Dinamani - கல்வி - http://www.dinamani.com/education/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2938427 கல்வி 1 லட்சம் குழந்தைத் தொழிலாளர்களுக்கு கல்வி: அமைச்சர் நிலோபர் கபில் DIN DIN Wednesday, June 13, 2018 04:20 AM +0530 தமிழகத்தில் இதுவரை மீட்கப்பட்ட 1 லட்சம் குழந்தைத் தொழிலாளர்களுக்கு கல்வி அளிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்தார்.
உலக குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி, தொழிலாளர் நலத் துறை சார்பில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு நாள் விழிப்புணர்வுக் கூட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில், தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபில் பேசும்போது, தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் மூலம், தமிழகத்தில் 1,08,604 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு கல்வி அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நாமக்கல் மாவட்டத்தில் நெசவுத் தொழிலிலிருந்து மீட்கப்பட்ட மாணவர் ராமலிங்கமும், தருமபுரி மாவட்டத்தில் கட்டடத் தொழிலிலிருந்து மீட்கப்பட்ட மாணவர் மூர்த்தியும் தற்போது மருத்துவம் படித்து வருகின்றனர். குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன' என்றார்.
தமிழகம் முன்னோடி: இதைத்தொடர்ந்து, மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசும்போது, குழந்தைகளின் கல்வியைக் கருத்தில் கொண்டு, பள்ளிக் கல்வித் துறைக்காக இந்த ஆண்டு ரூ. 26 ஆயிரம் கோடியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. பத்தாம் வகுப்புக்குப் பிறகு மாணவர்களின் கல்வி இடைநின்றலைத் தவிர்க்கும் வகையில், அவர்களின் பெயரில் வங்கியில் வைப்பு நிதி செலுத்தும் திட்டமும் நடைமுறையில் உள்ளது. இதுபோன்ற திட்டங்களால் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாகத் திகழ்கிறது' என்றார் அவர்.
இதைத்தொடர்ந்து, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற குழந்தைத் தொழிலாளியாக மீட்கப்பட்டவர்கள், கல்வி பயிற்றுநர்கள், குழந்தைத் தொழிலாளர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்ட களப் பணியாளர்கள் ஆகியோருக்குப் பரிசுத் தொகைகள் வழங்கப்பட்டன.
குறும்படம் வெளியீடு: இதைத் தொடர்ந்து, நாங்களும் பள்ளிக்கூடம் போகனும்' என்ற 3 நிமிட குறும்படம் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஊரகத் தொழில்துறை அமைச்சர் பி.பென்ஜமின், தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலர் மங்கத்ராம் சர்மா, தொழிலாளர் நலத் துறை ஆணையர் இரா.நந்தகுமார், பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் மகேஸ்வரி ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/13/w600X390/jayakumar.jpg சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு கூட்டத்தில், கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையை பயனாளிக்கு வழங்கிய மீன்வளத் துறை அமைச்சர் http://www.dinamani.com/education/2018/jun/13/1-லட்சம்-குழந்தைத்-தொழிலாளர்களுக்கு-கல்வி-அமைச்சர்-நிலோபர்-கபில்-2938427.html
2938426 கல்வி 10-ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வு தேதி அறிவிப்பு DIN DIN Wednesday, June 13, 2018 04:19 AM +0530 அடுத்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 1-ஆம் தேதி தொடங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் 19-ஆம் தேதி வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார். 
இதே போன்று 10-ஆம் வகுப்பு, பிளஸ் 1 வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணையையும் அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.
அமைச்சர் செங்கோட்டையன் மேலும் கூறியதாவது: மொழிப் பாடத் தேர்வுகள் ஒரே தேர்வாக மாற்றப்பட்டுள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு தலா 6 தேர்வுகள் மட்டும் நடைபெறும்.

]]>
http://www.dinamani.com/education/2018/jun/13/10-ஆம்-வகுப்பு-பிளஸ்-1-பிளஸ்-2-பொதுத்-தேர்வு-தேதி-அறிவிப்பு-2938426.html
2938393 கல்வி ரமலான் பண்டிகை: சென்னைப் பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு DIN DIN Wednesday, June 13, 2018 02:05 AM +0530 ரமலான் பண்டிகை காரணமாக, சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனம் சார்பில் சனிக்கிழமை (ஜூன் 16) நடத்தப்பட இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
ரமலான் பண்டிகை வரும் 16 -ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அன்றைய தினம் நடத்தப்பட இருந்த தொலைநிலைக் கல்வி நிறுவன இளநிலை, முதுநிலை மற்றும் தொழில் படிப்புகளுக்கான தேர்வுகள் ஜூலை 29 -ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகின்றன. மற்ற தேர்வுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் திட்டமிட்டபடி நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

]]>
http://www.dinamani.com/education/2018/jun/13/ரமலான்-பண்டிகை-சென்னைப்-பல்கலை-தேர்வு-ஒத்திவைப்பு-2938393.html
2938392 கல்வி எம்.பி.பி.எஸ்.: ஜூலை 1-ஆம் தேதி முதல் கட்ட கலந்தாய்வு: இதுவரை 26,628 விண்ணப்பங்கள் விற்பனை DIN DIN Wednesday, June 13, 2018 02:05 AM +0530 தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 1 முதல் 5-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர இதுவரை 26,628 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. எம்.பி.பி.எஸ். மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் 23 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியிலும் ஜூன் 11-ஆம் தேதி தொடங்கியது.
இது தவிர www.tnhealth.org , www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் இருந்தும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2-ஆம் நாள் விற்பனை: அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 8167, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு இடங்களுக்கு 863 என மொத்தம் 9,030 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இரண்டு நாள்களிலும் சேர்த்து மொத்தம் 26,628 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
முதல் கட்ட கலந்தாய்வு: விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு அனுப்ப ஜூன் 18-ஆம் தேதி கடைசியாகும். தரவரிசைப் பட்டியல் ஜூன் 28-ஆம் தேதி வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 1 முதல் 5 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/education/2018/jun/13/எம்பிபிஎஸ்-ஜூலை-1-ஆம்-தேதி-முதல்-கட்ட-கலந்தாய்வு-இதுவரை-26628-விண்ணப்பங்கள்-விற்பனை-2938392.html
2938391 கல்வி பி.இ. சேர்க்கை: சான்றிதழ் சரிபார்ப்பு நாளையுடன் முடிகிறது DIN DIN Wednesday, June 13, 2018 02:04 AM +0530 பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு வியாழக்கிழமையுடன் (ஜூன் 14) நிறைவடைய உள்ளது. சென்னை மையத்தில் மட்டும் ஜூன் 17 ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.
அண்ணா பல்கலைக்கழகம் ஜூலை 6-ஆம் தேதி முதல் பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வைத் தொடங்க உள்ளது. இதற்கான ஆன்-லைன் விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 2-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், விண்ணப்பித்தவர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 42 உதவி மையங்களிலும் கடந்த ஜூன் 8-ஆம் தேதி தொடங்கியது. இந்தச் சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை மையத்தைத் தவிர மற்ற அனைத்து உதவி மையங்களிலும் வியாழக்கிழமையுடன் நிறைவடைய உள்ளது.
எப்போது வேண்டுமானாலும்...: கடைசி நேர நெரிசலைக் குறைப்பதற்காக, சான்றிதழ் சரிபார்ப்புக்கு சம்பந்தப்பட்ட உதவி மையத்தில் எப்போது வேண்டுமானாலும் மாணவர்கள் வந்து சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கெனவே அறிவித்துள்ளது.
அவ்வாறு மாணவர்கள் வரமுடியவில்லை எனில், புகைப்படத்துடன் கூடிய அத்தாட்சிக் கடிதத்தையும், அனைத்து அசல் சான்றிதழ்களையும் தங்களுடைய பெற்றோரிடம் கொடுத்து சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுப்பலாம். 
இல்லையெனில், கடைசி நாளான வியாழக்கிழமை மதியம் 1 மணிக்கு ஊட்டி மையத்தைத் தவிர பிற மையங்களில் ஏதாவது ஒரு மையத்தில் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம்.
இந்த இரண்டாவது வாய்ப்பையும் தவறவிடும் மாணவர்கள், சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் உதவி மையத்தில் ஜூன் 17-ஆம் தேதி பிற்பகல் 1 மணியளவில் சான்றிதழ் சரிபார்ப்புக்காகப் பங்கேற்கலாம் எனவும் பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிய தொலைபேசி எண்கள்: மேலும் சந்தேகங்களுக்கு 044 - 22359901, 22359920 ஆகிய தொலைபேசி எண்களில், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைச் செயலர் அலுவலகத்தைத் தொடர்புகொள்ளலாம் எனவும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
 

]]>
http://www.dinamani.com/education/2018/jun/13/பிஇ-சேர்க்கை-சான்றிதழ்-சரிபார்ப்பு-நாளையுடன்-முடிகிறது-2938391.html
2938390 கல்வி கால்நடை மருத்துவம்: ஜூலை முதல் வாரத்தில் தரவரிசைப் பட்டியல் DIN DIN Wednesday, June 13, 2018 02:03 AM +0530 கால்நடை மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சேர்க்கைக் குழு தலைவர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இளநிலை கால்நடை மருத்துவம் -பராமரிப்பு மற்றும் உணவுத் தொழில்நுட்பம், கோழியின உற்பத்தி தொழில்நுட்பம், பால்வளத் தொழிநுட்பம் ஆகிய பி.டெக் படிப்புகளுக்கும் மே 21 -ஆம் தேதி முதல் ஜூன் 11 -ஆம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவுசெய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. விண்ணப்பத்தைப் பதிவு செய்ய கடைசி நாளான செவ்வாய்க்கிழமை நிலவரப்படி கால்நடை மருத்துவப் படிப்புக்கு 12,107 பேரும், பி.டெக் படிப்புகளுக்கு 2,418 பேரும் என மொத்தம் 14,525 மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவு செய்துள்ளனர்.
ஜூன் 18 கடைசி நாள்: இணையதளத்தில் பதிவு செய்த விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப ஜூன் 18-ஆம் தேதி நாளாகும். இதுவரை சுமார் 7,000 பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் பல்கலைக்கழகத்துக்கு வந்து சேர்ந்துள்ளன. 
விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, ஜூலை முதல் வாரத்தில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். கலந்தாய்வுத் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
 

]]>
http://www.dinamani.com/education/2018/jun/13/கால்நடை-மருத்துவம்-ஜூலை-முதல்-வாரத்தில்-தரவரிசைப்-பட்டியல்-2938390.html
2932477 கல்வி பொதுத் தேர்வில் புதிய சவால்கள்: மாணவர்கள் எதிர்கொள்ள தயாரா? DIN DIN Monday, June 4, 2018 07:53 AM +0530 சென்னை: "தமிழகத்தில் பள்ளிகளுக்கான பாடத்திட்டம் மாணவர்களின் அறிவுத்திறனை சோதிப்பதாக இல்லை; வெறும் மனப்பாடக் கல்வியாக மட்டுமே இருக்கிறது. பொதுத் தேர்வுகளிலும் "ப்ளு பிரிண்ட்' அடிப்படையிலேயே வினாத்தாள்கள் வடிவமைக்கப்படுகின்றன. இதன் காரணமாக பாடம் சார்ந்து எழுப்பப்படும் சில மறைமுக வினாக்களுக்கு கூட மாணவர்களால் பதிலளிக்க முடிவதில்லை. இத்தகைய செயல்பாடுகளால் மாணவர்களிடையே ஒரு குறிப்பிட்ட விஷயம் குறித்து ஆழமான புரிதல் ஏற்படுவதில்லை. எதைப் படிக்க வேண்டும் என்ற அடிப்படை விஷயத்திலேயே குழப்பம் ஏற்படுவதால் மத்திய அரசு நடத்தும் எந்தவொரு போட்டித் தேர்வுகளிலும் தமிழக மாணவர்கள் அதிகளவில் வெற்றி பெறுவதில்லை. எனவே, பள்ளி பாடத்திட்டத்திலும், வினாத்தாள் வடிவமைப்பிலும், கற்பித்தலிலும் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்'' இந்தக் கோரிக்கையை கல்வியாளர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினரும் தொடர்ந்து பல ஆண்டுகளாக தமிழக பள்ளிக் கல்வித்துறையிடம் முன்வைத்தனர்.
 மிகப் பெரிய மாற்றம்: அதற்கேற்றவாறு கல்வித்துறையில் அவ்வப்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டு வந்தாலும் மாணவர்களின் கற்றல் அடைவுத் திறனிலும், மேற்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளிலும் முன்பிருந்த நிலையே தொடர்ந்தது. இதை உற்றுக் கவனித்த பள்ளிக் கல்வித் துறை ஒரு மிகப் பெரிய மாற்றத்தைச் செய்ய தீர்மானித்தது. இனி செய்யப்படும் மாற்றம் அடுத்த பத்தாண்டுகளுக்கு நிலைத்திருக்க வேண்டும் என முடிவெடுத்து புதிய பாடத்திட்ட அறிவிப்பை கடந்த ஆண்டு மே மாதம் அறிவித்ததோடு வினாத்தாள் வடிவமைப்பிலும் கூடுதல் கவனம் செலுத்தியது.
 இதன் காரணமாக இந்த ஆண்டு (2018) நடந்து முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மொழிப்பாடம் உள்பட இயற்பியல், வேதியியல், பொருளியல், கணிதம் என முக்கியப் பாடங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு புதுமையான வினாக்கள் இடம்பெற்றிருந்தன. சிந்தித்துப் பதிலளிக்கக் கூடிய வகையிலும், ஏற்கெனவே கேட்கப்பட்ட கேள்வியே கூட மாறுபட்ட முறையில் கேட்கப்பட்டிருந்தன.
 ஆனால், புதிய மாற்றத்துக்கு பெரும்பாலான மாணவர்கள் கொஞ்சம் கூடத் தயாராகவில்லை என்பதை பொதுத்தேர்வு முடிவுகள் அப்பட்டமாக வெளிப்படுத்தின. பிளஸ் 2 உள்பட மூன்று பொதுத் தேர்வுகளிலும் 200-க்கு 200, 100-க்கு 100 பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையும், சராசரி மதிப்பெண் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கையும் தலைகீழாக மாறியது; அதாவது வெகுவாகக் குறைந்தது. ஆனால், அது குறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை; மனப்பாட கல்வி முறையைவிட, பாடம் குறித்த புரிதலே அவசியம் என கல்வியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
 மேலும், பிற துறைகளைப் போன்றே கல்வித் துறையிலும் மாற்றங்கள் தவிர்க்க முடியாது. அதுவும், பெரும் சவால்களை எதிர்கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட பாடத்தில் புத்தகத்தின் பின்பகுதியில் இடம்பெற்ற கேள்விகள் மட்டுமல்ல; அதன் எந்தப் பகுதியில் இருந்து வினாக்கள் இடம்பெற்றாலும் என்னால் பதிலளிக்க முடியும்; அது மட்டுமல்ல பாடத்தோடு தொடர்புடைய விஷயங்கள் குறித்துக் கேட்டாலும் சரியான விடையை எழுத முடியும் என்ற நம்பிக்கை மாணவர்களிடத்தில் ஏற்பட வேண்டும். அதற்கு மாணவர்களும், ஆசிரியர்களும் தங்களது வழக்கமான செயல்பாடுகளிலிருந்து எப்படி மாறுபட வேண்டும் என ஆசிரியர்கள், கல்வியாளர்கள் சில வழிகாட்டுதலைத் தெரிவித்துள்ளனர்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு (கல்வியாளர்): சிறுகதைகள், நாவல், படக்கதைகளைப் போன்றே பாடநூல்களையும் முழுவதுமாக விரும்பிப் படிக்கும் பழக்கம் மாணவர்களிடையே ஏற்பட வேண்டும். ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது அதில் சந்தேகம் ஏற்பட்டால் அதை உடனடியாக நிவர்த்தி செய்து கொள்வது அவசியம். ஏனெனில் முரண்பட்ட புரிதல் தவறான விடையை எழுத வழிவகுத்து விடும். பள்ளிகளில் அறிவியல், கணிதம் போன்ற பாடங்களுக்கு வாரந்தோறும் ஒரு முறை கருத்தரங்கம் ஏற்பாடு செய்து அதில் மாணவர்களைப் பேச வைப்பதன் மூலம் பாடநூல்களில் இடம்பெறாத வினாக்களையும், அதற்கான பதிலையும் வெளிப்படச் செய்யலாம்.
 ஒரு பாடம் குறித்த தகவலை பள்ளியில் வழங்கப்பட்ட பாடநூலில் மட்டுமல்ல, அது தொடர்பான பிற நூல்களில் இருந்தும் பெறலாம் என்பதை மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும். அதற்கு அவர்களை தினந்தோறும் வீடுகளுக்கு அருகிலேயோ அல்லது பள்ளியில் உள்ள நூலகத்தையோ தவறாமல் பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். தேர்வு உள்ளிட்ட எத்தகைய சவால்களையும் திறம்பட எதிர்கொள்ள, பொது அறிவு அவசியம். அதைத் தெரிந்து கொள்ள செய்தித்தாள்களை தினமும் வாசிக்க வேண்டும்.
 செல்லிடப்பேசி, கணினித் திரையில் படிப்பது திருப்தியாக இருக்காது. ஏனெனில் பாட நூல்களையும், செய்தித்தாள்களையும் நேரடியாகப் படிப்பது தாயின் மடியில் அமர்ந்து உண்பதைப் போன்றது. மாறாக இணையத்தில் படிப்பது நாற்காலியில் அமர்ந்து சாப்பிடுவதுபோன்றது. எது சிறந்தது என மாணவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக வகுப்பறையில் ஆசிரியர்கள்-மாணவர்கள் உரையாடல் கல்வி இருக்க வேண்டும். இவையனைத்தும் சாத்தியப்படுமானால் பொதுத்தேர்வுகள் மட்டுமல்ல, கடினமான போட்டித்தேர்வு வினாத்தாள்களும் கற்கண்டாகும் என்றார்.

ஆர்.பிரபுதாஸ், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர், சென்னை: தேர்வை மட்டுமே இலக்காக நிர்ணயித்துப் படிக்கும் பழக்கத்தை மாணவர்களும், அதற்காக மட்டுமே அவர்களை பயிற்றுவிப்பதை ஆசிரியர்களும் கைவிட வேண்டும். குறிப்பாக இந்தப் பாடத்தில் இதுதான் முக்கியமான கேள்வி-இதைப் படித்தால் போதும் என்று மாணவர்களுக்கு இருக்கும் மனநிலையில் மாற்றம் ஏற்படுவது அவசியம்.
 ஒரு பாடத்தைப் படிக்கும் போது, அதில் கூறப்பட்டுள்ள விஷயங்களை நமது வாழ்க்கையோடு தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும். புவிஈர்ப்பு விசை என்றால் என்ன, மின்விசிறி எப்படிச் சுழல்கிறது, வங்கியின் செயல்பாடுகள் எப்படி இருக்கும், தென்மேற்குப் பருவமழை போன்றவை குறித்து பாடநூலில் உள்ள தகவல்களை அன்றாடச் செயல்பாடுகளுடன் ஒப்பிட்டு பாடம் நடத்த வேண்டும். அப்போதுதான் அது குறித்த புரிதல் மாணவர்கள் மனதில் எப்போதும் தங்கும். அதன் மூலம் எந்தப் பாடப் பொருள் குறித்து வினாத்தாளில் எப்படி சுற்றி வளைத்துக் கேள்வியெழுப்பினாலும் குழப்பமடையாமல் பதிலளிக்க முடியும்.
 மாணவர்களைச் சிந்திக்க வைக்க வகுப்பறையில் உள்ள கரும்பலகை மட்டும் போதாது. மாறாக, வகுப்பறைகளை ஒரு சிறு ஆய்வுக்கூடமாக்க வேண்டும். அதில் கணிதம், வணிகவியல், அறிவியல் என எந்தப் பாடமாக இருந்தாலும் அதில் உள்ள முக்கியக் கோட்பாடுகள் குறித்த வரைபடங்கள், கருவிகள் போன்றவற்றை இடம்பெறச் செய்ய வேண்டும்.
 வரலாறு, சமூக அறிவியல், கணிதம், தாவரவியல் என முக்கியப் பாடங்கள் குறித்து தகவல் சேகரிப்பு, புள்ளி விவரக் கணக்கெடுப்பு போன்றவற்றை நடத்தி திட்ட அறிக்கையைச் சமர்ப்பிக்க அறிவுறுத்த வேண்டும். இதை அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும் பின்பற்றலாம். தேர்வுகளில் குறிப்பு வரைக, நெடுவினா போன்ற கேள்விகளுக்கு பொருத்தமான பதிலை அளிக்க வேண்டுமே தவிர அனைத்து மாணவர்களும் ஒரே மாதிரியானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை ஆசிரியர்கள்தான் தெளிவுபடுத்த வேண்டும்.

பி.நடராஜன், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர்: ஒரு மாணவனுக்கு "ஒரு வினாத்தாள் எப்படி இருந்தாலும் என்னால் அதில் முழு மதிப்பெண்ணைப் பெற முடியும் என்ற மன உறுதி இருக்க வேண்டுமானால் அவர்களுக்கு படைப்பாற்றல், படித்தல், ஆராய்தல், செய்முறைப்படுத்தல் போன்ற பன்முகத்தன்மை இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பிளஸ் 2 வகுப்புகளின் பொதுத்தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் ஆசிரியர்களுக்கு பாடங்கள் தொடர்பாகவும், பொதுத் தகவல்களை உள்ளடக்கியதாகவும் போதுமான பயிற்சிகள் ஆண்டுக்கு மூன்று முறை அரசின் சார்பில் வழங்கப்பட வேண்டும்.
 அரசு பொதுத் தேர்வுகளை மாணவர்கள் அச்சமின்றி எதிர்கொள்ளும் வகையிலும் அந்தத் தேர்வுகளை தெளிந்த மனதோடு அணுகவும் மேல்நிலைப் பள்ளிகளில் அரசின் உத்தரவுப்படி உளவியல் ஆசிரியர் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.
 அனைத்து உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளிலும் வழக்கமான பாடங்கள் தொடர்பாக குறிப்பெடுக்கவும், போட்டித் தேர்வுகளுக்கான தகவல்களை அறிந்து கொள்ளவும் வசதியாக தேவையான நூல்கள் அரசின் சார்பில் வழங்கப்பட வேண்டும். மேலும் அரசு, தனியார் பள்ளிகளில் மாணவர்களின் அறிவுத் திறனைச் சோதிக்கும் வகையில், கணிதம், அறிவியல், பொது அறிவு சார்ந்த போட்டிகள் அடிக்கடி நடத்தப்பட்டு மாணவர்களின் திறனை மேம்படுத்த வேண்டும்.
 -அ.ஜெயச்சந்திரன்
 
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/3/w600X390/Writting_Cartoon_copy.jpg http://www.dinamani.com/education/2018/jun/04/பொதுத்-தேர்வில்-புதிய-சவால்கள்-மாணவர்கள்-எதிர்கொள்ள-தயாரா-2932477.html
2930076 கல்வி பிளஸ் 1 பொதுத் தேர்வு: 91.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சி: ஈரோடு மாவட்டம் முதலிடம் DIN DIN Thursday, May 31, 2018 01:33 AM +0530 தமிழகம், புதுச்சேரியில் முதல்முறையாக நடைபெற்ற பிளஸ் 1 பொதுத் தேர்வில் 91.3 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 
அனைத்துப் பள்ளிகள் அளவிலும், அரசுப் பள்ளிகள் நிலையிலும் மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதல்முறையாக இந்த ஆண்டு, பிளஸ் 1 மாணவ -மாணவிகளுக்கு அரசு பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. கடந்த மார்ச் 7 -ஆம் தேதி முதல் ஏப்ரல் 16 -ஆம் தேதி வரை இத்தேர்வு நடைபெற்றது. முந்தைய ஆண்டு வரை 1,200 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட தேர்வு, நடப்புக் கல்வியாண்டில் 600 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டது. மேலும், தேர்வு நேரம் மூன்று மணி நேரத்திலிருந்து இரண்டரை மணி நேரமாகக் குறைக்கப்பட்டது. இந்தத் தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 61 ஆயிரத்து 915 பள்ளி மாணவ -மாணவிகளும், 1,753 தனித்தேர்வர்களும் எழுதினர். மொத்தம் 8 லட்சத்து 63 ஆயிரத்து 668 பேர் இத்தேர்வை எழுதினர். 
91.3 சதவீதம் தேர்ச்சி 
பிளஸ் 1 தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன. இதில், 91.3 சதவீத மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களைவிட மாணவிகளே 7.2 சதவீதம் கூடுதலாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர். 
மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 94.6; மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 87.4.
சிறப்பு துணைத் தேர்வு
பிளஸ் 1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு ஜூலை 5 -ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். 
188 அரசுப் பள்ளிகள்  100 சதவீத தேர்ச்சி 
மொத்தம் 7,070 மேல்நிலைப் பள்ளிகள் பொதுத்தேர்வில் பங்கேற்றன. இதில் 2,054 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளன. 2,724 அரசுப் பள்ளிகளில் 188 பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளன.

ஈரோடு, திருப்பூர், கோவை
பிளஸ் 1 தேர்வில் 97.3 சதவீதத் தேர்ச்சியுடன் ஈரோடு முதலிடமும், திருப்பூர் 96.4 சதவீதத் தேர்ச்சியுடன் இரண்டாம் இடத்தையும், 96.2 சதவீதத் தேர்ச்சியுடன் கோவை மூன்றாம் இடமும் பிடித்துள்ளன. இதேபோன்று அரசுப் பள்ளிகள் தேர்ச்சியிலும் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளைப் போன்றே பிளஸ் 1 பொதுத் தேர்விலும் பாடவாரியாக எத்தனை மாணவர்கள் 100 -க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. 
மதிப்பெண் பட்டியல் எப்போது? 
பிளஸ் 1 தேர்வு எழுதியோருக்கு இணையதளம் மூலமாக மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும். அரசுத் தேர்வுகள் துறையால் அச்சடிக்கப்பட்ட மதிப்பெண் சான்று வழங்கப்படும் வரை மட்டுமே இந்த மதிப்பெண் பட்டியல் செல்லும். ஜூன் 4 -ஆம் தேதி பிற்பகல் முதல் மாணவர்கள் தங்களது பள்ளி அல்லது தேர்வெழுதிய மையத்தில் மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம். 
மேலும் www.dge.tn.nic.in  இணையதளத்திலிருந்தும் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த மதிப்பெண் பட்டியல்களில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் அல்லது தேர்வு மைய பள்ளித் தலைமை ஆசிரியர் கையெழுத்திட்டிருந்தால் மட்டுமே செல்லும்.
விடைத்தாள் நகல், மறுகூட்டல்
பிளஸ் 1 விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களின் பள்ளி மற்றும் தேர்வெழுதிய மையங்கள் மூலமாக ஜூன் 1, 2, 4 -ஆம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே மறுமதிப்பீடு கேட்டு விண்ணப்பிக்க முடியும். விடைத்தாள் நகல் பெற்ற பிறகே மறுகூட்டல் செய்ய விண்ணப்பிக்க வேண்டும். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/31/w600X390/result.jpg http://www.dinamani.com/education/2018/may/31/பிளஸ்-1-பொதுத்-தேர்வு-913-சதவீத-மாணவர்கள்-தேர்ச்சி-ஈரோடு-மாவட்டம்-முதலிடம்-2930076.html
2930070 கல்வி சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 87.61 சதவீதம் பேர் தேர்ச்சி DIN DIN Thursday, May 31, 2018 01:30 AM +0530 பிளஸ் 1 பொதுத் தேர்வில் பெருநகர சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் படித்த 87.61 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டு மாநகராட்சிப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டின்கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் இந்த ஆண்டு முதன்முறையாக நடைபெற்ற பிளஸ் 1 பொதுத் தேர்வை 1,979 மாணவர்கள், 3,179 மாணவியர் என மொத்தம் 5,158 பேர் எழுதினர். இவர்களில் 1,588 மாணவர்கள், 2,932 மாணவியர் என மொத்தம் 4,520 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 87.61 தேர்ச்சி சதவீதமாகும்.
2 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி: வணிகவியல் பாடத்தில் 13 பேரும், கணக்குப் பதிவியல் பாடத்தில் ஒருவரும் என மொத்தம் 14 பேர் தலா 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 500 மதிப்பெண்களுக்கு மேல் 48 பேரும், 550 மதிப்பெண்களுக்கு மேல் 4 பேரும் பெற்றுள்ளனர். அத்துடன் கோயம்பேடு, லாயிட்ஸ் ரோடு மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கும், 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் த.கார்த்திகேயன், துணை ஆணையாளர் (கல்வி) மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
 

]]>
http://www.dinamani.com/education/2018/may/31/சென்னை-மாநகராட்சிப்-பள்ளிகளில்-8761-சதவீதம்-பேர்-தேர்ச்சி-2930070.html
2930068 கல்வி புதுவையில் 89.35 சதவீத மாணவர்கள் தேர்ச்சி DIN DIN Thursday, May 31, 2018 01:30 AM +0530 பிளஸ் 1 அரசு பொதுத் தேர்வில் புதுச்சேரி, காரைக்காலில் 89.35 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
கடந்த மார்ச் -ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பிளஸ் 1 பொதுத் தேர்வை புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 7,291மாணவர்கள், 7,955 மாணவிகள் என மொத்தம் 15,246 பேர் எழுதினர். இதில் மாணவர்கள் 6,206 பேர், மாணவிகள் 7,416 பேர் என 13,622 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 89.35 சதவீத விகிதம் ஆகும்.
அரசுப் பள்ளிகள்: புதுச்சேரி, காரைக்கால் பகுதி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 3, 007 மாணவர்கள், 3,912 மாணவிகள் என மொத்தம் 6,919 பேர் தேர்வு எழுதினர். இதில் 2,030 மாணவர்கள், 3,390 மாணவிகள் என மொத்தம் 5,420 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 78.34 ஆகும். மாணவர்கள் 67.51 சதவீதமும், மாணவிகள் 86.66 சதவீதமும் தேர்ச்சி பெற்றனர்.
பிளஸ் 1 தேர்வு முடிவுகளை, புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் அந்த மாநில கல்வி அமைச்சர் இரா.கமலக்கண்ணன் புதன்கிழமை வெளியிட்டார்.
 

]]>
http://www.dinamani.com/education/2018/may/31/புதுவையில்-8935-சதவீத-மாணவர்கள்-தேர்ச்சி-2930068.html
2930067 கல்வி முதுநிலை மருத்துவ கலந்தாய்வு நிறைவு DIN DIN Thursday, May 31, 2018 01:29 AM +0530 முதுநிலை மருத்துவப் படிப்பில் தமிழக இடங்களுக்கான கலந்தாய்வு புதன்கிழமை நிறைவுபெற்றது.
எம்.டி., எம்.எஸ்., எம்.டி.எஸ்., முதுநிலை டிப்ளமோ ஆகிய படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் கடந்த மே 19-ஆம் தேதி தொடங்கியது. 11 நாள்கள் நடைபெற்ற இரண்டு கட்ட கலந்தாய்வு புதன்கிழமை நிறைவு பெற்றது.
கலந்தாய்வின் முடிவில் அரசு கல்லூரிகளில் உள்ள 981 இடங்களும் நிரம்பின. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு சமர்ப்பிக்கப்பட்ட 235 இடங்களில் 14 இடங்கள் மீதம் உள்ளன. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 278 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் 25 இடங்கள் காலியாக உள்ளன.
முதுநிலை பல் மருத்துவப் படிப்புகளில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 135 அரசு ஒதுக்கீட்டு இடங்கள், 118 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என அனைத்தும் நிரம்பின. 
''தனியார் கல்லூரிகளில் நிரப்பப்படாமல் மீதம் உள்ள 39 இடங்களும் அந்தந்த கல்லூரி நிர்வாகத்திடமே சமர்ப்பிக்கப்படும். கல்லூரி நிர்வாகங்கள் அந்த இடங்களை நீட் தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் நிரப்பிக் கொள்ளலாம்'' என்று மருத்துவக் கல்வி தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

]]>
http://www.dinamani.com/education/2018/may/31/முதுநிலை-மருத்துவ-கலந்தாய்வு-நிறைவு-2930067.html
2930065 கல்வி உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்கான நீட்: விண்ணப்பிக்க இன்று கடைசி DIN DIN Thursday, May 31, 2018 01:29 AM +0530 உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்களை அனுப்புவதற்கு வியாழக்கிழமை (மே 31) கடைசியாகும்.
நாடு முழுவதும் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளான டி.எம்., எம்.சிஎச். ஆகிய படிப்புகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1,215 இடங்கள் உள்ளன. அவற்றில் தமிழத்தில் 192 இடங்கள் உள்ளன. நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக இடங்கள் உள்ளன. 
பொதுவாக எம்.பி.பி.எஸ். படிப்பில் 15 சதவீதம், முதுநிலை மருத்துவப் படிப்பில் 50 சதவீதம் மட்டுமே அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சமர்ப்பிக்கப்படும். மீதமுள்ள இடங்களுக்கான கலந்தாய்வை அந்தந்த மாநில அரசுகளே நடத்தும். ஆனால், உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளைப் பொருத்தவரையில் அனைத்து இடங்களுக்கான கலந்தாய்வையும் மத்திய சுகாதார சேவைகள் இயக்ககமே நடத்துகிறது.
அந்த வகையில் 2018 - 2019-ஆம் கல்வியாண்டுக்கான உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறைகள் மே 11-ஆம் தேதி தொடங்கின. ஆன்லைன் மூலமாக பூர்த்தி செய்த விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்து அனுப்புவதற்கு மே 31-ஆம் தேதி கடைசியாகும். ஜூலை 6-ஆம் தேதி தேர்வு நடைபெற்று, ஜூலை 15-ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்படும்.
 

]]>
http://www.dinamani.com/education/2018/may/31/உயர்-சிறப்பு-மருத்துவப்-படிப்புக்கான-நீட்-விண்ணப்பிக்க-இன்று-கடைசி-2930065.html
2930062 கல்வி ஜே.இ.இ. தாள்-2 தேர்வு முடிவுகள் வெளியீடு DIN DIN Thursday, May 31, 2018 01:29 AM +0530 என்.ஐ.டி., ஐஐஐடி கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (முதல்நிலை) ஜே.இ.இ. தாள்-2 தேர்வு முடிவுகளை சி.பி.எஸ்.இ. புதன்கிழமை வெளியிட்டது.
என்.ஐ.டி., ஐஐஐடி போன்ற மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்காக ஜே.இ.இ. முதல்நிலை (மெயின்) தேர்வுகளை சிபிஎஸ்இ நடத்தி வருகிறது. இதில் பி.இ., பி.டெக். படிப்புகளுக்கு ஜே.இ.இ. தாள்-1 தேர்வு நடத்தப்படும். பி.ஆர்க்., பி.பிளான் போன்ற கட்டடவியல் பொறியியல் படிப்புகளுக்கு ஜே.இ.இ. தாள்-2 தேர்வு நடத்தப்படும்.
இதில் ஜே.இ.இ. தாள்-1 தேர்வு முடிவுகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டன. பி.ஆர்க். படிப்புகளில் சேருவதற்கான ஜே.இ.இ. தாள்-2 தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளை jeemain.nic.in, cbseresults.nic.in ஆகிய இணையதளங்களில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

]]>
http://www.dinamani.com/education/2018/may/31/ஜேஇஇ-தாள்-2-தேர்வு-முடிவுகள்-வெளியீடு-2930062.html
2930060 கல்வி பொறியியல் கல்லூரி மாணவர்கள் பாட வாரியான தரவரிசைப் பட்டியல்: அண்ணா பல்கலை. வெளியீடு DIN DIN Thursday, May 31, 2018 01:28 AM +0530 பொறியியல் கல்லூரி மாணவர்களின் பாட வாரியான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் 38-ஆவது பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு இந்தப் பட்டியலை பல்கலைக்கழகம் அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் 2017 ஏப்ரல்-மே தேர்வு முடிவுகளின் அடிப்படையில் பி.இ. படிப்பை முடித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் இடம்பெற்றிருக்கிறது.
இந்தப் பட்டியலில் பாட வாரியாக முதல் 50 ரேங்குகள் பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்கள் படித்த கல்லூரி விவரங்களும் இடம்பெற்றுள்ளன.
 

]]>
http://www.dinamani.com/education/2018/may/31/பொறியியல்-கல்லூரி-மாணவர்கள்-பாட-வாரியான-தரவரிசைப்-பட்டியல்-அண்ணா-பல்கலை-வெளியீடு-2930060.html
2930058 கல்வி அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. தொடங்க நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல் DIN DIN Thursday, May 31, 2018 01:28 AM +0530 அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
இது தொடர்பாக, சமூக நலத் துறையுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
சட்டப் பேரவையில் பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது புதன்கிழமை நடந்த விவாதத்தில் அதிமுக உறுப்பினர் செம்மலை பேசினார். அப்போது நடந்த விவாதம்:-
செம்மலை (அதிமுக): கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் உள்ள இடங்களில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதனால், அரசுப் பள்ளிகளில் சேர்க்கை குறைகிறது. அரசுப் பள்ளிகள் தொலைவில் இருந்து சேர்க்க இயலாத போது, தனியார் பள்ளிகளில் சேர்க்கலாம். ஆனால், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், நாமே தனியார் பள்ளிகளுக்கு ஆள் சேர்த்து விடும் நிலை உள்ளது. இதைத் தவிர்க்க வேண்டும்.
அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்: கட்டாய கல்வி உரிமைச் சட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டதாகும். இந்தச் சட்டத்தின் கீழ், இருப்பிடத்தில் இருந்து ஒரு கிலோமீட்டருக்குள் அரசுப் பள்ளிகள் இல்லாவிட்டால் தனியார் பள்ளிகளில் சேர்க்கலாம். இந்தத் திட்டத்தின் கீழ் மாணவர்கள் சேர்க்கப்பட்டாலும் அதற்கான நிதியை மத்திய அரசு மூன்று ஆண்டுகளாக திருப்பித் தரவில்லை. நிதிகள் வழங்கப்படவில்லை.
செம்மலை: கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தால் நமக்கான பாதிப்புகள் என்ன என்பதை ஆராய வேண்டும். நமது மாநிலத்தில் தொடக்கப் பள்ளிகள் இல்லாதே ஊரே இல்லை. ஆனால், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், 25 சதவீத இடங்களை அரசுப் பள்ளிகளை தவிர்த்து, தனியார் பள்ளிகளில் சேர்க்க வேண்டியுள்ளது. இது தனியார் பள்ளிகளை ஊக்குவிப்பதாக இருக்கிறது.
அமைச்சர் செங்கோட்டையன்: பள்ளிகளைப் பொருத்தவரையில், மக்களின் மனநிலை வேறாக உள்ளது. ஆங்கிலம் கற்க வேண்டும் என்பதற்காக தனியார் பள்ளிகளை நாடுகிறார்கள். எனவே, தனியார் பள்ளிகளைத் தவிர்த்து, அரசு பள்ளிகளையே நாடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
செம்மலை: தனியார் பள்ளிகள் எல்கேஜி., யுகேஜி., வகுப்புகளைத் தொடங்கி பெற்றோர்களை ஈர்க்கிறார்கள். 
இரண்டரை வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றோர் வீட்டில் வைக்க விரும்பவில்லை. அண்டை வீட்டிலுள்ள குழந்தைகளைப் பார்த்து தங்களது குழந்தைகளையும் தனியார் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களிடம் படிப்புக் கட்டணம், வாகனக் கட்டணம் போன்றவற்றை தனியார் பள்ளிகள் வசூலிக்கின்றன. எனவே, நமது அரசே பள்ளிகளில் எல்கேஜி., யுகேஜி., போன்ற வகுப்புகளை ஏன் தொடங்கக் கூடாது? அப்படி தொடங்கப்பட்டால் குறைந்த செலவில் பெற்றோர் தங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பார்கள்.
அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்: அரசுப் பள்ளிகளில் எல்கேஜி., யுகேஜி. வகுப்புகளைத் தொடங்குவது குறித்து சமூகநலத் துறையுடன் ஆலோசித்து வருகிறோம். அரசுப் பள்ளிகளில் 90 சதவீத பள்ளி வளாகங்களில் அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில், 4.35 லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். அந்த மாணவர்களை அரசுப் பள்ளிகளுக்கு கொண்டு வர பரிசீலித்து வருகிறோம்.
அரசு விதிகளின்படி 5 வயது பூர்த்தியான மாணவ-மாணவிகளை மட்டுமே அரசுப் பள்ளிகளில் சேர்க்க முடியும். எனவே, அதற்கு முந்தைய வயது குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது குறித்து ஆலோசித்து சட்ட முடிவுகளை அரசு மேற்கொள்ளும்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/21/w600X390/senkotian1.jpg http://www.dinamani.com/education/2018/may/31/அரசுப்-பள்ளிகளில்-எல்கேஜி-யுகேஜி-தொடங்க-நடவடிக்கை-அமைச்சர்-செங்கோட்டையன்-தகவல்-2930058.html
2930054 கல்வி கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் நாளை திறப்பு DIN DIN Thursday, May 31, 2018 01:27 AM +0530 கோடை விடுமுறைக்குப் பிறகு தமிழகம் முழுவதும் அரசு, தனியார் பள்ளிகள் வெள்ளிக்கிழமை திறக்கப்படவுள்ளன.
தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்து வரையிலான வகுப்புகளுக்கு, மே மாதம் மட்டுமே விடுமுறை விடப்படும். ஆனால், இந்த ஆண்டு முதல், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளைப் போன்றே ஏப்ரல் மூன்றாவது வாரம் முதல் விடுமுறை அளிக்கப்பட்டது. 
கோடை விடுமுறை வியாழக்கிழமை முடிவுக்கு வருகிறது. இதையடுத்து அனைத்துப் பள்ளிகளும் ஜூன் 1-ஆம் தேதி வெள்ளிக்கிழமை திறக்கப்பட உள்ளன. கோடை விடுமுறைக் காலத்தைப் பயன்படுத்தி, பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்ய வேண்டும். வாகனங்களை சரியாக பராமரிக்க வேண்டும் என ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் கல்வித்துறை அதிகாரிகளும், போக்குவரத்து அதிகாரிகளும் பள்ளிகளில் ஆய்வு நடத்தினர்.
இதையடுத்து சரியாகப் பராமரிக்கப்படாத வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. அடிப்படை வசதி மற்றும் அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. அதேவேளையில் பள்ளிகள் வெள்ளிக்கிழமை திறக்கப்படுவதால் அதற்கான முன்னேற்பாடுகளை கல்வித்துறை அதிகாரிகளும், ஆசிரியர்களும் செய்து வருகின்றனர்.
பள்ளிகள் திறந்த முதல் நாளிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பாடநூல்கள், சீருடைகள் வழங்கப்படவுள்ளன. இந்த ஆண்டு முதல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, சீருடைகளின் நிறம் மாற்றப்பட்டுள்ளது. பள்ளி திறக்கும் நாளிலேயே பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் தேதிகளும், தேர்வு முடிவு வெளியாகும் தேதியும் அறிவிக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/11/30/w600X390/school.jpg http://www.dinamani.com/education/2018/may/31/கோடை-விடுமுறைக்குப்-பிறகு-பள்ளிகள்-நாளை-திறப்பு-2930054.html
2930052 கல்வி பிளஸ் 2: விடைத்தாள் நகல்களை ஜூன் 2 முதல் பதிவிறக்கம் செய்யலாம் DIN DIN Thursday, May 31, 2018 01:25 AM +0530 பிளஸ் 2 பொதுத்தேர்வெழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் சனிக்கிழமை முதல் அதனை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி புதன்கிழமை வெளியிட்ட செய்தி:-
பிளஸ் 2 பொதுத்தேர்வெழுதி விடைத்தாள்கள் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் ஜூன் 2-ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் scan.tndge.in   என்ற இணையதளத்துக்குச் சென்று தங்களது பதிவெண், பிறந்த தேதியைப் பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 
மறுகூட்டலுக்கு: விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் application for retotalling/ revaluation என்ற தலைப்பினை கிளிக் செய்து விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். 
இந்த விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து ஜூன் 4 முதல் ஜூன் 6 வரை, காலை 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் உரிய முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். 
மறுகூட்டல், மறு மதிப்பீட்டுக்கான கட்டணத்தை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

]]>
http://www.dinamani.com/education/2018/may/31/பிளஸ்-2-விடைத்தாள்-நகல்களை-ஜூன்-2-முதல்-பதிவிறக்கம்-செய்யலாம்-2930052.html
2930050 கல்வி 500 மதிப்பெண்களுக்கு மேல் 36,380 மாணவர்கள் DIN DIN Thursday, May 31, 2018 01:24 AM +0530 பிளஸ் 1 பொதுத் தேர்வில் 600 -க்கு 500 மதிப்பெண்களுக்கும் மேல் 36,380 மாணவ, மாணவிகள் பெற்றுள்ளனர். 
ஒவ்வொரு நிலையிலும் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை விவரம்:-
500 மதிப்பெண்களுக்கு மேல் 36,380
451 முதல் 500 மதிப்பெண் வரை 64,817
426 முதல் 450 மதிப்பெண் வரை 48,532
401 முதல் 425 மதிப்பெண் வரை 61,351
351 முதல் 400 மதிப்பெண் வரை 1,60,581
301 முதல் 350 மதிப்பெண் வரை 1,93,765
201 முதல் 300 மதிப்பெண் வரை 2,47,944
176 முதல் 200 மதிப்பெண் வரை 17,635
175 மற்றும் அதற்கு கீழ் 16,643 இதில், அதிகபட்சமாக 201 முதல் 300 மதிப்பெண்கள் வரை 29.25 சதவீத மாணவர்களும், 301 முதல் 350 மதிப்பெண் வரை 22.86 சதவீத மாணவர்களும் பெற்றுள்ளனர். குறைந்தபட்சமாக 175 மதிப்பெண்கள் மற்றும் அதற்கு கீழ் 1.96 சதவீத மாணவர்களும், 176 முதல் 200 வரை 2.08 சதவீத மாணவர்களும் மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
 

]]>
http://www.dinamani.com/education/2018/may/31/500-மதிப்பெண்களுக்கு-மேல்-36380-மாணவர்கள்-2930050.html
2930049 கல்வி உயிரியல் பாடத்தில் 96.9 சதவீத மாணவர்கள் தேர்ச்சி DIN DIN Thursday, May 31, 2018 01:24 AM +0530 பிளஸ் 1 பொதுத்தேர்வில் உயிரியல் பாடத்தில் அதிகபட்சமாக 96.9 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 
முக்கியப் பாடங்களில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம்:-
இயற்பியல் 93.0
வேதியியல் 92.7
உயிரியல் 96.9
கணிதம் 95.2
தாவரவியல் 89.3
விலங்கியல் 91.8
கணினி அறிவியல் 95.3
வணிகவியல் 93.7
கணக்குப் பதிவியல் 93.8
பாடப் பிரிவுகள் வாரியாக தேர்ச்சி சதவீதம்:-
அறிவியல் பாடப்பிரிவுகள் 92.0
வணிகவியல் பாடப் பிரிவுகள் 92.2
கலைப் பிரிவுகள் 80.0
தொழிற் பாடப் பிரிவுகள் 82.3

]]>
http://www.dinamani.com/education/2018/may/31/உயிரியல்-பாடத்தில்-969-சதவீத-மாணவர்கள்-தேர்ச்சி-2930049.html
2928540 கல்வி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு DIN DIN Monday, May 28, 2018 05:38 PM +0530 புதுதில்லி: சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மாலை 4 மணியளவில் வெளியிடப்படுகிறது. 

சிபிஎஸ்இ என அழைக்கப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 5-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ஆம் தேதி முடிவடைந்தது. நாடு முழுவதும், 16 லட்சத்து 88 ஆயிரத்து 144 மாணவ, மாணவியர்கள் இந்த தேர்வை எழுதினர். இந்த தேர்வின் முடிவுகள் நாளை மாலை 4 மணியளவில் வெளியிடப்படுகின்றன. 

தேர்வு முடிவுகளை cbse.nic.in, cbse.examresults.net, cbseresults.nic.in, results.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலர் அனில் ஸ்வரூப் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/3/w600X390/CBSE_10.jpg http://www.dinamani.com/education/2018/may/28/சிபிஎஸ்இ-பத்தாம்-வகுப்பு-பொதுத்தேர்வு-முடிவுகள்-நாளை-வெளியீடு-2928540.html
2927705 கல்வி எஸ்.ஆர்.எம். பயிற்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் DIN DIN Sunday, May 27, 2018 02:26 AM +0530 எஸ்.ஆர்.எம். பயிற்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் என்பது எஸ்.ஆர்.எம். குழுமத்தின் புதிய முயற்சியாகும். இது மாணவர்களின் திறனை பல மடங்கு மேம்படுத்தி சிறந்த வேலை வாய்ப்பினைப் பெற வழிவக்கும். எஸ்.ஆர்.எம். பயிற்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சென்னையின் மையப்பகுதியில் உள்ள ஈக்காட்டுத்தாங்கல் கலைமகள் நகரில் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தில் தரமான அனுபவமும் திறனும் மிக்க பேராசிரியப் பெருமக்களும் திறன் மேம்பாட்டு நிபுணர்களும் மாணவ, மாணவியருக்குப் பயிற்சி அளிக்கிறார்கள். தொழில் மற்றும் வேலை வாய்ப்பினைத் தரும் இளநிலை, முதுநிலை, டிப்ளமோ மற்றும் பட்டய வகுப்புப் பாடங்களோடு வேலைவாய்ப்பு மற்றும் திறன்களுக்கான பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
இந்த நிறுவனத்தில் இயங்குகின்ற இளநிலை பிரிவுகள்:
B.Sc. (Computer Science / Hotel Management / Visual Communication), BCA (Computer Application), B.Com (General / Professional Accounting), BBA (Financial Management) and Diploma (Hotel Management).
முதுகலை பிரிவுகள் :
MBA (Hospitality & Catering Science / Executive Management)
பாடப்பிரிவுகள் NAAC 'A' Grade பெற்ற பாரதியார் பல்கலைக்கழகத்தின் அனுமதியும் அங்கீகாரமும் பெற்றவை.
சிங்கப்பூரின் தலைசிறந்த பயிற்சி நிறுவனமான CSM  இன்டர்நேஷனல் அகதெமி நிறுவனத்துடன் வேலை வாயப்பு மற்றும் பயிற்சி தொடர்பாக இணைந்து செயல்படுகிறது.
இந்த நிறுவனத்தில் படிக்கின்ற மாணவ, மாணவியருக்கு உடனடியாக வேலை வாய்ப்புகளில் முக்கியத்துவம் தரப்படுகிறது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/27/w600X390/SRM.jpg http://www.dinamani.com/education/2018/may/27/எஸ்ஆர்எம்-பயிற்சி-மற்றும்-மேம்பாட்டு-நிறுவனம்-2927705.html
2927691 கல்வி டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலைப் பல்கலைக்கழகம் DIN DIN Sunday, May 27, 2018 02:25 AM +0530 இந்தியாவில் உள்ள நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மாணவ, மாணவிகள் மேல்தட்டு மாணவ, மாணவிகள் போன்று சிறப்பான கல்வியினை பெறுவதற்காக Dr.ஏ.சி. சண்முகம் அவர்கள், 1986-ஆம் ஆண்டு திருமதி. கண்ணம்மாள் அறக்கட்டளையை தோற்றுவித்தார். 
2003-ஆம் ஆண்டு முதல் தாய் மூகாம்பிகை பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர். பொறியியல் கல்லூரிகள் ஆரம்பம் முதலே சிறப்பாகச் செயல்பட்டதால் இரண்டையும் அங்கமாகக் கொண்டு பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் இந்திய அரசாங்கத்தின் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் ஒப்புதலுடன் டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நிகர் நிலைப்பல்கலைக்கழகமாக அந்தஸ்து பெற்று மிகச்சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. 
இந்நிறுவனமானது பல்கலைக் கழகமானியக் குழுவின் தன்னிறைவு பெற்ற ஒரு அங்கமான தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலால் (NAAC) 4கிற்கு 3.31 புள்ளிகளுடன் ஐந்து வருடங்களுக்கான "A' தர சான்றினை பெற்றுள்ளது. இந்நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் உயிரி தொழில் நுட்பம், கணினி அறிவியல் மற்றும் பொறியியல், மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல், மின் மற்றும் மின்னணு பொறியியல் மற்றும் மேலாண்மை படிப்புகள் ஆகிய 5 துறைகளுக்கு தேசிய அங்கீகார தர வாரியம் (NBA) தரச்சான்று வழங்கியுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் மத்தியமனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இந்நிகர் நிலைப்பல்கலைக் கழகத்தை வகைப்படுத்தி "சிறப்பு சுயாட்சிஅந்தஸ்தை அளித்து சிறப்பித்துள்ளது. மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளை உள்ளடக்கிய இந்நிகர் நிலைப் பல்கலைக்கழகமானது தமிழ்நாட்டிலேயே "சிறப்பு சுயாட்சி அந்தஸ்தைப் பெற்ற ஒரே ஒரு நிகர்நிலைப்பல்கலைக்கழகம் என்ற சிறப்பினை பெருகிறது. இந்நிறுவனமானது ஜெர்மன் நாட்டின் மிகச் சிறந்த TUV SUD நிறுவனத்தால் அனைத்து வகையிலும் தரமான சிறந்த நிறுவனம் என்று ISO 9001:2015 தரச்சான்றிதழ் வழங்கப் பெற்றுள்ளது. தற்போது இப்பல்கலைக்கழகத்தில் 11000-க்கும் மேற்பட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மற்றும் பல்வேறு உலகநாடுகளிலிருந்தும் மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயின்று வருகிறார்கள். இவர்களுக்கு உயர் கல்வி போதிக்க பல்கலைக் கழகமானியக் குழு நிர்ணயித்த கல்வித் தகுதிகளை பெற்ற, கல்வித் துறையில் அனுபவமிக்க 1000-க்கும் மேற்பட்ட விரிவுரையாளர்களும் 100-க்கும் மேற்பட்ட முனைவர் பட்டம் பெற்ற (Doctorates) பேராசிரியர்களும் இப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றி மாணவ மாணவிகளுக்குத் தகுந்த பயற்சியையும் கல்வியையும் வழங்கி அவர்களைத் தொழில் நுட்ப ரீதியாகத் தகுதி படைத்தவர்களாகவும் நடைமுறைச் செயல்களில் சிறப்பாகச் செயல்படத்தக்கவர்களாகவும் நுணுக்கமான திறமைகள் படைத்த மனிதவளங்களாக பொலிவு பெறவும் செய்கிறார்கள். 
ஆராய்ச்சிகள்: ஒரு பல்கலைக்கழகம் சிறந்து விளங்குகிறது என்பதற்கு அங்கு மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளே ஆதாரமாக விளங்கும். நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் பயன் தரக் கூடிய தனித்துவமிக்க ஆய்வுகளை மேற்கொண்டு நாட்டின் வளர்ச்சிக்குத் துணை நிற்கிறது. தற்போது எங்கள் பல்கலைக் கழத்தில் பல்வேறு துறைகளில் அந்தந்தத் துறை சார்ந்த சிறப்பு மையங்கள் (Centres of Excellence) உருவாக்கப்பட்டுள்ளன. இச்சிறப்பு மையங்கள் முன்னணித் தொழில் மற்றும் ஆய்வு நிறுவனங்களின் கூட்டமைப்புடன் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்த சிறப்பு மையங்கள் மூலம் மாணவர்கள் மேற்படி தொழில் நிறுவனங்களில் பயிற்சி பெறவும் படிப்பு முடிந்தவுடன் அது போன்ற நிறுவனங்களில் வேலை வாய்ப்புப் பெறவும் உதவியாக உள்ளது. 
குண்டு துளைக்காத மூலக்கூறு பொருட்களால் இராணுவ கவச ஊர்திகளுக்கு ஜன்னல்கள் உருவாக்குவது (Development of Composite Louvre Project) இது நாள் வரை நமது இந்திய ராணுவமானது நமது தாய் நாட்டை பகைவர்களிடமிருந்து பாதுகாக்கவும் எதிரிகளைத் தாக்கி அழிக்கவும் கூடிய பலவிதமான பாதுகாப்புக் கவச ஊர்திகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கலவை மூலக் கூறுகளால் ஆன குண்டு துளைக்காத மூலப் பொருட்கள் கொண்டு தயாரித்து வந்துள்ளது. இவ்வாறு இறக்குமதி செய்யாமல் உள் நாட்டிலேயே இவ்விதமான குண்டு துளைக்காத மூலக்கூறு பொருள்களை உருவாக்க இந்திய ராணுவத் துறையின் சென்னை ஆவடியிலுள்ள Combat Vehicles Research & Development Establishment (CVRDE) நிறுவனம் நிதியுதவி செய்ய இசைந்து அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இப்பல்கலைக்கழகத்துடன் கையெழுத்திடப்பட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது 
இந்திய அரசு பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் (DRDO) நவீன ஆராய்ச்சிக்கூடம், சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்கலைக்கழகத்தின் ஓர்அங்கமான நவீனஆராய்ச்சி மையத்திற்காக (ARI) அக்னி ஏவுகனைகளைப் பாதுகாப்பாகவும் சிறந்த முறையில் செலுத்தவும் ராக்கெட் மோட்டாருக்கான உட்புற வடிவமைப்புத் திட்டம் என்ற தலைப்பில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான அங்கீகாரம் அளித்துள்ளது. இந்த ஆராய்ச்சி நமது தேச வளர்ச்சிக்கும் நலனுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஆராய்ச்சியாகக் கருதப்படுவதால் இவ்வாராய்ச்சியை மேற்கொள்வதில் இப்பல்கலைக்கழகம் பெருமிதம் கொள்கிறது. 
மிகக்குறுகிய ஆறு மாத காலத்தில் கிட்டத்தட்ட ரூ.5 கோடிக்கான ஆராய்ச்சிகள் இப்பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது மட்டுமல்லாது இது போன்று நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் பல ஆராய்ச்சிகள் தேர்வு நிலையில் உள்ளன. அவைகளும் வெகுவிரைவில் இந்திய அரசின் நிதியுதவி பெறும் என்ற நம்பிக்கையுள்ளது.
எங்கள் மாணவர்கள் வேலை வாய்ப்பை தருபவர்கள், வேலை வாய்ப்பைத் தேடுபவர்கள் அல்லர்.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/27/w600X390/mgrphoto.jpg http://www.dinamani.com/education/2018/may/27/டாக்டர்-எம்ஜிஆர்-கல்வி-மற்றும்-ஆராய்ச்சி-நிறுவன-நிகர்நிலைப்-பல்கலைக்கழகம்-2927691.html
2927378 கல்வி சட்டப் படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பங்கள்: துணைவேந்தர் அறிவிப்பு சென்னை DIN Sunday, May 27, 2018 12:19 AM +0530 நிகழ் கல்வியாண்டுக்கான (2018-2019) சட்டப்படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகங்கள் வரும் திங்கள்கிழமை (மே 28) முதல் தொடங்கும் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் டி.சூரியநாராயண சாஸ்திரி தெரிவித்தார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள பல்கலைக்கழக அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த துணைவேந்தர் டி.சூரியநாராயண சாஸ்திரி கூறியதாவது:- 
சீர்மிகு சட்டப் பல்கலைக்கழகத்தில் நிகழ் கல்வியாண்டுக்கான 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கான (ஹானர்ஸ்) விண்ணப்பங்கள் வரும் திங்கள்கிழமை (மே 28) முதல் வழங்கப்படும். அரசு சட்டக்கல்லூரிகளில் 5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரும் ஜூன் 1 தேதி முதல் வழங்கப்படும். 3 ஆண்டு ஹானர்ஸ் மற்றும் 3 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரும் ஜூன் 27-ஆம் தேதியன்று வழங்கப்பட உள்ளது. 
மேலும், தொலைதூரக்கல்வி வாயிலாக சட்டப் படிப்புகளைத் தொடங்குவதற்கான அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக்குழுவின் அனுமதி கிடைத்த பின் அது தொடங்கப்படும். மேலும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான (என்ஆர்ஐ) இடங்கள் அரசு உத்தரவுப்படி மட்டுமே நிரப்பப்படும். 

எத்தனை இடங்கள்.... தமிழகத்தில் உள்ள 10 அரசு சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு 1411 இடங்களும், 3 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு 1541 இடங்களும் உள்ளன. இதுதவிர சீர்மிகு சட்டப்பல்கலைக் கழகத்தில் 624 இடங்களும் உள்ளன. 
விண்ணப்பிக்கும் முறை...சட்டப்படிப்புகளுக்கு ஆன்-லைன் வழியாகவும், விண்ணப்பங்களை நேரடியாகவும் பெற்று விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
விண்ணப்பங்களை சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, செங்கல்பட்டு உள்ளிட்ட 10 இடங்களில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் நேரடியாக பெறலாம். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் (www.tndalu.ac.in) என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

]]>
http://www.dinamani.com/education/2018/may/27/சட்டப்-படிப்புகளுக்கு-நாளை-முதல்-விண்ணப்பங்கள்-துணைவேந்தர்-அறிவிப்பு-2927378.html
2927319 கல்வி சிபிஎஸ்இ பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியீடு: மாணவிகளே அதிக தேர்ச்சி!  DIN DIN Saturday, May 26, 2018 03:52 PM +0530 மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பிளஸ்- 2 பொதுத்தேர்வு முடிவுகளை இன்று சனிக்கிழமை வெளியிட்டது. 

சிபிஎஸ்இ பிளஸ் - 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 5-ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 13-ஆம் தேதி வரை நடைபெற்றது. ஏறத்தாழ 11 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர். 

இம்முறை அந்தத் தேர்வுகள் தொடங்கிய நாள் முதலே பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.

குறிப்பாக, பிளஸ்-2 தேர்வில் பொருளியல், கணக்குப் பதிவியல் உள்ளிட்ட வினாத் தாள்கள் முன்கூட்டியே கசிந்ததாகத் தகவல்கள் பரவின. பத்தாம் வகுப்பு கணித பாடத் தேர்வின்போதும் இத்தகைய விமர்சனங்கள் எழுந்தன. முதலில் அந்தக் கூற்றுகளை சிபிஎஸ்இ வாரியம் திட்டவட்டமாக மறுத்தது. 

ஆனால், அதன் பின்னர், பொருளியல் மற்றும் கணித பாடத்துக்கான வினாத்தாள்கள் கசிந்ததை ஒப்புக் கொண்ட சிபிஎஸ்இ வாரியம், பொருளியல் பாடத்துக்கு மட்டும் மறுதேர்வு நடத்தியது. 

இதனிடையே, வேறு சில பாடங்களிலும் குழப்பமான கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததாகவும் மாணவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.

இந்நிலையில், அவர்களின் தேர்வு முடிகள் இன்று சிபிஎஸ்இ-யின் இணைய தளங்களான (c​bs‌e.‌n‌i​c.‌i‌n  அல்லது c​b‌s‌e‌r‌e‌s‌u‌l‌t‌s.‌nic.‌i‌n) ஆகிய இணையப் பக்கங்களில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.  

ஒட்டுமொத்தமாக 83.01 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  நொய்டா மாணவி மேக்னா 499 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். 

மாணவர்களை விட மாணவிகளே அதிகயளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். உத்தரபிரச மாநிலம், நொய்டாவைச் சேர்ந்த மாணவி மேக்னா ஸ்ரீவஸ்தவா 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

காசியாபாத்தைச் சேர்ந்த மாணவி அனவ்ஷ்கா சந்திரா 498 மதிப்பெண்கள் பெற்றரு இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். 497 மதிப்பெண்களுடன் 7 பேர் மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளனர்.

மண்டல வாரியாகப் பார்க்கும்போது திருவனந்தபுரம் மண்டலம் 97.32 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் முதலிடத்திலும், சென்னை மண்டலம் 93.87 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் இரண்டாமிடத்திலும், தில்லி மண்டலம் 89 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் மூன்றாமிடத்திலும் உள்ளன.

மாணவிகள் 88.31 சதவீதமும், மாணவர்கள் 78.99 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி கிட்டத்தட்ட ஒரு சதவீதம் அதிகரித்துள்ளது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/3/1/17/w600X390/cbse6.jpg http://www.dinamani.com/education/2018/may/26/சிபிஎஸ்இ-பிளஸ்-2-தேர்வு-முடிவுகள்-வெளியீடு-மாணவிகளே-அதிக-தேர்ச்சி-2927319.html
2926790 கல்வி அரை நூற்றாண்டு சேவையில் கெளரிவாக்கம் எஸ்.ஐ.வி.இ.டி. கல்லூரி DIN DIN Saturday, May 26, 2018 02:06 AM +0530 தாம்பரம் வேளச்சேரி பிரதான சாலையில் கடந்த 52 ஆண்டுகளாக சிறந்த கல்விப்பணியை ஆற்றி வரும் கல்லூரியாக எஸ்.ஐ.வி.இ.டி. கல்லூரி திகழ்ந்து வருகின்றது.
மறைந்த முன்னாள் நீதிபதி எஸ்.ஏ.அய்யாசாமி செட்டியார் அவர்களின் முயற்சியால் தொலைநோக்குப் பார்வையுடன் அவர் தொடங்கிய தென்னிந்திய வாணியர் கல்வி அறக்கட்டளை மூலம் இக்கல்லூரி 1966-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்தியாவின் முதல் நிதி அமைச்சராகத் திகழ்ந்த மறைந்த ஆர்.கே.சண்முகம் செட்டியார் இக்கல்லூரிஅறக்கட்டளையின் செயலராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை புறநகர்ப்பகுதியைச் சேர்ந்த நடுத்தர, ஏழை, எளிய மக்களுக்கு உயர்கல்வி வழங்கி வரும் இந்தக் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கல்வி பயில உதவும் வகையில் இளநிலை பட்டப்படிப்புகளும் முதுநிலை பட்டப்படிப்புகளும் டிப்ளமோ படிப்புகளும் வழங்கப்படுகின்றன.
இங்கு பி.ஏ. சரித்திரம், பி.ஏ. பொருளாதாரம், பி.எஸ்.சி. இயற்பியல், பி.எஸ்.சி. வேதியியல், பி.எஸ்.சி கணிதவியல், பி.எஸ்.சி. உயிரியல், பி.காம் பொது, பி.காம். கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப் ஆகிய இளநிலை படிப்புகளும், எம்.எஸ்.சி. கணிதவியல், எம்.காம்., வணிகவியல் ஆகிய முதுநிலை பட்டப் படிப்புகளும் வழங்கப்படுகின்றன. 
சுயஉதவிக் கல்லூரியில் பி.சி.ஏ, பி.பி.ஏ, பி.எஸ்.சி. கம்யூ.சயின்ஸ், பி.எஸ்.சி. பயோகெமிஸ்ட்ரி,பி.காம். பொது, பி.காம் கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப், பி.காம் இன்பர்மேஷன் சிஸ்டம் மேனேஜ்மெண்ட், பி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், பி.காம்., அக்கவுண்ட்ஸ், பைனான்ஸ்., பி.எஸ்.சி. விஷூவல் கம்யூனிகேஷன் ஆகிய இளநிலை பட்டப்படிப்புகளும், எம்.பி.ஏ., எம்.எஸ்.சி., பயோகெமிஸ்டரி, எம்.பில், கணிதவியல், எம்.பில். வணிகவியல் ஆகிய முதுநிலை பட்டப்படிப்புகளும், அக்கவுண்ட்ஸ் மற்றும் ஆடிட்டிங், கம்யூட்டரைஸ்டு அக்கவுண்டிங், கம்யூட்டர் அசெம்பிளிங் மற்றும் சர்வீஸ் ஆகிய டிப்ளமோ படிப்புகளும் கற்றுத் தரப்படுகின்றன.
 

]]>
http://www.dinamani.com/education/2018/may/26/அரை-நூற்றாண்டு-சேவையில்-கெளரிவாக்கம்-எஸ்ஐவிஇடி-கல்லூரி-2926790.html
2926789 கல்வி தலை சிறந்த மாணவிகளை உருவாக்கும் வித்யாசாகர் மகளிர் கல்லூரி DIN DIN Saturday, May 26, 2018 02:05 AM +0530 மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என்ற கவிமணியின் பொன்மொழிக்கேற்ப மாதவத்தின் பயனால் பெற்றெடுத்த பெண் பிள்ளையின் எதிர்காலத்தை சிறப்பாகக் கவனத்தில் கொண்டு அற்புதமான உள்கட்டமைப்புகளுடன் பெண்ணின் எதிர்கால வாழ்க்கைச் சூழலைப் பிறர் வியக்கும்படியாக வடிவமைக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டதே செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கல்லூரி.
சாதாரண பெண் சாதனைகள் பல படைக்கும் வகையில் தூண்டுகோலாய் செயல்பட்டு கல்வி, விளையாட்டு, ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்தோடு, வேலைவாய்ப்பினையும் பெற்று உலகம் என் கையில் என்ற தன்னிறைவோடு செல்லக்கூடிய அளவில் அனைத்து முயற்சிகளிலும் செவ்வனே 12 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் வித்யாசாகர் மகளிர் கல்லூரியின் சிறப்பம்சங்கள் குறித்து கல்லூரியின் தலைவர் ஹஸ்திமால் சுரானா கூறியதாவது:
பெண்களுக்கு பாதுகாப்பு அவசியம். அந்தப் பாதுகாப்பை அவர்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் தற்காப்புக்கலையானது அனைத்து மாணவியருக்கும் பயிற்றுவிக்கப்படுகிறது. இங்கு யோகாசனம் அனைத்து மாணவியருக்கும் பயிற்றுவிக்கப்படுகிறது.
நாட்டு நலப்பணித்திட்டம், செஞ்சிலுவை சங்கம் முதலான சங்கங்கள் மூலம் மாணவியருக்கு பெரிதும் தேவைப்படும் உயர்பண்புகளான சேவை, தியாகம், உதவி ஆளுமைத்தன்மை முதலான குணங்களை மேம்படுத்தும் நோக்குடன் இக்கல்லூரி செயல்பட்டு வருகிறது.
பல்கலைக்கழகப் பாடத்திட்டம் மட்டுமல்லாமல் அழகுக்கலை முதலான சான்றிதழ் படிப்புகளும், பட்டயப்படிப்புகளும் பயிற்றுவிக்கப்படுவதால், சுயதொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்திக்கொள்ள ஏதுவாக அமைகிறது என்றார் அவர்.
ஆங்கில மொழி பயிற்சிக் கூடமும் ஹிந்தி மொழிப்பயிற்சிக் கூடமும் சிறப்பான முறையில் அமைக்கப்பெற்று, அற்புதமான முறையில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதால் சென்னை பல்கலைக்கழகத் தேர்வுகளில் தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்று, பட்டம் பெற்ற கையுடன் பணி ஆணையினையும் பெற்று திறம் படைத்தவர்களாய் உலகத்தரம் வாய்ந்த பெரிய நிறுவனங்களில் பணிபுரியும் வாய்ப்பினைப் பெற்றவர்களாக வெளியேறும் மாணவியர் பலர் சாட்சியாக உள்ளனர். தலைசிறந்த மாணவிகளை வித்யாசாகர் மகளிர் கல்லூரி உருவாக்கி வருகிறது என்றால் அது மிகையல்ல.
பாதுகாப்பாகப் பயணம் செய்ய அனைத்துத் தடங்களிலும் பேருந்து வசதியுடன் பெண்கள் தம் வாழ்க்கைச் சூழலை மேம்படுத்திக்கொள்ளத் தேவையான அனைத்து வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தருவதில் முதன்மையான கல்லூரியாகத் திகழ்கிறது வித்யாசாகர் மகளிர் கல்லூரி.

ஹஸ்திமால் சுரானா
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/26/w600X390/hasthimal.jpg http://www.dinamani.com/education/2018/may/26/தலை-சிறந்த-மாணவிகளை-உருவாக்கும்-வித்யாசாகர்-மகளிர்-கல்லூரி-2926789.html
2926788 கல்வி மாணவர்களின் போட்டித்திறனை வளர்க்கும் குமாரராணி மீனா முத்தையா கலை & அறிவியல் கல்லூரி DIN DIN Saturday, May 26, 2018 02:05 AM +0530 கல்வித் துறையில் தொலைநோக்குப் பார்வை கொண்ட ராஜா அண்ணாமலைச் செட்டியாரின் பேத்தியான செட்டிநாடு குமாரராணி டாக்டர் மீனா முத்தையா அவர்களால் 1996ல் துவங்கப்பட்ட கல்லூரிதான் சென்னை நகரில் முக்கிய பகுதியான அடையாறில் அமைந்த குமாரராணி மீனா முத்தையா கலை & அறிவியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரி சென்னைப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாகவும் NAAC அங்கீகாரம் பெற்றதாகவும் திகழ்கிறது.
இக்கல்வி நிறுவனம் இளம் தலைமுறையினறை சமூகப் பொறுப்புடையோராகவும் உலக ரீதியில் போட்டியிடக் கூடிய திறன் கொண்டவராகவும் உருவாக்குவதுடன் நாட்டிற்குப் பெருமை அளிக்கும் குடிமக்களை உருவாக்கும் வகையிலும் கல்வி அறிவை ஊட்டி வருகின்றது. இக்கல்லூரி 11 இளநிலை படிப்புகளையும் ((B.Sc.,)
கணிதம், கணினி அறிவியல், நுண்ணியல், மின்னணுவியல் & தொடர்பு அறிவியல், உயிரி தொழில் நுட்பம் மற்றும் விஷூவல் கம்யூனிகேஷன், B.C.A, B.Com., (General), B.Com. (Corporate secretaryship), B.B.A., B.A., ஆங்கில இலக்கியம்) 3 முதுநிலை படிப்புகளையும்(M.Sc., IT, M.Sc., BT மற்றும் B.Com (A&F), B.C.A.,படிப்புகளையும் ஷிப்ட் II விலும் வழங்கி வருகிறது.
வழக்கமான பல்கலைக்கழக பாடத் திட்டத்துடன் கல்லூரியானது மாணவர்களுக்கு பல்வேறு அறிவு விரிவாக்கத்திற்கான குழுக்களைக் கொண்டு அவர்களது போட்டித்திறன் மட்டத்தை வளர்த்து வருகின்றது.
அவற்றுள் Vocation Training Centre, Placement & Career Guidance Cell, Women Forum,   தொழில்துறையாளருக்கான டாக்டர் மீனா முத்தையா மையம் வர்த்தகத் திறனுக்கான மையம் (வணிகவியல் ஆய்வகம்) போன்றவற்றைக் குறிப்பிடலாம். VT இயால் நிழற்படக் கலை, தையல், நகை செய்தல், ரொட்டி தயாரித்தல், அழகுக்கலை, வீடு சார்ந்த மின்னணுவியல் முதலியனவும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. வெப்-டிசைனிங் வெர்மிகம்போஸ்டிங், செய்திகள் வாசித்தல் இதழியல், வங்கி & மூலதனச் சந்தை மருத்துவ ஆய்வகத் தொழில் நுட்பம் போன்ற ஆக்கபூர்வமான திறன் வளர்க்கும் படிப்புக்களும் இங்கே வழங்கப்படுகின்றன.
இங்கு பயிலும் மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 90 விழுக்காட்டினர் உடனே வேலை வாய்ப்பு பெறுகின்றனர். 
கல்லூரியானது விளையாட்டுத் திறன் மற்றும் கலாச்சார நடவடிக்கைகள் மூலம் மாணவர்களின் திறனை வெளிக் கொணர்ந்து அவர்களின் தன்னம்பிக்கையை உயர்த்துகிறது. அத்துடன் மாணவர்களை NSS Rotaract, Nature Club, YRC, Leo Clubமற்றும் கலாம் கிளப் போன்றவற்றில் பங்கேற்கச் செய்து அவர்களின் சேவை மனப்பான்மையை மெருகேற்றுகிறது.
பல்துறை வல்லுநர்கள் மற்றும் அவர்களது வழிகாட்டலின் கீழ் டாக்டர் மீனா முத்தையா கல்லூரியானது ஒவ்வொரு தனிநபரையும் போட்டி திறன் மிக்க நபராகவும் சமூகப் பொறுப்புடைய நபராகவும் உருமாற்றும் பணியில் வீறு நடை போடுகிறது என்றால் அது மிகையில்லை.
வெள்ளிவிழாவை நெருங்கிக் கொண்டிருக்கும் இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்களின் பெரும்பாலானோர் தனித்திறமையுள்ள மனிதர்களாக பல துறைகளிலும் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இனிவரும் வருடங்களிலும் பல திறமையான மாணவர்களை இக்கல்லூரி உருவாக்கும் என்பது திண்ணம்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/26/w600X390/KRMMC.jpg http://www.dinamani.com/education/2018/may/26/மாணவர்களின்-போட்டித்திறனை-வளர்க்கும்-குமாரராணி-மீனா-முத்தையா-கலை--அறிவியல்-கல்லூரி-2926788.html
2926778 கல்வி பி.இ. ஆன்லைன் விண்ணப்பப் பதிவு: ஜூன் 2 வரை கால அவகாசம் நீட்டிப்பு DIN DIN Saturday, May 26, 2018 01:20 AM +0530 மூன்று மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பி.இ. ஆன்லைன் விண்ணப்பப் பதிவுக்கான கால அவகாசத்தை ஜூன் 2ஆம் தேதி வரை அண்ணா பல்கலைக்கழகம் நீட்டித்துள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் 100 நாள்களுக்கும் மேலாகப் போராடி வந்தனர். இதை தமிழக அரசும் மத்திய அரசும் கண்டுகொள்ளாததைத் தொடர்ந்து, கவனத்தை ஈர்க்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தை மக்கள் மேற்கொண்டனர்.
போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த போலீஸார் 144 தடை உத்தரவைப் பிறப்பித்தனர். அதையும் மீறி போராடியவர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். இதனால் பதற்றமான சூழ்நிலை உருவானது. போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், போராட்டக்காரர்கள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளக்கூடாது என்பதற்காக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களிலும் இணையதள வசதியை அரசு முடக்கியுள்ளது.
இதன் காரணமாக அந்த மூன்று மாவட்டங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த மூன்று மாவட்டங்களில் பொறியியல் படிக்கும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு மே 25, 26, 28 தேதிகளில் நடைபெற இருந்த பருவத் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது.
நீட்டிப்பு: அதே போன்று பி.இ. படிப்பில் சேர இருக்கும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஆன்லைன் விண்ணப்பப் பதிவுக்கான கால அவகாசத்தை மேலும் மூன்று நாள்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நீட்டித்துள்ளது. இந்த கால அவகாசம் முன்னர் மே 30 ஆம் தேதியுடன் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி: தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் இணையதள வசதி இல்லாத காரணத்தால், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2018இல் பங்கேற்பதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவுக்கான கால அவகாசம் ஜூன் 2ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2012/9/20/5/w600X390/annauniv1.jpg http://www.dinamani.com/education/2018/may/26/பிஇ-ஆன்லைன்-விண்ணப்பப்-பதிவு-ஜூன்-2-வரை-கால-அவகாசம்-நீட்டிப்பு-2926778.html
2926676 கல்வி பத்தாம் வகுப்பு விடைத்தாள் மறுகூட்டல் விண்ணப்ப தேதி மாற்றம் DIN DIN Friday, May 25, 2018 01:44 PM +0530 சென்னை: தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், பத்தாம் வகுப்பு விடைத்தாள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் தேதி மாற்றப்பட்டுள்ளதாக அரசு தேர்வுத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், இணையதள சேவை நிறுத்தம் மற்றும், 144 தடையுத்தரவு காரணமாக, பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் தேதி மாற்றப்படுகிறது.

இந்த துாத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு மட்டும், இயல்பு நிலை திரும்பியதும், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க, மூன்று நாட்கள் அவகாசம் அளிக்கப்படும்.  எனவே, மாணவர்களும், பெற்றோரும் பதற்றம் அடைய தோவையில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/25/w600X390/exam.jpg http://www.dinamani.com/education/2018/may/25/பத்தாம்-வகுப்பு-விடைத்தாள்-மறுகூட்டல்-விண்ணப்ப-தேதி-மாற்றம்-2926676.html
2924117 கல்வி கால்நடை மருத்துவ படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு  DIN DIN Monday, May 21, 2018 03:51 PM +0530 பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழகத்தில் 6 இடங்களில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்பில் பேச விரும்பும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இன்று முதல் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ்., சித்த மருத்துவம், ஆயுர்வேதம் உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

ஆனால், கால்நடை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை பிளஸ் 2 தேர்வு முடிவுகளின் அடிப்படையிலேயே நடைபெற உள்ளது. மருத்துவப் படிப்புகளில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கும் மாணவர்கள் அதிக முக்கியத்துவம் அளிப்பது உண்டு. 

பிற மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், நிகழாண்டு கால்நடை மருத்துவப் படிப்பில் சேருவதற்கு அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் ஆர்வம் காட்டுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கல்லூரிகள்: 
1. சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி, சென்னை - 600 007
2. நாமக்கல் - கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், 637 002
3. கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி - 627 358
4. கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு, தஞ்சாவூர் - 614 625
5. உணவு மற்றும் பால் தொழில்நுட்ப கல்லூரி, கொடுவல்லி, சென்னை - 600 052 
6. கோழி வளர்ப்பு மற்றும் மேலாண்மை கல்லூரி, ஓசூர் - 635 110

கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு, உணவுத் தொழில்நுட்ப பட்டப் படிப்பு, கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு, பால்வள தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கென மொத்தம் 360 இடங்கள் உள்ளன.  

துறைவாரியான சேர்க்கைக்கான இடங்கள்:
1. BVSc & AH 5½ Years (4½ Years +1 Year Internship - as per MSVE Regulation 2016) - 306
2. BTech (Food Technology) 4 years  - 40
3. BTech (Poultry Technology) 4 years  - 40
4. Technology) 4 years  - 20

மேற்கண்ட படிப்புகளில் சேர இன்று திங்கள்கிழமை (மே 21) முதல் தொடங்கி அடுத்த மாதம் (ஜூன் 6) தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கவும், கட்டணம் செலுத்தலாம். 

விண்ணப்பம் சமர்ப்பித்து கட்டணம் செலுத்திய பின், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தகுந்த சான்றிதழ் நகல்களை சேர்க்கைக்குழு தலைவரின் அஞ்சல் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞசல் முகவரி: "The Chairman, Admission Committee (UG),Tamil Nadu Veterinary and Animal Sciences University, Madhavaram Milk Colony, Chennai-600 051"

மேலும் முழுமையான விவரங்களை http://www2.tanuvas.ac.in/UGAdmission/Instructions/Prospectus.pdf என்ற லிங்கில் சென்று படித்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/21/w600X390/BVSc.jpg http://www.dinamani.com/education/2018/may/21/தமிழ்நாடு-கால்நடை-மருத்துவ-அறிவியல்-பல்கலைக்கழகத்தில்-சேர-இணையத்தில்-விண்ணப்பிங்கள்-வரவேற்பு-2924117.html
2922303 கல்வி தமிழகத்தில் 20 அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவு: ஆசிரியர் கூட்டமைப்பினர் கடும் எதிர்ப்பு DIN DIN Friday, May 18, 2018 04:13 PM +0530 தமிழகத்தில் 20 அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளை மூட உத்தரவிட்ட தமிழக அரசுக்‍கு மாணவ-மாணவியர், பெற்றோர், ஆசிரியர் கூட்டமைப்பினர் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 32 அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில், 20 பள்ளிகளை மூட வலியுறுத்தி கடந்த 9-ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. மூடவுள்ள இந்த 20 பள்ளிகளை, ஆசிரியர் பணியிடை பயிற்சி நிலையங்களாக மாற்றப்படும் எனவும், மொத்த மாணவர் சேர்க்கை இடம் 3 ஆயிரத்தில் இருந்து 1050 ஆக குறைக்கப்பட்டுள்ளது என்றும், இந்த நடவடிக்கையை மத்திய அரசு வழிகாட்டுதலின்படி தமிழக அரசு எடுத்துள்ளதாகவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் பிளஸ் டூ தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஈ.ப.உக் எனப்படும் இரண்டாண்டு பட்டயப்படிப்பை வழங்கி வருகிறது. இதற்கான அரசின் பயிற்சி பள்ளிகளில் நாகை மாவட்டம் கீழ்வேளுரை அடுத்த குருக்கத்தியில் அமைந்துள்ள பயிற்சி பள்ளி மற்றும் தஞ்சை மாவட்டம் ஆடுதுறை ஆசிரியர் பயிற்சி பள்ளிகளும் அடங்கும். இங்கு மாணவர் சேர்க்கை திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால், கொள்ளிடம் முதல் கோடியக்கரை வரை உள்ள மாணவர்களும் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களும் இனி அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர விரும்பினால் நீண்ட தூரம் பயணம் செய்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் தான் சேர வேண்டும். இல்லையெனில் கூடுதல் கட்டணம் செலுத்தி தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர வேண்டும்.

தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு, பொதுமக்கள், மாணவ, மாணவிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நாகை வட்டாரக் கிளை அரசுக்‍கு கோரிக்‍கை விடுத்துள்ளது. இல்லை என்றால் தொடர் போராட்டங்கள் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.

]]>
http://www.dinamani.com/education/2018/may/18/தமிழகத்தில்-20-அரசு-ஆசிரியர்-பயிற்சி-பள்ளிகளை-மூட-தமிழக-அரசு-உத்தரவு-ஆசிரியர்-கூட்டமைப்பினர்-கடும்-2922303.html
2917702 கல்வி தமிழகத்தில் 28 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இல்லை: அதிகாரி தகவல் DIN DIN Friday, May 11, 2018 06:52 PM +0530 தமிழகத்தில் 28 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுவதால் அந்த கல்லூரிகளில் வருகிற (2018-2019) கல்வியாண்டுக்கான முதலாம் ஆண்டு பி.இ. மாணவர் சேர்க்கை இல்லை என்று அகில இந்திய தொழில்நுட்ப குழு மண்டல தலைவர் பாலமுருகன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் 562 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் அண்ணா பல்கலைக்கழகம் மூலம் நடத்தப்படும் கலந்தாய்வு மூலம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் பெற்று வருகிறது. 

இந்நிலையில், தமிழக்தில் 28 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இல்லை என சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அகில இந்திய தொழில்நுட்பக் குழுவின் மண்டல தலைவர் பாலமுருகன் கூறியுள்ளார்.

அதாவது, தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 28 கல்லூரிகள் தங்கள் கல்லூரிகளை மூடக்கோரி அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழுவிற்கு விண்ணப்பித்துள்ளன. அந்த கல்லூரிகளை மூட அனுமதி இன்னும் வரவில்லை. ஆனால், அனுமதி வந்தாலும் வரவில்லை என்றாலும் கல்லூரிகள் மூடவேண்டும் என்று முடிவு செய்து விண்ணப்பித்து விட்டால் அந்தக்கல்லூரிகள் இந்த கல்வியாண்டுக்கான (2018-2019) மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது. நடத்தவும் மாட்டார்கள்.

ஆனால், அந்த கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு, நான்காம் ஆண்டுக்கான வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும். அதனால் மாணவர்கள் அந்த கல்லூரிக்கு செல்வார்கள். ஆனால் புதியதாக முதலாம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை மட்டும் இருக்காது. இந்த கல்லூரிகள் அனைத்தும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வில் கல்லூரிகளின் பட்டியல் இடம் பெறாது என தெரிவித்தார்.

மேலும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கான அனுமதி பெறவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் காரணமாக தமிழகத்தில் உள்ள 23 நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் விண்ணப்பித்து அனுமதி பெற்றுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கை மிகக்குறைவாக இருந்ததன் காரணமாகவே, 28 கல்லூரிகள் மூடும் நிலையில் உள்ளன. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2014/6/30/1/w600X390/be_counselling.jpg http://www.dinamani.com/education/2018/may/11/தமிழக்தில்-28-பொறியியல்-கல்லூரிகளில்-மாணவர்-சேர்க்கை-இல்லை-அதிகாரி-தகவல்-2917702.html
2913519 கல்வி 8-ம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்துக்கு... DIN DIN Saturday, May 5, 2018 02:18 AM +0530 தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு சான்றிதழ்கள் தேர்வர்களுக்கு நேரடியாக விரைவு அஞ்சல் மூலம் 
மே 8-ஆம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பப்பட்டுள்ளது. 
சான்றிதழ்கள் கிடைக்கப் பெறாத தேர்வர்கள் தொடர்புடைய அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகத்தை அணுக வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
 

]]>
http://www.dinamani.com/education/2018/may/05/8-ம்-வகுப்பு-தனித்தேர்வர்கள்-கவனத்துக்கு-2913519.html
2911285 கல்வி இலக்கை நிர்ணயித்து தன்னம்பிக்கையுடன் பயணித்தால் எந்த துறையிலும் சாதிக்கலாம்: கீர்த்திவாசன் பேட்டி DIN DIN Tuesday, May 1, 2018 04:17 PM +0530 இளைஞர்கள் தன்னம்பிக்கையுடன் இலக்கை நோக்கி பயணித்தால் எந்த துறையிலும் சாதிக்கலாம் என்று ஐஏஎஸ் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த கீர்த்தி வாசன் தெரிவித்தார்.

2017-ஆம் ஆண்டுக்கான முதல் நிலைத் தேர்வு 2017 ஜூன் மாதத்திலும், முதன்மைத் தேர்வுகள் 2017 அக்டோபர்- நவம்பர் மாதங்களிலும் நடத்தப்பட்டது. இறுதித் தேர்வான ஆளுமைத் திறன் தேர்வு கடந்த பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை நடத்தப்பட்டது.

இதற்கான இறுதித் தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி வெள்ளிக்கிழமை வெளியிட்டது. நாடு முழுவதிலும் இருந்து 2500 பேர் பங்கேற்ற இந்த இறுதித் தேர்வில், 990 பேர் தகுதி பெற்றவர்களாக யுபிஎஸ்சி அறிவித்துள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த கீர்த்தி வாசன் என்பவர் அகில இந்திய அளவில் 29 ஆவது இடமும், தமிழக அளவில் முதலிடமும் பிடித்து அசத்தியுள்ளார்.

திருச்சி என்.ஐ.டி.-யில் பி.டெக். (கட்டடவியல்) பட்டதாரியான கீர்த்தி வாசன் தருமபுரியைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை வெங்கடேஷ்பாபு தருமபுரியில் வர்த்தகராக இருக்கிறார். இவர், யு.பி.எஸ்.சி. குடிமைப் பணித் தேர்வின் மூன்று நிலைகளிலும், முதல் முயற்சியிலேயே தகுதி பெற்று சாதனை படைத்திருக்கிறார்.

இந்நிலையில், இன்று சொந்த ஊரான தர்மபுரிக்கு வந்த கீர்த்திவாசனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஆர்வம், முயற்சியின் காரணமாக முதல்நிலை, முதன்மை, ஆளுமைத் திறன் தேர்வு என மூன்று நிலைகளிலும் முதல் முயற்சியிலேயே தகுதி பெற்று, இப்போது இந்திய அளவில் 29-ஆவது ரேங்க் பெற்றிருக்கிறேன். இளைஞர்கள் தன்னம்பிக்கையுடன் தங்கள் இலக்கை நோக்கி பயணித்தால் எந்தத் துறையிலும் சாதிக்கலாம் என கூறினார்.

மேலும் சிவில் சர்வீஸ் தேர்வு குறித்த ஆலோசனைக்காக தன்னை அணுகலாம் எனக் கூறினார். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/1/w600X390/keerthivasan.jpg http://www.dinamani.com/education/2018/may/01/இலக்கை-நிர்ணயித்து-தன்னம்பிக்கையுடன்-பயணித்தால்-எந்த-துறையிலும்-சாதிக்கலாம்-கீர்த்திவாசன்-பேட்டி-2911285.html
2910570 கல்வி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள பொறியியல் படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் மூலம் கலந்தாய்வு DIN DIN Monday, April 30, 2018 12:39 PM +0530 சென்னை: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள பொறியியல் படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நிர்வாக சீர்கேடு காரணமாக ஊழியர்களுக்கே சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசே ஏற்றது. அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவ படிப்புகளுக்கு தமிழக அரசே கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கையை மேற்கொண்டது.

இந்நிலையில், தற்போது அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் படிப்புகளுக்கு, அண்ணா பல்கலைக்கழகமே கலந்தாய்வு நடத்தும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக அரசின் முதன்மை செயலாளர் சுனில் பாலிவால் நேற்று வெளியிட்டுள்ள அரசு ஆணையில் கூறப்பட்டு இருப்பதாவது:

அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகத்தின் அனுமதியுடன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகள் என 10 பிரிவுகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த பாடப்பிரிவுகளில் மொத்தம் ஆயிரத்து 20 மாணவர்களை சேர்ப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

அண்ணாமலை பல்கலைக்கழகம் 2013-ஆம் ஆண்டு சட்டப்படி அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை-2018 ஒற்றைச்சாளர முறை கலந்தாய்வில் சேர்த்து நடத்த வேண்டும் என்று அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதை அரசு நன்கு பரிசீலனை செய்து பொறியியல் பாடப்பிரிவுகளில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேருவதற்கு தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை ஒற்றைச்சாளர முறையில் ஆன்-லைன் கலந்தாய்வு நடத்த இந்த கல்வியாண்டு (2018-2019) முதல் அனுமதி அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் படிப்புகளுக்கும் இனி அண்ணா பல்கலைக்கழகமே கலந்தாய்வை நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

]]>
 AnnamalaiUniversity , AnnaUniversity EngineeringCounselling, EngineeringCounselling, AnnaUniversity http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2013/5/17/4/w600X390/annamalaiuniversity.jpg http://www.dinamani.com/education/2018/apr/30/அண்ணாமலை-பல்கலைக்கழகத்தில்-உள்ள-பொறியியல்-படிப்புகளுக்கு-அண்ணா-பல்கலைக்கழகம்-மூலம்-கலந்தாய்வு-2910570.html
2906158 கல்வி பி.இ. சேர்க்கை: மே 3 முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்: ஜூலை முதல் வாரத்தில் ஆன்-லைன் கலந்தாய்வு DIN DIN Tuesday, April 24, 2018 01:24 AM +0530 பி.இ. சேர்க்கைக்கு மே 3 ஆம் தேதி முதல் ஆன்-லைன் மூலம் விண்ணப்பபிக்கலாம். இதற்கான அறிவிப்பு ஏப்ரல் 29 ஆம் தேதி வெளியிடப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
பி.இ. சேர்க்கைக்கான ஆன்-லைன் கலந்தாய்வு ஜூலை முதல் வாரத்தில் தொடங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
500-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளில்...தமிழகம் முழுவதும் உள்ள 500-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள அரசு ஒதுக்கீட்டு பி.இ., பி.டெக். இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இதுவரை, தமிழகம் முழுவதும் உள்ள மாணவ, மாணவிகள் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க தங்களுடைய பெற்றோருடன் சென்னைக்கு வரவேண்டி இருந்தது.
ஆன்-லைன் மூலம் மட்டுமே கலந்தாய்வு: இந்தச் சிரமத்தைப் போக்கும் வகையில், முழுமையாக ஆன்-லைன் கலந்தாய்வு முறையை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன் காரணமாக 2018-19-ஆம் கல்வியாண்டு பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க மாணவர்கள் சென்னைக்கு வரவேண்டியதில்லை. மாறாக, வீட்டில் இருந்தபடியே கலந்தாய்வில் பங்கேற்று, இடங்களைத் தேர்வு செய்யலாம். சான்றிதழ் சரிபார்ப்புக்கு மட்டும், அந்தந்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள கலந்தாய்வு உதவி மையத்துக்குச் செல்ல வேண்டும். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 42 கலந்தாய்வு உதவி மையங்கள் அதிவேக இணையதள வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆன்-லைன் கலந்தாய்வு குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது . இதில் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், செயலாளர் சுனில் பாலிவால், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கணேசன், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் அமைச்சர் கே.பி. அன்பழகன் அளித்த பேட்டி: பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு 2018-ஆம் ஆண்டு முதல் இணையதளம் வாயிலாக நடத்தப்படுகிறது. இதில் இணையதள வசதி இல்லாத மாணவர்கள் மற்றும் கிராமப்புற மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் 42 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் மாணவர்களுக்கு வழிகாட்டி மையங்களாகவும், அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மையங்களாகவும் திகழும்.
என்னென்ன வசதிகள்?: இந்த மையங்களில் இணையதள வசதியுடன் கூடிய கணினிகள், அச்சுப் பொறிகள், பயிற்சிபெற்ற நபர்கள், கருத்தரங்கு மண்டபம், குடிநீர், ஆவின் பாலகம், சிற்றுண்டி உணவக வசதிகள், கழிப்பிட வசதி உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றிருக்கும். 
விண்ணப்பப் பதிவு எப்போது?: ஆன்-லைன் விண்ணப்பப் பதிவுக்கான அறிவிப்பு ஏப்ரல் 29-ஆம் தேதி வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து, ஆன்-லைன் விண்ணப்பப் பதிவு மே 3 ஆம் தேதி தொடங்கப்படும். விண்ணப்பத்தைப் பதிவு செய்ய மே 30 கடைசி நாளாகும்.
விண்ணப்பதாரர்களின் அசல் சான்றிதழ் சரிபார்க்கும் பணி ஜூன் முதல் வாரத்தில் தொடங்கி 6 நாள்கள்நடத்தப்படும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு விண்ணப்பதாரரால் வரமுடியாதச் சூழலில், அவருடைய பெற்றோர் அல்லது உறவினர் சான்றிதழ்களை எடுத்து வரலாம். 
ஒருவேளை இந்த 6 நாள்களிலும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரமுடியாதவர்களுக்கு, மேலும் ஒரு நாள் வாய்ப்பு வழங்கப்படும். அந்த 7 ஆவது நாளில், அவர்கள் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள பொறியியல் சேர்க்கை அலுவலகத்தில் நேரடியாக சான்றிதழ்களைச் சமர்ப்பித்து, சரிபார்ப்பை முடித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள், கல்லூரி மற்றும் பாடப் பிரிவு விருப்ப வரிசையை சமர்ப்பிப்பது (கலந்தாய்வு) ஜூலை முதல் வாரத்தில் தொடங்கும். இந்த தேதியானது மருத்துவக் கலந்தாய்வு கால அட்டவணைக்கேற்ப தீர்மானிக்கப்படும். மேலும், கலந்தாய்வில் ஒவ்வொரு சுற்றுக்கும் 3 நாள்கள் கால அவகாசம் அளிக்கப்படும்.
பிளஸ்-2 மதிப்பெண்: விண்ணப்பதாரர்கள், பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியான பிறகு அவர்களுடைய மதிப்பெண்களைப் பதிவு செய்யும் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. மாணவர்களின் பிளஸ்-2 தேர்வு பதிவு எண்ணைக் கொண்டு, விண்ணப்பதாரர்களின் பிளஸ்-2 மதிப்பெண் அதிகாரிகளாலும் சரிபார்த்துக்கொள்ளப்படும்.
மாணவர்களுக்கு கையேடு: கிராமப்புற மாணவர்களுக்கு உதவும் வகையில், ஆன்-லைன் கலந்தாய்வில் எவ்வாறு பங்கேற்பது என்பது குறித்த அவர்களின் சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில் சிறிய அளவிலான வழிகாட்டி கையேடு ஒன்று இம்முறை வழங்கப்பட உள்ளது. அதனுடன், வழக்கமாக வழங்கப்படும் 550 பக்கங்கள் கொண்ட பொறியியல் கல்லூரிகளின் விவரங்கள் அடங்கிய கையேடும் வழங்கப்படும். மாணவர்கள், சான்றிதழ் சரிபார்ப்புக்காக கலந்தாய்வு உதவி மையத்துக்கு வரும்போது, இந்தக் கையேடுகள் அவர்களுக்கு வழங்கப்படும். அதோடு, ஆன்-லைன் கலந்தாய்வு குறித்த காணொலி காட்சியும் மையத்தில் மாணவர்களுக்கு காண்பிக்கப்படும்.
தெரிவை மாற்ற வாய்ப்பு: மாணவர்கள் ஜூலை முதல் வாரத்தில் கல்லூரியைத் தேர்வு செய்து பதிவு செய்தால் போதும். கல்லூரியைத் தேர்வு செய்து பதிவு செய்த பிறகுகூட தங்களது தெரிவுகளை மாற்றிக் கொள்ளவும் மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும்.
மேலும், மாணவர்களுக்கு கூடுதல் வசதியாக, ஆன்லைன் விண்ணப்பத்தில் கல்லூரி மற்றும் பாடப் பிரிவை தேர்வு செய்ய அளவற்ற வாய்ப்புகள் வழங்கப்படும். அதாவது கல்லூரியைத் தேர்வு செய்யும் இடத்தில் ஒரே ஒரு கல்லூரியை மட்டும் அல்லாமல், ஒரு மாணவர் உதாரணமாக 25 கல்லூரியைக் கூட தேர்வு செய்யலாம். இதில் எந்த உச்ச வரம்பும் இல்லை. அது போல, கல்லூரி, பாடப்பிரிவு, விருப்ப வரிசை என எத்தனை இடங்களையும் அவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என்றார் அமைச்சர் கே.பி.அன்பழகன்.
மாணவர் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் கல்லூரி பட்டியல்
பொறியியல் கல்லூரிகளின் தரம் குறித்து மாணவர்கள் ஓரளவு புரிந்து கொள்ளும் வகையில், பொறியியல் கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்பாக, மாணவர் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளின் வரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடும்.
அதுபோல, இந்த ஆண்டும் மாணவர் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையிலான பொறியியல் கல்லூரிகள் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும் என அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
19 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நிறுத்தம்
மாணவர் சேர்க்கை குறைந்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் 19 பொறியியல் கல்லூரிகள் இந்த முறை மாணவர் சேர்க்கையை முழுவதுமாக நிறுத்த உள்ளதாக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
கடந்த 2017-18-ஆம் கல்வியாண்டில் ஒற்றைச்சாளர பொறியியல் கலந்தாய்வில் தமிழகம் முழுவதிலும் உள்ள 586 பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகள் பங்கேற்றன. இந்த நிலையில், இப்போது 19 பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை முழுமையாக நிறுத்த உள்ளன. எனவே, இப்போது நடைபெறும் 2018-19-ஆம் ஆண்டு பி.இ. கலந்தாய்வில் 567 பொறியியல், தொழில்நுட்ப கல்லூரிகள் மட்டுமே பங்கேற்க உள்ளன என்றார் அவர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/24/w600X390/anbalagan.jpg பிஇ ஆன்லைன் விண்ணப்பப் பதிவு, கலந்தாய்வு குறித்த கையேட்டை சென்னையில் திங்கள்கிழமை வெளியிட்ட உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன். http://www.dinamani.com/education/2018/apr/24/பிஇ-சேர்க்கை-மே-3-முதல்-ஆன்-லைனில்-விண்ணப்பிக்கலாம்-ஜூலை-முதல்-வாரத்தில்-ஆன்-லைன்-கலந்தாய்வு-2906158.html
2903591 கல்வி கல்வியாண்டின் இறுதி வேலை நாள் அறிவிப்பில் குளறுபடி: குழப்பத்தில் ஆசிரியர்கள் DIN DIN Saturday, April 21, 2018 12:34 PM +0530 கல்வியாண்டின் இறுதி வேலை நாள் குறித்த கல்வித் துறையின் அறிவிப்பால்  குளறுபடி ஏற்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலும் பள்ளிகளின் மொத்த வேலை நாள்களின் எண்ணிக்கை, விடுமுறை நாள்கள் ஆகியவை குறித்து கல்வித் துறை சார்பில் கல்வித் துறையின் அலுவலர்களுக்கும், பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுவிடும். அதன்படி பள்ளிகள் இயங்கும். 
இதேபோல் 27.06.2017 அன்று வேலூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகளுக்கான பணி நாள்கள் என்று குறிப்பிட்டு அனுப்பிய பட்டியலில் கோடை விடுமுறை 20.04.2018 முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 
இந்த அறிவிப்பின்படி தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் வியாழக்கிழமை ஓவியத் தேர்வை நடத்திய பள்ளித் தலைமை ஆசிரியர்கள், மாலை பள்ளியை முடித்து மீண்டும் பள்ளி ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்படும் என்று மாணவர்களுக்கு அறிவித்து அனுப்பி விட்டனர். 
இந்நிலையில், மாணவர்கள் வீடுகளுக்குச் சென்ற பின்னர், மாலை 4.10-க்கு மேல் தலைமை ஆசிரியர்களின் செல்லிடப்பேசிக்கு மாவட்ட மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களிடம் இருந்து வந்த தகவலில் ஏப்ரல் 20-ஆம் தேதி (வியாழக்கிழமை) இறுதி வேலை நாள் எனவும்,  அன்று பள்ளிகள் இயங்கும் எனவும், ஏப்ரல் 21 முதல் கோடை விடுமுறை என்வும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்த தலைமை ஆசிரியர்கள் குழப்பமான மனநிலைக்கு உள்ளாகினர்.
மேலும், கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்ட மாணவர்களை 20-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) எப்படி பள்ளிக்கு அழைப்பது என தெரியாமல் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தவிப்பிற்குள்ளாகினர்.
மேலும், ஆண்டு முழுவதும் 210 நாள்கள் பள்ளிகள் இயங்கியதாக குறிப்பிட்டு வட்டார வள மையங்களுக்கு வியாழக்கிழமை மாலை அனுப்பப்பட்ட ஆண்டு அறிக்கைகளில் தற்போது 211 நாள்கள் என்று மாற்றம் செய்ய வேண்டிய நிலைக்கு தலைமை ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். 
மேலும், அனைத்து வேலை நாள்களிலும் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு 100 சதவீத வருகைப் பதிவு செய்த நிலையில், தற்போது வெள்ளிக்கிழமை பள்ளிக்கு அவர்கள் வரவில்லையென்றால் 100 சதவீத வருகைப் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் வெள்ளிக்கிழமை எத்தனை மாணவர்களுக்கு சத்துணவு தயாரிப்பது, மாணவர்களே வராத நிலையில் சத்துணவைத் தயாரிக்காமல் விட்டு விடுவதா? என சத்துணவு அமைப்பாளர்களும் குழப்பமடைந்துள்ளனர். 
பள்ளிக் கல்வித் துறை உயர் அலுவலர்களின் விடுமுறை தொடர்பான அறிவிப்பால் ஆசிரியர்களும், மாணவர்களும் மனஉளைச்சலுக்கு உள்ளாகினர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/23/w600X390/teacher.JPG http://www.dinamani.com/education/2018/apr/20/கல்வியாண்டின்-இறுதி-வேலை-நாள்-அறிவிப்பில்-குளறுபடி-குழப்பத்தில்-ஆசிரியர்கள்-2903591.html
2902124 கல்வி நீட் தேர்வு: இணையதளத்தில் 'ஹால் டிக்கெட்' DIN DIN Wednesday, April 18, 2018 01:24 AM +0530 எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நீட் தேர்வுக்கான அனுமதிச் சீட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
2018-2019-ஆம் கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு மே மாதம் 6-ஆம் தேதி நீட் நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது. 
கடந்த ஆண்டு 11 லட்சம் பேர் நாடு முழுவதும் இந்தத் தேர்வை எழுதிய நிலையில், இந்த ஆண்டு 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத உள்ளனர்.
இத்தேர்வுக்கான விண்ணப்ப நடைமுறைகள் மார்ச் 9-ஆம் தேதி நிறைவுபெற்றது. இந்த நிலையில் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு ஏப்ரல் 2-ஆம் வாரத்தில் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 
ஆனால் திங்கள்கிழமை வரை அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை. 
இதனால் மாணவர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்தத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான இணைப்பு மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) நீட் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் https://cbseneet.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்ட இணைப்பில் சென்று, தங்களுடைய நீட் விண்ணப்ப எண் அல்லது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு, தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

]]>
http://www.dinamani.com/education/2018/apr/18/நீட்-தேர்வு-இணையதளத்தில்-ஹால்-டிக்கெட்-2902124.html
2901535 கல்வி நீட் தேர்வு: 'ஹால் டிக்கெட்' எப்போது? DIN DIN Tuesday, April 17, 2018 02:21 AM +0530 நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு இந்த வாரத்தில் விநியோகிக்கப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிகழ் கல்வியாண்டில், எம்.பி.பி.எஸ். படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு மே மாதம் 6 -ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு 11 லட்சம் பேர் நாடு முழுவதும் இந்தத் தேர்வை எழுதிய நிலையில், இந்த ஆண்டு 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வெழுத உள்ளனர்.
இந்தத் தேர்வுக்கான விண்ணப்ப நடைமுறைகள் மார்ச் 9 -ஆம் தேதி நிறைவு பெற்றது. இந்த நிலையில், தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு ஏப்ரல் 2 -ஆம் வாரத்தில் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதில் தாமதம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, 'நீட் தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு தொடர்பான அறிவிப்பு இந்த வாரத்தில் எந்த நேரம் வேண்டுமானாலும் வெளியிடப்படலாம்' என அவர்கள் தெரிவித்தனர். 
ஆனால், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) இணையதளத்தில் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு வெளியீடு தொடர்பாக எவ்வித அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.
 

]]>
http://www.dinamani.com/education/2018/apr/17/நீட்-தேர்வு-ஹால்-டிக்கெட்-எப்போது-2901535.html
2901534 கல்வி முதுநிலை மருத்துவம்: இடங்களைச் சமர்ப்பிக்க அவகாசம் நீட்டிப்பு DIN DIN Tuesday, April 17, 2018 02:21 AM +0530 முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதார சேவைகள் இயக்ககத்தின் மருத்துவக் கலந்தாய்வுக் குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு: முதுநிலை மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான முதல் கட்டக் கலந்தாய்வில் பங்கேற்று இடங்களைப் பெற்று, அடுத்த கட்டக் கலந்தாய்வில் பங்கேற்க விரும்பாத மாணவர்கள் தங்கள் இடங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஏப். 19-ஆம் தேதி மாலை 5 மணி வரை மாணவர்கள் தங்கள் இடங்களை குறிப்பிட்ட கல்லூரிகளில் புறக்கணிக்கலாம் அல்லது சமர்ப்பிக்கலாம்.
 

]]>
http://www.dinamani.com/education/2018/apr/17/முதுநிலை-மருத்துவம்-இடங்களைச்-சமர்ப்பிக்க-அவகாசம்-நீட்டிப்பு-2901534.html
2901533 கல்வி சென்னைப் பல்கலை.யில் முதுநிலை படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் DIN DIN Tuesday, April 17, 2018 02:21 AM +0530 சென்னை பல்கலைக்கழகத் துறைகளில் முதுநிலைப் படிப்புகள், எம்.ஃபில். படிப்புகளில் சேர புதன்கிழமை (ஏப்.18) முதல் விண்ணப்பத்தைப் பதிவு செய்யலாம் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி: சென்னைப் பல்கலைக்கழகத்தில் உள்ள 70-க்கும் மேற்பட்டத் துறைகளில் முதுநிலைப் படிப்புகள், எம்.ஃபில். படிப்புகளில் சேர்க்கை பெற விண்ணப்பங்களை ஆன்-லைனில் புதன்கிழமை முதல் பதிவு செய்யலாம். பதிவு செய்ய ஜூன் 18 கடைசி நாளாகும். முதுநிலை பட்டயப் படிப்புகள், பட்டயப் படிப்புகள், சான்றிதழ் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
 

]]>
http://www.dinamani.com/education/2018/apr/17/சென்னைப்-பல்கலையில்-முதுநிலை-படிப்புகளில்-சேர-நாளை-முதல்-விண்ணப்பிக்கலாம்-2901533.html
2900100 கல்வி பாரதியார் பல்கலை.யில் பிஹெச்.டி. படிப்பு: மே 7-க்குள் விண்ணப்பிக்க அறிவிப்பு DIN DIN Saturday, April 14, 2018 11:51 AM +0530 கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பிஹெச்.டி., எம்.ஃபில். படிப்புகளில் சேர மாணவ}மாணவிகள் மே 7-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரதியார் பல்கலைக்கழகத்தின் துறைகளிலும், பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்களிலும் எம்.ஃபில்., பிஹெச்.டி. ஆராய்ச்சிப் பட்டப் படிப்பில் முழு நேர, பகுதி நேரமாகச் சேருவதற்கான விண்ணப்ப விநியோகம் கடந்த 10-ஆம் தேதி தொடங்கியுள்ளது. மே 7-ஆம் தேதி வரை இதற்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

2018-19 ஆம் ஆண்டுக்கான பொது நுழைவுத் தேர்வு ஜூன் 24-ஆம் தேதி நடைபெறுகிறது. எனவே, மாணவர்கள் விண்ணப்பப் படிவங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/14/w600X390/bharathiaruniversity.jpg http://www.dinamani.com/education/2018/apr/14/பாரதியார்-பல்கலையில்-பிஹெச்டி-படிப்பு-மே-7-க்குள்-விண்ணப்பிக்க-அறிவிப்பு-2900100.html
2900093 கல்வி ஆழ்கடல் மீன்பிடி, வணிகக் கப்பல்களில் வேலைவாய்ப்புக்கான படிப்பு: மே 16-க்குள் விண்ணப்பிக்கலாம் DIN DIN Saturday, April 14, 2018 10:59 AM +0530 ஆழ்கடல் மீன்பிடி, வணிகக் கப்பல்களில் வேலைவாய்ப்புக்கான படிப்புக்கு மே 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய கடல்சார், மீன்வள தொழில்நுட்பம், பயிற்சி நிறுவனம் சார்பில் வெளியிட்ட அறிக்கை: 

தமிழக மாணவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி, வணிகக் கப்பல்களில் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் இந்திய அரசின் வேளாண் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய கடல்சார், மீன்வள தொழில்நுட்பம்,  பயிற்சி நிறுவனம் சார்பில் ஆழ்கடல் மீன்பிடி, வணிகக் கப்பல்களில் பொறியாளர்கள், மாலுமி, கப்பல் இயக்கி, மெரைன் ஃபிட்டர் ஆகிய படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

இப்படிப்பில் சேரும் மாணவர்களுக்கு தங்கும் விடுதி வசதியுடன், மாதம்தோறும் ரூ.1,500 உதவித் தொகை வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கணிதம், அறிவியலில் 40 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

மே 16-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்: சென்னை ராயபுரம், எஸ்.என். செட்டி தெருவில் உள்ள மத்திய கடல்சார், மீன்வள தொழில்நுட்பம்,  பயிற்சி நிறுவனத்தில் இதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.  

மேலும், www.cifnet.gov.in இணையதளத்திலும் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மே 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து, ஜூன் 23-ஆம் தேதி இதற்கான நுழைவுத் தேர்வு நடத்தப்படும். மேலும் விவரங்களுக்கு 044-25952691 என்ற தொலைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/education/2018/apr/14/ஆழ்கடல்-மீன்பிடி-வணிகக்-கப்பல்களில்-வேலைவாய்ப்புக்கான-படிப்பு-மே-16-க்குள்-விண்ணப்பிக்கலாம்-2900093.html
2896395 கல்வி தனியார் பள்ளிகளில் இலவச ஒதுக்கீடு இடங்களை நாளை வெளியிட வேண்டும்: பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல் DIN DIN Monday, April 9, 2018 04:34 AM +0530 தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இடங்களை பள்ளிகளின் தகவல் பலகையில் செவ்வாய்க்கிழமை (ஏப்.10) வெளியிட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. 
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி. அல்லது ஒன்றாம் வகுப்பில் 25 சதவீத இடஒதுக்கீடு கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கு ஏப்ரல் 20-ம் 
தேதியில் இருந்து மே 18-ம் தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதைக் கருத்தில் கொண்டு தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி. அல்லது ஒன்றாம் வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை அந்தந்தப் பள்ளிகளின் தகவல் பலகையில் செவ்வாய்க்கிழமை (ஏப்.10) வெளியிட வேண்டும். உதாரணமாக எல்.கே.ஜி. வகுப்பில் பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 200 இடங்கள் இருப்பின் அதில் 25 சதவீத இடங்களின் எண்ணிக்கையை பட்டியலில் குறிப்பிட வேண்டும். 
இந்தச் சேர்க்கையின்போது வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள, ஆதரவற்றோர், எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்கள், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம் இருந்து பெறப்படும் தகுதியான விண்ணப்பங்களுக்கு குலுக்கல் நடத்துவதற்கு முன்னரே முன்னுரிமை அளித்து சேர்க்கை வழங்கப்பட வேண்டும் என மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. தனியார் பள்ளி சேர்க்கைக்கு ஏப்.20-ஆம் தேதி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும்போது தேவையான ஆவணங்களை பெற்றோர் எடுத்துச் செல்ல வேண்டும். 
விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்: பாஸ்போர்ட் அளவு புகைப்படம், பிறப்புச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் (அசல்), நலிவடைந்த பிரிவினரில் இதர வகுப்பினரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருப்பின், அவர்களின் வருமானச் சான்று (அசல்), பள்ளிக்கும், மாணவர் வசிக்கும் இடத்திற்கும் இடையேயான தொலைவு ஒரு கிலோ மீட்டர் முதல் ஒன்றரை கிலோமீட்டர் சுற்றளவுக்குள் இருத்தல் வேண்டும். (வருவாய்த் துறையினரால் அளிக்கப்பட்டுள்ள இருப்பிடச்சான்று, ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை (இவற்றுள் ஏதேனும் ஒன்றின் அசல்). இந்த ஆவணங்களுடன் சென்றால் ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தைப் பதிவு செய்து அதற்கான ஒப்புகைச் சீட்டை பெற்றுக் கொள்ளலாம். 

]]>
http://www.dinamani.com/education/2018/apr/09/தனியார்-பள்ளிகளில்-இலவச-ஒதுக்கீடு-இடங்களை-நாளை-வெளியிட-வேண்டும்-பள்ளிக்-கல்வித்-துறை-அறிவுறுத்தல்-2896395.html
2891820 கல்வி உயர்கல்வித் துறை முறைகேடுகளைத் தடுக்க உயர்நிலைக் குழு: அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் வலியுறுத்தல்  சென்னை DIN Monday, April 2, 2018 03:34 AM +0530 உயர்கல்வித் துறையில் முறைகேடுகளைத் தடுக்க அதிகபட்ச அதிகாரம் கொண்ட உயர்நிலைக் குழுவை அமைப்பது அவசியம் என அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மு.அனந்தகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
 தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பு, கல்லூரி பேராசிரியர்கள் கூட்டு நடவடிக்கைக் குழு ஆகியவை சார்பில் "உயர்கல்வி துறையில் ஊழல்' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 இதில் மு.அனந்தகிருஷ்ணன் பேசியது:
 ஊழல்களே நடைபெறாத நாடுகளின் பட்டியலில் நியூசிலாந்து, பின்லாந்து, டென்மார்க், நார்வே ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன. இதில் இந்தியா 81 -ஆவது இடத்திலும், சீனா 77 -ஆவது இடத்திலும், ரஷியா 136 -ஆவது இடத்திலும் உள்ளன. ஆனால் ரஷியாவிலும், சீனாவிலும் கல்வி, விஞ்ஞானத் துறைகளில் ஊழலே இல்லை; இந்தியாவில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் உள்ளது. கல்வித் துறையில் முறைகேடுகள் காரணமாக, தரமற்ற ஆசிரியர்கள் ஒருமுறை பணியில் சேர்ந்தால் அவர்களால் ஒரு தலைமுறையைச் சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்படுவர். எனவே, இதனை ஊழல் என்று மட்டும் கருதாமல் மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் நடவடிக்கை என்பதை மக்களும், அரசும் உணர வேண்டும்.
 பணம் கொடுத்து துணைவேந்தர், பேராசிரியர் போன்ற பணிகளில் சேரும் ஆசிரியர்களை எப்படிக் கண்டறிவது, அவர்களை எவ்வாறு தகுதி நீக்கம் செய்வது, அவர்கள் மீது மேற்கொள்ளப்பட வேண்டிய சட்டப்பூர்வ நடவடிக்கை என்ன என்பவை குறித்து அரசு ஆலோசித்து, அதுதொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகபட்ச அதிகாரம் கொண்ட உயர்நிலைக் குழுவை நியமிக்க வேண்டும். அதில் மிகச்சிறந்த கல்வியாளர்கள், வல்லுநர்கள் இடம்பெற வேண்டும் என்றார் அவர்.
 மார்க்சிஸ்ட் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் பேசியது: கல்வி உலகமயமாக்கப்பட்ட வியாபாரமாகிவிட்டது. இந்தியா முழுவதும் கல்வி தனியார் வசம் உள்ளது. பொதுக்கல்வி முறை கைநழுவிப் போய்விட்டது. முன்பு தனியார் கல்வி நிறுவனங்கள் லாபநோக்கம் இல்லாமல் சமூகப் பார்வையுடன் இருந்தன. தற்போது அதில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுவிட்டது. கல்வியை காப்பாற்ற வேண்டும் என்றால் பொதுக்கல்வி முறையை பலப்படுத்த வேண்டும். அரசு அதிகாரிகளில் 70 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை நேர்மையானவர்களாக உள்ளனர். ஆனால் சில காரணங்களால் அவர்கள் வெளியில்வர அச்சப்படுகின்றனர். நேர்மையான அதிகாரிகளுக்கு உரிய அங்கீகாரமும், பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும் என்றார் அவர்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/2/w600X390/CORRUPTION.jpg http://www.dinamani.com/education/2018/apr/02/உயர்கல்வித்-துறை-முறைகேடுகளைத்-தடுக்க-உயர்நிலைக்-குழு-அண்ணா-பல்கலை-முன்னாள்-துணைவேந்தர்-வலியுறுத்த-2891820.html
2889249 கல்வி முதுநிலை மருத்துவக் கலந்தாய்வு: 11,000 இடங்கள் நிரம்பின DIN DIN Thursday, March 29, 2018 02:27 AM +0530 முதுநிலை மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான முதல்கட்ட கலந்தாய்வு முடிவு புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.
2018-19 -ஆம் ஆண்டுக்கான கலந்தாய்வு நடைமுறைகள் மார்ச் 17 -ஆம் தேதி தொடங்கின. மத்திய சுகாதாரத் துறையின் சுகாதார சேவைகள் இயக்ககம் நடத்தும் இந்தக் கலந்தாய்வின் முதல்கட்ட ஒதுக்கீடு மார்ச் 27 -ஆம் தேதி நடைபெற்றது. அதன் முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன.
அதன்படி, நாடு முழுவதும் எம்.டி., எம்.எஸ்., முதுநிலை டிப்ளமோ ஆகிய படிப்புகளுக்கு 10,450 இடங்களும், முதுநிலை பல் மருத்துவப் படிப்பில் (எம்.டி.எஸ்.) 972 இடங்கள் என மொத்தம் 11,422 இடங்கள் நிரம்பியுள்ளன. 
மாணவர்கள் தங்களுக்கான ஒதுக்கீட்டு ஆணையை www.mcc.nic.in  என்ற இணையதளத்தில் புதன்கிழமை மாலை 5 மணிக்கு மேல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இடங்களைப் பெற்ற மாணவர்கள் ஏப்ரல் 3 -ஆம் தேதிக்குள் குறிப்பிட்ட கல்லூரிகளுக்குச் சென்று சேர வேண்டும். இரண்டாம்கட்ட கலந்தாய்வு ஏப்ரல் 9,10 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. 

]]>
http://www.dinamani.com/education/2018/mar/29/முதுநிலை-மருத்துவக்-கலந்தாய்வு-11000-இடங்கள்-நிரம்பின-2889249.html
2888590 கல்வி பிளஸ் 1: காப்பியடித்த 5 பேர் பிடிபட்டனர் DIN DIN Wednesday, March 28, 2018 02:16 AM +0530 பிளஸ் 1 பொதுத் தேர்வில் காப்பியடித்ததாக தமிழகம் முழுவதும் 5 மாணவர்கள் பிடிபட்டனர்.
இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: 
பிளஸ் 1 பொதுத் தேர்வில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இயற்பியல், பொருளியல் தேர்வுகளில் ஒழுங்கீனச் செயலில் ஈடுபட்டதாக நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் தலா ஒருவர் வீதம் மொத்தம் 5 மாணவர்கள் பிடிபட்டனர்.

]]>
http://www.dinamani.com/education/2018/mar/28/பிளஸ்-1-காப்பியடித்த-5-பேர்-பிடிபட்டனர்-2888590.html
2881578 கல்வி இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 லட்சத்து 1,140 மாணவ,மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர் DIN DIN Friday, March 16, 2018 07:54 AM +0530 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்குகின்றன. இந்த தேர்வினை தனித்தேர்வர்கள் உள்பட மொத்தம் 10 லட்சத்து 1,140 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.

தமிழகம், புதுச்சேரியில் 2017-18-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று வெள்ளிக்கிழை (மார்ச்.16) முதல் தொடங்கி ஏப்ரல் 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதலாவதாக இன்று மொழிப்பாடத்தேர்வு நடைபெறுகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 4 லட்சத்து 83 ஆயிரத்து 120 மாணவர்கள், 4 லட்சத்து 81 ஆயிரத்து 371 மாணவிகள், 36 ஆயிரத்து 649 தனித்தேர்வர்கள் உள்பட மொத்தம் 10 லட்சத்து ஆயிரத்து 140 பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர். இதற்காக 3,609 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

சென்னை மாநகரில் 567 பள்ளிகளிலிருந்து 211 தேர்வுமையங்களில் மொத்தம் 26 ஆயிரத்து 43 மாணவிகள் மற்றும் 24 ஆயிரத்து 713 மாணவர்கள் என 50 ஆயிரத்து 756 பேர் தேர்வு எழுதுகின்றனர். 

சிறையில் உள்ள 186 பேர் தேர்வு எழுத 4 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்கும் 3,659 மாற்றுத்திறனாளிகளில் 1,898 மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு சொல்வதை எழுதுபவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதோடு அவர்களுக்கு ஒரு மணி நேரம் கூடுதல் அவகாசமும் அளிக்கப்படுகிறது. ஆயிரத்து 67 மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு மொழிப்பாட விலக்களிப்பு வழங்கப்பட்டுள்ளது. 

முறைகேடுகள் நடைபெறாமல் கண்காணிக்க 6 ஆயிரத்து 900 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள் உள்ளிட்டோர் தேர்வு மையங்களில் திடீர் சோதனை மேற்கொள்வார்கள்.

காப்பி அடித்தல், உள்ளிட்ட ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருக்கும் பள்ளிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/16/w600X390/exam.jpg http://www.dinamani.com/education/2018/mar/16/இன்று-பத்தாம்-வகுப்பு-பொதுத்தேர்வு-தமிழகம்-மற்றும்-புதுச்சேரியில்-10-லட்சத்து-1140-மாணவமாணவிகள்-த-2881578.html
2881331 கல்வி 200 பள்​ளி​கள் தரம் உயர்த்​தப்​ப​டும்: பள்ளி கல்​வித் துறைக்கு ரூ.27,205 கோடி DIN DIN Friday, March 16, 2018 05:15 AM +0530 2018-19-ஆம் ஆண்​டில் 100 நடு​நி​லைப் பள்​ளி​கள் உயர் நிலைப் பள்​ளி​க​ளா​க​வும், 100 உயர்​நி​லைப் பள்​ளி​கள் மேல்​நி​லைப் பள்​ளி​க​ளா​க​வும் தரம் உயர்த்​தப்​ப​டும் என தமி​ழக அரசு அறி​வித்​துள்​ளது.
இது​போல பல்​வேறு திட்டங்​க​ளுக்​காக 2018-19 நிதி​நிலை அறிக்​கை​யில் பள்​ளிக் கல்​வித் துறைக்​காக மட்டும் ரூ. 27 ஆ​யி​ரத்து 205 கோடியே 88 லட்சம் நிதி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது.
இது தொடர்​பாக தமி​ழக அர​சின் நிதி​நிலை அறிக்​கை​யில் வெளி​யி​டப்​பட்​டுள்ள அறி​விப்​பு​கள்:
2018-19 ஆம் ஆண்​டில் 100 நடு​நி​லைப் பள்​ளி​கள் உயர்​நி​லைப் பள்​ளி​க​ளா​க​வும், 100 உயர்​நி​லைப் பள்​ளி​கள் மேல்​நி​லைப் பள்​ளி​க​ளா​க​வும் தரம் உயர்த்​தப்​ப​டும். பள்​ளிக்​குச் செல்​ல​வில்லை எனக் கண்​ட​றி​யப்​பட்​டுள்ள 33,519 குழந்​தை​களை 2018-2019-ஆம் ஆண்​டில் பள்​ளி​க​ளில் சேர்க்க நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும்.
​உள்​கட்​ட​மைப்பு வச​தி​க​ளுக்கு நிதி​: பள்​ளி​க​ளில் உள்​கட்​ட​மைப்பு வச​தி​களை மேம்​ப​டுத்த நிதி​நிலை அறிக்​கை​யில் ரூ. 333.36 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. 
​சீ​ரு​டை​கள், சைக்​கிள் வழங்​கும் திட்டங்​க​ளுக்கு ரூ. 1,600 கோ​டி:​ பள்ளி மாண​வர்​க​ளுக்கு நான்கு இணை சீரு​டை​கள், புத்​த​கப் பைகள், கால​ணி​கள், பாடப் புத்​த​கங்​கள், நோட்டுப் புத்​த​கங்​கள், வடி​வி​யல் பெட்டி​கள், சைக்​கிள் மற்​றும் பேருந்​துக் கட்ட​ணச் சலு​கை​கள் விலை​யில்​லா​மல் வழங்​கப்​பட்டு வரு​கின்​றன. இந்​தத் திட்டங்​க​ளுக்​காக 2018-19-ஆம் ஆண்​டில் ரூ.1,653.89 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. 
மேலும், பள்ளி இடை​நிற்​ற​லைக் குறைப்​ப​தற்​காக பத்​தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாண​வர்​க​ளுக்​கான ரூ. 5000 ஊக்​கத் தொகைத் திட்டத்​துக்​காக நிதி​நிலை அறிக்​கை​யில் ரூ. 313.58 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது.
​ம​டிக்​க​ணினி திட்டத்​துக்கு ரூ. 758 கோ​டி:​ பள்​ளி​க​ளில் கற்​பிக்​கும் முறையை மேம்​ப​டுத்​தும் வகை​யில் இணை​ய​வழி மூலம் கற்​கும் வகுப்​ப​றை​கள் ஏற்​கெ​னவே 770 பள்​ளி​க​ளில் நிறு​வப்​பட்​டுள்​ளன. 
இந்த நிதி​யாண்​டில் 3,090 உயர்​நி​லைப் பள்​ளி​க​ளி​லும், 2,939 மேல்​நி​லைப் பள்​ளி​க​ளி​லும் ரூ. 462.60 கோடி செல​வில் 10 முதல் 20 கணி​னி​க​ளு​டன் கூடிய உயர் தொழில்​நுட்ப ஆய்​வ​கங்​கள் அமைக்​கப்​பட்டு வரு​கின்​றன. 
பள்ளி மாணவ, மாண​வி​க​ளுக்கு மடிக்​க​ணினி வழங்​கு​வ​தற்​காக இந்த நிதி​யாண்​டில் ரூ. 758 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. அனை​வ​ருக்​கும் கல்வி இயக்​கத்​துக்கு ரூ.1,750 கோ​டி​யும், அனை​வ​ருக்​கும் இடை​நி​லைக் கல்வி இயக்​க​கத்​துக்கு ரூ. 850 கோ​டி​யும் இந்த நிதி​யாண்​டில் ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. குழந்​தை​க​ளுக்​கான இல​வச மற்​றும் கட்டா​யக் கல்வி உரி​மைச் சட்டத்தை' திறம்​ப​டச் செயல்​ப​டுத்த ரூ.200.70 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது.
​மொத்​தம் ரூ. 27,205.88 கோ​டி:​ பள்​ளிக் கல்​வித் துறை​யில் பல்​வேறு திட்டங்​க​ளுக்​காக 2018-19-ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்​கை​யில் ரூ. 27,205.88 கோ​டியை தமி​ழக அரசு ஒதுக்​கீடு செய்​துள்​ள​து.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/10/w600X390/sslc_exam-6.jpg http://www.dinamani.com/education/2018/mar/16/200-பள்​ளி​கள்-தரம்-உயர்த்​தப்​ப​டும்-பள்ளி-கல்​வித்-துறைக்கு-ரூ27205-கோடி-2881331.html
2879823 கல்வி மிகவும் தாழ்ந்த சாதி எது?- சிபிஎஸ்இ தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் புதிய சர்ச்சை DIN DIN Tuesday, March 13, 2018 11:03 AM +0530 மிகவும் தாழ்ந்த சாதி எது என ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தின் சிபிஎஸ்இ தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வரும் கேள்வியால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. 

மத்திய அரசின் கல்வித்திட்டத்தின் கீழ் செயல்படும் சிபிஎஸ்இ பிரிவுகளுக்கு என்சிஆர்டி எனப்படும் பாடநூல் அடிப்படையில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. ஆனால், ஆண்டுத் தேர்வுக்கு அந்தந்த பள்ளிகளே வினாத்தாள்களை தயாரித்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது சிபிஎஸ்இ பாடப்பிரிவில் செயல்படும் பள்ளிகளில் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. அண்மையில் நடந்த ஆறாம் வகுப்புக்கான சமூக அறிவியல் தேர்வில் மிகவும் தாழ்ந்த சாதி என்ற சர்ச்சைக்குரிய கேள்வி இடம் பெற்றுள்ளது. அதில் வர்ணாசிரம முறையில் மிகவும் தாழ்ந்த சாதி என்ற கேள்வி இடம் பெற்றுள்ளது. அதற்கு 4 விடைகளாக பிராமணர்கள், சூத்திரர்கள், வைசியர்கள், சத்திரியர்கள் என்ற 4 பதில்கள் தரப்பட்டுள்ளன.

இந்தக் கேள்வி மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களிலும் இந்த கேள்வித்தாள் வேகமாக வரைலாகி வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த கேள்வித்தாள் எந்த பள்ளியில் வழங்கப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை. 

சில காலங்களாக அரசு தேர்வுகளிலும் இதுபோன்ற சர்ச்சையை ஏற்படுத்தக் கூடிய கேள்விகள் இடம்பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/12/w600X390/exam.jpg http://www.dinamani.com/education/2018/mar/13/மிகவும்-தாழ்ந்த-சாதி-எது--சிபிஎஸ்இ-தேர்வில்-கேட்கப்பட்ட-கேள்வியால்-புதிய-சர்ச்சை-2879823.html
2879428 கல்வி பிளஸ் 2 கணிதத் தேர்வு கடினம்: 'சென்டம்' குறைய வாய்ப்பு: முறைகேட்டில் ஈடுபட்ட 18 மாணவர்கள் DIN DIN Tuesday, March 13, 2018 01:48 AM +0530 பிளஸ் 2 பொதுத் தேர்வில் கணித வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக தேர்வெழுதிய மாணவர்கள் தெரிவித்தனர். இந்தத் தேர்வில் 18 மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். 
பிளஸ் 2 பொதுத் தேர்வில் அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழித் தாள்களுக்குப் பிறகு கணிதத் தேர்வு திங்கள்கிழமை (மார்ச் 12) நடைபெற்றது. இது குறித்து சென்னையைச் சேர்ந்த பாண்டியன், மதுபாலா, நவீன் உள்ளிட்ட மாணவர்கள் கூறியது:- கணித வினாத்தாளை வாங்கி என்னென்ன வினாக்கள் கேட்கப்பட்டிருக்கின்றன என்பதைப் பார்த்தபோது எங்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தது. ஏனெனில் காலாண்டு, அரையாண்டு, இடைப்பருவத் தேர்வுகளில் கேட்கப்படாத பல வினாக்கள், புதிய வினாக்கள் அதிகளவில் இடம்பெற்றிருந்தன. 6 மதிப்பெண் பகுதியில் 15 வினாக்கள் இடம்பெற்றிருந்தன. அவற்றில் 10 வினாக்களுக்கு மட்டும் விடையளித்தால் போதும் என்ற நிலையிலும் அணிக்கோவை (வினா எண் 41), தொடுகோடு, செங்கோடு சமன்பாடு, ஒரு குலத்தின் சமனி உறுப்பு ஒருமைத்தன்மை வாய்ந்தது என நிரூபிக்க (வினா எண் 52), வெக்டர், கார்டீசியன் சமன்பாடுகள் (55) உள்பட பெரும்பாலான வினாக்கள் கடினமாகவே இருந்தன. 1 மதிப்பெண், 10 மதிப்பெண் பகுதியில் வினாக்கள் புத்தகத்துக்கு உள்ளிருந்து கேட்கப்பட்டிருந்ததாலும் ஓரளவுக்கு பதிலளிக்கக் கூடியதாக இருந்தது. கணித வினாத்தாள் சற்று கடினமாக இருக்கும் ஏற்கெனவே எதிர்பார்த்திருந்தோம். ஆனால், எதிர்பார்த்த அளவைக் காட்டிலும் சற்று கடினமாகவே இருந்தது என்றனர்.
மேலும் 200-க்கு 200 மதிப்பெண் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தேர்வுக்கு கடினமாக உழைத்தோம். ஆனால் தற்போது 180 மதிப்பெண் பெறுவதே பெரிய விஷயம் என மாணவர்கள் தெரிவித்தனர். 
'சென்டம் குறையும்': இது குறித்து ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கணித ஆசிரியர் எம்.விஜயபானு கூறியது:- பிளஸ் 2 பொதுத்தேர்வு கணித வினாத்தாள் சற்று கடினமாக இருந்தது உண்மைதான். குறிப்பாக 6 மதிப்பெண் பகுதியில் சில எதிர்பாராத வினாக்கள் இடம்பெற்றிருந்தன. எனினும் 10 மதிப்பெண், 1 மதிப்பெண் பகுதிகளில் நன்கு தெரிந்த கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததால் சுமாராக படிக்கும் மாணவர்கள்கூட எளிதில் தேர்ச்சி பெற வாய்ப்புள்ளது. 
மற்ற தேர்வுகளைக் காட்டிலும் கணிதத் தேர்வில்தான் முழு மதிப்பெண் பெறுவது எளிது. ஆனால், இந்த முறை 'சென்டம்' (200-க்கு 200) பெறும் மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறையும் என்றார். 
இந்தத் தேர்வில் தமிழகம் முழுவதும் 18 மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளனர். அதில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 6 மாணவர்கள் பிடிபட்டுள்ளதாக தேர்வுத் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/6/w600X390/10th_exam.jpg http://www.dinamani.com/education/2018/mar/13/பிளஸ்-2-கணிதத்-தேர்வு-கடினம்-சென்டம்-குறைய-வாய்ப்பு-முறைகேட்டில்-ஈடுபட்ட-18-மாணவர்கள்-2879428.html
2879195 கல்வி விண்ணப்பித்துவிட்டீர்களா..? நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் DIN DIN Monday, March 12, 2018 11:06 AM +0530 எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து இன்று மாலை 5.30க்குள் தங்களது விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். 

நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் மார்ச் 9-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தனித் தேர்வர்களும் நீட் தேர்வில் பங்கேற்கலாம் என்ற தில்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவிட்டது. மேலும் நீட் தேர்வுக்கு ஆதார் எண் கட்டாயமில்லை என்றும் அதற்கு பதிலாக ரேசன் அட்டை, கடவுச்சீட்டு, வங்கிக் கணக்கு எண், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஏதாவது அரசு அடையாள அட்டையின் எண்ணைக் குறிப்பிட்டால் போதுமானது. நீட் தேர்வுக்காக வழங்கப்பட்டுள்ள இதர விதிமுறைகள் எதிலும் மாற்றமில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, அதிக எண்ணிக்கையிலானோர் விண்ணப்பிக்கும் வகையில் தேர்வுக்கான கால அவகாசம் இன்று திங்கள்கிழமை (மார்ச்.12) வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று திங்கள்கிழமை (மார்ச் 12) மாலை 5.30 மணிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான கட்டணத்தை இணையதளத்தில் நாளை செவ்வாய்கிழமை (மார்ச் 13) இரவு 11 மணிக்குள் செலுத்த வேண்டும். 

மேலும் விண்ணப்பத்தில் திருத்தங்கள் ஏதேனும் இருந்தால் அவற்றை ஆன்லைனிலேயே மார்ச் 15 முதல் 17-ஆம் தேதி வரை செய்துகொள்ளலாம்.

இதுவரை விண்ணப்பிக்காத விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்பிக்கலாம். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/12/w600X390/exam.jpg http://www.dinamani.com/education/2018/mar/12/விண்ணப்பித்துவிட்டீர்களா-நீட்-தேர்வுக்கு-விண்ணப்பிக்க-இன்றே-கடைசி-நாள்-2879195.html
2876953 கல்வி நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு DIN DIN Friday, March 9, 2018 01:42 AM +0530 எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 
நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் மார்ச் 9-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தனித் தேர்வர்களும் நீட் தேர்வில் பங்கேற்கலாம் என்ற தில்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவிட்டது. மேலும் நீட் தேர்வுக்கு ஆதார் எண் கட்டாயமில்லை என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவு ஆகியவை வெளியானதைத் தொடர்ந்து, அதிக எண்ணிக்கையிலானோர் விண்ணப்பிக்கும் வகையில் கடைசித் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 12-ஆம் தேதி கடைசி என்றும், இணையதளத்தில் கட்டணத்தைச் செலுத்த மார்ச் 13-ஆம் தேதி கடைசி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் நீட் தேர்வு இயக்குநர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
நீட் தேர்வுக்கு ஆதார் எண் கட்டாயமில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திங்கள்கிழமை (மார்ச் 12) மாலை 5.30 மணிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கான கட்டணத்தை செவ்வாய்க்கிழமை (மார்ச் 13) இரவு 11 மணிக்குள் செலுத்த வேண்டும். மேலும் விண்ணப்பத்தில் திருத்தங்கள் ஏதேனும் இருந்தால் அவற்றை ஆன்லைனிலேயே மேற்கொள்வதற்கான நாள்கள் மார்ச் 15 முதல் 17-ஆம் தேதி வரை என மாற்றப்பட்டுள்ளது.
ஆதார் தேவையில்லை: விண்ணப்பிக்கும்போது ஆதார் எண்ணைக் குறிப்பிடுவதற்கான பகுதியில் ரேசன் அட்டை, கடவுச்சீட்டு, வங்கிக் கணக்கு எண், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஏதாவது அரசு அடையாள அட்டையின் எண்ணைக் குறிப்பிட்டால் போதுமானது. நீட் தேர்வுக்காக வழங்கப்பட்டுள்ள இதர விதிமுறைகள் எதிலும் மாற்றமில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/15/w600X390/neet.jpg http://www.dinamani.com/education/2018/mar/09/நீட்-தேர்வுக்கு-விண்ணப்பிக்க-கால-அவகாசம்-நீட்டிப்பு-2876953.html
2876379 கல்வி 'நாடா 2018': விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு DIN DIN Thursday, March 8, 2018 04:36 AM +0530 பி.ஆர்க். கட்டடவியல் பொறியியல் படிப்பில் சேருவதற்கான 'நாடா' நுண்ணறி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மார்ச் 30 -ஆம் தேதி வரை இந்தத் தேர்வுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்.
பி.ஆர்க். படிப்பிகளில் சேர்க்கை பெற 'நாடா' (தேசிய கட்டடவியல் நுண்ணறி தேர்வு) தேர்வில் தகுதி பெறுவது கட்டாயம். இத்துடன், பிளஸ் 2 தேர்வில் கணிதத்தை ஒரு பாடமாகக் கொண்டு 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2018 -ஆம் ஆண்டுக்கான 'நாடா' தேர்வை அண்மையில் அறிவித்த கட்டடவியல் கவுன்சில், தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 2 கடைசி என அறிவித்திருந்தது. இந்த நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மார்ச் 30 -ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
பிளஸ் 2 முடித்தவர்களும், தற்போது பொதுத் தேர்வு எழுதுபவர்களும் இதற்கு விண்ணப்பிக்க முடியும். மேலும் விவரங்களை www.nata.in  என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

]]>
http://www.dinamani.com/education/2018/mar/08/நாடா-2018-விண்ணப்பிக்க-கால-அவகாசம்-நீட்டிப்பு-2876379.html
2876317 கல்வி பிளஸ் 1 தமிழ் முதல் தாள்: ஒரு மதிப்பெண் வினாக்கள் கடினம் DIN DIN Thursday, March 8, 2018 01:49 AM +0530 பிளஸ் 1 வகுப்புக்கு முதல் முறையாக நடைபெற்ற பொதுத் தேர்வில் தமிழ் முதல் தாளில் ஒரு மதிப்பெண் வினாக்கள் சற்று கடினமாக இருந்ததாக தேர்வெழுதிய மாணவர்கள் தெரிவித்தனர். 
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு ஆகியவற்றைப் போன்று பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி இந்த ஆண்டுக்கான பொதுத்தேர்வு தமிழகம், புதுச்சேரியில் புதன்கிழமை தொடங்கியது. 
இந்தத்தேர்வில் 8.61 லட்சம் தேர்வர்கள் 2,795 தேர்வு மையங்களில் தேர்வெழுதுகின்றனர். பிளஸ் 1 பொதுத்தேர்வின் முதல் தேர்வாக தமிழ் முதல்தாள் தேர்வு நடைபெற்றது. 
இந்தத் தேர்வில் இடம் பெற்ற வினாக்கள் குறித்து சென்னை சாய்மோகன், விஷ்ணு, தீபிகா உள்ளிட்டோர் கூறியது:
கடந்த ஆண்டுதான் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினோம். தற்போது 1 ஆண்டு இடைவெளிக்குள் மீண்டும் ஒரு பொதுத்தேர்வை எதிர்கொள்வது சற்று புதிய அனுபவமாக இருந்தது. தமிழ் முதல் தாளில் மொத்தம் 90 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம்பெற்றிருந்தன. அதில் 20 ஒரு மதிப்பெண் கேட்கப்பட்டிருந்தன. 
அவற்றில் 7 வினாக்கள் பாடத்தின் உள்பகுதிகளிலிருந்து கேட்கப்பட்டுள்ளன. இதனால் ஒரு மதிப்பெண் கேள்விகள் சற்றுக் கடினமாகவே இருந்தன. இருப்பினும் மூன்று மதிப்பெண் பகுதியில் இடம்பெற்ற 9 வினாக்களும் எளிமையாக இருந்தன. ஒரு மதிப்பெண் வினாக்களைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் தமிழ் முதல்தாள் வினாத்தாள் ஓரளவுக்கு எளிமையாகவே இருந்தது என்றனர். 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/8/w600X390/exam.JPG http://www.dinamani.com/education/2018/mar/08/பிளஸ்-1-தமிழ்-முதல்-தாள்-ஒரு-மதிப்பெண்-வினாக்கள்-கடினம்-2876317.html
2875332 கல்வி ஜிப்மர் எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்   புதுச்சேரி, DIN Tuesday, March 6, 2018 08:19 AM +0530 ஜிப்மர் எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வுக்கு புதன்கிழமை (மார்ச் 7) முதல் ஏப்.13-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
ஜிப்மர் புதுச்சேரி கிளையில் 150, காரைக்கால் கிளையில் 50 என மொத்தம் 200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. 
இவற்றை நிரப்ப தனியாக அகில இந்திய அளவில் ஆன்லைன் மூலம் நுழைவுத் தேர்வு நடத்தப்படுவது வழக்கம்.
இது குறித்து ஜிப்மர் கல்லூரி முதல்வர் சுவாமிநாதன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஜிப்மர் எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைன்( www.jipmer.puducherry.gov.in) மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மார்ச் 7-ஆம் தேதி காலை 11 முதல் ஏப்.13}ஆம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மே 21}ஆம் தேதி முதல் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஜூன் 3-ஆம் தேதி எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வு இரு பிரிவுகளாக நடைபெறும். முதல் பிரிவுக்கு காலை 10 மணி முதல் 12.30 மணி வரையும், 2-ஆம் பிரிவுக்கு பிற்பகல் 3 மணி முதல் மாலை 5.30 மணி வரை தேர்வு நடைபெறும். தேர்வு முடிவுகள் ஜூன் 20}ஆம் தேதிக்குள் வெளியிடப்படும். 
புதுவை ஜிப்மரில் உள்ள 150 இடங்களில் 40 இடங்கள் புதுவை மாநிலத்துக்கு ஒதுக்கப்படும். மற்றவை அகில இந்திய ஒதுக்கீடு ஆகும். காரைக்கால் ஜிப்மரில் உள்ள 50 இடங்களில் புதுவை மாநிலத்துக்கு 14 இடங்களும், மற்றவை அகில இந்திய ஒதுக்கீடாகவும் இருக்கும். மொத்தம் 54 இடங்களுக்கு புதுவைக்கு ஒதுக்கப்படும்.
இட ஒதுக்கீடு விவரம்: பொதுப் பிரிவு -74, ஓபிசி பிரிவு -37, எஸ்சி பிரிவு -20, எஸ்டி பிரிவு -9, புதுவை மாநில ஒதுக்கீட்டில் பொதுப் பிரிவு -31, ஓபிசி பிரிவு -13, எஸ்சி பிரிவு -6, எஸ்டி -4, வெளிநாடு வாழ்வு இந்தியர் பிரிவு -6, மாற்றுத் திறனாளிகளுக்கு 6 இடங்கள் என 200 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2014/4/11/8/w600X390/jipmer.jpg http://www.dinamani.com/education/2018/mar/06/ஜிப்மர்-எம்பிபிஎஸ்-நுழைவுத்-தேர்வு-நாளை-முதல்-விண்ணப்பிக்கலாம்-2875332.html
2874905 கல்வி 10-ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்ணில் சலுகை: சிபிஎஸ்இ தேர்வு வாரியம் அறிவிப்பு DIN DIN Monday, March 5, 2018 12:23 PM +0530  

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு மதிப்பெண்ணில் புதிய சலுகையை சிபிஎஸ்இ வாரியம் அறிவித்துள்ளது.

சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத் திட்டத்தில் 2017 வரை பத்தாம் வகுப்புக்கு பள்ளி அளவிலேயே தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. 
இத்தேர்வுகளில் தன்னிச்சையாக மதிப்பெண்கள் வழங்கப்படுவதால் கல்வித்தரம் குறைந்துள்ளதாக மத்திய அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து இந்த ஆண்டு முதல் 10-ம் வகுப்புக்கு கட்டாய பொதுத்தேர்வு நடத்தப்படும் என வாரியம் அறிவித்தது. 
இந்த அறிவிப்பின்படி பத்தாம் வகுப்பு மாணவர்கள் முதல்முறையாக பொதுத்தேர்வை எழுத உள்ளனர். இதனால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க சிபிஎஸ்இ தேர்வு கமிட்டி புதிய சலுகையை அறிவித்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு பிப்ரவரி 26-ம் தேதி வெளியிடப்பட்டது.

அந்த அறிவிப்பில் சிபிஎஸ்இ தலைவர் அனிதா கர்வால் தெரிவித்திருப்பதாவது:

2018 பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒருமுறை அடிப்படையில் தேர்ச்சிக்கான மதிப்பெண்களில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி மொழிப் பாடம், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் அகமதிப்பீட்டுக்கான 20 மதிப்பெண் மற்றும் எழுத்துத் தேர்வுக்கான 80 மதிப்பெண்களில் ஒட்டு மொத்தமாக 33 சதவீதமான 33 மதிப்பெண்களை எடுத்தால் தேர்ச்சி பெறுவர். அகமதிப்பீடு மற்றும் எழுத்துத் தேர்வில் தனித் தனியாக 33 சதவீத மதிப்பெண்கள் எடுக்கத் தேவை இல்லை.

மேலும், முக்கியப் பாடங்கள் தவிர மாணவர்கள் எடுத்த விருப்பப் பாடங்களில் செய்முறை தேர்வுகள் இருந்தால் அதிலும் ஒட்டுமொத்தமாக 33 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி என அறிவிக்கப்படும். 
தொழிற்கல்வி பாடப் பிரிவு மாணவர்களுக்கு மொழிப் பாடம், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகஅறிவியல் ஆகிய 5 பாடங்களுக்கு மட்டும் ஒட்டுமொத்தமாக 33 சதவீத மதிப்பெண் பெறலாம் என்ற புதிய சலுகை பொருந்தும்.

செய்முறை தேர்வு அடங்கிய மற்ற தொழிற்கல்வி பாடங்களுக்கு அகமதிப்பீடாக ஏற்கெனவே 50 சதவீதம் வழங்கப்படுவதால் அந்தப் பாடங்களுக்கு புதிய சலுகை பொருந்தாது என அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/4/w600X390/cbse.jpg http://www.dinamani.com/education/2018/mar/05/10-ம்-வகுப்பு-தேர்வு-மதிப்பெண்ணில்-சலுகை-சிபிஎஸ்இ-தேர்வு-வாரியம்-அறிவிப்பு-2874905.html
2873499 கல்வி 'தமிழ் இரண்டாம் தாளும் எளிமை' DIN DIN Saturday, March 3, 2018 02:50 AM +0530 பிளஸ் 2 தமிழ் இரண்டாம் தாளும் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். 
பிளஸ் 2 பொதுத்தேர்வெழுதும் மாணவர்களுக்கு இரண்டாவது தேர்வாக தமிழ் இரண்டாம் தாள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
இது குறித்து தேர்வெழுதிய மாணவர்கள் கூறியது:- தமிழ் இரண்டாம் தாளில் உரைநடை, துணைப்பாடம், படைப்பாற்றல், தமிழாக்கம் தொடர்பான வினாக்கள் இடம் பெற்றிருந்தன. நான்கு மதிப்பெண் வினா பகுதியில் கவிதைக்குரிய நல்லியல்புகளைக் கம்பன் உரைக்குமாறு யாங்கனம், உலகில் சமரசம் பரவாமைக்குக் காரணங்களாக திருவிக கூறுவன யாவை, நீதி நூல்களின் பொதுவான இயல்புகளைக் குறித்து எழுதுக உள்ளிட்ட பெரும்பாலான கேள்விகள் ஏற்கெனவே பருவத் தேர்வுகளில் இடம்பெற்றவை. அதனால் பதில் எழுதுவதும் எளிமையாகவே இருந்தது. 
படைப்புத் திறனை வளர்க்கும் வகையில் 22-ஆவது வினாவாக 'மழை' அல்லது 'வாய்மை' என்ற தலைப்பில் கவிதை எழுதுமாறு கேட்கப்பட்டிருந்தது. 
துணைப்பாடத்தில் பத்து மதிப்பெண் பகுதியில் மண் அல்லது கிழிசல் என்ற சிறுகதைகள் இடம்பெற்றிருந்தன; மாற்று வினாவாக இடம்பெற்றிருந்த 'பழிக்குப்பழி' அல்லது 'ஓர் உல்லாசப் பயணம்' என்ற சிறுகதையில் இடம்பெற்றிருந்த ஏதேனும் ஒரு நிகழ்ச்சியை நாடக வடிவில் எழுத வேண்டும் என கேட்கப்பட்டிருந்தது. மொத்தம் இருபது மதிப்பெண்கள் கொண்ட இந்த இரு பகுதிகளிலும் நன்கு தெரிந்த சிறுகதைகளே இடம்பெற்றது மகிழ்ச்சியளித்தது. ஒட்டுமொத்தமாக தமிழ் முதல் தாளைப் போலவே இரண்டாம்தாளும் எளிமையாக இருந்தது என்றனர்.

]]>
http://www.dinamani.com/education/2018/mar/03/தமிழ்-இரண்டாம்-தாளும்-எளிமை-2873499.html
2870569 கல்வி ஜிப்மர் கல்லூரி நுழைவுத் தேர்வு: மார்ச் 7 முதல் விண்ணப்பிக்கலாம் DIN DIN Monday, February 26, 2018 11:49 AM +0530 புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு ஜுன் 3-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக மார்ச் 7-ஆம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்தக் கல்லூரியில் உள்ள 200 எம்பிபிஎஸ் இடங்கள் ஆண்டுதோறும் நுழைவுத் தேர்வு மூலம் நிரப்பப்படும். அதன்படி, 2018-ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு ஜுன் 3-ஆம் தேதி நடைபெற உள்ளது. 

நுழைவுத் தேர்வுக்கு மார்ச் 7-ஆம் தேதி முதல் இணையம் (ஆன்-லைன்) மூலம் விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 13-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். நுழைவுத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டை (ஹால் டிக்கெட்) தேர்வு நடைபெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


உரிய பரிசோதனைகளுக்குப் பிறகே மாணவர்கள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள். ஆள் மாறாட்டத்தைத் தடுப்பதற்கு பயோ-மெட்ரிக் வருகைப் பதிவு மற்றும் நிழற்படம் எடுக்கும் பணிக்கு ஏற்பாடு செய்யப்படும். தேர்வு முடிவுகள் உடனடியாக வெளியிடப்படும். 

மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜுன் 27 முதல் 29-ஆம் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 25-ஆம் தேதியும் நடைபெறும். மூன்றாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 20-ஆம் தேதியும், இறுதிக் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 28-ஆம் தேதியும் நடைபெறும். செப்டம்பர் 30-ஆம் தேதி மாணவர் சேர்க்கைக்கான இறுதி நாள் என ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

கடந்த 2017-ஆம் ஆண்டு 200 எம்பிபிஎஸ் இடங்களுக்கு ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 663 மாணவர்கள் விண்ணப்பித்தது குறிப்பிடத்தக்கது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2014/4/11/8/w600X390/jipmer.jpg http://www.dinamani.com/education/2018/feb/26/ஜிப்மர்-கல்லூரி-நுழைவுத்-தேர்வு-மார்ச்-7-முதல்-விண்ணப்பிக்கலாம்-2870569.html
2857444 கல்வி அரசுப் பள்ளிகளில் முடங்கி கிடக்கும் ஸ்மார்ட் வகுப்புகள்: கல்வித் துறை நடவடிக்கை எடுக்குமா? -ஆம்பூர் அருண்குமார் DIN Monday, February 5, 2018 10:39 AM +0530 அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் முடங்கியுள்ளதை பயன்பாட்டுக்கு கொண்டு வர கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தனியார் பள்ளிகளில் புரொஜெக்டர் மூலம் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஸ்மார்ட் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இத்தகைய நவீன தொழில்நுட்பத்தில் படக் காட்சிகள் மூலம் வகுப்புகள் நடத்தப்படுவதால் மாணவர்களின் மனதில் பாடங்கள் எளிதாக பதிவாகும். அதனால் இத்தகைய முறை தனியார் பள்ளிகளில் பின்பற்றப்படுகிறது. 

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடம் ஸ்மார்ட் வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டு அரசால் செயல்படுத்தப்படுகிறது. மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கும் ஸ்மார்ட் வகுப்புகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் நடுநிலைப் பள்ளிகளுக்கு ஓஎச்பி புரொஜெக்டர், மடிக்கணினி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. மேலும், பாட வகுப்புகள் தொடர்பான குறுந்தகடுகளும் வழங்கப்பட்டுள்ளன. இதைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு படக்காட்சிகள் மூலம் பாடம் நடத்தும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் ஒரு சில பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆர்வம், முயற்சியின் காரணமாக நவீன தொழில்நுட்ப உதவியுடன் மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்புகள் நடத்தப்படுகிறது. ஆனால் பெரும்பாலான பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் நடத்துவதற்கான நவீன தொழில்நுட்ப கருவிகள் இருந்த போதிலும் ஸ்மார்ட் வகுப்புகள் நடத்தப்படாமல் அவை முடங்கிப்போயுள்ளன. 

அவ்வாறு முடங்கி போயுள்ளதற்கு காரணம் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களின் ஆர்வம் இல்லாததே ஆகும். அதனால் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள நவீன தொழில் நுட்ப கருவிகள் பயன்படுத்தப்படாமல் முடங்கிப் போயுள்ளன.

ஸ்மார்ட் வகுப்புகள் நடத்துவதற்காக ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளில் கூட சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் ஆர்வத்துடன் ஈடுபடுவதில்லை என புகார் எழுந்துள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய நவீன தொழில்நுட்ப முறையிலான கல்வி கிடைக்காமல் மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளாகும் சூழ்நிலை உள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 3 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்புகளைத் தொடங்க தமிழக பள்ளிக் கல்வித் துறை அரசாணை பிறப்பித்துள்ளது. 

ஏற்கெனவே தொடங்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்புகளே சில பள்ளிகளைத் தவிர பெரும்பாலான பள்ளிகளில் சரிவர நடத்தப்படாமல் முடங்கிப்போயுள்ளது.

புதிதாக 3 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் ஏற்கெனவே தொடங்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்புகளும், புதிதாக தொடங்கப்பட உள்ள ஸ்மார்ட் வகுப்புகளும் சரிவர நடத்தப்படுகிறதா என கல்வித்துறை அதிகாரிகள் கண்காணித்து ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது.

அதனால் கல்வித் துறை உயரதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டு ஸ்மார்ட் வகுப்புகள் நடத்தப்படுகிறதா என கண்காணிக்க வேண்டும். ஸ்மார்ட் வகுப்புகள் நடத்தப்படாத பள்ளிகளில் வகுப்புகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து ஸ்மார்ட் வகுப்புகள் சரிவர நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஸ்மார்ட் வகுப்புகளை நடத்தாத பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கூறுகின்றனர்.

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என முடிவெடுத்து அரசு நடைமுறைப்படுத்தும் பல்வேறு திட்டங்கள், பாட திட்டங்கள் சரிவர செயல்படுத்தாமல் விடப்படுவதால் தான் அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் குறைந்து கொண்டே வருகிறது.

அதனால் அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களும் ஒத்துழைப்பு அளித்தால் தான் தனியார் பள்ளிகளை காட்டிலும் அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் உயர்ந்த இடத்தை எட்டும் என்பது பெற்றோர்களின் கருத்தாக உள்ளது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/5/w600X390/class-room.jpg http://www.dinamani.com/education/2018/feb/05/அரசுப்-பள்ளிகளில்-முடங்கி-கிடக்கும்-ஸ்மார்ட்-வகுப்புகள்-கல்வித்-துறை-நடவடிக்கை-எடுக்குமா-2857444.html
2857456 கல்வி அண்ணா பல்கலை. முதல் பருவத் தேர்வு முடிவு: இன்று வெளியீடு DIN DIN Monday, February 5, 2018 03:39 AM +0530 இணைப்பு பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான முதல் பருவத் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை (பிப்.5) வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு:
பல்கலைக்கழகம் சார்பில் 2017 நவம்பர்/டிசம்பர் மாதத்தில் நடத்தப்பட்ட இணைப்புக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான முதல் பருவத் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. மாணவர்கள் பதிவு செய்துள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுந்தகவல் மூலமும் தேர்வு முடிவு அனுப்பி வைக்கப்படும். தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தாத கல்லூரி களுக்கான தேர்வு முடிவுகள் மட்டும் வெளியிடப்படாமல் நிறுத்தி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/7/6/1/w600X390/annauniv.jpg http://www.dinamani.com/education/2018/feb/05/அண்ணா-பல்கலை-முதல்-பருவத்-தேர்வு-முடிவு-இன்று-வெளியீடு-2857456.html
2854971 கல்வி பல்கலை., கல்லூரி ஆசிரியர்களுக்கான புதிய ஊதியம்: யுஜிசி அறிவிப்பு DIN DIN Thursday, February 1, 2018 04:23 AM +0530 ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை அடிப்படையிலான பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியர்களுக்கான புதிய ஊதிய உயர்வு அறிவிப்பை பல்கலைக்கழகம் மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது. 
இதனடிப்படையில், பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியர்களுக்கு ஊதியத்தை மாற்றியமைப்பதற்கான கடிதத்தை அனைத்து மாநில அரசுகளுக்கும் யுஜிசி அனுப்பியுள்ளது.
ஊதிய உயர்வு எவ்வளவு? யுஜிசி-யின் இந்த ஊதிய உயர்வு அறிவிப்பின்படி, இப்போது ரூ. 39,100 ஊதியம் பெறும் உதவிப் பேராசிரியருக்கு ரூ. 57,700 முதல் ரூ.79,800 வரை ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.
இணைப் பேராசிரியருக்கான ஊதியம் ரூ. 67,000 என்ற நிலையிலிருந்து ரூ. 1,31,400 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பேராசிரியருக்கு ரூ. 67 ஆயிரத்திலிருந்து ரூ. 1,44,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அனுபவமிக்கப் பேராசிரியருக்கு (ஹெச்.ஏ.ஜி.) புதிய ஊதியம் ரூ. 1,82,200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
துணைவேந்தருக்கு ரூ. 2 லட்சம்: புதிய அறிவிப்பின்படி, பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கான ஊதியம் ரூ. 2.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதனுடன்மாத சிறப்புப் படியாக ரூ. 5 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
அதுபோல, இளநிலை பட்டப் படிப்புகள் மட்டும் உள்ள கல்லூரி முதல்வருக்கான ஊதியம் ரூ. 1,31,400 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மாத சிறப்புப் படி ரூ. 2000 எனவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
முதுநிலை பட்டப் படிப்புகளும் உள்ள கல்லூரி முதல்வருக்கான ஊதியம் ரூ. 1,44,200 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மாத சிறப்புப் படி ரூ. 3000 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
 

]]>
http://www.dinamani.com/education/2018/feb/01/பல்கலை-கல்லூரி-ஆசிரியர்களுக்கான-புதிய-ஊதியம்-யுஜிசி-அறிவிப்பு-2854971.html
2854968 கல்வி பல்கலை., கல்லூரி ஆசிரியர்களுக்கான புதிய ஊதியம்: யுஜிசி அறிவிப்பு DIN DIN Thursday, February 1, 2018 03:12 AM +0530 ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை அடிப்படையிலான பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியர்களுக்கான புதிய ஊதிய உயர்வு அறிவிப்பை பல்கலைக்கழகம் மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது. 
இதனடிப்படையில், பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியர்களுக்கு ஊதியத்தை மாற்றியமைப்பதற்கான கடிதத்தை அனைத்து மாநில அரசுகளுக்கும் யுஜிசி அனுப்பியுள்ளது.
ஊதிய உயர்வு எவ்வளவு? யுஜிசி-யின் இந்த ஊதிய உயர்வு அறிவிப்பின்படி, இப்போது ரூ. 39,100 ஊதியம் பெறும் உதவிப் பேராசிரியருக்கு ரூ. 57,700 முதல் ரூ.79,800 வரை ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.
இணைப் பேராசிரியருக்கான ஊதியம் ரூ. 67,000 என்ற நிலையிலிருந்து ரூ. 1,31,400 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பேராசிரியருக்கு ரூ. 67 ஆயிரத்திலிருந்து ரூ. 1,44,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அனுபவமிக்கப் பேராசிரியருக்கு (ஹெச்.ஏ.ஜி.) புதிய ஊதியம் ரூ. 1,82,200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
துணைவேந்தருக்கு ரூ. 2 லட்சம்: புதிய அறிவிப்பின்படி, பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கான ஊதியம் ரூ. 2.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதனுடன்மாத சிறப்புப் படியாக ரூ. 5 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
அதுபோல, இளநிலை பட்டப் படிப்புகள் மட்டும் உள்ள கல்லூரி முதல்வருக்கான ஊதியம் ரூ. 1,31,400 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மாத சிறப்புப் படி ரூ. 2000 எனவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
முதுநிலை பட்டப் படிப்புகளும் உள்ள கல்லூரி முதல்வருக்கான ஊதியம் ரூ. 1,44,200 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மாத சிறப்புப் படி ரூ. 3000 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

]]>
http://www.dinamani.com/education/2018/feb/01/பல்கலை-கல்லூரி-ஆசிரியர்களுக்கான-புதிய-ஊதியம்-யுஜிசி-அறிவிப்பு-2854968.html
2854215 கல்வி தனியார் செவிலியர் பயிற்சி நிறுவனத்துக்கு 'சீல்' DIN DIN Wednesday, January 31, 2018 01:37 AM +0530 நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த தனியார் பாராமெடிக்கல் செவிலியர் பயிற்சி நிறுவனத்துக்கு மருத்துவத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை 'சீல்' வைத்தனர்.
இதனால், இப்பயிற்சி நிறுவனத்தில் பயின்றுவரும் 33 மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். வேதாரண்யத்தில் தாமரை பாராமெடிக்கல் இன்ஸ்டிடியூட் என்ற தனியார் செவிலியர் பயிற்சி நிறுவனம், கடந்த சில மாதங்களுக்கு முன்பிருந்து பயணியர் மாளிகை சாலை பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற அலுவலர் சங்க கட்டட வளாகம் அருகே உள்ள வாடகைக் கட்டடத்தில் இயங்கிவந்தது. இந்நிலையில், இந்த நிறுவனம் குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு வந்த புகாரைத் தொடர்ந்து, மருத்துவ அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அனுமதியை புதுப்பிக்காமல் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நிறுவனத்துக்கு 'சீல்' வைக்கப்பட்டது.
 

]]>
http://www.dinamani.com/education/2018/jan/31/தனியார்-செவிலியர்-பயிற்சி-நிறுவனத்துக்கு-சீல்-2854215.html
2854212 கல்வி சென்னைப் பல்கலை. தேர்வு முடிவு இன்று வெளியீடு DIN DIN Wednesday, January 31, 2018 01:37 AM +0530 இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான நவம்பர் (2017-ஆம் ஆண்டு) மாதத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை (ஜன.31) வெளியிடபடும் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை  www.results.unom.ac.in, www.ideunom.ac.in  ஆகிய இணைதளங்களில் புதன்கிழமை மாலை பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
மறு மதிப்பீடு: தேர்வு மதிப்பெண் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் ஆன்-லைனில் பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் பாடம் ஒன்றுக்கு ரூ. 1000 கட்டணம் செலுத்த வேண்டும். மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் பாடம் ஒன்றுக்கு ரூ. 300 கட்டணம் செலுத்த வேண்டும் எனப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

]]>
http://www.dinamani.com/education/2018/jan/31/சென்னைப்-பல்கலை-தேர்வு-முடிவு-இன்று-வெளியீடு-2854212.html
2849427 கல்வி அரசுப் பள்ளிகளில் பழுதடைந்த பொருள்கள்: மாத இறுதிக்குள் புதுப்பிக்க அறிவுறுத்தல் DIN DIN Tuesday, January 23, 2018 01:34 AM +0530 அரசுப் பள்ளிகளில் பழுதடைந்து பயன்பாட்டில் இல்லாத நாற்காலி, மேசை, 'பெஞ்ச்-டெஸ்க்' போன்ற பொருள்களை இந்த மாத இறுதிக்குள் பழுது நீக்கிப் பயன்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன் அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் நாற்காலி, மேசை, பெஞ்ச், 'டெஸ்க்' போன்றவை உபரியாக இருந்தால், அவற்றை தலைமையாசிரியரின் ஒப்புதலுடன் தேவைப்படும் வேறு அரசுப் பள்ளிகளுக்கு மாற்றி வழங்குதல் வேண்டும்; இது தொடர்பாக இருப்புப் பதிவேட்டில் இரண்டு பள்ளிகளுமே பதிவு மேற்கொள்ள வேண்டும். இதற்கான உத்தரவினை முதன்மைக் கல்வி அலுவலர்களே வழங்கலாம். 
பயன்பாட்டில் இல்லாமல் பழுதடைந்த நிலையில் உள்ள மேசை-நாற்காலி, மாணவர்கள் அமரும் 'பெஞ்ச்- டெஸ்க்' உள்ளிட்ட பொருள்களை பழுது நீக்கம் செய்து பயன்படுத்தலாம். இதற்கான செலவினத்தை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக நிதி அல்லது அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் பள்ளி மானிய நிதியிலிருந்து (நஸ்ரீட்ர்ர்ப் எழ்ஹய்ற்) மேற்கொள்ளலாம். 
ஏலம் மூலம் விற்பனை செய்யலாம்: முற்றிலும் பழுது நீக்கம் செய்தாலும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள பொருள்களைப் பிரித்தெடுத்து பள்ளித் தலைமை ஆசிரியர், உதவித் தலைமை ஆசிரியர் அல்லது மூத்த ஆசிரியர் கொண்ட குழு ஒன்றை அமைத்து அந்தப் பொருள்களை அரசு விதிகளின்படி குறைந்தபட்ச விற்பனை மதிப்பை நிர்ணயம் செய்து அதற்கு குறையாத வகையில் ஏல முறையில் விற்பனை செய்து அரசுக் கணக்கில் செலுத்தலாம். 
இந்த நடைமுறையைப் பின்பற்றி பள்ளியில் வகுப்பறை, வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளிலும் இந்தப் பணியினை ஜனவரி மாதத்துக்குள் முடிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

]]>
http://www.dinamani.com/education/2018/jan/23/அரசுப்-பள்ளிகளில்-பழுதடைந்த-பொருள்கள்-மாத-இறுதிக்குள்-புதுப்பிக்க-அறிவுறுத்தல்-2849427.html
2849426 கல்வி 'நெட்' தேர்வு: இனி இரண்டு தாள்கள் மட்டுமே உண்டு மூன்றாம் தாள் கிடையாது DIN DIN Tuesday, January 23, 2018 01:34 AM +0530 தேசிய அளவிலான தகுதித் தேர்வில் (நெட்) இரண்டு தாள்கள் மட்டுமே இடம்பெறும். மூன்றாவது தாள் இனி கிடையாது என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது.
இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும், கல்லூரி -பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கும் 'நெட்' தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். இந்தத் தேர்வு சிபிஎஸ்இ சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தத் தேர்வில் இதுவரை மூன்று தாள்கள் இடம்பெற்றிருந்தன. முதல் தாள் காலை 9.30 மணிக்குத் தொடங்கி 10.45 மணிக்கு முடிவடையும். இரண்டாம் தாள் காலை 11.15 மணிக்கு தொடங்கி பகல் 12.30 மணிக்கு முடிவடையும். மூன்றாம் தாள் பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி மாலை 4.30 மணிக்கு முடிவடையும்.
இந்த நிலையில், 2018 ஆம் ஆண்டுக்கான 'நெட்' தேர்வில் இரண்டு தாள்கள் மட்டுமே இடம்பெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. 
இதுதொடர்பான சிபிஎஸ்இ அறிவிப்பு:
'நெட்' தேர்வு திருத்தியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தத் தேர்வில் இரண்டு தாள்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கும். மொத்தம் 100 மதிப்பெண்களுக்கான முதல் தாள் காலை 9.30 மணிக்கு தொடங்கி 10.30 மணி வரை 1 மணி நேரம் மட்டும் நடத்தப்படும். இதில் 50 கேள்விகள் இடம்பெற்றிருக்கும். அதேபோல 100 மதிப்பெண்களுக்கான இரண்டாம் தாள் காலை 11 மணிக்குத் தொடங்கி மதியம் 1 மணிக்கு முடிவடையும்.
வயது வரம்பு அதிகரிப்பு: கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெற நெட் தேர்வை எழுதுபவர்களுக்கு வயது உச்ச வரம்பு எதுவும் கிடையாது.
ஆனால், இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெற நெட் தேர்வை எழுதுபவர்களுக்கு இதுவரை அதிகபட்சம் 28 வயது, உச்ச வரம்பாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த உச்ச வரம்பை இப்போது 30 வயதாக சிபிஎஸ்இ உயர்த்தியுள்ளது. இதன் மூலம் இனி 30 வயதுடையவர்களும் இந்தத் தேர்வை எழுத முடியும்.
தேர்வு எப்போது?: 2018-ஆம் ஆண்டுக்கான நெட் தேர்வு ஜூலை 8 ஆம் தேதி நடத்தப்படும். மார்ச் 6 ஆம் தேதி முதல் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஏப்ரல் 5 கடைசி நாளாகும். இதுதொடர்பாக விரிவான அறிவிப்பு சிபிஎஸ்இ இணையதளத்தில் பிப்ரவரி 1 ஆம் தேதி வெளியிடப்படும் எனத் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

]]>
http://www.dinamani.com/education/2018/jan/23/நெட்-தேர்வு-இனி-இரண்டு-தாள்கள்-மட்டுமே-உண்டு-மூன்றாம்-தாள்-கிடையாது-2849426.html
2849425 கல்வி நிகழாண்டு நீட் தேர்வு பாடத் திட்டத்தில் மாற்றமில்லை: சிபிஎஸ்இ DIN DIN Tuesday, January 23, 2018 01:33 AM +0530 நிகழாண்டு நடைபெற உள்ள நீட் தகுதித் தேர்வு பாடத் திட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது. எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவக் கல்வி நிறுவனங்களைத் தவிர, நாடு முழுவதும் உள்ள பிற மருத்துவக் கல்வி நிறுவனங்களில் இளநிலை எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளில் சேர நீட் தகுதித் தேர்வில் தகுதி பெறுவது கட்டாயம்.
இந்த தகுதித் தேர்வை சிபிஎஸ்இ நடத்தி வருகிறது. 2018 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு அறிவிப்பை ஓரிரு நாள்களில் சிபிஎஸ்இ வெளியிட உள்ளது. இந்த நிலையில், அதற்கான பாடத் திட்டம் குறித்த அறிவிப்பை இப்போது வெளியிட்டள்ளது. அதன்படி, 2017 ஆம் ஆண்டு நீட் தேர்வு பாடத் திட்டத்தின் அடிப்படையிலேயே, 2018 ஆம் ஆண்டும் நீட் தேர்வு நடத்தப்படும். எனவே, பாடத் திட்டத்தில் எந்தவித மாற்றுமும் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/3/1/17/w600X390/cbse1.jpg http://www.dinamani.com/education/2018/jan/23/நிகழாண்டு-நீட்-தேர்வு-பாடத்-திட்டத்தில்-மாற்றமில்லை-சிபிஎஸ்இ-2849425.html
2846792 கல்வி 5, 8-ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு: விரைவில் மசோதா: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் DIN DIN Friday, January 19, 2018 04:30 PM +0530 தொடக்கக் கல்வியை மேம்படுத்தும் வகையில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு முறையை அமல்படுத்துவதற்கான சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.
'இம்மசோதாவுக்கு இதுவரை 26 மாநிலங்கள் ஒப்புதல் தெரிவித்து விட்டன. ஒருசில மாநிலங்கள் மட்டுமே எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. விரைவில் அந்த மாநிலங்களிடமும் ஒப்புதல் பெறப்படும்' என்றும் அவர் கூறினார்.
'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம்' சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட இரண்டு நாள் கல்வி மாநாட்டின் இறுதி நாளான வியாழக்கிழமை நிகழ்வில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசியது:
ஒரு நாட்டைப் பாதுகாக்க ராணுவம் எந்த அளவுக்குத் தேவையோ, அதுபோல ஒரு நல்ல பண்பு நிறைந்த சமூகத்தைப் பாதுகாக்க சிறந்த பள்ளிகள் தேவை. இதை உணர்ந்துள்ள மத்திய அரசு தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரை மிகப் பெரிய மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது.
பல சிறிய நாடுகளிலும்கூட, ஒன்றாம் வகுப்பு முதல் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஆனால், இந்தியாவில் குறிப்பாக அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை தேர்வுகள் நடத்தப்படுவதில்லை. மாணவர்களை முறையாக மதிப்பீடு செய்யாமலேயே 9-ஆம் வகுப்புக்கு அனுப்பப்படுகின்றனர். இதனால், மாணவர்கள் பல பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. உதாரணத்துக்கு, 7-ஆம் வகுப்பு மாணவருக்கு, 4-ஆம் வகுப்பு கணிதத்தைப் போடத் தெரிவதில்லை. இதை மாற்றி, முறையான, தரமான தொடக்கக் கல்வியை குழந்தைகளுக்கு வழங்கும் நோக்கத்தோடு 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு முறை (போர்டு எக்ஸாம்) அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான சட்ட மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.
இதன்படி, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு மார்ச் மாதம் நடத்தப்படும் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, மே மாத துணைப் பொதுத் தேர்வில் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும். இந்த இரண்டாவது வாய்ப்பிலும் தேர்ச்சி பெறாத மாணவர்கள், அடுத்த வகுப்புக்கு அனுப்பப்பட மாட்டார்கள். இந்தச் சட்ட மசோதாவுக்கு இதுவரை 26 மாநிலங்கள் ஒப்புதல் தெரிவித்துவிட்டன. எதிர்ப்புத் தெரிவித்து வரும் ஒரு சில மாநிலங்களிடமும் விரைவில் ஒப்புதல் பெறப்பட்டுவிடும்.
ஆசிரியர்கள் பணி நீக்கம்: தொடக்கக் கல்வி ஆசிரியர்களையும் உரிய தகுதியுடையவர்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இப்போது நாடு முழுவதும் தொடக்கப் பள்ளிகளில் முறையான பயிற்சி இல்லாமல் 20 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அனைவரையும் தகுதியான ஆசிரியர்களாக மாற்றுவதற்காக, ஆசிரியர் பட்டயத் தேர்வில் தேர்ச்சி பெறுவதை மத்திய அரசு கட்டாயமாக்கியது. இதுவரை இவர்களில் 5 லட்சம் ஆசிரியர்கள் மட்டுமே இந்தப் பட்டயத் தேர்வில் தகுதி பெற்றுள்ளனர்.
இந்த ஆசிரியர்களின் வசதிக்காக 'ஸ்வயம்' என்ற வலைதளத்தில் ஆசிரியர் பட்டயத் தேர்வுக்கான அனைத்துப் பாடங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. எனவே, எஞ்சியுள்ள 15 லட்சம் ஆசிரியர்களும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் பட்டயத் தேர்வில் தேர்ச்சி பெற்றாக வேண்டும். இல்லையெனில், பணியிலிருந்து அவர்கள் நீக்கப்படுவர்.
பள்ளிக் கல்வியைப் போல, உயர் கல்வியையும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உலகத் தரத்திலான உயர் கல்வி நிறுவனங்களை உருவாக்கும் வகையில், மேம்பட்ட உயர் கல்வி நிறுவனம் என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், 20 உயர் கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு அவற்றுக்கு தலா ரூ. 1000 கோடி மேம்பாட்டு நிதியை மத்திய அரசு வழங்க உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 103 உயர் கல்வி நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. 
அதுபோல, அதிக எண்ணிக்கையிலான கல்லூரிகளை தன்னாட்சி அதிகாரம் கொண்ட கல்வி நிறுவனங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சிலிடம் (நாக்) குறைந்தபட்சம் 3.26 தரப் புள்ளிகளைப் பெற்ற அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும் முழு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட உள்ளது.
ஐஐஎம்-க்கு முழு தன்னாட்சி அதிகாரம்: நாடு முழுவதும் இயங்கி வரும் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களுக்கு (ஐஐஎம்) முதன் முறையாக முழு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட உள்ளது. வரும் 31-ஆம் தேதி இதற்கான சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் என்றார் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர். இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
'நவோதயா பள்ளிகள் இல்லாதது துரதிர்ஷ்டம்'
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் இல்லாதது துரதிர்ஷ்டவசமானது என்று மத்திய அமைச்சர் ஜாவடேகர் பேசினார்.
சென்னையில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் வியாழக்கிழமை நடந்த கல்விக் கருத்தரங்கில் அவர் பேசியது:
தரமான உயர்கல்வி நிறுவனங்களில் மேலும் அதிக மாணவர்கள் சேர்க்கை பெற வசதியாக, புதிதாக 7 ஐஐஎம்கள், 7 ஐஐடி கல்வி நிறுவனங்களும் உருவாக்கப்பட உள்ளன. நாடு முழுவதும் 100 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும், 17 நவோதயா பள்ளிகளும் புதிதாக உருவாக்கப்பட உள்ளன. சிறந்த பள்ளிக் கல்வியை வழங்கி வரும் நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் இல்லாதது துரதிஷ்டவசமானது.
மீண்டும் ரூசா திட்டம்: தரமான அனைவருக்குமான உயர் கல்வியை உறுதிப்படுத்தும் வகையில், அனைவருக்கும் உயர் கல்வி (ரூசா) என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. ஆனால், பல உயர் கல்வி நிறுவனங்கள் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாமல், இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெறத் தவறிவிட்டன. 
இந்த உயர் கல்வி நிறுவனங்களும் பயன்பெறும் வகையில், பல்வேறு புதிய அம்சங்களுடன் மாற்றியமைக்கப்பட்ட 'ரூசா' திட்டம் வரும் 2020-இல் மீண்டும் அறிமுகம் செய்யப்படும். 
இதை உயர் கல்வி நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் உயர் கல்வி நிறுவனத்துக்கு ரூ. 40 கோடி வரை மேம்பாட்டு நிதியை மத்திய அரசு வழங்கும்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/19/w600X390/jawdegar.jpg http://www.dinamani.com/education/2018/jan/19/5-8-ஆம்-வகுப்புகளுக்குப்-பொதுத்-தேர்வு-விரைவில்-மசோதா-மத்திய-அமைச்சர்-பிரகாஷ்-ஜாவடேகர்-2846792.html
2835412 கல்வி ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கு ஜன. 7-இல் இலவச பயிற்சி DIN DIN Saturday, December 30, 2017 02:22 AM +0530 ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் தேர்வுகளுக்கு வழிகாட்டும் இலவச பயிற்சி முகாம், சென்னையில் வரும் ஜனவரி 7 -ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
இதுகுறித்து பெரியார் ஐஏஎஸ் அகாதெமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை பெரியார் திடலில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் பெரியார் ஐஏஎஸ் அகாதெமியில், 2018 -ஆம் ஆண்டுக்கான ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் தேர்வுக்கான வழிகாட்டும் இலவச பயிற்சி முகாம் ஜனவரி 7 -ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.
இதில் ஐஏஎஸ் தேர்வுக்கு எளிமையாக பயிலும் வழிமுறைகளைப் பற்றியும், மாணவர்கள் தேர்வுக்கு தங்களை எவ்வாறு தயார் செய்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும் பேராசிரியர்களும், வெற்றி பெற்ற முன்னாள் மாணவர்களும் விளக்கமாக எடுத்துரைக்க உள்ளனர். மேலும் விவரங்களை, பெரியார் ஐஏஎஸ் அகாதெமி, பெரியார் திடல், ஈ.வி.கே சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 7 என்ற முகவரியிலும், 044- 2661 8056, 99406 38537 ஆகிய எண்களிலும் பெறலாம்.

]]>
http://www.dinamani.com/education/2017/dec/30/ஐஏஎஸ்-ஐபிஎஸ்-தேர்வுக்கு-ஜன-7-இல்-இலவச-பயிற்சி-2835412.html
2829767 கல்வி திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பெற்ற எம்.பில், பி.எச்.டி. பட்டங்கள் செல்லும்: அரசாணை வெளியீடு DIN DIN Wednesday, December 20, 2017 10:17 AM +0530 சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பெற்ற எம்.பில், பி.எச்.டி. பட்டம் செல்லும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் நேரடி முறையில் பெறப்பட்ட எம்.பில். மற்றும் பிஎச்.டி. பட்டங்கள் செல்லும் என்ற தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

முதலில் யூ.ஜி.சி. அங்கீகரித்த பல்கலையில் பட்டம் அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதன்பின்னர் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையில் முழு அல்லது பகுதி நேர படிப்பில் சேர்ந்து ஆய்வு பட்டம் பெற வேண்டும்.

தமிழக அரசு, அரசுசார் நிறுவனங்கள், பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரியில் பணி நியமனம் செய்வதற்கு மற்றும் பதவி உயர்வுக்கு இந்த பட்டம் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/12/12/w600X390/tngov1.jpg http://www.dinamani.com/education/2017/dec/20/திறந்தநிலை-பல்கலைக்கழகத்தில்-பெற்ற-எம்பில்-பிஎச்டி-பட்டங்கள்-செல்லும்-அரசாணை-வெளியீடு-2829767.html
2829198 கல்வி சென்னை பல்கலைக்கழகத்தில் 2018-19-ம் கல்வி ஆண்டு முதல் ஆன்லைன் வழியாக படிக்கலாம்: துணைவேந்தர் தகவல் DIN DIN Tuesday, December 19, 2017 11:40 AM +0530 சென்னை பல்கலைக்கழகத்தில் வரும் 2018-2019-ஆம் கல்வி ஆண்டு முதல் ஆன்லைன் வழியாகவும் படிக்கலாம் என்று துணைவேந்தர் பி.துரைசாமி கூறினார். 

சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டம் முடிந்து வெளியே வந்த துணைவேந்தர் பி.துரைசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சென்னை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவருக்கும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் 7-வது ஊதியக்குழு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. 91 துறைகள் மூலம் முதுகலை படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. அந்தந்த துறை விருப்பப்படி ஆன்லைனில் யாரும் எங்கிருந்தும் படிக்கலாம். வேலைவாய்ப்பை கருதி இந்த வசதி கொண்டு வரப்படுகிறது. மேலும் வரும் கல்வி ஆண்டு (2018-2019) முதல் அமல்படுத்தப்படுகிறது எனவும் சிண்டிகேட்டில் இதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது என்றார். 

மேலும் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் வழக்கம்போல நேரடியாக படிக்கலாம். அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்று தெரிவித்தார். 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/19/w600X390/madrasuniversity.jpg http://www.dinamani.com/education/2017/dec/19/சென்னை-பல்கலைக்கழகத்தில்-2018-19-ம்-கல்வி-ஆண்டு-முதல்-ஆன்லைன்-வழியாக-படிக்கலாம்-துணைவேந்தர்-தகவல்-2829198.html
2825365 கல்வி டிச. 31-க்குள் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை கட்டாயம் DIN DIN Wednesday, December 13, 2017 03:43 AM +0530 இம்மாதம் 31-ஆம் தேதிக்குள் தொடக்கக் கல்வியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் ஆதார் புகைப்பட அடையாள அட்டை கட்டாயம் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறையின் தொடக்கக் கல்வி இயக்குநர் கார்மேகம் பிறப்பித்த உத்தரவு: 
2017-18-ஆம் கல்வியாண்டில் தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வி இயக்க கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் இதுவரை ஆதார் அட்டை எடுக்காதவர்களுக்கு ஒன்றிய அளவில் ஆதார் எடுப்பதற்கான பணிகளை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் விரைந்து முடிக்க வேண்டும். இப்பணிகள் டிசம்பர் 31-க்குள் முடிக்கப்பட வேண்டும்.
ஆதார் புகைப்பட அட்டை எடுக்கப்படாத மாணவர்களின் ஒட்டு மொத்த விவரங்களைப் பெற்று, ஆதார் எடுக்கும் முகமையினரிடம் செயல்திட்டத்தை வழங்கி, ஆதார் எடுக்கும் நாள்களில் அம்மையத்தில் கல்வித் துறையைச் சார்ந்த பொறுப்பான நபர் ஒருவரை நியமித்து அனைத்து மாணவர்களுக்கும் ஆதார் புகைப்பட அட்டை எடுக்கும் பணியை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் நடத்தி முடிக்க வேண்டும். 
ஆதார் அட்டை எடுக்க மாணவர்களை ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு அழைத்துச் செல்லும் போது, பெற்றோர்களின் அனுமதியுடனும், பாதுகாப்பாகவும் அழைத்துச் செல்ல வேண்டும்.
இப்பணிகள் முடிவடைந்த நிலையில், ஏற்கெனவே ஆதார் எடுக்கப்பட்ட மாணவர்களினுடைய ஆதார் எண்ணிக்கை மேற்கண்ட தகவல் முறைமையில் பதிவேற்றம் செய்யும் பணியையும் மேற்கொள்ள வேண்டும். தற்போது ஆதார் புகைப்படம் எடுக்கும் மாணவர்களுக்கு ஆதார் எண் கிடைக்கப் பெற்றதும் அவ்விவரத்தையும் கல்வி மேலாண்மை தகவல் முறைமையில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
கல்வி மேலாண்மை தகவல் முறைமையில் அனைத்து மாணவர்களின் விவரங்கள் பதிவு முடிவடைந்த நிலையில், குறைந்த எண்ணிக்கையுள்ள மாணவர்கள் இருக்கும் பள்ளியில் அதிக எண்ணிக்கையில் பணியாற்றும் ஆசிரியர்கள் மாற்றப்படுதல், 20-க்கும் குறைந்த நிலையில் மாணவர்கள் எண்ணிக்கை உள்ள தொடக்கப் பள்ளிகளை அருகே இருக்கும் பள்ளிகளோடு இணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருக்கும் உபரி ஆசிரியர் பணியிடங்களைத் திரும்ப அரசிடம் ஒப்படைக்கு பணிகள் நடைபெறும் எனத் தெரிகிறது.
 

]]>
http://www.dinamani.com/education/2017/dec/13/டிச-31-க்குள்-பள்ளி-மாணவர்கள்-அனைவருக்கும்-ஆதார்-அட்டை-கட்டாயம்-2825365.html
2825251 கல்வி தொலைநிலைக் கல்வி நிறுவன தேர்வுகள்: நுழைவுச் சீட்டுகள் பதிவேற்றம் DIN DIN Wednesday, December 13, 2017 01:28 AM +0530 சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனம் சார்பில் டிசம்பர் மாதத் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி:
தொலைநிலைக் கல்வி நிறுவனம் சார்பில் வழங்கப்படும் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான டிசம்பர் மாதத் தேர்வுகள் வருகிற 16 -ஆம் தேதி தொடங்க உள்ளன. 
இந்தத் தேர்வுகள் அனைத்தும் வார இறுதி நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடத்தப்படும். பட்டயப் படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான தேர்வுகள் ஜனவரி 2 -ஆம் தேதி முதல் தொடங்க உள்ளன. 
இந்தத் தேர்வுகள் அனைத்து நாள்களும் நடத்தப்படும்.
இந்தத் தேர்வுகளுக்கான கால அட்டவணைகள், மாணவர்களுக்கான தேர்வறை நுழைவுச் சீட்டுகள் அனைத்தும் பல்கலைக்கழக இணையதளத்தில் www.unom.ac.in பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/education/2017/dec/13/தொலைநிலைக்-கல்வி-நிறுவன-தேர்வுகள்-நுழைவுச்-சீட்டுகள்-பதிவேற்றம்-2825251.html
2824988 கல்வி சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு தேர்வுகளில் மதிப்பெண் முறை பின்பற்றப்படும்: சிபிஎஸ்இ அறிவிப்பு PTI PTI Tuesday, December 12, 2017 10:16 AM +0530 புதுதில்லி: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில், வருகிற மார்ச் மாதம் நடக்கும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகளில் மதிப்பெண் முறை பின்பற்றப்படும் என்று மத்திய கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நேற்று திங்கள்கிழமை அறிவித்துள்ளது.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தற்போது, கிரேட் முறை பின்பற்றப்படும் நிலையில், வருகிற 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடக்கும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகளில் மதிப்பெண் முறையே மீண்டும் பின்பற்றப்படும் என்று மத்திய கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நேற்று திங்கள்கிழமை அறிவித்தது. மேலும், 10-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு கட்டாயம் ஆவதாகவும் சிபிஎஸ்இ மீண்டும் தெரிவித்துள்ளது.

10-ஆம் வகுப்புக்கு கணிதம், அறிவியல், சமூக அறிவியல், ஆங்கிலம் (தகவல் தொடர்பு), ஆங்கிலம் (மொழி மற்றும் இலக்கியம்) ஆகிய பாடங்களுக்கும், 12-ஆம் வகுப்பு தேர்வில் கணக்கு பதிவியல், உயிரியல், வணிக கல்வி, வேதியியல், பொருளாதாரம், ஆங்கிலம், ஹிந்தி, கணிதம், இயற்பியல் ஆகிய பாடங்களுக்கும் மதிப்பெண் முறை பின்பற்றப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

மதிப்பெண் முறையை இணையதளத்தில் பார்த்து கொள்ளலாம் என்றும், தேர்வு கால அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளது. 

மேலும், நாடு முழுவதும் 18 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளிகள் சிபிஎஸ்இ உடன் இணைக்கப்பட்டுள்ளன. இதில்,10,678 பள்ளிகள் 12-ஆம் வகுப்பு தேர்வுக்கு பதிவு செய்துள்ளன. அதில், மாணவர்கள் 6,38,865 பேர், மாணவிகள் 4,60,026 பேர் என மொத்தம் 10,98,891 பேர் இந்த ஆண்டு தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளார்கள் பதிவு செய்துள்ளனர். 

கடந்த 2017-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2.82 சதவீதம் அதிகரித்துள்ளது. சுமார் 10,67,900 மாணவர்களில், 6,21,259 பேர் மாணவர்கள், 4,46,641 மேர் மாணவிகள் என தெரிவிக்கப்ட்டுள்ளது. 

]]>
new delhi, Central Board of Secondary Education (CBSE) , marking scheme , 10 and 12 examinations, re-introduced http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/10/w600X390/sslc_exam-15.jpg http://www.dinamani.com/education/2017/dec/12/cbse-notifies-marking-scheme-for-class-10-12-examinations--2824988.html
2822658 கல்வி புதுச்சேரியில் விதிமுறைகளை மீறி எம்.பி.பி.எஸ். சேர்ந்த 105 மாணவர்கள் நீக்கம்? DIN DIN Friday, December 8, 2017 10:45 AM +0530 புதுச்சேரி சென்டாக் சென்டாக் மூலம் தேர்வு செய்யப்பட்ட 56 மாணவர்களை தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை - ஆராய்ச்சி மையத்தில் இருந்து வெளியேற்றக் கூடாது என இந்திய மருத்துவக் கழகத்துக்கு புதுவை அரசு பரிந்துரைத்தது.  

இதுகுறித்து புதுவை மாநில நலவழித் துறை சார்பில் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:  

இந்திய மருத்துவக் கழகமானது புதுச்சேரியில் இயங்கி வரும் மூன்று சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் பட்ட மருத்துவக் கல்விக் கட்டுப்பாட்டுச் சட்டம் 1997-இன்படி, 2017-18 ஆம் கல்வியாண்டில் மருத்துவப் பட்டப் படிப்பில் சேர்க்கப்பட்ட 105 மாணவர்களை விடுவிக்க கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது.  

இந்திய மருத்துவக் கழகத்தின் இந்த வெளியேற்ற நடவடிக்கையானது, தனியார் மருத்துவக் கல்லூரிகளால் அளிக்கப்பட்ட பட்டியலில் உள்ள மாணவர்களின் பெயர்கள், சென்டாக் வழங்கிய பட்டியலில் இல்லாததன் அடிப்படையில் எடுக்கப்பட்டதாகும். 

இந்திய மருத்துவக் கழகத்தின் இந்த அறிவுறுத்தலை புதுவை பல்கலைக்கழகப் பதிவாளர் மற்றும் தமிழ்நாடு மாநில மருத்துவக் கழகத்தின் கவனத்துக்கு புதுவை அரசு தெரிவித்தது.  இந்திய மருத்துவக் கழகமானது மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரியில் - 41, வெங்கடேஸ்வரா கல்லூரியில் - 38, பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் - 26 என 105 மாணவர்கள் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீ வெங்டேஸ்லரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை - ஆராய்ச்சி மையத்தில் இருந்து சென்டாக் வழங்கிய 56 மாணவர்களை (55 அரசு ஒதுக்கீடு மற்றும் ஒரு நிர்வாக ஒதுக்கீடு) வெளியேற்றும்படி தவறுதலாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.  

சென்டாக் வழங்கிய இந்த 56 மாணவர்கள் தொடர்பான நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய மருத்துவக் கழகத்தை புதுவை அரசு அணுகியுள்ளது. மேலும், இந்திய மருத்துவக் கழகத்திடம் இருந்து அடுத்த ஆணை (அ) கடிதம் வரும் வரை மாணவர்களை வெளியேற்றாமல் இருக்க அந்தத் தனியார் கல்லூரிக்கு புதுவை அரசு அறிவுறுத்தியுள்ளது.  

எனவே, இந்த 56 மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், இது தொடர்பாக வதந்திகள் பரப்பப்பட்டால் அதை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது. 

இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு புதுவை நலவழித் துறை இயக்குநரை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மருத்துவ கழகத்தின் அதிரடி நடவடிக்கையால் புதுச்சேரி எம்.பி.பி.எஸ். மாணவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/8/w600X390/medical-stud.jpg http://www.dinamani.com/education/2017/dec/08/புதுச்சேரியில்-விதிமுறைகளை-மீறி-எம்பிபிஎஸ்-சேர்ந்த-105-மாணவர்கள்-நீக்கம்-2822658.html
2821588 கல்வி படிப்பு உதவித் தொகை தேர்வு நுழைவுச் சீட்டு நாளை முதல் பதிவிறக்கம் செய்யலாம் DIN DIN Thursday, December 7, 2017 02:25 AM +0530 தேசிய வருவாய் வழி-திறன் படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை தொடர்புடைய பள்ளியின் தலைமையாசிரியர்கள் வெள்ளிக்கிழமை (டிச.8) முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி புதன்கிழமை வெளியிட்ட செய்தி:

தேசிய வருவாய் வழி-திறன் படிப்பு உதவி தொகை திட்டத் தேர்வு வரும் டிச. 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது. 
விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளைப் பள்ளிகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள USER ID மற்றும் PASSWORD-ஐ பயன்படுத்தி பள்ளியின் முதல்வர் அல்லது தலைமையாசிரியர் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கலாம்.

]]>
http://www.dinamani.com/education/2017/dec/07/படிப்பு-உதவித்-தொகை-தேர்வு-நுழைவுச்-சீட்டு-நாளை-முதல்-பதிவிறக்கம்-செய்யலாம்-2821588.html
2820951 கல்வி அரையாண்டுத் தேர்வுகள் நாளை தொடக்கம் DIN DIN Wednesday, December 6, 2017 01:12 AM +0530 தமிழக பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வுகள் வியாழக்கிழமை தொடங்கவுள்ளன.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில், இந்த ஆண்டுக்கான அரையாண்டுத் தேர்வு குறித்த அறிவிப்பை பள்ளிக் கல்வித் துறை கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்டது. மேலும், தேர்வுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டது.
இந்த ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு மாநிலம் முழுவதும் ஒரே கேள்வித்தாள்கள் இடம்பெற உள்ளன. தற்போது கேள்வித்தாள்கள் அச்சிட்டு மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இதையடுத்து வியாழக்கிழமை (டிச. 7) அரையாண்டு தேர்வுகள் தொடங்குகின்றன. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு டிசம்பர் 7 முதல் டிசம்பர் 23 -ஆம் தேதி வரையிலும், பத்தாம் வகுப்புக்கான தேர்வுகள் டிசம்பர் 11 முதல் டிசம்பர் 23 -ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளன. அதற்கு பிறகு விடுமுறை அறிவிக்கப்படும்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/6/w600X390/10th_exam.jpg http://www.dinamani.com/education/2017/dec/06/அரையாண்டுத்-தேர்வுகள்-நாளை-தொடக்கம்-2820951.html
2820558 கல்வி பிளஸ் 2 துணைத் தேர்வு: மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு DIN DIN Tuesday, December 5, 2017 07:53 AM +0530 பிளஸ் 2 துணைத் தேர்வுகளுக்கான மறுமதிப்பீடு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படவுள்ளது. 

இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பு:-
கடந்த செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் பிளஸ் 2 துணைத்தேர்வு எழுதிய தேர்வர்களில் மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள பதிவெண்கள் அடங்கிய பட்டியல் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு மேல் www.tndge.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.

மேலும், மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் தங்களுக்கான தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை www.dge.tn.nic.in என்ற இணையதளத்துக்குச் சென்று பதிவெண் மற்றும் பிறந்ததேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி பின்னர் தெரிவிக்கப்படும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2015/2/4/4/w600X390/tn_education.jpg http://www.dinamani.com/education/2017/dec/05/பிளஸ்-2-துணைத்-தேர்வு-மறுமதிப்பீடு-முடிவுகள்-இன்று-வெளியீடு-2820558.html
2820173 கல்வி 300 தனியார் பொறியியல் கல்லூரிகளில் வரும் கல்வி ஆண்டில் மாணவர்களை சேர்க்க தடை: ஏ.ஐ.சி.டி.இ DIN DIN Monday, December 4, 2017 11:22 AM +0530 நாடு முழுவதும் உள்ள 300 தனியார் பொறியியல் கல்லூரிகள் வரும் கல்வியாண்டில் புதிய மாணவர் சேர்க்கை நடத்த அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தடை விதித்துள்ளது. 

இந்தியாவில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான தனியார் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அவற்றில் 13.56 லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். அவற்றில் 800 கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை 50 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. 

கடந்த சில வருடங்களாக பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை படிப்படியாக குறைந்து வருகிறது. என்ஜினீயரிங் படிப்பு மீதுள்ள மோகம் குறைந்ததால் கல்லூரிகளில் சேர ஆர்வம் காட்டவில்லை.

சிறந்த கட்டமைப்பு வசதிகள் கொண்ட கல்லூரிகளை மட்டும் மாணவர்கள் தேர்வு செய்து வருவதால் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத கல்லூரிகளை புறக்கணித்தனர். இதனால் அந்த கல்லூரிகளில் மாணவர்கள் சேராததால் தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொறியியல் இடங்கள் நிரப்பப்படாமலேயே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் சேர்கை இல்லாமலும் மிக குறைந்த எண்ணிக்கையில் சேர்ந்த மாணவர்களை வைத்துக்கொண்டு தொடர்ந்து கல்லூரிகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் தொடர்ச்சியாக 30 சதவீதத்திற்கும் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளை விரைவில் மூடப்பட வேண்டும். அந்த கல்லூரிகளில் அடுத்த கல்வியாண்டிற்கான புதிய மாணவர்களை சேர்க்கையை உடனிடியாக நிறுத்த வேண்டும் என அனைத்திந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) அனுமதி அளித்துள்ளது.

மேலும் மாணவர் சேர்க்கை 30 சதவீதத்துக்கும் குறைவாக உள்ள 500 பொறியியல் கல்லூரிகளை கண்காணித்து வருவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாணவர் சேர்க்கைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள கல்லூரிகள் விரும்பினால், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாகவோ, தொழில்பயிற்சி கல்லூரிகளாகவோ மாறிக்கொள்ளலாம் என ஏ.ஐ.சி.டி.இ. கூறியுள்ளது. 

பொறியியல் கல்லூரிகளின் வங்கிக்கடன், முதலீட்டுத்தொகை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கலை, அறிவியல் கல்லூரிகளாக மாற வாய்ப்பு அளிக்கப்படுவதாக ஏ.ஐ.சி.டி.இ. விளக்கமளித்துள்ளது.

]]>
New Delhi, HRD ministry, 300 private engineering colleges, stop operations, 2018-19 academic sessions, All India Council for Technical Education (AICTE) http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/4/w600X390/aicte.jpg http://www.dinamani.com/education/2017/dec/04/300-private-engineering-colleges-likely-to-be-asked-to-shut-operations-heres-why-2820173.html
2818723 கல்வி கல்வி உதவித்தொகை: புதுப்பித்தல் விண்ணப்பங்கள் வரவேற்பு DIN DIN Saturday, December 2, 2017 02:22 AM +0530 மத்திய அரசின் கல்வி உதவித்தொகையை பெறும் கல்லூரி மாணவர்களிடமிருந்து அதற்கான புதுப்பித்தல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்ட செய்தி: மத்திய அரசு கல்வி உதவித்தொகைகளை கடந்த 2012, 2013, 2014 ஆகிய ஆண்டுகளிலிருந்து பெற்று வரும் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து, உதவித் தொகை புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுதொடர்பான விவரங்களை ஆன் -லைனில் பதிவு செய்ய வரும் 15 -ஆம் தேதி (டிச.15) கடைசி நாளாகும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து சமர்ப்பிப்பதற்கு டிசம்பர் 31 -ஆம் தேதி கடைசி நாளாகும். மேலும் விவரங்களை ஜ்ஜ்ஜ்.ஸ்ரீக்ஷள்ங்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் பெறலாம்.
 

]]>
http://www.dinamani.com/education/2017/dec/02/கல்வி-உதவித்தொகை-புதுப்பித்தல்-விண்ணப்பங்கள்-வரவேற்பு-2818723.html
2816811 கல்வி மீலாது நபி: சென்னைப் பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு DIN DIN Wednesday, November 29, 2017 01:43 AM +0530 மீலாது நபி விடுமுறை (டிசம்பர் 2) காரணமாக சென்னைப் பல்கலைக்கழகத் தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
மீலாது நபி பண்டிகையை முன்னிட்டு வரும் சனிக்கிழமை (டிச.2) விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே, அன்றைய தினம் நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் அனைத்தும் டிசம்பர் 7-ஆம் தேதி நடத்தப்படும்.
 

]]>
http://www.dinamani.com/education/2017/nov/29/மீலாது-நபி-சென்னைப்-பல்கலை-தேர்வு-ஒத்திவைப்பு-2816811.html
2814328 கல்வி பொறியியல் மாணவர்களுக்கு மூன்று வார கட்டாய அறிமுகப் பயிற்சி: ஏஐசிடிஇ அறிவுறுத்தல்  DIN DIN Saturday, November 25, 2017 10:42 AM +0530 பொறியியல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 3 வார கட்டாய அறிமுகப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் . அதன் பிறகே, வழக்கமான வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏஐசிடிஇ) அறிவுறுத்தியுள்ளது.

நிறுவனங்களின் இன்றைய தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலும், நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வித் திட்டம் நடைமுறையில் இருக்கும் வகையிலும் மாதிரி பொறியியல் கல்வித் திட்டத்தை ஏஐசிடிஇ உருவாக்கி வருகிறது. முதல்கட்டமாக பொறியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கான முதல் இரண்டு பருவங்களுக்கான கல்வித் திட்டத்தை முழுமையாக மாற்றியமைத்து, வெளியிட்டுள்ளது.

3 வார கட்டாய அறிமுகப் பயிற்சி: இதில் மாணவர்களுக்கான மூன்று வார கட்டாய அறிமுகப் பயிற்சி இடம்பெற்றுள்ளது. அதாவது, கல்லூரியில் புதிதாக நுழையும் மாணவர்கள் கல்லூரிச் சூழல், சக மாணவர்கள், ஆசிரியர்கள், தேர்வு செய்துள்ள துறை சார்ந்த விவரங்கள் குறித்த புரிதலை ஏற்படுத்தி, அச்சமற்ற தொடக்கத்தை மாணவர்களுக்கு ஏற்படுத்தித் தருவதே இந்தப் பயிற்சியின் நோக்கமாகும்.

பயிற்சியில் என்னென்ன இடம்பெறும்? அனைத்து மாணவர்களும் தினமும் காலை மற்றும் மாலையில் ஏதாவது ஒரு விளையாட்டைத் தேர்வு செய்து பயிற்சியில் ஈடுபடுவது. முன்னதாக காலை 6 மணிக்கு உடற்பயிற்சி அல்லது யோகாவில் ஈடுபடுவது.

ஒவ்வொரு நாளும், வண்ணம் தீட்டுதல், இசை, நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது. ஒரு ஆசிரியர் , 20 மாணவர்கள் என்ற எண்ணிக்கையில் குழுக்களாகப் பிரித்து, குழு விவாதங்களில் ஈடுபட வைப்பது.
வாரத்துக்கு ஒருமுறை பிரபல நபர்களை சொற்பொழி ஆற்ற வைப்பது.
 
நகரின் முக்கிய இடங்கள், மருத்துவமனை அல்லது ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அழைத்துச் செல்வது.

மாணவர்கள் தேர்வு செய்துள்ள துறை சார்ந்த தகவல்கள், சமூகத்தில் அந்தத் துறையின் பயன் குறித்து எடுத்துரைப்பது போன்ற பல்வேறு பயிற்சிகள் இந்த மூன்று வார அறிமுகப் பயிற்சித் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

பயிற்சிக்குப் பிறகே வகுப்புகள்: இந்த மூன்று வார பயிற்சிக்குப் பிறகே, வழக்கமான வகுப்புகளை பொறியியல் கல்லூரிகள் தொடங்க வேண்டும். மேலும், இந்தப் பயிற்சியின் போது அமைக்கப்படும் 10 மாணவர்களுக்கு ஒரு முதுநிலை மாணவர் வழிகாட்டி மற்றும் 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வழிகாட்டி என்ற அடிப்படையில் அமைக்கப்படும் குழுக்கள், மாணவர்களின் படிப்புக் காலமான 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கச் செய்யவேண்டும்.

இதன் மூலம், படிப்புக் காலம் முழுவதும் கல்வி, நிதி, உளவியல் ரீதியிலான ஆலோசனைகளை தனது குழுவில் உள்ள மாணவர் வழிகாட்டியிடம் அல்லது ஆசிரியர் வழிகாட்டியிடம் மாணவர்கள் தயக்கமின்றி கேட்டு பயன் பெற முடியும் எனவும் ஏஐசிடிஇ மாதிரி கல்வித் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இப்போது 2 நாள்கள் மட்டுமே... அண்ணா பல்கலைக்கழகத்தைப் பொருத்தவரை, பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு 2 நாள்கள் மட்டுமே இந்த அறிமுகப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. 

இதுகுறித்து பல்கலைக்கழக கல்வித் திட்டக் குழு இயக்குநர் கீதா கூறுகையில், இப்போது பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு 2 நாள்கள் மட்டுமே அறிமுகப் பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும், முதலாமாண்டு வகுப்புகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டு விட்டன. எனவே, நிகழாண்டு மாற்றம் கொண்டுவர முடியாது.

எனவே, ஏஐசிடிஇ வெளியிட்டுள்ள மாதிரி கல்வித் திட்டம் குறித்து பல்கலைக்கழக அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றார்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2014/8/3/1/w600X390/engineering.jpg http://www.dinamani.com/education/2017/nov/25/பொறியியல்-மாணவர்களுக்கு-மூன்று-வார-கட்டாய-அறிமுகப்-பயிற்சி-ஏஐசிடிஇ-அறிவுறுத்தல்-2814328.html
2814330 கல்வி சென்னை, கோவளம், பழவேற்காடு உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் சுனாமி விழிப்புணர்வு ஒத்திகை DIN DIN Saturday, November 25, 2017 02:30 AM +0530 செங்கல்பட்டை அடுத்த கேளம்பாக்கம், கோவளம், கல்பாக்கத்தை அடுத்த பரமன்கேணி, பழவேற்காடு உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் சுனாமி விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
கேளம்பாக்கம், கோவளம், பரமன்கேணி ஆகிய கடலோரப் பகுதிகளில் சுனாமி விழிப்புணர்வு ஒத்திகை சார் ஆட்சியர்கள் தலைமையில் நடைபெற்றது. 
நிகழ்ச்சியில் காவல் துறை, கடலோர காவல் துறை, போக்குவரத்து, வருவாய், பொதுப்பணித் துறை, தீயணைப்பு, சுகாதாரத் துறை, கடற்படை, ஊரக வளர்ச்சித்துறை, செஞ்சிலுவை சங்கம், தன்னார்வலர் தொண்டு நிறுவனங்கள் மத்திய பேரிடர் மீட்பு படை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டு, சுனாமி உள்ளிட்ட பேரிடர் காலத்தில் மக்களை எவ்வாறு பாதுகாத்து முதலுதவி, மருத்துவ உதவிகள் செய்வது, கை, கால்களில் அடிபட்டால் சிகிச்சை அளிப்பது உள்ளிட்டவை குறித்து ஒத்திகை நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டியில்...: கும்மிடிப்பூண்டியை அடுத்த வல்லம்பேடு குப்பத்தில் நடத்தப்பட்ட ஒத்திகை பயிற்சிக்கு கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ஆர்.எஸ்.ராஜகோபால் தலைமை வகித்தார். 
நிகழ்வில் கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ராஜன், கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் தயாநிதி, கும்மிடிப்பூண்டி மண்டல துணை வட்டாட்சியர் தாமோதரன், ஆரம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் முத்துராமலிங்கம், வருவாய் ஆய்வாளர் பாலாஜி முன்னிலை வகித்தனர். இதில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 83 பேர் பங்கேற்றனர். 
தொடர்ந்து ஹைதராபாத்தில் உள்ள இந்திய பெருங்கடல் சுனாமி முன்னறிவிப்பு அமைப்பின் மூலம் சுனாமி தாக்கக்கூடும் என்ற எச்சரிக்கை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் மூலம் பொன்னேரி கோட்டாட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் இதுகுறித்து அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தி மீட்பு மற்றும் பாதுகாப்பு குழுவினை வல்லம்பேடு குப்பம் பகுதிக்கு வரவழைத்தார். 
வல்லம்பேடு குப்பம் கிராமத்தில் மாவட்ட நிர்வாகத்தில் பேரிடர் மேலாண்மை பயிற்சி பெற்ற அப்பகுதியைச் சேர்ந்த 15 முதல் நிலை பொறுப்பாளர்கள் அக்கிராம மீனவர் கூட்டமைப்பு தலைவர் எல்லப்பன் தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் இணைந்து, பொதுமக்களுக்கு சுனாமி எச்சரிக்கை தந்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். 
பொன்னேரியில்...: பொன்னேரி வட்டத்தில் கடலோரப் பகுதியான பழவேற்காடு, நக்கத்துறவில் நடத்தப்பட்ட ஒத்திகை நிகழ்ச்சியில், சுனாமி ஆழிப்பேரலை வருவது போல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, அலாரம் ஒலிக்கப்பட்டது. பேரிடர் மீட்புக் குழுவினர் அங்கிருந்த உயரமான கட்டடங்களில் ஏறி, கொடியசைத்து கடலில் இருக்கும் படகுகளை உள்ளே செல்லுமாறு ஒலிப்பெருக்கியில் எச்சரித்தனர். 
மேலும் நக்கத்துறவு சென்ற வருவாய்த் துறையினர் அங்கிருந்த மக்களை பேருந்துகள் மூலம் பாதுகாப்பாக அழைத்துச் சென்று ஆண்டாள் மடத்தில் உள்ள அரசு சமுதாய நலக் கூடத்தில் தங்க வைத்தனர். மேலும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களை பேரிடர் மீட்புக் குழு மற்றும் தீயணைப்புத் துறையினர் கடற்கரை பகுதிக்கு சென்று மீட்டனர். 
மீட்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சைகள் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகைகள் நடத்தப்பட்டன. 
நிகழ்ச்சிகளில் தேசிய பேரிடர் மீட்பு துறையினர், வருவாய்த் துறையினர், சுகாதாரத் துறையினர், தீயணைப்புத் துறையினர், நெடுஞ்சாலைத் துறையினர், மின்சாரத் துறை, மீன்வளத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் போலீஸார் பங்கேற்றனர்.



 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/25/w600X390/awarnes.JPG http://www.dinamani.com/education/2017/nov/25/சென்னை-கோவளம்-பழவேற்காடு-உள்ளிட்ட-கடலோரப்-பகுதிகளில்-சுனாமி-விழிப்புணர்வு-ஒத்திகை-2814330.html
2814321 கல்வி அண்ணா பல்கலை.யில் ஏ.சி. ரிப்பேர் இலவச பயிற்சி   DIN DIN Saturday, November 25, 2017 02:19 AM +0530 குளிரூட்டி (ஏ.சி.) இயந்திரம் பழுதுபார்த்தலுக்கான 6 மாத கால இலவச பயிற்சியை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பல்கலைக்கழகத்தின் தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம் சார்பில் இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது. 
இந்தப் பயிற்சியில் சேர விரும்புவோர் 8 -ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நேர்முகத் தேர்வின் அடிப்படையில் 50 மாணவ, மாணவிகள் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்படுவர். 
இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க வரும் 27 -ஆம் தேதி கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள தொழில்முனைவோர் மேம்பாட்டு மையத்தை அனுகலாம். தொடர்புக்கு: 044-2235 8601, 98404 67267.
 

]]>
http://www.dinamani.com/education/2017/nov/25/அண்ணா-பல்கலையில்-ஏசி-ரிப்பேர்-இலவச-பயிற்சி-2814321.html
2814273 கல்வி அண்ணா பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு DIN DIN Saturday, November 25, 2017 01:44 AM +0530 மீலாது நபி விடுமுறை காரணமாக, டிச. 2-இல் நடைபெற இருந்த பருவத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் வேறு தேதிக்கு மாற்றியுள்ளது.
இது தொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு: இஸ்லாமியர்களின் மீலாது நபி பண்டிகையையொட்டி, டிச. 2-ஆம் தேதி விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே, அன்றைய தினம் நடைபெற இருந்த இணைப்புக் கல்லூரி மாணவர்களுக்கான எழுத்துத் தேர்வுகள், டிச.5-ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்படுகின்றன.
 

]]>
http://www.dinamani.com/education/2017/nov/25/அண்ணா-பல்கலை-தேர்வு-ஒத்திவைப்பு-2814273.html
2813623 கல்வி கலந்தாய்வில் முன்னுரிமை கோரி முதுநிலை மருத்துவ மாணவர்கள் போராட்டம் DIN DIN Friday, November 24, 2017 02:33 AM +0530 அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள முதுநிலை மருத்துவர்களுக்கான கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கக் கோரி சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை முதுநிலை மருத்துவ மாணவர்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 500 முதுநிலை மருத்துவர்களுக்கான கலந்தாய்வு அண்மையில் நடைபெற்றது. இந்தப் பணியிடங்களில் முன்னுரிமை அளிக்கக் கோரி, அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்பை இன்னும் 4 மாதங்களில் முடிக்க உள்ள மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உலக சர்க்கரை நோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு வியாழக்கிழமை வந்தனர். அப்போது அங்கு குழுமிய முதுநிலை மருத்துவ மாணவர்கள் தங்களது கலந்தாய்வு முன்னுரிமை கோரிக்கை குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் மனு அளித்து, எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கும்படி வலியுறுத்தினர். இதை அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்க மறுத்துவிட்டார்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/24/w600X390/medicak_student.JPG http://www.dinamani.com/education/2017/nov/24/கலந்தாய்வில்-முன்னுரிமை-கோரி-முதுநிலை-மருத்துவ-மாணவர்கள்-போராட்டம்-2813623.html
2813622 கல்வி பிரிக்ஸ் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல்: அண்ணா பல்கலை.க்கு 85-ஆம் இடம் DIN DIN Friday, November 24, 2017 02:31 AM +0530 பிரபல கியூ.எஸ். நிறுவனம் வெளியிட்டுள்ள பிரிக்ஸ் நாடுகள் பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் 85-ஆவது இடம் பிடித்து அசத்தியுள்ளது. இந்தப் பட்டியலில் சென்னைப் பல்கலைக்கழகம் 171-180 வரையிலான இடத்தைப் பிடித்துள்ளது.
ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியீடு, புதிய கண்டுபிடிப்புகளுக்கான அறிவுசார் சொத்துரிமை, ஆராய்ச்சி ஊக்குவிப்பு என்பன உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்து, தரவரிசைப் பட்டியலை கியூ.எஸ். நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் 2018-ஆம் ஆண்டுக்கான உலக அளவிலான பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலை கடந்த ஜூன் மாதம் வெளியிட்டது. இதில் முதல் 200 இடங்களில் தில்லி ஐஐடி, மும்பை ஐஐடி, பெங்களூரு ஐ.ஐ.எஸ்சி. ஆகிய 3 இந்திய கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்து அசத்தியிருந்தன.
இப்போது ஆசியா, அமெரிக்கா என பகுதி வாரியான பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. இதில் மும்பை ஐஐடி 34-ஆவது இடத்தையும், தில்லி ஐஐடி 41-ஆவது இடத்தையும், சென்னை ஐஐடி 48-ஆவது இடத்தையும் பிடித்து அசத்தின. அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 301-350 வரையிலான இடம் கிடைத்தது.
பிரிக்ஸ் நாடுகள் அளவில்...: இப்போது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் நாடுகள் அளவிலான சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசைப் பட்டியலை கியூ.எஸ். நிறுவனம் வெளியிட்டுள்ளது.
முதல் நான்கு இடங்களை...இதில் முதல் நான்கு இடங்களையும் சீன கல்வி நிறுவனங்கள் பிடித்துள்ளன. ஸிங்குவா பல்கலைக்கழகம், பெக்கிங் பல்கலைக்கழகம், ஃபுடான் பல்கலைக்கழகம், சீன அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகிய 4 சீன பல்கலைக்கழகங்கள் முதல் 4 இடங்களைப் பிடித்துள்ளன.
இதில் மும்பை ஐஐடி 9-ஆவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. பெங்களூரு ஐஐஎஸ்சி 10-ஆவது இடமும், தில்லி ஐஐடி 17-ஆவது இடமும், சென்னை ஐஐடி 18-ஆவது இடமும், கான்பூர் ஐஐடி 21-ஆவது இடமும், காரக்பூர் ஐஐடி 24-ஆவது இடமும், தில்லி பல்கலைக்கழகம் 41-ஆவது இடமும் பிடித்துள்ளன.
இந்தப் பட்டியலில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 85-ஆவது இடம் பிடித்துள்ளது. சென்னைப் பல்கலைக்கழகம் 171 முதல் 180 வரையிலான இடம் பிடித்துள்ளது.
மாணவர் வேலைவாய்ப்பில்...இது போன்று மாணவர்கள் வேலைவாய்ப்பைப் பெறும் திறன் அடிப்படையிலான உலக அளவிலான பல்கலைக்கழகத் தர வரிசைப் பட்டியலையும் கியூ.எஸ். நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதில், அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம், கலிஃபோர்னியா பல்கலைக்கழகம், ஹார்வார்ட் பல்கலைக்கழகம் ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.
மும்பை ஐஐடி, தில்லி ஐஐடி இரண்டும் 191 முதல் 200 வரையிலான இடத்தைப் பிடித்துள்ளன. சென்னை ஐஐடி, தில்லி பல்கலைக்கழகம், மும்பை பல்கலைக்கழகம் ஆகியவை 201 முதல் 250 வரையிலான இடத்தைப் பிடித்துள்ளன. ஐஐடி காரக்பூர் 251 முதல் 300 வரையிலான ரேங்க் பெற்றுள்ளது. பெங்களூர் ஐஐஎஸ்சி, கான்பூர் ஐஐடி இரண்டும் 301 முதல் 500 வரையிலான இடத்தை மட்டுமே பிடித்துள்ளன.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/20/w600X390/annauniversity.jpg http://www.dinamani.com/education/2017/nov/24/பிரிக்ஸ்-பல்கலைக்கழக-தரவரிசைப்-பட்டியல்-அண்ணா-பல்கலைக்கு-85-ஆம்-இடம்-2813622.html
2813591 கல்வி தேர்வுத் தாள் திருத்தும் பணி: தவறிழைத்த 1,070 பேராசிரியர்கள் தகுதி நீக்கம்: அண்ணா பல்கலை. நடவடிக்கை DIN DIN Friday, November 24, 2017 01:33 AM +0530 தேர்வுத் தாள் திருத்தும் பணியில் தவறிழைத்த 1,070 பேராசிரியர்களை தகுதி நீக்கம் செய்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன் மூலம் இவர்கள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குத் தேர்வுத் தாள் திருத்தும் பணியிலோ அல்லது கேள்வித் தாள் தயாரிக்கும் பணியிலோ ஈடுபட முடியாது.
தேர்வுத் தாள் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் பொறியியல் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வந்தது. இதற்காக பல்கலைக்கழகம் சார்பில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முதலில் தலா ரூ. 300 கட்டணம் செலுத்தி தேர்வுத்தாள் நகலை மாணவர்கள் பெற வேண்டும். பின்னர் ஒவ்வொரு தேர்வுத் தாள் மறுமதிப்பீடுக்கும் ரூ.400 வீதம் கட்டணம் செலுத்த வேண்டும். 
இவ்வாறு மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் பெரும்பாலானவர்களுக்கு, மதிப்பெண் மாறுதலில் தொடர்ச்சியாக மிகப் பெரிய வித்தியாசம் இருந்து வந்தது. இது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக ஆய்வு செய்ய முடிவெடுத்த பல்கலைக்கழகம், 2017 ஏப்ரல், மே பருவத் தேர்வு முடிவுகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்தது. 
இது குறித்துஅண்ணா பல்கலைக்கழக உயர்அதிகாரிஒருவர்கூறியது: இந்தக் குழு மேற்கொண்ட ஆய்வில், 1,070 பேராசிரியர்கள் தேர்வுத் தாள் திருத்தும் பணியில் முறையாக ஈடுபடாததும் அவர்கள் திருத்திய தேர்வுத் தாள்களில் மதிப்பெண் மாறுதலில் மிகப் பெரிய வித்தியாசம் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
3 ஆண்டுகளுக்கு தடை: அதன்படி, 21 முதல் 30 மதிப்பெண்கள் வரை வித்தியாசம் வரும் வகையில் தேர்வுத் தாளை திருத்திய 433 பேராசிரியர்களுக்கு ஓராண்டும், 31 முதல் 40 மதிப்பெண்கள் வரை வித்தியாசம் வரும் வகையில் திருத்திய 364 பேராசிரியர்களுக்கு 2 ஆண்டுகளும், 40 மதிப்பெண்களுக்கு மேல் வித்தியாசம் வரும் வகையில் தேர்வுத் தாளைத் திருத்திய 273 பேராசிரியர்களுக்கு 3 ஆண்டுகளும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த 1,070 பேராசிரியர்களும் இந்தத் தடைக் காலத்தில் தேர்வுத் தாள் திருத்தும் பணியிலோ அல்லது கேள்வித் தாள் தயாரிக்கும் பணியிலோ ஈடுபட முடியாது.
இந்தத் தவறுகளைக் குறைக்கும் வகையில் சில மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 20 தேர்வுத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கு ஒரு தலைமை மதிப்பீட்டாளர் என்று இருந்ததை மாற்றி, இனி 10 மதிப்பீட்டாளர்களுக்கு ஒரு தலைமை மதிப்பீட்டாளர் நியமிக்கப்பட உள்ளார்.
அதுபோல, இதுவரை தலைமை மதிப்பீட்டாளருக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த விடைப் பட்டியல், இனி ஒவ்வொரு மதிப்பீட்டாளருக்கும் வழங்கப்படும் என்றார்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/6/17/4/w600X390/annauniversity.jpg http://www.dinamani.com/education/2017/nov/24/தேர்வுத்-தாள்-திருத்தும்-பணி-தவறிழைத்த-1070-பேராசிரியர்கள்-தகுதி-நீக்கம்-அண்ணா-பல்கலை-நடவடிக்கை-2813591.html
2813590 கல்வி சென்னை ஐஐடி வளாக தேர்வு: 50 -க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்பு DIN DIN Friday, November 24, 2017 01:32 AM +0530 சென்னை ஐஐடியில் டிசம்பர் 1 -ஆம் தேதி தொடங்கவுள்ள வளாகத் தேர்வில் 50- க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.
இதுதொடர்பாக சென்னை ஐஐடி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி: சென்னை ஐஐடியில் முதல்கட்ட வளாகத் தேர்வு (வேலைவாய்ப்பு முகாம்) டிசம்பர் 1 -ஆம் தேதி முதல் டிசம்பர் 10 -ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதில் 50 -க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று மாணவர்களைத் தேர்வு செய்ய உள்ளன.
வழக்கமாக இதில் பங்கேற்கக்கூடிய மைக்ரோசாப்ட், சேம்சங், மஹிந்திரா, இன்டெல், பஜாஜ், லார்சன் அண்ட் டூப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் இம்முறையும் வரவிருக்கின்றன. ஆப்பிள் நிறுவனம் முதல்முறையாக இந்த வளாகத் தேர்வில் பங்கேற்க உள்ளது. நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், வேலைவாய்ப்பைப் பெறும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வெவ்வேறு படிப்பு மற்றும் துறைகளைச் சார்ந்த சுமார் 1,100 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் வேலைவாய்ப்புகளுக்காக பதிவு செய்துள்ளனர் என அந்தச் செய்திக்குறிப்பில் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

]]>
http://www.dinamani.com/education/2017/nov/24/சென்னை-ஐஐடி-வளாக-தேர்வு-50--க்கும்-மேற்பட்ட-நிறுவனங்கள்-பங்கேற்பு-2813590.html
2813589 கல்வி ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வு: டிச.1 முதல் விண்ணப்பிக்கலாம் DIN DIN Friday, November 24, 2017 01:31 AM +0530 ஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுக்கு (ஜே.இ.இ.) டிசம்பர் 1 -ஆம் தேதி முதல் ஆன்-லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஜே.இ.இ. தேர்வு முதல்நிலை, முதன்மை நிலை (அட்வான்ஸ்டு) என இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. முதல்நிலை தேர்வில் தகுதி பெறுபவர்களில் முதல் 1.5 லட்சம் பேர், அடுத்து நடத்தப்படும் முதன்மைத் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவர். இதில் தகுதி பெறுபவர்கள் நாடு முழுவதும் உள்ள ஐஐடி, ஐஐஎஸ்சி கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற முடியும். தற்போது 2018-ஆம் ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பும், தகவல் கையேடும் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் நேரடி எழுத்துத் தேர்வு 2018 ஏப்ரல் 8 -ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து ஆன்-லைன் தேர்வு ஏப்ரல் 15,16 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளன. இதில் பங்கேற்க www.jeemain.nic.in என்ற இணையதளத்தில் ஆன்-லைனில் டிசம்பர் 1 -ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் ஜனவரி 1 -ஆம் தேதி கடைசி நாளாகும்.

]]>
http://www.dinamani.com/education/2017/nov/24/ஜேஇஇ-முதல்நிலைத்-தேர்வு-டிச1-முதல்-விண்ணப்பிக்கலாம்-2813589.html
2813487 கல்வி பள்ளி நேரங்களில் மாணவர்களுக்கு ஏன் சிறப்பு பேருந்து இயக்கக் கூடாது? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி DIN DIN Thursday, November 23, 2017 01:04 PM +0530 சென்னை: பள்ளி நேரங்களில் மாணவர்களுக்கு ஏன் சிறப்பு பேருந்து இயக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பு உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு, போக்குவரத்துக் கழகம் நாளை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அரசுப் பேருந்துகளில் மாணவர்கள் அதிக அளவில் தொங்கிக்கொண்டும், பேருந்து மேற்கூரையில் ஏறிக்கொண்டும் ஆபத்தான பயணம் செய்வது அதிகரித்து வருகிறது. இப்படி பயணம் செய்யும்போது மற்ற பயணிகளுக்கு சிரமம் ஏற்படுவதுடன், மாணவர்களும் விபத்தில் சிக்க நேரிடுகிறது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒரு மனு தாக்கல் செய்தார். 

மாணவர்கள் பேருந்து மேற்கூரைகளில் பயணம் செய்தது மற்றும் படிக்கட்டில் தொங்கிகொண்டு பயணம் செய்த புகைப்படங்களை காட்டி அவர் மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனு மீது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணை நடந்தது. விசாரணையை அடுத்து, பேருந்துகளில் படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கிக்கொண்டு பயணம் செய்வதை தடுக்கும் விதமாக பள்ளி நேரங்களில் மாணவர்களுக்கு ஏன் சிறப்பு பேருந்து இயக்கக் கூடாது? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. 

மேலும் இதுகுறித்து தமிழக அரசு மற்றும் மாநகர போக்குவரத்துக் கழகம் நாளை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/4/w600X390/chennai_HC.jpg http://www.dinamani.com/education/2017/nov/23/பள்ளி-நேரங்களில்-மாணவர்களுக்கு-ஏன்-சிறப்பு-பேருந்து-இயக்கக்-கூடாது-சென்னை-உயர்நீதிமன்றம்-கேள்வி-2813487.html
2809947 கல்வி தேர்வில் முறைகேடு: தொலைநிலைக் கல்வி மாணவர்கள் 12 பேருக்கு 3 ஆண்டுகள் தடை: சென்னைப் பல்கலை. நடவடிக்கை DIN DIN Saturday, November 18, 2017 01:32 AM +0530 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி மாணவர்கள் 12 பேருக்கு 3 ஆண்டுகள் தேர்வெழுத தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, இந்த மாணவர்கள் மூன்று ஆண்டுகளுக்குத் தேர்வு எழுத முடியாது என்பதோடு, வேறு எந்தக் கல்வி நிறுவனப் படிப்புகளிலும் சேர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தொலைநிலைக் கல்வி நிறுவனத் தேர்வை ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட சில வெளி மாநிலத் தேர்வு மையங்களிலும், சென்னை தேர்வு மையங்களிலும் தேர்வெழுதிய மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் முறைகேட்டில் ஈடுபட்டதாகப் பிடிபட்டனர்.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சென்னைப் பல்கலைக்கழகம், பிடிபட்ட மாணவர்கள் விசாரணைக் குழு முன்பாக ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டது. அவ்வாறு விளக்கமளித்தவர்களில் 16 பேர் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டனர். சிலர் மீது இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
மேலும் சிலர், இதுவரை விசாரணைக் குழு முன் ஆஜராகி விளக்கம் அளிக்காமல் இருந்து வருகின்றனர். இவர்களின் தேர்வு முடிவுகள் இரண்டு ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்சிக் குழுவில், மீதமுள்ள பிடிபட்ட மாணவர்களுக்கு விசாரணைக் குழு முன் ஆஜராகி விளக்கம் அளிக்க மேலும் இரண்டு இறுதி வாய்புகள் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி கூறியது: கடந்த 2015-ஆம் ஆண்டு தொலைநிலைக் கல்வி தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட இந்த மாணவர்களில் உரிய விளக்கம் அளித்த 16 பேர், குற்றச்சாட்டிலிருந்து ஏற்கெனவே விடுவிக்கப்பட்டனர்.
உரிய விளக்கம் அளிக்காத 12 மாணவர்களுக்கு 3 ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இந்த மூன்று ஆண்டுகளுக்கு தேர்வு எழுத முடியாது என்பதோடு, வேறு பல்கலைக்கழகப் படிப்புகளிலும் மூன்று ஆண்டுகளுக்குச் சேர முடியாது.
பிடிபட்டவர்களில் மேலும் சில மாணவர்கள், இதுவரை விசாரணைக் குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்காமல் இருந்து வருகின்றனர். இவர்களுக்கு விளக்கம் அளிக்க இப்போது இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பையும் அவர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை எனில், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். 
மேலும், இந்தத் தேர்வு முறைகேடு நடந்த ஹைதராபாத், மும்பை போன்ற வெளி மாநில தேர்வு மையங்கள் மற்றும் பல்கலைக்கழக படிப்பு மையங்கள், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தலின்படி கடந்த ஆண்டே மூடப்பட்டுவிட்டன என்றார் அவர்.
 

]]>
http://www.dinamani.com/education/2017/nov/18/தேர்வில்-முறைகேடு-தொலைநிலைக்-கல்வி-மாணவர்கள்-12-பேருக்கு-3-ஆண்டுகள்-தடை-சென்னைப்-பல்கலை-நடவடிக்கை-2809947.html
2809362 கல்வி ஒன்று முதல் பிளஸ் 2 வரை வரைவுப் பாடத் திட்டம் தயார் DIN DIN Friday, November 17, 2017 02:26 AM +0530 தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை வரைவுப் பாடத் திட்டப் பணிகள் முழுவதுமாக முடிவடைந்துள்ளது.
மாறுபட்ட அறிவியல் தொழில்நுட்பச் சூழல், மாணவர்கள் சந்தித்து வரும் கல்வி சார்ந்த பல்வேறு சவால்களைக் கருத்தில் கொண்டு புதிய பாடத்திட்டம் மற்றும் பாடநூல்களை வடிவமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதையடுத்து உயர்நிலைக் குழு, கலைத் திட்டக் குழு என இரு குழுக்கள் தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டு புதிய பாடத்திட்டப்பணிகள் கடந்த ஜூன் மாத இறுதியில் தொடங்கின. இப்பணிகள் தற்போது முழுவதுமாக முடிவடைந்துள்ள நிலையில் அடுத்த சில நாள்களில் வரைவு பாடத்திட்டம் வெளியிடப்படவுள்ளது. 
புதிய பாடத்திட்டத்தின் சிறப்பம்சங்கள் குறித்தும் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் நிறுவன அதிகாரிகள் கூறியது:
புதிய பாடத்திட்டத்தை வடிவமைக்க பல்வேறு மாநிலங்களிளின் பாடத்திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டன. தமிழக அளவில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு கருத்தரங்கம் நடத்தப்பட்டு ஆலோசனைகள் பெறப்பட்டன. இதற்கிடையே இரு குழுக்களும் 10 முறை கூடி பாடத்திட்டம் குறித்து விவாதித்தன. தற்போது சர்வதேச மற்றும் தேசிய அளவில் கல்வியில் சிறந்து விளங்கும் நிபுணர்களின் வழிகாட்டுதலுடன் தமிழ், ஆங்கிலம், கணிதம், உயிரியல் உள்பட 70-க்கும் மேற்பட்ட பாடங்களுக்கு வரைவுப் பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. 
சிறப்பம்சங்கள்?: புதிய பாடத் திட்டத்தில் தொழிற்கல்வி, வேலைவாய்ப்பு, மொழித்திறன், பொது அறிவு, தொலைநோக்குப் பார்வை, கணக்கியல் நுணுக்கங்கள் போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வகுப்பறைச் சூழல், கற்பித்தல் முறை, வினாக்களுக்கான மதிப்பெண் முறை ஆகியவற்றில் பல மாற்றங்கள் இருக்கும். அடுத்த சில நாள்களுக்குள் வரைவுப் பாடத்திட்டம் வெளியிடப்படும். 
இது குறித்துக் கருத்துக் கூற பொதுமக்கள், கல்வியாளர்கள், நிபுணர்களின் பார்வைக்கு வைக்கப்படும். மேலும் www.tnscert.org  என்ற வலைதளத்தில் பாட வாரியாக வெளியிடப்படும்.
பாடத்திட்டத்தில் விடுபட்ட அம்சங்கள், தவறுகள், கூடுதலாகச் சேர்க்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து கருத்து தெரிவிக்கலாம். அவை ஏற்கத் தகுந்ததாக இருக்கும் பட்சத்தில் உடனுக்குடன் பரிசீலிக்கப்படும். இந்தப் பணிகள் முடிவுற்றதும் டிசம்பர் மாதத்தில் புதிய பாடத் திட்டத்துக்கு ஏற்றவாறு பாடநூல்கள் எழுதும் பணி தொடங்கும். இதைத் தொடர்ந்து ஏற்கெனவே பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவுறுத்தியபடி தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு பாடத் திட்டம் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்படும். 
2,000 ஆசிரியர்களின் பங்களிப்பு: பயிற்சிக்குப் பின்னர் வரும் 2018-2019-ஆம் கல்வியாண்டில் முதல் கட்டமாக 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டத்தின் மூலம் கற்பித்தல் தொடங்கும். சுமார் 2,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பேராசிரியர்கள், வல்லுநர்களின் உழைப்பில் உருவான புதிய பாடத் திட்டம் அனைவரது எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வதுடன், தமிழக மாணவர்களின் கல்வித் தரத்தை மேலும் உயர்த்தும் என்றனர்.

]]>
http://www.dinamani.com/education/2017/nov/17/ஒன்று-முதல்-பிளஸ்-2-வரை-வரைவுப்-பாடத்-திட்டம்-தயார்-2809362.html
2808545 கல்வி தொலைநிலைப் பட்டப் படிப்புகளிலும் விருப்பப் பாடத் தேர்வு முறை: சென்னைப் பல்கலை.யில் அடுத்த ஆண்டு முதல் அமல் DIN DIN Thursday, November 16, 2017 01:38 AM +0530 சென்னைப் பல்கலைக்கழக தொலை நிலைக் கல்வி நிறுவனம் சார்பில் வழங்கப்படும் பட்டப் படிப்புகளிலும் வரும் 2018-ஆம் ஆண்டு முதல் விருப்பப் பாடத் தேர்வு முறை (சி.பி.சி.எஸ்.---'சாய்ஸ் பேஸ்ட் கிரெடிட் சிஸ்டம்') அறிமுகம் செய்யப்பட உள்ளது.
அது மட்டுமின்றி, முறையான பட்டப் படிப்புகளுக்கு நடத்தப்படுவதுபோல, தொலைநிலைப் பட்டப் படிப்புக்கும் பருவத் தேர்வு முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. 
மாறி வரும் காலச் சூழல், தொழில் நிறுவனங்களின் தேவை ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர்கள் தாங்கள் விரும்பிய பாடத்தைத் தாங்களாகவே தேர்வு செய்து கொள்ள வசதி செய்வதுதான் விருப்பப் பாடத் தேர்வு முறை.
ஒரு படிப்பின் அடிப்படைப் பாடங்களில் அல்லாமல், துணைப் பாடங்களில் தாங்கள் விரும்பும் வேறு துறை பாடத்தை மாணவர்கள் மாற்றித் தேர்வு செய்து படிக்க இந்த நடைமுறை வசதி செய்கிறது. பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தலின் பேரில் சென்னைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் போன்ற பல்வேறு பல்கலைக்கழகங்களில் இந்த முறை ஏற்கெனவே நடைமுறையில் உள்ளன.
அண்ணா பல்கலைக்கழகம் பல்கலைக்கழகத் துறைகளில் 2015-16 கல்வியாண்டு முதலும், இணைப்புக் கல்லூரிகளில் 2017-18 கல்வியாண்டு முதலும் இந்த நடைமுறையை அறிமுகம் செய்தது.
தொலைநிலைக் கல்வியில் முதன் முறை: இந்நிலையில், தொலைநிலை பட்டப் படிப்புகளில் முதன் முறையாக சி.பி.சி.எஸ். முறையை சென்னைப் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்ய உள்ளது.
இது குறித்து சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி கூறியது: 
சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனம் சார்பில் வழங்கப்படும் அனைத்துப் பட்டப் படிப்புகளிலும் 2018-19-ஆம் கல்வியாண்டு முதல் சி.பி.சி.எஸ். முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதோடு பருவத் தேர்வு முறையும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இதன் காரணமாக முறையான பட்டப் படிப்புப் படிக்கும் மாணவர்களைப் போல, தொலைநிலைக் கல்வி மாணவர்களும் 6 மாதத்துக்கு ஒறு முறை பருவத் தேர்வை எழுத வேண்டும். 
இதற்கான புதிய வழிகாட்டுதல்களை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. 2018 பிப்ரவரி மாதத்துக்குள் இந்தப் பணிகள் முடிக்கப்பட்டு, ஒப்புதலும் பெறப்பட்டுவிடும் என்றார்.
அனைத்துப் பல்கலைக்கழக த்தொலைநிலைக் கல்வி நிறுவனங்களிலும் விரைவில் சி.பி.சி.எஸ். முறை அறிமுகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

]]>
http://www.dinamani.com/education/2017/nov/16/தொலைநிலைப்-பட்டப்-படிப்புகளிலும்-விருப்பப்-பாடத்-தேர்வு-முறை-சென்னைப்-பல்கலையில்-அடுத்த-ஆண்டு-முதல-2808545.html
2805409 கல்வி 2018-இல் பொறியியல் கலந்தாய்வை ஆன்லைனில் நடத்த அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அரசு உத்தரவு!  DIN DIN Friday, November 10, 2017 02:36 PM +0530 சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு அடுத்த ஆண்டு (2018) முதல் ஆன்லைனில் நடத்தப்பட்டு சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என அண்ணா பல்கலைக் கழகத்துக்கு அதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

இது குறித்து அறிவிப்பு கடந்த 6-ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பொறியியல் படிப்புக்களான பி.இ, பி.டெக், பி.ஆர்க், எம்.இ., எம்.டெக், எம்.ஆர்க்., எம்.பிளான், உள்ளிட்ட பட்டபடிப்புகளுக்கு 2018-ஆம் ஆண்டு முதல் ஆன்லைனில் கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். இது 3 ஆண்டுகளுக்கு பொருந்தும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஆன்லைனில் கலந்தாய்வு நடத்துவதற்காக புதிய மறுசீரமைப்பு கமிட்டி அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கமிட்டியில் அண்ணா பல்கலைக்கழகம் எம்.ஐ.டி. வளாகத்தில் உள்ள தகவல் தொழில்நுட்பத் துறை பேராசிரியர் ரைமண்ட் உதரிராஜ் புதிய உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார். இவர் ஆன்லைன் கலந்தாய்வு செயலாளராக இருப்பார். ஏற்கனவே, இப்பொறுப்பில் இந்துமதி இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆன்லைனில் கலந்தாய்வு நடத்துவதற்கு வசதியாக மென்பொருளை வடிவமைக்கும் பணிகள் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் குழுவிடம் அளிக்கப்பட்டுள்ளது.

வெளியூர்களில் இருந்து பொறியியல் கலந்தாய்வுக்கு வருகை தரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் சிரமத்தை தவிர்க்க ஆன்லைன் கலந்தாய்வு நடத்தும்படி உயர் கல்வித்துறை அமைச்சருக்கு அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கணேசன் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/20/w600X390/annauniversity.jpg http://www.dinamani.com/education/2017/nov/10/government-order-to-next-year-the-engineer-counseling--annu-university-to-conduct-online-consultatio-2805409.html
2804951 கல்வி கைத்தறி-துணி நூல், சிறைத் துறை உயரதிகாரிகள் பதவி: டிஎன்பிஎஸ்சி பட்டியல் வெளியீடு DIN DIN Friday, November 10, 2017 03:45 AM +0530 கைத்தறி மற்றும் துணிநூல், சிறைத்துறை உயரதிகாரிகள் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் உதவி இயக்குநர் பணியிடத்துக்கு கடந்த ஆகஸ்ட்டிலும், சிறை அலுவலர் பணியிடங்களுக்கு கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களிலும் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. 
இந்தத் தேர்வுகளின் மூலம் தெரிவு செய்யப்பட்டோரின் விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் (‌w‌w‌w.‌t‌n‌p‌s​c.‌g‌o‌v.‌i‌n)  வெளியிடப்பட்டுள்ளதாக அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

]]>
http://www.dinamani.com/education/2017/nov/10/கைத்தறி-துணி-நூல்-சிறைத்-துறை-உயரதிகாரிகள்-பதவி-டிஎன்பிஎஸ்சி-பட்டியல்-வெளியீடு-2804951.html
2804921 கல்வி பணிபுரிபவர்களுக்கான எம்.பி.ஏ. படிப்பு: சென்னை ஐஐடி அறிமுகம் DIN DIN Friday, November 10, 2017 02:35 AM +0530 பணியில் இருப்பவர்களுக்கான இரண்டு ஆண்டு எம்.பி.ஏ. படிப்பை சென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது.
இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்ட செய்தி: பணியில் இருப்பவர்கள் சேர்ந்து படிக்கும் வகையில் இரண்டு ஆண்டுகள் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தொழில் நிறுவனங்களின் இன்றைய தேவையைப் பூர்த்தி செய்யக் கூடிய வகையிலும் டிஜிட்டல் பொருளாதாரம் எதிர்கால உற்பத்தித் துறை எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யக் கூடிய வகையிலும் இந்த எம்.பி.ஏ. படிப்பு வழங்கப்பட உள்ளது. 
வரும் ஜனவரி முதல் வகுப்புகள் தொடங்கப்படும். வார இறுதி நாள்களில் வகுப்புகள் நடத்தப்படும்.இப்படிப்பில் சேர்க்கை பெறுவதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க நவ.30 கடைசி நாளாகும்.
சேர்க்கை பெற விரும்பும் மாணவர்கள் ஏதாவது ஒரு பட்டப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதோடு தொழில்நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். நுழைவுத் தேர்வு மூலம் சேர்க்கை நடத்தப்படும்.

]]>
http://www.dinamani.com/education/2017/nov/10/பணிபுரிபவர்களுக்கான-எம்பிஏ-படிப்பு-சென்னை-ஐஐடி-அறிமுகம்-2804921.html
2803687 கல்வி சென்னை மாவட்ட பள்ளிகளில் முன் அரையாண்டுத் தேர்வு ரத்து DIN DIN Wednesday, November 8, 2017 02:25 AM +0530 சென்னை மாவட்டப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு நடைபெறவிருந்த முன் அரையாண்டுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்ட சுற்றறிக்கை:
சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்துப் பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு சென்னை மாவட்டத் தேர்வுக் குழுவின் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. 
தொடர் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாலும் ஆசிரியப் பெருமக்கள் பாடங்களை முடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாலும் ஆசிரியர்களின் வேண்டுகோளுங்கிணங்க முன் அரையாண்டுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது.

]]>
http://www.dinamani.com/education/2017/nov/08/சென்னை-மாவட்ட-பள்ளிகளில்-முன்-அரையாண்டுத்-தேர்வு-ரத்து-2803687.html
2803037 கல்வி பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் DIN DIN Tuesday, November 7, 2017 02:21 AM +0530 வடகிழக்குப் பருவமழை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் வழக்கம்போல் தொடங்கும்போது மாணவர்கள் நலன் கருதி மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என ஆட்சியர் வெ.அன்புச் செல்வன் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. 
இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் அவர்களது பெற்றோர் நலனைக் கருத்தில் கொண்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு கடந்த அக்.31-ஆம் தேதி முதல் நவ.6-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
கடந்த நவ.1-ஆம் தேதி அனைத்துப் பள்ளித் தாளாளர்கள், முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது பள்ளி வளாகங்களில் மழைநீர் தேங்காதவாறும் அவற்றுடன் கழிவுநீர் கலக்காதவாறும் நிரந்தர ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. 
மின்கசிவு-சுற்றுப்புறச் சூழல்...பள்ளிகள் அனைத்தும் வழக்கம்போல தொடங்கும்போது பள்ளி வளாகங்களில் மழைநீர் தேங்கவில்லை என்பதையும் பள்ளி மாணவர்களை நோய்த் தொற்று பாதிக்காத வகையில் சுற்றுப்புறச் சூழல் நன்றாக உள்ளது என்பதையும் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் மின்கசிவு இல்லை போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
தொடர்புடைய மாவட்டக் கல்வி அதிகாரிகள் பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து சான்றளிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. 
பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனில் மிகுந்த அக்கறையுடனும், விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும்.

]]>
http://www.dinamani.com/education/2017/nov/07/பள்ளிகளில்-மேற்கொள்ளப்பட்ட-முன்னெச்சரிக்கை-நடவடிக்கைகளை-உறுதி-செய்ய-வேண்டும்-2803037.html