்-ஆட்சியர்-2902461.html
2902460 விழுப்புரம் கடலூர் உணவுப் பொருள் உற்பத்தியை விவசாயிகள் அதிகரிக்க வேண்டும்: அமைச்சர் எம்.சி.சம்பத்      கடலூர், DIN Wednesday, April 18, 2018 08:38 AM +0530 தமிழக அரசின் வேளாண் திட்டங்களைப் பயன்படுத்தி உணவுப் பொருள்களின் உற்பத்தியை விவசாயிகள் அதிகரிக்க வேண்டும் என மாநில தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கேட்டுக் கொண்டார்.
 கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் கூட்டுப் பண்ணையத் திட்டத்தின்கீழ் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.22.85 லட்சத்தில் பண்ணை இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி தலைமையில், தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பண்ணை இயந்திரங்களான 11 பவர்வீடர்கள், ஒரு மினி டிராக்டர், 5 சுழல் கலப்பைகள் மற்றும் 2 பவர் டில்லர்களை விவசாயிகளுக்கு வழங்கினார்.
 பின்னர் அவர் பேசியதாவது: தமிழக அரசு விவசாயத் துறைக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ரூ.22.85 லட்சம் மதிப்பிலான பண்ணை இயந்திரங்களுக்கு அரசு மானியமாக ரூ.20 லட்சம் வழங்கி உள்ளது. விவசாயிகள் இதைப் பயன்படுத்திக் கொண்டு உணவுப் பொருள்களின் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும் என்றார்.
 நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (தோட்டக் கலை) ராஜாமணி, உதவி இயக்குநர் ராமலிங்கம், செய்தி - மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன் மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
 
 
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/18/உணவுப்-பொருள்-உற்பத்தியை-விவசாயிகள்-அதிகரிக்க-வேண்டும்-அமைச்சர்-எம்சிசம்பத்-2902460.html
2902459 விழுப்புரம் கடலூர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அருகே சுகாதாரக் கேடு: நோய் பரவும் அபாயம்      நெய்வேலி, DIN Wednesday, April 18, 2018 08:37 AM +0530 பண்ருட்டி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பகுதியில் சுகாதாரக்கேடு நிலவுவதால் தொற்று நோய் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.
 பண்ருட்டி நகரில் உள்ள 33 வார்டுகளில் பல்லாயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். பொதுமக்களின் குடிநீர்த் தேவைக்காக நகராட்சி நிர்வாகம் பல்வேறு இடங்களில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள், ஆழ்துளைக் கிணறுகளை அமைத்துள்ளது. இதில், பண்ருட்டி பேருந்து நிலையத்துக்குப் பின்புறம் 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைந்துள்ளது.
 நேதாஜி நகரில் உள்ள ஆழ்துளைக் கிணறிலிருந்து கொண்டுவரப்படும் தண்ணீர், இந்தத் தொட்டியில் ஏற்றப்பட்டு பின்னர் காமராஜ் நகர், அன்வர்ஷா நகர், லட்சுமிபதி நகர், லிங்க் ரோடு, அன்னை இந்திரா காந்தி சாலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
 ஆனால், சமூக விரோதிகள் சிலர், சுமார் 60 அடி உயரம் கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது ஏறி மது அருந்துதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் நகர நிர்வாகம் பல லட்சம் ரூபாய் செலவில் மேல்நிலை தண்ணீர் தொட்டி வளாகத்தைச் சுற்றிலும் சுவர் அமைத்தது. ஆனால், அதற்கு இதுவரை கேட் அமைக்கப்படவில்லை (படம்). பாதுகாவலரையும் நியமிக்கவில்லை.
 இதனால், குடிநீர்த் தொட்டி வளாகப் பகுதியில் சிலர் இயற்கை உபாதை கழிப்பதால் சுகாதாரமற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீரில் அசுத்தம் கலந்து தொற்றுநோய் பரவும் சூழல் நிலவுகிறது. எனவே, நகர நிர்வாகம் குடிநீர்த் தொட்டி வளாக சுற்றுச் சுவருக்கு கேட் அமைத்து, உரிய பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/18/மேல்நிலை-நீர்தேக்கத்-தொட்டி-அருகே-சுகாதாரக்-கேடு-நோய்-பரவும்-அபாயம்-2902459.html
2902458 விழுப்புரம் கடலூர் வயல் நீர் குழாய் முறைப் பாசனம்: விவசாயிகளுக்கு செயல் விளக்கம்    நெய்வேலி, DIN Wednesday, April 18, 2018 08:37 AM +0530 குறிஞ்சிப்பாடி வேளாண்மை விரிவாக்க மையம் சார்பில், விவசாயிகளுக்கு வயல் நீர் குழாய் முறை பாசனம் (பாணி பைப்) குறித்த செயல் விளக்கம் (படம்) அண்மையில் அளிக்கப்பட்டது.
 வயல் நீர் குழாய் முறையானது, தேவையறிந்து நீர் மேலாண்மை செய்யும் முறையாகும். இதன்மூலம் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த முடியும். குறிஞ்சிப்பாடி வேளாண்மை விரிவாக்க மைய வளாகத்தில், வேளாண்மை உதவி இயக்குநர் சின்னக்கண்ணு வயல் நீர் குழாய் பயன்பாடு குறித்த செயல் விளக்கத்தை உழவர் மன்ற விவசாயிகளுக்கு அளித்தார்.
 நிகழ்ச்சியில் வேளாண்மை அலுவலர் தேவி கலாவதி, உதவி வேளாண்மை அலுவலர் தெய்வசிகாமணி, முன்னோடி விவசாயி சிவராமசேது, ஆர்.கே.ராமலிங்கம், செல்வம், கண்ணன், குப்புசாமி, ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/18/வயல்-நீர்-குழாய்-முறைப்-பாசனம்-விவசாயிகளுக்கு-செயல்-விளக்கம்-2902458.html
2902457 விழுப்புரம் கடலூர் அரசுப் பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய கிராம மக்கள்    சிதம்பரம் DIN Wednesday, April 18, 2018 08:36 AM +0530 கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே அரசுப் பள்ளிக்கு தேவையான உபகரணங்களை கிராம மக்கள் சீர்வரிசையாக வழங்கினர்.
 காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள நந்திமங்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த கிராமம் கடலூர் மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியாகும். இந்தப் பள்ளி ஆசிரியர்களின் முயற்சியால் மாணவர்கள் மாவட்ட அளவிலான பொது அறிவு, ஆங்கிலப் பேச்சு, ஓவியப் போட்டிகளில் முதலிடம் பிடித்தனர். இதனால் மகிழ்ச்சியடைந்த மாணவர்களின் பெற்றோர், கிராம மக்கள் தனியார் பள்ளிகள் போல இந்தப் பள்ளிக்கு தேவையான வசதிகள் செய்துதர முயற்சி மேற்கொண்டனர்.
 இதற்காக, இந்தப் பள்ளியில் படித்து அரசு, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்தும் ரூ.2 லட்சம் வரை நிதி உதவி பெற்று, பள்ளிக்குத் தேவையான கணினி, மேஜைகள், பீரோக்கள், மின் விசிறிகள், விளையாட்டு உபகரணங்கள், நூல்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை வாங்கினர்.
 இந்தப் பொருள்களை பள்ளிக்கு வழங்கும் நிகழ்வை, "ஊர் கூடி கல்விச் சீர் வழங்கும்' விழாவாக நடத்த முடிவு செய்தனர். அதன்படி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை மேளதாளம் முழங்க, வாண வேடிக்கைகளுடன் இந்தப் பொருள்களை சுமந்து ஊர்வலமாகச் சென்று பள்ளிக்கு வழங்கினர். விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் சித்ரா தலைமை வகித்தார். ஆசிரியர்கள் சத்தியசீலன், அஜய், அகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் மூர்த்தி வரவேற்றார்.
 சிறப்பு அழைப்பாளர்களாக காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ நாக.முருகுமாறன், சிதம்பரம் எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். விழாவில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாலமுருகன், தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஜெயக்குமார் ஜான்சன், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் செல்வி மற்றும் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 ஆசிரியை சரண்யா நன்றி கூறினார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/18/அரசுப்-பள்ளிக்கு-சீர்வரிசை-வழங்கிய-கிராம-மக்கள்-2902457.html
2902439 விழுப்புரம் கடலூர் மணல் கடத்தல்: 2 லாரிகள் பறிமுதல்    கடலூர், DIN Wednesday, April 18, 2018 08:29 AM +0530 மணல் கடத்தல் தொடர்பாக 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
 வேப்பூரை அடுத்துள்ள பில்லூர் பகுதியில் வேப்பூர் காவல் துறையினர் அண்மையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மணல் அள்ளி வந்த 2 லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். இதில், உரிய ஆவணமின்றி வெள்ளாற்றில் இருந்து மணல் அள்ளிவந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக, லாரி ஓட்டுநர்கள் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அடுத்துள்ள பட்டணங்குறிச்சியை சேர்ந்த செ.தமிழ்மணி (29), விருத்தாசலம் அருகே உள்ள புலியூரைச் சேர்ந்த ச.ஜெயசுந்தர் (30) ஆகியோரை கைது செய்ததோடு, லாரிகளையும் மணலுடன் பறிமுதல் செய்தனர்.
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/18/மணல்-கடத்தல்-2-லாரிகள்-பறிமுதல்-2902439.html
2902437 விழுப்புரம் கடலூர் காவிரி மேலாண்மை வாரியம் கோரி போராட்டம்   கடலூர், DIN Wednesday, April 18, 2018 08:29 AM +0530 உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்; தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என வலியுறுத்தி, சே - தோழர்கள் அமைப்பினர் திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.
 முன்னதாக திட்டக்குடியை அடுத்துள்ள தி.இளமங்கலத்தில் இருந்து இந்த அமைப்பினர் பேரணியாகப் புறப்பட்டனர்.
 திட்டக்குடி பேரூந்து நிலையம் வழியாக வட்டாட்சியர் அலுவலகத்தை வந்தடைந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தி.இளமங்கலம் வெள்ளாற்றில் தமிழக அரசு மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
 இந்தப் போராட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் ரா. சத்தியசீலம் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக வழக்குரைஞர் அம்பேத்கர், பழனிசாமி, வேல்அரசன், அருள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/18/காவிரி-மேலாண்மை-வாரியம்-கோரி-போராட்டம்-2902437.html
2902434 விழுப்புரம் கடலூர் மகளிர் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்    கடலூர், DIN Wednesday, April 18, 2018 08:28 AM +0530 கடலூரில் மகளிர் காங்கிரஸார் வாயில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொல்லப்பட்டார். அதேபோல உத்தரப் பிரதேச மாநிலத்தில் 17 வயது சிறுமியை ஆளும் கட்சிப் பிரமுகர் பாலியல் வன்முறைக்கு உள்படுத்தியதாக கைது செய்யப்பட்டார்.
 இந்தச் இரு சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கடலூரில் மகிளா காங்கிரஸ் சார்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரின் பழைய அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கலைச்செல்வி தலைமை வகித்தார்.
 மாநிலச் செயலர் மங்கலட்சுமி, மாவட்ட நிர்வாகிகள் அமுதா, லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஏ.எஸ்.சந்திரசேகரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினார். மாவட்ட இளைஞரணிச் செயலர் கே.கலையரசன், தொழில்சங்கச் செயலர் டி.ராம்ராஜ், மீனவரணிச் செயலர் கார்த்தி, வட்டத் தலைவர் ராஜாராமன், நகரச் செயலர் உமாபதி உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/18/மகளிர்-காங்கிரஸார்-ஆர்ப்பாட்டம்-2902434.html
2902432 விழுப்புரம் கடலூர் கடலூர் பேருந்து நிலையத்தில் காலாவதி தின்பண்டங்கள் பறிமுதல்   கடலூர், DIN Wednesday, April 18, 2018 08:27 AM +0530 கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்தில் காலாவதியான தின்பண்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
 இங்குள்ள கடைகளில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையினர் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர். இதில் சில கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, காலாவதி தேதி குறிப்பிடாமல் இருந்த பாதாம் பானம், குளிர்பான புட்டிகள்,பழச்சாறுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் காலாவதியான, சரியான லேபிள்கள் இல்லாத தின்பண்டங்கள், செயற்கை வண்ணம் பூசப்பட்ட பச்சைப் பட்டாணி உள்ளிட்ட பொருள்களையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அளித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட திண்பண்டங்கள், குளிர்பானங்களின் மதிப்பு ரூ.30 ஆயிரம் என உணவு பாதுகாப்புத் துறையினர் தெரிவித்தனர். இந்தப் பொருள்கள் நகராட்சி குப்பைக் கிடங்கில் அழிக்கப்பட்டன.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/18/கடலூர்-பேருந்து-நிலையத்தில்-காலாவதி-தின்பண்டங்கள்-பறிமுதல்-2902432.html
2902430 விழுப்புரம் கடலூர் செம்பேரி வெள்ளாற்றில் ஆட்சியர் ஆய்வு   கடலூர், DIN Wednesday, April 18, 2018 08:27 AM +0530 செம்பேரி வெள்ளாற்றில் மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
 பெண்ணாடம் அருகே உள்ள செம்பேரி கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள வெள்ளாற்றில் மணல் அள்ள எதிர்ப்புத் தெரிவித்து அந்தப் பகுதியினர் வெள்ளாறு பாதுகாப்பு இயக்கத்தை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், திங்கள்கிழமை வெள்ளாற்றில் மணல் அள்ளிக் கொண்டிருந்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை இயக்கத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் தட்டிக்கேட்டனர். அப்போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு அந்த இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டனர்.
 இதனால், ஆத்திரமடைந்த செம்பேரி கிராமத்தினர் அரியலூர் மாவட்டம், தெத்தேரி பகுதிக்குச் சென்று கடத்திச் செல்லப்பட்ட இருவரையும் விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இருவரும் காயங்களுடன் விடுவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டு பாதுகாப்பிற்காக போலீஸார் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில், கடலூர் மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி செவ்வாய்க்கிழமை செம்பேரி கிராமத்துக்குச் சென்றார். அங்குள்ள வெள்ளாற்றில் மணல் கடத்தப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, மணல் கடத்தலில் ஈடுபடுவோர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராம மக்களிடம் உறுதியளித்தார். ஆய்வின்போது, கனிம வளத் துறை துணை இயக்குநர் விஜயலட்சுமி, விருத்தாசலம் கோட்டாட்சியர் சந்தோஷினி சந்திரா, வட்டாட்சியர் சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/18/செம்பேரி-வெள்ளாற்றில்-ஆட்சியர்-ஆய்வு-2902430.html
2902426 விழுப்புரம் கடலூர் ஊராட்சிகளில் இன்று தூய்மைப் பணி மேற்கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தல்    கடலூர், DIN Wednesday, April 18, 2018 08:26 AM +0530 தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் புதன்கிழமை தூய்மைப் பணி மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி கேட்டுக்கொண்டார்.
 இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூய்மை இந்தியா கொண்டாட்ட தினத்தை முன்னிட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் புதன்கிழமை முழுமையான துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அனைத்து வீடுகளிலும், கழிப்பறை கட்டி முடிக்காத ஊராட்சிகளில் இந்தப் பணி சிறப்பாக மேற்கொள்ளப்பட வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் 100 சதவீதம் கழிப்பறைகள் கட்டி முடிக்க பணிகளை துரிதப்படுத்த வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட தனி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் தூய்மை இந்தியா திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து தெளிவுப்படுத்த வேண்டும். பொதுமக்கள் தன்னார்வ நோக்குடன் ஊராட்சிகளில் துப்புரவு பணிகளை மேற்கொள்வதுடன் கழிப்பறைகளுக்கான குழிகள் எடுக்கும் பணியும் மேற்கொள்ளப்பட வேண்டும். சுகாதாரம், கழிப்பறைகள் பயன்படுத்துதல் தொடர்பான பேரணிகள் நடத்தி வீடு,வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டு என்று ஆட்சியர் அதில் தெரிவித்துள்ளார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/18/ஊராட்சிகளில்-இன்று-தூய்மைப்-பணி-மேற்கொள்ள-ஆட்சியர்-அறிவுறுத்தல்-2902426.html
2902424 விழுப்புரம் கடலூர் மணல் குவாரிக்கு எதிர்ப்பு: திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகம் 2-ஆவது நாளாக முற்றுகை    கடலூர், DIN Wednesday, April 18, 2018 08:26 AM +0530 மணல் குவாரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகம் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் முற்றுகையிடப்பட்டது.
 திட்டக்குடி அருகே உள்ள தி.இளமங்கலம் - கீழ்செருவாய் இடையே வெள்ளாற்றில் மணல் குவாரி அமைக்க பொதுப் பணித் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே, சிலர் இரவு நேரங்களில் லாரிகள் மூலம் ஆற்றில் மணல் அள்ளி விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கடத்திச் சென்று விற்பதாகப் புகார் எழுந்தது. இதனால் தங்களது பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதாகவும், குடிநீர் ஆதாரம், விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் கூறி அந்தப் பகுதி மக்கள் வெள்ளாற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். மேலும், வெள்ளாற்றில் தடுப்பணை கட்டவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
 திங்கள்கிழமை பாமக, தவாக, அமமுக, பாஜக, தமாகா உள்ளிட்ட கட்சியினர், வணிகர்கள் சங்க பேரவைக் கூட்டமைப்பு சார்பில் திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
 இதே விவகாரம் தொடர்பாக, இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை திமுக மற்றும் தோழமைக் கட்சியினர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 திட்டக்குடி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினரும், திமுக கடலூர் மேற்கு மாவட்டச் செயலருமான சி.வெ.கணேசன் தலைமையில், திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தமாகா, மமக, வணிகர் சங்கம், விவசாய சங்கங்கத்தினர் இணைந்து திட்டக்குடி பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக வந்து வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் வட்டாட்சியர் ரவிச்சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
 அப்போது, மணல்குவாரி திறப்பை தற்காலிகமாக ஒத்தி வைத்திருப்பதாகவும், பொதுமக்களுடன் கலந்துபேசி அடுத்தக் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உறுதி அளித்தார். இதையடுத்து கட்சியினர் கலைந்துச் சென்றனர்.
 இதுகுறித்து எம்எல்ஏ சி.வெ.கணேசன் கூறுகையில், மணல் குவாரி அமைக்கக் கூடாது என்பதே எங்களின் நோக்கம். இதை திறப்பதற்கான முயற்சியை மேற்கொண்டால் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
 
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/18/மணல்-குவாரிக்கு-எதிர்ப்பு-திட்டக்குடி-வட்டாட்சியர்-அலுவலகம்-2-ஆவது-நாளாக-முற்றுகை-2902424.html
2901835 விழுப்புரம் கடலூர் குடிநீர்ப் பிரச்னை: விருத்தாசலம் நகராட்சி அலுவலகம் முற்றுகை    கடலூர், DIN Tuesday, April 17, 2018 08:46 AM +0530 குடிநீர் வழங்கக் கோரி விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை பெண்கள் முற்றுகையிட்டனர்.
 விருத்தாசலம் நகராட்சிக்கு உள்பட்ட திருவள்ளுவர் நகரில் சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியினருக்கு குடிநீர் விநியோகம் செய்யும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பழுதடைந்ததைத் தொடர்ந்து, குடிநீர் விநியோகம் கடந்த சில நாள்களாக தடைபட்டுள்ளதாம். இதையடுத்து, அந்தப் பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
 இதையடுத்து திங்கள்கிழமை 50-க்கும் மேற்பட்ட பெண்கள் நகராட்சி அலுவலகத்துக்கு காலிக் குடங்களுடன் வந்து முற்றுகையிட்டனர்.
 அவர்களிடம் நகராட்சி குடிநீர் வழங்கல் பிரிவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அடுத்த ஓரிரு நாள்களில் சீராகக் குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்ததன் பேரில் பெண்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
 
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/17/குடிநீர்ப்-பிரச்னை-விருத்தாசலம்-நகராட்சி-அலுவலகம்-முற்றுகை-2901835.html
2901833 விழுப்புரம் கடலூர் தில்லைக்காளிக்கு மகாபிஷேகம்    சிதம்பரம் DIN Tuesday, April 17, 2018 08:45 AM +0530 சிதம்பரம் எல்லையில் வீற்றுள்ள பிரசித்திபெற்ற தில்லைக் காளியம்மன் கோயிலில், சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு தில்லைக்காளிக்கு மகாபிஷேகம் மற்றும் 204-ஆவது சிறப்பு அர்த்தசாம பூஜை ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
 அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி, செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளில் ராகுகாலத்தில் தீபம் ஏற்றி காளியை வழிபட்டால் தீராத கடன், பகைவர்கள் தொந்தரவு, பூர்வஜென்ம சாப தோஷங்கள் தீரும், சித்தம் தெளியும் என நம்பப்படுகிறது. சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு இந்தக் கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீவிநாயகர், ஸ்ரீபிரம்மசாமுண்டி சந்நிதிகளில் நெய் தீப ஆராதனை, சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
 பின்னர் தில்லைக்காளியம்மனுக்கு குடம், குடமாக நல்லெண்ணெய் அபிஷேகமும், தைலக்காப்பு, குங்குமக் காப்பு ஆகியவையும் செய்யப்பட்டு, வாசனை திரவியம், வெட்டிவேர், விலாமிச்சு வேர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மகாபிஷேகத்தை திரளான பக்தர்கள் தரிசித்தனர். சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை அமாவாசை அர்த்தசாம அபிஷேக மண்டலி நிர்வாகி எஸ்.வைத்தியநாதன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
 
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/17/தில்லைக்காளிக்கு-மகாபிஷேகம்-2901833.html
2901830 விழுப்புரம் கடலூர் ஆவின் பால் விற்பனையகம் மீது தாக்குதல்: இளைஞர் கைது    நெய்வேலி DIN Tuesday, April 17, 2018 08:45 AM +0530 வடலூரில் வசிப்பவர் தானப்பன். இவர், நெய்வேலி சாலையில் ஆவின் பால் விற்பனையகம் நடத்தி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை இரவு தானப்பனின் மனைவி காசியம்மாள் (50), டீ மாஸ்டர் ஆகியோர் பால் விற்பனையகத்தில் இருந்தனராம். அப்போது, அங்கு வந்த வடலூர், புதுநகரைச் சேர்ந்த மணி மகன் அருள்பாண்டி, தானப்பன் எங்கே எனக் கேட்டு இரும்புத் தடியால் காசியம்மாளை தாக்கினாராம். மேலும், கடையையும் சேதப்படுத்தினாராம். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த காசியம்மாள் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 இதுகுறித்து வடலூர் போலீஸார் வழக்குப் பதிந்து அருள்பாண்டியை கைது செய்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/17/ஆவின்-பால்-விற்பனையகம்-மீது-தாக்குதல்-இளைஞர்-கைது-2901830.html
2901828 விழுப்புரம் கடலூர் "மாணவர்களுக்கு ஒழுக்கம் அவசியம்'    கடலூர் DIN Tuesday, April 17, 2018 08:44 AM +0530 மாணவர்களுக்கு ஒழுக்கம் மிக அவசியம் என்றார் கடலூர் மாவட்ட எஸ்பி செ.விஜயகுமார்.
 கடலூர் தேவனாம்பட்டினத்திலுள்ள பெரியார் அரசு கலைக் கல்லூரியின் ஆண்டு விழா, விளையாட்டு விழா கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் ப.குமரன் தலைமை வகித்தார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் மா.ராஜா முன்னிலை வகித்தார்.
 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, விளையாட்டுப் போட்டிகள், கல்வி தொடர்பான பல்வேறு நிகழ்வுகளில் சிறப்பிடம் பெற்றவர்களைப் பாராட்டி பரிசு வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், மாணவர்கள் ஒழுக்கத்துடன் கல்வி பயன்று தங்களது வாழ்க்கையில் மேன்மையடைய வேண்டும் என்றார்.
 கல்லூரி முதல்வர் ப.குமரன் பேசுகையில், இந்தக் கல்லூரியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அதிக போட்டி நிலவி வருகிறது. தற்போது கல்லூரியில் ரூ.2.50 லட்சத்தில் வகுப்பறையும், ஆய்வகமும் கட்டப்பட்டு வருகிறது.
 எனினும், கூடுதல் கட்டடம் தேவைப்படுவது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், என்எல்சி இந்தியா நிறுவனம் தனது சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ் பெரிய அளவிலான கலையரங்கம், 10 வகுப்பறைகள் கட்டுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் ஆங்கிலம், கணிதம், வரலாறு பாடங்களில் எம்.பி.எல்., பி.எச்.டி. படிப்புகள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
 இந்தக் கல்லூரியில் 25 ஆண்டுகளாக உடல்கல்வி இயக்குநர் பணியிடம் காலியாக இருந்த நிலையில், தற்போது இந்தப் பணியிடம் நிரப்பப்பட்டதைத் தொடர்ந்து விளையாட்டு விழா நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 முன்னதாக, தமிழ்த் துறை பேராசிரியர் கே.பழனிவேலு வரவேற்க, உடல்கல்வி இயக்குநர் தி.குமணன் உடற்கல்வி ஆண்டறிக்கை வாசித்தார்.
 வேதியியல்துறைத் தலைவர் ஐ.வண்ணமுத்து நன்றி கூறினார்.
 
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/17/மாணவர்களுக்கு-ஒழுக்கம்-அவசியம்-2901828.html
2901826 விழுப்புரம் கடலூர் உயர்கல்வித் துறையில் சராசரியை விட அதிக வளர்ச்சி: அமைச்சர் கே.பி.அன்பழகன் பெருமிதம்    சிதம்பரம், DIN Tuesday, April 17, 2018 08:44 AM +0530 தமிழக அரசின் உயர் கல்வித் துறையானது, இந்தியாவின் சராசரி வளர்ச்சியை விட அதிக வளர்ச்சியை அடைந்து வருவதாக மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
 கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
 விழாவையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 39 மாணவர்களுக்கும், 10 ஒருங்கிணைப்பாளர்களுக்கும் பரிசுகள், சான்றிதழ்களை தமிழக உயர் கல்வித் துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணை வேந்தருமான கே.பி.அன்பழகன் வழங்கினார். பின்னர் அவர் ஆற்றிய சிறப்புரை:
 உயர்கல்வித் துறையில் தமிழக அரசு பல்வேறு சாதனைகளைச் செய்து வருகிறது. இந்தத் துறையில் இந்தியாவின் சராசரி வளர்ச்சியை விட கூடுதலான வளர்ச்சியை அடைந்து வரும் அரசாக நமது அரசு செயல்பட்டு வருகின்றது. இந்த விழா மலரில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் யாவும் எம்ஜிஆரின் பன்முக ஆளுமையை இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ள உதவும். மக்கள் நலனை தனது உயிராகக் கொண்டு செயலாற்றிய எம்ஜிஆரின் ஆளுமையை நாம் அறிவதோடு, அவர் காட்டிய தூய வழியில் பயணிக்க வேண்டும். இதற்கான உறுதியேற்கும் விழாவாக இந்த விழா அமைய வேண்டும் என்றார் அமைச்சர்.
 விழாவில் தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது:
 இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த நீலம் சஞ்சீவி ரெட்டி, தமிழக ஆளுநராக இருந்த பிரபுதாஸ் பட்வாரி ஆகியோர் பங்கேற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழக பொன் விழாவில் சிறப்புரையாற்றியவர் எம்ஜிஆர். மேலும், 1979-ஆம் ஆண்டில் நடைபெற்ற தொலைதூரக் கல்வி இயக்ககத் தொடக்க விழா, நிர்வாகக் கட்டட அடிக்கல் நாட்டு விழாக்களில் பங்கேற்ற பெருமையும் அவருக்கு உண்டு என்றார்.
 விழாவில், மாவட்ட ஆட்சியர் வே.ப. தண்டபாணி, பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் வீ.திருவள்ளுவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழியல் துறைத் தலைவர் அரங்க.பாரி அறிமுக உரை ஆற்றினார். விழாவில் மா.சந்திரகாசி எம்.பி., எம்எல்ஏக்கள் கே.ஏ.பாண்டியன், நாக.முருகுமாறன், சத்யா பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
 விழா மலரை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட, முதல் பிரதியை அமைச்சர் எம்.சி.சம்பத் பெற்றுக்கொண்டார். பல்கலைக்கழக பதிவாளர் கே.ஆறுமுகம் நன்றி கூறினார்.
 விழாவில் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் எம்.உமாமகேஸ்வரன், முன்னாள் அமைச்சர்கள் கே.கலைமணி, செல்வி.ராமஜெயம், முன்னாள் எம்எல்ஏ எம்.சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, பல்கலைக்கழக துணைவேந்தர் செ.மணியன் வரவேற்றார்.
 "அண்ணாமலைப் பல்கலை.
 ஊழியர்களுக்கு புதிய ஊதியம்'
 சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஏப்.1-ம் தேதி முதல் கணக்கிட்டு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
 இதுகுறித்து சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: இந்தப் பல்கலைக்கழகத்துக்கு ஆசிரியர்கள், ஊழியர்கள் 6 ஆயிரம் பேர் மட்டுமே தேவை. ஆனால், 12,500 பேர் இருந்தனர். இவர்களில் 3,500 பேரை அரசு பணி மாறுதல் செய்துள்ளது. எஞ்சியவர்களையும் பணி மாறுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 பல்கலைக்கழகத்தில் தனி அலுவலர்களுக்கு கூடுதல் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, இவர்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம் நிர்ணயம் செய்து, பணிமாறுதலுக்கு ஒப்புதல் கோரி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை யாரும் ஒப்புதல் கடிதம் வழங்கவில்லை. எனவே, பல்கலைக்கழகத்தை நல்ல முறையில் நடத்திச் செல்லும் நோக்கத்தில் அவர்களுக்கு ஊதிய விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 15 நாள்கள் அவகாசம் போதுமானது. இது நாள் வரை அவர்கள் பெற்ற சம்பளம் கூட பிடித்தம் செய்யபட மாட்டாது என உறுதி கொடுத்துள்ளோம். பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் தேர்வு குறித்து ஆளுநர்தான் முடிவு செய்வார். இதில் தமிழக அரசின் தலையீடு கிடையாது.
 அருப்புக்கோட்டை கல்லூரி மாணவிகள் கொடுத்த புகாரின் பேரில் உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தவறு உறுதி செய்யப்படும்பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமைச்சர்.
 
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/17/உயர்கல்வித்-துறையில்-சராசரியை-விட-அதிக-வளர்ச்சி-அமைச்சர்-கேபிஅன்பழகன்-பெருமிதம்-2901826.html
2901822 விழுப்புரம் கடலூர் பாதைப் பிரச்னை:  குடும்பத்துடன் விவசாயி தீக்குளிக்க முயற்சி    கடலூர் DIN Tuesday, April 17, 2018 08:43 AM +0530 பாதைப் பிரச்னை தொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி ஒருவர் குடும்பத்தினருடன் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றதால்
 பரபரப்பு ஏற்பட்டது.
 கடலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மனு அளிப்பதற்காக, கடலூர் வட்டம், நொச்சிக்காடு கிராமத்தைச் சேர்ந்த வீர.தங்கபாண்டின் வந்திருந்தார். இவர், தனது தந்தை, சகோதரர்கள், அவர்களது மனைவிகள், குழந்தைகள் உள்பட 16 பேருடன் வந்திருந்தார்.
 மனுவைப் பதிவு செய்துவிட்டு அலுவலகத்துக்குச் செல்லும் முன் திடீரென வீர.தங்கபாண்டியன் தனது உடலில் பெட்ரோலை ஊற்றினார். பின்னர், குழந்தைகள் உள்பட தனது குடும்பத்தினர் 16 பேர் மீதும் பெட்ரோலை ஊற்றினார். இதையடுத்து குழந்தைகள் கதறி அழுதன. வீர.தங்கபாண்டியன் தீப்பெட்டியை எடுத்து தீயைப் பற்ற வைக்க முயன்றார். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் விரைந்து செயல்பட்டு தீப்பெட்டியை பறித்தனர். பின்னர், அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி தீக் குளிக்கும் முயற்சியை தடுத்தனர். பின்னர், வீர.தங்கபாண்டியனிடமிருந்து மனு பெறப்பட்டு மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: எங்களது மூதாதையர் வழியில் கிரையமாகப் பெறப்பட்ட 1.35 ஏக்கர் நிலத்தில் அண்ணன், தம்பிகள் வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். வீட்டுக்கும், பொதுச் சாலைக்கும் சென்று வர அங்குள்ள அரசு புறம்போக்கு நிலத்தைப் பயன்படுத்தி வருகிறோம்.
 தற்போது அந்த இடத்தை தனியாருக்குப் பட்டாவாக வழங்கியதால் எங்களுக்கு பாதை மறுக்கப்படுகிறது. இதனால், நாங்கள் பொதுச் சாலைக்கு சென்று வர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றனர்.
 
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/17/பாதைப்-பிரச்னை--குடும்பத்துடன்-விவசாயி-தீக்குளிக்க-முயற்சி-2901822.html
2901777 விழுப்புரம் கடலூர் சத்துணவு ஊழியர்கள் சங்க ஒன்றிய மாநாடு    கடலூர், DIN Tuesday, April 17, 2018 08:32 AM +0530 தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் கடலூர் ஒன்றிய மாநாடு கடலூரில் அண்மையில் நடைபெற்றது.
 சங்கத் தலைவர் கே.சுப்ரமணியன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சி.மச்சேந்திரன், துணைத் தலைவர் ஏ.சுந்தரமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலர் எல்.அரிகிருஷ்ணன், மாவட்ட முன்னாள் தலைவர் ஆர்.பாலசுப்ரமணியன், அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் சி.குழந்தைவேலு உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
 மாநாட்டில் சங்கத்தின் மாவட்டத் தலைவராக ஏ.வேலு, செயலராக எஸ்.டெல்லிகுமார், பொருளாளராக டி.ஜெயசந்திரன், துணைத் தலைவர்களாக கே.சுப்ரமணியன், ஆர்.கருணாகரன், இணைச் செயலர்களாக வி.குமுதா, எஸ்.மல்லிகா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 சிறப்பு கால முறை ஊதியத்தில் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர்களை கால முறை ஊதியத்தில் கொண்டு வர வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ. 5 லட்சம், சமையலர், உதவியாளர்களுக்கு ரூ. 3 லட்சம் சிறப்பு ஒட்டு மொத்த தொகையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட
 பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/17/சத்துணவு-ஊழியர்கள்-சங்க-ஒன்றிய-மாநாடு-2901777.html
2901775 விழுப்புரம் கடலூர் 2 இளைஞர்கள் கடத்தல்: கிராம மக்கள் மோதல்    கடலூர் DIN Tuesday, April 17, 2018 08:32 AM +0530 வெள்ளாற்றில் மணல் அள்ளியதை தட்டிக்கேட்ட 2 இளைஞர்கள் கடத்தப்பட்டதால் இரு கிராமத்தினரிடையே திங்கள்கிழமை மோதல் ஏற்பட்டது.
 கடலூர் மாவட்டம், பெண்ணாடத்தை அடுத்த செம்பேரி கிராமத்துக்கும், அரியலூர் மாவட்டத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் வெள்ளாறு செல்கிறது. இதில், கடலூர் மாவட்டப் பகுதிகளில் மணல் அள்ளுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வெள்ளாற்று பாதுகாப்பு சங்கம் அமைக்கப்பட்டது. அரியலூர் பகுதியிலிருந்து வந்து மணல் எடுப்பவர்கள் கடலூர் மாவட்ட பகுதிக்குள் இரவில் ஊடுருவி மணல் திருட்டில் ஈடுபடுவதாக புகார் கூறப்படுகிறது.
 இதையடுத்து கிராமமக்கள் வெள்ளாற்றில் இரவு நேரப் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், திங்கள்கிழமை அதிகாலையில் அரியலூர் மாவட்டம், முள்ளுக்குறிச்சியை சேர்ந்த சிலர் ஆற்றில் மணல் அள்ளினராம். இதை செம்பேரியைச் சேர்ந்த பாலாஜி, மணிகண்டன் ஆகியோர் தட்டிக்கேட்டுள்ளனர். இதில் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதோடு, இளைஞர்கள் இருவரையும் மணல் அள்ளியவர்கள் தாக்கியதோடு தங்களது பகுதிக்கு கடத்திச் சென்றனராம்.
 தகவலறிந்த கிராம மக்கள், அரியலூர் மாவட்ட எல்லையில் புகுந்ததால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து இரண்டு மாவட்ட போலீஸாரும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதற்கிடையில் கடத்தப்பட்ட இருவரையும் முந்திரிக்காட்டில் வைத்து தாக்கி விட்டு அங்கேயே விட்டுச்சென்றுள்ளனர். அவர்கள் பலத்த காயத்துடன் ஊர் திரும்பியதை அடுத்து, திட்டக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து இரு மாவட்ட எல்லையிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/17/2-இளைஞர்கள்-கடத்தல்-கிராம-மக்கள்-மோதல்-2901775.html
2901773 விழுப்புரம் கடலூர் தெளிப்பு நீர் கருவிகள் அமைத்த வயல்களில் வேளாண் அதிகாரி ஆய்வு    கடலூர், DIN Tuesday, April 17, 2018 08:31 AM +0530 தெளிப்பு நீர் பாசனக் கருவிகள் அமைத்த வயல்களில் வேளாண் உதவி இயக்குநர் வெங்கடாஜலபதி அண்மையில் ஆய்வு செய்தார்.
 கடலூர் வட்டத்தில் பிரதமரின் விவசாயப் பாசன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கரும்பு, தென்னை, மணிலா, உளுந்து, மக்காச்சோளம் பயிர் செய்யப்பட்ட வயல்களில் சொட்டு நீர், தெளிப்பு நீர் கருவிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதமும் மானியம் அளிக்கப்படுகிறது.
 இந்த நிலையில், சேடப்பாளையத்தில் தென்னைக்கு அமைக்கப்பட்ட பாசனக் கருவிகளை சென்னை வேளாண் இயக்குநரக உதவி இயக்குநர் (கணினியியல்) வெங்கடாஜலபதி அண்மையில் சென்று பார்வையிட்டு விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
 பின்னர், வாண்டரசன்குப்பத்தில் முன்னோடி விவசாயி அறவாழி சாகுபடி செய்துள்ள மரவள்ளி பயிர் செய்யப்பட்ட வயல்களில் அமைக்கப்பட்ட நுண்ணீர் பாசனம் குறித்து ஆய்வு செய்தார்.
 தொடர்ந்து, குறிஞ்சிப்பாடி வட்டம், வழுதலம்பட்டு, புலியூர், அண்ணாகிராமம் வட்டம், மேல்பட்டாம்பாக்கம் பகுதிகளில் அமைக்கப்பட்ட சொட்டு நீர் பாசனம், நிழல் வலை நாற்றங்கால் ஆகியவற்றை அவர் ஆய்வு செய்தார்.
 கடலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் என்.கனகசபை, உதவி இயக்குநர் சு.பூவராகன், வேளாண் அலுவலர்கள் டி.பார்த்தசாரதி, தரணிகாமாட்சி ஆகியோர் உடனிருந்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/17/தெளிப்பு-நீர்-கருவிகள்-அமைத்த-வயல்களில்-வேளாண்-அதிகாரி-ஆய்வு-2901773.html
2901770 விழுப்புரம் கடலூர் கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்ட கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தக் கூடாது: நுகர்வோர் கூட்டமைப்பு வலியுறுத்தல்   கடலூர், DIN Tuesday, April 17, 2018 08:31 AM +0530 கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்ட வரைபட கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தக் கூடாதென தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு வலியுறுத்தியது.
 இதுதொடர்பாக அந்தக் கூட்டமைப்பின் பொதுச் செயலர் மு.நிஜாமுதீன் மாவட்ட ஆட்சியருக்கு அண்மையில் அனுப்பிய மனுவில் கூறியிருப்பது:
 தமிழக அரசால் கடந்த பிப்ரவரி 19 -ஆம் தேதி வரைவு கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டம் என்ற பெயரில் வரைபடங்களை வெளியிட்டு, மாவட்ட வாரியாக மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றது. அதன்படி, கடலூர் மாவட்டத்துக்கான கூட்டம் ஏப்ரல் 18- ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டது. தற்போது அரசால் வெளியிடப்பட்ட வரைவு கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்ட வரைபடங்கள் எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது.
 குறிப்பாக, மீனவக் கிராமங்கள், மீனவ கிராமங்களின் பொதுச் சொத்துகள், அவர்களுக்கான வீட்டு வசதித் திட்டங்கள் ஆகியவை சர்வே எண்ணுடன் அமைக்கப்படவில்லை.
 மத்திய அரசால் 1990- ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்ட வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு, புதிய கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டம் உருவாக்கப்படவில்லை. சட்டத்துக்கு ஒவ்வாத வரைபடங்களை மட்டும் வைத்து கருத்துக் கேட்பது அரசின் அறிவிப்பாணைகளுக்கு எதிரானதாகும்.
 இந்த வரைபடத்தைக் கொண்டு கருத்துக் கூறுவது என்பது சரியானதாக இருக்காது. எனவே, ஏப்ரல் 18 -ஆம் தேதி நடைபெற உள்ள கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில்
 குறிப்பிடப்பட்டுள்ளது.
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/17/கடற்கரை-மண்டல-மேலாண்மைத்-திட்ட-கருத்துக்-கேட்புக்-கூட்டத்தை-நடத்தக்-கூடாது-நுகர்வோர்-கூட்டமைப்பு-வல-2901770.html
2901767 விழுப்புரம் கடலூர் தோசை சாப்பிட்ட முதியவர் சாவு: 2 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்    நெய்வேலி, DIN Tuesday, April 17, 2018 08:30 AM +0530 பண்ருட்டி அருகே தோசை சாப்பிட்ட முதியவர் திங்கள்கிழமை உயிரிழந்தார். வாந்தி மயக்கம் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட 2 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 பண்ருட்டி ஒன்றியம், சொரத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி சுதா. இவர்களுக்கு சுபா (16), சுதாகர்(11) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். திங்கள்கிழமை மதியம் பழனிவேலின் தந்தை ராமச்சந்திரன் (76), குழந்தைகள் சுபா, சுதாகர் ஆகியோர் வீட்டில் தோசை சுட்டு சாப்பிட்டனராம். சிறிது நேரத்தில் இவர்கள் அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதில், ராமச்சந்திரன் உயிரிழந்தார்.
 ஆபத்தான நிலையில் இருந்த சுபா, சுதாகர் ஆகியோர் புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவத்துக்கான காரணம் குறித்து முத்தாண்டிக்குப்பம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/17/தோசை-சாப்பிட்ட-முதியவர்-சாவு-2-குழந்தைகளுக்கு-வாந்தி-மயக்கம்-2901767.html
2901766 விழுப்புரம் கடலூர் நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது தடுப்புக் காவல் சட்ட நடவடிக்கை: முயற்சியை கைவிடக் கோரி மனு    கடலூர் DIN Tuesday, April 17, 2018 08:30 AM +0530 நாம் தமிழர் கட்சி நிர்வாகியை தடுப்புக் காவல் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டாம் என அவரது தந்தை ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தார்.
 நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு வருபவர் கடல்தீபன். காவிரி விவகாரம் தொடர்பான பிரச்னையில் அண்மையில் கடலூரில் கர்நாடக மாநில அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த வழக்கில் இவர் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 இந்த நிலையில், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் கடல்தீபனின் தந்தை வா.பாலாறு மனு அளித்தார். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: எனது மகன் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் துறை முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது எங்களுக்கு அச்சமூட்டுவதாக உள்ளது.
 பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்ட வழக்கில் முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளோம். இதுவரை எந்தவிதமான வன்முறைப் போராட்டங்களிலும் கடல்தீபனோ, அவரது கட்சியினரோ ஈடுபட்டதில்லை. எனவே, அவர்மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக்கொண்டார்.
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/17/நாம்-தமிழர்-கட்சி-நிர்வாகி-மீது-தடுப்புக்-காவல்-சட்ட-நடவடிக்கை-முயற்சியை-கைவிடக்-கோரி-மனு-2901766.html
2901765 விழுப்புரம் கடலூர் பாதைப் பிரச்னை: ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் விவசாயி தீக்குளிக்க முயற்சி   கடலூர், DIN Tuesday, April 17, 2018 08:29 AM +0530 பாதைப் பிரச்னை தொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி ஒருவர் குடும்பத்தினருடன் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
 கடலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மனு அளிப்பதற்காக, கடலூர் வட்டம், நொச்சிக்காடு கிராமத்தைச் சேர்ந்த வீர.தங்கபாண்டின் வந்திருந்தார். இவர், தனது தந்தை, சகோதரர்கள், அவர்களது மனைவிகள், குழந்தைகள் உள்பட 16 பேருடன் வந்திருந்தார்.
 மனுவைப் பதிவு செய்துவிட்டு அலுவலகத்துக்குச் செல்லும் முன் திடீரென வீர.தங்கபாண்டியன் தனது உடலில் பெட்ரோலை ஊற்றினார். பின்னர், குழந்தைகள் உள்பட தனது குடும்பத்தினர் 16 பேர் மீதும் பெட்ரோலை ஊற்றினார். இதையடுத்து குழந்தைகள் கதறி அழுதன. வீர.தங்கபாண்டியன் தீப்பெட்டியை எடுத்து தீயைப் பற்ற வைக்க முயன்றார். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் விரைந்து செயல்பட்டு தீப்பெட்டியை பறித்தனர். பின்னர், அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி, தீக் குளிக்கும் முயற்சியை தடுத்தனர். பின்னர், வீர.தங்கபாண்டியனிடமிருந்து மனு பெறப்பட்டு மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.
 அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: எங்களது மூதாதையர் வழியில் கிரையமாகப் பெறப்பட்ட 1.35 ஏக்கர் நிலத்தில் அண்ணன், தம்பிகள் வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். வீட்டுக்கும், பொதுச் சாலைக்கும் சென்று வர அங்குள்ள அரசு புறம்போக்கு நிலத்தைப் பயன்படுத்தி வருகிறோம். தற்போது அந்த இடத்தை தனியாருக்குப் பட்டாவாக வழங்கியதால் எங்களுக்கு பாதை மறுக்கப்படுகிறது. இதனால், நாங்கள் பொதுச் சாலைக்கு சென்று வர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதுகுறித்து 2016-ஆம் ஆண்டிலிருந்து பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது. எனவே, இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண வலியுறுத்தி தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/17/பாதைப்-பிரச்னை-ஆட்சியர்-அலுவலகத்தில்-குடும்பத்துடன்-விவசாயி-தீக்குளிக்க-முயற்சி-2901765.html
2901762 விழுப்புரம் கடலூர் கந்து வட்டிக் கொடுமை: ஆட்சியரகத்தில் விஷம் குடித்த தொழிலாளி    கடலூர், DIN Tuesday, April 17, 2018 08:28 AM +0530 கந்து வட்டிக் கொடுமை தொடர்பாக மனு அளிக்க வந்த விவசாயி, ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 சிதம்பரம் வட்டம், சி.முட்லூர் அருகே உள்ள அம்பூட்டியபாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயத் தொழிலாளி கோ.கிருஷ்ணன் (64). இவர், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு அளிக்க வந்தார். மனுவைப் பதிவு செய்த அவர், திடீரென தான் எடுத்து வந்திருந்த பூச்சி மருந்தை எடுத்து பொதுமக்கள் முன்னிலையில் குடிக்கத் தொடங்கினார். பின்னர் அவர் மயங்கி விழுந்தார் (படம்).
 இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அவரிடம் கடலூர் புதுநகர் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதில், தனது மகளின் திருமணத்துக்காக 2012-ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்தவரிடம் ரூ.1.20 லட்சம் கடன் பெற்றதாகவும், இதில், ரூ.85 ஆயிரத்தை திருப்பிச் செலுத்திய நிலையில், கடன் கொடுத்த நபர் தன்னை மிரட்டி தனது சொத்தின் மீது ரூ.2.50 லட்சம் மதிப்பிலான அடமானம் கடன் பத்திரம் எழுதி வாங்கிக் கொண்டதாகவும் தெரிவித்தார். பின்னர், அந்தச் சொத்தினை மற்றொருவர் பெயருக்கு கிரையம் செய்துவிட்டார்களாம். இதை தட்டிக் கேட்டபோது அடியாள்களை வைத்து தன்னை மிரட்டி வருவதாக கிருஷ்ணன் தெரிவித்தார்.
 அவர் மேலும் கூறுகையில், இந்தப் பிரச்னை தொடர்பாக கிள்ளை காவல்நிலையம், மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. என்னை மிரட்டி எழுதி வாங்கிய அடமானக் கடன் பத்திரங்களை ரத்து செய்ய வேண்டும் என்றார்.
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/17/கந்து-வட்டிக்-கொடுமை-ஆட்சியரகத்தில்-விஷம்-குடித்த-தொழிலாளி-2901762.html
2901757 விழுப்புரம் கடலூர் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு: திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை    கடலூர், DIN Tuesday, April 17, 2018 08:27 AM +0530 வெள்ளாற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து அரசியல் கட்சியினர், வணிகர் சங்கத்தினர் திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தை கருப்புக் கொடிகளுடன் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
 திட்டக்குடியை அடுத்துள்ள தி.இளமங்கலம் வெள்ளாற்றில் மணல் குவாரி அமைக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இந்தப் பகுதியில் மணல் குவாரி அமைத்தால் குடிநீர்ப் பிரச்னை ஏற்படுவதோடு, விவசாயம் முற்றிலும் முடங்கிவிடும் எனவும், வெள்ளாற்றின் மூலம் செயல்படுத்தப்படும் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தால் பயன்பெறும் 65 கிராமங்களுக்கும் குடிநீர் கிடைக்காது என்றும், எனவே, மணல் குவாரி அமைக்கக் கூடாதென அப்பகுதியினர் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். இதுதொடர்பாக அண்மையில் திட்டக்குடி வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
 இதையடுத்து திட்டமிட்டபடி திங்கள்கிழமை பாட்டாளி மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், பாஜக, வணிகர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, மணல் குவாரிக்கு எதிராக முழக்கமிட்டனர். அதன்பின்னர், வட்டாட்சியர் ரவிச்சந்திரனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
 போராட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் தனபால், பாமக மாவட்டச் செயலர் இ.கே.சுரேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் வீரகோவிந்தன், மாநில இளைஞரணி துணைத் தலைவர் ரா.மோகன், ஒன்றியச் செயலர் அ.கண்ணன், தவாக ஒன்றியச் செயலர் ரெங்க.சுரேந்தர், மாவட்ட மகளிர் அணித் தலைவர் கற்பகம், நகர நிர்வாகிகள் முருகன், கதிரவன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக ஒன்றியச் செயலர் அக்ரி.முருகேசன், நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, கலையரசன், முருகன், பாஜக மாவட்டச் செயலர் பொன்.பெரியசாமி, நிர்வாகிகள் செல்வ.பூமிநாதன், சுரேஷ், தமாகா நிர்வாகி அன்பரசு, வணிகர்கள் சங்கப் பேரவை கூட்டமைப்பு மாநில துணைத் தலைவர் தங்கராசு, சண்முகம் செட்டியார், வளையாபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/17/மணல்-குவாரி-அமைக்க-எதிர்ப்பு-திட்டக்குடி-வட்டாட்சியர்-அலுவலகம்-முற்றுகை-2901757.html
2901168 விழுப்புரம் கடலூர் விழுப்புரம் மாவட்ட பத்திரப் பதிவு அலுவலர் வீட்டில் ஊழல் தடுப்பு போலீஸார் சோதனை    கடலூர் DIN Monday, April 16, 2018 08:53 AM +0530 கடலூர் வெளிச்செம்மண்டலத்தில் உள்ள விழுப்புரம் மாவட்ட பத்திரப் பதிவு அலுவலர் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
 விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 13-ஆம் தேதி சார்-பதிவாளர்கள் உள்ளிட்ட பதிவுத் துறை அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் மாவட்ட பத்திரப் பதிவு அலுவலர் குமரேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் குமரேசன் அதிகாரிகளிடம் இருந்து பணம் பெற்றதாக ஊழல் தடுப்பு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
 அதன்பேரில், அங்கு சென்று சோதனையிட்ட போலீஸார் குமரேசன் அலுவலகத்தில் இருந்து ரூ. 92,630 கைப்பற்றினர்.
 குமரேசனின் வீடு கடலூர் வெளிச்செம்மண்டலத்தில் இருப்பதை அறிந்த ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் சனிக்கிழமை அங்கு சென்றனர். ஆனால், அவரது வீடு பூட்டியிருந்ததுடன் அவர் வெளியூர் சென்றிருப்பதும் தெரிய வந்தது.
 இதையடுத்து, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் 10 பேர் இரண்டு கார்களில் குமரேசனின் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றனர். அவரது உறவினர்கள் வீட்டைத் திறந்துவிட, போலீஸார் உள்ளே சென்று சோதனை நடத்தினர்.
 கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் குமரேசன் அந்த வீட்டை ரூ. ஒரு கோடிக்கு வாங்கி, ரூ. 25 லட்சம் செலவு செய்து புதுப்பித்தது தெரிய வந்தது.
 மேலும், பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட அளவைவிட வீட்டின் அளவு அதிகமாக இருந்ததைத் தொடர்ந்து, வீட்டை அளவீடு செய்தனர். காலை 8 மணியளவில் தொடங்கிய சோதனை பிற்பகல் ஒரு மணி வரை நீடித்ததது. சோதனையின் போது, முக்கிய ஆவணங்களை போலீஸார் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.
 இந்த நிலையில், குமரேசனின் வீட்டில் சனிக்கிழமை நிறுத்தப்பட்டிருந்த காரை, நள்ளிரவில் மர்ம நபர் அங்கிருந்து ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அந்த காரில் ஆவணங்கள், பணம் கொண்டு செல்லப்பட்டதா? என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 
 
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/16/விழுப்புரம்-மாவட்ட-பத்திரப்-பதிவு-அலுவலர்-வீட்டில்-ஊழல்-தடுப்பு-போலீஸார்-சோதனை-2901168.html
2901126 விழுப்புரம் கடலூர் அண்ணாமலைப் பல்கலை.யில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா    சிதம்பரம், DIN Monday, April 16, 2018 08:40 AM +0530 சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 அம்பேத்கர் இருக்கை சார்பில் நடைபெற்ற இந்த விழாவில், இணைப் பேராசிரியர் கே.செüந்திரராஜன் வரவேற்றார். அம்பேத்கரின் உருவப் படத்துக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் செ.மணியன் மலர்தூவி மரியாதை செலுத்தி தொடக்கவுரையாற்றினார். மேலும் அம்பேத்கர் உருவப் படத்துக்கு பதிவாளர் கே.ஆறுமுகம், ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள், புல முதல்வர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், பல்வேறு சங்க உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
 அம்பேத்கர் இருக்கை சார்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
 விழாவில் சிறப்பு விருந்தினராக கல்வியாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக அம்பேத்கர் பாடுபட்டதை எடுத்துரைத்தார். பதிவாளர் கே.ஆறுமுகம் பேசுகையில், அம்பேத்கரின் கொள்கைகள் மூலம் நமது நாட்டில் சமத்துவம், சகோதரத்துவம் மேலோங்கி இருப்பதாகத் தெரிவித்தார்.
 தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக சர்வதேச சட்டத் துறை பேராசிரியர் செ.இளையராஜா விழா பேருரையாற்றினார்.
 மேலும் அவர், அம்பேத்கரின் சமூக பங்களிப்பு பற்றி மாணவர்களுடன் கலந்துரையாடினர். மொழிப்புல முதல்வர் வி.திருவள்ளுவன் வாழ்த்துரையாற்றினார். விழா ஏற்பாடுகளை அம்பேத்கர் இருக்கை இணைப் பேராசிரியர் கே.செüந்திரராஜன், துணைப் பேராசிரியை வி.ராதிகாராணி ஆகியோர் செய்திருந்தனர். துணைப் பேராசிரியை வி.ராதிகாராணி நன்றி கூறினார்.
 விழாவில் பல்கலைக்கழக புல முதல்வர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் திரளானோர் பங்கேற்றனர்.
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/16/அண்ணாமலைப்-பல்கலையில்-அம்பேத்கர்-பிறந்த-நாள்-விழா-2901126.html
2901124 விழுப்புரம் கடலூர் பிராமணர் சங்கக் கூட்டம்    கடலூர், DIN Monday, April 16, 2018 08:39 AM +0530 தமிழ்ப் புத்தாண்டு பிறப்பையொட்டி, தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் கடலூர் மஞ்சக்குப்பம் கிளை பொதுக் குழுக் கூட்டம் கடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
 மாநிலச் செயலர் கே.திருமலை தலைமை வகித்து, விளம்பி ஆண்டுக்கான பஞ்சாங்கத்தை சங்க உறுப்பினர்களுக்கு வழங்கினார். உறுப்பினர் கோதண்டராமன் விளம்பி ஆண்டுக்கான பஞ்சாங்கத்தை வாசித்து அதன் சிறப்புகளை எடுத்துக் கூறினார். கூட்டத்தில் நிர்வாகிகள் வெங்கடேசன், கிருஷ்ணன், பாஸ்கரன், பாலகிருஷ்ணன், பாலசுப்பிரமணியன், சாவடி தலைவர் வரதராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக கிளை பொதுச் செயலர் எஸ்.பரகாலராமானுஜம் வரவேற்க, நிர்வாகி ராமன் நன்றி கூறினார்.
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/16/பிராமணர்-சங்கக்-கூட்டம்-2901124.html
2901122 விழுப்புரம் கடலூர் தமிழ் வளர்ச்சி கருத்தரங்கம்    நெய்வேலி DIN Monday, April 16, 2018 08:39 AM +0530 பண்ருட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், தமிழ் வளர்ச்சிக் கருத்தரங்கம் காமராஜர் நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 அந்தக் கட்சியின் நகரச் செயலர் உத்தராபதி தலைமை வகித்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் "சிகரம்' செந்தில்நாதன் சிறப்புரையாற்றினார். கட்சியின் மாவட்டச் செயலர் டி.ஆறுமுகம், மாநிலக் குழு உறுப்பினர்கள் மாதவன், மூசா, செயற்குழு உறுப்பினர்கள் உதயகுமார், ரமேஷ்பாபு, கருப்பையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/16/தமிழ்-வளர்ச்சி-கருத்தரங்கம்-2901122.html
2901120 விழுப்புரம் கடலூர் மணல் குவாரிக்கு எதிராக கையெழுத்து இயக்கம்    கடலூர், DIN Monday, April 16, 2018 08:39 AM +0530 கடலூர் அருகே உள்ள விஸ்வநாதபுரத்தில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்து இயக்கம் நடத்தினர்.
 தென்பெண்ணை ஆற்றில் நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உள்பட்ட விஸ்வநாதபுரத்தில் மணல் குவாரி அமைப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணி நடைபெற்று வரும் நிலையில், மணல் குவாரிக்கு அந்தப் பகுதியினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
 மணல் குவாரி அமைய உள்ள இடத்தில் தடுப்பணை கட்ட ஏற்கெனவே அரசு ஒப்புதல் வழங்கிய நிலையில், தற்போது மணல் அள்ளினால் தடுப்பணை கட்ட முடியாத நிலை ஏற்படும்.
 மேலும், இரு கரைகளிலும் உள்ள சுமார் 50 கிராமங்கள் இந்த ஆற்று நீரை நம்பியே விவசாயம் செய்து வருகின்றன. குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. தற்போது மணல் அள்ளப்பட்டால் குடிநீர் ஆதாரம், விவசாயப் பணிகள் பாதிக்கும் என்பதால், மணல் குவாரி அமைக்கக் கூடாதென மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.
 மேலும், குவாரி தொடர்பான பணிகளை ஆய்வு செய்ய வந்த ஆட்சியரையும் முற்றுகையிட்டனர். எனவே, விஸ்வநாதபுரம் பகுதியில் மணல் குவாரி அமைக்க அரசு வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும். நிலத்தடி நீரைச் சேமிக்க இந்தப் பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, கிராம மக்கள் கையெழுத்து இயக்கம் நடத்தினர். விஸ்வநாதபுரம், கலிஞ்சிக்குப்பம் உள்ளிட்ட சுற்று வட்ட மக்கள், இளைஞர்கள் கையொப்பமிட்டு, மணல் குவாரிக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/16/மணல்-குவாரிக்கு-எதிராக-கையெழுத்து-இயக்கம்-2901120.html
2901117 விழுப்புரம் கடலூர் நடராஜர் கோயிலில் 380 கலைஞர்களின் நாட்டியம்    சிதம்பரம் DIN Monday, April 16, 2018 08:38 AM +0530 சிதம்பரம் நடராஜர் கோயிலில் சபாபதி சங்கீத ஞான அறக்கட்டளை சார்பில், ஆயிரங்கால் மண்டபம் எதிரே உள்ள நடனப் பந்தலில் சித்திரை தமிழ்ப் புத்தாண்டையொட்டி, ஒரே நேரத்தில் 380 நாட்டிய மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 நிகழ்ச்சியில் 6 வயது முதல் 68 வயது வரையிலான நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்று நாட்டியம் ஆடினர். பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த நாட்டிய நிகழ்ச்சியை கோயிலுக்கு வந்த பக்தர்கள் பலர் பார்த்து ரசித்தனர்.
 
 
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/16/நடராஜர்-கோயிலில்-380-கலைஞர்களின்-நாட்டியம்-2901117.html
2901114 விழுப்புரம் கடலூர் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம்   நெய்வேலி, DIN Monday, April 16, 2018 08:38 AM +0530 பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கம் சார்பில், தமிழ் புத்தாண்டு சித்திரை விழா பண்ருட்டியில் உள்ள சாரதா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
 சங்கத்தின் கெüரவத் தலைவர் ப.ச.வைரக்கண்ணு தலைமை வகித்தார். செந்தமிழ் இசைமாமணி கொ.கோதண்டபாணி இறை வணக்கப் பாடல் பாடினார். செய்தித் தொடர்பாளர் கவிதை கணேசன் வரவேற்றார். "தமிழ்க் காவிரியே வருக' என்ற தலைப்பில், கவிஞர் நாகராசன் தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் மகாவிஷ்ணு, ஆறுமுகம், கிருஷ்ணமூர்த்தி, அழகைதாஸ், கவிதை கணேசன், ராஜ்குமார், வைத்தியநாதன், கிருஷ்ணன் ஆகியோர் கவிதை பாடினர்.
 காப்பாளர் ரா.சஞ்சீவிராயர், தலைவர் சுந்தர.பழனியப்பன், செயலர் சொ.முத்துக்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்வில் தமிழக அரசின் "தமிழ்ச் செம்மல் விருது' பெற்ற கடலூர் பேராசிரியர் ராச.குழந்தைவேலனார், திட்டக்குடி பிறவிக் கவிஞர் ராமசாமி ஆகியோர் கெüரவிக்கப்பட்டனர்.
 விழாவில் சு.சதீஷ்குமாருக்கு விஸ்வேஸ்வரய்யா விருதும், ஆசை.தாமஸýக்கு சமூகப் பணிக்கான விருதும், சமையல் கலைஞர் ராஜாவுக்கு நளபாக சக்கரவர்த்தி விருதும், நெல்லிக்குப்பம் மூர்த்திக்கு தீயணைப்புத் துறையில் முதல் பெண் அதிகாரியான பிரியா ரவிச்சந்திரன் விருதும் வழங்கப்பட்டன.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/16/தமிழ்ப்-புத்தாண்டு-கொண்டாட்டம்-2901114.html
2901112 விழுப்புரம் கடலூர் உளுந்துக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை: விவசாயிகள் வரவேற்பு   கடலூர், DIN Monday, April 16, 2018 08:37 AM +0530 உளுந்து பயிருக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிலோவுக்கு ரூ.54 என மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
 கடலூர் மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் ஹெக்டேரில் நேரடியாகவும், ஊடுபயிராகவும் உளுந்து சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. எனினும், விவசாயிகளுக்கு போதுமான விலை கிடைப்பதில்லை எனவும், உளுந்துக்கு அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
 கடந்த 2016-ஆம் ஆண்டுகளில் உளுந்து 100 கிலோ கொண்ட குவிண்டால் ரூ.12 ஆயிரம் வரை விற்பனையானது. ஆனால், கடந்த ஆண்டு ரூ.6,500-க்கு மட்டுமே விற்பனையானது.
 தற்போது உளுந்து அறுவடை தொடங்கியுள்ள நிலையில் விருத்தாசலம், பண்ருட்டி, கடலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு உளுந்து வரத்து அதிகரித்துள்ளது. எனினும், கிலோவுக்கு ரூ.30 முதல் ரூ.40 வரை மட்டுமே வியாபாரிகளால் விலை கேட்கப்பட்டு வாங்கி செல்லப்படுகிறது.
 எனவே, உளுந்துக்கு உரிய ஆதரவு விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
 அதன்படி உளுந்து கொள்முதலை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசு கேட்டுக்கொண்டது. அதன்படி, தமிழகத்திலிருந்து 3 ஆயிரம் மெட்ரிக் டன் வரை சஅஊஉஈ திட்டத்தின் மூலம் கொள்முதல் செய்திட மத்திய அரசு அனுமதித்துள்ளது.
 இதற்காக ஆதரவு விலைத் திட்டத்தின் மூலமாக ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் உளுந்து கொள்முதல் நிலையம் அமைத்து கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
 அதன்படி, மாவட்டத்தில் விருத்தாசலம், பண்ருட்டி ஆகிய இரண்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உளுந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்கு அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையாக குவிண்டாலுக்கு ரூ.5,400 ஆக நிர்ணயித்துள்ளது. அதாவது கிலோவுக்கு ரூ.54 ஆகும்.
 எனவே, விவசாயிகள் விற்பனைக்கு உளுந்தை கொண்டு வருவதற்கு முன்பாக தங்களது விவரத்தை ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். பதிவு செய்த பின்னர் அழைப்பு வரும் தேதியன்று விற்பனைக்கு கொண்டுவந்து, விற்பனை செய்து அதற்கான தொகையை வங்கிக் கணக்கில் பெற்றுக்கொள்ளலாம்.
 ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு விற்பனைக்கான பதிவுக்கு வரும்போது விவசாயிகள் சிட்டா, அடங்கல், வங்கி கணக்குப் புத்தக நகல், ஆதார் அட்டை நகல், செல்லிடப்பேசி எண் ஆகிய விவரங்களை கொடுத்து பதிவு செய்துகொள்ள வேண்டும். பதிவு செய்த விவசாயிகளது உளுந்து விற்பனைக்கு கொண்டுவரப்படும் நாளில் அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஏற்ப, தரத்துக்குள்பட்டு கொள்முதல் செய்யப்படுமென ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 அரசால் உளுந்துக்கான குறைந்தபட்ச ஆதரவுவிலை நிர்ணயிக்கப்பட்டிருப்பது விவசாயிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
 
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/16/உளுந்துக்கு-குறைந்தபட்ச-ஆதரவு-விலை-விவசாயிகள்-வரவேற்பு-2901112.html
2901108 விழுப்புரம் கடலூர் பெருமாள் கோயில்களில் அமாவாசை வழிபாடு    நெய்வேலி, DIN Monday, April 16, 2018 08:37 AM +0530 பண்ருட்டியில் உள்ள பெருமாள் கோயில்களில் சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 பண்ருட்டி திருவதிகையில் சரநாராயணப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்தக் கோயிலில், அமாவாசை வழிபாடு மாதந்தோறும் சிறப்பாக நடைபெறும். அதன்படி, சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி, சென்னை - திருவல்லிக்கேணி கோயில் பார்த்தசாரதி அலங்காரத்தில் மூலவர் காட்சியளித்தார். உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் திருக்கண்ணாடி அறையில் அருள் பாலித்தார். ஹேமாம்புஜவள்ளி தாயார் வெள்ளி அங்கி அலங்காரத்தில் காட்சியளித்தார்.
 இதேபோல, பண்ருட்டி வரதராஜப் பெருமாள், திருவதிகை அரங்கநாதப் பெருமாள் கோயில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/16/பெருமாள்-கோயில்களில்-அமாவாசை-வழிபாடு-2901108.html
2901106 விழுப்புரம் கடலூர் காஷ்மீர் சிறுமி பலாத்காரம்: தமுமுக, இடதுசாரி அமைப்புகள் ஆர்ப்பாட்டம்   கடலூர், DIN Monday, April 16, 2018 08:36 AM +0530 காஷ்மீர் மாநிலத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்த சம்பவத்தைக் கண்டித்து, கடலூரில் தமுமுகவினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
 காஷ்மீர் மாநிலம், கதுவா மாவட்டம் ரசானா கிராமத்தில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் கட்சி ஆகியவை சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தமுமுக மாவட்டத் தலைவர் வி.எம்.ஷேக்தாவூத் தலைமை வகித்தார். தலைமைக் கழகப் பேச்சாளர் திருச்சி ஷரிப், தமுமுக மாவட்டச் செயலர் எஸ்.ஜாகீர் உசேன், மமக மாவட்டச் செயலர் ஏ.எச்.தமீம்அன்சாரி ஆகியோர் பேசினர். முன்னதாக தமுமுக மாவட்ட பொருளாளர் எஸ்.ஹசன்முஹம்மது வரவேற்றார். நகரத் தலைவர் ஐ.நசுருதீன் நன்றி கூறினார்.
 இடதுசாரிகள்....
 அதேபோல, இடதுசாரிகள் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகியவை சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாலிபர் சங்கத்தின் நகரச் செயலர் டி.எஸ்.தமிழ்மணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்று கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தி முழக்கம் எழுப்பினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் டி.ஆறுமுகம், நகரச் செயலர் ஆர்.அமர்நாத், செயற்குழு உறுப்பினர் ஜி.ரமேஷ்பாபு, முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாவட்டச் செயலர் பால்கி உள்ளிட்டோர் உரையாற்றினர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/16/காஷ்மீர்-சிறுமி-பலாத்காரம்-தமுமுக-இடதுசாரி-அமைப்புகள்-ஆர்ப்பாட்டம்-2901106.html
2901056 விழுப்புரம் கடலூர் சாலைப் பணியாளர்கள் சங்க மாவட்ட பொதுக் குழுக் கூட்டம்    நெய்வேலி, DIN Monday, April 16, 2018 08:25 AM +0530 தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தின் கடலூர் மாவட்ட பொதுக் குழுக் கூட்டம், வடலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 அந்தச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கோ.பெருமாள் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் குறிஞ்சிப்பாடி ஆர்.பாலமுருகன், காட்டுமன்னார்கோவில் பி.ஜெயசங்கர், பண்ருட்டி எம்.தேவநாதன், இணைச் செயலர்கள் பரங்கிப்பேட்டை எஸ்.ராஜேந்திரன், திட்டக்குடி ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பண்ருட்டி ஆர்.கே.பி.பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 சங்கத்தின் மாநிலத் தலைவர் மா.சண்முகராஜா சிறப்புரையாற்றினார். மாநில முன்னாள் தலைவர் எம்.என்.ராமலிங்கம், துணைப் பொதுச் செயலர் கா.பெருமாள், துணைத் தலைவர்கள் ப.சண்முகசுந்தரம், எம்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். குறிஞ்சிப்பாடி, பரங்கிப்பேட்டை, கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 கூட்டத்தில் மே 12-இல் தஞ்சாவூரில் நடைபெறும் பணிப் பாதுகாப்பு மாநில மாநாட்டில் திரளாகப் பங்கேற்பது, 41 மாதங்களைப் பணிக் காலமாக அறிவிக்க வேண்டும். சீருடை சலவைப்படி, விபத்துப்படி ஆகியவை வழங்க வேண்டும், 7-ஆவது ஊதியக் குழுவில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின் மாவட்ட இணைச் செயலர் டி.சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/16/சாலைப்-பணியாளர்கள்-சங்க-மாவட்ட-பொதுக்-குழுக்-கூட்டம்-2901056.html
2901055 விழுப்புரம் கடலூர் "தமிழ் இசைக்கு மாணவர்கள் முக்கியத்துவம் தர வேண்டும்'      சிதம்பரம், DIN Monday, April 16, 2018 08:24 AM +0530 தமிழ் இசைக்கு மாணவர்கள் முக்கியத்துவம் தரவேண்டும் என சீர்காழி கோ.சிவசிதம்பரம் கேட்டுக்கொண்டார்.
 சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைத் துறையின் கௌரவ பேராசிரியரான சீர்காழி கோ.சிவசிதம்பரம், வெள்ளிக்கிழமை பல்கலை.யில் சிறப்புரையாற்றினார்.
 இந்த நிகழ்வுக்கு, பல்கலைக்கழக துணைவேந்தர் சே. மணியன் தலைமை வகித்து, இசையின் சிறப்பு பற்றி பேசினார். சிவசிதம்பரம் சிறப்புரையாற்றுகையில், மாணவர்களும், ஆசிரியர்களும் தமிழ் இசைக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பேராசிரியர் சிவசிதம்பரத்தின் தந்தை சீர்காழி கோவிந்தராஜன், நுண்கலைப் புலத்தின் முதன்மையராக இருந்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைத் துறையின் வளர்ச்சிக்கு பெரும்பங்கு ஆற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. புல முதல்வர் முத்துராமன் வரவேற்றார். துறைத்தலைவர் பேராசிரியர் டி.அருள்செல்வி நன்றி கூறினார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/16/தமிழ்-இசைக்கு-மாணவர்கள்-முக்கியத்துவம்-தர-வேண்டும்-2901055.html
2901053 விழுப்புரம் கடலூர் பறிமுதல் வாகனங்கள் ஏப். 18-இல் ஏலம்   கடலூர், DIN Monday, April 16, 2018 08:24 AM +0530 காவல் துறையினரால் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 149 வாகனங்கள் வருகிற 18-ஆம் தேதி ஏலம் விடப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் தெரிவித்தார்.
 இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு காவல் நிலையங்களில் 146 இருசக்கர வாகனங்கள், ஒரு டாடா ஏஸ், இரண்டு லாரிகள் பல்வேறு வழக்குகள் தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வாகனங்களுக்கு யாரும் இதுவரை உரிமை கோராத காரணத்தால், சட்ட விதிகளுக்குள்பட்டு அரசுடமையாக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் மாவட்ட அரசிதழில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. எனினும், யாரும் உரிமை கோராததால் 149 வாகனங்களையும் ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
 கடலூர் புதுக்குப்பத்தில் உள்ள மாவட்ட ஆயுதப் படை அலுவலகத்தில் ஏப்.18-ஆம் தேதி காலை 9 மணிக்கு வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது. இருசக்கர வாகனத்தை ஏலத்தில் எடுக்க விரும்புவோர் ரூ.ஆயிரமும், 3 சக்கர வாகனத்துக்கு ரூ.3 ஆயிரமும், 4 சக்கர வாகனத்துக்கு ரூ.5 ஆயிரமும் முன்பணமாக செலுத்தி டோக்கன் பெற்று ஏலத்தில் பங்கேற்கலாம்.
 ஏலம் எடுக்காதபட்சத்தில் மேற்படி தொகை அன்றே திருப்பி கொடுக்கப்படும் என்று மாவட்ட எஸ்பி அதில் தெரிவித்துள்ளார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/16/பறிமுதல்-வாகனங்கள்-ஏப்-18-இல்-ஏலம்-2901053.html
2901051 விழுப்புரம் கடலூர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுக் கூட்டம்    கடலூர், DIN Monday, April 16, 2018 08:23 AM +0530 விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அண்ணாகிராமம் மைய ஒன்றியம் சார்பில், அம்பேத்கரின் 127-ஆவது பிறந்த நாள் பொதுக் கூட்டம் மேல்பட்டாம்பாக்கத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. கட்சியின் ஒன்றியச் செயலர் அருள்செல்வன் தலைமை வகித்தார். ஒன்றியப் பொருளாளர் பெருமாள், துணைச் செயலர்கள் பாண்டியன், கிருஷ்ணா, தொல்காப்பியன், மருவேல், ஜோதிபாசு, மணிகண்டன், கண்ணன், உதயநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 சிறப்பு அழைப்பாளராகக் கட்சியின் மாநிலக் கருத்தியல் பரப்புச் செயலர் சிபிச்சந்தர், கடலூர் நாடாளுமன்றத் தொகுதிச் செயலர் பா.தாமரைச்செல்வன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.
 கட்சியின் மாவட்டச் செயலர் சா.முல்லைவேந்தன், மாநில அமைப்புச் செயலர் தி.ச.திருமார்பன், பொருளாளர் கே.கெய்க்வாட்பாபு, மாநிலச் செயற்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், நகரச் செயலர் புலிக்கொடியன், மாவட்ட அமைப்பாளர் ம.சுரேஷ்பாபு, நகரப் பொருளாளர் ஓவியர் பகலவன் நிர்வாகிகள் தினேஷ், ராஜ்குமார், முகமது யாசீன், சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, கட்சியின் பேரூராட்சிச் செயலர் முகமது இத்ரீஸ் வரவேற்றார். நிர்வாகி குமார் நன்றி கூறினார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/16/விடுதலைச்-சிறுத்தைகள்-கட்சி-பொதுக்-கூட்டம்-2901051.html
2901050 விழுப்புரம் கடலூர் காவிரி: பட்டதாரி மாணவர்கள் உண்ணாவிரதம்    நெய்வேலி, DIN Monday, April 16, 2018 08:23 AM +0530 நெய்வேலி அருகே ஞாயிற்றுக்கிழமை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பட்டதாரி மாணவர்கள் 25 பேர் உண்ணாவிரதம் இருந்தனர்.
 நெய்வேலியை அடுத்துள்ள பெரியாக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் பட்டதாரி மணிமாறன். இவரது தலைமையில், அதே பகுதியைச் சேர்ந்த திலீபன், ராஜ்குமார், காசிபாரதி உள்ளிட்ட மாணவர்கள், பொதுமக்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் உண்ணாவிரதம் இருந்தனர்.
 உண்ணாவிரதப் போராட்டத்தை தி.க. நிர்வாகி பன்னீர்செல்வம் தொடக்கி வைத்தார். உண்ணாவிரதத்தில் பங்கேற்ற மக்கள் அதிகாரம் அமைப்பின் கலைக் குழுவினர் இசை நிகழ்ச்சி நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/16/காவிரி-பட்டதாரி-மாணவர்கள்-உண்ணாவிரதம்-2901050.html
2901048 விழுப்புரம் கடலூர் "திட்டமிட்ட உழைப்பே வெற்றியை தேடித் தரும்'    கடலூர், DIN Monday, April 16, 2018 08:23 AM +0530 திட்டமிட்ட உழைப்பே வெற்றியைத் தேடி தரும் என்று கல்லூரி பட்டமளிப்பு விழாவில் திருவள்ளுவர் பல்கலை. தேர்வுக் கட்டுப்பாட்டு நெறியாளர் பி.செந்தில்குமார் கூறினார்.
 கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியின் 2014 - 15, 2015 - 16- ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சென்னை பச்சையப்பன் அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவர் எஸ்.செயச்சந்திரன் தலைமை வகித்தார். நிதிநிலை அறங்காவலர் வி.ராமநாதன், அறநிலையச் செயலர் வி.துரைமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் மல்லிகா சந்திரன் ஆண்டறிக்கை சமர்ப்பித்து விழாவைத் தொடக்கி வைத்தார். விழாவில் திருவள்ளுவர் பல்கலை. தேர்வுக் கட்டுப்பாட்டு நெறியாளர் பி.செந்தில்குமார் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று 1,021 பேருக்கு பட்டங்களை வழங்கிப் பேசியதாவது: மாணவிகள் வாழ்வில் என்ன சாதிக்க வேண்டும் என்ற இலக்கைத் தேர்வு செய்து அதற்காகத் திட்டமிட்டு உழைக்க வேண்டும். திட்டமிட்ட உழைப்பே வெற்றியைத் தேடித் தரும். பட்டம் பெற்ற மாணவிகள் அடுத்தடுத்து மேல்படிப்பைத் தேர்வு செய்து வாழ்வில் உயர்ந்த இடத்தை அடைய வேண்டும்.
 இதன் மூலம் தங்களது குடும்பத்துக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றார் அவர்.
 விழாவில் 27 பேர் பல்கலை. அளவில் தரப்பட்டியலில் சிறப்பிடம் பெற்றனர். அவர்களுக்கு கேடயம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
 விழாவுக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் அனைத்துத் துறை பேராசிரியர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/16/திட்டமிட்ட-உழைப்பே-வெற்றியை-தேடித்-தரும்-2901048.html
2900648 விழுப்புரம் கடலூர் அம்பேத்கர் பிறந்த நாள்: அரசியல் கட்சியினர் மரியாதை DIN DIN Sunday, April 15, 2018 05:27 AM +0530 இந்திய சட்ட மேதை அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி, கடலூரில் அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கடலூர் தலைமைத் தபால் நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் நகரச் செயலர் ஆர்.குமரன் தலைமையில் மாவட்டச் செயலரும், அமைச்சருமான எம்.சி.சம்பத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
எம்ஜிஆர் மன்றச் செயலர் ஜி.ஜெ.குமார், மாவட்ட துணைச் செயலர் முருகுமணி, தொழிற்சங்கச் செயலர் கே.ஆர்.பாலகிருஷ்ணன், விவசாயப் பிரிவு செயலர் கே.காசிநாதன், பேரவை நகரச் செயலர் வ.கந்தன், ஒன்றிய துணைச் செயலர் ஏழுமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திமுக சார்பில் நகரச் செயலர் கே.எஸ்.ராஜா தலைமையில், மாநில தேர்தல் பணிக்குழு செயலர் இள.புகழேந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட அவைத் தலைவர் து.தங்கராசு, பொருளாளர் வி.எஸ்.எல்.குணசேகரன், மாணவரணி அகஸ்டின் பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இளைஞர் காங்கிரஸ் சார்பில் மாவட்டத் தலைவர் கே.கலையரசன் தலைமையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஏ.எஸ்.சந்திரசேகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மீனவரணி செயலர் கார்த்திகேயன், தொகுதித் தலைவர்கள் குமார், வெங்கடேஷ், நிர்வாகிகள் ராஜாராமன், சக்திவேல், நாராயணன், தீனதயாளன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கடலூர் நாடாளுமன்ற தொகுதிச் செயலர் பா.தாமரைச்செல்வன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நகரச் செயலர் மு.செந்தில், நிர்வாகிகள் த.ஸ்ரீதர், மொ.வீ.சக்திவேல், பா.ரா.முரளி, தமிழரசன், செந்தில்குமார், பிரதீப் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேபோல, விசிக மாவட்டச் செயலர் சா.முல்லைவேந்தன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. துணைச் செயலர்கள் இல.திருமேனி, ராகவி ஒன்றியச் செயலர் லெனின், பொருளாளர் கோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மாவட்டச் செயலர் டி.ஆறுமுகம் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. மாநிலக்குழு உறுப்பினர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.சுப்புராயன், எஸ்.ஜி.ரமேஷ்பாபு, பி.கருப்பையன், மு.மருதவாணன், நகரச் செயலர் ஆர்.அமர்நாத் பங்கேற்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் தொலைத்தொடர்பு சங்க மாவட்டச் செயலர் ஸ்ரீதர், மாநிலக் குழு உறுப்பினர் வி.குளோப் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. நிர்வாகிகள் சு.தமிழ்மணி,
கே.அரிகிருஷ்ணன் பங்கேற்றனர்.
இந்திய குடியரசு கட்சியினர் மாவட்டத் தலைவர் பால.வீரவேல் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். துணைத் தலைவர் வி.சிவராஜ், நிர்வாகிகள் கே.கணபதி, எம்.செந்தில், வி.ஆனந்தராஜ், குமார், சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேபோல, மாவட்டச் செயலர் கே.ஜெயமணி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. பொருளாளர் சோ.உத்திரவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தேசிய மக்கள் கழகம் சார்பில் நிறுவனத் தலைவர் கலியவீரமணி மாலை அணிவித்தார். மாநில இளைஞரணிச் செயலர் வி.விஜயபாஸ்கரன், நிர்வாகிகள் கலியகிருஷ்ணராஜ், எம்.செல்வராசு பங்கேற்றனர்.
தமிழ்நாடு அரசு எஸ்சி, எஸ்டி அலுவலர்கள் நலச் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் ம.சங்கர் தலைமையில் மாநில பொதுச் செயலர் ஆர்.ரெங்கராஜ் முன்னிலையில், மாவட்டச் செயலர் ஆர்.புகழ்வேந்தன், பொருளாளர் எம்.புஷ்பராஜ் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர். பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மாநில இளைஞரணிச் செயலர் ஆர்.சுரேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்டச் செயலர் ஜெயபிரகாஷ், பொருளாளர் விஜயகாந்த், நிர்வாகிகள் பன்னீர், விஜி பங்கேற்றனர்.
பாஜக சார்பில் ஒன்றிய பொதுச் செயலர் ஆர்.வேலாயுதம் தலைமையில் மாவட்ட பொதுச் செயலர் ரா.குணசேகரன் மாலை அணிவித்தார். நகரத் தலைவர் ஏ.எம்.வெங்கடேசன், நிர்வாகிகள் பொன்னி.ரவி, சரவணன் பங்கேற்றனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் மாவட்டச் செயலர் எல்.அரிகிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்தனர். கடலூர் நகர காங்கிரஸ் கட்சியினர் நகர தலைவர் என்.குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/15/அம்பேத்கர்-பிறந்த-நாள்-அரசியல்-கட்சியினர்-மரியாதை-2900648.html
2900647 விழுப்புரம் கடலூர் என்எல்சி சார்பில் 8 இடங்களில் தண்ணீர்ப் பந்தல் திறப்பு DIN DIN Sunday, April 15, 2018 05:26 AM +0530 கோடை காலத்தில் பொதுமக்களின் தாகம் தீர்க்க வசதியாக, 8 இடங்களில் என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் சனிக்கிழமை தண்ணீர்ப் பந்தல் திறக்கப்பட்டது.
தினமும் சுமார் 55 ஆயிரம் பேருக்கு நீர்மோர், எலுமிச்சை பழச் சாறு வழங்குவதற்காக என்எல்சி இந்தியா நிறுவனம் 8 தண்ணீர் பந்தல்களை அமைத்துள்ளது. வெவ்வேறு நிகழ்வுகளில், என்எல்சி இந்தியா நிறுவன உயர் அதிகாரிகள் தண்ணீர்ப் பந்தல்களை சனிக்கிழமை திறந்து வைத்தனர். என்எல்சி இந்தியா நிறுவனம் தனது சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின்கீழ் 'ஜல்தாரா' என்ற திட்டம் மூலம் நகரியத்தின் முக்கியப் பகுதிகளான நெய்வேலி நுழைவு வாயில், மக்கள்-தொடர்பு அலுவலகம், புனித பால் பள்ளி, பொது மருத்துவமனை, மத்தியப் பேருந்து நிலையம், புதுகுப்பம் சந்திப்பு, வட்டம்-29 நீரேற்று நிலையம், மந்தாரக்குப்பம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் தண்ணீர்ப் பந்தல்களை அமைத்துள்ளது.
மக்கள்-தொடர்பு அலுவலகம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் என்எல்சி இந்தியா நிறுவன மனித வளத் துறை இயக்குநர் ஆர்.விக்ரமன், சமூகப் பொறுப்புணர்வுத் துறை தலைமைப் பொது மேலாளர் ஆர். மோகன் முன்னிலையில் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார். இந்தப் பந்தல்களில் 45 நாள்களுக்கு பொதுமக்களுக்கு நீர்மோர், எலுமிச்சை சாறு வழங்கப்படுமெனவும், இதற்காக சுமார் ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/15/என்எல்சி-சார்பில்-8-இடங்களில்-தண்ணீர்ப்-பந்தல்-திறப்பு-2900647.html
2900646 விழுப்புரம் கடலூர் உளுந்துக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை: விவசாயிகள் வரவேற்பு DIN DIN Sunday, April 15, 2018 05:26 AM +0530 உளுந்து பயிருக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிலோவுக்கு ரூ.54 என மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் ஹெக்டேரில் நேரடியாகவும், ஊடுபயிராகவும் உளுந்து சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. எனினும், விவசாயிகளுக்கு போதுமான விலை கிடைப்பதில்லை எனவும், உளுந்துக்கு அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. கடந்த 2016-ஆம் ஆண்டுகளில் உளுந்து 100 கிலோ கொண்ட குவிண்டால் ரூ.12 ஆயிரம் வரை விற்பனையானது. ஆனால், கடந்த ஆண்டு ரூ.6,500-க்கு மட்டுமே விற்பனையானது. தற்போது உளுந்து அறுவடை தொடங்கியுள்ள நிலையில் விருத்தாசலம், பண்ருட்டி, கடலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு உளுந்து வரத்து அதிகரித்துள்ளது. எனினும், கிலோவுக்கு ரூ.30 முதல் ரூ.40 வரை மட்டுமே வியாபாரிகளால் விலை கேட்கப்பட்டு வாங்கி செல்லப்படுகிறது.
எனவே, உளுந்துக்கு உரிய ஆதார விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். அதன்படி உளுந்து கொள்முதலை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசு கேட்டுக்கொண்டது. அதன்படி, தமிழகத்திலிருந்து 3 ஆயிரம் மெட்ரிக் டன் வரை சஅஊஉஈ திட்டத்தின் மூலம் கொள்முதல் செய்திட மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதற்காக ஆதரவு விலைத் திட்டத்தின் மூலமாக ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் உளுந்து கொள்முதல் நிலையம் அமைத்து கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, மாவட்டத்தில் விருத்தாசலம், பண்ருட்டி ஆகிய இரண்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உளுந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்கு அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையாக குவிண்டாலுக்கு ரூ.5,400 ஆக நிர்ணயித்துள்ளது. அதாவது கிலோவுக்கு ரூ.54 ஆகும். எனவே, விவசாயிகள் விற்பனைக்கு உளுந்தை கொண்டு வருவதற்கு முன்பாக தங்களது விவரத்தை ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். பதிவு செய்த பின்னர் அழைப்பு வரும் தேதியன்று விற்பனைக்கு கொண்டுவந்து, விற்பனை செய்து அதற்கான தொகையை வங்கிக் கணக்கில் பெற்றுக்கொள்ளலாம்.
ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு விற்பனைக்கான பதிவுக்கு வரும்போது விவசாயிகள் சிட்டா, அடங்கல், வங்கி கணக்குப் புத்தக நகல், ஆதார் அட்டை நகல், செல்லிடப்பேசி எண் ஆகிய விவரங்களை கொடுத்து பதிவு செய்துகொள்ள வேண்டும். பதிவு செய்த விவசாயிகளது உளுந்து விற்பனைக்கு கொண்டுவரப்படும் நாளில் அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஏற்ப, தரத்துக்குள்பட்டு கொள்முதல் செய்யப்படுமென ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசால் உளுந்துக்கான குறைந்தபட்ச ஆதரவுவிலை நிர்ணயிக்கப்பட்டிருப்பது விவசாயிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/15/உளுந்துக்கு-குறைந்தபட்ச-ஆதரவு-விலை-விவசாயிகள்-வரவேற்பு-2900646.html
2900645 விழுப்புரம் கடலூர் தேசியத் திறனாய்வுத் தேர்வு: நகராட்சிப் பள்ளி மாணவர்கள் வெற்றி DIN DIN Sunday, April 15, 2018 05:26 AM +0530 பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற தேசியத் திறனாய்வுத் தேர்வில் சிதம்பரம் நகராட்சி பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, தேசிய அளவில் தகுதி அடிப்படையில் திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்வு பெறும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, 2017-18-ஆம் கல்வி ஆண்டுக்கான தேர்வு, சிதம்பரம் ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. இந்தத் தேர்வில் சிதம்பரம் மானாசந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியின் 8-ஆம் வகுப்பு மாணவர்கள் ஜெயந்த் நாராயணன், ரத்தீஷ் ஆகியோர் தேர்ச்சி பெற்றனர்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தேசியத் திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை நகர கூட்டுறவு வங்கி துணைத் தலைவரும், கல்விக்குழுத் தலைவருமான டேங்க் ஆர்.சண்முகம் பாராட்டி ஆங்கிலம் மற்றும் தமிழ் அகராதி நூல்களை வழங்கினார்  . மேலும் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் ஜான்சன், பள்ளித் தலைமை ஆசிரியை ஜெயக்கொடி ஆகியோர் மாணவர்களைப் பாராட்டி பரிசு வழங்கினர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/15/தேசியத்-திறனாய்வுத்-தேர்வு-நகராட்சிப்-பள்ளி-மாணவர்கள்-வெற்றி-2900645.html
2900644 விழுப்புரம் கடலூர் 'தமிழ் இசைக்கு மாணவர்கள் முக்கியத்துவம் தர வேண்டும்' DIN DIN Sunday, April 15, 2018 05:25 AM +0530 தமிழ் இசைக்கு மாணவர்கள் முக்கியத்துவம் தரவேண்டும் என சீர்காழி கோ.சிவசிதம்பரம் கேட்டுக்கொண்டார்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைத் துறையின் கௌரவ பேராசிரியரான சீர்காழி கோ.சிவசிதம்பரம், வெள்ளிக்கிழமை பல்கலை.யில் சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்வுக்கு, பல்கலைக்கழக துணைவேந்தர் சே. மணியன் தலைமை வகித்து, இசையின் சிறப்பு பற்றி பேசினார். சிவசிதம்பரம் சிறப்புரையாற்றுகையில், மாணவர்களும், ஆசிரியர்களும் தமிழ் இசைக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பேராசிரியர் சிவசிதம்பரத்தின் தந்தை சீர்காழி கோவிந்தராஜன், நுண்கலைப் புலத்தின் முதன்மையராக இருந்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைத் துறையின் வளர்ச்சிக்கு பெரும்பங்கு ஆற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. புல முதல்வர் முத்துராமன் வரவேற்றார். துறைத்தலைவர் பேராசிரியர் டி.அருள்செல்வி நன்றி கூறினார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/15/தமிழ்-இசைக்கு-மாணவர்கள்-முக்கியத்துவம்-தர-வேண்டும்-2900644.html
2900642 விழுப்புரம் கடலூர் பிராமணர் சங்கக் கூட்டம் DIN DIN Sunday, April 15, 2018 05:24 AM +0530 தமிழ்ப் புத்தாண்டு பிறப்பையொட்டி, தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் கடலூர் மஞ்சக்குப்பம் கிளை பொதுக் குழு கூட்டம் கடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாநிலச் செயலர் கே.திருமலை தலைமை வகித்து, விளம்பி ஆண்டுக்கான பஞ்சாங்கத்தை சங்க உறுப்பினர்களுக்கு வழங்கினார். உறுப்பினர் கோதண்டராமன் விளம்பி ஆண்டுக்கான பஞ்சாங்கத்தை வாசித்து அதன் சிறப்புகளை எடுத்துக் கூறினார்.
கூட்டத்தில் நிர்வாகிகள் வெங்கடேசன், கிருஷ்ணன், பாஸ்கரன், பாலகிருஷ்ணன், பாலசுப்பிரமணியன், சாவடி தலைவர் வரதராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக கிளை பொதுச் செயலர் எஸ்.பரகாலராமானுஜம் வரவேற்க, நிர்வாகி ராமன் நன்றி கூறினார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/15/பிராமணர்-சங்கக்-கூட்டம்-2900642.html
2900641 விழுப்புரம் கடலூர் தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு DIN DIN Sunday, April 15, 2018 05:23 AM +0530 தமிழ்ப் புத்தாண்டையொட்டி, கடலூர் மாவட்டத்திலுள்ள கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
விளம்பி வருடப் பிறப்பை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து இந்துக் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் அதிகாலையில் எழுந்து, புதிய ஆடை தரித்து கோயில்களுக்குச் சென்று வழிபாடு நடத்தினர்.
திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் கோயிலில் அதிகாலையில் கோ பூஜையுடன் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து பாடலீஸ்வரர்-பெரியநாயகி, பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேகமும், துர்க்கை அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரமும் நடைபெற்றன.
உச்சி கால பூஜையில் பாடலீஸ்வரருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்புப் பூஜை நடத்தப்பட்டது. மாலையில் சந்திரசேகர் மாடவீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து தமிழ்ப் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது.
திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயிலில் அதிகாலையில் விஸ்வரூப தரிசனமும், தாயாருக்கு திருமஞ்சனமும் நடைபெற்றது. திருப்பாதிரிபுலியூர் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், அதனைத் தொடர்ந்து தீபாராதனையும் நடைபெற்றது.
மேலும் வண்டிப்பாளையம் சிவசுப்பிரமணியர் கோயில், அங்காளம்மன் கோயில், மஞ்சக்குப்பம் வில்வநாதீஸ்வரர் கோயில், புதுப்பாளையம் இரட்டைப் பிள்ளையார் கோயில், தரைக்காத்த காளியம்மன் கோயில், வரகூர் மாரியம்மன் கோயில், முதுநகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோயில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன், பெருமாள், முருகன், அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பொதுமக்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
லட்ச தீப வழிபாடு: புத்தாண்டை முன்னிட்டு கடலூர் வீர ஆஞ்சநேயர் கோயிலில் லட்ச தீப வழிபாடு நடைபெற்றது. கோயில் வளாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அகல் விளக்குகளை ஏற்றினர். இந்த விழாவில் அமைச்சர் எம்.சி.சம்பத், நகராட்சி முன்னாள் தலைவர் ஆர்.குமரன், முன்னாள் துணைத் தலைவர் ஜெ.குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோல செம்மண்டலம், கடலூர் முதுநகர், வண்ணாரப்பாளையம், நத்தப்பட்டு, கடலூர் சிப்காட், பெரியகாரைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களிலும் லட்ச தீப வழிபாடு நடைபெற்றது.
மாலையில் கடற்கரை, பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களில் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/15/தமிழ்ப்-புத்தாண்டு-கோயில்களில்-சிறப்பு-வழிபாடு-2900641.html
2900640 விழுப்புரம் கடலூர் காவல் துறையினர் பறிமுதல் செய்த 149 வாகனங்கள் ஏலம்: ஏப். 18-இல் நடைபெறுகிறது DIN DIN Sunday, April 15, 2018 05:23 AM +0530 காவல் துறையினரால் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 149 வாகனங்கள் வருகிற 18-ஆம் தேதி ஏலம் விடப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு காவல் நிலையங்களில் 146 இருசக்கர வாகனங்கள், ஒரு டாடா ஏஸ், இரண்டு லாரிகள் பல்வேறு வழக்குகள் தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வாகனங்களுக்கு யாரும் இதுவரை உரிமை கோராத காரணத்தால், சட்ட விதிகளுக்குள்பட்டு அரசுடமையாக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் மாவட்ட அரசிதழில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. எனினும், யாரும் உரிமை கோராததால் 149 வாகனங்களையும் ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடலூர் புதுக்குப்பத்தில் உள்ள மாவட்ட ஆயுதப் படை அலுவலகத்தில் ஏப்.18-ஆம் தேதி காலை 9 மணிக்கு வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது. இருசக்கர வாகனத்தை ஏலத்தில் எடுக்க விரும்புவோர் ரூ.ஆயிரமும், 3 சக்கர வாகனத்துக்கு ரூ.3 ஆயிரமும், 4 சக்கர வாகனத்துக்கு ரூ.5 ஆயிரமும் முன்பணமாக செலுத்தி டோக்கன் பெற்று ஏலத்தில் பங்கேற்கலாம்.
ஏலம் எடுக்காதபட்சத்தில் மேற்படி தொகை அன்றே திருப்பி கொடுக்கப்படும் என்று மாவட்ட எஸ்பி அதில் தெரிவித்துள்ளார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/15/காவல்-துறையினர்-பறிமுதல்-செய்த-149-வாகனங்கள்-ஏலம்-ஏப்-18-இல்-நடைபெறுகிறது-2900640.html
2900639 விழுப்புரம் கடலூர் தன்னலமற்ற தொண்டால் மக்கள் மனதில் இடம் பெற்றவர் அம்பேத்கர்: அமைச்சர் எம்.சி.சம்பத் புகழாரம் DIN DIN Sunday, April 15, 2018 05:23 AM +0530 தன்னலமற்ற தொண்டால் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றவர் அம்பேத்கர் என அமைச்சர் எம்.சி.சம்பத் புகழாரம் சூட்டினார்.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறை சார்பில் பிரதமரின் கிராம சுயராச்சிய அபியான் திட்டத்தின் கீழ் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்தநாள் விழா மற்றும் சமூக நீதிநாள் விழா கடலூர் நகர அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, அம்பேத்கர் உருவப் படத்தை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், போட்டிகளில் வென்ற மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கினார்.
விழாவில் அமைச்சர் பேசியதாவது:
தன்னலமற்ற தொண்டினால் வரலாற்றிலும், மக்களின் உள்ளத்திலும் நீங்காத இடம் பெற்றவர் அம்பேத்கர். இந்திய மக்களுக்கு அரசியல் விடுதலையுடன், சமூக விடுதலையும் கிடைத்தால்தான் முழுமையான சுதந்திர நாடாக மாற்ற முடியும் எனக் கருதி உழைத்தார். அவர் தனது லட்சிய வேட்கை, அயராத உழைப்பு ஆகியவற்றால் பெற்ற பேரறிவு ஒன்றையே ஆயுதமாகக் கொண்டவர். நமது நாட்டில் நிலவிய சமூகக் கொடுமைகளை எதிர்த்து நின்று வெற்றி பெற்றவர்.
அம்பேத்கர் வெளிநாட்டில் மேல்நிலைக் கல்வி கற்றார். அவர் தாய் நாடு திரும்பியதும் பெரும் பதவியைப் பெற்றாலும், தாழ்த்தப்பட்டவர் என்பதால் மதிக்கப்படவில்லை. அவரை பார்க்கவும், பேசவும் கூட மறுத்தனர். இதையடுத்து, தாம் வகித்தப் பதவியை துறந்தார்.
தீண்டாமையை விரட்டவும், தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காகவும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். உளப்பூர்வமாகவும், அறிவுப்பூர்வமாகவும் மக்கள் செயல்படாத அமைப்பில் எந்தவித நன்மையும் கிடைக்காது. சமூக சீர்திருத்தமே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நன்மை தரும் என்று தெளிவாக அறிந்தவர் அம்பேத்கர் என்றார் எம்.சி.சம்பத்.
விழாவில், பரதம், பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன. தேசபக்தி பாடல், ஹிந்தி பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை சிதம்பரம் வட்டம், பு.ஆதிவராகநல்லூர் அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் நடத்தினர்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஆ.சண்முகசுந்தரம் வரவேற்றார். தனி வட்டாட்சியர் கோ.அரங்கநாதன் நன்றி கூறினார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் இயக்குநர் பி.ஆனந்ராஜ், செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், ஊரக வளர்ச்சி முகமை தூய்மை பாரத இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.எஸ்.வேலுமணி, ஆதிதிராவிடர் நல அலுவலக உதவி கல்வி அலுவலர் ஜெ.கலியவரதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/15/தன்னலமற்ற-தொண்டால்-மக்கள்-மனதில்-இடம்-பெற்றவர்-அம்பேத்கர்-அமைச்சர்-எம்சிசம்பத்-புகழாரம்-2900639.html
2900638 விழுப்புரம் கடலூர் அண்ணாமலைப் பல்கலை.யில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா DIN DIN Sunday, April 15, 2018 05:22 AM +0530 சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அம்பேத்கர் இருக்கை சார்பில் நடைபெற்ற இந்த விழாவில், இணைப் பேராசிரியர் கே.செளந்திரராஜன் வரவேற்றார். அம்பேத்கரின் உருவப் படத்துக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் செ.மணியன் மலர்தூவி மரியாதை செலுத்தி தொடக்கவுரையாற்றினார். மேலும் அம்பேத்கர் உருவப் படத்துக்கு பதிவாளர் கே.ஆறுமுகம், ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள், புல முதல்வர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், பல்வேறு சங்க உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அம்பேத்கர் இருக்கை சார்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினராக கல்வியாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக அம்பேத்கர் பாடுபட்டதை எடுத்துரைத்தார். பதிவாளர் கே.ஆறுமுகம் பேசுகையில், அம்பேத்கரின் கொள்கைகள் மூலம் நமது நாட்டில் சமத்துவம், சகோதரத்துவம் மேலோங்கி இருப்பதாகத் தெரிவித்தார்.
தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக சர்வதேச சட்டத் துறை பேராசிரியர் செ.இளையராஜா விழா பேருரையாற்றினார். மேலும் அவர், அம்பேத்கரின் சமூக பங்களிப்பு பற்றி மாணவர்களுடன் கலந்துரையாடினர். மொழிப்புல முதல்வர் வி.திருவள்ளுவன் வாழ்த்துரையாற்றினார். விழா ஏற்பாடுகளை அம்பேத்கர் இருக்கை இணைப் பேராசிரியர் கே.செளந்திரராஜன், துணைப் பேராசிரியை வி.ராதிகாராணி ஆகியோர் செய்திருந்தனர். துணைப் பேராசிரியை வி.ராதிகாராணி நன்றி கூறினார்.
விழாவில் பல்கலைக்கழக புல முதல்வர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் திரளானோர் பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/15/அண்ணாமலைப்-பல்கலையில்-அம்பேத்கர்-பிறந்த-நாள்-விழா-2900638.html
2900637 விழுப்புரம் கடலூர் அம்பேத்கரின் கொள்கைகளை என்எல்சி இந்தியா பின்பற்றுகிறது: நிதித் துறை இயக்குநர் DIN DIN Sunday, April 15, 2018 05:21 AM +0530 அம்பேத்கரின் கொள்கைகளைப் பின்பற்றி என்எல்சி இந்தியா நிறுவனம் வளர்ந்து வருவதாக அந்த நிறுவனத்தின் நிதித் துறை இயக்குநர் ராக்கேஷ் குமார் கூறினார்.
அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் நெய்வேலி நகரியம், புதுக்குப்பம் சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. என்எல்சி இந்தியா நிதித் துறை இயக்குநர் ராக்கேஷ் குமார் மாலை அணிவித்தார். மின் துறை இயக்குநர் வி.தங்கப்பாண்டியன், திட்டம் மற்றும் செயலாக்கத் துறை இயக்குநர் பி.செல்வகுமார், மனித வளத் துறை இயக்குநர் ஆர். விக்ரமன், மனித வளத் துறை செயல் இயக்குநர் என்.முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், ராக்கேஷ் குமார் பேசியதாவது: அம்பேத்கர் தான் சந்தித்த இடர்பாடுகள், சோதனைகளை தனது விடா முயற்சியாலும், மன உறுதியாலும் எதிர்கொண்டு, ஒப்பற்றத் தலைவராகத் திகழ்ந்தார்.
ஒவ்வொரு போராட்டத்தையும் தனக்கு மேலும், வலிமை சேர்க்கும் வாய்ப்பாக அவர் மாற்றிக் கொண்டதால், தற்போது சமத்துவம் மிக்க சமூகம் உருவாகக் காரணமாகத் திகழ்கிறார்.
சமூக மேம்பாடு சார்ந்த அவரது கொள்கைகளை என்எல்சி இந்தியா நிறுவனம் பின்பற்றி வருகிறது. தன்னைச் சுற்றியுள்ள சமூகமும் வளர வேண்டும் என்ற நோக்கில் சமூக மேம்பாட்டுப் பணிகளை சிறப்பாகச் செய்து வருகிறது. இதுபோன்ற, நலப் பணிகளால், என்எல்சி இந்தியா நிறுவனமும் சிறப்பாக வளர்ந்து வருகிறது என்றார்.
நிகழ்ச்சியில், என்எல்சி இந்தியா தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின பணியாளர்கள் நலக் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் பா.ஆசைத்தம்பி, கே.மனோகரன், க.மனோகரன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/15/அம்பேத்கரின்-கொள்கைகளை-என்எல்சி-இந்தியா-பின்பற்றுகிறது-நிதித்-துறை-இயக்குநர்-2900637.html
2900636 விழுப்புரம் கடலூர் வெள்ளாற்றில் மணல் அள்ளிய 4 மாட்டு வண்டிகள் பறிமுதல் DIN DIN Sunday, April 15, 2018 05:21 AM +0530 வெள்ளாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக 4 மாட்டு வண்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
பெண்ணாடம் அருகே உள்ள செம்பேரி வெள்ளாற்றில் அடிக்கடி அனுமதியின்றி மணல் எடுக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
இதை தடுக்க அந்தப் பகுதியினர் தனிக்குழு அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பெண்ணாடம் காவல் துறையினர் சனிக்கிழமை அதிகாலையில் காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, செம்பேரி வெள்ளாற்றில் உரிய அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்றதாக அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/15/வெள்ளாற்றில்-மணல்-அள்ளிய-4-மாட்டு-வண்டிகள்-பறிமுதல்-2900636.html
2900635 விழுப்புரம் கடலூர் கடலூர் அரசு மருத்துவமனையில் அதிநவீன சிடி ஸ்கேன்-அமைச்சர் தொடக்கிவைத்தார் DIN DIN Sunday, April 15, 2018 05:21 AM +0530 கடலூர் அரசுத் தலைமை மருத்துவமனையில் ரூ.4.2 கோடி செலவில் நிறுவப்பட்ட அதிநவீன சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட இயந்திரங்கள் சனிக்கிழமை பயன்பாட்டுக்கு வந்தன.
கடலூரில் செயல்பட்டு வரும் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் ரூ.4.2 கோடியில் அதிநவீன சிடி ஸ்கேன் இயந்திரம், மருத்துவ உபகரணங்கள் நிறுவப்பட்டன. இவற்றை மக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று இயந்திரத்தை தொடக்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: கடலூர் அரசுத் தலைமை மருத்துவமனையில் ரூ.2 கோடியில் அதிநவீன சிடி ஸ்கேன் இயந்திரம், ரூ.15 லட்சத்தில் மேமோகிராம் (மார்பகப் புற்றுநோய் கண்டறியும் கருவி), ரூ.1.2 கோடியில் மொபைல் டிஜிட்டல் ரேடியோகிராபி, ரூ.85 லட்சத்தில் அதிநவீன அல்ரா சவுண்டு கருவி ஆகியவை நிறுவப்பட்டுள்ளன.
இதில் மொபைல் டிஜிட்டல் ரேடியோகிராபி மற்றும் அதிநவீன அல்ட்ரா சவுண்டு கருவி ஆகியவை சாம்சங் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டம் மூலம் வழங்கப்பட்டுள்ளன. இந்த மருத்துவமனையில் ஏற்கெனவே இயங்கி வந்த சிடி ஸ்கேன் இயந்திரத்தை திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.
கடலூர் அரசு மருத்துவமனையில் பல நோயாளிகள் முழு உடல் பரிசோதனைக்கு வருகிறார்கள். அதில் குறிப்பாக 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் அறிகுறிகளைக் கண்டறிய இந்த மருத்துவமனையில் மேமோகிராம் கருவி மூலம் நுண்கதிர் படம் எடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். இந்தக் கருவிக்கு தமிழக அரசால் ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த மருத்துவமனையில் தினசரி சுமார் 3,500 வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று பயனடைகின்றனர். 588 படுக்கை வசதிகள் உள்ளன. இந்த மருத்துவமனையில், 2000-ஆம் ஆண்டு முதல் சிடி ஸ்கேன் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது மேம்படுத்தப்பட்ட அதிநவீன சிடி ஸ்கேன் இயந்திரத்துக்கு தமிழ்நாடு அரசால் ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது என்றார் அவர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/15/கடலூர்-அரசு-மருத்துவமனையில்-அதிநவீன-சிடி-ஸ்கேன்-அமைச்சர்-தொடக்கிவைத்தார்-2900635.html
2900634 விழுப்புரம் கடலூர் சமூக நீதி நாள் விழா DIN DIN Sunday, April 15, 2018 05:20 AM +0530 அம்பேத்கர் பிறந்த நாள் விழாவையொட்டி, பரங்கிபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமூக நீதி நாள் விழா நடைபெற்றது.
விழாவுக்கு, சிதம்பரம் வருவாய்க் கோட்டாட்சியர் சி.ராஜேந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் அசோகன், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் ரா.செந்தில்குமார், முன்னாள் கூட்டுறவு வங்கித் தலைவர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவஞானம் வரவேற்றார். நிகழ்ச்சியில் எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் பங்கேற்று, அம்பேத்கர் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மேலும், கிராம சுவராஜ் அபியான் திட்டத்தின்கீழ், கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய ஊராட்சிகள் எனக் கண்டறியப்பட்ட 164 ஊராட்சிகளில், பரங்கிப்பேட்டை ஒன்றியத்துக்குள்பட்ட 7 ஊராட்சிகளில் 14.4.2018 முதல் 5.5.2018 வரை அரசின் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியதில் விடுபட்ட குடும்பங்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு முழுமையாக அரசின் பயன்கள் கிடைத்திடும் வகையில் திட்டங்களை தொடக்கி வைத்துப் பேசினார்.
நிகழ்ச்சியில் நிர்வாகிகள் மலைமோகன், இக்பால், வீராசாமி, செல்வரங்கம், சக்திவேல், ராஜா, சங்கர் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர், பொறியாளர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஒன்றியப் பொறியாளர் சந்தானகிருஷ்ணன் நன்றி கூறினார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/15/சமூக-நீதி-நாள்-விழா-2900634.html
2900089 விழுப்புரம் கடலூர் காவிரி விவகாரம் பண்ருட்டி தபால் நிலையம் முற்றுகை DIN DIN Saturday, April 14, 2018 10:46 AM +0530 நெய்வேலி: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, மக்கள் பாதுகாப்பு கவசம் அமைப்பினர் பண்ருட்டி தபால் நிலையத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர். 

முன்னதாக இந்த அமைப்பினர் மாவட்ட அமைப்புக்குழு கே.ஆறுமுகம் தலைமையில்,  பண்ருட்டி பயணியர் விடுதியில் இருந்து கருப்புக் கொடிகளை  ஏந்தியபடி ஊர்வலமாகப் புறப்பட்டனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக தபால் நிலையத்தை வந்தடைந்தனர். அங்கு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவும், மக்களின் ஒற்றுமையைப் பாதுகாத்திடவும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

போராட்டத்துக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.தஷ்ணாமூர்த்தி, அமைப்புக்குழு வி.சேதுராஜன், டி.ஏ.பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப்புக்குழு ஆர்.மணிவண்ணன், கே.தணிகாசலம், ஏ.ராஜா, எஸ்.லட்சுமி, எம்.ராயலு உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/14/காவிரி-விவகாரம்-பண்ருட்டி-தபால்-நிலையம்-முற்றுகை-2900089.html
2900088 விழுப்புரம் கடலூர் மொபெட்டுகள் திருட்டு: இளைஞர் கைது DIN DIN Saturday, April 14, 2018 10:45 AM +0530 சிதம்பரம்: சிதம்பரம் பகுதியில் தொடர்ந்து மொபெட்டுகளைத் திருடியதாக இளைஞர் ஒருவரை தனிப் படை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் பகுதியில் கடந்த சில மாதங்களாக மொபெட்டுகள் அதிகளவில் திருடுபோயின. இது குறித்து சிதம்பரம் ஏஎஸ்பி என்.எஸ்.நிஷா உத்தரவின் பேரில், ஆய்வாளர் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. 

தனிப் படையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர்கள் தனசேகரன், பாலச்சந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் இளங்கோவன், காளிமுத்து, தலைமைக் காவலர்கள் திலீப், ராஜா மற்றும் போலீஸார் சம்பவத்தில் தொடர்புடையவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் தனிப்படை போலீஸார் சிதம்பரம் பகுதியில் வியாழக்கிழமை வாகனத் தணிக்கை ஈடுபட்டனர். அப்போது, மொபெட்டில் வேகமாக வந்த இளைஞரை மறித்து விசாரித்தபோது, அந்த வாகனத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது.  சந்தேகத்தின்பேரில் அந்த இளைஞரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, அவர் லால்பேட்டை, மேட்டுத்தெருவைச் சேர்ந்த அப்துல்ஜபார் மகன் அப்துல் சையது (32) எனத் தெரியவந்தது. மேலும் இவர் சிதம்பரம் பகுதியில் பல்வேறு இடங்களில் இருந்து 15}க்கும் மேற்பட்ட மொபெட்டுகளை திருடி, லால்பேட்டையில் தனது வீட்டுக்கு பின்புறமுள்ள தோட்டத்தில் மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. அந்த வாகனங்களை தனிப் படையினர் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.3 லட்சம் என போலீஸார் தெரிவித்தனர். 

சம்பவம் குறித்து சிதம்பரம் நகர குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து அப்துல் சையதை கைது செய்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/14/மொபெட்டுகள்-திருட்டு-இளைஞர்-கைது-2900088.html
2900087 விழுப்புரம் கடலூர் ரயில் பாதை வழியாக குடிநீர்க் குழாய் பதிக்கும் பணி தொடக்கம் DIN DIN Saturday, April 14, 2018 10:44 AM +0530 சிதம்பரம்: சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் ரயில் பாதை வழியாக குடிநீர்க் குழாய் பதிக்கும் பணியை எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் வியாழக்கிழமை தொடக்கி வைத்தார். 
கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின்கீழ் சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பரங்கிப்பேட்டை பேரூராட்சிப் பகுதிகளை இணைக்கும் அகரம் ரயில்வே பாதைப் பகுதியில் குடிநீர்க் குழாய்களைப் பதிக்கும் பணிக்கான பூமி பூஜையை தொகுதி எம்எல்ஏ  கே.ஏ.பாண்டியன் தொடக்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: ரயில்வே இருப்புப் பாதையில் குழாய்களைப் பதித்தால்தான், குடிநீர்த் திட்டப் பணிகள் முழுமைபெற்று  பரங்கிப்பேட்டை பேரூராட்சிப் பகுதிகள் பயன்பெறும். 
இதற்கான நிர்வாக அனுமதி வேண்டி திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் பி.உதயகுமார் ரெட்டியிடம் கடந்த ஆண்டு கோரிக்கை மனு வழங்கினேன்.  இதையடுத்து, ஆய்வின் அடிப்படையில் ரயில்வே நிர்வாகம் ரயில்வே பாதையில் குடிநீர்க் குழாய்களைப் பதிக்க அனுமதி வழங்கியது. 
இந்தப் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டேன். 
இந்தத் திட்டத்தால் பரங்கிப்பேட்டை பேரூராட்சிப் பகுதியில் சுமார் 25 ஆயிரம் பேர் பயன்பெறுவர் என்றார் அவர். 
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், ஒன்றியச் செயலர் அசோகன், சிதம்பரம் நகரச் செயலர் ஆர்.செந்தில்குமார், பரங்கிப்பேட்டை நகரச் செயலர் மாரிமுத்து, ஒன்றிய அவைத் தலைவர் கோவி.ராசாங்கம், நகர பேரவைச் செயலர் வீராசாமி, சந்தர் ராமஜெயம், நகர துணைச் செயலர் இக்பால், அவைத் தலைவர் மலைமோகன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் தமிழ்செல்வன், உதவி பொறியாளர் பாலகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/14/ரயில்-பாதை-வழியாக-குடிநீர்க்-குழாய்-பதிக்கும்-பணி-தொடக்கம்-2900087.html
2900086 விழுப்புரம் கடலூர் அரசுப் பொருள்காட்சி ஏப்.28-இல் தொடக்கம் DIN DIN Saturday, April 14, 2018 10:43 AM +0530 நெய்வேலி: கடலூரில் அரசுப் பொருள்காட்சி ஏப்.28-ஆம் தேதி தொடங்குகிறது. இது தொடர்பாக, அனைத்துத் துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகக்  கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. 

 கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி பேசியதாவது: கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் ஏப்.28}ஆம் தேதி அரசுப் பொருள்காட்சி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியை தமிழக அமைச்சர்கள் தொடக்கி வைக்க உள்ளனர். 

கண்காட்சியில் ஒவ்வொரு துறை அரங்குகளும் அரசின் திட்டங்கள், சாதனைகளை விளக்கும் வகையில் புகைப்படங்கள், செயல் வடிவங்களுடன் சிறப்பாக அமைக்கப்பட வேண்டும் என்றார் அவர். 

 45 நாள்கள் நடைபெறும் இந்தப் பொருள்காட்சியில் சுகாதாரப் பணிகள், குடிநீர், தற்காலிக கழிவறைகள் அமைத்துத் தர நகராட்சி ஆணையருக்கும்,  பொருள்காட்சி மைதானத்தில் புறக்காவல் நிலையம் அமைத்து பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த காவல் துறைக்கும் அறிவுறுத்தப்பட்டது. 

மேலும், அரசுப் பேருந்துகள்  பொருள்காட்சி நடைபெறும் மைதானம் வழியாக மாலை 3 மணி முதல் இரவு 11 மணிவரை  செல்லவும், பேருந்துகளில் அரசுப் பொருள்காட்சி என்ற வில்லைகள் ஒட்டப்பட வேண்டுமென தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக மேலாண்மை  இயக்குநருக்கும் அறிவுறுத்தப்பட்டது. 

தீயணைப்பு வாகனத்தை தயார் நிலையில் வைத்திருக்கவும், மைதானத்தில் தண்ணீர் தெளிக்க வேண்டுமென தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலருக்கும், ஆவின் அரங்கத்தில் அந்த நிறுவனத்தின் தயாரிப்புப் பொருள்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டுமென அதன் மேலாளருக்கும் அறிவுறுத்தப்பட்டது. முதலுதவி, அவசர சிகிச்சைக்கு மருத்துவர் தலைமையிலான குழு அமைக்க வேண்டுமென சுகாதாரத் துறை துணை இயக்குநருக்கும், தடையில்லா மின்சார வசதி செய்துதர மின் வாரிய அலுவலருக்கும் அறிவுறுத்தப்பட்டது. 

பொருள்காட்சி தொடக்க விழாவில் அமைச்சர்கள் பங்கேற்று, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்குவதற்காக, அனைத்து அரசுத் துறைகளிடமிருந்தும் நலத் திட்ட உதவிகள் பட்டியலை தயார் செய்து வழங்கவும், பயனாளிகள் தேர்வுக்கும் உரிய ஏற்பாடுகளைச் செய்யுமாறு மாவட்ட வருவாய் அலுவலருக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.  கூட்டத்தில் சார்}ஆட்சியர் ஜானிடாம் வர்க்கீஸ், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, சென்னை தலைமைச் செயலக செய்தி}மக்கள் தொடர்புத் துறை (பொருள்காட்சிப் பிரிவு) தொழில்நுட்ப உதவியாளர் துரைசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) நடராஜன், துணை இயக்குநர் (சுகாதாரம்) ஜவாஹர்லால், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் ஜெ.ராஜகோபால், நகராட்சி ஆணையர் சரவணன், துணை இயக்குநர் (மீன்வளம்) கே.செல்வன், துணை இயக்குநர் தோட்டக்கலை ஆர்.ராஜாமணி  உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/14/அரசுப்-பொருள்காட்சி-ஏப்28-இல்-தொடக்கம்-2900086.html
2900074 விழுப்புரம் கடலூர் சமையல் எரிவாயு இணைப்பு வழங்க 35 கிராமங்களில் சிறப்பு முகாம் DIN DIN Saturday, April 14, 2018 10:33 AM +0530 நெய்வேலி: கடலூர் மாவட்டத்தில் பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டம், கிராம சுயராஜிய திட்டத்தின் கீழ், 35 கிராமங்களில் அம்பேத்கர் பிறந்த நாள் மற்றும் சமூக நீதி நாள் விழா வருகிற 20-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதில், விடுபட்ட பயனாளிகளுக்கு அரசு சார்பில் சமையல் எரிவாயு இணைப்பு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி தெரிவித்துள்ளதாவது:  கடலூர் மாவட்டத்தில் பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 35 சமையல் எரிவாயு விநியோக முகவர்கள் உள்ளனர். 

மாவட்டத்தில் ஏப்.14 முதல் மே 5-ஆம் தேதி வரை பிரதமரின் கிராம சுயராஜிய திட்ட விழாக்கள் நடத்தப்படுகின்றன. இதன் ஒரு அம்சமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள 164 கிராமங்களில், சமையல் எரிவாயு இணைப்பு விடுபட்டுள்ள தகுதியான குடும்பத்தினர் அனைவருக்கும் இணைப்பு வழங்கப்பட உள்ளது. இதன் தொடக்க விழா ஏப்.20}ஆம் தேதி முதற்கட்டமாக 35 கிராமங்களில் நடத்தப்படும்.

இந்த விழாவில் சமையல் எரிவாயு இணைப்புப் பெற்றவர்களும், இந்த திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு இணைப்பு பெறப்படவுள்ள குடும்பத்தினரும் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

விழாவில் நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், கிராம மக்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். 
விழா தொடர்பான விவரங்கள் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 

பாரதப் பிரதமரின் உஜ்வாலா யோஜனா மற்றும் இலவச எரிவாயு இணைப்பு விரிவாக்கத் திட்டத்தின் கீழ், பொதுமக்கள் சமையல் எரிவாயு இணைப்பு பெற தங்களது ஆதார் அட்டை நகல், தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தவர்களின் சாதிச் சான்றிதழ் நகல், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கான சான்றிதழ், வங்கி கணக்குப் புத்தக நகல், பாஸ்போட் அளவுள்ள 2 புகைப்படங்கள், அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கான குடும்ப அட்டைச் சான்று, பிரதமர் வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு  வீடு கட்டும் திட்ட உத்தரவு, குடும்ப அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் சமையல் எரிவாயு இணைப்பு பெற தகுதி பெறுவர். 

சமையல் எரிவாயு இணைப்பு பெற இதர உபரி பாகக் கட்டணமாக ரூ.1,600 மத்திய அரசால் வழங்கப்படும். அதேபோல ரூ.990 மதிப்புள்ள எரிவாயு சமையல் அடுப்பு மற்றும் ரூ.682 மதிப்புள்ள எரிவாயு உருளை என ஆக மொத்தம் ரூ.1,672}ஐ சமையல் எரிவாயு இணைப்பு பெறுவோர் ரொக்கமாகவோ அல்லது முகவர்கள் மூலம் தவணை முறையில் கடனாகவும் வழங்கலாம். கடன்தொகையானது எதிர்காலத்தில் எரிவாயு இணைப்பு உருளை பெறுவதில் வழங்கப்படும் மானியத்தில் ஈடு செய்யப்படும்.

மேலும் இந்தத் திட்டத்தின்கீழ் சமையல் எரிவாயு இணைப்பு பெறுவதற்கான விவரங்களுக்கு கடலூர் மாவட்ட வழங்கல் அலுவலரை  94450 00209 என்ற எண்ணிலும் , அந்தந்தப் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலர்களையும் தொடர்பு கொள்ளுமாறு ஆட்சியர் அதில் தெரிவித்துள்ளார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/14/சமையல்-எரிவாயு-இணைப்பு-வழங்க-35-கிராமங்களில்-சிறப்பு-முகாம்-2900074.html
2900073 விழுப்புரம் கடலூர் மணல் குவாரி விவகாரம்: பேச்சுவார்த்தை தோல்வி DIN DIN Saturday, April 14, 2018 10:31 AM +0530 நெய்வேலி: திட்டக்குடி அருகே மணல் குவாரி அமைப்பது தொடர்பாக, வட்டாட்சியர் அலுவலகத்தில்  வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.  

திட்டக்குடியை அடுத்துள்ள தி.இளமங்கலத்தில் மணல் குவாரி அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தப் பகுதியில் மணல் குவாரி அமைக்கப்பட்டால், தங்களது குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும் என பொதுமக்கள், அனைத்துக் கட்சியினர், வணிகர் மற்றும் விவசாய சங்கத்தினர் தெரிவித்தனர்.

மேலும் இதுதொடர்பாக ஏப்.16}ஆம் தேதி திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர்.

இதையடுத்து, திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில்  வெள்ளிக்கிழமை பேச்சு வார்த்தை நடைபெற்றது (படம்). இதில், அனைத்துக் கட்சியினர், வணிகர், விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டனர். 

ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. இதனால் திட்டமிட்டபடி ஏப்.16}ஆம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள், அரசியல் கட்சியினர், வணிகர், விவசாய சங்கத்தினர் சார்பில் அறிவிக்கப்பட்டது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/14/மணல்-குவாரி-விவகாரம்-பேச்சுவார்த்தை-தோல்வி-2900073.html
2900072 விழுப்புரம் கடலூர் வடலூர் பேருந்து  நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் DIN DIN Saturday, April 14, 2018 10:30 AM +0530 நெய்வேலி: வடலூர் வள்ளலார் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்படும் தனியார் வாகனங்களால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.  

கடலூர் மாவட்டத்தின் மையப் பகுதியிலும், சென்னை - கும்பகோணம், கடலூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலைகள் சந்திக்கும் இடத்திலும் வடலூர் நகரம் அமைந்துள்ளது. 
இங்கு வள்ளலார் தெய்வ நிலையமும், பல்வேறு கல்வி நிறுவனங்களும் உள்ளன. பேரூராட்சியாக உள்ள வடலூரை நகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான  பூர்வாங்கப் பணிகள் முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

வடலூரைச் சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களது அடிப்படை தேவைகளுக்கும், வள்ளலார் தெய்வ நிலையத்துக்கும் வந்து செல்கின்றனர். மேலும், சுற்றுலாப் பணிகள், சன்மார்க்க அன்பர்கள் என நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வடலூருக்கு வந்து செல்கின்றனர்.

இங்குள்ள வள்ளலார் பேருந்து நிலையம் உரிய பராமரிப்பின்றி சுதாதாரமற்ற நிலையில் உள்ளதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். கார்கள், இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக இந்தப் பேருந்து நிலையம் மாறியுள்ளதாகவும், இதனால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். 

மேலும், பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து தரைக் கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இதேபோல, விருத்தாசலம் வழித்தடத்தில் உள்ள பேருந்து நிறுத்தம் இருசக்கர வாகனம் நிறுத்து இடமாக  மாறியுள்ளது. 

இதுகுறித்து பயணிகள் கூறியதாவது: 
வடலூர் பேருந்து நிலையம் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இதை பேரூர் நிர்வாகம் முறையாகப்  பராமரிக்கவில்லை. எனவே, வடலூர் பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். வாகனங்கள் நிறுத்துவதை முறைப்படுத்தி,  பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/14/வடலூர்-பேருந்து--நிலையத்தில்-பயணிகளுக்கு-இடையூறாக-நிறுத்தப்படும்-வாகனங்கள்-2900072.html