Dinamani - நடுப்பக்கக் கட்டுரைகள் - http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2886499 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் பகையாகும் புகை...! பா. ராஜா DIN Saturday, March 24, 2018 02:48 AM +0530 சுகாதாரம் குறித்துப் பேசும்போது பொதுவாக கண்ணுக்குத் தெரியக் கூடிய, சுற்றுப்புறச் சுகாதாரம் குறித்தே அதிகம் நமது கவனத்துக்கு வருகிறது. ஆனால், கண்ணுக்குத் தெரியாத, காற்றில் கலக்கக் கூடிய நச்சுகளால் மனித குலம் மட்டுமல்ல, விலங்குகள், உணவுப் பயிர்கள் ஆகியவையும் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இதனால் நச்சு உணவுகளையே நாம் உண்டு வரு
கிறோம் என்பது கொடுமையான விஷயம்.
பல்வேறு வகையான எரிபொருள்களைப் பயன்படுத்துவதன் மூலம் காற்று மாசு அதிகரிக்கிறது. தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் புகையினால் அதிக காற்று மாசு ஏற்படுகிறது. நிலக்கரி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி மின்னுற்பத்தி செய்யும் நிலையங்கள், மோட்டார் வாகனப் புகை முதல் பெயிண்ட், கேசத்தில் தெளித்துக் கொள்ளும் ரசாயன ஹேர் ஸ்பிரே ரகங்கள், வார்னிஷ் உள்ளிட்டவற்றில் இருந்து வெளியாகும் வேதிப் பொருள்கள் காற்றில் பரவி, நச்சுத் தன்மையை அதிகரிக்கச் செய்கின்றன.
மாசினால் காற்றில் கலக்கும் கண்ணுக்குத் தெரியாத பல்வேறு வகையான வேதிப் பொருள்கள் மனித உயிரைக் குடித்து வருகின்றன.
காற்று மாசைக் கட்டுப்படுத்தவில்லையென்றால், உலக நாடுகள் பெரிய அளவிலான பாதிப்பைச் சந்திக்க நேரிடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுக்கின்றது. இதைத் தொடர்ந்துதான், காற்று மாசைக் குறைக்க, தனி நபர்களின் பெட்ரோல், டீசல் வாகனங்களின் இயக்கத்தை குறிப்பிட்ட நாள்களில் நிறுத்தி, பொது போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் படிப்படியாக உலகம் முழுவதும் மின்சார வாகனங்களுக்கு மாற வேண்டும் எனவும் கூறப்படுகிறது. நகரில் குறைவான தூரப் பயணத்துக்கு சைக்கிளை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்றெல்லாம் வலியுறுத்தப்படுகிறது.
நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் பல்வேறு உற்பத்தி நிறுவனங்களும், ஆலைகளும், விரிவாக்கக் குடியிருப்புகளும் அதிகரித்துள்ளன. இதனால், இரு மற்றும் 4-சக்கர வாகனங்களின் புழக்கமும் அதிகரித்துள்ளது என்பது கண்கூடு. இதனால், தில்லி, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட நகரங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது என்றும் ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும் காற்று மாசு உள்ள 100 நகரங்களும் கண்டறியப்பட்டுள்ளன.
இது உண்மை என்றாலும், இதற்கு எதிர்மறையாக தற்போது ஓர் ஆச்சரியமான விவரத்தை வெளியிட்டுள்ளனர். அதாவது, நகர்ப்புறங்களில் உள்ள காற்று மாசைவிட, கிராமப்புறங்களில் காற்று மாசு அதிகமாக உள்ளதாம்! அதுவும், மாட்டுச் சாணத்தால் தயாரிக்கப்பட்ட எரு, விறகு உள்ளிட்டவற்றைக் கொண்டு சமையல் செய்யும்போது, வெளியாகும் புகையானது காற்று வெளியில் கலந்து, அதிக அளவில் மாசு ஏற்படுகிறது என்று கண்டறிந்துள்ளனர். வயல்களில் கழிவுப் பயிர்களை எரிப்பதன் மூலமும் காற்று மாசு அதிகரிக்கிறது. அதாவது, கிராமப்புறங்களில் இது ஒரு முக்கியமான பிரச்னையாக உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்திலும் இத்தகைய நிலைதான். வளரும் நாடுகளில் உள்ள கிராமங்களில் இத்தகைய காற்று மாசு அதிகமாகவே உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, கிராமப்புறம் என்றால் பசுமை, தூய்மை என்று எண்ணிய காலம் மாறி வருகிறது!
இது தவிர, வெளியிடங்களில் ஏற்படும் மாசால் பாதிக்கப்படுவதைவிட, நான்கு சுவர்களுக்குள் இருந்து வெளியாகும் மாசால்தான் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமையலறையில் போதிய காற்றோட்ட வசதி இல்லாதது ஆகியவை உள்புற மாசு ஏற்பட முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. இத்தகைய உள்புற மாசு, நகர்ப்புறங்களில் உள்ள கட்டடங்களில் அதிகம் ஏற்படுகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கட்டுமானத்தின்போது செயற்கைப் பொருள்களைப் பயன்படுத்துவது, பெயிண்ட், வேதிப் பொருள்கள், பூச்சிகொல்லிகள் உள்ளிட்டவற்றாலும் காற்று மாசு ஏற்படுகிறது.
இத்தகைய மாசுகளைக் கண்டறிய போதிய காற்று மாசு கண்காணிப்பு மையங்கள் தற்போது இல்லை. மாசுப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்காக அதிக அளவிலான காற்று மாசு கண்டறியும் நிலையங்களை நாடு முழுவதும் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் காற்று மாசை பாதியாகக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது தலைநகர் தில்லியை ஒட்டியுள்ள பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுவரும் நிலையில், அதை நாடு முழுவதும் கிராமப் பகுதிகளுக்கு விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.
கை கழுவுதல் போன்ற உடல் தூய்மை நடவடிக்கை போல புறத் தூய்மை குறித்தும் காற்று மாசு குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் முனைப்பு காட்ட வேண்டும். இதை ஒரு முனைப்பு இயக்கமாக மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். குறிப்பாக, கிராமப்புறப் மக்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசர, அவசியமாகும்.


 

]]>
http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/mar/24/பகையாகும்-புகை-2886499.html
2886494 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் மொழிபெயர்ப்பு எதற்கு?  சா. கந்தசாமி DIN Saturday, March 24, 2018 02:47 AM +0530 ஒவ்வொரு எழுத்தாளருக்கும் தன் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் இன்னொரு மொழியில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்ற பேரவா இருக்கிறது. அதுவும் இந்திய எழுத்தாளர்கள், சர்வதேச மொழியான ஆங்கிலத்திலும், இந்திய ஆட்சிமொழியான இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டுமென விழைகிறார்கள். மொழிபெயர்ப்பு வழியாகவே தன் எழுத்தின் தனித்தன்மையை, படைப்பாற்றலின் வலிமையை எல்லோரும் அறிந்து கொள்ளவும், பரிசுகள், விருதுகள் பெறவும் காரணமாக இருக்கும் என்று கருதுகிறார்கள்.
 உலகம் ஒன்றுதான். ஆனால் மக்கள் ஒரே மொழி பேசுவதில்லை. ஒரே மாதிரியான எழுத்தில் எழுதுவதும் கிடையாது. பெரும்பாலானவர்கள் தாய்மொழியில் எழுதுகிறார்கள். சிலர்தான் கற்ற மொழியில் எழுதுகிறார்கள். மொழிபெயர்ப்புக்கு வசதியாக ஆங்கிலம் அமைந்துவிட்டது. பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், சீனம், அரபு, ரஷிய மொழி நூல்கள் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுகின்றன.
 அதனையே மூலமொழி மாதிரி வைத்துக் கொண்டு இதர உலக மொழிகளில் மொழிபெயர்க்கிறார்கள். அபூர்வமாகவே எழுதப்பட்ட மொழியில் இருந்து நேரடியாக மொழிபெயர்ப்பு நிகழ்கிறது.
 இந்திய எழுத்தாளர்கள் படைப்புக்களை இந்தி மொழியை மூலமொழி மாதிரி வைத்துக்கொண்டு மொழிபெயர்க்கிறார்கள். ஏனெனில் இந்திய இலக்கியத்திற்கு அடிப்படையானது சமஸ்கிருதம். அதன் அழகியல், இலக்கியக் கோட்பாடுகள், கதைகள் எல்லாம் சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது. தனித்தனியான மொழிகளாக இருந்தாலும் இந்திய மொழிகள் சமஸ்கிருதத்தைவிட்டு அதிகமாக விலகிப் போகவில்லை என்பது பொது புத்தியில் ஏறியிருக்கிறது.
 தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் சமஸ்கிருதத்தில் இருந்து தோன்றியவை அல்ல. அம்மொழிகளில் நிறைய சமஸ்கிருத சொற்கள் இருந்தாலும், அவை தனியானவை. தனியான லட்சணங்கள் கொண்டவை. அவற்றுக்கு சமஸ்கிருத கோட்பாடுகளை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது.
 இந்திய மொழிகளில் எழுதப்படும் -எழுதப்பட்ட இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தாலும், இந்தியர்கள் ஆங்கிலத்தில் எழுதியவற்றை இந்திய மொழிகளில் மொழிபெயர்த்தாலும் பெரிய அளவில் அங்கீகாரம் பெறுவதில்லை. மொழிபெயர்ப்பு செம்மையாக இல்லை. மூலத்தின் அருகில் கூட செல்ல முடியாமல் இருக்கிறது என்று சொல்லப்பட்டே வருகிறது.
 மொழி என்பது கற்பது. இந்தியப் பல்கலைக்கழகங்களில் மொழியியல் துறைகள் இருக்கின்றன. அதாவது ஆங்கிலம், இந்தி, வங்காளம், குஜராத்தி, உருது, தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று பல மொழிகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றது. அந்தத் துறை ஒரு மொழி மட்டும் சார்ந்தது. இந்தி மொழியைக் கொண்டு இந்தியைக் கற்றுக் கொள்வது; உருதுவைக் கொண்டு உருது மொழி வரலாறு, இலக்கியம் பற்றிப் படிப்பது; தமிழைக் கொண்டு தமிழ் இலக்கணம், இலக்கியம் கற்பது என்பதுதான். ஒரே மொழியை மட்டுமே படித்து பேராசிரியர்களாகி, அம்மொழியை மட்டுமே கற்றுக் கொடுக்கத் தகுதி பெற்று விடுகிறார்கள்.
 ஒரே வளாகத்தில் இருந்தாலும், இலக்கியம் படித்தாலும், அவர்களுக்கிடையே இணைப்பு இல்லை. இந்தியாவில் படைப்பு இலக்கியம் என்பது பல்கலைக்கழகங்கள் சார்ந்து இல்லை என்பது போலவே மொழிபெயர்ப்புகளும் இல்லை.
 இந்தி, வங்காளம், குஜராத்தி, தமிழ், கன்னட மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் இன்னொரு இந்திய மொழியைக் கற்பது இல்லை. அவர்கள் படிப்பு என்பது ஆங்கில மொழியோடு பிரஞ்சு, ஜெர்மன் என்றாகிவிட்டது. இலக்கிய மொழிபெயர்ப்பு என்பது பெரிய அளவில் பணம் கொடுப்பதில்லை என்பதால் யாரும் படிக்க வருவதில்லை.
 வேலை, வாணிபம், தொழில் நிமித்தம் பிற மொழி பேசப்படும் மாநிலங்களுக்குச் சென்றவர்களில் சிலர் இலக்கிய ஆர்வத்தின் அடிப்படையில் அந்த மாநில மொழியைக் கற்றுக் கொண்டு, சிறந்த படைப்பு என்று விமர்சகர்கள் சொல்வதையும் தன் சொந்த அறிவால் அறிவதையும் வைத்துக் கொண்டு மொழிபெயர்க்கிறார்கள். அதில் இல்லத்தரசிகளும் உண்டு. அவர்கள் பெரும்பாலும் நாவல்கள், சிறுகதைகள் மட்டுமே மொழிபெயர்க்கிறார்கள். கவிதைப் பக்கம் போவதே இல்லை. பழைய படைப்புகள் அவர்கள் அறியாதது.
 இந்தியாவில் சாகித்ய அகாதெமி இருபத்து நான்கு மொழிகளில் எழுதப்படும் சிறந்த படைப்புகளுக்கு பரிசு வழங்குகிறது. பரிசு பெற்ற நூல்களைப் பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டும். ஒவ்வொரு மொழியில் என்ன நிகழ்கிறது என்பதை எல்லா மாநிலத்தவரும் தம் மொழி வழியாகவே தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என்பதை விதியாகக் கொண்டிருக்கிறது. ஆனால் அது நடைபெறுவதில்லை. பெரும்பாலும் ஆங்கிலம், இந்தி மொழியோடு மொழிபெயர்ப்பு முடிந்துவிடுகிறது.
 கொங்கணி, மைதிலி, போடோ, டோக்ரி, சந்தாலி மொழிகளில் என்ன எழுதப்படுகிறது என்பது மற்ற மொழியினர்க்குத் தெரிவதில்லை. அதுபோலவே இந்திய மொழிகளில் நடைபெறும் சோதனைகள், வேறுபட்ட தத்துவ சரடு கொண்ட படைப்புகளை அறிய வழியில்லாமல் போய்விடுகிறது.
 ஒரு மொழி அறிவு மட்டும் இலக்கியத்தை அறிந்துகொள்ள போதுமானதில்லை. மொழிக்குள் ஒரு மொழி இருக்கிறது. அதுதான் படைப்பாளர்களின் மொழி. அதனைப் படிப்பின் வழியாக வசப்படுத்திக் கொள்ள வேண்டும். அது முடியாவிட்டால் சர்வதேச மொழியான ஆங்கிலத்தில் படித்து உலக இலக்கியம் படிக்கிறேன் என்று சொல்லிக் கொள்ள முடியாது.
 இலக்கியத்தில் உலக இலக்கியம் என ஒன்று கிடையாது. உள்ளூர் இலக்கியந்தான், அதன் மேன்மையால் உலக இலக்கியமாகிறது. மொழிபெயர்ப்புகள் உள்ளூர் வாழ்க்கையைச் சொல்லியே உலக இலக்கியமாக்கிவிடுகிறது. அதனை நிலைநிறுத்துவதில் மொழிபெயர்ப்புகள் முதலிடத்தில் இருக்கின்றன. மொழிபெயர்ப்புகள் மொழிக்கு நவீனத்துவத்தைக் கொடுக்கின்றன. மொழிபெயர்ப்பு இல்லாமல் எந்தவொரு இலக்கியமும் தனித்திருக்க முடியாது.
 மொழிபெயர்ப்பில் சமயம் சார்ந்த நூல்கள் முதலிடத்தில் இருக்கின்றன. கிறிஸ்தவ நூலாகிய பைபிள் 552 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. ஒரே மொழியில் பல்வேறு காலங்களில் பைபிளை புது அர்த்தம் தொனிக்க மொழிபெயர்த்திருக்கிறார்கள்.
 அரபு மொழியில் இருக்கும் குர்ஆன் 112 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. அதில் தமிழ் மொழியும் சேர்ந்து போகிறது.
 பேசப்படும் மொழிகளில் இருந்துதான் மற்றொரு மொழிக்கு நூற்கள் மொழிபெயர்க்கப்படும் என்பதில்லை. பல நூற்றாண்டுகளுக்கு முன்னாலேயே வழக்கொழிந்து போன மொழிகளில் எழுதப்பட்ட நூல்களையும் கண்டெடுத்து வாழும் மொழிகளில் மொழிபெயர்த்து வருகிறார்கள். யேசுநாதர் பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் மெசொபொட்டேமியாவில் களிமண் கட்டிகளில் அக்காட்டன் மொழியில் எழுதப்பட்ட "கில்காமேஷ்' என்ற காப்பியத்தைக் கண்டெடுத்து உலக மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்த்து இருக்கிறார்கள். தமிழில் இரண்டு மொழிபெயர்ப்புகள் வந்துள்ளன. ஒன்று க.நா.சுப்ரமண்யம் மொழிபெயர்த்தது. "கில்காமேஷ்' உலகத்தின் ஆதிகாப்பியம் என்று கொண்டாடப்பட்டு வருகிறது.
 1948-ஆம் ஆண்டில் ஐ.நா. சபையில் மனித உரிமைகள் பற்றிய ஆவணம் பிரகடனப்படுத்தப்பட்டது. மத கருத்துகளோ, இலக்கியத் தன்மைகளோ இல்லாத ஆவணம் அது. மனித உரிமைகள் பற்றி மட்டுமே பேசக்கூடியது. அது முதலில் ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ் மொழிகளில் எழுதப்பட்டது. பின்னர் 452 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஓர் ஆவணம் என்ற முறையில் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது மனித உரிமைகள் பற்றியதுதான்.
 மொழிபெயர்ப்பு மூலநூலை வதம் செய்துவிடுகிறது. படைப்புக்கு விசுவாசமாக இல்லை என்று பலர் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அதனைப் புறந்தள்ளியே மொழிபெயர்ப்பாளர்கள் நெடுங்காலமாக மொழிபெயர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
 மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழின் இலக்கண நூலாகிய தொல்காப்பியம், மொழிபெயர்ப்பு என்ன என்பது பற்றிச் சொல்லியிருக்கிறது. மொழிபெயர்ப்பு என்ற சொல்லும் தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ளது. தொல்காப்பியம் மொழிபெயர்ப்புப் பற்றிச் சொல்வது, மூலநூலில் உள்ளவற்றைத் தொகுத்துச் சொல்வது, விரித்துச் சொல்வது, தொகுத்தும் விரித்தும் சொல்வது. அது "அதர்படயாத்தல்' என்கிறது.
 கவிசக்கரவர்த்தி கம்பர் ராமாயணத்தை மொழிபெயர்க்கவில்லை. தொகுத்தும், விரித்தும் தொல்காப்பியம் சொன்னபடியே எழுதியிருக்கிறார். தமிழ் மொழி சமஸ்கிருத மொழி படைப்புகளை முழுவதும் மொழிபெயர்த்துக் கொள்ளவில்லை. பல நூற்றாண்டுகளுக்கு பகவத்கீதைக்கு வரிக்கு வரியான மொழிபெயர்ப்பு தமிழிலில்லை.
 ஐரோப்பிய மொழியான போர்த்துகீசிய மொழியில் இருந்துதான் வரிக்கு வரியான மொழிபெயர்ப்பு தமிழில் ஆரம்பமாகியது. செயின்ட் பிரான்ஸிஸ் சேவியர், போர்த்துகீசிய மொழியில் எழுதிய டாக்ட்ரினா கிறிஸ்தம் என்ற கிறிஸ்துவ கோட்பாடுகளைச் சொல்லும் பதினாறு பக்கங்கள் கொண்ட நூலை ஆண்டிரிக்ஸ் பாதிரியார், "தம்பிரான் வணக்கம்' என்ற பெயரில் மொழிபெயர்த்து 1578-ஆம் ஆண்டில் வெளியிட்டார்.
 கிறிஸ்தவ சமயம் பரப்ப வந்த ஐரோப்பிய பாதிரிகள் தமிழ் கற்றுக்கொண்டு, தமிழின் பழைய நூல்களைப் படிக்க ஆரம்பித்தார்கள். அறவழிப் பண்புகள், நேர்மை, ஒழுக்கம், உண்மை பேசுதல் பற்றிய தமிழ் நூல்கள், அவர்களை வெகுவாகக் கவர்ந்தன. திருக்குறள், நாலடியார், ஒüவை பாட்டியின் மூதுரை, கொன்றை வேந்தன் போன்ற பல நூல்களை லத்தீன், ஆங்கில மொழிகளில் மொழிபெயர்த்தார்கள். தமிழ் மொழி கொள்வதும், கொடுப்பதுமான மொழியாகியது.
 மொழிபெயர்ப்பு என்பது கருத்தைச் சொல்வதுதான். கலையைச் சொல்ல முடியாது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவே இருக்கிறது. ஆனால் சொல்லப்பட்டதின் வழியாகச் சொல்லப்படாத கலையம்சத்தை வாசகர்கள் தங்கள் மதியால் பிடித்துக் கொண்டு விடுகிறார்கள்.
 எழுதப்பட்ட ஒரு காப்பியத்தை மாற்றி, திருத்தி, புதிதாக முதல் நூல் மாதிரியே யாராலும் எழுத முடியாது. அது எழுதி முடிக்கப்பட்டது. ஆனால் மொழிபெயர்ப்பில் மொழிபெயர்க்கப்படும் மொழியின் நவீனத்தால் பழைய படைப்புகள் எல்லாம் புதுமை பெற்றுவிடுகின்றன.
 மொழிபெயர்ப்பு நிகழ்காலத்திற்கு முன்னால் இருந்தது. நிகழ் காலத்தில் இருக்கிறது. வருங்காலத்திலும் இருக்கவே செய்யும் என்பதுதான் சரித்திரம்.
 
 
 

]]>
http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/mar/24/மொழிபெயர்ப்பு-எதற்கு-2886494.html
2885973 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் போர் இல்லாத புதிய உலகம்  அருணன் கபிலன் DIN Friday, March 23, 2018 03:26 AM +0530 போர் என்னும் கொடிய வினை மனிதன் தோன்றிய காலந்தொட்டுத் தொடர்ந்து வருவதுதான். ஏனைய உயிர்களுக்கிடையே நிகழும் போர்கள் வயிற்றுப்பாட்டுக்கானவை. அதற்காக அவை தாமே களத்தில் நின்று போராடும். ஆனால், மாந்தர் நிகழ்த்தும் போர்கள் அப்படிப்பட்டவை அல்ல. அவை தனிமனித விருப்பு வெறுப்புகளால் இச்சைகளால் ஏற்படுபவை. தனக்காகப் பலரையும் பலிகொடுக்கும் தன்மையுடையவை.
 போர்க்களத்தில் எதிரிகளின் படைகளைத் தாக்கி அவற்றை எதிர்கொண்டு அவர்தம் தாக்குதல்களையும் ஏற்று வீரமரணம் அடைபவனையே நல்ல மகனாக ஏற்றுக் கொண்ட வீரத்தாய்மார்கள் தமிழகத்தில் இருந்துள்ளனர். கொடிய கொலை செய்யும் போரையும் வீரப்பயிற்சியாக்கி நன்னடை என்று சுட்டி, அதற்கும் அறம் வகுத்தது தமிழ் மரபு.
 அறிவியல் கருவிகளின் துணையில்லாது, வாளும் வேலும் களத்திலே மோதிக் கொண்ட காலத்திலேயே போருக்கான அறங்கள் வகுக்கப்பட்டன. அவையும் பூக்களின் பெயராகிய திணைகளாக இலக்கியத்தில் இலக்கணமாக இடம்பெற்றுள்ளன.
 வெட்சி- ஒரு நாட்டின் ஆநிரைகளைக் கவர்கின்ற போர்; கரந்தை- அதனைத் தடுத்து ஆநிரைகளை மீட்பது; வஞ்சி- அடுத்த நாட்டின் மீது படையெடுத்துச் செல்வது; காஞ்சி - அப்படையை மறித்து எல்லையிலேயே தற்காத்துக் கொள்வது; நொச்சி- அரசன் தனது அரண்மனைக்குள் பாதுகாப்பாக இருந்து கொண்டு தாக்குதலுக்குச் சரியான நேரத்தைக் கருதியிருப்பது; உழிஞை- அந்த அரண்மனையை முற்றுகையிடுவது.
 இவ்வகையான போர்முறைகளுக்கு மேலான மற்றொரு போர்முறை உண்டு. அதற்கு வாகை என்று பெயர். இருதிறத்து அரசர்களும் அவர்தம் படைகளும் குறிப்பிட்ட ஒருநாளில் பொதுவிடம் ஒன்றில் கூடி, இந்த நாளில் இந்த நேரத்தில் நாம் போரிடலாம் எனத் திட்டமிட்டுப் போர்செய்யும் முறையே வாகை ஆகும். இப்போர் முறையில் வென்றவரையே வாகை சூடினார் என்று உலகம் வாழ்த்தும்.
 ஒவ்வொரு போர்முறைக்கும் தனித்தனி அறங்கள் உண்டு. சான்றாக முற்றுகை இடப்படுவதற்கு முன்பாக, கால்நடைகள், பெண்டிர், நோய்பீடித்தோர் உள்ளிட்டோரைப் பட்டியலிட்டு அவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுமாறு அறிவித்ததாக நெட்டிமையாரின் புறநானூற்றுப் பாடல் தெரிவிக்கிறது.
 ஒரு நாட்டிற்குரிய பாதுகாப்புக்கு உரியதாக விளங்கும் போரின் தேவையையும் படைகளின் வலிமையையும் மறுக்காத திருவள்ளுவர் படைச்செருக்கு அதிகாரத்தில் நுண்மையான ஒரு குறளைப் பதித்திருக்கிறார்.
 அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
 வன்க ணதுவே படை (குறள்-764)
 போர்க்களத்தில் (யார்க்கும்) அழிவின்றி எதிரிகளின் சூழ்ச்சிக்கு இரையாகிவிடாமல் வலிமையுடன் அஞ்சாது எதிர்த்து நிற்பதுவே நல்ல படை எனவும் அத்தகைய படையினை உடையதுவே நல்ல அரசு என்றும் காட்டும் அவரது கருத்தின் மூலமாகப் போரில் வெற்றிதான் முக்கியமே தவிர, அழிவு நோக்கமல்ல என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
 போர்க்குரிய முதற்காரணமாகிய பகையைத் தொலைத்துவிட்டாலே போரை ஒழித்தது போலத்தான். இதனை இராமனும் போர்க்களத்தில் ஆயுதமிழந்தவனாக எதிராளியாக நிற்கிற இராவணனைக் கொன்றுவிடாமல் அவனைப் பார்த்து, "இன்று போய் போர்க்கு நாளை வா' என்று நன்னயம் செய்து நின்றான்.
 போர்க்களத்தில் பெற்ற பெருவெற்றியைக் கொண்டாட வந்த அசோக சக்ரவர்த்தி, அதன் கொடுமையையும் அவலங்களையும் கண்டு வெட்கித் தன்னுடைய படைவீரர்களை அமைதித் தூதுவர்களாக மாற்றி உலகெங்கிலும் அமைதி நிலவுதற்குத் தூதனுப்பினான்.
 சுதந்திரத்தை வேண்டி ஆங்கிலேயரை எதிர்த்த மகாத்மா காந்தி போருக்குப் பதிலாக சத்திய வழியிலான புதிய போராட்டத்தை மேற்கொண்டார். இதனைக் கத்தியில்லாத, இரத்தமில்லாத யுத்தம் என்று நாமக்கல் கவிஞர் போற்றினார்.
 மகாகவி பாரதியாரோ, அவருக்குப் பஞ்சகம் பாடும்போதில், "பெருங்கொலை வழியாம் போர்வழி இகழ்ந்தாய்' என்று குறிப்பிட்டுப் போற்றினார். அவ்வழியே அவருடைய தாசனாகிய பாவேந்தர், "புதியதோர் உலகம் செய்வோம், கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்' என்று அறைகூவல் விடுத்தார்.
 ஆயினும், இன்றும் இந்த நிமிடத்திலும் கூட உலகின் பல பகுதிகளில் தனி நபர்களும் குழுக்களும் அதிகாரத்துக்காக கட்டவிழ்த்துவிடும் போர்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. மக்கள் கொடுமைக்கு ஆளாகிச் செத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எல்லைப் பிரச்னை தொடங்கி உள்நாட்டுப் பிரச்னைகள் வரையிலும் போருக்குரிய காரணங்கள் பலவாகச் சொல்லப்பட்டாலும் அதன் விளைவுகள் மானுட உயிர்கள் மீதான கொடூரம் என்ற ஒன்றைத் தவிர வேறில்லை.
 பத்தாண்டுகளுக்குள் நடந்திருக்கிற போர்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை லட்சங்களில். வீடிழந்தோர் அதனினும் பன்மடங்கு.
 மானுட வாழ்வை வளப்படுத்துவதாகவும் அதன் மேன்மைக்குரிய பணிகளே தனது இலட்சியம் எனவும் அடிப்படைகளைக் கொண்டு தோன்றிய அறிவியலும், தொழில்நுட்பமும் அழிவினுக்கே முதற்காரணமாகிப் போருக்குத் துணை நிற்கின்றன. அறிவியல் வளர்ந்தது; அறம் தாழ்ந்தது. அறத்துக்கன்றி அதிகாரத்துக்கு மோதல் மூள்கிறது.
 அறிவியலின் வளர்ச்சியில் கொக்கரிக்கிற மனித குலத்தினை இந்த அசுரத் தனம் மற்றொரு பக்கம் அதைவிடவும் பெரிதாக வளர்ந்து நின்று இடிபோன்ற நகைப்பொலி எழுப்பிக் கேலி செய்கிறது.
 இரண்டு பெரிய உலகப் போர்களையும் அதன் கொடிய அழிவுகளையும் கண்ட பின்னும் இன்னும் இந்த நாடுகள் போர்களைத் தொடர்ந்து நடத்திக் கொண்டுதான் இருக்கின்றன. இனிவரும் இளந்தலைமுறையாவது போரில்லாத புதிய உலகத்தில் வாழட்டும்.
 
 

]]>
http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/mar/23/போர்-இல்லாத-புதிய-உலகம்-2885973.html
2885972 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் காட்டுத் தீ விபத்து உணர்த்தும் பாடம் முனைவர் இரா. கற்பகம் DIN Friday, March 23, 2018 03:25 AM +0530 வனங்களைப் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகப் பாவிக்காமல், யார் வேண்டுமானாலும் வனங்களுக்குள் செல்லலாம் என்ற நிலைப்பாட்டின் நேரிடைப் பலன்தான் அண்மையில் ஏற்பட்ட குரங்கணி சோக விபத்து. வனங்களுக்குள் செல்பவர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்- வனத்துறையினர், வனங்களின் உள்ளே வசிப்பவர்கள், வெளியிலிருந்து வனங்களுக்குள் செல்பவர்கள்.
 இதில் வனத்துறையினர், வனங்களின் பராமரிப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைசார்ந்த வேலைகளுக்காக வனங்களுக்குள் செல்வது மிக அவசியமான ஒன்று. இவர்கள் காடுகளுக்குள் மிருகங்களின் நடமாட்டம், அவற்றின் பழக்கவழக்கங்கள் பற்றி நன்று அறிந்திருப்பார்கள். ஒரு இக்கட்டு என்று வந்தால் என்ன செய்யவேண்டும் என்பதும் இவர்களுக்குத் தெரியும். இவர்கள் காடுகளுக்குள் செல்லும்போது விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு.
 அடுத்த வகை, வனங்களின் உள்ளேயே பிறந்து வளர்ந்து வசித்து வரும் ஆதிவாசிகள் மற்றும் பழங்குடியினர், வனங்களைத் தங்கள் உள்ளங்கை ரேகைகளைப் போல அறிந்திருப்பர். உட்பாதைகள், விலங்குகளின் நடமாட்டம், எல்லாம் இவர்களுக்கு அத்துப்படி. ஒவ்வொரு யானைக் கூட்டத்தையம், அதிலுள்ள ஒவ்வொரு யானையையும் தனித்தனியாகக் கூட இவர்களால் அடையாளம் கண்டுகொள்ள இயலும். இவர்களில் பலரை வனத்துறையே வேட்டைத்தடுப்புக் காவலர்களாகப் பணியமர்த்தி, வனங்களின் பராமரிப்புப் பணிகளுக்குப் பயன்படுத்துகிறது.
 இவர்களுடைய உள்ளுணர்ச்சி, காடுகளைப் பற்றிய புரிதல் ஆகியவை இவர்களுக்குப் பாதுகாப்பு தருகின்றன. எந்த ஆபத்தையும் எதிர்கொள்ளவும், தப்பிக்கவும் தேவையான பலமும் சூழலறிவும் இவர்களுக்கு உண்டு. இவர்களுக்கு காடுகளால் ஏற்படும் ஆபத்தும் விபத்தும் மிக மிகக் குறைவே!
 மூன்றாவது வகையைச் சேர்ந்த, வெளியிலிருந்து வனங்களுக்குள் செல்பவர்களால்தான் மிக அதிக அளவில் விபத்துகள் நேரிடுகின்றன. மனிதர்களுக்கும் விபத்துகள் ஏற்படுகின்றன, விலங்குகளுக்கும் ஆபத்து ஏற்படுகின்றன. விபத்துக்கள் காடுகளுக்கும் காட்டிலுள்ள விலங்குகளுக்கும் எனும்போது அதிக அளவில் வெளியில் தெரிவதுமில்லை, பேசப்படுவதுமில்லை. அதுவே விபத்து மனிதர்களுக்கு எனும்போது மிகப் பரபரப்பாகப் பேசப்பட்டு அரசின் கவனத்தை ஈர்க்கிறது. அதாவது விலங்குகளின் உயிரிழப்பு ஒரு விஷயமாகவே பொருட்படுத்தப்படுவதில்லை, மனித உயிரிழப்பு என்று வரும்போதுதான் எல்லா மட்டங்களிலும் பெரிய தாக்கத்தை உண்டாக்குகிறது!
 அதிலும், மிருகங்கள் மனிதர்களால் வேட்டையாடப்பட்டோ, விரைவாகச் செல்லும் வண்டிகளினால் கொல்லப்பட்டாலோ, வெறும் அபராதமோ குறைந்தபட்ச சிறை தண்டனையோ தண்டனை! ஆனால் மனிதர்கள் மிருகங்களால் கொல்லப்பட்டால், அது என்ன காரணத்துக்காக என்றெல்லாம் யோசிக்காமல், மிருகங்கள் கடும் குற்றவாளிகளாககக் கருதப்பட்டு மரண தண்டனையே பெறுகின்றன, அதாவது சுட்டுத் கொல்லப்படுகின்றன!
 வெளியிலிருந்து வனங்களுக்குள் செல்பவர்களையும் மூன்று வகையாகப் பார்க்கலாம்-
 வனத்துறையின் முறையான அனுமதி பெற்று, அவர்களின் துணையோடு, கணக்கெடுப்பு, புள்ளிவிவரம் சேகரித்தல் போன்ற வனம் சார்ந்த பணிகளுக்குச் செல்லும் அரசுசாரா அமைப்புகள். இவர்கள் வனத்துறைக்கு உதவி செய்கின்றனரேயன்றி உபத்திரவம் செய்வதில்லை. தக்க துணையோடு செல்வதாலும், வனங்களுக்குள் கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதாலும், கட்டுப்பாடுகள், சட்டதிட்டங்களை மதித்து நடந்து கொள்வதாலும், இவர்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்பட வாய்ப்பில்லை.
 இரண்டாவது, காலங்காலமாக வனங்களும் வழிபாட்டு இடங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டே இருந்து வருகின்றன. எல்லா வனக்கோட்டங்களிலும் அடர்ந்த காட்டுக்குள் ஏதாவது ஒரு கடவுள், அவருக்குச் சிறிய கோயில் இருக்கிறது. பெüர்ணமி, சிவராத்திரி உள்ளிட்ட விசேஷ நாட்களில், பக்தர்கள் பகல், இரவு இருநேரமும் நடைப்பயணமாகக் கடவுளை வழிபட்டுப் பொங்கலிடுவது வழக்கமாக இருந்துவருகிறது. நவநாகரிக மலையேற்றம் மாதிரியில்லாமல் இந்த எளிய மக்களின் மலையேற்றம் சில மதம்சார்ந்த நம்பிக்கைகளோடு அந்தக் காலகட்டத்தில் காட்டின் அமைதிக்கும் விலங்குகளுக்கும் எவ்வித இடையூறும் இல்லாமல் நடந்துவந்திருக்கிறது. பிளாஸ்டிக்கும் செல்ஃபோனும் மலிந்துவிட்ட இக்காலத்தில் இந்த பக்திப் பயணமும் பாதை மாறிவிட்டது! வெள்ளிங்கிரி, ஏழுமலையான் கோயில், சபரிமலை, முத்திக்குளம், தெங்குமரஹாடா- இங்கெல்லாம் பக்தர்கள் மலையேற்றம் முடிந்து சென்ற பின், அவர்கள் விட்டுச் செல்லும் பிளாஸ்டிக், கண்ணாடி பாட்டில், துணிகள், செருப்புகள் என்று "டன்'கணக்கில் அள்ளி வருகின்ற வேலையும் வனத்துறை தலையிலேயே விழுகிறது. அரசுசாரா அமைப்புகளும், கல்லூரி மாணவர்களும் கூட இந்தச் சுத்தம் செய்யும் பணியைச் செய்கின்றனர். இந்தப் பக்தர்கள் சமைப்பதற்கு மூட்டும் தீ பல நேரங்களில் காட்டுத்தீ உருவாகக் காரணமாகி விடுகிறது. இவர்கள் பெருங்கூட்டமாகச் செல்வதால் விலங்குகள் இவர்களைக் கண்டு ஒதுங்கிவிடுகின்றன. அதனால் இவர்களுக்கு விபத்து நேருவதில்லை. இவர்களால் காடுகளுக்குத்தான் ஆபத்து! வனம் மற்றும் விலங்குகளின் வாழ்க்கைச் சூழலைப் பெரிதும் பாதிக்கிறது இவர்கள் ஏற்படுத்தும் சப்தமும் விட்டுச் செல்லும் கழிவுகளும்!
 மூன்றாவது வகையாக, வனத்துறையின் முறையான அனுமதி பெறாமல் உள்ளே செல்பவர்களுக்கு மட்டுமே, இப்போது குரங்கணியில் நேர்ந்தது போல் விபத்து நேரிடுகிறது. இதற்குக் காரணம் காட்டைப்பற்றி எந்தவித புரிதலும் இல்லாமல், வனத்துறை ஊழியர்களின் துணையும் இல்லாமல், காட்டின் சட்டதிட்டங்களை மதிக்காமல் அவர்கள் வனங்களுக்குள் செல்வதுதான்.
 புற்றீசல் போல் பல "மலையேற்றப் பயிற்சி மையங்கள்' தோன்றி உள்ளன. செய்தித்தாள்களிலும், சமூக வலைத்தளங்களிலும் விளம்பரப்படுத்திக் கொண்டு மலையேற்றத்திற்கு ஆள் சேர்க்கின்றன.
 இம்மையங்கள் உரிய அனுமதி பெற்றுத்தான் இயங்குகின்றனவா என்பதையெல்லாம் விசாரிக்காமல் பலரும் இவர்களுடன் மலையேற்றத்துக்குச் செல்கின்றார்கள். இப்படிச் செல்பவர்கள் எல்லாம் காடுகளை நேசிப்பவர்களோ, விலங்குகளை மதிப்பவர்களோ அல்ல. பெரும்பாலும் விடுமுறையை உல்லாசமாகக் கழிக்க விழைபவர்கள் மட்டுமே. காட்டில் நடந்துகொள்ளும் முறை பற்றி ஏதும் தெரியாதவர்கள். பெங்களூரில் சில கணினி மென் பொறியாளர்கள் காட்டில் வழிதவறித் தவித்ததும், பிறகு வனத்துறையினரால் மீட்கப்பட்டதும், வெள்ளிங்கிரி மலையில் கல்லூரி மாணவர் ஒருவர் தனியே அனுமதியின்றிச் சென்று செந்நாய்க் கூட்டத்தால் துரத்தப்பட்டுப் பின்னர் வனத்துறையினரால் காப்பாற்றப்பட்டதும் நாம் அறிந்த செய்திகளே!
 இதுதவிர வனங்களுக்குள் காளான்போல் முளைத்திருக்கும் அனுமதி பெறாத ஓய்வு விடுதிகள். இரவில் கூட சுற்றுலாப் பயணிகளைக் காடுகளுக்குள் அழைத்துச் செல்கிறார்கள். இத்தகைய விடுதிகளையெல்லாம் இழுத்து மூடவேண்டும்.
 கானுயிர்ப் புகைப்படக் கலைஞர்கள் என்று சொல்லிக்கொண்டு சிலர் காட்டுக்குள் நுழைந்து விலங்குகளைத் துரத்தோ துரத்தென்று துரத்தி, புகைப்படம் எடுத்துக் கண்காட்சி நடத்திப் பணமும் பேரும் சேர்க்கிறார்கள்.
 இன்னும் வருந்தத்தக்கது என்னவென்றால், கானுயிர் ஆர்வலர்கள் பலர் வனங்களுக்குள் மாணவர்களையும், பிறரையும் அழைத்துக்கொண்டு செல்வதை ஒரு வியாபாரமாகவே ஆக்கிவிட்டிருக்கிறார்கள்! வனங்களில் மலையேற்றம் செல்லும் ஒரு குழுவில் இருபது பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களை அழைத்துச் சென்று, பேனர் பிடித்துக் கொண்டு, புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு, சமூக வலைதளங்களில் பதிவு செய்து விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள். வனத்துறையும் இந்த விதிமீறலைக் கண்டுகொள்வதே இல்லை.
 இவற்றையெல்லாம் விடக் கொடுமையானது, அரசே காடுகளைத் திறந்துவிட்டு, "வாருங்கள், மனிதர்களே! வாருங்கள், உல்லாசமாய் இருங்கள்'"என்று அழைப்பு விடுப்பதே. "சூழல் சுற்றுலா' என்ற பெயரில் காடுகளைக் காலி செய்தே தீருவது என்று அரசே கங்கணம் கட்டிக்கொண்டு வேலைசெய்கிறது.
 தேக்கடி, பரளிக்காடு, ஒகனேக்கல், இங்கெல்லாம் சூழல் சுற்றுலா என்ற பெயரில் காடுகள் சின்னாபின்னமாக்கப்பட்டு வருகின்றன.
 கோவை வனக்கோட்டத்தில் காரமடை அருகே பரளிக்காடு வனப்பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன் சூழல் சுற்றுலா ஆரம்பிக்கப்பட்டது. மலைவாழ் மக்களின் வருவாயைப் பெருக்க, வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஆரம்பிக்கப்பட்டது. சனி ஞாயிறுகளில் மட்டும் ஒரு நாளைக்கு 80 பயணிகளுக்கு மட்டும் அனுமதி என்று ஆரம்பிக்கப்பட்டது. இப்போது ஒரு நாளைக்கு 150 பயணிகள் என்று "அமோகமாக' நடைபெறுகிறது! அதாவது வனத்தின் "தாங்கும் சக்தியை'விட இருமடங்கு அதிகமான பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
 சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சமீபத்தில் சூழல் சுற்றுலா ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி. இதுவும் சனி ஞாயிறு மட்டும் என்று இருந்தது பிறகு டிசம்பர் மாதம் விடுமுறை நாட்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மிகவும் பெரியது. இதில் பல பகுதிகள் மனிதர்கள் எளிதில் நுழைய முடியாத அடர்ந்த, சாலைவசதியற்ற, வனப்பகுதிகள். இங்குள்ள விலங்குகள் செழுமையாகவும் ஆரோக்கியமாகவும், பயமற்றும் இருக்கின்றன. இப்போது சுற்றுலாவுக்குத் திறந்துவிட்டபடியால் விலங்குகளின் வாழ்க்கை முறை மாறி அவை மிக்க மன அழுத்தத்துக்கு உள்ளாக நேரிடும். இதனால் மனிதர்- விலங்கு மோதல்கள் அதிகமாகும்.
 காடுகள் நமக்கு "அரண்'. கேளிக்கைக்கும் உல்லாசத்துக்கும் அங்கு இடமில்லை. ஒரு நாட்டின் படைத்தளங்களை எவ்வளவு இரகசியமாகவும் பாதுகாப்பாகவும் போற்றி வைத்திருக்கிறோமோ, அதேபோல் காடுகளையும் மிக பத்திரமாகப் போற்றிப் பாதுகாக்க வேண்டும். அரசு முனைந்து, வனங்களில் வெளியார் நுழைவதை முற்றிலுமாகத் தடைசெய்ய வேண்டும். செய்யாவிடில் அடுத்த விபத்தை எதிர்பார்த்துத் தயாராய் காத்திருப்போம்!
 

]]>
http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/mar/23/காட்டுத்-தீ-விபத்து-உணர்த்தும்-பாடம்-2885972.html
2885033 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் வேலைவாய்ப்புக்குத் திறவுகோல் எஸ். கோபாலகிருஷ்ணன் DIN Thursday, March 22, 2018 01:19 AM +0530 இந்தியாவின் உடனடித் தேவை வேலைவாய்ப்புடன் கூடிய வளர்ச்சியே. கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு வெளிவரும் இளைஞர்களும், பாலிடெக்னிக் போன்ற கல்விக்கூடங்களில் தொழில் பயிற்சி பெற்று வெளிவரும் மாணவர்களும் வேலைக்காக காத்திருக்கும் நேரம் அதிகரித்துக் கொண்டே போகிறது.
உலக அளவில் பொருளாதார மந்த நிலை இருக்கிறது என்பது உண்மைதான். அத்துடன் ஒப்பிடுகையில் இந்திய பொருளாதாரம் எவ்வளவோ மேல். 2014-15இல் நமது மொத்த உற்பத்தி மதிப்பு (ஜி.டி.பி.) 7.5%; 2015-16இல் 8%; 2016-17இல் 7.1%; 2017-18இல் 6.5%. வரும் ஆண்டில், அதாவது 2018-19இல் ஜி.டி.பி. அதிகரிக்கும் என்று நாடாளுமன்றத்தில் புதிய பட்ஜெட்டுக்கு முன் சமர்ப்பிக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
பணவீக்கம் கட்டுக்குள்- ரிசர்வ் வங்கியின் இலக்கான 5 சதவீதத்திற்குள் இருக்கிறது. உலக அளவில் பெட்ரோலிய பொருள்களின் விலை தொடர்ந்து உயர்வதால், விலைவாசியும் பணவீக்கமும் உயர்வதற்கான சாத்தியக்கூறு உள்ளது.
இந்தப் பொருளாதார நிலைமையை ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, வேலைவாய்ப்புகள் ஓரளவேனும் உயர்ந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நிகழவில்லை என்பதே கவலையளிக்கும் விஷயம்.
பொருள்களை உற்பத்தி செய்யும் ஆலைகள் புதிய வேலைகளை உருவாக்க முடியும். ஜிடிபியில் ஆலைகளின் பங்கு 17% மட்டுமே. சீனாவில் அதன் பங்கு 35%. அதாவது நம்மைவிட இரு மடங்கு.
சமீப காலங்களில் டிஜிட்டல், கணினி, தகவல் தொழில்நுட்பம், தொலைத் தொடர்பு தொழில்நுட்பம் ஆகியவை வேகமாக வளர்ந்து வருவது கண்கூடு. இது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் அதே÷நேரம், நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் மனிதவளத்தின் தேவை குறைகிறது. மனிதர்களின் தேவையைவிட இயந்திரங்களின் தேவை அதிகரிக்கிறது. புதிய வேலைவாய்ப்புகளின் வளர்ச்சி மந்தமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
பொருளாதார ஆய்வறிக்கையின்படி ஆண்டுக்கு ஒரு கோடியே 20 லட்சம் முதல் ஒரு கோடியே 50 லட்சம் வரையிலானவர்கள் வேலை தேடி களம் இறங்குகிறார்கள். 2017ஆம் ஆண்டில் முதல் 4 மாதங்களில் மட்டும், பல லட்சம் அளவில் வேலை இழப்பு நேர்ந்திருப்பதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
சர்வதேச தொழிலாளர் நல நிறுவனம் ஆய்வின்படி, 2019ஆம் ஆண்டில் இந்தியாவில் வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 89 லட்சமாக இருக்கும் என்று தெரிகிறது. அது தவிர, வேலையில் இருப்பவர்களில் 77% பேர் தற்காலிக வேலை, அல்லது ஒப்பந்த அடிப்படையிலான வேலையில் இருப்பார்கள் என்று கூறுகிறது. இது கவலைக்குரிய செய்தி.
உலகிலேயே மிகப்பெரிய சேவை அமைப்பாகவும், மிக அதிக அளவில் வேலைவாய்ப்பை வழங்குவதாகவும் திகழும் இந்திய ரயில்வே அமைப்பு அண்மையில் மேற்கொண்டுள்ள முடிவு கவலை அளிப்பதாக உள்ளது. ரயில்வே துறையில் லிமூத்த பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்களுக்கான பணியிடங்கள் காலியாக இருந்தால், அவற்றில் ரயில்வே துறையிலிருந்து ஓய்வுபெற்ற பொறியாளர்களை நியமிக்க வேண்டும். ஒருவேளை பொருத்தமான ஓய்வுபெற்ற பொறியாளர்கள் இல்லாவிட்டால், அந்த காலிஇடங்களில் ஒப்பந்த அடிப்படையில் வெளியிலிருந்து பொறியாளர்களை நியமிக்கலாம். மேற்கூறிய நியமனங்கள் ஓராண்டுக்கு மட்டுமே. இந்த திட்டம் இரண்டு ஆண்டு காலத்துக்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட வேண்டும். தற்போது ஒன்றரை லட்சம் காலி இடங்கள் உள்ளன. அவற்றில் 75,000 காலியிடங்கள் மேற்கூறிய முறையில் நிரப்பப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
புதிய வேலைவாய்ப்புகள் உருவாகாத நிலையில், ஏற்கெனவே உள்ள வேலைவாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளாமல், ஓராண்டு காலத்துக்கு, ஓய்வூதியதாரர்களையும், ஒப்பந்தப் பணியாளர்களையும் நியமிப்பது எந்த விதத்தில் நியாயம்?
தேசப்பிதா காந்தியடிகள், கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில், தனக்கே உரிய நெடுநோக்குப் பார்வையில், கதர் (காதி) ஆடை திட்டத்தை அறிமுகம் செய்தார். அதற்கும் வந்துவிட்டது ஆபத்து! காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் பாரம்பரிய வடிவமைப்பிலான ராட்டையை ஒதுக்கிவிட்டு நவீன ராட்டையை அறிமுகம் செய்ததன் விளைவாக, சமீபத்தில் ஏழு லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். இதன் மூலிலம் உத்தராகண்ட், உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், பிகார், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், ஒடிஸா மற்றும் அந்தமான் நிக்கோபார் ஆகிய மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
நாடு புதிய வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்காக காத்திருக்கும் வேளையில், இருக்கும் வேலைவாய்ப்பையும் கைநழுவவிடுவது ஓர் எதிர்மறையான நிகழ்வு. இதனால் பாதிக்கப்படுபவர்களின் மனஉளைச்சல் மற்றும் இன்னல்கள் சாதாரணமானவை அல்ல. நவீனமயமாக்கல் மூலம் எதிர்கால வேலைவாய்ப்புகள் குறைவது புரிந்துகொள்ளக்கூடியது. வேலையில் இருப்பவர்களை வீட்டுக்கு அனுப்பாமல் மாற்று வேலை வழங்க அரசு முயலவேண்டும்.
தொழிற்கூடங்கள் தவிர, விவசாயம் வேலை வாய்ப்பு உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. 2022-க்குள் விவசாயிகளின் வருவாயை இரு மடங்காக உயர்த்துவது மத்திய அரசின் இலக்கு. இந்த இலக்கு வசப்பட வேண்டுமானால், விவசாய வளர்ச்சி 14%ஆக உயரவேண்டும். ஆனால் தற்சமயம் வளர்ச்சி விகிதம் 2% முதல் 4% மட்டுமே இருக்கிறது. விவசாய வளர்ச்சி 14 சதவீதமாக வளருவதற்கு, வரும் ஆண்டுகளில் பட்ஜெட்டில் ஒதுக்கீடு உரிய அளவில் உயர்த்தப்பட வேண்டும்.
சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் 738 கடைநிலை ஊழியர்களுக்கான வேலைக்கு 3 லட்சம் விண்ணப்பங்கள் வந்து குவிந்துள்ளன.இவர்களில் பல்லாயிரம் பேர் உயர்படிப்பு பெற்றவர்கள்.
அந்த மாநலத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 2015இல் 15.6 லட்சம். 2017இல் அந்த எண்ணிக்கை 23.7 லட்சமாக உயர்ந்துள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் இதே நிலைதான்.
அதேபோல் தில்லி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், புணே போன்ற பெரிய நகரங்களில் புதிய வேலைவாய்ப்பு உருவாக்கம் மிகவும் மந்த நிலையில் உள்ளது. கடந்த ஓர் ஆண்டில் 1 முதல் 8% அளவுக்கு மட்டுமே புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன என்று 'மான்ஸ்டர் எம்ப்ளாய்மெண்ட் இண்டெக்ஸ்' தெரிவிக்கிறது. பெரிய நகரங்களுக்கிடையே மும்பை மட்டுமே 18% வேலைவாய்பை அளித்துள்ளது.
மனநிறைவு தரக்கூடிய விஷயம் என்னவெனில், இரண்டாம் நிலை நகரங்களான சண்டீகர், கொச்சி, வடோதரா மற்றும் ஆமதாபாத் போன்ற நகரங்கள் வேலைவாய்ப்பில் 25% வளர்ச்சி எட்டியுள்ளன. இதற்கு காரணம் நுகர்பொருள்கள் உற்பத்தி, சில்லறை வியாபாரம் (டிபார்ட்மெண்ட் ஸ்டோர் போன்றவை) மற்றும் மக்கள் அதிகம் பயன்படுத்தும் நுகர்பொருள்களின் வியாபாரம் ஆகியவை என்கிறது அந்த ஆய்வறிக்கை.
இன்னுமொரு நல்ல செய்தி என்னவென்றால், அரசு சார்ந்த தொழிலாளர் ஆணையம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, வரும் ஜுலை-செப்டம்பர் மாதங்களில் ஆலை உற்பத்திதுறையில் 89,000 புதிய வேலைகளும், கல்வித்துறையில் 21,000 வேலைகளும், போக்குவரத்துத் துறையில் 20,000 வேலைகளும், சுகாதாரத்துறையில் 11,000 வேலைகளும், ஹோட்டல் துறையில் 2000 வேலைகளும், தகவல் தொழில்நுட்பத்துறையில் 1000 வேலைகளும் புதிதாக உருவாகும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.
எது எப்படி இருந்தாலும், புதிய வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு திறவுகோல் புதிய முதலீடுகளே என்பதில் இரு கருத்துக்கள் இல்லை. எவ்வளவுக்கெவ்வளவு புதிய முதலீடுகள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் திரட்டப்படுகின்றனவோ, அவ்வளவுக்கவ்வளவு ஆலைகள் விரிவாக்கமும் புதிய தொழிற்சாலைகளும் உருவாகும். அதன் பயனாக வேலைவாய்ப்புகள் பெருகும்.
தமிழ்நாட்டின் நிலை என்ன? 2017ஆம் ஆண்டில், இந்தியா முழுவதுமாக ரூ.3.95 லட்சம் கோடி முதலீடு திரட்டப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு திரட்டிய முதலீடு வெறும் ரூ.3,131 கோடி மட்டுமே. அதாவது ஒரு சதவீதத்துக்கும் குறைவு. சரியாகச் சொல்வதென்றால் 0.8 சதவீதம் மட்டுமே. அரசியல் ஸ்திரமின்மை இதற்கு ஒரு காரணமாக இருக்கக்கூடும்.
2015ஆம் ஆண்டிலிருந்தே, தமிழ்நாட்டில் முதலீடுகள் குறைந்து வந்துள்ளன. கர்நாடகத்துக்கு 38%; குஜராத் 20%; மகாராஷ்டிரம் 12.2%; உத்தரப்பிரதேசம் 3%. ஆனால் தமிழ்யநாடு ஒரு சதவீதத்துக்கும் குறைவு. இந்த தகவல் மத்திய அரசின் வணிகம் மற்றும் தொழில் அமைச்கத்தால் வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு இந்த நிலையிலிருந்து உடனடியாக மீள வேண்டும். அதற்குத் தேவை வெளிப்படையான தொழில் வளர்ச்சிக் கொள்கை; நம்பகமான நிலம் கையகப்படுத்தும் கொள்கை மற்றும் நடைமுறைகள்; தொழில்முனைவோருக்கு நியாயமான வரி மற்றும் கட்டணச் சலுகை, அடிப்படைக் கட்டமைப்புகள் மேம்பாடு, உயர்மட்டத்தில் துரிதமான மற்றும் வெளிப்படையான அரசு செயல்பாடுகள் ஆகியவையே.
நாட்டில் 90% தொழிலாளர்கள் அமைப்பு சாரா வேலைகளைச் செய்து வருகிறார்கள். இவர்களை மத்திய அரசு படிப்படியாக அமைப்பு ரீதியிலான தொழில் வட்டத்திற்குள் கொண்டுவர வேண்டும். அதேபோல் நிரந்தரப் பணி இடங்களில் ஒப்பந்தப் பணியாளர்களை நியமனம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
பணிகளில் ஈடுபடுவதற்கு முன் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கும் முறை வரவேற்கத்தக்க ஏற்பாடு. வேலைவாய்ப்புகளை உருவாக்கும் உத்திகளை மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். மொத்தத்தில், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் அதிகபட்ச முனைப்பு காட்டிட வேண்டும்.
 

]]>
http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/mar/22/வேலைவாய்ப்புக்குத்-திறவுகோல்-2885033.html
2885032 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் ராகுலின் பாண்டவர் பூமி... ஆ. கோபிகிருஷ்ணா DIN Thursday, March 22, 2018 01:18 AM +0530 'கடந்த கால வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக் கொள்வது ஒவ்வொரு மனிதனின் அடிப்படைத் தகுதிகளில் ஒன்று' - 1984-ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் இப்படித்தான் தனது உரையை ஆரம்பித்தார் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி.
ஏறத்தாழ 34 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த உண்மையை தற்போது காங்கிரஸ் உணர்ந்திருப்பதாகத் தெரிகிறது. தில்லியில் அண்மையில் நடைபெற்ற அக்கட்சியின் தேசிய மாநாட்டில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசானது மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யத் தவறிவிட்டது என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அதன் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்ததும், முந்தைய காங்கிரஸ் அரசுதான் நல்லாட்சி தந்தது என தொடர்ந்து கூறி வந்ததும் இதே ராகுல் காந்திதான்.
கடந்த 4 ஆண்டு காலமாக காங்கிரஸ் கட்சி எதிர்கொண்டு வரும் வரலாறு காணாத தோல்விகள் அவருக்கு படிப்பினையைக் கொடுத்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக இத்தகைய கருத்தை அவர் வெளிப்படுத்தியிக்கிறார் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
காங்கிரஸின் தவறுகளை ஒருபுறம் ஒப்புக்கொண்டாலும், அதே மேடையில் இதுவரை இல்லாத அளவு பாஜகவையும், அதன் தலைவர்களையும் கடுமையாக விமர்சித்துள்ளார் ராகுல். அதிலும் உச்சமாக பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் கெளரவர்கள் என்றும், காங்கிரஸார் பாண்டவர்கள் என்றும் கூறியுள்ளார்.
லட்சுமண ரேகை உவமையையும், மகாபாரத தர்மயுத்த உதாரணங்களையும் பெரும்பாலும் பாஜகவினரே மேற்கோள் காட்டுவர். தற்போது அந்த சொல்லாடலை தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறார் காங்கிரஸ் தலைவர்.
அண்மையில் நடைபெற்ற குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் கோயில், கோயிலாகச் சென்று ராகுல் வழிபட்டதும், தற்போது இதிகாசக் கூற்றுகளை எடுத்தாளுவதும் எத்தகைய அரசியல் சாணக்கியம் என்பது தெரியவில்லை. எவ்வாறாயினும், பாஜகவின் ஹிந்துத்துவ வாக்கு வங்கியை இத்தகைய நடவடிக்கைகள் மூலம் ஓரளவேனும் சிதைக்க முடியும் என ராகுல் திடமாக நம்புகிறார் என்றே கருதத் தோன்றுகிறது.
இது ஒருபுறமிருக்க, காங்கிரஸ் தேசிய மாநாட்டின்போது மேலும் ஒரு கடுமையான விமர்சனத்தை ராகுல் முன்வைத்தார். அதாவது, பாஜகவின் தலைவராக கொலைக் குற்றச்சாட்டில் சிக்கிய ஒருவர் (அமித் ஷா) உள்ளார் என்று அவர் கூறினார்.
அதற்கு உடனடியாக பாஜகவிடம் இருந்து பதிலடி வந்தது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் பிணையில் வந்த ராகுல், பாஜக தலைவரைப் பற்றிப் பேசுவதா? என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினார். மேலும், காங்கிரஸ் ஆட்சிக் காலங்களில் நடைபெற்ற ஊழல்களையும், கலவரங்களையும் நிர்மலா சீதாராமன் பட்டியலிட்டார்.
இந்தத் தருணத்தில் இன்னொரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். பொதுவாக ராகுல் காந்தி தெரிவிக்கும் கருத்துகளுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் பாஜக விரிவான விளக்க அறிக்கையை வெளியிடுவதில்லை. அறியாச் சிறுவன் (பப்பு) என்றும், அரசியல் அரிச்சுவடி தெரியாதவர் என்றும்தான் அவரை பாஜக தலைவர்கள் விமர்சிப்பது வழக்கம்.
இன்னும் சொல்லப்போனால், ராகுல் காந்தியை தங்களுடைய அரசியல் எதிரியாகக் கருதவில்லை என்ற தோற்றத்தையே பாஜகவினர் ஏற்படுத்தி வந்தனர். ஆனால், சமீபத்திய அரசியல் மாற்றங்கள் ராகுலுக்கு உரிய பதிலுரைகளை அளிக்க வேண்டிய நிர்பந்தத்தை பாஜகவுக்கு ஏற்படுத்தியுள்ளது. அதற்கு ராகுலின் பதவி உயர்வு காரணமாக இருக்கலாம்.
அல்லது, பாஜக ஆளும் மாநிலங்களான ராஜஸ்தானிலும், உத்தரப் பிரதேசத்திலும் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் அக்கட்சி அடைந்த தோல்வி அதற்குக் காரணமாக இருக்கலாம். அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறிய சந்திரபாபு நாயுடு, பாஜக - காங்கிரஸ் அல்லாத மாற்று அணியை மத்தியில் உருவாக்க முயன்று வருவதும் அதற்குக் காரணமாக இருக்கலாம்.
தேசிய அரசியலில் மூன்றாவது அணியை உருவாக விடக் கூடாது என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. 
காங்கிரஸும் அதே நிலைப்பாட்டில்தான் உள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் இரு கட்சிகளுக்கும் இடையே ஒரு வேறுபாடு உள்ளது. பாஜகவைப் பொருத்தவரை, மூன்றாவது அணி உருவாகவிடாமல் தடுத்தாலே வாக்கு வங்கி சிதறி, அது அக்கட்சிக்கு சாதகமாக அமையும் எனக் கூறப்படுகிறது. அதேவேளையில், காங்கிரஸுக்கோ மாற்று அணி அமையாமல் தடுப்பதுடன், ஒத்த கருத்துடைய கட்சிகளை எல்லாம் தங்களுடன் கைகோக்க வைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
அதன் காரணமாகவே காங்கிரஸ் தேசிய மாநாட்டில், பாஜகவைத் தோற்கடிக்க புதிய அரசியல் உத்தி கையாளப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சியின் தலைவராக ராகுல் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் தேசிய மாநாடு என்பதால், அதை அரசியல் அரங்கமே உற்று நோக்கியது. அதற்கு தகுந்தாற்போல அவரது உரையும் வீராவேசமாக அமைந்தது. பாஜகவை வீழ்த்தி மீண்டும் காங்கிரஸை அரியணையில் ஏற்றுவதே முக்கியக் குறிக்கோள் என்பது அவரது மொத்த உரையின் மையக் கரு. ஆனால், அதை எவ்வாறு சாத்தியப்படுத்தப் போகிறார் என்பதுதான் இப்போதைய கேள்வி.
ஒரு காலத்தில் நாடு முழுவதும் கொடிகட்டிப் பறந்த காங்கிரஸ் கட்சி, தற்போது வெறும் 4 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் உள்ளது. கட்சியை மீட்டெடுக்க வேண்டுமென்றால் மாநில அளவில் பலப்படுத்துவதற்கு முன்னால் வட்டக்கிளை அளவில் இருந்து வலுப்படுத்த வேண்டிய நிர்பந்தம் ராகுலுக்கு ஏற்பட்டுள்ளது. அதை சாத்தியமாக்கி தனது சூளுரையை ராகுல் வென்றெடுப்பாரா என்பது அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தல் முடிவுகளில்தான் தெரியவரும்.
 

]]>
http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/mar/22/ராகுலின்-பாண்டவர்-பூமி-2885032.html
2884360 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் மாணவர்களுக்கு அரசியல் அறிவு மட்டுமே தேவை! ஜோதிர்லதா கிரிஜா DIN Wednesday, March 21, 2018 01:20 AM +0530 காந்தியடிகளின் விடுதலைப் போராட்ட இயக்கத்தின்போது அவர் அதில் மாணவர்களின் பங்கேற்புக்கு அறைகூவல் விடுத்து அதைச் சாதிக்கவும் செய்தார் என்பதன் அடிப்படையில், இன்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அதையே கூறிக் கொண்டிருக்கின்றனர். காந்தியடிகள் கூறிய மற்றவற்றையெல்லாம் அறவே புறக்கணித்துவிட்டுத் தங்கள் கட்சிகளுக்கு வலுச் சேர்க்கக் கூடிய இதை மட்டும் இவர்கள் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டுள்ளார்கள்! 
விடுதலைப் போராட்ட இயக்கத்தில் காந்தியடிகள் மத உணர்வை வலியுறுத்தினார் என்கிற 'குற்றச்சாட்டு' கடவுள் நம்பிக்கையும் மதப் பற்றும் இல்லாதவரிடையே நிலவிவந்துள்ளது. கடவுள் நம்பிக்கை என்பது மகாத்மாவைப் பொருத்தமட்டில் நீதி, நேர்மை, அறம் சார்ந்த சிந்தனை, மனச்சாட்சியின் குரல் ஆகியவைதான். இதனை ஆன்மிகம் என்றும் கூறலாம். மதம் என்பதைச் சரியான அணுகுமுறையுடன் நெருங்கி அதைப் புரிந்துகொள்ளாதவர்களே காந்தியின் மதப் பற்றைக் குறை கூறுபவர்கள்.
இந்தப் புரிதலின்மை ஒரு புறமிருக்க, இன்றைக்கு நிலவும் சூழலில் மாணவர்கள் அரசியல் கட்சிகளில் சேர்ந்து அவற்றின் போராட்டங்களிலும் நேரடியாக ஈடுபட்டால், அவர்களது கல்விக்குக் குந்தகம் ஏற்படும் என்பதோடு, கல்விக்கூடங்களில் பல்வேறு பிரச்னைகளும் அதன் விளைவாய்த் தலைதூக்கும். ஏற்கெனவே, கிட்டத்தட்ட அனைத்துக் கல்விக்கூடங்களிலும் புகுந்துள்ள கட்சிகளை அங்கிருந்து விரட்டியடிக்க வேண்டியதே மக்களின்பால் அக்கறை இருந்தால் அரசு செய்ய வேண்டிய வேலையாகும். 
இவற்றால் ஏற்கெனவே மாணவர்கள் மிக இள வயதிலேயே கட்சிவாரியாய்ப் பிளவுபட்டுள்ளனர். இதனை நாம் இன்று பல்வேறு கல்விக்கூடங்களில் பார்த்து வருகிறோம். கல்வி பயிலும் மாணவர்களின் தந்தையரோ, நெருங்கிய உறவினரோ, காப்பாளர்களோ கட்சித் தலைவர்களாக இருப்பின், தங்கள் செல்வாக்கால் கல்விக்கூடங்களிலும் தங்களின் கட்சிகளைப் புகுத்தி விடுகிறார்கள். பெற்றோரின் அறிவுரையை ஏற்று இக்கட்சிகளில் சேர்வதில் ஆர்வம் காட்டாத மாணவர்களையும் இந்த நிலை பல்வேறு வகைகளில் பாதித்துவிடுகிறது. மாணவர்கள் மட்டுமன்றி, கல்விக்கூட நிர்வாகிகளும் பல்வேறு பிரச்னைகளை இதனால் சந்திக்க நேர்கிறது. 
மாணவர்களை அரசியலில் பங்கேற்க காந்தியடிகள் அழைத்ததை மட்டும் தங்களுக்குச் சாதகமாய்ச் சுட்டிக்காட்டும் சில கட்சித் தலைவர்கள், அன்றைய அரசியல் தலைவர்களின் தேசப்பற்று மிகுந்த தரத்தையும், இன்றுள்ள தலைவர்களின் தரமின்மையையும் ஒப்பிடாமல், காந்தியடிகளின் ஒரு செயற்பாட்டை மட்டுமே தங்களுக்குச் சாதகப்படுத்தி வருவது வெட்கக் கேடானதாகும். 
அதே போது, மாணவர்களிலும் கணிசமான எண்ணிக்கையினர் இன்று வாக்குரிமை பெற்றுள்ளதால், பல்வேறு அரசியல் கட்சிகள் பற்றிய அடிப்படை அறிவு அவர்களுக்கு இருந்தாக வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. எனவே பல்வேறு கட்சித் தலைவர்களுடைய, சட்ட மன்றத்தில் உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும் உள்ள கட்சியினருடைய நடவடிக்கைகளை உற்று கவனித்து உள்வாங்கிக் கொண்டு, அதன் விளைவான மதிப்பீட்டின் அடிப்படையில் வாக்களிக்க வேண்டிய பொறுப்பு பெற்றவர்களாக இவர்கள் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது. எனவே அரசியல் நிகழ்வுகளை கவனித்து, அவை பற்றிய அறிவை இவர்கள் வளர்த்துக்கொண்டே ஆக வேண்டும். ஆனால் தங்கள் கல்விக்குக் குந்தகம் விளையும் வண்ணம் அரசியல் கட்சிகளின் மாயவலைக்குள் அவர்கள் நேரடியாய்ச் சிக்கிக் கொள்ளக் கூடாது. நிற்க.
அரசியலில் புகுந்து ஆட்சி செய்வதன் மூலம் மட்டுமே மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்று சிலர் நினைப்பதும் விந்தையானது. மக்களுக்கு சேவை செய்ய நூற்றுக்கணக்கான வழிகள் உள்ளன என்பதும் இவர்களுக்குத் தெரியாததன்று. இது நன்றாகவே தெரிந்தாலும், சில நல்லவர்கள் மக்களின் வற்புறுத்தலால் தாங்கள் விரும்பாத நிலையிலும் அரசியலில் குதிக்க நேர்கிறது. வேறு சிலர் எம்.ஜி.ஆர். போல் தாங்களும் பேசப்பட வேண்டும் என்னும் புகழுக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு அரசியலில் சுய விருப்பத்தோடு குதிக்கிறார்கள்.
இன்று எல்லாரும் காமராஜ் ஆட்சி, காமராஜ் ஆட்சி என்று பெருந்தலைவரின் பெயரை உச்சரித்துப் புலம்பி வருகிறார்கள். ஆனால், காமராஜ் அவர்கள் சாதித்தை இவர்களால், இன்றைய சூழ்நிலையில் சாதிக்க முடியுமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. காமராஜ் அவர்களின் அந்த நாளைய அமைச்சர்களைப் போலவா இன்றைய அமைச்சர்கள் உள்ளார்கள்? அவருக்கு வாய்த்தவர் போன்ற நேர்மையான அமைச்சர்கள் இனி வரப்போகும் முதலமைச்சருக்குக் கிடைப்பார்களா! ஒருபோதும் இது நடக்கப் போவதில்லை.
ஒரு குழந்தையை மழலை வகுப்பில் சேர்ப்பதற்குக் கூட அதன் பெற்றோர் இரண்டு லட்சம் நன்கொடை கொடுக்க வேண்டியுள்ளது. இந்தத் தொகைக்கு ரசீதும் தரப்படுவதில்லை. ஒரு தனி ஏட்டில் மட்டும் குறித்துக்கொள்ளுகிறார்கள். மாணவர் தேர்ந்தெடுக்கப்படாவிட்டால், இத்தொகையில் ஒரு பகுதியைப் பிடித்துக் கொண்டு மீதியைத்தான் தருகிறார்கள். சில பள்ளிகள் முழுத் தொகைக்கும் 'பெப்பே'தான் காட்டுகின்றன. எனவே இப்படிப் பொதுமக்களை ஏமாற்றாத கல்விக்கூடங்களை இவர்கள் தொடங்கலாமே! 
இதே போல், மருத்துவமனைகளையும் இவர்கள் தொடங்கலாம். மருத்துவம் வணிகமாகியிருப்பதை விடுத்து, ஏழை மக்களுக்கு உதவி புரியும் நோக்கில் நல்ல முறையில் அவற்றைச் செயல்பட வைக்கலாம். இதையெல்லாம் காட்டிலும் பெரிய சேவை என்ன இருக்க முடியும்? இவை போன்ற இன்னும் எத்தனையோ வழிகள் உள்ளனவே!
தப்பான வழிகளில் செயல்பட்டு வரும் மக்களைத் திருத்தி ஜப்பானியர்களைப் போல் பொறுப்பானவர்களாக அவர்களை மாற்ற வேண்டியதுதான் இன்றைய மிகத் தேவையான சமுதாயத் தொண்டு.
மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி என்பது முதுமொழி. மக்கள் எவ்வழி, மன்னர் (ஆள்வோர்) அவ்வழி என்பது புதுமொழி. நம் மக்களிலும் முக்கால்வாசிப் பேர் சட்டத்தை மதிக்காதவர்களாகவும், தன்னலவாதிகளாகவும் இருப்பதாலுமே அரசியல்வாதிகள் கொழிக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை. சாலை விதிகளைக் கூடப் பின்பற்ற நம்மில் பலர் தயாராக இல்லையே! நடைபாதைகளில் பலர் சைக்கிள், ஸ்கூட்டர், பைக் ஓட்டுகிறார்கள். ஒருவழிப் பாதையாக நடைபாதையைப் பயன் படுத்திக்கொண்டிருந்தவர்கள் இப்போது இருவழிப் பாதையாக அதை உபயோகிக்கத் தொடங்கிவிட்டார்கள். முன்னாலும் பின்னாலும் வண்டிகள் வேகத்துடன் துரத்தினால் மக்கள் எப்படி அச்சமின்றி நடப்பார்கள்? நடைபாதையாவது சமதளமாய் இருக்கிறதா? குண்டும் குழியுமாகப் போடப்பட்டுள்ள இதில் நடப்பதே ஒரு சர்க்கஸ் போன்றதாயிற்றே? மக்கள் இதை கவனித்து நடப்பார்களா, இல்லாவிடில் முன்னாலும் பின்னாலும் துரத்தும் வண்டிகளைக் கவனித்தா? பாதசாரிகள் ஆட்சேபித்துக் கத்தினாலோ, திட்டினாலோ கூட மனசாட்சியோ, வெட்கமோ இல்லாத இவர்கள் காதில் வாங்காமல், காரியமே குறியாகத் துளியும் உறுத்தலே இன்றிக் கடந்து போகிறார்கள்! 
கியூவில் நிற்கக் கூட நம் மக்கள் தயாராக இல்லை. வங்கிகள், அஞ்சல் அலுவலகங்கள் போன்றவற்றில் வரிசையில் நிற்க வேண்டியவர்கள் முண்டியடித்துக் கொண்டு பெண்கள் என்றும் பாராமல் தொட்டுத் தள்ளிவிட்டு வரிசையின் முன்னால் போய் நிற்கிற அவலத்தை என்ன சொல்லுவது! 
'என் காதலை நீ ஏற்றே ஆகவேண்டும்' என்கிற ஆணவத்துடன் பெண்களைத் துரத்தும் இளைஞர் திலகங்களையும், ஏற்காவிடில் அப் பெண்களைக் கொல்லவோ, எரிஅமிலம் வீசி அவலட்சணப்படுத்தவோ முனையும் ஒருதலைக் காமுகர்களைத் திருத்த வேண்டாமா? கோயில்களில் ஏழைகளுக்காக நடத்தப்படும் அன்னதானக் கூடத்தில் போய் உட்கார்ந்துகொண்டு சாப்பிட்டுவிட்டு, கைப்பெட்டியுடன் அலுவலகத்துக்குச் செல்லும் ஐந்திலக்கச் சம்பளம் வாங்கும் படித்த பக்தர்களை' (அல்லது பதர்களை) யார் திருத்துவது? 
உணவகங்களில் உட்கார்ந்து மூக்குப் பிடிக்கச் சாப்பிட்டுவிட்டு, ஓட்டலுக்குப் பணம் கொடுக்காமல் அதையும் சாப்பிட்டு ஏப்பம் விட்டுவிட்டுப் போகும் வெட்கங்கெட்ட பிச்சைக்காரக் காவல்துறையினர் திருடர்களிலும் மோசமானவர்கள் அன்றோ? இவர்களையெல்லாம் திருத்துவதுதான் இன்றைய, தலையாய சமுதாயப் பணியாகும்.
இன்னும் எத்தனையோ 'செய்யலாம்'களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இப்போது கட்சி தொடங்கும் இரு நடிகர்களில் ஒருவர் மட்டுமே அரசியல் கட்சியைத் தொடங்கவும், மற்றவர் மேற்குறிப்பிட்ட சமுதாயப் பணிகளில் ஈடுபடவும் முன்வந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்!
 

]]>
http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/mar/21/மாணவர்களுக்கு-அரசியல்-அறிவு-மட்டுமே-தேவை-2884360.html
2883727 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் கோயிலும் கோயில் சார்ந்த குடிகளும் டி.எஸ். தியாகராசன் DIN Tuesday, March 20, 2018 01:45 AM +0530 அண்மையில் வெளியான ஒரு பத்திரிகைச் செய்தி படித்தவர் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 'தமிழ்நாட்டில் கடந்த 25 ஆண்டுகளில் 1200 தெய்வத் திருவுருவச் சிலைகள் திருடு போயுள்ளன. இதில் 385 வழக்குகளில் தடயம் எதுவும் கிடைக்காததால் வழக்குகள் முடித்துவைக்கப்பட்டன. 56 சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் 18 சிலைகள் உரிய கோயில்களில் ஒப்படைக்கப்பட்டன' என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கையொன்றை சமர்ப்பித்தது இந்து சமய அறநிலையத் துறை.
கோயில் என்பது இறைவன் குடி கொண்ட இடம் மட்டும் அன்று. நுண்கலைகள் பயிற்றுவிக்கும், வளர்க்கும் கூடமாக, மக்களின் வழக்குகளை ஆராய்ந்து தீர்ப்பு வழங்கும் நடுவர் ஆயமாக, ஆய்ந்தறிந்த ஆசிரியர்கள் பலர் சூழ்ந்த தேவாசிரிய மண்டபமாக விளங்கி வந்தது. காலப்போக்கில் ஆயிரமாண்டு அந்நியர் ஆட்சியில் நம் நாட்டுத் தொல் மரபுகள் தொலைந்து போயின. சுதந்திர இந்தியாவில் கடந்த 70 ஆண்டுகளில் இன்னும் நசிந்து போனது.
கோயில்கட்கு நமது முன்னோர்கள் அளித்த நிலபுலன்களின் அளவு, நன்செய், புன்செய் என்று 4 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள். பல கோடி சதுர அடி பரப்பு உள்ள கட்டடங்கள் குடியிருப்பு மனைகள், இவைகள் எல்லாம் என்றோ ஒரு காலத்தில் சொற்ப வாடகைக்கும், குத்தகைக்கும் விடப்பட்டவை. செல்வாக்கு மிக்க பலர் வாடகைக்கு, குத்தகைக்கு எடுத்த சொத்தை உள்வாடகை, குத்தகைக்கு விட்டுக் கொழுத்த லாபம் அடைகிறார்கள். இந்த சொத்துகளை இன்றைய சந்தை நிலவரப்படி ஏலத்தில் அல்லது நியாய வாடகையை நிர்ணயம் செய்தால் ஆண்டொன்றுக்கு உத்தேசமாக 11 ஆயிரம் கோடி ரூபாய் வருமானமாக வரும் என்று சமய அறிஞர்கள் சொல்கிறார்கள். 
1967-இல் அரசுக் கட்டிலில் அமர்ந்த திராவிடக் கட்சி கடவுள் மறுப்புக் கொள்கையை மனதில் கொண்டு, பல ஆண்டுகளாக செலுத்தாமல் இருந்த பழைய பாக்கியைத் தள்ளுபடி செய்தது. இதன் விளைவு தினசரி ஆறுகால பூசை செய்து வந்த பல கோயில்கள் இரு கால, ஒரு கால பூசைக்கே வழியின்றி அவலக் காட்சியில் நின்று அலறின.
கடந்த ஆயிரம் ஆண்டு காலமாகவே அந்நியர் ஆட்சியில் கோயில்கள் பல சிதைவுண்டன. தெய்வச் சிலைகள் சேதமுற்றன. வழிபாடுகள் நின்றுபோயின. இப்படி அவலம் நிகழ நம்மிடையே இருந்த ஒற்றுமையின்மையும், பல்குழுவும், பாழ் செய்யும் உட்பகையும்தான் காரணம் எனில் மிகையல்ல.
1967-க்குப் பிறகு முன் எப்போதும் இல்லாத வகையில் பகுத்தறிவுக் கொள்கைகள் என்ற பெயரில் நாத்திக உணர்வோடு ஆன்மிகம் பலவாறாக, தவறாக விமர்சிக்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மையப்படுத்தி கொச்சைப்படுத்தினர். சில இடங்களில் அந்தப் பிரிவு ஆடவரின் சிகை அலங்காரங்கள் சிதைக்கப்பட்டன. முப்புரி நூல் அறுக்கப்பட்டது. 'பச்சிளம் குழந்தைக்கு இல்லாத பால் பாழும் கல்லுக்கு ஏன்' என்று கேலி பேசப்பட்டது. 'தில்லை நடராசனையும், ஸ்ரீரங்கநாதரையும் பீரங்கி வைத்துப் பிளக்கும் நாள் எந்நாளோ' என்று ஏக்கம் தெரிவித்து மகிழ்ந்தனர்.
இன்னொரு மிகக் கேவலமான பணியையும் மேற்கொண்டனர். இதற்கு அரசின் அனுமதியும் உண்டு என்பதுதான் வெட்கக்கேட்டின் உச்சம். முக்கிய நகரங்களில் நாற்சந்திகளில், கோயில்கள் முன்பு உள்ள சாலைகளில், சமய ஆச்சாரியர்கள் மடம் முன்பு கருங்கல் தூண் நிறுவி, 'கடவுளைக் கற்பித்தவன் முட்டாள். மதத்தைப் பரப்பியவன் அயோக்கியன், கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி' என்ற வசைச் சொற்களை வடித்தார்கள். உலகில் எந்த ஒரு நாட்டிலும் நகரத்திலும் இப்படிப்பட்ட மூர்க்கத்தனமான செயல் நடக்கவும் இல்லை. நடக்கவும் நடக்காது. 'தெய்வம் உண்டின்று இரு', 'ஆலயம் தொழுவது சாலவும் நன்று', 'கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்று நம் முன்னோர்கள் போதித்த நம் நாட்டிலா இப்படி!
இதில் ஒரு வருத்தப்பட வேண்டிய அம்சம், கடவுள் இருக்கிறார் என்று திடமாக நம்பும் உலகின் மிகப் பெரிய மதங்களான கிறித்தவமும், இஸ்லாமும், இது ஏதோ இந்துக் கடவுள்களைக் குறித்துதான் எழுதியுள்ளனர் என்று எண்ணி வாளா இருந்துவிட்டனர்.
இந்தக் கல்வெட்டுகளில் இந்துக் கடவுள் என்று எங்கும் குறிப்பிடவில்லை. கடவுள் என்றே, பொதுவாகவே எழுதியுள்ளனர். ஆகவே, உலகில் கடவுள் இருக்கிறார் என்று நம்பும் கிறித்தவ மக்களும் இஸ்லாம் மக்களும் வாய் திறவாமல் இருப்பது வேடிக்கைதான்.
இந்நாட்டின் பெரும்பான்மை சமய இளைஞர் சமூகம் இதனை நம்பியதால் விபரீத விளைவுகள் தோன்றலாயிற்று. நாள்தோறும் வழிபாடுகள், திங்கள்தோறும் உற்சவங்கள் என்று நடந்த கோயில்களில் நிதி நெருக்கடி, அடியார்கள் வருகை குறைவு, பணியாளர்கள் தட்டுப்பாடு போன்ற பல காரணங்களால் பழம்பெரும் கோயில்கள் பொலிவிழந்தன. 
கிழக்கு தஞ்சை மாவட்டத்தில் புகழ் பெற்ற ஒரு கோயிலுக்கு 138 ஏக்கர் நன்செய், புன்செய் விளை நிலங்கள் உள்ளன. ஆயிரத்திற்கும் அதிகமான சதுர அடியில் குடியிருப்பு மனை கட்டடங்கள் உள்ளன. 1967-க்கு முன்பு 40 நபர்கள் பணியில் இருந்தார்கள். முப்போதும் திருமேனி தீண்டுவோர், பண்களைப் பாடும் ஓதுவார், தீபம் ஏற்றுவோர், மாலை கட்டுவோர், நந்தவனம் பராமரிப்போர், நாகஸ்வரம் வாசிப்போர், மேளம் வாசிப்போர், ஒத்து ஊதுவோர், தாளம் போடுவோர், பல்லக்கு சுமப்போர், தீவட்டி பிடிப்போர், காவலர், கணக்கர் என்று பலர். இன்றைக்கு இருவர் மட்டுமே. ஒருவர் அர்ச்சகர். மற்றொருவர் மெய்க்காவல். இந்த இருவர்க்கும் சேர்ந்து சுமார் ஏழாயிரம் ரூபாய்தான் ஊதியம். ஆனால் இந்தவொரு கோயிலோடு மற்றிரு கோயில்களையும் நிர்வாகம் செய்யும் நிர்வாக அலுவலர்க்கு அரசின் இளநிலை ஊழியர் சம்பளம் பல ஆயிரம். இவர்க்கு சமய நம்பிக்கையோ, ஆன்மிக நாட்டமோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏன், இவர் நாத்திக உணர்வு கொண்டவராகக் கூட இருக்கலாம். இவர் ஒரு அரசு ஊழியர், அவ்வளவே! இதுவே இன்றைய கோயில் நிலை.
திருவாரூர், திருவிடைமருதூர், திருபுவனம், சீரங்கம், மதுரை, தஞ்சை, தில்லை போன்ற பெருங்கோயில்கட்கு எத்துணை பேர் ஊழியம் செய்தால் அதன் பழைய பொலிவு வரும்? பல ஆண்டுகட்கு முன்னர் சீர்காழி கோயிலில் 200 நபர்கள் ஊழியமாற்றினார்கள். இன்றைக்கு பத்துக்கும் குறைவாகவே உள்ளனர்.
அற்றை நாளில் கோயிலுக்கும் கோயிலைச் சுற்றியுள்ள மக்கட்கும் ஆன்மிகத் தொடர்பு ஒரு சங்கிலித் தொடர்பாக இருந்தது. அண்மைக் காலத்தில் மகளிர்க்கு ஏற்படும் கருச்சிதைவு போல, மக்கட்கு கருத்துச் சிதைவு ஏற்பட்டது.
தஞ்சைப் பெரு நிலத்தில் சிறு மலைகளோ, ஏன், குன்றுகளோ கூட இல்லாத நிலையில், தஞ்சை முதல் திருமறைக்காடு வரை உள்ள கோயில்கள் அனைத்தையும் கருங்கற்களால் எப்படிக் கட்டினார்கள்? சுமார் 25 அடி உயரமும் 3 அடி முதல் 4 அடி அகலம் கொண்ட நீண்ட பாறைகளைப் பல கி.மீ. தூரம் கடந்து கொண்டு வந்து எப்படிச் சேர்த்தார்கள்? மேடு பள்ளமான மண் சாலைகள், மழை, வெயில், காற்று, வறட்சி இவை போன்ற இயற்கை இடர்களைத் தாங்கிக் கொண்டு, முயற்சியோடும், தெய்வ நம்பிக்கையோடும், பொறுமையாடும், சலியாது உழைத்தார்கள். கடவுள் இல்லை என்று வாதிடுபவர்கள் சற்றே பின்நோக்கி நமது தொல் இலக்கிய பனுவல்களின் ஏடுகளை ஓரளவாவது படிக்க வேண்டும்.
இன்றைக்கு கிடைத்திட்ட பழம்பெரும் இலக்கண நூலான தொல்காப்பியம் தமிழ்க் கடவுள் முருகனையும், இன்ன பிற தெய்வங்களையும் குறிப்பிட்டு,
மாயோன் மேய காடுறை உலகமும் 
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
என்று அகத்திணையில் குறிக்கிறது.
முருகனை, 'உலகம் உவப்ப வலனேர்பு திரிதரும் பலர் புகழ் ஞாயிறு கடற்கண்டாங்கு' என்று நீலக்கடலை நீல மயிலுக்கும் பலர் புகழ் ஞாயிற்றை முருகப் பெருமானுக்கும் உவமையாக நக்கீரர் பெருமான் திருமுருகாற்றுப்படையில் பேசுகிறார்.
சங்க இலக்கியப் பனுவலான மதுரைக் காஞ்சியும்,
நீரு நிலனும் தீயும் வளியும்
மாக விசும்போடைந்துடன் இயற்றிய
மழுவான் நெடியோன் தலைவனாக
என்று கூத்தப்பிரானை வழுத்தும்.
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பதை, 'பிறங்கு மலை மீமிசைக் கடவுள்' என்று குறிஞ்சிப் பாடல் சொல்லி மகிழும். பிறைச் சந்திரனை தன் தலையில் சூடிய ஆடல் வல்லானை, '...பலர் தொழச் செவ்வாய் வானத்து ஐயெனத்தோன்றி இன்னம் பிறந்தென்று பிறை சூடிய' என்று குறுந்தொகை காட்டும். 
ஆனால், எப்படியோ இப்படிப்பட்ட சிந்தனைகள், பேச்சுகள், எழுத்துகள், ஆங்கிலத்தை ஆராதனை செய்தல், ஒரு வகுப்பினரை வெறுத்தல், கடவுட் கொள்கையை மறுத்தல் போன்றவற்றை விதைத்து விளைச்சலாக்கி அறுவடை செய்துவிட்டனர். முன்னோர் போற்றிப் புகழ்ந்த பெருமையான சமயக் கருவூலங்களைப் படித்தறிய மறந்தனர். படிக்க மறுத்தனர். 
சாதிப்பூசலும், தீண்டாமைக் கொடுமையும் சத்தின் உண்மை உட்பொருள் அறியாததால் வளர்ந்து நின்றது. பல நூறு ஆண்டுகட்கு முன்னர் ஆளுடைப்பிள்ளை தன்னோடு கோயிலுக்கும் வேதியர் குடிலுக்கும் யாழ்ப்பாணரை அழைத்துச் சென்றார் என்பது வரலாறு.
ஆயிரம் ஆண்டுகட்கு முன்னரே தீண்டாமைத் தீயை அணைத்த வள்ளல் ஸ்ரீ இராமானுஜர். சடைக்கரந்தார்க்கு அன்பர் எனில் நான் வணங்கும் கடவுள்தாம் அவர் என்று புலையரையும் சொல்லால் வணங்கி மகிழ்ந்தாரே நாவுக்கரசர்! நேர வந்தவர் யாவர் ஆயினும் என் விருந்தினர்தான் என்று வரவேற்று விருந்தோம்பல் செய்தாரே இளையான்குடி மறை நாயனார்! சேக்கிழார் பெருமான் மூன்று இடங்களில் ஐயரே என்று யாரை விளிக்கிறார்?
கோயிலும் கோயிலைச் சார்ந்த குடிகளும் முன்னைப் போல ஒன்றொடொன்று இணைந்தும், பிணைந்தும் தெய்வ நெறி வளர்த்து, முறை காத்து, எல்லோரும் ஓர் குலம் ஓர் நிறை என்ற அளவில் சமைய
இறைவனை இறைஞ்சுவோம்.

]]>
http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/mar/20/கோயிலும்-கோயில்-சார்ந்த-குடிகளும்-2883727.html
2883724 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் பொறுப்பு வகிப்பவர்களின் பொறுப்பு எஸ். ஸ்ரீதுரை DIN Tuesday, March 20, 2018 01:44 AM +0530 உலகளவில் நமது நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் எத்தனையோ புள்ளிவிவரங்கள் உள்ளன.
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு; சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியர்களின் சராசரி வயது அதிகரித்துள்ளது; உலகத்திலேயே நான்காவது பெரிய ராணுவம் இந்தியாவினுடையது; வலுவான பொருளாதாரக் கட்டமைப்பு இங்கு இருக்கிறது; விளையாட்டுத் துறையில் நம் நாட்டு வீரர்-வீராங்கனைகள் உலக சாதனைகள் பலவற்றைப் படைத்து வருகிறார்கள்; கூகுள், பெப்சி போன்ற உலக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இந்தியர்கள் தலமை வகிக்கிறார்கள்... என்பன போன்று தலைநிமிர வைக்கும் தகவல்கள் எத்தனையோ இருக்க -
நம் நாட்டினர் அனைவரும் வெட்கித் தலை குனியும் வேறு ஒரு புள்ளிவவரமும் இருக்கத்தான் செய்கிறது. சுமார் பத்தாண்டு கால இடைவெளியில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் ஐந்நூறு சதவீதம் அதாவது ஐந்து மடங்கு அதிகரித்திருக்கின்றன என்பதே அந்தப் புள்ளிவிவரம்.
அதாவது, 2006-ஆம் ஆண்டில் சுமார் பதினெட்டாயிரமாக இருந்த இத்தகைய குற்றங்கள் 2016-இல் ஒரு லட்சத்துக்கும் மேலாக ஆகிவிட்டனவாம். பெண் குழந்தைகள் மீதான குற்றங்களின் எண்ணிக்கையே ஆண்டுக்கு ஒரு லட்சத்தைத் தாண்டுகின்றதென்றால், ஒட்டுமொத்த பெண் இனத்தின் மீது கட்டவிழ்த்துவிடப்படும் அத்துமீறல்களின் எண்ணிக்கை பல லட்சங்களைத் தொடும். 
இத்தகைய சமூகக் குற்றங்கள் அதிகரிப்பதற்கு மேம்போக்காக ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லிவிட்டுப் போய்விடலாம். உண்மையான காரணம் என்பது வேறு.
'பெண் என்பவள் அனுபவிக்கப்பட வேண்டிய ஒரு போகப் பொருள்; ஆணின் இன்பத்திற்காகவே பெண் படைக்கப்பட்டிருக்கிறாள்' என்கின்ற ஆணாதிக்கச் சிந்தனை பெரும்பான்மையான ஆண்களின் நெஞ்சத்தில் ஆழமாகப் பதிந்திருக்கின்றது என்பதே அந்த உண்மைக் காரணமாகும்.
பெண் தெய்வங்களைத் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடுகின்ற தேசத்தில் நதிகள், மலைச்சிகரங்களுக்கெல்லாம் பெண்களின் பெயரை வைத்துப் போற்றுகின்ற இந்த மண்ணில், பெண் இனத்துக்கெதிராக நிகழ்த்தப்படுகின்ற இத்தனை அத்துமீறல்களுக்கும் காரணமாக எதைச் சொல்லலாம் - ஆண் இனத்தினரின் கண்ணோட்டம் என்னும் பார்வைக் கோளாறு ஒன்றைத் தவிர?
பாலியல் அத்துமீறல்களுக்கு ஆளாவது இளம் பெண்கள்தான் என்றில்லை, வயது முதிர்ந்த பெண்கள், நடுத்தர வயதுப் பெண்கள் மற்றும் அப்பாவிச் சின்னஞ்சிறுமிகள் என்று எல்லோருமே ஏதோ ஒரு வகையில் பாதிக்கப் படுகின்ற சூழ்நிலை. வெளியார் நிகழ்த்தும் பாலியல் கொடுமைகள் போதாதென்று, கட்டிய கணவர்களே நிகழ்த்தும் குடும்ப வன்முறைகளால் அன்றாடம் பாதிக்கப்படும் பெண்களின் கதை ஒரு தனி அத்தியாயம். 
ஜாடை மாடையாகப் பேசுவது, பலர் முன்னிலையில் தோற்றத்தை வர்ணித்து சங்கடம் ஏற்படுத்துவது, உதவி செய்வது போன்ற பாவனையில் உரிமை எடுத்துக் கொள்வது, எதிர்க்கத் திராணியில்லாத பெண்களிடம் அத்துமீறுவது என்று பல்வேறு படிநிலைகளில் பாலியல் சீண்டல்களும் வன்முறைகளும் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன. பள்ளிகள் கல்லூரிகள், பயணத் தடங்கள், அலுவலகங்கள், விளையாட்டுப் பயிற்சி நிலையங்கள் என எதை எடுத்துக் கொண்டாலும், அவை பாலியல் சீண்டல் களங்களாக மாறிவருகின்றன. திரைத்துறை உள்ளிட்ட காட்சி ஊடகங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
தன் குடும்பத்துப் பெண்களை மற்றவர்கள் கண்ணியமாக நினைக்கவும் நடத்தவும் வேண்டும் என்று விரும்பாத ஆண்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால் அதே போன்ற கண்ணியம் மிக்க நடத்தையை சக மனுஷிகளான, பிற குடும்பத்துப் பெண்களிடம் அனுசரித்தால் ஏது வம்பு?
பெண்களின் மீதான வன்கொடுமைகளை எப்படித்தான் தடுப்பது அல்லது குறைப்பது? மாற்றம் ஒன்றே அதற்கான பதில். அதாவது மன மாற்றம்.
பெண் என்பவள் வெறும் போகப் பொருள் அல்ல. தத்தம் மனைவியைத் தவிர இதர பெண்கள் ஒவ்வொருவருமே நம்முடைய தாய் அல்லது சகோதரி என்ற சிந்தனை பரவ வேண்டும். சரி, இந்த மாற்றம் எப்படி சாத்தியம்? பள்ளி, கல்லூரிகளில் பாடமாகச் சொல்லிக் கொடுக்கலாமா?
கற்பித்தலை விட முக்கியமானது நடத்தை. மூத்தோர்கள் மற்றும் முக்கியஸ்தர்களின் பொதுவெளி நடத்தையே இளைய தலைமுறையினர் மனத்தில் எந்தவித நேர்மறை மாற்றத்தையும் ஏற்படுத்தும் வல்லமை படைத்தது. 
ஆனால் இங்கே என்ன நடக்கிறது? மகள்களாக நடத்தப்படவேண்டிய மாணவிகளிடம் ஆசிரியர்கள் சிலர் அத்துமீறுகிறார்கள். பெண் நிருபரின் கேள்விக்கு பதிலளிக்காமல், 'நீங்க அழகாக இருக்கிறீங்க!' என்று பதில் கொடுக்கிறார் ஓர் அரசியல்வாதி.
பாலியல் வன்முறைக்கு ஆளாகி உயிரிழந்த (நிர்பயா) பெண்ணின் அங்க லாவண்யத்தைப் பொது நிகழ்வில் வர்ணனை செய்கிறார் ஓர் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி; பாலியல் வன்முறைக்கு ஆளாகும் பெண்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் ஒத்துழைத்துவிட்டால் உயிர் பிழைக்கலாம் என்று உபதேசம் செய்கிறார் அதே அதிகாரி.
இளைய தலைமுறையினரோடு அன்றாடம் உறவாடும் ஆசிரியர்களும் பொதுவாழ்வில் உயர்நிலை வகிக்கும் தலைவர்கள் மற்றும் அதிகார வர்க்கத்தினரும் முதலில் பெண்களைப் பற்றிய தங்கள் பார்வைக் கோளாறுகளைச் சரி செய்து கொள்ள வேண்டும். பொதுவெளியில் கண்ணியம் காப்பதுடன் கருத்து முத்துக்களை உதிர்ப்பதற்கு முன்பு பல முறை யோசித்த பின்புதான் வாயைத் திறக்க வேண்டும்.
பெண்களுக்கெதிரான ஆண்வர்க்கத்தினரின் மனோபாவம் மாறுவதற்கும் பாலியல் வன்முறைகள் குறைவதற்கும் இதுதான் முதல் படி என்று தோன்றுகிறது. வழிகாட்டி சரியாய் இருந்தால்தானே வழிப்போக்கர்கள் திசை மாறாமல் இருப்பார்கள்?
 

]]>
http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/mar/20/பொறுப்பு-வகிப்பவர்களின்-பொறுப்பு-2883724.html
2883168 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் விதிமீறலே வாழ்க்கையா? ஆர். வேல்முருகன் DIN Monday, March 19, 2018 02:57 AM +0530 ஒரு காரியத்தைச் செய்யாதே என்றால் அதைச் செய்ய வேண்டும் என்று துடிப்பது மனித மனோபாவம். கடந்த சில நாள்களுக்கு முன் சென்னை, கோவை மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த சுமார் 40 பேர் தேனி மாவட்டம், குரங்கணி மலைப் பகுதிக்குள் சென்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றுபவர்கள். இவர்கள் வழக்கமாக மலையேற்றத்தில் ஈடுபடுவார்களாம். குரங்கணி மலை வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 14 பேர் மாண்டனர்.
இப்போதே இந்த விவகாரம் பற்றி பல மாறுபட்ட தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. உரிய அனுமதி இருந்ததா என்பது பற்றி, சரியான பாதையில் சென்றார்கள் என்பது பற்றி ஐயங்கள். இதில் விரைவில் தெளிவு பிறக்கட்டும்.
ஆனால் துக்கத்துக்கிடையிலும், வழக்கமாக மலையேற்றத்தில் ஈடுபடுபவர்கள் என்றால் சிறுவர்களை எதற்காக அழைத்துச் சென்றார்கள் என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. நெஞ்சைக் கவ்வும் இத்தகைய சோக சம்பவம் தவிர்த்திருக்கக் கூடியதுதானா?
இவ்வாறு அடிக்கடி மலையேற்றத்துக்குச் செல்வார்கள் என்றால் வனத் துறையினருக்குத் தெரியாமல் நடக்குமா? வனத் துறையினர் தரப்பில் கீழ்மட்ட நிலையில் இருப்பவர்கள் சொற்ப காசுக்கு ஆசைப்பட்டு, முன்னெச்சரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு இந்தத் துயரம் அரங்கேறிவிட்டதா? எச்சரிக்கும் தகவல்கள் இருந்தும் புறக்கணிக்கப்பட்டனவா? சிறியது என்று நினைக்கும் விதிமீறல்களால்தான் இன்று பல இளம் உயிர்கள் பலியாகிவிட்டனவா?
வனத்துறை விவகாரத்தில் கேரள அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் பாராட்டியே ஆக வேண்டும். வனப் பகுதிக்குள் 5 மணிக்குள் செல்ல வேண்டும் என்றால், அது அமைச்சராக இருந்தாலும் குறிப்பிட்ட நேரத்துக்குள் கடந்து சென்றாக வேண்டும். அங்கு அமைச்சர், அதிகாரிகள், கீழ்மட்ட ஊழியராக இருந்தாலும் வனத் துறையில் சட்டத்தை வளைப்பதில்லை. ஆனால் தமிழகத்தில்?
பொதுவாக தமிழகத்தைப் பொருத்தவரையில் வருமுன் எதையும் தடுப்பதென்பது பெரும்பாலும் கிடையாது என்றே கூறிவிடலாம். ஆனால் ஒரு பிரச்னை வந்த பின்பு, மீண்டும் அது போல் எதுவும் நடைபெறக் கூடாது என்ற கட்டுப்பாடும் ஒரு சில மாதங்களுக்கு மட்டுமே. ஒரு பிரச்னை வரும்போது மட்டுமே அதைப் பற்றிப் பேசுகிறோம். அதன் பின் வசதியாக அதைப்பற்றி மறந்துவிடுகிறோம். யாராவது ஒருவரைக் குற்றவாளியாக்கி, அது பெரும்பாலும் இடை - கடை நிலை ஊழியர், அவருக்கு தண்டனை தருகிறோம்.
கும்பகோணத்தில் நடைபெற்ற பள்ளித் தீ விபத்தில் குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்த பின் பல்வேறு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன. ஆனால் அந்த ஆணைகள் அனைத்தும் நடைமுறைப்படுத்தப்பட்டனவா? இப்போதும் ஓடுகளை மேற்கூரையாகக் கொண்ட பள்ளிக் கட்டடங்கள் கிராமங்களில் உள்ளனவே.
குடியிருப்புக் கட்டடம் கட்ட வேண்டுமென்றால் உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து உரிய அனுமதி பெற வேண்டும் என்பது சட்டம். ஆனால் ஒரு மாடிக்கு அனுமதி பெற்றுக் கொண்டு 3 அல்லது 4 மாடிகள் கட்டிக் கொண்டு வாடகைக்கு விடுவது; அதற்கு உள்ளாட்சி அமைப்புகளிடம் வரியையும் செலுத்துவது; ஏதாவது விபத்து நடைபெற்ற பின் கட்டட அனுமதி கொடுக்கும் பிரிவு அலுவலர், உள்ளாட்சி அமைப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ள அலுவலர், அரசியல்வாதி, மாவட்ட ஆட்சியர், அரசின் மற்ற துறை அலுவலர்கள் உள்பட அனைவரும் சம்பந்தப்பட்ட கட்டடத்துக்கு உரிய அனுமதி பெறவில்லை என்பார்கள். இது முன்பே சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்குத் தெரியாதா? முதலிலேயே நடவடிக்கை எடுத்திருக்கலாம் அல்லவா?
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி முடிக்கப்படும் நிலையில் சரிந்து விழுந்து ஏராளமான உயிர்களை பலி வாங்கியதும், பல மாடி வணிக கட்டடம் தீக்கிரையானதும் விதிமீறல்களின் விளைவால்தானே?
இதுபோன்ற விதிமீறல்களில் உயிரிழப்போர் அல்லது பாதிக்கப்படுவோர் தங்களுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றால் ஆதாயம் பெறுவோர் அதைப் பெற்றுக் கொண்டிருப்பார்களா?
பெரும்பாலான விதிமீறல்களிலும் கடைசியாக கீழ்மட்ட ஊழியர்கள்தான் தண்டனைக்கு உள்ளாகின்றனர் என்பது கண்கூடு. அவர்கள்தான் பலிகடா. சிறிது காலம் கழித்து, பிரச்னையின் தீவிரம் முடிந்தபின், அவர்கள் மீது எடுக்கும் நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது.
இன்னும் என்னென்ன விதமான விதிமீறல்கள்... ஒருவழிப் பாதையில் தவறான திசையில் வாகனத்தை ஓட்டிச் செல்வது முதல் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதுவரை விதவிதமான போக்குவரத்து விதிமீறல்கள். இவற்றால் ஏற்படும் விபத்துகளால் பேரிழப்புகள் ஏற்படும்போதுதான் அந்தச் சிறு விதிமீறலின் தீவிரம் புரிகிறது.
இரவு நேரத்தில் குடிபோதையில் வாகனங்களை ஓட்டி சாலையோரத்தில் படுத்துறங்கும் பாதசாரிகள் பலியாகின்றனர்.
அண்மையில் சென்னையில் பள்ளி மாணவர்கள் பேருந்துப் படிக்கட்டில் நின்று கொண்டு ஒருவரை ஒருவர் தள்ளி விளையாடும்போது கீழே விழுந்து ஒரு மாணவர் இறந்தார்.
மனித வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் விதிமீறல்கள் இருக்கத்தான் செய்கின்றன. நம்மில் பலரும் விதிமீறல்களைச் செய்கிறோம். பலரின் வாழ்க்கையே விதிமீறலாக இருக்கிறது. விதிமீறல்கள் விதிவிலக்காக இருந்தால் சமூகம் அதை ஜீரணித்துக் கொண்டுவிடும். ஆனால், அன்றாட வாழ்வானாலும் அரசியலானாலும், விதிவிலக்குகளே நடைமுறையாகிவிட்டால் அந்த சமூகமே சீரழிந்துவிடும்.

]]>
http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/mar/19/விதிமீறலே-வாழ்க்கையா-2883168.html
2883167 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் அரசியல் களத்தில் வெற்றிடம் உதயை மு. வீரையன் DIN Monday, March 19, 2018 02:57 AM +0530 தமிழ்நாட்டு அரசியல் களம் கொஞ்ச காலமாகப் பரபரப்புடன் காணப்படுகிறது. இதற்குக் காரணம் திரையுலக முன்னணி நடிகர்கள் அரசியலில் இறங்க முன்வந்திருப்பதுதான். ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றங்களாக மாற்றி, அரசியல் கட்சிகளைத் தொடங்குவது தொடர்பான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இதற்கு அவர்கள் கூறும் காரணம் தமிழ்நாடு அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புவதன் மூலம் நல்லாட்சியை அமைக்க முடியும் என்று சொல்கின்றனர். அதன் மூலம் மக்களுக்குத் தொண்டு செய்யப் போகிறார்களாம்.
மக்களுக்குச் சேவை செய்வது வரவேற்க வேண்டியதுதான். அதுவும் தலைவணங்கி வரவேற்க வேண்டும். அதற்கு அரசியல் பதவி அவசியம் வேண்டுமா? அரசியல் இல்லாமல் மக்களுக்குத் தொண்டு செய்ய முடியாதா? அவ்வாறு பணியாற்றிய தலைவர்களும், நிறுவனங்களும் இல்லையா? இதுவரை இவர்கள் செய்த பணி என்ன?
இப்போது அரசியல் என்பது முதலீடு இல்லாத வணிகமாகிவிட்டது. அழுக்கு நிறைந்த குட்டையாக மாறி நெடுங்காலமாகிவிட்டது. ஊழல்மயமாகிவிட்ட அரசியலில் நல்லவர்கள் வருவதற்கே அஞ்சுகின்றனர். இந்த நிலை மக்களாட்சி முறைக்கு நல்லதல்ல என்றாலும் உண்மை அதுதான்.
திரையுலகில் வெற்றி பெற்றவர்களுக்குப் பணமும், புகழும் கொட்டிக் கிடக்கின்றன. அடுத்து அவர்களுக்குத் தேவை பதவி. அந்தப் பதவி அரசியலில் ஈடுபட்டால் மட்டுமே கிடைக்கும் என்று திட்டமிடுகின்றனர். அரசியல் பரபரப்புக்கு இதுவே காரணம்.
அரசாங்கத்தின் அரியாசனத்தில் அமர்வதென்பது, புலியின்மேல் சவாரி செய்வது போன்றது. அதிகார பீடத்தில் இருப்பவர்களுக்கு ஓய்வும் இல்லை, உல்லாச வேளையும் இல்லை என்றார் பண்டித நேரு.
உண்மையான அரசியல் தலைவர்களுக்கு இது பொருந்தும். அரசியலை வணிகமாகக் கருதுகிறவர்களுக்கு இது பொருந்தாது. அவர்களுக்கு அரசியல் என்பது ஊழலில் திளைக்கும் உல்லாசபுரியாகவே இருக்கிறது. சுயநலத்துக்காக சொந்த நாட்டையே சூறையாடுகின்றனர்.
ஆமைகளாகவும், ஊமைகளாகவும் அடங்கிக் கிடக்கும் மக்கள் ஒருநாள் ஆர்த்து எழுவார்கள். அப்போது அவர்கள் எல்லாம் அந்தப் புரட்சித் தீயில் பொசுங்கிப் போவார்கள். சர்வாதிகார ஆட்சிகள் சரிந்த கதைகளை வரலாறுகளின் பக்கங்களில் காணலாம்.
திராவிடக் கட்சிகள் கடந்த 50 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்கின்றன. மாநிலம் முன்னேறவில்லை. ஊழல்தான் முன்னேறியிருக்கிறது. மக்களின் வாழ்க்கை வறுமையின் உச்சத்தில் உள்ளது. திராவிடக் கட்சிகளை இனியும் ஆட்சி செய்ய அனுமதிக்கக் கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சி கூறி வருகிறது. அதையே இப்போது வரும் நடிகர்களும் கூறத் தொடங்கியுள்ளனர்.
திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் 1967 வென்று, அதன் தலைவர் அண்ணா முதலமைச்சர் ஆனார். நீண்ட நாள் அவர் ஆட்சியைத் தொடர முடியவில்லை. நோய் வாய்ப்பட்டு விரைவில் காலமானார்.
அதன்பின் மு. கருணாநிதி 1969-இல் முதலமைச்சர் பதவி ஏற்றார். இரண்டு முறை ஆட்சியமைத்த பிறகு உள்கட்சிப் பிரச்னையால் கட்சி பிளவுபட்டது. பிரிந்து வந்த எம்.ஜி.ஆர். 1977-இல் ஆட்சியைக் கைப்பற்றி முதலமைச்சர் ஆனார்.
மும்முறை தொடர்ந்து முதல்வராகப் பதவி வகித்த எம்.ஜி.ஆர். காலமானதும், கருணாநிதி 1989-இல் மீண்டும் முதலமைச்சர் ஆனார். அடுத்து 1991-இல் நடந்த தேர்தலில் அஇஅதிமுக வெற்றி பெற்று ஜெயலலிதா முதலமைச்சர் ஆனார்.
இவ்வாறு இவ்விரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்தன. இந்நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதாவும் காலமானார். முதுமை காரணமாக கருணாநிதியும் செயல்பட முடியாத நிலையில் உள்ளார். எனவே தமிழ்நாட்டு அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு விட்டதாகக் கருதி முன்னணி நடிகர்கள் ஆட்சியைக் கைப்பற்றிவிடலாம் எனத் துடிக்கின்றனர்.
அரசியலில் வெற்றிடம் என்பது தற்காலிகமானதுதான். நாட்டின் முதல் பிரதமர் பண்டித நேரு திடீரென காலமானார். அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்தது. உடனடியாக அந்த வெற்றிடம் நிரப்பப்பட்டது. யாரும் எதிர்பாராத வகையில் லால் பகதூர் சாஸ்திரி பிரதமர் ஆனார்.
அவர் திடீரென மரணமடைந்தார். அப்போதும் பரபரப்பு ஏற்பட்டது. இந்திரா காந்தி பிரதமர் ஆனார். இவ்வாறு வெற்றிடம் நிரப்பப்படுகிறது.
திரையுலகில் "வெள்ளையும், கருப்புமாக' தாராளமாகவும், ஏராளமாகவும் பணம் புரளுகிறது. பல தலைமுறைகளுக்குத் தேவையான பணம் திரட்டிக் கொண்ட பிறகு, பதவிக்காக சிலர் அரசியலை நாடுகின்றனர். அவர்களுக்கு முன்மாதிரியாக எம்.ஜி.ஆரையே நினைத்துக் கொள்ளுகின்றனர். அவர் வெற்றியின் அடையாளம்.
அரசியலில் ஈடுபட்டுப் படுதோல்வியடைந்த சிவாஜி கணேசனை வசதியாக மறந்துவிடுகின்றனர். அரசியல் அவர்களுக்குப் பாடம் கற்பிக்கும் என்றாலும் அவர்களால் அதிலிருந்து விடுதலை அடைய முடியாது. பிறகு அவர்களின் நிலை புலிவால் பிடித்த கதைதான்.
கோடி கோடியாக ஊதியம் பெறும் நடிகர்கள் தங்களது நடிகர் சங்கக் கட்டடத்துக்கு பொதுமக்களிடம் நிதி கேட்டு அலைகின்றனர். நடிகர்கள் பங்கு பெறும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் கிரிக்கெட் விளையாட்டுகள் மூலம் நிதி திரட்டுகின்றனர். அவர்களது சொந்தப் பணத்தைச் செலவழிக்கத் தயங்குகின்றனர். இவர்கள்தாம் அரசியலுக்கு வந்து மக்களை முன்னேற்றப் போகிறார்களாம். கேட்பதற்கு வேடிக்கையாகத்தான் இருக்கிறது.
சுதந்திரப் போராட்டக் காலத்தில் தங்கள் உடல் பொருள் உயிரை அர்ப்பணித்தவர்கள் எத்தனை பேர்! சொத்து சுகங்களைத் துறந்தவர்கள் எத்தனை பேர்! அந்தத் தியாகிகளால்தான் தேசம் விடுதலை பெற்றது. விடுதலை பெற்ற நாட்டில் சுகங்களை அனுபவிப்பவர் யார்?
விடுதலை வேள்வியில் ஆகுதியாக ஆக்கிக் கொண்ட மகாத்மா காந்தி, வெள்ளையர் ஆட்சியை எதிர்த்துப் போராடி தூக்குமேடை ஏறிய புரட்சி வீரன் பகத்சிங், ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போர்க்கோலம் பூண்ட நேதாஜி சுபாஷ்சந்திர போஸ், கொடிக்காகப் போராடி உயிர்நீத்த குமரன் இவர்களைப் போல எத்தனையோ பேர்! இவர்களை மறக்க முடியுமா?
இவர்கள் எல்லாம் இந்த பூமியின் விடுதலைக்காக வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டவர்கள்! விடுதலை பெற்ற நாட்டில் எந்த சுகத்தையும் அனுபவிக்காதவர்கள்!
அண்மையில் திரிபுராவில் நடந்த தேர்தலில் 25 ஆண்டுகள் ஆட்சி புரிந்து வந்த இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தது. முதல்வராக இருந்த மாணிக் சர்க்கார் பதவியைவிட்டு விலகியதும், அவரும், அவரது துணைவியாரும் நடந்தே கட்சி அலுவலகத்துக்கு வந்துவிட்டனர்.
அவரிடம் இருந்த சொத்தாகக் கருதப்பட்ட கொஞ்சம் புத்தகங்களையும் கட்சி நூலகத்துக்கு அளித்துவிட்டார். இதுவரை முதலமைச்சராக இருந்த இவர் இப்போது கட்சி அலுவலகத்திலேயே தமது குடியிருப்பை மாற்றிக் கொண்டார். கட்சிக் குடும்பத்தில் அவரும், அவரது துணைவியாரும் இப்போது உறுப்பினர்கள். இப்படியும் ஓர் அரசியல்வாதி.
இப்படிப்பட்ட எளிமையான இடதுசாரிக் கட்சிகளும் தோல்வியைத் தழுவத்தான் செய்கின்றன. இதற்குக் காரணம் என்ன? 25 ஆண்டுகள் ஆளுவதற்கு அனுமதித்த மக்கள் ஒரு மாற்றத்தை நோக்கியே நகர்கின்றனர்.
மேற்கு வங்கத்திற்கு பிறகு திரிபுராவும் இடதுசாரிகளின் கையை விட்டுப் போய்விட்டது. இனி கேரளம் மட்டும்தான். தமிழ்நாட்டிலும் இந்த மாற்றம் நிகழலாம். ராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது மிகப் பெரிய எதிர்க்கட்சியாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டு கழுதை தேய்ந்து கட்டெறும்பாக மாறிவிட்டது.
ஜனநாயக நாட்டில் அரசியலில் ஈடுபட அனைவருக்கும் உரிமையுண்டு என்னும்போது நடிகர்கள் மட்டும் விதிவிலக்கா? அவர்களும் அரசியலில் ஈடுபடத் தகுதி படைத்தவர்கள்தாம். மக்கள் விரும்பினால் அவர்களும் ஆட்சிக்கு வரலாம் என்பதில் இரு வேறு பேச்சுக்கே இடமில்லை.
மக்கள் எவ்வழியோ அரசும் அவ்வழி; நல்ல மக்கள் இருந்தால்தான் நல்ல அரசாங்கத்தை எதிர்பார்க்க முடியும். 
சட்டசபைச் சீர்திருத்தங்களை நிறைவேற்றிவிடுவதால் மட்டும் பலன் இல்லை. மனிதர்களின் மனோபாவங்களையே மாற்றி அமைத்தால்தான் பரிகாரம் காண முடியும் என்பது சிந்தனையாளர் பிளேட்டோவின் அரசியல் அறிவுரையாகும்.
மக்களை அறியாமையிலும், மது போதையிலும் வைத்துக் கொண்டு நல்ல அரசாங்கம் வேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படி நிறைவேறும்? தூங்கிக் கிடக்கிற மக்களைத் தூக்கி நிறுத்த வேண்டும். மக்களுக்கு விழிப்புணர்ச்சியை உருவாக்கும் தொடர் நடவடிக்கைகள் தொடர வேண்டும்.
அரசியல்வாதிகள் மக்களின் அறியாமையையே முதலீடாகக் கொண்டிருக்கின்றனர். அந்த நிலை மாறாமல் இந்த நிலை மாறாது. அரசியலில் வெற்றிடம் என்பது எப்போதும் இருக்க முடியாது.

]]>
http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/mar/19/அரசியல்-களத்தில்-வெற்றிடம்-2883167.html
2882193 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் அரசியல் - ஓர் ஆயுதம் ஏந்தாத போர் சு. வெங்கடேஸ்வரன் DIN Saturday, March 17, 2018 03:47 AM +0530 போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர்' என்பது மா சேதுங்கின் புகழ்பெற்ற வாக்கியம். ஆயுதம் ஏந்தாத அந்த அரசியல் போரில் வெற்றி பெற்று சீனாவின் நிரந்தர அதிபராக தன்னை முன்னிறுத்தியுள்ளார் ஷி ஜின்பிங். பொதுவுடைமை சீனாவில் மா சேதுங்குக்குப் பிறகு நாட்டின் நிரந்தரத் தலைவர் என்ற நிலையை எட்டியுள்ளதும் ஷி ஜின்பிங் மட்டும்தான்.
சீனா தன்னைச் சுற்றி இரும்புத் திரையிட்டுக் கொண்டாலும், அதனையும் மீறி "சீனாவின் இரண்டாவது மா சேதுங்காக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள ஷி முயற்சிக்கிறார்' என்ற விமர்சனங்களும், எதிர்ப்பும் கசியவே செய்கின்றன. எனினும் "ஜனநாயக நாட்டில் மொத்த வாக்கில் பாதிக்கு மேல் பெறுபவர் அதிபர் ஆகிறார். ஆனால், எங்கள் தலைவர், 2,980 எம்.பி.க்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 2,958 பேரின் ஆதரவுடன் நிரந்தர அதிபராக ஆதரவைப் பெற்றுள்ளார்' என்று கூறுகின்றனர் ஷி-யின் விசுவாசிகள். அரசு கொண்டு வரும் எந்தத் தீர்மானத்தை நிராகரிக்க இயலாத "ரப்பர் ஸ்டாம்பு'தான் சீன நாடாளுமன்றம் என்ற உண்மையை அவர்கள் மறந்துவிட்டனர்.
ஊடங்களுக்கு கட்டுப்பாடு இருந்தாலும், சீனாவில் அரசின் செயல்பாடுகளை பகிரங்கமாக எதிர்ப்பவர்கள் இருக்கவே செய்கிறார்கள். இவர்களில் பிரபலமானவர் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஜி சூ. அதிபர் ஷி ஜின்பிங் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி, அவர் பதவி விலக வேண்டும் என்று அவருக்கே கடிதம் எழுதி சிறைத் தண்டனை அனுபவித்ததன் மூலம் சர்வதேச ஊடகங்களுக்கு பரிச்சயமானவர் ஜி சூ. ஷி ஜின்பிங்கின் நிரந்த அதிபர் முயற்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அவர், "வானத்தின் நிறம் மஞ்சள் என்று சீன பொதுவுடைமைக் கட்சி கூறினால், அதற்கும் தலையசைக்க வேண்டிய நிலையில் சீன மக்கள் உள்ளனர்' என்று சர்வதேச ஊடகங்களில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
எனினும், சீனா போன்ற ஒரு பெரிய நாட்டில் அதிக எதிர்ப்பு ஏதுமின்றி, தான் விரும்பும் வரை அதிபர் பதவியை வகிக்கலாம் என்று சட்டத் திருத்தம் கொண்டு வந்த ஜின்பிங்கின் அரசியல் சாணக்கியம், பல நாடுகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையாகாது. ஏனெனில், இனி அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் சர்வதேச அரசியலில் வெவ்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தும்.
ராணுவம், ஆயுத பலம், பொருளாதாரம், தொழில்நுட்பம் என அனைத்திலும் முன்னிலையில் இருக்கும் சீனா, ஷி ஜின்பிங் என்னும் ஒற்றை மனிதரின் கட்டுப்பாட்டுக்குள் நிரந்தரமாகச் சென்றுவிட்டது.
"இதுவரை ஒரு கட்சி ஆட்சி முறையில் இருந்த சீனா இப்போது ஒரு மனிதர் ஆட்சி முறைக்கு மாறியுள்ளது' என்பது பொதுவாக விமர்சனமாக உள்ளது. ஆனால், சீனாவின் நிரந்தர அதிபராக ஷி ஜின்பிங் தன்னை நிலை நிறுத்திக் கொண்டது ஒரே நாளில் முடிந்துவிட்ட காரியமல்ல. சீன பொதுவுடைமைக் கட்சியையும் தாண்டி, மக்களின் நம்பிக்கையையும் வென்றதுதான், சீனாவில் அசைக்க முடியாத தலைவராக அவர் உருவானதற்குக் காரணம்.
தனது சொந்தக் கட்சியில் தொடங்கி அரசு நிர்வாகம் வரை மண்டிக்கிடந்த ஊழலை வேரறுக்க அவர் மேற்கொண்ட "ஈக்கள் முதல் புலிகள்' வரை என்ற நடவடிக்கை அவரது செல்வாக்கை உச்சிக்கே கொண்டு சென்றது. அதாவது லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டு யார் மீது எழுந்தாலும் சரி, அரசின் கடைநிலை ஊழியர்கள் (ஈக்கள்) முதல் அமைச்சர்கள் (புலிகள்) அனைவருக்கு ஒரே விதமான விசாரணை முறை, தவறுக்கு கடுமையான தண்டனை என்பதை கடுமையாகக் கடைப்பிடித்தார். இதில் உயர் ராணுவ அதிகாரிகள், சீன பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவர்கள், பொதுத் துறை நிறுவனங்களில் தலைவர்கள் என உயர் பதவியில் இருந்தவர்கள் உள்பட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கடும் தண்டனைக்கு உள்ளானார்கள். சீனாவைத் தவிர உலகின் வேறு எந்த நாட்டிலும் இதுபோன்ற அரசியல், நிர்வாகச் சுத்திகரிப்பு சாத்தியமே இல்லை என்பதை நாட்டு மக்கள் மனதில் ஆழமாகப் பதிய வைத்து தனக்கென்று ஓர் இடத்தையும் பிடித்தார் ஷி ஜின்பிங்.
வடகொரியா போன்ற சிறிய நாட்டில் சர்வாதிகாரியாக இருப்பவரே உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நிலையில், பல நிலைகளில் முன்னிலையில் இருக்கும் சீனா போன்ற ஒரு வல்லரசு நாட்டில் ஒரே நபரின் கையில் அவரது ஆயுள் முழுவதும் அதிகாரம் செல்வது நிச்சயம் கவலைக்குரிய விஷயம்தான் என்பது சர்வதேச அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.
சீனாவில் ஏற்பட்டுள்ள இந்த முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் மாற்றத்தை இந்தியப் பார்வையில் நோக்குவது மிகவும் அவசியமாக உள்ளது. முழுவதும் பொருளாதார கண்ணோட்டத்தில் கட்டமைக்கப்பட்டு வரும் நவீன அரசியல் சூழலில், தங்கள் நாட்டின் பொருளாதார, வர்த்தக நலன்களை விட்டுக்கொடுக்க ஷி ஜின்பிங் ஒருபோதும் விரும்ப மாட்டார்.
இப்போது உலகின் அனைத்து நாடுகளும் தங்களை ராணுவ வலிமையுள்ள நாடு என்று கூறிக் கொள்வதைவிட பொருளாதார வல்லமைமிக்க நாடு என்ற பெயரை அதிகம் விரும்புகின்றன. இதனால், இந்தியா மட்டுமல்ல வேறு எந்த நாட்டுக்கு எதிராகவும் தீவிர மோதல் போக்கை கையாண்டாலோ அல்லது ராணுவ பலத்தை பயன்படுத்தினாலோ, அது தங்கள் நாட்டு பொருளாதார நலன்களை வெகுவாக பாதிக்கும்.
மேலும், எந்த நாட்டின் மீது சீனா ராணுவ நடவடிக்கை மேற்கொண்டால் அமெரிக்கா உள்ளிட்ட போட்டி நாடுகள் தங்களுக்கு எதிராக உடனடியாக அணி திரள்வார்கள் என்பதை சீன அதிபர் நன்கு அறிவார். எனவேதான், படை பலம் அதிகமிருந்து தென்சீன கடல் பிரச்னையை அவர் சாதுர்யமாகக் கையாண்டு வருகிறார்.
சமீபத்தில், இந்தியாவுடன் டோக்கா லாம் எல்லை விவகாரத்தைக் கூட சீனா ராஜீயரீதியில் பேசித்தான் தீர்த்துக் கொண்டது என்பது நினைவுகூரத்தக்கது. எனவே, சீனாவின் நிரந்தத் தலைவர், தங்கள் நாட்டின் பொருளாதார நலன் சார்ந்தே அரசியல் முடிவுகளை எடுப்பார் என்பதில் ஐயமில்லை.

]]>
http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/mar/17/அரசியல்---ஓர்-ஆயுதம்-ஏந்தாத-போர்-2882193.html
2882192 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் விவசாயி நல்வாழ்வுக்கு ஓர் ஆணையம் ஆர்.எஸ். நாராயணன் DIN Saturday, March 17, 2018 03:46 AM +0530 ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்... கூடவே 70,000 விவசாயிகளின் உயிர்களும் போகும். ஒரு மணி நேரத்திலும் இந்தியாவில் எந்த மாநிலத்திலாவது ஒரு விவசாயி தூக்கில் தொங்கலாம். பாலிடால் குடித்து வயல்காட்டில் மடிந்து கிடக்கலாம். விவசாயிகளின் தற்கொலைகள் பற்றிய செய்திகள் நம்மைத் துணுக்குறச் செய்கிறது.
விவசாயிகளின் தற்கொலை பற்றிய செய்தி வரும்போது, சாலை விபத்து செய்தியைப் படிப்பது போல் எந்தச் சலனமும் இல்லாமல் நாமும் அன்றாடம் நாளிதழ்களைப் புரட்டி நாளை ஓட்டுகிறேம்.
விவசாயிகளின் தற்கொலை என்பது ஏறத்தாழ தேசப் பகைவர்களுடன் போராடி வீரமரணம் அடையும் ராணுவ வீரர்களின் உயிர் பலிக்கு ஒப்பானது. விவசாயிகளின் தற்கொலை ஒரு தியாக மரணம் என்று நாம் அஞ்சலி செய்யக் கடமைப்பட்டுள்ளோம்.
விவசாயம் செய்து நஷ்டப்பட்டு தந்தை தற்கொலை செய்து கொண்டார். சில ஆண்டுகளுக்குப் பின் பிள்ளைகள்... பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மாவட்ட கிராமம் ஒன்றில் அவதார் சிங் பத்தாண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். 2017-இல் அவர் புதல்வர்கள் 40 வயதான ரூப்சிங்கும் 32 வயதான பசந்த் சிங்கும் தற்கொலை செய்து கொண்டனர். 1 ஹெக்டேர் சொந்த நிலத்துடன் 10 ஹெக்டேர் குத்தகைக்கு எடுத்துச் செய்த தீவிர விவசாயம் லாபம் தரவில்லை. மேலும் கடன், மேலும் கடன் என்று கடன் தொடர்ந்து தொகை பெருகியது. முதல் கடனைக் கூட தீர்க்க முடியாத சூழ்நிலையில் இரு இளம் விவசாயிகளை பாரதம் பறி கொடுத்தது. 
கடந்த 21 ஆண்டுகளில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 3,20,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். உணவு உற்பத்தி செய்து மக்கள் பசியைப் போக்கும் விவசாயிகளில் பலர் இரவில் உண்ணச் சோறில்லாமல் உறங்கச் செல்வதைக் கேள்விப்பட்டு வேதனைப்படுவதைவிட வேறு என்ன செய்வது?
உணவு தரும் விவசாயிகளை வாழ வைக்க வழங்கப்படும் ஆதரவு விலைகள் நிராதரவு ஆகிவிட்டன. 2009-ஆம் ஆண்டிலிருந்து 2013 வரை குறைந்தபட்ச ஆதரவு விலை சராசரியாக 19.3 சதவீதம் ஆண்டுதோறும் உயர்ந்த நிலையில், 2014-இலிருந்து 2017 வரை அதன் சராசரி உயர்வு 3.6 சதவீதம் மட்டுமே. அதே சமயம், அரசு ஊழியர்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கூட்டித் தரப்படும் சம்பளப்படி விவசாயிகளுக்கு ஏற்றித் தரப்படும் கொள்முதல் விலையைவிட பன்மடங்கு உயர்வாக உள்ளது. 
உதாரணத்திற்கு, ஒரு பள்ளி ஆசிரியர் சம்பளத்தை எடுத்துக் கொள்வோம். 1970-இல் சராசரி ரூ.100-மாதச் சம்பளம். 2015 புள்ளிவிவரப்படி அவர் சம்பளம் 300 மடங்கு உயர்ந்துள்ளது. அரசு ஊழியர்கள் சம்பளம் 150 மடங்கும் கல்லூரிப் பேராசிரியர் சம்பளம் 200 மடங்கும் உயர்ந்துவிட்டது. ஆனால் அரிசி, கோதுமை கொள்முதல் விலை 20 மடங்கு மட்டுமே உயர்ந்துள்ளது. 
கொள்முதல் விலையை நிர்ணயிக்கும் விவசாயச் செலவு மற்றும் விவசாய விலைக் கமிஷன் வழங்கும் கணக்குப்படி, மகாராஷ்டிரத்தில் நெல் விளைச்சல் மூலம் ரூ. 966- லாபம் - சரி. இந்த லாபத்தை மாத சம்பளமாக கணக்கிட்டால் விவசாயியின் சம்பளம் ரூ. 300 தான் வரும். பருத்தியில் ரூ. 2949 ரூ லாபம். மாதச் சம்பளமாக கணக்கிட்டால் வருவது ஹெக்டேருக்கு ரூ. 700. அதே சமயம் போட்ட முதலுக்கு நஷ்டம் என்ற கணக்குப்படி, கேழ்வரகு போட்டதில் ரூ.10,674 நஷ்டம்; பாசிப் பயறு போட்டதில் ரூ. 5873 நஷ்டம்; உளுந்து போட்டதில் ரூ. 6613 நஷ்டம். 
மேற்படி சாகுபடிக் கணக்கு மூலம் நாம் அறியும் செய்தி - நெல், கோதுமை, கரும்பு, பருத்தி, மக்காச் சோளம் வழங்கும் லாபம் ஆண்டுக்கு ஆண்டு குறைகிறது. அதே சமயம், மானாவாரி அல்லது புஞ்சை நிலப் பயிர்கள் - கம்பு, கேப்பை, வரகு, தினை போன்ற தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் சாகுபடி முழு நஷ்டக் கணக்கில் செயல்படுகிறது.
இவ்வாறு விவசாயம் நஷ்டமாவது தொடர்கதையாக உள்ளதை நினைத்தால், இது நாள் வரை நிகழ்ந்த கடன் உதவிகளோ தொழில் நுட்ப உதவிகளோ விவசாயிகளைக் கரையேற்றியதாகத் தெரியவில்லை. மேலும் விவசாயக் கடன், கடன் என்று ஒரு சராசரி விவசாயிக்கு சுமையைக் கூட்டி வருகிறோம்.
"கடனிலே பிறந்து, கடனிலே வாழ்ந்து, கடனிலே மடிவது' விவசாயிக்குரிய இலக்கணமாகிவிட்டது. "கடனிலேயே உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்' என்று திருக்குறளைத் திருத்த வேண்டுமோ?
ஒரு விவசாயி உற்பத்தி செய்த பொருளுக்குச் செலவழித்த தொகைக்கு மேல் கிடைக்கும் லாபத்தைக் கொண்டு வாழ்வை நடத்திச் செல்வது அறம். ஆனால் விவசாயத்தில் அவன் செலவழித்த தொகையைப் பெறும் அளவில்கூட விலை உத்தரவாதம் இல்லை. பணவீக்கம் பாடாய்ப் படுத்துகிறது.
ஒரு விவசாயி தான் உற்பத்தி செய்த பொருளை மொத்த விலையில் மலிவாக விற்கிறான். தான் வாங்கும் பொருளை சில்லறை விலையில் கிராக்கியாக வாங்குகிறான். இந்தியாவில் மட்டுமல்ல, உலகநாடுகள் அனைத்திலும் விவசாயம் லாபகரமான தொழிலாக இருப்பதில்லை. ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் வழங்கப்படும் விவசாய மானியம் ரொக்கமாக விவசாயிகள் நேரிடையாகப் பெறுகிறார்கள். இந்திய விவசாயிகள் பெறும் மானியங்கள் எல்லாம் மறைமுகங்கள். உர உற்பத்தியாளர்கள், விவசாயக் கருவிகள் உற்பத்தியாளர்கள், டிராக்டர் உற்பத்தியாளர்கள் போன்றோர் பெறும் மானியங்கள் நேரிடையானவை. ஒரு விவசாயி பெறும் விலை குறைக்கப்படுகிறது. நுகர்வோர் பெறும் உணவு மானியம் மறைமுகமாக விவசாயிகள் பெறும் நஷ்டத்தைக் கொண்டு ஈடு செய்யப்படுகிறது. சற்று யோசித்துப் பார்த்தால் ஒரு விவசாயி தலையில்தான் உணவு மானியச் செலவு கட்டப்படுகிறது.
இந்தியாவைப் பொருத்தவரை, விவசாய விலைக் கொள்கை என்பது விவசாயத்தில் தொடர்ந்து நஷ்டத்தை உருவாக்கி விவசாயிகளை கிராமங்களிலிருந்து வெளியேற்றுவதுதான். இதைத்தான் உலக வங்கியும் போதிக்கிறது.
1996-இல் உலக வங்கி ஒரு கெடு வைத்தது. 2015-ஆம் ஆண்டை நெருங்கும்போது 2 கோடி இந்திய விவசாயிகள் கிராமத்தைவிட்டு வெளியேறி வேறு தொழில் செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டது. உலக வங்கியிலிருந்து இந்தியா கடன் வாங்கும்போது ஒவ்வொரு முறையும் விதிக்கும் நூற்றுக்கணக்கான நிபந்தனைகளில் விவசாயிகளின் வெளியேற்றம் நினைவூட்டப்படுகிறது. விவசாயிகளின் வெளியேற்றத்திற்கு முகவுரை எழுதியவர் மன்மோகன் சிங். அவர் பிரதமராயிருந்த காலகட்டத்தில் அணிந்துரை எழுதிய ரகுராம் ராஜனும் கிராமங்களிலிருந்து 70 சதவீத விவசாயிகள் நகரங்களுக்குச் சென்று வேறு பிழைப்பு நடத்தினால்தான் விவசாயத்தை லாபத்தில் இயங்க வைக்கலாம் என்ற தத்துவத்தை போதித்தார். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்கைவிட விவசாயம் சாராத அடித்தளக் உள்கட்டமைப்பு அதாவது "இன்ஃப்ராஸ்டரக்சர்' பங்கு உயர வேண்டுமென்று திட்டமிடப்பட்டது. விவசாயம் வழங்கும் வருமானத்தைவிட, உலக வங்கி உதவியுடன் நிர்மாணிக்கப்படும் தேசிய நெடுஞ்சாலைத் திட்டம், பொதுப் பணித் துறை கட்டுமானத் திட்டம் என்று விவசாயிகள் புலம் பெயர்ந்து சென்றும் கூட விவசாயப் பிரச்னைகள் அடங்கவில்லை.
2016-இல் வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வு அடிப்படையில், 17 மாநிலங்களில் விவசாயிகளின் வருமானம் ஆண்டுக்கு 20,000 ரூபாயைவிடக் குறைவு என்றும் ஒவ்வொரு விவசாயக் குடும்பமும் மாதம் வெறும் ரூ. 2000-த்தை வைத்துக் கொண்டு காலத்தை ஓட்டுவதாகவும் தெரிவிக்கின்றது. இந்த வருமானத்தைக் கொண்டு ஒரு பசு மாட்டைக் கூட நிர்வகிக்க முடியாது.
நல்ல முறையில் நீர்ப்பாசனமும் உற்பத்தித் திறனும் இருந்து சிறப்பாக விளைந்தால் விவசாயிகளின் பிரச்னை தீர சரியாகவிடும் என்பது "நிபுணத்துவமான' கருத்து. நிஜமாகப் பார்த்தால், விவசாயம் உருப்படலாம், விவசாயிகள் உருப்பட முடியாது என்பதற்கு பஞ்சாப் நல்ல உதாரணம். பஞ்சாபில் 98 சதவீதம் பாசன வசதி. ஹெக்கேடருக்கு 6000 கிலோ அரிசியும் 4500 கிலோ கோதுமையும் விளைகிறது. உலக அளவில் உணவு உற்பத்தித் திறனில் பஞ்சாப் முதல் இடம் பெற்றாலும் பஞ்சாப் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்களே? விவசாயிகள் வாழ்ந்தால்தான் விவசாயம் வாழும். விவசாயிகள் வாழ்வதற்கு விடிவு தரும் திட்டத்தில் விவசாயிகளுக்கு நிர்ணயமாகும் ஆதார விலைகளில் சில ஆதாரச் செலவுகளைக் கணக்கில் கொள்ள வேண்டும். 
ஆதார விலைகளை நிர்ணயிக்கும் போது சாகுபடிச் செலவு மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் வாழ்க்கைச் செலவு கணக்கில் வருவதில்லை. சாகுபடிச் செலவுக்கு மேல் 1: வீட்டுப்படி, 2: கல்விப்படி, 3: மருத்துவப்படி, 4: போக்குவரத்துப்படி ஆகியவற்றை வழங்க வேண்டும். என்ன, சிரிப்பாயிருக்கிறதா? சற்று யோசியுங்கள். மக்கள் வரிப் பணத்திலிருந்து அரசு ஊழியர்களுக்கு வழங்கும் படிகள் 108 உள்ளன. நாலு படிகள் விவசாயிகளுக்கு வழங்க முடியாதா?
தற்போது வழங்கப்பட்டுவரும் கொள்முதல் அல்லது ஆதார விலைகள் மூலம் 50 சதவீதம் லாபம் பெறுவோர் 6 சதவீத விவசாயிகளே. மீதி 94 சதவீத விவசாயிகள் கடனில் உழல்கின்றனர்.
இந்த நிலை மாற வேண்டுமானால், விவசாய சாகுபடிச் செலவு விலை நிர்ணய ஆணையத்தைக் கலைத்துவிட்டு, விவசாயிகளின் வருமான நலவாழ்வு ஆணையம் என்ற பெயரில் ஒரு புதிய குழு நியமனம் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு விவசாயிக்கும் மாதம் ரூ.18,000-குடும்ப வருமானமாக நிர்ணயம் செய்ய வேண்டும். அப்படிப்பட்ட ஒரு பொன்னாளை நோக்கி மோடி அரசு அடி வைத்து நடக்குமானால் விவசாயிகளின் தற்கொலைகள் தலைகாட்டாது. பாரதம் தலை நிமிரும். 

]]>
http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/mar/17/விவசாயி-நல்வாழ்வுக்கு-ஓர்-ஆணையம்-2882192.html
2881324 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் துப்​பாய துப்​பாக்கி ஆர். நட​ராஜ் DIN Friday, March 16, 2018 01:53 AM +0530 பாயும் புலி​போல அக்​கி​ர​மக்​கா​ரர்​க​ளுக்கு சிம்ம சொப்​ப​ன​மாக இருக்க வேண்​டும்; அதே சம​யம் கருணை வடி​வ​மாக, நீதி தேடி வரு​ப​வர்​க​ளுக்கு அடைக்​க​லம் அளிக்க வேண்​டும் என்று காவல் களப்​ப​ணி​யா​ளர்​க​ளுக்கு அறி​வு​றுத்​தப்​ப​டு​கி​றது. இந்த இரு முகம் தவிர, நடு​நி​லை​யாக நீதி​மன்​றத்​தின் முன் நம்​பிக்கை அளிக்​கும் மூன்​றா​வது முக​மாக அறிக்கை சமர்ப்​பிக்க வேண்​டும். 
சட்டம் ஒழுங்கை நிலை​நாட்​டும் பணி அவ்​வ​ளவு எளி​தா​ன​தல்ல.
சமீ​பத்​தில் பூந்​த​மல்​லி​யில் காவல்​து​றை​யி​னர் 72 ரொள​டி​களை சுற்​றி​வ​ளைத்​தது. சில நாட்க​ளுக்கு முன் மது​ரை​யில் மூன்று ரொள​டி​கள் எதிர்​மறை தாக்​கு​த​லில் சுட்டுக் கொல்​லப்​பட்​ட​னர். என்​க​வுன்ட்​டர் எனப்​ப​டும் தவிர்க்க முடி​யாத நேர்​வு​க​ளில் காவல்​துறை எடுக்​கும் அதி​ரடி நட​வ​டிக்கை சர்ச்​சைக்​கு​ரி​யது.
காவல்​து​றைக்​கும் சமூக விரோத குற்​ற​வா​ளி​க​ளுக்​கும் நடக்​கும் சண்டை என்​க​வுன்ட்​டர் என்று அறி​யப்​ப​டு​கி​றது. காவல்​துறை எப்​போது எந்த அளவு எதிர் தாக்​கு​தல் செய்​ய​லாம் என்​பது சட்டத்​தி​லும் காவல் ஆணை​கள் மூல​மும் வரை​ய​றுக்​கப்​பட்​டுள்​ளது. இருப்​பி​னும் ஒவ்​வொரு நிகழ்​வின் தன்​மை​யைப் பொருத்​தது. 
மத்​திய பிர​தே​சம் சம்​பல் பள்​ளத்​தாக்கு கொள்​ளை​யர்​கள் புக​லும் மறை​வி​டம். கிரா​மங்​க​ளில் செல்​வந்​தர்​கள் இல்​லத் திரு​ம​ணங்​க​ளுக்கு வந்து தாக்​கு​தல் நடத்​திப் பல லட்சம் பணம் நகை​கள் கொள்​ளை​ய​டித்து தப்​பி​வி​டு​வார்​கள். அல்​லது கொள்ளை அடிக்​கா​மல் இருக்க பாது​காப்பு பணம் கணி​ச​மாக பெற்​று​வி​டு​வார்​கள்.
ஒரு இளம் அதி​காரி ஜான்சி குவா​லி​யர் எல்​லைப் பகு​தி​யில் பணி​யில் இருந்​த​போது தேவி​சிங் என்ற பயங்​கர கொள்​ளை​யன் பதுங்கி இருப்​பது பற்​றித் தக​வல் வரு​கி​றது. காவல் படை​யோடு போகி​றார். சிறு சண்​டைக்​குப் பிறகு கொள்​ளை​யன் சர​ண​டை​கி​றான். இளம் அதி​காரி வெற்​றி​க​ர​மாக கொள்ளை கும்​பலை கைது செய்த திருப்​தி​யில் அவர்​களை காவல் நிலை​யம் கொண்டு வரு​கை​யில், அவ​ரோடு துணை சென்ற ஆய்​வா​ள​ரும் உதவி ஆய்​வா​ள​ரும் கொள்ளை கும்​பல் கதையை முடித்து விட வேண்​டும்- என்​க​வுன்ட்​டர்- செய்து விட வேண்​டும் என்று வற்​பு​றுத்​து​கின்​ற​னர். ஆனால் அவர் அத்​த​கைய சட்ட விரோத செய​லுக்கு இடம் கொடுக்​க​வில்லை. எதி​ரி​கள் மீது பல கொள்ளை வழக்​கு​கள் இருந்​தன.
எதி​ரி​களை சட்டத்​தின் முன் நிறுத்தி, நீதி​மன்​றத்​தில் வழக்​காடி, இரண்டு வரு​டம் போரா​டி​னர். சாட்சி​க​ளைப் பாது​காப்​பது பெரும் பாடு. முடி​வில் நீதி​மன்​றத்​தில் விடு​தலை பெற்று, தேவி​சிங்​கும் அவ​னது கூட்டா​ளி​க​ளும் காவல் துறைக்கு தக​வல் கொடுத்து அவர்​கள் கைதா​வ​தற்கு கார​ண​மாக இருந்த உள​வா​ளியை கோர​மான முறை​யில் தாக்கி, இரு கைக​ளை​யும் வெட்டி, மர்ம உறுப்பை சிதைத்து, கண்​கள் இரண்​டை​யும் தோண்டி எடுத்து, காட்டிக் கொடுத்​த​தற்கு வஞ்​சம் தீர்த்​துக்​கொண்​ட​னர். கதறி அழும் வித​வை​யான இளம் மனை​விக்கு காவல்​துறை என்ன பதில் சொல்ல முடி​யும்? 
இது நடந்​தது 1977-இல். தேவி​சிங் கொள்ளை கும்​பல் மத்​திய, உத்​தர பிர​தே​சங்​க​ளில் தொடர்ந்து கொலை கொள்​ளை​யில் ஈடு​பட்​ட​னர். முடி​வில் ஷிவ்​புரி மாவட்​டத்​தின் கண்​கா​ளிப்​பா​ளர் பெண் அதி​காரி ஆஷா கோபால் தலை​மை​யில் போலீஸ் படை கொள்​ளை​யர்​களை சுட்டு வீழ்த்​தி​யது. ஆஷா கோபா​லுக்கு வீர தீர செய​லுக்​கான குடி​ய​ர​சுத் தலை​வர் விருது 1984-இல் வழங்​கப்​பட்​டது. 
இதில் தர்​ம​சங்​க​ட​மான கேள்வி, 1977-லேயே தேவி சிங்கை என்​க​வுன்ட்​ட​ரில் வீழ்த்​தி​யி​ருந்​தால் கொள்​ளை​யர்​கள் கொட்டத்தை முன்பே முடி​விற்கு கொண்டு வந்​தி​ருக்​க​லாம்; உயி​ரி​ழப்பை தவிர்த்​தி​ருக்​க​லாம், ஏன் செய்​தி​ருக்​கக் கூடாது என்​ப​தற்கு எளி​தில் பதில் சொல்ல முடி​யாது. 
நீதி முறை, நெறி​முறை சார்ந்த பண்​பு​க​ளில் இருந்து வழுவ முடி​யுமா? அதன் எல்லை என்ன?
தென் மாவட்​டங்​க​ளில் 1960/70-களில் கொடூர கொள்​ளைக்​கா​ரன் சீவ​லப்​பேரி பாண்டி. கிராம நிர்​வாக அதி​காரி சுப்​ர​ம​ணிய பிள்​ளையை கொன்ற வழக்​கில் கைதாகி பாளை​யங்​கோட்டை சிறை​யி​லி​ருந்து தப்பி மேலும் பல கொள்ளை கொலை செய்து போலீ​ஸுக்கு சவா​லா​கத் தலை​யெ​டுத்​தான். என்​க​வுன்ட்​டர் மூல​மா​கத்​தான் அவன் கதை முடிந்​தது.
மாயாவி வீரப்​பன் சகாப்​தம் 1970-லிருந்து தொடர்​க​தை​யாக கர்​நா​ட​கம், தமிழ்​நாடு இரு மாநி​லங்​க​ளுக்கு கடுக்​காய் கொடுத்து கொலை, கொள்ளை, ஆள் கடத்​தல் என்று காட்டுக் கொள்​ளை​ய​னாக உரு​வெ​டுத்​தான். கர்​நா​டக வனத்​துறை அதி​காரி ஸ்ரீநி​வாஸ், வீரப்​பனை சர​ண​டை​யச் செய்து நல்​வ​ழிப்​ப​டுத்த வியூ​கம் வகுத்​தார். ஆனால் அவனோ சர​ண​டை​வது போல் பாவலா காட்டி ஸ்ரீநி​வாஸை சிறைப்​பி​டித்து, அவ​ரது தலையை வெட்டி பர்​கூர் வனப்​ப​கு​தி​யில் தொங்​க​விட்​டான். 1987-ஆம் ஆண்டு வீரப்​பன் பிடி​பட்​டான். அப்​போதே அவன் கதையை முடித்​தி​ருக்​க​லாம். துர​தி​ருஷ்​ட​வ​ச​மாக, காவல் பிடி​யில் இருந்து தப்பி 17 ஆண்​டு​கள் காட்டுக் கொள்​ளை​ய​னி​லி​ருந்து பயங்​க​ர​வா​தி​யா​னான். 2004-இல்​தான் வீரப்ப வதம் முடி​வுற்​றது.
என்​க​வுன்ட்​டர் நிகழ்​வு​க​ளில் எவ்​வாறு புலன் விசா​ரணை மேற்​கொள்ள வேண்​டும் என்​பது பற்றி பியூ​சி​எல் எதிர் மகா​ராஷ்​டி​ரம் வழக்​கில் உச்ச நீதி​மன்​றம் 16 அம்ச வழி​காட்​டு​தல் அளித்​துள்​ளது. குற்​ற​வா​ளி​கள் நட​மாட்​டம் அல்​லது குற்​றம் நிக​ழப்​போ​கி​றது என்​பது பற்றி பெறப்​ப​டும் தக​வல் ஏதா​வது ஒரு வகை​யில், இர​க​சி​யம் காக்​கும் பொருட்டு அதி​கம் விவ​ரங்​கள் இல்​லாது, குறித்​து​வைத்​தல் வேண்​டும்.
இந்த தக​வல் அடிப்​ப​டை​யில் எதிர்​மறை தாக்​கு​தல் நடந்து துப்​பாக்​கிச் சூட்டில் உயி​ரி​ழப்பு ஏற்​பட்​டால் உட​ன​டி​யாக முதல் தக​வ​ல​றிக்​கையை காவல்​நி​லை​யத்​தில் பதிவு செய்து, தாம​த​மின்றி குற்​ற​வி​யல் சட்டம் 157 பிரிவு படி நீதி​மன்​றத்​திற்கு அனுப்ப வேண்​டும்.
புலன் விசா​ரணை பார​பட்​ச​மின்றி இருப்​பதை உறுதி செய்ய சிஐடி அல்​லது வேறொரு காவல் நிலைய போலீஸ் குழு விசா​ரணை மேற்​கொள்​ள​வேண்​டும். துப்​பாக்கி சண்​டை​யில் பாதிக்​கப்​பட்​ட​வரை தெளி​வான புகைப்​ப​டம் காயம் பட்டது துல்​லி​ய​மா​கத் தெரி​யும் வகை​யில் எடுக்க வேண்​டும்.
சம​பவ இடத்​தில் சாட்சி​யப் பொருட்​கள், இரத்​தம் தோய்ந்த உடை, உதிர்ந்த தலை​முடி போன்​றவை, உடுத்​திய ஆடை துகள்​கள், துப்​பாக்​கிச் சூட்டில் பயன்​ப​டுத்​திய ஆயு​தங்​கள், காலி ரவை​கள், கைரே​கை​கள்- இறந்​த​வர் ரேகை சேர்த்து- கவ​ன​மாக சேக​ரித்து ரசா​யன பரி​சோ​த​னைக்கு உட்ப​டுத்த வேண்​டும்.
சம்​பவ இடத்​தில் நிகழ்​வி​னைப் பார்த்த சாட்சி​களை விசா​ரித்து சம்​ப​வம் நடந்த இடம், நேரம், காய​முற்​றோர் விவ​ரம், இறந்த நேரம், எத​னால் இறப்பு இவற்றை சாட்சி​கள் மூலம் பெற்று, அவர்​க​ளது முழு விவ​ரங்​களை தாக்​கு​த​லில் பங்கு கொண்ட காவல் துறை​யி​னர் பதிவு செய்ய வேண்​டும்.
சம்​பவ இடத்​தின் வரை​ப​டம், புகைப்​ப​டம் காணொலி பதிவு முக்​கி​யம்.
பிரே​தப் பரி​சோ​தனை குறைந்த பட்சம் இரண்டு மருத்​து​வர் குழாம் நடத்த வேண்​டும். விடியோ பதிவு செய்​தல் அவ​சி​யம். குற்​ற​வி​யல் 176 பிரிவு படி, சம்​ப​வத்​தின் உண்மை நிலை அறிய குற்​ற​வி​யல் நடு​வர் விசா​ரணை மேற்​கொள்ள வேண்​டும். காய​முற்ற குற்​ற​வா​ளி​க​ளுக்கு தகுந்த சிகிச்சை அளித்து அவர்​க​ளது வாக்​கு​மூ​லத்தை குற்​ற​வி​யல் நடு​வர் பதிவு செய்ய வேண்​டும். இறந்த குற்​ற​வா​ளி​க​ளின் உற​வி​ன​ருக்கு உட​ன​டித் தக​வல் அளிக்க வேண்​டும்.
எதிர்​ம​றைத் தாக்​கு​த​லில் இறப்பு ஏற்​பட்​டாலோ காய​முற்​றாலோ அவற்​றின் முழுத் தக​வல்​களை தேசிய மனித உரிமை ஆணை​யத்​திற்கு ஆறு மாதத்​துக்கு ஒரு முறை காவல் துறை தலைமை இயக்​கு​நர் அனுப்ப வேண்​டும். 
உச்ச நீதி​மன்​றம் இவ்​வாறு பட்டி​ய​லிட்ட வழி​காட்​டு​தல்​களை பிச​கின்றி கடைப்​பி​டிக்க வேண்​டும். பாதிக்​க​பட்​ட​வ​ருக்கு இதில் ஏதே​னும் சந்​தே​கம் இருந்​தால் மாவட்ட நீதி​ப​தி​யி​டம் முறை​யி​ட​லாம். விசா​ரணை முடி​யும் வரை காவல் துறை​யி​ன​ருக்கு வெகு​ம​தி​கள், விரு​து​கள் வழங்​கக்​கூ​டாது.
உச்ச நீதி​மன்​றம் இவ்​வ​ளவு கெடு​பிடி போட்ட​தற்கு கார​ணம், வளர்ந்து வரும் குற்ற நிகழ்​வு​க​ளின் கொடூ​ரம் மக்​க​ளி​டம் பயத்தை உண​டாக்​கி​யது மட்டு​மின்றி காவல்​து​றை​யும் குற்​றத்​தின் தன்மை பொருத்து அசா​தா​ரண நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும் என்ற மக்​கள் கோரிக்கை மேலோங்​கி​யது. காவல்​து​றை​யி​ட​மி​ருந்து அதிக எதிர்​பார்ப்பை ஏற்​ப​டுத்​தி​ய​து.​ 
இ​தன் விளை​வாக என்​க​வுன்​ட​டர் நிபு​ணர்​கள் என்று காவல் அதி​கா​ரி​கள் தலை​யெ​டுத்​த​னர். அவர்​க​ளுக்கு ஊட​கங்​கள் வர​வேற்பு அளித்து வீர தீர செயல்​களை பிர​ப​லப்​ப​டுத்​தின. பல இடங்​க​ளில் அத்​து​மீ​றல்​கள் கவ​னத்​திற்கு வந்​தன, பல மூடி மறைக்​கப்​பட்​டன.
இந்​தி​யா​வின் பொரு​ளா​தார தலை​ந​கர் மும்பை. அங்கு வர்த்​த​கப் பரி​மாற்​றங்​க​ளில் பல போட்டி​கள். நிலம் அப​க​ரித்​தல், விப​சா​ரம், போதைப் பொருள் கடத்​தல் என்று வளர்ந்த நக​ரங்​கள் சந்​திக்​கும் பிரச்​னை​கள் அதி​கம். நவீன குற்​ற​வா​ளி​கள் ஆங்​கி​லப் படங்​க​ளில் வரு​வது போல நாக​ரிக உடை அணிந்து சொகு​சுக் கார்​க​ளில் வலம் வரு​வார்​கள். ஆனால் செய்​வது அவ்​வ​ள​வும் அக்​கி​ர​மம். கடத்​தல், கட்டப் பஞ்​சா​யத்து, தட​யம் இல்​லாது கொலை​கள் என்று கணக்​கி​ல​டங்கா கொடூர குற்​றங்​க​ளில் ஈடு​ப​டும் அயோக்​கி​யர்​களை கட்டம் கட்டி கொட்டத்தை அடக்​கு​வது கடி​னம். அதற்​காக விசேஷ சட்டம் மஹ​ராஷ்ட்ரா ஆர்​க​னைஸ்ட் க்ரைம் தடுப்பு சட்டம் அம​லுக்கு வந்​தது. இதே வகை குற்ற கும்​பல் தடுப்பு சட்டம் தமிழ் நாட்டி​லும் உள்​ளது.
குற்ற கும்​பல்​கா​ரர்​கள் 'சுபாரி கொலை' அல்​லது ஒப்​பந்​தம் போட்டுக் கொல்​வ​தில் வல்​ல​வர்​கள். வஞ்​சம் தீர்க்க அல்​லது வியா​பா​ரத்​தில் போட்டி போன்ற சந்​தர்ப்​பங்​க​ளில் எதி​ரா​ளி​யைக் கொலை செய்ய ஒப்​பந்​தம் செய்த கொலை​கா​ரர்​கள், வேலையை சுவ​டில்​லா​மல் முடித்​து​வி​டு​வார்​கள். கொலை​யுண்​ட​வர்க்​கும் இவர்​க​ளுக்​கும் வேறு தொடர்பு இல்லை, தனிப்​பட்ட விரோ​தம் இல்லை. பணத்​துக்​காக எதை​யும் செய்​யத் துணி​ப​வர்​கள். இவர்​களை எவ்​வாறு அடக்​கு​வது? 
இந்த பிரச்னை கட்டுக்​க​டங்​கா​மல் போன​போது, மும்பை போலீ​ஸில் என்​க​வுன்ட்​டர் நிபு​ணர்​கள் என்று காவல் ஆய்​வா​ளர்​கள் - ப்ர​தீப் ஷர்மா சுமார் நூறு என்​க​வுன்ட்​டர் மூலம் குற்​ற​வா​ளி​களை முடி​விற்கு கொண்டு வந்​த​வர், தயா நாயக், ப்ர​புல் போசுலே, ரவீந்​தி​ர​நாத் ஆங்​கிலே ஆகி​யோர் 50-க்கும் மேற்​பட்ட குற்​ற​வா​ளி​க​ளின் கதையை முடித்​த​வர்​கள்- பிர​ப​ல​மா​னார்​கள். அவர்​க​ளின் செயல்​கள் மக்​கள் பாராட்​டைப் பெற்​றது. அவர்​க​ளின் சாக​சங்​களை வைத்து திரைப்​ப​டங்​கள் வந்​துள்​ளன. 
மனித உரி​மை​கள் காப்​பது ஒரு​பு​றம். அப்​பாவி மக்​க​ளின் உரி​மை​க​ளைப் பறிப்​ப​வ​ரின் மீது எடுக்க வேண்​டிய அசா​தா​ரண என்​க​வுன்ட்​டர் நட​வ​டிக்கை தவிர்க்க முடி​யா​த​தா​கி​வி​டு​கி​றது. தனது எதிர்​கா​லத்​தைப் பண​யம் வைத்து ஒரு அறுவை சிகிச்சை மருத்​து​வர்​போல சில சம​யங்​க​ளில் காவல் துறை அதி​கா​ரி​கள் சமூக காளான்​களை களை​யெ​டுக்​கி​றார்​கள். 
துப்​பாக்கி மூலம் சமு​தா​யம் துப்​பாய துப்​பாக்​கி​யைத் துப்​பாக்கி மக்​களை பாது​காப்​ப​வன் காவ​லன் என்​பது உண்மை.
 

]]>
http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/mar/16/துப்​பாய-துப்​பாக்கி-2881324.html
2881323 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் எல்லா சிலை​க​ளும் வழி​ப​டத்​தக்​க​வையே! சந்​திர. பிர​வீண்​கு​மார்​ DIN Friday, March 16, 2018 01:52 AM +0530 அ​ண்​மை​யில் நடை​பெற்ற திரி​புரா மாநில தேர்​த​லில் 25 ஆண்​டு​கள் ஆட்சி​யில் இருந்த கம்​யூ​னிஸ்ட் கட்சி தோற்​க​டிக்​கப்​பட்டு, பாஜக கூட்டணி வெற்​றி​பெற்​றது. தேர்​தல் முடி​வு​கள் வெளி​யா​ன​துமே, மாநி​லத்​தில் இருந்த லெனின் சிலை உடைக்​கப்​பட்​டது. அதைத் தொடர்ந்து, தமி​ழக பாஜக மூத்த தலை​வர் ஹெச்.​ரா​ஜா​வின் முக​நூல் பக்​கத்​தில், 'அடுத்து தமி​ழ​கத்​தில் ஈ.வெ.ரா. சிலைக்கு' என்று பதி​வி​டப்​பட்​டி​ருந்​தது. அதற்கு பலத்த எதிர்ப்​பு​கள் கிளம்​பவே முக​நூல் பதிவு நீக்​கப்​பட்​ட​தோடு, வருத்​த​மும் தெரி​வித்​தார். மேற்கு வங்​கத்​தில் பாஜ​க​வின் முன்​தோன்​ற​லான பார​திய ஜன​சங்​கத்​தின் தலை​வர் சியாம்​பி​ர​சாத் முகர்​ஜி​யின் சிலை சேதப்​ப​டுத்​தப்​பட்​டது. பிர​த​மர் தலை​யிட்டு சூட்டைத் தணிக்க முற்​பட்​டார். ஆனால், கார​சார விவா​தம் தொடர்ந்​தது.
அர​சி​யல்​ரீ​தி​யாக ஒரு சித்​தாந்​தமோ அல்​லது கட்சியோ தோற்​க​டிக்​கப்​ப​டும்​போது, அதன் அடை​யா​ளங்​க​ளை​யும், சிலை​க​ளை​யும் உடைப்​பது கடந்த இரு​ப​தாம் நூற்​றாண்​டில் சர்​வ​தேச அள​வில் தொடங்​கி​விட்​டது. ரஷி​யா​வில் ஜார் மன்​னர் ஆட்சி அகற்​றப்​பட்​ட​போது, அவ​ரது வீட்டு நாய்க்​குட்டி கூட கொல்​லப்​பட்டு தட​யங்​கள் அழிக்​கப்​பட்​ட​தா​கச் சொல்​லப்​ப​டு​வ​துண்டு. அதன் தொடர்ச்​சி​யாக, 1980-களில் கம்​யூ​னி​ஸம் வீழ்ந்​த​போது, சோவி​யத் யூனி​யன் நாடு​க​ளில் இருந்த பிரம்​மாண்ட லெனின், ஸ்டா​லின் சிலை​கள் அடித்து நொறுக்​கப்​பட்​டன. 
இராக்​கில் சதாம் உசேன் ஆட்சி முடிவு வந்​த​தும், அவ​ரது சிலை ஆக்​ரோ​ஷ​மாக அகற்​றப்​பட்​டது. இந்​தி​யா​வும் அதற்கு விதி​வி​லக்​கல்ல. உத்​த​ரப் பிர​தே​சத்​தில் மாயா​வதி அவ​ரது கட்சி தேர்​தல் சின்​ன​மான யானை​யைப் பெரிய சிலை​க​ளாக வடித்​தி​ருந்​தார். பேர​வைத் தேர்​த​லில் அவர் தோல்​வி​யுற்​ற​தும் அந்த யானை​கள் காணா​மல் போயின. ஆஃப்​க​னிஸ்​தா​னில் பிரம்​மாண்ட புத்​தர் சிலை​கள் உடைக்​கப்​பட்​டது மத ரீதி​யா​னது என்​றா​லும், ஆட்சி மாற்​றத்​தின் விளைவே.
இந்​தியா மீது படை​யெ​டுத்த முக​லா​யர்​கள், கோயில்​க​ளை​யும் குறி​வைத்​த​னர். 
நம் நாட்டி​லேயே அர​சர்​கள் படை​யெ​டுத்​துப் போரிட்​ட​போது கோயில்​களை அழிக்​கும் வழக்​கம் தொடக்​கத்​தில் இருந்​த​தாக சில வர​லாற்​றா​சி​ரி​யர்​கள் கூறு​கி​றார்​கள். ஆனால், பிற்​கா​லத்​தில் அது வழக்​கொ​ழிந்து, சிவ​னும், விஷ்​ணு​வும் அரு​க​ருகே கோயில் கொண்ட அதி​ச​யம் நிகழ்ந்​த​தும் இங்​கே​தான். அது மட்டு​மல்ல. பிற நாட்ட​வர் வழி​ப​டும் கட​வு​ள​ரை​யும் ஏற்​றுக்​கொள்​ளும் பண்பு இங்​கி​ருந்​தது. வெளி​நாட்​டி​லி​ருந்து வந்த பார்சி மதத்​தி​னர் இங்​குள்ள மக்​க​ளோடு இசைந்து வாழ்​கின்​ற​னர். உல​கெங்​கும் சித​றிய யூதர்​கள் பிற நாடு​க​ளில் கொடு​மைப்​ப​டுத்​தப்​பட்​டா​லும், இந்​தி​யா​வில் மரி​யா​தை​யு​டன் நடத்​தப்​பட்​டதை நவீன யூதர் வர​லாறு கூறு​கி​றது.
இந்த மண்​ணி​லேயே தோன்​றிய பெளத்த, சமண மதங்​கள் சூன்​ய​வா​தத்​தைக் கொள்​கை​யாக முன்​வைத்து பிரம்​மாண்​ட​மாக வளர்ந்​தன. வைதிக மதத்தை அசைத்​துப் பார்த்​தன. இன்று பெளத்​தம் ஒரு​சில ஆசிய நாடு​க​ளில் பெரிய மத​மா​கத் திகழ்ந்​தா​லும், இந்​தி​யா​வில் புத்​தரை மஹா​விஷ்​ணு​வின் அவ​தா​ரங்​க​ளில் ஒன்​றா​கக் கரு​து​வோ​ரும் உண்டு. 
நாத்​தி​க​வா​தத்​தை​யும் ஆன்​மி​கத்​தோடு கலந்து பார்த்​தது இங்​கு​தான். சார்​வா​க​மும் சாங்​கிய தத்​து​வ​மும் இந்து தத்​துவ இய​லின் கிளை​யா​கி​விட்​டன. நாத்​தி​கத்தை வெளிப்​ப​டுத்​தும் ஏரா​ள​மான ஆன்​மிக இலக்​கி​யங்​கள் இருக்​கின்​றன. திரு​ஞா​ன​சம்​பந்​தர் காலத்​தில் 'நட்ட கல்​லும் பேசு​மோ?' என்று கேலி பேசி​ய​போது, அதை எதிர்​கொண்​ட​தாக வர​லாறு உண்டு. வால்​மீகி ராமா​ய​ணத்​தில் ஜாபாலி என்ற முனி​வ​ருக்​கும், ராம​ருக்​கும் நடை​பெ​றும் விவா​தத்​தில் நாத்​தி​க​வா​தம், மூட நம்​பிக்கை ஒழிப்பு போன்ற கருத்​து​கள் கூறப்​பட்​டன. ஆத்​தி​க​வா​தம் பேசப்​பட்ட காலம் முழு​வ​தும், நாத்​தி​க​வா​த​மும் பேசப்​பட்​டது. அதை​யும் வர​வேற்ற பரந்த பண்​பாட்​டிற்​குச் சொந்​த​மா​ன​வர்​கள் நாம்.
ஆனால், முந்​தைய எழுச்​சி​க​ளால் விளைந்த சல​ச​லப்​பு​கள் அள​வுக்கு கடந்த நூற்​றாண்​டின் தமி​ழக நாத்​தி​க​வா​தம் பேசப்​ப​ட​வில்லை. பெரிய, பெரிய சுனா​மி​க​ளையே சமா​ளித்த நம்​ம​வர்​க​ளுக்கு, தோர​ணப் பிர​சா​ரங்​கள் எம்​மாத்​தி​ரம்? நாத்​தி​கத் தலை​வ​ரைப் புகழ்ந்​து​கொண்டே அவ​ரது தொண்​டர்​கள் கோயில்​க​ளுக்கு சாரி, சாரி​யா​கச் சென்​ற​னர். திரு​வண்​ணா​மலை கிரி​வ​ல​மும், சப​ரி​மலை யாத்​தி​ரை​யும், பழனி பாத யாத்​தி​ரை​யும் பிர​ப​ல​மா​னது, மிக சமீ​பத்​திய ஆண்​டு​க​ளில்​தான். வீதி​க​ளில் கட​வுள் சிலை​களை உடைத்து 'சிலை​க​ளுக்கு உயிர் இல்லை' என்​ற​வ​ருக்​கும் பெரிய பெரிய சிலை​கள் எழுப்​பப்​பட்​டன. அந்​தச் சிலை​க​ளும் மகத்​து​வம் பெற்று, சிலர் வழி​ப​ட​வும் செய்​தார்​கள். தொண்​டர்​கள் பக்​தர்​க​ளா​னார்​கள்.
இந்து வழி​பாட்டு இய​லில் சிலை வழி​பாடு கீழ்​நி​லை​தான். உரு​வ​மற்ற கட​வுளை வணங்​கு​வ​தும், 'தத்-த்​வ​மஸி' என தன்​னையே கட​வு​ளாக உயர்த்​து​வ​துமே உயர்​நி​லை​யா​கக் கரு​தப்​பட்​டது. அப்​படி உணர்ந்​த​வர்​க​ளையே சமூ​கத்​தில் உயர்​நி​லை​யி​லும் வைத்​தார்​கள். இப்​ப​டித்​தான் வழி​பட வேண்​டும் என்ற பிடி​வா​த​மும் இங்​கில்லை. சிலை​களை வழி​பட்​ட​வர்​களை கீழ்​நி​லை​யில் பார்க்​க​வும் இல்லை. அனை​வ​ருக்​கும் வழி​பாடு சுதந்​தி​ரம் இருந்​தது.
சிலை​கள் இருக்​கட்​டுமே; இங்கு எல்லா சிலை​க​ளும் வழி​ப​டத்​தக்​க​வையே, நாத்​தி​கம் பேசி​ய​வர்​க​ளின் சிலை​கள் உட்​ப​ட.
 

]]>
http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/mar/16/எல்லா-சிலை​க​ளும்-வழி​ப​டத்​தக்​க​வையே-2881323.html
2880625 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் கலக மானிடப் பூச்சிகள் பேராசிரியர் தி. இராசகோபாலன் DIN Thursday, March 15, 2018 01:16 AM +0530 நந்தவனத்திலே யாழ் மீட்டுவதைப் போன்று ரீங்காரமிடும் தேனீக்கள், மலர்களின் முதுகில் காற்றைப் போல் வந்து தங்கும்; தேனைக் குடிக்கும். அதற்குமேல் அந்தச் செடிகொடிகளின் இனப்பெருக்கத்திற்கு மகரந்தச் சேர்க்கை மூலம் வழி வகுக்கும். தாமும் வாழ்ந்து, தாவரங்களையும் வாழ வைக்கின்றன தேனீக்கள். எனவேதான் ஓர் ஆங்கிலக் கவிஞன், 'தேனீக்கள் மட்டுமே மலர்களிலிருந்து தேனை எடுக்க முடியும்; சிங்கம், புலி போன்ற விலங்குகளால் அது முடியாது' என்றான்.
கலக மானிடப் பூச்சிகள் தேனீக்கள் இனத்தில் இல்லை; மானுடத்தில்தான் உண்டு போலும்.
ஆனால், குரங்குகள் ஒரு வாழை மரத்திலிருந்து, வாழைப் பழங்களைப் பறித்துப் பாதி தின்றுவிட்டு மீதிப் பாதியைக் கீழே தூக்கி எறியும். அதே குரங்கு எதிர்த்த வாழை மரத்தில் உட்கார்ந்திருக்கும் குரங்கோடு சண்டை போட நினைத்தால், வாழைத்தாரிலிருந்து பழங்களைப் பறித்து, எதிர்த்த மரத்தில் எறியும். எதிர்த்த மரத்தில் இருக்கும் குரங்கு, ஏட்டிக்குப்போட்டியாக தானிருக்கும் மரத்திலிருந்து பழங்களைப் பறித்து முதல் குரங்கின் மீது எறியும். அந்தக் கோரக் காட்சியைக் கண்டுகொண்டிருக்கும் தோட்டக்காரன், பல நாட்களாகக் காலையும் மாலையும் தண்ணீர்விட்டு வாழைத் தோட்டத்தை வளர்த்தவன், இப்பொழுது தண்ணீருக்குப் பதிலாகக் கண்ணீர்விட்டுக் கொண்டிருப்பான். குரங்குகள் தெய்வாம்சத்தோடும் சம்பந்தப்பட்டிருப்பதால், அவற்றை அவன் அடித்துத் துரத்தவும் முடியாது.
குரங்குகள் செய்யும் வேலையைச் சமீப காலமாகப் பக்குவமில்லாத - ஆறறிவும் சரியாக வளரப் பெறாத மனிதர்களும் செய்யத் தொடங்கிவிட்டார்கள். 'விலங்குகளுக்குக் கால்நடைகள் எனப்பெயர்; ஏனென்றால், அவைகள் காலால் மட்டுமே நடக்கக் கூடியவை; ஆனால், மனிதனுக்கும் கால்கள் உண்டு. அவனைக் கால்நடை எனச் சொல்வதில்லை. ஏனென்றால், மனத்தாலே நடக்கக் கூடியவன்; தேவைப்பட்டால், காலாலேயும் நடப்பான்' என்பார் தவத்திரு குன்றக்குடி அடிகளார்.
சமீப காலமாகச் சில மனதர்கள் காலாலே மட்டும் நடக்கிறார்கள். அதனால் மாவீரன் லெனின் சிலைகளும், டாக்டர் அம்பேத்கர் சிலையும் பின்னப்படுத்தப்படுகின்றன.
அமெரிக்காவில் டகோடா கருமலைத் தொடரின் அண்ணாந்து பார்க்கின்ற உச்சியில் ரஷ்மோர் குன்றில், ஜார்ஜ் வாஷிங்டன், தாமஸ் ஜெஃபர்சன், ஆபிரகாம் லிங்கன், தியோடர் ரூஸ்வெல்ட் ஆகிய நான்கு அதிபர்களின் திருவுருவங்களைச் செதுக்கியிருக்கிறார்கள். அயல்நாட்டுப் பயணிகளும், உள்நாட்டுப் பார்வையாளர்களும் கழுத்து வலிக்க நிமிர்ந்து பார்த்து, வீர வணக்கம் செலுத்த முடியுமே தவிர, யாரும் கிட்டே நெருங்க முடியாது.
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் செஞ்சதுக்கத்தில் மாவீரன் லெனினுடைய கல்லறை மாடம் அமைந்திருக்கிறது. 1924-ஆம் ஆண்டு, இயற்கையெய்திய அந்தப் புரட்சித்தலைவனுடைய புகழுடம்பு, பக்குவப்படுத்தப்பட்டு மிகக் கவனத்தோடு பாதுகாக்கப்படுகிறது. இன்றைக்கும் அங்கு செல்கின்ற பார்வையாளர்கள் மெளன அஞ்சலி செலுத்திச் செல்கின்றனர்.
இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது பால கங்காதர திலகர் கைது செய்யப்பட்டார். அதனால், ஆலைத் தொழிலாளர்கள் அனைவரும் கொதித்தெழுந்து போராட்டத்தில் குதித்துவிட்டனர். இதைப் படித்த மாவீரன் லெனின், 'லோகமான்ய திலகர் கைது செய்யப்பட்டதால், பாட்டாளி வர்க்கம் களத்தில் இறங்கிவிட்டது. இதன் மூலம் இந்திய விடுதலை உறுதியாகிவிட்டது' என்றான். தோழமைக்குரல் கொடுத்த அந்த மாவீரனுக்கு திரிபுராவில் பொக்லைன் மூலம் நன்றி செலுத்தப்படுகின்றது. குழாயடிச் சண்டைக்காரர்கள் செய்யும் சிறுபிள்ளைத்தனங்களால், பாரதப் பிரதமரே இன்று சங்கடத்திற்கு உள்ளாகியிருக்கிறார்.
மானுடத்தை ஈடேற்றம் செய்வதற்காகவே சர்வோபரித் தியாகம் செய்த உத்தமர்களின் நினைவு காலங்கள்தோறும் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காகவே உருவச்சிலைகள் நிறுவப்படுகின்றன. எதிர்கால சந்ததியினருக்கும் தேசத் தலைவர்களின் தியாகங்கள் மனத்தில் படிய வேண்டும் என்பதற்காகவே நினைவுச் சிலைகள் நிறுவப்படுகின்றன. 
ஊருக்குழைத்த உத்தமர்களைப் பற்றி படிக்க வேண்டும் என்பதற்குப் பதிலாக, இடிக்க வேண்டும் என்ற உணர்வு, இந்தியாவில் மட்டுமன்றி, உலகெங்கும் ஊடுருவி நிற்கிறது. உலகத்திற்கே ஞானத்தைப் போதித்த புத்தர் சிலைகளை, ஆப்கானிஸ்தானத்திலுள்ள தலிபான்கள் வெடிகுண்டுகளை வீசி சிதைத்தனர். மானுடத்தின் ஈடேற்றத்திற்காக மாளிகையைத் துறந்து, மரத்தடிக்கு வந்த புத்தரின் விக்கிரகங்களை, 2001-லிருந்து 2008 வரை கொலைவெறியாடி சின்னாபின்னமாக்கினார்கள். கி.பி. ஆறாம் நூற்றாண்டிலிருந்து சீனச் சிற்பிகளால் செதுக்கப்பட்ட சிற்பங்களை, ஈவிரக்கமின்றித் தகர்த்து எறிந்தனர்.
கயாவில் ஒரு தந்தைக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தனர். அவர்கள் இருவரும் புத்தருடைய போதானா மொழிகளைச் செவிமடுத்துக் குடும்பத்தை விடுத்து, துறவுபூண்டனர். வம்சத்திற்கு ஒரு பிள்ளையில்லாமல் போனதால், ஆத்திரம் அடைந்த அந்தப் பிள்ளைகளின் தகப்பன், புத்தர் தவம் செய்து கொண்டிருக்கும் இடத்திற்குச் சென்று அவர் முகத்தில் காறித் துப்பிவிட்டு வந்தான். புத்தர் சாந்த முகத்தோடு, அதனை மார்புத்துணியால் துடைத்துக் கொண்டார். மறுநாள் மனம் திருந்திய அந்தத் தகப்பன், புத்தர் முன் சென்று மன்னிப்புக் கேட்டான். அதற்கு புத்தர், 'நீ மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை. இன்றைக்கு வந்திருக்கின்ற நீ, நேற்றைக்குத் துப்பியவனல்ல; நேற்றைய தினம் துப்பியவன் இன்று வரவில்லை. அதனால் பாதகம் இல்லை' என்றார். அந்த உத்தமனின் உருவச்சிலைகளைத்தான் பயங்கரர்கள் குண்டுகளால் துளைத்தனர்.
கண்ணியத்தோடும் நாகரிகத்தோடும் வாழ வேண்டும் என்பதை உலகத்திற்கே சொல்லிக் கொடுத்தது இப்பாரத பூமி. முதல் சுதந்திரப்போர் எனக் கருதப்பட்ட சிப்பாய்க் கலகத்தை முன்னின்று தோற்கடித்தவன், ஜெனரல் நீல் என்ற ஆங்கிலேயன். அந்தப் போராட்டத்தின்போது, பஞ்சமா பாதகங்கள் அனைத்தையும் கொஞ்சமும் அஞ்சாமல் செய்தவன் அந்தப் பாதகன். இராணுவத்தில் காட்டுத் தர்பாரை நடத்தினான். ஆண்கள் - பெண்கள் அத்தனை பேரையும் ஓடோட விரட்டியவன். ஆங்கிலேயருக்குத் தேடிக் கொடுத்த வெற்றிக்காக, அவனுக்கு ஆங்கில அரசு சென்னை மவுண்ட் ரோடில் சிலை ஒன்றை நிறுவியது.
ஜெனரல் நீல் சிலையை எப்படியாவது இரவோடு இரவாக அகற்றிட வேண்டும் என்று சுதந்திரப் போராட்ட வீரர்கள் துடித்தனர். அந்த அறப்போருக்குத் தலைமை ஏற்றவர் கர்மவீரர் காமராசர். அப்பொழுது மகாத்மா காந்தியடிகள் சென்னையில் எஸ். சீனிவாச அய்யங்கார் வீட்டில் தங்கியிருப்பது தெரிய வரவே, காமராசர் காந்தியடிகளிடம் சென்று அப்போராட்டத்தை எப்படி நடத்துவது என ஆலோசனை கேட்டார். அதற்குக் காந்தியடிகள், வன்முறையற்ற வகையில், வெறுப்பை மட்டும் காட்டத் தக்க வகையில், பொதுமக்கள் பார்த்து ஏளனம் செய்யும் வகையில், நீல் சிலை மீது சிறு சிறு களிமண் உருண்டைகளை உருட்டிப் போடும்படி ஆணையிட்டார். அந்த மறியலுக்குத் தலைமை தாங்கியவர் கர்மவீரர் காமராசர் என்பதால், காந்தியடிகள் தெரிவித்தவாறு கண்ணிய முறையில் நடத்திச் சென்றார்.
இந்த மண்ணின் நயத்தக்க நாகரிகத்திற்கு மேலும் ஒரு சுவையான செய்தி உண்டு. சோவியத் நாட்டு அதிபரான நிகிடா குருச்சேவ், இந்திய அரசின் விருந்தினராக தில்லிக்கு வருகை புரிந்தார். அப்போதைய இந்தியப் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு, குருச்சேவுக்குக் குடியரசுத் தலைவரின் மாளிகையைச் சுற்றிக் காண்பித்தார். குடியரசுத்தலைவர் மாளிகையின் சுவர்களில் வரிசையாக நம்மையாண்ட ஆங்கிலேய கவர்னர் ஜெனரல்களின் ஓவியங்கள் சட்டம் போட்டு மாட்டப்பட்டிருப்பதைப் பார்த்துக் குருச்சேவ் திடுக்கிட்டார். உடனே, நம்முடைய பிரதமரைப் பார்த்து, 'என்ன இது! உங்களை அடிமைப்படுத்தி ஆண்ட ஆங்கிலேயர்களின் படங்களை இன்னும் இங்கு மாட்டி வைத்திருக்கிறீர்கள்?' என வினவினார்.
அதற்குப் பண்டித ஜவாஹர்லால் நேரு, 'வரலாறு அவ்வளவு சீக்கிரம் துடைத்தெறியப்படக் கூடியதன்று' என்றாராம்.
என்றாலும், நாம் ஒரு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்! தப்புவதற்கு வழிகள் இருக்கின்றன என்பதற்காகத் தவறுகளைச் செய்யக்கூடாது. அண்மையில் எகிப்திய பிரபல பாடகி ஷெரின் அப்தெல் வஹாபிற்குக் கிடைத்த தண்டனையை எண்ணிப் பார்க்க வேண்டும். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஷெரினிடம் 'நீங்கள் நைல் நதியின் தண்ணீரைக் குடித்திருக்கிறீர்களா?' என ஒரு ரசிகர் கேட்டுவிட்டார். அதற்கு அப்பாடகி, 'நைல் நதி நீரைக் குடித்தால் நோய்த் தாக்குதலுக்கு அல்லவா உள்ளாவோம்' எனப் பதிலிறுத்துவிட்டார். செய்தி அரசுக்கு எட்டி, வழக்கு பாய்ந்தது. நாட்டுப்பற்றைக் குறைத்துப் பேசியதற்காக, ஷெரினுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம்.
மனிதர்கள் கருத்துப் பரிமாற்றத்துக்குப் பேச்சு இருக்கிறது; எழுத்து இருக்கிறது. கடப்பாரையும் பொக்லைனும் எதற்கு?
 

]]>
http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/mar/15/கலக-மானிடப்-பூச்சிகள்-2880625.html
2880624 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் காவலருக்குப் பாதுகாப்பு! ஐவி. நாகராஜன் DIN Thursday, March 15, 2018 01:16 AM +0530 தற்போதைய காவல் துறையின் பணித்திறன் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. உயிரிழப்புகள் மட்டும் அதிகரித்துக்கொண்டுடிருக்கிறது. குற்றவாளிகளுக்கு கிடைக்கும் அறிவியல் மற்றும் தொழிநுட்ப வளர்ச்சி வசதி, விசாரணை அதிகாரிகளுக்கு கிடைப்பதில்லை. களப்பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கீழ் நிலை அலுவலர்களில் ஓரளவு கணிப்பொறி பற்றித் தெரிந்தவர்கள் அல்லது படித்தவர்களே 'சைபர்' கிரைம் பிரிவில் நியமிக்கப்படுகின்றனர். ஆனால் அவர்களுக்கு உதவ காவல்துறையில் பொறியியல் வல்லுநர்கள் போதுமான அளவில் இல்லை. 
கைப்பேசி உரையாடல் மற்றும் தகவல் பறிமாற்றங்கள் பல வழக்குகளில் துப்புத்துலங்க உதவியாய் இருக்கிறது. ஆனால் அந்த தகவல்களை சேகரிக்கவும் கண்காணிக்கவும் தனியார் நிறுவனத்தின் தயவையே காவல் துறை நாட வேண்டியுள்ளது. அந்தப் பிரிவில் குவியும் வழக்குகளுக்கு ஈடான அலுவலர்களும் உபகரண வசதியும் இல்லை. கீழ்மட்ட காவலர்கள் முதல் சப்இன்ஸ்பெக்டர் வரை அவர்களின் திறமை வீணடிக்கப்படுகிறது. ஒரு புகாரைப் பெற்று சி.எஸ்.ஆர். ரசீது கொடுக்கக் கூட இன்ஸ்பெக்டரின் அனுமதிக்காகவும், எப்.ஜ.ஆர். போட எஸ்பியின் அனுமதிக்காகவும் காத்திருக்க வேண்டியிருக்கிறது.
இப்போதெல்லாம் காவலர் பதவிக்கே பட்டதாரிகள் அதிகம் வருகின்றனர். ஆனால் அவர்களின் திறமைக்கேற்ற பணிகள் கொடுக்கப்படுவதில்லை. முன்பெல்லாம் எட்டாம் வகுப்பு படித்த 'ஏட்டய்யா' புகார்களை விசாரித்து சமரசம் செய்து வைத்து பிரச்னைகள் பெரிதாகாமல் தடுத்துவிடுவார். இப்போதெல்லாம் காவல் நிலையத்துக்குப் புகார் கொடுக்க வருகிறவர்கள் இன்ஸ்பெக்டருக்காக காத்துக் கிடந்துவிட்டு, தாதாக்களிடமும் கூலிப் படையினரிடமும் போக ஆரம்பித்துவிட்டனர். 
இன்னொருபுறம், கடந்த 2017 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான 5 மாதங்களில் மட்டும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 138 காவல்துறையினர் உயிரிழந்தனர். இவர்களில் 15 பேர் தற்கொலை செய்துகொண்டனர். 20 பேர் மாரடைப்பாலும் 29 பேர் சாலை விபத்துகளிலும் உயிரிழந்தனர். புற்றுநோய், மஞ்சள் காமாலைக்கு 5 பேர் பலியாகினர். மீதமுள்ள 69 பேர் பல்வேறு காரணங்களினால் உயரிழந்தனர் என்று காவல்துறை பதிவேடுகள் மற்றும் பல்வேறு பத்திரிக்கை குறிப்புகளிருந்து தெரியவருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாதுகாப்பு பணிலிருந்தபோது மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த 14-ஆவது பட்டாலியன் காவலர் உட்பட 6 பேர் தற்கொலைக்கு முயன்று காப்பற்றப்பட்டுள்ளனர். 
அண்மையில் ஆயுதப்படையில் காவலராக பணியாற்றிய காவலர், மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமாதி உள்ள இடத்தில் பாதுகாப்பு பணியிலிருந்தபோது துப்பாக்கியால் தன்னையே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
அதைத் தொடர்ந்து உதவி ஆய்வாளர் ஒருவர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். ஒரே வாரத்தில் காவல்துறையை சார்ந்த இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் காவல்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் அண்மையில் திருச்சி மாவட்டத்தில் இரு சக்கர வாகனத்தில் ஒருவர் தனது கர்ப்பிணி மனைவியுடன் சென்றபோது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல் அதிகாரி தடுத்து நிறுத்தி நிற்காததால் துரத்திச் சென்று வாகனத்தை காலால் எட்டி உதைத்தார். அப்போது பின்னால் அமர்ந்திருந்த அந்த கர்ப்பிணிப் பெண் கீழே விழுந்து உயிரிழந்த கோர சம்பவம் காவல்துறையினர் மீது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுவும் கூட காவல்துறையினரின் தாக்குப் பிடிக்க முடியாத பணிச்சுமையின் ஒரு வடிவமாகவே பார்க்க முடிகிறது. பணிச்சுமையில் ஏற்படும் மன அழுத்தமே உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கின்றனர். 
உயரதிகாரிகள் கீழ்நிலை காவலர்களை சொந்தப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்குத் தொடர்ந்து நிர்பந்திக்கப்படுவதும், தங்களுடைய உத்தரவுக்குப் பணியாத கீழ்நிலை அதிகாரிகளை குறிவைத்துப் பழிவாங்குவதும் காவல்துறையினரிடம் மனஅழுத்தத்தை கூடுதலாக்குகிறது. இடைவேளையின்றி நீண்டநேரம் தொடர்ந்து பணியாற்ற வேண்டியிருப்பதால் குடும்பத்துடன் நேரத்தை செலவிட முடிவதில்லை. பல பேர் குடும்பத்தினரை பிரிந்து வேறு ஊரில் வாழவேண்டிய நிலை ஏற்படுகிறது. இதன் விளைவாக காவல்துறையினர் அதிக அளவில் மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர். உயரதிகாரிகளின் நிர்பந்தத்தாலும் சிலர் தவறான முடிவுக்குத் தள்ளப்படுகின்றனர். 
காவல்துறையினரின் பணிநேரம் ஒழுங்கற்றதாக இருப்பதால் அவர்களால் சரியான நேரத்திற்கு உணவு அருந்த முடிவதில்லை. பாதுகாப்பு என்ற பெயரில் பல நாட்கள் வெளியூரில் தங்க வைக்கப்படும்போது குடிநீர் கூட சில நேரங்களில் கிடைப்பதில்லை. உணவுப் பழக்கத்தில் மாற்றம் எற்பட்டு நோய்களில் சிக்கி இளம் வயதிலேயே காவல்துறையினர் பலர் உயிரிழந்து வருகின்றனர். 
காவல்துறையினரின் பணிநேரத்தை வரையறுத்து செயல்படுத்த வேண்டும். காவலர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும். காவல்துறையில் காலியாக உள்ள 30 ஆயிரம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். காவல்துறையினரின் மன அழுத்தத்தை போக்க கவுன்சிலிங், பொழுதுபோக்குகள், விளையாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை அடிக்கடி ஏற்படுத்தித் தர வேண்டும். அரசு ஊழியர்கள் போல் காவல்துறையினருக்கும் 8 மணி நேரம் வேலை, ஊதிய முரண்பாட்டைக் களைதல், 7 ஆண்டுக்கு ஒரு முறை பதவி உயர்வு, அனைத்து மாவட்டங்களிலும் காவலர் நல அமைப்புகளை ஏற்படுத்துதல், அவர்களுக்கான படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு செய்து தர வேண்டும். அப்போதுதான் காவல்துறையில் தொடரும் குறைபாடுகளை களைய முடியும். காவல்துறையினரின் உயிரிழப்புகளையும் தடுத்து நிறுத்த முடியும். தற்போதைய தேவை, காவலரின் நல்வாழ்வை உறுதி செய்யும் பாதுகாப்பு!
 

]]>
http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/mar/15/காவலருக்குப்-பாதுகாப்பு-2880624.html
2880036 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் சரியான தீர்ப்பு ஸதீஷ் குமார் டோக்ரா DIN Wednesday, March 14, 2018 01:43 AM +0530 சென்னை உயர் நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதியரசர் அவர்கள், 'எல்லா பிரச்னைகளுக்கும் காவல்துறையே காரணம் என்னும் மனப்பான்மையை விட்டுவிட வேண்டும்'என்று கூறியுள்ளார்கள். இது வரவேற்கத்தக்கது.
காவல்துறையின் அனைத்துப் பணிகளும் ஏதோ ஒரு விதத்தில் சமுதாயத்தினரின் கசப்பான அனுபவங்களோடே தொடர்பு பெறுகின்றன. வீட்டில் திருட்டு நடந்தாலோ, கொலை - கொள்ளை நடந்துவிட்டாலோ, வாகன விபத்து நடந்தாலோ, இயற்கைப் பேரிடர் ஏற்பட்டாலோ காவல்துறையின் தலையீடு தேவைப்படும்.
வேறு யாராலும் செய்ய முடியாத உதவிகளை காவல்துறையினரால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை மக்களுக்கு உண்டு.
பல்லாண்டுகளுக்கு முன் நான் இந்திய காவல் பணியில் தேர்வு பெற்று புதிதாக அகில இந்தியப் பணிகளில் சேர்க்கப்படும் அதிகாரிகளுக்கான 'நாட்டுடன் ஓர் அறிமுகம்' எனப்படும் 'பாரத தர்ஷன்' பயணத்துக்குச் சென்றிருந்தேன். அப்பொழுது ஒரு காவல்துறைத் தலைவரைப் பார்க்கச் சென்றோம். அவர் தனக்கு நிகழ்ந்த ஓர் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
ஒரு நாள் நடு இரவில் தொலைபேசியின் மூலம் மிக அவசரமாகத் தொடர்பு கொண்டு, 'ஐயா, எங்க வீட்டில் ஒரு பாம்பு வந்துள்ளது' என்று புகார் தெரிவிக்கிறார் ஒருவர். நடு இரவில் தூக்கத்திலிருந்து எழுப்பப்பட்ட காவல்துறை அதிகாரிக்கு படுகோபம் வந்தது. 'என்னடா, நான் ஒரு பாம்பாட்டின்னு நினைக்கிறியா?' என்றார் கோபமாக.
அப்பொழுது அடுத்த முனையில் இருந்தவர் 'ஐயா, நான் உங்களை அணுகாமல் வேறு யாரிடம் போவது? எங்கள் வீட்டில் பாம்புகள் ஆங்காங்கே நெளிகின்றன. குழந்தைகள் அலறித் துடித்து ஓடுறாங்க. என்ன செய்யச் சொல்றீங்க?' என்றார் பாவமாக.
அந்தக் காவல்துறை அதிகாரி கூறியது என் மனதில் அழுத்தமாக பதிந்தது. அது என் வாழ்வில் ஒரு வழிகாட்டிச் செய்தியாக அமைந்தது. ஒருவருக்கு எந்த ஒரு பிரச்னை வந்தாலும், அவர் முதலில் நினைப்பது காவல்துறையைத்தான். இது காவல்துறையின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையே காட்டுகிறது.
சுனாமியாக இருந்தாலும், புயலாக இருந்தாலும், தீ விபத்தாக இருந்தாலும், எந்த ஒரு நெருக்கடி வந்தாலும், மக்களைப் பாதுகாக்க மூத்த அதிகாரிகள் எதைச் சொன்னாலும் அவர்களுக்குக் கீழ் பணி புரிபவர்கள் முகம் சுளிக்காமல் செய்வார்கள்.
ஒருமுறை நான் ஒரு மென்பொருள் உருவாக்கிக் கொண்டிருந்தேன். இரவு எட்டு மணி வரை தயாராகவில்லை. அடுத்த நாள் அமைச்சர் ஒருவர் ஒரு திறப்புவிழாவில் கலந்து கொள்வதாக ஒப்புக்கொண்டதால் இப்பணியைத் தள்ளி வைக்க முடியாத நிலை. என்னோடு அந்த மென்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவருக்கு 104 டிகிரி காய்ச்சல். வீட்டுக்குப் போய் ஓய்வு எடுக்கச் சொன்னேன். அவர் மறுத்துவிட்டார். இரவு முழுவதும் என்கூட பணி செய்துவிட்டு, எல்லா பணிகளும் முடிந்த பிறகு காலை ஆறு மணிக்குத்தான் வீட்டுக்குப் போனார்.
மூத்த அதிகாரிகளுக்குப் பெயர் கெட்டுவிடக் கூடாது, காவல்துறைக்கு அசிங்கம் வரக்கூடாது என்ற உணர்வோடு பட்டினியாகக் கிடந்து தன் கடமைகளைச் செய்கிறவர்கள் ஏராளம் பேர் உண்டு. வேறெந்தத் துறையிலும் இல்லாத குடும்ப உணர்வும் கடமையுணர்வும் காவல்துறையில் உள்ளது.
காவல்துறையில் மோசமானவர்கள் இல்லை என்று சொல்லவில்லை. ஒருவர் இருசக்கர வாகனத்தில் தன் மனைவியை அழைத்துச் செல்ல, அவள் தவறி விழுந்து, அடிபட்டு, மருத்துவமனையில் அனுமதித்திருக்கும்போது, விசாரணை செய்யும் உதவி ஆய்வாளரிடம் அந்தம்மாவின் கணவர் காயச் சான்றிதழ் கேட்க, அவர் அதற்கு ஒரு விலை நிர்ணயம் செய்து, பிறகு அந்த அம்மா இறந்துவிட்டதால், அந்த விலையை உதவி ஆய்வாளர் உயர்த்திய நிகழ்வும் நடந்துள்ளது. ஆனால் அப்படிப்பட்ட உதவி ஆய்வாளர் போலீஸ் உத்தியோகம் பார்க்கிறார் என்பதைவிட அவர் பிணங்களை விற்கும் உத்தியோகம் பார்க்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
திருச்சி துவாக்குடி சம்பவமும், சமீபத்தில் நடந்த துரதிருஷ்டவசமான தற்கொலைச் சம்பவங்களும், மாண்புமிகு நீதியரசர் அவர்களின் நல்ல புரிதலும் என்னை காவல்துறையினரின் இன்றைய நிலையை சற்றே அலசத் தூண்டின.
தமிழ்நாட்டுக்கு வந்து கடலூர் மாவட்டத்தில் பயிற்சியாளராக சேர்ந்த நான் காவல்துறை மரபின்படி அப்பொழுது டி.ஐ.ஜி.ஆக இருந்த திரு. குமாரசாமி அவர்களைப் பார்க்கச் சென்றேன்.
'கடவுள் இந்த உலகத்திற்கு வர வேண்டுமானால், அவர் அவதாரம் எடுக்க வேண்டும். அப்படித்தான் இவ்வுலகத்தின் அமைப்பு. அவ்வுலகத்திலிருந்து இவ்வுலகத்திற்கு வர மனிதப் பிறவி தேவை. அதனால்தான், தனக்குப் பதிலாக - தன் சார்பாக - அவர் படைத்த மனிதர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க அவர் காவல்துறையினரை உருவாக்கியிருக்கிறார்', என்றார் அவர்.
அனைத்து காவல்துறையினரும் தாம் கடவுள் சார்பாகச் செயல்படுவதாக நினைக்கத் தொடங்கினால் பல பிரச்னைகளுக்குத் தீர்வு வரும். கடவுள் சார்பாக செயல்படுபவன் சீருடை அளிக்கும் அதிகாரம் தன்னுடையது என்று என்றைக்கும் நினைக்க மாட்டான். அந்த அதிகாரத்தை தன் இலாபத்துக்காகவோ, இன்னொருவரின் விருப்பத்துக்காகவோ பயன்படுத்த மாட்டார். எது ஒன்று ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக நமக்குக் கொடுக்கப்பட்டதோ அதை, வேறு ஒரு நோக்கத்திற்காக எப்படி பயன்படுத்த முடியும்?
அதிகாரம் சமுதாய அமைப்பின் அடிப்படை. அதிகாரம் என்பது என்ன? ஒருவர் எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என்பதை அவரே முடிவு செய்யாமல் இன்னொருவர் முடிவு செய்வது அதிகாரம். சாலையில் போகும்போது உங்களிடம் வண்டியை நிறுத்தச் சொல்லும் அதிகாரம் போக்குவரத்து அதிகாரிகளுக்கு உள்ளது. 
ஆனால், உங்கள் வீட்டுக்குள் எந்த இடத்தில் வண்டியை நிறுத்தலாம், எந்த இடத்தில் நிறுத்தக் கூடாது என்று உங்களைக் கட்டாயப்படுத்தும் அதிகாரம் அவருக்கு இல்லை.
ஆக, எது தனிப்பட்ட முறையில் உங்களை மட்டும் பாதிக்கிறதோ அதை காவல்துறை நிர்ணயிக்க முடியாது. ஆனால், எது மற்றவர்களைப் பாதிக்கிறதோ அதை காவல்துறை நிர்ணயிக்கலாம். உங்கள் வீட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நீங்கள் வண்டியை நிறுத்தினால் சுவாசம் பாதிக்கிறது என்று உங்கள் மகளே சொன்னாலும் கூட, அதை காவல்துறையினர் விசாரிக்கவே செய்வார்கள்.
மேற்கண்ட செய்திகளிலிருந்து இரண்டு விஷயங்கள் தெளிவாகின்றன.
1. காவல்துறைக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்கள் சட்டங்களை அமல்படுத்துவதற்காகவே அளிக்கப்பட்டவை.
2. சமுதாயம் சீராக நடைபெற அனைவரும் சட்டங்களுக்குப் பணிந்து செயல்படுவது அவசியம்.
இவ்விரண்டும் தவறில்லாமல் நடந்துவிட்டால் பிரச்னை எதுவும் வராது. ஆனால், அப்படி இருப்பதில்லை.
சட்டங்களை மீறி காரியங்களைச் சாதிப்பவர்கள் பொதுமக்களில் ஏராளமானோர். அதே போல், கடமைகளை நிறைவேற்ற மட்டுமே அளிக்கப்பட்ட அதிகாரங்களை தன் சுயலாபத்துக்காக அல்லது தனக்கு வேண்டியவர்களுக்காக பயன்படுத்தும் காவல்துறையினரும் இல்லாமல் இல்லை.
விளைவாக, ஒரு இழுபறி நிலை ஏற்படுகிறது. சாலையில் நின்று கொண்டிருக்கும் காவல்துறையினரைப் பார்த்து, இருசக்கர வாகனத்தில் வந்திருப்பவர் மனதில், 'இவர் காசு - கீசு கேட்பார் போல' என்றும், காவல்துறையினரின் மனதில் 'இவர் போகும் வேகத்தைப் பார்த்தால், நிறுத்தமாட்டார் போல' என்றும் தோன்றுகிறது. அதாவது, இருவருக்கும் அடுத்தவர் மீது அவநம்பிக்கை. இந்த அவநம்பிக்கையின் விளைவுகள் பலவிதமாகத் தோன்றுகின்றன.
- இவர் பணம் கேட்டார் - என்ற குற்றச்சாட்டு.
- சரி போகட்டும் என்று காவல்துறை இருந்துவிட்டால், தப்பித்துப் போனவர் காவல்துறையினரால் தேடப்படும் குற்றவாளியாகக் கூட இருக்கலாமே, ஏன் இவரைப் போகவிட்டார்கள் என்ற கேள்வி எழும். 
- வலுக்கட்டாயமாக நிறுத்தினால், அப்பொழுது வேறுவிதமாக பிரச்னைகள் வர வாய்ப்புகள் இருக்கின்றன.
ஆக, நாமே சமுதாயத்தை சிக்கல்களில் மாட்டிவிடுகிறோம். மிக அரிதாக இருக்க வேண்டிய சட்ட மீறல்கள் வழக்கமாக ஆகிவிட்டன. சட்டத்தை மதிப்பதுதான் இனி விதிவிலக்கு என்ற அடையாளத்துடன் செயல்படும் ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பணியில் அனைவரும் மும்முரமாக ஈடுபட்டுவிட்டது போல் ஒரு நிலை.
20-30 ஆண்டுகளிலேயே சமுதாயம் ஏன் இப்படி மாறிவிட்டது?
குழந்தைகளுக்கு நெறிமுறைகளை கற்றுக் கொடுக்கும் பள்ளிக்கூடமாக இருந்து வந்த குடும்ப அமைப்பு, அந்தப் பணியை விட்டுவிட்டதால்தான் இந்த விளைவுகள் என்று நான் நினைக்கிறேன்.
அடுத்தவரின் வலியை உணரும் மனப்பான்மையை இழந்து வருகிறோம். ஒரு பெண்ணின் இரு சக்கர வாகனத்தையும், அவரது மொபைல் போனையும் பறிக்க ஒரு இளைஞர், அப்பெண்ணை பயங்கரமாகத் தாக்கி, காயப்படுத்துகிறார். அவளது வலியையும், அவளது பெற்றோர் உணரப்போகும் மன வேதனையையும் உணரும் ஆற்றலை அவனுக்கு யாரும் கொடுக்கவில்லை. உணர்வுகள் அளவில் அவனுக்கும் ஒரு மிருகத்துக்கும் வித்தியாசம் இல்லை. சமுதாயம் அவனை மனிதனாக்கத் தவறிவிட்டது.
சிறைத்துறையில் கூடுதல் இயக்குநராகப் பணிணயாற்றியபோது தினமும் புழலுக்குச் சென்று தியான முறைகள் மூலம் அங்கே உள்ள சிறைவாசிகளின் சிந்தனை முறையை மாற்ற முயற்சிகள் மேற்கொண்டேன். அவர்களின் மனதில் மனிதநேயம் வளர வளர, அதுவரை அவர்கள் உணராத மகிழ்ச்சியை அவர்கள் பெற்றார்ககள். அவர்களின் ஆழ்மனதில எங்கோ மறைந்திருந்த மனிதன் எழ ஆரம்பித்தான்.
ஒருநாள் ஒரு வியப்பூட்டும் சம்பவம் நடந்தது. காலையில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்த ஒரு சிறைவாசி மயக்கம் போட்டு விழுந்துவிட்டார். இதைக் கண்ட மற்ற சிறைவாசிகள் ஒதுங்கிவிட்டார்கள். இவனுக்கு ஏதாவது ஆகிவிட்டால் நமக்கு ஆபத்து வரும் என்ற பயம் அவர்களுக்கு. ஆனால், மிக மோசமானவர் என்று இன்னொரு மத்திய சிறையிலிருந்து புழலுக்கு அனுப்பப்பட்டிருந்த ஒரு சிறைவாசி, விழுந்த நபரின் பக்கத்தில் சென்று அவருக்கு முதலுதவி அளித்து சிறைக்குள் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.
பிறகு நான் அவரிடம் பேசியபோது, அவர், 'மயக்கமுற்று விழுந்தவரை கஷ்டத்தில் பார்த்தது என்னை ஏனோ உறுத்தியது. அவரது துன்பத்தை நான் உணர்ந்தேன்' என்றார்.
இந்நிகழ்வு எனக்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது. வியப்பாகவும் இருந்தது. அடுத்தவரின் வலியை தன் வலியாக உணருவதுதான் மனிதனின் மிகப்பெரிய குணம். அந்தக் குணம் சமுதாயத்தில் வளர வளர குற்றங்கள் குறையும். காவல்துறையின் பணிப் பளுவும் குறைந்துவிடும். 
இதை யார் செய்வது? எப்படிச் செய்வது? என்ற கேள்வி எழும்.
முதன்மைப் பொறுப்பு தாய்மார்களுக்குத்தான். ஒரு காலத்தில் குழந்தைகளுக்கு ராமர் கதை சொல்லி நெறிமுறைகளைச் சொல்லிக் கொடுத்த தாய்மார்களும் பாட்டிமார்களும் இப்பொழுது வளரும் குழந்தைகளைப் பக்கத்தில் உட்கார வைத்து மாமியார்- மருமகள் சண்டையிடும் தொடர்களை அல்லது கிரைம் தொடர்பான, ரத்தத்தில் மிதக்கும் நிகழ்ச்சிகளைப் பார்க்கிறார்கள்.
அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளைப் பார்ப்பதால் விழிப்புணர்வு ஏற்படுகிறது என்று சிலர் சொல்லலாம். ஆனால், விழிப்புணர்வு என்ன பயன் தருகிறது? விபரீதங்கள் அல்லவா தொடர்கின்றன?
சமுதாயம் மாற ஒவ்வொருவரும் மாற வேண்டும். முதலில் நாம் நிஜத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். நிஜத்தைப் பேச ஆரம்பிக்க வேண்டும்.
நிகழ்கின்ற நிகழ்வுகளினால், ஒரு நீதிமன்றம் காவல்துறையை பயங்கரமாகச் சாடும் என்ற பொது எதிர்பார்ப்புக்கு மாறாக, நீதிமன்றம் எல்லாவற்றையும் எடைபோட்டு நியாயமான முடிவு அளித்தது வரவேற்கத்தக்கது.
 

]]>
http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/mar/14/சரியான-தீர்ப்பு-2880036.html
2879425 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் வாய்மொழி உணர்த்திய வாய்மை கிருங்கை சேதுபதி DIN Tuesday, March 13, 2018 01:45 AM +0530 'நீங்கள் சொல்வது உண்மையாயிருக்க வேண்டிய அவசியமில்லை; ஆனால் அது பொய்யாயிருக்கக் கூடாது!' என்றார் ஒரு பெரியவர், தனது பேச்சுக்கிடையில்!
ஓடும் பேருந்தின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த அவர் பக்கத்திலிருப்பவரிடம் இதைச் சொன்னார். இதன் 'தோற்றக் காரணம்' அறியாது போனாலும், அவர்களது உரையாடலைக் கவனிக்கச் செய்தது.
'எல்லாருக்கும் எல்லா உண்மைகளும் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை; தேவையேற்பட்டால் ஒழிய, சொல்லியாக வேண்டிய கட்டாயமுமில்லை. நிறையபேர் 'உண்மை சொல்கிறேன் பேர்வழி' என்று குழப்பங்களைத்தான் உண்டாக்கிவிடுறாங்க!' என்று பொதுவாய்ச் சொன்னார் பெரியவர்.
'அதுக்காக உண்மை சொல்லாமல் இருக்கலாமா?' என்றார் அடுத்தவர்.
'அதனாலே சொல்பவருக்கும் நன்மையிருக்கணும்; கேட்பவருக்கும் நன்மையிருக்கணும்' என்று அவர் சொல்லியபோது, எனக்குள் பாரதியார் பாடல் மின்னல் பாய்ச்சியது.
'ஊருக்கு நல்லது சொல்வேன் - எனக்கு
உண்மை தெரிந்தது சொல்வேன்!'
எத்தனையோ உண்மைகளைத் தெரிந்து வைத்திருந்தாலும், அதனைச் சொல்வதனால் ஊருக்கு நல்லது நடப்பதற்கானதாக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். அது மட்டுமல்ல, ஊருக்கு நல்லது சொல்லத்துணிகிறவர்கள், தனக்கு அது உண்மை என்று தெரிந்த பிறகே சொல்லவும் வேண்டும். பாரதியின் பாடலில் இடம்பெறும் 'எனக்கு' என்ற சொல்லுக்கு அழுத்தம் கொடுத்துப் பார்த்தால், அந்த'என்னோடு' சேர்த்து 'என் நெஞ்சத்துக்கும்' இடம் கொடுத்துவிடுகிற பாங்கைப் பார்க்கலாம். 
அதுதான் எது உண்மை, எது பொய் என்பதைச் சீர் தூக்கிப் பார்க்க வல்ல தராசு. அது நடுநிலையாகஇருக்கவேண்டும். ஒருபால் சாய்ந்தால் அதில் ஏதோ சார்பிருப்பதாகக் கண்டுபிடித்துவிடலாம். நெஞ்சம் கண்டு பிடித்துவிடும். அதற்கு மாற்றாகச் சொல்லி, அந்தக் கணத்தில் தப்பித்தும் விடலாம். அதற்குப் பிறகு காலமெல்லாம் அது பொய்யென்று கண்டுகொண்ட நெஞ்சு சுடுமே, அந்தச் சூடு நெஞ்சைத் துளைக்கும் துப்பாக்கிச் சூட்டை விடவும் அதிக வேதனை தரும். அதனைத் தவிர்க்கவும் முடியாது; உள்ளில் இருந்து உதிர்க்கவும் முடியாது. 
தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்த பின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்
என்பது அனுபவம் உணர்த்தும் உண்மையாக அப்போது தெரியும். அது சுட்டுக் கொண்டே இருக்கும். அவ்வாறு சுடும் உண்மையின் வேதனையை மறைக்க மேற்கொள்ளும் பொய்மிகு பாவனை இன்னும் அழுத்தமாய் உள்ளிருந்து சுடும்.
உள்ளதை உள்ளபடி உரைப்பது உண்மை என்கிற நிலையிலிருந்து விலகி, உள்ளதை, உள்ளியவாறு (நினைத்தபடி) சொல்லத் தொடங்கியது, கற்பனை. அதில், உண்மையின் சாரம் குறையக் குறைய, அது பொய்யுருக்கொள்ள நேரவே, 'கண்ணால் காண்பதும் பொய்: காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய்' எனும் நிலையில், பொய்யானது விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலை. இங்கே பொய்யை முன்னிறுத்தி, மெய் தலைநிற்கத் தொடங்குகிறது. அறிவின் செயற்பாடு மெய்ப்பொருள் காண்பதாய் அமைகிறது.
நடைமுறையில் உண்மை எப்போதும் ஒன்றாக இருக்க, பொய்கள் பலவாகிப் பெருகி விடுகின்றன. அப்போதெல்லாம் உண்மை சுடுகிறது. அதனால்தான், உள்ளத்தால் பொய்யாது ஒழுகச் சொல்கிறார் திருவள்ளுவர். 
பொய் ஒருபோதும் நிலைக்காது. அது சீட்டுக்கட்டில் கட்டுகிற வீடு மாதிரி. ஒரு பொய் சொல்லி, அதைக் காப்பாற்ற இன்னொரு பொய் சொல்லி, இரண்டையும் காப்பாற்ற இன்னும் நான்கு பொய்கள் சொல்லி, நான்கு பதினாறாய்ப் பெருகும். ஆனால், அவ்வாறு சொல்லப்பட்டதில் ஒன்று உண்மையில்லை என்று கண்டுபிடிக்கப்படுகிறபோது, எழுப்பிய அத்தனை பொய்யடுக்குகளும் மொத்தமாய்ச் சரிந்து விழுந்து ஒன்றும் அற்றுப் போகும்.
தாற்காலிமாகத் தப்பிப்பதற்காகவோ, ஒரு வசதிக்காகவோ சொல்லத் தொடங்கும் பொய், சொல்வோருக்கும் கேட்போருக்கும் ஆபத்தை விளைவிப்பது நிச்சயம். இன்னும் பலர், சுவாரசியத்திற்காகப் பொய் சொல்லத்தொடங்கி, அதற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். 'அவர் வாயைத் திறந்தாலே வர்றதெல்லாம் பொய்' என்று புத்தகம் போல மனிதர்களைப் படித்துக் கொண்டிருக்கும் படிக்காத கிராமத்துப் பெரியவர்கள் சொல்லக் கேட்டதும் நினைவுக்கு வருகிறது.
அதற்குப் பிறகு, அவர்களே வெளிவர நினைத்தாலும் வெளிவர முடியாத அபாயக் கூண்டு அது. கிடைக்கப் போகும் தண்டனைக்கோ, கஷ்டத்துக்கோ, சின்னஞ்சிறு அவமானத்துக்கோ பயந்து பொய் சொல்ல முயலுகிறவர்கள். அதனைக் காப்பாற்ற அடுத்தடுத்து பொய் சொல்ல ஆரம்பித்து, பொய்க்கே அடிமையாகிப் போகிறார்கள். ஒரு கட்டத்தில் அவருக்கு உண்மை எது? பொய் எது என்றே பிரித்தறிய முடியாத நிலை வந்துவிடுகிறது. அவர்கள் பொய்யர்களாகிப்போகிறார்கள். அவர்கள் கூறுவதை, 'பொய்யர்தம் மெய்' என்றே மாணிக்கவாசகர் அடையாளப்படுத்துகிறார். புற்றில்வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும்அஞ்சேன் என்பது மணிவாசகம். புற்றில் உறைகிற கொடிய பாம்பினைவிடவும் பொய்யர்தம் மெய் அஞ்சத்தக்கது என்பது அவர் உணர்த்தும் அனுபவ உண்மை.
இத்தகு பொய்யர்களின் கூடாரமாய் பூமி போய்விட்டால் அறமானது ஆணிவேரோடு அற்று அழிந்து போய்விடும். அதன் பின்னர் என்ன சொல்லி, செய்து யாது பயன் என்று அஞ்சித்தான் பொய்யாமொழிப்புலவர்,
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று 
என்றார் போலும்.
நடைமுறை வாழ்க்கையில், பொய் சொல்லி, ஒருவரையோ, அல்லது ஒரு விஷயத்தையோ காப்பாற்ற எடுத்துக்கொள்கிற முயற்சி இருவரையும் பொய்யராக்கிப் புறங்கடை நிறுத்திவிடும். அதற்குமாறாக, ஒரேயொரு உண்மை சொல்லி அதற்கான பலனை நன்மையோ தீமையோஅனுபவித்துக் கொண்டுவிடலாம் என்கிற மனப்பாங்கு வந்துவிட்டால், பல்வேறு மன அழுத்தங்களிலும் மனஉளைச்சல்களிலும் இருந்துவிடுபட முடியும். அதனால் ஏற்படும் அறப் பிறழ்ச்சியில் இருந்து தப்ப இயலும். அது வீட்டுக்கும் நல்லது. நாட்டுக்கும் நல்லது. இந்த நிலைப்பாடு தவறியதால்தான் இன்றைக்குப் பல்வேறு சிக்கல்கள் அன்றாட வாழ்வில் மலிந்து கிடக்கின்றன என்றால் அது மிகையில்லை. உடலளவில் வல்லவர்களாக வாழ்கிற பலரும் உள்ள அளவில் நல்லவர்களாக வாழ முடியாத நிலைக்கு ஆளாக நேர்கிறது.
உண்மைக்கும் பொய்மைக்கும் இடையிலான இடத்தில் வாய்மையைக் கொண்டுவந்து நிறுத்துகிறார் வள்ளுவர்.
வாய்மை எனப்படுவது யாதெனில் யாதொன்றும்
தீமை இலாத சொலல்
என்று அடிப்படையைச் சொல்கிறார். யாது ஒன்றுக்கும் தீமை தராத வரையில்தான் அது வாய்மை. தவறினால், அது பொய்யாய்ப் போய்விடும் என்று மறைமுகமாக எச்சரிக்கை செய்கிறார். 'தீங்கு பயவாதாயின் மெய்ம்மையாம்: பயப்பின் பொய்ம்மையாம்' என்பது பரிமேலழகர் விளக்கம்.
அத்தகு வாய்மையும் சொல்ல முடியாத நிலை ஏற்பட்டுப் பொய் சொல்ல வேண்டி வந்தால் என்ன செய்வது என்று நடப்பியல் அனுபவம் எழுப்புகிற கேள்விக்கும் அவர் பதில் தருகிறார்.
பொய்மையும் வாய்மையிடத்த...
இந்தக் குறளின் முதற்பகுதியைச் சொல்லியே பலர் தமது பொய்மைக்குக் காவலாய் பொய்யாமொழிப் புலவரைத் துணைக் கொள்கிறார்கள். அதுவே ஒரு பொய்! உண்மையில் அவர் சொல்ல வருவது வேறு. அது பொய்தான்; அது ஒருபோதும் வாய்மையாகாது. வாய்மை வேறு; பொய் வேறு. அது வாய்மையின் இடத்தில் இருக்கிறது, அவ்வளவுதான். அப்படி இருப்பதனாலேயே, அது வாய்மை ஆகிவிடாது. அதுமட்டுமல்ல, அப்படி அந்த இடத்தில் இருப்பதற்கு ஒரு தகுதியும் வேண்டுமல்லவா? அது புரைதீர்ந்த நன்மை பயக்கும் என்றால்தான் இருக்க முடியும்; குற்றமற்ற நன்மை தருகிற வரைக்கும்தான் அதற்கு அங்கே இடமுண்டு. அது தவறினால், தானாகவே அங்கு இருக்கும் தகுதியை இழக்கும் என்பது உறுதி.
ஆக, பொய்கள் மலிந்துகிடக்கும் இந்த உலகில் முதலில் பொய்யிலிருந்து விடுபட உரிய வழி, அது புரைதீர்ந்த நன்மை பயப்பதாக இருக்கிறதா எனப்பார்த்து, வாய்மையின் இடத்தில் பொய்யை வைத்துப் பார்க்கலாம்.
பின்னர் தன்நெஞ்சு துணையாக, பொய்யாமையிலிருந்து விடுபடலாம். அதற்கு மனத்தூய்மை அவசியம். உடல் தூய்மைக்கு நீரைப் பயன்படுத்தும் நமக்கு, மனத்தூய்மைக்கு வாய்மையைப் பரிந்துரைக்கிறார் வள்ளுவர்.
வாய்மையே மனத் தூய்மையைத் தருகிறது. மனதின் தூய்மை வாக்கில் தூய்மையை வழங்குகிறது. மனமும் வாக்கும் தூய்மையுறுகிறபோது, செயலும் தூய்மையடையத் தொடங்கும்.
இது தனிநபர் வாழ்வில் தொடங்கி பொதுவாழ்வுக்கும் உரியதாகிறபோது அறம் தலைநிற்கும். அபாயம் பல வழிகளில் நீங்கும்.
 

]]>
http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/mar/13/வாய்மொழி-உணர்த்திய-வாய்மை-2879425.html
2879424 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் 'வல்லறிதல்' வரம்பு மீறினால்... சு. வெங்கடேஸ்வரன் DIN Tuesday, March 13, 2018 01:45 AM +0530 எதிரி நாடுகளை மட்டுமல்லாது, நட்பு நாடாக இருந்தாலும் அவற்றின் செயல்பாடுகளையும் தங்கள் உளவாளிகள் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் சிறந்த அரசுக்கான இலக்கணம். இதுவே திருக்குறளில் 'வல்லறிதல் வேந்தன் தொழில்' (அனைத்து இடங்களிலும் நடப்பதையும் ஒற்றர்கள் மூலம் அறிந்து கொள்வது அரசனின் வேலை) என்று கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், உளவு விஷயங்களில் ரகசியங்கள் காக்கப்படுவது மிகவும் அவசியம். அது தவறும்போது அரசுக்கு தலைகுனிவையும், பிற நாடுகளுடன் பகைமையையும் ஏற்படுத்தும். ஜெர்மனி பிரதமராக இருந்தவர்களின் தொலைபேசி உரையாடல்களை பல ஆண்டுகளாக அமெரிக்க உளவு அமைப்பு பதிவு செய்து வந்ததை விக்கிலீக்ஸ் சில ஆண்டுகளுக்கு அம்பலப்படுத்தியதும், அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷிய தலையீடு இருந்தது வெளிப்பட்டதும் உளவுத் தகவல்கள் கசிந்ததால் அமெரிக்க அரசுக்கு ஏற்பட்ட நெருடல்களுக்கு சமீபத்திய உதாரணங்கள்.
வல்லரசு நாடுகள் மட்டுமல்லாது வலுவான உளவு அமைப்பைக் கொண்டுள்ள சிறு நாடான இஸ்ரேல் கூட தனது மொஸாத் உளவு அமைப்பைச் சேர்ந்தவர்களை உலகின் மூலை முடுக்கெல்லாம் வைத்துள்ளது. ராணுவ பலத்தை மேம்படுத்துவதுபோல உளவுத் துறையின் பலத்தை மேம்படுத்துவதிலும் அனைத்து நாடுகளும் முனைப்பு காட்டி வருகின்றன. ராணுவ நடவடிக்கைகள் மட்டுமல்லாது, வர்த்தக, பொருளாதார ஒப்பந்தங்கள், வெளியுறவுக் கொள்கைகளை வகுப்பதிலும் ஒவ்வொரு நாட்டிலும் கண்ணுக்குப் புலப்படாத கையாக உளவு அமைப்புகள் செயல்படுகின்றன. இந்த உளவுச் செயல்பாடுகள் ஓர் எல்லையைக் கடக்கும்போது பெரும் பிரச்னைகளுக்கும் வித்திடுகின்றன.
உளவாளிகள் பிரச்னையால் வல்லரசு நாடுகளான பிரிட்டன்- ரஷியா இடையே அண்மைக்காலமாக பதற்றம் அதிகரித்துள்ளது. ரஷியாவைச் சேர்ந்த 'டபுள் ஏஜெண்ட்' (இரு தரப்புக்கும் உளவுபார்க்கும் இரட்டை உளவாளி) செர்ஜி ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் யூலியா ஆகியோர் மீது பிரிட்டனில் நடைபெற்ற ரசாயனத் தாக்குதல், அந்நாடுகளிடையே மோதல் போக்கை ஏற்படுத்தியுள்ளது. 1990-ஆம் ஆண்டுகளில் ரஷிய ராணுவ உளவாளியாக பணியாற்றிக் கொண்டு, அதே நேரத்தில் ரஷிய நாட்டு ரகசியங்களை பிரிட்டனின் 'எம்.ஐ.6' உளவு அமைப்பு அளித்து வந்ததன் மூலம் அந்நாட்டின் இரட்டை உளவாளியாக செயல்பட்டார் செர்ஜி. அவரது இந்த குட்டு வெளிப்பட்ட பிறகு, தேசத் துரோக குற்றச்சாட்டில் ரஷியாவில் பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், உளவாளிகள் விடுவிப்பு ஒப்பந்தத்தின்படி விடுதலையான செர்ஜி, பிரிட்டனில் அடைக்கலமானார்.
அண்மையில் ரஷியாவில் இருந்து செர்ஜியை சந்திக்க வந்த அவரது மகள் யூலியாவும், செர்ஜியும் நரம்புகளைத் தாக்கி செயலிழக்கச் செய்யும் ரசாயனத் தாக்குதலுக்கு உள்ளாகி சுருண்டு விழுந்தனர். பிரிட்டன் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ள அவர்கள் உயிர் பிழைப்பது கடினம் என்றே தெரிகிறது. இதனைச் செய்தவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க பெரிய குழுவை முடுக்கிவிட்டுள்ளது பிரிட்டன். ரஷியாவைத் தவிர வேறு யாரும் இத்தகைய தாக்குதலை நடத்த வாய்ப்பு இல்லை என்பது பிரிட்டனின் கணிப்பு. ரஷிய அதிபர் தேர்தல் சில நாள்களில் (மார்ச் 18) நடைபெறவுள்ள நிலையில், இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளதும், பிரிட்டன் அரசு இந்த விவகாரத்தை தீவிரமாக கருத்தில் கொண்டுள்ளதும் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது.
ஏனெனில், தாக்குதலுக்கு உள்ளான செர்ஜி, ரஷிய அரசின் ரகசியத் தகவல்களை பிரிட்டன் உளவு அமைப்புகளுக்கு முன்பு அளித்து வந்தவர். அவரது மகள் சில நாள்களுக்கு முன்புதான் ரஷியாவில் இருந்து பிரிட்டனுக்கு வந்துள்ளார். அவர் மூலம் ரஷியாவின் சில முக்கிய அரசியல் ரகசியங்கள் கொண்டு வரப்பட்டிருக்கலாம். அவற்றை மறைக்கவே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நரம்புகளைத் தாக்கும் ரசாயனத் தாக்குதல் நடத்துவது, அரசியல்ரீதியாக எதிரியாகக் கருதுபவர்களை நாடு கடந்து சென்று வேட்டையாடுவதில் ரஷியாவுக்கு சாதனை சரித்திரமே உண்டு! ரஷிய மன்னர் 'இவான் தி டெரிபிள்' தொடங்கி, சோவியத் யூனியனில் சர்வாதிகார ஆட்சி நடத்திய ஜோசப் ஸ்டாலினின் என்கேவிடி படையினர் வரை, அரசுக்கு எதிரானவர்கள் என்று கருதப்படுவோரை களையெடுப்பதில் ரஷிய உளவு அமைப்புகள் கைதேர்ந்தவை. இப்போதைய ரஷிய அதிபர் புதினும் அதே அரசியல் பாணியைக் கடைப்பிடிப்பவர்தான். அதிபராவதற்கு முன்பு ரஷிய உளவு அமைப்பான கேஜிபி தலைவர் பொறுப்பு வகித்தவர் புதின் என்பது நினைவிருக்கட்டும்.
செர்ஜி மற்றும் அவரது மகளுக்கு நரம்புகளைத் தாக்கி செயலிழக்கச் செய்யும் கொடூரமான ரசாயனம் கொடுக்கப்பட்டது என்பதை தீவிர ஆய்வுக்குப் பிறகுதான் பிரிட்டன் உறுதி செய்துள்ளது. இதனை சாதாரண நபர்களால் மேற்கொள்ள முடியாது. அதுவும் அவர்களைக் கட்டாயப்படுத்தியோ, ஊசி மூலமாகவோ ரசாயனத்தைச் செலுத்தவில்லை. நிலைகுலைந்து விழுவதற்கு முன்பு அவர்கள் உணவு விடுதியில் சாப்பிட்டுள்ளனர். அங்கு தாக்குதல் நடந்திருக்கலாம். அந்த உணவு விடுதியில் வேறு பலரும் உணவுண்டபோதிலும், இவர்கள் இருவர் மட்டுமே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். எனவே, கைதேர்ந்த சதியாளர்கள்தான் இதனை நிகழ்த்தியதாக பிரிட்டன் சந்தேகிக்கிறது. சம்பவம் நடந்த அன்று செர்ஜி தனது மனைவியின் நினைவிடத்துக்கு மகளுடன் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். அப்போது அவர்கள் பயன்படுத்திய மலர்க்கொத்தின் மூலம் கூட ரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் நிலவுகிறது.
பிரிட்டனில் இதுபோன்று உளவாளிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவது முதல்முறையல்ல. கடந்த 2006-ஆம் ஆண்டு ரஷியாவைச் சேர்ந்த முன்னாள் உளவாளி அலெக்சாண்டர் லிட்வினென்கோ பிரிட்டனில் ரசாயனத் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார்.
இப்போது, தங்கள் நாட்டில் உளவாளி மீது மீண்டும் ரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை பிரிட்டனால் சகித்துக் கொள்ள முடியவில்லை. தங்கள் நாட்டுக்குள் அந்நிய நாடு இப்படி ஒரு தாக்குதல் நடத்தி இருப்பதை பெரும் தலைகுனிவாகவும், சர்வதேச அரங்கில் ஏற்பட்ட அவமானமாகவும் பிரிட்டன் கருதுகிறது. பிரிட்டனின் பதிலடி எந்த வகையில் வெளிப்படும் என்பதை சர்வதேச சமூகம் பதற்றத்துடன் எதிர்நோக்கியுள்ளது.
சதுரங்க விளையாட்டில் ராஜா உள்ளிட்ட 'பெரும் தலை'களைக் காக்க முன்வரிசை சிப்பாய் காய்கள்தான் பலி கொடுக்கப்படும். அதே நகர்வுகள்தான் சர்வதேச அரசியலிலும் பிரதிபலித்து வருகிறது.
 

]]>
http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/mar/13/வல்லறிதல்-வரம்பு-மீறினால்-2879424.html
2879026 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் இளம் வயது திருமண அவலம் பா.ராஜா  DIN Monday, March 12, 2018 04:15 AM +0530 பெண்கள் நாட்டின் கண்கள், வீட்டின் குலவிளக்கு என்றெல்லாம் நாம் போற்றுகிறோம், பாராட்டுகிறோம்; பெண் கல்வி குறித்து பரவலாகப் பேசப்படுகிறது. ஆனால், நடைமுறையில் நிலைமை தலைகீழ். 
இந்தியாவில் திருமண வயதானது சட்டப்படி பெண்களுக்கு 18 வயது என்றும், ஆண்களுக்கு 21 வயது என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் அண்மையில் வெளியாகியுள்ள ஆய்வு முடிவு நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும். 18 வயது முதல் 29 வயது வரையுள்ள பெண்களில் 25 சதவீதத்துக்கும் அதிகமானேர், திருமண வயதை அடைவதற்கு முன்னரே திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்று தேசிய குடும்ப நல வாரியம் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பெண்களில் 18}29 வயது வரம்பில் இருப்போரில் 28 சதவீதத்தினர், 18 வயதை அடைவதற்கு முன்னரே திருமணம் செய்துள்ளனர். ஆண்களைப் பொருத்தவரையில், 21}29 வயது வரம்பில் இருப்போரில் 17 சதவீதத்தினர் 21 வயதை அடைவதற்கு முன்னரே திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
தேசிய குடும்ப நல வாரியம் மேற்கொண்டுள்ள இந்த ஆய்வானது, நாடு முழுவதும் சுமார் 5.78 லட்சம் பெண்களிடம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தகைய இளம் வயதில் திருமணம் கொண்டவர்களில் 10 சதவீதத்தினர் 15 வயதுக்கு முன்னரே தாம்பத்ய உறவை மேற்கொண்டுள்ளனர். அதுபோல, 38% பேர் 18 வயதுக்கு முன்னரே தாம்பத்ய உறவை மேற்கொண்டுள்ளனர். 58% பெண்கள் 20 வயதில் தாம்பத்ய உறவை மேற்கொண்டுள்ளனர் என ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறப் பெண்களுடன் ஒப்பிடுகையில், நகர்ப்புறங்களில் வசிக்கும் பெண்கள் 2 ஆண்டுகளுக்குப் பின்னரே தாம்பத்ய உறவில் ஈடுபட்டுள்ளது தெரியவருகிறது. 
சட்டப்படி திருமண வயதை எட்டுவதற்கு முன்னரே திருமணம் செய்து கொண்டுள்ள பெண்கள் உள்ள மாநிலங்களில் முதலிடம் வகிக்கிறது மேற்கு வங்கம். இதைத் தொடர்ந்து, பிகார், ஜார்க்கண்ட் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள். மேற்கு வங்க மாநிலத்தைப் பொருத்தவரையில், ஐந்தில் 2 பெண்கள் 18 வயதுக்கு முன்னரே திருமணம் செய்து கொள்கின்றனராம். அதாவது, மேற்கு வங்கத்தில் 44% பெண்கள், பிகாரில் 42%, ஜார்க்கண்டில் 39%, ஆந்திரத்தில் 36% பெண்கள் 18 வயதுக்கு முன்னரே திருமணம் செய்து கொண்டுள்ளனர். 
இதில் குறிப்பிடத்தக்க அம்சம், கல்வி கற்போர் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, இளம் வயதில் திருமணம் செய்வது குறைந்து வந்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுபோல, திருமணம் வயதை எட்டுவதற்கு முன்னரே ஆண்களுக்கு ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், பிகார், ஜார்க்கண்ட், குஜராத், அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் திருமணங்கள் நடைபெறுகின்றன என்றும் ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்களைவிட பெண்களே இளம் வயது திருமணங்களால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்பது கண்கூடு. இத்தகைய சூழ்நிலையால், பல பெண் குழந்தைகளுக்கு பள்ளி, கல்லூரிப் பருவ வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதே தெரியாமல் போகிறது. மேலும், போதிய கல்வியறிவும் பெற முடியாத நிலை ஏற்படுகிறது. இளம் வயதுத் திருமணத்தால் குடும்பச் சுழலில் சிக்கித் தவிப்பதிலேயே அவரது வாழ்நாள் வீணாகிறது.
இளம் வயது திருமணம் அல்லது குழந்தைத் திருமணம் என்பது இந்தியாவில் பல நூற்றாண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருவதுதான். உடல்ரீதியாகவும் மனதளவிலும் முதிர்ச்சியடையாத, பக்குவப்படாத நிலையில், பல பெண்கள் மணமாலையைச் சுமந்து வருகின்றனர். இத்தகைய இளம் வயதுத் திருமணங்களுக்கு சமூக பழக்க வழக்கங்கள், பொருளாதார நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
இளம் வயது திருமணங்களால் பெண் இறப்பு விகிதம், சிசு இறப்பு விகிதம் அதிகரிப்பு, பெண்களுக்கு பாலியல் ரீதியிலான தொல்லைகள் அதிகம் ஏற்படுகின்றன என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில் பின்தங்கியோர், குடும்பத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்டவர்கள் இத்தகைய இளம் வயது திருமணங்களை அதிகம் மேற்கொள்கின்றனர். 
குழந்தைப் பேறு பாக்கியம் உறுதி செய்ய, சில சமூகங்களில் உறவுகளுக்குள் சிக்கல் ஏற்படாமல் இருக்க, உறவு விடுபடாமல் இருக்க நெருங்கிய உறவினர்களுக்குள் மணம் முடித்தல் போன்ற காரணங்களால் இளம்வயது திருமணங்களை ஆதரித்து வந்துள்ளனர். மேலும், வறுமை, இளம் வயதில் பெண்களை விலைக்கு விற்பது, வரதட்சிணை, சமூக கலாசாரம் உள்ளிட்டவை இளம் வயது திருமணங்கள் அதிகரிக்கக் காரணங்களாக உள்ளன.
15 முதல் 19 வயது வரையுள்ள ஒரு பெண் குழந்தைப் பேற்றின்போது இறப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அதுபோல, 15 வயதுக்குக்கீழ் கர்ப்பம் தரிக்கும் பெண்களுக்கு பிரசவ காலத்தின்போது இறப்பு விகிதம் அதிகம் இருக்கும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. அதுபோல, 18 வயதுடைய பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளில் 60% குழந்தைகள் இறக்க வாய்ப்புள்ளது. மேலும், இத்தகைய வயதுடைய பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் எடை குறைந்தும், போதிய ஊட்டச் சத்தின்றியும் பிறக்கும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இளவயது திருமண அவலம் உலகின் பல நாடுகளிலும் பரவலாகக் காணப்படுகிறது. ஆப்பிரிக்கா, தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா, மேற்கு ஆசியா, தென் அமெரிக்காவைச் சேர்ந்த நாடுகளில் மரபின் பெயரால் இளம் வயது திருமணங்கள் அதிக அளவில் நடைபெற்றுள்ளன.
இளம்வயது திருமணங்களைத் தடுக்க பல்வேறு நலத் திட்டங்களும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டாலும், அவை குறைந்தபாடில்லை. இந்த வழக்கங்களால் பெண்களுக்கு கல்வி போன்ற உரிமைகள் மறுக்கப்படுவதுடன் வாழ்வுரிமையும் பாதிக்கப்படுகிறது என்று துணிந்து கூறலாம்.
"சாத்திரங்கள் பலபல கற்பராம்... மூடக் கட்டுக்கள் யாவும் தகர்ப்பராம்' என்ற முண்டாசுக் கவி பாரதி கண்ட புதுமைப் பெண்ணைக் காணும் நாள் எந் நாளோ?

]]>
http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/mar/12/இளம்-வயது-திருமண-அவலம்-2879026.html
2879023 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் தென்னாசிய நாடுகளில் இந்தியாவின் செல்வாக்கு சரிவு ஏன்? பழ. நெடுமாறன் DIN Monday, March 12, 2018 04:15 AM +0530 இந்தியாவை கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் அண்டை நாடுகளான பர்மா, இலங்கை, மாலத்தீவுகள் போன்றவற்றையும் தங்கள் பேரரசின் கீழ் கொண்டு வந்தார்கள். மற்றும் நேபாளம், பூடான், சிக்கிம் போன்ற மன்னராட்சி நாடுகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். இந்துமாக்கடல் ஆங்கிலேயரின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்தியாவில் நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தின் விளைவாக மேற்கண்ட நாடுகளும் விடுதலை பெற்றன. எனவே, அந்நாடுகள் இந்தியாவை சார்ந்தே இயங்கின. உலக அரங்கில் இந்தியாவின் தலைமையையேற்றுப் பின்பற்றின. ஆனால், இதெல்லாம் பகற் கனவாக, பழங்கதையாக மறைந்துவிட்டன.
இந்தியாவிலிருந்து பிரிந்த பாகிஸ்தான், அதிலிருந்து இந்தியாவின் உதவியுடன் பிரிந்து உருவான வங்கதேசம், நேபாளம், மியான்மர், இலங்கை, மாலத்தீவு போன்ற எந்த அண்டை நாடும் இந்தியாவுடன் நட்புறவாக இல்லை என்பதோடு அவை சீனாவுடன் மிக நெருக்கமான நட்புறவு கொண்ட நாடுகளாக மாறிவிட்டன என்பது மறைக்க முடியாத அப்பட்டமான உண்மையாகும். 
ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் பல நாடுகளைக் கொண்ட நடுநிலை நாடுகள் அமைப்பின் உருவாக்கத்திற்கு இந்தியாவின் முதலாவது தலைமையமைச்சர் நேரு பெரும் காரணமாவார். அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகிய இரு வல்லரசுகளின் தலைமையில் இரு பெரும் முகாம்கள் உலகில் இயங்கிவந்தன. ஆனால், இவ்விரு முகாம்களுக்கு மாற்றாக மூன்றாவது முகாமாக நடுநிலை நாடுகள் அமைப்பு விளங்கியது. மூன்றாவது உலகப் போர் மூளவிருந்ததை இந்த அமைப்பு தவிர்த்தது. இந்த முகாமின் உருவாக்கத்தில் நேருவின் தலைமையையேற்று தென்னாசிய நாடுகள் அவருக்குத் துணை நின்றன. ஆனால், இப்போது அதே நாடுகள் இந்தியாவிடமிருந்து விலகி வெகுதூரம் சென்றுவிட்டன. இந்துமாக்கடலும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இல்லை.
தனது பாட்டனார் நேரு, தாயார் இந்திரா காந்தி ஆகியோரால் உருவாக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட நடுநிலை நாடுகள் அமைப்பைப் போன்று ஓர் அமைப்பை உருவாக்கி தானும் வரலாற்றில் இடம்பெற வேண்டுமென நினைத்து பிரதமர் இராஜீவ் காந்தி உருவாக்கிய தென்னாசிய அமைப்பு முற்றிலுமாக செயலற்றுவிட்டது. மூத்த அண்ணனின் போக்கில் இந்தியா நடந்துகொண்டதே இதற்குக் காரணமாகும். 
சின்னஞ்சிறிய நாடான மாலத்தீவு தனது உள்நாட்டுப் பிரச்னையில் இந்தியா தலையிடுவதை விரும்பவில்லை. தனது அரசியல் எதிரிகளை ஒடுக்குவதற்காக மாலத்தீவின் அதிபர் யமீன் அவசரநிலையை அறிவித்தார். அதை நீட்டிக்க வேண்டாம் என இந்திய வெளியுறவுத் துறை வற்புறுத்தியது. "ஒட்டக்கூத்தன் பாட்டிற்கு இரட்டைத் தாழ்ப்பாள்' என்ற பழமொழிக்கேற்ப அவசரநிலையை உடனடியாக மேலும் நீட்டித்ததோடு, தன்னுடைய நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி நிற்குமாறு இந்தியாவுக்கு எச்சரிக்கையும் விடுத்தது.
அந்தமான் தீவுக்கருகே இந்தியக் கடற்படை சார்பில் 16 நாடுகளின் கடற்படை ஒத்திகையில் கலந்துகொள்ள வேண்டும் என மாலத்தீவுக்கு இந்தியா அழைப்பு விடுத்தது. ஆனால் அந்த அழைப்பையும் ஏற்க மறுத்துவிட்டது மாலத்தீவு. அதே வேளையில் சீனாவுடன் அதனுடைய நட்புறவு நாளுக்குநாள் பெருகிக் கொண்டே இருக்கிறது. சீனாவின் கடற்படைக் கப்பல்கள் தனது துறைமுகங்களுக்கு வந்து செல்ல மாலத்தீவு அனுமதித்துள்ளது. மாலத்தீவில் விமான நிலையம் ஒன்றை அமைப்பதற்காக இந்திய நிறுவனம் ஒன்றிற்கு அளித்த அனுமதியை மாலத்தீவு அதிபர் அப்துல்லா யமீன் ரத்து செய்ததோடு மட்டுமல்லாமல், அந்த அனுமதியை சீனாவுக்கு வழங்கியுள்ளார்.
சீனா திட்டமிட்டுள்ள கடல் பட்டுப்பாதைத் திட்டத்தில் மாலத்தீவும் இணைந்துள்ளது. இதன்மூலம் சீன போர்க் கப்பல்களும், நீர்மூழ்கிக் கப்பல்களும் மாலத்தீவுக்கு வந்து போகும் உரிமையைப் பெற்றிருக்கின்றன. சீனாவுடன் சுதந்திர வணிக உடன்பாட்டினையும் மாலத்தீவு செய்துள்ளது. இதன் மூலம் மாலத்தீவின் சந்தை சீனப் பொருட்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது. மாலத்தீவுக் கூட்டத்தில் 20 தீவுகள் வரை சீனாவுக்குக் குத்தகைக்குக் கொடுக்கப்பட்டுள்ளன.
அண்டை நாடான நேபாளத்தில் புதிதாகப் பதவியேற்றுள்ள இடதுசாரி அரசின் தலைமையமைச்சர் சர்மா ஒலி சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் நெருக்கமான நட்புறவுக் கொண்டிருக்கிறார். சீனாவும், நேபாளமும் அண்மையில் 10 உடன்பாடுகளை செய்துகொண்டுள்ளன. பொருளாதார ரீதி மட்டுமல்ல, அரசியல் ரீதியாகவும் இந்த உடன்பாடுகள் சீனா } நேபாள நட்புறவை மேலும் நெருக்கமாக்கி உள்ளன. நேபாளத்தில் மன்னராட்சி நிலவியபோது அங்கு நடைபெற்ற மக்களாட்சி முறைப் போராட்டத்திற்கு இந்தியா ஆதரவு அளித்தது. ஆனால், பிற்காலத்தில் இந்தியாவின் அணுகுமுறையைத் தன் மூப்புப் போக்காக நேபாள அரசியல்வாதிகள் கருதினார்கள். இப்போது நேபாளத்தில் இடதுசாரிகள் அரசும், இந்தியாவில் இந்துத்துவா அரசும் இருப்பது என்பது இரு நாடுகளுக்கிடையேயுள்ள உறவு மேலும் சீர்கேடு அடைவதற்கும், அதை சீனா முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதற்கும் உதவும் என்பதில் ஐயமில்லை. 
வங்கதேச விடுதலைப் போருக்கு இந்தியா செய்த உதவியினால் உருவான நெருங்கிய நட்புறவு இப்போது குறைந்துவிட்டது.
அண்மையில் வங்க அமைச்சரான அசாநுல் ஹக் இனு பேசும்போது, "மதச் சார்பற்ற ஜனநாயகக் கொள்கையில் நாங்கள் நம்பிக்கைக் கொண்டிருக்கிறோம். இந்தியாவும் அதையே ஏற்றுக்கொண்டிருந்தது. வங்காளத்தில் பெரும்பான்மையாக இருக்கக் கூடிய சமூகம் இந்தியாவில் சிறுபான்மையாக இருக்கிறது. அந்தச் சமூகம் மீது ஏவப்படுகிற வன்முறை வங்கத்தில் வேண்டாத ஒரு விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. மத அடிப்படை அரசியலில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. மத வேறுபாடுகளுக்கப்பால் மொழி அடைப்படையில் அடையாளம் காண்பதில் நாங்கள் நம்பிக்கைக் கொண்டுள்ளோம்' என்று கூறியுள்ளார்.
இரு நாடுகளுக்கிடையேயுள்ள தீஸ்தா நதிநீர் பிரச்னை மற்றும் வணிகப் பிரச்னைகள் உள்ளன. நீண்ட காலமாக இவை தீர்க்கப்படவில்லை. மாறாக, சீனாவுடனான வங்கதேச நட்புறவு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. வங்கதேசத்தில் சிட்டகாங் ஆழ்கடல் துறைமுக வளர்ச்சித் திட்டம் சீனாவின் உதவியுடன் நிறைவேற்றப்பட்டுவிட்டது.
"இலங்கையில் நடைபெறுவது ஈழத் தமிழர்களுக்கெதிரான இன அழிப்பேயாகும்' என இந்திய முன்னாள் தலைமையமைச்சர் இந்திரா காந்தி 1983}ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம் தேதி டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி வைத்துப் பேசுகையில் குறிப்பிட்டு இலங்கை அரசை எச்சரித்தார். அதைத் தொடர்ந்து மூத்த இராசதந்திரியான ஜி. பார்த்தசாரதியை இலங்கைக்கு அனுப்பி இலங்கை அரசுடன் பேச வைத்தார். இதன் விளைவாக ஈழத் தமிழர் தலைவர்களுக்கும், சிங்கள அரசுக்குமிடையே உடன்பாடு கையெழுத்திடப்பட்டது. அந்த உடன்பாட்டிலிருந்து இலங்கை அரசு பின்வாங்கத் தொடங்கியவுடன் போராளிக் குழுக்களை இந்தியாவுக்கு அழைத்து இராணுவப் பயிற்சிக் கொடுக்கச் செய்தார். அதற்கடுத்த கட்ட நடவடிக்கைக்குச் செல்வதற்கு முன் படுகொலை செய்யப்பட்டார்.
ஆனால் அவருக்குப் பின் தலைமையமைச்சரான இராஜீவ் காந்தி அதற்கு நேர் மாறான பாதையில் பின்பற்றி ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கி, இந்தியப் படையை இலங்கைக்கு அனுப்பி இலங்கை அரசை திருப்தி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். மன்மோகன் சிங் ஆட்சியிலும் அதுவே தொடர்ந்தது. இதன் விளைவாக இலங்கையின் அதிபராக இராஜபக்சே இருந்தபோது சீனாவுடன் நெருக்கமான நட்புறவு கொண்டார்.
"ஈழத் தமிழர்களுக்கு இந்தியா உதவாமல் இருக்க வேண்டுமானால் சீனாவுடன் நெருக்கமான நட்புறவு கொள்ளவேண்டும். அப்போதுதான் இந்தியா தன்னுடைய வழிக்குவரும்' என்ற இராஜபக்சேயின் திட்டம் இனிதே நிறைவேறியது. அதன் விளைவாக இலங்கையின் ஹம்பன்தொட்டாவில் கடற்படைத் தளம் ஒன்றினை சீனா அமைத்துள்ளது. சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் கொழும்பில் நிற்கின்றன. இலங்கையில் சீனா ஆழமாகக் காலூன்றிவிட்டது.
மேற்கு நாடுகளுக்கும், கிழக்கு நாடுகளுக்கும் இடையே நடைபெறும் கப்பல் போக்குவரத்து இந்துமாக்கடல் வழியேதான் நடைபெறுகிறது. எனவே, இந்துமாக்கடலின் ஆதிக்கம் தன்வசம் இருக்கவேண்டும் என்னும் இந்தியாவின் திட்டத்தை இலங்கையும், மாலத்தீவும், மியான்மரும், வங்கதேசமும், பாகிஸ்தானும் செயலற்றதாக்கிவிட்டன. இந்நாடுகள் அனைத்திலும் சீனாவின் கடற்படைத் தளங்கள் அமைக்கப்பட்டுவிட்டன. இந்தியாவைச் சுற்றி இந்நாடுகளின் வழியாக சீனாவின் முற்றுகை வளையம் இறுகி வருகிறது. இதைக்கண்டு இந்திய அரசு பதற்றம் அடைந்துள்ளது. 
பல்வேறு மதங்கள், பல மொழி பேசும் மக்கள், பல்வேறு பண்பாடுகள் ஆகியவற்றைக் கொண்ட தென்னாசிய நாடுகளுடன் இந்தியாவின் நட்புறவு நீடித்தால்தான் உலக அரங்கில் இந்தியா மதிக்கப்படும். இந்த உண்மையை இந்தியா உணரவேண்டும். இந்தியாவிலேயே பல்வேறு மொழி பேசும் மக்களும், பல்வேறு மதங்களைப் பின்பற்றுபவர்களும், பல்வேறு பண்பாடுகளும் நிலவுவதை மதிக்காமல் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு என்பதை நிலைநிறுத்த நடைபெறும் முயற்சி உள்நாட்டில் எதிர்விளைவுகளை ஏற்படுத்துவதோடு அண்டை நாடுகள் அனைத்தையும் மேலும் மேலும் அந்நியப்படுத்திவிடும். 
பல்வேறு மொழிகளையும், அவற்றின் அடிப்படையில் அமைந்த பண்பாடுகளையும் கொண்ட ஐரோப்பிய நாடுகளின் ஒன்றியம் அரசியல், சமுதாயம், பொருளாதாரம் ஆகியவற்றில் மேலும் மேலும் நெருக்கமான வலுவான உறவு கொண்டு தங்களின் தனித்தன்மையை இழக்காமல் ஒன்றிணைந்து வெற்றி பெற்றுள்ளது. ஆனால், தென்னாசிய நாடுகளில் அந்த முயற்சி தோல்வியடைந்திருப்பதற்கு என்ன காரணம்? யார் பொறுப்பு? 
அண்டை நாடுகளில் சீனாவை காலூன்ற வைத்ததில் காங்கிரசுக் கட்சிக்கு எவ்வளவு பங்குண்டோ, அதற்குக் கொஞ்சமும் குறையாத பங்கு பா.ஜ.க. ஆட்சிக்கும் உண்டு.

]]>
http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/mar/12/தென்னாசிய-நாடுகளில்-இந்தியாவின்-செல்வாக்கு-சரிவு-ஏன்-2879023.html
2879024 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் தென்னாசிய நாடுகளில் இந்தியாவின் செல்வாக்கு சரிவு ஏன்? பழ. நெடுமாறன் DIN Monday, March 12, 2018 04:15 AM +0530 இந்தியாவை கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் அண்டை நாடுகளான பர்மா, இலங்கை, மாலத்தீவுகள் போன்றவற்றையும் தங்கள் பேரரசின் கீழ் கொண்டு வந்தார்கள். மற்றும் நேபாளம், பூடான், சிக்கிம் போன்ற மன்னராட்சி நாடுகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். இந்துமாக்கடல் ஆங்கிலேயரின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்தியாவில் நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தின் விளைவாக மேற்கண்ட நாடுகளும் விடுதலை பெற்றன. எனவே, அந்நாடுகள் இந்தியாவை சார்ந்தே இயங்கின. உலக அரங்கில் இந்தியாவின் தலைமையையேற்றுப் பின்பற்றின. ஆனால், இதெல்லாம் பகற் கனவாக, பழங்கதையாக மறைந்துவிட்டன.
இந்தியாவிலிருந்து பிரிந்த பாகிஸ்தான், அதிலிருந்து இந்தியாவின் உதவியுடன் பிரிந்து உருவான வங்கதேசம், நேபாளம், மியான்மர், இலங்கை, மாலத்தீவு போன்ற எந்த அண்டை நாடும் இந்தியாவுடன் நட்புறவாக இல்லை என்பதோடு அவை சீனாவுடன் மிக நெருக்கமான நட்புறவு கொண்ட நாடுகளாக மாறிவிட்டன என்பது மறைக்க முடியாத அப்பட்டமான உண்மையாகும். 
ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் பல நாடுகளைக் கொண்ட நடுநிலை நாடுகள் அமைப்பின் உருவாக்கத்திற்கு இந்தியாவின் முதலாவது தலைமையமைச்சர் நேரு பெரும் காரணமாவார். அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகிய இரு வல்லரசுகளின் தலைமையில் இரு பெரும் முகாம்கள் உலகில் இயங்கிவந்தன. ஆனால், இவ்விரு முகாம்களுக்கு மாற்றாக மூன்றாவது முகாமாக நடுநிலை நாடுகள் அமைப்பு விளங்கியது. மூன்றாவது உலகப் போர் மூளவிருந்ததை இந்த அமைப்பு தவிர்த்தது. இந்த முகாமின் உருவாக்கத்தில் நேருவின் தலைமையையேற்று தென்னாசிய நாடுகள் அவருக்குத் துணை நின்றன. ஆனால், இப்போது அதே நாடுகள் இந்தியாவிடமிருந்து விலகி வெகுதூரம் சென்றுவிட்டன. இந்துமாக்கடலும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இல்லை.
தனது பாட்டனார் நேரு, தாயார் இந்திரா காந்தி ஆகியோரால் உருவாக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட நடுநிலை நாடுகள் அமைப்பைப் போன்று ஓர் அமைப்பை உருவாக்கி தானும் வரலாற்றில் இடம்பெற வேண்டுமென நினைத்து பிரதமர் இராஜீவ் காந்தி உருவாக்கிய தென்னாசிய அமைப்பு முற்றிலுமாக செயலற்றுவிட்டது. மூத்த அண்ணனின் போக்கில் இந்தியா நடந்துகொண்டதே இதற்குக் காரணமாகும். 
சின்னஞ்சிறிய நாடான மாலத்தீவு தனது உள்நாட்டுப் பிரச்னையில் இந்தியா தலையிடுவதை விரும்பவில்லை. தனது அரசியல் எதிரிகளை ஒடுக்குவதற்காக மாலத்தீவின் அதிபர் யமீன் அவசரநிலையை அறிவித்தார். அதை நீட்டிக்க வேண்டாம் என இந்திய வெளியுறவுத் துறை வற்புறுத்தியது. "ஒட்டக்கூத்தன் பாட்டிற்கு இரட்டைத் தாழ்ப்பாள்' என்ற பழமொழிக்கேற்ப அவசரநிலையை உடனடியாக மேலும் நீட்டித்ததோடு, தன்னுடைய நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி நிற்குமாறு இந்தியாவுக்கு எச்சரிக்கையும் விடுத்தது.
அந்தமான் தீவுக்கருகே இந்தியக் கடற்படை சார்பில் 16 நாடுகளின் கடற்படை ஒத்திகையில் கலந்துகொள்ள வேண்டும் என மாலத்தீவுக்கு இந்தியா அழைப்பு விடுத்தது. ஆனால் அந்த அழைப்பையும் ஏற்க மறுத்துவிட்டது மாலத்தீவு. அதே வேளையில் சீனாவுடன் அதனுடைய நட்புறவு நாளுக்குநாள் பெருகிக் கொண்டே இருக்கிறது. சீனாவின் கடற்படைக் கப்பல்கள் தனது துறைமுகங்களுக்கு வந்து செல்ல மாலத்தீவு அனுமதித்துள்ளது. மாலத்தீவில் விமான நிலையம் ஒன்றை அமைப்பதற்காக இந்திய நிறுவனம் ஒன்றிற்கு அளித்த அனுமதியை மாலத்தீவு அதிபர் அப்துல்லா யமீன் ரத்து செய்ததோடு மட்டுமல்லாமல், அந்த அனுமதியை சீனாவுக்கு வழங்கியுள்ளார்.
சீனா திட்டமிட்டுள்ள கடல் பட்டுப்பாதைத் திட்டத்தில் மாலத்தீவும் இணைந்துள்ளது. இதன்மூலம் சீன போர்க் கப்பல்களும், நீர்மூழ்கிக் கப்பல்களும் மாலத்தீவுக்கு வந்து போகும் உரிமையைப் பெற்றிருக்கின்றன. சீனாவுடன் சுதந்திர வணிக உடன்பாட்டினையும் மாலத்தீவு செய்துள்ளது. இதன் மூலம் மாலத்தீவின் சந்தை சீனப் பொருட்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது. மாலத்தீவுக் கூட்டத்தில் 20 தீவுகள் வரை சீனாவுக்குக் குத்தகைக்குக் கொடுக்கப்பட்டுள்ளன.
அண்டை நாடான நேபாளத்தில் புதிதாகப் பதவியேற்றுள்ள இடதுசாரி அரசின் தலைமையமைச்சர் சர்மா ஒலி சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் நெருக்கமான நட்புறவுக் கொண்டிருக்கிறார். சீனாவும், நேபாளமும் அண்மையில் 10 உடன்பாடுகளை செய்துகொண்டுள்ளன. பொருளாதார ரீதி மட்டுமல்ல, அரசியல் ரீதியாகவும் இந்த உடன்பாடுகள் சீனா } நேபாள நட்புறவை மேலும் நெருக்கமாக்கி உள்ளன. நேபாளத்தில் மன்னராட்சி நிலவியபோது அங்கு நடைபெற்ற மக்களாட்சி முறைப் போராட்டத்திற்கு இந்தியா ஆதரவு அளித்தது. ஆனால், பிற்காலத்தில் இந்தியாவின் அணுகுமுறையைத் தன் மூப்புப் போக்காக நேபாள அரசியல்வாதிகள் கருதினார்கள். இப்போது நேபாளத்தில் இடதுசாரிகள் அரசும், இந்தியாவில் இந்துத்துவா அரசும் இருப்பது என்பது இரு நாடுகளுக்கிடையேயுள்ள உறவு மேலும் சீர்கேடு அடைவதற்கும், அதை சீனா முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதற்கும் உதவும் என்பதில் ஐயமில்லை. 
வங்கதேச விடுதலைப் போருக்கு இந்தியா செய்த உதவியினால் உருவான நெருங்கிய நட்புறவு இப்போது குறைந்துவிட்டது.
அண்மையில் வங்க அமைச்சரான அசாநுல் ஹக் இனு பேசும்போது, "மதச் சார்பற்ற ஜனநாயகக் கொள்கையில் நாங்கள் நம்பிக்கைக் கொண்டிருக்கிறோம். இந்தியாவும் அதையே ஏற்றுக்கொண்டிருந்தது. வங்காளத்தில் பெரும்பான்மையாக இருக்கக் கூடிய சமூகம் இந்தியாவில் சிறுபான்மையாக இருக்கிறது. அந்தச் சமூகம் மீது ஏவப்படுகிற வன்முறை வங்கத்தில் வேண்டாத ஒரு விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. மத அடிப்படை அரசியலில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. மத வேறுபாடுகளுக்கப்பால் மொழி அடைப்படையில் அடையாளம் காண்பதில் நாங்கள் நம்பிக்கைக் கொண்டுள்ளோம்' என்று கூறியுள்ளார்.
இரு நாடுகளுக்கிடையேயுள்ள தீஸ்தா நதிநீர் பிரச்னை மற்றும் வணிகப் பிரச்னைகள் உள்ளன. நீண்ட காலமாக இவை தீர்க்கப்படவில்லை. மாறாக, சீனாவுடனான வங்கதேச நட்புறவு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. வங்கதேசத்தில் சிட்டகாங் ஆழ்கடல் துறைமுக வளர்ச்சித் திட்டம் சீனாவின் உதவியுடன் நிறைவேற்றப்பட்டுவிட்டது.
"இலங்கையில் நடைபெறுவது ஈழத் தமிழர்களுக்கெதிரான இன அழிப்பேயாகும்' என இந்திய முன்னாள் தலைமையமைச்சர் இந்திரா காந்தி 1983}ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம் தேதி டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி வைத்துப் பேசுகையில் குறிப்பிட்டு இலங்கை அரசை எச்சரித்தார். அதைத் தொடர்ந்து மூத்த இராசதந்திரியான ஜி. பார்த்தசாரதியை இலங்கைக்கு அனுப்பி இலங்கை அரசுடன் பேச வைத்தார். இதன் விளைவாக ஈழத் தமிழர் தலைவர்களுக்கும், சிங்கள அரசுக்குமிடையே உடன்பாடு கையெழுத்திடப்பட்டது. அந்த உடன்பாட்டிலிருந்து இலங்கை அரசு பின்வாங்கத் தொடங்கியவுடன் போராளிக் குழுக்களை இந்தியாவுக்கு அழைத்து இராணுவப் பயிற்சிக் கொடுக்கச் செய்தார். அதற்கடுத்த கட்ட நடவடிக்கைக்குச் செல்வதற்கு முன் படுகொலை செய்யப்பட்டார்.
ஆனால் அவருக்குப் பின் தலைமையமைச்சரான இராஜீவ் காந்தி அதற்கு நேர் மாறான பாதையில் பின்பற்றி ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கி, இந்தியப் படையை இலங்கைக்கு அனுப்பி இலங்கை அரசை திருப்தி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். மன்மோகன் சிங் ஆட்சியிலும் அதுவே தொடர்ந்தது. இதன் விளைவாக இலங்கையின் அதிபராக இராஜபக்சே இருந்தபோது சீனாவுடன் நெருக்கமான நட்புறவு கொண்டார்.
"ஈழத் தமிழர்களுக்கு இந்தியா உதவாமல் இருக்க வேண்டுமானால் சீனாவுடன் நெருக்கமான நட்புறவு கொள்ளவேண்டும். அப்போதுதான் இந்தியா தன்னுடைய வழிக்குவரும்' என்ற இராஜபக்சேயின் திட்டம் இனிதே நிறைவேறியது. அதன் விளைவாக இலங்கையின் ஹம்பன்தொட்டாவில் கடற்படைத் தளம் ஒன்றினை சீனா அமைத்துள்ளது. சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் கொழும்பில் நிற்கின்றன. இலங்கையில் சீனா ஆழமாகக் காலூன்றிவிட்டது.
மேற்கு நாடுகளுக்கும், கிழக்கு நாடுகளுக்கும் இடையே நடைபெறும் கப்பல் போக்குவரத்து இந்துமாக்கடல் வழியேதான் நடைபெறுகிறது. எனவே, இந்துமாக்கடலின் ஆதிக்கம் தன்வசம் இருக்கவேண்டும் என்னும் இந்தியாவின் திட்டத்தை இலங்கையும், மாலத்தீவும், மியான்மரும், வங்கதேசமும், பாகிஸ்தானும் செயலற்றதாக்கிவிட்டன. இந்நாடுகள் அனைத்திலும் சீனாவின் கடற்படைத் தளங்கள் அமைக்கப்பட்டுவிட்டன. இந்தியாவைச் சுற்றி இந்நாடுகளின் வழியாக சீனாவின் முற்றுகை வளையம் இறுகி வருகிறது. இதைக்கண்டு இந்திய அரசு பதற்றம் அடைந்துள்ளது. 
பல்வேறு மதங்கள், பல மொழி பேசும் மக்கள், பல்வேறு பண்பாடுகள் ஆகியவற்றைக் கொண்ட தென்னாசிய நாடுகளுடன் இந்தியாவின் நட்புறவு நீடித்தால்தான் உலக அரங்கில் இந்தியா மதிக்கப்படும். இந்த உண்மையை இந்தியா உணரவேண்டும். இந்தியாவிலேயே பல்வேறு மொழி பேசும் மக்களும், பல்வேறு மதங்களைப் பின்பற்றுபவர்களும், பல்வேறு பண்பாடுகளும் நிலவுவதை மதிக்காமல் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு என்பதை நிலைநிறுத்த நடைபெறும் முயற்சி உள்நாட்டில் எதிர்விளைவுகளை ஏற்படுத்துவதோடு அண்டை நாடுகள் அனைத்தையும் மேலும் மேலும் அந்நியப்படுத்திவிடும். 
பல்வேறு மொழிகளையும், அவற்றின் அடிப்படையில் அமைந்த பண்பாடுகளையும் கொண்ட ஐரோப்பிய நாடுகளின் ஒன்றியம் அரசியல், சமுதாயம், பொருளாதாரம் ஆகியவற்றில் மேலும் மேலும் நெருக்கமான வலுவான உறவு கொண்டு தங்களின் தனித்தன்மையை இழக்காமல் ஒன்றிணைந்து வெற்றி பெற்றுள்ளது. ஆனால், தென்னாசிய நாடுகளில் அந்த முயற்சி தோல்வியடைந்திருப்பதற்கு என்ன காரணம்? யார் பொறுப்பு? 
அண்டை நாடுகளில் சீனாவை காலூன்ற வைத்ததில் காங்கிரசுக் கட்சிக்கு எவ்வளவு பங்குண்டோ, அதற்குக் கொஞ்சமும் குறையாத பங்கு பா.ஜ.க. ஆட்சிக்கும் உண்டு.

]]>
http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/mar/12/தென்னாசிய-நாடுகளில்-இந்தியாவின்-செல்வாக்கு-சரிவு-ஏன்-2879024.html
2877812 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் வள்ளுவர் காட்டுவது அறமா, மதமா? நெல்லை சு. முத்து DIN Saturday, March 10, 2018 02:18 AM +0530 'பகவன் என்ற பிராமணனுக்கும் ஆதி என்ற பறைச்சிக்கும் ஒளவை, திருவள்ளுவர், கபிலர், பரணர், உப்பை, உறுவை, வள்ளி என்ற குழந்தைகள் பிறந்து உபய குலத்துக்கும் நீங்காத கீர்த்தி ஏற்படுத்தியதை இக்காலத்திலும் பறையர் மறந்து போகவில்லை' - என்று மகாகவி பாரதி 'பஞ்சமர்' என்ற கட்டுரையில் தெரிவிக்கிறார்.
ஆதி பகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான், இருள்சேர் இருவினையும் சேரா இறைவன், பொறிவாயில் ஐந்தவித்தான், தனக்கு உவமை இல்லாதான், அற ஆழி அந்தணன் ஆகிய எட்டு பண்புகளையே எண்குணத்தான் என்கிற ஒன்பதாம் குறட்பாவினில் குறிப்பிடுவதாகவும் கருதுவர்.
இத்தகைய சொல்லாட்சிகள் 'வள்ளுவப் பெருமான் சமண சமயத்தினர் என்று கொள்வதற்கு வலிமையான சான்றுகள்' (திருவள்ளுவர் திருமேனி தாங்கிய தங்கக் காசு, Iravati , பக்கம் 498) என்று உரைக்கிறார் அறிஞர் ஐராவதம் மகாதேவன்.
இந்த எட்டுப் பண்புகளையும் சட்டை முனிவாத காவியம் (பாடல் 13) புருவ மத்தியாகிய ஆக்ஞேயம் அல்லது வெளிப்பாழ், ஒளியின் பாழ், வெளி ஒளிப்பாழ், நிர்க்குணத்தின் பாழ், அனமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞான மயம் என்று எடுத்துக் கூறுகிறது.
'பகவன்' என்ற சொல்லுக்கு 'பகவு+அன்', அதாவது பகுத்தறிவு மிக்கவன் என்றும், வேறு சிலர் 'பகலன்' என்ற சொல்லாட்சி ஓலைச்சுவடியில் எழுத்தாணி இயல்பால் திரிந்து வழங்கிற்று என்றும் எல்லாம் கருதுகின்றனர்.
'ஞாயிறு போற்றுதும்' என வணங்கப்படும் ஆதவனே ஆதி பகவன். இது தமிழர் மரபு. வேளாண் மக்களுக்கு அறுவடைத் திருநாள் பொங்கல் விழா - சூரிய வழிபாட்டுத் தினம் - எல்லாம் சூரிய பகவானைப் போற்றும் மங்கல வழக்காகும்.
இவ்வுலக இயக்கத்திற்கு வேண்டிய ஆற்றலை வரையறாது வாரி வழங்குகிற அமுத சுரபி சூரியன். விலங்குகள், தாவரங்கள், உயிரினங்கள் போன்ற அனைத்து ஜீவராசிகளுக்கும் சூரிய வெளிச்சம் இயற்கையானதோர் வரப்பிரசாதம். ஏனெனில் சூரிய ஒளி மட்டும்தான் பூமிக்கு அப்பால் வெளியிலிருந்து நமக்கு வந்து சேரும் ஆற்றல் மூலம். ஏனைய கருவறைகள் பூமிக்குள் அல்லது புவி சார்ந்த வளிமண்டலத்தில் அடங்கி இருப்பனவே... நம் முழு முதற்கடவுள் ஞாயிறு. இவனே ஆதிபகவன். ஆதித்த பகவன்' என்று நான் 'வள்ளுவர் கண்ட அறிவியல்' என்ற நூலில் நிறுவியுள்ளேன்.
சூரிய தேவன் கோலோச்சாத இதிகாசங்கள், புராண காவியங்கள் எம்மொழியிலும் எம்மதத்திலும் இல்லை. வடமொழி வேதத்தில் அருணம் என்பது ஞாயிறு- வழிபாட்டுக்குரியது. இராமபிரானுக்கு அகத்தியர் உபதேசித்தது 'ஆதித்ய ஹிருதயம்' அல்லவா?
கிறித்தவ விவிலியமும் 'கடவுள் ஒளி உண்டாவதாக' என்றபடி பகலவனை சிருஷ்டித்த விதத்தினை ஓதுகின்றது.
கிரேக்கத்தில் சூரியக் கடவுளை 'ஹீலியோஸ்' என்கிறார்கள். 'úஸால்' என்று அழைக்கப்பட்ட ரோமானிய சூரியனும் பண்டைய யவனர் தம் முதல் தெய்வம்தானே!
தமது 90-ஆம் வயதில் திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்திற்கு வருகை தந்த முத்தமிழ்க் காவலர் டாக்டர் கி.ஆ.பெ. விசுவநாதம் திருக்குறளைப் பற்றிப் பேசும்பொழுது, 'கடவுள் வாழ்த்து என்ற முதல் அதிகாரத்தில் பத்துக் குறள்களில் ஏழிலும் இறைவனது திருவடித் தாளினையே வள்ளுவர் வாழ்த்துகின்றார். ஏனெனில் இறைவனது வேறெந்த உறுப்பினை எடுத்துக் கூறினாலும் அது கடவுளை உருவம் காட்டிவிடும்! உடலுறுப்புகளில் பாதம் மட்டுமே ஆண், பெண் என்று இனங்காட்ட இயலாத அங்கமாகும். அதனாலேயே இன்ன தெய்வம் என்றில்லாமல், எல்லா மதங்களுக்கும் ஏற்புடைய கடவுளை வாழ்த்தும் உலகப் பொதுமறையாகத் திருக்குறள் திகழ்கிறது' என்று கூறினார்.
மிக அண்மையில் 2017 டிசம்பரில் 'திருக்குறள் - சாஸ்திரங்களின் சுருக்கக் கோவை' (Thirukkural - An Abridgement of Sasthras) எனும் ஆங்கில நூலில் ஆய்வறிஞரும் சம்ஸ்கிருத நிபுணரும் ஆன டாக்டர் இரா. நாகசாமி முப்பாலின் சில பகுதிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உள்ளார். சம்ஸ்கிருதம் இடையிட்ட ஆங்கில உரைநூல். தர்மசாஸ்திர(ம்), அர்த்த சாஸ்திர(ம்) காம சாஸ்திர(ம்) மற்றும் நாட்டிய சாஸ்திர(ம்) ஆகிய இந்து வேத மரபிலான சாஸ்திரங்களின் மேற்கோள்களுடன் ஒரு புதிய பார்வையில் திருக்குறள் ஆராயப்பட்டு இருக்கிறது.
இந்துச் சிந்தனைகளின்படி தர்ம, அர்த்த, காம, மோட்ச நிலை ஆகிய புருஷார்த்தங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட நூல் என்று டாக்டர் நாகசாமி வள்ளுவரை மத வரையறைக்குள் குறுக்குவது மட்டும் ஏனோ தெரியவில்லை.
திருக்குறளின் உரையாசிரியரான பரிமேலழகரை காஞ்சி விஷ்ணு கோயில் பூசாரி என்றும் குறிக்கின்றார் (பக். 22). 'சில கிறித்தவ மிஷனரிகள் இந்தியாவை ஆண்ட ஐரோப்பியர்களின் துணையோடு இங்கே ஜனங்களை மதம் மாற்றுவதற்காகவே ஊதியம் பெற்று வந்தனர். 'இந்தப் பெரும்பணியில் உள்ளூர் மக்களின் மொழியே உன்னதம் என்றும், புகழ் மிக்கது என்றும் பரப்பினர். வட மொழிகள் பிராந்திய மொழிகளைக் கீழடக்க வந்த அன்னிய பாஷைகள் என்பதையும் பரப்பினர்' (பக். 24) என்றும் எழுதுகிறார்.
அதிலும் திருவள்ளுவர் மனுதர்ம சாஸ்திர(ம்) கூறுகிற பிரம்மச்சர்ய, வனப்பிரஸ்த, சன்னியாச வாழ்வியல் கட்டங்களோடு ஒத்துப்போகிறார். இது முழுக்க முழுக்க இந்து (இந்திய) வாழ்க்கை நெறி. ஜி.யு.போப்பும் மற்றவர்களும் போல வள்ளுவரைச் சித்திரிப்பவர்கள் திருக்குறளின் மொத்த வடிவமைப்பும் அறியாத அற்பர்களாமே. (பக்.14-15).
'வள்ளுவர் பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திரர் ஆகிய நால்வர்ண முறையினை ஏற்றுக்கொண்டு எழுதுகிறார். இன்றைய நவீன சுயநல அரசியல்வாதிகள் வெளிக்காட்டுவது போன்று அவற்றைக் கருதவில்லை' (பக். 26) என்று எந்த அடிப்படையில் ஆராய்ச்சி செய்கிறாரோ? 'பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற திருக்குறள் எதை வற்புறுத்துகிறதோ?
'சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு' என்ற குறளில் வரும் பூசனை என்பது வானோர்க்குச் செய்யப்படும் மதச்சடங்கு ஆகிய பூஜை என்பதாகக் கருதி, 'வள்ளுவர் மதங்களுக்கு எதிரானவர் அல்லர்' (Valluvar was not anti-religious  - பக்.70) என்று முடிவும் செய்கிறார். 4000 ஆண்டுகளுக்கு முன்னம் தமிழ்நாடு என்பது ஆரிய தேசம் என்றே வழங்கிற்று என்று அறுதியிட்டுக் கூறுகிறார். (பக்.35).
அறத்துப்பாலில் பிரம்மச்சர்யம், கிரஹஸ்தம், வானப்பிரஸ்தம், சன்னியாசம் ஆகிய நான்கு ஆசிரம வாழ்வு நிலைகளும் தொகுக்கப்பட்டு உள்ளன என்கிறார். அதில் பாயிரம் காட்டும் கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் ஆகிய அதிகாரங்களை பிரம்மச்சரியத்தின் அடிப்படைகளாகவே வகுக்கின்றார்.
பாயிரத்திற்குப் பிரம்மச்சர்ய விரதம் என்றும் தலைப்பு இட்டு, கடவுள் வாழ்த்து அதிகாரத்தினை அக்ஷர அப்பியாச(ம்) என்று விளக்குகிறார். வான்சிறப்பு என்பதனைப் பிரம்மச்சரிய சீடர்கள் அண்டை அயலாரிடம் போய் பிச்சை வாங்கி வந்து குருவிடம் காட்டி, அவர் சம்மதித்த பின்னேயே அன்னம் உண்ண வேண்டுமாம். இது 'பிக்ஷô வந்தனம்' என்க. மூன்றாவது அதிகாரத்திற்கு ஒழுக்கத்து நீத்தார் பெருமை என்கிற விளக்கம் தரப்படுகிறது.
பூனை வேடத்தில் வந்து அகலிகையுடன் கூடல் புரிந்த இந்திரனை 'ஐந்து புலன்களையும் அவித்த ஆற்றல் உடையவனுக்கு உரிய எடுத்துகாட்டு' என்பது தெரிந்தே இழைக்கப்படும் தவறு அல்லவா?
அதிலும் அறன் வலியுறுத்தலில் மெளரியப் பேரரசர் அசோகர் தமது அதிகாரிகளையும், ஆசான்களையும் தமது கொள்கை பரப்ப அனுப்பினார் என்று எழுதுகிறார். அசோகர், பிராந்திய மொழிகளின் முன்னேற்றம் கருதி அவரவர் தாய்மொழியில் பாலி மொழியின் புத்தக் கருத்துகளைப் பரப்பினார் என்கிற வரலாற்றினை இயல்பாகவே சீரிய ஆய்வாளர்கள் மறைப்பது கூடாதுதானே?
ஏதாயினும் டாக்டர் நாகசாமியின் கருத்துப்படி வேத தர்ம மார்க்கத்தினை தமிழர்கள் எளிதில் புரியும்படி வழங்கியதே திருக்குறள். (முகவுரை, பக். 12). இறுதியில் திருக்குறள், சம்ஸ்கிருத சாஸ்திரங்களின் சுருக்கக் கோவை அல்லது தழுவல் என்ற நிரூபணத்தை மறுத்து உரைக்க இயலாது என்றே பறைசாற்றுகின்றார்(பக்.38).
'பிராகிருதம் என்னும் வழக்கு மொழியில் இருந்து தோன்றிய பைசாசம், செளரசேனி, மஹாராஷ்ட்ரம், மாகதி, அர்த்தமாகதி (பாலி) போன்ற மொழிகளின் இலக்கியங்களையும் அவற்றில் இருந்து பிறந்த சிந்தி, ராஜஸ்தானி, குஜராத்தி, பிகாரி, ஒரியா, வங்காளி, அசாமி, லந்தா, காஷ்மீரி, கீழை இந்தி, மேலை இந்தி பஞ்சாபி ஆகிய இந்திய மொழிகள் அனைத்தும் பேச்சு வழக்கு மொழிகள். பிராகிருதத்தின் செம்மைப்படுத்தப்பட்ட இலக்கிய வழக்கு மொழியே சம்ஸ்கிருதம். ஆயின், ஆரியம் அல்லாத திராவிட மொழிக் குடும்பங்களில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் தென்னிந்தியாவில் புழங்கியவை. ஆயினும் ஆரியத்தை அகற்றிவிட்டு தென் பிராந்தியத்தில் இந்த வழக்கு மொழிகள் முன்னிலை பெறத் தொடங்கியதற்கு எந்த ஆதாரமும் இந்திய வரலாறு முழுவதிலும் கிடைக்கவில்லை' என்று 'சம்ஸ்கிருத இலக்கியத்தின் சிறு வரலாறு' (A Short History of Sanskrit Literature, முன்ஷிராம் மனோஹர்லால் வெளியீடு, புதுதில்லி, திருத்திய விரிவான இரண்டாம் பதிப்பு, 1963. பக். 11) நூலில் ஹன்ஸ்ராஜ் அகர்வால் ஆராய்ந்து உரைக்கிறாரே.
ஏதானாலும், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் முயற்சியால் சீனமொழியில் அண்மையில் மொழிபெயர்க்கப்பட்டது உள்பட, இதுவரை நாற்பதுக்கும் அதிகமான உலக மொழிகளில் அரங்கேறிய உலகப் பொது மறையாம் திருக்குறளை எந்த மதக் குடத்தினுள்ளும் அடக்கிவிட முடியாது என்பதே உண்மை!

]]>
http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/mar/10/வள்ளுவர்-காட்டுவது-அறமா-மதமா-2877812.html
2877805 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் முடிவின் தொடக்கம்! எஸ். ராஜாராம் DIN Saturday, March 10, 2018 02:15 AM +0530 அணு ஆயுதங்களைக் கைவிடுவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை சந்திக்கத் தயார் என வடகொரிய அதிபர் கிம் ஜோங்-உன் தென்கொரியா மூலம் தூது அனுப்பியதும், அந்த அழைப்பை அதிபர் டிரம்ப் ஏற்றுக் கொண்டதும் உலகத்தையே புருவம் உயர்த்தச் செய்துள்ளது.
2017-ஆம் ஆண்டு முழுவதும் கிம்முக்கும், டிரம்ப்புக்கும் இடையில் நடந்த வார்த்தைப் போரைக் கண்டு உலகமே பதைபதைத்துக் கிடந்தது. அணுகுண்டை முதலில் அமெரிக்கா வீசுமா, வடகொரியா வீசுமா என்று அச்சப்படும் அளவுக்கு இரு தலைவர்கள் இடையே மோதல் வெடித்தது. ஆனால், நிகழாண்டு தொடக்கத்தில் இருந்தே வடகொரியாவின் நிலைப்பாட்டில் தலைகீழ் மாற்றங்கள்.
தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்க அனுமதித்தார் கிம். அத்துடன் குளிர்கால ஒலிம்பிக் தொடக்க விழாவுக்குத் தன் சகோதரி கிம் யோ ஜாங்கையும் தென்கொரியாவுக்கு கிம் அனுப்பி வைத்ததை மூக்கின் மீது விரலை வைத்துப் பார்த்தன உலக நாடுகள். அதன் உச்சகட்டம்தான், வரும் மே மாதம் டிரம்ப்பை நேருக்கு நேர் சந்தித்துப் பேச விரும்புவதாக தென்கொரிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மூலம் கிம் தற்போது விடுத்துள்ள தூது.
இரு நாடுகள் தங்கள் இடையேயான பிரச்னையைப் பேச்சுவார்த்தை மூலம் பேசித் தீர்த்துக் கொள்ள முடிவு செய்ததில் உலக நாடுகளுக்கு என்ன வியப்பு என்கிறீர்களா? சர்வதேச விவகாரத்தை அணுகுவதில் இரு தலைவர்களும் இதுவரை கடைப்பிடித்து வரும் அதிரடி முறையே இதற்குக் காரணம்.
வடகொரியா தனது நிலையிலிருந்து தடாலடியாக இறங்கி வந்திருப்பதன் பின்னணியில் என்னதான் உள்ளது? தென்கொரிய அதிபர் மூன் ஜே-வுக்கு இதில் பெரும் பங்கிருக்கிறது. படிப்படியாக வடகொரியாவுடனான பதற்றத்தைத் தணித்தது, தென்கொரிய அரசுக் குழுவினர் கிம்மை சந்தித்துப் பேசும் அளவுக்கு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை சீர்செய்தது என மூன் ஜே-வின் உழைப்பு முக்கியமானது. மற்றொன்று வடகொரியா மீதான பொருளாதாரத் தடை.
வடகொரியா அணு ஆயுதங்கள் தயாரிப்பதையும், ஏவுகணை பரிசோதனையில் ஈடுபடுவதையும் தடுக்கும் வகையில் 2006-ஆம் ஆண்டிலிருந்தே அந்த நாட்டின் மீது ஐக்கிய நாடுகள் சபை பல பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கிறது. அந்நாட்டிலிருந்து நிலக்கரி, இரும்பு, ஜவுளி, கடல் உணவுப் பொருள்கள் போன்றவை ஏற்றுமதி செய்யப்படுவதையும், அந்நாட்டுக்கு கச்சா எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருள்கள் இறக்குமதி செய்யப்படுவதையும் தடுக்கிறது இந்தத் தடை. இது தவிர அமெரிக்காவும் தன் பங்குக்கு இதுபோன்ற பொருளாதாரத் தடைகளை வடகொரியா மீது விதித்திருக்கிறது. பொதுவாக, பொருளாதாரத் தடைகளை எல்லாம் வடகொரியா பொருள்படுத்துவதில்லை என்றாலும், சில தினங்களுக்கு முன் அமெரிக்கா புதிதாக விதித்த பொருளாதாரத் தடை வடகொரியாவை சற்றே அசைத்துப் பார்த்துவிட்டது எனலாம்.
அதிபர் கிம்மின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜாங்-நம் மலேசியாவில் வி.எக்ஸ். என்கிற ரசாயன ஆயுதத்தால் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கொலை செய்யப்பட்டார். சர்வதேச தடையை மீறி ரசாயன ஆயுதத்தை வடகொரியா பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, புதிய பொருளாதாரத் தடையை விதித்தது அமெரிக்கா. இந்தப் புதிய தடையானது வடகொரியாவின் 28 வர்த்தக கப்பல்களையும், 27 கப்பல் நிறுவனங்களையும் குறிவைத்தது. இதன்மூலம் கடல் வழியாகக் கூட வடகொரியாவுக்குள் எதுவும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஏற்கெனவே அமெரிக்காவுடன் பேச்சு நடத்த விருப்பம் தெரிவித்து வந்த நிலையில், அதிபர் டிரம்புடன் கிம்மே நேரடியாகப் பேச விரும்புகிறார் எனச் சொன்னதற்கு இந்தப் புதிய தடையே கூடக் காரணமாக இருக்கலாம்.
டிரம்ப்-கிம் இடையே நிகழப் போகும் இந்த சந்திப்பை சீனா, ஜப்பான் உள்பட பல நாடுகள் வரவேற்றுள்ளன. இந்தச் சந்திப்பின்போது, வடகொரியா என்ன மாதிரியான கோரிக்கைகளை முன்வைக்கும் என்கிற எதிர்பார்ப்பு பலமாக எழுந்துள்ளது. 'பொருளாதாரத் தடைகளை விலக்க வேண்டும்; தென்கொரியாவில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட வேண்டும்; தென்கொரியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை அமெரிக்கா விலக்கிக் கொள்ள வேண்டும். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றினால் அணு ஆயுதங்களைக் கைவிடத் தயார் என வடகொரிய அதிபர் கிம் நிபந்தனை விதிக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
அதற்கு முன்னதாக, இந்தச் சந்திப்பு நிகழ வேண்டுமானால், ஏப்ரல் மாதம் தென்கொரிய, வடகொரிய அதிபர்கள் சந்தித்துப் பேச வேண்டும்; அதுவரை எந்த ஏவுகணை சோதனையையும் வடகொரியா மேற்கொள்ளக் கூடாது என அமெரிக்கா நிபந்தனை விதித்துள்ளது. மேலும், 'வடகொரியா தனது பேச்சில் உண்மையாக இருக்க வேண்டும்; இந்தச் சந்திப்பை வைத்து ஏதாவது விளையாட்டு காட்ட நினைத்தால், கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்' என அமெரிக்க நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் லிண்ட்úஸ கிரஹாம் எச்சரித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தச் சந்திப்பின்போது, வடகொரியா அதிபர் கிம் என்ன கேட்பார்; அமெரிக்க அதிபர் டிரம்ப் என்ன கொடுப்பார் என்கிற கேள்விக்கான விடை தெரிய சில நாள்கள் காத்திருக்க வேண்டும். ஆனால், பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தாலோ, பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டபடி நடக்காவிட்டாலோ வடகொரியா கேட்காததையும் அமெரிக்கா தரக் கூடும் என்பதே உண்மை.
மொத்தத்தில், வடகொரியாவும், அமெரிக்காவும் எடுத்துள்ள இந்த நடவடிக்கை கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதத்தை ஒழிக்கும் முடிவின் தொடக்கமாக இருக்கட்டும்.
 

]]>
http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/mar/10/முடிவின்-தொடக்கம்-2877805.html
2876951 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் வங்கிக் கடன் மோசடியும் அதற்கு அப்பாலும்... பி.எஸ்.எம். ராவ் DIN Friday, March 9, 2018 01:27 AM +0530 பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நீரவ் மோடி நிகழ்த்திய மோசடி குறித்து பல தரப்பிலும் புகார்கள் கூறப்படுகின்றன. இந்த மோசடியில் மத்திய அரசு, ரிசர்வ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, அதன் ஊழியர்கள், ஆடிட்டர்கள் உள்ளிட்ட பலருக்கும் பொறுப்புண்டு. ஆனால் அனைவரும் தங்கள் பொறுப்பை பிறர் மீது சுமத்தவே விழைகிறார்கள். இதன் காரணமாக, இந்த மோசடியின் முழுமையான பரிமாணம் கண்ணுக்குப் புலப்படாமல் போகிறது. 
மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளை, தனது வாடிக்கையாளரான நீரவ் மோடிக்கு உதவும் வகையில், வெளிநாடுகளிலுள்ள அலகாபாத் வங்கி, ஆக்சிஸ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, யூனியன் வங்கி ஆகியவற்றின் கிளைகளுக்கு கடன் பத்திர ஒப்பந்தக் கடிதம் (லெட்டர் ஆஃப் அண்டர்டேக்கிங்-எல்ஓயு) அளித்தது. அதன் அடிப்படையில் நீரவ் மோடி, அவரது மாமா மெஹுல் சோக்ஸி ஆகியோரின் நகை வர்த்தக நிறுவனங்கள் எந்தக் கேள்வியுமின்றி வெளிநாட்டு வங்கிக் கிளைகளில் ரூ. 12,717 கோடி கடன் பெற்றன. 
வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபடுவோர் சிரமமின்றி வர்த்தகம் செய்ய ஏதுவாக கொண்டுவரப்பட்ட முறையே எல்ஓயு. இதன்படி, நீரவ் மோடி நிறுவனத்துக்கு வெளிநாட்டுக் கிளைகள் அந்நாட்டு நாணயத்தில் கடனளிக்க பஞ்சாப் நேஷனல் வங்கி பொறுப்பேற்றுக் கொண்டது. 
இது ஒரு வங்கி வர்த்தக நடைமுறை. இதற்காக நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு வட்டியும், கட்டணமும் செலுத்துவார். ஆயினும் குறிப்பிட்ட காலத்துக்குள் அந்தக் கடனை அடைக்காவிட்டால் வங்கி நடவடிக்கை எடுக்கும். இதுவே நடைமுறை. 
இந்தக் கடனுக்கு ஈடாக, இந்தியாவில் நூறு சதவீத அடமானம் வைக்கப்பட்டிருக்க வேண்டும். தவிர, இந்தக் கடனை 90 நாள்களுக்குள் திருப்பிச் செலுத்தாவிட்டால், பஞ்சாப் நேஷனல் வங்கி, கடனளித்த வெளிநாட்டு வங்கிக்கு அந்தப் பணத்தைத் திருப்பித் தரும். இந்த கால வரையறையை நீரவ் கும்பல் ஓராண்டாக உயர்த்திக் கொண்டது. தவிர, இந்தியாவில் அதற்கு ஈடான அடமானமும் வைக்கப்படவில்லை. 
அதாவது, நீரவ் மோடியும் மெஹுல் சோக்ஸியும் பஞ்சாப் நேஷனல் வங்கி அலுவலர்கள் சிலருடன் கள்ளக் கூட்டணி வைத்துக்கொண்டு, பழைய கடன்களை அடைக்காமலே, எல்ஓயு முறையில் வெளிநாடுகளில் இயங்கும் பல வங்கிகளில் புதிய கடன்களைப் பெற்றுள்ளனர். இதுதான் மோசடியின் அடிப்படை.
இந்த எல்ஓயு முறைக்கு உதவ உலகளாவிய 'ஸ்விப்ட்' என்ற கணினி வழி ஒப்பந்தப் பரிமாற்ற முறை 1973-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. உலக நாடுகளின் வங்கிகளிடையிலான பாதுகாப்பான நிதிப் பரிமாற்றத்துக்கு இதற்காக ஒப்பந்தம் உள்ளது. இதன்படி அனுப்பப்படும் எல்ஓயு உத்தரவாதக் கடிதங்கள் எந்தத் தயக்கமும் இன்றி ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இந்த வசதியைத்தான் நீரவ் மோடி கும்பல் துஷ்பிரயோகம் செய்துள்ளது. 
எந்த ஒரு வங்கியிலும் ஸ்விப்ட் முறையில் எல்ஓயு அனுப்பப்பட்டால் அதை 'கோர் பாங்கிங் சிஸ்டம்' (சிபிஎஸ்) எனப்படும் மையக் கட்டுப்பாட்டு நிர்வாக முறையுடன் ஒருங்கிணைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே வெளிநாடுகளில் வாடிக்கையாளருக்காகச் செய்யப்படும் நிதிப் பரிமாற்றங்கள் வங்கிப் பேரேட்டில் பதிவாகும். ஆனால், பஞ்சாப் நேஷனல் வங்கியின் சில ஊழியர்கள் நீரவ் மோடியுடன் கைகோத்துக் கொண்டு, இந்த பரிமாற்றங்களை சிபிஎஸ் முறையிலிருந்து மறைத்துவிட்டனர்.
இந்த மோசடியில் நீரவ் மோடிக்கோ, மெஹுல் சோக்ஸிக்கோ பஞ்சாப் நேஷனல் வங்கி நேரடியாக கடன் அளிக்கவில்லை. ஆனால் அவர்கள் வெளிநாடுகளில் இயங்கும் பிற வங்கிகளின் கிளைகளில் கடன் பெற உத்தரவாதம் அளித்திருக்கிறது. ரொக்கப் பரிமாற்றம் இல்லாத இந்த வகையிலான வங்கிச் செயல்பாடுகளில் குறிப்பிட்ட காலத்துக்குள் அந்தக் கடன் திருப்பிச் செலுத்தப்பட்டதா என்று கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது அவசியம். இத்தகைய ரொக்கமற்ற கடன்கள், வங்கிப் பேரேட்டில் முழுமையான கடன்கள் பிரிவில் இடம் பெறாது; மாறாக, அவசரத் தேவை என்னும் விதத்தில் தற்செயல் கடனாகவே (கன்டிஜென்சி லயபிலிட்டிஸ்) பட்டியலிடப்படும். 
ஒருவகையில் இதுவும் வாராக்கடன் போன்றதே. வங்கியில் முறைப்படி விண்ணப்பித்து கடன் பெற்றவர் குறிப்பிட்ட காலத்துக்குள் அதை வட்டியுடன் திருப்பச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டால் அது வாராக்கடன் ஆகிறது. அது வங்கிப் பேரேட்டில் பதிவாகி இருக்கும். ஆனால், எல்ஓயு முறையில் வெளிநாடுகளில் பெற்ற கடன் திரும்ப வராவிட்டால், அதற்கு உத்தரவாதம் அளித்த வங்கியின் மறைமுகமான வாராக்கடனாகவே அது மாறும். இதுவே பஞ்சாப் நேஷனல் வங்கியில் தற்போது நிகழ்ந்துள்ளது.
வங்கியின் வாராக்கடன்களும், மறைமுகமான தற்செயல் கடன் பொறுப்புகளும் வங்கியின் மூலதனத்தில் துண்டு விழ வைப்பவை. 2017 செப். 30 -ஆம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகள் (ரூ. 7,33,974 கோடி), தனியார் வங்கிகளின் (ரூ. 1,02,808 கோடி) மொத்த வாராக்கடன் அளவு ரூ. ரூ. 8.37 லட்சம் கோடி ஆகும். இது பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு வெளிவருவதற்கு முன் எடுக்கப்பட்ட மதிப்பீடாகும். இந்த வாராக்கடன்களின் அளவு மார்ச் 2018-இல் ரூ. 9.5 லட்சம் கோடியை எட்டக் கூடும்.
உண்மையில் இதைவிட பல மடங்கு அதிகமாக தற்செயல் கடன் பொறுப்புகள் இருக்கக்கூடும். அவற்றை வங்கி ஆண்டறிக்கையில் சேர்க்காமல் இருப்பது, அவற்றின் வர்த்தக அத்துமீறல்களை மறைக்க உதவுகிறது. எல்ஓயு, வங்கி கடன் பத்திர ஓப்பந்தம் (லெட்டர் ஆஃப் கிரெடிட்-எல்ஓசி) போன்றவை இதற்கு பயன்படுத்தப்படுகின்றன. எனினும், பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு, இந்த நடைமுறையிலுள்ள சிக்கலை அம்பலப்படுத்திவிட்டதால், வாராக் கடன்களின் அளவு நம்மை திகைக்க வைப்பதாக அமையலாம். ஏனெனில் தற்செயல் பொறுப்புக் கடன்களும் வாராக்கடன்களின் மற்றொரு வடிவமே.
உதாரணமாக, 2017 மார்ச் வரையிலான காலகட்டத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் தற்செயல் பொறுப்புக் கடன்களின் அளவு ரூ. 3.32 லட்சம் கோடி. இதில் மும்பை கிளையில் நீரவ் மோடி கும்பல் நடத்திய முறைகேட்டின் அளவு மட்டுமே ரூ. 12,171 கோடி! 
நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளின் தற்செயல் பொறுப்புக் கடன்களின் ஒட்டுமொத்த அளவு ரூ. 151.61 லட்சம் கோடியாகும். இது நாட்டின் ஓராண்டு உள்நாட்டு உற்பத்தி மதிப்பைவிட (ஜிடிபி- ரூ. 141.58 லட்சம் கோடி) அதிகமாகும். தவிர, அனைத்து வங்கிகளின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பான ரூ. 149.94 லட்சம் கோடியைவிடவும் இது அதிகம். 
இதுபோன்ற கடன்களை எந்த அளவுக்கு அனுமதிக்கலாம் என்பதற்கு ரிசர்வ் வங்கி வரையறை விதித்துள்ளது. வங்கியின் சொத்து மதிப்பில் 36 சதவீதத்தை ஸ்டேட் வங்கிகளும், 41 சதவீதத்தை பிற தேசிய வங்கிகளும் அவசரத் தேவையாக தற்செயல் பொறுப்புக் கடனாக அளிக்கலாம். ஆனால் தனியார் வங்கிகள் 106 சதவீதத்துக்கு மேல் தற்செயல் பொறுப்புக் கடன்களை அளிக்கின்றன. சில வெளிநாட்டு வங்கிகளோ 927 சதவீதத்துக்கு மேல் அவசரக் கடன்களை அளிக்கின்றன. 
இந்தியாவின் வங்கி வர்த்தகத்தில் வெளிநாட்டு வங்கிகளின் பங்களிப்பு 4% முதல் 5% மட்டுமே. ஆனால் அவற்றின் தற்செயல் பொறுப்புக் கடன்களின் மதிப்பு ரூ. 75 லட்சம் கோடியாக உள்ளது. அதாவது நாட்டின் தற்செயல் பொறுப்புக் கடன்களில் சரிபாதி வெளிநாட்டு வங்கிகளால் உருவானவை. 
இத்தகைய நிலையில், தற்செயல் பொறுப்புக் கடன் முறையில் மேலும் பல மடங்கு கடன் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்புள்ளதை யாரும் மறுக்க இயலாது. ஒரே ஒரு பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிகழ்ந்த முறைகேடு மூலமாகவே இந்திய வங்கித் துறையின் நம்பகத்தன்மை பாதிக்கப்பட்டுவிட்டது. 
இந்த பரிதாபகரமான சூழலிலிருந்து இந்திய வங்கிகள் தப்ப வேண்டுமானால், வங்கிகள் அனைத்தும் தனியார்மயமாக வேண்டும் என்று அசோசேம், ஃபிக்கி போன்ற வர்த்தக அமைப்புகள் யோசனை கூறியுள்ளன. 
2008-ஆம் ஆண்டு உலக அளவில் வங்கிகள் சந்தித்த நெருக்கடிக்கு தனியார் வங்கிகளே காரணம் என்பதை அந்த அமைப்புகள் மறந்துவிட்டன. பல தனியார் வங்கிகள் திவாலானதால்தான் 1970-களில் அவை தேசியமயமாக்கப்பட்டன என்ற வரலாற்று உண்மையையும் மறக்கக் கூடாது. இந்த வாதத்தால் பொதுத் துறை வங்கி ஊழியர்களின் பொறுப்பற்ற தன்மையை நியாயப்படுத்துவதாகப் பொருளல்ல. தனியார் மயமாக்கத்தால் ஊழியர்களின் திறன் மேம்படும் என்றும் கூற முடியாது. 
இந்த விகாரத்தில் வங்கி ஊழியர்களை குற்றம் சாட்டும்போது, அவர்களைக் கண்காணிக்காமல் தவறவிட்ட மேல்மட்ட நிர்வாகத்தையும் கண்டிக்க வேண்டும். 
இந்த விவகாரத்தால் வங்கிகள் மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அவநம்பிக்கையைப் போக்க வேண்டுமானால், உறுதியான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். முதலாவதாக, அனைத்து வங்கிகளின் ஒட்டுமொத்த வாராக்கடன்கள், தற்செயல் பொறுப்புக் கடன்களின் அளவினை முழுமையாக ஆராய்ந்து வெளிப்படுத்த வேண்டும். நோயைக் குணப்படுத்த அதன் காரணத்தைக் கண்டறிவதும் அவசியம் அல்லவா?
வங்கிகளில் நிகழும் நிதி மோசடிகளின் சுமை மக்கள் மீதே விழும். கடன் மோசடிகளால் இழக்கப்படும் பணம் நாட்டுக்கு நிதிச் சுமையாகும். எனவே, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கடும் நடவடிக்கைகளை எடுத்து, வங்கித் துறையை கட்டுக்குள் வைப்பது காலத்தின் கட்டாயமாகும்.
 

]]>
http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/mar/09/வங்கிக்-கடன்-மோசடியும்-அதற்கு-அப்பாலும்-2876951.html
2876950 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் சுகமாகுமா சுமைகள்? ம. அஹமது நவ்ரோஸ் பேகம் DIN Friday, March 9, 2018 01:27 AM +0530 வேலைக்குச் செல்லும் பெண்கள் மீது எனக்கு எப்பொழுதும் பிரியம் உண்டு. நானும் அவர்கள் இனம் என்பதாலோ என்னவோ!
இலேசான ஒப்பனையுடன், காலையில் உற்சாகமாக வேலைக்குச் செல்லும் பெண்கள் மாலையில் களைப்புடன் திரும்பினாலும் முகத்தில் மலர்ச்சிக்கு மட்டும் பஞ்சமிருக்காது. பெரும்பாலான பெண்கள் தாங்கள் பணி செய்யும் இடங்களில் தங்கள் கவலைகளை மூட்டை கட்டி வைத்துவிட்டுதான் வேலைகளை செவ்வனே செய்கிறார்கள். வசதியான அல்லது வியாபாரப் பின்னணி கொண்ட பெண்களுக்கு பணிக்குச் செல்வது சுமையாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் சம்பாதித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் நடுத்தரத்திற்கும் கீழே உள்ள மற்றும் நடுத்தர வர்க்கப் பெண்களில் பெரும்பாலானோருக்கு வீட்டிலிருந்து வெளியே வந்து பணிக்குச் செல்வது ஒரு சில நேரங்களைத் தவிர பெரும் சுமையாகவே இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. பணிச் சுமையுடன், குடும்ப பாரமும் முதுகை அழுத்த 'எப்படா' ஓய்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.
கணவன், குழந்தைகளுடன் அணுக் குடும்பமாகத் தனியாக வசிப்பவர்களின் பாட்டை சொல்லி முடியாது. சிறு குழந்தைகளை சம்பளத்திற்கு ஆள் வைத்துப் பார்ப்பதற்கோ அல்லது குழந்தைகளை காப்பகத்தில் விடுவதற்கோ பாதி சம்பளம் போய்விடும். மாலையில் பள்ளிக்கூடத்திலிருந்து வரும் குழந்தைகள், அம்மா வருகிறார்களா என்று வழி மேல் விழி வைத்துப் பசியுடன் வீட்டில் காத்துக் கிடக்கிறார்கள். களைப்புடன் வீட்டில் நுழையும் அம்மாவைப் பார்த்துக் குழந்தைகள் தவறாமல் கேட்கும் கேள்வி, 'ஏனம்மா தினமும் லேட்டாக வருகிறீர்கள்?' என்பதும், அதற்கு அவர்களை அணைத்தபடி, 'உங்களுக்காகத்தானே வேலைக்குப் போகிறேன்' என்கிற தாயின் பதிலும் வழக்கமானதுதான். 
களைப்பை மறந்து, அடுக்களைக்குள் ஓடிச்சென்று பாலைக் காய்ச்சி காப்பியோ அல்லது எதோ ஒரு பானமோ கலந்து கொடுக்கும் நேரத்தில் அம்மாவின் கைப்பையைக் குடைந்து அம்மா தனக்கு ஏதாவது வாங்கி வந்திருக்கிறாளா என்ற ஆராய்ச்சியை முடித்து தனக்கான தின்பண்டங்களை கடை பரப்புவதை அம்மா ரசித்துப் பார்ப்பது விலை கொடுத்து வாங்க முடியாத சந்தோஷங்களில் ஒன்று. அடுத்து, இரவு நேர சமையலைத் தயார் செய்வது, அடுத்த நாளுக்கு செய்ய வேண்டிய பொறியல், கூட்டு, குழம்பிற்கு காய்கறிகளை வெட்டி வைத்தல், இடையில் நேரம் கிடைக்கும் பொழுது பிள்ளைகளின் வீட்டுப் படிப்பையும் கவனித்துக் கொள்வது என்று வேலைகள் தொடர்ந்து கொண்டேயிருக்கும். இதனிடையே பணி முடிந்து வரும் கணவருக்கும் சாப்பாடு போட்டுக் கொடுத்து, சமையலறையை சுத்தம் செய்து படுப்பதற்குள் போதும், போதும் என்றாகிவிடும். மனைவிக்கு வீட்டுவேலையில் உதவி செய்கிற கணவராக இருந்தால் கவலையில்லை. ஒரு துரும்பைக் கூடத் தூக்கிப்போடாதவராக வாய்த்திருந்தால் மனைவியின் பாடு பாவம்தான். 
எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருக்கும். என்றாவது அலுவலகத்தில் வேலைப்பளு அதிகம் இருந்தாலோ அல்லது அதிகாரிகளிடம் திட்டு வாங்கியிருந்தாலோ மனதுக்குள் கனன்று கொண்டிருக்கும் நெருப்பு வீட்டிற்கு வந்தவுடன், குழந்தைகள் சிறிது சத்தம் போட்டாலோ, சண்டை போட்டாலோ எரிமலைக் குழம்பாக வெடித்து வெளிவந்துவிடும். பிள்ளைகள்தான் பலிகடாக்கள். அடி வாங்கி அழும் குழந்தைகளைப் பார்த்து வருந்தி, தானும் அழுது அவர்களை சமாதானப்படுத்தும் பொழுது தன் இயலாமை குறித்து தன் மீதே கோபப்படும் தாய்மார்கள் எத்தனையோ பேர்.
வேலைக்குப் போகும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லையென்றால் நிறைய யோசிக்க வேண்டும். குழந்தைகளைத் தனியாக வீட்டில் விட முடியாது என்பதால், மருந்து கொடுத்து பள்ளிக்கு அனுப்ப வேண்டும். கூடவே மதிய வேளை மருந்தையும் கொடுத்துவிடுவதும் நடக்கும். உடல் நலமில்லா பிள்ளையைப் பள்ளிக்கு அனுப்பவே முடியாத அளவுக்கு மோசமென்றால், அலுவலக மேலாளரின் முகச்சுளிப்பை சம்பாதித்துக் கொண்டு, விடுப்பு கேட்டு, வீட்டில் இருந்து குழந்தைகளைக் கவனித்துக் கொள்ள வேண்டும். 
பணியிடங்களில் அவர்களுக்குப் பாதுகாப்பான சூழல் இருக்குமானால், அதிக வேலைப்பளு என்றால் கூட சமாளித்து கொள்ளக் கூடியவர்கள்தான் பெண்கள். ஆனால் ஆண்களால் வேறு விதமான பிரச்னைகளுக்கு ஆளாகும் பெண்களின் நிலைமையைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை. பார்வைக் கணைகளே பெண்களுக்குப் பெரும் தொந்தரவுதான். இன்னும் மோசமான நடவடிக்கைகளை சமாளிக்கும் பெண்களுக்கு தினமும் நரக வேதனைதான்.
வேலைக்குச் செல்வதால் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிக்க முடியாத ஏக்கம் எல்லா தாய்மார்களுக்கும் உண்டு. தங்கள் அம்மா வேலைக்குப் போவதால் நிறைய விஷயங்களில் சமரசம் செய்து கொள்ளும் குழந்தைகளைத்தான் பாராட்ட வேண்டும். அப்படிப்பட்ட பிள்ளைகள் தங்கள் சொந்தக் கால்களில் நிற்க, மற்றவர்களைவிட விரைவாகவே பழகிவிடுகிறார்கள்!
நடுத்தர வகுப்புப் பெண்கள் வேலைக்குச் செல்வதால் குடும்பச் செலவுகளை சமாளிப்பதில் கணவருக்கு உதவியாக இருக்கலாம். ஆனால் வேலைக்குச் செல்லும் பெண்களின் குழந்தைகள் தங்கள் தாயுடன் செலவழிக்கும் நேரத்தை இழக்கிறார்கள்.
அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, இன்ன பிற உறவுகளுடன், ஒரே வீட்டில் கூட்டாக வளர்ந்த குழந்தைகள் சவால்களை தைரியமுடன் எதிர்கொள்ளக் கற்றுக் கொண்டனர். வாழ்க்கை முழுவதற்குமான பாடங்களான அன்பு, இரக்கம், சகிப்புத்தன்மை போன்ற எத்தனையோ அருங்குணங்களுடன், வெற்றி, தோல்விகளை சமமாகப் பாவிக்கும் தன்மையையும் வளர்த்துக் கொண்டனர். அத்தகைய பொற்காலத்தை நம் பிள்ளைகள் இழந்துவிட்டனர் என்றுதான் கூற வேண்டும். 
குழந்தைகளின் எதிர்காலத்திற்காக வேலைக்குச் செல்வதாகக் கூறிக் கொள்ளும் பெண்கள், வீட்டில் இருந்து குடும்பத்தைப் பராமரிப்பதை விட குழந்தைகளின் எதிர்காலத்திற்கு சிறந்தது வேறு எதுவும் இருக்க முடியாதுதான்.
ஆனால் பொருளாதாரம் போன்ற அழுத்தங்களால் வேலைக்குச் செல்வதையும் தவிர்க்க முடிவதில்லை. இந்தப் பெண்கள் தங்களின் குடும்பத்துக்கு உழைப்பால் செய்யும் முதலீடு முழு 'லாபத்தை' பெற்றுத் தருகிறதா என்பது மனவேதனையுடன் எழும் கேள்விக்குறி.
 

]]>
http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/mar/09/சுகமாகுமா-சுமைகள்-2876950.html
2876350 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் ஒரு நாடு ஒரு மொழி சா. கந்தசாமி DIN Thursday, March 8, 2018 02:38 AM +0530 மனிதர்கள் பேசும் மொழியென்பது பல நூறு ஆண்டுகளில் அறிவால் உண்டாக்கப்பட்டு ஞானத்தால் சீரமைக்கப்பட்டது. அதாவது பேச்சு என்பது வெறும் ஓசையோ, சப்தமோ கிடையாது. சமூகத்தில் பல நூற்றாண்டுகளில் உருவான கலை இலக்கியம், பண்பாடு, உளவியல், இறை நம்பிக்கை, குடும்பம், தொழில், வாணிபம் என்று பலவற்றால் கட்டமைக்கப்பட்டது.
மொழியில் இருக்கும் ஒவ்வொரு சொல்லும் அர்த்தம் கொண்டது. சில சொற்களுக்குப் பல அர்த்தங்களும், பல சொற்களுக்கு ஓர் அர்த்தமும் கொடுத்து இருக்கிறார்கள். மொழியில் அர்த்தம் இல்லாத சொல் என்பதே கிடையாது. எல்லா சொற்களும் அதற்கான இலக்கணப்படியே பேசப்படுகிறது; எழுதப்படுகிறது.
மொழியில் சொல்லென்பது இனிமையும், நயமும், வசீகரமும் கொண்டது. அது சொல்லப்படும்போது மனம் கவர்கிறது. கேட்கும்போது புளகாங்கிதம் அடைய வைக்கிறது. எனவேதான் சொல் மாலை புனைந்து இருக்கிறார்கள். வாடாத சொல் மாலை காலம் காலமாக நறுமணம் வீசிக்கொண்டு உள்ளது. கவிதையாக ஜீவித்துக் கொண்டு இருக்கிறது. சொல்லில் எத்தனை சொன்னாலும் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்கிறார் வள்ளுவர்.
மல்லிகைப் பூ வெண்மையாக இருக்கிறது என்பது அதன் நிறத்தைக் குறிக்கிறது. அதுதான் நேராகச் சொல்லப்படுவது. அதில் சொல்லப்படாதது, மல்லிகைப் பூ சிவப்பாக இல்லை; மஞ்சள் நிறத்தில் இல்லை; வெண்மையென்ற ஒரே நிறத்தைக் கொண்டிருக்கிறது என்பதுதான். அதனைச் சொல்வதும், சொல்ல வைப்பதும் அறிவுதான். மொழியென்பது ஞானத்தின் இருப்பாகிவிடுகிறது. அது மக்களைத் தாய்மொழி மீது பெருமிதமும், பற்றும் கொள்ள வைக்கிறது.
எந்த நாடும் எல்லா காலத்திலும் ஒன்றுபோல் இருப்பதில்லை. அந்நிய நாடுகளின் படையெடுப்புகள், இயற்கைப் பேரிடர்கள், மக்கள் புலம்பெயர்வு, மக்களின் கிளர்ச்சி, தொழில், வாணிபம் என்பவற்றால் எல்லைகள் மாறி புதிய நாடாகி விடுகிறது.
பழைமையும், பெருமையுங் கொண்ட இந்தியா பல நூற்றாண்டுகளாகப் பன்மொழிகள், பல கலாசாரங்கள், பல சமயங்கள், பல இன மக்கள் கலந்து வாழும் தனியான நாடுகளாகவே இருந்து வந்தது.
பதினேழாவது நூற்றாண்டில் வாணிபம் செய்வதற்காகக் கடல் வழியாக வந்த இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவின் சில பகுதிகளைக் கைப்பற்றி, ஆட்சி புரிய ஆரம்பித்தது. கம்பெனியின் மொழியான ஆங்கிலம் நிர்வாக மொழியாக இருந்தது.
1858-ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் இந்திய நிர்வாகத்தை ஏற்றுக் கொண்டது. அரசின் நிர்வாகம் முழுவதும் ஆங்கிலமயமாக்கப்பட்டது. பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள், நீதிமன்றங்களின் மொழியாக அது மாறியது. அது இந்தியாவிற்கு மட்டும் ஏற்பட்ட நிலை இல்லை. அமெரிக்கா, கனடா, மேற்கிந்திய தீவுகள், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து உள்பட பல நாடுகளின் நிர்வாக மொழியாகியது ஆங்கிலம். அரசுப் பணிகள் பல உருவாகின. அவற்றில் பணியாற்றப் பலரும் ஆங்கிலம் படிக்க ஆரம்பித்தார்கள்.
ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட தொழில் புரட்சி, கலை இலக்கிய மறுமலர்ச்சியில் ஆங்கில மொழிக்கும் பெரும் பங்கு கிடைத்தது. பல நாட்டு தத்துவ நூல்கள், சமய பனுவல்கள், அரசியல் கட்டுரைகள் எல்லாம் ஆங்கில மொழியில் பெயர்க்கப்பட்டன. அதனால் அறிவு பெற விழைந்தவர்கள் ஆங்கிலம் படிக்க ஆரம்பித்தார்கள். பல நவீன, பழைய நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தன.
இங்கிலாந்து அறிவைப் பெறுவதற்கு உரிய களமாகவும் தன் அறிவை நிலைநாட்டக் கூடிய இடமாகவும் இருக்கிறது என்று பிரிட்டிஷ் காலனி நாட்டினர் கருதினார்கள்.
இந்தியாவில் பாரம்பரிய முறையிலான நீதி பரிபாலன முறை கைவிடப்பட்டு, ஐரோப்பிய சட்ட ரீதியிலான முறைக்கு மாற்றப்பட்டு இருந்தது. அது வக்கீல்களின் சாமர்த்தியம் சார்ந்தது. நிறைய பணம் சம்பாதிக்கக் கூடிய தொழிலாகவும், கெளரவம் மிக்கவும் இருந்தது. எனவே இந்திய குறுநில மன்னர்கள், ஜமீன்தார்கள், வருங்காலம் வக்கீல் தொழிலுக்கானது என்பதை அறிந்து கொண்டவர்கள், தம் மக்களை வக்கீல் தொழிலில் உச்சமான பாரிஸ்டர் படிப்பு படிக்க இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தார்கள். இந்திய இளைஞர்கள் ஆங்கில மொழி வழியாகத்தான் சட்டம் படித்தார்கள்.
சிலர் அரசியல் தத்துவம், இலக்கியம் படித்தார்கள். சாக்ரடீஸ் உரைகளும் பிளேட்டோ குடியரசு தத்துவங்களும், காரல் மார்க்ஸ், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையும், 'மூலதன'த்தையும் படித்து அடியோடு மாறிப் போனார்கள். சுதந்திரம், சமத்துவம் மானிடத்தின் பொதுப் பண்பென கொண்டார்கள்.
'ஒரு நாடு இன்னொரு நாட்டை அடிமைப்படுத்தி ஆள, குடிமக்களை அடிமைகளாக வைத்திருக்க, அவர்களை வறுமையில் வாட வைக்க யாருக்கும் உரிமை இல்லை. மனிதர்கள் சுதந்திரமாகப் பிறக்கிறார்கள். அவர்கள் சுபிட்சமாகவும் பரிபூரண சுதந்திரத்தோடு வாழ வழி செய்து கொடுப்பதுந்தான் அரசாங்கத்தின் ஒரே வேலை' என்ற சித்தாந்தத்தோடு இந்தியா வந்தார்கள். அவர்களுக்கு பாரிஸ்டர் தொழில் மீது இருந்த நாட்டம் போய்விட்டது. அந்நிய நாட்டில், அயல்மொழி மூலமாகவே தங்களையே அறிந்து கொண்டார்கள். ஒரு மனிதனின் சிந்தனை சொல்லில் சொல்லப்பட்டதும் எல்லோர்க்கும் பொதுவாகிவிடுகிறது.
மொழியே அவர்களுக்கு முற்போக்கான சிந்தனைகளைக் கொடுத்தது. அதுதான் கல்வி என்பதன் அடிப்படை. அந்தக் கல்வி மொழி வழியாகவே கிடைக்கிறது.
இங்கிலாந்தில் ஆங்கிலம் கற்றுத் தேர்ந்து வந்து இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முன்வரிசையில் இருந்த தலைவர்களில் சிலர் ஆங்கில மொழியை அடிமையின் சின்னமாகக் கருதினார்கள். அது அந்நிய மொழி என்று பழித்துரைத்தார்கள்.
'நாம் சுதந்திரம் பெறும்போது, தன் நாட்டிற்குச் செல்லும் ஆங்கிலேயர்களோடு அவர்களின் மொழியையும் கப்பல் ஏற்றி அனுப்பிவிட வேண்டும்; ஆங்கில மொழிக்கும் நமக்கும் ஒரு தொடர்பும் இல்லை' என்று உரைத்தார்கள். அதில் முன்னணியில் இருந்தவர் மகாத்மா காந்தி. அவர் 1917-ஆம் ஆண்டில் குஜராத்தில் ஒரு கல்வி மாநாட்டில் உரையாற்றும்போது, 'இந்தியாவில் இந்துஸ்தானிதான் ஆட்சி மொழியாக, பொதுமொழியாக இருக்க வேண்டும்' என்று பிரகடனப்படுத்தினார்.
பாரசீகம், அரபு, சம்ஸ்கிருத மொழிகளின் கலப்பில் உருவானது இந்துஸ்தானி. ஆனாலும் அதில் பாரசீக, அரபுச் சொற்கள் அதிகம். இந்தியர்களில் பலர் இந்துஸ்தானியை ஏற்றுக்கொள்ளவில்லை. சம்ஸ்கிருத்தில் இருந்து உருவான- பன்னிரண்டு பேச்சுமொழிகளை உள்ளடக்கிய இந்திதான் இந்தியமொழி, அது இந்துக்களின் சொந்த மொழியாகக் கருதப்பட்டது.
இந்தியா சுதந்திரம் பெற்றது. இந்தி மொழியை இந்தியாவின் ஒரே ஆட்சிமொழியாக்க விரைவாகக் காரியங்கள் நடக்க ஆரம்பித்தன.
இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் என்று புதிய நாடு உருவாக்கப்பட்டது. பாகிஸ்தானில் வங்காளம், உருது, இந்தி, பஞ்சாபி என்று பல மொழிகள் பேசப்பட்டு வந்தன. 1948-ஆம் ஆண்டில் பாகிஸ்தான் கவர்னர் ஜெனரலாக இருந்த முகமது அலி ஜின்னா, 'உருது, உருது மொழி ஒன்றே பாகிஸ்தான் ஆட்சிமொழி' என்று அறிவித்தார். அவருக்கு உருது மொழி பேசவோ,எழுதவோ தெரியாது. அவரது தாய்மொழி குஜராத்தி.
பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்த கிழக்கு பாகிஸ்தானில் பெரும்பான்மையானவர்களின் தாய்மொழி வங்காளம். அவர்கள் உருது ஆட்சிமொழி என்பதை ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். 'உருதுவை எங்கள் மீது திணிக்கக் கூடாது' என்று கிளர்ச்சி செய்தார்கள். போராட்டங்கள் நடத்தினார்கள்.
1956-ஆம் ஆண்டில் மாணவர்கள் டாக்கா பல்கலைக்கழகத்தின் முன்னே கூடி ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள். பொதுமக்கள், எழுத்தாளர்கள் என்று பலரும் அதில் கலந்து கொண்டார்கள். பிப்ரவரி-21-ஆம் தேதி மொழிப் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்தது. போலீஸ் துப்பாக்கியால் சுட்டது. சில மாணவர்கள் இறந்து போனார்கள். கிளர்ச்சி அடங்கவில்லை. 1971-ஆம் ஆண்டில் மொழி அடிப்படையில் தனிநாடு உருவாகியது. அதுதான் வங்கதேசம்.
தாய்மொழிக்காகப் போராடி தனி நாடு பெற்ற மக்களை கெளரவப்படுத்தும் விதமாக 1999-ஆம் ஆண்டு முதல் ஐ.நா. சபையின் யுனெஸ்கோ சார்பாக 'உலக தாய்மொழி தினம்' பிப்ரவரி 21-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அது, அழிவின் விளிம்புக்குச் சென்று கொண்டிருக்கும் தாய்மொழிகளைக் காக்கும் காரியந்தான்.
இந்தியாவின் 'மேலே' இருக்கும் நாட்டில் ஒரு மொழிப்போர் நடைபெற்றதுபோல, 'கீழே' உள்ள தீவு நாடான இலங்கையிலும் நடைபெற்றது. இலங்கை 1948-ஆம் ஆண்டில் பிரிட்டிஷாரிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. உடனே ஆங்கிலத்தை அகற்றிவிட்டு சுதேசி மொழிகளான சிங்களம், தமிழ் மொழிகளை ஆட்சிமொழியாக்கினார்கள்.
ஜனநாயகம் என்பது தேர்தல், பொதுமக்கள் வாக்கு பற்றியது. மக்கள் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு, சகோதர மனிதர்களிடையே பகையை வளரவிட்டு வாக்குகளை அள்ளுவதுதான்.
இலங்கையில் எழுபத்தைந்து சதவீதம் பேர் சிங்கள மொழி பேசுகிறவர்கள். எனவே அவர்கள் வாக்குகளை அப்படியே பெற, இங்கிலாந்தில் படித்த சாலமன் பண்டாரநாயகே 1956-ஆம் ஆண்டு தேர்தலில் தன் கட்சி வெற்றி பெற்றால் 'சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி, தமிழுக்கு ஆட்சிமொழி அதிகாரம் இல்லை' என்றார். சிங்கள மொழி பேசும் பெரும்பான்மையானவர்கள் சாலமன் பண்டாரநாயகே கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தார்கள். அவர் கட்சி வெற்றி பெற்று பிரதம மந்திரியானார். தேர்தலில் சொல்லியபடி சிங்கள மொழி ஒன்றே இலங்கையில் ஆட்சிமொழி என்று சட்டம் போட்டார்.
ஒரு நாடு, ஒரு மொழி என்ற சித்தாந்தத்தை புதிதாகச் சுதந்திரம் பெற்ற சுற்றியுள்ள நாடுகளுக்கு இந்தியாதான் பரப்பியது. ஒரு நாடு, ஒரு மொழி என்பது மனித சமுதாயத்தின் மீது ஏவி விடப்படும் வன்முறை. எந்த நாடும் எக்காலத்திலும் ஒரு மொழி நாடாக இருந்ததில்லை. பன்மொழிகள் பேசப்படும் நாடாகவே இருந்து வந்திருக்கிறது.
மனிதர்கள் ஒன்றுபோல் இருப்பினும் உளவியல் ரீதியில் ஒன்றானவர்கள் இல்லை. ஒரு வளமான நாடு என்பதே பல மொழிகள், பல கலாசாரங்கள் இனங்கள் சேர்ந்து இருப்பதுதான். வேற்றுமையில் ஒற்றுமை என்பது மனிதர்களை எல்லா நாட்டிலும் வாழ வைக்கிறது. அதனை அறியவும், அறிந்து செயல்படவும் தெரியாத அரசியல் தலைவர்கள் குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள். மனித சமூக விரோதிகள். அவர்கள் எத்தனைதான் பிரபலமாக இருந்தாலும் - நாட்டிற்கு நன்மை செய்வதைவிட தீமையே செய்கிறார்கள்.
 

]]>
http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/mar/08/ஒரு-நாடு-ஒரு-மொழி-2876350.html
2876349 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் வெறும் பேச்சோடுதானா...? இடைமருதூர் கி. மஞ்சுளா DIN Thursday, March 8, 2018 02:37 AM +0530 மார்ச் 8-ஆம் தேதி, இன்று ஒரு நாள் மட்டும் மகளிரைப் பெருமைப்படுத்தும்படியான பல நிகழ்ச்சிகள் உலகெங்கிலும் நடைபெறுகின்றன. அன்றிரவோடு அன்றைய 'மகளிர் தின'க் கொண்டாட்டமும் முடிவுக்கு வந்துவிடும். 
'பெண்ணின்' பெருமைகளையும், உரிமைகளையும், பாதுகாப்புகளையும் பற்றிப் பலகாலம் பேசிப் பேசி அவற்றை ஏடுகளில் பதிவு செய்த நல்லறிஞர்களின் நன்மொழிகள் எல்லாம் வெறும் ஏட்டுச் சுவடிகளிலும், புத்தக அலமாரிகளிலும் பாதுகாக்கப்பட்டு, நிம்மதியாக இருக்கின்றன. ஆனால், மகளிருக்குத்தான் சங்க காலம் தொடங்கி, சமகாலம் வரை எந்தவிதப் பாதுகாப்புமில்லை; சுதந்திரமுமில்லை; நிம்மதியுமில்லை.
பாரத தேசம், நதி, ஆறு, மொழி, கல்வி, செல்வம், வீரம் எனப் பலவற்றையும் பெண்ணாகவும் பெண் தெய்வங்களாகவும் பாவித்துப் போற்றுவது தமிழர் மரபு. ஆனால், அம்மரபில் வந்துதித்த மகளிர்க்குப் பாதுகாப்பில்லை. 
இன்றைக்கு அனைத்துத் துறைகளிலும் ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் கோலோச்சி, பல சரித்திர சாதனைகளைப் புரிந்து வருகின்றனர். என்றாலும், வீட்டில், நாட்டில், தெருவில், பேருந்துகளில், பள்ளி, கல்லூரிகளில், பணியிடங்களில் என அன்றாடம் அவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகளும், பிரச்னைகளும் குடும்ப வன்முறையாக, பாலியல் பலாத்காரமாக, ஒருதலைக் காதலாக, சங்கிலிப் பறிப்பாக பூதாகாரம் எடுத்துவந்து அவர்களை அச்சுறுத்துகின்றனவே! 
தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஒரு நாளைக்கு 50-க்கும் மேற்பட்ட சிறுமியரும், இளம் பெண்களும் பாலியல் வன்முறைக்கும், சீண்டல்களுக்கும், ஒருதலைக் காதல் கட்டாயத்துக்கும் உள்ளாக்கப்படுகின்றனராம். அதனால்தான் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ, பணியிடத்துக்கோ சென்ற தங்கள் பெண் பாதுகாப்பாக வீடு வந்து சேர வேண்டுமே என்கிற பயத்தில் அன்றாடம் ஒவ்வொரு பெற்றோரும் தவிக்கின்றனர்.
பகவான் ராமகிருஷ்ணரும், சுவாமி விவேகானந்தரும் பெண்மையின் இறைமைத் தத்துவங்களை வலியுறுத்தினார்கள். பகவான் ராமகிருஷ்ணர் பெண்ணைப் பெருந் தெய்வமாகவே கண்டார். ஆண்-பெண் பால் வேற்றுமை அகன்றால் மனித குலம் அமைதி பெறும்; பெண் வளம் பெற்றால் சமுதாயம் வளம்பெறும் என்றார் சுவாமி விவேகானந்தர். யார் கேட்கிறார்கள்?
பெண்கள் முன்னேற்றம், பாதுகாப்பு, உரிமைகள் குறித்து ஒளவையார், வேதநாயகம் பிள்ளை, மகாகவி பாரதியார், திரு.வி.க., போன்றோர் கூறியவை வெறும் ஏட்டோடு இருப்பதால்தான், அன்றாடம் கொலை, கொள்ளை, தற்கொலை, பாலியல் பலாத்காரம் போன்றவற்றை இந்தியா மட்டுமல்ல அனைத்து நாடுகளும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. 
'ஏன் நம்நாடு மற்ற எல்லா நாடுகளைக் காட்டிலும் வலுவிழந்தும் பின்தங்கியும் இருக்கிறது தெரியுமா? இங்குதான் 'சக்தி' அதிகமாக அவமதிக்கப்படுகிறாள். பெண்களை உயர்த்துவதும், மக்களை விழிப்புணர்வு அடையச் செய்வதுமே நாம் முதலில் செய்ய வேண்டியது. அப்பொழுதுதான் நம் நாட்டுக்கு நாம் செய்யும் மற்ற நல்ல காரியங்கள் வெற்றியடையும். பெண்கள் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம்' என்று இந்தியப் பெண்களின் பெருமையை விரிவாக எடுத்துரைத்தவர் சுவாமி விவேகானந்தர். 
'இவ்வுலக ஆக்கமும் அழிவும் பெண்ணிடத்திருக்கின்றன' என்கிறார் திரு.வி.க. அவரே, 'பெண்களைக் கேலி செய்வதும், தாழ்த்திப் பேசுவதும், அவர்களிடம் குறும்புகள் செய்வதும், ஆண் தன்மைக்கு இழிவு. பெண்மணிக்கு இழிவு நேருமாயின் அதைப் போக்க ஆண்மகன் விரைதல் வேண்டும். இல்லையேல் அவன் ஆண்பிறவி எய்தியவனாகான்' என்றார். ஆனால், இன்றைக்கு பெண்களுக்கு எதிராக நடக்கும் அனைத்துக் குற்றப்பின்னணியிலும் இருப்பது ஆண்களே!
'பெண்கள் மனித இனத்தின் அழகிய நல்ல பகுதி' என்று கூறிப் பெண்களைக் மேன்மைப்படுத்தியது இஸ்லாம். திருக்குர்ஆனும், நபிகள் நாயகமும் (ஸல்) பெண்களுக்கு மேலான உரிமைகள் பலவற்றை வழங்கிக் கண்ணியப்படுத்தியுள்ளதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். பெண்களின் கடமைகளையும் உரிமைகளையும் விளக்கத் திருக்குர்ஆனில் 'அன்னிஸா' (பெண்கள்) என்ற ஓர் அதிகாரமே அருளிச் செய்யப்பட்டிருக்கிறது.
பெண் குழந்தைகளைக் கொலை செய்வது மகாபாவம் என்றும், பெண் குழந்தைகளைப் பேணிப் பாதுகாக்கும்படியும் கூறுகிறது திருக்குர்ஆன். 'பெண் குழந்தைதான் மேலான செல்வம்' என்று நபிகள் நாயகம்(ஸல்) கூறியுள்ளார்.
'அவள் உயிரோடிருக்கிற நாளெல்லாம் அவனுக்குத் தீமையல்ல, நன்மையே செய்கிறாள்' என்பது பைபிள் மொழி (நீதிமொழிகள் 31:11,12). 'சூட்சும புத்தியும் ஞானமு முள்ள ஸ்திரீகள்' என்று போற்றுகிறார் வேதநாயகம் பிள்ளை.
'பெண்களை நம்மவர்கள் மரியாதையுடன் நடத்துவதில்லை' என்கிற பெருங்குறை மகாகவி பாரதிக்கு இருந்ததனால்தான், 'ஸ்திரீகளைப் புருஷர்கள் அடிப்பதும் திட்டுவதும் கொடுமை செய்வதும் எல்லையின்றி நடைபெற்று வருகின்றன. சீச்சி! மானங்கெட்ட தோல்வி ஆண்களுக்கு!' என்றும்; 'நாகரீகம் பெற்றுவரும் ஜாதியாருக்கு முதல் அடையாளம் அவர்கள் ஸ்திரீ ஜனங்களை மதிப்புடன் நடத்துவதே யாகும்' என்கிறார். 
இன்றைக்குப் பெண்ணுரிமையும், பெண் சுதந்திரமும், பெண் பாதுகாப்பும் வெறும் எழுத்தோடும், பேச்சோடும், திரைக் காட்சிகளோடும் மட்டும் நின்று போகின்றன. இனிவரும் ஆண்டிலாவது இவற்றை எல்லாம் நடைமுறைக்குக் கொண்டு வந்தால் மட்டுமே நாம் 'மகளிர் தினம்' கொண்டாடுவதில் பொருள் இருக்கும்; பெருமையும் கொள்ளலாம். இல்லையேல், ஒரு நாள் மட்டும் பெண்களைக் கொண்டாடும் வழக்கம் மண்மூடிப் போகட்டும்! எந்நாளும் பெண்களைக் கொண்டாடி, அவர்களுக்கு நிரந்தரப் பாதுகாப்பளிக்கும் நன்நாடே இன்றைய தேவை. 
'பெண்' பாதுகாப்பு உடனடியாக உறுதி செய்யப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, அரசின் தலையாய கடமையும்கூட! 'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்' என்ற மகாகவியின் திருவாக்கு எப்போது நனவாகப் போகிறது?

]]>
http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/mar/08/வெறும்-பேச்சோடுதானா-2876349.html
2875692 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் வைணவத்தின் விழுது - வேதாந்த தேசிகர் பேராசிரியர் தி. இராசகோபாலன் DIN Wednesday, March 7, 2018 01:32 AM +0530 எம்பெருமானார் - உடையவர் இராமாநுஜர் பரமபதித்த பின்னர் வைணவத்தின் தலைமை பீடம் வெற்றிடமாகவில்லை; சுவாமி தேசிகன் எனப்படும் வேதாந்த தேசிகர் தோன்றியதால், அது வெற்றியிடமாயிற்று. எம்பெருமானாருடைய தரிசனத்தையும், விருத்தியுரையையும் வேதாந்த தேசிகர் மேலும் பிரகாசப்படுத்தியதால், அவர் நிகமாந்த தேசிகர் எனப் பெற்றார். (நிகமாந்த என்பதற்குப் பிரகாசப்படுத்தல் எனப் பொருள்). வடகலையினருக்கு வேதம் முதன்மையானது என்றால், நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தை 'உபயவேதாந்தம்' என அழைக்கும் வழக்காற்றை, வேதாந்த தேசிகர் உருவாக்கினார். ஆழ்வார்கள் அருளிச் செய்தவை 'நாலாயிர திவ்யப் பிரபந்தம்' என்றால், தேசிகர் அருளிச் செய்தவை, 'தேசிகப் பிரபந்தம்' எனப்படுகிறது.
வேதாந்த தேசிகர் 1268-ஆம் ஆண்டு, புரட்டாசி மாதம், திருவோண நட்சத்திரத்தில், காஞ்சிபுரத்தை அடுத்துள்ள தூப்புல் எனும் சிற்றூரில் அனந்தசூரி சோமயாஜிக்கும் தோதாரம்மாவுக்கும் மகனாக அவதரித்தார். தூப்புல் என்றால் தூய்மையான புல், தர்ப்பை எனவும் பொருள்படும். தூப்புலில் தோன்றியதால் இளமைக்காலத்தில் வேதாந்த தேசிகர் 'தூப்புல் பிள்ளை' என அழைக்கப்பட்டார். திருமலையில் உள்ள திருமணியின் அம்சமாக இவர் அவதரித்ததால், 'வேங்கடநாதன்' எனப் பெயரிட்டனர் பெற்றோர்.
தேசிகரின் தாய்மாமனாகிய கிடாம்பி அப்புள்ளான், ஐந்து வயதான தூப்புல் பிள்ளையை நடாதூர் அம்மாளுடைய (நடாதூர் பெண்ணன்று; ஆண் ஆச்சாரியர்) உபன்யாசத்திற்கு அழைத்துச் சென்றார். தூப்புல் பிள்ளையின் முகத்தில் தோன்றிய தீட்சண்யத்தை உற்று நோக்கிய நடாதூர் அம்மாள், பேருரையை பாதியிலே நிறுத்திவிட்டு, தூப்புல் பிள்ளையை அழைத்து, 'இந்தப் பிள்ளை எதிர்காலத்தில் மிகப்பெரிய வேத விற்பன்னராக வருவார். எம்பெருமானாருடைய தரிசனத்தை நிலைநிறுத்தக் கூடிய வல்லமை பெற்றவர் இவரே' என ஆசீர்வதித்து, அவையினருக்கும் அறிமுகம் செய்தார். பின்னர் நடாதூர், கிடாம்பி அப்புள்ளானை அழைத்து, 'எமக்கு வயதாகிவிட்டதால் இந்தப் பிள்ளைக்கு ஆச்சாரியனாக இருந்து வித்தை கற்பிக்க முடியவில்லை; அதனால் நீரே ஆச்சாரியராக இருந்து வடமொழி, தென்மொழி வேதங்களைக் கற்பிக்கவும்' எனப் பணித்தார்.
கிடாம்பி அப்புள்ளானிடம் வேதங்களை வேங்கடநாதன் ஆதியந்தமாகக் கற்றார். வடமொழி - தமிழ்மொழி - மணிப்பிரவாளம் - பிராகிருதம் ஆகிய மொழிகளில் 124 நூல்களை எழுதக்கூடிய பாண்டித்யத்தைப் பெற்றார். எனினும் தமிழ் மீதிருந்த தீராக் காதலினால் தம்மைச் 'சந்தமிகு தமிழ்மறையோன்' என அழைத்துக் கொண்டார். 'சூரியனுடைய ஒளி பரவாத இடத்தைக் கூடக் காணக்கூடும்; ஆனால், தூப்புல் பிள்ளையின் புகழ் பரவாத இடத்தைக் காணுதல் அரிது' என வைணவம் அவரை ஆராதித்தது. தேசிகரின் ஆளுமையைக் கேட்டு ரெங்கமன்னார், 'வேதாந்தாச்சார்யர்' என ஆசீர்வதித்தார்; ரெங்கநாயகி 'சர்வதந்த்ர ஸ்வதந்த்ரர்' என விருது வழங்கினார்.
உரிய பருவத்தில் வேங்கடநாதனுக்கு திருமங்கை எனும் நல்லாளுடன் திருமணமும் நடந்தது. காஞ்சிப் பேரருளாளன் அருளினால் பிறந்த குழந்தைக்கு 'வரதன்' எனப் பெயர் சூட்டினார்.
தேசிகர் ஆழ்வார்கள் மீது அளப்பரிய காதல் கொண்டவர். ஆழ்வார்கள் திருமாலின் மறு அவதாரங்கள் எனச் சொல்லி, அவர்களை அபிநவ தசாவதாரம் எனவும் அழைத்தார். அவர் காலத்தில் வேதங்களைச் சிலர்தாம் கற்கலாம் என்ற நிலை இருந்தது. அதனால் தேசிகர் எல்லா வருணத்தைச் சார்ந்தவரும் பெண்களும் வேதத்தைக் கற்கலாம் எனச் சொல்லி, 'சில்லரை ரகசியங்கள்' எனுந் தலைப்பில் 32 நூல்களை இயற்றினார். நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை 'பழமறையின் பொருள்' என்றார். நாலாயிரத்தைக் கற்று வேதங்களில் புரிந்து கொள்ள முடியாத இடங்களைப் புரிந்து கொண்டதாக தேசிகர் கூறுகின்றார். 'செய்ய தமிழ்மாலைகள் நாம் தெளிய ஓதித் தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே' என்பதில் அழுத்தமான நம்பிக்கை கொண்டிருந்தார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இராப்பத்து, பகல்பத்து உற்சவம் நடந்த காலை, பெருமாளுக்கு முன் திவ்யப் பிரபந்தம் ஓதுவதைச் சாத்திர விரோதம் எனக் கூறிச் சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர். தேசிகர், 'நாலாயிரமும் பரம வைதிகமே' என வாதிட்டு, அதனை நிறுவி, உற்சவம் தடையின்றி நடப்பதற்கு வழிவகுத்தார். இந்த வெற்றிக்கு அறிகுறியாகப் பேரருளாளனாகிய வரதராஜ பெருமாள் தம்முடைய திருச்சின்னங்கள் இரண்டனுள் ஒன்றை தேசிகருக்கு மகிழ்ந்தருளினார். அந்த வரலாற்றைப் பின்பற்றியே வரதராஜ பெருமாளுக்கு இன்றும் ஒற்றைச் சின்னமே சேவிக்கப்படுகின்றது. தேசிகரும் தமிழ் இலக்கியத்தில் இதுவரை யாராலும் எழுதப்படாத 'திருச்சின்னமாலை' என்ற பிரபந்தத்தை அருளிச் செய்தார்.
பிற மதத்தார் படையெடுப்பால் திருவரங்கம் பெரிய கோயில் 48 ஆண்டுகள் நித்ய பூசையின்றிக் கிடந்தது. மூலவருக்கு எந்தவிதச் சேதமும் ஏற்படாதவாறு சுவாமி தேசிகன் ஒரு கற்சுவரெழுப்பி பகைவர் கண்ணில் படாதவாறு பாதுகாத்தார். உற்சவர் போன்ற விக்கிரகங்களைத் திருமலைக்கு எடுத்துச் சென்று பாதுகாப்பாக வைத்திருந்தார். பின்னர் செஞ்சியை ஆண்ட கோப்பணார்யன் எனும் அரசன் உதவியினால் திருக்கோயில் திறக்கப்பட்டது. ஊரைக் காலி செய்துவிட்டு வேற்றூர் சென்றவர்கள் எல்லாம் திருவரங்கம் திரும்பினர். மார்கழிப் பெருவிழாவின்போது ஆழ்வார்களுடைய திருவுருவங்களை வரிசையாக அலங்கரித்துக் கொணர்ந்தனர். ஆனால், விசாலமான மனசில்லாத சிலர், பல சாதிகளைச் சார்ந்த ஆழ்வார்களுடைய திருவுருவங்களைக் கோயிலுக்குள் கொணர்வது சாஸ்திர விரோதம் என்று எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், எதிர்ப்புத் தெரிவித்தவர்களோடு வேதாந்த தேசிகர் வாதாடி, தமிழ்மறை தந்தருளிய ஆழ்வார்களுக்கு விக்கிரகப் பிரதிஷ்டை, உற்சவங்கள் நடைபெற வேண்டுமென்ற முன்னோர்கள் மரபைக் காட்டி நிறுவினார். பின்னர் திருவிழா கோலாகலமாக நடந்தேறியது.
வேதாந்த தேசிகர் அருளிச் செய்த படைப்புகளில் அதிஅற்புதமானது, 'பாதுகா சஹஸ்ரம்' எனும் வடமொழி நூல். பெருமாளுடைய பாதுகையைப் பற்றி இதுவரை எந்த அருளாளரும் எந்த மொழியிலும் பாடவில்லை. நம்மாழ்வாரும் பாதுகையும் ஒன்றே என்று ஒரு சுலோகம் அதில் இடம்பெற்றிருக்கிறது. பாதுகையின் பெருமையை நன்குணர்ந்தவன் பரதன் என்பதால், அவன் 'பரதாழ்வான்' எனப் பாராட்டப்படுவதாக தேசிகர் கருதுகிறார். 'ஒரு காலத்தில் எனக்கு என்னுடல் பெரிதாகத் தெரிந்தது; பின்னர் இறைவனே பெரிதாகத் தெரிந்தான். இப்பொழுது எனக்கு உடம்பும் பெரிதில்லை; இறைவனும் பெரியவன் இல்லை; பாதுகையே, நீயே பெரியவர்' என அருளிச் செய்கிறார் தேசிகர்.
'வானம் அனைத்தையும் ஏடாகக் கொண்டு, ஏழு சமுத்திரங்களையும் மையாகக் கொண்டு, ஆயிரம் தலைகளையுடைய பெருமாளே எழுதினால்தான், பாதுகையின் பெருமையைச் சொல்ல முடியும் என நவில்கின்றார் சுவாமி தேசிகர்.
சுவாமி தேசிகருடைய இளமைக்கால நண்பர் வித்யாரண்யர். அவர் விஜயநகர மன்னருக்கு அணுக்கமாக இருந்தார். தேசிகருடைய அசாத்தியமான ஆற்றலை அறிந்த வித்யாரண்யர், மன்னரிடம் பக்குவமாக எடுத்துரைத்தார். மன்னரும் அரசவைக்கு வருமாறு தேசிகருக்கு ஓர் முடங்கல் அனுப்பினார். ஆனால் விஜயநகர மன்னரை தேசிகர் சந்திக்க மறுத்தார். காஞ்சிப் பேரருளாளனே பெரியவன் என்று கூறி, 'வைராக்ய பஞ்சகம்' என்ற பிரபந்தத்தையும் அருளிச் செய்து, அதனை அரசருக்கு அனுப்பினார். 'வம்மின் புலவீர்! இம்மண்ணுலகில் செல்வர் இப்போது இல்லை!... என்னாவது எத்தனை நாளைக்குப் போதும் புலவீர்காள்! மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும் பொருள்' எனும் நம்மாழ்வார் பாசுரங்கள் தேசிகருடைய மனத்தில் ஆழமாகப் பதிந்திருந்தது போலும்.
தேசிகர் வைணவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். ஒருநாளைக்குக்கூட அவர் பயனின்றிப் பொழுதை கழித்ததில்லை. காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்ததில் இருந்து இரவு உறங்கச் செல்லும்வரை, அவர் தமக்கென ஒரு செயல் திட்டத்தை வைத்திருந்தார். இது 'வைஷ்ணவ தினசர்யை' என்று இன்றும் பல்லோராலும் பின்பற்றப்படுகிறது.
தேசிகர் ஆச்சாரியனுக்கு நல் ஆச்சாரியராகவும், பாகவதர்களுக்கே ஒரு தலைசிறந்த பாகவதராகவும் இருந்தார். ஓர் ஆச்சாரியன் எப்படி இருப்பார் என்பதைப் பட்டுக் கத்தரித்தாற்போல எடுத்துரைக்கின்றார். 'ஆச்சாரியன் தம் மனத்துக்குள்ளே பொதிந்து கிடக்கும் தத்துவார்த்தங்களை பணிவோடும் பக்குவத்தோடும் வந்து கேட்கும் சீடர்களுக்கு வாரி வழங்குவார். அவர் பெரிய புகழ் வரும் என்றோ, பெரும்பொருள் வருமென்றோ புண்ணியம் கிடைக்கும் என்றோ எதிர்பார்த்து உபதேசிக்க மாட்டார்கள். சீடர்களைக் கன்றுகளாகப் பாவித்துத் தாம் காமதேனுவைப் போல உபதேச மொழிகளை அள்ளி வழங்குவார் என நயம்பட எடுத்தோதுகின்றார்.
ஆச்சாரியனுக்கு இலக்கணம் வகுத்தது போல், சீடனுக்கு இருக்க வேண்டிய ஒழுகலாறுகளையும் இரத்தினச் சுருக்கமாகக் கட்டறுத்துச் சொல்லுகிறார் தேசிகர். 'பாகவதர்களின் மனத்திலிருக்கும் அஞ்ஞானமாகிய இருளை ஒழித்து, ஞானமாகிய விளக்கை ஏற்றுகின்றனர் ஆச்சாரியர்கள். ஆசாரியனுக்குரிய பிரதிபலனை ஆற்றுவதற்கு, ஆச்சரியங்களை நிகழ்த்தும் சர்வேசுவரனாலும் முடியாது என்றால், மற்றவர்களால் எப்படி முடியும்? ஆனால், சீடர்கள் ஆச்சாரியர்களை மனத்தால் தியானிக்க வேண்டும்; அவர்களுடைய கீர்த்தியைப் பேசிப்பேசி வளர்க்க வேண்டும். இவையனைத்தும் ஆச்சாரியன் மேலுள்ள பக்திக்கு ஒரு வடிகாலாக அமையுமே அன்றி, பெற்ற ஞானத்திற்குச் சிறிதும் ஈடாக மாட்டா' என அருளிச் செய்கிறார்.
சுவாமி தேசிகர் வீறார்ந்த வீர வைணவராக வாழ்ந்தார்; திவ்ய தேசங்கள் அனைத்தையும் தரிசித்தார். ஈரத்தமிழில் இலக்கியங்கள் படைத்தார். மறுகண்ணாகத் திகழ்ந்த வடமொழியிலும் அதிசயிக்கத்தக்க இலக்கியங்களைப் படைத்தருளினார். வேதப்பிராயம் நூறு என்பதற்கேற்ப நூறாண்டுக்கு மேல் வாழ்ந்தார். தமக்குப் பின்னால் வைணவம் தழைக்க, வாழையடி வாழையாகச் சீடர்களையும் உருவாக்கினார். 1369-ஆம் ஆண்டு, சீடர்கள் சூழ்ந்திருக்க திருநாடு அலங்கரித்தார். எம்பெருமானார் வைணவத்தின் வேர் என்றால், வேதாந்த தேசிகரை விழுது எனச் சொல்லலாம்.
நானிலமும் தான் வாழ, நான்மறைகள் தாம் வாழ
மாநகரின் மாறன் மறை வாழ - ஞானியர்கள்
சென்னி அணிசேர் தூப்புல் வேதாந்த தேசிகனே
இன்னுமொரு நூற்றாண்டிரும்
எனும் தனியன், காலங்கள்தோறும் தேசிகர் புகழைப் பேசிக்கொண்டே இருக்கும்.
குறிப்பு:
இவ்வாண்டு ஸ்ரீ வேதாந்த தேசிகரின் 750-ஆம் ஆண்டாகும்.
 

]]>
http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/mar/07/வைணவத்தின்-விழுது---வேதாந்த-தேசிகர்-2875692.html
2875051 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் நீரவ் மோடி வங்கிகளுக்கு போதித்த பாடம் எஸ். ராமன் DIN Tuesday, March 6, 2018 01:44 AM +0530 பல லட்சம் கோடி ரூபாய் அளவில் வாராக்கடன் எனும் சுனாமியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் வங்கிகள், மத்திய அரசின் மறு முதலீட்டு திட்டத்தினால் புத்துயிர் பெற்று மீண்டு எழுந்துவிடும் என்ற நம்பிக்கை நிழலில் நாம் அனைவரும் இளைப்பாறிக் கொண்டிருக்கும் தருணத்தில், வங்கி கடன் மோசடிகள் பற்றிய செய்திகள் ஒன்றன் பின் ஒன்றாக அணி வகுத்து, நம்மை அதிர வைத்துக் கொண்டிருக்கின்றன.
செயல்பாட்டு வழி முறைகளில் ஏற்பட்ட சில குறைபாடுகள்தான் இம்மாதிரி மோசடி நிகழ்வுகளுக்கு காரணம் என்று சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகம் சார்பில் சொல்லப்பட்டாலும், அந்த குறைபாடுகளை குறைந்த இடைவெளியில் அடையாளம் கண்டு, சரி செய்யாமல்விட்டதுதான் பெரிய நிர்வாக குறைபாடு என்ற முடிவுக்கு வருவதற்கு பெரிய பொருளாதார நிபுணத்துவம் தேவை இல்லை.
புலனாய்வு அமைப்புகள், இந்த நிகழ்வுகளின் பிண்ணனியை ஆராய்ந்து, அனைத்து குற்றவாளிகளையும் தேடிக் கண்டுபிடித்து வழக்கு தொடர்ந்து அவர்களை தண்டிப்பதற்குள் ஆண்டுகள் பல ஓடிவிடும். நீதிமன்றங்களில் வழக்கின் வாதங்களை வலுப்படுத்த தேவையான அனைத்து ஆவணங்களும் சிதைக்கப்படாமல், புலனாய்வு அமைப்புகளுக்கு கிடைக்க வேண்டும். வாங்கிய கடனை திரும்ப செலுத்தாமல், கடனாளிகள் எல்லை தாண்டி தப்பித்துவிட்டால், அந்நிய நாட்டு சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டாக வேண்டிய கட்டாயத்தில், இந்த அமைப்புகளின் பணி மிகக் கடினமாகிவிடும். இந்த சூழ்நிலையில், கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில், வங்கிகள் இம்மாதிரி மோசடிகளில் இழந்த தொகையை முழுவதும் மீட்டு எடுப்பது என்பது இயலாத காரியம் என்பதை நாம் அறிவோம். 
வங்கிகளில் பெருந்தொகை கடன் மோசடிகள் அரங்கேறுவதற்கு முக்கிய காரணம், கடனாளிகள், வங்கி நிர்வாகத்தைவிட அதிக நுண்ணறிவும், ஆற்றலும், சமயோசித புத்தியும், சமூக அந்தஸத்தும், வலுவான தொடர்புகளும் பெற்றிருப்பதுதான் என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆகவேண்டும். ஆகவே, இவர்களின் மோசடி நடவடிக்கைகளிலிருந்து, வங்கி நிர்வாகங்கள் பாடம் கற்றுக் கொள்வதில் தவறு இல்லை.
சமீப காலங்களில், தங்க நகை மற்றும் வைர வியாபாரங்களுக்கு பல வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்கள், வசூலிக்க முடியாமல் வாராக்கடன்களாக மாறிய அனுபவங்கள் பகிரப்படாமல் அல்லது பகிரப்பட்டு பாடம் கற்கப் படாமல் இருந்தது வங்கி நிர்வாகங்கள் அறிந்தே செய்த தவறாகும். தங்கம் மற்றும் வைர வியாபாரத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் வழங்கும்போது, பிணை மதிப்பீடுகளுக்குத் தேவையான நுண்ணறிவு வங்கிகளிடம் அறவே கிடையாது என்று சொல்லலாம். 
பல வகைப்பட்ட வைரங்கள், தரத்திற்கு ஏற்ப பல்வேறு மதிப்புடையவை. அவைகளுக்கான தர மதிப்பீட்டு திறமை பிரிவு வங்கிகளில் இல்லை. அதற்கு பதிலாக, மற்ற எல்லாவற்றையும்விட, கடனாளியின் சமூக அந்தஸ்துக்கான மதிப்பீடு ஒன்றை மட்டுமே, பெரும் அளவில் கடன் வழங்குவதற்கும், வழங்கப்பட்ட கடனை வசூல் செய்யாமல் இருப்பதற்கும் வங்கிகளால் பின்பற்றப்படும் தவறான நடைமுறை என்பது பெரும் குறையாகும். 
நல்ல சமூக அந்தஸத்து உள்ளவர்கள் ஏமாற்ற மாட்டார்கள் என்ற தவறான எண்ணம் வங்கிகளிடையே வேரூன்றி இருப்பது இம்மாதிரி நிகழ்வுகள் மூலம் வெட்டவெளிச்சமாகின்றது. இது உடனடியாக நிவர்த்தி செய்யப்பட வேண்டிய ஒரு பெரும் குறையாகும்.
நீதிமன்றம் வேதனையுடன் சுட்டிக் காட்டும் அளவுக்கு, 25,000 ரூபாய் கல்விக் கடனுக்கு ஆயிரம் வினாக்களை எழுப்பி, கடனை மறுக்கப் பாடுபடும் வங்கி அதிகாரிகள், பெருந்தொகை கடனாளிகளிடம் எந்தவித வினாக்களையும் எழுப்பாததை செயல்பாட்டு வழிமுறையிலுள்ள குறை என்பதைவிட, அவர்களின் செயல்திறன் மற்றும் சமூக நலனுக்கான அக்கறையில் குறைபாடு என்றே கருதலாம். 
பெரும்பாலும், வைரம் போன்ற அரிய வகை கற்களுக்கான மூலப் பொருள்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அவை பட்டை தீட்டப்பட்டு, குறிப்பிட்ட பிராண்ட் பெயருடன் பெருமளவில் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது நடைமுறை வியாபாரமாகும். இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் இடைப்பட்ட காலத்தில் ஏற்படும் நிதித் தேவைகளை சமாளிக்க வங்கிகள் பல்வேறு கடன் திட்டங்களில் நிதி உதவி வழங்கி, பன்னாட்டு வியாபாரத்தை ஊக்குவிக்கின்றன. 
அவ்வாறு வழங்கப்பட்ட கடன் திட்டத்தின் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பு, அதை விற்றவர்களுக்கு செலுத்த பயன்படுத்தப்படுகிறதா என்று வங்கிகள் கண்காணிக்க வேண்டியது மிக அவசியம். மேலும், வங்கி கடனில் கொள்முதல் செய்யப்பட்ட மூலப்பொருள் மேம்படுத்தப்பட்டு / பதப்படுத்தப்பட்டு விற்கப்பட்டால்தான், அந்த விற்பனை தொகையை பயன்படுத்தி, கடனாளி கடனை திரும்ப செலுத்த முடியும். இல்லையென்றால், அந்த கடன் வாராக்கடனாக உருவெடுக்க வாய்ப்புகள் அதிகம். 
வைர ஏற்றுமதி வியாபாரத்தில் பல தில்லுமுல்லுகள் நடைபெறுவதாக முந்தைய வங்கி மோசடிகள் மூலம் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. வெளிநாட்டில் பெயரளவில் இயங்கும் தங்கள் குழு சார்ந்த துணைநிறுவனங்களுக்கு வைரக்கற்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதாக வங்கிகளுக்கு தெரிவிக்கப்பட்டு, அதற்கான கடன் தொகை பெறப்பட்டுவிடும். ஆனால், விலை மதிப்பற்ற கற்களுக்கு பதிலாக, சாதாரண கற்கள் அனுப்பப்பட்ட திகில் மோசடி விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. இம்மாதிரி மோசடிகளால் வங்கிகளின் பொருளாதார இழப்பு ஏராளம். தற்போதைய நிகழ்வுகளும், ஏறக்குறைய இந்த மோசடி சூத்திரத்தின் அடிப்படையில்தான் நிகழ்ந்திருக்கிறது எனலாம். இம்மாதிரி, கடந்த கால இழப்பு சரித்திரக் குறிப்புகளை வங்கிகள் புரட்டிப் பார்த்து பாடம் படிக்க மறந்தது பெரும் குறையாகும். 
ஒவ்வொரு வங்கியிலும், பெரும் செலவில், ஐ.டி. துறை இயங்கி வருகின்றது. வங்கிகளின் வணிக செயல்பாடுகள் கணினிமயமாக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், இன்னும் பல செயல்பாடுகள் கணினி தொடர்பில்லாமல், கையேட்டு முறையிலேயே (manual process) நடத்தப்பட்டு வருகின்றன. பல வங்கிகளின் நிலை இதுதான். ஆனால், கணினி இணைப்பு இல்லாத செயல்பாடுகளை அறவே துறக்க, வங்கி நிர்வாகங்கள் போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது பெரும் குறையாகும். 
வங்கி அதிகாரிகளை கவர்வதற்காக, மோசடி நோக்குடன் செயல்படும் கடனாளிகள் அவ்வப்போது பல கவர்ச்சி வலைகளை விரித்துக் கொண்டிருப்பார்கள். அந்த வலைகளில் சிக்காமல் தப்பித்தால்தான் வங்கி அதிகாரிகளால் தங்கள் கடமையை செவ்வனே ஆற்ற முடியும். கடனாளி-அதிகாரி நெருங்கிய கூட்டணியைத் தவிர்க்கும் நோக்கத்துடன், குறிப்பிட்ட இடைவெளியில் அதிகாரிகளை வேறு பொறுப்புகளுக்கு மாற்றும் வழிமுறை வங்கிகளில் இருந்துவருகிறது. ஆனால், மேல்மட்ட நிர்வாக கூட்டணியுடன் பல அதிகாரிகள் இந்த நடைமுறையிலிருந்து தப்பி வருவதைக் கண்டுபிடிக்க, வங்கி நிர்வாகம் தவறியது பெரும் குறையாகும். ஆழ்ந்து ஆய்வு செய்தால், இது போன்ற குறைபாடுகள் மற்ற வங்கிகளிலும் நிலவுவதைக் கண்டுபிடித்து, அதை நிவர்த்தி செய்யலாம்.
கடந்த பல ஆண்டுகளாக தம்மைச் சுற்றி நடக்கும் மோசடிகளை சிறிதும் உணராமல் பணிபுரிந்த குறிப்பிட்ட வங்கிப் பணியாளர்களின் அணுகுமுறை அதிர்ச்சி அடைய வைக்கிறது. அர்ப்பணிப்பு, முழு ஈடுபாடு, சமூக நோக்கு ஆகிய குண நலன்கள் பணியாளர்களிடையே வளர்க்கப்பட வேண்டிய அவசியத்தை இந்த நிகழ்வு உணர்த்துகிறது. 
மூன்றாண்டு குறுகிய காலத்திற்கு தலைமைப் பதவிக்கு அமர்த்தப்படும் அதிகாரிகள், வங்கி சொத்துப் பாதுகாப்பைவிட, தங்கள் சொந்த பாதுகாப்புக்கே முதலிடம் வழங்குவதாக கருத்துகள் நிலவி வருகின்றன. தங்கள் சொந்த பாதுகாப்புக்கு இவர்கள் அரசியல் தொடர்புகளை நாடுவதால், பல நிர்வாக செயல்பாடுகளில் அவர்களின் சொற்படி நடக்கவேண்டியது அவசியமாகிறது. இதனால், வங்கி சொத்து பாதுகாப்பு பிறழும் வாய்ப்புகள் உள்ளன.
மோசடி தொடர்ந்த கடந்த சில ஆண்டுகளில், அந்த மோசடிகளில் வங்கித் தலைமைப் பதவிக்கு அமர்த்தப்பட்ட அதிகாரிகளின் நேரடித் தொடர்பு இல்லையென்றாலும், பொது சொத்துகளைப் பாதுகாக்கும் கடமையிலிருந்து தவறியதற்கான தார்மிக பொறுப்பை அவர்கள் ஏற்க வேண்டியது அவசியமாகும்.
வங்கிகளின் அனைத்து செயல்பாடுகளையும் மேற்பார்வையிடும் பொறுப்பை வகிக்கும் வங்கி நிர்வாகக்குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள், அவை சம்பந்தமான நுண்ணறிவைப் பெற்றவர்களாக இருப்பது மிக அவசியமாகும். அனைத்து பொது துறை வங்கிகளின் நிர்வாக செயல் குழுக்களையும் கூர்ந்து ஆராய்ந்து, அவைகளை மறு சீரமைப்பது மிக அவசியமாகும். 
அரசு கஜானாவை நிர்வகிக்கும் பொதுத் துறை வங்கிகளின் செயல்பாடுகளில் ஏற்படும் குறைகள், ஒவ்வொரு குடிமகன் செலுத்தும் நேரடி மற்றும் மறைமுக வரிகளை பெருமளவில் விழுங்கி, அதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் வல்லமை படைத்தவை என்ற சமூக உணர்வு, வரும் காலங்களில் வங்கி அதிகாரிகளின் மனதில் வேரூன்றி வளர வேண்டும். 
வங்கித் தொழில் நிர்வாகத்தை பொருத்தவரை, அதிகாரிகள் தங்களின் செயல்பாடுகள் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை ஆக்கவும் செய்யலாம்; அழிக்கவும் செய்யலாம். அவர்களிடமிருந்து ஆக்கபூர்வமான செயல்பாடுகளை மட்டும்தான் ஒவ்வொரு இந்திய குடிமகனும் எதிர்பார்க்கிறான் என்று சொன்னால் அது மிகையாகாது.

]]>
http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/mar/06/நீரவ்-மோடி-வங்கிகளுக்கு-போதித்த-பாடம்-2875051.html
2875050 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் ஏழைகளின் முதல்வருக்கு பிரியாவிடை! வ.மு. முரளி DIN Tuesday, March 6, 2018 01:35 AM +0530 'நம்ப முடியவில்லை!'
இருபது ஆண்டுகளாக திரிபுராவில் முதல்வராக இருந்த மாணிக் சர்க்காரின் ஆட்சி அண்மையில் நடந்த தேர்தலில் முடிவுக்கு வந்தபோது, பலரும் கூறிய வார்த்தைகள் இவை.
தேர்தலுக்கு இரு வாரங்களுக்கு முன் ஆங்கில நாளிதழுக்கு அளித்த நேர்காணலில், மார்க்சிஸ்ட் ஆட்சி கண்டிப்பாக மறுபடி அமையும் என்றார் அவர். ஆனால், இதுவரை திரிபுராவில் எந்த ஓர் அடித்தளமும் இல்லாதிருந்த பாஜகவிடம் அவர் தோற்றுவிட்டார்! 
நாட்டிலுள்ள மாநில முதல்வர்களில் மிகவும் வசதி குறைந்தவர் மாணிக் சர்க்கார். முதல்வர் என்ற முறையில் கிடைத்த அரசு ஊதியத்தையும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு வழங்கிவிட்டு, தனது தேவைக்காக சுமார் ரூ. 10,000 மட்டும் கட்சியிடம் பெற்றுக்கொண்டு அவர் எளிய வாழ்க்கை வாழ்ந்தார்.
தனது முன்னோர் வசித்த சிறிய வீட்டில்தான் வசிக்கிறார். அரசு படாடோபங்களை வெறுத்தவர்; காட்சிக்கு மட்டுமல்ல, அணுகவும் எளியவர்; நேர்மையானவர்; சுயநலமற்றவர். இதனை அவரது அரசியல் எதிரிகளும் ஒப்புக் கொள்கின்றனர்.
தையல் தொழிலாளியான தந்தைக்கும் அரசு ஊழியரான தாய்க்கும் மகனாக 1949-இல் பிறந்த மாணிக் சர்க்கார், கல்லூரி மாணவர் சங்கத்தின் பொதுச்செயலாளரானார். அன்றைய காங்கிரஸ் அரசுக்கு எதிராக மாணவர்களை ஒருங்கிணைத்து போராட்டங்களை நடத்தினார். பின்னர் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தார். தனது 31-வது வயதில் அகர்தலா தொகுதியின் எம்.எல்.ஏ. ஆனார்.
1993-இல் மார்க்சிஸ்ட் கட்சி திரிபுராவில் ஆட்சியைப் பிடித்தபோது அவர் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆனார். 1998-இல் அப்போதைய முதல்வர் தசரத் தேவ் காலமானபோது திரிபுராவின் முதல்வராகவும், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும் சர்க்கார் தேர்வானார். கடந்த 20 ஆண்டுகளில் மார்க்சிஸ்ட் கட்சி திரிபுராவில் தொடர்ந்து வெல்லவும் அவரே காரணமாக இருந்தார்.
சிந்தித்துப் பாருங்கள். ஒரு சாதாரண வார்டு உறுப்பினர்கூட சில ஆண்டுகளில் திடீர் கோடீஸ்வரர் ஆகிவிடுவதை நாம் கண்டுவருகிறோம். மாணிக் சர்க்காரோ, கட்சியிலும் ஆட்சியிலும் உயரிய நிலையில் பல்லாண்டுகள் இருந்தபோதும் பணத்தின் பின்னால் செல்லவில்லை.
இத்தனை சிறப்புப் பெற்ற மாணிக் சர்க்காரை திரிபுரா மக்கள் நிராகரித்திருப்பதை அவரது ஆதரவாளர்களால் நம்ப முடியவில்லை. பெரும்பாலும் இடதுசாரிகள் மிகுந்த ஊடக உலகமும்கூட சர்க்காரின் வீழ்ச்சியைக் கண்டு திகைப்பில் ஆழ்ந்திருக்கிறது. ஆனால், இதுவே தேர்தல் ஜனநாயகத்தின் இயல்பு என்பதை உணர்ந்த எவரும், இந்த முடிவால் அதிர்ச்சியோ, வியப்போ அடைய மாட்டார்கள்.
மக்களின் வாக்குகளால் அமைதியான முறையில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த முடியும் என்பதே ஜனநாயகத்தின் அடிப்படை. எனவே, இந்தத் தேர்தல் முடிவுகளுக்காக, சமூக ஊடகங்களில் இப்போது அரங்கேறியுள்ள திரிபுரா மக்கள் மீதான வசை பாடலோ, பாஜகவின் வெற்றியை சந்தேகப்படுவதோ முறையல்ல. குறிப்பாக, தொடர்ந்து 4 முறை ஆட்சி அமைத்த மார்க்சிஸ்ட் கட்சி அவ்வாறு கூற இயலாது.
உண்மையில் இந்தத் தோல்வி மாணிக் சர்க்காரின் தோல்வி அல்ல; அவர் சார்ந்திருந்த மார்க்சிஸ்ட் கட்சியின் தோல்வி இது. எந்த ஒரு கட்சியும் நீண்ட நாள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் ஏற்படும் அதிகார மமதை மார்க்சிஸ்ட் கட்சியை அரித்ததே, மக்கள் அக்கட்சியை நிராகரிக்கக் காரணம். கடந்த பல ஆண்டுகளாகவே மார்க்சிஸ்ட் கட்சியின் உள்ளூர் தலைவர்கள் எதேச்சாதிகாரத்துடன் செயல்பட்டு வந்தார்கள். முதல்வர் எளியவராக இருந்தாலும், அவரது கட்சியினர் குட்டி அரசர்களாகிவிட்டார்கள். 
மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிரான அனைத்து அமைப்புகளும் கட்சிகளும் மிரட்டப்பட்டன. பிரதான எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸால் மார்க்சிஸ்டுகளுக்கு எதிராகப் போராட முடியாத நிலையில், அந்த வெற்றிடத்தை பாஜக நிரப்பியது. பாஜகவினர் பல இன்னல்களுக்கு ஆளாயினர். கடந்த ஓராண்டில் மட்டும் பாஜக தலைவர்கள் மூவர் மார்க்சிஸ்ட் கட்சியினரால் கொல்லப்பட்டனர். இவை மாணிக் சர்க்காருக்கு தெரியாமல் நடந்திருக்க முடியாது.
மாநிலத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்தது. ஆசிரியர் பணி நியமனங்களில் முறைகேடு, ரோஸ்வேலி நிதிநிறுவன மோசடி, சாரதா நிதி நிறுவன மோசடி, உள்கட்டமைப்புத் திட்டங்களில் நிதி சுருட்டல், மருத்துவமனைக்கு மருந்து கொள்முதலில் லஞ்சம், தேசிய சுகாதாரத் திட்டத்தில் ஊழல் என மார்க்சிஸ்ட் கட்சியினர் முறைகேடுகளில் திளைத்தனர். கட்சிப் பற்று காரணமாக இவற்றை முதல்வர் கண்டும் காணாமல் இருந்தார். அதன் விளைவையே இப்போது அறுவடை செய்திருக்கிறார்.
இடதுசாரிகள் ஆதிக்கம் காரணமாக தொழிற்சாலைகள் பல மூடப்பட்ட நிலையில், அரசுப் பணிகள் மார்க்சிஸ்ட் கட்சியினருக்கே கிடைத்து வந்ததும் அதிருப்தியை ஊதிப் பெருக்கியது. இளம் தலைமுறையினர் அரசுக்கு எதிராகத் திரண்டனர். அதை பாஜக திறமையாகப் பயன்படுத்திக்கொண்டு, வெற்றிக்கனியைப் பறித்தது.
மாநிலத்தின் பொருளாதார நிலை தேக்கம் அடைந்ததும், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு தொடர்ந்து புறக்கணித்ததும், தொழில்வளம் பெருகாததும், ஆட்சி மீதான அதிருப்தியாக மாறின.
மாணிக் சர்க்கார் நல்லவர்தான். ஆனால், அவரது கண்களுக்கு இந்த பாதிப்புகள் புலப்படவில்லை என்பது ஓர் அரசியல் தலைவர் என்ற முறையில் பலவீனமே. மக்களின் அதிருப்தியை உணர இயலாத வகையில் கட்சி சார்ந்தே அவர் இயங்கினார்.
அரசியலிலும் ஆட்சி நிர்வாகத்திலும் தனது கட்சியினரின் பலவீனத்தால் அவர் தோல்வி அடைந்தாலும், எளிமை என்ற அம்சத்தில் அவர் அனைவருக்கும் முன்மாதிரியே. அவருக்கு பிரியாவிடை அளிப்பது, நமது நல்ல அம்சங்களை நாமே பாராட்டிக் கொள்வது போன்றது!

]]>
http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/mar/06/ஏழைகளின்-முதல்வருக்கு-பிரியாவிடை-2875050.html
2874559 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் ஆதர்சவாதியும் யதார்த்தவாதியும்! டி.எஸ். ரமேஷ் DIN Monday, March 5, 2018 02:12 AM +0530 அரசியல், ஜனநாயகம், தத்துவம் என எழும் சிந்தனைத் தொடரில் நமக்கு பண்டைய கால கிரீஸ், குறிப்பாக ஏதென்ஸ் நகரமும் அங்கு காலம் கடந்து எஞ்சி நிற்கும் கட்டடங்களும் நம் மனக் கண் முன் தோன்றுவது இயல்பு. ஆனால், அங்கு தத்துவமும் ஜனநாயகமும் ஒத்துப் போகவில்லை என்பது பலருக்கு வியப்பளிக்கும். ஜனநாயகத்தை இயல்பான அரசியல் முறையாக எல்லா சிந்தனையாளர்களும் ஏற்கவில்லை. மனித மனதின் இயல்பையும் மனிதக் கூட்டத்தின் இயல்புகளையும் ஆராய்ந்த கிரேக்க தத்துவ ஞானிகள், மனித புத்தி எப்படி வேண்டுமானாலும் திரியும் என்று உணர்ந்திருந்ததில் வியப்பில்லை!
கிரேக்க தத்துவ ஞானத்தின் தந்தை என்று சிறப்பிக்கும் தகுதியுடைய சாக்ரடீஸ், ஜனநாயகத்தை சந்தேகக் கண்ணோடு பார்த்தார் என்று தெரிகிறது. ஜனநாயகத்தைக் குறித்தும் அதன் நிறைகுறைகளைக் குறித்தும் சாக்ரடீஸýக்கும் மற்றொருவருக்கும் இடையே ஒரு சம்பாஷணை நடக்கிறது. ஜனநாயகத்தின் குறைகளை அந்த நபருக்குப் புரிய வைக்க முயற்சி செய்கிறார் சாக்ரடீஸ்.
"நமது சமூகத்தை ஒரு கப்பலாக நினைத்துக் கொள். அந்தக் கப்பலை கடலில் இறக்கி பயணம் மேற்கொள்ள வேண்டும். அந்தக் கப்பலை நிர்வகிக்கும் பொறுப்பை யாரிடம் கொடுப்பாய்? அந்தக் கப்பலில் உள்ள ஏதாவது ஒரு நபரிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைப்பாயா, அல்லது கடற்பயணத்தில் உள்ள ஆபத்துகள், சிக்கல்களைப் பற்றி நல்ல அனுபவமும் கப்பலோட்டும் திறனும் அறிவும் உடைய நபரிடம் அந்தக் கப்பலை ஒப்படைப்பாயா?' என்று சாக்ரடீஸ் கேட்கிறார்.
"இதென்ன ஓய் கேள்வி? கப்பலையும் கடலையும் நன்றாக அறிந்தவரிடம்தான் அந்தப் பொறுப்பை ஒப்படைக்க முடியும்' என்கிறார் மற்றைய நபர்.
"கப்பலுக்கே இதுதான் விதிமுறை என்றால், ஒரு நாட்டை ஆள்வதற்கு யாருக்கு வேண்டுமானாலும் தகுதி இருக்கிறது என்று நாம் ஏன் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருக்கிறோம்' என்று சாக்ரடீஸ் ஒரு போடுபோடுகிறார்!
ஆனால் சாக்ரடீஸை ஒரேயடியாக ஜனநாயக விரோதி என்று எண்ணிவிட வேண்டியதில்லை. அவரே விளக்குகிறார்: பெரும்பான்மையினரின் தீர்ப்பு சரியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆழ்ந்து சிந்தித்து, சரியான முடிவெடுக்கிறார்களா, அந்த முடிவை எடுப்பதற்கான சரியான ஞானம் அவர்களிடம் இருக்கிறதா என்பதுதான் விஷயம்.
ஜனநாயக முறையில் நடைபெறும் தேர்தலில் வாக்களிப்பது என்பது ஒரு திறன் என்று கூறலாம். அது தற்செயலாக ஏற்படும் எண்ணத்தின் வெளிப்பாடாக இருக்க முடியாது. திறன்களை எப்படி முறையாக ஒருவருக்குக் கற்றுத் தருகிறோமோ, அதே போலவே வாக்களிப்பதையும் முறையாக மக்களுக்குக் கற்றுத் தர வேண்டியிருக்கிறது. எவரையாவது பிடித்து ஆழ்கடலில் கப்பலைச் செலுத்த ஒப்படைப்பது எவ்வளவு ஆபத்தான செயலாக இருக்குமோ, அதே போலத்தான் வாக்களிக்கும் திறன் இல்லாத மக்களிடம் ஆட்சியை ஒப்படைப்பதும். அதைத்தான் சாக்ரடீஸ் வலியுறுத்துகிறார்.
சாக்ரடீஸைப் பொருத்தவரையில், முன்யோசனையின்றி கூட்டமாக வாக்களிப்பவர்களால் நேரக் கூடிய ஆபத்தை அவரே அனுபவித்தார். அவருக்கு இறை நம்பிக்கையில்லை என்றும் ஏதென்ஸ் நகர இளைஞர்களை நெறி தவறச் செய்கிறார் என்று சாக்ரடீஸ் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது. வழக்கில் ஏதென்ஸ் நகரைச் சேர்ந்த ஐந்நூறு பேர் நடுவர்களாக அமர்த்தப்படுகிறார்கள். அவர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். விசாரணை நடக்கிறது. முடிவில், சிறிய வாக்கு வித்தியாசத்தில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகத் தீர்ப்பாகிறது. இன்னும் முப்பது வாக்குகள் இருந்திருந்தால் சாக்ரடீஸ் தப்பியிருப்பார் என்று அவருடைய சிஷ்யர் பிளேட்டோ கூறுகிறார்.
வழக்கை நடத்தியவர்கள் சாக்ரடீஸ் விஷமருந்தி உயிர் துறக்க வேண்டும் என்று விதிக்கிறார்கள். அவருடைய விஷயத்தில் இதுதான் ஜனநாயகத்தின் நேர் விளைவு என்று இதனைக் கூறலாமா?
விதித்த தீர்ப்பை சாக்ரடீஸ் ஏற்று விஷமருந்தினார். இதில் இன்னொரு விஷயம், வேண்டப்பட்டவர்கள் எல்லாம் அவரை ஊரைவிட்டு ஓடிவிடும்படி கூறுகிறார்கள். "சட்டத்தை மதிப்பவன் என்ற முறையில் நான் அதைச் செய்ய மாட்டேன்' என்று விதிக்கப்பட்ட தீர்ப்பை உளமார ஏற்றார் சாக்ரடீஸ். அவருடைய முடிவே, ஜனநாயகம் குறித்த அவருடைய கருத்தையும், சட்டத்தை மதிக்கும் அவருடைய கொள்கையையும் நிரூபித்தது.
ஆனால் அவரை முற்றிலுமாக ஜனநாயக விரோதியாகவோ சர்வ அதிகாரமும் படைத்த சிலரே ஆட்சிபுரிய வேண்டும் என்று பிரசாரம் செய்தவராகவோ பார்க்க வேண்டிய அவசியமில்லை. சமூகப் பிரச்னைகளைக் குறித்து ஆழ்ந்து அறிந்தவரே வாக்குரிமை பெற்றிருக்க வேண்டும் என்பதுதான் அவருடைய கருத்தாக இருந்தது.
புத்திசாலித்தனமாக வாக்களிப்பதற்கும், வாக்களிப்பது பிறப்புரிமை என்பதற்கும் நிறைய வித்தியாசமிருக்கிறது. சாக்ரடீஸ் வாழ்ந்தது இன்றைக்கு 2400 ஆண்டுகளுக்கு முன்னர். இன்றும் சிந்திக்கத் தூண்டுவது அவருடைய வாழ்வும் முடிவும்.
இந்தியா சுதந்திரம் அடைவதற்குப் பல ஆண்டுகள் முன்னதாகவே, வாக்குரிமை பற்றி மகாத்மா காந்தி சிந்தித்து விடை கண்டார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
இந்தியா முழு சுயராஜ்யம் பெற வேண்டும் என்று வலியுறுத்திய அதே நேரத்தில், பொதுமக்களுக்கு முறையாக கல்வி புகட்டப்பட வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். விடுதலையை வேண்டிய அதே சமயத்தில், கடமை, உரிமை, பொறுப்புணர்வையும் அவர் வலியுறுத்துகிறார். சுதந்திரத்துக்கு 16 ஆண்டுகளுக்கு முன்னர் 1931-இல் அவர் இவ்வாறு எழுதுகிறார்-
"சொத்து இருப்பதால் ஒருவன் வாக்களிக்க முடியும் என்பதையும், சொத்தும் படிப்பும் இல்லாத ஒருவன் வாக்களிக்க முடியாது என்பதையும், நாளும் பொழுதும் நெற்றி வியர்வை சிந்தி நேர்மையாக உழைக்கும் ஒருவன் ஏழையாக உள்ள குற்றத்துக்காக வாக்களிக்க முடியாது என்கிற கருத்தையும் என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. வாக்காளருக்குப் படிப்பறிவு வேண்டும் என்ற கருத்து எனக்கு ஏற்புடையதல்ல. மக்களுக்கு கல்வியறிவு வேண்டும் என்பதே என் விருப்பம். ஆனால் அனைவரும் கல்வி அறிவு பெற்றவராவது என்பது எப்போது நடக்கும் எனக் கூற முடியாது. நான் அதற்காகக் காத்திருக்க விரும்பவில்லை என்றார் காந்திஜி. வாக்குரிமை பற்றிய அவருடைய விருப்பம் அரசியல் சாசனத்தில் ஏறியது!
இரு வேறு காலங்களைச் சேர்ந்த பிடிவாதக்காரர்களான ஆதர்சவாதிக்கும் யதார்த்தவாதிக்குமான வித்தியாசம் இதுதான்!


 

]]>
http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/mar/05/ஆதர்சவாதியும்-யதார்த்தவாதியும்-2874559.html
2874558 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் தெய்வம் தந்த வனங்கள் ஆர்.எஸ். நாராயணன் DIN Monday, March 5, 2018 02:11 AM +0530 ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளை ஒன்றுகூட்டிப் புவி வெப்பமாகி வருவதால் அடுத்த ஐம்பது ஆண்டுகளில் செய்ய வேண்டிய திட்டப் பணிகளை விவாதித்து முடிவு எடுப்பதை அறிவோம். அதில் சூழலுக்கு உகந்த மாற்று எரிசக்திப் பயன்பாடு பெற்றுவரும் முக்கியத்துவத்திற்கு இணையாக காடு வளர்ப்பு திட்டம் ஏனோ விவாதிக்கப்படாமல் புறந்தள்ளப்படுகிறது.
மாற்று எரிசக்திப் பயன்பாடும், காடு வளர்ப்பும் மனிதனின் இரு கண்கள் போன்றவை. வனங்களே நமது பாரம்பரியம்என்று தீர்மானம் போட்டுப் பயனில்லை! அண்மைக்காலப் புள்ளிவிவரப்படி இந்தியாவில் பெயரளவில் வனநிலப்பரப்பு கூடியுள்ளதாகக் கூறப்பட்டாலும், அடர்த்தியான காடுகள் என அறியப்படுவன அடர்த்தியில்லாமல் வெற்றிடமாகக் காட்சி தருவதாகச் செயற்கைக்கோள் படங்கள் தெரிவிக்கின்றன. காரணம், அடர்த்தியற்ற காடுகளில் அடர்த்திக்காக தைல மரங்களையும், சவுக்குமரங்களையும் நட்டு காகிதத் தேவைக்கு வெட்டிவிடுவதால் அடர்த்திக்கு வாய்ப்பில்லை. வெட்டுப்படாமல் இருக்க அரசு, ஆல், இலுப்பை, சால் என்ற சாம்பிராணி மரம், வாகை, கொன்றை, கோங்கு, வேம்பு, புங்கை, நாவல், விளா, வில்வம் போன்ற நாட்டு ரக மரங்களை நடவேண்டும். அதேசமயம் தெய்வம் தந்த வனங்களில் அடர்த்தி காப்பாற்றப்படுவதாகவும் சுற்றுச்சுழல் வனத்துறை தெரிவித்துள்ளது.
அது என்ன தெய்வம் தந்த வனங்கள்? 
பக்தியும் பாசுரங்களும் வளர்ந்த தமிழ்நாட்டில் "சாமியாவது பூதமாவது' என்று பேசும் நாத்திகக் கூட்டமும் ஒரு நோய்போல் தொற்றியுள்ளது. ஆனால், சுற்றுச் சூழலைப் பொருத்தவரை தெய்வ நம்பிக்கை, பேய், பிசாசு, குலதெய்வம், போன்ற பலதரப்பட்ட காரணங்களால் உலகில் உள்ள மொத்த வனநிலப்பரப்பில் 1 சதவீத அளவு காடுகள் என்றுமே அழிக்கப்படாமல் காலம் காலமாகக் காப்பற்றப்படுவதாகச் சூழலியல், வல்லுநர்கள் கூறுகிறார்கள். அவைதான் தெய்வம் தந்த வனங்கள்! வனங்களில் அடர்த்தியைக் காப்பாற்றும் ஆன்மிக உயிர்ச் சூழல் அதாவது, spiritual ecology என்ற கருத்துருவமே தமிழ்நாட்டில் சிதைக்கப்பட்டுவிட்டது. திருத்தலங்களைச் சுற்றியிருந்த வனங்கள் அழிக்கப்படுள்ளன. அதேசமயம் கம்யூனிஸம் வேரூன்றியுள்ள கேரளம், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் தெய்வம் தந்த வனங்கள் ஓரளவு காப்பாற்றப்பட்டுள்ளன.
இன்று காலநிலை மாற்றம் என்ற எமன் படுத்தும் பாட்டிற்கும் அரணாக நிற்பது ஆன்மிக உயிர்ச் சூழலே. இந்த உண்மையை உலகச் சுற்றுச்சூழல் நிறுவனம் உணர்ந்து தெய்வம் தந்த வனங்களை sacred groves என வரையறுத்து அவற்றைக் காப்பாற்ற நிதியும் வழங்கி வருகிறது. மரங்களுக்கு தெய்வச் சாற்றுதல் உள்ளதால் மரங்களை வெட்டுவதற்கு முன் மனிதர்கள் சற்று யோசிப்பார்கள். தெய்வம் தந்த வனங்கள் காலம் காலமாகக் காப்பாற்றப்பட்டுள்ளன. வேப்பமரம் மாரியம்மன் குடியிருப்பு என்று பேசப்பட்டாலும், தனியாக வளர்ந்தால் தேவை வரும்போது பலகைக்கு ஆகும் என்று வெட்டுவோரும் உண்டு. அதே வேப்பமரம் தெய்வச் சாற்றுதல் உள்ள தோப்போடு இருந்தால் காப்பாற்றப்படும். அப்படியும் சில தனியான வேப்பமரங்களுக்குக் கீழ் மாரியம்மன் சிலையை வைத்து கும்பிட ஆரம்பித்துவிட்டால் வேப்பமரம் பிழைத்துவிடும். கூடவே சிலமரங்கள் வளரும். 
அரச மரத்திற்கு அந்த யோகம் நிறையவே உள்ளது.
தமிழ்நாட்டில் ஒரு பெரியவர் 60 ஆண்டுகளுக்கு முன்பு ஆயிரக்கணக்கான பிள்ளையார் படங்களைச் சேர்த்து செருப்பால் அலங்கரித்து சேலத்தில் ஊர்வலம் நடத்தினார். "பிள்ளையாரைக் கும்பிடாதே' என்ற இயக்கத்தின் எதிர்வினையாக ஒவ்வொரு நகரங்களிலும் புதிய பிள்ளையார் கோயில்கள் முளைத்துவிட்டன. தமிழ்நாட்டில் மட்டும் கணக்கெடுத்துப் பார்த்தால் பத்து லட்சம் பிள்ளையார் கோயில்கள் இருக்கலாம். பிள்ளையார் கோயிலுக்குத் துணையாகப் பல லட்சம் அரச மரங்களும் நடப்பட்டிருக்கும்.
தமிழ்நாட்டுக் கோயில்களுடன் இணைந்துதிருந்த நந்தவனக் காடுகள் ஆக்கிரமிப்பால் அழிக்கப்பட்டபோதிலும், பிள்ளையார், மகமாயி, கருப்பணசாமி, முனிசாமி, மாரியாத்தாள், காளியம்மன், பத்ரகாளி, காத்தாயி போன்ற பற்பல சிறு தெய்வங்களின் வழிபாட்டை அனுசரித்தும், பல தெய்விக மரங்கள் நடப்பட்டுள்ளன. 
சுற்றுச்சூழல், வனவளர்ப்பு, புவிவெப்பமாதலுக்குரிய தீர்வாகப் பொதுநல விழிப்புணர்வுள்ள பலர் மரம் நடும்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாகத் தமிழ்நாட்டில் மர நர்சரிகளும் மிகுந்துள்ளன. இவ்வாறு நர்சரித் தொழில் செய்யும் ஆர்வலர்களிடம் விசாரிக்கும்போது தெய்விகத் தொடர்புள்ள தல மரக்கன்றுகளுக்கு மவுசு கூடிவருவதாகத் தெரிவிக்கிறார்கள். நாகலிங்கம், அரசு, ஆல், நாவல், அத்தி, கடம்பு, வேம்பு, புங்கன், மகிழம், வெண்மருது போன்ற நாட்டு மரங்களின் கன்றுகள் விரும்பப்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.
வாழ்வுக் கலை மையம் என்ற பெயரிலும், யோகாசன -ஆன்மிக மையங்களிலும், ஜக்கி வாசுதேவ், ஸ்ரீஸ்ரீரவிசங்கர், மாதா அமிர்தானந்தமயி போன்ற பல பிரபலங்களும், ஆன்மிகம், யோகக்கலையில் ஈடுபட்டுப் பிரபலமாகாத வேறு பலரும் தெய்வத்தன்மையுள்ள மரங்களை நட்டுப் புதிய வனங்களை உருவாக்குகின்றனர்.
இருப்பினும், பாரம்பரியம் மாறாமல் பழைய கட்டமைப்புடன், காலம் காலமாக மாறாமல், உள்ளது உள்ளபடி உள்ள தெய்விக வனங்களில் மரங்களை வெட்டாமல் அவை பட்டுபோகும் வரை காப்பாற்றப்பட்டிருக்கும். பட்டமரம் அருகில் பக்கவேர் மூலம் பலமரங்கள் வளர்ந்திருக்கும். கீழே கொட்டிக் கிடக்கும் இலைகள், பூக்கள், கனிகள், விதைகள் எதையுமே யாரும் தொடுவது கூட இல்லை. அப்படிக் தொடுவதுகூட தெய்வ குற்றமாக எண்ணிப் பாரம்பரியம் காப்பாற்றப்பட்டிருக்கும். அந்தச் சூழலையே ஆங்கிலத்தில் sacred groves என்கிறார்கள். அங்கு பல்லுயிர்ப் பெருக்கம் வளம் பெற்றிருக்கும். அபூர்வமான பறவைகள், புள், பூச்சிகள், ஊர்வன எல்லாம் நிறைந்திருக்கும்.
எனக்குத் தெரிந்தவரை அப்படிப்பட்ட பாரம்பரியம் மாறாத ஒரு காடு எங்கள் முன்னோர்கள் வாழ்ந்த ஊரான செருவாவிடுதியில் உள்ளது. இது பட்டுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி செல்லும் வழியில் உள்ளது. இங்கு 150 ஏக்கர் பரப்பில் போத்தியம்மன் காடு என்ற பெயரால் அறியப்படுகிறது. காப்பிடமாக வனத்துறை அறிவித்து காவலும் போடப்பட்டுள்ள இந்தக் காடு, தெய்விக வனங்கள் பட்டியலில் உள்ளது. கடந்த நூற்றாண்டில் 1000 ஏக்கர் வரை காடாக இருந்ததை அழித்துப் பட்டா நிலங்களாக மாற்றப்பட்டிருந்தாலும், மிச்சமுள்ள 150 ஏக்கர் மட்டுமே எஞ்சி நிற்கக் காரணம், அந்த ஊரில் வாழ்ந்த பல ஜாதி மக்களின் தெய்வங்கள் உறைந்துள்ளதால் அங்குள்ளோர் யாரும் உள்ளே சென்று மரங்களை வெட்டுவதில்லை. சிறு வயதில் நான் பார்த்தபோது அந்தப் போத்தியம்மன் காட்டைச் சுற்றி நிறைய ஏரி, குளங்கள் இருந்தன. ஏராளமாகப் பறவைகள் வரும். மிகவும் அரிதாகிவிட்ட பாலை மரங்கள், xantolis tomentosa  வகை பாலை மரங்கள், நிறைய இருந்தன. பழம் ஈச்சம்பழம் போல் துவரும் தித்திப்புமாக இருக்கும். மதுக்குடம் என்ற திருவிழா மிகவும் சிறப்பாக நடக்குமாம். போத்தியம்மன் கோயிலின் பாதுகாவலர்களாக இருந்த பிராம்மண குருக்களும் வேறு சில பிரிவினரும் பல தலைமுறைகளுக்கு முன்பே ஊரைவிட்டு வெளியேறிவிட்டதால் திருவிழா கொண்டாடப்படவில்லை என்றும் பேச்சுண்டு. இன்று ஏரி, குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுச் சுற்றியுள்ள நிலங்கள் முழுக்கவும் காவிரி ஆற்றுப் பாசனத்தை நம்பியுள்ளதால், முன்னொரு காலத்தில் செழிப்புடன் பசுமையாயிருந்த போத்தியம்மன் காடு இன்று பசுமை குறைந்து காணப்பட்டாலும், அழியும் நிலையிலிருந்த பற்பல தாவரங்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக வனத்துறை உயர் அதிகாரிகள் கூறுகின்றனர்.
வனத்துறை வழங்கும் தகவல்கள் அடிப்படையில், இந்தியாவில் உள்ள காப்பிட வனப்பரப்பில் 1% அளவு நெருக்கமான மரங்கள் வனத்துறைக்கு சொந்தம் என்றாலும், ஒரு பகுதி தனிப்பட்ட குடும்பம் அல்லது பழங்குடி சமூக உரிமையுள்ளனவாகவும் உள்ளன. 
தனியார் நிலங்களில் பாரம்பரியமாகக் காப்பாற்றப்பட்டு வரும் தெய்வம் தந்த வனங்களுக்கு உலகச் சுற்றுச்சூழல் நிறுவனம் நிதி வழங்குகிறது. அப்படிப்பட்ட தெய்வம் தந்த வனங்களை உள்ளது உள்ளபடி போற்றி, மாற்றுப் பயன் செய்யாமல், தரிசாகவே - அதன் இயல்பான வளர்ச்சிக்கு விட்டு, இயற்கை வழியில் சும்மா இருந்தால் நிதி உதவி உண்டு. இப்படி வழங்கப்படும் நிதி போதுமானதாக இல்லை என்பதால் தனியார் நிலங்களில் உள்ள தெய்வ வனங்கள் விவசாயத்திற்கோ, வேறு கட்டுமானங்களுக்கோ அழிக்கப்படுகிறது. 
எனினும், தெய்வத்தை மையமாக வைத்து பக்தர்கள் பலர் நடத்தும் ஆசிரமங்களில் நீண்ட காலப் பயனையும், மருத்துவ குணங்களையும் கொண்ட பாரம்பரிய மரங்கள் வளர்க்கப்படுமானால், தலைமுறை தலைமுறையாக, 500 ஆண்டுகள் மரம் தானாகப் பட்டு விழும் வரை வளர்க்கப்படுமானால், ஓசோன் படலத்திற்கு உரமேற்றிய பெருமையுடன், புவியைக் காப்பாற்றும் தெய்வம் தந்த வனப் பணி நிறைவு உடையதாக விளங்கும் என்பதில் ஐயம் இல்லை.

]]>
http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/mar/05/தெய்வம்-தந்த-வனங்கள்-2874558.html
2873373 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் தமிழ்த் தாத்தாவுக்கு சென்னையில் நினைவு இல்லம் உதயை மு. வீரையன் DIN Saturday, March 3, 2018 01:39 AM +0530 பெரிய மனிதர்களைப் பாராட்டுவதன் மூலம் தேசமே பெருமையடைகிறது. அவர்கள் பணம் பதவிக்காக உழைக்கவில்லை; பிற்காலத்தில் தமக்குச் சிலை வைப்பார்கள், விழாக்கள் நடத்துவார்கள் என்பதற்காகவும் அவர்கள் தொண்டாற்றவில்லை. நாட்டுக்கும், தம்மைச் சுற்றிய சமூகத்துக்கும் பணியாற்றுவதையே தங்கள் பிறவிக் கடமையாகக் கொண்டிருந்தனர்.
'சென்ற நூற்றாண்டின் இறுதியில் தோன்றி இந்த நூற்றாண்டில் மறைந்த இரண்டு பெரும் புலவர்கள் தமிழுக்கு ஆக்கத்தை அளித்து புகழ்படைத்தனர். ஒருவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்; மற்றொருவர் மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாத ஐயரவர்கள்' என்று வாகீச கலாநிதி கி.வா.ஜகந்நாதன் அவர் வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார். (அவர் குறிப்பிட்ட இரு நூற்றாண்டுகள் பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகள்).
பாரதியார் அற்புதமான புதிய கவிதைகளைப் பாடி தமிழ்த்தாயை அலங்கரித்தார். உ.வே.சா. அவர்களோ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய சங்க நூல்களையும், வேறு பழைய காவியங்களையும் கண்டெடுத்து ஆராய்ந்து அருமையான முறையில் பதிப்பித்து உதவினார்கள்.
அந்த நூல்களால்தான் தமிழின் தொன்மையையும், பெருமையையும், பண்டைத் தமிழ் நாகரிகத்தையும் உலகம் தெரிந்து கொண்டது. உலகில் சிறந்த செம்மொழிகளில் தமிழும் ஒன்று என்பதை உலகப் பேரறிஞர்கள் ஒத்துக் கொண்டனர். இதனால் உலகம் முழுவதும் தமிழ் மாநாடுகள் நடைபெற்றன. இப்போதும் நடைபெற்று வருகின்றன.
திருவல்லிக்கேணிப் பகுதிக்குப் பெருமை சேர்ப்பது பார்த்தசாரதி கோயில் மட்டுமல்ல, மகாகவி பாரதியாரும், தமிழ்த்தாத்தா உ.வே.சா.வும் வாழ்ந்ததும்தான். அதற்கான அடையாளங்களை அழிக்க அல்லது அழிய விடலாமா?
'ஐயரவர்கள் சுமார் 60 ஆண்டுகளாகத் தமிழையே சிந்தித்து வந்தார்கள். தமிழ் நூல்களையே ஓதி வந்தார்கள்; தமிழ் நூல்களையே போதித்து வந்தார்கள். தமிழ் நூலாராய்ச்சிகளையே செய்து வந்தார்கள். தமிழ் நூல்களையே பதிப்பித்து வந்தார்கள். தமிழ் நூல்களையே தேடிப் பெற்றுத் தொகுத்து வந்தார்கள். இவர்கள் இல்லத்தைத் தமிழ்த் தெய்வத்தின் திருக்கோயில் என்றுதான் சொல்ல வேண்டும்...' என்று தமிழறிஞர் எஸ். வையாபுரி பிள்ளை கூறியுள்ளார். 
அந்தத் திருக்கோயிலை நினைவில்லமாக ஆக்கி அவருக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்பது தமிழ் அமைப்புகளின் கோரிக்கை.
1855-ஆம் ஆண்டு பிப்ரவரி 19 அன்று கும்பகோணத்தை அடுத்த உத்தமதானபுரத்தில் பிறந்த சாமிநாதையர் தம் தொடக்கத் தமிழ்க் கல்வியையும், இசைக் கல்வியையும் சொந்த ஊரிலிருந்த ஆசிரியரிடம் பயின்றார். பின்னர் தம் 17-ஆம் அகவையில் திருவாவடுதுறை சைவ ஆதீனப் புலவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் முறையாகத் தமிழ் பயின்றார்.
'பல காலமாகத் தவம் புரிந்து ஒரு தெய்வ தரிசனத்துக்காகக் காத்திருக்கும் உபாசகனைப் போல நான் இருந்தேன். அவனுக்குக் காட்சியளிக்கும் அத்தெய்வம் போல அவர் (மீனாட்சி சுந்தரம் பிள்ளை) வந்தார்...' என்று உ.வே.சா. தம் ஆசிரியரைப் பற்றிப் பெருமையோடு குறிப்பிடுகிறார்.
'ஐயரது 17-ஆம் அகவையில் 1871-இல் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையை அடுத்து, 1876-இல் தம் பேராசிரியர் சிவபதம் அடையும் வரை அவரிடம் கல்வி கற்று வந்தார்...' என்று வையாபுரி பிள்ளை குறிப்பிடுகிறார்.
1880-இல் கும்பகோணம் அரசு கல்லூரியில் பேராசிரியராகப் பணியைத் தொடங்கினார். அங்கு 23 ஆண்டுகளும், சென்னை மாநிலக் கல்லூரியில் 16 ஆண்டுகளும் பேராசிரியராகப் பணிபுரிந்தார். இவர் மாநிலக் கல்லூரியில் பணிபுரிந்தபோது, சென்னை திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரன் பேட்டைக்கு நிரந்தரமாகக் குடியேறினார்.
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் முதல் மாணவரான சி.தியாகராச செட்டியார் தாம் பணிபுரிந்த கும்பகோணம் அரசுக் கல்லூரியில் ஐயரை ஆசிரியராக அமர்த்தினார். அந்த நன்றிப் பெருக்கினால் தமது இல்லத்துக்கு 'தியாகராச விலாசம்' என்று பெயரிட்டார். அந்த இல்லம்தான் இப்போது இடிக்கப்பட்டிருக்கிறது.
ஐயரவர்கள் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார் என்பதைவிட அழிந்து கொண்டிருந்த தமிழ்ச் சுவடிகளைத் திரட்டித் தந்தார் என்பதில்தான் அவரது தனித்தன்மை காணப்படுகிறது.
சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள் என 90-க்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளை அச்சிட்டுப் பதிப்பித்ததோடு, மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஏட்டுச்சுவடிகளையும், கையெழுத்துப் பிரதிகளையும் சேகரித்துத் தமிழ் உலகத்துக்கு அளித்துள்ளார்.
சமயக் காழ்ப்புணர்ச்சியில்லாமல் அவற்றைப் பதிப்பித்தார் என்பது அவருக்குக் கூடுதல் சிறப்பாகும். சமண சமய இலக்கியமாகிய சீவக சிந்தாமணியையும், பெளத்த மத நூலாகிய மணிமேகலையையும் மிகுந்த ஈடுபாட்டோடு பல பிரதிகளைச் சீர்தூக்கிப் பார்த்து அச்சு வடிவம் தந்துள்ளார்.
சமயத் தொண்டு வேறு, இலக்கியத் தொண்டு வேறு என்பதில் சரியாக இருந்தார். ஆறுமுக நாவலர் சமயத் தொண்டில் ஈடுபட்டு, சமய நூல்களையே அச்சிட்டு வந்த காலத்தில், இவர் சமயங்களுக்கு அப்பாற்பட்டுத் தமிழ்த் தொண்டாற்றி வந்தார்.
சமண, பெளத்த நூல்களை அச்சிடும்போது அவற்றில் ஏற்படும் ஐயப்பாடுகளை அவ்வம்மத அறிஞர்களைக் கலந்து பேசி சீர் செய்துள்ளார். பிற சமய நூல்களை அச்சிடுவது பற்றிச் சிலர் நிந்தித்தபோதும், அதுபற்றிக் கவலைப்படாமல் தமது தமிழ்ப் பணியைத் தொடர்ந்து செய்து வந்தார்.
பெளத்த காப்பியமான குண்டலகேசியும், அதற்கு மறுப்பாக எழுந்த நீலகேசியும் அக்காலத்தில் கண்டு கொள்ளப்படவில்லை. இதனால் குண்டலகேசி முற்றிலும் அகப்படாமல் அழிந்து போனது. ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றினை இழந்தது தமிழுக்குப் பேரிழப்பாகும் அல்லவா!
இவற்றையெல்லாம் அவரது சுயசரிதையான 'என் சரித்திரம்' நூலில் விரிவாக எழுதியுள்ளார். 1906-ஆம் ஆண்டு சென்னை அரசாங்கம் இவரது பணியைப் பாராட்டி, மகா மகோபாத்தியாய என்ற பட்டத்தை வழங்கியது. 1932-ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகம் டாக்டர் பட்டமான டி.லிட். பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
1919-ஆம் ஆண்டு உ.வே.சா. சென்னை மாநிலக் கல்லூரியிலிருந்து ஓய்வு பெற்றார். ஒரு சமயம், மகாகவி ரவீந்திரநாத் தாகூர் சென்னைக்கு வந்து வழக்குரைஞர் டி.எஸ்.இராமசாமி ஐயருடைய வீட்டில் தங்கியிருந்தார். அப்போது வங்க மகாகவியிடம் உ.வே.சா. தமிழ்த்தொண்டு பற்றிக் கூறினார்.
அன்று மாலையே உ.வே.சா.வின் இல்லமாகிய தியாகராச விலாசத்துக்கு வந்து, அவர் பதிப்பித்துள்ள நூல்களைக் கண்டு வியந்தார் தாகூர்; அவர் வருகையை அறிந்தவர்கள் ஐயரின் பெருமையையும் அறிந்து கொண்டனர்.
1937-ஆம் ஆண்டு சென்னையில் மகாத்மா காந்தி தலைமையில் நடைபெற்ற பாரதிய சாகித்ய பரிஷத்தின் மாநாட்டில் உ.வே.சா. வரவேற்புக்குழுத் தலைவராக இருந்து உரை நிகழ்த்தியுள்ளார். அப்போது காந்திஜிக்கு இவர் மீது மதிப்பும், மரியாதையும் ஏற்பட்டுள்ளது.
தமிழின் வடிவமாகவே இருக்கும் இவர்கள் திருவடியில் இருந்து தமிழ் பயில வேண்டுமென்ற ஆசை எனக்கு உண்டாகிறது. அந்த வாய்ப்பு எப்போது கிடைக்குமோ? என்று அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு மாமனிதர்களால் போற்றப்பட்ட உ.வே.சா. அவர்கள் இடைவிடாது பணியாற்றி 1942 ஏப்ரல் 28 அன்று நிரந்தர ஓய்வு பெற்றார். இவரது மகனார் கல்யாண சுந்தரம் ஐயரும் இப்பணியைத் தொடர்ந்து செய்து வந்துள்ளார்.
எண்ணற்ற மகான்களும், புலவர்களும், பேராசிரியர்களும், மாணவர்களும் வந்து போன வணக்கத்துக்குரிய அவரது இல்லம் 'தியாகராச விலாசம்' போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டாமா? வங்கக் கவிஞர் தாகூரும், மகாத்மா காந்தியடிகளும் வந்து போன அந்த அறிவாலயம் இடிக்கப்படுவது தமிழ் மக்களின் பண்பாட்டையே தகர்ப்பதற்கு ஒப்பாகும் அல்லவா!
உ.வே.சா.வின் மறைவிற்குப் பிறகு அவரது உறவினர்களால் விற்கப்பட்ட அந்த வீட்டை இடிப்பதற்கு 2012-ஆம் ஆண்டே முயற்சிகள் நடந்தன. பாதி இடிக்கப்பட்ட நிலையில் தமிழ் அமைப்புகளின் கடுமையான எதிர்ப்பினால் தடைபட்ட அப்பணி, இப்போது முழுமையாகவே தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளது.
மகாகவி பாரதியார் சென்னையில் வாழ்ந்த இல்லமும் இப்படித்தான் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. பிறகு தமிழ் ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று திரும்பக் கட்டி புதுப்பிக்கப்பட்டது. இப்போதும் இந்த முன்மாதிரியை ஏற்று, தமிழ்நாடு அரசு செயல்பட வேண்டும்.
இந்திய அரசியல் சாசனச் சிற்பி டாக்டர் அம்பேத்கர் 1921-22ஆம் ஆண்டுகளில் லண்டன் பொருளாதார கல்வி நிறுவனத்தில் படித்தார். அந்தக் காலகட்டத்தில் அம்பேத்கர் தங்கியிருந்த இல்லத்தை மகாராஷ்டிர அரசு சுமார் ரூ.40 கோடிக்கு வாங்கி நினைவு இல்லம் அமைத்துள்ளது. 1915-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அதனைத் திறந்து வைத்துப் பெருமைப்படுத்தியுள்ளார்.
இதேபோல தமிழக அரசும் சென்னை திருவேட்டீஸ்வரன்பேட்டையிலுள்ள உ.வே.சா. வாழ்ந்த இடத்தையும் வாங்கி அவருக்கு நினைவில்லம் அமைக்க வேண்டும் என்று தமிழ் அமைப்புகள் கோரிக்கை எழுப்பி வருகின்றன. அரசுக்கு விண்ணப்பங்களும் அனுப்பியுள்ளன.
தமிழ்த் தாத்தாவுக்கு விரைவில் நினைவில்லம் அமைக்க ஆவன செய்ய வேண்டும் என்று தமிழ் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். நாம் நன்றியுள்ள மக்கள் என்பதை வேறு எப்படி வெளிப்படுத்துவது?
 

]]>
http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/mar/03/தமிழ்த்-தாத்தாவுக்கு-சென்னையில்-நினைவு-இல்லம்-2873373.html
2873370 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் கனவு ஆசிரியர்! ஆம்பூர் எம். அருண்குமார் DIN Saturday, March 3, 2018 01:39 AM +0530 இன்றைய ஆசிரியர்கள் அனைவரும் தங்களுடைய கனவு ஆசிரியராகத் திகழ வேண்டுமென மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்பார்க்கின்றனர்.
கனவு ஆசிரியர் என்பவர் ஆசிரியர் சமுதாயத்தில் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக திகழ வேண்டியவராவார். மாணவர்களைத் தன்னுடைய பிள்ளையாக கருதி அந்த மாணவர்களின் சுக, துக்கங்களில் பங்கேற்று அவர்களுக்குத் தேவையான கல்வியை வழங்கி, அவர்களுடைய தேடல்களுக்கு வடிகாலாக அமைந்திருப்பவரே 'கனவு ஆசிரியர்'.
கல்வித்துறை போன்று வேறு எந்த துறைக்கும் ஒரு சமூகத்தை முன்னெடுத்துச் செல்லக் கூடிய பொறுப்பும், கடமையும் இல்லை. நாட்டின் எதிர்காலம் வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள்தான் நிர்ணயிக்கப்படுகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஒரு நல்ல ஆசிரியரால்தான் நல்ல சமூகத்தை உருவாக்க முடியும். 
குடும்பமும், பள்ளியும் மாணவர்களுக்குத் நல்ல சூழ்நிலையை உருவாக்கித் தரும்போதுதான் அவர்கள் கல்வியில் சிறந்த நிலையை அடைய முடியும். வகுப்பறையில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே நிலவும் நல்லிணக்கச் சூழலே மாணவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். தமது குடும்பத்தில் ஒருவராக மாணவரைக் கருதும் ஆசிரியரால்தான் அந்த மாணவருக்குத் தேவையான கல்வியை சரியாக வழங்க முடியும்.
தவறு செய்வது மனித இயல்பு. பல சூழல்களில் இருந்து மாணவர்கள் வருவதால் வகுப்பிலும், பள்ளி வளாகத்திலும் தவறுகள் நடைபெற வாய்ப்புள்ளது. அவ்வாறு மாணவர்கள் தவறு செய்யும்போது அதை அவர்களுக்கு உணர்த்தி அவர்களைத் திருத்த வேண்டும். சிறிய குற்றங்களைப் பெரிதாக சுட்டிக் காட்டி விமர்சனம் செய்தால் விளைவுகள் வேறுவிதமாக மாறிவிடும். அதே சமயம் மாணவர்கள் செய்யும் தவறுகளைக் கண்டும் காணாமலும் இருந்துவிட முடியாது, கூடவும் கூடாது. மாணவர்கள் தவறுகளை உணர்ந்து மீண்டும் அதுபோன்ற தவறுகளைச் செய்யாதவாறு ஆசிரியர்கள் அவர்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மாணவர் சமுதாயம் நல்ல, உயர்ந்த நிலை அடைந்திருந்தால் நிச்சயமாக அதற்கு காரணமாக இருப்பது ஆசிரியர் சமுதாயமே ஆகும். சிறந்த ஆசிரியர்கள் என்பவர்கள் செயலுக்கும் சொல்லுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பவர்களாக இருக்க வேண்டும்.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்று தெய்வத்திற்கு முன்னதாக ஆசிரியரை வைத்துள்ளோம். பெற்றோர்கள் ஒரு குழந்தையை இந்த உலகத்திற்குத் தருகிறார்கள். ஆனால் உலகத்தையே மாணவர்களுக்குத் தருகிறார் ஆசிரியர். இறந்த பிறகும் மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் வரிசையில் ஆசிரியர்களுக்கு முதல் இடம் உண்டு.
ஆனால் தற்போதைய சூழ்நிலையில் ஆசிரியர் பணியை சேவைப் பணியாக கருதாமல், வணிக ரீதியிலான பணியாக கருதிப் பலரும் பணிபுரிந்து வருகின்றனர். 
தாயாக, தந்தையாக இருக்கின்ற ஆசிரியர் தன்னிடம் படிக்கும் மாணவிகளிடம் தவறாக நடப்பதாக வரும் செய்திகள் மிகவும் வேதனை தருவன. தன்னுடைய குழந்தையாக பாவிக்க வேண்டியவரே தடம் மாறிச் செல்கின்றாரே! அத்தகைய ஆசிரியர்கள் ஒட்டுமொத்த ஆசிரியர் பணிக்கே இழிவை ஏற்படுத்தி வருகின்றனர்.
மாணவர்களுக்கு நல்வழிகாட்டுவது, அவர்களுடைய திறமைகளைக் கண்டறிந்து வெளிக் கொணர்வது, இவற்றையெல்லாம் செய்யாவிட்டாலும், மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டியவர்களே தவறான வழியில் செல்கிறார்கள்.
இன்றைய திரைப்படங்கள், சமூக ஊடகங்களால் மாணவர்கள் அழிவுப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இந்தக் காலகட்டத்தில் மாணவர்களுக்கு ஒழுக்கக் கல்வி மிகவும் அவசியமானதாக உள்ளது. தற்போதைய கல்வி முறையில் ஒழுக்கக் கல்வியைச் சேர்த்து மாணவர்களுக்கு போதிக்கப்பட வேண்டும்.
மாணவரின் தவறான செயல் ஒரு ஆசிரியரை பாதிக்காது. ஆனால் ஒரு ஆசிரியரின் தவறான செயல் ஒரு சமூகத்தையே தவறான பாதைக்கு அழைத்துச் சென்றுவிடும்.
ஆசிரியரின் நடத்தைதான் மாணவர்களின் நடத்தை ரீதியான மாற்றத்திற்கு முன்மாதிரியாக அமைகிறது. வாழ்க்கைக் கற்றலில் மாணவர்கள் ஆசிரியர்களின் நடத்தை, செயல்பாடுகளின் மூலம் கற்றுக் கொள்கின்றனர். புத்தகக் கல்வி மட்டுமல்லாமல், சிறந்த பண்பாடு, ஒழுக்கம், சமூகத் தொடர்புகள் போன்ற அத்தனை துறைகளிலும் மாணவர்களை வழிகாட்ட வேண்டியது ஆசிரியர்களின் கடமையாகும். அதனால் ஆசிரியர் பல்துறை வல்லுநராக இருக்க வேண்டியது அவசியமாகின்றது. 
ஆசிரியர் கல்வியை மட்டும் வழங்குவதில்லை; மத, மொழி, ஜாதி ரீதியில் உள்ள வேறுபாடுகளைக் களைந்து, அனைவரையும் மாணவர்கள் மதிக்க கற்றுத் தருபவர்கள் ஆசிரியர்கள்.
கற்பித்தல் என்பது ஒரு வகையில் கண்டறியும் கலையாகும். பலருக்குத் தங்களின் பலம் எதுவென்று கூடத் தெரிவதில்லை. 
நல்ல ஆசிரியர்கள், மாணவர்களின் தனித்திறனை, பலத்தைக் கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்தி, நம்பிக்கையை விதைத்து வாழ்க்கையில் முன்னேற உதவுகிறார்கள். 
ஆசிரியர்கள் அறிவுக் கதவுகளைத் தட்டித் திறப்பவர்கள். சமூகத்தில் அனுபவம் என்ற வெளிக்காற்றை மாணவர்களுக்கு சுவாசிக்க கற்றுத் தருபவர்கள். அறியாமை இருட்டைத் திறந்து அறிவு என்ற ஒளி தருபவர்கள். ஆசிரியர்கள் தங்களுடைய பெரும் கடமையை உணர்ந்து செயல்பட்டு மாணவர்களின் கனவு ஆசிரியர்களாக தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.
 

]]>
http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/mar/03/கனவு-ஆசிரியர்-2873370.html
2872571 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் வங்கி மோசடி: தீர்வு என்ன? எஸ். கோபாலகிருஷ்ணன் DIN Friday, March 2, 2018 01:30 AM +0530 பஞ்சாப் நேஷனல் வங்கியில் நேர்ந்த ரூ.11,500/ கோடி மோசடி நாட்டையே உலுக்கிவிட்டது. யாரைப் பார்த்தாலும், விஜய் மல்லையா விவகாரம் முடிவதற்குள், இப்படி ஒரு மோசடியா? என்று அதிர்ச்சி தெரிவித்தனர். இந்நிலையில், அரசு முதல் சாதாரண குடிமகன் வரை, இந்த தொடர் மோசடிகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது அவசர அவசியம் என்று கருதுவதில் வியப்பில்லை. அதேநேரம், 'வங்கிகளைத் தனியார் மயமாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது' என்று பலரும் கூறுகின்றனர். அதாவது, இந்த பயங்கரமான நிதி மோசடிகளுக்கெல்லாம் வங்கிகள் அரசின் உடைமையாக இருப்பதுதான் காரணம் என்பது அவர்களது கூற்றாக உள்ளது. இது எந்த அளவு உண்மை?
1969-ஆம் ஆண்டு வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. 1970களிலோ, 1980களிலோ அல்லது 1990களிலோ இதுபோன்ற பெரும் நிதி மோசடிகள் வங்கிகளில் நிகழவில்லை என்பது நிதர்சனம். இந்திய வங்கிகள் வரலாற்றில் முதல் முறையாக நிகழ்ந்த பெரிய அளவிலான வங்கி மோசடி 1992-ஆம் அண்டு, ஷர்ஷத் மேத்தா என்னும் பங்குச் சந்தை தரகர் பாரத ஸ்டேட் வங்கியில் அரங்கேற்றியதுதான். தொகை ரூ.4,900 கோடி. பிறகு, அதேபோன்ற மற்றொரு மோசடி 2001-ஆம் ஆண்டு, கேதன் பாரேக் என்னும் பங்குத் தரகர் ரூ.1,200 கோடி வங்கி மோசடி செய்தார்.
1991-92ல் அறிமுகமான தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் சித்தாந்தங்கள் செயல்படுத்தப்பட்ட நேரத்தில் 'புதிய தலைமுறைத் தனியார் வங்கிகள்' தொடங்கப்பட்டன. அந்த சமயம் நிறுவப்பட்ட 'குளோபல் டிரஸ்ட் வங்கி' என்னும் தனியார் வங்கி, தொடங்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே, பல்வேறு மோசடிகளினால் திவால் ஆனது.
ஆக, வங்கி மோசடிகளுக்கும் வங்கிகள் நாட்டுடமையாக இருப்பதற்கும் தொடர்பில்லை என்பது வெளிப்படை.
மாறாக, வங்கி மோசடிகளுக்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. எந்த ஆட்சி நடந்தாலும் சரி, பொதுவாக அரசியல் செல்வாக்கு, சில வங்கித் தலைவர்கள் உள்ளிட்ட மேல்நிலை அதிகாரிகளின் வளைந்து கொடுக்கும் போக்கு, பேராசை, அதிகாரிகளுக்கு கண்காணிப்புத் திறமை இன்மை, கடன் வழங்கும் கலையில் தேர்ச்சி இன்மை ஆகியவையே மோசடிக்கான காரணங்கள். இவை தவிர, நிர்வாக இயலின் பால பாடங்களைக் கூட கடைப்பிடிக்கத் தவறியதும் தற்போதைய அவலநிலைக்கு காரணம்.
உதாரணமாக, வங்கி அதிகாரிகள் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை பணி இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்பது நியதி. பெரும்பாலும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது இடமாற்றம் செய்வார்கள். இதன் மூலிலம் அவர்களுக்குப் பணிப் பயிற்சியும் அனுபவ ஆற்றலும் அதிகரிக்கும். அதேநேரம், சில அதிகாரிகளுக்கு முறைகேடுகளில் ஈடுபடும் மனப்பான்மை இருக்குமேயானால், இடமாற்றங்கள் ஒரு தடுப்பணையாக அமையும். இதை 'ஜாப் ரொடேஷன்' என்பார்கள். பஞ்சாப் நேஷனல் வங்கியில் சம்பந்தப்பட்ட நபர் 6 ஆண்டுகளாக ஒரே பணியில், ஒரே இடத்தில் இருந்துள்ளார்.
அதேபோல், ஒரு அலுவலர் வருடக்கணக்கில் ஒருநாள்கூட விடுமுறை எடுக்காமல் இருந்தால், அவரது நடவடிக்கை கண்காணிக்கப்பட வேண்டும். அவர் எதையோ மறைக்கிறார், அவர் ஈடுபட்டுள்ள முறைகேடுகளை, வேறு ஒருவர் தன் பணியை மேற்கொண்டால், கண்டுபிடித்துவிடுவார் என்ற அச்சத்தினால் விடுமுறை எடுக்காமல் பணிக்கு வருபவர்களும் உண்டு.
ரிசர்வ் வங்கியின் முக்கியப் பொறுப்புகளில் ஒன்று, வங்கிகளின் நிதி மற்றும் நிர்வாகம் தொடர்பான பணிகளைக் கண்காணிப்பதாகும். இந்தப் பணியை மேற்கொள்வதில் ரிசர்வ் வங்கியும் அவ்வப்போது தவறிவிடுகிறது. போதிய மனிதவளம் -ஊழியர்கள்- இல்லாததே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இது ஏற்கத்தக்கது அல்ல. ரிசர்வ் வங்கியின் முக்கியமான பணிகளை மேற்கொள்ள ஆள் பற்றாக்குறை என்பதை ஒரு காரணமாக ஏற்க முடியாது.
அதுமட்டும் அல்ல. ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் பதவி இடம் கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல், அதாவது 7 மாதங்களுக்கு மேல், நிரப்பப்படாமல் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
தொழில்நுட்ப மேம்பாடு எவ்வளவுக்கெவ்வளவு உதவியாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு ஆபத்துகளையும் உருவாக்க வல்லது. அத்தகைய ஆபத்துகளை அடையாளம் கண்டு, அவற்றை முறியடிப்பதற்கு ஏற்ப அலுவலர்களுக்குப் பயிற்சியும் விழிப்புணர்வையும் உருவாக்க வேண்டும்.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் வில்லனாக அமைந்தது SWIFT இயந்திரம் தான். Society for Worldwide Inter-Bank Financial Telecommunication  என்பதன் சுருக்கம்தான் SWIFT . இது சர்வதேச அளவிலான வங்கிகளுக்கு இடையேயான நிதி தொடர்பான தகவல் பரிமாற்ற சாதனம். ரகசிய 'பாஸ்வேர்டு' லிமூலம்தான் இதனை இயக்க முடியும். வங்கி அலுவலகத்தில் மிகவும் நம்பிக்கைக்குரிய ஒரு சிலரிடமே 'பாஸ்வேர்டு' ஒப்படைக்கப்படும். அந்த பாஸ்வேர்டு வைத்திருந்த நபரே கடந்த பல ஆண்டுகளாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஒரே பணியில் ஒரே இடத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தார்.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், சிபிஎஸ் என்கிற நடைமுறை. ஒரு வங்கியின் அனைத்து கிளைகளுக்கும் இடையேயான தகவல்கள் எல்லாக் கிளைகளிலும் கிடைக்கும் விதத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும். ஒரு வங்கியின் ஒரு கிளையில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர் வேறு எந்த கிளையில் வேண்டுமானாலும் தனக்கு தேவையான சேவையை பெற முடியும். இந்த நடைமுறையைத்தான் சிபிஎஸ் (Core Banking Solution)என்கிறார்கள். பஞ்சாப் நேஷனல் வங்கியின் சம்பந்தப்பட்ட SWIFT சாதனமும் சிபிஎஸ்ஸும் இணைக்கப்படவில்லை. இதனால் தான் மோசடிகள் பல ஆண்டுகள் வெளிவராமல் இருந்துள்ளன.
மேலும் வங்கிகளில் தற்போது நடைமுறையில் உள்ள கேஒய்சி (அதாவது 'உங்கள் வாடிக்கையாளர்களை அறிந்து கொள்ளுங்கள்') என்கிற சர்வதேச நியதிகள் அடிப்படையில் வாடிக்கையாளர் பற்றிய பின்னணித் தகவல்களை அறிந்துகொள்ள முடிகிறது. இதன் லிமூலம் பயங்கரவாதிகளுக்கு வெளிநாடுகளிலிருந்து பணம் வரும்பட்சத்தில் அதை எளிதாகக் கட்டுப்படுத்த முடியும்.
அதேபோல் வங்கி அலுவலர்கள் ஊழல் முறைகேடுகளில் ஈடுபடாமல் தடுப்பதற்கு கேஒய்இ (அதாவது 'உங்கள் ஊழியர்களை அறிந்து கொள்ளுங்கள்') என்கிற உலக அளவிலான நடைமுறையை இயன்ற அளவு (ஊழியர்களுக்குத் தேவையில்லா இன்னல்கள் தராத அளவு) பின்பற்றுவது குறித்துப் பரிசீலனை செய்யலாம்.
இன்றைய சூழலில் அலுவலர்களுக்குத் தேவை, திறமை மட்டும் அல்ல, ÷நேர்மையும் கூட. இதை உறுதிப்படுத்தும் வகையில், கேஒய்இ நடைமுறை பயன்படக் கூடும். இதை எப்படி அலுவலர்களுக்கு சிரமம் இல்லாமல் செயல்படுத்தலாம் என்பதற்கு ஆய்வு மேற்கொள்வது நல்ல பலனைத் தரும்.
மேற்கூறிய நிகழ்வில் தணிக்கை முறை படுமோசமாகத் தவறி உள்ளது. வங்கிகளில் தற்போது மூலின்று அடுக்கு தணிக்கை முறை உள்ளது. வங்கியைச் சேர்ந்த தணிக்கையாளர்கள் (இன்டர்னல் ஆடிட்டர்கள்), வங்கி சாராத வெளித் தணிக்கையாளர்கள் (எக்ஸ்டர்னல் ஆடிட்டர்கள்) மற்றும் ரிசர்வ் வங்கியால் சட்டப்படி நியமிக்கப்படும் தணிக்கையாளர்கள் (ஸ்டாச்சூட்டரி ஆடிட்டர்கள்) ஆகியவர்கள் ஆண்டு முழுவதும் ஒருவர் மாற்றி ஒருவர் என வங்கி செயல்பாடுகளைத் தணிக்கை செய்து, விதிமுறைகள் மீறப்பட்டுள்ளனவா என ஆய்வு செய்வார்கள். இதுவும் பஞ்சாப் நேஷனல் விஷயத்தில் தோல்வி அடைந்துள்ளது.
தற்போது நடந்துள்ள பெரும் பண மோசடிகளுக்கு, மேற்கூறியவை போன்ற பல்வேறு காரணங்கள் இருந்துள்ளன என்பது தெளிவு. இந்தக் கடும் குறைகளைக் களைவதே நாம் மேற்கொள்ள வேண்டிய முதல் பணியாக இருத்தல் வேண்டும்.
மாறாக, வங்கிகளைத் தனியார்மயமாக்குதல்தான் தீர்வு என்றும், அதற்கான தருணம் வந்துவிட்டது என்றும் தனியார் தரப்பிலும் அரசு தரப்பிலும் கூறப்படுகிறது. விருப்பு, வெறுப்பின்றி யோசித்தால் அது கடிகாரத்தின் முள்ளைப் பின்னோக்கி நகர்த்துவதாகத்தான் அமையும் என்பது புலப்படும். அதனால் வங்கிகளின் பணியில் திறன் மேம்பாடும், தொழில்நுட்ப முன்னேற்றமும் வசப்படுமா என்பது கேள்விக்குறியே.
அரசுடைமை வங்கிகளில் விவசாயக் கடன் மற்றும் சிறுதொழில் கடனுக்கு ஒட்டுமொத்தக் கடன் அளிப்பில் 40 சதவீதம் ஒதுக்கப்படுகிறது. அதுவும் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுகிறது. இது தனியார் வங்கிகளில் சாத்தியமா? அரசுடைமை வங்கிகளில் லாபத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் குக்கிராமங்களிலும் கிளைகள் திறக்கப்படுகின்றன. தனியார் வங்கிகளில் அதுபோன்று கிராமக் கிளைகள் திறக்கப்படுமா? பிரதமரின் ஜன்தன் திட்டத்துக்கு ஏதுவாக தனியார் வங்கிக் கிளைகள் கிராமங்களில் செயல்படுமா?
கடந்த 11 ஆண்டுகளில், பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம் மற்றும் அருண் ஜேட்லி ஆகிய மூலின்று நிதிஅமைச்சர்கள், பொதுத்துறை வங்கிகளுக்கு மூலிலதனத் தேவையான ரூ.2.6 லட்சம் கோடியை செலுத்தியிருக்கிறார்கள். இது பட்ஜெட் மூலிலம் செலுத்தப்பட்ட தொகை என்பதால், வரிகள் வடிவத்தில் இறுதியாக இந்தச் சுமை மக்கள் தலையில்தான் விழும் என்பதையும் மறக்க முடியாது. எனவே, வங்கிகளில் ÷நேரும் மோசடிகளை எப்பாடுபட்டாவது ஒழிக்க வேண்டியதுதான் உடனடித் தேவை.
அதற்கேற்ப, பொதுமக்களுக்கோ, பொதுத்துறை வங்கிகளுக்கோ, வங்கி வாடிக்கையாளர்களுக்கோ, சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரும் தொழில்களுக்கோ பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் வங்கிகளில் நிதி மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதே அவசியமும் அவசரமும் ஆகும்.

]]>
http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/mar/02/வங்கி-மோசடி-தீர்வு-என்ன-2872571.html
2872570 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் சட்டம் யார் கையில்? பாறப்புறத் இராதாகிருஷ்ணன் DIN Friday, March 2, 2018 01:25 AM +0530 ஒரு நாட்டில் அமைதி நிலவ வேண்டுமென்றால் அங்கு சட்டமும், ஒழுங்கும் சீரோடும், சிறப்போடும் பேணப்படுதல் வேண்டும். அரசு சட்டம் இயற்றும் பணியையும், அதை அமல்படுத்தும் பணியை அரசு நிருவாகவும், அதைக் கட்டிக் காக்கும் பணியை நீதித் துறையும் செவ்வனே செய்துவரும் வேளையில், அச்சட்டத்தைப் பின்பற்றி ஒழுங்காக நடக்க வேண்டிய பெரும் பொறுப்பும், கடமையும் மக்களிடம்தான் உள்ளது.
நம் நாட்டில் நிறைய சட்டங்கள் இருக்கின்றன, ஆனால் ஒழுங்குதான் இல்லை. 
மக்களுக்காக, மக்கள் நலன் கருதித்தான் மக்களால் ஆளப்படும், மக்கள் நல அரசுகளால் அவ்வப்போது சட்டங்கள் இயற்றப்படுகின்றன. எனவே, சட்டம் என்பது நமக்கு நாமே வகுத்துக் கொண்ட சில நெறிமுறைகளின் தொகுப்புதான். ஆனால், அதை ஒழுங்காகப் பின்பற்ற வேண்டிய மக்களே தங்கள் கடமையை அவ்வப்போது மறந்து, தாங்களே சட்டத்தை மீறி, பொறுப்பற்ற முறையில் நாட்டின் அமைதியைக் கெடுக்கிறார்கள். 
சமீப காலமாக மக்களில் சிலர் விலங்கனைய, பகுத்தறிவுக்கு ஒவ்வாத செயல்களில் ஈடுபட்டு மனிதர்களுக்கே உரித்தான மனிதநேயத்தை தொலைத்து வருகிறார்கள். இதனால் மனித உரிமைகள் மீறப்பட்டு, சட்டத்தை தங்கள் கையிலெடுத்து உயிர்க் கொலைகளைப் புரிவதோடு, மன வலியையும், உடல் வலியையும் ஏற்படுத்தி ஜனநாயக நாட்டில் மனிதக் குலத்திற்கு இழுக்கை ஏற்படுத்தித் தருகிறார்கள். 
அண்மையில் சிவகங்கையில் ஒரு சம்பவம். அங்கே ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அப்போது பரமக்குடி செல்லவிருந்த அரசுப் பேருந்தை அதன் ஓட்டுநர் இயக்க முற்பட்டபோது, வழக்குரைஞர்களில் ஒருவர், பேருந்தின் பக்கவாட்டு கம்பியை பிடித்துக் கொண்டு பேருந்து இயக்கத்தை தடுக்க முற்பட்டதாகவும் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்ததால் பதற்றமடைந்த சில வழக்குரைஞர்கள், அப்பேருந்து ஓட்டுநரின் சட்டையைப் பிடித்து இழுத்து, வயதானவர் என்றும் பாராமல் பலமாக தாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. வழக்குரைஞர்களின் தாக்குதலுக்குள்ளான ஓட்டுநர் மனமுடைந்து பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். சட்டத்தைக் காக்க வேண்டியவரில் சிலரே சட்டத்தைக் கையிலெடுத்ததால் நேர்ந்த சோகம் இது.
மற்றொரு சம்பவம் தலைநகர் சென்னையில் நடந்தது. மாநகர அரசுப் பேருந்தில் பயணம் செய்த ஒரு பயணி, சுய ஒழுக்கமில்லாமல் திடீரென எச்சிலை வெளியே உமிழ்ந்தார். அது பேருந்தையொட்டி இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த இருவர் மீது படவே, வெகுண்ட அவர்கள் பேருந்தை மறித்து தகராறு செய்து, ஓட்டுநரைத் தாக்கிவிட்டுத் தப்பியோடிவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது. அவ்வழியே வந்த வேறு அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதைத்தான் பழி ஓரிடம், பாவம் வேறிடம் என்று சொல்வார்கள்போலும். பாதிக்கப்பட்டவர்கள் சட்டத்தைக் கையிலெடுத்து, ஓட்டுநரைத் தாக்கியதால் அப்பகுதியில் சட்டம் - ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்திவிட்டனர். 
இன்னொரு சம்பவம் - செங்கல்பட்டை அடுத்த காந்தலூர் என்னும் கிராமத்தில் பூட்டிய வீட்டின் கதவை ஒருவர் உடைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்த அவ்வூர் பொது மக்கள், அவர், யார், எவர் எனத் தெரியாமல் கண்மூடித்தனமாக அந்நபரைத் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். திருட வந்ததாக கருதப்பட்ட நபரை, பொதுமக்கள் காவல் துறையினரிடம் ஒப்படைந்திருந்தால் ஓர் உயிர் பலி நிகழ்ந்திருக்காது. இங்கு பொதுமக்களை சட்டத்தைக் கையிலெடுத்து தண்டனையைக் கொடுத்துள்ளனர். 
அண்மையில் கேரளத்தில் மனநலம் பாதித்த பழங்குடி இளைஞர் ஒருவர் கடைகளில் உணவுப் பண்டங்களைத் திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்டு, அப்பகுதியிலுள்ள இளைஞர்கள் அவரைக் கடுமையாகத் தாக்கினர். அது போதாதென்று, அவரைக் கட்டியிட்டு கைப்படம் எடுத்து, சமூக வலைதளத்தில் பரப்பினர். பலமாகத் தாக்கப்பட்ட அந்தப் பழங்குடி இளைஞர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார். இது அந்த மாநிலமே கொந்தளிக்கச் செய்த சம்பவமாயிற்று. இங்கும் பொதுமக்களே சட்டத்தைக் கையிலெடுத்து, குற்றவாளியெனத் தீர்ப்பு வழங்கி, தண்டனை விதித்துள்ளனர். 
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 51ஏ (எச்)-இன்படி அறிவியல் மனநிலை, மனித நேயம், புலனறிவு ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்ந்து செய்யப்படும் சீர்திருத்தங்களை மேற்கொள்வது என்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். எனினும், காரண காரியங்களையும், பகுத்தறிவையும் அடிப்படையாகக் கொண்ட அறிவியல் மனநிலையிலிருந்து இப்போது மக்கள் சற்றே விலகி, மனித நேயமற்ற கற்காலத்திற்கே சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.
இன்றைய சட்டங்கள் இல்லாத பண்டைய காலத்திலும் நெறி வழி நடந்து தெய்வநிலை அடைந்தோர் உண்டு. நவீன யுகத்தில் சட்டத்தின் மாட்சியின் கீழ், ஒவ்வொரு மனிதனுக்கும் உயிர் வாழ, பாதுகாப்புடன் வாழ உரிமை இருக்கிறது. நீதியையும் நெறியையும் பின்பற்றினால் மனிதனும் தெய்வமாகலாம். நேர்மையும் நெறியும் தவறினால், மனிதனும் விலங்காகலாம்.
 

]]>
http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/mar/02/சட்டம்-யார்-கையில்-2872570.html
2872047 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் கிலியூட்டும் சங்கிலித் திருடன் ஆர். நடராஜ் DIN Thursday, March 1, 2018 01:31 AM +0530 நெரிசலான பஸ் பயணம் அல்லது திருவிழா காலங்களில் திரளும் கூட்டம், நாளும் கிழமைகளிலும் கோயில்களுக்குச் செல்லும் பெண்கள் இவர்களைக் குறி வைத்து திருடர்கள் கூட்டத்தோடு கலந்து செயின் பறிப்பது அல்லது மணி பர்ஸ் திருடுவது போன்ற குற்றங்களில் ஈடுபடுவார்கள். அவர்கள் செயின் பறிப்பதே தெரியாமல் லாகவமாக கழட்டுவார்கள். கூட்டங்களில் திருடுவது ஒருவகை. பின்பு சைக்கிளில் சென்று நடந்து செல்லும் பெண்களிடமிருந்து செயின் பறிப்பு நடக்கும். அது ஒரு கால கட்டம். 
அடுத்து மோட்டார் சைக்கிள் புழங்க ஆரம்பித்தவுடன் அதில் வந்து திருடும் கும்பல் பெருகியது. இப்போது அதி நவீன வேகமாக செல்லக்கூடிய மோட்டார் சைக்கிள் வந்துவிட்டன. அதில் சில வண்டிகளில் பின்னால் இருக்கை உயரமாக இருக்கும். அதில் உடகார்ந்து செயின் பறிப்பது சுலபம். ஹெல்மட் அணிந்திருப்பார்கள் தங்கள் முகம் தெரு கண்காணிப்பு கேமராக்களில் பதியாமல் இருக்க.
ஒரு சுற்று கிளம்பினார்கள் என்றால், ஒரு மணி நேரத்தில் பல இடங்களில் திருடிவிட்டு மறைந்துவிடுவார்கள். குறைந்தது ஒரு சவரனாவது ஒரு செயினில் கிடைக்கும். பத்து இடத்தில் நிச்சயமாக பத்து சவரன். இன்றைய விலைக்கு சுமார் இரண்டு லட்சத்து முப்பதாயிரம். நடந்த குற்றங்களில் பாதி வழக்குகள் காவல் நிலையத்திற்கே வராது. பாதிக்கப்பட்டவர் மனு கொடுத்தாலும் எவ்வளவு பதிவாகிறது என்பது கேள்விக்குறி!
செயின் பறிப்பு என்னும் கொடுங்குற்றம் காவல்துறைக்கு எந்த காலகட்டத்திலும் ஒரு சவாலான நிகழ்வு. மதியம் ஆள் நடமாட்டம் இல்லாத வேளை அல்லது இரவு எட்டு மணிக்கு மேல் செயின் பறிப்பு குற்றங்கள் நிகழும். ஆனால் இப்போது நேரம் பொழுது என்றில்லாமல் எப்போதும் நிகழலாம் என்பது காவல்துறையை திணற அடிக்கும் நேர்வு. 
நாடு பல விதத்தில் முன்னேறுவது போல் குற்றவாளிகளும் நவீன யுக்திகளை கையாள்கிறார்கள். வெளி மாநிலங்களிலிருந்து வருகிறார்கள். ஓரிரு தினம் கைவரிசையை காட்டிவிட்டு விமானத்தில் சென்றுவிடுகின்றனர். சென்னையில் தங்குவதும் சௌகரியமான நட்சத்திர ஹோட்டலில். இத்தகைய ஹைடெக் குற்றவாளிகளுக்கு கடிவாளம் போடுவது கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து பிடிப்பது போல் என்றால் மிகை ஆகாது.
செயின் பறிப்பு சட்டம் ஒழுங்கு பிரச்னையா அல்லது குற்றப்பிரிவு கவனிக்க வேண்டியதா என்பதில் எப்போதும் காவல் நிலைய அளவில் அதிகாரிகளிடையே வேறுபட்ட கருத்து இருக்கும். குற்றப்பிரிவுதான் கவனிக்க வேண்டும் என்று சட்டம் ஒழுங்கு அதிகாரிகள் ஒதுங்கிவிடுவார்கள். எல்லா பிரச்னையும் வாகனம், ஆட்கள் குறைவாக உள்ள குற்றப்பிரிவு தலையில்தான் விடியும்! சமாளிக்க முடியாமல் திணறுவார்கள். இந்நிலையில்தான் உயர் அதிகாரிகள் தலையிட்டு, குற்றத் தடுப்பு மற்றும் குற்றவாளிகள் கண்காணிப்பு முறைகளை நடைமுறைப்படுத்துவதில் எல்லோரையும் இணைக்க வேண்டும்.
ஒரு திரைப்படத்தில் வடிவேலு, 'நானும் ஒரு ரெளடி, என்ன கைது பண்ணி விலங்கு மாட்டி எடுத்துட்டு போங்கய்யா; கைது பண்ணலேனா ஊர்ல என்ன யாரும் மதிக்க மாட்டாங்கய்யா' என்று கெஞ்சுவார். 
இது நகைச்சுவைக் காட்சி என்றாலும் அதில் அர்த்தமுள்ளது, நிதர்சன உண்மைகள் உள்ளன. ரெளடி என்று ஒருவனுக்கு அங்கீகாரம் கொடுப்பதே காவல்துறைதான். வட்டாரத்தில் சேட்டை செய்பவனை கண்காணிக்க வேண்டும், எச்சரிக்கை செய்ய வேண்டும். சேட்டை அதிகமானால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது நடவடிக்கை எடுத்தால் சிறைக்குச் சென்று வந்தவுடன் ரௌடியை கண்டு மற்றவர் ஒதுங்குவார்கள். அதை அவன் தனக்கு மரியாதை கொடுப்பதாக நினைத்து, மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக, தன்னைச் சுற்றி ஒரு கும்பலை வைத்துக்கொண்டு அடாவடித்தனத்தில் ஈடுபடத் துவங்குகிறான். இவ்வாறு ஒரு கொம்பு சீவிய ரெளடி உருவாகுகிறான்.
எங்கு பணம் புரளுகிறதோ அங்கு ரெளடிகள் ஆஜர். ரியல் எஸ்டேட், வீட்டு மனை வியாபாரத் தொழில், தொழிலாளர்கள் அதிகமாக உள்ள தொழிற்சாலைகள், வியாபார மையங்கள் இவை ரௌடிகள் தங்கள் கைவரிசை காட்ட உகந்த இடங்கள். நில அபகரிப்பு, அதிக வட்டிக்குப் பணம் கொடுத்து வசூல் செய்வது, குடித்தனக்காரர்கள், குத்தகைக்காரர்களை அச்சுறுத்தி காலி செய்ய வைப்பது போன்ற சட்ட விரோத 'கட்டப்பஞ்சாயத்து', வன்முறையில் இறங்கி பணம் ஈட்டி தனது பலத்தை நிரூபிக்கும் ரொளடிகள் இருக்கிறார்கள். காவல் துறையில் சிலர், மற்றும் தரம் கெட்ட அரசியல்வாதிகள் இணக்கமாக இருப்பது ரௌடிகள் வளர்ச்சிக்கு வித்திடுகிறது.
'அண்ணன் உங்க வீட்ட வாங்கணும்னு சொல்றாரு, வித்துடுங்க' என்ற அன்பு மிரட்டலுக்கு பயந்து கைமாறிய வீட்டு மனைகள் பல.
கோடிகள் விலையில் வீடுகள் அல்லது விலை உயர்ந்த வாகனங்கள் வாங்கினால் அதற்கு ரொளடி மாமூல் வாங்க வந்துவிடுவார்கள். வீடு கட்ட மணல் செங்கல் அடுக்கினால் மாமூல் வாங்க வந்துவிடுவார்கள். ஒரு ஃப்ளாட்டுக்கு அதன் விஸ்தீரணத்திற்கு ஏற்றவாறு பாதுகாப்பு பணம்! 
மும்பை, தில்லி போன்ற நகரங்களில் ரொளடி மாமூல் அதிகம், சென்னையில் கொஞ்சம் குறைவு, மற்றபடி செய்யும் தொழிலுக்கு வஞ்சகம் இல்லாது வசூல்! கட்டுமானத் தொழில் செய்பவர்களுக்குப் பல இடைஞ்சல்கள். இத்தகைய சட்ட விரோத 'வரிகள்' மீண்டும் வாடிக்கையாளர்கள் மீதுதான் சுமத்தப்படும். மக்கள்தான் சகித்துக் கொள்ள வேண்டும்.
இம்மாதிரி உருவாகும் ரெளடிகளை தரம் பிரித்து நடவடிக்கை எடுக்க காவல்துறை உஷாராக செயல்பட வேண்டும். கொஞ்சம் தவறவிட்டாலும், நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டாலும் காளான்கள் தோன்றுவதுபோல் ரொளடி கும்பல் ஆங்காங்கே முளைத்துவிடும். கூடிக் குலாவி கொண்டாடும் அளவிற்கு வளர்ந்து விடுவார்கள். நல்ல வேளை, சென்னை காவல் சுதாரித்து கொண்டு பூந்தமல்லியில் ரொளடி கும்பலை சுற்றி வளைத்தது. பலரை கைது செய்து கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.
பொது அமைதியை காப்பதில் காவல் துறை பல கோணங்களில் யோசித்து, வரும் தகவல்களை ஆராய்ந்து தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொது அமைதி மூன்று வகையாகப் பிரித்து ஆராய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் விளக்கியுள்ளது. ஒரே மையமுள்ள மூன்று வட்டங்களாக பிரித்தால், வெளிவட்டத்தில் சட்டம் ஒழுங்கு அடங்கும்; அடுத்த உள்வட்டத்தில் பொது அமைதியும், மையத்தில் உள்ள வட்டம் தேசிய பாதுகாப்பு வளையத்தைக் குறிக்கும்.
சாதாரண வட்டார வழக்குகள், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் பொது அமைதி பாதிக்கும் வளையத்திற்குள் வராது. 
ஒரு குற்ற நிகழ்வு பரவலாக பீதியை கிளப்பும் வகையில் அமைந்தால், ஒருவரது சட்டத்தை மீறிய செயல் பலரிடம் அச்சம் ஏற்படும் நிலையை உண்டாக்கினால் பொது அமைதி பாதிக்கப்பட்டது என்று எதிரி மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கலாம். 
ஆனால் தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கு உட்படாது. தேசத்திற்கு விரோதமான செயல்கள் புரிவது, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவது போன்றவை தேசவிரோத சட்டத்திற்கு உட்படும். அத்தகைய குற்றங்கள், சட்டம், ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் . இவ்வாறு பொது அமைதி என்பதை மூன்று வகையாகப் பிரித்து உச்ச நீதிமன்ற நீதிபதி இதாயத்துல்லா தெளிவுபடுத்தியிருக்கிறார்.
இதன் அடிப்படையில்தான் போக்கிரிகளின் கொட்டத்தை அடக்க காவல் துறையினர் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். புனையப்பட்ட வழக்குகள் மேற்சொன்ன விதிகளுக்கு உட்படவில்லை என்றால் நீதிமன்றத்தில் அடிபட்டுப்போகும். எடுத்த முயற்சிகள் வீணாகும். 
முன்பெல்லாம் போக்கிரிகளை அடக்க 'காவல்துறை பாணியில் நன்கு கவனித்து', கடை வீதி வழியாக பொதுமக்கள் பார்க்கும் வகையில் விலங்கிட்டு அவன் கூனிக் குறுக நடத்தி அழைத்து செல்வார்கள். அதுவே போக்கிரியின் தலைச்செருக்கை உடைக்கும். தலை தொங்க அவன் செல்வதைப் பார்த்து மக்களுக்கு காவல்துறை மீது நம்பிக்கை பிறக்கும்.
ஆனால் இப்போது நவீன காவல் வாகனங்களில் கமுக்கமாக அழைத்துச் சென்றுவிடுகிறார்கள். கைது செய்ததே யாருக்கும் தெரிவதில்லை. அவனும் ஏதோ ரிசார்ட்டுக்கு சென்று வந்ததுபோல சிறையில் இருந்து வெளியில் வந்து தனது மாமூல் ரெளடி பயணத்தை தொடர்கிறான்.
ஒரு நிர்பயா போன்ற பயங்கரம் நிகழ இருந்தது; சென்னையின் நல்ல காலம் லாவண்யா பிழைத்துக்கொண்டாள். புறநகர் காவல் ரோந்து சிரமமானது. அதிகமான கனரக வாகனங்கள், ஆறுவழி சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்கள் குறைவான வெளிச்சம், இந்த சூழலில் வேவு பார்ப்பது கடினம்.
வழிப்பறிக் கொள்ளை 2016-ஆம் ஆண்டு தமிழகத்தில் 1680 வழக்குகள், செயின் பறிப்பு 1799 வழக்குகள் பதிவாகின. 2017-இல் சிறிது அதிகமாகி, முறையே 1850, 2051 வழக்குகள்.
செயின் பறிப்பும் வழிப்பறியும் ரௌடிகளின் கைவரிசையாகவே கொள்ள வேண்டும். இதில் சட்டம் ஒழுங்கு பிரிவிற்கும் முக்கிய பொறுப்பு. இரு சக்கர வாகனங்களில் வந்து செயின் பறிப்பு நிகழ்வதால் போக்குவரத்து போலீஸ் உடனடியாக தணிக்கை மேற்கொள்ள வேண்டும்.
காவல்துறையில் எப்போதும் காவலர் பற்றாக்குறை பெரிய பிரச்னை. பிற பணிகளில் காவலர்கள் அனுப்பப்படுவதும் முக்கிய காரணம்.
மும்பை 26/11 பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு நடத்தப்பட்ட உயர்நிலை ஆய்வில், ஒப்பளிக்கப்பட்ட 40,000 காவலர்களில் 16,000 பேர் முக்கிய நபர் பாதுகாப்பு மற்றும் இதர பணிகளில் விரையமாகி, காவல் நிலைய ஷிப்ட் பணிக்கு 12,000 காவலர்கள்தான் தேறுகிறார்கள் என்ற நிலை தெரியவந்தது. அதாவது 30% காவலர்களை வைத்துதான் குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்ற நிலை சென்னைக்கும் பொருந்தும். இது யானைக்கு சோளப்பொரி தீனி போல்!
அநாவசியப் பணிகளைக் களைந்து, தேவையின்றி முக்கிய நபர்கள் பாதுகாப்பில் காவலர்களை ஓரிடத்தில் குவிப்பதை தவிர்த்து, இருப்பதை வைத்து பரிமளிக்கச் செய்து, செயின் பறிப்பு போன்ற குற்றங்களைத் தடுப்பதில்தான் தனி ஆளுமை இருக்கிறது. 
அதுதான் ஸ்மார்ட் போலீஸுக்கு இலக்கணம்.
 

]]>
http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/mar/01/கிலியூட்டும்-சங்கிலித்-திருடன்-2872047.html
2872043 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் காவிரியை காப்பாற்ற அவசர நடவடிக்கை ஐவி. நாகராஜன் DIN Thursday, March 1, 2018 01:30 AM +0530 காவிரி ஆற்றின் மாசுத்தன்மை குறித்து ஆய்வு செய்த அண்ணா பல்கலைக் கழகத்தின் புவியியல்துறையை சார்ந்த போராசிரியர் மாணவர்கள் அடங்கிய குழுவினர் ஸ்பிரிங்கர் நேச்சரின் சர்வதேச புவி சுற்றுச்சூழல் அறிவியல் இதழில் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆராய்ச்சிக் கட்டுரை இப்போது விவாதப் பொருளாகியுள்ளது.
இந்த ஆராய்ச்சிக் கட்டுரை, 4 மாதங்களுக்கு ஒருமுறையாக ஒராண்டில் 3 முறை வீதம் 2013-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட நீரியல் ஆராய்ச்சி முடிவுகளின் தொகுப்பு ஆகும். காவிரி மட்டுமல்ல அதன் துணை ஆறுகளை மையப்படுத்தி எண்ணற்ற ரசாயன மற்றும் சாயத்தொழிற்சாலைகள் எப்போது வந்தனவோ அப்போதே காவிரி ஆற்றுக்கு கெட்ட நேரம் தொடங்கிவிட்டது.
தோல் ஆலைக்கழிவுகள், சாயக் கழிவுகள், காகித ஆலைக்கழிவுகள், சாம்பல் கழிவுகள் உட்பட பல விதமான கழிவுகள் காவிரியில் பாயத்தொடங்கின. இதனால் காவிரி ஆற்று நீரின் தரம் படிப்படியாக குறைந்துவிட்டது. காவிரியின் முகத்துவாரமான பூம்புகாரில் தொடங்கி உற்பத்தியாகும் தலைக்காவிரி வரையிலான பகுதிகளில் 25கி.மீட்டர் தூரத்துக்கு ஒரு இடம் என்று பிரித்து மொத்தம் 28 இடங்களில் நீர் மாதிரிகளை சேகரித்துள்ளனர். இந்த நீர் மாதிரிகள் காவிரி ஆற்றிலும் ஆற்றின் கரையிலுமிருந்து அதிகபட்சமாக 300 மீட்டர் தூரத்தில் உள்ள கிணற்றில் இருந்தும் எடுக்கப்பட்டுள்ளன.
காவிரியில் கலந்துள்ள மாசு காரணமாக அந்நீரைக் குடிக்கவும் விவசாயத்துக்கு எந்தளவுக்கு பயன்படுத்த முடியும் என்பதையும் அறிவதே இந்த குழுவின் பிரதான நோக்கம் என்று தெரிவித்துள்ளனர்.
குடிநீரில் என்னென்ன தாது உப்புகள் எந்தளவுக்கு இருக்க வேண்டும் என்ற வரையறையை பிஐஎஸ் என்ற இந்திய தரக்கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் அலுமினியம், அமோனியா, கால்சியம், குளோரைடு, தாமிரம் புளுரைடு, இரும்பு, மெக்னீசியம், மாங்கனீஸ், நைட்ரேட் உள்ளிட்ட பல வகையான உப்புகளும் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
ஆற்று நீரோட்டம் அதிகமாக இருந்த இடங்களில் காவிரியின் நீர் குடிக்கும் வகையில் இருந்தது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் அமராவதி நொய்யல் ஆற்றின் படுகைகளிலும் அவை காவிரியில் கலக்கும் இடங்களிலும் தண்ணீரில் சோடியம், குளோரைடு, பொட்டாசியம், மக்னீசியம் ஆகியவற்றின் அளவு அதிகமாக உள்ளது. இதனால் அவற்றை குடிநீர் மற்றும் பாசனத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது.
இதில் இன்னொரு அதிர்ச்சியும் உள்ளது. காவிரிக் கரையோரத்தில் இருந்து இரு பக்கங்களிலும் தலா 300 மீட்டர் தூரத்துக்கு நிலத்தடி நீர் சோதனை நடைபெற்றது. இதில் பூம்புகார் பண்ணையூர், திருவலஞ்சுழி, கண்டியூர்பாலம், ஸ்ரீராமசமுத்திரம், கிழக்கு தவிட்டுப்பாளையம், மேக்கேதாட்டு, ருத்ரபட்டினம் உள்ளிட்ட 10 இடங்களில் எடுக்கப்பட்ட நிலத்தடிநீரில் அதிகப்படியான சோடியம், குளோரைடு பொட்டாசியம், மக்னீசியம் ஆகியவை இருந்ததால் அவற்றை குடிநீர் தேவைக்கு பயன்படுத்த முடியாது என்பது உறுதியானது. அதேபோல் பூம்புகார் பண்ணையூர், ஸ்ரீராமசமுத்திரம், குளித்தலை கிழக்குதவிட்டுப்பாளையம் மேக்கேதாட்டு, டி.நரசிபுரா ஆகிய பகுதிகளில் உள்ள நிலத்தடி நீரை பாசனத்துக்கு பயன்படுத்த முடியாது என்பது தெரியவந்தது.
இப்போது காவிரிப் படுகையின் நிலத்தடி நீர் மட்டும் அதிக அளவில் பாதிக்கபட்டுள்ளது. காவிரிக் கரையோரம் தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் உள்ள தொழிற்சாலைகள் தங்கள் கழிவுகளை சுத்திகரிக்காமல் அல்லது ஜீரோ டிஸ்சார்ஜ் செய்யாமல் வெளியிட்டால், நேற்று நொய்யல் ஆற்றுக்கு ஏற்பட்ட மோசமான நிலை, நாளை காவிரிக்கும் ஏற்படலாம் என்பதே ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட கட்டுரையின் ரத்தின சுருக்கமாக உள்ளது.
தொழில் வளர்ச்சியை மறுக்க முடியாது. ஆனால் அவற்றினால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கலாம். குறிப்பாக பவானி நொய்யல் மற்றும் அமராவதியை மாசுபடுத்தும் சாயக் கழிவுகள் சலவை ஆலைக் கழிவுகள் பேப்பர் ஆலைக் கழிவுகள் ஆகியவற்றை முறைப்படி சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழியாக செலுத்தி அவற்றின் ரசாயன மற்றும் உப்பு அளவுகளை குறைக்க வேண்டும. குறிப்பாக திருப்பூர், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள சாயப்பட்டறைகளின் பயன்பாட்டுக்காக பொது சுத்திகரிப்பு யூனிட்களை உடனடியாக உருவாக்கி சுத்திகரிப்பு செய்து சாயக் கழிவுகளை கடலில் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.
சாயக் கழிவுகள் மற்றும் பேப்பர் ஆலைக் கழிவுகள் நேரடியாக ஆறுகளில் கலந்திட தடை விதிக்க வேண்டும். அதேபோல் நகர்மயமாதலால் உருவாகும் கழிவுகளை பெரிய நகரங்களில் மட்டுமே சுத்திகரிக்கின்றனர். சிறிய பஞ்சாயத்துக்கள் மற்றும் நகர பேரூராட்சிகள் பகுதிகளில் கழிவுகள் அப்படியே ஓடைகள் வழியாக காவிரியில் பாய்கிறது. எனவே, சிறிய ஊராட்சி அமைப்புகள் கழிவுநீரை சுத்திகரிப்பு 
செய்து வெளியேற்றிடவேண்டும். இதுதான் காவிரியை இப்போதைக்கு காப்பாற்றும் அவசர நடவடிக்கையாக இருக்கும் என்று ஆய்வின் சுருக்கம் வெளிப்படுத்துகிறது.
இந்தியாவில் உள்ள முக்கியமான 275 பெரிய- சிறிய நதிகள் தொழிற்சாலைக் கழிவுகளால் மாசு அடைந்து கொண்டிருப்பதாக தேசிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கவலை தெரிவித்துள்ளது. இதில் தமிழகத்தில் காவிரி உள்பட 7 ஆறுகள் தொழிற்சாலை நகர்மயக் கழிவுகளால் கடுமையாக மாசடைந்து கொண்டிருப்பதை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சுட்டிக்காட்டியுள்ளது. 
விவசாயிகளுக்கும் ஆற்று நீரைக் குடிநீர் தேவைக்காக நம்பிக் கொண்டிருக்கும் கோடிக்காணக்கான மக்களுக்கும் நிச்சயம் மகிழ்ச்சி தரும் செய்தியாக இருக்காது என்பது மட்டும் உண்மை.

]]>
http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/mar/01/காவிரியை-காப்பாற்ற-அவசர-நடவடிக்கை-2872043.html
2871413 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் தொடரும் தேசபக்திக் குழப்பம்! எஸ். குருமூர்த்தி DIN Wednesday, February 28, 2018 01:38 AM +0530 நாடு, தேசம், தேசியம், தேசபக்தி ஆகியவை தனித்தனி கருத்தாக்கங்கள் அல்ல. இவை ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. இவற்றை தனியே பிரித்துப் பார்க்க முடியாது. ஓர் எல்லைக்கு உள்பட்ட நிலத்தின் மீதான அன்பு மட்டுமே தேசபக்தி அல்ல. அது நிலத்தின் எல்லை, அங்கு வாழும் மக்கள், அவர்களின் வரலாறு, வம்சாவளி ஆகியவற்றால் உருவாவதாகும். 
தேசத்துக்கு எல்லை மிகவும் அவசியம்; அதே சமயம், எல்லை மட்டுமே போதுமானதல்ல. மேலும் அனைத்து நாடுகளின் தேசியம் ஒன்றுபோல இருக்க வேண்டியதில்லை. இயல்பாக உருவான ஒரு நாட்டுக்கு, வரலாறு, சமூக மதிப்பீடுகள் தொடர்பான மக்களின் ஒருங்கிணைந்த உணர்வுகளே காரணமாக இருக்கும். இதற்கு இரு வேறுபட்ட தேசியவாத உதாரணங்களை நாம் காணலாம். அவை அமெரிக்க ஐக்கிய மாகாணங்களும், இஸ்ரேலும்.
யூத இஸ்ரேலும், உருகும் அமெரிக்காவும் 
அமெரிக்காவைப் பொருத்த வரை, நீண்ட காலமாக அங்கு குடியேறிய மக்களின் இணைப்பால் உருவான நாடு அது. இதை 'உருகும் பானை' தேசியம் (மெல்டிங் பாட் நேஷனலிஸம்) என்று பெருமிதமாக அமெரிக்கா சொல்லிக் கொள்கிறது. எனினும் அமெரிக்க அறிஞர் சாமுவேல் ஹன்டிங்டன், தனது நாட்டை ஆங்கிலோ சாக்ஸன் புராட்டஸ்டன்ட் வெள்ளையர்களின் தேசமாகவே விவரிக்கிறார். 
அமெரிக்கா என்பது செயற்கையாக உருவாக்கப்பட்ட தேசம். மாறாக, இயற்கையாக உருவாகும் தேசம் வித்தியாசமானது. வரையறுக்கப்பட்ட எல்லைகள் இல்லாதபோதும் தேசிய உணர்வு நிலைபெற முடியும். இதற்கு சிறந்த உதாரணம் இஸ்ரேல். 
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாக சொந்த நாடு இல்லாதபோதும், பாரதம் உள்பட நூறு நாடுகளில் பரந்திருந்த யூத மக்கள், தங்கள் நாடு என்ற கருத்தாக்கத்துடன் பல தலைமுறைகளாக வாழ்ந்தனர். 1947-இல்தான் யூத மக்கள் தங்கள் நாட்டின் சிறு பகுதியை மீட்டனர். அதுவே தற்போதைய இஸ்ரேல். 
யூத மக்களின் தேசிய உணர்வே அவர்களின் நாடு மீண்டும் கிடைக்கக் காரணமானது. இழந்த நாட்டைத் திரும்பப் பெற தேசிய சிந்தனை காரணமாகிறது. யூத மக்களின் தேசிய கருத்தாக்கம். அமெரிக்காவின் தேசிய கருத்தாக்கத்துக்கு முற்றிலும் முரணானது. உண்மையில் யூத தேசியம் என்பது இன அடிப்படையிலானது. எனினும் அதை உலகம் அங்கீகரித்துள்ளது. 
மக்கள் ஒன்றாக வாழ்வதாலோ, எல்லைகள் வகுக்கப்பட்டதாலோ ஒரு தேசம் உருவாவதில்லை. அது அரசால் ஒன்றாக ஆளப்படுகிறது, அவ்வளவே. அது செயற்கையாகக் கட்டமைக்கப்பட்ட தேசம் மட்டுமே. முந்தைய சோவியத் யூனியனும் யுகோஸ்லாவியாவும் அத்தகைய நாடுகளாகும். அவை இன்று இல்லை.
எல்லை அடிப்படையில் தேசத்தை நேசிப்பது தேசியமாகாது; அது தேசிய சிந்தனையுமல்ல; தேசபக்தியும் அல்ல. எல்லைகள் அடிப்படையிலான தேசபக்தி என்பது நில உரிமையாளரின் மண்ணாசை போன்றது. மாறாக, ஒரு நாட்டையும் அதன் மூதாதையர்களையும் நேசிப்பதே உண்மையான தேசபக்தியாகும். 
காந்தி, அரவிந்தர் பார்வையில் இந்திய தேசியம்
இந்திய தேசியம் காலம் கடந்தது. பழைமையான வேதங்களிலேயே 'ராஷ்ட்ரம்' குறித்த விளக்கங்கள் உள்ளன. விஷ்ணு புராணம், வாயு புராணம், லிங்க புராணம், பிரம்மாண்ட புராணம், அக்னி புராணம், ஸ்கந்த புராணம், மார்க்கண்டேய புராணம் ஆகியவற்றில், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மாபெரும் இந்தியாவை அறிய முடிகிறது. அப்போது 'பாரத வர்ஷம்' என்று அழைக்கப்பட்ட தேசத்தில் வாழ்ந்தவர்களே பாரதீயர்கள். ஆன்மிகம்தான் பாரத வர்ஷத்தின் ஆன்மா என்பதை புராணங்களிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. 
மகாத்மா காந்தியின் அடிப்படை அரசியல் நூல் 'ஹிந்த் ஸ்வராஜ்'. அதில், பழங்கால பாரத வர்ஷமே இந்தியா என்ற ஆன்மிக தேசியத்தின் அடிப்படை என்று காந்தி வரையறுக்கிறார். 
''தெற்கில் ராமேஸ்வரத்தில் சேது பந்தனத்தையும், கிழக்கில் புரி ஜகந்நாத்தையும், வடக்கில் ஹரித்வாரையும் வழிபாட்டுத் தலங்களாக அமைத்த நமது முன்னோர் முட்டாள்களல்ல. அந்த வழிபாடு வீடுகளில் பரவி, நாடு முழுவதிலுமுள்ள புனிதத் தலங்களை மக்களிடையே நினைவுபடுத்தி, தேசிய உணர்வைக் கிளர்ந்தெழச் செய்யும் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர். இத்தகைய காட்சியை உலகில் வேறெங்கும் காண முடியாது'' என்கிறார் மகாத்மா காந்தி. 
முஸ்லிம்களின் ஆக்கிரமிப்பும்கூட இந்தியாவில் மாற்றம் விளைவிக்கவில்லை. அவர்களையும் இந்நாடு தன்வயப்படுத்திக் கொண்டது என்றும் காந்தி கூறுகிறார். 
மகரிஷி அரவிந்தரோ, ''இந்திய தேசியம் என்பது ஹிந்து தேசியம் தான். மதம், வழிபாட்டுப் பிரிவுகள், சமயம் போன்றவற்றுக்கு அப்பாற்பட்டது அது. இந்நாட்டில் பன்னெடுங்காலமாக நிலைத்திருக்கும் சனாதன தர்மத்தின் அடிப்படையில் ஹிந்து நாடு அமைந்ததே தேசியம்'' என்பார். 
விவேகானந்தரும் ஆன்மிக தேசியமும்
இந்திய விடுதலைப் போரில் சுவாமி விவேகானந்தரின் உபதேசங்கள் செலுத்திய தாக்கம் அளப்பரியது. விடுதலைப் போராட்ட வீரர்களிடமிருந்து தொடர்ச்சியாக விவேகானந்தரின் நூல்களை பிரிட்டிஷ் போலீஸார் பறிமுதல் செய்தவண்ணம் இருந்தனர். இதனால் ராமகிருஷ்ண மடத்தைக் கண்காணிக்கவும் அவர்கள் தலைப்பட்டனர். நாட்டின் மாபெரும் தலைவர்கள் அனைவருமே, விடுதலை இயக்கத்தில் விவேகானந்தரின் பங்களிப்பைப் பதிவு செய்துள்ளனர்.
''சுவாமி விவேகானந்தரைப் படித்ததால் எனது தேசபக்தி ஆயிரம் மடங்கு அதிகரித்தது'' என்று கூறுவார் மகாத்மா காந்தி. 
''இந்தியாவில் நவீன தேசிய இயக்கத்தின் ஆன்மிகத் தந்தை சுவாமி விவேகானந்தரே'' என்பார் நேதாஜி சுபாஷ்சந்திர போஸ்.
ராஜாஜியோ, ''சுவாமி விவேகானந்தர் இல்லாதிருந்தால் நாம் நமது சமயத்தை இழந்திருப்போம்; சுதந்திரத்தையும் பெற்றிருக்க மாட்டோம். நாம் பெற்றுள்ள அனைத்துப் பெருமைகளுக்கும் அவரே காரணம்'' என்று கூறுவார்.
ரவீந்திரநாத் தாகூர், ''இந்தியாவைப் பற்றி நீ அறிய வேண்டுமானால் விவேகானந்தரைப் படித்தாக வேண்டும்'' என்பார். 
மதச்சார்பற்ற இந்தியாவின் தளகர்த்தரான ஜவாஹர்லால் நேருவும், ''இந்திய தேசிய இயக்கத்தின் மாபெரும் நிறுவனர்களுள் ஒருவர் சுவாமி விவேகானந்தர். அவரால் விடுதலைப் போராட்ட வீரர்கள் ஊக்கம் பெற்றனர்'' என்று கூறியுள்ளார். 
மகரிஷி அரவிந்தரும் மகாகவி பாரதியும்கூட சுவாமி விவேகானந்தரால் ஊக்கம் பெற்றவர்கள்தான். இந்திய தேசம் குறித்தும் தேசியம் குறித்தும் சுவாமி விவேகானந்தர் என்ன கூறியுள்ளார் தெரியுமா?
''ஒரே ஆன்மிக லயத்துடன் துடிக்கும் இதயங்களின் ஒருங்கிணைப்பே இந்திய தேசம். தற்போதுள்ள இங்கிலீஷ், பிரெஞ்ச், ஹிந்து தேசங்களில் ஹிந்து தேசமே வாழும் தேசமாகும். இதற்கு அதன் ஹிந்து சமயமே காரணம்'' என்று விவேகானந்தர் கூறுகிறார். அதனால்தான் மத மாற்றத்தை அவர் கண்டித்தார். 
''ஹிந்து சமுதாயத்திலிருந்து ஒருவன் பிற மதத்துக்கு மாறிவிட்டான் என்றால், அவன் தாய்நாட்டின் எதிரியாகி, வக்கிரமாகி விடுகிறான்'' என்றும் அவர் குறிப்பிட்டார். 
இந்தியாவின் ஹிந்துத் தன்மையை மிகவும் தொலைநோக்குடன் வரையறுத்தவராக சுவாமி விவேகானந்தர் உள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் கலாசாரப் பார்வை
இறுதியாக, நாட்டின் உச்ச நீதிமன்றமும் இதே சிந்தனையை 1995-இல் தனது தீர்ப்பில் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியாவின் அடிப்படையான ஹிந்து கலாசாரத் தன்மையை உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. ''ஹிந்துத்துவம், ஹிந்துயிஸம் ஆகியவற்றை மதரீதியான குறுகிய பொருளில் அணுகக் கூடாது. 'ஹிந்துத்துவம்' என்ற சொல், இந்த துணைக் கண்டத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை முறையுடன் தொடர்புடையதாகும்'' என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. 
இதே தீர்ப்பை, அயோத்தி கோயில் வழக்கிலும் உச்ச நீதிமன்றம் நினைவுபடுத்தியது. அப்போது ''ஹிந்து சமயம் சகிப்புத் தன்மை கொண்டது. இஸ்லாம், கிறிஸ்தவம், ஜொராஸ்டிரியம், யூதம், பெளத்தம், சமணம், சீக்கியம் போன்ற மதங்கள் இந்நிலத்தில் கடைப்பிடிக்கப்படுவதற்கு ஹிந்து சமயத்தின் பரந்த மனப்பான்மையே காரணம்'' என்று நீதிபதிகள் பரூச்சா, அகமதி ஆகியோர் கூறினர். அதாவது ஹிந்து சமயம் என்றாலே மதச்சார்பற்றதுதான். 
இந்தியாவின் ஹிந்து கலாசாரத் தன்மை குறித்த இந்த 1995-ஆம் வருடத்திய தீர்ப்பை மறு ஆய்வு செய்யுமாறு 2017-இல் முறையிடப்பட்டபோது, உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது. 
மதச்சார்பின்மையால் குழப்பம்
இந்திய தேசியத்தை வடிவமைத்ததில் ஹிந்து கலாசாரம், ஹிந்து வாழ்க்கை முறையின் பங்களிப்பை விவேகானந்தர், அரவிந்தர், மகாத்மா காந்தி முதற்கொண்டு உச்ச நீதிமன்றம் வரை பலர் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால் சுதந்திர இந்தியாவில் மதச்சார்பின்மைப் பிரசாரம் காரணமாக நாட்டின் உண்மையான தன்மை மதிப்பிழந்துள்ளது. 
இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது எதுவெல்லாம் இந்திய தேசம் என்ற சிந்தனைக்கு உரமூட்டியதோ, எதுவெல்லாம் விடுதலை வீரர்களுக்கு உணர்வூட்டியதோ, அவையெல்லாம் சமகால வரலாற்றில் வகுப்புவாதமாகவும் மதச்சார்பின்மைக்கு எதிரானதாகவும் சித்திரிக்கப்படுகின்றன. 
விடுதலைப் போராட்டத்தின்போது மக்களுக்கு உணர்வூட்டிய பங்கிம் சந்திர சட்டர்ஜியின் வந்தே மாதரம் பாடல், மகாத்மா காந்தியால் முன்மொழியப்பட்ட ராமராஜ்யம், சுவாமி விவேகானந்தரும் மகரிஷி அரவிந்தரும் வலியுறுத்திய ஹிந்து தேசியம் உள்ளிட்ட அனைத்துமே இன்று வகுப்புவாதமாக விளக்கப்படுகின்றன. 
இதனால்தான் தேசியம், தேசபக்தி ஆகிய கருத்தாக்கங்களில் இப்போது குழப்பம் நேரிட்டுள்ளது. 
மதச்சார்பின்மை தொடர்பான விவாதங்கள் இத்தகைய குழப்ப நிலையைத் தவிர்க்காத வரை, இந்தியாவை உருவாக்கிய ஹிந்து கலாசாரம் குறித்து மகத்தான தலைவர்களும் உச்ச நீதிமன்றமும் கூறியதை ஏற்காத வரை, தேசபக்தி தொடர்பான குழப்பம் தொடரவே செய்யும்.


கட்டுரையாளர்:
'துக்ளக்' வார இதழின் ஆசிரியர்.
 

]]>
http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/feb/28/தொடரும்-தேசபக்திக்-குழப்பம்-2871413.html
2870703 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் ஊழலை மேலும் வளர்க்கும் ஊழல் கே. ஜெயகுமார் DIN Tuesday, February 27, 2018 01:30 AM +0530 உலக அளவில் பிரபலமாக விளங்கிய ஆட்சியாளர்கள் பலர் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி கடந்த சில வாரங்களில் வீழ்ச்சி அடைந்துள்ளனர். வங்கதேச முன்னாள் பிரதமர் காலீதா ஜியாவுக்கு ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா ஊழல் புகாரால் பதவி விலகினார். முன்னதாக, ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே ஊழல் புகார் காரணமாக பதவியிலிருந்து விரட்டப்பட்டார். அவரது முப்பத்தேழு ஆண்டு கால ஆட்சி அவமானகரமாக முடிவுக்கு வந்தது. பிரேசில் அதிபர் டில்மா ரூஸஃப் முறையற்ற செயல்பாடுகளுக்காகப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். 
அதே சமயம், நம் நாட்டில் நடந்த சில நிகழ்வுகளை உற்று கவனித்தால் பல உண்மைகள் புரியவரும். கடந்த கால இந்திய அரசியலில் பிரதானமானவராக வலம் வந்தவரான லாலு பிரசாத் யாதவ், கால்நடைத் தீவன ஊழலில் பல கோடிகளைக் குவித்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வரான மது கோடாவும் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டிருக்கிறார். மேலும் பல சக்தி வாய்ந்த அரசியல் தலைவர்கள் ஊழல் வழக்கில் தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர்.
பதவி, அரசியல் அதிகாரம் என்பது தங்களுக்குப் பிரத்தியேக முக்கியத்துவமும் உரிமையும் தந்துவிடுவதாக அரசியல்வாதிகள் நினைத்துவிடுகிறார்கள். சமுதாயத்துக்கு நன்மைபயக்கும் விதத்தில் நலத்திட்டங்களை செயல்படுத்த அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. அதற்காகவே அரசியல் தலைவர்களுக்கு மக்கள் வாக்களிக்கிறார்கள். ஆனால், வளர்ச்சிப் பணிகள், பொதுநலன் என்ற பெயர்களில் தங்கள் சுயலாபம் ஒன்றையே கருத்தில் கொண்டு அவர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார்கள். இதன் மூலமாக, அதிகாரம் என்பது அரசு நிதியை தவறாகக் கையாள்வதற்கும், சட்டவிரோதமான செயல்களுக்கான ஆதாரமாகவும் மாற்றப்பட்டு விடுகிறது.
அரசியல் முதல் கல்வித் துறை வரை எங்கும் ஊழல் நீக்கமற நிறைந்திருக்கிறது. இது நமது இளம் தலைமுறையைத் தவறாக வழிநடத்துகிறது. இயற்கை வளங்களைக் கொள்ளையிடுவதால் நேரிடும் பொருளாதார இழப்பைவிட இது அபாயகரமானது.
இத்தகைய நிலையில், சட்டத்தின் ஆட்சியை மதித்து நடக்கும், முறைப்படி வரி செலுத்தும், அமைதியாக வாழ விரும்பும் குடிமக்கள் என்ன செய்வது? இந்த ஊழல் சகதியில் இருந்து விடுபடுவது எப்படி? தொற்றுநோய் போன்ற ஊழல் இன்னும் எத்தனை நாள்களுக்கு நீடிக்கப் போகிறது? அஹிம்ஸையையும் வாய்மையையும் மையமாகக் கொண்டு விடுதலைப் போராட்டத்தை நடத்திய இந்தியாவில், தற்போது ஊழல் மலிந்திருப்பது விதிவசம்தான் போலும். இதில் விந்தை என்னவென்றால், ஊழலுக்கான போட்டியில் தென் ஆப்பிரிக்காதான் நமக்கு சமகளப் போட்டியாளர்!)
நமது அரசியல் தலைவர்களின் பேராசை, அகந்தை, பாதுகாப்பற்ற உணர்வு, திறமையில் நம்பிக்கையின்மை, தார்மிகத் தோல்வி, நேர்மையின் வீழ்ச்சி ஆகியவற்றின் ஒட்டுமொத்த விளைவாகவே இந்த ஊழல் கறைகள் வெளிப்படுகின்றன.
ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி, அரசு ஊழியரின் வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்து சேர்ப்பதும், அதற்காக லஞ்சம் வாங்குவதும் குற்றம் என வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கம் சரியானதே. ஆனால், ஊழல் கடலில் முத்தெடுக்கும் நம்மவர்கள் சட்டத்தையே ஏமாற்றும் வித்தை தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். 
நில ஒதுக்கீடுகள், பொதுத்துறை நிறுவனப் பங்குகளின் விற்பனை, சுரங்க உரிமங்கள் வழங்குதல், பணியிட மாற்றம் போன்ற அனைத்தும் குறிப்பிட்ட நடைமுறையில் வெளிப்படையாக நடைபெற வேண்டியவை. ஆனால், இவை தொடர்பான கொள்கை முடிவுகள் யாருக்கும் புலப்படாத வகையில், ஊழலுக்கு வித்திடும் வகையில், ரகசியமாக எடுக்கப்படுகின்றன. இத்தகைய வினோதக் கொள்கை நிலவும் அமைப்பில் முறைகேடுகள் பொங்கிப் பெருகுவதில் வியப்பில்லை. 
எந்த ஒரு ஊழல் நடவடிக்கையிலும் கொள்பவரும் கொடுப்பவரும் இருப்பார்கள். லஞ்சம் கொடுப்பவர்கள் இல்லாவிட்டால் ஊழல் நடைபெற வாய்ப்பில்லை. லஞ்சம் கொடுப்பவர்கள் உள்ள சமூகம், ஜனநாயகத்தையும் தேச வளர்ச்சியையும் ஊழல் அரிக்கிறது என்பதை ஏற்க மறுக்கிறது. ஊழலில் பங்கேற்கும் லஞ்சம் வாங்குபவர்- கொடுப்பவர் என்ற இரு தரப்பினரும் அரசின் நம்பகத்தன்மை சீர்குலைவதை உணர்வதில்லை.
ஊழலைத் தடுக்கவும், தண்டிக்கவும் முறையான அமைப்புகளும் சட்டங்களும் உள்ளன. அதனால் சில பலன்கள் விளைந்தாலும், ஊழலை முழுமையாகத் தடுக்க முடிவதில்லை. சொல்லப் போனால் ஊழலின் விஸ்தீரணமும், வேகமும் முன்னைவிட அதிகரித்து வருகிறது. கண் சிமிட்டும் உயர்மட்ட ஊழல்கள், விபரீதமான சமூக சிந்தனைகளையும், மனஅழுத்தத்தையும் உருவாக்குகின்றன. ஊழலின் விளைவான பொருளாதார, சமூகப் பேரழிவுகளைவிட, இந்த பாதிப்புகள் அதிக சேதாரம் விளைவிப்பவை.
ஊழலால் தண்டிக்கப்பட்ட தலைவர்கள் மக்களின் நம்பிக்கையைப் பெற்று ஆட்சியைப் பிடித்தவர்கள்தான். அவர்கள் பதவியில் இருந்தபோது, காவல்துறை உயரதிகாரிகள் அவர்களுக்கு வணக்கம் செலுத்துவார்கள். 'சத்தியமேவ ஜயதே' (வாய்மையே வெல்லும்) என்ற வாசகம் பொறிக்கப்பட்ட சுவர் பின்னணியில் இருக்க அவர்கள் பலமுறை அரசுக் கூட்டங்களை நடத்தியிருப்பார்கள். பல உலகத் தலைவர்களுடன் அவர்கள் கைகுலுக்கி இருப்பார்கள். 
தற்போது அந்த நாயகர்கள் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுகையில், மக்களின் நம்பிக்கை பொய்த்துப் போகிறது; அரசு நடைமுறைகள் அனைத்தும் வெற்றுச் சடங்குகளே என்ற எண்ணம் மக்களுக்கு எழுகிறது. எனவே, யாரும் யோக்கியமில்லை என்ற முடிவுக்கு அவர்கள் வந்து விடுகிறார்கள். இந்த நிலைமை நமது இளைஞர்களை - வரும் தலைமுறையை எவ்வாறு பாதிக்கும் என்று சிந்திக்க வேண்டும்.
இப்படித்தான், பள்ளிகளில் சேர கணக்கில் வராத பணத்தைச் செலுத்துவதில் துவங்கி, அரசுப் பணிகளில் கூடுதல் செலவினத்தை ஏற்படுத்துவது வரை, ஊழல் சர்வ வியாபகமாகிறது. இது ஊழலை நியாயப்படுத்தும் நிர்பந்தத்துக்கு இளைஞர்களைத் தள்ளுகிறது. 
இத்தகைய நிலையில் ஊழலை எவ்வாறு தடுப்பது? இருண்ட ஊழல் பள்ளத்தில் தவிக்கும் சமுதாயத்துக்கு எப்படி தார்மிக நம்பிக்கை அளிப்பது? ஊழலே இங்கு ஊழலை மேலும் வளர்ப்பதாக இருக்கிறது என்பதுதான் நிதர்சனம். இது நிகழ்காலத்தை மட்டும் பாதிப்பதல்ல; எதிர்காலத்தையும் தடம்புரளச் செய்யும் கொடிய விஷம்.
புதிய தாராளமயக் கொள்கைகளும், தனியார்மயமாக்கலும்தான் இன்றைக்குப் பெருகி வரும் ஊழலுக்கு காரணம் என்று சிலர் கூறுகிறார்கள். தனியார் மயமாக்கலும், தாராளமயமாக்கலும் முதலீட்டாளர்களைக் கவரக் கூடிய நட்புரீதியான தன்மையுடன் இருப்பது ஊழலுக்கு வித்திடுகிறது என்பதும் உண்மையே. ஆனால் இது மட்டும் காரணம் என்று கூறுவது உண்மையாகாது. ஏனெனில், முதலாளித்துவ சமுதாயமோ, அரசால் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும் சமுதாயமோ எதுவாயினும் எல்லா இடங்களிலும் ஊழல் சதிராட்டம் போடுகிறது. 
சொல்லப்போனால், சர்வாதிகார அமைப்பைவிட, தாராளமயக் கொள்கை கொண்ட சமுதாயத்தில்தான், வெளிப்படைத்தன்மையும், நம்பகத்தன்மையும், சாமானியர்களின் தகவல் அறியும் உரிமையும், செய்திகளை அம்பலப்படுத்தும் ஊடக சுதந்திரமும் கூடுதலாக நிலவுகின்றன. ஊடகத்தை கடுமையாகக் கட்டுப்படுத்தும் நாட்டில் ஊழல் பெருமளவில் நடைபெறவே வாய்ப்புகள் அதிகம்.
முந்தைய சோவியத் ஒன்றியமோ, தற்போதைய சீனாவோ எதுவாயினும் ஊழலுக்கு அப்பாற்பட்டவை அல்ல என்பது நிரூபணம் ஆகிவிட்டது. எனினும், முன்னொரு காலத்தில் கோலோச்சியவர்கள் ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டு கம்பி எண்ணும்போது, ஊழல் தடுப்புச் சட்டங்கள் சிறுபிள்ளைத்தனமாகத் தோற்றம் அளிப்பதைத் தவிர்க்க முடிவதில்லை.
இதற்கு ஒரே தீர்வு, ஊழலுக்கு எதிரான மனப்பான்மையை சமுதாயத்தில் வளர்ப்பதும், சமரசமற்ற நேர்மையை முன்வைப்பதும், ஊழலை சற்றும் சகிக்காத பண்பை பரப்புவதும்தான்.
உயர்ந்த லட்சியங்களுடன் சிறந்து விளங்கும் ஜனநாயக நாடுகளில் சிறிதளவு ஊழல் கறையும்கூட ஒருவருடைய பொதுவாழ்வை முடிவுக்குக் கொண்டுவந்துவிடுகிறது.
மாறாக நமது நாட்டிலோ, ஊழலுக்காகத் தண்டிக்கப்படுவோர் அதீத முக்கியத்துவம் பெறுகிறார்கள். ஊழல் வழக்கில் சிறை செல்வோர் அதற்கு வெட்கப்படுவதாகவும் தெரியவில்லை. இத்தகைய சூழலில் மக்கள் சேவகன் என்று அரசியல் தலைவர்கள் சொல்லிக் கொள்வதற்கு எந்த தார்மிக நேர்மையும், தகுதியும் இல்லை. 
இந்த உண்மையை மூடி மறைக்கும் சமுதாயம், ஊழலை வெட்கமின்றி சகித்துக் கொள்கிறது. இந்த மனப்பான்மையால், ஊழல் சேறே மேலும் பெரிய ஊழல் விருட்சத்தை வளர்ப்பதற்கான ஆதாரமாகிறது.
கட்டுரையாளர்:
கேரள மாநில அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர்,

மற்றும் மலையாள பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்.
 

]]>
http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/feb/27/ஊழலை-மேலும்-வளர்க்கும்-ஊழல்-2870703.html
2870702 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் சாமானியர்களுக்கானதா வங்கிகள்? ஆர். வேல்முருகன் DIN Tuesday, February 27, 2018 01:29 AM +0530 இப்போதெல்லாம் செல்லிடப்பேசிகளுக்கு வரும் அழைப்புகளில் பெரும்பாலானவை, உங்களுக்குக் கடன் அட்டை வேண்டுமா, தனிநபர் கடன் வேண்டுமா என்று கேட்டுத்தான். அழைக்கும் பெண்களோ தங்களது வசீகரப் பேச்சில், நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள், எவ்வளவு ஊதியம் என எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு எங்கள் அலுவலகத்தில் இருந்து ஆள்களை அனுப்புகிறோம். விண்ணப்பத்தில் மட்டும் கையெழுத்திடுங்கள் என்பார்கள். 
அந்த அலுவலகத்தில் இருந்து ஒருவர் வந்து விண்ணப்பத்தில் கையெழுத்துப் பெற்றுக் கொண்டு சென்றுவிடுவார். அதன் பிறகு பத்திரிகையாளர், வழக்குரைஞர், போலீஸாருக்குக் கடனோ அல்லது கடன் அட்டைகளோ தருவதில்லை என்பார்கள். இதுதான் பொதுவாக நடப்பது. 
சாதாரண மக்கள் யாராவது குறைந்தது ஒரு வாரமாவது சம்பந்தப்பட்ட வங்கி மேலாளரிடம் கெஞ்சிக் கூத்தாடி கடன் பெற்றுவிட்டால் அதற்குள் முதல் தவணை வந்துவிடும்!
எப்படியோ எல்லாவற்றையும் மீறிக் கடன் பெற்று, ஏதாவது ஒரு பிரச்னை காரணமாக ஒரு தவணை கடனைத் திரும்பச் செலுத்தாவிட்டால் அதற்கு அந்த வங்கியில் போன் செய்து அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவிப்போம் பாருங்கள், அது மோசமான அனுபவம். தவணை தவறியதற்கு அபராதம், வட்டிக்கு வட்டி வேறு.
வங்கி அதிகாரிகள் நினைத்தால் யாருக்கு வேண்டுமானாலும் கடன் கொடுக்க முடியும் என்ற நிலை உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் ஒரு காலத்தில் பணக்காரர்களுக்கு மட்டுமே வங்கிகள் என்று இருந்த நிலை மாற்றப்பட்டு வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டதன் காரணம் வங்கிச் சேவை சாதாரண மக்களுக்கும் பயன்பட வேண்டும் என்பதற்காகத்தான்.
இன்றைய சூழ்நிலையில் வங்கிகளின் சேவை கண்டிப்பாக ஒவ்வொருவருக்கும் தேவை. முன்பிருந்ததை விட இப்போது வங்கிச் சேவையை அனைவருமே பயன்படுத்தியாக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 
யாரோ ஒருவருக்குக் கொடுத்த பணத்தை வசூலிக்க இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, ரூ.50, ரூ.100 செலுத்தும் வாடிக்கையாளர்கள் சராசரிக்கும் குறைவான தொகையைத் தங்கள் சேமிப்புக் கணக்கில் வைத்திருந்தார்கள் என்பதற்காக விதித்த அபராதக் கட்டணம் மூலம் ஈட்டிய தொகை கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரை ரூ.1771 கோடி. இது வங்கியின் இரண்டாவது காலாண்டின் நிகர லாபத்தை விடக் கூடுதல் என்பது கசப்பான உண்மை.
சாமானிய மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் கூடக் கண்டுகொள்ளாத பொதுத்துறை வங்கி நிர்வாகங்கள் தொழிலதிபர்களுக்கு எந்த உத்தரவாதமும் இல்லாமல் கடனை அள்ளிக் கொடுத்திருக்கிறது என்று இப்போது தெரிய வருகிறது. ஒரு சாமானியனுக்கு சில ஆயிரங்கள் கடன் தரும்போதே உத்தரவாதம் அளிப்பவரும் நேரில் வங்கிக்கு வந்து கையெழுத்திட வேண்டும் என்று வற்புறுத்தும் வங்கி மேலாளர்கள், வங்கி அதிகாரியின் உத்தரவாதக் கடிதம் என்ற முறையை ஏற்றுக் கொண்டு பல நூறு கோடிகளை அள்ளி வீசியது எப்படி?
தேசிய மயமாக்கப்பட்ட வங்கியொன்றின் வேலூர் கிளையில் நண்பர் ஒருவர் வீட்டை அடமானம் வைத்துக் கடன் வாங்கியிருந்தார். சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேலாகக் கடனை ஒரு தவணை கூடத் தவறாமல் செலுத்தி வருகிறார். அவருக்கு திடீரென ரூ.50 ஆயிரம் கூடுதல் கடன் தேவைப்பட்டது. 
வங்கிக்குச் சென்று கேட்டபோது, 'உங்களை விடக் கூடுதலாக ஊதியம் பெறுபவர் உத்தரவாதம் அளித்தால் கடன் தருவதாக' கூறினார். இத்தனைக்கும் பல லட்சம் மதிப்புள்ள வீடு சொற்பத் தொகைக்கு அந்த வங்கியில் அடமானத்தில் இருப்பது மேலாளருக்கும் தெரியும். அதை எடுத்துச் சொன்ன பிறகுதான் மேலாளர் கடன் தந்தாராம்.
நண்பரின் சொத்து அடமானத்தில் இருக்கும்போது கூடுதலாக ரூ.50 ஆயிரத்துக்கே இத்தனை பிரச்னை என்றால், ஆயிரக்கணக்கிலான கோடி முறைகேடு நடந்தது எப்படி என்பது அந்த அதிகாரிகளுக்குதான் வெளிச்சம்.
தேர்தல் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு ஊழல் அரசியல்வாதிகளுக்குக் கிடுக்கிப்பிடி போட சிறிய அளவிலாவது முயற்சி நடந்து வருகிறது. ஊழல் வழக்குகள் நிலுவையில் இருந்தால் தேர்தலில் போட்டியிடத் தடை, தேர்தலில் நிற்கும் வேட்பாளரின் உறவினர்களுடைய சொத்து விவரங்களையும் வெளியிட வேண்டும் என்று புதிய பரிந்துரை - போன்ற முயற்சிகள் தொடங்கியிருக்கின்றன. அரசியல்வாதிகளுக்கு உள்ள விதிமுறைகள் போல, வங்கி அதிகாரிகளுக்கும் சொத்து தொடர்ôன விதிமுறைகள் கொண்டு வரப்பட வேண்டும்.
வங்கிப் பணியில் சேரும் ஒவ்வொரு அதிகாரியின் சொத்து மதிப்புகளையும் பெற்றுக் கொண்டு அவர் பணியில் இருந்து விலகும்போது சொத்து மதிப்பைச் சரிபார்க்க வேண்டும். 
வருமானத்துக்கு அதிகமான சொத்து இருந்தால் அவரைப் பணி நீக்கம் செய்து கூடுதல் வருமானத்தில் வாங்கிய சொத்துகளையும் பறிமுதல் செய்யும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும். அப்போதுதான் தவறு செய்தால் தண்டிக்கப்படுவோம் என்ற பயமும் அனைவருக்கும் இருக்கும். 
ஆனால் ஒன்று, சாதாரண மக்களுக்குத் தேவையான கடனுதவிகளை வங்கி நிர்வாகங்கள் தைரியமாகச் செய்யலாம். ஏனெனில் சாமானியர்கள் வெளிநாடுகளுக்குத் திட்டமிட்டுத் தப்பிப்பதில்லை. சத்தியத்துக்குக் கட்டுப்பட்ட சாமானியர்கள் யாரும் தாங்கள் கடனாளியாகச் சாவதை விரும்புவதில்லை என்பது உண்மை.
 

]]>
http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/feb/27/சாமானியர்களுக்கானதா-வங்கிகள்-2870702.html
2870186 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் பூமியில் ஒரு நரகம்...! எஸ். ராஜாராம் DIN Monday, February 26, 2018 01:57 AM +0530 கண் முன் நடக்கும் மனிதத் துயரம் என்று வேதனைப்படுகிறார் ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரஸ்; சொல்வதற்கு வார்த்தைகளின்றி வெற்று அறிக்கையை வெளியிடுகிறது யுனிசெஃப் அமைப்பு. இரக்கம் காட்டுங்கள், சண்டையை நிறுத்துங்கள் என உலக நாடுகள் அனைத்தும் கெஞ்சுகின்றன ரஷியாவிடம். ஏதாவது நடக்குமா, உயிர் பிழைக்க சிறு துரும்பாவது கிடைக்குமா என பதுங்கு குழியில் இருந்து எட்டிப் பார்க்கின்றன குழந்தைகளின் ரத்தம் தோய்ந்த முகங்கள்.
சிரியாவின் கிழக்கு கௌட்டா நகரில்தான் இத்தனை அவலம். சிரியாவில் கடந்த எட்டு ஆண்டுகளாக நடக்கும் உள்நாட்டுப் போரில் பொதுமக்கள் சுமார் 3.40 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடுகள், உடைமைகளை இழந்து அகதிகளாக உலகமெங்கும் சிதறியிருக்கின்றனர். இருப்பினும், முன்னர் இல்லாத பதற்றம் இப்போது ஏற்பட்டிருப்பதற்கு இந்த கிழக்கு கௌட்டா நகரத்தில் கொத்து கொத்தாக மனித உயிர்கள் கொன்று குவிக்கப்படுவதே காரணம்.
ஒரு காலத்தில், "பூமியில் ஒரு சொர்க்கம்' என சிரியா மக்களால் புகழப்பட்ட கிழக்கு கௌட்டா இன்று நரகமாக மாறியிருக்கிறது. இந்நகரில் அதிபர் பஷார் அல்-அஸாதிற்கு ஆதரவாக, கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ரஷிய படைகள் நடத்திவரும் விமானத் தாக்குதலில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் குழந்தைகள், பெண்கள் உள்பட சுமார் 500 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். 2013-இல் இதே கௌட்டா நகரில் சிரியா படைகளால் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்பட்ட ரசாயன தாக்குதலில் பலியானோரின் எண்ணிக்கையைவிட இது அதிகம் எனக் கூறப்படுகிறது.
விமானத் தாக்குதல், ராக்கெட் வீச்சு, மார்ட்டர் ரக குண்டுகள், பேரல் ரக குண்டுகள் என விதவிதமான குண்டுகள் குடியிருப்புகள், பள்ளிக்கூடங்கள், வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள் என பாகுபாடு பார்க்காமல் வீசப்படுகின்றன. குண்டுமழை பொழியும் விமானங்களுக்கு அஞ்சி, உணவும், குடிநீரும் இன்றி, ஒரு வாரமாக சூரிய வெளிச்சத்தையே பார்க்காமல் பதுங்கு குழிக்குள் உயிரைப் பிடித்துக் கொண்டு தவிக்கின்றனர் மக்கள். என்னதான் நடக்கிறது கிழக்கு கௌட்டாவில்?
சிரியாவின் தலைநகர் டமாஸ்கûஸ அடுத்த புறநகர்ப் பகுதியான கிழக்கு கௌட்டா, அதிபர் அஸாதிற்கு எதிரான கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நகரை தங்களது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவருவது தலைநகரின் பாதுகாப்புக்கு முக்கியம் எனக் கருதியே சிரியா அரசுப் படைகளும், ரஷிய படைகளும் இந்தத் தாக்குதலை நடத்தி வருகின்றன. அதிபர் அஸாதிற்கு ஆதரவாக ரஷியா பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது; என்றாலும் கடந்த ஓராண்டாக நேரடி ராணுவ உதவியையும் அளித்து வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போர் என்கிற பெயரில் சொந்த நாட்டு மக்கள் மீதே தாக்குதல் நடத்துகிறார் என்ற குற்றச்சாட்டின்பேரில், அதிபர் அஸாத் தலைமையிலான அரசுக்கு எதிராக ஐ.நா. இதற்குமுன் கொண்டு வந்த தீர்மானங்களில் 11 தீர்மானங்களை தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுத்துள்ளது ரஷியா.
இப்போதும் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சர்வதேச அமைப்புகள் நிவாரணப் பொருள்களையும், மருந்துகளையும் கொண்டு செல்வதற்கு வசதியாக 30 நாள்கள் சண்டை நிறுத்தம் கோரி, ஐ.நா.வில் ஸ்வீடனும், குவைத்தும் கொண்டு வந்த வரைவுத் தீர்மானத்தையும் காலந்தாழ்த்தியே ரஷியா ஏற்றுக்கொண்டிருக்கிறது. தீர்மானத்தின் மீது நீண்ட விவாதம் நடத்தி, இரு தரப்பும் (அரசுப் படைகள்- கிளர்ச்சியாளர்கள்) ஒப்புக்கொண்டே பிறகே ஏற்றுக் கொள்வோம் என ரஷியா அடம்பிடித்ததே இத்தாமதத்துக்குக் காரணம். இந்தத் தீர்மானமும் உடனடியாக அமலுக்கு வரவேண்டும் என்று சொல்லாமல், "கால தாமதமின்றி அமல்படுத்தப்பட வேண்டும்' என்று வார்த்தைகளால்கூட ரஷியாவை சமாதானப்படுத்த வேண்டியிருந்தது.
இதற்காக பல நாடுகள் ரஷிய அதிபர் புதினை விமர்சித்திருக்கின்றன.
சிரியாவில் இதற்கு முன்னர் ஏற்பட்ட சண்டை நிறுத்தங்களின் ஆயுள் சொற்பமானது. இருதரப்பும் ஒப்பந்தத்தை மீறியே செயல்பட்டிருக்கின்றன. இப்போதைய சண்டை நிறுத்தத் தீர்மானத்தையும் நம்பிக்கையின்றியே பார்க்கிறார்கள் கௌட்டா நகர மக்கள். "நாங்கள் உயிர் பிழைப்போம் என்று ஒருபோதும் நம்பியதில்லை. இறப்பதற்கு எங்கள் முறை எப்போது வரும் என்றுதான் காத்திருக்கிறோம்' என்பதுதான் உயிரைத் தவிர இழப்பதற்கு எதுவுமே இல்லாத அவர்களது கருத்து.
கௌட்டா நகரின் இன்றைய நிலைக்கு ரஷியா மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது. சிரியா விவகாரத்தில் ரஷியாவும், ஈரானும் அதிபர் அல்-அஸாதிற்கு ஆதரவாகவும், அமெரிக்கா தலைமையிலான சில நாடுகள் அல்-அஸாதிற்கு எதிராகவும் செயல்படுகின்றன. கிளர்ச்சியாளர்களை ஒடுக்கும் நோக்கில் ரஷியா தாக்குதல் நடத்தினால், அஸாதிற்கு எதிரான நடவடிக்கையாக அக்கிளர்ச்சியாளர்களுக்கு மறைமுக ஆதரவு தருகிறது அமெரிக்கா. இதுதான் சிரியாவின் பிரச்னை முடிவுக்கு வராமல் தொடர்வதற்கு முக்கியக் காரணம். பழைய எதிரிகள், பலப்பரீட்சை நடத்த இப்போதைக்குத் தேர்ந்தெடுத்த இடம்தான் சிரியா.
"உங்கள் பனிப்போரை நிறுத்துங்கள்!' என சிரியாவின் பதுங்கு குழிகளிலிருந்து குழந்தைகள், பெண்கள் சொல்வது போர் விமான இரைச்சல்களுக்கு இடையில் வல்லரசுகளுக்கு கேட்க வாய்ப்பில்லை.
வல்லரசுகளே, பனிப்போரை நிறுத்தாவிடிலும், சிறிது நாள்களாவது முழுமையாக சண்டை நிறுத்தத்தை அமல்படுத்துங்கள்; காயமடைந்த அப்பாவிக் குழந்தைகள், பெண்கள் கொஞ்சம் மருந்திட்டுக் கொள்ளட்டும்.
 

]]>
http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/feb/26/பூமியில்-ஒரு-நரகம்-2870186.html
2870183 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் புது யுக அரசியல் க. பழனித்துரை DIN Monday, February 26, 2018 01:56 AM +0530 கட்சி அரசியல் என்பதில் மக்களுக்குச் சலிப்பு ஏற்பட்டுவிட்டது என்பது பரவலான கருத்து. அந்தக் கருத்து தொடர்ந்து வலிவு பெற்று வருகின்றது. மக்கள் புதுமையை நாடுகின்றார்கள். கட்சி அரசியலைவிட்டால் வேறு அரசியலே இல்லையா என்ற கேள்வி எழுகிறது. ஒரு கட்சியின் ஆட்சியைக் குறைகூறி அரசுக்கட்டிலில் அரியணையேறும் இன்னொரு கட்சி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் முன்பிருந்த கட்சி பரவாயில்லை என்று எண்ணும் அளவுக்குத்தான் செயல்படுகின்றது. அரசியல் கட்சிகள் தங்களின் இயலாமையை மூடி மறைக்க மக்களை தங்களின் தவறான அணுகுமுறைகளுக்கு உடந்தையாக்கி, பொதுமக்களை குறைகூறும் சூழலுக்கு கொண்டுவந்துவிட்டன.
உலகில் எல்லாத் துறைகளும் மிகவேகமாக வளர்ந்து வருகின்றன. அந்த வளர்ச்சியின் பயன்களை உள்வாங்கி எல்லாத் தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்கான வழிவகை செய்வது என்பது அரசியல், ஆளுகை மற்றும் நிர்வாகம். ஆனால் இந்த மூன்றும்தான் இன்று தேக்க நிலையில் இருக்கின்றன. இந்த தேக்க நிலைதான் புதுயுக அரசியலை உருவாக்குகின்றது. புதுயுக அரசியல் என்றால் என்ன என்பதை சற்று நாம் நிதானமாக புரிந்துகொள்ள வேண்டும். 
இதுவரை அரசியலில் திட்டவட்டமாக எதுவெல்லாம் நடக்காது என்று அறிவுப்பூர்வமாக சிந்தித்தோமோ அதெல்லாம் நிச்சயமாக நடக்கும். ஏனென்றால் மக்கள் ஒரு மனநிலைக்கு வந்துவிட்டனர். இன்றைக்கு உள்ள அரசியல் கட்சிகளிடம் புதுமைகள் கிடையாது, ஆற்றல் கிடையாது, மாற்றத்தைக் கொண்டுவரும் சக்தி கிடையாது என்று மக்கள் எண்ண ஆரம்பித்துவிட்டார்கள். மாற்றுத் தேடிக்கொண்டிருக்கின்றார்கள், அந்த மாற்றத்தை எது தருமோ அங்கு செல்ல தயாராகிவிட்டார்கள் என்பதை நம் அரசியல் கட்சிகள் இன்னும் உணரவில்லை. 
கேரளத்தில் கிராமப் பஞ்சாயத்திலிருந்து மாவட்டப் பஞ்சாயத்துவரை கட்சி அடிப்படையிலான போட்டிகள்தான் நடைபெறுகிறது. எப்படி கேரள மாநிலத்தில் இடதுசாரி ஜனநாயக முன்னணி மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணி என இரு கூட்டணிகள் ஆட்சி மாறி மாறி நடக்கின்றதோ, அதேபோல் பஞ்சாயத்துகளிலும் ஒரு கூட்டணி ஆட்சிதான் நடைபெற்று வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
கிழக்கம்பலம் கிராமப் பஞ்சாயத்து, அரசியல் கட்சிகளை வெளியேற்றிவிட்டது. இந்த இரண்டு கூட்டணிகளையும் தோற்கடித்துவிட்டு சுயேச்சைகள் பஞ்சாயத்தைக் கைப்பற்றி பணியாற்றி வருகின்றனர். இந்தச் சுயேச்சைகளும் அரசியல் கட்சிகளிலிருந்து வந்தவர்கள் என்பதைப் பார்க்கும்போது, மக்கள் ஏன் அரசியல் கட்சிகளை நிராகரித்துள்ளனர் என்று கேட்கத் தோன்றியது.
இவர்கள் அனைவரும் சுயேச்சையாக நின்றபோதும், அவர்களை ஒன்றிணைத்து ஒரு கூட்டணியாக்கி வைத்திருப்பது ஒரு பெரிய தொழில் நிறுவனம் உருவாக்கிய அறக்கட்டளை என்பது தெரிய வந்தது. அந்த அறக்கட்டளை என்பதற்குப் பெயரே 20-20 என்பதுதான். இந்த 20-20 என்ற அறக்கட்டளை அந்தக் கம்பெனியின் Corporate Social Responsibility (CSR) பணத்தை மக்கள் நல்வாழ்வுக்கான செலவழிப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட ஒன்று. இந்தியாவில் இதுபோல்தான் எல்லா தொழில் நிறுவனங்களும் அறக்கட்டளை ஏற்படுத்தி CSR நிதியைப் பயன்படுத்தி வருகின்றனர். 
கிழக்கம்பலத்தில் இயங்கிவரும் 20-20 அறக்கட்டளை, அதே கிராமப் பஞ்சாயத்தில் செயல்படும் "கிட்டெக்ஸ்' என்ற சிறார்களுக்கு ஆடைத் தயாரிப்பு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. அந்தக் கம்பெனியின் நிறுவனர் அதே கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் மாபெரும் தொழில் நிறுவனத்தை அந்த ஊரில் ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
அவர் தான் பிறந்த ஊரை மாற்ற வேண்டும், அந்தக் கிராமத்தை முன்னுதாரண கிராமமாக மாற்ற வேண்டும், அதற்கு அவர் தொழில் நிறுவனத்திலிருந்து பயன்படுத்தும் CSR நிதியைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே அந்த 20-20 அறக்கட்டளையை உருவாக்கியுள்ளார்.
கேரளத்தில் தொழிற்சாலை நடத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. இருந்தபோதிலும் அந்த தொழிலதிபர் தொழிற்சாலையை உலகத் தரத்தில் எல்லா விதிகளையும் கடைப்பிடித்து நடத்தி வருகிறார். இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. இவர் தயார் செய்யும் சிறார்களுக்கான ஆயத்த உடைகள் அமெரிக்காவுக்கும், மேற்கு ஐரோப்பாவிற்கும் செல்கிறது. அந்த நாடுகளில் இந்தக் கம்பெனி தயாரிக்கும் ஆடைகளை வாங்கி விற்பவர்கள் தொடர்ந்து இந்தத் தொழிற்சாலைக்கு வந்து முறையாக விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு, தரமான பொருள்களை உற்பத்தி செய்கிறார்களா என்பதைக் கவனிக்க இங்கு வந்து ஆய்வு செய்கிறார்கள் என்பதும் ஒரு காரணம்.
இவ்வளவு வெற்றிகரமாக தொழில் நடத்துபவர் ஏன் இந்தச் சமூகப் பணிகளுக்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பினை, பஞ்சாயத்து ஆளுகைக்கான தேர்தலில் ஈடுபட வைத்து, அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை சம்பாதிக்கிறார் என்று கேள்வி கேட்கத் தோன்றியது. இதற்கு ஒட்டுமொத்தமாக பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தரும் பதில், நம் கட்சிகள் மக்களை ஒற்றுமைப்படுத்துவதற்கு பதில் பிரித்து வைத்துக் கொள்கின்றன, பக்குவப்படுத்துவதற்குப்பதில் ஒருவரையொருவர் பகைத்துக் கொள்ள தயார் செய்கின்றன, மேம்படுத்துவதற்கு பதில் சிறுமைப்படுத்துகின்றன. 
இவற்றை எல்லாம்விட மக்களின் மேம்பாடு, முன்னேற்றம், அமைதி என்பதைவிட, கட்சிகளின் வளர்ச்சிதான் பிரதானமாக்கப்படுகின்றன. அரசியல் என்பதே கட்சி வளர்ச்சிக்குத்தான் என்பதான சூழல்தான் எங்களை கட்சிகளிலிருந்து வெகுதூரத்திற்கு அழைத்துவந்து இந்த 20-20 அறக்கட்டளையுடன் இணைத்து மக்களுக்குச் சேவை செய்ய வைத்துள்ளது என்று கூறுகின்றனர். 
பஞ்சாயத்தின் மூலம் இந்த அறக்கட்டளை செய்கின்ற பணிகள் பிரமிக்க வைக்கின்றன. வீடுகள் இல்லா ஏழைகளுக்கு 780 சதுர அடியில் தனிவீடுகள் 11 லட்சத்திலிருந்து 13 லட்சம்வரை செலவு செய்து கட்டித்தருகின்றனர். அரசாங்கம் தரும் பணத்தையும் வாங்கி அதற்குமேல் உள்ள பணத்தை அறக்கட்டளை செலவு செய்கிறது.
விவசாய நிலங்கள், விவசாயம் செய்ய இயலாமல் தரிசாக போடப்பட்ட நிலங்களைப் பயன்படுத்தி, விவசாயம் செய்ய இயந்திரங்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து, விவசாயத்தை உயிர்ப்பிக்கச் செய்து வருகின்றனர். மிகவும் ஏழ்மையில் உள்ளவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி, அவர்களின் அன்றாட அத்தியாவசியமான பொருள்களுக்கு ஒரு சூப்பர் மார்க்கெட் ஆரம்பித்து மிகக்குறைந்த விலையில் குடிமைப் பொருள்களை தருவதும் இந்த 20-20 அறக்கட்டளைதான். 
அனைத்து நீர்நிலைகளும் தூர்வாரி தண்ணீர் தேக்கி வைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஏழைக் குடும்பங்களின் மருத்துவச் செலவுகளை ஏற்பது, ஏழைகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மீன்வளர்ப்பு, ஆடுவளர்ப்பு, கோழி வளர்ப்பு என பல்வேறு உதவிகளைச் செய்வது என, இந்த அறக்கட்டளை செயல்படுவது ஒரு வித்தியாசமான வளர்ச்சிப் பாதையாகவே தெரிகிறது. 
கிழக்கம்பலம் கிராமப் பஞ்சாயத்து இந்தியாவிலேயே மிகச்சிறந்த பஞ்சாயத்தாக ஆக்க வேண்டும் என்பதுதான் 20-20 அறக்கட்டளையின் குறிக்கோள். அறக்கட்டளை சார்பில் அந்தப் பஞ்சாயத்துத் தலைவர்கள் தேர்தலில் போட்டியிடும்போது ஓர் உறுதிமொழியை எழுத்துப்பூர்வமாகத் தந்துள்ளனர். தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பஞ்சாயத்தில் பணி செய்கின்றபோது, அந்தப் பணி மக்களுக்கு நிறைவு தரவில்லை என்றால் மூன்றில் இரு பங்கு வாக்காளர்கள் கையெழுத்திட்டு பதவி விலகச் சொன்னால் பதவி விலகிவிடுவோம் என்ற உறுதிமொழிதான். இதுதான் அவர்கள் மக்களுக்குக் கொடுத்த உறுதிமொழி. 
பஞ்சாயத்து உறுப்பினர்களின் செயல்பாடுளைத் தொடர்ந்து கண்காணிக்க ஒரு சிறிய அமைப்பை அறக்கட்டளை ஏற்படுத்தியுள்ளது. 
இவற்றைத் தாண்டி அறக்கட்டளையின் சொந்த நிதியில் வார்டுக்கு ஒரு நல அலுவலரை நியமித்து பஞ்சாயத்து வார்டு உறுப்பினருடன் செயல்பட வைத்துள்ளது. இவை அத்தனையும் நமக்குச் சொல்லும் செய்திகள் என்ன என்று பார்க்க வேண்டும்.
கட்சிகளின் அரசியல் மேல் மக்கள் ஆர்வத்தை இழந்துள்ளனர். ஆர்வம் மட்டுமல்ல நம்பிக்கையையும் இழந்து வருகின்றனர். கட்சி அரசியலால் மக்கள் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதில்லை அல்லது செய்ய முடியவில்லை என மக்கள் கருதுகின்றனர். சமூகம் மிகப்பெரிய மாறுதலுக்கு ஆட்பட்டுக்கொண்டிருக்கையில் நம் அரசியல் கட்சிகள் அந்த மாற்றங்களை உள்வாங்கி தங்களை சூழலுக்குப் புதுப்பிக்க அல்லது மாற்றிக் கொள்ளவில்லை. இந்தச் சூழலில் கிழக்கம்பலம் பஞ்சாயத்து தெரிவிக்கும் செய்தி - மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்; அதற்கான புது அரசியல் பாதையை தேடிடும் பணியில் இருக்கின்றனர் என்பதுதான்.
அந்த அரசியல் பாதையை, தொழில் நிறுவனங்கள் கொண்டுவந்தாலும் அதை மக்கள் ஏற்றுக்கொள்ள முனைகின்றார்கள் என்றால், நம் கட்சி அரசியலில் ஏதோ பின்னடைவு ஏற்பட்டு உள்ளது என்று பொருள். இதை அரசியல் கட்சிகள் பரிசீலனை செய்து பார்க்க வேண்டும். வணிக நிறுவனங்கள் எல்லாம் இப்படி அரசியலுக்கு வந்தால் என்ன செய்வது என்று விமர்சனம் செய்வதற்குப் பதில், மக்கள் ஏன் அரசியல் கட்சிகளை நிராகரிக்கத் தயாரானார்கள் என்று சிந்திக்க வேண்டும்.
கேரள மக்கள் கட்சி அரசியலில் ஊறிப் போனவர்கள், சித்தாந்தத்தில் ஊறிப் போனவர்கள், அவர்கள் எப்படி கட்சிகளிலிருந்து வெளியேறினார்கள் என்பதற்குப் பதில் தேட வேண்டியது கட்சிகளின் கடமை.


 

]]>
http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/feb/26/புது-யுக-அரசியல்-2870183.html
2869131 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் இருட்டை விதைக்கவா வெளிச்சம்? முனைவர் ம. இராசேந்திரன் DIN Saturday, February 24, 2018 01:36 AM +0530 வெளிச்சம் இருட்டை விரட்டுகிறது. சுற்றிக் கொண்டிருக்கும் பூமியில், இருட்டை விரட்டி விரட்டி வெளிச்சத்தை விதைத்துக் கொண்டே இருக்கிறது சூரியன். ஆனால் வெளிச்சத்தைக் கொண்டு வெளிச்சத்திலேயே இருட்டை விதைக்க முடியுமா?
ஊடக வெளிச்சம் வீட்டிற்குள் வந்து இருட்டை விரட்டுகிறதா? விதைக்கிறதா? இருட்டை விரட்டுவதைவிட விதைப்பதில்தான் வியாபாரம் இருக்கிறதோ? 
உண்மையைவிட, உண்மை போல இருக்கும் பொய்க்கு மக்களை ஈர்க்கும் ஆற்றல் அதிகம் போல. 
பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால் மெய்போ லும்மே மெய்போ லும்மேமெய்போலும்மே என்பதற்கு இரண்டுமுறை அழுத்தம் கொடுத்துச் சொல்கிறது அதிவீரராம பாண்டியனின் வெற்றிவேற்கை. பொய்யை மெய்யாக்க முடியாது. ஆனால் மெய்போல ஆக்க முடியுமாம்.
பொய்யை மெய்போல ஆக்குவதற்குச் சொல்லில் வன்மை வேண்டுமாம். வன்மை என்பதற்கு வலிமை, வன்சொல், ஆற்றல், வலாற்காரம், அழுத்தம், கோபம், கருத்து, வல்லெழுத்து என்று நிறைய பொருள்கள் உள்ளன.
சொல் வல்லமை என்று சொல்லாமல் சொல்வன்மை என்று கூறுகிறது வெற்றிவேற்கை. எனவே சொல் வலிமை என்பது சொல்பவரின் வலிமையாகிறது. அந்த வலிமையானவரால் பொய்யையும் மெய்போல ஆக்க முடியுமாம்! ஏனெனில் ஏழை சொல் அம்பலம் ஏறாது அல்லவா? 
சொல் ஏன் அம்பலம் ஏற வேண்டும்? அம்பலம் ஏறும் சொற்களே மக்களை அடைய முடியும்.
மக்களை அடையும் சொற்களைக் கொண்டே மக்கள் மனதை மாற்ற முடியும்; மனதை மாற்றுவது என்பது வசப்படுத்துவதாகும்; கட்டுப்படுத்துவதாகும்.
ஒரு காலத்தில் ஒவ்வொரு ஊருக்கும் ஊடகமாக ஊர் அம்பலம் இருந்திருக்கிறது. மரத்தடியோ சாவடியோ ஊர்ச் செய்திகளுக்கு அம்பலமாக இருந்திருக்கிறது. நாட்டு நடப்பு அறிய வானொலி அம்பலமாக இருந்திருக்கிறது. அம்பலத்தில் உண்மைக்கு மட்டுமே இடம் என்று மக்கள் நம்பி இருக்கிறார்கள். ஊர்ச்சபையில் அல்லது ஒரு சிலர் வீட்டில் வானொலி இருந்தபோதும் உண்மைச் செய்திகள் விரைவில் நாடெங்கும் பரவி இருக்கின்றன. 
காந்தியும் பகத்சிங்கும் தனித்தனி ஊடகங்களைத் தம் கையில் வைத்திருக்கவில்லை. ஆனாலும் இந்தியக் கிராமங்களிலும் மக்கள் அவர்களைத் தெரிந்து வைத்திருந்தார்கள். பொய்யை மெய்போலாக்க வேண்டிய நெருக்கடிகள் அப்போது இல்லை போலும்.
இப்போது நிறைய ஊடகங்கள் இருக்கின்றன. சொல்வன்மையில் போட்டி போடுகின்றன. சொல்லுக்கு வலிமை சேர்க்கின்றன. பரபரப்புக்கு அவசரம் அவசரமாகச் சொற்களுக்கு வலிமை சேர்க்கின்றன.
உண்மையைச் சொல்வதற்குச் சொல்லுக்கு இருக்கும் ஆற்றல் போதும். உண்மையைச் சொல்ல வல்லமை கூட வேண்டாம்; இயல்பே போதும். பொய்யை மெய்போல ஆக்குவதற்கு அந்த ஆற்றல் போதுமானதாக இல்லை. பொய்யை உண்மைபோல சொல்ல வலிமை தேவை. ஆகவே சொல்லுக்குக் கூடுதலாக வலிமை சேர்க்க வேண்டியிருக்கிறது. அதற்கு ஊடக வெளிச்சத்தோடு திரை வெளிச்சமும் அதிகாரத்திற்குத் தேவைப்படுகிறது. ஏனெனில் சொல்லுக்கு வலிமை சேர்ப்பது சொல்பவரின் வல்லமையில் இல்லை. சொல்பவரின் அதிகார வெளிச்சத்தில் இருக்கிறது என்பதைச் சொல்பவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். ஊடக வெளிச்சம் அதிகார வெளிச்சத்தின் கட்டுப்பாட்டில் கிடக்கிறது.
வெளிச்சத்தால், வெளிச்சத்திலும் இருட்டை விதைக்க அவர்களால் முடிகிறது. ஊடக வெளிச்சத்தால் சொல்லுக்கு வலிமை ஏற்றிப் பொய்யை மெய்போல் ஆக்க முடிகிறது. பொய்யை மெய்போல் ஆக்கினால் மட்டும் போதாது. மக்கள் மனதில் விதைக்க வேண்டும். அதற்கு அது அம்பலம் ஏற வேண்டும். இப்போது அம்பலமாக ஊடக விவாதம் இருக்கிறது.
விவாதத்தில் கருத்தைவிட வன்மமே வெளிப்படுகிறது. பெறுவதற்கு அதில் ஒன்றுமில்லை எனினும் நிராகரிப்பதற்கு நிறையவே உள்ளன. 
வல்லமையில் புலமை வெளிப்படும்; வலிமையில் வன்முறை கிடக்கும். வல்லமை வேறு; வலிமை வேறு. மக்களிடம் வல்லமையைவிட வலிமையே அதிகம் எடுபடுகிறது என்று யாரோ சொல்லித் தந்திருக்கிறார்கள். வலிமை மிக்கதை மக்கள் வரவேற்பார்கள் என்று நம்புகிறார்கள்.
உண்மையைவிட உண்மைபோலக் காட்டப்படுவதை மக்கள் கொண்டாடுவார்கள் என்றும் உண்மையைவிட உண்மைபோல் இருப்பதைக் கொண்டு மக்களை எளிதில் நம்ப வைக்க முடியும் என்றும் எண்ணும் நிலைக்கு ஊடக வெளிச்சத்தைக் கொண்டுபோய் நிறுத்தி இருக்கிறார்கள். 
அடிபட்டவனைப் பார்த்துவிட்டு அப்படியே போகிறவர்கள்கூட, அடிபட்டவன் போல நடிப்பவரோடு சேர்ந்து அழுகிறார்கள். உண்மையாகக் காதலிப்பவர்களைக் காவு வாங்குகிறவர்களும் காதல் காட்சிகளில் நடிப்பவர்களைக் கைதட்டிக் கொண்டாடுகிறார்கள். அவர்களுக்காகக் கண்ணீர் வடிக்கிறார்கள். தான் அடிமையாக கிடப்பதைப் பற்றிக் கவலைப்படாமல், அடுத்தவர் விடுதலைக்கு ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். மனசாட்சியை விற்றுவிட்டு மக்களைக் காப்பாற்றப் போராடப் போகிறார்கள். 
யாரிடமிருந்து யாரைக் காப்பாற்றப் போகிறார்கள்? விலங்குகளிடமிருந்து மக்களைக் காப்பாற்ற தலைவன் தேவைப்பட்டிருக்கலாம். இப்போதும் மக்களுக்கு மேய்ப்பர்களும் ஏய்ப்பர்களும் ஏன் தேவைப்படுகிறார்கள்? எத்தனைபேர் வந்தாலும் கொண்டாடுகிறார்களே, ஏன்?
மக்கள் இப்படிப் பழக்கப்பட்டது எப்படி?
மக்களை இப்படிப் பழக்கியது எப்படி?
ஆதிமனிதன் பயத்தைப் போக்கியது வெளிச்சம். அடிமனதின் இடுக்குகளில் கிடக்கும் அந்த வெளிச்ச நம்பிக்கையில் ஆளுகிறவர்களுக்கு அவ்வப்போது தேவையானதை மக்களுக்குத் தேவையானதாக மாற்றிக் காலம்தோறும் மக்கள் மனதில் விதைத்துக் கொண்டே வந்திருக்கிறார்கள். மக்களின் தன்மானத்தை/ நாட்டின் தன்மானத்தை மக்களுக்கு உணர்த்தவும் -வெளிச்சத்தில் விதைக்க வேண்டி இருந்தது. கூத்தும் நாடகமும் மேடையும் வெளிச்சத்தில் விதைத்தவை - மக்கள் மனதில் பதிந்தன. 
வெளிச்சம் போட்டுச் சொல்வதை மக்கள் நம்புகின்றனர். ஆழ்மனதில் கிடக்கும் நம்பிக்கை வெளிச்சம் அவர்களையும் அறியாமல் அவர்களை இயக்குகிறது. 
வெளிச்சத்தில் சொல்வதைக் காட்டிலும் வெளிச்சத்தில் (திரையில்) வந்தவர்கள் சொல்வதில் கூடுதல் நம்பிக்கை ஏற்படுகிறது போலும். தங்களுக்குத் தேவையானதைத்தான் அவர்கள் சொல்கிறார்கள் என்று கண்ணை மூடிக்கொண்டு வெளிச்சத்தை வரவேற்கிறார்கள். ஏனெனில் ஆதிமனதில் வெளிச்சம் அந்த நம்பிக்கையை விதைத்திருக்கிறது. தாயிடமிருந்துதான் தொப்புள் கொடி வெட்டப்படுகிறது. சமூகத்திலிருந்து வெட்ட முடிவதில்லை. மரபின் தொடர்பில் வெளிச்ச நம்பிக்கையில் மக்கள் பழக்கப்பட்டு இருக்கிறார்கள். அந்த நம்பிக்கையில்தான் வீட்டுக்குள் வந்து ஊடகங்கள், வெளிச்சத்தில் இருட்டை விதைக்கின்றன.
கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய் என்று காட்சி ஊடகம் வருவதற்கும் முன்பே பழமொழியைத் தமிழர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். தீர விசாரிப்பதே மெய் என்று தீர்வும் சொல்லியிருக்கிறார்கள். 
தீர விசாரித்தது எல்லாம் மெய் சொல்லி இருக்கிறதா? சொல்ல விட்டிருக்கிறார்களா? ஒவ்வொரு நாளும் போட்டி போட்டுக் கொண்டு ஊடகங்களில் தீர விசாரணைகள் நடக்கின்றன. மெய்போல இருப்பதைப் பார்த்து உண்மையே நம்புகிற வகையில் விவாத வெளிச்சத்தில் சொல்வன்மை வெளிப்படுகிறது.
மக்களுக்குத் தேவை உண்மை. வெளிச்சம் மறைக்கும் அந்த மெய்ப்பொருளைக் கண்டுபிடிப்பது எப்படி? நாம் இருட்டில் இருந்தபோது வெளிச்சத்தில் நடந்தது தெரிந்தது. இப்போது நாம் வெளிச்சத்தில் உட்கார வைக்கப்பட்டிருக்கிறோம். இருட்டில் என்ன நடக்கிறது என்பது நமக்குத் தெரியாமல் இருக்க நம்மை வெளிச்சத்தில் உட்கார வைத்திருக்கிறார்கள். 
அடுத்தவர் சொல்வதை அப்படியே நம்பினால் உண்மையைக் கண்டுபிடிக்க இயலாதாம். சொல்புத்திக் கேட்காதே என்றும் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள். அப்படியென்றால் வேறு எப்படிக் கண்டுபிடிப்பது?
மெய்ப்பொருள் எது? பொய்ப்பொருள் எது? என்று கண்டுபிடிப்பது எளிது. ஆனால் மெய் போல இருக்கிற பொய்ப்பொருளைக் கண்டுபிடிப்பது எப்படி? 
'போல' இருப்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். 'மக்களே போல்வர் கயவர்' என்று வள்ளுவர் எச்சரிக்கிறார். கயவரைவிட மக்களைப் போல இருக்கிற கயவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமாம். கண்டுபிடிப்பது எப்படி? வள்ளுவர் ஒரு வழி சொல்கிறார். அறிவால்தான் கண்டுபிடிக்க முடியும் என்கிறார்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் 
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
அறிவைக் கொண்டு ஓரறிவுயிர் முதலாக ஆறறிவுயிர் வரை உயிர்களை வகைப்படுத்தியவர் தொல்காப்பியர்.
அறிவின் வாயில்கள் ஐந்து. மெய், வாய், கண், மூக்கு, காது என்று ஐந்து வாயில்கள் வழியாக ஐந்து அறிவுகளைப் பெறுகிறோம். மனம் ஆறாவது அறிவு. ஐந்து பொறிகளும் அவற்றுக்குத் தொடர்புள்ளவை அவற்றைத் தொடும்போது மட்டுமே அனுபவம் பெறும். ஆனால் உடம்பு, கண், காது, வாய், காது அனுபவங்களை அவற்றிற்கான பொருட்கள் இல்லாமலே மனதால் அனுபவிக்க முடியும். அறிவாக்கிக் கொள்ள முடியும்.
ஐந்து பொறிகள்வழி பெறுவது அனுபவம் என்றால், அனுபவத்தை அறிவாக மாற்றிக் கொள்வது உயிரின் அடையாளங்களுள் முதன்மையானது. ஒவ்வொரு பொறிக்கும் அதற்கென்று ஒரு வேலை இருக்கிறது. மூக்குக்கு மூச்சுவிடுவது வேலை. மணம் அறிவது அதன் விருப்பம். அதன்வழி மணம் தரும் பொருளைக் காண்பது அறிவு.
அறிவுதான் உயிர்; அறிவில்லை என்றால் உயிரில்லை.
அனைத்துலக மனிதனை நோக்கி, தாகூர் இப்படிக் கூறுகிறார்-
எங்கே மனம் அச்சமற்று இருக்கிறதோ-
எங்கே மனம் தலை நிமிர்ந்து நிற்கிறதோ-
எங்கே அறிவு உரிமையுடன் இருக்கிறதோ-
எங்கே உண்மையின் ஆழ்ந்த அடிப்படை
யிலிருந்து சொற்கள் பிறக்கின்றனவோ-
எங்கே பகுத்தறிவு எனும் தெளிந்த ஓடை,
மூடப் பழக்க வழக்கம் என்னும்
வறண்ட பாலையில் வற்றிப் போகாது 
இருக்கிறதோ-
அங்கே -
அந்த உரிமையுள்ள இடத்தில்
என் நாடு விழிப்புறுக
வெளிச்சம் பயத்தைப் போக்க வேண்டும்.அறிவும் மனதும் அச்சமுற்று வாழ ஊடக வெளிச்சம் உதவ வேண்டும். உயிருள்ள மற்றவற்றிலிருந்து மனிதர்களை வேறுபடுத்துவதே அச்சமற்ற அறிவோடும் மனதோடும் வாழ்கிற அவர்களின் வாழ்க்கை முறைதான். அதற்கு வெளிச்சம் இருட்டை விரட்ட வேண்டாமா?
 

]]>
http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/feb/24/இருட்டை-விதைக்கவா-வெளிச்சம்-2869131.html
2869130 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் காது கொடுத்துக் கேளுங்கள்! வாதூலன் DIN Saturday, February 24, 2018 01:35 AM +0530 செவித் திறன் குறைபாட்டால் நான் பயன்படுத்தி வரும் செவிக்கருவியில் சில நாட்களுக்கு முன்பு பழுது ஏற்பட்டது. அதைச் சரி செய்ய அக்கருவியை வாங்கிய மையத்துக்குச் சென்றிருந்தேன். கருவியில் பழுதைச் சரி செய்த பின்னர், என்னுடைய செவித் திறன் குறைபாட்டின் அளவைப் பரிசோதித்தார் ஓர் ஊழியர். அங்கேயே செவிக் கருவியை வாங்கியிருந்ததால் இந்த சேவைகள் எல்லாம் இலவசம். நன்றி தெரிவித்துவிட்டு வெளியே வருகையில், நான் குடியிருக்கும் அடுக்கு வீட்டில் மேல்தளத்தில் வசிக்கும் நண்பர் அந்த மையத்துக்குள் நுழைவதைப் பார்த்தேன். ஆச்சரியப்பட்டு, யாருக்கு என்ன பிரச்னை என்று விசாரித்தேன். அவருடைய பின்புறம் ஒதுங்கி நின்றிருந்த மகனின் தலையில் தட்டினார்!
'எனக்கில்லை, இவனுக்குதான்! அப்புறமா விவரமாகச் சொல்கிறேன்' என்று மையத்துக்குள் சென்றுவிட்டார்.
அந்த இளைஞனுக்கு காதில் பிரச்னையா என்ற கவலை எழுந்தது எனக்கு. ஓரிரண்டு நாள் கழித்துதான் முழு விவரம் தெரிய வந்தது. பெற்றோர் சொல்வதெல்லாம் அந்த இளைஞனின் காதில் விழுவதில்லையாம்! பல தருணங்களில் முக்கியமான விஷயம் கூட!
செவிக் கருவி மையத்தில் இருந்த நிபுணரிடம் அந்த இளைஞனைக் காண்பித்துச் சோதித்ததில், அவன் செவியில் கோளாறு ஏதுமில்லை என்று தெரிந்ததாம். பெற்றோருக்கு நிம்மதி. 
ஆனால் செவிப் பரிசோதனைக்குப் பிறகு இளைஞனுக்கு அந்த மைய நிபுணர் அளித்த முக்கிய உபதேசம்-
'செல்லிடப்பேசியைக் குறைவாகப் பயன்படுத்த வேண்டும். அப்படியே பேசினாலும் கூட, காதிலிருந்து சற்றுத் தள்ளி வைத்துப் பேச வேண்டும்' என்று இளைஞனுக்கு மருத்துவ அறிவுரை வழங்கினார் செவி நிபுணர்.
அந்த இளைஞன் ஒரு நிதி முதலீட்டு நிறுவனத்தில் பணி புரிகிறான். செவித்திறன் முக்கியத் தேவை. வாடிக்கையாளர்களிடமிருந்து குவிகிற கேள்விக் கணைகளுக்குப் பதில் கூற செல்லிடப்பேசி ஒரு முக்கியத் துணை. எனவே, அவன் செவியில் குறையேதுமில்லை என்று தெரிந்து கொண்டதில் திருப்தி.
அப்படியானால் காது கேட்கவில்லை என்ற சந்தேகமும் பயமும் எங்கிருந்து வந்தது? யோசித்துப் பார்த்தால், விளக்கம் வெகு சாதாரணம். கவனக் குறைவு, கவனச் சிதறல்.
எந்த விஷயத்தையுமே கேட்டு மனதில் பதித்துக் கொள்ளுவதற்குத் தேவைப்படும் அம்சம் - கவனம். சில நடுத்தர வயதினர் காலையில் அலுவலகத்துக்குக் கிளம்பும் வரை சின்னத் திரையில் மூழ்கியிருப்பார்கள். அதுவும் இன்றுள்ள அரசியல் சூழ்நிலையில், 'நாளும் ஒரு சேதி' வருகிறதே? வேறு சில இளைஞர்கள், பாட்டு, சினிமா சேனலில் லயித்து இருப்பார்கள். இவையெல்லாம் இல்லையன்றால், இருக்கவே இருக்கிறதே - செல்லிடப்பேசி சமூக வலைதளங்கள்! கணினித் துறையில் பணி புரிபவர்களுக்கோ அயல் நாட்டு அழைப்பு எந்த நிமிஷத்திலும் வரக்கூடும். எனவே, பொதுவாகக் காலை 'விஷக்கடி வேளையில்' முக்கியமான விஷயத்தைப் பேசுவதையும் தெரிவிப்பதையும் தவிர்க்கலாம்.
இரண்டாவது அம்சம் - அக்கறை. எங்கள் உறவினர் வீட்டில் இதனால் பெரிய சண்டையே மூண்டுவிட்டது. மனைவியின் கட்டளையைக் கேட்டு, அழகு சாதனப் பொருளும் இனிப்பும் கடையிலிருந்து வாங்கி வந்த மகன், தாயார் கேட்டிருந்த மருந்துகளை வாங்கி வரவில்லை. விளைவை நீங்களே ஊகித்துக் கொள்ளலாம். உற்றவளிடம் அக்கறை, பெற்றவள் விஷயத்தில் இருக்காது என்பது ஓரளவு உண்மைதான். ஆனாலும் சற்றுக் கூடுதல் அக்கறையுடன் செவி மடுத்திருந்தால், மனக்கசப்பு வந்திராது.
வீட்டுக்கு உள்ளேயே கவனச் சிதறல்களுக்குப் பல காரணங்கள் இருக்கும்போது, வெளியில் உள்ள நிலவரத்தைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். வாகனங்களின் இரைச்சல், போக்குவரத்து இரைச்சல், ஆங்காங்கே கூட்ட இரைச்சல், ஊர்வலம் எனப் பல வகை காரணிகள்.
இவையெல்லாம் நமது கவனத்தைக் கலைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. அப்போது வேறு விஷயங்களில் நமது கவனம் செல்லாது. 
வீட்டில் முதியவர்களோ, பள்ளிக்கூடம் போகும் சிறுவர் சிறுமிகளோ இருந்தால் செவிமடுத்துக் கேட்பது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. பள்ளிப் பருவக் குழந்தைகளின் பெற்றோர் இருவருமே வேலைக்குச் செல்பவர்களாக இருந்தால், அந்தச் சிறார்களின் பாடு கஷ்டம்தான். அலுவலகத்திலிருந்து களைத்து வரும் பெற்றோரிடம் பள்ளியில் நடந்த நிகழ்வை சுவாரஸ்யமாகச் சொல்லத் தொடங்கும்போது, அதைக் காது கொடுத்துக் கேட்காமலேயே, 'தொந்தரவு செய்யாதே, நான் களைப்பாக இருக்கிறேன்' என்றோ, 'நான் இப்போது ரொம்ப பிஸி' என்று கத்தரித்தாற்போல் பேசினால், இளம் பிஞ்சின் மனம் புண்படும். இது போன்ற காரணங்கள் சிறார்களின் கவன சக்தியை பாதிக்கிறது. இத்தகைய உணர்வு அதிகமானால் சிறார்கள் தவறான வடிகால் தேடுவர் என்று மன நல நிபுணர்கள் அறிவுரை கூறுகிறார்கள். 
முதுமையால் வீட்டைவிட்டு வெளியே செல்ல இயலாத முதியவர்களும் குழந்தை போலத்தான். அவர்களுடைய பழைய கால ஞாபகங்களையோ, சின்னஞ்சிறு உடல் உபாதைகளையோ காது கொடுத்துக் கேட்பது மிக அவசியம். மெத்தப் படித்த மருத்துவர்களே, வயதான நோயாளிகளின் சொந்த சுக துக்கங்களைக் கேட்டு விசாரிக்கிறார்களே!
ஐம்புலன்களில் செவியின் முக்கியத்துவத்தை மறுப்பதற்கில்லை. திருவள்ளுவர் 'கேள்வி' என்று ஓர் அதிகாரமே இயற்றியிருக்கிறாரே!
ஆங்கிலத்தில் வெறும் கேட்டல் திறனை 'ஹியரிங்' என்றும் கவனித்துக் கேட்பதை 'லிஸனிங்' என்று குறிப்பிடுவதுண்டு. யார் என்ன சொன்னாலும், அதை மேம்போக்காகக் கேட்காமல், செவி மடுத்து, உற்றுக் கேட்டால் பல பிரச்னைகள் அகலும். 'தெளிவுறவே அறிந்திடுதல்; தெளிவுதர மொழிந்திடுதல்' என்ற மகாகவியின் கூற்றை நாம் ஞாபகத்தில் வைத்துக் கொள்வது உசிதம்.

]]>
http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/feb/24/காது-கொடுத்துக்-கேளுங்கள்-2869130.html
2868444 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் மேலாண்மை வாரியம் அல்லது வேண்டாத விளைவு பழ. நெடுமாறன் DIN Friday, February 23, 2018 01:18 AM +0530 இயற்கை நீதியின்படி காவிரியாற்றில் நமக்குரிய நீரைப்பெற 50 ஆண்டு காலத்திற்கு மேலாக தமிழகம் நடத்தி வந்த சட்டப் போராட்டத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு தமிழக விவசாயிகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இந்தத் தீர்ப்பாவது செயல்படுத்தப்படுமா? அல்லது முந்திய தீர்ப்புகளைப்போல ஏட்டளவு தீர்ப்பாக இருக்குமா? என்ற கேள்வி விவசாயிகளின் உள்ளங்களைக் குடைந்து கொண்டிருக்கிறது.
நடுவர் மன்றம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையிலிருந்து அதனுடைய இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்த வேண்டும் என்பது வரை உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மீண்டும் முறையிட்டுப் பெற்ற தீர்ப்புகளும் கருநாடக அரசினாலும் மத்திய அரசினாலும் ஒருபோதும் மதிக்கப்படவில்லை. தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டது. 2007-ஆம் ஆண்டு சனவரியில் நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை சட்டப்படி மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் உச்ச நீதிமன்றத்தின் கதவைத் தட்டி தமிழகம் முறையிட்டு, உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்த பிறகே அரசிதழில் அத்தீர்ப்பு வெளியிடப்பட்டது. ஆனாலும் அதன்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. மீண்டும் உச்ச நீதிமன்றத்தைத் தமிழகம் நாடிய பிறகே இப்போது இந்தத் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.
1987 மற்றும் 2002-ஆம் ஆண்டுகளில் மத்திய அரசு வெளியிட்ட தேசிய நீர்க்கொள்கை, 1966-ஆம் ஆண்டு உலக நாடுகளால் வகுக்கப்பட்ட எல்சிங்கி விதிகள், உலகச் சட்டக்கழக மாநாடு 2004-ஆண்டு வகுத்த பெர்லின் விதிகள் ஆகியவற்றுக்கிணங்க பன்மாநில மற்றும் பன்னாட்டு நதிகளின் நீரை எவ்வாறு பகிர்ந்து கொள்வது குறித்த விதி முறைகளை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். 
பன்மாநில நதி எந்தவொரு மாநிலத்திற்கு மட்டும் சொந்தமானதல்ல. எந்த மாநிலமும் தனி உரிமை கொண்டாட முடியாது. அந்நதியின் நீரைத் தடுத்த நிறுத்தவோ, திசை திருப்பவோ உரிமை கிடையாது. இயற்கை அளித்த இந்தப் பரிசு அனைவர்க்கும் சொந்தமானது. அவரவர்க்கு உள்ள உரிமைகளை அனுபவிக்க வேண்டுமே தவிர அதை மீறக்கூடாது. நியாய முறையில் நீர்ப்பகிர்வு செய்துகொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் இடித்துரைத்துள்ளது. நடுவர் மன்றம் தனது இடைக்காலத் தீர்ப்பில் தமிழ்நாட்டுக்கு 205 டி.எம்.சி. நீர் ஒதுக்கியது. ஆனால் இறுதித் தீர்ப்பில் 192 டி.எம்.சி.யாகக் குறைந்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் இதில் மேலும் 14.5 டி.எம்.சி. குறைத்து 177.25 டி.எம்.சி.யாக தமிழகத்துக்கு அளித்துள்ளது. பெங்களூரு நகரின் குடிநீர்த் தேவைக்காக கருநாடகத்துக்கு இந்த 14.5 டி.எம்.சி. நீரைக் கொடுத்துள்ளது. 
பெங்களூரு நகரம் நாள்தோறும் பெறும் நீரிலிருந்து பன்னாட்டு நிறுவனங்கள், பெரும் அங்காடிகள், நீர் விளையாட்டுப் பூங்காக்கள் செயற்கைக் கடல்கள் ஆடம்பர விடுதிகளில் உள்ள நீச்சல் குளங்கள் போன்றவற்றுக்காக 50%க்கு மேலான நீர் வீணடிக்கப்படுகிறது. ஆனால் 14.75 டி.எம்.சி. நீரைத் தமிழகம் இழப்பதன் முலம் 88,500 ஏக்கர் நிலம் நெல் பயிர் விளைச்சலை இழக்கும். உணவு உற்பத்திக்கு நீர் முக்கியமா? அல்லது உல்லாசப் பயன்பாட்டுக்கு முக்கியமா? இந்த நீர்க்குறைப்பை காவிரிப்படுகையில் உள்ள நிலத்தடி நீரின் முலம் ஈடுகட்டிக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இது தவறான கண்ணோட்டமாகும்.
தமிழக பொது மற்றும் பாசனத்துறை தலைமைப் பொறியாளராகவும் காவிரி பேச்சுவார்த்தைகளில் முக்கியப் பங்குவகித்தவருமான எஸ்.பி. நமச்சிவாயம் பின்வருமாறு கூறியுள்ளார். காவிரி படுகைப் பகுதியில் நிலத்தடி நீர் குறித்து ஐ.நா. வளர்ச்சித் திட்ட வல்லுநர்கள் நடத்திய ஆய்வின் முடிவின்படி சூன் மாதத்தில் மேட்டூரிலிருந்து வழியும் தண்ணீர் ஆறுகளிலும் வாய்க்கால்களிலும் ஓடிய 15 நாட்களுக்குள் காவிரிப் படுகைப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் விரைவில் மேலேறிவிடும். வயல்களில் கட்டும் நீர் கீழே மண்ணுக்குள் விரைவில் கீழே இயங்குவதில்லை. ஏனெனில் கீழ்மட்டத்தில் உள்ள மணற்பாங்கான ஊற்று மண்ணுக்கும் மேலே உள்ள உழுத மண்ணுக்கும் இடையில் கனத்த தகடு விரித்தாற்போல களிமண் திரை விரிந்து கிடக்கிறது. இந்தக் களிமண் வயலில் கட்டிய நீரை கீழே இறங்காமல் தடுத்துவிடுகிறது. இதற்கு மாறாக ஆறுகள் மற்றும் வாய்க்கால்களின் படுகைக்குக் கீழே மணற்பாங்கு இருப்பதால் தண்ணீர் விரைவாக இறங்கிவிடுகிறது. இதற்கும் அடியில் உள்ள ஊற்று மண் பகுதிக்கும் தொடர்பு இருப்பதால் அப்பகுதி முழுவதிலும் விரைவில் நீர் நிரம்பிவிடுகிறது. மேட்டுர் அணை திறந்தபிறகு நான்கரை மாதங்கள் வரை நிலத்தடி நீர் இருக்கும். இதைப் பயன்படுத்தினால் ஆற்றுநீர் மீண்டும் கீழே இறங்கிவிடும். எனவே, நிலத்தடி நீரை முழுமையாகப் பயன்படுத்த இயலாது. மேட்டூர் அணை திறக்கும்வரை நாற்று நடவுக்கு ஆயத்தம் செய்யவும், தாளடிப் பருவத்தின் கடைசியில் ஏற்படும் தணணீர் பற்றக்குறையைச் சமாளிக்கவும், சாகுபடிப் பருவங்களில் மழை பற்றாக்குறை ஏற்படும் காலத்திலும் நிலத்தடி நீரைப் பயன்படுத்தலாமே தவிர முழுமையான சாகுபடிக்குப் பயன்படுத்துவது இயலாத ஒன்றாகும்.
இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே ஏற்பட்ட சிந்து நதி நீர்ப் பங்கீட்டு உடன்பாட்டில் அந்தந்த நாடுகளில் உள்ள நிலத்தடி நீரை அந்தந்த நாடுகளே பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்னும் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணா நதி நடுவர் மன்றத் தீர்ப்பிலும் நிலத்தடி நீர் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் காவிரிப்படுகையில் கிடைக்கும் நிலத்தடி நீரை தமிழகம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறிய உச்ச நீதிமன்றம் கருநாடகமும் அவ்வாறே நிலத்தடி நீரைப் பயன்படுத்த வேண்டும் எனக் கூறவில்லை.
நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பு உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புக்கு சமமானதாகக் கருதப்பட வேண்டும் என்பதற்குப் பல சான்றாதாரங்களை இத்தீர்ப்பு சுட்டிக் காட்டியுள்ளது. குறிப்பாக பன்மாநில நதி நீர்ச்சட்டம் - 1956 இன் 6 (2) பிரிவில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிராக எந்த மாநிலமும் எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது. தீர்ப்பினை செயல்படுத்தும் வகையில் திட்டம் உருவாக்கப்பட வேண்டும். அதற்கிணங்க மத்திய அரசு ஆறு வார காலத்திற்குள் அதற்கான அமைப்பினை உருவாக்க வேண்டும். நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பினை தற்போது திருத்தி அமைத்ததற்கு ஏற்ப அவை எத்தகைய எதிர்ப்பும் இல்லாமல் செயற்படுத்த வேண்டும். நடுவர் மன்றம் தமிழகத்திற்கு 192 டி.எம்.சி. நீர் ஒதுக்கி, மாதந்தோறும் அளிக்கப்பட வேண்டிய நீரளவையும் திட்டவட்டமாகக் கூறியிருந்தது. இப்போது தமிழகத்திற்கு 177.25 டி.எ.ம்.சி. நீராக குறைப்பட்டபோதிலும் அதற்கேற்ற அளவில் மாதந்தோறும் நீர் தொடர்ந்து அளிக்கப்பட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதற்கு எக்காரணம் கொண்டும் கால நீட்டிப்பு அளிக்கப்பட மாட்டாது என உச்ச நீதிமன்றம் கண்டிப்பாகக் கூறியுள்ளது. 
1956 நதிநீர்ச் சட்டம் 6-ஆவது பிரிவின்படி, மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் விருப்பத்திற்குட்பட்டது என்ற வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை. நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பினை நிறைவேற்றுவதற்காகவே மேலாண்மை வாரியம் அமைக்கப்படுகிறது என்பதை உச்ச நீதிமன்றம் அழுத்தந் திருத்தமாக தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. மேலும் இத்தீர்ப்பு 15 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் என்றும் கூறியுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியத்தின் அதிகாரங்கள், செயற்பாடுகள் ஆகியவற்றை வகுக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு விழிப்புடன் செயல்பட வேண்டும். ஆணைய அமைப்பு திறமையுடனும் செம்மையாகவும் செயல்படக் கூடிய நீர் மேலாண்மை வல்லுநர்களைக் கொண்ட குழுவாக அமைக்கப்பட வேண்டும். செயலாக்கமும் அதை செவ்வனே நிறைவேற்றுவதற்குரிய அதிகாரமும் திறமையும் கொண்டதாக அமைய வேண்டும். அரசியல்ரீதியான விருப்பு வெறுப்பற்ற தன்மையில் தன்னிச்சையாகச் செயற்பட வேண்டும். காவிரி பாயும் மாநிலங்களின் பருவந்தோறும் தேவைப்படும் நீர் வளம் பாதிப்புக்கு ஆளாக்காமலும் நீர் விரயம் ஆகாமலும் கண்காணிப்புடன் செயல்பட வேண்டும். இதற்கு ஏற்றவாறு காவிரி மேலாண்மை வாரியம் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
28-5-2014இல் கோதாவரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு அரசிதழில் வெளிவந்த மறுநாளே அதாவது, 29-5-2014இல் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது. அதைப்போல மத்திய அரசு காலந்தாழ்த்தாமல் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முன்வரவேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியத்தை ஒருபோதும் ஏற்கப்போவதில்லை எனக் கருநாடக முதலமைச்சர் கூறியுள்ளார். அம்மாநிலத்தைச் சேர்ந்த பா.ச.க. உட்பட அனைத்துக் கட்சிகளும் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கே இது அறைகூவலாகும். நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்காக கருநாடக முதல்வர் மீது உச்சநீதி மன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்போதுதான் அரசமைப்புச் சட்டம், உச்சநீதி மன்றம் ஆகியவற்றின் மாண்பு நிலைநிறுத்தப்படும். அனைத்திந்திய கட்சித் தலைவர்கள் அனைவரும் கருநாடக மாநிலத்தைச் சேர்ந்த தங்களின் கட்சித் தலைவர்களை இடித்துரைத்துத் திருத்த வேண்டும். இல்லையேல் இக்கட்சிகளின் தேசிய ஒருமைப்பாட்டு முழக்கம் வெற்று வார்த்தைகளாகிவிடும். இத்தகைய போக்கினை வளரவிடுவது வேண்டாத விளைவுகளுக்கு வழி வகுக்கும்.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் பஞ்சாப் - சிந்து ஆகிய மாநிலங்களுக்கிடையே நிலவிய சிந்து நதி நீர்ப் பங்கீட்டுப் பிரச்னை தீர்க்கப்படாமல் நீடித்தது. ஆனால் அந்நிய ஆட்சி அகன்ற பிறகு இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் பிரச்னை ஆயிற்று. உலக வங்கியின் தலையீட்டின் விளைவாக சுமுகத் தீர்வு காணப்பட்டது. இரு மாநிலங்களாக இருந்தவரை தீராத பிரச்னை இரு நாடுகளான பிறகு தீர்க்கப்பட்டது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்து அதைச் செயல்படுத்த இந்திய அரசு முன்வராவிட்டால், மேலே குறிப்பிடப்பட்ட வேண்டாத விளைவுகள் உருவாகும்.
 

]]>
http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/feb/23/மேலாண்மை-வாரியம்-அல்லது-வேண்டாத-விளைவு-2868444.html
2868443 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் சமச்சீரற்ற பாலின விகிதாசாரம் இ. முருகராஜ் DIN Friday, February 23, 2018 01:17 AM +0530 திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர், திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என பழமொழிகள் சொல்லப்படுவதுண்டு. ஆனால், தற்போதைய சூழ்நிலையில் ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ திருமணம் முடித்து வைப்பதென்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.
குறிப்பாக, படித்த இளைஞர்களைவிட, படிக்காத இளைஞர்களுக்கும், படித்துவிட்டு குறைவாக ஊதியம் பெறும் வேலைகளில் உள்ள இளைஞர்களுக்கும் பெண் கிடைப்பதென்பது குதிரைக்கொம்பாகவே உள்ளது.
தாங்கள் திருமணம் செய்து கொள்ளவுள்ள இளைஞர் எவ்வளவு சம்பளம் வாங்குபவராக இருக்க வேண்டும், என்ன வேலையில் இருக்க வேண்டும், என்ன படித்திருக்க வேண்டும், அவருடைய தனிப்பட்ட விருப்பங்கள் என அனைத்தையும் தெரிந்துகொண்ட பின்னரே திருமணத்துக்குச் சம்மதிக்கும் எண்ணம் பெண்களிடம் அதிகரித்து வருகிறது.
ஆனால் இதையெல்லாம் கேள்விப்படும்போது, பெண்களின் நிலை நமது சமூகத்தில் மிகவும் மாறிவிட்டதோ என்று தோன்றக் கூடும். அதுதான் இல்லை. பெண்களின் 'மவுசு' கூடியிருக்கிறது என்பதெல்லாம் ஏதோ ஒருசில இடங்களில்தான். மற்றபடி, பெண்களின் சமூக அந்தஸ்தும், மக்கள்தொகை எண்ணிக்கையில் ஆண்களை ஒப்பிடுகையில் விகிதாசாரமும் சமச்சீரற்ற நிலையில்தான் உள்ளன.
இந்தியாவில் பெரும்பாலும் ஆண் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளவே பெற்றோர் அதிகம் விரும்புவதாகவும், உலகின் மற்ற பல நாடுகளை ஒப்பிட்டால் இந்தியாவில் ஆண் - பெண் விகிதாசாரம் சமனற்று இருப்பதாகவும் நாடாளுமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியா போன்ற நாடுகளில் 100 பெண்களுக்கு 101 ஆண்கள் என்ற அளவில் பாலின விகிதாசாரம் உள்ளது. ஆனால், இந்தியாவில் 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 1,000 ஆண்களுக்கு 940 பெண்கள் என்ற விகிதத்தில் பாலின சம நிலை உள்ளது. இந்த விகிதமானது வரும் 2021-ஆம் ஆண்டில் 904 எனவும், 2031-ஆம் ஆண்டில் 898-ஆகவும் சரிவைச் சந்திக்கும் என உலக வங்கி கணிப்பின்படி தெரியவந்துள்ளது.
இதேபோல, தமிழகத்திலும் ஆண் - பெண் பிறப்பு விகிதம் கணிசமாக குறைந்து வருகிறதாம். தமிழகத்தில் 1,000 ஆண் குழந்தைகளுக்கு பெண் குழந்தைகளின் விகிதம் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் எடுக்கப்பட்டு வரும் கணக்கெடுக்கப்பின்படி, கணிசமாக குறைந்து வருகிறது.
மாநில சுகாதார மேலாண்மை அமைப்பின் தகவல்படி, 2011 - 2012ஆம் ஆண்டில் 1000 ஆண்களுக்கு 923 பெண்கள், என இருந்த பாலின விகிதாசாரம் 2015 - 16ஆம் ஆண்டில் 912ஆக குறைந்துள்ளது. 2016 - 17ஆம் ஆண்டு செப்டம்பர் வரையிலான கணக்கெடுப்பின்படி, 911-ஆக குறைந்துள்ளது.
திருவண்ணாமலை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிக அளவில் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும், பெண் குழந்தைகளை கருவிலேயே கண்டறிந்து அழிக்கும் துயர சம்பவங்களும் தொடர்கின்றன.
திருவண்ணாமலையில் பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய சுகாதாரக் குழுவினர் நடத்திய ஆய்வின்போது, கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை தெரிவித்ததாக ஒரு மருத்துவமனைக்கும், 3 ஸ்கேன் பரிசோதனை மையங்களுக்கும் அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். கர்ப்பத்தில் உள்ள சிசுவின் பாலினத்தை வெளியிடக் கூடாது என்பதை சட்ட விரோதமாக்கி எத்தனையோ ஆண்டுகளாகிவிட்டன. இருந்தும், பல பெற்றோர்கள் உள்நோக்கத்துடன் அந்த விவரத்தைக் கேட்பதும் ஒரு சில ஸ்கேனிங் மையங்கள் அந்த விவரத்தை சட்ட விரோதமாக வெளியிடுவதும் வெளியிட்டு வருவது வேதனைக்குரியது.
எத்தனை சட்டங்களும் விதிமுறைகளும் இருந்தாலும் சிசு காலம் முதலே பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி தொடர்கிறதே? பல்வேறு துறைகளில் பெண்கள் சாதித்து வரும் சூழலிலும், பெண் குழந்தைகளுக்கு எதிரான எண்ணம் தொடர்கிறது.
ஆண்களுக்கு நிகராக பெண்களும் வருமானம் ஈட்டி, பொருளாதார நிலையில் உயர்ந்து வரும் சூழலிலும் பெற்றோர் ஆண் குழந்தைகளை அதிகம் விரும்புவதற்கு காரணம் இந்திய கலாசாரமே. சொத்துரிமை போன்றவற்றில் சமத்துவம் கொண்டு வர சட்டங்கள் இருந்தாலும் வேறு பல மரபுகள் ஆண்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. இறுதிச் சடங்கு செய்வதற்கு ஆண் குழந்தைகள் தேவை என்ற மரபு முதல் பல்வேறு விஷயங்களில் ஆண்களுக்கு இன்னும் முக்கியத்துவம் தொடர்கிறது. பெற்றோர் இறந்தால் ஆண்கள்தான் இறுதிச் சடங்குகள் செய்ய வேண்டும் என்ற நிலை மாறி பெண்களும் செய்யலாம் என்ற நிலை வர வேண்டும். இதற்கு சமுதாயத் தலைவர்கள் ஒருங்கிணைந்து சீர்திருத்தம் ஏற்படுத்த வேண்டும். 
பாலின சமத்துவம் என்பது சமூக முன்னேற்றம், பொருளாதார வளர்ச்சி, தேசத்தின் வளர்ச்சி என பல்வேறு விவகாரங்களையும் உள்ளடக்கியது. எனவே, பாலின விகிதாசாரத்தை பேணிக் காக்க வேண்டிய அரசின் பிரதான கடைமையாகிறது.
சமூகத்தின் சமச்சீரான மேம்பாட்டுக்கு ஜாதிவாரியான இட ஒதுக்கீடு மட்டும் போதாது. பாலின சமச்சீர் நிலை ஏற்பட வேண்டுமானால், அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டையும், தேர்தல்களில் 50 சதவீத இட ஒதுக்கீட்டையும் அமல்படுத்த வேண்டும்.

]]>
http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/feb/23/சமச்சீரற்ற-பாலின-விகிதாசாரம்-2868443.html
2867861 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் மறைந்தும் மறையாத மலை - வானமாமலை தி. இராசகோபாலன் DIN Thursday, February 22, 2018 02:22 AM +0530 நிகழ்காலச் சமூகத்தின் தேய்மானத்தை நினைத்து நைந்து நெஞ்சுருகிக் கொண்டிருக்கும் சராசரி மனிதனுக்கும், திடீரென்று வீசும் புதுக்காற்று புது நம்பிக்கையைத் தரும். அப்படி வீசிய புதுக்காற்று - புது நம்பிக்கை நாங்குநேரி நா. வானமாமலை ஆவார். ஒரு காலத்தில் நன்செய் பயிர்கள் தலைகாட்டாத தாலுகா - வறட்சிப் பிரதேசம், நாங்குநேரி ஆகும். அந்த மண்ணில் பாலைவனச் சோலையாக 07.12.1917 அன்று நாராயணன் - திருவேங்கடம் தம்பதியர்க்கு அருமந்த புத்திரனாக உதித்தவர் நா. வானமாமலை. பக்திப்பயிர் பச்சை கட்டிய வைணவக் குடும்பத்தில், மார்க்சியம் என்னும் வீரியத்தைத் தாங்கிக் கொண்டு வந்து விழுந்த விதைதான், பேராசிரியர் நா. வானமாமலை.
பல்கலைக்கழகத்தின் படிக்கட்டில் நின்று பேராசிரியர் ஆனவர்கள் பலர். ஆனால் பல்கலைக் கழகமே படிப்பதற்குரிய பாடங்களைப் படைத்துத் தந்து பேராசிரியர் ஆனவர்கள் சிலர். அப்படிப்பட்டவர்களில் முதல்வர் பேராசிரியர் கல்கி, இரண்டாமவர் பேராசிரியர் நாராயண துரைக்கண்ணன், மூன்றாமவர் பேராசிரியர் நா.வானமாமலை.
நான்கு ஏரிகளின் ஈரக்காற்றில், வானமாமலை உயர்நிலைப்பள்ளிக் கல்வியைக் கற்றார். பின்னர் தாமிரபரணி தாலாட்டும் திருநெல்வேலி எம்.டி.டி. இந்துக் கல்லூரியிலும், ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் வைகைக் கரையில் அமைந்துள்ள அமெரிக்கன் கல்லூரியிலும், முதுகலை வரை படித்தார். 
பேராசிரியர் கார்மேகக் கோனார் ஊட்டிய உற்சாகத்தில் வானமாமலைக்குச் சங்க இலக்கியங்களும், காப்பிய இலக்கியங்களும் அத்துப்படி ஆயின. மேலும், சுயவிருப்பத்தில் ஏற்பட்ட அறிவுப்பசியால், ஷெல்லி, பைரன், ஷேக்ஸ்பியர், மாக்சிம் கார்க்கி போன்றோர் அவரிடம் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர்.
1942-ஆம் ஆண்டிலிருந்து ஐந்து ஆண்டுகள் ஆசிரியர் பணி. அதிகாரிகளிடமும் ஆசிரியப் பெருமக்களிடமும் இரத்தத்தோடு ஊறிப்போயிருந்த ஆங்கில மோகத்தையும் அடிமைத்தனத்தையும் கண்டு ஆவேசப்பட்டார். அழுக்கடைந்த குட்டையில் அதற்கு மேலும் வாழ விரும்பாமல், உடையில் ஒட்டியிருந்த தூசுகளையும் துடைத்தெறிந்துவிட்டு வெளியேறினார்.
1935-களில் மார்க்சிய காற்று பாளையங்கோட்டை, நாங்குனேரி வட்டாரத்து இளைஞர்களுடைய சுவாசக் காற்று ஆயிற்று. தோழர்கள் ஜீவா, பி. இராமமூர்த்தி, பி. சீனிவாசராவ் போன்றோரின் கனல் மணக்கும் பேச்சுக்கள், வானமாமலை நடக்க வேண்டிய பாதைக்கு வழித்தடம் அமைத்துத் தந்தன. அதுமுதல் மார்க்சும், லெனினும் அவருடைய வலது இடது கரங்களாயினர்.
இன்றைய சூழலில் இயக்கங்கள், தனி மனிதர்களிடம் சரண் அடைந்து கடைசியில் ஒரேயடியாகக் காலாவதி ஆகிப்போவதைக் காண்கிறோம். ஆனால், தனிமனிதராகிய நா. வானமாமலை ஓர் இயக்கமானார். அந்த இயக்கத்தின், தாக்கம் அவர் மறைந்த பிறகும் உலைக்கள நெருப்பாய் சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றது.
இடறி விழுந்த இடமெல்லாம் ஏற்றத்தாழ்வுகளும், வர்க்க வேறுபாடுகளும் சமூகத்தை எலும்புருக்கி நோயாய் உருக்குலைத்து வருவதைக் கண்டு ஆத்திரம் கொண்டார்; களத்தில் இறங்கினால் அன்றிக் காரியம் ஆகாது என்ற முடிவுக்கு வந்தார்.
நாங்குனேரி வட்டார விவசாயிகள் இயக்கத்திலும், நெல்லை மாவட்டத் தொழிலாளர் இயக்கத்திலும் நேரடியாகப் பங்கேற்றார். 1948-இல் ஒருமுறையம், 1970-இல் நிலமீட்சிப் போராட்டத்திலும் கைது செய்யப்பட்டார். பிரபலமான நெல்லைச் சதி வழக்கில் விசாரணைக் கைதியாக விசாரிக்கப்பட்டார். நில மீட்சிப் போராட்டத்தில் பங்கேற்று ஒரு மாதத்திற்கு மேல் சிறையில் இருந்தார். சிறையில் இருந்தபோது எஸ்.ஏ. டாங்கே எழுதிய 'காந்தியும் லெனினும்' எனும் நூலைப் படித்தார். அந்நூல் அவரை வெகுவாகப் புரட்டிப் போட்டது. சிறைக்காலத்திலேயே திவான் ஜர்மன்தாஸ் எழுதிய 'மகாராஜ்' எனும் நூலைப் படித்து, அதனைத் தமிழில் மொழி பெயர்க்கவும் செய்தார். இந்திய சமஸ்தானாதிபதிகளைப் பற்றிய அந்நூலைக் கட்டுரைகளாக வெளியிடவும் செய்தார்.
ஓர் இராணுவம் ஆற்ற வேண்டிய பணியை ஒரே ஒரு போர்வீரன் மட்டுமே ஆற்றுவதுபோல், சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், மானுடவியல், கல்வெட்டியல், செப்பேட்டியல், தொல்பொருள் ஆய்வியல், ஒப்பிலக்கியம், தொன்மங்கள், கதைப்பாடல்கள், வாய்மொழித் தரவுகள், நாட்டுப்புறவியல், கள ஆய்வு, புதுக்கவிதை ஆகிய அனைத்துத் துறைகளிலும் வானமாமலை முத்திரை பதித்து நின்றார்.
1947-இல் முற்போக்கு இலக்கிய முன்னோடிகளான தொ.மு.சி. ரகுநாதன், தி.க. சிவசங்கரன், சிந்துபூந்துறை அண்ணாச்சி சண்முகம்பிள்ளை ஆகியோரை இணைத்து, 'நெல்லை இலக்கியச் சங்கம் என்ற அமைப்பை அவர் உருவாக்கினார். அறிவியல் நோக்கு, சமூக அக்கறை, படிப்பில் ஈடுபாடு, ஆய்வில் ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கு இந்த அமைப்பு, ஒரு போர்ப்பாசறை ஆயிற்று. 1969-ஆம் ஆண்டு 'ஆராய்ச்சி' எனும் காலாண்டு ஆய்விதழைத் தொடங்கினார். பண்பாடு, தத்துவம், மானுடவியல், நாட்டார் வழக்காறுகள், மொழிபெயர்ப்பு ஆகிய அகண்ட வழித்தடங்களைத் தாங்கி நின்றது, அப்பத்திரிகை. பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் சிவத்தம்பி போன்ற மார்க்சிய அறிஞர்கள் அவ்விதழை உச்சி முகர்ந்து கொண்டாடினர்.
உள்நாட்டுத் தமிழறிஞர்களுக்கும் அயலகத் தமிழறிஞர்களுக்கும் 'ஆராய்ச்சி' ஓர் எழுத்துப் பட்டறை ஆயிற்று. காப்பி ஆற்றுவது போல் இலக்கிய ரசனையை மட்டும் வைத்து ஆலாபனை செய்து கொண்டிருந்த தமிழறிஞர்களுக்கு மத்தியில் ஆராய்ச்சி, சமூகத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைக் காட்டும் கருவியாகவும், அதனை மாற்றும் ஆயுதமாகவும் ஆயிற்று.
பேராசிரியர் நா. வானமாமலை கதைப்பாடல்களுக்கும், நாட்டுப்புறப் பாடல்களுக்கும் ஆற்றிய தொண்டு அளப்பரியது. ஆனால், நா. வானமாமலை நாட்டுப்புறப் பாடல்களுக்காகக் கள ஆய்வு செய்து, அவற்றிலுள்ள மானுடத்தையும் மனிதநேயத்தையும் பகுப்பாய்வு செய்து, அவை பல்கலைக்கழகங்களில் பாடம் ஆகும் அளவுக்கு உயர்த்தினார். 'நாட்டுப்புறப் பாடல்கள் தாம் பண்பாட்டின் அடிப்படை. இலக்கியத்திற்கு அதுவே தாய் என்றார்.
கதைப்பாடல்களுக்கும் நாட்டார் வழக்காற்றியலுக்கும் பேராசிரியர் ஆற்றிய பணியை வியந்து, 'நா. வானமாமலையின் தமிழ்ப்பணி, அநேக ஏட்டுப்பிரதிகளை அச்சேற்றி, அவற்றிற்குச் சாகாவரம் அளித்த டாக்டர் உ.வே. சாமிநாதய்யரின் தமிழ்ப்பணிக்கு அடுத்தபடியாகச் சொல்லத்தக்கது எனப் பாராட்டியுள்ளார் கு. அழகிரிசாமி. தமிழறிஞர் உலகில் நெற்றிக்கண் படைத்த நேர்மையாளர் திரு.வ.அய். சுப்பிரமணியம் அவர்கள், வானமாமலையின் மலைபோன்ற தமிழ்ப்பணியை மதித்து, அவரை தார்வார் பல்கலைக் கழகத்தில் திராவிட மொழியியல் கழகத்தின் சார்பில் ஓராண்டுக்கு (1975 - 1976) பேராய்வாளர் பணியில் அமர்த்தினார்.
இலக்கியப் பரப்பின் அனைத்துத் துறைகளின் அங்கமாக இருந்த நா. வானமாமலை, கல்விக்கூடங்களில் தமிழ்தான் பயிற்றுமொழியாக இருக்க வேண்டும் என்பதில் அழுத்தமான எண்ணம் கொண்டிருந்தார். 'சுதந்திரம் அடைந்த எந்த நாட்டிலும், அந்தந்த நாட்டு மொழிதான் பயிற்று மொழியாக இருக்கின்றது. தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இல்லை' எனக் கண்டனக் குரல் எழுப்பினார். மோகன் குமாரமங்கலம் வேண்டுகோளுக்கு இணங்க, 'தமிழால் முடியும் எனும் கட்டுரைத் தொகுப்பு நூலை 1965-ஆம் ஆண்டு கொணர்ந்தார்.
சமூகத்தில் எந்தப் பிரச்னைக்கும் மூலாதாரமாக இருப்பது வர்க்க வேறுபாடுதான் என்பதில் வானமாமலை அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார்.
இலக்கிய ஆய்வில் அகலாய்வு (மேக்ரோ ஸ்டடி), நுண்ணாய்வு (மைக்ரோ ஸ்டடி) என இரண்டு வகை உண்டு. இந்த இரண்டிலும் ஆழங்காற்பட்டவர், வானமாமலை. 
மணிமேகலை காப்பியத்தில், தத்துவப் பார்வையும் பார்த்தார்; புதுக்கவிதையில் பாடுபொருளையும் பார்த்தார். புதுக்கவிதையை அவர் மதிப்பிட்ட பாங்கு இதுவரை யார் கண்ணிலும் தட்டுப்படாதது. 'புதுக்கவிதை, மனிதனுக்குத் தீமையானவற்றின்மீது மாபெரும் அருவருப்பை உண்டாக்குகிறது. ஒரு சிந்தனைத் தொடரைத் தொடங்கி வைக்கின்றது. சூழ்நிலை பற்றிய அகநோக்கை மாற்றுகிறது. என்றாலும், ஒரு மக்கள் போராட்டத்தில் உணர்ச்சி நிலையை உயர்த்தும் சக்தி அதற்கில்லை என ஒரு நீதியரசரைப் போல நின்று புதுக்கவிதையின் பலத்தையும் பலவீனத்தையும் எடுத்துரைக்கின்றார்.
20-ஆம் நூற்றாண்டு இலக்கியப் பயணத்தைச் சரியான திசையில் திருப்பிவிட்ட மாலுமி, வானமாமலை. எழுத்து, அஜீரணத்திற்கு மருந்தாக இருக்கக் கூடாது; பசித்தவன் வயிற்றுக்குக் கூழாக இருக்க வேண்டும் எனப் பாடுபட்டவர். 
அத்தகைய மாமலை, வானமாமலை, மத்தியப்பிரதேசத்திலுள்ள கோர்பாவில் தன் மகள் வீட்டில் தங்கியிருந்தபோது, 02.02.1980 இல் இயற்கை எய்தினார். அவருடைய இழப்பை எண்ணி வருந்திய இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், 13.09.1980 அன்று அவருக்கு 'கலாநிதி' (டாக்டர்) பட்டம் வழங்கியது.
தமிழன் இழந்த சொத்துகளை எல்லாம் தேடிக் கொடுத்த வானமாமலையின் மறைவு கேட்டு அதிர்ச்சியடைந்த எழுத்தாளர் சுஜாதா, 'வானமாமலையின் மீது சாகித்திய அகாடமியின் பார்வை படாதது எனக்கு ஆச்சர்யம் அளிக்கிறது. அதற்கவர் இடதுசாரி சிந்தனைகள் காரணமாக இருக்கலாம் என்றால், அந்த ஆச்சர்யம் வெறுப்பாக மாறுகிறது என எழுதினார்.
தாமிரபரணித் தண்ணீரைப் பருகுவதற்கு முன்னர் அதனை நினைத்தாலே நாவில் நீர் சுரக்கும். அதுபோல வானமாமலையைப் படிப்பதற்கு முன்பு, அவரைப் பற்றி நினைத்தாலே மேனி சிலிர்க்கின்றது.

]]>
http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/feb/22/மறைந்தும்-மறையாத-மலை---வானமாமலை-2867861.html
2867860 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் மக்கள் பிரதிநிதிகளுக்கும் கட்டாய கல்வித் தகுதி? வெ.ந. கிரிதரன் DIN Thursday, February 22, 2018 02:21 AM +0530 ஜனநாயகம் எனும் உயர்ந்த கட்டடத்தை நாடாளுமன்றம், அரசு இயந்திரம், நீதிமன்றம், ஊடகம் எனும் நான்கு தூண்கள் தாங்கிப் பிடித்துள்ளன. இதில், அரசு இயந்திரத்தின் பல்வேறு துறைகளில் பணிபுரிய விரும்புவோர், அப்பணிகள் தொடர்பான போட்டித் தேர்வுகளில் பங்கேற்கவே, வேலையின் தன்மையை பொருத்து பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியுள்ளது. நீதிமன்றத்துக்குள் வழக்குரைஞராக நுழைய சட்ட பாடப் பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டியது அடிப்படைத் தகுதி.
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படும் ஊடகத் துறையில் பணிபுரியவும் பட்டப்படிப்புடன் மொழி ஆளுமையும், மொழிப்பெயர்ப்புத் திறனும் அவசியமாக உள்ளது. நாட்டில் சட்டம் -ஒழுங்கை நிலை நாட்டும் காவலர் ஆவதற்கு, பதவியைப் பொருத்து பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகிறது. 
ஆனால், ஜனநாயகத்தின் அடிநாதமாகத் திகழும் நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு செல்லும் நம் மக்கள் பிரதிநிதிகளான எம்.பி., எம்எல்ஏக்கள் மற்றும் அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதமர், முதல்வருக்கும், அவர்களால் அடையாளம் காணப்படும் அமைச்சர் பெருமக்களுக்கும் இந்த பதவிகளுக்கு போட்டியிட, குறிப்பிட்ட கல்வித் தகுதி எதுவும் வரையறுக்கப்படாதது ஏற்புடையதாக இல்லை.
'லாமேக்கர்ஸ்' - அதாவது சட்டம் இயற்றுவோர் எனப் பெருமையாக அழைக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் இயற்றும் சட்ட, திட்டங்களைத்தான் அரசு இயந்திரத்தின் பல்வேறு நிலைகளில் பணிபுரியும் அதிகாரிகள் நிறைவேற்றுகின்றனர். 
அரசு இயந்திரத்தின் செயல்பாட்டில் ஏதேனும் குறைபாடோ, முறைகேடோ, ஊழலோ நிகழ்ந்தால் அதனை தீர விசாரித்து தண்டனை வழங்கும் முக்கிய இடத்தில் நீதிமன்றங்கள் உள்ளன. 
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகள், அரசு இயந்திரம், நீதிமன்றம் ஆகியவற்றின் அன்றாட நிகழ்வுகளை வெளியிலிருந்து ஊடகங்கள் கண்காணித்து வருகின்றன. 
அரசு இயந்திரம், நீதிமன்றம், ஊடகம் என இந்த மூன்றில் பணியாற்ற அடிப்படை கல்வித் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கும்போது, இவை எல்லாவற்றுக்கும் அடிப்படையான நாடாளுன்றம், சட்டப்பேரவையில் மக்கள் பிரதிநிதிகளாகப் பணியாற்றச் செல்வோருக்கு அடிப்படை கல்வித் தகுதி கட்டாயமாக்கப்படாதது நகை முரணாகவே தோன்றுகிறது.
நாட்டின் குடிமகனாக இருக்கும் எல்லோருக்கும் எப்படி வாக்குரிமை உள்ளதோ, அதேபோன்று மக்களின் பிரதிநிதியாக விரும்பும் அனைவருக்கும் தேர்தலில் போட்டியிட உரிமை உள்ளது. 
தேர்தலில் வெற்றி பெறுபவர்கள்தானே நாடாளுமன்றம், சட்டப்பேரவைக்கு செல்கிறார்கள்? தொகுதி மக்களின் விருப்பப்படிதானே ஒருவர் எம்.பி.யாவோ, எம்எல்ஏவாகவோ தேர்ந்தெடுக்கப்படுகிறார்? இந்த நடைமுறைக்கு மாறாக, மக்கள் பிரதிநிதியாகி, சமூகத்துக்கு சேவையாற்ற விரும்புவோர் தேர்தலில் போட்டியிட குறிப்பிட்ட கல்வியை தகுதியாக நிர்ணயிப்பது அவர்களின் அடிப்படை உரிமையை பறிப்பது ஆகாதா என்ற கேள்வி நமக்கு எழலாம். 
அப்படியானால், அரசு இயந்திரத்தில் பணியாற்றுவதன் மூலம் நாட்டுக்கு சேவையாற்ற விரும்புவோருக்கு மட்டும் ஏன் கல்வித் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்ற எதிர் கேள்வியும் எழுகிறது.
அரசுப் பணியில் சேர்ந்து அதன் மூலம் சமூகத்துக்கு சேவகம் செய்ய விழைவோரின் கல்வித் தகுதி, வயது வரம்பு என எதையும் கருத்தில் கொள்ளாமல், ஆர்வம், விருப்பத்தின் அடிப்படையில் மட்டும் அவர்களை போட்டித் தேர்வுகளில் பங்கேற்க அனுமதிப்பது சரியாக இருக்குமா? இந்த யோசனை சரியில்லை என்றால், குறிப்பிட்ட கல்வித் தகுதி என எதையும் நிர்ணயிக்காமல், எம்.பி., எம்எல்ஏக்களுக்கான தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை அனுமதிப்பதும் தவறுதான். 
நம் ஜனநாயக நடைமுறையின் மிகப்பெரிய இந்த முரண்பாட்டை களைய, எம்பி., எம்எல்ஏக்களாக போட்டியிட விரும்புவோர், அரசியல் அறிவியலை முதன்மைப் பாடமாகவும், நிர்வாகம், சட்டம் ஆகியவற்றை துணைப் பாடங்களாகவும் கொண்ட, இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். 
அமைச்சர்களாக விரும்புவோர், எந்தத் துறையில் அமைச்சராக உள்ளாரோ அந்தத் துறை சார்ந்த படிப்புகளில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பிரதமர், முதல்வர் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புவோர் அரசியல் அறிவியல் பாடத்தில் ஆராய்ச்சிப் படிப்பை முடித்திருக்க வேண்டுமென இவர்களுக்கு ஏன் கல்வித் தகுதியை நிர்ணயிக்கக் கூடாது?
இதன்மூலம் படித்தவர்கள், இளைஞர்கள் அதிகமாக அரசியலுக்கு வருவதற்கு வழி பிறக்கும். அதன் பயனாக, அரசியலில் குற்றப் பின்னணி உள்ளவர்களின் ஆதிக்கம் படிப்படியாக குறையும். முக்கியமாக, பணம், பெயர், புகழ் என எல்லாவற்றையும் பார்த்தாகிவிட்டது; இனி அரசியலில் குதிக்க வேண்டியதுதான் மிச்சம் என்ற சினிமா பிரபலங்களின் கடைசிப் போக்கிடமாக அரசியல் இருக்கும் அவலநிலை மாறும்.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, சில மாநிலங்களில் அடிப்படை கல்வித் தகுதி வரையறுக்கப்பட்டுள்ளது. அதன் நீட்சியாக எம்.பி.க்கள், எம்எல்ஏக்களுக்கான தேர்தலில் போட்டியிடுவோருக்கும் கட்டாய கல்வித் தகுதியை வரையறுக்கும் வகையிலும், அதனை தொலைநிலைக் கல்வியில் இல்லாமல், கல்லூரிகளுக்கு நேரடியாகச் சென்று பட்டம் பெறும் விதத்திலும் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது காலத்தின் அவசியம் மற்றும் கட்டாயமும் கூட.
ஏன் காமராஜர், கக்கன் போன்றவர்கள் எல்லாம் சிறந்த ஆட்சியாளர்களாக வரலாற்றில் இன்றளவும் பேசப்படவில்லையா? அவர்கள் என்ன மெத்தப்படித்த பட்டதாரிகளா? என விதிவிலக்குகளை இங்கு நாம் உதாரணம் காட்டலாம். 
ஆனால், அன்றாட அரசியல் நிகழ்வுகள் நாளுக்கு நாள் மிகவும் மோசமாக போய் கொண்டிருப்பதன் விளைவாக, தங்களின் பிரதிநிதிகள் மீது மக்களுக்கு தீராத கோபமும், அரசியல் குறித்து ஒருவித வெறுப்புணர்வும் ஏற்பட்டுள்ளதை யாரும் மறுக்க முடியாது. 
தேர்தல் ஆணையம் எவ்வளவுதான் முனைந்து, விழிப்புணர்வை ஏற்படுத்தி தேர்தலை நடத்தினாலும், வாக்குப்பதிவு அளவு குறைவாக இருப்பது அரசியல் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள வெறுப்புணர்வுக்கு உதாரணம். இத்தகைய சூழலில்தான் அரசியலுக்கு வருவோருக்கு ஏன் கட்டாயக் கல்வித் தகுதியை நிர்ணயிக்கக் கூடாது? அதன் மூலமாக அரசியல் புனிதம் பெறாதா? போன்ற கேள்விகள் சாமானியர்கள் மனதில் மீண்டும் எழுந்துள்ளது.

]]>
http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/feb/22/மக்கள்-பிரதிநிதிகளுக்கும்-கட்டாய-கல்வித்-தகுதி-2867860.html
2867258 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் தாய்மொழியைப் போற்ற ஒரு தினம்! முனைவர் மலையமான் DIN Wednesday, February 21, 2018 01:34 AM +0530 கொலம்பியா நாட்டின் ரக்பி சாலமன் என்பவர் 1998-ஆம் ஆண்டில் உலகத் தாய்மொழி தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று ஐக்கிய நாட்டுச் சபை பொதுச் செயலாளருக்கு ஒரு வேண்டுகோள் கடிதம் எழுதினார். இது பரிசீலிக்கப்பட்டது. இது 1999-இல், ஏற்றுக் கொள்ளப்பட்டது. 
பிப்ரவரி 21-ஆம் நாள் உலகத் தாய்மொழி தினமாக 2000-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. வங்க தேசத்தில் நடைபெற்ற தாய்மொழிப் போராட்டமும் இதற்குப் பின்புலமாக இருந்தது.
தாய்மொழி தேசியம் வளர்க்கும், நாட்டுப்பற்றை ஊட்டும் தாய்மொழி எந்த நிலையிலும் இன்பம் தரும். தாய்மொழி, சிந்தனையை வளர்க்கும். ஆகவே புதிய புதிய இலக்கியங்கள் பிறக்கும். தாய்மொழி அறிவியல் வளர்ச்சிக்கு உரமாக அமையும். தாய்மொழி மன ஒற்றுமைக்கு வழி வகுக்கும். இன முன்னேற்றத்துக்குப் பாதை போடும். 
ஆங்கிலத்தில் புலமை பெற்றிருந்தும், அண்ணல் காந்திஅடிகள் தாய்மொழி குஜராத்தியில் தன்வரலாறு எழுதினார். ரவீந்திரநாத் தாகூர், நோபல் பரிசு பெற்றுத் தந்த கீதாஞ்சலி கவிதை நூலைத் தனது தாய்மொழியான வங்க மொழியில் படைத்தார்.
தாகூர் தமிழ்நாட்டுக்கு ஒருமுறை வந்தபோது அவருக்கு வரவேற்புரை படித்து வழங்கப்பட்டது. அது ஆங்கிலத்தில் இருந்தது. 'இந்த வரவேற்புரை உங்கள் தாய்மொழியில் இருந்திருக்கலாமே' என்று கூறி அவர் வருத்தப்பட்டார். டி வேலரா என்பவர் அயர்லாந்து நாட்டின் விடுதலைப் போராட்ட வீரர். ஒரு கூட்டத்தில் அவரைப் பாராட்டி, சிலர் உரையாற்றினார்கள். 
அவர்கள், ஃபிரெஞ்சு, ஜெர்மன் முதலிய மொழிகளில் பேசினார்கள். அவரது தாய்மொழியான ஐரிஷ் மொழியில் ஒருவரும் உரையாற்ற வந்திருக்கவில்லை. தன் தாய்மொழியில் பாராட்டுரை கேட்க முடியவில்லையே என்று கூறி டி வேலரா கண்ணீர் விட்டார். 
இன்று குறுகிய நிலப்பரப்பில் உள்ள தமிழ்மொழி, ஒரு காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பரவி - விரவி இருந்தது. இந்த உண்மையை தாமஸ் ட்ராட்மன், அலெக்சாந்தர் கோந்தரதோவ், பண்டார்கர் முதலியவர்கள் எடுத்துரைத்தார்கள். சிந்தி மொழியில் பல தமிழ்ச் சொற்கள் இருப்பதை சிந்தி மொழி அறிஞர் பர்சோ கித்வானி ஆய்ந்து அறிவித்தார். 
மராத்திய மொழியில் கலந்துள்ள தமிழ்ச் சொற்களை அம்மொழிப் புலமையாளர் விசுவநாத் கைரே கண்டு உணர்த்தினார். சங்க காலத்துத் தமிழரின் ஊர்ப்பெயர்கள் மூவாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும், சிந்து வெளிப் பகுதியில் இன்றும் உள்ளன.
தமிழ் நாகரிகமே, இந்திய நாகரிகத்தின் அடித்தளமாக அமைந்தது என்று சுனிதி குமார் சட்டர்ஜி ஆய்ந்துரைத்தார். தென்னாட்டுக்குரிய - தமிழருக்குரிய - சிவ வழிபாடு இந்தியா முழுவதும் பரவியிருப்பது, ஒரு சிறிய சான்று. 
உலகின் பல மொழிகளிலும் தமிழ்ச் சொற்கள் காணப்படுகின்றன. ஹீப்ரு மொழியில் ரிசா (அரிசி) துகி(தோகை) முதலிய சொற்கள் இடம் பெற்றுள்ளன. தமிழினின் அரிசி, கிரேக்கத்தில் ஒரிசா என்று திரிந்து, ஆங்கிலத்தில் ரைஸ் என்ற உருவில் உள்ளது. 
கிரேக்கத்திலும் லத்தீனிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்ச் சொற்கள் இருப்பதை ஞானகிரியார் ஆராய்ந்து நூல்கள் எழுதினார். சாத்தூர் சேகரனும் உலகின் பல மொழிகளில் தமிழ்ச் சொற்கள் இருப்பதை ஆய்ந்துரைத்தார். 'கல்' எனும் சொல் உலகம் முழுவதும் பரவியிருப்பதை அரசேந்திரன் தன் நூல்கள் மூலம் தெரிவித்தார். 
அம்மா என்ற சொல், முப்பது மொழிகளில் திரிபு நிலையில் வழங்கப்படுகிறது. ஆப்பிரிக்க மொழிகளில் தமிழ்ச் சொற்கள் திகழ்வதை செனகல் நாட்டு முன்னாள் தலைவர் செங்கோர் கூறினார். 
ஜப்பான் மொழியில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட தமிழ்ச்சொற்கள் விளங்கி வருவதை மேனாள் துணைவேந்தர் பொற்கோவின் துணையுடன் ஜப்பானிய அறிஞர் சுசுமு ஓனோ ஆராய்ந்து கூறினார். 
கொரிய மொழியில் தமிழ்ச் சொற்கள் இருப்பதை ஜங் நாம் கிம் என்ற கொரிய அறிஞரும் ஒரிசா பாலு என்ற தமிழறிஞரும் உணர்த்தியுள்ளனர். 
தமிழ் மொழியின் சிறப்பை, வின்ஸ்லோ, ஸ்லேட்டர், பெர்சிவல், மாக்ஸ்முல்லர், ஈராஸ், போப் முதலியோர் பலவாறு கூறிப் பாராட்டியுள்ளனர். 
கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம் தமிழனைத் தலை நிமிரச் செய்தது. தமிழ், உலகின் முதல் செவ்வியல் மொழி (செம்மொழி) என்று தேவநேயப் பாவாணர் எடுத்துரைத்தார். தொன்மை, இயன்மை, தூய்மை, தாய்மை, முன்மை, வியன்மை, வளமை, மறைமை, எண்மை, இளமை, இனிமை, தனிமை, ஒண்மை, இறைமை, அம்மை, செம்மை என்ற 16 சிறப்புகளைத் தமிழ் தன்னுள் கொண்டிருக்கிறது என்றார் அவர். 
தமிழ் என்ற சொல்லுக்கு இனிமை, நீர்மை, அகப்பொருள், வீரம், இறைமை, சைவ சமயம், படைவீரர், நாடு, மன்னன், நூல் என்ற பொருள்கள் உள்ளன.
துறவிகளும் துறவாத மொழி தமிழாகும். குமரகுருபரர், சிவப்பிரகாசர், இராமலிங்க வள்ளலார், வண்ணச்சரபம், தண்டபாணி, ஞானியார் சுவாமிகள் முதலிய பல அடிகளார் தமிழைத் தலை மேல் வைத்துப் போற்றினார்கள். சமயம் பரப்ப வந்த பெஸ்கி முதலிய மேனாட்டுத் துறவிகள் தமிழ்த்தாசர் ஆனார்கள். 
உலகத்து பக்தி இலக்கியங்களின் பட்டியலுக்கு தமிழ், தலைமை தாங்குகிறது என்று தனிநாயகம் அடிகளார் அறிவித்தார். திணை, நானிலப் பாகுபாடு ஆகியவை தமிழுக்கே உரியவை. உலகத்திற்கு அறிவுக்கொடை அளித்துள்ளது தமிழ். 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்றவன் தமிழன். 
தமிழை 'என்றுமுள தென்தமிழ்' என்றார் கம்பர். 'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' என்று பன்மொழிப் புலமைப் பாரதியார் இரத்தினச் சுருக்கமாய்ச் சொன்னார். 
உலகத் தாய்மொழி தினத்தன்று தமிழின் வளர்ச்சிக்குரிய வழிகளை எண்ணிப் பார்க்க வேண்டும். திட்டம் இட வேண்டும். 
செயற்படுத்தவும் வேண்டும்.
தமிழ் செழிக்க கல்வி, வேளாண்மை, வணிகம், கலை, தொழில்நுட்பம், மருத்துவம், அறிவியல், ஊடகம், ஆகிய அனைத்துத் துறைகளிலும் தமிழ் நல்லாட்சி புரிய வேண்டும் என்று டாக்டர் அப்துல் கலாம் வழிகாட்டினார். 
மழலையர் பள்ளிமுதல் பல்கலைக் கழகப் படிப்பு வரை, தமிழே கல்வி மொழியாக விளங்க வேண்டும். அழிவு நிலை மொழிகளின் பட்டியலில் தமிழும் இருப்பதாகக் கூறப்படுகிறது. 
இந்த நிலையை மாற்றுவதற்கு முழுமுயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். 1956-இல் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்டது. இது எல்லாத் துறைகளிலும், எல்லா நிலைகளிலும் நிறைவேற்றப்பட வேண்டும்.
மொழியாலும் பண்பாட்டாலும் உலகத் தமிழர்களை ஒன்றுபடுத்த வேண்டும். இங்கிலாந்து, ஃபிரான்சு, ஜெர்மனி ஆகிய நாடுகளின் தலைநகரங்களில் பழைமையான நூலகங்கள் இருக்கின்றன. அங்கு அரிய தமிழ் நூல்கள் உள்ளன. அவற்றின் படிகளைப் பெற்று, தமிழக நூலகங்களில் சேர்க்க வேண்டும்.
நீதிமன்றங்களில் தமிழ் வாழவில்லை என்று மயிலாடுதுறை முன்னை நீதிபதி வேதநாயகர் வேதனைப்பட்டார். இன்றும் நிலைமை அதேதான். 
இனி நீதிமன்றங்களிலும் தமிழ் செழிக்கச் செய்ய வேண்டும். திரைப்படம், தொலைக்காட்சி, நாளேடு, பருவ இதழ் முதலியவை சக்தி வாய்ந்த ஊடகங்கள் நல்ல தமிழை வளர்க்கும் நிலை உருவாக வேண்டும். 
தமிழகக் கோயில்களில் ஓதுவார்களின் பக்தித் தமிழிசை இனிதாக முழங்கும் நிலை உருவாக்கப்பட வேண்டும். தமிழ் வழிபாடு நடைபெற வேண்டும். சித்த மருத்துவம் தமிழுடன் பிறந்தது என்று முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் சொன்னார். இந்தச் சித்த மருத்துவமும் ஓங்கி வளரும் நிலை உருவாக வேண்டும்.
உலகின் உயர்ந்த இலக்கியங்களையும் அறிவியல் புதுமைப் படைப்புகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள பன்னாட்டுத் தரத்தில் மொழிபெயர்ப்புத் துறை, புதிய கலைச் சொல்லாக்கத் துறை ஏற்படுத்த வேண்டும். 
சங்க காலத்திலிருந்து இன்றுவரை வாழும் செங்கம் போன்ற ஊர்களில் அகழாய்வு தொடங்கப்பெற வேண்டும். எந்தெந்த முறைகளில் தமிழை வாழ வைக்க முடியும் என்று முனைப்போடு தமிழர், அனைவரும் சிந்திக்க வேண்டும், செயற்படவும் வேண்டும்.
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே என்றான் மகாகவி பாரதி. உலகத் தாய்மொழி தினத்தில் தமிழின் சிறப்பை உணர்வோம். தாய்மொழியாம் தமிழின் உயர்வையே விழைவோம். எங்கும் தமிழ் சிறக்கச் செய்வோம்.

பிப்ரவரி 21-ஆம் தேதி உலக தாய்மொழி தினம்.
 

]]>
http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/feb/21/தாய்மொழியைப்-போற்ற-ஒரு-தினம்-2867258.html
2866797 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் தயக்கமே தடை! பாறப்புறத் இராதாகிருஷ்ணன் DIN Tuesday, February 20, 2018 02:51 AM +0530 எந்த ஒரு செயலைச் செய்வதற்கும் அடிப்படை நம் மனம் மற்றும் மனதில் எழும் எண்ணமே. ஆனால், நம்மிடையே காணப்படும் தயக்கங்கள், அந்த எண்ணங்களைத் தடுத்து, முயற்சிகளைக் கைவிடத் தூண்டுகின்றன. 
தாழ்வு மனப்பான்மையின் இன்னொரு முகம்தான் இந்தத் தயக்க உணர்வு. முன்னேறத் துடிக்கும் பலருக்கும் இந்தத் தயக்க உணர்வு தான் தடையாக இருக்கிறது. எனவே தான் திருவள்ளுவரும் அச்சமே கீழ்களது ஆசாரம்" என்கிறார். 
தயக்கம் அடிமையின் குணம், அறிவினை மறைக்கும், துணிவை அழிக்கும், கோழைகளை வளர்க்கும். 
அளவுக்கதிமாகத் தயக்கமடைபவர்கள் தங்களின் பல அடிப்படை உரிமைகளைக் கூட இழக்கிறார்கள். இந்த தயக்க உணர்வு நம் மனதில் துளிர்விடும் எண்ணங்களை எப்போதும் மாற்றிக் கொண்டே இருக்கும். இவர்கள் தானாக இயங்கும் திறன் அற்றவர்களாக இருப்பார்கள். எந்தக் காரியத்தையும் மற்றவர்களைக் கேட்டே செய்வார்கள். 
தாங்களாகவே எந்த முடிவையும் எடுக்க மாட்டார்கள். அதாவது மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ, அவர் கோபித்து திட்டுவாரோ, இவர் பிறரிடம் சொல்லி கேலி பேச வைப்பாரோ என்ற எண்ணமே ஒருவனை தயக்கமடையச் செய்து, தாழ்வு மனப்பான்மையைத் தூபம் போட்டு வளர்க்கிறது. 
இதைப் பயன்படுத்தி, ஒருவர் செய்யும் சிறு தவறுகளையோ, அவரிடமிருக்கும் பய உணர்ச்சியையோ, காட்டும் தயக்கத்தையோ தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அவரை மேலும் அச்சவுணர்வுக் கொள்ளச் செய்து இறுதியில் அவரை எதற்கும் பயனற்றவராக மாற்றிவிடுகிறார்கள் சிலர். 
தன்னுடைய சிந்தனைகள், உணர்வுகள் மற்றும் செயல்களைப் பற்றி அவர்களே முடிவு செய்யாமல், பிறர் என்ன நினைப்பார்களோ, சொல்வார்களோ என்ற யோசனையில் இரட்டை மனம் கொண்டு பல வாய்ப்புகளை இவர்கள் தவற விட்டு விடுவார்கள்.
பிறவியில் யாருக்கும் தயக்கம் உண்டாவதில்லை. தயக்க உணர்வுகளுக்குப் பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய அனைத்துமே காரணமாகிறது என்றால் அது மிகையல்ல. 
பிறர் நம் குறையைச் சுட்டிக் காட்டும்போதும், பலர் முன்னிலையில் குறுகி நிற்கச் செய்யும்போதும், இந்தத் தயக்க உணர்வு பெருகிக் கொண்டே வந்து ஒருவரை செயலற்றவராக்குகிறது. இறுதியில் தாழ்வு மனப்பான்மை பெருகி, நான் ஒன்றுக்கும் உபயோகமில்லாதவன் என்ற நிலையை அவருக்குள் ஏற்படுத்திவிடுகிறது. 
முதலாவது வருபவரைத்தான் உலகம் நினைவில் வைத்திருக்கும். தயக்கம், பயம் ஆகியவை நம் வெற்றியை பாதிக்கும் என்பதற்கான உதாரணங்கள் ஏராளம். ஒரு நிமிட தயக்கம் கூட, நமது மிகப் பெரிய வெற்றியைத் தடுத்துவிடுகிறது.
இந்தத் தயக்க உணர்வு ஒருவரின் வளர்ச்சியை அணை போட்டுத் தடுக்கிறது.
ஒருவர் பெற நினைத்ததை, கேட்க நினைத்ததை, அச்ச உணர்வு இல்லாத இன்னொருவர், திறனில்லாதபோதிலும் துணிந்து கேட்டு அந்த வாய்ப்பை முன்னவரிடமிருந்து தட்டிப் பறித்துக் கொள்கிறார். 
எந்த ஒரு மனிதனுக்கும் தயக்கவுணர்வு நீங்கினால்தான் அவனுடைய உண்மையான ஆற்றல்கள் வெளிப்படும். 
சிலருக்குப் பேசும்போது தயக்க உணர்வு காரணமாக, பேச வந்ததை விட்டுவிட்டு அவசர அவசரமாக ஏதேதோ பேசுவார்கள். 
அதிகாரிகளையோ, பெரியவர்களையோ சந்திக்கும்போது அமைதியாக, தயக்கமின்றி பேச கற்றுக் கொள்ள வேண்டும். தயக்க உணர்வு உள்ளவர்கள் திட்டமிட்டுப் பேச கற்றுக் கொள்ள வேண்டும். அதற்கான சுய பயிற்சிகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டும்.
பிறருடன் பேசும்போது ஆவலுடன் கவனிப்பதும், புதிய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் நாமாகவே சென்று உரையாடுவதும், வீட்டில், பள்ளியில், பணி புரியும் இடத்தில் அதிகப்படியான தயக்கத்தை ஏற்படுத்தி, நம் வாய்ப்புகளை தட்டி பறித்து, நம்மை பேச விடாமல் தடுக்கும் நபர்களைக் கண்டால் அவர்களைவிட்டு விலகுவதும் நல்லது.
எங்கெல்லாம் தயக்கம் வருகிறதோ, அந்த செயலைப் பலமுறை முன் ஒத்திகை பார்த்தால் தயக்கம் ஓடிவிடும் என்றும், திரும்பத் திரும்பச் செய்யும் பயிற்சி மட்டும்தான் தயக்கத்தை விரட்டும் சிறந்த வழியாகும் என்கிறார்கள் மனநல நிபுணர்கள். 
"அச்சம் தவிர், ரெüத்திரம் பழகு'" என்றார் மகாகவி பாரதியார். தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும்" என்கிறது விவிலியம்.
தோல்வியின் அடையாளம் தயக்கம்; வெற்றியின் அடையாளம் துணிச்சல்; தயங்கியவர் வென்றதில்லை. துணிந்தவர் தோற்றதில்லை.

]]>
http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/feb/20/தயக்கமே-தடை-2866797.html
2866796 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் மாநிலங்களவை என்னும் தடைக்கல்! ஏ. சூர்யபிரகாஷ் DIN Tuesday, February 20, 2018 02:51 AM +0530 இந்திய நாடாளுமன்றத்தில் இரு அவைகளைக் கொண்டிருப்பது, கூட்டாட்சி முறையில் நம்பிக்கை கொண்ட ஜனநாயகத்துக்கு ஒருவகையில் தடைக்கல்லாகவே மாறிவிட்டிருக்கிறது. மக்களவைத் தேர்தலில் பெருவாரியான மக்கள் ஆதரவுடன் வென்றாலும்கூட, மக்களுக்கு அளித்த வாக்குறுதியை ஆட்சியாளர்கள் நிறைவேற்றாமல் மாநிலங்களவையால் தடுக்க முடியும் என்ற சூழல் நிலவும்வரை, மக்களவை வெற்றியை மட்டும் நாடாளுமன்ற ஜனநாயகத்தில் வலிமையானதாகக் கருத முடியாது.
விடுதலை அடைந்த பிறகான இத்தனை ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சி என்ற ஒற்றைக் கட்சி ஆட்சி நிலவிய காலம் தவிர்த்து, வேறெந்த ஆட்சியாளர்களும் மாநிலங்களவையில் பெரும்பான்மை பெற்றதில்லை. இந்த நிதர்சன உண்மையின் கசப்பை சமாளிக்க முடியாமல் பிரதமர் நரேந்திர மோடியின் அரசும் திணறி வருகிறது. அவரது அரசு மேற்கொள்ளும் பல முயற்சிகளுக்கு நாடாளுமன்ற மேலவை தடையாகவே இருந்து வருகிறது.
எதிர்க்கட்சிகளின் கண்மூடித்தனமான எதிர்ப்பால் அரசின் சட்ட நிறைவேற்ற முயற்சிகள் மாநிலங்களவையில் முடக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி வெளிப்படையாகவே கூறிவிட்டார். கடந்த மாதம் கர்நாடகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், முத்தலாக் தடை சட்ட மசோதாவும், பிற பிற்படுத்தப்பட்டோர் (ஓ.பி.சி.) ஆணைய மசோதாவும் எவ்வாறு எதிர்க்கட்சிகளால் சட்டமாகாமல் தடுக்கப்பட்டன என்று விவரித்தார்.
ஓ.பி.சி. ஆணைய மசோதா 2017 ஏப்ரலிலேயே மக்களவையில் நிறைவேறிவிட்டது. அதேபோல, முத்தலாக் தடைச் சட்ட மசோதாவும் கடந்த டிசம்பரில் மக்களவையில் நிறைவேறிவிட்டது. ஆனால், இவை இரண்டையும் மாநிலங்களைவையில் நிறைவேற்ற விடாமல் எதிர்க்கட்சிகள் முடக்கிவிட்டன.
இத்தகைய அனுபவத்தை இதற்கு முன்னரும் பல பிரதமர்கள் சந்தித்திருக்கின்றனர். அவர்கள் மக்களவையில் பெரும்பான்மை பெற்றிருந்தபோதும், மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால், அவர்களது எதிரிகளின் பெரும்பான்மை பலத்தின் முன்பு தவித்திருக்கிறார்கள். ஒவ்வொரு முறை ஆட்சி மாறும்போதும், ஆளும் கட்சியின் முடிவுகளுக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை ஆதரவு பெற பகீரதப் பிரயத்தனம் செய்ய வேண்டியதாகிறது. 
மாநிலங்களில் அதிக இடங்களில் வெல்லும் கட்சியே மாநிலங்களவையிலும் பெரும்பான்மை பெற முடியும். இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் நடைபெறும்போது ஆளும்கட்சியோ, ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகளோ மாநிலங்களவைக்கு கூடுதல் உறுப்பினர்களை அனுப்பினால் அங்கு அவர்களின் பலம் கூடும். அந்த வகையில் இரண்டு தடவை இத்தகைய தேர்தல்கள் நடந்து முடியும்போது, ஆளும்கட்சியின் பலம் மாநிலங்களவையில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால், அதற்குள் அந்த அரசின் மக்களவைப் பதவிக் காலம் முடியும் தருவாயை எட்டிவிடும்.
அதாவது, மத்திய அரசை நடத்தும் கட்சியானது, மக்களவையில் வென்றால் மட்டும் போதாது; அது பல்வேறு மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களிலும் வென்று ஆட்சி அமைக்க வேண்டும். ஏனெனில், சட்டப் பேரவை உறுப்பினர்கள்தான் மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்வு செய்கிறார்கள். அந்த நிலையில் மட்டும்தான், மத்தியில் ஆட்சி புரியும் கட்சி, நாடாளுமன்ற இரு அவைகளிலும் பெரும்பான்மை பெற முடியும். பெரும்பாலான பிரதமர்களால் இத்தகைய நிலையை எட்ட முடிவதில்லை.
கிரேக்க புராணக் கதையில் வரும் எபிரா நாட்டு மன்னன் சிஸிபஸ் ஒரு சாபத்தால் மலையுச்சிக்கு பாறாங்கல் ஒன்றை உருட்டிச் சென்று வைக்க வேண்டியதாகிறது. அவன் ஒவ்வொரு முறையும் மலையுச்சிக்குச் செல்லும்போது, பாறாங்கல் உருண்டு கீழே வந்துவிடும். மீண்டும் பாறாங்கல்லை மலையுச்சிக்கு உருட்டிக் கொண்டு போக வேண்டும். மீண்டும் அது கீழே உருண்டு விழும்... அதுபோலத்தான், இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் ஆளும் கட்சி பெரும்பான்மை பெறுவதென்பது சிக்கலானதாக மாறி இருக்கிறது.
1952-இல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அமைக்கப்பட்டபோது, நாடு முழுவதும் காங்கிரஸ் ஏகபோகமாக ஆண்டு வந்தது. எனவே அக்கட்சிக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை என்பது பிரச்னையாக இருக்கவில்லை. ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகிய மூன்று காங்கிரஸ் பிரதமர்களும் மாநிலங்களவையில் அதீதப் பெரும்பான்மையுடன் ஆட்சி செய்தவர்கள்; நேரு பிரதமராக இருந்த காலம் முழுவதுமே நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றிருந்தார்; இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும், போதிய பெரும்பான்மை பெற்றிருந்தார்கள். மற்றொரு காங்கிரஸ் பிரதமரான லால் பகதூர் சாஸ்திரியும்கூட, மாநிலங்களவையில் வலுவான பெரும்பான்மை பெற்றிருந்தார். அவருக்கு ஆதரவாக 166 எம்.பி.க்கள் மேலவையில் இருந்தனர்.
இந்த நால்வர் தவிர்த்து வேறெந்தப் பிரதமரும் மாநிலங்களவையில் பெரும்பான்மை ஆதரவு பெற்றதில்லை. அதிலும், காங்கிரஸ் பிரதமரான நரசிம்ம ராவோ மக்களவையிலேயே பெரும்பான்மை இல்லாமல்தான் ஆட்சி செய்தார். அவருக்கு மக்களவையில் 232 எம்.பி.க்களின் ஆதரவு மட்டுமே இருந்தது! 
ஆனாலும் கூட, அவர்தான் அதுவரை கடைப்பிடிக்கப்பட்ட போலித்தனமான நேருவிய- சோஷலிஸ பொருளாதாரப் பாதையிலிருந்து நாட்டை விடுவித்து, பொருளாதார வல்லரசு என்ற நிலையை நோக்கி இந்தியாவை நடை போடச் செய்தார்.
அடுத்து, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் ஆறு ஆண்டுகள் பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாயின் காலத்தில் மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 50-ஐத் தாண்டியது.
1989-க்குப் பிறகு கடந்த 28 ஆண்டுகளில் எந்தப் பிரதமரும் மாநிலங்களவையில் பெரும்பான்மை வலுவை அடையவில்லை.
இந்த யதார்த்த நிலையை முழுமையாகப் புரிந்துகொண்டால்தான், ஆளும் கட்சியின் சட்ட நிறைவேற்ற முயற்சிகள் எவ்வாறு எதிர்க்கட்சிகளால் மாநிலங்களவையில் முடக்கப்படுகின்றன என்பதையும், அதுகுறித்துப் பிரதமர் மோடி குறை கூறுவதையும் உணர முடியும்.
இந்த ஆண்டு மாநிலங்களவையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களின் பதவிக் காலம் நிறைவடைகிறது. எனவே, புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல்கள் நடைபெற உள்ளன. 
மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 245. இதில் தற்போது பாஜகவின் வலிமை 58 உறுப்பினர்கள் மட்டுமே. மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற முறையில் கணக்கிட்டால், ஆளும் தரப்பின் பலம் எண்பதை நெருங்குகிறது. நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்றபோது, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் 57 ஆக மட்டுமே இருந்தது. 
இந்த ஆண்டு நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தல்களில் பாஜகவின் பலம் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆயினும், மாநிலங்களவையில் 123 உறுப்பினர்கள் என்ற பெரும்பான்மை இலக்கை ஆளும் கூட்டணி அடைவது சிரமமே. தேர்தலில் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களால் நரேந்திர மோடி பிரதமராகத் தேர்வானவர். ஆனால், மக்களின் அபிலாஷைகளை அரசு பூர்த்தி செய்ய விடாமல் மாநிலங்களவையில் தடைக்கற்கள் போடப்படுகின்றன.
மோடி பிரதமரான 2014-லேயே இந்த இடையூறு துவங்கிவிட்டது. 2014-இல் நடந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரிலேயே அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் எதிர்க்கட்சிகளால் முடக்கப்பட்டன. நிலக்கரிச் சுரங்க சீர்திருத்த சிறப்பு மசோதா, காப்பீட்டு சட்டத் திருத்த மசோதா ஆகியவை அப்போது தடுக்கப்பட்டன.
சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க வகை செய்யும் ஓ.பி.சி. ஆணைய மசோதாவை 2017 ஏப்ரலில் மாநிலங்களவை முடக்கியது. அங்கு எதிர்க்கட்சிகள் அந்த மசோதாவில் பல திருத்தங்களைச் சேர்த்தன. எனவே திருத்தப்பட்ட ஓ.பி.சி. ஆணைய மசோதாவை மீண்டும் கீழவையில் (மக்களவையில்) அரசு நிறைவேற்ற வேண்டி வந்தது. தற்போதும் இந்த மசோதா முழுமையாக நாடாளுமன்றத்தில் நிறைவேறுமா என்பது தெளிவாகவில்லை.
அதுபோலவே, முஸ்லிம் பெண்களை முத்தலாக் விவாகரத்து என்னும் தீங்கிலிருந்து காப்பாற்ற மத்திய அரசு கொண்டுவந்த முத்தலாக் தடைச் சட்ட மசோதா மக்களவையில் 2017 டிச. 28-இல் நிறைவேறிவிட்டது. அதனை மாநிலங்களவையில் அறிமுகப்படுத்த அரசு முயன்றபோது, எதிர்க்கட்சியான காங்கிரஸ், பலவிதமான முறைகளில் எதிர்ப்பு தெரிவித்து, அதை அவையின் தேர்வுக் குழுவுக்கு அனுப்புமாறு நிர்பந்தித்தது. இந்த இரு மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் நிறைவேறாமல் தடுமாறி வருவதற்குக் காரணம், மாநிலங்களவையில் அரசுக்குப் போதிய பெரும்பான்மை இல்லை என்பதே.
நாடாளுமன்ற இரு அவைகளை நிறுவிய நமது முன்னோர் இத்தகைய நிலையை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இதுதொடர்பாக அரசியல் சாஸன சபையில் தீவிரமான விவாதம் நடந்தபோது, மேலவை அமைக்கப்படுவதற்கு சபை உறுப்பினர்கள் பலரும் பெருவாரியாக ஆதரவு தெரிவித்தனர். 
இருந்தபோதும், அரசியல் சாஸன சிற்பிகள் மக்களவையே பிரதானமானது என்று தற்செயலாகவேனும் உறுதிப்படுத்தினர். நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இரு அவைகளுக்கும் சம உரிமைகள் அளிக்கப்பட்டபோதும், மக்களவையே மேலானது என்று அவர்கள் கருதினர். அதனால்தான் நிதி மசோதாக்களை நிறைவேற்ற மாநிலங்களவையின் அனுமதி தேவையில்லை என்று அவர்கள் முடிவெடுத்தனர்.
அண்மைக்காலமாக நமது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு இடையூறாக மாநிலங்களவை மாறி வருவதைக் காணும்போது வருத்தம் ஏற்படுகிறது.
அரசியல் சாஸன சபை உறுப்பினரான என். கோபாலசுவாமி ஐயங்கார் நாடாளுமன்ற மேலவையின் முக்கியத்துவதை வலியுறுத்தியவர்களுள் முதன்மையானவர். விடுதலைப் போராட்டக் கால காங்கிரஸ் கட்சி 70 ஆண்டுகளுக்குப் பிறகு மாநிலங்களவையை தேச வளர்ச்சிக்குத் தடைக்கலாக மாற்றும் என்று அவர் நிச்சயமாக எதிர்பார்த்திருக்க மாட்டார். நாடாளுமன்றத்தில் சட்டங்களை நிறைவேற்றவோ, அரசு நிர்வாகத்துக்கோ மாநிலங்களவை ஒருபோதும் தடையாக இருக்காது என்று அவர் அப்போது நம்பிக்கையுடன் சொன்னது இன்று பொய்யாகிவிட்டது.
இதுவே தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியின் அரசுக்கும் தடைக்கல்லாக மாறிவிட்டது.

கட்டுரையாளர்: தலைவர், பிரஸார் பாரதி.

]]>
http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/feb/20/மாநிலங்களவை-என்னும்-தடைக்கல்-2866796.html
2866120 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் தேவை, மனமாற்றம் ஆர். வேல்முருகன் DIN Monday, February 19, 2018 02:38 AM +0530 மாதா, பிதா, குரு, தெய்வம் என்று பெற்றவர்களுக்கு அடுத்து ஆசிரியர்களுக்கு உயரிய மதிப்பளித்த நமது மரபு இன்று தேய்ந்து வருகிறது.
இப்போது ஒவ்வொரு குழந்தை வளரும் சூழ்நிலை வேறு வேறாக உள்ளது. தன்னை மிகவும் இழிவுபடுத்தியதால் தலைமை ஆசிரியரைக் கத்தியால் குத்தியதாக ஒரு மாணவன் வாக்குமூலம் அளித்திருக்கிறார். இது வேலூரில் அரங்கேறிய சம்பவம். மாணவர்களால் சிறு சிறு அவமானங்களையும் தாங்க முடிவதில்லை. அதிலும் மாணவியர் முன்னிலையில் அவமானப்படுத்தினால்...?!
தான் சொன்னதை மீறி ஒரு கிரிக்கெட் கிளப்புக்காக விளையாடிய மாணவனைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கத்தியால் குத்தினாராம். இது கரூரில் அண்மையில் நடந்த சம்பவம்.
இது உண்மையாக இருக்கும்பட்சத்தில், கிரிக்கெட் விளையாட்டில் மிளிர எண்ணிய ஒருவனின் கனவுக்கு முதலிலேயே ஒரு தடைக்கல் வந்துவிட்டதே என்று கவலையுறத் தோன்றுகிறது.
ஆசிரியராகப் பணியாற்றிய எஸ்.ராதாகிருஷ்ணனை குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்த தேசமிது. அவரது பிறந்த நாளை ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக
நாடு கொண்டாடுகிறது.
இயன்றவரை மாணவர்களைச் சந்தித்து நேரத்தைச் செலவிடுவேன் என்று உறுதிபூண்டு, நாடெங்கிலும் லட்சக்கணக்கான மாணவர்களைச் சந்தித்து உரையாடி, மாணவர்கள் நிறைந்த அரங்கு மேடையிலேயே உயிர் நீத்த அப்துல் கலாம் இந்த மண்ணைச் சேர்ந்தவர்தான்.
ஒரு காலத்தில் ஆசிரியர்கள் சொன்னால் அது வேத வாக்கு. இப்போதும் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பல ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு எவ்விதப் பிரதி பலனும் எதிர்பாராமல் வழிகாட்டுகின்றனர்.
மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தைத் தமிழக ஆசிரியர்களும் பெறுகின்றனர். ஆனால் தகுதியில், மலை, மடுவுக்குள்ள வித்தியாசம்.
ஆசிரியர் பணி என்பது எவ்விதப் பொறுப்பும் இல்லாத, அதிக விடுமுறை, கூடுதல் ஊதியம் தரும் பொழுதுபோக்காகப் பெரும்பாலானவர்களுக்கு மாறிவிட்டது என்பது கண்கூடு.
இப்போது பல ஆசிரியர்கள் டியூஷன் எடுப்பது முதல் வட்டி வரவு செலவு வரை பல்வேறு தொழில் செய்கின்றனர். பதிலி ஆசிரியர்களை நியமித்துவிட்டு பள்ளிக்கு வருவதில்லை. மலைப்பகுதிகளில் நியமிக்கப்பட்ட பெரும்பாலானவர்கள் பள்ளிகளுக்கே செல்வதில்லை. இன்னும் சிலர் டியூஷன் வருமானத்தை விட்டுத் தர மனமில்லாமல் பணியிட மாறுதலுக்காகப் பல லட்சங்களைச் செலவு செய்கின்றனர். "அரசுப் பள்ளியில் ஊதியம், தனியார் பள்ளியில் விசுவாசம்' காட்டுபவர்கள் பலருண்டு.
தொடக்கப்பள்ளி முதல் பல்கலைக்கழகங்கள் வரை அங்கிங்கெனாதபடி முறைகேடுகள். இதன் உச்சபட்சம் பாரதியார் பல்கலைக் கழகத் துணைவேந்தரின் கைது.
கல்வித்துறை அலுவலகங்களில் நடைபெறும் முறைகேடுகளுக்கு அளவேயில்லை. இவற்றையெல்லாம் மீறித்தான் பல நல்ல ஆசிரியர்கள் நாட்டையும் நல்லதையும் பற்றி மாணவர்களுக்குப் பாடம் நடத்த வேண்டியுள்ளது.
கற்றலின் முக்கிய அம்சமான கேள்விகளையே கேட்கக் கூடாது என்றுதான் இன்றைக்கும் பல ஆசிரியர்கள் சொல்கின்றனரே தவிர, மாணவர்களைக் கேள்வி கேட்கும்படி ஊக்கப்படுத்துவதில்லை. இது மாணவர் மனதில் எதிர்மறைத் தாக்கத்தையல்லவா ஏற்படுத்தும்?
குடிபோதையில் வகுப்பறைகளுக்கு வரும் ஆசிரியர்கள், ஆசிரியைகள் பலர் மோசமான வார்த்தைகளைப் பேசுவது, இருபால் ஆசிரியர்களும் மாணவ, மாணவியரைப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குவது என பல பிரச்னைகள் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. 
ஒரு காலத்தில் ஆசிரியர்கள் மீதிருந்த நம்பிக்கையின் காரணமாக மாணவர்களை அடிக்கவும் மிரட்டவும் பெற்றோர்கள் உரிமை கொடுத்திருந்தனர். ஆனால் இப்போது ஆசிரியர்களின் மீதான நம்பிக்கை அனைவருக்குமே போய்விட்டது. நம்புங்கள் - இவர்களின் கையில்தான் வருங்கால இந்தியாவை உருவாக்கும் வல்லமை படைத்த சிற்பிகளின் எதிர்காலத்தை ஒப்படைத்திருக்கிறோம்.
இப்போதும் மாணவர்களுக்கு முன்மாதிரியாகச் செயல்படும் ஆசிரியர்கள் ஒவ்வொரு பள்ளிகளில் உள்ளனர். ஆனால் அவர்கள் மெழுகுவர்த்தி போலத் தங்களை உருக்கிக் கொண்டு வெளியில் தெரியாதவாறு உள்ளனர். 
ஆசிரியர் தொழிலுக்கு இருக்கும் மிகப் பெரிய மரியாதை உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் ஒரு மாணவர் இருப்பார் என்பதுதான். அத்தகைய பெருமை, புனிதம் மிக்க ஆசிரியர் பணியென்பது சிலரால் கேவலப்பட்டுப் போக யாரும் அனுமதிக்கக் கூடாது. எதற்கெடுத்தாலும் அடுத்தவர்களுடன் ஒப்பிடும் போக்கை ஆசிரியர்கள் கைவிட வேண்டும். இதில் அவர்களுக்குத் தேவை மனமாற்றம். இல்லாவிட்டால் மாணவர்களின் மனதில் நஞ்சை விதைத்த பெருமை ஆசிரியர்களுக்கே.
ஆசிரியர்களின் அடிப்படைத் தகுதிகளை உயர்த்தி தொழில் நுட்ப ரீதியாகவும் அவர்களைத் தயார்படுத்த வேண்டும். அப்போதுதான் அவர்களால் நாளைய தலைமுறையைச் சிறப்பாக உருவாக்க முடியும். இதற்கு அவர்களுக்குத் தேவை மனமாற்றமே. களிமண்ணைப் போல இருக்கும் மாணவ, மாணவியரைப் பார்போற்றும் வகையில் சிறந்த மண்பாண்டங்களாக உருவாக்குவதும் வீணாக்குவதும் ஆசிரியர்களிடம்தான் உள்ளது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை.
வேறு எந்தத் துறை மோசமானாலும் அதைச் சரி செய்து விட முடியும். ஆனால் கல்வித்துறை மோசமாகப் போனால் சீர் செய்வது கடினம். அதற்கு முன்பாக அரசு விழித்துக் கொண்டு ஆசிரியர் பணியை நெறிப்படுத்துவது அவசரமான அவசியம்! இதற்கு ஆசிரியர் இயக்கங்களின் ஒத்துழைப்பும் மிக முக்கியம்.

]]>
http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/feb/19/தேவை-மனமாற்றம்-2866120.html
2866119 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் யானைகள் மோதிக் கொள்ளும்போது... ஆர்.எஸ். நாராயணன் DIN Monday, February 19, 2018 02:37 AM +0530 உலக நாடுகள் ஒருங்கிணைந்து பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின் எல்லா உறுப்பு நாடுகளும் பயன் பெற்று உலக வர்த்தகம் உயர வேண்டும் என்று உலக வர்த்தக அமைப்பு உருவானது. தடையில்லா வர்த்தகமே அதன் குறிக்கோள். இந்தியாவில் உலக வர்த்தகம் பற்றிய ஞானக் குறைவுள்ள சில இடதுசாரிகளுக்கு ஒவ்வாமை உள்ளது இயல்பு. கார்ப்பரேட் ஆதிக்கம், உலக ஏகபோக முதலாளித்துவ சுரண்டல் என்றெல்லாம் தூற்றுவார்கள். ஆனால், உலக ஏகபோக முதலாளித்துவப் பொருளாதாரத்தின் தலைவரான அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் இன்று உலக வர்த்தக அமைப்பின் தடையில்லா சர்வதேச வர்த்தகக் கொள்கையைத் தூற்றுவது ஏன்? இரண்டு யானைகள் மோதிக் கொண்டால் புல்லுக்கு ஆபத்து என்பதுபோல், சர்வதேச வர்த்தகத்தால் பலன் பெற்று வரும் பல வளர்முக நாடுகள் கவலைப்படும் நிலைக்குத் தள்ளப்படுவதற்கு அண்மையில் நிகழ்ந்த ஒரு சம்பவம் காரணமாகியுள்ளது. 
அமெரிக்க யானையுடன் சண்டை போடும் மற்றொரு யானை சீனாதான். உலக வர்த்தக அமைப்பு தோன்றிய வரலாற்றை கவனித்துவிட்டு இன்றைய நிலையை சீர்தூக்கிப் பார்ப்போம். 
இரண்டாவது உலகப்போர் முடிந்ததும் ஐரோப்பிய-அமெரிக்க நாடுகளில் பொருளாதார வளர்ச்சி குன்றியிருந்தது. உலக வர்த்தகம் சுருங்கியிருந்தது. ஒவ்வொரு நாடும் தத்தம் வர்த்தக நலன் கருதி இறக்குமதிப் பொருட்களுக்கு எக்கச்சக்கமாக வரி விதித்தன. ஆரம்பத்தில் அதிகபட்சமாக முதலாளித்துவ மேற்கு நாடுகள் மட்டும் தத்தம் அந்நிய வர்த்தகத்தை உயர்த்த ஒரு பொதுவான உடன்பாட்டை ஜெனீவா நகரில் 1948-இல் செய்து கொண்டன. அதுவே "காட்' ஒப்பந்தம். எங்ய்ங்ழ்ஹப் அஞ்ழ்ங்ங்ம்ங்ய்ற் ர்ய் பஹழ்ண்ச்ச்ள் & பழ்ஹக்ங் - எஅபப - அதாவது, வரி விதிப்பு மற்றும் வர்த்தகம் குறித்த சர்வதேச பொது உடன்படிக்கை. 
அப்போது "காட்' உறுப்பு நாடுகள் 23 மட்டுமே. அந்த 23 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. காட் ஒப்பந்தத்தின் மூலம் 1949-லிருந்து உலக வர்த்தக அமைப்பாக காட் மாறும் முன் 1994 வரையில் இறக்குமதிகளுக்குரிய சுங்கத் தீர்வை 50 சதவீதத்திலிருந்து 5 சதவீதமானது. 
இருப்பினும் கூட உலக வர்த்தகம் உய்வு பெறவில்லை. காரணம் சோஷலிச மாயை. 1980-இல் சோவியத் யூனியன் நாடுகள் சிதறுண்டன. ரஷியா தனி நாடானது. சீனாவிலும் கம்யூனிசம் இருப்பினும் அந்நிய முதலீடுகளுக்கு ஆதரவு தோன்றியது. வளர்ச்சிப் பாதைக்கு சோஷலிசத்தை ஏற்றுக் கொண்டு பொதுத் துறையை வளர்த்த வளர்முக நாடுகளில் தேக்கம் உருவானது. பொதுத் துறைகள் நஷ்டமடைந்தன. வளர்ந்த முதலாளித்துவ நாடுகளிலும் முதலீட்டுத் தேக்கம் ஏற்பட்ட சூழ்நிலையில்தான் "காட்' ஒப்பந்தம் நிலைத்தன்மையுள்ள உலக வர்த்தக அமைப்பாக உருவாகி, "ஒரே உலகம்' என்ற கொள்கையுடன் உலகமயமாக்கலுக்கு (குளோபலைúஸஷன்) வழிவிடும் நோக்கத்தில் டங்க்கெல் அறிக்கை எற்கப்பட்டது.
காட் ஒப்பந்த தலைமை இயக்குநராயிருந்த ஆர்தர் டங்க்கெல் என்ற பொருளாதார மேதைதடையில்லா வர்த்தகக் கொள்கை அடிப்படையில் பல்வேறு விதிமுறைகளுடன் தயாரித்த அறிக்கை 164 உறுப்பு நாடுகளாலும் ஏற்கப்பட்ட பின்பு இந்த உலக வர்த்தக அமைப்பு உருவானது. இவ்வாறு உலக வர்த்தக அமைப்பு உருவானதும் இறக்குமதி வரி முற்றிலும் நீக்கப்பட்டது. ஆனால் இன்று காட் ஒப்பந்தம் உருவாக்கிய பழைய இருமுக வர்த்தக உறவு மீட்சியுற்றுப் பன்முக வர்த்தக உறவு முறிந்துவிடும் அபாயம் தோன்றிவிட்டது.
பதினோராவது அமைச்சர்கள் மாநாடு ஆர்ஜென்டீனா தலைநகரமான புவனஸ் ஏரிஸில், 2017 டிசம்பர் 10,11,12,13 தேதிகளில் நடைபெற்றது. சர்வதேச வர்த்தகம் குறித்து விவாதித்தனர். வர்த்தக சுதந்திரம் என்ற அடிப்படை விதியைத் தாக்கிப் பேசிய அமெரிக்க பிரதிநிதி ராபர்ட் லைட்ஹைசர், உலக வர்த்தக வளர்ச்சியில் உலக வர்த்தக அமைப்பு போதிய கவனம் செலுத்தவில்லை என்று மேலோட்டமாகப் பேசிவிட்டு மாநாடு முடிவதற்கு ஒரு நாள் முன்பாகவே நழுவிவிட்டார்.
உலகில் சோஷலிச தத்துவம் தடம் மாறிய கதையை நாம் அறிவோம். படிப்படியாக ரஷியா, சீனா, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் காட் உறுப்பு நாடுகளாயின. உலக வர்த்தகத்தில் மீண்டும் ஒரு தொய்வு ஏற்பட்டது. முதலாளித்துவ கருத்துக் கோவையில் ஒரு புதிய சொல் அரங்கேறியது. அதுவே உலக மயமாதால்.
ஒரு நாட்டின் இறையாண்மைக்குக் கட்டுபட்டு, அந்த நாட்டில் அந்நிய முதலீடுகளுக்கு வரவேற்பு அளித்து, லாபத்தில் பங்கு பெறுவது என்று உலகமயமாதலை வளரும் நாடுகள் வரவேற்றன. இக்கருத்துக்கு ஆக்கமூட்டி உருவானதுதான் டங்க்கெல் திட்டமும், உலக வர்த்தக நிறுவன உருவாக்கமும். உலக வர்த்தக நிறுவனம் உருவாகி 24 ஆண்டுகள் கடந்துவிட்ட சூழ்நிலையில் இன்று அமெரிக்க அதிபர், "பழைய குருடி தகவைத் திறடி' என்று பேசுவது ஏன்?
அன்று டங்க்கெல் திட்டத்தை ஆதரித்த அமெரிக்கா, பன்னாட்டு வர்த்தக உறவை போற்றி வளர்த்ததை மறந்துவிட்டு இன்று பழையபடி இருநாடுகளிடையே ஒப்பந்தம் வர வேண்டும் என்று பேசுவதுதான் விந்தையிலும் விந்தை. காரணம் சீனாதான்.
ஒரு கம்யூனிச நாடாயிருந்து கொண்டு சோஷலிசம் பேசி கட்டுப்பாடாயிருந்த சீனா, உலகமயமாதலை ஏற்றுக்கொண்டு வர்த்தக சுதந்திரத்துக்காக வாள் வீசுவதைப் பார்த்து அமெரிக்கா அரண்டு போய்விட்டது. இந்த யானைப் போர் தனியார் முதலாளித்துவத்திற்கும் அரசு முதலாளித்துவத்திற்கும் இடையே நிகழ்வதாகவும் இடதுசாரிகள் பேசும் வாய்ப்பு உண்டு.
ஒபாமா அமெரிக்க அதிபராயிருந்த காலத்தில் அமெரிக்க - சீன உறவு அரசல் புரசலாயிருந்தது. இன்று ட்ரம்ப் பதவி ஏற்றதும் வெடித்துவிட்டது. அமெரிக்க அங்காடியை சீனா கைப்பற்றிவிட்ட காரணத்தால், ஆனானப்பட்ட அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை 2016-இல் 347 பில்லியன் டாலர் என்ற நிலை மேலும் உயர்ந்து 400 பில்லியன் டாலர் என்ற அளவுக்கு அமெரிக்கா வர்த்தகப் பற்றாக்குறையில் அல்லாடுகிறது! 
சீனாவில் வழங்கப்படும் மானியங்களை உலக வர்த்தக நிறுவனம் ஏன் தடுத்த நிறுத்த முயற்சிக்கவில்லை, என்று கூப்பாடு போடுகிறது! தவிரவும், உலக வர்த்தக நிறுவனம் விதித்துள்ள பல விதிமுறைகளை உறுப்பு நாடுகள் மீறிவிட்டதாகவும் இனியும் பன்னாட்டு வர்த்தக உறவு அர்த்தமற்றது என்று அழுது புரளுகிறது! "அமெரிக்கா, அமெரிக்கர்களுக்கே' என்று அந்நாடு ஓலமிடுவதில் வியப்பில்லை. பருத்தி விஷயத்தில் உலக வர்த்தக நிறுவனத்தின் நீதித்துறை கொடுத்த அடியின் வலி அப்படிப்பட்டது.
உலக வர்த்தக விதிகளை மீறுவதில் அமெரிக்காவுக்கு முதலிடம். அனைத்துலக சந்தையைப் பிடிப்பதற்கு ஏற்றுமதி மானியம் வழங்கி அமெரிக்க பருத்திக்கு விலைக்குறைப்பு நிகழ்ந்தபோது, பருத்தி ஏற்றுமதியை நம்பி வாழ்ந்த நான்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதாரம் பாதிப்புற்றது. 2005-இல் அமெரிக்காவின் பருத்தி மானியத்தை எதிர்த்து உலக வர்த்தக நீதிமன்றம் பருத்தி மானியத்தை நிறத்தும்படி அமெரிக்காவுக்கு உத்தரவு போட்டது. இந்தப் பிரச்னையை அமெரிக்கா வேறு விதமாக சமாளித்தது. பிரேசிலுக்கு 300 மில்லியன் டாலர் ரொக்கமாக வழங்கி, மேலும், ஆண்டுக்கு 147 மில்லியன் டாலர் தருவதாக ஆசைகாட்டி பிரேசிலை அடக்கிவிட்டுப் பருத்தி மானியத்தைத் தொடர்ந்தது. பாவம், பருத்தி விளையும் ஆப்பிரிக்கா நாடுகள் நீதிமன்றம் செல்லக் கூடப் பணம் இல்லாமல் அமைதி காத்தன. இந்தியாவில் பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட வரலாற்றில் குற்றம் "பிடி' பருத்தியினுடையது மட்டுமல்ல - அனைத்துலகச் சந்தையில் விலைக்குறைப்பு செய்த அமெரிக்காவின் நரித்தந்திரமும் ஒரு காரணம். இவ்வளவு ஓட்டை உடைசலை வைத்துக்கொண்டு, "நீ என்ன ஒழுங்கு?' என்று சீன யானை அமெரிக்க யானையை வினவி மோதுகிறது!
உலக வர்த்தக நிறுவனத்தில் சீனா இணைந்து 15 ஆண்டுகள் கடந்தும் கூட, அந்நாட்டுக்கு அங்காடிப் பொருளியல் தகுதியே வழங்கப்படவில்லை. அங்காடிப் பொருளியல் தகுதி என்றால் விலை உரிமை. அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுக்கும் உள்ள விலை உரிமை சீனாவுக்கு மறுக்கப்படுவதால், அமெரிக்கா கேட்கும் அதே கேள்வியைத்தான் சீனாவும் கேட்கிறது - உலக வர்த்தக நிறுவனம் மதிக்க வேண்டிய சுதந்திர வணிகம் போற்றப்படாமல், நெறிமுறைகள் மீறப்படுவது ஏன்? 
கடந்த டிசம்பர் கூடிய உலக வர்த்தக நிறுவன அமைச்சர்கள் மாநாடு மோதலில் முடிந்த பின்னர் எழுந்த பேச்சு, "ஆட்டம் குளோஸ்'. "கொடுத்தவனே பறித்துக் கொண்டாண்டி' என்பது போல் தனக்குத் தானே அமெரிக்கா சூடு போட்டுக் கொண்ட காட்சி சுவாரசியமாயிருந்தது! இந்தியாவின் சார்பாகக் கலந்து கொண்ட நம் வர்த்தக அமைச்சர் சுரேஷ் பிரபு மகிழ்ச்சியுடன் திரும்பினார். உணவு மானியக் குறைப்பு, ஓவராக உணவு இருப்பு வைத்தல் எல்லாம் விதியை மீறும் செயல் என்று இந்தியாவை வழக்கமாக எதிர்க்கும் அமெரிக்காவின் கவனம் எல்லாம் இம்முறை சீனா மீது திரும்பிவிட்டதால், வழக்கமான இந்திய நியாயத்தை முன்வைக்காமல், இந்த மட்டிலும் ஆளைவிட்டால் சரி என்று யானைகளின் சண்டைக்கிடையில் இந்தியப் பூனை நைசாக நழுவிவிட்டது!

]]>
http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/feb/19/யானைகள்-மோதிக்-கொள்ளும்போது-2866119.html
2864861 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் வழிகாட்டியாகட்டும் வாசிப்புப் பழக்கம் வி. குமாரமுருகன் DIN Saturday, February 17, 2018 02:24 AM +0530 தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் சமூக ஆர்வலர்கள் மற்றும் பதிப்பகத்தினர் புத்தக கண்காட்சிகளை பெரும் பொருள் செலவில் நடத்தி வருகின்றனர். இதற்கு தற்போது கிடைத்து வரும் வரவேற்பைப் பார்த்தால் வாசிப்பை நேசிப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்ற மகிழ்ச்சி மேலோங்குகிறது.
இளைய தலைமுறையினருக்கு நாம் சொல்ல வேண்டியது இதைத்தான் } பாட நூல் கழகங்கள், பல்கலைக் கழகங்கள் வழங்கும் புத்தகங்கள் அந்தந்த படிப்பு குறித்த அறிவை மட்டுமே தரும். நம் தவறுகளைக் களைந்து, திறன்களை மேம்படுத்த வேண்டுமானால் அதற்கு பாடப் புத்தகத்தை தாண்டிய அறிவு அவசியம்.
அத்தகைய பல்திறன் சார்ந்த அறிவினை வழங்குபவைகள்தான் நூல்கள். வாழ்க்கைக்குத் தேவையான அறிவையும், உயர்நிலையில் இருப்பவர்கள் அந்த நிலையை அடைவதற்கு என்ன செய்தார்கள் என்பதையும், பின்னடைவைச் சந்தித்தவர்கள் எவ்வாறு மேலெழுந்தார்கள் என்பதையும் அறிந்து கொள்வது மிக அவசியம் என்ற உணர்வை சிறுவர்களுக்குப் புகட்ட வேண்டும். இன்றைய சமூகம் உள்ள இருப்பில், புத்தகங்களே சிறந்த வழிகாட்டிகளையும் முன்மாதிரிகளையும் நமக்கு அடையாளம் காட்டித் தருபவையாக உள்ளன. 
நாளிதழ்கள் வெளியிடும் தலையங்கங்கள், கட்டுரைகள், பதிப்பகத்தார் வெளியிடும் நூல்கள், சமூகம் குறித்தும், பொருளாதாரம் குறித்தும், அரசியல் குறித்தும் ஏராளமான தகவல்களுடன் வெளிவரும் பருவ இதழ்கள் என அனைத்தையும் வாசிக்கும் பழக்கம் இருப்பவர்களால் மட்டுமே அனைத்து வகை தேர்வுகளையும் எதிர்கொள்ள முடியும் என்பதுடன் உயர் பதவியையும் எட்ட முடியும் என்பது, மிக உயர்ந்த பதவியில் இருக்கும் அல்லது உயர்ந்த நிலையில் இருக்கும் பலரும் தெரிவிக்கும் கருத்தாக உள்ளது. 
இப்படி வாசிப்புடன் ஒன்றியிருந்த நம்மை வாசிப்புக்கு அந்நியமாக்கி, ஏன், வாசிப்பை அடியோடு நிறுத்தச் செய்த பெருமை முதலில் தொலைக்காட்சிகளைத்தான் சேரும். அதன் பின்னர் வந்த சமூக ஊடகங்கள் இன்றைய இளைஞர்களை ஒட்டுமொத்தமாகப் பல விஷயங்களில் புரட்டிப் போட்டு விட்டன என்றே சொல்லலாம். அப்படி புரட்டிப் போடப்பட்ட விஷயங்களில் மிக முக்கியமானது வாசிப்புப் பழக்கம்தான்.
முன்பெல்லாம் முழு நீள நாவலை ஒரே மூச்சில் படித்தவர்கள் பல பேர். நாளிதழ்களை வரி விடாமல் வாசிப்பவர்கள் பலர். ஆனால், அவை ஒவ்வொன்றாகக் குறைந்து, நாவல் என்பது குறுநாவலாகி பின் தொடர்கதையாகி, தொடர்ந்து சில பக்க அளவிலான கதையாக குறைந்து, பின் சிறுகதையாக வடிவெடுத்து, அதன் பின் ஒரு பக்கக் கதையாக சுருங்கி, இப்போது மைக்ரோ கதையாக சிறுத்து, சிதைந்து கிடக்கிறது.
அப்படிச் சுருங்க கொடுத்தாலும் கூட படிப்பதற்கு ஆளில்லை என்ற நிலையை இன்றைய சமூக ஊடகங்கள் உருவாக்கி விட்டன. முகநூல், கட்செவி அஞ்சல், யூ}டியூப் என உலகத்தைச் சுருங்க செய்து விட்ட சமூக ஊடகங்களால் வாசிப்பு என்பது வசப்படாமலேயே போய்விட்டது என்று அங்கலாய்த்தால் அது முற்றிலும் தவறு என்று தள்ளிவிட முடியாது. போதாக் குறைக்கு விரல் சொடுக்கில் கூகுள் கொடுக்கின்ற விஷயங்களாலும், பாட விஷயத்தைத் தவிர பிறவற்றுக்குப் புத்தகத்தை நாடிப் பக்கங்களைப் புரட்ட வேண்டிய தேவையே இல்லையென்று இளைஞர்களுக்குத் தோன்றிவிட்டதோ என்று அஞ்ச வேண்டியுள்ளது.
வாசிப்பும், புதிய தேடலும் குறையக் குறைய, இளைய தலைமுறை ஒருவித சோம்பேறித்தனத்துக்கு அடியாகிவிடுகிறது. இதனால், சமூக ஊடகங்களுக்கு மனது அடிமையாக மாறி வருகிறது. எதிர்கால தலைமுறை யாருக்கும் அடிமையாகாமல் உயர, வாசிப்புப் பழக்கத்தை நமது பிள்ளைகளுக்கு முறையாக கற்றுத் தர வேண்டும். அறிவை வளர்க்கும் அடிப்படை விஷயம் வாசிப்பு மட்டும்தான் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
ஒருவகையில், தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நடைபெறும் புத்தகக் கண்காட்சிகளுக்கு கிடைத்து வரும் வரவேற்பு ஊக்கமும் ஆறுதலும் அளிக்கிறது. வாசிப்புப் பழக்கத்தை இன்றைய மாணவர்கள் மத்தியில் கொண்டு வர பதிப்பகங்களும், எழுத்தாளர்களும் பெரும் முயற்சி எடுத்து வருவது மன நிறைவைத் தந்த போதிலும், பள்ளிகளில் இருக்கும் நூலகங்கள், புத்தகங்கள் தூங்கும் அறையாக மட்டுமே இன்றும் இருந்து வருவது வேதனை. மாணவர்கள் இடைவேளை நேரங்களைப் பயனுள்ளதாகக் கழிக்க கதைகளை வாசிக்க, புத்தகங்களை படிக்க அந்த நூலகங்களை செயல்படுத்த வேண்டும். அதற்குப் பள்ளிகள்தோறும் ஆயிரக்கணக்கான புத்தகங்களை வழங்கினால் மட்டும் போதாது. அதை நிர்வகிக்க நூலகரையும் நியமிக்க வேண்டும். 
இன்றோ பள்ளிகள் பலவற்றில் மதிப்பு மிக்க, கிடைப்பதற்கரிய நூல்கள் பல பாதுகாக்கப்படாமல் சேதமுற்று கிடக்கின்றன. பொது நூலகங்களில் பல நூலகங்கள் தனியார் கட்டடத்தில் எந்தவிதப் பராமரிப்பும் இன்றி செயல்பட்டு வருகின்றன. அவை ஊருக்கு ஒதுக்குப்புறமாகவோ அல்லது கிடைக்கும் இடத்திலோ பெயரளவில் செயல்பட்டு வருகின்றன. 
அவற்றை எல்லாம் மக்கள் பயன் பெறும் வகையில் நகரப்பகுதிக்குள் சொந்தக் கட்டடத்தில் செயல்படச் செய்தால் நூலகங்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கும். ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தங்களின் தொகுதி வளர்ச்சி நிதியின் மூலம் நூலகக் கட்டடம் கட்டுவதற்கும், புத்தகங்கள் வாங்குவதற்கும் முன்னுரிமை கொடுக்கும் வகையில் நிதி செலவீட்டை அறிவித்தால் நூலகங்களின் தரம் உயர்த்தப்பட்டுவிடும். 
அதைவிட நாம் ஒவ்வொருவரும் செய்ய இயல்வது ஒன்றுண்டு. திருமணம், பிறந்த நாள், அதிலும் குறிப்பாக சிறுவர்களின் பிறந்த நாள் போன்ற நிகழ்ச்சிகளில் வேறு எந்த பரிசுப் பொருளையும்விட, நல்ல நூல்களைப் பரிசாக கொடுப்போம். அப்படிச் செய்தால் வாசிப்பு நம் வசப்படும்.

]]>
http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/feb/17/வழிகாட்டியாகட்டும்-வாசிப்புப்-பழக்கம்-2864861.html
2864860 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் ஆய்வோம் தமிழை இந்த நாட்டிலே! நெல்லை சு. முத்து DIN Saturday, February 17, 2018 02:23 AM +0530 கண் நுதல் பெருங்கடவுளும் கழகமோடு அமர்ந்து பண்ணுறத் தெளிந்து ஆய்ந்த பைந்தமிழ்' என்றபடி, சிவபெருமான் ஆராய்ந்த தமிழின் ஓசை உலகெங்கும் பரவட்டும். அந்த மூல மந்திரத்தின் கர்ப்பகிரகம் தமிழகமாக இருந்தால்தானே சிறப்பு!
தமிழன் என்ற சொல் வெறும் இன அடையாளச் சீட்டு அல்ல. தமிழகத்தில் இருந்தபடி தொட்டதற்கு எல்லாம் "நான் தமிழன்' என்று யாரேனும் சொன்னால் அதன் நம்பகத்தன்மை குறையும். சந்தையில் "இங்கு நல்ல மீன் கிடைக்கும்' என்றால், மற்றவர்கள் நொள்ளை மீனையா விற்கிறார்கள் என்கிற பகுத்தறிவு முளைப்பது இயல்புதானே?
ஆனாலும், உலகில் வருங்காலத் தமிழர்களை வாழிடம் அன்றி, பயன்நிலை தளத்தில் நால் வகையாகக் காணலாம். தமிழில் பேச, வாசிக்க, எழுதத் தெரிந்து புரிதலுடனும் பண்பாட்டுடனும் வாழ்பவன் முழுத் தமிழன்'. தமிழ் எழுத வராது என்றால் "முக்கால் தமிழன்'. எழுதவோ வாசிக்கவோ தெரியாது என்ற நிலை} "அரைத்தமிழன்'. அதில் பேசவும் வராது என்பவன் "கால் தமிழன்'. தமிழ்ப் பண்பாடே புரியாதவன் தமிழனே அல்ல.
இளமையிலேயே தமிழில் கற்றுக்கொள்ள என்னவெல்லாம் தொழில்நுட்ப அறிவுச் சமாசாரங்கள் இருக்கின்றன. ஆராய்ச்சி செய்வதற்கு முழுத் தமிழர்களால் மட்டுமே முடியும். கால்டுவெல் வகுத்த "திராவிடம்' போன்ற கருத்தாக்கத்தில் தமிழ்மொழி மீதான வரலாற்றுப் பார்வைக் குறைபாடு உண்டு என்று கருதத் தோன்றுகிறது. தமிழர்தம் பண்பாட்டுப் புரிதல் இன்றித் தவறான கருத்துகளையும் ஆங்கிலேயர்கள் முன்வைத்து உள்ளனர்.
ஏற்கெனவே தமிழ் வெறும் பாடமாக சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளில் கற்றுத் தரப்படுகிறதாம். அமெரிக்காவில் கலிஃபோர்னியா (பெர்க்ளி) பல்கலைக்கழகம், பென்சில்வேனியா பல்கலைக்கழகம், ஆஸ்டினில் டெக்சாஸ் பல்கலைக்கழகம், சிகாகோ பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் தமிழ் பயிற்றுவிக்கப்படுகிறது. ஆனாலும் ஹார்வர்டு பல்கலையில் இருக்கைக்கு மட்டும் ஏன் இத்தனை ஒளிச் சிறகுகள்?
"உங்கள் கைப் பணத்தை எங்களுக்கு அனுப்புங்கள். நாங்கள் ஆராய்ந்து உங்கள் மொழிவளத்தை அறிவிக்கிறோம்' என்கிறார்களா? அமெரிக்காவின் பழைமையான பல்கலைக் கழகம் என்ற "பேனர்' இருந்தால் போதுமாம். தமிழ் வளருமாம்.
உலக அழகியே ஆனாலும் வாடகைத்தாய் பெற்றுத் தருவதற்குத் தமிழ் என்ன சோதனைக் குழாய்க் குழந்தையா? ஆய்வுகள் ஆர்டருக்குச் செய்வதற்க