Dinamani - விழுப்புரம் - http://www.dinamani.com/all-editions/edition-villupuram/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2906650 அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் வைப்புத் தொகை மோசடி: ஒருவர் மீது வழக்குப் பதிவு DIN DIN Tuesday, April 24, 2018 12:55 PM +0530 விழுப்புரம்: வாடகைக்கு கடை விடுவதாகக் கூறி, ரூ.5 லட்சம் முன்வைப்புத் தொகையைப் பெற்று மோசடி செய்ததாக, ஒருவர் மீது மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
 சேலம் மாவட்டம், கொண்டலம்பட்டி, நடுத் தெருவைச் சேர்ந்த காசிநாதன் மகன் ரவிச்சந்திரன்(50). இவர், விழுப்புரம் மாவட்டம், இருந்தை பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் முத்துக்குமரன் என்பவருக்கு சொந்தமாக மடப்பட்டு-திருக்கோவிலூர் சாலையில் உள்ள ஐ.ஆர்.எம். வணிக வளாகத்தில் பேக்கரி கடை வைக்க இடம் கேட்டுள்ளார்.
 இதற்கு, முத்துக்குமரன், ரூ.5 லட்சம் முன்வைப்புத் தொகையும், ரூ.12 ஆயிரம் மாத வாடகையும் கேட்டாராம். அதன்படி, கடந்த 2015-ஆம் ஆண்டு மார்ச் 17-ஆம் தேதி ரவிச்சந்திரன் ரூ.5 லட்சம் முன் வைப்புத் தொகையை முத்துக்குமரனிடம் கொடுத்தாராம். இதற்கான ஒப்பந்தம் செய்துகொண்டனராம். ஆனால், கூறியபடி, கடை வைக்க இடத்தை கொடுக்காமல், முத்துக்கிருஷ்ணன் ஏமாற்றி வந்தாராம்.
 இதுகுறித்து நடவடிக்கை எடுத்து, தனது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவில் ரவிச்சந்திரன் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், முத்துக்குமரன் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/2018/apr/24/வைப்புத்-தொகை-மோசடி-ஒருவர்-மீது-வழக்குப்-பதிவு-2906650.html
2906649 அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரிக்கை DIN DIN Tuesday, April 24, 2018 12:54 PM +0530 விழுப்புரம்: கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக பிரித்து அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என்று  எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 
இதுகுறித்து, மாவட்டச் செயலர்கள் ஆர்.பொன்மலை,  சிவசங்கரன் தலைமையில் வந்த அக்கட்சியினர்,  விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமை கோரிக்கை மனு அளித்துக் கூறியதாவது:  தமிழக மக்களின் ஜீவாதாரப் பிரச்னையைத் தீர்ப்பதற்கான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க,  தமிழக அரசு  மத்திய அரசுக்கு தொடர் அழுத்தம் கொடுக்க வேண்டும்.  விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள  ஏரி, குளம், ஆறுகளைச் சீரமைத்து,  தடுப்பணைகள் ஏற்படுத்தி நிலத்தடி நீராதாரப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மிகப்பெரிய அளவில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து,  கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், கள்ளக்குறிச்சியில் நெரிசல் நிலையைப் போக்க புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்,  கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையின்  பழைய கட்டடங்களை புதுப்பிக்க வேண்டும்.  மகளிர் கலைக் கல்லூரி அமைக்க வேண்டும். 
கல்வராயன்மலை போன்ற மலைகளில் விலங்குகள் தண்ணீர் அருந்தத் தொட்டிகள் அமைத்து,  மின் மோட்டார் மூலம் தண்ணீர் நிரப்பி வைக்க வேண்டும்.  கல்வராயன் மலையில் சாராயத்தை ஒழிக்க வேண்டும்.  நகர்ப்புறங்களில் மக்கள் கூடும் இடங்களில் பொதுக்கழிப்பறைகளை ஏற்படுத்த வேண்டும்.  கச்சிராயப்பாளையம் வாரச் சந்தைக்கு தனி இடம் வழங்கி மேற்கூரை அமைத்து தர வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/2018/apr/24/கள்ளக்குறிச்சியை-தனி-மாவட்டமாக-அறிவிக்கக்-கோரிக்கை-2906649.html
2906648 அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் வியாபாரிகள் கொள்முதல் செய்ய மறுப்பு: செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் மூட்டைகள் தேக்கம் DIN DIN Tuesday, April 24, 2018 12:53 PM +0530 செஞ்சி: செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், விவசாயியுடனான மோதல் காரணமாக வியாபாரி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 3 ஆயிரம் நெல் மூட்டைகள் திங்கள்கிழமை ஏலம் விடப்படாமல் பெருமளவில் தேங்கிக் கிடக்கின்றன.
கடந்த சில நாள்களுக்கு முன்பு, செஞ்சி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்துக்கு விற்பட்டு பகுதியைச் சேர்ந்த விவசாயி பாலு என்பவர் நெல் மூட்டைகளை கொண்டு வந்தார். அப்போது, இவருக்கும் நெல் கொள்முதல் செய்த வியாபாரிக்கும் பணம் பட்டுவாடா தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், பாலுவை, வியாபாரி தாக்கினாராம். இதையடுத்து அந்த வியாபாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி  விவசாயிகள் சங்கம் போராட்டம் அறிவித்தது. இதையடுத்து வியாபாரியை செஞ்சி போலீஸார் கைது செய்தனர்.
இதனைக் கண்டித்து வியாபாரிகள் நெல்லை கொள்முதல் செய்ய மறுத்துவிட்டனர். இதன் காரணமாக, திங்கள்கிழமை விவசாயிகள் கொண்டு வந்த 3 ஆயிரத்துக்கும் அதிகமாக நெல் மூட்டைகள் களத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: நெல்லுக்கு நியாயமான விலை வழங்குவதில்லை. எடை சரியில்லை. பணமும் உடனடியாக பட்டுவாடா செய்யப்படுவதில்லை. நேரடியாக பணம் வழங்காமல் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்துவதாகக் கூறி அலைக்கழிக்கவைக்கின்றனர். ஒரு மாதமாகியும் வங்கியில் பணம் செலுத்தவில்லை. இதுகுறித்து கமிட்டியில் கேட்டாலும், நெல் கொள்முதல் செய்த வியாபாரியிடம் கேட்டாலும் பதில் இல்லை. இந்த நிலையில் நெல் கொள்முதலையும் நிறுத்தியுள்ளது வேதனை தருகிறது என்றனர்.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/2018/apr/24/வியாபாரிகள்-கொள்முதல்-செய்ய-மறுப்பு-செஞ்சி-ஒழுங்குமுறை-விற்பனைக்-கூடத்தில்-நெல்-மூட்டைகள்-தேக்கம்-2906648.html
2906647 அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் திண்டிவனம் நகரில் கூடுதலாக 76 கண்காணிப்பு கேமராக்கள் DIN DIN Tuesday, April 24, 2018 12:53 PM +0530 திண்டிவனம்: திண்டிவனம் நகரின் முக்கிய வீதிகளில் கூடுதலாக நிறுவப்பட்ட 76 கண்காணிப்பு கேமராக்கள் (சிசிடிவி கேமரா) ஞாயிற்றுக்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வந்தன.
திண்டிவனம் நகரில் குற்றச்செயல்களை தடுக்கும் பொருட்டு வகாப்நகர், காந்திநகர் மற்றும் ஜெயபுரம் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் சிறந்தமுறையில் செயல்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக, மயிலம் சாலையில் 6, இந்திராநகரில் 32, மேம்பால பகுதியில் 13, திருவள்ளுவர் நகரில் 25 என மொத்தம் 76  கேமராக்கள் சுமார் ரூ.12 லட்சம் மதிப்பில் தற்போது நிறுவப்பட்டுள்ளன.
இந்த கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடு தொடக்க விழா மயிலம் சாலையில் நடைபெற்றது. திண்டிவனம் டிஎஸ்பி வி.வி.திருமால், திண்டிவனம் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் 
என்.விஜயகுமார் முன்னிலை வகித்தனர். புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அருள்தந்தை பால்ராஜ்குமார் வாழ்த்துரை வழங்கினார்.
இந்திரா நகர் குடியிருப்போர் நலச் சங்கச் செயலர் சரவணன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் கலந்து கொண்டு கேமராக்களின் செயல்பாட்டை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் திண்டிவனம் காவல் நிலைய ஆய்வாளர் சீனிபாபு, குடியிருப்போர் நலச் சங்கத் தலைவர் துரைராஜ், பொருளர்கள் பாலசுப்பிரமணியன்,விவேகானந்தன்,என்.எஸ்.வி சீனுவாசன், எம்.பி.சி. ராஜாபாதர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/2018/apr/24/திண்டிவனம்-நகரில்-கூடுதலாக-76-கண்காணிப்பு-கேமராக்கள்-2906647.html
2906646 அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் இ-சேவை மையம் மூலம் சான்றிதழ்கள் பதிவேற்றம் DIN DIN Tuesday, April 24, 2018 12:52 PM +0530 விழுப்புரம்:  விழுப்புரம் மாவட்டத்தில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுவோருக்கு இ-சேவை மையம் வாயிலாக சான்றிதழ்கள் பதிவேற்றம் சேவை தொடங்கப்பட்டுள்ளது. 
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்,  ஆள் தேர்வுப் பணிகளில் துரித மற்றும் வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்யும் வகையில்,  தகவல் தொழில்நுட்ப உதவியுடன்,  விண்ணப்பதாரர்கள் எளிதில் பயன்பெறும் வகையில், புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. 
தேர்வாணையம் மூலம் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள்,  தற்போதைய  நடைமுறையில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கென்று,  இருமுறை சென்னை தேர்வாணைய அலுவலகம் செல்ல வேண்டியுள்ளது. 
தேர்வர்களுக்கு இதனால் ஏற்படும் பணம்,  கால விரயத்தை குறைக்கும் பொருட்டு,  சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வாகியுள்ள விண்ணப்பதாரர்கள் அனைவரும்,  தற்போது,   இணையவழியில்,  அனைத்துத் தகுதி சான்றிதழ்களையும்,  ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யும் முறையை தேர்வாணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்காக,  தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தினரால்,  அனைத்து வட்டங்களிலும் இயங்கி வரும் இ-சேவை மையங்கள் வழியாக ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சேவை விழுப்புரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.  விழுப்புரம் ஆட்சியரக இ-சேவை மையத்தில் இந்த சேவையை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தொடக்கி வைத்தார்.  அப்போது,  அண்மையில் குரூப்-2ஏ தேர்வில் தேர்வானவர்கள் தங்களது சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலம் பதிவேற்றம் செய்து அனுப்பினர்.
இதன் மூலம் ,  சான்றிதழ்கள் ஆய்வு செய்யப்பட்டு,  அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தகுதி மற்றும் தரவரிசையின் அடிப்படையில் கலந்தாய்வுக்கு தேர்வாகுவோர்,  ஒருமுறை தேர்வாணைய அலுவலகத்துக்கு மூலச்சான்றிதழ்களுடன் நேரில் சென்றால் போதும்  என்று அறிவுறுத்தப்பட்டது. 
இந்த  நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.பிரியா,  ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கார்த்திகேயன்,  கோட்டாட்சியர் சரஸ்வதி,  அரசு கேபிள் டிவி வட்டாட்சியர் திருநாவுக்கரசு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/2018/apr/24/இ-சேவை-மையம்-மூலம்-சான்றிதழ்கள்-பதிவேற்றம்-2906646.html
2906645 அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் வலைதளத்தில் அவதூறு: மேலும் ஒருவர் மீது வழக்குப் பதிவு DIN DIN Tuesday, April 24, 2018 12:52 PM +0530 விழுப்புரம்: வலைதளத்தில் அவதூறு கருத்துகளை பரப்பியதாக, விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் ஒருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். 
    விழுப்புரம் மாவட்டத்தில் கட்செவி அஞ்சல், முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் அரசியல் கட்சி தலைவர்கள், சாதி, மதம் குறித்து அவதூறு கருத்துகளை விடியோ, ஆடியோ, படம், எழுத்து வடிவிலோ பதிவிட்டால் சட்டப் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரித்திருந்தார்.
ஏற்கெனவே, உளுந்தூர்பேட்டை, செஞ்சி அருகே ஆலம்பூண்டி, திருக்கோவிலூர் அருகே ஆலப்பாடி ஆகிய பகுதிகளில் ஒரு தரப்பைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றொரு தரப்பு அரசியல் கட்சித் தலைவரையும், மற்றொரு சாதியினரையும் அவதூறாகப் பேசி விடியோ, ஆடியோ வெளியிட்டதாக 5 பேர் மீது வன்கொடுமைத் தடுப்பு சட்டம் உள்ளிட்ட கடுமையான சட்டப் பிரிவுகளின் வழக்குப் பதிந்து 3 பேரை போலீஸாரை கைது செய்தனர். அதேபோல, சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர், மற்றொரு அரசியல் கட்சித் தலைவரையும், சாதியினரையும் அவதூறாகப் பேசி வலைதளத்தில் வெளியிட்டதாக விழுப்புரம் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், விழுப்புரம் அருகே அன்னியூரைச் சேர்ந்த அன்பழகன் என்பவர் அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் குறித்தும், ஒரு பிரிவு மக்கள் குறித்தும் அவதூறாக கருத்துகளை கட்செவி அஞ்சலில் வெளியிடுவதால், இரு பிரிவினரிடையே  மோதல் உருவாக வாய்ப்புள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் காணை ஒன்றியப் பொருளாளர் சதீஷ்குமார்(30) கஞ்சனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், போலீஸார் அன்பழகன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக  மாவட்டத்தில் இதுவரை 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/2018/apr/24/வலைதளத்தில்-அவதூறு-மேலும்-ஒருவர்-மீது-வழக்குப்-பதிவு-2906645.html
2906644 அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் நூதன வழிப்பறி: இளைஞர் கைது  DIN DIN Tuesday, April 24, 2018 12:51 PM +0530 விழுப்புரம்: விழுப்புரம் அருகே  குளிர்சாதன இயந்திரத்தை பழுதுநீக்குபவரிடம் இருந்து நூதன முறையில் வழிப்பறி செய்ததாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

விழுப்புரம், அருகே சித்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் பிரகாஷ்(32). குளிர்சாதன இயந்திரம் (ஏ.சி) பழுதுபார்ப்பவர். இவர், நேமூருக்கு சென்று, ஏ.சி. இயந்திரத்தை பழுது பார்த்துவிட்டு வீட்டுக்கு காரில் வந்து கொண்டிருந்தார். வேடம்பட்டு ஏரிக்கரை அருகே வந்தபோது, சாலையில் இரு சக்கர வாகனம் விழுந்து கிடந்ததைக் கண்ட பிரகாஷ் காரை நிறுத்தி கீழே இறங்கி பார்த்துள்ளார். அப்போது, ஒரு இளைஞர் ஓடி வந்து பிரகாஷை மிரட்டி பணம் கேட்டாராம். ஆனால், பிரகாஷ் பணம் தர மறுத்துள்ளார். உடனே, அந்த இளைஞர், பிரகாஷ் சட்டைப்பையில் இருந்த ரூ.500-ஐ பறித்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிவிட்டார். இருப்பினும், பிரகாஷ், அந்த வாகன எண்ணை குறித்து வைத்து காணை போலீஸில் புகார் செய்தார். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, நன்நாடு கிராமத்தைச் சேர்ந்த கேசவன் மகன் அஜித்(22) என்பவரை கைது செய்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/2018/apr/24/நூதன-வழிப்பறி-இளைஞர்-கைது-2906644.html
2906643 அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கொட்டகைக்கு தீ வைப்பு:2 பேர் மீது வழக்குப் பதிவு DIN DIN Tuesday, April 24, 2018 12:51 PM +0530 விழுப்பும்: விழுப்புரம் அருகே மாட்டுக் கொட்டகைக்கு தீ வைத்ததாக 2 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் அருகே காணையை அடுத்த கொண்டங்கி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(62). இவருக்கும், உறவினர்கள் தண்டபாணி மகன் மணிகண்டன், சீனுவாசன் மகன் மணிகண்டன் ஆகியோருக்கும் இடையே நிலம் பாகப் பிரிவினை தொடர்பாக பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. 
இந்த நிலையில், ஆறுமுகம் வீட்டின் பின்புறம் இருந்த அவரது மாட்டுக் கொட்டகை கடந்த இரு தினங்களுக்கு முன்பு இரவில் தீப் பற்றி எரிந்து சேதமடைந்தது.
இந்த கொட்டகைக்கு மணிகண்டன், மற்றொரு மணிகண்டன் சேர்ந்து தீ வைத்துவிட்டதாக, ஆறுமுகம் காணை காவல் நிலையத்தில் ஆறுமுகம் புகார் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், காணை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/2018/apr/24/கொட்டகைக்கு-தீ-வைப்பு2-பேர்-மீது-வழக்குப்-பதிவு-2906643.html
2906642 அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கள்ளக்குறிச்சி அருகே பூட்டிய வீட்டில் 30 பவுன் திருட்டு DIN DIN Tuesday, April 24, 2018 12:50 PM +0530 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியை அடுத்த பெத்தானூரில் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் தங்க நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர். 
பெத்தானூரைச் சேர்ந்தவர் மணி. ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி மாலதி. 
இவருக்கு இரு மகன்கள். சென்னையில் வசிக்கும் மகன்களை காண்பதற்காக, கடந்த சனிக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு மாலதி சென்றார். திங்கள்கிழமை திரும்பி வந்தபோது, வீட்டின் நுழைவாயில் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு,  அலமாரியில் இருந்த 30 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், ரூ.10 ஆயிரம் ஆகியவை திருடுபோயிருந்தது.
இதுகுறித்து சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விழுப்புரத்திலிருந்து வரவழைக்கப்பட்ட மோப்பநாய், வீட்டிலிருந்து சிறிது தொலைவு  சென்று நின்று விட்டது. தடயங்களை கூடுதல் துணைக் கண்காணிப்பாளரும், தடயவியல் நிபுணருமான குமார் உள்ளிட்ட குழுவினர் சேகரித்தனர். சின்னசேலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/2018/apr/24/கள்ளக்குறிச்சி-அருகே-பூட்டிய-வீட்டில்-30-பவுன்-திருட்டு-2906642.html
2906641 அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கிராமங்களில் பணியாற்ற முன்வர வேண்டும்: மருத்துவ மாணவர்களுக்கு துணைவேந்தர் அறிவுரை DIN DIN Tuesday, April 24, 2018 12:50 PM +0530 விழுப்புரம்: அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்த மாணவர்கள் கிராமப்புறங்களில் பணியாற்ற முன்வர வேண்டும் என்று எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அறிவுறுத்தினார்.
விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை,  விழுப்புரம் அருகேயுள்ள முண்டியம்பாக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.  இதன் மூலம், கடந்தாண்டு வெளி நோயாளியாக 9 லட்சம் பேரும்,  உள் நோயாளியாக 81 ஆயிரம் பேரும் சிகிச்சை பெற்றுள்ளனர். பொது மருத்துவம்,  அறுவைச் சிகிச்சை,  மகப்பேறு பிரிவு, குழந்தைகள் நலம்,  காது, மூக்கு, தொண்டை, மனநலம்,  தோல் சிகிச்சை,  சிறுநீரகம்,  நுரையீரல்,  காசநோய் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் மூலம் இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இதய நோய்,  ரத்தம் சுத்திகரிப்பு,  புற்றுநோய்,  உடல் ஒட்டுறுப்பு,  குடல் அறுவை போன்ற உயர் சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.  இந்த மருத்துவக் கல்லூரியில் இதுவரை 350 மாணவர்கள் மருத்துவம் முடித்துச் சென்றுள்ளனர்.  துணை மருத்துவப் படிப்புகளாக,  பட்டய படிப்புகளும் வழங்கப்படுகின்றன.
இந்தக் கல்லூரியில் மூன்றாவது பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜி.சங்கரநாராயணன் தலைமை வகித்தார். உயிரி வேதியியல் துறைத் தலைவர் பூங்குழலி கோபிநாத் வரவேற்றார்.  மருத்துவக் கண்காணிப்பாளர் ஏ.எஸ்.ராஜேந்திரன்,  நிலைய மருத்துவ அலுவலர் கே.புகழேந்தி, துணை முதல்வர் எ.சந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.கீதாலட்சுமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று,  105 மாணவ,  மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். 
அப்போது அவர் பேசுகையில், மருத்துவப் படிப்பு,  மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்.  அரசு மருத்துவக் கல்லூரியில் அரிய வாய்ப்பை பயன்படுத்தி மருத்துவம் முடித்துள்ள நீங்கள்,  கிராமப்புறங்களில் மருத்துவப்பணி மேற்கொள்ள முன்வர வேண்டும்.  கிராமப்புற ஏழைகளுக்கு மருத்துவ சேவையாற்றி பெருமை கொள்ளச் செய்ய வேண்டும்.  மருத்துவ மேற்படிப்புகளைத் தொடர்ந்து,  சிறந்த மருத்துவர்களாக பணியாற்ற வேண்டும் என்றார்.
இதையடுத்து, மருத்துவப் பட்டம் பெற்ற மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.  விழாவில்,  துறைத் தலைவர்கள் வெங்கடேஸ்வரி,  சுபசித்ரா,  பரிமளா,  டெலிபுளோ,  ராஜராஜன், சிந்துஜா, ராஜாராமன், ரவிக்குமார்,  அறிவழகன்,  நிர்வாக அலுவலர்கள் எம்.ஆர்.சிங்காரம்,  ஆனந்தஜோதி, சதீஷ்குமார் மற்றும் பேராசிரியர்கள்,  மாணவர்கள்,  செவிலியர்கள் கலந்துகொண்டனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/2018/apr/24/கிராமங்களில்-பணியாற்ற-முன்வர-வேண்டும்-மருத்துவ-மாணவர்களுக்கு-துணைவேந்தர்-அறிவுரை-2906641.html
2901801 அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் ஆர்.கே.எஸ். கல்லூரியில் தேசிய மதிப்பீட்டு சான்றளிப்புக் குழு ஆய்வு    கள்ளக்குறிச்சி DIN Tuesday, April 17, 2018 08:37 AM +0530 கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலி ஆர்.கே.சண்முகம் கலை அறிவியல் கல்லூரியில், பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) தேசிய மதிப்பீட்டுச் சான்றளிப்புக் குழுவினர் வியாழன், வெள்ளி ஆகிய இரு நாள்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
 இந்தக் குழுவினர் பேராசிரியர்கள்- மாணவர்களின் விகிதாசாரம், கற்றல், கற்பித்தல் முறைகள், மாணவர்களின் கல்வித் தரம், கல்லூரியின் கொள்கை, இலக்கு, வேலை வாய்ப்பு, ஆராய்ச்சிக் கல்வி, தொலை நோக்குத் திட்டம், மாணவர்களின் பின்னூட்டம், கல்லூரி வழங்கும் காப்பீட்டுத் திட்டம், டாக்டர் ஆர்.கே.எஸ்.கல்வி அறக்கட்டளை வழங்கும் மாணவர் உதவித்தொகை, அரசு வழங்கும் உதவித் தொகை துறை சார்ந்த கோப்புகள், என்.சி.சி, என்.எஸ்.எஸ், விளையாட்டு,கலை போன்றவை குறித்து ஆய்வு செய்தனர்.
 கல்லூரி கட்டமைப்புகள் மாணவர்களுக்கு அளிக்கும் சலுகைகள், அரசு அறிவிக்கும் பிற சலுகைகள் குறித்தும் ஆய்வு நடத்தினர்.
 
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/2018/apr/17/ஆர்கேஎஸ்-கல்லூரியில்-தேசிய-மதிப்பீட்டு-சான்றளிப்புக்-குழு-ஆய்வு-2901801.html
2901799 அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விடைத்தாள் மதிப்பிடும் மையத்தில் ஜாக்டோ அமைப்பினர் போராட்டம்    விழுப்புரம், DIN Tuesday, April 17, 2018 08:36 AM +0530 கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் மதிப்பிடும் மையத்தில் ஜாக்டோ அமைப்பினர் திங்கள்கிழமை தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 விழுப்புரம், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த மையத்தில், திங்கள்கிழமை காலை திரண்ட ஜாக்டோ அமைப்பினர் கூட்டமைப்புத் தலைவர் லூர்து சேவியர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 பழைய ஓய்வூதிய முறையை நடைமுறைப்படுத்த வேண்டும், 7-ஆவது ஊதிய உயர்வு 21 மாத நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். பணி முரண்பாடுகளைக் களைய வேண்டும். ஆசிரியர்கள் எண்ணிக்கையை குறைக்க அமைக்கப்பட்ட குழுவைக் கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். பின்னர், ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு விடைத் தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்கள் சென்றனர்.
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/2018/apr/17/விடைத்தாள்-மதிப்பிடும்-மையத்தில்-ஜாக்டோ-அமைப்பினர்-போராட்டம்-2901799.html
2901796 அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் மரக்காணம் அருகே காயங்களுடன் காவலாளி சடலம் மீட்பு    விழுப்புரம், DIN Tuesday, April 17, 2018 08:36 AM +0530 மரக்காணம் அருகே மாந்தோப்புக்கு காவலுக்குச் சென்ற காவலாளி உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் சாலையோரம் சடலமாக மீட்கப்பட்டார். அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் அருகேயுள்ள சிறுவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சூர்யமூர்த்தி(35). இவர், மரக்காணம் அருகேயுள்ள ஆலத்தூர் என்ற இடத்தில் உள்ள மாந்தோப்பு ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு பணிக்குச் சென்ற சூர்யமூர்த்தி காலை வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், பிற்பகல் 3 மணி அளவில், குரும்புரம் பேருந்து நிறுத்தம் அருகே திண்டிவனம் சாலையில் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
 தகவல் அறிந்த மரக்காணம் போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, உடல் கூறாய்வுக்காக புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரிக்கின்றனர்.
 
 
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/2018/apr/17/மரக்காணம்-அருகே-காயங்களுடன்-காவலாளி-சடலம்-மீட்பு-2901796.html
2901793 அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் மானிய விலை எல்இடி மின் விளக்கு விற்பனை தொடக்கம்    விழுப்புரம் DIN Tuesday, April 17, 2018 08:35 AM +0530 விழுப்புரம் மாவட்டத்தில் மின்துறை மூலமாக மானிய விலையில் எல்.இ.டி. மின் விளக்கு விற்பனை செய்யும் திட்டம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
 மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின்கீழ் இந்தியாவில் எரிசக்தியை சேமிக்கும் வகையில் மானிய விலை மின்விளக்கு, மின் விசிறி விற்பனை தொடங்கப்பட்டது. அந்த திட்டத்தின் கீழ் மின்விசிறி ரூ.1,110-க்கும், டியூப் லைட் ரூ.220-க்கும், எல்.இ.டி. மின் விளக்கு ரூ.70-க்கும் மின்துறை மூலமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், சுராஜ் கிராம அபியான் திட்டத்தின் கீழ் எல்.இ.டி. மின் விளக்குகள் கிராமங்களைச் சென்றடையும் வகையில், அவற்றை மானிய விலையில் விற்பனை செய்யும் திட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
 விழுப்புரம் மின் வாரிய அலுவலகம் எதிரே இந்த விற்பனை வாகனங்களின் பயணத்தை மின்சார வாரிய மேற்பார்வைப் பொறியாளர் காளிமுத்து கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். செயற்பொறியாளர் மதனகோபால், பாஜக மாவட்டப் பொதுச் செயலாளர் சுகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 இந்த விளக்குகளை விழுப்புரம் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 227 கிராமங்களில் மானிய விலையில் 9 வாட்ஸ் எல்.இ.டி. மின்விளக்கு ரூ.50-க்கும் விற்பனை செய்யப்படும். ஆதார் அட்டை நகல், மின் இணைப்பு நகலை கொடுத்து ஒரு நபர் 10 மின் விளக்குகள் வரை வாங்கிக்கொள்ளலாம். மூன்று ஆண்டுகள் வரை அதனை மாற்றிக்கொள்ளும் உத்தரவாதம் வழங்கப்படும் என்று மின்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
 
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/2018/apr/17/மானிய-விலை-எல்இடி-மின்-விளக்கு-விற்பனை-தொடக்கம்-2901793.html
2901791 அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் தடுப்புக் காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது    விழுப்புரம் DIN Tuesday, April 17, 2018 08:35 AM +0530 சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரை தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
 கள்ளக்குறிச்சி அருகே சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் ராஜா(30). இவர், அந்த பகுதியில் சாராயம் கடத்தல், சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இது தொடர்பாக சங்கராபுரம் போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க, ராஜாவை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியனுக்கு எஸ்.பி. ஜெயக்குமார் பரிந்துரைத்தார்.
 இந்த நிலையில், கடலூர் மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக உள்ள ராஜாவை, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/2018/apr/17/தடுப்புக்-காவல்-சட்டத்தில்-சாராய-வியாபாரி-கைது-2901791.html
2901789 அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் ஜி.அரியூரில் மூடப்பட்ட மதுக் கடையை திறக்கக் கூடாது: ஆட்சியரகத்தில் கிராம மக்கள் மனு    விழுப்புரம் DIN Tuesday, April 17, 2018 08:34 AM +0530 திருக்கோவிலூர் அருகே ஜி.அரியூரில் மூடப்பட்ட அரசு மதுக் கடையை மீண்டும் திறக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் திங்கள்கிழமை ஆட்சியர், எஸ்.பி. ஆகியோரிடம் மனு அளித்தனர்.
 ஜி.அரியூரில் ஏற்கெனவே செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுக் கடை அப்பகுதி மக்களின் வலியுறுத்தல் காரணமாக மூடப்பட்டது. ஆனால், அந்த கடையை மீண்டும் திறக்கக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் சிலர் மாவட்ட ஆட்சியரகத்துக்கு கடந்த இரு வாரங்களாக வந்து மனு அளித்தனர். அவர்கள் மதுக்கடை செயல்பட்டு வந்த கட்டடத்தின் உரிமையாளரின் ஆதரவாளர்கள் எனக் கூறப்பட்டது.
 தொடர்ந்து இவ்வாறு மனு அளிக்கப்படுவதால், ஜி.அரியூரில் மீண்டும் மதுக்கடை திறக்கப்படலாம் என்ற தகவல் பரவியது. இதையடுத்து அந்த கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய தாலுகா காவல் ஆய்வாளர் ராஜன், சிலரை மட்டும் ஆட்சியரை சந்திக்க அனுமதி அளித்தார்.
 அதன்படி, கிராம மக்களில் சிலர் சென்று ஆட்சியரை சந்தித்து, தங்களது ஊரில் மதுக் கடையை மீண்டும் திறக்கக் கூடாது எனக் கோரி மனு அளித்தனர். தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளரையும் சந்தித்து மனு அளித்தனர்.
 
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/2018/apr/17/ஜிஅரியூரில்-மூடப்பட்ட-மதுக்-கடையை-திறக்கக்-கூடாது-ஆட்சியரகத்தில்-கிராம-மக்கள்-மனு-2901789.html
2901785 அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் ஏப்.20-இல் 33 கிராமங்களில் சமையல் எரிவாயு விழிப்புணர்வு: இந்தியன் ஆயில் அதிகாரி தகவல்      விழுப்புரம், DIN Tuesday, April 17, 2018 08:34 AM +0530 விழுப்புரம் மாவட்டத்தில் 33 கிராமங்களில் வருகிற 20-ஆம் தேதி சமையல் எரிவாயு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று இந்தியன் ஆயில் அதிகாரி தெரிவித்தார்.
 இதுகுறித்து மாவட்ட இந்தியன் ஆயில் நிறுவனத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கான விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ரோஷினி கூறியதாவது:
 மத்திய அரசின் பெட்ரோலியத்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, பொதுமக்களுக்கு சமையல் எரிவாயு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி வருகிற 20-ஆம் தேதி கிராமங்களில் நடத்தப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாவட்டத்தில் உள்ள அனைத்து சமையல் எரிவாயு முகவர்களும் தலா ஒரு கிராமங்களுக்குச் சென்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவர். அதில், ஏற்கெனவே சமையல் எரிவாயுவை பயன்படுத்தும் நபர்களின் அனுபவங்கள், அவர்களின் கருத்துகள் கேட்கப்படும். மேலும், சமையல் எரிவாயு இணைப்பு இல்லாதவர்களுக்கு இலவசமாகவோ அல்லது கட்டணம் மூலமாகவோ இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 கடந்த 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள பெண்களுக்கு இலவசமாக சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த கணக்கெடுப்பில் இல்லாவிட்டாலும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள எஸ்.சி., எஸ்.டி பிரிவினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர், 35 கிலோ அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினர், தீவுகளில் வசிக்கும் பெண்கள் இந்த திட்டத்தின்கீழ் இலவசமாக இணைப்பு பெறும் வசதி ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இலவசமாக பெறமுடியாதவர்கள் கடன் மூலமாக இணைப்புப் பெற நடவடிக்கை எடுக்கப்படும். அந்த கடன் தொகை 6 சிலிண்டர்களைப் பெற்ற பிறகு, அடுத்தடுத்த சிலிண்டருக்கான மானியத்தொகையில் இருந்து பிடித்தம் செய்யப்படும். இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
 காப்பீடு உண்டு: வாடிக்கையாளர்கள் வாங்கும் ஒவ்வொரு சிலிண்டருக்கும் காப்பீடு உள்ளது. சமையல் எரிவாயு உருளையில் தீ விபத்து ஏற்பட்டால், அந்த விபத்தை ஆய்வு செய்து இழப்பீடு வழங்கப்படும். இதற்கு முன்னதாக நடைபெற்ற விபத்துகளில் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. விபத்துத் தகவல் அல்லது புகார்களை 1906 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். சிலிண்டர் விலையைவிட கூடுதலாக கட்டணம் அளிக்கத் தேவையில்லை. அதிக கட்டணம் கேட்டாலும் புகார் செய்யலாம் என்று கூறினார்.
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/2018/apr/17/ஏப்20-இல்-33-கிராமங்களில்-சமையல்-எரிவாயு-விழிப்புணர்வு-இந்தியன்-ஆயில்-அதிகாரி-தகவல்-2901785.html
2901781 அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் காசநோய் கண்டறியும் நடமாடும் ஆய்வுக் கூடம்: ஏப். 21 வரை கிராமங்களில் வலம் வருகிறது    விழுப்புரம் DIN Tuesday, April 17, 2018 08:33 AM +0530 விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற 21-ஆம் தேதி வரை பல்வேறு கிராமங்களுக்குச் சென்று காசநோய் கண்டறியும் நடமாடும் ஆய்வுக் கூட சேவையை ஆட்சியர் இல.சுப்பிரமணியன் திங்கள்கிழமை தொடக்கி வைத்தார்.
 திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்புத் திட்டத்தின் கீழ், நடமாடும் காசநோய் கண்டறியும் அதிநவீன ஆய்வுக் கூட சேவைத் தொடக்க விழா விழுப்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
 மாவட்ட ஆட்சியரக நுழைவாயில் பகுதியிலிருந்து இந்த வாகன சேவையை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.
 அப்போது அவர் பேசியதாவது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மார்ச் 24-ஆம் தேதி அதிநவீன கருவி அடங்கிய காசநோய் கண்டறியும் ஆய்வுக் கூட வாகன சேவையை சென்னையில் தொடக்கி வைத்தார். இந்த வாகனம் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப் பயணம் செய்து, காசநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் பொதுமக்களிடையே காசநோய் பரிசோதனையும் மேற்கொண்டு வருகிறது.
 விழுப்புரம் மாவட்டத்தில் இந்த வாகனம் ஏப்ரல் 16-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் வருகிற 21-ஆம் தேதி வரை கண்டமானடி, சிறுவந்தாடு, மயிலம், கிளியனூர், சந்தியமங்கலம், மேல்சித்தாமூர், ஒலக்கூர், முகையூர், ரிஷிவந்தியம், கரியாலூர், இருவேல்பட்டு, எலவனாசூர்கோட்டை, திருநாவலூர் ஆகிய காசநோய் அலகுக்கு உள்பட்ட கிராமத்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களிடையே காசநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும். அப்போது, பொதுமக்களுக்கு சளி பரிசோதனையும் செய்யப்படும்.
 அதிநவீன கருவிகள் அடங்கிய இந்த வாகனம் உங்கள் வீடுதேடி வருவதால், இரண்டு வாரங்களுக்கு மேல் இருமல், சளி இருப்பவர்கள், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சளி பரிசோதனை செய்து பயன்பெற வேண்டும். மேலும், காசநோயை துரிதமாகவும், துல்லியமாகவும் கண்டறியும் கருவி விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனை ஆகிய இரு மருத்துவமனைகளில் உள்ளது. அதனையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் ஆட்சியர் இல.சுப்பிரமணியன்.
 தொடர்ந்து, காசநோய் பணியாளர்களுக்கு காசநோயாளர்களின் விவரத்தை இணையத்தில் தினமும் பதிவேற்றம் செய்ய கையடக்கக் கணினி, கருவிகளை ஆட்சியர் வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் நேரு, காசநோய் பிரிவு துணை இயக்குநர் சுதாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
 
 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/2018/apr/17/காசநோய்-கண்டறியும்-நடமாடும்-ஆய்வுக்-கூடம்-ஏப்-21-வரை-கிராமங்களில்-வலம்-வருகிறது-2901781.html
2691789 அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் பதிவுச் சான்று இல்லாமல் இறால் வளர்த்தால் நடவடிக்கை: ஆட்சியர் விழுப்புரம், DIN Thursday, April 27, 2017 08:08 AM +0530 விழுப்புரம் மாவட்டத்தில் பதிவுச் சான்று இல்லாமல் இறால் வளர்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரித்தார்.
 விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக இறால் வளர்க்கவும், 5 ஆண்டுகள் முடிவுற்ற பதிவுச் சான்றை புதுப்பிக்கவும், விண்ணப்பிக்கப்பட்ட இறால் பண்ணைகளை கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்தில் பதிவு செய்வது குறித்து, மாவட்டக் குழு உறுப்பினர்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
 விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
 மாவட்டத்தில் இறால் பண்ணைகள், கடல்நீர் வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்திடமிருந்து பதிவுச் சான்று பெற்று இறால் வளர்க்க வேண்டும், பதிவுச் சான்று பெறாமல் இறால் வளர்த்தால், கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையச் சட்டம் 2005-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்து, குழுவினருக்கு ஆலோசனை வழங்கினார்.
 கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜசேகரன், மாவட்ட வன அலுவலர் ஆனந்தன், மீன்வளத் துறை உதவி இயக்குநர் மணிமேகலை உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 
 

 

]]>
http://www.dinamani.com/all-editions/edition-villupuram/2017/apr/27/பதிவுச்-சான்று-இல்லாமல்-இறால்-வளர்த்தால்-நடவடிக்கை-ஆட்சியர்-2691789.html