Dinamani - உலகம் - http://www.dinamani.com/world/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2824557 உலகம் இஸ்ரேலின் ஜெருசலேம் கனவு மெய்ப்படுமா? DIN DIN Tuesday, December 12, 2017 11:00 AM +0530
இஸ்ரேல் தேசம் உருவாக்கப்பட்டு 70 ஆண்டுகள் கடந்துவிட்டன.
ராணுவம், தொழில்நுட்பம், பொருளாதாரம், கலாசாரம் போன்றவற்றில் அந்நாடு பல முன்னேற்றங்களைக் கண்டு பல நாடுகள் வியந்து வருகின்றன. 

இருந்தும், அந்த நாடு தனது தலைநகராகக் கூறிக் கொள்ளும் ஜெருசலேமை மட்டும் ஏற்றுக்கொள்ள ஏறத்தாழ எந்த நாட்டுக்கும் மனமில்லை.

இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரித்துள்ள சுமார் 160 நாடுகள், ஜெருசலேமுக்குப் பதிலாக டெல்-அவிவ் நகரில்தான் தங்கள் தூதரகங்களை அமைத்துள்ளன.
இஸ்ரேல் பிரதமர்-அதிபர் இல்லங்கள், பிரதமர் அலுவலகம், நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம், முக்கிய அமைச்சரகங்கள், அரசு அலுவலகங்கள் அனைத்தையும் ஜெருசலேமில் அமைத்து, 'இதுதான் எங்கள் நாட்டின் தலைநகர்' என்று இஸ்ரேல் உரக்கக் கூறினாலும், அந்த நாடுகள் டெல்-அவிவை விட்டு அசையவில்லை.

ஒரு அன்னையைப் போல இஸ்ரேலை தன் மடியில் வைத்துப் பாதுகாத்து வரும் அமெரிக்காவே அந்த விஷயத்தில் இத்தனை ஆண்டுகளாக மெளனம் காத்து வந்த நிலையில், இப்போதுதான் ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரிக்கவிருக்கும் அறிவிப்பை அதிபர் டொனால்ட் டிரம்ப் கொளுத்திப் போட்டுள்ளார்.

உலகம் முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ள அந்த அறிவிப்பு, மிகப் பெரிய பின்விளைவுகளை உண்டாக்கும் என்றும், பாலஸ்தீனப் பிரச்னைக்கு தீர்வே எட்ட முடியாத அளவுக்கு நிலைமை மோசமாகிவிடும் என்றும் சிலர் எச்சரித்துள்ளனர்.

ரஷியா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் நிரந்த உறுப்பு நாடுகளும், ஜெர்மனி உள்ளிட்ட உலக அரசியலில் செல்வாக்கு மிக்க நாடுகளும் இந்த அறிவிப்புக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன.

பாலஸ்தீன விவகாரத்தில் இஸ்ரேலுக்கு எதிரான இஸ்லாமிய நாடுகள்தான் என்றில்லாமல், கிட்டத்தட்ட உலக நாடுகள் அனைத்துமே ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அமெரிக்கா அறிவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?
ஏற்கெனவே அனைத்து அரசு இயந்திரங்களையும் ஜெருசலேமில் அமைத்து, அந்த நகரை இஸ்ரேல் தனது தலைமைப் பீடமாக்கிவிட்ட நிலையில், அதற்கு அங்கீகாரம் கொடுப்பதற்கு மட்டும் உலக நாடுகள் தயக்கம் காட்டுவது ஏன்?
இதற்கு அவ்வளவு எளிமையாக பதில் அளித்துவிட முடியாது.

காரணம், ஜெருசலேம் என்பது வெறும் நிலப்பரப்போ, கட்டடங்கள் நிறைந்த நகரமோ கிடையாது. அது ஒரு புனித பூமி.

யூதர்களுக்கும், உலகம் முழுவதும் சுமார் 300 கோடி பேர் பின்பற்றி வரும் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களுக்கும் அந்த நகரம்தான் புண்ணிய பூமி.
அந்த நகரை தங்கள் தலைநகராக்கியே தீர வேண்டும் என்று இஸ்ரேல் என்ன காரணத்துக்காக கனவு காண்கிறதோ, அதே காரணத்துக்காகத்தான் அந்த நகரை விட்டுத் தர பாலஸ்தீனமும் மறுத்து வருகிறது.

இஸ்ரேலின் புனித வரலாறு இன்று நேற்றல்ல.. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அந்த நகருக்கான மதச் சண்டைகள் ஆரம்பித்து விட்டன.

இருந்தாலும், அந்த நகரம் தற்போது இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது எப்படி? மதச் சண்டைகளின் தொட்டிலாக இன்றும் தொடர்வது ஏன்?
இதற்கு, இஸ்ரேல் பிறந்த வரலாற்றை சற்று தெரிந்து கொள்ள வேண்டும்.

உலகம் முழுவதும் வெறுப்புகளையும், துன்புறுத்தல்களையும் சந்தித்து வந்த யூத மதத்தினர், இரண்டாம் உலகப் போரின்போது ஐரோப்பாவில் நாஜிக்களின் சொல்லவொண்ணா கொடூரங்களுக்கு ஆளானதைத் தொடர்ந்து, அவர்களுக்கென்று ஒரு தனி தேசத்தை அமைப்பதற்கான யோசனை உதித்தது.
உலகப் போரின் முடிந்த பிறகு, ஏறத்தாழ 6 கோடி யூதர்கள் படுகொலை செய்யப்பட்ட விவரங்கள் விலாவாரியாக வெளிவந்த பிறகு அதிர்ச்சியில் உறைந்த உலக நாடுகளுக்கு யூதர்களின்பால் இரக்கம் பெருக்கெடுத்தது.

அதன் தொடர்ச்சியாக, கடந்த 1940-களில் பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்த பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியில் நாஜி படுகொலையால் பாதிக்கப்பட்ட யூதர்கள் கூட்டம் கூட்டமாகக் குடியேறினர்.

ஜெருசலேம் பகுதியின் கட்டுப்பாடுகள் குறித்து அதுவரை பாலஸ்தீனர்கள், யூதர்கள் ஆகிய இரு பிரிவினருமே வேண்டா வெறுப்பாகக் கடைப்பிடித்து வந்த பிரிட்டன் விதிமுறைகள் முடிவுக்கு வந்த பிறகு, 1948-ஆம் ஆண்டு மே 14-ஆம் தேதி இஸ்ரேல் தன்னை தனி நாடாக அறிவித்தது.

அப்போது தொடங்கியதுதான் இந்த ஜெருசலேம் தலைநகர் பிரச்னை.

-நாகா
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/12/w600X390/jerusalesm.jpg http://www.dinamani.com/world/2017/dec/12/இஸ்ரேலின்-ஜெருசலேம்-கனவு-மெய்ப்படுமா-2824557.html
2824568 உலகம் வெனிசூலா அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சியினர் போட்டியிட முடியாது': மடூரோ அதிரடி அறிவிப்பு DIN DIN Tuesday, December 12, 2017 01:21 AM +0530 வெனிசூலாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சியினர் போட்டியிட முடியாது என்று அதிபர் நிக்கோலஸ் மடூரோ கூறியுள்ளார்.
அந்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அந்தத் தேர்தலை பெரும்பாலான எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. தேர்தலில் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் அதிபர் நிக்கோலஸ் மடூரோ கூறியது:
உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் கலந்து கொள்ளாதது சில கட்சிகள் எடுத்த தவறான முடிவாகும். தேசிய அரசியல் நிர்ணய சபை புதிய அரசியல் சாசனத்தை இயற்றி வருகிறது. தற்போது விவாதிக்கப்பட்டு வரும் புதிய தேர்தல் விதிமுறைகளின் அடிப்படையில், உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணித்த கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது. ஜனநாயக நடைமுறைகள் அனைத்திலும் எல்லா தரப்பினரும் கலந்து கொண்டு தங்களுக்குள்ள ஆதரவைத் திரட்டிக் கொள்வதுதான் சரியான முறையாகும். தொடர்ச்சியாக முக்கியத் தேர்தல்களை எதிர்க்கட்சியினர் புறக்கணித்து வருகின்றனர். இது சரியல்ல என்றார் அவர்.
அவரது இந்தப் பேச்சு வெனிசூலா அரசியலில் மீண்டும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
அதிபருக்கு எல்லையில்லா அதிகாரம் வழங்குவதற்காகப் புதிய அரசியல் சாசனம் இயற்ற மடூரோ திட்டமிட்டார். அதையொட்டி புதிய அரசியல் நிர்ணய சபை அமைப்பதற்கான தேர்தல் அறிவிப்பை அதிபர் மடூரோ கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டார். அப்போது முதலே அந்த நாட்டில் பெரும் கொந்தளிப்பு நிலவி வருகிறது. தொடர்ந்து ஜூலை மாதம் நடைபெற்ற அரசியல் நிர்ணய சபை தேர்தலை எதிர்க்கட்சியினர் புறக்கணித்தனர்.
அரசியல் நிர்ணய சபையில் தற்போது இடம் பெற்றுள்ள 545 பேரும் இடதுசாரி அதிபரின் வெனிசூலா ஐக்கிய சோஷலிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் அல்லது அவரது ஆதரவாளர்களாக உள்ளனர்.
அரசியல் நிர்ணய சபை தேர்தலை வெனிசூலா ஆதரவு நாடுகளான சீனா, ரஷியா போன்றவை ஏற்ற போதிலும், பெரும்பாலான மேற்கத்திய நாடுகளும், பிற தென் அமெரிக்க நாடுகளும் தேர்தலை அங்கீகரிக்க மறுத்தன.
அரசியல் நிர்ணய சபைத் தேர்தலைத் தொடர்ந்து வெனிசூலா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகள் விதித்தது. அதிபர் மடூரோவுக்கு எதிராகவும் தனிப்பட்ட முறையில் தடைகளை விதித்துள்ளது.
தற்போது அரசியல் நிர்ணய சபையில் புதிய அரசியல் சாசனம் குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணித்த கட்சிகள் அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்த முடியாது என்று மடூரோ கூறியிருப்பது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் நிர்ணய சபை தேர்தலையொட்டி நாடு முழுவதும் நடந்த தொடர் வன்முறையில் முப்பதுக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
தற்போது, அந்நாட்டில் பொதுவாக அமைதி நிலவி வந்தாலும், முக்கிய எதிர்க்கட்சிகளின் உள்ளாட்சித் தேர்தல் புறக்கணிப்பைத் தொடர்ந்து அதிபர் வெளியிட்டுள்ள அறிவிப்பு மீண்டும் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/12/w600X390/maduro3.jpg http://www.dinamani.com/world/2017/dec/12/வெனிசூலா-அதிபர்-தேர்தலில்-எதிர்க்கட்சியினர்-போட்டியிட-முடியாது-மடூரோ-அதிரடி-அறிவிப்பு-2824568.html
2824563 உலகம் சிரியாவில் உள்ள ரஷிய படைகள் குறைப்பு DIN DIN Tuesday, December 12, 2017 01:20 AM +0530 சிரியாவில் உள்ள ரஷிய படையினரின் எண்ணிக்கையைக் குறைப்பதாக ரஷிய அதிபர் புதின் அறிவித்தார்.
சிரியாவின் லடாகியா மாகாணத்தில் உள்ள ஹமைம் போர் விமான தளத்திலிருந்த ரஷிய விமானப் படை வீரர்களிடையே நிகழ்த்திய உரையில் அவர் தெரிவித்ததாவது: சிரியாவில் நிறுத்தப்பட்டுள்ள ரஷிய படையினர் எண்ணிக்கையைக் குறைக்க உத்தரவிட்டிருக்கிறேன். படிப்படியாக படைக் குறைப்பு நடைபெறும். முதல் கட்டமாக கணிசமான வீரர்கள் நாடு திரும்புவார்கள். பயங்கரவாதிகளை அழிப்பதில் உங்களது பங்களிப்பை தாய் நாடு போற்றிப் பாராட்டுகிறது என்றார் அவர்.
முன்னதாக, ஹமைமில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பை சிரியா அதிபர் பஷார் அல்-அஸாதுடன் பார்வையிட்டார் புதின்.
சிரியாவில் உள்நாட்டுச் சண்டை காரணமாக நிலவிய அரசியல் குழப்பத்தின் இடையே அந்நாட்டின் கணிசமான பகுதியை இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் கைப்பற்றினர். இந்த நிலையில், சிரியா அரசுக்கு ஆதரவாக ரஷியா களத்தில் இறங்கியது. பயங்கரவாதிகள் மீது ரஷிய போர் விமானங்கள் கடந்த 2015 முதல் வான்வழித் தாக்குதல் மேற்கொண்டன. ஐ.எஸ். பயங்கரவாதிகளின் வீழ்ச்சிக்கு ரஷிய தலையீடே முக்கியக் காரணமாக அமைந்தது. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/12/w600X390/russia2.jpg சிரியாவின் லடாகியா மாகாணம், ஹமைமில் உள்ள விமான தளத்தில் ரஷிய போர் விமானிகளை திங்கள்கிழமை சந்தித்துப் பேசிய ரஷிய அதிபர் புதின். http://www.dinamani.com/world/2017/dec/12/சிரியாவில்-உள்ள-ரஷிய-படைகள்-குறைப்பு-2824563.html
2824560 உலகம் 'ஜெருசலேம் அறிவிப்பு அமைதிக்கு வழி வகுத்துள்ளது' DIN DIN Tuesday, December 12, 2017 01:19 AM +0530 ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரித்திருப்பது அந்தப் பிராந்தியத்தில் அமைதிக்கு வழி வகுத்துள்ளது என்று அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு திங்கள்கிழமை கூறினார்.
ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கும் விதமாக அங்கு அமெரிக்க தூதரகத்தை அமைக்க அதிபர் டிரம்ப் கடந்த வாரம் உத்தரவிட்டார். இஸ்ரேல் இதனை வரவேற்றுள்ளது.
ஜெருசலேம் நகருக்குத் தனியுரிமை கோரும் மையப் பிரச்னையில் பாலஸ்தீனும் இஸ்ரேலும் மோதி வரும் நேரத்தில் டிரம்ப்பின் அறிவிப்பு மத்திய கிழக்கு பிரதேசத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஐரோப்பிய யூனியன் கூட்டத்தில் கலந்து கொள்ள பிரஸல்ஸ் நகர் வந்துள்ள நெதன்யாஹு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது: 
ஜெருசலேம் நகரம் இஸ்ரேல் நாட்டின் தலைநகராக 70 ஆண்டுகளாகவும், இஸ்ரேலிய மக்களின் தலைநகராக மூவாயிரம் ஆண்டுகளாகவும் இருந்து வருகிறது என்கிற உண்மை அமெரிக்க அதிபரின் அறிவிப்பால் வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பால் அமைதிக்கு பாதிப்பு ஏற்படவில்லை, மாறாக, அமைதிக்கு வழி வகுத்துள்ளது. உண்மை நிலையை அறிந்து கொள்வது அமைதிக்கான அஸ்திவாரம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு தெரிவித்துள்ளார்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/12/w600X390/israel.jpg http://www.dinamani.com/world/2017/dec/12/ஜெருசலேம்-அறிவிப்பு-அமைதிக்கு-வழி-வகுத்துள்ளது-2824560.html
2824559 உலகம் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர் மீதான ஊழல் விசாரணை தொடக்கம் DIN DIN Tuesday, December 12, 2017 01:19 AM +0530 சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர் மீதான ஊழல் குற்றச்சாட்டு விசாரணை திங்கள்கிழமை தொடங்கியது.
இதுகுறித்து சீன அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹுவா தெரிவித்துள்ளதாவது: சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பலம் பொருந்திய தலைவராக வலம் வந்தவர் ஸன் ùஸங்சாய் (53). இவர், ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் úஸாங்கிங் நகர தலைவராக இருந்தவர்.
அவர் மீது முறைகேடாக பணம் பெற்றது மற்றும் அதிபர் ஜீ ஜின்பிங்குக்கு எதிராக சதி செய்து ஆட்சியை கலைக்க முற்பட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தலைவர் பதவியிலிருந்து கடந்த ஜூலை மாதம் அதிரடியாக நீக்கப்பட்டார். மேலும், ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார். 
ஸன் ùஸங்சாய் மீதான ஊழல் வழக்கு விசாரணை திங்கள்கிழமை தொடங்கியது. 
அவர் லஞ்சம் பெற்று சொத்து சேர்த்தது தொடர்பாகவும், அதிகார துஷ்பிரயோகம் செய்தது குறித்தும் விசாரிக்கப்பட உள்ளதாக அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியில் அதிகாரமிக்க 25 பொலிட்பியூரோ உறுப்பினர்களில் ஒருவராக விளங்கியவர் ஸன் ùஸங்சாய். மொத்த உறுப்பினர்களில் அவர்தான் மிக குறைந்த வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சீன பாதுகாப்பு ஒழுங்காற்று ஆணையத்தின் தலைவர் லியூ ஷியு இதுதொடர்பாக தெரிவித்தது:
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய, போ ஜிலாய், úஸாகு யோங்கங்க், லிங் ஜிகுவா, ஜு கெய்கோ, கயோ பாக்ஸியாங் மற்றும் ஸன் ùஸங்சாய் ஆகியோர் கட்சியில் உயரிய 
அந்தஸ்தில் இருந்தவர்கள். ஆனால், அவர்கள் அனைவரும் தங்களுடைய தலைமைப் பொறுப்புகளை மறந்து லஞ்ச லாவண்யத்தில் ஈடுபட்டார்கள். அதுமட்டுமின்றி, கட்சியின் தலைமைப் பொறுப்பை முறைகேடான வழியில் பின்பற்றி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றத் துடித்தார்கள் என்றார் அவர்.
கடந்த 2015இல் சீன அதிபராக ஜீ ஜின்பிங் பொறுப்பேற்றுக் கொண்டது முதல் ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதிபரின் இந்த அதிரடி நடவடிக்கையால், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், ராணுவத்தினர் என ஊழலில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் இதுவரையில் தண்டிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

]]>
http://www.dinamani.com/world/2017/dec/12/சீன-கம்யூனிஸ்ட்-கட்சியின்-முக்கிய-தலைவர்-மீதான-ஊழல்-விசாரணை-தொடக்கம்-2824559.html
2824447 உலகம் வரும் ஆண்டு முதல் சவூதி அரேபியாவில் திரையரங்கங்கள் துவங்க அனுமதி!  IANS IANS Monday, December 11, 2017 05:31 PM +0530  

ரியாத்: வரும் ஆண்டு முதல் சவூதி அரேபியாவில் திரையரங்கங்கள் துவங்க அனுமதி அளிக்கப்பட உள்ளதாக அந்நாட்டின் செய்தி மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்நாட்டின் செய்தி மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் அவாத் பின் சலேத் அலாவத் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளதாவது:

கலாச்சாரத்துறை ஒழுங்குமுறை அமைப்பான ஒலி-ஒளி ஊடங்களுக்கான பொது அமைப்பு இதற்கான ஆரம்ப கட்ட வேலைகளைத் துவக்கியுள்ளது. நாட்டின் முதல் திரை அரங்கமானது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கப்படும் என்று எதிர்ப்பார்க்கிறோம். 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த நடவடிக்கைகள் எல்லாம் 2030-ஆம் ஆண்டினை மனதினில் கொன்டு சவூதி அரசால் தீட்டப்பட்டுள்ள பொருளாதார திட்டங்களின் ஒரு பகுதியாகும். இதன் மூலம் ஒவ்வொரு வருடமும் சவூதி நாட்டு மக்கள் வெளிநாடுகளுக்கு பல்வேறு விதமான பொழுதுபோக்கு அம்சங்களுக்காக செலவு செய்யும் 20 பில்லியன் டாலரை மிச்சப்படுத்தும் எண்ணமும் அந்நாட்டுக்கு உள்ளது   

தீவிர இஸ்லாமிய சட்டங்களை பின்பற்றும் நாடான சவூதி சமீப காலமாக தனது முகத்தினைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டு வருகிறது. அதற்கு ஏற்றவாறு அங்கு சமீப காலமாக அரங்க இசை நிகழ்ச்சிகள், பாப் இசை திருவிழா கொண்டாட்டங்கள், வெகுவான பொதுமக்கள் பங்களிப்பை உள்ளடக்கிய தேசிய நாள் கொண்டாட்டம் உள்ளிட்டவைகள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

]]>
saudi arabia, cinema theatre, open, cultural ministry, notification, economic plan http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/11/w600X390/saudi_cinema.jpg http://www.dinamani.com/world/2017/dec/11/saudi-arabia-to-grant-cinema-licenses-from-2018-2824447.html
2824417 உலகம் உங்கள் தேர்தல் பிரச்னையில் எங்களை இழுக்காதீர்: பாகிஸ்தான் பளீச் பதில் DIN DIN Monday, December 11, 2017 02:42 PM +0530
குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையீடு இருப்பதாக மோடி கூறியிருந்த குற்றச்சாட்டுக்கு, 'உங்கள் தேர்தல் பிரச்னையில் எங்களை இழுக்காதீர்கள்' என்று பாகிஸ்தான் பதில் அளித்துள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் மொஹம்மது ஃபைசல் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, தேர்தல் தொடர்பான விவகாரத்தில் எல்லாம் இந்தியா, பாகிஸ்தானை வம்புக்கு இழுப்பதை நிறுத்திக் கொண்டு, அரசியல் கட்சிகள் தங்களது சொந்த பலத்தைக் காட்டி நிரூபித்து வெற்றி பெற வேண்டும். அதைவிடுத்து, இல்லாதக் குற்றச்சாட்டுகளை புனைந்து, அடிப்படையில்லாத குற்றச்சாட்டுகளை பொறுப்பற்ற முறையில் சொல்லக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையீடு இருப்பதாகவும்; பாகிஸ்தானைச் சேர்ந்த அதிகாரிகள் இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியுடன் ரகசிய சதி ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாகவும் பிரதமர் நரேந்திர மோடி பரபரப்பான குற்றச்சாட்டைக் கூறியிருந்தார்.
 

இக்கூட்டத்தில் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரும் பங்கேற்றனர் என்று மோடி கூறியுள்ளது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாகிஸ்தானுக்கு என்ன அக்கறை: குஜராத் மாநிலத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லையையொட்டி அமைந்துள்ள பனஸ்கந்தா மாவட்டம், பாலன்பூரில் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற மோடி பேசியதாவது:
பாகிஸ்தான் ராணுவத்தின் ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவர் குஜராத் தேர்தல் குறித்து மிகுந்த அக்கறையுடன் பேசியுள்ளார். முக்கியமாக காங்கிரஸ் தலைவர் அகமது படேல் குஜராத் மாநில முதல்வராக வேண்டுமென்று பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் ஜெனரல் சர்தார் அர்ஷத் ரஃபீக் விருப்பம் தெரிவித்துள்ளார். இது பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்புகின்றன. இதற்கு காங்கிரஸ் கட்சி உரிய பதிலளித்தாக வேண்டும்.

அன்சாரி, மன்மோகன் மீது குற்றச்சாட்டு: காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் வீட்டில் சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு ரகசிய சதி ஆலோசனைக் கூட்டம் குறித்த செய்தி பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது. அக்கூட்டத்தில், பாகிஸ்தான் தூதர், பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர், இந்தியாவின் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் (ஹமீது அன்சாரி), முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். சுமார் 3 மணி நேரத்துக்கு மேல் அவர்கள் சந்தித்துப் பேசியுள்ளனர். 

ரகசியக் கூட்டம் நடத்தியது ஏன்?: இதற்கு அடுத்த நாளில் என்னைப் பற்றி தரக்குறைவான விமர்சனத்தை மணிசங்கர் அய்யர் முன்வைத்தார். இந்த ரகசியக் கூட்டம் மிகவும் முக்கியமான பிரச்னையாகும். குஜராத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், இதுபோன்ற ரகசியக் கூட்டத்தை காங்கிரஸ் கட்சி நடத்த வேண்டிய அவசியம் என்ன? இதற்கு காங்கிரஸ் கட்சி உரிய பதிலளிக்க வேண்டும். 

இந்தக் கூட்டத்துக்குப் பிறகுதான், குஜராத் மக்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், ஏழை மக்களும், மோடியும் அவமதிக்கப்பட்டனர். இதுபோன்ற நிகழ்வுகள் சந்தேகத்தை ஏற்படுத்தும் என்பது காங்கிரஸுக்குத் தெரியாதா? எனவே இந்த விவகாரத்தில், உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து, நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் கட்சி விளக்க வேண்டும் என்றார் மோடி.

உருளைக் கிழங்குக்குப் பதில் தங்கம்?: முன்னதாக பனஸ்கந்தா மாவட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "ஒரு பக்கத்தில் உருளைக் கிழங்கை செலுத்தினால், மறுபக்கம் வழியாக அதனைத் தங்கமாக மாற்றித் தரும் இயந்திரத்தை பனஸ்கந்தாவில் பொருத்த இருக்கிறேன்' என்று உதாரணம் கூறி அத்தகைய வளர்ச்சியை அந்த மாவட்டத்தில் ஏற்படுத்த இருப்பதாகப் பேசினார்.

இதனைச் சுட்டிக் காட்டிப் பேசிய மோடி, "உருளைக் கிழங்குகளை இயந்திரம் மூலம் தங்கமாக மாற்றித் தருவதாக ராகுல் காந்தி தனது வார்த்தை ஜாலத்தை இங்கு காட்டியுள்ளார். 

பனஸ்கந்தா பகுதியில் விவசாயிகளின் கடின உழைப்பால் அமோகமான உருளைக் கிழங்கு விளைச்சலைப் பெற்று வருகின்றனர் என்பது நமது தேசத்துக்கே தெரியும். ஆனால், உருளைக் கிழங்கு ஏதோ தொழிற்சாலையில் விளையும் பொருள் என ராகுல் காந்தி நினைத்துக் கொண்டிருக்கிறார்.

மண்ணில் இறங்கி கடினமாக உழைப்பதன் மூலம்தான் உருளைக் கிழங்கை விளைவிக்கிறீர்கள் என்பதை தேர்தலில் தோற்கடிப்பதன் மூலம் காங்கிரஸுக்கு நீங்கள் நிரூபிக்க வேண்டும் என்றார் அவர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/9/w600X390/Pakistan.jpg http://www.dinamani.com/world/2017/dec/11/உங்கள்-தேர்தல்-பிரச்னையில்-எங்களை-இழுக்காதீர்-பாகிஸ்தான்-பளீச்-பதில்-2824417.html
2823961 உலகம் இந்தியாவின் சூரிய மின்திட்டம்: பிரான்ஸ் மாநாட்டில் விவாதிக்கப்படும் DIN DIN Monday, December 11, 2017 01:44 AM +0530 இந்தியாவின் பிரம்மாண்ட சூரிய மின்திட்டம் குறித்து பிரான்ஸில் இந்த வாரம் நடைபெறவிருக்கும் சர்வதேச மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் சனிக்கிழமை கூறியதாவது:
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெறவிருக்கும் சர்வதேச சுற்றுச்சூழல் மாநாட்டில், காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்காக உலக நாடுகள் மேற்கொள்ளும் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
அவற்றில், இந்தியாவின் பிரம்மாண்ட சூரிய மின் உற்பத்தித் திட்டமும் ஒன்றாகும். புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவதற்காக, வளரும் நாடுகளுடன் இணைந்து உலக வங்கி பணியாற்றி வருகிறது. அந்த வகையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து பணியாற்றுவோம்.
மோடியின் தலைமையில் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை எந்த அளவுக்கு வளர்ச்சி பெறும் என்பதை இப்போதே ஊகிக்க முடிகிறது.
கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு தனிப்பட்ட முறையிலும், பொது வாழ்விலும் நரேந்திர மோடி தீவிர ஆதரவளித்து வருகிறார். இந்தியாவின் கரியமில வாயு வெளியேற்ற அளவைக் குறைப்பதில், மிகக் கடுமையான இலக்கை அவர் நிர்ணயித்துள்ளார்.
சூரிய மின் நிலையங்கள் மற்றும் நீர் மின் நிலையங்களில் இந்தியா முன்னணி வகித்து வருகிறது. முக்கியமாக, சூரிய மின்சாரத் தயாரிப்பில் பிரதமர் மோடி காட்டும் ஆர்வம் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.
எனினும், புவி வெப்பயமாதலைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் இந்தியாவுடன் பேசித் தீர்க்க வேண்டிய பல விவகாரங்கள் உள்ளன. இந்திய அரசுக்கும் இது நன்றாகத் தெரியும் என்றார் அவர்.
இந்தியாவின் சூரிய மின் உற்பத்தித் திறனை 20,000 மெகாவாட்டிலிருந்து, 40,000 மெகாவாட்டாக உயர்த்துவதற்கு நாடு முழுவதும் சூரிய மின் உற்பத்திப் பூங்காக்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவதற்காக, கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பபது தொடர்பான சர்வதேச ஒப்பந்தம் பாரீஸ் நகரில் கடந்த 2015-ஆம் கையெழுத்தானது. அதன் இரண்டாவது ஆண்டு தினத்தையொட்டி பாரீஸில் இந்த வாரம் நடைபெறும் "ஒரே அகிலம்' என்ற தலைப்பில் மாநாடு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

]]>
http://www.dinamani.com/world/2017/dec/11/இந்தியாவின்-சூரிய-மின்திட்டம்-பிரான்ஸ்-மாநாட்டில்-விவாதிக்கப்படும்-2823961.html
2823880 உலகம் ஜெருசலேம்: அமெரிக்க முடிவைக் கைவிட அரபு நாடுகள் கூட்டமைப்பு வலியுறுத்தல் DIN DIN Monday, December 11, 2017 12:31 AM +0530 ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கும் முடிவை அமெரிக்கா கைவிட வேண்டும் என்று அரபு நாடுகள் கூட்டமைப்பு வலியுறுத்தியது.
அரபு நாடுகளின் கூட்டமைப்பு சார்பில் எகிப்து தலைநகர் கெய்ரோவில் சனிக்கிழமை இரவு அவசரக் கூட்டம் தொடங்கி விடிய விடிய நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலையில் நிறைவடைந்தது. கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள 22 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களும் அதில் கலந்து கொண்டனர். 
அவசரக் கூட்டத்தில் ஜெருசலேம் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. ஜெருசலேமில் இஸ்ரேலுக்கான தூதரகத்தை அமெரிக்கா அமைக்கவுள்ளதையும், அந்த சர்ச்சைக்குரிய நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்க முடிவு செய்துள்ளதையும் குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது.
நீண்ட விவாதத்தின் முடிவில், அமெரிக்காவின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்தும், அந்த முடிவை மாற்றிக் கொள்ளும்படியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
இது தொடர்பாக அரபு நாடுகள் கூட்டமைப்பின் தலைவர் அகமது அபுல் கெய்த் கூறியது:
ஜெருசலேம் கடந்த 50 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியாக இருந்து வருகிறது. 
தற்போது அந்த நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இது ஏற்க முடியாததாகும். ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டிருக்கிறது என்று அரபு நாடுகள் கண்டனம் தெரிவித்தன. 
இஸ்ரேல் - பாலஸ்தீன் பிரச்னையின் மைய விஷயமே ஜெருசலேமின் அந்தஸ்து என்ன என்பதுதான். அந்த நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதால் அமெரிக்கா ஒருதலைப் பட்சமாக செயல்படுகிறது என்று பொருளாகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது முடிவைக் கைவிட வேண்டும்.
அமெரிக்காவுக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டைக் காட்டும் வகையில் அரபு கூட்டமைப்பில் தீர்மானம் நிறைவேற்ற சில நாடுகள் வற்புறுத்தின. அமெரிக்காவின் முடிவை வேறு ஏதேனும் நாடுகள் பின்பற்றினால் அந்த நாடுகள் மீது கடுமையான நடவடிக்கையை அரபு நாடுகள் எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பல மிதவாத அரபு நாடுகள் அந்த ஆலோசனையை எதிர்த்தன.
டிரம்ப்பின் அறிவிப்பு சர்வதேச சட்டங்களுக்கும் தீர்மானங்களுக்கும் விரோதமானது. டிரம்ப்புக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தால் அந்தத் தீர்மானத்தை தள்ளுபடி செய்தால், ஐ.நா. பொதுக்குழுவில் அதே போன்ற தீர்மானத்தை தாக்கல் செய்ய வேண்டும்.
பாலஸ்தீன் என்கிற சுதந்திரமான நாட்டை அங்கீகரிப்பதுடன், கிழக்கு ஜெருசலேம் பகுதியை பாலஸ்தீன் தலைநகராக அறிவித்தால்தான் இஸ்ரேல்-அரபு நாடுகள் மோதல் நிற்கும். கடந்த 2002-ஆம் ஆண்டில் அரபு நாடுகள் சார்பில் நீடித்த அமைதிக்கான ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, 1967-இல் இஸ்ரேல் ஆக்கிரமித்த ஜெருசலேம் உள்ளிட்ட பகுதிகளை அந்த நாடு கைவிட்டு வெளியேற வேண்டும். அவ்வாறு செய்தால் இஸ்ரேல் என்னும் நாட்டை அரபு நாடுகள் அங்கீகரிக்கும் என்று தெரிவித்துள்ளோம். 
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீடித்த அமைதி நிலவ அதுவே சரியான அணுகுமுறையாக இருக்கும் என்றார் அவர்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/11/w600X390/jerusulam.jpg ஜெருசலேம் விவகாரம் தொடர்பாக எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்ற அரபு நாடுகள் கூட்டமைப்பு மாநாடு. http://www.dinamani.com/world/2017/dec/11/ஜெருசலேம்-அமெரிக்க-முடிவைக்-கைவிட-அரபு-நாடுகள்-கூட்டமைப்பு-வலியுறுத்தல்-2823880.html
2823879 உலகம் குடியிருப்பில் தீ விபத்து: சீனாவில் 8 பேர் பலி DIN DIN Monday, December 11, 2017 12:30 AM +0530 சீனாவில் உள்ள குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து சீன அரசின் செய்தி நிறுவனமான ஜின்ஹுவா தெரிவித்தது:
குவாங்டங் மாகாணம் ஹெய்பெங்க் மாவட்டத்தில் உள்ள கோங்பிங் நகரில் உள்ள குடியிருப்புப் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு (உள்ளூர் நேரம்) திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புப் படையினர் துரிதமாக செயல்பட்டு 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீக்கிரையான கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த ஒருவரது சடலம் மீட்கப்பட்டது. மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு வழியிலும், ஆறு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக அந்த செய்தி நிறுவனம் தெரிவித்தது.
சமீப வாரங்களில் நிகழ்ந்த மூன்றாவது பெரிய தீ விபத்து இதுவாகும். முன்னதாக டிசம்பர் 1ஆம் தேதி டியான்ஜின் நகர குடியிருப்பு வளாகத்தில் 38 ஆவது தளத்தில் பற்றிய தீயில் 10 பேர் உயிரிழந்ததுடன், 5 பேர் படுகாயமடைந்தனர். நவம்பர் 19ஆம் தேதி நிகழ்ந்த மற்றொரு தீவிபத்தில் சிக்கி 19 பேர் பலியானதுடன், 8 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

]]>
http://www.dinamani.com/world/2017/dec/11/குடியிருப்பில்-தீ-விபத்து-சீனாவில்-8-பேர்-பலி-2823879.html
2823877 உலகம் அமைதிக்கான நோபல் பரிசளிப்பு DIN DIN Monday, December 11, 2017 12:30 AM +0530 அணு ஆயுதப் பரவலைத் தடுப்பதற்காகப் போராடி வரும் தன்னார்வ அமைப்பான ஐ.சி.ஏ.என்.னுக்கு அமைதிக்கான நோபல் பரிசு ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐ.சி.ஏ.என். அமைப்பின் சார்பில் இயக்குநர் பியாட்ரிஸ் ஃபின் நோபல் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டார். ஜப்பான் நகரான ஹிரோஷிமாவில் நடத்தப்பட்ட அணுகுண்டு வீச்சில் உயிர் தப்பிய செட்சுகோ தர்லோ நோபல் பரிசு சான்றிதழைப் பெற்றுக் கொண்டார்.
நார்வே நோபல் பரிசுக் குழுத் தலைவர் பெரிட் ரைஸ் ஆண்டர்சன் பரிசுகளை வழங்கினார்.
ஸ்விட்ஸர்லாந்தின் ஜெனீவா நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சர்வதேச அணு ஆயுதத் தடை இயக்கம் (ஐ.சி.ஏ.என்.) 101 நாடுகளைச் சேர்ந்த 468 தன்னார்வ அமைப்புகளின் கூட்டமைப்பாகும். இந்த அமைப்பு கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 
அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவதால் மனித குலத்துக்கு ஏற்படக் கூடிய பேரழிவு குறித்து தொடர்ந்து எச்சரித்து வருவதற்காகவும், அது போன்ற பேரழிவு ஆயுதங்களைத் தடை செய்ய முற்படும் சர்வதேச ஒப்பந்தத்தைப் பல நாடுகள் ஏற்கச் செய்தமைக்காகவும் இவ்வாண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஐ.சி.ஏ.என். அமைப்புக்கு வழங்கப்படுகிறது என்று தேர்வுக் குழுவினர் தெரிவித்தனர். அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் ஒன்றை ஐ.சி.ஏ.என். அமைப்பு கடந்த ஜூலை மாதம் அறிவித்தது. அந்த ஒப்பந்தத்தை 122 நாடுகள் ஏற்று கையெழுத்திட்டுள்ளன. ஆயினும், அமெரிக்கா உள்ளிட்ட முக்கிய அணு ஆயுத நாடுகள் இந்த ஒப்பந்தத்தை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/11/w600X390/nobel.jpg நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடைபெற்ற அமைதிக்கான நோபல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் (இடமிருந்து) பரிசுக் குழுத் தலைவர் பெரிட் ரைஸ் ஆண்டர்சன், செட்சுகோ தர்லோ, ஐ.சி.ஏ.என். அமைப்பின் இயக்குநர் பியாட்ரிஸ். http://www.dinamani.com/world/2017/dec/11/அமைதிக்கான-நோபல்-பரிசளிப்பு-2823877.html
2823874 உலகம் சவூதி மனம் திருந்தினால் நல்லுறவு சாத்தியம்: ஈரான் DIN DIN Monday, December 11, 2017 12:28 AM +0530 சவூதி அரேபியா மனம் திருந்தினால் அந்த நாட்டுடன் நல்லுறவு சாத்தியம் என்று ஈரான் தெரிவித்தது.
ஈரான் அதிபர் ஹசன் ரெüஹானி அரசு தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்தது: 
ஈரானும் சவூதி அரேபியாவும் பல்வேறு நிலைகளில் போட்டி நாடுகளாக உள்ளன. ஆனால் போட்டி நாடுகளாக இருந்தாலும் கூட, நட்புடனும் நல்லுறவுடனும் இருக்கலாம். அப்படி நல்லுறவு ஏற்பட வேண்டுமானால், இஸ்ரேலுடனான உறவை சவூதி அரேபியா கைவிட வேண்டும். சவூதி - இஸ்ரேல் நட்பு பொய்யானது. அதனை உணர்ந்து சவூதி அதனைக் கைவிட வேண்டும்.
அதே போல, யேமனில் மனிதாபிமானமற்ற முறையில் சவூதி தலைமையிலான கூட்டுப் படை நடத்தி வரும் தாக்குதல்களை நிறுத்த வேண்டும். இந்த இரு நடவடிக்கைகளையும் சவூதி எடுக்கும் பட்சத்தில் அந்த நாட்டுடன் உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ள ஈரான் தயாராக உள்ளது. சவூதி மனம் திருந்தினால் நல்லுறவு சாத்தியமாகும் என்றார் அவர்.
ஈரானுடனான ராஜீய உறவுகளை சவூதி அரேபியா கடந்த 2016-ஆம் ஜனவரியில் துண்டித்துக் கொண்டது. பயங்கரவாதக் குற்றச்சாட்டின் பேரில் நிமர் அல்-நிமர் என்ற மதகுருவுக்கு சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஷியா பிரிவைச் சேர்ந்த அவருக்கு ஈரான் உள்பட உலகின் பல பகுதிகளில் பெரும் செல்வாக்கு இருந்தது. அவருக்கு 2016 ஜனவரியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து ஈரானில் உள்ள சவூதி தூதரக அலுவலகங்கள் தாக்கப்பட்டன. இதையடுத்து, ஈரானுடனான உறவுகளை சவூதி துண்டித்துக் கொண்டது.
யேமனில் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆயுத உதவி அளித்து வருகிறது. அதே சமயத்தில் யேமன் ராணுவத்துக்கு ஆதரவாக சவூதி தலைமையிலான கூட்டுப் படை கிளர்ச்சியாளர்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலை ஒரு நாடாக சவூதி அங்கீகரிக்காவிட்டாலும் கூட, அவ்விரு நாடுகளும் ஈரானை எதிர்ப்பதில் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளன.

]]>
http://www.dinamani.com/world/2017/dec/11/சவூதி-மனம்-திருந்தினால்-நல்லுறவு-சாத்தியம்-ஈரான்-2823874.html
2823848 உலகம் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில் துபையில் "கல்விக் கண்காட்சி-2017' DIN DIN Sunday, December 10, 2017 11:57 PM +0530 நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் துபையில் நடைபெற்ற "கல்வி கண்காட்சி-2017' ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. 
டிச.9 மற்றும் டிச.10 ஆகிய இரு தேதிகளில் நடைபெற்ற இந்த கல்விக் கண்காட்சியை எக்ஸ்பிரஸ் பப்ளிகேஷன்ஸ் துணைத் தலைவர் (சந்தைப்படுத்துதல்) ஜே.விக்னேஷ்குமார் முன்னிலையில், வழக்குரைஞரும் சட்ட ஆலோசகருமான அலி அல் ஷம்ஸி தொடங்கி வைத்தார். உலக தரத்திலான உயர் கல்வி அனைத்துக்கும் இந்தியா முக்கிய மையமாகத் திகழ்கிறது என்பதை உணர்த்துவதே இந்த கண்காட்சியின் முக்கிய இலக்கு என்று அவர்கள் தெரிவித்தனர். 
இந்த கண்காட்சியில், விஐடி, எஸ்ஆர்எம், சவீதா, ரேவா பல்கலைக்கழகங்கள், ஹிந்துஸ்தான் குழும கல்வி நிறுவனங்கள், கிரெசன்ட், டெக்னோ இந்தியா, சின்மயா விஸ்வவித்யாபீடம், காருண்யா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கொங்கு என்ஜினியரிங் கல்லூரி, எஸ்எஸ்விஎம் கல்வி நிறுவனங்கள், கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் இண்டஸ்ட்ரியல் டெக்னாலஜி, சிக்ஷா ஓ அனுசந்தான், பாவை குழும பள்ளிகள், சோனா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, ஐபிஇ, கிரியேட்டிவ் அகாதெமி, கார்னர்ஸ்டோன் இன்டர்நேஷனல் காலேஜ், செயின்ட் ஜோசப் காலேஜ் ஆஃப் என்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, எம்இஎஸ் இண்டர்நேஷனல் ஸ்கூல், டிசிஎஸ்எம்ஏடி, செயின்ட் ஜார்ஜ் காலேஜ், தானிஷ் அகமது காலேஜ் ஆஃப் என்ஜினியரிங், ராஜலட்சுமி என்ஜினியரிங் காலேஜ், கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமி உள்ளிட்ட முன்னணி கல்வி நிறுவனங்கள் பங்கேற்றன. 
இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த கல்வி கண்காட்சியின் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயனடைந்தனர். 
கல்விக் கண்காட்சியில் கலந்து கொண்ட விஐடி பல்கலையின் இணை பேராசிரியர் விவேகானந்தன் தெரிவித்தது: இந்த கல்வி கண்காட்சியில் பங்கேற்றது மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளித்துள்ளது. எங்களின் கல்வி நிறுவன படிப்புகளுக்கு மாணவர் மற்றும் பெற்றோரிடையே அதிக வரவேற்பு காணப்பட்டது. அடுத்த கல்வியாண்டில் சேருவதற்கு இப்போதே மாணவர்கள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்துள்ளனர் என்றார் அவர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/10/w600X390/viteee.jpg தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில் துபையில் நடைபெற்ற கல்வி கண்காட்சியைப் பார்வையிட்ட மாணவர் மற்றும் பெற்றோர். http://www.dinamani.com/world/2017/dec/10/நியூ-இந்தியன்-எக்ஸ்பிரஸ்-சார்பில்-துபையில்-கல்விக்-கண்காட்சி-2017-2823848.html
2823730 உலகம் இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிடம் ஒப்படைப்பு DIN DIN Sunday, December 10, 2017 04:08 AM +0530 இலங்கையின் தென் பகுதியில் அமைந்துள்ள அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிடம் சனிக்கிழமை முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.
அந்தத் துறைமுகத்தை சீனாவுக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகை விட்டதன் மூலம், சிறீசேனா தலைமையிலான அரசு இலங்கையின் வளங்களை சீனாவிடம் விற்றுவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சவின் ஆட்சிக் காலத்தில், அவரது சொந்த மாவட்டத்தில் அமைந்துள்ள அம்பாந்தோட்டை நகரில் மிகப் பெரிய துறைமுகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கு கடனுதவி அளிக்க சீனா ஒப்புக் கொண்டது.
அதையடுத்து, கடந்த 2008}ஆம் ஆண்டு அந்தத் துறைமுகம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, பிறகு துறைமுகத்தின் கொள்திறன் மேலும் அதிகரிக்கப்பட்டது. எனினும், அந்தத் துறைமுகத்தால் இலங்கை துறைமுக பொறுப்புக் கழகத்துக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு, சீனாவுக்குத் திருப்பித் தர வேண்டிய கடன் சுமை அதிகரித்தது.
துறைமுகம் அமைத்ததில் சீனாவுக்கு 800 கோடி டாலர் (சுமார் ரூ.51,000 கோடி) கடன் பாக்கி இருப்பதாக அப்போதைய நிதியமைச்சர் ரவி கருணாநாயகே கடந்த ஆண்டு தெரிவித்தார்.
இந்த நிலையில், தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த ஏப்ரல் மாதம் சீனா சென்றபோது கடன் தொகைக்குப் பதிலாக அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 சதவீத பங்குகளைத் திருப்பித் தருவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தில், துறைமுகத்தை சீன நிறுவனங்களுக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகை விட இலங்கை அரசு ஒப்புக் கொண்டது.
இதன் மூலம், துறைமுகத்தின் உரிமை இலங்கை துறைமுக பொறுப்புக் கழகத்திடம் இருந்தாலும், அதன் மீதான முழு கட்டுப்பாடும் சீன நிறுவனங்களிடம் வரும் நிலை ஏற்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தன.
இந்தச் சூழலில், 99 ஆண்டு குத்தகை ஒப்பந்தத்தின் கீழ் சீனாவின் அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகக் குழு (ஹெச்ஐபிஜி) மற்றும் அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகச் சேவை (ஹெச்ஐபிஎஸ்) நிறுவனங்களிடம் அந்தத் துறைமுகத்தை இலங்கை துறைமுக பொறுப்புக் கழகம் சனிக்கிழமை முறைப்படி ஒப்படைத்தது.
இதையடுத்து, அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வர்த்தக மண்டலங்கள் அந்த நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் வந்தன.
இந்த நடவடிக்கை மூலம், துறைமுகத்துக்காக வாங்கிய கடனை சீனாவுக்குத் திருப்பியளிக்கத் தொடங்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மேலும், அந்தத் துறைமுகத்தால் பொருளாதார மேம்பாடும், சுற்றுலா வளர்ச்சியும் ஏற்படும் என்று அவர் கூறினார்.
இந்தியா கவலை: அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் கட்டுப்பாட்டில் வருவதால், இந்தியக் கடல் பகுதியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக இந்தியா கவலை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
எனினும், அந்தத் துறைமுகம் வர்த்தகப் பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்று ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/10/w600X390/ship.jpg http://www.dinamani.com/world/2017/dec/10/இலங்கை-அம்பாந்தோட்டை-துறைமுகம்-சீனாவிடம்-ஒப்படைப்பு-2823730.html
2823656 உலகம் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல்: 3 வீரர்கள் பலி DIN DIN Sunday, December 10, 2017 02:36 AM +0530 ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 3 வீரர்கள் உயிரிழந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:
ஆப்கானிஸ்தானின் கஜினி மாகாணத்தில் அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடிகளைக் குறிவைத்து சனிக்கிழமை அதிகாலை பயங்கரவாதிகள் திடீர் தாக்குதலை நிகழ்த்தினர். இதில், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 3 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், இரண்டு பேர் பலத்த காயமடைந்தனர். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதிலடித் தாக்குதலில் எட்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். 
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருவதையடுத்து, பாதுகாப்புப் படையினர் மீதான தாக்குதலை தலிபான் பயங்கரவாதிகள் கடந்த சில மாதங்களாகவே தீவிரப்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

]]>
http://www.dinamani.com/world/2017/dec/10/தலிபான்-பயங்கரவாதிகள்-தாக்குதல்-3-வீரர்கள்-பலி-2823656.html
2823654 உலகம் காஸா ஏவுகணை வீச்சுக்கு இஸ்ரேல் பதிலடித் தாக்குதல் DIN DIN Sunday, December 10, 2017 02:36 AM +0530 காஸா பகுதியிலிருந்து இஸ்ரேலுக்கு எதிராக நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடியாக, இஸ்ரேல் போர் விமானங்கள் பதிலடித் தாக்குதல் நடத்தின.
இதில் இரு பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக காஸாவில் ஆட்சிபுரிந்து வரும் ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருப்பது:
காஸாவின் மத்திய பகுதியில் உள்ள நுúஸரத்தில் அமைந்திருக்கும் ஹமாஸ் ராணுவ நிலை மீது சனிக்கிழமை அதிகாலை இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. அதில் இருவர் பலியாகினர். பல மணி நேரத்துக்குப் பிறகு இடிபாடுகளிலிருந்து இருவரது உடல்களும் மீட்கப்பட்டன என்று ஹமாஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும் பலியான இருவர் எந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிவிக்கப்படவில்லை.
இதற்கு முன்னதாக, வெள்ளிக்கிழமை, காஸா பகுதியிலிருந்து இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் அதன் மூலம் இஸ்ரேல் தரப்பில் உயிரிழப்பு ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
ஹமாஸ் இயக்கம் ஆட்சிபுரிந்து வரும் காஸா பகுதியிலிருந்து இந்தத் தாக்குதல் நடந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பின்னர் அந்தத் தாக்குதல்களுக்கு காஸாவில் உள்ள சலாஃபி பிரிவைச் சேர்ந்த சலாஹிதீன் படையினர் பொறுப்பேற்றனர்.
இருந்த போதிலும், காஸாவிலிருந்து நடத்தப்படும் எந்தத் தாக்குதலுக்கும் ஹமாஸ்தான் பொறுப்பு என்று இஸ்ரேல் கூறி வருகிறது. இந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலையில் இஸ்ரேல் பதிலடித் தாக்குதல் நடத்தியது. 
இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பது: 
இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் ஹமாஸ் பயங்கரவாதிகள் வெள்ளிக்கிழமை மூன்று முறை ஏவுகணை வீச்சு நடத்தினர். அதில் முதல் ஏவுகணை இஸ்ரேலின் ùஸடரோட் நகரில் விழுந்த போதிலும் அது வெடிக்கவில்லை. காஸாவிலிருந்து செலுத்தப்பட்ட மற்றொரு ஏவுகணையை இஸ்ரேல் ராணுவம் நடுவானிலேயே சுட்டு வீழ்த்தியது. 
காஸாவிலிருந்து செலுத்தப்பட்ட மேலும் ஓர் ஏவுகணை இஸ்ரேல் எல்லைக்குள் கடந்து வரும் முன்னரே விழுந்தது.
இந்த ஏவுகணைத் தாக்குதல்களையடுத்து, காஸாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளின் இலக்குகளைக் குறி வைத்து இஸ்ரேல் ராணுவ விமானங்கள் பதிலடித் தாக்குதல் நடத்தின. அந்தத் தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாதிகளின் ஆயுத உற்பத்தி மையம், ஆயுதக் கிடங்கு மற்றும் ஹமாஸ் ராணுவ நிலை அழிக்கப்பட்டன. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/10/w600X390/blast.jpg இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் அழிக்கப்பட்ட ஹமாஸ் ஆயுதக் கிடங்கு. http://www.dinamani.com/world/2017/dec/10/காஸா-ஏவுகணை-வீச்சுக்கு-இஸ்ரேல்-பதிலடித்-தாக்குதல்-2823654.html
2823652 உலகம் ஜெருசலேம் குறித்த அமெரிக்க நிலைப்பாடு: ஐ.நா. நிராகரிப்பு DIN DIN Sunday, December 10, 2017 02:35 AM +0530 ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து அங்கு தூதரகம் அமைக்கும் அமெரிக்காவின் நிலைப்பாட்டை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிராகரித்தது.
ஜெருசலேம் தொடர்பான அமெரிக்க அதிபரின் அறிவிப்பு வெளியானதையடுத்து, முஸ்லிம் நாடுகளில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் டிசம்பர் மாதத்துக்கான தலைமையேற்றுள்ள ஜப்பான் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க அவசரக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற அவசரக் கூட்டத்தின்போது, பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள 15 நாடுகளில் 14 நாடுகள் அமெரிக்காவின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்தன.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஜெருசலேம் சர்ச்சை குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளது; அவற்றுக்கு விரோதமாக அமெரிக்காவின் அறிவிப்பு அமைந்ததாக அந்த நாடுகள் விமர்சித்தன.
"கிழக்கு ஜெருசலேம், பாலஸ்தீனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி என்றும், ஒருங்கிணைந்த ஜெருசலேம் நகரம் இஸ்ரேல் - பாலஸ்தீனின் கூட்டுத் தலைநகராக இருக்க வேண்டும்' என்பதே பிரிட்டன் நிலைப்பாடு என்று ஐ.நா.வுக்கான அந்நாட்டு தூதர் மாத்யூ ரைக்ராஃப்ட் கூறினார்.
ஜெருசலேம் குறித்த அமெரிக்காவின் அறிவிப்பை விளக்கி பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி கூறியது:
ஜெருசலேமில் இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகத்தை அமைக்கவும் அந்த நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கவும் முடிவு செய்து அமெரிக்க அதிபர் அறிவிப்பு வெளியிட்டார். இது பல கவலைகளையும் கேள்விகளையும் எழுப்பும் என்று தெரிந்துதான் மிகுந்த யோசனைக்குப் பிறகு இந்த முடிவை அவர் அறிவித்தார்.
அந்தப் பிராந்தியத்தில் அமைதி நிலவ இந்த அறிவிப்பு உதவும். அனைத்துத் தரப்பினரும் ஒருவருக்கொருவர் நேர்மையுடன் நடந்து கொண்டால்தான் அமைதிக்கான முயற்சிகளில் முன்னேற்றமும் வெற்றியும் காண முடியும்.
தற்போதைய உண்மை நிலவரத்தின் அடிப்படையில் அமெரிக்காவின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. எது ஏற்கெனவே வெளிப்படையாக உள்ளதோ, அதனை அமெரிக்கா அங்கீகரித்திருக்கிறது. ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகர். டெல் அவிவ் நகரில் உள்ள இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேமில் அமைக்குமாறு வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு அதிபர் உத்தரவிட்டுள்ளார். இதை மட்டும்தான் அதிபர் செய்துள்ளார். ஜெருசலேம் நகர்ப்புற எல்லை வரையறைகள், எந்தப் பகுதியில் யார் யாருக்கு உரிமை உண்டு போன்ற விவகாரம் எதையும் அதிபர் அறிவிப்பு தொடவேயில்லை. அது இரு தரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்மானிக்கப்பட வேண்டியது என்று அமெரிக்கா இப்போதும் கூறுகிறது. 
ஜெருசலேம் எல்லைக்கோடுகள் குறித்து அதிபர் எதுவும் கூறவில்லை. அப்பகுதியில் இரு தரப்பினரும் கோரும் இறையாண்மை குறித்து அதிபர் கருத்து வெளியிடவில்லை. அதையெல்லாம் இஸ்ரேலியரும் பாலஸ்தீனரும் பேசித் தீர்வு காண வேண்டும் என்பது அமெரிக்காவின் நிலைப்பாடு.
தற்போது மலைக்கோயில், அல்-அக்ஸா மசூதியில் நடைபெற்று வரும் நிர்வாகம், வழிபாடு ஏற்பாடுகளில் எந்த மாற்றத்தையும் அதிபர் டிரம்ப்பின் அறிவிப்பு கொண்டு வரவில்லை. அங்கு தற்போதுள்ள ஏற்பாடே தொடர வேண்டும் என்றுதான் கூறியிருக்கிறார்.
இவ்வாறு நிக்கி ஹேலி தெரிவித்தார்.
அமெரிக்காவின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஸ்வீடன் கூட்டறிக்கை வெளியிட்டன. "அமெரிக்காவின் அறிவிப்பு ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின் அடிப்படையில் இல்லை; அந்தப் பிராந்தியத்தில் அமைதி ஏற்பட இந்த அறிவிப்பு உதவாது; இஸ்ரேல் - பாலஸ்தீன் இடையேயான பேச்சுவார்த்தை மூலமே இதற்குத் தீர்வு காண முடியும்' என்று அந்தக் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் முடிவு சர்வதேச சட்டங்களுக்கு விரோதமானது என்று ஐ.நா.வுக்கான பாலஸ்தீன் பார்வையாளர் ரியாத் மன்சூர் கூறினார்.
இதனிடையே, இஸ்ரேல் தூதர் டேனி டேனன் ஐ.நா. சபையில் பேசியதாவது: அமெரிக்காவின் துணிச்சலான முடிவுக்கு இஸ்ரேல் நன்றி தெரிவிக்கிறது. அதிபர் டொனால்ட் டிரம்ப், துணை அதிபர் மைக் பென்ஸ், ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி ஆகியோருக்கு நன்றி. ஜெருசலேமில் உள்ள மலைக்கோயிலில் அகழாய்வில் கிடைத்த கி.பி. 67-ஆம் ஆண்டைச் சேர்ந்த காசில் "புனித ஜெருசலேம்' என்று பொறித்துள்ளது. கி.பி. 70-இல் ஜெருசலேமில் யூதக் கோயில் அழிக்கப்பட்டது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு யூதர்கள் தங்கள் தாயகத்தைவிட்டுத் துரத்தப்பட்டனர் என்று அவர் கூறினார்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/10/w600X390/meet1.jpg ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கிடையே அமெரிக்க தூதர் நிக்கி ஹேலியுடன் பேசும் பாலஸ்தீனுக்கான பார்வையாளர் ரியாத் மன்சூர். http://www.dinamani.com/world/2017/dec/10/ஜெருசலேம்-குறித்த-அமெரிக்க-நிலைப்பாடு-ஐநா-நிராகரிப்பு-2823652.html
2823649 உலகம் பாகிஸ்தான் செல்ல வேண்டாம்: அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை வெளியீடு DIN DIN Sunday, December 10, 2017 02:34 AM +0530 பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொள்ள விரும்பும் அமெரிக்கர்களுக்கான எச்சரிக்கையை அமெரிக்க அரசு சனிக்கிழமை வெளியிட்டது.
பாகிஸ்தானில் பயங்கரவாத, வகுப்புவாத தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் புதிய எச்சரிக்கையை வெளியிடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக அத்தியாவசியமான காரணங்கள் இல்லாத பட்சத்தில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கர்கள் பயணம் மேற்கொள்ளக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட எச்சரிக்கை அறிவிக்கையில் குறிப்பிட்டிருப்பது:
பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள், வகுப்புவாத தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்த தொண்டர்கள், அரசு சாரா அமைப்புகளின் ஊழியர்கள், இனக்குழுக்களின் தலைவர்கள், காவல் படையினர் தாக்குதலுக்கு உள்ளாவது அந்த நாட்டில் சகஜமாக உள்ளது.
பாகிஸ்தான் முழுவதும் செயல்பட்டு வரும் உள்நாட்டைச் சேர்ந்த மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பயங்கரவாதிகளால் அமெரிக்கர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. அமெரிக்க தூதரக அதிகாரிகள், ஊழியர்கள், தூதரகக் கட்டடங்கள், பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இரையாகியுள்ளனர். அண்மைக் காலமாக வகுப்புவாத வன்முறையும் அதிகம் நிகழ்ந்து வருகின்றன. மத நிந்தனைக் குற்றச்சாட்டு தொடர்பான சட்டங்கள் அங்கு கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. மத நிந்தனை குற்றச்சாட்டின் பேரில் சிறுபான்மையினர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 
கடந்த 6 மாதங்களில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கு எதிராகப் பல தற்கொலைத் தாக்குதல்கள், குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஏராளமான அப்பாவிப் பொதுமக்களும் பலியாகியுள்ளனர். எனவே, மிக அத்தியாவசியமான காரணங்கள் இல்லாவிடில், அமெரிக்கர்கள் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று அந்த எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய பயண எச்சரிக்கை கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது.

]]>
http://www.dinamani.com/world/2017/dec/10/பாகிஸ்தான்-செல்ல-வேண்டாம்-அமெரிக்கர்களுக்கு-எச்சரிக்கை-வெளியீடு-2823649.html
2823647 உலகம் காங்கோவில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: ஐ.நா. அமைதிப்படையைச் சேர்ந்த 15 வீரர்கள் பலி DIN DIN Sunday, December 10, 2017 02:34 AM +0530 காங்கோவில் கிளர்ச்சியாளர்கள் நிகழ்த்திய தாக்குதலில் ஐ.நா. அமைதிப் படையைச் சேர்ந்த 15 வீரர்கள் பலியாகியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:
காங்கோவின் வடக்கு கிவு மாகாணத்தில் வியாழக்கிழமை கிளர்ச்சியாளர்கள் இந்தக் கொடூரத் தாக்குதலை நிகழ்த்தினர். அண்டை நாடான தான்சானியாவிலிருந்து வந்த ஐ.நா. அமைதிப்படையினரை குறிவைத்து இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில், அமைதிப்படையைச் சேர்ந்த 15 வீரர்களும், காங்கோ ராணுவத்தைச் சேர்ந்த ஐந்து பேரும் உயிரிழந்தனர். 
மேலும், 53 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வடக்கு கிவு மாகாணத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் உகாண்டா இஸ்லாமிய கிளர்ச்சிக் குழு இந்த ஈவு இரக்கமற்ற தாக்குதலுக்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
காங்கோ தாக்குதலுக்கு ஐ.நா. பொது செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளதுடன், அமைதிப்படையினருக்கு எதிரான மனிதாபிமானமற்ற இந்த செயல் போர்க் குற்றத்துக்கு ஒப்பாகும் என்று தெரிவித்துள்ளார்.

]]>
http://www.dinamani.com/world/2017/dec/10/காங்கோவில்-கிளர்ச்சியாளர்கள்-தாக்குதல்-ஐநா-அமைதிப்படையைச்-சேர்ந்த-15-வீரர்கள்-பலி-2823647.html
2822826 உலகம் 1,300 முறை அத்துமீறித் தாக்குதல்: இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு DIN DIN Saturday, December 9, 2017 01:32 AM +0530 நிகழாண்டில் மட்டும் தங்களது எல்லைக்குள் இந்தியா 1,300 முறை அத்தமீறித் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதன் விளைவாக 52 பாகிஸ்தானியர்கள் உயிரிழந்ததாகவும், 175 பேர் காயமடைந்ததாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் முகமது ஃபைசல், இஸ்லாமாபாத்தில் பத்திரிகையாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
காஷ்மீர் மக்களின் மீது இந்திய அரசு அடக்குமுறையை ஏவி வருகிறது. அந்த விவகாரத்தை உலக நாடுகளின் கவனத்திலிருந்து திசை திருப்புவதற்காகவே பாகிஸ்தான் மீது தொடர்ச்சியாக இந்தியா தாக்குதல் நடத்தி வருகிறது. நிகழாண்டில் மட்டும் 1,300 முறை அத்தகைய தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. அவற்றில் 52 பாகிஸ்தானியர்கள் உயிரிழந்தனர். மேலும், 175 பேர் பலத்த காயமடைந்தனர். இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபடுவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும். எங்களது நாட்டில் பயங்கரவாதிகளுக்கோ, தீவிரவாதிகளுக்கோ புகலிடம் அளிக்கவில்லை.
பாகிஸ்தான் - சீனா இடையேயான பொருளாதார வழித்தடத் திட்டத்தில் மூன்றாவது நாடும் பங்கெடுப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஆனால், அதுகுறித்து பாகிஸ்தானும், சீனாவும் ஆலோசித்தே முடிவெடுக்கும் என்றார் அவர்.
இந்தியத் துணைத் தூதருக்குக் கண்டனம்: இதனிடையே, அத்துமீறல் நடவடிக்கை தொடர்பாக பாகிஸ்தானில் உள்ள இந்தியத் துணைத் தூதர் ஜே.பி.சிங்கை நேரில் அழைத்து அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

]]>
http://www.dinamani.com/world/2017/dec/09/1300-முறை-அத்துமீறித்-தாக்குதல்-இந்தியா-மீது-பாகிஸ்தான்-குற்றச்சாட்டு-2822826.html
2822825 உலகம் இந்தியா-அமெரிக்கா இணைந்து பாதுகாப்பு தொடர்பான திட்டங்களை வகுக்க வேண்டும் DIN DIN Saturday, December 9, 2017 01:32 AM +0530 இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து பாதுகாப்புத் தொடர்பான முக்கியத் திட்டங்களை வகுக்க வேண்டும் என்று இந்தியாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதர் ரிச்சர்ட் வர்மா வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் அவர் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
பாதுகாப்புத் துறை வர்த்தகத்தில் இந்தியாவுக்கு கடந்த ஆண்டு பிரத்யேக இடத்தை அமெரிக்க அரசு அளித்துள்ளது. தொழில்நுட்பத்தை பகிர்ந்துகொள்வதில் அந்நாட்டுடன் நாம் நெருங்கிய நட்பு பாராட்ட வேண்டும்.
முன்னாள் அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் முடிய இருந்த காலகட்டத்தில், புதிய வகை ராணுவ வாகனங்கள், மேம்படுத்தப்பட்ட வடிவிலான புதிய வகை ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை வடிவமைக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டது. அந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
இந்தியாவுக்கு விமானம் தாங்கி போர்க் கப்பலை வடிவமைத்துத் தர வேண்டிய திட்டமும் உள்ளது. இந்தத் திட்டங்கள் அனைத்தையும் மிகப் பெரிய அளவில் செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது.
இந்தியாவும்-அமெரிக்காவும் இணைந்து பாதுகாப்பு தொடர்பான முக்கியத் திட்டங்களை வகுக்க வேண்டும். இதன்மூலம், இருநாட்டுத் தொழில்துறை, அரசுத் துறைகள் இடையே எதிர்வரும் ஆண்டுகளில் பிணைப்பு ஏற்படும் என்றார் ரிச்சர்ட் வர்மா.

]]>
http://www.dinamani.com/world/2017/dec/09/இந்தியா-அமெரிக்கா-இணைந்து-பாதுகாப்பு-தொடர்பான-திட்டங்களை-வகுக்க-வேண்டும்-2822825.html
2822824 உலகம் மனைவி, தாயாரை சந்திக்க குல்பூஷண் ஜாதவுக்கு பாக். அனுமதி DIN DIN Saturday, December 9, 2017 01:31 AM +0530 பாகிஸ்தானில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு, கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தன்று (டிச.25) அவரது மனைவி, தாயாரை சந்திப்பதற்கு அந்நாட்டு அரசு அனுமதியளித்துள்ளது.
இதுகுறித்து இஸ்லாமாபாதில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் முகமது பை ஃசல் கூறுகையில், "மனைவி, தாயாரை டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி சந்திப்பதற்கு குல்பூஷண் ஜாதவுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசின் முடிவு, இந்தியாவிடம் தெரிவிக்கப்பட்டு விட்டது. பாகிஸ்தானுக்கு வரும் குல்பூஷண் ஜாதவ் குடும்பத்தினருக்கு பாதுகாப்பை ஏற்பாடுகளை அரசு செய்து தரும்' என்றார்.
இந்தியா வரவேற்பு: பாகிஸ்தானின் இந்நடவடிக்கையை இந்தியா வரவேற்றுள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவிக்கையில், "பாகிஸ்தானுக்கு குல்பூஷணின் மனைவி மற்றும் தாயார் செல்வது குறித்து அவர்களுடன் கலந்தாலோசித்து சுற்றுப்பயணம் திட்டம் குறித்து முடிவு செய்யப்படும்' எனத் தெரிவித்துள்ளது.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
குல்பூஷணின் மனைவிக்கு மட்டும் விசா அளிக்க முன்பு பாகிஸ்தான் ஒப்புக் கொண்டிருந்தது. ஆனால், இந்தியத் தரப்பில் குல்பூஷணின் தாயாருக்கும் விசா அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதையேற்று, தற்போது குல்பூஷண் ஜாதவின் மனைவி, தாயார் ஆகிய 2 பேருக்கும் விசா அளிக்க பாகிஸ்தான் ஒப்புக் கொண்டுள்ளது. பாகிஸ்தானுக்கு அவர்கள் செல்லும்போது ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து அந்நாட்டிடம் இந்தியா கவலை எழுப்பியிருந்தது. இதைக் கேட்ட பாகிஸ்தான், அவர்கள் இருவருக்கும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தரப்படும் வாக்குறுதி அளித்துள்ளது என்று சுஷ்மா குறிப்பிட்டுள்ளார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/18/w600X390/kulbhushan-.jpg http://www.dinamani.com/world/2017/dec/09/மனைவி-தாயாரை-சந்திக்க-குல்பூஷண்-ஜாதவுக்கு-பாக்-அனுமதி-2822824.html
2822755 உலகம் அமெரிக்க அறிவிப்புக்கு தொடரும் எதிர்ப்பு DIN DIN Saturday, December 9, 2017 12:23 AM +0530 ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரிக்கும் அமெரிக்காவின் முடிவை எதிர்த்துப் பல்வேறு இடங்களில் இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
காஸா பகுதியில் உள்ள ராஃபா நகரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
லெபனான், மலேசியா, ஆப்கானிஸ்தான், துருக்கி, இந்தோனேசியா உள்ளிட்ட இடங்களிலும் அமெரிக்காவின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டப் பேரணிகள் நடைபெற்றன.
ஜெருசலேம் நகரிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போதிலும், நிலைமை கட்டுக்குள்ளேயே இருந்தது. பதற்றம் நிறைந்த மலைக்கோயில் பகுதியில் பலத்த காவல் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
பாகிஸ்தானின் லாகூர் நகரில் ஹபீஸ் சயீதின் ஜமாதுத் தாவா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ஹபீஸ் சயீத் ஆற்றிய உரையில், அணு ஆயுத நாடான பாகிஸ்தான் இஸ்லாமிய நாடுகளுக்குத் தலைமையேற்று டிரம்ப் அரசுக்குத் தக்க பதிலடி தர வேண்டும் என்று குறிப்பிட்டார்.
 

]]>
http://www.dinamani.com/world/2017/dec/09/அமெரிக்க-அறிவிப்புக்கு-தொடரும்-எதிர்ப்பு-2822755.html
2822754 உலகம் "இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம்: தற்போதைய உண்மை நிலவர அடிப்படையில் அமெரிக்கா எடுத்த முடிவு' DIN DIN Saturday, December 9, 2017 12:23 AM +0530 ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கும் முடிவு, தற்போதைய உண்மையான நிலவரப்படி எடுத்த முடிவு என்று அமெரிக்கா தெரிவித்திருக்கிறது.
வாஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் கூறியது:
ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிக்கிறது. இதனை அதிகாரபூர்வமாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். அந்தப் பகுதியில் நீடித்த அமைதிக்கு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு வேண்டும் என்பதில் அமெரிக்காவுக்கு எந்த தயக்கமோ ஐயமோ இல்லை. இறுதி லட்சியம் என்பது இஸ்ரேல் - பாலஸ்தீன் இடையே அமைதி உடன்படிக்கை ஏற்பட வேண்டும் என்பதுதான். அதற்கான முயற்சிகளுக்கு அமெரிக்கா துணை நிற்கும்.
ஜெருசலேம் குறித்து அமெரிக்காவைப் பின்பற்றி வேறு ஏதேனும் நாடு இதுபோன்ற அறிக்கையை வெளியிடுமா என்பது சந்தேகம்தான்.
ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரிக்கும் அதே நேரத்தில், அந்த நகருக்கு உரிமை கொண்டாடும் இஸ்ரேல் - பாலஸ்தீன் இடையே நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளுக்கு அமெரிக்கா தடையாக இருக்காது. எல்லைக்கோடுகள், இறையாண்மை குறித்து அந்த இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதில் அமெரிக்கா தலையிடாது என்று அதிபர் டிரம்ப் தெளிவாகக் கூறியுள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத் தீர்மானத்தின்படியும், ஜெருசலேமில் தற்போதைய உண்மை நிலவரத்தின் அடிப்படையிலும் அந்த நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அதிபர் அறிவித்திருக்கிறார் என்று சாரா சாண்டர்ஸ் கூறினார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளியுறவுத் துறை விவகார அவைக்குழுத் தலைவர் எட் ராய்ஸ் இது தொடர்பாகத் தெரிவித்திருப்பது:
ஒவ்வொரு நாட்டுக்கும் தங்கள் அரசின் தலைமையகம் எந்த இடத்தில் அமைய வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமை உண்டு. இஸ்ரேல் மட்டும் ஏன் அதற்கு விதிவிலக்காக இருக்க வேண்டும்? அமெரிக்க தூதரகத்தை டெல் அவிவ் நகரிலிருந்து ஜெருசலேமுக்கு மாற்றும்போது மிகுந்த எச்சரிக்கை காட்ட வேண்டும். பதற்றம் நிறைந்த பிரதேசத்தில் அமெரிக்க தேச நலன், அமெரிக்கர்களின் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டும் என்றார்.
ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அதிபர் டிரம்ப் கடந்த புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்புக்கு அமெரிக்காவிலும் பிற இடங்களிலும் உள்ள யூத அமைப்புகள் வரவேற்பு தெரிவித்திருக்கின்றன.
நியூயார்க் டெய்லி நியூஸ் தலையங்கத்தில் குறிப்பிட்டிருப்பது: 
ஜெருசலேம் என்பது எந்த நாட்டுக்கும் சொந்தமில்லாத நகரம் என்றும் பல நாடுகள் சொந்தம் கொண்டாடும் புராணத் தலம் என்றும் கடந்த எழுபது ஆண்டுகளாக அமெரிக்காவில் ஒரு கட்டுக் கதை நிலவி வந்தது. 
டிரம்ப்பின் அறிவிப்பு அந்த நிலையை மாற்றிவிட்டது. இஸ்ரேலுக்கு எதிரான நாடுகள் ஜெருசலேம் குறித்த உண்மையை ஏற்க வேண்டும். 
யூதர்களுக்கு நாடு உண்டு என்பதை அனைவரும் ஏற்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/9/w600X390/sara.jpg http://www.dinamani.com/world/2017/dec/09/இஸ்ரேல்-தலைநகர்-ஜெருசலேம்-தற்போதைய-உண்மை-நிலவர-அடிப்படையில்-அமெரிக்கா-எடுத்த-முடிவு-2822754.html
2822753 உலகம் நேபாள பொதுத் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது DIN DIN Saturday, December 9, 2017 12:22 AM +0530 நேபாள நாடாளுமன்றத்துக்கும் மாகாணப் பேரவைகளுக்கும் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை தொடங்கியது.
நேபாளத்தில் புதிய அரசியல் அமைப்பு சட்டம் இயற்றிய பிறகு அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கும், 7 மாகாணங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றது.
கடந்த நவ. 26-ஆம் தேதி முதல் கட்டத் தேர்தலும், இரண்டாம் கட்டத் தேர்தல் கடந்த வியாழக்கிழமையும் நடைபெற்றன. 
இதில் 66 சதவீத வாக்குகள் பதிவாகின. 
இதையடுத்து, வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை தொடங்கியது.
நேபாள கம்யூனிஸ்ட்-ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கூட்டணி 5 இடங்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு தொகுதியில் நேபாள கம்யூனிஸ்ட்-மாவோயிஸ்ட் சென்டர் கட்சி வெற்றி பெற்றதாகவும் ஒரு தொகுதியில் சுயேச்சை வெற்றி பெற்றார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் மொத்த 275 இடங்களில் 165 உறுப்பினர்கள் இந்தத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மீதமுள்ள 110 இடங்களுக்கு விகிதாசார அடிப்படையில் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள்.
கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் நேபாளத்தில் நடந்த உள்நாட்டுச் சண்டையில் 16,000-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அதன் பின்னர் அமைந்த அரசின் கீழ் புதிய அரசியல் சாசனம் இயற்ற முடிவாகியது. அதன்படி, கடந்த 2015-ஆம் ஆண்டு புதிய சாசனம் இயற்றப்பட்டது. அதன் கீழ் நேபாளம் 7 மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது. சமவெளிப் பகுதியில் பாரம்பரியமாக வசித்து வரும் மதேசிகள் என்னும் இந்திய வம்சாவளியினர் புதிய மாகாணப் பிரிவால் பாதிக்கப்படுவதாக போராட்டம் நடத்தினர். அவர்களின் கவலைகளைக் களைய அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, புதிய தொகுதி வரையறுப்பு அடிப்படையில் நாடாளுமன்றத்துக்கும் மாகாணப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்தது.

]]>
http://www.dinamani.com/world/2017/dec/09/நேபாள-பொதுத்-தேர்தல்-வாக்கு-எண்ணிக்கை-தொடங்கியது-2822753.html
2822752 உலகம் பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 2 மாணவர்கள் பலி DIN DIN Saturday, December 9, 2017 12:22 AM +0530 அமெரிக்க பள்ளியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
நியூ மெக்ஸிகோ மாகாணம், அஸ்டெக் நகரில் உள்ள அஸ்டெக் உயர்நிலைப் பள்ளிக்குள் வியாழக்கிழமை புகுந்த மர்மநபர் அங்கிருந்த மாணவர்கள் நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில், 2 மாணவர்கள் உயிரிழந்தனர். வேறு எவருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. 
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய அந்த மர்மநபரை சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தையடுத்து, பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு அங்கிருந்த மாணவர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். 
இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் நடப்பு ஆண்டில் இதுவரையில் பலியான, காயமடைந்த மாணவர்கள் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை 3,700 ஆகும். 
அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் துப்பாக்கிக்கு 33,000க்கும் மேற்பட்டோர் இரையாகின்றனர். இதில், 22,000 பேர் துப்பாக்கியால் சுட்டுத் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வதாக, நோய்கள் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

]]>
http://www.dinamani.com/world/2017/dec/09/பள்ளியில்-துப்பாக்கிச்-சூடு-2-மாணவர்கள்-பலி-2822752.html
2822751 உலகம் டிரம்ப் உடல் நிலை குறித்த விவரங்களை வெளியிட முடிவு DIN DIN Saturday, December 9, 2017 12:21 AM +0530 அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் உடல் நிலை குறித்த விவரங்கள் வெளியிடப்படும் என்று வெள்ளை மாளிகை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிக்கிறது என்று டிரம்ப் கடந்த புதன்கிழமை அறிவித்தார். அது தொடர்பான உரையின் இறுதியில் அவரது நாக்குழறியது போலத் தெரிந்தது. இதையடுத்து, டிரம்ப்பின் உடல் நிலை குறித்து பல்வேறு ஊகச் செய்திகள் ஊடகங்களில் வலம் வரத் தொடங்கின. 
இந்த நிலையில், அதிபர் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, அதிபர் ஆரோக்கியமாக உள்ளாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் பதில் அளிக்கையில், அதிபரின் உடல் நிலை திருப்திகரமாகவே உள்ளது என்றார்.
அவர் மேலும் கூறியது: அதிபர் உடல் நிலை குறித்த கேள்விகளும் சந்தேகங்களும் நகைப்புக்குரியவை. அவர் மிகவும் ஆரோக்கியமாக உள்ளார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேசிய ராணுவ மருத்துவ மையத்தில் அதிபருக்கு வருடாந்தர மருத்துவப் பரிசோதனைகள் நடைபெறவுள்ளன. அந்த மருத்துவப் பரிசோதனைகளின் முடிவுகளை ராணுவ மருத்துவர் முறைப்படி வெளியிடுவார். வீணாக சந்தேகம் எழுப்பும் விமர்சகர்களுக்கு அப்போது திருப்தி ஏற்படும் என்றார்.
டிரம்ப்புக்கு தற்போது 71 வயதாகிறது. கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், அந்நாட்டு வழக்கப்படி ஜனவரி மாதம் பதவியேற்றார். இதையடுத்து, சர்வதேச மாநாடுகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, கடந்த சில மாதங்களாக அவர் தொடர்ந்து வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டு வருகிறார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/22/w600X390/trump.jpg http://www.dinamani.com/world/2017/dec/09/டிரம்ப்-உடல்-நிலை-குறித்த-விவரங்களை-வெளியிட-முடிவு-2822751.html
2822750 உலகம் பிரெக்ஸிட் குறித்து ஐரோப்பிய யூனியன் - பிரிட்டன் இடையே உடன்படிக்கை DIN DIN Saturday, December 9, 2017 12:21 AM +0530 ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறும் பிரெக்ஸிட் நடவடிக்கை தொடர்பான முக்கிய உடன்படிக்கை ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இது குறித்து ஐரோப்பிய ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது:
யூனியன் அமைப்பிலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக பிரதமர் தெரசா மே, ஐரோப்பிய ஆணையத் தலைவர் ஜீன் கிளோட் ஜங்க்கர் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் மூன்று முக்கிய விவகாரங்களில் உடன்படிக்கை ஏற்பட்டது.
வெளியேற்றத்துக்கு இழப்பீடாக 4,500 கோடி யூரோ முதல் 5,500 கோடி யூரோ வரையிலான தொகையை ஐரோப்பிய யூனியனுக்கு பிரிட்டன் அளிக்கும். இறுதித் தொகை பின்னர் முடிவு செய்யப்படும்.
இரண்டாவதாக, ஐரோப்பிய யூனியன் விதிமுறைகளின் கீழ் பிரிட்டனில் தற்போது வசித்து வரும் சுமார் 30 லட்சம் ஐரோப்பியர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.
மூன்றாவதாக, அயர்லாந்து - பிரிட்டன் எல்லையில் வர்த்தக சோதனைச் சாவடிகள் மீண்டும் உடனடியாக அமைக்கப்படாது. இவற்றை பிரிட்டன் பிரதமர் தெரசா மே ஏற்றுள்ளார்.
ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் கூட்டம் டிசம்பர் 14, 15 தேதிகளில் நடைபெறவுள்ளது. அப்போது பிரிட்டனுடன் வர்த்தகம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஐரோப்பிய யூனியனின் முக்கிய வங்கிகள், நிதி அமைப்புகள் தற்போது லண்டனில் தலைமையகம் அமைத்து செயல்பட்டு வருகின்றன. ஆனால் எதிர்காலத்தில் பிரிட்டனின் வரி விதிப்பு போன்ற காரணங்களால் அவை பிரிட்டனைவிட்டு வெளியேறுமா என்பது தெரியவில்லை. அடுத்த கட்டப் பேச்சுவார்த்தையில் இந்த விவகாரத்தில் தெளிவு பிறக்கும் என்று கூறப்படுகிறது.
கடந்த நாற்பதாண்டு காலமாக ஐரோப்பிய யூனியனில் இடம் பெற்றிருந்த பிரிட்டன், அந்த அமைப்பிலிருந்து விலகத் தீர்மானித்தது. கடந்த ஆண்டு பிரிட்டனில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறும் முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. அந்த அமைப்பில் தொடர வேண்டும் என்ற கொள்கையுடைய அப்போதைய பிரிட்டன் பிரதமர் ஜேம்ஸ் கேமரூனுக்கு இந்த முடிவு அதிர்ச்சி அளித்தது. அவர் தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்தார். அவருக்குப் பின்னர் தெரசா மே பிரதமர் பொறுப்பேற்றார். ஐரோப்பிய யூனியனில் தொடர வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் அவர் விரும்பினாலும், பொது வாக்கெடுப்பு முடிவையும், அதனை அங்கீகரிக்கும் பிரிட்டன் உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் ஏற்று அதற்கான தொடர் நடவடிக்கையில் இறங்கினார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/9/w600X390/meet1.jpg பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைகள் குறித்து பிரஸல்ஸில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரிட்டன் பிரதமர் தெரசா மே, ஐரோப்பிய ஆணையத் தலைவர் ஜங்க்கர். http://www.dinamani.com/world/2017/dec/09/பிரெக்ஸிட்-குறித்து-ஐரோப்பிய-யூனியன்---பிரிட்டன்-இடையே-உடன்படிக்கை-2822750.html
2822723 உலகம் பாகிஸ்தானில் உள்ள சீனர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அந்நாட்டு அரசு அறிவுரை Raghavendran DIN Friday, December 8, 2017 03:29 PM +0530  

பாகிஸ்தானில் வசித்து வரும் சீனர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி சீன அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், அவர்களின் மீது பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையிலான பொருளாதார கூட்டு நடவடிக்கை தொடர்பாக பாகிஸ்தானில் மொத்தம் 4 லட்சம் சீனர்கள் வசித்து வருகின்றனர். பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதால் அவர்கள் அனைவரையும் பாதுகாப்பாக இருக்கும்படி சீன அரசு வலியுறுத்தியுள்ளது.

மேலும், தேவைப்பட்டால் பாகிஸ்தான் ராணுவம், போலிஸ் அல்லது சீனத் தூதரகம் ஆகியவற்றை உடனடியாக அணுகவேண்டும் என்று சீன மக்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

]]>
China, Terrorist attack, embassy, சீனா http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/6/w600X390/pak-china.jpg http://www.dinamani.com/world/2017/dec/08/china-warns-of-possible-terror-attacks-on-its-citizens-in-pakistan-2822723.html
2822689 உலகம் சிறைகளைப் பற்றி மல்லையா கவலைப்பட வேண்டாம்; 'சிறப்பாகவே' இருப்பார் : இந்திய அரசு DIN DIN Friday, December 8, 2017 12:12 PM +0530
லண்டன்: ரூ.9,000 கோடி அளவுக்கு வங்கிகளில் கடன் பெற்றுவிட்டு திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பியோடி தலைமறைவாக இருக்கும் விஜய் மல்லையா, இந்திய சிறைகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்று இந்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பாக பிரிட்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கின் அதிகாரபூர்வ விசாரணை கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

நேற்று நடைபெற்ற விசாரணையின் போது, விஜய் மல்லையா தரப்பில் கூறப்பட்டதாவது, இந்திய சிறைகளில் கொடுமைப்படுத்தப்படலாம் என்று அஞ்சப்படுவதாகவும், பைகுலா சிறைச்சாலையில் கடந்த ஜூன் 23ம் தேதி பெண் கைதி மஞ்சுளா ஷெட்டி என்பவர் கொலை செய்யப்பட்டதாகவும், ஒரு வேளை மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பினால், சிறையில் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்று அஞ்சுகிறார் என்றும் வாதிடப்பட்டது.

இதற்கு இந்திய தரப்பில் கூறப்பட்டதாவது, இந்திய சிறைகளைப் பற்றி உலகளவில் தவறாக அபிப்ராயம் நிலவுகிறது. இந்திய சிறைகள் நரகம் என்று மக்கள் கருதுகிறார்கள். இந்திய சிறைகளைப் பற்றிய எதிர்மறையான தகவல்களையே சர்வதேச ஊடகங்கள் பரப்புகின்றன. ஆனால் அவை அப்படி இல்லை. அந்த உருவகத்தை நாங்கள் மாற்ற முயன்று வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், மும்பையில் உள்ள சிறைச்சாலையில் சிறப்பு வகுப்புகள் உள்ளன. ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்து நாடு கடத்தப்பட்ட கைதிகள் அதில் வைக்கப்பட்டிருந்தனர். மல்லையா அந்த சிறையில் அடைக்கப்பட்டு அவருக்கு தனி கழிவறை, தொலைக்காட்சி என எல்லாமே வழங்கப்படும். சிறையில் விஜய் மல்லையாவுக்கு எதுவும் நேராது. அதற்கு இந்திய அரசாங்கம் உறுதி அளிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில், மல்லையாவுக்கு எதிராக இந்திய அரசு நிச்சயம் வெற்றி பெறும் என்று உறுதியோடு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாடு கடத்தும் வழக்கு விசாரணையின் தொடக்கத்தில், விஜய் மல்லையாவின் கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ரூ.2,000 கோடி கடன் தொடர்பான ஆவணங்கள் இந்திய அரசின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டன. அப்போது, கடன் வழங்குவதில் இந்திய வங்கிகளில் விதிமீறல்கள் நடைபெறுவது உண்டு என இந்தியத் தரப்பு வழக்குரைஞர்கள் ஒப்புக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து விஜய் மல்லையா நீதிபதிகளிடம் கூறுகையில், "என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை; புனையப்பட்டவை; அடிப்படை முகாந்திரமற்றவை' என்று கூறினார்.

பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளிடமிருந்து பெற்ற ரூ.9,000 கோடி கடனைத் திருப்பிச் செலுத்தாதது தொடர்பாக தொழிலதிபர் விஜய் மல்லையா மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைகளைத் தவிர்ப்பதற்காக, விஜய் மல்லையா பிரிட்டனில் தஞ்சமடைந்தார்.

அதையடுத்து, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தக் கோரி பிரிட்டனுக்கு மத்திய அரசு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தது. 

இதன் தொடர்ச்சியாக, மல்லையாவை லண்டனில் ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி கைது செய்தனர். எனினும், ரூ.5 கோடி (65 ஆயிரம் பவுண்டு) பிணைத் தொகை செலுத்தி, கைதான மூன்று மணிநேரத்திலேயே மல்லையா ஜாமீனில் வெளிவந்தார். எனினும், அவரது கடவுச்சீட்டுகள், நுழைவு இசைவு (விசா) உள்ளிட்ட ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில், லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பாக நடைபெற்று வரும் வழக்கின் அதிகாரபூர்வ விசாரணைதான் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நீதிபதி எம்னா லூஸி அர்பத்நாட் விசாரணை மேற்கொள்ளும் இந்த வழக்கில், அடுத்த ஆண்டின் தொடக்கத்துக்குள் தீர்ப்பு அளிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று கூறப்படுகிறது.

இந்த வழக்கில், விஜய் மல்லையாவுக்காக பிரிட்டனைச் சேர்ந்த பிரபல வழக்குரைஞர் கிளார் மான்ட்கோமரி தலைமையிலான வழக்குரைஞர் குழு வாதாடி வருகிறது. பிரிட்டனில் மிகப் பெரிய குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்களையும் வழக்கிலிருந்து விடுவிப்பதற்கு கிளார் மான்ட்கோமரி பெயர் பெற்றவர் ஆவார்.

இந்திய அரசுக்காக, "கிரெளன் பிராஸிக்யூஷன் சர்வீஸ்' என்ற வழக்காடு நிறுவனம் இந்த வழக்கில் ஆஜராகி வாதிடுகிறது. விஜய் மல்லையாவை இந்திய நீதிமன்றங்களில் வைத்து விசாரணை நடத்துவதற்குத் தேவையான குற்றங்களை அவர் புரிந்துள்ளார் என்பதை அந்த நிறுவனம் பிரிட்டன் நீதிமன்றத்தில் நிரூபித்தாக வேண்டும்.

இந்த வழக்கில், இந்தியச் சிறைச் சாலைகளின் நிலைமை மிக முக்கியப் பங்கு வகிக்கும் எனத் தெரிகிறது. ஏற்கெனவே, கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் சம்பந்தப்பட்டவரும், பிரிட்டனில் தஞ்சமடைந்தவருமான சூதாட்டத் தரகர் சஞ்சீவ் சாவ்லாவை நாடு கடத்த மத்திய அரசு முயற்சி செய்தது. 

எனினும், இந்தியச் சிறைகளில் தனக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் நடக்க வாய்ப்புள்ளதாக அவரது சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டதை அடுத்து, மத்திய அரசின் கோரிக்கையை வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் நிராகரித்தது.

தங்கள் நாட்டில் தஞ்சமடையும் குற்றம்சாட்டப்பட்டவர்களை பரஸ்பரம் நாடு கடத்துவதற்கு வசதியாக பிரிட்டன்-இந்தியா இடையே கடந்த 1992-ஆம் ஆண்டு ஓர் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி இதுவரை, ஒரே ஒருவர் மட்டுமே பிரிட்டனில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார்.

அவர், குஜராத் மாநிலம், கோத்ராவில் கடந்த 2002-ஆம் ஆண்டில் நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட சமீர்பாய் வினுபாய் படேல் என்பது குறிப்பிடத்தக்கது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/22/w600X390/vijay-mallaya.jpg http://www.dinamani.com/world/2017/dec/08/சிறைகளைப்-பற்றி-மல்லையா-கவலைப்பட-வேண்டாம்-சிறப்பாகவே-இருப்பார்--இந்திய-அரசு-2822689.html
2822182 உலகம் இலங்கையில் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு எதிராக புதிய அணி உதயம் DIN DIN Friday, December 8, 2017 04:47 AM +0530 இலங்கையில் இறுதிக் கட்டப் போரின்போது பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி பெற்றுத் தருவதில் தமிழ்த் தேசியக் கூட்டணி மெத்தனம் காட்டுவதாக அதிருப்தியடைந்துள்ள தமிழ்க் கட்சிகள், அந்தக் கூட்டணியிலிருந்து விலகி புதிய கூட்டணியை அமைத்துள்ளன.
இதுகுறித்து இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிகேஎல்ஃப்) கட்சியைச் சேர்ந்தவருமான சிவசக்தி ஆனந்தன் கூறியதாவது:
தற்போது இலங்கைத் தமிழர்களின் பிரதிநிதிகளாகச் செயல்படும் தமிழ் தேசியக் கூட்டணிக்குப் பதிலாக, தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற புதிய அணி உருவாக்கப்பட்டுள்ளது.
எங்களது ஈபிகேஎல்ஃப் கட்சியுடன், மூத்த அரசியல்வாதியான ஆனந்தசங்கரியின் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (டியுஎல்எஃப்) உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இந்தக் கூட்டணியை உருவாக்கியுள்ளன.
தமிழத் தேசியக் கூட்டணியின் கொள்கையுடன் தமிழ் கட்சிகளுக்கு உடன்பாடு இல்லை. எனவே, விரைவில் மேலும் பல கட்சிகள் எங்களது கூட்டணியில் இணையும்.
விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் தமிழ் தேசியக் கூட்டணியை எதிர்த்து எங்களது கூட்டணி போட்டியிடும் என்றார் சிவசக்தி ஆனந்தன்.
தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர் ஆர். சம்பந்தன், தனி ஈழம் கோருவதற்குப் பதிலாக ஒன்றுபட்ட இலங்கையிலேயே தமிழர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். எனினும், அவர் இலங்கை அரசிடம் மிதமாக நடந்து கொள்வதாக பல்வேறு தமிழக் கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இலங்கை அதிபர் தேர்தலின்போது, முன்னாள் அதிபர் ராஜபட்சவின் சிங்களவாத அரசுக்கு எதிராகப் போட்டியிட்ட, மைத்ரிபாலா சிறீசேனா, தமிழர்களின் ஆதரவுடன் தற்போது அதிபராகப் பதவி வகித்து வருகிறார். எனினும், தமிழர்களுக்கு உரிய நீதியை சிறீசேனா வழங்கத் தவறிவிட்டதாக தமிழ்க் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
ஆனால், கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்ற வந்த உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான புனர்வாழ்வுத் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றி வருவதாக இலங்கை அரசு கூறி வருகிறது.
எனினும், இறுதிக் கட்டப் போரின்போது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிள் தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பதில் இலங்கை அரசு மெத்தனமாகச் செயல்படுவதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
ஐ.நா.வின் கணக்குப்படி, கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டுப் போரில் 40,000 தமிழர்கள் உயிரிழந்தனர்.

]]>
http://www.dinamani.com/world/2017/dec/08/இலங்கையில்-தமிழ்த்-தேசியக்-கூட்டணிக்கு-எதிராக-புதிய-அணி-உதயம்-2822182.html
2822105 உலகம் சீன எல்லைக்குள் நுழைந்த இந்தியாவின் ஆளில்லா விமானம்! DIN DIN Friday, December 8, 2017 02:14 AM +0530 சீனாவின் வான் எல்லைக்குள் நுழைந்த இந்தியாவின் ஆளில்லாத விமானம் ஒன்று நொறுங்கி விழுந்தது.
இதையடுத்து, இந்தியத் தரப்பு தங்கள் எல்லைக்குள் அத்துமீறி விமானத்தைப் பறக்கவிட்டதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது. அதே நேரத்தில் அந்த ஆளில்லா விமானம் கட்டுப்பாட்டை இழந்து சீன எல்லைக்குள் நுழைந்துவிட்டதாக இந்திய ராணுவம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் இந்திய ராணுவத்துக்குச் சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங், பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
சில நாள்களுக்கு முன்பு இந்தியாவைச் சேர்ந்த ஆளில்லாத சிறிய ரக விமானம் ஒன்று சீன வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தது. சீன எல்லைப் பாதுகாப்புப் படையினர் அதனை அடையாளம் கண்டு, அந்த விமானத்தைக் கண்காணித்தனர். பின்னர் சிக்கிம் பகுதிக்குள் சென்று அந்த விமானம் விழுந்து நொறுங்கிவிட்டது. இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவிடம் சீனா, ராஜீயரீதியில் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது என்றார் அவர்.
சிக்கிமில்தான் பிரச்னை ஏற்பட்ட டோக்கா லாம் பகுதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் தொடர்பாக சீன அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவா வெளியிட்டுள்ள செய்தியில், "சீனாவின் இறையாண்மையைச் சிதைக்கும் வகையில் எல்லைக்குள் இந்திய ஆளில்லா விமானம் அத்துமீறி ஊடுருவியுள்ளது. இதனால் கடும் அதிருப்தியடைந்துள்ள சீனா, தனது எதிர்ப்பையும், கண்டனத்தையும் இந்தியாவிடம் தெரிவித்துள்ளது. நமது எல்லையைப் பாதுகாப்பதில் ராணுவம் முழு பலத்துடன் செயல்பட்டு வருகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் துறை அமைச்சகம் விளக்கம்: இந்த விவகாரம் தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: எல்லைப் பகுதியில் இந்திய ராணுவம் சிறிய ரக ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்வது வழக்கம்தான். சிக்கிம் பகுதியிலும் அதேபோன்ற பயிற்சி நடைபெற்றது. அப்போது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம், எல்லையைக் கடந்து சென்றுவிட்டது. உடனடியாக, இது தொடர்பாக சீன எல்லைப் பாதுகாப்புப் படைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்த விமானத்தைக் கண்காணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இதுபோன்ற அசாதாரண சூழ்நிலையில் இவ்வாறு தகவல் தெரிவிப்பது வழக்கமாகும்.
அந்த விமானம் இந்தியப் பகுதிக்கே திரும்பிவிட்டதாக சீனத் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. விமானம் கட்டுப்பாட்டை இழந்ததற்கான காரணம் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/world/2017/dec/08/சீன-எல்லைக்குள்-நுழைந்த-இந்தியாவின்-ஆளில்லா-விமானம்-2822105.html
2822090 உலகம் சீனாவின் நிதி நிலை: பன்னாட்டு நிதியம் எச்சரிக்கை DIN DIN Friday, December 8, 2017 01:26 AM +0530 சீனாவில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக பன்னாட்டு நிதியம் (ஐஎம்எஃப்) வியாழக்கிழமை எச்சரித்தது.
இதுகுறித்து அந்த நிதியம் மேலும் தெரிவித்துள்ளதாவது:
சீனாவின் கடன் சுமை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடன்சுமை 234 சதவீதம் அளவுக்கு இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்துவதுடன், எதிர்கால வளர்ச்சியையும் அடியோடு பாதிக்கும்.
கடன் வளர்ச்சி அதிகரிப்பு என்பது எதிர்வரும் நிதி சிக்கலை எடுத்துரைக்கும் முக்கிய காரணியாக உள்ளது. ஏனெனில் கடன் வழங்கும் நடவடிக்கைகளுக்கான தரம் குறையும் போதெல்லாம் கடன் பெறும் அளவும் அதிகமாக இருக்கும். 
பெரிய, நடுத்தர, நகரத்தை மையமாகக் கொண்ட வணிக வங்கிகளில் மூலதனம் பலவீனமான நிலையில் உள்ளது. குறிப்பாக, 33 வங்கிகளை ஆய்வு செய்ததில் 27 வங்கிகளின் சொத்து மதிப்பு என்பது மூன்று காலாண்டுகளாகவே நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கும் குறைவாகவே காணப்படுகிறது.
இந்த நிலையில், பொருளாதார வளர்ச்சி இலக்கை சீனா அதிகமாக நிர்ணயித்துள்ளது. இதனால், கடன் நடவடிக்கையில் காட்டும் அக்கறை, நிறுவனங்களின் பாதுகாப்பில் செலுத்தப்படாமல் உள்ளது. எனவே, சீனாவிடம் வளர்ச்சி விகிதத்தை குறைத்து நிர்ணயிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது என்று பன்னாட்டு நிதியம் தெரிவித்துள்ளது.

]]>
http://www.dinamani.com/world/2017/dec/08/சீனாவின்-நிதி-நிலை-பன்னாட்டு-நிதியம்-எச்சரிக்கை-2822090.html
2822089 உலகம் 1.9 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சிங்க இன படிமங்கள் கண்டுபிடிப்பு DIN DIN Friday, December 8, 2017 01:25 AM +0530 சுமார் 1.9 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த சிங்க இனத்தின் படிமங்களை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாவது: 
குயின்ஸ்லேண்ட் மாகாணத்தில் உள்ள உலகின் மிக பாரம்பரியமிக்க ரிவெர்செலிக் பகுதியில் விஞ்ஞானிகள் தொல்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சுமார் 1.9 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த "மர்சூபியல்' இன சிங்கத்தின் புதைபடிமங்கள் கண்டறியப்பட்டன. அந்த இன சிங்கத்தின் மண்டைஓடு, பற்கள் மற்றும் கால் மேற்பகுதியின் நீண்ட எலும்புகளை விஞ்ஞானிகள் சேகரித்துள்ளனர்.
சுமார் 1.8 கோடி ஆண்டுகள் முதல் 2.6 கோடி ஆண்டுகளுக்கு இடையிலான மியோசீன் காலத்தின் முற்பகுதியிலும் ஒலிகோசீன் காலத்தின் பிற்பகுதியிலும் "மர்சூபியல்' சிங்கங்கள் ஆஸ்திரேலியாவின் சில அடர்ந்த வனப்பகுதிகளில் வாழ்ந்துள்ளன. அப்போது இவை வாக்கலியோ ஸ்கூட்டனி என்ற பெயரிலும் அழைக்கப்பட்டுள்ளன.
வேட்டையாடி இறைச்சியை உண்ணும் பழக்கத்தைக் கொண்ட "மர்சூபியல்' சிங்கங்கள் நாய் போன்ற தோற்றத்தை உடையதாகவும், அதன் எடை சுமார் 23 கிலோவாகவும் இருந்துள்ளது. 
ஆனால், தற்போது கிடைத்துள்ள படிமங்கள் அந்த சிங்கங்கள் வாழ்ந்த இறுதிகாலகட்டத்தைச் சேர்ந்ததாகும். 

]]>
http://www.dinamani.com/world/2017/dec/08/19-கோடி-ஆண்டுகளுக்கு-முன்பு-வாழ்ந்த-சிங்க-இன-படிமங்கள்-கண்டுபிடிப்பு-2822089.html
2822088 உலகம் பிரிட்டன் ஏற்கவில்லை: பிரதமர் தெரசா மே DIN DIN Friday, December 8, 2017 01:22 AM +0530 பிரிட்டன் பிரதமர் தெரசா மே வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பது: ஜெருசலேமை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக அங்கீகரிக்கும் அமெரிக்காவின் முடிவை பிரிட்டன் ஏற்கவில்லை. ஜெருசலேம் நகரின் அந்தஸ்து குறித்து இறுதி தீர்மானம் எட்டப்படாமல், இது போன்ற முக்கிய முடிவு எடுப்பது சரியல்ல. அந்தப் பிராந்தியத்தில் அமைதி நிலவச் செய்வதற்கு அமெரிக்காவின் தற்போதைய அறிவிப்பு எந்த விதத்திலும் உதவப் போவதில்லை.
தற்போதைய நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பல்வேறு தீர்மானங்களில் குறிப்பிட்டிருப்பதைப் போல, கிழக்கு ஜெருசலேம் என்பது பாலஸ்தீனத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட இடம் என்ற நிலைப்பாட்டை பிரிட்டன் ஏற்கிறது.
ஜெருசலேமின் இறுதி அந்தஸ்து குறித்து பாலஸ்தீனும் இஸ்ரேலும் பேசி முடிவு செய்ய வேண்டும். இஸ்ரேல் - பாலஸ்தீன் நாடுகளின் கூட்டுத் தலைநகராக ஜெருசலேம் இருக்க வேண்டும். இதுவே பிரிட்டனின் அதிகாரபூர்வ நிலைப்பாடாக இருந்து வந்திருக்கிறது. அதே நிலைப்பாட்டில் இப்போதும் பிரிட்டன் உறுதியுடன் உள்ளது.
இஸ்ரேலுக்கான பிரிட்டன் தூதரகம் டெல் அவிவ் நகரிலேயே தொடரும் என்று பிரதமர் தெரசா மே தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

]]>
http://www.dinamani.com/world/2017/dec/08/பிரிட்டன்-ஏற்கவில்லை-பிரதமர்-தெரசா-மே-2822088.html
2822087 உலகம் பொறுப்பற்ற செயல்: சவூதி கண்டனம் DIN DIN Friday, December 8, 2017 01:21 AM +0530 ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரிக்கும் அமெரிக்காவின் முடிவை பொறுப்பற்ற செயல் என சவூதி அரேபியா கடுமையாகச் சாடியுள்ளது.
சவூதி அரசவை சார்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் இது தொடர்பாகத் தெரிவித்திருப்பது:
ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கும் அமெரிக்காவின் முடிவு மிகவும் வருந்தத்தக்கது. எந்த விதத்திலும் நியாயப்படுத்த இயலாத, பொறுப்பற்ற இந்தச் செயல் ஏற்படுத்தக் கூடிய கடுமையான பின்விளைவுகள் குறித்து சவூதி எச்சரிக்க விரும்புகிறது. பாலஸ்தீன மக்களின் சரித்திரபூர்வமான, நிரந்தரமான உரிமைகளுக்கு விரோதமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பிராந்தியத்தில் அமைதி நிலவுவதற்காக எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளுக்கு இதனால் பெரும் குந்தகம் விளையும். ஏறத்தாழ எழுபதாண்டுகளாக இருந்த வந்த ஜெருசலேம் கொள்கையை டிரம்ப் அதிரடியாக மாற்றியுள்ளார். அமெரிக்கா தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று சவூதி அரேபிய அரசவை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

]]>
http://www.dinamani.com/world/2017/dec/08/பொறுப்பற்ற-செயல்-சவூதி-கண்டனம்-2822087.html
2822086 உலகம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசரக் கூட்டம் DIN DIN Friday, December 8, 2017 01:20 AM +0530 ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்க அமெரிக்கா எடுத்துள்ள முடிவு குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கும் சர்ச்சைக்குரிய அறிவிப்புக்கு அரபு நாடுகளில் மட்டுமல்லாமல், மேற்கத்திய நாடுகளிடையேயும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
இந்த நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெற்றுள்ள 8 நாடுகள் ஜெருசலேம் விவகாரம் குறித்து விவாதிக்க அவசரக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களான பிரிட்டன், பிரான்ஸ் அவசரக் கூட்டம் நடத்தக் கோரியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
டிரம்ப்பின் முடிவுக்கு பிரிட்டன், சவூதி அரேபியா போன்ற அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன.
இதனிடையே, ஜெருசலேம் விவகாரம் தொடர்பாக பாதுகாப்பு கவுன்சிலில் ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெருசலேம் பிரச்னை என்பது இரு தரப்பு விவகாரம் என்றும் இஸ்ரேல், பாலஸ்தீன் நேரடியாகப் பேசித் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும், "பாலஸ்தீனம் - இஸ்ரேல் என்ற இரு நாடுகள் அமைவதுதான் தீர்வு, அதற்கு மாற்றாக எதையும் சிந்திக்க முடியாது' என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக ஐ.நா. பொதுக்குழுவில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

]]>
http://www.dinamani.com/world/2017/dec/08/ஐநா-பாதுகாப்பு-கவுன்சில்-அவசரக்-கூட்டம்-2822086.html
2822085 உலகம் மேற்குக் கரையில் இஸ்ரேல் ராணுவம் குவிப்பு DIN DIN Friday, December 8, 2017 01:20 AM +0530 ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்க அறிவித்ததையடுத்து, மேற்குக் கரையில் கூடுதலாக இஸ்ரேல் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் ராணுவம் இது தொடர்பாக வியாழக்கிழமை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பது: 
ராணுவத் தலைமையகம் நடத்திய ஆய்ûவைத் தொடர்ந்து, மேற்குக் கரையில் கூடுதல் படைப் பிரிவுகளை ஈடுபடுத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் காவல் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவை தவிர, பாதுகாப்புத் தகவல் சேகரிப்புக்கான ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அந்தப் பகுதியின் நிலைமையைப் பொருத்து, ராணுவம் எத்தகைய தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது என்று இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/8/w600X390/isreal.jpg http://www.dinamani.com/world/2017/dec/08/மேற்குக்-கரையில்-இஸ்ரேல்-ராணுவம்-குவிப்பு-2822085.html
2822084 உலகம் ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகர் என அங்கீகரிப்பதாக டிரம்ப் அறிவிப்பு DIN DIN Friday, December 8, 2017 01:18 AM +0530 ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
நாட்டு மக்களுக்குத் தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில் தெரிவித்தது: 
ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகர் என்று அதிகாரபூர்வமாக அங்கீகரிப்பதற்கு இதுதான் சரியான தருணம் என்று முடிவு செய்துள்ளேன். தற்போது டெல் அவிவ் நகரில் உள்ள அந்நாட்டுக்கான அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேம் நகரில் மாற்றி அமைப்பதற்கான ஏற்பாடுகளை உடனடியாகத் தொடங்குமாறு வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டிருக்கிறேன். இஸ்ரேல் - பாலஸ்தீன் இடையே அமைதி ஏற்படுவதற்கு இந்த முடிவு உதவும் என்று கருதுகிறேன். அமெரிக்க நலனுக்கு உதவும் விதமாகவும் இந்த முடிவு அமையும்.
இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேம் நகரத்துக்கு மாற்றவும் அந்த நகரை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரிக்கவும் ஜெருசலேம் தூதரக சட்டம் என்ற சட்டத்தை கடந்த 1995-ஆம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்ற கீழவை இயற்றியது. இரு தரப்பு எம்.பி.க்களின் ஆதரவும் அந்த சட்டத்துக்கு இருந்தது. இதற்கு மேலவை ஒப்புதலும் கிடைத்தது. ஆனால் அடுத்தடுத்து வந்த அமெரிக்க அதிபர்கள் அந்த சட்டத்தை செயல்படுத்துவதை ஒத்திப்போட்டு வந்தனர்.
பல்வேறு அதிபர்கள் தொடர்ந்து வாக்குறுதி அளித்து வந்தாலும், இவ்வளவு காலம் தள்ளிப்போட்டு வந்த முடிவை நான் எடுத்துள்ளேன். எனது தேர்தல் வாக்குறுதியை நான் நிறைவேற்றியுள்ளேன்.
ஜெருசலேம் நகரம் மூன்று பெரும் மதங்களின் இதயமாக உள்ளது. அது மட்டுமல்லாமல், உலகின் வெற்றிகரமான ஜனநாயகத்தின் இருப்பிடமாகவும் உள்ளது. இஸ்ரேலின் நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம், அதிபர், பிரதமர் இல்லங்கள் அந்த நகரில்தான் உள்ளன. இதை மறந்துவிட்டு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முடியாது.
இந்த முடிவு மூலம், ஜெருசலேம் நகரில் இஸ்ரேலின் இறையாண்மையை உறுதி செய்யும் எல்லைகள், பிற எல்லைக் கோடு சர்ச்சைகளில் அமெரிக்கா எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை.
இஸ்ரேல் - பாலஸ்தீன் என்கிற இரு நாடுகள் அமையும் முடிவு இரு தரப்பினருக்குள் ஏற்படும் பட்சத்தில் அமெரிக்கா அதனை ஏற்கும்.
மலைக்கோயில் - ஹராம் அல் ஷரீப் வழிபாட்டுத் தலம் குறித்து இரு தரப்பினரும் எடுக்கும் முடிவே இறுதியானது.
இஸ்ரேல் - பாலஸ்தீன் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா துணை புரியும். இரு தரப்பினருக்கும் ஏற்புடைய அமைதி ஒப்பந்தம் ஏற்பட அமெரிக்கா உதவும். அத்தகைய அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கு எனது சக்திக்கு உள்பட்ட அனைத்தையும் நான் செய்வேன்.
என்னுடைய இந்த அறிவிப்பை ஏற்காமல் இருப்பது, எதிர்ப்பு தெரிவிப்பது என்பது எதிர்பார்க்கக் கூடியதுதான். ஆனால் பேச்சுவார்த்தை, ஆலோசனைகள் மூலம் தடைகளைக் கடந்து ஏற்புடைய முடிவுக்கு வருவோம் என்றார் அவர்.
ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவிக்கும் உத்தரவை துணை அதிபர் மைக் பென்ஸ் முன்னிலையில் கையெழுத்திட்ட பின்னர் அதனை செய்தியாளர்களிடம் வெளியிட்டார்.
கிழக்கு ஜெருசலேம் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியாக பல்வேறு நாடுகள் கருதுகின்றன.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/8/w600X390/trump.jpg ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கும் தனது உத்தரவை  செய்தியாளர்களிடம் காட்டும் அமெரிக்க அதிபர் டிரம்ப். உடன், துணை அதிபர் மைக் பென்ஸ். http://www.dinamani.com/world/2017/dec/08/ஜெருசலேமை-இஸ்ரேல்-தலைநகர்-என-அங்கீகரிப்பதாக-டிரம்ப்-அறிவிப்பு-2822084.html
2821453 உலகம் ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரிக்க டிரம்ப் முடிவு DIN DIN Thursday, December 7, 2017 12:56 AM +0530 சர்ச்சைக்குரிய ஜெருசலேம் நகரை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக அங்கீகரிக்கவும், அந்த நாட்டுக்கான அமெரிக்கத் தூதரகத்தை டெல் அவிவ் நகரிலிருந்து ஜெருசலேமுக்கு மாற்றவும் அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜெருசலேம் விவகாரத்தில் அமெரிக்கா நீண்ட காலமாகக் கடைபிடித்து வரும் நிலைப்பாட்டுக்கு முற்றிலும் மாறான இந்த நடவடிக்கையால், மேற்கு ஆசியப் பிரச்னை மேலும் தீவிரமாகும் என்று அரபு நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இதுகுறித்து அமெரிக்க அரசின் உயரதிகாரிகள் கூறியதாவது:
ஜெருசலேம் நகரை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக அங்கீகரிக்கும் அறிவிப்பை அதிபர் டொனால்ட் டிரம்ப் விரைவில் அறிவிப்பார். ஜெருசலேம்தான் இஸ்ரேல் தலைநகர் என்பதை ஒரு வரலாற்று உண்மையாக அவர் கருதுகிறார்.
பண்டைய காலம் முதலே ஜெருசலேம் யூதர்களின் தலைநகரமாக இருந்து வந்துள்ளது. தற்போதைய நிலையிலும் இஸ்ரேல் அரசின் தலைமையகம், முக்கிய அமைச்சரகங்கள், நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவை ஜெருசலேம் நகரில் இருப்பதுதான் நிதர்சனம் ஆகும்.
இந்த அறிவிப்பை வெளியிடுவதன் மூலம், அதிபர் தேர்தலின்போது பொதுமக்களுக்கு டிரம்ப் அளித்த முக்கியமான வாக்குறுதியை அவர் நிறைவேற்றுகிறார். ஜெருசலேம் நகருக்கு இஸ்ரேலின் தலைநகர் என்ற அந்தஸ்தை வழங்குவதாக ஏற்கெனவே பல அதிபர் வேட்பாளர்கள் வாக்குறுதி அளித்து, பிறகு அதிபரானதும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டனர்.
ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரிப்பது தவிர, அமெரிக்கத் தூதரகத்தை டெல் அவிவ் நகரிலிருந்து ஜெருசலேம் நகருக்கு மாற்றுவது குறித்த அறிவிப்பையும் டிரம்ப் வெளியிடுவார்.
எனினும், புதிய தலைமையகத்துக்கான மிகச் சரியான இடத்தைத் தேர்ந்தெடுப்பதற்கும், கட்டுமான வேலைகளை மேற்கொள்வதற்கும் இரண்டு ஆண்டுகளாவது ஆகும். டிரம்ப்பின் இந்த முடிவுக்கு நாடாளுமன்ற ஒப்புதலைப் பெற வேண்டியது அவசியம் என்றாலும், இந்த விவகாரத்தில் பெரும்பாலான எம்.பி.க்கள் டிரம்ப்புக்கு ஆதரவு அளிப்பார்கள்.
மேற்கு ஆசிய நாடுகள் இந்த முடிவை எதிர்த்தாலும், ஜெருசலேம் குறித்த டிரம்ப்பின் அறிவிப்பால் இஸ்ரேலும், பாலஸ்தீனமும் தனித் தனி நாடுகளாக ஒற்றுமையுடன் இருப்பதற்கான தீர்வை எட்டுவதில் எந்த பாதிப்பும் ஏற்படாது. தற்போது இஸ்ரேல் வசமிருக்கும் சில பகுதிகள் கூட விவாதத்துக்கு உள்படுத்தக் கூடியது என்பதே அதிபரின் நிலைப்பாடாக உள்ளது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னெச்சரிக்கை: இதற்கிடையே, டிரம்பின் அறிவிப்பைத் தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் முன்பு வன்முறை ஆர்ப்பாட்டங்கள் நடைபெறலாம் எனவும், சில நாட்டு அரசுகள் அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்குப் பயணத் தடை விதிக்கலாம் எனவும் வெளியுறவுத் துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
யூதர்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் ஆகிய மூன்று மதத்தவருக்குமே மிகவும் புனிதமான நகரான ஜேருசலேமை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளதை சர்வதேச நாடுகள் அங்கீகரிக்கவில்லை. ஜெருசலேம்தான் தனது தலைநகர் என்று இஸ்ரேல் கூறி வந்தாலும், பெரும்பாலான நாடுகள் தங்களது தூதரகங்களை டெல் அவிவ் நகரிலேயே அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எதிர்ப்பு: இதற்கிடையே, ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிக்கக் கூடாது என்று கத்தோலிக்க மதத் தலைவர் போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஐநா அமைப்பும், ஜெருசலேம் விவகாரத்தை இஸ்ரேலும், பாலஸ்தீனமும் மட்டுமே சுமுகமாகப் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், சர்ச்சைக்குரிய அந்த நகர் குறித்து பிற நாடுகள் எடுக்கும் எந்த முடிவும் கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்தது.
அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மிகத் தவறான முடிவு இது என்று கூறியுள்ள துருக்கி அரசு, ஏற்கெனவே எரிந்து கொண்டிருக்கும் மேற்காசியப் பிரச்னையில் இந்த முடிவு எண்ணையை ஊற்றியது போலாகிவிடும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
அதிபர் டிரம்ப்பின் இந்த முடிவுக்கு சீனாவும் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/7/w600X390/jerusalem.jpg புதன்கிழமை எடுக்கப்பட்ட ஜெருசலேம் நகரின் புகைப்படம். http://www.dinamani.com/world/2017/dec/07/ஜெருசலேம்-நகரை-இஸ்ரேல்-தலைநகராக-அங்கீகரிக்க-டிரம்ப்-முடிவு-2821453.html
2821452 உலகம் மியான்மரில் நடப்பது 'இன அழிப்பு': அமெரிக்க நாடாளுமன்றம் தீர்மானம் DIN DIN Thursday, December 7, 2017 12:55 AM +0530 மியான்மரில் ரோஹிங்கயா முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் 'இன அழிப்பு' நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து, அமெரிக்க நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் கீழவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் சிறுபான்மை இனத்தவரான ரோஹிங்கயா முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்தும்படி அந்த நாட்டு அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானத்துக்கு முந்தைய விவாதத்தின்போது, ராக்கைன் மாகாணத்தில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மட்டுமே ராணுவம் எடுத்து வருவதாக மியான்மர் அரசு கூறி வருவதற்கு எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பயங்கரவாதத் தடுப்பு என்ற பெயரில் ராணுவமும், உள்ளூர் குழுக்களும் அப்பட்டமான இன அழிப்பில் ஈடுபடுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
மேலும், மியான்மரின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் ஆங் சான் சூகி, அந்தப் பதவியின் மாண்மைக் காக்கும் வகையில் ரோஹிங்கயாக்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க முன்வர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
வங்கதேசத்தில் உள்ள மியான்மர் அகதிகள் முகாம்களுக்கு நேரடியாகச் சென்று விசாரணை நடத்திய எம்.பி.க்கள் குழுவும் தீர்மானத்தை ஆதரித்துப் பேசியது. அதையடுத்து, மியான்மர் அரசுக்கு எதிரான கண்டனத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
ராக்கைன் மாகாணத்தில் உள்ள ராணுவ முகாமை ரோஹிங்கயா பயங்கரவாதிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்கினர். இதையடுத்து, அந்த மாகாணத்தில் ரோஹிங்கயாக்கள் வசித்து வந்த பகுதியில் ராணுவத்தினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது நிகழ்ந்த வன்முறை, தீவைப்பு உள்ளிட்ட சம்பவங்களைத் தொடர்ந்து, முஸ்லிம்களான ரோஹிங்கயாக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி அண்டை நாடான வங்கதேசத்தில் அடைக்கலம் புகுந்தனர். கடந்த ஆகஸ்ட் மாத இறுதியிலிருந்து 6 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கயா அகதிகள் வங்கதேசத்தில் குவிந்தது, சர்வதேச அளவில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/7/w600X390/myanmar.jpg மியான்மரின் ராக்கைன் மாகாணம், மெளங்டா பகுதியில் எரித்து சாம்பலாக்கப்பட்ட ஒரு ரோஹிங்கயா குடியிருப்புப் பகுதி (கோப்புப் படம்). http://www.dinamani.com/world/2017/dec/07/மியான்மரில்-நடப்பது-இன-அழிப்பு-அமெரிக்க-நாடாளுமன்றம்-தீர்மானம்-2821452.html
2821451 உலகம் பிரிட்டன் பிரதமரைக் கொல்ல சதி: இருவர் கைது DIN DIN Thursday, December 7, 2017 12:55 AM +0530 பிரிட்டன் பிரதமர் தெரசா மே-வைப் படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக இருவரை பயங்கரவாதத் தடுப்புப் படையினர் கைது செய்துள்ளதாக அந்த நாட்டு ஊடகம் ஒன்று புதன்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து அந்த ஊடகம் தெரிவித்துள்ளதாவது:
லண்டனின் டெளனிங் தெருவிலுள்ள பிரதமர் தெரசா மே-வின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் வாயிலில், அவர் மீது வெடிகுண்டுத் தாக்குதல் நிகழ்த்தவும், அதனைத் தொடர்ந்து கத்தியைக் கொண்டு தாக்குதல் நிகழ்த்தவும் சதித் திட்டம் தீட்டியதாக இரண்டு நபர்களை பயங்கரவாதத் தடுப்புப் படையினர் கடந்த வாரம் கைது செய்தனர்.
பிரிட்டனின் உளவு அமைப்பான எம்ஐ5-யின் உதவியுடன் பயங்கரவாதத் தடுப்புப் படையினர் லண்டன் மற்றும் பர்மிங்ஹம் பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையில் அந்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.
பிரதமர் இல்லத்தில் கைப்பையைப் போன்ற வெடிகுண்டைப் பயன்படுத்தி தெரசா மே-வைக் கொல்ல அவர்கள் சதித் திட்டம் தீட்டியதாகத் தெரிகிறது. தற்போது தீவிர விசாரணைக்கு உள்படுத்தப்பட்டிருக்கும் அந்த இருவரும், விரைவில் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றதில் ஆஜர்படுத்தப்படுவர்.
கடந்த மார்ச் மாதம் முதல் மதவாதிகளின் இதுபோன்ற தாக்குதல் முயற்சியை பாதுகாப்புப் படையினர் முறியடித்துள்ளது இது 9-ஆவது முறை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் என்று அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
பிரதமரைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்டுள்ள இருவரும், வடக்கு லண்டனைச் சேர்ந்த ஜகாரியா ரஹ்மான் (20), பர்மிங்ஹம் பகுதியைச் சேர்ந்த முகமது அகீப் இம்ரான் (21) ஆகியோர் என போலீஸார் தெரிவித்தனர்.
கடந்த மார்ச் மாதம் முதல் பிரிட்டனின் லண்டன் மற்றும் மான்செஸ்டர் நகரங்களில் நிகழ்த்தப்பட்ட பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களில் 36 பேர் உயிரிழந்தனர். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/7/w600X390/may.jpg http://www.dinamani.com/world/2017/dec/07/பிரிட்டன்-பிரதமரைக்-கொல்ல-சதி-இருவர்-கைது-2821451.html
2821450 உலகம் பிரபல 'செல்ஃபி' குரங்குக்கு 'இந்த ஆண்டின் சிறந்தவர்' விருது! DIN DIN Thursday, December 7, 2017 12:54 AM +0530 கைப்படம் (செல்ஃபி) எடுத்து சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான இந்தோனேசியாவைச் சேர்ந்த குரங்குக்கு 'பீட்டா' அமைப்பு 'இந்த ஆண்டின் மிகச் சிறந்தவர்' விருதை வழங்கி சிறப்பித்துள்ளது.
கடந்த 2011-ஆம் ஆண்டில், இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் உள்ள காடுகளில் படமெடுக்க வந்திருந்த பிரிட்டன் புகைப்படக் கலைஞர் டேவிட் ஸ்லேட்டரின் கேமராவை, அரிய வகைக் குரங்கு ஒன்று எடுத்து இயக்கியது. அப்போது அதன் வித்தியாசமான முகம் கேமராவில் மிகத் தெளிவாகப் பதிவானது. அந்தப் படங்களை டேவிட் ஸ்லேட்டர் இணையதளம் மற்றும் பத்திரிகைகளில் வெளியிட்டதும், அவை சர்வதேச அளவில் மிகவும் புகழடைந்தன.
இந்த நிலையில், குறிப்பிட்ட அந்தக் கைப்படங்களை எடுத்தது குரங்குதான் எனவும், எனவே அந்தப் படங்களுக்கான பதிப்புரிமையை டேவிட் ஸ்லேட்டர் பயன்படுத்தக் கூடாது எனவும் சர்வதேச விலங்குகள் உரிமைகள் அமைப்பான 'பீட்டா' அமைப்பு அமெரிக்காவின் கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் டேவிட்டுக்கு வெற்றி கிடைத்தாலும், அதனைத் தொடர்ந்து 'பீட்டா' மேல்முறையிடு செய்யவே நீதிமன்றத்துக்கு வெளியிலேயே இந்த விவகாரம் முடித்துக் கொள்ளப்பட்டது.
குரங்கின் கைப்படங்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் 25 சதவீதத்தை இந்தோனேசியக் காடுகளில் உள்ள அரிய வகைக் குரங்குகளின் பாதுகாப்புக்காக அளிக்க டேவிட் ஒப்புக் கொண்டார்.
இந்தச் சூழலில், பதிப்புரிமை வழக்கின் மூலம் ஒரு விலங்குக்கு மனிதர்களுக்கான உரிமை உள்ளதா, இல்லையா என்ற விவாதத்தை உலக அளவில் முதல் முறையாக எழுப்பியதற்காக, 'இந்த ஆண்டின் மிகச் சிறந்தவர்' என்ற பட்டத்தை கைப்படக் குரங்குக்கு அளிப்பதாக 'பீட்டா' அமைப்பு அறிவித்துள்ளது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/7/w600X390/monkey.jpg http://www.dinamani.com/world/2017/dec/07/பிரபல-செல்ஃபி-குரங்குக்கு-இந்த-ஆண்டின்-சிறந்தவர்-விருது-2821450.html
2821445 உலகம் இந்தியா வருகிறார் சீன அமைச்சர் வாங் யீ DIN DIN Thursday, December 7, 2017 12:52 AM +0530 இந்தியா, ரஷியா, சீனா ஆகிய நாடுகள் பங்கேற்கும் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக சீன நிதி அமைச்சர் வாங் யீ இந்தியா வருகை தரவுள்ளார்.
இந்தியா-பூடான்-சீனா ஆகிய 3 நாடுகளின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள டோக்கா லாம் பகுதி விவகாரத்துக்குப் பிறகு, சீனாவிலிருந்து இந்தியா வரும் அரசுத்தரப்பு உயர் அதிகாரி வாங் யீ என்பது குறிப்பிடத்தக்கது.
3 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு டிசம்பர் 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஜென்ஞ் ஷாங் கூறுகையில், 'தில்லியில் நடைபெறவுள்ள 3 நாடுகள் பங்கேற்கும் 15-ஆவது வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டில், வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ தலைமையிலான அதிகாரிகள் பங்கேற்பார்கள்.
இந்த மாநாட்டில், பிராந்திய மற்றும் சர்வதேசப் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டு, பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்' என்றார். டோக்காலாம் பகுதியில் சீன ராணுவம், சாலை அமைத்து ஆக்கிரமிக்க முயற்சி செய்தது. அந்த முயற்சியை ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, இரு நாடுகளின் ராணுவ வீரர்களும் எல்லையில் குவிக்கப்பட்டனர். இதனால், பதற்றமான சூழல் நிலவி வந்தது. சுமார் 73 நாள்கள் நீடித்த இந்தப் பதற்றம், கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி முடிவுக்கு வந்தது.
 

]]>
http://www.dinamani.com/world/2017/dec/07/இந்தியா-வருகிறார்-சீன-அமைச்சர்-வாங்-யீ-2821445.html
2821411 உலகம் இந்திய சிறுமி ஷெரின் வீட்டை சோதித்த விசாரணை அதிகாரி அளித்த நெஞ்சை உருக்கும் தகவல் DIN DIN Wednesday, December 6, 2017 06:05 PM +0530
லண்டன்: மரணம் அடைந்த இந்தியச் சிறுமி ஷெரின் மேத்யூஸின் ஒரு புகைப்படம் கூட அவர்களது வீட்டில் இல்லை என்றும், மேத்யூஸ் தம்பதி தாங்கள் பெற்ற பெண் குழந்தையையும், ஷெரினையும் ஒன்றுபோல நடத்தவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

லண்டனில் குடிபெயர்ந்து வாழ்ந்து வரும் கேரளாவைச் சேர்ந்த மேத்யூஸ் தம்பதியின் 4 வயது  மகளை அவளது வீட்டில் இருந்து அழைத்து வரச் சென்ற விசாரணை அதிகாரி கெல்லி மிட்செல், நீதிமன்றத்தில் கூறியதாவது, தான் அக்டோபர் 9ம் தேதி மேத்யூஸ் வீட்டுக்குச் சென்று அவர்களது பெண் குழந்தையை அழைத்து வந்தேன். அப்போது சினி மேத்யூஸ் மிகவும் அமைதியாகக் காணப்பட்டார். எந்த உணர்ச்சியும் இல்லாமல் இருந்தார். 

அந்த வீட்டில் ஒரு விஷயத்தை நான் கவனித்தேன். அதாவது, அவர்களது வீட்டில் மேத்யூஸ் தம்பதிக்குப் பிறந்த பெண் குழந்தையின் புகைப்படங்கள் இருந்ததைப் பார்த்தேன். ஆனால், ஷெரினின் எந்தபுகைப்படமும் அங்கே இல்லை. அதில் இருந்து, இவர்கள் தங்களது பெண் குழந்தையையும், ஷெரினையும் ஒன்றுபோல நடத்தவில்லை என்பது புரிந்தது என்று தெரிவித்துள்ளார்.

பெற்றோர்களிடம் இருந்து தனியாக பிரிக்கப்பட்ட மேத்யூஸ் தம்பதியின் மகள், அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

கேரளாவைச் சேர்ந்த வெஸ்லே மேத்யூஸ் - சினி மேத்யூஸ் தம்பதிக்கு 4 வயதில் மகள் இருக்கிறார். லண்டனில் குடிபெயர்ந்து வாழ்ந்து வரும் இவர்கள் பிகாரைச் சேர்ந்த சிறுமியை (ஷெரின் 3) தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.

இந்த நிலையில், அக்டோபர் 7ம் தேதி ஷெரின் மேத்யூஸ் காணாமல் போனதாக, அவளது தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, அந்த தம்பதியின் 4 வயது மகள் அவர்களிடம் இருந்து பிரித்து தனியாக பாதுகாக்கப்பட்டு வந்தார்.

குழந்தை ஷெரின் உடல் அவர்களது வீட்டுக்கு அருகே கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவளை அடித்துத் துன்புறுத்தியக் குற்றச்சாட்டுக்காக, தந்தை வெஸ்லே மேத்யூஸ் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், ஹுஸ்டனில் இருக்கும் அவர்களது உறவினர்களிடம் அந்த சிறுமி ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கு முன்பு, அவள் ஒப்படைக்கப்பட வேண்டிய குடும்பத்தாரையும் காவல்துறையினர் நன்கு விசாரித்துள்ளனர்.

3 வயதான ஷெரினை பாதுகாப்பற்ற முறையில் தனியாக விட்டக் குற்றத்துக்காக, அவரது வளர்ப்புத் தாய் சினி கைது செய்யப்பட்டதற்கு மறுநாளே, அவர்களது மகள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்த நிலையில், சிறுமி ஷெரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/25/w600X390/sherin_2.jpg http://www.dinamani.com/world/2017/dec/06/இந்திய-சிறுமி-ஷெரின்-வீட்டை-சோதித்த-விசாரணை-அதிகாரி-அளித்த-நெஞ்சை-உருக்கும்-தகவல்-2821411.html
2821407 உலகம் 2017-ல் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட தலைவர்கள்: 2-ஆம் இடம்பிடித்த நரேந்திர மோடி! Raghavendran DIN Wednesday, December 6, 2017 05:37 PM +0530  

2017-ம் ஆண்டு நிறைவுபெறும் நிலையில், சமூக வலைதளமான ட்விட்டர், நடப்பு ஆண்டில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட தலைவர்கள் பட்டியலை புதன்கிழமை வெளியிட்டது. 

இதில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முதலிடம் பிடித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2-ஆவது இடத்தைப் பெற்றார்.

மேலும், நடப்பு ஆண்டிலேயே உலகளவில் ட்விட்டரில் இந்த இரு தலைவர்களும் தான் ஆதிக் ட்வீட் செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைமை நிர்வாகம் வெளியிட்ட பட்டியலில் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உலகளவில் 44.1 மில்லியன் ஃபாலோவர்களைக் கொண்டுள்ளார். இது அவர் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்பு அதிகரித்துள்ளது. அதுபோல இந்திய பிரதமர் நரேந்திர மோடியை 37.5 மில்லியன் நபர்களால் பின்தொடரப்படுகிறார்.

 

இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, நிறம் மற்றும் இனம் குறித்து பதிவிட்ட ட்வீட் தான் 2017-ல் உலகளவில் அதிகம் விரும்பப்பட்ட ட்வீட்டகளில் 2-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், 2017-ல் அதிகம் ரீ ட்வீட் செய்யப்பட்ட பதிவுகளில் முதல் 10 இடங்களில் பாரக் ஒபாமா 3 இடங்களை ஆக்கிரமித்துள்ளார். இவரது ட்விட்டர் பக்கத்தை 97.6 மில்லியன் நபர்கள் பின்தொடர்வது குறிப்பிடத்தக்கது.

]]>
Narendra Modi, Twitter, donald trump, ட்விட்டர், நரேந்திர மோடி, டொனல்டு டிரம்ப் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/14/w600X390/MODIDRUMP.jpg http://www.dinamani.com/world/2017/dec/06/pm-modi-is-most-tweeted-about-leader-after-trump-2821407.html
2821404 உலகம் கிறிஸ்துமஸ் மரத்தை சேதப்படுத்தியதற்காக கைதான எலிக்கு ஜாமீன்: அமெரிக்கக் காவல்துறை பெருமிதம் DIN DIN Wednesday, December 6, 2017 05:03 PM +0530
அமெரிக்காவின் சீ கிர்ட் நகரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது அலங்கார விளக்குகளைக் கடித்து சேதப்படுத்திய அணில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை சீ கிர்ட் காவல்துறை தனது பேஸ்புக்கில் புகைப்படங்களோடு பதிவிட்டிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கிவிட்டது. நியூ ஜெர்சியை அடுத்த சீ  கிர்ட் பகுதியில் நடைபெறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் உலக பிரசித்தி. 

இந்த நிலையில் சீ கிர்ட் பகுதியில் செய்யப்பட்டிருந்த அலங்கார விளக்குகளில் ஒரு பகுதி துண்டிக்கப்பட்டிருந்தது. உடனடியாக அது சரி செய்யப்பட்டது. இது குறித்து விசாரித்த காவல்துறை, அதனை அணில் ஒன்று கடித்துத் துண்டாக்கியிருப்பதை கண்டுபிடித்து அதனை கைது செய்தனர். 

அணில் கைது செய்யப்பட்டு பெயிலில் விடுவிக்கப்பட்டதாக சீ கிர்ட் காவல்துறை தனது பேஸ்புக்கில் புகைப்படங்களுடன் செய்தி வெளியிட்டிருப்பதன் மூலம் இது வெளிஉலகத்துக்குத் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் கடந்த மாதம் சிறை வளாகத்தில் பராமரிக்கப்பட்டு வந்த மரக் கன்றுகளைச் சேதப்படுத்தியதற்காக, 2 குதிரைகளும், 2 கழுதைகளும் 3 நாள்கள் சிறைத் தண்டனை அனுபவித்த சம்பவம், உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்தது. தற்போது அமெரிக்காவில் அணில் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.

சட்டம் அனைவருக்கும் சமம் என்பது இதுதானோ?!

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/6/w600X390/squir.jpg http://www.dinamani.com/world/2017/dec/06/கிறிஸ்துமஸ்-மரத்தை-சேதப்படுத்தியதற்காக-கைதான-எலிக்கு-ஜாமீன்-அமெரிக்கக்-காவல்துறை-பெருமிதம்-2821404.html
2821366 உலகம் எல்லை தாண்டும் தமிழக மீனவர்களுக்கு அதிக தண்டனை: இலங்கை எம்.பி. பேச்சு DIN DIN Wednesday, December 6, 2017 12:22 PM +0530
எல்லைத் தாண்டி வந்து மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு அதிக தண்டனை வழங்க வேண்டும் என்று இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சரவண பவன் கூறியுள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று வடக்கு மாகாண எம்.பி. சரவண பவன் கூறியதாவது, தமிழக மீனவர்களால் இலங்கையின் மீன் வளம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. தமிழக மீனவர்கள் சட்டவிரோதமாக மீன்பிடிப்பதை இந்திய அரசும் ஒப்புக் கொண்டுள்ளது.

இலங்கைக்குச் சொந்தமான பல்லாயிரம் கோடி கடல் வளங்களை இந்திய மீனவர்கள் அத்துமீறி அள்ளிச் செல்கின்றனர். எல்லை தாண்டும் மீனவர்களுக்கு தண்டனையை அதிகரிக்க வேண்டும்.  இந்தியா ஏற்றுமதி செய்வதில் 40% இலங்கை கடல் எல்லைக்குள் பிடிக்கப்படும் மீன்கள்தான் என்றும் அவர் கூறினார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/7/w600X390/Srilanka_border-board.jpg http://www.dinamani.com/world/2017/dec/06/எல்லை-தாண்டும்-தமிழக-மீனவர்களுக்கு-அதிக-தண்டனை-இலங்கை-எம்பி-பேச்சு-2821366.html
2820925 உலகம் இந்தியாவின் செல்வாக்கு அதிகரிப்பால் காஷ்மீர் பிரச்னையை உலக நாடுகள் பேசுவதில்லை  DIN DIN Wednesday, December 6, 2017 01:05 AM +0530 'சர்வதேச அளவில் இந்தியாவின் செல்வாக்கும், பொருளாதார சக்தியும் வளர்ந்து வருவதால், காஷ்மீர் பிரச்னை குறித்து உலக நாடுகள் பேசாமல் தவிர்க்கின்றன' என்று ஐ.நா.வுக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதரும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதி அதிபருமான மசூத் கான் குறைகூறினார்.
அமெரிக்காவில் செயல்படும் சர்வதேச விவகாரங்களுக்கான ஆய்வு அமைப்பான 'அட்லாண்டிக் கவுன்சிலின்' கூட்டம், வாஷிங்டனில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்று, மசூத் கான் பேசியதாவது:
காஷ்மீரில் தற்போது நிலவும் சூழல் தொடர்பாக சர்வதேச சமூகத்துக்கு எடுத்துரைக்கவே இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளேன். இந்தியாவை பொருத்தவரை, மேற்கத்திய நாடுகளுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ளது. அதன்படி, அந்த நாடுகளுக்கு ஆதாயம் தரும் ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் இந்தியா, அதற்கு பிரதிபலனாக காஷ்மீர் விவகாரத்தை எழுப்பாமல் இருப்பதற்கு வாய்ப்பூட்டு போட்டுவிடுகிறது. சர்வதேச அளவில் இந்தியாவின் செல்வாக்கும், பொருளாதார சக்தியும் வளர்ந்து வருவதால், வாஷிங்டன், பிரசல்ஸ், லண்டன் அல்லது இதர நாடுகளின் தலைநகரங்களில் எவரும் காஷ்மீர் விவகாரத்தை எழுப்புவதில்லை. ஐ.நா. சபையில் கூட காஷ்மீர் பிரச்னையை எழுப்புவதற்கு சர்வதேச நாடுகள் விரும்புவதில்லை.
காஷ்மீர் விவகாரத்தில், தங்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, ஐ.நா. செயல்படுத்தாமல் இருப்பதற்கு இந்தியாவே காரணம். ஜம்மு-காஷ்மீரில் நிலவி வரும் பிரச்னையை, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கவனத்தில் கொள்ளாமல் இருக்கிறது. இதற்கு, சர்வதேச அரசியலே காரணம். காஷ்மீர் விவகாரத்தில் தங்களது கடமையை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தவிர்த்து வருவது வருந்தத்தக்கதாகும். இப்பிரச்னையில் ஐ.நா. முழு வீச்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் மசூத் கான்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/6/w600X390/MASOOD-KHAN.jpg http://www.dinamani.com/world/2017/dec/06/இந்தியாவின்-செல்வாக்கு-அதிகரிப்பால்-காஷ்மீர்-பிரச்னையை-உலக-நாடுகள்-பேசுவதில்லை-2820925.html
2820922 உலகம் ஹஃபீஸ் சயீதின் அமைப்புடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட முஷாரஃப் விருப்பம் DIN DIN Wednesday, December 6, 2017 01:04 AM +0530 பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சயீதுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட அந்நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் விருப்பம் தெரிவித்துள்ளார்.
தற்போது துபையில் வசித்து வரும் பர்வேஸ் முஷாரஃப், ஆஜ் செய்தித் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
இதுவரையிலும் ஜமாத்உத்-தாவா அமைப்பினருடன் கூட்டணி குறித்து பேச்சு நடத்தப்படவில்லை. ஆனால், அவர்கள் எங்கள் கூட்டணியில் இடம்பெற விரும்பினால், அதை வரவேற்கிறேன்.
காஷ்மீருக்காக லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பினரைப் போல் வேறு யாரும் அதிக அளவு தியாகம் செய்ததில்லை. ஆனால், அந்த அமைப்பினரை பயங்கரவாத அமைப்பாக சர்வதேச சமூகம் தெரிவிக்கிறது. காஷ்மீர் அரசியல் நிலவரத்தை சர்வதேச சமூகம் தனது கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் நிராகரித்து விட்டது. அந்த அமைப்பினர் குறித்து மற்றவர்கள் என்ன நினைத்தாலும் எனக்கு கவலையில்லை. காஷ்மீரில் அந்த அமைப்பினரின் நடவடிக்கையை பயங்கரவாதம் என்று முத்திரை குத்தக் கூடாது. அந்த அமைப்புகள் (ஜமாத்-உத்-தாவா, லஷ்கர்-ஏ-தொய்பா) தன்னார்வத் தொண்டு அமைப்புகள் ஆகும். பாகிஸ்தானின் நலனைக் கருத்தில் கொண்டே அவை செயல்படுகின்றன. தலிபான், அல்-காய்தா ஆகியவற்றுக்கு ஆதரவாக அந்த அமைப்புகள் செயல்படவில்லை. அப்படியிருக்கையில், அந்த அமைப்புகளை நாம் ஏன் பயங்கரவாத அமைப்புகளாக முத்திரை குத்த வேண்டும்? என்றார் முஷாரஃப்.
பாகிஸ்தான் அரசால் கைது செய்யப்பட்டு கடந்த ஜனவரி மாதம் முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஹஃபீஸ் சயீது, கடந்த மாதம்தான் விடுதலை செய்யப்பட்டார். 
இதற்கு இந்தியாவும், அமெரிக்காவும் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில், பர்வேஸ் முஷாரஃப் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், தாம், லஷ்கர்-ஏ-தொய்பா, ஜமாத்-உத்-தாவா அமைப்புகள் மற்றும் ஹஃபீஸ் சயீதின் மிகப்பெரிய ஆதரவாளர் என்று குறிப்பிட்டிருந்தார்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/6/w600X390/musharaff.jpg http://www.dinamani.com/world/2017/dec/06/ஹஃபீஸ்-சயீதின்-அமைப்புடன்-கூட்டணி-அமைத்து-தேர்தலில்-போட்டியிட-முஷாரஃப்-விருப்பம்-2820922.html
2820880 உலகம் 6 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா வரத் தடை: டிரம்ப் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி DIN DIN Wednesday, December 6, 2017 12:54 AM +0530 ஆறு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வருவதைத் தடை செய்யும் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் உத்தரவை முழு வீச்சில் செயல்படுத்த அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதி வழங்கியது.
இந்த உத்தரவின் மூலம், ஈரான், லிபியா, சிரியா, யேமன், சோமாலியா, சாட் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்குத் தடை விதித்து டொனால்ட் டிரம்ப் கடந்த செப்டம்பர் மாதம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையிலும், அந்த உத்தரவை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசுக்கு வழி ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, அமெரிக்காவில் பயங்கரவாதச் செயல்களைக் கட்டுப்படுத்த முஸ்லிம்கள் அமெரிக்கா வருவதற்குத் தடை விதிக்கப்போவதாக டொனால்ட் டிரம்ப் வாக்குறுதி அளித்தார்.
அதனைத் தொடர்ந்து, தேர்தலில் வெற்றி பெற்று அதிபராக அவர் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றதும், ஒரே வாரத்தில் முதல் பயணத் தடை உத்தரவை அவர் பிறப்பித்தார். அந்த உத்தரவில், உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட சிரியா அகதிகளுக்கு அமெரிக்காவில் புகலிடம் அளிப்பது நிரந்தரமாக தடை செய்யப்பட்டதோடு, இராக், ஈரான், லிபியா, சிரியா, யேமன், சோமாலியா, சூடான் ஆகிய 7 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வருவதற்கு 90 நாள் தடையும் விதிக்கப்பட்டது.
எனினும், இதனை எதிர்த்து அமெரிக்காவின் பல்வேறு நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளில் அந்த உத்தரவை அமல்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டது.
அதையடுத்து, தனது தனது முதல் உத்தரவுக்குப் பதிலாக அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டாவதாக ஒரு பயணத் தடை உத்தரவை கடந்த மார்ச் மாதம் பிறப்பித்தார். அந்த உத்தரவில், இராக்கைத் தவிர மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளும், நுழைவு இசைவு (விசா) போன்ற ஆவணங்கள் இல்லாத அகதிகளை ஏற்பதற்குத் தடையும் விதிக்கப்பட்டது. 
அந்த உத்தரவு 90 நாள்களில் காலாவதியானதைத் தொடர்ந்து, 3-ஆவதாக டிரம்ப் கடந்த செப்டம்பர் மாதம் புதிய உத்தரவைப் பிறப்பித்திருந்தார். எனினும், அந்த உத்தரவு முஸ்லிம்களுக்கு எதிரானது எனக் கூறி ஹவாய் மாகாண அரசும், அமெரிக்க சிவில் உரிமைகள் யூனியன் அமைப்பும் தனித் தனியாகத் தொடர்ந்த வழக்குகளில், நீதிமன்றங்கள் அந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தன.
அதையடுத்து, அந்த உத்தரவை செயல்படுத்த அனுமதிக்கக் கோரி தொடர்ந்த வழக்கில்தான் உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
அந்த வழக்கை விசாரித்த 9 நீதிபதிகளில் 7 பேர் டிரம்ப்பின் உத்தரவை உடனடியாகச் செயல்படுத்துவதற்கு ஆதரவாகவும், 2 பேர் எதிராகவும் தீர்ப்பளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, 6 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்குப் பயணத் தடை விதிக்கும் டிரம்ப்பின் உத்தரவை அதிகாரிகள் முழு வீச்சில் செயல்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து நாட்டுக்குப் பாதுகாப்பு அளிக்கும் அதிபரின் பயணத் தடை உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு எதிர்பார்த்த ஒன்றுதான்.
- ஹோகன் கிட்லி, 
அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத் தக்கது. ஆபத்தை ஏற்படுத்துபவர்களிடமிருந்து அமெரிக்காவைப் பாதுகாப்பதே அதிபர் டிரம்ப்பினுடைய குடியேற்றக் கொள்கையின் அடிப்படை நோக்கம் ஆகும்.
-மைக்கேல் எஸ். கிளாஸ்னர், 
டிரம்ப்புக்கான அதிபர் தேர்தல் பிரசாரக் குழுசெயல் இயக்குநர்.

ஒருவர் பிறந்த நாட்டை அடிப்படையாகக் கொண்டு அவருக்குப் பாரபட்சம் காட்டப்படும் மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்க முடியாது.
- நீல் கட்யால், 
ஹவாய் மாகாணத்துக்காக வாதாடிய இந்திய வம்சாவளி வழக்குரைஞர்.

அதிபரின் முஸ்லிம் தடை உத்தரவை முழுமையாக செயல்படுத்துவதன் மூலம் அமெரிக்கா மேலும் பாதுகாப்பானதாகிவிடாது. இனத்தையும், மதத்தையும் அடிப்படையாக வைத்து பாகுபாடு காட்டுவது அமெரிக்கத் தன்மைக்கு எதிரானது ஆகும்.
- ஸ்டீவன் சோய், 
நியூயார்க் குடியேற்றவாசிகள் 
கூட்டணி அமைப்பின் செயல் இயக்குநர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/6/w600X390/ban.jpg http://www.dinamani.com/world/2017/dec/06/6-முஸ்லிம்-நாடுகளைச்-சேர்ந்தவர்கள்-அமெரிக்கா-வரத்-தடை-டிரம்ப்-உத்தரவுக்கு-உச்ச-நீதிமன்றம்-அனுமதி-2820880.html
2820876 உலகம் கூகுளைப் பயன்படுத்துவதால் மறதி நோய் அபாயம்!: ஆய்வாளர் எச்சரிக்கை DIN DIN Wednesday, December 6, 2017 12:53 AM +0530 கூகுள் போன்ற தேடல் வலைதளங்களைப் பயன்படுத்தி விவரங்களைப் பெறும் வழக்கத்தால் மறதி நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம் என பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அந்த நாட்டின் செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஃபிராங்க் கன்மூரே கூறியதாவது:
மூளை ஆரோக்கியத்தைப் பரமாரிப்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். மூளைக்கு வேலை கொடுத்தால்தான் அது ஆரோக்கியத்துடன் திகழும்.
ஆனால், தற்போதைய காலக்கட்டத்தில் நாம் நமது மூளையின் வேலைகளை இணையதளத்தைக் கொண்டே செய்துவிடுகிறோம். 
நமக்கு மறந்துபோன ஏதாவது ஒரு தகவலை மீண்டும் பெற வேண்டும் என்றால், அதை மீண்டும் நினைவாற்றலிருந்து தேடிப் பார்ப்பதற்குப் பதிலாக இணையதளத்தில் தேடி எளிதில் பெற்று விடுகிறோம்.
அந்த வகையில், மனிதர்கள் தற்போது தங்களது மூளைகளை மிகப் பெரிய பரிசோதனைக்கு உள்படுத்தி வருகின்றனர். இந்தப் பரிசோதனையின் முடிவில், இணையதளத் தேடல்கள் காரணமாக மறதி நோய் உண்டாகும் அபாயம் அதிகரித்திருப்பது தெரிய வரலாம் என்றார் அவர்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/6/w600X390/google.jpg http://www.dinamani.com/world/2017/dec/06/கூகுளைப்-பயன்படுத்துவதால்-மறதி-நோய்-அபாயம்-ஆய்வாளர்-எச்சரிக்கை-2820876.html
2820874 உலகம் யேமன் தலைநகர் சனாவில் சவூதி அரேபியா குண்டு மழை: சண்டையில் பலி எண்ணிக்கை 234-ஆக உயர்வு DIN DIN Wednesday, December 6, 2017 12:52 AM +0530 யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலே உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள தலைநகர் சனா மீது சவூதி தலைமையிலான கூட்டுப் படை விமானங்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை குண்டு மழை பொழிந்தன.
சனா நகரில் சலே ஆதரவுப் படையினருடன் ஒரு வாரமாக நடைபெற்று வந்த சண்டையில் வெகு வேகமாக முன்னேறிய ஹூதி படையினர், அந்த நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, ஹூதி கிளர்ச்சியாளர்களிடமிருந்து சனா நகரை மீட்குமாறு தனது படையினருக்கு சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட யேமன் அதிபர் அப்துர்ரபோ மன்சூர் ஹாதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து நடைபெற்று வரும் கடுமையான சண்டையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 234-ஆக உயர்ந்ததாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், மோதலில் 400 பேர் காயமடை ந்ததாக அந்த அமைப்பு செவ்வாய்க்கிழமை கூறியது.
கடந்த 2014-இல் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள் யேமனில் கணிசமான பகுதியைக் கைப்பற்றியதுடன் தலைநகர் சனாவையும் கைப்பற்றினர். கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆயுதங்கள் வழங்கி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மீண்டும் ஆட்சியைப் பிடிக்கத் திட்டமிட்ட முன்னாள் அதிபர் சலே, ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். 
யேமன் ராணுவத்திலிருந்து வெளியேறிய வீரர்கள் சலே தலைமையை ஏற்றனர். இதைத் தொடர்ந்து வெடித்த உள்நாட்டுச் சண்டையில் லட்சக்கணக்கானோர் தங்கள் இருப்பிடங்களை இழந்தனர். 
தற்போது சலே -ஹூதி கிளர்ச்சியாளர்கள் கூட்டணி முறிந்ததைத் தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் தீவிர சண்டை நடந்து வரும் நிலையில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் நிகழ்த்திய தாக்குதலில் அப்துல்லா சலே உயிரிழந்ததாக திங்கள்கிழமை தகவல்கள் வெளியாகின.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/6/w600X390/yemen2.jpg யேமன் தலைநகர் சனாவில் சவூதி கூட்டுப் படை விமானங்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை நிகழ்த்திய தாக்குதலில் உருக்குலைந்த அதிபர் மாளிகை. http://www.dinamani.com/world/2017/dec/06/யேமன்-தலைநகர்-சனாவில்-சவூதி-அரேபியா-குண்டு-மழை-சண்டையில்-பலி-எண்ணிக்கை-234-ஆக-உயர்வு-2820874.html
2820873 உலகம் சிரியா அரசு ஆதரவு படையினர் மீது இஸ்ரேல் தாக்குதல் DIN DIN Wednesday, December 6, 2017 12:51 AM +0530 சிரியாவில் அரசுப் படையினர் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்தது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தலைநகர் டமாஸ்கஸுக்கு அருகே உள்ள ஜமாரயா பகுதியில் உள்ள அறிவியல் ஆய்வு மையம், ராணுவம் மற்றும் அரசு ஆதரவுப் படையினரின் ஆயுதக் கிடங்குகள் ஆகியவற்றின் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு வீசித் தாக்கின' என்று தெரிவித்தது.
தங்களை நோக்கி இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நிகழ்த்தியதாகவும், தங்களது வான் பாதுகாப்புத் தளவாடங்கள் மூலம் அவற்றில் 3 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாகவும் சிரியா அரசு தெரிவித்தது.
சிரியா ராணுவத்துடன் இணைந்து போராடும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளுக்கு அந்நாட்டு அரசு ராணுவ உதவியளிப்பதாக இஸ்ரேல் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
 

]]>
http://www.dinamani.com/world/2017/dec/06/சிரியா-அரசு-ஆதரவு-படையினர்-மீது-இஸ்ரேல்-தாக்குதல்-2820873.html
2820866 உலகம் வட கொரியாவில் ஐ.நா. தூதர் DIN DIN Wednesday, December 6, 2017 12:48 AM +0530 அணு ஆயுத மற்றும் தொலைதூர ஏவுகணை பரிசோதனைகளை வட கொரியா நடத்தி வருவதால் அந்தப் பிராந்தியத்தில் போர்ப் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஐ.நா. தூதர் ஜெஃப்ரீ ஃபெல்ட்மேன் அந்த நாட்டுக்கு நல்லெண்ணப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
வட கொரியாவை செவ்வாய்க்கிழமை வந்தடைந்த ஃபெல்ட்மேன், அண்மையில் அந்த நாடு நடத்திய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைப் பரிசோதனையால் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
வட கொரியாவின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்காவும், தென் கொரியாவும் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பிரம்மாண்டமான கூட்டு ராணுவப் பயிற்சியை திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், ஜெஃப்ரீ ஃபெல்ட்மேன் அந்த நாட்டுக்குச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

]]>
http://www.dinamani.com/world/2017/dec/06/வட-கொரியாவில்-ஐநா-தூதர்-2820866.html
2820864 உலகம் 9 அமெரிக்க ஊடகங்களுக்கு ரஷியா கட்டுப்பாடு DIN DIN Wednesday, December 6, 2017 12:48 AM +0530 ரஷியாவில் செயல்பட்டு வரும் 'வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா' உள்ளிட்ட 9 ஊடகங்களை அந்நாட்டு அரசு 'வெளிநாட்டு முகவர்' என்ற பட்டியலில் சேர்த்து கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டு ஊடகங்களை சர்ச்சைக்குரிய முத்திரையுடன் ரஷியாவில் செயல்பட அனுமதிக்கும் உத்தரவில் அதிபர் விளாதிமீர் புதின் கையெழுத்திட்டதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. 
இதுகுறித்து ரஷிய நீதித் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
அமெரிக்க நிதி உதவியுடன் செயல்பட்டு வரும் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா, ரேடியோ ப்ரீ யூரோப்/ரேடியோ லிபர்ட்டி மற்றும் அவற்றின் ஏழு ஊடகங்கள் வெளிநாட்டு முகவருக்கான பணிகளை மேற்கொள்ள ஏதுவான வகையில் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு முகவர் என்ற முத்திரையுடன் செயல்படும் நிறுவனங்களின் ஆவணங்கள் அனைத்தும் தீவிர பரிசீலனைக்கு உட்படுத்தப்படும். 
அந்த நிறுவனங்களின் ஊழியர்களும், நிதி நடவடிக்கைகளும் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நடவடிக்கை காரணமாக, அமெரிக்க ஊடக நிறுவனங்கள் ரஷியாவில் சுதந்திரமாகச் செயல்பட முடியாத நிலை ஏற்படும் என்று மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.
 

]]>
http://www.dinamani.com/world/2017/dec/06/9-அமெரிக்க-ஊடகங்களுக்கு-ரஷியா-கட்டுப்பாடு-2820864.html
2820801 உலகம் கிங்ஃபிஷ்ஷருக்குக் கிடைத்த கடனை எப்படி செலவழித்தார் விஜய் மல்லையா? இந்திய அரசு வாதம் DIN DIN Tuesday, December 5, 2017 04:03 PM +0530
இந்திய வங்கிகளில் ரூ.9,000 கோடி அளவுக்குக் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பியோடி தலைமறைவாக இருந்து வரும் விஜய் மல்லையா, கிங்ஃபிஷ்ஷருக்குக் கிடைத்த கடனை எப்படியெல்லாம் செலவழித்தார் என்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பாக பிரிட்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கின் அதிகாரபூர்வ விசாரணை திங்கள்கிழமை தொடங்கியது.

இந்திய அரசுக்காக, கிரெளன் பிராஸிக்யூஷன் சர்வீஸ் என்ற வழக்காடு நிறுவனம் இந்த வழக்கில் ஆஜராகி வாதிடுகிறது. நீதிமன்றத்தில் நேற்று இது தனது வாதத்தை முன் வைத்தது. அதாவது, இந்தியாவின் வங்கிகளிடம் இருந்து ரூ.9,000 கோடி அளவுக்குக் கடன் பெற்று அதனை தவறான வழிகளில் செலவிட்டுவிட்டு, தற்போது வேண்டுமென்றே கடன் தொகையை செலுத்தாமல் தவிர்க்கிறார். கிங்ஃபிஷ்ஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காக பல்வேறு வங்கிகளில், குறிப்பாக லண்டன் எச்எஸ்பிசி வங்கியில் இருந்தும் மிகப்பெரிய தொகைகளை கடனாகப் பெற்றுள்ளார். இந்த கடன் தொகைகளில் பெரும்பாதியை அவர் கோவாவில்தான்  செலவழித்துள்ளார். மீதித் தொகையை மோட்டார் பந்தயத்திலும், தனது சொந்தக் காரணத்துக்காக வாடகைக்கு எடுத்த இரண்டு ஜெட் விமானங்களின் வாடகைக்கும் செலவிட்டுள்ளார். 

விஜய் மல்லையா வைத்திருக்கும் விலையுயர்ந்த கார்கள் பற்றி அனைவருக்குமே தெரியும். இந்திய வங்கிகளிடம் இருந்து கடனைத் திரும்பக் கேட்டு அழுத்தம் வரவே, அவர் இந்தியாவில் இருந்துதப்பி இங்கிலாந்து வந்து, லண்டனில் டெவின் வில்லேஜில் ஒரு வீட்டையும் வாங்கியுள்ளார். அங்கிருக்கும் பொதுமக்களும், அவர் வைத்திருக்கும் விலை உயர்ந்த ஆடம்பர கார்களைப் பற்றிச் சொல்கிறார்கள் என்று கூறினார்.

நேற்று விசாரணை தொடங்குவதற்கு முன்னதாக நீதிமன்ற அறையில் எச்சரிக்கை மணி ஒலித்ததால் சற்று நேரம் தாமதமாகத் தொடங்கிய அந்த விசாரணையின் தொடக்கத்தில், விஜய் மல்லையாவின் கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ரூ.2,000 கோடி கடன் தொடர்பான ஆவணங்கள் இந்திய அரசின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டன. 

அப்போது, கடன் வழங்குவதில் இந்திய வங்கிகளில் விதிமீறல்கள் நடைபெறுவது உண்டு என இந்தியத் தரப்பு வழக்குரைஞர்கள் ஒப்புக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து விஜய் மல்லையா நீதிபதிகளிடம் கூறுகையில், "என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை; புனையப்பட்டவை; அடிப்படை முகாந்திரமற்றவை" என்று கூறினார்.

முன்னதாக, முதல் நாள் விசாரணைக்காக நீதிமன்றம் வந்த மல்லையாவிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளைக் கேட்டனர். 

எனினும், அவர்களிடம் மல்லையா, "அனைத்து விவரங்களையும் வழக்கு விசாரணையை கவனித்துத் தெரிந்து கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டுச் சென்றார்.

பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளிடமிருந்து பெற்ற ரூ.9,000 கோடி கடனைத் திருப்பிச் செலுத்தாதது தொடர்பாக தொழிலதிபர் விஜய் மல்லையா மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைகளைத் தவிர்ப்பதற்காக, விஜய் மல்லையா பிரிட்டனில் தஞ்சமடைந்தார்.

அதையடுத்து, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தக் கோரி பிரிட்டனுக்கு மத்திய அரசு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தது. 

இதன் தொடர்ச்சியாக, மல்லையாவை லண்டனில் ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி கைது செய்தனர். எனினும், ரூ.5 கோடி (65 ஆயிரம் பவுண்டு) பிணைத் தொகை செலுத்தி, கைதான மூன்று மணிநேரத்திலேயே மல்லையா ஜாமீனில் வெளிவந்தார். எனினும், அவரது கடவுச்சீட்டுகள், நுழைவு இசைவு (விசா) உள்ளிட்ட ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில், லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பாக நடைபெற்று வரும் வழக்கின் அதிகாரபூர்வ விசாரணைதான் திங்கள்கிழமை தொடங்கியது.

நீதிபதி எம்னா லூஸி அர்பத்நாட் விசாரணை மேற்கொள்ளும் இந்த வழக்கில், அடுத்த ஆண்டின் தொடக்கத்துக்குள் தீர்ப்பு அளிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று கூறப்படுகிறது.

இந்த வழக்கில், விஜய் மல்லையாவுக்காக பிரிட்டனைச் சேர்ந்த பிரபல வழக்குரைஞர் கிளார் மான்ட்கோமரி தலைமையிலான வழக்குரைஞர் குழு வாதாடி வருகிறது. பிரிட்டனில் மிகப் பெரிய குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்களையும் வழக்கிலிருந்து விடுவிப்பதற்கு கிளார் மான்ட்கோமரி பெயர் பெற்றவர் ஆவார்.

இந்திய அரசுக்காக, கிரெளன் பிராஸிக்யூஷன் சர்வீஸ் என்ற வழக்காடு நிறுவனம் இந்த வழக்கில் ஆஜராகி வாதிடுகிறது. விஜய் மல்லையாவை இந்திய நீதிமன்றங்களில் வைத்து விசாரணை நடத்துவதற்குத் தேவையான குற்றங்களை அவர் புரிந்துள்ளார் என்பதை அந்த நிறுவனம் பிரிட்டன் நீதிமன்றத்தில் நிரூபித்தாக வேண்டும்.

இந்த வழக்கில், இந்தியச் சிறைச் சாலைகளின் நிலைமை மிக முக்கியப் பங்கு வகிக்கும் எனத் தெரிகிறது. ஏற்கெனவே, கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் சம்பந்தப்பட்டவரும், பிரிட்டனில் தஞ்சமடைந்தவருமான சூதாட்டத் தரகர் சஞ்சீவ் சாவ்லாவை நாடு கடத்த மத்திய அரசு முயற்சி செய்தது.
 
எனினும், இந்தியச் சிறைகளில் தனக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் நடக்க வாய்ப்புள்ளதாக அவரது சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டதை அடுத்து, மத்திய அரசின் கோரிக்கையை வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் நிராகரித்தது.

தங்கள் நாட்டில் தஞ்சமடையும் குற்றம்சாட்டப்பட்டவர்களை பரஸ்பரம் நாடு கடத்துவதற்கு வசதியாக பிரிட்டன்-இந்தியா இடையே கடந்த 1992-ஆம் ஆண்டு ஓர் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி இதுவரை, ஒரே ஒருவர் மட்டுமே பிரிட்டனில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார்.

அவர், குஜராத் மாநிலம், கோத்ராவில் கடந்த 2002-ஆம் ஆண்டில் நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட சமீர்பாய் வினுபாய் படேல் என்பது குறிப்பிடத்தக்கது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/5/w600X390/vijay-mallayah.jpg ரூ.9,000 கோடி வங்கிக் கடன் மோசடி தொடர்பாக தம்மை இந்தியாவுக்கு நாடு கடத்தக் கோரும் வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக, பிரிட்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாகாண நீதிமன்றத்துக்கு திங்கள்கிழமை வந்த தொழிலதிபர் http://www.dinamani.com/world/2017/dec/05/கிங்ஃபிஷ்ஷருக்குக்-கிடைத்த-கடனை-எப்படி-செலவழித்தார்-விஜய்-மல்லையா-இந்திய-அரசு-வாதம்-2820801.html
2820261 உலகம் அமெரிக்க - தென் கொரிய விமானப் படைகளின் பிரம்மாண்ட போர்ப் பயிற்சி DIN DIN Tuesday, December 5, 2017 12:22 AM +0530 அமெரிக்க மற்றும் தென் கொரிய விமானப் படைகள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட போர்ப் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.
இவ்விரு நாடுகளிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பின் கீழ் இதுபோன்ற போர்ப் பயிற்சிகள் நடைபெற்றாலும், தற்போதைய போர்ப் பயிற்சியே மிகப் பெரிது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"விஜிலன்ஸ் ஏஸ்' என்று பெயரிடப்பட்ட இந்தப் போர்ப் பயிற்சி ஐந்து நாட்களுக்கு நடைபெறும்.
இது தொடர்பாக அமெரிக்க விமானப் படை தெரிவித்திருப்பது:
இரு நாட்டு விமானப் படைகளைச் சேர்ந்த 230 விமானங்கள் "விஜிலன்ஸ் ஏஸ்' போர்ப் பயிற்சியில் கலந்து கொள்கின்றன. அமெரிக்காவின் அதி நவீன எஃப்22 ராப்டர் ஸ்டெல்த் ஜெட் போர் விமானங்கள், எஃப்16, எஃப்35 விமானங்கள், யூ2 உளவு விமானங்கள் உள்ளிட்டவை இதில் கலந்த கொள்கின்றன. மேலும் 12,000 அமெரிக்க வீரர்கள் ஐந்து நாள் போர்ப் பயிற்சியில் பங்கு பெறுகின்றனர்.
தென் கொரியாவின் குன்சான் போர் விமான தளத்தை மையமாகக் கொண்டு போர்ப் பயிற்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் இரு முறை இதுபோன்ற போர்ப் பயிற்சிகள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. ஆனால் அமெரிக்காவை அச்சுறுத்தும் வட கொரியாவின் ஏவுகணை சோதனைகளையடுத்து தற்போதைய போர்ப் பயிற்சி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.நா.வின் கடுமையான பொருளாதாரத் தடைகளைப் பொருட்படுத்தாமல், கண்டம் விட்டு கண்டம் பாயும் சக்தி வாய்ந்த ஏவுகணையைக் கடந்த வாரம் வட கொரியா வெற்றிகரமாக சோதனை செய்தது. அது 13,000 கிலோமீட்டர் தொலைவு பறக்கும் திறன் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஹவாúஸாங்-15 என்னும் இந்தப் புதிய ஏவுகணை மூலம் அமெரிக்காவில் உள்ள எந்தப் பகுதியையும் குறி வைத்து வட கொரியாவால் தாக்க முடியும் எனப்படுகிறது. எனினும் 1 டன் எடையுள்ள அணு குண்டை ஏந்தி வெற்றிகரமாக அது தனது இலக்கை எட்டுமா என்பது குறித்து நிபுணர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
வட கொரியாவின் போர் அச்சுறுத்தல் புதிய உச்ச நிலையைத் தொட்டிருக்கும் வேளையில், சரித்திரம் காணாத பிரம்மாண்ட போர்ப் பயிற்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவுடன் மோதினால் வட கொரியா முற்றிலும் அழிந்துவிடும் என்று ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி கூறினார்.
வட கொரியாவின் போர்த் திறனை முடக்கும் விதமான ஒரு தாக்குதலை அமெரிக்கா மேற்கொள்ள வாய்ப்பிருப்பதாக மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் லிண்ட்ஸி கிரஹாம் ஒரு கருத்தரங்கில் கூறியிருந்தார்.
வட கொரியாவின் போர் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எச்.ஆர். மெக்மாஸ்டர் கூறியுள்ளார்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/5/w600X390/jetplane.jpg http://www.dinamani.com/world/2017/dec/05/அமெரிக்க---தென்-கொரிய-விமானப்-படைகளின்-பிரம்மாண்ட-போர்ப்-பயிற்சி-2820261.html
2820260 உலகம் ஜிம்பாப்வேயில் புதிய அமைச்சரவை பதவியேற்பு DIN DIN Tuesday, December 5, 2017 12:21 AM +0530 ஜிம்பாப்வேயின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எமர்சன் நங்கக்வா தலைமையிலான புதிய அமைச்சரவை திங்கள்கிழமை பதவியேற்றது. 
22 பேர் அடங்கிய அந்த அமைச்சரவையில் முன்னாள் விமானப் படை தளபதி பெரன்ஸ் ஷிர்ரி, வேளாண் மற்றும் நில அமைச்சராக பொறுப்பேற்றார். ராணுவ தளபதி சிபுஷியோ மோயோவுக்கு வெளியுறவுத் துறை வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் பொறுப்பேற்றதையடுத்து அவர்கள் இருவரும் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்தனர். 
புதிய அதிபராக பொறுப்பேற்ற எமர்சன் நங்கக்வா தெரிவித்ததாவது:
என் தலைமையிலான அமைச்சரவை குழு பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. அதனை சிறப்பாக எதிர்கொள்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. நாம் அனைவரும் (ஜிம்பாப்வே மக்கள்) இணைந்து நமது பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுப்போம் என்றார் அவர்.
ஜிம்பாப்வேயில் 37 ஆண்டுகளாக அதிபர் பதவியில் இருந்த ராபர்ட் முகாபே, மனைவியின் அரசியல் பிரவேச சர்ச்சை காரணமாக தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து, எமர்சன் நங்கக்வா புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

]]>
http://www.dinamani.com/world/2017/dec/05/ஜிம்பாப்வேயில்-புதிய-அமைச்சரவை-பதவியேற்பு-2820260.html
2820259 உலகம் ஊழல் வழக்குகளை இணைத்து விசாரிக்க கோரும் நவாஸ் ஷெரீஃப் மனு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி DIN DIN Tuesday, December 5, 2017 12:20 AM +0530 பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீதான மூன்று ஊழல் வழக்குகளை இணைத்து ஒரே வழக்காக விசாரிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
நவாஸ் ஷெரீஃப் குடும்பத்தினர் பிரிட்டன் தலைநகர் லண்டனில் குடியிருப்பு வாங்கியது, அவருடைய மகன்களின் இரு வெளிநாட்டு நிறுவனங்களில் அவருக்குத் தொடர்பு இருந்தது ஆகிய முறைகேடுகள் குறித்து பாகிஸ்தான் ஊழல் தடுப்பு ஆணையம் அவர் மீது மூன்று தனித்தனி வழக்குகளைப் பதிவு செய்தது. 
இந்த வழக்குகள் தொடர்பாக இஸ்லாமாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுப் பதிவு நடவடிக்கையும் நடந்து முடிந்துள்ளது.
இதனிடையே அந்த மூன்று வழக்குகளுமே ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்பதால் அவற்றை இணைத்து ஒரே வழக்காக விசாரிக்குமாறு சிறப்பு நீதிமன்றத்தில் நவாஸ் ஷெரீஃப் கோரியிருந்தார். ஆனால் அந்தக் கோரிக்கையை சிறப்பு விசாரணை நீதிமன்ற நீதிபதி முகமது பஷீர் நிராகரித்துவிட்டார்.
இதையடுத்து இதே கோரிக்கையை முன்வைத்து இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் நவாஸ் ஷெரீஃப் வழக்கு தொடர்ந்தார். அந்த கோரிக்கை மனு மீதான விசாரணை கடந்த நவ. 23-ஆம் தேதி நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், ஷெரீஃப் மனு மீதான தீர்ப்பு திங்கள்கிழமை வெளியானது. அதில் நவாஸ் ஷெரீஃபின் கோரிக்கையைத் தள்ளுபடி செய்வதாக உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தெரிவித்தது.
முழு விவரங்களுடன் விரிவான தீர்ப்பை பின்னர் வெளியிடுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
காலையிலேயே தீர்ப்பு வெளியாகும் என்று கருதப்பட்ட நிலையில், தீர்ப்பளிப்பை பிற்பகல் 1 மணிக்கு ஒத்திவைப்பதாக உயர் நீதிமன்றம் கூறியது. அதன்படியே, பிற்பகலில் சுருக்கமான உத்தரவு வெளியானது.
இதனிடையே, தலைநகரிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் லண்டன் குடியிருப்பு தொடர்பான ஊழல் வழக்கு காலையில் விசாரணைக்கு வந்தது. இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு வெளியாகும் வரை தற்போதைய விசாரணையை ஒத்திவைக்குமாறு நவாஸ் ஷெரீஃபின் வழக்குரைஞர் கவாஜா ஹாரிஸ் நீதிபதியிடம் கேட்டுக் கொண்டார். அதையடுத்து, பிற்பகல் வரை விசாரணையை ஒத்தி வைப்பதாக நீதிபதி முகமது பஷீர் கூறினார்.
பிற்பகலில் நீதிமன்றம் கூடியதும், உயர் நீதிமன்றத்தின் சுருக்கமான தீர்ப்பு குறித்து தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஊழல் வழக்குகளில் சாட்சி விசாரணை போன்ற நடவடிக்கைகள் தொடரும் என்று நீதிபதி முகமது பஷீர் கூறினார்.
நவாஸ் ஷெரீஃப், அவரது மகள் மரியம், மருமகன் முகமது சஃப்தர் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். நீதிமன்ற வளாகத்தில் பலத்த காவல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிரடி காவல் படையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.
டிச. 5 முதல் ஒரு வார காலத்துக்கு நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு வேண்டுமென நவாஸ் ஷெரீஃப் மனு தாக்கல் செய்தார். அவரது மகள் மரியம், டிச. 5-ஆம் தேதி முதல் ஒரு மாத காலத்துக்கு நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு வேண்டுமென கோரியுள்ளார்.
நவாஸ் மனைவி குல்ஸூம் தொண்டை புற்று நோய்க்கான சிகிச்சை பெற்று லண்டனில் ஓய்வெடுத்து வருகிறார். அவருக்குத் துணையாக இருப்பதற்காக லண்டன் செல்ல இருப்பதால் நவாஸூம் அவரது மகளும் வழக்கு விசாரணையில் ஆஜராவதிலிருந்து விலக்கு கேட்டுள்ளனர்.
முன்னதாக, நவாஸ் ஷெரீஃப் மீது எதிர்க்கட்சியினர் அளித்த புகார்களை விசாரித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், அவரைத் தகுதி நீக்கம் செய்து கடந்த ஜூலையில் தீர்ப்பளித்தது. மேலும் அவர் மீதும் அவருடைய குடும்பத்தினர் மீதும் ஊழல் வழக்குகளைப் பதிவு செய்து விசாரிக்குமாறு தேசிய ஊழல் தடுப்பு ஆணையத்துக்கு உத்தரவிட்டது. அவர் மீது மூன்று தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பையடுத்து, நவாஸ் ஷெரீஃப் தனது பிரதமர் பதவியையும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜிநாமா செய்தார்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/29/w600X390/nawascotout.jpg http://www.dinamani.com/world/2017/dec/05/ஊழல்-வழக்குகளை-இணைத்து-விசாரிக்க-கோரும்-நவாஸ்-ஷெரீஃப்-மனு-உயர்-நீதிமன்றம்-தள்ளுபடி-2820259.html
2820258 உலகம் கிளர்ச்சியாளர்களுடன் யேமன் ராணுவம் கடும் சண்டை DIN DIN Tuesday, December 5, 2017 12:19 AM +0530 கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள யேமன் தலைநகர் சனாவை மீட்க நடைபெற்று வரும் கடும் சண்டையில் 125 பேர் பலியானதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
ஷியா பிரிவைச் சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள தலைநகரை மீட்குமாறு அதிபர் அப்துர்ரபோ மன்சூர் ஹாதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ராணுவத்தினர் முன்னேறி வருகின்றனர்.
இந்த நிலையில், தலைநகர் சனாவை கடந்த மூன்று ஆண்டுகளாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த கிளர்ச்சியாளர்களுக்கும் முன்னாள் அதிபர் அப்துல்லா சலே ஆதரவு வீரர்களுக்கும் இடையேயான உறவு முறிந்து சண்டை மூண்டது. அவ்விரு தரப்பினரும் சனாவில் ஆங்காங்கே மோதி வரும் நிலையில், ராணுவம் அந்த நகரை மீட்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
கடும் சண்டையில் 125 பேர் பலியானதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்தது. மேலும் 238 பேர் காயமடைந்ததாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே, பிரதமர் அகமது உபைத் பின் தாகர் கூறியிருப்பதாவது:
தலைநகர் சனாவுக்கு கிழக்கே மாரிப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவப் பிரிவை உடனடியாக நடத்திச் செல்லுமாறு துணை அதிபர் அலி மோசன் அல்-அஹ்மாருக்கு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
ஹூதி கிளர்ச்சியாளர்களுடன் சேர்ந்து சண்டையிட்ட அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்க அதிபர் முடிவு செய்துள்ளார். முன்னாள் அதிபர் அப்துல்லா சலேவுக்கும் இது பொருந்தும். ராணுவத்திலிருந்து வெளியேறி முன்னாள் அதிபருக்கு ஆதரவு தெரிவித்த வீரர்கள், கிளர்ச்சியாளர்களுடன் இணைந்து ஆயுதம் ஏந்தி சண்டையிட்ட ஆயுதக் குழுக்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும். சர்வதேச அங்கீகாரம் பெற்ற மன்சூர் ஹாதியின் அரசுக்கு ஆதரவு தெரிவித்து வந்தால் பொது மன்னிப்பு வழங்கப்படும். இது குறித்த முறையான அறிவிப்பை அதிபர் விரைவில் வெளியிடுவார்.
தற்போதைய நிலையில், ஈரானின் துணையுடன் சண்டையிட்டு வரும் ஹூதி கிளர்ச்சியாளர்களைத் தோல்வியுறச் செய்வதுதான் முக்கியம் என்றார் அவர்.
கடந்த 2014-இல் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள் யேமனில் கணிசமான பகுதியைக் கைப்பற்றியதுடன் தலைநகர் சனாவையும் கைப்பற்றினர். கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆயுதங்கள் வழங்கி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மீண்டும் ஆட்சியைப் பிடிக்கத் திட்டமிட்ட முன்னாள் அதிபர் சலே கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். யேமன் ராணுவத்திலிருந்து வெளியேறிய வீரர்கள் சலே தலைமையை ஏற்றனர். இதைத் தொடர்ந்து வெடித்த உள்நாட்டுச் சண்டையில் லட்சக்கணக்கானோர் தங்கள் இருப்பிடங்களை இழந்தனர். 
தற்போது சலே -கிளர்ச்சியாளர்கள் கூட்டணி முறிந்துவிட்டது.
சர்வதேச அங்கீகாரம் பெற்ற மன்சூர் ஹாதி அரசுக்கு ஆதரவாக 10 அரபு நாடுகளின் கூட்டுப் படையை சவூதி கடந்த 2015-இல் அமைத்து, கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தத் தொடங்கியது. இந்தத் தாக்குதலில் 8,700-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். சவூதி கூட்டுப் படையின் கடும் முற்றுகையால் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டு பகுதிகளில் உணவு, குடிநீர், மருந்தின்றி லட்சக்கணக்கானோர் தவித்து வருகின்றனர்.

முன்னாள் அதிபர் சலே பலியானதாகத் தகவல்

முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலே (76) பலியானதாக கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள தொலைக்காட்சி திங்கள்கிழமை செய்தி வெளியிட்டது.
ஹூதி கிளர்ச்சியாளர்களின் அதிகாரபூர்வத் தொலைக்காட்சியான அல்-மஸீரா வெளியிட்ட செய்தியில் தெரிவித்திருப்பது: 
ஆயுதக் குழுவுக்குத் தலைமை வகித்தவர் சண்டையில் பலியானார். அவருடன் பல கூட்டாளிகளும் பலியாகினர். இத்துடன் ஆயுதக் குழுவால் ஏற்பட்ட நெருக்கடி முடிவுக்கு வந்தது என்று தெரிவித்தது.
ஹூதி கிளர்ச்சியாளர்கள் தங்களையே உண்மையான அரசாகக் கூறி வருவதால், உள்துறை அமைச்சகம் பெயரில் அந்தச் செய்தியை வெளியிட்டிருக்கிறது. செய்தியில் சலே பெயர் குறிப்பிடவில்லையென்றாலும், செய்தியுடன் அலி அப்துல்லா சலேவின் தோற்றம் உள்ள ஒருவரது சடலம் காட்டப்பட்டது. ஆனால் அது சலேவின் உடல் என்று வேறு எவராலும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
அண்மைக்காலம் வரை கிளர்ச்சியாளர்களும் சலே ஆதரவாளர்களும் இணைந்து சண்டையிட்டு வந்தனர். கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரை கிரிமினல் என்று கிளர்ச்சியாளர்கள் கூறி வந்தனர்.
கடந்த 1978 முதல் 1990 வரை வடக்கு யேமன் அதிபராகவும், 1990-ஆம் ஆண்டு முதல் 2012-ஆம் ஆண்டு வரை யேமன் அதிபராகவும் இருந்தார். அவரது ஜனநாயக விரோத ஆட்சி குறித்து எழுந்த விமர்சனத்தைத் தொடர்ந்து அவர் பதவி விலகினார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/5/w600X390/terrorist.jpg யேமன் தலைநகர் சனாவில் சண்டையிட்டு வரும் ஹூதி கிளர்ச்சிப் படையினர். http://www.dinamani.com/world/2017/dec/05/கிளர்ச்சியாளர்களுடன்-யேமன்-ராணுவம்-கடும்-சண்டை-2820258.html
2820207 உலகம் நாடு கடத்தக் கோரும் வழக்கு: லண்டன் நீதிமன்றத்தில் ஆஜரான விஜய் மல்லையா!  DIN DIN Monday, December 4, 2017 04:39 PM +0530  

லண்டன்: தன்னை நாடு கடத்தக் கோரி இந்திய அரசு தொடர்ந்துள்ள வழக்கில், லண்டன் நீதிமன்றத்தில் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா ஆஜர் ஆனார்.

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா தொழில் வளர்ச்சிக்கு என்று கூறி பல்வேறு இந்திய வங்கிகளில் இருந்து ரூ.9000 கோடி அளவுக்கு கடன் பெற்றார். ஆனால் வாங்கிய கடனைத் திருப்பியளிக்காத அவர், பண மோசடியில் ஈடுபட்டார். அது தொடர்பாக இங்கு அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அவர் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்று விட்டார்.

எனவே நீதிமன்ற வழக்குகளை சந்திக்க ஏதுவாக அவரை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புமாறு இங்கிலாந்து அரசை மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அதன்படி லண்டன் புறநகர் பகுதி ஒன்றில் சில மாதங்களுக்கு முன் அவரை ஸ்காட்லாந்து போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று துவங்கி வரும் 14–ந்தேதி வரை தொடர்ந்து நடக்கிறது. இந்த வழக்கு விசாரணைக்காக இந்திய விசாரணை ஆணைய அதிகாரிகள் லண்டன் சென்றுள்ளனர்.

இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக விஜய் மல்லையா இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.  இந்த வழக்கின் தீர்ப்பு 2018 - ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

]]>
india, king fisher, vijay mallaya, banks, loan, fraud, london, extradition, court http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/4/w600X390/vijay_mallaya.JPG http://www.dinamani.com/world/2017/dec/04/நாடு-கடத்தக்-கோரும்-வழக்கு-லண்டன்-நீதிமன்றத்தில்-ஆஜரான-விஜய்-மல்லையா-2820207.html
2819882 உலகம் பாகிஸ்தான்: 2018 பொதுத் தேர்தலில் ஜமாத்-உத்-தாவா அமைப்பு போட்டி: ஹஃபீஸ் சயீது அறிவிப்பு DIN DIN Monday, December 4, 2017 02:03 AM +0530 மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட பயங்கரவாதி ஹஃபீஸ் சயீது, பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில், தனது ஜமாத்-உத்-தாவா அமைப்பானது "மில்லி முஸ்லிம் லீக்' என்ற பெயரில் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக லாகூர் அருகே உள்ள சௌபுர்ஜியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில், மில்லி முஸ்லிம் லீக் போட்டியிட முடிவு செய்துள்ளது. வரும் 2018-ஆம் ஆண்டை, காஷ்மீர் மக்களுக்காக அர்ப்பணிக்கிறேன்.
ஜம்மு-காஷ்மீரில் இந்திய ராணுவத்தினரை எதிர்த்துப் போராடும் காஷ்மீர் மக்களுக்கு, எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் எனது ஆதரவு தொடர்ந்து இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக நான் குரல் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. இதற்காக, பாகிஸ்தான் அரசுக்கு இந்தியா நிர்ப்பந்தம் கொடுக்கிறது.
மறைமுக ராஜீய தந்திர நடவடிக்கையானது, காஷ்மீர் பிரச்னையை மேலும் மோசமாக்கவே செய்யும் என்பதை இந்தியாவுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். பாகிஸ்தானில் நான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதும், இந்தியாவில் ஹுரியத் மாநாட்டு அமைப்புத் தலைவர்கள் கைது செய்யப்பட்டதும், சர்வதேச ரீதியிலான திட்டமாகும்.
வீட்டுக் காவலில் இருந்து நான் விடுவிக்கப்பட்டதைக் கண்டு, இந்தியா ஆத்திரத்தில் இருக்கிறது. காஷ்மீர் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை இந்தியா நிறுத்தவில்லையெனில், காஷ்மீரில் நடக்கும் போராட்டமானது மேலும் அதிகரிக்கும்; அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்று இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன் என்று ஹஃபீஸ் சயீது தெரிவித்தார்.
கடந்த ஜனவரி மாதம் முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த அவர் நவம்பர் மாதம்தான் விடுவிக்கப்பட்டார். அவர், பாகிஸ்தானில் 40-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளைக் கொண்ட கூட்டமைப்பின் துணைத் தலைவராக உள்ளார். கடந்த செப்டம்பர் மாதத்தில் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது, ஜமாத்-உத்-தாவா அமைப்பு, அரசியலுக்குள் நுழைந்தது. பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீஃப் பதவி விலகியதால், தேசிய அவையில் காலியான இடத்துக்கு நடந்த தேர்தலில் ஜமாத்-உத்-தாவா அமைப்பின் ஆதரவுடன் ஷேக் யாகூப் என்பவர் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில், யாகூப்புக்கு 6 ஆயிரம் வாக்குகள் கிடைத்தன. அப்போது அவர், 2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஜமாத்-உத்-தாவா அமைப்பு போட்டியிட இருக்கும் தகவலை வெளியிட்டிருந்தார்.

]]>
http://www.dinamani.com/world/2017/dec/04/பாகிஸ்தான்-2018-பொதுத்-தேர்தலில்-ஜமாத்-உத்-தாவா-அமைப்பு-போட்டி-ஹஃபீஸ்-சயீது-அறிவிப்பு-2819882.html
2819839 உலகம் விஜய் மல்லையாவை நாடுகடத்துவது தொடர்பான வழக்கு: பிரிட்டன் நீதிமன்றத்தில் இன்று விசாரணை DIN DIN Monday, December 4, 2017 01:10 AM +0530 வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் பிரிட்டனில் தஞ்சமடைந்த தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடுகடுத்துவது தொடர்பான வழக்கு விசாரணை பிரிட்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாகாண நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.
விஜய் மல்லையா சார்பில், பிரிட்டனைச் சேர்ந்த பிரபல வழக்குரைஞர் கிளார் மான்ட்கோமரி தலைமையிலான வழக்குரைஞர் குழு வாதாடி வருகிறது. 
முந்தைய வழக்கு விசாரணையின்போது, இந்தியச் சிறைகளில் தாம் அடைக்கப்பட்டால், மனித உரிமை மீறல்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக மல்லையா சார்பில் நீதிமன்றத்தில் அச்சம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், "இந்தியச் சிறைகள் பாதுகாப்பானவை; அங்கு எந்த மனித உரிமை மீறல்களும் நடைபெற வாய்ப்பில்லை' என்பதற்கான ஆதாரங்களை மத்திய அரசு சார்பில் ஆஜராக உள்ள வழக்குரைஞர் குழு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்காக சிபிஐ அதிகாரிகள் குழு லண்டனுக்கு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றது.
வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில், வழக்கு விசாரணை டிசம்பர் 14-ஆம் தேதி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் மல்லையாவை நாடு கடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி அளிக்கும் பட்சத்தில், அதையடுத்து 2 மாதங்களுக்குள் அந்நாட்டு உள்துறை அமைச்சர் ஆம்பர் ரூட், அவரை நாடு கடத்துவதற்கு அனுமதியளிக்கும் உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
தங்கள் நாட்டில் தஞ்சமடையும் குற்றம்சாட்டப்பட்டவர்களை பரஸ்பரம் நாடு கடத்துவதற்கு வசதியாக கடந்த 1992-ஆம் ஆண்டு பிரிட்டன்-இந்தியா இடையே ஓர் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி இதுவரை, ஒரே ஒருவர் மட்டுமே பிரிட்டனில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார்.
அவர், குஜராத் மாநிலம், கோத்ராவில் கடந்த 2002-ஆம் ஆண்டில் நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட சமீர்பாய் வினுபாய் படேல் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் சம்பந்தப்பட்டவரும், பிரிட்டனில் தஞ்சமடைந்தவருமான சூதாட்டத் தரகர் சஞ்சீவ் சாவ்லாவை நாடு கடத்த மத்திய அரசு முயற்சி செய்தது. எனினும், இந்தியச் சிறைகளில் தனக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் நடக்க வாய்ப்புள்ளதாக அவரது சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டதை அடுத்து, மத்திய அரசின் கோரிக்கையை வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் நிராகரித்தது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/13/w600X390/VijayMallya.jpg http://www.dinamani.com/world/2017/dec/04/விஜய்-மல்லையாவை-நாடுகடத்துவது-தொடர்பான-வழக்கு-பிரிட்டன்-நீதிமன்றத்தில்-இன்று-விசாரணை-2819839.html
2819747 உலகம் தென்கொரியாவில் மீன்பிடிப் படகு விபத்து: 13 பேர் பலி DIN DIN Monday, December 4, 2017 12:23 AM +0530 தென்கொரியாவில் மீன்பிடிப் படகு, டேங்கர் கப்பலுடன் மோதிய விபத்தில் 13 பேர் பலியாகினர்.
இதுகுறித்து கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
சியோன்சங்-1 என்கிற படகு மீன்பிடி சுற்றுலாவுக்காக 20 பயணிகளை ஏற்றிக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை கடலுக்குள் சென்றது. படகில் இரு ஊழியர்களும் இருந்துள்ளனர். அந்தப் படகு, இன்சியான் துறைமுகத்துக்கு அருகே சென்ற போது தனது கட்டுப்பாட்டை இழந்து எரிபொருளை ஏற்றிவந்த சரக்கு கப்பலுடன் எதிர்பாராத விதமாக மோதியது. காலை 6 மணி அளவில் (உள்ளூர் நேரம்) ஏற்பட்ட இந்த விபத்தில் பயணிகள் சென்ற படகு கடலுக்குள் மூழ்கியது. இதையடுத்து, அதில் பயணம் செய்த 13 பேர் தண்ணீரில் மூழ்கி மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். 
மேலும் ஏழுபேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீன்பிடிப் படகில் சென்ற ஊழியர் உள்ளிட்ட இருவரை காணவில்லை. அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
சரக்கு கப்பலில் இருந்தவர்களுக்கு இந்த விபத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

]]>
http://www.dinamani.com/world/2017/dec/04/தென்கொரியாவில்-மீன்பிடிப்-படகு-விபத்து-13-பேர்-பலி-2819747.html
2819745 உலகம் கிழக்காசிய நாடுகளின் ஒத்துழைப்புக்கு ஈரான் வலியுறுத்தல் DIN DIN Monday, December 4, 2017 12:23 AM +0530 மத்திய கிழக்கு நாடுகளிடையே கூடுதல் ஒத்துழைப்பு தேவை என்றும் வெளிநாடுகளைத் தலையிடும் நிலையைத் தவிர்க்க வேண்டும் என்றும் ஈரான் அதிபர் ஹசன் ரெüஹானி கூறினார்.
ஈரானின் சாபஹார் நகரில் மேம்படுத்திய துறைமுகத்தை ஞாயிற்றுக்கிழமை அவர் திறந்து வைத்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் தெரிவித்தது:
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏதேனும் பிரச்னையென்றால், நமக்குள்ளேயே பேச்சுவார்த்தை மூலம் அதனைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். பிற நாடுகளின் தலையீடே தேவையில்லை. வெளியார்களின் தலையீட்டைத் தவிர்க்க வேண்டும். அவர்களின் ஆயுதங்களும் நமக்குத் தேவையில்லை. ஒற்றுமையாகக் கூடிப் பேசி நாமே நமது பிரச்னைகளுக்குத் தீர்வு காணலாம்.
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள எந்த ஒரு நாடும் வல்லரசு நாடு போலச் செயல்படக் கூடாது. அதே சமயத்தில், தற்போது வல்லரசு நாடாக உள்ள எந்த நாடும் இங்கு ஆதிக்கம் செலுத்த நாம் அனுமதிக்கக் கூடாது. இதுவரை எந்த வல்லரசும் இங்கு ஆதிக்கம் செலுத்த முடியவில்லை என்பதையும் நாம் நினைவுகூர்வது அவசியம்.
இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றுள்ளோம். இதையடுத்து, ஷியா - சன்னி பிரிவினரிடையேயான மோதல் முடிவுக்கு வரும். வெளிநாடுகளின் தலையீடும் இதனால் முடிவுக்கு வரும்.
இப்போது தொடங்கப்பட்டுள்ள புதிய துறைமுகம் வேறு எந்த நாட்டுக்கும் போட்டியாக உருவாக்கப்படவில்லை. இந்தப் பிராந்தியத்தில் மேலும் பெரிய துறைமுகங்கள் உருவாவதை ஈரான் வரவேற்கிறது. ஆரோக்கியமான போட்டி தேவை. பாகிஸ்தானில் உருவாகும் கவாதர் துறைமுகத்தை ஈரான் வரவேற்கிறது என்று அவர் கூறினார்.
மத்திய கிழக்கு நாடுகளிடையே வல்லரசு நாடு போல ஆதிக்கம் செலுத்த ஈரானும் சவூதி அரேபியாவும் முயற்சி செய்கின்றன என்று மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.
ஷியா பிரிவினர் பெரும்பான்மையாக உள்ள ஈரானும், சன்னி பிரிவைச் சேர்ந்த சவூதி அரசும் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்கிறது என்று மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.
சிரியாவிலும், யேமனிலும் ஈரான் - சவூதி அரேபியா எதிரெதிர் அணிகளுக்கு ஆதரவளித்து வருகின்றன.

முக்கியத்துவம் வாய்ந்த சாபஹார் துறைமுகம்

முக்கியத்துவம் வாய்ந்த சாபஹார் நகரில் ஈரான் கடற்படை தளமும், விமானப் படை தளமும் உள்ளன. தற்போது அதன் துறைமுகமும் மிக பிரம்மாண்டமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 85 லட்சம் டன் சரக்குகளைக் கையாளும் திறன் கொண்டது இந்தத் துறைமுகம். ஒரு லட்சம் டன் எடையளவு கொண்ட பிரம்மாண்ட சரக்கு கப்பல்களைக் கையாளும் இரு தளங்கள் உள்பட 5 புதிய துறைமுக மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் ஏற்றுமதிக்கு சாபஹார் துறைமுகம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இத்துறைமுகம் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு கடந்த அக்டோபர் மாதம் கோதுமையை இந்தியா ஏற்றுமதி செய்தது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானின் கவாதர் துறைமுகம் சீனாவின் உதவியுடன் பிரம்மாண்டமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. சீன பொருளாதார வழித்தடத்தில் கவாதர் துறைமுகம் முக்கிய இடம் வகிக்கிறது. இந்நிலையில், ஈரானின் சாபஹார் துறைமுகம் இந்திய பங்களிப்புடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
ஈரானில் விரிவாக்கம் செய்த சாபஹார் துறைமுகத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்துப் பேசும் 
அந்நாட்டு அதிபர் ஹசன் ரெüஹானி.

]]>
http://www.dinamani.com/world/2017/dec/04/கிழக்காசிய-நாடுகளின்-ஒத்துழைப்புக்கு-ஈரான்-வலியுறுத்தல்-2819745.html
2819741 உலகம் தற்கொலைத் தாக்குதல்: ஆப்கனில் 6 பேர் பலி DIN DIN Monday, December 4, 2017 12:22 AM +0530 ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 6 பேர் பலியாகினர்.
நங்கர்ஹார் மாகாணத்தில் நிகழ்த்தப்பட்ட இந்தத் தாக்குதல் குறித்து மாகாண காவல் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தது: 
மாகாணத் தலைநகர் ஜலாலாபாதில் உள்ள விளையாட்டரங்கில் பொதுக்கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது வெடிபொருள் பொருத்திய மோட்டார் சைக்கிளில் வந்த பயங்கரவாதி கூட்டத்தினரிடையே வாகனத்தை வேகமாக ஓட்டி அதனை வெடிக்கச் செய்தார். இந்த தற்கொலைத் தாக்குதலில் ஒரு சிறுமியும் பெண்ணும் உள்பட 6 பேர் பலியாகினர். மேலும் 13 பேர் காயமடைந்தனர். அதில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவத்துக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்றார் அவர்.
அந்த மாகாணத்தில் உள்ள இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் இந்தத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

]]>
http://www.dinamani.com/world/2017/dec/04/தற்கொலைத்-தாக்குதல்-ஆப்கனில்-6-பேர்-பலி-2819741.html
2819739 உலகம் இடைத்தேர்தலில் வெற்றி: ஆஸ்திரேலிய அரசு கவிழும் அபாயம் நீங்கியது DIN DIN Monday, December 4, 2017 12:22 AM +0530 ஆஸ்திரேலிய நாடாளுமன்ற இடைத் தேர்தலில் முன்னாள் துணைப் பிரதமர் பார்னபி ஜாய்ஸ் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மால்கம் டர்ன்புல் அரசு கவிழும் அபாயம் நீங்கியது.
இரட்டைக் குடியுரிமை விவகாரம் தொடர்பாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் கடந்த அக்டோபரில் வெளியிட்ட தீர்ப்பையடுத்து, துணைப் பிரதமர் பார்னபி ஜாய்ஸ் ராஜிநாமா செய்தார். அதைத் தொடர்ந்து, நியூ செüத் வேல்ஸ் மாகாணம், டாம்வர்த் நகரில் நடைபெற்ற இடைத் தேர்தலில் அவர் போட்டியிட்டார். அதில் 64 சதவீத வாக்குகள் பெற்று அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 
நாடாளுமன்றத்தின் கீழவையில் ஆளும் கட்சிக்கு ஒரே ஒரு உறுப்பினரின் பெரும்பான்மையே இருந்து வந்த நிலையில், பார்னபி ஜாய்ஸ் விலக நேர்ந்தது. எனவே அவர் தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆளும் ஆஸ்திரேலிய லிபரல் கட்சிக்குப் பெரும்பான்மை இருக்கும் நிலை எழுந்தது. இந்த நிலையில், அவர் வெற்றி பெற்றிருப்பதால், பிரதமர் மால்கம் டர்ன்புல் ஆட்சி கவிழும் அபாயம் நீங்கியது. 
பிரிட்டனின் காலனியாக இருந்து வந்த ஆஸ்திரேலியாவுக்கு கடந்த 1901-இல் தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது. எனினும் அது பிரிட்டன் முடியாட்சியின் கீழ் செயல்படும் சுதந்திர நாடு. தன்னாட்சி அதிகாரம் வழங்கியபோது இயற்றிய சட்டப்படி, ஆஸ்திரேலிய குடியுரிமையுடன் பிரிட்டன் அல்லது பிற பிரிட்டன் காலனியின் குடியுரிமையும் உள்ளவர்கள் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினராக முடியாது.
இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்களாக ஆவதை தடுக்கும் சட்டம் சாதாரண குடிமக்களுக்குப் பொருந்தாது. அந்த வகையில், ஏராளமானோர் பிரிட்டன், நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகளின் குடியுரிமையுடன் ஆஸ்திரேலிய குடியுரிமையும் பெற்று அந்த நாட்டில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், துணைப் பிரதமர் பார்னபி ஜாய்ஸ் உள்ளிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் என்ற விவரம் வெளியானது. பார்னபி ஜாய்ஸின் தந்தை நியூஸிலாந்திலிருந்து ஆஸ்திரேலியாவில் குடியேறியவர். அவர் தனது நியூஸிலாந்து குடியுரிமையை கைவிடவில்லை. பார்னபி ஜாய்ஸ் ஆஸ்திரேலியாவில் பிறந்தாலும், அவரது தந்தை வழியாக இயற்கையாகவே நியூஸிலாந்து குடியுரிமையும் பெற்றவராக இருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கில் துணைப் பிரதமர் பார்னபி ஜாய்ஸ், மற்றும் 4 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்து உச்ச நீதிமன்றம் கடந்த அக்டோபரில் உத்தரவிட்டது.
இதையடுத்து, அவர் தனது நியூஸிலாந்து குடியுரிமையை முறைப்படி கைவிட்டார். பின்னர் நடைபெற்ற இடைத் தேர்தலில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/4/w600X390/barnabay.jpg http://www.dinamani.com/world/2017/dec/04/இடைத்தேர்தலில்-வெற்றி-ஆஸ்திரேலிய-அரசு-கவிழும்-அபாயம்-நீங்கியது-2819739.html
2819671 உலகம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வாழும் வெள்ளை மாளிகையிலேயே இவ்வளவு பிரச்னைகளா? எலி, எறும்பு மற்றும் கரப்பான்பூச்சிகளின் தொல்லை! உமா DIN Sunday, December 3, 2017 01:40 PM +0530  

வீட்டில் எலி, கரப்பான் பூச்சி இருந்தால் முதல் வேலையாக அவற்றை ஒழித்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்போம். காரணம் எலியால் நோய் உட்பட பலவிதமான பிரச்னைகள் ஏற்படும். வீடுகளில் அது தரும் தொல்லையை சகிக்க முடியாது. சிறிய வீடுகளில் எலி மற்றும் பூச்சிகளால் பிரச்னை ஏற்பட்டால் எளிதில் அதனை ஒழித்துவிடலாம். ஆனால் பிரம்மாண்டமான வெள்ளை மாளிகையின் மூலை முடுக்குகளில் ஒளிந்து கொண்டு அட்டகாசம் செய்யும் இந்தச் சிறிய ஜீவன்களை எப்படி அழிப்பது என்ற கவலையில் இருக்கின்றனர் அதன் ஊழியர்கள். 

அமெரிக்கா அதிபர்களின் வசிப்பிடமாகவும், அமெரிக்க அரசாங்கத்தின் தலைமையகமாகவும் உள்ளது வெள்ளை மாளிகை. இந்த வெள்ளை மாளிகையை வடிவமைத்தவர் அயர்லாந்தை பூர்வீகமாகக் கொண்ட கட்டிடக் கலைஞர் ஜேம்ஸ் ஹோவன் என்பவர்.  வெள்ளை மாளிகைக்கு White House என்று பெயர் சூட்டியவர் அமெரிக்காவின் 26-வது ஜனாதிபதியான தியோடர் ரூஸ்வெல்ட்.

அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டனின் பதவிக் காலத்தில் 1792-ம் ஆண்டு, அமெரிக்க அதிபர்கள் வசிப்பதற்கு தனிப்பட்ட ஒரு மாளிகை நிர்மாணிக்க முடிவெடுக்கப்பட்டது. ஆனால் ஜார்ஜ் வாஷிங்டன் இம்மாளிகையில் வசிக்கவில்லை. காரணம் இம்மாளிகையின் கட்டிடப் பணிகள் நிறைவடையும் முன்பே, 1799-ம் ஆண்டு அவர் இறந்துவிட்டார். வெள்ளை மாளிகைப் பணிகள் 1800-ம் ஆண்டில்தான் நிறைவடைந்தது. அதன்பின் அங்கு முதன்முதலில் வசித்தவர் ஜான் அடம்ஸ். இவர் அமெரிக்காவின் இரண்டாவது ஜனாதிபதி.

தற்போது வெள்ளை மாளிகை நிர்மாணித்து 225 ஆண்டுகளாகிவிட்டது. இம்மாளிகையினைப் பார்வையிட பொதுமக்களுக்கு 1805-ம் ஆண்டு முதல் அனுமதி இருந்தது. ஆனால் 9/11 தாக்குதலுக்குப் பிறகு, வெள்ளை மாளிகையினைப் பார்வையிட கட்டுப்பாடுகள் அதிகரித்துவிட்டது. வெள்ளை மாளிகையினைப் பார்வையிட ஒவ்வொரு வருடமும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் வருகை தருகின்றனராம்.

55000 சதுர அடி பரப்பளவில், 132 அறைகள், 35 குளியல் அறைகள், 6 அடுக்கு மாடி இருப்பிடங்களை வெள்ளை மாளிகை கொண்டுள்ளது. இதில் 412 கதவுகள், 147 ஜன்னல்கள், 8 மாடி படிக்கட்டுகள், 3 லிஃப்டுகள் ஆகியவற்றினையும் கொண்டுள்ளது. சுமார் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இங்கு பணிபுரிகின்றனர்.

இந்நிலையில், வெள்ளை மாளிகை குடியிருப்பில் சமீபகாலமாக எலிகள், எறும்புகள் மற்றும் கரப்பான்பூச்சிகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக அங்குள்ள ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையில் செயல்பட்டு வரும் அதிபரின் நிர்வாக இடம், கப்பல்படையின் உணவகம், விருந்தினரை வரவேற்கும் அறை உள்ளிட்டப் பகுதிகளில் எலிகளின் தொல்லை அதிகளவில் காணப்படுகிறது.

டிரம்பின் முக்கிய நிர்வாக அறையில் 4 இடங்களில் கரப்பான்பூச்சிகளின் தொல்லை அதிகரித்துள்ளது. மூத்த அதிகாரிகளின் அறைகளில் எறும்பு, மூட்டைப் பூச்சிகளின் தொல்லை அதிகரித்துள்ளது. 

இது தொடர்பாக வெள்ளை மாளிகை முழுவதும் பணிபுரியும் ஊழியர்கள் தரப்பில் இந்த ஆண்டில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் சில பிரச்னைகள் முன்னாள் அதிபர் ஒபாமா காலத்தில் இருந்தே தொடர்கின்றனவாம்.

அமெரிக்க பொது சேவை நிர்வாகம் தரப்பில் வெள்ளை மாளிகையின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை உடனடியாக சீர் செய்து தருவதாக உத்திரவாதம் அளித்துள்ளது. இரண்டாம் மாடியில் உள்ள டிரம்பின் மனைவி மெலனியா டிரம்பின் கிழக்கு அலுவலகத்தில் திரைச் சீலைகளை மாற்றும் பணி உத்தரவுகள் உள்ளிட்ட வெள்ளை மாளிகையிலிருந்து நூற்றுக்கணக்கண பராமரிப்பு வேலை உத்தரவுகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் அளிக்கப்பட்டுள்ளன. 

வெள்ளை மாளிகையின் பராமரிப்பு பணிகளை மேற்பார்வையிட்டு வரும் அமெரிக்காவின் ஜெனரல் சர்வீஸ் நிர்வாக அமைப்பின் முன்னாள் ஆய்வாளர் பிரையன் மில்லர் கூறுகையில் அவை மிகப் பழமை வாய்ந்த கட்டிடங்கள். பழைய மாளிகையைச் சீர் அமைப்பது எத்தகைய சிரமமான பணி என்று கூறினார்.

சதுர அடிக்கு 2.13 டாலர்கள் என்ற அடிப்படையில் மொத்தம் ஒரு லட்சம் டாலர்களை ஒவ்வொரு ஆண்டும் இம்மாளிகையின் சீரமைப்புப் பணிக்காக செலவிடப்படுவது குறிப்பிடத்தக்கது.

]]>
அமெரிக்க அதிபர், america, White house, வெள்ளை மாளிகை, Trumph, டொனல்ட் டிரம்ப் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/3/w600X390/rat_in_white_house.jpg http://www.dinamani.com/world/2017/dec/03/white-house-plagued-by-cockroaches-mice-and-broken-toilet-seats-2819671.html
2819310 உலகம் இந்திய கடற்படைக்கு காமோவ் 226டி ஹெலிகாப்டர்கள் வழங்க ரஷிய நிறுவனம் விருப்பம் DIN DIN Sunday, December 3, 2017 05:05 AM +0530 இந்திய கடற்படைக்கு 111 ஹெலிகாப்டர்களை கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், தங்களது தயாரிப்பான காமோவ் 226டி ஹெலிகாப்டர்களை வாங்குவது குறித்து இந்திய கடற்படை பரிசீலிக்க வேண்டும் என்று ரஷிய நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது.
இந்திய கடற்படைக்கு சுமார் ரூ.21 ஆயிரம் கோடி செலவில் 111 ஹெலிகாப்டர்கள் கொள்முதல் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கான ஒப்புதல், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அண்மையில் நடைபெற்ற உயர்நிலை கூட்டத்தில் வழங்கப்பட்டது.
இந்நிலையில், தங்களது தயாரிப்பான காமோவ் 226டி ஹெலிகாப்டர்களை வாங்குவது குறித்து இந்திய கடற்படை பரிசீலிக்க வேண்டும் என்று, ரஷிய தலைநகர் மாஸ்கோவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ரஷியன் ஹெலிகாப்டர் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆண்ட்ரே போகினிஸ்கி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்திய ராணுவம், விமானப் படைக்காக 200 காமோவ் 226டி ஹெலிகாப்டர்களைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தம், இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் மற்றும் ரஷியன் ஹெலிகாப்டர் நிறுவனம் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டில் கையெழுத்தானது. பிரதமர் மோடியின் ரஷிய வருகையின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அதற்கான நடைமுறைகள், கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டன. அந்த ஒப்பந்தத்தின்படி, 60 ஹெலிகாப்டர்கள் ரஷியாவிலும், 140 ஹெலிகாப்டர்கள் இந்தியாவிலும் தயாரிக்கப்படவுள்ளன.
இந்நிலையில், இந்திய கடற்படை 111 ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கு முடிவு செய்துள்ளது. நவீன மாற்றங்களுடன் கூடிய காமோவ் 226டி ஹெலிகாப்டர்கள், இந்திய கடற்படையின் தேவையை பூர்த்தி செய்யும் என கருதுகிறோம். அத்துடன், பராமரிப்பு, பயிற்சி உள்ளிட்டவற்றுக்கான செலவும் குறையும் என்பதால், காமோவ்226டி ஹெலிகாப்டர்களை தேர்வு செய்வது இந்திய கடற்படைக்கு நல்ல நடவடிக்கையாக இருக்கும் என்றார் அவர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/3/w600X390/Kamov_226_helicopter.jpg http://www.dinamani.com/world/2017/dec/03/இந்திய-கடற்படைக்கு-காமோவ்-226டி-ஹெலிகாப்டர்கள்-வழங்க-ரஷிய-நிறுவனம்-விருப்பம்-2819310.html
2819317 உலகம் அமெரிக்கா: குடியரசு கட்சி எம்.பி. வேட்பாளர் தேர்தலில் இந்திய வம்சாவளி பெண் போட்டி DIN DIN Sunday, December 3, 2017 01:29 AM +0530 அமெரிக்காவின் இல்லினாய்ஸ் தொகுதி நாடாளுமன்ற கீழவை உறுப்பினர் (எம்.பி.) பதவிக்கு குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளரைத் தேர்வு செய்வதற்கான தேர்தலில் இந்திய வம்சாவளி பெண் வந்தனா ஜிங்கன் போட்டியிடவுள்ளார்.
அவரை எதிர்த்து அதே கட்சியைச் சேர்ந்த மற்றொரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான ஜிதேந்திர "ஜேடி' திகான்கரும் வேட்பாளர் தேர்தலில் போட்டியிடுகிறார்.
அடுத்த ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி நடைபெறவுள்ள இத்தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் இல்லினாய்ஸ் மாகாணத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக 
அறிவிக்கப்படுவர்.
வேட்பாளர் தேர்தலில் வந்தனா வெற்றி பெறும் பட்சத்தில், இல்லினாய்ஸ் மாகாணத்தில் தற்போது எம்.பி.யாகப் பதவி வகித்துவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சியின் ராஜா கிருஷ்ணமூர்த்தியை எதிர்த்து போட்டியிடுவார்.
இவர், கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எம்.பி.யாக முதல் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இல்லினாய்ஸ் தொகுதியில் ஜனநாயகக் கட்சிக்கு அதிக செல்வாக்கு உள்ளது.
வேலைவாய்ப்பு, நிதி விவகாரம், வெளியுறவுக் கொள்கை ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவேன் என்று வந்தனா வாக்குறுதி அளித்துள்ளார். டிவி ஏசியாவில் செய்தியாளராக இவர் பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் அமி பெரா, ரோ கன்னா, பிரமிளா ஜெயபால் ஆகியோரும் உறுப்பினர்களாக உள்ளனர்.
அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபைக்கு (மேலவை) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ், முதல் முறையாகத் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

]]>
http://www.dinamani.com/world/2017/dec/03/அமெரிக்கா-குடியரசு-கட்சி-எம்பி-வேட்பாளர்-தேர்தலில்-இந்திய-வம்சாவளி-பெண்-போட்டி-2819317.html
2819312 உலகம் உலகத் தொழில்முனைவோர் மாநாடு: மோடிக்கு டிரம்ப் பாராட்டு DIN DIN Sunday, December 3, 2017 01:17 AM +0530 பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை தொலைபேசியில் அழைத்து உரையாடினார்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாற்றினார். அப்போது, அண்மையில் இந்தியாவில் உலகத் தொழிலதிபர் மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது குறித்து இரு தலைவர்களும் தங்களது திருப்தியைப் பரிமாறிக் கொண்டனர்.
இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து நடத்திய அந்த மாநாட்டில், 38 அமெரிக்க மாகாணங்கள், கொலம்பியா, பியூர்டோரிகோ தீவு ஆகியவை உள்பட உலகம் முழுவதிலும் இருந்து தொழில்முனைவோரும், முதலீட்டாளர்களும் பங்கேற்றனர்.
தொழிற்துறையில் பெண்களுக்கு அதிக அதிகாரம் பெறச் செய்வதை மையமாகக் கொண்டு அந்த மாநாடு நடைபெற்றது. தொழில்நுட்பங்களைப் பெறுவதிலும், ஊட்டச் சத்துணவுகள், சுகாதார வசதிகள் ஆகியவற்றைப் பெறுவதிலும் பாலினப் பாகுபாடு நிலவி வருகிறது. இதந் காரணமாக, தொழிற்துறையில் பெண்களால் முழுத் திறனையும் காட்ட முடிவதில்லை என்றார் அவர்.
தெலங்கானா தலைநகர் ஹைதராபாதில் கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெற்ற 3 நாள் உலகத் தொழில்முனைவோர் மாநாட்டில், அமெரிக்கா சார்பில் பங்கேற்ற குழுவுக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகளும், அவரது முதுநிலை ஆலோசகருமான இவாங்கா டிரம்ப் தலைமை வகித்தது நினைவுகூரத்தக்கது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/21/w600X390/donald_trump.jpg http://www.dinamani.com/world/2017/dec/03/உலகத்-தொழில்முனைவோர்-மாநாடு-மோடிக்கு-டிரம்ப்-பாராட்டு-2819312.html
2819307 உலகம் சர்வதேச கடல்சார் அமைப்பின் தேர்தல்: இந்தியா மீண்டும் வெற்றி DIN DIN Sunday, December 3, 2017 01:02 AM +0530 சர்வதேச கடல்சார் அமைப்பின் கவுன்சில் (ஐஎம்ஓ) தேர்தலில் இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.
லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச கடல்சார் அமைப்பின் உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல், வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில், இந்தியா சார்பில் பிரிட்டனுக்கான இந்தியத் தூதர் ஒய்.கே.சின்ஹா கலந்து கொண்டார்.
ஜெர்மனி 146 வாக்குகள் பெற்று முதலிடத்தைப் பிடித்தது. "பி' பிரிவில் நடைபெற்ற தேர்தலில், இந்தியா 144 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது. ஆஸ்திரேலியா, 143 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்தன.
சர்வதேச கடல்சார் அமைப்பு, நாடுகளுக்கு இடையே கடல்சார் பாதுகாப்பு, வர்த்தகம் ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த அமைப்பில், இந்தியா கடந்த 1959-ஆம் ஆண்டில் இருந்து உறுப்பினராக உள்ளது.
கடந்த தில தினங்களுக்கு முன் லண்டன் சென்றிருந்தபோது, சர்வதேச கடல்சார் அமைப்பின் தலைமையகத்தில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி உரையாற்றினார். அப்போது, கடல்சார் அமைப்பின் தேர்தலில் இந்தியா மீண்டும் வெற்றி பெற்றால், அந்த அமைப்பின் நோக்கங்கள் நிறைவேற இந்தியா மீண்டும் ஒத்துழைப்பு அளிக்கும் என்று கட்கரி உறுதியளித்திருந்தார்.

]]>
http://www.dinamani.com/world/2017/dec/03/சர்வதேச-கடல்சார்-அமைப்பின்-தேர்தல்-இந்தியா-மீண்டும்-வெற்றி-2819307.html
2819305 உலகம் லண்டன் மேயர் இன்று இந்தியா வருகை DIN DIN Sunday, December 3, 2017 12:53 AM +0530 "பிரெக்ஸிட்'டுக்குப் பிறகும் பிரிட்டன் தலைநகர் லண்டனில் இந்தியாவுக்குள்ள தொழில் வாய்ப்புகள் குறித்து விளக்குவதற்காக, அந்த நகர மேயர் சாதிக் கான் ஞாயிற்றுக்கிழமை (டிச. 3) இந்தியா வருகிறார்.
இந்தியாவில் மும்பை, தில்லி, அமிருதசரஸ் ஆகிய நகரங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அவர், மூத்த அரசியல் தலைவர்கள், முன்னணி தொழிலதிபர்கள், பிராந்தியத் தலைவர்கள், பாலிவுட் பிரபலங்கள் ஆகியோரைச் சந்தித்துப் பேசுகிறார். அவருடன், வர்த்தகத்துக்கான துணை மேயர் ராஜேஷ் அகர்வாலும் வருகிறார்.
இந்தியாவில் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு, பாகிஸ்தானின் லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி ஆகிய நகரங்களிலும் சாதிக் கான் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகியதற்குப் பிறகு ஏற்பட்டுள்ள புதிய வர்த்தகச் சூழலில், இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு உள்ள சாதக அம்சங்களை விளக்கும் நோக்கில் இருநாடுகளின் 6 நகரங்களிலும் அவர் 6 நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
வர்த்தக முதலீடுகள், உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பாக மேயர் சாதிக் கான், துணை மேயர் ராஜேஷ் அகர்வால் ஆகியோர் அந்த நகரங்களில் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் எனத் தெரிகிறது.
 

]]>
http://www.dinamani.com/world/2017/dec/03/லண்டன்-மேயர்-இன்று-இந்தியா-வருகை-2819305.html
2819298 உலகம் பாகிஸ்தான் கல்வி நிலைய தாக்குதல் தொடர்பாக 9 பேர் கைது DIN DIN Sunday, December 3, 2017 12:42 AM +0530 பாகிஸ்தானில் வேளாண் பயிற்சி மையத்தில் தாக்குதல் நடத்தியது தொடர்பாக 9 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். 
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தாதவது:
கைபர் பக்துன்குவா மாகாண தலைநகர் பெஷாவரில் அமைந்துள்ள வேளாண் பயிற்சி மையத்தில் தலிபான் பயங்கரவாதிகள் வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தினர். ஆட்டோவில் பர்கா அணிந்து வந்த மூன்று பயங்கரவாதிகள் வேளாண் கல்வி மைய விடுதிக்குள் நுழைந்து கண்மூடித்தனமாக நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் ஆறு மாணவர்கள் உள்பட 12 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 35 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
பின்னர் அதிரடி படையினர் நடத்திய பதிலடித் தாக்குதலில் அந்த மூன்று பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில், அந்த தாக்குதலில் தொடர்புடைய மேலும் சில நபர்களை கைது செய்யும் வகையில் பத்பேர், டெலாபேண்ட் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தினர். அதன் பயனாக, பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 9 நபர்களை அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

]]>
http://www.dinamani.com/world/2017/dec/03/பாகிஸ்தான்-கல்வி-நிலைய-தாக்குதல்-தொடர்பாக-9-பேர்-கைது-2819298.html
2819239 உலகம் வட கொரியா விவகாரம்: அமைச்சர்களின் அவசரக் கூட்டத்துக்கு ஜப்பான் அழைப்பு DIN DIN Sunday, December 3, 2017 12:21 AM +0530 வட கொரியா விவகாரம் குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத் துறை அமைச்சர்களின் அவசரக் கூட்டத்துக்கு ஜப்பான் அழைப்பு விடுத்துள்ளது.
வட கொரியாவின் புதிய சக்தி வாய்ந்த ஏவுகணை சோதனை கிழக்கு ஆசிய பகுதியில் பெரும் பதற்ற நிலையைத் தோற்றுவித்துள்ளது. இந்நிலையில், இந்த விவகாரத்தைக் குறித்து விவாதிக்க அவசரக் கூட்டம் நடத்த வேண்டும் என்று ஐ.நா.வுக்கான ஜப்பான் தூதர் கோரோ பெஷ்ஷோ கூறினார். நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது: 
வட கொரியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. அவற்றையும் மீறி அந்த நாடு அண்மையில் ஏவுகணை சோதனை மேற்கொண்டது. முந்தைய தடைகளையும் அந்நாடு மீறியுள்ளது என்பது தெரிந்ததே. எனவே இவற்றையெல்லாம் கடந்து நாம் வட கொரியாவுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
புதிய ஏவுகணை சோதனையின் பின்னணியில், எந்த வகையான சர்வதேச நடவடிக்கை சரியான பயன் தரும் என்பது குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத் துறை அமைச்சர்களின் அவசரக் கூட்டம் நடத்த ஜப்பான் அழைப்பு விடுத்துள்ளது. அதில் எடுக்கப்படும் முடிவு நிரந்தர உறுப்பு நாடுகளின் பரிசீலனைக்கு அளிக்கப்படும்.
எந்த விதத்திலாவது வட கொரியாவின் அணு ஆயுதக் குவிப்பைத் தடுக்க வேண்டும். 
உலகில் அணு ஆயுதத் தாக்குதலுக்கு உள்ளான ஒரே நாடு என்ற வகையிலும் வட கொரியா தற்போது குறி வைத்துள்ள நாடு என்ற வகையிலும் ஜப்பான் அதனை வலியுறுத்தும் என்றார் அவர்.
இதனிடையே, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வட கொரியா விவகாரம் குறித்துப் பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் பேசுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதின்மூன்றாயிரம் கிலோமீட்டர் தொலைவு பறந்து அமெரிக்க நகரங்களைத் தாக்க வல்லதாகக் கூறப்படும் சக்தி வாய்ந்த ஏவுகணையை வட கொரியா கடந்த புதன்கிழமை வெற்றிகரமாக சோதனை செய்தது.
போரைத் தூண்டும் விதமாக அந்நாடு நடந்து கொள்கிறது என்று ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி தெரிவித்திருந்தார். அமெரிக்காவுடன் மோதினால் வட கொரியா முற்றிலுமாக அழிந்துவிடும் என்று அவர் பாதுகாப்பு கவுன்சில் நடத்திய அவசர கூட்டத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது.

]]>
http://www.dinamani.com/world/2017/dec/03/வட-கொரியா-விவகாரம்-அமைச்சர்களின்-அவசரக்-கூட்டத்துக்கு-ஜப்பான்-அழைப்பு-2819239.html
2819238 உலகம் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் DIN DIN Saturday, December 2, 2017 11:58 PM +0530 அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜிம் மேட்டிஸ், முக்கியத்துவம் வாய்ந்த மத்திய கிழக்கு நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தை சனிக்கிழமை தொடங்கினார்.
இதுகுறித்து ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்தது:
இருதரப்பு உறவுகளை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜிம் மேட்டிஸ், மத்திய கிழக்கு , மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை சனிக்கிழமை தொடங்கினார். 
சுற்றுப் பயணத்தின் முதல் நாளான டிசம்பர் 2ஆம் தேதி எகிப்து செல்லும் அவர் அந்நாட்டின் அதிபர் அல்-சிசி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் செட்கி úஸாபியை சந்தித்துப் பேசவுள்ளார்.
டிசம்பர் 3ஆம் தேதி ஜோர்டானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர், மன்னர் அப்துல்லாவை சந்தித்து உரையாடுகிறார். அப்போது, மேற்கு ஆப்பிரிக்காவில் நிலவும் வன்முறை சூழல் குறித்தும், அதை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இருவரும் விவாதிக்க உள்ளனர்.
ஜோர்டான் பயணத்தை முடித்துக் கொண்டு, டிசம்பர் 4ஆம் தேதி பாகிஸ்தான் செல்லும் மேட்டிஸ் , அந்நாட்டு பிரதமர் ஷாஹித் அப்பாஸி மற்றும் ராணுவ தலைமை தளபதி கமர் ஜாவேத் பாஜ்வா ஆகியோரை சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார்.
சுற்றுப்பயணத்தின் இறுதி நாளான டிசம்பர் 5ஆம் தேதி குவைத்தில் அரசர் ஸபா அகமது அல்ஸபா, இதர தலைவர்களையும் சந்தித்துப் பேசவுள்ளார் என பென்டகன் தெரிவித்தது.
ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளின் தளபதி ஜான் நிக்கல்ஸன், பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் பாகிஸ்தான் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற தவறிவிட்டது என ஒரு வாரத்துக்கு முன்பாக வெளிப்படையாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில், அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜிம் மேட்டிஸ் பாகிஸ்தானுக்கு செல்லவுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

]]>
http://www.dinamani.com/world/2017/dec/02/அமெரிக்க-பாதுகாப்புத்-துறை-அமைச்சர்-மத்திய-கிழக்கு-நாடுகளுக்கு-சுற்றுப்பயணம்-2819238.html
2819237 உலகம் அமைச்சர் பதவிப் பறிப்பு செய்திக்கு டிரம்ப் திட்டவட்ட மறுப்பு DIN DIN Saturday, December 2, 2017 11:58 PM +0530 அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சனை பதவியிலிருந்து நீக்கும் எண்ணமில்லை என்று அதிபர் டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
டில்லர்சன் மீது டிரம்ப்புக்கு ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவரது அமைச்சர் பதவியைப் பறிக்கப் போவதாக நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட ஊடகங்களில் செய்தி வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் அது தவறான செய்தி என்று தற்போது டிரம்ப் மறுப்பு தெரிவித்துள்ளார். "வெளியுறவுத் துறை அமைச்சர் பதவியிலிருந்து டில்லர்சனை நீக்கும் எண்ணம் இல்லை' என்று அதிபர் டிரம்ப் தனது டுவிட்டர் கணக்கில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருக்கிறார். சுட்டுரைப் பதிவில் டிரம்ப் குறிப்பிட்டிருப்பது:
ரெக்ஸ் டில்லர்சனை நீக்கப் போவதாக ஊடகங்கள் ஊகச் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. அவர் பதவியைப் பறித்துவிட்டேன் என்றும் அவர் விலகிவிட்டார் என்றும் பல விதமாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அது பொய் செய்தி. சில விவகாரங்களில் எங்களுக்குள் கருத்து வேறுபாடு உள்ளது என்றாலும் அதிபர் என்ற முறையில் இறுதி முடிவு என்னுடையதாக உள்ளது. அமெரிக்காவின் கண்ணியத்தையும் கெளரவத்தையும் உயர்த்தும் விதமாக இருவரும் இணைந்து செயல்பட்டு வருகிறோம் என்று டிரம்ப் தனது சுட்டுரைப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
டிரம்ப் வெளியிட்ட இந்த சுட்டுரைப் பதிவின் மூலம், டில்லர்சனின் பதவி விலகல் குறித்து கடந்த சில நாட்களாக அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டு வந்த ஊகச் செய்திகளால் ஏற்பட்ட பரபரப்பு முடிவுக்கு வந்திருக்கிறது.
டில்லர்சன் பதவிப் பறிப்பு என்ற வதந்தி வலம் வரத் தொடங்கியதுமே, அதை மறுக்கும் விதமாக, அவர் அமைச்சர் பதவியில் தொடர்கிறார் என்றும் டிரம்ப்புக்கு எதிரான எண்ணங்கள் கொண்ட ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் ஏற்கெனவே அதிபர் வட்டாரங்கள் தெரிவித்து வந்தன. அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ், வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹெதர் நோவர்ட் ஆகியோரும் ஊடகச் செய்திகளை மறுத்தனர். எனினும் டில்லர்சன் விவகாரத்தால் எழுந்த பரபரப்பு அடங்கவில்லை.
இந்த நிலையில், அதிபர் டிரம்ப்பின் டுவிட்டர் பதிவு வெளியாகி நிலைமையைத் தெளிவுபடுத்தியுள்ளது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/22/w600X390/trump.jpg http://www.dinamani.com/world/2017/dec/02/அமைச்சர்-பதவிப்-பறிப்பு-செய்திக்கு-டிரம்ப்-திட்டவட்ட-மறுப்பு-2819237.html
2819236 உலகம் வதந்தி என்னும் பயங்கரவாதத்தை எதிர்க்க போப் பிரான்சிஸ் வலியுறுத்தல் DIN DIN Saturday, December 2, 2017 11:57 PM +0530 பல்வேறு பிரிவினரிடையே பிளவை ஏற்படுத்தும் வதந்தி என்னும் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும் என்று போப் பிரான்சிஸ் கூறினார்.
வங்கதேச சுற்றுப் பயணத்தின் இறுதி நிகழ்ச்சியாக, அந்நாட்டின் சிட்டகாங் நகரில் உள்ள புனித ரோசரி தேவாலயத்தில் சனிக்கிழமை அவர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியது:
முன்பே எழுதித் தயார் செய்த 8 பக்க உரையை நான் வாசிக்கப் போவதில்லை. என் உள்ளத்திலிருந்து எழும் வார்த்தைகளை உங்களிடம் கூறப் போகிறேன். 
வதந்தி என்பது தனி மனிதனையும் சமூகத்தையும் அழிக்க வல்லது. 
வதந்திகளால் எத்தனையோ
மதப் பிரிவுகள் அழிக்கப்பட்டுள்ளன என்பதை எனது சொந்த அனுபவத்திலேயே கண்டிருக்கிறேன். நாவடக்கத்துடன் இருப்பது அவசியம்.
வதந்தி என்பது வெடிகுண்டு போல செயல்படக் கூடியது. வெளியுலக வாழ்க்கையிலிருந்து ஒதுங்கி இறைவாழ்வில் ஈடுபட்டிருப்போரிடையே வதந்தி என்னும் வெடிகுண்டு பெரும் சேதத்தை விளைவிக்கும். 
அதே போல பல்வேறு பிரிவினரிடையே பிளவை ஏற்படுத்தக் கூடியது வதந்தி. 
அந்த வதந்தி என்னும் பயங்கரவாதத்தை நாம் முழு மூச்சுடன் எதிர்க்க வேண்டும் என்றார் அவர்.
எழுதித் தயார் செய்த உரையை நான் வாசிக்க விரும்பவில்லை என்று தொடக்கத்தில் குறிப்பிட்ட போப் பிரான்சிஸ், சிரிப்பையும் சிந்தனையையும் தூண்டும் விதமாக 15 நிமிஷ நேரம் உரையாற்றினார்.
முன்னதாக, வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்துள்ள ரோஹிங்கயாக்களின் துயரத்துக்காகத் தான் வருந்துவதாக குறிப்பிட்டார்.
மியான்மரிலிருந்து வந்த அகதிகளை "ரோஹிங்கயா' என்று முதல் முறையாக அவர் குறிப்பிட்டார்.
வங்கதேசம் வருவதற்கு முன்னர் அவர் மியான்மர் சென்றாலும் கூட, முஸ்லிம் பிரிவினரை ரோஹிங்கயா என்று குறிப்பிடவில்லை. 
அது மியான்மர் அரசுக்கு ஏற்புடையதாக இருக்காது என்பதால் அவர் "ரோஹிங்கயா' என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை.
மியான்மர் சுற்றுப் பயணத்தின்போது அந்நாட்டு ராணுவத் தலைமை தளபதி, தேசிய ஆலோசகர் ஆங் சான் சூகி ஆகியோரை அவர் சந்தித்தார்.
மியான்மர் ராணுவத்தினரின் அடக்குமுறையைத் தொடர்ந்து, 6 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கயாக்கள் அகதிகளாக வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். 
இந்தச் சூழலில் அவ்விரு நாடுகளுக்கும் போப் பிரான்சிஸ் சுற்றுப் பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
"ரோஹிங்கயா' என்னும் சொல்லை மியான்மரில் பயன்படுத்தாமல், அவர்கள் தஞ்சம் புகுந்துள்ள வங்கதேசத்தில் பேசும்போது போப் பிரான்சிஸ் குறிப்பிட்டார். இது சர்வதேச விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
மியான்மர், வங்கதேச சுற்றுப் பயணத்தை நிறைவு செய்து அவர் வாடிகனுக்கு சனிக்கிழமை திரும்பினார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/2/w600X390/pope.jpg http://www.dinamani.com/world/2017/dec/02/வதந்தி-என்னும்-பயங்கரவாதத்தை-எதிர்க்க-போப்-பிரான்சிஸ்-வலியுறுத்தல்-2819236.html
2818619 உலகம் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் பதவி பறிப்பா? DIN DIN Saturday, December 2, 2017 12:56 AM +0530 அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் பதவியைப் பறிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார் என்ற ஊடகத் தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிபர் டிரம்ப்பின் அதிருப்தியைத் தொடர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சர் பதவியிலிருந்து ரெக்ஸ் டில்லர்சன் நீக்கப்படுவார் என்று நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. 
டில்லர்சனுக்கு பதிலாக மைக் பொம்பியோ அப்பொறுப்புக்கு வரவுள்ளார் என்றும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது.
எனினும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் இந்தத் தகவலைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அந்த அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹெதர் நோவர்ட் செய்தியாளர்களிடம் கூறியது:
அதிபர் டிரம்ப்பின் வெற்றிகரமான ஓராண்டு கால ஆட்சியைக் கொண்டாடும் இந்த வேளையில் சில ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் ஊகச் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சராக ரெக்ஸ் டில்லர்சன் பல முக்கியப் பங்களிப்புகளைச் செய்துள்ளார். ஐரோப்பிய யூனியன், மேற்கு ஆசிய நாடுகள் தொடர்பான உறவுகள் உறுதி பெற்றுள்ளன. அவர் பதவி விலகுவதாக வந்த தகவல்கள் முற்றிலும் தவறானது என்றார்.
எக்ஸான் மொபில் என்னும் பன்னாட்டு எண்ணெய் நிறுவனத்தின் தலைவர் பதவி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் இருந்த ரெக்ஸ் டில்லர்சனை அதிபர் டிரம்ப் வெளியுறவுத் துறை அமைச்சராக அறிவித்தார்.
எனினும், ஈரான் அணு ஆராய்ச்சி திட்டம், வட கொரியா விவகாரத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பது அவர்கள் வெளியிட்டு வரும் கருத்துகளிலிருந்து தெரிய வந்தது. அணு ஆராய்ச்சி குறித்து ஈரானுடனான சர்வதேச ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று டிரம்ப் கூறி வரும் நேரத்தில், அது தொடரலாம் என்று டில்லர்சன் கூறியுள்ளார். 
வட கொரியாவுடன் பேச்சு வார்த்தை நடத்த வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும் என்ற டில்லர்சனின் நிலைப்பாடு, காலத்தை வீணாக்கும் வேலை என்று டிரம்ப் கூறினார்.
இது போன்ற சம்பவங்களால் அதிருப்தி அடைந்துள்ள அதிபர் டிரம்ப், வெளியுறவுத் துறை அமைச்சர் பதவியிலிருந்து டில்லர்சனை நீக்கவுள்ளார் என்று ஊகச் செய்தி வலம் வரத் தொடங்கியுள்ளது.
டில்லர்சனுக்கு பதிலாக, அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வின் முன்னாள் தலைவர் மைக் பொம்பியோ வெளியுறவுத் துறை அமைச்சராவார் என்றும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/2/w600X390/trump.jpg ரெக்ஸ் டில்லர்சன் டொனால்ட் டிரம்ப் http://www.dinamani.com/world/2017/dec/02/அமெரிக்க-வெளியுறவுத்-துறை-அமைச்சர்-பதவி-பறிப்பா-2818619.html
2818618 உலகம் 'வட கொரியாவில் ஆட்சி மாற்றமல்ல அமெரிக்காவின் குறிக்கோள்' DIN DIN Saturday, December 2, 2017 12:55 AM +0530 வட கொரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவது அமெரிக்காவின் குறிக்கோள் அல்ல என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
வட கொரியா விவகாரம் குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தது: 
அமெரிக்காவைப் பொருத்தவரை, வட கொரியா விவகாரத்தில் ஒரே லட்சியம்தான் உள்ளது. கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுத அச்சுறுத்தல் இல்லாத பிரதேசமாக்குவது. அதற்கு மட்டுமே அமெரிக்கா முக்கியத்துவம் அளிக்கிறது. அதற்கான முயற்சிகளை மட்டுமே அதிபர் டிரம்ப் மேற்கொண்டு வருகிறார். அதைத் தவிர வேறு எதைப் பற்றியும் இப்போது சிந்திக்கவில்லை. 
வட கொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல் குறித்து உலகத் தலைவர்களுடன் அதிபர் டிரம்ப் தொடர்ந்து பேசி வருகிறார். அந்தப் பேச்சுவார்த்தைகளிலும் சரி, அதிபர் தனிப்பட்ட முறையல் தெரிவித்து வரும் கருத்துகளிலும் சரி, வட கொரியாவில் ஆட்சி மாற்றம் குறித்து எதையும் குறிப்பிட்டதில்லை. வட கொரியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது அமெரிக்காவின் குறிக்கோள் அல்ல என்று சாரா சாண்டர்ஸ் கூறினார்.
இதைத் தவிர, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் செய்தித் தொடர்பாளர் ஹெதர் நோவர்ட் கூறியது: 
வர்த்தகம் மூலம் கிடைத்து வரும் நிதியைக் கொண்டுதான் தடை செய்யப்பட்ட ஆயுத ஆராய்ச்சிகளை வட கொரியா மேற்கொண்டு வருகிறது. அந்த வருவாயை முற்றிலும் முடக்க உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அதிபர் டிரம்ப்பின் அழைப்பை ஏற்று, வட கொரியாவில் உள்ள தங்கள் தூதரக அதிகாரிகள், ஊழியர்கள் எண்ணிக்கையைக் குறைக்க ஜெர்மனி முடிவு செய்துள்ளது வரவேற்கத்தக்கது. அதே போல, ஜெர்மனியில் உள்ள வட கொரிய தூதரக ஊழியர்கள் எண்ணிக்கையையும் குறைக்க வலியுறுத்தியுள்ளது. இது போன்ற சர்வதேச நெருக்குதல்கள் காரணமாக வட கொரியா தனது விரோதப் போக்கைக் கைவிடும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பல்வேறு கடுமையான தடைகளையும் மீறி, வட கொரியா கடந்த புதன்கிழமை ஏவுகணை சோதனை மேற்கொண்டது. மிக சக்தி வாய்ந்த அந்த ஹவாúஸாங்-15 ரக ஏவுகணை, ஆயிரம் கிலோ எடையுள்ள ஆயுதத்தை தாங்கி 13,000 கி.மீ. தொலைவு பறந்து தாக்க வல்லது என்று முதல் கட்ட ஆய்வுகள் கூறுகின்றன. 
அமெரிக்காவின் எந்தப் பகுதியையும் இலக்கு வைத்து அந்த ஏவுகணையைச் செலுத்த முடியும் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர். இது வட கொரிய ராணுவத்தில் உடனடியாக ஈடுபடுத்த முடியுமா என்பது குறித்து தற்போதைக்கு எந்தத் தகவலும் இல்லை.
எனினும், அந்த ஏவுகணையில் உண்மையான 1 டன் எடையுள்ள ஆயுதத்தைப் பொருத்திப் பறக்கச் செய்தால், அது முதலில் பல்லாயிரக் கணக்கான கிலோமீட்டர்கள் விண்வெளியில் உயரப் பறந்து, பின்னர் பூமியின் வளி மண்டலத்துக்குள் மீண்டும் பிரவேசித்து 13,000 கி.மீ. தொலைவிலுள்ள இலக்கை வெற்றிகரமாக எட்டுமா என்பது குறித்து சந்தேகம் நிலவுகிறது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/2/w600X390/sara.jpg http://www.dinamani.com/world/2017/dec/02/வட-கொரியாவில்-ஆட்சி-மாற்றமல்ல-அமெரிக்காவின்-குறிக்கோள்-2818618.html
2818617 உலகம் ஜப்பான் பேரரசர் 2019-இல் அரியணை துறப்பார்' DIN DIN Saturday, December 2, 2017 12:55 AM +0530 ஜப்பான் பேரரசர் அகிஹிடோ வரும் 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் இறுதியில் அரியணை துறப்பார் என்று அந்நாட்டு பிரதமர் ஷின்ஸோ அபே அறிவித்தார்.
இது தொடர்பாக தலைநகர் டோக்கியோவில் வெள்ளிக்கிழமை அவர் தெரிவித்தது:
பேரரசரின் ஆலோசனைக் குழு நடத்திய சிறப்புக் கூட்டத்தில் பேரரசர் அரியணை துறப்பது எப்போது என்பது குறித்து சுமுகமான முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, வரும் 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி அவர் அரியணை துறப்பார். அதைத் தொடர்ந்து, அடுத்த பேரரசரின் முடிசூட்டு விழா நடைபெறும். ஜப்பானின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த முக்கிய நிகழ்ச்சிகளை நாட்டு மக்கள் அனைவரும் இனிதே கொண்டாடும் விதத்தில் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் என்று பிரதமர் ஷின்ஸோ அபே கூறினார்.
ஜப்பானின் கடந்த 2,600 ஆண்டு சரித்திரத்தில் பல மன்னர்கள் அரியணை துறந்ததாகத் தெரிகிறது. எனினும் கடந்த இரு நூற்றாண்டுகளில் எந்தப் பேரரசரும் அரியணை துறந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தந்தையின் மறைவுக்குப் பிறகு 1990-ஆம் ஆண்டில் அகிஹிடோவுக்கு முடிசூட்டப்பட்டது. அவரது வம்சத்தில் 125-ஆவது பேரரசர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவருக்கு 83 வயதாகிறது. முதுமை காரணமாகத் தனது கடமைகளையாற்றுவதில் மிகவும் சிரமப்படுவதால் ஓய்வு பெற விரும்புவதாக அவர் கடந்த ஆண்டு அறிவித்தார். தற்போது அதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பேரரசர் அரியணை துறந்த அடுத்த நாள் அவரது மூத்த மகனான இளவரசர் நருஹிடோவுக்கு (57) முடிசூட்டு விழா நடைபெறும் என்று தெரிகிறது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/2/w600X390/japan.jpg http://www.dinamani.com/world/2017/dec/02/ஜப்பான்-பேரரசர்-2019-இல்-அரியணை-துறப்பார்-2818617.html
2818616 உலகம் கல்வி நிலையத்தில் பயங்கரவாதத் தாக்குதல்: பாகிஸ்தானில் 12 பேர் பலி DIN DIN Saturday, December 2, 2017 12:53 AM +0530 பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள வேளாண் பயிற்சி மையத்தில் பயங்கரவாதிகள் வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில் 12 பேர் பலியாகினர்.
பதற்றம் மிகுந்த கைபர் பக்துன்குவா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் வேளாண் பயிற்சி மையம் அமைந்துள்ளது. அந்த மையத்தில் நடந்த தாக்குதல் குறித்து மாகாண காவல் துறை தலைவர் சலாஹுதீன் கான் மெஹ்சூத் கூறியது: 
வேளாண் பயிற்சி மையத்துக்கு காலை வேளையில் ஆட்டோவில் மூன்று பேர் வந்திறங்கினர். அவர்கள் உடல் முழுவதையும் மறைக்கும் விதத்தில் பெண்கள் அணியும் பர்கா அணிந்திருந்தனர். அந்தக் கல்வி மையத்தின் மாணவர் விடுதிக் கட்டடத்துக்குள் நுழைந்த அவர்கள் திடீரென சரமாரியாகத் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். விடுமுறை நாளானதால் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் இல்லாவிட்டாலும் கூட, விடுதியில் சுமார் 100 மாணவர்கள் இருந்தனர்.
பயங்கரவாதிகளின் தாக்குதல் தொடங்கியதும் மாணவர்கள் சிதறி ஓடினர். எனினும் துப்பாக்கித் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். 
மேலும் 32 பேர் காயமடைந்தனர். வேளாண் கல்வி மையத்தில் பயங்கரவாதிகள் புகுந்த தகவல் கிடைத்ததும் ஆயுதப் போலீஸார் அப்பகுதிக்கு விரைந்தனர். இரு தரப்பினருக்கும் இடையே ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இறுதியில் பயங்கரவாதிகள் மூவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அவர்களிடமிருந்து ஏகே-47 ரக தானியங்கித் துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்துவதற்காக வெடிகுண்டுகள் பொருத்திய மூன்று சட்டைகள், வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன என்றார் அவர்.
இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) இயக்கம் பொறுப்பேற்றது.
பெஷாவரில் உள்ள ராணுவப் பள்ளியில் கடந்த 2014-ஆம் ஆண்டு தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 141 மாணவர்கள் பலியானது நினைவுகூரத்தக்கது.
 

]]>
http://www.dinamani.com/world/2017/dec/02/கல்வி-நிலையத்தில்-பயங்கரவாதத்-தாக்குதல்-பாகிஸ்தானில்-12-பேர்-பலி-2818616.html
2818615 உலகம் போதை மருந்து சிகிச்சை நடவடிக்கைகளுக்கு 3 மாத ஊதியத்தை நன்கொடையாக அளிக்க டிரம்ப் முடிவு DIN DIN Saturday, December 2, 2017 12:53 AM +0530 போதை மருந்து சிகிச்சை நடவடிக்கைகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மூன்று மாத ஊதியத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இதுகுறித்து சுகாதாரத் துறையின் செயலர் எரிக் ஹார்கன் தெரிவித்ததாவது: 
போதைப் பொருள்கள் காரணமாக அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் 175 பேர் உயிரிழக்கின்றனர். அதன் தீவிரத்தை உணர்ந்து டிரம்ப் அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டது முதல் நாடு முழுவதும் போதை மருந்து பழக்கத்துக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதிக போதை மருந்து உட்கொள்ளும் பிரச்னைகளால் பாதிக்கப்படவர்களை மீட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சுகாதாரத் துறை பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறது. அந்த முயற்சிக்கு நிதி உதவி செய்து ஊக்கமளிக்கும் வகையில் டிரம்ப் தனது மூன்று மாத ஊதியமான 1 லட்சம் டாலரை ஹெச்.ஹெச்.எஸ். துறைக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார் என்றார் அவர்.
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது டிரம்ப், தான் வெற்றிபெற்றால் ஊதியம் பெறப் போவதில்லை என்று தெரிவித்திருந்தார். ஆனால், அமெரிக்க சட்டப்படி அதிபராக பதவி வகிக்கும் ஒருவர் ஊதியம் பெறுவது கட்டாயமாக உள்ளது. இதையடுத்தே அதிபர் டிரம்ப், ஒவ்வொரு காலாண்டின் போது பெறும் ஊதியம் முழுவதையும் நற்பணிகளுக்கு நன்கொடையாக வழங்குவதென முடிவெடுத்தார். 
அதன்படி, முதல் காலாண்டு ஊதியத்தை அமெரிக்காவின் தேசிய பூங்கா பராமரிப்பு பணிகளுக்கும், இரண்டாம் காலாண்டு ஊதியத்தை கல்வி துறைக்கும் நன்கொடையாக வழங்கினார். இந்த நிலையில், தற்போது, மூன்றாம் காலாண்டு ஊதியத்தை போதை மருந்து சிகிச்சை நடவடிக்கைகளுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார். 
அமெரிக்க அதிபரின் ஆண்டு ஊதியம் 4 லட்சம் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

]]>
http://www.dinamani.com/world/2017/dec/02/போதை-மருந்து-சிகிச்சை-நடவடிக்கைகளுக்கு-3-மாத-ஊதியத்தை-நன்கொடையாக-அளிக்க-டிரம்ப்-முடிவு-2818615.html
2818614 உலகம் ஈரானில் நிலநடுக்கம் DIN DIN Saturday, December 2, 2017 12:52 AM +0530 மேற்கு ஈரானில் வெள்ளிக்கிழமை இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. கெர்மான் பகுதியை ஒட்டி கடலுக்கடியில் நிகழ்ந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 அலகுகளாகப் பதிவானது. இதனைத் தொடர்ந்து 10 நிமிட இடைவெளியில் ஏற்பட்ட மற்றொரு நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 அலகுகளாகப் பதிவானது. அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்களால் உயிர்சேதம், பொருள்சேதம் ஏற்பட மிகவும் வாய்ப்பு குறைவு என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஈரானில், இராக் எல்லையையொட்டியுள்ள கெர்மான்ஷா மாகாணத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பப்புவா நியூ கினியா தீவிலும் நிலநடுக்கம்:
பப்புவா நியூ கினியா தீவிலும் வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்து புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்ததாவது:
மோர்பி மாகாணத்தின் ஃபின்ஸ்ஹாஃபென் நகரத்திலிருந்து 59.1 கி.மீ. தொலைவில் உள்ள பகுதியை மையமாகக் கொண்டு வெள்ளிக்கிழமை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 
பூமிக்கடியில் 52 கி.மீ. ஆழத்தில் நிகழ்ந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.0 அலகுகளாகப் பதிவானது. இந்த நிலடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதாகவும், சிறிய அளவில் சேதம் ஏற்பட்டதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

]]>
http://www.dinamani.com/world/2017/dec/02/ஈரானில்-நிலநடுக்கம்-2818614.html
2818567 உலகம் வெள்ளை மாளிகையை ஆட்கொண்ட கரப்பான்களும், எலிகளும்! Raghavendran DIN Friday, December 1, 2017 05:59 PM +0530  

அமெரிக்காவின் அதிபர் வசிப்பதற்கென வாஷிங்டனில் வெள்ளை மாளிகை குடியிருப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அதிபராகத் தேர்வு செய்யப்படுபவர் தன்னுடைய குடும்பத்துடன் இங்கு வசிப்பது வழக்கம்.

அதுமட்டுமல்லாமல் அமெரிக்க அரசாங்கத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களின் தனி அறைகளும் இங்கு செயல்படுகின்றன. மேலும் இங்குதான் அமெரிக்க அரசாங்கத்தின் தலைமையகம் உள்ளது.

இந்நிலையில், வெள்ளை மாளிகை குடியிருப்பில் சமீபகாலமாக கரப்பான்பூச்சிகள் மற்றும் எலிகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக அங்குள்ள ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இங்கு பணிபுரிகின்றனர்.

அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முக்கிய நிர்வாக அறையில் 4 இடங்களில் கரப்பான்பூச்சிகளின் தொல்லை அதிகரித்துள்ளது. மூத்த அதிகாரிகளின் அறைகளில் எறும்பு, மூட்டைப் பூச்சிகளின் தொல்லை அதிகரித்துள்ளது.

வெள்ளை மாளிகையில் செயல்பட்டு வரும் அதிபரின் நிர்வாக இடம், கப்பல்படையின் உணவகம், விருந்தினரை வரவேற்கும் அறை உள்ளிட்டப் பகுதிகளில் எலிகளின் தொல்லை அதிகளவில் காணப்படுகிறது.

இதுதொடர்பாக வெள்ளை மாளிகை முழுவதும் பணிபுரியும் ஊழியர்கள் தரப்பில் இந்த ஆண்டில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட முறை கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க பொது சேவை நிர்வாகம் தரப்பில் வெள்ளை மாளிகையின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை உடனடியாக சீர்செய்வதாக தெரிவித்துள்ளது. மேலும் சதுர அடிக்கு 2.13 டாலர்கள் என்ற அடிப்படையில் மொத்தம் 1 லட்சம் டாலர்களை ஒவ்வொரு ஆண்டும் வெள்ளை மாளிகை சீரமைப்புக்காக செலவிடுவதாகவும் கூறியுள்ளது.

இதனிடையே கடந்த முறை ஒபாமா ஆட்சிக்காலத்தில் 2016-ம் ஆண்டு முதல் வெள்ளை மாளிகை சீரமைப்பு தொடர்பான கோரிக்கையை முன்வைத்து வருவதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

]]>
White house, வெள்ளை மாளிகை, அமெரிக்க அதிபர், US President http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/1/w600X390/whitehouse.jpg http://www.dinamani.com/world/2017/dec/01/white-house-infested-with-cockroaches-mice-2818567.html
2818564 உலகம் ஏஞ்சலினா ஜூலி போல ஆக நினைத்து 50 அறுவை சிகிச்சைகள் செய்த இளம்பெண்: விளைவு என்ன தெரியுமா?  DIN DIN Friday, December 1, 2017 05:22 PM +0530  

வாஷிங்டன்: பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி போல ஆக நினைத்து 50 முறை அறுவை சிகிச்சைகள் செயது கொண்ட ஈரானிய இளம்பெண் ஒருவரின் முகம் மாற்றம் அடைந்து கோரமாக காட்சியளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஹாலிவுட்டின் பிரபல நடிகை ஏஞ்சலினா ஜூலி. டாம்ப் ரைடர், மிஸ்டர் & மிசஸ் ஸ்மித் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர். இவருக்கு உலகம் முழுக்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

ஈரான் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஷாகர் தபார் (19). இவர் ஏஞ்சலினா ஜூலியின் தீவிர ரசிகை. எந்த அளவுக்கு ரசிகை என்றால், ஏஞ்சலினாவிற்காக எதையும் செய்வேன் என்ற மனப்பான்மை கொண்டவர்.

அதன் உச்சகட்டமாக தன்னை ஏஞ்சலினா போல மாற்றிக் கொள்ள நினைத்தார். ஷாகர் தபார். அதற்காக தொடர் அறுவை சிகிச்சைகள் செய்து கொள்ளவும் தயாரானார். கடந்த சில மாதங்களாக சீரான இடைவெளிகளில் 50 முறை அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டுள்ளார்.

இது மட்டும் போதாது என்று ஏஞ்சலினா போலவே உடல் அமைப்பிலும் காட்சி தர வேண்டி, கடுமையான  உணவு கட்டுப்பாட்டையும் மேற்கொண்டுள்ளார், இதன் காரணமாக தனது உடல் எடையில் 40 கிலோவை குறைத்து உள்ளார்.

இந்நிலையில் அறுவை  சிகிச்சைக்கு பின்னர் எடுக்கப்பட்ட தனது புகைப்படங்களை ஷாகர் தபார் இன்ஸ்டாகிராமில் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார். இதனால்  இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

ஆனால் அவரின் இந்த செயலுக்காகவும், அவரது மாறிய தோற்றம் குறித்தும் இன்ஸ்ட்டாகிராமில்  பலரும் அவரைக்  கடுமையாக விமர்சித்து காணப்படுகிறார்கள்.

இந்த தகவலை லண்டனில் இருந்து வெளிவரும் 'தி சன்' பத்திரிகை வெளியிட்டுள்ளது.

]]>
hollywood, angelina julie, Sahar Tabar, surgery, instagram, alien http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/1/w600X390/final.jpg http://www.dinamani.com/world/2017/dec/01/ஏஞ்சலினா-ஜூலி-போல-ஆக-நினைத்து-50-அறுவை-சிகிச்சைகள்-செய்த-இளம்பெண்-விளைவு-என்ன-தெரியுமா-2818564.html
2818536 உலகம் சப்பாத்தி செய்யத் தெரியாது; ஆனால் 'தால்' அசத்தி விடுவேன்: இது ஒபாமாவின் 'சமையல் டைம்'! IANS IANS Friday, December 1, 2017 01:49 PM +0530  

புதுதில்லி: எனக்கு சப்பாத்தி செய்யத் தெரியாது; ஆனால் 'தால்' அசத்தி விடுவேன் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

தில்லியில் ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்று நடத்தி வரும் தலைமைப்பண்பு தொடர்பான கருத்தரங்கத்தில் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொண்டார்.   

நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக பிரபல ஊடகவியலாளர் கரண் தாப்பருடன் கேள்வி-பதில் நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டார். அப்பொழுது அவர் பகிர்ந்து கொண்டதாவது:

முந்தைய நாள் இரவு தங்கும் விடுதியில் எனக்கு இரவு உணவு பரிமாறிய பணியாளர், உணவு மேஜையிலிருந்த 'தால்' குறித்து என்னிடம் சொல்லத் தொடங்கினார். அவரை இடைமறித்த நான், 'எனக்கு நீங்கள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை; கல்லூரிக் காலத்தில் எனக்கு அறை நண்பனாக இருந்த ஒரு இந்திய நண்பன் மூலம் எனக்கு ஏற்கனவே 'தால்'  எப்படி செய்வது என்று தெரியும்' என்று தெரிவித்ததாகக் கூறினார்.    

இதைக் கேட்டு அரங்கமே சிரிப்பில் ஆழ்ந்தது. மேலும் தொடர்ந்த அவர் அநேகமாக 'தால்' செய்யயத் தெரிந்த ஒரே அமெரிக்க அதிபர் தான்தான் என்று கூறினார்.  தொடர்ந்த அவர் மற்றொரு இந்திய உணவான 'கீமாவும்' தனக்கு செய்யத் தெரியும், தான் சமைக்கும் சிக்கன் பரவாயில்லாமல் இருக்கும் என்றும் பகிர்ந்து கொண்டார்.    

பின்னர் கரண் தாப்பர் அவரிடம், 'அப்படியானால் உங்களுக்கு சப்பாத்தி செய்யத் தெரியுமா? ' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு 'சப்பாத்தி ரொம்பக் கடினம்' என்று ஒபாமா பதிலளித்தார்.

உலகின் மிகவும் அதிகாரம் வாய்ந்த ஒரு பதவியில் பணியாற்றிய அதிபர் ஒபாமா இந்திய உணவுகளைப் பற்றி 'சுவை'பட பகிர்ந்துகொண்டது அனைவரையும் கவர்ந்தது.   

]]>
delhi, summit, USA. president, obama, daal, chiken, keema, chapathi, karan thapar http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/1/w600X390/obama.jpg http://www.dinamani.com/world/2017/dec/01/i-am-first-american-president-to-have-recipe-for-daal-obama-2818536.html
2818022 உலகம் 'அமெரிக்காவுடன் மோதினால் வட கொரியா அழிந்துவிடும்': ஐ.நா.வில் நிக்கி ஹேலி பேச்சு DIN DIN Friday, December 1, 2017 01:14 AM +0530 வட கொரியா போரைத் தூண்டும் விதமாக நடந்து கொள்கிறது என்றும் அமெரிக்காவுடன் மோதினால் முற்றிலுமாக அழிந்துவிடும் என்றும் ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி கூறினார். 
கண்டம் விட்டு கண்டம் பாயக் கூடிய, சக்தி வாய்ந்த புதிய ஏவுகணையை வட கொரியா செவ்வாய்க்கிழமை விண்ணில் பறக்கச் செய்து சோதனை மேற்கொண்டது. அந்த சோதனையின்போது விண்ணில் ஆயிரம் கிலோ மீட்டர் பறந்த ஏவுகணை ஜப்பான் கடலில் விழுந்தது. இந்த சோதனை மூலம் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் மற்றும் நியூயார்க் நகரைக் குறி வைத்து தாக்கும் திறனைப் பெற்றதாக வட கொரியா கூறியது.
புதிய ரக ஏவுகணையில் அணு ஆயுதம் பொருத்தி தாக்குதல் நிகழ்த்த முடியும் என்றும் தெரிவித்தது. மேலும், இந்த சோதனைகளையடுத்து, வட கொரியாவை அணு ஆயுத நாடாக கருத வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. 
வட கொரியாவின் இந்தச் செயல் சர்வதேச பதற்ற நிலையைப் புதிய உச்சத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறது. இந்த நிலையில், வட கொரியா விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி பேசியது:
வட கொரியாவின் புதிய ஏவுகணை சோதனையானது உலகை யுத்தத்தின் விளிம்புக்கு கொண்டு வந்துள்ளது. அந்நாட்டின் செயல் போருக்கான அறைகூவலாக உள்ளது. போரைத் தூண்டுவதற்காகவே இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
போர் மூண்டால் இதுபோன்ற சோதனைகள்தான் அதற்குக் காரணமாக இருக்கும். வட கொரியாவுடன் அமெரிக்கா போரிட விரும்பியதில்லை. இப்போதும் விரும்பவில்லை. ஆனால் இந்த ஏவுகணை சோதனைகளைத் தொடர்ந்து அமெரிக்காவுடன் மோதினால் வட கொரியா முற்றிலுமாக அழிந்துவிடும்.
வட கொரியாவுடன் உலக நாடுகள் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று அமெரிக்கா வலியுறுத்துகிறது. ஐ.நா. ஏற்கெனவே விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை முற்றிலுமாக செயல்படுத்த வேண்டும். அந்த நாட்டுடனான ராணுவ, வர்த்தக, தொழில்நுட்ப ஒத்துழைப்பை அனைத்து நாடுகளும் கைவிட வேண்டும். அந்த நாட்டிலிருந்து எந்தப் பொருளையும் இறக்குமதி செய்யவோ, அந்த நாட்டுக்கு எந்தப் பொருளையும் ஏற்றுமதி செய்யவோ கூடாது. வெளிநாடுகளில் உள்ள அனைத்து வட கொரிய பணியாளர்களையும், விஞ்ஞானிகள் அனைவரையும் வெளியேற்றி, அவர்கள் நாட்டுக்கே திருப்பி அனுப்ப வேண்டும்.
ஐ.நா. இதற்கு முன்னர் பல கட்டங்களாகப் பொருளாதாரத் தடைகளை விதித்தபோதிலும், மேலும் மேலும் சக்தி வாய்ந்த புதிய ஏவுகணைகளை வட கொரியா சோதித்து வருகிறது. அடுத்ததாக, அணு ஆயுதங்களைக் குவிக்கத் திட்டமிட்டு வருகிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று நிக்கி ஹேலி பேசினார்.
முன்னதாக, வட கொரியாவின் புதிய ஏவுகணை சோதனை தகவல் வெளியானதும், அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஜீ ஜின்பிங்குடன் புதன்கிழமை தொலைபேசியில் அவசர ஆலோசனை நடத்தினார். வட கொரியாவுக்கு கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருள் சாதனங்கள் வழங்குவதை சீனா உடனடியாக நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் அப்போது கேட்டுக் கொண்டார்.
வட கொரியாவிலிருந்து எஃகு தாது, எஃகு பொருள்கள், ஆடைகள் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்ய ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளதால், அந்நாட்டுக்கு கடந்த பல மாதங்களாக எந்த வருவாயும் இல்லை. அந்த நாட்டுக்குத் தற்போது கிடைத்து வரும் சொற்ப வருவாய் சீனா மூலமாகத்தான் கிடைத்து வருகிறது. எரிபொருள் போன்ற முக்கியத் தேவைகளை சீனா மூலம் வட கொரியா பெற்று வருகிறது.
இதையும் முடக்கிவிட்டால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் வட கொரியா வழிக்கு வரும் என்றும் அமெரிக்கா கூறி வருகிறது. செவ்வாய்க்கிழமை நடந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையையும் சேர்த்து, இந்த ஆண்டு இதுவரையில் 20 ஏவுகணை சோதனைகளை வட கொரியா மேற்கொண்டுள்ளது. மிக சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனையையும் நடத்தியுள்ளது.
'எத்தனை கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டாலும், அந்நாடு எந்த விதத்திலும் தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை' என்று பிரிட்டனுக்கான ஐ.நா. தூதர் மாத்யூ ரைக்ராஃப்ட் தனது உரையின்போது குறிப்பிட்டார்.
உலகுக்கே அச்சுறுத்தல்: வெள்ளை மாளிகை
வட கொரியாவின் புதிய மிரட்டல் நடவடிக்கை கொரிய தீபகற்ப பிராந்தியத்துக்கு மட்டுமல்லாமல், உலகுக்கே அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்று அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித் துறை துணை செய்தியாளர் ராஜ் ஷா கூறினார்.
அந்நாடு மீது கடும் நடவடிக்கைகளை எடுக்க பிற நாடுகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளோம் என்றார் அவர். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்தார். 
புதிய பொருளாதாரத் தடைகள் விரைவில் விதிக்கப்படும் என்று டிரம்ப் தனது டிவிட்டர் சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/1/w600X390/niki_holi.JPG வட கொரியா குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தில் உரையாற்றும் அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி. http://www.dinamani.com/world/2017/dec/01/அமெரிக்காவுடன்-மோதினால்-வட-கொரியா-அழிந்துவிடும்-ஐநாவில்-நிக்கி-ஹேலி-பேச்சு-2818022.html
2818019 உலகம் ரோஹிங்கயா விவகாரத்தில் விரைவில் தீர்வு காண வேண்டும் DIN DIN Friday, December 1, 2017 01:13 AM +0530 ரோஹிங்கயா விவகாரத்தில் விரைவில் தீர்வு காண வேண்டும் என்று போப் பிரான்சிஸ் தெரிவித்தார்.
தனது 4 நாள் மியான்மர் பயணத்துக்குப் பிறகு வியாழக்கிழமை வங்கதேசம் வந்த அவர் தெரிவித்தது: 
வங்கதேசத்துக்கு லட்சக்கணக்கில் புலம் பெயர்ந்துள்ளோர் எதிர்கொள்ளும் வேதனையை அகற்ற சர்வதேச சமூகம் முன்வர வேண்டும். அவர்கள் புலம் பெயர்வதற்கு காரணமான அரசியல் பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும். 
பெண்கள், குழந்தைகள் உள்பட லட்சக்கணக்கானோர் அகதிகள் முகாமில் அவதியுறுகின்றனர். அவர்களுக்குப் புகலிடம் அளித்து வரும் வங்கதேசத்துக்கு உடனடியாக பொருளுதவி வழங்க உலக நாடுகள் முன் வர வேண்டும் என்றார்.
தனது உரையில் ரோஹிங்கயாக்கள் என்ற சொல்லைப் பயன்படுத்தாமல், 'புலம் பெயர்ந்தவர்கள்' என்று போப் பிரான்சிஸ் குறிப்பிட்டார். மியான்மரிலும் அவர் 'ரோஹிங்கயா' என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை. 
மியான்மர் ராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து 6 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கயாக்கள் வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்நிலையில், அவ்விரு நாடுகளுக்கும் போப் பிரான்சிஸ் பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/1/w600X390/pop.jpg http://www.dinamani.com/world/2017/dec/01/ரோஹிங்கயா-விவகாரத்தில்-விரைவில்-தீர்வு-காண-வேண்டும்-2818019.html
2818018 உலகம் எரிமலை சீற்றம்: பாலி தீவில் எச்சரிக்கை நிலை நீடிப்பு DIN DIN Friday, December 1, 2017 01:12 AM +0530 இந்தோனேசியாவின் பாலி தீவில் அகுங் எரிமலைச் சீற்றம் காரணமாக அறிவிக்கப்பட்ட அதிகபட்ச எச்சரிக்கை நிலை நீடிக்கிறது.
இதனிடையே, எரிமலையின் சீற்றத்தையடுத்து கடந்த மூன்று நாள்களாக மூடப்பட்டிருந்த பாலி சர்வதேச விமான நிலையம் புதன்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது. 
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்தது: 
எரிமலை சீற்றத்தால் வெளியேறிய சாம்பல் மற்றும் புகை மூட்டம் காரணமாக பாலி விமான நிலையம் மூன்று நாள்களுக்கு முன்பு மூடப்பட்டது. 
விமானப் போக்குவரத்து முற்றிலும் முடங்கிப் போனதால் பாலி தீவுக்கு வந்த 1.20 லட்சம் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
தற்போதைய நிலையில், எரிமலையின் சீற்றத்தின் வேகம் இன்னும் அதிகமாகத்தான் உள்ளது. இருப்பினும், காற்றடிக்கும் திசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 
இதனால், பாலி விமான நிலையம் சாம்பல் மற்றும் புகையின் தாக்கத்திலிருந்து விடுபட்டுள்ளது. 
ஏற்கெனவே படிந்திருந்த சாம்பல் படிமங்களை உறிஞ்சும் இயந்திரங்களைக் கொண்டு ஓடுதளங்கள் சுத்தம் செய்யப்பட்டன. 
இதையடுத்து, விமான நிலையம் புதன்கிழமை பிற்பகலில் திறக்கப்பட்டது. 4,500க்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர். அவர்களில், 3,200 பேர் சர்வதேச பயணிகள். 
புதன்கிழமை மாலை கருடா ஏர்லைன்ஸ் தனது சர்வதேச விமான சேவையை மீண்டும் தொடங்கியது. ஏர்ஏசியா விமானம் மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. 
பாலி விமான நிலையம் திறக்கப்பட்டுள்ள போதிலும், பல திசைகளிலிருந்தும் சாம்பல் மற்றும் புகை வருவதால் மற்றொரு பிரபல சுற்றுலாத் தலமான லோம்போக் தீவுக்கு அருகேயுள்ள விமான நிலையம் வியாழக்கிழமை மீண்டும் மூடப்பட்டது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/1/w600X390/pali.JPG http://www.dinamani.com/world/2017/dec/01/எரிமலை-சீற்றம்-பாலி-தீவில்-எச்சரிக்கை-நிலை-நீடிப்பு-2818018.html
2818016 உலகம் ஆட்சிக் கவிழ்ப்பு சதி: துருக்கியில் ராணுவ அதிகாரிகள் உள்பட 50 பேர் கைது DIN DIN Friday, December 1, 2017 01:12 AM +0530 கடந்த ஆண்டு துருக்கியில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதி தொடர்பாக ராணுவ அதிகாரிகள், போர் விமானிகள் உள்பட 50 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் தொடர்புடையவர்கள் என்ற தகவலையடுத்து அவர்களுக்காக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனைகள் நடைபெற்றன. சோதனையின் முடிவில் ராணுவ அதிகாரிகள், போர் விமானிகள் உள்ளிட்ட ஐம்பது பேர் கைது செய்யப்பட்டனர்.
பதினொரு நகரங்களில் தொடர்ந்து சோதனைகள் நடைபெற்று வருவதாக அரசு செய்தி நிறுவனமான அனடோலு தெரிவித்திருக்கிறது.
கைதானவர்களில் 'ரகசிய மதகுருக்களும்' அடங்குவர் என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள மதகுரு ஃபெதுல்லா குலென் தீட்டிய சதித் திட்டத்தின்படி, துருக்கியில் அதிபர் எர்டோகனின் ஆட்சியைக் கவிழ்க்க இவர்கள் அனைவரும் முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். 
முன்னதாக, புதன்கிழமை நடைபெற்ற தேடுதல் வேட்டையில் 360 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 333 பேர் ராணுவ வீரர்கள். ஏனையோரில் மதகுருக்கள், அரசு அதிகாரிகள் உள்படுவர்.
கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் தேதி துருக்கி பாதுகாப்புப் படைகளில் ஒரு பிரிவினர் ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டனர்.
அதிபர் எர்டோகன் தலைநகரில் இல்லாத நிலையில், அதிபர் மாளிகை அருகே போர் விமானம் குண்டு வீசியது. ராணுவ பீரங்கிகள் வீதிகளில் வலம் வந்தன. அதிபரின் கட்சியினர் ஆயிரக்கணக்கில் வீதிகளில் திரண்டு ராணுவத்தினரை எதிர்கொண்டதையடுத்து, ஆட்சிக் கவிழ்ப்பு சதி முறியடிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, கடந்த ஓராண்டில் அந்த சதியில் தொடர்புடையதாகக் கருதப்பட்ட ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில், முப்படைகளின் மூத்த அதிகாரிகள், அரசு அதிகாரிகள், நீதிபதிகள், வழக்குரைஞர்கள், ஆசிரியர்கள், மதகுருக்கள் அடங்குவர். துருக்கியிலிருந்து கடந்த 1999-ஆம் ஆண்டு வெளியேறி அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள மதகுருவான ஃபெதுல்லா குலெனின் அறிவுறுத்தலின்படி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி நடைபெற்றது என்று அதிபர் எர்டோகன் குற்றம்சாட்டி வருகிறார்.
ஃபெதுல்லா குலெனை பயங்கரவாதி என்று துருக்கி அரசு குறிப்பிட்டு வருகிறது. அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள அவர் தலைநகர் வாஷிங்டன் அருகே வசித்து வருகிறார். துருக்கிக்கு அவரை நாடு கடத்த வேண்டும் என்று அமெரிக்க அரசிடம் அதிபர் எர்டோகன் வலியுறுத்தி வருகிறார். ஆனால் அவருக்கு எதிராகப் போதுமான ஆதாரம் இல்லாததால் அவரை நாடு கடத்த முடியாது என்று அதிபர் ஒபாமா காலத்திலிருந்தே தெரிவிக்கப்பட்டு வருகிறது.
 

]]>
http://www.dinamani.com/world/2017/dec/01/ஆட்சிக்-கவிழ்ப்பு-சதி-துருக்கியில்-ராணுவ-அதிகாரிகள்-உள்பட-50-பேர்-கைது-2818016.html
2818014 உலகம் ரூ.2.47 லட்சம் கோடிக்கு அமெரிக்க ராணுவ தளவாடங்கள் விற்பனை DIN DIN Friday, December 1, 2017 01:12 AM +0530 நடப்பு 2017ஆம் ஆண்டில் அமெரிக்கா 38,000 கோடி டாலர் (ரூ.2.47 லட்சம் கோடி) மதிப்புக்கு ராணுவ தளவாடங்களை விற்பனை செய்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
அமெரிக்காவின் ராணுவ தளவாட தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கு உலக அளவில் எப்பொழுதுமே நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக, வெளிநாட்டு ராணுவம் மூலமான ஆயுத விற்பனையில் விறுவிறுப்பு காணப்படுகிறது. இதற்கு, வாடிக்கையாளர்களுக்கு வெறும் தளவாடங்களை மட்டும் விற்பனை செய்யாமல், அதனை இயக்குவதற்கான பயிற்சி, பராமரிப்பு பணி உள்ளிட்ட சேவைகளை தொடர்ந்து அளித்து வருவதே முக்கிய காரணம். 
கடந்த 70 ஆண்டுகளாக அமெரிக்காவின் அரசியல் மற்றும் பாதுகாப்பில் ஆயுத விற்பனை என்பது முக்கிய அம்சமாக கோலோச்சி வருகிறது. 
நடப்பு 2017ஆம் ஆண்டில் 38,000 கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்கள் விற்பனை ஆகியுள்ளது. இதில், அதிகபட்சமாக மத்திய ஆசியா மற்றும் மேற்கு ஆசிய நாடுகளுக்கு 2,200 கோடி டாலர் (ரூ.1.43 லட்சம் கோடி) மதிப்புக்கு ஆயுதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இவற்றைத் தொடர்ந்து, இந்தோ-பசிஃபிக் நாடுகள் (796 கோடி டாலர்), ஐரோப்பா (730 கோடி டாலர்), ஆப்பிரிக்கா (24.86 கோடி டாலர்) உள்ளிட்ட நாடுகளுக்கும் அமெரிக்காவின் ஆயுதங்கள் விற்பனையாகியது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். ஒவ்வொரு நாட்டுக்கும் விற்பனை செய்யப்பட்ட ஆயுதங்களும்- அதன் மதிப்பும் குறித்த விவரம் வெளியிடப்படவில்லை.

]]>
http://www.dinamani.com/world/2017/dec/01/ரூ247-லட்சம்-கோடிக்கு-அமெரிக்க-ராணுவ-தளவாடங்கள்-விற்பனை-2818014.html
2817513 உலகம் லஷ்கர் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர் நான் DIN DIN Thursday, November 30, 2017 01:21 AM +0530 மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் உள்ளிட்ட தாக்குதல்களை நிகழ்த்திய லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் மிகப்பெரிய ஆதரவாளர் என்று தம்மை பாகிஸ்தான் முன்னாள் அதிபரும், அந்நாட்டின் முன்னாள் ராணுவ தலைமைத் தளபதியான பர்வேஸ் முஷாரஃப் கூறிக் கொண்டுள்ளார்.
துபையில் தற்போது வசித்து வரும் முஷாரஃப், ஏஆர்ஒய் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
லஷ்கர்-ஏ-தொய்பா மிகப்பெரிய படையாகும். அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து கொண்டு, லஷ்கர் அமைப்பினரை பயங்கரவாதிகளாக இந்தியா அறிவித்துள்ளது. காஷ்மீரில் அவர்களின் (லஷ்கர்) தலையீடு இருப்பது உண்மைதான்; ஆனால், காஷ்மீர் என்பது பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையே இருக்கும் பகுதியாகும்.
காஷ்மீரில் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பினரின் செயல்பாட்டை நான் ஆதரிக்கிறேன். காஷ்மீரில் இந்திய ராணுவத்தை அடக்குவதற்கு லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பு ஆற்றி வரும் பங்களிப்பை நான் ஆதரித்தேன்.
லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பு, அந்த அமைப்பின் நிறுவனர் ஹபீஸ் சயீது ஆகியோரின் மிகப்பெரிய ஆதரவாளர் நான். லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பையும், ஹபீஸ் சயீதின் மற்றொரு அமைப்பான ஜமா-உத்- தவா-வையும் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று பர்வேஸ் முஷாரஃப் குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் அதிபராக முஷாரஃப் இருந்தபோதுதான், லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் மீது அந்நாட்டு அரசு தடை விதித்தது. இதுகுறித்து முஷாரஃபிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், 'பல்வேறு சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, அந்த அமைப்பின் மீது தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது' என்றார். மேற்கொண்டு எதுவும் தெரிவிக்க அவர் மறுத்து விட்டார்.
பாகிஸ்தானில் வீட்டுக் காவலில் கடந்த ஜனவரி மாதம் முதல் வைக்கப்பட்டிருந்த சயீது அண்மையில்தான் நீதிமன்ற உத்தரவுப்படி விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, ஐ.நா. சபையில் தன்னை பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்கும்படி, ஹபீஸ் சயீது மனு அளித்துள்ளார். இதுபோன்ற சூழ்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் அதிபரான முஷாரஃப் இத்தகைய கருத்துகளை வெளியிட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/30/w600X390/musharaf.jpg http://www.dinamani.com/world/2017/nov/30/லஷ்கர்-பயங்கரவாத-அமைப்பின்-ஆதரவாளர்-நான்-2817513.html
2817452 உலகம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை: வட கொரியா மீண்டும் சோதனை - அமெரிக்காவின் அனைத்து பகுதிகளையும் தாக்கக் கூடியது என தகவல் DIN DIN Thursday, November 30, 2017 01:03 AM +0530 கண்டம் விட்டு கண்டம் பாயும் மேலும் ஒரு ஏவுகணையை வட கொரியா வெற்றிகரமாக சோதித்துப் பார்த்தாக புதன்கிழமை அறிவித்தது. இந்த ஏவுகணை, இதுவரை வட கொரியா சோதித்த மற்ற ஏவுகணைகளைவிட மிகவும் மேம்பட்டது என்று கூறப்படுகிறது.
ஏற்கெனவே, இரண்டு முறை கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கக் கூடிய தொலைதூர ஏவுகணைகளை சோதித்துள்ள வட கொரியா, தற்போது 3-ஆவது முறையாக செவ்வாய்க்கிழமை சோதித்துள்ள ஏவுகணை 13,000 கி.மீ. வரை பறந்து செல்லக்கூடியது என்று சில நிபுணர்களால் கருதப்படுகிறது.
அது உறுதியானால், வட கொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளால் அமெரிக்காவின் அனைத்து முக்கிய நகரங்களையும் தாக்கி அழிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு வெற்றகரமாக சோதிக்கப்பட்ட இந்த ஏவுகணை, அணு ஆயுதம் தாங்கிச் செல்லும் திறன் கொண்டது என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, வட கொரியாவை முழுமையான அணு ஆயுத நாடாக உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் என்று அந்த நாடு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து வட கொரிய அரசுத் தொலைக்காட்சியில், முக்கிய நிகழ்வுகளை அறிவிக்கும் ரி சுன்-ஹீ என்ற அறிவிப்பாளர் கூறியதாவது:
அணு ஆயுத சக்தி கொண்ட நாடாகவும், ஏவுகணை சக்தியாகவும் வட கொரியா உருவெடுத்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை அதிபர் கிம் ஜோங்-உன் வெளியிட்டுள்ளார்.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஹுவாஸாங்-14 ஏவுகணையின் வெற்றிகரப் பரிசோதனை, வட கொரிய மக்களுக்குக் கிடைத்த பரிசு என்றார் அவர்.
அணு ஆயுதம் போன்ற மிகப் பெரிய குண்டுகளையும் சுமந்து செல்லக் கூடிய அந்த ஏவுகணை, அமெரிக்காவின் எந்த இடத்தை வேண்டுமானாலும் சென்றடைந்துத் தாக்கும் வல்லமை கொண்டது என்று வட கொரிய அரசு செய்தி நிறுவனமான கேஎன்சிஏ தெரிவித்தது.
சோதனையின்போது 4,475 கி.மீ. உயரத்துக்கு ஹுவாஸாங்-15 ஏவுகணை பறந்து சென்றதாகவும், அதனைத் தொடர்ந்து 950 கி.மீ. தூரத்துக்கு கீழ் நோக்கிப் பாய்ந்ததாகவும் தென் கொரிய அரசு கூறியது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அண்மையில் வட கொரியாவுக்கு எதிரான புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துடன், அந்த நாட்டை பயங்கரவாதத்துக்கு உதவும் நாடாகவும் அறிவித்தார். இந்தக் கடுமையான நடவடிக்கைகளையும் பொருள்படுத்தாமல், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வட கொரியா மீண்டும் சோதித்துள்ளது அமெரிக்காவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தேசியப் பாதுகாப்புக் கவுன்சிலின் அவசரக் கூட்டத்துக்கு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், ஜப்பான் பிரதமர் ஷென்úஸா அபே, தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வட கொரியாவின் ஏவுகணை சோதனை குறித்து டிரம்ப் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஒரு தொலைதூர ஏவுகணையை வட கொரியா சோதித்துள்ளது, போர்ப் பதற்றத்தைத் தூண்டும் நடவடிக்கை என்பதில் சந்தேகமே இல்லை.
- டிமித்ரி பெஸ்கோவ், ரஷிய அரசின் செய்தித் தொடர்பாளர்

வட கொரியாவின் இந்த நடவடிக்கை, கட்டுப்படுத்த முடியாத நிலைமைக்கு பதற்றத்தைக் கொண்டு செல்லும். இந்த நிலவரத்தை வட கொரியா தவறாகக் கணிப்பதையும், அந்த நாடு மீது அமெரிக்கா முன்னெச்சரிக்கைத் தாக்குதல் நிகழ்த்துவதையும் நாம் தடுத்தே ஆக வேண்டும்.
- மூன் ஜே-இன், 
தென் கொரிய அதிபர்

வட கொரியாவின் புதிய ஏவுகணை சோதனை, ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானத்துக்கு முற்றிலும் விரோதமானதும், சர்வதேச நாடுகளின் ஒன்றுபட்ட கருத்துக்கு எதிரானதும் ஆகும்.
- அன்டோனியோ குட்டெரஸ், 
ஐ.நா. பொதுச் செயலர்

பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளது, அமெரிக்காவுக்கும், தென் கொரியாவுக்கும் மட்டும் அச்சுறுத்தல் அல்ல. அது இந்த உலக அமைதிக்கே அச்சுறுத்தலானது.
- டொனால்ட் டிரம்ப், 
அமெரிக்க அதிபர்

அமைதியைக் குலைக்கும் வகையில் வட கொரியா மேற்கொண்ட ஏவுகணை பரிசோதனை கவலையளிப்பதாக உள்ளது. ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானத்தை ஏற்று நடக்கும்படி வட கொரியாவை வலியுறுத்துகிறோம்.
- கெங் ஷுவாங், சீன வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர்

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/30/w600X390/fire.JPG வட கொரியாவின் பெயர் குறிப்பிடப்படாத ஒரு சோதனை மையத்தில், செவ்வாய்க்கிழமை சீறிப் பாயும் ஹுவாஸாங்-14 ஏவுகணை. http://www.dinamani.com/world/2017/nov/30/கண்டம்-விட்டு-கண்டம்-பாயும்-ஏவுகணை-வட-கொரியா-மீண்டும்-சோதனை---அமெரிக்காவின்-அனைத்து-பகுதிகளையும்-தா-2817452.html
2817450 உலகம் துருக்கி: 333 ராணுவத்தினரை கைது செய்ய உத்தரவு DIN DIN Thursday, November 30, 2017 01:02 AM +0530 துருக்கியில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்குக் காரணமானவர்கள் என்று அந்த நாட்டு அரசால் குற்றம் சாட்டப்படும் மதத் தலைவர் ஃபெதுல்லா குலெனின் ஆதரவாளர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 333 ராணுவத்தினருக்கு எதிரான கைது உத்தரவை அந்த நாட்டு அரசு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டைச் சேர்ந்த அனடோலு செய்தி நிறுவனம் புதன்கிழமை தெரிவித்ததாவது:
அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள மதத் தலைவர் ஃபெதுல்லா குலெனுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 333 ராணுவ வீரர்களையும், அரசுக்கு எதிராக ராணுவத்தைத் தூண்டியதாகச் சந்தேகிக்கப்படும் 27 பேரையும் கைது செய்து விசாரிக்க துருக்கி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ராணுவ வீரர்களில் பெரும்பாலானவர்கள் தற்போது பணியில் இருப்பவர்கள் என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
ஏற்கெனவே, ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு எதிராக துருக்கி அரசு மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகள் காரணமாக 50,000 பேர் வரை கைது செய்யப்பட்டனர். 1.10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அரசுப் பணிகளிலிருந்து நீக்கப்பட்டனர்.

]]>
http://www.dinamani.com/world/2017/nov/30/துருக்கி-333-ராணுவத்தினரை-கைது-செய்ய-உத்தரவு-2817450.html
2817449 உலகம் யேமன்: ஐ.எஸ். தாக்குதலில் 5 பேர் பலி DIN DIN Thursday, November 30, 2017 01:01 AM +0530 யேமன் தலைநகர் சனாவில் புதன்கிழமை நிகழ்த்தப்பட்ட கார் குண்டுத் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர். 
இந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பின் யேமன் பிரிவு பொறுப்பேற்றுள்ளது.
அந்த நாட்டின் நிதிமைச்சக வளாகத்தில் நிகழ்த்தப்பட்ட இந்த கார் குண்டுத் தாக்குதலில், அந்தக் கட்டடம் முற்றிலும் தரைமட்டமானது என்றும், அருகிலுள்ள கட்டடங்களும் கடுமையாக சேதமடைந்தன என்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். 
யேமனில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசுப் படையினருக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹூதி பழங்குடியின கிளர்ச்சியாளர்களுக்கும் உள்நாட்டுச் சண்டை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தாக்குதல் அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது.

]]>
http://www.dinamani.com/world/2017/nov/30/யேமன்-ஐஎஸ்-தாக்குதலில்-5-பேர்-பலி-2817449.html
2817448 உலகம் ஆஸ்திரேலியா: கருணைக் கொலைக்கு சட்ட அங்கீகாரம் DIN DIN Thursday, November 30, 2017 01:01 AM +0530 தீர்க்க முடியாத நோயால் அவதியுறும் நோயாளிகள், தங்களைக் கருணைக் கொலை செய்யும்படி கோருவவதை சட்டப்பூர்வமாக்க, ஆஸ்திரேலிய நாட்டின் விக்டோரியா மாகாண நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
'விருப்ப மரண மசோதா' என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட அந்த மசோதாவுக்கு, மாகாண நாடாளுமன்றத்தில் இரு அவைகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் பெரும்பான்மையான வாக்குகளை அளித்தனர்.
கருணைக் கொலைகளை அனுமதிப்பதா, வேண்டாமா என்பது குறித்து நீண்ட காலமாக நடைபெற்று வந்த விவாதத்துக்குப் பிறகு, இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மசோதா நிறைவேற்றப்பட்டாலும், அதை சட்டமாக்கி அமல்படுத்துவதற்கு 18 மாத கால அவகாசம் தரப்பட்டுள்ளது. இதையடுத்து, வரும் 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அந்தச் சட்டம் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்டோரியா மாகாணம்தான் கருணைக் கொலையை சட்டப்பூர்வமாக்கியுள்ள ஆஸ்திரேலியாவின் முதல் மாகாணம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

]]>
http://www.dinamani.com/world/2017/nov/30/ஆஸ்திரேலியா-கருணைக்-கொலைக்கு-சட்ட-அங்கீகாரம்-2817448.html
2817341 உலகம் பேஸ்புக்கில் ஒவ்வொரு 'லைக்'குக்கும் ஒவ்வொரு குத்து: மனைவியின் முகம் சிதையுமளவுக்கு கணவன் கொடூர சித்ரவதை!  DIN DIN Wednesday, November 29, 2017 05:57 PM +0530  

நெம்பி (உருகுவே): பேஸ்புக்கில் மனைவியின்  புகைப்படத்திற்கு கிடைக்கும் ஒவ்வொரு 'லைக்'குக்கும், அவரை முகத்தில் குத்து விட்டு தாக்கி சித்ரவதை செய்து வந்த கொடூர கணவன் கைது செய்யப்பட்டிருக்கிறார். 

உருகுவே நாட்டின் சன்ஸின் மாகாணத்தில் உள்ள நெம்பி என்ற பகுதியைச் சேர்ந்தவர் அடோல்பினா (21). இவரது கணவர் கேலியானோ (32). மனைவியின் மீது சந்தேகப்பட்டு கேலியானோ எப்போதும் அவரைத் தாக்குவார் என்று கூறப்படுகின்றது. அத்துடன் மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு அவரை தொடர்ச்சியாக சித்ரவதைகளும் செய்து வந்துள்ளார். மேலும் அடோல்பினா விருப்பதுக்கு மாறாக அவரை வீட்டில் அடைத்து வைத்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.         

சித்ரவதையின் உச்ச கட்டமாக பேஸ்புக்கில் அடோல்பினாவின்  புகைப்படத்திற்கு கிடைக்கும் ஒவ்வொரு 'லைக்'குக்கும், அவரை முகத்தில் குத்து விட்டுத் தாக்கி வந்துள்ளார். அத்துடன் அவரது படத்திற்கு ஏதேனும் கமெண்ட்டுகள் வந்தாலும் சரி, ரியாக்ஷன் சிம்பல்கள் இடப்பட்டாலும் சரி, அதற்கான நோட்டிபிகேஷன்கள் வந்தவுடன் அடோல்பினாவைத் தாக்கத் துவங்கி விடுவார்.      

இந்த கொடூரம் இன்னும் தீவிரமாகி அடோல்பினாவின் பேஸ்புக் பக்கத்தினை முழுவதுமாக கேலியானோ பொறுப்பில் எடுத்துக் கொண்டு, தானே புகைப்படங்களை அப்லோடு செய்து விட்டு, ஒவ்வொரு 'லைக்'கும் வர வர மிருகத்தனமாக தாக்கத் துவங்கியுள்ளார். ஆனால் அடோல்பினாவின் நண்பர்கள் யாருக்கும் இந்த விஷயங்கள் எதுவும் தெரியாது.

இறுதியாக நேற்று முன்தினம் நடந்த தாக்குதல்களின் காரணமாக அடோல்பினா இறந்து விடுவார் என்று பயந்த கேலியானோவின் தந்தை, மகனுக்குத் தெரியாமல் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். விரைந்து வந்த போலீஸார் தற்பொழுது கேலியானோவைக் கைது செய்துசிறையில் அடைத்துள்ளனர்.

இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அடோல்பினாவின் வழக்கறிஞர் மார்ட்டின்ஸீ கூறியதாவது:

அடோல்பினாவின் வாய் முற்றிலுமாக உடைந்துள்ளது. அவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். தொடர் அடிகளின் காரணமாக தோல் வழன்று காணப்படுகிறது. அடோல்பினாவின் பேஸ்புக் பக்கத்தினை கேலியானோ முழுமையாக கட்டுப்படுத்தி வந்துள்ளார். அவரது புகைப்படத்திற்கு 'லைக்' மற்றும் 'கமெண்ட்' இடுபவர்களுக்கும், அடோல்பினாவுக்கும் தொடர்பு உள்ளது என்று குற்றம் சாட்டி வந்திருக்கிறார்.

தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அடோல்பினாவுக்கு விரைவில் முக ஒழுங்கமைப்பு சிகிச்சை செய்யபட உள்ளது. தன்னுடைய முகத்தினை அவராலேயே நம்ப முடியாத அளவுக்கு முகம் மாறியுள்ளது. 

சிறையில் உள்ள கேலியானோவுக்கு அந்நாட்டுச் சட்டப்படி 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

]]>
husband, wife, facebook, photos, like, comment, reaction, punch, attack, complaint http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/29/w600X390/ortigoza.jpg http://www.dinamani.com/world/2017/nov/29/woman-whose-husband-punched-her-every-time-someone-liked-one-of-her-facebook-photos-has-to-have-her-face-rebuilt-2817341.html
2817315 உலகம் நான் ஒரு லஷ்கர் இ தொய்பா இயக்க ஆதரவாளன்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பகிரங்க ஒப்புதல்!  DIN DIN Wednesday, November 29, 2017 03:45 PM +0530  

இஸ்லாமாபாத்: நான் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் தீவிர ஆதரவாளன் என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் வெளிப்படையாகத் தெரிவித்திருப்பது அதிர்ச்சியினை  ஏற்படுத்தியுள்ளது.

மும்பை தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹபீஸ் சயீத்தால் உருவாக்கப்பட்ட பயங்கரவாத இயக்கம்தான் லஷ்கர் இ தொய்பா. இவ்வியக்கம் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனைத் தொடர்ந்து ஐநா சபை லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பட்டியலில் சேர்த்தது.

அத்துடன் பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற ஆணையின்படி ஹபீஸ் சயீத் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னால் வீட்டுக்காவலில் இருந்து ஹபீஸ் சயீத்தினை பாகிஸ்தான் விடுவித்தது. இதற்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில் நான் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் தீவிர ஆதரவாளன் என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் வெளிப்படையாக தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்திருப்பது அதிர்ச்சியினை  ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில்  பர்வேஸ் முஷரப் கூறியிருப்பதாவது:

நான் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் தீவிர ஆதரவாளன். அந்த இயக்கமும் என்னை விரும்புகிறது என்பது எனக்குத் தெரியும். காஷ்மீர் விவகாரத்தில் ஹபீஸ் சயீத்தின் ஈடுபாட்டை நான் ஆதரிக்கிறேன். என்னுடைய ஆட்சியின் போதுதான் லஷ்கர் இ தொய்பா இயக்கம் தடை செய்யப்பட்டது. அப்போது நிலவிய சூழல் காரணமாகவே அவ்வியக்கம் தடை செய்யப்பட்டது.

உண்மையாக ஹபீஸ் சயீத் பற்றி அப்போது எனக்கு முழுமையாகத் தெரியாது. முழுமையாக அறிந்து இருந்தால், லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை நான் அப்போது தடை செய்து இருக்க மாட்டேன்.

இவ்வாறு முஷரப் தெரிவித்தார்.

]]>
pakistan, fomer president, parvez mushraf, LeT, hafez sayeed, support http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/29/w600X390/parvez_mushraf.jpg http://www.dinamani.com/world/2017/nov/29/நான்-ஒரு-லஷ்கர்-இ-தொய்பா-இயக்க-ஆதரவாளன்-பாகிஸ்தான்-முன்னாள்-அதிபர்-பகிரங்க-ஒப்புதல்-2817315.html