Dinamani - சிறப்புக் கட்டுரைகள் - http://www.dinamani.com/editorial-articles/special-stories/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2884269 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் உலக சிட்டுக்குருவிகள் தினத்தில் உங்களுக்காக ஒரு செய்தி! படித்துவிட்டு முடிவு செய்யுங்கள்! உமா பார்வதி Tuesday, March 20, 2018 02:41 PM +0530
சிட்டுக்குருவி...சிட்டுக்குருவி சேதி தெரியுமா, என்னை விட்டுப் பிரிந்து போன கணவன் வீடு திரும்பலை என்ற பாடல் நினைவிருக்கிறதா? பாடலும் சரி அதன் பொருளுமான அந்தச் சிட்டுக்குருவியும் சரி இன்னும் சில ஆண்டுகளுக்கு பிறகு தேடிப் பிடிக்கவேண்டியவையாக மாறிக் கொண்டிருப்பதை நினைத்தால் ஈரமுள்ள மனங்களுக்கு வலிக்கும். இன்று (20 மார்ச்) உலக சிட்டுக்குருவிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஒரு காலத்தில் நம்மைச் சுற்றி நீக்கமற நிறைந்திருந்த குருவிகளை நினைவு கூற வைத்துவிட்ட இந்த நவீன வாழ்வியலை என்ன சொல்ல?

முன்பு நம் வீட்டு முற்றத்தில் க்ரீச் க்ரீச் என்று தன் இருப்பை அறிவித்தபடி பறந்து வந்து, உரிமையுடன் கீழே சிதறி கிடக்கும் தானியங்களை சின்னஞ்சிறு அலகால் கொத்தி சாப்பிட்டுவிட்டு, தன் குடும்பத்துக்கும் உணவு சேகரித்துப் பறந்து செல்லும் அந்த அழகிய பறவைகள், தற்போதைய நவீன தொழில்நுட்ப உலகில் அருகிப் போயின. பங்களூரூவில் தன் வீட்டையே குருவிகளின் சரணாலயமாக மாற்றி வாழும் ‘குருவி மனிதன்’ என்ற பட்டப் பெயருடன் அழைக்கப்படும் எட்வின் ஜோசப் பற்றி படித்த போது உண்மையில் ஆச்சரியமாகிப் போனது. அவர் அண்மையில் ஒரு ஆங்கில ஊடகத்தில் குருவிகளைப் பற்றி பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

'12 ஆண்டுகளுக்கு முன்னால்தான் இது தொடங்கியது. என் மனைவி சமைப்பதற்காக அரிசியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது கீழே சிதறியிருந்த அரிசிக்காக நிறைய குருவிகள் அவர் காலருகே சுற்றி நின்று சிந்திய அரிசிகளை கொத்தி சாப்பிட்டன. 

நான் என் மனைவியிடம் அரிசியை தினமும் சற்று அதிகமாகப் போடச் சொன்னேன். அப்போதுதான் நிறைய குருவிகள் வந்து சாப்பிட முடியும் என்று நினைத்தேன். நான் நினைத்தது போலவே நிறைய குருவிகள் தினந்தோறும் பசியாற்றிக் கொள்ள எங்களைத் தேடி பறந்து வரத் தொடங்கின.

குருவிகள் முட்டையிட ஒரு சிறிய தொட்டிச் செடிகளை நண்பர் ஒருவர் தந்தார். அதன்பின் நானே செயற்கை கூடுகள், சிறு வீடுகள் என அவர்களுக்காக கட்டினேன். முன்பு 12 குருவிகளாக இருந்த அந்த எண்ணிக்கை இப்போது 200 குருவிகளுக்கும் மேலாக மாறியுள்ளது’. என்றார் ஜோசப்.

குருவிகள் மீது ஏன் இவ்வளவு பாசம் என்று அவரிடம் கேட்டதற்கு, ‘என்னுடைய குழந்தைபருவத்தில் என் வீட்டருகே நிறைய குருவிகளை பார்ப்பேன். திருமணமான புதிதில் என் வீட்டிலும் கூட ஒரு குருவி கூடு கட்டியிருந்தது. நம்முடைய வாழ்வியலில் ஒன்றாக இணைந்திருந்த அந்தக் குருவிகள் திடீரென்று மறைந்து போக ஆரம்பித்தன.

ஒரு நாள் ம்யூசியத்தில் ஒரு குருவியை பாடம் செய்துவைத்து இதுதான் இந்திய குருவி என்று எழுதியிருந்ததைப் பார்த்து எனக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டுவிட்டது. இப்போதே ஏதாவது செய்யாவிட்டால் உண்மையில் குருவிகள் முற்றிலும் அழிந்துவிடும் என்று நினைத்தேன். அவற்றை அழிவிலிருந்து தடுத்து என்னால் முடிந்த அளவுக்கு பாதுகாக்க முடிவு செய்தேன்.

முன்பெல்லாம் சாலையோரங்களில் மரங்கள் இருக்கும். அவை பல்லாயிரக்கணக்கான பறவைகளின் வீடுகளாக இருந்தன. ஆனால் இப்போது மரங்களை வெட்டிவிட்டார்கள். எங்கு திரும்பினாலும் கான்க்ரீட் மயமாகிவிட்டது. நீர்நிலைகளும் குறைந்து வருகின்றன. பசுமையும் இற்று வருகிறது. இந்த நிலையில் பறவைகள் உணவுக்கும் தாகத்துக்கும் நிழலுக்கும் என்ன செய்யும்? சரியான உணவு கிடைக்காதது, முட்டையிடுவதற்கான கூடு கட்டமுடியாத நிலை, செல்போன் டவர்களில் இருந்து வரும் நுண்ணிய கதிரியக்கம் போன்ற பல காரணங்களால் குருவிகள் இன்றைய தேதியில் மொத்தமாக அழிந்து வருகின்றன.

குருவிகளின் இந்த பேரழிவிற்கு எல்லாவற்றையும் விட முக்கிய காரணம் செல்போன் டவர்களும் அதிலிருந்து வரும் மின் காந்த அலைகள் தான் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். தென் அமெரிக்காவுக்கு நான் சென்றிருந்த போது, செல்போன் டவர்கள் எதுவும் நகரத்தில் பார்க்க முடியவில்லை. அவரை எல்லாம் நகரத்துக்கு வெளியே ஒதுக்குப் புறமாக அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் இங்கே? அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தால் எங்கே வேண்டுமானாலும் டவரை கட்டிக் கொள்ளலாம்’ என்று வேதனையுடன் கூறினார் ஜோசப்.

எட்வின் ஜோசப் ஓய்வு பெற்ற ஒரு அரசுப் பணியாளர். தன்னுடைய சொற்பமான ஓய்வூதியப் பணத்திலிருந்துதான் அவர் குருவிகளைப் பராமரித்து வருகிறார். அவரது இந்த தன்னலமற்ற சேவைக்கு அரசு உள்ளிட்ட எந்த தன்னார்வ அமைப்பும் உதவ முன்வரவில்லை என்பதில் அவருக்கு வருத்தம் உண்டு. அவரது மனைவி மட்டுமே அவருக்கு இவ்விஷயத்தில் உற்ற துணை. மேலும் அவர் கூறுகையில், 'ஆனால் இது முடிவல்ல. குருவிகளைப் பொருத்தவரையில் என்னால் ஆனவற்றை தொடர்ந்து செய்து கொண்டிருப்பேன். மனிதர்கள் தன்னைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கக் கூடாது.

சக ஜீவன்களான பறவைகள், மிருகங்கள் ஆகியவற்றின் மீதும் அன்பு செலுத்த வேண்டும். அவர்களுக்கு சிறிதளவு உணவும், கொஞ்சம் நீரும் தினமும் உங்கள் வீட்டு மொட்டை மாடியில் வைத்தால் போதும், இதுதான் ஒவ்வொருவரிடமும் என்னுடைய கோரிக்கை’ என்றார் ஜோசப்.

ஜோசப் தற்போது மகிழ்ச்சியான மனிதராக தன்னை உணர்கிறார். தினமும் காலையில் எழுந்தவுடன் பறவைகளின் ஒலியைக் கேட்டபடி தான் விழிக்கிறார். அவரது வீட்டைச் சுற்றி குருவிகள் அங்குமிங்கும் பறந்தபடி இருக்கும். அவை இரையை உண்டுவிட்டு, தண்ணீர் குடித்துவிட்டு நிம்மதியாக தனது கூடுகளுக்குத் திரும்பும். முதலில் அரிசியை மட்டும் வைத்துக் கொண்டிருந்த ஜோசப் தம்பதியர் தற்போது சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி, பருப்பு, நவதானியங்கள் என விதவிதமான மெனுக்களை தயாரித்து அப்பறவைகளுக்கு உணவிடுகிறார்கள். தங்கள் வீட்டில் வசிக்கும் அந்தக் குருவிகளை தங்களுடைய குழந்தைகளைப் போலவே எண்ணி பராமரிக்கிறார்கள்.

சுறுசுறுப்பு, சிறிய உடல்வாகு, ரசிக்கத்தக்க நிறம் என அழகிய பறவைகளான சிட்டுக்குருவிகள், தற்போது அழிந்து வரும் நிலையை நாம் மாற்ற  முயற்சி செய்ய வேண்டும். அழிவின் விளிம்பில் உள்ள சிட்டுக்குருவிகளை மீட்டெடுக்க, அவற்றை நம் சக ஜீவனாக நினைத்துக் காக்க, ஒவ்வொருவரும் அவற்றுக்கு சிறிது இடம் மனத்திலும், சிறிது இடம் வீட்டிலும் அல்லது நம் மொட்டை மாடிகளிலும் தந்து அழிந்து வரும் அப்பறவை இனத்திஅக் காப்பாற்றுவோம். இதுவே சிட்டு குருவி தினத்தில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய ஒரு உறுதிமொழி. செய்வோமா?

நன்றி - ஜோசப் எட்வின் நேர்காணல் - NDTV

]]>
sparrow, பறவை, Edwin Joseph, Sparrow Man, சிட்டுக்குருவி, குருவி, எட்வின் ஜோசப் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/20/w600X390/joseph_edwin.jpeg http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/mar/20/20th-march-world-sparrow-day-2884269.html
2883578 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் ‘சிருங்காரம்’ என்பது வெறும் உடல்சுகமல்ல; பிறகு வேறென்ன? தெரிந்து கொள்ள இதைப் படியுங்கள்! கார்த்திகா வாசுதேவன் Tuesday, March 20, 2018 10:57 AM +0530  

நவரசங்களில் ஒன்றான சிருங்காரமே இந்த பூலோக சிருஷ்டியின் ஆதி மூலம். அந்த சிருங்கார ரசத்தை இந்தத் தலைமுறை மட்டுமல்ல முன்பு தப்பிதமாகப் புரிந்து கொண்டிருந்தவர்கள் கூட சரியான வகையில் எவ்விதமாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்று கற்றுத் தருகிறது இந்த அருமையான பாடல். 

ஆனால், கலிஃபோர்னியாவில் மென்பொறியாளராக இருக்கும் செளபாவோ( செளபாக்யா) காதல் என்பதும், கணவன், மனைவி கூடல் என்பதும் மூக்குப் பிழிவதைப் போல சடுதியில் நடந்து முடிந்து விடக் கூடியது என்கிறாள். ரொமான்ஸ் எல்லாம் திரைப்படங்களில் வரும் ஹீரோ, ஹீரோயின்ஸுக்கும், நாவல்களில் வரும் கற்பனை கதாபாத்திரங்களுக்கும் மட்டுமே உகந்தது. நிஜ வாழ்வில் இணைந்தவர்களுக்கு அப்படியான சினிமாட்டிக் ரொமான்ஸ் தேவையில்லை என்பது அவளதும், அவளது கணவரதுமான புரிதல்கள்.

டெல்லியில் விலங்கியல் பேராசிரியையாக இருக்கும் அனிதாவோ ‘ச்சூ... அதுல அப்படி ஒன்னும் ஸ்பெஷல் இல்லே தீதி... இட்ஸ் லைக் எ கமிட்மெண்ட், வாரத்துக்கு 3 நாள் கம்பல்ஸரி அது வேணும்கறார் என் ஹஸ்பண்ட். Now a days... If I am interested or not... it happend in our life. என்று எந்தவிதமான சுவாரஸ்யமும் இன்றி தேங்காய் உடைப்பது போல உடைத்துப் பேசி நகர்கிறாள்.

சில வாரங்களுக்கு முன் விகடனில் வெளிவந்த சிறுகதையொன்றில், கல்லூரிப் பருவத்திலிருக்கும் இரு குழந்தைகளுக்குத் தாயான நடுத்தர வயது ஒல்லிப் பெண்ணொருத்தி, அவளை விட வயதில் இளையவனான பக்கத்து வீட்டு இளைஞனிடம் ‘செக்ஸ்னா ரொம்ப நல்லா இருக்குமாமே?! அப்படியா? நிஜமாவா? என்று கேட்பதாக ஒரு வரி வாசித்தேன். சகஜமாகப் பேசும் நண்பன் தானே என்று யோசிக்காமல் இந்தக் கேள்வியைக் கேட்டு விட்டு பிறகு தன்னைப் பற்றி அவன் ஏதாவது தவறாகக் கருதி விடக்கூடாதே என்கிற பயத்தில் அவள் அந்த இளைஞனை தனது வசிப்பிடத்தில் இருந்து மொத்தமாக அப்புறப்படுத்தி விரட்ட குரூரமாக பல திட்டம் தீட்டுகிறாள் என்று கதை நீள்கிறது. இங்கே அவளது குரூரத்தைப் பற்றி நாம் பேச வேண்டியதில்லை. இத்தனை வயதுக்குப் பின்னும், தனது மகனுக்கே திருமணம் செய்யும் வயதிலிருக்கும் ஒரு பெண்மணியே கூட தாம்பத்யத்தில் பூரணத்துவம் பெற்றவளாக இல்லை. அவளுக்கு அது குறித்த கேள்விகள் இருக்கின்றன. யாரிடம் கேட்பதென்று தெரியாமல் அக்கா, அக்காவெனப் பழகும் பக்கத்து வீட்டு இளைஞனிடம் போய் அதைக் கேட்டு வைத்து விட்டு தன்னைத் தானே நொந்து அவனையும் நோகடிக்கிறாள். இது தான் அவலம்.

அவர்களுக்காவது சிருங்காரம் என்பது குடும்ப வாழ்வியலில் ஒரு அங்கம். அதிலும் கூட்டுக்குடும்ப வாழ்வில் இருக்கும் தம்பதிகளுக்கு அதெல்லாம் வீட்டில் யாருமற்ற நேரங்களில் எப்போதாவது கிடைக்கக் கூடிய போனஸ் சர்ப்ரைஸ் என்பது மாதிரியாகத் தான் நமது திரைப்படங்கள் நமக்குக் காட்டியிருக்கின்றன. ஆனால், இந்தப் பாடல் வீடியோவில் ஓய்ந்து போய் அமர்ந்திருக்கும் அந்தப் பெண்ணுக்கு சிருங்காரம் தான் வாழ்க்கையே! காரணம் அவளொரு விலைமாது. ஆனால், அவளது கோபம் என்னவென்றால்... இளமையில் அவளிடத்தில் சிருங்கார ரசம் தேடி ஓடி வந்தவர்களில் ஒருவரேனும் இப்போது அவளது மனமும், உடலும் சோர்ந்த நிலையில் அவளை ஏற்றுக் கொண்டு உதவத்தயாராக இல்லை. மீறி அவள் அவர்களிடத்தில் உதவி கேட்டு வந்தாளெனில்;

நீ அளித்த சுகத்துக்கும், நான் அளித்த பணத்துக்கும் கணக்கு நேராகி விட்டது. இனிமேல் நான் உனக்கொரு சகாயம் செய்யவேண்டும் எனில் ‘இறந்து போ’ என்கிறார்கள்.

அதனால், வாழ்வை வெறுத்துப்போய் கோயிலில் அமர்ந்திருக்கும் அவளுக்குள், சிருங்காரம் என்றால் வெறும் உடல்சுகம் மட்டும் தானா? கேவலம் அதற்காகத் தான் எப்போதுமே ஆண்கள், பெண்களை நாடுகிறார்களா? அதனால் தான் அழியப் போகும் இந்த உடல் மீதான ஈர்ப்பு குறையும் போது தன்னை அம்போவென இந்த சமூகம் கைவிட்டு விட்டதா? என்றெல்லாம் கேள்வி எழுகிறது. இந்தத் தொழிலை விட்டு விட்டு வேறு ஏதாவது வேலை செய்து பிழைக்கலாம் என்றால் அதற்கு இந்த உலகமும், சமூகமும் தடையாக நிற்கிறது. பிறகு இந்த உடலுக்கான மரியாதை தான் என்ன? வெறும் சரீர சுகத்தை அனுபவிப்பதற்காக மட்டும் தான் இந்த உடலை ஆண்டவன் நமக்கு அளித்திருக்கிறானா? சதைப்பிண்டமான இந்த உடலைத் தாண்டியும் பார்க்க முடிந்தால் உள்ளிருக்கும் மனதை உணர முடியாதா? சிருங்காரம் என்றால் அது உடல் அங்கங்கள் மட்டும் தானா? எனத் தன்னைத் தேடி வந்து ஆறுதல் கூறும் நாட்டிய வித்வானிடமும் அவள் கேட்கிறாள்.

எஸ்.பி.பியின் மந்தகாஸக் குரலில் அந்தப் பாடலைக் கேட்பதற்கான வீடியோ...

 

அவளது கேள்வி கண்டு அவள் மீது பரிதாபம் கொள்ளும் நாட்டிய வித்வான் நன்றாக பரதம் தெரிந்தவளான அந்தப் பெண்ணுக்கு பரத மொழியிலேயே சிருங்காரம் என்றால் என்ன என்பதை அழகான பாடல் வாயிலாக விளக்குவார். நிஜமாகவே இந்தப் பாடலை எழுதிய பாடலாசிரியர் மிகுந்த பாராட்டுதலுக்கு உரியவரே! 

பாடலைக் கேட்டால் நீங்களும் அதை ஒப்புக் கொள்ளக்கூடும். பாடல் தெலுங்கில் இருந்தாலும் அதற்கான சப் டைட்டில் ஆங்கிலத்திலும் விரிகிறது. எனவே மொழி புரியாதவர்களாலும் பாடலின் சாரத்தைப் புரிந்து கொள்ள முடியும். சப் டைட்டிலும் புரியாதெனில், கீழே உள்ள மொழிபெயர்ப்பு உங்களுக்கு உதவக்கூடும்.

ஷண நேரம் மட்டும் சந்தோசத்தைத் தந்து மறையக்கூடிய உடலின்பம் அல்ல சிருங்காரம், இருட்டறையில் சரஸ, சல்லாபங்களில் ஈடுபட்டு, கீழான ஆசைகளுக்கு இடமளித்துப் பின்பு மோகம் தீர்ந்ததும் மறப்பதுமல்ல சிருங்காரம். ஆடற்கலையில் வல்லோன், காலைத் தூக்கி நின்றாடும் தெய்வம் சிவபெருமானின் நடன மேதாவிலாசத்தின் உச்சம் சிருங்காரம். ஸ்ரீகிருஷ்ணனின் வேணுகானம் சிருங்காரம். வேய்ங்குழலை காதலி போல் பாவித்து தன் சுவாசத்தை அமுதகானமாக்கி ஆயர்பாடியைத் தாலாட்டும் மாயக்கண்ணனின் குழலோசையின் உச்சம் சிருங்காரம். சத்யபாமா அந்தப் பொல்லாத கிருஷ்ணன் மீது பொய்க்கோபம் கொள்வதும் கூட சிருங்காரமே! அவள் கோபம் முதிர, முதிர அப்போதும் விடாது அவளைத் தூண்டி விட்டு, பொறாமை கொள்ள வைத்து பிற கோபியருடன் ஆடிப்பாடி முடிவில் சத்யபாமாவையே சரணடையும் கிருஷ்ணனின் தீராத விளையாட்டும் சிருங்காரமே. அண்ணலும் நோக்க அவளும் நோக்கி ராமனும் சீதையும் மிதிலையில் கொண்ட காதலும் சிருங்காரம். பின்பு ப்ரிய நேர்கையில் அவ்விருவர் உள்ளமும் பிரிவாற்றாமையால் பட்ட பாடும் சிருங்காரமே! நடராஜ நாட்டிய சிகரம் சிருங்காரம்! ஸ்ரீகிருஷ்ண வேணுகானம் சிருங்காரம்!

தாழிட்ட கதவுக்கு அப்பால் நிகழ்வது என்னவென்று அறியமுடியாததைப் போல, நேசம் கொண்ட இரு மனங்களும் ஒருவர் மனதில் இருப்பதை மற்றவர் அறிந்து கொள்ள முயல்கையில் இரு மனங்களுக்குள் நிகழும் ரசவாதமும் சிருங்காரமே! கேட்கத் தெவிட்டாத இரு ராகங்கள் ஒன்றாகி முயங்கி நிற்பதைப்போல காதலினால் ஒன்றிணைந்தவர்கள் ஈருடல் ஓருயிராய் இயைந்து வாழ்கையில் நிகழும் தாம்பத்யமெனும் தேகயாகம் சிருங்காரம். அந்தி மயங்கி சூரியன் துயில் கொள்ளச் செல்கையில் பூமியில் உயிர்கள் அனைத்தும் காமனின் மலர்க்கணைகளால் வீழ்த்தப்பட்டவர்களாய் தன் இணையை நாடிச்செல்லத் தூண்டும் மென்னுணர்வுகளின் சங்கமம் சிருங்காரம். மூன்று முடிச்சிட்டு தம் இணையெனத் தீர்மானித்து ஏற்றுக் கொண்ட மங்கையுடன் பெற்றோரும் உற்றாரும் வாழ்த்தி அனுமதிக்க ஒரு புனித கணத்தில் ஆணும், பெண்ணும் நிகழ்த்தும் பவித்ர யாகம் சிருங்காரம்! நடராஜ நாட்டிய சிகரம் சிருங்காரம், ஸ்ரீகிருஷ்ண வேணுகானம் சிருங்காரம்.

உடலின் ஆசைத்தூண்டல்களோ, மோக மயக்கங்களோ சிருங்காரமல்ல, உச்சி முதல் உள்ளங்கால் வரை மனமும், உடலும் ஒளி விட்டுப் பிரகாசிக்கச் செய்வதான தெய்வீக அனுபவமே சிருங்காரம்! ஆலயங்களில் கூடலின் வெவ்வேறு ரூபங்களை விலாவாரியாகச் சிலாகிக்கும் சிலாரூபங்களின் நிர்வாணம் அர்த்தமற்ற காமத்தூண்டல்கள் அல்ல. இந்த உலகை நிர்மாணித்த ஆதிசக்தியும் சிவனும் கொண்ட பூரண தாம்பத்யத்தின் தத்ரூப விளக்கங்களே அவை. ரதி, மன்மதனை ஆஸ்தான தேவதைகளாகக் கொண்டு விரியும் பூமியின் ஜன சிருஷ்டியை விஸ்தரிக்க அபிஷேகிக்கப்படும் பிராணநீரில் முகிழ்க்கும் பரிசுத்தமான சிறு மலர் சிருங்காரம். பிரம்ம சிருஷ்டியைப் போஷிக்க சதா இரு உயிர்களுக்குள் நிகழும் பவித்ர யாகம் சிருங்காரம்! நடராஜ நாட்டியத்தின் உச்சம் சிருங்காரம்! ஸ்ரீகிருஷ்ண வேணுகானம் சிருங்காரம்!

இத்தனை பவித்ரமான இந்த சிருங்கார உணர்வை வெறுமே  சிறுநீர் கழிப்பதைப் போலவோ, மூக்குப் பிழிவதைப் போலவோ, தலையில் பேன் அரிப்பைத் தீர்ப்பது போலவோ, அல்லது உடல் அரிப்பைத் தீர்த்துக் கொள்ளவோ மட்டுமே பெரும்பாலான மனிதர்கள் கையாள்வதன் பெயர் சிருங்காரம் அல்ல. அதன் பெயர் வேறு என்கிறது இந்தப்பாடல்!

மொத்தத்தில் சிருங்காரத்தின் வெவ்வேறு பாவங்களான காதலும், காமமும், தாம்பத்யமும் நிகழ வேண்டியது இப்படித்தானேயன்றி வெறுமே உடல் இச்சைகளைத் தீர்ப்பது மட்டுமேயாக அல்ல என்கிறது இப்பாடல்.

நுங்கும், நுரையுமாய்ப் பாய்ந்தோடி கடலோடு சங்கமிக்கும் நதியைப் போல, மென்காற்றின் திசையெங்கும் இதம் பரப்பும் மலரின் நறுமணம் போல... ஈடுபடும் உணர்வேயின்றி தன்னை மறந்த லயிப்பில் நிகழ்வதே சிருங்காரம் அதாவது இந்தப்பாடலில் சொல்லப்பட்டிருப்பதைப் போல ஸ்ரீகிருஷ்ண வேணுகானம் கேட்ட உணர்வோ, நடராஜ நாட்டிய உச்சம் கண்ட சிலிர்ப்போ மிஞ்சவேண்டும் உள்ளத்தில் தித்திப்பாகத் தங்க வேண்டும் அந்த உணர்வே சிருங்காரம் என்கிறது இப்பாடல். அப்படியல்லாது வேதனையான உணர்வைத் தரும் எதுவொன்றும் சிருங்காரமாகாதாம்.

]]>
காதல், love, romance, srungaram, navarasa bhavam, intimacy, சிருங்காரம், தாம்பத்யம், அந்நியோன்யம், சரீர சுகம், தேவ யாகம், பவித்ர ஹோமம், எஸ்.பி.பி பாடல், மணி சர்மா இசை, S.P.B SONG, MANI SHARMA MUSIC, ARCHANA RAJ http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/19/w600X390/srungaram_song.jpg http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/mar/19/romance-is-as-spritual-as-the-melodious-music-emitted-through-the-flute-of-lord-krishna-2883578.html
2883607 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் ஆர்யாவின் நவீன சுயம்வரத்தில் வெல்லப் போவது யார்? சேனலா? ஆர்யாவா, பெண்களா? சரோஜினி DIN Monday, March 19, 2018 03:39 PM +0530  

நடிகர் ஆர்யா தனியார் சேனலொன்றின் ரியாலிட்டி ஷோ மூலமாகத் தனக்கான மணமகளைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வு கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 16 வரன்களுடன் தொடங்கிய இந்த நவீன சுயம்வரத்தில் இப்போது எஞ்சியிருப்பது 

அகாதா, சீதாலட்சுமி, ஸ்வேதா, நவீனா, தேவ சூர்யா, குஹாசினி, சுஷானா, ஸ்ரியா, அபர்னதி, எனும் 9 மணமகள்கள் மட்டுமே,

இவர்களிலும் ஒருவர் திங்களன்று எலிமினேட் செய்யப்படவிருக்கிறாராம். அது அபர்னதியா? ஸ்ரீயாவா? என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள் அந்த நிகழ்ச்சியை வழக்கமாகப் பார்க்கும் பார்வையாளர்கள்.

சரி இந்தப்பெண்கள் எல்லாம் ஆர்யாவை எந்த நம்பிக்கையில் திருமணம் செய்து கொள்ளத் தேடி வந்திருக்கிறார்கள் என்பது இந்த நிகழ்ச்சியைப் பற்றி கேள்விப்பட்டுள்ள உங்களைப் போலவே எனக்கும்  புரியத்தான் இல்லை. ஆனால், சமூக ஊடகங்களில் செமையாய்க் கலாய்த்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். ஒருபக்கம் ‘பல் இருக்கிறவன் பகோடா திங்கிறான்’ கணக்கில் ஆர்யாவைப் புகழ்ந்தாலும் மறுபக்கம், கல்யாணம் பண்ணிக்கனும்னா வீட்ல அப்பா, அம்மா கிட்ட சொல்லி பண்ணிக்கலாம், இல்லைன்னா இவருக்கிருக்கிற பெர்சனலிட்டிக்கு அவர் சினிமா இண்டஸ்ட்ரியிலயோ இல்ல ஃப்ரெண்ட்ஸ் சர்க்கில்லயோ பிடிச்ச பொண்ணுக்கிட்டு ப்ரப்போஸ் பண்ணி லவ் மேரேஜ் பண்ணிக்கலாம். அதெல்லாம் வேண்டாம்னா ஏதாவது மேட்ரிமோனியல் சைட்ல ரெஜிஸ்டர் பண்ணி கல்யாணம் பண்ணலாம். இதென்ன புதுசா பப்ளிசிட்டி ஸ்டண்ட் மாதிரி சேனல்ல போட்டி வச்சு கல்யாணம் பண்ணிக்கிறதுன்னு கிளம்பியிருக்காங்க, இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு. நீங்க வேணும்னா பாருங்க, இதுல கலந்துக்கற எந்தப் பொண்ணையுமே ஆர்யா கல்யாணம் பண்ணிக்க மாட்டார். ஆர்யாக்கு கடைசியா நடிச்ச எந்தப் படமும் சரியாப் போகல... அதான் அவர் இப்படி இறங்கிட்டார். கடைசில எல்லாம் விளையாட்டுன்னு சொல்லப் போறாங்க. என்கிறார்கள் ரசிகர்களும், விமர்சகர்களும்.

இணையத்தில் சமூக ஊடகங்களைப் பொறுத்த அளவில் எப்போதும் அப்டேட்டாக இருக்கும் ஆர்யா இவற்றையெல்லாம் பார்க்காமலா இருந்திருப்பார். ஆனாலும் இதைப் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் செம கூலாக ஜெய்ப்பூரில் தினம் ஒரு டேட்டிங் கதையாக மீதமிருக்கும் 9 பெண்களுடனும் பேசிப் பழகி புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறார். போட்டியின் முடிவில் எந்தப் பெண் அவரது மனதை வெல்கிறாரோ அந்தப் பெண்ணுக்கு அவர் மாலையிடுவாராம். சமூக ஊடக கலாய்த்தல்களைப் பற்றி அவரிடம் கேட்டால், ‘அவங்களுக்கு என்ன?! ‘இது என் வாழ்க்கைப் பிரச்னைங்க’ என்று பதில் வந்தாலும் வரலாம்.

எது எப்படியோ? ஆர்யாவுக்கு இந்த நிகழ்ச்சி மூலமாகத் திருமணம் ஆனால் சரிதான். கலந்து கொண்ட பெண்களில் அட்லீஸ்ட் ஒருவராவது வென்ற திருப்தியுடன் வெளியேறுவார்.

தமிழர்களான நமக்குத்தான் இது போன்ற ரியாலிட்டி ஷோ கான்செப்ட் புதுசு. ஆனால், இது 2002 ஆம் ஆண்டிலேயே அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டதாம். அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான தி பேச்சிலர் எனும் ரியாலிட்டி ஷோவின் தமிழ் வெர்சன் தான் இது என்கிறார்கள். இந்தியாவில் இந்தக் காற்று பாலிவுட்டைத் தாண்டித்தான் தமிழகம் வந்திருக்கிறது. 2013 ஆம் ஆண்டில் இந்தி நடிகை மல்லிகா ஷெராவத் இதே மாதிரியான ரியாலிட்டி ஷோ ஒன்றில் தனத் வாழ்க்கைத் துணையைத் தேடிக் கண்டடையப் போவதாகக் கூறி பப்ளிசிட்டி ஸ்டண்ட் அடித்தார். The Bachelorette - Mere Khayalonki Malika  நிகழ்ச்சி மூலமாக அவருக்குப் பொருத்தமான மனதுக்குப் பிடித்த ஒரு வரனும் அமைந்தது வாஸ்தவமே. ஆனால், ஏனோ இறுதியில் தான் கண்டடைந்த அந்த நபரை மல்லிகா திருமணம் செய்து கொள்ளவில்லை. இருவரும் சண்டையிட்டுக் கொண்டு பிரிந்து விட்டார்கள் என்று தகவல்.

ஆர்யா விஷயம் எப்படியென்று போட்டி முடிவுக்கு வரும்போது தான் தெரியும்.
 
இரு நாட்களுக்கு முந்தைய நிகழ்ச்சியொன்றில் வரன்களாக வந்திருந்த பெண்கள் ஆர்யாவிடம் சில கேள்விகளை எழுப்புகையில், அவர் தனது வாழ்வில் சினிமாத்துறைக்கு வருவதற்கு முன்பு நிகழ்ந்த சில வலி தருணங்களைப் பற்றிப் பகிர்ந்து கொண்டார். ஆர்யாவுக்கு கல்லூரிப் பருவத்தில் ஒரு பெண்ணுடன் காதல் இருந்து அது பதிவுத்திருமணம் வரை சென்றதாகவும். ஆனால், ஏனோ அந்தத் திருமணம் சட்டப்படி முழுமையாகப் பதிவாகவில்லை, அதற்குள் அவர் திருமணம் செய்ய நினைத்த பெண் 30 நாட்களுக்குப் பின் மீண்டும் பதிவுத் திருமணச் சான்றில் கையெழுத்திட வேண்டிய நேரத்தில் வராமல் போனதால் திருமணம் பதிவாகவில்லை என்றும் தெரிவித்திருந்தார். அந்தப் பெண்ணின் மீதான காதலை வெல்லுமளவுக்கு போட்டியில் கலந்து கொண்ட பெண்களில் எவர் ஆர்யாவின் மனதில் ஆதிக்கம் செலுத்துகிறாரோ அவரே அவரது மனைவியாகப் போகிறவர் என்கிறார் உடனிருந்து நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவரும் தயாரிப்பாளருமான நடிகை சங்கீதா!

இதுவரை கோலப்போட்டி, ஸ்பெஷல் டேலண்ட் போட்டி, என்று ஜாலியாகப் போய்க் கொண்டிருந்த இந்த ஷோ, கடந்த வாரம் கொஞ்சம் எமோஷனலாக இருந்தது.

ஆர்யாவின் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ இது வரை எப்படியோ, ஆனால், இனி ஒரே எமோஷனல் தானாம்?!

ஏனெனில், ஆர்யாவின் மணமகளாகப் போகும் ஆசையில் வந்திருந்த இளம்பெண்களில் சிலர் இதுவரை தங்களது குடும்பத்தினரிடம், ஏன் பெற்றோரிடம் கூட இதுவரை தெரிவித்திராத ரகசியங்கள் சிலவற்றை கன்ஃபெஷன் ரூம் சீக்ரெட்ஸ் என்ற பெயரில் ஆர்யாவுடன் பகிர்ந்து கொண்டனர்.  அவை கிட்டத்தட்ட சமூக ஊடகங்களில் ஹிட்டடித்த #metoo ஹேஷ்டேக் விவகாரம் போல அவர்களது குழந்தைப் பருவத்திலோ அல்லது கல்லூரிப் பருவத்திலோ அல்லது வேலைக்காகவென்று வெளியுலகிற்கு வந்த கணத்திலோ நிகழ்ந்த முதல் பாலியல் துஷ்பிரயோகச் சம்பவமாக இருந்தது அந்தப் பகிர்வு. அவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் அவர்கள் ஆர்யாவிடம் மட்டுமே அதைப் பகிர்ந்து கொள்ளவில்லை ஷோ மூலமாக அந்த நேரத்தில் அந்நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த அத்தனை பார்வையாளர்களிடமும் அதைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் என. அதனாலென்ன என்று அவர்கள் நினைத்திருக்கலாம். ஏனெனில் அவ்விதமாக தங்களது ஆழ்மன உளைச்சல்களைப் பகிர்ந்து கொண்ட அத்தனை பெண்களுக்குமே ஆர்யாவைக் கணவனாக அடைய வேண்டுமென்ற ஆசையும், ஆவலும், நம்பிக்கையும் நிறையவே இருந்தது. எனவே அவர்கள் பகிர்ந்தார்கள். பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்களுக்குத் தான் அது விந்தையாக இருந்தது. ஏனெனில் ஆர்யா தேர்ந்தெடுக்கப் போவது ஒரே ஒரு மணமகளைத் தான். அவரையும் அவர் மணப்பாரா? இல்லை இது ஒரு கேம் ஷோ என்று அல்வா கொடுப்பாரா? என்பது இதுவரைக்கும் புரியாத புதிர். ஏனெனில் இப்படி ஒரு ஷோ மூலமாகத் திருமணம் செய்து கொண்ட நடிகர்களை நாம் கண்டதே இல்லை என்பதால்!

]]>
ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை, ரியாலிட்டி ஷோ கலாட்டா, Arya's enga veetu mappillai, reality show galattas, colors tamil, arya http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/19/w600X390/aryas_enga_veetu_mappillai.jpg http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/mar/19/ஆர்யாவின்-நவீன-சுயம்வரத்தில்-வெல்லப்-போவது-யார்-சேனலா-ஆர்யாவா-பெண்களா-2883607.html
2883585 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் இவர்களும் மனிதர்கள்தான்! கருணை இல்லாத முதலாளிகளின் சுயநலத்தால் வீழ்ந்த மனிதம்! ஜான் ரிச்சர்டு எபனேசர் Monday, March 19, 2018 01:12 PM +0530 ஆழ்துளை கிணற்றின் முடிவில்லாத குழாய்கள்: கட்டாயத் தொழில்முறை

சில காலத்திற்கு முன்பு, தமிழ்நாட்டில் பணியாற்றிய சார்-ஆட்சியற் ஒருவருக்கு, தொழிலாளர்கள் மோசமாக சுரண்டப்படும் ஒரு நிகழ்வு குறித்து தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அத்தொழிலாளர்களை மீட்பதற்கான முயற்சியில் அவர் இறங்கினார்.

ஆழ்துளை கிணறு தோண்டுகின்ற ஒரு லாரி முன்பாக இது அவரைக் கொண்டுபோய் நிறுத்தியது. அங்கே, அழுக்கான ஆடைகளுடன் சோர்வடைந்த, பார்க்க சகிக்காத தோற்றத்தில் வடஇந்திய இளைஞர்கள் சிலரை அவர் பார்த்தார். ஆழ்துளை கிணறு அமைக்கும் தொழில் நிறுவனங்கள், ஒரு நிரந்தர அல்லது தற்காலிக அமைவிடத்தில் இருந்து கொண்டு செயல்படுவதில்லை. இதில் பணியாற்றும் தொழிலாளர்கள் ஆழ்துளை கிணறு அமைக்கப்படும் இடங்களுக்கு அந்த லாரியிலேயே தொடர்ந்து பயணம் செய்து தங்கள் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். வெவ்வேறு ஊர்களுக்கு செல்கின்ற ஒரு சர்க்கஸ் குழுவைப் போலவே இந்த தொழிலாளர்களும் அந்த லாரியிலேயே பயணித்து, அதன் கீழேயே உணவு சமைத்து, உண்டு, உறங்க வேண்டிய அவலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்தத் தொழிலாளர்கள் வட இந்திய மாநிலத்தைச் சேர்ந்த ஒரு ஏஜெண்ட் வழியாக இங்கு வேலை செய்வதற்கு அழைத்து வரப்பட்டனர் என்று ஒரு மொழிபெயர்ப்பாளர் மூலம் சார்-ஆட்சியருக்கு தெரிய வந்தது. ‘நல்ல ஊதியம்’ தரப்படுமென்றும் அவ்வூதியம் அவர்கள் பணியை முடித்த பிறகு சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் போது மொத்த ஊதியமும் சேர்த்து தரப்படுமென்றும் அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டது. இதில் பிரச்னை என்னவென்றால் சொந்த ஊருக்கு அவர்கள் எப்போது திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் மற்றும் அவர்கள் சம்பாதித்த ஊதியம் எப்போது அவர்களுக்கு கிடைக்குமென்று அந்த முதலாளி ஒரு போதும் கூறியதில்லை.

லாரியில் ஊர் ஊராக  சென்று வேலை செய்தபோது அவர்கள் ஏதோ சாப்பிட்டு உயிர் வாழ்வதற்கு போதுமான அளவுக்கு மட்டும் ஒரு குறைந்த தொகையில் பிழைப்புக்கான படி மட்டும் வழங்கப்பட்டது. ஒரு காலகட்டத்தில், தங்கள் அன்புக்குரிய மனைவியையும், குழந்தைகளையும் பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு அத்தொழிலாளர்கள் திரும்ப வேண்டுமென்று தங்கள் விருப்பத்தை தெரிவித்தபோது, அவர்களுக்கு தரப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருந்த சேர்த்து வைக்கப்பட்ட ஊதியமானது மறுக்கப்பட்டது. ‘எந்த நேரத்திலும் இங்கிருந்து நீங்கள் கிளம்பலாம். ஆனால் உங்களது ஊதியத்தை எப்போது தருவதென்று நான்தான் தீர்மானிப்பேன்,’ என்று அந்த முதலாளி கூறியது அத்தொழிலாளர்களை அச்சத்திற்கு உள்ளாக்கியது. அவர்களுக்குரிய ஊதியத்தை தராமல் பிடித்து வைத்துக் கொண்டு அத்தொழிலாளர்களை அநியாயமாக நிர்ப்பந்தித்து வேலை வாங்குகிற முழு அதிகாரமும் அந்த முதலாளியிடமிருந்தது.

மாதங்கள் கடந்தோடியபோது, தொடர்ந்து அங்கேயே வேலை செய்து கொண்டிருந்த அத்தொழிலாளர்களின் வேதனையும், பயமும் அதிகரித்தன. அங்கிருந்து தப்பியோட ஒரு தொழிலாளர் முடிவு செய்வாரானால், அவரது குடும்பத்திற்காக கஷ்டப்பட்டு சம்பாதித்த ஊதியப்பணம் அனைத்தையும் அவர் இழக்க வேண்டியிருக்கும். வேலை வழங்கும் முதலாளியுடனே தொடர்ந்து இருக்கலாம் என்று அவர் முடிவு செய்வாரானால், பல மாதங்கள் தரப்படாமல் பிடித்து வைத்துள்ள பெருந்தொகையானது, மனதில் தோன்றி, அது கிடைக்குமா? அல்லது கிடைக்காதா என்ற ஏக்கத்தை உருவாக்கும். தனது சொந்த நிலைமை குறித்து, தீர்மானிக்கின்ற எந்த உரிமையும் அல்லது கட்டுப்பாடும் அவருக்கு இருக்காது.

இந்த வழக்கில், இந்த முதலாளி தனது இஷ்டப்படி அவர்களை ஆட்டுவித்து கட்டாயமாக வேலை செய்வதற்கு நிர்ப்பந்திப்பதற்கு பல மாதங்கள் தரப்படாத உறுதியளிக்கப்பட்ட ஊதியத்தொகையை மீனை சிக்க வைப்பதற்கான இரை போலப் பயன்படுத்தியிருக்கிறார். இது உண்மையிலேயே மிக மோசமான, அநியாயமான சுரண்டலாகும்.

சமூக அல்லது பாரம்பரிய அல்லது சாதி அடிப்படையிலான காரணங்களுக்காக அல்லது வேலை தருபவரிடம் ரொக்கமாக முன் பணத்தை பெற்றதன் காரணமாக அவரிடம் வேலை செய்யுமாறு தொழிலாளர்கள் நிர்ப்பந்தப்படும்படி வழக்கமாக இருந்து வருகிறது. இதுதான் கொத்தடிமைத் தொழில்முறை என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசும், மத்திய அரசும், இந்த கொத்தடிமைத் தொழில்முறையை எதிர்த்து போராடுவதற்காக செயல்நடவடிக்கைத் திட்டங்களையும், பட்ஜெட் ஒதுக்கீடுகள், நடைமுறைகளையும் மற்றும் நியமனம் செய்யப்பட்ட அதிகாரிகளையும் கொண்டிருக்கின்றன.

இருப்பினும், இந்த ஆழ்துளை கிணறு விஷயத்தில் நிர்ப்பந்திக்கப்படும் கட்டாய தொழில்முறையானது, ஒரு நவீன வடிவத்தை பெற்றிருக்கிறது. சிக்குண்ட ஒரு தொழிலாளரை தொடர்ந்து தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதற்கு பல மாதங்கள் தரப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிற ஊதியமானது, அத்தொழிலாளியைத் தன் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக அந்த முதலாளி அவர்களது அடிப்படை உரிமையை மறுத்து வந்திருக்கிறார். மாநில அரசும், மத்திய அரசும் இப்பிரச்னையை இன்னும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. அநியாயமான, மனிதாபிமானமற்ற இந்தச் சூழலில் சிக்கியிருக்கிற தொழிலாளர்களுக்கு, அவர்களது ஊதியத்தை இழப்பது அல்லது அவர்களது சுதந்திரத்தை இழப்பதைத் தவிர வேறு வழியில்லை.

கட்டாய வேலை செய்வதற்கு தொழிலாளர்களை நிர்ப்பந்திப்பதற்கு அவர்களது கல்விச் சான்றிதழ்களை வேலை வாங்கும் முதலாளிகள் தங்கள் வசம் வைத்துக் கொள்கின்ற பல சம்பவங்களும் நடந்துள்ளன. இதற்குக் தீர்வு காண தொழிலாளர் நல நீதிமன்றங்களை அல்லது அலுவலர்களை அத்தொழிலாளர்கள் அணுகலாமே என்று சில நபர்கள் வாதம் செய்யலாம். முறைப்படுத்தப்படாத தொழில்துறையை, அங்கு பணியாற்றியதாக எந்தவொரு ஆவணமும் இருக்கப் போவதில்லை. கல்விச் சான்றிதழ்களை தராமல் வைத்துக் கொள்கின்ற நேரும்போது, அவற்றை பெற்றுக் கொண்டதற்கான அத்தாட்சியாக எந்த ரசீதும் தரப்படவில்லை. இத்தகைய எதார்த்தமே தங்களது முதலாளிகளுக்கு பயந்து அவர்கள் பேச்சைக் கேட்டு நடக்கும்படியாக இவர்களை நிர்ப்பந்திக்கிறது. இங்கிருந்து வெளியேறி சுதந்திரத்தை பெறுவதை அவர்கள் தேர்வு செய்யலாம் அல்லது ஊதியப்பணம் எப்போதாவது கிடைத்துவிடுமென்ற நப்பாசையில் அவர்கள் தொடர்ந்து வேலை செய்யலாம்.

1860-ம் ஆண்டு இந்திய தண்டனை சட்டம், பிரிவு 374, கட்டாய தொழில்முறையை குற்றச்செயலாக குறிப்பிடுகிறது. இந்திய அரசியல் சட்டத்தின் உறுப்பு 23, கட்டாயத் தொழில்முறையை தடை செய்கிறது மற்றும் தண்டிக்கிறது. 1976-ம் ஆண்டின் கொத்தடிமைத் தொழில்முறை (ஒழிப்பு) சட்டத்தின் பிரிவு 12, ‘கட்டாயத் தொழில்முறையின் பிற வடிவங்களை / முறைகளை’ ஒழிப்பதற்கு மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுப்பதை அவசியமாக்குகிறது. பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடை) சட்டம் 1976-ன் பிரிவு 3(1) (h)இ கட்டாயத் தொழில்முறையின் பிற வடிவங்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தல்களை குறிப்பிட்டிருக்கிறது.

எனினும், 'கட்டாயத் தொழில்முறையின் பிற வடிவங்களை / முறைகளை’ கையாள்வதற்காக எந்தவொரு தேசிய / மாநில அளவிலான கொள்கையோ, பட்ஜெட் ஒதுக்கீடோ, 'கட்டாயத் தொழில்முறையின் பிற வடிவங்களினால்’ பாதிக்கப்பட்டவர்களின் மீட்பு மற்றும் மறுவாழ்வுக்கான நடைமுறைகளையோ அல்லது அவற்றை கையாள்வதற்கான எந்த முன்தடுப்பு இயக்க முறைகளையோ நம்மால் காண இயலாது மற்றும் கட்டாயத் தொழில்முறையின் பிற வடிவங்களுக்காக குற்றமிழைப்பவர்கள் மீது எந்தவொரு வழக்குகள் பதிவு செய்யப்படுவதோ அல்லது தண்டனை வழங்கப்படுவதோ இல்லவே இல்லை.

கொத்தடிமைத் தொழில்முறையை ஒழிப்பதற்காக அரசு தீவிரமாக நடவடிக்கை எடுக்கின்றபோது, முதலாளிகளின் / பணி வழங்கும் நிறுவனங்களின் சுரண்டல் முறைகளும், 'கட்டாயத் தொழில்முறையின் பிற வடிவங்களாக / முறைகளாக’ மாற்றம் கண்டு செயல்படுத்தப்படும் என்று சில குடிமைச் சமூக அமைப்புகள் நம்புகின்றன, கவலை தெரிவிக்கின்றன.

 

ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் கூட்டமைப்பு வழக்கில் (1982 யுஐசு 1473) இந்திய உச்சநீதிமன்றம், 'மாற்று வழிமுறைகளுக்கான விருப்பத் தேர்வை ஒரு நபர் இழக்கச் செய்யும் எந்தவொரு காரணியும் மற்றும் ஒரு குறிப்பிட்ட நடவடிக்கை வழிமுறையை மட்டுமே பின்பற்றி செயல்படுமாறு அவரை கட்டாயப்படுத்துகிற எதுவும், 'நிர்ப்பந்தம் என முறையாக கருதப்பட வேண்டும்; ஏனெனில் இது ஒரு நிர்ப்பந்தத்தின் பேரில் கட்டாயமாக செய்யப்படும் பணிமுறையாக இருக்கும்,’ என்று தெளிவாக குறிப்பிட்டிருக்கிறது.

தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய அரசும், கொத்தடிமைத் தொழில்முறை பிரச்னைக்குத் தீர்வுகாண தீவிரமாக செயலாற்ற முனைகின்ற போது, ‘கட்டாயத் தொழில்முறையின் பிற வடிவங்கள் / முறைகள்’ என்ற மற்றொரு குற்றச்செயல் உருவாகக்கூடும் என்பதையும் அவர்கள் முன்கூட்டியே கணித்து, அது வலுப்பெற்று நடைமுறையாக மாறிவிடுவதற்கு முன்பாக அது நிகழாமல் திறம்பட தடுக்கப்பட இந்திய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

- ஜான் ரிச்சர்டு எபனேசர், வழக்கறிஞர்

]]>
deep well, rig, lorry, poor employees, ஆழ்துளை கிணறு, தொழிலாளர்கள் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/19/w600X390/AF_India_2015_02542.jpg http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/mar/19/இவர்களும்-மனிதர்கள்தான்-கருணை-இல்லாத-முதலாளிகளின்-சுயநலத்தால்-வீழ்ந்த-மனிதம்-2883585.html
2881832 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் இந்தியாவில் நதிகளின் தேசியமயமாக்கல் சாத்தியமா? - ரமேஷ் கிருஷ்ணன் பாபு Friday, March 16, 2018 03:42 PM +0530
காவிரி நதி நீரை கர்நாடகமும், தமிழ்நாடும் பிரித்துக்கொள்வது தொடர்பாக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியதுடன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் உத்தரவிட்டது. விடுதலை இந்தியாவில், நீர்த் தகராறு பல்வேறு மாநிலங்களுக்கு இடையில் நிலவி வரும் சூழ்நிலையில், இத்தீர்ப்பு பல சிக்கல்களுக்கு முடிவு கட்டுவதாக வெளிவந்துள்ளது. ஆயினும், நதிகளை தேசியமயமாக்கினால் இப்பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு கண்டுவிடலாம் எனப் பலரும் பரிந்துரைக்கின்றனர். இருப்பினும், இதற்கு எதிராக அரசியல்வாதிகள் இருக்கின்றனர்.

நதி நீர் என்பது மாநில விவகாரம். இதில் மத்திய அரசு தலையிடுவது பொருத்தமல்ல என்பது பல மாநில அரசுகளின் வாதம். நதி நீரைப் பிரித்துக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டால், மத்திய அரசு தலையிட அரசமைப்புச் சட்டத்தில் இடம் உண்டு. அதன்படி, 262-ம் பிரிவின் கீழ் நதிகளை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முடியும். இப்போதைய காவிரி மேலாண்மை வாரியமும் இப்படியொரு நடவடிக்கைதான் என்று பலரும் சுட்டிக்காட்டுகின்றனர். இன்று நம்முடைய பயன்பாட்டுக்குக் கிடைக்கும் மொத்த நீரின் அளவு 1123 பில்லியன் கன அடியாகும். 2030-ம் ஆண்டில், நமது தேவை 1.5 டிரில்லியன் கன அடியாக உயரும் வாய்ப்பு உள்ளது. அதே ஆண்டில், இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 150 கோடியாகவும் உயரும் வாய்ப்பும் உள்ளது. இதையொட்டியே நதிகளை இணைப்பது அல்லது தேசியமயமாக்கல் செய்து நீரைப் பிரித்தளிப்பது என்கிற ஏற்பாடு அவசியமாகிறது.

நதிகளை தேசியமயமாக்குவதற்கு மாற்றாக, வற்றாத நதிகளை இணைத்து, விவசாயம், குடிநீர், தொழிற்சாலைத் தேவைகள், அன்றாடப் பயன்பாடு மற்றும் இதரத் தேவைகளுக்கு உள்ள பற்றாக்குறையை நீக்க, நீண்டகாலமாகவே திட்டமிட்டு வருகின்றனர். ஆனால், இத்திட்டங்கள் வரைபடங்களிலேயே தங்கிவிட்டன. இந்தியா விடுதலை பெற்ற பின்னர், கே.எல். ராவ் என்ற பொறியாளரும், காலஞ்சென்ற முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும், நதிகளை இணைக்கும் திட்டத்தினை முன்னெடுத்தனர். என்றாலும், இத்திட்டத்துக்கு எவ்வளவு ஆதரவு இருக்கிறதோ அவ்வளவு எதிர்ப்பும் இருக்கிறது. 

பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் பல அரசியல்வாதிகள், நதிகள் இணைப்புத் திட்டத்தை எதிர்க்கின்றனர். ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு, போலாவரம் அணையை நதிகள் இணைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகக் கட்டி வருகிறார். சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர், 1980-ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் அஞ்சையாவால் துவங்கப்பட்ட திட்டம் இது. அண்டை மாநிலங்களான சத்தீஸ்கரும், ஒடிஷாவும் இத்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. அவர்கள் மட்டுமின்றி, இத்திட்டத்தால் ஏராளமான வனப்பரப்பு நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதால், சூழலியலாளர்களும் கடுமையாகவே எதிர்க்கின்றனர். 

நதிகளை இணைப்பதால் கிடைக்கும் நன்மை குறைவே என்றும், அதனால் ஏற்படும் பாதகமான அம்சங்களை சரிவர கணக்கிடாமல் திட்டத்தை வற்புறுத்துகின்றனர் என்றும், இத்திட்டத்தால் மிகக்குறைவான நீராதாரமே கிடைக்கும் என்றும், அன்றாட பயன்பாட்டுக்கு இப்போது நாட்டில் கிடைக்கும் மொத்த நீரில் 5 - 10 சதவீதம் மட்டுமே செலவாகிறது என்றும், அதனால் இத்திட்டத்தை மேலும் தீவிரமாக ஆராய வேண்டும் என்றும் சுட்டிக்காட்டுகிறார் நீர்வள நிபுணரும், முன்னாள் தேசிய திட்டக்குழு உறுப்பினருமான பேராசிரியர் வைத்தியநாதன். அதுமட்டுமின்றி, கங்கை நதியை இந்தியாவுடன் பங்கிடும் வங்க தேசம், நதி நீர் இணைப்பை எதிர்க்கிறது.

இந்தியாவில், பல மாநிலங்கள் பல்வேறு காரணங்களால் நதிநீர் இணைப்புத் திட்டத்தை எதிர்க்கின்றன. ஆந்திரமும், தமிழகமும் மட்டுமே இத்திட்டத்தை முன்னெடுக்க விரும்புகின்றன. காரணம், இரு மாநிலங்களிலும் உள்ள வறட்சிப் பிரதேசங்களாகும். அதுமட்டுமின்றி, பெருகிவரும் நீர்த் தேவைகளும் இதற்கான அழுத்தத்தைக் கொடுக்கின்றன. இந்திய நதிகளை இணைக்கும் திட்டத்துக்கு சுமார் ஆறு லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, நதி நீர்வழிகளை இணைத்து, அதில் நீர்வழிப் போக்குவரத்தை நடத்தும் திட்டமும் மத்திய அரசிடம் உள்ளது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இத்திட்டத்தில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார். நமது அண்டை நாடான சீனா, சுமார் 1.2 லட்சம் நீர்வழிகளை உருவாக்கியுள்ளதை, இத்திட்டத்தை தொழில்நுட்ப ரீதியாக அணுகிவரும் தேசிய நீர்வழி மேம்பாட்டுத் தொழில்நுட்பத்தின் தலைவர் ஏ.சி. காமராஜ் சுட்டிக்காட்டுகிறார். இத்திட்டத்தின் மூலம் சரக்குப் போக்குவரத்து விரைவாக நடைபெறுவதுடன், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது என்றும் எடுத்துரைக்கப்படுகிறது.  

நவீன இந்தியாவின் நீர்ப்பயன்பாட்டு முறை
நாடு விடுதலை பெற்றபோது, நீர்ப் பயன்பாடு என்பது ஏறக்குறைய முற்றிலும் வேறாக இருந்துள்ளது. நீர்நிலைகளை நம்பி மக்கள் இருந்ததால், குடிமராமத்து போன்ற நடைமுறைத் திட்டங்கள் இருந்தன. மேலும், நீரில் மாசு என்பது அறவே இல்லை. சென்னையின் முக்கிய ஆறுகளான அடையாறும், கூவமும், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் நிலையில் இருந்துள்ளன. நகரமயமாக்கல், மக்கள்தொகைப் பெருக்கம் போன்றவற்றால் நீர்நிலைகள் மாசுபட்டன. இன்று அவற்றை மீண்டும் புனரமைக்க, சில ஆயிரம் கோடிகளில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 

மக்கள் தொகைப் பெருக்கத்துடன், தொழிற்சாலைக் கழிவுகள், வீட்டுக் கழிவுகள், நவீன கருவிகளான மேற்கத்திய கழிவறைகள், துணி துவைக்கும் இயந்திரம் போன்ற வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் அன்றாடம் பயன்படும் நீரின் அளவை அதிகரித்துவிட்டன. இத்துடன், இந்தியாவில் உணவு உற்பத்தியை மேம்படுத்த அறிமுகம் செய்யப்பட்ட பசுமைப் புரட்சியின் புதிய வீரிய ரகப் பயிர்கள், அதிக நீரினைப் பயன்படுத்தும் தன்மையுடையவையாக இருந்தன. இதனால், பாசன நீருக்கான தேவை பல மடங்கு உயர்ந்தது. இன்றைய நீர்ப் பங்கீட்டு சிக்கல்களுக்கு மூலகாரணம் இதுவே என்று சூழலியலாளர்கள் எடுத்துக் கூறுகின்றனர். இயற்கை விஞ்ஞானியான நம்மாழ்வார், பாரம்பரிய பயிர்முறைகளில் நமக்குத் தேவையான ஊட்டம் நிரம்பிய பயிர்களை மட்டுமின்றி, நீரின் பயன்பாடும் சிக்கனமானது என்றார். மேலும், வறட்சியைத் தாங்கி வளரும் பயிர்கள் இங்கு பயிரிடப்பட்டதை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துவருவதையும் காணமுடிகிறது.

நகர்ப்புறங்களில் உருவாகும் மாசு கலந்த நீரைச் சுத்திகரித்து மறுபயன்பாட்டுக்கு அளிக்கும் முறைகள் இருந்தாலும், அவை சுமார் 30 சதவீத நீரை மட்டுமே சுத்திகரிக்கின்றன என்று தனியார் ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. நீர் சுத்திகரிப்புத் தொழிலோடு, குப்பைகளையும் உரங்களாக மாற்றினால் மக்கள் பயனைடைவர் என்பது மெய்யே! தனியார் நிறுவனங்கள் பல இதில் ஆர்வம் காட்டிவருவதும் கண்கூடு. மேலும், நீரைச் சுரண்டாமல் நிலத்தடி நீர்மட்டத்தை வற்றாமல் வைத்திருப்பது அவசியமாகும். மேலும், நிலத்தடி நீரைச் சேகரிக்கும் வழிமுறைகளை அரசு மிகக் கவனமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் நீர் மேலாண்மை வல்லுநர்களால் வலியுறுத்தப்படுகிறது. 

நதிகளை தேசியமயமாக்குவதற்கு ஆதரவாகப் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயல்பட்டு வந்துள்ளனர். அதேபோல, மத்திய அரசின் நீர்வழி இணைப்புச் சட்டத்தை எதிர்த்து கோவாவின் பாஜக மக்களவை உறுப்பினர் தனிநபர் சட்ட முன்வரைவு ஒன்றைக் கொண்டுவந்ததும் வரலாறு. எனவே, நதிகளை இணைப்பதோ அல்லது தேசியமயமாக்குவதோ இப்போதைக்கு சாத்தியமில்லை என்பதையே இதுவரையிலான நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.

- ரமேஷ் கிருஷ்ணன் பாபு

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/9/w600X390/river.JPG http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/mar/16/இந்தியாவில்-நதிகளின்-தேசியமயமாக்கல்-சாத்தியமா-2881832.html
2881848 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் உழவன் செயலியை அறிமுகப்படுத்தும் முன் ஒரு நிமிடம் கவனிக்குமா தமிழக அரசு? Friday, March 16, 2018 02:29 PM +0530  

புதிய வரிகள் இல்லாத, 3 லட்சம் ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை, அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு நிதி என பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டிருந்தது தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்.

பள்ளிக் கல்வித் துறை, நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்துத் துறை என அனைத்துத் துறைகளுக்கும் தமிழக அரசு இந்த பட்ஜெட்டில் தனிக்கவனம் செலுத்தியிருந்தது.

அதே போல, கரும்பு கொள்முதல் விலை நிர்ணய முறையில் மாற்றம், விவசாயம் மற்றும் இதரப் பயன்பாட்டு மின் மானியத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு போன்றவை இடம்பெற்றிருந்தாலும், தமிழக பட்ஜெட்டில் விவசாயம் தொடர்பாக பல எதிர்பார்ப்புகள் புறந்தள்ளப்பட்டுள்ளதோ என்று விவசாயிகள் கருதும் வகையில் அமைந்துவிட்டது துரதிருஷ்டம்.

விவசாயிகளுக்கு உழவன் என்ற செயலி அறிமுகப்படுத்தப்படும் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்திருப்பதன் மூலம், விவசாயிகளை ஒன்றிணைக்க வேண்டும் என்று தமிழக அரசு சிந்தித்திருப்பது தெரிய வருகிறது. இது வரவேற்கத்தக்க விஷயம்.

ஆனால், கிராமம்  தோறும் தகவல் மற்றும் விவசாய செயல் மேலாண்மை மையம் அமைத்து விவசாயிகளுக்கான ஒட்டுமொத்த தீர்வை கிராம அளவில் வழங்கும் திட்டம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், 'உழவன்' என்கிற செயலி அறிமுகப்படுத்தப்படும் என்கிற அறிவிப்பு மட்டும் பட்ஜெட்டில் வந்திருப்பது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.

விவசாயிகளை ஒன்றிணைக்கும் திட்டத்துக்கு செயலி முறை எந்த வகையில் பலனளிக்கும் என்பது குறித்து, விவசாயம் தொடர்பாக பல ஆண்டு காலமாக ஆய்வு செய்து வரும் தொழில்நுட்ப நிபுணர்களிடம் கேட்டதற்கு, அவர்கள் அளித்த தகவல்களை இங்கே பகிர்ந்துள்ளோம்.

செயலி என்றாலே அது செல்போனில் பயன்படுத்துவது என்பது தெரிந்ததே. விவசாய மேலாண்மையில் மொபைல் போன்களின் பங்களிப்பு என்ன என்பதற்கான எங்கள் ஆய்வின் தொகுப்பை இங்கே பதிவு செய்கின்றோம்:

* கிராமப்புறங்களில் மொபைல் போன்களின் உபயோகம் மிக அதிகமாக உள்ளது. மேலும் அதிகரிக்கிறது என்பது உண்மை. மக்கள் இந்த தொழில்நுட்ப பயன்பாட்டை எளிதில் ஏற்றுக்கொள்வதற்கான  காரணம், தகவல் தொடர்பு தேவை என்பதை விட அதனை உபயோகப்படுத்த தேவைப்படும் திறமை/ அறிவு பேசுவதற்கு பச்சை பட்டனையும் நிறுத்துவதற்கு சிகப்பு பட்டனையும் அமுக்கினாள் போதுமானது என்பதுதான், இன்னமும் கிராமங்களில் பலர் புது தொடர்புகளை பதியவோ, பதிந்திருக்கும் தொடர்பை தெரிவுசெய்யவோ தெரிந்தவர்களின் உதவியை நாடுவதை பார்க்கலாம்.

* கிராமங்களில் குறைந்த மக்கள் தொகையே இருப்பதால் தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் நிதிச்சுமைகளினால்  தங்கள் கட்டமைப்பை பலப்படுத்தி, சிக்னல் அளவை கூட்டுவதில் சிக்கலை சந்திக்கின்றன. இதனால் கிராமப்புறங்களில் செல்போன் உபயோகிப்பவர்கள் பேசுவதற்கு கூட வீட்டை விட்டு வெளியே வந்து பேசும் நிலை உள்ளது. இந்நிலையில், பயிர் மேலாண்மைக்கு தேவைப்படும் வீடியோக்கள் பார்ப்பது/ பதிவிறக்கம் செய்து கொள்வது என்பது மிக்க கடினமான செயல்.

* நல்ல விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களில்  மட்டுமே செயலிகளை சிறப்பாக உபயோகப்படுத்த முடியும். விவசாயிகள் அதற்கு நிறைய செலவு செய்ய நேரிடும்

* செல்போன்களின் திரை அளவு சிறிதாக இருப்பதால் கண்பார்வை நன்றாக இருப்பவர்களுக்கே தகவலை படிப்பது, வீடியோ பார்ப்பது கடினமாக உள்ளது. விவசாயிகள் பெரும்பாலோனோர் வயதானவர்கள். அவர்கள் மொபைல் போனில் தகவலை பெறுவது மற்றும் தெரிவிப்பது என்பது சிரமமான ஒன்று. இன்னும் பலர் எழுத்தறிவு இல்லாமல் இருக்கின்றனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

* அடிப்படையான சேவைகளையே பயன்படுத்த திணறும் மக்கள் பெரும்பாலோனோர் உள்ள நிலையில், பேசுவதை தாண்டி செயலி மூலம்  பயிர்களில் ஏதும் பிரச்னை இருந்தால் அதை போட்டோ எடுத்து விவசாய தொடர்பு மையங்களுக்கு அனுப்புவது, வரும் பதிலை படிப்பது, விலை நிலவரங்களை தெரிந்து கொள்வது, விலைபொருளை வாங்க விரும்பும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்வது போன்ற செயல்களை விவசாயிகள் மேற்கொள்வது அல்லது அவர்களை பயிற்றுவிப்பது மிக்க கடினமான விஷயம். 

* ஒவ்வொரு விளைநிலமும் தனித்தன்மை வாய்ந்தது. ஒவ்வொரு விவசாயியும் வெவ்வேறு விதமாக செயல்படும் தன்மையுள்ளவர்கள். எனவே ஒரு விளைநிலத்தின் மகசூலை தரத்தை கூட்டவேண்டுமெனில் அது அந்த நிலம் சார்ந்த காரணிகளைக்கொண்டு அணுகப்படவேண்டும் (SITE SPECIFIC ). அது செயலி மாதிரி மையப்படுத்தப்பட்ட அணுகுமுறையைக்கொண்டு செய்ய இயலாது. பொதுவான தகவல்களை விவசாயிகளுக்கு வழங்குவதால் எந்த பெரிய மாற்றமும் வராது.

* விவசாய விளைபொருள்கள் தொட்டு, முகர்ந்து, உண்டு, மதிப்பீடு செய்து விலை நிர்ணயம் செய்யப்படும் தன்மையை சார்ந்தவை, மேலும், ஒரு விளைநிலத்திலேயே விளைபொருள்கள் தரம் வேறுபடக்கூடியது. இந்த தன்மைகளால்தான் இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகளால் தங்கள் விளைபொருள்களை விற்க முடிவதில்லை. எனவே, விளைபொருளை போட்டோ எடுத்து செயலி மூலம் அனுப்புவதன் மூலம் வாங்குபவர்களின் நம்பிக்கையை பெற முடியாது. விலைநிர்ணயம் செய்துகொள்வது கடினம்.

* பெரும்பாலோனோர் சிறு குறு விவசாயிகளாக உள்ள நிலையில் அவர்களின் சிறிய அளவிலான விளைபொருளை வாங்குவதற்கு ஆட்கள் இருந்தாலும் போக்குவரத்து ஏற்பாடு செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இந்த விளைபொருள்களை ஒன்றுசேர்க்கும் வழிமுறை அவசியம். தற்போது அது இல்லை.

* சந்தை நிலவரங்களை விவசாயிகளுக்கு தெரிவிப்பது மட்டும் முழு தீர்வாக அமையாது. பெரும்பாலான நேரங்களில் சந்தைக்கு வரும் விளைபொருளைகளின் அளவை வைத்தே அன்றைய விலை தீர்மானிக்கப்படுகிறது. மேலும், திண்டுக்கல் அருகில் உள்ள விவசாயி ஓட்டன்சத்திரம் சந்தைக்கு தன் விளைபொருளை கொண்டுபோக திட்டமிட்டிருப்பார். ஆனால் மதுரை சந்தையில் முதல் நாள் விலை அதிகமாக இருப்பது தெரியவரின், அந்த விவசாயி  ஓட்டன்சத்திரத்தை விடுத்து மதுரை செல்ல முற்படலாம். எத்தனை பேர் இப்படி மாறி முடிவெடுத்திருக்கின்றனர் என்பது தெரியாது. நிறைய பேர் அப்படி மாறியிருந்தால் மதுரை சந்தையில், அதிகப்படியான வரத்து காரணமாக விலை குறையும். இது பிற விவசாயிகளுக்கு குழப்பத்தை விளைவிக்கலாம். இந்த கண்ணாம்பூச்சி ஆட்டம் தான் விவசாயிகளை அலைக்கழிக்கிறது. நட்டத்தை ஏற்படுத்துகிறது. எனவே தகவலை கொண்டு சேர்ப்பது முக்கியம். அதைவிட முக்கியம் கடத்தப்பட்ட தகவல் கட்டுப்படுத்தப்படும்  தன்மையை கொண்டிருத்தல். அதற்கு அடிப்படை தற்போது விளையும் பயிர்களின் நேரடி புள்ளிவிபரம் (Live Crop Variety Production Data)

தமிழகத்தை சேர்ந்த கணிப்பொறி வல்லுனர்கள் குழு 15 வருட முயற்சியின் மூலம்  தகவல் தொழில்நுட்பத்தின்   அபார வளர்ச்சியினை, பயன்பாட்டினை விவசாயிகள் முழு அளவில் பயன்படுத்தி தரம், உற்பத்தி, நிகர லாபம் அதிகமாக்குதல்  மற்றும் விவசாயம் செய்வதில்  உள்ள  கடின  தன்மையை இலகுவாக்கும்,  ஒரு புது  இணையத் தளம் சார்ந்த கிராம அளவில் செயல்படும் திட்டத்தை உருவாக்கி, மாதிரி அளவில் வெற்றிகரமாக செயல்படுத்தி, சிறப்பான மதிப்பீடுகளை பெற்றிருக்கின்றோம்..  திட்டமிடுதலில் தொடங்கி விதை முதல்  விற்பனை வரையிலான சேவைகளை, கிராம அளவில் செயல்படும் விவசாய  மேலாண்மை மையத்தில் குறு, சிறு விவசாயிகளும் பெற்று பலன் பெற முடியும். இந்தத்தீர்வை பெரிய அளவில் அரசாங்கத்துடன் சேர்ந்து விரிவாக்கம் செய்யும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறோம்.

இந்தத் திட்டப்படி ஒவ்வொரு கிராமத்திலும் அரசுடன் இணைந்து தகவல் மற்றும் செயல் மேலாண்மை  மையம் செயல்படும். இதில், இன்டர்நெட் வசதியோடு ஒரு கம்ப்யூட்டர், அதை ஆபரேட் செய்ய ஒரு பட்டதாரி, மற்றும் பள்ளிக் கல்வி முடித்த உள்ளூர் இளைஞர் என இரண்டு பேர் கொண்ட டீம் இருக்கும். விவசாயிகள் இவர்களின் துணையோடு, வேளாண்மை சார்ந்த துல்லியமான சமீபத்திய தகவல்கள், அரசின் சிறப்புத் திட்டங்கள், மானிய விவரங்கள், தான் பயிரிட விரும்பும் பயிர் எவ்வளவு ஏக்கர்களில் ஏற்கனவே பயிரிடப்பட்டிருக்கிறது என்கிற விபரம்,  தனது குறிப்பிட்ட நிலத்தில் அதிகபட்ச உற்பத்தி கிடைப்பதற்கான வழிகள், நோய் மற்றும் பூச்சி தடுப்பு பரிந்துரைகள் என்ற     தவல்களைப்  பெறலாம். விதை, உரம் போன்ற  இடுபொருள்களை ஒப்பீடு செய்வது மற்றும் தான் தேர்வு செய்த பொருளை அதற்கான பணத்தை மையத்தில் செலுத்தி குறிப்பிட நாளில் சொந்த இடத்திலேயே பெற்றுக்கொள்ளும் வசதி, தனது ஊரில், வேலை ஆட்கள் மற்றும் எந்திரங்கள் கிடைக்காத பட்சத்தில்  அருகில் இருக்கும் இடங்களில் இருந்து ஒப்பந்தம் செய்துகொள்ளும் வசதி மற்றும் முக்கியமாக, அறுவடைக்கு முன்பாகவே சந்தை விலை விபரங்களை அறிதல், நேரடியாக கொள்முதல் செய்ய விரும்பும் நிறுவனங்களுடன் விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்தல் போன்ற முக்கிய செயல் மேலாண்மை தேவைகளை   செய்துகொள்ள  முடியும். குறு சிறு விவசாயிகளுக்கான மிகச்சிறந்த தீர்வாக இது அமையும்.

விவசாயத்தில் செல்போன் பயன்பாடு என்பது தொழில்நுட்ப ரீதியில், விவசாயிகள் பயன்படுத்தும் ரீதியில் என பல்வேறு எல்லைகளை, தடைகளை கொண்டுள்ளது. எனவே, செயலி, இணையத்தளம்  என்ற அளவோடு இல்லாமல் தகவல் தொழில்நுட்பத்துறையின் முழுப்பயன்பாட்டை விவசாயிகள் பெற்று பயன்படும் விதமான தீர்வை அரசு செயல்படுத்த வேண்டுகின்றோம்.

இதனை பரிசீலித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்குமானால், இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயத்தில் மிகக் குறைந்த காலத்திலேயே தமிழகம் அளப்பரிய சாதனைகள் படைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/10/w600X390/000000000_farmer.jpg http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/mar/16/உழவன்-செயலியை-அறிமுகப்படுத்தும்-முன்-ஒரு-நிமிடம்-கவனிக்குமா-தமிழக-அரசு-2881848.html
2879262 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் குழந்தைகளுக்கு போதை மருந்து அளித்து தூங்கச் செய்த டே கேர் பெண்மணிக்கு 21 ஆண்டுகள் சிறை! கார்த்திகா வாசுதேவன் Monday, March 12, 2018 05:17 PM +0530  

வாஷிங்டனில் சட்டத்திற்குப் புறம்பாக குழந்தைகள் காப்பகம் வைத்து நடத்திக் கொண்டிருந்த பெண்ணொருத்தி கண்டுபிடிக்கப்பட்டு ஆதாரங்களுடன் குற்றவாளியாக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். எப்படி தெரியுமா?

32 வயதான நெதர்லின் எனும் பெண், லிட்டில் கிக்லர்ஸ் என்ற பெயரில் குழந்தைகள் காப்பகம் ஒன்றை நடத்தி வந்திருக்கிறார். அவரது காப்பகத்தில் குழந்தைகளை ஒப்படைக்கும் பெற்றோரிடம் நெதர்லின் கண்டிப்புடன் வளியுறுத்தும் நிபந்தனைகளில் ஒன்று, எந்தக் காரணத்தை முன்னிட்டும் காலை 11 மணி முதல் பிற்பகம் 2 மணீ வரை குழந்தைகளை அழைத்துச் செல்ல காப்பகத்துக்கு வரக்கூடாது என்பது! அந்த 3 மணி நேர இடைவேளை என்பது குழந்தைகள் உறங்குவதற்கான நேரம் என அவர் குறிப்பிட்டுள்ளார். அடடா! தங்களது குழந்தைகளின் உறக்கத்தில் தான் இந்த காப்பகப் பொறுப்பாளருக்கு எத்தனை அக்கறை என்று தான் முதலில் பெற்றோர்கள் அனைவரும் நினைத்திருந்தனர். 

ஆனால், உண்மையில் அந்த நேரத்தில், நெதர்லின் செது கொண்டிருந்தது முழுக்க முழுக்கத் தனது சொந்த வேலைகளை. அந்த நேரத்தில் தான் அவர் தனது வெளுத்துப் போன உடலை சூரியனுக்குக் காட்டி மாநிறமாக மாற்ற முயற்சிக்கும் நேரம் என்கிறார்கள் சிலர், சிலரோ, அவர் அந்த நேரத்தில் தான் உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பார் என்றார்கள். ஆனால் காவல்துறை ஆய்வில் தெரிய வந்தது என்னவென்றால், அந்த நேரத்தில் நெதர்லின் தனது சொந்தக் குழந்தைகளை பள்ளியில் இருந்து பிக் அப் செய்து கொண்டு வரும் நேரம் என்று தெரிய வந்திருக்கிறது.

அந்த நேரத்தில், தான் பணம் பெற்றுக் கொண்டு பொறுப்பேற்றுக் கொண்ட குழந்தைகளை காப்பகத்தில் தனியே விட முடியுமா? குழந்தைகள் விழிப்புடன் இருந்தால் தானே இந்தப் பிரச்னை எல்லாம்?! பேசாமல் குழந்தைகளுக்கு மெலட்டோனின் எனும் போதை வஸ்துவை கலந்து அளித்துத் தூங்கச் செய்து விட்டால், விட்டது தொல்லை. எல்லாமே 1 வயது முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தானே; அவர்கள் பாட்டுக்கு போதை மயக்கத்தில்  தூங்குவார்கள். அதற்குள் தனது சொந்த வேலைகளையும் முடித்து விடலாம் என நெதர்லின் திட்டம் போட்டிருக்கிறார். அதைச் சில நாட்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தியும் வந்திருக்கிறார். தனது காப்பகத்தில் குழந்தைகளைச் சேர்க்கும் நோக்கில் அணுகிய பெற்றோரிடத்தில் ‘தானொரு அரசு அங்கீகாரம் பெற்ற பதிவு செய்து கொண்ட செவிலி என்று கூறி நம்ப வைத்திருக்கிறார். இதை நம்பித்தான் பெரும்பாலான பெண்கள் நெதர்லினின் காப்பகத்தில் தங்களது குழந்தைகளைச் சேர்த்துள்ளனர்.

ஒருவழியாக நெதர்லினின் குற்றங்கள் கண்டறியப்பட உதவியாக இருந்தது அவரது முன்னாள் ஆண் நண்பர் ஒருவரே!

2007 ஆம் ஆண்டு வாக்கிலேயே அடையாளத் திருட்டு மற்றும் ஆள்மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டதாக நெதர்லினின் மீது கிரிமினல் ரெக்கார்டு இருக்கிறதாம். அது மட்டுமல்ல, தனத் இரு கூட்டாளிகளுடன் இணைந்து தனது தேவைகளுக்காக சுயநலமாக அடுத்து என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யவிருக்கிறாள் என்பது போன்ற ரெகார்டுகளையும் அவள் பராமரித்து வந்திருக்கிறாள்.

தற்போது மனதில் கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி பிஞ்சுக் குழந்தைகளின் உயிரோடு விளையாடிய நெதர்லினின் மோசமான குற்றத்துக்காக அவளுக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பெற்றோர்களில் சிலர், இவளை வெளியே விடவே கூடாது, மொத்தமாகச் சிறையில் தள்ளுங்கள் என்றும் 32 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளியுங்கள் என்றும், வாதிட நீதிபதி என்னவோ, நெதர்லினை கடுமையாக எச்சரித்து விட்டு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளித்துள்ளார்.

கொஞ்சமும் மெலட்டினின் பின்விளைவுகள் குறித்த தெளிவின்றி. மிக மோசமாகத் தனது சுயநலத்துக்காக ஒன்றும் அறியாப் பிஞ்சுக் குழந்தைகளுக்கு நெதர்லின் மெலட்டினின் போதை மருந்து அளித்ததால் குழந்தைகளுக்கு உயிரிழப்பு ஏற்படவில்லையே தவிர பிற பாதிப்புகள் நிறையவே இருக்கத்தான் செய்கின்றனவாம். சில குழந்தைகளுக்கு உடல் முழுதும் தடிப்புத் தடிப்பாக பூச்சி கடித்தது போன்ற தளும்புகள், சில குழந்தைகளுக்கு தூக்க சுழற்சி மாறுபட்டு சதா அழுகையால் மோசமான உடல் மெல்வு, முகம் வெளுத்து சோகையாக மாறுதல், உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றனவாம். அந்தக் குழந்தைகள் இயல்பு நிலையை அடைய சில வருட தொடர் மருத்துவக் கண்காணிப்பு தேவை என்கிறார்கள் மருத்துவர்கள்.

இத்தனை நடந்தும் நெதர்லின், நீதிமன்ற விசாரணையின் போது, நான் எனது காப்பகத்தில் இருந்த குழந்தைகளை என் சொந்தக் குழந்தைகள் போலத்தான் பாவித்தேன். அவர்கள் மீது உண்மையான அக்கறையோடு தான் கவனித்துக் கொண்டேன். குழந்தைகளுக்கும் என்னைக் கண்டால் மிகவும் பிடிக்கும் ‘ என்று அப்பாவியாகத் தன்னிலை விளக்கம் அளித்திருக்கிறாள்’

நெஞ்சு பதறத்தான் செய்கிறது. இப்படியும் சில அரக்கிகள் குழந்தைகள் காப்பகம் நடத்துகிறேன் என்ற பெயரில் வந்து சேர்ந்தால் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டியவர்கள் பெற்றோர்களான நாம் தான். நமது குழந்தைகளின் பொறுப்பை எவரிடமேனும் ஒப்படைக்கிறோமெனில் தொடந்து அவர்களை நமது கண்காணிப்பில் வைத்திருப்பதும் அவசியமாகிறது.

இது இப்படி என்றால் பல வருடங்களுக்கு முன் பெங்களூரில், வீட்டோடு இருந்து குழந்தையை கவனித்துக் கொள்ள வந்த கிராமப் புறத்துப் பெண்ணொருத்தி... குழந்தையின் பெற்றோர் இருவரும் வேலைக்குக் கிளம்பியதும் அவர்கள் திரும்பி வரும் வரையிலான இடைவெளியில் குழந்தையை அவளுக்குத் தெரிந்த பிச்சைக்காரி ஒருத்தியிடம் கொடுத்து தூக்க மருந்து அளித்து தோளில் சார்த்திக் கொண்டு சிக்னல், சிக்னலாகப் பிச்சையெடுக்க விட்டு பணம் சம்பாதித்திருக்கிறார். 

வீட்டில் குழந்தைக்காக பெற்றோர் செய்து வைத்த குளிர்சாதன வசதி, சத்தான ஆகார வசதி, எக்ஸ்ட்ரா சத்துணவுகள், பழங்கள் அனைத்தையும் உண்டு கொழுத்ததோடு போனஸாகக் குழந்தையைப் பிச்சையெடுக்க வாடகைக்கு விட்டதில் வேறு அந்தக் கிராதகிக்கு நல்ல வருமானம். 

பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் எனும் பழமொழிக்கிணங்க இவளும் ஒருநாள் பிடிபட்டாள். ஆனால், அந்தக் குழந்தையின் பெற்றோரது மனநிலையை யோசித்துப் பாருங்கள். எத்தனை வலித்திருக்கும்! இப்படி ஒரு அரக்கியிடம் குழந்தையை விட்டுவிட்டு இத்தனை நாட்கள் நிம்மதியாக அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தோமே? குழந்தை அப்போதெல்லாம் தூக்கமாத்திரை மயக்கத்தில் சிஞல், சிக்னலாக எவளோ ஒரு பிச்சைக்காரி கைகளில் கிடந்திருக்கிறதே? இதற்காகவா நாம் சம்பாதித்துக் கிழிக்கிறோம் என்ற ஆத்திரத்திலும், சுய பச்சாதாபத்திலுமாக அந்தக் குழந்தையின் தாய் தனது வேலையை உடனடியாக ராஜினாமா செய்து விட்டு வீட்டிலிருந்து குழந்தையைப் பார்த்துக் கொள்ளத் தொடங்கினார்.

குழந்தைகளை டே கேரில் (குழந்தை காப்பகத்தில்) விடுவது தவறில்லை. ஆனால், அப்படி விடுமுன் காப்பகம் நிஜமாகவே நல்லவர்களால் தான் நடத்தப்படுகிறதா? நடத்துபவர்கள் மேல் குற்றப் பின்னணி எதுவும் உண்டா என்றெல்லாம் ஒன்றுக்குப் பலமுறை யோசித்த பின்னரே நமது குழந்தைகளை ஒப்படைக்க வேண்டும்/ இல்லா விட்டால் மேலே குறிப்பிட்டுள்ளபடி மனம் நொந்து வருத்தப்படப்போவதும் நாமே தான். அதனால் பெற்றோர்களே! அவரவர் குழந்தைகள் விஷயத்தில் எப்போதுமே எச்சரிக்கையாக இருங்கள்!
 

]]>
day care, netherlin, 21 years jail, குழந்தைகள் காப்பகம், போதை மருந்து, 21 வருடச் சிறை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/12/w600X390/netherlin.jpg http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/mar/12/day-care-owner-drugged-children-gets-21-years-jail-2879262.html
2879209 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் டிடிவி தினகரன் நன்றி சொல்ல விரும்பினா முதல்ல இந்த ஃப்ரெஞ்சுக்காரருக்கு தான் சொல்லனும்! கார்த்திகா வாசுதேவன் Monday, March 12, 2018 12:46 PM +0530  

தேர்தல் சின்னமான பிரஸ்ஸர் குக்கர்...

உள்ளாட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடத் தோதாக தங்களுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு டிடிவி தினகரன் தரப்பு உச்சநீதிமன்றத்தை நாடியது. அவரது விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் மீண்டும் குக்கர் சின்னத்தையே உள்ளாட்சி மன்றத் தேர்தலின் போதும் டிடிவி தரப்பு பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

யார் கண்டார்கள்! எம்ஜிஆருக்கு இரட்டை இலை போல, கலைஞருக்கு உதய சூரியனைப் போல நாளை இந்தக் குக்கர் சின்னமே டிடிவியின் நிரந்தர சின்னமாக ஆனாலும் ஆகிப் போகலாம். ஆர்கே நகர் இடைத்தேர்தல் சமயத்தில் தினகரனின் தனிமனித ஆளுமை பேசிய பேச்செல்லாம் இரண்டாம் பட்சம். முதல் பட்சமாக மக்களின் (வாக்காளர்களின்) மனதில் ஸ்பஷ்டமாகப் பதிந்து பேசாத ரகசியப் பேச்சுக்களையும் பேசியது இந்தக் குக்கர் சின்னம் தான்.

குக்கர் பேசுமா? என்று கேட்டு விடாதீர்கள். மனைவியை நேசிப்பவர்கள் பிரஸ்டீஜை... அதாவது பிரஸ்ஸர் குக்கரை வேணாம்னு சொல்வாங்களா ரேஞ்சுக்கு ஆர்கே நகர் மக்களுக்கு வீட்டுக்கொரு குக்கர் வழங்கி தினம், தினம் காலங்காலையில் குக்கர் இல்லாத வீடுகளில் கூட குக்கரைப் பேச வைத்துப் புரட்சி செய்து ஈட்டிய வெற்றியல்லவா அது! அந்த நன்றிக் கடனில் தான் மீண்டும் தனது கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கச் சொல்லி கேட்டிருக்கிறார் டிடிவி தினகரன்.

தமிழகத் தேர்தல் களத்தைப் பொறுத்தவரை, படுத்துக் கொண்டே ஜெயித்தவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். தனது ரோஜா நிற முகத்தைக் காட்டி, முகலாவண்யத்துக்காக ஜெயித்தவர் புரட்சித்தலைவி ஜெயலலிதா. பேச்சு வன்மையால் குரலுக்காக ஜெயித்தவர் கலைஞர் கருணாநிதி. கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுக, திமுக எனும் இரு கட்சிகளும் இப்படித்தான் ஏதோ ஒரு தனித்திறமையால் தொடர்ந்து ஜெயித்து ஆட்சி அமைத்துக் கொண்டிருக்கின்றன. முதல்வர் நாற்காலியில் இவர்களை அமர வைப்பதில் அவர்கள் செய்த நன்மைகளைக் காட்டிலும் மேற்சொன்ன தனித்திறன்களுக்குத் தான் வல்லமை அதிகம். இது தமிழ்நாட்டில் சிறு குழந்தைக்கு கூடத் தெரியும். சரி டிடிவி தினகரனுக்கு ‘குக்கர்’ தான் என்றாகி விட்டது. இனி மக்களுக்கு ஓட்டு இயந்திரப் பலகையில் இரட்டை இலை கண்டதும் எம்ஜிஆர் முகம் ஞாபகம் வருவதைப் போல குக்கரைக் கண்டாலே டிடிவி ஞாபகம் வந்து மேலுமொரு குக்கர் பெறும் கனவில் பச்சக்கென தங்களது பொன்னான ஓட்டை குக்கருக்கே குத்தினாலும் குத்துவார்கள். எல்லாம் அவன் செயல்!

தமிழக தேர்தல் வரலாற்றில் இப்படியொரு மகத்துவத்தை ஏற்படுத்தியுள்ள இந்தக் குக்கரைப் பற்றி நமக்கு வேறு ஏதாவது தெரியுமா? என்றால்... அது தான் காலையில் சமைத்து உண்கிறோமே என்று சொல்லி விடாதீர்கள். இப்போதும் சோற்றைப் பானையில் வடித்து உண்பவர்கள் இருப்பார்கள்... ஆனாலும் அவர்கள் வீட்டிலும் சாஸ்திரத்துக்காகவாவது ஒரு குக்கர் வைத்திருப்பார்கள். அந்த அளவுக்கு குக்கர் 21 ஆம் நூற்றாண்டின் துவக்கம் முதலே இந்திய மக்களிடையே தனித்த செல்வாக்கைப் பெற்று விட்டது. இம்மாதிரியானதொரு சந்தர்பத்தில் குக்கரின் வரலாற்றைப் பற்றியும் நாம் கொஞ்சம் தெரிந்து கொண்டால் நியாயமாக இருக்குமென்று பட்டது. அந்த யோசனையின் விளைவே இந்தக் கட்டுரை.

பிரஸ்ஸர் குக்கரின் கதை...

குக்கரைக் கண்டுபிடித்தது ஒரு ஃப்ரெஞ்சுக்காரர். அவரது பெயர் டென்னிஸ் பாபின்.

அவர் உயர் வெப்பத்தில் நீர் கொதிக்கும் போது உண்டாகக் கூடிய நீராவி மூலமாக அரிசியை மிகக்குறைவான நேரத்தில் வேக வைக்கும் தன்மை கொண்ட ஒரு பாத்திரத்தை உருவாக்க முயற்சித்தார். இதன் மூலமாக சத்துக்களும் வீணாகக் கூடாது என்பது உபரி ஆசை. அதற்காக அவர் கண்டு பிடித்த பாத்திரத்தின் பெயர்  'ஸ்டீம் டைஜெஸ்டர்'. அதாவது நீராவி செரிப்பான். இந்த பாத்திரத்தில் வெப்பத்தின் காரணமாக உருவாகும் நீராவி, நீரின் கொதி திறனை அதிகரிக்கச் செய்யும் என்றும் அதன் மூலமாக வழக்கத்தை விட விரைவில் சமைக்க முடியும் எனவும் அவர் கருதினார்.

தன்னுடைய இந்த அருமையான கண்டுபிடிப்பை எடுத்துக் கொண்டு 1681 ஆம் ஆண்டு வாக்கில் ‘ராயல் சொஸைட்டி ஆஃப் லண்டனுக்குச்’ செல்கிறார் டென்னிஸ் பாபின். அவர்களோ இதை இயற்கை அறிவியல் ஆய்வு சார்ந்த ஒரு கண்டுபிடிப்பாக மட்டுமே அங்கீகரித்து டென்னிஸுக்கு மிகுந்த ஏமாற்றத்தைப் பரிசளித்தனர். பிற்காலத்தில் அவர்களே டென்னிஸை அழைத்து தங்களது சொஸைட்டியின் உறுப்பினராக்கியது தனிக்கதை.

கண்டுபிடிக்கப்பட்ட ஆரம்ப காலத்தில் எந்த ஒரு புதிய பொருளுக்கும் மக்களிடையே இருந்த சந்தேகம் கலந்த வரவேற்பு தான் பிரஸ்ஸர் குக்கருக்கும் இருந்தது. 1681 ஆம் ஆண்டு வாக்கிலேயே பிரஸ்ஸர் குக்கருக்கான ஆரம்ப முஸ்தீபுகள் துவங்கப்பட்டு விட்டாலும் அது இன்று நாம் காணும் குக்கருக்குண்டான வடிவமைப்பைப் பெற கிட்டத்தட்ட 150 வருடங்களாயின. முதன்முறையாக 1864 ஆம் ஆண்டில் ஜார்ஜ் கட்பிரட் என்பவரது முயற்சியில் தகரம் மற்றும் இரும்புத்தாது கலைவையில் கிடைத்த உலோகத்தின் மூலமாக முதல் குக்கர் தயாரிப்பு தொடங்கப்பட்டது.

இன்று நாம் பயன்படுத்தும் குக்கரின்  எள்ளுப்பாட்டி!

1918 ஆம் ஆண்டில் ஸ்பெயின், ஜரகோஸாவைச் சேர்ந்த ஜோஸ் ஆலிக்ஸ் மார்டினிஸ்க்கு பிரஸ்ஸர் குக்கர் தயாரிப்பிற்கான காப்புரிமை வழங்கப்பட்டது. 71143 எனும் காப்புரிமை எண் கொண்ட தனது கண்டுபிடிப்புக்கு மார்டினிஸ் ‘ஒல்லா எக்ஸ்பிரஸ்’ என்று பெயரிட்டார். ‘எக்ஸ்பிரஸ் குக்கிங் பாட்’ (அதி விரைவில் சமைக்கக் கூடிய பாத்திரம்) 1924 ஆம் ஆண்டில் முதன்முறையாக பிரஸ்ஸர் குக்கரின் இணைத்து சமையல் குறிப்பு புத்தகமும் வெளியிடப்பட்டது இவரது தயாரிப்புகளில் தான். தானே எழுதி, வெளியிட்ட 360 சமையல் சூத்திரக் குறிப்புகளுடன் ஒல்லா எக்ஸ்பிரஸ் பிரஸ்ஸர் குக்கர் வெளிவந்தது. இந்தக் குக்கர்கள் உணவகங்களில் பயன்பாட்டில் இருந்தன. ராணுவ முகாம்கள் போன்ற ஆட்புழக்கம் அதிகமுள்ள இடங்களில் எல்லாம் இவைகள் பயன்படுத்தப் பட்டன.

முதல் தலைமுறை பிரஸ்ஸர் குக்கர்...

1938 ஆம் ஆண்டில் நியூயார்க்கைச் சார்ந்த ஆல்ஃப்ரெட் விஸ்செர் என்பவர் முதன் முதலாக ஃப்ளெக்ஸ் சீல் ஸ்பீட் குக்கரை அறிமுகப்படுத்தினார். இந்தக் குக்கர்கள் முதன்முறையாக வீட்டு உபயோகங்களுக்கு என அறிமுகப்படுத்தப் பட்டன. அதற்கு கிடைத்த அமோகமான வெற்றி அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களிடையே குக்கர் தயாரிப்பில் பிற்காலத்தில் பலத்த போட்டியை உருவாக்கியது. 1939 ஆம் ஆண்டில் நேஷனல் பிரஸ்ஸர் குக்கர் கம்பெனி நியூயார்க் உலக கண்காட்சியில் தானே தயாரித்த முதல் பிரஸ்ஸர் குக்கரை அறிமுகப்படுத்தியது. இது பிற்காலத்தில் ‘நேஷனல் பிரஸ்டோ இண்டஸ்ட்ரி எனப் பெயர் மாற்றம் பெற்றது.

இப்படியெல்லாம் பல பரிமாணங்களில் உருமாறி வந்த குக்கர் இன்று நாம் பயன்படுத்தும் குக்கரின் கொள்ளுப்பாட்டியான முதல் தலைமுறை பிரஸ்ஸர் குக்கராக மாறி வர சில காலம் பிடித்தது. முதல் தலைமுறை பிரஸ்ஸர் குக்கர்கள், குக்கருக்குள் அழுத்தம் அதிகரிக்கும் போது உள்ளிருக்கும் நீராவியை வெளியேற்றி குக்கருக்குள் தாங்கக்கூடிய அளவிலான அழுத்தத்துக்கு மாற்றித்தர இன்று நாம் பயன்படுத்துகிறோமே ‘விசில்’ அமைப்புடன் அறிமுகமாயின. சிலர் அந்த விசில் சத்தம் கர்ண கடூரமாக இருப்பதாக உணர்ந்ததால் முதல் தலைமுறை பிரஸ்ஸர் குக்கரில் திருப்தி அடையாத அதன் தயாரிப்பாளர்கள் தொடர்ந்து அதில் தங்களது வாடிக்கையாளர்கள் விரும்பும் அம்சங்களைக் கொண்டு வர முயன்று கொண்டே இருந்தனர். ,

உள்ளிருக்கும் தண்ணீரின் கொதிநிலை உயர, உயர அதன் அழுத்தத்துக்கு நீராவியை வெளித்தள்ளும் விசில் அமைப்புகளுடன் பிரஸ்ஸர் குக்கர்களை ஆபத்துக் குறைவானவையாகவும், விசில் சத்தம் குறைவானதாகவும், மக்கள் விரும்பி வாங்கிப் பயன்படுத்தத் தக்க அம்சங்கள் கொண்டதாகவும் மாற்றும் முயற்சிகளும், ஆராய்ச்சிகளும் தொடர்ந்த வண்ணம் இருந்தன.

சில சமயங்களில் அதிக அழுத்தம் காரணமாக குக்கர் மூடி வெடித்துத் திறந்து கொண்டு உள்ளிருந்த உணவுப் பொருட்களெல்லாம் விசிறியடிக்கப்பட்டுச் சிதறும்படியாக குக்கர் விபத்துகள் அரங்கேறிய படியால், அப்படியான விபத்துக்கள் நேராத அளவில் சிறந்த குக்கர்களைத் தயாரிப்பது அவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. தொடர்ச்சியான பல்வேறு ஆய்வுகளின் பின்னரெ இன்று நாம் பயன்படுத்தக் கூடிய ஆபத்துக்கள் அதிகமற்ற நவீன ரக பிரஸ்ஸர் குக்கர்கள் புழக்கத்துக்கு வந்தன. பிரஸ்ஸர் குக்கர்களின் தங்கையாக இன்று அதி நவீன எலக்ட்ரிக் பிரஸ்ஸர் குக்கர்களைக் கூட நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். என்ன இருந்தாலும் இந்திய மனநிலைக்கு எலக்ட்ரிக் குக்கர்களைக் காட்டிலும் ஸ்டவ் டாப் பிரஸ்ஸர் குக்கர்கள் என்று சொல்லப்படக்கூடிய ஸ்டவ்வில் வைத்து சமைக்கக் கூடிய பிரஸ்ஸர் குக்கர்கள் தான் விற்பனையில் அமோக லாபத்தைச் சம்பாதித்து வருகின்றன.

இன்று பிரஸ்ஸர் குக்கர்கள் இயங்கும் சூத்திரத்தைப் பின்பற்றி சாதம் சமைக்க மட்டுமல்ல, குழம்பும், கிரேவியும் செய்யத் தோதாக பிரஸ்ஸர் பான்கள், பால் காய மில்க் குக்கர்கள், இட்லி அவிக்க, புட்டு அவிக்க இட்லி குக்கர்கள், புட்டுக்கெனத் தனியாக இண்டாலியம் குழாய்ப் புட்டு குக்கர்கள் எனப் பலவும் வந்து விட்டன. இன்றைய குக்கர்கள் பிரஸ்டோ தயாரித்து அறிமுகப்படுத்திய முதல் தலைமுறை குக்கர்களைக் காட்டிலும் பல மடங்கு நவீனமானவை. ஹாக்கின்ஸ் பிரஸ்ஸர் குக்கர் விளம்பரத்தில் ஒரு பேத்தி, தனது பாட்டியிடம் சொல்வாளே, ‘பாட்டி ஹாக்கின்ஸ் குக்கர் மூடி பிரஸ்ஸர்னாலே திறக்காது’ என்பது போல 100% பிரஸ்ஸரால் மூடி பிளந்து திறந்து கொள்ளாத பிரஸ்ஸர் குக்கர்கள் எல்லாம் வந்து விட்டன.

பிரஸ்ஸர் குக்கர்களின் தனிச்சிறப்பு...

எவர்சில்வர் பாத்திரங்களில் சமைப்பதைக் காட்டிலும் குக்கரில் சமைப்பதால் அரிசி மற்றும் காய்கறிகளிருக்கும் சத்துக்கள் சோற்றை வடிப்பதன் மூலமாக வீணடிக்கப்படுவது குறையும். பாத்திரங்களில் சமைப்பதற்கான நேரத்தோடு ஒப்பிடும் போது குக்கர்களில் சமைக்க அவற்றில் மூன்றில் ஒரு பங்கு நேரமே போதுமானது. பாத்திரங்களில் சமைக்கையில் நீரின் கொதிநிலை வெறும் 100 டிகிரி செல்சியஸாக மட்டுமே இருக்க பிரஸ்ஸர் குக்கர்களில் சமைக்கும் போது நீரின் கொதிநிலை அசாதாரண அளவில் 121 டிகிரி செல்சியஸாக உயர்வதால் பானைகளில் சமைப்பதை விட குக்கர்களில் சமைப்பது நேரத்தை மிச்சப்படுத்தித் தருகிறது.

அதனால் தான் இன்று, உலகம் முழுக்க இன்று குக்கர் இல்லாத வீடுகளே இல்லை எனலாம். குக்கர் வாங்கக் கூட வகையில்லாது இருக்கும் குடும்பங்கள் இன்று அரிது. அதுதான் இன்று தேர்தல் சின்னமாகி விட்டதே. குக்கரே வாங்க முடியாதவர்களின் குக்கர் ஆசையை இனி அரசியல்வாதிகள் ஓட்டு அறுவடைக்காக வெகு எளிதாக நிறைவேற்றி விடுவார்கள். 

இதுவரை மக்களின் அத்யாவசியத் தேவைகளில் ஒன்றாக இருந்த குக்கர் இப்போது அரசியல்வாதிகளின் தேர்தல் தேவையாகவும் மாறி விட்டது சுவாரஸ்யமான கதை தான்.

ஒன்று செய்யலாம், தேர்தல் கலாச்சாரம் இப்படித்தான் என்றாகி விட்டபடியால் அரசியல்வாதிகள் தேர்தல் ஆணையத்திடம்,  இனி வருடம் தோறும் மாம்பழம், கதிர் அரிவாள், பம்பரம், உதய சூரியன், இரட்டை இலை, கை, போன்ற சின்னங்களை வழங்குவதைக் காட்டிலும் குளிர்சாதனப் பெட்டி, இஸ்திரிப் பெட்டி, கேஸ் அடுப்பு, மிக்ஸி, கிரைண்டர், தொலைக்காட்சிப் பெட்டி, கட்டில், பீரோ, மெத்தை போன்ற மக்களுக்கு உபயோகமுள்ள பொருட்களையே தேர்தல் சின்னங்களாக அறிவிக்கக் கோரி விண்ணப்பிக்கலாம். அப்புறமென்ன,  இந்தப் பொருட்களை எல்லாம் வாங்க முடியாதவர்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் வரும் போதாவது வாழ்வில் ஒளி பிறக்கட்டுமே!

அதனால் தான் சொல்கிறேன். டிடிவி தினகரன் தனது ஆர்கே நகர் இடைத்தேர்தல் வெற்றிக்கும், இனிமேல் அடையவிருக்கும் வெற்றிகளுக்கும் நன்றி சொல்ல விரும்பினாரென்றால் முதலில் சொல்ல வேண்டியது இந்த பிரஸ்ஸர் குக்கர் என்ற வஸ்துவை முதன்முறையாகக் கண்டறிந்தவரான ஃப்ரெஞ்சுக்காரரான டென்னிஸ் பாபினுக்குத் தான் சொல்ல வேண்டும்.

]]>
டிடிவி தினகரன், TTV dinakaran, பிரஸ்ஸர் குக்கர், தேர்தல் சின்னம், வீட்டு உபயோகப் பொருள், குக்கரின் கதை, election symbol, pressure cooker, the story of pressure cooker http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/12/w600X390/pressure-cookers-history-1.jpg http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/mar/12/story-of-pressure-cooker-turns-election-symbol-2879209.html
2878116 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் எல்கேஜிக்கு எதற்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் கட்டணம்? இந்த கேள்வியை  ஒருநாளாவது கேட்டிருக்கிறோமா?? Saturday, March 10, 2018 02:58 PM +0530  

பெற்றோரில் ஒருவர் வெளிநாட்டில் இருந்து, அவரது பிள்ளையை தனியார் பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்றால், விண்ணப்பப் படிவங்களை சற்று கவனமாக படிக்க வேண்டியது அவசியம்.

என்ன? விண்ணப்பப் படிவங்களை கவனமாக படிக்க வேண்டுமா? அதுவும் பெற்றோர் வெளிநாட்டில் வேலை செய்வதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று பலரும் கேள்வி கேட்கலாம்?

கல்விக் கட்டணக் கொள்ளை பற்றி சொல்ல வந்து இங்கு வேறு எதையோ சொல்கிறோம் என்று குழம்ப வேண்டாம். விஷயம் இருக்கிறது.

கல்விக் கட்டணம் என்ற பெயரில் பகல் கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகள் பற்றி இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத்தான் எழுதிக் கொண்டிருக்கப் போகிறோமோ? என்று கலங்கும் நேரத்தில் அதிலும் பல நுணுக்கங்களை செய்து நம்மை இன்னும் கதிகலங்க வைக்கிறார்கள் தனியார் பள்ளி நிர்வாகத்தினர்.

பெரிய பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கும் பெற்றோரிடம் கல்விக் கட்டணம் என்று ஒரு வார்த்தையைச் சொன்னால் மாய்ந்து மாய்ந்து பேசுவார்கள். ஆனால் என்ன செய்வது? நல்ல பள்ளி, மாணவர்களின் எதிர்காலம் என பல விஷயங்களையும் பார்த்துத்தானே அந்த பள்ளியில் பெற்றோர் சேர்க்கிறார்கள். பிறகு கட்டணம் பற்றி தனியாக பேசுவானேன் என்று கடைசியாக பிரச்னைக்கு முற்றுப்புள்ளியும் வைத்து விடுகிறார்கள்.

தமிழகத்தில் எடுத்துக் கொண்டால் தனியார் பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்புக்கும் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று அரசு முடிவெடுத்து அறிவிக்கத்தான் செய்கிறது. ஆனால் அதனை உண்மையிலேயே பின்பற்றும் பள்ளிகளை ஒரு கையில் இருக்கும் விரல்களை விட்டே எண்ணிவிடலாம். அப்போதும் சில விரல்கள் மிச்சமிருக்கும் என்கிறது உண்மை நிலவரம்.

தமிழக அரசு அறிவிக்கும் கட்டணத்துக்கும், பள்ளிகள் வசூலிக்கும் கட்டணத்துக்கும் மடுவுக்கும் மலைக்கும் இடையிலான வித்தியாசம். இதனை அரசு கண்டுகொள்ளாதது ஏன்? என்றெல்லாம் நாம் கேட்பதேயில்லை. கேட்க வேண்டியவர்களும் கேட்பதில்லை.

பள்ளிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கை தொடங்கும் நேரம் இது. இந்த நேரத்தில் சமூக தளத்தில் ஒரு நண்பர் பெங்களூருவில் இருக்கும் ஒரு புகழ்பெற்ற பள்ளியின் கட்டண விவரங்களை புகைப்பட ஆதாரத்துடன் வெளியிட்டிருந்தார்.

அந்த விவரத்தில், எல்கேஜி மாணவருக்கு ஆண்டுக் கட்டணம் ரூ.2 லட்சத்து 2 ஆயிரம் மட்டுமே என்கிறது பள்ளி நிர்வாகம். இந்த தொகையை மாணவர் சேர்க்கையின் போது பெற்றோர் செலுத்த வேண்டும்.

எல்கேஜி படிக்கும் ஒரு குழந்தைக்கு அப்படி 2 லட்சத்துக்கு என்னதான் சொல்லிக் கொடுத்துவிடுவார்கள். ஏ முதல் இசட் வரை மட்டும்தானே? அதற்கு டியூஷன் பீஸ் என்று 39 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. அதுவே போதுமே என்று பெற்றோர் சொல்லலாம். பள்ளி நிர்வாகம் விடுவதில்லையே.

இதர ஆக்டிவிடிஸ் கட்டணம் என்ற வகையில் ஒரு 8 ஆயிரமாம். ஐயா சாப்பிடவும், சிந்தாமல் தண்ணீர் குடிக்கவும் தெரியாத 3 அல்லது இரண்டரை வயதுக் குழந்தைக்கு பள்ளி வேறு எதைத்தான் சொல்லிக் கொடுக்கும் இந்த கட்டணத்தில் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

விளையாட்டு, பராமரிப்பு, கம்ப்யூட்டர் சயின்ஸ் (எல்கேஜிக்கு கம்ப்யூட்டர் சயின்ஸா? என்ன கொடுமை), ஸ்மார்ட் க்ளாஸ் என பல ஆயிரங்களுக்கு நீள்கிறது ஒரு பட்டியல். இது எல்லாம் சரி.. ஸ்கூல் மேனேஜ்மென்ட் சாஃப்ட்வேர், கிறிஸ்துமஸ் பெல்லோஷிப் லஞ்ச் என்றெல்லாம் போட்டு சில ஆயிரங்களை வசூலிக்கும் இந்த பள்ளியின் மேனேஜ்மென்ட்தான் அந்த சாஃப்ட்வேர் பற்றி நமக்கு விளக்க வேண்டும்.

இப்படி, அப்படி என ஏ முதல் டபிள்யூ வரை ஒரு சிறிய(?!)பட்டியலின் மொத்தத் தொகைதான் ரூ.2,02,000 மட்டும். அப்பாடா என்று மூச்சு விடும் போது, அந்த பட்டியலுக்குக் கீழே பொடி எழுத்தில் ஒன்று அச்சிடப்பட்டுள்ளது. அதைப் படித்த பின் சிலருக்கு வாந்தி, லேசான தலைச்சுற்றல் ஏற்படலாம். அதற்கு பள்ளி நிர்வாகமோ, செய்தியை வெளியிட்ட நாங்களோ பொறுப்பு அல்ல. உங்கள் ரத்தக் கொதிப்புத்தான் காரணமாக இருக்கும்.

சரி என்ன சொல்லுங்கள் என்று அவசப்படாதீர்கள். சொல்கிறோம்.. பெற்றோர் வெளிநாட்டைச் சேர்ந்தவராகவோ அல்லது வெளிநாட்டில் வேலை செய்தாலே, அந்த பெற்றோரின் பிள்ளைகளுக்கு டியூஷன் கட்டணம் இரட்டிப்பாக வசூலிக்கப்படும். அதாவது 40 ஆயிரம் அல்ல, அவர்களுக்கு 80 ஆயிரம் டியூஷன் பீஸ். (இப்போது இந்த செய்தியில் முதல் பாராவை படித்தால் உங்களுக்கு நாங்கள் என்ன சொல்ல வந்தோம் என்பது புரிந்திருக்கலாம்)

கடவுளே இதையெல்லாம் நீர் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறீரா? என்று கேட்டுக் கொண்டிருக்காதீர்கள். அப்புறம், அவர் பார்ப்பதற்கும் நம்மிடம் இருந்து சிறப்புக் கட்டணம் என்று கூறி சில லகரங்களை இந்த பள்ளிகள் வசூலித்துவிடும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/9/15/w600X390/private_schools.jpg http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/mar/10/எல்கேஜிக்கு-எதற்கு-கம்ப்யூட்டர்-சயின்ஸ்-கட்டணம்-இந்த-கேள்வியை-ஒருநாளாவது-கேட்டிருக்கிறோமா-2878116.html
2877550 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் அஸ்வினி!!! ஒரு தலைக் காதல் வன்முறைகளை நியாயப்படுத்தும் சினிமாக்கள் வெட்கித் தலைகுனிய வேண்டிய நேரமிது! கார்த்திகா வாசுதேவன் Friday, March 9, 2018 05:33 PM +0530  

கத்தியால் குத்தப்பட்ட அஸ்வினிக்கு எத்தனை கனவுகளிருந்தனவோ? 

காலையில் கல்லூரிக்குச் சென்ற மகள் பிற்பகலில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டாள் என்றால் அந்தப் பெண்ணைப் பெற்றவர்களின் கதியை நினைத்துப் பாருங்கள். அவளுடனே அருகமர்ந்து படிக்க வாய்த்த பிற மாணவிகளின் மனநிலையை யோசித்துப் பாருங்கள். சென்னையில் இப்படிப்பட்ட பயங்கரங்கள் இன்று தொடர்கதையாகி வருகின்றன. 

கொலையின் பின்னணி...

மதுரவாயலைச் சேந்த மாணவி அஸ்வினிக்கு அழகேசன் என்ற இளைஞரால் முன்பே தொந்திரவு இருந்திருக்கிறது. அழகேசன் கடந்த மாதம் காதல் எனும் பெயரில் மாணவி அஸ்வினிக்கு கட்டாயத் தாலி கட்ட முயன்றிருக்கிறார். அது குறித்து மதுரவாயல் காவல்நிலையத்தில் அஸ்வினி புகார் அளித்திருக்கிறார். அஸ்வினியின் புகாரின் அடிப்படையில் அழகேசன் காவல்நிலையத்துக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டிருக்கிறார். இதனால் கோபமடைந்த அழகேசன் இன்று மாணவி அஸ்வினி கல்லூரி முடிந்து வழக்கம் போல கல்லூரியை விட்டு வெளியில் வருகையில் வாசலில் வைத்தே கத்தியால் குத்திக் கொன்றிருக்கிறார். மாணவி அஸ்வினி கத்தியால் குத்தப்பட்டதும் சம்பவ இடத்திலிருந்தோர் அவரை அவசரகதியில் அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிக்க முயன்றிருக்கிறார்கள். ஆனால், அதிகப்படியான ரத்தம் வெளியேறியதில் மாணவி அஸ்வினி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்திருக்கின்றனர். மாணவியை கத்தியால் குத்தி விட்டு அழகேசனும் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். ஆனால், அங்கிருந்த பொதுமக்கள் ஆத்திரமுற்று அந்த இளைஞனை அடித்துத் துவைத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். தற்போது பிடிபட்டுள்ள அந்த இளைஞன் அருகிலுள்ள இஎஸ் ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்.

கொலை செய்யப்பட்ட அஸ்வினி, அழகேசனின் ஒரு தலைக்காதல் தொல்லையைப் பொறுக்க இயலாமல் மதுரவாயலில் இருந்து ஜாபர்கான் பேட்டையில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக அவர் அங்கிருந்து தான் கல்லூரிக்குச் சென்று வந்திருக்கிறார். கொலையாளி அழகேசன் பட்டப்பகலில் மக்கள் நெருக்கடி மிகுந்த கே.கே நகர் பகுதியில் மாணவி ஒருவர், இளைஞன் ஒருவனால் குத்திக் கொல்லப் பட்ட்அ இச்சம்பவம் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மட்டுமல்ல தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே காதல் என்ற பெயரில் தொடர்ந்து இளம்பெண்கள் மீதும், சிறுமிகள் மீதும் நடத்தப்பட்டு வரும் இத்தகைய வன்முறைகள் முடிவே இல்லாமல் நீண்டு கொண்டிருக்கின்றன.

தமிழகத்தில் காதலின் பெயரால் இப்படி வன்முறைகள் நிகழ்த்தபடுவது முதல்முறையல்ல. 

தொடரும் ஒருதலைக்காதல் கொலைகள்...

2016 ஆம் ஆண்டில் ஜூன் 24 ஆம் தேதி அன்று நுங்கம் பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக் கொல்லப்பட்ட இளம்பெண் ஸ்வாதி கொலைக்கு காரணமாகவும் இதே ஒருதலைக் காதல் விவகாரம் தான் பேசப்பட்டது. தனது உருவத்தைக் கேலி செய்து காதலை ஏற்க மறுத்ததால் ராம்குமார் எனும் இளைஞன், ஸ்வாதியை ரயில் நிலையத்தில் வைத்து அரிவாளால் வெட்டிக் கொன்றான் என்பதே கடைசி வரை உண்மை என காவல்துறை சாதித்தது. முடிவில் ராம்குமாரும் சிறையில் வைத்து தற்கொலை செய்து கொள்ள அந்த வழக்கு அப்படியே முடிந்தது. இன்று வரை ஸ்வாதி கொலை வழக்கு பல்வேறு மர்ம முடிச்சுகளுடனும் விடை தெரியா சந்தேகங்களுடனும் நீடித்தாலும் கொலைக்குக் காரணம் ஒருதலைக் காதல் என்று தான் காவல்துறையால் கூறப்பட்டுள்ளது.

ஸ்வாதி கொலையைத் தொடர்ந்து ஜூன் 27 ஆம் தேதி சேலத்தைச் சேர்ந்த வினுப்ரியா எனும் மாணவி தற்கொலை செய்து கொண்டார். வினுப்ரியா, தனது காதலை ஏற்க மறுத்ததால் சுரேஷ் எனும் மாணவன் வினுப்ரியாவின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து முகநூலில் பதிவு செய்ய அதைக் கண்டு மனமுடைந்த வினுப்ரியா தற்கொலை செய்து கொண்டதாகச் செய்தி. இந்தக் கொலையிலும் ‘ஒரு தலைக் காதல் தான் பிரதானம்.

அடுத்து, விழுப்புரத்தைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவி நவீனாவை, தன்னைக் காதலிக்கச் சொல்லி வற்புறுத்தி செந்தில் என்ற இளைஞன் வற்புறுத்த, மாணவி நவீனா அதற்கு ஒத்துழைக்காததால் நவீனா மீதும், தன் மீதும் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திக் கொண்டான் அந்த இளைஞன். இதனால் ஒரு பாவமும் அறியாத அந்தத் தளிர் காதலின் பெயரால் தனது விருப்பமின்றியே ஒரு கொடூரத்துக்குப் பலியானது.

அதே போல... தொடரும் வெறிச்செயலாக கரூர் மாணவி சோனாலியை, உடன் படித்த மாணவன், தனது ஒரு தலைக் காதலை அந்த மாணவி ஏற்றுக் கொள்ளாததால் மாணவியைக் கல்லூரி வகுப்பறையில் வைத்தே கட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

அதோடு முடியவில்லை இத்தகைய கொடூரங்கள்,  தூத்துக்குடியில் ஆசிரியை பிரான்சினா என்பவருக்கு மறுநாள் திருமணம் என்ற நிலையில், அவரை சர்ச் வளாகத்தில் வைத்தே சீகன் கோமஸ் என்பவன் வெட்டிக் கொன்று விட்டு தப்பி ஓடினான். இதன் பின்னணியும் ஒருதலைக் காதலே!

திருச்சி மோனிஷா, கோவையில் தன்யா, சென்னையில் சோனியா என்று தொடர்ந்து இளம்பெண்கள் கத்தியால் குத்தப்பட்டும், அரிவாளால் வெட்டப்பட்டும், பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டதன் பின்புலமாகக் கூறப்பட்டது அதே ஒருதலைக் காதல் விவகாரம் தான்.

இத்தனை கொடூரங்களையும் தொடர்ந்து தொலைக்காட்சி செய்திகளின் வாயிலாக பார்த்துக் கொண்டும், அதைப் பற்றிப் பேசிக் கொண்டும் இருக்கும் பொதுமக்களின் தீர்க்க முடியாத பிரச்னைகளில் ஒன்றாக இப்போது  ‘பிள்ளை வளர்ப்பும்’ மாறி விட்டிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்ததும் சிறுவர்களையும், சிறுமிகளையும், இளம்பெண்களையும், இளைஞர்களையும் எப்படி கையாள்வது என்றே புரியாமல் தவிக்கிறார்கள் பெரும்பாலான பெற்றோர்கள். முடிவெடுக்கத் தெரியாத வயதில் பிள்ளைகள் செய்யும் தவறுகளை பக்குவமாக கையாண்டு எவ்வித சேதமும் இன்று அவர்களை அந்தச் சிக்கலில் இருந்து மீட்பது எப்படி என்ற கவலை இன்று 100 ல் 80 பெற்றோருக்கு உண்டு.

நிலைமை அப்படி இருக்க, இன்றைய பெற்றோர்களை வதைக்கும் காரணிகளில் மேலும் ஒன்றாக இப்போது ஒருதலைக் காதலும் அதனால் விஸ்வரூபமெடுக்கும் கொடூரக் கொலைகளும் கூட இணைந்து கொண்டமை துரதிருஷ்ட வசமானவை. 

இதற்கொரு முடிவு கட்ட வேண்டுமெனில் இளைஞர்களும், இளம்பெண்களும் இருக்கும் வீடுகளில் பெற்றோருக்கும், பிள்ளைகளுக்குமான உரையாடல்களில் தொய்வு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அனைத்துப் பெற்றோரின் கடமை. அதுமட்டுமல்ல வளர்ந்த பிள்ளைகள் தானே, இனி அவர்களது விஷயங்களை அவர்களே பார்த்துக் கொள்வார்கள் என்று மிகுந்த தன்னம்பிக்கையோடு பிள்ளைகளை கட்டுப்பாடற்ற அதிகப்படி சுதந்திரத்துக்கோ அல்லது தலைமுறை இடைவெளியின் காரணமாக நிகழும் தன்னியல்பான தூரத்திற்கோ பழக்கி விடாதீர்கள். அம்மாதிரியான சூழல்களில் தான் மேற்கண்ட வெறிச்செயல்கள் நிகழ் அதிக சாத்தியங்கள் இருக்கின்றன. 

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த ஒரு தலைக் காதல் விவகாரத்தில் கொலை போன்ற கொடூரங்கள் நிகழ நமது சினிமாக்களும் முக்கிய காரணங்களாகின்றன என்பதை மறுக்க முடியாது. ஒரு பெண்ணுக்கு, ஒரு ஆணின் மீது விருப்பமில்லை, காதல் இல்லையென்றால் அந்தச் சூழலை எப்படி கெளரமாக அணுக வேண்டும் என இன்றைய இளைஞர்களுக்கு கற்றுத்தரும் சினிமாக்களை உருவாக்குங்கள். முகத்துக்கு நேராக ஒரு பெண் நோ என்று சொன்னால் அடுத்து அவளை வெட்டச் சொல்வதும், குத்தச் சொல்வதும், பெட்ரோல் ஊற்று எரிக்கச் சொல்வதுமாக சினிமாக்கள் எடுக்கப் பட்டால், சினிமாவை சினிமாவாகப் பார்க்கத் தெரியாத இந்தக் கால இளைஞர், இளம்பெண்களை நாம் குற்றம் சொல்ல வாய்ப்பில்லை.

தயவு செய்து காதலின் பேரால் இனியொரு கொடூரக் கொலை நிகழ்த்தப் பட வேண்டாம். 

அதற்கான பொறுப்புணர்வை, புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டிய கடமை பெற்றோர், ஆசிரியர், ஊடகத்தினர், சினிமா படைப்பாளிகள் என நம் அனைவருக்கும் உண்டு!


 

]]>
ஒரு தலைக்காதல் கொலைகள், அஸ்வினி கொலை, மீனாட்சி கல்லூரி மாணவி கொலை, அழகேசன், Chennai girl stabbed to death near college entrance-, ashwini murder, student murder at her college campus http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/9/w600X390/ashvini_murder.jpg http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/mar/09/chennai-girl-stabbed-to-death-near-college-entrance-2877550.html
2877518 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் மீண்டும் உயிரூட்டப்படும் ஆருஷி தல்வார் கொலை வழக்கு! RKV DIN Friday, March 9, 2018 02:08 PM +0530  

இந்தியாவை உலுக்கிய ஆருஷி தல்வார் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருந்த ஆருஷியின் பெற்றோர் இருவரையும் கடந்தாண்டு அக்டோபரில் குற்றமற்றவர்கள் எனத் தீர்ப்பளித்து விடுவித்தது அலகாபாத் உயர்நீதிமன்றம். ஆருஷி கொலை வழக்கில் வெளிநபர்கள் யாரும் ஈடுபட்டிருக்க வாய்ப்பே இல்லை. கொலை நிகழ்ந்த நேரத்தில் வீட்டினுள் இருந்தது நால்வர் மட்டுமே, ஆருஷியின் பெற்றோர், ஆருஷி மற்றும் அவர்களது வீட்டு சமையற்காரரான ஹேம்ராஜ். இவர்கள் மட்டுமே இருந்தனர். இதில் நடு இரவில் ஆருஷி கழுத்தறுபட்டு கொலை செய்யப்பட்ட நேரத்தில் ஹேம்ராஜைக் காணாததால் அவர் தான் ஆருஷியைக் கொன்று விட்டு தப்பிச் சென்று விட்டதாக முதலில் கருதப்பட்டது. ஆனால் அடுத்தநாளே அதே அபார்ட்மெண்ட்டின் மொட்டை மாடியில் கொலை செய்யப்பட்ட ஹேம்ராஜின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆருஷி மற்றும் ஹேம்ராஜைக் கொன்றது தல்வார் தம்பதிகளே எனும் ரீதியில் சிபிஐ வழக்கின் போக்கை மாற்றியது. ஆருஷி கொலையைப் பொறுத்தவரை அவரது பெற்றோர்கள், தங்கள் மீதான குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வருகிறார்கள். ஆனால் சிபிஐ அவர்கள் மீதான ஐயத்தை விலக்கிக் கொண்டபாடில்லை. 

அலகாபாத் உயர்நீதிமன்றம் ஆருஷியின் பெற்றோரை குற்றமற்றவர்கள் என விடுவித்த பின்னும் கொலை செய்யப்பட்ட வீட்டு வேலைக்காரரான நேபாளி ஹேம்ராஜின் மனைவி கும்கலா பஞ்சடே, தல்வார்கள் தான் குற்றவாளிகள். அவர்களே தங்களது மகளையும், சந்தேகத்தின் பேரில் என் கணவரையும் கொன்று விட்டு இப்போது நாடகமாடுகிறார்கள். எனது கணவரின் மரணத்துக்கு நீதி கிடைக்காமல் நான் ஓய மாட்டேன் என கடந்தாண்டு டிசம்பரில் பெட்டிஷன் சமர்பித்து உச்சநீதிமன்றத்தை நாடி இருந்தார்.

அலகாபாத் உயர்நீதிமன்றம் சிபிஐ சமர்பித்திருந்த சாட்சியங்களை ஏற்றுக் கொண்டாலும், கொலை வீட்டினுள்ளே நடந்திருக்கிறது என்பதால் அந்த நேரத்தில் கொலையுண்டவர்களை கடைசியாகப் பார்த்தவர்கள், பேசியவர்கள் எனும் அடிப்படையில் தல்வார்களை குற்றவாளிகளாகக் கருதமுடியாது. என அறிவித்து அவர்களை விடுதலை செய்தது. இதை எதிர்த்து தற்போது ஹேம்ராஜின் மனைவியும், சிபிஐ தரப்பும் ஆருஷி வழக்கில் உண்மையான நீதி வேண்டி உச்சநீதிமன்றத்தை நாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.

சிபிஐ வழக்கு விசாரணையின் போக்கு, ஆருஷிக்கும், ஹேம்ராஜுக்கும் இடையே தவறான உறவிருந்து அவர்களைப் பார்க்கக் கூடாத கோலத்தில் பெற்றோரான தல்வார் தம்பதிகள் கண்டதால் ஆத்திரமிகுதியில் இருவரையும் கொலை செய்து விட்டுத் தற்போது தண்டனையிலிருந்து தப்பிக்க நாடகமாடுகிறார்கள் என்பதாகவே இருந்தது. இதை முற்றிலும் அநீதியான விசாரணை என மறுத்த தல்வார்கள் சில காலம் சிறைத்தண்டனையையும் அனுபவித்து வந்தனர். தற்போது மீண்டும் தூசி தட்டப்பட்டுள்ள இந்த வழக்கில் உண்மையான கொலையாளிகள் கண்டறியப்பட்டால் ஒருவேளை ஆருஷி கொலைக்கும், ஹேம்ராஜ் கொலைக்கு நியாயம் கிடைக்கலாம்.

இந்தியாவின் புதிரான கொலை வழக்குகளில் ஒன்றான இவ்வழக்கில் உண்மையான கொலையாளிகள் பிடிபட்டால் அது சிபிஐயின் சாதனையே!

]]>
ஆருஷி கொலை வழக்கு, தல்வார் தம்பதிகள், ஹேம்ராஜ், Hemraj's wife, aarushi, Aarushi Murder Case http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/9/w600X390/aarushi.jpg http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/mar/09/aarushi-murder-case-2877518.html
2877508 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் தமிழக அரசியலில் வெற்றிடமும், வைராக்கியத் தீயும்! - சாது ஸ்ரீராம் Friday, March 9, 2018 12:10 PM +0530 தமிழகத்தில் எல்லோர் மனத்திலும் இடம்பிடித்த ஒரு வார்த்தை “வெற்றிடம்”. அதாவது அரசியல் தலைமை வெற்றிடமாக இருக்கிறது என்பதே அது. “வெற்றிடம்” என்ற பட்டாசை கொளுத்திப் போட்டுவிட்டு அமைதியாக வேடிக்கை பார்க்கிறார் நடிகர் ரஜினிகாந்த். அது இப்போது வெடித்துச் சிதறிக்கொண்டிருக்கிறது. ‘அடுத்தது நாம தான்', என்று கணக்குப் போட்டவர்களை மாற்று வழியை தேட வைத்துள்ளது. உண்மையிலேயே தமிழக அரசியல் கள தலைமை வெற்றிடமாக இருக்கிறதா? அப்படி வெற்றிடமாக இருந்தால், அதை யாரால் நிரப்ப முடியும்? அதை எப்படி நிரப்புவது? என்ற கேள்விகள் நம் மனத்தில் எழுகிறது.

‘இது வெற்றிடம்', என்று யாரும் போர்டு வைக்கமாட்டார்கள். அரசியல் களம் அப்படிப்பட்டது. வெற்றிடம் போலத் தெரியும், ஆனால், வெற்றிடமாக இருக்காது. இதற்கு மாறாக, கம்பீரமாக ஒருவர் உட்கார்ந்து இருப்பார், ஆனால், அது கண்களுக்கு புலப்படாத வெற்றிடமாக இருக்கும். அப்படியென்றால், வெற்றிடத்தை எப்படி உணர்வது? விளக்க வருகிறது ஒரு மகாபாரத சூழல்.

ஆதிபர்வம். திருதிராஷ்டிரன், பாண்டு, விதுரர் ஆகிய மூவரில் யாரை அரசனாக்குவது என்று முடிவெடுக்கும் சூழல் ஏற்படுகிறது. திருதிராஷ்டிரன் பார்வையற்றவர். அதனால் அவர் அரசனாகும் தகுதியிழக்கிறார். விதுரர் அரச குடும்பத்தை சேர்ந்த தாய்க்கு பிறக்காததால் அவரும் அதற்கான தகுதியை இழக்கிறார். இதனால் பாண்டு அரசனாகிறார். சில காலத்துக்குப் பிறகு முனிவர் ஒருவரின் சாபத்தால் காட்டிற்குச் செல்லும் நிலை ஏற்படுகிறது. அதன் பின் பதினாறு வருடங்களுக்கு மேல் காட்டில் வாசம் செய்த பாண்டு மரணமடைகிறார். பாண்டு காட்டிற்கு சென்றவுடன், அரசனாக யாருக்குத் தகுதியில்லை என்று சொன்னார்களோ, அதே திருதிராஷ்டிரன் அரசனாக்கப்படுகிறார். அந்த சூழலில் அவரது பார்வையின்மையை பற்றியோ, அரசியல் ஞானம் பற்றியோ யாரும் கவலைப்படவில்லை. காரணம் அது தற்காலிக ஏற்பாடாகத்தான் உணரப்படுகிறது. பார்க்கப்படுகிறது. மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும்வரை தொடரும் தற்காலிக நிலை அது. தற்காலிக அரசன் மற்றவர்களை கட்டுப்படுத்துவது எவ்வளவு கஷ்டமான காரியம் என்பதை மகாபாரதத்தின் பல நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகிறது. சிறிய விஷயங்களுக்குக்கூட அடுத்தவரை நம்பியே காலத்தை கழிக்க வேண்டிய நிலை திருதிராஷ்டிரனுக்கு ஏற்படுகிறது. இதனால், துரியோதனன் போன்றவர்கள் தன்னிச்சையாக செயல்பட்டனர். திருதிராஷ்டிரன் அரியணையில் ஒரு அலங்காரப் பொருளாக மட்டுமே இருந்தார். ஆளுமையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பாடமாக அந்த சூழல் பார்க்கப்படுகிறது

அடுத்ததாக, வெற்றிடத்தை நிரப்பும் தகுதியையும், சூழலையும் நமக்கு உணர்த்த வருகிறது ஷேக்ஸ்பியரின் காவியங்களில் ஒன்றான அரசர் ஐந்தாம் ஹென்றி (King Henry V). அரசர் நான்காம் ஹென்றியின் மகன் “இளவரசன் ஹாரி”. பொறுப்பில்லாமல் ஊரைச் சுற்றும் மைனர் குஞ்சு. தவறான சேர்க்கையால் செய்யக்கூடாத கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுகிறான். நம்ம ஊர் மொழியில் சொன்னால் “சுத்த காலிப்பய”. அரசரின் மகனாச்சே! யாராவது அவன் மீது கைவைக்க முடியுமா? அரசருக்கு மிகுந்த மன வருத்தம். மகனை திருத்த வழிதெரியாமல் தவித்தார். அதற்காக பல பிரயத்தனங்களை செய்கிறார். எதுவும் கைகொடுக்கவில்லை. அந்த சமயத்தில் உள் நாட்டு கலவரம் வெடிக்கும் சூழல் ஏற்படுகிறது. ஹாரியை அழைக்கிறார் அரசர். இம்முறை அரசரின் வேண்டுதல் பலித்தது. நிலைமையை உணர்ந்த ஹாரி, அரசரின் அழைப்பை ஏற்கிறான். அரண்மனை திரும்புகிறான். உள் நாட்டு போர் வெடிக்கிறது. இளவரசன் ஹாரி பொறுப்புடன் அதை சமாளிக்கிறான். வெற்றிபெறுகிறான். பிறகு ஹாரி ஒரு பொறுப்பான அரசன், ஐந்தாம் ஹென்றியாகிறான்.

இளவரசர் ஹாரி என்ற கதாபாத்திரத்தை கொஞ்சம் அலசிப்பார்த்தால் நமக்கு சில விஷயங்கள் புலப்படும்.

தகப்பன் ஒரு அரசன். அந்த அதிகாரத்தில் மகன் எல்லாத் தவறுகளிலும் ஈடுபடுகிறான். யாராலும் தண்டிக்க முடியாது. ஆனால், ஒரு பிரச்னையான காலத்தில் பொறுப்பை உணர்ந்து தலைமையை ஏற்கிறான். அதாவது தலைமையேற்கும் நேரத்தை அவன் நன்கு உணர்ந்திருக்கிறான். கடந்த கால கெட்ட சகவாசங்களை சட்டென்று உதறித் தள்ளுகிறான். தவறான செயல்களிலிருந்து பாடங்களை கற்றுக்கொள்கிறான். அந்தப் பாடம் அவனை முதிர்ச்சியான தலைவனாக்குகிறது. நெகடிவான விஷயங்களை பாசிடிவாக்கும் கலையை அவன் தன்னுள்ளே வைத்திருப்பது நமக்குப் புரிகிறது. இதையெல்லாம் விட மற்றொரு முக்கியமான விஷயம், இளவரசன் ஹாரி, ஐந்தாம் ஹென்றியாக பதிவியேற்றதும், அவனுடைய பழைய கெட்ட நண்பர்கள் அவனை சந்திக்க வருகிறார்கள். அவர்களுக்கு பரிசுகளை கொடுத்து அரண்மனை பக்கம் வரக்கூடாது என்றும் அறிவுறுத்துகிறான். தவறான செய்கையில் ஈடுபடும் போது அவன் அரச பதவியை நினைக்கவில்லை. அரச பதவியில் இருக்கும் போது தவறான செய்கையில் ஈடுபடவில்லை. இந்த இரண்டு நிலைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை ஹாரி தெரிந்து வைத்திருக்கிறான். இதையெல்லாம் விட மிக முக்கியமான விஷயம், அரசர் நான்காம் ஹென்றி தான் நல்ல நிலையில் இருக்கும் போதே தன் மகனை அரியணையில் அமர்த்த வேண்டும், அவன் ஆட்சி செய்வதை பார்த்து ரசிக்க வேண்டும் என்று நினைத்தார். அப்படியில்லாமல், தான் இருக்கும் போதே மகன் அரியணைக்கு வந்தால், தன்னுடைய முக்கியத்துவம் குறைந்துவிடும் என்று நான்காம் ஹென்றி நினைத்திருந்தால், அவர் வெற்றிடத்தை மட்டுமே தன் சந்ததிகளுக்கு விட்டுச் செல்லும் நிலை ஏற்பட்டிருக்கும்.

இந்த தருணத்தில் மற்றொரு கேள்வி எழுகிறது. நான்காம் ஹென்றியின் ஆளுமையும், திறமையும் அப்படியே ஐந்தாம் ஹென்றிக்கு வந்துவிட்டதே! அப்படியானால், அப்பாவின் உயர்ந்த குணங்கள் எந்த முயற்சியும் இல்லாமல் மகனுக்கும் வந்துவிடுமா?

ஒரு குட்டிக்கதையை பார்ப்போம்.

ஒரு நாடு. அங்கு ஒரு புகழ் பெற்ற திருடன், பக்கிரி இருந்தான். எத்தனை காவல்கள், தடுப்புகள் போட்டாலும் எல்லோர் கண்களிலும் மண்ணைத் தூவி திருடிச்சென்று விடுவான். அவனுடைய திறமை எல்லோரையும் ஆச்சர்யப்பட வைத்தது. ‘பக்கிரி திருடுமளவுக்கு நான் பெரிய மனிதன்', என்று பொருளை இழந்தவர்கள் பெருமைப்படத் தொடங்கினர். வருத்தப்பட வேண்டிய திருட்டு, பெருமைப்படும் விஷயமாக மாறிவிட்டது. பக்கிரியின் மகனும், அந்த நாட்டு அரசனின் மகனும் நண்பர்கள். இருவரும் ஒரு நாள் சாதுவை சந்தித்தார்கள்.

‘ஐயா! என்னுடைய தந்தையின் தனித் திறமை என்னுடைய ரத்தத்திலும் இருக்கும். ஆனால், அவர் எனக்கு தொழிலின் சூட்சமங்களை சொல்லித்தர மறுக்கிறார். நானும் அவரைப் போல புகழ்பெற்ற திருடனாக வேண்டும். என்னுள்ளே உறங்கிக்கிடக்கும் என் தந்தையின் குணங்களை தட்டி எழுப்ப நீங்கள்தான் உதவ வேண்டும்', என்று கேட்டான்.

அடுத்ததாக அரசனின் மகன் பேசினான்.

‘ஐயா! என் தந்தை சிறந்த நிர்வாகி. ஆட்சி செய்யும் சூட்சமத்தை எனக்கு சொல்லித் தருவதில்லை. என்னுடைய தந்தையின் தனித் திறமை என்னுடைய ரத்தத்திலும் இருக்கும். ஆனால், அவர் ஆட்சி செய்யும் சூட்சமங்களை சொல்லித்தர மறுக்கிறார். என்னுள்ளே உறங்கிக்கிடக்கும் என் தந்தையின் குணங்களை தட்டி எழுப்ப நீங்கள்தான் உதவ வேண்டும்', என்று கேட்டான்.

திருடனையும், அரசனையும் அழைத்தார் சாது. ‘உங்கள் மகன்கள் கேட்கும் சூட்சமங்களை சொல்லித் தாருங்கள். ஒரு மாதம் கழித்து மீண்டும் சந்திக்கிறேன்', என்று சொன்னார் சாது.

சாதுவின் கோரிக்கையை இருவரும் ஏற்றுக் கொண்டனர். திருடன் தான் திருடும் இடத்திற்கு மகனை உடன் அழைத்துச் சென்றான். அரசன், தன் மகனுக்கு முடிசூட்டிவிட்டு யாத்திரைக்கு சென்றுவிட்டான்.

ஒரு மாதம் கடந்தது.

சாதுவை சந்திக்க திருடன் வந்தான். மகனை தோளில் சுமந்து வந்தான். மகனின் உடல் முழுவதும் காயங்கள். எழுந்து நிற்க முடியாத நிலை. சாதுவைப் பார்த்ததும் மகன் பேசினான்.

‘ஐயா! இவனெல்லாம் ஒரு அப்பனா! திருடும் இடத்தில் என்னை மாட்டிவிட்டு இவன் தப்பி ஓடிவிட்டான். அங்கிருந்தவர்கள் என்னை நையப்புடைந்துவிட்டார்கள். எனக்கு அப்பனும் வேண்டாம், திருட்டுத் தொழிலும் வேண்டாம்', என்று கையெடுத்து கும்பிட்டான்.

சாது திருடனைப் பார்த்தார். திருடன் பேசினான்.

‘ஐயா! திருடும் தொழிலை சிறு வயதிலிருந்தே செய்கிறேன். இது போன்று பலமுறை அடி உதை வாங்கியிருக்கிறேன். எந்த தொழிலாக இருந்தாலும் அதில் வெற்றி பெற முனைப்பும், வைராக்கியமும் தேவை. அந்த ‘வைராக்கியத் தீயே' நம்முள்ளே இருந்து நம்மை வழி நடத்த வேண்டும். எந்த இடர் வந்தாலும் அந்த தீயை அணையவிடாமல் நாம் காப்பாற்ற வேண்டும். அப்படிச் செய்தால், அந்த தீ நம்மை உயர்த்திப் பிடிக்கும். எனக்கு மகனாகப் பிறந்ததாலே அந்த தீ என்னிடமிருந்து மகனுக்கு சென்றிருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இதை என் மகன் இப்போது உணர்ந்திருப்பான்', என்று சொல்லிவிட்டு நகர்ந்தான் திருடன்.

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே அரசன் அங்கு வந்தான். சாதுவை வணங்கினான்.

‘அரசே! தங்கள் மகனுக்கு பட்டம் சூட்டினீர்களே! இப்போது அவன் எப்படி ஆட்சி செய்கிறான்?' என்று கேட்டார் சாது.

‘அரசனுக்கு உண்டான தகுதி அவனிடம் இருக்கிறாதா என்பதை நான் ஆராயவில்லை. அவன் என் மகன். எனக்குப் பின் அவனே அரசாள வேண்டும். அதனால், அவனைச் சுற்றி அறிஞர்களையும், மந்திரிகளையும், விசுவாசிகளையும் அமர்த்தியிர்க்கிறேன். அவர்கள் அவனை பார்த்துக் கொள்வார்கள்', என்றான் அரசன்.

‘அரசே! உங்களின் தந்தையும் உங்களை இப்படித்தான் அரியணையில் அமர்த்தினாரா?” என்று கேட்டார் சாது.

‘ஐயா! என் தந்தை ஒரு விவசாயி. ஆட்சிக்கு எதிராக புரட்சிகள் செய்து இந்த ஆட்சியை பிடித்தேன். ஆட்சியைப் பிடிக்க என்னுள் இருந்த “புரட்சித் தீ” எனக்கு உதவியது. அந்த தீ என்னுடைய மகனிடம் இருக்க வாய்ப்பில்லை. அதனால் அவனைச் சுற்றி பாதுகாக்கும் ஏற்பாடுகளை செய்திருக்கிறேன்', என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.

நடப்பவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த திருடனின் மகன் பேசினான்.

‘ஐயா! தகுதியில்லாத ஒருவன் திருடனாக இருக்க முடியாது! ஆனால், அரசனாக இருக்க முடியுமா? இது என்ன நியாயம்? ஆட்சியின் போது எல்லாவற்றையும் மற்றவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றால், அவன் அரசனா? சுற்றியிருப்பவர்கள் அரசர்களா?' என்று கேட்டான் அவன்.

பதிலேதும் சொல்லாமல் நகர்ந்தார் சாது.

நாம் படித்த கதைகளிலிருந்து நாம் புரிந்து கொண்ட விஷயங்களை பட்டியலிடுவோம்.

‘தலையிருக்க, வால் நாட்டியமாடும் அந்த நிலையே “வெற்றிடம்” ஏற்பட்டதற்கான அறிகுறி. இதை மகாபாரத திருதிராஷ்டிரன் ஆட்சி நமக்கு புரியவைக்கிறது. இது போன்ற வால்களின் நாட்டிய சூழல் தற்போதைய தமிழகத்தில் நடக்கிறதா?

ஷேக்ஸ்பியரின் காவியம் நமக்கு உணர்த்துவது, ‘தலைமை என்பது ஒரு சிறப்பான குணம். அது வெளிப்படும் போது மட்டுமே உயரத்திற்கு செல்ல முடியும். இதை இளவரசன் ஹாரி நமக்கு உணர்த்துகிறான்.

திருடன் கதை நமக்கு உணர்த்துவது பிறப்பால் உயர்ந்த குணங்கள் தந்தையிடமிருந்து மகனுக்கு இடம் பெயரும் என்று சொல்ல முடியாது. உயர்ந்த குணங்களை ரத்தமும், சதையும் முடிவு செய்கிறது என்ற வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.

திருடன் கதை உணர்த்தும் மற்றொரு விஷயம், எந்த உயரத்தை தொட வேண்டுமென்றாலும் ‘வைராக்கியத் தீ' நம்முள் இருக்க வேண்டும். அந்த நெருப்பை அணையாமல் யார் பார்த்துக் கொள்கிறார்களோ, அவர்களால் மட்டுமே வெற்றிடத்தை நிரப்ப முடியும்.

மகாபாரதமும், திருடன் கதையும் உணர்த்தும் மற்றொரு விஷயம், வெற்றிடத்தை நிரப்புவதற்கும், அரியணையை பிடிப்பதற்கும் சம்பந்தம் இருக்க வேண்டிய அவசியமில்லை.

இந்தக் கதைகள் நமக்கு உணர்த்தும் விஷயங்களின் மூலம் தமிழக அரசியல் களத்தில் வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறதா என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். ‘ஆம் வெற்றிடம் உருவாகியிருக்கிறது. நானே அதை நிரப்புவேன்', என்று யாராவது சொன்னால், அவர்களிடம் இருப்பது ‘ஆசையா' அல்லது ‘வைராக்கிய தீயா' என்பதை அவர் சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். அது வைராக்கியத் தீயாக இருந்தால், வெற்றிடம் நிரப்பப்படும். ஆசையாக இருந்தால், வெற்றிடம் காத்திருக்கும் மற்றொரு புரட்சியாளருக்காக.

சாது ஸ்ரீராம்
- saadhusriram@gmail.com

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/7/22/1/w600X390/tamilnaduasambli.jpg http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/mar/09/தமிழக-அரசியலில்-வெற்றிடமும்-வைராக்கியத்-தீயும்-2877508.html
2877503 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் நான் பார்த்த பீனிக்ஸ் பறவைகள்... உண்மையில் மகளிர் தினக் கொண்டாட்டங்களை அர்த்தமுள்ளதாக ஆக்குபவர்கள் இவர்களே! ஹெலன் பர்னபாஸ், சமூக சேவகி Friday, March 9, 2018 11:48 AM +0530  

சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் எவரும் பெண்களுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் தனி ரயில் பெட்டியை கவனிக்கத் தவறியிருக்க மாட்டார்கள். தனி உலகம் போல் செயல்படும் அந்த பெட்டியில் இந்த உலகையே சுற்றி வந்துவிடலாம். அப்பெட்டியில் எப்போதாவது பயணிக்கும் ஒரு சிலர். அங்கு, பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்வதையும், வீட்டிற்கு தேவையான காய்கறிகளை சுத்தம் பண்ணுவதையும், தங்கள் சொந்தக் காரியங்களை வாய்வலிக்க பேசுவதையும் கேலியாக பேசுவர். ஆனால் இந்த செயல்களும், அப்பேச்சுகளும் தான் இப்பெண்களுக்கு தாங்கு சக்தியையும், மீள்திறனையும் உண்டுபண்ணுகிறது. 

நான் பயணித்த அந்த பெட்டியில் பயணித்த பெரும்பாலான பெண்கள் தங்கள் குடும்ப சேவைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் தங்கள் தனிமனித நிலைப்பாட்டிற்காகவும் உழைக்கும் மகளிர். இத்தனை சுதந்திரத்தைப் பெற்ற இவர்கள் வாழ்க்கையிலேயே, இத்தனை நிகழ்வுகளும், அதை எதிர்நோக்க பல்நோக்கு ஆதரவும் தேவைப்படுமாயின்... நான் அனுதினமும் பார்க்கும் வேலை செய்யும் கொத்தடிமைகளாய் இருந்து விடுதலையான பெண்களுக்கு எத்தனை ஆதரவு தேவைப்படும்? 

கொத்தடிமைகளா? இந்த உலகிலா? என்று நீங்கள் சிந்திப்பதை என்னால் உணர முடிகிறது. ஆம். நானும் நம் நாகரிக வளர்ச்சிக்குப்பின் உழைப்பிற்காக கடத்தப்படும் மக்களைப் பார்க்கும் வரை கொத்தடிமை முறையை நம்பினது இல்லை. 

செய்தித்தாள்களை புரட்டும்போது அங்கொன்றும், இங்கொன்றுமாய் காணப்படும் ‘கொத்தடிமைகளாய் இருந்தவர்கள் மீட்பு’ என்ற செய்திக்குப்பின் இருக்கும் மனித உணர்வுகளைப் படிக்க நமக்கு சில சமயங்களில் மனதுமில்லை, நேரமுமில்லை. ஆனால் எனக்கு தெய்வாதீனமாக அந்த வாய்ப்பு அமைந்துள்ளது. தொழில்நுட்பம் பெருகிப்போன இந்த காலத்தில் மனிதனுடன், மனிதன் பேசுவது அரிதாகிவிடுவதால் தனிமனித எழுச்சி மற்றும் வீழ்ச்சியின் சூட்சுமங்கள் பகிரப்படாமலேயே போகிறது. 

அதிலும் நான் இங்கு பகிரவிருக்கிற இந்த பெண்களின் வாழ்வு... சுதந்திரத்தை இழந்து ஏழ்மைக்காக கொத்தடிமையாக்கப்பட்டது.

கொத்தடிமை வாழ்வைச் சட்டப்பூர்வமாகத் தகர்த்தெறிந்த இரும்புப் பெண்மணி கெளரி...

தனது ஆழமான இந்தக் காதல், ஓர் அழகான திருமண வாழ்க்கையை உண்டாக்கும் என்று காத்திருந்தாள் அந்த பெண். அந்த வாழ்வும் வந்தது. திறமையாய் மேளம் கொட்டும் அவள் கணவன் அவளையும் அவள் மூன்று குழந்தைகளையும் நிஜமான அன்போடு நேசித்தான். இந்த சின்னக் குடும்பம், தங்கள் சக்திக்கு மீறி வாங்கிய ரூபாய் 2500 முன்பணத்திற்காய் தாங்கள் வசித்த அந்த கிராமத்திலேயே கொத்தடிமைகளாய் விலைபோனார்கள். குழந்தை பெற்று தையலிடப்பட்ட அந்த சிறு உடலை தூக்கிக்கொண்டு கணவனுடன் சேற்றிலிறங்கி வேலை செய்யும் பொழுதெல்லாம் சாவையே விரும்பினாள் கௌரி. மருத்துவ செலவிற்காய் வாங்கின இந்தச் சிறு முன்பணம், தன்னையும், தன் குடும்பத்தையும் உணவின்றி உறக்கமின்றி, பிள்ளைகளுக்கு படிப்பின்றி முடக்கிப்போடும் என்று அவள் சிறிதும் சிந்தித்ததில்லை. இந்த அனுதின போராட்டத்தினிடையே தன் பெண்மையை பாதுகாக்கவும் அவள் வெகு பிரயத்தனப்பட வேண்டியதாயிருந்தது. ஒரு பொட்டுத்தூக்கம் நிம்மதியாகத் தூங்கினாளில்லை. எளிதில் பயந்துவிடும் கணவனிற்கும், கூட வேலை செய்யும் ஏழைகளுக்கும் சேர்த்து இவள் தான் அந்த முதலாளியிடம் நியாயத்தை தட்டிக்கேட்க வேண்டியிருந்தது. அப்படி கேட்டபோது வயிற்றிலிடப்பட்ட தையல் பிய்ந்துப்போகும் அளவுக்கு அடித்து துன்புறுத்தப்பட்டாள். அதனையும் துடைத்து திருட்டுத்தனமாக தன் கோரிக்கையை அரசாங்கத்திடம் கொண்டு சேர்த்து, இந்த கொத்தடிமையிலிருந்து விடுதலையாகும் நாளை எதிர்நோக்கி காத்திருந்தபோது... இவர்களின் சூழலை ஆய்வுசெய்ய வந்த அதிகாரிகள் பொய் வழக்கு என்று அறிக்கை தர மேலும் நரகமாகிப்போனது வாழ்க்கை. 

தன் விழுந்துபோன குடிசையிலிருந்து கல்லெறியும் தூரத்தில் வாழும் முதலாளியின் கோபத்திற்கு ஆளானாள். தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையை தவறு என கூறியதால் செல்வாக்கு மிக்க முதலாளியின் முன்பு புழுவாகிப்போனாள். அவரிடம் செய்த வேலையிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் முறையான ‘விடுதலைச்சான்று’ கொடுக்கப்படாததினால் அவளின் போக்குவரத்துகள் கண்காணிக்கப்பட்டன. தன் சொந்த ஊரிலேயே அந்நியமாக்கப்பட்ட உணர்வுடன் வாழ்வதா? இல்லை வயிற்று நோவினால் பாதிக்கப்பட்ட கணவருடனும், மூன்று சுட்டிக்குழந்தைகளுடனும் வேறிடம் சென்று வாழ்வதா?! என்று புரியாது தவித்தாள். தன்னுடன் வேலை செய்தவர்கள் தனக்குத் துணை நிற்பார்கள் என்று கௌரி நம்பிய போது அவர்களோ முதலாளியால் கொடுக்கப்பட்ட துன்பம் தாங்காமல் ஊரைவிட்டு சென்றனர். கௌரி தனது போராட்டம் உண்மை என்று நம்பியதால், தான் ஒரு சாமானியன் என்றாலும் அரசாங்கம் தனக்கு நீதி செய்யும் என்று நம்பி தன்னுடைய விடுதலைக்காய் உறுதியாக நின்று தொடர்ந்து போராடினாள். ஐந்து வருட போராட்டத்திற்கிடையே தன் கணவனையும் தன்னுடன் வேலை செய்த மற்றொரு நபரையும் இழந்தாள். விதவை என்ற பட்டம் அவளது போராட்டத்தை மேலும் வலுவிழக்கச் செய்தது. ஆனால் கௌரி அந்த விதவை வாழ்வை தகர்ப்புகள் எதுவுமின்றி தன்னலமற்று செயல்படும் ஒரு வாய்ப்பாக மாற்றிக்கொண்டாள். இவளின் கோரிக்கையால் அரசாங்கம் அவர்கள் விடுதலையை மறுபரிசீலனை செய்ய முடிவுசெய்தது. அந்த விசாரணையில் அவர்கள் அனைவரும் கொத்தடிமைகளாய் இருந்தது உறுதியாகி விடுதலை சான்று தரப்பெற்றனர். தனி மனுஷியாய் ஏழு தனிநபர்களின் சுதந்திர வாழ்விற்கு வித்திட்ட கௌரி, இன்று கொத்தடிமை முறைக்கு எதிரே குரல் கொடுக்கும் சமுதாயத் தலைவியாக உயர்ந்திருக்கிறாள். 

தாயம்மாவின் காரிருளான கர்ப்பகாலம்...

கர்ப்பிணி பெண்களுக்குத் தாங்கள் கருவுற்றிருக்கிற காலங்கள் வசந்தகாலம் போன்றது. நமது கலாச்சாரத்திலும் கர்ப்பிணிகளுக்கு தனித்த சலுகைகளும், பிள்ளையாண்டிருக்கிறாள் எனும் பிரதான இடமும், இரக்கமும் இன்றும் கொடுக்கப்படுகிறது. தெரியாதவர்கள்கூட உடன்பிறப்பைப்போல் உரிமைக் கொண்டாடி பாதுகாக்கப்படும் மனிதவாழ்வின் நிகழ்வுதான் கர்ப்பகாலம். 
ஆனால் தாயம்மாவிற்கு இந்த வாழ்வு ரூ.1000-த்திற்கு விலைபோனது. வறுமையின் காரணமாக வாங்கப்பட்ட இந்த முன்பணத்திற்காக விறகு வெட்டும் வியாபாரியிடம் இவளும், இவள் குடும்பமும் கொத்தடிமைத் தொழிலாளர்களாய் விற்கப்பட்டு விட்டனர். வியாபாரி குத்தகைக்கு எடுக்கும் முள் புதர்களிடையே கிடைக்கும் சிறு இடத்தில் தான் சிறு சிசு வளரும் வயிற்றுடன் இவளும் இவளது 1 வயது குழந்தையும் இராத்தங்க வேண்டும். இதற்கிடையில் என்றேனும் மழை பெய்தால் முழு இரவும் சிவராத்திரி தான். பொங்கிச் சாப்பிட வழியில்லாமல் அக்கம் பக்கம் ஊர்களில் மக்கள் கொடுக்கும் மிச்ச மீதியே இவளுக்கு ஊட்டச்சத்து! 

இவர்கள் நாளெல்லாம் செய்யும் வேலைக்கு கூலி, வாரத்திற்கு ஒருமுறைக் கொடுக்கப்படும் ரூ.100 அல்லது ரூ.200 தான். இதற்கிடையில் ஏதேனும் கடனாகப் பெற்றால், வட்டியுடன் அது முன்பணத்தில் இணைக்கப்படும். பத்தாம் வகுப்பு வரை தன் கிராமத்தில் படித்திருந்ததால் தாயம்மா தன் முதலாளி செய்யும் கொடுமையை எதிர்த்துக் கேள்வி கேட்டால் அது இவள் கணவனுக்கே ஆபத்தாய் முடிந்தது. அந்த வாரக்கூலி நிறுத்தப்பட்டு அவனுக்குக் குடிக்க சாராயம் தரப்படும், அடி விழும். இந்த காரணத்தினாலேயே எது நடந்தாலும் அமைதி காக்க கட்டாயப்படுத்தப் பட்டாள் தாயம்மாள். வளரும் சிசுவின் மருத்துவத்திற்காகக்கூட ஆஸ்பித்திரி போக அனுமதி மறுக்கப்பட்டாள். அதை மீறி அவள் செல்ல வேண்டும் என்றால் தனியாகவும், திருட்டுத்தனமாகவும் செல்ல வேண்டும். வேலை நின்றுவிடும், நஷ்டம் ஏற்பட்டுவிடும் என்ற காரணத்தினாலும் இவ்வித காரியங்கள் கண்டறியப்பட்டால் முதலாளியின் இரட்டை அர்த்தங்களைச் கொண்ட கெட்ட வார்த்தைகளுக்கும், உணர்வை உறைய வைக்கிற அச்சுறுத்தல்களுக்குமே ஆளாக நேரிடும். 

இதனாலேயே 40 வாரங்களில் 5 முறைக்கும் குறைவாகவே தாயம்மா மருத்துவரிடம் சென்றுள்ளார். தான் காதலித்த பெண் இப்படி துன்புறுகிறாளே என்பதற்காக தன் உடலையும், ஆரோக்கியத்தையும் பணயம் வைத்து உழைத்தான் இவள் கணவன் தேவேந்திரன். எப்பாடுபட்டாவது ஒரு நாளைக்கு இரண்டு கடலை மிட்டாய் வாங்கி கொடுத்துவிடுவான். அவனுக்கு திருப்தி அந்த கடலைமிட்டாயில் அவளுக்கு தேவையான விட்டமின்களும், மினரல்களும் கிடைக்கிறது என்று. 

காலை 6.30 மணிக்கு தொடங்கும் வேலை இரவு லோடு ஏற்றும் வரை நீண்டு கொண்டே இருக்கும். இதற்கிடையில் பானையில் குடிக்கும் தண்ணீர் காலியானால் கூட ஊருக்குள் சென்று எடுத்து வர நேரமிருக்காது. முதலாளி இருக்கும்போது பெண்களைத் தனிமையில் விட்டுச் செல்வது பாதுகாப்பில்லாததாய் இருந்தது. கர்ப்பிணியும் அதற்கு விலக்கில்லை. இந்த தொழிலில் 4 வருடங்களும், கர்ப்ப காலத்தில் ஒன்பது மாதங்களும் ஓடிவிட்டன. இந்த ஒன்பது மாதத்தில் எப்போதாவது தான் அந்த வயிற்றினுள் சிறு உணர்ச்சி இருந்திருக்கிறது.

வானத்தில் நட்சத்திரங்களை பார்த்து தூங்கும் ஒரு இரவில் தங்கள் வாழ்க்கையின் ஏக்கம் மேம்பட, தங்களைப்போல அடிமைத்தனத்திலிருந்து விடுதலையான தூரத்து உறவினரின் நினைவு வர... அவரின் உதவியோடு அரசாங்கத்தை அணுகினர். கொத்தடிமை முறையிலிருந்து விடுதலை பெற்றபின்... தாயம்மா முதல் வேலையாக மருத்துவரிடம் சென்றபோது அவரின் வசைப்பாட்டுக்கே ஆளானார். ஆனால் அவரிடம் இவர்கள் அனுபவித்த இன்னல்களை சொல்ல முடியவில்லை. குழந்தை பெறும் தருணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றிருந்த அந்த நேரத்தில் மருத்துவமனையில் ஆறு யூனிட் இரத்தம் ஏற்றபட்டது. ‘அப்போதுதான் பல மாதங்களாக அமைதியாக இருந்த குழந்தை உயிர்ப்பெற்றதாக உணர்ந்தேன்’ என்று தாயம்மா அழுதது இன்றும் எனக்கு நினைவிருக்கிறது. இன்று தாயம்மா தன் மக்களின் எழுச்சிக்காக வளர்ந்துவரும் தலைவி.

இப்படி பல மக்கள், நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் தங்கள் தனிமனித உரிமைகளையும், சுதந்திரத்தையும் இழந்து கொண்டிருக்கின்றனர். இப்போது நாம் இதை படிக்கும்போதும் எங்கோ ஒரு அரிசி ஆலையில் சில பெண்கள் தங்கள் தாய்மையை அடகு வைத்திருக்கலாம். ஒரு செங்கல் சூளையில் குறைந்த கூலிக்கு வேலை செய்ய கட்டாயப் படுத்தப்பட்டிருக்கலாம். எங்கோ ஒரு பஞ்சாலையில் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கலாம். 

இதைக் கருத்தில் கொண்டு தங்கள் தாங்கு சக்தியையும், மீள்திறனையும் பிரயோஜனப்படுத்தி கொத்தடிமை தொழில்முறைக்கு ஒரு முடிவு கட்டுவோம் என்றும்; இந்தத் தொழில்முறையிலிருந்து கடைசி நபர் விடுதலையாகும் வரை ஓயமாட்டோம் என்றும் சூளுரைத்துச் செயல்படும் இந்த பெண்களை, நெருப்பில் கருகி இறந்த பின்னும் தன் சாம்பலில் இருந்து மீண்டும் மீண்டும் உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவை என்று சொல்லாமல் வேறென்ன சொல்வேன்?! உண்மையில் மகளிர் தினக் கொண்டாட்டங்களை அர்த்தமுள்ளதாக மாற்றக் கூடியவை இவர்களது மீட்சியும், வளமான எதிர்கால வாழ்வுமேயன்றி வேறில்லை.
- ஹெலன் பர்னபாஸ்
சமூக சேவகி
ஐஜேஎம்
 

]]>
WOMEN WHO BREAKE THEIR SLAVE LIFE, தங்களது கொத்தடிமைத் தனத்தை உடைத்த பெண்கள், உலக மகளிர் தினம், international women's day, real life stories, உண்மைக் கதை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/9/w600X390/Thaiyamma.jpg http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/mar/09/real-life-stories-of-2-women-who-breake-their-slave-life-2877503.html
2876829 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் பிறந்தநாள் கொண்டாட்டப் புகைப்படங்களுக்காக இணையத்தில் கடுமையாக ட்ரால் செய்யப்படும் ஜான்வி கபூர்! சரோஜினி DIN Thursday, March 8, 2018 03:38 PM +0530  

அம்மா ஸ்ரீதேவி துபையில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்து 10 நாட்கள் கடப்பதற்குள் நேற்று மார்ச் 7 ஆம் தேதி ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் முகம் கொள்ளாச் சிரிப்புடன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டுள்ளன. பகிர்ந்திருப்பது அவரது சித்தப்பா அனில் கபூரின் மகளும், பிரபல நடிகையுமான சோனம் கபூர் மற்றும் போனி கபூரின் மூத்த மனைவி மோனா கபூரின் மகள் அன்சுலா கபூர்.

இன்ஸ்டாகிராமில் இவர்கள் பகிர்ந்திருக்கும் புகைப்படங்களைக் கண்டு சிலர்,

'உங்களை ஸ்ரீதேவி மறைவுக்காக அப்படியே சோகத்தில் மூழ்கி இருங்கள் என்று கூறவில்லை, ஆனால், இந்தியாவின் மிகப் பிரபலமான சூப்பர் ஸ்டார் நடிகையாக இருந்தவர் இறந்திருக்கிறார். அவரது இறப்பிற்காக குறைந்த பட்சம் 13 நாட்களாவது துக்கம் அனுஷ்டிக்கக் கூடாதா? இறப்பில் நாங்கள் துயரப்படுகிறோம் என உருக்கமாகக் கடிதம் எழுதி விட்டு இப்போது சகோதரிகளுடன் சோகத்தின் சுவடே இன்றி கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி அதை வலையிலும் ஏற்ற வேண்டுமா? உங்களுக்கே தெரியும், உங்களது குடும்பம் ஸ்ரீதேவி மறைவின் பின் தொடர் கண்காணிப்பில் இருக்கிறது என; வலையுலகில் மக்கள் உங்களைத் தான் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள். வெறும் வாய்க்கு அவல் கிடைத்தாற் போல நீங்களாக ஏன் இப்படி கொண்டாட்டமான புகைப்படங்களை வலையேற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.’

- என கருத்துரை இட்டிருக்கிறார்கள். ஆனாலும் அந்தக் கருத்துரைகளையெல்லாம் பெரிதாகப் பொருட்படுத்தாமல் அன்சுலா கபூரும், சோனம் கபூரும் தொடர்ந்து ஜான்வி கபூரின் பிறந்தநாள் கொண்டாட்டப் புகைப்படங்களை வலையேற்றிக் கொண்டு தான் இருந்திருக்கிறார்கள். 

வாழ்வில் முக்கியமான நபரொருவர் துரதிர்ஷ்டவசமாக மறைந்து விட்டார் எனில், நாமும் அவருடனே உயிரை மாய்த்துக் கொள்ள முடியாது. இழப்பைத் தாண்டி வாழ்வு முன்னேறிச் செல்லத்தான் வேண்டும். ஆனால், அந்த மாற்றம் இயல்பானதாக இருக்க வேண்டும். அனுதாபத்தால் மக்களின் கவனம் அனைத்தும் உங்கள் மீது உள்ளபோது நாங்கள் எங்களது துக்கத்தைச் சடுதியில் கடந்து விட்டோம் என்பதாக கபூர் சகோதரிகள் இந்தப் புகைப்படங்களை இணையத்தில் பரப்பியதால் வந்த வினை இது. அவர்களுக்கு அது ஒரு பொருட்டில்லை எனினும் ஸ்ரீதேவியின் தீவிர ரசிகர்களை மனவருத்தம் கொள்ளச் செய்வதாக அமைந்து விட்டது.

]]>
ஸ்ரீதேவி, ஜான்வி கபூர் பிறந்தநாள் கொண்டாட்டம், இன்ஸ்டாகிராம், ட்ரால், sridevi's demiss, jhanvi kapoor, instagram, troll http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/8/w600X390/anshula_kapoorrr.jpg http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/mar/08/janhvi-kapoor-and-kapoor--sisters-trolled-for-posting-birthday-pics-after-sridevis-demise-2876829.html
2876821 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் அதிகாரத் திமிரில் சாமானிய மக்களைக் கொசுக்களாகப் பாவிக்கும் உரிமையை இவர்களுக்கெல்லாம் யார் வழங்கியது? RKV Thursday, March 8, 2018 02:39 PM +0530  

வங்கிகள், ரேஷன் அலுவலகங்கள், அரசு வேலை வாய்ப்பு அலுவலகங்கள், காவல் நிலையங்கள், பள்ளி மற்றும் கல்லூரி முதல்வர் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களுக்கெல்லாம் ஏதாவது ஒரு காரணத்தை முன்னிட்டு சாமானிய மக்கள் சென்றாக வேண்டிய சூழல் வரும்போது அணுகக் கூடிய மக்களின் பதவி, வாழ்க்கைத்தரம் மற்றும் பொருளாதார வசதியை முன்னிட்டு ஒவ்வொருவரும் ஒரு தராசால் அளக்கப்படுகிறார்கள். நாம் அவர்களை அணுகும் போது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அல்லது பதவியில் இருக்கும் மனிதர்களுக்கு நம்மைப் பற்றி ஒரு மாற்றுக்குறைவான அல்லது தாழ்வான எண்ணம் சிறிது உருவானாலே போதும் அப்படிப்பட்ட சாமானியர்களின் சுயமரியாதைக்குப் பங்கம் விளைவிக்கும் விதத்தில் பேசக்கூடிய, செயல்படக்கூடிய அதிகாரிகள் இன்றும் இருக்கிறார்கள். என்றும் இருப்பார்கள்.

நீங்கள் அவர்களை எதிர்க்க வேண்டும் என நினைத்தீர்களானால் உங்களது வேலையில் அல்லது நீங்கள் கோரி வந்த விண்ணப்பத்தை நிறைவேற்றுவதில் தொடர்ந்து தாமதத்தை ஏற்படுத்திக் கொண்டே இருப்பார்கள். எதுவரை? என்றால், அவர்கள் மனம் இரங்கும் வரை, அல்லது அவர்களாக போய்த் தொலையட்டும் என்று சலித்துப் போய் சமாதானம் ஆகும் வரை. சில நேரங்களில் அவர்கள் எதிர்பார்த்த கையூட்டை நீங்கள் அளிக்கும் வரை. சில இடங்களில் அவர்கள் எதிர்பார்க்கும் பணிவு உங்களது உடல்மொழியில் தெரியும் வரை. உண்மையில் மேற்குறிப்பிட்ட பணிகள் அனைத்துமே ஒருவகையில் சேவைப்பணிகளே! மக்களின் தேவைகளுக்காகத் தான் இவர்களை அரசு தேர்ந்தெடுத்து அந்தந்த பதவிகளில் அமர வைத்திருக்கிறது. அங்கே அமர்ந்து கொண்டு பெரும்பாலானோர் கெத்துக் காட்டுகிறோம் என்ற போர்வையில் செய்யும் அட்டூழியங்கள் அதிகம். 

ஒருமுறை சினேகிதி ஒருவரது குடும்பம் சென்னையில் இருந்து டெல்லிக்கு குடி பெயர்ந்தது. இதனால், சென்னையின் பிரபல பள்ளிகளில் பயின்று கொண்டிருந்த அவரது இரு மகன்களுக்கும் டி.சி வாங்க வேண்டிய நிலை. பள்ளியில் அதற்காக அவர்கள் சொன்ன கெடுவில் விண்ணப்பித்திருந்தார். விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட பள்ளி நிர்வாகம் குறிப்பிட்ட தினத்தன்று பள்ளி அலுவலகத்துக்கு வந்து டி.சி வாங்கிச் செல்லுமாறு அறிவுறுத்தியிருந்தது. சினேகிதியால் அந்தத் தேதியில் செல்லமுடியவில்லை. மறுநாள் வரலாமா? என நேரம் கேட்டு அறிந்து கொள்ள பள்ளிக்குத் தொலைபேச முயற்சித்திருக்கிறார். எந்தப் பள்ளியில் உடனே தொலைபேசி லைன் கிடைக்கிறது. இவர் முயன்றபோதெல்லாம் பிஸி என்றே ஒலித்திருக்கிறது. சரி நாளை நேரில் சென்றே பேசிக் கொள்ளலாம் என சலித்துப் போய் தனது தொலைபேசும் முயற்சியைக் கைவிட்டு விட்டார்.

மறுநாள் இவர் பள்ளிக்குச் சென்ற போது, முதலில் பள்ளியின் துணை முதல்வரரைச் சந்திக்கச் சொல்லியிருக்கிறார்கள். உடனே அல்ல, ஏறக்குறைய 2 மணி நேரக் காத்திருப்பின் பின் அந்த அம்மணி இவரை உள்ளே அழைத்திருக்கிறார். உள்ளே சென்றவருக்கு செம டோஸ். சொன்னால், சொன்ன நேரத்தில் வந்தால் தான் டி.சி தர முடியும். நீங்கள் இப்போது வந்து உங்கள் இஷ்டத்துக்கு டி.சி கேட்டால் எங்களது மற்ற வேலைகள் எல்லாம் தடை படுகின்றன. ஒரு பள்ளியின் அலுவலகப் பணியாளர்களுக்கு டி.சி வழங்குவதைத் தவிர வேறு வேலை இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இன்று டி.சி தர முடியாது. மறுபடியும் அடுத்த வாரம் வந்து பாருங்கள். முதல்வர் இன்று விடுமுறை என்பதால் இன்று டி.சி வழங்க முடியாது என்று முகத்திலடித்தாற் போல் கூறி இருக்கிறார். சினேகிதிக்கு தன்நிலை விளக்கம் அளிக்கவோ, பேசவோ வாய்ப்பே தரவில்லையாம் அந்த அம்மணி. பள்ளியில் டி.சி வாங்க வரச்சொல்லி அவர்கள் குறிப்பிட்ட தினத்தன்று மாமானார் பாத்ரூமில் வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டு சுயநினைவை இழந்த காரணத்தால் அவருடன் மருத்துவமனை சென்று திரும்பியதில் தாமதமான காரணத்தை எல்லாம் விளக்க இவருக்கு வாய்ப்பே தரப்படவில்லை. பிறகென்ன டி.சி வாங்காமலே நொந்து போய் வீடு திரும்பிய சினேகிதி அறிந்தவர்களிடமும், நட்புக்களிடையிலேயும் ஒரு பாட்டம் இந்தக் கதையைச் சொல்லிப் புலம்பித் தீர்த்தார்.

அப்புறமும் ஓரிரு முறை அலைய விட்டுப் பிறகு தான் அவரால் டி.சி வாங்க முடிந்திருக்கிறது. சென்னை மட்டுமல்ல இன்றும் தமிழகத்தில் லட்சங்களில் கல்விக் கட்டணம் வசூலிக்கும் பல்வேறு பிரபல பள்ளிகளில் நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கிடையிலான உறவு இப்படித்தான் இருக்கிறது. 

ரேஷன் அலுவலகங்களில் புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டுமா? குடும்ப உறுப்பினர்கள் பெயர் சேர்க்க வேண்டுமா? நீக்க வேண்டுமா? இடம் மாறுதல் காரணமாக ரேஷன் கார்டில் முகவரி மாற்றம் செய்ய வேண்டுமா? எந்த வேலையாக இருந்தாலும் சரி ரேஷன் அலுவலகம் சம்மந்தப்பட்ட வேலை எனில் அது சுமுகமாக முடியும் வரை நிச்சயம் உங்களது உயிரை வாங்கி பெரும் மன உளைச்சலுக்கு உட்படுத்தக் கூடியவையாகவே இன்றளவும் நீடிக்கிறது. திருமணமான புதிதில் கணவரது சொந்த ஊர் முகவரியில் எங்களுக்கு ரேஷன் கார்டு இருந்தது. அங்கிருந்து எங்களது பெயர்களை நீக்கிச் சான்றிதழ் பெற்று சென்னை வந்ததும் இங்கிருந்த முகவரிக்கு புது ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்திருந்தோம். அவர்கள் கேட்ட சான்றிதழ்கள் மற்றும் தகவல்களை சமர்பித்து விட்டு புது ரேஷன் கார்டு இன்று வரும், நாளை வரும் எனக் காத்திருக்கத் தொடங்கினோம். இடையிடையே ரேஷன் அலுவலகத்துக்கு நேரில் சென்றும் விசாரிக்கத் தவறவில்லை. ஒரு பயனும் இல்லை. நாட்கள் கடந்து கொண்டே இருந்தன. விண்ணப்பித்து சரியாக 10 மாதங்கள் கழித்து அவர்களாகத் தராமல் நாங்களே போய் அங்கே மேலதிகாரியின் இன்ஸ்ஃபெக்‌ஷன் நடந்து கொண்டிருக்கையில் எங்களது குறையை உரக்கக் கத்திச் சொல்லி அங்கிருந்தோர் அத்தனை பேரின் கவனத்தையும் கலைத்த பிறகே எங்களுக்கென நியமிக்கப்பட்ட ரேஷன் அலுவலக அதிகாரியான பெண்மணி புது கார்டை எடுத்து நீட்டினார். எதற்காக இத்தனை நாட்கள் தராமல் இழுத்தடித்தார்கள் என்பது மிகப்பெரிய புதிராக இருந்தது எனக்கு. இவர்களது தேவை தான் என்ன? ஓரளவு படித்தவர்களான எங்களுக்கே இந்த நிலை என்றால் படிக்காத பாமர மக்களை இவர்கள் என்ன பாடு படுத்துவார்கள். என்று யோசிக்கையில் வெறுப்பாக இருந்தது.

அங்கே இப்படி என்றால், வங்கி நடைமுறைகள் பற்றித் தனியாக ஒரு மெகா நாவலே எழுதலாம். வங்கியில் புதிதாக கணக்குத் தொடங்க வேண்டும் என்றால் இப்போதெல்லாம் தனியார் வங்கிகளில் ராஜமரியாதையோடு கணக்குத் துவக்கிக் கொடுத்து விடுகிறார்கள் அங்குள்ள அலுவலர்கள். ஆனால், எஸ்பிஐ போன்ற அரசு வங்கிகளை புதுக் கணக்குத் துவக்க அதுவும் அலுவலகத்தின் சார்பில் புதுக்கணக்குத் தொடங்க விண்ணப்பித்துப் பாருங்கள். விண்ணப்பத்தில் உள்ள சான்றிதழ்களை பரிசோதித்து அவர்கள் கேட்டுள்ள பகுதிகளை எல்லாம் பூர்த்தி செய்திருக்கிறோமா என்றெல்லாம் சரி பார்க்கிறேன் பேர்வழியென்று சில கடுவன் பூனை மேனேஜர்கள் செய்யும் அராஜகம் பொறுமையைச் சோதிக்கக் கூடியவை. வங்கிக் கணக்கு துவக்கக் கோரி விண்ணப்பிக்கையில் ஏற்படும் கால தாமதத்தைக் கூட நாம் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் பெரும்பாலான வங்கி மேலாளர்கள் தங்களை அணுகும் சாமானியர்களான விண்ணப்பதாரர்களை கொசுக்களைப் போலவும் ஈக்களைப் போலவும் பாவித்து மரியாதையின்றி பேசுவதும், என்னவோ பள்ளித் தலைமையாசிரியரைப் போல மிரட்டல் தொனியில் பதிலளிப்பதும் மகா கேவலமான செய்கை. வங்கிகளில் ஒருமுறையேனும் அவமதிப்பாக உணரத் தலைப்படாத மானுடர்கள் நம்மில் குறைவு. இந்த ஏடிஎம்கள் வந்தனவோ, இல்லையோ பலரும் உண்மையில் ஜென்ம சாபல்யம் அடைந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

காவல் நிலையங்கள்... காவல்நிலையங்களைப் பற்றியும் ஏதோ பூர்வ ஜென்ம பாவத்தால் அங்கே செல்ல வேண்டிய அவசியம் நேர்ந்து விட்டவர்களின் கதியையும் பற்றித் தனியாக நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது. அதைத் தான் நம் தமிழ் சினிமாக்களில் காலங்காலமாக கிழி, கிழியென்று கிழித்துக் கொண்டு தானே இருக்கிறார்கள். காவலர்களில் விரல் விட்டு எண்ணிவிடத்தக்க அளவில் ஒரு சில மனிதாபிமானிகளைத் தவிர பலருக்கும் இந்த நாட்டில் அராஜகமாக நடந்து கொள்வதற்கான உரிமையை அரசே தங்களுக்கு வழங்கியிருப்பதான பாவனை தான் அதிகம். பாதிக்கப்பட்ட மக்களைக் கேட்டால் கதை, கதையாகச் சொல்வார்களே! இதோ நேற்றுக் கூட காவலர் ஒருவர், வாகனச் சோதனையின் போது வண்டியை நிறுத்தாமல் சென்றதற்காக கர்ப்பிணிப் பெண் ஒருவரை எட்டி உதைத்ததில் அவர் இறந்ததாக வந்த செய்தியை என்னவென்பது? இத்தனை அராஜகமாக மனிதாபிமானமற்று நடந்து கொள்ளும் அதிகாரத்தை இவர்களுக்கு யார் வழங்கியது?! காவல்நிலையத்தில் புகார் அளிக்க வரும் இளம்பெண்களை மானபங்கம் செய்த காவல்துறை அதிகாரிகள் பற்றிய கதைகளை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அத்தனை ஏன் காவல்துறை உயர் அதிகாரிகளின் அராஜகப் போக்கை சிவகாசி ஜெயலட்சுமி, டி.எஸ்.பி விஷ்ணுப்ரியா தற்கொலை வழக்கு, உள்ளிட்ட சம்பவங்களில் எல்லாம் நாம் அறியாதிருக்கிறோமா என்ன? கிரா வின் கதையொன்றில் சித்தரிக்கப்பட்டதைப் போல இப்போதெல்லாம் இளம்பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டால் புகார் அளிக்க காவல்நிலையம் சென்றாரகள் எனில் அங்கே அவர்கள் இரண்டாம் முறை பலாத்காரத்துக்கு உட்படுத்தப் படலாம் என்ற நிலையே எஞ்சியுள்ளது. மக்களிடையே காவல்நிலையங்களைப் பற்றியதான சித்திரம் இப்படித்தான் இருக்கிறது. காவல்துறை அதிகாரிகளை இப்போதும் சிங்கம், புலி, கரடிகளைப் போல மிரட்சியுடன் பார்க்கும் நிலை தான் பொதுமக்களுக்கு! காவல்துறை மக்களின் நண்பன் என்று பெயரளவிற்கு அவர்கள் ஸ்தாபிக்க நினைத்தாலும்... அவர்களில் பெரும்பாலானோரது மோசமான நடவடிக்கைகளால் நடைமுறையில் அது சாத்தியமில்லாத நிலையே நீடிக்கிறது.

மேற்கண்ட துறை சார்ந்த அலுவலர்களும், அதிகாரிகளும் சாமனியர்களிடம் இத்தனை தலைக்கனத்துடனும், அவமரியாதையாகவும் நடந்து கொள்வது எதனால்? இவர்கள் சாமானியர்களிடத்தில் தங்களது அணுகுமுறையை மாற்றிக் கொள்ளவே மாட்டார்களா? பதவிக்கு மரியாதை தருவது மனித இயல்பு, அதை வேண்டுமானால் இவர்கள் எதிர்பார்க்கலாம். ஆனால், தாங்கள் வகிக்கும் பதவியின் காரணமாக தங்களைக் கண்டால் சாமானியர்கள் பயந்து மரியாதை தருவதோடு, தங்களை அரசர்களைப் போல உணர வைக்க வேண்டும் என்றெல்லாம் இவர்கள் எதிர்பார்ப்பது அவர்களுக்கே அநியாயமாகத் தோன்றாதா? இல்லை, அநியாயமானாலும் பரவாயில்லை. தாங்களது அதிகாரத்தின் எல்லைக்குட்பட்டு தங்களை சிற்றரசர்களாகத்தான் உணர்வோம், மற்றவர்களுக்கு உணர்த்துவோம் என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்களா? இதுவும் கூட ஒருவகையான நடத்தைக் கோளாறு தான் இல்லையா?

மேற்கண்ட குற்றச்சாட்டை வாசகர்கள் அனைவரும் உங்களது சொந்த அனுபவத்திலும் உணர்ந்திருப்பீர்கள். நான் அடுக்கிய குற்றச்சாட்டை இல்லையென மறுப்பவர்கள் அது குறித்த உங்களது கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.

நடக்கும் பாதையில் இடறும் முட்களைப் போன்றதான இவர்களின் செயல்களுக்கு எப்படிப் பதிலடி தருவது? இதற்குப் பொருத்தமான தங்களது பதில்களையும் வாசகர்கள் இங்கு பதிவு செய்யலாம்.
 

]]>
power arrogance, அதிகாரத் திமிர் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/8/w600X390/thorn_1.jpg http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/mar/08/power-arrogance-head-weighted-higher-officials-2876821.html
2876807 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் எது உண்மையான பெண்கள் தினம்? கேளிக்கைகள் கொண்டாட்டங்கள் மட்டுமே என நினைக்கிறீர்களா? ஒரு நிமிடம் ப்ளீஸ் உமா பார்வதி Thursday, March 8, 2018 12:56 PM +0530  

பெண்களின் இன்றைய நிலை உண்மையில் என்னவென்று யாரேனும் யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? பெண் சுதந்திரம் என்று பேசுபவர்கள் அந்த சுதந்திரம் என்பதன் உண்மை அர்த்தம் என்னவென சிந்தித்ததுண்டா? 

மகளிர் தினத்தை ஒரு கொண்டாட்டமான தினமாக மாற்றிவிட்டார்கள், உண்மையில் எதற்காக தொடங்கப்பட்டது என்பதை மறப்பது சரியல்ல என்கிறார்கள் சிலர். பெண்கள் தினக் கொண்டாட்டங்கள் சமீபமாக வணிக லாபத்துக்கான ஒரு தளமாகிவிட்டது, பெண்கள் சம்பந்தப்பட்ட பொருட்களுக்கான விளம்பரமும் விற்பனையும் செய்து சூழலில் லாபம் பார்க்கிறது ஒரு கூட்டம் என்கிறார்கள் இன்னும் சிலர். பெண்கள் இப்படித்தான் இருக்கவேண்டும், இந்த உடைகள் தான் அணிய வேண்டும். இந்த நேரத்துக்குள் வீடு திரும்பிவிட வேண்டும், இல்லையெனில் அவர்களின் பாதுகாப்புக்கு யாரும் பொறுப்பல்ல என்று உரத்த குரலில் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் கலாச்சார காவலாளிகள் சிலர். 'ஒரு நாளை ஓட்டறதே பெரிய கஷ்டம், இதில் பெண்களுக்கான ஒரு நாளுன்னா எங்க பிரச்னை தீர்ந்திடுமா’ என்று வேதனையுடன் ஒலிக்கும் குரல்கள் ஒரு பக்கம்.

நன்றாகப் படித்து முடித்திருந்தாலும் குடும்பம் எனும் கூட்டில் அடைபட்டு, என் திறமைகளை வெளிக் கொண்டு வர முடியவில்லை, இதில் மகளிர் தினம் ரொம்ப முக்கியம் என்று புலம்பும் இல்லத்தரசிகள் பலர். இப்படி நாலா பக்கமும் பெண்கள் தினத்தை மறுப்பவர்கள் இருக்கவே செய்கிறார்கள். அந்தக் குற்றச்சாட்டுகள் ஒருபுறம் இருக்கட்டும். உண்மையில் மகளிர் தினம் என்று தனிப்பட்ட ஒரு தினம் தேவையா? அந்த ஒரு நாளில் ஏதேனும் நல்ல விஷயங்கள் நடக்கின்றனவா? உலகம் முழுவதும் உள்ள பெண்களின் விழிப்புணர்வு மேம்பட்டுள்ளதா? 

என்னைப் பொருத்தவரையில் மகளிர் தினத்தைப் பற்றி கலவையான ஒரு உணர்வு தான் எப்போதும் ஏற்படும். பத்திரிகையில் பணிபுரிந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில் மற்றவர்களுக்கு மார்ச் மாதம் வரவேண்டிய மகளிர் தினம் எங்களுக்கு மட்டும் பிப்ரவரி மாதமே வந்துவிடும். காரணம் வரவிருக்கும் இதழுக்கான முன் தயாரிப்பாக எல்லா வேலைகளையும் முன்பே முடித்துவிடுவோம். நாங்கள் தயாரிக்கும் அந்த மகளிர் ஸ்பெஷல் இதழில் வாசகியரின் கலந்துரையாடல் இருக்கும், அதன் பின் பெண் படைப்பாளிகளிடமிருந்து கவிதை, ஆவேசமான கட்டுரை, அல்லது சிறுகதை இருக்கும். தவிர வெற்றிப் பெற்ற பெண்களின் பேட்டிகள் குறைந்தது பத்தாவது அதில் இடம்பெறும்.

எல்லாவற்றுக்கும் உச்சமாக கடந்த வருடம் சாதனைப் பெண்களின் பட்டியலில் இருந்த அதே பத்து பேர் இருந்தால், இந்த வருடமும் தொடர்வார்கள். அதில் பெரிய மாற்றங்கள் இருக்காது அல்லது ‘ஊடக’ வெளிச்சத்திற்கு வந்திருக்காது. மீறி வந்தால் பத்து ஒரு பதினைந்தாக உயர்ந்திருக்கும் அவ்வளவே. எவ்வளவு பெரிய முன்னேற்றம் இது!!!. இவை எல்லாம் எங்கோ கடைக் கோடி கிராமத்திலிருக்கும் வளர் இளம் பெண்ணுக்கோ, நகரத்தில் வசித்து வேலைப் பார்க்கும் பெண்ணுக்கோ ஏதோ ஒரு வகையில் பயனுள்ளதாக இருக்கலாம். ஆனால் அந்தக் கட்டுரையைப் படித்தபின் சில நாட்களில் மறந்துவிடக் கூடியவை தானே? இவை என்ன தாக்கத்தை படிப்பவர் மனத்தில் ஏற்படுத்திவிட முடியும்? சுவாரஸ்யமாக சொல்வதினால் அந்தந்த பத்திரிகைகளின் விற்பனை வேண்டுமானால் அதிகரிக்கலாம். 

பெண்கள் பத்திரிகைகளின் வேலை என்ன? அவை திரும்பத் திரும்ப ஒரே ரீதியில் அதே பானை அதே கூழ் என்று வகைமைக்குள் சிக்கியவர்களாக மாறிவிட்டது வேதனையே. பக்கங்கள் அதிகம் கொடுப்பதல்ல வளர்ச்சி கூறும் விஷயங்களின் ஆழத்தில்தான் உள்ளது உண்மையான அக்கறை. மகளிர் தினத்தன்று நூறு வாசகிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குப் பரிசு கொடுப்பதில் முடிந்துவிடுவதில்லை பெண்கள் பத்திரிகைகளின் பணி. பெண்களின் உண்மையான வளர்ச்சிக்குத் தேவையான காத்திரமான படைப்புக்கள், அவர்களை நேரடியாக வாழ்க்கையெனும் களப்பணியில் ஈடுபடுத்த தேவையான பயிற்சிகளைக் கற்றுக் கொடுக்கும் ஒரு கையேடாக ஒவ்வொரு பத்திரிகையும் மலர இனி வரும் காலங்களிலாவது கவனம் செலுத்த வேண்டும். 

பத்திரிகைகள் இப்படி என்றால் தொலைக்காட்சி சானல்களில் அவற்றின் நீட்சியாகத் தான் செயல்படுகிறது. உன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லி குற்றமில்லை என்று புலம்பும்படியாகத் தான் சூழல் பெரும் சிக்கலில் உள்ளது. இதில் முரண் நகை என்னவென்றால் தாங்கள் செய்வது மகத்தான பணி என்று அவர்கள் நம்புவதுதான். எல்லா சேனல்களிலும் மகளிர் தின செய்தியை கேட்டு பொதுவெளியில் மைக்கை நீட்ட, பதில் சொல்ப்வர்களும் தங்களுக்குத் தெரிந்த தெரியாத, நம்பிய நம்பாத கருத்துக்களை அபத்தமாக பதிவு செய்வார்கள். இத்தகைய நிகழ்ச்சிகளைப் பார்த்து அலுத்தும் சலித்தும் போய்விட்டது. 

மகளிர் தினத்தென்று வேறு என்ன தான் செய்ய வேண்டும் என்று என்று கேட்கிறீர்களா? உண்மையில் அன்று ஒரு நாளாவது பெண்களின் நிலை குறித்து அவரவர் மனசாட்சியிடம் கேள்வி கேட்டு அதற்குப் பதில் தேடினால் போதும். மாற்றத்தின் முதல்படி தொடங்கிவிட்டது என்று அர்த்தம். அந்தக் கேள்விகள் இப்படியாகக் கூட இருக்கலாம். 

 • காலகாலமாக இருக்கும் பாலின பிரச்னைகள் ஓரளவுக்கேனும் தீர்க்கப்பட்டதா? 
 • நூறு சதவிகிதம் பெண் கல்வி எப்போது கிடைக்கும்? 
 • பல இடங்களில் பெண்களுக்கு பெண்களே எதிரி எனும் நிலை மாறிவிட்டதா?
 • பாதுகாப்பான ஒரு பயணம் பெண்களுக்கு முழுமையாக சாத்தியப்படுமா? 
 • விளம்பரங்களில் பெண்களை இழிவு படுத்துவதை தடுக்கமுடியுமா? 
 • பெண்களுக்கு எங்கும் எதிலும் சம வாய்ப்பு, சம உரிமை எனும் கனவு மெய்ப்படுமா? 
 • மகளிர் தினத்தை சாக்குக் காட்டி ஆதாயம் தேடும் போலி பெண்ணியவாதிகளை அடையாளம் தெரிகிறதா? 

இன்னும் நிறைய கேள்விகள் உள்ளன. அவை ஒரு அலையாக மாறி நம்மை மூழ்கடிக்கக் கூடிய அபாயம் உள்ளது எனவே இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம். 

நம் சமூகத்தில் இன்னமும் கூட ஆணாதிக்கத்தை வளர்த்தெடுப்பது ஆண்கள் மட்டுமல்ல, சில பெண்களும் தான். தன்னை விட ஆண் ஏதோ ஒரு வகையில் உயர்ந்தவன் என்று பெண்களின் மரபணுவில் பதியப்பட்டிருப்பதால் அவர்கள் அதை அப்படியே நம்பும் நிலை இன்னும் நீடிக்கிறது. போலி பெண்ணியவாதிகள் எவ்வளவு ஆபத்தானவர்களோ அதே போலத்தான் இந்தப் பெண்களும். இவர்களை முதலில் சரி செய்தால் தான் சம உரிமை, பெண்ணை உடலாக மட்டும் ஆண் பார்க்கும் தன்மையிலிருந்து விடுபடுதல் சாத்தியம். எப்போதும் ஒருவன் தன்னை உயர்ந்தவனாகவே நினைத்துக் கொண்டிருந்தால் அங்கு ஒடுக்குமுறைகள் அழிக்கப்படவே முடியாது. எனவே பெண்கள் தங்கள் மனத்திலிருந்து செயல்படும் நிலையிலிருந்து மாறி புத்தியிலிருந்து சிந்திக்கும் நிலை வர வேண்டும். சமூகம் ஆண் பெண் பாகுபாடற்ற சீரான சமூகமாக மறுமலர்ச்சி அடையும் வரையிலேனும் அவர்கள் தங்களை அப்படியே தக்க வைத்துக் கொள்ள வேண்டும். 

மகளிர் தினங்கள் ஏன் கொண்டாடப்பட வேண்டும் என்று பெண்களுக்கு முதலில் தெளிவு ஏற்பட வேண்டும். பெண்களைப் பற்றி மட்டுமே கவன ஈர்ப்பு செய்வதை விட்டுவிட்டு ஆண்கள் சிறுவர்கள் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும். சமீபத்தில் ஆறு வயது சிறுவன் ஒருவனை கல்லால் அடித்துக் கொன்ற ஆறாம் வகுப்பு மாணவனைப் பற்றி செய்தித் தாள்களில் படித்திருப்போம். அந்தச் சிறுவனை சிறுவர் சீர் திருத்தப் பள்ளியில் சேர்த்து விட்டாலும், அவனுடைய பெற்றோர்களுக்கு முக்கியமாக அவன் தாய்க்கு தீராத பழி ஏற்பட்டுவிட்டது நிதர்சனம். ‘புள்ளையை வளர்த்தாளா… இல்லை கொலைகாரனை வளர்த்தாளா…’ என்று சமூகம் விரல் சுட்டி கேள்வி கேட்கும். பெண்ணியவாதிகள் பத்திரிகையாளர்கள், மீடியாக்கள் முதலில் இது போன்ற தாய்மார்களை தேடிப் பிடித்து அவர்களிடம் பேச முன் வர வேண்டும். அவர்களின் வலியை முதலில் பதிவு செய்ய வேண்டும். ‘நான் சரியாகத் தான் வளர்த்தேன், ஆனால் எங்கே தவறு நிகழ்ந்தது என்று தெரியவில்லை’ என்று சொல்பவர்களிடம் இங்கே தான் என்று அவர்களின் வளர்ப்பு முறையில் எங்கே பிரச்னை என்று கண்டு பிடித்து சொல்லவேண்டும்.

இதற்கு மனநல ஆலோகர்களின் உதவியும் நிச்சயம் தேவை. காரணம் சமீப காலமாக சிறுவர் குற்றங்கள் அதிகம் பெருகி வருகின்றன. அதற்கான காரணம் என்ன என்பதை தீவிரமாக ஆராய வேண்டும். எங்கே தவறு நிகழ்கிறதோ அந்த இடத்தில் தான் அது சீரமைக்கப்பட வேண்டும். ஒரு சானலின் அறையில் நான்கைந்து அறிவு ஜீவிகளின் தொடர் பேச்சுக்கள் அந்தந்த சானல்களின் டி ஆர் பி கணக்குகளில் ஏற்றங்களை விளைவிக்குமே தவிர சமூக மாற்றத்திற்கான தீர்வு அதில் கிடைக்க வாய்ப்பில்லை.

மார்ச் 8, 2018 இன்றைய பெண்கள் தினத்தன்று ஒரு பெண்ணின் (செய்திகளில் வந்துள்ள) பிரேதப் பரிசோதனை நடந்து கொண்டிருக்கிறது நம் மனத்தை வருத்தவில்லையெனில் நாமென்ன பெண்கள்? கர்ப்பிணிப் பெண்ணான உஷா செய்த தவறென்ன? இதுதான் இன்றளவும் சராசரிப் பெண்களின் அவல நிலை. இது ஆயிரம் ஆயிரமாண்டுகளாக தொடர்ந்து வரும் நிலை. இதை எப்படி மாற்றுவது? யார் மாற்ற முடியும்? பெண்களுக்கு எதிரே நடக்கும் குற்றங்களுக்கான தண்டனையை தீவிரப்படுத்துவதுதான் அதற்கான வழி. அச்சம் இருப்பவர்கள் குற்றம் செய்ய ஒரு நிமிடமேனும் தயங்குவார்கள். அந்த ஒரு நிமிடத்தைப் பயன்படுத்தி ஒரு பெண்ணால் தப்பிவிட முடியுமெனில் தண்டனைகள் ஏன் இன்னும் இழுபறி நிலையில் உள்ளன. பாலியல் குற்றங்களுக்கு எதிராக வழக்குகளைப் பதிவு செய்யவே ஒரு பெண் அச்சப்படுகிற சமூக சூழலில் பெண்களின் பாதுகாப்பு குறித்து பட்டிமன்றங்களில்தான் தீர்வுகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. யதார்த்தம் தேய்ந்த செறுப்பாகி அறுந்துக் கிடக்கின்றது.

இந்த ஊர் இப்படித்தான், இந்த உலகம் இப்படித்தான் என்று அடுத்தவர் மீது பழி சுமத்துவதை விட்டுவிட்டு, பெண்களாகிய நாம் அதிக பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது. வீட்டில் மட்டுமல்லாது நாம் வாழும் சமூகத்திற்காகவும் சிறிதேனும் நம்மால் இயன்ற பங்களிப்பை செய்ய வேண்டும். பெண்களில் ஒரு சாரார் நல்ல படிப்பு, பதவி என்று முன்னேறிவிட்டவர்கள். அவர்களின் பிரச்னை முற்றிலும் வேறு. அது ஆதிக்கம் சார்ந்தது. அந்த போராட்டத்தில் அவர்கள் சக மனுஷிகளை மறந்துவிடுகிறார்கள். அல்லது நினைக்க நேரமில்லை. நினைத்தாலும் நம்மால் என்ன செய்ய முடியும் என்று ஒதுங்கிப் போய்விடுவார்கள். அவரவர் பிரச்னை நம்மால் என்ன செய்யமுடியும் பரிதாபப்படுவதைத் தவிர என்று புறம்தள்ளி பார்ட்டிகளுக்கும், தங்களுடைய சுயத் தேவைகளுக்காகவும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். நான் என்னுடைய சுய முன்னேற்றம் என்னுடைய வெற்றிகள் என்ற சிறிய வட்டத்திலிருந்து சற்று விலகி வந்து நம்மைச் சுற்றியும் ஒரு உலகம் உள்ளது என்பதை முதலில் உணர வேண்டும். அதன் அமைதியைக் குலைக்கும் செயல் சிறியதாக இருந்தாலும் அதில் முதலில் நாம் ஈடுபடக் கூடாது, அதன் பின் நம் குழந்தைகளையும் சூழல் குறித்த விழிப்புணர்வுடன் வளர்க்க வேண்டும்.

'எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அது நல்லவனாவது தீயவனாவதும் அன்னையின் வளர்ப்பினிலே ’ என்ற வைர வரிகள் எல்லா காலத்துக்கும் பொருந்தும். குழந்தை வளர்ப்பில் அதிக கவனத்துடன் செயல்பட்டு, நல்லவனவற்றை குழந்தைகளின் இளம்மனத்தில் பதித்துவிட வேண்டும். பாடம் படித்து மனப்பாடம் செய்து மார்க்குகள் அள்ளிக் குவிக்கும் இயந்திரமாக அவர்களை வளர்க்காமல் நன்னெறிகளை அறிந்தவர்களாய் நல்லவர்களாய் வளர்த்தெடுக்கவேண்டியது நம் கடமை. அடுத்தவருடைய உணர்வுக்கு மதிப்பு தர வேண்டும், அடுத்த உயிரின் வலியை உணர வேண்டும் என்ற அடிப்படை விஷயங்கள் தெரிந்திருந்தால் ஆத்திரத்தில் கூட இன்னொரு சிறுவனின் தலையில் கல்லைப் போட்டிருக்க மாட்டான் அவன். எனவே ஒரு புதிய சமூகத்தை உருவாக்கும் மிகப் பெரிய பொறுப்பு பெண்களாகிய நம்மிடம், நம்மிடம் மட்டுமே உள்ளது. நாம் அதைத்தான் செய்து கொண்டு இருக்கிறோம். என்றாலும், இன்னும் மிகச் சரியாக செய்ய வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு காந்தியும் ஒரு கலாமும் தோன்றினால் உலகம் பூந்தோட்டமாகவே மாறிவிடுமல்லவா? அத்தகைய பூந்தோட்டத்தில் மகளிர் தினத்தை கொண்டாடுவது எவ்வளவு சிறப்பாக இருக்கும்!
 

]]>
womans day, march 8, பெண்கள் தினம், சர்வதேச மகளிர் தினம், மார்ச் 8 http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/8/w600X390/annoyed-young-woman.jpg http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/mar/08/womans-day-celebrations-2876807.html
2876796 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் மிக முக்கிய பிரச்னை உங்கள் மூலம் தீர்வு காண காத்திருக்கிறது: எச். ராஜாவுக்கு சிறப்புக் கடிதம் திருச்செல்வம் ராமு Thursday, March 8, 2018 11:32 AM +0530  

தாங்கள் திறமை மதத்தை வளர்ப்பதற்கும் அப்பாற்பட்டது. விவசாயத்திற்கான தீர்வு தாங்கள் மனது வைத்தால் சாத்தியம் என்று தமிழக தகவல் தொழில்நுட்ப வல்லுனர் குழு எச். ராஜாவுக்கு எழுதிய சிறப்புக்கடிதம் இது.

எச். ராஜா அவர்களுக்கு வணக்கம்,

சமீபகாலமாக தாங்கள் பெயர் ஜாதி, மதம் தொடர்பான சர்ச்சைகளால் தவறான காரணங்களுக்காக ஊடகங்களில் பரவிக்கொண்டிருக்கிறது. தாங்கள் படித்தவர். இந்துமதம் மற்றும் ஆன்மிகக் கருத்துக்களை நன்கு உணர்ந்தவர். பொருளாதாரம் நாட்டு முன்னேற்றம் குறித்த திறமை பெற்றவர். அப்படிப்பட்டவர் இந்த மாதிரி தங்கள் திறமைக்கு ஒவ்வாத விஷயங்களில் கவனம் செலுத்துவது மற்றும் அதனால் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாவது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை உண்டாக்குகிறது.

தங்களுக்கு பணிவான எங்கள் வேண்டுகோள் என்னவென்றால் 'அன்னமய கோஷம்' என்பதுதான் மனித வாழ்வின் அடிப்படை. அதற்கு மூலாதாரம் விவசாயம். திட்டமிடப்பட்ட சதிச்செயலால் இந்தியாவின் விவசாயம், அதன் கட்டமைப்பு பலவீனப் படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. விவசாயிகள், நுகர்வோர்கள், அரசாங்கம் உட்பட அனைத்துப் பிரிவினரும் விவசாயப் பிரச்னைகளால் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். இந்தியா பலவீனப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இது தாங்கள் அறியாதது அல்ல.

பிரச்னையின் தீவிரம் அறிந்தே பிரதமர் மோடியும் விவசாய பிரச்னைக்கான தீர்வை தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டிருக்கின்றார். அதில் முக்கியமானது அவர் கடந்த 2015, ஏப்ரல் 23-ல் நாடாளுமன்றத்தில் நடந்த மிக முக்கிய விவாதம் ஒன்றில், இந்திய விவசாயப்பிரச்னை பல காலங்கள் கடந்தது, பரந்து விரிந்தது, ஆழமானது. அதை தீர்ப்பதற்கான தீர்வை மனதார வரவேற்கின்றேன் என்றார்.

தமிழகத்தை சேந்த தகவல் தொழில்நுட்ப வல்லுனர் குழு நாட்டு நலன் கருதி 16 ஆண்டு கால தொடர் முயற்சியில் விவசாயத்திற்கான முழு தீர்வை உருவாக்கி கிராமங்களில் அதை மாதிரி அளவில் வெற்றிகரமாக செயல்படுத்தி காட்டினோம். அதன் திறனை மதிப்பீடு செய்த நாட்டின் உயர்மட்டக்குழு இத்தீர்வு இந்திய விவசாப்பிரச்னைக்கான தீர்வாக அமையும். புதிய விவசாய அணுகுமுறைக்கு வழிவகுக்கும் என்ற மதிப்பீடு வழங்கியிருந்தது. ஆனால் ஆந்திர மாநிலத்தில் நடந்த சில துரதிர்ஷ்டமான நிகழ்வுகளால் இத்திட்டம் விரிவான அளவில் செய்யப்பட வேண்டிய நிலையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் முடக்கப்பட்டது.

நேர்மையான திறன் மிக்க பிரதமர் அவர்களின் அழைப்பிற்கு எங்கள் தொழில்நுட்ப வல்லுநர் குழுவின் விவசாயப் பிரச்னைகான தீர்வை சமர்ப்பிப்பதற்கு தங்களின் உதவியை நாடினோம். 'தாய் நாட்டுப்பணியில்' என்று கையெழுத்திடும் தாங்கள் எங்கள் தீர்வை பிரதமர் அவர்களிடம் கொண்டு சேர்த்து நாடு முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு ஆவண செய்வீர்கள் என்று நம்பினோம். தாங்களும் உரியநேரத்தில் பிரதமர் அலுவலகம் கொண்டு சேர்த்தீர்கள். பிரதமர் அலுவலக அதிகாரிகள் மிகவும் பாராட்டியதாகவும் விரைவில் அரசு திட்டத்தை அங்கீகரிக்கும் என்று உறுதியளித்ததாகவும் கூறினீர்கள்.

ஆனால் இன்றுவரை அத்திட்டம் செயல்படுத்தப்படுவதற்கான அறிவிப்பு இல்லை. காரணம் என்ன என்று கேட்டு தங்களை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. இப்போது உள்ள நிலையில் தாங்கள் நாட்டின் நலன் கருதி விவசாய தீர்வு நோக்கி கவனம் செலுத்துங்கள். உணவு, விவசாயம்  என்பதும் ஆன்மிகம் தான். தமிழக தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களின் 16 ஆண்டு கால உழைப்பு நாட்டிற்கும் விவசாயிகளுக்கும் பயன்பட வழிசெய்யுங்கள்.

தமிழகம் உட்பட பல மாநிலங்களில் தற்போதிருக்கும் பல அடிப்படை பிரச்னைகளுக்கு இந்த விவசாயத் தீர்வு நிச்சயம் நல்ல பலனை அளிக்கும். டிஜிட்டல் மயமாக்கும் பிரதமர் மோடியின் கனவுக்கு இந்த திட்டம் வலுசேர்க்கும் என்பதால், உங்களது கவனத்துக்கு கொண்டு வந்திருக்கிறோம். இது உங்கள் மூலமாக தீர்வு காண காலம் காலமாக காத்திருக்கும் பிரச்னை என்பதை உணர்ந்து உடனடியாக கவனம் செலுத்துங்கள். 

தாங்கள் பிரதமர் அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தின் நகலை இந்த லிங்கில் இணைத்துள்ளோம்: www.it-rural.com/content/BJP_NS_Lr2PMJi.jpg

தங்கள் அழைப்பிற்கு காத்திருக்கும்
திருச்செல்வம் ராமு
Mission IT-Rural
9840374266
www.it-rural.com

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/31/w600X390/hraja.jpg http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/mar/08/மிக-முக்கிய-பிரச்னை-உங்கள்-மூலம்-தீர்வு-காணகாத்திருக்கிறது-எச்-ராஜாவுக்கு-சிறப்புக்-கடிதம்-2876796.html
2874908 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் திரிபுராவில் மார்க்சிஸ்ட் கட்சியின் வீழ்ச்சி எதைச் சுட்டிக்காட்டுகிறது?  - ரமேஷ் கிருஷ்ணன் பாபு Monday, March 5, 2018 12:50 PM +0530  

கடந்த 25 ஆண்டுகளாக இடைவிடாமல் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திரிபுராவில் தனது சித்தாந்த எதிரியான பாஜகவிடம் ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக அக்கட்சியின் மூத்தத் தலைவர்கள் பலரும், ஆட்சிக்கு எதிரான மனப்போக்குடன், பாஜக பிரிவினைவாத சக்திகளுடன் கைகோர்த்துக் கொண்டதும் ஒரு முக்கிய காரணம் என்று கூறியுள்ளனர். உண்மை என்ன?

திரிபுரா எனும் குறிஞ்சி நிலப்பகுதியை உருவாக்கியது பிரிட்டிஷ் காலனியாதிக்கம். இதன் சமவெளிப்பகுதி பிரிவினையின் போது இன்றைய வங்கதேசத்தில் அடைக்கலமாகிவிட்டது. மீதமிருந்த மலையகப்பகுதியில் பாரம்பரியமாக வசித்து வந்த பழங்குடியினரே பெரும்பான்மை மக்கள் ஆவர். எனினும் பிழைப்புத் தேடி வங்கத்திலிருந்து புலம் பெயர்ந்த வங்க மொழி பேசும் மக்கள் நாளடைவில் ஆட்சியைப் பிடிக்கும் சக்தியாக மாறினர். கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி சுமார் 50% மக்கள் பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் ஆவர். எனினும் 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு ஒன்று வங்க மொழி பேசும் மக்கள் தொகை சுமார் 70% என்று கூறுகிறது. விடுதலை அடைந்த காலகட்டத்தில் தொல்குடிகளின் எண்ணிக்கை 50% மாக இருந்துள்ளது. பின்னர் 1981 ஆம் ஆண்டில் இது சுமார் 30% மாக குறைந்திருந்தது. மத அடிப்படையில் இந்துக்களே மிகப் பெரும்பான்மையாக உள்ளனர். இஸ்லாமியர் சுமார் 9% பேரும், கிறிஸ்துவர்கள் 4.35% பேரும், பௌத்தர்கள் சுமார் 3% பேரும் உள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் அசாமிற்கு பிறகு இரண்டாவது அதிக மக்கள் தொகையுள்ள மாநிலமாகும் திரிபுரா.

அரசியல் ரீதியாக கம்யூனிசம் விடுதலைப் போராட்டக்காலத்திலேயே அறிமுகமாகியுள்ளது. நீண்ட காலம் காங்கிரஸ் ஆட்சி செய்தப்பிறகு 1978 ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சியைப் பிடித்தது. பத்தாண்டுகள் ஆட்சி செய்த அவர்கள் 1988-93 ஆண்டுகளில் காங்கிரஸ்-இளைஞர் முன்னணி எனும் கூட்டணி ஆட்சியிடம் பதவியை பறிகொடுத்தனர். அதன்பிறகு 1993 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஆட்சியில் இருந்து வந்துள்ளனர். அங்கு காங்கிரஸ், இடது சாரிகளுக்கு மாற்றாக மூன்றாவது அரசியல் சக்தி ஏதும் தோன்றவில்லை. பாஜக உட்பட பலக் கட்சிகள் சிறு கட்சிகளாகவே இருந்துள்ளனர். இன்று பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ள பாரம்பரிய மக்கள் முன்னணி கிறிஸ்துவ தனிநாடு கிளர்ச்சியாளர்களின் உதவியுடன் செயல்படும் அமைப்பு என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. எனினும் கடந்த 2013 ஆம் ஆண்டுத் தேர்தலில் பாஜக சுமார் 1.5% வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது. இன்று தனிநாடு கோரும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புடன் இணைந்து ஆட்சியைப் பிடித்து விட்டதாக கூறப்படுவது எப்படி ஏற்கத்தக்கது என்று அரசியல் பார்வையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதில் கவனிக்கத்தக்க விஷயம் கிறிஸ்துவ மக்களின் மக்கள் தொகை வெறும் 5% மாக இருக்கும் நிலையில் அம்மதத்தின் பெயரால் இயங்கும் இயக்கம் எப்படித் தேர்தலில் செல்வாக்கு செலுத்த இயலும்? இந்நிலையில் திரிபுரா காங்கிரஸ் கட்சி அதிர்ச்சியூட்டும் அளவில் சுமார் 2.0% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் அக்கட்சி சுமார் 37% வாக்குகளைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

வட கிழக்கு மாநிலங்களான அசாம், அருணாச்சல் பிரதேசம் ஆகியவை பாஜகவின் வசமாகி விட்டது. மணிப்பூரில் கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது பாஜக. எனவே அதன் தாக்கம் நீண்ட காலமாக மூன்றாவது மாற்றைத் தேடி வந்த திரிபுரா மக்களுக்கு பாஜகவின் மீது இயல்பாகவே ஆர்வம் ஏற்பட்டிருக்கலாம் அல்லவா? இது தவிர கேரள மாநிலத் தேர்தலில் பாஜக ஒரு பேரவை உறுப்பினரை பெற்றதோடு சுமார் 15% வாக்குகளையும் பெற்றிருந்தது. அதற்கு ஆதரவாக சுமார் 9% வாக்குகள் கூடுதலாக கிடைத்தது. இது காங்கிரஸ் கட்சியை பாதித்தது; மட்டுமின்றி மார்க்சிஸ்ட் கட்சி அங்கு 92 இடங்களை (மொத்தமுள்ள140 இடங்களில்) பெறுவதற்கு உதவியது. அதற்கு முன் நடந்தத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மைக்கும் மார்க்சிஸ்ட் தலைமையிலான கூட்டணிக்கும் இடையே வெறும் நான்கு இடங்களே இருந்தன. மார்க்சிஸ்ட் கட்சி பெரியதொரு வெற்றியைப் பெறுவதற்கு பாஜகவின் வளர்ச்சியே காரணமாக இருந்துள்ளது. கேரளத்திலும் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் கணிசமான அளவில் உள்ளனர். ஆகையால் பாஜக தன்னளவில் காங்கிரஸ்சிற்கு மாற்றாக மாறி வருவது பல மாநிலங்களில் நடைபெறும் போக்காக நிலைத்து விட்டது. இதையே திரிபுரா தேர்தலும் நிரூபிக்கிறது. மேலும் அண்டை மாநிலமான நாகாலாந்து, மேகாலயாவிலும் காங்கிரஸ் வீழ்ச்சியடைந்திருப்பது ஒட்டுமொத்தமான மன நிலையையே காட்டுகிறது  எனலாம்.  மேகாலயாவில் தனது பெரும்பான்மையைத் தக்க வைக்க காங்கிரஸ் தவறியுள்ளது. மேகாலயா, நாகாலாந்து ஆகியவை கிறிஸ்தவ மக்கள் பெரும்பான்மையாகவுள்ள மாநிலங்கள். இங்கும் பாஜக தனது செல்வாக்கை நுழைத்துள்ளது என்பதும் அங்கும் காங்கிரஸின் வீழ்ச்சிக்கு அது காரணமாகவுள்ளதும் சுட்டிக்காட்டத்தக்கது. மேலும் சிக்கிம் மாநிலம் இந்தியாவுடன் 1970 களிலேயே இணைந்தது. நீண்டகாலமாக  சிக்கிம் சங்கராம் பரிஷத் எனும் கட்சி ஆட்சி செய்து வந்த நிலையில் பல்வேறு பழங்குடி இன மக்களின் இணைப்பான சிக்கிம் ஜனநாயக முன்னணி 1994 ஆம் ஆண்டில் இருந்து வெற்றிகரமாக ஆட்சி செய்து வருகிறது. எனவே மலையக மக்களின் ஆதரவை முழுமையாகப் பெற்ற கட்சிகளே வடகிழக்கு மாநிலங்களை வெற்றிகரமாக ஆட்சி செய்ய முடிவது யதார்த்தமாகும்.

திரிபுராவைப் பொறுத்தவரை அங்குள்ள மலையக மக்களுக்கும் குடியேறிய வங்காள மக்களுக்கும் இடையே பலகாலமாக மோதல்கள் இருந்து வந்தது. பின்னர் அது குறைந்து விட்டாலும் இன்று பாஜக அம்மக்களை தன்னுடன் இணைத்துக் கொண்டு ஆட்சியைப் பிடித்திருப்பது அரசியல் ஆட்டத்தின் தந்திரமேத் தவிர வேறொன்றும் இல்லை என்போரும் உண்டு. எனினும் சரிபாதி மக்கள் தொகையுள்ள மலையக, தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமைக் கொடுக்கப்பட வேண்டியது அவசியமாகும். இதை பாஜக பிரதிபலிக்க வேண்டும் என்பதே தேர்தல் முடிவு காட்டும் யதார்த்தமாகும்.

மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை வீழ்ச்சி என்றாலும் கடந்த காலத் தவறுகளிலிருந்து அது பாடம் கற்க வேண்டியுள்ளது. திரிபுராவைத் தவிர வேறு வடகிழக்கு மாநிலங்களில் அதன் செல்வாக்கு ஏன் இல்லை என்பதை அது ஆராய்ந்திருந்தால் இத்தோல்வி ஏற்பட்டிருக்காது. ஏன் 25 ஆண்டுக்காலக் கோட்டையான மேற்கு வங்கத்தை மமதாவின் திரிணமுல் காங்கிரஸிடம் இழக்க வேண்டும். அதுவும் தற்போது பாஜகவை இரண்டாவது இடத்திற்கு மேலுயர்த்தும்படியானச் சூழலை சந்திக்க வேண்டும் என்று அக்கட்சி அலசினால் தொடர்ந்து அதன் செல்வாக்கை நிலைநிறுத்தலாம். இல்லையென்றால் காங்கிரஸ் முழுமையாக பாஜகவால் விழுங்கப்படுகிற நிலையை வேடிக்கைப் பார்க்க வேண்டியதுதான். அத்தோடு தனது செல்வாக்கை மாநில அல்லது ஆம் ஆத்மி போன்ற மாற்று இயக்கங்களிடம் பறி கொடுக்க வேண்டிய நிலைக்கு ஆளாகும் சூழலையும் எதிர்கொள்ள வேண்டி வரும்.

ஒருபுறம் புதிய இடங்களில் தடம் பதித்தாலும் குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் செல்வாக்கு பெற்றுவருவதை பாஜக கவனிக்க வேண்டிய நிலையில் அது காங்கிரஸ்சின் வாக்குகளை பிரிக்க புதிய அரசியல் இயக்கங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடலாம். வரும் 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் சரிசமமாக மோதும் நிலையில் காங்கிரஸ் இல்லை என்றாலும் அடுத்து வரும் மாதங்களில் என்ன நடக்கும் என்பது தெரியாது. எனவே காங்கிரஸ் கட்சியின் விழ்ச்சியை மார்க்சிஸ்ட் கட்சி எப்படி அணுகுகிறது என்பது அதன் நிலைத்த தன்மைக்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/4/w600X390/tiripura_cm.jpg http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/mar/05/திரிபுராவில்-மார்க்சிஸ்ட்-கட்சியின்-வீழ்ச்சி-எதைச்-சுட்டிக்காட்டுகிறது-2874908.html
2873821 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் விளம்பர உலகின் சத்ய சோதனை! முகம் காட்டும் முதலாளிகள்... சேனல் மாத்தினாலும் வந்துடறாங்களே! கார்த்திகா வாசுதேவன் Saturday, March 3, 2018 04:25 PM +0530  

முதலாளிகள், தங்களைத் தாங்களே விளம்பரம் செய்து கொள்ளும் யுக்திக்கு காரணம் பணமா? பாப்புலாரிட்டியா?

விளம்பரங்களில் முகம் காட்ட நடிகர், நடிகைகள் கோடிகளில் சம்பளம் கேட்பதால் சில முதலாளிகள் துணிந்து தாங்களே தங்களது தயாரிப்புகள் மற்றும் கடைகளுக்கு விளம்பரத் தூதர்கள் ஆகிவிட்டார்கள். தமிழ்நாட்டில் சமீபத்தில் நொடிக்கொரு தரம் அப்படி தொலைக்காட்சி விளம்பரங்களில் வந்து பார்வையாளர்களை படு பயங்கர மூளைச்சலவை செய்தவர்கள் என இருவரைக் கூறலாம். ஒருவர் தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அருள், மற்றொருவர் லலிதா ஜூவல்லரி உரிமையாளர் கிரண் குமார்.

இவர்கள் இருவரையும் தொடர்ந்து இன்னும் சிலரும் தற்போது அடிக்கடி தொலைக்காட்சி விளம்பரங்களில் முகம் காட்டத் தொடங்கி இருக்கிறார்கள். அவர்களில் முக்கியமான்வர்கள் பதஞ்சலியின் பாபா ராம் தேவும், ஆச்சி மசாலா நிறுவனத்தின் உரிமையாளரான பத்ம சிங் ஐசக்கும், ரத்னா ஃபேன் ஹவுஸ் உரிமையாளரான கே.சாம்பசிவம் ஐயரும். 

விளம்பரங்களில் நடிப்பதில் இவர்களுக்கெல்லாம் முன்னோடிகளாக இருந்தவர்கள் என இருவரைக் குறிப்பிடலாம். அவர்களை மொத்த தமிழ்நாட்டுக்கும் நன்கு பரிச்சயமுண்டு. வசந்த் அன் கோ உரிமையாளரான வசந்த குமாரும், சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான சரவணா செல்வரத்தினமும் தான் அவர்கள். இவர்கள் இருவரும் ஆரம்பம் முதலே தங்களது முகத்தை தங்களது தயாரிப்புகளின் அடையாள முத்திரையாக விளம்பரப் படுத்தி வெற்றி கண்டவர்கள். 

இவர்களைத் தொடர்ந்து தான் பாலு ஜூவல்லர்ஸ்காரர் 1990 களில் புன்னகை பொங்கும் முகத்துடன் தொலைக்காட்சியில் வலம் வரத் தொடங்கி இருந்தார். ஆனால் அவரது கதையோ மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் திருமணக் கோலாகலத்தின் பின் பெரும் சோகக் கதை ஆயிற்று. வளர்ப்பு மகன் திருமணத்தோடு சரி அதற்குப் பிறகு அவரது புன்னகை பொங்கும் முகத்துடனான பாலு ஜுவல்லர்ஸ் விளம்பரங்களைத் தொலைக்காட்சிகளில் காண்பது அரிதாகி விட்டது. வளர்ப்பு மகன் திருமணத்துக்காக சுமார் 40 கோடி ரூபாய்களுக்கு வாங்கப்பட்ட நகைகளுக்கான தொகை அளிக்கப்படாததால் கடைசியில் அவர் பெரும் கடனில் சிக்கி மீளாத்துயரத்துடன் உடல் நலக்குறைபாடு ஏற்பட்டு உயிர் விட்டார் என்பார்கள்.

இவர்களின் கதை இப்படி என்றால், இன்னும் இருவர் இருக்கிறார்கள் அவர்கள் தற்போது இவ்வுலகில் இல்லை என்றாலும் நாம் தினம் பார்க்கும் நபர்களில் ஒருவராக நம்முடனே தங்களது விளம்பரங்களின் வாயிலாக தொடர்ந்து ஜீவித்து வருகிறார்கள். அது யாராடா அது? என்று புருவம் தூக்க வேண்டாம். அவர்கள் உலகளாவிய கிளைகள் கொண்ட கேஎஃப்சி உரிமையாளரும், நம்மூர் தலப்பாகட்டி உரிமையாளரும் தான். இவர்கள் மறைந்தும் கூட தங்களது விளம்பரங்களின் மூலமாக தினமும் நமது வீடுகளைத் தேடி வரவேற்பறைக்கே வந்து விடுகிறார்கள்.

லலிதா ஜுவல்லர்ஸ்
சரவணா ஸ்டோர்ஸ்
ரத்னா ஃபேன் ஹவுஸ்

பதஞ்சலி
வசந்த் அன் கோ
பாலு ஜூவல்லர்ஸ்
திண்டுக்கல் தலப்பா கட்டி


கேஎஃப்சி
ஆச்சி மசாலா

மேற்படி உரிமையாளர்கள் அனைவருமே ஒரு கால கட்டத்தில் பிரபல நடிகர், நடிகைகளைத் தங்களது தயாரிப்புகளின் விளம்பரத் தூதர்களாக நடிக்க வைப்பதன் மூலம் தொழிலை வளர்த்தவர்களே. ஆயினும் காலம் மாற, மாற தொழில்முறை நடிகர்கள் தங்களது பிரபலத் தன்மைக்கு ஏற்ப உயர்த்திக் கொண்டே போகும் பிரமாண்ட சம்பள உயர்வைக் கண்டு அதெல்லாம் தங்களுக்குக் கட்டுப்படியாகாது என்று நினைத்தோ, அல்லது தினம், தினம் தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலமாக ஒவ்வொரு வீட்டின் வரவேற்பறையிலும் தாங்களே நுழைந்து மந்திரம் ஓதுவது போல தங்களது பொருட்களைப் பற்றிய விளம்பரங்களை தாங்களே மக்களிடம் ஓதிக் கொண்டே இருந்தால் ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் மக்கள் தங்களது பொருட்களை வாங்காமலா போய்விடுவார்கள் எனும் அசாத்திய நம்பிக்கையினாலோ, அல்லது குறைந்த பட்சம் விளம்பரப் படங்கள் மூலமாகவாவது தாங்களும் நடிகர்கள் ஆனால் என்ன? என்ற தீராத தாகத்தின் காரணமாகவோ எனப் பல காரணங்களை முன் வைத்து இவர்கள் இன்று நடிகர்களுக்கு இணையாக விளம்பரங்களில் தோன்றி வருகிறார்கள்.

முன்பெல்லாம் சரவணா ஸ்டோர்ஸ் காரரும், வசந்த் அண்ட் கோ காரரும் விளம்பரங்களில் தோன்றும் போது வாடிக்கையாளர் முன் வாயெல்லாம் பல்லாக தங்களது முகத்தைக் காட்டினால் போதும் என்று முடிவு செய்து அதை மட்டுமே செய்து வந்தார்கள். ஆனால் இன்று அப்படியல்ல, தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸின் சரவண அருள் ஹன்சிகா, தமன்னாவுடன் டூயட் பாடாத குறையாக விளம்பர உலகின் உச்ச பட்ச சம்பளம் பெறும் பிரபல நடிகர்களுக்குச் சவால் விடும் அளவுக்குத் தனது விளம்பரங்களில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் எனப் பிளந்து கட்டுகிறார். 

கல்யாண் ஜூவல்லர்ஸ் விளம்பரங்களில் என் தங்கம், என் உரிமை என்று பிரபு ஒரு தங்கப் போராளியாக தன்னைக் காட்டிக் கொண்டாரோ இல்லையோ அதற்கு பதிலடி கொடுப்பதாக நினைத்துக் கொண்டோ என்னவோ லலிதா ஜூவல்லரியின் கிரண் குமார் நகையுலகில் ஒரு புரட்சி செய்வதாக நினைத்துக் கொண்டு நாலு கடை ஏறி இறங்குங்க, உங்களுக்குப் பிடித்த நகையை, விலைப்பட்டியலோடு மொபைல்ல ஃபோட்டோ எடுங்க, அந்த நகையின் விலையை நாலு கடை ஏறி இறங்கி எங்கே குறைந்த விலையில் தரமான தங்கம் கிடைக்குதுன்னு சோதிச்சுப் பாருங்க, அப்புறம் தெரியும் லலிதா ஜுவல்லரி தான் பெஸ்ட்னு எனும் ரேஞ்சுக்கு தங்களது விளம்பரங்களில் தனியொருவனாகக் களமிறங்கி மூளைச்சலவை செய்கிறார்.

இதை நம்பி எத்தனை பேர் தங்களது வாடிக்கையான நகைக்கடைகளை விட்டு, விட்டு லலிதாவுக்கு மாறினார்களே தெரியவில்லை.

இன்று நகைக்கடைகள், உணவகங்கள், துணிக்கடைகள், துரித உணவகங்கள் என எல்லாவற்றிலுமே நிலவும் பலத்த போட்டிகள் இப்படியான உத்தரவாதமளிக்கும் விளம்பரங்கள் வெளிவரத் துணையாக இருந்தாலும் அந்த உத்தரவாதத்தின் உண்மைத் தன்மையை யார் சோதிப்பது? எனத் தெரியவில்லை.

மக்கள் விளம்பரங்களைப் பார்க்கிறார்கள். ஒரு முறை அல்ல இருமுறை அல்ல நாளொன்றுக்குப் பலமுறை பல தொலைக்காட்சி சேனல்கள் வழியாக இடைவெளியின்றி நடிகர்களோ அல்லது அந்தந்த நிறுவனத்தின் உரிமையாளர்களோ எவரோ ஒருவர் திரையில் தோன்றி எங்கள் தயாரிப்பு தான் தரமானது, விலை மலிவானது, வாடிக்கையாளர்களுக்குத் திருப்தி அளிக்கக் கூடியது எனத் தொடர்ந்து உத்தரவாதமளித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு வேளை இல்லாவிட்டாலும் பிறிதொரு வேளையில் மக்கள் சலித்துப் போயாவது அந்த விளம்பரங்களை நம்பித்தானாக வேண்டியிருக்கிறது. அந்த நம்பிக்கையில் தான் இன்று பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது விளம்பரங்களுக்ககாகச் செலவிடும் தொகையை ஆண்டு தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.

அதன் உச்ச கட்டம் தான் விளம்பரம் தங்களது நிறுவனங்களுக்கும், தயாரிப்புகளுக்கும் மட்டுமே போதாது, தங்களுக்கும் வேண்டும் என்ற உணர்வு மேலெழுந்த அதிசயம்.

ஒருவகையில் அவர்களது செயலில் குற்றம் காணவும் வகையில்லை. 

ஏனெனில் தமிழில் விஜய், சூர்யா போன்ற டாப் ஹீரோக்கள் விளம்பரப் படங்களில் நடிக்க 5 கோடி ரூபாய் வரை சன்மானம் பெறுகிறார்கள். சமீபத்தில் நடிகை நயன் தாரா டாட்டா ஸ்கை விளம்பரமொன்றில் நடிக்க பெற்றுக் கொண்ட தொகை கூட 5 கோடி ரூபாய் என்றொரு செய்தி. நடிகர்களில் விஜயை விட சூர்யா அதிக விளம்பரங்களில் நடித்தவர். அவரைத் தொடர்ந்து கார்த்தி, விஷால், பிரபு, சத்யராஜ், சரத்குமார், ஜெயராம், ஜெயம் ரவி, ஆர்யா உட்பட சின்னத்திரை, வெள்ளித்திரையில் ஓரளவுக்கு மக்களால் அடையாளம் காணப்படக் கூடிய நிலையில் இருந்த நடிக, நடிகையர் அனைவருமே கூட ஏதோ ஒரு விளம்பரத்தில் தோன்றி ஏதோ ஒரு பொருளை வாங்கச் சொல்லி கியாரண்டி அளித்து நம்மை கரையாய்க் கரைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.  

நயன்தாரா தவிர தற்போது கீர்த்தி சுரேஷ், காஜல் அகர்வால், தமன்னா, ஹன்சிகா, ஜோதிகா, சினேகா, ராதிகா, மீனா, சுகன்யா, தேவயானி, என நடிகையர் பட்டாளமும் விளம்பரங்கள் வாயிலாக தங்களது பாப்புலாரிட்டியை மூலதனமாக வைத்து கல்லா கட்டினர். இவர்களுக்கு கொடுக்கும் தொகை தங்களது பட்ஜெட்டில் பெரிய ஜமுக்காளமே விழும் அளவுக்கு பள்ளத்தை தோண்டி விடுகிறது என்று கண்டார்களோ என்னவோ சில உரிமையாளர்கள் இப்போது நடிகர்களை நம்பாமல் மேலே குறிப்பிட்டாற் போல தாங்களே நேரடியாகக் களமிறங்கி விடுகிறார்கள். அதில் அவர்களுக்குப் பாதகம் எதுவும் இல்லாத போதும் பார்வையாளர்களுக்கு நிச்சயம் பாதகம் இருக்கலாம் என்றெல்லாம் அவர்கள் அணுவளவும் யோசிப்பதே இல்லை.

விளம்பரங்களைப் பொறுத்தவரை அதில் யார் நடித்தாலென்ன என்று விட்டு விட முடியாதே... ஏனெனில் தினமும் தொலைகாட்சியிலோ, யூ டியூபிலோ அல்லது ஸ்மார்ட் ஃபோன் ஆப்களை தரவிறக்கும் போதோ ஏதோ ஒரு வகையில் ஏதாவதொரு விளம்பரத்தைக் கண்டு களித்தே ஆக வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் சாமான்யக் குடிமக்களாகிய நாம் யாரையெல்லாம் விளம்பரங்களில் பார்க்க விரும்புகிறோமோ அந்த எல்லைக் கோட்டைத் தாண்டி நாம் பார்க்க விரும்பாத அல்லது நம்மை எரிச்சலுக்கு உள்ளாக்கும் சிலரையும் கண்டு களித்தே ஆக வேண்டியதாகி விடுகிறது.

அதற்காக விளம்பரங்களில் தோன்றி நடிக்கும் உரிமையாளர்களை எல்லாம் மட்டம் தட்டுவதாக அர்த்தப் படுத்திக் கொள்ளத் தேவையில்லை. உங்களிடம் பணமிருக்கலாம். அதற்காக உங்களை நாங்கள் நொடிக்கொரு தரம் தொலைக்காட்சியில் பார்த்தே ஆக வேண்டிய கட்டாயமென்ன? பிடிக்காவிட்டால் சேனலை மாற்றி விட்டுப் போ, என்று கூறி விடாதீர்கள். எல்லாச் சேனல்களிலும் தான் உங்களது விளம்பரங்களும் முகங்களும் நொடிக்கொரு தரம் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கின்றனவே... ஒருவேளை ஆசிர்வாதம், சப்தகிரி, அனிமல் பிளானட், டிஸ்கவரி, போன்றவற்றைப் பார்ப்பதானால் உங்களைத் தவிர்க்கலாமோ என்னவோ?! மாதா மாதம் டிடிஹெச் காரர்களுக்கு காசைத் தண்டம் அழுது விட்டு ஒரு தமிழ் சேனலைக் கூடப் பார்க்க முடியாமல் இவற்றையே பார்த்துக் கொண்டிருக்கவும் முடியாது தானே!

ஐயா பணம் படைத்த கனவான்களே! நீங்கள் விளம்பரங்களில் நடிப்பது தவறில்லை. ஆனால், சதா சர்வ காலமும் உங்களை மட்டுமே பல்வேறு கோணங்களில் நொடிக்கொரு தரம் பார்த்துக் கொண்டிருப்பது ஒரு மண்புழுவால் கூட முடியாத காரியம்! பிரபல நடிகர்கள் உங்கள் விளம்பரத்தில் நடிக்க கொள்ளைப் பணம் கேட்டால் அவர்களைத் தாண்டி குறைந்த சம்பளம் வாங்கும் தொழில்முறை நடிகர்கள் யாரையாவது நடிக்க வையுங்கள். முடியாவிட்டால் புத்தம் புது முகங்களை சல்லிசான சம்பளத்தில் அறிமுகம் செய்து நடிக்க வையுங்கள். இதெல்லாமும் கூட ஒருவகையில் உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் நன்மைகள் தான். 

அதெல்லாமில்லை, இதையெல்லாம் சொல்ல ஒரு சாமானிய பார்வையாளனுக்கு என்ன உரிமையிருக்கிறது. எங்களிடம் பணமிருக்கிறது. பொருளும் எங்களுடையது. விளம்பரத்திலும் நாங்களே தான் நடிப்போம் என்பீர்களானால் இந்தச் சோதனையில் இருந்து தமிழன் எப்படித் தப்பிப்பது?

நிச்சயமாக இது விளம்பர உலகின் சத்ய சோதனை தருணமே!

]]>
தமிழ் தொலைக்காட்சி விளம்பரங்கள், விளம்பர கலாட்டாக்கள், முகம் காட்டும் முதலாளிகள், விளம்பரங்களில் நடிக்கும் முதலாளிகள், tamil add film galattas, owners who show their faces in adds http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/3/w600X390/getting_scared_watching_adds.png http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/mar/03/விளம்பர-உலகின்-சத்ய-சோதனை-சேனல்-மாத்தினாலும்-வந்துடறாங்க-பாஸ்-2873821.html
2873828 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் ‘பெற்றோரைக் கொண்டாடுங்கள்’ அம்மா ஸ்ரீதேவி நினைவுகளில் கரைந்து மகள் ஜான்வி கபூர் எழுதிய உருக்கமான கடிதம்! கார்த்திகா வாசுதேவன் DIN Saturday, March 3, 2018 04:21 PM +0530  

ஜான்வியின் இன்ஸ்டாகிராம் கடிதம்...

‘அம்மா, மனம் முழுதும் அரித்துக் கொண்டிருக்கிறது நீயில்லாத வெறுமை. எனக்குத் தெரியும் இனி நீயற்ற வெளியில் நான் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். இப்போதும் நான் உனது அன்பை உணர்ந்து கொண்டே தான் இருக்கிறேன். கவலைகளிலிருந்தும், வலிகளிலிருந்தும் என்னை மீட்டெடுக்க நீ எப்போதும் இருக்கிறாய் என உணர்கிறேன் நான். நான் கண்களை மூடிக் கொள்ளும் ஒவ்வொரு முறையும் எனக்குள்ளே சந்தோசமான நினைவுகளே ஊற்றெடுக்கின்றன அத்தனைக்கும் காரணம் நீ மட்டுமே! நீ எங்கள் வாழ்வில் கடவுள் எங்களுக்கு அளித்த ஆசிர்வாதம். நீ எங்களுடன் இருந்த காலம் முழுவதும் நாங்கல் கடவுளால் ஆசிர்வதிக்கப் பட்டவர்களாக உணர்ந்திருந்தோம். ஆனால் நீ இந்த உலகத்துக்குப் பொருத்தமானவள் இல்லை எனக் கடவுள் நினைத்து விட்டார் அம்மா, நீ மிகவும் நல்லவள், மிக, மிக பரிசுத்தமானவள், உனக்குள்ளே எப்போதும் நிரம்பியிருந்தது அன்பு மட்டுமே! அதனால் தான் கடவுள் உன்னை இத்தனை சீக்கிரம் தன்னிடமே திரும்ப அழைத்துக் கொண்டார். குறைந்த காலத்துக்காவது உன்னை அம்மாவென அடைந்திருந்தது எங்களது பாக்கியம்.

என் நண்பர்கள் சொல்வார்கள், நான் எப்போதும் பூரணமான சந்தோசத்துடன் இருக்கிறேன் என்று, இப்போது உணர்கிறேன் அது அனைத்தும் உன்னால் என, யார் என்ன சொன்னாலும் அதைப் பொருட்படுத்தியதில்லை, எந்தப் பிரச்னையையுமே பெரிதாகக் கருதியதில்லை, எந்த நாளையுமே சோர்வாகவோ, வெறுமையாகவோ கடந்ததில்லை. ஏனென்றால் எங்களுடன் நீ இருந்தாய். நீ எங்களை மிக விரும்பி அன்பு செய்தாய். நான் எப்போதும் உன்னை மட்டுமே தேடிக் கொண்டிருந்ததால் எனக்கு நம்பிக்கைக்கும், பகிர்தலுக்குமாக வேறு யாருடைய தேவையுமிருந்ததில்லை. நீ என் ஆன்மாவின் ஒரு பகுதி. என் சிறந்த தோழி. எனது எல்லாவற்றுக்கும் காரணகர்த்தாவாக இருந்தவளும் நீயே. நீ உன் முழு வாழ்வையும் எங்களுக்கெனத் தந்தாய். ஒவ்வொருநாளும் காலையில் நான் விழுத்தெழும் போது என் மனதில் தோன்றும் ஒரே ஆசை என்னால் நீ பெருமையுற வேண்டும் என்பதாகவே இருக்கும். நானுனது மகள் எனும் பெருமை தரத்தக்க எனது இந்த ஆசை நிச்சயம் ஒரு நாள் நிறைவேறும். ஏனெனில் நீ என்றென்றைக்குமாய் என்னுடன் இருந்து எனது ஆசையை நிறைவேற்றித் தருவாய். நீ இல்லாத இந்த வெறுமையிலும் என்னால் உனது இருப்பை உணர முடிகிறதே. நீ என்னுள்ளும், தங்கை குஷியினுள்ளும், அப்பாவினுள்ளும் முடிவே இன்றி நீக்கமற நிறைந்திருக்கிறாய். எங்களிடத்தில் நீ பதித்துச் சென்ற தடங்கள் வலிமையானவை. அந்த வலிமை எங்களை இனி வழி நடத்தும். ஆனால் அந்த வலிமை முழுமையானதாக இல்லாத போதும் நீயற்ற வெறுமையக் கடக்கவும் எங்களுக்கு நீயே தான் துணையிருக்கிறாய்.

எங்களுக்கு எல்லாமுமாக இருந்த அம்மாவே, ஐ லவ் யூ!

- இப்படி ஒரு உருக்கமான கடிதத்தை ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் வலைப்பக்கத்தில் இன்று பதிவு செய்திருக்கிறார். தனது அம்மாவும், பிரபல நடிகையுமான ஸ்ரீதேவியின் மறைவு அவரது மூத்த மகளும், அறிமுகத் திரைப்பட வெளியீட்டுக்காக காத்திருக்கும் நடிகையுமான ஜான்வி கபூரை மனதளவில் மிக மோசமாகப் பாதித்திருக்கிறது. மார்ச் 7 ஜான்வியின் பிறந்தநாள். இதுவரை தாயுடன் கொண்டாடிய பிறந்தநாட்கள் பல என்றாலும் பிறந்தநாளும், தனது அறிமுகத் திரைப்படமும் வெளிவருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக திடீரென எதிர்பாராது துபையில் தன் அம்மா மரணமடைந்த அதிர்ச்சியில் இருந்து அவரால் இன்னும் மீளமுடியவில்லை. அந்த இழப்பின் வலியோடு ஜான்வி பதிவு செய்தது தான் இக்கடிதம். இதில் வேடிக்கையான ஒற்றுமை என்னவென்றால், ஜான்வி கபூரின் அறிமுகத் திரைப்படமான ‘தடக்’ வரும் ஜூலை மாதம் வெளியிடப்படவிருக்கிறது. தடக் என்றால் இந்தியில் ‘திடீர் அதிர்ச்சி’ என்று பொருள். ஜூலையில் வெளிவரவேண்டிய தடக் கடந்த வாரமே வெளிப்பட்டு ஸ்ரீதேவி குடும்பத்தையே மொத்தமாக அலைக்கழித்து ஓய்ந்திருப்பது தான் தற்போதைய நிரந்தர சோகம்.

ஜான்வி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தனது தாயின் நினைவாக அவரது ரசிகர்களான நம்மிடமும் ஒரு வேண்டுகோளை எழுப்பியிருக்கிறார்.

“எனது பிறந்தநாள் பரிசாக நான் உங்களிடம் கேட்டுக் கொள்வது இது ஒன்று மட்டுமே! எனது அம்மாவின் ரசிகர்களான நீங்கள் அனைவரும் உங்களது பெற்றோரைக் கொண்டாடுங்கள், பெற்றோரிடம் பணிவு கலந்த மரியாதையுடன் இருங்கள், உங்களது அன்பை உங்கள் பெற்றோர் உணர்ந்து கொள்ளுமாறு நடந்து கொள்ளுங்கல். உங்களை உருவாக்கியவர்கள் அவர்கள். என் அம்மாவின் மீதான உங்களது அன்பின் பேரில் நான் இந்த வேண்டுகோளை உங்களிடம் விடுக்கிறேன். என் அம்மாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள்” - என்றும் ஜான்வி கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த வாரம் துபையில் நடைபெற்ற தனது குடும்ப உறவினரின் திருமண விழாவொன்றில் கலந்து கொள்ள துபை சென்ற ஸ்ரீதேவி, அங்கே குளியல் தொட்டியில் சுய நினைவின்றி மயக்கமுற்று விழுந்ததில் மீண்டு எழ வாய்ப்பின்றி நீரில் மூழ்கி மூச்சுத்திணறி உயிரிழந்தார். இந்தியத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தைப் பெற்ற ஒரே தமிழ் நடிகையான ஸ்ரீதேவியின் இந்த திடீர் மறைவு அவரது குடும்பத்தினரை மட்டுமல்ல இந்தியாவில் ஸ்ரீதேவி ரசிகர்களாக இருந்த அத்தனை உள்ளங்களையும் மீளாத் துயரில் ஆழ்த்தியது. நேற்று முன் தினம் மும்பையில் அவரது இறுதிச் சடங்கு முடிவடைந்த நிலையில் தாயின் மறைவை ஜீரணிக்க இயலாத மகளாக ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று பதிவு செய்துள்ள இந்த உருக்கமான கடிதமும், வேண்டுகோளும் மீண்டுமொருமுறை ஸ்ரீதேவி ரசிகர்களின் விழிகளில் கண்ணீரைத் துளிர்க்கச் செய்வதாக இருக்கிறது.
 

]]>
jhanvi kapoor's instagram post, sridevi, ஜான்வி கபூரின் இன்ஸ்டாகிராம் கடிதம், ஸ்ரீதேவி, ஜான்வி கபூர் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/3/w600X390/sridevi_jhanvi_kapoor.jpg http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/mar/03/jhanvi-kapoors-instagram-letter-to-her-mother-sridevi-2873828.html
2873807 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் தண்ணீர்த் தொட்டி - கொத்தடிமைகள் ஆக்கப்படும் குழந்தைத் தொழிலாளர் பற்றிய சிறுகதை! வழக்குரைஞர். டேவிட் சுந்தர்சிங் Saturday, March 3, 2018 12:19 PM +0530  

முழு நிலவு மேகக்கூட்டத்தினூடே ஊடுருவும் நிசப்தமான நடுநிசி பொழுது. தூரத்தில் தெரியும் சைக்கிளில் அருகாமையிலுள்ள மணியாச்சி ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் இரவு ஷிஃப்ட் முடித்துவிட்டு வழக்கம்போல் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார். ஏழு சிறு வாய்க்கால் பாலங்களை கடந்து தான் அவர் தனது வீட்டுக்குச் செல்ல வேண்டும். இரவு கடந்து நேரம் அதிகாலை ஒரு மணியை தொட்டுக் கொண்டிருக்கிறது. நாயின் ஊளைச்சத்தம், சுவர்ப் பூச்சிகளின் ரீங்காரச் சத்தங்களுக்கிடையே அவர் மூன்றாவது பாலத்தைக் கடக்கும் போது அந்த பாலத்தினூடே கேட்ட முனகலோசை... ஒரு நொடி அவரைத் திடுக்கிட்டு நிலைகுலைய வைத்தது. 23 ஆண்டுகளாக இதே பாதையில், இதே நேரத்தில் வைரவன் பயணிக்கிறார். இது என்ன விசித்திரமான ஓசை?! ஒருவேளை காத்து, கருப்பாக இருக்குமோ?! எதுவாக இருந்தால் தான் என்ன? எதற்கும் ஒருமுறை கீழிறங்கிப் பார்த்துவிடலாம் என சைக்கிளை நிறுத்தினார்.

அந்தோ பரிதாபம்! பாலத்தின் இடுக்கில் ஒரு சிறுவன் உடலெல்லாம் ரத்த காயத்துடன் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறான். அழுக்கான உடல், உபயோகமில்லாத உடைகள், மெலிந்த தேகம் தலை முதல் கால் வரை சிராய்ப்புகளும், ஆறியும் ஆறாத பழைய, புதிய காயங்களுமாக மிகப் பரிதாபகரமான தோற்றத்தில் அவனிருந்தான். பார்ப்பதற்கு தமிழ் பையனைப் போலத் தெரியவில்லை. சுமாராக 13 வயதிருக்கும். முகம் சைனா சைசில் இருக்கிறது. இந்த அருகில் மருத்துவமனை உள்ளது. சரி எப்படியும் இருக்கவே இருக்கிறது 108. அவர் செல்போனில் 108 டயல் செய்தார். சில மணி நேரத்தில் உணர்வற்ற அந்த குழந்தையை அரசு மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு நர்சிடம் ‘கவனிச்சுக்கம்மா எனக்கு காலைல டியூட்டி இருக்கு. எதுக்கும் என் செல் நம்பரை நோட் பண்ணிக்கோ காலைல பார்க்கலாம். யார் பெத்த பிள்ளையோ பாவம்’ என கூறிவிட்டு கிளம்பினார். மருத்துவமனையில் சிகிச்சையை ஆரம்பித்தார்கள். மேலோட்டமான காயங்கள் தான், ஆனால் ரணமான காயங்கள். யார் இந்த குழந்தை? எப்படி கிராமத்திற்கு வந்தது? ஏதாவது பிரச்சினையாகி விடுமோ? எதற்கும் காவல்துறைக்கு தகவல் கொடுத்துவிடலாம் என்றார் டாக்டர். 

காலை 6 மணி கதிரவன் வானத்தை எட்டி பார்க்கும் நேரம். ஊரே அதிர்வது போன்ற அலறல் சத்தம். ஆம் அந்த குழந்தைக்கு உணர்வு திரும்பியது. ஆனால் அதன் கண்களுக்குள் ஒரு வித அச்ச உணர்வு அந்த அச்சத்தினால் எழும் அலறல். யார் யாரோ போய் பேசி பார்த்தார்கள், முடியவில்லை. ஆட்களை பார்த்தால் பயந்து அழுதுகொண்டே மூலை முடுக்குகளில் போய் ஒளிந்து கொள்கிறது. இது விபரீதமான விவகாரமாக அனைவருக்கும்பட்டது. ஜீப் சத்தம் கேட்டது இன்ஸ்பெக்டர் வந்தார். அவர் சட்டையில் சாரதா என அவர் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. மிக பாசமாக பேசிப்பார்த்தார். சிறுவனின் அலறல் மட்டும் நிற்கவே இல்லை. ரத்தத்தை உறைய வைக்கும் அச்சத்தின் பிடியிலிருந்தான் அந்த சிறுவன். இதுவரை மனிதர்களை பார்த்ததே இல்லை என்பதைப்போல யாரை பார்த்தாலும் பயந்து அழுதான். காயங்களுடன் கோரமாகத் தெரிந்தான். 

அவன் ஒரிசாவை சார்ந்த சிறுவன் என அவன் முகபாவம் சொல்கிறது என்றார் இன்ஸ்பெக்டர்;  என்ன செய்வது? அச்சத்தின் பிடியிலிருந்த அந்த சிறுவனின் அருகே சென்று அவன் தலையை தடவிக்கொடுத்தார். தொடர்புகொள்ள எந்த வாய்ப்பும் இல்லை. ‘என் அப்பா ராணுவத்தில் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்றவர். நெடுநாட்கள் அவர் ஒரிசாவில் பணியாற்றினார். அவருக்கு மொழி தெரியும்’ என ஒரு நர்சம்மா சொன்னது... இன்ஸ்பெக்டரின் காதுகளில் தேனாக ஒலித்தது. அந்த மாஜி ராணுவ வீரரும் வரவழைக்கப்பட்டார்.

இந்த சிறுவனையும் அவனது உடலமைப்பையும் பார்த்த மாத்திரத்தில் அந்த பெரியவர் சொன்னார். ‘இன்ஸ்பெக்டர் மேடம், 27 ஆண்டுகள் நான் ஒரிசாவின் சில கிராமங்களில் இருந்தேன். அங்கு சில சமூக விரோதிகள் ஏழைப் பெற்றோரிடம் மூளைச் சலவை செய்து முன்பணமாக ரூ.5000 முதல் ரூ.10,000 வரை கொடுத்துவிட்டு குழந்தைகளை அழைத்துக்கொண்டு போய் இங்கு சில கம்பெனிகளில் ரகசியமாக வைத்து கொத்தடிமைகளாக வேலை வாங்குவார்கள். சம்பளம் கொடுப்பதாகச் சொல்லி அதை முன்பணத்தில் கழிப்பதாக சொல்லுவார்கள். உயிர் வாழும் அளவிற்கு உணவு கொடுப்பார்கள். ஓய்வில்லாமல் 20 மணி நேரம் வரை வேலை கொடுப்பார்கள். ஒரு நாள் கூட விடுமுறை இல்லை. வெளியே எங்கும் போக முடியாது. அப்படி போனால் தேடி கண்டுபிடித்து அடித்து உதைத்து விடுவார்கள். காலப்போக்கில் இதுவே பழக்கமாகி இப்படிப்பட்ட வாழ்க்கை முறையை அந்த குழந்தைகள் ஏற்றுக்கொண்டு மனதளவில் அடிமைகளாக மாறிவிடுகிறார்கள். இதனால் சில முதலாளிகளும் கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்கள். யாரோடும் பேசக்கூடாது, எங்கும் போகக்கூடாது. உனது அப்பா 5000 ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார். அதற்காக தான் நீ இங்கு வேலை செய்கிறாய். வெளியே போனால் அந்த 5000 ரூபாய்க்காக உன்னை போலீசில் பிடித்து கொடுத்து விடுவோம். என வாழ்நாள் பூராவும் அந்த கடனின் பெயரைச் சொல்லி இந்த குழந்தைகளின் வாழ்வை சீர்குலைக்கும் சூழல் இங்கு இருக்கிறது. நான் உண்மையாக நம்புகிறேன். இந்த ஒரிசா குழந்தை கூட அப்படி பாதிக்கப்பட்ட குழந்தையாகத்தான் இருக்க வேண்டும் என்றார். அந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர். இதை சொன்னதும் அங்கு கேட்டுக் கொண்டிருந்த யாராலும் அழாமல் இருக்க முடியவில்லை. 

பதறிப்போன இன்ஸ்பெக்டர் போனில் டிஎஸ்பியிடம் பேசினார். அவரது அறிவுரைக்கேற்ப ஆர்.டி.ஓ. வை உடனடியாகத் தொடர்பு கொண்டார். நேர்மையான அந்த ஆர்.டி.ஓ அடுத்த 20 நிமிடத்தில் தனது குழுவோடு மருத்துவமனைக்கு வந்தார். ஒரியா தெரிந்த அந்த ராணுவ வீரரின் உதவியோடு அந்த குழந்தையை விசாரித்தார். ஆர்.டி.ஓ.-விடம் சிறுவன் சொன்னான். ‘அப்பா சிறு வயதில் இறந்து போனார். அம்மாவும் 4 குழந்தைகளும் உண்டு. இதில் நான் தான் மூத்தவன். 3 இளைய தங்கைகள்... மூத்த தங்கைக்கு திருமணம் (குழந்தை திருமணம்) செய்யும் போது ரூபாய் 5000  செலவானது. அதற்காக நாங்கள் 5000 ரூபாய் அட்வான்ஸ் வாங்கினோம். கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு இந்த முறுக்கு கம்பெனியில் வேலை செய்கிறோம். என்னோடு 30 சிறுவர்கள் இந்த நரகத்தில் வேலை செய்கிறார்கள். எங்கள் ஊர், பெயர்,  எதுவும் தெரியவில்லை. எனது பெயர் ஜெயந்தன். ஒரே ஒரு வேளை கஞ்சி கொடுப்பார்கள். காலை 3 மணிக்கு எழுந்து முறுக்குச் சுட வேண்டும். அப்போது தான் 10 மணிக்கெல்லாம் பிரஷ் ஆக முறுக்கு பேக்கிங் செய்து லோடு ஏத்த முடியும். இரவு 11 மணி வரை மாவு பிசைந்து வைக்க வேண்டும். அப்போதுதான் காலை 3 மணிக்கு முறுக்குச் சுட முடியும். வேலை செய்து வேலை செய்து காய்ந்துபோன அந்த பிஞ்சு கரங்களையும் கொதிக்கும் எண்ணெய் பட்டு கொப்பளமாகி, ரணமாகிப்போன காயங்களையும், ஓனர், மேஸ்திரி ஆகியோர் அடித்து காயப்படுத்திய புண்களையும் காட்டின சிறுவனை பார்த்து ஆர்.டி.ஓ. கண்ணீர் விட ஆரம்பித்தார். பக்கத்திலே பல கி.மீ. வீடுகள் இல்லாத ஒரு அவாந்திரமான இடத்தில் தான் அந்த கம்பெனி இருக்கிறது. கொஞ்சம் அசந்தாலும் அடித்து நொறுக்கி விடுவார்கள். வழிப்போக்கர் யாரிடமாவது பேசினால் அவ்வளவுதான் கொன்றுவிடுவார்கள். எனக்கு என் அம்மாவை பார்க்க வேண்டும். அவர்களை கட்டி அணைக்க வேண்டும். அவர்களின் மடியில் படுத்து உறங்க வேண்டும். ஆகவே தான் வெளியே ஓடி வந்தேன். துரத்தினார்கள்... கூட்டமாகத் துரத்தினார்கள் அவ்வளவுதான் தெரியும் ஐயோ....’ என்று கதறினான் அச்சிறுவன். 

இனி நேரம் கடத்தத் தேவையில்லை. 30 சிறுவர்களையும் மீட்க வேண்டும். ஆர்.டி.ஓ. அவசரப்பட்டார். போலீஸாரும் இணைந்தனர். ஜீப்பில் புறப்பட்டனர். யாருக்கும் அந்த சுற்றுவட்டாரத்தில அப்படி ஒரு முறுக்கு கம்பெனி இருப்பதே தெரியவில்லை. அந்த பகுதியில் சல்லடை போட்டு தேடினார்கள். பல மைல் சுற்றளவில் தேடினார்கள். அந்த சிறுவனால் கூட அந்த கம்பெனியை கண்டுபிடிக்க முடியில்லை. அடைபட்டு கிடந்த சிறுவன் எப்போதும் வெளியே வந்ததே இல்லையே ஆகவே அவனுக்கும் வழி தெரியவில்லை. நெடுநேரம் தேடியாகிவிட்டது. எல்லோரும் சோர்வுற்றனர். மாலை நெருங்கிவிட்டது. இனி நேரத்தை வீணடிக்கவேண்டாம். காலையில் பார்த்துக்கொள்ளலாம் என்றார். ஆர்.டி.ஓ. அலுவலகம் திரும்ப ஜீப்பைத் திருப்பினார்... இரண்டு நிமிடத்தில்... சிறுவன் மகிழ்ச்சியில்  ‘நிறுத்துங்கள்... நிறுத்துங்கள்’ என்றான். தூரத்தில் தெரிந்த அரசாங்கத்தின் உயரமான தண்ணீர் தொட்டியை கைநீட்டி சுட்டிக்காட்டினான் அந்த சிறுவன். ஆம், அதுதான் அவனின் கலங்கரை விளக்கு. அடைபட்டு கிடக்கும் 30 சிறுவர்களின் மீட்பிற்கான நம்பிக்கை நட்சத்திரம் அந்த தண்ணீர் தொட்டி, கம்பெனியில் கடுமையான வேலைகளுக்கு மத்தியில் தன் தாயின் முகத்தை எண்ணி விம்மி விம்மி இந்த சிறுவன் அழும்போதெல்லாம் ஜன்னலின் வழியாக என் தாய் வரமாட்டார்களா? என அவன் வெளியே பார்க்கும்போது அவனுக்கு ஆறுதலாக தெரிந்த இந்த தண்ணீர் தொட்டி.

இதன் பக்கத்தில்தான்... அந்த கம்பெனி சிறுவன் குதூகலித்தான். தண்ணீர் தொட்டியினூடே ஆர்.டி.ஓ. பயணித்தார். 30 சிறுவர்களும் மீட்கப்பட்டனர். சொந்த ஊர் தெரியாத அவர்கள் அரசு பதுகாப்பில், முழு கவனிப்பில் வைக்க கலெக்டர் உத்தரவிட்டார். 30 பேர்களும் கொத்தடிமைத் தொழில்முறை ஒழிப்பு சட்டம் 1976-ன் அடிப்படையில் விடுதலை சான்றிதழ் வழங்கினார் ஆர்.டி.ஓ. அரசு நிர்ணயித்த நிவாரண தொகையான 20,000 ரூபாய் ஒவ்வொரு குழந்தைக்கும் கொடுக்கப்பட்டது. பள்ளியில் படிப்பற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த குற்றத்தில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டனர். சீக்கிரமாக குழந்தைகளின் சொந்த ஊரை கண்டுபிடித்து அவரது குடும்பத்தினருடன் இணைத்து மறுவாழ்வு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ‘கொத்தடிமைகள் குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் இப்போதும் அந்த முறை நமது கிராமங்களில் இருக்கிறது என்பதை இன்று தான் உணருகிறேன்’ என்றார் இன்ஸ்பெக்டர். இதை அறிந்தது முதல் வைரவனின் சைக்கிள் எப்போதெல்லாம் அந்த பகுதியைக் கடக்குமோ அப்போதெல்லாம் இந்த தண்ணீர் தொட்டியை மட்டும் பார்க்கத் தவறுவதேயில்லை. 


 

]]>
சிறார் வன்கொடுமை, thanneer thotti short story, தண்ணீர்த் தொட்டி சிறுகதை, கொத்தடிமைகள், குழந்தைத் தொழிலாளர், child labour http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/3/w600X390/thanneer_thotti.jpg http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/mar/03/thanneer-thotti-short-story-2873807.html
2872504 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் கைவரப்பெறுமா நடிகர்களின் அரசியல் க(வ)லை? ரமேஷ் கிருஷ்ணன் பாபு DIN Thursday, March 1, 2018 04:07 PM +0530
ரஜினி காந்த் மற்றும் கமல ஹாசனின் அரசியல் பிரவேசம் எத்தகைய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் உண்டு. ஆனால் தமிழகத்தின் வளர்ச்சியில் அவர்களது அரசியல் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதே தற்போதைய கேள்வி.

எதிர்பாராத நிகழ்வுகளிலிருந்துதான் புதிய அரசியல் பாதைகள் துவங்குகின்றன என்பது இதுவரையில் பதிவு செய்யப்பட்ட அரசியல் மாற்றங்களிலிருந்து நாம் அறிகின்ற உண்மை. சமீபகால எடுத்துக்காட்டு ஆம் ஆத்மி கட்சியின் தோற்றம். ஒரு ஊழல் எதிர்ப்புப் போராட்டம் சாதாரணமாக கடந்து செல்லாமல் ஒரு புதிய கட்சியையும், அதன் ஆட்சியையும் அதனையும் கடந்து ஒரு மாற்று அரசியல் சக்தியையும் ஏற்படுத்தியது.

தமிழ்த்திரையுலகில் வசூல் மன்னனாக இருந்து வந்த ரஜினி எனும் நடிகர், பிரபல இயக்குநரின் வீட்டில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தைக் கண்டிக்கப் போய் இன்று அவரே அரசியல் கட்சி ஒன்றை துவங்கும் நிலையில் முடிந்துள்ளது. இதை அவர் தனது வாழ்நாளில் எதிர்பார்த்திராத மாற்றமாகவே கருதியிருக்கக்கூடும். கடந்த 1995 ஆம் ஆண்டில் நடந்த சம்பவம் 2017ஆம் ஆண்டின் இறுதி நாளன்று புதிய அரசியல் கட்சியை துவங்குவதாகவும், அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் அவர் அறிவிக்கும் அளவுக்கு வந்துள்ளது.

கடந்த 22 ஆண்டுகளில் பலமுறை அரசியலுக்கு வந்து விடுவார் என்று எதிர்ப்பார்ப்புகள் கூடியிருந்த தருணங்களில் அவர் அரசியலுக்கு வருவதாக தெரிவிக்கவில்லை. “நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது. ஆனா வரும்போது தானா வருவேன்” என்பது அவரது பிரபல வசனம். மேலும், “லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்” என்பதும் அவரது திரைப்பட வசனங்களில் ஒன்று. அது இன்று உண்மையாகியுள்ளது. தனது கட்சி உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ள இணையதளம் ஒன்றை அவர் துவங்கியுள்ளார். அதாவது துல்லியமான தொழில்நுட்பத்தின் உதவியுடன் அவர் களம் இறங்குகிறார். பதிவு செய்யும் தொண்டர் தனது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் அந்த வாக்காளர் தமிழகத்தில் எங்கு வசிக்கிறார் என்பது தெரிய வரும். மாவட்ட வாரியாக தொண்டர்களைத் திரட்ட இந்தத் தரவு அவசியம் தேவை. மேலும் எதிர்காலத்தில் ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டையும் இணைக்கப்பட்டால் தொண்டரின் தனிப்பட்டத் தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம்.

ரஜினி ரசிகர்மன்றங்களைச் சேர்ந்தவர்கள் உடனடியாக பதிவு செய்து கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை. ரஜினியே கூட பதிவு செய்யப்பட்ட/செய்யப்படாத மன்றங்களையும் இணையதளத்தில் பதியும்படி கேட்டுக்கொண்டுள்ளார். இதுநாள்வரை அதிகாராபூர்வ ரசிகர் மன்றங்களாக பதிவு செய்யாதவற்றின் எண்ணிக்கையே அதிகம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவற்றிலுள்ள மொத்த ரசிகர்களின் எண்ணிக்கையும் சரிவரத் தெரியவில்லை. இதனால் இத்தனை இலட்சம் பேர் தொண்டர்களாக பதிவு செய்துக் கொள்வார்கள் என்பதையும் கணக்கிட முடியாத சூழல் உள்ளது. என்றாலும் தோராயமானதொரு எண்ணிக்கை ரசிகர்மன்றத்தின் மாநிலத் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு தெரிந்திருக்கும். அதை அவர்கள் வெளியிடுவது உகந்ததல்ல என்பதால் அது சிதம்பர ரகசியமாகவே இருக்கும்.

தமிழகத்தின் மக்கள் தொகையில் இளைஞர்களின் எண்ணிக்கை கணிசமானது. நாற்பதுகளைக் கடந்தவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால் வாக்களிக்கும் வயதுடையவர்களின் மொத்த எண்ணிக்கையில் சரிபாதியை அவர்கள் கொண்டிருக்கலாம். இவர்களே தேர்தல்களின் முடிவை நிர்ணயிப்பவர்கள். இவர்களில் எத்தனை பேரை ரஜினியின் கட்சி உறுப்பினர்களாக பெறப்போகிறது என்பதுவே அடுத்தக்கட்டத்தை நோக்கிய பயணத்தின் திசையை தீர்மானிக்கும். கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் சுமார் 4,66,03,352 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களாக இருந்துள்ளனர். சராசரியாக ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திற்கும் 906 வாக்காளர்கள் இருந்துள்ளனர். இன்றைய நிலையில் இந்த எண்ணிக்கை கூடுதலாகவே இருக்கக்கூடும். புதிய வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணி நடைபெற்று வருகிறது. எனவே இளம் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் சேர்க்கப்படும் வாய்ப்பேயுள்ளது. இவர்களில் எத்தனை பேர் ரஜினியின் கட்சியில் உறுப்பினர்களாக இணைவார்கள் என்பது தெரியாது. இவர்களை தங்கள் கட்சிக்கு இழுக்க ரஜினியின் கட்சி வைத்துள்ள திட்டமும் தெரியாது.

தனது சினிமாப் புகழ் மட்டுமே தனக்கு வெற்றித் தேடித்தரும் என்பதை ரஜினி நம்பமாட்டார்தான். எனவே விரைவில் கொடி, சின்னம் மற்றும் கொள்கைகளை அவர் வெளியிட்டாக வேண்டும்.  அடுத்த மூன்றரை ஆண்டுகளில் தன் கட்சியை வெகுமக்கள் மத்தியில் பரவலாகக் கொண்டு செல்ல அவர் தொண்டர் பலம் மட்டுமின்றி கட்சியின் கொள்கைகளையும் நம்பியிருக்க வேண்டும். விஜயகாந்த் கட்சி துவங்கிய போது ஏழை மக்களின் உயர்வையே கொள்கையாக முன் வைத்தார். விஜயகாந்த் கட்சி துவங்குவதற்கு முன்பே தனது ரசிகர் மன்ற உறுப்பினர்களை உள்ளாட்சித் தேர்தல்களில் சுயேட்சையாக போட்டியிடச் செய்து சில ஆயிரங்களில் உறுப்பினர்களையும் பெற்றிருந்தார். ரஜினி ரசிகர் மன்ற உறுப்பினர்களில் எத்தனைப் பேர் இவ்வாறு கலைக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் சுயேட்சை உறுப்பினர்களாக இருந்துள்ளனர் என்பதும் தெரியவில்லை. அப்படியொரு பலமான அடித்தளம் 2011ஆம் ஆண்டில் இலகுவாக 29 பேரவை உறுப்பினர்களை பெற்றுத்தர பேருதவி புரிந்துள்ளது. அத்தகைய அடித்தளமின்றி என்னத்தான் அதிமுகவிற்கு சாதகமான அலை வீசியிருந்தாலும் விஜயகாந்த் கட்சியால் 29 இடங்களைப் பெற்றிருக்க முடியாது. ரஜினியோ உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்கிறார்.

அதற்கு முன்னர் விஜயகாந்த் 2006 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனது கட்சியை தனித்துப் போட்டியிடச் செய்தார். அவர்மட்டும் விருதாசலம் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்தேர்தலில் அவரது கட்சிக்கு 8% வாக்குகள் கிடைத்தன. ரஜினியின் கட்சியும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் தனது பலத்தைப் பரிசோதிக்க வாய்ப்புண்டு. தொண்டர்கள் சுயேட்சையாகவே போட்டியிட்டு வெற்றி பெறுவது கட்சியின் துல்லியமான பலத்தை அறிய உதவும். மக்களவைத் தேர்தலிலும் போட்டியிடுவதன் மூலம் வாக்கு வங்கியை அதிகரித்துக் கொள்ளலாம். ஆனால் இவற்றை மேற்கொள்ளாமல் நேரடியாக 2021 ஆம் ஆண்டு நடைபெறும் பேரவைத் தேர்தலை மனதில் இருத்தி மட்டுமே கட்சியை வளர்ப்பது என்ற முடிவு எவ்வளவு தூரம் பலனளிக்கும் என்பதைக் கணிக்க இயலாது.

தமிழகத்தின் தனிப்பெரும் கட்சிகளான அதிமுக, திமுக ஆகியன பேரவைத் தேர்தல்களில் மாறி மாறியே ஆட்சியை பிடித்துள்ளன. கடந்த முறை மட்டுமே அதிமுக ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. கடந்த 20 ஆண்டுகளில், 1996 முதல் 2016 ஆம் ஆண்டு வரையில் இரு கட்சிகளின் வெற்றித் தோல்வி போட்டியாளரின் ஆட்சியின் சிறப்பையும், கூட்டணியையும் பொறுத்தே அமைந்துள்ளது. இதில் ஒருமுறை ரஜினி வாய்ஸ் எனும் திருப்பமும் அடங்கியிருந்தது. அது 1996 ஆம் ஆண்டில் ஜெயா அரசிற்கு எதிரான குரலாக அமைந்திருந்தது. அதன் பிறகு நடந்த பல தேர்தல்களில் ரஜினியின் குரலுக்கு உரிய பலன் கிட்டவில்லை. 2004 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியை ஆதரித்தும் அக்கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. 

ஆகவே தனிப்பட்ட பலம் என்பதைப் பொறுத்தே கட்சிகளின் வெற்றி அமைகிறது. எடுத்துக்காட்டாக 1996 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையிலான பேரவைத் தேர்தல்களில் பெற்ற வாக்குகள், இடங்கள் ஆகியவற்றை பார்க்கலாம். 


மேற்கண்ட அட்டவணை மூலம் நாம் அறிய வருவது 1996 ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆம் ஆண்டு வரை கூட்டணிகளின் பலம் வெற்றிக்கான அடிப்படையாக அமைந்துள்ளது என்பதுவே. அதிமுக, திமுக ஆகியன கூட்டணிகளின் பலமின்றி நேரடியாக மோதிக்கொண்ட 2016 ஆம் ஆண்டில் இரு கட்சிகள் மட்டுமே சட்டசபையை நிரப்பிவிட்டுள்ளன. ஆகையால் தொண்டர் பலமுள்ள கட்சிகளே களத்தில் நிலைக்க முடியும் என்பது தெளிவு. ரஜினி காந்த் கட்சி குறைந்தபட்சம் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க திட்டமிடுவதாகத் தெரிகிறது.  அதாவது 2018 ஜனவரி கணக்கெடுப்பின்படி 6 கோடி வாக்காளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் அக்கட்சியில் இணைய வேண்டும்!... கமல் கட்சியில் எத்தனைப் பேர் இணைவார்கள் என்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

இங்கு வேறொன்றையும் நாம் காண வேண்டியுள்ளது. யார் ஆட்சியமைக்கும் போதும் மொத்தம் பதிவான வாக்குகளில் சுமார் 30% பெற்றிருந்தால் மட்டுமே அது சாத்தியமாகியுள்ளது. கூட்டணி கட்சிகள் பெற்ற வாக்குகளையும் ஆட்சியமைக்கும் கட்சியின் மொத்த வாக்குகளுடன் இணைத்துப் காண்பதே சரியாக இருக்கும். ஏனெனில் காங்கிரஸ் உட்பட எந்தக் கட்சிக்கும் 5-10% மேல் சொந்தமாகப் வாக்குகளைப் பெறும் வலு இருந்ததில்லை. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு பாமக. அக்கட்சி 2001 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை ஏதேனும் ஒரு கழகத்தின் கூட்டணியில் இடம் பெற்று அதிக இடங்களைப் பெற்று வந்தது. 2011 ஆம் ஆண்டில் தனித்துப் போட்டியிட்டு 3 (5.23% வாக்குகளுடன்) இடங்களில் வெற்றி பெற்றது. 2016 ஆம் ஆண்டில் சுமார் 5% வாக்குகளைப் பெற்றாலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. 

ஆட்சியமைத்த காலங்களில் கழகங்கள் பெற்ற வாக்குகளை காண்போம்.

1996 திமுக 11423380 (42.07%)
2001 அதிமுக 8815387 (31.44%) 
2006 திமுக 8728716 (26.46%) 
2011 அதிமுக 14150289 (38.40%)
2016  அதிமுக 17616266 (40.77%)

2006 ஆம் ஆண்டில் திமுக கூட்டணி கட்சிகள் அதிகளவில் வெற்றி பெற்றன என்பதை மேலேயுள்ள அட்டவணையில் பார்த்தோம். திமுகவிற்கு கிடைக்க வேண்டிய வாக்குகளாகவே அவற்றைக் கருத வேண்டியுள்ளது. மேலும் அதே தேர்தலில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகளோடு மட்டுமே கூட்டணி கண்ட அதிமுக 70 இடங்களையும் சுமார் 50% வாக்குகளையும் பெற்றிருந்தது. இதே சூழ்நிலையை 2016 ஆம் ஆண்டில் திமுக பெற்ற 88 இடங்கள் மற்றும் சுமார் 40% வாக்குகளோடும் பொருத்திப்பார்க்கலாம்.

ரஜினிக்கு போடப்படும் இக்கணக்கு கமலுக்கும் பொருந்தும். எனவே அவரும் தொண்டர் பலம் நிறைந்த கட்சியை தோற்றுவிக்க வேண்டும்.

இதுவரை அரசியல் கணக்கைப் பார்த்த நாம் இனி தமிழகத்தின் வளர்ச்சிக்காக இவர்களது பங்கு எதுவாக இருப்பது பொருத்தமானது என்பதையும் காண வேண்டும். தமிழகம் வளர்ச்சிப்பெற்ற மாநிலமாக கருதப்படுகிறது. இக்கருத்தை மத்திய அரசின் அங்கங்கள் பல நிறுவியுள்ளன. சமீபத்திய வருடாந்திர பொருளாதார சர்வேயில் தமிழகம் அதிக ஏற்றுமதி செய்யும் மாநிலமாகவும், ஜி எஸ் டி அதிகம் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களைக் கொண்ட மாநிலமாகவும் காட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே சேவைத்துறையின் தமிழகத்தின் வருமானத்தில் சுமார் 45 விழுக்காடு என்றும் விவசாயத்தின் பங்களிப்பு 21 விழுக்காடு என்றும் தமிழக அரசு பேரவையில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்திருந்தது. ஆனாலும், வறுமை, வேலையின்மை, இடப் பெயர்வு போன்ற பல்வேறு பிரச்சினைகளை மாநிலம் கொண்டுள்ளது. கருவறை முதல் கல்லறை வரை அரசின் ஏராளமான மானியங்கள், கடன்கள், நல உதவித் திட்டங்களால் ஏழை-எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டங்களுக்குத் தேவையான நி்தியைத் திரட்டுவதில் பெரும் சிரமம் இருந்து வருகிறது. மேலும், ஜி எஸ் டி வரிமுறையால் மாநில அரசின் வருவாய் குறையும்; எனவே மத்திய அரசு இழப்பை ஈடுகட்ட வேண்டிய நிலை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அரசு தனது சொந்த முயற்சியில் வரி வருவாயை அதிகரிக்க நிலம், நிலக்குத்தகை, கனிம வளங்கள், வாகனங்கள் பதிவு போன்ற வணிக ரீதியிலான பயன்பாடுகளில்  வருவாயை பெருக்கும் திட்டங்களில் கவனம் செலுத்துகிறது. 

தமிழக அரசுக்கு இன்றைய தேதியில் சுமார் 4 இலட்சம் கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும், கடனுக்கான வட்டியே ஆண்டு வருமானத்தில் 20% மேல் எடுத்துக்கொள்ளும் என்றும் கணிக்கப்படுகிறது. அரசின் நிதிநிலையை சரி செய்ய வேண்டுமென்றால் விவசாயத்திற்கான இலவச மின்சாரம், உணவு மானியம் உட்பட பல திட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் அல்லது வறுமைக் கோட்டிற்கு மேலே உள்ளோரை அடையாளம் கண்டு மானிய சலுகைகளிலிருந்து விலக்க வேண்டும். இது போன்ற நிலையில் அரசியலுக்கும், நிர்வாகத்திற்கும் புதியவர்களால், அதுவும் இத்தனை நாள் திரைத்துறையில் கோலோச்சியவர்களால் எப்படி முடியும் என்ற கேள்வியை தவிர்க்க முடியாது. அடுத்து வரும் நாட்களில் இது குறித்த பரந்தக் கண்ணோட்டதை இரு நடிகர்களும் வெளியிட வேண்டியக் கட்டாயம் உள்ளது. 

அவர்களது அரசியல் க(வ)லை வாக்கு வங்கி அரசியலாக குறுகி விடாமல் இருக்க தமிழகத்தின் நீண்ட கால வளர்ச்சிக்கு வலுவான அடித்தளம் ஒன்றை அமைக்கும்படி இருப்பதே மக்களுக்கும், அவர்கள் தோற்றுவித்தக் கட்சிகளின் கடும் முயற்சிகளுக்கும் பொருள் உள்ளதாக அமையும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/18/w600X390/rajini-kamal-4.jpg http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/mar/01/கைவரப்பெறுமா-நடிகர்களின்-அரசியல்-கவலை-2872504.html
2872446 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் ஸ்ரீதேவியின் வாழ்வில் எத்தனை மாயங்களோ? போனி கபூர் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவரா? RKV Thursday, March 1, 2018 03:53 PM +0530  

சனிக்கிழமை இரவு ஸ்ரீதேவி மறைந்தார். இன்றோடு 5 நாட்களாகி விட்டன. இப்போது கூட நம்பத்தான் முடியவில்லை. என்ன ஆயிற்று ஸ்ரீதேவிக்கு?! நன்றாகத்தானே இருந்தார். ஸ்ரீதேவியைப் பொருத்தவரை அவருக்கு திரையுலகில் நுழைவதற்கு முன் ஒரு வாழ்க்கை, திரையுலகில் நுழைந்த பின் ஒரு வாழ்க்கை என்ற இரட்டை வாழ்க்கையே இல்லை. அவர் நடிகர் கமல்ஹாசனைப் போல வெகு இளம் வயதிலேயே நடிக்க வந்து விட்டார். ஆதலால் பள்ளிக் கல்வியோ, பள்ளி, கல்லூரி நண்பர்கள் மற்றும் பொதுவெளி, பொதுமக்களுடனான அனுபவங்கள் என்பதே இல்லாதவர். அவருண்டு அவரது பெற்றோர், உடன்பிறந்தார், ஒரு சில நெருங்கிய உறவினர்கள் மற்றும் அவர் நடித்த திரைப்படங்களில் பணிபுரிந்தவர்கள் உண்டு என்றே மிகக் குறுகியதொரு வட்டத்தில் வாழ்ந்தவர் அவர். இயக்குனர் ராம் கோபால் வர்மா ட்விட்டரில் குறிப்பிட்டிருந்ததைப் போல ஸ்ரீதேவி தனது சொந்த வாழ்வில் நிஜமான சந்தோஷத்துடன் தான் வாழ்ந்தாரா? அல்லது திரையில் நடித்ததைப் போலவே திரைக்குப் பின்னான இயல்பு வாழ்க்கையிலும் நடித்தே வாழ வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தாரா? என்பது புதிரான கேள்வி!

சிவகாசியை அடுத்திருக்கும் சின்னஞ்சிறு கிராமமான மீனம்பட்டியைச் சேர்ந்த வழக்கறிஞரான ஐயப்பன் ஒன்றும் சாமானிய மனிதரில்லை. அவரது குடும்பம் அந்தக் கிராமத்தின் வளமான குடும்பங்களில் ஒன்று. அந்தக் குடும்பம் மீனம்பட்டி முதலாளி குடும்பம் என்றே சுற்று வட்டாரத்தில் விளிக்கப்படுவது வழக்கம். அப்படியான குடும்பத்தின் வாரிசான ஐயப்பன் தன் மூத்த மகளான ஸ்ரீதேவியை வெகு இளம் வயதிலேயே பள்ளிக் கல்வியைக் கூட முழுதாக வழங்காமல் முற்றிலுமாக சினிமாவுக்கென தத்துக் கொடுத்ததைப் போல தன் மகளை முழு நேர நடிகையாக்கியது ஏன்? என்பது முதல் கேள்வி. ஒருவேளை அது அவரது தாயாரின் முடிவாக இருந்தால் அதை எதிர்க்கும் அளவுக்கோ அல்லது மறுத்துப் பேசும் அளவுக்கோ வலுவான குழந்தையாக ஸ்ரீதேவி இருந்திருக்கவில்லை என்பதே நிஜம்.

ஸ்ரீதேவியுடன் குழந்தை நட்சத்திரமாக இணைந்து நடித்தவரான குட்டி பத்மினி இந்தத் தகவலை உறுதி செய்கிறார்.

'நாங்கள் இருவரும் இணைந்து நடித்தது ஒரே ஒரு படத்தில் தான் என்றாலும் அதன் படப்பிடிப்பு ஓராண்டாக நீடித்ததால் குழந்தைப் பருவத்தில் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது, நன் அறிந்தவரை ஸ்ரீ மிகவும் பணிவான பயந்த குழந்தை. அவருக்கு தனக்கு இது தான் வேண்டும், இது வேண்டாம் என்றெல்லாம் கேட்டுப் பெறத் தெரியாது. எல்லாவற்றுக்கும் தனது அம்மாவைத் தான் எதிர்பார்ப்பார். அம்மா சொல்லாமல் உடை மாற்றக் கூடத் தயங்குவார். அந்த அளவுக்கு அவரது வாழ்வு அவரது அம்மாவால் கட்டுப்படுத்தப் பட்டிருந்தது. இயல்பிலேயே பிறர் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்களோ?, என்ன சொல்வார்களோ? என்ற அச்சம் நிரம்பிய குழந்தையாகத்தான் ஸ்ரீதேவி இருந்தார்.’

- என்கிறார் குட்டி பத்மினி.

தன் தாயார் ராஜேஸ்வரியால் அப்படி வளர்க்கப் பட்ட ஸ்ரீதேவிக்கு நெருங்கிய நட்புகள் இருந்திருக்க வாய்ப்புகள் குறைவாகத்தான் இருந்திருக்கக் கூடும்.

ஆரம்ப காலங்களில் ஸ்ரீதேவி பங்கேற்ற படப்பிடிப்புகளுக்கு அவரது அம்மாவோ அல்லது தங்கையோ துணைவருவார்களாம்.

ஆரம்பம் முதலே ஸ்ரீதேவி தனித்து இயங்கக்கூடியவர் அல்ல. திருமணத்திற்கு முன், சரியாகச் சொல்வதென்றால் தனது தாயாரின் மரணத்துக்கு முன்பு வரை ஸ்ரீதேவிக்காக முடிவுகளை எடுக்கக் கூடியவராக அவரைக் கட்டுப்படுத்தக் கூடியவராக அவரது தாயார் இருந்திருக்கிறார் என்றால் தாயாரின் மரணத்தின் பின் ஸ்ரீதேவியைக் கட்டுப்படுத்தும் சக்தியாக விளங்கியவர் அவரது கணவரான போனி கபூர்.

பெற்றோர் இருவரும் உயிருடன் இருந்தவரை ஸ்ரீதேவியின் வாழ்வு சுமுகமாகத்தான் சென்றிருக்கக் கூடும். பெற்றோர் மறைந்து ஒரே தங்கையும் திருமணமாகிப் பிரிந்ததும் தனித்தவர் ஆனார். அப்போது தான் ஸ்ரீதேவியின் வாழ்வில் போனி கபூர் முன்னுரிமை பெற்றார். ஸ்ரீதேவியின் தாயார் உயிருடன் இருக்கையிலேயே போனி கபூருடனான நட்பு துவங்கி விட்டது என்றாலும் அந்த நட்பு வெறும் தயாரிப்பாளர், நடிகை என்ற அளவிலேயே இருந்து வந்தது.

போனி கபூர், ஸ்ரீதேவிக்கு அறிமுகமான ஆரம்ப நாட்களில் ஸ்ரீதேவி அவரைச் சகோதரராகப் பாவித்து ராக்கி கட்டிய அதிசயமெல்லாம் நடந்திருக்கிறது என்கின்றன இந்தி மீடியாக்கள். இந்தித் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த நாட்களில் போனியை விட அவரது முதல் மனைவி மோனா கபூருடன் நெருக்கமான நட்பு பாராட்டியவர் ஸ்ரீதேவி. இப்படித் தொடங்கிய இந்த உறவு ஸ்ரீதேவியின் தாயாருக்கு அமெரிக்காவில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை சர்ச்சையின் போது தான் மடை மாறி இருக்கக் கூடும். ஏனெனில், அப்போது தான் ஸ்ரீதேவி முற்றிலும் தனிமைப்பட்டுப் போனார்.  

தகப்பனார் ஐயப்பன் உயிருடன் இருந்தவரையில் ஸ்ரீதேவியின் சொத்துக்களை சட்டச் சிக்கல்கள் இன்றி உரிய வகையில் பாதுகாக்கத் தேவையான ஏற்பாடுகளை அவரே கவனித்து வந்தார். அவர் இறந்த பின் ஸ்ரீதேவியின் தாயாருக்கு சொத்துக்களை வாங்குவதில் போதுமான தெளிவின்றி வில்லங்கமான சில சொத்துக்களை வாங்கி சிக்கலில் மாட்டிக் கொண்டார், அப்போது அவர்களுக்கு உதவியாக இருந்தது போனி கபூரே! போனி கபூரைப் பொருத்தவரை அவர் பிரபல தயாரிப்பாளராக இருந்த போதும் முதல்முறை ஸ்ரீதேவி நடித்த திரைப்படமொன்றைப் பார்த்ததில் இருந்தே அவருக்கு ஸ்ரீதேவியின் மீது காதல். காதலுக்குத்தான் கண்ணில்லை என்கிறார்களே, அப்படித்தான் ஆனது இவர்கள் விஷயத்திலும். முதல் மனைவி மோனா உயிருடன் இருக்கையில், அவர் மூலமாகத் தனக்கு அர்ஜூன் கபூர், அன்சுலா என இரண்டு குழந்தைகளும் இருக்கையில் ஸ்ரீதேவி மீது போனி கபூருக்கு எல்லையற்ற காதல் கரைபுரண்டு ஓடியது.

அந்தக் காதல் மோகத்தில் எப்படியாவது தனது தயாரிப்பில் ஸ்ரீதேவியை நடிக்க வைத்து விட வேண்டும் என்று அவர் முயற்சித்தார். அப்போது ஒரு திரைப்படத்துக்கு 8 லட்சம் சம்பளம் பெற்றுக் கொண்டிருந்த ஸ்ரீதேவிக்கு தனது தயாரிப்பில் அவரை ஒப்பந்தம் செய்வதற்கு 11 லட்சம் சம்பளம் நிர்ணயித்து ஒரே திரைப்படத்தில் ஸ்ரீதேவியின் சம்பளத்தை அதிகரிக்கச் செய்து அவரது அம்மாவின் அன்புக்குரியவராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் ஆனார் போனி கபூர்.

ஸ்ரீதேவி குடும்பத்துடன் போனி கபூர் நெருக்கமானது இப்படித்தான். சமீபத்தில் ஒரு நேர்காணலில் போனி கபூரே குறிப்பிட்டபடி அவர் ஸ்ரீதேவியை திட்டமிட்டு நம்பவைத்துத் தான் திருமணம் செய்திருக்கிறார். அமெரிக்காவில் சிகிச்சைக்குச் சென்ற ஸ்ரீதேவியின் தாயாருக்கு மூளையில் தவறான பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில் தொடர்ந்து அவரது உடல் நலிவடைந்து மூளைப் புற்றுநோயால் அவர் மரணமடைந்தார். அப்போதைய சட்டப் போராட்டங்களில் எல்லாம் ஸ்ரீதேவியுடன் பக்கபலமாக இருந்தது போனி கபூர் மட்டுமே என்கின்றன பழைய மீடியா செய்திகள். இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக ஸ்ரீதேவியை தன்வசப்படுத்தி ஒரு கட்டத்தில் புற்றுநோயாளியான தனது முதல் மனைவி மோனாவை விவாகரத்து செய்து விட்டு முற்றிலுமாக ஸ்ரீதேவியுடன் வாழத்தொடங்கி விட்டார் போனி கபூர். 

ஸ்ரீதேவி, போனி கபூர் திருமணத்தில் ரகசியம் காக்கப்பட்டது. திருமணமாகி சில மாதங்கள் கழித்துத் தான் அதிகாரப்பூர்வமாக ஊடகங்களில் திருமணம் குறித்து அறிவிப்பு வெளியானது. தமிழில் குமுதம் வார இதழ் தான் நடிகர் விஜயகுமார் வீட்டில் வைத்து ஸ்ரீதேவி, போனி கபூர் தம்பதிகளை திருமணத்திற்குப் பின் முதல்முறையாக எக்ஸ்க்ளூசிவ்வாக பேட்டி கண்டு வெளியிட்டது. ஸ்ரீதேவி, போனி கபூர் திருமணத்தில் பல்வேறு தடங்கல்கள் இருந்தாலும் எல்லாமும் ஒருவாறு சரியாகி இருவருமே காதல் மிகுந்த மனமொத்த தம்பதிகளாகத் தான் கடந்த சனிக்கிழமை வரை வாழ்ந்து வந்திருக்கின்றனர். இறப்பிற்கு முன்னான வீடியோ பதிவில் கூட ஸ்ரீதேவி தன் கணவர் போனி கபூரை அணைத்துக் கொண்டு நடனமாடும் காட்சி அவர்களுக்கிடையிலிருந்த அந்நியோன்யத்தைப் பறைசாற்றும் விதமாகத் தான் இருக்கிறது.

ஆனால், பிறகெப்படி குளியல் தொட்டிக்குள் தவறி விழுந்து மூச்சுத்திணறி இறந்தார் ஸ்ரீதேவி என்று கேள்வியெழுப்புகிறீர்களா?

அதற்கு இனி ஸ்ரீதேவியே நேரில் வந்து பதில் சொன்னால் தான் ஆயிற்று.

ஸ்ரீதேவியின் திடீர் மரணத்தின் பின் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஊடகங்கள் அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் மற்றும் அவருடன் பணிபுரிந்தவர்கள், சிறுவயது முதலே அவரை அறிந்தவர்கள் எனப் பலரையும் அழைத்து ஸ்ரீதேவி குறித்த நினைவுகளைப் பகிரச் சொல்லிக் கேட்டு கடந்த நான்கு நாட்களாக அவற்றைத் தொடர்ந்து  ஒலிபரப்பிக் கொண்டே இருந்தன.

அந்த நினைவலைகளில் இருந்து கிரகித்துக் கொள்ளக் கூடிய பொதுவான ஒரு விஷயம் இது தான்;

இயக்குனர் ராம்கோபால் வர்மா கூறியதைப் போல, ஸ்ரீதேவியை அழகின் இலக்கணமாக அவரது ரசிகர்கள் கருதினார்களே தவிர அவர் அப்படிக் கருதினாரா? அப்படியோர் அழுத்தமான நம்பிக்கை அவருக்கு இருந்ததா? என்பது சந்தேகத்திற்கிடமானது;

நடிகை ராதிகா சில வருடங்களுக்கு முன் நடிகை ஸ்ரீப்ரியாவுடன் இணைந்து கலந்து கொண்ட காஃபி வித் டிடி நிகழ்ச்சியில் ஸ்ரீதேவி குறித்துப் பகிர்ந்து கொண்ட ஒரு தகவலை இந்த இடத்தில் நினைவு கூர்வது நல்லது;

ராதிகாவும், ஸ்ரீதேவியும் இணைந்து பல தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் ராதிகா என்னவிதமான ஆடை, அணிகளைத் தேர்வு செய்கிறார் என்று பார்த்து விட்டு வந்து சொல்ல தனியாக ஒரு நபரை நியமித்து வைத்திருந்தாராம் ஸ்ரீதேவி. இதை ராதிகா அந்த நிகழ்ச்சியில் நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு தான் பகிர்ந்திருந்தார். ஸ்ரீதேவி எத்தனை அழகு! ஆனால், அவர் உடன் நடித்த சக நடிகையான என்னைப் பார்த்து, நான் அவரை விடத் திரையில் நன்றாகத் தோன்றி விடக்கூடுமோ?! என்ற ஐயத்துடன் நடந்து கொண்டது எனக்கு உண்மையில் சிரிப்பை வரவழைப்பதாக இருந்தது என்றார்.

ராதிகா சொல்வதால் மட்டுமல்ல, இதையொத்த வேறொரு சம்பவமும் ஸ்ரீதேவியின் வாழ்வில் உண்டு.

‘மீண்டும் கோகிலா’ திரைப்படத்தில் ஸ்ரீதேவி கதாநாயகி, இரண்டாம் நாயகியாக தீபா நடித்த வேடத்தில் முதலில் நடிக்கத் தேர்வானவர் இந்தி நடிகையும், நடிகர் ஜெமினி கணேசனின் புதல்வியுமான ரேகா. ஆனால் ஸ்ரீதேவியின் தாயார் இரண்டாம் நாயகியான ரேகாவின் உடையலங்காரம் மற்றும் ஒப்பனை உள்ளிட்ட விஷயங்கள் தன் மகள் ஸ்ரீதேவியைக் காட்டிலும் பெரிதாகப் பேசப்பட்டு விடக்கூடாது என இயக்குனரிடம் கோரிக்கை வைத்ததால் அதைக் கேள்வியுற்ற ரேகாவின் தாயார் ரேகாவை அத்திரைப்படத்தில் நடிக்க ஒப்புதல் அளிக்க விடாமல் தவிர்த்து விட்டார் என்பது பழைய சினிமா வார இதழொன்றில் வாசிக்கக் கிடைத்த செய்தி.

திரையில் உடன் நடிக்கும் சக நடிகைகள் தன்னை விட அழகாகத் தெரிந்து விடுவார்களோ எனும் சஞ்சலம் ஸ்ரீதேவிக்கு இயல்பில் இருந்ததா அல்லது அவரது தாயாரால் புகுத்தப்பட்டதா என்ற ஆராய்ச்சி இப்போது தேவையில்லை எனினும் ராம்கோபால் வர்மாவின் ட்விட்டர் கூற்றைப் புறக்கணிக்க இயலாமல் ஸ்ரீதேவிக்கு மன அழுத்தம் தரத்தக்க விஷயங்களில் ஒன்றாக இதைக் கருத வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன.

அதையடுத்து ஸ்ரீதேவியின் திருமண விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள், ஸ்ரீதேவி மறைவதற்கு முன்பு வரை விக்கிபீடியாவில் அவரது பக்கத்தில் போனி கபூருடனான திருமணத்துக்கு முன்பே ஸ்ரீதேவிக்கும், மிதுன் சக்ரவர்த்திக்கும் ரகசியத் திருமணம் நடந்திருந்ததாக ஒரு தகவல் உலவியது. இப்போது அந்தத் தகவல் நீக்கப்பட்டிருக்கிறது.

மூன்றாம் பிறை, மீண்டும் கோகிலா, வாழ்வே மாயம், சிகப்பு ரோஜாக்கள், குரு திரைப்படங்களில் கமல், ஸ்ரீதேவி ஜோடியின் அற்புதமான பொருத்தத்தைக் கண்டு இவர்கள் இருவரும் திருமண வாழ்வில் இணைந்திருந்தால் ஒருவேளை ஸ்ரீதேவி இறந்திருக்க மாட்டாரோ! என்ற ரீதியில் எல்லாம்  ரசிக சிகாமணிகள் சிலர் கருத்துக் கூறியிருந்தனர். இதற்கு கமலே அளித்த பதிலொன்று உண்டு.

சில வருடங்களுக்கு முன் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில், பிரகாஷ் ராஜ் தொகுத்து வழங்கிய ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ நிகழ்ச்சியில் கெளதமியுடன் கலந்து கொண்ட கமல்ஹாசன், ஸ்ரீதேவி குறித்த கேள்விக்குப் பதிலளிக்கையில்; 

‘சத்தியமா... சிலபேர் மேல எல்லாம் காதலே வராதுங்க, நானும், ஸ்ரீதேவியும் பாலசந்தர் சார் டைரக்‌ஷன்ல பல படங்கள் நடிச்சிருக்கோம், ரிகர்சலின் போது அத்தை பொண்ணு மாதிரி அவங்களை நான் டீஸ் பண்ணியிருக்கேன், திரையில் எங்களோட கெமிஸ்ட்ரி ரசிக்கற மாதிரி இருக்கும்... ஆனா அதுக்காக அவங்களை நான் காதலிக்கிறேன்னு சொல்றதா? இல்லவே இல்லைங்க. எங்களுக்குள்ள அந்த மாதிரி எண்ணமே இருந்ததில்லை. அந்த நட்பைப் பத்திச் சொல்லனும்னா  கோ எஜுகேஷன்ல படிக்கிறவங்களுக்குத் தான் அது புரியும்.’ 

- என்கிறார் கமல்.

அதற்கான வீடியோ பதிவு...

 

ஸ்ரீதேவி, கமலை மணக்க விரும்பியிருந்தால், அல்லது கமல் ஸ்ரீதேவியை மணக்க விரும்பியிருந்தால் அவர்களது திருமணம் அப்போது நிச்சயம் செல்லுபடியாகியிருக்க பெரிதாக தடைகள் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் இருவரின் எதிர்பார்ப்புகளும், நோக்கங்களும் வேறு, வேறாக இருந்திருக்கையில் இன்று வரையிலும், ஏன் ஸ்ரீதேவியின் இறப்பின் பின்னும் கூட கமல், ஸ்ரீதேவி திருமணம் நடந்திருந்தால் என்று சிலர் பேசத் தொடங்குவது வேடிக்கையாகத்தான் இருக்கிறது.

 
ஸ்ரீதேவி ஆரம்ப காலங்களில், தமிழில் நடித்துக் கொண்டிருக்கையில் படப்பிடிப்புத் தளங்களில் தனது தாயாரின் மடியில் அமர்ந்து கொண்டு அவர் ஊட்டி விட்டால் தான் உண்பார் என்பதாக ராதிகா ஒரு தகவலைப் பகிர்ந்து கொண்டிருந்தார். அப்படி ஊட்டும் போது வழக்கத்துக்கு மாறாக ஒரு வாய் அதிகமாக உண்டாலும் கூட, ஸ்ரீதேவியின் தாயார் அவரிடம்,
‘பப்பி, அதிகமா சாப்பிட்டா நீ வெயிட் போட்டுடுவ’ 
- என்று கூறுவது வழக்கமாம்.
 
இப்படி தொடக்கம் முதலே தாயாரால் கட்டுப்படுத்தப் பட்ட வாழ்க்கைக்குப் பழக்கப் பட்டுப் போன ஸ்ரீதேவி. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி எனத் தனது எல்லைகள் விரிவடைய, விரிவடைய பாடுபட்டுத் தான் தேடிக் கொண்ட அகில இந்திய நட்சத்திரம் எனும் புகழைத் தக்க வைத்துக் கொள்ள தனது ஒட்டுமொத்த வாழ்நாளையுமே ஒப்புக் கொடுத்திருக்கிறார் என்று தான் கருத வேண்டியதாகிறது.
 
அதுமட்டுமல்ல, திரைப்பட விழாக்களோ அன்றி பொது நிகழ்வுகளோ, ஃபேஷன் ஷோக்களோ, புரமோஷன் விழாக்களோ எதுவானாலும் சரி ஸ்ரீதேவி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் எனத் தெரிந்தால் போதும் அவரைச் சுற்றி வட்டமிடும் வல்லூறுகளாக அவரைப் புகைப்படமெடுக்கச் சுற்றி வளைக்கும் ஊடகத்தினர் ஒருபுறம் வயது ஏற, ஏற ஸ்ரீதேவிக்கு பெரும் மன உளைச்சலைத் தந்திருக்கலாம். 
 
அவர்கள் பரபரப்புச் செய்திகளுக்கு தீனி போடுவதாக நினைத்துக் கொண்டு எந்த நேரத்திலும் தனிப்பட்ட குடும்ப விழாக்களாகவே இருந்த போதிலும்,அல்லது பொது இடங்களில் மேக் அப் இல்லாமல் ரிலாக்ஸாக இருக்க விரும்பும் நேரங்களில் கூட ஸ்ரீதேவியைத் தங்களது கேமராக்களில் அடைக்க விரும்பினார்கள். இந்த வீடியோ அதற்கொரு சாட்சி;
 

 

 

நடிகை என்றால் சதா 24 மணி நேரமும் கேமரா கண்காணிப்பிலேயே இருந்தாக வேண்டிய நிலை எல்லோருக்கும் நேர்வதில்லை. பல நடிகைகள் வெகு சுதந்திரமாக பொது வெளியில் இயங்குவதைக் கண்டிருப்பீர்கள். ஆனால், ஸ்ரீதேவிக்கு அப்படிப் பட்ட சுதந்திரம் கிடைத்ததில்லை. அவர் தனது பிறந்தநாளைக் கொண்டாட குடும்பத்துடன் 5 நட்சத்திர விடுதிக்குச் சென்றாலும் சரி, அல்லது திருப்பதி ஏழுமலையான் தரிசனத்துக்குக் கணவருடன் சென்றாலும் சரி... அவருடைய பிரைவஸி அவருடையதாக இருக்க ஊடகத்தினர் அனுமதித்ததில்லை. சதா அவர் ஊடகங்களால் துரத்தப் பட்டுக் கொண்டே தானிருந்தார். சற்றேறக்குறைய மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானா போல! அப்படி ஊடகத்தினர் தன்னை விடாது தொடரும் போது ஒரு ஆதர்ஷ நாயகியால் மேக் அப் துணையின்றி எப்படி வெளியில் வர இயலும்? அப்படி ஒரு மன அழுத்தத்திற்கு அவரை ஆளாக்கிய பெருமை இந்திய ஊடகங்களுக்கு உண்டு.

அது மட்டுமல்ல, சில வருடங்களுக்கு முன்பு ஸ்ரீதேவியின் சித்தி மகள் என நடிகை மகேஸ்வரியை ‘கருத்தம்மா’ திரைப்படம் மூலமாக இயக்குனர் பாரதிராஜா அறிமுகம் செய்திருந்தார். படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்பதோடு மகேஸ்வரிக்கும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிப்படங்கள் அமையவில்லை. அவர் நடித்த பெரிய பேனர் படங்கள் எல்லாம் கூட பப்படங்கள் ஆயின. என்ன தான் ஸ்ரீதேவியின் தங்கை என்றாலும் அவருக்கு ஸ்ரீதேவிக்கு கிடைத்த அங்கீகாரத்தை ரசிகர்கள் தந்தார்களில்லை. அதே நிலை தற்போது முதல் படத்தில் நடித்து வரும் தனது மகள் ஜானவிக்கும் நேர்ந்து விடக் கூடாதே என்கிற பதட்டம் ஸ்ரீதேவிக்கு இருந்ததாக தகவல்.

ஸ்ரீதேவி கடன் தொல்லையில் இருந்தாரா? இல்லையா? என்பதைத் தாண்டி ஸ்ரீதேவியை ஆரம்பம் முதலே வெகு அழகாகத் திட்டமிட்டு, அவரது தனிமையைப் பயன்படுத்தி தன் பக்கம் நகர்த்தி  திருமணம் செய்து கொண்ட போனி கபூர், அவர் மீது அன்பையும், காதலையும் பொழியும் கணவராக ஒருவேளை இருந்திருக்கலாம். ஆனால் அந்த அன்பில் ஸ்ரீதேவியின் நலம் சார்ந்த பேரன்பு கொட்டிக் கிடந்ததா? அல்லது ஒரு பாலிவுட் தயாரிப்பாளராகத் தொழில் சார்ந்து தனது நலம் மட்டுமே ஒரு கல் தூக்கலாக இருந்ததா? என்பதே இப்போதைய சந்தேகத்துக்குரிய கேள்வி.

அனைத்தும் அறிந்தவர் எவரோ?!

4 வயதில் நடிக்க வந்தது முதலே சுயவிருப்பங்களின்றி பிறரது விருப்பங்களுக்காக தன்னை மாற்றிக் கொண்டு ஆயிரம் பேர் சூழ இருந்த போதும் மனதளவில் தனித்து நின்று, தனது வாழ்வில் பலவிதமான தனிமைப் போராட்டங்களைத் தாங்கித் தாங்கி துவண்டு போனவராகவே ஸ்ரீதேவியைக் கருத வேண்டிய நிலை. 

உண்மையில் இறப்பு ஒருவிதத்தில் அவருக்கு நிம்மதி அளித்திருக்கலாம்.

]]>
Sridevi, போனி கபூர் , ஸ்ரீதேவி, Boney Kapoor, குடும்ப வாழ்வு, family life http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/1/w600X390/sridevi_boney.jpg http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/mar/01/ஸ்ரீதேவியின்-வாழ்வில்-எத்தனை-மாயங்களோ-போனி-கபூர்-சந்தேகத்துக்கு-அப்பாற்பட்டவரா-2872446.html
2872476 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் தமிழகப் பேருந்துக் கட்டண உயர்வும்; மாற்று வழிகளும்! கி. ரமேஷ் பாபு Thursday, March 1, 2018 03:01 PM +0530  

கடந்த ஜனவரி 3 ஆம் தேதியன்று மாலை தமிழக மக்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. திடீரென்று அரசு பேருந்துகள் பணிமனைகளுக்கு செல்லத் துவங்கின. அரசுக்கும், போக்குவரத்துக்கழக தொழிற்சங்களுக்கும் இடையிலான சம்பள உயர்வு குறித்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து அவர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். ஏற்கனவே 2017ம் ஆண்டு மே மாதத்தில் மூன்று நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டு பின்னர் அரசின் வாக்குறுதிகளால் பணிக்குத் திரும்பினர். அதன் பின்னர் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பெற்றன. என்றாலும் தொழிலாளர் தரப்புக் கோரிய 2.57 காரணி ஊதியத்தை அரசு ஏற்க மறுத்து 2.44 காரணி ஊதியம் வழங்குவதாகவும் நிலுவையிலுள்ள பிற கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுவதாகவும் சொல்லியது. அடுத்தடுத்து நடந்த பேச்சுவார்த்தைகளாலும், உயர்நீதிமன்றம் தலையிட்டு ஒரு நபர் ஆணையம் ஒன்றை முன்னாள் நீதியரசர் பத்மநாபன் தலைமையில் நியமித்ததாலும் இரு தரப்பாரும் சிக்கலைத் தங்கள் நிலைப்பாடுகளில் நெகிழ்வை மேற்கொண்டனர். பொங்கல் விடுமுறைக்கு மக்கள் அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள முடிந்த சூழல் ஏற்பட்டது.

தமிழகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டிற்குப் பிறகு பெருமளவில் பேருந்து கட்டண உயர்வு எதையும் அரசு மேற்கொள்ளாமல் இருந்து வந்தது. இடையே எரிபொருள் மற்றும் உதிரிபாகங்களின் விலையுயர்வும், சம்பள உயர்வு கோரிக்கைகளும் தொடர்ந்து இறுக்கமானதொரு நிலையை தோற்றுவித்து வந்தன. அரசு முடிந்தவரை நிலைமையை தீவிரமடையவிடாமல் தடுத்து வந்தது. ஒரு கட்டத்திற்கு பிறகு தங்களுக்கு சாதகமான நிலை வரும்வரைக் காத்திருந்து வேலை நிறுத்தப் போராட்டத்தைக் காரணம் காட்டி அரசு 20 ஜனவரி அன்று கடுமையான கட்டண உயர்வை அறிவித்தது. வழக்கம்போல எதிர்ப்புகள் வந்தாலும், சிறிதளவு கட்டணக் குறைப்பை மேற்கொண்டு தனது நல்லெண்ணத்தை வெளிக்காட்டியது.

இப்படி அடிக்கடி கட்டண உயர்வு, வேலை நிறுத்தப்போராட்டங்களின் பின்னால் இருக்கும் காரணிகளை ஆராய்ந்து மாற்று வழிகளை பலரும் வெளியிட்டு வந்தாலும் அவை பரவலாக மக்கள் மத்தியில் பேசு பொருளாக இருந்ததில்லை. எனினும் அவற்றை ஆராய்ந்து மாற்று வழிகளை மீண்டும் ஒருமுறை சுட்டிக்காட்டுவதில் தவறில்லை. 

கட்டண உயர்வின் காரணிகள்

அரசு கட்டண உயர்விற்கான காரணிகளாகக் கூறுவது நிர்வாகச் செலவுகளை மட்டுமே. அவற்றில் ஊழியர்களின் ஊதியம், எரிபொருள் செலவு ஆகியவை சுமார் 80% மாக உள்ளன. ஊதியம் சுமார் 50%மும், எரிபொருள் செலவு சுமார் 28%மும், உதிரிபாகங்களுக்கான செலவு சுமார் 4% மாகவும் உள்ளன. இவற்றிற்கான செலவுகளில் ஏற்றமிருந்தால் கட்டண உயர்வு தவிர்க்க முடியாததாகும். பிற அண்டை மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகத்தில் போக்குவரத்துக் கட்டணங்கள் குறைவு என்பதை அரசு பட்டியல் போட்டு விளக்குகிறது. இந்நிலையில் இவற்றை எப்படித் தவிர்ப்பது என்பது குறித்து ஆராய்ந்தப் பலரும், அரசினால் போக்குவரத்து கழகங்களை இலாபத்தில் இயக்க முடியாது எனவே கட்டணம் நிர்ணயிக்கும் அதிகாரத்தை மட்டும் வைத்துக் கொண்டு தனியாரிடமே மீண்டும் பேருந்து சேவையை விட்டுவிடலாம் என்கின்றனர். தமிழகத்தில் அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கைச் சுமார் 25,000 (இருப்பு எண்ணிக்கை உட்பட). இவ்வளவு எண்ணிக்கையில் பேருந்துகளைக் கொண்ட பிரம்மாண்ட அமைப்பான கழகங்கள் மிகச் சில வருடங்களில் மட்டுமே இலாபம் கண்டுள்ளன என்பது மிகச் சோகமானது. ஓரிரண்டு பேருந்துகளை வைத்துக் கொண்டு திறம்பட நடத்தி குறைந்த ஆண்டுகளில் மேலும் சிலப் பேருந்துகளை தனியார் நிறுவனங்கள் இணைத்துக் கொள்ள வாய்ப்புள்ள சூழலில் அரசுப் போக்குவரத்துக்கழகங்கள் நஷ்டக் கணக்கு காட்டுவது ஏற்புடையதல்ல என்பதுவே முக்கிய வாதம். 

ஊழியர்களின் எண்ணிக்கையை பொறுத்தவரை ஒரு பேருந்திற்கு ஆறு பேர் என்கின்ற விகிதத்தில் உள்ளனர். இதுவே தனியாரில் மூன்றில் ஒரு பங்கு என்கின்றனர். அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் சுமார் 1.5 இலட்சம் பேர் பணிபுரிகின்றனர். இவர்களில் சுமார் 7,000 பேர் அதிகாரிகள்/ நிர்வாகப் பிரிவு ஊழியர்கள் ஆவர். இவர்கள் தவிர ஓய்வூதியம் பெறும் ஊழியர்களும் செலவு கணக்கில் உள்ளடங்குவர். அரசு போக்குவரத்து ஊழியர்களின் சம்பள விகிதத்துடன் ஒப்பிடும் போது தனியார்த்துறை ஊழியர்கள் பெறும் ஊதியம் குறைவு; சமூகப் பாதுகாப்பு திட்டங்களும் பெரும்பாலும் கிடையாது. ஒரு முக்கிய வித்தியாசம் சென்னையைத் தவிர பிற மாநகரங்களிலும், ஊரகப்பகுதி சேவைகளில் தனியார் போக்குவரத்து நிறுவனங்களின் பங்களிப்பு கணிசமானது. இங்கெல்லாம் அரசு அதிகாரிகளும், தனியார் நிறுவனங்களும் கள்ளக்கூட்டணி அமைத்துக் கொண்டு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு இழப்பு உண்டாக்குவதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. என்றாலும் இவ்விடங்களில் தனியாரின் செயல்பாடு சிறப்பானது. அரசு போக்குவரத்து பேருந்துகள் ஒரு நாள் முழுவதும் பல ’டிரிப்’களில் ஈட்டும் வருமானத்தை தனியார் ஒரு சில ‘டிரிப்’களில் ஈட்டுவதையும் பலர் சுட்டிக்காட்டுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் பேருந்து பராமரிப்பு. அரசு பணிமனைகளில் பராமரிப்பு பணிகளில் சுணக்கமும், ஊழலும் நிலவுவதை பல ஊழியர்கள் ஊடகங்களில் தெரிவித்துள்ளதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. 

மாற்று வழிகள் எவை?

தனியார்மயமாக்கலைத் ஒரு தீர்வாக முன்வைக்கின்றனர் பலர். ஏனெனில் தனியாரிடம்தான் அதிகத் திறன் இருக்கிறது. அவர்களால் குறைந்த செலவில் நிறைந்தச் சேவையைத் தர முடிகிறது. எனவே முழுமையாக தனியாரிடம் கொடுத்து விடலாம்.

மினி பஸ் சேவையைப் போல் ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் பேருந்துகளை ஒப்படைத்து வருவாயை பிரித்துக்கொள்ளும் முறையைக் கொண்டு வரலாம். இதனால் ஏராளமான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக ஊரகப் பகுதிகளுக்கான சேவையை மேம்படுத்தலாம். முறையாகப் பயிற்சிப் பெற்று வேலையின்றியிருக்கும் ஓட்டுநர்-நடத்துநர் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

எரிபொருள் செலவினைக் குறைக்க எத்தனாலை டீசலுடன் கலக்க அனுமதிக்கலாம். சமீபத்தில் பிரதமர் 10% எத்தனாலை எரிபொருட்களுடன் கலக்க அனுமதிப்பதன் மூலம் கரும்பு விவசாயிகள் பயன்பெறுவர் என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது, இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசையும் குறைக்க முடியும். தமிழகக் கரும்பு விவசாயிகளுக்கு ஆயிரம் கோடிகளில் நிலுவைத்தொகை தரவேண்டியுள்ளது. எத்தனால் உற்பத்தி இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வாய்ப்புண்டு.

சமீபத்தில் பேட்டரியில் இயங்கும் பேருந்துகள் பற்றியும் பேசப்பட்டு வருகிறது. விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் 2011 ஆம் ஆண்டு முதல் லித்தியம் அயன் பேட்டரிகளைத் தயாரிக்க தனியாரிடம் கேட்டு வருகிறார்களாம். தமிழக அரசு தண்ணீர் பாட்டில்களைத் தயாரிக்க ஓர் ஆலையை போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. அதே போல பேருந்திற்கான பேட்டரிகளைத் தயாரிக்க ஓர் ஆலையை ஏற்படுத்திக் கொடுத்தால் எரிபொருள் செலவைக் கட்டுப்படுத்தலாம். 

இவற்றையும் கடந்து கட்டணங்களைக் குறைக்க வேண்டுமென்றால் மாறுபட்ட கட்டண விகிதங்களைப் பயன்படுத்தலாம். இன்றைக்கு ஆதார் அட்டையும், குடும்ப ஸ்மார்ட் அட்டையும்  பெரும்பாலானோருக்கு வழங்கப்பட்டு விட்டது. இதை அடிப்படையாக வைத்து வருமானம் குறைந்தப் பிரிவினருக்கு சலுகை அடிப்படையில் பயண அட்டை வழங்கலாம். ஏற்கனவே இருந்து வரும் மாணவர், முதியோர் சலுகைப் பயண அட்டைகளும் இத்திட்டத்திற்குள்ளேயே அடங்கிவிடும் வாய்ப்பும் உண்டு. இவற்றை இலவசமாக வழங்குவதில் பிரச்சினையிருக்காது. ஆனால் வருவாய் இழப்பைச் சரிசெய்ய வேண்டும். அதற்கு ஊழியர் எண்ணிக்கையில் சம நிலை, எரிபொருள் செலவில் குறைப்பு தேவைப்படுகிறது. ஊரகப்பகுதி சேவைகளிலேயே அதிக வருவாய் இழப்பு ஏற்படுகிறது; இதனால்தான் நஷ்டம் அதிகமாகிறது எனும் போது மேற்கண்டவாறான நெறிமுறை சீர்திருத்தங்களால் இழப்பைத் தடுப்பதோடு சிறந்தச் சேவையையும் வழங்க முடியும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/6/w600X390/bus-strike.jpg http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/mar/01/தமிழகப்-பேருந்துக்-கட்டண-உயர்வும்-மாற்று-வழிகளும்-2872476.html
2870617 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் ‘சுமங்கலி திட்டம்’: வரதட்சணை பணத்திற்காக 5 ஆண்டுகளுக்கு கொத்தடிமைகளாக விலை போகும் பெண்கள்! ஊ.இராஜ்குமார் Monday, February 26, 2018 07:37 PM +0530  

1976-ம் ஆண்டில் கொத்தடிமைத் தொழில் முறை (ஒழிப்பு) சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் இந்தியாவில் கொத்தடிமைத் தொழில் முறையானது சட்ட விரோதமானதாக ஆக்கப்பட்டது. ஆனால், 42 ஆண்டுகள் கடந்துவிட்டபோதிலும், இந்திய மண்ணில் சமூகத்திற்கு தீமை பயக்கும் இது இன்னும் தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. உலகமயமாக்கலுக்குப் பிறகு நிறுவனங்களுக்கிடையே போட்டி அதிகரித்ததால் பிற நிறுவனங்களைவிட தங்களது உற்பத்திச் செலவு, குறைவாக இருக்க வேண்டுமென்று நிறுவனங்கள் விரும்புகின்றன. உற்பத்திச் செலவை குறைப்பதற்கு குறைந்த அல்லது குறைந்தபட்ச ஊதியத்தில் தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பதை இந்நிறுவனங்கள் தொடங்கியிருக்கின்றன. சில நேரங்களில், தொழிலாளர் நல சட்டத்தில் வகை செய்யப்பட்டவாறு குறித்துரைக்கப்பட்ட கால அளவுக்கும் அதிகமாக நீண்ட மணி நேரங்கள் பணியாற்றுமாறு தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப் படுகின்றனர். இதற்கு மறுபக்கத்தில் குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறைவான ஊதியத்தில் வேலை கிடைக்காதா என்ற எதிர்பார்ப்போடு இந்தியாவில் எண்ணற்ற தொழிலாளர்கள் இருக்கின்றனர். இந்த சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதற்கு இந்தியாவில் சில நிறுவனங்கள் தொழிலாளர்களை தவறாக பயன்படுத்தவும், சுரண்டவும் தொடங்கியுள்ளன. 

'சுமங்கலி’ திட்டம் என்பது 3-ல் இருந்து 5 ஆண்டுகள் வரை ஒப்பந்தத் தொழிலாளர்களாக இளம் பெண்களை பணியில் சேர்க்கும் ஒரு திட்டமாகும். இந்த ஒப்பந்த காலத்தின்போது, குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறைவாகவே இந்த பெண் பணியாளர்களுக்கு ஊதியம் தரப்படுகிறது. அவர்களது ஒப்பந்த காலம் முடியும்போது, அந்த பெண்ணின் திருமணத்தின் போது தேவைப்படுகின்ற வரதட்சணை பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை அவர்களுக்கு வழங்கப்படும். 

சுமங்கலி என்ற வார்த்தை 'மகிழ்ச்சியான திருமணமான பெண்’ என தமிழில் பொருள்படும். 'திருமகள் திருமண திட்டம்’, 'கேம்ப் கூலி சிஸ்டம்’ போன்ற பெயர்களும் இந்த சுமங்கலி திட்டத்திற்கு உண்டு. இது செயல் படுத்தப்படும் பிராந்தியத்தை பொறுத்து இதன் பெயர்கள் மாறுபடுகின்றன. கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில்தான் இத்திட்டம் இந்தியாவில் முதலில் அறிமுகமானது என்று இது குறித்து நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளின் வழியாக பரவலாக ஒப்புக் கொள்ளப்படுகிறது. இந்தியாவில், குறிப்பாக தென்னிந்தியாவில் திருமணம் என்பது மணப்பெண்ணின் குடும்பத்திற்கு அதிக செலவு வைக்கும் விஷயமாகும். அதிலும் ஒரு ஏழைக் குடும்பத்திற்கு இந்த திருமணம் என்பது ஒரு மிகப்பெரிய சுமையாகும். இதன் காரணமாக 1950-களில் பெண் சிசுக்கொலை அதிகமானது. இன்னும் கூட இந்தியாவில் சில தொலை தூர கிராமங்களில் இப்பழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்திய சமூகமானது, பெண் குழந்தையை ஒரு சுமையாகவே பார்த்து வந்திருக்கிறது என்பது வருத்தம் தரும் உண்மையாகும். 

தங்களது மகளின் திருமணத்திற்கான செலவுகளை சமாளிப்பது, பெண் குழந்தையை பெற்றவர்களுக்கு மிக கடினமானதாகவே இருக்கிறது. கிராமத்தில் வசிக்கும் ஒரு நபருக்கு வருடம் முழுவதும் வருவாய் தரும் வேலை கிடைப்பது என்பதும் மிகவும் அரிதானது. இத்தகைய சமூக காரணிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்துதான் தங்களது மகள்களை சுமங்கலி திட்டத்தின் கீழ் வேலை செய்யுமாறு அனுப்பிவைக்க பெற்றோர்களை நிர்ப்பந்திக்கின்றன. 

சுமங்கலி திட்டத்தின் அடிப்படை அம்சங்கள்: 

1. குறைந்தபட்ச ஊதியம்: குறைந்தபட்ச ஊதியம் என்பது, அரசால் நிர்ணயிக்கப் பட்டிருக்கிற அல்லது சட்டத்தால் அனுமதிக்கப் பட்டிருக்கிற மிக குறைந்த ஊதியத்தையே குறிக்கிறது. சுமங்கலி திட்டத்தில் பெரும்பாலான இளம் பெண்களுக்கு குறைந்தபட்ச ஊதியமே வழங்கப்படுகிறது. ஒப்பந்த கால அளவு முடியும்போது ‘வாக்குறுதியளிக்கப் பட்டிருக்கிற தொகை’ அவர்களுக்கு இறுதி செட்டில்மென்ட்டாக வழங்கப்படுவதற்கு அவர்களது மாத ஊதியத்தில் ஒரு பகுதியை நிறுவனங்களே பிடித்து வைத்துக் கொள்வதுதான் இத்தகைய குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுவதற்கான காரணமாகும். 

2. விரும்புகிற இடத்திற்கு சென்று வரும் உரிமை (நடமாட்ட சுதந்திரம்): 

'கேம்ப் கூலி சிஸ்டம்’ என்பது சுமங்கலி திட்டத்தின் மற்றொரு பெயராகும். இத்திட்டத்தின்படி வழக்கமாக தொழிற்சாலைக்கு அருகிலுள்ள பகுதியில் அமைந்திருக்கும் விடுதிகளில் (ஹாஸ்டல்) வேலை செய்யும் இளம் பெண்கள் தங்க வேண்டும். வழக்கமான கொத்தடிமைத் தொழில் முறை போன்று இல்லாமல் வித்தியாசமான வழியில் தொழிலாளர்களின் நடமாட்டம் மீது பணிவழங்கும் நிறுவனங்கள் கட்டுப்பாடுகளை சுமத்துகின்றன. 1976-ம் ஆண்டில் கொத்தடிமைத் தொழில் முறை (ஒழிப்பு) சட்டத்தின்படி ஒரு முன்தொகை (கடன்) அல்லது வேறு பிற சமூக கடமை பொறுப்புகளின் காரணமாக ஒரு தொழிலாளரின் நடமாட்ட சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுமானால், அப்போது அத்தகைய உரிமை மறுப்பானது கொத்தடிமைத் தொழில் முறை செயல்பாடாக கருதப்படுகிறது. 

பிற்பாடு வழங்குவதாக உறுதியளிக்கும் தொகையைக் கொண்டு பணி வழங்கும் நிறுவனங்கள் இளம்பெண்களுக்கு ஆசை காட்டி கவர்ந்திழுக்கின்றன அல்லது குறிப்பிட்ட காலம் வரை பணியாற்ற வேண்டுமென்று அச்சுறுத்துகின்றன. சுமங்கலி திட்டத்தில் பிறகு வழங்குவதாக கூறுகிற இந்த மொத்த தொகையை அல்லது உறுதியளிக்கப்படும் தொகையை, எதிர்மாறான வழிமுறையில் ஒரு கடன் பத்திரமாகவும் கருத முடியும், ‘உறுதியளிக்கப்படும் தொகை’ என்பதன் மூலம் இத்தொழிலாளர்கள் கட்டுண்டு கிடக்கின்றனர் மற்றும் தவறாக பயன்படுத்தப்பட்டாலும், சுரண்டப்பட்டாலும் கூட தொழிற்சாலையை விட்டு அவர்கள் வெளியேறுவதில்லை. 

நடமாட்ட சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகளில் கீழ்க்கண்டவைகளும் அடங்கும் : 

 • வார இறுதி விடுமுறை நாளில் அவசியமான பொருட்களை வாங்க பெண் தொழிலாளர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டாலும் கூட அநேக நேரங்களில் தொழிற்சாலை மேற்பார்வையாளர்கள் அல்லது பிற அதிகாரிகள் இவர்களை கண்காணிப்பதற்கு உடன் செல்கின்றனர். 
 • ஒரு நாளில் 24 மணிநேரமும் தொழிற்சாலை நிர்வாகத்தால் இப்பணியாளர்கள் கண்காணிக்கப்படுகின்றனர். 
 • பெரும்பான்மையான நேரங்களில் தொழிலக வளாகத்திற்குள் இத்தொழிலாளர்கள் செல்போன்களை வைத்திருக்க அனுமதிக்கப்படுவதில்லை.
 • அனுமதி பெறாமல் ஒரு தொழிலாளி விடுப்பு எடுப்பாரானால், அவரது ஊதியத்தில் பெருந்தொகை பிடித்தம் செய்யப்படும். 

3. வேலைவாய்ப்புக்கான சுதந்திரம்: 

தனது சொந்த வேலைவாய்ப்பை தேர்வு செய்கின்ற சுதந்திரமானது, இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இருப்பதற்கு இந்திய அரசியலமைப்பு சட்டம் உத்தரவாதம் வழங்குகிறது. ஆனால் சுமங்கலி திட்டத்தில் இந்த விலை மதிப்பில்லா சுதந்திரம் குறைக்கப்படுகிறது. தொழிலாளர்களது ஒப்பந்த காலம் முடிவடையும் வரை வேறு பிற தொழிற்சாலைகளில் பணியாற்ற தொழிலாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. நல்ல வேலை வாய்ப்புகள் அவர்களுக்கு கிடைத்தாலும் கூட பிறகு தருவதாக உறுதியளிக்கப்பட்டுள்ள தொகையை தாங்கள் இழக்க வேண்டியிருக்கும் என்ற அச்சத்தின் காரணமாக இத்தொழிலாளர்கள் அவர்களது வேலையைவிட்டு விலகுவதில்லை. 

தங்களது வேலைக்காக பணியாளர்களை வேறு எங்கும் செல்லவிடாமல் தக்கவைத்துக் கொள்வதற்காக சுமங்கலி திட்டத்தை நிறுவனங்கள்/உரிமையாளர்கள் தொழிலாளர்களின் ஊதியத்தை ஒரு பங்கை பிடித்து வைத்துக் கொள்கிறார்கள். வேலை வாய்ப்பை தேர்வு செய்வதற்கான சுதந்திரம் இதில் நிச்சயமாக பறிக்கப்படுகிறது. 
 
4. சுமங்கலி திட்டம் மற்றும் மனித வணிகம்:

செயல்பாடு வழிமுறை நோக்கம் ஸ்ரீ மனித வணிகம் பணிக்கு ஆட்சேர்ப்பு, போக்குவரத்து, இடம் மாற்றுகை,  மறைவாக தங்க வைத்தல், நபர்களை வரவைத்தல்,    பலவந்த பிரயோகம் அல்லது அச்சுறுத்தல், நிர்ப்பந்தம், கடத்தல், மோசடி, ஏமாற்றல், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது அல்லது எளிதில் பாதிப்புக்குள்ளாகும் நிலை, பணத்தொகை அல்லது ஆதாயங்களை வழங்குதல், பிறரை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது உட்பட தவறாக பயன்படுத்துவது,  பாலியல் சுரண்டல், கட்டாயப்பணி, அடிமைத்தனம் அல்லது அதை போன்ற நடைமுறைகள், உடலுறுப்புகள் அகற்றல் சுரண்டலின் பிற வகைகள்.

          

2013-ம் ஆண்டின் குற்றவியல் திருத்தம் சட்டம், வழியாக பிரிவு 370-ஐ இந்திய குற்றவியல் தொகுப்பு திருத்தம் செய்து, மனித வணிகத்திற்கான மேற்கண்ட பொருள் வரையறையை சேர்த்துக் கொண்டிருக்கிறது. சுமங்கலி திட்டத்தில் வேலைக்கு ஆட்சேர்ப்பு என்பது பல்வேறு முகமைகள்/நபர்கள் வழியாக நடத்தப்படுகிறது. கிராமங்களில் பெண்களை தேடிப்பிடித்து வேலையில் அமர;த்துவதற்காகவே வழக்கமாக நூற்பு ஆலைகளில் (பஞ்சாலைகளில்) ஏஜெண்டுகள் இருக்கின்றனர். வறட்சியினால் பாதிக்கப்பட்ட மற்றும் போதுமான வேலை வாய்ப்புகள் இல்லாத கிராமங்களை இந்த ஏஜெண்டுகள் குறிவைக்கின்றனர். தமிழ்நாட்டில் இன்றைய காலகட்டத்திலும்கூட பல பகுதிகளில் வரதட்சணை என்ற கொடுமை தலைவிரித்தாடுகிறது. வரதட்சணையின் காரணமாக திருமணத்தின்போது, பெரியளவில் வரதட்சணையை தர ஏழை குடும்பங்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்; இதனால் பஞ்சாலைகளில் வேலை செய்ய தங்களது பெண் குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் தயாராக இருக்கின்றனர். இச்சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்ளும் இந்த ஆட்சேர்ப்பு முகமைகள்/ஏஜெண்டுகள் அவர்களது வலையில் இளம் பெண்கள் சிக்குமாறு செய்வதற்கு அவர்களது உத்திகளை கவனமாக கையாளுகின்றனர். பொதுவாக, ஒரு இளம் பெண் 3 ஆண்டுகள் பணியாற்றினால் 3-வது ஆண்டின் இறுதியில் அப்பெண்ணுக்கு 30,000 தரப்படும் என்று உறுதியளிக்கப்படுகிறது. அத்துடன் உணவு மற்றும் தங்குமிடம் போன்ற பிற வசதிகளும் அப்பெண்ணுக்கு கிடைக்கும் என்றும் உறுதி தரப்படுகிறது.
 
தவறான உறுதிமொழியின் அடிப்படையில் சுமங்கலி திட்டத்தில் பணிக்கு ஆட்சேர்ப்பு நடத்தப்படுகிறது. சுரண்டலுக்காக, தவறாக பயன்படுத்தும் நோக்கத்திற்காக ஏமாற்றுவது என்பதே இதன் அர்த்தமாகும். எனவே, சுமங்கலி திட்டமானது, இந்திய குற்றவியல் சட்டத் தொகுப்பின் பிரிவு 370-ன் கீழ் மனித வணிகத்திற்கான பொருள் வரையறைக்குள் இடம் பெறுகிறது. 

5. நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்:

அநேக நேரங்களில், நிறுவனங்களால்/உரிமையாளர்களால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் பல நேரங்களில் காப்பற்றப்படவில்லை என்பது ஆணித்தரமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. பெண்களை ஆசை வார்த்தை கூறி தங்கள் வலையில் சிக்க வைப்பதற்காக மட்டுமே இந்த வாக்குறுதிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒப்பந்த கால அளவு முடிவதற்கு சற்று முன்னதாகவே, வாக்குறுதியளித்த தொகையை அவர்களுக்கு வழங்குவதை தவிர்ப்பதற்காக உப்பு சப்பில்லாத காரணங்களை சொல்லி இப்பெண்களை உரிமையாளர்கள் வேலையிலிருந்து நிறுத்திவிடுகின்றனர். 

தொழிற்சாலைக்குள் நிலவும் சிரமங்கள், கஷ்டங்கள் குறித்த உண்மைகளை இளம்பெண்களின் பெற்றோருக்கு தெரிவிக்காமலேயே சுமங்கலி திட்டத்தின் புரோக்கர்கள் வேண்டுமென்றே மறைத்துவிடுவது வழக்கமானதுதான். வேலைக்கு செல்லும் பெண் அதற்கான திறனை கற்றுக் கொண்டால் ஒரு நிலையான வேலை வாய்ப்பு கிடைப்பதோடு, உணவும், தங்குமிட வசதியும் தொழிற்சாலைக்கு வேலைக்கு போவதில் கிடைக்கின்றன என்று ஆதாயங்கள் குறித்து இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி வறுமையில் வாடுகிற மற்றும் வேறு வழி தெரியாத பெற்றோர்களை இந்த புரோக்கர்கள் நம்ப வைத்து விடுகின்றனர். அத்தகைய பணியில் இருக்கிற ஆபத்துகள் குறித்தோ, கடினமான உடல் உபாதைகள் மற்றும் மன அழுத்தங்கள் குறித்தோ எந்த தகவலையும் இவர்கள் எடுத்துக் கூறுவதில்லை.

தொழில் பழகுநர் என்ற பெயரில் சுமங்கலி திட்டங்களில் வேலைசெய்கிற பெண்களுள் அநேகர், வேலை பழகுநர்களாகவே இருக்கின்றனர் என்பதைத்தான் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. மோசமான, சுகாதாரமற்ற பணியிடம் மற்றும் குடியிருப்பு சூழ்நிலைகளில் நிறுவனத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அமைவிடத்திற்குள் மட்டுமே தங்கியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் நீண்ட மணி நேரங்களுக்கு 'வேலை பழகுநர்களாக’ வேலை செய்யுமாறு இளம்பெண் தொழிலாளர்களை சுமங்கலி திட்டம்  நிர்ப்பந்திப்பதாகவும் மற்றும் ஜவுளித் தொழில் துறைக்கு குறைந்த ஊதியத்தில் மலிவான தொழிலாளர்களை வேலை செய்ய வைப்பதற்கான ஒரு வழி முறையாக இது இருக்கிறது என்றும் இதன் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

1961-ம் ஆண்டின் 'வேலை பழகுநர்’ (அப்ரென்டிஸ்) சட்டத்தில் தொழில் பழகு பருவ ஒப்பந்தத்தின்படி தொழில்/வேலையை கற்றுக் கொள்வதற்கான பயிற்சியில் ஈடுபடுகின்ற ஒரு நபர் என்று ‘வேலை பழகுநர்’ என்ற வார்த்தை பொருள் வரையறை செய்யப்பட்டுள்ளது. 1961ம் ஆண்டின் ‘வேலை பழகுநர்’ சட்டத்தில், வேலை பழகுநருக்கான தெளிவான பொருள் வரையறை காணப்படவில்லை. சட்டப்பூர்வ ஏற்பின்படி, அவரது வேலையை, திரள் பயிற்சியை கற்றுக்கொள்ளும் நோக்கத்திற்காக மற்றொருவரின் கீழ் இணைந்து பணியாற்றும் ஒரு நபராக, ஒரு வேலை பழகுநர் கருதப்படுகிறார்; கற்றறிந்த ஆசான் கற்றுத்தருகிற மற்றும் கற்றுக்கொள்ளும் நோக்கத்திற்காக ஆசானுக்கு சேவையாற்றுகின்ற தன்மையை கொண்டதாக இந்த ஒப்பந்தம் இருப்பதாகவும், கருதப்படுகிறது. பயிற்சி பெறும் நபர், அவரது தொழில் முறை முன்னேற்றத்தில் எதிர்கால ஆதாயத்தை பெறுவதற்காக அவருக்கு திறன்சார்ந்த பயிற்சியை வழங்குவதே ‘வேலை பழகுநர்’ சட்டம் இயற்றப்பட்டதன் நோக்கமாகும். ஆனால், சுமங்கலி திட்டத்தில் வேலை பழகு பருவத்தின் கருத்தாக்கமும், குறிக்கோளுமே கடுமையாக மீறப்படுகிறது. இளம் பெண்களை பயிற்சி பெறுபவர்களாக கருதி கற்றுத் தருவதற்கு பதிலாக முழு நேர பணியாளர்களாக அவர்கள் வேலையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆனால் முழுநேர பணியாளர்களுக்கான ஊதியமும் பிற பலன்களும், இத்தகைய பெண் தொழிலாளர்களுக்கு மறுக்கப்படுகின்றன.

சுமங்கலி திட்டம் மற்றும் கொத்தடிமைத்தொழில்முறை:
 
கடன் வழங்கியவர் - கடன் பெற்றவர் என்ற உறவுமுறை சுதந்திரம்/உரிமைகள் இழப்பு என்பதே கொத்தடிமைத் தொழில் முறையின் முதன்மையான பண்பியல்பாக இருக்கிறது. 

சுமங்கலி திட்டத்தில், குறைந்தபட்ச ஊதியம் பெறுவதற்கான உரிமை, விரும்பும் இடத்திற்கு சுதந்திரமாக சென்று வருகிற உரிமை மற்றும் பிற வேலை வாய்ப்புகளை பயன்படுத்துவதற்கான சுதந்திரம் ஆகியவை தொழிலாளர்களுக்கு மறுக்கப்படுகின்றன. 

இரண்டாவதாக, சுமங்கலி திட்டத்தின் கீழ் பணியாற்றும் அநேக தொழிலாளர்கள் முன்தொகை அல்லது கடனை பெறுவதில்லை. ஆனால், ஒரு கொத்தடிமைத் தொழில் முறையில் கடன் வழங்கியவர் மற்றும் கடன் பெற்றவருக்கு இடையிலான உறவுமுறை இருப்பது கட்டாயமானதாகும்.. 

சுமங்கலி திட்டத்தில் பெரும்பாலான நேரங்களில் இந்த முன்தொகை/கடன் என்பது இருப்பதில்லை. கடன் வழங்கியவர் - கடன் பெற்றவர் உறவுமுறை இல்லாத நிலையில் சுமங்கலி திட்டத்தை ஒரு கொத்தடிமைத் தொழில் முறை செயல்பாடாக கருதுவது கஷ்டமானதாக இருக்கும். ஆனால் பல மனித உரிமை மீறல்களை உள்ளடக்கிய சுரண்டுகின்ற நடைமுறையாக சுமங்கலி திட்டம் இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். சுமங்கலி திட்டத்தில் தொழிலாளர்கள் அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தைவிட குறைவாகவே பெறுகின்றனர் என்பதை நாம் ஏற்கனவே கண்டிருக்கிறோம். இந்திய உச்சநீதிமன்றமானது, 'குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறைவாக ஊதியம் பெற்று ஒரு பணியை அல்லது சேவையை ஒரு நபர் வழங்குவாரென்றால், சட்டத்தின்கீழ் பிற உரிமைத்தகுதி  கொண்டுள்ள அளவுக்கும் குறைவாக ஊதியம் தரப்படுகிற போதிலும் கூட அந்த பணியை செய்வதற்கு அவரை ஊக்குவிக்கிற ஏதாவது ஒரு வகையிலான நிர்ப்பந்தம் அல்லது கட்டாயத்தின் கீழ் அவர் செயல்படுகிறார் என்று நியாயமாக ஊகித்துக் கொள்ளலாம்” என்று குறிப்பிட்டிருக்கிறது. 

சுமங்கலி திட்டத்தில் பசிக்கொடுமை, ஏழ்மை, தேவை மற்றும் ஆதரவற்ற நிலை ஆகியவற்றின் காரணமாக தொழிலாளர்கள் இத்தகைய பணியை செய்யுமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் என்பது ஐயத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது. வேலை செய்ய வேண்டுமென்று உடல் ரீதியாக அவர்கள் நிர்ப்பந்திக்கப்படவோ அல்லது துன்புறுத்தப்படவோ இல்லையென்றாலும் கூட, வரதட்சணை என்ற சமூக ரீதியிலான அழுத்தத்தின் காரணமாகவே வேலை செய்யுமாறு இத்தொழிலாளர்கள் ஆளாக்கப்படுகின்றனர். மேற்கூறப்பட்ட ஆய்வு முடிவுகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் பார்க்கையில் சுமங்கலி திட்டம் என்பது ஒரு கட்டாய பணியாகவே இருக்கிறது என்பது தெளிவாகிறது. 

சுமங்கலி திட்டத்தில் கடன் வழங்கியவர் அல்லது கடன் பெறுபவர் உறவுமுறை இருக்கிறதா என்று பரிசீலிப்போம் என்றால், அது கண்ணுக்குப் புலப்படாமல் மறைக்கப் பட்டிருக்கிறது என்பதே உண்மை. சுமங்கலி திட்டத்தில் முன்பணம், கடன் என்பது தலைகீழான முறையில் செயலாற்றுகிறது. இங்கு, பணி வழங்குநரின் பணத்தை தொழிலாளர் வைத்திருப்பதற்கு பதிலாக, தொழிலாளருக்கு சேர வேண்டிய பணத்தை பணிவழங்குநர் வைத்திருக்கிறார். இத்திட்டத்தின் பணியாளருக்கு தரப்படும் என்று பணி வழங்குநர் ‘வாக்குறுதியளிக்கும் தொகையானது,’ தொழிலாளரின் பணமே; வேறு எவருக்கும் சொந்தமானதல்ல; மறைமுகமான வழிமுறையில் தங்களது, பிடிக்குள் தொழிலாளர்களை வைத்திருப்பதற்கான ஒரு உத்தியாகவே இத்திட்டம் பயன் படுத்தப்படுகிறது. 

மேலும், சுமங்கலி திட்டம் கொத்தடிமைத்தொழில்முறையை பின்பற்றும் ஒரு நடைமுறையாகவே இருக்கிறது என்றும் அது சட்ட விரோதமானதென்று மெட்ராஸ் உயர்நீதிமன்றம் அதன் இடைக்கால உத்தரவில் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறது. 

6. இறுதி உரை:

சுமங்கலி திட்டம், தொழிலாளர் நல சட்டங்களை மீறுவதாக இருப்பதோடு, மனித உரிமைகளை கடுமையாக மீறுகின்ற செயல் நடவடிக்கையாகவும் இருக்கின்றது. இளம்பெண்களின் வாழ்க்கைக்கு, அதுவும் 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு கடுமையாக அச்சுறுத்தலை இது முன்வைக்கிறது. சமூக, கலாச்சார மற்றும் பிற காரணங்களினால் சுமங்கலி திட்டமானது, தமிழ் நாட்டில் பரவலாக பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த பஞ்சாலைகள் வழங்குகிற வேலைவாய்ப்புகள் இத்திட்டம் பரவுவதற்கான மற்றொரு காரணமாகும். இத்தகைய ஏழை இளம் பெண்களுக்கு இதை விட்டால் மாற்று வேலை வாய்ப்புகள் இல்லை என்பதே நம்மை கவலைப்பட வைக்கிற உண்மையாகும். 

கட்டுரை ஆசிரியர்
ஊ.இராஜ்குமார்,
வழக்குரைஞர்
 

]]>
திருமணம், India, Tamil nadu, இந்தியா, marriage, தமிழ் நாடு, பெண்கள், woman, வரதட்சனை, கொத்தடிமை, dowry, bonded labor, முறை, இளம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/26/w600X390/Women6.jpg http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/feb/26/sumangali-scheme-in-bonded-labor-system-2870617.html
2870573 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் இந்திய அரசியல் வரலாற்றில் சோதனைகளை சாதனையாக்கிய தன்னகரில்லா தலைவர் ஜெயலலிதா! -தி.நந்தகுமார். DIN Monday, February 26, 2018 12:28 PM +0530 இந்திய அரசியல் வரலாற்றில் தன்னகரில்லா பெண் தலைவராக விளங்கியவர் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி. அவருக்கு பிறகு அவருக்கு நிகராக ஒருவர் இருந்தார் என்றால், இந்தியர்களால் கைகாட்டப்படும் நபர் ஜெயலலிதாவாகதான் இருக்கும்..

நடிகையாக இருந்தபோது, ஒருமுறை "நான் தமிழகத்தைச் சேர்ந்தவர்' என்று பேட்டியளித்திருந்தார். இதற்கு அடுத்த சில நாள்களில் மைசூரில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது ஜெயலலிதாவை கன்னட அமைப்பினர் சூழ்ந்துகொண்டு, "தமிழ் ஒழிக - கன்னடம் வாழ்க' என்று கூறுமாறு மிரட்டினர். தனக்கு ஆபத்து நெருங்கும்போது கூட கொள்கையில் உறுதியாக இருந்து தடம் மாறாமல் மறுத்தவர். "அச்சமில்லை. அச்சமில்லை...' என்ற பாரதியார் வரிகளை முழங்கி, வீரப் பெண்மணியாகத் திகழ்ந்தார். அரசியலில் கூட பதவிக்காகவோ, சுயநலத்துக்காகவோ சமரசம் செய்துகொள்ளாதவர். 

வள்ளல் தன்மையில்...: மறைந்த முதல்வர் ஜெயலலிதா நடிகையாக இருந்தபோதும், அரசியல் தலைவராகவும், முதல்வராக இருந்தபோதும்  விளம்பரங்கள் இல்லாமல் பல உதவிகள் புரிந்தவர் ஜெயலலிதா. எம்ஜிஆர் அறக்கட்டளை, அம்மா பெஸ்ட் அறக்கட்டளைகள் வாயிலாகவும், தனிநபராகவும், தமிழக அரசின் வாயிலாகவும் நலிந்தோருக்கும், ஏழை எளியவர்களுக்கும் பல்வேறு உதவிகளைப் புரிந்தவர். கல்வி, மருத்துவம் போன்றவற்றில் உடனுக்குடன் உதவிகளை செய்தவர். போயஸ் தோட்டத்தில் உள்ள  வேதா இல்லத்தில் ஜெயலலிதா குடிபெயர்ந்தபோது, அப்போது அவர் அரசியல் களத்திலும் இல்லை. 

இதன்பின்னர், ஜெயலலிதாவுக்கு ஜானகி ஆதரவு தெரிவித்து கட்சியை இணைத்தார். இதன்பின்னர், 1991-இல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் அதிமுக வெற்றி பெற்று, அவர் முதல்வரானார். 

இதன்பின்னர், 1991-96-ஆம் ஆண்டு ஆட்சிக்காலத்தில் மகளிர் குழுக்கள் உருவாக்கம், மகளிர் காவல் நிலையங்கள், கமாண்டோ வீரர்கள், தொட்டில் குழந்தைகள் திட்டம் உள்பட பல்வேறு மக்கள் நலன் காக்கும் திட்டங்களைக் கொண்டு வந்தார்.

இதையடுத்து, 2001-06, 2011-16-ஆம் ஆண்டுகளில் முதல்வராக  இருந்த ஜெயலலிதா தனது பதவிக்காலத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கான இலவச சைக்கிள் திட்டம், கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம், பெண்களுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகள் வழங்கும் திட்டம், பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டம், விலையில்லா கல்வி உபகரணங்கள், முதியோர் உதவித்தொகை ரூ.1,000-ஆக உயர்வு, இளம்பெண்களின் திருமணத்துக்கு தாலிக்குத் தங்கத்துடன் கூடிய நிதியுதவி, அம்மா உணவகங்கள், விலையில்லா அரிசி, அம்மா குடிநீர், அம்மா அழைப்பு மையம், அம்மா திட்ட முகாம்கள், ஏழை பெண்களுக்கான வளைகாப்பு, கர்ப்பிணிகளுக்கான அம்மா பரிசு பெட்டகம், மகளிர் குழுக்களுக்கு தாராளமான கடனுதவி,  அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம், உள்பட நூற்றுக்கணக்கான திட்டங்களைக் கொண்டு வந்தார்.

தமிழக முதல்வராக இருந்து ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்களை பிற மாநில  அரசுகளும், ஏன் உலகில் உள்ள  பல்வேறு நாடுகளும் பாராட்டி வருகின்றன.  பெண்ணுரிமைக்காக ஜெயலலிதா போராடி வருவதை அறிந்த அன்னை தெரசாவும், அமெரிக்காவின் ஹிலாரி கிளிண்டனும் தேடி வந்து பாராட்டியுள்ளனர் என்பது உலகையே திரும்பி பார்க்க விஷயம்தான்...!

ஆணாதிக்கம் மிகுந்த அரசியல் சமூகத்தில் நாடு போற்றும் சிறந்த அரசியல் தலைவராக விளங்கிய ஜெயலலிதா, அமெரிக்காவின் தங்கத் தாரகை விருது, 69 சதவீத இடஒதுக்கீட்டை காப்பாற்றியதற்காக சமூக நீதி காத்த வீராங்கனை விருது உள்பட பல்வேறு விருதுகளும், பல்வேறு பல்கலைக்கழகங்களின் கௌரவ முனைவர் பட்டங்களும் தேடி வந்து பெருமை சேர்த்தன.

சோதனைகளைத் தகர்ந்தெறிந்து, பொய் பிரசாரங்களை முறியடித்து, எதிர்க்கட்சிகளின் ஒட்டுமொத்த தாக்குதல்களை முறியடித்து தன்னந்தனியே தனது பிரசாரத்தால் 2016-இல் மீண்டும் அதிமுகவை ஆட்சியில் அரியணையில் அமர வைத்தவர் ஜெயலலிதா. எம்ஜிஆருக்கு பிறகு, ஜெயலலிதா   தான் மீண்டும் ஆட்சியை தொடரவைத்த வரலாறு கிடைத்தது. 

கொண்ட கொள்கையில்உறுதி..:
1989-இல் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதாதான் சட்டப் பேரவையில் தாக்கப்பட்டதையடுத்து, மீண்டும் முதல்வராகவே நுழைவேன் என்று சவால் விடுத்தார். அதை நிகழ்த்தியும் காட்டினார். 2006-11-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் இயங்கிய புதிய தலைமைச் செயலகத்தில் நுழைய மாட்டேன் என்றும் 2011-இல் முதல்வராகி செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே தலைமைச் செயலகத்தை இயங்கச் செய்வேன் என்றும் சபதம் மேற்கொண்டார். அதையும் நிகழ்த்திக் காட்டினார்.

ஜெயலலிதாவின் பேச்சுகளில் கண்டிப்பாக இடம்பெறும் குட்டிக் கதைகள் சிரிக்கவும் மட்டுமின்றி, சிந்திக்கவும் வைக்கும். தவறு செய்தால் கட்சியிலும், ஆட்சியிலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்  ஜெயலலிதா, தவறு செய்தவர் வருந்தும்போது மீண்டும் பதவிகளை அளித்து கௌரவப்படுத்தி மன்னிக்கும் குணம் கொண்டிருந்தவர். 

பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளைகூட தலைமைச் செயலகத்திலேயே இருந்து மக்களுக்கு கஷ்டம் கொடுக்காமல், எளிய விழாவாக விடியோ கான்பரன்ஸிங்கில் நடத்தி முன்மாதிரி முதல்வராக விளங்கியவர் ஜெயலலிதா. 

மோடியா - லேடியா: 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, லேடி ஆள வாக்கு அளியுங்கள் என்ற கோஷம் தமிழகத்தையே திணறவைத்தது. தமிழகத்தில் 37 தொகுதிகளில் அதிமுகவுக்கு வெற்றியை அளித்து, நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக அங்கீகரித்தது.

2011-ஆம் ஆண்டு முதல் அவர் மறைந்த 2016-ஆம் ஆண்டு வரை நடைபெற்றஅனைத்து தேர்தல்களிலும் வெற்றி வாய்ப்பை பெற்று தந்த ஜெயலலிதா, 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-இல் மண்ணுலகைவிட்டு மறைந்தார்.

மண்ணை விட்டு மறைந்தாலும் இன்றும் ஊடகங்கள் அவரது பெயரை மறவாமல் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றன.  ஆம் அவரை அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும், மக்களும் இன்றும்  மறக்கவில்லை...

அவரது பெயரை உச்சரிக்காமல்  தமிழகம் இல்லை என்பது போலும்...! மறந்தால்தானே உங்களை நினைப்பதற்கு...!

தாய்க்கு ஜெயலலிதா எழுதிய கவிதை
தனது தாய் சந்தியா மீது ஜெயலலிதாவுக்கு அதிகமான பாசம் இருந்தது. ஒரு பிறந்த நாளன்று அவர் தனது தாய்க்கு எழுதிய கவிதை:
என் அன்பான தாயே!
உனக்கோர் அம்மா இருந்தால்
அவளை அன்பாகக் கவனித்துக் கொள்!
அவள் அமர்ந்திருந்த நாற்காலியை
வெறுமையாகப் பார்க்கும் வரை
அவளது அருமை
 உனக்கு புரியாதென்பதால்
இப்போதே அன்புடன் கவனி!

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/26/w600X390/jayalalitha.jpg http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/feb/26/இந்திய-அரசியல்-வரலாற்றில்-சோதனைகளை-சாதனையாக்கிய-தன்னகரில்லா-தலைவர்-ஜெயலலிதா-2870573.html
2870572 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் அரசியலிலும், திரைத்துறையிலும் அளவில்லாத சாதனைகளை படைத்த வீராங்கனையின் வெற்றிச் சரித்திரம்! தொகுப்பு: தி.நந்தகுமார் Monday, February 26, 2018 12:22 PM +0530 அரசியலிலும், திரைத்துறையிலும் அளவில்லாத சாதனைகளை படைத்த முதல்வர் ஜெயலலிதா, 1948-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி (சிம்ம ராசி-மகம் நட்சத்திரம்) பிறந்தார். அவர் 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி மறைந்தார். அவர் தனது வாழ்நாளில் எண்ணற்ற சாதனைகளையும், சோதனைகளையும் சந்தித்து இரும்புப் பெண்மணியாகத் திகழ்ந்தார். 

அவரது வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்:
ஜெயலலிதாவின் முன்னோர்களுக்கு பூர்விகம் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம்தான்.  தொழில் நிமித்தமாக ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூருக்கு அவரது தாத்தா ரங்கசாமி குடிபெயர்ந்தார். அவருக்கு வேதா, அம்புஜா, பத்மா ஆகிய 3 பெண்களும், சீனிவாசன் என்ற ஒரு மகனும் இருந்தனர். ரங்கசாமிக்கு பெங்களூரில் எச்.ஏ.எல். நிறுவனத்தில் எழுத்தராகப் பணி கிடைத்ததால், பெங்களூருக்கு குடும்பம் இடம்பெயர்ந்தது. வேதா என்னும் சந்தியாவுக்கு 11 வயதாக (6-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்) இருந்தபோது, திருமணம் நடைபெற்றது.  அவரது கணவர் ஜெயராம். மைசூர் மகாராஜாவின் குடும்ப மருத்துவரான ரங்காச்சாரியின் மகன் ஜெயராமன்.

ஜெயராம்-சந்தியா தம்பதியினர் பெங்களூரில் பரம்பரை வீட்டில் குடியிருந்தனர். ஜெயலலிதாவின் 2-வது வயதில் ஜெயராமன் இறந்தார். இதனால், சந்தியா தனது குடும்பத்துடன் சென்னைக்கு குடிபெயர்ந்தார்.

ஜெயலலிதாவுக்கு பெற்றோர் வைத்த பெயர் கோமளவல்லி. ஆனால், அவரை குடும்பத்தினர் அம்மு என்று அழைத்தனர். பிற்காலத்தில் அம்மா என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார்.

சென்னை தியாகராயநகரில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலப் பள்ளியிலும், பெங்களூரில் பிஷப் கார்டன் பெண்கள் உயர்நிலைப் பள்ளியிலும்,  சென்னை சர்ச் பார்க் ஆங்கிலப் பள்ளியிலும் படித்தார். 

சர்ச் பார்க் ஆங்கிலப் பள்ளியில் படித்தபோது, புதுமையான சிகை அலங்காரத்துடன் ஜெயலலிதா எடுத்த புகைப்படத்தைப் பார்த்த புகைப்பட நிபுணர் பவனா சத்யம், சந்தியாவிடம் சொல்லாமல் அனைத்திந்திய புகைப்படப் போட்டிக்கு அனுப்பிவைத்தார். அந்தப் படம் முதல் பரிசை பெற்றது. இந்தப் படத்தை தங்கப் பிரேம் போட்டு பவனா சத்யம், ஜெயலலிதாவிடம் வழங்கினார். இந்தப் படம் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லமான வேதா நிலையத்தின் வரவேற்பு அறையில் இடம் பெற்றுள்ளது.

10-ஆம் வயதில் ஜெயலலிதா பரதநாட்டியம் கற்றுக் கொண்டார். 12-ஆவது வயதில் பரதநாட்டிய அரங்கேற்றம் மயிலாப்பூர் ரசிக ரஞ்சனி சபாவில் நடிகர் சிவாஜி கணேசனின் முன்னிலையில் நடைபெற்றது. 

இவரது பரதநாட்டிய குரு சரசா. படிக்கும்போதே கல்வி, விளையாட்டில் சிறப்பிடம் பெற்று, பதக்கங்கள், பரிசுகளை ஜெயலலிதா பெற்றார். பள்ளி இறுதி வகுப்பில் கணக்கு பாடத்தில் அவர் வாங்கிய மதிப்பெண்கள் நூற்றுக்கு நூறு.
தேர்வுக்காக ஜெயலலிதா தினமும் படிக்க மாட்டார். தேர்வுக்கு முந்தைய நாளில் இரவு முழுவதும் விழித்திருந்து படிப்பார்.  இதில், பொதுத்தேர்வில் மாநிலத்தில் 2-ஆவது இடம்பெற்றதும் வியப்புதான்.

ஜெயலலிதாவுக்கு வளர்ப்புப் பிராணிகள் மீது அதிக விருப்பம். 1958-இல் சென்னை தியாகராய நகர் சிவஞானம் தெருவில் சந்தியாவின் குடும்பத்தார் வசித்தபோது, அவர்களது வீட்டுக்கு தொலைபேசி இணைப்பு வந்தது. அப்போது, அதில் முதல்முறையாக "நான்தான்' பேசுவேன் என கூறி, தனது தோழி சாந்தினியிடம் பேசினார் ஜெயலலிதா. தமிழ், ஆங்கிலம், இந்தி, கன்னடம், தெலுங்கு உள்பட பல மொழிகளை அறிந்து, புலமை பெற்றவர்.

திரைத்துறையில்...
திரையுலகில் தமிழில் "வெண்ணிற ஆடை' படத்தில் அறிமுகமாகி 11 ஆண்டுகள் சிறந்த  நடிகையாக வலம் வந்தார். அவர் 150திரைப்படங்களில் நடித்துள்ளார்.  மறைந்த முதல்வர் எம்ஜிஆருடன் இணைந்து 28 படங்களில் நடித்துள்ளார்.

1961-ஆம் ஆண்டில் கன்னடப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக சில காட்சிகளில் அறிமுகமாகினார். 1964}ஆம் ஆண்டில் இரு கன்னடப் படங்களில் கதாநாயகியாக நடித்துமுடித்தார். திரைத்துறையில் இருந்தபோது ஜெயலலிதாவின் சிகை அலங்காரம் பெண்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

"காவிரி தந்த கலைச்செல்வி' எனும் ஜெயலலிதாவின் நாடகம் மிகவும் பிரபலம். திமுக ஆட்சியின்போது சிறுசேமிப்பு வாரியத் தலைவராக எம்ஜிஆர் இருந்தார். அப்போது, சிறுசேமிப்பை ஊக்கப்படுத்த அரசு சார்பில் நடைபெறும் விழாக்களில் ஜெயலலிதாவின் நாட்டிய நாடகம் கண்டிப்பாக இடம்பெறும்.
1972-ஆம் ஆண்டில் போயஸ் கார்டனில் உள்ள "வேதா நிலையம்' ஜெயலலிதா கட்டிய வீடு. இங்கு 1972-ஆம் ஆண்டு மே 15-ஆம் தேதி கிரஹப் பிரவேசம் செய்து, குடியேறினார். 

திரைத்துறையில் ஜெயலலிதா சம்பாதித்து வாங்கிய முதல் காரின் பதிவு எண் எம்.எஸ்.எக்ஸ். 3333. ஜெயலலிதாவுக்கு ஜேன் ஆஸ்டேன், சார்லஸ் டிக்கன்ஸ், ஷிட்னி ஷெல்டன் போன்ற எழுத்தாளர்களின் படைப்புகள் பிடிக்கும். படப்பிடிப்பு நேரத்தில் புத்தகத்துடன்தான் அவர் இருப்பார். தனது வீட்டில் மிகப் பெரிய நூலகத்தை அவர் ஏற்படுத்தியிருந்தார். இதில், நாவல்கள்தான் நிரம்பியிருக்கும். அரசியல் புத்தகங்கள் குறைவுதான். ஆங்கில நாவல்களை அதிகம் ஜெயலலிதா படிப்பார்.

ஒய்.ஜி.பார்த்தசாரதியின் யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட்ஸ் நாடகக் குழுவின் நாடக ஒத்திகை சந்தியாவின் வீட்டில் நடக்கும். அப்போது, அங்கு சோ வருகை தருவார். அப்போது, 4-வயதாக ஜெயலலிதா இருக்கும்போதே, சோவுக்கு அறிமுகமானார். 1980-ஆம் ஆண்டில் திரையுலகில் இருந்து ஜெயலலிதா விலகினார்.

எம்ஜிஆருடன் நடித்த திரைப்படங்கள்: மறைந்த முதல்வர் எம்ஜிஆருடன் ஜெயலலிதா இணைந்து நடித்த 28 திரைப்படங்கள். ஆயிரத்தில் ஒருவன், கன்னி தாய், சந்திரோதயம், தனிபிறவி, முகராசி, தாய்க்கு தலைமகன்,  அரசக் கட்டளை, காவல்காரன்,  ரகசிய போலீஸ் 115, தேர்த் திருவிழா, குடியிருந்த கோவில், கண்ணன் என் காதலன், புதிய பூமி, கணவன், ஒளிவிளக்கு, காதல் வாகனம், நம்நாடு, அடிமை பெண்,  மாட்டுக்கார வேலன், என் அண்ணன், தேடி வந்த மாப்பிள்ளை, எங்கள் தங்கம், குமரி கோட்டம், நீரும், நெருப்பும், ஒரு தாய் மக்கள், ராமன் தேடிய சீதை, அன்னமிட்ட கை, பட்டிக்காட்டு பொன்னையா. அடிமைப் பெண் படத்தில் ஜெயலலிதா தனது சொந்தக் குரலில் ஒரு பாடலை பாடினார். "அம்மா என்றால் அன்பு, அப்பா என்றால் அறிவு' என்ற பாடல் பதிவாகும்போது, அப்போது எம்ஜிஆர் அருகேயிருந்து ஊக்கப்படுத்தினார்.

பெரியாரிடம் பாராட்டு: முக்தா சீனிவாசன் இயக்கிய "சூரிய காந்தி' எனும் திரைப்படத்தின் நூறாவது நாள் விழா சென்னை ஏவிஎம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் 1973-ஆம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி நடைபெற்றது. பெண் சுதந்திரத்தை வலியுறுத்தும் இந்தப் படத்தை பாராட்டிய பெரியார், நூறாவது நாள் விழாவில் அவர் பங்கேற்றார். அப்போது, ஜெயலலிதாவுக்கு பரிசு கேடயம் வழங்கினார் பெரியார். 

அரசியலில்... அதிமுகவில்  1982-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி ஒரு ரூபாய் கட்டணத்தை எம்ஜிஆரிடம் செலுத்தி இணைந்தார் ஜெயலலிதா. 
1982-ஆம் ஆண்டு அதிமுக கொள்கை பரப்புச் செயலராகப் பொறுப்பேற்றார். மதுரையில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் தனக்கு வழங்கப்பட்ட செங்கோலை எம்ஜிஆருக்கு அளிக்கும் புகைப்படம்தான் அரசியலில் இன்றும் பிரபலம்.

தமிழக அரசின் சத்துணவுத் திட்ட உயர்மட்ட ஆலோசனைக் குழு உறுப்பினராக ஜெயலலிதா நியமிக்கப்பட்டார்.  அப்போது, இந்தத் திட்டத்துக்கு ரூ.1 லட்சத்தை நன்கொடையாக அளித்தார் ஜெயலலிதா. தனது தாய் சந்தியாவின் பெயரில் ஒரு சத்துணவுக் கூடத்தையும் அவர் நிறுவினார்.

அதிமுகவில் இணைந்தவுடன் மாதத்தில் பாதி நாள்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணத்தில்தான் இருந்தார். கட்சி பொதுக்கூட்டங்கள், பொதுமக்களின் குறைகளைக் கேட்டு உதவுதல், கட்சியினரின் பிரச்னைகளைக் களைதல் போன்றவற்றால் அவர் புகழ்பெற்றார். தொண்டர்களிடம் மரியாதையும், எம்ஜிஆருடம் மதிப்பும் அதிகரித்தது.

1984-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டார். 23.4.1984-ஆம் தேதி காலை 11.30 மணிக்கு அவர் எம்.பி.யாக தமிழில் பதவிப் பிரமாணம் எடுத்துகொண்டார். அப்போது அவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை எண் 185. பேரறிஞர் அண்ணா அமர்ந்த அதே இருக்கைதான் ஜெயலலிதாவுக்கு கிடைத்தது.  

மாநிலங்களவையில் மின்சார உற்பத்திக்காக தமிழக அரசு 27 திட்டங்களை அனுப்பியும், அவற்றுக்கு 11 திட்டங்களை மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஜெயலலிதா பேசிய கன்னிப் பேச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

அதிமுகவில் எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக ஜெயலலிதா பங்கேற்கும் கூட்டங்களில்தான் மக்கள் அதிகளவில் திரண்டனர்.

எம்ஜிஆர் மறைவுக்கு பின், அதிமுக உடைந்தது. ஜானகி, ஜெயலலிதா என்ற இரு அணிகள் தேர்தல் களத்தில் நின்றாலும், ஜெயலலிதா அணியையே மக்கள் ஆதரித்தனர். இந்த நிலையில், 1989-ஆம் ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி தமிழக பட்ஜெட் கூட்டம் சட்டப்பேரவையில் நடைபெற்றது. அப்போது,  முதல்வராக கருணாநிதி இருந்தார். இந்த நேரத்தில் ஒரு பிரச்னைக்காக பேரவையில் பெரிய விவாதம் எழுந்து, தகராறு ஏற்பட்டு கடும் மோதல் முற்றியது. ஜெயலலிதா தாக்கப்பட்டார். இனி மீண்டும் சட்டப் பேரவைக்கு வந்தால் முதல்வராக வருவேன் என்று அவர் மேற்கொண்ட சபதத்தை, 1991-இல் வென்று காட்டினார்.
ஜெயலலிதா தனது பேச்சை நிறைவு செய்யும்போது, எம்ஜிஆர் நாமம் வாழ்க என்று கூறியே முடிப்பார்.

1990-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதியன்று ஒரு சம்பவம். அவரது 42-வது பிறந்த நாளும் கூட.  பிப்ரவரி 23-ஆம் தேதி நள்ளிரவு வரை புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தை முடித்த பின்னர்,  தனது தோழி சசிகலாவோடு சென்னைக்கு காரில் வந்தார். மீனம்பாக்கம் அருகே கார் வந்தபோது, எதிரே வந்த லாரி காரின் மீது மோதியது. இதில், பின் சீட்டில் தூங்கிக் கொண்டு வந்த ஜெயலலிதா காயம் அடைந்தார்.  இதையடுத்து சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர்  அனுமதிக்கப்பட்டார். இவரை காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி நேரில் வந்து பார்த்து ஆறுதல் கூறினார்.

காவிரி நீர் பிரச்னைக்காக 1991,2007-ஆம் ஆண்டுகளில் உண்ணாவிரதம் இருந்தவர் ஜெயலலிதா. 

தேர்தல் பிரசாரங்களில் "நீங்கள் செய்வீர்களா... செய்வீர்களா'- என்று மக்களை கேள்வி கேட்டு பதில் வாங்கும் நூதன பிரசாரம் வெகுவாக அனைவரையும் கவர்ந்தது.

அரசியல் ரீதியாக 48 வழக்குகளை எதிர்கொண்டார். இந்த அளவுக்கு வழக்குகள் தன் மீது வந்தபோதும் துவண்டு விடாமல் சட்டப் போராட்டங்களை எதிர்கொண்டு சமாளித்தார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/26/w600X390/jaya.jpg http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/feb/26/அரசியலிலும்-திரைத்துறையிலும்-அளவில்லாத-சாதனைகளை-படைத்த-வீராங்கனையின்-வெற்றிச்-சரித்திரம்-2870572.html
2870566 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கை: விபரீத விளைவுகளை அன்றே கணித்த மேதை சுதாகரன் ஈஸ்வரன் Monday, February 26, 2018 11:20 AM +0530  

பணமதிப்பிழப்பின் விபரீதமான விளைவுகளை பொருளாதார மேதை மன்மோகன் சிங் அன்றே துல்லியமாக கணித்திருந்தார். சுமார் 15 மாத காலம் கடந்த பிறகும் அதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

நவம்பர் 8, 2016 – பெரும்பாலான இன்றைய தலைமுறை மக்களின் மறக்க முடியாத நாள். இன்னும் சொல்லப்போனால் சிலரின் வாழ்க்கையை புரட்டி போட்ட நாள். இது ஒன்றும் இங்கு மிகைப்படுத்தி  சொல்லப்படவில்லை. உண்மையான யதார்த்தமான நிகழ்வின் விளைவை உணர்த்தும் செய்தி மட்டுமே. 

2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நடப்பில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். அந்த நடவடிக்கையின் நோக்கம் அனைத்து  தரப்பு மக்களாலும் அதிகளவில் பாராட்டப்பட்டது. ஆனால் அந்த நடவடிக்கை அமல்படுத்தப்பட்ட விதம் பல்வேறு விதமான விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்டது. 

24 நவம்பர், 2016 அன்று ராஜ்ய சபாவில் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கை பற்றி பல்வேறு முக்கியமான விஷயங்களை எடுத்து உரைத்தார்.

அதில் சில  துளிகள் :

 • இப்பொழுது செயல்படுத்தியுள்ள பணமதிப்பிழப்பு நடைமுறைக்கு வந்த விதம், நிர்வாகத் தோல்வியை தழுவியுள்ளது.
 • இது விவசாயம், சிறு மற்றும் குறு தொழிற்துறைகள், முறைபடுத்தப்படாத சீர்திருத்தப் பிரிவு ஆகியவற்றில் பெரும் பாதிப்பை உண்டாக்கும்.
 • இது பொருளாதார பேரழிவிற்கு வழிவகுக்கும்.
 • என் சொந்த கருத்து என்னவென்றால், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 2 சதவீதம் வரை வீழ்ச்சியடையக் கூடியது. 
 • மக்களின் துயரங்களைக் கவனத்தில் கொள்வது முக்கியம்.
 • இந்த நடவடிக்கை நாணய மற்றும் வங்கி முறைகளில் நமது மக்களின் நம்பிக்கையை பலவீனப்படுத்தக்கூடும்.
 • பணமதிப்பிழப்பு நடவடிக்கை எதிர்காலத்திற்கு சிறந்த ஒன்று என்று கூறுபவர்கள் பின்வரும் மேற்கோளை நினைவில் கொள்ள வேண்டும். “மிக தொலைவில் உள்ள தூரத்தை நோக்கி பயணிக்கும் போது  சில நேரங்களில் நாம் அனைவரும் இறந்துவிடுவோம்”

நிர்வாகத் தோல்வி:
99% சதவீத அளவிலான பணம் வங்கிக்கு திரும்ப வந்துவிட்டதாக பல்வேறு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதிக அளவிலான கருப்புப்பணம் பிடிபடும் என்ற திட்டம் பொய்த்துப் போனது. மேலும்  100-க்கும் மேற்பட்ட மனித உயிரிழப்புகள் நிகழ்ந்தன. இந்த உயிரிழப்பிற்களுக்கு இது மட்டுமே காரணம் இல்லை என்ற போதிலும், இது முக்கிய காரணி என்பதை யாராலும் மறுக்க முடியாது.

தொழில்பாதிப்பு:
கடந்த சில ஆண்டுகளாகவே பல தொழில்கள் மந்தமாக இருந்தன. அந்த நிலையில்தான் பணமதிப்பிழப்பு அமல்படுத்தப்பட்டது. இன்று காணப்படும் சிறு, குறு தொழில்களின் பாதிப்பிற்கு செல்லாக்காசு  நடவடிக்கை வலுசேர்த்தது என்பது யதார்த்தம். ஏற்கனவே நிலவி வந்த வேலையில்லா திண்டாட்டத்திற்கு இது மேலும் பாதிப்பை அதிகப்படுத்தியது.


மக்களின் நம்பிக்கை:
வங்கிகளின் மேல் இருந்த மக்களின் நம்பிக்கை குறைந்ததற்கு இந்த நடவடிக்கை ஒரு தொடக்கப் புள்ளியாகும். டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை  பாமர மற்றும் நடுத்தர மக்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. 

ஒரு தொழில்நுட்பத்தில் இருந்து அடுத்த நவீன தொழில்நுட்பத்தை நோக்கி அரசு செல்வது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. ஆனால் 132 கோடி மக்கள் வாழும் இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில்  அனைவரையும் அடுத்த நவீன தொழில்நுட்பத்தை நோக்கி நகர்த்துவது மிகவும் சிக்கலான ஒன்று என்பதை அரசு உணரவில்லை என்றே தோன்றுகிறது. 

சட்டப்பூர்வ கொள்ளை: 
சட்டப்பூர்வ கொள்ளைக்கு இந்த நடவடிக்கை இட்டுச்செல்லும் என்பதை அன்றே எச்சரித்தார் மன்மோகன் சிங். இன்று ஏழை மக்கள் முதல் பணக்காரர்கள் வரை அனைவரும் ஏதாவது ஒரு வகையில்  தனியார் நிறுவனங்களுக்கோ அல்லது சில சமயம் அரசு நிறுவனங்களுக்கோ நம் பணத்தை நம்மை அறியாமல் இழந்து வருகிறோம் என்பது கவனிக்கத்தக்கதாகும்.

மேற்குறிப்பட்ட அனைத்து பாதிப்புகளும் இன்று அனைவரையும் ஏதாவது ஒரு முறையில் பாதித்துள்ளது. இன்றும் அதனுடைய பாதிப்புகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.  இத்தகைய பாதிப்புகளை அன்றே சுட்டிக்காட்டினார் பொருளாதார மேதை என்று அழைக்கப்படும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். இவ்வளவு துல்லியமாக விளைவை கணித்ததன் மூலம் தன்னுடைய  பொருளாதார அறிவை உலகிற்கு மீண்டும் ஒரு முறை உணர்த்தியுள்ளார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/1/w600X390/rupees.jpg http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/feb/26/பணமதிப்பிழப்பு-நடவடிக்கை-விபரீத-விளைவுகளை-அன்றே-கணித்த-மேதை-2870566.html
2870563 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் அச்சமும் வழிபாடும்: கடமங்குட்டை யானை ஓவியம் த. பார்த்திபன் Monday, February 26, 2018 11:17 AM +0530  

மனித இனத்தில் தொல்சமய நிலையிலாகட்டும், சமய நிலையிலாகட்டும், வழிபாடு முக்கியப் பங்காற்றுகிறது. வழிபாடு என்னும் செயல் மனிதனுடைய அச்ச உணர்ச்சியில் இருந்தும், குற்ற உணர்ச்சியில் இருந்தும் தோற்றம் கொண்டது என சிக்மண்ட் ஃபிராய்டு கருதுகிறார். அச்சமும், நன்றி உணர்ச்சியுமே மனித சமூகத்தில் இறைவுணர்வை தோற்றுவித்தன என்பது, தெய்வம் குறித்த சிந்தனையில் முதன்மையாக இருக்கின்றது. இவ்வகைச் சிந்தனையே தற்காலத்து வழிபாட்டு மரபுகளுக்கு அடிப்படைகளையும் தோற்றுவித்தது. இச்சிந்தனையே சமயத்தின் அடியோட்டங்களையும் வழங்கியது. தொல்சமயத்திலும் சரி, சமயத்திலும் சரி வழிபாடு என்பது நம்பிக்கை சார்ந்து மேற்கொள்ளப்படும் சடங்காகும். இந்தவகையில், தீமை புரிபவற்றில் இருந்து காத்துக்கொள்வது அல்லது தீமையைக் குறைத்துகொள்வது, நன்மையும் வளத்தையும் வழங்குபவற்றுக்கு நன்றி செலுத்துவது என்ற இருமுனைப்பட்ட வழிபாட்டு மரபு, தொன்மைக் காலம் முதல் இன்றுவரையிலான வழிபாட்டு மரபின் வேர்களாக நீடித்துள்ளது.

பாலக்கோட்டைச் சேர்ந்த தமிழாசிரியர் திரு. கல்சி.குமார் அவர்களால், அவரது முகநூல் பக்கத்தில் 2018, பிப்ரவரி 20 மற்றும் 23-ம் தேதிகளில் வெளியிடப்பட்ட, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டத்தைச் சார்ந்த கடமங்குட்டை யானை ஓவியம், சிக்மண்ட் ஃபிராய்டு அவர்களின் கருத்தான, அச்ச உணர்ச்சியில் இருந்து மனிதனிடம் வழிபாடு தோற்றம் கண்டது என்பதற்குச் சான்றாக விளங்குகிறது. களத்தகவலின் அடிப்படையில், ஊருக்குள் யானைகள் வராமல் இருக்க இந்த ஓவியம் வழிபடப்படுவதாகத் தெரிவிக்கிறார் குமார்.

இன்றும் வழிபாட்டில் உள்ள இவ்வோவியம், யானைகள் மீது கொண்ட அச்சம், அல்லது அவை விளைவிக்கும் தீமைகளைக் குறைத்துக்கொள்ள அவற்றை வழிபடுவது என்ற தொல்மனதில் வழிபாட்டுணர்வின் பின்னணியில் உருவாகியுள்ளதைக் காட்டுகிறது. 

இந்த ஓவியம் வேட்டைச் சமூகத்தைச் சார்ந்தவர்களால் தீட்டப்பெற்றோ, வழிபடப்பட்டோ இருக்கமுடியாது. வேட்டைச்சமூக மக்கள் இதனை யானையை வீழ்த்தும் மந்திரச் சடங்கு வழிபட்ட ஓவியத்தையே தீட்டியிருப்பர். எனில், இப்பகுதியில் குடியேறிய வேளாண் சமூக மக்களால்தான் இது உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். இம்மக்கள், மேய்த்தல் தொழிலுடன் உணவை உற்பத்தி செய்யும் சமூகத்தினராகக் கிளைத்து, அடர்காட்டின் விளிம்பில் காடுகளைத் திருத்தி மலைப்புல வேளாண்மையில் ஈடுபட்டவர்களாகவும், அருகில் தம் குடியிருப்புகளை அமைத்துக்கொண்டவராகவும் விளங்கியுள்ளனர். காடுகளில் இருந்து வெளிப்பட்டு வலசை போகும் யானகளால் இவர்களது விளைநிலங்களும், குடியிருப்பும் பாதிப்படைந்திருக்க வேண்டும். அப்பாதிப்பு பெரும் அச்சமூட்டுவதாக இருந்திருக்கும். அல்லது தொடர்ச்சியான நிகழ்வாக இருந்திருக்க வேண்டும். எனவே, பாதிப்பில் இருந்து தம்மையும், தம் உடைமைகளையும் காப்பாற்ற, யானை உருவங்களைத் தீட்டி வழிபட்டுள்ளனர். இவ்வோவியமும் வழிபட்டுச் செய்தியும் இதனைத் தெளிவாகக் காட்டுகிறது.

இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள், யானைகளின் தொன்மைவாய்ந்த வலசைப்பாதைப் பகுதிகளாகும். குறிப்பாக, தேன்கனிக்கோட்டை, சூளகிரி மற்றும் ஒசூர் வட்டங்களைச் சார்ந்த பகுதிகள். இன்று வலசைப்பாதையில் அல்லது அதற்கு அருகாமையில் அமைந்த ஊர்கள், விளைநிலங்கள் யானைகளால் பாதிப்படைவது தினச்செய்தியாக உள்ளது. இப்பகுதியின் மூதாதையர், யானைகள் மீது கொண்ட அச்சத்தால் அவறை வழிபட்டு, தீமைகளில் இருந்து தம்மைக் காத்துக்கொள்ளும் நம்பிக்கையுடையவர்களாக விளங்கியுள்ளனர். இன்றைய சந்ததியினர் அதன் வலசையை மறித்து விரட்டுவது போன்ற ஒரு செயலை செய்யாத மூதாதையராக அவர்கள் வாழ்ந்திருந்ததற்கும் சாட்சியாக இவ்வோவியம் விளக்குகிறது. 

ஓவியக்காட்சி

ஓவியத்தில் மூன்று யானைகள் காட்டப்பட்டுள்ளன. உருவ அமைப்பிலிருந்து அவற்றை ஆண், பெண், குட்டி என வரிசைப்படுத்திப் பார்க்க முடிகிறது. (பார்க்க, புகைப்படம் 1 & 2)

ஓவியத்தின் தன்மை

இந்த ஓவியம் வெள்ளை வண்ணத்தில் வரையப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு, வரலாற்றுக்கால ஓவியத்தின் தற்காலக் குணங்கள் வெளிப்படுகின்றன. உண்மையில், பழைய ஓவியத்தின் மீது அதே வடிவில் சிறிதும் பிசகாமல் அதன் மேலேயே தற்காலத்து திருநீர்க்கட்டி என்ற நாமக்கட்டி கொண்டு வரைந்துள்ளனர். (கல்சி.குமாருடனான உரையாடல் தகவல்) தற்காலத்தியக் குணமான சிவப்புக் குங்குமம், உருவத்தின் மீது ஆங்காங்கே வைத்திருப்பதையும் காணமுடிகிறது.

காலம்

ஓவியம் அவ்வப்பொழுது மறுதீட்டல் கண்டுள்ளதால், காலத்தைக் கணிப்பதில் சிக்கல் உருவாகிறது. யானைகளின் உருவ அமைதியும், கோட்டுருவ உத்தியும், பொருங்கற்படைப் பண்பாட்டைக் கொண்டுள்ளன. எனவே, பெருங்கற்படைக் காலத்து மக்களால் வரையப்பட்ட இவ்வோவியமானது, அண்மைக்காலம் வரை மறுமேல் தீட்டலுக்கு உள்ளாகிவருகிறது என்பது பொருத்தமான முடிவாகிறது. 

ஓவியத்தின் உருவத்தன்மை மட்டுமல்லாது, ஓவியம் வரையப்பட்டுள்ள கல்குண்டில், ஓவியம் வரைய தேர்ந்தெடுத்த இடத்தைச் செதுக்கி, குழிவாக்கி, ஒரு தளத்தை உருவாக்கியுள்ள தன்மை, பெருங் கற்காலப் பண்பாட்டின் குணத்தைக் காட்டுகிறது. 

இவ்வாறு, பாறையின் (கல்குண்டின்) மேற்புறத்தை குழைத்துச் சீராக்குவதன் மூலம், உதிரும் மேற்பரப்பிலோ, பாறையின் உப்புப்படிவுகள் மீதோ ஓவியம் தீட்டப்படுவது தவிர்க்கப்படுகிறது. மேலும், மழைத்துளி நேரடியாக விழுவதும், மேலிருந்து நீர்த்தாரையாக வரும் நீரும் ஓவியத்தின் மீது ஓடுவதும் தவிர்க்கப்படுகிறது. இங்கு சிறப்பான, நேர்த்தியான பாறைக்குழைவைப் பார்க்கமுடிகிறது. இந்த அமைப்பின் காரணமாக, மேலிருந்து வரும் நீர் ஓவியத்தைப் பாதிக்காமல் கீழே சொட்டிவிடும். ஓவியம் பாதுகாக்கப்படும்.

மேலும், குகை, மலைமுகடு, பாறையிடுக்கு போன்ற இடங்களில் வழிபாட்டிடங்களை அமைக்கும் வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட மக்களின் நம்பிக்கை இவ்வோவியத்தின் இடத்தேர்விலும் உள்ளது. அதே சமயத்தில், பெரும்பான்மையாக வரலாற்றுக் கால ஓவியங்கள் தூண்கள், பலகைக்கற்களில் தீட்டப்பெற்றும், அடர் வண்ண முறையும், கண்ணாடிக்காட்சி போன்ற மனித, விலங்கு உருவங்கள் இடம்பெறும். மேலும் வழிபாட்டிடங்கள் வாழிடத்திலேயே அமையும். 

இவ் ஓவியத்தின் தொன்மையினை காட்டவல்ல உடன் சான்றாக அமைவது, இதற்கு அருகில் அமைந்துள்ள கல்திட்டை போன்ற ஒரு சிறு கட்டுமானத்தின் உள், புதிய கற்காலக் கருவிகள் வைத்துள்ள வழிபாட்டிடமாகும். (பார்க்க, புகைப்படம் 3) இக்கட்டுமானமும் பெருங் கற்காலப் பண்பாட்டை அடையாளப்படுகிறது. 

எனில், இவ் ஓவியத்தின் பழைய நிலை, இன்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும், அண்மைக்கால மறுதீட்டல் ஒரு சில ஆண்டுகளுக்குள் நிகழ்திருக்கிறது என்றும் கருதலாம்.

ஓவியத்தின் சிறப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நுண் கற்காலம் முதல் பெருங் கற்படைக் காலம் வரையிலான பண்பாட்டிற்குரிய பலவகையான தொல்லோவியங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை வேட்டைக்காட்சி, விழாக்காட்சி, ஏர் உழும்காட்சி, மூத்தோர் வழிபாடு என பல வாழ்வியல் செய்திகளைப் பதிவு செய்திருப்பதைக் காணமுடிகிறது. அதே சமயத்தில், அச்சம் காரணமாக மேற்கொள்ளும் வழிபாட்டு மரபை அடையாளம் காட்டும் முதல் சான்றாக கடமங்குட்டை ஓவியம் திகழ்கிறது.
 

தொல்சமய வழிபாட்டின் நீட்சியாக கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, கடமங்குட்டை யானை ஓவியம் 

(கடமங்குட்டை புகைப்படம் 1)

(கடமங்குட்டை புகைப்படம் 2)

 (கடமங்குட்டை புகைப்படம் 3)

(நன்றி: புகைப்படங்கள் - கல்சி.குமார். சான்று - கல்சி.குமார் (சித்திரகுமார் குமார்) முகநூல் பக்கம் - நாள் 20.02.2018 & 23.02.2018, மற்றும் தொலைபேசி உரையாடல் - நாள் 24.02.2018)
 

]]>
தமிழர் பண்பாடு, கற்குட்டை, பாறை ஓவியம், கடமங்குட்டை http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/feb/26/அச்சமும்-வழிபாடும்-கடமங்குட்டை-யானை-ஓவியம்-2870563.html
2867740 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் 9000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இளம் பெண்ணுக்கு உருவம் கொடுத்தனர் கிரேக்க ஆராய்ச்சியாளர்கள்! ஆனால் அந்த முகத்தில் சிரிப்பு இல்லை!  உமா பார்வதி Wednesday, February 21, 2018 04:27 PM +0530  

நாம் மனிதர்கள் என்பதற்கான முதல் அடையாளம் நமது உடல். கிட்டத்தட்ட 9000 ஆண்டுகளுக்கு முன்னால் உடலும் உயிருமாக வாழ்ந்த ஒரு இளம் பெண்ணின் எலும்புக்களின் எச்சங்களின் மூலம் அவளது முகத்தை வடிவமைத்துள்ளார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

ஆச்சரியமாக உள்ளதா? உண்மைதான். இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டவர்கள் ஏதென்ஸ் மற்றும் ஸ்வீடன் ஆராய்ச்சியாளர்கள். கிட்டத்தட்ட ஒன்பதாயிரம் ஆண்டு காலத்துக்கு முன்னால் வாழ்ந்த கற்கால பெண்ணின் முகத்தை எலும்புப் படிமங்கள் மூலம் கண்டறிந்து உத்தேசமான ஒரு வடிவத்தைக் கொடுத்து உருவாக்கியுள்ளனர். 

கிரேக்கத்திலுள்ள தியோபெட்ரா குகையில் 1993-ம் ஆண்டு அந்தப் பழங்காலப் பருவப்  பெண்ணின் படிமங்கள் கிடைத்தன.  முதலில் 'அவ்கி' என்றுதான் அவளுக்குப் பெயர் சூட்டினர் ஆய்வாளர்கள். ஆனால் டான் என்பது உதயத்தைக் குறிக்கும் சொல். புதிய உதயமாக பல மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் சந்தித்த காலகட்டத்தை அவள் சேர்ந்தவள் என்பதால் உதயம் என்றே பெயர் வைக்கப்பட்டது. டான் சிறுபான்மை குடியொன்றில் கிட்டத்தட்ட 9000 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்திருக்கலாம் என்று மேலும் கண்டறிந்தனர். தொன்மப் படிமங்களாய் சிதைந்து கிடந்த அவளின் எலும்பு மற்றும் பற்களை வைத்து ஆராய்ச்சி செய்ததில், டானுக்கு 15-லிருந்து இருபது வயது இருக்கலாம் என்றனர்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்து மடிந்து எச்சங்களான படிமங்களை வைத்து, நவீன கருவிகள் மற்றும் 3டி உத்தியை பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் டானை மீள் உருவாக்கம் செய்தனர். அவளுடைய தாடை சற்று எடுப்பாக முன்னோக்கி இருந்ததற்கான காரணம், அந்தக் காலத்தில் மிருகங்களை நன்றாக கடித்து சாப்பிடவும் அவற்றின் தோலை மெல்லியதாக்கி சுவைக்கவும், அந்த வகையில் தாடை மற்றும் பல் அமைப்பு இருந்திருக்க வேண்டும் என்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

டானின் உருவத்தை வடிவமைத்த பேராசிரியர் மனொலிஸ் பபாகிரிகோரகிஸிடம் டான் ஏன் கோபமாக இருக்கிறாள் என்று கேட்கப்பட்ட போது, அவர் 'அத்தகைய காலகட்டத்தில் வாழ்ந்ததற்கு கோபப்படாமல் இருப்பது எப்படி சாத்தியம்’ என்று கிண்டலாக பதிலளித்தார்.

டானுக்கு ரத்தசோகை இருந்திருக்கலாம் ஸ்கர்வி எனப்படும் ஈறுகளில் ரத்தம் கசியும் பிரச்னையும் இருந்துள்ளது என்றனர் ஆராய்ச்சியாளர்கள். இடுப்பு மற்றும் எலும்புப் பிரச்னைகளும் அவளுக்கு இருந்துள்ளது. டான் தனது வாழ்நாளின் இறுதி கட்டத்தில் நடக்க முடியாமல் இறந்திருக்கிறாள் என்று அந்த ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

கி.மு 7000 -ம் ஆண்டு வாழ்ந்த அப்பெண்ணின் முகத்தை எந்தக் கோணத்தில் பார்த்தாலும் மகிழ்ச்சி என்பது மருந்துக்கும் தென்படவில்லை என்பதையும் மீள் உருவாக்கம் செய்த பின்னர் ஆய்வாளர்கள் கண்டனர். கற்காலத்திலிருந்து தற்காலம் வரை பெண்ணின் நிலையை ஒரு வேளை 'டான்’ குறியீடாகத் தோன்றியிருக்கிறாளோ என்று எண்ணத் தோன்றுகிறது. டான் தற்போது ஏதென்ஸில் உள்ள அக்ரோபோலிஸ் அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாக மாறியிருக்கிறாள்.

நன்றி - Reuters

]]>
ஆராய்ச்சி, greek, Dawn, Athens, டான், தொன்மம், கற்காலம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/21/w600X390/Article_-_Face_of_9000_Year-Old_Teenager_Reconstructed.jpg http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/feb/21/scientists-reconstruct-face-of-9000-year-old-greek-teenager-2867740.html
2867041 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் விவசாயப் பிரச்னை: கமலுக்கு சவால்விடும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் - ஏற்பாரா கமல்? - திருச்செல்வம் ராமு Tuesday, February 20, 2018 02:11 PM +0530  

கமல் அவர்களுக்கு, தங்களுடைய சமுதாய நலன் கொண்ட அரசியல் பிரவேசத்துக்கு வாழ்த்துகள்.
 
இந்தியா, கிராமங்களில் வாழ்கிறது. கிராமங்கள் அழியுமானால் இந்தியாவும் அழியும் என்கிற காந்தியடிகளின் எச்சரிக்கைக்கு வாழ்வு கொடுத்ததற்கும், அதற்கான தீர்வை உருவாக்க நினைப்பதற்கும் விவசாயிகள் தங்களுக்கு நன்றிக்கடன்பட்டுள்ளனர்.
 
ஆனால், அந்தத் தீர்வை தாங்கள் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் யாசித்தது, இந்தியர்களின், பிரச்னைகளைத் தீர்க்கும் இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர்களின் திறனுக்கு நேர்ந்த அவமானமாகக் கருதுகிறோம்.
 
தகவல் தொழில்நுட்பத் துறையில் உலகுக்கு முன்னோடியாக இந்தியா திகழ்கிறது என்பது தாங்கள் அறியாததல்ல. அப்படியிருக்க, தாங்கள் கிராம மேம்பாட்டுக்கான தீர்வை, உரிமையோடு இந்தியர்களிடம் கேட்டிருந்தால் அது சிறப்பான அணுகுமுறையாக இருந்திருக்கும்.
 
தமிழகத் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களால், பதினாறு ஆண்டுகால விடாமுயற்சியில் விவசாயப் பிரச்னை ஆராயப்பட்டு, முழு தீர்வு (திட்டமிடுதலில் இருந்து விற்பனை செய்துகொள்ளும் வரையிலான அனைத்து சேவைகளையும் கிராம அளவிலேயே விவசாயிகள் செய்துகொள்ளும்படியான தீர்வு) உருவாக்கப்பட்டது. அது ஆந்திர மாநிலத்தில். ஒரு ஒன்றியத்தில் (முப்பது கிராமங்களில்) இரண்டு ஆண்டு காலம் வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டப்பட்டது. ஒட்டுமொத்த கிராம மேம்பாட்டுக்கு, குறிப்பாக விவசாயப் பிரச்னைக்கான தீர்வுக்கு வழிவகுக்கும் இந்தத் திட்டத்தை மாவட்ட அளவில் விரிவாக்கம் செய்வதற்கு, நாட்டின் (மாநில, மத்திய) உயர்மட்ட அதிகாரிகள் கொண்ட குழு தீவிர ஆய்வுக்கு உட்படுத்தியது. ஓராண்டு தொடர் பரிசீலனைக்குப் பிறகு, இத்திட்டம் இந்திய விவசாயத்தின் திருப்புமுனையாக அமையும், புது விவசாய அணுகுமுறைக்கு வழிவகுக்கும், நாட்டில் உள்ள இரண்டரை லட்சம் பஞ்சாயத்துகளுக்கும் விரிவாக்கம் செய்யக்கூடியது என்று கூறி, கடப்பா மாவட்டம் (1000 தகவல் மற்றும் செயல் மேலாண்மை மையம்), ஆந்திராவில் செயல்படுத்த நிதி ஒதுக்கி ஒப்புதல் வழங்கியது.
 
அரசு உயர்மட்டக் குழுவில் விவசாயம், கிராமம் குறித்து நன்கு அறிந்த நேர்மையான அதிகாரிகள் (பலர் M.Sc., Agri முடித்துவிட்டு IAS ஆனவர்கள்) இடப்பெற்றிருந்தனர். இந்தத் திட்டம், மாநில முதல்வர், நிதி அமைச்சர், விவசாய அமைச்சர், சட்ட அமைச்சர் என அனைவரின் ஒப்புதலையும் பெற்றிருந்தது.
 
இதைவிட வேறென்ன வேண்டும்? இந்திய இளைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் நாட்டுக்கு வேறு என்ன செய்ய வேண்டும்? 
 
ஆனால், முக்கிய அதிகாரிகளின் தொடர் மாற்றம், அம்மாநில முதல்வரின் திடீர் மறைவு, தெலங்கானா பிரச்னை போன்ற விஷயங்களினால், இத்திட்டம் நியாப்படுத்தமுடியாத, சந்தேகத்துக்கு இடமளிக்கக்கூடிய வகையில், தொடங்கும் முன்னரே நிறுத்தப்பட்டது. ஆனால், மனம் தளராமல் எங்கள் முயற்சியை தொடர்ந்துகொண்டிருக்கிறோம். தற்போது, டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் இந்தத் தீர்வை செயல்படுத்தவேண்டி, மத்திய அரசிடம் முயற்சித்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், பாரதப் பிரதமர் அவர்களிடம் இந்தத் தீர்வை கொண்டுசெல்ல விடாமல் சில சக்திகள் தடுக்கின்றன. 
 
இதுதான் இந்தியாவின் நிலை. இதற்கு ஹார்வர்டு பல்கலைக் கழகம் என்ன தீர்வை தரும்? தர முடியும்? இந்தியாவின் விவசாயப் பிரச்னை, பல உலக நாடுகள் விரும்பும் ஒன்று. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று தமிழர்கள் வேண்டுமானால் கூறிக்கொண்டிருக்கலாம். தற்போதைய உலகம் அப்படியல்ல. தாங்கள் தொடங்க வேண்டிய இடம் இங்கிருந்துதான். இதற்கு தாங்கள் என்ன தீர்வு வைத்திருக்கின்றீர்கள்? அரசு செயல்படும் விதத்தை எப்படி மாற்றப்போகிறீர்கள் என்பதில்தான் கிராமப்புற, விவசாய மேம்பாட்டுக்கான தீர்வு உள்ளது.
 
தங்கள் அரசியல் வாழ்வின் தொடக்கமாக, முதல் சவாலாக இதை எடுத்துக்கொள்ளுங்கள். ஹார்வர்டில் தாங்கள் யாசித்துப்பெற்ற தகவல்களோடு, மாநாட்டு மேடையில் எங்களோடு விவசாயப் பிரச்னைகளையும், தீர்வையும் விவாதிப்பதற்கு வாய்ப்பு வழங்குங்கள். இந்தியா இந்தப் புது முயற்சியைக் காணும். நாட்டின் ஒட்டுமொத்த கவனமும் திசை திரும்பும். தாங்கள் புத்திசாலித்தனத்தை ரசிப்பவர். சவாலை விரும்புபவர். இந்த அழைப்பை ஏற்கும்பட்சத்தில், இந்திய விவசாயப் பிரச்னைக்கான தீர்வை நாடு பெறும் என்பது உறுதி.
 
காத்திருக்கின்றோம்.
 திருச்செல்வம் ராமு
(Mission IT-Rural, www.it-rural.com, 9840374266)

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/23/w600X390/kamalhasan.jpg http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/feb/20/விவசாயப்-பிரச்னை-கமலுக்கு-சவால்விடும்-தகவல்-தொழில்நுட்ப-வல்லுநர்கள்---ஏற்பாரா-கமல்-2867041.html
2867059 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் சங்கிலி பறிப்புத் திருடர்களிடமிருந்து தப்ப எளியதொரு தற்காப்பு முறை! ஆண்களுக்கும், பெண்களுக்கும்... கார்த்திகா வாசுதேவன் Tuesday, February 20, 2018 01:26 PM +0530  


இன்று சென்னையில் பொது மக்களை பீதியில் ஆழ்த்தியிருக்கும் ஆபத்துக்களில் ஒன்று சங்கிலி பறிப்புத் திருடர் பயம். அவர்கள் சங்கிலியை மட்டுமே பறிக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. சங்கிலி கிடைக்காவிட்டால் நீங்கள் காதோடு ஒட்ட வைத்துப் பேசிக் கொண்டு செல்லும் ஸ்மார்ட் ஃபோன்களைப் பறிப்பதற்கும் தயங்குவதில்லை. அல்லது தோளோடு கைக்குழந்தை போல நீங்கள் அணைத்துப் பிடித்துச் செல்லும் கைப்பையையும் அவர்கள் விட்டு வைப்பதில்லை. இதனால் உயிர்ப்பலி நேர்ந்தாலும் திருடர்களுக்கு அதில் எவ்வித அக்கறையுமில்லை. அவர்களது ஒரே இலக்கு விலையுயர்ந்த ஏதேனும் ஒரு பொருள். அது சங்கிலியாக இருந்தால் பெருத்த மகிழ்சியடைவார்கள், ஃபோனாக இருந்தாலும் மோசமில்லை... 

இப்போது தான் ஸ்மார்ட் ஃபோனில் ரகசியத் தகவல்கள் அத்தனையையும் சேகரித்து வைக்கிற பழக்கம் இருக்கிறதே மக்களுக்கு, இல்லாவிட்டாலும் வங்கி சேமிப்புக் கணக்கு எண் உட்பட பணப்பரிவர்த்தனைக்கான அத்தனை பாஸ் வேர்டுகளையும் ஸ்மார்ட் ஃபோனில் சேமித்து வைக்கிறோமே அதை வெகு எளிதாக நோண்டி தகவல்களைக் கபளீகரம் செய்யும் தொழில்நுட்ப அறிவு இருந்தால் போதும் திருடர்களுக்கு. அப்புறம் இதைப் போல பத்து திருவாளர் அப்பாவி பொது ஜனங்கள் கிடைத்தால்  அலேக்காகத் தகவல்களைத் திருடி பெரும் பணத்தை ஸ்வாஹா செய்து விடுவார்கள். 

இது ஒரு வகை ஸ்மார்ட் ஃபோன் திருட்டு என்றால், இதில் மற்றொரு வகை சற்று விவகாரமானது. ஸ்மார்ட் ஃபோனில் இருக்கும் ரகஷிய சாட்டிங் மற்றும் அந்தரங்கப் புகைப்படங்களைத் திருடியோ அல்லது அத்துமீறி கையாண்டோ சம்மந்தப்பட்ட நபர்களை பிளாக் மெயில் செய்வது. இதைப் பற்றி பிறிதொரு கட்டுரையில் நாம் விளக்கமாகத் தெரிந்து கொள்வோம். இப்போது இந்த வகைத் துன்பத்திற்கான அடிப்படைக் காரணங்களைப் பற்றி மட்டும் பார்ப்போம். 

மக்கள் தங்களது ஸ்மார்ட் ஃபோன்களைப் பறி கொடுக்காமல் இருந்திருந்தாலோ அல்லது தங்களைப் பற்றிய அந்தரங்க விஷயங்களை அல்லது தனிப்பட்ட தகவல்களை பகிர்வதில் அலட்சியமில்லாமல் ஜாக்கிரதையாக இருந்திருந்தாலோ இந்த வகை அவஸ்தைகளில் சிக்கி நிலைகுலையாமல் இருந்திருக்கலாம் தானே! இதற்கெல்லாம் மூலகாரணம் சில நொடி அலட்சியம் அல்லது ஜாக்கிரதை உணர்வு போதாமை தான் காரணமே தவிர வேறில்லை. இதைத் தவிர்ப்பதற்கான முதல் தேவை முன் ஜாக்கிரதை உணர்வே!

அதற்காக காலையில் வாசல் தெளித்துக் கோலமிடச் செல்லும் போதே, யாரோ ஒரு திருடன் வந்து சங்கிலி பறித்துக் கொண்டு போவான் என்ற எதிர்மறை உணர்வுடனே அன்றாட வேலைகள் அனைத்தையும் செய்ய முடியுமா? வாகனத்தில் விரைந்து கொண்டிருக்கும் போது, திடீரென யாரோ ஒருவர் குறுக்கிட்டு கழுத்தில் பகட்டாக மின்னும் சங்கிலியை இழுக்கப் போகிறார்கள் என்ற உணர்வுடனே வண்டியோட்டிச் செல்ல வேண்டுமா? அதெப்படி முடியும். அப்புறம் கவனம் சிதறி ஒரு வேலையையும் உருப்படியாகச் செய்ய முடியாமல் எல்லா நேரங்களிலும் பயந்து, பயந்து சாக வேண்டியது தான் என்கிறீர்களா? இல்லை முன் ஜாக்கிரதைக்கு அர்த்தம் அதுவல்ல, 

நீங்கள் பூங்காவில் காலையிலோ, மாலையிலோ வாக்கிங் சென்று கொண்டிருக்கிறீர்கள். அப்போது திடீரெனக் குறுக்கிடும் ஒருவன் உங்களது கழுத்துச் சங்கிலியில் கை வைக்கிறான் எனில் நிச்சயமாக உங்களது உள்ளுணர்வு உங்களுக்கு அதைக் காட்டித்தரும். அந்த உள்ளுணர்வை அலட்சியப் படுத்தாதீர்கள். அதைத் தான் முன் ஜாக்கிரதை என்பார்கள். இப்போதெல்லாம் ஆளரவமற்ற இடங்களை விட மனித நடமாட்டம் மிகுந்த இடங்களில் தான் சங்கிலி பறிப்பு, ஸ்மார்ட் ஃபோன் பறிப்புத் திருட்டுகள் அதிகமாக நடக்கின்றன. காரணம் பலே கில்லாடியாக திட்டம் தீட்டும் திருடர்களின் சாமர்த்தியம் தான். திருடுபவனுக்கே அத்தனை சாமர்த்தியம் இருந்தால், திருட்டுக் கொடுக்கவா நாம் ஒவ்வொரு பொருளையும் கஷ்டப் பட்டு சம்பாதிக்கிறோம் என்ற உணர்வுள்ள மனிதர்களுக்கு அவர்களைக் காட்டிலும் சாமர்த்தியம் அதிகமிருக்க வேண்டும் தானே?! எப்படிச் சமாளிப்பது இந்த வகை நூதனத்திருடர்களை? சொல்லித் தருகிறார் தற்காப்புக் கலை பயிற்றுநர் கோபுடோ ஏ.எஸ். கிருஷ்ணமூர்த்தி;

தற்காப்புக் கலை பயிற்றுநரின் விளக்கத்தைக் காட்சியாகக் காண...

 

நீங்கள் நடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள், திடீரென ஒருவன் உங்கள் கழுத்தில் இருக்கும் சங்கிலியையோ அல்லது காதுகளில் இருக்கும் ஸ்மார்ட் ஃபோனையோ வெடுக்கென நொடியில் பறித்துக் கொண்டு ஓட முயல்கிறான். அப்போது ஒரு நொடி திகைத்து நின்றாலும் உடனடியாகச் சுதாரித்துக் கொண்டு திருடிக் கொண்டு ஓட முயல்பவனை உங்களது வலது கைகளால் வெடுக்கெனத் தட்டி விட்டு அவனுக்கு யோசிக்க அவகாசம் தராமல் உடனடியாக உங்கள் வலது கையில் இருவிரல்களைப் பயன்படுத்தி அதாவது சுட்டு விரல் மற்றும் பாம்பு விரல் கொண்டு சடுதியில் அவனது கண்களைப் பதம் பார்த்து அவன் அசரும் நேரத்தில் தலைமுடியைப் பிடித்து உலுக்கி மோவாயில் நச்சென முஷ்டி மடக்கி அழுந்தக் குத்தி அவனை நிலைகுலையச் செய்ய வேண்டும். அவ்வளவு தான் அதற்குள் நீங்கள் உரக்கக் கத்தி கூப்பாடு போட்டால் போதும் மற்றதை சுற்றியுள்ள மக்கள் கூட்டம் பார்த்துக் கொள்ளும். இந்த தற்காப்பு முறையை ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் தைரியமாக முன்னெடுக்கலாம். ஏனெனில், பெண்களின் தயக்கம் தான் சங்கிலி பறிப்புத் திருடர்களின் முதல் பலம். எனவே பெண்களும் கூட தங்களது தயக்கத்தை உதறி விட்டு ஆபத்துக்காலங்களில் திடமாகச் செயல்பட வேண்டும்.

ஒருவேளை மேலே சொன்ன தற்காப்பு முறையில் நீங்கள் திருடனின் கண்களைப் பதம் பார்க்க முயலும் போது அவன் சடாரென முகத்தைத் திருப்பிக் கொண்டான் எனில், அப்போதும் அசராது அவனது பின் தலைமுடியைப் பிடித்து உலுக்கி கீழே தள்ளி தரையோடு அழுத்த வேண்டும். நமது ஒரே நோக்கம் திருடன் தப்பி ஓடி விடக்கூடாது என்பதாகவே இருக்க வேண்டும். ஏனென்றால் அவன் ஓடி விட்டால் பொருள் பறிபோகும் அபாயமுண்டு. அதோடு கூட இந்த தற்காப்பு முறையில் நாம் மேலும் கவனித்தாக வேண்டிய முக்கிய அம்சம், திருடனின் கையில் ஏதேனும் ஆயுதம் இருக்கிறதா? என்றும் அவதானிக்க வேண்டும். இல்லா விட்டால் சிக்கலாகி விடும். இம்மாதிரியான ஆபத்தான தருணங்களில் ஆண்களோ, பெண்களோ தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காகவேனும் தற்காப்புக் கலைகளை முறையாகப் பயின்று வைத்துக் கொள்வது நல்லது. ஏனெனில் ஒரு திருட்டு நடைபெறுகையில் திருடனுக்கும் சரி, பொருளைப் பறிகொடுப்பவர்களுக்கும் சரி... சரி பாதி ரிஸ்க் இருக்கிறது. அந்த ரிஸ்கைத் தான் பொது மக்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயல வேண்டும். வீண் பயம் இழப்பை மட்டுமே தரும்.

ஆகவே முடிந்தவரை தனிப்பட பயிற்சியாளரை வைத்தோ அல்லது தொலைக்காட்சி அல்லது இணையத்தில் கிடைக்கும் வீடீயோ பதிவுகள் மூலமாகவோ எப்படியேனும் தற்காப்பு வழிமுறைகளைக் கற்றுக் கொண்டு முன் ஜாக்கிரதை உணர்வுடன் செயல்பட்டு சங்கிலி முதல் ஸ்மார்ட் ஃபோன் வரையிலான திருட்டுகளுக்கு பலிகடாக்கள் ஆவதில்லை என உறுதியேற்போம்.

Image courtesy: Hindusthan times

Video courtesy: kalaigner t.v

]]>
chain snatching burglers, chain snatching self defence, சங்கிலி பறிப்புத் திருடர்கள், தற்காப்பு வழிமுறைகள், முன் ஜாக்கிரதை, http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/20/w600X390/chain_snatching.jpg http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/feb/20/chain-snatching-self-defence--2867059.html
2866455 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு: சரியான வழிகாட்டுதலின்றி தவிக்கும் இளைஞர் சமுதாயம்! சுதாகரன் ஈஸ்வரன் Monday, February 19, 2018 04:26 PM +0530  

உலக நாடுகளின் மக்கள் தொகையை அறிய உதவும் வோர்ல்டோமீட்டர் (Worldometers) புள்ளிவிவரங்களின்படி இன்றைய இந்திய மக்கள் தொகை 134.85 கோடி. இது உலக மக்கள் தொகையில் 17.74 சதவீதம். 

உலகின் இரண்டாவது மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட ஜனநாயக நாட்டில் அனைத்து தரப்பு மக்களுக்கும் வேலை கொடுப்பது எந்த ஒரு அரசாங்கத்திற்கும் சிக்கலான காரியம்தான். ஆனால் பட்டபடிப்பை முடித்த மாணவர்களில் 20 சதவீதத்தினர் மட்டும் தான் முடித்த துறை சார்ந்த வேலைவாய்ப்பை நல்ல ஊதியத்தில் பெறுவதும், மற்ற 80 சதவீதத்தினர் தன்னுடைய துறை சாராத வேலைக்கு செல்வதும் அல்லது மிகக்குறைந்த ஊதியத்தில் ஏதாவது ஒரு பணியில் அமர்வதும் இயல்பாக நடக்கும் விஷயம் அல்ல. இதற்கு கண்டிப்பாக மக்களை ஆண்ட ஆட்சியாளர்களும், ஆளும் ஆட்சியாளர்களுமே காரணமாக இருக்க முடியும். 

அதே சமயம் தற்போது நிலவிவரும் வேலைவாய்ப்பின்மை பிரச்னைக்கு அரசாங்கத்தை மட்டும் குறை கூறுவது முற்றிலும் தவறு. நல்ல தலைவர்கள் மக்களிடம் இருந்து உருவாகாமல் இருப்பது, அதையும் தாண்டி உருவாகும் தலைவர்களை வளர்ச்சியடைய செய்யாமல் விட்டது, சமூக  சிந்தனையுடன் செயல்படும் சமுக ஆர்வலர்களை நாம் கண்டு கொள்ளாதது, சமூக நலன் சார்ந்து செயல்படும் நல்ல சிறந்த ஆசிரியர்களை மதிக்கத்தவறிய சமூகம் என பல காரணிகள் உள்ளன. இதை அனைத்தையும் தாண்டி நல்ல அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை தவறவிட்ட நமது அறியாமையும் முக்கிய காரணி என்பது அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டும்.

மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்கில் இந்தியா மற்றும் ஸ்மார்ட் சிட்டி என பல வகையான நடைமுறைகளை மத்திய அரசு தொடங்கியது. ஆனால் வழக்கம்போல பெரும்பாலான நடைமுறைகள் அடுத்த கட்டத்தை நோக்கி நகரவில்லை. உண்மையில் இந்த  திட்டங்களால் பல லட்சகணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். ஒவ்வொரு திட்டமும் இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமானதாகும். சில ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை மட்டுமே இந்த திட்டங்கள் இதுவரை உருவாக்கியுள்ளன. திட்டத்தின் நோக்கங்கள் மிகவும் பாராட்டத்தக்க ஒன்று. அந்த திட்டங்கள் அமல்படுத்திய விதம்தான், வேலைவாய்ப்புகளை உருவாக்க தவறிவிட்டது. இதன் குறைபாடுகளை உணர்ந்து அதை ஆராய்ச்சி செய்து, திட்டங்களை மேம்படுத்தி அமல்படுத்தினால் இன்றைய வேலையில்லா திண்டாட்டத்திற்கு முற்றுப்புள்ளியாக அமையும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. 

ஏழை மக்கள் அன்றாட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய தினமும் உழைக்கிறார்கள். நடுத்தர மக்கள் தன்னுடைய அன்றாட பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுபிடிக்க வழி தேடிக்கொண்டிருக்கிறார்கள். மேல்தட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பு பிரச்னை பெரிய விதத்தில் பாதிக்கப்போவதில்லை. இப்படி அனைவரும் தன்னுடைய பிரச்னைகளை மட்டுமே நோக்கி நகர்ந்து வந்ததால், அன்று முதல் இன்று வரை நாம் இந்த வேலையில்லா திண்டாட்டத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இன்று அது பூதாகரமாக மாறி நிற்கிறது. இன்று அனைவருக்கும் அது  ஒரு முக்கிய பிரச்னையாக மாறியுள்ளது.

அரசாங்க வேலை, தனியார் துறையில் வேலை மற்றும் சுய தொழில் என மூன்று விதமான வாய்ப்புகள் இருந்தாலும் அரசாங்க மற்றும் தனியார் துறை வேலை மட்டுமே மதிப்பு மிக்கதாக சமூகத்தில் ஒரு தவறான பார்வை இருந்து வருகிறது. இன்றைய காலத்தில் திருமணத்திற்கு அரசாங்க மற்றும் தனியார் துறை வேலை அவசியத் தேவையாக சித்தரிக்கப்படுகிறது. இது இன்றைய கால இளைஞர்களை சுய தொழில் தொடங்க விடாமல் தடுக்கிறது. 1980-களில் கணினியின் தொடக்க காலத்தில் பல எதிர்ப்புகள் அதற்கு இருந்தன. கணினி வேலைவாய்ப்புகளை குறைத்துவிடும் என்ற ஒரு அச்சம் நிலவியது. ஆனால் கணினியின் அறிமுகம் பல வேலைவாய்ப்புகளை புதிதாக ஏற்படுத்தின. ஆட்டோமேசன் என்ற புதிய தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்பு மிகவும் குறையும் என்ற அச்சம் இன்று நிலவுகிறது. ஆனால் எவ்வளவு புதிய முறைகள் வந்தாலும் மக்களின் தேவை அதிகரிக்கும் என்றும் அதனால் வேலைவாய்ப்பு எப்பொழுதும் இருந்து கொண்டுதான் இருக்கும் என்பதையும் நாம் உணர மறுக்கிறோம். 

உண்மையில் நம்மை சுற்றி லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. அதை சரியாக நாம் பயன்படுத்த தவறுகிறோம்.  நமக்கு வேலையில்லை என்றால் உலகில் வேலையில்லை என்றில்லை. உங்களை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை பாருங்கள்.  நீங்கள் வசிக்கும் வீடு, தெரு, நீங்கள் அன்றாடம் பயணம் செய்யும் சாலை, நீங்கள் கடந்து செல்லும் அரசு மற்றும் தனியார் அலுவலகம், உங்கள் வீட்டுக்கு  அருகிலுள்ள பள்ளி, கல்லுரி என நாம் அன்றாடம் பார்க்கும் அனைத்தும் அனைத்து வசதிகளிலும் மேம்பட்டு விடவில்லை. இன்னும் மேம்படுத்தப்பட வேண்டிய வசதிகள் நிறைய இருக்கின்றன.   

ஒவ்வொரு இடத்திலும் தேவைப்படும் வசதிகளை மேம்படுத்தும் தொழில்களைதான் அரசாங்கமும், தனியார் துறையும் செய்கின்றன. ஆனால் மேம்படுத்த வேண்டிய ஏராளமான வேலைகள் இன்னும் செய்யப்படாமல் வசதி குறைவாகவே இருக்கின்றன.  இதை நாம் உணர தொடங்கினால் குறைந்த முதலீட்டில் லட்சக்கணக்கில் மாத வருமானத்தை ஈட்டும் சுய தொழில் தொடங்கி சாதிக்க முடியும். இதற்கு தேவை விழிப்புணர்வும் தன்னம்பிக்கையும் மட்டுமே. 

சுய தொழில் தொடங்க தேவையான வசதிகளையும், அதற்கான வழிமுறைகளையும் சில அரசாங்க அமைப்புகளும் தனியார் துறைகளும் செய்து கொடுக்கின்றன. இருப்பினும் இன்றைய கால கட்டத்தில் கூகுள் மூலம் நாம் சொந்தமாக உலகில் நடக்கும் எந்தவொரு செயலையும் கற்றுகொள்ள முடியும். இதை உணர்ந்து குறைந்தது இரண்டு அல்லது மூன்று நபர்கள் சேர்ந்து சிறு தொழில்கள் அமைக்க முன் வந்தால் வேலைவாய்ப்பு பிரச்னையும் அதனால் குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்களும் முடிவுக்கு வரும். சில தொழில்களை, தனி ஒரு ஆளாகவும் நாம் தொடங்கலாம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. அரசாங்கத்தை நம்புவதை விட தன்னை நம்பு என்று வருங்கால தலைமுறைக்கு ஒரு முன்மாதிரி தலைமுறையாய் நாம் உருவாகலாம்.  

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2015/9/14/15/w600X390/jobvacancies.jpg http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/feb/19/கொட்டிக்கிடக்கும்-வேலைவாய்ப்பு-சரியான-வழிகாட்டுதலின்றி-தவிக்கும்இளைஞர்-சமுதாயம்-2866455.html
2864722 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் அப்பா வாங்கிய ரூ.5000 கடனுக்காக 20 ஆண்டுகள் கொத்தடிமையாக இருந்த மகன்! மின்வேலிக்குள் முடிந்த குழந்தைப் பருவம்!! டாக்டர்.கிருஷ்ணன் Friday, February 16, 2018 04:05 PM +0530  

தமிழ் நாட்டில் கொத்தடிமைத் தொழில்முறை எந்தளவுக்கு நிலவுகிறது?

40 ஆண்டுகளுக்கு முன்பே, சட்ட விரோதமானது என்று கொத்தடிமைத் தொழில் முறை தடை செய்யப்பட்டிருந்த போதிலும், இது இந்தியா முழுவதும் லட்சக் கணக்கானவர்களை தொடர்ந்து பாதித்து வருகிறது. அநேக நேரங்களில் பாதிக்கப் படுகிற குழந்தைகள், அரிசி ஆலைகள் அல்லது செங்கல் சூளைகள் போன்ற பணியிடங்களில் பிறந்து அவர்களது பெற்றோர்கள் வாங்கிய கடனை அடைப்பதற்காக அவர்களுடைய ஒட்டு மொத்த வாழ்க்கையையும் வேலை செய்தே கழிக்கின்றனர். 

மின்சார வேலிக்குள் முடங்கிய குழந்தைப் பருவம்:

தமிழ் நாட்டிலுள்ள ஒரு அரிசி ஆலையில் பிறந்து அவருடைய சகோதரருடன் சேர்ந்து வளர்ந்த அப்புவின் வாழ்க்கைக் கதையும் இப்படித்தான் இருந்தது. இவனுடைய தந்தை வாங்கிய கடன் வெறும் ரூ. 5000 மட்டுமே. இருப்பினும், இந்தக் கடனை அடைப்பதற்குப் பல ஆண்டுகளாக அப்பு வேலை செய்ய வேண்டியிருந்தது. இப்போது, அப்புவின் மகனும் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி அங்குத் தொடர்ந்து வேலை செய்து வருகிறான். 

அப்பு, அவருடைய குழந்தை பருவத்தை நினைத்துப்பார்க்கும் போது, அரிசி ஆலையில் வேலை செய்தது மட்டுமே அவரது நினைவில் இருக்கிறது. அதைத் தவிர, வேறு எதுவும் அவருக்கு நினைவில் இல்லை. அப்புவின் தந்தை அவருடைய வேலைப் பொறுப்புகள் என்ன என்பதை அவருக்கு கற்றுத் தந்து, பயிற்சியளித்திருந்தார். மற்ற பிள்ளைகளைப் போல பள்ளிக்கூடம் செல்வதற்கோ அல்லது நண்பர்களுடன் விளையாடுவதற்கோ அப்புவுக்கு நேரம் இருந்ததில்லை. சிறுவனாக இருந்த போதும் ஒரு நாளைக்கு 18 மணிநேரம் அரிசி மூட்டைகளை அப்பு சுமந்திருக்கிறார். அவருடைய தந்தை இறந்த பிறகும் கூடத் தனது தந்தையின் கடனை அடைப்பதற்கு, தொடர்ந்து வேலை செய்யுமாறு அவர் கட்டாயப்படுத்தப்பட்டார். அடிக்கடி மிக மோசமாக நடத்தப்பட்டதுடன், அரிசி ஆலையை விட்டு வெளியே செல்வதற்கும் அப்புவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

கொத்தடிமைத் தொழிலாளர்கள் அவர்களுடைய பணியிடத்தைவிட்டு வெளியே செல்வதற்கு பெரும்பாலும் தடைவிதிக்கப்படுகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அனைத்து வகையான சுதந்திரங்களும் இவர்களுக்கு மறுக்கப்பட்டன. சில நேரங்களில் வெளியே செல்ல அனுமதி கொடுக்கப்பட்டாலும் கூட, ஒட்டுமொத்த குடும்பங்களும் ஒன்றாகப் பணியிடத்தை விட்டுச் செல்வதற்கு ஒருபோதும் அனுமதிக்கப்படுவதில்லை. ஒரு நபர் எப்போதும் பணியிடத்தில் கட்டாயம் தங்கியிருக்க வேண்டும். இது, யாரும் வெளியே தப்பிச் செல்வதற்கு முயல்வதைத் தடுப்பதற்காக செய்யப்படுகிறது மற்றும் யார் பணியிடத்தை விட்டு வெளியேறிச் சென்றாரோ அவர் மீண்டும் திரும்பி வருவதற்குரிய வாய்ப்புகளை இது அதிகரிக்கச் செய்கிறது. 

அப்பு போன்ற குழந்தைகள் வெளியுலகிலிருந்து பிரித்து வைக்கப்பட்டு, அதனுடைய தாக்கங்கள் படாதவாறு வளர்கின்றனர். அவர்களுக்கு வேலை செய்வது மட்டுமே தெரியும் மற்றும் அவர்கள், கல்வி கற்காமல், மோசமான உடல் நலத்தோடு வளர்வதாலும் மற்றும் அவர்கள் பல்வேறு வகைகளில் மோசமாக நடத்தப்படுதலுக்கு உட்படுத்தப்படும் காரணத்தாலும், மற்றொரு தலைமுறையை வறுமை மற்றும் நம்பிக்கையின்மை என்ற சுழலில் தொடர்ந்து சிக்கவைக்கிறது.

ஆங்கிலேயர் ஆட்சியிலேயே சட்ட விரோதமாக்கப் பட்ட குழந்தை தொழிளார் முறை:

அப்பு

குழந்தை தொழிலாளர் முறை என்பது, ஆங்கிலேயர் ஆட்சியின்கீழ் குழந்தை (தொழிலை அடைமானம் செய்தல்) சட்டம் இயற்றப்பட்ட 1933-ஆம் ஆண்டிலிருந்து சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளது. சுதந்திரம் பெற்றதிலிருந்து குழந்தை மற்றும் உரிய வயது வந்தவர்களைப் பாதுகாப்பதற்கு 1976-ம் ஆண்டு கொத்தடிமைத் தொழில் முறை (ஒழிப்பு) சட்டம் மற்றும் 1986ம் ஆண்டு குழந்தை தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குமுறை)ச் சட்டம் உள்ளிட்ட வேறு பல சட்டங்கள் இயற்றப் பட்டுள்ளன. கொத்தடிமைத் தொழில் முறையை இச்சட்டங்கள் சட்டவிரோதமாக ஆக்கியுள்ள போதிலும், இந்த கொத்தடிமைத் தொழில்முறை இந்தியா முழுவதும் இன்னும் தொடர்கிறது. ஆனால், இது எந்தளவுக்குப் பரவி காணப்படுகிறது?

இந்தக் கேள்விக்கு யாரும் முறையாகப் பதில் சொல்வதற்கு, கொத்தடிமைத் தொழில் முறை பற்றி எவராலும் போதியளவு ஆய்வு செய்யப்படவில்லை. 1995-லிருந்து இந்தப் பிரச்சினை குறித்து மூன்று மதிப்பாய்வுகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளன. முதல் ஆய்வு, 1995-ல் இந்திய உச்ச நீதிமன்றத்தால் நடத்தப்பட்டது மற்றும் தமிழ்நாட்டில் ஏறக்குறைய 10 லட்சம் கொத்தடிமைத் தொழிலாளர்கள் உள்ளனர் என்று அதில் கண்டறியப்பட்டது. அடுத்த மதிப்பாய்வு 1997-ல் தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு 25,005 கொத்தடிமைத் தொழிலாளர்கள் மட்டுமே இருக்கின்றனர் என்று தெரிவித்தது. இறுதியாக, 2015-ல் இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் மற்றும் நேஷனல் ஆதிவாசி சாலிடாரிட்டி கவுன்சில் ஆகிய அமைப்புகள் இணைந்து விரிவான ஒரு ஆய்வை நடத்தின.

தேசிய அளவில் அழுத்தம் பெற வேண்டிய பிரச்னை:

10 வகையான கொத்தடிமைத் தொழில் முறையில் 4.63 லட்சம் உடலுழைப்புத் தொழிலாளர்கள் உள்ளனர் என்று இந்த ஆய்வில் கண்டறியப்பட்டது. இந்த ஒவ்வொரு ஆய்வுகளுக்கிடையே எண்ணிக்கையில் பெரும் வித்தியாசம் உள்ளது. இந்தக் குற்றத்தை எப்படி ஒழிப்பது, தடுப்பது என்பது குறித்து தகவலறிந்து மாநில அரசு முடிவுகள் எடுப்பதற்காக இன்னும் ஆழமான ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். 

கொத்தடிமைத் தொழில்முறை நிலவுவது மற்றும் அதில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை குறித்து அரசு துல்லியமான தகவலையும், அறிவையும் கொண்டிருக்கும்போது, டீடுளுயு-வை பயனுகந்த வகையில் திறம்பட நடை முறைப்படுத்துவதற்கும் மற்றும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை மனித கடத்தல் செய்பவர்களைப் பொறுப்பாக்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அரசு திறனுள்ளவாறு தயார் நிலையில் இருக்கும். தங்களது சொந்த மாவட்டத்திற்கு வெளியே அதிக சதவீதத்தில் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக உள்ள நிலையில், இந்தியா முழுவதும் மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கிடையே பாதுகாப்புடன் பணிக்காக மக்கள் இடம்பெயர்வதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆதரவு வழங்க வேண்டும். 

2005-ல் ஐடுழு ஒரு ஆய்வு நடத்தியது. தேசியளவில் அழுத்தம் கொடுக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டபோது மட்டுமே கொத்தடிமைததொழில்முறையை ஒழிப்பதற்கு உள்ளுர; அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று இந்த ஆய்வு தெரிவித்தது. சில அதிகாரிகள், கொத்தடிமைத்தொழில்முறை நடைமுறையில் இல்லை என்று கருதினர் அல்லது இந்த வகை வேலைக்காக மட்டுமே கொத்தடிமைத் தொழிலாளர்கள் பிறந்துள்ளனர் என்று நம்பி, கொத்தடிமை தொழில்முறை தங்கள் பகுதிகளில் இல்லவே இல்லை என்று மறுத்து வந்தனர். கொத்தடிமைத் தொழில்முறையை எதிர்த்துப்போராடுவதில் தமிழ்நாடு முன்னோடியாக இருந்தபோதிலும், இந்தப் பிரச்சினை குறித்து ஒரு நிலைப்பாடு எடுப்பதற்குப் பல அரசு அதிகாரிகள் இன்னும் விருப்பமில்லாமல் இருப்பதால், இது ஒரு கடினமான பாதையாகவே இருந்து வந்திருக்கிறது. 

கல ஆய்வு தேவை :

'கொத்தடிமைத் தொழில் முறை நிலவுகின்ற இடங்களில் நிகழ் நேரத்தில் ஆய்வுகள் செய்யப்படாத நிலையானது, இந்தப் பிரச்சினையின் உண்மையான வீச் செல்லையை இப்பிரச்சினை மீது அக்கறைப் பாங்கு கொண்டிருக்கிற அனைவரும் புரிந்துகொள்ளவும் மற்றும் பன்முகத்தன்மையோடு ஒருங்கிணைப்பு நிலவும் வழிமுறையில் அதை போதுமானளவு கையாண்டு தீர்வுகாண முடியாதவாறு தடங்கலாக இருந்து வந்திருக்கிறது” என்று குடிமை சமூக அமைப்புகளைச் சார்ந்த ஒரு பிரிவினர் கருதுகின்றனர். மிகவும் முழுமையான ஆராய்ச்சி மூலம், கொத்தடிமைத் தொழில்முறை எப்படி ஆரம்பிக்கிறது, அதன் அடிப்படை காரணங்கள் என்ன மற்றும் தொழிலாளர் மற்றும் குற்றம் புரிபவர் ஆகிய இரு தரப்பினர் மீதும் அதன் விளைவுகள் என்ன என்பதை நாம் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். நம்மிடமுள்ள புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, டீடுளுயு முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்பது தெளிவாகிறது. இச்சட்டத்தை நடை முறைப் படுத்துவது அரசின் முன்னுரிமையாக மாற வேண்டும். 

ஆய்வுகள், புலன் விசாரணைகள், மீட்புப் பணி மற்றும் மறு வாழ்வுப்பணி மேற்கொள்வதற்குத் தேவையான மனிதவள மற்றும் நிதி சார்ந்த ஆதாரங்களை மாநில மற்றும் மத்திய அரசுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். கொத்தடிமைத் தொழிலாளர்கள் அதிகளவில் இருப்பதாகத் தெரியக்கூடிய தொழில்களில் காவல் மற்றும் மாவட்ட அதிகாரிகள் ஒழுங்குமுறை தவறாமல் விசாரணைகள் நடத்த வேண்டும். ஒரு உகந்த, முழுமையான ஆய்வை மேற்கொள்வதற்கு நடப்பு மற்றும் முன்னாள் கொத்தடிமைத் தொழிலாளர்களை நேர்காணல்கள் செய்ய வேண்டும். அவர்கள் ஏன் கொத்தடிமைத் தொழிலாளர்களாக ஆனார்கள் என்பதை நாம் நன்றாகப் புரிந்து கொள்வதற்கு இது உதவும் மற்றும் இதே போன்ற சூழ்நிலைகளில் மற்றவர்கள் சிக்காமல் தடுப்பதற்கும் மற்றும் சமூகத்திற்கு இது குறித்து கற்பிப்பதற்குச் சிறந்த வழிகள் என்ன என்பதைக் கண்டறிவதற்கும் இது உதவும். 

இந்த மேம்பட்ட ஆய்வின் மூலம், கொத்தடிமைத் தோழில் முறை குற்றத்தை முடிவுக்குக்  கொண்டு வருவதற்குரிய அறிவாற்றலை மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் பெறும். அப்போது தமிழ் நாட்டைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை தவறாக முறையில் பயன்படுத்தி கொத்தடிமை முறையில் வேலை வாங்கும் குற்றவாளிகளிடமிருந்து அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள்.

 

டாக்டர்.கிருஷ்ணன்
Secretary General of National Adivasi Solidarity Council (NASC)

]]>
India, Tamil nadu, இந்தியா, கொத்தடிமை, bonded labor, child labor, தமிழ் நாடு, குழந்தை தொழிலாளி, முறை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/16/w600X390/maxresdefault.jpg http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/feb/16/bonded-child-labors-2864722.html
2864665 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் ஆண்டுக்கு 3 லட்சம் பேரை காவு வாங்கும் காற்று மாசுபாடு?! அலட்சியப்படுத்தினால் எண்ணிக்கை இருமடங்காகும்! கார்த்திகா வாசுதேவன் DIN Friday, February 16, 2018 11:19 AM +0530  

சமீபத்தில் காற்று மாசுபாட்டின் காரணமாக தலைநகர் டெல்லியில் சில தினங்களுக்குப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள்.  காற்று மாசுபாட்டைப் பற்றியும் அதனால் விளையக்கூடிய கேடுகளைப் பற்றியும் அறிந்தவர்களாயிருந்த போதிலும் நம்மில் பலர் அதன் மோசமான விளைவுகளையும் அதனால் மனித ஆரோக்யத்தில் ஏற்படக்கூடிய பின் விளைவுகளையும் தொடர்ந்து அலட்சியப்படுத்தியே வருகிறோம். இதனால் என்ன ஆகும்? இன்று 3,00,000 என்றிருக்கும் பலி எண்ணிக்கை 2050 ஆம் ஆண்டுக்குள் இரு மடங்காகி விடக்கூடும். உலகில் 80 % மக்கள் வாழுமிடங்கள் பெரும்பாலும் உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள காற்றுத் தர நிர்ணயித்தின் படி வாழத் தகுதியற்ற் விஷக் காற்று நிரம்பியுள்ள இடங்களென சமூக நல ஆர்வத்துடன் எடுக்கப்பட்டதொரு சர்வே கூறுகிறது.

உலகில் மலேரியா மற்றும், எயிட்ஸ் நோய்பாதிப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் காற்றுத் தூய்மைக் கேட்டினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என லேண்ட்மார்க் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

காற்று மாசால் நேரக்கூடிய மரணங்கள் மனிதனின் சுவாச மண்டலத்துடன் தொடர்பு கொண்டவை. மாசடைந்த காற்றிலுள்ள கண்ணுக்குப் புலப்படாத நுண்ணிய நச்சுத் துகள்களை நுரையீரல் சுவாசிப்பதன் மூலமாக ஆஸ்துமா, ஹார்ட் அட்டாக், பக்கவாதம் போன்ற பாதிப்புகள் உண்டாகின்றன.  சிலருக்கு காற்று மாசுபாட்டின் தீவிரத்தைப் பொறுத்து நேரடியாக நுரையீரல் கேன்சரும் வரக்கூடும்.

காற்று மாசுபாட்டை பொதுவாக;

 • உட்புற காற்று மாசுபாடு
 • வெளிப்புற காற்று மாசுபாடு 

- என இருவகையாகப் பிரிக்கலாம்.

உட்புறக் காற்று மாசுபாடு...

 • உட்புற காசு மாசுபாடு என்பது வீடுகள் மற்றும்  பொது சமையல் கூடங்களில் விறகடுப்பைப் பயன்படுத்தி சமையல் செய்யும் போது உண்டாகும் புகை மற்றும் கரித்துகள்கள் காற்றில் கலப்பதால் ஏற்படக்கூடியவை. 
 • வீட்டுக்குள்ளே குழந்தைகள் மற்றும் வயதான பெரியவர்களின் முன்னிலையில் சிகரெட் புகைப்பது, சாம்பிராணி இடுவது, போகிக்கு வீட்டின் திறந்த வெளி முற்றத்தில் வைத்து டயர் கொளுத்துவது போன்றவற்றைக்  கூட இந்த வகைப்பாட்டில் சேர்க்கலாம். இவை மட்டுமல்ல,
 • வீடுகளில் நறுமணத்துக்காக நாம் பயன்படுத்தும் ரசாயனக் கலப்புள்ள வாசனைத் திரவியங்கள், முகத்துக்குப் பூசும் நறுமணப் பவுடர்களைக் கூட இந்த உட்புறக் காற்று மாசுபாட்டுக் காரணிகளாக வகைப்படுத்தலாம்.

வெளிப்புறக் காற்று மாசுபாடு...

 • வெளிப்புறக் காற்று மாசுபாடு என்பவை பெரும்பாலும் சாலைப் போக்குவரத்தில் எண்ணிக்கையில் பெருத்துப் போன இரு சக்கர, மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் இருந்து வெளியேற்றப்படும் நச்சு வாயுக்கள் மற்றும்
 • புதை வடிவ எரிபொருள் நிலையங்களில் இருந்து வெளியேற்றப்படும் நச்சு வாயுக்கள் காற்றில் கலப்பதால் ஏற்படக்கூடியவை.
 • தீபாவளி, புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போதும், தனியார் விழாக்களின் போதும் கொண்டாட்ட மனநிலையைப் பிரதிபலிப்பதற்காக வெடிக்கப்படும் பட்டாசுகள் மற்றும் வாணவேடிக்கைகள் போன்றவற்றால் வெளிப்புறக் காற்றுமாசுபாடு ஏற்படுகிறது.

இந்த இருவகை காற்று மாசுக்கும் காரணமான நச்சு வாயுக்கள் எவையென்றால்;

கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் டையாக்ஸடு, சைஃபர் டையாக்ஸைடு, தொழிற்சாலைப் புகை போக்கிகள் வழியே வெளியேறும் காரீயம் மற்றூம் ஆர்செனிக் கழிவுகள், பாதரசக் கழிவுகள் உள்ளிட்ட நச்சு வாயுக்களால் தான் காற்று மாசுபாட்டு மரணங்கள் நிகழ்கின்றன. இந்த வாயுக்கள் காற்றில் கலந்து காற்றின் தூய்மையைக் கெடுத்து சுவாசிக்க தரமற்ற அசுத்தக் காற்றாக மாற்றுகின்றன.

இந்த நச்சு வாயுக்கள் காற்றில் கலப்பதால் அதைச் சுவாசிக்கையில் அதிகப்படியான நச்சு வாயுக்களை வடிகட்ட இயலாமல்  குழந்தைகள் மற்றும் வயதானவர்களின் நுரையீரல் செயல்பாடு ஒடுங்குகிறது.  கருவுற்ற பெண்களிடையே இந்தக் காற்று மாசுபாடானது கருவிலிருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சியில் பாதிப்பை உண்டாக்கி விடுகிறது. 

பூமியில் அதிகரிக்கும் காற்றுமாசுபாடானது தற்போது உலகை அச்சுறுத்தக்கூடிய தலையாய பிரச்னைகளில் ஒன்றாகியுள்ளது. 60 வருடங்களுக்கு முன்பே காற்று மாசுபாடெனும் ஒரு காரணத்தைப் பிரதான ஆய்வுக்கு உள்ளாக்கி அதனால் மனித ஆரோக்யத்தில் நிகழக்கூடிய மோசமான பின்விளைவுகளைக் கண்டறிந்து அதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வரும் ஐக்கிய நாடுகளில் கூட இன்னமும் இது ஒரு தீராத பிரச்னையாகவே நிலைபெற்றுள்ளது. ஐக்கிய நாடுகளைத் தவிர்த்து காற்றுமாசுபாடு குறித்து அக்கறையுடன் யோசித்து அதற்காகப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து இந்தப் பிரச்னை குறித்துத் தொடர்ந்து போராடி வரும் உலக நாடுகள் பலவற்றிலேயே இன்னமும் அதற்கான நிரந்தரத் தீர்வு எட்டப்படவில்லை என்கின்றன புள்ளி விவரங்கள். அப்படி இருக்கையில் காற்றூ மாசுபாடு குறித்துப் பெரிதாக அக்கறை காட்டாத மக்கள் நிறைந்த இந்தியாவில் இதனால் எதிர்காலத்தில் நேரக்கூடிய மரண எண்ணிக்கைகளைக் கற்பனை செய்து கூட பார்க்க இயலவில்லை.

காரணம், எவ்வளவு தான் போராடியும் கூட... 

 • எந்த நாடுகளாலும் தங்களது மக்களின் வாகன நுகர்வு எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வீட்டுக்கு ஒரு கார்,ஒரு ஸ்கூட்டர் என்றிருந்த நிலை மாறி இன்று ஒவ்வொரு தனிமனிதனும் ஒரு வாகனம் வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறான். வாகனங்களைப் பகிர்ந்து கொள்ளும் மனநிலை மாறி சூழல், தேவை எனும் காரணங்களைத் தாண்டி சகிப்புத் தன்மை இன்மையால் ஒவ்வொருவரும் தனித்தனியே பயணிக்க ஆசைப்பட்டு தங்களால் இயன்றவரை காற்று மாசுபாட்டுக்குக் காரணமாகின்றனர். அரசு பொதுப் பேருந்துகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையைக் காட்டிலும் தற்போது தனித்தனி வாகனங்களில் விரையும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
 • தொழிற்சாலைப் பெருக்கத்தாலும், தொழிற்சாலை சூழ்ந்த இடங்களிலும் மக்கள் வீடு கட்டிக் கொண்டு குடியேற நேர்ந்த மக்கள் தொகைப் பெருக்கத்தாலும் கூட காற்றுமாசுபாடு அதிகரிக்கிறது. இதையும் அரசுகளால் கட்டுப்படுத்த இயலாத நிலையே இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் காணப்படுகிறது.

இச்சூழ்நிலையில்... இப்போதேனும் காற்று மாசுபாடு குறித்து அக்கறையுடன் யோசிக்கத் தலைப்படா விட்டால் வருங்கால சந்ததியினருக்கு வாழத் தகுதியற்ற பூமியை விட்டுச் சென்றவர்களாவோம்!

Image courtesy: Financial express.

]]>
death rates of air pollution, Air POLLUTION IN INDIA, காற்று மாசுபாட்டு மரண விகிதங்கள், இந்தியாவில் காற்று மாசுபாடு http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/16/w600X390/air_pollution2.jpg http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/feb/16/tragic-death-rates-of-air-pollution-in-india-2864665.html
2863418 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் யார் இந்த ‘கியூபிட்’? கிரேக்க மன்மத கடவுளான கியூபிட்டின் காதல் கதை உங்களுக்குத் தெரியுமா! பவித்ரா முகுந்தன் Wednesday, February 14, 2018 04:49 PM +0530  

நமக்கு ஒருவர் மேல் காதல் வருவதற்கு இந்த ‘கியூபிட்’ விடும் காதல் அம்புதான் காரணம்னு பல கதைகளை கேட்டு இருப்போம். அதனாலேயே எப்போதும் கையில் வில்லும் அம்புமாக, ரெக்கையுடன் பறந்து கொண்டிருக்கும் இந்த கியூபிட்டின் உருவத்தைக் காதலின் ஒரு முக்கிய சின்னமாகவே பலரும் பார்க்கிறோம். 

யார் இந்த கியூபிட்? காதலுக்கும் இவனுக்கும் என்ன தொடர்பு? அப்படினுலாம் என்னைக்கினா யோசித்து இருக்கிங்களா? எப்பவும் மத்தவங்கள காதல் வலையில் விழ வைக்கிற இந்த கியூபிட் பையனுக்கும் ஒரு அழகான காதல் கதை இருந்து இருக்குங்க, அது என்னனு பார்ப்போம் வாங்க.

கிரேக்க கடவுளான இந்த கியூபிட் (Cupid) வேற யாரும் இல்லைங்க நம்ம ஊரு பாஷைல சொல்லனும்னா மன்மதன். யார்? எப்போ? எங்கே? யாரை? காதலிக்கனும்னு முடிவு பன்றது இவர்தான். கிரேக்கர்களின் புராண இதிகாசங்களின் படி பார்த்தால் இவர் தான் காதல், ஆசை, காமம் மற்றும் அன்பிற்கான கடவுள். அழகின் கடவுளான வீனஸ் அவர்களின் இரு மகன்களுள் ஒருவர். இப்படி எல்லாரையும் காதல் வசப்பட வைக்கிற இந்த கியூபிட்டுக்கும் ஒரு அழகான காதல் கதை இருந்திருப்பதா கிரேக்க வரலாறு சொல்லுகிறது. இந்தக் காதலர் தினத்துக்குக் காதல் கடவுளுடைய காதல் கதையை தெரிஞ்சிப்போம்!

ஆபத்தில் தள்ளிய அழகு:

முன்னொரு காலத்தில் ரோமின் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஆண்டு வந்த ராஜாவுக்கு 3 மிகவும் அழகான மகள்கள், அவர்களில் பேரழகியாக இருந்தவள் சைக் (Psyche). சைக் என்பதற்குத் தமிழில் ஆன்மா எனப் பொருள். இவளை அனைவரும் அழகின் கடவுளான வீனஸின் மறு உருவமாகவே பார்த்தனர். காலப் போக்கில் பலரும் வீனஸை மறந்து வாழும் கடவுளாகவே சைக்கை வழிப்பட்டனர். இதனால் ஆத்திரமும், பொறாமையும் அடைந்த வீனஸ், அவள் அழகைக் கண்டு வியக்கும் எவருக்கும் அவள் மீது காதல் வராதபடி செய்து விடுகிறார். தனது மற்ற இரு மகள்களுக்கும் திருமணம் ஆன பிறகும் மூன்றாவது மகளுக்கு மட்டும் திருமண வரன் ஏதும் வராததால் கவலையடைந்த சைக்கின் தந்தை ஒளியின் கடவுளான புளூடோவிடம் சென்று வேண்ட, “உன் மகளை மலையின் உச்சியில் தனியாக விட்டு விட்டு வா” என்று கடவுள் உத்தரவிட்டதைக் கேட்டு சைக்கின் தந்தையும் வலுக்கட்டாயமாக அவளை அழைத்துச் சென்று மலையின் விளிம்பில் நிக்க வைத்து விட்டு வருகிறார்.

இந்தச் சந்தர்ப்பத்தை பயன் படுத்த நினைத்த வினஸ் தனது மகன் கியூபிட்டை அழைத்து இந்த உலகிலேயே மிகவும் கொடூரமான, பார்க்கவே பயங்கரமாக இருக்கும் பாம்பு உடல் கொண்ட ஒரு அரக்கனுக்கு இவள் மேல் காதல் வரும்படி செய்துவிடு என்று உத்தரவிடுகிறார். தாயின் கட்டளையை ஏற்று கியூபிட்டும் சைக் தனியாக நின்று கொண்டிருக்கும் மலையின் விளிம்பிற்குச் செல்கிறான். திடீரென்று மேற்கில் இருந்து வீசிய தென்றல் சைக்கை அப்படியே காற்றில் தூக்கிச் செல்கிறது. காற்றில் மிதந்தவாறே சில தூரம் பயணித்த பிறகு ஒரு பிரம்மாண்டமான கோட்டையின் வாசலில் அவளைக் கீழே இறக்குகிறது. அந்தக் கோட்டையை பார்த்து வியந்தபடியே நின்று கொண்டிருந்த சைக்கிற்கு ஒரு அசரீரி கேட்கிறது, “இனி இதுதான் உன் வீடு, உள்ளே செல்” என்று அந்தக் குரல் சொல்லியது.

மர்ம காதலன்:

அந்தக் கோட்டை முழுவதும் விலை மதிக்க முடியாத போருட்களால் உருவாகி இருப்பதைக் கண்டு சைக் வியந்து போகிறாள். நடக்கும் தரை முழுவதும் தங்கத்தால் இழைக்கப்பட்டு, சுவர்கள் எல்லாம் வைரம், வைடூரியம், ரூபி, எமரால்ட் போன்ற விலையுர்ந்த கற்கள் பதிக்கப்பட்டிருந்தது. அப்போது ஒரு அறை அவள் கண்ணில் படுகிறது, மீண்டும் அசரீரி ஒலிக்கிறது, உள்ளே செல் என்று. அதைக் கேட்டு சைக்கும் உள்ளே சென்றால் அறை முழுவதும் இருள் சூழ்ந்து துளி வெளிச்சம் கூட இல்லாமல் இருந்தது. அந்த இருளில் யாரோ தன்னை தொடுவதை சைக் உணர்கிறாள். அந்த உணர்வை வைத்தே தன்னை தொடுவது ஒரு ஆண் என்பது அவளுக்குத் தெரிகிறது, அந்த ஆண் அவளிடம் “நான் உன்னை உயிருக்கு உயிராகக் காதலிக்கிறேன், உனக்கு எந்தக் குறையும் இல்லாமல் எப்போதும் மகிழ்ச்சியாகப் பார்த்து கோள்வேன் உனக்கு என் மேல் நம்பிக்கை இருந்தால் நான் சொல்வதை நம்பு, அதே சமயம் என்றுமே நான் யார் என்பதை நீ தெரிந்து கொள்ள முயலக் கூடாது, மேலும் என் முகத்தைப் பார்க்கவும் நீ என்றுமே ஆசைப் படக்கூடாது” என்று மிகவும் கவர்ச்சிகரமான அந்தக் குரலுக்கு சைக்கும் சற்றும் யோசிக்காமல் ஒப்புக் கொள்கிறாள். 

தினமும் இரவில் மட்டும் சைக்குடன் நேரத்தை அந்த இருட்டு அறையிலேயே கழித்துவிட்டு காலைச் சூரியன் உதயமாகுவதற்கு முன்பே ஜன்னலின் வழியாக வெளியே செல்வதே சைக்கின் காதலனது வழக்கம். இப்படியே பல நாட்கள் கழிகிறது பின்பு ஒரு நாள் சைக் கர்ப்பமாகிறாள், தனது கணவன் யார் என்றே தெரியாத நிலையில் எப்படி ஒரு குழந்தைக்கு தாய் ஆவது என்ற கவலையில் அவளை அந்தக் கர்ப்ப செய்தி ஆழ்த்துகிறது. சைக்கின் இந்தப் பிரம்மாண்டமான வாழ்க்கையைப் பார்த்து பொறாமை அடைந்த அவள் சகோதரிகள் இருவரும் ஏற்கனவே குழப்பத்தில் உள்ள சைக்கை மேலும் பயமுறுத்துகிறார்கள். “ஒரு வேளை நீ யாருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாயோ அவர் மிகவும் பயங்கரமான ஒரு பாம்பாக இருந்தால் என்ன செய்வாய் நீ?” என்று அவளை தங்களது பேச்சால் தூண்டி தனது கணவனின் பேச்சை மீறிச் செயல்பட தூண்டுகிறார்கள்.

சத்தியத்தை மீறியதால் கணவனைப் பிரியும் சைக்:

தனது சகோதரிகளின் பேச்சைக் கேட்ட சைக்கும் அடுத்த நாள் விடிவதற்கு முன் கையில் ஒரு விளக்கை எடுத்துக் கொண்டு ஒரு வேளை அவர்கள் சொன்னது போல் கொடூரமான ஒரு அரக்கனாக இருந்தால் என்ன செய்வது என்கிற பயத்தோடு அறையினுள் நுழைகிறாள். விளக்கை உயர்த்தி தனது கணவனின் முகத்தை வெளிச்சத்தில் பார்த்து உறைகிறாள். இந்த உலகிலேயே மிகவும் அழகான ஆண் என்று சொல்லும் அளவிற்கு கியூபிட் படுத்திருப்பதை பார்க்கிறாள். அந்த மகிழ்ச்சியில் கை நழுவ, அந்த விளக்கில் இருந்த எண்ணெய் கியூபிட்டின் மேல் பட்டு காயத்தை ஏற்படுத்துகிறது. அதனால் தூக்கத்தில் இருந்து விழித்த கியூபிட் “நீ என் வார்த்தையை மீறிவிட்டாய், இனி என்னால் உன்னுடன் வாழ முடியாது” என்று கோவத்துடன் ஜன்னல் வழியாகப் பறந்து செல்கிறான். 

தனது தாயின் பேச்சைக் கேட்டு சைக்கிற்கு ஒரு அரக்கன் மீது காதல் வரச் செய்ய சென்ற கியூபிட் அவளது அழகில் மயங்கி அந்த அம்பில் தன்னை தானே குத்தி சைக்கின் மீது காதல் வயப்படுகிறான்.

தனது கணவனிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் அவருடன் சேர்ந்து விட வேண்டும் என்ற முடிவு எடுத்து சைக், கியூபிட்டை தேடி செல்கிறாள். வழியில் கியூபிட்டின் தாய் அவளைத் தடுத்து “உனக்கு என் மகனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றால் நான் வைக்கும் சில சோதனைகளில் நீ தேர்ச்சி பெற வேண்டும்” என்று நிபந்தனை போடுகிறார். அதற்கு சைக்கும் ஒப்புக் கொள்கிறாள்.

காதலை நிரூபிக்க 3 பரீட்சைகள்:

முதலாவதாக ஒரு பல வகையான விதைகள் ஒன்றாகக் கலந்து மலை போல் உயர்ந்திருக்கும் ஒரு குவியலை காட்டி இன்று இரவுக்குள் இதில் இருக்கும் ஐந்து வகையான விதைகளையும் தனி தனியே பிரிக்க வேண்டும் என்று சொல்கிறார், சற்றும் சாத்தியம் இல்லாத அந்த முயற்சியில் சைக் படும் கஷ்டத்தைப் பார்த்த ஒரு எறும்பு கூட்டம் அதை அவளுக்குப் பிரித்து தருகிறது. இதனால் முதல் பரீட்சையில் சைக் வெற்றி பெறுகிறாள். 

அடுத்ததாக மிகவும் முரட்டுத் தனமான தங்க ரோமங்களை உடைய ஆட்டின் உடலில் இருந்து அந்தத் தங்கத்தை எடுத்து வருமாறு சொல்கிறார். அங்கும் ஆற்றின் கடவுள் அவளுக்கு உதவி செய்து ஆட்டின் தங்க ரோமங்களை அவளுக்குத் தருகிறார், இதனால் இரண்டாவது பரீட்சையிலும் சைக் தேருகிறாள்.

இறுதியாக மரண உலகம் என்று சொல்லப்படும் பாதாளத்திற்குச் சென்று இறப்பின் ராணியிடமிருந்து சிறிது அழகை ஒரு பெட்டியில் வாங்கி வர வேண்டும் என்று வீனஸ் சொல்கிறார். எப்படி அங்குச் செல்வது என்று சைக் தவித்து நிற்கும் நிலையில் மீண்டும் அசரீரி ஒலிக்கிறது, சில கேக் துண்டுகளையும், வெள்ளி நாணயங்களையும் எடுத்துக் கொண்டு இந்தத் திசையில் செல் என்கிறது. அதன்படி சைக்கும் செல்ல மரண உலகமான பாதாள உலகத்தின் நுழைவாயிலைப் பாதுகாக்கும் மூன்று தலை நாய்களுக்கு கேக் துண்டை கொடுத்து அதைக் கடந்து உள்ளே செல்கிறாள். பின்னர் அங்கிருக்கும் ஆற்றைக் கடக்க படகோட்டியிடம் வெள்ளி நாணயங்களைக் கொடுத்து மரணத்தின் ராணியிடமிருந்து அழகைப் பெட்டிக்குள் வைத்து மிகவும் பத்திரமாக கொண்டு வருகிறாள்.

முடிவில்லா உறக்கம்:

வினஸின் கோட்டை அருகே வந்த சைக் அந்தப் பெட்டிக்குள் இருக்கும் அழகைத் தானும் கொஞ்சம் எடுத்துக் கொள்வோம் என்கிற ஆசையோடு பெட்டியை திறக்கிறாள், ஆனால் அந்தப் பெட்டிக்குள் முடிவில்லா தூக்கம் மட்டுமே இருக்கிறது, அதனால் மயங்கி விழுந்த சைக் ஆழ்ந்த உறக்கம் செல்கிறாள். அந்த நேரத்தில் காயங்கள் குணமடைந்து தான் செய்தது தவறு என்பதை உணர்ந்த கியூபிட் மீண்டும் தனது மனைவியான சைக்குடன் சேர்ந்து வாழ முடிவு செய்து அங்கு வந்த கியூபிட் கர்ப்பவதியான தனது மனைவி மயங்கி விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். பின்னர் கடவுள்களின் அமரத்துவத்திற்குக் காரணமான அமிழ்தத்தை சைக்கிற்கு கொடுத்து அவளைத் தூக்கத்தில் இருந்து மீட்கிறான். பின்னர் அனைத்துக் கடவுள்களின் ஆசியுடன் இவர்கள் இருவரது திருமணம் மிகப் பிரம்மாண்டமாக நடக்கிறது.

இவர்கள் இருவருக்கும் அழகான ஒரு பெண் குழந்தை பிறந்தது, அதற்கு ‘பிளெஷர்’ (Pleasure)  எனப் பெயரிடுகிறார்கள். கியூபிட் அன்பு மற்றும் ஆசையின் வடிவமாக, சைக் ஆன்மாவின் வடிவமாக, இவர்களின் மகள் பிளேஷர் அதனால் கிடைக்கும் இன்பத்தின் வடிவமாகப் பார்க்கப்பட்டு, இந்த மூன்றும் சேர்ந்ததே காதலாகி உலகில் உள்ள அனைவரது காதல் வாழ்க்கைக்கும் காரணமாக அமைந்துள்ளது.

]]>
beauty, India, Tamil, தமிழ், காதல், love, இந்தியா, danger, story, அழகு, கியூபிட், சைக், பிளெஷர், கிரேக்க கடவுள், ஆபத்து, psyche, cupid, greek, goddess http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/14/w600X390/kjk.jpg http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/feb/14/the-myth-of-cupid-and-psyche-2863418.html
2863402 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் தினமணியின் காதலர் தின ஸ்பெஷல் பக்கம்! டேட்டிங் முதல் ப்ரேக் அப் வரையிலான காதல் பதிவுகள்! கார்த்திகா, பவித்ரா, உமா Wednesday, February 14, 2018 01:32 PM +0530  

பிப்ரவரி 14 - இந்த தினத்தை இத்தனை இனிமையாக மாற்றச் செய்தது எதுவென்று காதலர்கள் யோசிக்க மாட்டார்கள். அவர்கள் தான் காதலைக் கொண்டாடுவதில் மும்முரமாக உள்ளார்களே! பிரியத்துக்கு உரியவரிடம் காதலை எப்படி காதலைச் சொல்வது என்று தயங்குபவர்களுக்கு உதவியாக உருவானதுதான் வாலண்டைன்ஸ் டே ட்ரெஸ் கோட் (Valentines Dday Dress Code). காதலர்கள் உலகத்தில் இது பிரசித்தம்.  

அந்தந்த நிறத்தில் உடை அணிந்து,  காதலைச் சொல்லியாகிவிட்டது. காதலி / காதலனிடமிருந்து க்ரீன் சிக்னல் கிடைத்துவிட்டது. அதன்பின் என்ன? கொண்டாட்டம் தானே? அதுவும் எப்படி! ஷெட்யூல் போட்டு காதலிக்கிறார்கள் இன்றைய இளசுகள். இந்த ஸ்பெஷல் தினங்கள் காதலர் தினத்துக்கு ஒரு வாரம் முன்பே தொடங்கிவிடும். ஒவ்வொரு தினமும் ஒரு கொண்டாட்டமாக மலர்கின்றது. பிப்ரவரி 7 ரோஸ் டே, 8 ப்ரபோஸ் டே (ட்ரெஸ் கோடில் மிஸ் செய்தவர்கள் இந்த நாளில் விட்ட இடத்தைப் பிடிக்கலாம்), 9 - சாக்லெட் டே, 10 - டெட்டி டே, 11 - பிராமிஸ் டே, 12 - கிஸ் டே, 13 - ஹக் டே, 14 - வாலண்டைன்ஸ் டே. ஒரு வாரம் முழுக்க மட்டுமல்லாமல், அக்காதல் வாழ்நாள் முழுவதும் காதல் எனத் தொடர்ந்தால் சந்தோஷம்தான்.

காதலர் தினம் 1537-ம் ஆண்டு இங்கிலாந்து மன்னர் 7-ம் ஹென்றிம் செயின்ட் வாலண்டைன் எனும் பாதிரியாரின் நினைவாக பிப்ரவரி 14-ம் தேதியை காதலர் தினமாக அறிவித்தார்.

காற்றில் காதலைக் கலந்துவிட்ட இந்த தினத்தில் எல்லாமே ஸ்பெஷல். இதோ காதலர்களையும் காதலையும் சிறப்பிக்கும் வண்ணம் தினமணியின் காதலர் தின ஸ்பெஷல் பக்கம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதோ அதன் சுட்டி  http://www.dinamani.com/valentines-special/

 

காதல் கடவுள் யார் தெரியுமா? க்யூபிட் (Cupid) என்பவர்தான் காதல் கடவுள். உலகம் முழுவதும் உள்ள மனிதர்களை காதல் வயப்பட வைக்கும் வல்லமை க்யூபிட் ஒருவருக்கே உண்டு என்கிறது கிரேக்க புராணம். 

காதலர் தினத்தில் அதிகம் பரிசளிக்கப்படுவது பூக்கள். அதிலும் குறிப்பாக ரோஜா மலர்கள். அதனால் தான் ரோஜா மலரே ராஜ குமாரி என்ற பாடலை அப்போதே எழுதிவிட்டார் கவிஞர் கண்ணதாசன். 

இன்றைய தினத்தில் காதலர்களுக்கிடையே பகிரப்படும் குறுஞ்செய்திகளும் காதல் விடியோக்களும் புகைப்படங்களும் இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது. 

காதல் கொண்டாட்டமானது. அது ஒரே ஒரு முறைதான் வரும் என்பது ஒருசிலரின் நம்பிக்கை. காதலின் வெற்றி திருமணம் என்பது எழுதப்படாத விதி.

ஆனால் உண்மையில் காதல் திருமணத்தில் மட்டும் முடிந்துவிடக் கூடாது. வாழ்நாள் முழுவதும் தொடரும் நறுமணமாக அது காதலர்கள் மனத்தினுள் நிறை ஜோதியாய் ஒளிர வேண்டும். அதுதான் காதலின் வெற்றி.

எத்தனை முறை ஒரு மனத்தில் காதல் பூத்தாலும் அத்தனை முறையும் அது அவர்களைப் பொருத்தவரையில் கொண்டாட்டம்தான். காதல் என்பது அனைவருக்கும் உரிய பொதுவான உணர்வு அதனை கலாச்சாரத்துடன் தொடர்பு படுத்தி சுருக்கிவிடாதீர்கள் என்கிறார்கள் பல முறை காதலில் விழுந்து தம்மைத் தொலைத்தவர்கள்.

இப்படி காதலை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். பக்கங்கள் போதாது. எந்த சட்டகத்திலும் அதனை அடக்கி வைத்துவிட முடியாது. 


 

]]>
காதல், lovers day, Valentines Day, காதலர் தினம், February 14, வேலண்டைன்ஸ் டே, பிப்ரவரி 14 http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/14/w600X390/meow.jpg http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/feb/14/valentines-day-special-articles-in-dinamani-2863402.html
2862748 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் இது அக்னிப் பரீட்சை: ஆட்சிக்கு தகுந்தார்போல காட்சியை மாற்றுகிறதா சிபிஐ? சாது ஸ்ரீராம் Tuesday, February 13, 2018 04:43 PM +0530  

சமீபகாலமாக நம்மைச் சுற்றி நடக்கும் பல விஷயங்கள் எதிர்காலத்தின் மீது நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியிருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு நிகழ்வுதான் ஏர்செல்-மேக்சிஸ் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக தற்போது எழுந்துள்ள ஒரு பிரச்னை. சிபிஐயின் நம்பகத்தன்மைக்கு விடப்பட்ட சவால்.

ஜனவரி 13ம் தேதி மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் டெல்லி வீட்டில் அமலாக்கத்துறை சோதனையிட்டது. அதில் ஏர்செல் வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்டில் சிபிஐ 2013ம் ஆண்டு தாக்கல் செய்த விசாரணை நிலை அறிக்கையின் ஒரு பகுதி கைப்பற்றப்பட்டதாகவும், அது சிபிஐ தயாரித்த வரைவு விசாரணை அறிக்கையின் ஒரு பகுதி என்றும் பத்திரிக்கைகள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ரகசிய ஆவணமாக கருதப்பட்ட ஒன்று பிரச்னையில் சம்பந்தப்பட்டவரின் வீட்டில் கைப்பற்றப்பட்டது என்ற செய்தி பெரிய அதிர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

இந்த விஷயத்தை தொடர்ந்து படிக்கும் முன், மகாபாரதத்தில் இடம் பெற்றிருக்கும் மாண்டவ்ய ரிஷியின் கதையை படிப்போம்.

மாண்டவ்யர் என்ற ரிஷி இருந்தார். தன்னுடைய ஆசிரம வாசலில் மெளன விரதத்துடன் கூடிய தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது திருடர்கள் சிலரை காவலர்கள் துரத்திக்கொண்டு வந்தனர். அவர்கள் கொள்ளையடித்த பொருட்களோடு மாண்டவ்ய ரிஷியின் ஆசிரமத்தில் ஒளிந்து கொண்டனர். துரத்தி வந்த காவலர்கள் மாண்டவ்ய ரிஷியிடம் திருடர்களைப் பற்றி விசாரித்தனர். மாண்டவ்யர் தவத்தில் இருந்ததால் பதிலேதும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். இதைத் தொடர்ந்து காவலர்கள் ஆசிரமத்தை சோதனையிட்டனர். அங்கு ஒளிந்திருந்த திருடர்களையும், அவர்கள் கொள்ளையடித்த பொருட்களையும் கைப்பற்றினர். அவர்களை அரண்மனைக்கு இழுத்துச் சென்றனர். அப்படியே, வாசலில் அமர்ந்திருந்த மாண்டவ்யரையும் உடன் இழுத்துச் சென்றனர்.

திருடர்கள் கைது செய்யப்பட்ட விஷயம் உடனடியாக அரசனிடம் தெரிவிக்கப்பட்டது. எதையும் யோசிக்காமல் பிடிபட்டவர்களை கழுவில் ஏற்றும்படி உத்திரவிட்டான் அரசன். திருடர்களோடு சேர்த்து மாண்டவ்ய ரிஷியும் கழுவில் ஏற்றப்பட்டார்.

அடுத்த நாள் பொழுது விடிந்தது. திருடர்கள் அனைவரும் இறந்து போனார்கள். ஆனால், மாண்டவ்ய ரிஷி உயிருடன் கழுவில் தொங்கிக்கொண்டிருந்தார். பயந்து போன காவலர்கள் விஷயத்தை அரசனிடம் தெரிவித்தனர். ‘தான் தவறு செய்துவிட்டதை உணர்ந்த அரசன் மாண்டவ்ய ரிஷியிடம் ஓடோடி வந்தான்.

‘கழுவில் ஏற்றிய பிறகும் மெளனத்தை அனுஷ்டித்துக் கொண்டு தவத்திலேயே ஈடுபட்டிருக்கும் உங்களுக்கு பெரிய அநீதி இழைத்துவிட்டேன். தெரியாமல் செய்த தவறுக்கு வருந்துகிறேன். என்னை மன்னிக்க வேண்டும்', என்று வேண்டினான் அரசன்.

மாண்டவ்யர் அரசனிடம் கோபித்துக் கொள்ளவில்லை. ஏனென்றால் அரசன் ஒரு கருவி. அவனை நொந்துகொள்வதில் பயனில்லை', என்று நினைத்தார். உடனடியாக தர்ம தேவதையை அழைத்தார்.

‘தர்ம தேவதையே! இப்படி ஒரு தண்டனையை அனுபவிக்கும் வகையில் நான் என்ன தீங்கு செய்தேன் என்பதை அறிய விரும்புகிறேன்', என்று கேட்டார் மாண்டவ்யர்.

தர்ம தேவதை பதிலளித்தாள்.

‘தவத்தில் சிறந்தவரே! தட்டான் பூச்சியின் மீது முள்ளைக் குத்தி அவற்றை துன்புறுத்தியதால், அதன் பலனை நீங்கள் அனுபவிக்க நேரிட்டது. ஒருவன் கொஞ்சமாக தானம் செய்தாலும், அதன் பலன் அவனுக்குப் பல மடங்காகப் பெருகும். அதே போல், சிறிய பாவத்தைச் செய்தாலும், அது பெரும் துன்பத்தை கொடுக்கும். இது தர்மத்தின் விதி', என்று கூறினாள்.

‘நான் எப்போது இந்த பாவத்தை செய்தேன்?' என்று கேட்டார் மாண்டவ்யர்.

‘நீங்கள் குழந்தைப் பருவத்தில் இருந்த போது செய்தீர்கள்', என்றாள் தர்ம தேவதை.

‘எது தர்மம், எது அதர்மம் என்று அறியாத குழந்தைப் பருவத்தில் செய்த தவறுக்கு நீ கொடுத்த தண்டனை மிகவும் கொடியது. அறியாத குற்றத்திற்குத் தகாத தண்டனையை விதித்ததால், நீ தர்மம் தவறிவிட்டாய். ஆகையால், நீ பூமியில் மனிதனாகப் பிறக்கக் கடவாய்', என்று சாபமிட்டார் மாண்டவ்யர்.

சாபத்தின் பலனாய், திருதிராஷ்டிரனின் தம்பி ‘விதுரராக' அவதரித்தாள் தர்ம தேவதை.

‘செய்த வினையின் பயனை ஒருவன் அனுபவிப்பதற்கு, இன்று முதல் நான் ஒரு விதியை ஏற்படுத்துகிறேன். பதினான்கு வயது அடையும் வரையில் ஒருவன் செய்கிற பாவம் அவனைச் சாராது. அந்த வயதைக் கடந்தவர்கள் செய்யும் பாவம்தான், அதற்கான விளைவுகளைக் கொடுக்கும். இது நான் உலகில் கொண்டு வருகிற விதி', என்று ஒரு புதிய விதியை ஏற்படுத்தினார்.

உலகத்திற்கே ஒரு புதிய விதியை ஏற்படுத்தும் ஞானமும், தவ பலமும் கொண்ட ஒருவரால் தண்டனையிலிருந்து தப்ப முடியவில்லை. செய்தது தவறாக இருந்தால், அது தர்ம தேவதையாக இருந்தாலும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பதை இந்த நிகழ்வு நமக்கு புரிய வைக்கிறது. அதுமட்டுமல்ல, தண்டனை என்பது அதிகாரத்தைப் பொறுத்தோ, தண்டிக்கப்பட வேண்டியவரின் ஞானத்தைப் பொறுத்தோ மாறுவதில்லை. ஆனால், இன்று இந்த நிலையிலா நம் நாடு இருக்கிறது?

இந்தக் கதையில் வரும் காவலர்கள் செய்த தவறு தர்ம தேவதைக்கே தண்டனை பெற்றுத் தந்தது. அதுமட்டுமல்ல எந்த தவறும் செய்யாத மாண்டவ்ய ரிஷிக்கும் தண்டனை பெற்றுத்தந்தது. அதாவது, எந்த குற்றமாக இருந்தாலும், அதை முதலில் அணுகுபவர்கள் காவலர்கள். காவலர்கள் என்பவர்கள் தவறுக்கு உருவம் கொடுத்து, பிறகு அதற்கு உயிர் கொடுக்கும் பிரம்மாக்கள். ஒரு காவலர் செய்யும் தவறு ஒரு வழக்கின் போக்கை திசை திருப்பிவிடும் சக்தி படைத்தது.

சிபிஐ என்பது உயர்ந்தபட்ச விசாரணை ஆணையம். எந்த சிக்கல்களையும் உடைத்து உண்மையை கண்டறியும் ஆற்றலும், கடந்த கால வரலாறும் அதற்கு உண்டு. இன்று நாம் காணும் பத்திரிக்கை செய்திகள் அதன் நம்பகத் தன்மையை அசைத்துப் பார்க்கிறது. இந்த செய்திகள் பொய்யாக இருக்குமானால் நாம் மட்டுமல்ல நீதியின் மீதும் நியாயத்தின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியடைவார்கள்.

அதே நேரத்தில் பத்திரிக்கை செய்தி உண்மையாக இருக்குமானால், நம் நாட்டின் எதிர்காலம் கவலைக்குறியதுதான். நீதியிலும், நேர்மையிலும் நம்பிக்கை கொண்ட நாம் பின்வரும் சில கேள்விகளை நம்மை நாமே கேட்டுக்கொள்ளவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.

சில வருடங்களுக்கு முன் நடந்த ஒரு பெண் சம்பந்தப்பட்ட குற்றத்தில் தமிழக காவல்துறையினர் பலர் சம்பந்தப்பட்டிருப்பதால், வழக்கை தமிழக போலிஸ் விசாரிப்பது சரியாக இருக்காது என்று சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. தற்போது சிபிஐ தவறு செய்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வழக்கை சிபிஐயே விசாரிப்பது சரியாக இருக்குமா?

எதற்கெடுத்தாலும் எங்களுக்கு தமிழ் நாட்டு காவல்துறை மீது நம்பிக்கையில்லை, சிபிஐ விசாரணை வேண்டும்', என்று கேட்கும் நம்ம ஊர் தலைவர்கள் இனி என்ன சொல்லப்போகிறார்கள்?

சிபிஐ தரம்புரண்டது இதுதான் முதல்முறையா? இந்த சந்தேகம் எல்லோர் மனத்திலும் இருக்கிறது. மக்கள் மனத்தில் நம்பிக்கையை விதைக்க அரசு என்ன செய்யப்போகிறது?

கொள்கைகளிலும், அரசியல் சிந்தனைகளிலும் வேறுபட்டு நிற்கும் கட்சிகளையும், அரசியல்வாதிகளையும் போல சிபிஐ-யும் பிரிந்து நிற்கிறதா? ஆட்சிக்கு தகுந்தார்போல காட்சியை மாற்றுகிறதா?

தவறு செய்யும் சிபிஐயை மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கும் அரசை நாம் நம்புவதா வேண்டாமா?

தவறு நடந்தது உண்மையானால், தவறு இந்த வழக்கில் மட்டும் நடந்ததா? என்ற சந்தேகம் மக்கள் மனத்தில் எழத்தானே செய்யும்? சிபிஐக்கு இது அக்னி பரீட்சை. இந்த பரீட்சையில் தன்னை சுத்தப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பை சிபிஐ நழுவவிடக்கூடாது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஏதோ பரபரப்பிற்காக செய்திகளை வெளியிட்டு பிறகு உறங்கச் சென்றுவிடும் பல வழக்குகளைப் போல இந்த வழக்கும் இருந்துவிடக்கூடாது.

நேற்றைய இரவில் நிம்மதியாக தூங்கினோம் என்றால் நாளைய பொழுது விடியும் என்ற நம்பிக்கையில் மட்டுமே. இயற்கையின் மீது நாம் கொண்ட நம்பிக்கையே இத்தகைய பயமில்லா நிலையை நம் மனத்தில் ஏற்படுத்துகிறது. இயற்கையின் மீது எத்தகைய நம்பிக்கை வைத்திருக்கிறோமோ அதே அளவிற்கு சிபிஐயை போன்ற காவல்துறையின் மீதும் நாம் வைத்திருக்கிறோம். இந்த நம்பிக்கைகளுக்கு ஏதாவது ஆபத்து ஏற்படும் போது நம்முடைய அனைத்து செயல்களும் முடங்கிப்போகும். அப்படிப்பட்ட முடங்கிபோகும் நிலையை இயற்கையும், காவல்துறையும் நமக்குத் தராது என்று நம்புவோம். எந்தத் தவறையும் சிபிஐ செய்திருக்காது என்று நம்புவோம்.

கதையில் படித்தபடி, அரசனை மன்னிப்பதற்கோ, தர்ம தேவனை தண்டிப்பதற்கோ நாம் மாண்டவ்ய ரிஷி அல்ல. நாம் சாமானியர்கள். செய்தித்தாள்களில் வரும் செய்திகள் நமக்கு எதைக் காட்டுகிறதோ, அதை மட்டுமே நம்பும் நிலையில் இருக்கிறோம். அதைத் தாண்டி என்ன நடந்திருக்கும் என்பதை நாம் அனுமானிக்கலாம், ஆனால் அது உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. நம்முடைய அனுமானம், நம்மைத் தவிர வேறு யாரையும் கட்டுப்படுத்தாது. ஆகையால் நம்முடைய வேண்டுதல்கள் எல்லாம் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கக்கூடாது என்பதுதான். எது எப்படியோ உண்மை நிலையை மக்கள் உணரும் வகையில் இந்த வழக்கில் புதைந்திருக்கும் உண்மைகள், அதை கையாளும் நிலையில் இருப்பவர்களின் உண்மைத் தன்மை ஆகியவற்றை மக்கள் அறிந்துகொள்வது அவசியம்.

‘ஊரெல்லாம் கவுளி சொல்லுமாம் பல்லி, அது விழுமாம் கழனிப் பானையிலே துள்ளி', என்று ஒரு கிராமத்து பழமொழி நினைவிற்கு வருகிறது. அடுத்தவன் தவறுகளை கண்டுபிடிக்கும் நாட்டின் உயர்ந்த விசாரணை ஆணையம் கழனிப் பானையில் விழுந்துவிட்டது போன்ற உணர்வு நமக்கு ஏற்படுகிறது. நல்லதே நடக்கும்.

- சாது ஸ்ரீராம்
saadhusriram@gmail.com
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2015/11/4/11/w600X390/cbi.jpg http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/feb/13/இது-அக்னிப்-பரீட்சை-ஆட்சிக்கு-தகுந்தார்போல-காட்சியை-மாற்றுகிறதா-சிபிஐ-2862748.html
2860429 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் நான்கு கண்ணில் தோன்றும் ஒற்றை கனவான காதலை கொண்டாடுவோம்!  கார்த்திகா, பவித்ரா, உமா Monday, February 12, 2018 03:27 PM +0530  

காதலர் தினம் தேவை என்று ஒரு சாராரும் தேவையில்லை என்று ஒரு சாராரும் தொடர்ந்து கட்சிகட்டி வாதம் புரிந்தாலும், ஒவ்வொரு வருடம் பிப்ரவரி மாதம் 14 தேதி வாலண்டின்ஸ் டே என்ற காதலர் தினம் காதலர்களுக்கிடையே உற்சாகமாக கொண்டாடப்பட்டுதான் வருகிறது.  காதல் கொண்டாட்டமானது. அது வாழ்விலே ஒரு முறை மட்டும் சுவைத்தவர்கள் உண்டு. காதல் தோல்வியில் துவண்டவர் உள்ளார்கள். ஒரு காதல் போயின் இன்னொரு காதல் என்று தொடர்பவர்களும் உள்ளார்கள். இந்த பிரபஞ்சம், இந்த வாழ்க்கை காதலுக்கானது என்று நம்புகிறவர்கள் உலகெங்கிலும் உள்ளார்கள். அதனால் தான் அழியா முத்திரையாக உலக சரித்தரத்தில் காதலர் தின கொண்டாட்டங்கள் தொடர்ந்து வருகிறது.

பத்திரிகைகள், தொலைக்காட்சி, சினிமா என காதலை ஊடகங்களும் வளர்த்தெடுப்பதில் கணிசமான பங்களிப்பது உண்மை. காதல் காதல் காதல், காதல் போயின் சாதல் சாதல் சாதல் என்று கிட்டத்தட்ட நூற்றாண்டுகளுக்கு முன்னால் சொல்லிச் சென்ற முண்டாசுக் கவிஞனின் வரி இன்றுவரை உயிர்ப்புடன் மட்டுமல்லாமல் உவப்புடன் உள்ளது என்பதை உள்ளத்தில் காதல் சுமந்தவர் அறிவார்.

இந்த ஆண்டு காதலர் தின ஸ்பெஷலாக தினமணி இணையதளம் சில சிறப்புக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. அதன் தொகுப்பு :

 

http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/feb/08/dating-before-love-and-living-together-relationship-before-marriage-2858549--1.html

***

http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/feb/09/life-love-and-death-of-ambai-2859126--1.html

***

http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/feb/12/a-rose-is-a-rose-is-a-rose-valentines-day-rose-special-2862027.html

***

https://goo.gl/tsPrCf

***

http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/feb/09/5-ways-to-handle-love-break-ups-2860398--1.html

***

http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/feb/05/research-results-of-love-lab-2857818.html

***

http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/feb/09/is-this-called-love-2858557--1.html

***

http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/feb/12/valentines-day-banned-2862028.html

***

https://goo.gl/Pg4nbh

***

https://goo.gl/FSfu3T

***

http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/feb/12/10-love-songs-of-ilaiyaraja-on-valentines-day-2862040--1.html

***

http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/feb/12/eternal-love-story-of-old-hindusthan---sassui-punnhun-2862038--1.html

***

]]>
காதல், lovers day, காதலர் தினம், kaathalar thinam http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/9/w600X390/gift-girlfriend.jpg http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/feb/09/valentines-day-special-articles-2860429.html
2862040 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் காதலர் தினத்தில் மறக்க முடியாத இளையராஜாவின் 10 காதல் பாடல்கள்! உமா பார்வதி Monday, February 12, 2018 03:11 PM +0530  

இயற்கை நமக்கு இரண்டு பாதைகளை காட்டுகிறது. ஒன்று வழக்கமான வாழ்க்கை. இன்னொன்று நமக்கேயான வாழ்க்கை. இதில் இரண்டாவது வகை வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தால் அந்த வாழ்க்கையை மேலும் அழகாக்குவது காதல்தான். இந்தக் காலத்தில் (நாமும் இந்தக் காலம்தான் எனினும்) ஒரு குறுஞ்செய்தியில் காதலை வெளிப்படுத்தி, ஒரு மாலையில் சந்தித்து, இன்னொரு இரவின் முடிவில் பல காதல்கள் நீர்த்துப் போவதைப் பார்க்க முடிகிறது. நாங்கள் வாழ்ந்த காலகட்டம் உண்மையிலேயே சந்தோஷமாக, இசைவாக, இசையாக, காதலாக வாழ முடிந்த தொண்ணூறுகள். அதற்கு முக்கிய காரணம் இளையராஜா. எங்கும் இசையாக எப்போதும் மின் அலையாய் பாடல்கள் நமது விரல்நுனியில் இருந்தாலும், அன்றைய நாட்களில் எங்கேயோ எப்போதோ ஒரு பேருந்து நிலையத்தில் தேநீர் நிறுத்தத்தில் ஒலி பெருக்கியில் கேட்ட 'வா வா அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே' மூளைக்குள் ஊடறத்து காலத்தை உறைய வைக்கும் தன்மையுடையதாக இருந்தது.

ஒவ்வொரு மன நிலைக்கும் ஒவ்வொரு பாடல்களை தந்த ராஜா, காதலுக்கு மட்டும் ஆயிரமாயிரம் பாடல்களைத் தந்துள்ளார். எதை கேட்பது எதை விடுப்பது என எண்ணிக்கை வரிசையில் ஒரு பட்டியலில் சுருக்கிவிட முடியாது. காதல் எப்படி ஒரு கடலாக விரிந்திருக்கிறதோ அது போலத் தான் இளையராஜா இசையமைத்துள்ள காதல் பாடல்களும். இந்த பத்துப் பாடல்களை சும்மா ஒப்புக்குத் தான் தந்திருக்கிறேன். இவை முழுக்க முழுக்க எனது சொந்தத் தெரிவுகள். எனது விருப்பப் பட்டியலில் என்றென்றும் நிறைந்திருப்பவை. காதலர் தினத்தில் இந்தப் பாடல்களை பதிவிடுவதன் மூலம் காதலர்களுக்கு இசையால் வாழ்த்துக்களை தெரிவிக்கவே இந்த முயற்சி. அதுவும் நம் காலத்து திரை இசையெனில் என்னைப் பொருத்தவரையில் ராஜா மட்டுமே தான் ‘என்றென்றும் ராஜா’.

1. காதல் ஓவியம் பாடும் காவியம்

எத்தனையோ பாடல்கள் நாம் கேட்டிருப்போம். ஆனால் இளையராஜாவின் இந்தப் பாடல் நம் நினைவுகளை மடைமாற்றம் செய்துவிடும். ஏதோ ஒரு தூர தேச காதல் பிரதேசத்திற்கு பயணம் மேற்கொள்ளச் செய்துவிடும். ஜென்ஸியின் குரல் இதம் இதம் அவ்வளவு மென்மையான இதம் என்பதைத் தவிர வேறென்ன சொல்ல? காதலில் மிதப்பவர்கள், கனவு காண்பவர்கள் இவர்களை இலவசமாக விண்வெளியில் உலா வரச் செய்துவிடும் இந்தப் பாடலை ஒரு முறைக் கேட்போமா? 

2. காதலின் தீபம் ஒன்று

காதலர் தினத்தன்று மட்டுமல்ல, இந்தப் பாடல் காதல் என்று சொல்லும் போதே நினைவிடுக்குகளிலிருந்து விடுபட்டு மேலெழுந்து வந்துவிடும். ஒரு குரல் என்னவெல்லாம் செய்யும் என்பதை இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த பாடகரான எஸ்.பி.பியின் குரல் சொல்லாமல் சொல்லும். கண்களை மூடிக் கொண்டு இந்தப் பாடலை கேட்கலாம், அல்லது கண்களைத் திறந்து காட்சிகளை ரசித்தபடியும் பார்க்கலாம். எது செய்தாலும் அது இக்கணத்தை பொற்கணமாக மாற்றச் செய்துவிடும்.

3. விழியிலே மணி விழியிலே

தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு என இந்தப் பாடலை இசைஞானியின் அபார இசையில் கேட்கலாம். இசைக்கு மொழி தேவையில்லை என்பதை 'ஜானே தூனா' கேட்கும் போது உணர்வோம். போலவே 'சங்கத்தில் பாடாத கவிதை' என்ற பாடலைக் கேட்கும் போதும் தோன்றும் உணர்வு, 'தும்பி வா தும்பக்குடத்தில்’ கேட்கும் போதும் பன்மடங்காகும். நல்ல பாடல்களை நாம் ரசிக்கும் போது மொழி ஒருபோதும் தடையாக இருப்பதில்லை என்பதற்கு இந்தப் பாடலே சான்று.  

4. வளையோசை கலகலவென

இதுவரை காதலிக்காதவர்களைக் கூட இந்தப் பாடல் காதலிக்கச் செய்துவிடும். காதல் பற்றிய எதிர்ப்புணர்வை உடையவர்களை குற்றவுணர்வுக்குள்ளாகி விடும் தன்மையுடையது இப்பாடல். கவிதை எழுதத் தெரியாதவர்களையும் ஒருசில வரிகளை எழுதச் செய்துவிடும். இந்த இசை, அதன் காலகட்டம், இதில் நடித்துள்ள கமல் ஹாசன் மற்றும் அமலா, இசைஞானி என்று அந்த மாய உலகத்தை மீட்டுறுவாக்கம் செய்ய முடியாதா என்று ஏங்கச் செய்துவிடும் இப்பாடல். எங்கள் வாழ்க்கை எங்கள் வளம் மங்காத ராஜாவின் இசையென சங்கே முழங்கு என்று பித்தேறச் செய்துவிடும். என்னுடைய விருப்பப் பட்டியில் நீங்கா இடம் பிடித்த இந்த வளையோசையை ஒருபோதும் காதலர்களால் மறுக்க முடியாது.

5. பூந்தளிர் ஆட..

காதல் ஒருவர் மனத்தினுள் நுழைய அனுமதி கேட்பதில்லை. அது வரும் நேரத்தில், பருவத்தில் சரியாக வந்துவிடும். அதன் மெல்லிய சப்தத்தைக் கேட்கத் தெரியாதவர்கள் வாழ்வில் எதோவொன்றை இழந்தவர்களாகிறார்கள். பதின் பருவத்தில் தோன்றும் இனக் கவர்ச்சியல்ல காதல். அது வாழ்நாள் முழுவதும் தொடரும் அனுபந்தத்திற்கான கீதம். இந்தப்  பாடல் எனக்குப் பிடித்த காரணம் இதில் என் பெயர் உச்சரிக்கப்படுவதினாலும் கூட இருக்கலாம்.

6. நீ தானே என் பொன் வசந்தம்

ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இது. இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் மனத்துக்குள்ளிருந்து ஏதோ ஒரு நீறூற்றி வண்ணமயமாக நம் மூளை வரைத் தெறிக்கும். ரசனைக்குள் மூழ்கி, ரசனையில் நனைந்து, ரசனையில் காய்ந்து, என ரசித்து வாழும் காதலர்கள் இந்தப் பாடலைக் கேட்கும் போது ஒவ்வொரு வரியையும் உண்மை என உணர்வார்கள்.  பாடும் நிலா பாலுவின் உற்சாகக் குரலில் நினைவெல்லாம் நித்யாவிலிருந்து நம் நினைவெல்லாம் நிறைத்த பாடலிது. 

7. சுந்தரி கண்ணால் ஒரு சேதி

உறக்கத்துக்குள்ளும் ஒலிக்க முடிகின்ற பாடல் எனக்கிது. 'நான் உனை நீங்க மாட்டேன், நீங்கினால் தூங்க மாட்டேன்’ இந்த வரியும் அது தரும் நினைவுகளும் காதலிப்பவர்களின் இதயத்தில் பொன் எழுத்துக்களால் கல்வெட்டாக பதிந்துவிட்டவை. இதன் காட்சியமைப்பும், மென் சோகமும், பிரிவுத் துயரும் காதலை காவியமாக்குகிறது. காவியத்தை வாழ்க்கையாக்குகிறது. காதலின் ஆழத்தை உணர முடியுமெனில் அது இப்பாடலைக் கேட்பதன் மூலம் நிகழும்.

8. ராஜ ராஜ சோழன் நான்

மழைத் தூறலில் நின்று கொண்டு, கையில் ஆவி பறக்கும் ஒரு சூடான காப்பி கோப்பையை வைத்துக் கொண்டு இளையராஜாவின் இந்தப் பாடலை ஒரு முறையேனும் கேட்டிருப்பீர்கள் எனில், நீங்கள் சொர்க்கத்துக்குள் காலடியெடுத்தவராக உணர்ந்திருப்பீர்கள். இசையும், அந்தப் பாடல் வரிகளும் இயைந்து மெய்சிலிர்க்கச் செய்யும் அற்புத அனுபவத்தை அள்ளித் தரும் பாடலிது. காதலின் சுவை அறிந்தவர்களுக்குத் திகட்ட திகட்ட பாடல்களை தந்தவர் ராஜா. ராஜ ராஜ சோழன் இசைக் காதலர்களுக்கு அவர்தான் என்பதை சொல்லவும் வேண்டுமா?

9. மணியே மணிக்குயிலே மாலை இளம்

இந்தப் பாடலின் இடையே ராஜா ஒரு சிரிப்பு சிரிப்பார். பாடலை அதன் வரிகளை அந்தச் சூழலை கேட்கும் நம்மை என அனைத்துமே தட்டாமாலை சுழல்வது போலச் சுழலும். நம்மை வேறாக்கி விடும் வல்லமை ஒருவருக்கு உண்டெனில் அது காதலுக்கும், இசைக்கும் மட்டுமே சாத்தியம். அவ்வகையில் இந்தப் பாடல் உன்னதமான ஒரு உணர்வை உயிருக்குள் ஊட்டும். கேளுங்கள்.

10. கொடியிலே மல்லிகைப்பூ....

இந்தப்  பாடலைக் கேட்கும் போதெல்லாம் மெல்லிய கோடாக உங்கள் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடினால், அதே சமயத்தில் சன்னமாக உங்கள் இதழோரம் புன்னகையும் அரும்பினால், நீங்கள் காதலிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம். அவ்வகையில் அசீர்வதிக்கவும் பட்டுள்ளீர்கள். ஒரு தேவதையாக உங்களை உணரச் செய்ய வல்லது காதல் எனில், அதை எடுப்பதா கொடுப்பதா என்பது போராட்டமே. எந்த அளவுக்கு கொடுக்கிறோமோ அந்த அளவுக்கு பெற முடிந்த அன்பின் பேரமுதம் காதல் மட்டும்தானே?

நன்றி : இசைஞானி இளையராஜா / ராஜ் விடியோ விஷன் / யூ ட்யூப்

]]>
இளையராஜா, Ilaiyaraja, Raja, இசைஞானி, raja love songs, காதல் பாடல்கள் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/12/w600X390/raja.jpg http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/feb/12/10-love-songs-of-ilaiyaraja-on-valentines-day-2862040.html
2862027 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் காதல் ரோஜாவே! காதலிக்கு நீங்கள் தரும் ரோஜாவின் பயணம் எங்கிருந்து தொடங்குகிறது தெரியுமா? சினேகா Monday, February 12, 2018 11:59 AM +0530  

காதல் மீண்டும் மீண்டும் சொன்னாலும் சலிக்காது இந்த வார்த்தை! காரணம் காதல் அலுக்காத விஷயமாயிற்றே. அதைப் பற்றி எந்தவொரு விஷயத்தை தெரிந்து கொள்ளும் போதெல்லாம் ஆர்வமேற்படும். முதல் காதல், திருமணத்தில் முடிந்த காதல், அல்லது நமக்குத் தெரிந்தவர்களின் காதல் என காதல் நம்மைச் சுற்றி கண்ணுக்குத் தெரியாத ஒரு வட்டம் போலச் சுழன்று கொண்டிருக்கிறது. வாழ்வின் இனிமையான பக்கம் எதுவென்றால் அது இளமையும் காதலும் என்று கண்ணை மூடிச் சொல்லலாம். வாயை மூடிக் கொண்டு பேசச் செய்வது காதலன்றி வேறென்ன? 

1537-ம் ஆண்டு இங்கிலாந்து மன்னர் 7-, ஹென்றி, செயிண்ட் வேலண்டைன் நினைவாக பிப்ரவரி 14-ம் தேதியை வேலண்டைன் தினமாக அறிவித்தார். அன்றிலிருந்து தொடர்ந்து ஆண்டாண்டு காலமாக காதலர்கள் தினம் உலகெங்கிலும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. மதம், இனம், மொழி என பாகுபாடின்றி உலகக் காதலர்கள் அனைவராலும் கொண்டாடப்படும் ஒரே பண்டிகை இது.

காதலர் தினக் கொண்டாட்டம் என்றாலே உடனடியாக நம் நினைவுக்கு வருவது சிவப்பு ரோஜாக்கள்தாம். ரோஜா மலருக்கு காதலர்கள் மத்தியில் எப்போதும் தனி ஈர்ப்பு உண்டு. இந்த ரோஜாக்களை உற்பத்தி செய்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் ஒசூர் விவசாயிகளின் பங்கு முக்கியமானது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் ரோஜா மலர்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருவதுடன், ஆண்டுதோறும் காதலர் தினத்தை முன்னிட்டு வெளிநாடுகளுக்கு கோடிக் கணக்கில் ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ஒசூரில் நிலவும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை, அரசு வழங்கும் மானிய விலையில் பசுமைக் குடில் மற்றும் அரசு வழங்கும் 100 சதவீத சொட்டுநீர்ப் பாசன வசதிகளைப் பயன்படுத்தி ரோஜாக்களை உற்பத்தி செய்கின்றனர்.

ஒசூர் அருகே பாகலூர், தளி, தேன்கனிக்கோட்டை மற்றும் சுற்றுப் பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ரோஜா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஓர் ஏக்கரில் 50,,000 ரோஜாக்கள் கிடைக்கும்.

ரோஜா மலர்களை பல வண்ணங்களில் உற்பத்தி செய்தாலும், காதலர்களுக்கு மிகவும் விருப்பமானது சிவப்பு ரோஜாக்கள்தாம். தாஜ்மஹால் ரகமான இதனை காதலர்கள் விரும்பி வாங்கும் மலராக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த ரகத்துக்கு கூடுதல் விலை கிடைத்து வருகிறது.

குறிப்பாக நோப்லஸ், கோல்டு ஸ்ட்ரைக், கார்வெட்டி, தாஜ்மகால், பீச் அவலஞ்ச், டி.ஏ. என்ற பலவிதவிதமான ரோஜாக்கள் இப்பகுதிகளில் விளைவிக்கப்படுகின்றன. 

இந்த ரோஜாக்கள் தோட்டத்தில் இருந்து பறிக்கப்பட்ட பின்னர், குளிர்பதனக் கிடங்கில் 2 நாள்கள் வைத்து பாதுகாக்கப்பட்டு, பின்னர் பெங்களுரு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலம் ஜரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அரபு நாடுகள் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கும், உள்நாட்டில் சென்னை, கேரளம், தில்லி, ஹைதராபாத், மும்பை போன்ற பெருநகரங்களுக்கும் ஆண்டுதோறும் அனுப்பப்படுகின்றன.

சில ஆண்டுகளுக்கு முன் வரை, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஒசூர் பகுதி ரோஜாக்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், தற்போது சீனா- இந்தியாவுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளதால், நமக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக, இப் பகுதி ரோஜா உற்பத்தியாளர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

ஆயினும் இந்தாண்டு, 2 கோடி ரோஜாக்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டு இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

வெளிநாட்டுச் சந்தையில், தாஜ் மகால் மற்றும் கிட்டம் வண்ணத்துடன் காணப்படும் பீச் அவலஞ்ச் என்ற ரோஜா மலருக்கு கடந்த சில ஆண்டுகளாக பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

தமிழக அரசு மலர் உற்பத்தியாளர்களுக்கு, தோட்டக்கலைத் துறை மூலம் அளித்து வரும் மானியங்கள் ரோஜா உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருந்து வருகிறது என விவசாயிகள் தெரிவித்தனர்.

பிப்ரவரி 14-ம் தேதி கொண்டாடப்படும் காதலர் தினத்துக்காக பிப். 6-ஆம் தேதி முதல் ஏற்றுமதியைத் தொடக்கியுள்ளனர் ஏற்றுமதியாளர்கள். இந்தாண்டு ஒசூர் பகுதியிலிருந்து சர்வதேச சந்தைகளுக்கு 2 கோடி ரோஜா வரை ஏற்றுமதி செய்துள்ளனர்.

]]>
Valentines Day, காதலர் தினம், rose Day, 7 feb rose day, ரோஜா தினம், காதல் ரோஜாவே http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/12/w600X390/red-roses-4114x2631-petals-hd-4k-6007_1.jpg http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/feb/12/a-rose-is-a-rose-is-a-rose-valentines-day-rose-special-2862027.html
2862028 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் காதலுக்குத் தடையா? ராக்கி DIN Monday, February 12, 2018 11:49 AM +0530 தமிழர்களின் கலாசாரத்துக்கு எதிரான காதலர் தின கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலர் ஜெ. சுவாமிநாதன் வெளியிட்ட அறிக்கை: ஐரோப்பிய நாட்டில் பிறந்த வாலன்டைன் இறந்த நாளான பிப்ரவரி. 14-ஆம் தேதியை அந்த நாட்டிலுள்ள சிறு பிரிவினர் காதலர் தினமாக கொண்டாடினர். தமிழகத்திலும் கடந்த சில ஆண்டுகளாக இந்த நிகழ்வு அரங்கேற்றப்பட்டு வருகிறது. இது நமது தேசத்தின் அடிப்படையையே கொச்சைப்படுத்துவதாகும். இந்து மதமும், இந்து மக்கள் கட்சியும் காதலுக்கும், காதலர்களுக்கும் என்றைக்கும் எதிரானவர்கள் அல்ல.

நமது புராணங்கள், இதிகாசங்களில் காதலின் புனிதம் போற்றப்பட்டுள்ளது. தமிழர்களின் இல்லற வாழ்க்கையை அற்புதமாக எடுத்துரைக்கும் அகநானூறு போன்ற பல காப்பியங்கள் நம்மிடையே உள்ளன. நாட்டின் பண்பாட்டையும், கலாசாரத்தையும் பாதிக்காத கொண்டாட்டங்களையோ, பழக்க வழக்கங்களையோ நாம் ஏற்றுக்கொள்ள ஒரு போதும் தயங்கியதில்லை. ஆனால், தேச விரோத, பண்பாட்டு சீரழிவுக்கான நிகழ்வாக காதலர் தினம் உள்ளது.

பிப்ரவரி 14-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள சுற்றுலாத்தலங்கள், கோயில்கள், பூங்காக்கள், கடற்கரை போன்ற இடங்களில் காதலர் தினம் என்ற பெயரில் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் உணவகங்களில் காதலர் தின கொண்டாட்டங்கள் என்ற பெயரில் ஜோடியாக வருபவர்களுக்கு இலவசமாக மது வழங்கப்படும் என்று கவர்ச்சி அறிவிப்புகள் வெளியிட்டு ஏற்பாடு செய்யப்படும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும். பொது இடங்களில் மக்களுக்கு இடையூறாக நடைபெறும் ஆபாச காதலர் தின கொண்டாட்டங்களை தமிழக அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும் என அந்த அறிக்கையில் இந்து மக்கள் கட்சி வலியுறுத்துகிறது .

]]>
valentines day, காதலர் தினம், தடை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/12/w600X390/LIR-boundaries.png http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/feb/12/valentines-day-banned-2862028.html
2862021 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் பிரதமரின் லாஜிக் இல்லாத பேச்சு: தோல்வியை மறைக்க முடியாமல் தடுமாறுகிறதா ஆளும் கட்சி? சுதாகரன் ஈஸ்வரன் DIN Monday, February 12, 2018 11:08 AM +0530  

ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவித்து, பிரதமர் நரேந்திர மோடி புதன் கிழமை அன்று 90 நிமிடங்கள் மிகவும் ஆவேசமாக பேசினார். இதில் கவனிக்கப்பட வேண்டியது அவர் காங்கிரஸ் கட்சியை குறை கூறிய விதம். 90 நிமிட உரையில் தன்னுடைய அரசின் செயல்பாடுகளை பற்றி பேசியதை விட, முந்தைய காங்கிரஸ் அரசுகளை அதிகமாக வசை பாடினார். 

பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு பல அம்சங்களை உள்ளடக்கியது. கடந்த வாரம் இரு அவைகளிலும் பிரதமர் மோடி உரையாற்றினார். மக்களவையில் பேசிய அவர் “பண்டிட் நேரு மற்றும் காங்கிரஸ் கட்சியால் இந்தியாவிற்கு ஜனநாயகம் கிடைத்தது எனத் தலைவர்கள் எப்படிச் சொல்ல முடியும்? இது தான் இந்தியாவின் வரலாற்றைப் படித்ததா? இது என்ன அகந்தை?” என்று காங்கிரஸ் கட்சியை நோக்கி கேள்வி எழுப்பினார். மேலும் முந்தைய காங்கிரஸ் அரசுகளின் தவறான செயல்பாடுகள், காஷ்மீர் பிரச்சினை, ஆந்திரா பிரிவினை, போபர்ஸ், செயல்படாத சொத்துகள் மற்றும் காங்கிரஸ் ஆட்சியின்போது சீனா பிரச்னையின் மீதான நிலைப்பாடு போன்றவற்றை முன்னிறுத்தி பேசினார். 

மாநிலங்களவையில் காங்கிரஸின் அவசரநிலை, சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை, பழைய இந்தியா, இந்திரா காந்தியின் இறப்புக்கு பின்னர் இராஜீவ் காந்தியின் பேச்சு, காங்கிரஸ் இல்லாத இந்தியா, அரசின் திட்டங்களின் பெயர் மாற்ற சர்ச்சை உள்ளிட்டவற்றை முன்னிலைப்படுத்தினார். இரு அவைகளிலும் அவர் எதிர்கட்சிகளை வசை பாடுவதில் ஆர்வம் காட்டினார். ஆனால் பிரதமராக அவர் மக்களுக்கு ஆற்ற வேண்டியது சொற்பொழிவல்ல; சேவை தான் என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்.

பிரதம வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்ட போது இருந்த பேச்சுத்திறமை இன்று வரை தொடர்கிறது. 2014 தேர்தல் காலங்களில் இருந்த பாரதீய ஜனதா கட்சியின் ஊடகப்பிரிவும் செய்திப்பிரிவும் இன்றும் மிகவும் வலுவாக உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் அன்று தான் எதிர்க்கட்சி; இன்று ஆளும் கட்சி என்பதை உணர மறுக்கின்றது மோடி அரசு. ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் எதிர்கட்சிகளை நோக்கி கேள்வி எழுப்புவதையே வாடிக்கையாக கொண்டு வருகிறது மத்திய அரசு.

50 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டது. எங்களுக்கு ஒரு முறை வாய்ப்பளித்து பாருங்கள். ஆறு மாதங்களில் மாற்றிக்காட்டுவோம் என்று 2014 தேர்தலின் போது கூக்குரலிட்டது இன்றைய ஆளும் அரசு. வளர்ச்சியின் நாயகனாக தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக களம் இறங்கினார். மோடியின் கடின உழைப்பு, சிறந்த பேச்சாற்றல், பாரதீய ஜனதா கட்சியின் வலுவான சமூக ஊடகப்பிரிவு போன்ற பல காரணங்களால் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 31% மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களித்து ஆட்சியில் அமர வைத்தனர்.

கிட்டத்தட்ட 4 ஆண்டு கால ஆட்சியில் அவர்களின் செயல்பாடு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. வளர்ச்சியின் நாயகனாக சித்தரிக்கப்பட்ட மோடியின் இந்த ஆட்சியில் வளர்ச்சி என்பது சமூகத்தில் ஏழை, நடுத்தர மக்களுக்கு சென்றடையவில்லை என்பதே நிதர்சனம். புதிய வேலைவாய்ப்பு, புதிய தொழில் தொடங்க ஏற்ற சூழ்நிலை மற்றும் விவசாயத்தை மேம்படுத்த சிறப்பு ஏற்பாடுகள் என முக்கிய பிரச்னைகள் எதிலும் போதிய நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டதாக சாமானியனின் பார்வைக்கு தென்படவில்லை.

குஜராத் மாதிரி என குஜராத் மாநில வளர்ச்சி முன்னிறுத்தப்பட்டு மோடி ஆட்சிக்கு வந்தார். அன்று முதல் இன்று வரை பெரும்பாலான மனித வள மேம்பாடு குறியீடுகளில் தமிழ்நாடு குஜராத்தை விட மேம்பட்டிருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று. ஆனால் திராவிட கட்சிகளால் தமிழ்நாடு சீரழிந்துவிட்டதாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வளர்ச்சியின் நாயகன் மோடி ஆட்சி செய்த குஜராத்தை விட திராவிட கட்சிகள் ஆட்சி செய்த தமிழ்நாடு பல துறைகளில் மேம்பட்டு இருக்கும் இந்த முரண்பாட்டிற்கு இது வரை பாரதீய ஜனதா கட்சியிடம் இருந்து தெளிவான பதில் இல்லை.

மோடி ஆட்சியை பிடிக்க முக்கிய காரணங்களில் ஒன்று ஊழல் குற்றச்சாட்டுகள். காங்கிரஸ் ஆட்சியில் அலைக்கற்றை, நிலக்கரி உள்ளிட்டவற்றில் இமாலய ஊழல் செய்ததாக சொல்லி வாக்கு கேட்டு 31% மக்களின் ஆதரவோடு ஆட்சியை பிடித்தது. கடந்த ஆட்சியில் அலைக்கற்றை, நிலக்கரி ஊழல் குற்றச்சாட்டுகளை வெளிகொண்டுவந்தது Comptroller and Auditor General (CAG) அமைப்பு. இன்று ஊழல் நடைபெறவில்லை என்பதை விட அதை வெளி உலகிற்கு காட்டும் CAG போன்ற அமைப்புகள் இருக்கும் இடம் தெரியவில்லை என்பது வருத்தப்படக்கூடிய ஒன்று.

இன்றைய மத்திய அரசின் செயல்பாடுகள் காங்கிரஸ் கட்சி மீது அனுதாபத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்க ஒன்று. இதை உணராமல் தான் ஆளும் கட்சி என்பதை மறந்து எதிர்க்கட்சிகள் போல வெறும் பேச்சில் மட்டுமே தீவிரமாக செயல்பட்டு வருகிறது ஆளும் கட்சி. பாரதீய ஜனதா கட்சிக்கு வாக்களித்தது “நல்ல ஆட்சியை கொடுக்கவே; காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகளை குறை கூற அல்ல” என்பதை அக்கட்சி உணர்வது இன்றைய காலத்தின் கட்டாயம். 

தனது பேச்சில் அடுத்த தேர்தலுக்கான பிரச்சார உத்தியை தொடங்கிய பிரதமர் மக்களின் அன்றாட பிரச்னைகளுக்கு பதில் சொல்லாதது பெருத்த ஏமாற்றமாகவே பார்க்கப்படுகிறது. அண்மைக் காலங்களில் இந்திய அரசியலில் மிகவும் திறமையான பேச்சாளர் பிரதமர் மோடி என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஆனால் செயல்களை செய்யாமல் வெறுமனே உரக்க பேசினால் மீண்டும் ஆட்சி என்பது பகல் கனவாகவே இருக்கும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/7/w600X390/modi.jpg http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/feb/12/பிரதமரின்-லாஜிக்-இல்லாத-பேச்சு-தோல்வியை-மறைக்க-முடியாமல்-தடுமாறுகிறதா-ஆளும்-கட்சி-2862021.html
2861016 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் மாவீரன் மதன்லால் திங்ரா: இந்திய சுதந்திர போராட்டத்திற்காக நிகழ்த்தப்பட்ட முதல் படுகொலை -சாது ஸ்ரீராம் Saturday, February 10, 2018 05:30 PM +0530 யார் இந்த மதன்லால் திங்ரா? பஞ்சாப் மாநிலத்தில் 1883ம் ஆண்டு பிப்ரவரி 8ம் நாள் பிறந்தவன். இந்திய சுதந்திர போராட்டத்தில் தீவிரவாதத்தை ஏற்றுக்கொண்டவன்.

இந்திய சுதந்திர போராட்டத்திற்காக நிகழ்த்தப்பட்ட முதல் படுகொலை ஆங்கிலேயன் கர்சான் வைலி'யுடையது. லண்டனில் இருந்த இந்திய மந்திரியின் வலதுகரமாக செயல்பட்டவன் கர்சன் வைலி. இந்த தீரச்செயலை நிகழ்த்தியது மதன்லால் திங்ரா. ஆங்கிலேயர்கள் மனத்தில் அச்சத்தை ஏற்படுத்திய மாவீரன்.

திங்ராவிற்கு அப்போது வயது 22. இந்தியாவில் இருந்தபோது ஒரு நிறுவனத்தில் குமாஸ்தாவாக பணிபுரிந்தான். சில காலம் ‘டோங்கா' என்று அழைக்கப்படும் பயணிகள் வண்டியை இழுக்கும் பணியை செய்தான். சிறிது காலத்திற்குப் பிறகு ஒரு நிறுவனத்தில் சாதாரண தொழிலாளியாக பணியாற்றினான். அந்த நிறுவனத்தில் தொழிற்சங்கம் ஒன்றை அமைக்க முயற்சித்த போது நிறுவனத்தைவிட்டு வெளியேற்றப்பட்டான். திங்ரா எந்த வேலையாக இருந்தாலும் தன்மானம் பார்க்கமல் செய்வான். நேர்மை மீதும், தேசத்தின் மீதும் அபார நம்பிக்கை கொண்டவன். திங்ரா வேலை இழந்ததும் அவருடைய அண்ணன் வருத்தமடைந்தார். இனி திங்ராவிற்கு இந்தியா ஒத்துவராது', என்று நினைத்தார். மேல் படிப்பிற்காக லண்டனுக்கு அனுப்பினார். அங்கு மெக்கானிக்கல் இன்ஜியரிங் படிப்பில் சேர்ந்தான் திங்ரா. இதற்காக ஆகும் செலவை அவர் அண்ணனும், சில தேசபக்தர்களும் ஏற்றுக் கொண்டார்கள்.

லண்டனில் சாவர்கர் ஏற்படுத்திய ஃப்ரி இந்தியா சொஸைட்டியிலும், ரகசிய இயக்கமான அபிநவ் பாரத் இயக்கத்திலும் சேர்ந்தான் திங்ரா. சாவர்க்கர், வ.வே.சு ஐயர், ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா போன்றவர்களுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தான். லண்டனில் செயல்பட்டுவந்த ‘இந்தியா ஹவுஸிலும்' உறுப்பினர். திங்ராவை சாவர்க்கருக்கும் மிகவும் பிடிக்கும். திங்ராவின் தேசபக்தியும், வேகமும், சாவர்க்கரை ஆச்சர்யப்பட வைத்தது. நாட்கள் செல்லச் செல்ல திங்ராவிற்கு பயங்கரவாதத்தில் நாட்டம் அதிகமானது. லண்டனில் ஆயுதப்பயிற்சி சாலை ஒன்றில் சேர்ந்து தீவிர பயிற்சி பெற்றான். துப்பாக்கியை கையாள்வதில் தேர்ச்சி பெற்றான். திங்ராவிற்கு வாய்ப்பந்தல் போடும் ஆசாமிகளை பிடிக்காது. எந்த விஷயமாக இருந்தாலும், பேச்சைவிட செயலே அவசியம் என்று வாதிப்பான்.

1905 - ம் வருட லார்ட் கர்ஸன் செய்த வங்கப் பிரிவினை சரித்திரத்தில் ஒரு முக்கியமான நிகழ்வு. பிரிட்டிஷ் வைசிராய் லார்ட் கர்ஸ்ன் வங்காளத்தை இரண்டாகப் பிரித்தார். முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியை கிழக்கு வங்காளம் என்றும், இந்துக்கள் வசிக்கும் பகுதியை மேற்கு வங்காளம் என்றும் பிரித்தார். இந்து - முஸ்லிம் வேற்றுமையை இது மேலும் அதிகப்படுத்தியது. இந்திய மக்களை மதத்தின் அடிப்படையில் பிரித்து அதில் குளிர்காய்ந்தது ஆங்கிலேய அரசு. இதை எதிர்த்து பல இடங்களில் கிளர்ச்சி நடைபெற்றது. 1909-ம் ஆண்டு, லார்ட் கர்ஸன் லண்டனுக்கு வந்தார். இது சரியான தருணம். கர்ஸனை கொன்று பிரிட்டிஷ் அரசுக்கு நமது எதிர்ப்பை காட்டவேண்டும் என்று நினைத்தான் மதன்லால் திங்ரா. ஆனால், கர்ஸனை நெருங்க முடியவில்லை. பாதுகாப்பு பலமாக இருந்தது. லார்ட் மார்லி'யின் பக்கம் தனது பார்வையைத் திருப்பினான் திங்ரா. அவரையும் நெருங்க முடியவில்லை. கடைசியாக கர்சான் வைலி'யை கொல்வது என்று முடிவு செய்தான். இந்தியாவிற்கான மந்திரிக்கு வலதுகரமாக இருந்தவன் ‘கர்சான் வைலி'. தனது திட்டத்தை வ.வே.சு ஐயர் மற்றும் சாவர்க்கரிடம் சொல்லி அவர்களின் ஆசியைப் பெற்றான்.

ஜுலை 1, 1909 அன்று லண்டனில் ‘இந்தியன் நேஷனல் அசோசியேஷன்' வருடாந்திர கொண்டாட்டத்திற்கு சர் கர்சன் வைலி தனது மனைவியுடன் வந்திருந்தார். அந்தக் கூட்டத்தில் இந்தியர்களும், ஆங்கிலேயர்களும் கலந்து கொண்டனர். விழா முடிந்து கர்சன் வைலி தன் மனைவியுடன் கூட்ட அரங்கைவிட்டு வெளியே வந்து கொண்டிருந்தார். அப்போது மணி இரவு 11.20. கர்சன் வைலியை நெருங்கினான் திங்ரா. அவரிடம் ஏதோ சொல்ல முற்பட்டான். திங்ராவின் பேச்சைக் கேட்க அவரும் குனிந்தார். தன் வலதுபுற கோட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து ஐந்து முறை கர்சன் வைலி யின் முகத்தை நோக்கி சுட்டான். நான்கு குண்டுகள் முகத்தில் பாய்ந்தது. பக்கத்தில் நின்றிருந்த கவாஸ்ஜி லால்காகா என்ற டாக்டர், பார்ஸி இனத்தைச் சேர்ந்தவர், பாய்ந்து வந்து திங்ராவை தடுக்க முயற்சித்தார். அவரின் மீது இரண்டு குண்டுகள் பாய்ந்தன. இரண்டு பேரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். திங்ரா தப்பி ஓடவில்லை. துப்பாக்கியை கையில் பிடித்தவரே அப்படியே நின்றான். பிரிட்டிஷ் அரசு ஸ்தம்பித்துப் போனது. இருபதாம் நூற்றாண்டில், இந்திய சுதந்திரத்திற்காக செய்யப்பட்ட முதல் கொலை அது. அது நாள்வரை சுதந்திரமாக சுற்றித் திரிந்த பிரிட்டிஷ் அதிகாரிகள், முதல்முறையாக தங்கள் பாதுகாப்பைப் பற்றி நினைக்கத் தொடங்கினர்.

கர்சன் வைலியை சுட்டவுடன் அங்கிருந்த போலீஸ் திங்ராவை கீழேதள்ளி படுக்க வைத்தது. இதில் அவனுடைய கண்ணாடி கீழே விழுந்தது. போலீஸ் அவனிடமிருந்த துப்பாக்கியை பிடுங்கியது. கைகளை பின்புறமாக மடக்கி, அவனைத் தூக்கி நிறுத்தியது. திங்ரா என்ன பேசப்போகிறான் என்று எல்லோரும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர். முகத்தில் எந்த சலனமும் இல்லாமல், ‘என்னுடைய கண்ணாடியைக் கொடுங்கள்', என்றான். கண்ணாடியை வாங்கி அணிந்து கொண்டு அமைதியாக நின்றான். டாக்டர்கள் அவனுடைய நாடித் துடிப்பை பரிசோதித்தார்கள். அவனிடம் எந்த பதட்டமும் காணப்படவில்லை.

‘உன்னை கைது செய்கிறோம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்கள் யாருக்காவது தெரிவிக்க வேண்டுமா?', என்று கேட்டார் ஒரு போலீஸ் அதிகாரி.

‘தேவையில்லை. என்னுடைய கைது பற்றி நாளைய செய்தித்தாளை படித்து அவர்கள் தெரிந்து கொள்வார்கள்', என்றான் அமைதியாக. காவல்துறை அவனை வால்டன் ஸ்டிரீட் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இந்தியர்களின் வீரத்தை வெளிக்காட்ட வேண்டும் என்று சொன்ன சாவர்க்கரும், வ.வே.சு ஐயரும் திங்ரா பிடிபட்டதை எண்ணி மிகவும் வேதனைப்பட்டார்கள். உடனே வ.வே.சு ஐயரும், டாக்டர் ராஜனும் சிறைச்சாலைக்கு சென்று, திங்ராவை சந்தித்தனர். வழக்கறிஞர் ஒருவரை வைத்து வாதிடலாம் என்று அவர்கள் சொன்னார்கள். திங்ரா அதை மறுத்துவிட்டான். ‘இந்த காரியத்தில் இறங்குமுன், விளைவுகளை தெரிந்துகொண்டுதான் இறங்கினேன். இனி தேசத்திற்காக உயிரை விடும் நாளை மட்டுமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்', என்றான் திங்ரா

இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஜுலை 3-ம் தேதி லண்டனில் கர்சன் வைலி கொலையைக் கண்டித்து ஒரு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள். திங்ராவின் செயலை கண்டிப்பதன் மூலம், ஆங்கிலேயர்களிடம் நெருக்கத்தை வளர்த்துக் கொள்ளலாம் என்பது அவர்களின் நினைப்பு. திங்ராவின் தந்தை தன் மகனின் செயலை கண்டித்து, ‘அவனை மகனாகப் பெற்றதற்கு வெட்கப்படுகிறேன்', என்று ஒரு தந்தி அனுப்பியிருந்தார். வெள்ளையர்கள், உளவாளிகள், இந்தியாவில் பணியாற்றி ஓய்வூதியம் பெறும் அதிகாரிகள் என்று பலரும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஒவ்வொருவரும் திங்ராவை தங்கள் பங்குக்கு திட்டித் தீர்த்தனர். இந்திய தேசிய காங்கிரஸிலிருந்தும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். காங்கிரஸின் ஆங்கிலேய ஆதரவு முகம் அந்தக் கூட்டத்தில் வெளிப்படையாகவே தெரிந்தது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு குணம் உண்டு. தங்களைத் தவிர மற்றவர்களின் வளர்ச்சியோ, மற்றவர்களுக்கு பெருமையோ போய்ச்சேர்ந்தால் அவர்களுக்குப் பிடிக்காது. இதுதான் சரியான தருணம் என்று காங்கிரஸ் சார்பில் கலந்து கொண்ட தலைவர்கள் சுரேந்திர நாத் பானர்ஜி, பிபின் சந்திர பால், காப்ர்டே, பவநகரி ஆகியோர் திங்ராவின் செயலை கண்டித்தனர். அவர்களில் ஆத்திரத்தோடும், ஆக்ரோஷத்தோடும் பேசியவர் பிபின் சந்திர பால். ‘இந்தியர்கள் ஆங்கிலேயர்களின் ஆட்சியை விரும்புவதாகவும், சாவர்கர் போன்றவர்கள் மட்டுமே குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள்', என்பது போன்று அவர்களுடைய பேச்சு இருந்தது. கூட்டத்திற்கு தலைமை தாங்கிய ஆகாகான், திங்ராவின் செயலைக் கண்டித்து ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்.

அப்போது கூட்டத்தின் பின்பகுதியிலிருந்து ஒரு குரல் எழுந்தது.

‘தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்படவில்லை. நான் அதை எதிர்க்கிறேன்', என்றது அந்தக் குரல்.

அனைவரும் குரல் வந்த திசையை நோக்கி திரும்பினர். ‘யாரது, பிடி அவனை. உதை', என்று பலர் கத்தினார்கள்.

‘யார் பேசியது', என்று கேட்டார் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய ஆகாகான்,

‘தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்படவில்லை. நான் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்கவில்லை', என்றவாறு அமைதியாக எழுந்து நின்றார் சாவர்க்கர்.

கர்சன் வைலி கொலையைப் பற்றிய செய்திகளை அன்றைய பத்திரிக்கைகள் திகில் கதை போல வெளியிட்டுவந்தன. அவற்றில் அதிகமாக சாவர்கர் பெயர் அடிபட்டுக் கொண்டிருந்தது. சாவர்க்கரைக் கண்ட கூட்டத்தினர் ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்ற பயத்தில் அங்குமிங்கும் ஓடினர்.

அந்தக் கூட்டத்தில் இருந்த பால்மர் என்ற யூரேஷியன் சாவர்க் நெருங்கினான். அவரின் முகத்தில் பலமாக குத்தினான். சாவர்க்கரின் கண்ணாடி உடைந்து நெற்றிப் பொட்டை பதம் பார்த்தது. சதை பிய்ந்து இரத்தம் கொட்டியது. யாருக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் கூட்டம் ஸ்தம்பித்து நின்றது. பக்கத்தில் நின்றுகொண்டிருந்த சாவர்க்கரின் நண்பர் எம்.பி. திருமலாச்சாரி கையில் இருந்த தடியால் பால்மரின் மண்டையில் ஓங்கி அடித்தார். பால்மரின் மண்டை உடைந்து ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. பக்கத்தில் நின்றிருந்த வ.வே.சு ஐயர் தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியால், பால்மரை சுடுவதற்கு தயாரானார். அதைக் கவனித்த சாவர்க்கர் அவரை சமாதானப்படுத்தினார். உடனடியாக போலீஸ் அங்கு வந்தது. சாவர்க்கரை கைது செய்தது. இரண்டு மணி நேரத்திற்கு பிறகு விடுவித்தது.

உடனடியாக ‘டைம்ஸ்' பத்திரிக்கைக்கு விளக்கக் கடிதம் ஒன்றை எழுதினார் சாவர்க்கர்.

‘திங்ராவின் மேல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. விசாரணையே இன்னும் ஆரம்பமாகவில்லை. தற்போதுவரை அவன் குற்றம் சாட்டப்பட்டவன். குற்றவாளியா, இல்லையா என்பதை நீதிமன்றம்தான் தீர்மானிக்க வேண்டும். நிலைமை அப்படியிருக்க திங்ராவை கண்டித்து தீர்மானம் போடுவதால் வழக்கு ஒருதலைப்பட்சமாக போகும். வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், அதைப் பற்றி பேசுவதுகூட நீதிமன்ற விவகாரத்தில் தலையிட்டு அதை அவமதிப்பது போன்றது. எனவேதான் தீர்மானத்துக்கு ஒரு திருத்தம் கொண்டுவர நினைத்தேன்', என்று ஒரு தன்னிலை விளக்கத்தை அளித்தார்.

டைம்ஸ் பத்திரிக்கை சாவர்க்கரின் கடிதத்தை வெளியிட்டது. சாவர்க்கரின் செய்கையில் தவறில்லை என்று பல பத்திரிக்கைகள் தங்கள் கருத்தை வெளியிட்டன. இதைப் படித்த சாவர்க்கரை தாக்கிய பால்மர் ஒரு கடிதம் எழுதியிருந்தான். ‘தான் சாவர்க்கரை தாக்கியது நியாயமென்றும், ஒரு பிரிட்டிஷ் அடி எப்படி இருக்கும் என்பதை சாவர்க்கருக்கு உணரவைத்ததற்காக பெருமைப்படுவதாகவும்' எழுதியிருந்தான். இதைத் தொடர்ந்து இந்தியர்கள் தரப்பில் மற்றொரு கடிதம் எழுதப்பட்டது. அதில் ‘பிரிட்டிஷ் அடியை இரத்தம் கக்க வைத்த இந்தியன் தடியை அவன் மறந்திருக்கமாட்டான்', என்று எழுதப்பட்டிருந்தது.

வழக்கு 23 ஜுலை நீதிமன்றத்துக்கு வந்தது. கர்சன் வைலியை கொன்றதற்காக பெருமைப்படுவதாக வெளிப்படையாக தெரிவித்தான் திங்ரா. அதே நேரத்தில் கவாஸ்ஜி லால்காகாவை கொலை செய்ய திட்டமிடவில்லை என்றும் அது தவறுதலாக நடந்தது என்றும் சொன்னான். அதற்காக வருத்தம் தெரிவித்தான்.

‘எனக்காக யாரும் வாதாட வேண்டாம். என்னைக் காப்பாற்றிக்கொள்ள எந்த வாதத்தையும் நான் முன் வைக்கப் போவதில்லை. என்னைப் பொறுத்தவரையில் எந்த ஆங்கிலேய சட்டத்திற்கும் என்னை கைது செய்யவோ, தண்டனை அளிக்கவோ அதிகாரமில்லை. அதனால்தான் எனக்காக வாதாட யாரையும் நான் நியமிக்கவில்லை. திரும்பதிரும்ப நான் சொல்லும் ஒரே விஷயம் இதுதான். உங்கள் யாரையும் நான் அதிகாரமுள்ளவராக நினைக்கவில்லை. நீங்கள் அளிக்கும் தண்டனையைப் பற்றி நான் கவலைப்படவில்லை. வெள்ளையர்களான நீங்கள் இன்று அதிகாரம் படைத்தவராக இருக்கிறீர்கள். இந்த நிலை சீக்கிரம் மாறும். எங்கள் கையில் அதிகாரம் வந்து சேரும், என்று சொல்லி தன் வாதத்தை முடித்தான்.

திங்ராவிற்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. நீதிபதி இருபது நிமிடங்களில் தீர்ப்பை வழங்கினார். எந்த வழக்கிலும் இல்லாத வகையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் தேதி, இடம் ஆகியவற்றையும் நீதிபதி தீர்ப்பில் தெரிவித்தார். தண்டனையை கேட்ட திங்ரா வருத்தப்படவில்லை.

‘என்னுடைய நாட்டிற்காக உயிரை தியாகம் செய்வதில் பெருமையடைகிறேன். ஒரு விஷயத்தை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். வருகின்ற காலம் எங்களுடையது', என்று சொல்லி அமைதியானான். திங்ராவின் பேச்சை செய்தித் தாள்கள் வெளியிட்டன.

பல காங்கிரஸ் தலைவர்கள் திங்ராவின் செயலை கண்டித்தது போலவே, காந்தியும் கண்டித்தார். அவர் அஹிம்சாவாதி. அதனால் வன்முறையை கண்டித்தார் என்று வைத்துக் கொள்வோம். ஆனால், சாவர்க்கர் தாக்கப்பட்டது குறித்து ஏன் யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை?

மதன்லால் திங்ராவின் அண்ணன் பஜன்லால் திங்ரா லண்டனில் படித்துக் கொண்டிருந்தார். கர்சன் வைலி கொலை செய்யப்பட்ட நான்கு நாட்களுக்குப் பின் திங்ராவை கண்டித்து லண்டனில் ஒரு பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பஜன்லால், மதன்லால் திங்ராவின் செயலை கண்டித்தார். சில நாட்களுக்குப் பிறகு திங்ராவை சந்திக்க சிறைச்சாலைக்குச் சென்றார். ஆனால், அவரை சந்திக்க திங்ரா மறுத்துவிட்டான். அதையெல்லாம் விட முக்கியமான ஒரு விஷயம், மதன்லால் திங்ரா தூக்கிலிடப்பட்ட பிறகு அவரது சகோதரர்கள், தங்கள் பெயரில் இருந்த திங்ரா என்ற வார்த்தையை நீக்கிவிட்டார்கள்.

17 ஆகஸ்ட், 1909 அன்று தூக்குக்கயிறு திங்ராவிற்காக காத்துக் கொண்டிருந்தது. தூக்குமேடையில் ஏறிய திங்ரா விரமுழக்கமிட்டான்.

‘அந்நியர்களால் அடிமைப்படுத்தப்பட்ட எங்கள் தாய் நாடு, தொடர் போருக்கு தள்ளப்பட்டிருக்கிறது. ஆயுதமில்லாத நாங்கள் நேரடியாக அவர்களிடம் மோதுவது என்பது இயலாத காரியம். அதனால் தான் யாரும் எதிர்பார்க்காத நிலையில் தாக்கினேன். எங்களுக்கு துப்பாக்கி வைத்துக்கொள்ளும் அனுமதி இல்லாததால், என் கைத்துப்பாக்கியை பயன்படுத்தினேன். நான் பெரிய அறிவாளி இல்லை. பெரிய பணக்காரனுமில்லை. ஒரு மகனாக தாய்க்கு கொடுக்க என் ரத்தத்தைத்தை தவிர என்னிடம் வேறொன்றும் இல்லை. அதனால்தான் என் ரத்தத்தை அவளுக்கு காணிக்கையாக்குகிறேன். இந்தியர்கள் இப்போது தெரிந்து கொள்ள வேண்டியதெல்லாம் ஒன்றுதான். நாம் எப்படி உயிர் தியாகம் செய்வது என்பது தான் அது. நம் உயிரை தியாகம் செய்வதன் மூலம் அந்த பாடத்தை அடுத்தவர்களுக்கும் புரியவைக்க முடியும். கடவுளிடம் நான் வேண்டுவதெல்லாம் ஒன்றுதான். வெற்றி கிடைக்கும் வரை நான் மீண்டும் அதே தாயின் வயிற்றில் பிறக்கவேண்டும். மீண்டும் இதே போல் ஒரு புனித காரியத்திற்காக நான் இறக்க வேண்டும். வந்தே மாதரம்', என்று சொல்லி தன் பேச்சை முடித்தான். சுருக்குக் கயிறு கழுத்தை இறுக்கியது. மரணத்தை மகிழ்ச்சியோடு முத்தமிட்டான் திங்ரா.

திங்ராவின் உடலை சாவர்கர் பெற முயற்சித்தார். உடலைத் தர பிரிட்டிஷ் அரசு மறுத்துவிட்டது. அதற்கு அவர்கள் சொன்ன காரணம், ‘சாவர்க்கர், திங்ராவின் உறவினர் அல்ல', என்பதுதான். திங்ராவின் குடும்பம் எங்களுக்கும் அவனுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லிவிட்டது. எந்தவித சடங்குகளும் செய்யாமல் ஓர் மாவீரனை சவப்பெட்டியில் வைத்து மண்ணில் புதைத்தது பிரிட்டிஷ் அரசு.

அறுபத்தி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, சாஹித் உத்தம் சிங்கின் கல்லறையை கண்டுபிடிக்கும் முயற்சியில் பிரிட்டிஷ் அரசு இறங்கியது. பல இடங்களில் தோண்டியது. அப்போது மதன்லால் திங்ராவின் சவப்பெட்டி கிடைத்தது. இந்திய அரசு அந்த சவப்பெட்டியை இந்தியாவிற்கு கொண்டு வந்தது. மஹாராஷ்டிராவில் உள்ள அகோலா அருங்காட்சியகத்தில் வைத்தது. இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் நிரந்தரமான இடத்தை பிடித்துவிட்டான் திங்ரா.

காங்கிரஸ் சாரா தியாகிகள் பலரின் தியாகங்கள் மறைக்கப்பட்டது போல் திங்ராவின் புகழும் முடக்கப்பட்டது. பிப்ரவரி 8ம் தேதி திங்ராவின் பிறந்த நாள் இந்தக் கட்டுரையை படிக்கும் நேரமாவது அந்த மாவீரனை நம் மனத்தில் நினைப்போம். ஜெய்ஹிந்த்.

- சாது ஸ்ரீராம்
saadhusriram@gmail.com
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/10/w600X390/Madan_Lal_Dhingra.jpg http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/feb/10/மாவீரன்-மதன்லால்-திங்ரா-இந்திய-சுதந்திர-போராட்டத்திற்காக-நிகழ்த்தப்பட்ட-முதல்-படுகொலை-2861016.html
2859126 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் இது இதிகாசக் காதல்! ஹேமா பாலாஜி Friday, February 9, 2018 02:41 PM +0530  

 

மஹாபாரதத்தில் வரும் பெண் கதாபாத்திரங்களில் முக்கிய பங்கை வகிப்பவள் அம்பை. காசி ராஜனின் மூத்த மகளாக, ஒரு ராஜகுமாரியாக மட்டுமே நமக்கு அறிமுகமாகும் அம்பையின் பாத்திரம் பின்பு மஹாபாரத வரலாற்றில்  முக்கிய இடத்தைப் பிடித்துவிடுகிறது. அதற்கு அப்பெண் கொடுத்த விலை கொஞ்ச நஞ்சமில்லை. 

வாழ்வில் சில நேரங்களில் புகழை விட, கொண்டாடப்படுதலை விட நிம்மதியும் மன அமைதியுமே மேலானது என்பதை உணரும் போது அதற்காக நாம் அதிக விலை கொடுத்திருப்போம். இதிகாசப் பெண்களுக்கும் அப்படித்தான் போல.

அம்பா காசி ராஜனின் மூத்த புதல்வி. அவளுக்கு அம்பிகா அம்பாலிகா என்ற இரு இளைய சகோதரிகள் உண்டு. காசி ராஜன் தன் பெண்கள் மூவரும் பருவ வயதை அடைந்ததும் தகுந்த மணமகன்களைத் தேடி மணம் முடிக்க விரும்பினான். அந்தக் கால வழக்கப்படி மூன்று ராஜ குமாரிகளுக்கும் சுயம்வரம் ஏற்பாடு செய்கிறான். பல நாடுகளிலிருந்தும் எண்ணற்ற ராஜகுமாரர்கள், இந்த மூன்று ராஜகுமாரிகளையும் தங்கள் வீரத்தையும் பராக்கிரமத்தையும் நிரூபித்து மணம் புரிந்து கொள்ள ஆவலாக வீற்றிருந்தனர்.

மூத்தவளான அம்பைக்கு சௌபல நாட்டு மன்னன் சால்வனிடம் ஈர்ப்பு இருந்தது. அவனும் அவளை விரும்பினான். சுயம்வரத்தில் அவனுக்கே தன் மாலையை இடுவது என அம்பை முடிவு செய்திருந்தாள். மனதில் முடிவு செய்திருப்பவன், தன் காதலன் சபையில் இருக்க அம்பை எப்போதையும் விட அன்று வெகு சிறப்பாகத் தன்னை அலங்கரித்துக் கொண்டாள். மனதில் கற்பனைகள் பொங்கியது. கண்கள் மின்ன அவனை சபையில் காணப்போகும் நேரத்துக்காக தன்னை வெகு சிரத்தையாக தயார்படுத்திக் கொண்டிருந்தாள். 

சபைக்கு வந்ததுமே கண்கள் சால்வனைத் தேடின. கூடவே மனதில் ‘அவன் தோள்களின் இன்று என் மாலை தழுவும் அடுத்து நான் தழுவுவேன்’ என்ற நினைப்பு வந்ததும் பெண்ணுக்கே உரிய நானம் வந்து அப்பிக் கொள்ள, கன்னம் சிவந்து தலை குனிந்தாள்.

அதே சமயம் பீஷ்மர் தன் இளைய சகோதரன் விசித்திர வீரியனுக்காக பெண் தேடிக் கொண்டிருந்தார். காசி ராஜன் தன் மகள்களுக்கு சுயம்வரம் ஏற்பாடு செய்திருப்பதை அறிந்து அரசவைக்கு தானும் சென்றார். அரசவையில் வீற்றிருந்த மன்னர்கள் சிலர் அவரது புகழையும் வீரத்தையும் கருதி விலகி வழிவிட்டனர். அங்கு அவர் வந்த நோக்கத்தை அறியாமல் மற்ற அரச குமாரர்கள் 'கிழவனுக்கு இந்த வயதில் வந்த ஆசையைப் பார். மீசை நரைத்தாலும் ஆசை நரைக்கவில்லை போலுள்ளதே. பிரம்மச்சரிய விரதம் முடித்துவிட்டாரோ?’ என கேலி பேசிச் சிரித்தனர்.

சினம் கொண்ட பீஷ்மர் காசி ராஜனிடம் 'உன் மகள்களை என் நாட்டு மருமகள்கள் ஆக்கிக் கொள்ள அழைத்துப் போகிறேன்’ என்று கூறி மூன்று ராஜ குமாரிகளையும் தன்  தேரில் பலவந்தமாக ஏற்றிச் சென்றார். தடுக்க வந்த மன்னர்கள் எல்லாம் அவரை முறியடிக்க முடியாமல் சிதறி ஓடினர். அம்பையின் காதலன் சௌபல நாட்டு மன்னன் சால்வன் தன் காதலியை பீஷ்மரிடம் இருந்து காக்க கடைசி வரை போராடினான். ஆனால் அவனாலும் பீஷ்மரை வெல்ல முடியவில்லை.

சால்வன் பீஷ்மருடன் தனக்காக போராடியதைக் கண்டு அவள் மனம் பெருமிதத்தில் விம்மியது. யாராலும் தோற்கடிக்க முடியாதவர், வீர புருஷர் பீஷ்மரையே எதிர்த்துப் போராடும் அவனது தன்னம்பிக்கையும் அதற்கும் மேலாக அவன் தன் மேல் கொண்டுள்ள காதலையும் எண்ணி உருகினாள்.  தன்னைக் காத்து தன்னுடன் இட்டுச் சென்றுவிடுவான் சால்வன் என்று மனமார நம்பினாள். கடைசி வரை போராடிய சால்வனால் பீஷ்மரை முறியடிக்க முடியவில்லை. தடுமாற ஆரம்பித்தான்.  மனம் பதை பதைக்க தான் கண்ட கனவெல்லாம் புகை போல கண் எதிரிலேயே கலைவதைக் கண்டாள் அம்பை. கடைசியில் சால்வன் பீஷ்மரை போராட்டத்தில் எதிர் கொள்ள முடியாமல் தன் நாடு திரும்பினான்.

சுயம்வர மாலையுடன் சபையில் காத்திருந்த பருவ வயது ராஜகுமாரிக்கு சற்றும் எதிர்பாராத இத்திருப்பம் அவள் இதயத்தை நடுங்கச் செய்வதாய் இருந்தது. வேறு வழியின்றி அஸ்தினாபுரம் சென்றாள். வழி எங்கும் பலவாராக யோசித்து ஒரு முடிவுக்கு வந்துவிட்டாள் என்பதை சபையில் அவள் நின்றிருந்த தோற்றம் காட்டியது.

அஸ்தினாபுரத்தின் அரசவையில் கலங்காத விழிகளுடனும் தெளிந்த சித்தத்துடனும் அவள் பீஷ்மரை நோக்கி தன் மனம் சால்வ மன்னனிடம் சென்றுவிட்டது எனவும், வெறும் உடலால் தங்கள் சகோதரனை தன்னால் மணக்க இயலாது எனவும் தைரியாமாகக் கூறினாள். அதைக் கேட்டுக் கொண்டிருந்த பீஷ்மரின் சகோதரனும், யாருக்கு மணம் முடிக்க மூன்று ராஜகுமாரிகளையும் பீஷ்மர் கவர்ந்து வந்தாரோ அந்த அஸ்தினாபுரத்தின் மன்னனுமான விசித்திரவீரியன் கூறினான். 'சால்வ மன்னனை மனதில் வரித்திருக்கும் இப்பெண்ணை என்னால் மணம் புரிய இயலாது. அவள் தன் காதலுடனேயே போய் சேரட்டும்’ என்றுவிட்டான்.

பீஷ்மரும் அம்பையை சகல மறியாதைகளோடு சால்வ மன்னனிடம் அனுப்பி வைத்தார். மனதில் மீண்டும் துளிர்விட்ட ஆசைகளோடு, சிதைந்து விட்டதோ என பயந்த தன் கனவு மறுபடியும் வண்ணங்களை வாரிக் கொண்டு தன் கண் முன்னே வந்தாட, மிகுந்த காதலுடன் கிளம்பினாள் அம்பை. அவள் மனதுள் ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள். சால்வன் இந்த எதிர்பாராத ஆச்சரியத்தை எப்படி எதிர் கொள்வான், தன்னை வாரி அனைத்துக் கொள்வானா? காலம் தாழ்த்தாது உடனே திருமணம் செய்து தன்னை தனது பட்டத்து ராணியாக்கி பக்கத்தில் இருத்துவானா? என்ற பலவிதமான கற்பனைகளுடன் குதூகலமாக அவன் அரண்மனைக்குச் சென்றாள்.

அவனிடம் அஸ்தினாபுரத்தில் நிகழ்ந்தவற்றைக் கூறினாள். பீஷ்மர் தன் மனம் சால்வனை நாடியது எனத் தெரிந்தவுடன், அவளை வற்புறுத்தாது பெருந்தன்மையுடன் இங்கு அனுப்பி வைத்ததை, சபை நாகரீகம் அறிந்து தன்னை அங்கு இருத்திய பாங்கை, தன் பெண்மைக்கு களங்கம் ஏற்படாமல் நடத்திய விதத்தை எல்லாம், பீஷ்மரின் பால் கொண்ட நன்றியிலும் சால்வனைக் கண்டவுடன் பொங்கிய காதலிலும் நெஞ்சு விம்மக் கூறினாள்.

ஆனால் சால்வனோ அவள் எதிர்பாத்தபடி, கனவு கண்ட படி கற்பனை செய்து மகிழ்ந்தபடி எதையும் செய்யவில்லை. அவள் சற்றும் எதிர்பார்த்திராத சொல்லைச் சொன்னான். 'பெண்ணே பலர் அறிய மன்னர்கள் வீற்றிருந்த சபையில் பீஷ்மர் உன்னை கவர்ந்து சென்றார். அடுத்தவரால் கவரப்பட்டு அவர் வீடு சென்று, பின் அவராலேயே திருப்பி அனுப்பப்பட்ட பெண்னை என்னால் திருமணம் புரிய முடியாது. ஆகவே நீ திரும்பிச் சென்றுவிடு’ என்று ஆயிரம் இடிகளை ஒன்றாக அவள் நெஞ்சில் இறக்கியது போன்றதொரு சொல்லைச் சொல்லிவிட்டான்.

மீண்டும் அம்பை செய்வதறியாது அஸ்தினாபுரமே சென்றாள். அங்கு பீஷ்மரிடம் 'சால்வனை நாடிய என்னை மணம் செய்து கொள்ள உங்கள் சகோதரன் விரும்பவில்லை, உங்களால் கவரப்பட்டு பின் அனுப்பப்பட்ட என்னை சால்வன் ஏற்கவில்லை. அதனால் சுயம்வர மண்டபத்தில் இருந்து என்னைக் கவர்ந்து வந்த நீரே என்னை மணக்க வேண்டும். அதுவே தர்மமாகும்’ என்றாள்.

தான் மேற்கொண்டிருக்கும் பிரம்மச்சரிய விரதத்தை காரணம் காட்டி, அதை மீற முடியாது என்றும் அதனால் அம்பையை திருமணம் செய்துகொள்ள முடியாது என்றும் கூறி பீஷ்மர் மறுத்துவிட்டார். சால்வனிடம் சென்று உன் நிலமையை விளக்கு. அவன் புரிந்து கொண்டு உன்னை ஏற்பான் என்று நம்பிக்கை கொடுத்து மறுபடியும் சால்வனின் நாட்டுக்கு அவளை அனுப்பிவைத்தார். தன்னால் ஏதும் செய்ய இயலாத கையறுநிலை, அவளுக்கு வேதனையையும் துன்பத்தையும் அளித்தது. 

இப்படியாகவே ஒன்றல்ல இரண்டல்ல ஆறுவருடங்கள் அப்பேதை இங்கும் அங்கும் அலைக்கழிக்கப்பட்டாள். தவறேதும் செய்யாமலயே மிகப் பெரும் அவமானத்தை அனுபவித்தாள். ராஜகுமாரியாக பிறந்திருந்தும் தன் இளமையை, வளமான வாழ்வை, நிம்மதியை, சமூகத்தில் மறியாதைக்குறிய அந்தஸ்த்தை அனைத்தையும் இழந்து நின்றாள். குற்றம் ஏதும் புரியாமலேயே தண்டனை கிடைத்தது கண்டு மனம் வெதும்பினாள். எத்தனை பெரிய மன அழுத்தத்தில் இருந்திருக்க வேண்டும் அம்பை.

சால்வனிடமும் பீஷ்மரிடமும் கண்ணீரோடு போராடி போராடியே களைத்துப் போன அம்பை மனம் வெறுத்துப் போனாள். தன்னுடைய இந்த நிலமைக்கு காரணம், தன் சம்மதம் இன்றி தன்னை சுயம்வர மண்டபத்தில் இருந்து கவர்ந்து வந்த பீஷ்மரே என்பதால் அவர் மீது அளவில்லாத கோபமும் வெறுப்பும் உண்டாகியது. பீஷ்மரைக் கொல்வதே தன் லட்சியம் என்று சபதம் ஏற்று இமயமலைக்குச் சென்றாள். அங்குள்ள பாகூத நதிக்கரையில் கட்டை விரலை ஊன்றி நின்று பன்னிரெண்டு ஆண்டுகள் கடுந் தவம் செய்தாள். முருகப்பெருமான் அவளுக்குக் காட்சி அளித்து அழகிய மாலை ஒன்றை கொடுத்து 'இனி உன் துன்பம் தொலையும்’ இந்த தாமரை மாலையை அணிபவனால் பீஷ்மர் மரணமடைவார் என்று கூறி மறைந்தார்.

அதன் பின்னும் அவளின் அலைக்கழிப்பும் ஓட்டமும் நின்ற பாடில்லை. எல்லா நாடுகளுக்கும் சென்று ஒவ்வொரு அரசனிடமும் அம்மாலையை அணிந்து கொண்டு பீஷ்மருடன் போரிட்டு கொன்றுவிட மன்றாடினாள். எந்த அரசன் இம்மாலையை அணிகிறானோ அவனுக்கு பீஷ்மரைக் கொல்லும் வலிமை வந்துவிடும். பீஷ்மரைக் கொல்பவருக்கே நான் மனைவியாவேன் என்றாள். ஆனால் பீஷ்மரின் வல்லமைக்கும் பேராற்றலுக்கும் பயந்து யாரும் அதை அணிய முன்வரவில்லை. இருந்தும் மனம் சோராத அம்பை அம்மாலையை எடுத்துக்கொண்டு துருபதன் என்ற பாஞ்சால நாட்டு அரசனிடம் சென்று தனக்கு உதவுமாறு வேண்டினாள்.

துருபதனும் மறுத்துவிட அம்பை மனம் வெறுத்து மாலையை அங்கேயே வீசிவிட்டு மீண்டும் தவம் புரிய சென்றுவிட்டாள். இம்முறை சிவ பெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்தாள்.  சிவன் அவளுக்கு காட்சி அளித்து 'பெண்ணே! உன் கோரிக்கை இப்பிறவியில் நிறைவேறாது. அடுத்த பிறவியில் அது நடக்கும். உன்னைக் காரணமாகக் கொண்டு பீஷ்மருக்கு மரணம் எற்படும்’ என்றார்.

பீஷ்மரை கொல்வதே தன் குறிக்கோளாக கொண்டிருந்த அம்பை, தனக்கு இயற்கையான மரணம் சம்பவித்து, ஆயுள் முடிந்து மறுபிறவி ஏற்படும் வரை பொறுத்திருக்கவில்லை. வரம் கிடைத்த மறு நொடியே சிதையில் விழுந்து தன்னை அழித்துக் கொண்டாள். தன்னுடைய மறுபிறவியில் துருபதனின் மகனாகப் பிறந்து சிகண்டி என்ற பெயர் கொண்டாள். பாரதப் போரில் பீஷ்மர் அம்பு பாய்ந்து அம்புப் படுக்கையில் வீழ காரணமானவள் சிகண்டியாகப் பிறப்பெடுத்த அம்பையே.

எல்லா ராஜகுமாரிகளைப் போல அரண்மனை வாழ்வு, காதல், சுயம்வரம் திருமணம் அதைப்பற்றிய கனவு என்றிருந்திருக்க வேண்டிய அம்பையின் வாழ்வு அலைக்கழிப்பிலும் சுயபச்சாதாபத்திலுமே கழிந்தது. காதல் சுமந்து கொண்டிருக்கும் மென்மையான மனம் கொண்டவளுக்கு பழிவாங்கும் எண்ணமும் பீஷ்மரை கொல்லும் காழ்ப்புணர்ச்சியும் வந்தது எதனால்?

அவரவர் நியாயத்தில் அவரவர் தர்மத்தில் அவரவர் நிலைத்திருக்க, அம்பையின் நியாயதர்மத்தையும் மனப் போராட்டத்தையும் உணர்ந்தவர் எவர்?

]]>
மகாபாரதம், Mahabharatha, amba, ambai, அம்பை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/7/w600X390/ambai_mahabharatham_character.jpg http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/feb/09/life-love-and-death-of-ambai-2859126.html
2860398 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் உங்கள் காதல் ப்ரேக் அப் ஆகாமல் இருக்க 5 வழிகள் உமா DIN Friday, February 9, 2018 11:40 AM +0530  

காதல் இந்த வார்த்தை சிலருக்கு மந்திரம். காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால் தகரம் கூட தங்கமாகுமே என்பதெல்லாம் காதலைப் பொருத்தவரையில் நூறு சதவிகிதத்திற்கும் மேலான உண்மை. அந்தக் காலத்துக் காதல் எஃகு போல உறுதியானது இன்றைய காதல் மேலோட்டமானது என்று சிலர் மலரும் நினைவுகள் பகிர்வதுடன் இந்தக் காலத்து காதலை டேமேஜ் செய்வார்கள். ஆனால் காதல் எக்காலத்திற்கும் காதல் மட்டுமே. காதலர்கள் வேண்டுமானால் நிறம் குணம் மாறலாம்.

எல்லா உறவுகளிலும் மேடு பள்ளங்கள் இருக்கவே செய்யும். எல்லா உறவுகளும் எப்போதும் நம் வாழ்க்கையின் இறுதிவரை தொடர்வதில்லை. ஆனால் எந்த ஆழமான காரணங்களும் இல்லாமல், சில சமயம் நாம் மிகவும் நேசித்தவர் நம்மை விட்டு ஒரேடியாக விலகிச் செல்ல முடிவெடுத்து விடலாம். அல்லது அத்தகைய முடிவுக்கு நாமே கூட காரணமாக இருக்கலாம். ஆனால் பிரிவின் அந்தக் கடைசி நொடியில்தான் அவரை எந்தளவு நாம் நேசித்திருக்கிறோம் என்று நாம் உணர்வோம்.

கடைசி முயற்சியாக அவர் நம்மை விட்டு ஒரேடியாக விலகாமல் இருக்க என்ன செய்யலாம். அந்தக் காதலை அல்லது அந்த நேசத்துக்குரியவரை எப்படி மீட்டெடுக்கலாம்? உங்கள் ஆழ் மனத்தில் காதலின் தீபத்தை ஒருமுறை ஏற்றிவிட்டால் அது ஒரு போதும் அணையாது என நீங்கள் உணர்ந்துள்ளீர்களா? எதாவது பிரச்னை ஏற்பட்டு அணைந்து போனால்? அணையாமல் பாதுகாப்பது எப்படி என்று சில வழிமுறைகள் உள்ளன. அவற்றுள் சிலவற்றைப் பார்க்கலாம்.

1. மனம் விட்டுப் பேசுங்கள்

நேசிப்பவரிடையே பிரச்னை ஏற்பட்டிருந்தால் அதன் காரணத்தை நன்றாக யோசித்து அதை சரி செய்ய இருவரும் சற்று நேரம் ஒதுக்குங்கள். அமைதியாக சண்டை போடும் நோக்கத்தை எல்லாம் ஓரமாக வைத்துவிட்டு, மனம் விட்டு பேசுங்கள். பேசித் தீர்க்க முடியாத பிரச்னைகள் இந்த உலகில் எதுவுமில்லை. அதற்கான மனம் உங்களுக்கு இருக்க வேண்டும். அல்லது உங்களால் எல்லாவற்றையும் பேச முடியவில்லை எனில், மனத்தில் நினைத்தவற்றை கடிதமாக உங்கள் கைப்பட எழுதுங்கள்.

இருவருக்குள் ஏதோ சரியில்லை, அவ்வுறவு முறிந்துவிடும் போலுள்ளது என்று நீங்கள் நினைக்கத் தொடங்கினால் உங்கள் துணையிடம் அதுப் பற்றி வெளிப்படையாக பேசுங்கள். அதற்கான நேரத்தை இருவரும் ஒதுக்கி மனம் திறந்து உங்கள் பிரியத்தை அவரைப் பிரிய விரும்பவில்லை என சொல்லுங்கள். உண்மையில் அது அவர் மனத்தில் உறைக்கும் விதமாக இருந்தால் நிச்சயம் இந்தப் பிரச்னையை நீங்கள் இருவரும் கடந்து செல்வீர்கள். 

2. சிறிய இடைவேளை தேவை 

ஒரு சிறிய இடைவெளியை சில நாட்கள் இருவரும் எடுத்துக் கொள்ளுங்கள். அந்தச் சமயத்தில் நீங்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க வேண்டாம். ஆனால் எது பிசகியது, எந்த விஷயத்தில் சறுக்கினோம், அல்லது எது மற்றவரை காயப்படுத்திவிட்டது என யோசித்து அதை தவிர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள். அடுத்து என்ன செய்யலாம் என்று நிதானமாக சிந்தியுங்கள். அது உங்கள் உறவை அதன் உன்னதத்தை உங்களுக்குள் உரத்துச் சொல்லும்.

உங்களால் தொடர்ந்து இத்தகைய யோசனைகளுக்குள் இருக்க முடியவில்லை என்றால் நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் உங்கள் பிரச்னையை எடுத்துச் சொல்லுங்கள். அவர்கள் உங்களுக்காக யோசித்து நல்ல தீர்வை சொல்வார்கள்.

3. குற்றம் சுமத்தாதீர்கள்

உன்னால தான் இப்படி ஆச்சு, நீங்க தான் சரியில்லை, என்று ஒருவர் மீது மற்றவர் குற்றம் சுமத்தாதீர்கள். உண்மையில் யார் மீது தவறு இருந்தாலும் அதை மன்னிக்கும் மனப்பக்குவத்தை இருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும். காலம் முழுவதும் அந்த உறவு நீடிக்க வேண்டும் எனில் மன்னிக்கும் பண்பு அவசியம். பேசும் போது, குத்திக் காட்டுவது, அல்லது பழி சொல்லும் விதத்தில் இல்லாமல் ஒருவருக்கு மற்றவர் மீது இருக்கும் சங்கடங்களை அல்லது பிடிக்காத விஷயங்களை மென்மையாக எடுத்துக் கூறுங்கள்.

உதாரணமாக உங்கள் துணை எப்போதும் ஃபோனில் பேசிக் கொண்டும், நீங்கள் சந்திக்கும் சமயத்தில் உங்களை விட வேறொரு விஷயத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக நீங்கள் உணர்ந்தீர்கள் எனில் அதை அவர்களிடம் மென்மையாக எடுத்துச் சொல்லுங்கள். அதுவே பெரிய சண்டையாகி இந்தப் பிரிவு ஏற்பட்டிருந்தால், எப்படி இந்தப் பிரச்னைகளிலிருந்து மீண்டு வரலாம் என்று சில வழிமுறைகளையும் கோடிட்டு காட்டுங்கள். நமக்கானவர்கள் செய்த சிறிய பெரிய தவறுகளை எல்லாம் மன்னிக்க மட்டுமல்ல, மறக்கவும் பழகுங்கள். 

4. குடும்பநல ஆலோகர்களை அணுகுங்கள்

உங்கள் வரையறைக்குள் பிரச்னையைத் தீர்க்க முடியவில்லை எனில் தேவைப்பட்டால் அதற்கான கவுன்சிலர்களை அணுகுங்கள். சில தீர்க்க முடியாத உளவியல் சிக்கல்களையும் மன அழுத்தப் பிரச்னைகளையும் அதற்குரிய ஆலோசகர்களிடம் வெளிப்படையாக மனம் திறந்து பேசும் போது தெளிவு கிடைக்கும்.

தேவைப்படும் எனில் உளவியல் மருத்துவர்களின் உதவியையும் நாடலாம். பிரச்னையின் வேரினை அவர்கள் கண்டறிந்து உங்களுக்கு பரிந்துரை செய்பவற்றை நீங்கள் கடைப்பிடித்தால் போதும். படிப்படியாக உங்கள் பிரச்னை எதுவாக இருந்தாலும் சரி அடையும்.

5. அடிக்கடி சந்தித்துப் பேசுங்கள்

Out of sight, out of mind என்று சொல்வார்கள். உங்கள் கண் பார்வையில் இல்லாத எதுவொன்றையும் உங்கள் மனது எளிதில் மறந்துவிடும். நீங்கள் உங்கள் பிரச்னைகளை பேசி தீர்க்கவும் உங்கள் உறவை முன்பு போல் மகிழ்ச்சி உடையதாகவுமாக்க அடிக்கடி ஒருவரை ஒருவர் சந்திப்பது அவசியம்.

முதல் முதலில் சந்தித்துப் பேசியது, முதல் முத்தம், முதல் அணைப்பு என ஒவ்வொன்றையும் நினைத்து புத்தக் புதியதாக நினைத்து உங்கள் உறவை மீண்டும் தொடருங்கள். காதலர் தினம், பிறந்த தினம், பண்டிகை போன்ற நாட்களில் அதிக நேரம் செலவழித்து உங்கள் எதிர்காலம் பற்றி நிறைய பேசுங்கள்.

இறுதியாக இது எதுவுமே நடைபெறவில்லை அல்லது என்ன செய்தால் இந்த உறவு உடைந்த கண்ணாடிதான் ஒட்டாது என நீங்கள் நினைத்தீர்கள் எனில் உங்கள் மனத்தை தேற்றிக் கொண்டு அப்பிரிவை ஏற்றுக் கொள்ளுங்கள். எக்காரணத்தை கொண்டும் அன்பை யாசிக்காதீர்கள். உங்கள் சுயத்தை அதிகளவில் நீங்கள் இழக்க நேரும் உறவுகளிலும் ஒரு வழிப் பாதை போல நீங்கள் மட்டுமே அன்பு செலுத்திக் கொண்டு இருக்கிறீர்கள், உங்கள் துணை சிறிதும் அதை மதிப்பவராக இல்லாவிட்டால் அதிலிருந்து நீங்கள் விடுபடுவதே மேல். உங்கள் முடிவு எதுவாக இருந்தாலும் நன்கு யோசித்து எடுப்பது நல்லது. வாழ்க்கை வாழ்வதற்கே! அழுது புலம்பி வீழ்வதற்கு இல்லை என்பதை உணர்ந்து உற்சாகமாக உங்களை முன்னெடுத்துச் செல்லுங்கள். காதலை விட வாழ்க்கை பெரிது.

]]>
love, break up, valentines day, காதல், பிரிவு, காதலர் தினம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/9/w600X390/doubt.jpg http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/feb/09/5-ways-to-handle-love-break-ups-2860398.html
2859766 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் இவர்களின் மரண ஓலம் கேட்கிறதா? உடம்பை மறைக்கச் சரியான ஆடைகூட இல்லாமல் தவிக்கும் அடிமைப் பெண்கள்! M. தங்கவேல் Friday, February 9, 2018 10:33 AM +0530  

தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடந்த 11-01-2018 அன்று ஒரு முக்கியமான உத்தரவை கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியருக்கும், தமிழக அரசின் தலைமை செயலருக்கும் அளித்துள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் விசைத்தறி ஆலையில் கொத்தடிமைகளாக தங்கவைக்கப்பட்டிருந்த ஒரு குடும்பத்தில் 6  வயது சிறுமி மின்கம்பி வேலியில் சிக்கி இறந்து போன சம்பவத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது. 

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுக்காவில் உள்ள நொச்சிக்குட்டை கிராமம் பொன்மேடு காலனியில் வசிக்கும் பாலசுப்பிரமணி என்பவர் தன் மனைவி கருப்பம்மாள் மற்றும் மூன்று குழந்தைகளுடன் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கோயமுத்தூர் வந்துள்ளார். கொத்தடிமைகளை விசைத்தறி ஆலைகளுக்கு சப்ளை செய்யும் ஒரு இடைத்தரகர் மூலம் இவர்கள் கோயமுத்தூர் மாவட்டம், சூலூர் தாலுக்காவில் உள்ள காடுவெட்டி பாளையம் பகுதியில் இருக்கும் ஒரு விசைத்தறி ஆலையில் சேர்க்கப்பட்டார்கள். 

விசைத்தறி ஆலை வளாகத்திற்குள்ளேயே இக்குடும்பத்திற்கு எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லாத மிகச் சிறிய அறை அளிக்கப்பட்டு அங்கு இவர்கள் தங்கவைக்கப்பட்டனர். ஒரு சிறிய தொகை இக்குடும்பத்துக்கு வழங்கப்பட்டு அத்தொகையைத் திருப்பி செலுத்தும் வரை இந்த அறையில் தான் தங்கி தினமும் 12 மணி நேரம் கணவன், மனைவி இருவரும் வேலை செய்ய வேண்டும் என்பது விசைத்தறி முதலாளியின் கட்டளை. அந்த அறையிலேயே இந்தக் குடும்பத்திற்கு இரண்டு ஆண்டுகள் கழிந்தது. இவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல நேரிட்டால் குழந்தைகளை அழைத்துச் செல்ல கூடாது என்பது கொத்தடிமை குடும்பத்துக்கும், ஆலை முதலாளிக்கும் நடுவில் போடப்பட்ட வாய்மொழி ஒப்பந்தமாகும். இரண்டு வருடம் கழித்து, செய்து கொண்ட ஒப்பந்தத்தால் 30-08-2014 அன்று கணவன் மனைவி இருவரும் சொந்த ஊருக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்ல முடியாமல் அவர்களை விசைத்தறி ஆலை வளாகத்திற்குள்ளேயே விட்டு இவர்கள் மட்டும் ஊருக்குச் சென்றுள்ளனர். 

சிறுமியின் குடும்பம்

அன்று மாலை பெற்றோர்கள் ஊருக்குச் சென்று விட்ட நிலையில் மின் கம்பி வேலிக்கு அருகில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அறியாமல் மின் கம்பி வேலியை 6 வயது பெண் குழந்தை நந்தினி தொட்டதும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தாள். சொந்த ஊருக்குச் சென்ற பெற்றோர்கள் தகவல் அறிந்து விசைத்தறி ஆலைக்குச் சென்று பார்க்கும் பொழுது தனது குழந்தை மின் கம்பி வேலியருகில் இறந்து கிடப்பதை பார்த்துக் கதறி அழுதனர். பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக விழுதுகள் அமைப்புக்குத் தகவல் அளித்ததைத் தொடர்ந்து உடனடியாக விழுதுகள் அமைப்பிலிருந்து 5 பேர் கொண்ட குழு சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். இறந்து கிடந்த பெண் குழந்தையின் சடலத்தை விழுதுகள் குழுவினர் நேரில் சென்று பார்த்ததும் உடனடியாக கருமத்தம்பட்டி காவல் நிலையத்துக்கும், வருவாய் கோட்டாட்சியர் குணசேகரன் அவர்களுக்கும் போன் மூலம் தகவல் அளித்தனர். இதை அறிந்த விசைத்தறி ஆலை முதலாளிகள் 50-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உதவச்சென்ற குழுவினரை தாக்க முயன்றனர். தகவல் அளித்து மூன்று மணி நேரம் கழித்து காவல் நிலையத்தினர் சுமார் 9 மணிக்குச் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

அரசு அதிகாரிகள் காட்டிய அலட்சியம்:

பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் நடந்த சம்பவத்தை புகாராக அளித்தனர். இறந்த குழந்தையின் சடலத்தை போஸ்ட்மார்ட்டம் செய்வதற்காக கோயமத்தூர் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாருக்குரிய முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை. கொத்தடிமை முறை ஒழிப்பு சட்டம் 1976-ன் படியும் SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் படியும் வழக்குப் பதிவு செய்யவில்லை. கோட்டாட்சியர் அவர்களும் உரிய விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட கொத்தடிமை குடும்பத்துக்கு விடுதலைச் சான்று அளிக்கவில்லை. 

சிறுமி நந்தினி

இதனால் மனமுடைந்த பாதிக்கப்பட்ட கொத்தடிமை குடும்பத்தினர் கொத்தடிமை ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்கைப் பதிவு செய்யக்கோரி போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்ட குழந்தையின் சடலத்தை வாங்காமல் போராட்டம் செய்தனர். அதனால் இரண்டு நாட்களுக்குப் பிறகு கோயமத்தூர் அரசு மருத்துவமனையில் கோட்டாட்சியர் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆகியோர் வந்து பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் கொத்தடிமை ஒழிப்பு சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுத்து விடுதலைச் சான்று வழங்குவதாக உறுதியளித்ததை நம்பிய பாதிக்கப்பட்ட கொத்தடிமை குடும்பம் சடலத்தை வாங்கிக்கொண்டு சொந்த ஊருக்குச் சென்று அடக்கம் செய்தனர். ஆனால், காவல் துறையினரும், கோட்டாட்சியரும் உரிய நடவடிக்கை எடுத்து தங்களுக்கு விடுதலைச் சான்று வழங்காத காரணத்தால் ஏமாற்றம் அடைந்த அந்தக் குடும்பம் விழுதுகள் அமைப்பின் இயக்குநர் திரு.எம். தங்கவேல் அவர்களின் மூலம் தேசிய மனித உரிமை ஆணையத்தில் உரிய நடவடிக்கையும் நீதியும் வேண்டி புகார் அளித்தனர். தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அதன்படியே  கடந்த 11-01-2018 அன்று இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவை அளித்துள்ளது. 

கொத்தடிமை ஒழிப்பு பற்றிய இந்திய அரசியல் சாசனம்: 

நம் நாட்டில் கொத்தடிமை முறையை முற்றிலும் ஒழிக்கும்  நோக்கத்தில் 1976 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதியன்று  கொத்தடிமைகள் ஒழிப்பு சட்டம் 1976  கொண்டு வரப்பட்டது. சட்டம் இயற்றப்பட்டு 42 ஆண்டுகள் ஆகியும் நம் நாட்டில் அடிமை முறையும் கொத்தடிமை முறையும் தொடர்ந்து நீடிப்பது வேதனைக்குரிய ஒன்று. அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள் சிலர் இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள சட்ட உரிமைகளைச் சமூக மாற்றத்துக்குப் பயன்படுத்தாமல் அடிமை முறையைத் தக்க வைத்துக்கொள்வதற்கு ஆதரவாகச் செயல்படுவது இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரான ஒரு செயல்.

இருபத்தொன்றாம் நூற்றாண்டின் துவக்கத்தில், இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள கிரகங்களில் என்னென்ன இருக்கின்றன. இருளில் மின்னும் விண்மீன்களின் எண்ணிக்கை என்ன? இனி வருங்காலங்களில் நோயே இல்லாத உயிரினத்தை உருவாக்க முடியும்.  ஒருவரைப் போலவே இன்னொருவரை உருவாக்க முடியும் என்றெல்லாம் மனிதன் விஞ்ஞானத்தின் துணை கொண்டு அற்புதங்கள் நிகழ்த்தும் சாதனைகளைக்கொண்டு மனித சமுதாயம் பெருமிதம் கொள்கின்றது. ஆனால், இவ்வளவு உயர்ந்த மனித சமுதாயத்தின் லட்சக்கணக்கான மக்கள், நாளெல்லாம் உழைத்தும், உழைப்பின் பயன் கிட்டாமல் கடனுக்கு ஆளாகி, வறுமையின் கோரப்பிடியில் சிக்கி, உண்பதற்கு போதிய உணவின்றி, மானத்தை மறைத்திட தேவையான ஆடைகளின்றி, தான் பெற்ற மழலைச் செல்வங்களுக்கு கல்வி அளிக்க முடியாமல், மருத்துவம் செய்யா வழியில்லாமல் அடிமை வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

அடிமையாய் வாழ்ந்து வரும் மக்களும் மனித சமுதாயத்தின் ஒரு பகுதிதான், இப்படி அடிமையாக நடத்தும் மக்களும் மனித சமுதாயத்தின் ஒரு பகுதிதான், இந்த நிலையை ஒழுங்குபடுத்தி, சட்டத்தின் துணை கொண்டு மனித மாண்பினையும், மனித உரிமைகளையும் நிலை நாட்ட வேண்டியவர்கள் தங்களது கடமைகளை மறந்து, அடிமை முறையைக் கையாளுவோரின், செயலுக்கு நீரூற்றி வளர்த்து வருகிறார்களே, அவர்களும் மனித சமுதாயத்தின் ஒரு பகுதிதான் என்று எண்ணும்போது, உண்மையில் நாம் இருபதாம் நூற்றாண்டிற்கே திரும்பி விட்டோமா? என்கிற கேள்வி எழுகிறது.

கொத்தடிமைகளின் மரண ஓலம்:

நமது பாரதத்தை குடியரசாகப் பிரகடனம் செய்து அரசியல் சாசனத்தை வெளியிட்டார்களே, அப்போது கூறினார்கள், இன்னும் பத்து ஆண்டுகளில் கல்வியில், வேலைவாய்ப்பில், மருத்துவத்தில், குடிநீரில், சாலைகளில், மின்சாரத்தில் என்று அனைத்திலும் தன்னிறைவு பெற்ற நிலை உருவாக்கப்படும், மக்களுக்குக் குறைவின்றி அனைத்தும் கிடைத்துவிடும் என்று. ஆனால், நாடு சுதந்திரம் பெற்று 7௦ ஆண்டுகளுக்குப் பின்னும் கேட்கும் அவலக்குரல் அடிமை நிலையிலிருந்து காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... எனக் கதறுகின்றனர். அடிமைகளின் குரலின் உண்மை நிலையறிய குறிப்பாகத் தமிழகத்தின் உண்மை நிலையறிய.  1995ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட இரு நபர் ஆணையம், தனதுஆய்வறிக்கையில் தமிழகத்தில் இருபது விதமான தொழில்களில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கூறியுள்ளது.

தமிழகத்தில் மட்டும் பத்து லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் கொத்தடிமைகள் என்றால், ஒட்டுமொத்த இந்தியாவில் எவ்வளவு பேர் கொத்தடிமைகளாக இருப்பார்கள்? எனச் சிந்தித்து பாருங்கள். ஆதியில் நிலவிய அடிமைத்தனத்தை உணர்ந்துதான் அரசியல் சாசனம் பிரகடனம் செய்தபோதே அடிமை முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டது என்று அறிவிக்கப்பட்டது. 1976-ல் கொத்தடிமை முறை ஒழிப்புக்காக ஒரு சட்டமே இயற்றப்பட்டு மனிதனை, மனிதனே அடிமையாக நடத்துவது கொடுமையான குற்றம் என்று அழுத்தந் திருத்தமாக சொல்லப்பட்டது. ஆயினும் தொழிலாளர்களை சங்கிலியால் கட்டியா வேலை வாங்குகின்றார்களா? இல்லை அடைத்து வைத்து இருக்கின்றார்களா? என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது. இது என்ன கேள்வி? அடிமை முறை குறித்து புரியாதவர்களால் எவ்வாறு பிரச்சனையை தீர்க்க முடியும்? அடிமை முறைக்குப் பலவித அர்த்தங்கள் கூறப்படுகின்றன. உண்மையில் அடிமை முறை என்றால் என்ன?

அடிமை முறை இன்று நேற்று தோன்றியதல்ல. என்று மனிதன் தோன்றினானோ அன்றே அடிமை முறையும் தோன்றி விட்டது.  ஆரம்பத்தில் வலிமையுள்ளவரின் உடல் பலத்துக்கு மட்டும் பயந்து அடிமையாக வாழ்ந்த மனிதன், காலப்போக்கில் கொடுக்கல், வாங்கலுக்காக நாணயங்கள் பயன்படுத்தப்பட்டதும், பணத்துக்காகவும் அடிமையாக வாழ வேண்டிய கட்டாயம் தோன்றியது.

அடிமைகள் பல விதம்:

சாதிய அடிப்படையில் அடிமை, பரம்பரை அடிப்படையில் அடிமை, பணத்துக்காக அடிமை, விலைகொடுத்து வாங்கியதால் அடிமை என்று பலவிதமான வழிகளில் கொத்தடிமை முறை கையாளப்பட்டு வந்தது. கொத்தடிமை நிலையில் வைக்கப்பட்டு இருப்பவர்கள் ஊதியம் ஏதுமின்றி தானியத்துக்கும், உயிர் வாழ இரண்டு வேளை உணவுக்கு மட்டுமே ஆசைப்பட முடியும். இதில் அடிமை முறை தன்னுடைய தலையெழுத்து என்றுநம்பி அடங்கிக் கிடப்பவர்கள் சற்று சுதந்திரமாக நடமாடமுடியும். மாறாக எதிர்ப்பு தெரிவிக்க நினைப்பவர்கள் எல்லாம் கழுத்தில் வளையத்தோடு கையில் ஒரு இரும்புக் குண்டு அல்லது கால்களில் சங்கிலிகளோடு, கையில் இரும்புக் குண்டு என்ற தடைகளோடுதான் நடமாடமுடியும்.  அவர்கள் உழைக்கும் நேரங்களுக்கு வரம்பு இல்லை. எந்த நேரமும் முதலாளி அழைக்கிறாரோ, உடனே ஐயா என்று குரல் கொடுக்க வேண்டும். இல்லையேல் சாட்டைதான் பேசும். இது அந்த கால அடிமை முறை.


காலத்தின் போக்கில் அனைத்தும் நவீனப்பட்டது போல் கொத்தடிமை முறையும் நவீன பட்டுவிட்டது.  கழுத்திலும், காலிலும் விலங்கிட்ட நிலை மாறி, நாகரீகமாக உடையணிந்து நடமாட அனுமதிக்கப்படுகிறது.  பழைய உணவை எருமை சாணிக்கு நடுவிலே உண்ண வேண்டிய கொடுமை மாறி, வீட்டிலிருந்து உணவு கொண்டு வந்து உண்ணவும் அனுமதிக்கப்படுகிறது.

எதிர்க்க நினைத்தால் கையெழுத்திட்ட வெற்று பத்திரம் பேசும்:

ஆனால், முதலாளியால் கொடுக்கப்பட்ட முன் பணம் திருப்பிச் செலுத்தப்படும் வரையில் தொடர்ந்து அங்கேயே வேலை செய்தாக வேண்டும், தொடர்ந்து வேலைக்கு வர வேண்டும், விடுமுறை எடுக்கக்கூடாது, கொடுக்கும் ஊதியத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.  மறுத்துப் பேசினால் அடி, உதை நிச்சயம் அல்லது பொய்யான புகாரின் பேரில் தண்டிக்கப்பட நேரிடும்.  இதற்கு உறுதுணையாக வெற்று புரோநோட்டு, வெற்று பத்திரங்கள் ஆகியவற்றில் குடும்ப தலைவன், மனைவி, பிள்ளைகள், உறவினர், நண்பர்கள் என்று ஒரு கூட்டத்திடமே கையெழுத்து வாங்கி வைத்திருப்பார்கள்.  தொழிலாளி எப்போது எதிர்க்க நினைகிறானோ அப்போது அந்த ஆவணங்கள் பேசும்.  இப்படி கையொப்பம் பெற்ற வெற்று புரோ நோட்டுக்களைப் பயன்படுத்தி வழக்கு தொடர்ந்து தொழிலாளிக்குச் சொந்தமாக இருக்கும் மூதாதையர்களால் வழங்கப்பட்ட நிலம், வீடு போன்ற சொத்துக்கள் கைப்பற்றப்படும். வெற்று பத்திரங்களில் இட்ட கையெழுத்துக்களை பயன்படுத்தி சொத்துக்களை எழுதித் தந்ததாகவும், அடகு வைத்ததாகவும், ஆவணங்கள் தயாரித்து சொத்துக்கள் அபகரிக்கப்படும்.  இறந்து போன கணவன் பட்ட கடனுக்காக மனைவி அடிமையாகி கட்டாய உழைப்பிற்கு ஆளாவது உண்டு.  அது போல தகப்பன் பட்ட கடனுக்காகப் பிள்ளைகள் அடிமையாக உழைக்க நேர்வதும் உண்டு. இது இந்தக்கால கொத்தடிமை முறை.

கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பஞ்சாலை, விசைத்தறி ஆலை நூற் பாலை மற்றும் பின்னலாடை தயாரிப்பு ஆலைகளில் தினந்தோறும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்து வருகின்றனர். பெரும்பாலான தொழிலாளர்கள் வெளி மாவட்டங்களிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் வேலைக்காக அழைத்து வரப்படுகின்றனர். போதிய தங்குமிடம், சுகாதாரமான குடிநீர் உணவு கிடைப்பதில்லை.  இதிலும் குறிப்பாக 20 வயதிற்குட்பட்ட இளம் பெண் தொழிலாளர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றனர். கடந்த இரு மாதங்களில் மட்டும்3  இளம் பெண் தொழிலாளர்கள் வேலை செய்யும்போது இறந்துள்ளனர். மேற்கண்ட தொழில்களில் நவீன கொத்தடிமை முறையில் சிக்கி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அதிலிருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றனர். சட்டமும் அரசும் நவீன கொத்தடிமை முறையிலிருந்து தொழிலாளர்களை மீட்பதும் மறுவாழ்வு அளிப்பதும் அவசியமானதாகும்.

M. தங்கவேல்,
விழுதுகள் அமைப்பு.

]]>
India, Tamil nadu, இந்தியா, government, தமிழ் நாடு, சட்டம், அரசு, bonded labors, கொத்தடிமைகள், அவலம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/8/w600X390/article-2576901-1C25B2D500000578-102_964x639.jpg http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/feb/08/bonded-labors-of-21st-century-2859766.html
2859768 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் மாணவர்களே சிந்தியுங்கள்! ஓட்டுப்போடுவதோடு உங்கள் அரசியல் முடியட்டும்..  - சாது ஸ்ரீராம் Thursday, February 8, 2018 05:58 PM +0530
அரசியலில் மாணவர்கள் ஈடுபடலாமா? அந்தக் காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் மூன்று அல்லது நான்கு குழந்தைகள் இருப்பார்கள். ஒரு குழந்தையை அரசியலுக்கு எளிதாக கொடுக்க முடியும். இன்று நிலை அப்படியல்ல. இருக்கும் ஒரே குழந்தையின் கையில் புத்தகத்தை கொடுத்து அனுப்புவதா? கட்சிக் கொடியை கொடுத்து அனுப்புவதா?

சில தினங்களுக்கு முன் நடிகர் கமலஹாசன் ஒழுக்கமும், கட்டுப்பாடும் நிறைந்த ஒரு தனியார் கல்லூரி விழாவில் பேசினார். ‘தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த மாணவர்கள் அரசியலுக்கு அவசியம் வர வேண்டும்', என்று அழைப்பு விடுத்தார்.

கமலஹாசன் அவர்களே! உங்களிடம் சில கேள்விகள்:

‘மாணவர்கள் அரசியலுக்கு வருவது யாருக்கு நல்லது? நாட்டுக்கு நல்லது என்று சொல்வது எழுத்தளவு உண்மையே!

நீங்கள் இளைஞராக இருக்கும் போது உங்களது நாட்களை பத்திரப்படுத்திவிட்டு தற்போதைய இளைஞர்களை உசுப்பிவிடுவது என்ன நியாயம்? உங்கள் இளமைக் காலத்தில் எத்தனை போராட்டங்களில் பங்கேற்றுள்ளீர்கள்? எத்தனை அறிக்கை வெளியிட்டுள்ளீர்கள்?

ஏதோ இன்றுதான் ஆட்சி கெட்டுவிட்டது என்று நீங்கள் சொன்னால், அது பொய். தமிழகத்தில் கிட்டத்தட்ட இதே போன்ற ஆட்சிதான் அரை நூற்றாண்டுக்கும் மேலாக நடந்து கொண்டிருக்கிறது. இன்றைய தகவல் தொழில் நுட்பம் பல விஷயங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. அவ்வளவுதான்.

தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து தியேட்டர்களையும் வளைத்துப் போட்டு, அதில் ஒரே படத்தை வெளியிட்டு, ஒரே வாரத்தில் வசூல் செய்யும் வசூல் ராஜாக்களாக மட்டுமே இன்றைய திரைப்படத் துறை இருக்கிறது. பெரிய பட்ஜெட் படம் வெளியாகும் போது, அதே நாளில் வெளியிட விரும்பும் பிற படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை. இந்த நிலை இருபது ஆண்டுகளுக்கு முன் இருந்ததா? தியேட்டர் முழுவதும் ஒரே டிக்கெட் விலை. அதுவும் அதிரடியான விலை. ரசிகர்கள் தங்கள் மீது கொண்டிருக்கும் ஈர்ப்பை உறிஞ்சி எடுக்கும் நிலைக்கு என்ன பெயர்? இப்படித்தான் எம்ஜியாரும், சிவாஜியும் அந்தக் காலத்தில் செய்தார்களா? இவையெல்லாம் தாங்கள் சார்ந்த, தாங்களும் வெற்றிகரமாக பயணிக்கும் பாதை. இது போன்ற அவல நிலைக்கு எதிர்ப்பும் தெரிவிக்காமல், தொடர்ந்து அதே பாதையில் பயணிக்கும் நீங்கள் நியாயமான அரசியலையும், ஆட்சியை கொடுப்பீர்கள் என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முட்டியும்?

அசிங்கங்களையும், ஒழுக்கச் சீர்கேடுகளையும் சமுதாயத்தில் சர்வ சாதாரணமாக நடமாடவிட்டதற்கு திரைப்படத்துறையும் ஒரு காரணம். ‘திரைப்படத்துறை சீரழிந்து கிடக்கிறது, சமுதாயத்தை சீரழிக்கிறது. இளைஞர்களே வாருங்கள் நாம் இந்த துறையை சீரமைப்போம்', என்று என்றாவது முழங்கியிருக்கிறீர்களா?

அரசியலுக்கு மாணவர்கள் வருவதாக வைத்துக் கொள்வோம். அவர்கள் யாரிடமிருந்து அரசியல் கற்றுக் கொள்வார்கள்? யாரை முன்னுதாரணமாக ஏற்றுக் கொள்வார்கள்?

உலகத்தில் காணப்படும் பொதுவான நியாயங்களும், அரசியல் நியாயங்களும் ஒன்றல்ல. இரண்டும் ஒன்று போல் தோற்றத்தை ஏற்படுத்தினாலும் நடைமுறையில் ஒன்றாக இருப்பதில்லை. இதைப் பற்றி தெரிந்து கொள்ள ஒரு குட்டிக்கதையை படிப்போம்:

ஒரு அரசன். சாதுவை அழைத்தான். தன் மகனுக்கு அரசியல் கற்றுக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டான்.

அடுத்த நாள். அரண்மனை புலவர் வீட்டிற்கு சென்றார் சாது. உடன் இளவரசனையும் அழைத்துச் சென்றார்.

‘புலவரே! இந்த மூட்டையில் ஆயிரம் பொற்காசுகள் இருக்கிறது. இதை விற்கவோ, உருமாற்றம் செய்யவோ, செலவு செய்யவோ கூடாது. அப்படி செய்தால் அரசனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். அதே நேரத்தில் பொற்காசுகளை எந்த சூழலிலும் அரசர் திரும்ப கேட்க மாட்டார்', என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

புலவருக்கு மகிழ்ச்சி. ஆனால், ஆயிரம் பொற்காசுகளை பாதுகாக்க வீட்டில் இடமில்லை. ஆகையால் வீட்டின் பின்புறம் ஒரு குழியைத் தோண்டி, பொற்காசுகளை புதைத்து வைத்தார். வாரம் ஒரு முறை குழியைத் தோண்டி பொற்காசு மூட்டைகளை பார்த்துவிட்டு மீண்டும் மூடிவிடுவார்.

அடுத்ததாக அரண்மனை காவலனை ஒரு மரத்தடிக்கு அழைத்துச் சென்றார் சாது.

‘காவலனே! இந்த மரத்தில் ஒரு பிசாசு வசித்து வருகிறது. பிசாசால் மக்களுக்கு எந்த பிரச்னையும் வரக்கூடாது. அதற்காக உன்னை இங்கு காவலுக்கு அரசர் நியமித்திருக்கிறார். இதற்கு உனக்கு இரட்டிப்பு சம்பளம் கிடைக்கும். பிசாசு இந்த மரத்திலிருந்து சென்றுவிட்டால் நீ மீண்டும் அரண்மனை பணிக்கு திரும்பிவிட வேண்டும். அதன் பிறகு உனக்கு சாதாரண சம்பளம்தான் கிடைக்கும். ஜாக்கிரதை, பிசாசு பொல்லாதது', என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

அடுத்ததாக, அந்த ஊரில் நேர்மையாளர் ஒருவர் இருந்தார். அவர் எதற்கெடுத்தாலும் நீதி, நேர்மை என்று பேசித் திரிவார். அவரை தன்னுடன் அழைத்துக் கொண்டு புறப்பட்டார் சாது. ஊருக்கு வெளியே வசிக்கும் திருடனிடம் அழைத்துச் சென்றார்.

‘நேர்மையாளரே! நீண்ட நாட்களாக என்னிடம் ஏதாவது வேலை வாங்கிக் கொடுங்கள் என்று கேட்டீர்கள். இதோ, இந்த திருடனிடம் பணியாற்றுங்கள். உங்களுக்கு சம்பளமும் இதர வசதிகளையும் செய்து கொடுப்பான்', என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சாது.

சில மாதங்கள் கடந்தன. ஒரு நாள் சாது யாருக்கும் தெரியாமல் புலவரின் வீட்டிற்குச் சென்றார். புதைத்து வைத்திருந்த பொற்காசு மூட்டையை எடுத்து வந்துவிட்டார். விடிந்ததும் பொற்காசு மூட்டை காணாமல் போனது புலவருக்கு தெரிந்தது. வருத்தமைடைந்தார். விஷயம் அரசருக்கு தெரிந்தால் பிரச்னையாகிவிடும். யோசித்தார். குழியில் மண்ணைப் போட்டு மூடினார். அமைதியானார்.

சில வாரங்களுக்குப் பிறகு மூவரையும் அரண்மனைக்கு அழைத்தார் சாது. அவர்களிடம் பேசினார்.

‘புலவரே! எப்படி இருக்கிறீர்கள்?' என்று கேட்டார் சாது.

‘நலமாக இருக்கிறேன். பொற்காசு மூட்டை பத்திரமாக உள்ளது. உங்கள் பரிசுதான் என்னை இன்றும் வாழவைத்துக் கொண்டிருக்கிறது', என்றார்.

‘காவலனே! பிசாசு நலமாக இருக்கிறதா?', என்று கேட்டார் சாது.

‘அதை ஏன் கேட்கிறீர்கள். அது செய்யும் அட்டகாசத்தை தாங்க முடியவில்லை. மிகவும் சிரமப்பட்டுதான் காவல் பணி செய்ய வேண்டியிருக்கிறது', என்றான் காவலன்.

‘நேர்மையாளரே! எப்படி இருக்கிறீர்கள்? இன்னமும் நேர்மையோடு இருக்கிறீர்களா?' என்று கேட்டார் சாது.

‘அதிலென்ன சந்தேகம்! என்றுமே நேர்மையிலிருந்து விலகியதில்லை', என்றார் நேர்மையாளர்.

இளவரசனிடம் பேசினார் சாது.

‘இளவரசே! அரசியலுக்கு பல முக்கிய அம்சங்கள் தேவைப்பட்டாலும், இன்றைய சூழலுக்கு அவசியமானது மூன்று. ஒன்று, கொள்கை, இரண்டு, ஜாதி, மூன்று, நேர்மை.

புலவரிடம் பொற்காசுகள் இல்லை. ஆனால், குழியில் பொற்காசுகள் பத்திரமாக இருப்பதாக அவர் ஒரு தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். அரசியல் கொள்கைகளும் அப்படித்தான். அவை தொடக்கத்தில் இருந்திருக்கும், பிறகு அது காணாமல் போயிருக்கும். ஆனால் தொடர்ந்து அது இருப்பது போன்ற ஒரு தோற்றமே மிஞ்சியிருக்கும்.

அடுத்ததாக பேய் இருப்பதாக நான் சொன்னது பொய். தனக்கு வருமான இழப்பு ஏற்படும் என்பதற்காக பேய் இருப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறான் காவலாளி. அரசியல்வாதிகள் ஜாதிகளை கையாள்வதும் இப்படித்தான். தங்களது தேவைக்கேற்றபடி ஜாதிகளை கையாள்வார்கள். ஓரிடத்தில் ஜாதிகள் இருக்கிறது என்பார்கள். மற்றொரு இடத்தில் ஜாதிகள் இல்லை என்பார்கள்.

அடுத்ததாக திருடனிடம் பணியாற்றும் நேர்மையாளர். நேர்மை என்பது என்ன? தனக்கு கொடுக்கப்பட்ட பணியில் நேர்மையாக இருப்பதா? அல்லது தன் பணியின் ஆதிமூலமே நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பதா? நேர்மை எங்கிருந்து தொடங்குகிறது, எதுவரை களத்தில் இருக்கிறது? எங்கு முடிகிறது என்பதற்கு யாரும் விளக்கமளிக்க முடியாது. அரசியல்வாதிகளின் நேர்மையும் இப்படித்தான். அடுத்தவன் செய்வதெல்லாம் தவறு. தாங்கள் மட்டுமே நேர்மையாளன் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவார்கள்.

‘ஆகையால், இளவரசே கொள்கை, ஜாதி, நேர்மை ஆகியவற்றிற்கான விளக்கத்தை நீங்கள் புரிந்துகொண்டால், அரசியலில் பாதி தேறிவிட்டீர்கள் என்று அர்த்தம். அதை முதலில் கற்றுக்கொள்ளுங்கள்', என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சாது.

இன்றைய அரசியல் இப்படித்தான் இருக்கிறது. கட்சிகளின் கொள்கை ஏட்டளவில் மட்டுமே இருக்கிறது. படிப்பதற்கும், வேலைக்கும் ஜாதி அவசியம் என்பார்கள். ஆனால், திருமணத்திற்கு ஜாதி கூடாது என்பார்கள். அதைப் போலத்தான் நேர்மையும், தான் மட்டுமே நேர்மையாளன் என்ற எண்ணத்தில் அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள் அரசியல்வாதிகள்.

காமராஜர் என்ற மாமனிதரின் நேர்மையைப் பற்றி இன்று பெருமையாக பேசுகிறோம். அவரை தோற்கடித்து அரசியலிலிருந்து அப்புறப்படுத்தியவர்களைத்தானே ஆட்சியாளர்களாக நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். நாம் மட்டுமல்ல, பெருந்தலைவர் காமராஜர் சார்ந்த கட்சிக்காரர்களும் அவர்களின் பின்னால் அல்லவா நிற்கிறார்கள்?

கமலஹாசன் அவர்களே, கொள்கை, ஜாதி, நேர்மை ஆகியவற்றில் மற்ற கட்சிகளைப் போலத்தான் நீங்களும். உங்களிடம் பெரிய வித்தியாசத்தை காணமுடியவில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை, எந்தக் கட்சியும் சாராத வாக்காளர்கள் எண்ணிக்கை மிக குறைவு. இதை மனத்தில் கொண்டு புதிய வாக்காளர்களான இளைஞர்கள் மீது உங்கள் பார்வை திரும்பியிருக்கிறது.

ஒரு விஷயத்தை மனதில் கொள்ளுங்கள். தமிழகம் சினிமாக்காரர்களால் குழம்பிப்போய் நிற்கிறது. அரசியலே கேளிக்கூத்தாக தெரிகிறது. நீங்கள் அரசியலில் குதியுங்கள். அது உங்களது உரிமை. ஆனால் இளைஞர்களின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள். அவர்களின் பெற்றோர்களின் கனவுகளை பொய்க்கச் செய்துவிடாதீர்கள். வாக்கு, வெற்றி, பதவி என்பதையெல்லாம் மறந்து, ஒரு பெற்றோரின் நிலையில் இருந்து ஒரு நிமிடம் சிந்தியுங்கள்.

மாணவர்களே! ஒழுக்கத்தின் மீது அதிக நம்பிக்கை வையுங்கள். ஒழுக்கம் எங்கிருக்கிறதோ, அங்கு மற்ற நல்ல விஷயங்களும் இருக்கும்.

அரசியலுக்கு மாணவர்களின் பங்களிப்பு எவ்வளவு அவசியமோ, அதை விட அவர்களின் குடும்பத்திற்கு அவர்களின் பங்களிப்பு மிக அவசியம். மாணவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், படியுங்கள், தொடர்ந்து படியுங்கள், தேர்தலில் ஓட்டுப்போடுவதோடு உங்கள் அரசியல் முடியட்டும். அரசியல் உங்கள் படிப்பையும், வாழ்க்கையையும் பாழக்கிட ஒரு போதும் அனுமதிக்காதீர்கள். அரசியல்வாதிகளின் அறைகூவலை புறக்கணியுங்கள்.

- சாது ஸ்ரீராம்
saadhusriram@gmail.com

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/5/10/9/w600X390/indianvoters.jpg http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/feb/08/மாணவர்களே-சிந்தியுங்கள்-ஓட்டுப்போடுவதோடு-உங்கள்-அரசியல்-முடியட்டும்-2859768.html
2859751 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் மீனாட்சியம்மன் கோயிலிலும் திருவாலங்காடு ஸ்தல விருட்சத்திலும் பற்றிய தீ: கவனிக்க வேண்டியது என்ன? Thursday, February 8, 2018 03:00 PM +0530
சிவபெருமானின் ஐந்து சபைகள் என்பவை சிவன் நடனக் கோலத்தில் நடராசராக எழுந்தருளியுள்ள சிவஸ்தலங்களுள் முக்கியமானவை. இத்தலங்களில் சிவனின் நடனம் நடைபெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. 

அதாவது ஐம்பெரும் அம்பலங்களாக.. பொன்னம்பலம், வெள்ளியம்பலம், இரத்தினம்பலம், தாமிர அம்பலம், சித்திர அம்பலம் ஆகும். இவை முறையே சிதம்பரம் நடராஜர் கோயில் (கனக சபை), மதுரை மீனாட்சியம்மன் கோயில் (இரஜத சபை), திருவாலங்காடு வடாரண்யேசுவார் கோயில் (இரத்ன சபை), திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் (தாமிர சபை), குற்றாலநாதர் கோயில் (சித்திர சபை) ஆகும்.

இந்த பஞ்ச சபைகளில் ஒன்றான மதுரை மீனாட்சியம்மன்  திருக்கோயிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீரவசந்தராயமண்டபத்தில் பற்றிய பயங்கர தீ தமிழக மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

தீ விபத்தில் வீரவசந்தராய மண்டபத்தில் பல தூண்கள் சேதமடைந்தன. மேற்கூரையும் இடிந்து விழுந்தது. ஆட்சிக்குப் பெயர் போன மீனாட்சியம்மன் கோயிலில் தீ பிடித்ததால், தமிழகத்தில் ஆட்சிக்கு சிக்கல் என்று பல கருத்துகளும் முன் வைக்கப்பட்டன.
 

இது பற்றிய அச்சங்களும், விவாதங்களும் அடங்குவதற்குள், மற்றுமொரு அதிர்ச்சியாக, பஞ்ச சபைகளில் 3வதாக விளங்கும் திருவாலங்காடு வடாரண்யேஸ்சுவரர் திருக்கோயிலின் மிகப்பெரிய ஸ்தல விருட்சமான ஆலமரம் தீப்பற்றி எரிந்தது என்ற செய்தி.

பச்சை மரம், அதுவும் கோயிலின் ஸ்தல விருட்சம் எப்படி தீப்பிடித்து எரியும் என்று செய்தியைப் பார்த்த அனைவரது மனதிலும் ஒரு சொல்ல முடியாத அதிர்ச்சி கலந்த கேள்வி எழுந்தது.

இது மோசமான அறிகுறியா? இயற்கை நமக்குக் காட்டும் சமிக்ஞைகளா என்றெல்லாம் ஆராய்வதற்கு முன்பு, உடனடியாக இது குறித்து எழும் புரளிகளை நினைத்தும் அச்சப்பட வேண்டியுள்ளது.

ஏற்கனவே, ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை ஆண்கள் இருக்கிறார்களோ அத்தனை விளக்குகளை வீட்டு வாசலில் ஏற்ற வேண்டும் என்ற புரளி காட்டுத் தீயாகப் பரவி வருகிறது. இதில் இன்னும் என்னவெல்லாம் பரவ உள்ளதோ..?  அது வேறு கதை.

கடந்த ஆண்டு இறுதியில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் வெளிப்பிரகார மண்டபம் இடிந்து விழுந்து பெண் ஒருவர் பலியானார். இதுபோன்று கோயில்களில் அசம்பாவிதங்கள் நடக்கும் போது மக்கள் பெரிதும் அதிருப்தி அடைகின்றனர்.
 

இதுபோன்ற அசம்பாவிதங்கள் வழக்கம் போல மனிதர்களின் அஜாக்கிரதையால் அல்லது சமூக விரோதிகளால் செய்யப்படுவதுதான். இயற்கையாகவே நடந்தாலும் சரி செயற்கையாக உருவாக்கப்பட்டாலும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் கோயிலுக்குள் நடக்கும் போது நிச்சயம் அது அபசகுனமாகவே பார்க்கப்படுகிறது. அதற்கும் காரணம் உண்டு, அதாவது கோயில்களை கட்டமைக்கும் போதே, அவை  இயற்கை சீற்றங்களை தாங்கும் விதத்திலும், பஞ்சபூதங்களால் பாதிக்கப்படாத வகையிலும் உருவாக்கப்படுவதே.

அதையும் மீறி அங்கே ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் போது அது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்குவதில் எந்த விநோதமும் இல்லை. 

எனவே, எல்லாவற்றுக்கும் கூறப்படும் ஒரே வாசகம்தான் இங்கும் பொருந்துகிறது. வருமுன் காப்போம் என்பதே.. இதுபோன்று கோயில்களில் அசம்பாவிதங்கள் ஏற்பட்ட பிறகு அதற்கான பரிகாரப் பூஜைகள், ஹோமங்கள் செய்தாலும், அது மக்களின் மனதுக்கு ஆறுதலைத்தராது. எனவே, பஞ்ச சபைத் தலங்கள் உட்பட அனைத்து முக்கியக் கோயில்களையும் மிகுந்த கவனத்துடன் பராமரித்திட வேண்டும்.

இதுவரை என்ன நடந்ததோ அது நடந்ததாகவே இருக்கலாம். இனி நடப்பது நன்மையாகவே இருக்கட்டுமே. கோயில்களை வணிக வளாகங்களாக மாற்றி, பக்தர்களுக்கு இடையூறு செய்வதை தவிர்க்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மீனாட்சியம்மன் கோயிலுக்கு என்று மட்டும் இல்லாமல், அனைத்துக் கோயில்களிலுமே இதனை செய்வது அடுத்த கட்ட அசம்பாவிதங்களைத் தடுக்க உதவலாம்.

கோயில்களைச் சுற்றி இருக்கும் காலி இடங்கள் சமூக விரோதிகளின் கூடாரங்களாக மாறாமல் தடுக்கலாம். கோயிலுக்குள் எந்த விதி மீறல்களும் நடக்காமல் தடுத்து, பக்தர்கள் இடையூறு இல்லாமல் சுவாமி தரிசனம் செய்ய அனைத்து வழிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். 

அனைத்துக் கோயில்களையும் ஆய்வு செய்து, எங்கெல்லாம் சிறு பிரச்னைகள் இருக்கிறதோ அதை உடனடியாக களைந்து அரசு உரிய நடவடிக்கை எடுத்தால் மக்களுக்கு மட்டும் அல்ல அது அரசுக்கும் நல்ல சகுனமாக மாறும். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/8/w600X390/scaredtree.jpg தீக்கிரையான ஆலமரம். http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/feb/08/மீனாட்சியம்மன்-கோயிலிலும்-திருவாலங்காடு-ஸ்தல-விருட்சத்திலும்-பற்றிய-தீ-கவனிக்க-வேண்டியது-என்ன-2859751.html
2856055 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் கூவம் நதியோரம் வாழும் கொத்தடிமைகள்! சாலை சிறார்களுக்கு மறுவாழ்வு தருமா அரசு? ரெனி ஜேகப் Friday, February 2, 2018 05:22 PM +0530  

குடியிருப்பதற்கான வீட்டுவசதி ஒரு அடிப்படை உரிமை. அரசு இதை உறுதிசெய்யவில்லை என்றால், யார் செய்வார்? இப்போது இல்லையென்றால் எப்போது?

கொல்கத்தா மற்றும் சென்னையில் நான் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, குடியிருப்பதற்கான தங்குமிடம் குறித்த எனது கருத்து மாறியது. கொல்கத்தாவில் ஆயிரக்கணக்கான நபர்கள், குடிசைப் பகுதிகளில் இருப்பதைவிட இன்னும் மிக மோசமான நிலைகளில், தெருக்களில் வசிக்கின்றனர். தெருக்களில் இரவு நேரத்தில் தாங்கள் தூங்கும்போது ‘மனித மிருகங்களிடமிருந்து’ எப்படி அவர்களது நாய்கள் அவர்களைப் பாதுகாக்கின்றன என்பது குறித்து வளரிளம் பருவத்திலுள்ள பெண்களிடமிருந்து நேரடியாக நான் கேட்ட வாழ்க்கைக் கதைகள் இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது. 

சென்னையில் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள காந்தி இர்வின் சாலைக்கு அடுத்த சந்துக்கு நீங்கள் சென்றிருக்கிறீர்களா? அங்குச் சென்றால் 20 லிருந்து 25 பெரிய பெட்டிகள் ஒரு கம்போடு சேர்த்துக் கட்டப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்க முடியும். அதைப் பார்த்தால் இது என்னவென்று நீங்கள் வியப்பிலும் மூழ்கக்கூடும். இங்கு தான் பல குடும்பங்கள் தங்கியிருந்து அவர்களது வாழ்க்கையை நடத்துகின்றனர். இந்தப் பெட்டிகள் தான் அவர்களது அடையாளம். ‘வீடு’ என்பது எப்போதுமே ஒரு வெறும் தங்குமிடத்தை மட்டும் குறிப்பதில்லை. நமது உடைமைகளையும், பொருட்களையும் வைப்பதற்கான ஒரு அமைவிடமாகவும் அது இருக்கிறது. 

இத்தகைய குடும்பங்களைத் தான் தெரு குடும்பங்கள் மற்றும் சாலைச் சிறார்கள் என்று நாம் அழைக்கிறோம். பல தலைமுறைகளாகவே இவர்களது அடையாளம் என்பது அத்தெருவின் 3-வது அல்லது 4வது மின் கம்பம் அல்லது மஞ்சள் நிறத்திலான பெட்டி என்பதாகவே இருந்துவருகிறது. இவர்களைத் தெரு குடும்பங்கள், சிறார்கள் என்று அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் அழைப்பதனால் மனநல ரீதியில் அழுத்தமும், அடக்குமுறையும்கூட இவர்கள் மீது சாத்தப் படுகிறது.

வாழ்வதற்கான உரிமை குறித்து இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 21-வது சரத்து பேசுகிறது. இது, வெறுமனே உயிர்வாழ்வது குறித்ததல்ல; கண்ணியத்தோடு வாழ்வதைப் பற்றியதாகும். நமது நாட்டின் உச்சநீதிமன்றம் இதை பல்வேறு வழக்கு விசாரணைகளின்போது தெளிவுபடுத்தியிருக்கிறது. ஆகவே தான் கல்வி கற்பதற்கான உரிமை என்பது சரத்து 21யு-வாக இடம்பெற்றிருக்கிறது. இதைப்போலவே, உடல்நல சிகிச்சைக்கான உரிமையாகச் சரத்து 21டி-யும் மற்றும் குடியிருப்பதற்கான தங்குமிட உரிமையாகச் சரத்து 21ஊ-யும் இடம்பெற வேண்டும் என்பது எனது விரும்பமாகவும், நம்பிக்கையாகவும் இருக்கிறது.

இந்தியாவில், ஏழை எளியவர்களக்கான அரசு வீட்டுவசதி திட்டங்களில் பெரும்பாலானவை, இதில் பயன்பெறும் நபர்கள், அவர்களது பெயரில் 23 சென்ட் நிலத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்ற முன் நிபந்தனையை வைத்திருக்கின்றன. சட்டப்படி சரியாக இருக்கின்ற அனைத்தும் நன்னெறியின்படி சரியானதாக இல்லாமல் போகலாம். விளிம்புநிலையில் இருப்பவர்களுக்கு அல்லது இந்த விஷயத்தில் சொந்தமாக நிலம் வைத்திருக்காத நபர்களுக்குச் சட்டங்கள் பாகுபாடு காட்டுபவையாக இருக்கக்கூடும். நிஜமான எதார்த்த உலகில், சில சட்டங்கள் ஏழைகளுக்கும், விளிம்புநிலை மக்களுக்கும் எதிரானவையாக இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, ஒரு பாலத்திற்கு கீழே அல்லது கூவம் ஆற்றுக்குக் கரையோரமாக அல்லது அங்கீகாரம் பெறாத நிலத்தில் ஒரு குடிசையை நீங்கள் கட்டக்கூடாது. இது, ஏழைகள் மற்றும் பணக்காரர்கள் ஆகிய அனைவருக்குமே பொருந்தும். ஆனால், இந்த உலகில் நாற்றமெடுக்கும் கூவமாற்றின் கரையோரத்தில் யார் குடிசை போடுவார்கள்? நீங்களோ அல்லது நானோ போடப்போவதில்லை. ஆனால்,சொந்தமாக நிலமே இல்லாத மற்றும் தனது குடும்பம் தூங்குவதற்கு ஒரு இடத்தை வழங்குவதற்கு வசதி வாய்ப்பே இல்லாத ஒரு நபர் தான் அங்கு குடிசைபோட எண்ணக்கூடும். சில சட்டங்கள் அனைவருக்கும் சமமானவை, ஆனால் பணக்காரர்களுக்கும் மற்றும் அதிகாரமிக்கவர்களுக்கும் அதிக சமமானவையாக அவை இருக்கக்கூடும்.

கொத்தடிமைத்தனம் என்ற கொடுமையான சுழற்சியை இது விளைவிக்கிறது. கொத்தடிமைத் தொழிலாளர்கள்,கடன் முன்பணம் அல்லது சமூக கடப்பாடு ஆகியவற்றின் காரணமாக வேறிடங்களில் வேலைவாய்ப்பைத் தேட சுதந்திரமில்லாமல், தாங்கள் விரும்புகின்ற இடங்களுக்குச் செல்வதற்கான உரிமையும் இல்லாமல், தங்களது உற்பத்தி பொருட்களையும், சேவைகளையும் சந்தை விலையில் விற்பதற்கான உரிமையின்றி அரசு நிர்ணயித்திருக்கிற குறைந்தபட்ச ஊதியத்தைப் பெறுவதற்கான உரிமையும் இன்றி விலங்குகளைவிட மிக மோசமான நிலைகளில் வசிக்குமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். அவர்கள் போவதற்கு இடம் ஏதுமில்லை; நிலம் இல்லை என்பதால் வீடோ, குடிசையோ இல்லை. வீடு இல்லை என்பதால் ஆதார் அட்டையோ, ரேஷன் கார்டோ என அடையாளச் சான்றுகளும் எதுவுமில்லை. இவை ஏதும் இல்லாத காரணத்தால் மறுவாழ்வு நிவாரணங்களைப் பெறுவதற்கும் வழியில்லை. இந்த நிலையில் கொத்தடிமையிலேயே தொடர்ந்து இருப்பதைத் தவிர வேறு வழியும் இல்லை என்று இவர்கள் கருதுவதில் வியப்பும் ஏதுமில்லை.

நமது முன்னேற்றத்திற்கான வட்டப்பாதையில் ஆதார மையமாக இது இருப்பதால், தங்குவதற்கான ஒரு வீடு இருப்பது எந்தவொரு மனிதநபருக்கும் அத்தியாவசியமானதாகும். அது, உங்களுக்கு ஒரு முகவரியை, ஒரு அடையாளத்தை, ஒரு சமூகத்தை மற்றும் கண்ணியத்தை, ஆதார் அட்டை, ரேஷன் அட்டை மற்றும் பொது வினியோக முறை உட்படப் பிற சட்ட ரீதியான உரிமைத் தகுதிகள் போன்ற சட்டப்பூர்வ ஆவணங்களோடு சேர்த்து தருகிறது. ஒரு இடத்தில் குடியிருக்கத் தொடங்குவது சிறப்பான வாய்ப்புகளையும் குழந்தைகளுக்கு தடங்கலற்ற கல்வி வாய்ப்பையும், பாதுகாப்பையும் வழங்குகிறது. மீண்டும் கொத்தடிமை முறையில் சிக்கி சுரண்டப்படும் வாய்ப்பைக் குறைக்க இது உதவுகிறது. இதன்மூலம், உடல் ரீதியான மற்றும் மனரீதியான நலத்தோடு வாழ்வதற்கு வழி ஏற்பட வாய்ப்புள்ளது.

இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷனில் (ஐதுஆ) பணியாற்றும் நாங்கள், 5000-க்கும் அதிகமான கொத்தடிமை தொழிலாளர்களைக் கொத்தடிமையிலிருந்து மீட்பதில் அரசுக்கு ஆதரவளித்திருக்கிறோம். கொத்தடிமையிலிருந்து இவர்கள் வெளியே வரும்போது அவர்களுள் பெரும்பாலானவர்களுக்கு போவதற்கு இடம் ஏதும் இருப்பதில்லை. பொன்னேரியில் 2 ஆண்டுகளாக ஒரு பள்ளிக்கூட வளாகத்தில் விடுவிக்கப்பட்ட 7 குடும்பத்தினர் தங்கியிருப்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம். மிகச் சமீபத்தில் தான் இக்குடும்பங்களுக்கு வீட்டுமனை ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. வேறுபலர் ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்காவது அவர்களது உறவினர்கள் அல்லது நண்பர்களோடு சேர்ந்து வசிக்கின்றனர். கொத்தடிமையிலிருந்து விடுவிக்கப்பட்டபிறகு கூட மீண்டும் அதிலேயே சிக்குகின்ற பலவீனமான நிலையிலேயே இவர்களது சூழ்நிலை இவர்களைத் தள்ளுகிறது. 

2015 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் கொத்தடிமையிலிருந்து விடுவிக்கப்பட்ட 158 குடும்பங்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 64 குடும்பங்களுக்கே தங்குமிட வசதி இருப்பதும், மீதம் 94 குடும்பங்களுக்குத் தங்குமிட வசதி இல்லை என்பது கண்டறியப்பட்டது. 105 குடும்பங்களுக்கு வீட்டு மனைக்கான பட்டா இருந்தபோது, 53 குடும்பங்களுக்கு வீட்டு மனைக்கான பட்டா இல்லை என்பதும் அதில் தெரியவந்தது. 41 குடும்பங்களுக்கு நிலம் இருந்தபோதிலும், அவர்கள் தங்குவதற்கென சொந்தமாக வீடு எதுவும் இல்லை என்ற தகவலும் அறியப்பட்டது. 

2014ம் ஆண்டில் தமிழ்நாடு அரசால் விடுவிக்கப்பட்ட 83 குடும்பங்களில் 30 குடும்பங்களுக்கே தங்குமிட வசதி இருந்தபோது 53 குடும்பங்களுக்கு அவ்வசதி இல்லை. 10 குடும்பங்கள் வீட்டுமனை பட்டாவைக் கொண்டிருந்தபோது 73 குடும்பங்களுக்கு மனை பட்டா இல்லை. மருத்துவ சிகிச்சைக்கான செலவுகளுக்கு (26மூ) அடுத்ததாக வீட்டு வாடகை செலவு (17மூ) என்பதே கொத்தடிமையில் சிக்குவதற்கான இரண்டாவது முக்கியமான காரணமாக இருந்திருக்கிறது. கொத்தடிமைக்கான காரணங்கள் மீது நடத்தப்பட்ட ஒரு ஆய்வு வெளிப்படுத்தியிருப்பது வியப்பூட்டக்கூடிய உண்மையாகும். அரசின் திட்டங்கள் பெரும்பாலானவற்றில் கட்டுமானப் பணியில் குறிப்பிட்ட நிலை நிறைவுசெய்த பிறகே பணம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன் காரணமாக, கட்டுமானப் பணியை முடிப்பதற்காகக் கடன் வாங்குமாறு அரசின் இத்திட்டத்தில் பயன்பெறுபவர்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் மற்றும் பெரும்பாலான நேர்வுகளில் வாங்கிய கடனை திரும்பிச் செலுத்துகின்ற நிலையில் இவர்கள் இருப்பதில்லை. 

விளிம்பு நிலை மக்களுக்கான வீட்டுவசதி திட்டங்களில் ஏறக்குறையப் பெரும்பாலானவற்றில், தங்களது வாழ்வாதார வாய்ப்புகளிலிருந்து இவர்கள் துண்டிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதே பொதுவான காரணியாக இருக்கிறது. வந்தவாசி தாலுகாவில் மீசநல்லூர் கிராமத்தில் செய்யாரின் முன்னாள் துணை ஆட்சியர் டாக்டர் பிரபு சங்கர் அவர்களால், தொடங்கிச் செயல்படுத்தப்பட்ட இருளர் நலவாழ்வு திட்டம் ஒன்றை இங்குக் குறிப்பிட நான் விரும்புகிறேன். வீடுகள், கறவை மாடுகள், பால் சங்கம் மற்றும் தீவன சாகுபடி பகுதிகள் ஆகியவற்றை உருவாக்கித்தர வேண்டும் என்ற திட்டத்தோடு 1.59 கோடி என்ற மொத்த மதிப்பீட்டைக் கொண்டு 43 இருளர் குடும்பங்களுக்கு (185 பயனாளிகள்) 6.2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இருளர்களுக்கான ஒரு பசுமை வீட்டுவசதி சமூகமான இதற்கு அப்துல்கலாம் புரம் என அவர் பெயர் சூட்டியிருந்தார். இச்செயல்திட்டத்திற்குத் தொழில்நுட்ப ஆதரவை வழங்க மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியின் சமூக பணி துறையோடு ஐஜேஎம் ஒத்துழைப்பை மேற்கொண்டது. ஒரு முன்மாதிரி செயல்திட்டமாக இது உருவாகும் என்று நாங்கள் நம்புகிறோம். இத்திட்டத்தில் கற்றுக்கொண்ட பாடங்களை நாட்டின் பிற பகுதிகளுக்கும் இத்தகைய திட்டங்களை உருவாக்குவதில் பயன்படுத்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். விடுவிக்கப்பட்ட 100 கொத்தடிமை தொழிலாளர் குடும்பங்களுக்கான இரண்டாவது கட்ட செயல்பாடாக 6.5 கோடி ரூபாய் என்ற மொத்த செலவினத் தொகைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. 

கொத்தடிமையிலிருந்து விடுவிக்கப்பட்ட 11 குடும்பங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருக்கழுக்குன்றம் கிராமத்தில்,வீட்டுமனைகளை ஆர்டிஓ ஒதுக்கீடு செய்திருந்தார். ஆனால், அரசின் இந்தச் செயல்முறை நிறைவடையும் வரை மரங்களுக்குக் கீழே இவர்கள் வசிக்க நேர்ந்தது. அரசு, ஐஜேஎம், எம்சிசி மற்றும் பிற சமூக தொண்டு நிறுவனங்களின் உதவியோடு 11 வீடுகள் இவர்களுக்காகக் கட்டித்தரப்பட்டன. அதன்பிறகு, இவர்கள் ஒரு சுய உதவிக்குழுவைத் தொடங்கி, சட்டப்படியான உரிமைச் சலுகைகளை பெற்றனர். இக்குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் இப்போது தவறாது பள்ளிக்குச் சென்று கல்வி பயில்கின்றனர். இப்போது அவர்களுக்கென்று சொந்த வீடு இருப்பதால் தங்களது சுய மதிப்பு அதிகரித்திருப்பதாக இவர்கள் கூறுகின்றனர். 

2016 மே 17ம் தேதியன்று திருத்தியமைக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளருக்கான மத்திய பிரிவு திட்டத்தின்படி (ஊளுளு), ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் ஊனமுற்றவர்கள் போன்ற சிறப்பு வகையினத்தவர் ஆகியோருக்கு முறையே ரூ.1 லட்சம், 2 லட்சம் மற்றும் 3 லட்சம் என்ற மறுவாழ்வுத் தொகையைப் பெற விடுவிக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், இந்தப் பலன்களை இதுவரை எவரும் பெற்றிருப்பதாக ஆதாரங்கள் எதுவுமில்லை.

விடுவிக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர் குடும்பங்களுக்கு வீட்டுவசதி ஏற்படுத்தித்தரும் திட்டங்களை ஆதரிப்பதற்கு கார்பரேட் நிறுவனங்களும் மற்றும் குடீழுகளும் இருக்கின்றன. 

இந்தியாவில் வீடு இல்லாதவர்களுக்குக் குடியிருப்பு வசதி என்பது ஒரு அடிப்படை உரிமையாக ஆகவேண்டும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களின் முனைப்புத் திட்டங்களை வலுப்படுத்துவதற்கு தங்களது கார்பரேட் சமூக பொறுப்புறுதி செயல்பாட்டிலிருந்து கார்பரேட் நிறுவனங்கள் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். 

2011ம் ஆண்டின் மக்கள் கணக்கெடுப்பு விவரங்களின்படி, இந்தியாவில் 1.77 மில்லியன் நபர்கள் வீடு இல்லாதவர்களாக இருக்கின்றனர் மற்றும் சென்னையில் ஏறக்குறைய 11000 நபர்கள் வீடு இல்லாதவர்களாகத் தெருக்களில் வசிக்கின்றனர். இத்தகைய அடித்தட்டு மக்களுக்கு வீட்டுமனை மற்றும் வீடுகளை எப்போது நாம் வழங்கப்போகிறோம்? நிலம் இல்லாத, தங்க வீடு இல்லாத மனிதர்களை நமது சொந்த சகோதரர்களாகவும், சகோதரிகளாகவும் கருதி அவர்களது அடிப்படைத் தேவைகளை எப்போது நாம் பூர்த்திசெய்யப்போகிறோம்?

அரசு இதைச் செய்யவில்லை என்றால் யார் செய்வது? இப்போது இல்லையென்றால் எப்போது?

கட்டுரை ஆசிரியர் 
திரு. ரெனி ஜேகப்,

இயக்குநர் - சமூக கூட்டாண்மைகள் 
இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் (ஐதுஆ)
 

]]>
cooum river, street dwellers, basic needs, கூவம் ஆறு, சாலை சிறார்கள், அடிப்படை உரிமை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/2/w600X390/7954194280_a4142b17ac_b.jpg http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/feb/02/கூவம்-நதியோரம்-வாழும்-கொத்தடிமைகள்-சாலை-சிறார்களுக்கு-மறுவாழ்வு-தருமா-அரசு-2856055.html
2855382 கட்டுரைகள்