Dinamani - விழுப்புரம் - http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2980369 விழுப்புரம் விழுப்புரம் விழுப்புரம் அருகே ரயில் மறியல்: இந்து மக்கள் கட்சியினர் கைது  விழுப்புரம், DIN Tuesday, August 14, 2018 08:54 AM +0530 விழுப்புரம் அருகே திங்கள்கிழமை ரயில் மறியலில் ஈடுபட்டதாக இந்து மக்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
 விழுப்புரம் அருகேயுள்ள கண்டமங்கலத்தை அடுத்துள்ள ஆழியூர் கிராமத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களான மருது சகோதரர்களை நிறைவுகூரும் வகையில், அண்மையில் அவர்களின் உருவப்பட பதாகைகளை வைத்து மரியாதை செலுத்தினர்.
 இந்தப் பதாகைகளை மர்ம நபர்கள் சிலர் அவமதிப்பு செய்ததையடுத்து, கிராமத்தில் பிரச்னை ஏற்பட்டது. இதுகுறித்து இந்து மக்கள் கட்சி சார்பில், கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
 இதைக் கண்டித்து, இந்து மக்கள் கட்சியினர் அதன் மாநில அமைப்புக் குழு செயலர் ஆசைத்தம்பி தலைமையில், கண்டமங்கலம் ரயில் நிலையம் அருகே திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனர். கட்சியின் புதுவை மாநிலத் தலைவர் கி.மஞ்சினி, கடலூர் மாவட்டத் தலைவர் ஆர்.எஸ்.தேவா, விழுப்புரம் மாவட்ட பொதுச் செயலர் மணி உள்ளிட்டோர் விழுப்புரத்திலிருந்து புதுச்சேரிக்குச் சென்ற பயணிகள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 15 பேரை போலீஸார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்கவைத்தனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/14/விழுப்புரம்-அருகே-ரயில்-மறியல்-இந்து-மக்கள்-கட்சியினர்-கைது-2980369.html
2980367 விழுப்புரம் விழுப்புரம் திருக்கோவிலூர் கூட்டுறவு வங்கி தலைவராக அதிமுக நிர்வாகி தேர்வு  திருக்கோவிலூர், DIN Tuesday, August 14, 2018 08:54 AM +0530 திருக்கோவிலூர் நகரக் கூட்டுறவு வங்கித் தலைவராக அதிமுக நகரச் செயலர் கே.சுப்பிரமணியன் தேர்வு செய்யப்பட்டார்.
 திருக்கோவிலூர் நகரக் கூட்டுறவு வங்கி உறுப்பினர்களுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ஆம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, தலைவர், துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இதற்கான வேட்புமனு தாக்கல் வங்கி வளாகத்தில் தேர்தல் அலுவலர் தமிழ்ச்செல்வி முன்னிலையில் நடைபெற்றது. தலைவர் பதவிக்கு நகர அதிமுக செயலர் கே.சுப்பிரமணியன், துணைத் தலைவர் பதவிக்கு அதிமுக நிர்வாகி ஜெயபால் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இவர்களை எதிர்த்து வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்ட தலைவர் கே.சுப்பிரமணியன், துணைத் தலைவர் ஜெயபால் ஆகியோர் திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.
 இந்த விழாவில், ஒன்றிய அதிமுக செயலர் ஏ.பி.பழனி, நகர வர்த்தகர் சங்கத் தலைவர் சீனுவாசன், பேரூராட்சி முன்னாள் உறுப்பினர் சி.ஆர்.சம்பத், அக்ரோ ராஜா, வழக்குரைஞர் கே.உமாசங்கர், வங்கி இயக்குநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வங்கிப் பொது மேலாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/14/திருக்கோவிலூர்-கூட்டுறவு-வங்கி-தலைவராக-அதிமுக-நிர்வாகி-தேர்வு-2980367.html
2980364 விழுப்புரம் விழுப்புரம் கறவை மாடு வாங்க கடன் தருவதாக மோசடி: பாதிக்கப்பட்ட பெண்கள் எஸ்.பி.யிடம் மனு  விழுப்புரம், DIN Tuesday, August 14, 2018 08:53 AM +0530 செஞ்சி சுற்று வட்டாரப் பகுதிகளில் கறவை மாடு வாங்க கடன் தருவதாக ரூ. 5 கோடி வரை மோசடி செய்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாதிக்கப்பட்ட பெண்கள் எஸ்.பி.யிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
 செஞ்சி அருகே பருதிபுரத்தைச் சேர்ந்த ஏஞ்சல், அணையேரி சேர்ந்த சகாயமேரி உள்பட 30-க்கும் மேற்பட்ட பெண்கள், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:
 செஞ்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்குளை, திருவண்ணாமலையைச் சேர்ந்த சிவக்குமார் கடந்த 2012-ஆம் ஆண்டில் அணுகி, சிறிய அளவில் கடன் தருகிறேன், பின்னர் கறவை மாடுகள் வாங்க பணம் தருகிறேன் என்று கூறி, முதலில் சிறிய அளவில் கடன் வழங்கினார். தொடர்ந்து, மாதந்தோறும் பணம் கட்டினால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு அதிக வட்டியுடன் பணம் திரும்பக் கிடைக்கும் என்று கூறியதை நம்பி, 100-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்கள் பணத்தைக் கட்டினர்.
 சிலருக்கு பணம் திரும்ப வழங்கப்பட்டது. ஆனால், பலருக்கு பணம் திரும்ப வழங்கப்படவில்லை. கிராமப்புற பெண்களிடம் ரூ. 5 கோடி வரை மோசடியில் ஈடுபட்ட நபரிடம் இருந்து பணத்தை மீட்டு தரவேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி. ஜெயக்குமார் உறுதியளித்தார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/14/கறவை-மாடு-வாங்க-கடன்-தருவதாக-மோசடி-பாதிக்கப்பட்ட-பெண்கள்-எஸ்பியிடம்-மனு-2980364.html
2980362 விழுப்புரம் விழுப்புரம் இலவச மனைப் பகுதியை ஆக்கிரமிக்க முயற்சி: நெசவாளர்கள் புகார்  விழுப்புரம் DIN Tuesday, August 14, 2018 08:53 AM +0530 திருக்கோவிலூர் அருகே நெசவாளர்களுக்கு வழங்கப்பட்ட இலவச மனைப் பட்டா நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது.
 இது குறித்து, திருக்கோவிலூர் அருகே உள்ள எல்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் திங்கள்கிழமை ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்து கூறியதாவது:
 எல்லராம்பட்டில் வசித்து வரும் 26 நெசவாளர் குடும்பத்தினருக்கு, அரசு சார்பில், தரிசு நிலத்தில் கடந்த 1998-ஆம் ஆண்டு இலவசமாக மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன.
 அந்த இடங்களில் உடனே வீடு கட்டுவதற்கு வசதியின்றி, நெசவாளர் குடும்பத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், அந்த இடம் பஞ்சமி தரிசு நிலம் என தவறான தகவல் தெரிவித்து, அப்பகுதி ஆதிதிராவிட மக்களிடம் பணம் வசூலித்து, அவர்களுக்கு மனைப் பட்டா வாங்கித் தருவதாகக் கூறி வருகின்றனர்.
 அந்த இடம் பஞ்சமி தரிசு நிலம் என்பது பொய்யான தகவல்.
 இது குறித்து, அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/14/இலவச-மனைப்-பகுதியை-ஆக்கிரமிக்க-முயற்சி-நெசவாளர்கள்-புகார்-2980362.html
2980361 விழுப்புரம் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்துக்கு மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்த பெண்  விழுப்புரம், DIN Tuesday, August 14, 2018 08:53 AM +0530 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்துக்கு போலீஸாரின் தீவிர சோதனைகளையும் தாண்டி, பெண் ஒருவர் மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடைபெறும் குறைதீர் கூட்டத்துக்கு 500-க்கும் மேற்பட்ட பொது மக்கள் வந்து மனு அளிக்கின்றனர்.
 கோரிக்கை நிறைவேறாத சிலர், விரக்தியில் மண்ணெண்ணெய் கொண்டு வந்து, தீக்குளிக்க முயலும் சம்பவங்களும் தொடர்ந்து வருகின்றன.
 இதனால், ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் போலீஸார் சோதனையிட்டு அனுப்பி வருகின்றனர்.
 இந்த வகையில், திங்கள்கிழமை பெருந்திட்ட வளாக வாயில், பின் வாயில் பகுதி, ஆட்சியர் அலுவலக வாயில், இடைப்பட்ட சாலை முகப்பு, எஸ்.பி. அலுவலக வாயில் என பல்வேறு இடங்களில் போலீஸார் நிறுத்தப்பட்டு மனு கொடுக்க வருவோர் சோதனையிடப்பட்டனர்.
 இந்த நிலையில், போலீஸார் சோதனைகளைத் தாண்டி, ஆட்சியர் அலுவலக வாயில் பகுதியில் போலீஸார் சோதனையிட்டபோது, துணிப் பையில் மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்த பெண்ணை பிடித்தனர்.
 விசாரித்த போது, வளவனூர் அருகே உள்ள நரையூரைச் சேர்ந்த முருகன் மனைவி பத்மினி (45) என்பதும், கூலித் தொழிலாளியான அவர், ஆதரவின்றி வாழ்வதும், தனது வீட்டு மனையை, தனது சகோதரர் வாங்கி வீடு கட்டிக்கொண்டு, உரிய தொகையை தர மறுப்பதாகவும், தன்னை பராமரிக்க ஆளில்லை என்பதால், தற்கொலை முயற்சியுடன் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்ததாக தெரிவித்தார்.
 அவரிடமிருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை கைப்பற்றிய போலீஸார், அவருக்கு அறிவுரை கூறி, வளவனூர் போலீஸாரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/14/ஆட்சியர்-அலுவலகத்துக்கு-மண்ணெண்ணெய்-பாட்டிலுடன்-வந்த-பெண்-2980361.html
2980359 விழுப்புரம் விழுப்புரம் பால் நிறுவன கழிவுகளால் விளைநிலங்கள் பாதிப்பு: விவசாயிகள் புகார்  விழுப்புரம், DIN Tuesday, August 14, 2018 08:52 AM +0530 உளுந்தூர்பேட்டை அருகே தனியார் பால் நிறுவனத்தின் கழிவுநீரால் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு வருவதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் திங்கள்கிழமை புகார் தெரிவித்தனர்.
 இதுகுறித்து உளுந்தூர்பேட்டை நகர் (மன்னார்குடி) கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்து கூறியதாவது:
 எங்கள் கிராமத்தில் விளைநிலங்களுக்கு அருகே தனியார் பால் பண்ணை இயங்கி வருகிறது. அதிலிருந்து 600 மீட்டர் தொலைவில் ஏரி உள்ளது. இதன்மூலம் 200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
 தனியார் பால் நிறுவனத்திலிருந்து வெளியேறும் கழிவு நீர் விளைநிலங்களில் கலப்பதால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக நெல், வேர்க்கடலை, உளுந்து உள்ளிட்டவை வீணாகின. மேலும், நிலத்தடி நீரில் கலந்து கிணறுகளிலும் துர்நாற்றம் வீசுகிறது. குடிநீரும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்த பால் நிறுவனத்தில் முறையிட்டதால் நாங்கள் மிரட்டப்பட்டோம். ஏரிக்கான நீர்வரத்து ஓடையில் மழைக் காலத்தில் கழிவு நீருடன், மழை நீரும் ஏரிக்குச் செல்கிறது. இதனால், ஏரிப் பாசனத்தை நம்பியுள்ள விளைநிலங்களும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, இதுகுறித்த தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர் அவர்கள்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/14/பால்-நிறுவன-கழிவுகளால்-விளைநிலங்கள்-பாதிப்பு-விவசாயிகள்-புகார்-2980359.html
2980342 விழுப்புரம் விழுப்புரம் முகையூர் ரயில் நிலையத்தை மூடும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு  விழுப்புரம், DIN Tuesday, August 14, 2018 08:49 AM +0530 விழுப்புரம் அருகே உள்ள பழைமையான முகையூர் ரயில் நிலையத்தை மூடும் நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 விழுப்புரம்-திருக்கோவிலூர் இடையே உள்ள முகையூர் ரயில் நிலையத்தை கிராம மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
 அந்த ரயில் நிலையத்தில், பயணிகள் ரயில் நிற்பதையும் ரத்து செய்துவிட்டு, நிலையத்தையே மூடும் நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே நிர்வாகத்துக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: முகையூர் ரயில் நிலையம் கடந்த 100 ஆண்டுகளாக இயங்கி வரும் நிலையில், தற்போது, போதிய வசூல் இல்லை எனக் கூறி மூடுகின்றனர்.
 இப்பகுதியில் அதிகளவில் உள்ள ராணுவ வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பொது மக்கள் ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
 நீண்ட காலமாக பயணிகள் ரயில் நின்று செல்லும் நிலையில், அதனையும் தற்போது நிற்காமல் செய்துள்ளனர்.
 இந்த ரயில் நிலையத்துக்கு அருகேயுள்ள முகையூர் கிழக்கு கடவுப் பாதையையும் மூடிவிட்டனர். இதனால், எதிர்புறத்தில் வசிக்கும் 480 குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.
 பிரசித்தி பெற்ற முகையூர் மாதா கோயில் தேரோட்டம் போன்றவையும் வழியின்றி தடைபட்டுள்ளது.
 இதனால், முகையூர் சுற்றுப் பகுதி மக்களின் நலன் கருதி மூடப்பட்ட கடவுப் பாதையை திறக்க வேண்டும். அல்லது, தரைப்பாலம் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
 இது தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்திலும் அவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/14/முகையூர்-ரயில்-நிலையத்தை-மூடும்-நடவடிக்கைக்கு-எதிர்ப்பு-2980342.html
2980340 விழுப்புரம் விழுப்புரம் தவறி விழுந்து தொழிலாளி சாவு: 2 பேர் மீது வழக்கு  விழுப்புரம், DIN Tuesday, August 14, 2018 08:49 AM +0530 விழுப்புரம் அருகே கட்டுமானப் பணியின்போது, தவறி விழுந்த பெண் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இதுதொடர்பாக 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
 விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியை அடுத்த கல்யாணம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த தனவேல் மனைவி ஜெயந்தி (29). இவர், விழுப்புரம் அருகே செஞ்சி சாலையில், சுந்தரம் நகரில் உள்ள பாலா என்பவருக்கு சொந்தமான வீடு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, கட்டடத்தின் 3-ஆவது மாடியிலிருந்து ஜெயந்தி தவறி கீழே விழுந்தாராம். இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜெயந்தி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுதொடர்பான புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸார் கட்டட உரிமையாளர் பாலா, வளவனூரைச் சேர்ந்த மேஸ்திரி பழனி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/14/தவறி-விழுந்து-தொழிலாளி-சாவு-2-பேர்-மீது-வழக்கு-2980340.html
2980338 விழுப்புரம் விழுப்புரம் மது கடத்தியவர் கைது  விழுப்புரம், DIN Tuesday, August 14, 2018 08:48 AM +0530 புதுச்சேரியிலிருந்து காரில் மதுப் புட்டிகளைக் கடத்தியவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
 புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் மாவட்டம் வழியாக மது கடத்தப்படுவதைத் தடுக்க, மரக்காணம் அருகேயுள்ள அணிச்சங்குப்பம் பகுதியில் சோதனைச்சாவடி அமைத்து போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், திங்கள்
 கிழமை காலை சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையிலான போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
 அப்போது, புதுச்சேரியிலிருந்து அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் 672 புதுச்சேரி மதுப் புட்டிகள் இருந்தது தெரிய வந்தது.
 இதையடுத்து, காரில் இருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர், காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் அருகே புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் நீலமேகம் (32) என்பதும், புதுச்சேரியிலிருந்து மதுப் புட்டிகளை வாங்கி, சென்னைக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரிய வந்தது. பின்னர், மதுப் புட்டிகள், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது.
 இதுகுறித்து மது விலக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, நீலமேகத்தை கைது செய்தனர்.
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/14/மது-கடத்தியவர்-கைது-2980338.html
2980335 விழுப்புரம் விழுப்புரம் விழுப்புரம் கோயில்களில் ஆடிப்பூர விழா  விழுப்புரம், DIN Tuesday, August 14, 2018 08:48 AM +0530 விழுப்புரம் செல்லி அம்மன் கோயில், பெருமாள் கோயில், பசுபதீஸ்வரர் கோயில்களில் ஆடிப்பூர விழா சிறப்பு பூஜைகள் திங்கள்கிழமை நடைபெற்றன.
 விழுப்புரம் கமலா நகர் செல்லி அம்மன் கோயிலில் 108-ஆம் ஆண்டு ஆடித் திருவிழா கடந்த புதன்கிழமை காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. வியாழக்கிழமை கணபதி ஹோமங்களுடன் விநாயகர் வழிபாடும், வெள்ளிக்கிழமை பூங்கரகம் வீதியுலாம் நடைபெற்றது.
 பிற்பகல் ஒரு மணிக்கு சாகை வார்த்தல் நடைபெற்றது. செல்லி அம்மனுக்கு 108 வகை அபிஷேக ஆராதனைகளும், மாலை ஊரணிப் பொங்கலிடுதலும் நடைபெற்றது.
 தொடர்ந்து, சனிக்கிழமை மாலை குங்குமம் நிறைமணி அலங்காரத்துடன் அம்மனுக்கு தீபாராதனையும், ஞாயிற்றுக்கிழமை சந்தனக் காப்பு அலங்காரத்துடன் தீபாராதனையும் நடைபெற்றது.
 திங்கள்கிழமை ஆடிப்பூரத்தையொட்டி காலை 6 மணிக்கு செல்லி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
 இதேபோல, விழுப்புரம் வைகுண்டவாசப் பெருமாள், கீழ்ப்பெரும்பாக்கம் பசுபதீஸ்வரர் ஆகிய கோயில்களில் ஆடிப்பூர சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/14/விழுப்புரம்-கோயில்களில்-ஆடிப்பூர-விழா-2980335.html
2980313 விழுப்புரம் விழுப்புரம் பெண் தற்கொலை: உறவினர்கள் புகார்  விழுப்புரம், DIN Tuesday, August 14, 2018 08:44 AM +0530 வானூர் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போலீஸில் புகார் அளித்தனர்.
 வானூர் அருகே உள்ள பூத்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (32). தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவர், புதுவை கூடப்பாக்கத்தைச் சேர்ந்த சவீதாவை (28) காதலித்து, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டாராம். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
 கணவன் - மனைவி இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் சவீதா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.
 தகவலறிந்த வானூர் போலீஸார் அங்கு சென்று சவீதாவின் சடலத்தை மீட்டு, புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
 இந்த நிலையில், சவீதாவின் உறவினர்கள் அவரது சாவில் சந்தேகம் உள்ளதாகவும், வெங்கடேஷை கைது செய்ய வேண்டும் என்றும் கூறி, வானூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
 இதையடுத்து, காவல் ஆய்வாளர் ஏழிலரசி பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை சமாதானப்படுத்தினர். இதுகுறித்து சவீதாவின் தாய் செல்லம்மாள் அளித்த புகாரின் பேரில், வானூர் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/14/பெண்-தற்கொலை-உறவினர்கள்-புகார்-2980313.html
2980312 விழுப்புரம் விழுப்புரம் சாலை விபத்தில் விவசாயி சாவு  உளுந்தூர்பேட்டை DIN Tuesday, August 14, 2018 08:44 AM +0530 திருவெண்ணெய்நல்லூர் அருகே திங்கள்கிழமை சாலையைக் கடக்க முயன்ற முதியவர் மீது கார் மோதியதில், அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
 உளுந்தூர்பேட்டை வட்டம், இருவேல்பட்டு ஆற்றுத் தெருவைச் சேர்ந்தவர் அரசன் (65). விவசாயியான இவர், அரசூர் குறுக்கு சாலையக் கடக்க முயன்றபோது, விழுப்புரம் பகுதியிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற கார் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் நிகழ்விடத்திலேயே இறந்தார்.
 இதுகுறித்து புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லூர் போலீஸார், கார் ஓட்டுநரை கைது செய்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/14/சாலை-விபத்தில்-விவசாயி-சாவு-2980312.html
2980311 விழுப்புரம் விழுப்புரம் விழுப்புரம் பேருந்து நிலையத்தில் போலீஸார் சோதனை  விழுப்புரம் DIN Tuesday, August 14, 2018 08:44 AM +0530 சுதந்திர தினத்தையொட்டி, விழுப்புரம் மாவட்ட பேருந்து நிலையங்களில் மோப்ப நாய் மூலம் போலீஸார் பணிகளின் உடைமைகளை சோதனைக்கு உள்படுத்தி பாதுகாப்பை உறுதி செய்தனர்.
 நாடு முழுவதும் புதன்கிழமை சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, விழுப்புரம் ரயில் நிலையத்தில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
 இதேபோன்று, விழுப்புரம் மாவட்டத்தில் பேருந்து நிலையம், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்களிலும் போலீஸார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
 விழுப்புரம் பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு கண்டறியும் மோப்ப நாய் மூலம் பயணிகளின் உடைமைகள் மற்றும் நடைமேடைகளில் போலீஸார் சோதனையிட்டனர் .
 வெடிபொருள் கண்டறியும் பிரிவு உதவி ஆய்வாளர்கள் செந்தில்வாசன், பார்த்தசாரதி, பொன்னுரங்கன், தலைமைக் காவலர் வெங்கடேசன், காவலர்கள் பார்த்திபன், சதீஷ் ஆகியோர் பேருந்துகளில் ஏறி பயணிகளின் உடைமைகளை சோதனையிட்டனர். சாதாரண உடையிலும் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதேபோன்று, கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், செஞ்சி, திண்டிவனம், உளூந்தூர்பேட்டை ஆகிய பேருந்து நிலையங்களிலும் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/14/விழுப்புரம்-பேருந்து-நிலையத்தில்-போலீஸார்-சோதனை-2980311.html
2980310 விழுப்புரம் விழுப்புரம் காதலன் வீட்டு முன் பெண் தர்னா  திண்டிவனம், DIN Tuesday, August 14, 2018 08:43 AM +0530 மயிலம் அருகே காதலன் வீட்டின் முன் பெண் திங்கள்கிழமை தர்னாவில் ஈடுபட்டார்.
 செஞ்சி பிரங்கி மேடு பகுதியைச் சேர்ந்த பஷீரின் மகள் ஷம்மு (25). இவர், திண்டிவனம் அரசு கலைக் கல்லூரியில் படித்த போது, அங்கு படித்த மயிலத்தை அடுத்த சோழியசொற்குணம் பகுதியைச் சேர்ந்த மணிவண்ணனுடன் (26) பழக்கம் ஏற்பட்டதாம். கல்லூரி படிப்பு முடிந்து இருவரும் காதலித்து வந்ததாகத் தெரிகிறது.
 இந்த நிலையில், இரு வீட்டார் தரப்பில் திருமணத்துக்கு சம்மதித்து கடந்த 6-ஆம் தேதி பெண் வீட்டுக்கு வருவதாக மணிவண்ணனின் பெற்றோர் உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், சொன்னபடி யாரும் வரவில்லையாம்.
 எனவே, தன்னை திருமணம் செய்து கொள்வதாக மணிவண்ணன் எழுதிய கடிதத்தையும், அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் எடுத்துக் கொண்டு மணிவண்ணனின் வீட்டு முன் ஷம்மு திங்கள்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டார்.
 இதுகுறித்து தகவலறிந்த மயிலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் எழிலரசி அந்தப் பெண்ணிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தி, திண்டிவனம் மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். இதையடுத்து, பெண்ணின் பெற்றோரை வரவழைத்து அவரை அனுப்பி வைத்ததுடன், இருதரப்பு பெற்றோரையும் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 14 )விசாரணைக்கு காவல் நிலையம் வரும்படி கூறி அனுப்பி வைத்தார்.
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/14/காதலன்-வீட்டு-முன்-பெண்-தர்னா-2980310.html
2980309 விழுப்புரம் விழுப்புரம் மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்  விழுப்புரம், DIN Tuesday, August 14, 2018 08:43 AM +0530 கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரத்தில் மாட்டு வண்டித் தொழிலாளர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 விழுப்புரம் மாவட்ட மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில், பெருந்திட்ட வளாகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கஜேந்திரன் தலைமை வகித்தார்.
 முருகன், தங்கராசு, திருப்பதி, தணிகைவேல் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
 சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணைப் பொதுச் செயலாளர் வெங்கடேசன், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாவட்டச் செயலாளர் செண்பகவள்ளி, அனைத்திந்திய விவசாய கிராமப்புறத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் சுசீலா, ஒன்றியச் செயலாளர் ஏழுமலை ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.
 சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், உளுந்தூர்பேட்டை வட்டங்களில் அரசு ஒதுக்கீடு செய்யும் தொகுப்பு வீடுகளுக்கு மாட்டு வண்டியில் மணல் எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும்.
 அரசுக் கட்டங்களுக்கு, சிமென்ட் சாலை அமைக்கும் திட்டங்களுக்கு மாட்டுவண்டியில் மணல் எடுத்துவர அனுமதி அளிக்க வேண்டும், ஆறுகளில் மாட்டு வண்டியில் மணல் அள்ள சிறப்புக் குவாரி அமைத்துத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
 கூட்டத்தில், கதிர்வேல், முத்து, ராமலிங்கம், சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 பின்னர், கோரிக்கைகள் தொடர்பாக ஆட்சியரகத்தில் மனு அளித்தனர்.
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/14/மாட்டு-வண்டி-தொழிலாளர்கள்-ஆர்ப்பாட்டம்-2980309.html
2979741 விழுப்புரம் விழுப்புரம் கல்லை மாணவர்கள் குடும்ப நல அமைப்பு ஆண்டு விழா    கள்ளக்குறிச்சி DIN Monday, August 13, 2018 09:20 AM +0530 1967-68ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற கல்லை மாணவர்கள் குடும்ப நல அமைப்பின் 17-ஆம் ஆண்டு விழா மற்றும் 50 ஆண்டுகள் நிறைவு பெற்ற பொன் விழா, கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10, 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா, புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
 கள்ளக்குறிச்சி தனியார் அரங்கில் நடைபெற்ற இந்த விழாவுக்கு சங்கத் தலைவர் மு.அன்பழகன் தலைமை வகித்தார். செயலாளர் செ.வ.புகழேந்தி, செயற்குழு உறுப்பினர்கள்
 இர.தயாளன், கி.கருணாகரன், க.இளங்கோவன் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் மு.கலியமூர்த்தி வரவேற்றார்.
 கல்லை மாணவர்கள் குடும்ப நில அமைப்பு மலரை மா.தனசேகரன் வெளியிட்டார்.
 சங்க உறுப்பினர்களின் சிறார்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
 கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் அரசு பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் அகராதிகளை வழங்கி பாராட்டினர். மேலும், குடும்ப நண்பர்களின் பேரக் குழந்தைகளில் அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற வர்களுக்கும் பரிசுகளை வழங்கினர்.
 இதனையடுத்து புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.
 தலைவராக இர.தயாளன், செயலாளராக கி.கருணாகரன், பொருளாளராக க.இளங்கோவன் உள்ளிட்டோர் பொறுப்பேற்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/13/கல்லை-மாணவர்கள்-குடும்ப-நல-அமைப்பு-ஆண்டு-விழா-2979741.html
2979740 விழுப்புரம் விழுப்புரம் மருத்துவக் காப்பீடு குறித்த கருத்துரை  கள்ளக்குறிச்சி DIN Monday, August 13, 2018 09:19 AM +0530 ஓய்வு பெற்றோர் சங்கக் கூட்டத்தில் மருத்துவக் காப்பீடு குறித்தும், அரசாணை 140 பற்றியும் கருத்துரை வழங்கினர்.
 கள்ளக்குறிச்சி வட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கக் கூட்டம் கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள சங்க அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவர் கோ.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
 செயலாளர் பொன்.அறிவழகன் கூட்ட அறிக்கை வாசித்தார். பொருளாளர் வி.சரவணன் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்தார்.
 சிறப்பு அழைப்பாளராக சங்கராபுரம் வட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் தலைவர் கு.கலியமூர்த்தி பங்கேற்று சிறப்புரையாற்றினார். சங்க உறுப்பினர் சாம்பசிவம் மருத்துவக் காப்பீடு பற்றியும், அரசாணை 140 பற்றியும் கருத்துரை வழங்கினார்.
 சங்கத் தலைவர் மாநில மேலாண்மைக் குழுக் கூட்ட நிகழ்வுகளைப் பற்றி பேசினார். முன்னதாக, முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/13/மருத்துவக்-காப்பீடு-குறித்த-கருத்துரை-2979740.html
2979739 விழுப்புரம் விழுப்புரம் தலைமைக் காவலர்கள் இருவர் பணியிடமாற்றம்  விழுப்புரம் DIN Monday, August 13, 2018 09:19 AM +0530 வளவனூர் காவல் நிலையம் மற்றும் நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவில் பணியாற்றி வந்த 2 தலைமைக் காவலர்கள் ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
 வளவனூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தவர் தேவநாதன். இவர், அந்தப் பகுதியில் மணல் திருட்டை தடுக்கத் தவறியதுடன், மணல் திருட்டுக்கு உதவியாக செயல்படுவதாக புகார்கள் எழுந்தன.
 இதையடுத்து, தேவநாதனை விழுப்புரம் ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்து எஸ்.பி. ஜெயக்குமார் சனிக்கிழமை உத்தரவிட்டார்.இதேபோன்று, நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவில் பணியாற்றி வந்த தலைமைக் காவலர் செந்தில்குமார், மது போதையில் தகராறில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில், அவரை விழுப்புரம் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து எஸ்.பி. உத்தரவிட்டார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/13/தலைமைக்-காவலர்கள்-இருவர்-பணியிடமாற்றம்-2979739.html
2979738 விழுப்புரம் விழுப்புரம் தோட்டப்பயிர் வளர்ப்பு பயிற்சி முகாம்  விழுப்புரம், DIN Monday, August 13, 2018 09:19 AM +0530 திருக்கோவிலூர் அருகே டி.கீரனூர் கிராமத்தில் வேளாண்மைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு மாடி வீட்டுத் தோட்டம், வீட்டுக் காய்கறிகள் தோட்டம் அமைக்கும் பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.
 வேளாண்மை உதவி இயக்குநர் எம்.சாந்தி தலைமை வகித்து, வீட்டு மாடித் தோட்டத்தின் பயன்கள், வேளாண் துறை சார்பில் அதற்கு வழங்கப்படும் மானியங்கள், பயிர் காப்பீடு திட்டத்தின் அவசியம், உழவன் செயலி பயன்பாடு குறித்தும் விளக்கிப் பேசினார்.
 வேளாண்மை அலுவலர் எஸ்.ராஜா, சொட்டு நீர் பாசனம், அதற்கான மானியங்கள் குறித்து விளக்கினார். உதவி தோட்டக்கலை அலுவலர் எஸ்.கோவிந்தன், காய்கறி உற்பத்தி, கீரைகள் உற்பத்தி, வீட்டு மாடித் தோட்டம், காய்கறி தோட்டம் அமைத்தல், பராமரித்தல், அதன் பயன்கள் குறித்தும் விளக்கினார்.
 பயிற்சி முகாமில், விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர். வேளாண் உதவியாளர்கள் மணிவேல், சாட்டர்ஜி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/13/தோட்டப்பயிர்-வளர்ப்பு-பயிற்சி-முகாம்-2979738.html
2979736 விழுப்புரம் விழுப்புரம் கராத்தே பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்  செஞ்சி, DIN Monday, August 13, 2018 09:19 AM +0530 செஞ்சிக்கோட்டை மவாத்தே-கா-ஷிட்டோரியோ கராத்தே பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கராத்தே பெல்ட் மற்றும் தகுதிச் சான்று வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
 செஞ்சி காந்தி பஜார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவில், கராத்தே பள்ளியின் முதன்மை பயிற்சியாளர் ரென்ஷி கே.மணி, சிறப்பு பயிற்சியாளர் சென்சாய் எம்.ஆறுமுகம் ஆகியோர் தலைமை வகித்தனர்.
 செஞ்சிக்கோட்டை கராத்தே அசோசியேஷன் அமைப்பாளர்கள் செஞ்சி ஜீ.கே.ராஜாதேசிங்கம், கராத்தே மஹம்மது அலி, கராத்தே சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 அசோசியேஷன் தலைவர் இராம.நெடுஞ்செழியன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக செஞ்சி காவல் ஆய்வாளர் அசோகன் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கராத்தே பெல்ட் மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்.
 தொழிலதிபர் பி.மணிமாறன், முன்னாள் கவுன்சிலர் பத்மநாபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/13/கராத்தே-பள்ளி-மாணவர்களுக்கு-சான்றிதழ்-2979736.html
2979735 விழுப்புரம் விழுப்புரம் சுதந்திர தின விழா: விழுப்புரம் ரயில் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு  விழுப்புரம், DIN Monday, August 13, 2018 09:18 AM +0530 சுதந்திர தினத்தையொட்டி, விழுப்புரம் ரயில் நிலையம் மற்றும் ரயில்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
 நாட்டின் 72-ஆவது சுதந்திர தினம் வரும் புதன்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, விழுப்புரம் ரயில் நிலையப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகள் சோதனையிடப்படுகின்றன.
 வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு, மேப்ப நாயுடனும் ரயில் நிலைய வளாகம் முழுவதும் அவ்வப்போது சோதனையிட்டு வருகின்றனர்.
 பார்சல்களையும் சோதனையிட்டு, பாதுகாப்பானதாக உள்ளதா என்று ஆராய்ந்து உறுதி செய்த பிறகே எடுத்துச் செல்ல அனுமதிக்கின்றனர்.
 இதேபோன்று, ரயில் நிலையத்துக்கு வந்து செல்லும் கார், வேன் போன்ற வாகனங்களும் சோதனையிடப்படுகின்றன.
 இதற்காக கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 மேலும், விழுப்புரம் வழியாகச் செல்லும் ரயில்களிலும் போலீஸார் ஏறி சோதனையில் ஈடுபடுகின்றனர். ஞாயிற்றுக்கிழமை முற்பகல் சென்னைக்குச் சென்ற, வைகை விரைவு ரயிலில், உதவி ஆய்வாளர் ராஜன் தலைமையிலான போலீஸார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பயணிகளின் உடைமைகளை சோதனையிட்டனர். ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாரும், ரயில் நிலையம் முழுவதும் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சாதாரண உடையில் போலீஸார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். இதேபோன்று, மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/13/சுதந்திர-தின-விழா-விழுப்புரம்-ரயில்-நிலையத்தில்-போலீஸ்-பாதுகாப்பு-அதிகரிப்பு-2979735.html
2979734 விழுப்புரம் விழுப்புரம் காவலர் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 1,947 பேர் தேர்ச்சி  விழுப்புரம் DIN Monday, August 13, 2018 09:18 AM +0530 இரண்டாம் நிலைக் காவலர் எழுத்துத் தேர்வில் விழுப்புரம் மாவட்டத்தில் எழுதிய 431 பெண்கள் உள்பட 1947 பேர் தேர்ச்சி பெற்றனர்.
 தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் மூலம் தமிழகத்தில் காலியாக உள்ள 5,538 ஆயுதப்படை இரண்டாம் நிலைக் காவலர்கள், 340 சிறைத் துறை இரண்டாம் நிலைக் காவலர்கள், 216 தீயணைப்போர் பணியிடங்கள் மற்றும் 46 பின்னடைவுப் பணியிடங்கள் என மொத்தம் 6,140 காலிப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது.
 விழுப்புரம் மாவட்டத்தில் 2,060 பெண்கள், 14,524 ஆண்கள் என மொத்தம் 16,643 பேர் தேர்வு எழுதினர்.
 இத்தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டன.
 இதில், விழுப்புரம் மாவட்டத்தில் 431 பெண்கள், 1,516 ஆண்கள் என மொத்தம் 1,947 பேர் தேர்ச்சி பெற்றனர். கடலூர் மாவட்டத்தில் 1,396 பேர் தேர்ச்சி பெற்றனர்.
 இதைத் தொடர்ந்து, விழுப்புரத்தில் அடுத்து சில வாரங்களில் இரு மாவட்டங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் திறன் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதில், இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த 3,343 பேர் பங்கேற்க உள்ளனர்.
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/13/காவலர்-தேர்வு-விழுப்புரம்-மாவட்டத்தில்-1947-பேர்-தேர்ச்சி-2979734.html
2979733 விழுப்புரம் விழுப்புரம் பெருந்திட்ட வளாக நுழைவாயிலில் நிற்கும் மணல் வண்டிகள்: பொதுமக்கள் அவதி நமது நிருபர், விழுப்புரம், DIN Monday, August 13, 2018 09:17 AM +0530 மணல் கடத்தலின்போது போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டு, விழுப்புரம் பெருந்திட்ட வளாக நுழைவு வாயிலில் நிறுத்தப்பட்டிருக்கும் மணல் வண்டிகளால் பொதுமக்கள் நடந்து செல்ல இடமில்லாமல் அவதிக்குள்ளாகின்றனர்.
 விழுப்புரம் மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க காவல் துறை மற்றும் வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுத்து வந்தபோதிலும், மணல் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கத்தான் செய்கின்றன.
 லாரிகளில் மணல் கடத்தல் நடப்பதை கண்காணித்தால், மாட்டு வண்டிகளில் கடத்துகின்றனர். மாட்டுவண்டிகளை கண்காணித்தால், லாரிகளில் கடத்தல் நடக்கிறது.
 இதனிடையே, சட்டம்-ஒழுங்கு பிரச்னையில் போலீஸாரும், அரசுத் திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் வருவாய்த் துறையினரும் கவனம் செலுத்திவிட்டால், லாரி, மாட்டு வண்டி என்றில்லாமல் பால் வாகனம், இருசக்கர வாகனம் என நினைத்து பார்க்க முடியாத வாகனங்களில் கூட மணலை கடத்துகின்றனர்.
 அப்படி, நடைபெறும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று நிறுத்தி வைப்பார்.
 வருவாய்த் துறையினர் பிடித்தால் தங்களது அலுவலகத்துக்கு கொண்டு செல்வர், அல்லது காவல்துறையிடம் ஒப்படைப்பார்.
 இந்த நிலையில், விழுப்புரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மணல் கடத்தல் அதிகளவில் நடந்து வருவதால், பறிமுதல் செய்யப்பட்ட லாரி, மாட்டு வண்டிகளை வருவாய்த் துறையினர், விழுப்புரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி விடுகின்றனர்.
 தாலுகா போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் தாலுகா காவல் நிலையத்திலும், பெருந்திட்ட வளாக நுழைவு வாயில் பகுதி எம்எல்ஏ அலுவலகத்துக்குப் பின்புறம் காவல் துறைக்கு ஒதுக்கப்பட்ட இடத்திலும் நிறுத்தி வைக்கின்றனர்.
 கடந்த சில வாரங்களில் அதிக எண்ணிக்கையிலான மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு காவல்துறைக்கான இடத்தையும் கடந்து பெருந்திட்ட வளாக நுழைவாயிலை ஓட்டிய சாலையோரத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். இந்த மாட்டு வண்டிகளால் பெருந்திட்ட வளாகத்துக்கு வந்து செல்லும் அரசு அலுவலர்கள், பணியாளர்கள், மனு அளிக்க வரும் பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் நடந்து செல்ல இடமில்லாமல் சிரமப்படுகின்றனர்.
 ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருக்கும் மாட்டு வண்டிகளால் அவசரத்துக்கு சாலையோரத்தில் வாகனங்களில் ஒதுங்கிச் செல்ல முடியாத நிலை உள்ளது.
 மேலும், பெருந்திட்ட வளாக சாலையில் பல்வேறு அரசுத் துறை விளம்பரப் பதாகைகள், சுவர் விளம்பரங்களை பொதுமக்கள் கவனிப்பதற்குப் பதிலாக மாட்டு வண்டிகளை கவனிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
 எனவே, மாட்டு வண்டிகளை பிரதான சாலையில் நிறுத்தி வைத்திருப்பதை மாற்றி, வேறு எங்காவது பாதுகாப்பாக நிறுத்த மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/13/பெருந்திட்ட-வளாக-நுழைவாயிலில்-நிற்கும்-மணல்-வண்டிகள்-பொதுமக்கள்-அவதி-2979733.html
2979710 விழுப்புரம் விழுப்புரம் வாகனம் மோதி விவசாயி சாவு  உளுந்தூர்பேட்டை DIN Monday, August 13, 2018 08:56 AM +0530 உளுந்தூர்பேட்டை அருகே சாலையோரம் நடந்து சென்ற விவசாயி அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தார்.
 உளுந்தூர்பேட்டை வட்டம், எறஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (60) விவசாயி. இவர், எறஞ்சி கிராமத்தில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் ஞாயிற்றுக்கிழமை காலை நடந்து சென்றார். அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், ராஜமாணிக்கம் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 இதுகுறித்த புகாரின் பேரில் எடைக்கல் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/13/வாகனம்-மோதி-விவசாயி-சாவு-2979710.html
2979708 விழுப்புரம் விழுப்புரம் டாஸ்மாக் பணியாளர் தவறவிட்ட பணத்தை போலீஸாரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டு  விழுப்புரம், DIN Monday, August 13, 2018 08:55 AM +0530 உளுந்தூர்பேட்டை அருகே சாலையில் தவறவிட்ட ரூ.55 ஆயிரம் பணத்தை எடுத்து போலீஸாரிடம் கொடுத்து உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் பாராட்டினார்.
 உளுந்தூர்பேட்டை கார்மேஷன் தெருவைச் சேர்ந்த ஜெயபாலன் மகன் ராஜா (33). உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் எதிரே சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார்.
 இந்த நிலையில், ராஜா வெள்ளிக்கிழமை பிற்பகல் உளுந்தூர்பேட்டையில் இருந்து பயணி ஒருவரை ஏற்றிக்கொண்டு அருகில் உள்ள நத்தாமூர் கிராமத்தில் இறக்கிவிட்டு, உளுந்தூர்பேட்டைக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
 வழியில், பச்சையப்பா நகர் பகுதியில் வரும்போது, முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் இருந்து ஏதோ பொருள் விழுவதைக் கண்ட ராஜா, ஆட்டோவை நிறுத்தி பார்த்தபோது அதில் கட்டுக் கட்டாக பணம் இருந்தது.
 இதையடுத்து, பணத்தை எடுத்த ராஜா, அதை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த இருசக்கர வாகனத்தை பின்தொடர்ந்து சென்று மடக்கிப் பிடித்தார்.
 விசாரித்ததில், குன்னத்தூர் டாஸ்மாக் மதுக் கடையின் கண்காணிப்பாளர், கடையில் வசூலான ரூ.1.80 லட்சத்தை வங்கியில் செலுத்த இருசக்கர வாகனத்தில் பெட்டியில் வைத்து எடுத்துச் சென்றபோது, அதில் இருந்து ரூ.55 ஆயிரம் கொண்ட சில கட்டுகள் தவறி கீழே விழுந்தது தெரிய வந்தது.
 இதையடுத்து, பணத்தை முறையாக காவல்துறை மூலம் உரியவரிடம் ஒப்படைக்க போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதன்படி, உளுந்தூர்பேட்டை போலீஸார் மூலம் பணத்தை தவறவிட்ட நபரிடம் ராஜா வழங்கினார். ஆட்டோ ஓட்டுநர் ராஜாவை பொதுமக்கள் பாராட்டினர். இந்த நிலையில், ராஜாவை மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார், ஞாயிற்றுக்கிழமை நேரில் அழைத்து பாராட்டினார். உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி. ராஜேந்திரன், தனிப் பிரிவு காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/13/டாஸ்மாக்-பணியாளர்-தவறவிட்ட-பணத்தை-போலீஸாரிடம்-ஒப்படைத்த-ஆட்டோ-ஓட்டுநருக்கு-பாராட்டு-2979708.html
2979705 விழுப்புரம் விழுப்புரம் தமிழ்ப் படைப்பாளர்கள் சங்க ஐம்பெரும் விழா  திருக்கோவிலூர், DIN Monday, August 13, 2018 08:55 AM +0530 சங்கராபுரத்தில் தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 தமிழறிஞர் தனி நாயகம் அடிகள், நூலக தந்தை எஸ்.ஆர்.ரங்கநாதன், தோழர் ப.ஜீவானந்தம், தமிழ் தென்றல் திரு.வி.க. ஆகியோரது பிறந்த நாள்கள் மற்றும் சுதந்திர தின விழா ஆகியவை ஐம்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.
 விழாவுக்கு, நல்லாசிரியர் மு.முகமதுஉசேன் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ர.ராமலிங்கம், வாசவி கிளப் தலைவி தீபா, இன்னர்வீல் கிளப் முன்னாள் தலைவர் அகல்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கச் செயலர் அ.ராமசாமி வரவேற்றார்.
 விழாவில், திருக்குறள் பேரவைச் செயலர் ஆ.இலட்சுமிபதி, எழுத்தாளர் கல்யாணி, ஸ்டார் கிளப் வட்டாரத் தலைவர் அ.முகமத்ரபி, கவிஞர் இரா.கதிர்வேல், மருந்தாளுநர் இரா.மணிவேல் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
 சாதுகற்கண்டு சிவஞான அடிகள் கலந்துகொண்டு, பாண்டலம் கிளை நூலகர் ந.மலர்கொடிக்கு, நூலகச் செம்மல் விருது வழங்கினார். நல்நூலகர் இரா.செழியன் தகுதியுரை ஆற்றினார். வள்ளலார் மன்றச் செயலர் இரா.நாராயணன் வட்ட அளவிலான நூலகர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.
 சங்கத் தலைவர் அரங்க.செம்பியன், பயிற்சிக் களத்தில் பேசிய மாணவர்களுக்குப் பரிசு வழங்கினார். கவிஞர் இரா.துரைமுருகன் தொடக்கவுரை ஆற்றினார். சங்க துணைத் தலைவர் சி.இளையாப்பிள்ளை நன்றி கூறினார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/13/தமிழ்ப்-படைப்பாளர்கள்-சங்க-ஐம்பெரும்-விழா-2979705.html
2979703 விழுப்புரம் விழுப்புரம் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுக் கூட்டம்  உளுந்தூர்பேட்டை DIN Monday, August 13, 2018 08:54 AM +0530 உளுந்தூர்பேட்டை தேர்வுநிலை பேரூராட்சியில் வியாபாரிகள் சங்கம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 கூட்டத்துக்கு வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.டி. எம்.முகம்மது கனி தலைமை வகித்தார். பொருளாளர் வி.கலியபெருமாள் வரவேற்றார்.
 உணவுப் பாதுகாப்பு அலுவலர் கதிரவன், பேரூராட்சி அலுவலக துப்புரவு மேற்பார்வையாளர் ராஜேந்திரன் ஆகியோர் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து விளக்கவுரையாற்றினர். கூட்டத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
 உளுந்தூர்பேட்டையில் கடையின் முன் டிஜிட்டல் பதாகை வைப்பதால் கடை விளம்பரம் பாதிக்கப்படுவதோடு, வணிக இழுப்பும் ஏற்படுகிறது. இதனால் கடையின் முன் டிஜிட்டல் பதாகைகளை வைப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கவேண்டும், ஜிஎஸ்டி நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும், ஜிஎஸ்டி மாத ரிட்டன் தாக்கல் செய்வதில் தவறுகள் ஏற்படின் அதற்கு அபராதம் என்பதை ரத்து செய்ய வேண்டும், ஜிஎஸ்டி அமல்படுத்தியபோது ரூ.20 லட்சம் வரை ஜிஎஸ்டி எண் தேவையில்லை, வியாபாரம் செய்துகொள்ள அரசு அனுமதித்தது.
 ஆனால், தற்போது எந்த நிறுவனத்தில் கொள்முதல் செய்தாலும் ஜிஎஸ்டி இருந்தால் மட்டுமே சரக்கு தரமுடியும் எனக் கூறுகின்றனர்.
 இதற்கும் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 கூட்டத்தில் வியாபாரிகள் சங்கம் சார்பில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள், மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை பரிசாக வழங்கப்பட்டது. கூட்டத்தில் துணைத் தலைவர்கள் ஜி.இளங்கோவன், ஏ.என். முகம்மது ஹனிபா, துணைச் செயலாளர்கள் என்.ஏழுமலை,
 ஆர்.மதியழகன், என்.பத்ரூதின், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சங்கச் செயலாளர் பி.அமிர்தகண்டேசன் நன்றி கூறினார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/13/பிளாஸ்டிக்-ஒழிப்பு-விழிப்புணர்வுக்-கூட்டம்-2979703.html
2979701 விழுப்புரம் விழுப்புரம் ரோந்து வாகன ஓட்டுநர் பணியிட கலந்தாய்வு ரத்து  விழுப்புரம், DIN Monday, August 13, 2018 08:54 AM +0530 முறைகேடு புகார் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் வாகன ஓட்டுநர் பணியிட மாறுதல் கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டது.
 நீண்ட தொலைவிலான நெடுஞ்சாலைகளைக் கொண்ட விழுப்புரம் மாவட்டத்தில் 19 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் உள்ளன.
 வாகனங்கள் சாலையில் தேவையில்லாமல் நிறுத்துவதை தடுத்தல், சாலைத் தடுப்புகளை தேவையான இடங்களில் வைத்து கண்காணித்தால், விபத்து நிகழ்ந்த இடத்துக்கு விரைவாகச் சென்று உதவிகளை செய்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், கடத்தல் வாகனங்களை மடக்கிப் பிடித்தல் போன்ற பணிகளில் நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் ஈடுபடுத்தப்படுகின்றன.
 இதற்காக, ஓராண்டு ஒரு முறை, போலீஸார் வேறு இடத்தில் இருந்து பணியிடமாறுதல் மூலமாக நியமிக்கப்படுவர். ஒரு முறை பணியாற்றியவரை மீண்டும் பணியாற்ற, அனுமதிப்பதில்லை.
 அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் விதத்தில் ஒருமுறை பணியாற்றியவரை மீண்டும், நெடுஞ்சாலை ரோந்து வாகனம் மற்றும் மது விலக்கு பிரிவு போன்றவைகளில் நியமிப்பதை தவிர்த்து, புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
 இந்த நிலையில், காலியாக உள்ள 22 நெடுஞ்சாலை ரோந்து வாகன ஓட்டுநர் பணியிடங்களை, பணியிடமாறுதல் மூலம் நிரப்ப ஞாயிற்றுக்கிழமை கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
 இதற்கான பட்டியல் அதிகாரிகள் மூலம் தயார் செய்யப்பட்டது. பட்டியலை மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் ஆய்வு செய்தார். அப்போது, பழையபடி அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் வேண்டிய ஆள்கள் பெயர்கள் இடம் பெற்றிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் கலந்தாய்வை ரத்து செய்து, மீண்டும் புதிய பட்டியலை தயார் செய்ய உத்தரவிட்டார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/13/ரோந்து-வாகன-ஓட்டுநர்-பணியிட-கலந்தாய்வு-ரத்து-2979701.html
2979699 விழுப்புரம் விழுப்புரம் பெரியாறு அணையில் 142 அடி நீரைத் தேக்க வேண்டும்: இரா.முத்தரசன்  விழுப்புரம் DIN Monday, August 13, 2018 08:54 AM +0530 பெரியாறு அணையில் 142 அடி நீரைத் தேக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் வலியுறுத்தினார்.
 விழுப்புரத்தில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில மாநாடு செப்டம்பர் 1 முதல் 3-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக விழுப்புரத்தில் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், கட்சியின் மாநிலச் செயலர் இரா. முத்தரசன் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
 மேட்டூர் அணை நிகழாண்டில் இரண்டாவது முறையாக நிரம்பியுள்ளது. அணை திறக்கப்பட்டும் காவிரி கடைமடைப் பகுதிக்குத் தண்ணீர் செல்லவில்லை.
 கேரளத்தில் பெய்யும் மழையால் பெரியாறு அணையில் 142 அடிக்கு தண்ணீரை தேக்கி, வைகை அணைக்கு தண்ணீரைக் கொண்டு வந்து தென் மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்களை நிரப்ப வேண்டும். திமுக தலைவர் மு.கருணாநிதியின் மறைவு ஈடு செய்ய முடியாதது. திமுகவை அதன் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வழி நடத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது.
 கருணாநிதி உடல் ராஜாஜி அரங்கில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டபோது, காவல் துறை முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவில்லை. பிரதமர் நரேந்திர மோடி வரும் வரை இருந்த பாதுகாப்பு, அதன் பிறகு இல்லை. அதனால் ராகுல் காந்தி, சீதாராம் யெச்சூரி, அரவிந்த் கேஜரிவால் போன்ற முக்கியப் பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கித் தவித்தனர் என்றார் முத்தரசன்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/13/பெரியாறு-அணையில்-142-அடி-நீரைத்-தேக்க-வேண்டும்-இராமுத்தரசன்-2979699.html
2979023 விழுப்புரம் விழுப்புரம் செஞ்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் தேர்வு DIN DIN Sunday, August 12, 2018 03:05 AM +0530
செஞ்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் கூட்டுறவு கடன் சங்கத் தலைவராக வி.ரங்கநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
செஞ்சி தொடக்க வேளாளாண்மை கூட்டுறவு கடன் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்தல் சனிக்கிழமை கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்றது.
தேர்தல் அலுவலர் பாண்டியன் தேர்தலை நடத்தி வைத்தார்.
இதில் 11 பேர் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவரும், இதே வங்கியில் தலைவராக இருந்தவருமான வி.ரங்கநாதன் மீண்டும் கூட்டுறவு சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும், நிர்வாகக் குழு உறுப்பினர்களாக அம்சா (மேலச்சேரி), ஜெ.பாஸ்கர் (சக்கராபுரம்), ஜெயராமன் (கடலி), ஆர்.கமலக்கண்ணன் (செஞ்சி), பி.லலிதா (பூமியான்குட்டை), ஜெ.மல்லிகா (பீரங்கிமேடு), பாலுநடராஜன் (இல்லோடு), சி.ராமமூர்த்தி (செஞ்சி), சேகர் (மேல்களவாய்), வெங்கடேசன் (சக்கராபுரம்) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் வெ.ஏழுமலை, செஞ்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிச் செயலர் என்.ரவிச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏ சகாதேவன் உள்ளிட்டோர் தலைவர் மற்றும் சங்க உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/12/செஞ்சி-தொடக்க-வேளாண்மை-கூட்டுறவு-சங்க-உறுப்பினர்கள்-தேர்வு-2979023.html
2979022 விழுப்புரம் விழுப்புரம் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு DIN DIN Sunday, August 12, 2018 03:05 AM +0530
விழுப்புரம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த புதுவையைச் சேர்ந்த பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
புதுவை அருகே உள்ள நயினார்மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் கார்மேகன். மினிவேன் ஓட்டுநர். இவரது மனைவி சாரதி. இவர்கள், விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் அருகே உள்ள அரசமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்காக சனிக்கிழமை மாலை மோட்டார் சைக்கிளில் குடும்பத்தோடு வந்தனர்.
வளவனூர் அருகே உள்ள குடுமியான்குப்பம் பகுதியில் இவர்கள் வரும்போது, குழந்தை சிறுநீர் கழிப்பதற்காக மோட்டார் சைக்கிளை சாலையோரம் நிறுத்தி இறங்கி நின்றுள்ளனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், சாரதி அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டனர். இதில், கழுத்தில் காயமடைந்த சாரதி, வளவனூர் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/12/பெண்ணிடம்-தங்கச்-சங்கிலி-பறிப்பு-2979022.html
2979021 விழுப்புரம் விழுப்புரம் திண்டிவனத்தில் தனியார் நிதி நிறுவன மேலாளரிடம் ரூ.2.96 லட்சம் வழிப்பறி DIN DIN Sunday, August 12, 2018 03:05 AM +0530  

திண்டிவனத்தில் பைக்கில் சென்ற தனியார் நிதி நிறுவன மேலாளரிடம் ரூ.2.96 லட்சத்தை வழிப்பறி செய்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனத்தில் திந்திரீஸ்வர் கோயில் அருகே தனியாருக்குச் சொந்தமான நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இதில், திண்டிவனம் அருகே உள்ள ஆசூரைச் சேர்ந்த அமாவாசன் மகன் குப்பன் (32) மேலாளராகவும், திண்டிவனத்தைச் சேர்ந்த அய்யனாரப்பன் மகன் இளையராஜா (28) கணக்காளராகவும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், இளையராஜா வாடிக்கையாளர்களிடம் வசூலித்த ரூ.2.96 லட்சத்தை மேலாளர் குப்பனிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தார்.
அந்தப் பணத்தை அலுவலகத்துக்கு எடுத்துச் செல்வதற்காக, மேலாளர் குப்பன் பணத்தை பையில் போட்டு தனது மோட்டார் சைக்கிளில் முன் பகுதியில் வைத்துக் கொண்டு சென்றார். திண்டிவனம் மல்லியபண்டான் தெரு வழியாகச் சென்றபோது, குப்பனை வழிமறித்த இருவர், பணப் பையை பறித்துக் கொண்டு தலைமறைவாகி விட்டனராம்.
இது குறித்து, மேலாளர் குப்பன் அளித்த புகாரின் பேரில், திண்டிவனம் போலீஸார் வழக்குப் பதிந்து, சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர்.
மேலும், இதுதொடர்பாக சந்தேகத்தின் பேரில், அலுவலக ஊழியர்கள் சிலரிடமும் விசாரித்து வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/12/திண்டிவனத்தில்-தனியார்-நிதி-நிறுவன-மேலாளரிடம்-ரூ296-லட்சம்-வழிப்பறி-2979021.html
2979020 விழுப்புரம் விழுப்புரம் கட்டடத் தொழிலாளி தீக்குளித்து சாவு DIN DIN Sunday, August 12, 2018 03:05 AM +0530
கண்டாச்சிபுரம் அருகே கட்டடத் தொழிலாளி தீக்குளித்து உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கண்டாச்சிபுரத்தை அடுத்த மழவந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார் (38). கூலித் தொழிலாளியான இவர், சென்னையில் தங்கி கட்டட வேலை செய்து வந்தார்.
கடந்த சில மாதங்களாக சொந்த ஊரில் வசித்து வந்தார். கடந்த 23-ஆம் தேதி அதே ஊரில் உள்ள ஏரிக்கரையில் தீக்குளித்தார்.
அப்போது, அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று தீயில் எரிந்து கொண்டிருந்த அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், தீவிர சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி கடந்த
6-ஆம் தேதி உயிரிழந்தார். இதுகுறித்து கண்டாச்சிபுரம் போலீஸார் கடந்த புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/12/கட்டடத்-தொழிலாளி-தீக்குளித்து-சாவு-2979020.html
2979019 விழுப்புரம் விழுப்புரம் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு DIN DIN Sunday, August 12, 2018 03:04 AM +0530
விழுப்புரம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த புதுவையைச் சேர்ந்த பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
புதுவை அருகே உள்ள நயினார்மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் கார்மேகன். மினிவேன் ஓட்டுநர். இவரது மனைவி சாரதி. இவர்கள், விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் அருகே உள்ள அரசமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்காக சனிக்கிழமை மாலை மோட்டார் சைக்கிளில் குடும்பத்தோடு வந்தனர்.
வளவனூர் அருகே உள்ள குடுமியான்குப்பம் பகுதியில் இவர்கள் வரும்போது, குழந்தை சிறுநீர் கழிப்பதற்காக மோட்டார் சைக்கிளை சாலையோரம் நிறுத்தி இறங்கி நின்றுள்ளனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், சாரதி அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டனர். இதில், கழுத்தில் காயமடைந்த சாரதி, வளவனூர் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/12/பெண்ணிடம்-தங்கச்-சங்கிலி-பறிப்பு-2979019.html
2979018 விழுப்புரம் விழுப்புரம் அரசுப் பேருந்து மோதியதில் சென்னையைச் சேர்ந்தவர் சாவு DIN DIN Sunday, August 12, 2018 03:04 AM +0530  

திண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்தவர்கள் மீது அரசுப் பேருந்து மோதியதில் சென்னையைச் சேர்ந்தவர் உயிரிழந்தார். இருவர் காயமடைந்தனர்.
மேல்மலையனூர் ஆடி அமாவாசையை முன்னிட்டு, சென்னையில் இருந்து மேல்மலையனூருக்கு சனிக்கிழமை காலை முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
பிற்பகல் சுமார் 3 மணியளவில் சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப் பேருந்து ஒன்று மேல்மலையனூருக்கு புறப்பட்டது. ஒலக்கூரை அடுத்த கோனேரிக்குப்பம் பகுதியை அந்தப் பேருந்து கடக்கும் போது பேருந்தின் டயர் பழுதாகி சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டது.
அதில் இருந்த பயணிகளை மாற்றுப் பேருந்தில் ஏற்றுவதற்காக அனைவரும் கீழே இறங்கி சாலை ஓரத்தில் காத்திருந்தனர். அப்போது, பின்னால் இருந்து வந்த மற்றொரு அரசுப் பேருந்தை பயணிகள் நிறுத்த முற்பட்டனர். வேகமாக வந்த அந்த பேருந்தை அதன் ஓட்டுநர் திடீரென நிறுத்த முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அங்கு நின்றிருந்த மூவர் மீது மோதி நின்றது.
இந்த விபத்தில் சென்னை பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த வீரப்பன்(55) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி அஞ்சலை (48) மற்றும் சென்னையை அடுத்த மாங்காடு பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி(33) ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து ஒலக்கூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/12/அரசுப்-பேருந்து-மோதியதில்-சென்னையைச்-சேர்ந்தவர்-சாவு-2979018.html
2979017 விழுப்புரம் விழுப்புரம் மரத்தில் பைக் மோதியதில் இளைஞர் சாவு DIN DIN Sunday, August 12, 2018 03:04 AM +0530
திருக்கோவிலூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் சாலையோர மரத்தில் மோதியதில்
வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், அண்டம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் மகன் ரமேஷ் (30). இவர், வெள்ளிக்கிழமை காலை தனது மனைவியுடன், திருக்கோவிலூர் பகுதியில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு வந்தார். அன்றிரவு, திருக்கோவிலூர் ரயில் நிலையத்துக்குச் சென்று, தனது மனைவியை ரயிலில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
பின்னர், தனது மோட்டார் சைக்கிளில் இவர் தனியாக வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார்.
திருக்கோவிலூர்-திருவண்ணாமலை சாலையில் அமைந்துள்ள குச்சிப்பாளையம் கிராம எல்லையில் சென்றபோது, மோட்டார் சைக்கிள் சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயமடைந்த ரமேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து, மணலூர்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/12/மரத்தில்-பைக்-மோதியதில்-இளைஞர்-சாவு-2979017.html
2979016 விழுப்புரம் விழுப்புரம் பொறுப்பேற்பு DIN DIN Sunday, August 12, 2018 03:04 AM +0530
சின்னசேலம் வட்டாட்சியராக சு.இந்திரா சனிக்கிழமை பொறுப்பேற்றார்.
இவர் இதற்கு முன்பு அதே அலுவலகத்தில் சமூகநல பாதுகாப்பு தனி வட்டாட்சியராக பணிபுரிந்து வந்தார்.
சின்னசேலம் வட்டாட்சியராக பணிபுரிந்து வந்த க.வெங்கடேசன் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராக மாற்றப்பட்டார்.
புதிதாக பொறுப்பேற்ற வட்டாட்சியர் சு.இந்திராவுக்கு தனி வட்டாடாசியர்கள், துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/12/பொறுப்பேற்பு-2979016.html
2979015 விழுப்புரம் விழுப்புரம் தீ விபத்து: எம்.எல்.ஏ. நிவாரண உதவி DIN DIN Sunday, August 12, 2018 03:03 AM +0530
உளுந்தூர்பேட்டை வட்டம், நரிப்பாளையம் கிராமத்தில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட 7 குடும்பங்களுக்கு இரா.குமரகுரு எம்.எல்.ஏ சனிக்கிழமை நிவாரண உதவிகளை வழங்கினார்.
நரிப்பாளையம் கிராமத்தில் நேரிட்ட தீ விபத்தில் ஆறுமுகம் மகன் ஏழுமலை (45), மற்றும் சேகர் (38), வடிவேல் (70), கண்ணன் (55), கேசவன்(70), கோவிந்தன்(40), சொக்கலிங்கம் மகன் விஜயன்(25) ஆகிய 6 பேரின் கூரை வீடுகளும் முழுமையாக சேதமடைந்தன.
ஒரு சிமென்ட் சீட்டிலான ஒரு வீடு பகுதியாக சேதமடைந்தது.
இந்த 7 குடும்பங்களுக்கும் உளுந்தூர்பேட்டை தொகுதி எம்எல்ஏ இரா.குமரகுரு சனிக்கிழமை நேரில் சென்று ஆறுதல் கூறி, அரசு வழங்கிய தலா ரூ.5000-த்துடன், தன்னுடைய பணம் ரூ. 2000-த்தையும் சேர்த்து ரூ.7,000 மற்றும் 10 கிலோ அரிசி, வேட்டி - சேலை, மண்ணெண்ணெய், சமையல் செய்வதற்குத் தேவையான பாத்திரங்களையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் வட்டாட்சியர் ஜி.இளங்கோவன், வட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உளுந்தூர்பேட்டை அதிமுக ஒன்றிய செயலாளர் ஜி.மணிராஜ், நகர இளைஞரணி செயலாளர் சௌ.ராமலிங்கம், மாநில பொதுக்குழு உறுப்பினர் வளர்மதி பாண்டியராஜ் உள்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/12/தீ-விபத்து-எம்எல்ஏ-நிவாரண-உதவி-2979015.html
2979012 விழுப்புரம் விழுப்புரம் அவலூர்பேட்டை சாமுண்டீஸ்வரி கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை DIN DIN Sunday, August 12, 2018 03:02 AM +0530
அவலூர்பேட்டை சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் ஆடி மாதம் கடைசி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
துர்கை அம்மனுக்கு சிறப்பு பூஜையும், ராகுகால பூஜையும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு வார வழிபாடும், அமாவாசை பூஜையும் நடைபெற்றது.
இரவு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அர்ச்சனை அம்மன் துதிப் பாடல்கள் இசையுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/12/அவலூர்பேட்டை-சாமுண்டீஸ்வரி-கோயிலில்-ஆடி-வெள்ளி-சிறப்பு-பூஜை-2979012.html
2979011 விழுப்புரம் விழுப்புரம் மழை வேண்டி சிறப்புப் பிரார்த்தனை DIN DIN Sunday, August 12, 2018 03:02 AM +0530
சங்கராபுரம் அருட்பெரும் ஜோதி ஆண்டவர் திருச்சபையில் மழை வேண்டி சனிக்கிழமை சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது.
வள்ளலார் மன்றம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, அதன் தலைவர் ஜே.பால்ராஜ் தலைமை வகித்தார். ரோட்டரி அறக்கட்டளைத் தலைவர் ஆர்.வி.ஜனார்த்தனன், அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் ஆர்.பிரகாசம், திருக்கோவிலூர் இராம.குமரப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வணிகர் பேரவை மாவட்டப் பொருளாளர் இராம.முத்துக்கருப்பன் வரவேற்றார். நிகழ்ச்சியில் ரோட்டரி முன்னாள் தலைவர் ஏ.மூர்த்தி, ஜி.வேங்கடநாராயணன், பள்ளி வளர்ச்சிக் குழுத் தலைவர் கோ.குசேலன், சைவ சித்தாந்தப் பேராசிரியர் ஜ.ஜம்புலிங்கம் முன்னிலையில் அகவல் படித்து, மழை வேண்டி பிரார்த்தனை நடைபெற்றது. முன்னதாக, தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
வள்ளலார் மன்றத்தின் அன்னதான உபயோகத்துக்கான பாத்திரங்களை ராமநாதன்-ராமாயி அறக்கட்டளை சார்பில், அதன் நிர்வாகிகள் கல்யாணி, சிவகாமசுந்தரி, மீனாட்சி ஆகியோர் மன்றச் செயலர் இரா.நாராயணனிடம் வழங்கினர்.
பாண்டலம் அரிமா சங்கத் தலைவி கலைச்செல்வி, அரிசி ஆலை சங்கத் தலைவர் க.வேலு, ஸ்டார் கிளப் வட்டாரத் தலைவர் அ.முகமத்ரபி, ஜெய் பிரதர்ஸ் நற்பணி மன்றத் தலைவர் வ.விஜயகுமார், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் டி.எம்.சுப்பிரமணியன், ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத் தலைவர் கு.கலியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சிறப்பு ஜோதி தரிசனத்தைத் தொடர்ந்து, பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. கல்யாணி முத்துக்கருப்பன் நன்றி கூறினார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/12/மழை-வேண்டி-சிறப்புப்-பிரார்த்தனை-2979011.html
2979010 விழுப்புரம் விழுப்புரம் செஞ்சி அருகே அய்யனார் கோயிலில் வெண்கலச் சிலைகள் திருட்டு DIN DIN Sunday, August 12, 2018 03:02 AM +0530
செஞ்சி அருகே அய்யனார் கோயில் கதவை உடைத்து வெண்கலத்தினாலான 3 சுவாமி சிலைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
செஞ்சி வட்டம், அனந்தபுரம் அருகேயுள்ள மேல்அருங்குணம் கிராம எல்லைப் பகுதியில் பழைமை வாய்ந்த அய்யனார் கோயில் அமைந்துள்ளது. அய்யனாரை கிராம மக்கள் காவல் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், வழக்கம் போல, வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்வதற்காக அருங்குணம் கிராமத்தைச் சேர்ந்த அரிபாபு உள்ளிட்டோர் சென்றனர்.
அப்போது, பூட்டுகள் உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து கிடந்தன. உள்ளே சென்று பார்த்தபோது, மூலவர் சன்னதியில் இருந்த வெண்கலத்தினாலான அய்யனார், பொற்கிலை, பூரணி உற்சவர் சுவாமிகளின் சிலைகள் திருடு போயிருந்தது தெரிய வந்தது. ஒன்றரை அடி உயரம் கொண்ட இந்த சிலைகளின் மதிப்பு ரூ.ஒரு லட்சம் எனக் கூறப்படுகிறது.
இது குறித்து கோயில் நிர்வாகி முனுசாமி அளித்த புகாரின் பேரில், அனந்தபுரம் காவல் உதவி ஆய்வாளர் ஏழுமலை தலைமையிலான போலீஸார், கோயிலுக்கு வந்து பார்வையிட்டு விசாரித்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து சிலைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/12/செஞ்சி-அருகே-அய்யனார்-கோயிலில்-வெண்கலச்-சிலைகள்-திருட்டு-2979010.html
2979009 விழுப்புரம் விழுப்புரம் மயிலம் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா DIN DIN Sunday, August 12, 2018 03:01 AM +0530
மயிலம் பொறியியல் கல்லூரியின் 16-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
மயிலம் சுப்பிரமணிய சுவாமி கல்வி அறக்கட்டளைத் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் ம.தனசேகரன் தலைமை வகித்தார்.
துணைத் தலைவர் எஸ்.வே .சுகுமாறன், செயலர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் செந்தில் வரவேற்றார். டீன் ராஜப்பன் வாழத்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக சென்னை அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் முதன்மை விஞ்ஞானி அ.ஞானமணி கலந்து கொண்டு, கடந்த கல்வியாண்டில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களையும், பதக்கங்களையும் வழங்கினார் (படம்).
அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்ற ஒரு தங்கப்பதக்கம் உள்பட 29 மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி சார்பில் தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து 648 இளநிலை மாணவர்களுக்கும், 220 முதுநிலை மாணவ, மாணவிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/12/மயிலம்-பொறியியல்-கல்லூரி-பட்டமளிப்பு-விழா-2979009.html
2979008 விழுப்புரம் விழுப்புரம் பனை மரங்களை மீட்டெடுக்கும் பணியில் இளைஞர்கள்! இல.அன்பரசு DIN Sunday, August 12, 2018 03:01 AM +0530
தமிழர்களின் பாரம்பரியமாக போற்றப்படும் பனை மரங்கள், வணிக நோக்கத்துக்காக வெட்டப்பட்டு அழிந்து வருகின்றன. இதனை மீட்டெடுக்கும் வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் தன்னார்வ இளைஞர் அமைப்பினர் பனை விதைகளை விதைப்பு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் ஏரிகள், குளங்கள், நீர்வரத்து வாய்க்கால்கள், நிலப்பகுதிகளில் வறண்ட காலங்களிலும் உயர்ந்து நிற்கும் பனை மரங்களைக் காண முடியும். பனை மரங்கள் அதன் மட்டைகள் தொடங்கி, மரத்தின் பட்டைகள், பழங்கள், நொங்குகள் என முழு மரமும் மக்களுக்கு பயன் தருகின்றன.
நொங்காகவும், பழமாகவும், குளிர் பானமாகவும், மரங்கள் கூரைக்கு வேயப்படும் வாரைகளாகவும், பனம் கிழங்குகளாகவும், நாட்டுச் சர்க்கரையாகவும், பனை மரங்கள் பயன் தருவதுடன், தமிழர்களின் பாரம்பரியச் சின்னமாகவும், எப்போதும் பலன் தரும் கற்பக விருட்சமாகவும் விளங்குகின்றன.
இந்த பனை மரங்கள் கடந்த சில ஆண்டுகளாக வெட்டி வீழ்த்தப்பட்டு வருகின்றன.
செங்கல் சூளைக்காகவும், மரத்தூண்கள், மேற்கூரை வாரைகளுக்காகவும், ஏரிகளை புனரமைக்கிறோம் என்ற பெயரிலும் பனை மரங்கள் அழிக்கப்படுகின்றன.
பனை மரங்களை மீட்கும் சேவைப் பணி: இந்த நிலையில், பனை மரங்களை பாதுகாத்து மீட்டெடுக்கும் பணியில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தன்னார்வ இளைஞர் அமைப்பினர் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர்.
விழுப்புரம் கரிகால சோழன் பசுமை மீட்பு இயக்கம் என்ற பெயரில் அந்த அமைப்பினர், விழுப்புரம், விக்கிரவாண்டி சுற்றுப் பகுதி ஏரிகளில் பனை விதைகளை நடவு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் அகிலன் கூறியதாவது:
பனை மரங்களை பாதுகாப்பதற்காக, பனை விதைகளை சேகரித்து, கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் ஏரிகளில் நடவு செய்து வருகிறோம்.
பனையானது வேர் முதல் இலைகள் வரை பயன் தரக்கூடியது. வறட்சியிலும் நீரை சேமித்து வைத்து பயன் தரும் என்பதால், ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளையொட்டி இவற்றைப் பார்க்க முடியும். இதனால் நீர் நிலைகளின் கரைகளும் பலம் பெறுகின்றன.
இந்த மரங்கள் பல்வேறு தேவைகளுக்காக அழிக்கப்படுவதால், இதனை மீட்கும் வகையில், தமிழகம் முழுவதும் விதைகளை நடவு செய்து வருகின்றனர்.
எங்கள் அமைப்பு சார்பில் விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி, திருவாமாத்தூர், கொளத்தூர் உள்ளிட்ட கிராமங்களுக்குச் சென்று பனம் பழங்களை சேகரித்து வந்து, அதிலிருந்து விதைகளை எடுத்து ஏரிக் கரைகளில் விதைப்பு செய்கிறோம். விழுப்புரம் அருகே முத்தாம்பாளையம், கண்டம்பாக்கம், கண்டமானடி, விக்கிரவாண்டி அருகே பொம்பூர், ராதாபுரம் ஆகிய இடங்களில் உள்ள ஏரிகளில் 5 ஆயிரம் விதைகள் வரை விதைப்பு செய்துள்ளோம். இந்தப் பணியில் எங்களுடன் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற அமைப்பும், கல்லூரி மாணவர்களும் பங்கேற்றுள்ளனர்.
ஏற்கெனவே, பனை விதைகள் நடவு செய்த இடங்களில் தற்போது கன்றுகள் நன்கு வளர்ந்துள்ளன.
தமிழகத்தில் பனை மரங்களைப் பாதுகாக்க, அதனை வெட்டுவதை அரசு தடுக்க வேண்டும்.
பனை விதை விதைப்புப் பணிகளுக்கும் அரசு துணை நிற்க வேண்டும் என்றார்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/12/பனை-மரங்களை-மீட்டெடுக்கும்-பணியில்-இளைஞர்கள்-2979008.html
2979007 விழுப்புரம் விழுப்புரம் கல்விச் சிந்தனை கருத்தரங்கம் DIN DIN Sunday, August 12, 2018 03:01 AM +0530
விழுப்புரத்தில் உலக இலக்கியப் பேரவை சார்பில், உலக இலக்கியத்தில் கல்விச் சிந்தனைகள் கருத்தரங்க விழா மற்றும் சிறார் இலக்கியத்துக்கான சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் யூமா வாசுகிக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
தனியார் கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த விழாவுக்கு பேரவைத் தலைவர் இரா.மோகனசுந்தரம் தலைமை வகித்தார். பேராசிரியர் கே.முத்துராமன், எழுத்தாளர் இரா.நடராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் யூமா வாசுகி பாராட்டப்பட்டார். இரா.ராமமூர்த்தி, ரவிசங்கர், ரவி.கார்த்திகேயன், த.பாலு, கோ.செங்குட்டுவன், சி.விக்கிரமன், பி.ராஜன் உள்ளிட்ட எழுத்தாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
உலக இலக்கியத்தில் கல்விச் சிந்தனைகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/12/கல்விச்-சிந்தனை-கருத்தரங்கம்-2979007.html
2978880 விழுப்புரம் விழுப்புரம் விழுப்புரத்தில் கூட்டுறவுச் சங்கத் தேர்தலை நடத்தாததால் இயக்குநர்கள் போராட்டம் DIN DIN Sunday, August 12, 2018 01:28 AM +0530
விழுப்புரத்தில் மாவட்ட சத்துணவுத் திட்டப் பணியாளர்கள் கூட்டுறவுச் சங்கத் தேர்தலை நடத்தாததால் சங்க இயக்குநர்கள் சனிக்கிழமை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட்டுறவு சங்கங்களுக்கானத் தேர்தல் நடைபெற்றது. இதில், பல இடங்களில் முறைகேடு புகார் எழுந்ததால், நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இதனால், தொடக்க நிலை தேர்தல் நடைபெற்று சங்க இயக்குநர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டதோடு நின்றது. அண்மையில் நீதிமன்றத் தடை நீங்கியதால், அடுத்த கட்டமாக தலைவர், துணைத் தேர்தலை நடத்த கூட்டுறவுத் துறை தேர்தல் ஆணையம் தேதியை அறிவித்தது.
அதன்படி, விழுப்புரம் மாவட்ட சத்துணவுத் திட்டப் பணியாளர்கள் கூட்டுறவு கடன் சங்கத்துக்கான தலைவர், துணைத் தலைவர் தேர்தல் கடந்த ஆக.7ஆம் தேதி தொடங்கியது.
தேர்தல் அலுவலரான கூட்டுறவுச் சங்க துணைப் பதிவாளர் கண்ணன் தலைமையில் இறுதிப் பட்டியலை அன்றே வெளியிட்டனர். பின்னர், மாலையில் தேர்தல் நடைபெற்றது. இதில் 11 இயக்குநர்களும் தேர்வு செய்யப்பட்டனர். சனிக்கிழமை தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தலைவர் தேர்தலுக்கு வந்திருந்த இயக்குநர்கள் உள்ளிட்டோர் சனிக்கிழமை காலை அறிவித்தபடி தேர்தல் நடைபெறாமல் இருந்ததால் ஆத்திரமடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட இயக்குநர் சி.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கூறியதாவது:
தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி, ஆக.7ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. எஸ்.முத்தாலு (ராகவன்பேட்டை), டி.மலர் (சக்கராபுரம்), எம்.பிரேமகுமாரி (மணலூர்பேட்டை), ஏ.பச்சையம்மாள் (கோவிடமருதூர்), கே.மனோகரன் (மொளசூர்), ஏ.சக்கரவர்த்தி (புத்தந்தூர்), டி.மணி (தேவனூர்), சி.பாலகிருஷ்ணன் (கிள்ளனூர்), பி.அபராஜிதன் (திண்டிவனம்), சி.ராஜாராம் (பாண்டூர்), ஜி.ஆறுமுகம் (பேரணி) ஆகியோர் இயக்குநர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
ஆனால், அறிவித்தபடி சனிக்கிழமை தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடத்தப்படவில்லை. இயக்குநர்கள் வந்துள்ள நிலையில், தேர்தல் அதிகாரி வராமல் தேர்தலை முறைகேடாக அறிவிக்க முயன்றுள்ளனர்.
10 உறுப்பினர்கள் இங்குள்ளோம், பிற உறுப்பினர்கள் ஆதரவில்லாத திண்டிவனத்தைச் சேர்ந்த ஒருவரை தலைவராக அறிவிக்க முயற்சிக்கின்றனர் என்றனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பிற்பகல் தேர்தல் அதிகாரி வந்த பிறகு, இயக்குநர்களிடையே சமாதானம் ஏற்பட்டு மாலையில் தலைவர், துணைத் தலைவர் தேர்வு செய்யப்பட்டனர்.

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/12/விழுப்புரத்தில்-கூட்டுறவுச்-சங்கத்-தேர்தலை-நடத்தாததால்-இயக்குநர்கள்-போராட்டம்-2978880.html
2978416 விழுப்புரம் விழுப்புரம் உணவு மூலம் பரவும் நோய்கள்: மாணவர்களுக்கு விழிப்புணர்வு  திருக்கோவிலூர், DIN Saturday, August 11, 2018 09:27 AM +0530 சங்கராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் உணவு மூலம் பரவும் நோய்கள் பற்றிய விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் எல்.ஆரோக்கியசாமி தலைமை வகித்தார். உதவித் தலைமை ஆசிரியர் சி.இளையாப்பிள்ளை முன்னிலை வகித்தார்.
 முகாமில், உணவுப் பாதுகாப்பு அலுவலர் கே.சரவணன் கலந்துகொண்டு உணவு மூலம் சர்க்கரை நோய், புற்றுநோய், ரத்த அழுத்தம் போன்றவைகள் வராமல் தடுப்பது குறித்துப் பேசினார்.
 மேலும், கடைகளில் விற்கக்கூடிய பொருள்களை காலாவதி தேதியைப் பார்த்து வாங்கி பயன்படுத்த வேண்டும். செயற்கை வண்ணம் சேர்த்த உணவுப் பொருள்களை வாங்கி பயன்படுத்தக் கூடாது. நெகிழிப் பைகளில் சூடான உணவுப் பொருள்களை அடைத்து சாப்பிடக் கூடாது.
 சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் நெகிழியில் உணவுப் பொருள்களை பொட்டலமிட்டு பயன்படுத்தக் கூடாது. துரித உணவு மற்றும் வீதியில் விற்கக்கூடிய உணவுப் பொருள்கள், மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் எண்ணெயில் பொறிக்கப்படும் பலகாரங்களை சாப்பிடக் கூடாது எனத் தெரிவித்தார். இதில், மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஆசிரியர் ஞானப்பிரகாசம் நன்றி கூறினார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/11/உணவு-மூலம்-பரவும்-நோய்கள்-மாணவர்களுக்கு-விழிப்புணர்வு-2978416.html
2978415 விழுப்புரம் விழுப்புரம் மனைவியை தீ வைத்து கொல்ல முயற்சி: கணவர் கைது  கள்ளக்குறிச்சி, DIN Saturday, August 11, 2018 09:26 AM +0530 கல்வராயன்மலைப் பகுதியில் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொல்ல முயன்ற கணவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
 சின்னசேலம் வட்டம், மேல்வாழப்பாடியைச் சேர்ந்த அண்ணாமலை மகள் மாசிலாமணி(24). மேல்வெள்ளிமலையைச் சேர்ந்த தீர்த்தன் மகன் காமராஜ் (25). இவர்கள் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு விஸ்வா (3), வினோதினி (6 மாதம்) ஆகிய இரு குழந்தைகள் உள்ளன. காமராஜ் சென்னையில் லாரி ஓட்டுநராக பணிபுரிகிறார். இவர், ஆடிப் பெருக்கை முன்னிட்டு ஊருக்கு வந்துள்ளார்.
 வியாழக்கிழமை இரவு குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தாராம். அப்போது மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு தகராறு செய்ததாகத் தெரிகிறது. அப்போது, ஆத்திரமடைந்த அவர், மனைவியின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். மாசிலாமணியின் அலறல் சப்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் அவரை காப்பாற்றி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம்அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவர் மாஜிஸ்திரேட் பாலமுருகன் முன்னிலையில் மரண வாக்குமூலம் அளித்தார். அதன்பேரில் காமராஜை கரியாலூர் காவல் உதவி ஆய்வாளர் கிள்ளிவளவன் கைது செய்தார்.
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/11/மனைவியை-தீ-வைத்து-கொல்ல-முயற்சி-கணவர்-கைது-2978415.html
2978413 விழுப்புரம் விழுப்புரம் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுமா ? நமது நிருபர், விழுப்புரம் DIN Saturday, August 11, 2018 09:26 AM +0530 விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாலான ஊராட்சிகளில் முக்கிய தினங்களில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் கூட்டப்படாத நிலை தொடர்கிறது. மக்களிடம் திட்டங்களை கொண்டு சேர்க்கும் அரசின் உன்னத நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு, அனைத்து ஊராட்சிகளிலும், கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுவதை அதிகாரிகள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 தமிழகத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற சுதந்திர தினத்தன்று (ஆக.15) சிறப்பு கிராம சபைக் கூட்டங்களை நடத்த மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலும் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்களை நடத்த ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
 அதன்படி, மாவட்டத்தில் உள்ள 22 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 1,099 கிராம ஊராட்சிகளிலும் வருகிற புதன்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெறும்.
 இந்தக் கூட்டத்தில் பிளாஸ்டிக் பொருள்கள் தவிர்த்தல், கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம், அந்தியோதயா இயக்கம், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், முழு சுகாதார தமிழகம், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், மகளிர் திட்டம், பசுமை வீடு திட்டம், பிரதமரின் குடியிருப்புத் திட்டம், கிராம சாலைகள் திட்டங்கள் குறித்தும், இப்பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விவரங்கள், சத்துணவுத் திட்டம், குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், பொது விநியோகத் திட்டம் உள்ளிட்டப் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. இதனால், அந்தந்த கிராம மக்கள் கலந்து கொண்டு தங்கள் கிராமத்துக்கு, தங்கள் பகுதிக்கு வேண்டிய பொது தேவைகள், கருத்தைத் தெரிவிக்க வேண்டும் என்று ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
 ஆண்டு தோறும் சுதந்திர தினம், குடியரசு தினம், மே தினம், காந்தி ஜெயந்தி ஆகிய 4 நாள்கள் சிறப்பு கிராம சபை கூட்டங்களை நடத்தி, பொது மக்களிடம் விவாதித்து, கிராமத் தேவைகளையும், குறைகளையும் நிவர்த்தி செய்யவும், அரசுத் திட்டங்கள், சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறது.
 ஆனால், மாவட்டத்தில் ஆட்சியர், உயர் அதிகாரிகள் கலந்துகொள்ளும் சில கிராமங்களில் மட்டுமே இந்த சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மற்ற கிராமங்களில் பெரும்பாலும் கூட்டங்களை நடத்துவதே இல்லை. ஏற்கெனவே உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இருந்தபோதாவது, சில ஊராட்சித் தலைவர்கள் பெயரளவில் கிராம சபைக் கூட்டங்களை நடத்தினர். ஒரு சிறப்பு அலுவலரும் பங்கேற்று வந்தார். தற்போது, அதுவும் இல்லாததால், ஊராட்சிச் செயலர்கள் இந்த கிராம சபைக் கூட்டங்களை நடத்துவதில்லை என பரவலாக புகார்கள் எழுந்துள்ளன.
 கிராம சபை கூட்டத்தைக் கூட்டினால், தேவையற்ற பிரச்னை வருவதாகக் கூறி, ஊராட்சிச் செயலர்கள் கூட்டத்தைக் கூட்டாமல், கூட்டம் நடத்தியதாக கையெழுத்து மட்டும் வாங்கி வந்து பெயரளவில் செயல்படுத்தும் நிலை உள்ளது.
 இதனால், பெரும்பாலான கிராமங்களில் உள்ள பொதுப் பிரச்னைகள், திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படாமலும், தொகுப்பு வீடுகள், இலவச திட்டங்கள் பயனாளிகள் தேர்வு போன்ற தகவல் தெரியாமலும் பெரும்பாலான கிராம மக்கள் விழிப்பின்றி உள்ளனர்.
 சிறப்பு கிராம சபைக் கூட்டம் என்ற நடைமுறை பல ஆண்டுகளாக தொடர்ந்தும், முறையாக செயல்படுத்தப்படாமல் உள்ளது.
 இதனால், கிராம சபைக் கூட்டத்தால் மக்களிடம் திட்டங்களைச் சேர்க்கும் அரசின் உன்னத நோக்கம் நிறைவேறாமலேயே தொடர்ந்து வருகிறது.
 இதனால், அனைத்து கிராமங்களிலும், கிராம சபைக் கூட்டங்கள் நடத்துவதை அதிகாரிகள் நேரில் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/11/அனைத்து-ஊராட்சிகளிலும்-கிராம-சபைக்-கூட்டங்கள்-நடத்தப்படுமா--2978413.html
2978410 விழுப்புரம் விழுப்புரம் உளுந்தூர்பேட்டை அருகே லாரிகள் மோதல்: ஓட்டுநர் சாவு  உளுந்தூர்பேட்டை DIN Saturday, August 11, 2018 09:25 AM +0530 விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே வெள்ளிக்கிழமை லாரிகள் மோதிக் கொண்டதில் ஓட்டுநர் உயிரிழந்தார்.
 சென்னையிலிருந்து திருச்சி நோக்கி லாரி ஒன்று வெள்ளிக்கிழமை அதிகாலை வந்து கொண்டிருந்தது. இந்த லாரி, உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற சரக்கு லாரி மீது மோதியது.
 இந்த விபத்தில், சென்னையிலிருந்து வந்த லாரியின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. அதன் ஓட்டுநர் சேலத்தைச் சேர்ந்த கணேசன்(57) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
 உளுந்தூர்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் ஷாகுல் அமீது, நெடுஞ்சாலை ரோந்து காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல் ஆகியோர் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு விசாரணை செய்து வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/11/உளுந்தூர்பேட்டை-அருகே-லாரிகள்-மோதல்-ஓட்டுநர்-சாவு-2978410.html
2978407 விழுப்புரம் விழுப்புரம் திருக்கோவிலூர் அருகே தீ விபத்து: 7 வீடுகள் சேதம்  திருக்கோவிலூர், DIN Saturday, August 11, 2018 09:25 AM +0530 விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே வெள்ளிக்கிழமை மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 7 வீடுகள் எரிந்து சேதமடைந்தன.
 திருக்கோவிலூரை அடுத்த நரிப்பாளையத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ஏழுமலை (45). இவரது வீடு வெள்ளிக்கிழமை மின் கசிவால் திடீரென தீப்பிடித்தது. தீ வேகமாக பரவி, அருகிலுள்ள ஆறுமுகம் மகன் சேகர் (38), வடிவேல் (70), கண்ணன் (55), கேசவன் (70), கோவிந்தன் (40), சொக்கலிங்கம் மகன் விஜயல் (25) ஆகியோர் வீடுகளுக்கும் பரவியது.
 தகவலறிந்த உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து, தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். இருப்பினும், 6 கூரை வீடுகள் முழுமையாகவும், சிமென்ட் சீட்டிலான ஒரு வீடு பகுதியாகவும் தீயில் எரிந்து சேதமானது. வீட்டு உபயோகப் பொருள்கள் உள்பட சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானதாகக் கூறப்படுகிறது.
 உளுந்தூர்பேட்டை வருவாய் வட்டாட்சியர் ஜி.இளங்கோவன், எறையூர் வருவாய் ஆய்வாளர் வெங்கடாஜலபதி, கிராம நிர்வாக அலுவலர் அமர்நாத் உள்ளிட்டோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.
 திருக்கோவிலூர் காவல் உதவி ஆய்வாளர் பாபு தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/11/திருக்கோவிலூர்-அருகே-தீ-விபத்து-7-வீடுகள்-சேதம்-2978407.html
2978388 விழுப்புரம் விழுப்புரம் பைக் மீது வேன் மோதல்: ஆந்திரத்தைச் சேர்ந்தவர் சாவு  உளுந்தூர்பேட்டை, DIN Saturday, August 11, 2018 09:20 AM +0530 உளுந்தூர்பேட்டை அருகே மோட்டார் பைக் மீது வேன் மோதியதில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் உயிரிழந்தார்.
 ஆந்திர மாநிலம், நெல்லூரைச் சேர்ந்தவர் விஜயரத்தினம் (27). உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடி அருகே ஹோட்டலில் சமையலராக வேலை செய்து வந்தார். இவர், உளுந்தூர்பேட்டை நகர்ப்பகுதிக்கு வருவதற்காக சுங்கச்சாவடி அருகே நின்றுகொண்டிருந்தார்.
 அப்போது, பண்ருட்டியிலிருந்து எலவனாசூர்கோட்டை நோக்கிச் சென்ற ஒரு பைக்கில் "லிப்ட்' கேட்டு அமர்ந்து பயணித்தார். பைக்கை எலவனாசூர்கோட்டையைச் சேர்ந்த பாஷாகான் மகன் சேலத்தான்(30) ஓட்டிச் சென்றார். அப்போது, அந்த வழியாக வந்த பார்சல் வேன், பைக் மீது மோதியது. இதில், விஜயரத்தினம் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த சேலத்தான் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 உளுந்தூர்பேட்டை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/11/பைக்-மீது-வேன்-மோதல்-ஆந்திரத்தைச்-சேர்ந்தவர்-சாவு-2978388.html
2978387 விழுப்புரம் விழுப்புரம் செஞ்சி பேரூராட்சி திட்டப் பணிகள்: மண்டல அதிகாரி ஆய்வு  செஞ்சி, DIN Saturday, August 11, 2018 09:19 AM +0530 செஞ்சி சிறப்பு நிலை பேரூராட்சியில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை கடலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் இரா. இளங்கோவன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
 மேலும், மீட்பு பூங்காவில் இயற்கை உரம் தயாரிப்பு, மண் புழு உரம் தயாரிக்கும் பணிகளை பார்வையிட்டார். அப்போது, இயற்கை உரத்தை செஞ்சி மற்றும் சுற்றுப்புற கிராம விவசாயிகளுக்கு விற்பனை செய்யும் பொருட்டு முக்கிய இடங்களில் விளம்பரப் பதாகைகளை வைக்குமாறு அறிவுறுத்தினார். மேலும், பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் சீராக நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வடிகால்கள் அனைத்தையும் தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
 ஆய்வின்போது செஞ்சி பேரூராட்சி செயல் அலுவலர் பா.மூவேந்திரபாண்டியன், இளநிலை உதவியாளர் கோ.ஆனந்தன், துப்புரவு மேற்பார்வையாளர்கள் என்.ரமேஷ், கி.செந்தில்குமார், பணி ஆய்வாளர் சமுத்திரக்கனி மற்றும் இராமமூர்த்தி, கார்த்தி உள்ளிட்ட பேரூராட்சி ஊழியர்கள் உடனிருந்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/11/செஞ்சி-பேரூராட்சி-திட்டப்-பணிகள்-மண்டல-அதிகாரி-ஆய்வு-2978387.html
2978386 விழுப்புரம் விழுப்புரம் கழிவுநீர்த் தொட்டியில் பதுக்கிய 1,365 லி. எரிசாராயம் பறிமுதல்  விழுப்புரம், DIN Saturday, August 11, 2018 09:19 AM +0530 விழுப்புரம் அருகே கழிவுநீர்த் தொட்டியில் பதுக்கி வைக்கப்பட்ட 1,365 லிட்டர் எரிசாராயத்தை போலீஸார் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
 புதுச்சேரியிலிருந்து சாராயம் கடத்திவரப்பட்டு, விழுப்புரம் சுற்றுவட்டாரப் பகுதிகளான மரகதப்புரம், கண்டமானடி, தென்னமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் பதுக்கி வைக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன.
 கடந்த திங்கள்கிழமை மத்திய புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையிலான போலீஸார் தென்னமாதேவி கிராமத்தில் செல்வி என்பவர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 38 கேன்களில் இருந்த 1,630 லிட்டர் எரி சாராயத்தை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.
 இந்த நிலையில், அதே கிராமத்தில் கங்கா என்பவர் சாராய விற்பனையில் ஈடுபட்டதாக வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். இதையடுத்து, வெள்ளிக்கிழமை அவரது வீட்டுக்குச் சென்று தாலுகா போலீஸார் சோதனையிட்டனர். அப்போது, வீட்டின் பின்புறம் இருந்த கழிவுநீர்த் தொட்டியில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 39 கேன்களில் 1,365 லிட்டர் எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதனை போலீஸார் பறிமுதல் செய்து விழுப்புரம் மது விலக்கு போலீஸில் ஒப்படைத்தனர்.
 மூட்டைகளில் சாராயம்: தென்னமாதேவி கிராமத்தில் சாராயம் விற்பனை செய்ததாக ஏற்கெனவே கைது செய்யப்பட்ட செல்வி வீட்டில் விழுப்புரம் மது விலக்கு காவல் ஆய்வாளர் ரேணுகாதேவி தலைமையிலான போலீஸார் வெள்ளிக்கிழமை மீண்டும் சோதனையிட்டனர். அப்போது, அந்த வீட்டில் 4 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
 மேலும், அந்த பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்டதாக கலியமூர்த்தி மனைவி பச்சையம்மாள்(50) என்பவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
 பறிமுதல் செய்யப்பட்டு, விழுப்புரம் மது விலக்கு பிரிவில் வைக்கப்பட்டிருந்த சாராயத்தை எஸ்.பி. ஜெயக்குமார் நேரில் ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/11/கழிவுநீர்த்-தொட்டியில்-பதுக்கிய-1365-லி-எரிசாராயம்-பறிமுதல்-2978386.html
2978385 விழுப்புரம் விழுப்புரம் கருணாநிதி மறைவுக்கு கவிதாஞ்சலி  விழுப்புரம் DIN Saturday, August 11, 2018 09:18 AM +0530 விழுப்புரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு இலக்கிய அமைப்புகள் சார்பில் கவிதாஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 விழுப்புரம் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை எழுத்தாளர் ரவிகார்த்திகேயன் ஒருங்கிணைத்து, வரவேற்றார்.
 கவிஞர் த.பழமலய், பேராசிரியர் பு.குமரன், எழுத்தாளர்கள் இரா.ராமமூர்த்தி, மு.ராமமூர்த்தி, கவிஞர்கள் கி.ராஜேந்திரன், ந.சந்திரன், ந.பழனிராசு, நாகராஜன், கூ.பிச்சைப்பிள்ளை, சீ.விக்கிரமன், இளந்திரையன், மன்சூர் அகமத், சு.அருணகிரி, கொய்யாத்தோப்பு பகுதியைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு மாணவி வி.பார்கவி உள்ளிட்ட பலர், கருணாநிதிக்கு கவிதையால் அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் எழுத்தாளர் துரை.ரவிக்குமார், திமுக நிர்வாகிகள் இரா.ஜனகராஜ், ந.பஞ்சநாதன், இரா.சக்கரை, செ.புஷ்பராஜ் எழுத்தாளர்கள், கவிஞர்கள் பலர் கலந்துகொண்டு, கருணாநிதியின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/11/கருணாநிதி-மறைவுக்கு-கவிதாஞ்சலி-2978385.html
2978384 விழுப்புரம் விழுப்புரம் மது போதையில் தகராறு: ஊர்க்காவல் படை வீரர் கைது DIN DIN Saturday, August 11, 2018 09:18 AM +0530 தியாகதுருகம் அருகே மதுபோதையில் தகராறில் ஈடுபட்டு தாக்கியதாக ஊர்க்காவல் படை வீரர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
 தியாகதுருகத்தை அடுத்த சூளாங்குறிச்சியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் பன்னீர்செல்வம் (35), பெரியமாம்பட்டில் உள்ள உணவகத்தில் பணிபுரிகிறார். இவர் வியாழக்கிழமை மாலை பணிமுடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, பழையசிறுவங்கூர் காலனி பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் மகன் ராஜ்குமார் (32), நண்பர்களுடன் சேர்ந்து டாஸ்மாக் கடை முன் மது அருந்திக்கொண்டு, சப்தமாக பேசிக் கொண்டிருந்தாராம். இதனை பன்னீர்செல்வம் தட்டிக்கேட்டதாகத் தெரிகிறது. அப்போது ஏற்பட்ட தகராறில், பன்னீர்செல்வத்தை ராஜ்குமார் தாக்கினாராம். இதில் காயமடைந்த அவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தாக்குதலுக்கு ஆளானபோது, அவர் அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலியை காணவில்லையாம்.
 இதுதொடர்பாக தியாகதுருகம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர். கைதான ராஜ்குமார் கள்ளக்குறிச்சியில் ஊர்க்காவல் படையில் பணிபுரிவதாக கூறப்படுகிறது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/11/மது-போதையில்-தகராறு-ஊர்க்காவல்-படை-வீரர்-கைது-2978384.html
2978383 விழுப்புரம் விழுப்புரம் குண்டர் சட்டத்தின் கீழ் இளைஞர் கைது  விழுப்புரம் DIN Saturday, August 11, 2018 09:17 AM +0530 விழுப்புரம் அருகே குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இளைஞர் குண்டர் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
 விழுப்புரம் அருகே ஆலத்தூரைச் சேர்ந்த சண்முகம் மகன் சிலம்பரசன்(27) (படம்). ரெüடியான இவர் மீது கொலை முயற்சி, தாக்குதல் போன்ற வழக்குகள் உள்ளன. இது தொடர்பாக விழுப்புரம் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கைது செய்து, கடலூர் சிறையில் அடைத்தனர்.
 தொடர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் பொருட்டு, இவரை மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் குண்டர் சட்டத்தின்கீழ் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/11/குண்டர்-சட்டத்தின்-கீழ்-இளைஞர்-கைது-2978383.html
2978382 விழுப்புரம் விழுப்புரம் கரும்புக்கான ஊக்கத் தொகை: ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்  விழுப்புரம், DIN Saturday, August 11, 2018 09:17 AM +0530 விழுப்புரம் மாவட்டத்தில் 2017-18ஆம் ஆண்டில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு இடைக்கால உற்பத்தி ஊக்கத் தொகையை வங்கிக் கணக்கு மூலம் வழங்குதல் குறித்த ஆய்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
 விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். இடைக்கால உற்பத்தி ஊக்கத் தொகை வழங்குவது தொடர்பாக ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு முதல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இடைக்கால ஊக்கத்தொகை உரிய விவசாயிகளுக்கு மட்டுமே சென்றடைய வேண்டும். பயனாளிகளின் பட்டியலை விரைவாக தயார் செய்ய வேண்டும். விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நிலத்தின் அளவு, கரும்பு வழங்கிய அளவை ஆய்வு செய்ய வேண்டும்.
 விவசாயிகளின் வங்கிக் கணக்குகள், மத்திய கூட்டுறவு வங்கிக் கணக்குகள் ஆய்வு செய்ய வேண்டும். வேளாண்மை உதவி இயக்குநர் அலுவல் சாரா கரும்பு ஆய்வாளர்கள், குறைந்த பட்சம் 20 சதவிகிதம் விவசாயிகளின் பட்டியலில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தினார்.
 விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை தனி அலுவலர்கள் அனுசுயாதேவி, சிவமலர், இம்மானுவேல்ராஜ், மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலைப் பதிவாளர் லட்சுமி, முன்னோடி வங்கி மேலாளர் சேதுராமன், மத்திய கூட்டுறவு வங்கி உதவி பொது மேலாளர் சசிகுமார், வேளாண்மை துணை இயக்குநர் செல்வராஜ், வேளாண்மை அலுவலர் சுரேஷ் மற்றும் தனியார் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாளர்கள் கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/11/கரும்புக்கான-ஊக்கத்-தொகை-ஆட்சியர்-தலைமையில்-ஆய்வுக்-கூட்டம்-2978382.html
2978381 விழுப்புரம் விழுப்புரம் மின் மாற்றியை சீரமைக்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்  கள்ளக்குறிச்சி, DIN Saturday, August 11, 2018 09:17 AM +0530 தியாகதுருகம் அருகே பழுதடைந்த மின்மாற்றியை சீரமைக்கக் கோரி, கிராம மக்கள் தியாகதுருகம் மின்சார வாரிய அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 தியாகதுருகம் ஒன்றியம், பானையங்கால் ஊர்ப் பகுதியில் உள்ள மின் மாற்றி இரு தினங்களுக்கு முன்பு பழுதடைந்தது. இதனால், மின்சாரம் விநியோகமாகாததால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.
 இந்த நிலையில், அவர்கள் வெள்ளிக்கிழமை பகல் 11.45 மணியளவில் தியாகதுருகம்-திருக்கோவிலூர் சாலையில் உள்ள மின்சார வாரிய அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 தகவலறிந்து தியாகதுருகம் நகர மின் உதவிப் பொறியாளர் சத்தியபிரகாசம், நகர காவல் ஆய்வாளர் மூர்த்தி உள்ளிட்டோர் நிகழ்விடத்துக்கு வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகத் திறன் கொண்ட புதிய மின் மாற்றி விரைவில் பொருத்தப்பட்டு, மினி விநியோகம் சீராக வழங்கப்படும். அதற்கான பணிகள் வேகமாக நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று, பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். மறியலால் அப் பகுதியில் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து தடைபட்டது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/11/மின்-மாற்றியை-சீரமைக்கக்-கோரி-கிராம-மக்கள்-சாலை-மறியல்-2978381.html
2978380 விழுப்புரம் விழுப்புரம் தண்டலை சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு 108 பால்குட ஊர்வலம்    கள்ளக்குறிச்சி, DIN Saturday, August 11, 2018 09:16 AM +0530 கள்ளக்குறிச்சியை அடுத்த சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் 15ஆம் ஆண்டு ஆடித் திருவிழாவில் வெள்ளிக்கிழமை பக்தர்கள் 108 பால்குடத்துடன் ஊர்வலமாக வந்து வழிபாடு செய்தனர்.
 முன்னதாக, கள்ளக்குறிச்சி கோமுகி நதிக்கரையில் பூஜை செய்து சக்தி அழைத்து, காப்புக் கட்டி பூ கரகம் எடுத்தனர். பின்னர், அம்மன் கரகத்தை தலையில் சுமந்தும், பக்தர்கள் 108 பால்குடம் சுமந்தும் ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர்.
 அங்கு, அம்மனுக்கு பாலபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/11/தண்டலை-சாமுண்டீஸ்வரி-கோயிலுக்கு-108-பால்குட-ஊர்வலம்-2978380.html
2978379 விழுப்புரம் விழுப்புரம் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை  விழுப்புரம், DIN Saturday, August 11, 2018 08:58 AM +0530 விழுப்புரம் நகரில் மக்களை அச்சுறுத்தி வரும் தெரு நாய்களைப் பிடிக்கும் பணி தொடங்கி, தீவிரமாக நடைபெற்று வருகிறது.
 விழுப்புரம் நகரில் தெரு நாய்கள் தொல்லை பெரும் பிரச்னையாகத் தொடர்கிறது. குறிப்பாக, விழுப்புரம் நகரில் பேருந்து நிலையங்கள் முதல் முக்கிய சாலைகள், குடியிருப்புப் பகுதிகளில் தெரு நாய்கள் அதிகரித்து வருகிறது. கூட்டமாகத் திரியும் இந்த நாய்கள் அவ்வப்போது, பள்ளிக் குழந்தைகள், சிறுவர்களை விரட்டுவதும், கடிப்பதுமாய் அச்சுறுத்தி வருகின்றன. நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த போதிலும் கூட,
 விலங்குகள் நல வாரியத்தின் நெருக்கடி, நாய் பிடிப்போர் பற்றாக்குறை போன்ற காரணங்களால், நாய்கள் பிடிக்கும் பணியை நீண்டகாலமாக நகராட்சி நிறுத்தி வைத்திருந்தது. இந்த நிலையில், நாய்களைப் பிடித்து கட்டுப்படுத்தும் நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் தற்போது தொடங்கியுள்ளது.
 விழுப்புரத்தில் திங்கள்கிழமை முதல் நாய்களை பிடிக்கும் பணியை ஒப்பந்தக் குழுவினர் மேற்கொண்டுள்ளனர். சென்னையைச் சேர்ந்த "வாய்ஸ் பார் அனிமல்' என்ற அமைப்பினர், விலங்குகள் நல வாரியத்தின் அங்கீகாரம் பெற்று நகராட்சியில் ஒப்பந்தம் எடுத்து இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 விழுப்புரத்தில் முகாமிட்டுள்ள இக்குழுவினர், நாய் பிடிக்கும் பிரத்யேக கூண்டு கட்டமைக்கப்பட்ட வாகனத்தில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நகரை வலம் வந்து நாய்கள் அதிகளவில் திரியும் இடங்களில் களமிறங்கி, நாய்களைப் பிடித்து வருகின்றனர். பிடிக்கப்படும் நாய்களுக்கு மாம்பழப்பட்டு சாலையில் உள்ள நகராட்சி மையத்தில் கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது. அதற்குப் பிறகு 4 நாள்கள் பராமரிக்கப்பட்டு, மீண்டும் அந்த நாய்கள் பிடிக்கப்பட்டு, வீதிகளில் விடுவிக்கப்படவுள்ளது. இதனால், தெரு நாய்கள் இனப்பெருக்கம் கட்டுப்படுத்தப்படும் என நகராட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 நாய்களை கட்டுப்படுத்தும் பணியை அனைத்து வார்டுகளிலும் மேற்கொள்ள வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்துகின்றனர்.
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/11/தெரு-நாய்களைக்-கட்டுப்படுத்த-நடவடிக்கை-2978379.html
2978359 விழுப்புரம் விழுப்புரம் திடீர் மழையால் நீரில் மூழ்கிய உப்பளங்கள்!  விழுப்புரம், DIN Saturday, August 11, 2018 08:54 AM +0530 விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் கடந்த இரு தினங்களாக பெய்த திடீர் மழை காரணமாக உப்பளங்கள் நீரில் மூழ்கி உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
 மரக்காணம் கடற்கரைக் கழிமுகப் பகுதிகளில் 3,500 ஏக்கர் பரப்பில் உப்பளங்கள் உள்ளன. அரசுக்குச் சொந்தமான இப்பகுதியிலிருந்து, மரக்காணம் பகுதி தொழிலாளர்கள் சுமார் 3 ஆயிரம் பேர் பாத்தி கட்டி, உப்பு உற்பத்தி செய்து வருகின்றனர். உப்பு உற்பத்தியில் மாநில அளவில் மரக்காணம் இரண்டாம் இடம் வகிக்கிறது. இங்கு ஆண்டுக்கு 20 லட்சம் டன் அளவுக்கு உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகம், புதுவை, கேரள மாநிலங்களுக்கும் உப்பு அனுப்பி வைக்கப்படுகிறது.
 வழக்கம் போல ஜனவரி மாதத்தில் தொடங்கும் உப்பு உற்பத்தி தொடர்ந்து அக்டோபர் மாதம் வரை நீடிக்கும். நிகழாண்டு பருவமழை காரணமாக, உப்பு உற்பத்தி பிப்ரவரி மாதம் தொடங்கியது. எனினும், மழையின்மை, வெயில் கடுமை காரணமாக உப்பு உற்பத்தி அதிகம் இருந்தது. நிகழாண்டு 30 லட்சம் டன் வரை உப்பு உற்பத்தி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், அபரிமிதமான உற்பத்தி காரணமாக உப்பு விலை கடுமையாக சரிந்துவிட்டதாக உப்பளத் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்தனர். உப்பு உற்பத்தி பரவலாக நடைபெற்று வந்த நிலையில், மரக்காணம் பகுதியில் கடந்த இரு தினங்களாக பெய்த திடீர் கன மழையால், உப்பளங்களில் தண்ணீர் தேங்கி உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால், தேக்கி வைத்திருந்த உப்பு வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
 ஆகவே, உற்பத்தியாகும் உப்பை பாதுகாப்பாக தேக்கி வைப்பதற்கு கிடங்கு வசதியை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும். பாதிக்கப்பட்ட உப்பளத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/11/w600X390/vilu.jpg http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/11/திடீர்-மழையால்-நீரில்-மூழ்கிய-உப்பளங்கள்-2978359.html
2978340 விழுப்புரம் விழுப்புரம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்: இணைய வழியாக புகார் பதிவு செய்யலாம் விழுப்புரம், DIN Saturday, August 11, 2018 08:43 AM +0530 குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து இணைய வழியாக புகார்களை பதிவு செய்யலாம் என்று மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு செயல்பட்டு வருகிறது. 
இதன் தொடர்ச்சியாக, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல், பாதுகாப்பற்ற தொடுதல் குறித்தும் குழந்தைகள், பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் வாயிலாக, http://www.ncpcr.gov.in/ என்ற வலைதளத்தில் மின்னணு புகார் பெட்டி (POCSO E-BOX) ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதில் குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றம் நிகழ்ந்த இடம், குற்றம் செய்த நபர், தொடர்பு எண், மின்னஞ்சல் போன்ற விவரங்களை பதிவு செய்யலாம்.
மேலும், குழந்தைகளுக்கெதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து காவல்துறையிடமும் புகார் அளிக்க வேண்டும். புகார் அளிக்க தவறும் நபர்கள் மற்றும் புகாரைப் பதிவு செய்ய மறுக்கும் அல்லது தவறும் அலுவலர்கள் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012}ல் பிரிவு 21}ன் கீழ் ஆறு மாதம் முதல் ஓராண்டு வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதித்து தண்டனைக்குள்ளாக்கப்படுவர் என மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/11/குழந்தைகளுக்கு-எதிரான-பாலியல்-குற்றங்கள்-இணைய-வழியாக-புகார்-பதிவு-செய்யலாம்-2978340.html
2977731 விழுப்புரம் விழுப்புரம் நெல் மூட்டைகள் சரிந்து தொழிலாளி சாவு  உளுந்தூர்பேட்டை DIN Friday, August 10, 2018 08:48 AM +0530 உளுந்தூர்பேட்டை அருகே நெல் மூட்டைகள் சரிந்து விழுந்தததில் அதில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி உயிரிழந்தார்.
 திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம், கப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (60), கூலித் தொழிலாளி. இவர் கடந்த 4-ஆம் தேதி பேரங்கியூர் கிராமத்தில் டிராக்டரில் நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தார். அப்போது, டிராக்டரிலிருந்து ஜெயராமன் கீழே தவறி விழுந்தார். அதில் நெல் மூட்டைகள் சரிந்து ஜெயராமன் மீது விழுந்தன.
 அப்போது அருகில் இருந்தவர்கள் ஜெயராமனை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். பின்னர், தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயராமன் புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.
 இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/10/நெல்-மூட்டைகள்-சரிந்து-தொழிலாளி-சாவு-2977731.html
2977730 விழுப்புரம் விழுப்புரம் ஏரி ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தக் கோரிக்கை  செஞ்சி, DIN Friday, August 10, 2018 08:47 AM +0530 வல்லம் அருகே அகலூர் கிராமத்தில் உள்ள ஏரி ஆக்கிரமிக்கப்படுவதை தடுத்து நிறுத்தக் கோரி, செஞ்சி வட்டாட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
 செஞ்சி வட்டம், வல்லம் ஒன்றியம், அகலூர் கிராமத்தில் உள்ள ஏரியை தனி நபர்கள் சிலர் ஆக்கிரமித்து ஏரியின் கொள்ளளவை குறைத்து வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற வேண்டும் என அகலூர் கிராம மக்கள் செஞ்சி வட்டாட்சியருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:
 அகலூர் கிராமத்தில் உள்ள உள்ள ஏரி பொதுப்பணித் துறைக்குச் சொந்தமானது. இந்த ஏரி மூலம் சுமார் 59.02.5 ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெற்று வருகின்றன.
 இந்த நிலையில், ஏரி சங்கத் தலைவர் அப்பாண்டைராஜன் தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், தற்போது தனிப்பட்ட நபர் ஒருவர் பொக்லைன் இயந்திரம் மூலம் ஏரியை ஆக்கிரமித்து வருகிறார். பாறாங்கற்களை ஏரியில் கொட்டி ஏரியின் கொள்ளளவை குறைத்து வருகிறார். இதனால், ஏரியின் நீர் கொள்ளளவு குறைந்து விவசாயம் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.
 எனவே, வட்டாட்சியர் நடவடிக்கை மேற்கொண்டு ஏரி ஆக்கிரமிப்பை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும். ஏரியில் கொட்டப்பட்டுள்ள கல்பாறைகளை அகற்ற வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/10/ஏரி-ஆக்கிரமிப்பை-தடுத்து-நிறுத்தக்-கோரிக்கை-2977730.html
2977729 விழுப்புரம் விழுப்புரம் விழுப்புரம் மாவட்டத்தில் 37 டன் தரமற்ற விதைகள் பறிமுதல்  விழுப்புரம், DIN Friday, August 10, 2018 08:47 AM +0530 விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் வேளாண் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் 37 டன் தரமற்ற விதைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
 விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண் விதை துணை இயக்குநர் மல்லிகா தலைமையில், ஆய்வாளர்கள் சௌந்தராஜன், அரவிந்த்ராஜ், தமிழ்வேல், ராஜலட்சுமி, சான்று அலுவலர்கள் கதிரேசன், முத்துக்குமரன், சந்தோஷ், சுரேஷ், வேளாண் அலுவலர் பாலமுருகன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், கடந்த வாரங்களில் விழுப்புரம், கோலியனூர், செஞ்சி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
 அப்போது நெல், காய்கறி விதைகள், மக்காச்சோளம் உள்ளிட்ட தானிய விதைகள் உள்ளிட்ட விதைக் குவியல்கள், விதை மூட்டைகளின் பதிவேடுகள், தயாரிக்கப்பட்ட காலம், விதை சுத்திகரிப்பு உபகரணங்கள் போன்றவை ஆய்வு செய்யப்பட்டது.
 இதில், சந்தேகத்திற்குறிய 40 விதைக் குவியல்களில் இருந்து விதை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 ஆய்வின் போது, கோலியனூர், செஞ்சி, மணலூர்பேட்டை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் விதைச் சட்டம் மற்றும் விதை கட்டுப்பாட்டு விதிகளை மீறி தனியார் விதைப் பண்ணைகளில் விற்பனைக்கு வைத்திருந்த 13 விதைக் குவியல்களிலிருந்து, 37.27 டன் விதைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
 இதன் மதிப்பு ரூ.13.64 லட்சம் ஆகும். ஆய்வின் போது, விதை விற்பனையாளர்கள் தரமான விதைகளை விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டது.
 அதன்படி, விதை விற்பனையாளர்கள் விதை விற்பனை தொடர்பான பதிவேடுகள் மற்றும் ஆவணங்களை விதைச் சட்டப்படி பராமரிக்க வேண்டும்.
 விதை முட்டைகளை முளைப்புத் திறன் பாதிக்காத வகையில், சரியான சேமிப்பு முறைகளை கையாள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/10/விழுப்புரம்-மாவட்டத்தில்-37-டன்-தரமற்ற-விதைகள்-பறிமுதல்-2977729.html
2977728 விழுப்புரம் விழுப்புரம் பேருந்து மீது கல் வீச்சு: இளைஞர் கைது  விழுப்புரம், DIN Friday, August 10, 2018 08:47 AM +0530 விழுப்புரம் அருகே பேருந்து மீது கல் வீசித் தாக்கிய சம்பவம் தொடர்பாக இளைஞர் ஒருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
 திமுக தலைவர் கருணாநிதி செவ்வாய்க்கிழமை மாலை உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, திமுகவினர் விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு, செஞ்சி, உளுந்தூர்பேட்டை, விக்கிரவாண்டி போன்ற பல்வேறு இடங்களில் பேருந்து மற்றும் தனியார் வாகனங்கள் மீது கல் வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. இதில், 7 அரசுப் பேருந்துகள், 2 லாரிகள், 2 கார்கள் சேதமடைந்தன.
 இது குறித்து சம்பந்தப்பட்ட போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, விக்கிராண்டி சுங்கச்சாவடி பகுதியில் அரசுப் பேருந்து மீது கல் வீசி தாக்குதல் நடத்தியது தொடர்பாக விக்கிரவாண்டி, வாணியர் தெருவைச் சேர்ந்த செந்தில் (35) என்பவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். மேலும், கல் வீச்சில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/10/பேருந்து-மீது-கல்-வீச்சு-இளைஞர்-கைது-2977728.html
2977727 விழுப்புரம் விழுப்புரம் நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்  விழுப்புரம், DIN Friday, August 10, 2018 08:46 AM +0530 விழுப்புரம் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தொடரும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று நுகர்வோர் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
 விழுப்புரத்தில் மாவட்ட அளவிலான தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
 கூட்டத்தில் நுகர்வோர் அமைப்பினர் குறைகளைத் தெரிவித்து பேசியதாவது, திண்டிவனம், கள்ளக்குறிச்சி நகராட்சிப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதால், 3 நாளுக்கு ஒருமுறை தண்ணீர் வழங்கப்படுகிறது.
 குடிநீர் பிரச்னை தீரும் வரை நகராட்சி லாரிகள் மூலம் தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும்.
 அரசுப் பேருந்துகளில் ஒரே ஊருக்கு பல விதமான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.
 விரைவுப் பேருந்து, சொகுசுப் பேருந்து என கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர், ஆனால், பழைய பேருந்துகளையே இயக்குகின்றனர். நியாய விலைக் கடைகளில் விலைப் பட்டியல், பெயர் பலகை வைக்க வேண்டும், விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி நகராட்சி, பல பேரூராட்சி பகுதிகளில் முக்கிய சாலைகளில் ஆக்கிரமிப்புகள் இருப்பதால், பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது.
 உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். உணவுப் பாதுகாப்புத் துறையினர் உணவகங்கள், தேநீர் கடைகளில் சோதனையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
 இதற்கு பதிலளித்து ஆட்சியர் பேசுகையில், அனைத்து அரசுத் துறைகளிலும் 3 மாதத்திற்கு ஒருமுறை நுகர்வோர் ஆலோசனைக்குழு கூட்டம் நடத்த வேண்டும்.
 குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும். ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். துறை சார்ந்த அலுவலர்கள், குறைகள் குறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.பிரியா, உதவி ஆட்சியர் சாருஸ்ரீ, கோட்டாட்சியர்கள் சரஸ்வதி, தினேஷ், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ராஜேந்திரன் மற்றும் அலுவலர்கள், நுகர்வோர் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/10/நகராட்சி-பேரூராட்சிப்-பகுதிகளில்-ஆக்கிரமிப்பு-அகற்ற-வலியுறுத்தல்-2977727.html
2977726 விழுப்புரம் விழுப்புரம் விழுப்புரம் மாவட்டத்தில் 5 அரசு உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்வு  விழுப்புரம், DIN Friday, August 10, 2018 08:46 AM +0530 விழுப்புரம் மாவட்டத்தில் 5 அரசு உயர் நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.
 தமிழகத்தில் அரசு உயர் நிலைப் பள்ளிகளாக உள்ள 100 அரசு மற்றும் நகராட்சிப் பள்ளிகளை, மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த நிகழாண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
 இதனையடுத்து, முதல் கட்டமாக 5 பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.
 இதனைத் தொடர்ந்து, தற்போது 95 அரசு மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை, மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
 அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில், சங்கராபுரம் அருகே உள்ள கடுவனூர் அரசு உயர்நிலைப் பள்ளி, விழுப்புரம் அருகே அரசூர் அரசு உயர்நிலைப் பள்ளி, கோனூர் அரசு உயர்நிலைப் பள்ளி, திண்டிவனம் அருகே பேரணி அரசு உயர்நிலைப் பள்ளி, உளுந்தூர்பேட்டை அருகே எறையூர் அரசு உயர்நிலைப் பள்ளி ஆகிய 5 அரசு உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
 இதற்கான அரசாணையை கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ளார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/10/விழுப்புரம்-மாவட்டத்தில்-5-அரசு-உயர்நிலைப்-பள்ளிகள்-தரம்-உயர்வு-2977726.html
2977724 விழுப்புரம் விழுப்புரம் தேசிய வாக்காளர் பதிவேடு பதிவேற்றப் பணி: மாவட்ட ஆட்சியர் அறிவுரை  விழுப்புரம், DIN Friday, August 10, 2018 08:46 AM +0530 தேசிய வாக்காளர் பதிவேடு பதிவேற்றப் பணியை பாதுகாப்பாக மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
 விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய வாக்காளர் பதிவேட்டினை கணினியில் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.
 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமை தொடக்கிவைத்து ஆட்சியர் இல.சுப்பிரமணியன் பேசியதாவது:
 வட்டார, நகராட்சி, மாநகராட்சி வாரியாக தேசிய மக்கள் தொகை பதிவேடுகளுக்கான முதல்கட்ட பணிகள், 2010-ஆம் ஆண்டு குடும்பப் பட்டியல் கணக்கெடுப்பின்போது நடைபெற்றது. அதில், பதிவு செய்யப்பட்ட விவரங்கள் அடங்கிய புத்தகங்கள் அச்சிடப்பட்டு, கடந்த 2016-ம் ஆண்டு களப்பணிகள் மூலமாக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. சுருக்கப் பட்டியல் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
 இதனையடுத்து தற்போது தனிநபர் விவரங்கள் அடங்கிய கணக்கெடுப்பாளர், பகுதிவாரியான புத்தகத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களை உள்ளீடு செய்து, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
 தேசிய மக்கள் தொகைப் பதிவேடு விவரங்கள் மேம்படுத்துதல் பணி நடைபெறும் போது, பொறுப்பு அதிகாரி தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.
 ஆதார் எண், கைபேசி எண், தனிநபர் விவரங்கள் அடங்கிய அனைத்து ஆவணங்களும் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும்.
 இந்த ஆவணங்களை மற்றவர்கள் பார்க்கவோ, நகல் எடுக்கவோ, புகைப்படம் எடுக்கவோ அனுமதிக்கக் கூடாது. பொறுப்பு அதிகாரிகள் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு விவரங்கள் அடங்கிய புத்தகங்கள் அனைத்தையும் சீர்படுத்தி பட்டியலிட்ட பின்னரே மையத்தின் பொறுப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.
 திருத்தங்கள் செய்து முடித்த பிறகு, அப்பகுதியில் புதிய குடும்பமோ அல்லது குடும்ப நபர்களோ இருப்பின் அதற்குரிய விவரங்களையும் உள்ளீடு செய்ய வேண்டும். இப்பணிகள் அனைத்தும் 90 நாள்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றார்.
 இதனையடுத்து, அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கார்த்திகேயன், மக்கள்தொகை கணக்கெடுப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் தி.சித்ரா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சோமசுந்தரி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/10/தேசிய-வாக்காளர்-பதிவேடு-பதிவேற்றப்-பணி-மாவட்ட-ஆட்சியர்-அறிவுரை-2977724.html
2977721 விழுப்புரம் விழுப்புரம் சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு  விழுப்புரம்/திருக்கோவிலூர்/செஞ்சி DIN Friday, August 10, 2018 08:45 AM +0530 ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, விழுப்புரம், திருக்கோவிலூர், அவலூர்பேட்டை ஆகிய ஊர்களில் உள்ள சிவாலயங்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
 விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் அருளாம்பிகை உடனுறை பசுபதீஸ்வரர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, வியாழக்கிழமை நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
 இதேபோன்று, திருக்கோவிலூர்-கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோயிலில் நந்தீஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
 வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு மூலமூர்த்திகளுக்கு அபிஷேகம், 4.30 மணிக்கு நந்தீஸ்வரருக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றன.
 இதனைத் தொடர்ந்து, மூலவருக்கும், நந்தீஸ்வரருக்கும் மஹா தீபாராதனையும், பிரதோஷ நாயகருக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றன.
 பின்னர், ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் ஆலய வலம் வந்தார். நாகஸ்வர நிகழ்ச்சி, சிவபுராணம், நமச்சிவாய என்னும் பஞ்சாச்சர ஜெபம் ஆகியவை நடைபெற்றன. இதேபோல, அரகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் கோயில், ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோயில் ஆகியவற்றிலும் வியாழக்கிழமை நந்தீஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
 செஞ்சி: செஞ்சியை அடுத்த அவலூர்பேட்டையில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிவலிங்கத்துக்கும், நந்தீஸ்வரருக்கும் பல்வேறு வாசனைத் திரவியங்களால் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/10/சிவாலயங்களில்-பிரதோஷ-வழிபாடு-2977721.html
2977097 விழுப்புரம் விழுப்புரம் கருணாநிதி மறைவு: அரைக்கம்பத்தில் பறந்த அதிமுக கொடி! DIN DIN Thursday, August 9, 2018 08:19 AM +0530 திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி, விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே அதிமுக கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உளுந்தூர்பேட்டை அருகே ஏ.குமாரமங்கலத்தில் நெடுஞ்சாலையோரம் பல்வேறு அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி, துக்கம் அனுசரிக்கும் வகையில் கட்சிக் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விட, அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை இரவு அதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் கொடிகள் அரைக்கம்பத்தில் இறக்கப்பட்டன.
புதன்கிழமை காலை, அதிமுக கொடி அரைக் கம்பத்தில் பறந்து கொண்டிருந்ததை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். தகவல் அறிந்து போலீஸார் நிகழ்விடத்துக்கு வந்து விசாரித்தனர். கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அனைத்துக் கட்சிக் கொடிகளையும் அரைக்கம்பத்தில் பறக்க விட்டதாக கட்சிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், சாலையோரம் கொடிக் கம்பம் அமைந்துள்ளதால் வெளியூரைச் சேர்ந்தவர்கள் இதனை தவறாகப் புரிந்து கொண்டு அசம்பாவிதம் நிகழ வாய்ப்புள்ளது. ஆகவே, அதிமுக கொடியை முழுக் கம்பத்தில் ஏற்றி பறக்க விடுமாறு  போலீஸார் அறிவுறுத்தினர். இதனை ஏற்று, அங்கிருந்தவர்கள் அதிமுக கொடியை மீண்டும் முழுக் கம்பத்தில் ஏற்றி வைத்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/09/கருணாநிதி-மறைவு-அரைக்கம்பத்தில்-பறந்த-அதிமுக-கொடி-2977097.html
2977096 விழுப்புரம் விழுப்புரம் கருணாநிதிக்கு திருநங்கைகள் அஞ்சலி DIN DIN Thursday, August 9, 2018 08:19 AM +0530 மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு, விழுப்புரம் அருகே அய்யங்கோவில்பட்டு கிராமத்தில் திருநங்கைகள் அஞ்சலி செலுத்தினர்.
அய்யங்கோவில்பட்டில் அரசு வழங்கிய தொகுப்பு வீடு குடியிருப்பில் 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து சோப்பு, சொட்டு நீலம்,  மெழுகுவர்த்தி தயாரித்தல் போன்ற சுய தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் திமுக தலைவர் கருணாநிதி உயிரிழந்ததை அறிந்து,  புதன்கிழமை அவரது உருவப்படத்தை அலங்கரித்து வைத்து,  மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர் . இதில் திருநங்கைகள் சங்க மாவட்டத் தலைவர் ராதாம்மாள்,  சிந்து உள்ளிட்ட ஏராளமான திருநங்கைகள் கலந்து கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/09/கருணாநிதிக்கு-திருநங்கைகள்-அஞ்சலி-2977096.html
2977095 விழுப்புரம் விழுப்புரம் வெறிச்சோடிய சென்னை ரயில்கள்! DIN DIN Thursday, August 9, 2018 08:18 AM +0530 திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததையடுத்து, தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட ரயில்கள் பயணிகள் கூட்டமின்றி புதன்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டன.
திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி, மாநிலம் முழுவதும் செவ்வாய்க்கிழமை இரவு கடைகள் அடைக்கப்பட்டன. பேருந்துகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன. இதனால் பொதுமக்கள், வெளியூர் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். விழுப்புரம் மாவட்டத்திலும் புதன்கிழமை இரவு வரை பேருந்துகள் இயக்கப்படாததால் பெரும் அவதிப்பட்டனர்.
இந்த நிலையில், புதன்கிழமை தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட ரயில்கள் கூட்ட நெரிசலின்றி சென்றன.
தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்குச் செல்லும் ரயில்களில் முன்பதிவு செய்திருந்த ஏராளமானோர் முன்பதிவை ரத்து செய்ததால், முன்பதிவு பெட்டிகள் பயணிகளின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.
தினசரி கூட்ட நெரிசலுடன் செல்லும், புதுவை-சென்னை பயணிகள் ரயில், புதன்கிழமை காலை 6.50 மணிக்கு விழுப்புரம் வழியாக காலியாகவே வந்து சென்றது. 
தொடர்ந்து காலை 9.30க்கு சென்னை சென்ற காரைக்குடி-சென்னை பல்லவன் விரைவு ரயிலிலும் முன்பதிவில்லாத பெட்டிகளில் சிறிதளவு பயணிகள் கூட்டம் இருந்தன.
தொடர்ந்து,  பகல் 11.40க்கு மதுரையிலிருந்து சென்னை சென்ற வைகை அதிவிரைவு ரயிலில், முன்பதிவு பெட்டிகள் காலியாகவே இருந்தன.
முன்பதிவில்லாத பெட்டிகளில் மட்டும் ஓரளவுக்கு பயணிகள் சென்றனர். இதேபோல, காலை சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்குச் சென்ற குருவாயூர் விரைவு ரயில், சோழன் விரைவு ரயில், வைகை அதிவிரைவு ரயில், புதுச்சேரி ரயில்களும் காலியாகவே சென்றன.
திமுக தலைவர் மறைவையொட்டி அரசு பொது விடுமுறை, கடைகள் அடைப்பு, பதற்ற நிலை காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்ல வேண்டிய பயணிகள் ரயில் பயணத்தைத் தவிர்த்தனர். இதனால், புதன்கிழமை எப்போதும் இல்லாத வகையில், ரயில்களில் கூட்டநெரிசலின்றி காணப்பட்டது.
எனினும், ரயில்வே போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். புதன்கிழமை இரவு சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட  ரயில்களில் கூட்ட நெரிசல் இருந்தது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/09/வெறிச்சோடிய-சென்னை-ரயில்கள்-2977095.html
2977094 விழுப்புரம் விழுப்புரம் அனைத்துக் கட்சியினர் அமைதி ஊர்வலம் DIN DIN Thursday, August 9, 2018 08:17 AM +0530 திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்துக் கட்சிகள் சார்பில் புதன்கிழமை அமைதி ஊர்வலம் நடைபெற்றது. பல்வேறு அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்.
விழுப்புரத்தில் மனித உரிமைகள் கழகம் சார்பில் மாவட்ட அலுவலகத்தில் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்டச் செயலர் ஆர்.கந்தன் தலைமை வகித்தார்.  மாவட்ட இணை செயலர் பாலசந்தர்,  துணை செயலர்கள் கதிரவன், குமரகுரு,  ஒன்றிய செயலர் ராஜி, சாமிநாதன், அக்பர், நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  
விழுப்புரம் காந்தி வீதியில்,  வணிகர் சங்கக் கூட்டமைப்பினர் சார்பில்,  கருணாநிதியின் உருவப் படத்துக்கு சேம்பர் ஆப் காமர்ஸ் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் கேபிள் டிவி பொது நலச் சங்கத்தினர் சார்பில்,  கருணாநிதி உருவப்படம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 
விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை சிவசக்தி நகரில் கருணாநிதி உருவப்படத்துக்கு திமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.  திமுக நிர்வாகிகள் குமார்,  பாலகிருஷ்ணன்,  முன்னாள் செயலர் பழனி,  கிளை செயலர் பாண்டியன்,  கோவிந்தராஜ்,  அன்புசுரேந்தர்,  உதயசூரியன், உதயநிதி  உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
இதே போல,  விழுப்புரம் வண்டிமேடு,  கீழ்ப்பெரும்பாக்கம்,  புதிய பேருந்து நிலையம்,  கே.கே.சாலை,  காந்தி சிலை சந்திப்பு,  திருவிக வீதி,  திருச்சி சாலை,  மேல வீதி,  கிழக்கு பாண்டி ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகளிலும்,  குடியிருப்பு பகுதிகளிலும்,  கிராமங்களிலும் திமுக உள்ளிட்ட கட்சியினரும்,  பல்வேறு அமைப்பினர்கள் திமுக தலைவர் கருணாநிதியின் உருவப் படத்தை வைத்து,  பல்வேறு இடங்களில் புதன்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
செஞ்சியில்... கருணாநிதி மறைவையொட்டி, செஞ்சி நகரம் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை இரவு வரை வெறிச்சோடிக் காணப்பட்டது. 100 சதவீத அடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.
அனைத்துக் கட்சியினர் சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. செஞ்சி பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து செஞ்சி கூட்டு சாலை வரை நடைபெற்ற ஊர்வலத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்டுகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். 
கள்ளக்குறிச்சியில்... கருணாநிதி மறைவையொட்டி கள்ளக்குறிச்சியில் கடைகள் புதன்கிழமையும் அடைக்கப்பட்டிருந்தன. 
கள்ளக்குறிச்சியில் கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகம் முன்பிருந்து திமுக நகர செயலாளர் சுப்ராயலு தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
சின்னசேலம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட விவசாய பிரிவுச் செயலாளர் அண்ணாமலை தலைமையிலும் நைனார்பாளையம் கிளைச் செயலாளர் பாலு தலைமையிலும் கச்சிராயப்பாளையத்தில் நகரச் செயலாளர் சிதம்பரம் தலைமையிலும் கல்வராயன்மலையில் மண்டகப்பாடி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பிச்சன் தலைமையிலும் தியாகதுருகத்தில் முன்னாள் சேர்மென் பொன்.இராமகிருஷ்ணன் தலைமையிலும் திமுகவினரின் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/09/அனைத்துக்-கட்சியினர்-அமைதி-ஊர்வலம்-2977094.html
2977093 விழுப்புரம் விழுப்புரம் விழுப்புரம் மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: 10 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைப்பு DIN DIN Thursday, August 9, 2018 08:17 AM +0530 திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமை இரவு வரை கடைகள் அடைக்கப்பட்டும்,  பேருந்துகள் இயங்காமலும் இருந்ததால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலமின்றி, சென்னையில் செவ்வாய்க்கிழமை மாலை உயிரிழந்தார்.  இதையடுத்து,  மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது.  விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டன. இரவு 7 மணிக்கு பேருந்துகள் அனைத்தும் பணிமனைகளுக்கு  பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டன. தனியார் பேருந்துகளும் நிறுத்தப்பட்டன.
 புதன்கிழமை அரசு பொது விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அன்று காலையும் தேநீர் கடைகள்,  மருந்தகங்கள் உள்ளிட்ட அனைத்துவித கடைகளும் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தன.  அரசு, தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை.  நகரப் பேருந்துகளும் இயக்கப்படவில்லை. இதனால்,  எப்போதும் இல்லாத வகையில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம்,  பழைய பேருந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்பட்டன. பெட்ரோல் நிலையங்களும்,  உணவகங்களும் மூடப்பட்டன.  இதனால், வெளியூர் பயணிகள், பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.  முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.  விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் மேற்பார்வையில்,  8 உள்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் போலீஸார் ரோந்து சென்று பாதுகாப்புப் பணியை மேற்கொண்டனர்.
அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைப்பு: விக்கிரவாண்டி,  உளுந்தூர்பேட்டை,  மாடூர்,  மரக்காணம்,  பட்டானூர் ஆகிய சுங்கச் சாவடிகளில்,  செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கி புதன்கிழமை இரவு வரை கட்டணம் வசூலிப்பின்றி வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. 
விக்கிரவாண்டி அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்,  புதன்கிழமை அதிகாலை வந்த சேலம் அரசுப் பேருந்து மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதால் கண்ணாடி உடைந்தது.  இதே போல, திருக்கோவிலூர் அருகே விலந்தைப் பகுதியில் சென்ற நகரப் பேருந்து,  உளுந்தூர்பேட்டை அருகே எறையூர் பகுதியில் சென்ற நகரப் பேருந்து,  திண்டிவனம் அருகே தழுதாளி பகுதியில் சென்ற நகரப் பேருந்துகள்,  மேல்பேட்டை அருகே சென்ற நகரப் பேருந்து என மாவட்டம் முழுவதும் 10 அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகளும்,  தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு வந்த 3 கார்களின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன.
விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து புதன்கிழமை இரவு வரை கடைகள் அடைக்கப்பட்டும்,  பேருந்துகள் இயங்காமல் இருந்ததால்,  பொது மக்கள், வெளியூர் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், இரவு முதல் வாகனப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/09/விழுப்புரம்-மாவட்டத்தில்-இயல்பு-வாழ்க்கை-பாதிப்பு-10-பேருந்துகளின்-கண்ணாடிகள்-உடைப்பு-2977093.html
2977092 விழுப்புரம் விழுப்புரம் விழுப்புரத்தில் திமுகவினர் அமைதி ஊர்வலம் DIN DIN Thursday, August 9, 2018 08:16 AM +0530 கருணாநிதி மறைவையொட்டி விழுப்புரத்தில் திமுக, தோழமைக் கட்சி நிர்வாகிகள் புதன்கிழமை அமைதி ஊர்வலம் மேற்கொண்டனர் .
விழுப்புரம் காந்தி சிலை திமுக நகர கட்சி அலுவலகத்திலிருந்து மாலை ஊர்வலம் தொடங்கியது.  திமுக நகரச் செயலர் இரா.சக்கரை தலைமை வகித்தார்.  திமுக நிர்வாகிகள் கற்பகமூர்த்தி, சோமு,  காங்கிரஸ் நகரத் தலைவர் செல்வராஜ்,  பொதுச் செயலர் தயானந்தம்,  இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் ஏ.வி.சரவணன்,  நகரச் செயலர் குப்புசாமி,  ஏஐடியுசி செல்வம்,  மனித நேய மக்கள் கட்சி முஸ்தாக்தீன் உள்ளிட்ட தோழமைக் கட்சியினரும்,  திமுகவினர் பலரும் கலந்துகொண்டனர்.
அவர்கள், கருணாநிதியின் உருவப்படத்துடன் நேருஜி சாலை,  திருச்சி சாலை வழியாக ஊர்வலமாகச் சென்று,  விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நிறைவு செய்தனர்.  இதையடுத்து,  அங்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது.  திமுக நகர செயலர் சக்கரை மற்றும் தோழமை கட்சியினர் இரங்கல் தெரிவித்துப் பேசினர்.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/09/விழுப்புரத்தில்-திமுகவினர்-அமைதி-ஊர்வலம்-2977092.html
2977091 விழுப்புரம் விழுப்புரம் குழந்தைத் தொழிலாளர் மீட்பு ஆலோசனைக் கூட்டம் DIN DIN Thursday, August 9, 2018 08:16 AM +0530 செஞ்சி வட்டத்தில் குழந்தை தொழிலாளர்கள் மீட்பு, தேடப்படும் குழந்தைகள்,  பிச்சை எடுக்கும் குழந்தைகள் மீட்பு, குழந்தைத் திருமணம் தடுத்தல், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்த வட்ட அளவிலான ஆலோசனைக் குழுக் கூட்டம், செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
செஞ்சி துயர் துடைப்பு வட்டாட்சியர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.
பள்ளி நாள்களில் காலை, மாலை நேரங்களில் பேருந்து நிறுத்தத்தில் பெண் குழந்தைகளுக்கு வெளி ஆட்கள் மூலம் வரும் பிரச்னைகளை தடுக்க காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களுக்கு நடத்தப்படும் சிறப்பு வகுப்புகளை மாலை 6 மணிக்குள் நிறைவு செய்திட வேண்டும். 
திருமண மண்டபங்களில் பெண்ணின் திருமண வயது 18, ஆணின் திருமண வயது 21 என பூர்த்தியான சான்று பெற்ற பிறகே திருமணம் நடத்திட அனுமதித்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், துயர்துடைப்பு வட்டாட்சியர் கோவிந்தராஜ், துணை வட்டாட்சியர் செல்வமூர்த்தி, செஞ்சி கல்வி மாவட்ட அலுவலர் கிருஷ்ணன், போக்குவரத்து ஆய்வாளர் கோதண்டம் , திருமண மண்டப உரிமையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/09/குழந்தைத்-தொழிலாளர்-மீட்பு-ஆலோசனைக்-கூட்டம்-2977091.html
2977090 விழுப்புரம் விழுப்புரம் அரசுப் பள்ளி கட்டடம் திறப்பு DIN DIN Thursday, August 9, 2018 08:16 AM +0530 மயிலம் தொகுதி செ.கொத்தமங்கலம் அரசுப் உயர்நிலைப் பள்ளியின்புதிய கட்டடத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
ரூ.1.62 கோடியில் கட்டப்பட்ட இந்த கட்டடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். 
இதனை தொடர்ந்து, பள்ளியின் புதிய கட்டட வளாகத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திண்டிவனம் கல்வி மாவட்ட அலுவலர் (பொ) சி.சாந்தி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் மு.தண்டபாணி வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் லட்சுமணன், பொதுப்பணித் துறை பொறியாளர்கள் வைத்தியலிங்கம், ரவி வாழ்த்துரை வழங்கினர். இரா.மாசிலாமணி எம்எல்ஏ 
குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.  ஆசிரியர்கள் ஐ.செந்தில்குமார், எஸ்.செந்தில்குமார், பி.லியோனி, எஸ்.அம்புரோஸ், இ.கோவிந்தன், பி.ஜெயராமன், 
ஏ.குமரவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பட்டதாரி ஆசிரியர் தட்சணாமூர்த்தி நன்றி கூறினார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/09/அரசுப்-பள்ளி-கட்டடம்-திறப்பு-2977090.html
2977089 விழுப்புரம் விழுப்புரம் திருக்கோவிலூரில் பலத்த மழை DIN DIN Thursday, August 9, 2018 08:16 AM +0530 திருக்கோவிலூர் பகுதியில் புதன்கிழமை மாலை இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. 
திருக்கோவிலூர் பகுதியில் பருவமழை சரிவர பெய்யாததால் மானாவாரி கம்புப்பயிர்கள் தண்ணீரின்றி கருகும் நிலை ஏற்பட்டது. புதன்கிழமை மாலை 4.30 மணி முதல் தொடர்ந்து இரவு வரை மழை பெய்தது. இதனால் கம்பு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/09/திருக்கோவிலூரில்-பலத்த-மழை-2977089.html
2977088 விழுப்புரம் விழுப்புரம் வறட்சியால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்: விக்கிரவாண்டி பகுதி விவசாயிகள் கோரிக்கை DIN DIN Thursday, August 9, 2018 08:15 AM +0530 விக்கிரவாண்டி பகுதியில் வறட்சியால் கரும்பு,  நெல் பயிர்கள் கருகிவிட்டதால் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
விழுப்புரம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம், கோட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கோட்டாட்சியர் சரஸ்வதி தலைமை வகித்தார். வட்டாட்சியர்கள் விழுப்புரம் சையத்மெஹமுத்,  விக்கிரவாண்டி சுந்தரராஜன்,  வட்ட வழங்கல் அலுவலர் பிரபாகரன்,  துணை வட்டாட்சியர் பாண்டியன்,  வெங்கடசுப்பிரமணியன்,  கோவர்தணன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கலியவரதன்,  ராஜா,  கலியமூர்த்தி,  ஏழுமலை,  நாகராஜன்,  விவசாய பிரதிநிதிகள் நாகராஜன்,  பழனி,  முருகையன் உள்ளிட்ட விவசாயிகள் பங்கேற்று குறைகளைத் தெரிவித்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கரும்பு நிலுவைத் தொகையை சர்க்கரை ஆலைகளிடம் இருந்து விரைந்து பெற்றுத் தர வேண்டும். விக்கிரவாண்டி வட்டத்தில் தொடர் வறட்சி காரணமாக கரும்பு,  நெல் பயிர்கள் கருகி வருகின்றன. கரும்புக்கு உரிய காப்பீட்டுத் தொகையை ஆலை நிர்வாகம் செலுத்தாததால் இழப்பீடு பெறுவதற்கு வழியின்றி உள்ளது.  ஆகவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணத்தை வழங்க வேண்டும். 
விக்கிரவாண்டி அருகே அனுமந்தபுரம்-அன்னியூர் சாலை முழுவதும் முள் செடிகள் அடைத்துக்கொண்டுள்ளதை அகற்றி சீரமைக்க வேண்டும்.  கடந்த மாதம் நடைபெற்ற வருவாய் தீர்வாய முகாம்களில் (ஜமாபந்தி முகாம்) பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
நடப்பு பருவத்துக்கான விதை நெல்கள் வேளாண் பண்ணைகளில் இருப்பு வைக்க வேண்டும்.  பொன்னி நெல் தவிர்த்த இதர பிபிடி,  39 உள்ளிட்ட பல நெல் விதை ரகங்கள் இருப்பதில்லை. தரமான நெல் விதைகளையும், காய்கறி விதைகளையும் விவசாயிகளுக்கு கூடுதலாக வழங்க வேண்டும்.  விக்கிரவாண்டியிலிருந்து சே.புதூருக்கு முறையாக அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினர்.
இதற்கு பதிலளித்து கோட்டாட்சியர் கூறியதாவது: கரும்பு ஆலை நிர்வாகம் ஆக.15-க்குள் நிலுவைத் தொகை வழங்குவதாக உறுதி அளித்துள்ளது.  இதர கோரிக்கைகள் குறித்து,  அனைத்து துறையினருக்கும் பரிந்துரைத்து ஒரு வார காலத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
திடீர் போராட்டத்தில் பரபரப்பு: விவசாயிகள் கூட்டத்துக்கு வந்த விழுப்புரம் அருகே திருவாமாத்தூரைச் சேர்ந்த மாட்டு வண்டித் தொழிலாளி குப்பன்,  தனது மாட்டு வண்டியை மணல் எடுத்து வந்ததாக வருவாய்த் துறையினர் 20 நாள்களுக்கு முன்பு பிடித்து வந்தனர். ரூ.6,500 அபராதம் செலுத்தியும் விடாமல் அலைக்கழிப்பதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டார்.  இதனையடுத்து,  விழுப்புரம் தாலுகா போலீஸார் விரைந்து வந்து அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/09/வறட்சியால்-பாதித்த-பயிர்களுக்கு-நிவாரணம்-விக்கிரவாண்டி-பகுதி-விவசாயிகள்-கோரிக்கை-2977088.html
2977087 விழுப்புரம் விழுப்புரம் திண்டிவனத்தில் கருணாநிதிக்கு திமுகவினர்  அஞ்சலி DIN DIN Thursday, August 9, 2018 08:15 AM +0530 திண்டிவனத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவுக்கு திமுக சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
திண்டிவனம் நகரிலுள்ள 13, 14, 16, 17, 21 மற்றும் 23ஆவது வார்டுகளில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு திமுக விழுப்புரம் மாவட்ட முன்னாள் துணைச் செயலர் கே.அசோகன் தலைமையில் கருணாநிதியின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு, மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட சிறுபான்மை பிரிவு சார்பில் சாகுல்அமீத், மாவட்ட பிரதிநிதி முரளிதரன், நகரப் பொறியாளர் அணி வெங்கடபெருமாள், நகர சிறுபான்மைப் பிரிவு 
சாதிக்பாஷா, வழக்குரைஞர்கள் மலர்மன்னன், மோகனசுந்தரம், நகர அமைப்பாளர் கிளாசிக் ரமேஷ், நிர்வாகிகள் கருணா, வேல்முருகன், நாதன், ராஜா, விசு உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/09/திண்டிவனத்தில்-கருணாநிதிக்கு-திமுகவினர்--அஞ்சலி-2977087.html
2976664 விழுப்புரம் விழுப்புரம் சுங்கச்சாவடிகளில் கட்டண வசூல் நிறுத்தம் DIN DIN Wednesday, August 8, 2018 04:21 AM +0530 திமுக தலைவர் கருணாநிதி மறைவையடுத்து, தென் மாவட்டங்களில் இருந்து அக்கட்சியினர் ஆயிரக்கணக்கான வாகனங்களில் சென்னையை நோக்கி படையெடுத்து வரும் நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் கட்டண வசூல் செய்யும் பணி செவ்வாய்க்கிழமை இரவு நிறுத்தப்பட்டது.
திமுக தலைவர் கருணாநிதி மறைவையடுத்து, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த தென் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் சென்னைக்கு வாகனங்களில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் படையெடுக்கத் தொடங்கினர்.
இதனால், விழுப்புரம் மாவட்டத்தில்  தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, மாடூர் ஆகிய சுங்கச்சாவடிகளிலும், கிழக்குக் கடற்கரைச் சாலை மரக்காணம் சுங்கச்சாவடியிலும் வாகன நெரிசல் காணப்படுகிறது. 
இதையடுத்து, சுங்கச்சாவடிகளில் காவல் ஆய்வாளர் தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த சுங்கச்சாவடிகளில் பாதுகாப்பு கருதி சுங்கக் கட்டண வசூல் செய்வது நிறுத்தப்பட்டது.  
இதனால், சென்னை செல்லும் அனைத்து வாகனங்களும் செவ்வாய்க்கிழமை இரவு முதல் கட்டணம் செலுத்தாமல் செல்கின்றன.
 அதேபோல, கட்சியினர் ஊர் திரும்புவதற்காக புதன்கிழமை முழுவதும் கட்டணம் வசூல் இருக்காது என்றும் போலீஸார் தெரிவித்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/08/சுங்கச்சாவடிகளில்-கட்டண-வசூல்-நிறுத்தம்-2976664.html
2976663 விழுப்புரம் விழுப்புரம் கிணற்றில் மண் சரிந்து தொழிலாளி சாவு DIN DIN Wednesday, August 8, 2018 04:21 AM +0530 விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே கிணற்றில் மண் சரிந்து தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
திருக்கோவிலூரை அடுத்த கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த மண்ணாங்கட்டி மகன் முருகன்(45). 
இவர், திங்கள்கிழமை அதே பகுதியைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள கிணற்றை ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். 
பின்னர், மாலை 5 மணியளவில் பணி முடிந்து, கிணற்றுக்குள் போடப்பட்ட ஆழ்துளை வழியாக வந்த தண்ணீரில் முருகன் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக மண் சரிந்து அவர் மீது விழுந்தது. இதில், உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே முருகன் உயிரிழந்தார்.
சடலத்தை திருப்பாலப்பந்தல் போலீஸார் மீட்டு, உடல் கூறாய்வுக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
மேலும், இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/08/கிணற்றில்-மண்-சரிந்து-தொழிலாளி-சாவு-2976663.html
2976661 விழுப்புரம் விழுப்புரம் விழுப்புரம் மாவட்டத்தில் திமுகவினர் மறியல் DIN DIN Wednesday, August 8, 2018 04:20 AM +0530 திமுக தலைவர் கருணாநிதி உடலை அடக்கம் செய்வதற்கு மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்க வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்டத்தில் திமுகவினர் செவ்வாய்க்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  விழுப்புரம் புறவழிச் சாலையில் எல்லீஸ் சத்திரம் சாலை சந்திப்பில் திமுக நகரச் செயலர் இரா.சக்கரை, ஒன்றியச் செயலர் கல்பட்டு ராஜா ஆகியோர் தலைமையில், இரவு 9.30 மணிக்கு திமுகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செவ்வதற்கு கடற்கரை சாலையில் அண்ணா நினைவிடம் அருகே இடம் ஒதுக்கித் தர வேண்டும் என்றும், அதற்கு அனுமதிக்காத, தமிழக அரசைக் கண்டித்தும், தமிழக முதல்வரை விமர்சித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். தகவலறிந்து வந்த விழுப்புரம் டிஎஸ்பி ஜெ.சங்கர் தலைமையிலான போலீஸார்,  சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 100 பேரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.  
இதனால், சென்னை - திருச்சி நான்கு வழிச் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல, உளுந்தூர்பேட்டை - செஞ்சி நான்கு முனை சாலை சந்திப்பு, சின்னசேலம் -  கள்ளக்குறிச்சி நான்கு முனை சாலை சந்திப்பு பகுதிகளிலும் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
அரசுப் பேருந்து மீது கல்வீச்சு: இதனிடையே, செவ்வாய்க்கிழமை இரவு சேலத்திலிருந்து சென்னை  நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து, விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே மர்ம நபர்களால் கல்வீசி தாக்கப்பட்டது. இதில், பேருந்தின் பின்பக்கக் கண்ணாடி உடைந்து சேதமானது.  
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/08/விழுப்புரம்-மாவட்டத்தில்-திமுகவினர்-மறியல்-2976661.html
2976660 விழுப்புரம் விழுப்புரம் விழுப்புரம் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு; பேருந்துகள் நிறுத்தம் DIN DIN Wednesday, August 8, 2018 04:20 AM +0530 திமுக தலைவர் கருணாநிதி மறைவையடுத்து, விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் கடைகள் அடைக்கப்பட்டன. பேருந்து சேவையும் முழுமையாக நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.
 கருணாநிதி மறைவு குறித்த செய்தி வெளியானதை அடுத்து விழுப்புரத்தில் முக்கிய வீதிகளான நேருஜி சாலை,  காந்தி வீதி,  காய்கறி மார்க்கெட்,  காமராஜர் வீதி,  திருச்சி சாலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை மாலை கடைகள் அடைக்கப்பட்டன.
பேருந்துகள் நிறுத்தம்: விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இரவு 7 மணி முதல் பேருந்துகள் இயக்கப்படவில்லை. வெளியூர்களில் இருந்து வந்த அரசுப் பேருந்துகள் பயணிகளை இறக்கியபின் பணிமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.  தனியார் பேருந்துகளும் ஷெட்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. இதனால், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையங்கள் ஒரு பேருந்து கூட இல்லாமல் இரவு 7.30 மணிக்கே வெறிச்சோடிக் காணப்பட்டன. 
இதனால், வெளியூர்களிலிருந்து வந்த பயணிகளும், வெளியூருக்குச் செல்ல வந்த பயணிகளும், கிராம மக்களும் சிரமப்பட்டனர். சிலர் ஆட்டோக்களைப் பிடித்து ஊருக்குச் சென்றனர். பெட்ரோல் நிலையங்கள், உணவகங்கள்,  தேநீர் கடைகளும் மூடப்பட்டன.  நேருஜி சாலை,  திருச்சி சாலையில் கடைகளை மூடுமாறு சிலர் மோட்டார் சைக்கிளில் வந்து கூறிச் சென்றனர்.   இதனால்,  இரவு உணவுக்கு வழியின்றி வெளியூர் பயணிகள் அவதிப்பட்டனர்.
ரயில் நிலையத்தில் திரண்ட பயணிகள்: பேருந்துகள் முற்றிலும் இயங்காததால் பாதிக்கப்பட்ட பயணிகள் விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு நடந்தே சென்றனர். இதனால்,  ரயில் நிலையத்தில் வழக்கத்தைக் காட்டிலும் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. 
சென்னை மார்க்கத்தில் இரவு ரயில்கள் இல்லாததால்,  பலர் அதிகாலை வரை காத்திருந்து பின்பு ரயில்களில் பயணித்தனர். பெட்ரோல் பங்குகளில் கூட்டம் அலைமோதியது. 
இதேபோல, மாவட்டத்தில்  திண்டிவனம்,  கள்ளக்குறிச்சி,  உளுந்தூர்பேட்டை, செஞ்சி பகுதிகளிலும் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. 
கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் மதுக் கடைகளும் மூடப்பட்டன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தலைமையில்,  முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
பேருந்து கண்ணாடி உடைப்பு: திருக்கோவிலூர் அருகே மேலந்தல் கிராமத்திலிருந்து திருக்கோவிலூர் நோக்கி அரசு நகரப் பேருந்து வந்துகொண்டிருந்தது. விலந்தை ஏரிப் பகுதியில் 
இந்தப் பேருந்து வந்தபோது, இதன் பின்பக்க கண்ணாடியை மர்ம நபர்கள் கல் வீசி உடைத்தனர்.  இதில்,  பயணிகள் காயமின்றி தப்பினர். இது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
திமுக பிரமுகர் தீக்குளிக்க முயற்சி: திருக்கோவிலூர் மணம்பூண்டி கூட்டுச் சாலையில் திமுக நிர்வாகி மூர்த்தி என்பவர் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.  அவரை அங்கிருந்தவர்கள் தடுத்து காப்பாற்றினர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/08/விழுப்புரம்-மாவட்டத்தில்-கடைகள்-அடைப்பு-பேருந்துகள்-நிறுத்தம்-2976660.html
2976659 விழுப்புரம் விழுப்புரம் மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டம் DIN DIN Wednesday, August 8, 2018 04:19 AM +0530 மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்டத்தில் ஆட்டோக்கள்,  இரு சக்கர வாகன ஓட்டிகள் வேலை நிறுத்தத்தில் செவ்வாய்க்கிழமை பங்கேற்றனர். விழுப்புரத்தில் அனைத்துத் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி,  பல்வேறு தொழிற் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை மாநில அளவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதே போல, விழுப்புரம் மாவட்டத்திலும் போராட்டத்தை மேற்கொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சிஐடியு, தொமுச, மதிமுக கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொமுச பொதுச் செயலாளர் சேகர் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சந்திரசேகர்,  வாலிபால் மணி,  சிஐடியு பொதுச் செயலர் மூர்த்தி, மதிமுக தொழிற்சங்கச் செயலர் மனோகரன்,  விழுப்புரம் ஆட்டோ தொழிற் சங்கத் தலைவர் வெங்கடேசன்,  இருசக்கர வாகன பழுது பார்ப்போர் நல சங்க பொதுச் செயலர் சம்பூர்ணம்,  மாவட்டத் தலைவர் லோகநாதன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
இந்திய மோட்டார் வாகனச் சட்டத்தில் 71 திருத்தங்களை செய்தும் 18 புதிய பிரிவுகளை சேர்த்தும்  வாகனங்களுக்கான அனுமதி,  புதுப்பிப்பு,  ஓட்டுநர் உரிமம் போன்ற நடவடிக்கைகளில் தனியாருக்கு சாதகமான முடிவுகளை எடுத்து,  வாகனத் தொழிலாளர்களை மத்திய அரசு வஞ்சித்துள்ளது. 
இதனால்,  மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.  பெட்ரோல்,  டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.  விதிகளை மீறி சுங்கச்சாவடி கட்டண வசூலை கைவிட வேண்டும்.  வாகனங்களுக்கான காப்பீடு என்ற பெயரில் அதிக கட்டணங்களை வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினர்,  ஆட்டோ தொழிற்சங்கத்தினர், இரு சக்கர வாகன பழுதுபார்ப்போர் நலச் சங்கத்தினர் பலர் கலந்துகொண்டனர்.
ஆட்டோக்கள் இயங்கவில்லை: சிஐடியு,  தொமுச உள்ளிட்ட தொழிற்சங்கத்தினரின் பொது வேலைநிறுத்த அறிவிப்பால்,  விழுப்புரம் மாவட்டத்தில்,  விழுப்புரம்,  திண்டிவனம் உள்ளிட்டப் பகுதிகளில் 50 சதவீத ஆட்டோக்கள் இயங்கவில்லை.  இரு சக்கர வாகன பழுதுபார்ப்போர்,  கார்,  வேன் ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.
வேலை நிறுத்தப் போராட்டம்: விழுப்புரம் நகராட்சித் திடலில் சுற்றுலா வாகன வேன் மற்றும் கார் ஓட்டுநர்கள்,  உரிமையாளர்கள் சங்கத்தினர் பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.  மாவட்டச் செயலாளர் சி.ஜேம்ஸ் தலைமையில் கார்,  வேன் ஓட்டுநர்கள்,  உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு,  மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தினர்.
மாவட்டம் முழுவதும் வழக்கம் போல்,  அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கியதால், பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.  புதுவை மாநிலத்தில் போராட்டத்தின் காரணமாக புதுவை அரசுப் பேருந்துகள்,  புதுவை மார்க்க தனியார் பேருந்துகள் விழுப்புரம் மார்க்கமாக இயங்கவில்லை. 
எனினும்,  தமிழக அரசுப் பேருந்துகள் இயங்கியதால்,  பெரிதும் பாதிப்பு ஏற்படவில்லை.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/08/மோட்டார்-வாகனச்-சட்டத்-திருத்தத்தை-திரும்பப்-பெற-வலியுறுத்தி-போராட்டம்-2976659.html
2976657 விழுப்புரம் விழுப்புரம் உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து கவிழ்ந்து 10 பேர் காயம் DIN DIN Wednesday, August 8, 2018 04:19 AM +0530 விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே செவ்வாய்க்கிழமை தனியார் சொகுசுப் பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதி சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் உள்பட10 பேர் காயமடைந்தனர்.
மதுரையிலிருந்து திங்கள்கிழமை நள்ளிரவு பயணிகளை ஏற்றிக் கொண்டு சொகுசுப் பேருந்து சென்னையை  நோக்கி வந்து கொண்டிருந்தது. 
செவ்வாய்க்கிழமை அதிகாலை உளுந்தூர்பேட்டையில் சேலம் புறவழிச்சாலை மேம்பாலத்தைக் கடந்து வந்தபோது,  திடீரென "கியர் லாக்' ஆனதால், பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், பேருந்து ஓட்டுநர் மதுரை மாவட்டம்,  வெள்ளிமலைப் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன்(45), மாற்று ஓட்டுநர் முத்துக்குமார்(50), சென்னை மாதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கிருத்திகா (24), லட்சுமி பிரியா(23, பாலுசாமி (52), நெல்லையைச் சேர்ந்த கணேசமூர்த்தி (34)  உள்பட 10 பேர் காயமடைந்தனர்.
அவர்கள் அனைவரும் 108 அவசர ஊர்தி மூலம் உளுந்தூர்பேட்டை  அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 
உளுந்தூர்பேட்டை  போலீஸார் வழக்குப்பதிந்து  விசாரணை செய்து  வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/08/உளுந்தூர்பேட்டை-அருகே-பேருந்து-கவிழ்ந்து-10-பேர்-காயம்-2976657.html
2976656 விழுப்புரம் விழுப்புரம் தொழிலதிபர் கொலை வழக்கில் மேலும் இருவர் நீதிமன்றத்தில் சரண் DIN DIN Wednesday, August 8, 2018 04:19 AM +0530 ஆரோவிலில் தொழிலதிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், திண்டிவனம் நீதிமன்றத்தில் 2 பேர் செவ்வாய்க்கிழமை சரணடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே குயிலாப்பாளையத்தைச் சேர்ந்த தொழிலதிபரான ரிலையன்ஸ் பாபு(45) என்பவர், அண்மையில் குயிலாப்பாளையம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, மர்ம நபர்களால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார்.
 இதுதொடர்பாக ரிலையன்ஸ் பாபு உறவினர் உள்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்து ஆரோவில் போலீஸார், 5 பேரை கைது செய்தனர். 2 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.    இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை திண்டிவனம் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில், குயிலாப்பாளையத்தைச் சேர்ந்த முருகன் மகன் சதீஷ்(23), புதுச்சேரி முத்தியால் பேட்டையைச் சேர்ந்த பிரதீஷ்(21) ஆகிய இருவர் சரணடைந்தனர். மேலும், பாபுவின் உறவினர்கள் 2 பேரை 
போலீஸார் தேடி வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/08/தொழிலதிபர்-கொலை-வழக்கில்-மேலும்-இருவர்-நீதிமன்றத்தில்-சரண்-2976656.html
2976109 விழுப்புரம் விழுப்புரம் விழுப்புரம் அருகே சாலை விபத்து: மாணவர் உள்பட இருவர் சாவு  விழுப்புரம், DIN Tuesday, August 7, 2018 08:55 AM +0530 விழுப்புரம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு இரு சக்கர வாகனம், ஆட்டோ மோதிக் கொண்ட விபத்தில் மாணவர் உள்பட இருவர் உயிரிழந்தனர்.
 விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே ஆர்க்காடு கிராமத்தைச் சேர்ந்த வேளாங்கண்ணி மகன் சில்வர்ஸ்டார்(24). குளிர்சாதன இயந்திர மெக்கானிக். இவரது உறவினர் பெங்களூரைச் சேர்ந்த குழந்தையேசுவின் மகன் ராபின்சன்(10). பெங்களூரில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், ராபின்சன், ஆர்க்காட்டில் உள்ள தனது உறவினர் சில்வர் ஸ்டார் வீட்டுக்கு வந்திருந்தார்.
 ஞாயிற்றுக்கிழமை மாலை சில்வர்ஸ்டார், ராபின்சனை அழைத்துக்கொண்டு, விழுப்புரம் அருகே காணையை அடுத்த அரியலூர் கிராமத்தில் வசிக்கும் தனது அக்காள் வீட்டுக்கு வந்தார். இதன்பிறகு, மீண்டும் ஊருக்குச் செல்வதற்காக சில்வர் ஸ்டார், ராபின்சனை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில், ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட்டார்.
 கோழிப்பட்டு-மாம்பழப்பட்டு சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகில் சென்றபோது, இரு சக்கர வாகனமும் எதிரே வந்த ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில், ராபின்சன், சில்வர்ஸ்டார் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர்.
 தகவல் அறிந்து காணை போலீஸார் விரைந்து சென்று அவர்களை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ராபின்சன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 சில்வர் ஸ்டார் தீவிர சிகிச்சைக்காக, சென்னைக்கு அவசர ஊர்தி மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். வழியில், உடல் நிலை மோசமடையவே, அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தார். காணை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/07/விழுப்புரம்-அருகே-சாலை-விபத்து-மாணவர்-உள்பட-இருவர்-சாவு-2976109.html
2976106 விழுப்புரம் விழுப்புரம் விழுப்புரம் அருகே 1,630 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்: பெண் கைது  விழுப்புரம், DIN Tuesday, August 7, 2018 08:54 AM +0530 விழுப்புரம் அருகே வீட்டில் பதுக்கப்பட்டிருந்த 1,630 லிட்டர் எரிசாராயத்தை போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
 விழுப்புரம் அருகேயுள்ள தென்னமாதேவி கிராமத்தில் சாராயம் பதுக்கி வைத்து, விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், மத்திய புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையிலான போலீஸார் திங்கள்கிழமை மாலை அங்கு சென்று ஆறுமுகம் என்பவரது வீட்டில் சோதனை செய்தனர்.
 அப்போது, அங்கு 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 38 கேன்களில் மொத்தம் 1,630 லிட்டர் எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.3 லட்சம்.
 இதுதொடர்பாக ஆறுமுகத்தின் மனைவி செல்வி(58) என்பவரை போலீஸார் பிடித்து விசாரித்தனர்.
 அதில், ஆண்டையார்பாளையத்தைச் சேர்ந்த சாராய மொத்த வியாபாரியான ராஜா என்பவர் எரிசாராயத்தை சில்லறையில் விற்பனை செய்ய கொடுத்ததும், இதை ராஜாவின் உறவினர் ஐயப்பன் என்பவர் இறக்கிவைத்து விட்டுச் சென்றதும் தெரியவந்ததாம். இதையடுத்து, எரி சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு, விழுப்புரம் மதுவிலக்கு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பாக செல்வி, ஐயப்பன், ராஜா ஆகிய 3 பேர் மீது விழுப்புரம் மது விலக்கு காவல் ஆய்வாளர் ரேணுகாதேவி தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிந்து, செல்வியை கைது செய்தனர். ஐயப்பன், ராஜாவை தேடி வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/07/விழுப்புரம்-அருகே-1630-லிட்டர்-எரிசாராயம்-பறிமுதல்-பெண்-கைது-2976106.html
2976080 விழுப்புரம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளி வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்  விழுப்புரம், DIN Tuesday, August 7, 2018 08:49 AM +0530 அரசு வேலை வழங்க வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பட்டதாரி மாற்றுத் திறனாளி வாயில் கருப்புத் துணி கட்டி திங்கள்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
 விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, செஞ்சி அருகேயுள்ள கம்மந்தூரைச் சேர்ந்த பொன்னுசாமி (34) என்ற மாற்றுத் திறனாளி, கோரிக்கை மனுவுடன் ஆட்சியர் அலுவலகம் வந்தார். அலுவலக வாயில் பகுதியில், ஆட்சியரின் காருக்கு முன்னால் அமர்ந்து, வாயில் கருப்புத் துணி கட்டிக் கொண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
 அவரது போராட்டத்தை அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த விழுப்புரம் தாலுகா உதவி ஆய்வாளர் சரஸ்வதி மற்றும் போலீஸார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் கூறியதாவது:
 பட்டதாரி மாற்றுத் திறனாளியான நான், விவசாய கூலித் தொழிலாளியான எனது தந்தையுடன் வறுமையான சூழலில் வாழ்ந்து வருகிறேன். நான் கடந்த 2016-ஆம் ஆண்டு எங்கள் பகுதி ஊராட்சி உதவியாளர் பணிக்காக செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நேர்முகத் தேர்வில் பங்கேற்றேன். பின்னர், கல்விச் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களை சமர்ப்பித்தும், உரிய தகுதிகள் இருந்தும் எனக்கு வேலை வழங்கப்படவில்லை. இதற்கு மாறாக, அதிகாரிகள் ரூ.3 லட்சம் லஞ்சம் வாங்கிக்கொண்டு, அந்தப் பணியை தகுதியில்லாத வேறு ஒருவருக்கு வழங்கிவிட்டனர்.
 இதே போல, கடந்தாண்டு நடைபெற்ற ஊராட்சி உதவியாளர் பணிக்கான நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டேன். அதிலும் தேர்வு செய்யாமல் முறைகேடாக பணி நியமனம் வழங்கிவிட்டனர். இதே போல, அரசுப் பணிக்காக, 5 முறையாக நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டும் எனக்கு வேலை வழங்கப்படவில்லை.
 நிகழாண்டோடு, அரசுப் பணி வாய்ப்புக்கான வயதும் முடியப்போகிறது.
 ஆகவே, எனது ஏழ்மை நிலை கருதி மாற்றுத் திறனாளியான எனக்கு அரசுப் பணி வாய்ப்பு வழங்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதையடுத்து போலீஸார், ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்குமாறு, அறிவுறுத்தி அவரை அனுப்பி வைத்தனர்.
 
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/07/மாவட்ட-ஆட்சியர்-அலுவலகத்தில்-மாற்றுத்-திறனாளி-வாயில்-கருப்புத்-துணி-கட்டி-போராட்டம்-2976080.html
2976078 விழுப்புரம் விழுப்புரம் சம்பா சாகுபடிக்காக சாத்தனூர் அணையைத் திறக்கக் கோரிக்கை    விழுப்புரம், DIN Tuesday, August 7, 2018 08:49 AM +0530 விழுப்புரம் மாவட்டத்தில் வறட்சி நிலையை கருத்தில் கொண்டு, நிகழ் சம்பா பருவ பாசனத்துக்கு சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 இது குறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் ஏ.வி.சரவணன், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
 விழுப்புரம் மாவட்டத்தில் போதிய மழையின்மையால், சம்பா நெல் சாகுபடியை செய்ய முடியாமல் விவசாயிகள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். தொடர் வறட்சி காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துவிட்டது.
 வறட்சியைப் போக்குவதற்கு, திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்துவிட வேண்டும். சம்பா சாகுபடிக்கான போதிய தண்ணீரை திறந்துவிடுவதோடு, பருவமழை காலத்துக்கு முன்பாக மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் மற்றும் கன்மாய்களை ஆழப்படுத்தி கரைகளை பலப்படுத்த வேண்டும்.
 தென்பெண்ணை ஆற்றில் வரும் தண்ணீர் வழக்கம் போல் கடலில் வீணாக கலப்பதை தடுக்கவும், விழுப்புரம் மாவட்டத்தில் நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில், தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணைகள் கட்ட வேண்டும்.
 சம்பா பருவத்துக்கு தென்பெண்ணை ஆற்றிலிருந்து மலட்டாறுக்கு தண்ணீரை திருப்பிவிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 விவசாயிகளின் நலன் காக்கும் விதமாக, விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் தண்ணீர் பெறும் சாத்தனூர் அணையை தற்போது திறந்துவிட, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர் வறட்சியால் பாதிக்கப்பட்டு வரும் விழுப்புரம் மாவட்ட விவசாயிகளுக்கு, அவர்களுக்கான இழப்பீட்டை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தியுள்ளனர்.
 இக்கோரிக்கை மனுவை, மாவட்ட ஆட்சியரிடமும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வழங்கியுள்ளனர்.
 
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/07/சம்பா-சாகுபடிக்காக-சாத்தனூர்-அணையைத்-திறக்கக்-கோரிக்கை-2976078.html
2976074 விழுப்புரம் விழுப்புரம் விழுப்புரம் அருகே சாலை விபத்து: மாணவர் உள்பட இருவர் சாவு  விழுப்புரம் DIN Tuesday, August 7, 2018 08:48 AM +0530 விழுப்புரம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு இரு சக்கர வாகனம், ஆட்டோ மோதிக் கொண்ட விபத்தில் மாணவர் உள்பட இருவர் உயிரிழந்தனர்.
 விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே ஆர்க்காடு கிராமத்தைச் சேர்ந்த வேளாங்கண்ணி மகன் சில்வர்ஸ்டார்(24). குளிர்சாதன இயந்திர மெக்கானிக். இவரது உறவினர் பெங்களூரைச் சேர்ந்த குழந்தையேசுவின் மகன் ராபின்சன்(10). பெங்களூரில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், ராபின்சன், ஆர்க்காட்டில் உள்ள தனது உறவினர் சில்வர் ஸ்டார் வீட்டுக்கு வந்திருந்தார்.
 ஞாயிற்றுக்கிழமை மாலை சில்வர்ஸ்டார், ராபின்சனை அழைத்துக்கொண்டு, விழுப்புரம் அருகே காணையை அடுத்த அரியலூர் கிராமத்தில் வசிக்கும் தனது அக்காள் வீட்டுக்கு வந்தார். இதன்பிறகு, மீண்டும் ஊருக்குச் செல்வதற்காக சில்வர் ஸ்டார், ராபின்சனை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில், ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட்டார்.
 கோழிப்பட்டு-மாம்பழப்பட்டு சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகில் சென்றபோது, இரு சக்கர வாகனமும் எதிரே வந்த ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில், ராபின்சன், சில்வர்ஸ்டார் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர். தகவல் அறிந்து காணை போலீஸார் விரைந்து சென்று அவர்களை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ராபின்சன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சில்வர் ஸ்டார் தீவிர சிகிச்சைக்காக, சென்னைக்கு அவசர ஊர்தி மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். வழியில், உடல் நிலை மோசமடையவே, அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தார். காணை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/07/விழுப்புரம்-அருகே-சாலை-விபத்து-மாணவர்-உள்பட-இருவர்-சாவு-2976074.html
2976072 விழுப்புரம் விழுப்புரம் குறைதீர் கூட்டத்தில் 496 மனுக்கள் அளிப்பு  விழுப்புரம், DIN Tuesday, August 7, 2018 08:48 AM +0530 விழுப்புரத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் 496 மனுக்கள் பெறப்பட்டன.
 விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தலைமை வகித்து பொது மக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார்.
 மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள், முதியோர் ஓய்வூதியத் தொகை, கல்விக் கடன், வீட்டுமனைப் பட்டா, பசுமை வீடுகள், திருமண உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், ஆக்கிரமிப்புகள் அகற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 496 மனுக்கள் வரப்பெற்றன.
 மனுக்களை மாவட்ட ஆட்சியர், பரிந்துரைத்து மேல் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு வழங்கினார்.
 கூட்டத்தில் தொடர்ந்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதி உதவித் திட்டத்தின் கிழ் இறப்பு நிவாரண நிதியுதவியாக உளுந்தூர்பேட்டை வட்டம், தங்சாமி குடும்பத்தினருக்கு ரூ.50 ஆயிரமும், மேல்மலையனூர் வட்டம் சிவலிங்கம் மனைவி குமாரி குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும் வழங்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.பிரியா, தனித் துணை ஆட்சியர் சாந்தி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராம்சந்தர், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மஞ்சுளா, மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜேந்திரன் உள்ளிட்ட அலுவலர்கள், பொது மக்கள் கலந்துகொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/07/குறைதீர்-கூட்டத்தில்-496-மனுக்கள்-அளிப்பு-2976072.html
2976071 விழுப்புரம் விழுப்புரம் தலைமை ஆசிரியர் பணியிடம்: பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை  விழுப்புரம், DIN Tuesday, August 7, 2018 08:47 AM +0530 அரசுப் பள்ளிகளில் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை பட்டதாரி ஆசிரியர்களுக்கே வழங்க வேண்டும் என்று பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
 விழுப்புரத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
 மாவட்டத் தலைவர் வி.முருகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.நாராயணன், துணைத் தலைவர்கள் குருமூர்த்தி, செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார். இணைச் செயலாளர் பி.அன்பழகன் வரவேற்றார். மாநில பொருளாளர் எஸ்.செல்லையா சிறப்புரையாற்றினார். மாவட்ட கொள்கை பரப்புச் செயலர் சி.செல்வகுமார், பொருளாளர் டி.சசிக்குமார், முத்துவேல், செல்வதுரை, கந்தன், பாபு, ராஜாமணி, சிவா, இந்திரா, குணசேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை விரைவாக பெற்று பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு உடனே செயல்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தில் வழங்குவதைப் போல் பணிக்கொடை வழங்க வேண்டும். தாற்காலிக பணிக்காலத்தை நிரந்தர பணிக் காலமாக அறிவிக்க வேண்டும்.
 21 மாத ஊதியக்குழு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். தொடக்க கல்வித்துறையில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு தர எண் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை பட்டதாரி ஆசிரியர்களுக்கே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/07/தலைமை-ஆசிரியர்-பணியிடம்-பட்டதாரி-ஆசிரியர்-கூட்டமைப்பு-கோரிக்கை-2976071.html
2976069 விழுப்புரம் விழுப்புரம் புறவழிச் சாலை சந்திப்புகளில் விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? நமது நிருபர், விழுப்புரம், DIN Tuesday, August 7, 2018 08:47 AM +0530 விழுப்புரத்தில் தொடர் விபத்துகளை ஏற்படுத்தும் ஆபத்தான புறவழிச் சாலை சந்திப்புகளில் தெரு மின் விளக்கு வசதியையும், சாலைத் தடுப்புகளையும் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
 விழுப்புரத்தில் நீண்ட காலமாக நிலவிய போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக கடந்த 2008-இல் சென்னை- திருச்சி நான்கு வழிச் சாலை அமைக்கப்பட்டது. அப்போது, முத்தாம்பாளையம் தொடங்கி ஜானகிபுரம் வரை 5 கி.மீ. தொலைவுக்கு புறவழிச் சாலை அமைக்கப்பட்டது.
 சென்னை - திருச்சி நான்கு வழிச் சாலையில் நகராட்சி, பேரூராட்சி, முக்கிய ஊராட்சிப் பகுதிகளில் சாலையின் நடுவே மின் விளக்குகள் அமைக்கப்பட்டது. எனினும், விழுப்புரம் மாவட்டத்தில் திருச்சி மார்க்கத்தில் திண்டிவனத்துக்குப் பிறகு பெரும்பாலான பகுதிகளில் மின் விளக்குகள் அமைக்கப்படவில்லை.
 மின் விளக்குகள் இல்லாத புறவழிச் சாலை: விழுப்புரம் புறவழிச் சாலை சந்திப்புகளில் மின் விளக்குகள் அமைக்காததால், இரவு நேரங்களில் விழுப்புரத்தைக் கடந்து செல்வதைக்கூட வாகன ஓட்டிகளால் தெரிந்து கொள்ள முடியாது. விழுப்புரம் புறவழிச் சாலை தொடங்கும் முத்தாம்பாளையம் சந்திப்பு, செஞ்சி - திருவண்ணாமலை கூட்டுச் சாலை சந்திப்பு, திருவாமாத்தூர் சந்திப்பு, விராட்டிக்குப்பம் சந்திப்பு, விழுப்புரம் ஆட்சியர் அலுவலகச் சாலை சந்திப்பு, எல்லீஸ் சத்திரம் சாலை சந்திப்பு, வழுதரெட்டி சாலை சந்திப்பு, ஜானகிபுரம் சந்திப்பு ஆகிய முக்கியச் சாலை சந்திப்புகள் உள்ளன.
 இந்தச் சாலை சந்திப்புகள் விழுப்புரம் நகருக்குள் செல்லும் பிரதான சாலைகளாக உள்ளன. பெரும்பாலும், பல கிராமங்களிலிருந்து வரும் பேருந்துகள், வாகனங்கள், நகருக்குள் செல்லும் சந்திப்புப் பகுதியாகவும் உள்ளன. இவற்றில் பெரும் விபத்துகளை ஏற்படுத்தி வரும் செஞ்சி - திருவண்ணாமலை நெடுஞ்சாலை சந்திப்பில் மட்டும் மின் விளக்குகள் அமைத்தும், போக்குவரத்து போலீஸாரை நியமித்தும், சாலைத் தடுப்புகள் அமைத்தும் ஓரளவுக்கு விபத்துகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
 விழுப்புரம் நகரின் பிரதான வாகன நுழைவுப் பகுதியாக உள்ள எல்லீஸ் சாலை சந்திப்பில் பெரும் விபத்து பகுதியாக இருந்தும் மின் விளக்குகள் இல்லாமல், சாலைத் தடுப்புகள் மட்டும் தற்போது அமைக்கப்பட்டுள்ளன.
 இதனிடையே, பல்வேறு கிராமச் சாலைகள் சந்திக்கும் புகழ் மிக்க கோயில் உள்ள திருவாமாத்தூர் சாலை சந்திப்பு, விராட்டிக்குப்பம் சாலை சந்திப்புகளில் மின் விளக்குகள் இல்லை. சாலைத் தடுப்புகளும் இல்லை.
 குறிப்பாக, சாலை வளைவில் வரும் விராட்டிக்குப்பம் சாலை சந்திப்பு, விழுப்புரம் நகரையும் விராட்டிக்குப்பம், ஆலாத்தூர், கொட்டப்பக்கத்துவெளி, வெங்கந்தூர், ஆரியூர், சாணிமேடு, வேடம்பட்டு உள்ளிட்ட பல கிராமத்தினர் நுழையும் சந்திப்பதாக உள்ளது.
 இந்த சந்திப்பு மூலமே விழுப்புரம் நகரில் உள்ள அரசு மருத்துவமனை, பள்ளி, கல்லூரிகள், விற்பனைக் கூடங்கள், வணிக வளாகப் பகுதிகளுக்கு மக்கள் கடந்து செல்ல வேண்டும். விராட்டிக்குப்பம் புறவழிச் சாலையைக் கடக்கும் போது வாகனங்கள், பைக்குகள், மாட்டு வண்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர்.
 விராட்டிக்குப்பம் சாலை சந்திப்பில் ஏற்பட்ட விபத்துகளில் இதுவரை 25 பேர் வரை இறந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் கை, கால் முறிந்து பாதிக்கப்பட்டுள்ளனர். இரவு நேரங்களில் மின் விளக்கு வெளிச்சம் இல்லாததால், சாலையைக் கடந்து செல்வோர் மீது வாகனங்கள் மோதி விபத்துகள் நேரிடுவதாக கிராமப்புறத் தொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
 எனவே, இந்த சாலை சந்திப்புகளில் மின் விளக்குகள் மற்றும் சாலை தடுப்புகள், விபத்து அறிவிப்புப் பலகைகள், போதிய தரை பிரதிபலிப்பான்கள் ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/7/w600X390/vilu.jpg http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/07/புறவழிச்-சாலை-சந்திப்புகளில்-விபத்துகளைத்-தடுக்க-நடவடிக்கை-எடுக்கப்படுமா-2976069.html
2976039 விழுப்புரம் விழுப்புரம் எரிசாராயம் கடத்திய வாகனத்தை துரத்திப் பிடித்த வட்டாட்சியர்!  விழுப்புரம்/உளுந்தூர்பேட்டை, DIN Tuesday, August 7, 2018 08:41 AM +0530 உளுந்தூர்பேட்டை அருகே எரிசாராயம் கடத்திச் சென்ற வாகனத்தை வட்டாட்சியர் திங்கள்கிழமை காரில் துரத்திப் பிடித்தார். அதிலிருந்த 1,200 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
 விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் இளங்கோவன். இவர், அரசு அலுவல் சம்பந்தமாக திங்கள்கிழமை விழுப்புரம் வந்தார். பணிகள் முடிந்து பிற்பகல் 2.30 மணியளவில் உளுந்தூர்பேட்டைக்கு அரசு வாகனத்தில் புறப்பட்டுச் சென்றுக்கொண்டிருந்தார். சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் திருநாவலூர் அருகே வண்டிபாளையம் என்ற இடத்தில் சென்றபோது, பின்னால் வந்த சரக்கு வாகனம், வட்டாட்சியர் சென்ற காரின் மீது மோதுவது போல வந்துள்ளது. அப்போது, வட்டாட்சியரின் கார் ஓட்டுநர் உடனடியாக சுதாரித்துக்கொண்டு காரை லாவகமாக வளைத்து மோதல் சம்பவத்தை தவிர்த்தார். ஆனால், பின்னால் தொடர்ந்து வந்த சரக்கு வாகனம் மீண்டும் மோதுவது போல வந்து கடந்து சென்றதாம்.
 இதனால் சந்தேகமடைந்த வட்டாட்சியர், அதிவேகமாக சென்ற அந்த வாகனத்தை மடக்கிப் பிடிக்க கார் ஓட்டுநருக்கு உத்தரவிட்டார். ஆனால் அந்த சரக்கு வாகனம் உளுந்தூர்பேட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. இது குறித்து உளுந்தூர்பேட்டை போலீஸாருக்கு வட்டாட்சியர் தகவல் அளித்தார். அந்த சரக்கு வாகனம் உளுந்தூர்பேட்டை நகருக்குள் செல்லாமல், புறவழிச் சாலை வழியாகச் சென்றுகொண்டிருந்தது. இதையடுத்து, அந்த எல்லைக்குள்பட்ட எடைக்கல் காவல் நிலையத்துக்கு வட்டாட்சியர் தகவல் அளித்தார். இதையடுத்து, எடைக்கல் உதவி ஆய்வாளர் அகிலன் தலைமையிலான போலீஸார், அந்த வாகனத்தைப் பிடிக்க எதிர்புறமாக இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.
 காவல் துறையினரும், வருவாய்த் துறையினரும் அந்த வாகனத்தை சுற்றி வளைக்க முயன்றனர். அப்போது, உளுந்தூர்பேட்டையை அடுத்த பாலி என்ற இடத்தில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை வளாகம் அருகே அந்த வாகனத்தை நிறுத்திவிட்டு அதிலிருந்த 2 பேர் ஓட்டம் பிடித்தனர். அங்குவந்த வட்டாட்சியர் அந்த வாகனத்தை சோதனையிட்டதில் 34 கேன்களில் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள 1,190 லிட்டர் எரி சாராயம் இருந்தது தெரிய வந்தது.
 இதனிடையே, சரக்கு வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோடிய 2 பேரையும் போலீஸார் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் புதுவை, நெட்டப்பாக்கத்தைச் சேர்ந்த மனோகர் மகன் சங்கர் (24), மடுகரையைச் சேர்ந்த ரவி மகன் விவேக் (24) ஆகியோர் எனத் தெரியவந்தது. இவர்கள் மடுகரை பகுதியிலிருந்து உளுந்தூர்பேட்டைக்கு எரிசாராயத்தை கடத்திச் செல்ல முயன்றதும் தெரிய வந்தது.
 இதையடுத்து, எரிசாராயம், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்து, உளுந்தூர்பேட்டை மது விலக்கு பிரிவில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக, மது விலக்கு போலீஸார் வழக்குப் பதிந்து சங்கர், விவேக் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/07/எரிசாராயம்-கடத்திய-வாகனத்தை-துரத்திப்-பிடித்த-வட்டாட்சியர்-2976039.html
2976036 விழுப்புரம் விழுப்புரம் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்  விழுப்புரம், DIN Tuesday, August 7, 2018 08:41 AM +0530 விழுப்புரத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 அந்த மன்றத்தின் விழுப்புரம் மாவட்டச் செயலராக இருந்த ரஜினி இப்ராகிம் பல்வேறு புகார்களின் காரணமாக பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதிய மாவட்டச் செயலராக எத்திராஜ் நியமிக்கப்பட்டார்.
 இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை விழுப்புரத்தில் மன்ற நிர்வாகிகளுடன் இரு சக்கர வாகனம், கார்களில் பேரணியாகச் சென்று அம்பேத்கர், காந்தி, காமராஜர் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
 இதைத் தொடர்ந்து, சென்னை புறவழிச்சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் உள்ள அரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
 கூட்டத்தில் மன்றத்தின் மாவட்டத் துணைச் செயலர் வாஞ்சிநாதன், இணைச் செயலர்கள் ஜவகர், குமார், மாவட்ட துணைச் செயலர்கள் ரவி, முருகன், நகர நிர்வாகிகள் கலியன், சுதாகர், ரமேஷ், ஜெயராமன், வெங்கட்ராமன், ராஜ்குமார், ஏழுமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/07/ரஜினி-மக்கள்-மன்ற-நிர்வாகிகள்-ஆலோசனைக்-கூட்டம்-2976036.html
2976034 விழுப்புரம் விழுப்புரம் தாய்ப்பால் வார விழா  திண்டிவனம், DIN Tuesday, August 7, 2018 08:40 AM +0530 திண்டிவனம் அரிமா சங்கம், திண்டிவனம் அப்துல் கலாம் இளம் அரிமா சங்கம், இந்திரா காந்தி ஜெயந்தி பெண்கள் கலை, அறிவியல் கல்லூரி இணைந்து தாய்ப்பால் வார விழாவை அண்மையில் கொண்டாடின.
 நிகழ்ச்சிக்கு அரிமா சங்கத் தலைவர் அன்னை சந்தானம் தலைமை வகித்தார். மண்டலத் தலைவர் ரமேஷ், மாவட்டத் தலைவர்கள் ஹென்றி ஜோசப், ராஜேந்திரன், பிரசாத், இளம் அரிமா சங்கச் செயலர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரிமா சங்கச் செயலர் சக்திவேல் வரவேற்றார்.
 மருத்துவர் அமுதாம்பிகை மாணவிகள், ஆசிரியர்களுக்கு தாய்ப்பால் புகட்டுவதன் நன்மைகள் குறித்து சிறப்புரையாற்றி, பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
 அரிமா சங்க மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கார்த்திக், மாவட்டத் தலைவர்கள் வழக்குரைஞர் கணேஷ்காந்தி, தேவ், நவநீத கண்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
 அரிமா சங்க உறுப்பினர்கள் வழக்குரைஞர் பழனி, வெங்கடேசன், நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அரிமா சங்கப் பொருளாளர் சித்தார்த்தன் நன்றி கூறினார்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/07/தாய்ப்பால்-வார-விழா-2976034.html
2976032 விழுப்புரம் விழுப்புரம் மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்  திண்டிவனம், DIN Tuesday, August 7, 2018 08:40 AM +0530 திண்டிவனத்தில் மக்கள் நீதி மய்யத்தின் விழுப்புரம் மத்திய மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 புறவழிச் சாலையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் மத்திய மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நிர்வாகி எம்.மோகன்ராஜ் வரவேற்றார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஷாஜி தலைமை வகித்தார். விழுப்புரம் வடக்கு மாவட்ட நிர்வாகி பாபு முன்னிலை வகித்தார். திண்டிவனம் நகரச் செயலர் ஜெகன் வாழ்த்துரை வழங்கினார்.
 வரும் 60 நாள்களில் 25 ஆயிரம் புதிய உறுப்பினர்களை மக்கள் நீதி மய்யத்தில் இணைப்பது, நகர, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் கட்சிக்கொடி ஏற்றுவது, கட்சிக்கு நிதி வசூல் செய்வது, வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி கிராம சபைக் கூட்டங்கள் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 தொடர்ந்து, கண்டமங்கலம் பகுதி அதிமுக நிர்வாகி கமல்ராஜ் தலைமையில் 50 பேரும், வானூர் பூத்துறை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தமிழ்மாறன் தலைமையில் 50 பேரும், திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலைப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சந்தோஷ்குமார் தலைமையில் 100 பேரும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஷாஜி முன்னிலையில், மக்கள் நீதி மய்யத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர். நிர்வாகி ராஜகுரு பாண்டியன் நன்றி கூறினார்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/aug/07/மக்கள்-நீதி-மய்யத்தின்-மாவட்ட-நிர்வாகிகள்-கூட்டம்-2976032.html