Dinamani - நிகழ்வுகள் - http://www.dinamani.com/religion/religion-festivals/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2864716 ஆன்மிகம் நிகழ்வுகள் மேற்கூரையின்றி திருப்பணிக்காக காத்திருக்கும் தெய்வத் திருமேனிகள்... DIN DIN Friday, February 16, 2018 03:13 PM +0530  

வேலூர் மாவட்டம், ஆம்பூர் தாலுக்கா, பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள சுமார் 500 ஆண்டுகளுக்கு மேலான பழைமை வாய்ந்த சிவாலயம் மிகவும் சிதிலமடைது காணப்படுகிறது.

லிங்கத்திருமேனி, அம்பாள், பைரவர் போன்ற அனைத்து தெய்வத் திருமேனிகளும் வெட்ட வெளியில் காணப்படுகின்றன. இக்கோயிலைப் புனரமைத்து புதுப்பிக்க பக்தர்கள் இத்திருக்கோயில் திருப்பணியில் பங்கு கொண்டு இறையருள் பெறலாம்.

தொடர்புக்கு: 90253 45747/ 90470 07554.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/16/w600X390/Shiva.jpg http://www.dinamani.com/religion/religion-festivals/2018/feb/16/மேற்கூரையின்றி-திருப்பணிக்காக-காத்திருக்கும்-தெய்வத்-திருமேனிகள்-2864716.html
2864713 ஆன்மிகம் நிகழ்வுகள் திருப்பணி  செய்ய வாரீர்.... Friday, February 16, 2018 03:02 PM +0530  

திருநெல்வேலி மாவட்டம், சேரன் மகாதேவி வட்டம், குறுமுனிவர் அகத்தியர் தவமியற்றும் தென்பொதிகை மலையடிவாரத்தில் பாபவிநாசம் எனும் புண்ணிய தலம் உள்ளது. 

அருகில் கஜேந்திரன் என்னும் யானைக்கு மோட்சம் அளித்த ஸ்ரீ கஜேந்திர வரதப் பெருமாள் அருள்பாலிக்கும் அத்தாளநல்லூர் உள்ளது. இவ்வூருக்கு அருகில் சௌராஷ்டிர மகாஜனங்களால் பராமரித்து, வீரவநல்லூர் அருள்மிகு ரங்கவல்லி ரங்கநாயகி சமேத ஸ்ரீ ரங்கநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. 

தற்போது இவ்வாலயத்தில் திருப்பணி வேலைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஆன்மிக அன்பர்கள் இத்திருப்பணியில் பங்குகொண்டு பெருமாளின் அருளைப் பெறலாம்.

தொடர்புக்கு: 85080 29217.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/15/w600X390/temple.jpg http://www.dinamani.com/religion/religion-festivals/2018/feb/16/திருப்பணி--செய்ய-வாரீர்-2864713.html
2831851 ஆன்மிகம் நிகழ்வுகள் மார்கழி திருவாதிரை மஹோத்ஸவம் DIN DIN Saturday, December 23, 2017 12:41 PM +0530
சிதம்பரம் ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் ஸமேத ஸ்ரீமந் ஆனந்தநடராஜ மூர்த்தியின் மார்கழி திருவாதிரை மஹோத்ஸவம் விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி தினந்தோறும் அர்ச்சனை ஆராதனை, வீதியுலா, மஹாபிஷேகம், திருத்தேர் உலா போன்ற பல்வேறு உத்ஸவங்களுடன் நடைபெறுகின்றது.

நாள்: 22.12.2017 - 4.1.2018.

]]>
http://www.dinamani.com/religion/religion-festivals/2017/dec/23/மார்கழி-திருவாதிரை-மஹோத்ஸவம்-2831851.html
2831849 ஆன்மிகம் நிகழ்வுகள் திருக்கல்யாண மஹோத்ஸவம் Saturday, December 23, 2017 12:40 PM +0530
சென்னை, தி.நகர், வடக்கு போக் ரோடு, காந்திமதி கல்யாண மண்டபத்தில் ஸ்ரீ பூர்ணா புஷ்களாம்பாள் ஸமேத ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கல்யாண மஹோத்ஸவம் 33-ம் ஆண்டு (சென்னையில் 8-ம் ஆண்டு) பாகவதோத்தமர்கள் மற்றும் ஐயப்ப பக்த சிரோமணிகள் முன்னிலையில் நடைபெறுகின்றது.

தொடர்புக்கு: 98403 05141/ 97898 25596

நாள்: 31.12.2017, நேரம்: காலை 10.30 - 12.00 மணி

]]>
http://www.dinamani.com/religion/religion-festivals/2017/dec/23/திருக்கல்யாண-மஹோத்ஸவம்-2831849.html
2796921 ஆன்மிகம் நிகழ்வுகள் திருமூல நாயனார் குருபூஜை விழா Friday, October 27, 2017 04:00 PM +0530
"திருமந்திரம்' அளித்த திருமூலரின் அவதாரத் தலமான 69-சாத்தனூரில் அமைந்துள்ள திருமூல நாயனார் திருக்கோயிலில் திருமூலரின் குருபூஜை விழா நவ-3ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று காலை 7.30 மணி முதல் நடைபெறுகிறது.  கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் ஆடுதுறையிலிருந்து கிழக்கே 3 கி.மீ. தொலைவில் 69-சாத்தனூர் உள்ளது. 

தொடர்புக்கு: எம்.சந்திரசேகரன்-9444431691
 

]]>
http://www.dinamani.com/religion/religion-festivals/2017/oct/27/திருமூல-நாயனார்-குருபூஜை-விழா-2796921.html
2769615 ஆன்மிகம் நிகழ்வுகள் ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயிலில் பவித்ரோத்ஸவம் DIN DIN Friday, September 8, 2017 03:13 PM +0530
திருவண்ணாமலை மாவட்டம்,  வந்தவாசி அருகில் உள்ள ஆக்கூர் கிராமத்தில் அமைந்துள்ளது  பழைமை வாய்ந்த ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயில். விவாகம் மற்றும் புத்திரபாக்கியத்திற்கு சிறப்புபெற்ற இக்கோயிலில் பவித்ரோத்ஸவம்  விசேஷமாக நடைபெறுகின்றது. காஞ்சிபுரத்திலிருந்து ஆக்கூர் செல்ல நேரடி பேருந்து வசதிகள் உள்ளன.  
தொடர்புக்கு: 94444 40194 / 95853 18603.
நாள்: 8.9.2017 - 10.9.2017.

]]>
http://www.dinamani.com/religion/religion-festivals/2017/sep/08/ஸ்ரீ-லட்சுமி-நாராயணப்-பெருமாள்-திருக்கோயிலில்-பவித்ரோத்ஸவம்-2769615.html
2769614 ஆன்மிகம் நிகழ்வுகள் சக்திவிநாயகர் ஆலயத்தில் முதலாம் ஆண்டு சம்வத்ஸராபிஷேம் Friday, September 8, 2017 03:11 PM +0530
சென்னை, நங்கநல்லூர், டி.என். ஜி. ஒ. காலனி, முதல் தெருவில் உள்ள ஸ்ரீ சக்திவிநாயகர் ஆலயத்தில் முதலாம் ஆண்டு சம்வத்ஸராபிஷேம் செப்டம்பர் -8 ஆம் தேதி நடைபெறுகின்றது.  மேலும் ஆலயத்திலுள்ள அனைத்து மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம், சந்தனக் காப்பு, கலசாபிஷேகம், நாம சங்கீர்த்தனம் போன்ற வைபவங்கள் நடைபெறுகின்றன.  பூர்வாங்க பூஜைகள், ஹோமங்கள் செப்டம்பர்-7 ஆம் தேதி ஆரம்பமாகின்றது.  

]]>
http://www.dinamani.com/religion/religion-festivals/2017/sep/08/சக்திவிநாயகர்-ஆலயத்தில்-முதலாம்-ஆண்டு-சம்வத்ஸராபிஷேம்-2769614.html
2738993 ஆன்மிகம் நிகழ்வுகள் திருவையாற்றில் அப்பர் கயிலாயக்காட்சிக் காண வாரீர்.. Monday, July 17, 2017 05:35 PM +0530  

ஆருரில் பிறந்தால் முக்தி, அண்ணாமலையை நினைத்தால் முக்தி, ஐயாறு மண்ணை மிதித்தால் முக்தி என்று சொல்லும் அளவுக்கு மிகவும் பெருமை வாய்ந்த ஊர் திருவையாறு.

தென்கயிலாயம் என்று போற்றப்படும் தஞ்சை மாவட்டம் திருவையாறு அருள்மிகு அறம் வளர்த்தநாயகி உடனுறை ஐயாறப்பர் கோயிலில் ஆடி அமாவாசையில் அப்பர் கயிலாயக் காட்சி திருவிழா பல ஆண்டுகளாக பெருஞ்சிறப்புடன் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த ஆண்டு ஹேவிளம்பி வருடம் ஆடி மாதம் 7-ம் தேதி ஜூலை 23-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று அப்பர் திருக்கயிலாயக் காட்சி திருவிழா மிக விமரிசையாக நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு அன்று முழுவதும் இடையறாது திருமுறை இன்னிசை நிகழ்ச்சி நடக்கும். காலை 7 மணி அளவில் சிவபூஜையும், பகல் 12 மணி அளவில் காவிரியில் பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரியும், அபீஷ்ட வரத மகாகணபதி சந்நிதிக்கு எதிரில் இருக்கும் திருக்குளத்தில் (உப்பங்கோட்டை) அப்பர் எழுந்தருளி தீர்த்தவாரியும். இரவு 8-9 மணி அளவில் ஐயாறு ஆலயத்தில் அப்பர் பெருமானுக்கு திருக்கயிலாயக் காட்சி கொடுத்தருளுதலும் நடைபெறும். அதற்கு முன் சந்நிதியின் மண்டபத்தில் 200-க்கும் மேற்பட்ட ஓதுவார்கள் கூடி அப்பரின் பதிகங்களான கூற்றாயினவாறு, சொற்றுணைவேதயன், தலையே நீ வணங்காய், வேற்றாகி விண்ணாகி, மாதர்ப்பிறைக்கண்ணி யானை ஆகிய ஐந்து பதிகங்களை பக்கவாத்தியத்துடன் இசைத்து ஆராதனை செய்வார்கள்.

திருவையாற்றில் அப்பர் கயிலாயக்காட்சிக் காண திருவையாறு சிவ சேவா அறக்கட்டளை உங்களை அன்புடன் வரவேற்கிறது. அனைவரும் வருக எம்பெருமானின் திருவருளைப் பெருக. தொடர்புக்கு - 9976253220, 8939311178.

]]>
அப்பர் கயிலாயக்காட்சி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/17/w600X390/appar.jpg http://www.dinamani.com/religion/religion-festivals/2017/jul/17/திருவையாற்றில்-அப்பர்-கயிலாயக்காட்சிக்-காண-வாரீர்-2738993.html
2737327 ஆன்மிகம் நிகழ்வுகள் முப்பெரும் ஞானிகள் குருபூஜை Friday, July 14, 2017 02:38 PM +0530 ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருள்நெறி அறக்கட்டளை சார்பில் ஸ்ரீலஸ்ரீ சேக்கிழார், ஸ்ரீமத் அருணகிரிநாதர், ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் ஆகிய முப்பெரும் ஞானிகள் குருபூஜை விழா, சென்னை ஐ. சி. எப், பஸ் நிலையம் அருகில் ஸ்ரீ கமலவிநாயகர் கோயில் பின்புறம் உள்ள ஸ்ரீ வேங்கடேஸ்வரர் மஹா மண்டபத்தில் நடைபெறுகின்றது.  பிரபல அறிஞர் பெருமக்கள் பங்கேற்று சிவநெறி சிந்தனை சொற்பொழிவுகள் ஆற்றுகின்றனர்.  

தொடர்புக்கு:  வி. ரவிச்சந்திரன் -   94443 87061.

நாள்: 23.7.2017, நேரம்:  மாலை 5.00 மணி.

]]>
http://www.dinamani.com/religion/religion-festivals/2017/jul/14/முப்பெரும்-ஞானிகள்-குருபூஜை-2737327.html
2737328 ஆன்மிகம் நிகழ்வுகள் திருப்பணி செய்ய வாரீர்... Friday, July 14, 2017 02:36 PM +0530 காஞ்சி மாவட்டம், உத்திரமேரூர் தலத்திற்கு மேற்கே அமைந்துள்ளது அம்மையப்ப நல்லூர் கிராமம்.  இங்கு பாகவதோத்மர்கள் வழிபட்ட  மிகப் பழைமையான ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில் சுமார் 30 ஆண்டுகளாக போற்றி பாதுகாக்க வழியின்றி மிகவும் சிதிலமடைந்துள்ளது.  நித்ய  திருவாராதனங்களும் குறைந்த நிலையில் கிராம மக்கள் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் திருக்கைங்கர்ய அறக்கட்டளை என்ற ஆன்மிக அமைப்பை நிறுவி, முறைப்படி பதிவு செய்து. திருக்கோயிலின் புனரமைப்பு கட்டுமான திருப்பணிகளை மேற்கொண்டுள்ளனர்.  இரண்டு நிலை விமானத்துடன் பெருமாள் சந்நிதி உட்பட பல்வேறு திருப்பணி வேலைகள் நடைபெற வேண்டியுள்ளது.  மகா சம்ப்ரோக்ஷணம் பலவருடங்களாக நடைபெறவில்லை.  திருமால் அடியார்கள் அவசியம் உதவிட வேண்டும். 

தொடர்புக்கு : ஜி. ஸ்ரீதர் - 98435 87687 /  97875 13949. 

]]>
http://www.dinamani.com/religion/religion-festivals/2017/jul/14/திருப்பணி-செய்ய-வா-2737328.html
2726034 ஆன்மிகம் நிகழ்வுகள் ஸ்ரீ பரிமள ரங்கநாதப் பெருமாளுக்கு மகா சம்ப்ரோக்ஷணம் DIN DIN Friday, June 23, 2017 02:55 PM +0530 திருவாரூர் மாவட்டம், சிவகாளிபுரம் எனும் சேங்காலிபுரத்தில் உள்ள புராணச் சிறப்பு மிகுந்த ஸ்ரீ வரதராஜப்பெருமாள் மற்றும் ஸ்ரீ பரிமள ரங்கநாதப் பெருமாள் ஆலயங்களின் மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெறுகின்றது. அன்று மாலையே பரிமளரங்கநாதர் திருக்கல்யாண உத்சவமும் இரவு திருவீதி உலாவும் நடைபெறும்.

தொடர்புக்கு : 94440 56737 / 94441 43331.
நாள்: 25.6.2017, நேரம்: காலை 9.30 - 11 .00 மணி.

]]>
http://www.dinamani.com/religion/religion-festivals/2017/jun/23/ஸ்ரீ-பரிமள-ரங்கநாதப்-பெருமாளுக்குமகா-சம்ப்ரோக்ஷணம்-2726034.html
2726033 ஆன்மிகம் நிகழ்வுகள் புதுக்கோட்டை ஸ்ரீ சுந்தரமாகாளி அம்மனுக்கு குடமுழுக்கு Friday, June 23, 2017 02:52 PM +0530 காலத்தால் முற்பட்ட காண்பதற்கரிய கற்கோயில்! அருள்சுரக்கும் ஈசனவன் முற்கால சோழர்களால் கார்குறிச்சி திருக்கற்றளி பெருமானாக இருந்து திருக்கட்டளை ஈஸ்வரமுடையாராகி பிற்கால மதில் சுந்தரேஸ்வரராக நாமம் கொண்டருளுகிறார். ஆறிரண்டு கல்வெட்டுகள் சோழ, பாண்டிய, பல்லவ ஆட்சி கால பணிமுறையை பறைசாற்ற சப்தமாதர், ஜேஷ்டாதேவி அமைவாலும் அவர்கால சரித்திரம் பாடுகின்றன.

சோழர் படை பகைக்கொண்டு கடந்தபோது வந்தமர்ந்து இளைப்பாரி வாகைசூட வழிபட்ட காளியவள். சங்கப்பாடலாலும் போற்றப்படும் ஸ்ரீசுந்தரமாகாளி அம்மனுக்கு குடமுழுக்கு நடைபெறுகிறது. புதுக்கோட்டையில் இருந்து திருக்கட்டளைக்கு மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன.

நாள்: 30.6.2017, நேரம்: காலை 9.15 -10 .15 மணி.

- பொ.ஜெயச்சந்திரன்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/9/16/w600X390/kumbabishegam1.jpeg http://www.dinamani.com/religion/religion-festivals/2017/jun/23/புதுக்கோட்டை-ஸ்ரீ-சுந்தரமாகாளி-அம்மனுக்கு-குடமுழுக்கு-2726033.html
2700937 ஆன்மிகம் நிகழ்வுகள் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளின் மகா குருபூஜை DIN DIN Friday, May 12, 2017 02:31 PM +0530 சென்னை, திருவான்மியூர், பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளின் சமாதி நிலையத்தில் 88 ஆம் ஆண்டு மகா குருபூஜை விழா, 3 நாள்களுக்கு வெகு சிறப்பாக நடைபெறுகின்றது. விழாவினையொட்டி, நித்திய பாராயணம், அர்ச்சனை ஆராதனையுடன் இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. முக்கிய நிகழ்வாக, மகா தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது. 

நாள்: 15.5.2017 - 17.5.2017.

]]>
http://www.dinamani.com/religion/religion-festivals/2017/may/12/பாம்பன்-ஸ்ரீமத்-குமரகுருதாச-சுவாமிகளின்மகா-குருபூஜை-2700937.html
2700936 ஆன்மிகம் நிகழ்வுகள் திண்டுக்கல் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் திருக்கோயிலில் மஹாசம்ப்ரோக்ஷணம்  DIN DIN Friday, May 12, 2017 02:30 PM +0530 திண்டுக்கல் மாநகர், எம்.வி.எம். நகர், ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் திருக்கோயில் மற்றும் தென்திருப்பதி ஸ்ரீ வெங்கடாஜலபதி பெருமாள் திருக்கோயிலில் அருள்மிகு ஸ்ரீ பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீ வெங்கடாஜலபதி பெருமாள், ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர், ஸ்ரீ சக்கரத்தாழ்வார், ஸ்ரீ தும்பிக்கையாழ்வார் ஆகிய தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மஹாசம்ப்ரோக்ஷணம் நடைபெறுகின்றது. முன்னதாக ஹோமம் மற்றும் பூஜைகள் ஜூன்- 1,2,3, ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன.

நாள்: 4.6.2017, நேரம்: காலை 7.30 - 8.30 மணி.

]]>
http://www.dinamani.com/religion/religion-festivals/2017/may/12/திண்டுக்கல்-ஸ்ரீ-பக்த-ஆஞ்சநேயர்-திருக்கோயிலில்-மஹாசம்ப்ரோக்ஷணம்-2700936.html
2700935 ஆன்மிகம் நிகழ்வுகள் மெலட்டூர் பாகவத மேளா நாட்டிய நாடக உத்ஸவம் Friday, May 12, 2017 02:28 PM +0530 தஞ்சை மாவட்டம், மெலட்டூர் கிராமத்தில் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் ஆலயத்திற்கு முன் வடக்குத்தெருவில் விசேஷ பந்தல் அமைக்கப்பட்டு ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஜெயந்தி பாகவதமேளா நாட்டிய நாடக சங்கம் சார்பில் 77 ஆவது ஆண்டு பாகவத மேளா நாடக மகோத்சவம் நடைபெறுகின்றது. மே:18 - பிரகலாத சரித்திரம், மே:20 - அரிச்சந்திரா பகுதி 1, மே:21 - அரிச்சந்திரா  பகுதி-2, மே-23 - மார்க்கண்டேயன் ஜனனம், மே:25 - ருக்மிணி கல்யாணம், மே:26  - வள்ளித் திருமணம்.  

தொடர்புக்கு: 94431 27000.

நாள்: 17.5.2017 - 27.5.2017.

]]>
http://www.dinamani.com/religion/religion-festivals/2017/may/12/மெலட்டூர்-பாகவத-மேளா-நாட்டிய-நாடக-உத்ஸவம்-2700935.html
2691372 ஆன்மிகம் நிகழ்வுகள் பிரதிஷ்டா தின விழா Wednesday, April 26, 2017 12:22 PM +0530 காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் வட்டத்தில் உள்ள நீலமங்கலம் கிராமத்தில் சாஸ்த்ராலயம் அருள்மிகு ராஜா மகா காலேஷ்வர் ஆலயத்தின் முதலாம் ஆண்டு விழாவும், அருள்மிகு மகா நாராயணர் ஆலய இரண்டாம் ஆண்டு விழாவும் ஏப்-29ம் தேதி பூஜ்யஸ்ரீ சுவாமி ப்ரம்மயோகானந்தா மஹாராஜ் முன்னிலையில் நடைபெறுகின்றது,  இதனை முன்னிட்டு அன்று காலை 6 மணிக்கு மஹாலட்சுமி யாகமும் தொடர்ந்து 9 மணிக்கு ஆண்டுவிழா நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றது. முக்கிய பிரமுகர்கள் இவ்விழாவில் கலந்துகொள்கின்றனர்.  

தகவல்களுக்கு : 09884025911 ’ 8939133662.
 

]]>
Kancheepuram, Maha Kaaleshwar Temple, அருள்மிகு ராஜா மகா காலேஷ்வர், அருள்மிகு மகா நாராயணர் http://www.dinamani.com/religion/religion-festivals/2017/apr/26/arul-migu-raja-maha-kaaleshwar-temple-kanchipuram-2691372.html
2734 ஆன்மிகம் நிகழ்வுகள் பாளையத்தம்மன் கோயிலில் தீமிதி திருவிழா dn Thursday, July 28, 2016 12:36 PM +0530 ஊத்துக்கோட்டையை அடுத்த பூண்டி ஒன்றியம், பென்னாலூர்பேட்டை கிராம தேவதை ஸ்ரீபாளையத்தம்மன் கோயிலில் 26-ஆம் ஆண்டு தீ மிதி திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை பெண்கள் பால்குடம், சீர்வரிசைகள் ஏந்தி கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை நோன்பு இருந்த தீமிதிக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், கரக ஊர்வலம், கூழ்வார்த்தல், பொங்கலிடுதல் ஆகியன நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு மஞ்சள் ஆடை அணிந்து 200-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் குழந்தைகளுடன் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.
இரவு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, வாண வேடிக்கை, மேளதாளம் முழங்க நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/7/28/w600X390/amman.jpg http://www.dinamani.com/religion/religion-festivals/2016/jul/28/பாளையத்தம்மன்-கோயிலில்-தீமிதி-திருவிழா-2734.html