Dinamani - இந்தியா - http://www.dinamani.com/india/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3042408 இந்தியா மக்களவைத் தேர்தலில் வெல்ல முடியாது என்பது பாஜகவுக்கு தெரியும்: ராகுல் காந்தி DIN DIN Wednesday, November 21, 2018 01:38 AM +0530
அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் தங்களால் வெல்ல முடியாது என்பது பாஜகவுக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் நன்றாகத் தெரியும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
மிஸோரம் மாநில சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு அந்த மாநிலத்தின் சம்பாய் பகுதியில் தனது முதல் பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை பங்கேற்றார். அங்கு அவர் பேசியதாவது: மிஸோரம் மாநிலத்தின் கலாசாரத்தை சீர்குலைக்க பாஜக முயற்சி செய்து வருகிறது. ஏனெனில், மாநிலத்தில் கலாசாரத்தை ஒழித்தால் மட்டுமே இங்கு காலூன்ற முடியும் என்பது அவர்களுக்குத் தெரியும். அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் தங்களால் வெல்ல முடியாது என்பது பாஜகவுக்கும், அதன் தலைமை பீடமான ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் நன்றாகத் தெரியும். எனவே, மத்தியில் ஆட்சியில் இருக்கும் வரை முடிந்த அளவுக்கு அதிகாரத்தைப் பயன்படுத்தி மாநிலங்களைத் தங்கள் வசம் வைத்துக் கொள்ள முயற்சிக்கின்றனர்.
இந்த மாநிலத்தில் முக்கியக் கட்சியாக உள்ள மிஸோ தேசிய முன்னணி, தேர்தலுக்குப் பிறகு பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் திட்டத்தில் உள்ளது. மாநிலத்தில் மொழி, பாரம்பரியம், கலாசாரம் ஆகியவற்றை சீர்குலைக்கும் முயற்சிக்கு மிஸோ தேசிய முன்னணியும் துணை போகிறது. இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியால் மட்டுமே மிஸோரம் மாநிலத்தைக் காப்பாற்ற முடியும். பாஜகவின் சதிகளை எங்களால் மட்டுமே முறியடிக்க முடியும். மத்தியில் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி பல கோடி ரூபாய் ஊழலில் பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. 
உதாரணமாக ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் மூலம் தனது நண்பரான அனில் அம்பானிக்கு ரூ.30,000 கோடியை பிரதமர் மோடி பெற்றுத் தந்துள்ளார். இது தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் ஓராண்டுக்கான செலவுத் தொகையாகும். இதுபோன்றவர்களை மிஸோரம் மாநிலத்தில் அனுமதிக்கக் கூடாது.
மேலும், தேர்தல் ஆணையம், சிபிஐ, ரிசர்வ் வங்கி, உச்சநீதிமன்றம் உள்ளிட்ட முக்கிய அமைப்புகளின் செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிட்டு தங்களுக்கு சாதகமாக செயல்பட வலியுறுத்துகிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக தகுதி இல்லாதவர்கள் ஆளுநர்களாகவும், பல்கலைக்கழக துணை வேந்தர்களாகவும் நியமிக்கப்படுகின்றனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகளையே தங்களுக்கு சாதகமாக ஆட்டிப்படைக்க முயல்கிறார்கள்.
மிஸோரம் மாநிலத்தில் கடந்த 10 ஆண்டு ஆட்சியில் காங்கிரஸ் கட்சி பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. மாநிலத்தை பொருளாதாரரீதியாக முன்னேற்றியுள்ளோம். மாநிலத்தில் தனிநபர் வருமானம் இரு மடங்காகியுள்ளது என்றார் ராகுல்.
சிபிஐ விவகாரம் மர்ம நாவல் போல உள்ளது : சிபிஐ விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையில் வெளிப்பட்டு வரும் விஷயங்கள் குற்றங்கள் அடங்கிய மர்ம நாவல் போல் உள்ளது. வேலியே பயிரை மேய்கிறது என்று கூறப்படுவதற்கு இதுவே சிறந்த உதாரணம் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் சுட்டுரையில் (டுவிட்டர்) அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
சிபிஐ சிறப்பு இயக்குநராக இருந்த ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான ஊழல் புகார் விசாரணையில், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், மத்திய அமைச்சர் செளதரி, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் (சிவிசி) கே.வி. செளதரி ஆகியோர் தலையிட முயற்சித்ததாக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மூத்த அதிகாரி எம்.கே. சின்ஹா கூறியுள்ளார். இது வேலியே பயிரை மேய்கிறது என்று கூறப்படுவதற்கு உதாரணமாக உள்ளது. குற்றங்கள் அடங்கிய மர்ம நாவலைப் போல இந்த விசாரணையில் உண்மைகள் வெளிப்பட்டு வருகின்றன என்று ராகுல் பதிவிட்டுள்ளார்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/5/w600X390/rahul-gandhi.jpg http://www.dinamani.com/india/2018/nov/21/மக்களவைத்-தேர்தலில்-வெல்ல-முடியாது-என்பது-பாஜகவுக்கு-தெரியும்-ராகுல்-காந்தி-3042408.html
3042409 இந்தியா பணமதிப்பிழப்பு - ஊழல் ஒழிப்புக்கான கசப்பு மருந்து : பிரதமர் மோடி DIN DIN Wednesday, November 21, 2018 01:37 AM +0530
நாட்டில் புரையோடி போயிருந்த ஊழலை ஒழிக்கவும், கருப்பு பணத்தை வெளிக்கொணர்ந்து வங்கிக் கட்டமைப்புக்குள் கொண்டு வருவதற்காகவும்தான், பணமதிப்பிழப்பு என்னும் கசப்பு மருந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். நாட்டில் இதுவரை 1.25 கோடி மக்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாஜகவுக்கு ஆதரவாக ஜாபூவா என்ற இடத்தில் பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
கரையான்களை ஒழிக்க நச்சு மிகுந்த மருந்துகளை நாம் பயன்படுத்துவதுண்டு. அதைப்போலவே, நாட்டில் இருந்த ஊழலை ஒழிக்க உயர் மதிப்புடைய ரூபாய் தாள்களை தடை செய்யும் கசப்பு மருந்து நடவடிக்கையை நான் மேற்கொண்டேன்.
இதன் காரணமாக, யாரெல்லாம் தங்கள் வீடுகளில் மெத்தைகளுக்கு கீழேயும், அலுவலகம், தொழிற்சாலை போன்ற இடங்களிலும் பணத்தை பதுக்கி வைத்திருந்தனரோ, அவர்களெல்லாம் தற்போது ஒவ்வொரு ரூபாய்க்கும் வரி செலுத்த தொடங்கியிருக்கின்றனர். அந்த வரிப் பணத்தை சாமானியர்களுக்கான நலத்திட்டங்களுக்கு நாங்கள் பயன்படுத்தி வருகிறோம்.
பொய்யான வாக்குறுதிகள்: வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற காங்கிரஸின் வாக்குறுதியை மத்தியப் பிரதேச விவசாயிகள் நம்ப வேண்டாம். அது பொய்யானது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின்போதும், கடன் தள்ளுபடி செய்வதாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. ஆனால், அதைச் செய்வதற்குப் பதிலாக விவசாயிகளை சிறைக்கு அனுப்புவற்கான நடவடிக்கைகளை அங்குள்ள அரசு மேற்கொண்டு வருகிறது.
கடந்த 2008-இல், நாட்டில் பொதுத்தேர்தல் நடத்துவதற்கு ஓராண்டு இருந்த நிலையில், நாட்டில் உள்ளஅனைத்து விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி செய்யப்படும் அப்போதைய காங்கிரஸ் அரசு உறுதி அளித்தது. ஆனால் அது வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாக முடிந்துவிட்டது.
அதே சமயம், எங்களுடைய அரசு 2022-ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த 4 ஆண்டுகளில் முத்ரா திட்டத்தின் கீழ், நாட்டில் 14 கோடி பேருக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி கடன் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது.
இந்த 4 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை, காங்கிரஸ் கட்சி மேற்கொண்டிருந்தால் 10 ஆண்டுகள் ஆகியிருக்கும்.
ம.பி. அரசுக்குப் பாராட்டு: மத்தியப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது பொதுமக்கள் நிலை எப்படி இருந்தது? என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். மாநிலத்தின் நலனில் அக்கறை கொள்ளும் அரசு அப்போது இருந்திருக்கவில்லை.
காங்கிரஸ் கட்சியின் 55 ஆண்டுகால ஆட்சியில் இந்த மாநிலத்தில் வெறும் 1,500 பள்ளிகள் மட்டுமே திறக்கப்பட்டன. ஆனால், கடந்த 15 ஆண்டுகளில் 4,000 பள்ளிகளை பாஜக முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் கொண்டு வந்துள்ளார். சிறுவர், சிறுமியருக்கு கல்வி வழங்க வேண்டும், இளைஞர்களுக்கு வருமானத்தை ஏற்படுத்த வேண்டும், விவசாயிகளுக்கு பாசன வசதியை ஏற்படுத்த வேண்டும், பெரியோர்களுக்கு மருந்துகள் வழங்க வேண்டும் என்பதே எங்களது தாரக மந்திரம்.
அனைவருக்கும் வீடு: நாட்டில் உள்ள அனைவருக்கும் 2022-ஆம் ஆண்டுக்குள் கான்கிரீட் வீடுகளை வழங்க வேண்டும் என்பதே எங்களது கனவு. இதுவரையில் 1.25 கோடி மக்களுக்கு நாங்கள் வீடுகளை வழங்கியிருக்கிறோம்.
காங்கிரஸ் தலைமையிலான முந்தைய அரசு, ரிமோட் கட்டுப்பாட்டிலும், அம்மையாரின் கட்டுப்பாட்டிலும் இயங்குவதாக இருந்தது.
ஆனால், நான் நாட்டில் உள்ள 125 கோடி மக்களுக்காக சேவையாற்றிக் கொண்டிருக்கிறேன். அவர்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன். காங்கிரஸுக்கு அதுதான் பிரச்னையாக இருக்கிறது என்றார் மோடி.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/21/w600X390/modi.jpg மத்தியப் பிரதேச மாநிலம், ஜாபூவாவில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்த பிரதமர் நரேந்திர மோடியிடம் வாழ்த்து பெறும் பாஜக வேட்பாளர்கள். http://www.dinamani.com/india/2018/nov/21/பணமதிப்பிழப்பு---ஊழல்-ஒழிப்புக்கான-கசப்பு-மருந்து--பிரதமர்-மோடி-3042409.html
3042407 இந்தியா சிபிஐ இயக்குநரின் பதில் மனு கசிவு: உச்சநீதிமன்றம் கண்டனம் DIN DIN Wednesday, November 21, 2018 01:37 AM +0530
ஊழல் குற்றச்சாட்டு வழக்கை எதிர்கொண்டு வரும் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, அது தொடர்பாகத் தாக்கல் செய்த பதில் மனுவிலுள்ள தகவல்கள் ஊடகங்களில் கசிந்ததையடுத்து, உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அலோக் வர்மா மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் தாக்கல் செய்த மனுவுக்கு உரிய பதில் மனுவைத் தாக்கல் செய்ய அலோக் வர்மாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து, தன் தரப்பு வாதங்களை பதில் மனுவாக மூடி முத்திரையிட்ட உறையில் வைத்து அலோக் வர்மா திங்கள்கிழமை தாக்கல் செய்தார். இத்தோடு, தன்னை விடுப்பில் அனுப்பிய மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அலோக் வர்மா தாக்கல் செய்த மனுவையும் உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. 
இவற்றின் விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கெளல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
அப்போது, அலோக் வர்மா மூடி முத்திரையிட்ட உறையில் வைத்துத் தாக்கல் செய்த விவரங்கள் ஊடகங்களில் வெளியானது குறித்து அறிந்த நீதிபதிகள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாயினர். இது போன்ற நிகழ்வுகளுக்குக் கடும் கண்டனமும் தெரிவித்தனர். 
இதற்குப் பதிலளித்த நாரிமன் கூறியதாவது: இது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இது முற்றிலும் அங்கீகாரமற்றது. இந்த விவகாரம் என்னைப் பெருமளவில் பாதித்துள்ளது என்று தெரிவித்தார்.
இதனைக் கேட்ட நீதிபதிகள், உங்கள் யாருக்கும் வழக்கு விசாரணை நடத்தப்பட வேண்டிய அவசியமில்லை என்று கூறி விசாரணையை வரும் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மீண்டும் முறையீடு: ஆனால், வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று நாரிமன் நீதிபதிகளிடம் முறையிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மற்ற வழக்குகளின் விசாரணை முடிந்த பின்னர் இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தனர்.
பின்னர், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் கூறியதாவது:
சின்ஹாவுக்குக் கண்டனம்: தன்னுடைய பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த ஊழல் புகார் விசாரணையில் பல்வேறு முக்கிய நபர்கள் தலையிட்டதாகவும் சிபிஐ மூத்த அதிகாரி எம்.கே. சின்ஹா குற்றம் சாட்டி மனு தாக்கல் செய்திருந்தார்.
இதில் தொடர்புடைய நபர்களின் பெயர்களை பொதுவெளியில் வெளியிட வேண்டாம் என்று கூறியிருந்தோம். ஆனால், அடுத்த நாளே அவர்கள் அனைவரது பெயர்களும் ஊடகங்களில் வெளியாகின. 
இந்த வழக்கில் சிபிஐ-யின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்பதற்காகவே, அலோக் வர்மாவின் பதில் மனுவை மூடி முத்திரையிட்ட உறையில் வைத்துத் தாக்கல் செய்ய உத்தரவிட்டோம். அத்தோடு, சின்ஹாவையும் கேட்டுக்கொண்டோம். ஆனால், அதற்கு யாரும் ஒத்துழைப்பதாகத் தெரியவில்லை. இது குறித்து மேலும் விசாரணை நடத்த நாங்கள் விரும்பவில்லை என்று கூறி வழக்கை வரும் 29-ஆம் தேதிக்கே மீண்டும் ஒத்திவைத்தனர்.
சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான ஊழல் புகார் விசாரணையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், மத்திய அமைச்சர் ஹரிபாய் பார்திபாய் செளதரி, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் கே.வி. செளதரி ஆகியோர் தலையிட முயற்சித்ததாக எம்.கே. சின்ஹா திங்கள்கிழமை குற்றம்சாட்டினார்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/1/w600X390/supremecourt.jpg http://www.dinamani.com/india/2018/nov/21/சிபிஐ-இயக்குநரின்-பதில்-மனு-கசிவு-உச்சநீதிமன்றம்-கண்டனம்-3042407.html
3042404 இந்தியா சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: ஒருவருக்கு தூக்கு, மற்றொருவருக்கு ஆயுள் DIN DIN Wednesday, November 21, 2018 01:33 AM +0530
கடந்த 1984-ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யாஷ்பால் சிங்குக்கு மரண தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், இதில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை அளித்துள்ளது.
கடந்த 1984-ஆம் ஆண்டு, அக்டோபர் 31-ஆம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவரது மெய்ப்பாதுகாவலர்களான சீக்கியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து தலைநகர் தில்லி உள்பட நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிராகக் கலவரம் வெடித்தது. இதில் 2 பேரைக் கொலை செய்ததாக யாஷ்பால் சிங் மற்றும் அவரது கூட்டாளியான நரேஷ் ஷெராவத் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பான வழக்கின் விசாரணை தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அஜய் பாண்டே முன்னிலையில் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், கடந்த 14-ஆம் தேதி யாஷ்பால் சிங், ஷெராவத் ஆகியோர் குற்றவாளிகள் என்பதை உறுதி செய்து நீதிபதி உத்தரவிட்டார். அவர்களின் தண்டனை குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறி, இறுதித்தீர்ப்பை ஒத்திவைத்தார்.
இந்நிலையில், பாதுகாப்பு கருதியும், மக்களால் குற்றவாளிகள் தாக்கப்படக்கூடும் என்பதையும் கருத்தில் கொண்டு, திகார் சிறை வளாகத்திலேயே குற்றவாளிகள் இருவருக்குமான தண்டனைகளை செவ்வாய்க்கிழமை நீதிபதி அறிவித்தார். அதில், முக்கியக் குற்றவாளியான யாஷ்பால் சிங்குக்கு மரண தண்டனையும், ஷெராவத்துக்கு ஆயுள் தண்டனையும் விதிப்பதாக அவர் தீர்ப்பளித்தார்.
தில்லி காவல் துறையினர் கடந்த 1994-ஆம் ஆண்டு, குற்றவாளிகள் மீது போதிய சாட்சியங்கள் இல்லை என்று கூறி இந்த வழக்கை முடித்துவைத்தனர். ஆனால், இந்த வழக்கை மீண்டும் விசாரித்த சிறப்பு விசாரணைக்குழுவின் வாதங்கள் அடிப்படையில் குற்றவாளிகளுக்குத் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.
தீர்ப்புக்கு வரவேற்பு: தீர்ப்பு குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், வழக்கில் எந்தவித சமரசமும் செய்துகொள்ளக்கூடாது. இத்தீர்ப்பை காங்கிரஸ் வரவேற்கிறது என்று தெரிவித்தார். பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கூறுகையில், மனிதத்தன்மையற்ற செயலில் ஈடுபட்டவர்களுக்குச் சரியான தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்ற குற்றவாளிகளுக்கும் விரைவில் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
அகாலி தளத் தலைவர் மன்ஜிந்தர் சிங் சிர்சா கூறுகையில், ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிக்கும் மரண தண்டனை கிடைக்கும் வரை நாங்கள் போராடுவோம் என்று தெரிவித்தார். இத்துடன் பல்வேறு கட்சித் தலைவர்களும் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.
 

]]>
http://www.dinamani.com/india/2018/nov/21/சீக்கியர்களுக்கு-எதிரான-கலவர-வழக்கு-ஒருவருக்கு-தூக்கு-மற்றொருவருக்கு-ஆயுள்-3042404.html
3042403 இந்தியா தென்சீன கடல்பகுதியில் இந்தியாவும், வியத்நாமும் விதிகளை கடைப்பிடிக்கின்றன: ராம்நாத் கோவிந்த் DIN DIN Wednesday, November 21, 2018 01:32 AM +0530
தென்சீனக் கடல் பகுதியை உள்ளடக்கிய இந்திய - பசிபிக் பிராந்தியத்தில் விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டதொரு பார்வையை இந்தியாவும், வியத்நாமும் கொண்டுள்ளன என்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார். 
இறையாண்மைக்கு மதிப்பளிப்பது, பிராந்திய ஒற்றுமையை கடைப்பிடிப்பது, கட்டுப்பாடற்ற கடல் பயணம், கடலுக்கு மேலே விமானப் பயணம், கட்டுப்பாடற்ற வர்த்தகம் ஆகியவவை குறித்து இந்தியாவும், வியத்நாமும் பொதுவான பார்வையைக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
வியத்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருனே, தைவான் உள்ளிட்ட நாடுகளுக்கும் தென்சீனக் கடலில் உரிமையுள்ள நிலையில், அந்தக் கடல் பகுதி முழுவதுமே தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது. 
இத்தகைய சூழலில், தென்சீனக் கடல் பகுதியில் விதிகள் அடிப்படையிலான பார்வையை இந்தியாவும், வியத்நாமும் கொண்டிருப்பதாக ராம்நாத் கோவிந்த் பேசியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. வியத்நாம் நாடாளுமன்ற அவையில், ராம்நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை உரையாற்றியபோது இந்தக் கருத்துக்களை முன்வைத்தார். அவர் பேசியதாவது:
வலுவான வர்த்தகம், அரசியல், பொதுமக்களுக்கு இடையிலான பந்தம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் இந்தியாவுக்கும், வியத்நாமுக்கும் இடையே தொடர்பிருக்கிறது.
இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் இருநாடுகளும் பொதுவான இலக்கை கொண்டுள்ளன. அதில் தென்சீனக் கடல்பகுதியும் முக்கியமானதொரு அங்கம். 
இறையாண்மைக்கு மதிப்பளிப்பது, பிராந்திய ஒற்றுமையை கடைப்பிடிப்பது, கட்டுப்பாடற்ற கடல் பயணம், கடலுக்கு மேலே விமானப் பயணம், கட்டுப்பாடற்ற வர்த்தகம் ஆகியவவை குறித்து நாம் பொதுவான பார்வையைக் கொண்டுள்ளோம்.
பிரச்னைகளுக்கு அமைதியான தீர்வை நாம் கோரி வருகிறோம். சர்வதேச சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட விதிமுறைகள் மற்றும் ராஜீய நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு நாம் மதிப்பளித்து வருகிறோம். மேலும், கடல் மேலாண்மை குறித்து ஐ.நா. இயற்றிய விதிமுறைகளையும் இருநாடுகளும் பின்பற்றி வருகின்றன.
இந்தியாவும், வியத்நாமும் பழமையான கடல்சார்ந்த தேசங்கள். இந்திய பசிபிக் பிராந்தியத்தின் வர்த்தகம், பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை ஆகியவற்றில் நாமும் பங்கு வகிக்கிறோம். எல்லாவற்றையும் விட, இந்தத் துறைகளில் நாம் ஒரே மாதிரியான கருத்துக்களை கொண்டுள்ளோம். 
நட்பு நாடுகள் தொடர்பில் இந்தியா கடைப்பிடிக்கும் ஒத்துழைப்பு முறை என்பது அவர்களுக்கான விருப்பத் தேர்வுகளையும், வாய்ப்புகளையும் வழங்குவதாக இருக்கும். அதாவது, இந்தியா ஒருவழி சாலையை திறப்பதில்லை. மாறாக பலவழி கொண்ட சாலைகளை திறக்கிறது.
மகாத்மா காந்தி, வியத்நாமின் ஹோ சி மின் போன்றவர்கள் நாம் சார்ந்த தேசங்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த ஆசிய கண்டத்துக்கும், சர்வதேச சமுதாயத்துக்கும் தொடர்ந்து உந்துசக்தியாக இருப்பவர்கள். இனி வரும் ஆண்டு, அந்த தலைவர்களுக்கு இடையே மீண்டும் ஒரு பிணைப்பை ஏற்படுத்துவதாகவும், இரு நாடுகளையும் ஒற்றுமைப்படுத்துவதாகவும் அமையும் என்றார் கோவிந்த். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/21/w600X390/ramnath.jpg வியத்நாம் பிரதமர் நிகுயென் ஸுவான் புக்கை, அந்நாட்டுத் தலைநகர் ஹனோய் நகரில் உள்ள அரசு இல்லத்தில் சந்தித்துப் பேசிய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த். http://www.dinamani.com/india/2018/nov/21/தென்சீன-கடல்பகுதியில்-இந்தியாவும்-வியத்நாமும்-விதிகளை-கடைப்பிடிக்கின்றன-ராம்நாத்-கோவிந்த்-3042403.html
3042400 இந்தியா சபரிமலை: ஹிந்து அமைப்புகள் மீது கேரள முதல்வர் குற்றச்சாட்டு DIN DIN Wednesday, November 21, 2018 01:32 AM +0530
அரசியல் ஆதாயங்களுக்காக, சபரிமலை விவகாரத்தை ஹிந்து அமைப்புகளும் பாஜகவும் தவறாக பயன்படுத்துகின்றன என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு கர சேவகர்களை அனுப்பி, பிரச்னையை உருவாக்கி, கோயிலைக் கைப்பற்ற ஹிந்து அமைப்புகளும் பாஜகவும் முயற்சிக்கின்றன. ஐயப்பன் கோயிலை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்.
சபரிமலை விவகாரம், பாஜகவுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை பேசியுள்ளார். இதன் மூலம் அவர்களது உண்மையான நோக்கம் தெளிவாகிறது. 
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதற்கு காங்கிரஸின் தேசிய தலைமை விரும்புகிறது. ஆனால், மாநிலத் தலைவர்களோ அதற்கு மாறாக செயல்படுகின்றனர். ஆர்எஸ்எஸ் மற்றும் இதர ஹிந்து அமைப்புகளின் அரசியலுக்கு உதவும் வகையில் மாநில காங்கிரஸ் தலைவர்களின் செயல்பாடு உள்ளது என்றார் அவர்.
மேலும், சபரிமலை கோயிலில் கடந்த திங்கள்கிழமை அதிகாலை தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக 69 பேர் கைது செய்யப்பட்டது குறித்து பினராயி விஜயன் கூறியதாவது:
சபரிமலை, வன்முறை களமாக மாறுவதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். கோயில் வளாகத்தில் வன்முறையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுப்பதில் சமரசத்துக்கு இடமளிக்கமாட்டோம். அதேவேளையில், தரிசனத்துக்காக வரும் பக்தர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றார் அவர்.
காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்கு: இதனிடையே, சபரிமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தடை உத்தரவுகளை திரும்பப் பெற வலியுறுத்தி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) தலைவர்களும் தொண்டர்களும், பம்பை மற்றும் நிலக்கல் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, தடை உத்தரவுகளை மீறியதாக அவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். 
போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்: சபரிமலையில் காவல்துறையினரின் ஆதிக்கத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள மாநில பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை, சபரிமலை கோயிலை சீர்குலைக்க முயலும் மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி அரசுக்கு எதிராக போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்றார். மேலும், மத்திய அமைச்சர்களையும், பாஜக எம்.பி.க்களையும் அடுத்தடுத்து சபரிமலை கோயிலுக்கு அனுப்புவதற்கு, பாஜக திட்டமிட்டுள்ளது.
மனித உரிமை ஆணையக் குழு ஆய்வு: இதனிடையே, சபரிமலையில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என்பது குறித்து, மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் அந்தோணி டொமினிக் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
8 பேரிடம் விசாரணை
மண்டல பூஜைகளுக்காக சபரிமலை கோயில் கடந்த 16-ஆம் தேதி திறக்கப்பட்ட நிலையில், பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கோயில் வளாகத்தில் பிரச்னை ஏற்படுத்தும் திட்டத்துடன் வந்துள்ளதாக கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை இரவு 8 பேரை தடுப்பு காவலில் வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/26/w600X390/pinarayi.jpg http://www.dinamani.com/india/2018/nov/21/சபரிமலை-ஹிந்து-அமைப்புகள்-மீது-கேரள-முதல்வர்-குற்றச்சாட்டு-3042400.html
3042402 இந்தியா சபரிமலை விவகாரம்: கேரள அரசு மீது அமித் ஷா குற்றச்சாட்டு DIN DIN Wednesday, November 21, 2018 01:31 AM +0530
சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரத்தில் கேரள மாநில இடதுசாரி அரசின் செயல்பாடுகள் கடும் அதிருப்தி அளிப்பதாக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிறைக் கைதிகளைப் போல நடத்தப்படுகின்றனர் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோயிலுக்குச் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து ஐயப்பன் கோயிலில் திங்கள்கிழமை பக்தர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, 69 பேரை போலீஸார் கைது செய்தனர். கோயில் வளாகத்தில் பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு போலீஸாரால் கைது செய்யப்படுவது ஐயப்பன் கோயில் வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.
பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் திட்டமிட்டே இதுபோன்ற போராட்டங்களைத் தூண்டிவிடுவதாக கேரள மாநில இடதுசாரி கூட்டணி அரசு குற்றம்சாட்டியுள்ளது. இந்த விவகாரத்தால் கேரள மாநிலம் முழுவதுமே பதற்றமான சூழ்நிலை உள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக சுட்டுரையில் (டுவிட்டர்) பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பதிவிட்டுள்ளார். அதில், ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் குப்பைத் தொட்டிகளுக்கு அருகிலும், விலங்குகளின் கழிவுகள் கொட்டப்படும் பகுதிகளிலும் தங்க வேண்டிய அவல நிலை உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. ஐயப்ப பக்தர்களை குலாக் ( சோவியத் யூனியனின் ஜோசப் ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் இருந்த கட்டாயத் தொழிலாளர்கள் சிறை) கைதிகளைப் போல நடத்த முடியாது என்பதை கேரள முதல்வர் பினராயி விஜயன் உணர வேண்டும். மக்களின் நம்பிக்கையையும், பக்தியையும் சிதைக்கும் முயற்சியில் கேரள அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு எதிராகவும், பக்தர்களை சங்கடப்படுத்தும் நோக்குடனும் கேரள மாநில இடதுசாரி அரசு எடுக்கும் நடவடிக்கைகளை பாஜக கண்டிக்கிறது. இந்த விஷயத்தில் பாஜக ஐயப்ப பக்தர்களுக்கு துணைநிற்கும் என்று அமித் ஷா கூறியுள்ளார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/28/w600X390/amithsha.jpg http://www.dinamani.com/india/2018/nov/21/சபரிமலை-விவகாரம்-கேரள-அரசு-மீது-அமித்-ஷா-குற்றச்சாட்டு-3042402.html
3042401 இந்தியா பிகார்: தலைமறைவாக இருந்த முன்னாள் பெண் அமைச்சர் நீதிமன்றத்தில் சரண்: டிச.1 வரை காவலில் வைக்க உத்தரவு DIN DIN Wednesday, November 21, 2018 01:30 AM +0530 பிகார் மாநில முன்னாள் பெண் அமைச்சர் மஞ்சு வர்மா, தனது வீட்டில் ஆயுதங்கள் வைத்திருந்த வழக்கில் தலைமறைவாக இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரை டிசம்பர் 1-ஆம் தேதி வரை காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
பிகார் மாநிலம் முசாஃபர்பூர் காப்பகத்தில் இருந்த சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில், அமைச்சராக இருந்த மஞ்சு வர்மாவின் கணவர் சந்திரசேகர் வர்மாவுக்கு தொடர்புடையதாக கூறப்பட்டதை அடுத்து தனது அமைச்சர் பதவியை மஞ்சு ராஜிநாமா செய்தார். அந்த வழக்கு தொடர்பாக அவர்களது வீட்டில் சிபிஐ சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் வீட்டில் இருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. அதையடுத்து அவர்கள் இருவர் மீதும் ஆயுதங்கள் வைத்திருந்த குற்றத்துக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதையடுத்து அவரது கணவர் சந்திரசேகர் அக்டோபர் 29-ஆம் தேதி அந்த வழக்கில் சரணடைந்தார். எனினும் மஞ்சு வர்மா அந்த வழக்கில் ஆஜராகாமல் தப்பித்து வந்த நிலையில், முசாஃபர்பூர் வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம், ஆயுதங்கள் வைத்திருந்த மஞ்சு வர்மாவை கைது செய்யாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியது. மேலும், அவரை உடனடியாக கைது செய்யாவிட்டால் பிகார் மாநில காவல் துறை தலைமை அதிகாரி(டிஜிபி) நவம்பர் 27-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதையடுத்து மஞ்சு வர்மாவை தலைமறைவானவர் என்று அறிவிக்கும்படி பெகுசராய் நீதிமன்றத்தில் காவல் துறையினர் மனு தாக்கல் செய்தனர். 
இந்நிலையில், அந்த வழக்கில் மஞ்சு வர்மா செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிமன்றத்துக்கு வந்த அவர் பலமுறை மயக்கமடைந்தார். மருத்துவ சிசிச்சைக்கு பின்பு அவர் நீதிபதி பிரபாத் திரிவேதி முன்பு ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, மஞ்சு வர்மாவை டிசம்பர் 1-ஆம் தேதி வரை காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார். இதனிடையே, தங்களது கட்சியின் அமைச்சர் குற்றம் செய்ததால் அவரை பதவி விலக்கினோம் என்றும், மஞ்சு வர்மா நீதிமன்றத்தில் ஆஜரானதால் கட்சியில் குற்றவாளிகளை நாங்கள் ஆதரிக்கவில்லை என்பது நிரூபணமாகிறது என்றும் மாநிலத்தை ஆளும் ஜக்கிய ஜனதா தள அரசு தெரிவித்தது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/21/w600X390/manjuvarma.jpg http://www.dinamani.com/india/2018/nov/21/பிகார்-தலைமறைவாக-இருந்த-முன்னாள்-பெண்-அமைச்சர்-நீதிமன்றத்தில்-சரண்-டிச1-வரை-காவலில்-வைக்க-உத்தரவு-3042401.html
3042399 இந்தியா குடிநீர், சுகாதாரப் பணிகளுக்கு ரூ.74 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி DIN DIN Wednesday, November 21, 2018 01:28 AM +0530
குடிநீர் திட்டப்பணிகள், சுகாதார துப்புரவுப் பணிகளை மேம்படுத்த மத்திய அரசு ரூ.74 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி செவ்வாய்கிழமை தெரிவித்தார். 
தில்லியில் நடைபெற்ற தேசிய குடிநீர் மற்றும் சுகாதார துப்புரவு தூய்மைப்பணிகள் தொடர்பான மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் ஹர்தீப் சிங் புரி பேசியதாவது: நாடு முழுவதும் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.74 ஆயிரம் கோடி மதிப்பில் 2,400 புதிய திட்டங்களான குடிநீர் விநியோக விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளவும், கழிவுநீர் சாக்கடை மேம்பாட்டுப்பணிகளை 2015ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
மத்திய அரசு குடிநீர் மற்றும் சுகாதார துப்புரவு தூய்மைப்பணிகளை மேம்படுத்த புதிய திட்டங்களை வகுப்பதிலும், மேம்படுத்துவதிலும், தூய்மைப்பணிகளுக்கான புதிய கருவிகளை கண்டறிவதற்கும் போதிய ஊக்கம் அளித்து வருகிறது. சுகாதாரப்பணிகள் மட்டுமின்றி இதரத் துறைகளிலும் நம் நாட்டின் இளைஞர்களும், தொழில் முனைவோர்களும் புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்து, அவற்றை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ள முன்வர வேண்டும் என்று அவர் தெரிவித்தார். 
அம்ரூத் திட்டம் கடந்த 2015ஆம் ஆண்டில் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. வலுவான கழிவுநீர் கட்டமைப்பை உறுதி செய்யவும், நகர்ப்புற பகுதியில் குடிநீர் திட்டப்பணிகளை மேம்படுத்துவதற்காக இத்திட்டம் தொடங்கப்பட்டது. 
 

]]>
http://www.dinamani.com/india/2018/nov/21/குடிநீர்-சுகாதாரப்-பணிகளுக்கு-ரூ74-ஆயிரம்-கோடி-ஒதுக்கீடு-மத்திய-அமைச்சர்-ஹர்தீப்-சிங்-புரி-3042399.html
3042398 இந்தியா இறக்குமதி வரி அதிகரிப்பு: உலக வர்த்தக அமைப்பிடம் அமெரிக்காவுக்கு எதிராக இந்தியா முறையீடு DIN DIN Wednesday, November 21, 2018 01:27 AM +0530
உருக்கு, அலுமினியம் மீதான இறக்குமதி வரியை அமெரிக்கா அதிகரித்திருப்பதற்கு எதிராக உலக வர்த்தக அமைப்பிடம் இந்தியா முறையீடு செய்துள்ளது.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு உருக்கு, அலுமினியம் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆண்டொன்றுக்கு 1.6 பில்லியன் டாலர் மதிப்புக்கு அமெரிக்காவுக்கு இந்தியாவில் இருந்து உருக்கு, அலுமினியம் ஏற்றுமதி செய்யப்படுவதாக புள்ளி
விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உருக்கு, அலுமினியம் மீதான இறக்குமதி வரியை முறையே 25 சதவீதமாகவும், 10 சதவீதமாகவும் அமெரிக்கா அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாதாம், வால்நட், பருப்பு வகைகள், இரும்பு, உருக்கு பொருள்கள் மீதான சுங்க வரியை அதிகரிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இந்த முடிவு, வரும் டிசம்பர் மாதம் 17ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
இந்நிலையில், உருக்கு, அலுமினியம் மீது அமெரிக்கா இறக்குமதி வரியை அதிகரித்திருப்பதற்கு எதிராக உலக வர்த்தக அமைப்பிடம் இந்தியா முறையீடு செய்துள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்ய உயர்மட்ட குழு ஒன்றை அமைக்கும்படி இந்தியா கேட்டு கொண்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், வர்த்தகம் தொடர்பான பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதுதான் முதல் வழியாகும். இதில் தீர்வு எட்டப்படாதபோது, சம்பந்தப்பட்ட நாடு, உலக வர்த்தக அமைப்பின் பிரச்னை தீர்வு குழுவிடம் ஆய்வு செய்ய முறையீடு செய்யும். அதேபோல், இந்தியா-அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தையில் வர்த்தக விவகாரத்துக்கு தீர்வு எட்டப்படவில்லை. இதனாலேயே, உலக வர்த்தக அமைப்பிடம் இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கும்படி இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது என்றார்.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஒட்டுமொத்தமாக கடந்த 2017-18ஆம் நிதியாண்டில் 48 பில்லியன் டாலர் மதிப்புக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு 26.7 பில்லியன் டாலர் மதிப்புக்கு மட்டுமே இறக்குமதி நடைபெற்றுள்ளது. அதாவது, இருநாடுகளிடையேயான வர்த்தகமானது, இந்தியாவுக்கு சாதகமாக உள்ளது. இருப்பினும், இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தகம் தொடர்பாக பல்வேறு பிரச்னைகள் நிலவுகின்றன. இதுதொடர்பாக உலக வர்த்தக அமைப்பிடம் இருநாடுகளும் ஒன்றின் மீது ஒன்று புகார் 
தெரிவித்துள்ளன.
 

]]>
http://www.dinamani.com/india/2018/nov/21/இறக்குமதி-வரி-அதிகரிப்பு-உலக-வர்த்தக-அமைப்பிடம்-அமெரிக்காவுக்கு-எதிராக-இந்தியா-முறையீடு-3042398.html
3042397 இந்தியா இந்திய கடற்படைக்கு இரு போர்க்கப்பல்கள்: ரஷியாவுடன் ரூ.3, 572 கோடி ஒப்பந்தம் DIN DIN Wednesday, November 21, 2018 01:27 AM +0530
இந்திய கடற்படைக்கு 2 போர்க்கப்பல்களை கட்டுவதற்காக, ரஷியாவுடன் ரூ. 3, 572 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை இந்தியா செவ்வாய்க்கிழமை மேற்கொண்டுள்ளது.
ரஷியாவுடன் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் மேற்கொண்டால், அமெரிக்காவின் பொருளாதார தடையை சந்திக்க நேரிடும் என்று அந்நாட்டு அதிபர் டிரம்பின் எச்சரிக்கையும் மீறி இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
2023-ஆம் ஆண்டு இரு போர்கப்பல்களை இந்தியாவுக்கு வழங்கும் வகையில், ஏற்கெனவே ரூ. 7, 000 கோடி மதிப்பில் இரு நாடுகளும் ஒப்பந்தம் மேற்கொண்டன. இந்நிலையில் புதிதாக போர்கப்பல்கள் கட்டும் ஒப்பந்தம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், இரு போர்க்கப்பல்களை தயாரிக்கும் வகையில் ரஷியாவின் அரசு கப்பல் கட்டும் நிறுவனத்துடன்(ரோசோபோரான்) இந்திய பொதுத் துறை நிறுவனமான கோவா கப்பல் கட்டும் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், கப்பல் கட்டுவதற்கு தேவையான தொழில்நுட்பங்கள், வடிவமைப்பு மற்றும் சில உபகரணங்களை ரஷியா வழங்க உள்ளது. அனைத்து உயர்ரக நவீன ஏவுகணைகளையும், மற்ற ஆயுதங்களையும் தாங்கும் வகையில் இந்த போர்க்கப்பல்கள் கட்டப்பட உள்ளன. கப்பல் கட்டும் பணி கோவாவில் 2020-ஆம் ஆண்டு தொடங்கப்பட உள்ளது. 2026-ஆம் ஆண்டு முதலில் ஒரு கப்பல் நாட்டுக்கு வழங்கப்படும். அதையடுத்து 2027-ஆம் ஆண்டு மற்றொரு கப்பலும் வழங்கப்படும் என்றனர்.
இதனிடையே, குறுகிய தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் வகையிலான ஏவுகணைகளை கொள்முதல் செய்வதற்கான இந்திய ராணுவத்தின் ஒப்பந்தம் ரஷியாவின் பாதுகாப்பு நிறுவனம் ரோசோபோரானுக்கு திங்கள்கிழமை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
முன்னதாக, 6 வாரங்களுக்கு முன்பு எஸ்-400 ரக ஏவுகணைகளை ரஷியாவிடம் இருந்து வாங்குவதற்காக ரூ. 40 ஆயிரம் கோடி மதிப்பில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
 

]]>
http://www.dinamani.com/india/2018/nov/21/இந்திய-கடற்படைக்கு-இரு-போர்க்கப்பல்கள்-ரஷியாவுடன்-ரூ3-572-கோடி-ஒப்பந்தம்-3042397.html
3042396 இந்தியா மிஸோரத்தில் கிலோ அரிசி ஒரு ரூபாய்: தேர்தல் அறிக்கையில் பாஜக வாக்குறுதி DIN DIN Wednesday, November 21, 2018 01:26 AM +0530
மிஸோரம் மாநிலத்தில் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும் என்று தனது தேர்தல் வாக்குறுதியில் பாஜக தெரிவித்துள்ளது.
40 தொகுதிகளைக் கொண்ட மிஸோரம் சட்டப்பேரவைக்கான தேர்தல் வரும் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கையை அய்ஸாலிலுள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் ராம் மாதவ் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மாநிலத்தில் வீடு இல்லாத குடும்பங்களுக்கு, வீடு கட்டித் தரப்படும். போக்குவரத்து இடையூறு இல்லாத தலைநகராக அய்ஸால் அடுத்த 3 ஆண்டுகளில் உருவாக்கப்படும். மாநிலம் முழுவதும் குழிகள் இல்லாத சாலைகள் 6 மாதங்களுக்குள் அமைக்கப்படும்.
மாநிலத்தின் அலுவல் மொழியான மிஸோவை அரசியலமைப்பின் 8-ஆவது பட்டியலில் இணைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாநிலத்தில் 2 மருத்துவக் கல்லூரிகள், 3 பொறியியல் கல்லூரிகள், 3 செவிலியர் பயிற்சிக் கல்லூரிகள் அமைக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் 50,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
வர்த்தகம், சுற்றுலா ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் அய்ஸால் வழியாக மியான்மர் மற்றும் வங்கதேச நாடுகளை இணைக்கும் வகையில் நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் கால்பந்து அரங்கங்கள் அமைக்கப்படும். சுற்றுலாவை மேம்படுத்த சுற்றுச்சூழல் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

]]>
http://www.dinamani.com/india/2018/nov/21/மிஸோரத்தில்-கிலோ-அரிசி-ஒரு-ரூபாய்-தேர்தல்-அறிக்கையில்-பாஜக-வாக்குறுதி-3042396.html
3042395 இந்தியா சத்தீஸ்கர்: என்கவுன்ட்டரில் பெண் நக்ஸல் சுட்டுக்கொலை DIN DIN Wednesday, November 21, 2018 01:20 AM +0530
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் பெண் நக்ஸல் தீவிரவாதி ஒருவர் செவ்வாய்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். 
ராய்ப்பூரில் இருந்து 500 கி.மீ. தொலைவில் உள்ள சுக்மா மாவட்டம் ஃபுல்பாஹ்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புர்த்பாரா கிராமத்தில் நக்ஸல் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து செவ்வாய்கிழமை மதியம் அப்பகுதியில் தேடுதல் பணியின் போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக நக்ஸல் தடுப்புப்பிரிவு டி.ஐ.ஜி. சுந்தர்ராஜ் தெரிவித்தார். 
இதுகுறித்து மேலும் அவர் பிடிஐ., செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாநில சிறப்பு அதிரடிப்படை, மாவட்ட ரிசர்வ் படையும் ஒருங்கிணைந்து புர்த்பாரா வனப்பகுதியில் நக்ஸல் தீவிரவாதிகளுக்கு எதிராக வனப்பகுதியை நோக்கி முன்னேறிச் சென்றனர். அப்போது, நக்ஸல்கள் பாதுகாப்புப் படையினரை நோக்கி சுடத் தொடங்கினர். நீண்ட நேர துப்பாக்கிச்சண்டைக்கு பிறகு தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இச்சம்பவத்தில் ஒரு பெண் நக்ஸலைட் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். 
விசாரணையில் அந்தப் பெண் படúஸத்தியில் இயங்கி வரும் உள்ளூர் மாவோயிஸ்ட் குழுவை சேர்ந்தவர் என்பதும், அவரது பெயர் ஹேம்லா அய்தி என்பதும் தெரிய வந்தது. 
அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. நக்ஸல் தீவிரவாதிகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என டிஐஜி தெரிவித்தார். 
இந்நிலையில், சுக்மா மாவட்டம் புல்பாக்டி பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில், நக்ஸல் அமைப்பின் கேர்லப்பால் பகுதிக்குழுவின் துணைக் கமாண்டர் சிங்கா என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
 

]]>
http://www.dinamani.com/india/2018/nov/21/சத்தீஸ்கர்-என்கவுன்ட்டரில்-பெண்-நக்ஸல்-சுட்டுக்கொலை-3042395.html
3042394 இந்தியா கேரள அரசைக் கலைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்: வி.எச்.பி. திட்டம் DIN DIN Wednesday, November 21, 2018 01:19 AM +0530
ஐயப்ப பக்தர்கள் மீது கேரள அரசு தொடர்ந்து அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டால், அந்த அரசை உடனடியாகக் கலைக்கக் கோரி நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று விஷ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி.) தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் இணைப் பொதுச் செயலர் சுரேந்திரா ஜெயின் தில்லியில் செய்தியாளர்களுக்கு செவ்வாய்கிழமை அளித்த பேட்டி: கேரளத்தில் தற்போது மிகவும் மோசமான சூழல் நிலவுகிறது. முஸ்லிம் கொடுங்கோல் மன்னர்கள் பாபர், தைமூர் போல கேரள முதல்வர் பினராயி விஜயன் நடந்து கொள்கிறார். பல நாள்கள் கடும் விரதமிருந்து ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்கள் மீது காவல் துறையை ஏவி விட்டு கேரள அரசு மிக மோசமான முறையில் தாக்குதல் நடத்துகிறது.
ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கையை சிதைப்பதாக கேரள முதல்வர் சபதம் எடுத்துள்ளார். ஐயப்ப பக்தர்களுக்கு எவ்வித வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. காஷ்மீரைப் போல கேரள மாநிலத்தை மாற்ற கம்யூனிஸ்ட்டுகள் முயற்சிக்கின்றனர். ஆனால், அது பலிக்காது. கேரளத்தில், இந்நிலை தொடர்ந்தால், மக்களே கேரள அரசைக் கலைக்குமாறு மத்திய அரசைக் கோரும் நிலை உருவாகும். ஐயப்ப பக்தர்கள் மீது தாக்குதல் நடவடிக்கை தொடர்ந்தால், கேரள அரசைக் கலைக்குமாறு கோரி நாடு தழுவிய அளவில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். மேலும், அயோத்தியில் மிக விரைவில் ராமர் கோயில் கட்டப்படும் என்றார் அவர்.
 

]]>
http://www.dinamani.com/india/2018/nov/21/கேரள-அரசைக்-கலைக்கக்-கோரி-ஆர்ப்பாட்டம்-விஎச்பி-திட்டம்-3042394.html
3042393 இந்தியா 1398 விவசாயிகளின் ரூ.4.5 கோடி கடனை அடைத்த அமிதாப் பச்சன் DIN DIN Wednesday, November 21, 2018 01:18 AM +0530
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 1398 விவசாயிகளின் கடனை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அடைத்துள்ளார். அவரின் இந்த உதவிக்காக பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
தாம் பிறந்த மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் கடன் பிரச்னையால் கஷ்டப்படும் விவசாயிகளின் துன்பத்தைப் போக்கும் வகையில், அமிதாப் பச்சன் செய்துள்ள உதவி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
இதுதொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில்,துன்பத்தில் இருக்கும் விவசாயிகளின் இன்னலை போக்கியதில் மகிழ்ச்சி. ஆசைப்பட்டதை செய்து முடித்து விட்டதால் மனதில் அமைதி குடி கொண்டுள்ளது என்று பதிவிட்டிருந்தார்.
1398 விவசாயிகளின் ரூ. 4. 5 கோடி கடனை அமிதாப் பச்சன் அடைத்துள்ளார். அதற்கான வங்கி ஆவணத்தைப் பெற்றுக் கொள்ள 70 விவசாயிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் மும்பை வருவதற்கு ரயிலில் முன்பதிவு செய்து தந்துள்ளார்.
முன்னதாக, மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 350 விவசாயிகளின் கடனை அமிதாப் பச்சன் அடைத்தது குறிப்பிடத்தக்கது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/21/w600X390/Amithap.jpg http://www.dinamani.com/india/2018/nov/21/1398-விவசாயிகளின்-ரூ45-கோடி-கடனை-அடைத்த-அமிதாப்-பச்சன்-3042393.html
3042392 இந்தியா பான் அட்டை பெற தந்தை பெயர் இனி கட்டாயமில்லை DIN DIN Wednesday, November 21, 2018 01:18 AM +0530
பான் அட்டைக்கான விண்ணப்பத்தில் தந்தையின் பெயரைக் குறிப்பிடுவது இனி கட்டாயமில்லை என்று வருமான வரித் துறை செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. பான் அட்டை கோரி விண்ணப்பிப்பவர் தாயால் மட்டும் வளர்க்கப்படுபவராக இருந்தால், அவர்கள் தந்தையின் பெயரைக் குறிப்பிட விரும்ப மாட்டார்கள். எனவே, இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மத்திய நேரடி வரிகள் வாரியம் இது தொடர்பான விதிகளில் திருத்தம் மேற்கொண்டு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி பான் அட்டைக்கான விண்ணப்பப் படிவத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் தாயால் வளர்க்கப்படுபவர் என்றால், அவர் தனது தாயின் பெயரை மட்டும் பான் அட்டைக்கான விண்ணப்பத்தில் பதிவு செய்யலாம். தந்தையின் பெயரைத் தெரிவிக்க வேண்டிய தேவையில்லை. இந்தப் புதிய விதி வரும் டிசம்பர் 5-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஏற்கெனவே இருந்த விதிகளின்படி பான் அட்டை பெற தந்தையின் பெயரைத் தெரிவிப்பது கட்டாயமாக இருந்தது.
நாட்டில் பெண்களின் உரிமையைக் காப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒரு முக்கிய நடவடிக்கையாகவும் இது கருதப்படுகிறது. முன்னதாக, பான் அட்டையில் தங்கள் தந்தை பெயரை தெரிவிக்க விரும்பாத பலர் இது தொடர்பாக வருமான வரித் துறைக்கு தங்கள் தரப்பு கருத்துகளை தெரிவித்து வந்தனர். தந்தையால் கைவிடப்பட்டு தாயால் மட்டுமே வளர்க்கப்படும் தங்களுக்கு, தாயின் பெயரை மட்டும் பதிவு செய்து கொள்ள உரிமை வேண்டும் என்று அவர்கள் கோரி இருந்தனர்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/22/w600X390/pancard.jpg http://www.dinamani.com/india/2018/nov/21/பான்-அட்டை-பெற-தந்தை-பெயர்-இனி-கட்டாயமில்லை-3042392.html
3042391 இந்தியா எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி குண்டு வீச்சு: 2 வீரர்கள் காயம் DIN DIN Wednesday, November 21, 2018 01:17 AM +0530
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய குண்டு வீச்சில் இரு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் கூறியதாவது: பூஞ்ச் மாவட்டத்தின் ஃபிக்வார் மற்றும் மால்டி எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறியரக குண்டு மற்றும் ஆயுதங்களைக் கொண்டு இந்திய ராணுவத்தினர் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார்.
இதே போன்று ரஜெளரி மாவட்டத்தின் நவ்சேரா பகுதியிலும் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தியதால், மாநிலத்தின் பல இடங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மால்டி, கர்மாரா உள்ளிட்ட பல பகுதிகளில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
 

]]>
http://www.dinamani.com/india/2018/nov/21/எல்லையில்-பாகிஸ்தான்-அத்துமீறி-குண்டு-வீச்சு-2-வீரர்கள்-காயம்-3042391.html
3042389 இந்தியா ஜம்மு-காஷ்மீர்: 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை DIN DIN Wednesday, November 21, 2018 01:13 AM +0530
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் ராஜேஷ் காலியா கூறியதாவது:
சோபியான் மாவட்டத்தின் நதிகாம் பகுதியில் பயங்கரவாதிகள் மறைந்திருப்பதாக செவ்வாய்க்கிழமை காலை பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் வந்தது. அதையடுத்து அந்த பகுதியை சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினரும் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த மோதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இரு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். அந்த பகுதியில் தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது என்றார்.
 

]]>
http://www.dinamani.com/india/2018/nov/21/ஜம்மு-காஷ்மீர்-4-பயங்கரவாதிகள்-சுட்டுக்-கொலை-3042389.html
3042388 இந்தியா வெடிபொருள் சேமிப்புக் கிடங்கில் விபத்து: 6 பேர் உயிரிழப்பு DIN DIN Wednesday, November 21, 2018 01:12 AM +0530
மகாராஷ்டிர மாநிலம், வார்தா மாவட்டத்திலுள்ள அரசு வெடிபொருள்கள் கிடங்கு ஒன்றில், செவ்வாய்க்கிழமை திடீரென வெடிபொருள்கள் வெடித்ததில் அங்குப் பணியாற்றிக் கொண்டிருந்த 6 பேர் உயிரிழந்தனர்.
இது குறித்து, காவல் துறையினர் கூறியதாவது:
வார்தா மாவட்டத்தின் புல்கான் பகுதியில் மத்திய வெடிபொருள்கள் சேமிப்புக் கிடங்கு உள்ளது. அங்கு செவ்வாய்க்கிழமை காலை 7.10 மணியளவில் வெடிபொருள்களை இறக்கி வைக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். 
அப்போது, எதிர்பாராத விதமாக சில வெடிபொருள்கள் வெடித்ததில், 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த 12 பேர் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுள் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். 3 பேர் அதிக காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6 பேர் சாதாரண காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கிடங்கின் அதிகாரிகளும், காவல் துறையினரும் விபத்து ஏற்பட்ட காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த 2016-ஆம் ஆண்டு இதே சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் 16 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
 

]]>
http://www.dinamani.com/india/2018/nov/21/வெடிபொருள்-சேமிப்புக்-கிடங்கில்-விபத்து-6-பேர்-உயிரிழப்பு-3042388.html
3042387 இந்தியா நடப்பு சாகுபடி பருவத்தில் 1.65 கோடி டன் அரிசி கொள்முதல் DIN DIN Wednesday, November 21, 2018 01:12 AM +0530
நடப்பு சாகுபடி மற்றும் சந்தைப் பருவத்தில் இதுவரை 1.65 கோடி டன் அரிசி கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய உணவுத் துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பருவத்தில் 3.7 கோடி டன் அரிசியை கொள்முதல் செய்ய வேண்டும் என்று அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அடுத்தகட்டமாக மேலும் பல மாநிலங்களில் கொள்முதல் தொடங்க இருப்பதால் இந்த இலக்கைவிட அதிக கொள்முதல் நடைபெறும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கடந்த சாகுபடி பருவத்தில் 3.75 கோடி டன் அரிசியைக் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அப்போது மொத்தம் 3.81 கோடி டன் கொள்முதல் செய்யப்பட்டு இலக்கைவிட கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டது. மாநில அரசின் கொள்முதல் மையங்கள் மற்றும் இந்திய உணவுக் கழகம் சார்பில் இந்த கொள்முதல் நடைபெற்றுள்ளது.
பஞ்சாப், பிகார் மற்றும் கிழக்கு உத்தரப் பிரதேசப் பகுதியில் மழை குறைந்ததால் சாகுபடி பாதிக்கப்பட்டது. எனவே, அந்தப் பகுதிகளில் வழக்கத்தைவிட குறைவாகவே கொள்முதல் இருந்தது. தனியார் நிறுவனங்களுக்கு கொள்முதல் செய்யும் திட்டத்தில் ஆர்வம் குறைவாக இருந்தது.
அதிகபட்சமாக பஞ்சாப் மாநிலத்தில் 1.08 கோடி டன், ஹரியாணாவில் 38.8 லட்சம் டன், தெலங்கானாவில் 9.96 லட்சம் டன், சத்தீஸ்கரில் 3.02 லட்சம் டன், உத்தரகண்டில் 1.71 லட்சம் டன், தமிழ்நாட்டில் 1.10 லட்சம் டன் அரிசி இதுவரை அரசால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திரம், பிகார், கர்நாடகம், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் விரைவில் கொள்முதல் தொடங்க இருக்கிறது. அரிசி கொள்முதலில் 60 சதவீதம் பஞ்சாப், ஹரியாணாவில்தான் நடைபெற்றுள்ளது.
நடப்பு ஆண்டில் அரிசிக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.1,750 என்று அரசு நிர்ணயித்தது. இதில் முதல் வகைக்கு ரூ.1,770 வழங்கப்படுகிறது.
 

]]>
http://www.dinamani.com/india/2018/nov/21/நடப்பு-சாகுபடி-பருவத்தில்-165-கோடி-டன்-அரிசி-கொள்முதல்-3042387.html
3042386 இந்தியா ஒடிஸா: ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 12 பேர் பலி DIN DIN Wednesday, November 21, 2018 01:11 AM +0530
ஒடிஸா மாநிலம், ஜகத்பூர் அருகே மகாநதி ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 12 பேர் பலியாகினர். மேலும் 49 பேர் காயமடைந்தனர்.
தால்சர் பகுதியில் இருந்து கட்டாக்குக்கு தனியார் பேருந்து ஒன்று பயணிகளுடன் செவ்வாய்க்கிழமை சென்றது. ஜகத்பூர் அருகே மகாநதி மீதுள்ள பாலத்தின் மீது வந்தபோது, பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து, ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 12 பேர் பலியாகினர். 49 பேர் காயமடைந்தனர். இந்த விபத்துக்கு ஓட்டுநரே காரணம் எனத் தெரிகிறது. சாலையின் குறுக்கே வந்த மாடு ஒன்றின் மீது மோதாமல் இருக்க பேருந்தை ஓட்டுநர் வேகமாக திருப்பியுள்ளார். 
இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்தின் மீதிருக்கும் தடுப்பு சுவரை உடைத்து கொண்டு, ஆற்றுக்குள் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. ஆற்றில் தண்ணீர் ஓடாததால் வறண்டு கிடந்தது. இதனால் உயிரிழப்பு அதிருஷ்டவசமாக அதிகரிக்கவில்லை.
இந்த விபத்து குறித்த தகவலின்பேரில், ஓடிஸா பேரிடர் மீட்பு அதிரடிப்படையினர், தீயணைப்பு படையினர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து, பேருந்தில் சிக்கியிருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர். விபத்தில் பலியானோருக்கு முதல்வர் நவீன் பட்நாயக் தமது இரங்கலை தெரிவித்து கொண்டுள்ளார்.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/21/w600X390/bus.jpg ஜகத்பூர் அருகே பாலத்தில் இருந்து மகாநதி ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்தில் சிக்கியிருப்போரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள மீட்புக் குழுவினர். http://www.dinamani.com/india/2018/nov/21/ஒடிஸா-ஆற்றில்-பேருந்து-கவிழ்ந்து-12-பேர்-பலி-3042386.html
3042385 இந்தியா டிஆர்எஸ் கட்சியிலிருந்து மூத்த எம்.பி. விலகல் DIN DIN Wednesday, November 21, 2018 01:10 AM +0530
தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சியிலிருந்து மக்களவை மூத்த எம்.பி. கோண்டா விஷ்வேஸ்வர் ரெட்டி விலகியுள்ளார்.
இதுகுறித்து டிஆர்எஸ் கட்சித் தலைவர் சந்திரசேகர் ராவுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
கட்சியின் பல்வேறு நிலைகளிலும் தொடர்ந்து ஏமாற்றங்களை சந்தித்து வந்தேன். அதனால் கட்சியிலிருந்து விலகுவது என்ற கடினமான முடிவை நீண்ட நாள்களுக்கு முன்பே நான் எடுத்தேன். கட்சிக்கு சமூகத்தில் தற்போது ஓரளவு நல்ல பெயர் உள்ளது. அதனால் இப்போதே கட்சியிலிருந்து விலக முடிவு செய்துள்ளேன்.
அதேபோல், மக்களவை எம்.பி. பதவியிலிருந்தும் விலகுவதென்று நான் முடிவெடுத்துள்ளேன் என்று அந்த கடிதத்தில் கோண்டா விஷ்வேஸ்வர் ரெட்டி குறிப்பிட்டுள்ளார்.
அந்த கடிதத்தில், டிஆர்எஸ் கட்சியில் சந்தித்த 5 ஏமாற்றங்களையும் அவர் பட்டியலிட்டுள்ளார்.
செவல்லா மக்களவை தொகுதி எம்.பி.யாக கோண்டா விஷ்வேஸ்வர் ரெட்டி உள்ளார். தெலங்கானா சட்டப் பேரவைக்கு வரும் டிசம்பர் மாதம் 7ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், மூத்த எம்.பி.யான கோண்டா விஷ்வேஸ்வர் ரெட்டி, டிஆர்எஸ் கட்சியிலிருந்து விலகியிருப்பது அரசியல் ரீதியில் முக்கியத்துவம் பெறுகிறது.
 

]]>
http://www.dinamani.com/india/2018/nov/21/டிஆர்எஸ்-கட்சியிலிருந்து-மூத்த-எம்பி-விலகல்-3042385.html
3042384 இந்தியா காஷ்மீரில் என்.சி. ஆதரவுடன் பிடிபி, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி? DIN DIN Wednesday, November 21, 2018 01:10 AM +0530
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தேசிய மாநாட்டு கட்சியின் (என்.சி.) ஆதரவுடன், மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி), காங்கிரஸ் ஆகியன கூட்டணி ஆட்சியமைப்பதற்கு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியிலிருந்த பிடிபி கூட்டணி அரசுக்கு அளித்த ஆதரவை பாஜக கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி திரும்ப பெற்றது. இதனால், பிடிபி கூட்டணி அரசு கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது. மாநில சட்டப்பேரவையை ஆளுநர் சத்யபால் மாலிக் முடக்கி வைத்தார்.
இதனிடையே, ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு வரும் டிசம்பர் மாதம் 19ஆம் தேதியுடன் 6 மாதங்கள் ஆகின்றன. இதன்பின்னர் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த முடியாது என கூறப்படுகிறது.
இதனிடையே, ஜம்மு-காஷ்மீரில் 2 எம்எல்ஏக்களை கொண்ட சஜத் லோனேயின் மக்கள் மாநாட்டு கட்சி தலைமையில் புதிய அரசமைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்தன. இதன்படி, மக்கள் மாநாட்டு கட்சிக்கு இருக்கும் 2 எம்எல்ஏக்கள், பாஜகவின் 25 எம்எல்ஏக்கள் ஆகியோரை சேர்த்தால், மொத்தம் 27 எம்எல்ஏக்களின் பலம் வருகிறது. அதேநேரத்தில், சட்டப்பேரவையில் (மொத்தம் 87) பெரும்பான்மை பலம் பெற 44 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவையாகும். இதற்கு ஏதுவாக, மெஹபூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயக கட்சியிலிருந்து சில எம்எல்ஏக்கள் விலகி, இக்கூட்டணியில் இணையலாம் என செய்திகள் வெளிவந்தன.
இதனிடையே, புதிய அரசமைக்கும் பாஜகவின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் வகையிலும், காஷ்மீரில் மீண்டும் பாஜக ஆதரவு அரசு அமைவதை தடுக்கும் வகையிலும், பிடிபி, காங்கிரஸ், என்.சி. ஆகிய கட்சிகள் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக மற்றொரு தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டப் பேரவையில் பிடிபிக்கு தற்போது 28 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதுதவிர, தேசிய மாநாட்டு கட்சிக்கு 15, காங்கிரஸுக்கு 12 எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்கள் அனைவரின் எண்ணிக்கையையும் சேர்த்தால், மொத்தம் 55 எம்எல்ஏக்கள் வருகிறது. இதன்படி பார்த்தால், ஆட்சியமைக்க தேவைப்படும் எம்எல்ஏக்கள் ஆதரவை விட கூடுதலாகவே இக்கூட்டணிக்கு எம்எல்ஏக்கள் உள்ளனர். இதே கூட்டணி, ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2002-2007ஆம் ஆண்டு வரை ஆட்சியிலிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, புதிய அரசில் இடம்பெறுவதை விரும்பவில்லை என்று தேசிய மாநாட்டு கட்சி தெரிவித்துள்ளது. புதிய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் அக்கட்சி கூறியுள்ளது. 
இந்த திட்டத்தின்படி, ஜம்மு-காஷ்மீரில் புதிய கூட்டணி அரசு அமைந்தால், மெஹபூபா முஃப்தி முதல்வராக பதவியேற்க வாய்ப்பில்லை எனவும், பிடிபியில் உள்ள மூத்த தலைவர் ஒருவர் முதல்வராக பதவியேற்கலாம் எனவும் கூறப்படுகிறது.
 

]]>
http://www.dinamani.com/india/2018/nov/21/காஷ்மீரில்-என்சி-ஆதரவுடன்-பிடிபி-காங்கிரஸ்-கூட்டணி-ஆட்சி-3042384.html
3042383 இந்தியா தில்லியில் பயங்கரவாதி கைது DIN DIN Wednesday, November 21, 2018 01:09 AM +0530
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் காவல்துறை துணை ஆய்வாளர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பு பயங்கரவாதி, தில்லி விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
புல்வாமா மாவட்டத்தில் காவல்துறை துணை ஆய்வாளர் இம்தியாஸ் அகமது மிர் என்பவர் கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் தேதி பயங்கரவாதிகளால் கடத்தி செல்லப்பட்டு சுட்டு கொல்லப்பட்டார். இவரின் கொலையில் தொடர்புடைய ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதி அன்சார் உல் ஹக், பெங்களூரில் இருந்து தில்லிக்கு விமானத்தில் வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், தில்லி விமான நிலையத்துக்கு பெங்களூரில் இருந்து வந்த விமானத்தில் பயணித்த அன்சார் உல் ஹக்கை போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அன்சார் உல் ஹக், மெஹபூபா முஃப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி முன்னாள் உறுப்பினர் ஆவார். 
 

]]>
http://www.dinamani.com/india/2018/nov/21/தில்லியில்-பயங்கரவாதி-கைது-3042383.html
3042382 இந்தியா ராமர் கோயில்: தீர்ப்பு வரும் வரை காத்திருக்க முடியாது- விஷ்வ விதான் சன்ஸ்தான் DIN DIN Wednesday, November 21, 2018 01:09 AM +0530
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை காத்திருக்க முடியாது என்று விஷ்வ விதான் சன்ஸ்தான் தெரிவித்துள்ளது. 
இது தொடர்பாக அதன் தலைவர் சுவாமி ஸ்ரீ ஆனந்த் ஜி மகராஜ் தில்லியில் செவ்வாய்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: எத்தனை தடைகள் வந்தாலும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டியே தீருவோம். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வாழும் இந்துக்கள் இதற்குத் தயார் நிலையில் உள்ளனர். 
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் எங்களது முயற்சியின் முதல்படியாக வரும் டிசம்பர் 1 முதல் 6- ஆம் தேதி வரை அயோத்தியில் அஷ்வமேத யாகம் நடத்தவுள்ளோம். இந்த யாகத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த யோகிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதைத் தொடர்ந்து அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகள் ஆரம்பிக்கப்படும். பல வழக்குகளுக்கு இரவோடு இரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அயோத்தி விவகாரத்தில் மட்டும் தீர்ப்பு வழங்காமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருகிறது. எனவே, இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை காத்திருக்க முடியாது. ராமர் கோயில் கட்டும் பணிகள் உடனடியாக 
தொடங்கப்படும் என்றார் அவர். 

]]>
http://www.dinamani.com/india/2018/nov/21/ராமர்-கோயில்-தீர்ப்பு-வரும்-வரை-காத்திருக்க-முடியாது--விஷ்வ-விதான்-சன்ஸ்தான்-3042382.html
3042381 இந்தியா தில்லியில் விவசாயிகள் நவ.29-இல் மீண்டும் பேரணி DIN DIN Wednesday, November 21, 2018 01:09 AM +0530
விவசாயிகளின் வங்கிக் கடனை தள்ளுபடி செய்யக் கோரியும், விவசாய விளைப்பொருள்களுக்கு கட்டுப்படியாகக் கூடிய விலையை நிர்ணயிக்கக் கோரியும் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரை கூட்ட வலியுறுத்தி நவம்பர் 29-ஆம் தேதி மீண்டும் தில்லியில் பேரணி நடத்த அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்துள்ளது.
பொது விநியோக முறையை விரிவாக்கம் செய்ய வேண்டும். வேலைவாய்ப்புகளை கூடுதலாக உருவாக்க வேண்டும். அனைத்துத் தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை ரூ. 18 ஆயிரத்தை நிர்ணயிக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு எதிரான சட்டத் திருத்தங்களை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி விவசாயிகள் பேரணி நடத்தினர். அவர்களை தில்லி எல்லையிலேயே போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீஸாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் தடியடி நடத்தப்பட்டது. இதையடுத்து, விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது.
இந்நிலையில், நவம்பர் 29 மீண்டும் தில்லியை நோக்கிய பேரணியும், 30-ஆம் தேதி பொதுக்கூட்டமும் நடைபெறும் என அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது. 
இப்பேரணியில் பங்கேற்க 200-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களுக்கும், பாஜக தவிர மற்ற அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/india/2018/nov/21/தில்லியில்-விவசாயிகள்-நவ29-இல்-மீண்டும்-பேரணி-3042381.html
3042380 இந்தியா தில்லி முதல்வர் கேஜரிவால் மீது மிளகாய்ப் பொடி வீச்சு: ஒருவர் கைது DIN DIN Wednesday, November 21, 2018 01:08 AM +0530
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மீது தில்லி தலைமைச் செயலக வளாகத்தில் மிளகாய்ப் பொடி வீசி தாக்குதல் நடந்துள்ளது. இது தொடர்பாக தில்லி நரேலாவைச் சேர்ந்த அனில் குமார் சர்மா (40) என்பவரை தில்லி போலீஸார் கைது செய்துள்ளனர். தில்லியில் பாஜகவுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் இத்தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது தொடர்பாக ஆம் ஆத்மி வட்டாரங்கள் கூறியதாவது: தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்கிழமை வழக்கம் போல தலைமைச் செயலகம் சென்று தனது பணிகளைக் கவனித்தார். மதிய உணவுக்காக வீட்டிற்குப் புறப்பட்டார். அப்போது பார்வையாளர்கள் பகுதியில் காத்திருத்திருந்த ஒரு நபர், கேஜரிவாலைப் பார்த்து தன் குறைகளைக் கூறினார். அதை கேஜரிவாலும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது, கேஜரிவாலின் பாதங்களைத் தொட்டு வணங்கிய அவர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த மிளகாய்ப் பொடியை கேஜரிவாலின் முகத்தை நோக்கி வீசினார். பாக்கெட்டுடன் மிளகாய்ப் பொடியை வீசியதால், கேஜரிவாலின் மூக்குக் கண்ணாடி கீழே விழுந்து உடைந்தது. மிளகாய்ப் பொடி பட்டதால் முகத்திலும் எரிச்சல் ஏற்பட்டது என்றனர்.
இந்நிலையில், இத்தாக்குதல் சம்பவம் தொடர்பான சிசிடிவி கண்காணிப்புக் கேமரா காட்சியை ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளது. அதில், முதல்வரைச் சந்திக்க வந்த நபர், முதல்வரிடம் கோரிக்கை அடங்கிய மனுவை வழங்குகிறார். அதைப் பெற்றுக் கொண்ட முதல்வர் அந்த மனுவை சற்று பின்னே திரும்பி தனது உதவியாளரிடம் வழங்குகிறார். இதற்கிடையே, மனு வழங்கியவர் முதல்வரின் பாதங்களைத் தொட்டு வணங்குகிறார். அதன்பிறகு, திடீரென முதல்வரைத் தாக்குகிறார். அவரைக் காவலர்கள் வளைத்துப் பிடிப்பதாக காட்சிகள் உள்ளன.
நடந்தது என்ன?: போலீஸ் விளக்கம்
கேஜரிவால் மீது மிளகாய்ப் பொடி படவில்லை என்றும், மிளகாய்ப் பொடி அடங்கிய பை தாக்குதல் நடத்தியவரின் பாக்கெட்டில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளதாகவும் தில்லி காவல்துறை கூறியுள்ளது.
இது தொடர்பாக தில்லி காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், செவ்வாய்கிழமை மதியம் 2.25 மணியளவில் அனில் குமார் சர்மா என்பவர் முதல்வர் கேஜரிவாலை சந்திக்க வந்துள்ளார். முதல்வர் தனது அறையை விட்டு வெளியில் வந்த போது, தனது கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வரிடம் வழங்கிவிட்டு, முதல்வரின் பாதங்களைத் தொட்டு வணங்க அவர் முயற்சித்துள்ளார். அப்போது, முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள் அவரைத் தள்ளினார்கள். இந்த இழுபறியில் முதல்வரின் கண்ணாடி கீழே விழுந்து உடைந்துள்ளது. அந்த நபர் கையில் இருந்த பையில் மிளகாய்ப் பொடி அடங்கிய சிறிய பொட்டலம் இருந்தது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/21/w600X390/delhi.JPG தில்லி தலைமைச் செயலகத்தில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் விசாரணை நடத்தும் தில்லி போலீஸார். உள்படம்: கைது செய்யப்பட்ட அனில் குமார் சர்மா. http://www.dinamani.com/india/2018/nov/21/தில்லி-முதல்வர்-கேஜரிவால்-மீது-மிளகாய்ப்-பொடி-வீச்சு-ஒருவர்-கைது-3042380.html
3042379 இந்தியா ஜம்மு-காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தல்: 2-ஆம் கட்டமாக 71 % வாக்குப்பதிவு DIN DIN Wednesday, November 21, 2018 01:07 AM +0530
ஜம்மு-காஷ்மீரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் 71.1 சதவீதம் வாக்குகள் பதிவானதாகவும், பலத்த பாதுகாப்பு காரணமாக அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 
இதுகுறித்து மாநில தலைமை தேர்தல் ஆணையாளர் ஷலீன் கோப்ரா கூறியதாவது: செவ்வாய்க்கிழமை மாநிலம் முழுவதும் இரண்டாம் கட்டமாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 71.1 சதவீதம் வாக்குகள் பதிவானது. இதில் ஜம்மு மண்டலத்தில் 80.4 சதவீதம், காஷ்மீர் மண்டலத்தில் 52.2 சதவீதம் என்ற அளவில் வாக்குகள் பதிவானது. தற்போது குளிர்காலத்தையொட்டி கடுங்குளிர் நிலவி வருவதால் அதிக குளிர் உள்ள மாவட்டங்களான லடாக், கார்கில் மாவட்டங்களில் வாக்குப்பதிவு சற்று பாதிக்கப்பட்டது. கார்கில் மாவட்டத்தில் மைனஸ் 8.8 டிகிரி செல்சியஸ் அளவில் குளிர் நிலவியது. நேரம் செல்ல, செல்ல சற்று குளிர்ச்சி தணிந்து வாக்குப்பதிவில் முன்னேற்றம் ஏற்பட்டது. 
அதேசமயம் ஜம்மு மண்டலத்தில் காலை 8 மணி முதலே சுறுசுறுப்பாக வாக்குகள் பதிவானது. ஜம்மு மற்றும் காஷ்மீர் மண்டலங்களில் தலா 7 மாவட்டம் வீதம் மொத்தமுள்ள 14 மாவட்டங்களிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. 
மாநிலத்திலேயே அதிகளவாக உதம்ப்பூர் மாவட்டத்தில் 83.9 சதவீதமும், வடக்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் குறைந்தளவாக 1 சதவீதமும் வாக்குகள் பதிவானதாக அவர் தெரிவித்தார். 
நவம்பர் 17ஆம் தேதி நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில் மாநிலம் முழுவதும் 74.1 சதவீதம் வாக்குகள் பதிவானது. அடுத்து 3-ஆம் கட்டமாக வரும் 24ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 
ஜம்மு மண்டலத்தில் 1,351 வாக்குச்சாவடிகளிலும், காஷ்மீர் மண்டலத்தில் 828 வாக்குச்சாவடிகள் என மொத்தம் மாநிலம் முழுவதும் 2,179 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் நடத்தை விதிகளை மீறுபவர்கள் குறித்து பொதுமக்கள் எப்போதும் புகார் அளிக்கும் வகையில் மாவட்டந்தோறும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருவதாகவும் தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.
 

]]>
http://www.dinamani.com/india/2018/nov/21/ஜம்மு-காஷ்மீர்-உள்ளாட்சித்-தேர்தல்-2-ஆம்-கட்டமாக-71--வாக்குப்பதிவு-3042379.html
3042378 இந்தியா காஷ்மீர்: ஹுரியத் தலைவர் சுட்டுக்கொலை DIN DIN Wednesday, November 21, 2018 01:06 AM +0530
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் ஹுரியத் பிரிவினைவாத அமைப்பின் மாவட்ட தலைவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். 
சையது அலி ஷா கிலானி தலைமையிலான தாரிக்-ஏ-ஹூரியத் என்ற பிரிவினைவாத அமைப்பின் மாவட்ட தலைவரான ஹஃபீஸþல்லா மிர்ரை அனந்த்நாக் மாவட்டம் அச்சாபல் பகுதியில் அகின்கம் கிராமத்தில் செவ்வாய்கிழமை அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர். 
இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் தான் மிர் விடுதலையானார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

]]>
http://www.dinamani.com/india/2018/nov/21/காஷ்மீர்-ஹுரியத்-தலைவர்-சுட்டுக்கொலை-3042378.html
3042377 இந்தியா உயர் ஜாதியினருக்கு எதிராக டுவிட்டர் சிஇஓ பதாகை: இந்தியாவில் எதிர்ப்பு DIN DIN Wednesday, November 21, 2018 01:06 AM +0530
முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான சுட்டுரை(டுவிட்டர்) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி(சிஇஓ) ஜேக் டோர்ஸி, இந்தியாவின் உயர் ஜாதியினருக்கு எதிரான வாசகம் அடங்கிய பதாகை ஒன்றினை ஏந்திய நிலையில் உள்ள புகைப்படத்துக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
உயர் ஜாதியினரின் ஆதிக்கத்தை ஒழிப்போம் என்ற வாசகம் அடங்கிய பதாகையைப் பிடித்தவாறு டோர்ஸி உள்ள புகைப்படம் செவ்வாய்க்கிழமை சுட்டுரையில் பரவலாக பகிரப்பட்டது. 
இது குறித்து கருத்து தெரிவித்த இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகளுள் ஒருவரான மோகன்தாஸ் பாய் கூறுகையில், சுட்டுரை நிறுவன சிஇஓ-வின் இத்தகைய கருத்துகள் மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கின்றன. 
இது போன்ற நடவடிக்கைகள் இந்தியர்களிடையே பிரிவினைவாதத்தைத் தூண்டுவதாகவும், மக்களிடையே வெறுப்பினை உருவாக்குவதாகவும் அமைந்துள்ளது. 
இது குறித்து, மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
சுட்டுரை நிறுவனம் விளக்கம்: இந்த விவகாரம் குறித்து சுட்டுரை நிறுவனம் அளித்த விளக்கத்தில், கடந்த மாதம் டோர்ஸி இந்தியாவுக்கு வருகை புரிந்தபோது, தலித் பிரிவைச் சேர்ந்த ஒருவரால், இந்தப் பதாகை அவரிடம் வழங்கப்பட்டது. 
அப்போது எடுத்த புகைப்படம் தான் இது. இதற்கும் டோர்ஸிக்கும் எந்தவித நேரடித் தொடர்பும் இல்லை என்று தெரிவித்தது.
எனினும், இந்த விளக்கத்தை ஏற்க மறுத்து, பல்வேறு தரப்பினர் டோர்ஸி-யின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்தனர்.
 

]]>
http://www.dinamani.com/india/2018/nov/21/உயர்-ஜாதியினருக்கு-எதிராக-டுவிட்டர்-சிஇஓ-பதாகை-இந்தியாவில்-எதிர்ப்பு-3042377.html
3042376 இந்தியா மேற்கு வங்க அமைச்சர் பதவி விலகல் DIN DIN Wednesday, November 21, 2018 01:06 AM +0530
மேற்கு வங்க மாநிலத்தின் தீயணைப்பு மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான சோவன் சாட்டர்ஜி அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
இதுதொடர்பாக அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில்,  இதற்கு முன்னரும் 4-5 முறை சோவன் சாட்டர்ஜி ராஜிநாமா கடிதம் அளித்துள்ளார். அவரது தவறுகளை உணர்ந்து பதவியில் தொடர்வார் என்று எதிர்பார்த்தோம். 
ஆனால் இந்த முறை அவரது ராஜிநாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. கொல்கத்தா மேயர் பதவியில் இருந்தும் அவரை விலகுமாறு கூறியுள்ளோம். 
சாட்டர்ஜியின் துறைகள், நகர்ப்புற மேம்பாடு மற்றும் நகராட்சி விவகாரங்கள் துறை அமைச்சர் ஃபிர்ஹாத் ஹக்கீமுக்கு கூடுதல் பொறுப்பாக அளிக்கப்படுகிறது. 
மேயர் பதவி, தேர்ந்தெடுக்கப்படும் பதவி என்பதால் அதுகுறித்து பின்னர் அறிவிக்கப்படும். அதுவரை அந்த மாநகராட்சியின் நிர்வாகப் பொறுப்புகள் அனைத்தும் மாநகராட்சி ஆணையர் கலீல் அகமது வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார்.

]]>
http://www.dinamani.com/india/2018/nov/21/மேற்கு-வங்க-அமைச்சர்-பதவி-விலகல்-3042376.html
3042350 இந்தியா இந்தியக் கடற்படைக்கு  போர்க்கப்பல்கள் தயாரிக்க இந்தியா - ரஷ்யா இடையே ரூ.3570 கோடி ஒப்பந்தம் கையெழுத்து   DIN DIN Tuesday, November 20, 2018 08:36 PM +0530  

புது தில்லி: இந்தியக் கடற்படைக்கு  போர்க்கப்பல்கள் தயாரிக்க இந்தியா - ரஷ்யா இடையே ரூ.3570 கோடி மதிப்பில் ஒப்பந்தம் செவ்வாயன்று கையெழுத்தாகியுள்ளது.  

இந்தியக் கடற்படைக்காக இந்தியாவின் கோவாவிலேயே போர்க்கப்பல்கள் தயாரிக்க இந்தியா - ரஷ்யா இடையே செவ்வாயன்று ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்த ஒப்பந்தமானது பாதுகாப்புத் தளவாடங்கள் தயாரிக்கும் இந்திய பொதுத்துறை நிறுவனமான கோவா ஷிப்யார்ட் லிமிட்டட் (ஜி.எஸ்.எல்) மற்றும் ரஷ்ய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் ரோசோபோரோன் நிறுவனத்திற்கும் இடையே கையெழுத்தாகியுள்ளது.இந்த ஒப்பந்தமானது இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு அடிப்படையின் கீழ் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஒப்பந்தத்தின் கீழ் போர்க்கப்பல்கள் தயாரிக்கத் தேவையான வடிவமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் ஒரு சில முக்கியமான பாகங்களை,  ஜி.எஸ்.எல்லுக்கு ரஷ்ய நிறுவனம் வழங்கும். 

இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய ஜி.எஸ்.எல் நிறுவன தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநரான சேகர் மிட்டல் கூறியதாவது:   

கோவாவில் இரு போர்க்கப்பல்கள் தயாரிப்பதற்கான ரூ.3570 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை ரஷ்யாவுடன் இன்று இறுதி செய்துள்ளோம்.  

அதன்படி இரு போர்கப்பல்கள் தயாரிப்பதற்கான கட்டுமானப் பணிகள் 2020-ஆண்டு துவங்கும். முதல் கப்பலானது 2026-ஆம் ஆண்டிலும், இரண்டாம் கப்பலானது 2027-ஆம்  ஆண்டிலும் கப்பல் படையில் சேர்க்கப்படும். 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  

]]>
india, russia, warship, construction, GSL, agreement, navy, http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/20/w600X390/war_ship.jpg http://www.dinamani.com/india/2018/nov/20/india-russia-sign-500-million-deal-for-construction-of-two-warships-3042350.html
3042348 இந்தியா ராமர் கோவில் கட்டுவோம் என்பது வெற்று வாக்குறுதிதானா?: பாஜகவுக்கு சிவசேனா கேள்வி ANI ANI Tuesday, November 20, 2018 07:01 PM +0530  

மும்பை: ராமர் கோவில் கட்டுவோம் என்பது வெற்று வாக்குறுதிதானா என்று பாரதிய ஜனதா கட்சிக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக செவ்வாயன்று மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது:

ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்பதைப் போல, அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என்பதும் வெற்று வாக்குறுதிதானா? இந்த விஷயத்தைப் பற்றி நாம் பேசும்போதெல்லாம் ராமர் கோவில் கட்டப்பட்டு விடும் என்று நாம் நிஜமாகவே நம்புகிறோம்.

குறிப்பாக இந்த விஷயமானது தேர்தல்கள் வரும்போது மட்டுமே பேசப்படுகிறது; பின்னர் மறக்கப்பட்டு விடுகிறது. 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

முன்னதாக கடந்த மாதம் 18-ஆம் தேதியன்று உத்தவ் தாக்கரே செய்தியாளர்களிடம் பேசும் போது, நவமபர் 25-ஆம் தேதியன்று அயோத்திக்கு செல்லப் போவதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

]]>
ayodhya, ram temple, BJP, shiv sena, uddahv thackery http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/20/w600X390/uddhav_thackarey.jpg http://www.dinamani.com/india/2018/nov/20/is-ram-mandir-promise-also-a-jumla-asks-uddhav-thackeray-3042348.html
3042347 இந்தியா சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிப்பு PTI PTI Tuesday, November 20, 2018 05:48 PM +0530
புது தில்லி: 1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான வழக்கில் 2 பேரைக் கொலை செய்த யாஷ்பால் சிங்கக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரம் தொடர்பான வழக்குகளில், அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.

தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அஜய் பாண்டே இன்று அளித்த தண்டனை விவரத்தில், மற்றொரு குற்றவாளியான நரேஷ் ஷெராவத்துக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

தில்லி நீதிமன்றத்துக்குக் குற்றவாளிகள் அழைத்து வருவதில் பாதுகாப்புச் சிக்கல் ஏற்படும் என்பதால், நீதிபதி திஹார் சிறைக்குச் சென்று தண்டனை விவரங்களை அளித்தார்.

நவம்பர் 14ம் தேதி இந்த வழக்கு விசாரணை முடிந்து சீக்கியக் கலவரத்தில் 2 பேரைக் கொலை செய்த வழக்கில், குற்றம்சாட்ட 2 பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி தீர்ப்பளித்திருந்தார். 

இந்த வழக்கை கடந்த 1994ம் ஆண்டு சாட்சியங்கள் இல்லை என்று கூறி தில்லி காவல்துறை முடித்து விட்டதை அடுத்து, சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர் சீக்கியக் கலவர வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்து விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

]]>
death penalty , anti-Sikh riots http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/2/w600X390/lawwwwwww.jpg http://www.dinamani.com/india/2018/nov/20/delhi-court-awards-death-penalty-to-yashpal-singh-in-1984-anti-sikh-riots-case-3042347.html
3042345 இந்தியா தில்லி முதல்வர் கேஜரிவால் மீது மிளகாய்ப்பொடி வீச்சு: இளைஞர் கைது  ANI ANI Tuesday, November 20, 2018 05:33 PM +0530  

புது தில்லி: தில்லி முதல்வர் கேஜரிவாலின் அலுவலகத்திற்கு அருகில் அவர் மீது மிளகாய்ப்பொடி வீசிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தில்லி தலைமைச் செயலகத்தின் உள்ளே முதல்வர் கேஜரிவாலின் அலுவலகம் அமைந்துள்ளது. அங்கு செவ்வாயன்று புகுந்த அனில்குமார் என்ற இளைஞர், வெளியில் வந்த முதல்வர் கேஜரிவாலின் மீது மிளகாய்ப்பொடியை வீசினார். விரைந்து செயல்பட்ட போலீசார் அந்த இளைஞரைக் கைது செய்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக தில்லி மாநில ஆம் ஆத்மி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் ராகவ் சத்தா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

முதல்வர் மீதான இந்த தாக்குதலில் அவரது கண்ணாடி கீழே விழுந்து உடைந்துள்ளது. இது சிறிதும் ஏற்றுக் கொள்ள முடியாத பாதுகாப்புக் குறைபாடு என்பதைத் தவிர வேறில்லை. ஒருவேளை தாக்க வந்தவர் வேறு ஏதேனும் ஆபத்தான ஆயுதங்கள் வைத்திருந்தால், என்ன ஆகியிருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். யார் ஆபத்து நேராமல் காப்பது?

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  

]]>
delhi, CM, arvind kejriwal, AAP, condemnation, attack http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/20/w600X390/kejriwal_attack.jpg http://www.dinamani.com/india/2018/nov/20/chilli-powder-thrown-at-kejriwal-3042345.html
3042343 இந்தியா செருப்பு மாலை போட்ட வாலிபருடன் சண்டையிட்ட பாஜக எம்.எல்.ஏ (வைரல் விடியோ  ANI ANI Tuesday, November 20, 2018 05:05 PM +0530  

நகாடா: மத்திய பிரதேசத்தில் தனக்கு செருப்பு மாலை போட்ட வாலிபருடன் பாஜக எம்.எல்.ஏ ஒருவர் சண்டையிட்டது தொடர்பான விடியோ வைரலாகப் பரவி வருகிறது  

விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள மத்திய பிரதேசத்தில் கட்சிகள் விறுவிறுப்பான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நகாடா தொகுதி பாஜக எம்.எல்.ஏவான திலிப் ஷெகாவத், திங்களன்று பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். 

அப்போது அவருக்குஅருகில் வந்த வாலிபர் ஒருவர் எதிர்பாராதவிதமாக ஷெகாவத்துக்கு ஷூக்களால் ஆன மாலை ஒன்றை அணிவித்து விட்டார். சில நொடிகளில் சுதாரித்த ஷெகாவத், அதைக் கழற்றி கீழே எறிந்து விட்டு அந்த வாலிபருடன் சண்டையில் ஈடுபட்டார். 

அப்போது எடுக்கப்பட்ட விடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.      

   
 

]]>
MP, nagada, assembly elections, BJP, MLA, dilip shekhawat, garland of shoes, fight, viral video http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/20/w600X390/dilip_shekhawat.jpg http://www.dinamani.com/india/2018/nov/20/mp-man-greets-bjp-mla-with-garland-of-shoes-3042343.html
3042342 இந்தியா நாட்டு மக்களுக்கு கசப்பு மருந்து கொடுத்தது ஏன்? தேர்தல் பிரசாரத்தில் மோடி பேச்சு PTI PTI Tuesday, November 20, 2018 04:40 PM +0530
ஜபுவா: நாட்டில் வேர்விட்டுப் பரவியிருந்த ஊழலை ஒழிக்கவே நாட்டு மக்களுக்கு பணமதிப்பிழப்பு என்ற கசப்பு மருந்தைக் கொடுத்தாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கறையான்களை வேறோடு அழிக்க பூச்சி மருந்தைப் பயன்படுத்துவதில்லையா? அதுபோலவே நாட்டில் பரவியிருந்த ஊழலை ஒழிக்க நாட்டு மக்களுக்கு கசப்பு மருந்து அளிக்கப்பட்டது.

தங்கள் கட்டிலிலும், வீட்டிலும், நிறுவனத்திலும், தொழிற்சாலையிலும் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருந்தவர்கள் தற்போது ஒவ்வொரு ரூபாய்க்கும் வரி கட்டி வருகிறார்கள். வரிப்பணத்தை சாதாரண மக்களுக்கான திட்டங்களுக்காக மத்திய அரசு செலவிட்ட வருகிறது என்று கூறினார்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/14/w600X390/modi.jpg http://www.dinamani.com/india/2018/nov/20/demonetisation-bitter-medicine-to-treat-corruption-modi-3042342.html
3042341 இந்தியா முசாஃபர்பூர் சிறுமிகள் காப்பக வழக்கு: 6 மாதம் தலைமறைவாக இருந்த பெண் குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்  IANS IANS Tuesday, November 20, 2018 04:32 PM +0530  

முசாஃபர்பூர்: முசாஃபர்பூர் சிறுமிகள் காப்பக வழக்கில், 6 மாதங்கள் தலைமறைவாக  இருந்த முக்கிய பெண் குற்றவாளி செவ்வாயன்று நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். 

பிகார் மாநிலம் முசாஃபர்பூர் பகுதியில் அரசு நிதியுதவியுடன் செயல்பட்டு வந்த காப்பகம் ஒன்றில் தங்கியிருந்த 30-க்கும் மேற்பட்ட சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக மும்பையைச் சேர்ந்த டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோசியல் சயின்ஸ் என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் மூலமாக தெரிய வந்தது. அதையடுத்து அங்கிருந்த 42 சிறுமிகளும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டனர். அதில் 34 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. 

இந்த விவகாரத்தில் அந்த காப்பகத்தின் உரிமையாளர் பிரஜேஷ் தாக்குர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் பிரஜேஷ் தாக்குருக்கும், அந்த மாநில சமூக நலத் துறை அமைச்சர் மஞ்சு வர்மாவின் கணவர் சந்திரசேகர் வர்மாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது தெரியவந்தது. அதையடுத்து மஞ்சு வர்மா பதவி விலகினார். 

பின்னர் இவ்வழக்கில் தற்போதைய சிபிஐ குழு நடத்தி வரும் விசாரணையை நிறுத்துமாறும் புதிய சிபிஐ குழுவை நியமிக்குமாறும் பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல் முறையீடு செய்தது. 

அதை விசாரித்த உச்ச நீதிமன்றம் தற்போதைய சிபிஐ விசாரணை முறையாக நடைபெறுவதாகவும் அதை நிறுத்திவிட்டு புதிய குழு அமைக்க தேவையில்லை என்றும் கூறி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வழக்கில், 6 மாதங்கள்  தலைமறைவாக இருந்த முக்கிய பெண் குற்றவாளியான மது குமாரி, செவ்வாயன்று நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.  

இந்த வழக்கில் மே 31 - ஆம் தேதியன்று பிரஜேஷ் தாக்குர், மது குமாரி உள்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்பட்டவுடன், மது குமாரி, உடனடியாக தலைமறைவானார். ஆறு மாத தலைமறைவு வாழ்கைக்குப் பிறகு, செவ்வாயன்று அவர் முசாஃபர்பூ சிபிஐ அலுவலகத்தில் செவ்வாயன்று நேரில் ஆஜரானார் 

சிபிஐ நினைப்பது போல தனக்கு பிரஜேஷ் தாக்குருடன் நெருக்கமான தொடர்பு இல்லை என்று மறுத்த அவர், தான் அந்த தொண்டு நிறுவனத்தில் வெறும் ஊழியர் மட்டுமே என்றும், தனக்கும் அந்த சம்பவங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்தார்.   பின்னர் அவர் உள்ளூர் நீதிமன்றம் ஒன்றில் சரணடைந்தார்.    

பிரஜேஷ் தாக்குரின் தொண்டு நிறுவனத்தில், 2001-ஆம் ஆண்டு முதல் சமூக ஊழியராக மது குமாரி பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

]]>
bihar, muzzabarfur, shelter home, sexual misconduct, allgationss, arrest, prajesh thakur, madhu kumari, surrender, court, http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/20/w600X390/muzzabarfur_home.jpg http://www.dinamani.com/india/2018/nov/20/muzaffarpur-horror-woman-accused-surrenders-3042341.html
3042335 இந்தியா 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டி இல்லை: சுஷ்மா ஸ்வராஜ் அறிவிப்பு  IANS IANS Tuesday, November 20, 2018 03:50 PM +0530  

இந்தூர்: 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்துள்ளார். 

செவ்வாய்க்கிழமை அன்று மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் இடையே செய்தியாளர்களிடம்  பேசும்போது அவர் கூறியதாவது:

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சி முடிவு செய்கிறது. ஆனால் அடுத்த தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று நான் முடிவு செய்து விட்டேன். 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

அதேசமயம் தனது முடிவு குறித்து கட்சித் தலைமைக்கு தெரியப்படுத்தி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.  

]]>
external affairs minister, shshma swaraj, BJP, 2019 elections, contesting, decision, http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/13/w600X390/sushma_swaraj.jpg http://www.dinamani.com/india/2018/nov/20/decided-not-to-contest-2019-polls-sushma-3042335.html
3042292 இந்தியா மகாராஷ்டிராவில் ராணுவ குடோனில் குண்டு வெடித்து 6 பேர் பலி; 10 பேர் காயம் PTI PTI Tuesday, November 20, 2018 10:43 AM +0530
மகாராஷ்டிர மாநிலம் வர்தாவில் உள்ள ராணுவ குடோனில் இன்று காலை மிகப் பயங்கர வெடி விபத்து நேரிட்டது. 

புல்கானில் உள்ள மத்திய ராணுவ வெடிபொருள் கிடங்கில் நடந்த இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பழைய வெடிக்காத குண்டுகளை மண்ணில் புதைத்து செயலிழக்கச் செய்யும் போது இன்று காலை 7.10 மணியளவில் இந்த விபத்து நேரிட்டுள்ளது என்றும் ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் 3 பேரின் நிலைமைக் கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/20/w600X390/wardha_army_depot.JPG http://www.dinamani.com/india/2018/nov/20/maharashtra-six-people-dead-in-explosion-at-pulgaon-army-depot-in-wardha-3042292.html
3042290 இந்தியா காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை DIN DIN Tuesday, November 20, 2018 10:18 AM +0530
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டம் நாடிகாம் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் 4 பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

ஸ்ரீநகரில் இருந்து 60 கி.மீட்டர் தொலைவில் உள்ள சோபியான் மாவட்டம் நாடிகாம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின்பேரில் பாதுகாப்புப் படையினர், மாநில போலீஸார் மற்றும் மத்திய பாதுகாப்புப் படை போலீஸார் கூட்டாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இந்த சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். மேலும் 3 வீரர்கள் காயமடைந்தனர். 

தொடர்ந்து அந்த பகுதியில், பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

]]>
4 Terrorists Shot Dead, Kashmir's Shopian, Encounter, Soldier Killed In Encounter http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/6/w600X390/encounter.jpg http://www.dinamani.com/india/2018/nov/20/soldier-killed-in-encounter-in-kashmirs-shopian-4-terrorists-shot-dead-3042290.html
3042216 இந்தியா சத்தீஸ்கரில் இன்று 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது!  DIN DIN Tuesday, November 20, 2018 08:46 AM +0530 சத்தீஸ்கர் சட்டப் பேரவைத் தேர்தலில், 2-ஆவது மற்றும் இறுதிக்கட்டமாக 72 தொகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை (நவ.20) வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, சுமார் 1 லட்சம் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சத்தீஸ்கரில் தற்போது ஆட்சியில் உள்ள பாஜக அரசின் பதவிக்காலம் டிசம்பரில் நிறைவடைவதையொட்டி, அந்த மாநில சட்டப்பேரவைக்கு அண்மையில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. 90 தொகுதிகளை உள்ளடக்கிய அந்த மாநிலத்தில், இருகட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நக்ஸல் ஆதிக்கம் மிகுந்த 18 தொகுதிகளில் கடந்த 12-ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 76.28 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில், இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக மாநிலத்தின் 19 மாவட்டங்களில் உள்ள 72 தொகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை காலை (நவ.20) 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் 1,53,85,983 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். இவர்களில் 77,46,628 பேர் ஆண்கள்; 76,38,418 பேர் பெண்கள். 940 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர்.

2-ஆம் கட்ட தேர்தலுக்காக மொத்தம் 19,296 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, மத்திய படையினர், காவல்துறையினர் என சுமார் 1 லட்சம் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நக்ஸல் பாதிப்பு உள்ள ஜஷ்பூர், பல்ராம்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

72 தொகுதிகளிலும் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலா 72 வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 1,079 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் மாநில அமைச்சர்கள் 10 பேர், முன்னாள் முதல்வரும், "ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர்' கட்சியின் தலைவருமான  அஜீத் ஜோகி (மர்வாஹி தொகுதி), அவரது மனைவி ரேணு ஜோகி (கோண்டா தொகுதி), மருமகள் ரிச்சா ஜோகி (அகல்டாரா தொகுதி), காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சரண்தாஸ் மஹந்த் (சக்தி தொகுதி), அக்கட்சியின் மாநிலத் தலைவர் பூபேஷ் பக்ஹெல் (படான் தொகுதி) உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர். இத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், முதல்வராக சரண்தாஸ் மஹந்த் பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

டிசம்பர் 11-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸூக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்று கூறப்படுகிறது. 

கடந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முறையே 49, 39 இடங்களையும், பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்தையும் கைப்பற்றியது.

]]>
Chhattisgarh election, Naxals, BJP, Congress, Ajit Jogi, Chhattisgarh second phase polls, ஓட்டுப்பதிவு, சத்தீஸ்கர் சட்டப் பேரவைத் தேர்தல், இறுதிக்கட்ட வாக்குப்பதிவு http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/20/w600X390/Chhattisgarh.jpg http://www.dinamani.com/india/2018/nov/20/சத்தீஸ்கரில்-இன்று-2-ஆம்-கட்ட-வாக்குப்பதிவு-துவங்கியது-3042216.html
3041933 இந்தியா சபரிமலை தீர்ப்பை அமல்படுத்த கூடுதல் அவகாசம் வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் தேவஸ்வம் போர்டு மனு தாக்கல் DIN DIN Tuesday, November 20, 2018 05:37 AM +0530 சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான தீர்ப்பை அமல்படுத்த கூடுதல் அவகாசம் அளிக்கக் கோரி, அக்கோயிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதித்து, உச்சநீதிமன்றத்தின் அரசியல்சாசன அமர்வு கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி தீர்ப்பளித்தது. அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட இந்த அமர்வில், பெண் நீதிபதியான இந்து மல்ஹோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். எனினும், 4:1 என்ற பெரும்பான்மையின் அடிப்படையில் மேற்கண்ட தீர்ப்பு வெளியிடப்பட்டது. 
இதைத் தொடர்ந்து, சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்ட நாள்களில், சில பெண்கள் கோயிலுக்கு செல்ல முயன்றனர். எனினும், பக்தர்களின் கடும் எதிர்ப்பால், அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இதனிடையே, சபரிமலை தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை அண்மையில் பரிசீலித்த உச்சநீதின்றம், மறுஆய்வு மனுக்கள் மீது அடுத்த ஆண்டு ஜனவரி 22-ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்றும், ஏற்கெனவே அளித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை இல்லை என்றும் தெரிவித்தது.
இதையடுத்து, சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு, சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான தீர்ப்பை அமல்படுத்த கூடுதல் அவகாசம் கோரி மனு தாக்கல் செய்ய முடிவு செய்தது. அதன்படி, உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பெண்களுக்கான அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை என்பது உள்ளிட்ட காரணங்களைச் சுட்டிக்காட்டி, கூடுதல் அவகாசம் கோரப்பட்டுள்ளது.
முன்னதாக, கேரளத்தில் கடந்த ஆகஸ்டில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக, சபரிமலையில் உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன. இதனால், கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் குறைபாடு நிலவுவதாக பக்தர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். தற்போது மண்டல பூஜைகளுக்காக ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்காக, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/4/w600X390/sabarimala.jpg http://www.dinamani.com/india/2018/nov/20/சபரிமலை-தீர்ப்பை-அமல்படுத்த-கூடுதல்-அவகாசம்-வேண்டும்-உச்சநீதிமன்றத்தில்-தேவஸ்வம்-போர்டு-மனு-தாக்கல்-3041933.html
3041884 இந்தியா மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு: புரோஹித் மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவு DIN DIN Tuesday, November 20, 2018 03:00 AM +0530 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராணுவ துணை தளபதி பிரசாத் ஸ்ரீகாந்த் புரோஹித்தின் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்படி மும்பை உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக, புரோஹித் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்தச் சிறப்பு மனுவில், "மாலேகான் வழக்கு தொடர்பாக, முறையான அனுமதி பெறாமல் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழும், இந்திய தண்டனையியல் சட்டத்தின் கீழும் எங்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உயரதிகாரிகளின் அனுமதி இல்லாமல் எங்கள் மீது விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்குத் தடை விதிக்க வேண்டும். இது குறித்து மேல்முறையீடு செய்ய அனுமதி அளிக்க வேண்டும்' என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், எஸ்.கே.கெüல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், "புரோஹித்தின் கோரிக்கையை வரும் 21}ஆம் தேதி(புதன்கிழமை) மும்பை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எனவே, இந்த விவகாரத்தில் மேல்முறையீடு கோரும் சிறப்பு மனுவைத் தள்ளுபடி செய்கிறோம்' என்று தெரிவித்தனர். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள புரோஹித், சாத்வி பிரக்யா சிங் தாக்குர் உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கு விசாரணையை மும்பையில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றம் கடந்த 2}ஆம் தேதி தொடங்கியது. கடந்த ஏப்ரல் மாதம் 20}ஆம் தேதி, புரோஹித் தரப்பு கோரிக்கையை ஆராயும்படி சிறப்பு நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அதை சிறப்பு நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது.

]]>
http://www.dinamani.com/india/2018/nov/20/மாலேகான்-குண்டுவெடிப்பு-வழக்கு-புரோஹித்-மனுவை-விசாரிக்க-உயர்-நீதிமன்றத்துக்கு-உத்தரவு-3041884.html
3041883 இந்தியா வர்த்தகத்துக்கு உகந்த நாடுகளின் பட்டியலில் முதல் 50 இடங்களுக்குள் வர இந்தியா இலக்கு DIN DIN Tuesday, November 20, 2018 02:59 AM +0530 வர்த்தகம் செய்ய உகந்த நாடுகளின் பட்டியலில் முதல் 50 இடங்களுக்குள் வர இந்தியா இலக்கு நிர்ணயித்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தில்லியில் இந்திய தொழிற்துறை சார்பில் வர்த்தகம் தொடர்பான கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து பேசியதாவது:
நாட்டில் கொள்கை முடக்கம் என்பது முடிவுக்கு வந்து விட்டது. மத்தியில் ஆட்சியிலிருக்கும் எனது அரசானது, கொள்கையை அடிப்படையாக கொண்டு நிர்வாகம் செய்து வருகிறது. இதனாலேயே, உலக வங்கி கடந்த 2014ஆம் ஆண்டில் வெளியிட்ட வர்த்தகம் செய்ய உகந்த நாடுகளின் பட்டியலில் 142ஆவது இடத்தில் இருந்த இந்தியாவால்  77ஆவது இடத்துக்கு முன்னேற முடிந்தது.
வர்த்தக நடவடிக்கைகளில் நிறுவனங்கள் ஈடுபடுவதை மிகவும் எளிதாக்கும் வகையிலான நடைமுறைகளையும், சீர்திருத்தங்களையும், எனது அரசு தொடர்ந்து செயல்படுத்தும். நாட்டின் பொருளாதார மதிப்பை 5 டிரில்லியன் டாலர் மதிப்புக்கு உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தொடர்ச்சியான சீர்திருத்த நடவடிக்கைகளால்தான், உலக அளவில் நம்பகமான இடத்தை நமது நாடு பெற முடிந்தது. அதேபோல், சர்வதேச செலாவணி நிதியம், உலக வர்த்தக அமைப்பு போன்ற சர்வதேச அமைப்புகளின் அங்கீகாரமும் நமது நாட்டுக்கு கிடைத்தது. இந்த அமைப்புகள் அனைத்தும், நமது நாடு மேற்கொண்ட சீர்திருத்த நடவடிக்கைகள் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளன. இதுமட்டுமல்லாமல், உலகில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார மதிப்பு கொண்ட நாடுகளின் வரிசையில், நமது நாட்டையும் சேர்ப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது விரைவில் சாத்தியப்படும் என நம்புகிறோம். இந்த இலக்கை நமது நாடு அடைவதற்கு, பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையையும் மேம்படுத்த வேண்டியுள்ளது.
வர்த்தகம் செய்ய உகந்த நாடுகளின் பட்டியலில் முதல் 50 இடத்துக்குள் இந்தியா வர வேண்டும் என்ற திட்டத்தை முதன்முதலில் வெளியிட்டபோது, அது சந்தேகத்துடனேயே வரவேற்கப்பட்டது. இருப்பினும், கடந்த 4 ஆண்டுகளில் நமது பொருளாதாரத்தில் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது கண்கூடாகவே தெரிகிறது. 
வர்த்தகம் செய்ய உகந்த நாடுகளின் பட்டியலில் நமது நாட்டை முதல் 50ஆவது இடங்களுக்குள் கொண்டு வருவதற்கு, மத்திய, மாநில அரசுகள் கூட்டாக இணைந்து செயல்பட்டு வருகின்றன என்றார் மோடி.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/14/w600X390/modi.jpg http://www.dinamani.com/india/2018/nov/20/வர்த்தகத்துக்கு-உகந்த-நாடுகளின்-பட்டியலில்-முதல்-50-இடங்களுக்குள்-வர-இந்தியா-இலக்கு-3041883.html
3041877 இந்தியா எதிர்க்கட்சிகள் சந்திக்கும் கூட்டம் ஒத்திவைப்பு: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு DIN DIN Tuesday, November 20, 2018 02:29 AM +0530 பாஜகவுக்கு எதிரான முன்னணியை அமைப்பது குறித்து, எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி கலந்தாலோசிக்க, வரும் 22-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக ஆந்திர பிரதேச முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு திங்கள்கிழமை அறிவித்தார்.
இந்த அறிவிப்பை, மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜியை சந்தித்த பிறகு அவர் வெளியிட்டார்.
பாஜகவுக்கு எதிரான மாபெரும் கூட்டணியை உருவாக்கும் முயற்சியை சந்திரபாபு நாயுடு முன்னெடுத்துள்ளார். அதுதொடர்பாக, பாஜக சாராத எதிர்க்கட்சிகளின் தலைவர்களை சந்தித்து அதற்கான ஆதரவு கோரி வருகிறார். அந்த வரிசையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை அவர் திங்கள்கிழமை நேரில் சந்தித்தார். 
இருவரும் சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு, மம்தாவுடன் சேர்ந்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு கூறியதாவது:
பாஜகவுக்கு எதிரான மாபெரும் கூட்டணி அமைப்பது தொடர்பாக எதிர்க்கட்சிகள் வரும் 22-ஆம் தேதி தில்லியில் கூடி ஆலோசிப்பதாக இருந்தது. தற்போது சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறுவதால் அந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. கூட்டம் நடைபெறும் மாற்று தேதி விரைவில் அறிவிக்கப்படும். 
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடருக்கு முன்பாக அந்தக் கூட்டம் நடைபெறும். குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 11 முதல் ஜனவரி 8-ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. 
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியில் சிபிஐ, அமலாக்க இயக்குநரகம், வருமான வரித்துறை, ரிசர்வ் வங்கி, மத்திய தலைமை கணக்குத் தணிக்கை ஆகிய அமைப்புகள் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. தேசம், ஜனநாயகம், அரசு அமைப்புகள் ஆகியவற்றை காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.
கொல்கத்தாவில் ஜனவரி 19-ஆம் தேதி மம்தா பானர்ஜி நடத்தும் பொதுக் கூட்டத்தில் நான் பங்கேற்பேன் என்று சந்திரபாபு நாயுடு கூறினார்.
அப்போது செய்தியாளர்கள், "பாஜகவுக்கு எதிரான இந்த முன்னணியின் பிரதான தலைவராக யார் முன்னிறுத்தப்படுவார்கள்?' என்று கேள்வி எழுப்பினர். 
அதற்கு சந்திரபாபு நாயுடு, "நரேந்திர மோடியுடன் ஒப்பிடுகையில் நாங்கள் அனைவருமே மூத்த தலைவர்கள்' என்றார். மம்தா பானர்ஜி பதிலளிக்கையில், "இந்தக் கூட்டணியில் அனைவருமே முக்கியமான தலைவர்களே' என்று கூறினார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/20/w600X390/naidu-mamta.jpg மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள நாபன்னா பகுதிக்கு  திங்கள்கிழமை வந்த சந்திரபாபு நாயுடுவுக்கு மலர்க்கொத்து கொடுத்து  வரவேற்கும் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி. http://www.dinamani.com/india/2018/nov/20/எதிர்க்கட்சிகள்-சந்திக்கும்-கூட்டம்-ஒத்திவைப்பு-சந்திரபாபு-நாயுடு-அறிவிப்பு-3041877.html
3041876 இந்தியா சத்தீஸ்கர்: நக்ஸல் துணைத் தளபதி சுட்டுக் கொலை DIN DIN Tuesday, November 20, 2018 02:28 AM +0530 சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், நக்ஸல் தீவிரவாதிகளுக்கும் இடையே திங்கள்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் அமைப்பின் துணைத் தளபதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதுதொடர்பாக நக்ஸல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி டி.எம். அவஸ்தி கூறுகையில், " சுக்மா மாவட்டத்தின் சிர்செட்டி, மூலூர் கிராமங்களில் நக்ஸல் தடுப்பு பிரிவு பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 
பனுத்புரா வனப் பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது, நக்ஸல்கள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் மூண்டது. அப்போது நக்ஸல்கள் வனத்தின் அடர்ந்த பகுதிக்கு தப்பிச் சென்றனர். 
அதையடுத்து சம்பவம் நடைபெற்ற இடத்தில் பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டையின் போது, நக்ஸல் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது பெயர் சிங்கா என்பதும், கெர்லாபால் பகுதி மாவோயிஸ்ட் அமைப்பின் துணைத் தளபதி என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்' என்றார்.

]]>
http://www.dinamani.com/india/2018/nov/20/சத்தீஸ்கர்-நக்ஸல்-துணைத்-தளபதி-சுட்டுக்-கொலை-3041876.html
3041875 இந்தியா குஜராத் கலவர வழக்கு: மோடிக்கு எதிரான மனு நவ.26-இல் விசாரணை DIN DIN Tuesday, November 20, 2018 02:27 AM +0530 குஜராத் கலவர வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை வரும் 26-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்துக்குப் பிறகு, மாநிலம் முழுவதும் மிகப்பெரிய அளவில் கலவரம் மூண்டது. அதில், 1,500-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோனர் முஸ்லிம்கள். இந்த கலவரத்தில், அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோடிக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி), நரேந்திர மோடிக்கு நற்சான்று அளித்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த குஜராத் உயர் நீதிமன்றம், நரேந்திர மோடிக்கு சிறப்பு புலனாய்வுக் குழு நற்சான்று அளித்ததை உறுதிசெய்து கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்ட காங்கிரஸ் முன்னாள் எம்.பி. இஷான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவரது மனு, நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாகியா ஜாஃப்ரி சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சி.யு.சிங், ""இந்த வழக்கில் முதன்மை மனுதாரரான ஜாகியா ஜாஃப்ரி 80 வயது பெண்மணி என்பதால், அவருக்கு  உதவிடும் வகையில், சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட்டை இரண்டாவது மனுதாரராக சேர்க்க வேண்டும்'' என்று வாதிட்டார்.
அவரது கோரிக்கைக்கு சிறப்பு புலனாய்வுக் குழு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி மறுப்பு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: 
ஜாகியா ஜாஃப்ரியின் மனு விசாரணைக்கு உகந்ததல்ல. மேலும், இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் நடைபெற்றபோது எந்தவித்திலும் தொடர்பில் இல்லாத சீதல்வாட்டை இரண்டாவது மனுதாரராக சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது என்று முகுல் ரோத்தகி வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த மனு மீது விரிவாக விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே, மனு மீதான விசாரணை, வரும் 26-ஆம் தேதி நடைபெறும். அதற்குள், இரண்டாவது மனுதாரராக சீதல்வாட்டை சேர்ப்பது குறித்து ஆராயப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/25/w600X390/supremecourt.jpg http://www.dinamani.com/india/2018/nov/20/குஜராத்-கலவர-வழக்கு-மோடிக்கு-எதிரான-மனு-நவ26-இல்-விசாரணை-3041875.html
3041874 இந்தியா ஊழல் குற்றச்சாட்டுகள்: உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ இயக்குநர் பதில் மனு தாக்கல் DIN DIN Tuesday, November 20, 2018 02:26 AM +0530 ஊழல் குற்றச்சாட்டு வழக்கை எதிர்கொண்டு வரும் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, அதுதொடர்பான பதில் மனுவை உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்தார். மூடி முத்திரையிடப்பட்ட உறையில் வைத்து அதை அவர் தாக்கல் செய்தார்.
முன்னதாக, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் சில உத்தரவுகளை அவருக்கு பிறப்பித்தது. அதாவது, அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு உரிய பதிலையும், விளக்கத்தையும் காலந்தாழ்த்தாமல் உடனடியாக அளிக்குமாறு அறிவுறுத்தியிருந்தது. பதில் மனு தாக்கல் செய்யப்படாததைக் காரணமாக வைத்து இதுதொடர்பான வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க முடியாது என்றும் கூறியிருந்தது. இதையடுத்தே அதனை அலோக் வர்மா தரப்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாகத் தெரிகிறது.
நாட்டின் பிரதான விசாரணை அமைப்பாகத் திகழும் சிபிஐ - யில் அங்கம் வகிக்கும் இயக்குநர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே எழுந்த மோதலானது, இருவரும் பரஸ்பரம் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துக் கொள்ளும் அளவுக்கு சென்றது
இதையடுத்து, இதுதொடர்பாக தீர்வு காணும் விதமாக அவர்கள் இருவரது அதிகாரங்கள் தற்காலிகமாக பறிக்கப்பட்டன.
அவர்கள் மீதான புகார்களையும் விசாரிப்பதற்காக இடைக்கால இயக்குநர் பதவி நாகேஸ்வர ராவுக்கு அளிக்கப்பட்டது. அந்த விசாரணை நிறைவடையும் வரை இருவருக்கும் கட்டாய விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.இதனிடையே, அலோக் வர்மாவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வின் முன்பு கடந்த வாரம் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு அலோக் வர்மாவுக்கு உத்தரவிடப்பட்டது.
இதற்கு நடுவே இந்த விவகாரத்தில் முதல்கட்ட விசாரணை அறிக்கையை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் மூடி முத்திரையிட்ட உறையில் வைத்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதனை தலைமை நீதிபதி அமர்வு திங்கள்கிழமை பரிசீலித்தது. அப்போது, ஆஜரான அலோக் வர்மாவின் வழக்குரைஞர் கோபால் சங்கரநாராயணன், இந்த விவகாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிபதிகள் உடனடியாக அதனை தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து திங்கள்கிழமை பதில் மனுவை அலோக் வர்மா தாக்கல் செய்தார்.
உச்ச நீதிமன்றத்தை நாடிய சிபிஐ அதிகாரி: இதனிடையே, சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீதான வழக்கை விசாரித்து வந்த அதிகாரி மணீஷ் குமார் சின்ஹா திடீரென நாகபுரிக்கு (மகாராஷ்டிரம்) பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு, செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
 

]]>
http://www.dinamani.com/india/2018/nov/20/ஊழல்-குற்றச்சாட்டுகள்-உச்ச-நீதிமன்றத்தில்-சிபிஐ-இயக்குநர்-பதில்-மனு-தாக்கல்-3041874.html
3041873 இந்தியா இந்திரா காந்தி பிறந்ததினம்: மோடி, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை DIN DIN Tuesday, November 20, 2018 02:24 AM +0530 முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 101-ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் திங்கள்கிழமை அவருக்கு மரியாதை செலுத்தினர்.
இது குறித்து, பிரதமர் மோடி சுட்டுரையில், "நாட்டின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்ததினத்தில், அவருக்கு மரியாதை செலுத்த கடமைப்பட்டுள்ளேன்' என்று பதிவிட்டார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசு முன்னாள் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் இந்திரா காந்தியின் நினைவிடம் அமைந்துள்ள தில்லி சக்தி ஸ்தலத்தில் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவாண், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோரும் இந்திரா காந்திக்கு அஞ்சலி செலுத்தினர்.
ராணி லட்சுமிபாய்க்கு அஞ்சலி: ராணி லட்சுமிபாயின் பிறந்ததினத்தை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, "காலனிய ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடிய லட்சுமிபாயின் வீரம் என்றும் மறக்க முடியாதது. அவரைப் போன்ற பெருந்தலைவர்களால் தான் இந்தியா சுதந்திரம் பெற்றது' என்று சுட்டுரையில் பதிவிட்டார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/20/w600X390/cong.jpg முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 101-ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய உள்துறை அமைச http://www.dinamani.com/india/2018/nov/20/இந்திரா-காந்தி-பிறந்ததினம்-மோடி-ராகுல்-உள்ளிட்ட-தலைவர்கள்-மரியாதை-3041873.html
3041872 இந்தியா உபரி நிதி குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைப்பு: ரிசர்வ் வங்கி முடிவு DIN DIN Tuesday, November 20, 2018 02:22 AM +0530 உபரி நிதி ரூ.9.69 லட்சம் கோடி குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைப்பதென்று ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
ரிசர்வ் வங்கி தன்னிடம் எவ்வளவு மதிப்புக்கு உபரி நிதியை வைப்பது தொடர்பாகவும், சிறு மற்றும் குறு வணிகர்களுக்கு கடன் அளிப்பது தொடர்பான  விதிகள் மற்றும் நலிந்த வங்கிகள் தொடர்பான விதிகள் ஆகிய விவகாரங்கள் தொடர்பாகவும் மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியதாக செய்திகள் வெளிவந்தன. இதை உறுதிப்படுத்தும்  வகையில், மத்திய அரசை ரிசர்வ் வங்கி துணை நிலை கவர்னர்கள் விமர்சனமும் செய்தனர். அதேபோல், ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர் எந்நேரமும் தனது பதவியை ராஜிநாமா செய்யலாம் என்றும் கூறப்பட்டது.
இதுபோன்ற பரபரப்பான சூழ்நிலையில், தில்லியில் ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
இக்கூட்டத்தில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல், துணை கவர்னர்கள், மத்திய அரசின் நியமன இயக்குநர்களான பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க், நிதி சேவைகள் துறை செயலர் ராஜீவ் குமார்,  எஸ். குருமூர்த்தி உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 
இக்கூட்டம் சுமார் 9 மணி நேரம் நீடித்தது. இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவை குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. எனினும், மத்திய அரசு மற்றும் குருமூர்த்தி ஆகியோர் வங்கி சாராத நிதி அமைப்புகளுக்கு ரிசர்வ் வங்கி அதிக மூலதனம் அளிக்க வேண்டும், சிறு வணிகர்களுக்கு ஏதுவாக கடன் விதிகளை தளர்த்த வேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரிகிறது.
இக்கூட்டத்துக்குப் பிறகு ரிசர்வ் வங்கி தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், "ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் உபரி நிதி ரூ.9.69 லட்சம் கோடி தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆய்வு செய்ய உயர்மட்ட நிபுணர் குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வங்கிகளுக்கு கவலை தரும் பிரச்னைகள் குறித்து ரிசர்வ் வங்கியின் நிதி மேலாண்மை வாரியம் ஆய்வு செய்வதென்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"ரிசர்வ் வங்கி, மத்திய அரசு இடையே மோதல் இல்லை': 
இதனிடையே, மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே மோதல் போக்கு நிலவவில்லை என்றார். அவர் மேலும் கூறியதாவது: மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே மோதல் நிலவுவதாக எங்களுக்கு தெரியவில்லை. 
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஊடகத்தினர் ஆகியோர்தான், மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் பதற்றம் நிலவுவதாக தெரிவித்து வருகிறார்கள். ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் உபரி நிதியில் இருந்து ஒரு பைசாவை கூட கோரவில்லை என்று மத்திய அரசு ஏற்கெனவே தெளிவுப்படுத்தி விட்டது.அதேநேரத்தில், முக்கியமான அமைப்பான ரிசர்வ் வங்கிக்கு, நாட்டின் நலன் மீது சில கடமைகள் உள்ளன. இதுகுறித்து ரிசர்வ் வங்கி ஆலோசனை நடத்தினால், அதற்கு யாரும் ஆட்சேபம் தெரிவிக்க மாட்டார்கள். நாட்டிலுள்ள அரசியலமைப்பு அமைப்புகளை முந்தைய காங்கிரஸ் அரசுகள் எவ்வாறு அவமதிப்பு செய்தன என்பது குறித்து மக்களுக்கு நன்கு தெரியும். அதேபோல், கடந்த காலங்களில் ரிசர்வ் வங்கி கவர்னர்களாக இருந்தோரை, அப்போதைய காங்கிரஸ் அரசுகள் எப்படி பணிநீக்கம் செய்தன என்பது குறித்தும் நாட்டு மக்கள் அறிவார்கள் என்றார் பியூஷ் கோயல்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/28/w600X390/rbi.jpg http://www.dinamani.com/india/2018/nov/20/உபரி-நிதி-குறித்து-ஆய்வு-செய்ய-நிபுணர்-குழு-அமைப்பு-ரிசர்வ்-வங்கி-முடிவு-3041872.html
3041871 இந்தியா சிஎஸ்இ அமைப்புக்கு "இந்திரா காந்தி விருது' DIN DIN Tuesday, November 20, 2018 02:07 AM +0530 அமைதி மற்றும் வளர்ச்சிக்கான "இந்திரா காந்தி விருது', தில்லியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பான "சிஎஸ்இ'-க்கு (அறிவியல்-சுற்றுச்சூழல் மையம்) வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:
சுற்றுச்சூழல் சீரழிவைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் நிலையான பங்களிப்பை செய்துவரும் சிஎஸ்இ அமைப்புக்கு இந்திரா காந்தி விருது வழங்கப்படுகிறது. 
மேலும், இந்தியாவில் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான கொள்கைகள் மற்றும் திட்டங்களில் அந்த அமைப்பு வழங்கியுள்ள பங்களிப்புகளும் கருத்தில் கொள்ளப்பட்டு இந்த விருது வழங்கப்படுகிறது. சிஎஸ்இ அமைப்பானது, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை விவகாரத்தை தேசிய அளவில் கவனம் பெறச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விருது அறிவிக்கப்பட்டது குறித்து சிஎஸ்இ அமைப்பின் இயக்குநர் சுனிதா நரைன் கூறுகையில், "மாற்றத்துக்கான பங்களிப்பு செய்தவர்களின் பட்டியலில் எங்களது நிறுவனமும் இணைவது, எங்களுக்கான கெüரவமாகும். 
எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த விருதானது, உலகம் இன்று எதிர்கொண்டுள்ள பருவநிலை மாற்றம், நியாயமற்ற வளர்ச்சி, சுற்றுச்சூழல் சீரழிவு ஆகியவற்றை எதிர்கொள்வதற்காக கிடைத்துள்ள அங்கீகாரமாகும்' என்றார்.
கடந்த 1980-ஆம் ஆண்டு அனில் குமார் அகர்வால் என்ற சுற்றுச்சூழலியலாளரால் தொடங்கப்பட்ட சிஎஸ்இ அமைப்பானது, கடந்த சுமார் 40 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு கொள்கைகளை முன்னெடுத்து வருகிறது.
இந்திரா காந்தி விருதை வழங்கும் இந்திரா காந்தி அறக்கட்டளையானது, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை தலைவராகக் கொண்டதாகும். சர்வதேச அமைதி, வளர்ச்சி, ஆக்கப்பூர்வமான அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் பங்களிப்பு செய்துவரும் தனி நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு ஆண்டுதோறும் இந்த அறக்கட்டளை விருது வழங்கி வருகிறது.

]]>
http://www.dinamani.com/india/2018/nov/20/சிஎஸ்இ-அமைப்புக்கு-இந்திரா-காந்தி-விருது-3041871.html
3041870 இந்தியா நக்ஸல் தொடர்பு வழக்கில் குற்றப்பத்திரிகை: திக் விஜய் சிங் செல் எண்ணுடன் கைப்பற்றப்பட்ட கடிதம் சேர்ப்பு DIN DIN Tuesday, November 20, 2018 02:06 AM +0530 நக்ஸல் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டின்கீழ் இடதுசாரி ஆர்வலர்கள் கைது செய்யப்பட்ட வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில், காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் செல்லிடப் பேசி எண்ணுடன் கைப்பற்றப்பட்ட கடிதமும் சேர்க்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், புணேயில் கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி, பீமா கோரேகான் போர் சம்பவத்தின் 200ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது பெரும் வன்முறை மூண்டது. இந்த வன்முறையை தூண்டி விட்டதாக எல்கர் பரிஷத் என்பவரை புணே போலீஸôர் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, நக்ஸல் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம்சாட்டி, சுரேந்திர காட்லிங், சோமா சென், மகேஷ் ரௌத், ரோனா வில்சன் உள்ளிட்ட சில இடதுசாரி ஆர்வலர்களை புணே போலீஸôர் கைது செய்தனர். மேலும் நாட்டின் பல்வேறு இடங்களிலும் அவர்கள் அதிரடி சோதனை  நடத்தினர்.
இந்த சோதனையின்போது, பிரகாஷ் என்பவரால் சுரேந்திர காட்லிங்குக்கு எழுதிய கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில், "மாணவர்களை பயன்படுத்தி, மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும். இந்த போராட்டத்துக்கு உதவி செய்ய காங்கிரஸ் தலைவர்கள் ஆர்வமாக உள்ளனர். 
நிதியுதவி அளிக்கவும் தயாராக இருக்கின்றனர். இதுதொடர்பாக நமது நண்பரை இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் (திக்விஜய் சிங் செல்லிடப் பேசி எண் குறிப்பிடப்பட்டிருந்தது)' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த செல்லிடப் பேசி எண், காங்கிரஸ் கட்சியின் இணையதளத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் போலீஸôர் அண்மையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அந்த குற்றப்பத்திரிகையில், திக்விஜய் சிங் செல்லிடப் பேசி எண்ணுடன் கைப்பற்றப்பட்ட கடிதமும் சேர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "சோதனையின்போது ஏராளமான செல்லிடப் பேசி எண்கள் கிடைத்தன. 
அந்த எண்களின் உரிமையாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றனர். தேவைப்பட்டால் அவர்களிடம் விசாரணை  நடத்தப்படும்' என்றார்.

]]>
http://www.dinamani.com/india/2018/nov/20/நக்ஸல்-தொடர்பு-வழக்கில்-குற்றப்பத்திரிகை-திக்-விஜய்-சிங்-செல்-எண்ணுடன்-கைப்பற்றப்பட்ட-கடிதம்-சேர்ப்-3041870.html
3041869 இந்தியா சத்தீஸ்கரில் இன்று 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் DIN DIN Tuesday, November 20, 2018 02:06 AM +0530 சத்தீஸ்கர் சட்டப் பேரவைத் தேர்தலில், 2-ஆவது மற்றும் இறுதிக்கட்டமாக 72 தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ.20) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, சுமார் 1 லட்சம் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கரில் தற்போது ஆட்சியில் உள்ள பாஜக அரசின் பதவிக்காலம் டிசம்பரில் நிறைவடைவதையொட்டி, அந்த மாநில சட்டப்பேரவைக்கு அண்மையில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. 90 தொகுதிகளை உள்ளடக்கிய அந்த மாநிலத்தில், இருகட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நக்ஸல் ஆதிக்கம் மிகுந்த 18 தொகுதிகளில் கடந்த 12-ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 76.28 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில், இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக 72 தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ.20) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் 1,53,85,983 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். இவர்களில் 77,46,628 பேர் ஆண்கள்; 76,38,418 பேர் பெண்கள். 940 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர்.
2-ஆம் கட்ட தேர்தலுக்காக மொத்தம் 19,296 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி 5 மணி வரை நடைபெறுகிறது. தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, மத்திய படையினர், காவல்துறையினர் என சுமார் 1 லட்சம் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நக்ஸல் பாதிப்பு உள்ள ஜஷ்பூர், பல்ராம்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
முக்கிய வேட்பாளர்கள்: 72 தொகுதிகளிலும் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலா 72 வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 1,079 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் மாநில அமைச்சர்கள் 10 பேர், முன்னாள் முதல்வரும், "ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர்' கட்சியின் தலைவருமான  அஜீத் ஜோகி (மர்வாஹி தொகுதி), அவரது மனைவி ரேணு ஜோகி (கோண்டா தொகுதி), மருமகள் ரிச்சா ஜோகி (அகல்டாரா தொகுதி), காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சரண்தாஸ் மஹந்த் (சக்தி தொகுதி), அக்கட்சியின் மாநிலத் தலைவர் பூபேஷ் பக்ஹெல் (படான் தொகுதி) உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர். இத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், முதல்வராக சரண்தாஸ் மஹந்த் பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மும்முனைப் போட்டி: மத்தியப் பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்டு, கடந்த 2000-இல் சத்தீஸ்கர் மாநிலம் உதயமானது. அந்த மாநிலத்தின் முதல் முதல்வராக பதவியேற்றவர் அஜீத் ஜோகி. அவர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி 3 ஆண்டுகள் வரையே நீடித்தது. அடுத்து நடைபெற்ற மூன்று தேர்தல்களிலும் பாஜகவே வெற்றி பெற்றது. தொடர்ந்து 3 முறை முதல்வராக பதவி வகித்துள்ள ரமண் சிங், தற்போது 4-ஆவது முறையாக முதல்வராகும் முனைப்பில் களமிறங்கியுள்ளார். பாஜக - காங்கிரஸ் என இதுவரை இருமுனை போட்டியையே சந்தித்து வந்த சத்தீஸ்கர், இந்த தேர்தலில் மும்முனை போட்டியை எதிர்கொண்டுள்ளது. அதாவது, காங்கிரஸில் இருந்து விலகி, "ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர்' என்ற தனிக்கட்சியை தொடங்கிய அஜீத் ஜோகியுடன், மாயாவதியின் பகுஜன்சமாஜ் கைகோத்துள்ளது. இந்த மும்முனைப் போட்டி தங்களுக்கே சாதகம் என்று முதல்வர் ரமண் சிங் கூறிவருகிறார். இதேபோல், 66 தொகுதிகளில் ஆம் ஆத்மி வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
டிசம்பர் 11-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸýக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்று கூறப்படுகிறது. 
கடந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முறையே 49, 39 இடங்களையும், பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்தையும் கைப்பற்றியது.
பரஸ்பரம் குற்றச்சாட்டு: சத்தீஸ்கர் தேர்தலை முன்னிட்டு, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முதல்வர் ரமண் சிங் உள்ளிட்டோர் பிரசாரம் மேற்கொண்டனர். அதில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவரது குடும்பத்தினர் மீது பாஜக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தது. அதேவேளையில், விவசாயிகள் பிரச்னையை முன்னிறுத்தி பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ், பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தது. மேலும், பனாமா ஆவணங்கள் விவகாரத்தில் ரமண் சிங்கின் மகனுக்கு தொடர்பிருப்பதாகவும் குற்றம்சாட்டியது.
தேர்தல் ஆணையம் விளக்கம்: இதனிடையே, சத்தீஸ்கர் முதல்கட்ட தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னங்களில் குளறுபடி இருந்ததாக சமூக வலைதளங்களில் விடியோ பரவியது. ஆனால், அந்த விடியோ போலியானது என்று ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை விளக்கமளித்தது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/20/w600X390/election.jpg சத்தீஸ்கர் 2-ஆம் கட்ட தேர்தலையொட்டி, ராய்ப்பூரில் உள்ள  விநியோக மையத்தில் திங்கள்கிழமை வாக்குப்பதிவு இயந்திரங்களை  பெற்றுச் செல்லும் அதிகாரிகள். http://www.dinamani.com/india/2018/nov/20/சத்தீஸ்கரில்-இன்று-2-ஆம்-கட்ட-வாக்குப்பதிவு-பலத்த-பாதுகாப்பு-ஏற்பாடுகள்-3041869.html
3041868 இந்தியா மகாராஷ்டிரம்: 2 பெண் நக்ஸல்கள் சுட்டுக் கொலை DIN DIN Tuesday, November 20, 2018 02:02 AM +0530 மகாராஷ்டிர மாநிலம், கட்சிரோலி மாவட்டத்தில் காவல்துறையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 2 பெண் நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதுதொடர்பாக காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தனோரா பகுதியில் உள்ள நிஹல்காய் வனப்பகுதியில் காவல் துறையின் சிறப்பு நக்ஸல் தடுப்பு பிரிவினர் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நக்ஸல்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. சுமார் 30 நிமிடங்கள் வரை இந்த மோதல் நீடித்தது. 
அதையடுத்து தேடுதல் வேட்டையின் போது 2 பெண் நக்ஸல் தீவிரவாதிகளின் உடல் அங்கிருந்து கண்டெடுக்கப்பட்டது. அந்த பகுதியில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது' என்றார்.

]]>
http://www.dinamani.com/india/2018/nov/20/மகாராஷ்டிரம்-2-பெண்-நக்ஸல்கள்-சுட்டுக்-கொலை-3041868.html
3041866 இந்தியா ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான வழக்கில் மத்திய அமைச்சர் தலையீடு: மூத்த சிபிஐ அதிகாரி புகார் DIN DIN Tuesday, November 20, 2018 02:00 AM +0530 சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான ஊழல் புகார் விசாரணையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், மத்திய அமைச்சர் ஹரிபாய் பார்திபாய் செளதரி, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் (சிவிசி) கே.வி. செளதரி ஆகியோர் தலையிட முயற்சித்ததாக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மூத்த அதிகாரி எம்.கே. சின்ஹா குற்றம்சாட்டியுள்ளார்.
ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான ஊழல் புகார் குறித்து விசாரித்து வரும் சின்ஹா, நாகபுரிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். 
அவரது தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் சுனில் ஃபெர்னான்டஸ், சின்ஹா தனது மனுவில் அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவித்துள்ளதாகவும், சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவின் மனுவோடு சேர்த்து, சின்ஹாவின் மனுவையும் அவசர வழக்காக செவ்வாய்க்கிழமை விசாரிக்குமாறும் கேட்டுக் கொண்டார். 
அப்போது, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே. கெளல், கே.எம். ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு, "எங்களை எதுவும் அதிர்ச்சிக்குள்ளாக்காது. சின்ஹாவின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க இயலாது. அலோக் வர்மா மனு மீதான விசாரணையின்போது நீங்கள் (வழக்குரைஞர் சுனில்) நேரில் ஆஜராக வேண்டும்' என்று கூறியது.
அலோக் வர்மாவின் மனுவானது, தன்னை பணிகளில் இருந்து விடுவித்து, விடுப்பில் அனுப்பிய மத்திய அரசு நடவடிக்கைக்கு எதிராக அவர் தொடுத்துள்ளதாகும்.
முன்னதாக, சிபிஐ மூத்த அதிகாரி சின்ஹா தனது 34 பக்க மனுவில் கூறியிருந்ததாவது:
எனது பணியிடமாற்ற நடவடிக்கையின் மூலமாக, ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான ஊழல் புகாரை விசாரிக்கும் குழுவில் இருந்து நான் நீக்கப்பட்டுள்ளேன். இந்த பணியிடமாற்ற நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது. சில சக்திவாய்ந்த நபர்களுக்கு எதிரான ஆதாரங்களை இந்த விசாரணை வெளிக்கொணரும் என்பதால், பணியிடமாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர்: ராகேஷ் அஸ்தானா மீதான வழக்குப் பதிவு தொடர்பாக, கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலிடம், சிபிஐ இயக்குநர் விளக்கியுள்ளார். அன்றைய தினம் இரவே அஜித் தோவால் இதுதொடர்பாக ராகேஷ் அஸ்தானாவுக்கு தகவல் அளித்துள்ளார். அப்போது அஸ்தானா, தாம் கைது செய்யப்படக் கூடாது என்று தோவாலிடம் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, அஸ்தானா மீதான ஊழல் வழக்கில் தொடர்புடைய அரசு அதிகாரிகள் தொடர்பாக சோதனை நடத்த துணை கண்காணிப்பாளர் ஏ.கே. பஸ்ஸி (அந்தமானுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ள அஸ்தானா வழக்கு விசாரணை அதிகாரி) முன்மொழிந்தார். ஆனால், அதற்கு உடனடியாக அனுமதி அளிக்காத சிபிஐ இயக்குநர், தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் அதற்கு அனுமதியளிக்கவில்லை என்று கூறினார்.
அஸ்தானா மீதான வழக்கில், இடைத்தரகரான மனோஜ் பிரசாத்திடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டபோது, அவர் அஜித் தோவால் மற்றும் இந்திய உளவு அமைப்பான "ரா'வின் சிறப்பு இயக்குநர் சமந்த் குமார் கோயல் ஆகியோரது பெயரை குறிப்பிட்டார். தனது தந்தையும், ஓய்வு பெற்ற இணையச் செயலருமான தினேஷ்வர் பிரசாத்துக்கு, தோவாலுடன் நெருங்கிய நட்பு இருப்பதாக கூறிய அவர், தாம் சிபிஐ-யால் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டதற்காக ஆத்திரமடைந்து சிபிஐ அதிகாரிகளை தவறாகப் பேசினார்.
இந்நிலையில், இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரியான தேவேந்தர் குமாரின் அலுவலகம் மற்றும் வீட்டில் கடந்த அக்டோபர் 20-ஆம் தேதி சோதனை நடத்தப்பட்டது. அப்போது தொலைபேசியில் தொடர்புகொண்ட சிபிஐ இயக்குநர், சோதனையை உடனடியாக நிறுத்துமாறும், இது அஜித் தோவாலின் அறிவுறுத்தல் என்றும் கூறினார்.
மத்திய இணையமைச்சர்: அஸ்தானா வழக்கில் புகார்தாரரான தொழிலதிபர் சதீஷ் பாபு சனாவிடம் அக்டோபர் 20-ஆம் தேதி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சதீஷ் பாபு அளித்த வாக்குமூலத்தின்படி, கடந்த ஜூன் மாதத்தில் நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை இணையமைச்சர் ஹரிபாய் பார்த்திபாய்க்கு சதீஷ் பாபு சில கோடிகள் கொடுத்தார். அந்தப் பணம் ஆமதாபாதைச் சேர்ந்த விபுல் என்பவர் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஹரிபாய், மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை அமைச்சர் அலுவலகத்தின் மூலமாக சிபிஐ மூத்த அதிகாரிகளைக் கொண்டு இந்த வழக்கில் தலையிட்டுள்ளார். சிபிஐ இயக்குநர் அந்த அலுவலகத்துக்கு கட்டுப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர்: மேலும், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் கே.வி. செளதரியை, சதீஷ் பாபுவும், கோரந்தலா ரமேஷ் என்பவரும் தில்லியில் வைத்து சந்தித்து மொயின் குரேஷி வழக்கு தொடர்பாக கலந்தாலோசித்துள்ளனர். அதைத் தொடர்ந்து அஸ்தானாவை தனது இல்லத்துக்கு அழைத்து செளதரி விசாரித்ததாகவும், அப்போது சதீஷ் பாபு ஆகியோருக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை என்றும் செளதரியிடம் அஸ்தானா கூறியதாகவும் சதீஷ் பாபு தெரிவித்தார். 
இதனிடையே, சதீஷ் பாபுவிடம் விசாரணை நடத்தியபோது, மத்திய சட்டத்துறை செயலர் சுரேஷ் சந்திரா அவரை தொடர்பு கொண்டார் என்று அந்த மனுவில் சின்ஹா கூறியுள்ளார். இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி தொடர்புடைய வழக்கில், குற்றம்சாட்டப்பட்டுள்ள இடைத் தரகரான மனோஜ் பிரசாத்திடம் லஞ்சம் பெற்றதாக சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 
"குற்றச்சாட்டு அடிப்படையற்றது': இதனிடையே, பணம் பெற்றதாக தம் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று கூறியுள்ள அமைச்சர் ஹரிபாய் பார்த்திபாய் செளதரி, அத்தகைய குற்றச்சாட்டை நிரூபித்தால் தாம் அரசியலில் இருந்து விலகத் தயார் என்று சவால் விடுத்துள்ளார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/20/w600X390/sinha.jpg http://www.dinamani.com/india/2018/nov/20/ராகேஷ்-அஸ்தானாவுக்கு-எதிரான-வழக்கில்-மத்திய-அமைச்சர்-தலையீடு-மூத்த-சிபிஐ-அதிகாரி-புகார்-3041866.html
3041865 இந்தியா ராஜஸ்தான்: சச்சின் பைலட்டை தோற்கடிக்க பாஜக வியூகம் DIN DIN Tuesday, November 20, 2018 01:55 AM +0530 ராஜஸ்தானில் திடீர் திருப்பமாக மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டுக்கு எதிராக முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த அமைச்சர் யூனிஸ் கானை பாஜக களமிறக்கியுள்ளது. சச்சின் பைலட் போட்டியிடும் டோங் சட்டப் பேரவைத் தொகுதியில் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம் மக்கள் உள்ளனர். எனவே, அவருக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் யூனிஸ் கானை அத்தொகுதி வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான திங்கள்கிழமை பாஜக இந்த முடிவை எடுத்துள்ளது. முன்னதாக, இந்தத் தொகுதி பாஜக எம்எல்ஏவான அஜீத் சிங் மேத்தாவை வேட்பாளராக பாஜக அறிவித்திருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார். சச்சின் பைலட்டை தோற்கடிக்கும் பாஜகவின் முக்கிய உத்தியாக இது கருதப்படுகிறது. ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் சச்சின் பைலட் முதல்வராக வாய்ப்பு அதிகம் உள்ளதாகத் தெரிகிறது. அவருக்கு எதிராக முஸ்லிம் அமைச்சரை பாஜக களமிறக்கியுள்ளதால், அத்தொகுதியில் தேர்தல் களம் மேலும் விறுவிறுப்பு அடைந்துள்ளது.  
அமைச்சர் யூனிஸ் கான், இப்போது தீத்வானா தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். பாஜகவில் கடைசி நேரம் வரை அவருக்கு தொகுதி ஒதுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை 6 வேட்பாளர் அடங்கிய 5-ஆவது வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. அதில் யூனிஸ் கான், டோங் தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  பாஜக சார்பில் யூனிஸ் கான் மட்டுமே முஸ்லிம் வேட்பாளர் ஆவார். காங்கிரஸ் சார்பில் 15 முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட 15 வேட்பாளர்களும் தோல்வியடைந்தனர். பாஜக சார்பில் 4 வேட்பாளர்கள் போட்டியிட்டு, அவர்களில் இருவர் வெற்றி பெற்றனர்.
200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில் டிசம்பர் 7-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2013/5/31/1/w600X390/sachinpilot.jpg http://www.dinamani.com/india/2018/nov/20/ராஜஸ்தான்-சச்சின்-பைலட்டை-தோற்கடிக்க-பாஜக-வியூகம்-3041865.html
3041864 இந்தியா சபரிமலை: பக்தர்கள் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் DIN DIN Tuesday, November 20, 2018 01:55 AM +0530 கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்கள் 69 பேர் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மாநிலத்தின் பல இடங்களிலும் பாஜக, யுவ மோர்ச்சா அமைப்பினர் உள்பட பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசு முடிவெடுத்ததை அடுத்து, பாஜக,காங்கிரஸ், ஆர்எஸ்எஸ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் சபரிமலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், 2 மாத கால மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் கடந்த வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. அதையடுத்து கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வந்தது. 
இந்நிலையில், கோயில் சந்நிதானத்தில் திங்கள்கிழமை அதிகாலையில் பக்தர்கள் சிலர் ஐயப்பன் நாமத்தை கோஷமிட்டு திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதற்காகவும் 69 பேரை கைது செய்த காவல் துறையினர் அவர்களை மன்னியார் முகாமுக்கு கொண்டு வந்தனர். சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். இதற்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் பினராயி விஜயன் வீட்டுக்கு முன்னிலையிலும், மன்னியார் முகாம் முன்பும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். யுவ மோர்ச்சா அமைப்பை சேர்ந்த 5 பேர், கைகளில் கொடிகளை ஏந்தி முதல்வரின் காரின் முன்பு விழ முயற்சித்தனர். அவர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட 69 பேரும் திங்கள்கிழமை மாலை கேரள உயர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். பக்தர்கள் மீதான காவல் துறையினரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், இது போன்ற சம்பவம் மறுபடி நடைபெற்றால் காவல் துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். 
மேலும், கைது செய்யப்பட்டவர்களை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கண்டனம்: ஐயப்ப பக்தர்கள் கைது செய்யப்பட்டதற்கு மத்திய அமைச்சர் கே. ஜே. அல்போன்ஸ் கண்ணன்தானம் மற்றும் கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நிலக்கல் முகாமுக்கு திங்கள்கிழமை வருகை தந்த அல்போன்ஸ் இது தொடர்பாக பேசுகையில், "சபரிமலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டியதன் அவசியம் என்ன? ஐயப்பன் கோயில் வளாகத்தை கேரள அரசு போர்க்களமாக மாற்றி வருகிறது. யாத்திரைக்காக வந்தவர்கள் பக்தர்கள்; பயங்கரவாதிகள் அல்ல. பக்தர்களை வழிப்பறி கொள்ளைக்காரர்களைப் போல அரசு நடத்துகிறது. சோவியத் நாட்டில் ஸ்டாலின் ஆட்சி செய்ததை போல இங்கு உள்ளது. சட்டம், ஒழுங்கு என்ன ஆனது? இதுதான் ஜனநாயகமா? ' என்று கேள்வி எழுப்பினார். 
இதனிடையே, பக்தர்களுக்கு எதிராக காவல்துறையினர் எடுத்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த ரமேஷ் சென்னிதலா, மாநிலத்தில் ஹிட்லர் ஆட்சி நடைபெறுகிறதா? என்று கேட்டு பினராயி விஜயன் தலைமையிலான அரசை தாக்கிப் பேசினார். மேலும், அவர் பேசுகையில், " கோயிலின் அமைதியை குலைக்கும் வகையில் போராட்டம் நடத்துபவர்களை கைது செய்ய வேண்டுமே தவிர அப்பாவி பக்தர்களை அல்ல. உண்மையான பக்தர்களை கைது செய்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இது காவல்துறையின் அகந்தையை காட்டுகிறது' என்றார் சென்னிதலா.
நீதிமன்ற விசாரணை தேவை: சபரிமலையில் பக்தர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் நீதிமன்ற விசாரணை தேவை என்று கேரள மாநில பாஜக தலைவர் பி. எஸ். ஸ்ரீதரன்பிள்ளை தெரிவித்துள்ளார்.

"காவல்துறையின் நடவடிக்கை சரியே'

சபரிமலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த காவல் துறையினரின் நடவடிக்கை நியாயமானதுதான் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். இதுதொடர்பாக  கோழிக்கோட்டில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "ஐயப்பன் கோயிலில் பிரச்னையை உருவாக்குவதற்காக ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அங்கு தங்கியுள்ளனர். அவர்கள் தான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திட்டமிட்டு இவ்வாறு செயல்படுகின்றனர். ஆனால் கோயில் வளாகத்தில் பிரச்னையை உருவாக்க அரசு அனுமதிக்காது. அதுமட்டுமன்றி கைது செய்யப்பட்டவர்கள் யாரும் உண்மையான ஐயப்ப பக்தர்கள் இல்லை. அரசு எப்போதும் ஐயப்ப பக்தர்களுக்கு ஆதரவாகத்தான் செயல்படும். உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டிய கடமையை அரசு செய்து வருகிறது. சபரிமலைக்கு வருகை தரும் பெண் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது' என்றார்.
மேலும்,  ஐயப்ப பக்தர்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது என்ற பிம்பத்தை மக்களிடையே உருவாக்க வேண்டாம் என்று ஊடகங்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/30/w600X390/Sabarimala.jpg http://www.dinamani.com/india/2018/nov/20/சபரிமலை-பக்தர்கள்-கைதுக்கு-எதிர்ப்பு-தெரிவித்து-போராட்டம்-3041864.html
3041863 இந்தியா அமிருதசரஸில் வீசப்பட்ட குண்டுகள் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டவை?: முதல்வர் அமரீந்தர் சிங் சந்தேகம் DIN DIN Tuesday, November 20, 2018 01:53 AM +0530 பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ் அருகே அட்லிவால் கிராமத்தில்   ஞாயிற்றுகிழமை நிராங்கரி பவன் பிரார்த்தனைக் கூட்டத்தில் மர்மநபர்கள் வீசிய கையெறி குண்டுகள் பாகிஸ்தான் ராணுவத்தின் ஆயுத தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டதென்ற சந்தேகம் எழுந்துள்ளதென பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் திங்கள்கிழமை தெரிவித்தார். 
அமிருதசரஸ் அருகே சந்த் நிராங்கரி மிஷன் சார்பில் நடைபெற்ற ஆன்மிக பிரார்த்தனை கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மோட்டார் பைக்கில் வந்த முகமூடி அணிந்த நபர்கள் கையெறி குண்டுகளை வீசியதில் 3 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்தனர். 
பயங்கரவாதிகளின் நாசவேலை என சந்தேகிக்கப்பட்ட நிலையில், இச்சம்பவம் தொடர்பாக தகவல் அளிப்போருக்கு ரூ.50 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் திங்கள்கிழமை அறிவித்திருந்தார்.  
இதுதொடர்பாக பஞ்சாப் போலீஸாரை 181 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும், தகவல் அளிப்போரின் பெயர், இருப்பிடம் குறித்து ரகசியம் காக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. 
இந்நிலையில், முதல்வர் அமரீந்தர் சிங் குண்டு வெடிப்பு இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது, ""நிராங்கரி பவன் பிரார்த்தனை கூடத்தில் வீசப்பட்ட கையெறி குண்டுகள் பாகிஸ்தானின் அடையாளங்கள் காணப்படுகிறது. அந்த குண்டுகள் பாகிஸ்தான் ஆயுத தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டவை என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 
போலீஸாரால் கைப்பற்றப்பட்ட கையெறி குண்டுகளின் துகள்கள் எச்ஜி-84 ரகத்தை சேர்ந்தது என்பதும், கடந்த மாதம் பஞ்சாப்பில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்திலும் அதேப்போன்ற குண்டு பயன்படுத்தப்பட்டுள்ளதும், அந்த குண்டு எல்லைத்தாண்டிய நம் எதிரி நாட்டு (பாகிஸ்தான்) படையினராலும், அங்கிருந்து இயங்கும் பயங்கரவாதிகளாலும் பயன்படுத்தப்படும் வெடிப்பொருள் என்பதும் தெரிய வந்துள்ளது. 
பிரிவினைவாத குழுக்களான ஐ.எஸ். பயங்கரவாதிகள், காலிஸ்தான் தீவிரவாதிகள் அல்லது காஷ்மீர் பயங்கரவாதி கும்பல் என இந்த அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கு தொடர்பிருக்க வாய்ப்புள்ளதாக கருதுகிறோம்.  
விசாரணையில், தேசிய புலனாய்வு முகமைக்குழுவின் விசாரணை அதிகாரிகளும், வெடிகுண்டு நிபுணர்களும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்'' என்று தெரிவித்தார். பின்னர், குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், நிதி உதவியும் வழங்கினார். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/20/w600X390/amaristarsingh.jpg அமிருதசரஸ் அருகே கையெறி குண்டு தாக்குதல்  நிகழ்ந்த இடத்தில் திங்கள்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் அமரீந்தர் சிங். http://www.dinamani.com/india/2018/nov/20/அமிருதசரஸில்-வீசப்பட்ட-குண்டுகள்-பாகிஸ்தானில்-தயாரிக்கப்பட்டவை-முதல்வர்-அமரீந்தர்-சிங்-சந்தேகம்-3041863.html
3041862 இந்தியா தெலங்கானா தேர்தலில் ஜன சேனா போட்டியில்லை: நடிகர் பவன் கல்யாண் DIN DIN Tuesday, November 20, 2018 01:52 AM +0530 டிசம்பர் 7-ஆம் தேதி நடைபெற உள்ள தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் ஜன சேனா கட்சி போட்டியிடப் போவதில்லை என்றும், அதற்கு பதிலாக அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் மற்றும் நடிகருமான பவன் கல்யாண் அறிவித்துள்ளார். 
அவர் கூறுகையில், ""தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் 2019-ஆம் ஆண்டு ஏப்ரலில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்காக எங்கள் கட்சியினரை தயார் செய்து கொண்டிருந்தோம். 
ஆனால், எதிர்பார்ப்பிற்கு மாறாக முன்கூட்டியே அதாவது டிசம்பர்  7ஆம் தேதியே தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. ஒருவேளை ஏப்ரல் 2019ல் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தால் கட்டாயம் எங்கள் கட்சி தேர்தல் களத்தில் போட்டியிட்டிருக்கும்  என்றார்.

]]>
http://www.dinamani.com/india/2018/nov/20/தெலங்கானா-தேர்தலில்-ஜன-சேனா-போட்டியில்லை-நடிகர்-பவன்-கல்யாண்-3041862.html
3041861 இந்தியா ஆதார் இணைக்காத வங்கிக் கணக்கில் சம்பளத்தை நிறுத்திவைக்கக் கூடாது: மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு DIN DIN Tuesday, November 20, 2018 01:51 AM +0530 வங்கிக் கணக்கில் ஆதாரை இணைக்கவில்லை என்பதற்காக அந்த வங்கிக் கணக்கில் சம்பளத்தை செலுத்தாமல் நிறுத்தி வைக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு மும்பை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மும்பை துறைமுகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகத்திடம் இருந்து கடந்த டிசம்பர் 2015-ஆம் ஆண்டு எனக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அதில் துறைமுகத்தில் பணியாற்றும் தங்கள் அதிகார வரம்புக்குள் வரும் தொழிலாளர்கள் அனைவரும், தங்களது சம்பளம் வரவு வைக்கப்படும் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஆதார் இணைப்பது எனது அடிப்படை உரிமையைப் பறிக்கும் என்ற காரணத்தால் நான் எனது வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை. இதையடுத்து, கடந்த 2016 ஜூலை முதல் எனது சம்பளம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உரிய உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
மேலும், வங்கிக் கணக்கு தொடங்க ஆதார் கட்டாயமில்லை என்று கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் அவர் நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டினார்.
இதையடுத்து நீதிபதிகள் ஏ.எஸ்.ஓகா, எஸ்.கே.ஷிண்டே ஆகியோர் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது: வங்கிக் கணக்கில் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்று கூறி ஒரு ஊழியரின் சம்பளத்தை எவ்வாறு நிறுத்தி வைக்க முடியும்? இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைப் பின்பற்ற வேண்டும். ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்று கூறி வங்கிக் கணக்கில் சம்பளப் பணத்தை அரசு செலுத்தாமல் நிறுத்தி வைத்தது ஏற்க முடியாதது. எனவே, இதுவரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊதியத்தை அவரது சம்பள வங்கிக் கணக்கில் உடனடியாக செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கில் இறுதிக் கட்ட விசாரணை ஜனவரி 8-ஆம் தேதி நடைபெறும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2014/3/15/2/w600X390/mumbaicourt.jpg http://www.dinamani.com/india/2018/nov/20/ஆதார்-இணைக்காத-வங்கிக்-கணக்கில்-சம்பளத்தை-நிறுத்திவைக்கக்-கூடாது-மும்பை-உயர்நீதிமன்றம்-உத்தரவு-3041861.html
3041860 இந்தியா மோடி ஆட்சியில் வலுவிழந்து வரும் சுற்றுச் சூழல் சட்டங்கள் DIN DIN Tuesday, November 20, 2018 01:50 AM +0530 மோடி தலைமையில் மத்தியில் பாஜக அரசு ஆட்சியமைந்த பிறகு நாட்டின் சுற்றுச் சூழல் பாதுகாப்பு சட்டம் வலுவிழந்து வருவதாக முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
மறைந்த பிரதமர் இந்திரா காந்தி
குறித்து ஜெய்ராம் ரமேஷ் எழுதிய புத்தகத்தின் ஹிந்தி மொழியாக்க நூல் வெளியீட்டு விழா தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி அந்நூலை வெளியிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜெய்ராம் ரமேஷ், அவர்களிடம் கூறியதாவது:
பாஜக தலைமையிலான அரசு மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. குறிப்பாக, சுற்றுச் சூழல் பாதுகாப்பு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகள் மற்றும் வன உரிமைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களே அதற்கு சான்று. அதனால், பயன்கள் எதுவும் இல்லை; மாறாக பாதிப்புதான் அதிக அளவில் ஏற்பட்டு வருகின்றன. பாஜக அரசு ஆட்சியில் அமர்ந்த நாள் முதலே சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்கள் வலுவிழக்கத் தொடங்கிவிட்டன. இந்திரா காந்தியையும், மோடியையும் ஒப்பிடும் போக்கு சரியல்ல. இரண்டு தலைவர்களும்  தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவர்கள் என்பது மட்டும்தான் ஒற்றுமையான விஷயம். மற்றபடி இந்திரா முற்றிலும் வித்தியாசமானர். மோடியைப் போன்று திடீரென பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டு மக்களை அவர் அவதிக்குள்ளாக்கவில்லை என்றார் அவர்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2013/10/25/1/w600X390/jairamramesh.jpg http://www.dinamani.com/india/2018/nov/20/மோடி-ஆட்சியில்-வலுவிழந்து-வரும்-சுற்றுச்-சூழல்-சட்டங்கள்-3041860.html
3041859 இந்தியா "மோடி-போஃபியா'வால் எதிர்க்கட்சிகள் பாதிப்பு DIN DIN Tuesday, November 20, 2018 01:45 AM +0530 ""எதிர்க் கட்சிகள் "நரேந்திர மோடி- போஃபியா (அச்சம்)' காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்'' என பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா திங்கள்கிழமை தெரிவித்தார். 
மத்தியப் பிரதேசத்தில் வரும் 28-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து அங்கு தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. 
பேரணி ஒன்றைத் தொடங்கி வைத்து பேசிய  அமித் ஷா, கடந்த 4 தலைமுறைகளாக நாட்டை ஆட்சி செய்த நேரு- இந்திரா காந்தி குடும்பம் நாட்டின் நன்மைக்காக என்ன செய்தது?  என்று கேள்வி எழுப்பினார். 
மேலும் அவர் பேசும் போது, "எதிர்க்கட்சிகள் நரேந்திர மோடி- போபியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சிகள் மோடியை பிரதமர் பதவியை விட்டு விலக்கி வைக்க வேண்டும் என்று மட்டுமே நினைக்கின்றன. ஆனால், நாங்கள் (பாஜக ஆட்சி) வறுமை, பாதுகாப்பின்மை, காற்று மாசுபடுதல் போன்ற தேவையில்லாதவற்றையே மக்களிடம் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என தொடர்ந்து பாடுபடுகிறோம்.
கடந்த 4 ஆண்டுகளில் மோடி தலைமையிலான அரசு 129 வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. ஆனால் நான்கு தலைமுறை (நேரு, இந்திரா காந்தி) குடும்பம் இந்த நாட்டின் வளர்ச்சிக்காக என்ன செய்தது என்பதை தெரிவிக்க முடியுமா? 
சமீபத்தில் காங்கிரஸ் நடத்திய பேரணி ஒன்றில்  பங்கேற்ற ராகுல்காந்தி தான் உரையாற்றிய 22 நிமிடங்களில் மோடியின் பெயரை 44 முறை உச்சரித்தார். அவர் பாஜகவுக்கு ஆதரவாக  பேரணி நடத்தினாரா? காங்கிரஸþக்கு ஆதரவாக நடத்தினாரா? என்று நானே ஆச்சர்யப்படும் வகையில் அப்பேரணி அமைந்திருந்தது. இதே ஆச்சர்யம் தான் மக்களவையில் ராகுல், மோடியை வெறித்தனமாக கட்டிப்பிடித்த போதும் எனக்கு ஏற்பட்டது' என்றார். 
மேலும் அவர் குறிப்பிடுகையில், 2016ஆம் ஆண்டு காஷ்மீர் பயங்கரவாதிகள் உரி ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய போது நாடே கொந்தளித்தது. இதற்கு பதிலடியாக எல்லைக்கு அப்பால் பயங்கரவாதிகளின் முகாம்களை தாக்கி அழிக்கும் துல்லியத் தாக்குதல் நடத்த மோடி உத்தரவிட்டார். உலகளவில் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளுக்கு அடுத்தபடியாக  தனது ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாகவும், பழி வாங்கும் வகையிலும் இத்தாக்குதல் நடவடிக்கை அமைந்திருந்தது. 
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தின் போது 2014ம் ஆண்டு வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் இந்தியா உலகளவில் 9வது இடத்தில் இருந்தது. தற்போது, பாஜக ஆட்சியில் 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.  மீண்டும் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்பட்சத்தில் உலகளவில் 5ஆம் இடத்தில் உள்ள பிரிட்டனை முறியடித்து இந்தியா அந்த இடத்திற்கு முன்னேறும், என்று அமித் ஷா தெரிவித்தார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/20/w600X390/AmitShah.jpg http://www.dinamani.com/india/2018/nov/20/மோடி-போஃபியாவால்-எதிர்க்கட்சிகள்-பாதிப்பு-3041859.html
3041858 இந்தியா ஹரியாணா: குன்ட்லி-மானேசர் நெடுஞ்சாலையைத் திறந்துவைத்தார் மோடி DIN DIN Tuesday, November 20, 2018 01:44 AM +0530 ஹரியாணா மாநிலத்தில், பல ஆண்டுகளாக அமைக்கப்பட்டு வந்த குன்ட்லி-மானேசர் நெடுஞ்சாலையின் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, திங்கள்கிழமை பிரதமர் நரேந்திர மோடி அதனை மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தார்.
இத்துடன், 3.2 கி.மீ. நீளமுள்ள பல்லாபாகர்-முஜேசார் இடையிலான மெட்ரோ ரயில் வசதியையும் தொடங்கிவைத்த மோடி, பல்வல் மாவட்டத்தில் உள்ள துதோலா பகுதியில் ரூ.989 கோடி செலவில் அமையவுள்ள ஸ்ரீவிஷ்வகர்மா திறன் பல்கலைக்கழகத்துக்கான அடிக்கல்லையும் நாட்டினார்.
குருகிராம் மாவட்டத்திலுள்ள சுல்தான்பூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
மொத்தம் 83 கி.மீ. நீளம் கொண்ட "மேற்குப்புற நெடுஞ்சாலை' என்றழைக்கப்படும் குன்ட்லி-மானேசர் நெடுஞ்சாலைப்பணி கடந்த 12 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. தற்போதைய பாஜக ஆட்சியிலேயே இத்திட்டம் விரைந்து செயல்படுத்தப்பட்டது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், அனைத்துத் திட்டங்களுக்கும் பல்வேறு தடைகள் நிலவி வந்த நிலையில், அந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் தாமதப்படுத்தப்பட்டன.
இந்த நெடுஞ்சாலைத் திட்டம் 9 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்திருக்க வேண்டியது. கடந்த 2010-ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் அரசின் முறையான திட்டமிடல் இல்லாமை, தவறாக வழிநடத்துதல் ஆகியவற்றால் அதனை முடிக்க இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது.
திட்டம் ஆரம்பிக்கப்படும் போது ரூ.1,200 கோடி செலவாகும் எனக் கணிக்கப்பட்டது. ஆனால், திட்டம் முடியும்போது, அதை விட 3 மடங்கு அதிக செலவு ஆகியுள்ளது. இத்திட்டத்தின் மூலம், மக்கள் பணத்தை எப்படி வீணடிக்க முடியும்? என்றும், மக்களுக்கு எப்படி அநீதி இழைக்க முடியும்? என்றும் காங்கிரஸ் காட்டியுள்ளது. 
இத்துடன், பல்லாபாகர்-முஜேசார் இடையிலான மெட்ரோ ரயில் வசதியும் ஹரியாணா மக்களின் வசதிக்காகத் தொடக்கிவைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் மூலம் மாநிலத்தில் போக்குவரத்துக்கான புதிய புரட்சி தொடங்கியுள்ளது. மேலும், மாநில இளைஞர்களின் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் ஸ்ரீவிஸ்வகர்மா திறன் பல்கலைக்கழகம் கட்டப்படவுள்ளது என்று மோடி தெரிவித்தார்.
அரசியல் ஆதாயத்துக்காகத் திறப்பு: நெடுஞ்சாலை திறப்புவிழா குறித்து, காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா கூறுகையில், "அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மக்களைக் கவரும் நோக்கிலும், அரசியல் ஆதாயத்துக்காகவும் பணிகள் முழுமையாக நிறைவடையாத நெடுஞ்சாலையை பாஜக அரசு திறந்துவைத்துள்ளது. இதன் மூலம் மக்களின் உயிருடன் பாஜக அரசு விளையாடுகிறது' என்று தெரிவித்தார்.
சுகாதாரத்துக்கு முன்னுரிமை: இதனிடையே, "உலக கழிவறை தினம்' திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்ட நிலையில் பிரதமர் மோடி, "நாடு முழுவதும் சுதாதாரத்துக்கும், தூய்மைப் பணிகளுக்கும் கடந்த 4 ஆண்டுகளாக முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. தூய்மை இந்தியா திட்டம் மூலம் நாட்டின் சுகாதாரப் பணிகளுக்கு பங்களித்து வரும் அனைவருக்கும் நன்றி' என்று சுட்டுரையில் பதிவிட்டார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/20/w600X390/modi1.jpg ஹரியாணா மாநிலம், குருகிராம் மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நெடுஞ்சாலை திறப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, மாநில ஆளுநர் சத்யதேவ் நாராயண ஆர்யா, மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார். http://www.dinamani.com/india/2018/nov/20/ஹரியாணா-குன்ட்லி-மானேசர்-நெடுஞ்சாலையைத்-திறந்துவைத்தார்-மோடி-3041858.html
3041857 இந்தியா நேஷனல் ஹெரால்டு வழக்கு: சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிரான மனு தள்ளுபடி DIN DIN Tuesday, November 20, 2018 01:33 AM +0530 நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவிப்பதற்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் மோதிலால் வோரா தாக்கல் செய்த இந்த மனுவில், "நேஷனல் ஹெரால்டு வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும்போது, சுப்பிரமணியன் சுவாமி சுட்டுரையில் கருத்து தெரிவிப்பதன் மூலம் விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார். எனவே, வழக்கு குறித்து சுட்டுரையில் கருத்து தெரிவிக்க அவருக்குத் தடை விதிக்க வேண்டும்' என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவின் மீது விசாரணை நடத்திய கூடுதல் தலைமை பெருநகர நீதிபதி சமர் விஷால் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தெரிவித்ததாவது:
குற்றம் சாட்டப்பட்டுள்ளவரின் சுட்டுரைப் பதிவுகள் வழக்கு விசாரணையைப் பாதித்துள்ளதாகத் தெரியவில்லை. நீதிமன்ற விசாரணைக்குக் குறுக்கீடு ஏற்படுத்தியதாகவும் தெரியவில்லை. இது குறித்து மனுதாரரிடம் தெளிவான விளக்கங்களும், சாட்சியங்களும் இல்லை.
வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்குக்கான சாட்சியங்களும் ஏற்கெனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அவற்றை அனைத்தையும் பரிசோதித்துப் பார்த்ததில், சுட்டுரையில் சுவாமி பதிவிட்டது வழக்கின் போக்கை பாதிப்பதாகத் தோன்றவில்லை.
சுவாமியின் பதிவுகள் மனுதாரரைப் பாதிப்பதாகத் தோன்றினால், அவர் சட்டப்பூர்வ முறையில் தீர்வுகள் காணலாம். ஆனால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியாது என்று தெரிவித்த நீதிபதி, மனுவைத் தள்ளுபடி செய்தார்.
கடந்த அக்டோபர் 20-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, "சுட்டுரையில் கருத்து தெரிவிக்க எனக்கு உரிமை உள்ளது' என்று சுவாமி தெரிவித்திருந்தார். 
பின்னணி: நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வந்த அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனம், காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 90.25 கோடி கடன் பாக்கி வைத்திருந்தது. இதனிடையே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோரால் ரூ. 50 லட்சம் முதலீட்டில் யங் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் கடந்த 2010-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. யங் இந்தியா நிறுவனத்தின் பங்குதாரர்களாக ராகுல் காந்தி, சோனியா காந்தி, மோதிலால் வோரா, ஆஸ்கார் பெர்ணான்டஸ், சுமன் துபே, சாம் பிட்ரோடா ஆகியோர் உள்ளனர். அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் சொத்துகளை யங் இந்தியா நிறுவனம் முறைகேடாக அபகரித்து விட்டதாக, சுப்பிரமணியன் சுவாமி தில்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/6/w600X390/Subramanian-Swamy.jpg http://www.dinamani.com/india/2018/nov/20/நேஷனல்-ஹெரால்டு-வழக்கு-சுப்பிரமணியன்-சுவாமிக்கு-எதிரான-மனு-தள்ளுபடி-3041857.html
3041856 இந்தியா ரயில்வே உணவக ஒப்பந்த முறைகேடு வழக்கு: காணொலி முறையில் லாலு ஆஜராக நீதிமன்றம் உத்தரவு DIN DIN Tuesday, November 20, 2018 01:32 AM +0530 ரயில்வே உணவக ஒப்பந்த முறைகேடு வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் வரும் டிசம்பர் 20-ஆம் தேதி காணொலி முறையில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு, தில்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அருண் பரத்வாஜ் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது,  உடல் நலக்குறைவு காரணமாக லாலு பிரசாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால், அவரால் நேரில் ஆஜராக முடியவில்லை என்று அவரது தரப்பு வழக்குரைஞர் கூறினார். இதையடுத்து, லாலு பிரசாத் மருத்துவமனையில் இருந்தாலும் அல்லது சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், வரும் டிசம்பர் 20-ஆம் தேதி காணொலி முறையில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். லாலு பிரசாத் நேரில் ஆஜராவதை சிபிஐயும், அமலாக்கத் துறையும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
கால்நடைத் தீவன வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள லாலு பிரசாத், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முறையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக, அவருக்கு சில காலம் ஜாமீன் வழங்கப்பட்டது. தற்போது ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் லாலு சிகிச்சை பெற்று வருகிறார்.
லாலு பிரசாத், ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ரயில்வேயின் ஐஆர்சிடிசிக்குச் சொந்தமான உணவகங்களை நடத்துவதற்கான ஒப்பந்தத்தை வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, கடந்த ஏப்ரல் மாதம் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதனடிப்படையில் அமலாக்கத் துறை தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
அதைத் தொடர்ந்து, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட லாலு பிரசாதின் மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி ஆகியோருக்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி ஜாமீன் வழங்கியது. உடல்நலக் குறைவு காரணமாக லாலு பிரசாத் அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவர் நவம்பர் 19-ஆம் தேதி காணொலி முறையில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், திங்கள்கிழமையும் அவர் ஆஜராகததால் மேற்கண்ட உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/4/w600X390/Lalu_YadavAug25.jpg http://www.dinamani.com/india/2018/nov/20/ரயில்வே-உணவக-ஒப்பந்த-முறைகேடு-வழக்கு-காணொலி-முறையில்-லாலு-ஆஜராக-நீதிமன்றம்-உத்தரவு-3041856.html
3041855 இந்தியா உ.பி.: யோகி ஆதித்யநாத் அரசு மீது மாநில அமைச்சர் புதிய குற்றச்சாட்டு DIN DIN Tuesday, November 20, 2018 01:30 AM +0530 உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையான பாஜக அரசு மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு பள்ளி திறக்க நிதி ஒதுக்கவில்லை என்று கூட்டணிக் கட்சியான சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி (எஸ்பிஎஸ்பி) தலைவரும், மாநில பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அமைச்சருமான ஓம் பிரகாஷ் ராஜ்பர் குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னதாக, ராஜ்பர் தீய சக்தி என்று உத்தரப் பிரதேச மாநில பாஜக தலைவர் மகேந்திர நாத் அண்மையில் விமர்சித்தார். இதையடுத்து, மாநில பாஜகவுக்கும், ராஜ்பருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சுட்டுரையில் (டுவிட்டர்) ராஜ்பர் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், "உத்தரப் பிரதேசத்தில் 75 மாவட்டங்கள் உள்ளன. இதில் 1.5 கோடி மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர் உள்ளனர். இவர்களுக்கென்று 16 சிறப்புப் பள்ளிகள் மட்டுமே உள்ளன. இதில், அனைத்து மாணவர்களுக்கும் எவ்வாறு கல்வி அளிக்க முடியும். கூடுதல் பள்ளிகள் அமைக்க நிதி கோரினால், மாநில அரசு ஒதுக்கீடு செய்ய மறுக்கிறது' என்று பதிவிட்டுள்ளார்.
மாநில அமைச்சர் ஒருவர், அரசுக்கு எதிராக இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளது உத்தரப் பிரதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  முன்னதாக தங்கள் கட்சிக்கு பாஜக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று ராஜ்பர் குற்றம்சாட்டியிருந்தார். அப்போது, "பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுடன் முன்பு நடத்திய பேச்சுவார்த்தையில், உத்தரப் பிரதேசத்தில் அமைச்சர் பதவிக்கு இணையான மாநகராட்சி  தலைவர் பதவியும், 2 துணை தலைவர்  பதவிகளும் எங்கள் கட்சிக்கு அளிக்கப்படும் என வாக்குறுதியளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எதுவும் நடைபெறவில்லை. முதல்வர் யோகி ஆதித்யநாத், எங்கள் கட்சிக்கு எதிராக பேசி வருகிறார்' என்று குற்றம்சாட்டி இருந்தார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் ராஜ்பரின் கட்சி பாஜக கூட்டணி சார்பில் 8 தொகுதிகளில் போட்டியிட்டு நான்கு இடங்களில் வெற்றி பெற்றது.

]]>
http://www.dinamani.com/india/2018/nov/20/உபி-யோகி-ஆதித்யநாத்-அரசு-மீது-மாநில-அமைச்சர்-புதிய-குற்றச்சாட்டு-3041855.html
3041854 இந்தியா மம்தா பானர்ஜியின் வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடு DIN DIN Tuesday, November 20, 2018 01:30 AM +0530 மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் வாழ்க்கை வரலாறு பற்றிய நூல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
மம்தா பானர்ஜியின் வாழ்க்கை வரலாற்றை "தீதி: தி அன்டோல்ட் மம்தா பானர்ஜி' என்ற பெயரில் பத்திரிகையாளர் சுடாபா பால் எழுதியுள்ளார். இந்நூல் பென்குயின் இந்தியா நிறுவனத்தினால் வெளியிடப்பட்டது. திங்கள்கிழமை முதல் இந்த நூல் நாடெங்கிலும் விற்பனைக்கு வந்துள்ளது. மம்தா தனது வாழ்க்கையில் சந்தித்த பிரச்னைகள், அதை சமாளித்து அவர் மீண்டெழுந்து வந்த சாதனைகள், கல்லூரி கால அரசியலில் இருந்து மேற்கு வங்கத்தில் இடதுசாரி அரசை தோற்கடித்து 2011-ஆம் ஆண்டு ஆட்சி அமைத்தது வரை அனைத்தையும் அந்நூலில் பால் கூறியுள்ளார். 
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து இந்திய அரசியலில் எவ்வாறு மம்தா கால் பதித்தார்? என்றும், தேசிய தலைவராக உருவெடுத்தது குறித்தும் அந்நூலில் குறிப்பிட்டுள்ளார். மம்தா பானர்ஜி நாட்டின் வலிமையான, கடினமான பெண்களில் ஒருவர் என்றும் அவர் அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2019-ஆம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தலில் அவரது பங்கு என்னவாக இருக்கலாம் என்பது குறித்தும் அந்த நூலில் எழுதப்பட்டுள்ளது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/20/w600X390/mamta.jpg http://www.dinamani.com/india/2018/nov/20/மம்தா-பானர்ஜியின்-வாழ்க்கை-வரலாறு-நூல்-வெளியீடு-3041854.html
3041776 இந்தியா சக பேராசிரியர் மீது ஜாதிய வன்மம்: கான்பூர் ஐஐடி  பேராசிரியர்கள் நால்வர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு    DIN DIN Monday, November 19, 2018 07:11 PM +0530  

கான்பூர்: சக பேராசிரியர் மீது ஜாதிய வன்மத்துடன் நடந்து கொள்வதாக, கான்பூர் ஐஐடி  பேராசிரியர்கள் நால்வர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது   

கான்பூர் ஐஐடியின் ஏரோஸ்பேஸ் பிரிவில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் சுப்பிரமண்யம் சதேர்லா. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இவர் கான்பூர் ஐஐடியின் முன்னாள் மாணவரும் கூட. இவர் தன்னுடன் பணியாற்றும் சக பேராசிரியர்களான இஷான் ஷர்மா, சஞ்சய் மிட்டல், ராஜிவ் ஷேகர் மற்றும் சி.எஸ்.உபாத்யாய ஆகிய நால்வரும் தான் மீது ஜாதிய வன்மத்துடன் செயல்படுவதாக புகார் கூறியுள்ள சம்பவம் பரப்பரப்பைக் கிளப்பியுள்ளது. 

அவர் தனது புகாரில் குறிப்பிட்ட நால்வரும் மற்றும் வேறு சிலரும், 'தான் இட ஒதுக்கீட்டின் கீழ் பணிக்கு வந்துள்ளதாகவும், தனக்கு கேள்விகளுக்கு பதில் சொல்லும் திறமை இல்லையென்றும்'   கல்லூரியில் தன்னைப் பற்றி புரளிகளைப் பரப்பி  வருவதாகத் தெரிவித்துள்ளார். 

அவர் தனது புகார் தொடர்பாக கான்பூர் ஐஐடி இயக்குநரும், ஏரோஸ்பேஸ் பிரிவின் தலைவருமான ஏ.கே.கோஷுக்கு கடுமையான வார்த்தைகளில் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார் என்று ஐஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

அதேசமயம் சுப்பிரமண்யம் சதேர்லா காவல்துறையில் அளித்துள்ள புகாரின் பேரில், குறிப்பிட்ட நானகு பேராசிரியர்கள் மற்றும் அடையாளம் தெரியாத ஒருவர்  என ஐந்து பேர் மீது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கான்பூர் மேற்கு காவல்துறை கண்காணிப்பாளர் சஞ்சீவ் சுமன் தெரிவித்துள்ளார்.        

]]>
IIT, kanpur, dalit faculty, caste remarks, complaint, remarks, FIR, http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/19/w600X390/IIT_-_kanpur.jpg http://www.dinamani.com/india/2018/nov/19/4-iit-professors-charged-with-harassing-dalit-faculty-member-3041776.html
3041775 இந்தியா பூர்த்தியடையாத 'எக்ஸ்பிரஸ் வே'யினைத் திறந்து பயணிகளுக்கு உயிராபத்தை உண்டாக்கியுள்ளார் மோடி: காங்கிரஸ்  IANS IANS Monday, November 19, 2018 06:34 PM +0530  

புது தில்லி: ஹரியாணாவில் பூர்த்தியடையாத 'எக்ஸ்பிரஸ் வே'யினைத் திறந்து வைத்து பயணிகளுக்கு உயிராபத்தை பிரதமர் மோடி உண்டாக்கியுள்ளார் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. 

ஹரியானா மாநிலத்தில் குண்ட்லி - மனேசர்  - பல்வால்  (கே.எம்.பி) எக்ஸ்பிரஸ் வேயினை பிரதமர் மோடி மற்றும் ஹரியாணா முதல்வர் மனோஹர் லால் கட்டார் இருவரும் ஞாயிறன்று திறந்து வைத்தனர். முழுமையாக நிறைவேறாத நிலையில் இந்த சாலையினைத் திறந்து வைத்து விட்டதாக பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

இந்நிலையில் பூர்த்தியடையாத 'எக்ஸ்பிரஸ் வே'யினைத் திறந்து வைத்து பயணிகளுக்கு உயிராபத்தை பிரதமர் மோடி உண்டாக்கியுள்ளார் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. 

இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரான ரந்தீப் சிங் சுர்ஜிவாலா தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியான ட்வீட்டுகளில் வெளியிட்டுள்ள தகவலானது வருமாறு:

முழுமையடையாத கே.எம்.பி எக்ஸ்பிரஸ் வேயினை சட்டத்துக்கு புறம்பாகவும் வலுக்கட்டாயமாகவும் திறந்து வைத்ததன் மூலமாக, பயணிகளுக்கு உயிராபத்தை பிரதமர் மோடியம், ஹரியாணா முதல்வர் மனோஹர் லால் கட்டாரும் உருவாக்கியுள்ளனர். 

கே.எம்.பி எக்ஸ்பிரஸ் வே பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்படுவதற்கு முன்பாக, ஏன் முறையான பொறியாளர்கள் மூலமாக சோதனைகளை நடத்தப்படவில்லை என்பது தெரிய வேண்டும். 

சாலை கட்டுமான ஆலோசனைக்காக மாநில அரசால் நியமிக்கப்பட்ட மூன்றாம் தரப்பு ஆலோசகரான நிறுவனம் கூட, சாலை கட்டுமானத்திற்காக "நிறைவுச் சான்றிதழ்" வழங்கவில்லை. மேலும் ஹரியாணா மாநில தொழில் மற்றும் உள்கட்டமைப்பு முன்னேற்ற கழகமும், கட்டுமானத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் பொறுப்பேற்க இயலாது என்று மறுத்து விட்டது. 

தேர்தல் சமயத்தில் ஒரு திடீர் விளம்பரத்திற்காகவும், தனியார் நிறுவனம் ஒன்று பயன் பெறுவதற்காகவும், பயணிகளுக்கு உயிராபத்தை பிரதமர் மோடியும் முதல்வர் கட்டாரும் உண்டாக்கியுள்ளார்களா?

இவ்வாறு அவர் தெரிவித்துளார்.      
 

]]>
hariyana, KMP express way, modi, khattar, inaguration, congress, accusation, randeep singh surjewala, twitter, http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/19/w600X390/modi_khattar.jpg http://www.dinamani.com/india/2018/nov/19/பூர்த்தியடையாத-எக்ஸ்பிரஸ்-வேயினைத்-திறந்து-பயணிகளுக்கு-உயிராபத்தை-உண்டாக்கியுள்ளார்-மோடி-காங்கிரஸ-3041775.html
3041767 இந்தியா கரோல் பாக் ஆலையில் தீ: அவசர கால வழியில் பருமனான நபர் சிக்கியதால் 4 பேர் பலி PTI PTI Monday, November 19, 2018 04:32 PM +0530
புது தில்லி: மத்திய தில்லியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இன்று நேரிட்ட தீ விபத்தின் போது அவசர கால வழியில் பருமனான நபர் சிக்கியதால் 4 பேர் தீயில் கருகி பலியாகினர்.

கரோல் பாக்கின் பிடோன்புரா பகுதியில் உள்ள துணிகளை துவைக்கும் தொழிற்சாலையில் இன்று மதியம் 12.23 மணியளவில் தீப்பற்றியது.

இதில், துணிகளைத் துவைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் கட்டடத்துக்குள் சிக்கிக் கொண்டனர். தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அவசர கால வழியில் பருமனான நபர் வெளியேற முயன்ற போது அவர் அதில் சிக்கிக் கொண்டார். இதனால் அவரும் வேளியேற முடியாமல், கட்டடத்துக்குள் இருந்தவர்களும் வெளியேற முடியாமல் 4 பேர் தீயில் கருகி உயிரிழந்ததாக தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
 

]]>
Karol Bagh, factory fire http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/6/w600X390/fire.jpg http://www.dinamani.com/india/2018/nov/19/karol-bagh-factory-fire-four-dead-as-man-stuck-at-exit-door-blocks-escape-route-3041767.html
3041758 இந்தியா சபரிமலை வழக்கின் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி தேவசம்போர்டு மனு DIN DIN Monday, November 19, 2018 03:14 PM +0530
புது தில்லி: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்குமாறு அளித்தத் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் தேவசம்போர்டு மனு தாக்கல் செய்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்குமாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால், சபரிமலைக்கு பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் நடத்தி வரும் போராட்டம் காரணமாக, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த முடியாமல் கோயில் நிர்வாகம் திணறி வருகிறது.

தீர்ப்பை மறுசீராய்வு செய்யக் கோரி பல்வேறு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவை ஜனவரி 22ம்  தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

இந்த நிலையில் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி தேவசம்போர்டு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு  தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/5/w600X390/Supreme_Court_EPS1.jpg http://www.dinamani.com/india/2018/nov/19/சபரிமலை-வழக்கின்-தீர்ப்பை-அமல்படுத்த-அவகாசம்-கோரி-தேவசம்போர்டு-மனு-3041758.html
3041752 இந்தியா சன்னிதானத்தில் பிரச்னையை உண்டாக்க ஆர்எஸ்எஸ் முகாம்: கேரள முதல்வர் குற்றச்சாட்டு DIN DIN Monday, November 19, 2018 02:34 PM +0530  

சபரிமலை கோயிலில் பிரச்னையை ஏற்படுத்த ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் சன்னிதானத்தில் முகாமிட்டிருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று (திங்கள்கிழமை) குற்றம்சாட்டினார். 

சபரிமலை கோயிலில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 68 பேரை போலீஸார் நேற்று இரவு கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கையை எதிர்த்து கேரள மாநிலம் முழுவதும் ஆங்காங்கே போராட்டம் நடைபெற்று வருகிறது. பக்தர்கள் மீது மாநில அரசு நடத்தும் அடக்குமுறைக்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் கோழிகோட்டில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று பேசுகையில், 

"அவர்கள் ஐயப்ப பக்தர்கள் கிடையாது. சன்னிதானத்தில் பிரச்னையை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் தான் அங்கு முகாமிட்டுள்ளனர். சபரிமலையில் பிரச்னையை உண்டாக்க அரசு யாரையும் அனுமதிக்காது. 

சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பதற்கான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தப்படுவதற்காக குறிவைக்கப்படுகிறது. சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்க எனது அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ஆனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகு, ஐயப்பன் கோயிலில் வழிபட செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டியது பொறுப்பாகும்.

பக்தர்களுக்கு எதிராக அரசு இருக்கிறது எனும் தவறான பிரசாரங்களுக்கு ஊடகங்கள் இரையாக வேண்டாம். சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவதை தவிர்த்து அரசுக்கு வேறு வழியில்லை" என்றார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/31/w600X390/Pinarayi_Vijayan.jpg http://www.dinamani.com/india/2018/nov/19/kerala-cm-justifies-police-action-in-sabarimala-3041752.html
3041750 இந்தியா சட்டப்பேரவைத் தேர்தல்களை எதிர்கொள்ள பாஜக எடுத்திருக்கும் அதிரடி வியூகம் பலனளிக்குமா? ENS ENS Monday, November 19, 2018 02:19 PM +0530
புது தில்லி: மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை எதிர்கொள்ள யாரும் எதிர்பாராத ஒரு அதிரடி வியூகத்தை பாஜக கையாள திட்டமிட்டுள்ளது.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் மாநிலங்கள் சட்டப்பேரவைத் தேர்தல் ஜுரத்தில் உள்ளன.

பொதுவாகவே பாஜக தேர்தல் பிரசாரத்தில் மோடிதான் ஹைலைட்டாக இருப்பார். ஒரே நாளில் 5 பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களில் கூட பங்கேற்பார். ஆனால் இந்த முறை அப்படி இருக்காதாம். அதற்கு உதாரணமாக மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் தேர்தல் பிரசாரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை வெறும் 4 பேரணிகளில் மட்டுமே பங்கேற்றுள்ளார். ராஜஸ்தானில் இன்னும் பிரசாரத்துக்கே செல்லவில்லை.

அதாவது, மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக சார்பில் அமித் ஷாவும், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், அந்தந்த மாநில பாஜக தலைவர்களையும் முன்னிலைப்படுத்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.

விரைவில் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல்களில் மோடியை தீவிரமாக முன்னிலைப்படுத்துவதைத் தவிர்க்க முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 

]]>
Assembly elections, Narendra Modi, BJP’s star campaigne, poll strategy http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/19/w600X390/modi.jpg http://www.dinamani.com/india/2018/nov/19/modi-wont-be-bjps-star-campaigner-in-assembly-elections-3041750.html
3041748 இந்தியா உர்ஜித் படேல் மற்றும் அவரது குழுவுக்கு முதுகெலும்பு உள்ளது என்று நினைக்கிறேன்: ஆர்பிஐ கூட்டம் குறித்து ராகுல் டிவீட்  DIN DIN Monday, November 19, 2018 01:44 PM +0530  

ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் மற்றும் அவரது குழுவுக்கு முதுகெலும்பு உள்ளது என்று எண்ணுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆர்பிஐ மற்றும் மத்திய அரசுக்கு இடையிலான பிரச்னை நிலவி வரும் நிலையில், ஆர்பிஐ வாரியக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதுதொடர்பாக டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், 

"மோடி மற்றும் அவரது சேவகர்கள் குழு அனைத்து அமைப்புகளையும் அழித்து வருகிறது. இன்று, மோடி தனது கைப்பாவைகள் மூலம், ஆர்பிஐ வாரியக் கூட்டத்தில் ஆர்பிஐயை அழிக்க முயற்சிப்பார். உர்ஜித் படல் மற்றும் அவரது குழுவுக்கு முதுகெலும்பு உள்ளது என்று நினைக்கிறேன். அவர்கள் மோடிக்கான எல்லையை அவருக்கு காண்பிப்பார்கள் என்று நினைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/19/w600X390/rahul.jpg http://www.dinamani.com/india/2018/nov/19/rbi-board-meet-rahul-gandhi-hopes-urjit-patel-his-team-have-spine-3041748.html
3041743 இந்தியா தண்டவாளத்தில் படுத்து நூலிழையில் உயிர் பிழைத்த ஆந்திர நபர் ENS ENS Monday, November 19, 2018 12:57 PM +0530
அனந்தபுர்: ஆந்திர மாநிலத்தில் ரயில் தன் மீது மோதாமல் தவிர்க்க தண்டவாளத்தில் படுத்து உயிர் பிழைத்த சம்பவம் விடியோவில் பதிவாகியுள்ளது.

அனந்த்புர் ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து இறங்கிய ஒரு பயணி, தண்டவாளத்தில் ரயில் வருவதைப் பார்க்காமல், அதில் குதித்துக் கடந்து செல்ல முயன்றார். அவரைத் தடுக்க அருகில் இருந்த பயணிகள் கூக்குரல் எழுப்பியும் அதை அவர் காதில் வாங்காததால் இந்த சம்பவம் நேரிட்டது.

ஆனால், ரயில் மிக அருகில் வந்ததைப் பார்த்த அந்த நபர், சாதுர்யமாக காலை நீட்டி தண்டவாளத்தில் படுத்தே விட்டார். அவர் மீது சரக்கு ரயில் வேகமாக கடந்து சென்றது. ரயில் முழுவதுமாக தன்னைக் கடந்து சென்ற பிறகு தூங்கி எழுந்தது போல கை கால்களை அசைத்தபடி எழுந்து நின்றார்.

இதனை திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்த பயணிகள் அவர் எழுந்து நின்றதும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
 

இந்த சம்பவத்தை பயணி ஒருவர் தனது செல்போனில் விடியோ எடுத்ததால் அது சமூக தளங்களில் பரவி வருகிறது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/19/w600X390/train_Incident.jpeg http://www.dinamani.com/india/2018/nov/19/andhra-man-misses-death-narrowly-while-goods-train-passes-over-him-3041743.html
3041741 இந்தியா சிபிஐ சிறப்பு இயக்குநர் அஸ்தானா வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரி இடமாற்றத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு DIN DIN Monday, November 19, 2018 11:55 AM +0530  

சிபிஐ சிறப்பு அதிகாரி ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்து வந்த சிபிஐ அதிகாரி நாக்பூருக்கு இடமாற்றம் செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். 

சர்ச்சைக்குரிய இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி தொடர்புடைய வழக்கில், ஹைதராபாதைச் சேர்ந்த தொழிலதிபர் சதீஷ் சனாவை விடுவிக்க லஞ்சம் பெற்றதாக சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா, சிபிஐ காவல் துறை துணை கண்காணிப்பாளர் தேவேந்தர் குமார் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்து வந்த விசாரணை குழுவில் இடம்பெற்றிருந்த சிபிஐ அதிகாரி மனீஷ் குமார் சின்ஹா மகாராஷ்டிர மாநிலம் நாக்பூருக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.  

இந்நிலையில், சிபிஐ அதிகாரி இந்த நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்துள்ள மனுவை அவசர வழக்காக விசாரிக்கவேண்டும் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான நீதிபதிகள் எஸ் கே கௌல் மற்றும் கே எம் ஜோசப் அமர்விடம் குறிப்பிட்டார். 

தனக்கு அரசு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா தொடர்ந்த வழக்கை இதே அமர்வு நாளை (செவ்வாய்கிழமை) விசாரிக்கிறது. இந்த வழக்கு விசாரணையுடன் இணைத்து தனது வழக்கையும் விசாரிக்குமாறு சிபிஐ அதிகாரி மனீஷ் குமார் சின்ஹா கேட்டுக்கொண்டார். 

நாக்பூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால், அஸ்தானாவுக்கு எதிரான வழக்கில் இருந்து தான் வெளியேற்றப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/25/w600X390/supremecourt.jpg http://www.dinamani.com/india/2018/nov/19/cbi-officer-probing-fir-against-asthana-moves-sc-challenges-transfer-to-nagpur-3041741.html
3041733 இந்தியா லஞ்சத்தின் கோரத் தாண்டவம்: அஜ்மல் கசாப்புக்கு இருப்பிடச் சான்றளித்த அவலம் DIN DIN Monday, November 19, 2018 10:48 AM +0530
கான்பூர்: மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் போது உயிரோடு பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் கடந்த 2012ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டான்.

இந்த நிலையில், கடந்த அக்டோபர் 21ம் தேதியிடப்பட்டு, உத்தரப்பிரதேசத்தில் அஜ்மல் கசாப் பெயரில் இருப்பிடச் சான்று வழங்கப்பட்டுள்ள அவலம் ஊடகங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

உத்தரப்பிரதச மாநிலம் பிதோனாவில் கசாப்பின் பெயரில் இருப்பிடச் சான்றி வழங்கப்பட்டுள்ளது.

ஒருவர் வேண்டும் என்றே பிதோனாவில் ஒரு போலி முகவரி கொடுத்து கசாப்பின் புகைப்படத்துடன் இருப்பிடச் சான்று கேட்டு விண்ணப்பித்தார். அந்த விண்ணப்பம் மீது எந்த விசாரணையும் உரிய நடைமுறைகளும் பின்பற்றப்படாமல் இருப்பிடச் சான்று வழங்கப்பட்டுள்ளது.

ஒரு பயங்கரவாதிக்கு எந்த விசாரணையும் நடத்தப்படாமல் இருப்பிடச் சான்று வழங்கிய வருவாய்த் துறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
 

]]>
ajmal kasab, UP, Terrorist http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2012/11/21/10/w600X390/Ajmal-Kasab2LL.jpg http://www.dinamani.com/india/2018/nov/19/ajmal-kasab-issued-domicile-certificate-in-up-3041733.html
3041731 இந்தியா சபரிமலையில் தடையை மீறி போராட்டம்: 68 பக்தர்கள் கைது DIN DIN Monday, November 19, 2018 10:41 AM +0530  

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 68 பக்தர்களை போலீஸார் கைது செய்துள்ளதாக போலீஸார் இன்று (திங்கள்கிழமை) தெரிவித்தனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதைத்தொடர்ந்து, தொடரப்பட்ட வழக்கில், 28-ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்புக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து, சபரிமலை கோயில் நடை கடந்த 17-ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. கோயில் நடை 2 மாதங்களுக்கு திறக்கப்பட்டிருக்கும். 

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த மாநில அரசு முயற்சித்து வந்த நிலையில், பாஜக, ஆர்எஸ்எஸ், சங்க் பரிவார் அமைப்புகள், காங்கிரஸ் உள்ளிட்டவை கோயில் பாரம்பரியத்தை பாதுகாப்பதற்காக போராட்டம் நடத்தி வந்தனர். 

அதன் பகுதியாக நேற்று இரவு 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயில் நடை மூடிய பிறகும், ஐயப்ப கோஷங்களை எழுப்பியுள்ளனர். இதையடுத்து, அவர்களை கலைந்து செல்லுமாறு போலீஸார் அறிவுறுத்தினர்.  இருப்பினும், அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் 68 பக்தர்களை போலீஸார் கைது செய்து பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள போலீஸ் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் இன்று நீதிமன்றம் முன் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.  

இதுதொடர்பாக, எஸ்பி பிரதீஸ் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கோயில் நடை 10 மணிக்கு மூடியதால் அவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அவர்கள் அந்த இடத்தில் இருந்து நகரக்கூட இல்லை" என்றார்.

மத்திய சுற்றுலாத்துறை இணை அமைச்சர் கேஜே அல்ஃபோன்ஸ் நிலக்கலில் பேட்டியளிக்கையில், "கேரள போலீஸார் எதற்காக தடை உத்தரவை பிறப்பித்துள்ளனர் என்று புரிந்துகொள்ளமுடியவில்லை. இந்த விஷயத்தை இப்படி கையாளக் கூடாது. சபரிமலை பக்தர்கள் ஒன்று பிரிவினைவாதிகள் அல்ல. இந்த இடத்தில் படைகளைபயன்படுத்தக்கூடாது. சபரிமலை கோயிலுக்கு வழங்கப்பட்ட மத்திய அரசின் நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை உறுதி செய்ய கோயிலுக்கு செல்கிறேன்" என்றார். 

இந்த சம்பவத்தை கண்டித்து சங்க் பரிவார் அமைப்புகள் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். அதனால், கோழிகோட்டில் முதல்வர் பங்கேற்கும் நிகழ்வுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/19/w600X390/Sabarimala.jpg http://www.dinamani.com/india/2018/nov/19/kerala-protests-as-68-sabarimala-pilgrims-arrested-3041731.html
3041730 இந்தியா இந்திரா காந்தி பிறந்ததினம்: நினைவிடத்தில் சோனியா, ராகுல் மரியாதை ANI ANI Monday, November 19, 2018 10:24 AM +0530
புது தில்லி: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 101வது பிறந்ததினம் இன்று காங்கிரஸ் கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு தில்லி ஷக்தி ஸ்தாலில் உள்ள இந்திரா காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா, தலைவர் ராகுல் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

]]>
former PM Indira Gandhi , sonia gandhi, ragul gandhi http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/19/w600X390/ragul_sonia.jpg http://www.dinamani.com/india/2018/nov/19/sonia-rahul-pay-tribute-to-former-pm-indira-gandhi-at-shakti-sthal-3041730.html
3041692 இந்தியா பிரிவினைவாத சக்திகளுக்கு ஊடகங்கள் துணைபோகக் கூடாது: பிரணாப் முகர்ஜி DIN DIN Monday, November 19, 2018 05:19 AM +0530 பிரிவினைவாத சக்திகளுக்கு ஊடகங்கள் துணை போகக்கூடாது என்று குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். 

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் தில்லியில் "தி மார்னிங் ஸ்டாண்டர்டு' என்ற ஆங்கிலப் பத்திரிகை அறிமுக விழா மான் சிங் சாலையில் உள்ள தாஜ் ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு பத்திரிகையை அறிமுகப்படுத்திவைத்தார். இதைத் தொடர்ந்து, "இந்திய ஜனநாயகத்தில் ஊடகங்களின் பங்கு' என்ற தலைப்பில் பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரை:

1940-ஆம் ஆண்டு மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்ட மார்னிங் ஸ்டாண்டர்டு பத்திரிகையின் நவீனப்படுத்தப்பட்ட பதிப்பை தில்லியில் மீண்டும் அறிமுகப்படுத்துவதில் மகிழ்வடைகிறேன். திங்கள்கிழமை (நவம்பர் 19) வெளிவரவுள்ள இந்தப் பத்திரிகை, தனது குழும சகோதரப் பத்திரிகைகளின் பெருமையை பறை சாற்றும் என நம்புகிறேன். 

இந்த நேரத்தில், இந்தியப் பத்திரிகைத் துறையின் பிதாமகர் ராம்நாத் கோயங்காவை நினைவுகூர்கிறேன். "இந்திய ஜனநாயகத்தில் ஊடகங்களின் பங்கு' என்ற தலைப்பில் பேசுமாறு கேட்கப்பட்டுள்ள இந்நிலையில், கடந்த சில தசாப்த காலமாக தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியால் ஊடகத்துறையில் ஏற்பட்ட அபரிமிதமான வளர்ச்சியை நினைத்துப் பார்க்கிறேன். இந்தக் காலகட்டத்தில் ஊடகத் துறை பெரிய மாற்றத்தைச் சந்தித்தது. சமூக வலைதளங்களின் வருகை, ஒரு தொலைபேசி வைத்துள்ளவரே பதிப்பாளராகவும், ஒலிபரப்பாளராகவும் மாறலாம் என்ற நிலையைத் தோற்றுவித்துள்ளது.

 ஊடகத்தை இந்திய ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றாகக் கூறுவர். என்னைப் பொருத்தவரை, ஊடகத் துறையே இந்திய ஜனநாயகத்தின் தூண்களில் மிகவும் பலம் வாய்ந்தது ஆகும். ஊடகங்கள், மக்களுக்கு தகவல் வழங்குகின்றன, மதிப்பீடு செய்கின்றன. மேலும், மக்களின் பொதுக் கருத்தை ஊடகங்களே வடிவமைப்பதுடன், அரசு, நீதித் துறை, மக்கள் பிரதிநிதிகள் ஆகிய மூன்றையும் ஊடகங்களே பொறுப்புக் கூறவைக்கிறது.

 இந்திய ஊடகத் துறைக்கு மிகப் பெரிய பாரம்பரியம் உள்ளது. இந்தியாவில் 70,000 நாளிதழ்கள் வெளியாகின்றன. ஒரு நாளில் மட்டும் சுமார் 100 மில்லியன் நாளிதழ்கள் விற்பனையாகின்றன. இந்தியாவில் 400 செய்தித் தொலைக்காட்சிகள் உள்ளன. இந்திய ஊடகத் துறையின் மதிப்பு ரூ. 1.5 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது 13 சதவீதம் அதிகமாகும். 

ஊடகத்தைவிட ஐனநாயகத்துக்குப் பங்களிப்பு வழங்கும் வேறு துறையில்லை. இந்திய ஊடகத் துறை சுதந்திரமானது, கருத்துச் செறிவுள்ளது, அறிவு சார்ந்தது. இந்தியாவில் 1.3 பில்லியன் மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் 22 மொழிகளைப் பேசுகிறார்கள்;29 மாநிலங்களில் வாழ்கின்றனர். இந்நிலையில், இந்தியாவில் பிரிவினைவாத சக்திகளுக்கு ஊடகங்கள் துணை போகக்கூடாது. ஊடகங்கள் அதிகார மையங்களின் பக்கம் நிற்கக் கூடாது. மாறாக அவர்கள் மக்களின் பக்கம் நிற்க வேண்டும். சட்டத்தின் ஆட்சியை ஊடகங்கள் ஊக்கப்படுத்த வேண்டும்.

இந்தியாவின் அடிப்படை அதன் பன்முகத்தன்மையில் இருப்பதாக நம்புகிறேன். இந்தியாவில் அனைவரும் சிறுபான்மையினர் எனக் கூறுவார்கள். இதனால், ஆதிக்க சக்திகளின் அச்சுறுத்தல் தொடர்பாக நாம் கவனமாக இருக்க வேண்டும். அரசியல், வணிகம், சமூகம் போன்றவற்றில் அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு ஏற்ற வகையில் செய்திகளை வளைக்கப் பார்ப்பார்கள். தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி அதற்கு சாதகமாக அமைந்துள்ளது. ஊடகங்கள் இதற்கு இடம் கொடுக்கக் கூடாது. பன்முகத் தன்மை, சகிப்புத்தன்மை ஆகியவற்றை கொண்டாடிய நாகரிகம் இந்திய நாகரிகம் ஆகும். பல வேறுபாடுகள் இருந்தாலும் பல ஆண்டுகளாக இந்த இயல்புகள்தான் நம்மைப் பிணைத்து வைத்துள்ளது. அதிகாரத்துக்கும் மக்களுக்குமான கண்காணிப்பாளராகவும், நடுவராகவும், காவலராகவும் இருக்க வேண்டியது ஊடகங்களின் கடமையாகும். அதிகாரத்தில் உள்ளவர்களைக் கேள்வி கேட்க வேண்டியது ஊடகங்களின் கடமையாகும்.

நவீன இந்தியாவின் வரலாற்றை வடிவமைத்ததில் ஊடகங்களின் பங்களிப்பு இன்றியமையாததாகும். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஊடகங்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. சுதந்திரத்துக்கு பிறகு ஜனநாயகத்தின் காவலராக ஊடகங்கள் இருந்தன. பல ஊழல்களை வெளிக்கொண்டு வந்தன. இப்போது, நவீனத் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்குப் பிறகு, பொய்ச் செய்திகள் மிகப் பெரிய அபாயமாக மாறியுள்ளன. இவை சமூகங்கள், மதங்கள், இனங்களுக்கிடையே பதற்றங்களை திட்டமிட்டு ஏற்படுத்துகின்றன. இது தொடர்பாக ஊடகங்களும், மக்களும் விழிப்புடன் இருப்பது அவசியம். அரசியல், சமூக, பொருளாதார அடிப்படைகளைச் சிதைக்கும் சக்திகள் முனைப்பாக இயங்கும் இந்த வேளையில், ஊடகங்கள் இது தொடர்பாக விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார் அவர். 

இந்நிகழ்வில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைவர், மேலாண்மை இயக்குநர் மனோஜ் குமார் சொந்தாலியா, தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் வாசு, தி மார்னிங் ஸ்டாண்டர்டு பதிப்பாசிரியர் கோகென் சிங், மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, பத்திரிகையாளர்கள் ஆஷு தோஷ், நளினி சிங், தில்லி தமிழ்ச் சங்கப் பொதுச் செயலர் இரா.முகுந்தன், எழுத்தாளர் கிருங்கை சேதுபதி, பேராசிரியர் சி.அருணண், வ.உ.சி.யின் பேரன் முத்துக்குமாரசுவாமி, தில்லி தமிழ்க் கல்விக் கழகச் செயலர் ஆர்.ராஜு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/19/w600X390/morning-standatd.jpg 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் தில்லி பதிப்பான 'தி மார்னிங் ஸ்டாண்டர்டு' ஆங்கில பத்திரிகையை, தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அறிமுகப்படுத்துகிறார்  குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி. http://www.dinamani.com/india/2018/nov/19/பிரிவினைவாத-சக்திகளுக்கு-ஊடகங்கள்-துணைபோகக்-கூடாது-பிரணாப்-முகர்ஜி-3041692.html
3041465 இந்தியா வரவர ராவுக்கு 26-ஆம் தேதி வரை போலீஸ் காவல் DIN DIN Monday, November 19, 2018 03:38 AM +0530 மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்பிருப்பதாக கைது செய்யப்பட்ட தெலங்கானாவைச் சேர்ந்த கவிஞர் வரவர ராவை வரும் 26-ஆம் தேதி வரை போலீஸ் காவலில்  வைக்க புணே மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த வியாழக்கிழமையுடன் வீட்டுக் காவல் முடிவடைந்ததை அடுத்து, கடந்த சனிக்கிழமை போலீஸ் காவலில் வரவர ராவ் வைக்கப்பட்டார். தன்னை புணேவுக்கு காவலில் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டாம் என்று அவர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.
இதையடுத்து, அவர் புணே நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 26-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்குமாறு நீதிபதி கிஷோர் டி வதனே உத்தரவிட்டார். முன்னதாக, வரவர ராவுக்கு மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்பிருப்பதாகவும், அந்த அமைப்புக்கு ஆயுதங்கள், வெடிப்பொருள்கள் வாங்கியதில் தொடர்பிருப்பதாகவும் கூறி, அவரிடம் விசாரணை நடத்துவதற்கு 14 நாள் காவலில் வைக்க அனுமதி அளிக்குமாறு நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்குரைஞர் வாதம் முன்வைத்தார். எனினும், 26-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.


 

]]>
http://www.dinamani.com/india/2018/nov/19/வரவர-ராவுக்கு-26-ஆம்-தேதி-வரை-போலீஸ்-காவல்-3041465.html
3041462 இந்தியா புதுவை நிதித் துறை செயலரின் சுற்றறிக்கை ரத்து: புதிய ஆணையை வெளியிட்டார் நாராயணசாமி DIN DIN Monday, November 19, 2018 03:36 AM +0530 தன்னிச்சையாக வெளியிடப்பட்ட புதுவை நிதித் துறைச் செயலரின் சுற்றறிக்கையை ரத்து செய்துவிட்டு, புதிய நிலை ஆணையை (ள்ற்ஹய்க்ண்ய்ஞ் ர்ழ்க்ங்ழ்) முதல்வர் நாராயணசாமி சனிக்கிழமை வெளியிட்டார்.
புதுவையில் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் 10 ஆயிரம் ஊழியர்களுக்கு பல மாதங்களாக நிலுவை ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு மானியமாக ரூ. 762 கோடியை நிதிநிலை அறிக்கையில் அரசு ஒதுக்கியது. 
தீபாவளி பண்டிகையையொட்டி, சில மாத ஊதியத்தை பொதுத் துறை நிறுவன ஊழியர்களுக்கு வழங்க அரசு முடிவு எடுத்தது. அதன்படி, அந்தக் கோப்பு ஆளுநர் கிரண் பேடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அதற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், நிதித் துறை தரப்பில் புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில், கோப்பை ஏற்கவில்லை என்று ஆளுநர் கிரண் பேடி தெரிவித்திருந்தார். 
 இந்த நிலையில், அரசு அதிகாரிகளுக்கு புதிய ஆணை ஒன்றை புதுவை முதல்வர் நாராயணசாமி பிறப்பித்தார்.
அதன் விவரம் வருமாறு: முதல்வர், நிதி அமைச்சர் ஆகியோரின் ஒப்புதல் இல்லாமலேயே செலவின மேலாண்மை குறித்து ஒரு சுற்றறிக்கையை நிதித் துறைச் செயலர் அனைத்துத் துறைகளுக்கும் அனுப்பியுள்ளார். அதில், நிதி தொடர்பான தற்காலிகச் செலவு, இதர செலவுகளுக்கு மட்டுமே நிதி ஒப்புதல் பகிர்ந்தளிப்பு அதிகாரம் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சரியானதல்ல.
இந்தச் சுற்றறிக்கையின் இரண்டாவது பத்தியானது, 2014-ஆம் ஆண்டு வழங்கிய நிதி பகிர்ந்தளிப்பு ஆணைக்கு எதிரானதாகும்.இது உள்நோக்கமுடையதும், சட்ட விரோதமானதாகும். மேலும், இந்தச் சுற்றறிக்கை மாநில நிதி அமைச்சரின் ஒப்புதல் இல்லாமல் அனுப்பப்பட்டதாகும். புதுவை அமைச்சரவை, மத்திய உள்துறை அமைச்சகம்,  புதுவை சட்டப்பேரவை ஆகியவற்றின் ஒப்புதல் பெறப்பட்ட நிதிநிலை அறிக்கை செலவினத்தை புதுவையில் உள்ள எந்த ஒரு அதிகாரம் படைத்த தனி நபருக்கும் மாற்றம் செய்வதற்கு அதிகாரம் இல்லை.
நிதித் துறைச் செயலரின் சுற்றறிக்கை அரசின் பொதுத் துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடியதாகும். மேலும், இது நிதித் துறையைக் கவனித்து வரும் முதல்வரின் ஒப்புதலையும் பெறவில்லை. எனவே, நிதித் துறையைக் கவனிக்கும் முதல்வராகிய நான், சுற்றறிக்கையின் இரண்டாவது பத்தி சட்ட விரோதமானது என்றும், அது செல்லத் தக்கதல்ல என்றும் ஆணை பிறப்பித்துள்ளேன். இந்த ஆணை உடனடியாக அமலுக்கு வருகிறது என்று அந்த ஆணையில் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 


கிரண்பேடி எதிர்ப்பு

புதுவை நிதித் துறைச் செயலரின் சுற்றறிக்கைக்கு எதிரான முதல்வர் நாராயணசாமியின் நிலை ஆணை சட்ட விரோதமானது என்று துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.
இந்த ஆணையைத் திருத்தி முறைப்படி வெளியிடும்படி முதல்வர் நாராயணசாமிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
புதுவை முதல்வர் நாராயணாமி சனிக்கிழமை வெளியிட்ட நிலை ஆணை சட்ட விரோதமானது. புதுவை யூனியன் பிரதேச அலுவல் விதிகளுக்கு எதிரானது. தனது தவறான நிலை ஆணையைத் திருத்தி வெளியிடும்படி முதல்வர் நாராயணசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளேன்  என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/20/w600X390/narayanasamy.jpg http://www.dinamani.com/india/2018/nov/19/புதுவை-நிதித்-துறை-செயலரின்-சுற்றறிக்கை-ரத்து-புதிய-ஆணையை-வெளியிட்டார்-நாராயணசாமி-3041462.html
3041453 இந்தியா நிதி மோசடியாளர்கள் பட்டியல்: பிரதமர் அலுவலகம், ரிசர்வ் வங்கிக்கு மத்திய தகவல் ஆணையம் மீண்டும் உத்தரவு DIN DIN Monday, November 19, 2018 03:34 AM +0530 வேண்டுமென்று நிதி மோசடியில் ஈடுபட்டோர் குறித்த பட்டியலை வெளியிடும்படி, பிரதமர் அலுவலகம், ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆகியவற்றுக்கு மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) மீண்டும் உத்தரவிட்டுள்ளது.
வங்கிகளில் ரூ.50 கோடி அல்லது அதற்கு மேல் கடன்வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாமல் வேண்டுமென்று மோசடி செய்த நபர்களின் பட்டியலை அளிக்கக்கோரி, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் சந்தீப் சிங் என்ற ஆர்டிஐ ஆர்வலர் மனு அளித்திருந்தார். இந்த மனுவுக்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் பதில் அளிக்கவில்லை.
இதைத் தொடர்ந்து, மத்திய தகவல் ஆணையத்திடம் சந்தீப் சிங் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது கடந்த ஜூன் மாதம் 25ஆம் தேதி விசாரணை நடத்திய மத்திய தகவல் ஆணையம், மத்திய நிதியமைச்சகம், ரிசர்வ் வங்கி, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கல் அமைச்சகம் ஆகியவற்றுக்கு சந்தீப் சிங் கோரும் தகவலை அளிக்க வேண்டும் அல்லது அந்த தகவலை அளிக்க முடியவில்லை எனில், அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இருப்பினும், சந்தீப் சிங் கோரிய தகவல்கள் அளிக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து, மத்திய தகவல் ஆணையத்திடம் சந்தீப் சிங் மீண்டும் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த மத்திய தகவல் ஆணைய ஆணையர் எம்.ஸ்ரீதர் ஆச்சார்யலு, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகும், இந்த விவகாரத்தில் ஏன் பட்டியல் வெளியிடப்படவில்லை என்று கேள்வியெழுப்பியதுடன், இதற்காக ஏன் அதிகப்பட்ச தொகையை அபராதமாக விதிக்கக் கூடாது என்பது குறித்து 16ஆம் தேதிக்கு முன்பு விளக்கம் அளிக்கக்கோரி, ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார். 
வாராக்கடன் குறித்து ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் எழுதிய கடிதத்தை வெளியிடும்படி பிரதமர் அலுவலகம், மத்திய நிதியமைச்சகம், ரிசர்வ் வங்கி ஆகியவற்றுக்கும் அவர் உத்தரவிட்டார்.
இந்நிலையில், சந்தீப் சிங்கின் மனு, மத்திய தகவல் ஆணையத்தில் ஸ்ரீதர் ஆச்சார்யலு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 66 பக்க உத்தரவை ஆச்சார்யலு பிறப்பித்தார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
நிதி மோசடியாளர்கள் குறித்த விவரங்கள், நிதி மோசடியாளர்களிடம் இருந்து கடன் தொகையை வசூலிக்க வங்கிகள் எடுத்த நடவடிக்கைகள் ஆகியவை குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது, பிரதமர் அலுவலகத்துக்கு இருக்கும் அரசியலமைப்பு, தார்மீக ரீதியிலான கடமையாகும். இந்த விவகாரத்தில் வாரா கடன் குறித்த ரகுராம் ராஜன் எழுதிய கடிதத்தை பிரதமர் அலுவலகம் வெளியிடாதது கண்டிக்கத்தக்கது. இதற்கு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ள காரணம், சட்டரீதியில் ஏற்க முடியாது; துரதிருஷ்டவசமானது. அந்த கடிதத்தை வெளியிடுவதற்கு ஏதேனும் ஆட்சேபம் இருந்தால், அதை பிரதமர் அலுவலகம் தெரிவிக்கலாம்.
இதேபோல், ரிசர்வ் வங்கியும் நிதிமோசடியாளர்கள் பட்டியல், ரகுராம் ராஜனின் கடிதம் ஆகியவற்றை வெளியிட மறுத்திருப்பது மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சி துறையால் வெளியிடப்பட்டுள்ள பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள், அலுவல் குறிப்பாணைகளுக்கு முரண்பாடாக உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பளிக்கவில்லை என்றாலோ, மக்களுக்கு இருக்கும் தகவல் அறியும் உரிமையை மறுத்தாலோ, அது மோசடிக்கு வழிவகுக்கும். வசதிபடைத்த மற்றும் செல்வாக்கு பெற்ற நிதிமோசடியாளர்கள், நாட்டை விட்டு தப்பியோடவும் வழிவகுக்கும்.
ஆதலால், வேண்டுமென்று நிதிமோசடியில் ஈடுபட்ட நபர்களின் பட்டியலையும், ரகுராம் ராஜனின் கடிதம் மற்றும் கொள்கையின்படி மோசடியாளர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, நிதி மோசடியாளர்களிடம் இருந்து மீட்கப்பட்ட தொகை ஆகிய தகவல்களை வெளியிடும்படி பிரதமர் அலுவலகத்துக்கு உத்தரவிடப்படுகிறது. பொது கணக்கு குழு, நிதி விவகார நாடாளுமன்ற நிலைக்குழு, மதிப்பீட்டு குழு ஆகியவையும் தங்களிடம் இருக்கும் தகவல்களை அளிக்க வேண்டும். இதேபோல், ரிசர்வ் வங்கியும் நிதி மோசடியாளர்கள் பட்டியல், வாராக் கடன் குறித்த ரகுராம் ராஜன் கடிதம் ஆகியவற்றை வெளியிடும்படி உத்தரவிடப்படுகிறது என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2014/8/25/1/w600X390/black_money.jpg http://www.dinamani.com/india/2018/nov/19/நிதி-மோசடியாளர்கள்-பட்டியல்-பிரதமர்-அலுவலகம்-ரிசர்வ்-வங்கிக்கு-மத்திய-தகவல்-ஆணையம்-மீண்டும்-உத்தரவ-3041453.html
3041448 இந்தியா ஜிஎஸ்டி எதிர்பார்த்த பலனை அளித்ததா? நாடாளுமன்றத்தில் சிஏஜி விரைவில் அறிக்கை DIN DIN Monday, November 19, 2018 03:22 AM +0530 சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) எதிர்பார்த்த பலன்களை அளித்துள்ளதா என்பது குறித்த மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி (சிஏஜி) நாடாளுமன்றத்தில் விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் டிசம்பர் 11-ஆம் தேதி தொடங்க இருக்கிறது. அப்போது, அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருக்கிறது. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்த அறிக்கை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில், அதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் தேர்தலிலும் எதிரொலிக்க வாய்ப்பு உள்ளது.
சுதந்திர இந்தியாவில் மிக முக்கியமான வரிச் சீர்திருத்தமாக கருதப்படும் ஜிஎஸ்டி கடந்த 2017 ஜூலை 1-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஏற்கெனவே அமலில் இருந்த 17 வகையான வரிகளுக்கு ஒரே மாற்றாக ஜிஎஸ்டி அமைந்தது. 
இதில் வியாபாரிகளும், தொழில் துறையினரும் சுட்டிக் காட்டிய குறைகள் படிப்படியாக தீர்க்கப்பட்டன. 5,12,18,28 சதவீதம் என நான்கு அடுக்கு வரி விகிதம் உள்ளது. இதில் பல அத்தியாவசியப் பொருள்கள் குறைந்த வரி விகிதத்தில் கொண்டுவரப்பட்டன. மக்கள் அதிகம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருள்களுக்கும், எளிய மக்களின் கைவினைப் பொருள்களுக்கும் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிப்பது உள்ளிட்ட பல நடவடிக்கைகளும் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டன.
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு தற்காலிகமாக பணவீக்கம் அதிகரித்தாலும், அதன்பிறகு பொருள்களின் விலை குறைந்து பணவீக்கம் கட்டுக்குள் வரும். ஜிஎஸ்டி வரியால் பொருள்களின் உற்பத்திச் செலவு குறையும். இதனால் மக்கள் அதிகப் பொருள்களை வாங்கிப் பயனடைய முடியும். இதனால் நிறுவனங்களின் லாபம் அதிகரித்து அது முதலீடாக மாறும். நாட்டின் பொருளதாரம் வளர்ச்சி வேகமெடுக்கும் என்பது முக்கிய எதிர்பார்ப்பாகும். இந்நிலையில், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட நன்மைகள், அதன் மூலம் எதிர்பார்த்த நன்மைகள் கிடைத்ததா? என்பது குறித்து சிஏஜி குழு ஆய்வு நடத்தியது. 
இதில் ஜிஎஸ்டி பதிவு, செயல்படுத்தும் உரிமை, கணக்கை உரிய முறையில் தாக்கல் செய்து வரியைத் திரும்பப் பெறுவதற்கான நடைமுறைகள், ஜிஎஸ்டி தொகுப்பு முறைத் திட்டம், வரி செலுத்துதல் எந்த அளவுக்கு எளிதாக்கப்பட்டுள்ளது, ஜிஎஸ்டி-யால் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள நன்மைகள், எதிர்காலத்தில் எந்த அளவுக்கு வளர்ச்சி ஏற்படும் என்பது உள்ளிட்ட ஜிஎஸ்டி-யின் அனைத்து அம்சங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. 
முக்கிய நகரங்களில் உள்ள ஜிஎஸ்டி ஆணைய அலுவலகத்துக்கும் சிஏஜி குழுவினர் நேரடியாகச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர். எனினும், ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்பான தகவல்கள் ஆய்வுக்கு உள்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/2/w600X390/GST.jpg http://www.dinamani.com/india/2018/nov/19/ஜிஎஸ்டி-எதிர்பார்த்த-பலனை-அளித்ததா-நாடாளுமன்றத்தில்-சிஏஜி-விரைவில்-அறிக்கை-3041448.html
3041447 இந்தியா மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் பெயர் மாற்றம் மேலும் தாமதம்? DIN DIN Monday, November 19, 2018 03:21 AM +0530 பாரம்பரியமிக்க மெட்ராஸ், கல்கத்தா, பாம்பே ஆகிய உயர்நீதிமன்றங்களின் பெயரை மாற்றுவதற்கான புதிய மசோதா, எதிர்வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பில்லை என்று சட்ட அமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுதொடர்பான பணிகளில் எந்த முன்னெடுப்பும் இல்லாததால், மசோதா அறிமுகமாவதில் தாமதம் நிலவுவதாகக் கூறப்படுகிறது.
மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் பெயரை சென்னை உயர்நீதிமன்றம் எனவும்; கல்கத்தா, பாம்பே உயர்நீதிமன்றங்களின் பெயரை கொல்கத்தா, மும்பை உயர்நீதிமன்றங்கள் எனவும் மாற்றுவதற்கு, மத்திய அமைச்சரவை கடந்த 2016-இல் ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து, பெயர் மாற்றத்துக்கு வழிவகை செய்யும் "உயர்நீதிமன்றம் (பெயர்கள் மாற்றம்) மசோதா', மக்களவையில் அந்த ஆண்டு ஜூலை 19-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் பெயரை, "தமிழ்நாடு உயர்நீதிமன்றம்' என்று மாற்ற வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தியது. இதேபோல், கல்கத்தா உயர்நீதிமன்றத்தின் பெயரை மாற்றுவதற்கு, அந்த மாநில அரசு விரும்பியபோதிலும், நீதிமன்றம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 
இத்தகைய சிக்கல்கள் தொடர்பாக, கடந்த 2016, டிசம்பரில் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு சட்டத் துறை இணையமைச்சர் பி.பி.சௌதரி எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில், "உயர்நீதிமன்றங்களின் பெயர் மாற்றம் தொடர்பான மசோதாவில் திருத்தங்கள் செய்யப்பட்டு, புதிய மசோதா அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது. 
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடமும், உயர்நீதிமன்றங்களிடமும் மத்திய அரசு கருத்துகளை கோரியுள்ளது. புதிய மசோதாவை இறுதி செய்வதற்கும், அதனை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துவதற்கும் எந்த காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை' என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர், டிசம்பர் 11-ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில், புதிய மசோதா அறிமுகப்படுத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து, சட்ட அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "புதிய மசோதா தொடர்பான பணிகளில் தொடர்ந்து எந்த நகர்வும் இல்லை. இதனால், குளிர்கால கூட்டத் தொடரில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட வாய்ப்பில்லை' என்றார்.
இந்தியாவின் மிகப் பழைமையான உயர்நீதிமன்றமான கல்கத்தா உயர்நீதிமன்றம், கடந்த 1862, ஜூலை 1-இல் நிறுவப்பட்டது. பாம்பே, மெட்ராஸ் உயர்நீதிமன்றங்கள், அதே ஆண்டு ஆகஸ்டில் நிறுவப்பட்டன. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/4/w600X390/HIGHCOURTt.jpg http://www.dinamani.com/india/2018/nov/19/மெட்ராஸ்-உயர்நீதிமன்றத்தின்-பெயர்-மாற்றம்-மேலும்-தாமதம்-3041447.html
3041446 இந்தியா சோனியாவுக்காக சீதாராம் கேசரியை தூக்கியெறிந்தது காங்கிரஸ்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு DIN DIN Monday, November 19, 2018 03:19 AM +0530 சோனியா காந்தியை கட்சித் தலைவராக்க வேண்டும் என்பதற்காக, சீதாராம் கேசரியை அப்பதவியில் இருந்து காங்கிரஸ் கட்சி தூக்கியெறிந்ததாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார். ஒரு குடும்பம் நான்கு தலைமுறைகளாக ஆட்சி செய்தும், நாடு எந்த விதத்திலும் பலனடையவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைக்கு, மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தல் நிறைந்த பஸ்தர் பகுதியில் நடைபெற்ற முதல்கட்டத் தேர்தலிலும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த முதல்கட்டத் தேர்தலிலும் அதிகப்படியான வாக்குகள் பதிவாகியிருப்பதை பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். இதன் மூலமாக, பயங்கரவாதிகளுக்கும், பிரிவினைவாதிகளுக்கும் நாட்டு மக்கள் பாடம் புகட்டியிருப்பதாகவும் அவர் பாராட்டினார்.
மொத்தம் 90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் முதல்கட்டமாக 18 தொகுதிகளுக்கு கடந்த 12-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. மீதமுள்ள 72 தொகுதிகளில் இரண்டாம் கட்டமாக செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள தேர்தலுக்கான பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. அதையொட்டி, மஹாஸமுந்த் என்ற இடத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது மோடி பேசியதாவது:
சீதாராம் கேசரி யார் என்பது இந்நாட்டுக்குத் தெரியும். தலித் சமூகத்தைச் சேர்ந்த அவரை, காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஐந்து ஆண்டுகால பதவியை நிறைவு செய்யவிடவில்லை. சோனியா காந்தியை அடுத்த தலைவராக்க வேண்டும் என்பதற்காக, பதவியில் இருந்து தூக்கியெறியப்பட்டவர் சீதாராம் கேசரி.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு தலைமுறையினர் இந்த நாட்டை ஆட்சி செய்ததை நினைத்துப் பாருங்கள். மக்களின் தலைவிதி என்ன ஆனது? அவர்களது ஆட்சியின்போது ஒரு குடும்பத்தை பற்றி மட்டுமே சிந்தித்தனர். ஆனால், மக்கள் நலன் குறித்து ஒருபோதும் சிந்தித்ததில்லை. மக்களின் எதிர்பார்ப்புகளை அவர்கள் பூர்த்தி செய்வார்கள் என்று இப்போது மட்டும் நாம் எப்படி நம்பிக்கை வைக்க முடியும்?
 மக்களுக்குப் பாராட்டு: துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகளைக் கொண்டு மாவோயிஸ்டுகள் மிரட்டல் விடுத்த போதிலும், பஸ்தர் பகுதியில் பெருவாரியான வாக்காளர்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். ஏழை பழங்குடியின மக்கள் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். துப்பாக்கி மற்றும் குண்டுகளுக்கான பதிலடி இது.
இதேபோன்று, காஷ்மீரில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு முன்பு, தேர்தலை புறக்கணிப்பதையே அங்குள்ள மக்கள் வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். 
இந்த முறையும் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று பயங்கரவாதிகள் அழைப்பு விடுத்தனர். ஆனால், காஷ்மீர் மக்கள், ஜனநாயகத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையால் 60-70 சதவீதம் வரையில் வாக்குகள் பதிவாகியுள்ளன. இதன் மூலமாக பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளின் கன்னங்களில் அவர்கள் அறை விட்டுள்ளனர். ஜனநாயகத்தின் பலம் என்னவென்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர்.
பொய்யான வாக்குறுதிகள்: தேர்தல் வந்தாலே பொய்யான வாக்குறுதிகள் அளிப்பதை காங்கிரஸ் வாடிக்கையாகக் கொண்டுள்ளது. ஆனால், அவர்கள் இனியும் நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது. நான்கு தலைமுறைகளாக நாட்டை ஆட்சி செய்தபோது விவசாயிகளுக்காக செய்தது என்ன? என்ற கேள்விக்கு அவர்கள் பதில் அளிக்க வேண்டும்.
சத்தீஸ்கரில் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதாக அவர்கள் வாக்குறுதி அளித்துள்ளார்கள். கர்நாடக தேர்தலின்போதும் இதேபோன்ற வாக்குறுதி அவர்களால் தரப்பட்டது. ஆனால், ஏறத்தாழ ஓராண்டை கடக்கவுள்ள நிலையில், அந்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. 
அதற்குப் பதில், கடனை திருப்பிச் செலுத்தாத விவசாயிகளுக்கு எதிராக வாராண்ட் அனுப்பி, கைது நடவடிக்கைகளை அங்குள்ள அரசு மேற்கொண்டு வருகிறது என்றார் மோடி.

காங்கிரஸ் இரட்டை வேடம்

சிந்துவாரா, நவ.18: மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம் நடத்திய அதே காங்கிரஸ் கட்சி தற்போது பசு நலன் குறித்து தேர்தல் அறிக்கையில் பட்டியலிட்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்தார்.
மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, சிந்துவாரா என்ற பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிராசாரம் செய்தபோது அவர் பேசியதாவது:
காங்கிரஸ் கட்சி மக்களை தொடர்ந்து குழப்பி வருகிறது. ஏமாற்றுதல் என்பது காங்கிரஸின் ரத்தத்தில் கலந்துள்ளது. ஆனால், மத்தியப் பிரதேச மக்கள் இனியும் அக்கட்சிக்கு முக்கியத்துவம் அளிக்க மாட்டார்கள் என நம்புகிறேன்.
மத்தியப் பிரதேசத்தில் பசுக்கள் குறித்து புகழ்ந்துள்ள காங்கிரஸ் கட்சி, தேர்தல் அறிக்கையிலும் அதுதொடர்பான வாக்குறுதிகளை அளித்துள்ளது. ஆனால், கேரளத்தில் நடுத்தெருவில் பசுவைக் கொன்று, மாட்டிறைச்சி உண்ணும் விழாவை நடத்தியது இதே காங்கிரஸ் கட்சி தானே?
காங்கிரஸ் தலைவர்களால் நான் தொடர்ந்து குற்றம்சாட்டப்படுகிறேன். அதற்கான காரணத்தையும் நான் அறிவேன். ஆதாரை அடிப்படையாகக் கொண்ட தொழில்நுட்பம் மூலமாக, அரசின் நலத்திட்டங்களில் பயன்பெற்று வந்த 6 கோடி போலி பயனாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் தேசத்தின் பணம் ரூ.90,000 கோடி அளவுக்கு திருடப்பட்டு வந்ததை எங்களது அரசு தடுத்து நிறுத்தியிருக்கிறது என்றார் அவர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/19/w600X390/modi1.jpg மத்தியப் பிரதேச மாநிலம்,  சிந்துவாராவில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம்  செய்த பிரதமர் நரேந்திர மோடி. உடன், கட்சி நிர்வாகிகள். http://www.dinamani.com/india/2018/nov/19/சோனியாவுக்காக-சீதாராம்-கேசரியை-தூக்கியெறிந்தது-காங்கிரஸ்-பிரதமர்-மோடி-குற்றச்சாட்டு-3041446.html
3041436 இந்தியா அயோத்தி விவகாரம்: நீதிமன்றத்துக்கு வெளியே பேசித் தீர்வு காண  தேசிய சிறுபான்மையினர் ஆணையம் முயற்சி DIN DIN Monday, November 19, 2018 02:46 AM +0530 அயோத்தி விவகாரத்தில், நீதிமன்றத்துக்கு வெளியே சமரசம் செய்துகொள்ள சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக தேசிய சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் கயருல் ஹசன் ரிஸ்வி கூறினார்.
மேலும், அயோத்தி விவகாரம் ஹிந்துக்களின் நம்பிக்கை தொடர்பாது என்பதால் அதில் பெருந்தன்மையுடன் நடந்துகொள்ளுமாறு முஸ்லிம்களையும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக பிடிஐ செய்தியாளருக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
தேசிய சிறுபான்மையினர் நல ஆணையத்தின் மாதாந்திர கூட்டம் கடந்த 14-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, ஆணையத்தின் தலைவர் என்ற முறையில் விருப்பப்பட்டால் அயோத்தி விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு வெளியே சமரசம் செய்துகொள்ள சம்பந்தப்பட்டவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
நீதிமன்ற தீர்ப்பைப் பொருத்த வரையில், ஒரு தரப்புக்கு சாதகமாகவும், மற்றொரு தரப்புக்கு எதிராகவும் இருக்கும் என்று நம்புகிறேன். எனவே, நீதிமன்றத்துக்கு வெளியே சமரசம் செய்துகொள்வது நல்ல முடிவாக இருக்கும். அதில் தீர்வு கிடைத்தால் இருதரப்பும் மகிழ்ச்சியாக இருப்பதுடன், அவர்களிடையே ஏற்பட்ட பிளவையும் சரிசெய்ய இயலும்.
இதுதொடர்பாக, விஸ்வ ஹிந்து பரிஷத் செயல் தலைவர் அலோக் குமார், முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய உறுப்பினர்கள், சன்னி வக்ஃபு வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோரை விரைவில் சந்தித்து பேச இருக்கிறேன். பேச்சுவார்த்தை நேர்மறையாக தொடர்ந்தால், பிரதமர் மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆகியோரின் உதவியும் 
கோரப்படும்.
அயோத்தி விவகாரத்தில் சமரசம் செய்துகொண்டு தீர்வு காண முஸ்லிம்கள் முன்வரும் பட்சத்தில், காசி, மதுரா போன்ற இதர இடங்களில் உள்ள மசூதிகள் தொடர்பாக சர்ச்சைகள் எழாமல் இருப்பதற்கான உறுதியை பெற முயற்சிக்கப்படும். அத்தகைய உறுதி பெறப்படும் பட்சத்தில், அது மிகப்பெரிய முன்னேற்றமாக இருக்கும்.
அயோத்தி விவகாரத்தில் முஸ்லிம்கள் பெருந்தன்மையுடன் நடந்துகொள்ள விரும்புகிறேன். மெக்கா, மெதினா முஸ்லிம்களுக்கு எவ்வாறு முக்கியமோ, ஹிந்துக்களுக்கு அயோத்தி அவ்வாறு முக்கியமானது என்ற ரீதியில் இதை ஏற்க வேண்டும். ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமையுடன் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் பட்சத்தில், அது நாட்டின் அரசியலுக்கு மட்டுமல்லாது, வளர்ச்சிக்கும் நல்லதாக இருக்கும் என்று கயருல் ஹசன் ரிஸ்வி கூறினார்.

]]>
http://www.dinamani.com/india/2018/nov/19/அயோத்தி-விவகாரம்-நீதிமன்றத்துக்கு-வெளியே-பேசித்-தீர்வு-காண--தேசிய-சிறுபான்மையினர்-ஆணையம்-முயற்சி-3041436.html
3041435 இந்தியா ரஃபேல் விமானங்களில் 13 மாற்றங்கள்: இந்தியாவில் மேற்கொள்ளப்படுகிறது DIN DIN Monday, November 19, 2018 02:42 AM +0530 ரஃபேல் போர் விமானங்களில் இந்திய விமானப் படை கோரிய 13 மாற்றங்களும், அந்தப் போர் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு இங்கு வைத்தே மேற்கொள்ளப்பட இருப்பதாக பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் கூறின.
இதுகுறித்து அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:
பிரான்ûஸச் சேர்ந்த டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்படும் ரஃபேல் போர் விமானங்களில், 13 மாற்றங்களை மேற்கொள்ள இந்திய விமானப் படை கேட்டுக் கொண்டிருந்தது. அந்த மாற்றங்கள் யாவும், ஒப்பந்தத்தின்படி 36 விமானங்களும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, நமது நாட்டில் வைத்தே 2022 ஏப்ரலுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட இருக்கின்றன.
ரஃபேல் விமானத்தில் அந்த மாற்றங்களை டஸால்ட் ஏவியேஷன் நிறுவனமே இந்தியாவில் வைத்து மேற்கொள்ளும். மாதத்துக்கு 7 விமானங்கள் என்ற கணக்கில், 2022 செப்டம்பருக்குள்ளாக 36 விமானங்களிலும் அந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கும்.
இதனிடையே, இந்தியாவுக்கென தயாரிக்கப்பட்ட முதல் ரஃபேல் விமானமானது, முதல் முறையாக கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி பிரான்ஸில் பறக்கவிடப்பட்டது. "ஆர்பி 008' என்ற பெயரிடப்பட்டுள்ள அந்த விமானம், கடைசி விமானமாகவே இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும். ஏனெனில், அந்த விமானம் சோதனை நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.
உரிய சான்றுகள் அளிக்கப்பட்ட பிறகே, இறுதியில் இந்தியா கேட்டுக் கொண்ட மாற்றங்கள் அதில் செய்யப்படும் என்று அந்த வட்டாரங்கள் கூறின.
இதனிடையே, இந்திய விமானப் படை ஆவணத்தின் படி, ரஃபேல் விமானத்தில் இந்தியா கோரும் 13 மாற்றங்கள், தற்போது பிற நாடுகளில் புழக்கத்தில் இருக்கும் ரஃபேல் விமானங்களில் இல்லாத தொழில்நுட்பங்கள் என்று ஆங்கில பத்திரிகை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மிக நீண்ட தொலைவையும் கண்காணிக்கக் கூடிய "ரேடார்' வசதி, அதிக உயரமான தலங்களில் இருந்தும் விமானத்தை இயக்கும் வசதி, அகச்சிவப்பு தேடு கருவிகள், தடயம் அறியும் கருவிகள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் இதில் அடங்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/6/w600X390/rafel.jpg http://www.dinamani.com/india/2018/nov/19/ரஃபேல்-விமானங்களில்-13-மாற்றங்கள்-இந்தியாவில்-மேற்கொள்ளப்படுகிறது-3041435.html
3041434 இந்தியா காஷ்மீரில் சிஆர்பிஎஃப் முகாம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்: வீரர் பலி; 2 பேர் காயம் DIN DIN Monday, November 19, 2018 02:42 AM +0530 ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சிஆர்பிஎஃப் படைப்பிரிவு முகாம் மீது ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பு பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை நடத்திய திடீர் தாக்குதலில், வீரர் ஒருவர் பலியானார். மேலும் 2 வீரர்கள் காயமடைந்தனர்.
இதுகுறித்த விவரம் வருமாறு:
புல்வாமா மாவட்டம் காகபோராவில் சிஆர்பிஎஃப் படைப்பிரிவுக்கு புதிதாக முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் மீது பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை திடீர் தாக்குதல் நடத்தினர்.
சிஆர்பிஎஃப் முகாம் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதுடன், கையெறி குண்டுகளையும் பயங்கரவாதிகள் வீசினர். இந்த தாக்குதலில் சிஆர்பிஎஃப் தலைமை காவலர் சந்திரிகா பிரசாத் என்பவர் உயிரிழந்தார். மேலும் 2 வீரர்கள் காயமடைந்தனர்.
தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்தவர்கள். தாக்குதல் நடத்திவிட்டு, அவர்கள் தப்பியோட முயன்றனர். இதையடுத்து அவர்களை சிஆர்பிஎஃப் வீரர்களும், ராணுவ வீரர்களும் சுற்றிவளைத்தனர். இதையடுத்து, அவர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை மூண்டது. இருதரப்புக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து வருவதாக கடைசி கட்ட தகவல்கள் தெரிவித்தன.
பயங்கரவாதிகள் முகாம் அழிப்பு: இதனிடையே, சோபியான் மாவட்டம் யர்வான் வனப்பகுதியில் போலீஸாரும், ராணுவத்தினரும் கூட்டாக இணைந்து ஞாயிற்றுக்கிழமை தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு பயங்கரவாதிகளின் முகாம் இருப்பதை கண்டுபிடித்து, அவர்கள் அழித்தனர்.
பாதுகாப்பு படையினர் சென்றபோது, அந்த முகாமில் பயங்கரவாதிகள் இல்லை. இதனால் அவர்கள் தப்பி சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே அவர்களை பாதுகாப்புப் படையினர் தேடி வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/india/2018/nov/19/காஷ்மீரில்-சிஆர்பிஎஃப்-முகாம்-மீது-பயங்கரவாதிகள்-திடீர்-தாக்குதல்-வீரர்-பலி-2-பேர்-காயம்-3041434.html
3041433 இந்தியா ஐ.பி.க்கு மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு: உச்சநீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரி அஸ்வினி குப்தா மனு DIN DIN Monday, November 19, 2018 02:41 AM +0530 புலனாய்வு அமைப்புக்கு (ஐ.பி.) பணி மாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரி அஸ்வினி குமார் குப்தா மனு தாக்கல் செய்துள்ளார்.
இவரையும் சேர்த்து, இதுவரை மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு உச்சநீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் மனு தாக்கல் செய்துள்ளனர்.
சிபிஐ அமைப்பில் துணை கண்காணிப்பாளராக அஸ்வினி குமார் குப்தா பணிபுரிந்து வந்தார். இதற்கு முன்பு, ஐ.பி. அமைப்பில் அவர் பணியாற்றினார். இந்நிலையில், சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின் உச்சக்கட்டமாக, சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிராக லஞ்ச வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவருக்கு எதிரான விசாரணையையும் சிபிஐ தொடங்கியது. இதையடுத்து, இப்பிரச்னையில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுத்தது. அப்போது சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் அஸ்தானா ஆகியோரை மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது.  ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான லஞ்ச புகாரை விசாரித்து வந்த சிபிஐ அதிகாரிகள் ஏ.கே. பஸ்ஸி, அஸ்வினி குமார் குப்தா ஆகியோர் பணி மாற்றம் செய்யப்பட்டனர். இவர்களில் அஸ்வினி குமார் குப்தா, மீண்டும் ஐ.பி.க்கு பணி மாற்றம் செய்யப்பட்டார்.
இதனால் அதிருப்தியடைந்த அலோக் வர்மா, மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதேபோல், ஏ.கே. பஸ்ஸியும் மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், துணை கண்காணிப்பாளர் அஸ்வினி குமார் குப்தாவும், உச்சநீதிமன்றத்தில் தற்போது மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான புகார்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தேன்; இந்நிலையில் நான் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளேன். இது அநீதி, நேர்மையில்லாத நடவடிக்கை. இதில் உச்சநீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்துள்ளார். 
அந்த மனுவில், ஐ.பி.யில் தாம் பணிக்கு சேர்ந்தது, சிபிஐ அமைப்பில் இணைத்து கொள்ளப்பட்டது, சிபிஐ அமைப்பில் பணி நீட்டிப்பு அளிக்கப்பட்டது தொடர்பான விவரங்களையும் அவர் பட்டியலிட்டுள்ளார்.

]]>
http://www.dinamani.com/india/2018/nov/19/ஐபிக்கு-மாற்றப்பட்டதற்கு-எதிர்ப்பு-உச்சநீதிமன்றத்தில்-சிபிஐ-அதிகாரி-அஸ்வினி-குப்தா-மனு-3041433.html
3041432 இந்தியா உத்தரப் பிரதேசம்: பாஜகவுக்கு கூட்டணி கட்சி திடீர் சவால் DIN DIN Monday, November 19, 2018 02:40 AM +0530 உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு அதன் கூட்டணி கட்சியான சுகல்தேல் பாரதிய சமாஜ்  கட்சி (எஸ்பிஎஸ்பி) திடீர் சவால் விடுத்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியிலிருக்கும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக கூட்டணி அரசில், பிற்படுத்தப்பட்டோர் நல மற்றும் மாற்றுதிறனாளிகள் அதிகாரமளித்தல் துறை அமைச்சராக அக்கட்சித் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் உள்ளார். இந்நிலையில், பாஜகவின் உத்தரப் பிரதேச மாநில தலைவர் மகேந்திர நாத், ஓம் பிரகாஷ் ராஜ்பரை தீய சக்தி என்று அண்மையில் விமர்சித்திருந்தார். இதையடுத்து, பாஜகவுக்கு ஓம் பிரகாஷ் ராஜ்பர் சவால் விடுத்துள்ளார். இதுகுறித்து லக்னௌவில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கடந்த சில நாள்களாக எங்கள் கட்சிக்கு எதிராக பேசி வருகிறார். அப்படியெனில், கூட்டணியில் இருந்து எங்களை ஏன் கழட்டி விடவில்லை? கூட்டணியில் எங்கள் கட்சியை வைத்திருக்க அவர்கள் விரும்பவில்லை எனத் தெரிகிறது. இது உண்மையெனில், எங்களை கூட்டணியில் இருந்து தூக்கியெறியும்படி பாஜகவுக்கு சவால் விடுக்கிறேன் என்றார் அவர்.

]]>
http://www.dinamani.com/india/2018/nov/19/உத்தரப்-பிரதேசம்-பாஜகவுக்கு-கூட்டணி-கட்சி-திடீர்-சவால்-3041432.html
3041430 இந்தியா லாலுவின் உடல் நிலையில் பின்னடைவு DIN DIN Monday, November 19, 2018 02:36 AM +0530 ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத்துக்கு காலில் கடுமையான கொப்பளங்கள் ஏற்பட்டிருப்பதாகவும், அதன் விளைவாக அவரது உடல் நலம் மேலும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், கடந்த மூன்று நாள்களாகவே அவருக்கு ரத்த அழுத்தமும், ரத்த சர்க்கரை அளவும் அதிகரித்த வண்ணம் இருப்பதாகத் தெரிகிறது. இதையடுத்து இன்சூலின் உள்ளிட்ட மருந்துகள் கூடுதலாக செலுத்தப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமன்றி, சிறுநீரகப் பிரச்னையாலும் அவர் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறியுள்ளன.
இதனால், எழுந்து நடமாட இயலாத நிலை லாலுவுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. கொப்பளங்கள் குணமாக மேலும் சில நாள்களாகும் என்றும், அதன் பிறகே மற்ற சிகிச்சைகளை தொடர முடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  
பல கோடி ரூபாய் மதிப்புடைய மாட்டுத் தீவன ஊழல் குற்றச்சாட்டில் 4 வழக்குகளில் லாலு குற்றவாளி என்று நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து, அவர் கடந்த ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டார். அதற்கு அடுத்த சில வாரங்களில் இருந்தே  அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அவ்வப்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். உடல் நலனைக் கருத்தில் கொண்டு லாலுக்கு சில காலம் ஜாமீனும் வழங்கப்பட்டது.
அதன் பின்னரும், அவருக்கு பல்வேறு உடல் உபாதைகள் இருந்ததால் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் லாலுவின் வலது காலில் திடீரென கொப்பளங்கள் ஏற்பட்டன. இது பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதாக அவருக்கு சிகிச்சையளிக்கும் டாக்டர் உமேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/4/w600X390/Lalu_YadavAug25.jpg http://www.dinamani.com/india/2018/nov/19/லாலுவின்-உடல்-நிலையில்-பின்னடைவு-3041430.html
3041429 இந்தியா ராஜஸ்தான்: பாஜகவில் இருந்து மேலும் ஒரு எம்எல்ஏ விலகல் DIN DIN Monday, November 19, 2018 02:33 AM +0530 ராஜஸ்தான் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாததால் அதிருப்தியடைந்து பாஜகவில் இருந்து மேலும் ஒரு எம்எல்ஏ விலகியுள்ளார்.
ராஜஸ்தான் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை பாஜக கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. இதில் பெயர் இல்லாத பல்வேறு தலைவர்கள் பாஜகவில் இருந்து விலகிவிட்டனர். அவர்களில், மாநில அமைச்சர் உள்ளிட்ட ஏராளமான எம்எல்ஏக்களும் அடங்குவர்.
இந்நிலையில், ராம்கர் தொகுதி பாஜக எம்எல்ஏவான கியான் தியோ அகுஜா என்பவரும், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாததால் அதிருப்தியடைந்து, கட்சியிலிருந்து விலகியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "ராம்கர் தொகுதியில் வேறு ஒருவரை வேட்பாளராக பாஜக அறிவித்தது. இதனால் சாங்கனர் தொகுதியின் வேட்பாளராக எனது பெயரை அறிவிக்க கோரினேன். இதை பாஜக கேட்கவில்லை. இதற்கான காரணமும் என்னிடம் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எனது ஆதரவாளர்கள், குடும்பத்தினரின் நிர்ப்பந்தத்தின் பேரில், கட்சியில் இருந்து விலகியுள்ளேன். சாங்கனர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவேன். வேட்பு மனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்ய இருக்கிறேன்' என்றார்.
சாங்கனர் தொகுதி எம்எல்ஏவாக இருந்த கான்சியாம் திவாரி, முதல்வர் வசுந்தரா ராஜேயுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் கட்சியிலிருந்து விலகினார். தனது எம்எல்ஏ பதவியையும் ராஜிநாமா செய்தார். தனியாக அரசியல் கட்சியை ஆரம்பித்து அவர் நடத்தி 
வருகிறார்.

]]>
http://www.dinamani.com/india/2018/nov/19/ராஜஸ்தான்-பாஜகவில்-இருந்து-மேலும்-ஒரு-எம்எல்ஏ-விலகல்-3041429.html
3041428 இந்தியா சத்தீஸ்கரில் குண்டு வெடிப்பு: 3 காவலர்கள் காயம் DIN DIN Monday, November 19, 2018 02:33 AM +0530 சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் காவலர்கள் 3 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து சுக்மா மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் அபிஷேக் மீனா, செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
பெஜ்ஜி, எலர்மாட்கு ஆகிய கிராமங்களில் உள்ள வனப் பகுதிகளில் நக்ஸல்களை தேடும் நடவடிக்கையில் காவலர்கள் ஈடுபட்டனர். அந்தப் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியது. இதில், சிக்கி 3 காவலர்கள் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நக்ஸல்களை தேடும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம் என்று அபிஷேக் மீனா தெரிவித்தார்.
சத்தீஸ்கரில் சுக்மா உள்பட 8 நக்ஸல் பாதிப்பு மாவட்டங்களில் கடந்த 12-ஆம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றது.
சத்தீஸ்கரில் வரும் செவ்வாய்க்கிழமை (நவ. 20) 2-ஆம் கட்டத் தேர்தல் நடைபெறவுள்ளது. டிசம்பர் 11-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன.    
 

]]>
http://www.dinamani.com/india/2018/nov/19/சத்தீஸ்கரில்-குண்டு-வெடிப்பு-3-காவலர்கள்-காயம்-3041428.html
3041427 இந்தியா மிஸோரம்: மொத்த வேட்பாளர்களில் 15 பேர் மட்டுமே பெண்கள் DIN DIN Monday, November 19, 2018 02:29 AM +0530 மிஸோரம் மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 201 வேட்பாளர்களில், 15 பேர் மட்டுமே பெண்கள் ஆவர்.
மொத்தம் 40 சட்டப் பேரவைத் தொகுதிகளைக் கொண்ட இந்த மாநிலத்தில் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாகும். ஆனால், குறைந்த எண்ணிக்கையிலான பெண்களே தேர்தல் களத்தில் உள்ளனர்.
அதிகபட்சமாக பாஜக சார்பில் 6 பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக மாநில பாஜக தலைவர் ஜே.வி.ஹலுனா கூறுகையில், "மிஸோரம் மாநிலத்தில் பாரம்பரியமாகவே பெண்கள் அரசியல் ஈடுபாடு இல்லாமல் இருந்தனர். ஆனால், அந்த நிலை தற்போது மாறி வருகிறது. சமூக நடவடிக்கைகளிலும், அரசியலிலும் பெண்களின் பங்கேற்பு அதிகரித்து வருகிறது' என்றார்.
பாஜகவைத் தொடர்ந்து, "ஸோரம் தார்' கட்சி சார்பில் 5 பெண்களும், "ஸோரம் மக்கள் இயக்கம்' கட்சி சார்பில் 2 பெண்களும், ஆளும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் சார்பில் தலா ஒரு பெண் வேட்பாளரும் நிறுத்தப்பட்டுள்ளனர். வலுவான பிராந்திய கட்சியான மிஸோ தேசிய முன்னணி, பெண்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை.
மிஸோரம் சட்டப் பேரவைக்கு வரும் 28-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இங்கு மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 7.68 லட்சமாகும். இதில் ஆண்களின் எண்ணிக்கை 3.74 லட்சம். பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.93 லட்சமாகும்.  
 

]]>
http://www.dinamani.com/india/2018/nov/19/மிஸோரம்-மொத்த-வேட்பாளர்களில்-15-பேர்-மட்டுமே-பெண்கள்-3041427.html
3041426 இந்தியா 6 உயர்நீதிமன்றங்களுக்கு 34 புதிய நீதிபதிகள் நியமனம் DIN DIN Monday, November 19, 2018 02:29 AM +0530 ஆறு உயர்நீதிமன்றங்களுக்கு புதிதாக 34 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக, மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
6 உயர்நீதிமன்றங்களுக்கு புதிதாக 34 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், அலாகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு 28 நீதிபதிகளும், குவாஹாட்டி உயர்நீதிமன்றத்துக்கு 2 நீதிபதிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். தில்லி, மேகாலயம், ஒடிஸா மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தலா ஒரு நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளனர்.
மொத்தமுள்ள 34 நீதிபதிகளில் 17 பேர் வழக்குரைஞர்கள் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 24 உயர்நீதிமன்றங்களில் 1,079 நீதிபதிகள் இருக்க வேண்டும். சனிக்கிழமை புதிதாக 34 நீதிபதிகள் நியமிக்கப்பட்ட போதிலும், 430 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

]]>
http://www.dinamani.com/india/2018/nov/19/6-உயர்நீதிமன்றங்களுக்கு-34-புதிய-நீதிபதிகள்-நியமனம்-3041426.html
3041425 இந்தியா மராட்டியர்களுக்கு இட ஒதுக்கீடு: மகாராஷ்டிர அரசு முடிவு DIN DIN Monday, November 19, 2018 02:22 AM +0530 மகாராஷ்டிரத்தில், மராட்டிய சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் ஞாயிற்றுக்கிழமை கூறினார். 
மகாராஷ்டிர சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத் தொடரையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு முதல்வர் பட்னவீஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மராட்டியர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பான, மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கையை அமைச்சரவை ஏற்றுக் கொண்டது. அந்த அறிக்கையில் குறிப்பிட்டதுபோல மராட்டிய சமூகத்தினருக்கு, "சமூக மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்' என்ற பிரிவின் கீழ் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்கப்படும்.
அவர்களுக்கான இட ஒதுக்கீடு அளவு குறித்து, இட ஒதுக்கீடு மசோதாவின் தொழில்நுட்ப ரீதியான கோணங்களை ஆராய நியமிக்கப்பட்ட அமைச்சரவை துணைக் குழு முடிவு செய்யும். மேலும், அந்த இட ஒதுக்கீடு மசோதா எதிர்வரும் கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யப்படும். அரசு தலைமை வழக்குரைஞர் கருத்துப்படி, இட ஒதுக்கீடு வழங்குவதற்காக மத்திய அரசின் ஒப்புதலை மாநில அரசு பெற வேண்டியதில்லை. 
தங்கார்: இதனிடையே, தங்கார் சமூகத்தினரும் தங்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு வருகின்றனர். தற்போது, நாடோடி பழங்குடியினர்கள் பிரிவில் உள்ள அவர்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. எனினும், அவர்கள் தங்களை எஸ்டி பிரிவில் சேர்க்கக் கோரி வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கு மத்திய அரசின் கருத்தை பெற வேண்டியுள்ளது. எனவே அதுதொடர்பாக மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்று பட்னவீஸ் கூறினார்.
மராட்டிய சமூகத்தினர், தங்களுக்கு இட ஒதுக்கீடு கோரி நீண்ட காலமாக போராட்டம் நடத்தி வந்தனர். இதுதொடர்பாக கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் வன்முறை வெடித்தது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிர மக்கள் தொகையில் 30 சதவீதத்துக்கும் அதிகமானோர், மராட்டிய சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர்.
 

]]>
http://www.dinamani.com/india/2018/nov/19/மராட்டியர்களுக்கு-இட-ஒதுக்கீடு-மகாராஷ்டிர-அரசு-முடிவு-3041425.html
3041421 இந்தியா அஸ்ஸாம் என்ஆர்சி பட்டியல்: குடியுரிமை கோரி 4.5 லட்சம் பேர் மட்டுமே முறையீடு! DIN DIN Monday, November 19, 2018 02:02 AM +0530 அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (என்ஆர்சி) பெயர் சேர்க்கப்படாத 40 லட்சம் பேரில் இதுவரை வெறும் 4.5 லட்சம் பேர் மட்டுமே குடியுரிமை கோரி மீண்டும் முறையீடு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பட்டியலில் பெயர் சேர்க்கப்படாதவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக குரல் கொடுத்து வரும் நிலையில், குடியுரிமை கோரி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை எதிர்பார்த்ததை விடக் குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்க தகவலாக அமைந்துள்ளது.
வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்து வந்த லட்சக்கணக்கான மக்கள் அஸ்ஸாமில் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். தலைமுறை கடந்து அங்கு இருப்பதால், அவர்கள் அனைவரும் தங்களை இந்தியர்கள் என்றே அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.
இந்நிலையில், அஸ்ஸாமில் வசிக்கும் உண்மையான இந்திய குடிமக்கள் எவர்? என்பதை அறிவதற்கான தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதுதொடர்பான வரைவு பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. அதில், 2.9 கோடி பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. அதேவேளையில், சந்தேகத்தின் அடிப்படையில் ஏறத்தாழ 40 லட்சம் பேரின் பெயர்கள் அதில் சேர்க்கப்படவில்லை. இது சர்ச்சைகளுக்கு வித்திட்டது. இந்த சூழலில், பதிவேட்டில் பெயர் சேர்க்கப்படாதவர்கள், அதுதொடர்பாக, தங்களது ஆட்சேபங்களையும், முறையீடுகளையும் தெரிவிப்பதற்கு  கடந்த செப்டம்பர் 25 முதல் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், என்ஆர்சி தொடர்பான முறையீடுகளை பதிவு செய்ய  டிசம்பர் 15}ஆம் தேதி வரை அவகாசம் அளித்து அண்மையில் உத்தரவிட்டது.
அதன்படி, மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்ட 2,500 சேவை மையங்கள் வாயிலாக முறையீடுகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை 4.5 லட்சம் பேர் மட்டுமே இந்திய குடியுரிமை கோரி விண்ணப்பங்களை சமர்ப்பித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே, பதிவேட்டில் இடம்பெற்றுள்ள பெயர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 200 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக என்ஆர்சி வட்டாரங்கள் 
தெரிவித்துள்ளன.
 

]]>
http://www.dinamani.com/india/2018/nov/19/அஸ்ஸாம்-என்ஆர்சி-பட்டியல்-குடியுரிமை-கோரி-45-லட்சம்-பேர்-மட்டுமே-முறையீடு-3041421.html
3041419 இந்தியா காவல் துறை  மீது புகார்: கதுவா வழக்கில் சாட்சியம் அளித்தவர் மனு தள்ளுபடி DIN DIN Monday, November 19, 2018 02:01 AM +0530 கதுவா பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய சாட்சியம் அளித்த ஒருவர், வேறொரு பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல் துறையினர் துன்புறுத்தவதாகக் கூறி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
ஜம்மு}காஷ்மீர் மாநிலம், கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் முக்கியம் சாட்சியம் அளித்தவர் தாலிப் ஹுசைன்.
இவரது நெருங்கிய உறவினரும், வழக்குரைஞருமான எம்.ஏ.கான், உச்சநீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்தார். அதில், வேறொரு பாலியல் வன்கொடுமை வழக்கில், தாலிப் ஹுசைனைக் கைது செய்து, சட்டவிரோதக் காவலில் வைத்து காவல் துறையினர் துன்புறுத்துவதாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும், வழக்கில் இருந்து தாலிப் ஹுசைனை விடுவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனு கடந்த மாதம் 22}ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, தாலிப் ஹுசைனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு விட்டதால், சுதந்திரமாக வெளியே உள்ளார்; எனவே, அவரது குற்றச்சாட்டு ஏற்புடையதல்ல என்று மாநில காவல் துறை சார்பில் ஆஜரான வழக்குரைஞர் வாதிட்டார்.
இதையடுத்து, தாலிப் ஹுசைன் நவம்பர் 13}ஆம் தேதி நேரில் ஆஜராகி தனது தரப்பு வாதத்தை முன்வைக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், தீபக் குப்தா ஆகியோர் தலைமையிலான அமர்வு முன் கடந்த 13}ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஆனால், அன்றைய தினம், தாலிப் ஹுசைன் நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவரது மனுவை தள்ளுபடி செய்வதாக 
நீதிபதிகள் அறிவித்தனர்.

]]>
http://www.dinamani.com/india/2018/nov/19/காவல்-துறை--மீது-புகார்-கதுவா-வழக்கில்-சாட்சியம்-அளித்தவர்-மனு-தள்ளுபடி-3041419.html