Dinamani - புதுச்சேரி - http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2793936 விழுப்புரம் புதுச்சேரி வீட்டின் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்: ஆட்சியர் DIN DIN Sunday, October 22, 2017 05:32 AM +0530 வீட்டின் சுற்றுப் புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் இ.வல்லவன் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: துணைநிலை ஆளுநர் கிரண் பேடி முன்னிலையில், பேரிடர் மேலாண்மைத் துறை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், நலவழித் துறை,  உள்ளாட்சித் துறை, கல்வித் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு துறையினரும் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஆலோசிக்கப்பட்டன.
இதுதொடர்பாக கடந்த 6-ஆம் தேதி டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக குற்றவியல் நடைமுறை சட்டம், 1973-இன் கீழ், புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிக்கு உள்பட்ட காலி மனைகளில் உள்ள புதர்கள், குப்பைகளை 12 நாள்களுக்குள் (அக். 18-ஆம் தேதிக்குள்) அகற்றி, அவற்றைச் சுத்தப்படுத்தும்படி அதன் உரிமையாளர்களுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது.மேற்படி, ஆணையை மீறுவது அல்லது புறக்கணிப்பது என்பது பொதுமக்களின் உயிருக்கும், உடல் நலத்துக்கும் ஊறு விளைவிக்கக் கூடிய செயலாகும்.
அவ்வாறு மீறினால், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ், ஆறு மாத சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கக் கூடிய குற்றமாகும். இதுகுறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
மேற்குறிப்பிட்ட ஆணையின்படி, காலிமனை உரிமையாளர்கள் தங்களது மனையைச் சுத்தம் செய்து, சுற்றுப் புற சூழலைத் தூய்மையாக வைத்திருக்கவும்,  சுகாதாரத்தோடு வாழவும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மேலும், பொதுமக்களும் தாமாக முன்வந்து, தங்களது வீட்டைச் சுற்றியுள்ள இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு பாதுகாப்பது கொசு உற்பத்தியைத் தடுக்கும் என்றார் அவர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/22/வீட்டின்-சுற்றுப்புறங்களில்-தண்ணீர்-தேங்காமல்-பார்த்துக்-கொள்ள-வேண்டும்-ஆட்சியர்-2793936.html
2793935 விழுப்புரம் புதுச்சேரி லாஸ்பேட்டையில் டெங்கு விழிப்புணர்வு முகாம்: முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு DIN DIN Sunday, October 22, 2017 05:31 AM +0530 புதுவை வருவாய்த் துறை, நலவழித் துறை மற்றும் உள்ளாட்சி துறை ஆகியவை சார்பில், லாஸ்பேட்டை பகுதியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமில் முதல்வர் நாராயணசாமி, வருவாய்த் துறை அமைச்சர் ஷாஜகான், சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ண ராவ், பேரவைத் துணைத் தலைவர் வி.பி.சிவக்கொழுந்து மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முகாமில், டெங்கு பரவும் விதம், அதனால் ஏற்படும் பாதிப்புகள், டெங்கு கொசுக்கள் உருவாவதற்கான காரணம்,  அதைத் தடுக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன.
முகாமில்,  500-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் கலந்து கொண்டு லாஸ்பேட்டை பகுதியில் வீடு வீடாகச் சென்று டெங்கு குறித்தும், சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் பொதுமக்களுக்கு  விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/22/லாஸ்பேட்டையில்-டெங்கு-விழிப்புணர்வு-முகாம்-முதல்வர்-அமைச்சர்கள்பங்கேற்பு-2793935.html
2793934 விழுப்புரம் புதுச்சேரி ஜிப்மரில் கணைய பித்த நீர் புற்றுநோய்கள் கருத்தரங்கம் DIN DIN Sunday, October 22, 2017 05:31 AM +0530 புதுச்சேரி ஜிப்மர் இரைப்பை குடலியல் துறை சார்பில், கணைய பித்த நீர் புற்று நோய்கள் என்ற தலைப்பில் மருத்துவக் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கைத் தொடக்கிவைத்து ஜிப்மர் மருத்துவக் கண்காணிப்பாளர் அசோக் சங்கர் படே பேசியதாவது: கணைய பித்த நீர் புற்று நோய்கள் பொதுவாக கணையம், பித்த நாளங்கள், சிறுகுடல் பகுதிகளில் அதிகமாக உருவாகிறது. இவை பொதுவாக நோய் முற்றிய நிலையிலேயே அறியப்படுவதால் நோயாளிகளைக் குணப்படுத்துவது மிகுந்த சவாலாக உள்ளது.
கணைய பித்த நீர் புற்று நோய்களை கண்டறிவது மிகுந்த சிரமமான ஒன்றாகும். பெரும்பாலும் கணைய அழற்சி நோய் பல நேரங்களில் கணைய பித்த நீர் புற்று நோயுடன் ஒத்துபோவதால், புற்று நோய்களை தனித்து அறிய வேண்டியுள்ளது. ஆகையால், இந்த வகை நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது பல தரப்பட்ட மருத்துவ நிபுணர்கள் குழு அவசியமாகிறது.
தற்போது நடைமுறையில் உள்ள நவீன எண்டோஸ்கோபி முறை மூலம் இந்த வகை நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சையை அளிக்க முடிகிறது என்றார் அவர்.
முதல்வர் சுவாமிநாதன், இரைப்பைக் குடலியல் துறைத் தலைவர் அப்துல் அமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை குளோபல் மருத்துவமனை மருத்துவர் ரவி, வேலூர் சிஎம்சி மருத்துவமனை மருத்துவர் ஜார்ஜ் சைமன், ஜிப்மர் மூத்தப் பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் பேசினர். மருத்துவர் பழனிவேல் மோகன் நன்றி கூறினார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/22/ஜிப்மரில்-கணைய-பித்த-நீர்-புற்றுநோய்கள்-கருத்தரங்கம்-2793934.html
2793933 விழுப்புரம் புதுச்சேரி புதுவையில் சுற்றுலாத் திருவிழா இன்று தொடக்கம் DIN DIN Sunday, October 22, 2017 05:31 AM +0530 புதுவையில் சுற்றுலாத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (அக். 22) தொடங்குவதாக சுற்றுலாத் துறை இயக்குநர் முனிசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
மத்திய சுற்றுலா அமைச்சகம், அக்டோபர் 5-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை இந்தியாவில் சுற்றுலாவை மேம்படுத்தவும், அதன் பயன்களை அனைவரும் அறியும் வகையிலும் சுற்றுலாத் திருவிழாவை நடத்துமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைக் கேட்டுக் கொண்டது.
அதன் அடிப்படையில், புதுவை சுற்றுலாத் துறை பின்வரும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமை (அக். 22) காலை 10 மணி அளவில் தூய இருதய ஆண்டவர் உயர்நிலைப் பள்ளியில் புதுவை ஓவியர் மன்றத்துடன் இணைந்து புதுவை சுற்றுலா தலங்களை பிரதிபலிக்கும் ஓவியப் போட்டி நடைபெறும்.
தொடர்ந்து, திங்கள்கிழமை (அக். 23) காலை புதுச்சேரியில் அமைந்துள்ள பாரம்பரிய பகுதிகளான தூமாஸ் வீதி, லபோர்தனே வீதி, பாரதி பூங்கா வரை தூய்மைப்படுத்தும் பணி நடைபெறும்.
இதைத் தொடர்ந்து, காலை 10 மணியளவில் அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியில், கல்வித் துறையுடன் இணைந்து கண்டறிவோம் இந்தியாவை என்ற தலைப்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான வினாடி - வினா நிகழ்ச்சி நடைபெறும்.
தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை  (அக். 24) பிற்பகல் 2 மணியளவில் புதுவை வர்த்தக சபையில் இன்டாக் மற்றும் கல்வித் துறையுடன் இணைந்து புதுச்சேரி பாரம்பரியம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துதல் குறித்து கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறும்.
 புதன்கிழமை (அக். 25) பாரதிதாசன் மகளிர் கல்லூரியுடன் இணைந்து சுற்றுலா கருத்தரங்கம் நடைபெறும். சுற்றுலா திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியாக மாலை 6 மணிக்கு புதுச்சேரி கடற்கரை காந்தி திடலில் சுற்றுலா திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும். நிகழ்ச்சியை முதல்வர் நாராயணசாமி தொடக்கி
வைப்பார்.
சுற்றுலாத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ண ராவ் தலைமை வகிப்பார். லட்சுமி நாராயணன் எம்எல்ஏ, தலைமைச் செயலர் மனோஜ் பரிதா, சுற்றுலாத் துறைச் செயலர் பார்த்திபன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குவர். ஓவியப் போட்டி, வினாடி - வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். இதைத் தொடர்ந்து, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/22/புதுவையில்-சுற்றுலாத்-திருவிழா-இன்று-தொடக்கம்-2793933.html
2793932 விழுப்புரம் புதுச்சேரி பேருந்துக் கட்டண உயர்வுக்கான மானியத்தை அரசே ஏற்க வேண்டும்: அதிமுக DIN DIN Sunday, October 22, 2017 05:30 AM +0530 பேருந்துக் கட்டண உயர்வுக்கான மானியத்தை அரசே ஏற்க வேண்டும் என அதிமுக வலியுறுத்தியது.
இதுதொடர்பாக முதல்வர் நாராயணசாமிக்கு அந்தக் கட்சியின் சட்டப்பேரவைக் கொறடா வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
சட்டப்பேரவையில் கூடி விவாதிக்காமல் பேருந்துக் கட்டணத்தை தன்னிச்சையாக உயர்த்தி அறிவித்தது புதுச்சேரி மக்களையும், அதிமுகவையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி அதிமுக போராட்டங்களை நடத்தியது. இதையேற்று பேருந்துக் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்வது தொடர்பாக அரசு கூட்டம் நடத்தியுள்ளது.
வசதி படைத்தவர்கள் செல்லும் விமானப் போக்குவரத்துக்கு பல கோடியை அரசு மானியமாக அளித்து வருகிறது. ஆனால், ஏழை மக்கள் பயன்படுத்தும் பேருந்துப் போக்குவரத்துக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
எனவே, அறிவிக்கப்பட்ட பேருந்துக் கட்டண உயர்வை அரசு திரும்பப் பெற வேண்டும். டீசல் விலையேற்றம், உதிரிப் பாகங்கள் விலையேற்றம் காரணமாகப் பேருந்துக் கட்டணத்தை உயர்த்துவது அவசியம் என தனியார் பேருந்து உரிமையாளர்களின் வேண்டுகோள் நியாயமானதாக இருந்தால் கட்டண உயர்வை அரசே ஏற்றுக்கொள்வதில் அதிமுகவுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
ஆனால், அந்தக் கட்டண உயர்வை ஏழை மக்களின் நலன் கருதி அரசே மானியமாக செலுத்த வேண்டும் என அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/22/பேருந்துக்-கட்டண-உயர்வுக்கான-மானியத்தை-அரசே-ஏற்க-வேண்டும்-அதிமுக-2793932.html
2793931 விழுப்புரம் புதுச்சேரி பொதுமக்கள் எதிர்ப்பு: ஆய்வைப் பாதியில் நிறுத்திய ஆளுநர் DIN DIN Sunday, October 22, 2017 05:30 AM +0530 அமைச்சர் தொகுதியில் ஆய்வு மேற்கொள்ள இருந்த புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு அந்தத் தொகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் ஆய்வைப் பாதியிலேயே நிறுத்திவிட்டுத் திரும்பிச் சென்றார்.
புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி வார இறுதி நாள்களில் புதுவையின் பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி சனிக்கிழமை அவர், புதுச்சேரி பாகூர் பகுதியில் உள்ள ஏரி, குளத்தை ஆய்வு செய்தார். அப்போது, நீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்க  மறு சீரமைப்பு செய்ய திட்டம் தயாரிக்க வேண்டும் என பொதுப் பணித் துறை அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். தொடர்ந்து கொமந்தான் மேடு தரைப்பாலத்தை அவர் ஆய்வு செய்தார்.
தென்பெண்ணை ஆற்றில் வரும் நீர், பாகூர் தொகுதிக்கு உள்பட்ட கொமந்தான் மேடு படுகை அணை சேதமடைந்ததால் அங்கு தேங்காமல் செல்வதாக புகார் வந்ததையடுத்து, அந்தப் பகுதிக்கு கிரண் பேடி சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது புகார் தெரிவித்த விவசாயிகளிடம் அவர் விளக்கம் கேட்டறிந்தார். அப்போது, அணைக்கட்டு பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் மழை நீர் வீணாகக் கடலில் கலக்கிறது என விவசாயிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, உடன் வந்த பொதுப் பணித் துறைத் தலைமைப் பொறியாளர் சண்முக சுந்தரத்திடம் விளக்கம் கேட்டார். அப்போது அவர், பாதியளவு வேலைதான் நடைபெற்றது.
மீதிப் பணியை முடிக்க நபார்டு வங்கியிடம் கடன் கேட்கப்பட்டது. நபார்டு வங்கியும் நிதி தருவதாக ஒப்புக்கொண்டுள்ளது. எனவே, அந்தப் பணி விரைவில் முடிக்கப்படும் என்றார்.
இதையடுத்து, உடனடியாகப் பணியைத் தொடங்கி முடிக்க வேண்டும் என கிரண் பேடி உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது பொதுப் பணித் துறை உதவிப் பொறியாளர் தாமரை புகழேந்தி, மாவட்டத் துணை ஆட்சியர் உதயகுமார், வட்டாட்சியர் கார்த்திகேயன், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்தர்ராஜன் ஆகியோரி உடனிருந்தனர்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் கந்தசாமியின் ஏம்பலம் தொகுதிக்கு உள்பட்ட பிள்ளையார்குப்பம் பகுதியில் உள்ள குளத்தையும், நரம்பை கிராமத்தில் ஐ.ஆர்.பி.என். போலீஸாருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தையும் பார்வையிட கிரண் பேடி திட்டமிட்டிருந்தார்.
இதையறிந்த பிள்ளையார்குப்பம் பேட் பொதுமக்களும், கிருமாம்பாக்கம் பேட்,  நரம்பை மீனவப் பகுதி பொதுமக்களும் ஆங்காங்கே திரண்டு நலத் திட்டங்கள் தொடர்பான கோப்புகளுக்கு கையெழுத்திடாதது குறித்து ஆளுநர் கிரண் பேடியிடம் கேள்வி எழுப்பவும், அவரைக் கண்டித்து பதாகைகளுடன் நின்று கொண்டிருந்தனர். இதனால், அந்தப் பகுதியில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.
இதையறிந்த ஆளுநர் கிரண்பேடி அங்கு செல்லும் முடிவைக் கைவிட்டு, தனது ஆய்வுப் பயணத்தைப் பாதியிலேயே முடித்துக் கொண்டு ஆளுநர் மாளிகைக்குத் திரும்பினார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/22/பொதுமக்கள்-எதிர்ப்பு-ஆய்வைப்-பாதியில்-நிறுத்திய-ஆளுநர்-2793931.html
2793930 விழுப்புரம் புதுச்சேரி மூன்று பேர் கொலையில் விழுப்புரம் ரெளடி கும்பலுக்குத் தொடர்பு DIN DIN Sunday, October 22, 2017 05:30 AM +0530 புதுச்சேரியில் மூன்று ரௌடிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் விழுப்புரத்தைச் சேர்ந்த ரெளடி கும்பலுக்குத் தொடர்பிருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, கொலையாளிகளை பிடிக்க போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
முத்திரையர்பாளையம் ஜீவா வீதியைச் சேர்ந்தவர் ஞானசேகர் (எ) நாய் சேகர் (24). சண்முகாபுரம் அணைக்கரை வீதியைச் சேர்ந்தவர் ஜெரால்டு (24). முத்தரையர்பாளையம் காந்தி திருநல்லூரைச் சேர்ந்தவர் சதீஷ் (23). ரெளடிகளான மூவரும், மேட்டுப்பாளையம் சாரணப்பேட்டையைச் சேர்ந்த புளியங்கொட்டை ரங்கராஜன் (25), ரகு,  மாது ஆகியோருடன் கடந்த 18-ஆம் தேதி மேட்டுப்பாளையம் ராம்நகர் முதல் தெருவில் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள இரும்பு பீரோ, கட்டில் செய்யும் சிறு தொழிற்கூடத்தில் மது அருந்திக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த 10-க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் அந்த தொழிற்கூடத்தைச் சுற்றி வளைத்து, நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. தொடர்ந்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இந்தச் சம்பவத்தில் ஜெரால்டு,  நாய் சேகர், சதீஷ் ஆகிய மூவரும் அதே இடத்தில் உயிரிழந்தனர். ரங்கராஜன் பலத்த காயமடைந்தார். ரகு லேசான காயத்துடனும், மாது காயமின்றியும் தப்பினர்.
இதுதொடர்பாக மேட்டுப்பாளையம் போலீஸார் மார்டின் உள்ளிட்ட சிலர் மீது வழக்குப் பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் ஆய்வாளர்கள் தங்கமணி, கண்ணன், நாகராஜ் மற்றும் அதிரடிப் படை காவல் ஆய்வாளர்  கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் தனிப் படைகள் அமைக்கப்பட்டு, புதுச்சேரி  மற்றும் தமிழகப் பகுதிகளில் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே விழுப்புரத்தைச் சேர்ந்த ரெளடிக் கும்பலுக்கு இந்தக் கொலையில் தொடர்பிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும்,  விரைவில் கொலையாளிகள் சிக்குவார்கள் எனவும் போலீஸார் தெரிவித்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/22/மூன்று-பேர்-கொலையில்-விழுப்புரம்-ரெளடி-கும்பலுக்குத்-தொடர்பு-2793930.html
2793929 விழுப்புரம் புதுச்சேரி புதுவையில் பேருந்துக் கட்டண உயர்வு நிறுத்திவைப்பு: முதல்வர் DIN DIN Sunday, October 22, 2017 05:29 AM +0530 புதுவையில் பேருந்துக் கட்டண உயர்வை நிறுத்திவைப்பதாக முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்தார். மேலும், பேருந்துக் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக அமைச்சர் தலைமையில் குழு அமைத்தும் முதல்வர் உத்தரவிட்டார்.
புதுவையில் கடந்த 2012-ஆம் ஆண்டு பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், டீசல் விலை உயர்வு, உதிரிப் பாகங்களின் விலை உயர்வு, ஊதியம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பேருந்துக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என பேருந்து உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, பேருந்துக் கட்டணத்தை உயர்த்த அரசு முடிவு செய்தது.
அதன்படி, புதுவை யூனியன் பிரதேசத்தில் இயக்கப்படும் நகரப் பேருந்துகளுக்கு முதல் நிலை ரூ. 5ஆகவும், அதன்பிறகு ஒவ்வொரு நிலைக்கும் ரூ. 2-க்கு மிகாமலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. விரைவு அல்லாத பேருந்துகளுக்கு முதல் 6 கி.மீ. தொலைவுக்கு  ரூ. 8-க்கு மிகாமலும், விரைவுப் பேருந்துகளுக்கு முதல் 25 கி.மீ. தொலைவுக்கு ரூ. 25-க்கு மிகாமலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இந்தக் கட்டண உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்தது. இதனால், பொதுமக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
கட்டண உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி, பொதுமக்களும்,  அரசியல் கட்சியினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், பேரவைக் குழு அரங்கில் பேருந்துக் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ண ராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், அனந்தராமன், எம்.என்.ஆர்.பாலன், ஜெயமூர்த்தி, சிவா, விஜயவேணி, தீப்பாய்ந்தான், அன்பழகன், பாஸ்கர், தலைமைச் செயலர் மனோஜ் பரிதா, போக்குவரத்துத் துறைச் செயலர் சுந்தரவடிவேலு, சுந்தரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுவையில் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அனைத்து எம்.எல்.ஏ.க்களும் என்னை சந்தித்துப் பேசினார்கள். இதையடுத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை அழைத்து பேசி கருத்துகளைக் கேட்டேன்.
இதுதொடர்பாக அமைச்சர் ஷாஜகான் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் இடம் பெறுவார்கள். இந்தக் குழு பேருந்து உரிமையாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்து பேசி,  மூன்று மாதத்துக்குள் அறிக்கை சமர்ப்பிப்பார்கள்.
அந்த அறிக்கையின் அடிப்படையில், புதிய கட்டணத்தை அமல்படுத்துவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதுவரை பழைய கட்டணமே தொடரும்.
இதற்குப் பேருந்து உரிமையாளர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார் முதல்வர் நாராயணசாமி.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/22/புதுவையில்-பேருந்துக்-கட்டண-உயர்வு-நிறுத்திவைப்பு-முதல்வர்-2793929.html
2793928 விழுப்புரம் புதுச்சேரி சம்பளம் வழங்கக் கோரி பாசிக் ஊழியர்கள் போராட்டம் DIN DIN Sunday, October 22, 2017 05:29 AM +0530 புதுவை மாநில அரசின் சார்பு நிறுவனமான பாசிக்கில் பணி புரியும் ஊழியர்கள் சம்பளம் வழங்கக் கோரி,  சனிக்கிழமை வயிற்றில் ஈரத் துணியைக் கட்டிக்கொண்டு, நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாசிக்கில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பாசிக் நிறுவனத்தின் கீழ் காய்கறி அங்காடி, மதுபானம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தி நிலையம் ஆகியவை இயங்கி வருகின்றன.
இந்த நிலையில், பாசிக்கில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த 40 மாத காலமாக சம்பளம் வழங்கப்படவில்லை. மேலும் ஊழியர்கள் தங்களைப் பணி நிரந்திரம் செய்யக் கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே, ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்காததால், அவர்கள் கடந்த 100 நாள்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக,  பிச்சை எடுக்கும் போராட்டம், ஆயுத பூஜையன்று தங்களுக்கே  பூஜை போடும் போராட்டம் என,  அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நூதன முறையில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நிலுவையில் உள்ள  ஊதியத்தை வழங்க வேண்டும், நிரந்த ஊழியர்கள் அனைவருக்கும் 100 சதவீதம் முழு சம்பளம் வழங்க வேண்டும், தினக்கூலி ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, வறுமையின் காரணமாக தங்களுக்கு பசி எடுக்கக் கூடாது என்பதற்காக வயிற்றில் ஈரத் துணியைக் கட்டிக்கொண்டு பாசிக் தலைமை அலுவலகம் எதிரே படுத்துறங்கும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் பாசிக் நிர்வாகம், புதுவை அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அரசு தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தங்களுடைய போராட்டம் தொடரும் என பாசிக்  ஊழியர்கள் தெரிவித்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/22/சம்பளம்-வழங்கக்-கோரி-பாசிக்-ஊழியர்கள்-போராட்டம்-2793928.html
2793927 விழுப்புரம் புதுச்சேரி பெண்ணிடம் பணம் பறிப்பு: இரு சிறுவர்கள் கைது DIN DIN Sunday, October 22, 2017 05:29 AM +0530 புதுச்சேரியில் பெண்ணை வழிமறித்து ரூ. 50 ஆயிரம் பணத்தை பறித்துச் சென்ற இரு சிறுவர்களை போலீஸார் கைது செய்தனர்.
முத்தியால்பேட்டை செந்தாமரை நகரைச் சேர்ந்தவர் அப்துல் முனாப். கோழிக் கடை வைத்துள்ளார். இவரின் மனைவி நசீமா பேகம். இவர், கடந்த
18-ஆம் தேதி கடைக்கு தனது கைப்பையில் ரூ. 50 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு, நடந்து
சென்றார்.
அப்போது, பைக்கில் வந்த
2 பேர் நசீமாவின் கைப்பையைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து நசீமா பேகம் கொடுத்த புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், திலாஸ்பேட்டை, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த இரு சிறுவர்கள் நசீமா பேகத்திடம் பணம் பறித்துச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, சிறுவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/22/பெண்ணிடம்-பணம்-பறிப்பு-இரு-சிறுவர்கள்-கைது-2793927.html
2793926 விழுப்புரம் புதுச்சேரி வீடு புகுந்து நகை திருட்டு DIN DIN Sunday, October 22, 2017 05:28 AM +0530 வில்லியனூர் அருகே வீடு புகுந்து நகையைத் திருடிச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
வில்லியனூர் மேல் சாத்தமங்கம் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (31). . இவரது மனைவி ரேவதி (29). இவர்களுக்கு 2 வயதில் குழந்தை உள்ளது. குழந்தையை தாத்தாவிடம் வீட்டில் விட்டுவிட்டு, இருவரும் வேலைக்குச் சென்று வருவது வழக்கம்.
கடந்த இரு தினங்களுக்கு ரேவதி வீட்டைச் சுத்தம் செய்துள்ளார். அப்போது பீரோவில் இருந்த 2.5 பவுன் நகையை வெளியில் எடுத்து வைத்துவிட்டு மறந்துவிட்டாராம். பின்னர், வேலைக்குச் சென்று வீடு திரும்பிய போது, மர்ம நபர்கள் தோட்டத்து வழியாக  வீட்டுக்குள் புகுந்து நகையைத் திருடிச்சென்றிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து செந்தில்குமார் அளித்த புகாரின் பேரில், மங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/22/வீடு-புகுந்து-நகை-திருட்டு-2793926.html
2793925 விழுப்புரம் புதுச்சேரி புதுவையில் காவலர் வீர வணக்க நாள்: முதல்வர் அஞ்சலி DIN DIN Sunday, October 22, 2017 05:28 AM +0530 புதுச்சேரி கோரிமேடு ஆயுதப் படை காவல் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற காவலர் வீர வணக்க நாள் நிகழ்ச்சியில் முதல்வர் வி.நாராயணசாமி கலந்து கொண்டு காவலர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
காவல் துறையில் பணியில் இருந்தபோது உயிரிழந்த காவலர்களின் நினைவாக வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. திபெத் எல்லையில்
1959-ஆம் ஆண்டு நடைபெற்ற சண்டையின் போது எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 20 காவலர்கள் வீர மரணமடைந்தனர். பலர் காணாமல் போனார்கள்.
இந்தச் சம்பவத்தை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபர் 21-ஆம் தேதி பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில், நாடு முழுவதும் கடந்த ஆண்டு பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதுவையில் நடைபெற்றது.
கோரிமேடு ஆயுதப் படை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி பங்கேற்று காவலர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் உயிரிழந்த காவலர்களுக்கு அவர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அவரைத் தொடர்ந்து, காவல் துறை டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம், காவல் துறை உயரதிகாரிகள் மற்றும் முப்படையைச் சேர்ந்த அதிகாரிகள் காவலர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து, உயிர்நீத்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 21 குண்டுகள் முழங்க வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
முதுநிலை எஸ்.பி.க்கள் ராஜீவ் ரஞ்சன், அபூர்வா குப்தா, எஸ்.பி.க்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் துறையினர் பங்கேற்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/22/புதுவையில்-காவலர்-வீர-வணக்க-நாள்-முதல்வர்-அஞ்சலி-2793925.html
2793924 விழுப்புரம் புதுச்சேரி வங்கி அதிகாரியிடம் பணம் பறிப்பு DIN DIN Sunday, October 22, 2017 05:28 AM +0530 வங்கி அதிகாரியிடம் பணப்பையைப் பறித்துச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஒதியஞ்சாலை நேதாஜி நகரைச் சேர்ந்தவர் ரேணு சரண் பிலிப் 29. இவர், கனரா வங்கியில் அதிகாரியாகப் பணிபுரிந்து வருகிறார். வெள்ளிக்கிழமை தனது காரில் ஒதியஞ்சாலை பகுதியில் உள்ள உணவகத்தில் சாப்பிடச் சென்றார். காரை நிறுத்திவிட்டு தனது கைப்பையை எடுத்துக்கொண்டு இறங்கியபோது,  பைக்கில் 2 பேர் அவரின் கைப்பையைப் பறித்துக் கொண்டு தப்பினர். அந்தப் பையில் செல்லிடப்பேசி,  
ரூ. 2,500 ரொக்கம்,  ஏடிஎம் கார்டு உள்ளட்டவை இருந்தன. இதுகுறித்து பிலிப் கொடுத்த புகாரின் பேரில்,  ஒதியஞ்சாலை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/22/வங்கி-அதிகாரியிடம்-பணம்-பறிப்பு-2793924.html
2793923 விழுப்புரம் புதுச்சேரி பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து அரசியல் கட்சியினர் மறியல் DIN DIN Sunday, October 22, 2017 05:27 AM +0530 புதுச்சேரியில் பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து அதிமுக, பாஜக கட்சிகள் சார்பில், சனிக்கிழமை சாலை மறியல் நடைபெற்றது. சாலை மறியலில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
புதுவையில் 5 ஆண்டுகளுக்கு பின்னர் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தி அரசு அறிவித்தது. குறிப்பாக, 40 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக
அதிமுக சார்பில் புதுச்சேரி வெங்கட சுப்பாரெட்டியார் சதுக்கம் அருகே சாலை மறியல் நடைபெற்றது. அந்தக் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் குழுத் தலைவர் ஆ.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார்.  எம்.எல்.ஏ. பாஸ்கர் முன்னிலை வகித்தார்.
கட்சியின் மாநிலத் துணைச் செயலர் பன்னீர்செல்வி, நகரச் செயலர்கள் ரவீந்திரன், அன்பானந்தம், அணி செயலர்கள் பாப்புசாமி, ஞானவேல், சுப்பிரமணி, குணசேகர ரெட்டியார், தொகுதிச் செயலர்கள் கிருஷ்ணமூர்த்தி, நாராயணன், ஜானிபாய், மணவாளன், மணி, ஆனந்தன் உள்பட நூற்றுக் கணக்கானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், கடலூர் சாலை, மறைமலையடிகள் சாலைகளில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாமல் திண்டாடினர்.
 இதைத் தொடர்ந்து, உருளையன்பேட்டை போலீஸார் சாலை மறியலில் ஈடுபட்ட 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
பாஜக சார்பில் சாலை மறியல், பேருந்துகள் சிறைபிடிப்பு: இதேபோல, பாஜக சார்பில் புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் நடைபெற்றது.
கட்சியின் மாநிலத் தலைவர் வி.சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். பொதுச் செயலர்கள தங்க.விக்ரமன், ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் செல்வம், துரை கணேசன், ஏம்பலம் செல்வம், நாகராஜ் ஜெயந்தி, சிவானந்தம், மோகன்குமார், மூர்த்தி, சக்திபாலன் உள்பட நூற்றுக் கணக்கானோர் மறியலில் கலந்து கொண்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் பேருந்துகளை வெளியே செல்லவிடாமல் சிறைபிடித்தனர்.
இதனால், பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 125 பேரை போலீஸார் கைது செய்தனர்.
அதிமுக, பாஜக கட்சிகளின் சாலை மறியலால் புதுவையின் மையப் பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
சோஷலிஸ்ட் யூனிட்டி அமைப்பினர் சாலை மறியல்: இதேபோல, பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து சோஷலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆஃப் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் எதிரே சாலை மறியல் நடைபெற்றது. அந்த அமைப்பின் மையத் தலைவர்  லெனின் தலைமை வகித்தார். பேருந்து நிலையத்துக்கு எதிர்புறமுள்ள மறைமலை அடிகள் சாலையில் மறியல் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டோரையும் போலீஸார் கைது செய்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/22/பேருந்துக்-கட்டண-உயர்வைக்-கண்டித்து-அரசியல்-கட்சியினர்-மறியல்-2793923.html
2793497 விழுப்புரம் புதுச்சேரி பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து ஆதரவை திரும்பப் பெற திமுக தயாரா? அதிமுக முன்னாள் எம்எல்ஏ கேள்வி  புதுச்சேரி, DIN Saturday, October 21, 2017 09:21 AM +0530 பேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்து, புதுவையில் காங்கிரஸ் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெற திமுக தயாரா என்று அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி அரசு வீட்டு வரி, தண்ணீர் வரி, மின்சாரக் கட்டணம் ஆகியவற்றை ஏற்கெனவே வரலாறு காணாத வகையில் உயர்த்தியுள்ள நிலையில் தற்போது அடித்தட்டு ஏழை மக்களைப் பாதிக்கும் பேருந்துக் கட்டணத்தை உயர்த்திருப்பது கண்டனத்திற்குரியது. மேலும், அரசு அறிவிப்பில் 2012ஆம் ஆண்டு முடிவு செய்தபடி என்று குறிப்பிட்டிருப்பது, கடந்த அரசின் மீது பழிபோட்டு தப்பித்துக்கொள்ளும் முயற்சியாகவே தெரிகிறது.
 புதுச்சேரியை விட டீசல் விலை தமிழகத்தில் அதிகமாக உள்ள நிலையிலும் மக்களின் நலன் கருதி அங்கு பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படவில்லை.
 ஆனால், புதுவை அரசோ மக்களின் நலன் கருதாமல் அரசுப் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தியருப்பது மறைமுகமாக தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு அரசு துணை போகிறதா என்று எண்ணத்தோன்றுகிறது.
 காங்கிரஸ் கட்சிக்கு எல்லா நிகழ்வுகளிலும் ஆதரவளிக்கும் தி.மு.க. பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதும் போராட்டம் நடத்துவோம் என்பதும் மக்களை ஏமாற்றும் செயல்.
 உண்மையிலேயே தி.மு.க.வுக்கு புதுச்சேரி மக்களின் மீது அக்கறை இருக்குமேயானால் பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரசுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெறத் தயாரா?
 புதுவை காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லாவிடில் புதுவை மாநில அதிமுக சார்பில் தலைமையின் அனுமதி பெற்று பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று அதில் தெரிவித்துள்ளார்.
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/21/பேருந்து-கட்டண-உயர்வை-எதிர்த்து-ஆதரவை-திரும்பப்-பெற-திமுக-தயாரா-அதிமுக-முன்னாள்-எம்எல்ஏ-கேள்வி-2793497.html
2793496 விழுப்புரம் புதுச்சேரி "காலி மனைகளில் மழைநீர் தேங்கினால் நடவடிக்கை'  புதுச்சேரி, DIN Saturday, October 21, 2017 09:21 AM +0530 காலி மனைகளில் நீர் தேங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கலியமூர்த்தி எச்சரித்துள்ளார்.
 அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
 அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வீட்டு மனைகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் பல இடங்களில் வீடுகள் கட்டப்படாமல் காலியாக உள்ளது. இந்த இடத்தில் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதனால் டெங்கு, காலரா, மலேரியா போன்ற நோய்கள் பரவி வருகிறது.
 எனவே, காலி வீட்டு மனைகள் வைத்திருப்போர், வீட்டு மனைகளில் 12 நாள்களுக்குள் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்காமல் மண் கொட்டி சமன்படுத்தி, தண்ணீர் தேங்காமல் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
 தவறும் பட்சத்தில் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை மற்றும் 1973ம் ஆண்டு புதுச்சேரி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து சட்ட விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பொதுமக்கள் கால்வாய்களில் கழிவுநீர் செல்வதற்கு தடையில்லாமல் ஒத்துழைக்க வேண்டும்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/21/காலி-மனைகளில்-மழைநீர்-தேங்கினால்-நடவடிக்கை-2793496.html
2793495 விழுப்புரம் புதுச்சேரி காவல் துறையினரைக் கண்டித்து திருநங்கைகள் சாலை மறியல்  புதுச்சேரி, DIN Saturday, October 21, 2017 09:20 AM +0530 காவல் துறையினர் தாக்கியதாகக் கூறி, புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட அரவாணிகள் கைது செய்யப்பட்டனர். அப்போது, காவல் துறையினருடன் திருநங்கைகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 புதுச்சேரி பேருந்து நிலையத்தில் 15-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் நின்று கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்தனராம். அவ்வாறு இடையூறு செய்த திருநங்கைகளை காவல் துறையினர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
 இதனையடுத்து காவல் துறையினரைக் கண்டித்து 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பேருந்து நிலையம் முன் மறியலில் ஈடுபட்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது திருநங்கைகளை காவல் துறையினர் கைது செய்து அழைத்து வந்தனர்.
 இதுகுறித்து அறிந்த மேலும் 25-க்கும் மேற்பட்ட திருநங்கைகள், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீண்டும் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. '
 அதன் பிறகு திருநங்கைகளிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
 இதுதொடர்பாக திருநங்கைகள் கூறியதாவது: எங்களுக்கான எந்தவித உதவிகளையும் மாநில அரசு செய்யவில்லை. குறிப்பாக, உரிய வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரவில்லை. எனவே, எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தருவதை விடுத்து, எங்களை தாக்குவது, அவமானப்படுத்துவது வேதனை அளிக்கிறது என்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/21/காவல்-துறையினரைக்-கண்டித்து-திருநங்கைகள்-சாலை-மறியல்-2793495.html
2793494 விழுப்புரம் புதுச்சேரி பிளாஸ்டிக் பையை அப்புறப்படுத்த வணிக நிறுவனங்களுக்குக் கெடு  புதுச்சேரி, DIN Saturday, October 21, 2017 09:20 AM +0530 பிளாஸ்டிக் பை, கப் உள்ளிட்ட பொருள்களை 15 நாள்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
 அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட நகர மற்றும் கிராமப்புறங்களில் தேநீர் விடுதிகள், உணவு விடுதிகளில் துரித உணவகங்கள் போன்றவற்றில் பயன்படுத்தும் அனுமதிக்கப்பட்ட தரம் மற்றும் அளவுக்கு மாறான பிளாஸ்டிக் கப், பேப்பர் கவர்கள் போன்றவற்றை பயன்படுத்தும்போது அந்த பிளாஸ்டிக் பொருட்களால் பொதுமக்களுக்கும் அனைத்து வகையான கால்நடைகளுக்கும் பலவிதங்களில் உடல் உபாதைகளும் பாதிப்புகளும் ஏற்படுகிறது.
 பொதுவாக உணவகங்களில் உணவு பரிமாறுவதற்கு இலைக்கு பதில் பிளாஸ்டிக் பேப்பர்கள் பயன்படுத்தப்படுகிறது. மேலும், உணவுகளை பொட்டலமிடுவதற்கும் அதனை எடுத்து செல்வதற்கும் இவ்வகையான பிளாஸ்டிக் பைகளே பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஊர் முழுவதும் பிளாஸ்டிக் கழிவு குப்பைகளாக காணப்படுகிறது. அவற்றை கழிவு நீர் செல்லும் வாய்க்கால்களில் கொட்டுவதால், அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் செல்லாததால் கொசுக்கள் இனப்பெருக்கம் அதிகமாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக சுகாதார கேடு, டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
 மத்திய அரசின் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகளின்படி, பிளாஸ்டிக் பொருள்களை கையாளும் வணிக நிறுவனங்களே அதனை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தவும் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த அறிவிப்பு கிடைக்க பெற்ற 15 தினங்களுக்குள் தங்கள் உணவு விடுதிகளில் பிளாஸ்டிக் பை, கப் பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ளவோ அல்லது கழிவு பொருள்களை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தி நீர் நிலைகளில் தேங்காவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/21/பிளாஸ்டிக்-பையை-அப்புறப்படுத்த-வணிக-நிறுவனங்களுக்குக்-கெடு-2793494.html
2793493 விழுப்புரம் புதுச்சேரி பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்: முதல்வரிடம் திமுக மனு  புதுச்சேரி, DIN Saturday, October 21, 2017 09:19 AM +0530 புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணத்தை திரும்பப் பெறக் கோரி, முதல்வர் நாராயணசாமியிடம் திமுக சார்பில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
 புதுச்சேரி தெற்கு மற்றும் வடக்கு மாநில திமுக அமைப்பாளர்கள் இரா. சிவா, எம்.எல்.ஏ., எஸ்.பி. சிவக்குமார் ஆகியோர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமியை சந்தித்து மனு அளித்தனர்.
 அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: புதுச்சேரியில் ஆளும் அரசுக்கு ஆதரவுஅளித்தாலும் மக்கள் நலன்சார்ந்த பிரச்னைகளில் திமுக எப்போதும் தனித்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது.
 அவ்வாறு இருந்தும் மக்களை பாதிக்கிற வீட்டு வரி, குடிநீர் வரி உயர்வு, மின்கட்டண உயர்வு போன்ற முடிவுகளில் கூட்டணி கட்சி என்ற முறையில் எங்களிடம் பெயரளவுக்குக் கூட கலந்து ஆலோசிக்கவில்லை. இதுபோன்று காங்கிரஸ் அரசு எடுக்கிற மக்கள் விரோத நடவடிக்கைக்கு திமுக-வும் துணை நிற்கிறதோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலை மாறவேண்டும். அரசின் அறிவிப்புகள் வெளிப்படைத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்.
 புதுச்சேரி மக்கள் ஏற்கெனவே ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு போன்றவற்றால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பண்டிகை நாளை கசப்படையச் செய்யும் வகையில் பேருந்து கட்டணத்தை அதிகளவு உயர்த்தி வெளியான அறிவிப்பு, மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
 ஆட்டோ கட்டண உயர்வு போல, பேருந்துக் கட்டண உயர்வு தொடர்பாக திமுகவுடன் ஆலோசிக்கப்படவில்லை. எனவே, பொதுமக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தன்னிச்சையாக அறிவிக்கப்பட்ட இந்த பேருந்து கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இது சம்பந்தமாக கூட்டணி கட்சியான திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கலந்து பேச வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 அவைத்தலைவர்கள் சீத்தா. வேதநாயகம், வழக்குரைஞர் பலராமன், துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி, குணாதிலீபன், ஏ.கே.குமார், கலிய
 பெருமாள், பொருளாளர் செந்தில்குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தைரியநாதன், லோகையன், பொதுக்குழு உறுப்பினர்கள் மாறன், வேலவன், சக்திவேல், வேலன், அருட்செல்வி, பிரபாகரன், தொகுதிச் செயலாளர்கள் சக்திவேல், நடராஜன், தங்கவேலு, சவுரிராஜன், சிவக்குமார், செல்வபார்த்திபன், பல்வேறு அமைப்புகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
 பின்பு செய்தியாளர்களிடம் எம்.எல்.ஏ. சிவா கூறியதாவது:
 ஆளும் காங்கிரஸ் அரசுடன் திமுக கூட்டணியில் இருந்தாலும் மக்களை பாதிக்கக்கூடிய செயல்களை அரசு செய்தால் எதிர்ப்போம். தற்போது பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ள பேருந்துக் கட்டண உயர்வால் கிராமப்புற மக்கள், மாணவர்கள், கூலி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
 உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணத்தை மறு பரிசீலனை செய்யாவிட்டால் திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/21/பேருந்து-கட்டண-உயர்வை-திரும்பப்-பெற-வேண்டும்-முதல்வரிடம்-திமுக-மனு-2793493.html
2793477 விழுப்புரம் புதுச்சேரி கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்: ஜிப்மர் தொழிலாளர்கள் சங்கம் அறிவிப்பு  புதுச்சேரி, DIN Saturday, October 21, 2017 08:50 AM +0530 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என ஜிப்மர் மருத்துவமனை தொழிலாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
 இதுதொடர்பாக அந்த சங்கத்தின் ஆலோசகர் டி.முருகன் வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் 4ஆம் நிலை பணிகளை, நிரந்தரமான ஆள்களைக் கொண்டு செய்யாமல், தினக்கூலி ஊழியர்களை பணியமர்த்தி மேற்கொள்ளும் முயற்சியை மேற்கொண்டது. அதனடிப்படையில் ஜிப்மரில் துப்புரவாளர், சலவையாளர் உள்ளிட்ட 4ஆம் நிலை பணிகளை மேற்கொள்ள 800-க்கும் மேற்பட்ட தினக்கூலி ஊழியர்களை பணியில் அமர்த்தியது.
 அவர்கள் 12 ஆண்டுகள் பணி மேற்கொண்டு வந்த நிலையில், 2012ஆம் ஆண்டு திடீரென ஜிப்மர் நிர்வாகம் ஒப்பந்தப் பணி நிறுவனத்தின் கீழ் பணி செய்யுமாறு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது.
 இதனையடுத்து அந்த ஊழியர்கள் ஒன்றிணைந்து ஜிப்மர் மருத்துவமனை ஊழியர்கள் சங்கத்தின் துணையுடன் புதுச்சேரி உதவி தொழிலாளர் நல ஆணையத்தில் தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர். மேலும், சென்னை மத்திய நிர்வாக தீர்ப்பாணையத்திலும், உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர்.
 ஜிப்மர் தினக்கூலி பணியாளர்கள் அனைவரையும் மத்திய அரசின் தினக்கூலி ஊழியர்களாக மாற்றி, மத்திய அரசு தினக்கூலி ஊழியர்களுக்கு வழங்கும் ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும் புதுச்சேரி உதவி தொழிலாளர் நல ஆணையர் மத்திய தொழிலாளர் அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பினார்.
 அதனடிப்படையில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம், சென்னை தொழிலாளர் நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அதை தொடர்ந்து நடத்தவும் ஆணை பிறப்பித்தது. அந்த வழக்கில் கடந்த ஜூலை 17ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் 2012 மார்ச் 3ஆம் தேதி வரை 5 ஆண்டுகள் தினக்கூலி ஊழியர்களாக பணி முடித்திருந்தவர்களை நான்காம் நிலை ஊழியர்களாக பணிமாற்றம் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. மேலும், தற்போதுள்ள ஊதிய நிலுவைத்தொகையை 2 மாதங்களுக்குள் வழங்க வேண்டும், தவறினால் 7.5 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்றும் கூறியது.
 இந்தத் தீர்ப்பை அமல்படுத்த வலியுறுத்தி 21, 22 தேதிகளில் கோரிக்கை அட்டை அணிந்தும், 23ஆம் தேதி காலை 7.30 முதல் 9.30 வரை கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்த உள்ளோம். அதன்பிறகும் அமல்படுத்தவில்லை என்றால் பணிப் புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும் என்றார் முருகன்.
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/21/கோரிக்கைகளை-வலியுறுத்தி-போராட்டம்-ஜிப்மர்-தொழிலாளர்கள்-சங்கம்-அறிவிப்பு-2793477.html
2793476 விழுப்புரம் புதுச்சேரி 3 ரெளடிகள் கொலை சம்பவம்: தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை  புதுச்சேரி, DIN Saturday, October 21, 2017 08:50 AM +0530 புதுச்சேரியில் வெடிகுண்டு வீசி 3 ரெளடிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய கொலையாளிகளை தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
 புதுச்சேரி, முத்திரையர்பாளையம் ஜீவா வீதியை சேர்ந்தவர் ஞானசேகர் (24), சண்முகாபுரம் அணைக்கரை வீதியை சேர்ந்தவர் ஜெரால்டு (24). முத்தரையர்பாளையம் காந்தி திருநல்லூரைச் சேர்ந்தவர் சதீஷ் (23). ரௌடிகளான இவர்கள் மூவரும் மேட்டுப்பாளையம் சாரணப்பேட்டையை சேர்ந்த புளியங்கொட்டை ரங்கராஜன்(25), ரகு, மாது ஆகியோருடன் 18-ஆம் தேதி இரவு மேட்டுப்பாளையம் ராம்நகர் முதல் தெருவில் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள இரும்பு பீரோ, கட்டில் செய்யும் சிறு தொழிற்கூடத்தில் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 10-க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் அந்த தொழிற்கூடத்தை சுற்றி வளைத்து நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. தொடர்ந்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது.
 இதில் ஜெரால்டு, ஞானசேகர், சதீஷ் ஆகிய மூவரும் நிகழ்விடத்திலயே பலியாகினர். ரங்கராஜன் பலத்த காயம் அடைந்தார். ரகு லேசான காயமடைந்தார். மாது காயம் ஏதும் இன்றி தப்பிவிட்டார். இந்த கொலை தொடர்பாக மார்டின், லாரன்ஸ், ஸ்ரீபன் மற்றும் சிலர் மீது மேட்டுப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 மேலும், வடக்கு பகுதி எஸ்பி ரச்சனாசிங் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர்கள் தங்கமணி, கண்ணன், நாகராஜ் மற்றும் அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படையினர் புதுச்சேரி மற்றும் தமிழகப்பகுதியான ஆரோவில், கடலுôர் உள்ளிட்ட இடங்களில் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
 ஆனால், கொலைக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை. மார்ட்டினுக்கும், ஞானசேகருக்கும் மாமூல் வசூலிப்பது, யார் பெரியவர் என்பதில் மோதல் ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் அவர்களுக்குள் மீண்டும் பிரச்னை ஏற்பட்டதையடுத்து மார்ட்டின் தனது கூட்டாளிகளுடன், ஞானசேகர் உள்ளிட்ட 3 பேரை கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸாருக்கு எழுந்துள்ளது. மேலும், தமிழகத்தைச் சேர்ந்த ரெளடி ஒருவருக்கு இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு இறந்துபோன ஞானசேகர்,
 ஜெரால்டு, சதீஷ் ஆகியோர் மீது கொலை, அடிதடி போன்ற பல்வேறு வழக்குகள் இருப்பதால் அது தொடர்பாக கொலை நிகழ்ந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/21/3-ரெளடிகள்-கொலை-சம்பவம்-தனிப்படை-போலீஸார்-தீவிர-விசாரணை-2793476.html
2793475 விழுப்புரம் புதுச்சேரி பல்கலை. மாணவர் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றோருக்கு ரங்கசாமி வாழ்த்து  புதுச்சேரி, DIN Saturday, October 21, 2017 08:49 AM +0530 புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற என்.ஆர். காங்கிரஸ் மாணவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ந.ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார்.
 புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர் பேரவை தேர்தலில் மாணவர் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மாணவி நர்மதா வெற்றி பெற்றார். துணைத்தலைவர் பதவிக்கு மாணவி இலக்கியா, மாணவர் விக்னேஷ் ஆகியோரும், செயலாளர் பதவிக்கு மாணவர் பாலமுருகன், இணைச்செயலாளர் பதவிக்கு மாணவர் திலீப் அப்துல்கலாம் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.
 செயற்குழு உறுப்பினர்களான மாணவர்கள் கோகுல்சுந்தர், குணாளன், ஷில்பா கிருஷ்ணன், ஷிப்பா சன்னி, கனிமொழி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
 தேர்தலில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மாணவர் பேரவை தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் 10 மாணவர்கள் என்.ஆர்.காங்கிரஸ் பேரவையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/21/பல்கலை-மாணவர்-பேரவைத்-தேர்தலில்-வெற்றி-பெற்றோருக்கு-ரங்கசாமி-வாழ்த்து-2793475.html
2793474 விழுப்புரம் புதுச்சேரி பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து எம்எல்ஏ தலைமையில் சாலை மறியல்: 250 பேர் கைது  புதுச்சேரி, DIN Saturday, October 21, 2017 08:49 AM +0530 பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து புதுச்சேரி முத்தியால்பேட்டையில், அதிமுக எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் தலைமையில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் நடைபெற்றது. இதுதொடர்பாக 250 பேரை போலீஸார் செய்தனர்.
 பேருந்துக் கட்டணத்தை உயர்த்திய ஆளும் காங்கிரஸ்- திமுக கூட்டணி அரசைக் கண்டித்தும், பேருந்துக் கட்டணத்தை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும் முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகில் அதிமுக கொறடா வையாபுரிமணிகண்டன் எம்.எல்.ஏ தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. இந்த மறியல் போராட்டத்தில் கட்சி நிர்வாகிகள், ஊர் பிரமுகர்கள், தொகுதி மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 அப்போது, வையாபுரி மணிகண்டன் கூறுகையில், பண்டிகை நாளில் பேருந்துக் கட்டணத்தை 110 சதவீதம் அளவுக்கு அரசு உயர்த்தியுள்ளது. இது பேருந்து போக்குவரத்தை பெரிதும் நம்பியுள்ள ஏழை மக்கள், தொழிலாளர்களை துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது. பிற மாநிலங்களை விட புதுச்சேரியில் டீசல், வாகன உதிரிப்பாகங்கள் விலையும் இருக்கை வரியும் குறைவு. எனினும், தனியார் பேருந்து
 நிறுவனங்கள் கூட்டுக் கொள்ளை அடிக்கும் வகையில் அரசு இந்தப் பேருந்துக் கட்டண உயர்வை அறிவித்துள்ளது. இந்த பேருந்து கட்டண உயர்வை உடனடியாக அரசு திரும்பப் பெற வேண்டும் என்றார்.
 மறியலில் ஈடுபட்ட 250-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/21/பேருந்து-கட்டண-உயர்வைக்-கண்டித்து-எம்எல்ஏ-தலைமையில்-சாலை-மறியல்-250-பேர்-கைது-2793474.html
2793461 விழுப்புரம் புதுச்சேரி பிளாஸ்டிக் பையை அப்புறப்படுத்த வணிக நிறுவனங்களுக்குக் கெடு  புதுச்சேரி, DIN Saturday, October 21, 2017 08:42 AM +0530 பிளாஸ்டிக் பை, கப் உள்ளிட்ட பொருள்களை 15 நாள்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
 அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட நகர மற்றும் கிராமப்புறங்களில் தேநீர் விடுதிகள், உணவு விடுதிகளில் துரித உணவகங்கள் போன்றவற்றில் பயன்படுத்தும் அனுமதிக்கப்பட்ட தரம் மற்றும் அளவுக்கு மாறான பிளாஸ்டிக் கப், பேப்பர் கவர்கள் போன்றவற்றை பயன்படுத்தும்போது அந்த பிளாஸ்டிக் பொருட்களால் பொதுமக்களுக்கும் அனைத்து வகையான கால்நடைகளுக்கும் பலவிதங்களில் உடல் உபாதைகளும் பாதிப்புகளும் ஏற்படுகிறது.
 ஊர் முழுவதும் பிளாஸ்டிக் கழிவு குப்பைகளாக காணப்படுகிறது. அவற்றை கழிவு நீர் செல்லும் வாய்க்கால்களில் கொட்டுவதால், அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் செல்லாததால் கொசுக்கள் இனப்பெருக்கம் அதிகமாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக சுகாதார கேடு, டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
 மத்திய அரசின் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகளின்படி, பிளாஸ்டிக் பொருள்களை கையாளும் வணிக நிறுவனங்களே அதனை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தவும் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த அறிவிப்பு கிடைக்க பெற்ற 15 தினங்களுக்குள் தங்கள் உணவு விடுதிகளில் பிளாஸ்டிக் பை, கப் பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ளவோ அல்லது கழிவு பொருள்களை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தி நீர் நிலைகளில் தேங்காவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/21/பிளாஸ்டிக்-பையை-அப்புறப்படுத்த-வணிக-நிறுவனங்களுக்குக்-கெடு-2793461.html
2793460 விழுப்புரம் புதுச்சேரி சுவரொட்டி ஒட்டிய வழக்கு: நீதிமன்றத்தில் அமைச்சர் ஆஜர்  புதுச்சேரி, DIN Saturday, October 21, 2017 08:42 AM +0530 சுவரொட்டி ஒட்டப்பட்ட வழக்கு தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி வெள்ளிக்கிழமை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜரானார்.
 கடந்த 2008ஆம் ஆண்டு அமைச்சராக மல்லாடி கிருஷ்ணாராவ் இருந்தார். அப்போது அவரை விமர்சித்து புதுச்சேரி நகர் பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இது பற்றி அறிந்த மல்லாடி கிருஷ்ணாராவ் புகார் கொடுத்ததையடுத்து, பெரியக்கடை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
 இந்த வழக்கு புதுச்சேரி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இதில் அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி வருகிற 31ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/21/சுவரொட்டி-ஒட்டிய-வழக்கு-நீதிமன்றத்தில்-அமைச்சர்-ஆஜர்-2793460.html
2792854 விழுப்புரம் புதுச்சேரி புதுச்சேரியில் வெடிகுண்டு வீசி 3 ரௌடிகள் கொலை  புதுச்சேரி, DIN Friday, October 20, 2017 09:00 AM +0530 புதுவையில் வியாழக்கிழமை ரெüடிகளிடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டனர். இருவர் காயமடைந்தனர்.
 புதுச்சேரி அருகேயுள்ள முத்தரையர்பாளையம் ஜீவா நகரைச் சேர்ந்தவர் ஞானசேகர் (24). காந்திதிருநல்லூரைச் சேர்ந்தவர் சதீஷ் (23), சண்முகாபுரம் அணைக்கரை வீதியைச் சேர்ந்தவர் ஜெரால்டு (24). இவர்கள் மூவரும் ரௌடிகள்.
 தீபாவளியையொட்டி இவர்களும், சக நண்பர்களான மேட்டுப்பாளையம் சாணரப்பேட்டையைச் சேர்ந்த புளியங்கொட்டை ரங்கராஜன் (25), ரகு, மாது ஆகியோரும் புதன்கிழமை நள்ளிரவு மேட்டுப்பாளையம் ராம்நகர் முதல் தெருவில், குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள இரும்பு பீரோ தயாரிப்பு ஆலையின் காலியிடத்தில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர்.
 அப்போது, அங்கு வந்த ஒரு கும்பல் ஆலையை சுற்றி வளைத்து, ஞானசேகர் உள்ளிட்டோரை நோக்கி நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. இதில், ஜெரால்டு தலை சிதறி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த மற்றவர்கள் அங்கிருந்து தப்பிக்க முயல்வதற்குள், அந்தக் கும்பல் உள்ளே புகுந்து அவர்களைஅரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில், ஞானசேகர், சதீஷ் ஆகிய இருவரும் அங்கேயே உயிரிழந்தனர். புளியங்கொட்டை ரங்கராஜன், ரகு, மாது ஆகியோர் காயங்களுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்களை விரட்டிச் சென்றபடியே அந்தக் கும்பல் தலைமறைவானது. வெடிகுண்டு சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் வசித்த குடியிருப்புவாசிகள் அதிர்ச்சியடைந்து வீட்டின் கதவுகளை மூடிக் கொண்டனர்.
 தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் தங்கமணி, உதவி ஆய்வாளர் இனியன் தலைமையிலான போலீஸார் கொலை நடந்த இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தி சடலங்களை மீட்டு உடல் கூறு ஆய்வுக்காக, புதுவை கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 வழியில் காயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த புளியங்கொட்டை ரங்கராஜன், ரகு ஆகிய இருவரையும் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். முதுநிலை காவல் கண்காணிப்பாளர் சந்திரன், கண்காணிப்பாளர் ரஹீம் உள்ளிட்டோர் நிகழ்விடத்தை நேரில் பார்வையிட்டு விசாரித்தனர்.
 3 தனிப்படைகள்: இந்தக் கொலை தொடர்பாக சண்முகாபுரம் பாரதிபுரம் வடக்கு பகுதியைச் சேர்ந்த மார்ட்டின், லாரன்ஸ், ஸ்ரீபன் ஆகிய மூவரையும் மேட்டுப்பாளையம் போலீஸார் பிடித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் மார்ட்டின், லாரன்ஸ் இருவரும் சகோதரர்கள் என்பதும், கொலை செய்யப்பட்ட ஞானசேகர் தலைமையிலான கும்பலும், லாரன்ஸ் தலைமையிலான கும்பலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம் பகுதி கடைகளில் மாமூல் வசூலித்ததாகக் கூறப்படுகிறது.
 அப்போது இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது. இதனிடையே, வேறொரு கொலை வழக்கில் சிறையில் இருந்து 3 நாள்களுக்கு முன்பு வெளியே வந்த மார்ட்டினிடம் நடந்த சம்பவங்களை லாரன்ஸ் கூறியதாகத் தெரிகிறது.
 இதுகுறித்து ஞானசேகர், சதீஷ் ஆகியோரிடம் சென்று மார்ட்டின் கேட்டுள்ளார். அப்போது மார்ட்டினை அவர்கள் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த மார்ட்டின் முந்திக்கொண்டு ஞானசேகர், சதீஷ் உள்ளிட்டோரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக, அருகே தமிழகப் பகுதியில் உள்ள நண்பர்களை வரவழைத்து, இந்த கொலைச்சம்பவத்தை நிகழ்த்தியதாக போலீஸார் கூறுகின்றனர்.
 ஞானசேகர் மீது 2015ஆம் ஆண்டு சுரேஷ் என்பவரை கொலை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. ஜெரால்டு, சதீஷ் மீதும் கொலை, அடிதடி மோதல் வழக்குகள் உள்ளன. கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/20/புதுச்சேரியில்-வெடிகுண்டு-வீசி-3-ரௌடிகள்-கொலை-2792854.html
2792853 விழுப்புரம் புதுச்சேரி பேருந்து உரிமையாளர்களுக்கு சாதகமான நடவடிக்கை: அதிமுக கண்டனம்  புதுச்சேரி, DIN Friday, October 20, 2017 08:59 AM +0530 புதுவை மாநிலத்தில் பேருந்து உரிமையாளர்களுக்கு சாதகமாக, பேருந்துக் கட்டணத்தை உயர்த்திய காங்கிரஸ் அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.
 இதுகுறித்து புதுவை சட்டப்பேரவை அதிமுக தலைவர் அன்பழகன் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுவை மாநிலத்தில் மக்கள் விரோத ஆட்சி நடத்தும் காங்கிரஸ் அரசு பேருந்துக் கட்டணத்தை 75 சதவீதத்தில் இருந்து 90 சதவீத அளவுக்கு பல்வேறு நிலைகளில் உயர்த்தியுள்ளது. இதன் மூலம் வாக்களித்த மக்களுக்கு தீபாவளி பரிசை வழங்கியுள்ளார் முதலமைச்சர் நாராயணசாமி.
 பேருந்து கட்டண உயர்வு தேவையான ஒன்றாக இருந்தாலும், அரசு, ஆட்டோ கட்டணத்தை நிர்ணயம் செய்த போது சட்டப்பேரவை உறுப்பினர்கள், பல்வேறு அமைப்பினரின் கருத்துகளைக் கேட்டு பொதுமக்களுக்கும், ஆட்டோ உரிமையாளர்களுக்கும் பாதிப்பு இல்லாத வகையில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.
 ஆனால், தற்போது தான்தோன்றித்தனமாக இந்த பேருந்து கட்டண உயர்த்தி அறிவித்திருப்பதை அதிமுக வன்மையாகக் கண்டிக்கிறது. 10 கிலோ மீட்டருக்கு ரூ.4.50 இருந்ததை 6 கிலோ மீட்டருக்கு ரூ.8 ஆகவும், ஒவ்வோரு கிலோ மீட்டருக்கும் 75 பைசா வீதமும் உயர்த்தியுள்ளனர். எவ்வித திட்டமிடலும் இல்லாமல் உள்நோக்கத்தோடு பேருந்து உரிமையாளர்களுக்கு சாதகமாக இந்த முடிவை அரசு எடுத்துள்ளது. பொது மக்களை பாதிக்கக் கூடிய இந்த பேருந்து கட்டண உயர்வுக்கு, காங்கிரஸ் அரசின் அமைச்சரவை தங்களின் சுயநலத்திற்காக உயர்த்தப்பட்ட கட்டண உயர்வுக்கு, ஆளுநர் கிரண் பேடி எந்தவித கருத்தும் கேட்காமல் ஒப்புதல் அளித்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 ஆளும் அரசுக்கு மக்களைப் பற்றி சிறிதளவு கூட கவலை இல்லை. உயர்த்தப்பட்ட பேருந்து கட்டண உயர்வை அரசு நிறுத்தி வைக்க வேண்டும். ஆளுநர் கிரண் பேடி டீசல் விலை வித்தியாசம், காலாண்டு வரி வித்தியாசம் தொடர்பாக உயர் அதிகாரிகளை அழைத்து ஆய்வு செய்து, பேருந்து கட்டணத்தை நேர்மையான முறையில் விதிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 அரசு இதில் பாராமுகமாக இருந்தால், அதிமுக சார்பில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளார்.
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/20/பேருந்து-உரிமையாளர்களுக்கு-சாதகமான-நடவடிக்கை-அதிமுக-கண்டனம்-2792853.html
2792852 விழுப்புரம் புதுச்சேரி பேருந்து கட்டண உயர்வு: மார்க்சிஸ்ட், தவாக கண்டனம்  புதுச்சேரி, DIN Friday, October 20, 2017 08:59 AM +0530 புதுவையில் அரசுப் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து, அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.ராஜாங்கம் வெளியிட்ட அறிக்கை:
 புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு புதிய வரி, கட்டண உயர்வுகளை மக்கள் மீது திணித்து வருகிறது. குறிப்பாக மின்கட்டணம், குடிநீர் கட்டணம், வீட்டுவரி, குப்பைவரி, புதைச் சாக்கடை இணைப்பு வரி என்று, கடுமையாக உயர்த்தியுள்ளது. சிறிய மாநிலமான புதுச்சேரியில் அரசின் போக்குவரத்தை மேம்படுத்தாமல், மக்கள் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளுக்கு அரசு பேருந்தை இயக்காமல், தனியார் பேருந்து முதலாளிகளின் நலனுக்காக இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
 இந்த கட்டண உயர்வுக்கு பின்னால், பேரம் நடந்துள்ளதாக மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. இது சம்பந்தமாக முதல்வர் விளக்கம் அளிக்க வெண்டும். உயர்த்திய பேருந்துக் கட்டணத்தை திரும்பப்பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அக். 23-முதல் ஒருவார காலத்துக்கு பிரசார இயக்கங்கள் நடத்தப்படும் என்று அதில் தெரிவித்துள்ளார்.
 தவாக கண்டனம்: தவாக மாநில அமைப்பாளர் ஸ்ரீதர் வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கடந்த 3 மாதங்களில் ஆட்டோ கட்டணம், வீட்டு வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, மின் கட்டண உயர்வு என பலவித வரியை மக்கள் மீது திணித்தது. தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து அரசு அறிவிப்பது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெறவேண்டும். இல்லையெனில் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று அதில் தெரிவித்துள்ளார் ஸ்ரீதர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/20/பேருந்து-கட்டண-உயர்வு-மார்க்சிஸ்ட்-தவாக-கண்டனம்-2792852.html
2792851 விழுப்புரம் புதுச்சேரி பாலசுப்பிரமணியர் கோயிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்  புதுச்சேரி, DIN Friday, October 20, 2017 08:58 AM +0530 புதுச்சேரி ரயில் நிலையம் அருகே உள்ள ஸ்ரீ கெüசிக பாலசுப்பிரமணியர் கோயிலில் கந்த சஷ்டி விழா வியாழக்கிழமைத் தொடங்கியது.
 புதுச்சேரி கௌசிக பாலசுப்பிரமணியர் கோயிலில் 65-ஆம் ஆண்டு கந்த சஷ்டி விழா வியாழக்கிழமை மாலை விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பாலசுப்பிரமணியரை தரிசித்தனர். தொடர்ந்து, 17 நாள்கள் நடைபெறும் இந்த விழாவின் 6-ஆம் நாளான அக்.25-ஆம் தேதி கந்த சஷ்டி விழா தேரோட்டத்துடன் விமரிசையாக நடைபெற உள்ளது.
 தொடர்ந்து, 7-ஆவது நாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து சமபந்தி போஜனம் நடைபெறும். திருவிழா நாள்களில் தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், அதனைத் தொடர்ந்து சுவாமி உட்புறப்பாடும் நடைபெறும்.
 முக்கிய விழாவான கிருத்திகை வரும் நவ.5ஆம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை ஆலய அர்ச்சகர்கள் ஞானசேகர், ராஜேஷ்குமார், காதர் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
 கெüஸ் என்ற இஸ்லாமியர் முருகன் மேல் கொண்ட பற்றுதலால் இக்கோயிலை கட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/20/பாலசுப்பிரமணியர்-கோயிலில்-கந்த-சஷ்டி-விழா-தொடக்கம்-2792851.html
2792850 விழுப்புரம் புதுச்சேரி பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சாலை மறியல்  புதுச்சேரி, DIN Friday, October 20, 2017 08:58 AM +0530 பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து, புதுச்சேரி அருகே அபிஷேகப்பாக்கத்தில் பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 புதுவை மாநிலத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்தி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, நகரசேவை பேருந்துகளுக்கு முதல் நிலைக்கு குறைந்த பட்சம் ரூ.5-ம், அதன்பிறகு ஒவ்வொரு நிலைக்கும் அதாவது 3 கிலோ மீட்டருக்கு, ரூ.2-ம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
 அரசுப் பேருந்துகளின் கட்டண உயர்வை தொடர்ந்து, தனியார் பேருந்துகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்தது. இது பயணிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 இந்த நிலையில், புதுச்சேரி தவளக்குப்பம் அருகேயுள்ள அபிஷேகப்பாக்கம் பகுதி மக்கள், வியாழக்கிழமை காலை அம்பேத்கர் சிலை சந்திப்பில் தனியார் பேருந்தை சிறைப் பிடித்தனர். அவர்கள், பேருந்து கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தி குரலெழுப்பினர்.
 தொடர்ந்து, புதுச்சேரி தவளக்குப்பம்-அபிஷேகப்பாக்கம் வழித்தடத்தில் வந்த வாகனங்களையும் அவர்கள் அனுமதிக்கவில்லை.
 இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த தவளக்குப்பம் போலீஸார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து கோஷமிட்ட பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட மறுத்தனர்.
 இதனால் 2 மணி நேரத்துக்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து நிகழ்விடத்துக்கு வந்து வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 பேருந்து கட்டண உயர்வு குறித்து, அரசிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்ததையடுத்து, சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/20/பேருந்து-கட்டண-உயர்வைக்-கண்டித்து-சாலை-மறியல்-2792850.html
2792842 விழுப்புரம் புதுச்சேரி மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்: பேருந்து உரிமையாளர்கள் சங்கம்  புதுச்சேரி, DIN Friday, October 20, 2017 08:55 AM +0530 புதுவையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு பேருந்து கட்டண உயர்வு அளிக்கப்பட்டுள்ளதற்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 இது குறித்து, புதுச்சேரி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பாரதிகண்ணன் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடு முழுவதும், டீசல் விலை உயரும்போதெல்லாம், பேருந்துக் கட்டணங்களை உயர்த்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டு வருகிறது. புதுவை மாநிலத்தில் 2012-ல் பேருந்துகளுக்கு கட்டண உயர்வு அனுமதிக்கப்பட்டது. அப்போது 1 கிலோ மீட்டருக்கு 40 பைசாகவும், குறைந்த பட்ச கட்டணமாக 10 கி.மீட்டருக்கு ரூ.5-ம் வசூலிக்க அனுமதிக்கப்பட்டது. அப்போது டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.41.65 ஆக இருந்தது. அதன்பின்னர், 15 நாள்களுக்கு ஒருமுறை விலை நிர்ணயிக்கும் முறை அமலில் இருந்ததால், டீசல் விலை ரூ.59 வரை உயர்ந்துள்ளது.
 இதனால், மோட்டார் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனையடுத்து, எங்கள் சங்கம் சார்பில் கடந்த 2 ஆண்டுகளாக கட்டண உயர்வு வேண்டி அரசிடம் கோரிக்கை வைத்தும் அனுமதியில்லை. டீசல் 2012-ஆம் ஆண்டில் இருந்து தற்போது ரூ.59ஆக உயர்ந்து இருப்பதைப்போல், ஆண்டுக்கான காப்பீடு ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.80 ஆயிரமாகவும், பேருந்து சேசிங் ரூ.12 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாகவும், பேருந்துக் கட்டமைப்பு ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாகவும், டயர் ரூ.29 ஆயிரத்தில் இருந்து ரூ.42 ஆயிரமாகவும் உயர்ந்துள்ளது.
 இதன் காரணமாக தற்போது ஒரு பேருந்தை ஒரு கி.மீட்டர் தொலைவு இயக்க ரூ. 85 பைசா செலவாகிறது என்பதை பட்டியலிட்டு வழங்கினோம். மேற்சொன்ன விலை ஏற்றத்தின் காரணமாக மீண்டும் வலியுறுத்தியதை அடுத்து, அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளது. அதன்படி ஒரு கி.மீட்டருக்கு 75 பைசாவும், குறைந்த பட்ச கட்டணமாக 6 கி.மீட்டருக்கு ரூ.8-ம் என பேருந்து கட்டண உயர்வு அறிவித்துள்ளது.
 அதனால், பேருந்து உரிமையாளர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 5 ஆண்டுகளுக்குப் பிறகு உயர்த்தப்படும் இந்த பேருந்துக் கட்டண உயர்வுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.
 கர்நாடகத்தில் புதுச்சேரியைவிட அதிகமாக கட்டணம் வசூலிக்கப் படுகிறது. தமிழகத்தில் குறைவாக வசூலிக்கப்பட்டாலும், சாதாரண பேருந்துகளை டீலக்ஸ் பேருந்துகள் என்று அறிவித்து கூடுதல் கட்டணம் வசூலிப்பது போன்ற நடவடிக்கைகளை செய்து வருகிறது.
 தமிழகத்தில் கட்டணத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், அரசுப் பேருந்துகளுக்கு காப்பீடு இல்லை. அரசு பேருந்துக் கழகங்கள் கோடி கணக்கில் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. புதுச்சேரி அரசு போக்குவரத்துக் கழகமும் நஷ்டத்தில்தான் இயங்குகிறது. கம்யூனிஸ்ட் ஆட்சி செய்யும் கேரளம் உள்ளிட்ட 2 மாநிலங்களில் கிலோ மீட்டருக்கு ரூ.70 பைசாவுக்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
 புதுச்சேரியில் 246 தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், அதில் 50 பேருந்துகள் கட்டண உயர்வு இல்லாததால் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது கட்டண உயர்வு அளிக்கப்பட்டுள்ளதால் அந்த பேருந்துகளும் இயக்கப்படும் என்றார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/20/மக்கள்-ஆதரவு-அளிக்க-வேண்டும்-பேருந்து-உரிமையாளர்கள்-சங்கம்-2792842.html
2792841 விழுப்புரம் புதுச்சேரி பேருந்துக் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்: திமுக  புதுச்சேரி, DIN Friday, October 20, 2017 08:54 AM +0530 புதுவையில் ஏழை மக்களை கடுமையாகப் பாதிக்கும் அரசுப் பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று திமுக வலியுத்தியுள்ளது.
 இதுதொடர்பாக புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளர் இரா. சிவா எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு அண்மைக்காலமாக மக்கள் விரோத போக்குடன் செயல்பட்டு வருகிறது. வீட்டு வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, மின்சார கட்டண உயர்வு என பலவித வரியை மக்கள் மீது அரசு திணித்து வருகிறது.
 சட்டப்பேரவையிலோ, அமைச்சரவையிலோ இதுபோன்ற முடிவுகளை எடுக்காமல், தன்னிச்சையாக முடிவெடுத்து அறிவித்துள்ளது மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜிஎஸ்டி வரிவிதிப்பால் புதுச்சேரியில் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 வியாபாரம் முழுமையாக முடங்கியுள்ளது. தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.
 ஆண்டுதோறும் வழங்கப்படும் இலவச சர்க்கரை கூட வழங்கப்படவில்லை. மாதந்தோறும் இலவச அரிசி வழங்க முடியவில்லை. இந்த நிலையில், பண்டிகை தினத்தை கசப்படையச் செய்யும் வகையில், பேருந்துக் கட்டணத்தை 100 சதவீதம் உயர்த்தியுள்ளது.
 முதலமைச்சரோ, அமைச்சரோ இந்த அறிவிப்பை வெளியிடாமல், மக்களின் எதிர்ப்பை சமாளிக்க போக்குவரத்துத்துறை அதிகாரியை வைத்து இந்தக் கட்டண உயர்வை வெளியிடச் செய்துள்ளனர். இந்த கட்டண உயர்வு, ஏழை மக்களை கடுமையாக பாதிக்கும்.
 புதுச்சேரியில் மற்ற மாநிலங்களைவிட டீசல் விலை, உதிரிப்பாகங்கள் விலையும் குறைவு. இருக்கை வரியும் குறைவு. இவ்வளவு சலுகைகள் உள்ள நிலையில் 100 சதவீத கட்டண உயர்வு தேவையற்றது. இந்த பேருந்துக் கட்டண உயர்வை திமுக வன்மையாக கண்டிக்கிறது.
 ஏற்கெனவே ஆட்டோக்களின் கட்டணத்தை உயர்த்த குழு அமைத்து, 3 முறை அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டு, விவாதிக்கப்பட்டு இறுதியில் யாருக்கும் பாதிப்பின்றி கட்டணம் அறிவிக்கப்பட்டது. அதேபோல, பேருந்துக் கட்டண உயர்வு குறித்தும் விவாதிக்கப்பட வேண்டும். குறைந்தபட்சமாக 20 சதவீத கட்டணத்தை உயர்த்தினால் போதும். பொதுமக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தன்னிச்சையாக அறிவிக்கப்பட்ட பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாக காங்கிரஸ் அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தவும் திமுக தயங்காது என்பதை எச்சரிக்கையுடன் தெரிவித்துக்கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/20/பேருந்துக்-கட்டண-உயர்வை-திரும்பப்-பெற-வேண்டும்-திமுக-2792841.html
2792839 விழுப்புரம் புதுச்சேரி புதுவையில் வெடிகுண்டு கலாசாரம்: அதிமுக கண்டனம்  புதுச்சேரி, DIN Friday, October 20, 2017 08:54 AM +0530 புதுவையில் வெடிகுண்டு கலாசாரம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளதாக அதிமுக கொறடா வேதனை தெரிவித்துள்ளார்.
 இது குறித்து, அதிமுக சட்டப்பேரவை கொறடா வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கை:
 புதுச்சேரியை ஆளும் மக்கள் விரோத காங்கிரஸ், திமுக கூட்டணி அரசு அனைத்துத்துறையிலும் தோல்வியடைந்துள்ளது. குறிப்பாக, சட்டம்-ஒழுங்கு பற்றி அரசு துளியும் கவலைப்படுவதில்லை. சிறையில் ஆண், பெண் கொலை குற்றவாளிகள் சந்தித்துப் பேசி சதி செய்கின்றனர். அவர்களுக்கு சிறைத்துறை போலீஸார் துணை செல்கின்றனர். விவசாயிகளுக்காக போராடிய சட்டமன்ற உறுப்பினரையே போலீஸார் தாக்கி தடியடி நடத்துகின்றனர்.
 தற்போது வெடிகுண்டு கலாôரமும் தலை தூக்கியுள்ளது. மேட்டுப்பாளையம் ராம்நகரில் 3 பேர் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் புதுச்சேரி மக்களிடையே பெரும் பீதியையும், வேதனையையும் அளித்துள்ளது.
 ஒட்டுமொத்தமாக நலத்திட்டங்கள் நிறுத்தம், சுகாதாரமின்மை, தனியார்மய கொள்கை, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு என புதுச்சேரியை பொட்டல் காடாக காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு மாற்றி வருகிறது என்று தெரிவித்துள்ளார் வையாபுரி மணிகண்டன்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/20/புதுவையில்-வெடிகுண்டு-கலாசாரம்-அதிமுக-கண்டனம்-2792839.html
2792838 விழுப்புரம் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் முதல்வர் திடீர் ஆய்வு  புதுச்சேரி, DIN Friday, October 20, 2017 08:53 AM +0530 புதுச்சேரி அரசு மருத்துவமனையில் முதல்வர் நாராயணசாமி வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
 புதுவை சட்டப் பேரவை வளாகத்துக்கு வியாழக்கிழமை காலை வந்த முதல்வர் வி.நாராயணசாமி, தனது பணிகளுக்கு இடையே திடீரென வெளியே வந்து, அருகே உள்ள அரசு பொது மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். புறநோயாளிகள், உள் நோயாளிகள், அவசர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட இடங்களுக்குச் சென்றவர், அங்கிருந்த நோயாளிகளிடம் சிகிச்சை நிலவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
 மருத்துவர்கள், செவிலியர்கள் முறையாக கவனிக்கிறார்களா, நேரத்துக்கு வருகிறார்களா என்றும் அவர்களிடம் கேட்டறிந்தார். சிகிச்சை நிலவரங்கள் குறித்து, அங்கிருந்த மருத்துவர்கள், செவிலியர்களிடம் விசாரித்தார். சில பிரிவுகளை மட்டுமே பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் நாராயணசாமி, அங்கிருந்து மீண்டும் சட்டப் பேரவை அலுவலகத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.
 ஆய்வின் போது, அமைச்சர் கந்தசாமி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/20/அரசு-மருத்துவமனையில்-முதல்வர்-திடீர்-ஆய்வு-2792838.html
2792837 விழுப்புரம் புதுச்சேரி புதுவை அரசின் ரூ.100 கோடி பிணைய பத்திரங்கள் ஏலம்  புதுச்சேரி DIN Friday, October 20, 2017 08:53 AM +0530 புதுவை அரசின் ரூ.100 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்கள் ஏலம் விடப்படுகின்றன.
 இதுகுறித்து புதுச்சேரி நிதித் துறைச் செயலர் கந்தவேலு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: புதுவை அரசின் மொத்தம் ரூ.100 கோடி மதிப்புள்ள 11 ஆண்டுகால பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய அரசு முன்வந்துள்ளது. இந்த பிணைய பத்திரங்கள் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரத்துக்கும் அதன் பிறகு ரூ.10 ஆயிரத்தின் மடங்குகளிலும் ஏலம் விடப்படும். இந்திய ரிசர்வ் வங்கியின் மும்பை (கோட்டை) அலுவலகம் அக்டோபர் 24-ஆம் தேதி இந்த ஏலத்தை நடத்தும்.
 ஆர்வமுள்ளவர்கள், நிறுவனங்கள், கூட்டமைப்பு குழுமங்கள், நிதி நிறுவனங்கள், வருங்கால வைப்பு நிதி நிறுவனங்கள், பொறுப்புரிமை நிதியங்கள், கூட்டுறவு வங்கிகள், பிராந்திய ஊரக வங்கிகள் முதலியன ஓர் கூட்டுப் போட்டியில்லா ஏலத்தை அவரை சார்ந்த அனைத்து கூறுகளுக்கும் மின்னணு முறையில் பேசி, முடிவு செய்த இந்திய ரிசர்வ் வங்கியின் உட்பிரிவு வங்கியில் தீர்வு மூலம் மும்பை கோட்டையில் அமைந்துள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் இணையதள முகவரியில் அக்.24ஆம் தேதி காலை 10.30 மணி முதல் 11.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
 போட்டி ஏலத்தில் பங்கு பெறும் உறுப்பினர்கள் மின்னணு முறையில், அக்.24 மதியம் 12 மணிக்கு முன்பு சமர்ப்பிக்க வேண்டும். ஏலத்தின் முடிவுகள் 24-ஆம் தேதி மும்பை கோட்டையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி தனது இணையதள முகவரியில் வெளியிடும்.
 ஏலம் கிடைக்கப் பெற்றவர்கள் தங்களது ஏலங்களில் தெரிவிக்கப்பட்ட பிணைய பத்திரங்களுக்கான விலையை இந்திய ரிசர்வ் மும்பை (கோட்டை) அல்லது சென்னையில் செலுத்தத்தக்க வகையிலான வங்கியாளர் காசோலை அல்லது கேட்பு வரைவோலையை அக்25ஆம் தேதி வங்கி பணி நேரம் முடிவதற்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த அரசு பிணைய பத்திரங்களுக்கு ஏலத்தில் இந்திய ரிசர்வ் வங்கியால் தீர்மானிக்கப்படக் கூடிய விதத்தில் வட்டி வழங்கப்படும். இந்த வட்டி 6 மாதத்துக்கு ஒரு முறை, அதாவது ஏப்ரல் 25 மற்றும் அக்டோபர் 25 ஆகிய தேதிகளில் வழங்கப்படும். இந்த பிணைய பத்திரங்கள் மாற்றி கொடுக்கத்தக்கத் தகுதியுடையதாகும் என்று அதில் தெரிவித்துள்ளார் நிதித் துறைச் செயலர் கந்தவேலு.
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/20/புதுவை-அரசின்-ரூ100-கோடி-பிணைய-பத்திரங்கள்-ஏலம்-2792837.html
2792001 விழுப்புரம் புதுச்சேரி தொழில் நிறுவனங்களுக்கு மாசுக் கட்டுப்பாட்டு குழுமம் அறிவுறுத்தல் DIN DIN Wednesday, October 18, 2017 12:54 AM +0530 புதுச்சேரியில் உள்ள தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் தங்கள் வளாகங்களில் டெங்கு காய்ச்சல் ஏற்படுத்தும் கொசுவை உற்பத்தி செய்யும் வகையில் நீர் தேங்கியிருப்பதை தடுக்க வேண்டும் என புதுவை மாசுக்கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலாளர் துவாரகநாத் அறிவுறுத்தினார்.
இதுதொடர்பாக அவர் அனைத்துத் தொழிற்சாலைகள், நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-
டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசு உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் வகையில் தங்கள் வளாகத்திற்குள் எந்தப்பகுதியிலும் நீர் தேங்கி வைத்திருக்கக்கூடாது, இதற்காக ஊழியர்களைக் கொண்டு துப்புரவுப் பணியை மேற்கொள்ள வேண்டும்.
 வாரத்துக்கு ஒரு முறையாவது இந்தத் துப்புரவுப் பணி நடைபெற வேண்டும், துப்புரவுப் பணி செய்வது குறித்து புகைப்படங்களை எடுத்து மாசுக்கட்டுப்பாட்டு குழும இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.  மேலும், தொழிலாளர்கள், அலுவலர்களையும் தங்களது வீடுகளில் இதுபோன்ற துப்புரவுப் பணி மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.
தூய்மைப்பணிக்காக அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது.
 இந்தக் குழு உங்களது நிறுவனத்தை ஆய்வு செய்யும், அப்போது கொசு உற்பத்தியை தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது தெரியவந்தால் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/18/தொழில்-நிறுவனங்களுக்கு-மாசுக்-கட்டுப்பாட்டு-குழுமம்-அறிவுறுத்தல்-2792001.html
2791999 விழுப்புரம் புதுச்சேரி புதுவை ஆட்சி நிர்வாகத்தை காக்க தேசிய மீனவர் பேரவை கோரிக்கை DIN DIN Wednesday, October 18, 2017 12:54 AM +0530 புதுவை மாநில மக்கள் மற்றும் அரசைக் காக்க ஏதுவாக தகுதியான ஒருவரை ஆளுநராக நியமிக்க வேண்டும் என தேசிய மீனவர் பேரவைத் தலைவர் மா.இளங்கோ கோரியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: புதுச்சேரியில் புதிய அரசு, துணை நிலை ஆளுநர் பொறுப்பேற்ற கடந்த 16 மாதங்களாக ஆட்சி நிர்வாகம் முறையாக செயல்பட முடியாத ஒரு அசாதாரண சூழ்நிலை நீடித்து வருகிறது. உயர் அதிகாரிகளும், இரண்டாம் நிலை அதிகாரிகளும் செய்வது அறியாமல் குழம்பிப்போய் உள்ளனர். குறிப்பிட்ட அமைச்சர்களின் துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டாம். செலவினங்களை அனுமதிக்க வேண்டாம்  என்று மாநில அரசு நிதித்துறை செயலாளருக்கு துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளதாக குற்றச்சாட்டு பகிரங்கமாக கூறப்படுகிறது. அனைத்துத் தரப்பு மக்களும் தங்களுக்குரிய திட்டங்களில்  பலன் உரிய நேரத்தில் கிடைக்காமல் பெரும் துயரத்துக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலை நீடிப்பது மக்களாட்சி தத்துவத்தையே சீர்குலைப்பதாகும்.
எனவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு முறையாக செயல்பட அனுமதிக்குமாறு துணை நிலை ஆளுநருக்கு அறிவுறுத்த வேண்டும்.  புதுச்சேரி மாநிலத்தில் சுமுகமான சூழலில் ஆட்சி நிர்வாகம் நடைபெறச் செய்ய வேண்டிய பொறுப்பு மத்திய அரசு உள்துறை அமைச்சகத்திடமும், குடியரசுத் தலைவரின் கையில் தான் உள்ளது.
எனவே, தாங்களும், மத்திய அரசும் தகுதியான வேறு ஒருவரை புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக நியமித்து புதுச்சேரி அரசையும், மக்களையும் காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் இளங்கோ.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/18/புதுவை-ஆட்சி-நிர்வாகத்தை-காக்க-தேசிய-மீனவர்-பேரவை-கோரிக்கை-2791999.html
2791997 விழுப்புரம் புதுச்சேரி புதுவையில் பூக்கள் விலை கடும் உயர்வு DIN DIN Wednesday, October 18, 2017 12:54 AM +0530 தீபாவளி பண்டிகை எதிரொலி மற்றும் வரத்துக் குறைவு காரணமாக, புதுச்சேரியில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
தீபாவளிப் பண்டிகை புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக வியாழக்கிழமை வீடுகளில் நோன்பு நடைபெறும். பண்டைய காலம் முதல் தீபாவளி நோன்பு மற்றும் அமாவாசை நோன்பு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நோன்பு மூலம் குடும்பம் வளம் பெறும் என்பது பொதுமக்களின் ஐதீகம்.
நோன்பு எடுக்கும் குடும்பப் பெண்கள் விரதம் மேற்கொண்டு பலகாரங்கள்செய்து கோயிலுக்கு சென்று வழிபடுவர். அதன் பின்னர் வீட்டில் சாமிக்கு படையலிட்டு விரதத்தை முடிப்பர். அதுவரை உணவு எதுவும் சாப்பிட மாட்டார்கள்.
இந்த நோன்பு பண்டிகைக்காக பிரத்யேகமாக புதுவை பெரிய மார்க்கெட் உள்பட அனைத்து மார்க்கெட்டுகளிலும் பூஜை பொருள்கள் விற்கப்படுகின்றன. குறிப்பாக, நோன்பு பண்டிகைக்காக வில்வப் பூ அதிகம் விற்பனை செய்யப்படும்.
மேலும், பல வண்ணங்களில் நோன்பு கயிறு அவரவர்கள் குல மரபுப்படி கறுப்பு இல்லாத நோன்பு கயிறு, சுங்கு வைத்த நோன்பு கயிறு, மணி வைத்த நோன்பு கயிறு என பல விதங்களில் விற்கப்படுகின்றன.
அதுபோல எண்ணிக்கை அடிப்படையிலும் பூஜை பொருள்களை வாங்கி பூஜை செய்வர். மேலும் காய்கறி வகைகளையும் எண்ணிக்கை அடிப்படையிலேயே வாங்கி சமையல் செய்வது வழக்கம்.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மல்லிகைப் பூ விலை கிலோ ரூ.800 ஆகவும், முல்லை அரும்பு ரூ.700 ஆகவும், கனகாம்பரம் ரூ.1000 ஆகவும், சம்பங்கி ரூ.60 ஆகவும், சாமந்தி ரூ.100 ஆகவும், ரோஜா ரூ.200 ஆகவும், வாடாமல்லி ரூ.100 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டன.
இதில் மல்லி, முல்லை, கனகாம்பரம் பூக்கள் விலை திங்கள்கிழமை விலையைக் காட்டிலும் ரூ.200
முதல் 300 வரை உயர்ந்து காணப்பட்டது. புதுவை பெரிய மார்க்கெட்டில் பூக்கள், பூஜைப் பொருள்களை வாங்குவதற்காக ஏராளமானோர் குவிந்திருந்தனர். இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. ஏராளமான போலீஸார் ஆங்காங்கே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தமிழகப் பகுதியான திண்டிவனம், கடலூர், திருவண்ணாமலை, பெங்களூர் பகுதிகளில் இருந்தும் இங்கு பூக்கள் விற்பனைக்கு வருகிறது. எனினும், பூக்களின் வரத்து குறைந்ததாலும், தேவை அதிகரிப்பாலும் பூக்களின் விலை  உயர்ந்திருந்தது.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/18/புதுவையில்-பூக்கள்-விலை-கடும்-உயர்வு-2791997.html
2791995 விழுப்புரம் புதுச்சேரி தீபாவளி பண்டிகை: ஆளுநர், முதல்வர், தலைவர்கள் வாழ்த்து DIN DIN Wednesday, October 18, 2017 12:53 AM +0530 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி துணை நிலை ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள், பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
துணை நிலை ஆளுநர் கிரண்பேடி: தீபங்களின் விழா எனப்படும் தீபாவளி இந்திய மக்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தீய சக்திகள் மீதான கடவுளின் வெற்றி, தர்மத்தின் வெற்றியை பறைசாற்றுகிறது. நல்ல செயல்கள் மூலம் நமது வாழ்க்கையில் வெளிச்சம் ஏற்படுவதை தீபாவளி குறிக்கிறது. இந்த தீபஒளி திருநாள் பொதுமக்களின் வாழ்வில் மகிழ்ச்சி, ஆரோக்கியம், வளத்தை கிடைக்கச் செய்ய வேண்டும். புதுவை மாநில மற்றும் ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்.
முதல்வர் நாராயணசாமி:
தீயவை அகன்று நல்லவை நிகழ நாட்டு மக்கள் தீபஒளி ஏற்றி மிக விமரிசையாகக் கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளியாகும். இத்திருநாளை சிறிய மாநிலமான புதுச்சேரியில் ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசமில்லாமல் கொண்டாடி மகிழ்வர். மாநிலத்தில் உள்ள அனைத்துத் தரப்பினரின் வாழ்க்கை வளம் பெற வேண்டும் என நாம் ஒருங்கிணைந்து பாடுபடும் இந்த வேளையில், மக்கள் நலத் திட்டங்களை முடக்க சில சக்திகள் செயல்படுகின்றன. அந்த தடைகளை களைந்து மாநிலத்தில் வளர்ச்சி பெறுவோம் என்ற சூளுரையை இந்த நாளில் நாம் அனைவரும் ஏற்போம்.
சட்டப்பேரவைத் தலைவர் வைத்திலிங்கம்: தீபாவளி திருநாளில் வீடுகளில் ஏற்றும் தீப ஒளி, நமது உள்ளத்திலும் ஏற்பட வேண்டும். அதாவது நமது மனதில் உள்ள இருள் என்னும் தீமைகள் ஒழிந்து, வெளிச்சம் எனும் நன்மைகள் ஏற்பட வேண்டும். தீமையையும், அதர்மத்தையும் அழித்து நன்மையையும், தர்மத்தையும் நிலைநாட்டும் வலிமையும் கிடைக்க வேண்டும். இத்தீபாவளித் திருநாள் புதுச்சேரி யூனியன் பிரதேச மக்கள் அனைவருக்கும் ஆரோக்கியமான உடல் நலம், செல்வம், அறிவு, மகிழ்ச்சி ஆகியவைகளை கொண்டுவருவதாக அமையட்டும்.
வருவாய்த் துறை அமைச்சர் எப்.ஷாஜஹான்: உலக மக்களை ஒன்றிணைக்கும் தீபத்திருநாளாம் இந்த நன்னாளில் கடந்த கால கசப்பான எண்ணங்கள் புஸ்வாணம் போல அகன்று, இனிமையான மத்தாப்பு போல் வண்ணங்கள் வாழ்வில் ஒளிவீசட்டும். புதுவை வாழ் மக்களின் உள்ளங்களிலும் அவர்கள் இல்லங்களிலும் மகிழ்ச்சி வெள்ளம் தீப ஒளியாய்ப் பரவட்டும். மக்கள் அடிப்படைத் தேவைகள் நிறைவேறி வாழ்வாதாரம் உயர்ந்து தீமைகள் அகன்று புதுவை மாநில மக்கள் வாழ்நாளில் நன்மைகள் பெருக வாழ்த்துகள்.
நலத்துறை அமைச்சர் மு.கந்தசாமி: தீப ஒளித்திருநாளாம் தீபாவளிப் பண்டிகையை மொழி, மத, இன வேறுபாடின்றி சகோதரத்துவ மனப்பான்மையுடன் கொண்டாடி மகிழ்வோம். நாட்டின் முன்னேற்றத்துக்கும், மாநில வளர்ச்சிக்கும், முதுகெலும்பாய் விளங்கும் விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள், கட்டுமான தொழிலாளர்கள், வியாபாரிகள் என அனைவருக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துகள்.
ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.பி.: இந்திய கலாச்சாரத்தோடு பின்னிப்பிணைந்த  இந்த தீப ஒளித்
திருநாளில் வாழ்வில் சூழ்ந்த இருள் விலகிட அனைவரது இல்லங்களிலும் தீமை எனும் இருள் அகற்றி நன்மை எனும் ஒளி தீபத்தை ஏற்றுவோம்.   
மத, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து, சமத்துவம், சகோதரத்துவம் போற்ற  இந்நாளில் சபதமேற்போம் .  நம் இன்னல்கள் அகல, நம் எதிர்கால புதுச்சேரி வளமாக, இந்த நன்னாளை நம்பிக்கை தீபாவளியாக இனிதே கொண்டாடி மகிழ்வோம்.
அரசுக் கொறடா அனந்தராமன்: தீமை அழிந்து நன்மை வென்றதின் அடையாளமாக தீபாவளித் திருநாள் ஆண்டுதோறும் நாட்டு மக்களால் எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும் கொண்டாடப்படுகிறது. தீப ஒளியானது இருளை விலக்கி வெளிச்சத்தை அளிப்பதைப் போல் மக்களிடையே வறுமை, இல்லாமை , ஏற்றத்தாழ்வு போன்ற இருள்கள் நீங்கி அனைவரும் அனைத்து வளமும் பெற்றிட வேண்டும்.
கோகுலகிருஷ்ணன் எம்.பி.: நல்ல எண்ணங்கள் என்ற தீபத்தை ஏற்றி இருள் என்ற தீமையை அழிப்பதே தீபாவளியாகும். மக்களுக்கு துன்பம் தந்த நரகாசூரனை திருமால் அழித்தார். அதுபோல் நமக்கு துன்ம் விளைவிக்கும் அறியாமை, இயலாமை, பொறாமை, சூழ்ச்சி, சினம் போன்ற அகறவும், ஒளிமயமான, வண்ணமயமான எதிர்காலம் பிறக்க இத்திருநாளில் பிரார்த்திப்போம்.
அன்பழகன் எம்.எல்.ஏ.:  காலம் தொட்டு கொண்டாடப்படும் தீபாவளி திருநாளில், மனமாட்சியங்களை மறந்து உற்றார், உறவுகள் அனைவரும் இணைந்து கொண்டாடப்படும் இந்நாளில் அனைவரின் இதயங்களிலும் மகிழ்ச்சி ஒளியாக ஒளிர வாழ்த்துகள்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/18/தீபாவளி-பண்டிகை-ஆளுநர்-முதல்வர்-தலைவர்கள்-வாழ்த்து-2791995.html
2791988 விழுப்புரம் புதுச்சேரி மரத்தை வெட்டிய இளைஞர் கீழே விழுந்து சாவு DIN DIN Wednesday, October 18, 2017 12:52 AM +0530 பாகூர் அருகே மரத்தை வெட்டிய இளைஞர் கீழே விழுந்து உயிரிழந்தார்.
பாகூர் கரையாம்புத்தூர் ரைஸ்மில்வீதியை சேர்ந்தவர் சிவராமன் மகன் பிரபாகரன் (25). வெளிநாட்டில் பொறியாளராக வேலை பார்த்து வந்த இவர், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு புதுச்சேரி வந்தார்.
இந்த நிலையில்  ஞாயிற்றுக்கிழமை வீட்டின் தோட்டத்தில் இருந்த பூவரசம் மரத்தை வெட்டிக்கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி அவர் கீழே விழுந்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு புதுவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/18/மரத்தை-வெட்டிய-இளைஞர்-கீழே-விழுந்து-சாவு-2791988.html
2791986 விழுப்புரம் புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் தர்னா DIN DIN Wednesday, October 18, 2017 12:52 AM +0530 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் சார்பில் தலைமை தபால் நிலையம் முன் செவ்வாய்க்கிழமை தர்னா போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள உள்ளாட்சி, தன்னாட்சி, அரசு சார்பு நிறுவனங்கள் மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வலியுறுத்தியும். மத்திய அரசிடமிருந்து புதுச்சேரி அரசு வாங்கிய ரூ.6 ஆயிரம் கோடி கடனை மத்திய அரசு உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும், அரசு ஊழியர் சம்மேளனம் முன்வைத்துள்ள 31 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற தர்னா போராட்டத்துக்கு சம்மேளன தலைவர் மு.சீத்தாராமன் தலைமை தாங்கினார். கெளரவத் தலைவர் சிஎச்.பாலமோகனன் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் கே.ராதாகிருஷ்ணன், ரவிச்சந்திரன், வெ.செல்வன், மோகன கிருஷ்ணன், பிரேமதாசன், கண்டன உரையாற்றினர். பொருளாளர் கிறிஸ்டோபர் நன்றி கூறினார்.
இதில் பல்வேறு அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரியும் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி குரல் எழுப்பினர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/18/அரசு-ஊழியர்-சங்கங்களின்-சம்மேளனம்-தர்னா-2791986.html
2791984 விழுப்புரம் புதுச்சேரி டெங்கு விழிப்புணர்வுப் பேரணி DIN DIN Wednesday, October 18, 2017 12:51 AM +0530 நெல்லித்தோப்பு பகுதியில் மகாத்மா காந்தி அரசு நடுநிலைப் பள்ளி சார்பில் டெங்கு விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் பாஸ்கரராசு பேரணியைத் தொடங்கி வைத்தார். ஆசிரியர்கள் கிருஷ்ணராஜ், ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். முதலியார்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மணிமொழி டெங்கு காய்ச்சல் ஏற்படும் விதம், பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவரித்தார்.
நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் நெல்லித்தோப்பு, பெரியார் நகர் வீதிகள் வழியாக பேரணியாக சென்றனர். சுகாதார ஆய்வாளர்கள் மதிவாணன், தமிழன்பன், ஆசிரியர்கள் அமலோற்பவமேரி, மேரி மார்க்கிரெட், மதனகோபால், பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/18/டெங்கு-விழிப்புணர்வுப்-பேரணி-2791984.html
2791982 விழுப்புரம் புதுச்சேரி புதுச்சேரியில் அதிமுக 46-ஆவது ஆண்டு தொடக்க விழா DIN DIN Wednesday, October 18, 2017 12:51 AM +0530 புதுச்சேரியில் அதிமுகவின் 46-ஆவது ஆண்டு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
டாக்டர் அம்பேத்கர் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் ஆ.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். எம்.எல்.ஏக்கள் பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் முன்னிலை வகித்தனர்.
எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மாநில நிர்வாகிகள் சுத்துக்கேணி பாஸ்கர், கணேசன், பன்னீர்செல்வி, நாகமணி, நகர செயலர்கள் ரவீந்திரன், அன்பானந்தன், ஞானவேல், கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.
இதே போல நெல்லித்தோப்பு லெனின் விதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் தலைமை தாங்கினார். அண்ணா, எம்.ஜிஆர், ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் புதிய பேருந்து நிலையம் அருகே எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கினார்.
சாதாரண தொண்டனையும் கோட்டைக்கு அனுப்பியவர் ஜெயலலிதா. முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓபிஎஸ் இணைந்து இரட்டை இலையை மீட்டுத் தருவர்.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும் என்றார். முன்னாள் அமைச்சர் காசிலிங்கம், முன்னாள் எம்.பி.ராமதாஸ், முன்னாள் எம்.எல்.ஏ. பெரியசாமி, நிர்வாகிகள் கோவிந்தம்மாள், இந்திரா முனுசாமி, வெரோனிக்கா, நந்தன், உள்பட பலர் பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/18/புதுச்சேரியில்-அதிமுக-46-ஆவது-ஆண்டு-தொடக்க-விழா-2791982.html
2791981 விழுப்புரம் புதுச்சேரி புதுச்சேரி பல்கலை. மாணவர் பேரவை புதிய நிர்வாகிகளுக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து DIN DIN Wednesday, October 18, 2017 12:46 AM +0530 புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக மாணவர் அணியைச் சேர்ந்த தலைவர் நர்மதா தலைமையிலான குழுவினர் சென்னையில்  திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினை திங்கள்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாணவர் பேரவை தேர்தல் கடந்த 14-ஆம் தேதி நடைபெற்றது.   இதில் பல்கலைக்கழக மாணவர் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திமுக மாணவர் அணியை சேர்ந்த மாணவி நர்மதா வெற்றி பெற்றார்.
துணைத் தலைவர் பதவிக்கு இலக்கியா, விக்னேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். செயலாளராக பாலமுருகன், இணைச் செயலாளர் திலீப் அப்துல் கலாம், செயற்குழு உறுப்பினர்களாக அன்பரசு, கோகுல் சுந்தர், குணாளன், கனிமொழி, ஷில்பா சுன்னி, ஷில்பா கிருஷ்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பல்கலைக் கழக வரலாற்றில் திமுக-வை சேர்ந்தவர் முதல் முறையாக தலைவராக தேர்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவர் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பேரவைத் தலைவர் நர்மதா தலைமையிலான குழுவினர் தெற்கு மாநில அமைப்பாளர் இரா. சிவா, எம்.எல்.ஏ., தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது பல்கலைக் கழக பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி, குணாதிலீபன், அமுதாகுமார், தொகுதி செயலாளர் சக்திவேல், மாணவர் அணி அமைப்பாளர் மணிமாறன் உடனிருந்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/18/புதுச்சேரி-பல்கலை-மாணவர்-பேரவை-புதிய-நிர்வாகிகளுக்கு-முக-ஸ்டாலின்-வாழ்த்து-2791981.html
2791980 விழுப்புரம் புதுச்சேரி டெங்கு இல்லா தீபாவளி: சுகாதாரத் துறையினருக்கு ஆளுநர் அறிவுரை DIN DIN Wednesday, October 18, 2017 12:46 AM +0530 புதுச்சேரியில் மக்கள் டெங்கு இல்லாத தீபாவளியைக் கொண்டாட சுகாதாரத் துறையினர் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று துணை நிலை ஆளுநர் கிரண் பேடிஅறிவுறுத்தினார்.
புதுச்சேரியில் ஆளுநர் கிரண் பேடி பல்வேறு துறைகளுக்கு நேரில் சென்று ஊழியர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார். செவ்வாய்க்கிழமை அவர், புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்கள், ஊழியர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.
கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் ராமன் உள்ளிட்ட ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய துணை நிலை ஆளுநர், புதுச்சேரியில் டெங்கு அதிகமாக பரவி வருகிறது.
டெங்கு இல்லாத வகையில் நாம் பணியாற்ற வேண்டும். முன்னெச்சரிக்கையாக இருந்தால் டெங்கு இல்லாத தீபாவளியாக இருக்கும். சுகாதாரத் துறையினர் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றார்.
அதே போல காவல் துறை, வருவாய்த் துறை, கூட்டுறவு, நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து துறை ஊழியர்களுக்கும் கிரண் பேடி வாழ்த்து தெரிவித்தார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/18/டெங்கு-இல்லா-தீபாவளி-சுகாதாரத்-துறையினருக்கு-ஆளுநர்-அறிவுரை-2791980.html
2791979 விழுப்புரம் புதுச்சேரி திருவண்ணாமலை இளைஞர் புதுச்சேரியில் தற்கொலை DIN DIN Wednesday, October 18, 2017 12:46 AM +0530 புதுவை அருகே திருவண்ணாமலையைச் சேர்ந்த இளைஞர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் மாப்பாக்கத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் பாபு (29). புதுவை மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், முத்திரையர்பாளையம் காந்திதிருநெல்லூர் ஓடை வீதியில் தனியாக வாடகைக்கு தங்கியிருந்தார்.
இந்த நிலையில், கடந்த 2 நாள்களாக அவரது வீடு பூட்டியே கிடந்து உள்ளது.  வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே, வீட்டின் உரிமையாளர் இசைமணி பூட்டை உடைத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது, தூக்கிட்ட நிலையில் பாபு இறந்து கிடந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் மேட்டுப்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் இனியன் மற்றும் போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாபு காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/18/திருவண்ணாமலை-இளைஞர்-புதுச்சேரியில்-தற்கொலை-2791979.html
2791845 விழுப்புரம் புதுச்சேரி புதுவை முதல்வரின் தீபாவளி பரிசுப் பொருள்களை அதிகாரிகள் திருப்பி அனுப்பியதாக ஆளுநர் தகவல்  புதுச்சேரி, DIN Tuesday, October 17, 2017 09:21 AM +0530 புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அனுப்பிய தீபாவளி பரிசுப் பொருள்களை அரசு அதிகாரிகள் திருப்பி அனுப்பிவிட்டதாக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது; தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரியில் பல்வேறு அரசு துறைகளில் உள்ள அதிகாரிகள் சிலருக்கு முதல்வர் நாராயணசாமி பரிசுப் பொருள்களை அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.

பலர் இந்த பரிசுப் பொருள்களை ஏற்க மறுத்து திருப்பி அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரி ஒருவர் எனக்கு (கிரண் பேடி) அனுப்பிய குறுஞ்செய்தியில், முதல்வர் நாராயணசாமி தனக்கு அனுப்பிய தீபாவளி பரிசுப் பொருள்களை திருப்பி அனுப்பிவிட்டதாகவும், தன்னைப் போல மற்ற அதிகாரிகளும் பரிசுப் பொருள்களை ஏற்கவில்லை என்றும் இந்த பணத்தை ஏழைகளுக்காக செலவு செய்தால் அவர்கள் பயன்பெறுவர் என்றும் குறிப்பிட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார் ஆளுநர் கிரண் பேடி.

யாரிடமும் அதிகாரிகள் பரிசுப் பொருள்கள் பெறக் கூடாது. அவ்வாறு பெற்றால் அது குற்றமாகக் கருதப்படும் என்று துணை நிலை ஆளுநர் கிரண் பேடி அரசு அதிகாரிகளுக்கு இரு நாள்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/5/w600X390/kiran-bedi.jpg http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/17/புதுவை-முதல்வரின்-தீபாவளி-பரிசுப்-பொருள்களை-அதிகாரிகள்-திருப்பி-அனுப்பியதாக-ஆளுநர்-தகவல்-2791845.html
2791842 விழுப்புரம் புதுச்சேரி புதுச்சேரியில் "மெர்சல்' பட பதாகைகளை அகற்ற விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு: பாதியிலேயே திரும்பிச் சென்ற நகராட்சி அதிகாரிகள்  புதுச்சேரி, DIN Tuesday, October 17, 2017 08:57 AM +0530 புதுச்சேரியில் "மெர்சல்' பட பதாகைகளை அகற்றுவதற்கு, நடிகர் விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், திங்கள்கிழமை பாதியிலேயே நகராட்சி அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நடிகர் விஜய் நடித்துள்ள "மெர்சல்' திரைப்படம் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பே பதாகைகளை வைத்துள்ளனர். இந்த நிலையில், அந்தத் திரைப்படம் வெளியாகும் திரையரங்க வாயில்களில் பதாகைகளை வைத்து வருகின்றனர்.

புதுச்சேரியில் பதாகைகள், கட் அவுட்கள் வைப்பதற்கு அரசின் தடை உள்ளது. இதற்கிடையே திடீரென புதுச்சேரி நகராட்சி ஆணையர் கணேசன் விஜய் ரசிகர்கள் வைத்திருந்த பதாகைகளை அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதனையடுத்து நகராட்சி அதிகாரிகள் புதுச்சேரி அண்ணா சாலையில் வைக்கப்பட்டிருந்த "மெர்சல்' படத்தின் பதாகைகளை அகற்றினர்.

இதுகுறித்து அறிந்த நடிகர் விஜய் ரசிகர்கள் அங்கு திரண்டு வந்தனர். பதாகைகளை அகற்றுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அரசியல்வாதிகள் உள்பட பலரது பதாகைகள் பல மாதங்களாக அகற்றப்படாமல் இருக்கும் போது விஜய் பட பதாகைகளை மட்டும் அகற்றுவது ஏன் என கேள்வி எழுப்பினர். இதற்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் அதிகாரிகள் விழித்தனர்.

இதனைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் பதாகைகளை அகற்றுவதற்கு கண்டனம் தெரிவித்து, அண்ணா சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர். அதேசமயம் அங்கு போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து அதிகாரிகள் பதாகைகளை அகற்றுவதை பாதியிலேயே கைவிட்டு திரும்பிச் சென்றனர்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/10/w600X390/mersal_100xx.jpg http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/17/புதுச்சேரியில்-மெர்சல்-பட-பதாகைகளை-அகற்ற-விஜய்-ரசிகர்கள்-எதிர்ப்பு-பாதியிலேயே-திரும்பிச்-சென்ற-நக-2791842.html
2791234 விழுப்புரம் புதுச்சேரி டெங்கு பாதிப்பைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பும் அவசியம்: மத்தியக் குழு தலைவர்  புதுச்சேரி, DIN Monday, October 16, 2017 08:53 AM +0530 டெங்கு பாதிப்பைக் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என்று, புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்ட மத்தியக் குழுவினர் தெரிவித்தனர்.
 தமிழகம், புதுவையில் டெங்கு பாதிப்பு கடுமையாகி வருகிறது. இந்த நிலையில், டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய நிபுணர் குழு கடந்த 13-ஆம் தேதி சென்னை வந்தது.
 தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் பொது மருத்துவத் துறை பேராசிரியர் அசுதோஷ் விஸ்வாஸ், தேசிய தொற்றுநோய் தடுப்புத் திட்டத்தின் இணை இயக்குநர் கல்பனா பரூவா, தில்லி கே.எஸ்.சி.எச். மருத்துவமனையின் குழந்தைகள் நலத் துறை இணை பேராசிரியர் சுவாதி துப்ளிஷ், பூச்சியல் வல்லுநர் வினய் கார்க் மற்றும் தேசிய தொற்றுநோய் தடுப்பு திட்டத்தின் ஆலோசகர் கௌசல் குமார், தமிழக குடும்ப நலத் துறை மண்டல முதுநிலை இயக்குநர் ரோஷிணி ஆர்தர் ஆகியோர் இடம் பெற்றுள்ள இந்தக் குழு தமிழகத்தில் ஆய்வை முடித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை புதுவையில் ஆய்வு செய்தது.
 புதுவையிலும் டெங்கு காய்ச்சலுக்கு 2500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
 ஆய்வின் ஒரு பகுதியாக தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜஹான், லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ., தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதா, அரசுச் செயலாளர்கள் கந்தவேலு, மிகிர்வரதன், சுந்தரவடிவேலு, மாவட்ட ஆட்சியர் இ.வல்லவன், ஜிப்மர் இயக்குநர் எஸ்.சி.பரிஜா, சுகாதார இயக்குநர் கே.வி.ராமன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 டெங்கு பாதிப்பை குறைக்கும் வகையில் மாநில அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக மத்தியக் குழுவிடம் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் எடுத்துக் கூறினர். மேலும், தடுப்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதியுதவி, மருத்துவ உபகரணங்கள் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
 சமூகத்தின் ஒத்துழைப்பு அவசியம்: பின்னர், மத்தியக் குழுவின் தலைவர் கல்பனா பரூவா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 தமிழகம், புதுவையில் டெங்கு காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலுக்கு என தனியாக மருந்து எதுவும் இல்லை.
 மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா டெங்கு பாதிப்பு தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கை, வழிமுறைகள் குறித்து அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை அளித்துள்ளார்.
 அரசே டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த முடியாது. இதில் சமூகத்தின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியமாகும்.
 ஒவ்வொருவரும் தங்களது சுற்றுப்புறத்தை மட்டுமாவது தூய்மையாக பராமரிக்க வேண்டும்.
 டெங்கு பாதிப்பை தடுக்க கேட்டுள்ள நிதியுதவியை மத்திய அரசு முடிவு செய்து வழங்கும். மேலும், தொழில்நுட்ப உதவியும் மத்திய சுகாதாரத் துறை வழங்கும்.
 புதுவையில் உள்ள அரசு மருத்துவமனைகள், டெங்கு நோயாளிகள், அதிகளவில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள இடங்களைப் பார்வையிட்டு பின்னர் அறிக்கை தயாரித்து மத்திய அரசுக்கு அளிப்போம் என்றார் அவர்.
 பின்னர், மத்தியக் குழுவினர் அரசு பொது மருத்துவமனை, ராஜீவ் காந்தி மகப்பேறு மருத்துவமனை, ஜிப்மர், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய நலவழி மையம் ஆகியவற்றுக்குச் சென்று ஆய்வு செய்தனர்.
 அங்கு டெங்குவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்தனர். மருத்துவ ஆய்வகத்தையும் பார்வையிட்டு சோதனை செய்தனர்.
 டெங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவக் கண்காணிப்பாளர் மோகன்குமார் மற்றும் மருத்துவர்கள் விவரித்தனர்.
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/16/டெங்கு-பாதிப்பைக்-கட்டுப்படுத்த-பொதுமக்கள்-ஒத்துழைப்பும்-அவசியம்-மத்தியக்-குழு-தலைவர்-2791234.html
2791233 விழுப்புரம் புதுச்சேரி புதுச்சேரி மத்திய பல்கலை. மாணவர் பேரவை தேர்தல்  புதுச்சேரி, DIN Monday, October 16, 2017 08:52 AM +0530 புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தலில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
 இதற்கான தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது.
 இதில் தலைவராக கே.நர்மதா, துணைத் தலைவர்களாக இ.இலக்கியா, எம்.விக்னேஷ், செயலாளராக கே.பாலமுருகன், இணைச் செயலாளராக திலீப் அப்துல் கலாம் ஆகியோரும், செயற்குழு உறுப்பினர்களாக ஏ.அன்பரசு, ஆர்.கோகுல் சுந்தர், எம்.குணாளன், வி.கனிமொழி, ஷில்பா சன்னி, ஷில்பா கிருஷ்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக தேர்வு பெற்ற நர்மதா திமுக சார்பில் போட்டியிட்டார். அவருக்கு தெற்கு மாநில திமுக அமைப்பாளர் இரா.சிவா எம்.எல்.ஏ. பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
 
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/16/புதுச்சேரி-மத்திய-பல்கலை-மாணவர்-பேரவை-தேர்தல்-2791233.html
2791232 விழுப்புரம் புதுச்சேரி மனநல தின விழிப்புணர்வுப் பேரணி  புதுச்சேரி, DIN Monday, October 16, 2017 08:52 AM +0530 உலக மன நல தினத்தை முன்னிட்டு புதுச்சேரி முதல் தில்லி வரை மோட்டார் சைக்கிள் மூலம் செல்லும் விழிப்புணர்வுப் பேரணியை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தார்.
 உலக மன நல தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு உளவியல் சங்கம் மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் புதுச்சேரி முதல் தில்லி வரை விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெறுகிறது.
 கடற்கரை சலை காந்தி சிலை அருகே ஆளுநர் கிரண் பேடி பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார். இதில் 16 பேர் கொண்ட குழு பல்வேறு மாநிலங்கள் வழியாக தில்லி செல்கின்றனர். வழிநெடுக பொதுமக்களுக்கு மன நலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/16/மனநல-தின-விழிப்புணர்வுப்-பேரணி-2791232.html
2791231 விழுப்புரம் புதுச்சேரி டெங்கு பாதிப்பு: செயலிழந்த நிலையில் மாநில அரசு பாஜக குற்றச்சாட்டு  புதுச்சேரி, DIN Monday, October 16, 2017 08:52 AM +0530 டெங்கு பிரச்னையில் புதுவை மாநில காங்கிரஸ் அரசு செயலிழந்து விட்டது என பாஜக மாநில பொதுச் செயலாளர் எஸ்.ரவிச்சந்திரன் புகார் தெரிவித்தார்.
 இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
 புதுச்சேரி மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் இதுவரை பல உயிர்கள் பறி போய் உள்ளன. இந்தக் காய்ச்சலை தடுக்க முறையான அவசர நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படாததால் மிக வேகமாக பரவி வருகிறது. இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய சுகாதாரத் துறை செயலாளர் பதவி நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. இதற்கு முதல்வர் நாராயணசாமி மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் ஆகியோரே முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும். உயிரிழப்புகள் மேலும் ஏற்படுவதைத் தவிர்க்க சுகாதாரத் துறை செயலாளர் பதவியை உடனடியாக நிரப்ப வேண்டும். இல்லையேல் செயலிழந்து கிடக்கும் புதுச்சேரி காங்கிரஸ் அரசுக்கு எதிராக விரைவில் சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/16/டெங்கு-பாதிப்பு-செயலிழந்த-நிலையில்-மாநில-அரசு-பாஜக-குற்றச்சாட்டு-2791231.html
2791230 விழுப்புரம் புதுச்சேரி 15-ஆவது மத்திய நிதி ஆணையத்தில் புதுவை சேர்ப்பு: முதல்வர் நாராயணசாமி தகவல்  புதுச்சேரி, DIN Monday, October 16, 2017 08:51 AM +0530 15-ஆவது மத்திய நிதி ஆணையத்தில் புதுச்சேரி மாநிலம் சேர்க்கப்பட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
 புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 மத்திய பாஜக ஆட்சியில் அகில இந்திய அளவில் பொருளாதாரம் 7.7 சதவீதத்திலிருந்து 5.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதிலும் அதன் உண்மையான சதவீதம் 3.7 ஆகும். சரக்கு, சேவை வரியால் விவசாயத் துறையில் வளர்ச்சி குறைந்துள்ளது, தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
 ஜிஎஸ்டியால் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் ஹஜ் புனிதப் பயணம் செல்வதற்கான அரசின் சலுகைகளை ரத்து செய்வோம் என்ற மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகத்தின் முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது.
 புதுச்சேரியிலிருந்து பெங்களூரு, திருப்பதி, கொச்சி, கோவை ஆகிய இடங்களுக்கு உடான் திட்டத்தில் விமான சேவை தொடங்க மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் கேட்டுக் கொண்டேன். அதற்கு அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்துக்குத் தேவையான நிலத்தை தமிழகத்திடம் இருந்து பெற்றுத் தருவதாகவும் கூறியுள்ளார்.
 தில்லியில் நடைபெற்ற ஆளுநர்கள் மாநாட்டில் ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள் மாநில அரசோடு ஒத்துழைத்து மத்திய அரசுக்கு பாலமாக இருக்க வேண்டும் என குடியரசுத் தலைவர், பிரதமர் அறிவுறுத்தினர். மத்திய அரசுக்கு பாலமாக உள்ள ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள் பாலமாக இருக்க வேண்டுமே தவிர, அந்தப் பாலம் பழுதடைந்த பாலமாக இருக்கக் கூடாது.
 மத்திய நிதி ஆணையத்தில் புதுச்சேரியை சேர்க்க வலியுறுத்தி வந்தோம். அதற்கு அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் கூறியிருந்தார். பின்னர் அரசாணை பிறப்பித்து புதுவையை இணைக்கலாம் எனக் கேட்டுக் கொண்டோம். நிதி ஆணையத்தில் புதுவை இல்லாததால் மத்திய அரசின் நிதியுதவியை பெற முடியவில்லை. மேலும், இதர மாநிலங்களுக்கு 42 சதவீதம் வரை நிதி உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், புதுவைக்கு கடந்த 5 ஆண்டுகளாக 27 சதவீதம் அளவே நிதி தரப்படுகிறது. அந்த இழப்பையும் ஈடுகட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டோம். தற்போது, 15-ஆவது மத்திய நிதி ஆணையத்தில் புதுவையை இணைப்பதற்கான வரையறைகள் ஏற்கப்பட்டுள்ளன. இதனால், மற்ற மாநிலங்களுக்கு கிடைக்கும் 42 சதவீத மானியத் தொகை கிடைக்கும்.
 ஜிஎஸ்டி வரி விதிப்பால் புதுவைக்கு மாதம்தோறும் ரூ.40 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது. இதில் ஜூலை மாதத்தில் ஏற்பட்ட இழப்புத் தொகையை மத்திய அரசு தந்துள்ளது என்றார் நாராயணசாமி.
 பேட்டியின் போது, அமைச்சர் கந்தசாமி, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், ஜெயமூர்த்தி, அனந்தராமன், விஜயவேணி ஆகியோர் உடனிருந்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/16/15-ஆவது-மத்திய-நிதி-ஆணையத்தில்-புதுவை-சேர்ப்பு-முதல்வர்-நாராயணசாமி-தகவல்-2791230.html
2791225 விழுப்புரம் புதுச்சேரி கடன் தொல்லை: மகள்கள், மகனுடன் தாய் தற்கொலை முயற்சி    புதுச்சேரி, DIN Monday, October 16, 2017 08:46 AM +0530 கடன் தொல்லை தாளாமல் 2 மகள்கள், ஒரு மகனுடன் தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 நெட்டப்பாக்கம் அடுத்துள்ள கல்மண்டபம் புதுநகர் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் பொன்னம்பலம். இவரது மனைவி விஜயகுமாரி (40). இவர்களுக்கு அம்பிகா(17), ஆர்த்தி(14), மகன் விஷ்ணு(13) ஆகிய குழந்தைகள் உள்ளனர். பொன்னம்பலம் சொந்தமாக கார் வாங்குவதற்காக பல பேரிடம் அதிகளவு கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
 ஆனால் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தவில்லையாம். இதனால் கடன் கொடுத்தவர்கள் கடனை கேட்டு நெருக்கடி கொடுத்து வந்தனர். இதன் விளைவாக கணவன், மனைவி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது.
 இந்த நிலையில், சனிக்கிழமை பொன்னம்பலம் தொழில் விஷயமாக வெளியே சென்றுவிட்டார். அப்போது கடன் கொடுத்தவர்கள் வீட்டுக்கு வந்து பணத்தைக் கேட்டுள்ளனர். இதனால் மனம் உடைந்த விஜயகுமாரி, மகள்கள், மகனுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
 இதற்காக வீட்டில் 4 பேரும் தனித் தனியாக கயிறு மாட்டி தூக்குபோட்டுக் கொண்டனர். அப்போது மகன் விஷ்ணு தப்பிச் சென்று அக்கம் பக்கத்தினரிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்தார்.
 இதையடுத்து அவர்கள் வீட்டுக்கு வந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட விஜயகுமாரி உள்ளிட்ட மூவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். இது குறித்து நெட்டப்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/16/கடன்-தொல்லை-மகள்கள்-மகனுடன்-தாய்-தற்கொலை-முயற்சி-2791225.html
2791224 விழுப்புரம் புதுச்சேரி குழந்தை வளர்ப்பிலிருந்து பாலின சமத்துவத்தை கற்பிக்க வலியுறுத்தல்  புதுச்சேரி, DIN Monday, October 16, 2017 08:41 AM +0530 குழந்தை வளர்ப்பில் இருந்து பாலின சமத்துவத்தை கற்பிக்க வேண்டும் என அரசு சார்பு செயலரும், மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குநருமான யஷ்வந்தையா வலியுறுத்தினார்.
 அதேகொம் பின்னகமும் அடைவு பதிப்பகம் சார்பில் பாலினச் சமத்துவம் (திருமணமான பெண்களுக்கான பயிற்சிக் கையேடு) நூல் வெளியீட்டு விழா உழவர்கரையில் சனிக்கிழமை நடைபெற்றது.
 நூலை வெளியிட்டு பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குநர் யஷ்வந்தையா பேசியதாவது: மாநில அரசு மூலமாகவும் மத்திய அரசு மூலமாகவும் பெண்கள், குழந்தைகளுக்கான திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன.
 அரசாங்கம் எடுத்து நடத்த வேண்டிய இதுபோன்ற முக்கியமான பாலின சமத்துவக் கருத்துகளை இதுபோன்ற சமூக தன்னார்வ நிறுவனங்களும் செய்து கொண்டு வருகின்றன.
 பாலின சமத்துவம் என்கிற இந்த கையேட்டில் 37 தலைப்புகளில் வெவ்வேறு கோணங்களில் ஆண் பெண் பாகுபாட்டிற்கான செயல்களை ஆசிரியர் எடுத்துக் கூறியுள்ளார். ஆண் பெண் பாகுபாடு என்பது நாம் அவர்களுக்கு கொடுக்கும் உணவிலிருந்தே தொடங்குகிறது.
 பெண்கள் அனைத்து வேறுபாடுகளையும் தகர்த்து முன்னேற வேண்டுமென்றால் கல்வி தான் பெண்களுக்கு சிறந்த வழி. மேலும் குழந்தை வளர்ப்பிலிருந்து பாலின சமத்துவம் கற்பிக்கப்பட வேண்டும். அப்போதுதான் சமூகத்தில் பாலின சமத்துவம் நிலவும் என்றார்.
 நூலை அறிமுகம் செய்த ஆவணப்பட இயக்குநர் கீதா இளங்கோவன் பேசுகையில், பாலின சமத்துவம் பற்றிய பயிற்சிகளை நடத்தும் போது நாம் குடும்பத்திற்குள் ஆண் பெண் எவ்வாறு சமத்துவமாக நடந்துகொள்ள வேண்டும். குழந்தை வளர்பில் ஆண் பெண் சமத்துவம் பற்றிய கருத்துகளை கூறுவது மிக முக்கியம்.
 இந்த நூலில் இதுபோன்ற கருத்துகள் கொடுக்கப்பட்டுள்ளன. முதலில் சமத்துவம் என்றால் என்ன. பாகுபாடு என்றால் என்ன என்பதனை இந்த நூல் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.
 தொழில் அடிப்படையிலும் நம் சிந்தனைக்கு ஆண் பெண் வித்தியாசம் தோன்றுகிறது. உதாரணமாக விவசாயி என்றவுடன் நம் சிந்தனைக்கு வருவது ஆண் ஆகவும். செவிலியர் என்றால் நம் சிந்தனைக்கு வருவது பெண் ஆகவும் இருக்கிறது. எனவே இது போன்ற சிந்தனைகளை மாற்ற வேண்டும் என்றார்.
 எழுத்தாளர்கள் சாலைசெல்வம், ஓவியா சிறப்புரை ஆற்றினர்.
 நூலாசிரியர் அருணா ஏற்புரை ஆற்றினார். அதேகொம் பின்னக நிர்வாக இயக்குநர் ப. லலிதாம்பாள் தலைமை வகித்துப் பேசினார். வழக்குரைஞர் சீனு பெருமாள் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் ஜோதிபாஸ் நன்றி கூறினார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/16/குழந்தை-வளர்ப்பிலிருந்து-பாலின-சமத்துவத்தை-கற்பிக்க-வலியுறுத்தல்-2791224.html
2791223 விழுப்புரம் புதுச்சேரி அண்ணா பிறந்த நாள் போட்டிகள்  புதுச்சேரி, DIN Monday, October 16, 2017 08:41 AM +0530 தெற்கு மாநில திமுக இளைஞர் அணி சார்பில், புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் போட்டிகளில் 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
 அண்ணா பிறந்த நாள் போட்டிகள், புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் திருமண நிலையத்தில் நடைபெற்றது. தெற்கு மாநில அமைப்பாளர் இரா. சிவா, எம்.எல்.ஏ. தலைமை வகித்தார்.
 இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் கதிரவன், வெங்கடாஜலபதி, ஆரோக்கியராஜ், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் சுப. சந்திசேகரன் போட்டிகளை தொடக்கி வைத்தார்.
 இலக்கிய அணி துணைச் செயலாளர் ஈரோடு இறைவன் தலைமை நடுவராக இருந்து போட்டியை நடத்தினார். ஒருங்கிணைப்பாளராக சீனு. மோகன்தாஸ் மற்றும் நடுவர் குழு நெறியாளர்களாக சீனு. வேணுகோபால், பொறியாளர் பாலசுப்பிரமணியன், வேல்முருகன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் நடுவர்களாக இருந்து கட்டுரை, கவிதை ஒப்புவித்தல், பேச்சுப் போட்டிகளில் சிறந்த மாணவர்களை தேர்வு செய்தனர்.
 உருளையன்பேட்டை, உப்பளம், முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், மணவெளி, ஏம்பலம், பாகூர், நெட்டப்பாக்கம், மங்கலம், வில்லியனுர், உழவர்கரை, நெல்லித்தோப்பு ஆகிய தொகுகளில் பயிலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
 மேற்கண்ட போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவியர் அனைவருக்கும் புத்தகப்பை, நோட்டுகள், அட்டை, எழுதுபொருள்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
 துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி, குணாதிலீபன், அமுதாகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தைரியநாதன், இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர்கள் மாறன், சக்திவேல், அருட்செல்வி, முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி, டாக்டர் மாயக்கிருஷ்ணன், பாகூர் பாஸ்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/16/அண்ணா-பிறந்த-நாள்-போட்டிகள்-2791223.html
2791222 விழுப்புரம் புதுச்சேரி தீபாவளி பண்டிகை: சண்டே மார்க்கெட்டில் குவிந்த மக்கள்  புதுச்சேரி, DIN Monday, October 16, 2017 08:40 AM +0530 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சண்டே மார்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்காக குவிந்தனர்.

வரும் 18-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதற்காக பொதுமக்கள் பட்டாசு, புத்தாடைகள், இனிப்புகளை வாங்குவதற்காக முக்கிய கடை வீதிகளான நேரு வீதி, அண்ணா சாலை, காந்தி வீதி உள்ளிட்ட பகுதிகளில் குவிந்துள்ளனர்.

அதே நேரத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெறும் சண்டே மார்க்கெட் பிரசித்தி பெற்றதாகும்.

700 கடைகளுக்கு மேல் சண்டே மார்க்கெட்டில் உள்ள நிலையில், இங்கு அனைத்து வகையான பொருள்கள், ஆடைகளை குறைந்த விலையில் மக்கள் வாங்கிச் செல்கின்றனர். பேரம் பேசி வாங்க ஏதுவாக உள்ள இடம் ஆதலால் எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்திருக்கும். தற்போது தீபாவளியையொட்டி சண்டே மார்க்கெட் உள்ள காந்தி வீதி முழுவதும் வெறும் மக்கள் தலைகளாகவே காணப்பட்டன.

வெயில் இல்லாமல் வானிலையும் குளிர்ச்சியாக இருந்ததால், பொதுமக்கள் உற்சாகத்துடன் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிச் சென்றனர்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/16/w600X390/sunday_market.jpg http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/16/தீபாவளி-பண்டிகை-சண்டே-மார்க்கெட்டில்-குவிந்த-மக்கள்-2791222.html
2791221 விழுப்புரம் புதுச்சேரி மத்திய பூச்சியியல் நோய் ஆராய்ச்சி நிலையம் மீது நாராயணசாமி புகார்  புதுச்சேரி, DIN Monday, October 16, 2017 08:36 AM +0530 புதுவையில் உள்ள மத்திய பூச்சியியல் நோய் ஆராய்ச்சி நிலையம் மாநில அரசுக்கு எந்த ஒத்துழைப்பையும் தருவதில்லை என டெங்கு தொடர்பான மத்திய ஆய்வுக் குழுவிடம் முதல்வர் நாராயணசாமி புகார் தெரிவித்தார்.
 மேலும், டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த ரூ.30 கோடி முதல்கட்டமாக நிதி வழங்கவும் கேட்டுக் கொண்டார்.
 தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய வந்த மத்தியக் குழு புதுவையிலும் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தது.
 காலை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின் பல்வேறு மருத்துவமனைகளுக்குச் சென்று பார்வையிட்ட மத்தியக் குழுவினர், நோய்த் தாக்கம் அதிகம் உள்ள பகுதிகளிலும் ஆய்வு செய்தனர். பின்னர் இரவு சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் நாராயணசாமியுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
 பின்னர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 புதுவையில் டெங்கு பாதிப்பை குறைக்க மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மத்தியக் குழுவிடம் எடுத்துக் கூறினோம். அவர்களும் சில அறிவுரைகளை வழங்கினர். அவற்றை மாநில அரசு கவனத்தில் கொள்ளும். அதிக நோய்த் தாக்கம் ஏற்பட்டுளள ரெட்டியார்பாளையம் ஜெ.ஜெ. நகர், சாமிப்பிள்ளைத் தோட்டம் பகுதிகளில் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். நோயாளிகளுக்கு தரப்படும் சிகிச்சை, தடுப்பு நடவடிக்கைகளை பாராட்டினர்.
 முதல் கட்டமாக ரத்த தட்டணுக்கள் சேகரிக்கும் கருவிகள் 5 தர வேண்டும் எனவும், ரூ.30 கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என ஏற்கெனவே மத்திய அமைச்சர் நட்டாவிடம் கடிதம் அளித்துள்ளேன்.
 கோரிமேட்டில் உள்ள மத்திய பூச்சியியல் நோய் ஆராய்ச்சி நிலையம் டெங்கு, சிக்குன்குன்யா நோய் ஆய்வுகள் தொடர்பாக ஆராய்ச்சி செய்கிறது. ஆனால், அதன் முடிவுகளை மாநில அரசுடன் பகிர்ந்து கொள்வதில்லை. இந்த நோய்களை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்ற ஆலோசனையும் வழங்குவதில்லை. கொசு ஒழிப்பு தொடர்பாக மாநில அரசுக்கு எந்தவித ஒத்துழைப்பும் தருவதில்லை. இதுதொடர்பாக மத்திய குழுவிடம் புகார் செய்துள்ளோம் என்றார்.
 உடனிருந்த மத்தியக் குழுத் தலைவர் கல்பனா பரூவா கூறுகையில்,புதுச்சேரியில் டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்துள்ளோம்.
 பல்வேறு மருத்துவமனைகள், அதிக நோய்த் தாக்கம் உள்ள பகுதிகளை பார்வையிட்டோம். மேலும், அரசின் அனைத்துத் துறைகளும் சீராக இணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளன. இதுதொடர்பாக அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசிடம் தரப்படும் என்றார்.
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/16/மத்திய-பூச்சியியல்-நோய்-ஆராய்ச்சி-நிலையம்-மீது-நாராயணசாமி-புகார்-2791221.html
2791220 விழுப்புரம் புதுச்சேரி அறிவியல் மையத்தில் சூரிய ஒளி மின்னழுத்த நிலையம் திறப்பு  புதுச்சேரி, DIN Monday, October 16, 2017 08:36 AM +0530 புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அப்துல் கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கில் சூரிய ஒளி மின்னழுத்த நிலையம் திறக்கப்பட்டது.
 அறிவியல் மையத்தில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. அமைச்சர் கந்தசாமி கலந்து கொண்டு, அப்துல் கலாம் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
 மேலும், புதுச்சேரி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாமன்றத்தின் ரூ.14 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சூரிய ஆற்றலில் இயங்கும் ஒளி மின்னழுத்த நிலையத்தையும் அமைச்சர் கந்தசாமி திறந்து வைத்தார்.
 அறிவியல் அலுவலர் ஸ்ரீனிவாச ராவ், தொழில்நுட்ப உதவியாளர் சதீஷ்குமார், சிவக்குமார், இளநிலை அறிவியல் உதவியாளர் கென்னடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 இதைத் தொடர்ந்து, அறிவியல் மைய கருத்தரங்க கூடத்தில் "கேளிக்கை அறிவியல்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. அண்ணா பல்கலைக்கழக ஆய்வாளர் சண்முகம் கலந்து கொண்டு, "கேளிக்கை அறிவியல்' குறித்து செயல் விளக்கம் அளித்தார். இதில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும், அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு ஆலடிமேடு, பனித்திட்டு பகுதி மக்களுக்கு பழ மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/16/அறிவியல்-மையத்தில்-சூரிய-ஒளி-மின்னழுத்த-நிலையம்-திறப்பு-2791220.html
2791219 விழுப்புரம் புதுச்சேரி நலத் திட்ட கோப்புகள் எதுவும் ஆளுநர் மாளிகையில் இல்லை: கிரண் பேடி  புதுச்சேரி, DIN Monday, October 16, 2017 08:35 AM +0530 புதுவை துணைநிலை ஆளுநர் மாளிகையில் மக்கள் நலத் திட்டங்கள் தொடர்பான கோப்புகள் எதுவும் இல்லை. அப்படி வரும் கோப்புகள் அனைத்தும் உடனுக்குடன் அனுப்பப்படுகின்றன என துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.
 இந்திரா நகர் தொகுதியைச் சேர்ந்த நபரிடம் இருந்து ஆளுநர் மாளிகைக்கு வந்த இ-மெயிலில் காசநோய் மருத்துவமனை ஊழியர் குடியிருப்பு 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு தற்போது மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
 இதையடுத்து, கோரிமேட்டில் உள்ள காசநோய் மருத்துவமனை ஊழியர் குடியிருப்புப் பகுதியில் ஆளுநர் கிரண் பேடி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
 அப்போது, அப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள், கழிவுநீர் வாய்க்கல், சேதமடைந்த கட்டடங்களை அதிகாரிகளுடன் பார்வையிட்ட அவர், உடனடியாக கழிவுநீர் வாய்க்காலை சுத்தப்படுத்தவும், குப்பைகளை அகற்ற உள்ளாட்சித் துறை, பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
 இதற்கு பதிலளித்து காசநோய் கட்டுப்பாட்டு அதிகாரி கோவிந்தராஜன் கூறியதாவது: காசநோய் மருத்துவமனை தனியான இடத்தில் கட்டப்பட்டது. ஆனால் மக்கள்தொகை பெருக்கத்தால் தற்போது நகரின் மையப் பகுதி போல் மாறி விட்டது. தற்போது அங்குள்ள 42 குடியிருப்புகளில் வெறும் 10 குடியிருப்புகள் மட்டுமே வசிக்கும் இடங்களாக உள்ளன. பயன்பாட்டில் இல்லாத குடியிருப்புகளை இடித்து இங்கு தொற்று நோய் மருத்துவமனை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், புதுவையில் தனியாக மனநல மருத்துவமனை இல்லாத நிலையில், நோயாளிகளை சென்னை அல்லது பெங்களூருவுக்கு அனுப்பி சிகிச்சை பெறவும், மனநல பாதிப்பு சட்டத்தின்படி சான்றிதழ் பெறவும் அனுப்ப வேண்டியுள்ளது. குடியிருப்புகளை இடித்து விட்டு மனநல மருத்துவமனையும் கட்டலாம்.
 இது நீண்ட கால நோக்கில் செய்ய வேண்டும். உடனடியாக இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.
 பொதுப்பணித்துறை, உழவர்கரை, புதுச்சேரி நகராட்சி அதிகாரிகள் இணைந்து எங்கே பிரச்னைகள் உள்ளன என ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியிருப்போர் சங்கத்தையும் இதில் ஈடுபடுத்த வேண்டும் என்றார்.
 அவருடன் பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் சண்முகசுந்தரம், உழவர்கரை நகராட்சி ஆணையர் ரமேஷ், தனிச் செயலர் ஸ்ரீதரன், ஆய்வாளர் பாஸ்கரன், பாதுகாப்பு அதிகாரி கார்த்திகேயன் உடனிருந்தனர்.
 பின்னர், செய்தியாளர்களிடம் கிரண் பேடி கூறியதாவது:
 மக்கள் நலத் திட்டங்கள் தொடர்பாக கோப்புகள் ஆளுநர் மாளிகையில் தேங்கிக் கிடப்பதாக கூறுவது தவறு. என்னிடம் எந்தக் கோப்புகளும் இல்லை. அனைத்து கோப்புகளும் அனுப்பப்பட்டு விட்டன என்றார்.
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/16/நலத்-திட்ட-கோப்புகள்-எதுவும்-ஆளுநர்-மாளிகையில்-இல்லை-கிரண்-பேடி-2791219.html
2790413 விழுப்புரம் புதுச்சேரி காங்கிரஸ் அரசின் நிர்வாகச் சீர்கேட்டைக் கண்டித்து பாதயாத்திரை : பாஜக செயற்குழு முடிவு DIN DIN Sunday, October 15, 2017 01:23 AM +0530 புதுவை மாநில காங்கிரஸ் அரசின் ஊழல், நிர்வாகச் சீர்கேட்டைக் கண்டித்து, வருகிற நவம்பரில் பாதயாத்திரை மேற்கொள்ளப்படும் என்று மாநில பாஜக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரி தனியார் ஹோட்டலில் பாஜக மாநில செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாவட்டத் தலைவர் மூர்த்தி வரவேற்றார். பொதுச் செயலர்கள் தங்க.விக்ரமன், ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் வி.சாமிநாதன் தலைமை வகித்துப் பேசியதாவது: தற்போது பிரதமர் மோடி, பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோரின் தீவிர முயற்சியால் 18 மாநிலங்களில் பாஜகவின் நல்லாட்சி உருவாகி உள்ளது.
வருகிற 2022-ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் பாஜகவின் ஆட்சி அமையும். காங்கிரஸ் கட்சியில் வாரிசுகள்தான் கட்சித் தலைவராக முடியும். ஆனால், பாஜகவில் வாக்குச் சாவடி நிலை நிர்வாகி கூட மத்திய தலைவராக முடியும்.
காங்கிரஸ் கட்சியின் நிர்வாகச் சீர்கேட்டால் புதுவை மாநிலத்தில் மக்கள் நலத் திட்டங்கள் எதையும் நிறைவேற்ற முடியாத சூழல் நிலவுகிறது.
புதுவை சென்டாக் முறைகேட்டால் மருத்துவ மாணவர்கள் நலன் பாதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி பொலிவுறு நகரம் திட்டத்துக்கு ரூ. 1,800 கோடி, ஜிப்மர் கிளையை காரைக்காலில் தொடங்க ரூ. 1,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. மத்திய பாஜக அரசு புதுவையின் நலனில் அக்கறையோடு செயல்பட்டு வருகிறது.
தற்போது புதுவையில் பாஜக வளர்ச்சி கண்டுள்ளது. இதுவரை 50 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக பேசுவதைவிட்டு, காங்கிரஸ் அரசு மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்றார் சாமிநாதன்.
தேசிய அமைப்பு இணைப் பொதுச் செயலர் சந்தோஷ் ஜி சிறப்புரை ஆற்றினார். எம்.எல்.ஏ.க்கள் செல்வகணபதி, சங்கர் உள்பட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், நாடு முழுவதும் பயணித்து கட்சியைப் பலப்படுத்திய தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கும், மக்கள் நலனுக்காக மத்திய அரசின் மூலம் நூற்றுக்கணக்கான திட்டங்களை நிறைவேற்றி வரும் பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்து பாராட்ட வேண்டும். புதுச்சேரியில் அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு ஊதிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்.
புதுவையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தீவிரமாக பரவி வருகிறது. ஆனால், மாநில அரசும், சுகாதாரத் துறையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை கூட எடுக்கவில்லை. இந்த பிரச்னையில் தீவிர நடவடிக்கை எடுக்காத துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ண ராவ், சுகாதாரத் துறையை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். சென்டாக் மருத்துவ மாணவர் சேர்க்கை ஊழலுக்குப் பொறுப்பேற்று அமைச்சர் மல்லாடி பதவி விலக வேண்டும்.
முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு அனைத்துத் துறைகளிலும் தோல்வியைத் தழுவி உள்ளது. தோல்வியை மறைப்பதற்காக ஆளுநர் மீது அவதூறு பரப்பி தப்ப நினைக்கும், மாநில அரசையும், முதல்வர் நாராயணசாமியையும் கண்டிக்க வேண்டும். அரசின் ஊழல், நிர்வாகச் சீர்கேட்டைக் கண்டித்து வருகிற நவம்பரில் பாஜக சார்பில் பாத யாத்திரை மேற்கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/15/காங்கிரஸ்-அரசின்-நிர்வாகச்-சீர்கேட்டைக்-கண்டித்து-பாதயாத்திரை--பாஜக-செயற்குழு-முடிவு-2790413.html
2790412 விழுப்புரம் புதுச்சேரி எம்.எல்.ஏ. மீது போலீஸ் தாக்குதல்: அதிமுக கண்டனம் DIN DIN Sunday, October 15, 2017 01:23 AM +0530 விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராடிய செல்வம் எம்.எல்.ஏ. மீது போலீஸார் தாக்குதல் நடத்தியதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்தது.
இதுதொடர்பாக அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசு கடந்த 15 மாதங்களில் எந்தவொரு நலத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. சென்டாக் மாணவர் சேர்க்கையில் முறைகேடு, அரசு ஊழியர்களுக்கு 7-ஆவது ஊதியக் குழு நிலுவைத் தொகையை வழங்காதது, பொதுத் துறை, கூட்டுறவுத் துறை, அரசு சார்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காதது, உள்ளாட்சி அமைப்புகளான நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்தாதது, மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து மீன்பிடி தொழிலை முடக்கம் செய்தது, தாழ்த்தப்பட்டோருக்கு எந்த நலத் திட்டத்தையும் வழங்காதது, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையைப் பெயரளவில் செயல்படுத்துவது என அனைத்துத் தரப்பு மக்களையும் ஆளும் காங்கிரஸ் அரசு வாட்டி வதைத்து வருகிறது. இதற்கெல்லாம் மனசாட்சிப்படி தார்மிக பொறுப்பேற்று முதல்வர் நாராயணசாமி பதவி விலகியிருக்க வேண்டும்.
பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளுக்காக தார்மிக ரீதியில் போராட்டம் நடத்த முன் வந்தால், அதை நசுக்கும் வேலைகளில் காங்கிரஸ் அரசு ஈடுபட்டு வருகிறது. சர்க்கரை ஆலைக்கு வழங்கிய கரும்புக்கான நிலுவைத் தொகையை கேட்ட விவசாயிகளை போலீஸார் தடியடி நடத்தி விரட்டியடித்துள்ளனர்.
விவசாயிகளுக்காக குரல் கொடுத்த மண்ணாடிப்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. செல்வத்தையும் கண் மூடித்தனமாகத் தாக்கி, அவரது சட்டையைக் கிழித்துள்ளனர். இதை அதிமுக வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இனியும் இந்த ஆட்சி தொடர வேண்டுமா என்பதை புதுச்சேரி மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். சட்டப்பேரவை உறுப்பினரையே தாக்கி, அவமதித்து ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கிய இந்த அரசின் செயல்பாட்டை மத்திய அரசு வேடிக்கை பார்க்காமல் உடனடியாக முடக்கம் செய்ய வேண்டும் என்றார் அவர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/15/எம்எல்ஏ-மீது-போலீஸ்-தாக்குதல்-அதிமுக-கண்டனம்-2790412.html
2790411 விழுப்புரம் புதுச்சேரி இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை DIN DIN Sunday, October 15, 2017 01:22 AM +0530
வில்லியனூர் அருகே இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
வில்லியனூரைச் சேர்ந்தவர் ராஜா (34). அதே பகுதியைச் சேர்ந்தவர் தனம் (29). வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவரும் காதலித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோரின் எதிர்ப்பையும் மீறித் திருமணம் செய்து கொண்டு காலாப்பட்டில் வசித்து வந்தனர்.
அங்குள்ள தனியார் கம்பெனியில் ராஜா பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், ராஜாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலையில்லாமல் போய்விட்டதாம். அதே சமயம் இரு தரப்பு பெற்றோரும் இவர்களை வந்து பார்ப்பதும் இல்லை, கஷ்டத்துக்கு உதவவுமில்லையாம். இதனால், மனமுடைந்த ராஜா வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காலாப்பட்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
மண் சரிந்து இளைஞர் சாவு
வில்லியனூர் அருகே மண் சரிந்து விழுந்ததில் இளைஞர் உயிரிழந்தார்.
உத்திரவாகினிபேட்டையைச் சேர்ந்தவர் முருகவேல் (20). இவர், தனக்குச் சொந்தமான மாட்டு வண்டியில் மணல் அள்ளி விற்பனை செய்வதற்காக ஒதியம்பட்டு சங்கராபரணி ஆற்றுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஹரி (20) என்பவருடன் வெள்ளிக்கிழமை சென்றார்.
அப்போது, ஆற்றில் குகை போன்று ஆழமாகத் தோண்டிய பகுதியில் ஹரி உள்ளே சென்று மணலை அள்ளிக் கொடுக்க, முருகவேல் வெளியே இருந்து மணலை பெற்று வண்டியில் ஏற்றியுள்ளார்.
இந்த நிலையில், திடீரென மணல் சரிந்து விழுந்தது. இதனால், ஹரி உள்ளே சிக்கிக் கொண்டார். அங்கிருந்தவர்கள் ஹரியை மீட்டு, வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தூக்கிச் சென்றார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஹரி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து வில்லியனூர் காவல் உதவி ஆய்வாளர் வேலய்யன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பைக் மீது லாரி மோதல்: அரிசி வியாபாரி சாவு
வில்லியனூர் அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் அரிசி வியாபாரி உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம், கமலா நகரைச் சேர்ந்த கண்ணன் மகன் பிரபு (31). அரிசி வியாபாரி. இவர், புதுச்சேரி, கடலூரில் உள்ள பல்வேறு கடைகளுக்கு அரிசி விநியோகம் செய்து வருகிறார்.
இந்த நிலையில், விநியோகம் செய்த அரிசிக்குரிய பணத்தை வசூல் செய்வதற்காக சனிக்கிழமை பைக்கில் திருபுவனைக்கு வந்தார். அங்குள்ள அரிசிக் கடையில் பணத்தைப் பெற்றுக்கொண்டு, அங்கிருந்து கடலூருக்கு பைக்கில் சென்றார். மதகடிப்பட்டு பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த டிப்பர் லாரி பைக் மீது மோதியது.
இதில், நிலைத் தடுமாறி கீழே விழுந்த பிரபுவின் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இந்த விபத்தில் அவர் நிகழ்விடத்திலேயே இறந்தார். இதுகுறித்து வில்லியனூர் போலீஸார் வழக்குப் பதிந்து
விசாரிக்கின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/15/இளைஞர்-தூக்கிட்டுத்-தற்கொலை-2790411.html
2790410 விழுப்புரம் புதுச்சேரி விவசாயிகள் மீது தடியடி: அகில இந்திய விவசாயிகள் சங்கம் கண்டனம் DIN DIN Sunday, October 15, 2017 01:22 AM +0530 கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்புகள் அனுப்பி, அதன் நிலுவைத் தொகையைக் கேட்டுப் போராடிய விவசாயிகள் மீது தடியடி நடத்திய காவல் துறைக்கு அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் புதுச்சேரி பிரதேசக் குழு கண்டனம் தெரிவித்தது.
இதுதொடர்பாக அந்தச் சங்கத்தின் பிரதேச செயலர் வி.சங்கர் வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரி, லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு தொடர்ந்து 2011 முதல் கரும்புக்கான நிலுவைத் தொகையைத் தரவில்லை. இது ஆட்சி மாற்றத்துக்குப் பிறகும் தொடர்கதையாக உள்ளது.
கடந்த ஆண்டு (2016 - 17) வெட்டி அனுப்பிய கரும்புக்கு ஆலை நிர்வாகம் ரூ. 7 கோடி நிலுவை வைத்துள்ளது. தொடர்ந்து, விவசாயிகள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியும், போராட்டங்களில் ஈடுபட்டும் நிலுவைத் தொகையைக் கேட்டு வருகின்றனர்.
மாநில அமைச்சரும் அவ்வப்போது உடனே நிலுவைத் தொகை வழங்கப்படும் எனக் கூறி வந்தார். தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்ட சூழ்நிலையில், கரும்பு வெட்டி அனுப்பிய விவசாயிகள் தங்களது நிலுவைத் தொகையை கேட்டுப் போராடினால் அரசு காவல் துறையை ஏவி அவர்களைக் கடுமையாகத் தாக்கியுள்ளது.
இந்த நடவடிக்கையை அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் புதுச்சேரி பிரதேசக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது. விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் சீர்கேடு, முறைகேடு, ஊழல்கள் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடவும், தனியாருக்கு ஆலையைத் தாரை வார்க்கும் அரசின் முடிவை எதிர்த்தும் அனைத்து விவசாயிகளும், கிராமப்புற உழைப்பாளிகளும், ஆலைத் தொழிலாளர்களும் இணைந்து போராட முன்வர வேண்டும்
என்றார் சங்கர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/15/விவசாயிகள்-மீது-தடியடி-அகில-இந்திய-விவசாயிகள்-சங்கம்-கண்டனம்-2790410.html
2790409 விழுப்புரம் புதுச்சேரி சொர்ணாவூர் அணைக்கட்டை வந்தடைந்தது தென்பெண்ணை நீர் DIN DIN Sunday, October 15, 2017 01:22 AM +0530 சாத்தனூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தென்பெண்ணை ஆற்று நீர் வெள்ளிக்கிழமை அதிகாலை புதுச்சேரி சொர்ணாவூர் அணைக்கட்டை வந்ததடைந்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடந்த 2 ஆண்டுகளாகப் புதுவையில் பருவ மழை பொய்த்துப் போனதால் ஆறு, ஏரி, ஓடை, குளங்கள் உள்ளிட்ட நீராதாரங்கள் வறண்டுவிட்டன. இதனால் விவசாயமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே, வறட்சி நிலையைப் பார்வையிட மத்திய குழுவும் வந்தது. எனினும், விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை எதுவும் இதுவரை தரப்படவில்லை.
இந்த நிலையில், கர்நாடக மாநிலம், நந்திதுர்க் பகுதியில் பெய்த பலத்த மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், கிருஷ்ணகிரி அணை நிரம்பியது. இதைத் தொடர்ந்து, சாத்தனூர் அணையும் நிரம்பியதால் உபரி நீர் திறக்கப்பட்டது.
அணையில் இருந்து விநாடிக்கு 8,600 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்த நீர் விழுப்புரம் மாவட்டம், எல்லி சத்திரம் அணைக்கட்டுக்கு வருகிறது. அங்கிருந்து விநாடிக்கு 4,300 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு, அந்த நீர் சொர்ணாவூர் அணைக்கட்டை வந்தடைந்தது.
இந்த அணைக்கட்டில் உள்ள பங்காரு வாய்க்காலுக்கு 4 மதகுகள் வழியாகத் தண்ணீர் வெளியேற்றப்பட்டு, பாகூர் ஏரியை வந்தடையும் என செயற்பொறியாளர் தாமரை புகழேந்தி தெரிவித்தார்.
முன்னதாக, சொர்ணாவூர் அணைக்கட்டுப் பகுதியை அவர் ஆய்வு செய்தார். உதவிப் பொறியாளர் பாலசுப்ரமணியன் மற்றும் இளநிலைப் பொறியாளர்கள் உடனிருந்தனர்.
சொர்ணாவூர் அணைக்கட்டில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவதால், பாகூர் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/15/சொர்ணாவூர்-அணைக்கட்டை-வந்தடைந்தது-தென்பெண்ணை-நீர்-2790409.html
2790408 விழுப்புரம் புதுச்சேரி டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்தியக் குழு இன்று புதுவை வருகை DIN DIN Sunday, October 15, 2017 01:21 AM +0530 புதுவையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்தியக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை (அக். 15) வருகின்றனர்.
தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய நிபுணர் குழு கடந்த வெள்ளிக்கிழமை சென்னை வந்தது. 5 பேர் கொண்ட இந்தக் குழுவில் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் பொது மருத்துவத் துறைப் பேராசிரியர் அசுதோஷ் பிஸ்வாஸ், தேசிய தொற்று நோய்த் தடுப்புத் திட்டத்தின் இணை இயக்குநர் கல்பனா பர்வா, தில்லி கே.எஸ்.சி.எச். மற்றும் எல்.எச்.எம்.ஜி. குழும மருத்துவமனையின் குழந்தைகள் நலத் துறை இணைப் பேராசிரியர் சுவாதி டுப்ளீஸ், பூச்சியல் வல்லுநர் வினய் கார்க் மற்றும் தேசிய தொற்று நோய்த் தடுப்புத் திட்டத்தின் ஆலோசகர் கவுசல் குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழுவினர் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்குச் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.
புதுச்சேரியிலும் டெங்கு காய்ச்சலுக்கு 2,500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது தமிழகத்தில் ஆய்வு செய்து வரும் மத்திய நிபுணர் குழுவினர் புதுவையிலும் டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.
இதற்காக, சென்னையிலிருந்து பேராசிரியர் அசுதோஷ் பிஸ்வாஸ், இணை இயக்குநர் கல்பனா பர்வா ஆகியோர் சனிக்கிழமை இரவே புதுவை வந்தனர். அவர்களுடன் தமிழ்நாடு குடும்பம் - நலவழித் துறையின் மண்டல முதுநிலை இயக்குநர் ரோஷ்னி ஹார்த்தரும் வந்தார். சேலத்தில் ஆய்வு செய்துவிட்டு, மத்தியக் குழுவில் இடம் பெற்றுள்ள மற்ற 3 பேரும் ஞாயிற்றுக்கிழமை காலை புதுச்சேரி வருகின்றனர்.
தொடர்ந்து, அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ண ராவ், ஷாஜகான், தலைமைச் செயலர் மனோஜ் பரிதா மற்றும் அரசுச் செயலர்கள், சுகாதாரத் துறை இயக்குநர், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் பங்கேற்கும் டெங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது.
இதைத் தொடர்ந்து, பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் டெங்கு நோயாளிகளைப் பார்வையிடுகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/15/டெங்கு-பாதிப்பு-குறித்து-ஆய்வு-செய்யமத்தியக்-குழு-இன்று-புதுவை-வருகை-2790408.html
2790407 விழுப்புரம் புதுச்சேரி லாட்டரிச் சீட்டு விற்ற 2 பேர் கைது: ரூ. 8.85 லட்சம் பறிமுதல் DIN DIN Sunday, October 15, 2017 01:21 AM +0530 புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரிச் சீட்டுகளை விற்ற 2 பேரை போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ. 8.85 லட்சம் ரொக்கம், இரு செல்லிடப்பேசிகளைப் பறிமுதல் செய்தனர்.
மேட்டுப்பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் வந்தது. இதையடுத்து, அங்கு சென்று போலீஸார் சோதனை செய்ததில் 3 இலக்க எண் கொண்ட கேரள லாட்டரிச் சீட்டுகள் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது.
இதையடுத்து, லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த தட்சிணாமூர்த்தியை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், வேல்ராம்பட்டைச் சேர்ந்த கதிர்வேல் (எ) நடராஜன், சாரம் பகுதியைச் சேர்ந்த முனியன் ஆகிய இருவருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, எஸ்.பி. ரச்சனா சிங் உத்தரவின் பேரில், மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் தங்கமணி, சிறப்புக் காவல் படை ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில் போலீஸார் அவர்களைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில், வேல்ராம்பட்டு அருகே சனிக்கிழமை நடராஜனை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ. 8.85 லட்சம் ரொக்கம், இரு செல்லிடப்பேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய முனியனை போலீஸார் தேடி வருகின்றனர். சிறப்பாகச் செயல்பட்டு லாட்டரி விற்பனை செய்த நபர்களைப் பிடித்த போலீஸாரை முதுநிலை எஸ்.பி. ராஜீவ் ரஞ்சன் பாராட்டினார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/15/லாட்டரிச்-சீட்டு-விற்ற-2-பேர்-கைது-ரூ-885-லட்சம்-பறிமுதல்-2790407.html
2790406 விழுப்புரம் புதுச்சேரி விவசாயிகள் மீது தடியடி: நடவடிக்கை கோரி திருக்கனூர் காவல் நிலையம் முற்றுகை DIN DIN Sunday, October 15, 2017 01:21 AM +0530 கூட்டுறவு சர்க்கரை ஆலையைப் பாதுகாக்க வலியுறுத்தி, போராடிய விவசாயிகள் மீது தடியடி நடத்திய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சனிக்கிழமை திருக்கனூர் காவல் நிலையத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு போராட்டம் நடத்த விவசாயிகள் அனுமதி கேட்டிருந்தனர். இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் தடையை மீறி விவசாயிகள் டிபிஆர். செல்வம் எம்.எல்.ஏ. தலைமையில் போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலீஸார் திடீரென தடியடி நடத்தியதில் எம்.எல்.ஏ.வின் சட்டை கிழிந்தது. 15-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பலத்த காயமடைந்தனர். எம்.எல்.ஏ. மற்றும் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சனிக்கிழமை விவசாயிகள் திருக்கனூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தாக்குதல் நடத்திய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவர்கள் முழக்கமிட்டனர்.
இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் குமார் மற்றும் போலீஸார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தகவலறிந்து டிபிஆர். செல்வம் எம்.எல்.ஏ. அங்கு வந்து தாக்குதல் நடத்திய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் புதுச்சேரி காவல் துறை உயர் அதிகாரிகளிடம் புகார் செய்வோம் எனக் கூறினார். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/15/விவசாயிகள்-மீது-தடியடி-நடவடிக்கை-கோரி-திருக்கனூர்-காவல்-நிலையம்-முற்றுகை-2790406.html
2790405 விழுப்புரம் புதுச்சேரி எஸ்.பி. பணியிடங்களை நிரப்பாததால் பதவி உயர்வு வழங்குவதில் சிக்கல்பா.சுஜித்குமார் DIN DIN Sunday, October 15, 2017 01:20 AM +0530 புதுச்சேரி காவல் துறையில் காலியாக உள்ள எஸ்.பி. பணியிடங்களை நிரப்பாததால் காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தற்போது புதுவை காவல் துறை டி.ஜி.பி. தலைமையில் ஐ.ஜி., டி.ஐ.ஜி., முதுநிலை எஸ்.பி.க்கள், எஸ்.பி.க்கள் கீழ் இயங்கி வருகிறது. புதுவை காவல் துறையில் தற்போது வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு காவல் சரகங்களில் 26 காவல் நிலையங்களும், 4 போக்குவரத்துக் காவல் நிலையங்கள், 2 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், வன்கொடுமை தடுப்புப் பிரிவு, உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு, சிஐடி (4 பிரிவுகள்), லஞ்ச ஒழிப்புக் கண்காணிப்புத் துறை, காரைக்கால் பிராந்தியத்தில் 8 காவல் நிலையங்கள், போக்குவரத்துக் காவல், வன்கொடுமை தடுப்பு, உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவுகளும் உள்ளன.
இதேபோல, மாஹே, ஏனாம் பிராந்தியத்திலும் எஸ்.பி. தலைமையில் காவல் துறை பிரிவு உள்ளது.
சட்டம், ஒழுங்கைச் சிறப்பாகப் பராமரிக்கவும், காவல் துறையை நவீனமயமாக்கவும் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தேவையான ஆண், பெண் காவலர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். குற்றங்களை முன்கூட்டியே தடுக்க ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இருப்பினும் பதவி உயர்வுகள், சலுகைகள் உரிய காலத்தில் கிடைப்பதில்லை என்ற குறைபாடு காவல் துறையில் நிலவி வருகிறது. புதுவையில் எஸ்.பி.க்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாததால் அவர்கள் கவலையடைந்துள்ளனர்.
8 எஸ்.பி.க்கள் பணியிடம் காலி: எஸ்.பி.க்களாக பணியாற்றிய குமார், குணசேகரன், தமிழரசி, ராமச்சந்திரன், மஞ்சம் பிரசாத் ராவ் ஆகியோர் பணி ஓய்வு பெற்றனர். பிரவீன் திரிபாதி மாற்றலாகி வெளி மாநிலத்துக்குச் சென்றுவிட்ட நிலையில், ரவீந்திரன், ஆறுமுகம் உள்ளிட்ட எஸ்.பி.க்கள் விரைவில் ஓய்வு பெற உள்ளனர். இதனால், 8 எஸ்.பி. இடங்கள் காலியாகும் நிலை உள்ளது. ஏற்கெனவே பணி ஓய்வு பெற்றவர்களுக்கான இடங்களும் இதுவரை நிரப்பப்படவில்லை. எஸ்.பி. பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்பட்டால் மட்டுமே அடுத்தடுத்து காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வை வழங்க முடியும்.
இதற்கிடையே, எஸ்.பி.க்கள் பணியிடத்துக்கான பதவி உயர்வுப் பட்டியலில் 18 காவல் ஆய்வாளர்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
ஜிந்தா கோதண்டராமன், முருகவேல், செல்வம், மாறன், நல்லாம் கிருஷ்ணராய பாபு, பாஸ்கரன், ரங்கநாதன், வீரவல்லவன், மோகன்குமார், ராஜாசங்கர் வெல்லாட், சுப்பிரமணியன், பாலச்சந்திரன், ரகுநாயகம், சரவணன், பக்தவத்சலம், ராஜசேகரன், பழனிவேலு, சிவக்குமார் ஆகியோரின் செயல் திறன் அறிக்கை, நேர்மையான செயல்பாடு, பணியின் போது தண்டனை இல்லாதது தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
எனினும், காலியாக உள்ள சிஐடி, லஞ்ச ஒழிப்புத் துறை, காவலர் பயிற்சிப் பள்ளி, பிஓபி, ஆயுதப் படை, உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு உள்ளிட்ட எஸ்.பி. பணியிடங்களையும், மேலும் காலியாக உள்ள பணியிடங்களையும் விரைந்து நிரப்ப டி.ஜி.பி. நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/15/எஸ்பி-பணியிடங்களை-நிரப்பாததால்-பதவி-உயர்வு-வழங்குவதில்-சிக்கல்பாசுஜித்குமார்-2790405.html
2789946 விழுப்புரம் புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி மின் தடை தொடர்பாக ஆய்வுக் கூட்டம் DIN DIN Saturday, October 14, 2017 02:09 AM +0530 உருளையன்பேட்டை தொகுதியில் நிலவும் மின் தடை பிரச்னை தொடர்பான ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சட்டப்பேரவை உறுப்பினர் இரா. சிவா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மின்துறை உதவிப் பொறியாளர்கள் முருகானந்தம், சுரேஷ், அச்சுதானந்தம், சுந்தரமூர்த்தி, கார்த்திகேயன் உள்பட இளநிலைப் பொறியாளர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் மின் தடைக்கான  பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. வெங்கட்டா நகர் துணை மின் நிலையத்தில் இருந்து தனியாக ஒரு மின் இணைப்பை கோவிந்தசாலைக்கு ஏற்படுத்த வேண்டும்.
உப்பனாறு வாய்க்கால் மேல் செல்லும் உயர் மின் அழுத்த கேபிளை புதை வடமாக மாற்ற வேண்டும். உருளையன்பேட்டை தொகுதியில் இதுவரை எந்தெந்தப் பகுதிகளில் புதை மின்வட இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது?  அடுத்த ஆண்டுக்கான பணிகள், இடங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன. மேலும், குறைந்த மின் அழுத்தம் உள்ள பகுதிகள் புதிதாக திட்டத்தில் சேர்க்க வேண்டியது குறித்தும், உருளையன்பேட்டை, நெல்லித்தோப்பு தொகுதிகள் பயன்பெறும் வகையில் புதிதாக துணை மின் நிலையத்தை சுதேசி ஆலை வளாகத்தில் அமைக்க வேண்டும் எனவும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/14/உருளையன்பேட்டை-தொகுதி-மின்-தடை-தொடர்பாக-ஆய்வுக்-கூட்டம்-2789946.html
2789945 விழுப்புரம் புதுச்சேரி வாக்குச் சாவடிகளில் உள்ளாட்சித் துறைச் செயலர் ஆய்வு DIN DIN Saturday, October 14, 2017 02:08 AM +0530 புதுச்சேரியில் உள்ள பல்வேறு வாக்குச் சாவடிகளில் வெள்ளிக்கிழமை உள்ளாட்சித் துறைச் செயலர் பி.ஜவஹர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்திய தேர்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி புதுவை யூனியன் பிரதேசத்துக்கு உள்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்யும் பணிகள் கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி  தொடங்கியது. இந்தப் பணிகள் அக்டோபர் 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்தப் பணிகளை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் இதற்கென தனியாக அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அலுவலர்களின் செயல்பாடுகள்,  வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள், அலுவலர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் உள்ளிட்டவை குறித்து உள்ளாட்சித் துறைச் செயலரும், தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் பார்வையாளருமான ஜவஹர் பல்வேறு பகுதிகளில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/14/வாக்குச்-சாவடிகளில்-உள்ளாட்சித்-துறைச்-செயலர்-ஆய்வு-2789945.html
2789944 விழுப்புரம் புதுச்சேரி அரசுப் பள்ளியில் நிலவேம்புக் குடிநீர் விநியோகம் DIN DIN Saturday, October 14, 2017 02:08 AM +0530 முத்தரையர்பாளையம் இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வியாழக்கிழமை விநியோகிக்கப்பட்டது.
டெங்கு தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பள்ளியைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்குவது, விழிப்புணர்வுப் பேரணி ஆகியவை நடைபெற்றன.
இதன் தொடர்ச்சியாக பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது.
பள்ளியின் துணை முதல்வர் தனசெல்வன் நேரு தலைமை வகித்தார். விரிவுரையாளர் பூபதி டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள், டெங்கு கொசுவைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். மூத்த விரிவுரையாளர்கள் சுகுமார், பானுமதி, பாலசுப்ரமணியன், சிவராஜ், குமாரராசு, சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/14/அரசுப்-பள்ளியில்-நிலவேம்புக்-குடிநீர்-விநியோகம்-2789944.html
2789943 விழுப்புரம் புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி DIN DIN Saturday, October 14, 2017 02:08 AM +0530 புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் ஸ்வீப் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
18 வயது பூர்த்தியடைந்த கல்லூரி மாணவ, மாணவிகளை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் வகையில் சிறப்பு வாக்காளர் சேர்க்கை முகாம்களை நடத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.
அதன்படி, முதல் முறை வாக்காளர்களைப் பட்டியலில் சேர்க்கவும், வாக்களிப்பதில் அவர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் ஓய்விசி அமைப்பின் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி பாரதிதாசன் அரசுக் கலைக் கல்லூரியில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் பூங்காவனம் தலைமை வகித்தார். வாக்காளர் சேர்க்கை ஒருங்கிணைப்பாளர் மரிஜோஸ்பின் அருணா நோக்கவுரை ஆற்றினார்.
மாநில என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளர்கள் இ.தேவபாலன், பி.குழந்தைசாமி ஆகியோர் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விவரித்தனர்.
மேலும், இதன் ஒரு பகுதியாக ரங்கோலி, ஓவியம் வரைதல், போஸ்டர் மேக்கிங், நாடகம், மெஹந்தி, நைல் ஆர்ட், பேஸ் பெயிண்டிங், பேச்சுப் போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசளிக்கப்பட்டன.
அரசியலில் இளைஞர்கள் பங்களிப்பு, தேசக் கட்டமைப்புக்கு நன்மையா, தீமையா, சுதந்திரப் போராட்டத்தில் பெண்கள், மாற்றுத் திறனாளிகள், முதியோர், இதர பாலினத்தவர் பங்கேற்பு, தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பு உள்ளிட்ட தலைப்புகளிலும் போட்டிகள் நடைபெற்றன.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/14/பாரதிதாசன்-அரசு-மகளிர்-கல்லூரியில்-வாக்காளர்-விழிப்புணர்வு-நிகழ்ச்சி-2789943.html
2789942 விழுப்புரம் புதுச்சேரி நிலவேம்புக் குடிநீர் விநியோகம் DIN DIN Saturday, October 14, 2017 02:07 AM +0530 டெங்கு காய்ச்சல் பாதிப்பைத் தடுக்கும் வகையில், அரியாங்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் விநியோகிக்கப்பட்டது.
அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜெயமூர்த்தி, புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பின் தலைவர் சிவசங்கர் ஆகியோர் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் நிலவேம்புக் குடிநீரை விநியோகித்தனர். இதற்கான ஏற்பாட்டை வியாபாரிகள் சங்கத் தலைவர் ராமபுத்திரன், செயலர் சந்துரு ஆகியோர் செய்திருந்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/14/நிலவேம்புக்-குடிநீர்-விநியோகம்-2789942.html
2789940 விழுப்புரம் புதுச்சேரி அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கு இன்று முதல் தீபாவளி பரிசுக் கூப்பன் விநியோகம் DIN DIN Saturday, October 14, 2017 02:06 AM +0530 புதுச்சேரியில் பதிவு செய்துள்ள 28,500 அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய்க்கான தீபாவளி பரிசுக் கூப்பன் சனிக்கிழமை (அக். 14) முதல் விநியோகிக்கப்படும் என தொழிலாளர் நலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கு தீபாவளி பரிசுக் கூப்பன் சனிக்கிழமை (அக். 14) முதல் வருகிற 24-ஆம் தேதி வரை (18, 19 மற்றும் 21, 22 ஆகிய நாள்கள் நீங்களாக) தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரையில் அமைப்பு சாரா தொழிலாளர் நலச் சங்க அலுவலகத்தில் வழங்கப்படும். மேற்கண்ட நாள்களில் பரிசுக் கூப்பன் பெறத் தவறியவர்கள் 25-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை அனைத்து வேலை நாள்களிலும் பெற்றுக் கொள்ள
லாம்.  தீபாவளி பரிசுக் கூப்பன் பெற வரும் தொழிலாளர்கள் நலச் சங்கத்தில் வழங்கப்பட்ட அடையாள அட்டை, இறுதியாக செலுத்திய ஆண்டு சந்தா ரசீது, படிவம் - 1 ஆகியவற்றைத் தவறாமல் கொண்டு வர வேண்டும். அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வங்கியின் சேமிப்புக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல், உணவுப் பங்கீட்டு அட்டை நகல், எஸ்சி - எஸ்டியாக இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்களை இணைத்து வழங்க வேண்டும்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/14/அமைப்பு-சாராத்-தொழிலாளர்களுக்கு-இன்று-முதல்-தீபாவளி-பரிசுக்-கூப்பன்-விநியோகம்-2789940.html
2789939 விழுப்புரம் புதுச்சேரி சிறுபான்மையின உரிமை இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் DIN DIN Saturday, October 14, 2017 02:06 AM +0530 இன்சாப் சிறுபான்மையினர் உரிமை இயக்கம் சார்பில், புதுச்சேரி புஸ்ஸி வீதி - காந்தி வீதி சந்திப்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இன்சாப் தலைவர் ஏ.ஏ.ரஷீத் தலைமை வகித்தார். ஏ.எம்.சலீம், பி.ஏ.அன்துவான், தனராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏ.லியாகத் அலி, ஏ.அற்புதராஜ் விளக்கவுரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், சிறுபான்மையினத்தவருக்கு கல்விக் கடன், தொழில் கடன், வீட்டுக் கடன் ஆகியவை குறைந்த வட்டியில் கிடைக்க அதிக நிதி ஒதுக்கி, சிறுபான்மையோர் வளர்ச்சிக் கழகத்தை வலுப்படுத்த வேண்டும். தலித்துகளுக்கான சமூக நலத் திட்டங்கள் தலித் கிறிஸ்துவர்களுக்கும் பொருந்தும் என தமிழக அரசு அறிவித்தது போல, புதுவையிலும் அறிவிக்க வேண்டும்.
தாஜ்மகாலை சுற்றுலா நினைவுச் சின்னம் பட்டியலில் இருந்து நீக்கியதை உத்தரப்பிரதேச அரசு திரும்பப் பெற வேண்டும். சிறு, குறு தொழில்களில் ஈடுபட்டுள்ள சிறுபான்மையினர் உள்பட அனைத்து மக்களையும் பாதிக்கும் ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டும். ரோஹிங்கியா முஸ்லிம் மக்களை வெளியேற்றுவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/14/சிறுபான்மையின-உரிமை-இயக்கத்தினர்-ஆர்ப்பாட்டம்-2789939.html
2789938 விழுப்புரம் புதுச்சேரி கோரிக்கைளை நிறைவேற்றக் கோரி தீபாவளி அன்று உண்ணாவிரதம்: புதுச்சேரி மாநில தீயணைப்பு ஊழியர்கள் சங்கம் முடிவு DIN DIN Saturday, October 14, 2017 02:00 AM +0530 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 18-ஆம் தேதி, தீபாவளி அன்று அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்ள புதுச்சேரி மாநில தீயணைப்பு ஊழியர் சங்கம் முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக அந்தச் சங்கத்தின் தலைவர் என்.ஆறுமுகம் வெளியிட்ட அறிக்கை: சங்கத்தின் சார்பில் அண்மையில் நடைபெற்ற பொதுக் குழுக் கூட்டத்தில் சம்மேளனப் பொறுப்பாளர்கள் சி.எச்.பாலமோகனன், மு.சீத்தாராமன், எஸ்.ரவிச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
கடந்த 12.5.2017 அன்று  ஊழியர்களின் குறைகளைத் தீர்க்க துறை அமைச்சர், செயலர், கூடுதல் செயலர் கலந்து கொண்ட குறை தீர்க்கும் கூட்டத்தில் உறுதியளிக்கப்பட்டபடி எந்தக் கோரிக்கைகளையும் அரசு இதுநாள் வரை நிறைவேற்றவில்லை. இதற்கு பொதுக் குழு சார்பில்  கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
நீண்ட நாள் கோரிக்கைகளைத் தீர்க்க முன் வராமல் குறை தீர்ப்பு என்ற பெயரில் சங்கத்தோடு பேசித் தீர்க்கும் நியாயமான வழிவகைக்குத் தடை ஏற்படுத்திய நிர்வாகத்தின் போக்கைக் கண்டித்தும், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் வருகிற 18-ஆம் தேதி தீபாவளி பண்டிகை அன்று பணிக்கு எவ்வித பாதகம் இல்லாமல் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை புதுச்சேரி சுப்பையா சாலையில் உள்ள தீயணைப்பு நிலையம் எதிரே உண்ணாவிரதம் நடைபெறும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/14/கோரிக்கைளை-நிறைவேற்றக்-கோரி-தீபாவளி-அன்று-உண்ணாவிரதம்-புதுச்சேரி-மாநில-தீயணைப்பு-ஊழியர்கள்-சங்கம்-ம-2789938.html
2789937 விழுப்புரம் புதுச்சேரி ஆளுநர் மாளிகையே மக்களின் கடைசிப் புகலிடமாக உள்ளது: கிரண் பேடி DIN DIN Saturday, October 14, 2017 01:59 AM +0530 புதுவையில் ஆளுநர் மாளிகையே மக்களின் கடைசிப் புகலிடமாக உள்ளதாக துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.
புதுதில்லியில் ஆளுநர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ள அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
ஆளுநர் மாளிகையே புதுவை மக்களின் கடைசி புகலிடமாக உள்ளதால், அது தற்போது மக்கள் மாளிகையாக மாற்றப்பட்டுள்ளது. அவர்களின் நலனுக்காக குறைகேட்புக் கூட்டம், பார்வையாளர்கள் சந்திப்பு, சமூக கலாசார நிகழ்வுகள் அங்கு நடத்தப்படுகின்றன.
இதைத்தான் பிரதமர் மோடியும் வலியுறுத்தியுள்ளார். அனைத்துத் தரப்பைக் காட்டிலும் ஆளுநர் மாளிகைதான் மக்களின் நம்பத் தகுந்த இடமாக உள்ளது.  நீதி, நிவாரணத்துக்காக வரும் மக்களின் நலனே முக்கியமாகும். மத்திய அரசுக்கும் யூனியன் பிரதேசத்துக்கும் இடையே இணைப்புப் பாலமாக ஆளுநர் மாளிகை திகழ்கிறது.
குடியரசுத் தலைவரும் மாநாட்டில் பேசுகையில், எந்தத் தவறான தகவலையும் வெளிப்படுத்தக் கூடாது என வலியுறுத்தினார். பொதுமக்கள் நலன்,  ஒடுக்கப்பட்டோரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும். ஆளுநர் மாளிகையின் ஒவ்வோர் செயலும் மக்கள் நம்பும்படியாக இருக்க வேண்டும். ஆளுநர் மாளிகையின் மீதான நம்பிக்கை என்பது யூனியன் பிரதேசத்துக்கும் மத்திய அரசுக்கும் இடையே உள்ள அரசியல் சட்ட இணைப்பின் மீது வைக்கப்பட்ட நம்பிக்கையாகும் என துணைநிலை ஆளுநர் கிரண் பேடி பதிவிட்டுள்ளார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/14/ஆளுநர்-மாளிகையே-மக்களின்-கடைசிப்-புகலிடமாக-உள்ளது-கிரண்-பேடி-2789937.html
2789936 விழுப்புரம் புதுச்சேரி ஆற்றல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஓவியப் போட்டி DIN DIN Saturday, October 14, 2017 01:59 AM +0530 நெல்லித்தோப்பு மகாத்மா காந்தி அரசு நடுநிலைப் பள்ளியில் ஆற்றல் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த ஓவியப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும், அவர்களுடைய சிந்தனையைத் தூண்டும் வகையிலும் இந்த ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியர் பாஸ்கர ராசு நோக்கவுரையாற்றி, ஓவியப் போட்டியைத் தொடக்கி வைத்தார். இரு பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த ஓவியப் போட்டிக்கு ஆசிரியை சாந்தி ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டார். சிறந்த ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசளிக்கப்பட்டன.  
ஓவியப் போட்டியில் மாணவர்கள் பலர் ஆர்வமுடன் பங்கேற்றனர். ஆசிரியர்கள் மதனகோபால், கணபதி, விவேகாந்தன், கேசவர்த்தினி, கஸ்தூரி உள்பட பலர் பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/14/ஆற்றல்-பாதுகாப்பு-விழிப்புணர்வு-ஓவியப்-போட்டி-2789936.html
2789935 விழுப்புரம் புதுச்சேரி குடியரசுத் தலைவர் அறிவுரையின்படி ஆளுநர் கிரண் பேடி செயல்பட வேண்டும்: அதிமுக வலியுறுத்தல் DIN DIN Saturday, October 14, 2017 01:59 AM +0530 குடியரசுத் தலைவர் அறிவுரையின்படி புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி செயல்பட வேண்டும் என அதிமுக வலியுறுத்தியது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் ஆ.அன்பழகன் எம்.எல்.ஏ. வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:  புதுதில்லியில் நடைபெற்ற ஆளுநர்கள் மாநாட்டில் குடியரசுத் தலைவர் உரையாற்றும் போது, ஆளுநர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அறிவுரைகள் வழங்கிப் பேசினார்.
கூட்டாட்சித் தத்துவத்துக்கு ஆதாரமாக ஆளுநர்களின் செயல்பாடு இருக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்ட மத்திய, மாநில அரசுகள் இடையே இணைப்புப் பாலமாக ஆளுநர்கள் விளங்க வேண்டும். மக்கள் நலன் சார்ந்து, தேர்வு செய்யப்பட்ட மாநில அரசுடன் இணைந்து மாநில வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். ஆனால், புதுவை மாநில ஆளுநர் இதற்கு மாறாக செயல்பட்டு வந்துள்ளார். இனி மேல் அவர் தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.புதுவை மாநில அரசுடன் அவர் கொண்டுள்ள மோதல் போக்கைக் கைவிட வேண்டும்.
ஆளுநர் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து குழப்பத்தை ஏற்படுத்தாமல் ஆக்கப்பூர்வமான செயல்களைச் செய்ய வேண்டும. புதுவை அரசு டெங்கு பாதிப்பைக் கட்டுப்படுத்துவதில் முழுமையாகத் தோல்வி அடைந்து விட்டது. தமிழக அரசு மத்திய அரசிடம் கோரியதால் ஆய்வு செய்ய மத்திய குழு வந்துள்ளது. ஆனால், புதுவை அரசு அவ்வாறு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
மாநில அரசு மக்களின் தேவைக்காக மத்திய அரசின் உதவியைப் பெற வேண்டும். அரசின் உதவித் தொகையைப் பெற்று ஆண்டுக்கு 300 பேர் மருத்துவம் படிக்கின்றனர். ஆனால், ஒருவர் கூட டெங்கு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முன் வரவில்லை. எனவே, மருத்துவம் படித்து முடித்தோர் ஓராண்டு அரசு மருத்துவமனையில் பணி செய்யும் வகையில் ஒப்பந்தம் செய்ய வேண்டும். அரசு சார்பு நிறுவனங்களில் 9 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு 3 ஆண்டுகளாக ஊதியம் தரப்படவில்லை.
கூட்டுறவு சர்க்கரை ஆலையைத் தனியார் மயமாக்கக் கூடாது. விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ. செல்வம் தாக்கப்பட்டதற்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். அனைத்து வகையிலும்  அரசு தோல்வி அடைந்துவிட்டது. குடிநீர், வடிகால் வசதி ஏற்படுத்துவது தொடர்பாக பிரான்ஸ் நாட்டின் ஏஎப்டி அமைப்புடன் புதுவை அரசு செய்துள்ள ஒப்பந்தத்தை சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு ஆய்வு செய்யும் என்றார் அன்பழகன்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/14/குடியரசுத்-தலைவர்-அறிவுரையின்படி-ஆளுநர்-கிரண்-பேடி-செயல்பட-வேண்டும்-அதிமுக-வலியுறுத்தல்-2789935.html
2789932 விழுப்புரம் புதுச்சேரி பெண் கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை DIN DIN Saturday, October 14, 2017 01:58 AM +0530 புதுச்சேரியில் பெண்ணைக் கொன்று நகையைத் திருடிய வழக்கில், இளைஞருக்கு புதுச்சேரி இரண்டாவது மாவட்டக் கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
செங்கல்பட்டை அடுத்த காட்டாங்கொளத்தூரைச் சேர்ந்தவர் கலில் ரஹ்மான் (35)  . இவர், கடந்த 27.6.2008 அன்று புதுச்சேரி வந்தார். அவருடன் தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூரைச் சேர்ந்த பத்மநாபனின் மனைவி செல்வியும் (28) வந்தார்.
தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்த இருவரும் மறைமலையடிகள் சாலையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தனர். இந்த நிலையில், மறுநாள் காலை செல்வி அறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக உருளையன்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், செல்வியைக் கொன்றிவிட்டு, 7 பவுன் தங்க நகைகளுடன் கலில் ரஹ்மான் தப்பிச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸார் தீவிர விசாரணை நடத்தி கலில் ரஹ்மானை கைது செய்து மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத்  தொடர்ந்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொ) செல்வநாதன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கலில் ரஹ்மானுக்கு ஆயுள் சிறை விதித்து தீர்ப்பளித்தார்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/14/பெண்-கொலை-வழக்கில்-இளைஞருக்கு-ஆயுள்-சிறை-2789932.html
2789930 விழுப்புரம் புதுச்சேரி புற்று நோய் பாதிப்பு: காவலர் தற்கொலை DIN DIN Saturday, October 14, 2017 01:58 AM +0530 புற்று நோயின் பாதிப்பு தாளாமல் காவலர் தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி சண்முகாபுரம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் சீனுவாசன் (53). இவர், வில்லியனூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக சீனுவாசன் புற்று நோயினால் அவதிப்பட்டு வந்தாராம்.
இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் நோயின் தாக்கம் அதிகமானதால் மனமுடைந்த காவலர் சீனுவாசன் வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத போது, மின் வயரினால் கழுத்தை இறுக்கி தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கோரிமேடு போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/14/புற்று-நோய்-பாதிப்பு-காவலர்-தற்கொலை-2789930.html
2789928 விழுப்புரம் புதுச்சேரி மீனவர் விடுதலை வேங்கைகள் ஆர்ப்பாட்டம் DIN DIN Saturday, October 14, 2017 01:57 AM +0530 கோரிக்கைகளை வலியுறுத்தி, மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பினர் புதுச்சேரி தலைமைத் தபால் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இந்திய கடற்படையினரைக் கண்டித்தும்,  தமிழகம், காரைக்கால் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் புதுச்சேரியில் மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பினர் செயலர் மங்கையர்ச்செல்வன் தலைமை வகித்தார். இதில்,  70-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், இந்திய கடற்படையினரைக் கண்டித்தும் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/14/மீனவர்-விடுதலை-வேங்கைகள்-ஆர்ப்பாட்டம்-2789928.html
2789926 விழுப்புரம் புதுச்சேரி அமித் ஷா மகன் மீதான புகார்: சிபிஐ விசாரிக்க வலியுறுத்தி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் DIN DIN Saturday, October 14, 2017 01:57 AM +0530 பாஜக  தலைவர் அமித் ஷா மகன் ஜெய் ஷா மீதான ஊழல் புகார் தொடர்பாக சிபிஜ விசாரிக்க  நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அமித் ஷா, அவரது மகன்  ஜெய் ஷா ஆகியோர் ஊழல் புகாரில் சிக்கியுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் ஜெய் ஷா நிறுவனத்தின் சொத்து மதிப்பு 16 ஆயிரம் மடங்கு உயர்ந்துள்ளது. இதைக் கண்டித்தும், ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, புதுச்சேரி அஜந்தா சிக்னல் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  க.லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., கட்சி நிர்வாகிகள் தேவதாஸ், நீலகங்காதரன், விநாயகமூர்த்தி, மகளிர் காங்கிரஸ் தலைவி பிரேமலதா உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/14/அமித்-ஷா-மகன்-மீதான-புகார்-சிபிஐ-விசாரிக்க-வலியுறுத்தி-காங்கிரஸ்-ஆர்ப்பாட்டம்-2789926.html
2789924 விழுப்புரம் புதுச்சேரி ஏஐடியுசி பாசிக் ஊழியர்கள் போராட்டம்: 100 பேர் கைது DIN DIN Saturday, October 14, 2017 01:56 AM +0530 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, புதுச்சேரியில் ஏஐடியுசி பாசிக் ஊழியர்கள் முன்னேற்றச் சங்கம், கூட்டுப் போராட்டக் குழு சார்பில், வெள்ளிக்கிழமை பிச்சை எடுத்து அரசு கஜானாவை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுவை அரசின் கூட்டுறவு சார்பு நிறுவனமான பாசிக் சார்பில் காய்கறி, உரம், மலர்ச் செடிகள், உணவகம், மதுபான விற்பனை என பல்வேறு கடைகள் செயல்படுகின்றன. பாசிக் நிறுவனத்தில் மாநிலம் முழுவதும் 350 நிரந்தர தொழிலாளர்கள் உள்பட 600-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இதற்கிடையே, இவர்கள் தங்களுக்கு 40 மாதங்களாக வழங்கப்படாத ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். தினக்கூலி ஊழியர்களாக
15 ஆண்டுகள் பணிபுரிந்து வரும் ஊழியர்களை பணி நிரம்தரம் செய்ய வேண்டும். நிரந்தர ஊழியர்களுக்கு முழு சம்பளத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த பல நாள்களாக தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக பாசிக் ஊழியர்கள் அனைவரும் பிச்சை எடுத்து அரசு கஜானாவை நிரப்பும் போராட்டம் நடத்த திட்டமிட்டு வெள்ளிக்கிழமை அந்தப் போராட்டத்தை நடத்தினர்.
புதிய பேருந்து நிலையம், வெங்கட்டசுப்பா ரெட்டியார் சிலை, ராஜா திரையரங்கம் சிக்னல், ராஜீவ் காந்தி சிக்னல், இந்திரா காந்தி சிக்னல் ஆகிய பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு ஊழியர்கள் சங்கத்தின் செயலர் முத்துராமன் தலைமை வகித்தார். தலைவர் அப்துல்லா கான், துணைத் தலைவர் ரமேஷ், துணைச் செயலர் கோவிந்தராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில ஏஐடியுசி தலைவர் அபிஷேகம், செயலர் சேதுசெல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பொருளாளர் தரணிராஜன் நன்றி கூறினார். போராட்டத்தில், ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/14/ஏஐடியுசி-பாசிக்-ஊழியர்கள்-போராட்டம்-100-பேர்-கைது-2789924.html
2789922 விழுப்புரம் புதுச்சேரி புதுச்சேரி அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: போலீஸார் தடியடி: எம்எல்ஏ உள்பட 100 பேர் கைது DIN DIN Saturday, October 14, 2017 01:55 AM +0530 புதுச்சேரி கூட்டுறவு சர்க்கரை ஆலையைப் பாதுகாக்க வலியுறுத்தி, லிங்காரெட்டிப்பாளையத்தில் உள்ள சர்க்கரை ஆலை வளாகம் அருகே விவசாயிகள் வெள்ளிக்கிழமை நடத்திய ஆர்ப்பாட்டத்தில் போலீஸார் தடியடி நடத்தியதில் என்ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வத்தின் சட்டை கிழிக்கப்பட்டது. தடியடிச் சம்பவத்தில் 15 பேர் காயமடைந்தனர். எம்எல்ஏ உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
அனைத்து கரும்பு விவசாயிகள் சங்கம், அனைத்துத் தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு ஆகியவை சார்பில், இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவர் டிபிஆர்.செல்வம் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார்.
கடந்த 2016-17 இல் கரும்பு அரைவை பருவத்துக்கு வெட்டி அனுப்பிய கரும்புக்கு 7 மாதங்கள் ஆகியும் முன்பணத் தொகை ரூ. 7.5 கோடியை நிர்வாகம் தரவில்லை. அதை உடனே தர வேண்டும். நிகழாண்டு விவசாயிகளிடம் இருந்து பிடித்தம் செய்த கரும்புக் கடன் தொகை ரூ. 3 கோடியை இதுவரை வங்கிக்குச் செலுத்தவில்லை. அந்தத் தொகையை  அரசு உடனே வங்கிகளில் செலுத்த வேண்டும்.
2015-16 ஆம் ஆண்டுக்கு பிடித்தம் செய்த கரும்புக் கடன் தொகை ரூ. 3.5 கோடியை தமிழக அரசு தள்ளுபடி செய்து அறிவித்தும், விவசாயிகளுக்கு அந்தத் தொகை திருப்பித் தரப்படவில்லை. மேலும், 3 ஆண்டுகளுக்கு விவசாயிகளுக்குத் தர வேண்டிய ரூ. 7 கோடி நிலுவையை வழங்க வேண்டும். கூட்டுறவு ஆலையில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்களுக்கும் கடந்த மார்ச் முதல் செப்டம்பர் வரை 7 மாதங்கள் இபிஎப், எல்ஐசி பணிக் கொடை  ரூ. 27.5 கோடி செலுத்தப்படவில்லை. பணியாளர்கள் வாழ்க்கை நிலை கருதி நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்.
ஆலைப் பணியாளர்களுக்கு போனஸ்,  ஊக்கத் தொகை வழங்க வேண்டும்.
ஆலை அரைவையை உடனே தொடங்க பருவ காலப் பணியாளர்களை வரவழைத்து செப்பனிடும் பணிகளைத் தொடங்க வேண்டும்.
ஆலையைத் தனியாருக்குத் தாரை வார்க்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள், விவசாயிகள் உள்படப் பலர் பங்கேற்றனர்.
அப்போது திடீரென விவசாயிகள் அரசுக்கு எதிராக முழக்கமிட்டு ஆலையின் உள்ளே நுழைந்தனர்.
அவர்களைத் தடுத்த போலீஸார் போராட்டத்துக்கு அனுமதி இல்லை எனக் கூறி மறுத்தனர்.
ஏற்கெனவே அனுமதி தரப்பட்டுள்ளது என விவசாயிகள் கூறியபோது, அது ரத்து செய்யப்பட்டு விட்டதாக போலீஸார் தெரிவித்தனர். அதையும் மீறி விவசாயிகள் உள்ளே செல்ல முயன்றனர். இதனால், போலீஸார் அவர்கள் மீது  தடியடி நடத்தினர். இதில், என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.  டிபிஆர். செல்வத்தின் சட்டை கிழிக்கப்பட்டது. ஆலையின் முன்னாள் தலைவர் ஞானசேகரன் உள்பட 15 பேர் காயமடைந்தனர். பின்னர், எம்.எல்.ஏ. செல்வம் உள்ளிட்ட 100 பேரை போலீஸார் கைது செய்தனர். இதனால், அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/14/புதுச்சேரி-அருகே-விவசாயிகள்-ஆர்ப்பாட்டம்-போலீஸார்-தடியடி-எம்எல்ஏ-உள்பட-100-பேர்-கைது-2789922.html
2789920 விழுப்புரம் புதுச்சேரி என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை தோல்வி DIN DIN Saturday, October 14, 2017 01:55 AM +0530 பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள், மத்திய தொழிலாளர் உதவி ஆணையர் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இந்தப் பேச்சுவார்த்தையில் நிர்வாகத் தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை.
என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு அறிவித்த அடிப்படை ஊதியம், அகவிலைப்படி வழங்குவது தொடர்பாக புதுச்சேரியிலுள்ள  மத்திய தொழிலாளர் நலத் துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் முத்தரப்புப் பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தொழிலாளர்கள் நலத் துறை உதவி ஆணையர் கணேசன் முன்னிலையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் என்எல்சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கத்தினர் மட்டுமே பங்கேற்றனர். என்எல்சி நிர்வாகத் தரப்பில் இருந்து யாரும் பங்கேற்கவில்லை.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர், ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கத்தின் சிறப்புச் செயலர் சேகர் கூறியதாவது:
தற்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நிர்வாகத் தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை. இதனால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. வருகிற 16-ஆம் தேதி சென்னை சாஸ்திரி பவனில் அறிவித்தபடி மத்திய தொழிலாளர்கள் ஆணையம் முன் மனு அளித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவித்தார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/14/என்எல்சி-ஒப்பந்தத்-தொழிலாளர்கள்-பேச்சுவார்த்தை-தோல்வி-2789920.html
2789638 விழுப்புரம் புதுச்சேரி வங்கிக் கடனை நேர்மையாகத் திருப்பிச் செலுத்த வேண்டும்: மத்திய அமைச்சர்அசோக் கஜபதி ராஜு DIN DIN Friday, October 13, 2017 08:57 AM +0530 பொதுமக்கள் வங்கிகளில் பெறும் கடனை நேர்மையாகத் திருப்பிச் செலுத்தி, நாட்டின் முன்னேற்றத்துக்கு பாடுபட வேண்டும் என மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு கூறினார்.

வங்கிகள் கூட்டமைப்பு சார்பில், புதுச்சேரி கம்பன் கலையரங்கில் முத்ரா சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. பிரதமரின் முன்னோடித் திட்டமான முத்ராவில் நிகழாண்டு ரூ. 208 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரை சிஷு பிரிவில் 7,012 பேருக்கும், கிஷோர் பிரிவில் 2,820 பேருக்கும், தருண் பிரிவில் 257 பேருக்கும் என மொத்தம் 10,089 பேருக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக சிறப்பு முகாம் நடைபெற்றது.

புதுவை தலைமைச் செயலர் மனோஜ் பரிதா வரவற்றார். எம்.எல்.ஏ. ஆ.அன்பழகன், இந்தியன் வங்கி மேலாண் இயக்குநர் கிஷோர் காரத் முன்னிலை வகித்தனர்.

முகாமுக்கு புதுவை முதல்வர் வி.நாராயணசாமி தலைமை வகித்தார். நிகழ்வில், மத்திய அமைச்சர் அசோக் கஜபதி ராஜு பயனாளிகளுக்கு கடனுதவியை வழங்கிப் பேசியதாவது: இந்தியா பன்முகத் தன்மை கொண்ட நாடு. வேற்றுமையில் ஒற்றுமைதான் நமது பலம்.

பல ஆண்டுகளாக அனைவருக்கும் வங்கிச் சேவை என்பது கிடைக்காத நிலை இருந்தது. 4 ஆண்டுகளுக்கு முன் வங்கியில் கணக்குத் தொடங்குவது மிகுந்த சிரமமாக இருந்தது. ஆனால், மத்திய அரசின் முயற்சியால் அனைவருக்கும் தற்போது வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு, அனைத்துக் காப்பீடு திட்டங்கள், எழுந்திரு இந்தியா, முத்ரா திட்டம், ஓய்வூதியத் திட்டங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

உலகம் முழுவதும் சுற்றுலாதான் அதிக வேலைவாய்ப்பைத் தருகிறது. கலை, மொழி, கலாசாரத்தில் இந்தியா சிறப்புற்று விளங்குகிறது. விமான சேவை இணைப்பு என்பது மிக முக்கியமானதாகும்.

இந்தியா சுதந்திரம் பெற்று இதுவரை 70 விமான நிலையங்களே இயங்கி வரும் நிலை தொடர்கிறது. இதற்காக மாற்று ஏற்பாட்டைச் செய்தோம்.

மாநில அரசுகளுடன் இணைந்து உதான் திட்டத்தைச் செயல்படுத்தினோம். 32 நகரங்களுக்கு இணைப்பு ஏற்படுத்தினோம். அனைத்து இந்தியர்களும் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

அப்போதுதான் இந்தியா முன்னேற்றம் அடையும்.

எந்தத் திட்டமானாலும் நேர்மையாகச் செயல்படுத்தப்பட வேண்டும். இந்த விஷயத்தில் தனி நபர்கள், குடும்பத்தினர், நாட்டின் நலனுக்காகப் பாடுபட வேண்டும் என்றார் அமைச்சர் கஜபதி ராஜு.

நிகழ்வில் புதுவை முதல்வர் நாராயணசாமி பேசியதாவது: தேசியமயமாக்கப்பட்ட அனைத்து வங்கிகளும் ஏழை, எளிய, அடித்தட்டு மக்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க கடன் வழங்க முகாம்களை நடத்தி வருகின்றன.

புதுச்சேரியில் இந்த ஆண்டு ரூ. 208 கோடிக்கு 266 வங்கிகள் இணைந்து சுய தொழில் தொடங்க முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வழங்கின்றன. 13 லட்சம் பேர் புதுவையில் தனிக் கணக்குத் தொடங்கியுள்ளனர்.

முத்ரா திட்டத்தின் மூலம் கடன் பெறுவோர் தொழில் தொடங்கி, பலருக்கும் வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும்.

வங்கிகளில் 30 சதவீதம் மட்டுமே கடன் தருகின்றனர். சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்களை வங்கிகள் மறந்து விடுகின்றனர். அரசுப் பள்ளிகள், நிறுவனங்களுக்கு வங்கிகள் உதவி செய்யலாம். கல்வி கற்கத் தேவையான உபகரணங்கள் போன்றவற்றை வாங்க 3 சதவீதம் நிதியைத் தரலாம்.

புதுச்சேரியில் விமான சேவையை குறுகிய காலத்தில் தொடங்க அனுமதி அளித்த மத்திய அமைச்சருக்கு நன்றி. புதுவை - திருப்பதி, பெங்களூரு, கோவை, கொச்சி, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கும் விமான சேவையைத் தொடங்க முன்வர வேண்டும்.

விமான நிலைய விரிவாக்கத்துக்குத் தேவையான நிலத்தைத் தமிழகத்தில் இருந்து பெற மத்திய அமைச்சர் உதவி புரிய வேண்டும். சென்னை விமான நிலையத்தில் தற்போது நெரிசல் ஏற்படுகிறது. புதுவையில் சரக்கு விமான போக்குவரத்தையும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் முதல்வர் நாராயணசாமி.

முத்ரா சிறப்பு முகாமில் அனைத்து வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள், நபார்டு வங்கி அரங்குகள் இடம் பெற்றிருந்தன. மேலும், மின்னணு பணப் பரிவர்த்தனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பீம் செயலி குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டன.

ஆதார் எண் பதிவு செய்தல், இணைத்தல், புதிய வங்கிக் கணக்கு தொடங்குதல், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் இணைதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளும் முகாமில் வழங்கப்பட்டன.

நிதித் துறை செயலர் கந்தசாமி, நூற்றுக் கணக்கான மகளிர் சுய உதவிக் குழுவினர், வங்கி அதிகாரிகள், ஊழியர்கள், பங்கேற்றனர். நிகழ்வில், மொத்தம் 1,500 பேருக்கு முத்ரா கடன் திட்டத்துக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/13/w600X390/pondy1.jpg http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/13/வங்கிக்-கடனை-நேர்மையாகத்-திருப்பிச்-செலுத்த-வேண்டும்-மத்திய-அமைச்சர்அசோக்-கஜபதி-ராஜு-2789638.html
2789668 விழுப்புரம் புதுச்சேரி திமுக சார்பில் ரத்த தான முகாம்  புதுச்சேரி, DIN Friday, October 13, 2017 08:52 AM +0530 புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில், தெற்கு மாநில திமுக சார்பில் ஒரு மாத காலம் வரை நடைபெறும் ரத்த தான முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.
 புதுச்சேரியில் டெங்கு பாதிப்பு தீவிரமாக உள்ளது. ஏற்கெனவே 4 பேர் உயிரிழந்த நிலையில், சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 இந்த நோய் பாதிப்பால் ரத்த தட்டணுக்கள் குறையும். இதனால், அதிகம் அளவில் ரத்தம் தேவைப்படும். பொதுமக்களும் தங்களால் இயன்ற அளவுக்கு ரத்தம் வழங்கி வருகின்றனர்.
 இதன் தொடர்ச்சியாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் உத்தரவுப்படி, புதுவையில் தெற்கு மாநில திமுக சார்பில், அரசுப் பொது மருத்துவமனையில் ரத்த தான முகாம் தொடங்கியது.
 கட்சியின் மாநில அமைப்பாளர் இரா.சிவா எம்.எல்.ஏ. தலைமை வகித்தார்.
 நிர்வாகிகள் அனிபால் கென்னடி, குணா திலீபன், தைரியநாதன், இளங்கோவன், மாறன், வேலவன், சக்திவேல், உள்பட பலர் பங்கேற்றனர். இந்த ரத்த தான முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர், இளைஞர்கள், பொதுமக்கள் ரத்த தானம் செய்தனர். தெற்கு மாநிலத்தில் உள்ள 12 தொகுதிகளைச் சேர்ந்தவர்களும் ரத்த தானம் வழங்க உள்ளனர். முதல் கட்டமாக உருளையன்பேட்டைதொகுதியைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இந்த ரத்த தான முகாம் தொடர்ச்சியாக ஒரு மாத காலம் நடைபெறும் என சிவா எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/13/திமுக-சார்பில்-ரத்த-தான-முகாம்-2789668.html
2789667 விழுப்புரம் புதுச்சேரி திருநங்கைகள் சுய மரியாதையுடன் வாழ காவல் துறை உதவும்: முதுநிலை எஸ்.பி. ராஜீவ் ரஞ்சன்  புதுச்சேரி, DIN Friday, October 13, 2017 08:52 AM +0530 புதுவை காவல் துறை சார்பில் திருநங்கைகளுக்கான ஆலோசனைக் கூட்டம் தமிழ்ச் சங்க வளாகத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
 கூட்டத்துக்கு முதுநிலை எஸ்.பி. ராஜீவ் ரஞ்சன் தலைமை வகித்தார். எஸ்.பி.க்கள், காவல் ஆய்வாளர்கள், திருநங்கைகள் சங்கப் பிரதிநிதிகள், திருநங்கைகள் கலந்து கொண்டனர்.
 கூட்டத்தில் திருநங்கைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், பொருளாதார நிலை குறித்து காவல் துறை அதிகாரிகள் கேட்டறிந்தனர்.
 பின்னர், முதுநிலை எஸ்.பி. ராஜீவ் ரஞ்சன் கூறியதாவது: திருநங்கைகள் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தக் கூடாது. உங்களுடைய பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். வாழ்க்கை நிலையை மாற்ற அரசு அளிக்கும் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நேர்மையாக வாழ வேண்டும். தங்களுக்கு வருவாய் ஆதாரம் இல்லை என அவர்கள் தெரிவித்தனர்.
 வர்த்தக சங்கங்கள், வணிகர் சங்கங்களிடம் அவர்களுக்கு வேலைவாய்ப்பைத் தருமாறு கேட்டுள்ளோம். காவல் துறையில் அவர்களுக்கு பணி வழங்குவது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சுய உதவிக் குழுக்களைத் தொடங்கி பல்வேறு வியாபாரங்களை அவர்கள் மேற்கொள்ளலாம். காவல் துறை அவர்கள் வாழ்வு மேம்பட உதவி புரியும் என்றார் அவர்.
 ஆலோசனைக் கூட்டத்தில் திருநங்கைகள் கூறியதாவது: தமிழகத்தைப் போல, புதுவையிலும் எங்களுக்கு வீட்டு வசதி செய்து தர வேண்டும். தொழில் தொடங்க நிதியுதவி அளிக்க வேண்டும். நாங்கள் பணிபுரியத் தயாராகத்தான் உள்ளோம்.
 எனவே, அரசும் எங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து தரவேண்டும், நாங்களும் காவல் துறையினரின் அறிவுரைகளைப் பின்பற்றி நடப்போம் எனத் தெரிவித்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/13/திருநங்கைகள்-சுய-மரியாதையுடன்-வாழ-காவல்-துறை-உதவும்-முதுநிலை-எஸ்பி-ராஜீவ்-ரஞ்சன்-2789667.html
2789666 விழுப்புரம் புதுச்சேரி அரசுக் கல்லூரிகளின் செயல்பாடுகள்: அமைச்சர் ஆய்வு  புதுச்சேரி, DIN Friday, October 13, 2017 08:52 AM +0530 புதுவையில் அரசுக் கல்லூரிகளின் செயல்பாடுகள் குறித்து கல்வி அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
 லாஸ்பேட்டை பிப்மேட் கருத்தரங்கக் கூடத்தில் உயர் கல்வித் துறை தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் தலைமை வகித்தார். உயர் கல்வித் துறை இயக்குநர் யாசம் லட்சுமிநாராயண ரெட்டி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வர்கள் கலந்து கொண்டனர்.
 மத்திய பணியாளர் தீர்ப்பாயம், நீதிமன்றங்களில் உயர் கல்வித் துறை கீழ் இயங்கும் கல்லூரிகளில் பணியாற்றும் ஊழியர்களால் தொடரப்பட்டுள்ள வழக்குகளின் தற்போதைய நிலை குறித்தும், ராஷ்டீரிய உச்சாதர் சிக்ஷா அபியான் (ரூசா) திட்டத்தின் மூலம் பெறப்பட்ட நிதியின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டன.
 மேலும், கல்லூரிகளின் தற்போதைய நிர்வாகம், அங்கு நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள், 2017 - 18 ஆம் கல்வியாண்டுக்கான நிதித் தேவை, பணியாளர்களின் குறைபாடுகள், கல்லூரிப் பேராசிரியர்களின் பணி குறிப்புப் பதிவேடுகள், மதிப்பீடு ஆகியவை பற்றியும் இந்தக் கூட்டத்தில் அமைச்சர் கமலக்கண்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/13/அரசுக்-கல்லூரிகளின்-செயல்பாடுகள்-அமைச்சர்-ஆய்வு-2789666.html
2789665 விழுப்புரம் புதுச்சேரி சிறப்பு வாக்காளர் சேர்க்கை முகாம்  புதுச்சேரி, DIN Friday, October 13, 2017 08:51 AM +0530 புதுச்சேரி மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் சிறப்பு வாக்காளர் சேர்க்கை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
 மணக்குள விநாயகர் கல்லூரியின் தலைவர் எம்.தனசேகரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எஸ்.வி.சுகுமாறன், செயலர் கே.நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 வாக்காளர் சேர்க்கை அதிகாரி கருணாகரன் வரவேற்றார். ஸ்வீப் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வி.கோவிந்தசாமி பங்கேற்று ஸ்வீப் அமைப்பின் நோக்கம், செயல்பாடுகள், வாக்காளர் அட்டையின் முக்தியத்துவம் குறித்து விவரித்தார்.
 தேர்தல் துறையின் வாக்காளர் பதிவு அதிகாரி ஷீலா, சுஷித்திரா ஆகியோர் முதல் முறை வாக்காளர் அட்டை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விவரித்தனர்.
 தகுதியான 600 இளம் வாக்காளர்களுக்கு படிவம் 6 வழங்கப்பட்டு, நிறைவு செய்து பெறப்பட்டன. கல்லூரி முதல்வர் கே.வெங்கடாசலபதி சிறப்புரை ஆற்றினார். துணைப் பேராசிரியர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/13/சிறப்பு-வாக்காளர்-சேர்க்கை-முகாம்-2789665.html
2789664 விழுப்புரம் புதுச்சேரி வ.சுப்பையா நினைவு தினம்: முதல்வர், தலைவர்கள் அஞ்சலி  புதுச்சேரி, DIN Friday, October 13, 2017 08:51 AM +0530 மக்கள் தலைவர் வ.சுப்பையாவின் நினைவு தினத்தையொட்டி, நெல்லித்தோப்பு பகுதியில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு முதல்வர் வி.நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
 அவரைத் தொடர்ந்து, பேரவை துணைத் தலைவர் சிவக்கொழுந்து, திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சிவா ஆகியோர் மாலை அணிவித்து மாரியாதை செலுத்தினர். பின்னர், அங்கு வைக்கப்பட்டிருந்த சுப்பையாவின் உருவப் படத்துக்கும் மலர் தூவி அவர்கள் மரியாதை செலுத்தினர்.
 இதேபோல, வ.சுப்பையா உருவச் சிலைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அந்தக் கட்சியின் மாநிலச் செயலர் ஆர்.விசுவநாதன், தேசிய குழு உறுப்பினர் நாரா.கலைநாதன், துணைச் செயலர்கள் அ.ராமமூர்த்தி, அ.மு.சலீம், பொருளாளர் அபிஷேகம், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கீதநாதன், முருகன், தினேஷ் பொன்னையா, சேதுசெல்வம், சுப்பையா, சரளா மற்றும் மாநிலக் குழு உறுப்பினர்கள், தொகுதிச் செயலர்கள் கலந்து கொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/13/வசுப்பையா-நினைவு-தினம்-முதல்வர்-தலைவர்கள்-அஞ்சலி-2789664.html
2789663 விழுப்புரம் புதுச்சேரி தீபாவளி பரிசுத் தொகையை வழங்கக் கோரி அமைப்பு சாரா நலச் சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்  புதுச்சேரி, DIN Friday, October 13, 2017 08:51 AM +0530 தீபாவளி பரிசுத் தொகை அறிவிப்பை வெளியிடக் கோரி, புதுச்சேரி அமைப்பு சாரா நலச் சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாழக்கிழமை தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 புதுவை அமைப்பு சாரா தொழிலாளர் நலச் சங்க அலுவலகத்தில் சுமார் 30,000 மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். ஆட்டோ ஓட்டுநர்கள், கடை வைத்திருப்பவர்கள் என 24 வகையான தொழிலில் ஈடுபடுபவர்கள் இதில் அடங்குவர்.
 இவர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளி பரிசுத் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், நிகழாண்டு இதுகுறித்த எந்த அறிவிப்பையும் அரசு இதுவரை வெளியிடவில்லை.
 இதனிடையே, கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தீபாவளி தொகை ரூ. 2,000 வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து உறுப்பினர்கள் பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
 இந்த நிலையில், சிஐடியு உடல் உழைப்போர் சங்கம் சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலச் சங்க அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
 அந்தச் சங்கத்தின் செயலர் சீனுவாசன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் குமார், மதிவாணன், ராமசாமி, மது, ராதாகிருஷ்ணன் உள்பட ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராததால் கோபமடைந்த தொழிலாளர்கள் அங்கிருந்து பேரணியாகச் சென்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது தலைமைச் செயலகம் முன் போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
 இதுகுறித்து பெரியக்கடை போலீஸார் துறை அதிகாரிகளுக்குத் தெரிவித்தனர். அவர்கள் அமைச்சரை தொடர்பு கொண்டு பேசி வெள்ளிக்கிழமை முதல் கூப்பன் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து தொழிலாளர்களின் போராட்டம் கைவிடப்பட்டது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/13/தீபாவளி-பரிசுத்-தொகையை-வழங்கக்-கோரி-அமைப்பு-சாரா-நலச்-சங்க-அலுவலகத்தை-முற்றுகையிட்டு-போராட்டம்-2789663.html
2789648 விழுப்புரம் புதுச்சேரி அனைத்து சமுதாய மக்களுக்கும் பாலியஸ்டர் வகை துணிகள் வழங்க நடவடிக்கை: அமைச்சர் கந்தசாமி  புதுச்சேரி, DIN Friday, October 13, 2017 08:46 AM +0530 அனைத்து சமுதாய மக்களுக்கும் பாலியஸ்டர் துணி வகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமூக நலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி தெரிவித்தார்.
 புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் அட்டவணை இணைத்தவருக்கான துணைத் திட்ட ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
 கூட்டத்துக்கு அமைச்சர் மு.கந்தசாமி தலைமை வகித்தார். அரசுச் செயலர் மிகிர் வரதன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் வல்லவன், ஆதிதிராவிடர் நலத் துறை இயக்குநர் ரகுநாதன், சுகாதாரத் துறை இயக்குநர் ராமன், பாட்கோ மேலாண் இயக்குநர் கதிர்வேல், சமூக நலத் துறை இயக்குநர் சாரங்கபாணி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 கூட்டத்தில் நடப்பாண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்ட நிதியில் இருந்து செப்டம்பர் மாதம் (2017) வரை செய்யப்பட்ட செலவுகள் குறித்து அமைச்சர் கந்தசாமி ஆய்வு செய்தார்.
 கூட்டத்துக்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆதிதிராவிட மக்களுக்காக ஒதுக்கீடு செய்யும் திட்ட நிதி அந்த மக்களின் தேவையறிந்து செலவு செய்யப்பட வேண்டும். அட்டவணை இனத்தவருக்கான துணைத் திட்டத்துக்காக ஒதுக்கீடு செய்த நிதியை வேறு பொதுத் திட்டங்களுக்குச் செலவு செய்யக் கூடாது.
 நிகழாண்டு அட்டவணை இனத்தவருக்கான துணை திட்டத்தின் கீழ், 285.81 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் ரூ. 76.53 கோடி கடந்த செப்டம்பர் மாதம் வரை 21 துறைகள் மூலம் செலவு செய்துள்ளனர். இது 26.78 சதவீதமாகும். கடந்தாண்டு இதே கால கட்டத்தில் துணைத் திட்டம் 46.15 சதவீதத்தை அடைந்திருந்தது. ஆனால், நிகழாண்டு பாதி அளவாக 26.78 சதவீதத்தை மட்டுமே அடைந்துள்ளது.
 எனவே, அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு நூறு சதவீதத்தை எட்ட வேண்டும்.
 ஆதிதிராவிடர்களுக்கு 16 சதவீத நிதியை ஒதுக்கினால், மற்ற சமுதாய மக்கள் வருத்தப்படுகிறார்கள், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு துணிகளை வழங்கும் போது 18 வயது முதல் வழங்குகிறோம். பிற சமுதாயத்திலும் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்குத் துணிகள் வழங்கப்படுகின்றன.
 லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக துணிகள் வர தாமதம் ஏற்பட்டுள்ளது. அனைத்துச் சமுதாய மக்களுக்கும் பாலியஸ்டர் துணிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 பண்டிகை வரும் முன்பே வேட்டி, சேலைகள் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினேன். ஆனால், அவர்களின் மெத்தனப் போக்கால், தற்போது உரிய காலத்தில் தரமுடியவில்லை. விரைவில் வேட்டி, சேலைகள் வழங்கப்படும்.
 மேலும், கூட்டுறவு பணிகளில் பதவி உயர்வுக் கோப்பு, இலவச அரிசி வழங்கும் கோப்பு, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கல்வி, விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோப்புகளுக்கு அனுமதியளித்து, கையொப்பம் இட்டால் ஆளுநர் கிரண் பேடியைச் சந்தித்து நன்றி கூற தயாராக உள்ளேன் என்றார் அமைச்சர்
 மு.கந்தசாமி.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/13/அனைத்து-சமுதாய-மக்களுக்கும்-பாலியஸ்டர்-வகை-துணிகள்-வழங்க-நடவடிக்கை-அமைச்சர்-கந்தசாமி-2789648.html
2789647 விழுப்புரம் புதுச்சேரி விழி தேடுவோர் தின விழிப்புணர்வுப் பேரணி  புதுச்சேரி, DIN Friday, October 13, 2017 08:45 AM +0530 உலக விழி தேடுவோர் தினத்தின் ஒரு பகுதியாக புதுச்சேரியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் கண்களில் கருப்புத் துணியைக் கட்டிக் கொண்டு பங்கேற்றனர்.
 உலகம் முழுவதும் 39 மில்லியன் மக்கள் பார்வையின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் சுமார் 15 மில்லியன் மக்கள் பார்வைக்காக ஏங்கி வருகின்றனர். எனவே, கண் தானத்தை வலியுறுத்தி விழிப்புணர்வுப் பேரணி புதுச்சேரியில் நடைபெற்றது.
 உலக விழி தேடுவோர் தினத்தை முன்னிட்டு பார்வைத் திட்டம் புதுவை கூட்டமைப்பு சார்பில், கண் தானத்தை வலியுறுத்தி அண்ணா திடலில் தொடங்கிய இந்தப் பேரணியை ஜோதி கண் மருத்துவமனை நிறுவனர் வனஜா வைத்திநாதன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். புஸ்ஸி வீதி வழியாகச் சென்ற இந்த விழிப்புணர்வுப் பேரணி கடற்கரை சாலையில் முடிவடைந்தது.
 பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட கண் பார்வையற்றவர்களும், 500-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் கண்களை மறைத்து கருவிழி படலம் தேடி என்ற நிலையை உணர்த்தியும், கண் தானத்தை வலியுறுத்தியும் பங்கேற்றனர்.
 அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி முதுநிலை முதல்வர் எஸ்ஏ.லூர்துசாமி, அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மோகன்குமார், பேட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தாளாளர் ரெஜிஸ் ஜான் பிரிட்டோ, சவேரியார் மேய்ப்புப் பணி மையத்தின் இயக்குநர் பிலோமின் தாஸ் உள்பட பலர் பேரணியில் பங்கேற்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/13/விழி-தேடுவோர்-தின-விழிப்புணர்வுப்-பேரணி-2789647.html
2789646 விழுப்புரம் புதுச்சேரி ஜிப்மர் உடலுறுப்பு மாற்று சிகிச்சை மையத்துக்கு தேவையான நிலம் ஒதுக்கப்படும்: முதல்வர்  புதுச்சேரி, DIN Friday, October 13, 2017 08:45 AM +0530 ஜிப்மர் உடலுறுப்பு மாற்று சிகிச்சை மையத்துக்கு தேவையான நிலம் ஒதுக்கப்படும் என முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்தார்.
 ஜிப்மர் மருத்துவமனையில் மருந்தியாலாளர்கள், உடலியக்கவியலாளர்கள் 63-ஆவது தேசிய மாநாடு வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. ஜிப்மர் இயக்குநர் பரிஜா தலைமை வகித்தார். இணை ஒருங்கிணைப்பாளர் பிரவதி பால் வரவேற்றார். அமைப்புத் தலைவர் ஜிஎஸ்.கவுர் மாநாடு குறித்து விவரித்தார். முதன்மையர் ஜிகே.பால், மருத்துவக் கண்காணிப்பாளர் அசோக் பதே, முதன்மையர்கள் சுவாமிநாதன், விஷ்ணுபட் வாழ்த்திப் பேசினர்.
 முதல்வர் நாராயணசாமி மாநாட்டைத் தொடக்கிவைத்துப் பேசியதாவது:
 தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை போல, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையும் புகழ் பெற்றுள்ளது. புதுவை மற்றும் தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் இங்கு சிகிச்சை பெற வருகின்றனர். சிறிய மாநிலமான புதுவையில் 9 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. கல்வி, மருத்துவக் கேந்திரமாக புதுவை திகழ்கிறது. கிராமப்புற மக்களுக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே சிறந்த சிகிச்சை அளிக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.
 உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தற்காலத்தின் முக்கிய தேவையாக உள்ளது. இதற்காக ஜிப்மர் தனி மையத்தை தொடங்க உள்ளது. அதற்கான நிலத்தை வழங்க அரசு தயாராக உள்ளது என்றார் நாராயணசாமி. அமைப்புச் செயலர் விவேக்குமார் சர்மா நன்றி கூறினார். இந்த மாநாடு சனிக்கிழமை நிறைவடைகிறது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/13/ஜிப்மர்-உடலுறுப்பு-மாற்று-சிகிச்சை-மையத்துக்கு-தேவையான-நிலம்-ஒதுக்கப்படும்-முதல்வர்-2789646.html
2789645 விழுப்புரம் புதுச்சேரி தீபாவளி சிறப்பு விற்பனை அங்காடி திறப்பு  புதுச்சேரி, DIN Friday, October 13, 2017 08:45 AM +0530 புதுச்சேரியை அடுத்த பெரியகாலாப்பட்டில் பாப்ஸ்கோ தீபாவளி சிறப்பு விற்பனை அங்காடியை வருவாய்த் துறை அமைச்சர் எப்.ஷாஜகான் வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
 புதுச்சேரி அரசின் சார்பு நிறுவனமான பாப்ஸ்கோ நிறுவனம், தீபாவளி சிறப்பு அங்காடிகளை புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் அமைத்து விற்பனையைத் தொடங்கியுள்ளது.
 அதன்படி, பெரிய காலாப்பட்டில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் அமைக்கப்பட்ட பாப்ஸ்கோ தீபாவளி சிறப்பு அங்காடியை வருவாய்த் துறை அமைச்சர் ஷாஜகான் தொடக்கி வைத்தார்.
 பாப்ஸ்கோ மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, வடக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ஜோசப், காங்கிரஸ் நிர்வாகிகள் ஆடியபாதம், கிராம கமிட்டி தலைவர் சிவராமன், மூர்த்தி, சிங்காரம், லட்சுமணன், சுரேஷ்குமார், முருகன், மகளிர் அணியைச் சேர்ந்த வளர்மதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/13/தீபாவளி-சிறப்பு-விற்பனை-அங்காடி-திறப்பு-2789645.html
2788946 விழுப்புரம் புதுச்சேரி பெண்ணை மிரட்டி பணம் பறிப்பு: 3 பேர் கைது  புதுச்சேரி, DIN Thursday, October 12, 2017 08:56 AM +0530 புதுச்சேரியில் அழகு நிலையத்தில் புகுந்து பெண்ணை மிரட்டி பணத்தை பறித்துச் சென்ற 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 கோட்டக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சோபனா (27). இவர், கிழக்கு கடற்கரை சாலை அருகே அழகு நிலையம் நடத்தி வருகிறார். புதன்கிழமை 4 பேர் கொண்ட கும்பல் அழகு நிலையத்துக்கு வந்து தங்களுக்கு முகப்பொலிவு செய்ய வேண்டும் என்று கூறினர். அதற்கு சோபனா ஆயுத பூஜை செய்ய உள்ளதால் மறுநாள் வந்து செய்து கொள்ளும்படி கூறினார்.
 இதனால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செல்லிடப்பேசி, ரூ. 800 பணம் ஆகியவற்றைப் பறித்துச் சென்றனர்.
 இதுகுறித்து சோபனா கோரிமேடு போலீஸார் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
 விசாரணையில், புதுச்சேரி வினோபா நகரைச் சேர்ந்த இளம்பிறை (23), லாஸ்பேட்டை பார்த்திபன் (29), கிருணா நகரைச் சேர்ந்த ஆகாஷ் (25) மற்றும் ஒருவர் என்பது தெரிய வந்தது.
 இதையடுத்து இளம்பிறை, பார்த்திபன், ஆகாஷ் ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ஒரு கத்தி, 2 செல்லிடப்பேசிகள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/12/பெண்ணை-மிரட்டி-பணம்-பறிப்பு-3-பேர்-கைது-2788946.html
2788945 விழுப்புரம் புதுச்சேரி புதுச்சேரி - பெங்களூரு இடையே விரைவில் விமான சேவை: புதுவை தலைமைச் செயலாளர் தகவல்  புதுச்சேரி, DIN Thursday, October 12, 2017 08:55 AM +0530 புதுச்சேரி-பெங்களூரு இடையே விரைவில் பயணிகள் விமான சேவை தொடங்கப்படும் என புதுவை தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதா தெரிவித்தார்.
 புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் புதன்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 ஆளுநர் கிரண் பேடிக்கும், அரசு நிர்வாகத்துக்கும் இடையே நிலவி வரும் கருத்து வேறுபாடுகளால் அதிகாரிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதில் மத்திய உள்துறை தலையிட வேண்டும் எனக் கேட்டுள்ளேன்.
 புதுச்சேரியில் இருந்து ஹைதராபாதுக்கு தற்போது விமான சேவை சிறப்பாக இயங்கி வருகிறது. ஹைதராபாத்-விஜயவாடா வழித்தடத்தில் அனைத்து பயணிகள் இருக்கைகளும் முழுமையாக நிரம்பி விடுகின்றன. விரைவில் பெங்களூரு நகருக்கு விமான சேவையை தொடங்க தனியார் நிறுவனத்திடம் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து அதிகரித்து விட்டதால், இரண்டாவது விமான நிலையம் அமைக்கத் திட்டமிட்டுள்ளனர். அந்தத் திட்டத்தை தவிர்த்து, புதுச்சேரி விமான நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளோம்.
 இதற்காக 100 ஏக்கர் நிலத்தை அடையாளம் கண்டுள்ளோம். பொதுமக்களும் எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை. நிலத்தைக் கையகப்படுத்தினால் பணத்தை மாநில அரசுதான் தர வேண்டும் என விமான நிலையங்கள் ஆணையம் தெரிவித்துள்ளது. புதுவை அரசு சார்பில் மத்திய அரசு இதற்கான நிதியை வழங்கும். புதுச்சேரி விமான நிலையத்தை விரிவுபடுத்தி, விமானங்கள் இறங்குவதற்கான நவீன தொழில்நுட்ப வசதிகளை செய்து தந்தால் பெரிய விமானங்களும் வந்து செல்ல முடியும்.
 பின்னர், இங்கிருந்து மெட்ரோ நகரங்களுக்கும் விமானங்களை இயக்கலாம். இதுதொடர்பாக மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சரிடம் பேசுமாறு முதல்வரிடம் கேட்டுக் கொண்டுள்ளேன்.
 புதுச்சேரிக்கும்-சென்னை துறைமுகத்துக்கும் இடையே சரக்குப் பெட்டக போக்குவரத்தை கையாள்வது தொடர்பாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக முகத்துவாரத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்ட 2 இயந்திரங்கள் பழுதாகி உள்ளன. இதற்காக ரூ.4 கோடி தேவைப்படுகிறது.
 அந்தத் தொகையை தருமாறு மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சரிடம் முதல்வர் வலியுறுத்தியிருந்தார். மேல் நடவடிக்கை எடுக்குமாறு சென்னை துறைமுகத்துக்கு மத்திய அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி தூர்வாரும் இயந்திரமும், நிதியும் விரைவில் கிடைத்து விடும். அதன் பிறகு, புதுச்சேரி துறைமுகம் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத வகையில் நவீன முறையில் சரக்குப் பெட்டக போக்குவரத்து இரவு நேரங்களில் நடைபெறும். விரைவில் இப்பணி தொடங்கும்.
 டெங்கு பாதிப்பு தற்போது கட்டுக்குள் உள்ளது. தமிழகத்தில் இருந்து புதுவைக்கு சிகிச்சை பெறுவதற்காக டெங்கு நோயாளிகள் அதிகம் வருகின்றனர். எந்த நிலைமையையும் சமாளிக்க புதுவை அரசு தயாராக உள்ளது.
 புதுவை அரசின் நிதி நிலைமை மிகவும் மோசமான நிலையில் இருந்தாலும், 3 மாதங்களில் சீரடைந்துவிடும். பண மதிப்பிழப்பு, மதுக் கடைகள் இடமாற்றல் உத்தரவு, ஜிஎஸ்டி போன்றவற்றால் வருவாய் இழப்பு ஏற்பட்டது. ஜிஎஸ்டி இழப்பை மத்திய அரசு மீண்டும் அளித்து விடும். இதனால் நிதி நிலை சீரடையும்.
 அரசு ஊழியர்கள், அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு, எவ்வளவு தொகை என்பது அறிவிக்கப்படும்.
 அனைத்து மாநிலங்களிலும் தலைமைச் செயலாளர்கள்தான் தலைமைக் கண்காணிப்பு அதிகாரிகளாக உள்ளனர். புதுவை மாநிலம் இந்தியாவில் தான் உள்ளது. தலைமை கண்காணிப்பு அதிகாரியாக எனது பணியை நான் நேர்மையாகச் செய்து வருகிறேன். இதுவரை 3400 புகார்கள் பெறப்பட்டு, 2200 புகார்கள் மீது விசாரணை நடந்துள்ளது. கடந்த ஆட்சியில் படகு வாங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக மத்திய கண்காணிப்பு ஆணையம் விசாரணை நடத்தி 3 வாரங்களில் அறிக்கை தருமாறு கூறியுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம் என்றார் மனோஜ் பரிதா.
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/12/புதுச்சேரி---பெங்களூரு-இடையே-விரைவில்-விமான-சேவை-புதுவை-தலைமைச்-செயலாளர்-தகவல்-2788945.html