Dinamani - செய்திகள் - http://www.dinamani.com/religion/religion-news/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3041768 ஆன்மிகம் செய்திகள் வலம்புரி சங்கு: வளமான வாழ்வு தரும் கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்! - அஸ்ட்ரோ சுந்தரராஜன் DIN Monday, November 19, 2018 04:50 PM +0530  

இன்று கார்த்திகை மாத முதல் சோம வாரம்! அனைத்து சிவாலயங்களிலும் சங்காபிஷேகம் செய்வார்கள். கார்த்திகை சோமவாரத்தில் சிவாலயங்களில் சங்கில் புனித நீர் நிரப்பி, அந்தத் தீர்த்தத்தை கங்கையாகப் பாவித்து சங்காபிஷேகம் செய்வது வழக்கம். சங்கு, செல்வத்தின் சின்னம். வற்றாத பொருள் செல்வம் வேண்டும் இல்லத்தாரும், இறைவனின் அருட்செல்வம் வேண்டும் துறவிகளும், இந்தப் பூஜையை மேற்கொள்கிறார்கள். சென்னை திருமயிலை கபாலீஸ்வரர், வெள்ளீஸ்வரர், காரணீஸ்வரர், விருபாக்‌ஷிஸ்வரர், மல்லீஸ்வரர், வாலீஸ்வரர் மற்றும் தீர்த்தபாலீஸ்வரர் ஆகிய ஸப்த சிவஸ்தலங்களில் மட்டுல்லாது அனைத்து சிவாலயங்களிலும் இன்று சங்காபிஷேகம் செய்கிறார்கள். 

ஜோதிடத்தில் சங்கு

ஜோதிடத்தில் கடலும் கடல் சார்ந்த பொருட்களுக்கும் காரகர் சந்திர பகவான் ஆவார். காலபுருஷனுக்கு நான்காம் வீடான கடகம் சந்திரனின் ஆட்சி வீடாகும். மேலும் கடக ராசி கடலும் கடல் சார்ந்த இடமுமான நீர் ராசியாகும்.

மாத்ரு காரகன், மனோ காரகன் என்றெல்லாம் ஜோதிடத்தில் சிறப்பிடம் பெற்ற நவக்கிரக நாயகர்களில் ஒருவரான சந்திரன் மகாவிஷ்ணுவின் மனதிலிருந்து பிறந்ததாகவும் (சந்த்ரமா மனஸோ ஜாத: - புருஷ ஸூக்தம்), பாற்கடல் கடைந்த போது தோன்றியதாகவும் அறியமுடிகின்றது. பெரும் தவம் செய்து கிரஹ பதவி பெற்றவர் சந்திர பகவான்.

வலம்புரி சங்கு தோன்றிய கதை

சந்திர சகோதரியான மகாலக்ஷ்மியின் அம்சமே சங்கு. சங்குகளில் இரண்டு வகைகள் உண்டு. இடப்பக்கம் சுழிந்து செல்லும் சங்கு உலகில் எளிதாகக் கிடைக்கும். வலது பக்கம் சுழியுடைய வலம்புரிச் சங்குகள் அபூர்வமாகவே கிடைக்கும். வலம்புரி சங்கு மிக உயர்வானதாகக் கருதப்படுகிறது. தேவர்கள் மற்றும் அசுரர்களால் பாற்கடல் கடையப்பட்டபோது வெளிப்பட்ட, பதினாறு வகையான தெய்வீகப் பொருட்களில் வலம்புரி சங்கும் ஒன்று. அந்த சங்குதான் மகாவிஷ்ணுவின் இடக்கையில் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு தெய்வமும் தங்களுக்கென்று தனித்தனியாக சங்குகளை வைத்திருப்பதாக ஆகமங்களும், புராணங்களும் விளக்குகின்றன. மணி சங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண் சங்கு, பூமா சங்கு, திரி சங்கு என்ற எட்டு வகை சங்குகள் கடலில் உற்பத்தி ஆவதாகக் கூறப்படுகிறது. அதில் வலம்புரி சங்குக்கு மட்டும் விசேஷ சக்தி இருப்பதாகச் சாஸ்திரங்கள் சொல்கின்றன.

எந்த வீட்டின் பூஜை அறையில் வலம்புரி சங்கு இருந்தாலும் அங்கு திருமகள் வாசம் செய்வதாக நம்பிக்கையாகும். அந்த இல்லம் லக்மிகடாச்சம் பெற்றுச் சிறந்த இல்லமாக விளங்கும். சங்கு ஊதினால் அபசகுனம் என்று தற்போது நம் மக்களை நம்ப வைத்துள்ளனர். ஆனால் சங்கின் மகத்துவம் நம்மில் எத்தனைப் பேருக்கு தெரியும்.
 
சங்கின் மகத்துவம்

சங்கு, ஹரியின் இருப்பிடம். பணத்தைக் கொண்டுவரும். சங்கு தீர்த்தம் பற்றி பத்ம புராணம் விரிவாகக் கூறுகிறது. சங்கில் பாலை நிரப்பி இறைவனை நீராட்டினால் ஆயிரம் யாகங்கள் செய்த பலனை அடையலாம். கங்கை நீரை நிரப்பி அபிஷேகம் செய்தால் பிறவிப் பிணியை அறுக்கலாம் என்றும் புராணங்கள் கூறுகின்றது. இது கடலில் விளையும் பொருள். சங்கு பூச்சியின் கூடு. இவற்றில் சிறியது கடுகை ஒத்ததாகவும் பெரியது ஒரு அடிக்கு மேலும் உள்ளன. சங்கானது ஏரி, கடல், ஆறு, குளங்களிலும் வளரும். 

சங்குகளின் வகைகள்

மணி சங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண் சங்கு, பூமா சங்கு, திரி சங்கு வலம்புரி சங்கு எனப் பல வகைப்படுகிறது. திருப்பதி திருமலை வேங்கடேச பெருமாள் கையில் இருப்பது மணி சங்கு. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமியின் கையில் இருப்பது வைபவ சங்கு. திருக்கண்ணபுரம் ஶ்ரீ செளரிராஜ பெருமாள் கையில் இருப்பது துயிலா சங்கு. திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கையில் இருப்பது பாருத சங்கு.

மகாபாரதத்தில் சங்கு

கோவில்களிலும் போர்க்களங்களிலும் அரசர் நிகழ்ச்சிகளிலும் சங்கநாதம் முழங்கும். பூஜையில் ஒலிக்கவும், போரைத் தொடங்கவும், வெற்றியைப் பறைசாற்றவும், நல்லனவற்றின் வருகையை அறிவிக்கவும் ஆதிகாலம் தொட்டே சங்கு முழங்கப்பட்டு வந்துள்ளது. 

தமக்கு வில்வித்தை கற்றுத்தந்த 'சாந்தீபனி' முனிவரின் மகனை மீட்கக் கடலில் வாழ்ந்த 'பாஞ்சஜன்யன்' என்ற அசுரனை ஸ்ரீகிருஷ்ணர் கொன்றார். சாகும் தருவாயில் கிருஷ்ணரைப் பணிந்த அந்த அரக்கனின் வேண்டுகோளின்படி, அவனது சாம்பலைத் திரட்டி சங்காக மாற்றி அவனது பெயராலேயே “பாஞ்சஜன்யம்” என்ற சங்கினை ஏந்திக்கொண்டார் என்று பாகவத புராணம் கூறுகிறது. மகாபாரதத்தில் பாண்டவர்கள் ஐவரும் ஐந்து விதமான சங்குகளைத் தாங்கி இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

யுதிஷ்டிரர் 'அனந்த விஜயம்' எனும் ஒளிபொருந்திய சங்கையும், அர்ஜுனன் 'தேவதத்தம்' எனும் தேவ சங்கையும், பலவான் பீமன் 'மகாசங்கம்' எனும் பெரிய சங்கையும், நகுலன் 'சுகோஷம்' எனும் அதிர்ஷ்ட சங்கையும் சகாதேவன் 'மணிபுஷ்பகம்' எனும் சூட்சும சங்கையும் தாங்கி இருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது.

திருப்பாவையில் சங்கு

ஆண்டாளின் நான்காவது திருப்பாவையில் ஓர் அற்புதமான மழைக்காட்சியும் விஞ்ஞானக் குறிப்பும் உள்ளது. மழை எப்படிப் பெய்கிறது என்று ஆண்டாள் விவரிப்பதை இன்றைய வானிலை நிபுணர்கள் அப்படியே ஏற்றுக் கொள்வார்கள். மழை எப்படிப் பெய்கிறது என்பதற்கு ஆண்டாள் இரண்டுவிதமான படிமங்களைப் பயன்படுத்துவது அவரது கவிதைத் திறமையைக் காட்டுகிறது. ஒரு படிமம் திருமாலின் கரிய உடல் சங்கு சக்கரம் இவைகளோடு மழையை ஒப்பிட மற்றதில் மழை பெய்வதின் இயற்கையான விளக்கத்தைத் தப்பில்லாமல் தருகிறார். அந்த ஒன்பதாம் நூற்றாண்டில் ஆண்டாளுக்குத் இது தெரிந்திருந்தது விந்தையே.

ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்

ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி

ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து

பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்

ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து

தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்

வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

ஜாதகத்தில் சந்திரன் தரும் யோகங்கள்

ஜோதிடத்தில் சூரியனையும் சந்திரனையும் ராஜ கிரகங்கள் என சிறப்பித்து போற்றப்படுகிறது. மேலும் சூரியனை ஆத்ம காரகன் மற்றும் பித்ரு காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். சந்திரனை மனோ காரகன் என்றும் மாத்ரு காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். 

சூரியனும் சந்திரனும் ஒரு ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால்தான் அனைத்து நல்ல பலன்களும் ஜாதகர் அனுபவிக்க முடியும். ஜோதிட சாஸ்திரத்தில் சூரியனுக்கு அடுத்தபடியாக தனி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் கிரகம் சந்திரன்.
 
சந்திரனை "சந்திரமா மனஸோ ஜாத:" வேதம் போற்றுகிறது. இவரே உடலுக்கு காரகன். அமாவாசை தவிர அனைத்து நாட்களிலும் வளர்ந்தும் தேய்ந்தும் நமக்குக் காட்சி கொடுப்பவர் ‘சர்வம் சந்திர கலாபிதம்‘ என்று சந்திரனை ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. லக்னத்துக்கு அடுத்தபடியாக முக்கியம் வாய்ந்தது ராசி. ஜோதிடம் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எடுத்தவுடன் கேட்கும் கேள்வி ‘நீங்கள் என்ன நட்சத்திரம், என்ன ராசி?‘ என்பது. எந்த நட்சத்திர தினத்தன்று நாம் பிறந்தோமோ, அது நமது ஜென்ம நட்சத்திரம். அந்த நட்சத்திரத்துக்கான ராசி ஜென்மராசி அல்லது ஜனன ராசி. இந்த ராசியின் அடிப்படையிலேயே யோகங்கள் உண்டாகின்றன. அதுபோல குருபலம், ஏழரை சனி, அஷ்டம சனி கண்டசனி ஆகிய கோசார பலன்கள் சந்திரனை பிரதானமாக வைத்து நடக்கின்றன. எல்லா திதிகளிலும் சந்திர, சூரியன் ஆளுமை இருக்கும் சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருக்கும் காலம் அமாவாசை. 

சூரியனுக்கு 7-ம் இடத்தில் சந்திரன் இருக்கும்போது பௌர்ணமி அமாவாசை யோகம், பௌர்ணமி யோகம், கஜகேசரி யோகம், சகடை யோகம், குருசந்திர யோகம், சந்திரமங்கள யோகம், சந்திராதி யோகம் என்று பலவகையான யோகங்களைத் தருபவர் சந்திரன்.

நமது ஜாதகத்தில் சந்திரன் பலமாக இருந்தால் நல்ல யோக பலன்கள் உண்டாகும். சந்திரன் மாதுர்காரகன், அதாவது, தாயின் பலம், நிலைமை குறித்து அறிய முடியும். சந்திரன் மனோகாரகனும்கூட, அதாவது மனதை ஆள்பவன். சந்திரனால் ஏற்படும் சுப யோகங்களில் முக்கியமானது குரு சந்திர யோகமாகும்.

குரு சந்திர யோகம்

சந்திரனுடன் குரு சேர்ந்திருப்பது, குரு சந்திர யோகம் ஆகும். பொன், நவரத்தினங்கள் போன்றவற்றில் ஆதாயம் கிடைக்கும். எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். ஆன்மிகத்தில் புகழுடன் திகழ்வர். இவரைச் சுற்றி இருப்பவர்கள் இவர்களுக்கு உதவிக்கரமாகவே இருப்பர். இவர்களுக்குப் பெரும்பாலும் ஆண் குழந்தைகளே பிறக்கும். கோயில் கட்டுதல், பொதுநலப் பணிகள் போன்றவற்றில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். சந்திரன் குரு மற்றும் சனியுடன் அசுப சேர்க்கை பெற்று ஏற்படும் யோகம் யாசக யோகம் எனப்படும்.

யாசக யோகம்

லக்னதிற்கு 1-இல் சந்திரன் இருக்க, சனி கேந்திரத்தில் இருக்க, குரு 12-இல் இருக்க யாசக யோகம் உண்டாகும். இந்த அமைப்பு உடையவர்கள் பிச்சை எடுத்துத் தான் சாப்பிடுவார்கள். 6, 8 ,12-இல் லக்னாதிபதி இருந்தால் நாடு முழுவதும் திரித்து பிச்சை எடுத்துச் சாப்பிடுவார்கள்.

யாசக யோகம் என்பது துறவு வாழ்க்கை வாழ்பவர்களுக்கு மிக உன்னத யோகமாகும். ஆதி சங்கரர் உலக நன்மைக்காகப் பிச்சை எடுத்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இல்லற வாசிகளுக்கு இந்த யோகம் சிறப்பல்ல. யாரும் விரும்பமாட்டார்கள்.

சந்திரனால் ஏற்படும் அவயோகங்கள் நீங்கி செல்வ செழிப்பு தரும் பரிகாரங்கள்

கார்த்திகை மாதம் விருச்சிக மாதம் என அழைக்கப்படும். விருச்சிக ராசியில் சந்திரன் நீசமாக (பலமிழந்து) அமைவார். கார்த்திகை மாதத்தில் வரும் அனைத்துச் சந்திர அம்சம் பொருந்திய நாளாகிய சோமவாரம் எனும் திங்கட்கிழமைகளில், சந்திர அம்சமான சங்குகளுக்கு பூஜை செய்து, சங்கு தீர்த்தம் கொண்டு சிவபெருமானுக்கு பூஜை செய்வது, காண்பது, சந்திரன் பலம் பெற்று வளர்ந்ததைப் போல, நம் வாழ்க்கையும் நல்வளங்கள் அனைத்தும் பெருகும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது

சந்திரனை ராஜ கிரஹம் என்று கூறுவார்கள். மேலும் செல்வங்களை தரும் மஹா லக்‌ஷ்மியை சந்திர சகோதரி எனக் கூறுவார்கள். எனவே சந்திர தரிசனம் செய்பவர்களுக்கு சந்திர சகோதரியான மகாலக்‌ஷ்மியின் அருள் கிட்டி அனைத்துச் செல்வங்களையும் சேர்க்கும், பிரம்மஹத்தி போன்ற தோஷங்களை நீக்கும். பொதுவாகவே ஒருவர் ஜாதகத்தில் நீச கிரஹங்களே செல்வச் செழிப்பை ஏற்படுத்துகின்றது என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதிலும் சந்திரனின் நீச நிலை அபரிமிதமான செல்வ செழிப்பை ஏற்படுத்துகிறது என்பதில் மிகையில்லை.

சந்திர சகோதரியான ஸ்ரீ மஹாலஷ்மியை வெள்ளிக்கிழமைகளில் வலம்புரி சங்கோடு வணங்கிவர லக்‌ஷ்மி கடாக்‌ஷம் பெருகும். 

சந்திரனுக்கு அதிதேவதையான அம்பாள் ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், அபிராமி அந்தாதி, துர்கா சப்தஸ்லோகி பாராயணம் செய்பவர்கள், மேரு, ஸ்ரீ சக்ரம் இவற்றுடன் வலம்புரி சங்கு, பசு இவற்றைப் பூஜிப்பதும் நலம் பல பெருகும். 

செல்வச் செழிப்பு ஏற்பட திங்கள் ஸ்தலமான திருப்பதிக்கு திங்கள் கிழமையில் சென்று பெருமாளையும் சந்திர சகோதரியான அலர்மேல்மங்கை தாயாரையும் சேவிக்க வேண்டும். 
 
- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/19/w600X390/lord_srikrishna.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/19/வலம்புரி-சங்கு-வளமான-வாழ்வு-தரும்-கார்த்திகை-சோமவார-சங்காபிஷேகம்-3041768.html
3041762 ஆன்மிகம் செய்திகள் சோமவார விரதத்தை எப்படி எளிமையாகக் கடைப்பிடிப்பது?  Monday, November 19, 2018 03:58 PM +0530  

கார்த்திகை மாதத்தில் பல முக்கிய விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் முக்கியமானது கார்த்திகை சோமவார விரதமாகும். 

கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமை சிவனுக்கு மிகவும் உகந்த நாளாகும். எனவே அன்றைய நாள் சோமவார விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த விரதத்தைப் போல வேறு எந்த விரதத்திலும் சிவன் திருப்தியடைய மாட்டார் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

சோமவார விரதத்தை எளிமையாகக் கடைப்பிடிக்கும் முறை

சோமவார விரத நாளில் காலையில் பெண்கள் வீட்டில் விளக்கேற்றி விரதத்தைத் தொடங்கலாம். இறைவனின் ஆயிரம் திருநாமங்களை கூறி வில்வத்தால் அர்ச்சித்தால் அனைத்து பாவங்களும் அகலும், மணப்பேறு, மகப்பேறு, வாக்கு, கல்வி, செல்வம் யாவும் கிட்டும், நோய் நீக்கம், அகால மரண பயமின்மை என எல்லா நற்பலன்களையும் கார்த்திகை சோமவார விரதம் தரும்.
 

இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது. அப்படி இருக்க முடியாதவர்கள் ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு விரதத்தைக் கடைப்பிடிக்கலாம். இந்த விரதத்தை வாழ்நாள் முழுவதுமோ அல்லது 12 ஆண்டுகளோ கடைப்பிடிக்கலாம். அதுவும் இயலாதவர்கள் கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளிலாவது இந்த விரதத்தை அனுஷ்டிப்பது நலம் தரும்.

ஆண்களும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். திருமணமாகாதவர்கள் நல்ல கணவன் வேண்டியும், திருமணமானவர்கள் கணவன் நோயில்லாமல் நீண்ட காலம் வாழவும் இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கலாம். கணவன், மனைவி இருவருமாக இந்த விரதத்தை மேற்கொண்டு வந்தால் வாழ்வில் அனைத்து வளங்களும் கிட்டும். விரதமிருப்பவர்கள் மாலை வேளையில் சிவாலயத்திற்குச் சென்று சிவபெருமானை மனமுருக வழிபட்டு வரலாம். 

திருமணமான பெண்கள் வீட்டிலோ அல்லது சிவாலயம் சென்றோ முழு நெல்லிக்கனியில் சிறிய துளையிட்டு அதில், நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி விளக்கேற்றினால் செல்வம் பெருகும்.

அன்றைய தினம் முழுவதும் "ஓம் நமசிவாய" என்ற மந்திரத்தை இடைவிடாது மனதிற்குள் உச்சரித்துக்கொண்டே இருந்தால் வாழ்வில் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். ஆகவே, நாமும் கார்த்திகை மாத சோமவார விரதத்தைக் கடைப்பிடித்து சிவசக்தியின் அருளைப் பெறுவோமாக. 
 

]]>
somavaara viratham, சோமவார விரதம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/19/w600X390/sivan_par.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/19/சோமவார-விரதத்தை-எப்படி-எளிமையாகக்-கடைப்பிடிப்பது-3041762.html
3041755 ஆன்மிகம் செய்திகள் திருச்சானூர் கோயிலுக்கு ரூ.4 லட்சம் மதிப்புள்ள வெள்ளி கவசங்கள் நன்கொடை  DIN DIN Monday, November 19, 2018 02:51 PM +0530  

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வளாகத்தில் உள்ள சீனிவாச பெருமாளுக்கு பக்தர் ஒருவர் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி கவசங்களை நடைகொடையாக வழங்கினார். 

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் வளாகத்தில் சுந்தரராஜ பெருமாள் சீனிவாச பெருமாள் உள்ளிட்ட சந்நிதிகள் உள்ளன. 

இதில் சீனிவாச பெருமாளுக்கு உள்ளூரில் உள்ள பக்தர் ஒருவர் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளியில் ஆன கவசங்களை நன்கொடையாக வழங்கினார். இதை அவர் திருச்சானூர் கோயில் அதிகாரிகளிடம் அளித்தார். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/22/w600X390/tiruchanur.JPG http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/19/திருச்சானூர்-கோயிலுக்கு-ரூ4-லட்சம்-மதிப்புள்ள-வெள்ளி-கவசங்கள்-நன்கொடை-3041755.html
3041751 ஆன்மிகம் செய்திகள் திருவண்ணாமலை மகாதீப கொப்பரைக்கு சிறப்பு பூஜை DIN DIN Monday, November 19, 2018 02:32 PM +0530  

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் மகாதீபம் ஏற்றப்படவுள்ள மகா தீப கொப்பரை புதுப்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 

பஞ்சபூத தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் கடந்த 14-ம் தேதி கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை கார்த்திகை தீப திருவிழாவுக்கான தேரோட்டம் நடைபெற உள்ளது. இதற்காக5 அடி உயரமுள்ள ராட்சத கொப்பரை புதுப்பிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 

கொப்பரையில் தீபம் ஏற்றும் போது வெப்பத்தால் சேதமடையாமல் இருக்க மேல்பாகம் மூன்றே முக்கால் அடியும், கீழ்பாகம் இரண்டேமுக்கால் அடியும் கொண்டவாறு, 150 கிலோ எடையில் 20 வளைய ராடுடன் கூடிய செப்பு தகட்டில் செய்யப்பட்டுள்ளது.

இது புதுப்பிக்கப்பட்டு, கொப்பரை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று கொப்பரைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, வரும் 22-ம் தேதி மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்படும் என அறநிலையத்துறை அதிகாரிகள் கூறினர். 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2012/9/19/23/w600X390/thiruvannamalai.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/19/திருவண்ணாமலை-மகாதீப-கொப்பரைக்கு-சிறப்பு-பூஜை-3041751.html
3041747 ஆன்மிகம் செய்திகள் கார்த்திகை சோமவார விரதத்தின் சிறப்பு! Monday, November 19, 2018 01:40 PM +0530  

சோமன் என்றால் சந்திரன் என்று பொருள். பார்வதியுடன் கூடிய சிவபெருமான் என்றும் கூறுவர். சந்திரன், கார்த்திகை மாதம் சுக்லபட்ச அஷ்டமியில் தோன்றினான். தன்னுடைய கொடிய நோய் குணமாக சிவபெருமானை ஆராதனை செய்து, நவக்கிரகங்களில் ஒருவராகத் திகழும் பேறு பெற்றான். அவனது பெயரால் தோன்றியதுதான் சோமவார விரதம். அதுவும் சந்திரன் தோன்றிய இந்தக் கார்த்திகை மாத சோமவாரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்நாளில் சிவதலங்களில் சங்காபிஷேகங்கள் நடைபெறுகின்றன.

திங்கள் கிழமையான இந்த நாளில், சோமனாகிய சந்திரன் தன் பெயரால் இந்த விரதம் புகழ்பெற வேண்டும் என சிவபெருமானைப் பிரார்த்தித்தான். பெருமான் வரமருள, இந்த விரதம் சோமவார விரதமாக சிறப்பு பெற்றது.

தட்சனின் மருமகன்தான் சந்திரன். தட்சனின் இருபத்தியேழு பெண்களையும் மணந்து கொண்டான் சந்திரன். தட்சனோ தனது அனைத்துப் பெண்களையும் சமமாக நடத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். ஆனால் அதை மீறி ரோகிணியுடன் மட்டும் சந்திரன் அன்பாக இருந்தான். எனவே மற்ற 26 பேரும் தட்சனிடம் முறையிட, கோபமுற்ற தட்சன் சந்திரன் தேயக்கடவது என்று சாபம் கொடுத்தான். அதனால் தேய்ந்து கொண்டே வந்த சந்திரன் சிவபெருமானைத் தஞ்சமடைந்தான்.

அவர் சந்திரனைத் தன் திருமுடியில் தாங்கி சோமநாதர் ஆனார். சந்திரசூடராக, சந்திரமெளலீஸ்வரராக ஆனார். இவ்வாறு சிவபெருமான் திருமுடியில் சந்திரன் அமர்ந்ததும் இந்தக் கார்த்திகை சோமவாரத்தில்தான்.

சந்திரன் சிவபெருமானிடம் 14 ஆண்டுகள் சோமவாரம் தோறும் பூஜை செய்து, இரவு கண் விழித்து சிவபுராணம் படித்து காலையில் ஹோமம் செய்து, கலச நீரால் அபிஷேகம் செய்து கணவனும் மனைவியுமாகப் பூஜை செய்பவர்களுக்கு நற்கதி அருள வேண்டும்'' என்று வேண்டினான். எனவே, சோமவார விரதம் இருப்பவர்களின் பாவங்களைப் போக்கி, பகைவர் பயம் அகற்றி, அவர்களை நற்கதி அடையச் செய்வார் சிவபெருமான்.

]]>
பார்வதி, சந்திரன் , சோமன் , தட்சன் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/20/w600X390/sivan_par.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/19/கார்த்திகை-சோமவார-விரதத்தின்-சிறப்பு-3041747.html
3041728 ஆன்மிகம் செய்திகள் சோளிங்கர் மலைக் கோயிலில் கார்த்திகை திருவிழா தொடக்கம் DIN DIN Monday, November 19, 2018 06:06 AM +0530 சோளிங்கர் யோக நரசிம்மர் கோயிலில் கார்த்திகை மாத திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
ஆண்டு முழுவதும் யோக நிலையில் கண்மூடி இருக்கும் யோக நரசிம்மர், கார்த்திகை மாதம் மட்டும் கண் திறப்பார் என்பது ஐதீகம். 
கார்த்திகை திருவிழாவுக்கு முன் புரட்டாசி, ஐப்பசி ஆகிய இரு மாதங்களும் ஸ்ரீஅமிர்தவல்லி தாயார் மலைக்கோயிலில் இருந்து இறங்கி வந்து, கீழே உள்ள லட்சுமி நரசிம்மர் கோயிலில் அருள்பாலிப்பார். 
இது வருடந்தோறும் இரண்டு மாதம் மட்டும் நடைபெறும். இதையடுத்து, ஐப்பசி கடைசி வெள்ளிக்கிழமையில் சிறப்பு உற்சவங்கள் நிகழ்த்தப்பட்டன. திங்கள்கிழமை அமிர்தவல்லி தாயார் மலைக்கு புறப்படுவார். இவரை மலையடிவாரம் வரை சென்று லட்சுமிநரசிம்மர் வழியனுப்புவார். இது வருடந்தோறும் நடைபெறும் உற்சவம் ஆகும்.
இந்நிலையில், இந்தாண்டு கார்த்திகை திரு விழா, பெரியமலை, சிறிய மலை இரு இடங்களிலும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. கண் திறந்த யோக நரசிம்மரை பக்தர்கள் தரிசித்தனர். யோக நரசிம்மருக்கும், யோக ஆஞ்சநேயருக்கும் விசேஷ திருமஞ்சனமும், விசேஷ அலங்காரத்தில் உற்சவங்களும் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அமிர்தவல்லி தாயார், யோக நரசிம்மர், யோக ஆஞ்சநேயர் மூவருக்கும் தங்க ரத உலா நடைபெறும்.
கார்த்திகை மாதம் முழுவதும் யோக நரசிம்மர் கண் திறந்து இருப்பார் என்பதால், இம்மாதம் முழுவதும் காலை 5 முதல் மாலை 6 மணி வரை தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். 
ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணி தரிசனத்துக்காக பக்தர்கள் காலை 3.30 மணி முதலே மலை ஏறத் தொடங்கினர். பெரியமலை, சிறிய மலை இரு கோயில்களிலும் காலை 5 மணிக்கு தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 
விழாவையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விழாவுக்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் க.பெ.அசோக்குமார், செயல்
அலுவலர் ச.சுப்பிரமணியம் உள்ளிட்ட இந்துசமய அறநிலையத் துறையினர் செய்து வருகின்றனர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/19/w600X390/shrilordsakthi.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/19/சோளிங்கர்-மலைக்-கோயிலில்-கார்த்திகை-திருவிழா-தொடக்கம்-3041728.html
3041727 ஆன்மிகம் செய்திகள் திருவண்ணாமலை தீபத் திருவிழாவின் 5-ஆம் நாள்: கண்ணாடி ரிஷப வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரர் வீதியுலா Monday, November 19, 2018 06:05 AM +0530 திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் தீபத் திருவிழாவின் 5-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை கண்ணாடி ரிஷப வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரரும், இரவு வெள்ளி பெரிய ரிஷப வாகனத்தில் ஸ்ரீஅருணாசலேஸ்வரரும் வீதியுலா வந்தனர்.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 14-ஆம் தேதி தொடங்கியது.
 இதையடுத்து, தினமும் காலை வேளைகளில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசந்திரசேகரர் உள்ளிட்ட உத்ஸவர் சுவாமிகள் வீதியுலாவும், இரவு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் பஞ்ச மூர்த்திகள் வீதியுலாவும் நடைபெற்று வருகின்றன.
திருவிழாவின் 4-ஆம் நாளான சனிக்கிழமை இரவு மூஷிக வாகனத்தில் ஸ்ரீவிநாயகர், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான், கற்பக விருட்ச வாகனத்தில் ஸ்ரீஅருணாசலேஸ்வரர், வெள்ளி காமதேனு வாகனத்தில் ஸ்ரீபராசக்தியம்மன், வெள்ளி வாகனத்தில் ஸ்ரீசண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது.
கண்ணாடி ரிஷப வாகனத்தில்...: தீபத் திருவிழாவின் 
5-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை வெள்ளி மூஷிக வாகனத்தில் ஸ்ரீவிநாயகர், கண்ணாடி ரிஷப வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரர் வீதியுலா நடைபெற்றது.
இரவு 10 மணிக்கு மூஷிக வாகனத்தில் ஸ்ரீவிநாயகர், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப் பெருமான், வெள்ளி பெரிய ரிஷப வாகனத்தில் ஸ்ரீஅருணாசலேஸ்வரர், வெள்ளி வாகனங்களில் ஸ்ரீபராசக்தியம்மன், ஸ்ரீசண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் வீதியுலா வந்தனர். 
கோயில் ராஜகோபுரம் எதிரில் இருந்து புறப்பட்ட பஞ்ச மூர்த்திகள் தேரடி தெரு, திருவூடல் தெரு, பே கோபுரத் தெரு, பெரிய தெரு உள்ளிட்ட மாட வீதிகள் வழியாக வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ரா.ஞானசேகர் மற்றும் கோயில் உபயதாரர்கள், ஊழியர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/19/w600X390/shrilordsivasakthi.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/19/திருவண்ணாமலை-தீபத்-திருவிழாவின்-5-ஆம்-நாள்-கண்ணாடி-ரிஷப-வாகனத்தில்-ஸ்ரீசந்திரசேகரர்-வீதியுலா-3041727.html
3041670 ஆன்மிகம் செய்திகள் திருவண்ணாமலையில் நாளை தீபத் திருவிழா தேரோட்டம்: பஞ்ச ரதங்களுக்கு கலசங்கள் பொருத்தம் Monday, November 19, 2018 05:11 AM +0530 திருவண்ணாமலை தீபத் திருவிழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை (நவம்பர் 20) காலை முதல் இரவு வரை பஞ்ச ரதங்களின் தேரோட்டம் நடைபெறுகிறது.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 14-ஆம் தேதி தொடங்கியது. வரும் 26-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் திருவிழாவின் 7-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை பஞ்ச ரதங்களின் தேரோட்டம் நடைபெறுகிறது.
இதையொட்டி, அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்ரீஉண்ணாமுலையம்மன், ஸ்ரீஅருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்படுகின்றன.
ஸ்ரீவிநாயகர் தேரோட்டம்: தொடர்ந்து, காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் விருச்சிக லக்கினத்தில் ஸ்ரீவிநாயகர் தேரோட்டம் தொடங்குகிறது. 
தேரடி தெருவைக் கடந்து கடலைக்கடை சந்திப்புப் பகுதியை விநாயகர் தேர் கடந்து சென்ற பிறகு, 2-ஆவதாக வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான் தேர் புறப்படுகிறது.
ஸ்ரீஅருணாசலேஸ்வரர் தேர்: 3-ஆவதாக பெரிய தேர் எனப்படும் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் தேர் புறப்படுகிறது. 4-ஆவதாக பெண்கள் மட்டுமே இழுக்கும் ஸ்ரீபராசக்தியம்மன் தேரும், 5-ஆவதாக சிறுவர்கள் மட்டுமே இழுக்கும் ஸ்ரீசண்டிகேஸ்வரர் தேரும் கோயில் ராஜகோபுரம் எதிரில் இருந்து புறப்படுகின்றன.
பஞ்ச ரதங்களும் ஒன்றன் பின் ஒன்றாக மாட வீதிகளை வலம் வருகின்றன. நள்ளிரவு 12 மணி வரை தேரடி தெரு, திருவூடல் தெரு, பே கோபுரத் தெரு, பெரிய தெரு உள்ளிட்ட மாட வீதிகளில் வலம் வரும் தேரோட்டத்தைக் காண பல லட்சம் பக்தர்கள் கூடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வழக்கத்தைவிட அதிகமான அளவு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ரா.ஞானசேகர் மற்றும் உபயதாரர்கள், கோயில் ஊழியர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/19/w600X390/ther.jpg பெரிய தேர் எனப்படும் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் தேர் மீது அனுப்பி வைக்கப்படும் கலசம். http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/19/திருவண்ணாமலையில்-நாளை-தீபத்-திருவிழா-தேரோட்டம்-பஞ்ச-ரதங்களுக்கு-கலசங்கள்-பொருத்தம்-3041670.html
3040844 ஆன்மிகம் செய்திகள் தீபத் திருவிழாவின் நான்காம் நாள்: நாக வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரர் வீதியுலா DIN DIN Sunday, November 18, 2018 03:06 AM +0530
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் நான்காம் நாளான சனிக்கிழமை காலை நாக வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரரும், இரவு வெள்ளி காமதேனு வாகனத்தில் ஸ்ரீஅருணாசலேஸ்வரரும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலின் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
அன்று முதல் தினமும் காலை வேளைகளில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசந்திரசேகரர் வீதியுலாவும், இரவு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் பஞ்ச மூர்த்திகள் வீதியுலாவும் நடைபெற்று வருகின்றன.
திருவிழாவின் மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை இரவு மூஷிக வாகனத்தில் ஸ்ரீவிநாயகர், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான், சிம்ம வாகனத்தில் 
ஸ்ரீஅருணாசலேஸ்வரர், வெள்ளி அன்ன வாகனத்தில் ஸ்ரீபராசக்தியம்மன், வெள்ளி வாகனத்தில் ஸ்ரீசண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது.
நாக வாகனத்தில்...: தீபத் திருவிழாவின் 4-ஆம் நாளான சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு வெள்ளி மூஷிக வாகனத்தில் ஸ்ரீவிநாயகர், நாக வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரர் வீதியுலா நடைபெற்றது.
இரவு 10 மணிக்கு மூஷிக வாகனத்தில் ஸ்ரீவிநாயகர், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான், வெள்ளி காமதேனு வாகனத்தில் ஸ்ரீஅருணாசலேஸ்வரர், கற்பக விருட்ச வாகனத்தில் ஸ்ரீபராசக்தியம்மன், வெள்ளி வாகனத்தில் ஸ்ரீசண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் வீதியுலா வந்தனர்.
ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் எதிரில் இருந்து புறப்பட்ட பஞ்ச மூர்த்திகள் தேரடி தெரு, திருவூடல் தெரு, பே கோபுரத் தெரு, பெரிய தெரு உள்ளிட்ட மாட வீதிகள் வழியாக வீதியுலா வந்து மீண்டும் கோயில் எதிரில் நிலைக்கு வந்தடைந்தனர்.
விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ரா.ஞானசேகர் மற்றும் கோயில் உபயதாரர்கள், ஊழியர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.

தீபத் திருவிழாவின் 5-ஆம் நாள்
தீபத் திருவிழாவின் 5-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 18) காலை 9 மணிக்கு மூஷிக வாகனத்தில் ஸ்ரீவிநாயகர், கண்ணாடி ரிஷப வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரர் வீதியுலா நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு வெள்ளி பெரிய ரிஷப வாகனத்தில் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் வீதியுலா நடைபெறுகிறது.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/18/w600X390/annamalayar.JPG தீபத் திருவிழாவின் நான்காம் நாளான சனிக்கிழமை காலை நாக வாகனத்தில் வீதியுலா வந்த ஸ்ரீசந்திரசேகரர். (வலது) வெள்ளி மூஷிக வாகனத்தில் வீதியுலா வந்த ஸ்ரீவிநாயகர். http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/18/தீபத்-திருவிழாவின்-நான்காம்-நாள்-நாக-வாகனத்தில்-ஸ்ரீசந்திரசேகரர்-வீதியுலா-3040844.html
3040843 ஆன்மிகம் செய்திகள் வருண பகவானுக்கு சிறப்பு பூஜை DIN DIN Sunday, November 18, 2018 03:05 AM +0530
கூழமந்தலில் உள்ள நட்சத்திர திருக்கோயிலில் வருண பகவானுக்கு சனிக்கிழமை சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
காஞ்சிபுரத்தை அடுத்த உக்கம்பெரும்பாக்கம்-கூழமந்தலில் நட்சத்திர விருட்ச விநாயகர் கோயில், 27 நட்சத்திர அதிதேவதைகள், சனி, ராகு, கேது என தேவதைகளுக்கான கோயிலாக விளங்கி வருகிறது. 
சதய நட்சத்திரத்தன்று அதன் அதிதேவதையும், பாசமும், அமுத கலசமும் ஏந்தி தங்கத் திருமேனியுடன் அருள்புரியும் வருண பகவானுக்கு சனிக்கிழமை சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. 
புயல், வெள்ளத்திலிருந்து மக்களைக் காக்க வேண்டியும், சீரான மழை வேண்டியும் வருண பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகாதீபாரதனைகள் ஆகியவை நடத்தப்பட்டன. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வருண பகவானை வழிபட்டனர். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/18/w600X390/varunan.jpg சிறப்பு அலங்காரத்தில் வருண பகவான். http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/18/வருண-பகவானுக்கு-சிறப்பு-பூஜை-3040843.html
3040842 ஆன்மிகம் செய்திகள் கார்த்திகை முதல் நாள்: ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவிப்பு DIN DIN Sunday, November 18, 2018 03:05 AM +0530
திருவள்ளூர் பகுதியில் உள்ள கோயில்களில் கார்த்திகை மாதம் முதல் நாளான சனிக்கிழமை, ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து 48 நாள்கள் விரதத்தை கடைப்பிடிக்கத் தொடங்கினர். 
தமிழ் மாதங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மிக மாதமான கார்த்திகை இந்த ஆண்டு சனிக்கிழமை பிறந்தது. இதையொட்டி ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து 48 நாள்கள் கடும் விரதம் இருந்து சபரிமலைக்குச் சென்று வழிபட்டு வருவது வழக்கம். 
இந்நிலையில், திருவள்ளூர் பகுதியில் கார்த்திகை முதல் நாளில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து கொள்வதற்காக தீர்த்தீஸ்வரர் கோயில் வளாகத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் அதிகாலையிலேயே குவிந்தனர். அந்தப் பகுதியில் உள்ள தலைமை குருசாமி ஒவ்வொரு பக்தருக்கும் மாலை அணிவித்தார். 
இதையொட்டி திருவள்ளூர் பஜார் பகுதியில், சந்தனமாலை, துளசிமாலை, ருத்ராட்ச மாலை உள்ளிட்ட பல்வேறு வகையான மாலைகளின் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/18/w600X390/ayyappa.JPG திருவள்ளூரில் உள்ள தீர்த்தீஸ்வரர் கோயிலில் பக்தருக்கு ஐயப்ப மாலை அணிவித்த குருசாமி. (இடது) ஐயப்ப மாலை  அணிவதற்காகாக நீண்ட  வரிசையில் காத்திருந்த  பக்தர்கள். http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/18/கார்த்திகை-முதல்-நாள்-ஐயப்ப-பக்தர்கள்-மாலை-அணிவிப்பு-3040842.html
3040841 ஆன்மிகம் செய்திகள் திருப்பதியில் படி உற்சவம் DIN DIN Sunday, November 18, 2018 03:04 AM +0530
திருப்பதியில் தாசா சாகித்ய திட்டம் மற்றும் தேவஸ்தானம் இணைந்து சனிக்கிழமை படி உற்சவத்தை நடத்தியது.
திருமலை திருப்பதி தேவஸ்தானமும், தாசா சாகித்ய திட்டமும் இணைந்து 3 மாதங்களுக்கு ஒருமுறை திருப்பதியில் படி உற்சவத்தை நடத்தி வருகின்றன. அதன்படி, திருப்பதி மலையடிவராத்தில் உள்ள அலிபிரி பாதாலு மண்டபத்தில் சனிக்கிழமை காலையில் இந்த உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. 
அதிகாலை 4.30 மணிக்கு கோவிந்தராஜர் சத்திரத்தில் இருந்து தாசா சாகித்ய பக்தர்கள் மஞ்சள் ஆடையை அணிந்தபடி பஜனைப் பாடல்களை பாடிக்கொண்டு பாதாலு மண்டபத்தில் கூடினர். அங்கு மந்திராலயம் ராகவேந்திர சுவாமி மடத்தின் பீடாதிபதி சுபுதேந்திர தீர்த்த சுவாமிகள் தலைமை வகித்து, அலிபிரியில் உள்ள முதல் படிக்கு மஞ்சள், குங்குமம் பூசி, பூ மாலைகள் சாற்றி, பழங்களை நிவேதனம் செய்து, கற்பூர ஆரத்தி அளித்து பூஜைகள் செய்தார். 
அதன்பின் தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம் ஆகியவற்றில் இருந்து வந்த தாசா பக்தர்கள் 5 ஆயிரம் பேர் பாத யாத்திரையாக திருமலையை அடைந்து ஏழுமலையானை தரிசித்தனர். படி உற்சவ நிகழ்வில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/18/w600X390/pooja.JPG திருப்பதியில் நடந்த படி உற்சவத்தின்போது, முதல் படிக்கு பூஜை செய்த சுபுதேந்திர தீர்த்த சுவாமிகள். http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/18/திருப்பதியில்-படி-உற்சவம்-3040841.html
3040840 ஆன்மிகம் செய்திகள் மகா பைரவர் கோயிலில் நவ.22இல் தர்ப்பண மண்டப பூமி பூஜை DIN DIN Sunday, November 18, 2018 03:03 AM +0530
செங்கல்பட்டை அடுத்த ஈச்சங்கரணை ஸ்ரீபைரவர் நகரில் அமைந்துள்ள மகா பைரவர் கோயில் வளாகத்தில் தர்ப்பண மண்டபத்துக்கான பூமி பூஜை வரும் 22ஆம் தேதி நடைபெறுகிறது. மகா பைரவர் ஜெயந்தி விழா வரும் 29, 30ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. 
திருவடிசூலம் சூலம் சாலையில் ஸ்ரீபைரவர் நகரில் அமைந்துள்ள மகா பைரவர் கோயிலில் தர்ப்பண மண்டபம் கட்டப்பட உள்ளது. இந்த இடத்திற்கான பூமி பூஜை வரும் 22ஆம் தேதி நடைபெறுகிறது. வரும் 30ஆம் தேதியன்று பைரவாஷ்டமியை முன்னிட்டு, இக்கோயிலில் úக்ஷத்திர பால பைரவருக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. விசேஷ பூஜை, ஹோமம், அபிஷேகங்கள் ஆகியவை நடைபெறவுள்ளன. 
இவ்விழாவை முன்னிட்டு, வரும் 29ஆம் தேதி காலை 10 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் மூலவருக்கு உச்சிக்கால அபிஷேகம் நடைபெறும். அதையடுத்து அன்று மாலை கொடியேற்றமும் மூலவருக்கு மகா தீபாராதனையும் நடைபெறும். 30ஆம் தேதி காலை 6 மணிக்கு பைரவருக்கு நித்ய அபிஷேகம், 10 மணிக்கு உற்சவர் மகா அபிஷேகம், 12 மணிக்கு மூலவருக்கு மகா அபிஷேகம், பிற்பகல் 3.30 மணிக்கு மேல் மகா பைரவருக்கு சிறப்பு ஹோமம், மாலை 5 மணிக்கு மூலவருக்கு பைரவாஷ்டமி சிறப்பு அபிஷேகம், 5.30 மணிக்கு மகா பைரவருக்கு மகா தீபாராதனை ஆகியவை நடைபெறும். அதன் பின், உற்சவர் மாடவீதி உலாவைத் தொடர்ந்து, கொடியிறக்கம் நடைபெறும். 
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை மகா பைரவர் சுவாமிகள், கோயில் நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/18/w600X390/bairavar.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/18/மகா-பைரவர்-கோயிலில்-நவ22இல்-தர்ப்பண-மண்டப-பூமி-பூஜை-3040840.html
3040839 ஆன்மிகம் செய்திகள் கபில தீர்த்தத்தில் சண்டியாகம் விமரிசையாகத் தொடக்கம் DIN DIN Sunday, November 18, 2018 03:03 AM +0530
திருப்பதியில் உள்ள கபிலேஸ்வர ஸ்வாமி கோயிலில் நடைபெற்று வரும் கார்த்திகை மாத ஹோமங்களின் வரிசையில் வெள்ளிக்கிழமை சண்டியாகம் விமரிசையாக தொடங்கியது.
திருப்பதி உள்ள கபில தீர்த்தம் அருவிக்கரையில் கபிலேஸ்வர ஸ்வாமி கோயில் அமைந்துள்ளது. தேவஸ்தானம் நிர்வகித்து வரும் இக்கோயிலில் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு உற்சவ மூர்த்திகளுக்கு ஹோமங்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, வெள்ளிக்கிழமை சண்டியாகம் நடைபெற்றது. 
கோயிலில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் காமாட்சி அம்மனை அலங்காரம் செய்து அமர வைத்து அவர் முன் கலசங்களை ஏற்படுத்தி, அதில் அம்மனை எழுந்தருளச் செய்து, சிவாச்சாரியார்கள் ஹோமம், கலச உத்வாசனா, மகாசாந்தி அபிஷேகம், கலசாபிஷேகம் உள்ளிட்டவற்றை நடத்தினர். இந்த நிகழ்வில் பக்தர்கள் மற்றும் கோயில் அதிகாரிகள் திரளாக கலந்து கொண்டனர். சண்டியாகம் வரும் 24ஆம் தேதி வரை 9 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெற உள்ளது. கட்டணம் செலுத்தி, இந்த வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சிறப்பு பிரசாதங்களை வழங்கி வருகிறது. 


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/18/w600X390/kabila-theeratham.jpg கபில தீர்த்தம் கோயிலில் நடைபெற்ற சண்டி யாகம்.  http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/18/கபில-தீர்த்தத்தில்-சண்டியாகம்-விமரிசையாகத்-தொடக்கம்-3040839.html
3040838 ஆன்மிகம் செய்திகள் திருமலையில் மூத்த குடிமக்களுக்கு நவ.20, 21 தேதிகளில் இலவச தரிசனங்கள் DIN DIN Sunday, November 18, 2018 03:02 AM +0530
திருமலையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் இலவச தரிசனங்களை தேவஸ்தானம் வரும் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் வழங்க உள்ளது.
திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் இரு நாள்களுக்கு மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கைக்குழந்தைகளின் பெற்றோர் ஆகியோருக்கு இலவச தரிசனத்தை வழங்கி வருகிறது. அதன்படி, வரும் 20ஆம் தேதியன்று மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு தரிசனம் வழங்கப்பட உள்ளது. காலை 10 மணிக்கு ஆயிரம் பேர், மதியம் 2 மணிக்கு 2 ஆயிரம் பேர், மாலை 3 மணிக்கு ஆயிரம் பேர் என ஒரு நாளைக்கு 4 ஆயிரம் பேருக்கு தரிசனம் வழங்க உள்ளது. 
அதேபோல், வரும் 21ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை 5 வயது வரையுள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு சுபதம் வழியாக தரிசனம் வழங்கப்பட உள்ளது. தேவஸ்தானம் அளிக்கும் இந்த வாய்ப்பை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

]]>
http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/18/திருமலையில்-மூத்த-குடிமக்களுக்கு-நவ20-21-தேதிகளில்-இலவச-தரிசனங்கள்-3040838.html
3040837 ஆன்மிகம் செய்திகள் நாராயணவனத்தில் இன்று முதல் வருடாந்திர தெப்போற்சவம் DIN DIN Sunday, November 18, 2018 03:02 AM +0530 புத்தூரை அடுத்துள்ள நாராயணவனத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 18) முதல் 22ஆம் தேதி வரை வருடாந்திர தெப்போற்சவம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
நாராயணவனத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயிலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது. இக்கோயிலில் வரும் 18ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை தொடர்ந்து 5 நாள்கள் வருடாந்திர தெப்போற்சவம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. தினந்தோறும் மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை உற்சவமூர்த்திகள் கோயில் அருகில் உள்ள திருக்குளத்தில் அமைக்கப்பட உள்ள தெப்பத்தில் வலம் வர உள்ளனர். இவ்விழாவை முன்னிட்டு 5 நாள்களும் காலை 9 மணி முதல் 10 மணி வரை உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற உள்ளது. 
தெப்போற்சவத்தின் முதல் நாளில் சீதா, லட்சுமணர் சமேத ராமரும், 2ஆம் நாள் ஆண்டாள் நாச்சியாரும், இறுதி 3 நாள்கள் ஸ்ரீதேவி பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வர ஸ்வாமியும் தெப்பத்தில் வலம் வர உள்ளனர். தெப்போற்சவம் முடிந்த பின் மாடவீதியில் உற்சவமூர்த்திகளின் புறப்பாடு நடைபெறும். இதையொட்டி கோயிலில் தேவஸ்தானத்தின் அன்னமாச்சார்யா திட்டத்தின் கீழ் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/18/w600X390/narayanavatham.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/18/நாராயணவனத்தில்-இன்று-முதல்-வருடாந்திர-தெப்போற்சவம்-3040837.html
3040836 ஆன்மிகம் செய்திகள் நாகநாதசாமி கோயிலில் திருவிளக்கு பூஜை DIN DIN Sunday, November 18, 2018 03:01 AM +0530
சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் ஆம்பூர் நகர கிளை சார்பில், 108 சங்காபிஷேகம் மற்றும் திருவிளக்கு பூஜை ஆம்பூர் நாகநாத சுவாமி கோயிலில் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியையொட்டி, கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை நடைபெற்றது. ஐயப்பனுக்கு 108 சங்காபிஷேகம் மற்றும் தீபாராதனை, அன்னதானம் நடைபெற்றது.
தொடர்ந்து மாலை 401 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது. 
ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தலைவர் எம்.மதியழகன், சமாஜத்தின் தேசிய இணைப் பொதுச் செயலாளர் துரைசங்கர், வடமாநில பொதுச் செயலாளர் சிவராமன், வேலூர் மேற்கு மாவட்டத் தலைவர் ஜி.ஸ்ரீதர், மாநில பொதுக்குழு உறுப்பினர் டி. முத்துராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/18/w600X390/light.jpg ஆம்பூர் நாகநாத சுவாமி கோயிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்கள். http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/18/நாகநாதசாமி-கோயிலில்-திருவிளக்கு-பூஜை-3040836.html
3040835 ஆன்மிகம் செய்திகள் காளஹஸ்தியில் போலி நெய் தீபங்கள் விற்கத் தடை Sunday, November 18, 2018 03:01 AM +0530 காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் வாசலில் போலியான நெய் தீபங்களை விற்பதற்கு கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
ஆந்திரத்தில் உள்ள இக்கோயிலில் 4 மாட வீதிகளில் கோபுரங்கள் உள்ளன. இந்த நான்கு கோபுர வாயில்கள் வழியாகவும் பக்தர்கள் கோயிலுக்குள் சென்று வருகின்றனர். கோபுரங்களின் வாயிலில் அர்ச்சனைத் தட்டுகள், நெய் தீபங்கள், பூ மாலைகள் ஆகியவற்றை விற்கும் கடைகள் உள்ளன. 
தற்போது கார்த்திகை மாதம் என்பதால் பக்தர்கள் கோயில் வளாகத்தில் நெய் தீபங்களை ஏற்றி வழிபட்டு வருகின்றனர். அவர்களின் பக்தி உணர்வை அறிந்து வைத்துள்ள சில கடைக்காரர்கள் போலியான நெய் தீபங்களை குறைந்த விலையில் பக்தர்களுக்கு விற்று வருகின்றனர். இதுகுறித்து பல பக்தர்கள் கோயில் நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இதையடுத்து, சனிக்கிழமை முதல் போலி நெய் தீபங்களை விற்க கடைகாரர்களுக்கு கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. இத்தடையை மீறினால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளது. 
 

]]>
http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/18/காளஹஸ்தியில்-போலி-நெய்-தீபங்கள்-விற்கத்-தடை-3040835.html
3040587 ஆன்மிகம் செய்திகள் மீனாட்சிசுந்தரேசுவரர் கோயிலில் கார்த்திகை விழா Sunday, November 18, 2018 12:45 AM +0530
நவ.23- ஆம் தேதி லட்ச தீபம் ஏற்றப்படுகிறது
மதுரை, நவ. 17: மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் கோயிலில் கார்த்திகைத் திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது. கார்த்திகை திருநாளான நவ. 23 ஆம் தேதி கோயிலில் லட்ச தீபம் ஏற்றப்படுகிறது.
கார்த்திகைத் திருவிழா கொடியேற்றத்தையொட்டி மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் கோயிலின் சுவாமி சன்னதி முன்புள்ள கம்பத்தடி மண்டபத்தில் உள்ள தங்கக் கொடிமரத்தில் காளை, சிவலிங்க வடிவம் பொறிக்கப்பட்ட வெள்ளை நிறக்கொடி கட்டப்பட்டிருந்தது. கம்பத்தடி மண்டபத்தின் வலதுபுறம் சுப்பிரமணியபட்டர் என்ற அம்பிபட்டர் காப்புக்கட்டி பூஜைகளை நடத்தினார். கோயில் இணை ஆணையர் என்.நடராஜன் தலைமையில் கொடி மரத்துக்கான பூஜைகள் நடைபெற்றன.
அப்போது கொடிமரத்தின் முன்பு சுவாமி பிரியாவிடையுடனும், அம்மனும் எழுந்தருளினர். வேதமந்திரங்கள் முழங்க யாகசாலையில் கும்ப பூஜைகள் நடைபெற்ற பின்னர் காலை 9.30 மணிக்கு மேல் கொடிமரத்துக்கான பூஜைகள் தொடங்கின. கொடிமரத்தில் நான்கு புறமும் தர்ப்பைப் புற்கள் வைத்து கட்டப்பட்டிருந்தன. பின்னர் சுவாமி, அம்மனைக் குறிக்கும் வகையில் வேட்டி, சேலைகள் அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. அதன்பின்னர் மாலைகள் சாத்தப்பட்டு, காலை 10.40 மணிக்கு மேல் வேதமந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. தீபாராதனைக்குப் பிறகு சுவாமியும், அம்மனும் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர்.
மாலையில் சுவாமி, பிரியாவிடையுடனும், அம்மன் தனியாகவும் ஆடி வீதியில் வலம் வந்து அருள்பாலித்தனர். விழா தொடங்கிய நிலையில் தினமும் சுவாமி, அம்மன் சிறப்பு வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் ஆடி வீதியில் புறப்பாடாகி அருள்பாலிப்பர். 
வரும் நவ. 23 ஆம் தேதி திருக்கார்த்திகையையொட்டி மீனாட்சிசுந்தரேசுவரர் கோயில் வளாகத்தில் லட்ச தீபம் ஏற்றப்படவுள்ளது. அப்போது கோயில் பொற்றாமரைக்குளம், அம்மன், சுவாமி உள், வெளி சன்னதிகளில் தீபங்கள் ஏற்றப்படும்.

கொடியேற்றத்தின் போது பக்தர்களுக்கு அருள்பாலித்த சுவாமி, அம்மன்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/18/w600X390/madurai.jpg மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற கார்த்திகை திருவிழா கொடியேற்றத்தில், திருக்கொடிக்கு தீபாராதனை செய்யும் சிவாச்சாரியார். http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/18/மீனாட்சிசுந்தரேசுவரர்-கோயிலில்-கார்த்திகை-விழா-3040587.html
3040559 ஆன்மிகம் செய்திகள் சபரிமலைக்கு மாலை அணிபவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்!  Saturday, November 17, 2018 03:39 PM +0530  

சபரிமலை ஐயப்பனைத் தரிசிக்க செல்லும் பக்தர்கள் கார்த்திகை மாதம் 1-ம் தேதியான இன்று மாலை அணிவது வழக்கமாகக் கொண்டுள்ளனர். 

குடும்ப சூழ்நிலை உள்ளிட்ட ஏதேனும் காரணத்தால் மாலை அணிய முடியாவிட்டால், கவலைப்பட வேண்டியதில்லை. சனிக்கிழமை அல்லது உத்திர நட்சத்திர நாளில் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கலாம். 

அருகில் உள்ள கோயில் அர்ச்சகர் அல்லது குருசாமி கையினால் மாலை அணிந்துகொள்ளலாம். ருத்திராட்ச மாலையோ அல்லது துளசி மணி மாலையோ அணியலாம். மாலை அணிந்து கோயிலை வலம் வந்து தேங்காய் உடைத்து சுவாமிகளை வணங்க வேண்டும். 41 நாட்கள் விரதம் இருப்பது உத்தமமானது. 

ஐயப்ப மாலை அணிபவர்கள் பின்பற்ற வேண்டியவை..

• ஐயப்ப பக்தர்கள் என்பதை தனித்துவப்படுத்துவதற்கு கருப்பு அல்லுது நீல நிற ஆடையே அணிந்துகொள்ள வேண்டும். 

• மாலை அணிபவர்கள் செருப்பு அணியக்கூடாது. 

• கட்டில், மெத்தையில் படுத்து உறங்கக்கூடாது. 

• தலையணை பயன்படுத்தக்கூடாது. 

• மாமிசம் மற்றும் மதுபானம் எடுத்துக்கொள்ளக்கூடாது. 

• மற்றவர்களுக்கு தீங்கு உண்டாக்கக்கூடிய செயல்களை செய்தல் கூடாது. 

• பொய் சொல்லுதல், பொறாமை, ஆசை, தாம்பத்யம் ஆகியவை தவிர்க்க வேண்டும். 

• வீட்டில் மரணம் ஏற்படும்பட்சத்தில் மாலையைக் கழற்றிவிட வேண்டும். அந்த ஆண்டு மலைக்குச் செல்லக்கூடாது. 

• பணி காரணமாக வெளியில் செல்லும் பக்தர்கள் சாலையில் மரண ஊர்வலத்தைக் காண நேர்ந்தால் வீட்டிற்கு வந்து கோமியம் தெளித்து நீராடிவிட்டு அதன்பிறகே பூஜை செய்ய வேண்டும்.

• சபரிமலைக்கு வீட்டிலிருந்து கிளம்பும்போது வீட்டையோ மனைவி, குழந்தைகளையோ, பெற்றோரையோ திரும்பிப் பார்க்காமல் கிளம்ப வேண்டும். 

• மலைக்குச் செல்ல வேண்டும் என்ற ஆவலில் விரதமிருக்காமல் பம்பைக்கு சென்று மாலை அணிந்து  18 படி ஏறுதல் பாவமாகும்.

• முன்னதாகவே மாலைக்குச் செல்பவர்கள் ஊர் திரும்பிய பிறகும், மகரவிளக்கு காலம் முடியும் வரை தொடர்ந்து விரதம் அனுஷ்டிக்க வேண்டும். 
 

]]>
ஐயப்பன், கார்த்திகை, மாலை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2012/11/1/13/w600X390/sabarimalai.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/17/மாலை-அணிபவர்கள்-பின்பற்ற-வேண்டிய-விதிமுறைகள்-3040559.html
3040556 ஆன்மிகம் செய்திகள் மலேசியாவில் ஒரு சபரிமலை!  DIN DIN Saturday, November 17, 2018 02:57 PM +0530  

"கார்த்திகை மாதம் மாலையணிந்து நேர்த்தியாகவே விரதமிருந்து பார்த்தசாரதியின் மைந்தனே உனை பார்க்க வேண்டியே தவமிருந்து...'' என்றெல்லாம் பாட்டுப் பாடி ஆட்டம் போட்டுச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் அறிவார்கள் ஐயப்ப மகிமையை. அப்படி ஓர் ஆனந்த அனுபவத்தைச் சந்தித்தவர்தான் கிருஷ்ணன் நாயர். அந்த அனுபவம்தான் "தனிமலை ஐயப்பன்' என்ற தனி பெயரோடு புகழ் பெற்று விளங்கும் ஆலயம் அமைய அடித்தளமாக மாறியது. இந்த ஆலயம் இருப்பது மலேசியாவில். பத்துமலையில் இருந்து பத்து மைல் தொலைவில் உள்ளது.

கிருஷ்ணன் நாயர் தீவிரமான ஐயப்ப பக்தர். அவர் வசித்த பத்துமலை இந்தியன் செட்டில்மெண்ட் பகுதியில் அமைந்திருந்தது. நகருக்கு ஒதுக்குப்புறமாக அமைந்திருந்தது அந்தப் பகுதி. அவர் வசித்த பகுதியில் புதிய குடியிருப்புகள் முளைத்தன. மக்கள் நடமாட்டம் அதிகரித்தது. பெண்கள் நடமாட்டமும் அதிகரிக்க ஐயப்பனை வைத்து வணங்க ஒரு பவித்ரமான சூழல் இல்லையே எனக் கவலையுற்றாராம். இந்த ஏக்கத்திற்கான பதில் தூக்கத்தில் கிடைத்தது கனவு வழியாக.

"நான் இவ்விடத்தில் இருக்க விரும்பவில்லை. பத்துமலைக்கு அருகில் உள்ள தனிமலையில் என்னை எழுப்பி வை'' என்பதுதான் கனவு வழி உத்தரவு. காலை புலர்ந்ததும் கனவில் வந்த இடம் நோக்கி விரைந்தார் கிருஷ்ணன் நாயர். அவ்விடம் பெரும் காடாகவும், இரண்டடி உயரத்திற்கு சகதியும் சேறும் நிறைந்தும், காட்டுப் பன்றி, விஷப்பாம்புகள் நடமாடும் இடமாகவும் இருந்தது.

இறைவனை அடைவதென்பது பக்தர்களுக்கு எளிதான காரியம் அல்ல! இந்த சோதனைகளை எதிர்கொள்வதில் உண்மையான பக்தர்கள் பின்வாங்குவதே இல்லை. தன் நண்பர் மேனனோடு, ஐயப்ப பக்தர்கள் சிலரைத் துணைக்கு அழைத்துக்கொண்டு அவ்விடத்தைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தார் கிருஷ்ணன் நாயர். தனிமலையின் அடிவார குகைப் பகுதி ஓரளவுக்கு மக்கள் நடமாடக் கூடிய அளவிற்கு சுத்தமானது. இந்த அரியத் தொண்டிற்கு அவரோடு தோள் கொடுத்தவர்களில் ஆ சூன் என்ற சீனரும் முக்கியமானவர். சுத்தம் செய்யப்பட்ட இடத்திற்கு தன் இல்லத்தில் இருந்த ஐயப்பனை நாள், திதி,  நட்சத்திரம், யோகம், கரணம் எல்லாம் ஆராய்ந்து சுபவேளை கூடிய சுபநாளில் ஊர்வலமாக எடுத்துச் சென்றார். அதே நன்னாளில் ஆகம விதிகளின்படி, குருமார்கள் உதவியோடு தனிமலையில், ஐயப்பனை எழுந்தருளச் செய்தார்கள்.

இது நடந்தது 1975 இல். தனிமலையில் குடிகொண்ட ஐயப்பனுக்கு, தனியாளாக தங்கி நித்திய பூஜைகளை செய்து வந்தார் கிருஷ்ணன்நாயர். நாளடைவில் பக்தர்கள் வரவு கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்ததும், அவர்கள் தந்த நிதி உதவியோடு கோவில் விரிவடைந்தது. இக்கோவிலுக்கென்று இன்னும் சில சிறப்புகள் இருக்கின்றன. குகைக் கோயிலின் பக்க சுவர்களில் இயற்கையாக அமைந்த விநாயகர் உருவம், ஆதிசேஷனுடன் அரங்கநாதன் தோற்றம் மற்றும் அன்னை காளியம்மன் திருவுருதோற்றம், சிவலிங்க வடிவமும் பக்த அன்பர்களை மெய்சிலிர்க்க வைக்கும்.

அதோடு, தனிமலை ஐயப்பனுக்கென்று தனி மகிமையே இருக்கிறது. தீராத நோய்களை எல்லாம் தீர்த்து வைப்பான் ஐயப்பன் என்ற ஆழமான நம்பிக்கை இருக்கிறது. இக்கோயிலில் விநாயகருக்கென்று தனி ஆலயம், அன்னை தேவிக்காக சக்தி ஆலயம், தணிகைமலையில் குடி கொண்ட முருகன், இந்த தனிமலையிலும் தனி ஆலயத்தில் வீற்றிருக்க, மூலஸ்தானத்தில் பதினெட்டு படிகளுடன் நடு நாயகமாக ஐயப்பன் வீற்றிருக்கும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கும் ஆனந்த அனுபவம்.

- ஸ்ரீ கிருஷ்ணன்

]]>
கிருஷ்ணன் நாயர், சபரிமலை, ஐயப்பன், பத்துமலை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/17/w600X390/ayyapan.gif http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/17/மலேசியாவில்-ஒரு-சபரிமலை-3040556.html
3040540 ஆன்மிகம் செய்திகள் மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் மாலை அணியத் திரண்ட ஐயப்ப பக்தர்கள் Saturday, November 17, 2018 01:14 PM +0530  

சென்னை மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் கார்த்திகை முதல் தேதியான இன்று காலை முதல் மாலை அணியப் ஐயப்ப பக்தர்கள் குவிந்து வருகின்றனர். 

ஆண்டுதோறும் சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் கார்த்திகை மாதம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுவது வழக்கம். அதன்படி கார்த்திகை மாதத்தின் முதல் நாளான இன்று கருப்பு மற்றும் நீல நிறத்தில் உடை அணிந்து, பத்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மாலை அணிந்து வருகின்றனர். 

மகாலிங்கபுரத்தில் ஐயப்ப பக்தர்கள் 'சுவாமியே சரணம் ஐயப்பா சுவாமியே சரணம் ஐயப்பா' என்ற கோஷமிட்டபடி மாலை அணிந்து வருகின்றனர்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/17/w600X390/mahalingam.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/17/மகாலிங்கபுரம்-ஸ்ரீ-ஐயப்பன்-கோயிலில்-மாலை-அணியத்-திரண்ட-ஐயப்ப-பக்தர்கள்-3040540.html
3040546 ஆன்மிகம் செய்திகள் பத்து திருக்கரங்களுடன் காட்சிதரும் தசபுஜ ஐயப்பன்! Saturday, November 17, 2018 01:11 PM +0530  

பத்து திருக்கரங்களுடன் காட்சிதரும் தசபுஜ ஐயப்பன் ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து தேவிப்பட்டணம் செல்லும் வழியில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. இது,  தமிழகத்தின் சபரிமலை எனவும் போற்றப்படுகிறது. 

சபரிமலையில் ஐயப்பன் கோயில் அமைப்பைப் போன்றே இங்கேயும் கட்டப்பட்டுள்ளது. இரண்டடுக்குகளாக அமைந்த இக்கோயிலின் மேல்பகுதியில் ஐயப்பன் பாலகனாக காட்சி தருகிறார். இங்குள்ள பஞ்சலோக மூர்த்தியான ஐயப்பன் சிலை கேரளத்தில் செய்யப்பட்டது. 

கோயிலின் சந்நிதி முன் 18 படிகளும், அருகில் இரண்டு புலி வாகனங்களும் அமைந்துள்ளன. காவல் தெய்வங்களாக கருப்பண்ணசாமி மற்றும் கருப்பாயி ஆகியோர் உள்ளனர். இங்கு மஞ்சள்மாதா சந்நிதியும் உள்ளன. சபரிமலை அமைப்பிலேயே துவார பாலகர்களும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் நடை திறக்கும் நாட்களிலேயே இங்கும் கோயில் நடை திறக்கப்படுகிறது. சபரிமலை முறைப்படியே இங்கும் பின்பற்றப்படுகிறது. 

ஐயப்பன் தவநிலையில் இருப்பவர் என்பதால் கோயில் நடை அடைக்கும்போது சுவாமிக்கு விபூதி அலங்காரம் செய்கின்றனர். மீண்டும் கோயில் நடை திறக்கும்போது விபூதி அலங்காரம் கலைத்து, அதையே பக்தர்களுக்கு பிரசாதமாகத் தருகின்றனர். 

இக்கோயிலின் கீழ் தளத்தில் வானபிரஸ்த நிலையில் பாலகன் ஐயப்பன் (சபரிமலை), பூரணையுடன் இல்லறக் கோலம் (ஆரியங்காவு), இரண்டு கால்களையும் மடக்கி, கையில் அக்னி ஏந்தி யோகப்பட்டை அணிந்து பூரணா, புஷ்கலாவுடன் ஐயப்பன் (அச்சன் கோயில்) ஆகிய மூன்று நிலைகளில் ஐயப்பனைத் தரிசிக்கலாம். மேலும், இத்தலத்தில் பத்து கைகளுடன் அருளும் தசபுஜ ஐயப்பனுக்கும் சிலை வடித்துள்ளனர். ஐயப்பனை இத்தகைய நிலையில் காண்பது மிகவும் விசேஷமானதாகும். 

ஐயப்பனை மணக்க விரும்யி மஞ்சள் மாதாவுக்குத் தனி சந்நிதி உள்ளதால், திருமணத்தடை உள்ள பெண்கள் இங்கு வந்து மஞ்சள் பொடி தூவி வஸ்திரம் சாத்தி வழிபடுகின்றனர். இதனால் திருமண தடை நீங்குவதாக நம்பிக்கை. மழலை பாக்கியம் வேண்டும் தம்பதியர் இங்குள்ள ஐயப்பனுக்கு கழுத்தில் மணி கட்டி வணங்குகின்றனர். 

கார்த்திகை மாதத்தின் முதல் நாளான இன்று ஐயப்ப பக்தர்கள் அனைவரும் தமிழக சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாலை அணிந்து வருகின்றனர். 

]]>
ராமநாதபுரம் , தசபுஜ ஐயப்பன் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/17/w600X390/iyyappan.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/17/பத்து-கைகளுடன்-அருளும்-தசபுஜ-ஐயப்பன்-3040546.html
3040536 ஆன்மிகம் செய்திகள் கார்த்திகை முதல் நாளான இன்று மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்  DIN DIN Saturday, November 17, 2018 11:21 AM +0530  

கார்த்திகை முதல் நாளான இன்று ஐயப்ப பக்தர்கள் அனைவரும் இன்று காலை முதல் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கி வருகின்றனர். இதனால், ஐயப்பன் கோயில்களிலும், மற்ற கோயில்களிலும் ஐயப்பப் பக்தர்கள் குவிந்துள்ளனர். 

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மண்டல பூஜைக்காக நேற்று மாலை கோயில் நடை திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று காலை ஐயப்பனுக்குச் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. 

கார்த்திகை மாதம் பிறந்ததை முன்னிட்டு கடல் மற்றும் ஆறுகளில் இன்று காலை முதல் புனித நீராடி ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து சுவாமியே சரணம் ஐயப்பா என்ற பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பி வருகின்றனர். 

கன்னிசாமிகளுக்கு குருசாமிகள் மாலை அணிவித்தனர். வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான ஐயப்பப் பக்தர்கள் கன்னியாகுமரிக்கு வந்து மாலை அணிந்தனர். 10 வயதுக்குட்பட்ட சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை நீலம், கருப்பு நிற ஆகிய நிறங்களில் உடை அணிந்து மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கியுள்ளனர். 


 

]]>
ஐயப்ப பக்தர்கள், விரதம், கார்த்திகை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/11/15/w600X390/sabarimalai.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/17/கார்த்திகை-முதல்-நாளான-இன்று-மாலை-அணிந்து-விரதத்தைத்-தொடங்கிய-ஐயப்ப-பக்தர்கள்-3040536.html
3039963 ஆன்மிகம் செய்திகள் திருப்பரங்குன்றம் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம் Friday, November 16, 2018 06:10 PM +0530  

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டிற்கான கார்த்திகை தீப திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

நவம்பர் 24-ம் தேதி வரை பத்து நாட்கள் இந்தத் திருவிழா நடைபெறுகிறது. கொடியேற்ற நிகழ்ச்சியையொட்டி நேற்று காலை முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்றது. அதன் பின் கோயில் கொடி மரத்திற்குத் தீபாராதனை காட்டப்பட்டுக் கொடியேற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

விழாவின் சிகர விழாவாக 22-ம் தேதி பட்டாபிஷேகமும், 23-ம் தேதி காலை தேரோட்டமும், மாலை மகா தீபமும் ஏற்றப்படுகிறது. 24-ம் தேதி தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/26/w600X390/murugan1.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/16/திருப்பரங்குன்றம்-கோயிலில்-கார்த்திகை-தீப-திருவிழா-கொடியேற்றம்-3039963.html
3039980 ஆன்மிகம் செய்திகள் கும்பகோணம் நாகேஸ்வரர் ஆலயத்தில் துலா ஸ்நானம் கடை முழுக்கு தீர்த்தவாரி பெருவிழா Friday, November 16, 2018 06:07 PM +0530 கும்பகோணம், ஸ்ரீ பிரஹன்நாயகி சமேத ஸ்ரீ நாகேஸ்வரர் ஆலயத்தின் துலாஸ்நானம் - கடைமுழுக்கு தீர்த்தவாரி பெருவிழா இன்று காலை 12 மணிக்கு மேல், காவிரி ஆற்றின் பகவத் படித்துறையில்   நடைபெற்றது. 

இவ்விழாவினை முன்னிட்டு, ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள், பஞ்சமூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் வீதிப் புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

 

- குடந்தை. ப.சரவணன் 9443171383

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/16/w600X390/IMG-20181116-WA0014.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/16/கும்பகோணம்-நாகேஸ்வரர்-ஆலயத்தில்-துலா-ஸ்நானம்-கடை-முழுக்கு-தீர்த்தவாரி-பெருவிழா-3039980.html
3039978 ஆன்மிகம் செய்திகள் கடுமையான சனி தோஷத்தால் கஷ்டப்படுகிறீர்களா? முடவன் முழுக்கில் துலா ஸ்நானம் செய்யுங்க! DIN DIN Friday, November 16, 2018 05:39 PM +0530  

இன்றோடு ஐப்பசி மாதம் முடிவடைகிறது. துலா மாதம் எனப்படும் ஐப்பசி மாதம் முப்பது நாளும் காவிரி ஆற்றில் துலா ஸ்நானம் செய்வது சகல பாவங்களையும் போக்கும் என்றும் இந்த மாதத்தில் காவிரியில் அனைத்துப் புண்ணிய நதிகளும் வந்து கலப்பதால் இந்த மாதத்தில் காவிரியில் நீராடுவது அனைத்துத் தீர்த்தங்களிலும் நீராடிய பேறு கிடைக்கும் எனப் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. ஐப்பசி மாத கடைசி நாளன்று காவிரியில் மேற்கொள்ளப்படும் புனித நீராடல் “கடை முகம்/கடை முழுக்கு”  என்றும் கார்த்திகை மாதம் முதல் நாளன்று மேற்கொள்ளப்படும் புனித நீராடல் “முடவன் முழுக்கு” என்றும் சொல்லப்படுகிறது. அதன்படி இன்று ஐப்பசி மாதத்தின் கடைசி நாளான கடைமுகம் ஆகும். நாளை கார்த்திகை மாதத்தின் முதல் நாளில் கடைமுக புண்ணிய காலமாக அனுஷ்டிக்கப்படுகிறது.  

முடவன் முழுக்கு

புராண காலத்தில் ஒரு முடவன் ஒருவர் எப்படியாவது ஐப்பசி மாதத்தில் துலா காவேரி ஸ்நானம் செய்யவேண்டும் என்று நீண்ட தூரத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு நடந்து வந்துகொண்டிருந்தார். அவர் கால் ஊனத்துடன் நடந்து வந்ததால் அவர் மெதுவாக நடந்து மாயவரம் எனும் மயிலாடுதுறையை அடைவதற்குள் ஐப்பசி மாதத்தின் கடைசி நாளான கடைமுகமும் வந்துவிட்டது. அன்று இரவுதான் அவரால் மயிலாடுதுறையை அடைய முடிந்தது.

ஐப்பசி மாதம் கடைசி நாளன்று காவிரியில் புனிதநீராட முடியவில்லை. எனவே அவர் அந்த தலத்து இறைவனான மயூரநாத ஸ்வாமியிடம் “ஐப்பசி மாதமும் முடிந்து விட்டது. ஆனால் என்னால் காவிரியில் நீராட முடியாமல் போனதே” என்று முறையிட்டார். பிறகு மனக்கவலையுடன் அன்று இரவு அங்கே உள்ள மண்டபத்தில் உறங்கினார்.

அவனது கனவில் தோன்றிய இறைவன் அந்த முடவனுக்குக் காட்சி தந்து, மனம் வருந்தவேண்டாம். கார்த்திகை முதல் தேதியாகிய நாளை காலை நீ காவிரியில் நீராடினால் ஐப்பசி மாதத்தில் நீராடிய புனித பலனை அடையலாம் என்று கூறிவிட்டு மறைந்துவிட்டாராம். அதன்படி அந்த முடவன் கார்த்திகை மாதம் முதல் நாளன்று காவிரியில் புனித நீராடி முக்தியடைந்தார் என்றும் இதுவே “முடவன் முழுக்கு‘ பெயர் வரக் காரணம் என்றும் கூறப்படுகிறது.

அதுமுதல் ஐப்பசி மாதத்தில் காவிரியில் புனித நீராட இயலாதவர்கள் கார்த்திகை முதல்தேதி அன்று துலாக்கட்டக்காவிரியில் நீராடினால் அதே பலனைப்பபெறலாம் என்ற ஐதீகம்.

துலா காவேரி மஹாத்மியம்

ஆதியில் உமாதேவிக்கு ஸ்ரீ பரமேஸ்வரன் சொன்ன காவேரி மகாத்மியத்தை, தேவ வன்மன் என்ற அரசனுக்கு, சுமத்திரங்கி என்ற ரிஷி சொல்லத் தொடங்குகிறார். ஒரு சமயம் பார்வதி-பரமேஸ்வரர் ஒரு நந்தவனத்தில் தங்கியிருந்தபோது அங்குப் பறவைகள் வடிவில் வந்த நதி தேவதைகள், துலா மாதத்தில் காவேரியில் ஸ்நானம் செய்துவிட்டு அவ்விருவரையும் தரிசிக்க வந்தன. அவர்கள் வேண்டிய வரங்கள் எல்லாவற்றையும் தந்த ஈஸ்வரன், மேலும் கூறலானார்..

"கங்கைக்கு நிகரான காவிரியில் நீராடினாலும், தரிசித்தாலும், அதனைப் பக்தியுடன் தொட்டாலும் அதன் கரையில் தானம், தர்ப்பணம் செய்தாலும் எல்லாப் பாவங்களும் விலகி, புண்ணியம் கிட்டும். இதன் கரைகளில் காசிக்குச் சமமான ஸ்தலங்களும் இருக்கின்றன. நினைத்ததைத் தரும் சிந்தாமணியான காவேரியின் பெருமையை இன்னும் சொல்கிறேன் கேள்" என்றார். அஸ்வமேத யாகம் செய்யத் தொடங்கிய அரிச்சந்திர மகாராஜாவை, முனிவர்கள், பிராயச்சித்தமாக துலா மாதத்தில் காவிரியில் நீராடிவிட்டு வரச்சொன்னார்கள்.

நாத சந்மா என்பவன், பரம பதிவ்ரதையான அனவித்யை என்பவளுடன் காவேரி ஸ்நானம் செய்வதற்காகவும் இருவரும் மோக்ஷ சாம்ராஜ்யத்தைப் பெற வேண்டியும், கௌரி மாயூர க்ஷேத்திரத்தை நோக்கி வந்தான். முனிவர்கள், தங்கள் பத்தினிகளுடனும், புத்திரர்களுடனும் தங்கி, ஹோமாக்னி செய்து, பலவித தானங்களை செய்துவரும் அந்த மோக்ஷ புரியில் நாமும் தங்கி நற்கதி பெறுவோம் என்றான் நாதசன்மன். அப்படியானால். காவேரி, மற்ற எல்லாத் தீர்த்தங்களை விட எவ்வாறு உயர்ந்தது என்று, அனவித்யை கேட்க, நாதசன்மனும் கூறத்தொடங்கினான்.

காவிரி உருவான கதை

காவேரன் என்ற அரசன், தனக்குப் புத்திர பாக்கியம் இல்லாததால் பிரம்மாவைக் குறித்துத் தவம் செய்தான். பிரம்மாவானவர், "உனக்குப் புத்திர பாக்கியம் இல்லாவிட்டாலும், ஒரு குழந்தையை அளிக்கிறேன்" என்று கூறி, தன் மனத்தால் ஒரு பெண் குழந்தையை உண்டாக்கி அவனிடம் அளித்தார். காவேரி என்ற பெயரில் அவனிடம் வளர்ந்த அப்பெண், தகுந்த கணவனை வேண்டித் தவம் செய்யலானாள். பின்னர், அகஸ்திய முனிவரைக் கண்ட காவேரியானவள், இவரே தனது மணாளர் ஆவார் என்று நினைத்து, லோபாமுத்ரா என்ற பெயருடன் அவரை திருமணம் செய்துகொண்டவுடன், அவள் விரும்பியபடியே, நதி ரூபமாகி, பிற நதிகளுக்கும் மனிதர்களுக்கும் ஏற்பட்ட பாவங்களை நீக்கவும், மோக்ஷத்தை அளிக்கவும் மறு அம்சமாகத் திகழுமாறு, அகஸ்த்ய ரிஷி அருளினார்.

துலா மாதத்தில் காவிரியில் ஸ்நானம் செய்யும் முறைகளை, நாதசன்மன் விளக்கினார். உதய காலத்தில் நியமத்துடன் எழுந்தும், சிவபூஜை செய்தும் தீய பழக்கங்களை நீக்கியும், விரதத்துடனும் பரமேஸ்வர தியானத்துடன் இருக்க வேண்டும். மூன்றரைக்கோடி தீர்த்தங்கள் துலா மாதத்தில் காவிரியில் வந்து சேருவதால், இதில் ஸ்நானம் செய்வதன் மூலம், அழகு, ஆயுள், ஆரோக்கியம், செல்வம், கல்வி, வலிமை, மாங்கல்ய பாக்கியம். புத்திர பாக்கியம் முதலியவை சித்திக்கும். இதைக் காட்டிலும் புண்ணியச் செயல் எவ்வுலகிலும் இல்லை. எனவே, ஜன்மத்தில் ஒரு முறையாவது, துலா ஸ்நானம் செய்ய வேண்டும்." பிறகு இருவரும் துலா ஸ்நானம் செய்து, ஸ்ரீ அபயாம்பிகையையும் ஸ்ரீ கௌரி மாயூர நாதரையும் தரிசித்து மோக்ஷம் பெற்றனர்.

விஷ்ணுவின் வீரஹத்தி போக்கிய துலா ஸ்நானம்

துலா மாதக் கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசியன்று காலையில் நல்லெண்ணெய் தேய்த்துக்கொண்டு வெந்நீரில் ஸ்நானம் செய்து, அதன் பிறகே, காவேரி ஸ்நானம் செய்ய வேண்டும். தீராத தலைவலி முதலிய உபாதைகளும் இதனால் நீங்கும் என்று பரமசிவனே சொல்லியிருக்கிறார். நரகாசுரனை சம்ஹரித்தவுடன் வீரஹத்தி தோஷம் ஏற்பட்டதால், சிவபெருமான் அருளியபடி, மகாவிஷ்ணு காவேரி ஸ்நானம் செய்து, அப்பாவத்தைப் போக்கிக் கொண்டார்.

ப்ருகு முனிவரின் புத்திரியாகத் தோன்றிய மகா லக்ஷ்மி, காவேரி ஸ்நானம் செய்து தனது சுய வடிவம் பெற்று, மகாவிஷ்ணுவை அடைந்தாள். காவேரி ஸ்நானம் செய்த பூமா தேவி, யம தர்மனிடம், " தான தர்மங்கள் செய்யாமலும், பித்ரு காரியங்களைச் செய்யாமலும் பாவங்களைச் சுமப்பவர்களை உன் உலகத்திற்கு அழைத்துக்கொள். காவேரி ஸ்நானம் செய்தவர்களையும் அதன் மகிமையைக் கேட்டவர்களையும் என்னிடம் விட்டுவிடு." என்று சொன்னவுடன் எமனும் அதன்படியே செய்வதாக வாக்களித்தான்.

ஒரு முறை அகத்திய முனிவரிடம் காவேரி எடுத்தெறிந்து பேசியதால் கோபம் கொண்ட அகத்திய முனிவர் காவேரியை தன் கமண்டலத்தில் அடைத்து வைக்க, இதைக் கண்ட தேவர்கள், விநாயகரிடம் முறையிட, விநாயகப்பெருமான் காக்கை உருவத்தில் வந்து, அகத்தியர் முனிவரின் கமண்டலத்தை தள்ளிவிட்டார். விக்னங்களை போக்கும் விக்னேஷ்வரனால் காவேரி தாய் மீண்டும் பரந்துவிரிந்து ஓடினாள். 

காவிரியின் வேறு பெயர்கள்

தட்சிணகங்கை என்று போற்றப்படும் காவேரிக்குப் பொன்னி, விதிசம்பூதை, கல்யாணி, சாமதாயினி, கல்யாண தீர்த்தரூபி, உலோபமுத்ரா, சுவாசாஸ்யாமா, கும்பசம்பவ வல்லவை, விண்டுமாயை, கோனிமாதா, தக்கணபதசாவணி எனப் பல பெயர்கள் உள்ளன.

கங்கையின் பாபம் போக்கிய காவிரி

காவேரி நதி ஒரு புண்ணிய நதியாகும். இதில் ஸ்நானம்(நீராடினால்) செய்தால் பாவங்கள் நீங்கும். இதை மக்கள் உணர்வதற்குப் புராணத்தில் ஒரு சம்பவம் இருக்கிறது. மக்கள் தங்களுடைய பாவங்களைப் போக்க கங்கையில் நீராடி நீராடி கங்கைக்கே பாவம் அதிகமாகச் சேர்ந்து தோஷம் ஏற்பட்டது. தன் பாவங்கள் தீர என்ன செய்ய வேண்டும்? என்று விஷ்ணு பகவானிடம் கேட்டாள் கங்கை. அதற்கு ஸ்ரீமகாவிஷ்ணு, “நீ காவேரி நதியில் நீராடு. உன் பாவம் நீங்கும்” என்றார். 

அன்ய க்ஷேத்ரே க்ருதம் பாபம் புண்யக்ஷேத்ரே விநச்யதி |

புண்ய க்ஷேத்ரே கிருதம் பாபம் வாரனாச்யாம்  விநச்யதி |

வாரனாச்யாம் க்ருதம் பாபம் கும்பகோனே  விநச்யதி |

கும்பகோனே க்ருதம் பாபம் காவேரி ஸ்நானே விநச்யதி |

என்று காவேரி ஸ்நானத்தின் மகிமையை வேதம் போற்றுகிறது. அதன்படியே ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத அமாவாசையன்று கங்காதேவி காவேரியில் நீராடி மக்கள் தன்னிடம் கரைத்த பாவங்களைப் போக்கிக் கொள்கிறாள் என்று புராண இதிகாசங்களில் போற்றப்படுகின்றது.

துலா காவேரி ஸ்நானம் செய்யும்முன் தகுந்த புரோகிதர்களை கொண்டு ஸ்நான ஸங்கல்பம் செய்துகொள்வது சிறந்தது. முடியாதவர்கள் கீழ்க்கண்ட ஸ்லோகத்தைக் கூறி துலா ஸ்நானம் செய்வது உசிதம். 

"கங்கேச யமுனே சைவ

கோதாவரி சரஸ்வதீ

நர்மதே சிந்து காவேரீ

ஜலேஸ்மின் சன்னிதிம் குரு"


"கவேர கன்யே காவேரி, சமுத்ர மகிஷிப் பிரியே

தேகிமே பக்தி முக்தி தவம் சர்வ தீர்த்த ஸ்வரூபிணி "

ஜோதிடத்தில் துலா காவேரி ஸ்நானம் செய்யும் அமைப்பு யாருக்கு?
ஜோதிடத்தில் ஒன்பதாம் வீட்டை தர்மஸ்தானம் எனச் சிறப்பாக கூறப்படுகிறது. எனவே தீர்த்த யாத்திரை போன்ற புண்ணிய காரியங்கள் செய்ய லக்கினமும் ஒன்பதாம் பாவமும் பலமான தொடர்பில் இருக்கவேண்டும். ஜாதகத்தில் பன்னிரண்டாம் பாவத்தை அயன சயன போக மோக்ஷ ஸ்தானம் எனப் போற்றப்படுகிறது.

கால புருஷனுக்கு தனுர் ராசி ஒன்பதாம் பாவமும் மீனம் பன்னிரண்டாம் பாவமும் ஆகும். எனவே அதன் அதிபதியான குரு தர்ம காரியங்கள் மற்றும் தீர்த்த யாத்திரை போன்ற ஆன்மீக பயணங்களுக்கு செய்ய முக்கிய பங்கு வகிக்கிறார். ஜாதகத்தில் ஒன்பதாம் அதிபதி அல்லது கால புருஷ ஒன்பதாம் அதிபதி ஜலராசியில் இருந்து சுபக்கிரகத்தின் பார்வை பெரும் போது அந்த ஜாதகன் புனித பயணங்களை மேற்கொள்வான். மேலும் புனித நதியில் நீராடும் பாக்கியம் பெறுவான்.

குரு பகவான் ஒன்பதாம் வீட்டைப் பார்த்தாலும் ஒன்பதாம் அதிபதியும் பத்தாம் அதிபதியும் சேர்ந்து தர்மகர்மாதிபதி யோகம் பெற்று இருந்தாலும் அந்த ஜாதகன் பல புனித பயணங்களை மேற்கொள்வான். ஒன்பதாம் வீட்டை குரு பகவான் பார்வை செய்தாலும் சந்திரனுக்கு ஒன்பதாம் வீட்டில் ஒரு சுப கிரகம் இருந்தாலும் அவன் பலமுறை புனித யாத்திரை செல்வான். ஒன்பதாம் அதிபதி லக்னத்தில் அமர்ந்து குருவின் பார்வை பெற்றால் அந்த ஜாதகன் புனித நீராடுவான். சுபக்கிரகத்தின் பார்வை பன்னிரண்டாம் வீட்டின் மீதும் பன்னிரண்டாம் அதிபதி மீதும் இருக்கும் போது மத ரீதியிலும் தர்ம காரியங்களுக்காகவும் ஆன்மீக பயணங்களுக்காகவும் தனது சொத்தை செலவிடுவார்.

பன்னிரண்டாம் அதிபதி சுபக்கிரகத்துடன் கூடி நின்றால் அந்த ஜாதகனை மரியாதைக்குரிய சுப செலவு செய்ய வைக்கும். ஜோதிடத்தில் மேஷம், சிம்மம் மற்றும் தனுசு தர்ம திரிகோணங்கள் எனப்படும்.  மேலும் கடகம், விருச்சிகம் மற்றும் மீனம் ஆகிய மூன்றும் மோக்ஷ திரிகோணங்கள் எனப்படும். தர்ம திரிகோண அதிபதிகளும் மோக்ஷ திரிகோண அதிபதிகளும் பரிவர்தனை பெற்று நின்றால் அடிக்கடி தீர்த்த யாத்திரை மற்றும் புனித யாத்திரை செய்யும் அமைப்பு ஏற்படும். மோக்ஷ திரிகோணங்களில் ஸர்ப கிரகங்கள் நின்றாலும் ஒன்பதாம் வீடு, ஒன்பதாம் வீட்டதிபதி ஸர்ப கிரங்களின் தொடர்பு பெற்றால் புனித யாத்திரை செய்யும் அமைப்பு ஏற்படும்.

குருபகவான் நீர் ராசியில் பயணிக்கும்போது மற்றும் நீரினை குறிக்கும் சந்திரன் மற்றும் சுக்கிரனோடு தொடர்பு கொள்ளும்போது தீர்த்தயாத்திரை செய்யும் நிலை ஏற்படும். இந்த காவிரி துலாஸ்நானம் நடைபெறும்பொழுது துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்குச் செல்கிறார். மேலும் விருச்சிக ராசியில் இருந்து மீனம், ரிஷபம் மற்றும் கடகம் ராசிகளைப் பார்க்கிறார்.

இதில் மீன ராசியும் கடக ராசியும் நீர் ராசியாகி அமைந்து அதுவே குருவின் ஆட்சி மற்றும் உச்ச வீடாகவும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே கடகம், விருச்சிகம் மற்றும் மீன ராசி/லக்னம் ஒன்றுக்கொன்று திரிகோணமாகவும் அதுவே கால புருஷனுக்கு மோக்ஷ திரிகோணமாகவும் அமைந்திருப்பதால் இந்த மூன்று ராசி லக்னகாரர்களும் துலா காவேரி தீர்த்த யாத்திரையில் கலந்துகொள்வார்கள்.

1. கடகம், விருச்சிகம் மற்றும் மீன ராசிகளை ராசியாகவோ லக்னமாகவோ 1-5-9 அதிபதிகளாகவோ கொண்டவர்கள்.

2. எந்த லக்னமாக இருந்தாலும் கடகம், விருச்சிகம் மற்றும் மீன ராசிகளில் 1-5-9 அதிபதிகள் நிற்க பெற்றவர்கள். 

3. எந்த ராசி/லக்னமாக இருந்தாலும் தர்மகர்மாதி யோகம் பெற்று கோச்சார குரு ஜாதக தர்ம கர்மாதிபதிகளை பார்க்கப்பெற்றவர்கள்.

துலா மாதத்தின் அதிபதியான சுக்கிரனின் இரு வீடுகளான ரிஷபம் மற்றும் துலா ராசிகளுக்கு மட்டுமே கர்ம காரகன் சனைச்சர பகவான் கேந்திர திரிகோணாதிபதியாகவும் தர்ம கர்மாதிபதியாகவும் விளங்குகிறார். அதேபோல சனைச்சர பகவானின் மகர ராசிக்கும் ரிஷபமும் துலாமும் பூர்வ புண்ணியாதிபதியாகவும் கர்ம ஸ்தானதிபதியாகவும் மற்றும் கும்பத்திற்கு ரிஷபம் நான்காம் அதிபதியாகவும் துலாம் தர்ம ஸ்தானதிபதியாகவும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் விளங்குகின்றனர். எனவே இந்த முடவன் முழுக்கு ஸ்நானத்திற்கு அதிகமாக ரிஷபம், துலாம், மகரம் மற்றும் கும்பம் ராசி மற்றும் லக்னமாக கொண்டவர்களுக்கே செல்லும் வாய்ப்பு அதிகமாகும்.

நாளைய கோச்சாரத்தில் ராஜ கிரஹங்களான சூரியனும் சந்திரனும் தர்மாதிபதியான குருவின் நக்ஷத்திரங்களான விசாகத்திலும் பூரட்டாதியிலும் நிற்கும் நிலையில் தர்மாதிபதியான குருபகவானோ சனியின் நக்ஷத்திரமான அனுஷத்திலும் சனி பகவானோ குருவின் வீட்டிலும் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் முடவன் முழுக்கு காவேரி ஸ்நானம் சனி தோஷம் நீக்குவதோடு தர்ம கர்மாதிபதி யோகத்தின் பலனையும் அளிக்கும் என்பதில் மிகையில்லை.

ஸ்நானம் என்னும் நீராடல் உடல் தூய்மைக்காக மட்டுமல்ல புறக்கண்களுக்குப் புரிபடாத ஆன்ம தூய்மைக்காகவும் கடைப்பிடிக்கப்படுகிறது. புண்ணியத் தலங்களுக்குச் செல்லும்போது தவறாமல், அங்குள்ள புண்ணிய நதி, கிணறு, குளம் ஆகியவற்றில் ஸ்நானம் செய்வது அவசியம் என்கிறது சாஸ்திரம்.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510

]]>
ஐப்பசி , கார்த்திகை, முடவன் முழுக்கு, துலா காவேரி ஸ்நானம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/20/w600X390/thula_snanam2.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/16/கடுமையான-சனி-தோஷத்தால்-கஷ்டப்படுகிறீர்களா-முடவன்-முழுக்கில்-துலா-ஸ்நானம்-செய்யுங்க-3039978.html
3039970 ஆன்மிகம் செய்திகள் மேனாம்பேடு ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்கு மகா ஹோமம், 108 சங்காபிஷேகம்!  Friday, November 16, 2018 03:33 PM +0530  

அம்பத்தூர், மேனாம்பேட்டில் உள்ள ஸ்ரீ அன்னபூரணி சமேத ஆத்மநாத ஈஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மனோன்மணி உடனாய ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் ஆலயத்தில் மகா ஹோமம் மற்றும் 108 சங்காபிஷேகம் நடைபெற உள்ளது. 

நிகழும் விளம்பி வருடம் கார்த்திகை மாதம் (14-ம் தேதி) 30.11.18 வெள்ளிக்கிழமை அன்று மகா அஷ்டமியை முன்னிட்டு காலை 10.30 முதல் 12.30 வரை ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு இராகு கால பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அன்றைய தினம் மாலை 4 மணியளவில் மகா ஹோமமும், மாலை 6.30 மணியளவில் ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு மகா அபிஷேகமும், அதைத்தொடர்ந்து 7.15 மணிக்கு 108 சங்காபிஷேகம் மற்றும் 8.00 மணியளவில் தூப தீப ஆராதனையும் நடைபெறுகிறது. 

இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரின் அருளை பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/20/w600X390/bairavar.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/16/மேனாம்பேடு-ஸ்வர்ண-ஆகர்ஷண-பைரவருக்கு-மகா-ஹோமம்-108-சங்காபிஷேகம்-3039970.html
3039952 ஆன்மிகம் செய்திகள் கார்த்திகையில் கண் திறக்கும் யோக நரசிம்மர்! DIN DIN Friday, November 16, 2018 01:03 PM +0530  

"கடிகை' என்றால் ஒரு முகூர்த்த நேரம்; அதாவது 24 நிமிடம் என்பதாகும். "அசலம்' என்றால் மலை என்பது பொருள். இங்கு ஒரு நாழிகை நேரம் தங்கியிருந்து அக்காரக்கனி என்னும் நரசிம்மனை தரிசித்தால் அனைத்தும் கிடைக்கும் என நூல்கள் சொல்லுகின்றன. அவ்விதம் திருக்கடிகை செல்ல முடியாதவர்கள் ஒரு நாழிகை திருக்கடிகையை மனதில் நினைத்து நரசிம்மரைச் சிந்தித்தாலே பலன் உண்டு என்கிறார் அஷ்டப்பிரபந்தம் பாடிய பிள்ளைப் பெருமாளையங்கார்.

"வண்பூங்கடிகை இளங்குமரன்' என பேயாழ்வாராலும் "தக்கானை கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த அக்காரக் கனியை' என திருமங்கையாழ்வாராலும் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. கடிகாசலம் இன்று சோளிங்கர் என வழங்கப்படுகிறது. நரசிம்மர் குடிகொண்டுள்ளதால் சிம்மபுரம் எனவும் சோழர்கள் நாட்டின் எல்லையாக ஒரு காலத்தில் இது இருந்ததால் சோழசிம்மபுரம் என அழைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பெரிய மலை என்னும் மலைக்கோயிலில் "யோக நரசிம்மர்' வீற்றிருந்த திருக்கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் காட்சி தருகிறார். உற்சவர் "பக்தவத்ஸல பெருமாள்'. பக்தர்களை அன்போடு (வாத்சல்யத்தோடு) அரவணைத்துச் செல்வதால் "பக்தவத்ஸலன்' எனப்படுகிறது. உசிதம் என்றால் விருப்பம் எனப்படும். பக்தர்கள் விருப்பப்படி அருளவல்லவராதலால் "பக்தோசிதப்பெருமாள்' எனவும் அழைக்கப்படுகிறார். அருளுவதில் தக்கவராக இருப்பதால் "தக்கான்' எனவும் அழைக்கப்படுகிறார். தனிக்கோயில் நாச்சியாராக "அம்ருதவல்லித் தாயார்' என்ற திருநாமத்தோடு அழைக்கப்படுகிறார். உலக உயிர்களைக் காப்பதற்கு உரியமுறையில் பெருமாளுக்கு உதவுவதால் அம்ருதவல்லி என வழங்கப்படுகிறாள்.

தீர்த்தம் தாயார் பெயரால் அம்ருத தீர்த்தம் என்றும்; பெருமாள் பெயரால் தக்கான் குளம் மற்றும் பாண்டவ தீர்த்தம் என மூன்று தீர்த்தங்கள் உள்ளன.

விசுவாமித்திரர் இம்மலையில் ஒரு கடிகை நேரத்தில் (ஒரு நாழிகை நேரத்தில்) நரசிம்மனைக் குறித்து துதித்து பிரம்மரிஷி பட்டம் பெற்றார். ஆதலால் சப்தரிஷிகளும், வாமதேவர் என்னும் முனிவரும் பிரஹலாதனுக்காக பெருமாள் காட்டிய நரசிம்ம அவதாரத்தை தரிசிக்க வேண்டுமென்ற ஆசையால் இம்மலையில் வந்து தவமியற்றத் தொடங்கினர்.

ஸ்ரீராமவதாரம் முடிந்து திருமால் வைகுண்டத்திற்கு புறப்படத் தயாரானார். அதுவரை, அனுக்கனாக இருந்த ஆஞ்சநேயர் உடன் வருவதாகக் கூறினார். ஒருகணம் சிந்தித்த ராமர், "கடிகாசலத்தில் என்னைக் குறித்து தவம் செய்யும் ஸப்த ரிஷிகளுக்கு, இன்னல்கள் உண்டாகின்றன. அவைகளைக் களைந்து பின்னர் வைகுண்டம் வருக!'' என அருளினார்.

காலன், கேயன் என்னும் இரு அரக்கர்கள் இம்மலை வந்து நாராயணன் குறித்து தவஞ்செய்யும் ரிஷிகளுக்கு அல்லல் விளைவித்து வந்ததைக் கண்டார். அவர்களோடு நேரில் சண்டையிட்டுக் களைத்துப்போன ஆஞ்சநேயர் ஸ்ரீராமனைத் துதித்தார். ஸ்ரீராமன் அனுமனுக்கு நாராயண உருவில் காட்சி தந்து சங்கு சக்கரங்களை வழங்கினார். இரு அரக்கர்களின் தலையையும் சுதர்சனத்தை ஏவி கொய்து ரிஷிகளுக்கு உதவினார். ரிஷிகளின் தீவிர தவத்தை மெச்சிய பகவான் தவம் செய்த முனிவர்களுக்கு யோக பட்டம் கட்டிய யோக நரசிம்ம மூர்த்தியாகக் காட்சி கொடுத்தார். அத்திருவுருவத்தை தரிசித்த ரிஷிகளும் மிக மகிழ்ந்து, தங்களை இந்த திருக்கோலத்திலேயே எப்போதும் இங்கு வந்து தரிசிக்கும் பேற்றினை எங்களுக்கு அருள வேண்டும் என கேட்டுக்கொண்டனர். நரசிம்மப்பெருமாளும் ஒப்புக்கொண்டு அங்கே நிஷ்டையில் யோக நரசிம்மராக அருள் செய்து வருகிறார்.

சப்த ரிஷிகளும் வணங்கிய யோக நரசிம்ம அவதாரத்தைக் கண்டு உகந்து களித்த ஆஞ்சநேயர் மகிழ்ந்து போற்றி பஜனை செய்தார். மீண்டும் வைகுண்டம் வருவது குறித்து வற்புறுத்திய ஆஞ்சநேயருக்கு "இம்மலையில் நீயும் என்னுடன் இங்கிருந்து பக்தர்களுக்கு அருள்புரிந்து கலியுகம் முடியும் தறுவாயில் எம்மை வந்தடைவாயாக!'' என்றருளினார்.

நரசிம்மர் உத்தரவுப்படி, யோக நிலையில் சங்கு சக்கரத்துடன் அமர்ந்து வேறெந்த திவ்ய தேசத்திலும் இல்லாதவகையில் அனுமன் அருள்வழங்கிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இந்திரத்யும்னன் என்னும் மன்னன் , சத்திரிய தர்மத்தில் இருந்து விலகி, ஆயுதங்களை தியாகம் செய்து, நரசிம்மரை வணங்கி முக்தி பெற நினைத்து, பக்தி மார்க்கத்தில் இணைந்தான். மன்னன் இல்லாத நிலையில் ரிஷிகளை நிகும்பன் என்னும் அரக்கன் துன்புறுத்தத் துவங்கினான். மன்னன் தான் ஆயுதப் பிரயோகத்தை கைவிட்டபடியால் அக்காரக்கனியான நரசிம்மரிடம் இதுகுறித்து அருள்புரிய வேண்டினார். அவனது வேண்டுதலை ஏற்ற நரசிம்மர், யோகத்தில் இருந்த சிறிய திருவடியை கார்த்திகை வெள்ளிக்கிழமை அழைத்து தான் அளித்த சக்கராயுதத்தால் வென்று வரும்படி கூறினார்.

மன்னனுக்கு ஆதரவாக சக்கராயுதத்தால் நிகும்பனை கார்த்திகை ஞாயிற்றுக்கிழமை அழித்து வந்து சிறிய மலை என்னும் அனுமார் மலையில் உள்ள புஷ்கரணியில் ஸ்ரீசுதர்சனத்தைத் திருமஞ்சனம் செய்தார். அன்று முதல் அதற்கு சக்கர தீர்த்தம் எனப் பெயர் வழங்குகிறது. அதன் படிக்கட்டில் படுத்து விரதம் இருந்தால் எண்ணியது கிடைக்கும் என குறிப்பிடப்படுகிறது.

அதனால் இது ஒரு விசேஷமான பிரார்த்தனைத் தலமாக பேய், பிசாசு, பில்லி சூனியம் என்று சொல்லப்படும் அதீத நோய்கள் தீர, இங்கே வந்து கார்த்திகை மாதம் மட்டுமில்லாமல் எப்போதும் விரதம் கடைப்பிடித்து தக்கான் குளத்தில் நீராடி, மலையேறி தரிசனம் செய்வது வழக்கத்தில் உள்ளது.

அதன்படி, இவ்வாண்டு கார்த்திகை மாதத்தில் ஒவ்வொரு வெள்ளி, ஞாயிறுகளில் (நவம்பர் 18, 23, 25, ,30, மற்றும் டிசம்பர் 2,7,9,14 ,16, 21 ஆகிய தேதிகளில்) இரண்டு மலைகளிலும் பெருமாள் தாயார் ஆஞ்சநேயருக்கு சிறப்புத் திருமஞ்சனம் மற்றும் விசேஷ அலங்காரம் அர்ச்சனைகள் நடைபெறும். காலை 5.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை பக்தர்கள் தரிசனத்திற்காகத் திறந்திருக்கும். மாலை 4 மணிக்குத் தாயார் தங்கத்தேரில் புறப்பாடு நடைபெறும்.

அரக்கோணம் , வாலாஜா , திருத்தணியில் இருந்து பேருந்துகள் மூலம் சோளிங்கரைஅடையலாம்.

 தொடர்புக்கு : 041722 63515 / 96269 50507.

 - இரா.இரகுநாதன்
 

]]>
நரசிம்மர், யோக நரசிம்மர் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/16/w600X390/koil-rope-4.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/16/கார்த்திகையில்-கண்-திறக்கும்-யோக-நரசிம்மர்-3039952.html
3039948 ஆன்மிகம் செய்திகள் திருவண்ணாமலைக்குச் செல்ல முடியாதவர்களுக்காக சென்னையில் ஒளிரும் அண்ணாமலை..! DIN DIN Friday, November 16, 2018 12:34 PM +0530  

அண்ணாமலையாரை சென்று தரிசிக்க முடியாதவர்களை சென்னையில் கோயில் கட்டி கும்பிட வைத்தவர் மயிலை சுப்பராயமுதலியார் என்ற பக்தர் ஆகும்.

ஒவ்வொர் ஆண்டும் திருக்கார்த்திகையில் திருவண்ணாமலைக்கும் வைகாசி பிரம்மோற்சவத்திற்கு காஞ்சிபுரமும் சென்று இருந்து தரிசித்து வருவது வழக்கம். அவருக்கு சந்தான பாக்கியம் வாய்க்காத நிலையில் அண்ணாமலை அருணாசலேஸ்வரரிடமும் காஞ்சி வரதரிடமும் அதற்காக நேர்ந்து கொண்டார். கனவில் இறைவன் தோன்றி ஒரு சந்நிதியும் மலையும் அமைத்து சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து மலையில் தீபமேற்றி வழிபட்டால் வேண்டியது கிடைக்கும் என்றாராம். கனவு கலைந்து எழுந்த சுப்பராய முதலியார், சென்னை செளகார்பேட்டை பள்ளியப்பன் தெரு 15-ஆம் எண்ணுள்ள வீட்டில் காசியிலிருந்து பாணலிங்கம் தருவித்து பிரதிஷ்டை செய்து பரிவார சந்நிதிகள் பிரதிஷ்டை செய்து கட்டுமலை கட்டி அதனில் அகண்ட தீபம் ஏற்றி வழிபாடு செய்தார். அடுத்த ஆண்டு சந்தான ப்ராப்தி உண்டானது.

கை மேல் பலன் தந்த கடவுளின் கருணையை எண்ணி கோயிலுக்கு பின்புறம் உள்ள இடத்தினை வாங்கி அருணாசலேஸ்வரர் மற்றும் வரதராஜப் பெருமாளுக்கும் தனித்தனி கோயில்கள் அமைத்து 1765 -ஆம் ஆண்டு நித்தியபூஜை நடக்க கட்டளைககள் ஏற்படுத்தி குடமுழுக்கும் செய்தார். முதலில் கட்டிய கோயில் சின்னக்கோயில் அல்லது அணி அண்ணாமலையார் கோயில் எனவும் பின்னர் எடுத்த கோயில் பெரிய கோயில் எனவும் வழங்கப்படுகிறது.

வில்வத்தைத் தல விருட்சமாகக் கொண்ட இக்கோயிலின் கிழக்கு நோக்கிய பிரதான சந்நிதியில் லிங்க வடிவில் அருணாசலேஸ்வரர் காட்சி தருகிறார். பிரதோஷம், மஹா சிவராத்திரி, கார்த்திகை சோமவாரம் போன்றவை சிறப்பாக நடைபெறுகிறது.

சுவாமி சந்நிதியின் இடப்புறம் அருள்மிகு அபீதகுஜாம்பாள் சதுர் புஜத்துடன் நின்ற கோலத்தில் சுமார் 6 அடி உயரத்தில் தெற்கு முகமாக தவழும் புன்னகையுடன் சாந்தமான பாவனையோடு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். பெளர்ணமி பகல் வேளையில்சிறப்பு பூஜை, அபிஷேகம், திருவிளக்கு பிரார்த்தனை பூஜையும் பெண்களால் செய்யப்படுகிறது.

நவக்கிரகம், விஜய விநாயகர், காமாட்சியம்மை ஏகாம்பர லிங்கத்தை அணைத்துக் கொண்டிருக்கும் கம்பா நதிக் காட்சி சந்நிதி, அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீஆறுமுகர் சந்நிதி ஆகியவற்றோடு வில்வ மரத்தடியில் குடிகொண்டிருக்கும் சுமார் 4 அடி உயரமுள்ள வில்வேஸ்வரரை பக்தர்களே தொட்டு பூஜை செய்கின்றனர்.

ராஜகோபுரத்தில் நுழைந்தவுடன் வலப்புறம் உள்ள அணிஅண்ணாமலையார் சந்நிதி சின்னக்கோயில் என அழைக்கப்படுகிறது. இந்த சந்நிதிக்கு அருகில் தெற்கு நோக்கி உள்ள மஹிஷாசுரமர்த்தனிக்கு வளர்பிறை அஷ்டமியில் அபிஷேகம் செய்து அம்பாள் நெற்றியில் வெண்ணெய் சாற்றுவது பழக்கத்தில் உள்ளது. உடல் உபாதைகள் நீங்க இப்பிரார்த்தனையை செய்கிறார்கள்.

அதே திருச்சுற்றில் ஸ்ரீ வராஹி தனி சந்நிதியில் அருள்கிறாள். பில்லி, சூனியம், பிசாசு, பேய் ஆகியவை அண்டாமலிருக்க தேய்பிறை பஞ்சமியில் வாராகி நெற்றியில் வெண்ணெய் சார்த்தி வழிபடுகின்றனர்.

அருள்மிகு ஸ்ரீதேவி ஸ்ரீ பூதேவி சமேத அருள்மிகு வரதராச பெருமாளுக்கு வைகாசி மாதத்தில் பிரம்மோற்சவம் 10 நாள்கள் நடைபெறுகின்றது. திருவண்ணாமலையில் நடைபெறுவது போன்று, அருள்மிகு அபீதகுஜாம்பாள் சமேத அருள்மிகு அருணாசலேசுவரருக்கு கார்த்திகை மாதத்தில் பிரம்மோற்சவம் 11 நாள்கள் நடைபெறுகின்றது.

நவம்பர் மாதம் 14-ஆம் தேதி காலை கொடியேற்றி, 16-ஆம் தேதி காலை அதிகாரநந்தி புறப்பாடும்; 18 -ஆம் தேதி ரிஷப வாகனத்தில் புறப்பாடும்; 20 -ஆம் தேதி காலை திருத்தேர் புறப்பாடும்; 22 -ஆம் தேதி இரவு 7 மணிக்கு திருக்கல்யாணமும்; 23 -ஆம் தேதி காலை 5.30 மணிக்கு பரணி தீபமும் ஏற்றப்படுகிறது. அன்று மாலை 6.00 மணிக்கு கட்டு மலையில் மகாதீபம் ஏற்றப்பட்டு பஞ்சமூர்த்திகளின் வீதி புறப்பாடு உற்சவம் நடைபெறுவது மிகச் சிறப்பாகும் 24.11.2118 அன்று விஷ்ணு தீபம் நடந்து உற்சவம் முடிவு பெறும்.

 தொடர்புக்கு: 94448 94438/ 96296 18567.

 - எஸ் . இராதாமணி
 
 

]]>
அண்ணாமலையார், சென்னையில் அண்ணாமலை, திருவண்ணாமலை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/16/w600X390/DSC010771.JPG http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/16/திருவண்ணாமலைக்குச்-செல்ல-முடியாதவர்களுக்காக-சென்னையில்-ஒளிரும்-அண்ணாமலை-3039948.html
3039937 ஆன்மிகம் செய்திகள் இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு பணவரவு அதிகரிக்கும்!  Friday, November 16, 2018 11:19 AM +0530 தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த (நவம்பர் 16 - நவம்பர் 22) வாரப் பலன்களை துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

வேலைத்தொந்தரவுகள் அதிகரித்தாலும் முடிவில் வெற்றி காணப்போகிறீர்கள். வீண் அலைச்சல்களினால் மனச்சோர்வுக்கு ஆளாவீர்கள். பொருளாதாரம் சீராக இருப்பினும் அனாவசிய செலவுகளைக் குறைப்பது நல்லது. 

உத்தியோகஸ்தர்கள் இடையூறுகளைச் சமாளித்து வேலைகளை முடிப்பீர்கள். பணவரவுக்குத் தடைகள் இல்லாவிட்டாலும் கூட செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சுமாராகவே இருக்கும். கூட்டாளிகளிடம் மனக்கசப்புகள்  உண்டாகும். விவசாயிகளுக்கு திட்டமிட்ட பணிகள் அனைத்தும் நிறைவேறும். அமோகமான விளைச்சலினால் லாபத்தை அள்ளுவீர்கள்.

அரசியல்வாதிகள் அரசிடமிருந்து சில சலுகைகள் பெறுவார்கள். அவர்களின் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். கலைத்துறையினர் சாதகமான திருப்பங்களைக் காண்பார்கள்.  பெண்மணிகளுக்கு பொருளாதார வளத்தால் திருப்தி அடைவீர்கள். நல்லசெய்திகளைக் கேட்பீர்கள். மாணவமணிகள் ஆர்வமுடன் படித்து அதிக மதிப்பெண்கள் பெறுவீர்கள். 

பரிகாரம்: சூரியபகவானையும் விநாயகரையும் வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 16, 17. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

ஆற்றல் அதிகரிக்கும். செயல்கள் அனைத்தும் திட்டமிட்டபடியே நடந்தேறும். குடும்பத்திற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். காரியங்களில் இடையூறுகள் மற்றும் குழப்பங்கள் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே  இருக்கும்.

உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். கொடுத்த வேலைகளை நன்கு செய்வீர்கள். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். பொருள்களின் விற்பனை நல்லமுறையில் நடக்கும். விவசாயிகள் எதிர்பாராத மகசூல் கிடைத்து பொருளாதார முன்னேற்றம் அடைவீர்கள். கால்நடைகளால் எதிர்பார்த்த பலனைப் பெறுவீர்கள். 

அரசியல்வாதிகளின் பெயரும் புகழும் வளரும். புதிய பதவிகள் நாடி வரும். பயணங்களால் நன்மையே உண்டாகும். கலைத்துறையினரின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். தொழிலில் முன்னேற்றம் அடைவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். 

பெண்மணிகள் கணவரை அனுசரித்துச் செல்லவும். செலவுகள் கூடும். மாணவ, மணிகள் கடுமையாக உழைத்துப் படித்தால் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறலாம்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வணங்கி பலன் பெறவும். 

அனுகூலமான தினங்கள்: 16, 18. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

பொருளாதாரத்தில் முன்னேற்றம் தென்படும். அனைத்து வேலைகளையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். சமூகத்தில் உங்களின் செல்வாக்கு குறைந்து காணப்படும். சமயோசித புத்தியுடன் பணியாற்றி நற்பெயரை வாங்குவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் கவனம் சிதறாமல் வேலைகளைப் பட்டியலிட்டு செய்து முடிக்கவும். பதவி உயர்வை நீங்கள் எதிர்பார்க்கலாம். வியாபாரிகளுக்கு உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்கும். புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். விவசாயிகளுக்கு தானிய விற்பனை லாபகரமாக முடியும். குடும்ப நிலைமை மேன்மையடையும். 

அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும், ஒத்தி வைத்திருந்த திட்டங்களைச் செயல்படுத்த முனைவீர்கள். கட்சியில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு புகழும் பாராட்டும் கிடைக்கும். 

பெண்மணிகளுக்குக் கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். பேசும் நேரத்தில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். மாணவமணிகள் விளையாட்டில் கவனம் செலுத்தவும். மேலும் படிப்பிலும் வெற்றிக்கு பிரகாசமான வழிகள் தென்படும்.

பரிகாரம்: புதன்கிழமைகளில் பெருமாளை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 17, 18.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். ஆடம்பரப் பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். பெரியவர்களின் ஆசியுடன் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பூர்வீகச் சொத்து வழியில் இருந்த தடைகள் நீங்கி பாகப்பிரிவினை உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு குறைவாகவே இருக்கும். அதனால் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். வியாபாரிகளுக்கு பல வகைகளிலும் லாபம் வரும். செலவு செய்யும் நேரத்தில் கவனமாக இருக்கவும். கூட்டாளிகளிடம் மனம் திறந்து பேசுவதைத் தவிர்க்கவும். விவசாயிகளுக்கு வர வேண்டிய குத்தகை பாக்கிகள் கிடைக்கும். 

அரசியல்வாதிகளுக்கு அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றகரமான சூழல் அமையும். இருப்பினும் மேலிடத்தின் அதிருப்தி குழப்பத்தில் ஆழ்த்தும். கலைத்துறையினருக்கு அதிக முயற்சிகளுக்குப் பிறகே புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். 

பெண்மணிகளுக்கு கணவர் வழி உறவினரிடையே இருந்து வந்த சலசலப்புகள் குறையும்.  வீண் செலவுகளைத் தவிர்க்கவும். மாணவமணிகள் கல்வியில் எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளலாம்.

பரிகாரம்: சனிபகவானை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 18, 19. 

சந்திராஷ்டமம்: 16,17.

{pagination-pagination}
சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

நீங்கள் மதிப்பு மரியாதை உயரும். பயணங்களால் நன்மை அடைவீர்கள். உறவினர்களின் ஆதரவு கூடும். திட்டமிட்ட வேலைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்துவிடுவீர்கள். தேக ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பிரச்னைகள் குறையும். மேலதிகாரிகள் நட்போடு பழகுவார்கள். வியாபாரிகளுக்கு செயல்கள் அனைத்தும் சாதகமாகவே முடியும். புதிய திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் மந்தமாக இருக்கும். கால்நடைகளால் வருமானம் சுமாராக இருக்கும். 

அரசியல்வாதிகள் செய்யும் செயல்களில் வெற்றி பெறுவார்கள்.பெயரும் புகழும் கிடைக்கப் பெறுவர். தொண்டர்களின் ஆதரவுடன் கடினமான வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினர் மனதிற்கினிய ஒப்பந்தங்கலைச் செய்வார்கள். ரசிகர்களின் ஆதரவைப் பெறுவார்கள். 

பெண்மணிகள் வீண்வாதங்களில் ஈடுபடாமல் உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். மாணவமணிகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். 

பரிகாரம்: ஞாயிறன்று சூரிய நமஸ்காரம் செய்து ஆத்ம ஒளி பெறுங்கள். 

அனுகூலமான தினங்கள்: 16, 21.  

சந்திராஷ்டமம்: 18, 19, 20. 

{pagination-pagination}
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

சிறிதே தாமதமானாலும் உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். மற்றவர்களைச் சார்ந்து செயலாற்றிய நீங்கள் சுயமாகச் செயலாற்றும் காலமிது. தைரியமாகத் திட்டமிட்டுச் செயல்படுவீர்கள். பணவசதி சரளமாக இருக்கும். 

உத்தியோகஸ்தர்களுக்கு அனைத்து வேலைகளும் சிறப்பாக முடியும். ஊதிய உயர்வும் இடமாற்றமும் கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் பிரச்னைகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சாதுர்யமாகச் சமாளிப்பார்கள். விவசாயிகள் நீர்ப்பாசன வசதிக்காக எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கும். கால்நடைகளால் அனுகூலம் உண்டாகும். 

அரசியல்வாதிகள் அனைத்து காரியங்களிலும் வெற்றிவாகை சூடுவார்கள். அதிகம் சிரமப்படாமல் புதிய பதவிகளில் அமர்வர். தொண்டர்கள் ஆதரவும் இருக்கும். கலைத்துறையினரைத்தேடி புதிய வாய்ப்புகள் வரும். உங்கள் முயற்சியை மற்றவர்கள் பாராட்டுவார்கள்.

பெண்மணிகள் கணவரிடம் அனுசரித்துச் செல்லவும். வார்த்தைகளில் கவனம் தேவை. மாணவமணிகளுக்கு படிப்பில் ஆர்வம்அதிகரிக்கும். இதனால் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: பார்வதி தேவியை தீபமேற்றி வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 18, 20.  

சந்திராஷ்டமம்: 21, 22.


{pagination-pagination}
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

உங்கள் எண்ணங்கள் வெற்றி பெறும். சுபச் செய்திகள் தேடி வரும். சமூகத்தில் உங்கள் செல்வாக்கு உயரக் காண்பீர்கள். நண்பர்களின் அலட்சியப்போக்கை பெரிது படுத்த மாட்டீர்கள். வேலையில் குறியாக இருந்து பலன் பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தகர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு தடைபடும். பணிகளில் முன்கூட்டியே செயல்பட்டால் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். வியாபாரிகள் புதிய முயற்சிகளைத் தள்ளிப் போடவும். நண்பர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடக்கவும். விவசாயிகள் புதிய தானியங்களைப் பயிரிட்டு நல்ல மகசூலைக் காண்பார்கள். வழக்கமான விளைச்சல்களில் அதிக கவனம் செலுத்தவும்.

அரசியல்வாதிகள் தீட்டும் திட்டங்கள் யாவும் வெற்றி பெறும். எதிரிகளுக்கு தகுந்த பதிலடி கொடுப்பதற்கான நேரம் வந்து விட்டது. கலைத்துறையினர் கடுமையாக உழைத்து நற்பலன் அடைவார்கள்.  கைநழுவிப்போன ஒப்பந்தங்கள் திரும்பக் கிடைக்கும். 

பெண்மணிகளுக்கு குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். குழந்தைகளால் சந்தோஷம் கிடைக்கும். கணவரின் உடல்நலத்தில் கவனம் செலுத்தவும். மாணவமணிள் படிப்பில் அக்கறை காட்டவும்.

பரிகாரம்: ஆஞ்சநேயரையும் லட்சுமி ஹயக்ரீவரையும் வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 17, 20.  

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

எதிர்பார்த்த பணவரவும் உழைப்புக்கேற்ற பலனும் கிடைக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் ஒரு பெரிய சாதனைக்கு அடித்தளமாக அமையும். உபரி வருமானத்தைக் கொண்டு பூமி வாங்குவீர்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் நலம் தரும்.

உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலைகள் யாவையும் கருத்துடன் செய்து முடிப்பீர்கள்.  அலுவலக ரீதியான பயணங்களை மேற்கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு லாபம் குறைவாகவே கிடைக்கும். கூட்டாளிகளை கலந்தாலோசித்த பிறகே புதிய முயற்சிகளில் இறங்கவும். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். பழைய குத்தகைளை நன்றாக முடித்து அதற்கேற்ப வருமானம் பெறுவீர்கள். 

அரசியல்வாதிகள் செய்ய எடுத்த பெரிய காரியத்தை வெற்றிகரமாக முடித்து பலரது பாராட்டையும் பெறுவார்கள். கலைத்துறையினரைத் தேடிப் புதிய வாய்ப்புகள் வரும். பெண்மணிகள் இல்லத்தில் நிம்மதியைக் காண்பார்கள். கணவரிடம் கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்வீர்கள். மாணவமணிகள் நன்றாகப் படித்து மதிப்பெண்கள் பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவுடன் விளையாட்டுகளில் பங்கேற்று வெற்றி பெறுவீர்கள்.

பரிகாரம்: சூரியபகவானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 19, 20. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

சிறிய முயற்சிகளும் பெறும் வெற்றியைக் கொடுக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும்.  புதிய நட்புகள் உருவாகும். உங்கள் நம்பிக்கைகள் பலப்படும். மனச்சோர்வுக்கு ஆளாகாமல் உழைக்க வேண்டும். தேக ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளவும்.

உத்தியோகஸ்தர்கள் இருக்கும் இடத்தை விட்டு வெளியூருக்கோ, வெளி மாநிலங்களுக்கோ செல்வீர்கள்.   வியாபாரிகளுக்கு இருந்த வந்த தடைகள் விலகும். எதிலும் ஜாக்கிரதையுடன் முயற்சிகளைத் தொடரவும். எவருக்கு எந்த வாக்குறுதிகளையும் தர வேண்டாம்.  விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். லாபம் அதிகரிக்கும். கால்நடைகளுக்குச் செலவு செய்ய நேரிடும். 

அரசியல்வாதிகளின் செயல்கள் சாதனைகளாக மாறும். கட்சி மேலிடத்தின் பாராட்டு கிடைக்கும். தொண்டர்களின் ஆதரவும் இருக்கும். கலைத்துறையினர் சுமாரான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். 
பெண்மணிகள் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால் குழப்பங்களிலிருந்து தப்பிக்கலாம். மாணவமணிகள் வருங்காலத்திற்குச் செய்யும் பயிற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக அமையும். 

பரிகாரம்: மேற்குத்திசை நோக்கும் பிள்ளையாரை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 16, 19. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

தோல்விகள் அகன்று வெற்றிகள் குவியத்தொடங்கும். உங்கள் செயல்கள் சரியான இலக்கை அடையும். ஆன்மிகத்தில் சாதனை புரிவீர்கள். குடும்பத்தில் அமைதியைக் காண்பீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு  பணிகள் சுமுகமாக முடியும். மேலதிகாரிகள் நட்புடன் பழகுவார்கள். எதிர்பார்த்த  இடமாற்றங்களைப் பெறுவீர்கள். வியாபாரிகள் புதிய யுக்தியுடன் செயல்பட்டு வியாபாரத்தைப் பெருக்குவார்கள். கூட்டாளிகளின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். விவசாயிகளுக்கு கொள்முதலில் மிகுந்த லாபம் கிடைக்கும், கால்நடைகளை வைத்திருப்போர் நல்ல வருமானம் பெறுவர். 

அரசியல்வாதிகள் எடுத்த காரியங்களை எளிதாக முடித்து வெற்றி பெறுவார்கள். கட்சி மேலிடத்தின் கவனத்தை ஈர்ப்பீர்கள். கலைத்துறையினருக்கு முயற்சிகள் யாவிலும் வெற்றி உண்டாகும்.  
பெண்மணிகள் குழந்தைகளால் சந்தோஷம் அடைவர். கணவரிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வர். மாணவமணிகள் படிப்பில் அதிகக் கவனம் செலுத்தவும். விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.

பரிகாரம்: சனீஸ்வரருக்கு தீபமேற்றி வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 17, 20.  

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

கும்பம்(அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் குழப்பங்கள் அகலும். மந்தமாக இருந்து வந்த சுபகாரியங்கள் சுறுசுறுப்பாக முடியும். பெயரும் புகழும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாகவே அமையும். 

உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேறும். மூத்த அதிகாரிகளும் சக ஊழியர்களும் நட்புடன் பழகுவார்கள். வியாபாரிகள் புதிய முயற்சிகளை  மேற்கொண்டு வெற்றி பெறுவார்கள். விவசாயிகள் அதிக மகசூலைக் காண்பார்கள். கால்நடைகளால் பலன் அதிகரிக்கும். புதிய குத்தகைகள் தானாக வந்தால் மட்டுமே எடுத்துக்கொள்ளவும்.

அரசியல்வாதிகளின் பொதுச் சேவையை அனைவரும் பாராட்டுவர். மேலிடத்தின் மூலம் புதிய பொறுப்புகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு உயர்ந்தவர்களின் உதவியால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். 

பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையோடு பழகுவார்கள். கவனமில்லாமல் மனதில் சற்று அமைதி குறையும். மாணவமணிகள் படிப்பில் அதிக மதிப்பெண்களைப் பெறுவார்கள். நண்பர்களிடம் ஒற்றுமையோடு இருப்பீர்கள்.

பரிகாரம்: திங்களன்று விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 19, 22.  

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பெரிய திருப்பங்கள் ஏதும் நீங்கள் எதிர்பார்க்க முடியாது. பணவரவு தாராளமாகவே இருக்கும்.  காரியங்கள் அனைத்தையும் வெற்றியுடன் முடிப்பீர்கள். சிலருக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அவற்றைச் செவ்வனே செய்து முடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு வருமானம் சீராக இருக்கும். மறைமுகப் போட்டிகளை மிக்க சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். கூட்டாளிகளால் தொந்தரவுகள் உண்டாகலாம். விவசாயிகளுக்கு மகசூல் சுமாராக இருக்கும். ஆகையால் மாற்றுப் பயிர்களை உற்பத்தி செய்து பலன் பெறவும். கால்நடைகளால் லாபம் பெறுவீர்கள். 

அரசியல்வாதிகளைத் தேடி புதிய பொறுப்புகள் வந்து சேரும். வாய் பேசாமல் மௌனம் காப்பது நன்று. கலைத்துறையினருக்கு  சிறு தடைகள் வந்தாலும் ஒப்பந்தங்களை தக்க நேரத்தில் முடித்து விடுவீர்கள். பெண்மணிகளைத் தேடி இனிப்பான செய்திகள் வரும். பயணங்களால் மகிழ்ச்சி  உண்டாகும். மாணவமணிகள் உழைப்புக்கேற்ப நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.  

பரிகாரம்: வளசரவாக்கம் வேங்கடசுப்ரமணியரை வழிபட்டு வரவும்.  

அனுகூலமான தினங்கள்: 21, 22.  

சந்திராஷ்டமம்: இல்லை.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/8/w600X390/prediction.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/16/இந்த-வாரம்-எந்த-ராசிக்காரர்களுக்கு-பணவரவு-அதிகரிக்கும்-3039937.html
3039427 ஆன்மிகம் செய்திகள் தீபத் திருவிழாவின் இரண்டாம் நாள்: தங்க சூரிய பிரபை வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரர் வீதியுலா Friday, November 16, 2018 02:44 AM +0530 திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் தீபத் திருவிழாவின் இரண்டாம் நாளான வியாழக்கிழமை காலை தங்க சூரிய பிரபை வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரரும், இரவு வெள்ளி இந்திர விமானங்களில் பஞ்ச மூர்த்திகளும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, காலை 10 மணிக்கு வெள்ளி விமானங்களில் பஞ்ச மூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது. 
இரவு 9.30 மணிக்கு மூஷிக வாகனத்தில் ஸ்ரீவிநாயகர், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான், வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஹம்ச வாகனத்தில் ஸ்ரீபராசக்தியம்மன், வெள்ளி வாகனத்தில் ஸ்ரீசண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது.
தங்க சூரிய பிரபை வாகனத்தில்...: தீபத் திருவிழாவின் இரண்டாம் நாளான வியாழக்கிழமை காலை 10 மணிக்கு மூஷிக வாகனத்தில் ஸ்ரீவிநாயகர், தங்க சூரிய பிரபை வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரர் வீதியுலா நடைபெற்றது. இரவு 9.30 மணிக்கு வெள்ளி இந்திர விமானங்களில் ஸ்ரீவிநாயகர், வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீபராசக்தியம்மன், ஸ்ரீசண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் வீதியுலா வந்தனர்.
கோயில் ராஜகோபுரம் எதிரில் இருந்து புறப்பட்ட பஞ்ச மூர்த்திகள் தேரடி தெரு, திருவூடல் தெரு, பே கோபுரத் தெரு, பெரிய தெரு உள்ளிட்ட தெருக்கள் வழியாக வீதியுலா வந்தனர். அப்போது, மிதமான தூறல் மழை பெய்தபோதும், வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ரா.ஞானசேகர் மற்றும் கோயில் உபயதாரர்கள், ஊழியர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.
3-ஆம் நாள் தீபத் திருவிழா..!
தீபத் திருவிழாவின் 3-ஆம் நாளான வெள்ளிக்கிழமை (நவம்பர் 16) காலை 9 மணிக்கு மூஷிக வாகனத்தில் ஸ்ரீவிநாயகர், பூத வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரர் வீதியுலா நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு சிம்ம வாகனத்தில் ஸ்ரீஅருணாசலேஸ்வரர், வெள்ளி அன்ன வாகனத்தில் ஸ்ரீபராசக்தியம்மன் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் வீதியுலா வருகின்றனர்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/16/w600X390/annamalayar.jpg மூஷிக வாகனத்தில் வீதியுலா வந்த ஸ்ரீவிநாயகர். http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/16/தீபத்-திருவிழாவின்-இரண்டாம்-நாள்-தங்க-சூரிய-பிரபை-வாகனத்தில்-ஸ்ரீசந்திரசேகரர்-வீதியுலா-3039427.html
3039318 ஆன்மிகம் செய்திகள் கும்பகோணம் பெருமாள் திருக்கோயிலில் மகாஅஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் DIN DIN Thursday, November 15, 2018 03:40 PM +0530  

கும்பகோணம் அடுத்துள்ள நாதன் கோயில் எனும் நந்திபுரவிண்ணகரத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு செண்பகவல்லி தாயார் சமேத ஜெகநாத பெருமாள் திருக்கோயிலில், ஐப்பசி மாத வளர்பிறை மகாஅஷ்டமி தினமான நவ.15 அன்று, திருக்கோயில் வளாகத்தில், ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி வானமாமலை ஸ்ரீமதுரகவி ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள், மடத்தின் சார்பில் கிருஷ்ணன் ஸ்வாமிகள் மற்றும் திருக்கோயில் பட்டாச்சாரியார்கள், இராமன் மற்றும் கோதண்டராமன் ஆகியோர் தலைமையில் மங்கள இன்னிசை முழங்க, ஸ்ரீசூக்த மற்றும் சுதர்சன ஹோமம் நடைபெற்றது.     

அதனைத்  தொடர்ந்து, மூலவர் ஜெகந்நாத பெருமாள் மற்றும் செண்பகவல்லி தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனமும், பின்னர் சிறப்பு அலங்காரமும், தூப-தீபாராதனைகளும் நடைபெற்றது. 

இவ்விழாவில், பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். விழா நிறைவில் வந்திருந்த அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இவ்விழா ஏற்பாட்டினை திருக்கோவில் நிர்வாகத்தினர், மற்றும் ஜெகந்நாத பெருமாள் பக்தர்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தார்கள். 

- குடந்தை ப.சரவணன் 9443171383

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/15/w600X390/IMG-20181115-WA0020.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/15/கும்பகோணம்-பெருமாள்-திருக்கோயிலில்-மகாஅஷ்டமியை-முன்னிட்டு-சிறப்பு-பூஜைகள்-3039318.html
3039316 ஆன்மிகம் செய்திகள் மகரவிளக்கு பூஜைக்காக நாளை மாலை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு! DIN DIN Thursday, November 15, 2018 03:16 PM +0530  

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக நாளை மாலை கோயில் நடை திறக்கப்படுகிறது. 

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைகள் மிகவும் பிரசித்திப் பெற்றவை. மண்டல மகரவிளக்கு விழாவின்போது ஐயப்பனை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை வருவது வழக்கம். இந்தாண்டு மண்டல பூஜை டிசம்பர் 27-ம் தேதி நடைபெறுகிறது.

இதற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் நாளை மறுநாள் 17-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது. நடை திறந்ததும் ஐயப்பனுக்கு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. 

நவம்பர் 17-ம் தேதி முதல் தொடர்ச்சியாக 41 நாட்கள் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு, தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். டிசம்பர் 27-ம் தேதி மண்டல பூஜை முடிந்த பின்பு கோயில் நடை அடைக்கப்படும். 3 நாட்களுக்குப் பிறகு டிசம்பர் 30-ம் தேதி மகரவிளக்கு பூஜைக்காக நடை மீண்டும் திறக்கப்படும். 

ஐனவரி 14-ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறுகிறது. அதுவரை கோயில் நடை திறந்திருக்கும். சபரிமலை தொடர்ச்சியாக 62 நாட்கள் நடை திறந்திருக்கும் என்பதால் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. 

]]>
சபரிமலை, ஐயப்பன் கோயில், மகரவிளக்கு பூஜை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2012/11/1/13/w600X390/sabarimalai.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/15/மகரவிளக்கு-பூஜைக்காக-நாளை-மாலை-சபரிமலை-ஐயப்பன்-கோயில்-நடை-திறப்பு-3039316.html
3039283 ஆன்மிகம் செய்திகள் திருச்சி மலைக்கோட்டை மலை உச்சியில் கொப்பரை அமைக்கும் பணி தொடக்கம் DIN DIN Thursday, November 15, 2018 01:39 PM +0530  

திருச்சி மலைக்கோட்டை கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி மலை உச்சியில் கொப்பரை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. 

நவம்பர் 23-ம் தேதி கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தென்கயிலாயம் என்றழைக்கப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீப திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான தீப திருவிழா மலையில் உச்சிப்பிள்ளையார் சன்னதி முன்பு கொப்பரை அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. 

இதற்கான பூர்வாங்க பூஜை கடந்த 11-ம் தேதி நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கொப்பரையில் திரி வைப்பதற்கும், எண்ணெய் ஊற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. திரியை கொப்பரையில் வைக்கும் பணி நேற்று தொடங்கியுள்ளது. எண்ணெய் முழுவதுவாக ஊற்றப்பட்ட பின் திரி அதில் நன்கு ஊறியதும், நவ.23-ம் தேதி கார்த்திகை தீப திருவிழா அன்று மாலை 6 மணிக்கு கொப்பரையில் தீபம் ஏற்றப்படம். இந்த தீபம் அணையாமல் தொடர்ந்து மூன்று நாட்கள் எரியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

]]>
திருச்சி மலைக்கோட்டை, தாயுமானசுவாமி, கொப்பரை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/12/w600X390/kopparai.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/15/திருச்சி-மலைக்கோட்டை-மலை-உச்சியில்-கொப்பரை-அமைக்கும்-பணி-தொடக்கம்-3039283.html
3039278 ஆன்மிகம் செய்திகள் கார்த்திகை மாதப்பிறப்பையொட்டி ஜயப்பன் மாலை, வேட்டி வாங்க ஆர்வம் காட்டும் பக்தர்கள் DIN DIN Thursday, November 15, 2018 01:14 PM +0530  

கார்த்திகை மாதப் பிறப்பு வருகிற சனிக்கிழமை (நவ.17) தொடங்குவதையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்வோர் விரதத்துக்குத் தேவையான பொருள்களை வாங்குவதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். 

கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து செல்வது வழக்கம். தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தின் முதல் நாளில் தொடங்கும் இந்த விரதம், ஒரு மண்டலம் நீடித்து மகர ஜோதியைக் காணும் நாளில் நிறைவுபெறும். அதுவரை பக்தர்கள் தினமும் காலை மாலை வேளைகளில் குளித்து விரதம் மேற்கொள்வர். 

இதுபோல விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் தங்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டிக்கொள்ளும் வகையில் கருப்பு, காவி, நீலம் ஆகிய நிறங்களைக் கொண்ட வேட்டிகளையும், கழுத்தில் துளசி, சந்தனம், மணி, ருத்ராட்சம் கொண்ட மாலைகளையும் அணிந்துகொள்வர். 

நிகழாண்டில் (நவ.17) சனிக்கிழமை முதல் விரதம் தொடங்குகிறது. இதையொட்டி, விரத்துக்கான பொருள்களை வாங்குவதற்காக துளசி மணி மாலைகள், காவி வேஷ்டிகள் உள்ளிட்ட பொருள்களை ஐயப்ப பக்தர்கள் புதுக்கோட்டை கீழராஜ வீதியில் உள் காதிபவனில் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

இதுகுறித்து காதிபவன் நிர்வாகி ரமேஷ் கூறியது:

காதிபவனில் ஐயப்ப, முருக பக்தர்களுக்கு தேவையான துளசி, ருத்திராட்சம், மணி மாலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இதுதவிர, கேரளாவிலிருந்து மாலை, மும்பையில் இருந்து ஐயப்பன், முருகன் டாலர்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. பல்வேறு வண்ணங்களில் தயாரிக்கப்பட்ட வேஷ்டிகள் திருப்பூர், மதுரையில் இருந்து தருவிக்கப்பட்டிருக்கிறது என்றார்.

]]>
துளசி மாலை, காவி வேஷ்டி, கார்த்திகை, காதிபவன் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/15/w600X390/thulasi_mani.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/15/கார்த்திகை-மாதப்பிறப்பையொட்டி-ஜயப்பன்-மாலை-வேட்டி-வாங்க-ஆர்வம்-காட்டும்-பக்தர்கள்-3039278.html
3039269 ஆன்மிகம் செய்திகள் ஆணவத்தையும் கர்வத்தையும் அழித்து வெற்றிதரும் திருச்செந்தூர்: உங்கள் ஜாதகத்தில் சூரியன் செவ்வாய் சேர்க்கை இருக்கா? - அஸ்ட்ரோ சுந்தரராஜன் DIN Thursday, November 15, 2018 12:26 PM +0530  

இன்று வாழ்க்கையில் பல பேர் எப்போதும் ஏதாவது ஒரு பிரச்னையுடன் சுற்றிக்கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வேலையில் மேலதிகாரிகளுடன் பிரச்னை, கீழ் பணிபுரிபவர்களுடன் பிரச்னை, சக  பணியாளர்களுடன் பிரச்னை, திருமண வாழ்வில் கணவன் மனைவியிடத்தில் பிரச்னை, வியாபாரத்தில் பிரச்னை, விளையாட்டில் பிரச்னை, காதலில் பிரச்னை, தகப்பன் மகன் உறவில் பிரச்னை,  ஆன்மீகத்தில் பிரச்னை, அரசியலில் பிரச்னை, ஒரு நாடு மற்றொரு நாட்டோடு பிரச்னை என எல்லா இடங்களிலும் ஏதோ ஒருவித பிரச்னையோடு வாழ்ந்துவருகிறார்கள். இதற்கு முக்கிய காரணம்   மனிதரிடையே காணப்படும் அகவிருளான கோபம் பொறாமை பொறுமையின்மை பேராசை சுயநலப் போக்கு அகங்காரம் மமகாரம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

ஒவ்வொருவருடைய மனத்திலிருந்தும் குறிப்பிட்ட இவ்வழுக்குகள் நீங்கினால் வீட்டிலும் நாட்டிலும் அமைதி சாந்தி சமாதானம் போன்றவை துலக்கமுடன் ஒளிவீசும் எனலாம். அகங்காரம், மமகாரம் ஆகிய இவ்விரண்டும் அக்ஞானத்தினின்று உதிப்பவையாம். மமகாரம் என்பது என் வீடு, என் சொத்து, என் சுகம், என் கல்வி, என் உடைமை என்பனவாம். அகங்காரம் என்பது நான் செய்தேன், நான் சாதித்தேன், என்னைத் தவிர வேறு யாராலும் முடியாது போன்ற எண்ணத்தின் வெளிப்பாடாகும். நம்முடைய வாழ்க்கை என்பது இந்த அகங்காரத்திற்கும், மமகாரத்திற்கும் இடையில் நடக்கின்ற ஒரு  நீளமான சண்டை. அவ்வளவுதான். வெளியில் ஒரு பர்சனாலிட்டியாக, நம்மை வெளிப்படுத்திக் கொள்கிறோம். ஆனால், உள்ளே மற்றொரு பர்சனாலிட்டியாக இருக்கிறோம். இந்த இரண்டிற்கும் இடையில்  நடக்கின்ற சண்டைதான் வாழ்க்கை.

வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்கிற வேகம், தோல்வி வந்து விடுமோ என்கிற பயம், அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்கிற கவலை, என்ன நேர்ந்தாலும் அதிருப்தி, அடுத்தவர்கள் நிலை பார்த்து பொறாமை முதலான தன்மைகள் மமகாரத்தினால் உருவாக்கப்படுபவை. மன்னிப்பும், நகைச்சுவையும் இவ்விரண்டும் அகங்காரத்தைக் கட்டுப்படுத்தும் சாதனமாகும். அகங்காரம் செயல்களை  உருவாக்குகிறது. தவறுகளுக்குத் தண்டனை வழங்குகிறது. மாற்றங்களை ஏற்படுத்துகிறது. விருப்பத்தைத் தோற்றுவிக்கிறது. மன்னிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதால் அகங்காரத்தைக் கட்டுப்படுத்தும். நாம்  நமது அகங்காரத்தை குறைத்துக் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். பொறுமையாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும் என ஆன்மீக பெரியோர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த  அகங்காரத்தையும் மம காரத்தையும் ஆங்கிலத்தில் ஈகோ என குறிப்பிடுகிறார்கள்.

ஈகோ குணம் படைத்தவர்களை சமாளிப்பது மிகக் கடினம் தான். நமது ஒவ்வொரு நாள் அலுவலையும் நரகமாக்கி விடுவார்கள். நம்மைத் தீவிரமாக கண்காணிப்பார்கள். குறைச்சலாகப் பேசுவார்கள். மன  அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். தங்கள் பணிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காது. மனதில் வலியை உண்டாக்கும் நிகழ்வுகள் தொடர்கதை ஆகும். விலகிச் செல்லவும் முடியாது. அவஸ்தைப்பட நேரிடும்.  பாதிப்பின் தாக்கத்தால், எதிலும் கவனம் செலுத்த இயலாது. இவர்களை விட்டு விலகினால்தான் அமைதி திரும்பும்.

ஜோதிடத்தில் அகங்காரமும் மமகாரமும்

ஜோதிடத்தில் அகங்காரத்தையும் மமகாரத்தையும் குறிக்கும் கிரகம் சூரியன் எனப் பாரம்பரிய ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அகங்காரத்தையும் மமகாரத்தையும் குறிக்கும் பாவம்  லக்னபாவம் எனக் குறிப்பிடுகிறது. ஒருவர் ஜாதகத்தில் சூரியனது வீடு லக்னமாகவோ, ராசியாகவோ அமைந்து ஆட்சி உச்சம் பெற்றுவிட்டாலும் சூரியன் ஆத்மகாரகனாக அமைந்துவிட்டாலும் லக்னத்திற்கு சூரியன் பார்வை பெற்றுவிட்டாலும் அவர்களுக்கு எப்போதும் ஏதோ ஒரு அகங்காரம் இருந்துகொண்டே இருக்கும். ஆனால் சூரியனை குரு பார்த்துவிட்டாலும் குருவை சூரியன் பார்த்துவிட்டாலும் அகங்காரம் தகர்ந்துவிடும். சூரியன் ஆட்சி உச்சம் பெறும் மேஷமும் சிம்மமும் லக்னமாகவோ ராசியாகவோ அமைந்தவர்களுக்கு இயல்பாகவே கர்வம் சிறிது கூடவே அமைந்துவிடும்.

சூரியன் எந்தக் கிரகத்தில் நிற்கிறது என்பதைப் பொருத்தும் எந்தக் கிரகத்தோடு சேர்க்கை பெறுகிறது என்பதைப் பொறுத்தும் அகங்காரம் அமைந்துவிடுகிறது. சூரியன் புதன் சுக்கிரன் இம்மூன்றும் முக்கூட்டு  கிரகங்கள் எனப்படும். இவை மூன்றும் குறிப்பிட்ட பாகையில் இடைவிடாமல் ஒன்றைஒன்று தொடர்ந்து இணைந்தே செல்லும்.

ஒருவர் ஜாதகத்தில் சூரியனும் புதனும் இணைந்து புத ஆதித்ய யோகம் பெற்றுவிட்டால் அவர்களுக்கு அறிவு சார்ந்த கர்வம் மற்றும் அகங்காரம் ஏற்பட்டுவிடும். உலகில் உள்ள 95% பேருக்கு இந்த புத ஆதித்ய யோகம் அமைந்துவிடும். அனைவருக்கும் கல்வியறிவு பெறவேண்டும் எனும் இறைவனின் கருனையால் ஏற்பட்ட இந்த யோகம் உலகில் பலரையும் அகங்காரத்தோடு விளங்கக்  காரணமாகிவிடுகிறது.

புத ஆதித்ய யோகத்தினால் அனைவருக்கும் அகங்காரம் ஏற்பட்டாலும் சூரியனுக்கு முன்னும் பின்னும் புதன் நிற்கும் நிலையை பொறுத்து அங்காரத்தின் விளைவுகள் மாறுபட்டு அமைந்துவிடும். இன்று  சமூகத்தில் கல்வியில் சிறந்தவர்கள், ஆசிரியர்கள், ஜோதிடர்கள் இவர்களுக்குள் எப்போதும் ஒரு கர்வ நிலை இருப்பதற்கு இதுவே ஒரு காரணமாகிவிடுகிறது.

ஒருவர் ஜாதகத்தில் சூரியன் சுக்கிரன் இணைவு செல்வ செழிப்பினால் கர்வத்தை ஏற்படுத்திவிடுகிறது. சூரியனைக் கடந்து சுக்கிரன் நின்று சுப வெசி யோகம் ஏற்படும்போது அவர்களுக்கு செல்வ உயர்வு  நிலை ஏற்படுவதோடு செல்வத்தால் சிறிது செருக்கு ஏற்படவும் தவறுவதில்லை. 

சூரியனுடன் சேரும் கிரகத்தைப் பொருத்து அமையும் அகங்காரத்தின் தன்மை:

சூரியன் லக்னத்தில் ஆட்சி உச்சம் பெற்ற தன்மை அரசியல், பதவி, அதிகாரம், அந்தஸ்து ஆகியவற்றால் அகங்காரம் ஏற்படும்.

சூரியன் சந்திரன் சேர்க்கையால் ஏற்படும் அமாவாசை யோகமும் பௌர்ணமி யோகமும் பல பதவிகளைத் தந்து உயர்வை ஏற்படுத்தினாலும், பதவியினால் சிறிது அகங்காரத்தையும் தந்துவிடுகிறது.

சூரியன்-செவ்வாய் இரண்டும் நெருப்பு கிரஹங்களாகவும் அரசியல், அதிகாரம் போன்றவற்றின் காரக கிரஹமாகவும் விளங்குவதால் சாதாரணமாகவே சூரிய-செவ்வாய் சேர்க்கை பெற்றவர்கள் ஈகோ நிறைந்தவர்களாகக் காணப்படுவர். அதிலும் மேஷ ராசி/லக்னம் அமைந்து சூரியன் உச்சம் பெற்றுவிட்டால் அவ்வளவுதான், என்றாலும் இவர்களது சேர்க்கை சொத்து ரியல் எஸ்டேட் ஆகிய விஷயங்களில்  அகங்காரம் மற்றும் மமகாரத்தை ஏற்படுத்திவிடுகிறது.

சூரியன் புதன் சேர்க்கை கல்வியறிவு, வியாபாரம் ஆகியவற்றின் காரணமாக அகங்காரம் அமைந்துவிடுகிறது. 
 
சூரியன் குரு சேர்க்கை உயர்நிலை ஆன்மீகத்தை தந்தாலும் இருவரில் ஒருவர் 6/8/12 அதிபதிகளாகிவிட்டால் ஆன்மீகத்தில் கர்வம் ஏற்படக் காரணமாகிவிடுகிறது.

சூரியன் சுக்கிரன் இணைவு பணம், செல்வ நிலை பெண்கள் ஆகியவற்றில் செழிப்பை ஏற்படுத்தி அகங்காரத்தால் பிரச்னைகளையும் தந்துவிடுகிறது. சூரியன் சுக்கிரனின் வீட்டில் நீசமடைந்துவிடுவதால்  சுக்கிரனோடு இணைவு கர்வ பங்கத்தை ஏற்படுத்திவிடும்.

சூரியனோடு சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களின் இணைவு சூரியனுக்கு நீச நிலையே ஏற்படுத்தி கர்வ பங்கத்தையும் ஏற்படுத்திவிடுகிறது.

அகங்காரம் ஒழிய ஆன்மீகமும் தண்டனையும் வழிசெய்கிறது. எல்லா நேரங்களில் தண்டனை ஏற்புடையதாக இருக்காது என்பதால் ஆன்மீக வழி சிறந்தது என ஏற்று கொள்ளப்பட்டிருக்கிறது.

ஆன்மீக வழியில் விநாயகருக்கு "சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் ஜ்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தையே" என குட்டிக்கொள்வதும் தோபிகரணம் எனும் யோக பயிற்சியும் செய்வது அகங்காரத்தை அழிக்கும் என ஆன்மீகம் தெரிவிக்கிறது.

கேதுவிற்கு அதிதேவதை விநாயகர் என்பதும் சூரியனோடு கேது சேர்க்கை கர்வபங்கம் ஏற்படும் என மேலே குறிப்பிட்டிருப்பதை இங்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

அகங்காரம் மமகாரம் அழிக்கும் திருச்செந்தூர்

சூரபத்மன் சுப்ரமணியருடன் போர் செய்ய வரும் முதல் நிகழ்வை அருளுக்கும் இருளுக்கும், கருணைக்கும் கொடுமைக்கும், அறிவுக்கும் மருளுக்கும் நடக்கும் சந்திப்பு என்று கந்தபுராணம் சொல்கிறது.  சூரபத்மனின் ஒரு பாதி ‘நான்’ எனும் அகங்காரம், மறுபாதி ‘எனது’ எனும் மமகாரம். இந்த இரண்டையும் கொண்ட சூரபத்மன் மாமரமாக மாறி கடலுக்கடியில் தலைகீழாக நின்ற போதுதான் சுப்ரமணியரின்  வேல் அம்மரத்தை இரண்டு பகுதியாகப் பிளந்தது. அந்த இரண்டு பாகங்களுக்குள் ஒன்று ஆண்மயிலாகவும், இன்னொன்று சேவலாகவும் தோன்றின. சுப்ரமணியர் ஆண் மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் வைத்துக் கொண்டார் என்றும் கந்த புராணம் சொல்கிறது. இந்த சூரசம்ஹாரம் நடைபெற்ற இடம்தான் திருச்செந்தூர் என்று புராணங்கள் தெரிவிக்கின்றது.

அகங்காரம் நீங்கப் பரிகாரங்கள்

அகங்காரம் ஒழிய ஆன்மீகமும் தண்டனையும் வழிசெய்கிறது. எல்லா நேரங்களில் தண்டனை ஏற்புடையதாக இருக்காது என்பதால் ஆன்மீக வழி சிறந்தது என ஏற்று கொள்ளப்பட்டிருக்கிறது.

ஆன்மீக வழியில் விநாயகருக்கு "சுக்லாம் பரதரம் விஷ்னும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் ஜ்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தையே" எனக் குட்டிக்கொள்வதும் தோபிகரணம் எனும் யோக பயிற்சியும் செய்வது அகங்காரத்தை அழிக்கும் என ஆன்மீகம் தெரிவிக்கிறது.

கேதுவிற்கு அதிதேவதை விநாயகர் என்பதும் சூரியனோடு கேது சேர்க்கை கர்வபங்கம் ஏற்படும் என மேலே குறிப்பிட்டிருப்பதை இங்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

வேலூர் மாவட்டம் காவேரிபாக்கத்தை அடுத்த திருப்பாற்கடல் கிராமத்தில் உள்ளது பிரசன்ன வேங்கடேச பெருமாள் கோவில். சைவம் மற்றும் வைணவத்தை ஒருங்கிணைக்கும் ஆலயமாக இது விளங்குகிறது. இந்த ஆலயத்தில் எங்கும் இல்லாத புதுமையாக சிவலிங்கம் இருக்கும் ஆவுடையாரின் மீது பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இந்தத் திருத்தலம் 108 திவ்ய தேசங்களில்,  107-வது தலமாக திகழ்கிறது.

இந்த ஆலயம் திருவோண நட்சத்திரக்காரர்களுக்கு பரிகார தலமாக உள்ளது. ஒரு முறை, சந்திர பகவான் பெற்ற சாபத்தினால் அவரது ஒளியும், அவரது கலைகளும் மறையத் தொடங்கின. இதைக் கண்டு வேதனையடைந்த சந்திரனின் மனைவிகளில் ஒருவரான திருவோண நட்சத்திர தேவி, இந்த தலம் வந்து பெருமாளை வணங்கி, தவம் செய்தாள். இதையடுத்து பெருமாள் நேரில் காட்சி தந்து, சந்திர பகவானுக்கு சாபவிமோசனம் அளித்து அருள்புரிந்தார். அது முதற்கொண்டு இந்தத்தலம், திருவோண நட்சத்திரக்காரர்களுக்கு பரிகார தலமாக உள்ளது. இங்கு தரிசிப்போருக்கு சந்திராஷ்டம தோஷங்கள்,  மனக் குழப்பங்கள், நட்சத்திர தோஷங்கள், செவ்வாய் தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.

மேலும் புத்திகாரகரான புதனின் அதிதேவதையான விஷ்ணுவின் நக்‌ஷத்திர நாளில் ஸ்ரீ ப்ரஸன்ன வேங்கடேச பெருமாளை தரிசிப்பது அகங்காரம், மமகாரம் நீங்கி புத்தி தெளிவு ஏற்படும் என்பது நிதர்சனம். மகாபலி சக்கரவர்த்தியின் கர்வத்தை அடக்கி மூன்றடி மண் பெற்ற நாளும் ஒரு திருவோண நாள் தான் என்பது கூடுதல் தகவலாகும். மேலும் இன்றைய கோச்சாரத்தில் சந்திர பகவான் திருவோண நக்ஷத்திரத்தில் பயணம் செய்வது குறிப்பிடத்தக்கது.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510

]]>
திருச்செந்தூர், ஆணவம், அகங்காரமும் மமகாரமும் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/15/w600X390/Ego3_1.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/15/ஆணவத்தையும்-கர்வத்தையும்-அழித்து-வெற்றிதரும்-திருச்செந்தூர்-உங்கள்-ஜாதகத்தில்-சூரியன்-செவ்வாய்-சேர்-3039269.html
3039258 ஆன்மிகம் செய்திகள் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் பந்தல் அமைக்கும் பணி தீவிரம் DIN DIN Thursday, November 15, 2018 11:13 AM +0530  

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

திருச்சியில் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீ ரங்கநாதர் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை விழா டிசம்பர் 18-ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வெள்ளை கோபுரம் அருகே பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 
 

]]>
ஸ்ரீரங்கம், ஏகாதசி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/2/w600X390/srirangam.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/15/வைகுண்ட-ஏகாதசியை-முன்னிட்டு-ஸ்ரீரங்கத்தில்-பந்தல்-அமைக்கும்-பணி-தீவிரம்-3039258.html
3038588 ஆன்மிகம் செய்திகள் முருகனுக்கு மந்திர உபதேசம் செய்த குடந்தை ஸ்ரீமங்களாம்பிகை ஆலயத்தில் சூரசம்ஹார விழா Wednesday, November 14, 2018 03:37 PM +0530  

கும்பகோணம், அருள்மிகு  ஸ்ரீ மங்களாம்பிகை சமேத ஆதிகும்பேஸ்வரர் ஆலய கந்த சஷ்டி சூரசம்ஹார விழா நேற்று இரவு, அருள்மிகு  சோமேஸ்வரர் ஆலய வாயில் அருகில் நடைப்பெற்றது. 

 

இவ்விழாவில், கந்த பெருமானாகிய குமரப்பர், குதிரை வாகனத்திலும், கார்த்திகேயர் மயில் வாகனத்திலும் எழுந்தருளி, சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைப்பெற்றது. இதில் குடந்தை கீழ் கோட்டம் அருள்மிகு நாகேஸ்வரர், சோமேஸ்வரர், பழனியாண்டவர் ஆகிய திருக்கோயில்களில் இருந்து  முருகப் பெருமான்கள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்கள். பின்னர்  ஸ்வாமிகள்  வீதிஉலா வந்தன இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிகளை தரிசனம் செய்தன.  

குடந்தை ப.சரவணன் 9443171383

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/14/w600X390/shrilords1.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/14/முருகனுக்கு-மந்திர-உபதேசம்-செய்த-குடந்தை-ஸ்ரீமங்களாம்பிகை-ஆலயத்தில்-சூரசம்ஹார-விழா-3038588.html
3038098 ஆன்மிகம் செய்திகள் அரோகரா கோஷம் விண்ணதிர, கோயில்களில் சூரசம்ஹாரம் DIN DIN Wednesday, November 14, 2018 02:20 AM +0530
வல்லக்கோட்டை மற்றும் மொளச்சூர் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழாவின் ஒரு பகுதியாக சூரசம்ஹார விழா கோலாகலமாக நடைபெற்றது. 
ஸ்ரீபெரும்புதுôர் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில், பழமையான பிரசித்தி பெற்ற வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு 36ஆவது ஆண்டு கந்தசஷ்டி விழா கடந்த வியாழக்கிழமை கோயில் வளாகத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆறு நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முதல் நாளான வியாழக்கிழமை, மூன்று கால வேளையும் தீப ஆராதனை நடைபெற்றது. உற்சவர் மஞ்சள் சாற்று புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கந்த சஷ்டி விழாவின் 5ஆம் நாளான செவ்வாய்க்கிழமை மாலை சூரசம்ஹார விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு மூலவருக்கு செவ்வாய்க்கிழமை விபூதி, சந்தனம், பால் அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த விழாவில் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டனர். இதையடுத்து, புதன்கிழமையன்று திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. 
மொளச்சூர் முருகன் கோயில்: சுங்குவார்சத்திரத்தை அடுத்த மொளச்சூர் பகுதியில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில், சூரசம்ஹார விழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலை மூலவருக்கு விபூதி, சந்தனம், பால், தேன் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு மலர் அலங்காரத்தில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் மொளச்சூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோயிலை 108 முறை சுற்றி வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். 
விழா ஏற்பாடுகளை முன்னாள் ஸ்ரீபெரும்புதூர் சட்டப் பேரவை உறுப்பினர் மொளச்சூர் ரா.பெருமாள் தலைமையிலான விழாக் குழுவினர் செய்திருந்தனர். 
காஞ்சிபுரத்தில்..
குமரகோட்டம் சுப்பிரமணியர் கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
காஞ்சிபுரத்தில் கச்சியப்ப சிவாச்சாரியாரால் கந்தபுராணம் அரங்கேறிய பிரசித்தி பெற்ற கோயிலாக குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா கடந்த 8ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, பல்லக்கு, ஆடு, மான், அன்னம், மயில், குதிரை, யானை வாகனங்களில் அடுத்தடுத்த நாள்களில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். நாள்தோறும் ராஜவீதிகளில் பவனி வந்தும் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வான கந்த சஷ்டி விழா செவ்வாய்க்கிழமை விமரிசையாக நடைபெற்றது. அதன்படி, காலை சுப்பிரமணியருக்கு தீர்த்தவாரி உற்சவம் நடத்தப்பட்டது. அப்போது முருகனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்த வந்த பக்தர்கள் கோயிலின் வெளிப்பிரகாரத்தை 108 முறை சுற்றி வந்து நேர்த்திக்கடன் செலுத்தி, சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டபோது, திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா என பக்தி கோஷங்களை எழுப்பி மனமுருகி முருகனை வணங்கி வழிபட்டனர். 
சூரசம்ஹாரம்: அதேபோல், சிவபெருமானை நோக்கி தவமிருந்து, தான் பெற்ற வரத்தை தவறாகப் பயன்படுத்தி முனிவர்களையும் தேவர்களையும் துன்புறுத்திய சூரபத்மன் என்னும் அசுரனை முருகப் பெருமான் சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சிக்காக, அறநிலையத் துறையினரும், விழாக் குழுவினரும் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். இவ்விழாவையொட்டி, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. சூரசம்ஹார உற்சவத்தைக் காண வாலாஜாபாத், திருப்புலிவனம், திருப்புட்குழி, விஷார், கீழம்பி, சின்னகாஞ்சிபுரம், ஏகனாம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/14/w600X390/muruga1.JPG மொளச்சூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு  அலங்காரத்தில்  பக்தர்களுக்கு  காட்சியளித்த  மூலவர். http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/14/அரோகரா-கோஷம்-விண்ணதிர-கோயில்களில்-சூரசம்ஹாரம்-3038098.html
3038097 ஆன்மிகம் செய்திகள் திருத்தணி முருகன் கோயிலில் புஷ்பாஞ்சலி DIN DIN Wednesday, November 14, 2018 02:19 AM +0530
திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி விழாவையொட்டி, செவ்வாய்கிழமை புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
ஆறுபடை வீடுகளில் 5-ஆம் படைவீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 8-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு மலைக்கோயிலில் உள்ள மூலவர் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. மாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேக-அலங்காரம் நடைபெற்றது. பின்னர் தங்கக் கவசமும், பச்சை மாணிக்க மரகதக்கல்லும் அணிவிக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. 
தொடர்ந்து மாலை 5 மணிக்கு ம.பொ.சி.சாலையில் உள்ள முருகன் கோயிலின் உப கோயிலான சுந்தர விநாயகர் கோயிலில் மூலவர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 
அதனைத் தொடர்ந்து, முருகன் கோயில் தக்கார் வே.ஜெயசங்கர், கோயில் இணை ஆணையர் செ.சிவாஜி மற்றும் பக்தர்கள் ஆகியோர் பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட பலவகையான 5 டன் மலர்களை சரவணப்பொய்கை வழியாக மலைக்கோயிலுக்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
பின்னர், முருகன் கோயில் காவடி மண்டபத்தில் எழுந்தருளியிருந்த வள்ளி, தெய்வானையுடன் சண்முக சுவாமிக்கு அனைத்து வகையான மலர்களால் புஷ்பாஞ்சலி மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இந்த விழாவில் சென்னை, அரக்கோணம், திருவள்ளூர், திருத்தணி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். விழாவில் தேமுதிக இளைஞர் அணித் தலைவர் சுதீஷ், தேமுதிக மாவட்டச் செயலாளர் 
டி.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி, டி.எஸ்.பி. சேகர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.  

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/14/w600X390/tiruthani.JPG திருத்தணி முருகன் கோயிலில் வள்ளி, தெய்வானை சமேத முருகனுக்கு நடைபெற்ற புஷ்பாஞ்சலி, சிறப்பு தீபாராதனை.  http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/14/திருத்தணி-முருகன்-கோயிலில்-புஷ்பாஞ்சலி-3038097.html
3038096 ஆன்மிகம் செய்திகள் கோயில்களில் இன்று முருகன் திருக்கல்யாணம் DIN DIN Wednesday, November 14, 2018 02:18 AM +0530
செங்கல்பட்டில் உள்ள கோயில்களில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி விழாவின் ஒரு பகுதியாக புதன்கிழமை (நவ. 14) முருகன் திருக்கல்யாண உற்சவம் நடைபெறஉள்ளது.
நகரில் உள்ள சக்திவிநாயகர் கோயில், காட்டு நாயக்கன் தெருவில் உள்ள செம்மலை வேல்முருகன் கோயில், அண்ணாநகரில் உள்ள ரத்தினவிநாயகர் கோயில் மற்றும் எல்லையம்மன் கோயில், என்ஜிஜிஓ நகரில் உள்ள வரசித்திவிநாயகர் கோயில், மேட்டுத் தெருவில் உளஅள செங்கழுநீர் விநாயகர் கோயில், வ.உ.சிதம்பரனார் தெரிவில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயில், பெரிய நத்தம் கலாசநாதர்கோயில் ஆகியவற்றில் வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.
அதேபோல், செங்கல்பட்டை அடுத்த திருப்போரூர் கூட்டுச்சாலை நேரு நகரில் உள்ள வெங்கடேசன் வாசுகி திருமண மண்டபத்தில் கந்தசஷ்டி பெருவிழா திருக்கல்யாண உற்சவம் நடத்தப்பட உள்ளது.
இதனிடையே, திருப்போரூர் கந்தசாமி கோயிலிலும், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலிலும் முருகனுக்கு திருக்கல்யாண உற்வசம் நடைபெறும். 

]]>
http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/14/கோயில்களில்-இன்று-முருகன்-திருக்கல்யாணம்-3038096.html
3038095 ஆன்மிகம் செய்திகள் இஸ்ரோ தலைவர் சிவன் வழிபாடு DIN DIN Wednesday, November 14, 2018 02:18 AM +0530
ஏழுமலையானை இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பின் (இஸ்ரோ) தலைவர் சிவன் வழிபட்டார்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவிலிருந்து ஜிஎஸ்எல்வி மார்க்-3, டி-2 ராக்கெட் புதன்கிழமை (நவ. 14) காலை விண்ணில் செலுத்தப்பட உள்ளது. அதன் மாதிரி வடிவத்தை ஏழுமலையானின் திருவடியில் வைத்து பூஜை செய்வதற்காக இஸ்ரோ தலைவர் சிவன், திருப்பதிக்கு வந்தார். அவர் செவ்வாய்க்கிழமை காலையில் ஏழுமலையானை தரிசித்தார். பூஜை செய்து, தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சிறப்புப் பிரசாதங்களை வழங்கினர். பிரசாதங்களை பெற்றுக் கொண்டு கோயிலை விட்டு வெளியில் வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜிஎஸ்எல்வி மார்க்-3 டி-2 ராக்கெட் மூலம் செயற்கைக் கோள்கள் ஜம்மு-காஷ்மீர் மற்றும் நாட்டின் வடகிழக்குப் பகுதிகளில் தொலைதொடர்பை சீராக்கும் நோக்கில் புதன்கிழமை விண்ணில் ஏவப்பட உள்ளன. தற்போது கஜா புயல் காரணமாக வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வானிலை சாதகமாக இருந்தால் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும். வானிலை சாதகமாக இல்லையென்றால் ராக்கெட் ஏவப்படுவது ரத்து செய்யப்படும் என்றார் அவர். 
காளஹஸ்தியில் வழிபாடு: அதன் பின் காளஹஸ்தி சென்ற அவர் காளஹஸ்தீஸ்வரரை தரிசித்துவிட்டு, ஸ்ரீஹரிகோட்டா திரும்பினார்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/14/w600X390/sivan.jpg காளஹஸ்தீஸ்வரரை தரிசித்து திரும்பிய இஸ்ரோ தலைவர் சிவனுக்கு பிரசாதம் வழங்கும் கோயில் அதிகாரி. http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/14/இஸ்ரோ-தலைவர்-சிவன்-வழிபாடு-3038095.html
3038094 ஆன்மிகம் செய்திகள் ஏழுமலையான் உண்டியல் வருமானம் ரூ.2.50 கோடி Wednesday, November 14, 2018 02:18 AM +0530
ஏழுமலையான் உண்டியல் வருமானம் திங்கள்கிழமை ரூ.2.50 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அந்த உண்டியல் காணிக்கைகளை தேவஸ்தானம் தினந்தோறும் கணக்கிட்டு வங்கிகளில் வரவு வைத்து வருகிறது. அதன்படி திங்கள்கிழமை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்திற்கு ரூ.2.50 கோடி வருவாய் கிடைத்தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

]]>
http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/14/ஏழுமலையான்-உண்டியல்-வருமானம்-ரூ250-கோடி-3038094.html
3038002 ஆன்மிகம் செய்திகள் திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்தார் மயில்வாகனன்!  Tuesday, November 13, 2018 05:37 PM +0530  

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கந்த சஷ்டி விழாவையொட்டி முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.

கோயில் கடற்கரையில் நடைபெற்று வரும் இந்நிகழ்வை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த 8-ம் தேதி  விழாயக்கிழமையன்று கந்த சஷ்டி விழா காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா இன்று நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு கோயில் நடை அதிகாலை ஒரு மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு  உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை, அதிகாலை 4 மணிக்கு காலசந்தி பூஜை நடைபெற்றது. வைர கிரீடம், தங்க அங்கி அணிந்து சர்வ அலங்காரத்தில் காட்சியளித்த மூலவரை விரதமிருக்கும் பக்தர்கள் கடலில் புனித நீராடியும், அங்கப்பிரதட்சிணம், அடிப்பிரதட்சணம் செய்தும், காவடி எடுத்தும் தரிசனம் செய்து வருகின்றனர்.

இன்று காலை 6 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் எழுந்தருளினார். அங்கு ஹோமங்கள் நடந்து, சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. மதியம் மூலவரான சுப்பிரமணியருக்கு சஷ்டி சிறப்பு தீபாராதனையும், உச்சிகால தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர், யாகசாலையில் இருந்த ஜெயந்திநாதருக்கு சிறப்பு தீபாராதனையாகி, சுவாமி அம்பாளுடன் தங்கச்  சப்பரத்தில் எழுந்தருளி சண்முகவிலாசம் வந்தார். அங்கு மகா தீபாராதனை நடைபெற்றது. 

பின்னர் சுவாமி ஜெயந்தி நாதர் திருவாவடுதுறை ஆதீன கந்த சஷ்டி மண்டபத்துக்கு வந்து, அங்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சர்வ அலங்காரமாகி மாலை 4.30 மணிக்கு தங்க மயில் வாகனத்தில் சூரசம்ஹாரத்துக்குப் புறப்பட்டார். முன்னதாக, சூரபத்மன் தனது பரிவாரங்களுடன் மேலக் கோயிலான சிவன் கோயிலிலிருந்து புறப்பட்டு உள், வெளி மாடவீதிகள் மற்றும் ரதவீதிகள், சந்நிதித் தெரு  வழியாக கோயில் கடற்கரைக்கு வந்து சேர்ந்தார். 

மாலை 4.55 மணிக்கு கஜமுக சூரசம்ஹாரம் நடைபெற்றது. அதற்கு பின், 5.05 மணிக்கு ஆணவம் அடங்காத சூரபத்மன் சிங்கமுகமெடுத்து அமைதியின் திருஉருவமான முருகப்பெருமானை மூன்று முறை சுற்றி வந்து போர் புரிந்தார். முருகன் தனது வேலால் சிங்கமுக சூரனை வதம் செய்தார்.

இறுதியாக 5.20 மணிக்கு சூரபத்மன் தனது சுயரூபத்துடன் போர் புரிய வந்தார். அவரை முருகப்பெருமான் வதம் செய்தார். அதன்பிறகும் ஆணவம் அடங்காத சூரபத்மன் கடைசியாக மாலை 5.35 மணிக்கு மாமரமாக உருவெடுத்து மீண்டும் போருக்கு வந்து, சூரபத்மனின் ஆணவத்தை ஆட்கொண்டு அவரை சேவலாகவும், மயிலாகவும் உருமாறச் செய்து அவரை சூரசம்ஹாரம் செய்தார்.

ஒவ்வொரு முறையும் முருகப்பெருமான் சூரபத்மனிடம் போர் புரியும் போது வானில் கருடன் வட்டமிட்டதைக் கண்ட பக்தர்கள், பக்திப் பரவசத்தில் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' என்ற பரவசம் பொங்க கோஷம் எழுப்பி முருகப்பெருமானை வழிபட்டனர். 

]]>
திருச்செந்தூர் , கந்த சஷ்டி, சூரசம்ஹார விழா http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/13/w600X390/soorasamha.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/13/திருச்செந்தூரில்-சூரபத்மனை-வதம்-செய்தார்-முருகப்பெருமான்-3038002.html
3037999 ஆன்மிகம் செய்திகள் உலக நீரிழிவு நோய் தினம்: சர்க்கரை நோயினால் அவதியா? திருச்செந்தூர் முருகனை வணங்குங்க! - அஸ்ட்ரோ சுந்தரராஜன் DIN Tuesday, November 13, 2018 04:14 PM +0530  

நாளை உலக சர்க்கரை நோய் தினமாகும். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14-ம் தேதி உலக நீரிழிவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. நீரிழிவால் அதிகரித்து வரும் அபாயங்களைக் குறித்த அக்கறையோடு  உலக நீரிழிவு கூட்டமைப்பும் உலக சுகாதார நிறுவனமும் இணைந்து 1991-ஆம் ஆண்டு இந்நாளை உருவாக்கின. 160 நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் உலகின் மாபெரும் பிரசார இயக்கமான இது 2006-ஆம்  ஆண்டில் இருந்து ஐக்கிய நாடுகளின் அதிகாரப் பூர்வமான நாளாக இருந்து வருகிறது.

உலக சுகாதார நிறுவன அறிக்கையின் படி உலகளவில் 450 மில்லியன் மக்கள் சர்க்கரை நோயுடன் வாழ்ந்து வருகின்றனர். 2.5 மில்லியன் இறப்புகள் சர்க்கரை நோயின் மூலம் ஏற்படுகிறது. உலக நீரிழிவு  நோய் விழிப்புணர்வு தினத்தில் சர்க்கரை நோய் தடுப்பு முறைகளை ஊக்குவித்து, சர்க்கரை நோயிக்கான சிகிச்சை முறைகளை வலுப்படுத்தி சர்க்கரை நோய் வராமல் தீவிர கண்காணித்தலின் மூலம்  சர்க்கரை நோயை தடுப்பதாகும். சர்க்கரை வியாதியில் உலகத்திலேயே முன்னோடியாக இருக்கக்கூடிய நாடு எது என்றால் அது இந்தியா. இந்தியாவிலேயே சர்க்கரை வியாதியில் முன்னோடியாக இருக்கக்  கூடிய மாநிலம் எது? என்றால் நம்புங்கள் அது நம் தமிழ்நாடு தான். 

நீரிழிவு நோய்

இன்று நீரிழிவு எனப்படுவது அன்றே சித்தர்களால் மது மேகம் என்ற பெயரில் சொல்லப்பட்டது. சர்க்கரை நோய் என்பது உண்மையில் ஒரு தனிப்பட்ட நோய் அல்ல. உடம்பிலிருந்து வரும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த இயற்கையாக கணையம் இன்சுலினை சுரக்கும். இந்தக் கணையம் சுரக்கும் இன்சுலினின் அளவில் உண்டாகும் குறைபாடே சர்க்கரை நோய் என்றழைக்கப்படுகிறது. சர்க்கரை  நோய் என்ற குறைபாடுதான் பல நோய்கள் உடம்பில் தோன்றுவதற்குக் காரணமாக இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. 

நீரிழிவு ஒரு நீடித்த நோய். ஒருவரது உடலால் போதுமான கணைய நீரை (இன்சுலின்) உற்பத்தி செய்ய முடியாமை அல்லது அவரது உடல் கணைய நீருக்குத் தகுந்த முறையில் பதில்வினை ஆற்ற  முடியாமை ஆகிய காரணங்களால் இந்நோய் ஏற்படுகிறது. இந்நீர் கணையத்தால் உற்பத்தி செய்யப்படுகிறது. இது சர்க்கரையை உடல் செல்கள் பயன்படுத்தி ஆற்றல் உண்டாக்கத் துணை புரிகிறது (மாவுச்  சத்துக்கள் சர்க்கரையாக உடைக்கப்படுகின்றன). மிகைச்சர்க்கரை இரத்தத்தில் நீண்ட நாட்களாக இருக்கும் பட்சத்தில் உடலுக்கும் பல்வேறு உறுப்பு மற்றும் திசுக்களுக்கும் சேதம் உண்டாக்குகிறது.  போதுமான இன்சுலின் சுரக்காத போது, குளுக்கோஸ் செல்களுக்கு செல்ல இயலுவதில்லை. எனவே இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸ் அதிக அளவில் தங்கிவிடுகிறது. இந்த நிலைதான்  ஹைப்பார்க்ளைசீமியா எனப்படும் நீரிழிவு நோய் ஆகும்.

அறிகுறிகள்

அடிக்கடி சிறுநீர் கழித்தல், எப்போதும் பசித்தல், தண்ணீர் அதிகமாகக் குடிப்பது, எப்போதும் களைப்பாக இருக்கும், ஆறாத புண், பிறப்புறுப்பில் நீர் வடியும் புண், உடலுறவில் ஈடுபாடு இல்லாதிருத்தல்,  காரணமில்லாமல் எடை குறைதல், மிகக் கூடுதல் எடை,கால் மரத்துப் போய் உறுத்துதல், மங்கலான பார்வை போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கலாம். எனவே தகுந்த  மருத்துவரை அணுகி உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா? என்பதை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

விளைவுகள்

நீரிழிவைத் துவக்கத்திலேயே கவனிக்கவில்லை என்றால் நிலைமை மோசமாகிவிடும். கட்டுக்குள் இல்லாத நீரிழிவு, பல முக்கியமான உடல் உறுப்புகளையும் செயல்பாடுகளையும் பாதித்துவிடும். குறிப்பாக, பார்வையை இழக்க நேரிடலாம் அல்லது பார்வை மங்கலாம். சிறுநீரகங்கள் சேதமடையலாம். இன்பெக்சன் அடிக்கடி ஏற்படலாம். காங்கரீன் எனும் புண், பாதத்தில் பிரச்னைகள் வரலாம். உடலுறவில் இயலாமை ஏற்படலாம். மூளைச்சேதமும், மாரடைப்பும் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கலாம். நீரிழிவு நோயைத் துவக்கத்திலேயேக் கட்டுப்படுத்திவிட்டால், பல சிக்கல்கள் தடுக்கப்பட்டு நீங்கள்  சாதாரண வாழ்க்கை வாழ உதவும்.

நீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி?

நீரிழிவு நோயின் சிகிச்சையில் உணவுமுறை உடற்பயிற்சி நோயின் தீவிரத்தைத் தவறாமல் கண்காணித்தல் மற்றும் மாத்திரைகள் எடுத்துக்கொள்தல் இன்சுலின் பயன்படுத்துதல் இந்த சிகிச்சைகளைத்  தகுந்த மருத்துவர்களின் ஆலோசனைகள் மூலம் எடுத்துக்கொள்வதால் நீரிழிவைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். உங்களுக்கு நீரிழிவு இருந்தால் அதைக் குணப்படுத்த முடியாது. எனவே  குணப்படுத்துவதாகச் சொல்லி ஏமாற்றுபவர்களின் வலையில் விழுந்து விடாமல் கவனமாயிருக்க வேண்டும்.

நீரிழிவு நோயிற்கான ஜோதிட காரணங்கள்

குரு மற்றும் சுக்கிரன் இருவருமே சர்க்கரை நோய்க்கான காரணகர்த்தாக்களாக இருக்கிறார்கள். இவ்விருவரும் தாமாக தனிப்பட்ட எந்த வியாதியையும் உருவாக்குவதில்லை, குறைபாட்டினைத்   தோற்றுவித்து பலவிதமான நோய்கள் உண்டாவதற்குக் காரணமாகிறார்கள். ஆனால் நீரிழிவு வியாதியைத் தருவது குருவும், சுக்கிரனும்தான் என்று கூறப்படுகிறதே அது எப்படி என்ற கேள்வி எழலாம்.  குரு மற்றும் சுக்கிரன் ஜாதகத்தில் வலுவிழக்கும்போது சர்க்கரை நோய் உண்டாகிறது. 

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு இந்தச் சர்க்கரை நோயின் தாக்கம் இருக்கிறது. அப்படியென்றால் இவர்கள் எல்லோரின் ஜாதகத்திலும் குருவும், சுக்கிரனும் வலுவிழந்திருப்பார்களா என்ற  கேள்வியும் எழுகிறது. குருவும், சுக்கிரனும் சாதகமாக அமர்ந்திருந்தால் சர்க்கரை நோய் இருந்தாலும் 80 வயதிற்கு மேற்பட்டும் அன்றாடம் மருந்துகளை உட்கொண்டு சர்க்கரையின் அளவினை  கட்டுக்குள் வைத்திருப்பர். குரு - சுக்கிரனின் வலு குன்றியிருந்தால் 50 வயதிற்குள்ளாகவே சர்க்கரை நோயின் தாக்கத்தால் பெருத்த பாதிப்பிற்கும் உள்ளாகிறார்கள் என்பதே இதற்கான பதில்.

நீரிழிவு நோயிக்கு முக்கிய காரணம் இன்சுலின் குறைபாடே என மேலே பார்த்தோம். அந்த இன்சுலினின் காரகர் குருபகவான் என மருத்துவ ஜோதிடம் கூறுகிறது. அதேபோல் நீரிழிவு நோயிக்கான காரக  பாவம் கால புருஷ ஜாதகத்தில் வயிற்றைக் குறிக்கும் ஆறாம் பாவம் மற்றும் ஜெனன ஜாதக ஆறாம் பாவம் ஆகும். எனவே இன்சுலின் காரகரான குரு பகவான் கன்னி ராசி மற்றும் அதன் அதிபதியை  எந்த விதத்தில் தொடர்பு கொண்டாலும் அவர்களுக்கு நீரிழிவு நோயின் பாதிப்பு இருக்கும். 

நீரிழிவு நோயை உருவாக்கும் கிரக நிலைகள்

1.குரு ஆட்சி உச்சம் பெற்றவர்களுக்கும் நீசமடைந்தவர்களுக்கும் வக்ரம் பெற்றவர்களுக்கும் சர்க்கரைநோய் வந்து விடுகிறது. குரு ஆட்சி உச்சம் பெற்றவர்கள் சர்க்கரை நோய் வந்தாலும் எதிர்ப்பு சக்தி  பெற்று மருந்து மாத்திரைகளுடன் பிரச்னையின்றி வாழ்ந்திடுவர். ஆனால் குரு நீசமும் வக்ரமடைந்தவர்களுக்கு மருந்துகளும் பலனின்றி அவதியுறுவர்.

2. கல்லீரலுக்கு காரகமான குரு கால புருஷனுக்கு ஆறாம் வீடு எனப்படும் கன்னி ராசியில் குருவும் சுக்கிரனும் ஆறு/எட்டு/பன்னிரண்டு தொடர்பு பெற்று அசுபத்தன்மை பெற்று நிற்பது மற்றும் சுக்கிரன்  நீசமடைவது, கன்னியில் நீசமடைந்த சுக்கிரன் செரிமான கோளாரை ஏற்படுத்தி நீரிழிவு நோயை ஏற்படுத்திவிடுகிறது.

3. துலாம், மீனம் மற்றம் தனுசு, ரிஷபம் லக்னமாகவோ ராசியாகவோ பெற்றவர்களுக்கு குருவும் சுக்கிரனும் சஷ்டாஸ்டகமாக நின்று சர்க்கரை நோய் ஏற்பட்டுவிடுகிறது.

4. எந்த லக்னமானாலும் அதன் ஆறாம் வீட்டில் குருவும் சுக்கிரனும் ஆறு/எட்டு/பன்னிரண்டு அதிபதிகளாகி அசுபத்தன்மை பெற்று நிற்பது.

5. கால புருஷனுக்கு பன்னிரண்டாம் வீடாகிய மீனத்தில் குரு ஆட்சி பெறுவது அல்லது சுக்கிரன் உச்சமடைவது.

6. ஜெனன ஜாதகத்கதிலோ அல்லது கோச்சாரத்திலோ கன்னி ராசியில் சனி நிற்பது இறுதிநிலை அல்லது தீவிரமான உச்ச நிலை சர்க்கரை நோயைத் தெரிவிக்கிறது. கன்னியில் வாயு கிரகமான சனி  செரிமான கோளாறு, வாயுத்தொல்லை, கல்லீரல் பிரச்னைகள் மற்றும் என்சைம் பிரச்னைகளையும் ஏற்படுத்தி தீவிர சர்க்கரை நோயை ஏற்படுத்திவிடுகிறது.

7. குரு ராகு சாரம் பெற்று நிற்பது, ராகுவுடன் இணைந்து நிற்பது சுக்கிரன் சனி சாரம் பெறுவது மற்றும் சுக்கிரன் சனியுடன் இணைந்து நிற்பது குருவும் சுக்கிரனும் பாதகாதிபதி தொடர்பு பெறுவது  அல்லது பாதகாதிகளாகவே நிற்பது பிறப்பிலிருந்தே சர்க்கரை நோய் ஏற்பட்டு விடுகிறது.

8. சுக்கிரன் மற்றும் சந்திரன் சேர்க்கை எந்த விதத்தில் ஏற்பட்டாலும் அதிக கார்போஹட்ரேட் உணவுகளினால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

9. வைட்டமின் B6 (காரக கிரகம் குரு) குறைபாடுள்ளவர்களுக்கு அமினோ அமிலமான ட்ரிப்டோபான், ஸாந்துரனிக் அமிலமாக மாற்றமடைந்து குறைந்த கால இடைவெளியில் கணையம் சிதிலமடைந்து  ரத்தத்தில் சர்க்கரை நோயை ஏற்படுத்துகிறது. அதனால் அதிகளவு குளுக்கோஸ் ரத்தத்தில் கலந்து செல்லிலிருந்து அதிகளவு நீரினை வெளியேற்றுவதால் அடிக்கடி சிறுநீர் கழிப்பது நாவறட்சி போன்றவை  ஏற்படுகிறது. மேலும் வைட்டமின் B6 என்பது பெண்கள் கருத்தரிக்க மிகவும் அவசியமானது. எனவே பெண்களுக்கான வைட்டமின் என செல்லமாக அழைக்கப்படுகிறது. புத்திர காரகனாகிய குரு இதற்கும்  காரகமாவது எவ்வளவு பொருத்தமானதன்றோ!

10. தாதுக்களில் முக்கியமானதான மாங்கனிசு (காரக கிரகம் குரு) மற்றும் க்ரோமியம் (காரக கிரகம் குரு) குறைபாடும் கணைய செயல்பாடு மற்றும் மெட்டபாலிசம் எனப்படும் வளர்சிதை மாற்றத்தில்  பிரச்னையை ஏற்படுத்துகிறது.
 
மேற்கத்திய ஜோதிட கிரக நிலைகள்

1. உப கிரகமான புளுட்டோ கன்னியில் நிற்பது மற்றும் அசுப தொடர்பு பெறுவது கணைய செயல்பாடுகளில் பிரச்னையை ஏற்படுத்தி இன்சுலின் சுரப்பதில் குறைபாட்டினை தந்து தீவிர சர்க்கரைநோயை  ஏற்படுத்திவிடுகிறது மேற்கத்திய ஜோதிடத்தில் கூறப்படுகிறது. இந்த நோயின் தீவிரத்தை குளுக்கோஸ் ஏற்பு பரிசோதனை (Glucose Tolerance Test)மூலம் அறிய முடியும்.

2. உப கிரகமான யுரேனஸ் கன்னியில் நிற்பது அல்லது அசுப தொடர்புபெறுவது உணர்ச்சி வசப்படுவது, மன அழுத்தம், மன உளைச்சல், அடிக்கடி கோபப்படுவது போன்ற காரணங்களால் திடீரென  சர்க்கரை நோயை ஏற்படுத்தி செரிமான கோளாறுகள் மற்றும் கணைய பிரச்னைகளை ஏற்படுத்தி சர்க்கரை நோய்க்கான தீவிர சிகிச்சை மேற்கொள்ளும் நிலையை ஏற்படுத்திவிடுகிறது. தவறும்  பட்சத்தில் கனைய செயலிழப்பு மற்றும் உயிரிழக்கும் நிலையையும் ஏற்படுத்துகிறது.

நீரிழிவு நோய்க்கான ஜோதிட பரிகாரங்கள்

குரு பரிகாரஸ்தலங்களான திரு ஆலங்குடி, தென்குடி திட்டை, திருச்செந்தூர் போன்ற ஸ்தலங்களுக்கும் சென்னையில் உள்ளவர்கள் திருவலிதாயம் அம்பத்தூர் பாடியில் உள்ள குரு ஸ்தலங்களுக்குச் சென்று வழிபடுவது வியாழக்கிழமை மகான்கள் தரிசனம் மற்றும் விரதமிருப்பது ஆகியவை சர்க்கரை நோய் வருவதைத் தடுக்கும். 

முக்கியமாக ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து இந்நோயினால் அவதியுறுபவர்கள் சர்க்கரை நோயின் காரகரான குரு மற்றும் ரத்தத்தின் அதிபதியான செவ்வாய் இருவருக்கும் ஒரே ஸ்தலமாக விளங்கும் திருச்செந்தூர் முருகனை சஷ்டி விரதம் இருந்து வழிபட சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். நோய் ஏற்பட்டவர்கள் தகுந்த மருத்துவ ஆலோசனையின்றி விரதமிருக்கக் கூடாது.

சுக்கிரன் பலம் பெற்றிருந்தாலும், பலம் குறைந்திருந்தாலும் சுக்கிரனுக்குரிய வழிபாடுகள், பரிகாரங்கள் செய்வதன் மூலம் தோஷம் குறையும். விருத்தியடையும். பெண்கள் சுக்கிர வாரம் எனும் வெள்ளிக்கிழமை விரதம் இருந்து வீட்டில் திருவிளக்கு பூஜை செய்வது நல்லது. அத்துடன் அம்மன், அம்பாள், ஆண்டாள் கோயிலுக்கு சென்று வழிபடலாம். அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா  ஸ்தோத்திரம், ஸ்ரீலட்சுமி காயத்திரி மந்திரம் சொல்லலாம். ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரை தரிசித்து பிரார்த்திக்கலாம். சுக்கிர சேத்திரமான கஞ்சனூர், கும்பகோணம் அருகில் உள்ளது. அங்குச் சென்று  தேவியருடன் அருள்பாலிக்கும் சுக்கிரனை வழிபட்டால் எல்லா வகையான திருமண தோஷங்களும் நீங்கும்.

சென்னை மாங்காடு காமாட்சியம்மன் திருக்கோயில் அருகில் உள்ள வெள்ளீஸ்வரர் மற்றும் மயிலாப்பூரில் உள்ள வெள்ளீச்சரம் என்ற வெள்ளளீஸ்வரர் ஸ்தலம் சுக்கிரனுக்கு உரியது. இங்குள்ள சுக்கிரேஸ்வரர் சுக்கிரனின் அம்சமாக உள்ளார். இவரை வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரை காலத்தில் தரிசித்து வர சர்க்கரை நோயினால் ஏற்படும் கண்கள் சம்பந்தமான கோளாறுகள் மற்றும் சர்க்கரை  நோய் நிவர்த்தியாகும். பரிகார ஸ்தலங்கள், விசேஷ கோயில்களுக்குச் சென்று வழிபட முடியாதவர்கள் வீட்டருகே இருக்கும் நவக்கிரக சன்னதியில் சுக்கிர பகவானை வழிபடலாம். 

ரத்தத்தைக் குறிக்கும் காரக கிரகமான செவ்வாய் ஸ்தலமான வைதீஸ்வரன் கோயிலுக்கு செவ்வாய் கிழமையில் சென்று தரிசனம் செய்வது ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைத்து நோய் பாதிப்பை குறைக்கும். இத்துடன் திருவாரூர் மாவட்டம் கோயில்வெண்ணியில் உள்ள அருள்மிகு வெண்ணிகரும்பேஸ்வரர் திருக்கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வது சர்க்கரை அளவைக் குறைத்து நோய் பாதிப்பை குறைக்கும். தீவிர சர்க்கரை நோயால் அவதியுறுபவர்கள் சனைச்சர பகவானுக்கு கரும்புச்சாற்றினால் அபிஷேகம் செய்துவர சர்க்கரை நோயின் தீவிரம் குறையும்.

மருத்துவ முறைகள்

1. ஆயுர்வேதத்தில், நீரிழிவு மதுமேகம் என அறியப்படுகிறது. ஆயுர்வேத, நீரிழிவு நோய் ஒரு வளர்சிதை மாற்ற கபம் வகை சார்ந்த நோயாகக் கருதப்படுகிறது இதில் அக்னி (செரிமான தீ) குறைபாடு காரணமாக அஜீரன கோளாறுகளால் கணையத்தில் சர்க்கரை அதிகரித்து நோயை ஏற்படுத்துகிறது. வயிற்றிற்கும் செரிமான தீக்கும் காரக கிரகம் நெருப்பு ராசி அதிபதியுமான குருபகவானே ஆவார்.

2. பலருடன் அதிக அளவில் உடலுறவில் ஈடுபடுதல் / மீன் இறைச்சி போன்ற மாமிச உணவுகளை மிக அதிகமாகப் புசித்தல், நெய், பால் போன்ற உணவு வகைகளை அதிகமாகப் புசித்தலாலும் இந்நோய் தோன்றும் என அகத்தியர் தெரிவிக்கிறார். அளவுக்கு மிஞ்சினால், அமிர்தமும் நஞ்சு என்பது முதுமொழி அதற்கேற்ப உடல் உறவு மற்றும் உணவு முறைகளிலும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஈடுபடும்  போது மதுமேகம் எனும் நீரிழிவு தோன்றுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சுக்கிரன் நீசம் அடைவது, சுக்கிரன் ராகுவுடன் சேர்ந்து நிற்பது போன்றவை பலருடன் உடலுறவு கொள்ளும் நிலையை  ஏற்படுத்திவிடுகிறது. 

3. மதுமேகாதி சூர்னம், வஸந்த குசுமாகர ரஸம், அஸ்வ கந்தா சூர்ணம் (அமுக்கார சூர்னம்) போன்ற மருந்துகள் தகுந்த மருத்துவ ஆலோசனையுடன் எடுத்துக்கொள்வது நோயைக் கட்டுக்குள் வைக்கும்.

4. சிறுகுறிஞ்சான் தென்னிந்தியாவில் அதிகமாக வளர்க்கப்பட்டு மூலிகை ஏற்றுமதியிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிஞ்சானின் பயன் இரண்டாவது வகையான இன்சுலின் தேவையற்ற நீரிழிவு நோயிற்கு அதிகமாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் உள்ளது.

அமிர்த சர்க்கரை எனும் சீந்தில் சர்க்கரை (டினோஸ்போரா கார்டிபோலியா)

சீந்தில் கொடி குருவின் தன்மையும் சுக்கிரனின் தன்மையும் நிறைந்த கொடிவகை தாவரமாகும். இதனை வஞ்சிக்கொடி என்றும் அழைப்பார்கள். சீந்தில் கொடிக்கு, வஞ்சி மரம், ஆகாச வல்லி, அமிர்தவல்லி, சோமவல்லி, சாகா மூலி என்று பல பெயர்கள் உண்டு. பிறந்த குழந்தைக்கு காரகர் குருவாகும். பிறந்த குழந்தையின் வயிற்றில் தாயையும் குழந்தையையும் இணைக்கும்  தொப்புள் கொடியின் காரகர் சுக்கிரனாகும். அந்த தொப்புள்கொடி சுற்றி குழந்தை பிறந்தால் தோஷம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அவ்வாறு பிறக்கும் குழந்தைகளுக்கு சீந்தில் கொடியைக் கொண்டு  பரிகார ஹோமங்கள் செய்வது வழக்கம். சித்த வைத்தியத்தில் வஞ்சிக் கொடி முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

முதிர்ந்த கொடியை நறுக்கி இடித்து நல்ல நீரில் கரைத்து வடிகட்டி அசையாது சில மணி நேரம் வைத்திருந்து நீரை வடித்துப் பார்க்க அடியில் வெண்ணிறமான மாவு படிந்திருக்கும். மீண்டும் நீர் விட்டுக் கரைத்து தெளிய வைத்து இறுத்தி எடுத்து உலர்த்தி வைக்கப் பளிச்சிடும் வெண்ணிறப் பொடியாயிருக்கும். இதுவே சீந்தில் சர்க்கரை எனப்படும். இது ஓர் கற்ப மருந்தாகக் கருதப்படுகிறது. உணவுக்  கட்டுப்பாட்டுடன் நீண்ட நாள் சாப்பிட பல பிணிகளும் நீங்கும் என்பதாம்.

வஞ்சிக்கொடி சர்க்கரை நோயாளிகளுக்கும், எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் நல்ல மருந்து என்று அகத்திய முனிவர் அன்றே எழுதி வைத்திருக்கிறார். இன்றைய விஞ்ஞான மருத்துவ ஆராய்ச்சியிலும்  மேற்கண்ட மருத்துவ ஆற்றல் உண்மையென்று உணரப்பட்டுள்ளது. மார்பக புற்றுநோயால் ஏற்படும் அடைப்பின் காரணமாக உருவாகும் மஞ்சள் காமாலை, காச நோய்களில் இருந்து நோயாளிகளைப்  பாதுகாக்கக்கூடிய மருந்து சீந்தில் கொடியில் உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: எந்த மருத்துவ முறையானாலும் சுய மருத்துவம் செய்யாமல் சம்மந்தப்பட்ட மருத்துவர் ஆலோசனையுடன் மருந்து உட்கொள்வது சிறந்தது. 

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510

]]>
உலக நீரிழிவு நோய் தினம், சர்க்கரை, திருச்செந்தூர் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/13/w600X390/diabetic2.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/13/உலக-நீரிழிவு-நோய்-தினம்-சர்க்கரை-நோயினால்-அவதியா-திருச்செந்தூர்-முருகனை-வணங்குங்க-3037999.html
3037980 ஆன்மிகம் செய்திகள் தலையில் குல்லா அணிந்த முருகன் எங்குள்ளார் தெரியுமா? Tuesday, November 13, 2018 03:22 PM +0530
முருகப்பெருமான் ஒவ்வொரு தலங்களிலும் ஒவ்வொரு விதமாகக் காட்சியளிக்கின்றார். அதில், வித்தியாசமான கோலங்களில் காட்சியளிக்கு சில தலங்களைப் பற்றி பார்ப்போம். 

• பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளது செட்டிகுளம் என்ற ஊர். இவ்வூரில் அருளும் முருகப்பெருமான், கையில் செங்கரும்புடன் காட்சி அளிக்கிறார். உறையூர் சோழ மன்னனுக்காகக் கையில் கரும்புடன் காட்சி அளித்தவர், இன்று மலை மீது நமக்காகக் கரும்புடன் காட்சி அளிக்கிறார். அபிஷேகத்தின்போது கரும்பின் இடையில் உள்ள கணுக்கள் மிகவும் தெளிவாகத் தெரிவதை நாம் இன்றும் காணலாம்.

• சிதம்பரத்துக்கு வடகிழக்கில் உள்ளது சி. மானப்பட்டி என்ற ஊர். இவ்வூரில் அகத்தியர் ஓலைச்சுவடியில் இடம்பெற்ற புகழ்மிக்க முருகன் தலம் உள்ளது. இங்கு பங்குனி உத்திரம், தைப்பூசம், சஷ்டி, சித்திரை பவுர்ணமி நாள்களில் அரிவாள் மீது நின்று வேல் ஆட்டம் ஆடுகிறார், முருகன் அருள்பெற்ற தவத்திரு சின்னையன் சுவாமிகள்.

• புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கைவாசல் என்ற தலத்தில் தலையில் குல்லா அணிந்த முருகனைத் தரிசிக்கலாம்.

• கம்பம் அருகில் உள்ளது சுருளிமலை. இங்கு கந்தபெருமான் அருள்கிறார். மலையில் உள்ள குகையில் அருவி மணல் விபூதியாக மாறுவதைக் காணலாம்.

• முருகப்பெருமானுக்கு இந்திரன் தன் ஐராவதத்தைத் தந்த இடம் உத்திரகோசமங்கை (இராமநாதபுரம்).

• பூதல் (குமரி மாவட்டம்) பார்வதி மலையில் அருளும் கந்த பெருமான் பிரம்மசாரியாக வணங்கப்படுகிறார். ஆதலால் அங்கு பெண்களுக்கு அனுமதி இல்லை.

• மயிலாடுதுறை வட்டத்தில் உள்ளது வழுவூர். இங்கு முருகப் பெருமான் அன்னையாகிய பார்வதி தேவி கையில் குழந்தையாக அருள்பாலிக்கிறார்.

• புதுக்கோட்டை மாவட்டம் ஒற்றைக் கண்ணனூரில் முருகனுக்கு கருங்கல் கோயில் உள்ளது.

• இரண்டு தலைகள் உடைய முருகனுக்கு அக்னிநாதர் என்ற பெயர். இவரைச் சென்னிமலையில் காணலாம்.

]]>
முருகப்பெருமான் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/26/w600X390/murugan1.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/13/முருகனில்-பலவிதம்-தலையில்-குல்லா-அணிந்த-முருகன்-எங்குள்ளார்-தெரியுமா-3037980.html
3037991 ஆன்மிகம் செய்திகள் முருகனின் ஒரு படை வீட்டில் மட்டும் சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை ஏன் தெரியுமா? Tuesday, November 13, 2018 03:21 PM +0530  

பிரசித்தி பெற்ற அனைத்து முருகன் தலங்களிலும் கந்த சஷ்டித் திருவிழாவின் ஆறாம் நாளான இன்று சூரசம்ஹாரம் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில், முருகப்பெருமானின் ஒரு படைவீடு மட்டும் எந்தவித ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக இருக்கிறதென்றால் அது வியக்குரியது அல்லவா? 

அந்தத் திருத்தலம் தான் திருத்தணிகை! ஆம் முருகப்பெருமான் சினம் தணிந்து சாந்த ஸ்சொரூபமாகி அமர்ந்த தலம் என்பதால், அங்கே சூரசம்ஹாரம் நிகழ்த்துவதில்லை. சினம் தணிந்து அமர்ந்த காரணத்தினால்தான், முருகப்பெருமானைத் தரிசிக்கும்போது நம்முடைய வல்வினைகள், பிணிகள் அனைத்தும் தணிந்து போகும் என்பதாலும் இது தணிகை என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். 

புகழ்பெற்ற முருகன் திருத்தலமான திருத்தணிகை கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் மூலவரை தரிசித்துச் செல்கின்றனர். இந்நிலையில், கடந்த 8-ம் தேதி கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. விழாவில் தினமும் காலை 11 மணிக்கு கோயில் காவடி மண்டபத்தில் லட்சார்ச்சனை, சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நாளான 13-ம் தேதியான இன்று மாலை 5 மணிக்கு புஷ்பாஞ்சலியும், 14-ம் தேதியான நாளை காலை 11 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது. 

முருகப்பெருமானின் சினம் தணிந்து அருளும் தலம் என்பதால் தான் திருத்தணியில் மட்டும் சூரசம்ஹாரம் திருவிழா நடைபெறுவதில்லை. சூரசம்ஹாரம் நடைபெறாமல் கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுகிறது. விழாவின் கடைசி நாள் மட்டும் வள்ளி திருமணம் சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்படுகிறது. 

]]>
முருகன், திருத்தணி , அறுபடை , சூரசம்ஹாரம் , கந்த சஷ்டி திருவிழா http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/7/28/w600X390/murugan.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/13/முருகனின்-ஒரு-படை-வீட்டில்-மட்டும்-சூரசம்ஹாரம்-நடைபெறுவதில்லை-ஏன்-தெரியுமா-3037991.html
3037974 ஆன்மிகம் செய்திகள் அனைத்து முருகன் கோயில்களிலும் இன்று சூரசம்ஹாரம்: முருகனை தரிசிக்க மறக்காதீங்க!  Tuesday, November 13, 2018 12:49 PM +0530  

பழனி, திருச்செந்தூர், திருத்தணி உள்ளிட்ட அறுபடை வீடுளிலும், பிரசித்தி பெற்ற மற்ற முருகன் கோயில்களிலும் இன்று மாலை சூரசம்ஹாரம் மிக விமரிசையாக நடைபெற உள்ளது. 

கடந்த நவம்பர் 8-ம் தேதி கந்தசஷ்டி விழா துவங்கியது. நவம்பர் 13-ம் தேதியான இன்று மாலை சூரசம்ஹாரமும், நாளை திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது. சூரசம்ஹாரத்தைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் முருகன் கோயில்களில் குவிந்து வருகின்றனர். 

திருச்செந்தூர் முருகன்
இன்று மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்காக கடற்கரைக்கு எழுந்தருளுகிறார். அங்கு கஜமுகம், சிங்கமுகம் மற்றும் சுயரூபத்தோடு வரும் சூரபத்மனை, லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் சுப்பிரமணிய சுவாமி வதம் செய்கிறார். சூரசம்ஹாரம் முடிந்த பிறகு சந்தோஷ மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேக அலங்காரமாகி, தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து, கிரிபிரகாரம் உலா வந்து திருக்கோயில் சேருகிறார். நாளை (நவம்பர் 14) திருக்கல்யாணம் நடைபெறும்.

சூரசம்ஹாரத்தைக் காண இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உட்படப் பல நாடுகளில் இருந்தும், பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனர். திருச்செந்தூரில் 3,200 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சூரனை அழித்து வதம் செய்த தலமான திருச்செந்தூரில், கந்த சஷ்டி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வழிபடும் இத்தல முருகனை, வருடம் ஒரு முறை இவ்விழாவின் போது ஆறுமுகங்களும், பன்னிரு திருக்கைகளும் கொண்ட மூர்த்தியாக முழுமையாகத் தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் அங்கவஸ்திரம் அலங்கரித்திருக்கும். ஆகவே, சஷ்டி விழா பக்தர்களின் வருகையால் சிறப்புமிக்கதாகிறது.

பழநி தண்டாயுதபாணி 
இன்று நடைபெறும் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, மலைக் கோயில் சன்னதியில் மதியம் உச்சிக்கால பூஜையைத் தொடர்ந்து சாயரட்சை பூஜை நடத்தப்பட்டு, சூரர்களை வதம் செய்யும் பொருட்டு மலைக்கொழுந்து அம்மனிடம் சின்னக்குமாரசாமி வேல் வாங்கும்
நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தொடர்ந்து, மதியம் 3 மணிக்கு மலைக் கோயில் நடை அடைக்கப்பட்டு, சுவாமி பராசக்தி வேலுடன் அடிவாரம் வந்தடைகிறார். இதனால், மலைக் கோயிலில் தங்கத்தேர் புறப்பாடு
ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், பெரியநாயகியம்மன் கோயிலில் இருந்து வள்ளி, தேவசேனா சமேதராக முத்துக்குமாரசாமி மயில் வாகனத்தில் அடிவாரம் வந்தடைவார். அங்கிருந்து, திருஆவினன்குடி கோயிலுக்குச் செல்வதற்கு முன் வேலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

அதையடுத்து, மாலை 6 மணிக்கு மேல் வடக்கு கிரி வீதியில் தாரகாசூர வதமும், கிழக்கு கிரி வீதியில் பானுகோபன் வதமும், தெற்கு கிரி வீதியில் சிங்கமுகசூர வதமும், மேற்கு கிரி வீதியில் சூரபத்மன் வதமும் நடைபெறுகிறது. விழாவின் நிறைவாக நாளை திருக்கல்யாணம் நடைபெறும்.

சிக்கல் சிங்காரவேலன் 
நாகை அடுத்த சிக்கலில் அறுபடை வீடுகளுக்கு இணையான சிங்காரவேலவர் கோயில் உள்ளது. முருகப்பெருமானின் அவதார நோக்கமான சூரபத்மனின் சூரசம்ஹாரத்திற்கு இக்கோவிலில் தான் முருகப்பெருமான் அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் சக்திவேல் வாங்கி, திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்தார் என்பது கந்தபுராண வரலாறு.

இன்று திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்வதற்காக நேற்றிரவு அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சிக்காக திருத்தேரில் வீதியுலா வந்த முருகப்பெருமான் ஆவேசத்துடன் கோவிலுக்குள் வந்து அன்னையிடம் சக்திவேல் வாங்கும்போது ஆக்ரோஷத்துடன் காணப்பட்டார். அன்னையிடம் சக்திவேலை பெற்று, தமது சன்னதியில் அமர்ந்த முருகப்பெருமானுக்கு, மானிடருக்கு வியர்ப்பது போன்று, திருமேனியெங்கும் வியர்வைப் பொழியும் மகிமை நடந்தது. முருகப்பெருமானின் ஆக்ரோஷ வெப்பத்தைத் தாங்கிக்கொள்ள இயலாமல் சன்னதியின் சுவர்களிலும் வியர்வைத் துளிகள் அரும்பியிருந்த காட்சி, பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

]]>
திருச்செந்தூர் , முருகன், திருத்தணி , அறுபடை , சூரசம்ஹாரம் , சிக்கல் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2014/10/29/18/w600X390/nellai_surasamharam2.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/13/அனைத்து-முருகன்-கோயில்களிலும்-இன்று-சூரசம்ஹாரம்-முருகனை-தரிசிக்க-மறக்காதீங்க-3037974.html
3037968 ஆன்மிகம் செய்திகள் பழனியில் இன்று மாலை தாரகாசூரனை வதம் செய்கிறார் தண்டாயுதபாணி! DIN DIN Tuesday, November 13, 2018 11:31 AM +0530  

கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு பழனியில் இன்று சூரசம்ஹாரம் மிக விமரிசையாக நடைபெறுகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாளை  திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது.

பழனி மலைக் கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா கடந்த வியாழக்கிழமை காப்புக்கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. ஒரு வாரம் மலைக் கோயிலில் நடைபெறும் இவ்விழாவை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் காப்புக் கட்டி விரதத்தை தொடங்கினர்.

கந்த சஷ்டி விழாவின் ஆறாம் நாள் நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. மதியம் உச்சிக்கால பூஜையைத் தொடர்ந்து சாயரட்சை பூஜை நடத்தப்பட்டு, சூரர்களை வதம் செய்யும் பொருட்டு மலைக்கொழுந்து அம்மனிடம் சின்னக்குமாரசாமி வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தொடர்ந்து, மதியம் 3 மணிக்கு மலைக் கோயில் நடை அடைக்கப்பட்டு, சுவாமி பராசக்தி வேலுடன் அடிவாரம் வந்தடைகிறார். இதனால், மலைக் கோயிலில் தங்கத்தேர் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், பெரியநாயகியம்மன் கோயிலில் இருந்து வள்ளி, தேவசேனா சமேதராக முத்துக்குமாரசாமி மயில் வாகனத்தில் அடிவாரம் வந்தடைவார். அங்கிருந்து, திருஆவினன்குடி கோயிலுக்குச் செல்வதற்கு முன் வேலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

அதையடுத்து, மாலை 6 மணிக்கு மேல் வடக்கு கிரி வீதியில் தாரகாசூர வதமும், கிழக்கு கிரி வீதியில் பானுகோபன் வதமும், தெற்கு கிரி வீதியில் சிங்கமுகசூர வதமும், மேற்கு கிரி வீதியில் சூரபத்மன் வதமும் நடைபெறுகிறது. இரவு ஆரியர் மண்டபத்தில் வெற்றி விழா கொண்டாடப்பட்டு, மலைக் கோயிலில் சம்ப்ரோட்சண பூஜையை அடுத்து, அர்த்தஜாம பூஜை நடைபெறுகிறது.

புதன்கிழமை, மலைக் கோயிலில் வள்ளி, தேவசேனா சமேதர் சண்முகருக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, பழனி கோயில் இணை ஆணையர் செல்வராஜ் மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

]]>
பழனி , முருகன் , கந்த சஷ்டி திருவிழா, சூரசம்ஹாரம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/8/w600X390/palani-festivals.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/13/பழனியில்-இன்று-மாலை-தாரகாசூரனை-வதம்-செய்கிறார்-தண்டாயுதபாணி-3037968.html
3037409 ஆன்மிகம் செய்திகள் திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்  திருச்செந்தூர், Tuesday, November 13, 2018 05:00 AM +0530 திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் செவ்வாய்க்கிழமை (நவ. 13) மாலையில் நடைபெறுகிறது. சூரசம்ஹாரத்தை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்துள்ளனர்.
 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நிகழாண்டு கந்த சஷ்டி விழா கடந்த வியாழக்கிழமை காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 5ஆம் நாளான திங்கள்கிழமை காலையில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளினார்.
 யாகசாலையில் கும்பங்கள் வைக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. மதியம் மூலவருக்கு உச்சிகால அபிஷேகம் முடிந்து தீபாராதனை நடைபெற்றவுடன் யாகசாலையில் மகா தீபாராதனை நடைபெற்றது.
 அதன்பின் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து தங்கச்சப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பிரகாரம் வழியாக பக்தர்கள் வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு பாட சண்முகவிலாச மண்டபத்தில் வந்தமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாலையில் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் வைத்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
 சூரசம்ஹாரம்: கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும். மாலை 4.30 மணியளவில் திருக்கோயில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். பாதுகாப்புப் பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா தலைமையில், காவல் துறையினர், ஊர்க்காவல் படையினர், கடலோரக் காவல்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
 அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில், பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்துகள் மற்றும் திருநெல்வேலியிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.
 விழா ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பா.பாரதி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/13/w600X390/TDR.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/13/திருச்செந்தூரில்-இன்று-சூரசம்ஹாரம்-3037409.html
3037363 ஆன்மிகம் செய்திகள் நாச்சியார்கோயில் கல்கருடன் ஆலயத்தில் ஸ்ரீ மணவாள மாமுனிகள் திருநட்சத்திர புறப்பாடு - குடந்தை ப.சரவணன் Monday, November 12, 2018 05:39 PM +0530  

கும்பகோணம் அடுத்துள்ள நாச்சியார்கோயிலில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீனிவாச பெருமாள் உலக புகழ்பெற்ற கல் கருட பகவான் ஆலயத்தில் நடைபெற்று வந்த ஸ்ரீமணவாள மாமுனிகளின் திருநட்சத்திர திருவிழாவின் நிறைவு நாளான நவம்பர் 11 நேற்று, அருள்மிகு பெருமாள் - தாயார் சேஷ வாகனத்திலும், ஸ்ரீமணவாள மாமுனிகள் படிச் சட்டத்திலும் வீதி உலா நடைபெற்றது. இதில் இந்தாண்டு, பழங்கால முறையில், சுமார் 35 வருடங்களுக்குப் பின், 50 நபர்கள் தங்களின் தோள்களில் சுவாமிகளை சுமந்து வீதியுலா வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார்கள். விழா ஏற்பாட்டினை திருக்கோயில் நிர்வாகம் செய்திருந்தது.

- குடந்தை ப.சரவணன் (9443171383)

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/12/w600X390/.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/12/நாச்சியார்கோயில்-கல்கருடன்-ஆலயத்தில்ஸ்ரீ-மணவாள-மாமுனிகள்-திருநட்சத்திர-புறப்பாடு-3037363.html
3037358 ஆன்மிகம் செய்திகள் பச்சிளங்குழந்தைகளைக் குறிவைக்கும் நிமோனியா காய்ச்சல்! பாலாரிஷ்ட தோஷ பரிகாரம் அவசியம்! Monday, November 12, 2018 04:25 PM +0530  

தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையை எதிர்நோக்கியுள்ள நிலையில் வங்கக் கடலில் கஜா என்ற புயல் உருவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மழை மற்றும் குளிர்காலத்தில் ஏற்படும் நோயான நிமோனியா பரவும் சாத்தியக் கூறுகள் அதிகம். பச்சிளம் குழந்தைகளையே பெரும்பாலும் தாக்கும் ஒரு கொடிய நோய் நிமோனியா. இது சாதாரண காய்ச்சல் போலத் தெரிந்தாலும், இதன் தாக்கம் அதிகம். நிமோனியா சில சமயம் பெரியவர்களையும் ஆட்டிப்படைக்கும். நிமோனியா காய்ச்சலின் பாதிப்புகளையும் அதில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் வழிகளையும் நமக்கு நினைவூட்டும் விதமாக 'நிமோனியா தினம்' நவம்பர் 12-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

காற்றின் மூலமாக நுரையீரலில் சில கிருமிகள் பரவுவதால் ஏற்படும் ஒருவகைத் தொற்று இது. இந்தக் கிருமிகள் நுரையீரலைத் தாண்டி, ரத்த ஓட்டத்தில் கலந்து உடல் முழுவதும் பரவிவிடும் ஆபத்து இருக்கிறது. இதனால், அதிகக் காய்ச்சல் ஏற்படும். ஆரம்பத்தில் சாதாரண சளித் தொந்தரவு போலத் தோன்றினாலும், தொடர்ந்து காய்ச்சல், இருமல், நெஞ்சு வலி, மூச்சுவிடுதலில் சிரமம் ஆகியவை ஏற்பட்டு, கிருமிகளின் ஆதிக்கம் கட்டுக்கடங்காமல் போய், பாதிப்புக்கு உள்ளானவர்களைக் கவலைக்கிடமாக்கிவிடும்.

இருமல், காய்ச்சல், வேகமாக மூச்சுவிடுதல், மூச்சுத் திணறல், உதடுகள் வெளிறிப்போதல் அல்லது நீலம் பூத்தல், நடுக்கத்துடன் குளிர், நெஞ்சு வலி, பசியின்மை, சோர்வு, சாப்பிட இயலாமை, இவை எல்லாம் நிமோனியாவின் அறிகுறிகள் ஆகும்.

போதுமான காலம் தாய்ப்பால் குடிக்காத குழந்தைகள், சத்துக் குறைபாடு, குறிப்பாக 'வைட்டமின்' ஏ குறைபாடு உள்ள குழந்தைகள், பிறக்கும்போதே எடைக் குறைவுடன் பிறக்கும் குழந்தைகள், அதிக நெருக்கடியான பகுதிகளிலும் மாசு நிறைந்த சூழலிலும் வளரும் குழந்தைகள், சிகரெட், விறகு அடுப்பு போன்றவற்றில் இருந்து வரும் புகையை அதிகமாக சுவாசிக்கும் குழந்தைகள் ஆகியோரை நிமோனியா தாக்கும். பெரியவர்களையும் நிமோனியா தாக்கும். புகை மற்றும் மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள், உடலில் நோய் எதிர்ப்புத் திறன் குறைந்தவர்கள், சர்க்கரை நோய் மற்றும் எய்ட்ஸ் உள்ளவர்கள் ஆகியோர் நிமோனியா தாக்குதலுக்கு ஆளாகக்கூடும். மாசுபாடான காற்றை சுவாசித்தாலும் நிமோனியா நோய் தாக்கும்.

நிமோனியா காய்ச்சலுக்குக்காண ஜோதிட காரணங்களும் பரிகாரங்களும்

நுரையீரல் அழற்ச்சி எனும் நிமோனியா, நுரையீரல் கிருமி தொற்றால் ஏற்படும் ஒரு காய்ச்சல் நோயாகும். இதன் காரக கிரஹம் புதன் மற்றும் சனியாகும். மேலும் காரக பாவம் தொண்டை மற்றும் நுரையீரலைக் குறிக்கும் காலபுருஷனுக்கு மூன்றாம் பாவமான மிதுனம் மற்றும் ஜெனன ஜாதக மூன்றாம் பாவமாகும்.

காய்ச்சலுக்கான காரக கிரஹங்கள்
மருத்துவ ஜோதிடத்தில் காய்ச்சல் எனப்படும் ஜ்வரத்தை மூன்று வகையாகப் பிரித்து கூறுகின்றனர். அவை:

வாத ஜ்வரம் - உடல் வலியுடன் கூடிய காய்ச்சல்

பித்த ஜ்வரம் - தலைவலி மற்றும் வாந்தியுடன் கூடிய  காய்ச்சல்

கப ஜ்வரம் - ஜலதோஷம், சளி, இருமலுடன் கூடிய காய்ச்சல்

வாத ஜ்வரத்திற்கு சனைச்வர பகவானும், பித்த ஜ்வரத்திற்கு செவ்வாய் மற்றும் சூரியனும், கபஜ்வரத்திற்கு சந்திரன் மற்றும் சுக்கிர பகவானும் காரகத்துவம் வகிக்கின்றனர். என்றாலும் சனைச்சர பகவானும் குளிர்ச்சி மற்றும் கபத்திற்கு காரகம் வகிப்பதால் சந்திரன் மற்றும் சுக்கிரன் இவர்களோடு சனி சேரும்போது தீவிரமான கப ஜ்வரம் ஏற்படுகின்றது.

நிமோனியா காய்ச்சலின் அறிகுறிகளைக் கொண்டு பார்க்கும் போது தொண்டை அழற்ச்சி நோயைத் தொடர்ந்து ஏற்படும் கப ஜுவரத்தின் தன்மைகள் கொண்டதாக காணப்படுகின்றது.
 
நிமோனியா காய்ச்சலுக்கான கிரஹ நிலைகள்

1. தொண்டை மற்றும் நுரையீரலின் காரக கிரஹமான புதன் ஒரு ஜாதகத்தில் 6/8/12ம் பாவ தொடர்புகள், செவ்வாய், சனி, ராகு கேதுவுடன் சேர்ந்து பலமிழந்து நிற்பது போன்றவை ஜாதகருக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்படும் நிலையை ஏற்படுத்துகிறது.

2. ஒருவருடைய ஜாதகத்தில் தொண்டை மற்றும் நுரையீரலை குறிக்கும் மிதுன ராசி 6/8/12 தொடர்புகள் பெறுவது, மிதுனத்தில் செவ்வாய், சனி, ராகு கேது போன்ற கிரஹங்கள் நின்று அசுபத்தன்மை பெறுவது.

3. நோய் எதிர்ப்பு சக்தியினை தரும் விட்டமின் A  குறைபாடு நிமோனியாவினை ஏற்படுத்தும் என ஆங்கில மருத்துவம் மற்றும் நவீன மருத்துவ முறைகளில் கூறப்பட்டுள்ளது. விட்டமின் Aவின் காரக கிரகம் சூரியன் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவர் ஜாதகத்தில் சூரியன் நீர் ராசிகளில் நின்று பலமிழக்கும்போது முக்கியமாக மீனத்தில் சூரியன் பலமிழந்து அதனோடு நீச புதன் சேர்க்கை பெறும்போது விட்டமின் A குறைபாட்டினால் நிமோனியா காய்ச்சல் ஏற்படும்.

4. வாத மற்றும் கப கிரஹமான சனைச்சர பகவானே தடை மற்றும் உறைநிலை போன்றவற்றுக்கு காரகராகிறார். நுரையீரலின் காரகரான புதனுடன் சனி தனித்தோ அல்லது கபகிரஹங்களான சந்திரன் மற்றுன் சுக்கிரனுடன் சேர்க்கை பெற்று நிற்கும் போது தொண்டையில் கிருமி தொற்று, சளிக்கட்டு, மற்றும் நிமோனியா காய்ச்சலை ஏற்படுத்துகிறது.

5. காற்று ராசிகளான மிதுனம், துலாம், கும்பம் ஆகிய ராசிகள் 6/8/12 தொடர்புகள், சனி, ராகு, கேது தொடர்புகள் பெறும்போது மூச்சுகோளாருகள், சுவாச உறுப்பில் தடை மற்றும் நிமோனியா காய்ச்சல் ஏற்படுகின்றது. 

6. கால புருஷனுக்கு நெஞ்சினை குறிக்கும் வீடு நான்காம் பாவம் எனப்படும் கடக ராசியாகும். எனவே கடக ராசி மற்றும் அதன் அதிபதியான சந்திரன் அசுபத்தன்மை பெற்று புதனுடன் தொடர்பு கொள்ளும்போது நிமோனியா காய்ச்சல் ஏற்படும் சாத்திய கூறுகள் உள்ளதாக மருத்துவ ஜோதிடம் கூறுகிறது.

7. பச்சிளங்குழந்தைகளையே அதிகமாக நிமோனியா தாக்குகிறது என்பதால் குழந்தைகளின் ஜாதகத்தில் பாலாரிஷ்ட நிலையைக் கருத்தில் கொள்ளவேண்டும். பாலாரிஷ்ட நிலையைக் கொண்டு நிமோனியா காய்ச்சலுக்கான மேற்கூறிய கிரஹ அமைப்புகளும் இருந்தால் குழந்தைகளை இந்நோய் தாக்குகிறது.

பாலாரிஷ்ட தோஷங்கள்

பாலாரிஷ்டத்தை குறிப்பிடுவதில் சந்திரனின் நிலை முதன்மையானது என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகிறது. சந்திரனின் பலம்/பலவீனம், சுப அசுப தன்மைகள் ஒரு குழந்தையின் பாலாரிஷ்டத்தை தீர்மானிக்கிறது. சந்திரனின் அசுப தன்மைக்கு ஏற்றவாரு குழந்தையில் ஏற்படும் நோய் மற்றும் குழந்தை இறப்பு ஆகியவை அமைந்து விடுகிறது.

சந்திரனை அடுத்து ஒரு குழந்தையின் லக்னத்தின் பலமே குழத்தையின் ஆரோக்கியம் மற்றும் ஆயுளைத் தீர்மானிக்கிறது. லக்னம் மற்றும் லக்னாதிபதி 6/8/12 அதிபதிகளுடன் மற்றும் பாதகாதிபதி, அசுப கிரஹ தொடர்பு ஏற்படாமல் இருப்பதும் அவர்களின் தசா புத்தி குழந்தை பருவத்தில் ஏற்படாமல் இருப்பதும் அவசியம் ஆகும்.

விஷக்கிருமிகளை பெருக்கும் ராகு-கேது

விஷக்கிருமிகளின் உற்பத்தி செய்வது அதிலும் முக்கியமாகக் கண்ணுக்கு தெரியாத நோய்களை பரப்பும் வைரஸ் கிருமிகளைப் பரப்புவதும் ஸர்ப கிரஹங்களான ராகு-கேதுவின் முக்கிய காரகமாகும். மேலும், கிருமிகளை வேகமாகக் காற்றில் பரவ செய்வதில் ராகுவின் பங்கு முக்கியமானதாகும். மிதுனம் மற்றும் அதன் அதிபதியான புதனுடன் ஸ்ர்ப கிரஹ சேர்க்கை ஏற்படும்போது தொண்டையில் அழற்ச்சி மற்றும் நோய் தொற்று ஏற்படுகின்றது.

மருத்துவமனை வாசம்

ஒருவர் மருத்துவமனையில் தங்கி மருத்துவம் பெறுவதற்கு கால புருஷ பன்னிரண்டாம் பாவம், அதன் அதிபதியான குரு, சுக்கிரன், ஜென்ன ஜாதக பன்னிரண்டாம் பாவம் மற்றும் அதன் அதிபதியின் தொடர்பு ஜாதகத்தில் அமைந்திருந்தால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவார்கள். மேலும், ஜாதகத்தில் 6/8/12 அதிபதிகள் அவர்களுக்குள் வீடு மாறி அமர்ந்து விபரீத ராஜயோகத்தைப் பெற்றிருந்தாலும் மருத்துவமனை வாசம் ஏற்படும். 

நிமோனியா காய்ச்சல் ஏற்படுத்தும் கிரஹ சேர்க்கைகள்

1. உடல் பலம், நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றிற்கு லக்னம் மற்றும் லக்னாதிபதி பலமாக இருக்க வேண்டும். லக்னம் அல்லது லக்னாதிபதி 6/8/12 தொடர்பு, ராகு/கேது மற்றும் மாந்தி சேர்க்கை, லக்னாதிபதி நீசம் அடைவது, சந்திரன் நீசம் அடைவது ஆகியவை உடல் ரீதியான பிரச்னைகளையும் அதனால் உடல் சோர்வு மற்றும் மனச்சோர்வினை ஏற்படுத்தும்.

2. லக்னம்/சந்திர ராசி காற்று ராசிகளான மிதுனம், துலாம், கும்பம் ஆகிய ராசிகளாக அமைந்தால் அவர்களுக்கு ஆறாம் வீடு நீர் ராசிகளாக அமைந்துவிடுவதால் பொதுவாகவே நீரினால் ஏற்படும் அனைத்து நோய்களும் தாக்கும். அதிலும் லக்னத்தில் ஆறாமதிபதியே நீர் ராசி அதிபதியாகி நின்றுவிட்டால் அவர்களுக்கு நிமோனியா போன்ற நோய்கள் எளிதில் ஏற்பட்டுவிடும். மேற்கண்ட அமைப்பு பெற்றவர்கள் குளிர்காலங்களில் படும் அவதியைச் சொல்லிமாளாது.

3. ஜெனன ஜாதகத்தில் காற்று ராசிகளான மிதுனம், துலாம், கும்பம் 6/8/12 ராசிகளாகி அதில் புதன், ராகு/கேது இவர்களோடு காய்ச்சலை தரும் செவ்வாய், சந்திரன், சனி போன்ற கிரஹங்களின் சேர்க்கை பெற்று நிற்பது.

4. ஜெனன ஜாதகத்தில் ஆறாம்பாவதிபதியோடு புதன், ராகு/கேது மற்றும் சனி சேர்க்கை பெறுவது.

5. ஜெனன ஜாதகத்தில் புதன் மற்றும் சனி எந்தவித பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் அவர்களுடன் கோசார ராகு/கேது சேர்க்கை பெறுவது.

6. கால புருஷ எட்டாவது ராசியான விருச்சிகத்தில் சந்திரன் நீசமாகி புதன் மற்றும் சனியுடன் சேர்க்கை பெறுவது.

7. நீர் கிரஹங்களில் ராகு/கேது நின்று, சந்திரன், புதன், சுக்கிரன், சனி ஆகிய கிரஹங்களை பார்ப்பது.

8. கும்ப ராசி/லக்னமாகி சந்திரன், புதன், சனி ஆகிய கிரஹங்களின் வீடுகள் 6/8/12 வீடுகளாகி விபரீத ராஜயோகம் ஏற்படுவது.

9. நோய் எதிர்ப்பினை தரும் குருபகவான் 6/8/12 தொடர்பு மற்றும் வக்ர நிலையில் நிற்பது, தனது வீட்டிற்கு 12-ல் நிற்பது.

நிமோனியா காய்ச்சல் எப்போது வரும்?
1. ஜெனன ஜாதகத்தில் தொண்டை/நுரையீரல் நோய்க்கான கிரஹ அமைப்பினை பெற்று தசா புத்தி நடைபெறுவது, அவர்களுடன் கோசார நீச/பலமிழந்த சூரியன் சந்திரன், புதன், சனி மற்றும் ராகு போன்ற கிரஹங்களின் தொடர்பு கொள்வது.

2. தொண்டை நோயை ஏற்படுத்தும் புதன்/சுக்கிரன் போன்ற கிரஹங்களின் தசையில் காய்ச்சலை ஏற்படுத்தும் கிரஹங்களான சூரியன், சந்திரன், செவ்வாய், சனி, ராகு போன்ற கிரஹங்களின் புத்தி, அந்தரம் நடப்பது.

3. ஸர்ப கிரஹங்களின் தசைகளில் சந்திரன், புதன், சனி ஆகிய கிரஹங்களின் புத்தி அந்தரங்கள் நடைபெறுவது.

4. கோசாரத்தில் நீர் கிரஹங்களில் ராகு/கேது நிற்பது மற்றும் திரிகோண பார்வையில் சனி மற்றும் புதனை பார்ப்பது.

5. விருச்சிகத்தில் கோச்சார சந்திரன், புதன், சனி  சேர்ந்து பயணம் செய்வது.

நிமோனியா காய்ச்சலுக்கான மருத்துவம் மற்றும் பரிகாரங்கள்

1. நிமோனியா காற்றில் ஏற்படும் மாசினால் ஏற்படும் நோய் என்பதால் வீட்டில் சனியின் காரகம் கொண்ட காற்றினால் ஏற்படும் மாசுகளான தூசி, அழுக்கு, ஒட்டடை போன்றவை வீட்டில் சேராமல் சுத்தமாக வைத்துக்கொள்வது. முக்கியமாக ஒவ்வாமை, நுரையீரல் பாதிப்படைந்தவர்கள் தாங்களாகவே சுத்தம் செய்வதை தவிர்க்கவும்.

2. சந்திரனின் அம்சமான குடிநீரை செவ்வாயின் அம்சத்தோடு சேர்த்து வெந்நீராக்கிப் பருகுவது.

3. பொதுவாகக் காய்ச்சலுக்கு காரகர் செவ்வாய் தான் மருத்துவத்திற்கும் காரகர் என்கிறது மருத்துவ ஜோதிடம். செவ்வாய் ஸ்தலமான வைதீஸ்வரன் கோயிலில் உள்ள ஜ்வரஹரேஸ்வரரை பிரார்த்திக்க ஜ்வரங்கள் (காய்ச்சல்) நீங்கும் என்பது நம்பிக்கை. இங்குள்ள ஜ்வரஹரேஸ்வருக்கு ரஸம் சாத நிவேதனம் செய்வதாக பிரார்த்திப்பதும் ஜ்வரங்கள் நீங்கியபின் அவருக்கு ரசம் சாதம் நிவேதனம் செய்வதும் பிரசித்திபெற்ற பிரார்த்தனையாகும்.
 
4. செவ்வாய் மற்றும் சனியின் காரகம் பெற்ற ஆயுர்வேத மருந்தான கன சுதர்சன வடி எனும் மாத்திரை காய்ச்சலின் தீவிரத்தைக் குறைக்கிறது.

5. தொண்டை நோய்கள் மற்றும் சுரம், சளி இருமல் போன்ற நோய்களைக் குறிப்பது காலபுருஷனுக்கு இரண்டாம் வீடாடன ரிஷபமும் சுக்கிரனும் ஆகும். சுக்கிரனின் காரகத்தை பெற்ற யாரோ பூக்கள் இருமல், தொண்டை நோய்கள், காய்ச்சல் போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாகப் பயன்படுவதும் அதிலிருந்து தயாரிக்கப்படும் ஹோமியோபதி மருந்தும் குறிப்பிடத்தக்கது.

6. மது யஷ்டி சூர்ணம், சிதோபலாதி சூர்ணம், தாளிசாதி சூர்ணம், த்ரிகடு சூர்ணம், ப்ரவாள பற்பம் ஆகிய மருந்துகளை சம அளவில் கலந்துகொண்டு காலை, மதியம் இரவு மூன்று வேளையும் இரண்டு சிட்டிகை அளவு தேனில் குழைத்து உட்கொண்டு வர விரைவில் குணமாகும். மேலும், கதிராதி குடிகா எனும் மாத்திரையை சப்பி சாப்பிட்டு வருவது இருமல் நின்று தொண்டை புண் குணமாகும்.

7. நிமோனியா காய்ச்சல் பச்சிளங்குழந்தைகளையே அதிகமாகத் தாக்கும் வாய்ப்பு உள்ளதால் குழந்தைகளுக்கு பாலாரிஷ்டம் இருக்கிறதா என்பதை ஜோதிட ரீதியாக அறிந்து தகுந்த புரோகிதர்களைக் கொண்டு பாலாரிஷ்ட தோஷ சாந்தி செய்வது அவசியமாகும்.

8. சனியின் காரகம் பெற்ற ஆடு தீண்டா பாலை எனப்படும் ஆடாதோடை கஷாயம் அல்லது வாக்ஷாரிஷ்டம் உட்கொண்டு வர நல்ல பலனளிக்கும். கசப்பு சுவை கொண்ட மருந்துகளுக்கு சனைச்சர பகவானே காரகர் என்பது குறிப்பிடத்தக்கது.

9. செவ்வாயின் காரகம் நிறைந்த துளசியில் செய்த சிறப்பு மருந்துகள் தொண்டை நோய் மற்றும் இருமலுக்கு சிறந்த பலனளிக்கும்.

10. சனியின் காரகம் நிறைந்த அகஸ்திய ரஸாயனம் எனும் மருந்தை மருத்துவ ஆலோசனையுடன் சாப்பிட்டுவர நாட்பட்ட சுவாச நோய்கள் நீங்கும்.

11. சனி மற்றும் செவ்வாய் சேர்க்கை பெற்ற பாரங்கியாதி கஷாய சூரணம், நிம்பாதி சூரணம், தச மூல கஷாய சூரணம் ஆகிய மூன்றையும் நீரில் இட்டுக் காய்ச்சி மூன்றில் ஒரு பங்காக சுருக்கி கஷாயமாக மூன்று வேலையும் பருகி வர கப கட்டு மற்றும் சுரங்கள் முக்கியமாகக் கொசு கடியால் ஏற்படும் சுரங்கள் அனைத்தும் குணமாகும்,

12. நோய் ஏற்பட்டவரின் அருகில் கந்த சஷ்டி கவசம், திருமுருகாற்றுப்படை, சுதர்ஸனாஷ்டகம், ஸ்ரீ லஷ்மி நரசிம்ம மந்த்ர ராஜ பத ஸ்லோகம் பாராயணம் செய்வது.

13. நிமோனியாவினால் பாதிக்கப்பட்டவர்களின் விட்டமின் A அதிகரிக்கும் உணவுகளைச் சாப்பிடுவதோடு சூரிய பகவானுக்கான ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்வது.

14. மேற்கண்ட கிரகநிலை கொண்டவர்கள் நோய் வருமுன் காக்கும் விதமாக விட்டமின் A,  விட்டமின் C சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது, ச்யவண ப்ராச லேகியம், நெல்லிக்காய், திரிபலா சூரணம் போன்றவற்றை சாப்பிட்டுவர நோய் எதிர்ப்பு மிகுந்து நோய் வராமல் காக்கும்.

15. புதன் மற்றும் விஷ்ணுவின் அம்சமான தன்வந்திரி பகவானை புதன் கிழமைகளில் புதன் ஹோரையில் வணங்கி வருவது. 

குறிப்பு: எந்த மருத்துவ முறையானாலும் சுய மருத்துவம் செய்யாமல் சம்மந்தப்பட்ட மருத்துவர் ஆலோசனையுடன் மருந்து உட்கொள்வது சிறந்தது. முக்கியமாகக் குழந்தைகளுக்கு சுயமருத்துவ முயற்சியைத் தவிர்க்கவும்.


- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510
 

]]>
தோஷ பரிகாரம், நிமோனியா காய்ச்சல் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/12/w600X390/pneumonia9.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/12/பச்சிளங்குழந்தைகளைக்-குறிவைக்கும்-நிமோனியா-காய்ச்சல்-பாலாரிஷ்ட-தோஷ-பரிகாரம்-அவசியம்-3037358.html
3037350 ஆன்மிகம் செய்திகள் திருவண்ணாமலை தீப திருவிழாவுக்கு கொப்பரை சீரமைக்கும் பணி தொடக்கம் DIN DIN Monday, November 12, 2018 03:07 PM +0530  

திருவண்ணாமலையில் தீப திருவிழாவை முன்னிட்டு தீபம் ஏற்றப் பயன்படுத்தப்படும் மகா தீப கொப்பரையை சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது. 

ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் தொடக்க நிகழ்வாக காவல் தெய்வங்களின் 3 நாள் உத்ஸவம் நேற்று தொடங்கியது. 

திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெறும் மிக முக்கியமான விழா கார்த்திகை தீபத் திருவிழா. நிகழாண்டு வரும் புதன்கிழமை (நவம்பர் 14) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம், மகா தீபம் ஏற்றும் நிகழ்வு வரும் 23-ம் தேதி நடைபெறுகிறது.

மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்காக, 6 அடி உயரமுள்ள ராட்சத கொப்பரை புதுப்பிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்றப்படும் மகா தீபம் 40 கி.மீ தூரம் வரை பார்க்க முடியும்.

தீபம் எற்றும் போது வெப்பத்தால் கொப்பரை சேதமடையாமல் இருக்க மேல்பாகம் 3.75 அடி, கீழ்பாகம் 2.75 அடி சுற்றளவு கொண்டவாறு 150 கிலோ எடையில் 20 வளைய இரும்பு ராடுடன் கூடிய செப்பு தகட்டில் செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 22-ம் தேதி மலை உச்சிக்குக் கொப்பரை கொண்டுசெல்லப்படுகிறது. 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/12/w600X390/kopparai.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/12/திருவண்ணாமலை-தீப-திருவிழாவுக்கு-கொப்பரை-சீரமைக்கும்-பணி-தொடக்கம்-3037350.html
3037336 ஆன்மிகம் செய்திகள் திருச்செந்தூரில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார்! DIN DIN Monday, November 12, 2018 01:14 PM +0530  

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை சூரசம்ஹாரம் நடைபெறுவதையொட்டி 3000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை மாலை திருக்கோயில் கடற்கரையில் நடைபெறுகிறது. நவம்பர் 14-ம் தேதி சுப்பிரமணிய சுவாமிக்குத் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. 

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வரும் நிலையில், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி முரளி ரம்பா தெரிவித்துள்ளார். 

மேலும், பக்தர்களுக்கு வசதியாக சிறப்பு பேருந்து மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றது. 

]]>
tiruchendur, murugan temple, திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி, சூரசம்ஹாரம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/3/w600X390/tiruchendurmurugan.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/12/tiruchendur-murugan-temple-3037336.html
3037327 ஆன்மிகம் செய்திகள் திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: சுவாமி தரிசனம் செய்ய 20 மணி நேரம் காத்திருப்பு! Monday, November 12, 2018 12:38 PM +0530  

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டதால் சுவாமி தரிசனம் செய்ய 20 மணி நேரம் காத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ்சில் 31 கம்பார்ட்மெண்டுகள் நிரம்பி சுமார் 2 கி மீ. தூரத்திற்குப் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். அப்போது கூட்ட நெரிசலை தாங்கமுடியாமல் சிலர் இரும்பு கேட்டுகளை உடைத்து சாமி தரிசனத்திற்குச் செல்ல முயன்றதால் பக்தர்களுக்கிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. 

மேலும், பக்தர்கள் தங்கும் விடுதிகள் கிடைக்காமல் பூங்காக்களில் தங்கும் நிலை ஏற்பட்டது. இலவச தரிசனத்திற்கு சுமார் 20 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டி இருந்தது.

கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த தேவஸ்தான அதிகாரிகள், திருமலை முழுவதும் உள்ள விடுதிகளுக்குச் சென்று முன்பதிவு செய்த பக்தர்களிடம் கூட்டம் அதிகமாக இருப்பதால் 24 மணி நேரத்திற்குள் அறைகளை காலி செய்யும்படி உத்தரவிட்டனர். 

]]>
திருப்பதி, பக்தர்கள் கூட்டம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/29/w600X390/tirupathi.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/12/திருப்பதியில்-அலைமோதும்-கூட்டம்-சுவாமி-தரிசனம்-செய்ய-20-மணி-நேரம்-பக்தர்கள்-காத்திருப்பு-3037327.html
3037314 ஆன்மிகம் செய்திகள் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் டிச.4-ல் கார்த்திகை பிரம்மோற்சவம் துவக்கம் DIN DIN Monday, November 12, 2018 11:37 AM +0530  

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் கார்த்திகை மாத பிரம்மோற்சவம் டிசம்பர் 4-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெறுவுள்ளது. 

திருமலை தேவஸ்தானம் சார்பில் திருச்சானூர் தாயார் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. அதன்படி, இந்தாண்டும் இதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் அனைவரும் செய்து வருகின்றனர். டிசம்பர் மாதம் 4-ம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்வுள்ளது. 

விழாவில், டிசம்பர் 8-ல் கஜவாகனமும், 9-ல் தங்கதேரோட்டமும், கருட வாகனமும், 11-ல் ரத உற்சவமும், 12-ம் தேதி பஞ்சமி தீர்த்தத்துடன் பிரம்மோற்சவ விழா நிடைவடைகிறது. 

பிரம்மோற்சவத்தையொட்டி ஆர்ஜித சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட உள்ளது. பிரம்மோற்சவ விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 

]]>
திருச்சானூர், பத்மாவதி தாயார், கார்த்திகை, பிரம்மோற்சவம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/12/w600X390/tiruchanur.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/12/திருச்சானூர்-பத்மாவதி-தாயார்-கோயிலில்-டிச4-ல்-கார்த்திகை-பிரம்மோற்சவம்-துவக்கம்-3037314.html
3037307 ஆன்மிகம் செய்திகள் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி இன்று மாலை அன்னையிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்வு Monday, November 12, 2018 11:24 AM +0530
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் முருகப்பெருமான் வேல்வாங்கும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறுகிறது. 

கந்தசஷ்டி விழா கடந்த 8-ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில், விழாவையொட்டி தினமும் சண்முகருக்கு பகல் 11 மணிக்கும், மாலை 6 மணிக்கும் சண்முகார்ச்சனையும் தொடர்ந்து சிறப்பு அலங்காரமும் நடைபெறும்.
மேலும், தினமும் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தந்தத் தொட்டி விடையாத்தி சப்பரத்தில் எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தை 6 முறை வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று மாலை 6.30 மணியிலிருந்து இரவு 7.30 மணிக்குள் சூரனை வதம் செய்வதற்காக முருகப்பெருமான் தனது தாயாரான அன்னையிடம் இருந்து சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான நாளை மாலை 6 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

]]>
முருகப்பெருமான், திருப்பரங்குன்றம், சுப்பிரமணியசுவாமி, வேல்வாங்கும் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2012/11/18/20/w600X390/thiruparankundram_surasamharam6.JPG http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/12/திருப்பரங்குன்றம்-சுப்பிரமணியசுவாமி-இன்று-மாலைஅன்னையிடம்-சக்திவேல்-வாங்குகிறார்-3037307.html
3036987 ஆன்மிகம் செய்திகள் திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம் Monday, November 12, 2018 11:05 AM +0530 திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் செவ்வாய்க்கிழமை (நவ. 13) மாலையில் நடைபெறுகிறது. இதையொட்டி, பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நிகழாண்டு கந்த சஷ்டி விழா கடந்த வியாழக்கிழமை காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. நான்காம் நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளினார். யாகசாலையில் கும்பங்கள் வைக்கப்பட்டு, சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. மதியம் மூலவருக்கு உச்சிகால அபிஷேகம் முடிந்து தீபாராதனை நடைபெற்றவுடன் யாகசாலையில் மகா தீபாராதனை நடைபெற்றது.

அதன்பின் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து தங்கச் சப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பிரகாரம் வழியாக பக்தர்கள் வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு பாட சண்முகவிலாச மண்டபம் வந்தமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாலையில் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் வைத்து சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து சுவாமி தங்க ரதத்தில் எழுந்து கிரிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் 5ஆம் நாளான திங்கள்கிழமையும் இதே நிகழ்ச்சிகள் நடைபெறும்.

முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் செவ்வாய்கிழமை மாலை 4.30 மணியளவில் திருக்கோயில் கடற்கரையில் நடைபெறுகிறது. கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் கோயிலுக்கு வந்து பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றனர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/12/w600X390/TDR.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/12/திருச்செந்தூரில்-நாளை-சூரசம்ஹாரம்-3036987.html
3036946 ஆன்மிகம் செய்திகள் திருவண்ணாமலை தீபத் திருவிழா: காவல் தெய்வங்களின் வழிபாடு தொடக்கம்  திருவண்ணாமலை, Monday, November 12, 2018 01:50 AM +0530 திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் தொடக்க நிகழ்வாக காவல் தெய்வங்களின் 3 நாள் உத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
 திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெறும் மிக முக்கியமான விழா கார்த்திகை தீபத் திருவிழா. நிகழாண்டு வரும் புதன்கிழமை (நவம்பர் 14) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம், மகா தீபம் ஏற்றும் நிகழ்வு வரும் 23-ஆம் தேதி நடைபெறுகிறது.
 காவல் தெய்வங்களின் வழிபாடு: இந்த நிலையில், தீபத் திருவிழா தொடங்குவதற்கு முன்பாக, திருவண்ணாமலை நகரின் காவல் தெய்வங்களின் 3 நாள் வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை இரவு ஸ்ரீதுர்க்கையம்மன் உத்ஸவம் நடைபெற்றது. இதையொட்டி, சின்னக்கடைத் தெருவில் உள்ள ஸ்ரீதுர்க்கையம்மன் கோயிலில் இரவு 9 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் உத்ஸவர் ஸ்ரீதுர்க்கையம்மன் எழுந்தருளினார். தொடர்ந்து, மகா தீபாராதனை நடைபெற்றது.
 பின்னர், காமதேனு வாகனத்தில் சின்னக்கடைத் தெரு, தேரடி தெரு, திருவூடல் தெரு, பே கோபுரத் தெரு, பெரிய தெரு உள்ளிட்ட தெருக்களில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீதுர்க்கையம்மன், நள்ளிரவில் மீண்டும் கோயிலை சென்றடைந்தார்.
 இன்றும், நாளையும்: திங்கள்கிழமை (நவம்பர் 12) இரவு ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள ஸ்ரீபிடாரியம்மன் சந்நிதியில் ஸ்ரீபிடாரியம்மன் உத்ஸவமும், செவ்வாய்க்கிழமை (நவம்பர் 13) ஸ்ரீவிநாயகர் உத்ஸவமும் நடைபெறுகின்றன.
 கொப்பரை சீரமைப்பு: இதற்கிடையே, தீபம் ஏற்றப் பயன்படுத்தப்படும் மகா தீப கொப்பரையை சீரமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/12/w600X390/tml.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/12/திருவண்ணாமலை-தீபத்-திருவிழா-காவல்-தெய்வங்களின்-வழிபாடு-தொடக்கம்-3036946.html
3036809 ஆன்மிகம் செய்திகள் சிட்டரம்பாக்கம் முனீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் DIN DIN Monday, November 12, 2018 12:31 AM +0530 திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் சிட்டரம்பாக்கம் கிராமத்தில் உள்ள பச்சையம்மன் உடனுறை முனீஸ்வரர் கோயிலில் மூன்று நிலை ராஜகோபுரம் கட்டப்பட்டு மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 சிட்டரம்பாக்கம் முனீஸ்வரர் கோயிலில் நிகழ்வை ஒட்டி சனிக்கிழமை அனுக்ஞை, விநாயகர் பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், கோ பூஜை, தன பூஜை, வாஸ்து ஹோமம், ரக்ஹா பந்தனம், கலாகர்ஷணம், கும்ப அலங்காரம், யாகசாலை பூஜை, கோபுர கலச பிரதிஷ்டை ஆகியவை நடைபெற்றன.
 தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை நாடி சந்தனம், பால், தயிர், மோர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவிய ஹோமம், மஹாபூர்ணாஹுதி, தீபாராதனை, யாத்ராதானம், கலச புறப்பாடு போன்றவை நடைபெற்றன.
 இதைத் தொடர்ந்து, புரோகிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க ராஜகோபுரத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
 பின்னர், மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.
 இதையடுத்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேகத்தில் சிட்டரம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.
 இந்த கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை டி.ஆர்.வேலுமணி, லட்சுமி, கோவில் தர்மகர்த்தாக்கள் ஆர்.எஸ்.நந்தகோபால், வி.முருகைய்யன் மற்றும் கிராம பொதுமக்கள் முன்னின்று சிறப்பாக நடத்தினர்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/12/w600X390/TLROORVA.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/12/சிட்டரம்பாக்கம்-முனீஸ்வரர்-கோயில்-மகா-கும்பாபிஷேகம்-3036809.html
3036808 ஆன்மிகம் செய்திகள் பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி புறப்பாடு Monday, November 12, 2018 12:29 AM +0530 திருமலையில் நாகசதுர்த்தியை முன்னிட்டு பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி மாட வீதியில் வலம் வந்தார்.
 திருமலையில் ஆண்டுதோறும் நாகசதுர்த்தி நாளன்று மாலையில் பெரிய சேஷ வாகனப் புறப்பாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி ஞாயிற்றுக்கிழமை நாகசதுர்த்தியை முன்னிட்டு மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் மாடவீதியில் வலம் வந்தார். இந்த நிகழ்வில் அர்ச்சகர்களும், தேவஸ்தான அதிகாரிகளும் கலந்து கொண்டனர். பெருமாளை வழிபடுவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாடவீதியில் திரண்டனர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/12/w600X390/peddasesha_vahanam.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/12/பெரிய-சேஷ-வாகனத்தில்-மலையப்ப-சுவாமி-புறப்பாடு-3036808.html
3036237 ஆன்மிகம் செய்திகள் கல்யாண பெருமாள் கோயிலில் கோபாஷ்டமி திருவிழா Sunday, November 11, 2018 03:27 AM +0530 முரளீதர சுவாமி நாமத்வார் சார்பில், மாகான்யம் கல்யாண பெருமாள் கோயிலில் கோபாஷ்டமி திருவிழாவை முன்னிட்டு 7 நாள்களுக்கு நடைபெறும் கோவர்த்தன பூஜை கடந்த வியாழக்கிழமை கோயில் வளாகத்தில் தொடங்கியது.
 ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாகான்யம் பகுதியில் கல்யாண சீனிவாசப் பெருமாள் கோயில் உள்ளது.
 இக்கோயிலில், முரளீதர ஸ்வாமி நாமத்வார் சார்பில் கோபாஷ்டமி திருவிழாவை முன்னிட்டு 7 நாள்கள் நடைபெறும் கோவர்தன பூஜை கடந்த வியாழக்கிழமை கோயில் வளாகத்தில் தொடங்கியது.
 இதில் கோவர்த்தன மலை போல் அரங்கு அமைக்கப்பட்டு, மலைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட காரம் மற்றும் இனிப்பு வகைகள் படைக்கப்பட்டன. சிறப்பு பூஜைகள் நடைபெற்றதோடு, விழாவில் பங்கேற்ற சிறுவர்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டன.
 கடந்த 8-ஆம் தேதி தொடங்கிய கோவர்த்தன பூஜை வரும் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
 தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முரளீதர சுவாமியின் சீடர் பம்மல் பாலா தலைமையில், உலக நன்மை வேண்டியும், மழை பெய்ய வேண்டியும் மஹாமந்திர கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்று வருகிறது. வரும் 14-ஆம் தேதி மாலை கோவிந்த பட்டாபிஷேகத்தோடு விழா நிறைவுபெற உள்ளது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/11/w600X390/sbrtemple.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/11/கல்யாண-பெருமாள்-கோயிலில்-கோபாஷ்டமி-திருவிழா-3036237.html
3036235 ஆன்மிகம் செய்திகள் கபில தீர்த்தத்தில் கணபதி ஹோமம் நிறைவு DIN DIN Sunday, November 11, 2018 03:24 AM +0530 திருப்பதியில் உள்ள கபில தீர்த்தம் கபிலேஸ்வர சுவாமி கோயிலில் கார்த்திகை மாதத்தையொட்டி நடைபெற்று வந்த கணபதி ஹோமம் சனிக்கிழமையுடன் நிறைவு பெற்றது.
 கபில தீர்த்த அருவிக் கரையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் தெலுங்கு முறைப்படி கார்த்திகை மாதம் தொடங்கியதால் அம்மாதம் முழுவதும் கோயிலில் எழுந்தருளியுள்ள மூர்த்திகளுக்கு தேவஸ்தானம் ஹோமங்களை நடத்தி வருகிறது.
 அதன்படி கடந்த 8ஆம் தேதியன்று கோயிலில் கணபதி ஹோமம் தொடங்கி நடைபெற்று வந்தது. கோயிலிலுக்கு முன் இதற்கென அமைக்கப்பட்ட மண்டபத்தில் கணபதியின் சிலை மற்றும் கலசங்களை ஏற்படுத்தி இறைவனை எழுந்தருளச் செய்து, சிவாச்சாரியார்கள் மூன்று தினங்களுக்கு இந்த ஹோமத்தை நடத்தினர்.
 இந்த ஹோமம் சனிக்கிழமையுடன் நிறைவு பெற்றது. இதில் தேவஸ்தான அதிகாரிகள், கோயில் நிர்வாகத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கட்டணமாக ரூ.500 செலுத்தி இந்த ஹோமத்தில் கலந்து கொண்ட தம்பதியினருக்கு சிறப்பு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை காலை முதல் செவ்வாய்க்கிழமை வரை கோயிலில் சுப்ரமணிய சுவாமி ஹோமம் நடைபெற உள்ளது.
 இதில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள கவுன்ட்டரில் பணம் செலுத்தி பங்கேற்கலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/11/w600X390/ganapathi_homam.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/11/கபில-தீர்த்தத்தில்-கணபதி-ஹோமம்-நிறைவு-3036235.html
3036234 ஆன்மிகம் செய்திகள் காளஹஸ்தியில் நந்தி வாகனச் சேவை Sunday, November 11, 2018 03:23 AM +0530 காளஹஸ்தியில் நந்தி வாகனச் சேவை நடைபெற்றது.
 ஆந்திரத்தில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி கார்த்திகை மாத மகோற்சவம் நடைபெற்று வருகிறது.
 இதையொட்டி, காளஹஸ்தி கோயிலில் உள்ள மண்டபத்தில் 1008 விளக்குகள் தினந்தோறும் மாலை வேளைகளில் ஏற்றப்பட்டு வருகின்றன.
 இந்நிலையில், கார்த்திகை மாதத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு ஞானபிரசூனாம்பிகை அம்மனும், காளஹஸ்தீஸ்வரரும் நந்தி வாகனத்தில் மாடவீதியில் வலம் வந்தனர்.
 இந்த நிகழ்வில் சிவாச்சாரியார்கள், பக்தர்கள், கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/11/w600X390/Nandi-Vahanam.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/11/காளஹஸ்தியில்-நந்தி-வாகனச்-சேவை-3036234.html
3036228 ஆன்மிகம் செய்திகள் திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா 3-ஆம் நாள்: சுவாமி ஜெயந்தி நாதர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் Sunday, November 11, 2018 03:17 AM +0530 திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கந்த சஷ்டி விழாவின் மூன்றாம் நாளான சனிக்கிழமை சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
 விழாவையொட்டி, அதிகாலை 3 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து, சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளினார். யாகசாலையில் கும்பங்கள் வைக்கப்பட்டு, சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. மதியம் மூலவருக்கு உச்சிகால அபிஷேகம் முடிந்து தீபாராதனை நடைபெற்றவுடன், யாகசாலையில் மகா தீபாராதனை நடைபெற்றது.
 அதன்பிறகு, சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து தங்கச் சப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பிராகாரம் வழியாக பக்தர்கள் வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு பாட சண்முகவிலாச மண்டபத்தை வந்தடைந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
 மாலையில், திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. அப்போது சுவாமியை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். தொடர்ந்து, சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி, கிரிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
 பக்தி பஜனை: கந்த சஷ்டியை முன்னிட்டு கோயில் வளாகம், கிரிப்பிராகாரத்தில் தங்கி விரதம் இருக்கும் பக்தர்கள், முருகன் குறித்த பக்திப் பாடல்களை பாடி வழிபாடு நடத்தி வருகின்றனர்.
 மருத்துவக் குழு: கோயில் கலையரங்கப் பகுதியில் மருத்துவக் குழு, மருத்துவ வாகனம், நாழிக்கிணறு பேருந்து நிலையத்தில் தீயணைப்பு வாகனம் ஆகியவை தயார்நிலையில் உள்ளன. கடற்கரை மற்றும் கோயில் வளாகத்தில் உயர்கோபுரங்கள் மற்றும் கேமராக்கள் உதவியுடன் போலீஸார் கண்காணித்து வருகின்றனர். கடலோரத்தில் கடற்படையினரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/11/w600X390/SWAMY.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/11/திருச்செந்தூரில்-கந்த-சஷ்டி-விழா-3-ஆம்-நாள்-சுவாமி-ஜெயந்தி-நாதர்-வள்ளி-தெய்வானைக்கு-சிறப்பு-அபிஷே-3036228.html
3036203 ஆன்மிகம் செய்திகள் உங்க குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் தவறாமல் போடுகிறீர்களா? நோய் தடுப்பாற்றல் பற்றி ஜோதிடம் கூறும் ரகசியங்கள்! - அஸ்ட்ரோ சுந்தரராஜன் DIN Saturday, November 10, 2018 04:26 PM +0530  

உலக நோய்த்தடுப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 10-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. தடுப்பு மருந்தால் தடுக்கப்படக்கூடிய நோய்களுக்கு சரியான நேரத்தில் தடுப்பு மருந்து அளிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தவே இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இன்று பல்வேறு நோய்களின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அறிவியல் முன்னேற்றத்தின் விளைவாக பல்வேறு நோய்களுக்கும்  நோய் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. நோய் வந்த பிறகு சிகிச்சை செய்வதை விட வருமுன் காக்கும் விதமாக தேவையான தடுப்பு மருந்தைச் சரியான காலத்தில் எடுத்துக்கொள்வது  அவசியமாகிறது. 

தடுப்பு மருந்து

ஓர் உயிரியல் தயாரிப்பான தடுப்பு மருந்து ஒரு குறிப்பிட்ட நோய்க்கு எதிரான தடுப்பாற்றலை வலுப்படுத்துகிறது. நோயை உண்டாக்கும் நுண்ணுயிர் போன்றதொரு பொருள் தடுப்பு மருந்தில் உள்ளது. பெரும்பாலும் இப்பொருள் பலவீனமடைந்த அல்லது இறந்த நுண்ணுயிரில் இருந்தும் அல்லது அதற்கெதிரான நச்சில் இருந்தும், அல்லது அதனுடைய ஒரு மேற்பரப்புப் புரதத்தில் இருந்தும்  உருவாக்கப்படும்.

தடுப்பு மருந்தின் அவசியம்

தடுப்பு மருந்து அளிப்பதன் மூலம் ஒருவருக்குத் தொற்று நோய்த் தடுப்பை அல்லது எதிர்ப்பை உருவாக்குவதே நோய்த்தடுப்பு எனப்படும். உயிருக்கு ஆபத்தான நோய்களில் இருந்து ஒரு குழந்தையை  நோய்த்தடுப்பு பாதுகாக்கிறது. பிறருக்கு நோய் பரவுவதையும் குறைக்கிறது. உடலின் நோய் தடுப்பாற்றலைத் தடுப்பு மருந்து ஊக்குவித்து ஒருவரை நோயில் இருந்தும் தொற்றில் இருந்தும் பாதுகாக்கிறது.  குழந்தைக்குத் தாய்ப்பால் வழியாகச் சிறிது தடுப்பாற்றல் கிடைக்கிறது. தாயிடம் இருந்து குழந்தைக்குக் கிடைக்கும் நோய் எதிர் பொருள் நீடித்து நிற்பதில்லை குழந்தையின் தடுப்பாற்றல் மண்டலம்  உருவாகி வரும்போது இந்தத் தடுப்பாற்றல் படிப்படியாகக் குறைகிறது.

எனவே குழந்தையை நோய் தாக்கும் அபாயம் உருவாகும். மேலும் நோய்த்தடுப்பாற்றலை உருவாக்கும் போது உயிருக்கு ஆபத்தான நோய்களிடம் இருந்து அதிகப் பாதுகாப்பு கிடைக்கும். தடுப்பு மருந்து அளிக்கத் தொடங்கியதில் இருந்து உடலில் காப்பு எதிர்வினை உருவாவது வரையுள்ள செயல்முறைகள் நோய்த்தடுப்பு எனப்படும். ஓர் உயிரியல் தயாரிப்பான தடுப்பு மருந்து ஒரு குறிப்பிட்ட நோய்க்கு எதிரான தடுப்பாற்றலை வலுப்படுத்துகிறது. நோயை உண்டாக்கும் நுண்ணுயிர் போன்றதொரு பொருள் தடுப்பு மருந்தில் உள்ளது. பெரும்பாலும் இப்பொருள் பலவீனமடைந்த அல்லது இறந்த நுண்ணுயிரில் இருந்தும் அல்லது அதற்கெதிரான நச்சில் இருந்தும், அல்லது அதனுடைய ஒரு மேற்பரப்புப் புரதத்தில் இருந்தும் உருவாக்கப்படும்.  

தன்தாக்கு நோய்கள்

நம் உடலின் நோய் தடுப்பாற்றல் மண்டலம் என்பது நம்மை பல்வேறு தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கும் தற்காப்பு அமைப்பு ஆகும். நம் உடலுக்குள் நுழையும் நோய்க்கிருமிகளையும், தீங்கு  செய்யும் உயிரணுக்களையும் அடையாளம் கண்டு அழிப்பதன் மூலம் நம்மை இது பாதுகாக்கிறது. ஆனால் நோய் தடுப்பாற்றல் அமைப்பில் குறைபாடுகள் ஏற்படும்போது நோய் எதிர்ப்பு திறன் குறைந்து  அதிகமான தொற்றுநோய்களுக்கு நாம் ஆளாக நேரிடும். நம் உடலின் சொந்த உயிரணுக்களை (செல்களை) இனம்காண முடியாமல் சில நேரங்களில் நோய் தடுப்பாற்றல் மண்டலம் தன் உடலைத் தானே  சேதப்படுத்தவும் கூடும். 

நோய் தடுப்பாற்றல்

தடுப்பு மருந்து அளிப்பதன் மூலம் ஒருவருக்குத் தொற்று நோய்த் தடுப்பை அல்லது எதிர்ப்பை உருவாக்குவதே நோய்த்தடுப்பு எனப்படும். உயிருக்கு ஆபத்தான நோய்களில் இருந்து ஒரு குழந்தையை  நோய்தடுப்பு பாதுகாக்கிறது. பிறருக்கு நோய் பரவுவதையும் குறைக்கிறது. உடலின் நோய் தடுப்பாற்றலைத் தடுப்பு மருந்து ஊக்குவித்து ஒருவரை நோயில் இருந்தும் தொற்றில் இருந்தும் பாதுகாக்கிறது.  குழந்தைக்குத் தாய்ப்பால் வழியாக சிறிது தடுப்பாற்றல் கிடைக்கிறது. குழந்தையின் தடுப்பாற்றல் மண்டலம் உருவாகி வரும்போது இந்தத் தடுப்பாற்றல் படிப்படியாகக் குறைகிறது. நோய்தடுப்பே  மலிவான ஒரு சுகாதார முதலீடாகும்.

நோய் தடுப்பாற்றல் விழிப்புணர்வு

நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளுக்குக் குணமாக்கும் ஆற்றல் எவ்வளவு தூரம் உள்ளது என்பது குறித்த புரிந்துகொள்ளுதல் மக்களிடம் இன்னும் தெளிவாக இல்லை என்று உலக நலவாழ்வு நிறுவனம்  கூறியுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளின் ஆற்றல் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தவும், இம்மருந்துகள் பயன்படுத்தப்படும் விதத்தை மாற்றவும், நோய் எதிர்ப்பு சக்தி  மருந்துகள் உலக தடுப்பாற்றல் விழிப்புணர்வு வாரத்தில் முயற்சித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, உலகில் உள்ள பல நோய்களுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த நோய்களைக் குணப்படுத்துவதற்காக நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளையே மருத்துவர்கள்  கொடுக்கிறார்கள். அது மட்டுமல்லாமல், மற்ற நோய்களின் தாக்கத்தைக் குறைப்பதற்கும், நோய் வராமல் தடுப்பதற்கும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. மனித உயிர்களைப்  பாதுகாக்கும் தடுப்பு மருந்துகளின் விலை உலகில் அதிகரித்துள்ளதால் சில நாடுகளில் சிறார்க்கு தடுப்பு மருந்துகளை முழுமையாக வழங்க முடியாநிலை ஏற்பட்டுள்ளதாக எல்லைகளற்ற மருத்துவர்கள்  அமைப்பு எச்சரித்துள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் தடுப்பாற்றலுக்கான ஜோதிட ரீதியான காரணங்கள்

1. ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்து நோய் தடுப்பாற்றலுடன் விளங்க அவருக்கு ஜாதகத்தில் லக்னாதிபதி பலம் நிறைந்து நிற்க வேண்டும். லக்னாதிபதி லக்னத்திலேயே நிற்பது சிறப்பு. அதிலும் அவர் ஆட்சியாகவோ உச்சமாகவோ நின்றுவிட்டால் மிக்க பலமிக்கவராவார். அவ்வாறு நிற்கும்போது அவருக்கு நோய் தடுப்பாற்றல் இயற்கையாகவே மிகுந்து இருக்கும். லக்னாதிபதியின் வர்க்கோத்தம பலன் ஜாதகரை நோய்களில் இருந்து பாதுகாக்கும்.

2. ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்திருக்க லக்னத்திற்கோ அல்லது லக்னாதிபதிக்கோ கால புருஷ ராசிக்கு 6/8/12 பாவங்களான கன்னி, விருச்சிகம் மற்றும் மீன ராசிகளின் தொடர்பு இருக்கக்  கூடாது. மேற்கண்ட ராசிகள் லக்னமாக இருந்து லக்னாதிபதி ஆட்சி பெற்றிருந்தால் விதிவிலக்கு உண்டு.

3. ஒரு ஜாதகருக்கு அவரது லக்னத்தில் மாந்தி நிற்பது மற்றும் லக்னத்தை மாந்தி பார்ப்பது ஆகியவை ஜாதகருக்கு நோய் தடுப்பாற்றலை குறைத்து அடிக்கடி நோயினால் அவதியுறச் செய்யும்.

4. ஜெனன ஜாதகத்தின் 6/8/12 தொடர்புகள் மற்றும் ராகு கேதுக்களின் தொடர்பும் லக்னத்திற்கு இருப்பது நோய் தடுப்பாற்றலை குறைக்கும்.

5. மேலும் லக்னம் மற்றும் லக்னாதிபதிக்கு பாதகாதிபதிகள், மாரகாதிபதிகள், திதி சூன்ய ராசியதிபதிகள் தொடர்பும் நோய் தடுப்பாற்றலை குறைக்கும்.

6. லக்னம் மற்றும் லக்னாதிபதிகள் ம்ருத்யு பாகையில் அமைவதும் நோய் தடுப்பாற்றலை குறைத்துவிடும்.

7. ஆத்மகாரகன் எனப்படும் சூரியன் உலகிற்கெல்லாம் அளப்பறிய சக்திகளை வழங்குபவன் ஆவான். சூரியனின் நிலை ராகு கேதுவுடன் இணைந்து கிரகண தோஷம் பெறாமலும், 6/8/12 தொடர்புகள்  பெறாமலும் இருக்க வேண்டும். இந்த நிலை ஜெனன ஜாதக ஆத்ம காரக கிரகத்துக்கும் பொருந்தும்.

8. உடம்பு மற்றும் ரத்தத்தின் காரகன் சந்திரன் ஆகும். இவரே மனதிற்கும் காரகன் ஆவார். தன்னம்பிக்கை பெற்று மனோதிடம் நிறைந்திருந்தால்தான் நோய் எதிர்ப்பு சக்தி பலனளிக்கும். எனவே சந்திரன்  ஜாதகத்தில் நீசமாகாமலும் அசுப தொடர்புகள் பெறாமலும் பாபகர்த்தாரி யோகம் பெறாமலும் நிற்க வேண்டும்.

9. காலபுருஷ ராசியின் லக்னாதிபதி மற்றும் ரத்தத்தின் காரகனான செவ்வாய் பலம் பெற்று இருக்கவேண்டும்.

10. உடல் கட்டமைப்பு மற்றும் எலும்பின் காரகர் சனி பகவான் ஆவார். அவர் நல்ல நிலையில் ஜாதகத்தில் இருக்கவேண்டும்.

11. நோய் தடுப்பாற்றலை தரும் கிரகம் குரு பகவானாவார். குருபகவானின் அருள் பார்வை இருந்தால் மட்டுமே ஓருவருக்கு நோய் தடுப்பாற்றல் பலனளிக்கும்.

12. திரிகோண ஸ்தானங்களில் சுப கிரகங்களும் கேந்திர ஸ்தானங்களில் அசுப கிரகங்கள் ஆட்சி பலத்தோடும் நிற்க வேண்டும்.

13. ஆண்டிபயாடிக் என்பவை ராகு கேதுக்களின் ஆதிக்கம் நிறைந்தவை ஆகும். எனவே ஆண்டிபயாடிக் உபயோகத்தைக் குறைத்து வருமுன் காக்கும் பழக்க வழக்கத்தைக் கொள்ளவேண்டும். லக்னத்திற்கோ / லக்னாதிபதிக்கோ ராகு/கேதுவின் தொடர்புகள் இருந்தால் அடிக்கடி நோய் ஏற்படும் தன்மையும் ஆண்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்ளும் நிலையும் ஏற்படும்.

பாலாரிஷ்ட தோஷங்கள்

பாலரிஷ்டத்தை குறிப்பிடுவதில் சந்திரனின் நிலை முதன்மையானது என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகிறது. சந்திரனின் பலம்/பலவீனம், சுப அசுப தன்மைகள் ஒரு குழந்தையின் பாலரிஷ்டத்தை தீர்மானிக்கிறது. சந்திரனின் அசுப தன்மைக்கு ஏற்றவாரு குழந்தையில் ஏற்படும் நோய் மற்றும் குழந்தை இறப்பு ஆகியவை அமைந்து விடுகிறது.

சந்திரனை அடுத்து ஒரு குழந்தையின் லக்னத்தின் பலமே குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் ஆயுளை தீர்மானிக்கிறது. லக்னம் மற்றும் லக்னாதிபதி 6/8/12 அதிபதிகளுடன் மற்றும் பாதகாதிபதி, அசுப  கிரஹ தொடர்பு ஏற்படாமல் இருப்பதும் அவர்களின் தசா புத்தி குழந்தை பருவத்தில் ஏற்படாமல் இருப்பதும் அவசியம் ஆகும்.

மாந்தியின் நிலையும் நோய்தடுப்பாற்றலும்

ஜோதிடத்தில் மாந்தி கிரகம் சனியின் உபக்கிரகமாகவும், சனி பகவானின் மைந்தன் என்றும் சொல்லப்படுகிறது. மாந்தி கொடிய பாவ கிரகமாகும். மாந்திஎந்த வீட்டில் இருக்கிறதோ அந்தஸ்தானம் பாதக  ஸ்தானமாகும். அந்தஸ்தான அதிபதியும் பாதகாதிபதி ஆகும். மாந்தி இருக்கும் நட்சத்திரமும் பாதகமாகும். மாந்தி தான் இருக்கும்வீட்டில் இருந்து 2, 7, 12 ம் இடங்களைபார்க்கும். மாந்தியின் பார்வை  பதியும்வீடுகளும் தோஷத்தை உண்டாக்கும். ஒருவருடைய ஜாதகத்தில் குரு பார்வை, சேர்க்கை இல்லாமல் மாந்தி லக்னத்தில் அமர்ந்தால் அவர்களுக்கு நோய் தடுப்பாற்றல் குறைந்து அடிக்கடி  நோய்வாய்ப்பட நேரும்.

ஸ்ர்ப கிரஹங்களின் தாக்கம்

ஜாதகத்தில் லக்னத்தில் ஸர்ப கிரஹங்களான ராகு-கேது நிற்பது, லக்னம்/லக்னாதிபதி/சந்திரன் ஸர்ப கிரஹங்களின் திரிகோண பார்வையைப் பெறுவது ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் அம்சங்களாகும்

நோய் எதிர்பாற்றல் தரும் பரிகாரங்கள்

ஆயுஷ்ய ஹோமம்:

ஒரு குழந்தைக்கு பிறந்த முதல் வருட ஜென்ம நக்‌ஷத்திரம் முதல் ஒவ்வொரு வருடமும் ஜென்ம நக்‌ஷத்திர நாளில் 'ஆயுஷ்ய சூக்தம்” என்னும் மந்திரத்தைக் கொண்டு ஆயிரத்தெட்டு தடவை நல்ல நெய்யைக் கொண்டு ஹோமம் செய்ய வேண்டும். 'மிருத்யூ” பயமின்றி குழந்தை தீர்க்காயுளாக வளர வேண்டுமென்பதற்காகச் செய்யப்படும் ஹோமமாகும். இதனால் 'ஆயுஷ்ய ஹோமம்” என்று இது பெயர்  பெற்றது. ஆயுள் அபிவிருத்திக்கு சர்வேஸ்வரனை வேண்டிச் செய்யும் ஹோமமாகும். இத்துடன் கலசத்தால் கும்பம் அமைத்து, வருணனையும், குழந்தையின் நக்ஷத்திர தேவதையையும் ஆவாஹனம்  செய்து நக்ஷத்திர ஸுக்தம் எனும் 27 நக்ஷத்திரங்களை போற்றும் மந்திரங்களைச் செபித்து அக்கலச தீர்த்தத்தை குழந்தைக்கு ஸ்நானம் செய்வித்து தீர்த்தத்தை உள்ளுக்கும் கொடுக்க வேண்டும். இவ்வாறு  செய்வது வேத முறையிலான நோய் தடுப்பாற்றலை ஏற்படுத்தும் முறையாகும்.

1. நோய் எதிர்ப்பாற்றல் பெறக் குல தெய்வ வழிபாடு முக்கியமானதாகும். அவ்வப்போது அவரவர் குல தெய்வங்களைச் சென்று வழிபட்டுவருவது சிறந்த நோய் எதிர்ப்பாற்றலை ஏற்படுத்தும்.

2. பித்ரு வழிபாடு எனும் முன்னோருக்குச் செய்யும் திதிகளை சரிவர செய்யவேண்டும்.

3. நவக்கிரங்களில் நோய் தடுப்பாற்றலுக்கு அனைத்துக் கிரகங்களையும் வழிபடவேண்டும் என்றாலும் குரு, சூரியன் சந்திரன் இவர்களை வழிபடுவது சிறந்த பலனளிக்கும். சூரிய நமஸ்காரம் செய்வது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.

4. தேவ மருத்துவரான தன்வந்திரி வழிபாடு மிகச்சிறந்த நோய் எதிர்ப்பாற்றலை ஏற்படுத்தும். புதன் மற்றும் வியாழன் கிழமைகளில் தன்வந்திரி வழிபாடு செய்வது சிறப்பாகும்.

5. லக்னத்தில் மாந்தி நிற்கப்பெற்றவர்கள் கும்பகோணத்திற்கு அருகில் நாச்சியார் கோயிலில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள குடும்ப சனி கோயிலில் மாந்திக்கும் சனிக்கிழமை அல்லது  அஷ்டமி திதி நாளில் அபிஷேக ஆராதனைகளுடன் கூடிய வழிபாடு செய்வது, சென்னை அரக்கோணம் மார்க்கத்தில் திருவாலங்காட்டில் உள்ள சிவன் கோயிலில் உள்ள மாந்திக்கு வழிபாடு செய்வது  ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியினை ஏற்படுத்தி நோய்களிலிருந்து காக்கும்.

6. தற்போது ஸ்கந்த சஷ்டியின் மூன்றாம் நாள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் ”கந்தன் திருநீரனிந்தால் வந்த வினை ஓடிவிடும்” எனும் பாடலுக்கு இணங்கவும் “காக்க காக்க கனகவேல் காக்க”  எனும் வரிகளுக்கேற்பவும் கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் ஆகிய ஸ்தோத்திரங்களை ஒருவர் தொடர்ந்து ஜெபித்து திருநீரனிந்து வர, ரத்தத்தின் காரகர் மற்றும் காலபுருஷ லக்னாதிபதி பலமடைந்து  நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படும்.

7. தசமூலாரிஷ்டம், ச்யவன ப்ராஸ லேகியம், திராஷாதி லேகியம், திரிபால சூரணம் போன்ற ஆயுர்வேத மருந்துகளைத் தகுந்த மருத்துவ ஆலோசனையுடன் சாப்பிட்டுவர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

8. முக்கியமாகக் குழந்தை பருவத்தில் நோய் தடுப்பு மருந்துகளைத் தவறாமல் அளித்து வர வேண்டும்.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/10/w600X390/immunization1.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/10/உங்க-குழந்தைகளுக்கு-தடுப்பூசிகள்-தவறாமல்-போடுகிறீர்களா-நோய்-தடுப்பாற்றல்-பற்றி-ஜோதிடம்-கூறும்-ரகசிய-3036203.html
3036155 ஆன்மிகம் செய்திகள் இந்த ஜாதக அமைப்பு உள்ளவர்கள் தன் தாயிடம் இரக்கமின்றி நடந்துகொள்வார்களாம்!  Saturday, November 10, 2018 03:01 PM +0530  

சந்திர மங்கள யோகம். பெயரிலிருந்தே, இந்த யோகத்தில் சந்திரனும், மங்கள் என்று சொல்லப்படுகிற செவ்வாயும் சம்மந்தப்பட்டிருப்பது தெரிகிறது. ஒரே ராசியில் செவ்வாயும் சந்திரனும் சேர்ந்து இருந்தால், அது சந்திர மங்கள யோகமாகும். அதைத் தவிர, சந்திரனும் செவ்வாயும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தாலும் அதுவும் சந்திர மங்கள யோகம்தான்.

சரி! இந்த யோகத்திற்குப் பலன் என்ன?

இந்த யோகம் இருப்பவர்கள், தன் தாயைக் கடுமையாகப் பேசுவர். சமயங்களில், தாயிடம் இரக்கமின்றியும் நடந்துகொள்வர். நியாயமற்ற வழிகளில் பொருளீட்டுவர். இந்த யோகத்தின் பலனைப் பார்க்கும்போது, இது ஒரு அவயோகமாகவே காணப்படுகிறது.

சந்திரன் என்பவர் தாயாருக்குக் காரகம் வகிப்பவர். செவ்வாய் ஒரு பாப கிரகம். ஆக, கெட்டவர் சேர்க்கை பெற்ற சந்திரன் கெட்டுவிடுகிறார். ஆக, இந்த ஜாதகக்காரர், தாயிடம் கடுமையாக நடந்துகொள்கிறார்.

சரி! கடக, சிம்ம லக்கின ஜாதகக்காரர்களுக்கு செவ்வாய் யோக காரகனாயிற்றே! ஆக, அந்த லக்கினக்காரர்களுக்கு செவ்வாய் நல்லதுதானே செய்ய வேண்டும். அவர்களுக்கு இந்த யோகம் எத்தகைய பலனைக் கொடுக்கும். நல்ல பலனைக் கொடுக்குமா?

செவ்வாய், இயற்கையிலேயே ஒரு பாப கிரகம். ஆகவே, எல்லா லக்கினக்காரர்களுக்கும் மேற்கூறிய பலனையே கொடுத்து வருகிறார். 

நாம் உதாரணத்துக்கு ஒரு ஜாதகத்தைப் பார்ப்போம்.

இவருக்கு செவ்வாய் உச்சம். இருப்பினும் சந்திரனைப் பார்க்கிறார். இவர் தன் தாயாரிடம் பேசும்போது கடுமையாகத்தான் பேசுவார். இவருக்கு இந்த சந்திர மங்கள யோகம் இருக்கிறது.

இதேபோல், செவ்வாயும் சந்திரனும் சேர்ந்து இருக்கும் ஜாதகங்களையும் பார்த்து இருக்கிறேன். அவர்கள் எல்லோருமே, ஏதோ ஒருவிதத்தில் தாயாருக்கு ஆதரவில்லாத நிலையில் இருந்ததைப் பார்த்து இருக்கிறேன். ஆகவே, சந்திர மங்கள யோகம், ஒரு அவயோகமே.

–  ஜோதிடர் சோ.சந்திரசேகரன்

]]>
சந்திரன் , செவ்வாய், யோகம் , ஜாதகம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/13/w600X390/chandra_dev.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/10/இந்த-யோகம்-உள்ளவர்கள்-தன்-தாயிடம்-இரக்கமின்றி-நடந்துகொள்வார்களாம்nbsp-3036155.html
3036175 ஆன்மிகம் செய்திகள் கந்தசஷ்டி விழாவிற்கு இந்த கோவில்தான் மிகவும் புகழ்பெற்றது! DIN DIN Saturday, November 10, 2018 03:00 PM +0530  

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி கோயில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளுள் இரண்டாம் படைவீடாகும்.

இத்தலத்தில் முருகப்பெருமான் சூரபத்மன் என்னும் அசுரனை வென்றபின் சிவபெருமானை ஐந்து லிங்கங்கள் வடிவில் வைத்து வழிப்பட்டார். அலைகள் வந்து புரளும் கடற்கரையில் இக்கோவில் அமைந்துள்ளது.

150 அடி உயரம் கொண்ட இக்கோவிலின் கோபுரம், ஒன்பது தலங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்டபின்பு தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிவபெருமானுக்கு பூஜை செய்தார். தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார். இவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு லிங்கம் இருக்கிறது. இவருக்கு முதல் தீபாராதனை காட்டிய பின்பே, முருகனுக்கு தீப ஆராதனை நடக்கும். சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்கு பின்புறம் லிங்கம் இருக்கிறது. இவ்விரு லிங்கங்களும் இருளில் உள்ளதால், தீப ஆராதனை ஒளியில் மட்டுமே காண முடியும்.

இது தவிர முருகன் சன்னதிக்கு வலப்புறத்தில் பஞ்சலிங்க சன்னதியும் இருக்கிறது. திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைந்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். 

முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்து கோவில்களும் மலைக்கோவிலாக அமைந்துள்ளது. திருச்செந்தூர் கோயில் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது. இந்த குகைக்கு முன்புள்ள சந்தன மலையில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும் என்பது நம்பிக்கை. திருச்செந்தூர் கோயிலில் உள்ள சண்முக விலாசம் என்னும் மண்டபம் 120 அடி உயரமும், 60 அடி அகலமும் கொண்டது. 124 தூண்கள் இதை தாங்குகின்றன.

பங்குனி உத்திரம், திருகார்த்திகை, வைகாசி விசாகம், கந்த சஷ்டி முருகத்தலங்களில் கந்தசஷ்டிவிழா ஆறு நாட்களே நடக்கும். சில தலங்களில் சஷ்டிக்கு மறுநாள் முருகன் திருக்கல்யாணத்துடன் சேர்த்து ஏழு நாட்கள் நடத்துவர். ஆனால், திருச்செந்தூரில் கந்தசஷ்டி முதல் ஆறுநாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம், ஏழாம் நாளில் முருகன், தெய்வானை திருக்கல்யாணம், அடுத்த 5 நாட்கள், சுவாமி திருக்கல்யாண கோலத்தில் ஊஞ்சல் சேவை என இவ்விழா 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

]]>
கந்தசஷ்டி, முருகப்பெருமான், சூரபத்மன், அசுரன், திருச்செந்தூர் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/2/w600X390/tiruchendur.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/10/கந்தசஷ்டி-விழாவிற்கு-இந்த-கோவில்தான்-மிகவும்-புகழ்பெற்றது-3036175.html
3036152 ஆன்மிகம் செய்திகள் திருச்சானூர் பத்மாவதி கோயிலில் புதிய அன்னதான கூடம் திறப்பு DIN DIN Saturday, November 10, 2018 01:12 PM +0530  

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருச்சானூர் பத்மாவதி கோயிலில் அன்னதான கூடம் திறக்கப்பட்டுள்ளது. 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அன்னதான கூடம் அமைந்துள்ளது. இங்குத் தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. விழாக் காலங்களிலும், பக்தர்கள் அதிகம் வரும் நேரங்களிலும் அன்னதான கூடத்தில் கடும் கூட்டநெரிசல் ஏற்படுகிறது. இதனைக் கருத்தில்கொண்டு 2-வது வைகுண்ட கியூ காம்ப்ளக்ஸ் அருகே புதிய அன்னதான கூடம் கட்டப்பட்டது. பிரம்மாண்டமாகக் கட்டப்பட்ட இந்த அன்னதான கூடத்தில் சுமார் ஒன்றரை லட்சம் பக்தர்கள் உட்கார்ந்து சாப்பிடலாம்.

கடந்த பிரமோற்சவம் திருவிழாவின் போது இந்த புதிய அன்னதான கூடம் செயல்படத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், திருச்சானூர் பத்மாவதி அம்மன் கோயிலில் சுமார் 6.75 கோடி ரூபாய் மதிப்பில் புதிய அன்னதான கூடம் திறக்கப்பட்டது. இந்த அன்னதான கூடத்தை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சுதாகர் திறந்து வைத்தார். இதன்மூலம் பக்தர்கள் சிரமமின்றி அன்னதானத்தைச் சாப்பிடலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/6/20/5/w600X390/godesspadmavathithai.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/10/திருச்சானூர்-பத்மாவதி-கோயிலில்-புதிய-அன்னதான-கூடம்-திறப்பு-3036152.html
3036143 ஆன்மிகம் செய்திகள் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலில் இன்று டோலோத்ஸவம் தொடக்கம் DIN DIN Saturday, November 10, 2018 11:28 AM +0530  

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலில் ஸ்ரீரங்கநாச்சியாருக்கு சனிக்கிழமையான இன்று முதல் ஊஞ்சல் திருவிழா (டோலோத்ஸவம்) தொடங்குகிறது

கடந்த அக்டோபர் 27-ம் தேதி தொடங்கி நவம்பர் 4-ம் தேதி வரை ஸ்ரீரங்கநாதருக்கு ஊஞ்சல் திருவிழா நடைபெற்றது. தொடர்ந்து வரும் சனிக்கிழமை (நவ.10) முதல் ஸ்ரீரங்கநாச்சியாருக்கு ஊஞ்சல் திருவிழா தொடங்க உள்ளது. வரும் 16-ம் தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடைபெறும் 

இந்த விழா நாட்களில் ஸ்ரீரங்கநாச்சியார் ஊஞ்சல் மண்டபத்தில் உள்ள ஊஞ்சலில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். முதல் நாளான சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு ஸ்ரீரங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு 6 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்திற்கு வந்து சேருகிறார். அதனைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு ஊஞ்சல் திருவிழா ஆரம்பமாகிறது. 

இருபுறமும் வெண்சாமரம் வீச மேளதாளத்திற்கு ஏற்ப ஊஞ்சலில் ஸ்ரீரங்கநாச்சியார் ஆடுகிறார். இதனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்வர். விழா நாட்களில் இரவு 8 மணி வரை ஊஞ்சல் உற்ஸவம் நடைபெறும். 8.45 மணிக்கு மேற்படி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார் ஸ்ரீரங்கநாச்சியார். ஊஞ்சல் உற்ஸவ விழாவையொட்டி மாலை 3 மணி முதல் 5 மணி வரை மூலவர் சேவை கிடையாது. 

விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பொன்.ஜெயராமன் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2012/12/24/5/w600X390/srirangam.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/10/ஸ்ரீரங்கம்-அரங்கநாதர்-திருக்கோயிலில்-இன்று-டோலோத்ஸவம்-தொடக்கம்-3036143.html
3035640 ஆன்மிகம் செய்திகள் திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா 2-ஆம் நாள்: தங்கச் சப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய ஜெயந்திநாதர் DIN DIN Saturday, November 10, 2018 01:16 AM +0530 திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் தங்கசப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
 திருச்செந்தூர் கோயிலில் நிகழாண்டு கந்த சஷ்டி திருவிழா வியாழக்கிழமை (நவ. 8) காலை யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.
 தொடர்ந்து, சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளினார். அங்கு கும்பங்கள் வைக்கப்பட்டு, சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. மதியம் மூலவருக்கு உச்சிகால அபிஷேகம் முடிந்து, தீபாராதனை நடைபெற்றவுடன் யாகசாலையில் மகா தீபாராதனை நடைபெற்றது.
 அதன்பிறகு, சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து தங்கசப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, பிரகாரம் வழியாக பக்தர்கள் வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு பாட, சண்முகவிலாச மண்டபத்தை வந்தடைந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது, சுவாமியை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் சண்முகவிலாசத்தில் குவிந்தனர்.
 மாலையில், திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி, கிரிவீதி வலம்வந்து அங்கே கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
 வரும் 12-ம் தேதி வரை இதே நிகழ்ச்சிகளும், 13-ம் தேதி மாலை 4.30 மணியளவில் கோயில் கடற்கரையில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவும் நடைபெறவுள்ளது.
 திருவிழா நாள்களில், நாள்தோறும், காலை, மாலை வேளைகளில் கோயில் சிங்கப்பூர் கோவிந்தசாமி பிள்ளை கலையரங்கில் பக்தி சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/10/w600X390/TSWAMY.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/10/திருச்செந்தூரில்-கந்த-சஷ்டி-விழா-2-ஆம்-நாள்-தங்கச்-சப்பரத்தில்-வள்ளி-தெய்வானையுடன்-எழுந்தருளிய-ஜெய-3035640.html
3035639 ஆன்மிகம் செய்திகள் 14-இல் பயன்பாட்டுக்கு வருகிறது திருநள்ளாறு எமன் தீர்த்தக் குளம் Saturday, November 10, 2018 01:14 AM +0530 திருநள்ளாறு கோயில் சார்பில் ரூ.3.50 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்ட நளன் தீர்த்தக் குளம் உள்ளிட்ட திட்டப் பணிகளை புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி, வரும் 14-ஆம் தேதி திறந்துவைக்கிறார்.
 திருநள்ளாறு எமன் தீர்த்தக்குளம் ரூ. 80 லட்சத்தில் மேம்படுத்தும் பணி முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டது. குளத்தை சுற்றி தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டு, மக்கள் நடைப் பயிற்சியில் ஈடுபடும் வகையில் நடைமேடை உருவாக்கப்பட்டுள்ளது.
 இதுதவிர, கோயிலுக்கு வருவோர் தங்குவதற்காக கட்டப்பட்டுள்ள விடுதி வளாகத்தில் (சல்லித் தோட்டம்) நன்கொடையாளர் உதவியில் ரூ.1.30 கோடியில் கருத்தரங்கக் கூட வசதியும், முக்கியஸ்தர்கள் தங்கும் விடுதியும் கட்டப்பட்டுள்ளன.
 மேலும் பிரம்ம தீர்த்தக் குளம் அருகே கோயில் ஊழியர்களுக்கான குடியிருப்பு வளாகம் ரூ.1.20 கோடியில், கீழ் தளத்தில் 6 வீடுகள், மேல் தளத்தில் 7 வீடுகள் என தலா 600 சதுர அடி பரப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
 இந்த மூன்று திட்டப்பணிகளையும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நிகழ்ச்சிக்கு கோயில் நிர்வாகத்தினர் ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
 இதுகுறித்து கோயில் நிர்வாக அதிகாரியும், மாவட்ட சார்பு ஆட்சியருமான ஏ.விக்ரந்த் ராஜா வெள்ளிக்கிழமை கூறும்போது, எமன் தீர்த்தக் குளம், கோயில் ஊழியர் குடியிருப்பு வளாகம், வி.ஐ.பி. சூட் ஆகியவற்றின் திறப்பு விழா நவ.14-ஆம் தேதி நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி முதல்வர், வேளாண் துறை அமைச்சர் ஆகியோர் பங்கேற்று திறந்துவைக்கின்றனர் என்றார்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/10/w600X390/KK.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/10/14-இல்-பயன்பாட்டுக்கு-வருகிறது-திருநள்ளாறு-எமன்-தீர்த்தக்-குளம்-3035639.html
3035557 ஆன்மிகம் செய்திகள் மயிலுருவில் மகாதேவனைப் பூஜித்த உமையம்மை! Friday, November 9, 2018 03:04 PM +0530  

அன்னை பார்வதி தேவி மயில் உருவில் சிவனை பூஜை செய்ததாகக் கருதப்படும் தலங்கள் இரண்டு, ஒன்று மயிலாப்பூர், மற்றொன்று மயிலாடுதுறை. இந்த இரண்டு இடங்களுக்கும் பறவையான மயில் பூசனை செய்த வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ஊர் பெயர்கள் காரணப்பெயர்களாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டும் பாடல் பெற்ற தேவாரத் திருத்தலங்களாகும். 

முன்னதாகச் சொல்லப்பட்ட மயிலை தல வரலாற்றின்படி கயிலையில் ஒரு சமயம் சிவபெருமான் பிரணவம் மற்றும் பஞ்சாட்சரம் குறித்து உபதேசம் செய்த தருணத்தில், அவ்வமயம் அழகிய மயில் ஒன்று அங்கு தோகை விரித்து ஆட, அம்பிகையின் கவனம் அதில் ஈர்க்கப்பட்டு சிதறியது. அரனின் சாபத்திற்கு ஆளாகிய அம்பிகை பூலோகத்தில் தொண்டை நாட்டின்கண் உள்ள மயிலை திருத்தலத்தில் புன்னை மரத்தின் கீழ் மயில் உருக்கொண்டு சிவனை பூஜிக்கும்படி நேரிட்டது. பின்பு, ஈசனின் கருணையால் சாபவிமோசனம் ஏற்பட, அம்பிகை சுயரூபம் பெற, கற்பகாம்பாள், கபாலீசுவரராக உலகிற்கு காட்சியளித்தனர். இரண்டாவதாகக் கூறப்பட்ட மயிலாடுதுறை தலபுராண வரலாற்றின்படி:

சிவபெருமானை மதியாது தக்கன் யாகம், செய்யத் தொடங்கினான். உமையம்மை சிவபெருமான் சொல்லைக் கேளாது தந்தை செய்யும் வேள்விக்குச் சென்றாள். அங்கு தக்கன் தன்னை அவமதித்ததோடு அல்லாமல் அவன் கூறிய நிந்தனை உரைகளையும் கேட்டு உமையம்மை சினம் கொண்டாள். உலகே நடுங்கியது. அப்போது ஓர் மரத்தின் கிளையிலிருந்த மயில் அம்பிகையை சரணாக அடைந்தது. அம்மை மயிலுக்கு "தோகாய், அஞ்சலை' எனக்  கூறி அபயம் அருளினாள். சிவபெருமான் வீரபத்திரரை ஏவி, தக்கன் வேள்வியை அழிக்குமாறு செய்தார். மயிலுக்கு அபயம் அளித்த அம்பிகையை, பூலோகத்தில் காவிரிக்கரையில் மயில் உருக்கொண்டு தவம் செய்து, தன்னை மீண்டும் அடையுமாறு தன் சொல்லை மீறியதற்கு தண்டனை கொடுக்கும் விதமாக ஒரு விதமான கட்டளைக்கு பணித்தார். 

அதன் பிரகாரம், அம்பிகை சாப நிவர்த்தி வேண்டி, மயில் ரூபம் கொண்டு மயிலாடுதுறை தலத்தில் வெகு காலம் பூஜை செய்து வந்தாள். அன்னையின் தவத்தில் மகிழ்ந்த பெருமான், ஆண் மயிலாக வந்து ஆடி காட்சி கொடுத்து பின்னர் தாண்டவமாட, அம்பிகையும் சுயரூபம் பெற, இறைவன் அம்பிகையை ஏற்றருளி திருமணம் புரிந்து கொண்டார். அதனால் இத்தல இறைவன் மாயூரநாதர் என்றும், கௌரி தாண்டவரேசர் என்றும் அழைக்கப்பட்டார். இந்நிகழ்வு நடைபெற்ற மயிலாடுதுறையில் உள்ள சபைக்கு ஆதிசபை என்றும், இறைவனின் இத்தாண்டவத்திற்கு கௌரிதாண்டவம் எனவும் பெயர் வந்ததாக வரலாறு. இத்தலமும் கௌரி மாயூரம் என்றும் பெயர் பெற்றதாகக் சொல்லப்படுவது உண்டு. மேலும் தகவல்களின்படி, இறைவன் கௌரி தாண்டவம் ஆடிய நாள் ஒரு ஐப்பசி 25-ம் நாள் என்றும், திருமணம் நிகழ்ந்த தினம் ஐப்பசி 27 -ஆம் நாள் என்றும் அறியப்படுகின்றது.

திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனத்தின் அருளாட்சியில் விளங்கிப் பொலிவது மயிலாடுதுறை அருள்மிகு மாயூரநாத சுவாமி திருக்கோயில் புராணப்பெயர் மாயூரம், திருமயிலாடுதுறை. காசிக்கு இணையாகப் போற்றப்படும் தலங்களில் இதுவும் ஒன்று. இறைவன் சுயம்பு மூர்த்தியாய், மாயூரநாதர் (மயூரநாதர்) எனப்பெயர் கொண்டும், இறைவி அபயாம்பிகை எனப்பெயர் கொண்டும் அருளாட்சி புரிகின்றனர். ஞான சம்பந்தர், அப்பர் பெருமான் பாடல்கள் பெற்ற பதி. காவிரி தென்கரையில் 39-வது தலம். தீர்த்தம்: இடபம், பிரம்ம, அகத்திய, காவேரி. தலமரம்: மா, வன்னி. சுவாமி சந்நிதிக்கு பின் முருகவேள் சந்நிதி அமைந்துள்ளது. அருணகிரிநாதர் பாடல் பெற்றது (இச்சந்நிதி மட்டும் தருமையாதீனத்திற்கு உரியது). 

கந்தர் சஷ்டி விழாவில் மற்ற தலங்களைப் போல் இல்லாமல் இங்கு அம்பிகைக்கு பதில் சுவாமியிடம் முருகப்பெருமான் வேல்வாங்குவது தனிச்சிறப்பு. அகத்திய சந்தன பிள்ளையார், தலையில் அக்னிஜ்வாலையுடன் சனீஸ்வரபகவான், நடராஜர் பாதத்திற்கு அருகில் ஜுரதேவர் போன்று பல சிறப்பு சந்நிதிகளை தன்னகத்தே கொண்டது இந்த ஆலயம். மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் தல புராணமும், அபயாம்பிகை மாலையும், அபயாம்பிகை அந்தாதியும் பாடியுள்ளார். நல்லத்துக்குடி கிருஷ்ணய்யர் என்பர் அபயாம்பிகை சதகம் பாடியுள்ளார். "ஆயிரம் ஆனாலும் மாயூரம் போல் ஆகுமா?' என்று தொன்று தொட்டு வழங்கப்படும் பழமொழி. இத்தல பெருமையை பறை சாற்றும்.

இவ்வாலயத்தில் தெற்கு பிரகாரத்தில் உள்ள மயிலம்மன் சந்நிதி விசேஷமானது. மயிலுருவம் கொண்ட அம்பிகையின்  மயிலம்மன் திருவுருவம், லிங்கத்தை பூஜிப்பது போல் உள்ளது. இத்திருத்தலத்தில் துலா உற்சவம் அக்டோபர் 18 (ஐப்பசி 1) ஆரம்பித்து நடைபெற்று வருகின்றது. நவம்பர் 11-ஆம் தேதி மயிலம்மன் பூஜை (அன்று மாலை 6 மணிக்கு மேல் ஆண் மயில், பெண் மயில் பல்லக்கில் வருவதும், இறைவன் மயில் ரூபத்தில் உள்ள அம்பிகைக்கு அருள்புரிந்து சுயரூபம் பெறச் செய்தலும்,  ஐதீக விழாவாக கொண்டாடப் படுகின்றது. நவம்பர் 13 -திருக்கல்யாணம்; நவம்பர் 15 - திருத்தேர்; நவம்பர் 16 -கடைமுக தீர்த்தவாரி (காவிரி இடபதீர்த்தம்); நவம்பர் 17-  (கார்த்திகை 1) முடவன்முழுக்கு.துலாமாதம் என்று கூறப்படும் ஐப்பசி மாதத்தில் இத்தலத்தில் காவிரியில் நீராடினால் சகல பாபங்களும் நீங்குவதாகவும், நமது வேண்டுதல்கள் நிறைவேறி வளமான வாழ்வும் பெறலாம் என்கின்றது காவிரி புராணம். புனித நீராடுதலுக்கும்;புண்ணியப் பேறு அடைவதற்கும் இந்த ஐப்பசி விழா நடைபெறும் சமயத்தில் நாமும் மயிலாடுதுறைக்கு ஒருமுறை செல்லலாமே? நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழிக்கு தென்மேற்கே 21 கி.மீ. தூரத்திலும் கும்பகோணத்திற்கு கிழக்கே 32 கி.மீ. தூரத்திலும் உள்ளது இத்தலம். 

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/9/w600X390/mayuranathar.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/09/மயிலுருவில்-மகாதேவனைப்-பூஜித்த-உமையம்மை-3035557.html
3035547 ஆன்மிகம் செய்திகள் உலகிலேயே மிகப்பெரும் பணக்காரர் ஆகனுமா? சுக்கிர வார சந்திர தரிசனம் பாருங்க! - அஸ்ட்ரோ சுந்தரராஜன் Friday, November 9, 2018 02:30 PM +0530  

இன்று பஞ்சாங்கத்தில் சந்திர தரிசன நாளாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது ஸ்ரீ விளம்பி ஆண்டின் துலா மாதம் எனப்படும் ஐப்பசி மாதத்தில் வரும் சந்திர தரிசனமாகும். மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள். சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். ஒவ்வொரு அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. ஆனால் மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு, அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும். மூன்றாம் பிறையானது இரவு வருவதற்கு முன்னே 6.30 மணியளவில் அதாவது கோதூளி லக்ன காலத்தில் தோன்றும் பிறையாகும்.

மூன்றாம் பிறையை தெய்வீக பிறை என்றே சொல்லலாம். இந்த மூன்றாம் பிறையைத் தான் சிவன் தன்முடி மீது அணிந்திருக்கிறார். மூன்றாம் பிறையை பார்த்தல் மனநிறைவும், பேரானந்தமும், மன அமைதியும் கிடைக்கும். மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கும். அமாவாசை முடிந்து மூன்றாம் நாள் வரும் சந்திரனை அதாவது மூன்றாம் பிறையை பார்த்தால் ஆயுள் கூடும் என்பது  நம்பிக்கை.  

ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் ஆயிரம் மூன்றாம் பிறை, பார்த்தால் முக்தி எனச் சொல்லப்படுகிறது. "சந்த்ரமா மனஸோ ஜாத:" என்று புருஷ சூக்தம் போற்றும் சந்திரனே மனதிற்கு அதிபதி. இவனே உடலுக்குக் காரகன். சரீர பலம், மனோ பலம் இரண்டுமே உலக வாழ்க்கையின் வெற்றிக்கு மூல பலம் ஆகும்.

சந்திரன் தட்சனிடம் பெற்ற சாபம்

ஒரு முறை தட்சனின் சாபத்தால், தனது பதினாறு கலைகளையும் இழந்தான் சந்திரன். தனது கலைகளை மீண்டும் பெறுவதற்காக சந்திரன் சிவனை நினைத்து தியானம் செய்தார். தட்சனின் சாபத்தால் உருகும் சந்திர பகவானின் தேக நிலை குறித்து மிகவும் வருத்தம் அடைந்தனர் அவரின் இருபத்தேழு நட்சத்திர மனைவியர். உடனே தங்களின் தந்தையான தட்சனிடம் சென்று சாப விமோசனம் அளிக்கும்படி வேண்டினர்.

தட்சனோ தனது அறியாமையால், அளித்த சாபத்தால் தனது புண்ணியம் அனைத்தும் குறைந்துவிட்டது என்றும், தன்னால் சாப விமோசனம் அளிக்க முடியாது என்றும் கூறினார். இறுதியில் 27 நட்சத்திர மனைவியரும் சந்திரனும் சிவ பெருமானை நினைத்து தவம்புரிந்தனர். சந்திரனின் தவத்தை மெச்சிய சிவபெருமான் தன் தலைமுடியில், ‘மூன்றாம் பிறையாக’ அமரும் பேறுபெற்றார்.

சுறுசுறுப்போடு அதேநேரம் சிறுகச் சிறுக வளர்ந்தால் முழுப்பலனையும் அடையமுடியும் என்னும் கருத்தை வலியுறுத்துகின்றது இந்தப் பிறை. இதை வைத்துத்தான் எண்பது வயது நிறைவுற்றவர்களை 'ஆயிரம் பிறை கண்டவர்' என்று அவருக்குச் சதாபிஷேகம் செய்து கொண்டாடுகின்றோம்.

சந்திரனின் அகந்தை

"தான் பெரியவன்" என்று அகந்தையோடு நினைப்பது தவறு. அது மிகப்பெரிய அழிவை உணர்த்தும் என்பதை உலகிற்கு உணர்த்தும் விதமாக சந்திரன் காணப்படுகின்றான். இதனால் தான் வளர்பிறையில் எந்தக் காரியம் தொடங்கினாலும் அந்தக் காரியம் வளம் பெறும் என்பது ஐதீகம்.

சந்திர தரிசனம்

சந்திரன் அமாவாசையை அடுத்து வரும் நாட்களில் வளர்பிறையாக உருவெடுக்கின்றான். இந்த நாளை சந்திரதரிசனம் என்று அழைக்கிறார்கள். இந்த சந்திர தரிசனம் பற்றி இந்து சாஸ்திரம் சொல்வதைப் பார்ப்போம். வானத்தில் சில நொடிகளே காட்சி தரும் மூன்றாம் பிறைச் சந்திர தரிசனமே மிகவும் அபூர்வமான தெய்வ தரிசனமாகும். சிவபெருமான் தன் தலையில் மூன்றாம் பிறைச் சந்திரனையே சூடி “சந்திர மௌலீஸ்வரராக” காட்சி தருகின்றார். எனவே மூன்றாம் பிறை தரிசனம் வெறும் சந்திர தரிசனம் அல்ல. சாட்சாத் பரமேஸ்வரனின் ஒரு பகுதியே நாம் தரிசிக்கும் பாக்கியம் பெறுகிறோம்.

மூன்றாம் பிறைச்சந்திரனை நாம் வானத்தில் சற்று சிரமப்பட்டுத் தேடிக்கண்டுபிடித்து தரிசிக்கும் படியாக இருக்கும். மெல்லிய தங்கக் கம்பியில் செய்த மோதிரம் போல அழகாக வளைவாகக் காட்சி தரும்.

ஜனன லக்னத்தின்படி நல்ல பலன்களை ஒரு ஜாதகத்தில் காண முடியவில்லை எனில், சந்திரனை லக்னமாகக் கொண்டு பலன்களைச் சொல்ல வேண்டும் என்று விதி இருக்கிறது. இதையே ‘விதி கெட்டால் மதியைப் பாரு விதியை மதியால் வெல்லலாம் என்ற பழமொழி உணர்த்துகிறுது. யாராவது அறிவீனமான செயல்களை செய்துவிட்டால் "மதி கெட்டவனே" எனத் திட்டுவதை காணலாம். இதிலிருந்து ஒருவர் புத்திசாலியாக இருக்க சந்திரன் எவ்வளவு முக்கியம் என்பதை உணரலாம்.
 
ஜோதிடத்தில் சந்திர தரிசனம்

ஜாதகத்தில் சந்திரதோஷம் இருந்தால் அவர்கள் அமாவாசைக்குப் பின்னர் வரக்கூடிய துதியை திதியில் விரதம் இருக்கவேண்டும். விரதம் இருந்த பின்னர் மாலை நேரத்தில் சந்திர தரிசனம் செய்யவேண்டும். சந்திரன் நல்ல நிலைமையில் ஜாதகத்தில் இருந்தால் கவலையில்லை. பலம் குன்றிய சந்திரன், கிரகண தோஷம், சந்திரனோடு சர்ப்பக் கிரகங்கள் இருக்கும் அமைப்பு, சந்திரன் நீசமாக உள்ள‌ அமைப்பு இருப்பவர்கள் சந்திர வழிபாடு அவசியம் செய்ய வேண்டும். . 
 

சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் இந்த மூன்றாம் பிறை தரிசனம் கண்டால் சந்திரனின் பரிபூரண அருளைப் பெறலாம். மேலும் ஜாதகத்தில் சந்திரன் நீசம் அடைந்தவர்கள், சந்திரனுடன் ராகு, கேதுக்கள் இணைந்து தோஷம் அடைந்தவர்கள் இவர்களும் மூன்றாம் பிறை தரிசனம் செய்தால் தோஷங்கள் படிப்படியாக விலகும்.

ஆயுள் வளர்க்கும் சந்திர தரிசனம்

சந்திரனுக்கும் ஆயுளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் கெட்டிருந்தால் அவர்களுக்கு நீண்ட ஆயுள் அமையாது. எனவே ஜாதகத்தில் சந்திரன் 6/8/12 வீடுகளில் மறைவு பெற்றோ, விருச்சிகத்தில் நீசம் பெற்றோ அல்லது சனி/ராகு/கேது போன்ற அசுப கிரஹங்களுடன் சேர்ந்தோ இருந்தால் மூன்றாம் பிறையில் சந்திர தரிசனம் செய்து வணங்குவது ஆயுள் தோஷம் போக்கி  ஆயுளை விருத்தியாக்கும்.

திங்கட்கிழமையுடன் மூன்றாம் பிறை வரும்போது, சோமவாரம் என்பார்கள் திங்கட்கிழமையை அந்த சோமவாரத்தில் வரும் மூன்றாம் பிறையை நீங்கள் பார்த்துவிட்டால், வருடம் முழுக்க நீங்கள் சந்திரனை வணங்கிய பலன்கள் எல்லாம் கிடைக்கும். அதனால் மூன்றாம் பிறை என்பது ஒரு தெய்வீகமான பிறை. அதனைப் பார்த்தாலே மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கக் கூடியது. அதிலும் ஆயுள்காரகரான சனி பகவானின் நாளில் சந்திர தரிசனம் செய்தால் ஆயுள் விருத்தி ஏற்படுவதோடு புணர்ப்பு தோஷம் போக்கும்.

செல்வச் செழிப்பு சேரும்

சந்திரனை ராஜ கிரஹம் என்று கூறுவார்கள். மேலும் செல்வங்களை தரும் மஹா லக்‌ஷ்மியை சந்திர சகோதரி எனக் கூறுவார்கள். எனவே சந்திர தரிசனம் செய்பவர்களுக்கு சந்திர சகோதரியான மகாலக்‌ஷ்மியின் அருள் கிட்டி அனைத்துச் செல்வங்களையும் சேர்க்கும், பிரம்மஹத்தி போன்ற தோஷங்களை நீக்கும்.

சந்திராஷ்டம தோஷம் போக்கும்

ஒருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கோ சந்திரனுக்கோ 6/8/12 ஆகிய இடங்களில் கோசராக சந்திரன் வரும்போது பலவித தீமைகளை ஏற்படுத்துகிறது. வளர்பிறை காட்டிலும் தேய்பிறையில் சந்திர மறைவு  தன்மை அதிக பலம் உள்ளது. சந்திரனை மனநிலைக்கு உரியவன் (மனோகாரகன்) என்றும் போக்குவரத்துகளுக்கு காரகன் என்றும் ஜோதிட நூல்கள் கூறுகின்றன. மறைவுஸ்தானத்தில் சந்திரன் நிற்கும் காலத்தில் மனதில் தெளிவின்மையால் மன உளைச்சல் ஏற்பட்டு அதன் காரணமாக கோபப்படுதல், பொறுமை இன்மையால் எரிச்சல், அடுத்தவரிடத்தில் தேவையற்ற கோபம், இல்லறத்தில் சண்டை போன்ற உணர்ச்சி சார்ந்த பிழறல்கள் நிகழும். இதுபோன்ற அமைப்புடையவர்கள் சந்திர தரிசனம் செய்து வர சந்திராஷ்டமம் மற்றும் சந்திரனின் மறைவுத்தன்மையால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.

பார்வை தரும் மூன்றாம் பிறை

ஜோதிடத்தில் இரண்டாம் பாவம் வலது கண்ணையும் பன்னிரண்டாம் பாவம் இடது கண்ணையும் குறிக்கும் பாவங்களாகும். மேலும், சூரியனை வலது கண்ணிற்கு காரகராகவும் சந்திரனை இடது கண்ணிற்கு காரகராகவும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மேஷத்தை லக்கினமாகக் கொண்ட கால புருஷ ராசிக்கு லக்னம் மற்றும் முகத்தைக் குறிக்கும். மேஷத்தில் சந்திரன் உச்ச சூரியனோடு நின்று மூன்றாம் பிறை பார்க்கும் போது பார்வை கோளாறுகள் நீங்கும். பார்வை மற்றும் லென்ஸை குறிக்கும் சுக்கிரனின் இணைவும், குருவின் பார்வையும் எந்தவிதமான பார்வை கோளாறுகளையும் நிவர்த்தி செய்யும் என்பது நிதர்சனம். இன்றைய கோசாரத்தில் பார்வை தரும் கிரகங்களான சூரியனும் சந்திரனும் முறையே தங்கள் நீச வீடுகளான துலாம் மற்றும் விருச்சிகத்தில் சுக்கிரன் மற்றும் குருவோடு இணைவுபெற்று நீச பங்க ராஜயோக அமைப்பைப் பெற்று மேஷம் மற்றும் ரிஷப ராசிகளைப் பார்ப்பது பார்வை கோளாறுகளை தீர்க்கும் என்பதில் ஐயமில்லை.

குருவருளும் திருவருளும் சேர்க்கும்

நாளை அக்ஷய திருதியை வரும் நிலையில் இன்று ராஜ கிரஹங்களான சூரியனும் சந்திரனும் இனைந்து நின்றும் தன்காரகனான குருவின் பார்வை பெற்று மஹாலக்ஷ்மியின் அம்சமான பண காரகனான சுக்கிரனின் சேர்க்கை பெற்று நிற்கும் நிலையில் சந்திர தரிசனம் செய்வது ராஜ வாழ்க்கை தந்து வாழ்வில் வளம் சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. மேலும் இன்றைய கோசாரத்தில் ராஜ கிரகங்களான சூரியனும் சந்திரனும் அவர்களின் நீச வீட்டில்  தன காரக குருவோடும் செல்வச் செழிப்பை ஏற்படுத்தும் சுக்கிரனோடும் இணைவு பெற்று நிற்கின்றனர்.

பொதுவாகவே ஒருவர் ஜாதகத்தில் நீச கிரஹங்களே செல்வச் செழிப்பை ஏற்படுத்துகின்றது என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உலகின் மிகப்பெரும் பணக்காரரான பில் கேட்ஸின் ஜாதகத்தில் சூரியன் நீசம் அடைந்திருப்பதும், பங்கு வர்த்தகத்தின் தந்தை என்று போற்றப்படும் வாரன் பஃப்பட்டின் ஜாதகத்தில் சந்திரன் நீசமடைந்திருப்பதும் மிகச்சிறந்த உதாரணங்களாகும்.

அனைத்து மதங்களும் போற்றும் மூன்றாம் பிறை

மூன்றாம் பிறையின் சிறப்பை இன்னும் சொல்வதென்றால் அனைத்து மதங்களுமே இதை ஏற்றுக்கொண்டுள்ளன. அதாவது இஸ்லாம் மத‌ம், ஜைன‌ம், கிறித்தவம், இந்து மத‌ம் என்று எல்லா மதங்களும் மூன்றாம்பிறை என்பது தெய்வீக அம்சம் பொருந்தியது எனத் தெரிவிக்கிறது. அந்த பிறையைக் கண்டு வணங்குவது ஆயுளை விருத்தி செய்யும். செல்வங்களைச் சேர்க்கும், பிரம்மஹத்தி தோஷம் போன்ற தோஷங்களை நீக்கும்.

மூன்றாம் பிறைச்சந்திரனை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் தரிசிப்பதால் மனதில் உள்ள கல்மிஷங்கள், பாபங்கள் குழப்பங்கள் விலகி மன நிம்மதியும், தெளிவான ஞானமும் ஆரோக்கியமும், தம்பதிகளுக்குள் ஒற்றுமையும் ஏற்படும்.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510

]]>
சந்திரன் , சூரியன், மூன்றாம் பிறை, பிறை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/10/w600X390/chandra_dharsan_3.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/09/உலகிலேயே-மிகப்பெரும்-பணக்காரர்-ஆகனுமா-சுக்கிர-வார-சந்திர-தரிசனம்-பாருங்க-3035547.html
3035545 ஆன்மிகம் செய்திகள் சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழா தொடக்கம் Friday, November 9, 2018 01:23 PM +0530 தமிழ் கடவுளான முருகன் எழுந்தருளியிருக்கும் ஆறுபடை வீடுகளில் நான்காம் வீடான, திருவேரகம் எனும்  சுவாமிமலையில், தந்தை சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவத்தை உபதேசம் செய்த சிவகுருநாதன், அருள்மிகு சுவாமிநாதசுவாமியாக எழுந்தருளியுள்ள இத்தலத்தில்  நவம்பர் 7ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை பத்து நாள் நடைபெறும் கந்தர் சஷ்டி திருவிழாவானது 7ஆம் தேதி அன்று    விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது.

இவ்விழாவின்  தொடர்ச்சியாக  நவம்பர் 8ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை தினசரி சுவாமி படிசட்டத்தில் திருவீதி உலாவும், 13ஆம் தேதி சஷ்டி அன்று காலை 11மணியளவில்  சண்முகசுவாமிக்கு   நூற்றியெட்டு  சங்காபிஷேகமும், மாலை தங்கமயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடும், இரவு எட்டு மணிக்கு சூரசம்ஹராம் நிகழ்வும், 14ஆம் தேதி காலை 11 மணியளவில் காவிரி கரையில் தீர்த்தவாரி நிகழ்வும், மாலை ஆறு மணிக்கு மேல் திருக்கல்யாண வைபவமும், 15 மற்றும்  16ஆம் தேதிகளில் இரண்டு நாட்களும் மாலை 7-மணிக்கு மேல் ஊஞ்சல் உற்சவமும், 17ஆம் தேதி இரவு தேவசேனா திருக்கல்யாண ஊர்வல பல்லாக்கு வீதிஉலா திருக்காட்சியும் நடைபெற  உள்ளது.

 

இவ்விழா ஏற்பாட்டினை திருக்கோயில் அதிகாரிகள் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் சிறப்பாக செய்து வருகிறார்கள். 

குடந்தை ப.சரவணன் 9443171383

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/9/w600X390/lordmuruga6.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/09/சுவாமிமலை-சுவாமிநாதசுவாமி-திருக்கோயிலில்-கந்தசஷ்டி-திருவிழா-தொடக்கம்-3035545.html
3035541 ஆன்மிகம் செய்திகள் குளிர்காலத்தை முன்னிட்டு அடுத்த 6 மாதத்திற்கு கேதார்நாத் சிவன் கோயில் நடை அடைப்பு! Friday, November 9, 2018 12:37 PM +0530  

குளிர்காலம் தொடங்கியதையடுத்து கேதார்நாத் சிவன் கோயில் நடை இன்று அடைக்கப்பட்டது. 

உத்தரகண்ட் மாநிலத்தில் கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய 4 கோயில்கள் அமைந்துள்ளன. இந்தக் கோயில்கள் ஆறு மாதம் மட்டும் நடை திறக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆறு மாதங்களும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் அடுத்த 6 மாதத்திற்குக் கோயிலின் நடை அடைக்கப்படுகின்றது. மீண்டும் அக்ஷய திரிதியை நாளில் கோயில் நடை திறக்கப்படும் எனக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

]]>
kedarnath temple, uttarakhand, Winter Season, கேதார்நாத் , சிவன் கோயில் , குளிர்காலம், உத்தரகண்ட் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2015/4/24/11/w600X390/kedarnath.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/09/portals-of-kedarnath-temple-close-for-devotees-for-winters-3035541.html
3035529 ஆன்மிகம் செய்திகள் இந்த வாரம் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிக்காரர்கள் யார்? DIN DIN Friday, November 9, 2018 11:23 AM +0530 12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (நவம்பர் 09 - நவம்பர் 15) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். நெடுநாளைய எண்ணங்கள் சீரிய முயற்சிக்குப்பிறகே நிறைவேறும். கடின உழைப்பு ஒன்றே வெற்றியைத் தரும். சிறுசிறு தொல்லைகள் கொடுத்த நண்பர்கள் விலகுவார்கள். உடன்பிறந்தோரிடம் சுமுக உறவு ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். கொடுத்த வேலைகளைத் திறமையாக முடிக்கவும். 

வியாபாரிகள் கடன் வாங்கி வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்ளவும். விவசாயிகளுக்கு மகசூல் குறைவாகவே இருக்கும். புதிய குத்தகைகள் வேண்டாம். கால்நடைகளால் நன்மை உண்டாகாது. 

அரசியல்வாதிகளின் வளர்ச்சிக்கு எதிரிகள் முட்டுக்கட்டை போடுவார்கள். சாதுர்யத்துடன் அதிலிருந்து விடுபடுவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ரசிகர்களின்ஆதரவுடன் பயணங்களை மேற்கொள்வீர்கள். 

பெண்மணிகள் உடல்நலத்தில் கவனம் செலுத்தவும். உற்றார் உறவினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மாணவமணிகள் கல்வியில் முன்னேற கடுமையாக உழைக்கவும். விடியற்காலையில் எழுந்து பாடங்களை கவனமுடன் படிக்கவும்.

பரிகாரம்: அம்பாளை தரிசித்து வரவும். 

அனுகூலமான தினங்கள்: 11, 12. 

சந்திராஷ்டமம்: 9,10.

{pagination-pagination}
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

பொருளாதாரம் சீராக இருக்கும். செலவுக்கு ஏற்றவாறு வரவைக் காண்பீர்கள். உறறார் உறவினர்கள் நட்பு பாராட்டுவார்கள். பயணங்களால் நன்மை உண்டாகும். ஆன்மிகத் துறையை சேர்ந்தவர்கள் பயனடைவார்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள் சுமுகமாக முடியும். பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகளை அனுசரித்து செல்லவும். முடிந்தவரை சக ஊழியர்களிடம் அன்புடன் பழகவும். 
வியாபாரிகள் வியாபாரத்தில் புதிய யுக்திரகளைப் புகுத்துவீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். நீர்ப்பாசன வசதிகளுக்கு செலவு செய்ய நேரிடும். அரசியல்வாதிகள் எதிரிகளிடம் கவனமாக இருக்கவும். கட்சித் தலைமையிடம் நல்ல முறையில் நடந்துகொள்ளவும். 

கலைத்துறையினர் பழைய ஒப்பந்தங்களை நன்றாக முடித்துக் கொடுத்து புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆடை, ஆபரண சேர்க்கைகள் உண்டாகும். மாணவமணிகள் கல்வியில் முன்னேறுவார்கள். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றியுண்டு. 

பரிகாரம்: ராமபக்த அனுமனை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 9, 10.

சந்திராஷ்டமம்: 11,12.

{pagination-pagination}
மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

பொறுமையுடன் இருக்கவேண்டிய காலகட்டமிது. புதிய முயற்சிகள் வேண்டாம். எவருக்கும் உங்கள் பெயரில் கடன் வாங்கித் தருவதோ, ஜாமீன் கையெழுத்துப் போடுவதோ நல்லதல்ல. எதிப்பார்த்த தகவல்கள் வந்து சேரும். 

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்ளவும். அலுவலக ரீதியான பயணங்களைச் செய்வீர்கள். சக ஊழியர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். 

வியாபாரிகள் விழிப்புடன் செயல்பட்டு வியாபாரத்தைக் கவனிப்பது நல்லது. கூட்டுத்தொழில் நன்மை தராது. நன்கு கலந்தாலோசித்த பிறகே முக்கிய முடிவுகளை எடுக்கவும். 

விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். அரசியல்வாதிகளின் சொல்லுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். கட்சி மேலிடத்திடம் கவனம் தேவை. 

கலைத்துறையினருக்கு கடின முயற்சிகளுக்குப்பிறகே புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். பயணங்களால் பணவரவு உண்டாகும். பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பீர்கள். சேமிப்பு விஷயங்களில் கவனம் செலுத்தவும். மாணவமணிகள் பாடங்களை ஆழ்ந்து படிக்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

பரிகாரம்: விநாயகப் பெருமானை அருகம்புல் சாற்றி வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 10, 11. 

சந்திராஷ்டமம்: 13, 14, 15.

{pagination-pagination}
கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

பொருளாதாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். எடுத்த காரியங்களை நன்றாகச் செய்து முடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். உறவினர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும். பயணங்களின்போது கவனம் செலுத்தவும். 

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.  புதிய பொறுப்புகளும் சம்பள உயர்வும் பெறுவீர்கள். 

வியாபாரிகளை நோக்கி வாடிக்கையாளர்கள் வருவார்கள். இதனால் புதிய கடைகளைத் திறக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். விவசாயிகள் வேலைகளை சுலபமாக முடிப்பார்கள். தானிய விற்பனை லாபகரமாக இருக்கும். 

அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களின் ஆதரவு கிடைக்கும். கட்சித் தலைமையிடம் நற்பெயர் வாங்குவீர்கள். கலைத்துறையினரின் செயல்கள் அனைத்தும் வெற்றியைத் தேடித்தரும். ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைவீர்கள். புதிய வாய்ப்புகளும் வாயிற் கதவைத் தட்டும்.

பெண்மணிகள் குடும்பத்தில் அமைதியைக் காண்பீர்கள். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும். மாணவமணிகள் கல்வியில் கவனம் செலுத்துவீர்கள். பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து பாடங்களைப் படிக்கவும்.

பரிகாரம்: குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 9, 12. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். செய்தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். புதிய முயற்சிகளை செயல்படுத்துவீர்கள். வீடு மாற்றம் செய்ய நினைப்போருக்கு இது உகந்த காலமாகும். 

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளால் மன சஞ்சலம் ஏற்படும். தைரியத்துடன் எதையும் சாதிக்கலாம் என்ற எண்ணம் ஏற்படும். சக ஊழியர்களுடன் ஒற்றுமையை வளர்த்துக் கொள்வீர்கள். 

வியாபாரிகள் புதிய யுக்திகளை மேற்கொண்டு வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். கூட்டாளிகளால் ஏற்படும் பிரச்னைகளை பக்குவமாகச் சமாளிக்கவும். விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் அதிகரிக்கும். புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். அவற்றை நேர்த்தியாகச் செய்து முடித்து பதவி உயர்வையும் பாராட்டையும் பெறுவீர்கள். 

கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். பெண்மணிகளுக்கு இந்த காலகட்டத்தில் நல்லது கெட்டது இரண்டும் கலந்து வரும். வருமானத்திற்கு குறைவு இராது. மாணவமணிகள் கல்வியில் உயர்வு பெறுவீர்கள். 
பரிகாரம்: ஸ்ரீ ராமபிரானை வழிபட்டு  வரவும்.

அனுகூலமான தினங்கள்: 10, 13. 

சந்திராஷ்டமம்:  இல்லை.

{pagination-pagination}
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

பொருளாதாரத்தில் படிப்படியான வளர்ச்சி ஏற்படும். உங்களுக்குக்கீழ் பணிபுரிபவர்களுக்கு உதவிகள் செய்வீர்கள். தனித்தும் காரியங்களைச் செய்வீர்கள். மதிப்பு மரியாதை உயரும். 

உத்தியோகஸ்தர்கள் அலுவலகம் சம்பந்தமான பயணங்களைத் தள்ளிப்போடவும். சக ஊழியர்களின் உதவியால் உங்கள் வேலைப்பளு குறையும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சீராக இருக்கும். யாருக்கும் கடன் கொடுப்பதோ, ஜாமீன் கையெழுத்துப் போடுவதோ வேண்டாம். விவசாயிகளுக்கு புதிய குத்தகைகள் கிடைக்கும். நீர்ப்பாசன வசதிகளுக்காக செலவு செய்ய நேரிடும். 

அரசியல்வாதிகளுக்கு காரியங்கள் வெற்றி அடைவதில் தடைகள் ஏற்படும். கர்வத்தை விட்டொழித்து நிதானமாக செயல்பட்டால் நன்மை அடையலாம். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். 

பெண்மணிகளுக்கு பணவரவு சீராக இருக்கும். எதையும் ஆராய்ந்து முடிவெடுக்கவும். மாணவமணிகள் சிரத்தையுடன் படித்தால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உடற்பயிற்சி செய்து மனப்புழுக்கத்திலிருந்து விடுபடவும்.

பரிகாரம்:  மீனாட்சி அம்மனை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 10, 13. 

சந்திராஷ்டமம்:  இல்லை.

{pagination-pagination}
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

கடமைகளை கவனத்துடன் செய்வீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆனாலும் சமூகத்தில் உங்கள் மதிப்பு குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்களின்போது விழிப்புடன் இருக்கவும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். 

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளால் மனசஞ்சலம் ஏற்படும். தைரியத்துடன் எதையும் சாதிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சுமுகமாக இருக்கும். கூட்டாளிகளிடம் நல்ல முறையில் பழகவும். விவசாயிகள் புதிய நிலங்களை வாங்குவீர்கள். மகசூல் அதிகரித்து நல்ல லாபத்தைக் காண்பீர்கள். 

அரசியல்வாதிகளின் பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். மேலிடத்திடம் எதிர்பாராத பாராட்டு கிடைக்கும். கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த அங்கீகாரத்தைப் பெறுவார்கள். பணப்புழக்கமும் தாராளமாகவே இருக்கும். 

பெண்மணிகளுக்கு குடும்பத்தில் மதிப்பு உயரும். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் விளையாடுவது நல்லது.

பரிகாரம்: துர்க்கையை தீபமேற்றி வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 9, 14. 

சந்திராஷ்டமம்:  இல்லை.

{pagination-pagination}
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

சிறு தடைகள் ஏற்பட்டாலும் உங்களின் செயல்கள் இறுதியில் வெற்றி நடைபோடும். பண வருவாயில் சற்று ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டாலும் கடன் உண்டாகாது. உறவினர்கள் நேசக்கரம் நீட்டுவார்கள். நிதானமாக செயல்படவும். உடல் உபாதைகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக நடந்துகொள்வார்கள். 

வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் பலன் உண்டாகும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் புகுத்துவீர்கள். விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் அதிகரிக்கும் விளைபொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு எடுத்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். மேலிடத்தின் ஆதரவும் தொண்டர்களின் ஆதரவும் சிறப்பாகவே இருக்கும். கலைத்துறையினரின் படைப்புகள் மக்களிடம் நல்ல முறையில் சென்றடையும். சொத்துகள் சேர வழியுண்டாகும். 

பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பீர்கள். தன லாபம் உண்டாகும். மாணவமணிகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். வெளிவிளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.

பரிகாரம்: சனிபகவானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 10, 14. 

சந்திராஷ்டமம்:  இல்லை.

{pagination-pagination}

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

பணவரவு சீராக இருக்கும். மனதிற்கினிய பயணங்களை மேற்கொள்வீர்கள். சாமர்த்தியமாகப் பேசி போட்டிகளை சமாளித்து சாதமாக்கிக் கொள்வீர்கள். குழந்தைகள் வளர்ச்சி அடைவார்கள். அனைவருடனும் அன்புடனும் அணுசரனையுடன் நடந்து கொள்ளவும். 

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் கெடுபிடிகள் சற்று அதிகமாகலாம். வேலைகளில் கவனமாக இருக்கவும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய கடைகளைத் திறப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். 

விவசாயிகள் புதிய சாதனைகளை வாங்குவீர்கள். விவசாயப்பணிகள் வெற்றிகரமாக முடியும். அரசியல்வாதிகளின் பொதுச் சேவையை அனைவரும் பாராட்டுவார்கள். புதிய பொறுப்புகள் கிடைக்கும். 

கலைத்துறையினர் அனைத்து வேலைகளையும் நேர்த்தியாகச் செய்து முடிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்மணிகள் மனதிற்கினிய பயணங்களை மேற்கொள்வீர்கள். மாணவமணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளில் மட்டுமே ஈடுபடவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 

பரிகாரம்: பார்வதி தேவியை வெள்ளிக்கிழமையில் வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 11, 16. 

சந்திராஷ்டமம்:  இல்லை.

{pagination-pagination}

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் உங்கள் விருப்பம் நிறைவேறும். திட்டமிட்ட செயல்களில் வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு தடைபட்டிருந்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். பதவி உயர்வுக்கான அறிகுறிகள் தென்படும். 

வியாபாரிகள் கடுமையாக உழைக்க நேரிடும். இதனால் உடல் அசதி ஏற்படும். நண்பர்கள் பக்க பலமாக இருப்பார்கள். விவசாயிகள் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள். புதிய குத்தகைகள் தேடி வரும். 
அரசியல்வாதிகளுக்கு  எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு நல்குவார்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களைப் பெறுவதினால் மனநிம்மதி ஏற்படும். சமூகத்தில் பெயரும் புகழும் உயரும். 

பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவமணிகள் படிப்பில் அக்கறை காட்டுவீர்கள். விளையாடும்போது கவனம் தேவை. அதிகாலையிலேயே எழுந்து பாடங்களை மனப்பாடம் செய்வதுநல்லது. 

பரிகாரம்: சூரியபகவானையும் சிவபெருமானையும் வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 13, 14. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

அனைத்துச் செயல்களிலும் உங்களின் தனித்தன்மை வெளிப்படும். சமூகத்தில் உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். இல்லத்தில் வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். போட்டியாளர்களிடம் கவனம் தேவை. நிதானமாகப் பேசவும். உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். மூத்த அதிகாரிகளும் சக ஊழியர்களும் நட்புடன் பழகுவார்கள். பண வரவு சீராக இருக்கும். 

வியாபாரிகள் மக்கள் விரும்பும் பொருள்களை புதிய சந்தைகளில் விற்று லாபம் பெறலாம். விவசாயிகளுக்கு கொள்முதலில் லாபம் கிடைக்கும். புதிய குத்தகைகள் தேடிவரும். 

அரசியல்வாதிகள் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். புதிய பதவிகளில் அமர்ந்து மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு திறமைக்குத் தகுந்த மதிப்பும் அங்கீகாரமும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். 

பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். மனதில் காரணமில்லாத குழப்பம் நிலவும்.  மாணவமணிகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியரின் பாராட்டைப் பெறுவீர்கள். 

பரிகாரம்: கந்தசஷ்டி கவசம் படித்து கந்தனை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 14, 15. 

சந்திராஷ்டமம்:  இல்லை.

{pagination-pagination}
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

எடுத்த காரியங்கள் அனைத்தையும் வெற்றிகரமாக முடித்து மகிழ்ச்சியில் திளைப்பீர்கள். தெய்வ அனுகூலத்தைப் பெறுவீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்களின் உதவியுடன் முக்கிய வேலைகளை செய்து முடிப்பீர்கள். 

வியாபாரிகள் நன்கு யோசித்தும் புதிய முதலீடுகளைச் செய்யவும். நண்பர்களை அதிகம் நம்பி எதையும் செய்ய வேண்டாம். விவசாயிகளுக்கு நீர்வரத்து நன்றாக இருக்குமாதலால் விளைச்சல் அதிகரிக்கும். இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். அரசியல்வாதிகளுக்கு கட்சியில் வாக்குவாதங்கள் அதிகரிக்கும். போட்டிகளை சந்திக்க நேரிடும். 

கலைத்துறையினர் நிதானத்துடனும் பொறுமையுடனும் நடந்துகொண்டால் புதிய ஒப்பந்தங்கள் பெறலாம். பெண் மணிகள் குடும்பத்தில் அமைதியைக் காண்பீர்கள். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவ மணிகள் படிப்பில் ஏற்படும் இடையூறுகளைச் சமாளிப்பீர்கள். அனைவருடனும் அன்புடன் பழகவும். 

பரிகாரம்: திருவேங்கடமுடையானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 15, 16. 

சந்திராஷ்டமம்:  இல்லை.

]]>
prediction, astrology, november, monthly prediction, பரிகாரம், நவம்பர் மாத பலன்கள் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/1/w600X390/prediction.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/09/இந்த-வாரம்-அதிர்ஷ்டத்தை-அள்ளும்-ராசிக்காரர்கள்-யார்-3035529.html
3035475 ஆன்மிகம் செய்திகள் தரமணி ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி திருக்கோயிலில் ஸ்கந்த ஷஷ்டி விழா  Friday, November 9, 2018 10:09 AM +0530
நேற்று (8 நவம்பர்) தொடங்கி 13ஆம் தேதி செவ்வாய்கிழமை வரை தரமணி, இராஜாஜி தெருவிலுள்ள,  ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி திருக்கோவிலில் ஸகந்த ஷஷ்டி விழா விமர்சையாக நடைபெறுகிறது.

இந்த விழாவை ஒட்டி, நவம்பர் 8ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை தினமும் இரவு 7 மணியளவில் ஸஹஸ்ரநாம அர்ச்சனை,  தீபாராதனை மற்றும் கற்பூர ஹாரத்தி நடைபெறும்.  13ஆம் தேதி செவ்வாய்கிழமை காலை 9 மணியளவில் ஶ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமிக்கு  விஸேஷ அபிஷேகம் மற்றும் அதைத்  தொடர்ந்து கற்பூர ஹாரத்தியும் நடைபெறும். அன்று மாலை 6 மணி முதல் ஷண்முக ப்ரதி முக அர்ச்சனை ( ஆறு முக) அஷ்டோத்தரம் மற்றும் நைவேத்தியம் நடைபெறும்.

இரவு 7.30 மணியளவில்  ஶ்ரீ வல்லி தேவசேனா ஸமதே,  ஶ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி திருவீதி உலா நடைபெறும். இரவு 9 மணிக்கு மங்கள ஹாரத்தியுடன் ஸகந்த ஷஷ்டி விழா நிறைவு பெறும்.

அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு திருமுருகன் திருவருள் பெற்றுய்யும்படி கேட்டு கொள்கிறோம்.


தொடர்புக்கு :   94449 33965 / 98846 62071.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/9/w600X390/IMG_746173749295229.jpeg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/09/தரமணி-ஶ்ரீ-சுப்ரமண்ய-ஸ்வாமி-திருக்கோயிலில்-ஸ்கந்த-ஷஷ்டி-விழா-3035475.html
3035110 ஆன்மிகம் செய்திகள் திருத்தணியில் கந்த சஷ்டி லட்சார்ச்சனை தொடக்கம்  திருத்தணி, Friday, November 9, 2018 03:57 AM +0530 திருத்தணி முருகன் கோயிலில் வியாழக்கிழமை தொடங்கிய கந்த சஷ்டி விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.
 அறுபடை வீடுகளில் 5-ஆம் படைவீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயிலுக்கு, தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்துச் செல்கின்றனர். இந்நிலையில், வியாழக்கிழமை (நவம்பர் 8-ஆம் தேதி) கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா, 14 -ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
 இதனை முன்னிட்டு காலை 10 மணிக்கு மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், பச்சை மாணிக்க மரகதக் கல் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
 தொடர்ந்து, உற்சவ சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் காவடி மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் காலை 11 மணிக்கு லட்சார்ச்சனை, சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. நிகழ்வில், அரக்கோணம் எம்.பி. கோ.அரி கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.
 நிகழ்ச்சியில், முன்னாள் நகர் மன்றத் தலைவர் டி.சௌந்தர்ராஜன், கோயில் தக்கார் வே. ஜெயசங்கர், கோயில் இணை ஆணையர் சிவாஜி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 அதேபோல், திருத்தணி முருகன் கோயிலின் உபகோயிலான நந்தி ஆற்றின் கரையோரம் உள்ள கோட்டா ஆறுமுக சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா வியாழக்கிழமை தொடங்கியது. காலை 8 மணிக்கு மூலவருக்கு புஷ்ப அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
 இதில் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் கேபிள் எம்.சுரேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். விழாவின் முக்கிய நாளான 13 -ஆம் தேதி மாலை 5 மணிக்கு புஷ்பாஞ்சலியும், 14 -ஆம் தேதி காலை 11 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும்
 நடைபெறுகிறது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/9/w600X390/trtkov.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/09/திருத்தணியில்-கந்த-சஷ்டி-லட்சார்ச்சனை-தொடக்கம்-3035110.html
3034989 ஆன்மிகம் செய்திகள் முருகன் கோயில்களில் கந்த சஷ்டி லட்சார்ச்சனை தொடக்கம் DIN DIN Friday, November 9, 2018 12:56 AM +0530 காஞ்சிபுரத்தில் உள்ள குமர கோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
 கச்சியப்ப சிவாச்சாரியாரால் கந்தபுராணம் அரங்கேறிய பிரசித்தி பெற்ற கோயிலாக குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா வியாழக்கிழமை காலை 5.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, பல்லக்கு, ஆடு, மான், அன்னம், மயில், குதிரை, யானை வாகனங்களில் அடுத்தடுத்த நாள்களில் உற்சவர் பவனி வரவுள்ளார்.
 வரும் 13ஆம் தேதி கந்தசஷ்டி தீர்த்தவாரியுடன், சூரசம்ஹாரம் உற்சவம் விமரிசையாக நடைபெறவுள்ளது. கோயிலை 108 முறை சுற்றிவந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். கொடியேற்றத்தின்போது திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுப்பிரமணியரை வழிபட்டனர்.
 வல்லக்கோட்டையில்...
 ஸ்ரீபெரும்புதூர், நவ. 8: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா வியாழக்கிழமை தொடங்கியது.
 ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு 36ஆவது ஆண்டு கந்த சஷ்டி விழா வியாழக்கிழமை தொடங்கியது. ஆறு நாள்கள் நடைபெறும் இந்த விழாவின் முதல் நாளில், மூன்று கால தீப ஆராதனை நடைபெற்றது. உற்சவர் மஞ்சள் சாற்று புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
 அதைத் தொடர்ந்து வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாள்களும் மூலவருக்கு சந்தனக் காப்பு, அபிஷேகம் நடைபெற உள்ளது. வரும் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு சூரசம்ஹாரமும், புதன்கிழமை திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது. தினமும் ஒவ்வொரு நிற புஷ்ப அலங்காரத்தில் முருகப் பெருமான் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் அ.சிந்துமதி மற்றும் கிராமத்தார், ஆலய நிர்வாகிகள் ஆகியோர் செய்துள்ளனர்.
 திருத்தணி கோயிலில்...
 திருத்தணி, நவ. 8: திருத்தணி முருகன் கோயிலில் வியாழக்கிழமை தொடங்கிய கந்த சஷ்டி விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.
 அறுபடை வீடுகளில் 5-ஆம் படைவீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயிலுக்கு, தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்துச் செல்கின்றனர். இந்நிலையில், வியாழக்கிழமை (நவம்பர் 8-ஆம் தேதி) கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா, 14 -ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு காலை 10 மணிக்கு மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், பச்சை மாணிக்க மரகதக் கல் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
 தொடர்ந்து, உற்சவ சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் காவடி மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் காலை 11 மணிக்கு லட்சார்ச்சனை, சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. நிகழ்வில், அரக்கோணம் எம்.பி. கோ.அரி கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.
 நிகழ்ச்சியில், முன்னாள் நகர் மன்றத் தலைவர் டி.சௌந்தர்ராஜன், கோயில் தக்கார் வே. ஜெயசங்கர், கோயில் இணை ஆணையர் சிவாஜி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 அதேபோல், திருத்தணி முருகன் கோயிலின் உபகோயிலான நந்தி ஆற்றின் கரையோரம் உள்ள கோட்டா ஆறுமுக சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா வியாழக்கிழமை தொடங்கியது. காலை 8 மணிக்கு மூலவருக்கு புஷ்ப அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் கேபிள் எம்.சுரேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். விழாவின் முக்கிய நாளான 13 -ஆம் தேதி மாலை 5 மணிக்கு புஷ்பாஞ்சலியும், 14 -ஆம் தேதி காலை 11 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது.
 திருப்போரூர்
 கந்தசுவாமி கோயிலில் ...
 செங்கல்பட்டு, நவ. 8: திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.
 சூரபத்மனை வதம் செய்த வெற்றி விழாவாக கொண்டாடுப்படுவது சஷ்டி விழா. சூரபத்மனுடன் முருகப் பெருமான் விண்ணில் நின்று போர் புரிந்த தலமாக திருப்போரூர் விளங்குகிறது. இங்குள்ள மூலவர் பனைமரத்தில் சுயம்புவாக தோன்றியது சிறப்பாகும்.
 இந்தக் கோயிலுக்கு ஏராளமான வெளியூர் பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். இக்கோயிலில் முக்கிய விழாவாக கந்த சஷ்டி விழா நடைபெறுகிறது. இவ்விழா 7 நாள்கள் நடைபெறும். இந்த உற்சவத்தின்போது நாள்தோறும் கந்த சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறுவதுடன் உற்சவர் வீதியுலாவும் நடைபெறும். விழா நாள்களில் மாலை நேரத்தில் ஆன்மிகச் சொற்பொழிவு, இன்னிசை நடன நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
 இந்நிலையில், இக்கோயிலில் கந்த சஷ்டி விழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதையொட்டி கொடிமரத்திற்கு மஞ்சள், குங்குமம், விபூதி உள்ளிட்ட வாசனைப் பொருள்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. முருகனுக்கு சிறப்பு அலங்காரமும் உற்வச மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரமும் நடைபெற்றது.
 விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் வெங்கடேசன், உதவி ஆணையர் தக்கார் ரமணி, ஆய்வாளர் கோவிந்தராஜ், மேலாளர் வெற்றி உள்ளிட்ட கோயில் பணியாளர்கள், ஸ்ரீபாதம் தாங்கிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துவருகின்றனர்.
 செங்கல்பட்டு கோயில்களில்...
 செங்கல்பட்டு கோயில்களில் கந்த சஷ்டி விழா வியாழக்கிழமை தொடங்கியது.
 செங்கல்பட்டு என்ஜிஜிஓ நகர் வரசித்தி விநாயகர் கோயில், அண்ணா நகர் எல்லையம்மன் கோயில், அண்ணாநகர் ரத்தின விநாயகர் கோயில், செம்மலை வேல்முருகன் கோயில், மேட்டுத்தெரு செங்கழுநீர் வியாகர் கோயில், வ.உ.சி தெரு ஏகாம்பரேஸ்வரர் கோயில், சக்தி விநாயகர் கோயில், பெரியநத்தம் கைலாசநாதர்கோயில், இருங்குன்றம் பள்ளி மலை மீதுள்ள பாலமுருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் கந்தர் சஷ்டி விழா வியாழக்கிழமை தொடங்கியது.
 கோயில்களில் சஷ்டி விழா நாள்களில் லட்சார்ச்சனை வழிபாடு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. செம்மலை முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறாமல், கந்தர் சஷ்டி விழா திருக்கல்யாண விழாவாக நடைபெறுகிறது. மேலும், கந்தன் திருச்சபை சார்பில் வல்லம் நேரு நகர் திருப்போரூர் கூட்டுச் சாலை அருகே வெங்கடேச வாசுகி திருமண மண்டபத்தில் கந்த சஷ்டி விழா வியாழக்கிழமை தொடங்கியது. வரும் 14ஆம் தேதியன்று முருகன் திருக்கல்யாணத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் முருக பக்தர்கள் செய்து வருகின்றனர்.
 
 
 
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/9/w600X390/kan.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/09/முருகன்-கோயில்களில்-கந்த-சஷ்டி-லட்சார்ச்சனை-தொடக்கம்-3034989.html
3034988 ஆன்மிகம் செய்திகள் காளஹஸ்தியில் கார்த்திகை தீப மகோற்சவம் Friday, November 9, 2018 12:55 AM +0530 காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு தீப மகோற்சவ விழா வியாழக்கிழமை தொடங்கியது.
 ஆந்திரத்தில் உள்ள இந்தக் கோயிலில் கார்த்திகை மாதம் முழுவதும் கோயிலுக்குள் உள்ள கோட்ட மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது வழக்கம். இவ்விழா கார்த்திகை தீப மகோற்சவம் என்று அழைக்கப்படுகிறது.
 தெலுங்கு மாத பஞ்சாங்கத்தின்படி கார்த்திகை மாதம் வியாழக்கிழமை பிறந்தது. அதையொட்டி, அன்று மாலை கோயிலுக்குள் உள்ள மண்டபத்தில் 1008 அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன.
 இந்த நிகழ்வில், சிவாச்சாரியார்கள், பக்தர்கள், கோயில் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/9/w600X390/kk.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/09/காளஹஸ்தியில்-கார்த்திகை-தீப-மகோற்சவம்-3034988.html
3034978 ஆன்மிகம் செய்திகள் பழனி மலைக் கோயில் கும்பாபிஷேகம்: அதிகாரிகள் குழு ஆய்வு DIN DIN Friday, November 9, 2018 12:45 AM +0530 பழனி மலைக் கோயில் கும்பாபிஷேகம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், பொறியாளர்கள், ஸ்தபதி அடங்கிய குழுவினர் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
 பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கடந்த 2006-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகள் தாமதிக்கப்பட்டு வந்தன.
 இது குறித்து பல்வேறு இந்து அமைப்புகளும், பக்தர்களும் இந்து சமய அறநிலையத்துறைக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டி தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், மலைக்கோயில் கும்பாபிஷேகம் தொடர்பாக அதிகாரிகள் குழுவினர் பல்வேறு இடங்களிலும் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
 இந்த ஆய்வில் மதுரை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பச்சையப்பன், மதுரை மண்டல செயற்பொறியாளர் வெண்ணிலா, உதவி செயற்பொறியாளர் சந்தன மாரியப்பன், மதுரை மண்டல இந்துசமய அறநிலையத்துறை ஸ்தபதி ஜெயராமன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நாகலிங்கம், தொல்லியல் துறை ஒலி மாலிக், தியாகராஜா பொறியியல் கல்லூரி கட்டடத் துறை பிரிவு வல்லுநர் பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 மலைக் கோயிலில் உள்ள ராஜகோபுரம், தங்கக் கோபுரம், உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஆய்வு நடத்தப்பட்டது. மேலும் கோபுரத்தில் உள்ள சுதைகளை பழமை மாறாமல் புதுப்பிக்கவும், சேதமான சுதைகளை சீரமைக்கவும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
 தொல்லியல்துறை வழங்கிய ஆய்வின் அடிப்படையில் மேற்கொண்ட இந்த ஆய்வின் அறிக்கை, சென்னை உயர்நீதிமன்ற குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் அதன் வழிகாட்டுதலின் பேரில் பாலாலயம் உள்ளிட்ட கும்பாபிஷேக பணிகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/21/w600X390/palani.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/09/பழனி-மலைக்-கோயில்-கும்பாபிஷேகம்-அதிகாரிகள்-குழு-ஆய்வு-3034978.html
3034977 ஆன்மிகம் செய்திகள் திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா தொடக்கம் Friday, November 9, 2018 12:44 AM +0530 திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பிரசித்தி பெற்ற கந்த சஷ்டி விழா வியாழக்கிழமை காலையில் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடியும், அங்கப்பிரதட்சணம் செய்தும் விரதத்தைத் தொடங்கினர்.
 முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தல வரலாற்றை உணர்த்தும் கந்த சஷ்டி திருவிழா வியாழக்கிழமை காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதையொட்டி, கோயில் நடை அதிகாலை ஒரு மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றன. காலை 6 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளினார்.
 யாகசாலையில் பூஜைகளாகி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. நண்பகலில் மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றதும் யாகசாலையில் மகா தீபாராதனை நடைபெற்றது. அதன்பின், சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து தங்கச் சப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பிரகாரம் வழியாக பக்தர்கள் வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு பாட சண்முகவிலாச மண்டபத்தை வந்தமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாலையில் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று, சுவாமி தங்க ரதத்தில் எழுந்து கிரிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
 சூரசம்ஹாரம்: 5ஆம் திருநாளான நவ.12ஆம் தேதி வரை இதே நிகழ்ச்சிகளும், நவ. 13ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 6ஆம் திருநாளில் மாலை 4.30 மணிக்கு கடற்கரையில் சூரசம்ஹாரமும் நடைபெறும்.
 கந்த சஷ்டி விழாவையொட்டி, வியாழக்கிழமை காலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடியும், அங்கப்பிரதட்சணம் செய்தும் தங்கள் விரதத்தைத் தொடங்கினர். இதனால் கோயில் வளாகமே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
 பக்தர்கள் வசதிக்காக கோயில் உள், வெளிப்பிரகாரங்கள் மற்றும் வளாகங்களில் பெரிய அளவிலான எல்.இ.டி. டி.வி.க்கள் வைக்கப்பட்டு, யாகசாலை பூஜைகள், சுவாமி எழுந்தருளல், தங்கத் தேர் உலா, கலையரங்கில் நடைபெறும் பக்திச் சொற்பொழிவு ஆகியவை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. திருவிழாக் காலங்களில் காலை, மாலை வேளைகளில் கோயில் சிங்கப்பூர் கோவிந்தசாமி பிள்ளை கலையரங்கில் பக்திச் சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன.
 முருகன் கோயில்களில்....:
 அறுபடை வீடுகள் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் வியாழக்கிழமை கந்த சஷ்டி விழா பூஜைகளுடன் தொடங்கியது.
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/9/w600X390/TDR8SASTIYAGASALAI.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/09/திருச்செந்தூரில்-கந்த-சஷ்டி-விழா-தொடக்கம்-3034977.html
3034964 ஆன்மிகம் செய்திகள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை! DIN DIN Thursday, November 8, 2018 06:00 PM +0530  

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறும் விழாக்களில் முக்கியமானது கார்த்திகை தீபத் திருவிழாவாகும். நவம்பர் 14-ம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

இந்நிலையில் பரணி, மகா தீபத்தின் போது அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்குள் செல்போன் கொண்டுசெல்ல அதிரடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கோயில் சார்பில் வழங்கப்படும் உபயதாரர் அனுமதிச்சீட்டு பார் கோடு வசதி செய்யப்பட்டு, ஸ்கேன் செய்த பிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

]]>
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர், செல்போன் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/26/w600X390/thiruvannamalaikovil.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/08/திருவண்ணாமலை-அருணாசலேஸ்வரர்-கோயிலுக்குள்-செல்போன்-கொண்டு-செல்ல-தடை-3034964.html
3034954 ஆன்மிகம் செய்திகள் பழனியில் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது கந்த சஷ்டி திருவிழா Thursday, November 8, 2018 04:39 PM +0530  

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. 

பழனி மலைக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் கந்தசஷ்டி விழா முக்கியமான திருவிழாவாகும். நிகழாண்டில் இவ்விழா இன்று காப்புக்கட்டுதலுடன் தொடங்கி ஒருவாரம் நடைபெறுகிறது.

விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கே நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றது. உச்சிக்காலத்தின்போது மூலவர் சன்னதியில் விநாயகர், தண்டாயுதபாணி சுவாமிக்கு காப்புக்கட்டும் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து துவாரபாலகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு காப்புக்கட்டப்பட்டது. 

அதையடுத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காப்புக்கட்டி விரதத்தைத் தொடங்கினர். வரும் 13-ம் தேதி சூரசம்ஹாரமும், மறுநாள் நவ.14 அன்று காலை 10.30 மணிக்கு மேல் மலைக்கோயிலில் வள்ளி, தேவசேனா சமேத சண்முகருக்கு திருக்கல்யாணமும் நடைபெறும். 

விழாவுக்கான ஏற்பாடுகளை பழனி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் (பொறுப்பு) செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
 

]]>
பழனி, கந்த சஷ்டி திருவிழா http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/8/w600X390/palani-festivals.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/08/பழனியில்-காப்புக்கட்டுதலுடன்-தொடங்கியது-கந்த-சஷ்டி-திருவிழா-3034954.html
3034939 ஆன்மிகம் செய்திகள் புத்திர தோஷமும் ருண ரோக சத்ரு தோஷமும் நீக்கி சந்தோஷத்தை நிலைக்கச் செய்யும் கந்த சஷ்டி! - அஸ்ட்ரோ சுந்தரராஜன் Thursday, November 8, 2018 02:51 PM +0530  

இன்று முதல் கந்த சஷ்டி விரதம் தொடங்குகிறது. முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக 

கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நடந்தது. எனவே, கந்தசஷ்டி விழா இத்தலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

கந்த சஷ்டி உருவான கதை

படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு தட்சகன், காசிபன் என்ற இரு புதல்வர்கள் உண்டு. இவர்களுள் தட்சகன், சிவனை நோக்கி தவம் புரிந்து பல வரங்களைப் பெற்று சிவபிரானுக்கே மாமனாராகியும் அகந்தை காரணமாக இறுதியில் சிவனால் உருவாக்கப்பட்ட வீரபத்திரரால் கொல்லப்பட்டான். அடுத்து காசிபனும் கடும் தவம் புரிந்து சிவனிடம் பல வரங்களைப் பெற்றான். ஒரு நாள் அசுர குரு சுக்கிரனால் ஏவப்பட்ட மாயை எனும் பெண்ணின் அழகில் மயங்கி தான் பெற்ற தவவலிமையை இழந்தான். இதைத் தொடர்ந்து காசிபனும் மாயை எனும் அசுரப் பெண்ணும் இணைந்து சூரபத்மனும், சிங்கமுகமுடைய சிங்கனும், யானை முகமுடைய தாரகனும், ஆட்டுத் தலையுடைய அஜமுகி எனும் அசுரப் பெண்ணும் பிறந்தனர். மாயை காரணமாகத் தோன்றிய இந்த நான்கு பேரும் ஆணவ மிகுதியால் மிதந்தனர்.

காசிபர் தன் பிள்ளைகளிடம், சிவபெருமானை நோக்கித் தவம் செய்து வேண்டிய வரங்களைப் பெற்று வாழுங்கள்! என்று உபதேசம் செய்தார். இவர்கள் கடும் தவமிருந்து சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்றனர். இவர்களுள் சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து 108 யுகம் உயிர் வாழவும் 1008 அண்டம் அரசாளவும் இந்திர ஞாலம் எனும் தேரையும் வரமாகப் பெற்றான். மேலும் தனக்கு சாகாவரம் வேண்டும் என சூரபத்மன் சிவனிடம் கேட்க, பிறந்தவன் மடிந்தே தீர வேண்டும் என்ற சிவன், எந்த வகையில் அழிவு வர வேண்டும் எனக் கேட்டார். சூரபத்மன், ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால் தான் தனக்கு அழிவு வர வேண்டும், எனக் கேட்டான். இந்த வரத்தைப் பெற்ற சூரபத்மனும் அவனுடன் பிறந்தவர்களும் தம்மைப் போல் பலரை உருவாக்கி இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையிலடைத்தனர்.

இந்தக் கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள், கயிலாயம் சென்று சிவபெருமானிடம் சூரபத்மனிடம் இருந்து தங்களைக் காக்கும்படி முறையிட்டனர். சிவனும் அவர்களைக் காப்பாற்றும் நோக்குடன் பார்வதியின் தொடர்பின்றி, தனது ஆறு நெற்றிக்கண்களைத் திறக்க அவற்றிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளையும் வாயு பகவான் ஏந்திச் சென்று சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்கள் மீது சேர்த்தான். அந்த தீப்பொறிகள் ஆறும் ஆறு குழந்தைகளாகத் தோன்றி, ஆறு கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர்.

அந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி கட்டி அணைக்க, அவர்கள் ஒரு மேனியாக வடிவம் கொண்டு ஆறு முகங்களும் இரு கரங்களும் கொண்ட முருகப் பெருமானாகத் தோன்றினர். திருக்கரத்தில் வேலேந்திக்கொண்டு முருகப்பெருமான், இந்திராதி தேவர்களே! நீங்கள் அசுரர்களுக்குச் சிறிதும் அஞ்சத்தேவையில்லை. உங்கள் குறைகளை சீக்கிரமே போக்கி அருள்செய்வது என் வேலை என்றார். 

அசுரர்களை அழிக்க நினைத்த முருகன் முதலில் சிங்கமுகன், தாரகாசுரன், அவன் மகன் என எல்லா சேனைகளையும் ஐந்து நாட்களில் அழித்தார். ஆறாம் நாள் எஞ்சியவன் சூரபத்மன்தான்.தனது சேனைத்தலைவரான வீரபாகுவை சூரபத்மனிடம் தூது அனுப்பி அவனைத் திருந்தும்படி எச்சரித்தார். ஆனால், சூரபத்மன், பாலகன் முருகனா எனக்கு எதிரி! யார் வந்தாலும் இந்திராதி தேவர்களைக் காக்க யாராலும் முடியாது, என்று வீராவேசமாகக் கூறினான். உடனே பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் முருகப் பெருமானை சூரனுடன் போர் புரிய அனுப்பினர்.

சூரனோ, கடலின் நடுவில் வீரமகேந்திரபுரி என்ற பட்டணத்தை எழுப்பி அங்கே வசித்து வந்தான். உலகை ஆள வந்த முருகன் அந்த நகரை அடைந்தார். சூரன் அவரைப் பார்த்து ஏளனம் செய்தான். முருகன் அசறவில்லை. முருகனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் சூரனுக்கு வரவில்லை. காரணம், ஒரு சிறுவனைக் கொல்வது தன் வீரத்துக்கு இழுக்கு, அது பாவமென்றும் அவன் கருதினான். 

அந்தக் கல்லுக்குள்ளும் இருந்த ஈரத்தைக் கண்டு முருகனும் அவனைக் கொல்லாமல் ஆட்கொள்ள முடிவெடுத்தார். தன் விஸ்வரூபத்தை அவனுக்குக் காட்டினார்.அதைப் பார்த்தவுடனேயே சூரனின் ஆணவம் மறைந்து ஞானம் பிறந்தது. முருகா! என் ஆணவம் மறைந்தது. உன்னைப் பயமுறுத்த கடலாய் மாறினேன். அந்தக் கடலின் வடிவாகவே நான் இங்கு தங்குகிறேன். உன்னை வணங்க வரும் பக்தர்கள் என்னில் நீராடியதுமே, ஆணவம் நீங்கி, உன் திருவடியே கதி என சரணமடையும் புத்தியைப் பெற வேண்டும் என்றான். முருகனும் அந்த வரத்தை அவனுக்கு அளித்தார். அதன் பிறகு, தன் ரூபத்தைச் சுருக்கி சூரனுக்கு ஞாபகமறதியை உண்டாக்கினார். சூரனுக்கு ஆணவம் தலைதூக்கவே அவன் மாமரமாக மாறி அவரிடமிருந்து தப்ப முயன்றான்.

முருகப்பெருமான் தன் தாய் உமாதேவியிடம் ஆசிபெற்று வாங்கிய வேலாயுதத்தை மாமரத்தின் மீது விடுத்தார். வேல்பட்டதும் மாமரம் இரண்டாகப் பிளந்து, ஒருபாதியை மயிலாகவும், மறுபாதியை சேவலாகவும் மாற்றிய முருகன் தனது வாகனமாகவும், கொடிச்சின்னமாகவும் ஆக்கினார்,சஷ்டி விரதம் ஐப்பசி மாத தீபாவளி அமாவாசையின் பின் அதாவது வளர்பிறை பிரதமை முதல் ஆரம்பித்து, ஆறாம் நாளான சஷ்டி திதி வரையான ஆறு தினங்களும் அனுஷ்டிக்கப்படும் முருகப்பெருமானுடைய சிறப்பான நோன்பாகும். கந்தசஷ்டி விரதத்தை முறையாக அனுஷ்டிப்போர்க்கு இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்று சக்திகளுக்கும் தலைவனான முருகப்பெருமானது பேரருள் கிட்டும். சஷ்டியன்று கந்தனுக்கு அபிஷேகம் செய்த பாலைப் பருகுவோர்க்கு புத்திர பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்!.

கந்த சஷ்டி என்னும் போது அதற்கென சில விரத நியதிகள் தனித்துவம் பெற்றுத் திகழ்கின்றன. இவ்விரதம் அனுஷ்டிக்க விரும்புவோர் விரத நாட்களில் விடியற்காலை துயில் எழுந்து சந்தியாவந்தனம் முதலிய காலைக்கடன்களை முடித்து, ஆற்றில் இறங்கி நீரோட்டத்தின் எதிர்முகமாக நின்று, “ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை உச்சரித்தபடி முருகனை மனதில் இருத்தி நீரில் மூழ்கி எழ வேண்டும்.

கிணறு, குளம் போன்ற நீர்நிலைகளில் நீராடுபவர்கள் வடதிசை நோக்கி நின்று மேற்கூறியவாறு தூய நீராடி, தோய்த்துலர்ந்த ஆடையணிந்து அமைதியான இடத்திலோ அல்லது ஆலயத்திலோ அமர்ந்து அல்லல் தீர்க்கும் ஆறுமுகப் பெருமானை நினைந்து தியானம் செய்ய வேண்டும். விரத காலங்களில் மனம் வேறு எண்ணங்களில் ஈடுபடாதிருக்க கந்தசஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தரனுபூதி, கந்தர் கலிவெண்பா திருமுருகாற்றுப்படை போன்ற நூல்களைப் படிக்க வேண்டும். முருகனாலயங்களில் இவ்விரத நாட்களில் கந்தபுராண படனம் நடைபெறும். இதைத் தவறாது கேட்டல் மிகவும் ஆன்மிக நன்மை பயக்கும்.

இந்த ஆறு நாட்களும் பூரண உபவாசம் இருப்பது அதி உத்தமம் எனக் கருதப்படுகின்றது. மிளகுகளை விழுங்கி, பழம் மட்டும் சாப்பிட்டு, தீர்த்தம் குடித்து, இளநீர் குடித்து ஒரு நேர உணவு மட்டும் உண்டு அவரவர் தேக நிலைக்கேற்ப “கந்தசஷ்டி” விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஆறாவது நாளான கந்தசஷ்டியன்று பூரண உபவாசம் இருத்தல் வேண்டும். விரதம் ஆரம்பமான தினத்தில் ஆலயம் சென்று சங்கல்பம் செய்து காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்கவேண்டும். கடும் விரதம் அனுஷ்டிக்க முடியாதவர்கள் முதல் ஐந்து நாட்களும் இரவு ஒரு பொழுது பால்பழம் அல்லது பலகாரம் உண்டு இறுதி நாள் உபவாசம் இருக்கலாம். அதுவும் முடியாவதவர்கள் முதல் ஐந்து நாட்களும் பகல் ஒரு பொழுது அன்னமும் ஆறாம் நாள் இரவு பால், பழம் அல்லது பலகாரமும் உண்டு விரதமிருக்கலாம்.

ஆறாம் நாள் சஷ்டித்திதியில், சூரசம்ஹாரம் முடிந்த அன்றிரவு முழுவதும் விழித்திருந்து முருகன் பெருமைகளையே பேசியும், வழிபட்டிருக்குமாறு பழம் நூல்கள் விதிக்கின்றன. சிவபிரானுக்குரிய சிவராத்திரியும், மஹாவிஷ்ணுக்குரிய வைகுண்ட ஏகாதசியும் போல முருகப்பெருமானுக்குரிய ஸ்கந்தசஷ்டியும் மிக விசேஷமான தினமாதலால் துயில் நீத்தல் (விழித்திருத்தல்) பொருத்தமானதே. 

கந்தசஷ்டி விரத நாட்களில், ஆன்மா மும்மலங்களையும் நீக்குவதற்குரிய பக்குவமான மனதுடன் தனித்து, விழித்து, பசித்து இருக்க வேண்டும். உணவையும் உறக்கத்தையும் தவிர்த்து, தனித்திருந்து செய்யும் தவமே கந்தசஷ்டி விரதமாகும். உணர்வுகளை அடக்கி உள்ளத்தை ஒருநிலைப்படுத்தி கந்தப் பெருமானின் பெருமை பேசி இம்மைக்கும் மறுமைக்கும் சிறந்த வழியமைப்பதே இந்த விரதத்தின் பெறுபேறாக அமைகிறது.

ஜோதிடத்தில் சஷ்தி விரதம்

இந்து மதத்தின் பிரிவுகளில் உள்ள ஆறு பெரும் பிரிவு மதங்களில், மிகப் பழைமையானது கௌமாரம். கார்த்திகேயனை வணங்குபவர்கள் கௌமாரம் மதத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களே முருக பக்தர்கள்! ஒவ்வொரு மாதத்தின் ஆறாம் திதி சஷ்டி. இந்த சஷ்டியும் இந்தக் குமரனுக்கு உரிய நாள். எனவே கௌமாரர்கள் அனைவரும் சஷ்டி விரதம் இருப்பார்கள்.

ஜோதிடத்தில் அழகைக் குறிக்கும் கிரஹம் சுக்கிரன். குழந்தைப் பிறப்பிற்கு தேவையான காமத்திற்கும் சுக்கிலத்திற்கும் அதிபதி சுக்கிரன். சுக்கிரனைக் குறிக்கும் என் ஆறு. தெய்வங்களில் அழகன் எனப்போற்றப்படுபவர் முருகன். முருகனுக்கு ஆறு முகங்கள். முருகனை வளர்த்தவர்கள் ஆறு கார்த்திகை பெண்டீர். முருகனுக்குகந்த திதி ஆறாவது திதியான சஷ்டி. ஆண்மையைக் குறிக்கும் கடவுள் 

முருகப்பெருமான் ஆகும். "சுக்கிற்கு மிஞ்சின மருந்தும் இல்லை! சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை" எனும் சொலவடை உண்டு. மேலும் எண்ணியல் ஜோதிடத்தில் ஆறாம் எண்ணிற்கு அதிபதியாக சுக்கிரனை கூறுவர்.

ஜாதகத்தில் செவ்வாய் என்பது ஆண்மையையும் வீரியத்தையும் குறிக்கும். சூரியன் ஆன்மா உற்பத்தியாவதை அதாவது கருவளர்ச்சிக்கு தேவையான சீதோஷ்ணத்தை தருவது சூரியன். சஷ்டி திதியில் பிறந்தவர்களுக்கு மேஷமும் சிம்மமும் மற்றும் அதன் அதிபதிகளான செவ்வாயும் சூரியனும் பலமிழந்துவிடுவார்கள் என்கிறது பாரம்பரிய ஜோதிடம்.

மேஷம் கால புருஷனுக்கு லக்ன பாவம். செவ்வாயின் மூல த்ரிகோண வீடு. சூரியன் உச்சமாகுமிடம். ஆண்மையைக் குதிரையோடு ஒப்பிடுவது வழக்கம். குதிரையைக் குறிக்கும் அஸ்வினி நக்ஷத்திரம் முதல் நக்ஷத்திரமாக அமைந்திருப்பதும் மேஷத்தில்தான். ஆக ஆண்மைக்கும் செவ்வாய்க்கும் உள்ள தொடர்பு இப்போது புரிந்திருக்கும். அடுத்தது சிம்ம ராசி. சிம்ம ராசி கால புருஷனுக்கு ஐந்தாமிடம் எனப்படும் புத்திரஸ்தானம் ஆகும். அதற்குரிய கிரகம் சூரியன் ஆகும். இந்த இரண்டு ராசிகளும் கிரஹங்களும் நன்றாக இருந்தால் தான் ஒருவர் தகப்பன் ஆகும் பாக்கியம் ஏற்படும்.

மேலும் இந்த வருடம் கந்த சஷ்டி விரதம் ஆரம்பித்திருப்பது புத்திர காரக குருவின் ஆதிக்கம் பெற்ற நாளும் நக்ஷத்திரமும் வியாழக்கிழமையும் விசாக நக்ஷத்திரமும் அமைந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

விசாகம் குழந்தை வேலப்பராகிய முருகனுக்கும் உகந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கந்த சஷ்டியின் ஆறாம் நாள் முருகனுக்கு உகந்த செவ்வாய் கிழமையுடன் கூடிய சஷ்டி திதியில் அமைந்திருப்பதும் ஆத்மகாரகனாகிய சூரியனின் நக்ஷத்திரமான உத்திராடத்தில் அமைந்திருப்பதும் கோசாரக குருபகவான் செவ்வாயின் வீட்டில் நின்று காலபுருஷ குடும்ப ஸ்தானம் மற்றும் சுக்கிரனின் வீடாகிய ரிஷபத்தை பார்ப்பதும் இந்த ஆண்டு கந்த சஷ்டி விரதம் இருப்பவர்களுக்குக் குழந்தை பாக்கியம் நிச்சயம் என்பதை உணரமுடிகிறது.

ஒருவரது ஜாதகத்தில் லக்னத்திற்கு ஆறாமிடம் ருண ரோஹ சத்ரு ஸ்தானம் எனப்படும். இந்த ஆறாமிடம் மூலம் குறிப்பிட்ட ஜாதகரின் எதிரி எப்படிப்பட்டவர், எத்தகைய நோய்களுக்கு ஆட்படுவார், ஜாதகர் என்ன காரணங்களுக்காக கடன் வாங்குவார் என்பதை அறியலாம். நோய் தீர்ப்பதில் செவ்வாயும் அதன் அதிபதியான முருக பெருமானும் முக்கியமானவர்கள் ஆகும். முருகனுக்கு செவ்வாய் கிழமைகளில் விரதம் இருப்பது, சஷ்டியில் விரதமிருப்பது மற்றும் கிருத்திகை நக்ஷ‌த்திர நாளில் விரதமிருப்பது ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.

கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் பாம்பன் குமர குருதாஸ ஸ்வாமிகள் அருளிய “ஓம் ஷண்முக பதயே நமோ நம” எனத் தொடங்கும் குமாரஸ்தவ பாடலைப் படித்தால் நாள் பட்ட தீராத 

வியாதியும் தீரும். நோய் என்பது தீர்க்கக்கூடியது. ஆனால் பிணி என்பது.தீர்க்க முடியாதது. நோயை மருத்துவர்கள் குணப்படுத்திவிடுவார்கள். பிணியைக் குணப்படுத்துவது சிரமம். பிணி இறையருளால் தான் குணப்படும். வினையும் அப்படித்தான் இறையருளால்தான் தீரும் இங்கே வினை என்பது இந்தப் பிறவியில் நாம் அனுபவிக்கும் துன்பங்களுக்குக் காரணமாக நம்பப்படும் முற்பிறவியில் நாம் செய்த செயல் ஆறாமிடத்தில் அமர்ந்துள்ள கிரகங்கள் மூலமும், ஆறாமிடத்தைப் பார்வை செய்யும் கிரகங்கள் மூலமும், அந்த ஜாதகர் எத்தகைய நோய்களுக்கு ஆட்படுவார் என்பதையும் அறிய இயலும். இந்த நோய்களின் தாக்குதல் எப்போது பலமாக தன் இயல்பைக் காட்டும், எந்த கால கட்டங்களில் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதையும் அறியலாம்.

ஜெனன ஜாதகத்திற்கு ஆறாம்வீட்டிற்கு பன்னிரண்டாம் பாவத்தையும் அதன் கிரஹங்களையும் கொண்டு நோய் தீர்க்கும் அமைப்பை அறியலாம். அதேபோல காலபுருஷனுக்கு ஆறாம் வீடான கன்னி ராசிக்கு பன்னிரண்டாம் பாவமான சிம்மம் மற்றும் அதன் திரிகோண ராசிகளான மேஷம், தனுசு ஆகிய ராசிகளும் அதன் அதிபதிளும் நோய் தீர்க்கும் அமைப்பைக் கூறுவார்கள்.

இந்த கந்த ஷஷ்டி விரத முதல் நாளில் வேலைப் பெற விரும்புவோர்கள் மற்றும் சத்ரு, கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் கந்த ஷஷ்டி கவசமும், குழந்தை பாக்கியம் பெறவிரும்புபவர்கள் திருப்புகழும், கடும் நோயினால் அவதியுறுபவர்கள் ஷண்முக கவசம் மற்றும் திருமுருகாற்றுப்படையும், திருமண பாக்கியம் வேண்டுபவர்கள் திருப்புகழில் குறிப்பிட்ட பாடல்களும் சுப்ரமணிய புஜங்கமும் பாடி முருகனை வணங்கி வர அவரவர் பிரார்த்தனைகளை அந்த முருகப்பெருமான் தட்டாமல் நிறைவேற்றுவார்.

மருத்துவர்களால் குணப்படுத்த முடியாத வியாதிகள் நீண்ட நாட்களாக இழுவையில் இருக்கும் வழக்குள், தொடர்ந்து தொல்லை தரும் சத்ருகள் ஆகியவற்றால் ஏற்படும் தொல்லைகள் இந்த ஆறு நாட்களில் சத்ரு சம்ஹார அர்ச்சனை செய்து வணங்கி வரத் தொல்லைகள் முற்றும் நீங்கி நிம்மதியைத் தரும் என்பது நிதர்சனம்.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/10/w600X390/palani_murugan.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/08/புத்திர-தோஷமும்-ருண-ரோக-சத்ரு-தோஷமும்-நீக்கி-சந்தோஷத்தை-நிலைக்கச்-செய்யும்-கந்த-சஷ்டி-3034939.html
3034887 ஆன்மிகம் செய்திகள் கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கும் முறை! Thursday, November 8, 2018 11:45 AM +0530  

கந்தர் சஷ்டி விரதம் என்ற பிரபலமான விரதம் ஐப்பசி மாதம் சுக்கிலபட்சத்துப் பிரதமை முதல் சஷ்டி வரையிலும் ஆறு நாட்களுக்கு ஸ்ரீ முருகப்பெருமானைக் குறித்து அனுஷ்டிக்கும் விரதமாகும்.  எல்லா சிவ ஆலயங்களிலும் இந்த ஆறு தினங்களும் முருகனுக்கு கந்தர் சஷ்டி உற்சவம் கொண்டாடப்பெறும். ஆறுபடை வீடுகளிலும் பிற முருகன் தலங்களிலும் இத்திருவிழா மேலும் சிறப்பாக நிகழும்.

விரத முறை

இந்த ஆறு நாட்களும் விரதமிருப்பவர்கள் காலையில் நீராடி, உபவாசம் இருத்தல் வேண்டும். கோவிலிலோ அல்லது இல்லத்திலோ முருகனை வழிபாடு செய்து பாராயணம் செய்யலாம். இக்காலங்களில் திருப்புகழ், கந்தர் சஷ்டிக் கவசம், சண்முகக் கவசம் ஆகியவற்றைப் பாராயணம் செய்தல் சிறப்பாகும்.

ஆறு தினமும் உபவாசம் இருந்து ஆறாம் நாள் இரவு பால் பழம் சாப்பிடலாம். உடல்நிலை இடம் கொடுக்காதவர்கள் தினமும் ஒரு வேளை மதியமோ, அல்லது இரவோ பலகாரமோ அல்லது பால் பழமோ சாப்பிட்டுக் கொள்ளலாம்.

]]>
ஐப்பசி, கந்த சஷ்டி விரதம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/20/w600X390/muruga.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/08/கந்த-சஷ்டி-விரதம்-அனுஷ்டிக்கும்-முறை-3034887.html
3034888 ஆன்மிகம் செய்திகள் திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா கோலாகலமாக தொடக்கம் Thursday, November 8, 2018 11:38 AM +0530  

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. 

கந்த சஷ்டி விழாவில் கலந்துகொள்ள தமிழகத்தின் பல பகுதியில் இருந்து பக்தர்கள் குவிந்து வருகின்றனர். தொடர்ந்து ஆறு நாட்களும் சிறப்பு பூஜைகள், அபிஷேக அலங்காரங்கள் நடைபெற உள்ளது.

விழாவின் முக்கிய நிகழ்வான 13-ம் தேதி சூரசம்ஹரமும், 14-ம் தேதி திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது. இதையொட்டி, கோயில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, தொடர்ந்து பூஜைகள் நடைபெறும். அதிகாலை 5 மணியளவில் அம்பாள் தவசுக் காட்சிக்கு புறப்பாடு நடைபெற்றது. மாலை 6.30 மணியளவில் சுவாமி, அம்பாள் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சியும், இரவில் திருக்கல்யாணம் ஆகியவை நடைபெறுகின்றன.

விழா நாள்களில் காலையும், மாலையும் கோயில் கலையரங்கில் பக்திச் சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன.

கோயிலில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்களுக்குத் தேவையான வசதிகள் அனைத்தும் கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/3/w600X390/tiruchendurmurugan.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/08/திருச்செந்தூரில்-கந்தசஷ்டி-விழா-கோலாகலமாக-தொடக்கம்-3034888.html
3034356 ஆன்மிகம் செய்திகள் மின்னொளியில் அருணாசலேஸ்வரர் கோயில் கோபுரங்கள்: நவ. 23-இல் தீபத் திருவிழா DIN DIN Thursday, November 8, 2018 12:26 AM +0530 கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கோபுரங்கள் மின்னொளியில் ஜெலித்தன. தீபத் திருவிழா நவம்பர் 23-ஆம் தேதி நடைபெறுகிறது.
 தீபத் திருவிழாவைத் தொடங்குவதற்கு முன்பாக, திருவண்ணாமலை நகரின் காவல் தெய்வங்களின் வழிபாடு நடைபெறுவது வழக்கம்.
 அதன்படி, நவம்பர் 11-ஆம் தேதி இரவு துர்கையம்மன் உற்சவமும், 12-ஆம் தேதி இரவு பிடாரியம்மன் உற்சவமும், 13-ஆம் தேதி இரவு விநாயகர் உற்சவமும் நடைபெறுகிறது.
 நவம்பர் 14-ம் தேதி கொடியேற்றம்: நவம்பர் 14-ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு மேல் 6.15 மணிக்குள் துலா லக்கினத்தில் கோயில் தங்கக் கொடிமரத்தில் தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெறுகிறது.
 தொடர்ந்து, தினமும் காலை, இரவு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெறுகிறது.
 விழாவின் முதல் நாளான நவம்பர் 14-ஆம் தேதி காலை வெள்ளி விமானங்களில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா, இரவு 8 மணிக்கு மூஷிக வாகனத்தில் விநாயகர், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் அருணாசலேஸ்வரர், ஹம்ச வாகனத்தில் பராசக்தியம்மன், சிம்ம வாகனத்தில் சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட
 பஞ்சமூர்த்திகள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
 வெள்ளி, பஞ்ச ரதங்களின் தேரோட்டம்: வெள்ளித் தேரோட்டம் நவம்பர் 19-ஆம் தேதி இரவு நடைபெறுகிறது. நவம்பர் 20-ஆம் தேதி பஞ்ச ரதங்களின் தேரோட்டம் நடைபெறுகிறது. காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் விருட்சிக லக்கினத்தில் விநாயகர் தேரோட்டம் தொடங்குகிறது.
 தொடர்ந்து, முருகர் தேர், அருணாசலேஸ்வரர் தேர், பராசக்தியம்மன் தேர், சண்டிகேஸ்வரர் தேர் என பஞ்ச ரதங்களின் தேரோட்டம் கோலாகலமாக நடைபெறுகிறது.
 நவம்பர் 23-ல் பரணி, மகா தீபம்: முக்கிய நிகழ்வான தீபத் திருவிழா நவம்பர் 23-ஆம் தேதி நடைபெறுகிறது.
 அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
 விழாவுக்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகமும், கோயில் நிர்வாகமும் செய்து வருகின்றன.
 ஜொலிக்கும் கோயில் கோபுரங்கள்: இதனிடையே கோயிலின் 9 கோபுரங்களுக்கும் வண்ண மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு, செவ்வாய்க்கிழமை இரவு எரியவைக்கப்பட்டன.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/8/w600X390/GOPURAM.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/08/மின்னொளியில்-அருணாசலேஸ்வரர்-கோயில்-கோபுரங்கள்-நவ-23-இல்-தீபத்-திருவிழா-3034356.html
3034355 ஆன்மிகம் செய்திகள் ஐப்பசி அமாவாசை: கோயில்களில் கேதார கௌரி விரத வழிபாடு DIN DIN Thursday, November 8, 2018 12:25 AM +0530 ஐப்பசி மாத அமாவாசையையொட்டி, புதன்கிழமை காரைக்கால் பகுதி கோயில்களில் திரளான பெண்கள் நோன்பிருந்து கேதார கௌரி விரத வழிபாடு நடத்தினர்.
 ஆண்டுதோறும் ஐப்பசி மாத அமாவாசையில் ஸ்ரீ கேதாரீசுவரரை வழிபடும் கேதார கௌரி விரத வழிபாட்டில் பெண்கள் ஈடுபடுவது வழக்கம். தமிழகத்தில் 80 சதவீத மக்களிடையே இந்த நோன்பு வழிபாடு வழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.
 காரைக்கால் பகுதி தலத்தெருவில் உள்ள பிரசித்திப் பெற்ற சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ சிவலோகநாதசுவாமி கோயிலில் கேதார கௌரி விரத வழிபாட்டையொட்டி புதன்கிழமை சிவன் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
 இந்த நோன்பில் பெண்களே அதிகமாக பங்கேற்கின்றனர். அமாவாசை நாளில் பெண்கள் விரதமிருந்து, கோயிலில் ஸ்ரீ கேதாரீசுவரரை மலர்களால் பூஜித்தனர். அலங்காரம் செய்யப்பட்ட ஸ்ரீ கேதாரீசுவரருக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. சுவாமிக்கு படைக்கும் அனைத்து நைவேத்தியப் பொருள்களும் 21 என்ற எண்ணிக்கையில் வைக்கப்பட்டிருந்தன.
 இதுகுறித்து பூஜையில் பங்கேற்ற பெண்கள் கூறும்போது, ஆண்டில் ஒரு முறை மட்டுமே பெண்களே கேதாரீசுவரருக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதற்குரிய சந்தர்ப்பம் கிடைக்கிறது. ஊர் மற்றும் குடும்பம் செழிப்படையும் பிரார்த்தனையாக இது மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தனர். இதுபோன்று காரைக்கால் அம்மையார் கோயில், ஸ்ரீ சித்தி விநாயகர் கோயிலிலும் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்று கேதார கௌரி விரத வழிபாடு செய்தனர். கோயில் சிவாச்சாரியார்கள் விரதத்தின் பயன்கள் குறித்து பக்தர்களுக்கு விளக்கிப் பேசினார்.
 பக்தர்கள் அதிகமாக திரண்டிருந்த அம்மையார் கோயிலில் பாதுகாப்புக்கும், போக்குவரத்து சீர்செய்யவும் போலீஸ் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/8/w600X390/CHN.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/08/ஐப்பசி-அமாவாசை-கோயில்களில்-கேதார-கௌரி-விரத-வழிபாடு-3034355.html
3034354 ஆன்மிகம் செய்திகள் திருச்செந்தூரில் இன்று கந்தசஷ்டி விழா தொடக்கம்: 13-இல் சூரசம்ஹாரம் Thursday, November 8, 2018 12:24 AM +0530 திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா வியாழக்கிழமை (நவ. 8) யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது.
 இதில் பங்கேற்பதற்காக கடந்த 2 நாள்களாக வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து குவிந்துள்ளனர்.
 திருவிழாவையொட்டி, வியாழக்கிழமை அதிகாலை 1 மணிக்கு கோயில் நடைதிறக்கப்படுகிறது. தொடர்ந்து, விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட பூஜை, 5.30 மணிக்கு ஸ்ரீ ஜெயந்திநாதர் யாகசாலை புறப்படுதல், 9 மணிக்கு உச்சிகால பூஜை, பிற்பகல் 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மற்ற கால பூஜைகள் வழக்கம்போல நடைபெறுகின்றன.
 2ஆம் திருநாள் முதல் 5ஆம் திருநாள் வரை கோயில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும்.
 இம்மாதம் 13ஆம் தேதி சூரசம்ஹார விழா நடைபெறுகிறது. இதையொட்டி, கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பிற்பகல் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை ஆகியவை நடைபெறும். மாலை 4.30 மணிக்கு மேல் கோயில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
 14ஆம் தேதி திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. இதையொட்டி, நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று, அதிகாலை 5 மணியளவில் அம்பாள் தவசுக் காட்சிக்கு புறப்படுதல், மாலை 6.30 மணியளவில் சுவாமி, அம்பாள் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சியும், இரவில் திருக்கல்யாணம் ஆகியவை நடைபெறுகின்றன.
 விழா நாள்களில் காலையும், மாலையும் கோயில் கலையரங்கில் பக்திச் சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன.
 தற்காலிக மேற்கூரை: கந்தசஷ்டி விழாவுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக கழிப்பறையுடன் கூடிய தற்காலிக பந்தல்கள், கிரிப்பிரகாரத்தில் தகரத்தாலான தற்காலிக மேற்கூரைகள், கோயில் கந்தசஷ்டி மண்டபத்தில் தற்காலிக பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 கடற்கரையில் உயர்கோபுரங்கள், கோயில் வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளும், சுகாதாரத் துறை சார்பில் மருத்துவக் குழு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளன.

பழனியில்....
  பழனி, நவ. 7: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா வியாழக்கிழமை (நவ.8) காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது. விழாவில் வரும் 13 ஆம் தேதி சூரசம்ஹாரமும், 14 ஆம் தேதி திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.
 பழனி மலைக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் கந்தசஷ்டி விழா முக்கியமான திருவிழாவாகும். நிகழாண்டில் இவ்விழா வியாழக்கிழமை காப்புக்கட்டுதலுடன் தொடங்கி ஒருவாரம் நடைபெறுகிறது.
 விழாவை முன்னிட்டு வியாழக்கிழமை அதிகாலை நான்கு மணிக்கே நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெறவுள்ளன. உச்சிக்காலத்தின்போது மூலவர் சன்னதியில் விநாயகர், தண்டாயுதபாணி சுவாமிக்கு காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடைபெறும்.
 தொடர்ந்து துவாரபாலகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு காப்புக்கட்டப்படும். அதையடுத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காப்புக்கட்டி விரதத்தை தொடங்குவர். வரும் 13 ஆம் தேதி சூரசம்ஹாரமும், மறுநாள் நவ.14 அன்று காலை 10.30 மணிக்கு மேல் மலைக்கோயிலில் வள்ளி, தேவசேனா சமேத சண்முகருக்கு திருக்கல்யாணமும் நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை பழனி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் (பொறுப்பு) செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/8/w600X390/KOILSET.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/08/திருச்செந்தூரில்-இன்று-கந்தசஷ்டி-விழா-தொடக்கம்-13-இல்-சூரசம்ஹாரம்-3034354.html
3034248 ஆன்மிகம் செய்திகள் விரும்பிய யாவற்றையும் பெற வேண்டுமா? அனுஷ்டியுங்கள் கேதார கெளரி விரதம்! DIN DIN Tuesday, November 6, 2018 05:06 PM +0530  

ஐப்பசி அமாவாசையான கேதார கெளரி தினத்தில் பார்வதி சமேதரான சிவபெருமானை வழிபட வேண்டும். ஆண்களும் இவ்விரதத்தை அனுஷ்டிக்கலாம்.

அன்றைய தினம் நோன்பிருப்பவர்கள் நாள் முழுவதும் உபவாசமிருந்து ஓம் நமசிவாய மந்திரம் ஜெபித்து, அர்த்தநாரீஸ்வரராய், சிவசக்தி சொரூபனாய் முக்கண் முதல்வனை, முப்புரம் எரித்தானை, முத்தலை சூலம் ஏந்தினானை மனதில் தியானம் செய்து மாலை பிரதோஷ காலத்தில் நோன்பை முடிக்க வேண்டும்.

அம்பிகையாலேயே அனுஷ்டிக்கப்பட்டது என்ற சிறப்புடையது இந்த நோன்பு. "கேதார கௌரி விரதத்தை மேற்கொள்பவர்கள் விருப்பங்களை நிறைவேற்றி அருள்பாலிக்க வேண்டும்' என்று தேவி இறைவனிடம் வேண்ட, இறைவனும் அவ்வாறே வரமருளினார். அதன்படியே இவ்விரதம் அனுஷ்டிப்பவர்கள் விருப்பங்கள் நிறைவேறி நலம்பெறுவர். நாமும் ஈசனை இன்று [07-08-18] கேதார கெளரி தினத்தில் வழிபட்டு நலம் பெறுவோம்.

பிருங்கி என்ற மகரிஷி வண்டின் உருவம் பெற்று, பரமேஸ்வரனுக்கும், பார்வதி தேவிக்கும் இடையில் சென்று (பார்வதி தேவியை வணங்காது) பரமேஸ்வரனை மட்டுமே 3 தடவை வலம் வந்து பயபக்தியோடு வணங்கிய நிகழ்வானது சக்தி ரூபமான பார்வதி தேவியை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது. சிவனும் சக்தியும் ஈருடலாக (தனித்தனியாக) காட்சி தருவதனாலேயே இத்துன்பம் நேர்ந்தது என்பதை உணர்ந்த பரமேஸ்வரி ஈருடலும் ஓருடலாக தோற்றமளிக்கும் வரம் வேண்டி, சிவனை விட்டுப் பிரிந்து பூலோகம் சென்றார். பார்வதிதேவி பூலோகத்திலிருந்து சிவனை நினைந்து விரதமிருந்து, வழிபட்டு அதன் பலனாக சிவபெருமானின் (இடது பக்க) பாதியுடல் பெற்று, அர்த்தநாரிஸ்வரியாகவும், அர்த்த நாரீஸ்வரராகவும் ஒன்றாகிய விரதமே கேதார கௌரி விரதமாகும்.

"கேதாரம்" என்பது இமயமலைச் சாரலில் உள்ள ஒரு சிவதலம். இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் சிவனை நினைத்து பார்வதி தேவியாகிய "கௌரி' இவ்விரதத்தினை மேற்கொண்டதால் இப்பெயர் உண்டாயிற்று. இத்தகைய சிறப்பு வாய்ந்த விரதத்தினை பிரம்மன் அனுஷ்டித்து உலகைப் படைக்கும் உயர் பதவியினைப் பெற்றார். இந்திரன் அனுஷ்டித்து பொன்னுலகை ஆண்டு வெள்ளை யானையினையும் வாகனமாகக் கொண்டார்.

இவ்விரதத்தின் மகிமையை இதுதான் என யாராலும் வரையறுத்துக் கூற இயலாது. இவ்விரதத்தினை அனுஷ்டிப்பதால் ஐஸ்வரியம் பெருகும். வறுமையொழியும், நினைத்த காரியம் கைகூடும் என்பது அனுபவ உண்மை.

இந்நாளில் அம்பிகை சிவனை நோக்கி “எம்பெருமானே இவ்விரத்தை உலகில் யார் செய்தாலும் விரும்பிய யாவற்றையும் பெறுவதற்கு அருள் புரியவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். சிவன் அம்பிகையின் வேண்டுகோளை ஏற்று, அவ்வாறே ஆகுக என்று அருள் புரிந்தார்.

எனவே நாமும் அரிய இந்த நோன்பினை நோற்று பரம்பொருளின் பூரண கடாட்சத்தினைப் பெற்று "வையத்துள் வாழ்வாங்கு வாழ்வோமாக!.

]]>
கேதார கெளரி விரதம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/6/w600X390/Arthanareeswarar.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/06/விரும்பிய-யாவற்றையும்-பெற-வேண்டுமா-அனுஷ்டியுங்கள்-கேதார-கெளரி-விரதம்-3034248.html
3034245 ஆன்மிகம் செய்திகள் சென்னை காளிகாம்பாள் திருக்கோயிலில் நவ.8 முதல் மஹா கந்த சஷ்டி உற்சவப் பெருவிழா! DIN DIN Tuesday, November 6, 2018 03:11 PM +0530  

சென்னை, தம்பு செட்டித் தெருவில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ காளிகாம்பாள் கமடேஸ்வரர் திருக்கோயிலில் நவம்பர் 8-ம் தேதி முதல் மஹா கந்த சஷ்டி உற்சவப் பெருவிழா தொடங்கவுள்ளது. 

அன்னை ஸ்ரீ காமாட்சி ஸ்ரீ காளிகாம்பாள் எனும் திருநாமம் கொண்டு சர்வ மங்களகாரிணியாகவும், சர்வ துக்கவிமோசினியாகவும், சர்வ விக்னநிவாரிணியாகவும், சர்வவியாதி விநாசினியாகவும், சர்வ சௌபாக்யதாயினியாகவும் ஸ்ரீ சக்ர சாம்ராஜ்ஜினியாய் மேற்கு திசை நோக்கி எழுந்தருளி அன்பர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள். மராட்டிய மாமன்னர் சத்ரபதி சிவாஜி மஹாராஜா அவர்கள் வருகை தந்து வழிபாடு செய்ததும், மாகாளி அருள்பெற்ற மகாகவி சுப்ரமணிய பாரதியார் தன் பாமாலையைச் சூட்டி வழிபட்டதும் இத்திருத்தலமே.

ஸ்ரீ வடகதிர்காம முருகப்பெருமானுக்கு ஐப்பசி மாதம் 22-ம் தேதி 08.11.2018 வியாழக்கிழமை முதல் ஐப்பசி மாதம் 28-ம் தேதி 14.11.2018 புதன்கிழமை வரை நடைபெறவிருக்கும் ஸ்ரீ மஹா கந்த சஷ்டிப் பெருவிழாவில் காலை, மாலை வேளைகளில் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனையும் கந்த சஷ்டி உற்சவமும் நடைபெறும். 

மெய்யன்பர்கள் அனைவரும் வருகை தந்து ஸ்ரீ முருகப்பெருமானின் திருவருளை பெற்றுய்யுமாறு அன்புடன் அழைக்கின்றோம். 

]]>
காளிகாம்பாள், கந்த சஷ்டி, உற்சவம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/15/w600X390/murugar1.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/06/சென்னை-காளிகாம்பாள்-திருக்கோயிலில்-நவ8-முதல்-மஹா-கந்த-சஷ்டி-உற்சவப்-பெருவிழா-3034245.html
3034238 ஆன்மிகம் செய்திகள் உங்கள் இல்லத்தில் செல்வம் பெருக வேண்டுமா? இன்று மாலை லட்சுமி குபேர பூஜை செய்யுங்க! Tuesday, November 6, 2018 02:25 PM +0530 லக்ஷமி குபேர பூஜை செய்யத் தீபாவளி திருநாள் உகந்தது. மேலும் சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, கார்த்திகை மாதங்களில் பூரட்டாதி நட்சத்திரம் வரும் நாளில் பூஜை செய்வது மிகுந்த பலன்களை தரும். 

லக்ஷமி பூஜை என்பது அன்னை மகாலக்ஷமியை நம் இல்லத்திற்கு அழைக்கும் வழிபாடாகும். இது மாலை வேளையில் செய்யப்படும் ஒரு வழிபாடாகும். 

லட்சுமி குபேர பூஜை வழிபடும் முறை!

மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, வாழையிலையின் வலது பக்கமாக வைக்க வேண்டும். அவருக்கு குங்குமம் இட்டு அலங்கரிக்க வேண்டும். அதன்பிறகு, முழுமுதற் கடவுள் விநாயகர் வழிபாட்டோடு பூஜையை ஆரம்பிக்க வேண்டும். பிள்ளையார் மந்திரம், அஷ்டோத்திரம் சொல்லி வழிபடலாம். விநாயகரை வழிபட்ட பிறகு, மகாலட்சுமியின் ஸ்தோத்திரப் பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும். தொடர்ந்து, குபேர ஸ்துதியைச் சொல்லி வழிபட வேண்டும். ஸ்துதி தெரியாதவர்கள், குபேராய நமஹ… தனபதியே நமஹ.. என்று துதித்து, உதிரிப் பூக்களை கலசத்தின் மீது போட்டு அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை செய்து முடித்ததும் வாழைப்பழம், காய்ச்சிய பசும்பால், பாயசம் ஆகியவற்றை லட்சுமி குபேரருக்கு நைவேத்யம் செய்து, கற்பூர தீபாராதனையோடு பூஜையை நிறைவு செய்யவேண்டும். தாம்பூலத்தில் வைத்திருந்த தட்சணையை ஏழை சுமங்கலிகளுக்கு கொடுப்பது சிறப்பு. தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜை செய்வதால், சங்கடங்கள், காரியத்தடைகள் நீங்கும். கடன் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்; நம் இல்லத்தில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

பூஜையறையில் லட்சுமி குபேரர் படம் மற்றும் குபேர யந்திரத்தை கிழக்கு அல்லது மேற்கு திசை பார்த்தபடி வைத்து, பூஜையறையையும் தெய்வத் திருவுருவங்களையும் மலர்களால் அலங்காரம் செய்யவேண்டும். லட்சுமி குபேரர் படத்துக்கு மஞ்சள், குங்குமம் இட வேண்டும். சுவாமி படத்துக்கு முன்பாக தலை வாழையிலை விரித்து, அதில் நவதானியங்களைத் தனித்தனியாகப் பரப்ப வேண்டும். நடுவில் சுத்தமான தண்ணீர் நிரம்பிய சொம்பை வைத்து, தண்ணீரில் சிறிது மஞ்சள் சேர்க்க வேண்டும். பிறகு, சொம்பின் வாயில் மாவிலைக் கொத்தைச் செருகி, அதன் நடுவில் ஒரு தேங்காயை மஞ்சள் பூசி, நிறுத்தின வாக்கில் வைக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் முதலான நிவேதனப் பொருட்களோடு, தட்சணையாக பணம் மற்றும் சில்லறை நாணயங்களையும் சேர்த்து, கலசத்துக்கு முன்பாக வைக்க வேண்டும்.

தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜையோடு குபேர பகவானுக்கு நாணய வழிபாடு செய்வதும் மிகமிக விசேஷம்! குபேர பகவானுக்கு உகந்த எண் ஐந்து என்பதால், 108  ஐந்து ரூபாய் நாணயங்களை சுத்தம் செய்து அதனைக் கொண்டு அர்ச்சனை செய்வது மிகவும் விசேஷமாகும். இப்படிச் செய்வதால், நாணயங்களில் இருந்து ஒலி எழும்பும். அப்போது, குபேர பகவானின் 108 போற்றிகளைச் சொல்லி வழிபட வேண்டும். 108 போற்றிகளையும் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.

தீபாவளி அன்று குபேர பகவானுக்காகச் செய்யப்படும் இந்த நாணய வழிபாடு, நிலையான செல்வத்தை நமக்கு அருளும் என்பது நம்பிக்கை. நாணய பூஜை செய்து முடித்ததும் பால் மற்றும் சர்க்கரை கலந்த சிவப்பு அவல் நைவேத்யம் செய்து, தீப தூபம் காட்டி பூஜையை நிறைவு செய்ய வேண்டும். தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை, பிற்பகல் 1 மணி முதல் 2 மணி வரை அல்லது இரவு 8 மணி முதல் 9 மணி வரை புதன் ஓரையில் இந்த வழிபாட்டைச் செய்வது சிறப்பு.

தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜை செய்வதால், சங்கடங்கள், காரியத்தடைகள் நீங்கும். கடன் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்; நம் இல்லத்தில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

]]>
வழிபாடு, குபேரர் , பிள்ளையார், லட்சுமி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/6/w600X390/lakshmi_kuberar.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/06/உங்கள்-இல்லத்தில்-செல்வம்-பெருக-வேண்டுமா-இன்று-மாலை-செய்ய-வேண்டிய-லட்சுமி-குபேர-பூஜை-3034238.html
3034233 ஆன்மிகம் செய்திகள் இன்று தீபாவளி மட்டுமா? வேறென்ன சிறப்புகள்?  DIN DIN Tuesday, November 6, 2018 01:14 PM +0530  

இன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாடி வருகிறோம். தீபாவளி அன்று நடந்த பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் பற்றித் தற்போது தெரிந்துகொள்வோம். 

* ஸ்ரீ ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் முடித்து சீதாதேவியுடன் அயோத்தி திரும்பினார்.

* மஹாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்தார்.

* குபேரன் சிவபெருமானை வழிபட்டுப் பல பொக்கிஷங்களைப் பெற்றார்.

* காளிதேவி 64 ஆயிரம் யோகினிகள் புடைசூழ காட்சி தந்தார்.

* விக்கிரமாதித்த மன்னன் முடிசூடிக் கொண்டார்.

* கேதார விரதம் மேற்கொண்டு சக்திதேவி சிவபெருமானின் உடம்பில் பாதியை பெற்றார்.

* மகாபலி மன்னன் அரியணை ஏறினார்.

* மகாவீரர் முக்தியடைந்தார்.

* சீக்கிய குருவான குருநானக் முக்தியடைந்தார்.

* ஆதிசங்கரர் ஞான பீடங்களை ஸ்தாபித்தார்.

* சுவாமி ராமதீர்த்தர் தீபாவளியன்று பிறந்து, தீபாவளியன்று சந்நியாசம் பெற்று, ஒரு தீபாவளியன்றே சமாதி அடைந்தார்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/10/27/w600X390/amazingdiwalidecorationtips2-24-1477313158.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/06/இன்று-தீபாவளி-மட்டுமா-வேறென்ன-சிறப்புகள்-3034233.html
3034232 ஆன்மிகம் செய்திகள் தீபாவளி கொண்டாடும் மாப்பிள்ளை ரங்கநாதர்! Tuesday, November 6, 2018 12:47 PM +0530  

புதுமணத் தம்பதியர் மட்டும்தான் தலை தீபாவளி கொண்டாடுவதா என்ன? திருவரங்கத்தில் திவ்ய தம்பதியான அரங்கநாதன் தாமும் சிறப்புற மாப்பிள்ளை மிடுக்கோடு தீபாவளி கொண்டாடுகிறாரே! ஆம், ஸ்ரீரங்கநாதர், பெரியாழ்வாரின் மாப்பிள்ளை அல்லவா! ஆண்டாளை மணம் செய்து கொடுத்த பெரியாழ்வார் அரங்கனின் மாமனார் ஆயிற்றே!

வருடந்தோறும் அரங்கன் தீபாவளி கொண்டாடும் விதமே அலாதியானது தான். முதல் நாள் மாலை எண்ணெய் அலங்காரம், மேள தாளத்தோடு பெரிய பெருமாளுக்கு கண்டருளப் பண்ணுவர். மேலும் கோவில் சிப்பந்திகளுக்கு நல்லெண்ணெய், சிகைக்காய்த் தூள் ஆகியவையும் வழங்கப்படும்.

தீபாவளிக்கு முந்தைய நாள் இரவு நம்பெருமாளுக்கும், தொடர்ந்து ஆழ்வார், ஆச்சாரியர் சந்நிதிகளுக்கு நல்லெண்ணெய், சிகைக்காய்த் தூள், விரலி மஞ்சள் ஆகியவை நம்பெருமாள் சார்பில் அர்ச்சகர் மூலம் அனுப்பி வைக்கப்படும். தீபாவளி அதிகாலை தாயார் மற்றும் ஆழ்வார், ஆச்சாரியர் சந்நிதிகளில் எண்ணெய் சார்த்தப்பட்டு திருமஞ்சனம் நடைபெறும். பின்னர் மூலவர், உற்ஸவருக்குப் புத்தாடை, மலர் மாலை அலங்காரம் முடிந்ததும், ஆழ்வார், ஆச்சாரிய உற்ஸவர்கள் பெரிய சந்நிதிக்குக் கிழக்கே உள்ள கிளிமண்டபத்தில் பெருமாள் வருகைக்காகக் காத்திருப்பர். அப்போது பெரியாழ்வாரும் மாப்பிள்ளை ரங்கநாதருக்காக தீபாவளி சீர் தரக் காத்திருப்பார்.

அப்போது நம்பெருமாள் சந்தனு மண்டபம் எழுந்தருள்வார். அங்கே திருமஞ்சனம் அலங்காரம் முடிந்தபின் பெரியாழ்வார் அரங்கனுக்கு தீபாவளி சீர் தரும் நிகழ்ச்சி நடைபெறும். பெரியாழ்வாரின் பிரதிநிதிகளாக அரையர்கள் சீர் வழங்குவர்.

நம்பெருமாள் திருவடிகளைச் சுற்றி சீர் வரிசையான நாணய மூட்டைகள் வைக்கப்படும். வேத பாராயணம், மங்கள வாத்தியம் முழங்க, சீர் தரப்படும். இதை ஜாலி (சாளி) அலங்காரம் என்பர். நம்பெருமாளின் இந்த தீபாவளி தரிசனம், பக்தரின் வறுமை போக்கும். ஆடைகளுக்கும் பணவரவுக்கும் தட்டுப்பாடு இராது என்பது நம்பிக்கை.

]]>
தீபாவளி, ரங்கநாதர் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/6/w600X390/ranganathar-480x264.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/06/தீபாவளி-கொண்டாடும்-மாப்பிள்ளை-ரங்கநாதர்-3034232.html
3034230 ஆன்மிகம் செய்திகள் தீபாவளியில் செய்ய வேண்டிய லட்சுமி குபேர பூஜை! Tuesday, November 6, 2018 12:08 PM +0530  

தமிழகத்தில் தீபாவளி என்பது நரக-சதுர்தசி என்ற விதத்தில் மட்டுமே கொண்டாடப்படுகிறது. ஆனால் அண்டை மாநிலங்களில், தீபாவளிக்கு அடுத்த நாளான அமாவாசை மற்றும் பிரதமை என்று மூன்று நாள்கள் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தில் இந்த நரக சதுர்த்தசியன்று அதிகாலை நேரத்தில் எண்ணெய் தேய்த்து, வெந்நீரில் குளித்து, புத்தாடைகள் அணிந்து கொள்வது வழக்கமாக இருக்கிறது. இதற்குக் காரணமும் உண்டு. "தைலே லக்ஷ்மீர் ஜலே கங்கா' என்பர் பெரியோர். அதாவது இந்த தினத்தில் இல்லத்தில் இருக்கும் எண்ணெய்யில் லக்ஷ்மியும், தண்ணீரில் கங்கையும் இருப்பார்கள். தீபாவளி தினத்தில், கங்கா ஸ்நானமும் அன்னபூரணி தரிசனமும் மிகச் சிறப்பானவை.

சதுர்த்தசிக்கு அடுத்த நாள் அமாவாசை. இதனை வட இந்தியாவில் "ஸாத் பூஜா' என்று பெண்கள் கடைப்பிடிக்கிறார்கள். இந்த நாளில், இல்லத்தில் இருக்கும் ஆண்களின் நலனுக்காகப் பெண்கள் செய்யும் பூஜை இது. இந்நாளில்தான், தமிழகத்திலும், ஆந்திரம் போன்ற பகுதிகளிலும் கேதார கௌரி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. மங்கையர், அன்னையை நோக்கி விரதம் இருந்து மாங்கல்ய பலத்துக்காக இதனைச் செய்கின்றனர். அதேபோல், அமாவாசை தினத்தில் மாலை நேரத்தில் லக்ஷ்மி குபேர பூஜையைச் செய்கிறார்கள்.

சூரியன் மறையும் மாலை நேரத்தில் மஹாலக்ஷ்மியை முறைப்படி பூஜித்து, அவருடன் செல்வத்துக்கு அதிபதியான தேவதை குபேரனையும் வைத்துப் பூஜிப்பது சில இடங்களில் பரம்பரைப் பழக்கமாக உள்ளது. இவ்வாறு லக்ஷ்மி-குபேர பூஜை செய்யும் போது, குடும்பத்தினர் அனைவரும் புத்தாடை உடுத்தி, ஆபரணங்கள் அணிந்து கொண்டு பூஜிக்க வேண்டும் என்பர். இந்த பூஜையைச் செய்யும் இடத்திலும், செய்பவருக்கும் மகாலக்ஷ்மியின் பார்வை பரிபூரணமாகக் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனால்தான் இந்தத் திருநாளில் வடஇந்தியாவில் வர்த்தக நிறுவனங்களில் புதுக்கணக்கு தொடங்குதல் இன்றும் நடைமுறையில் உள்ளது.

]]>
தீபாவளி, நரக-சதுர்தசி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/5/w600X390/lakshmi_2.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/06/தீபாவளியில்-செய்ய-வேண்டிய-லட்சுமி-குபேர-பூஜை-3034230.html
3034223 ஆன்மிகம் செய்திகள் ஸகடபுரம் ஸ்ரீ வித்யா பீடம் - பீடாதிபதியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி Tuesday, November 6, 2018 11:18 AM +0530 ஸ்ரீ ஐகத்குரு பதரி சங்கராசார்ய சமஸ்தானம் ஸ்ரீ க்ஷேத்ர ஸகடபுரம் ஸ்ரீ வித்யா பீடம் 33ஆவது பீடாதிபதி ஸ்ரீ வித்யாபினவ ஸ்ரீஸ்ரீ க்ருஷ்ணானந்த தீர்த்த மஹாசுவாமிகள் தற்போது சென்னை கிழக்கு தாம்பரம் அகஸ்தியர் தெருவில் உள்ள கிளை ஸ்ரீ மடத்தில் முகாமிட்டுள்ளார்கள். 

தீபாவளித் திருநாளை முன்னிட்டு வாசகர்களுக்கு அவர் பிரத்யேகமாக அளித்த அனுக்ரஹ ஆசீர்வாத வாழ்த்துச் செய்தி: ஸ்ரீ வித்யா பாதுமாம் ஸதா - நமது ஸனாதன தர்மம் எனும் இந்து சமயத்தில் கொண்டாடப்படும் ஒவ்வொரு பண்டிகையும் ஓர் ஆழ்ந்த உள் அர்த்தத்துடனேயே கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் தட்சிணாயன புண்ய காலத்தில் துலா மாதத்தில் வரும் தீபாவளிப் பண்டிகையும் மனிதன் எப்போதும் ஒளியை நோக்கியே பயணப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் கொண்டாடப்படுகின்றது. 

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் "என்னை யார் பக்தியுடனும், மெய்யன்புடனும் போற்றி வழிபாடு செய்கின்றார்களோ, அத்தகைய பக்தர்களின் உள்ளத்தில் நிலைத்து நின்று அறியாமையால் உண்டான இருளை, ஒளிமயமான தத்துவ ஞானவிளக்கினால் போக்கி அருள் புரிகின்றேன்" என்கிறார். மனிதமனத்தில் உள்ள அறியாமை என்னும் இருளை நீக்கி அறிவு, ஞானம் என்னும் தீபத்தை ஏற்றுவதே இதன் நோக்கமாகும். 

இருளைக் கிழித்துக் கொண்டு ஒளியைப் பாய்ச்சுகின்ற மத்தாப்புகளும் இதனையே உணர்த்துகின்றன. இப்புனித நன்னாளில் தீர்த்தத்தில் உறைகின்ற கங்கையிலே குளித்து, புத்தாடைகளை உடுத்தி புதிய மனிதனாக தர்மத்தை நிலை நிறுத்தும் பணியைத் தொடங்குவோமாக! அம்பிகை ஸ்ரீ வித்யாராஜராஜேஸ்வரி பரங்கருணையினால் எல்லோரும் சகல நலன்களையும் பெற்று ஆனந்தமயமான வாழ்வு வாழ்ந்திட இந்த தீப ஒளித்திருநாளில் அம்பிகையின் சரண கமலங்களையே பிரார்த்திக்கிறேன். 

-  இதி சிவம் - 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/6/w600X390/kar.jpg http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/06/ஸகடபுரம்-ஸ்ரீ-வித்யா-பீடம்---பீடாதிபதியின்-தீபாவளி-வாழ்த்துச்-செய்தி-3034223.html
3033897 ஆன்மிகம் செய்திகள் காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் ராகு-கேது பரிகார பூஜை செய்யும் இடம் தற்காலிக மாற்றம் DIN DIN Tuesday, November 6, 2018 02:27 AM +0530
காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் ராகு-கேது பரிகார பூஜை செய்யும் இடம் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம், காளஹஸ்தியில் உள்ள கோயிலில் ராகு-கேது பரிகார பூஜை செய்ய பல மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்களின் வசதிக்கேற்ப கோயில் நிர்வாகம் ரூ.500, ரூ.750, ரூ.1,500, ரூ.2,500, ரூ.5,000 என்ற கட்டணங்களின்படி ராகு-கேது பரிகார பூஜை செய்யும் வசதியையும், அதற்கென தனித்தனி இடங்களையும் ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் ரூ.500 என்ற கட்டணத்தில் கோயிலுக்கு வெளியில் உள்ள ஸ்ரீகிருஷ்ண தேவராய மண்டபத்தில் ராகு-கேது பரிகார பூஜை நடைபெற்று வருகிறது. 
இந்த மண்டபத்தில், ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு, வரும் 7ஆம் தேதியன்று காலை முதல் சமஷ்டி கேதார கௌரி விரதம் கடைப்பிடிக்கப்பட உள்ளது. எனவே, அன்றைய தினம் ராகு-கேது பரிகார பூஜை செய்ய வரும் பக்தர்கள் எவ்வித இடையூறுமின்றி அந்த பூஜையை கோயிலுக்குள் உள்ள மந்துகொட்டு மண்டபத்திற்கு மேற்கொள்ளலாம். இது ஒரு தற்காலிக மாற்றம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/6/w600X390/kalahasthi.JPG காளஹஸ்தியில் தற்காலிகமாக பரிகார பூஜை நடைபெற உள்ள மந்துகொட்டு மண்டபம். http://www.dinamani.com/religion/religion-news/2018/nov/06/காளஹஸ்தீஸ்வரர்-கோயிலில்-ராகு-கேது-பரிகார-பூஜை-செய்யும்-இடம்-தற்காலிக-மாற்றம்-3033897.html