Dinamani - செய்திகள் - http://www.dinamani.com/cinema/cinema-news/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2984742 சினிமா செய்திகள் கேரள வெள்ள நிவாரணம்: நடிகர் விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவி! DIN DIN Tuesday, August 21, 2018 05:51 PM +0530  

கேரள வெள்ள நிவாரணத்துக்கு நடிகர் விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். 

கேரள மாநிலத்தில் கடும் மழை, வெள்ளம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 350 ஆக அதிகரித்துள்ளது  14 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. 

வரலாறு காணாத இயற்கைச் சீற்றத்தைச் சந்தித்து வரும் அம்மாநில மக்களுக்கு தமிழ்த் திரை உலகம் நேசக்கரம் கொடுத்து உதவி வருகிறது.  தென்னிந்திய நடிகர் சங்கம், நடிகர்கள் கமல்ஹாசன், சூர்யா, தனுஷ். விஜய்சேதுபதி உள்ளிட்ட பல நடிகர்கள் நிதி வழங்கியுள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் ரூ. 15 லட்சம் நிதி வழங்கியுள்ளார். நடிகர் உதயநிதி ரூ. 10 லட்சத்தை கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளார். இயக்குநர் ஷங்கர் ரூ. 10 லட்சமும், அருள்நிதி ரூ.5 லட்சமும் நிதி வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண நிதியாக ரூ. 70 லட்சம் வழங்கியுள்ளார் விஜய். இவருக்கு கேரளாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள். இதனால் மற்ற தமிழ் நடிகர்களை விடவும் அதிக தொகை அளித்துள்ளார் விஜய்.

]]>
KeralaFloodRelief, Rs 70 lakhs, Vijay http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/21/w600X390/mersal909011.jpg http://www.dinamani.com/cinema/cinema-news/2018/aug/21/vijay-donated-rs-70-lakhs-to-keralafloodrelief-2984742.html
2984735 சினிமா செய்திகள் பிக் பாஸ் 2 இறுதிச் சுற்றில் ரித்விகா, மும்தாஜ், பாலாஜி வரலாம்: ஆர்ஜே வைஷ்ணவி! சரோஜினி DIN Tuesday, August 21, 2018 05:05 PM +0530  

ஸ்டார் விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 2 ரியாலிட்டி ஷோவில் இருந்து கடந்த வாரம் ஆர்.ஜே வைஷ்ணவி வெளியேற்றப்பட்டார். தமிழில் பிரபல எழுத்தாளர் சாவியின் பேத்தியாக இருந்தும் தனக்கு பிரபலத்தன்மை போதாததும் கூட மக்கள் தனக்கு எதிராக ஓட்டளித்து பிக்பாஸ் வீட்டிலிருந்து தாம் வெளியேற்றப்படுவதற்கான காரணமாக இருந்திருக்கலாம் என நம்பும் வைஷ்ணவி அதை யூடியூப் நேர்காணலொன்றில் தெரியப்படுத்தி இருந்தார்.

பிக் பாஸ் 2 போட்டியிலிருந்து வைஷ்ணவி வெளியேறிய நிலையில் அவரிடம் இறுதிச் சுற்றில் யாரெல்லாம் இருக்கலாம் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு... ரித்விகா, மும்தாஜ், பாலாஜி மூவரும் வரலாம் என்று தான் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். காரணம் பிக்பாஸ் வீட்டில் தாம் எதற்காக அந்த ஷோவில் கலந்து கொண்டோம் என்ற தெளிவு ரித்விகாவுக்கு மட்டுமே உண்டு என்றும், அதனால் பிக்பாஸ் விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றி தன்னுடன் இருப்பவர்களையும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ குறித்த விஷயங்களை அவ்வப்போது நினைவூட்டி ‘இது ஒரு ரியாலிட்டி கேம் ஷோ... இங்கே நாம் எதற்காக வந்திருக்கிறோமோ அந்தக் கடமையைச் சரியாகச் செய்வதோடு நமது இயல்பு நிலையையும் மறக்கக் கூடாது. போலியாக எதையும் செய்து நம்மை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ என்றெல்லாம் பேசி உடனிருப்பவர்களையும் உற்சாகப் படுத்திச் செல்லக்கூடிய ஒரு சமநிலை மனப்பான்மை பிக்பாஸ் வீட்டில் ரித்விகாவுக்கு மட்டுமே உண்டு. எனவே அவர் இறுதிச் சுற்றுக்கு வருவார் என்று நான் நம்புகிறேன் என வைஷ்ணவி தெரிவித்தார். 

ரித்விகாவை அடுத்து பிக்பாஸ் வீட்டில் இறுதிச் சுற்று வரை செல்லக்கூடியவர்கள் எனத் தான் நம்புவது மும்தாஜையும், பாலாஜியையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

]]>
பாலாஜி, balaji, ஆர்ஜே வைஷ்ணவி, bigboss 2, R J Viaishnavi, bigboss 2 finals, பிக்பாஸ் 2 இறுதிச் சுற்று, ரித்விகா, மும்தாஜ், mumthaj, rithvika http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/21/w600X390/bigboss.jpg http://www.dinamani.com/cinema/cinema-news/2018/aug/21/bigboss-2-finals-expectation-2984735.html
2984736 சினிமா செய்திகள் மறக்குமா என்ன?  - ஜி.அசோக் DIN Tuesday, August 21, 2018 04:53 PM +0530 'இடப் பெயர்வுதான் மனித குலத்தின் ஆதி துயரம். 'அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்...' எனப் பாரி மகளிரின் சங்கப் பாடலிலேயே புலம் பெயர்வின் துயரம் வழிகிறது. புலம் பெயர்வு என்பது பேரனுபவம். மகத்தான தரிசனம். இருளும், வலியும் விசித்திரமான புதிர்களும் நிறைந்த புலப் பெயர்வை ஈழத் தமிழர்களைப் போல் நம்மால் உணர முடியாது.

எத்தனை தேசங்கள்... எத்தனை மனிதர்கள்... எத்தனை கதைகள்.. இருக்கின்றன. அங்கே இப்ப என்ன நேரம்.. என கிராமத்தை விட்டு மலேசியாவுக்கு பிழைக்க சென்ற நண்பன் கேட்கும் போது எப்படி இருக்கிறது நமக்கு. அந்த மனிதர்களிடம் மிச்சம் இருப்பவை வாழ்வின் மீதான தீராத நம்பிக்கையும், நம் மண்ணின் சொற்களும்தான். ஏதோ ஒரு நாளில் தமது சொந்த மண்ணில் இருந்து வெளியேறும் அல்லது துரத்தப்படும் கணங்கள் செத்துப் போகிற வரைக்கும் மறக்குமா என்ன....?' ஆழ்ந்து பேச தொடங்குகிறார் இயக்குநர் மங்களேஷ்வரன். இயக்குநர் பாரதிராஜாவிடம் 'கடல் பூக்கள்', 'ஈர நிலம்' படங்களில் பணியாற்றியவர். இப்போது 'மரகதக்காடு' படத்தின் மூலம் கதை சொல்ல வருகிறார்.
 
இன்னும் கொஞ்சம் விரிவாக பேசலாமா...?

தண்ணீரை காசு கொடுத்து வாங்கி குடிப்போம் என்று நினைத்துக் கூட பார்த்தது கிடையாது. ஆனால், நாளை காற்றுக்கும் காசு கொடுத்து வாங்கி சுவாசிக்க வேண்டிய நிலை வரும். நடப்பவற்றை பார்த்தால், அதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. காடுகளைப் பாதுகாப்போம் என்பதுதான் இதன் ஆதாரம். 70-களில் இந்தியா முழுமையும் 'சிக்கோ மூவ்மெண்ட்' என்று ஒரு முயற்சி நடந்தது. மலைவாழ் மக்களை காடுகளை விட்டு வெளியேற்றும் முயற்சி அது. பெண்கள் மரங்களை கட்டிப்பிடித்து வனங்களை விட்டு வெளியேற மறுத்த காட்சிகள் அப்போது பத்திரிகைகளில் வெளிவந்தன. அந்தப் போராட்டம் இந்தியா முழுமையும் பரவி நீண்டது. அப்போது நடந்த சம்பவங்களின் சிறு துளிதான் இது. இங்கே தமிழகத்தில் வாழுகிற பழங்குடி இன மக்களும், அங்கே கனிம வள ஆய்வுக்காக வருகிற ஒரு குழுவுக்குமான சம்பவங்களாக அதை தொகுத்து பின்னி வந்திருக்கிறேன். மீத்தேன் தொடங்கி இப்போது பரபரப்பாக பேசுகிற 8 வழி பசுமைவழிச்சாலை வரைக்குமான போராட்டங்களும், உணர்வுகளும் இதில் உண்டு. இயற்கைக்கும், அது தருகிற செல்வத்திற்கும் அங்கே இருக்கிற மக்கள் அமோகமாக இருக்க வேண்டும். ஆனால், நிலைமை என்ன? இயற்கை அழிந்துகொண்டு இருக்கிறது. அதனால் இழப்பு, நமக்குத்தானே தவிர இயற்கைக்கு இல்லையென்று யாருக்கும் தெரியவில்லை. மலை மக்களின் குரல் இதிலே பதிவாகியுள்ளது. சொல்லப் போனால் இதில் என் குரலும், உங்களின் குரலும் அடங்கியிருக்கிறது. எந்த விதத்திலும் உரிமையை மீட்டெடுக்க வேண்டும் என்பதுதான் பிரதான பகுதி.

இந்த மாதிரி நிறைய முன் உதாரண கதைகள் இங்கே இருக்கே...?

உண்மைதான். எந்த ஒரு கதைக்கும் மனித வாழ்வுதான் அடிப்படை. நேர்மை, நியாயம், கோபம், அன்பு என மாறிக் கொண்டே இருக்கும் வாழ்வின் மாயங்களை கடந்த சினிமா எங்கேயும் இல்லை. தஞ்சாவூர் பக்கம் தாத்தா விற்றுவிட்டுப் போன அந்த நிலத்தில் இப்போது ப்ளாட் போட்டு, கலர் கலராக பெயின்ட் அடித்து ரியல் எஸ்டேட் பலகைகள் நட்டிருக்கிறார்கள். அதை பார்க்கும் போதெல்லாம் பிணத்தின் மீது வைக்கப்பட்ட மலர் வளையம் மாதிரி இருக்கின்றன. அந்த மண்ணில் இருந்து இன்னும் ஆயிரமாயிரம் பேர் விவசாயத்தோடு போராட முடியாமல், நிலங்களை விட்டு விட்டு திருப்பூர் பனியன் கம்பெனிகளிலும் அரபு நாடுகளின் கொடும் வேலைகளிலும் உழல்கிறார்கள். யானை கட்டிப் போரடித்த, சோறுடைத்த சோழ வளநாடு, இன்று ஒரு வேளை சோற்றுக்கும் பணத்துக்கும் எங்கெங்கோ அலைகிறது. பருவம் தப்பிய மழை. எல்லாமும் மாறி விட்டது. ஆடி மாதக் காற்றில் அம்மியும் நகரும் என்பார்கள். இப்போது மழைப் பொழிகிறது. இந்த மழை எதற்கும் பயன்படாது. இயற்கையின் சமநிலைக்கே எதிரான இயற்கையின் வியூகங்கள் வந்து விட்டன. இதையெல்லாம் ஆராய்ந்து கதை எழுதினேன். அங்கே ஒரு காதல், கலாசாரம், பண்பாடு என்று கதை தனக்கு தேவையான எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டது.

வளர்ச்சியை முன்வைக்கும்போது சில சமரசங்கள் செய்ய வேண்டியுள்ளதே?

எல்லாவற்றுக்கும் விலை வைக்க ஆரம்பித்ததால்தான் மனிதம் மட்டும் மலிவாகி விட்டது. இதோ மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக, எத்தனை தமிழ் கிராமங்களின் தூக்கத்தை தொலைத்திருக்கிறோம். பணம் வாழ்க்கையில் இரண்டாம் பட்சம் ஆகி விட்டால், உலகத்தில் நம் வாழ்க்கையில் பாதி பிரச்னைகள் இல்லாமல் போய் விடும். இன்னும் நிறைய நல்ல மனிதர்கள் கிடைப்பார்கள். நல்ல தலைவர்கள், ஆன்மிகவாதிகள், அதிகாரிகள் கிடைப்பார்கள். சரிபாதி குற்றங்கள் தொலைந்து விடும். தேவைக்குத்தான் பணமே தவிர, ஆசைக்கு பணம் இல்லை. பசி, வலி... இந்த இரண்டையும் ஜெயிக்க தெரிந்து விட்டால் வாழ்க்கையை ஜெயித்து விடலாம். வயிற்று பசிக்கு சாப்பிடத்தான், நமக்கு பணம் தேவை. ஆனால், நாக்கு ருசிக்காகச் சாப்பிட ஆரம்பிக்கும்போது, பணத்தின் மீது நமக்கு வெறியாகிறது. இலக்குகள், லட்சியவாதங்கள், அரசியல் எதுவும் இல்லாத எளியவர்களின் வாழ்க்கை எவ்வளவு நிம்மதியானது. வாழ்க்கையை அதன் உண்மையோடும், அன்போடும் கொண்டாடுபவர்கள்தான் கொடுத்து வைத்தவர்கள். அவர்களை விட்டு விடுங்கள் என்பதை தவிர வேறு என்ன சொல்லி விட முடியும்.

நடிகர்கள் தொடங்கி இசை, கேமிரா எல்லாமே சரி பங்கு இருக்க வேண்டுமே...?

எல்லாமே புதுமுகங்கள்தான். படத்தின் பட்ஜெட், கால அவகாசம் எல்லாவற்றுக்கும் அவர்கள்தான் சரி. அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன் ,ஜே.பி. மோகன் என புதுமுகங்கள். "அறம்' ராமச்சந்திரன், பாவா லட்சுமணன் சரியான முத்திரை பதிக்கும் நடிகர்களும் இருக்கிறார்கள். மலைவாழ் மக்கள் பலரும் நடிப்புக்கு துணை நின்று உதவியிருக்கிறார்கள். நட்சத்திர பிரகாஷ் ஒளிப்பதிவாளர். ஆர்வம் கொண்ட இளைஞர். எல்லா விகிதத்திலும் பணியாற்றி தந்திருக்கிறார். இசைக்கு ஜெய் பிரகாஷ் சாதிக்க துடிக்கிறவர். விவேகா , மீனாட்சி சுந்தரம், அருண் பாரதி ஆகியோர் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். படத்தொகுப்புக்கு சாபு ஜோசப், கலை இயக்குநராக மார்டின் டைட்டஸ் என நம்பகமானவர்கள். அதே விகிதத்தில் ஆக்ஷன், காமெடி என கமர்சியலுக்கு பஞ்சம் வைக்காது 'மரகதக்காடு'.

]]>
refugee, attrai thingal, மரகதக்காடு, ஈர நிலம், பாரதிராஜா, மங்களேஷ்வரன் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/18/w600X390/sk4.jpg http://www.dinamani.com/cinema/cinema-news/2018/aug/21/மறக்குமா-என்ன-2984736.html
2984727 சினிமா செய்திகள் பாரதிராஜாவின் புதுப்பட கதாநாயகி இவர் தான்! (புகைப்படங்கள்) DIN DIN Tuesday, August 21, 2018 03:51 PM +0530  

பாரதிராஜா நடித்து இயக்கியுள்ள படம் - ஓம். இந்தப் படத்தில் பாரதிராஜா, ராசி நக்‌ஷத்ரா, ஜோ மல்லூரி, மெளனிகா போன்றோர் நடித்துள்ளார்கள்.

ராசி நக்‌ஷத்ரா அறிமுகமாகும் படம் இது. அவருடைய புகைப்படங்கள்:

]]>
Stills, Om Movie, Rasi Nakshathra http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/21/w600X390/Rasi_Nakshathra_Stills_6xx.jpg http://www.dinamani.com/cinema/cinema-news/2018/aug/21/om-movie-heroine-rasi-nakshathra-stills-2984727.html
2984711 சினிமா செய்திகள் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படம்: இசை வெளியீட்டு விழாவுக்கு வருகை தரும் பிரபல கிரிக்கெட் வீராங்கனை! எழில் DIN Tuesday, August 21, 2018 02:43 PM +0530  

தன் நெருங்கிய நண்பர் அருண்ராஜா காமராஜ் இயக்கும் படத்தைத் தயாரித்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். 

கபாலி படத்தில் நெருப்புடா பாடல் மூலம் கவனம் பெற்ற அருண்ராஜா இயக்குநராக அறிமுகமாகும் படம் இது. பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.

சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் போன்றோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - தினேஷ் கிருஷ்ணன், இசை - திபு நினன் தாமஸ். படத்தொகுப்பு - ஆண்டனி எல். ரூபன்.

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு அதிரடி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா வருகை தரவுள்ளார். ஆகஸ்ட் 23 அன்று நடைபெறவுள்ள இசை வெளியீட்டு விழாவில் பாடல்களை வெளியிடுகிறார் மந்தனா.

இந்நிகழ்வில் இயக்குநர் பாண்டிராஜ், அனிருத், இமான் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்கிறார்கள். அதே நாளில் படத்தின் டீசரும் வெளியிடப்படுகிறது. 

]]>
Smriti Mandhana, Sivakarthikeyan, Kanaa http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/21/w600X390/mandhana8811.jpg http://www.dinamani.com/cinema/cinema-news/2018/aug/21/cricketer-smriti-mandhana-to-unveil-teaser-of-sivakarthikeyans-kanaa-2984711.html
2984699 சினிமா செய்திகள் 'எனக்கு நம்பிக்கையும் ஆதரவும் அளிப்பது என் மகன் ரன்வீர்தான்! சோனாலி பிந்த்ரே நெகிழ்ச்சி! DIN DIN Tuesday, August 21, 2018 12:56 PM +0530 எனக்கு ஆதரவளிக்கும் என் மகன்!

தனக்கேற்பட்டுள்ள  புற்றுநோய்க்காக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் சோனாலி பிந்த்ரே, தற்போது, 'எனக்கு நம்பிக்கையும் ஆதரவும் அளிப்பது என் மகன் ரன்வீர்தான். நானும் என் கணவரும் எங்கள் மகனிடம் எப்போதும் வெளிப்படையாக பழகுவோம்.

எனக்கேற்பட்டுள்ள புற்றுநோய் பாதிப்பை அவனிடம் சொல்ல மிகவும் சங்கடப்பட்டோம். ஆனால் ரன்வீர் முதிர்ந்த மனநிலையோடு இதை ஏற்றுக் கொண்டதோடு எனக்கு நம்பிக்கையையும், வலிமையையும் கொடுக்கும் வகையில் ஆதரவாக இருக்கிறான்’ என்று சோனாலி தன் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

டிவி தொடரில்  ஜெயப்ரதா!

கடைசியாக 'ஆத்மஜா' என்ற பெங்காலி படத்தில் நடித்த முன்னாள் நடிகை ஜெயப்ரதா, தற்போது  'பர்பெக்ட் பதி' என்ற டிவி தொடரில் நடிகை பிரமிளா ரத்தோடின் அம்மாவாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.  'என்னுடைய  நீண்ட கால அனுபவத்தில் எப்போதும் அர்த்தமுள்ள பாத்திரங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து நடித்தேன்.  டிவி தொடரின் கதையை கேட்டபோது நல்ல பாத்திரமாக தோன்றியதால் நடிக்க ஒப்புக் கொண்டேன். ஏற்கெனவே தெலுங்கில் ஜெயப்பிரதம் என்ற ரியாலிடி ஷோவில் பங்கேற்ற அனுபவம் இருப்பதால், இந்த  டிவி தொடரில் நடிப்பது சிரமமாக இருக்காது' என்று கூறியுள்ளார்.

'விளையாட்டுத் துறையில் ஆண்-பெண் பாகுபாடு இருப்பதாக நான் கருதவில்லை. விளையாட்டு என்பது அனைவருக்குமே   பொதுவானது. இதில் எந்த பிரிவினையும் இல்லை. ஆண்-பெண் என்ற வித்தியாசம் இருக்கலாமே தவிர, அனைவரையும் ஒருங்கிணைக்க உங்களால் முடியாது. நீண்ட காலமாகவே  கிரிக்கெட்  ஆண்களுக்குரிய விளையாட்டாகவே கருதபட்டது. இன்று பெண்கள் கிரிக்கெட்டைப் பற்றி மக்கள் பேசுகிறார்கள். நான் இதை உண்மையான மாறுதலாக நினைக்கிறேன். மக்கள் மனதில் விளையாட்டில் மட்டுமல்ல மற்ற விஷயங்களிலும் முன்னேற்றத்தையும், மாறுதலையும் காண முடிகிறது' என்று கூறுகிறார் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தலைவர் மித்தாலிராஜ்.

மெழுகு சிலை மியூசியத்தில் தீபிகா படுகோன் சிலை!

பிரபல டென்னீஸ் வீரர் பிரகாஷ் படுகோனின் மகளான  தீபிகா படுகோன், 'ஓம் சாந்தி ஓம்'  என்ற படத்தின் மூலம் இந்தி திரையுலகில் பிரவேசித்து இன்று அதிக சம்பளம் பெறும் நடிகையாக விளங்குகிறார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் லண்டனில் உள்ள மேடம் டு சாட்டின் மெழுகுச்சிலை மியூசியத்தில் இவரது சிலையும்  இடம் பெறப்போகிறது.  தொடர்ந்து சில மாதங்களில் டெல்லியிலும் அவரது சிலையை அமைக்க  ஏற்பாடுகள் நடக்கின்றன.  இதற்காக தீபிகாவை லண்டனில் உள்ள மேடம் டு சாட் ஸ்டூடியோ கலைஞர்கள் சிலையை தத்ரூபமாக அமைய வேண்டுமென்பதற்காக 200க்கும்  மேற்பட்ட  உடல் அளளகளையும், புகைப்படங்களையும் எடுத்துள்ளனர்.

இந்திய திரைப்படவிழாவில் சிமி கேரவல்!

இந்திய படங்களில் காலஞ்சென்ற பாலிவுட் நடிகர் சசிகபூரின் பங்களிப்பை கெளரவிக்கும் வகையில், மெல்போர்னில் நடைபெறவுள்ள இந்திய திரைப்பட விழாவில், 1972-இல் வெளியான  சசிகபூர் - சிமிகேரவல்  நடித்த  'சித்தார்த்தா' படம் இடம் பெறுகிறது. இதுகுறித்து சிமிகேரவல் கூறுகையில், 'இந்திய திரைப்பட விழாவில் நானும், சசிகபூரும் நடித்த 'சித்தார்த்தா' படம் திரையிடப்படுவதால் என்னை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளனர். சசிகபூர் சிறந்த நடிகர், மனிதர் மட்டுமல்ல என் நண்பரும் கூட. யாரும் தன்னைப் பற்றி கேள்விகள் கேட்காதபடி  பேசுவார், பழகுவார். தான் எடுக்கும் படங்கள் வியாபார ரீதியாக  ஒடாது என்று  தெரிந்தும், சொந்த படங்கள் எடுத்தவர். அவரை கெளரவிக்கும் விழாவில் பங்கேற்பது பெருமையாக உள்ளது' என்றார்.

சல்மான் படத்திலிருந்து விலகல்!

அமெரிக்காவின் டிவி ஷோவான 'க்வாண்டிகோ' வின் இறுதி கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா (36) மீண்டும் மும்பை திரும்பியுள்ளார். ஏற்கெனவே இவர் நடித்துள்ள 'எ கிட் லைக் ஜாக்' மற்றும் 'இஸ் நாட் இட் ரொமான்டிக்' ஆகிய இரு ஹாலிவுட் படங்கள் திரையிடும் நிலையில் உள்ளன. இந்நிலையில்  சல்மான்கானின் 'பாரத்' என்ற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட பிரியங்கா, திடீரென அப்படத்திலிருந்து  விலகுவதாக அறிவித்துள்ளார். அமெரிக்கா பாடகர் நிக்ஜோன்ஸ் (25) என்பவரை பிரியங்கா காதலித்து  வந்ததாக கூறப்பட்ட நிலையில், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருப்பதே பிரியங்கா விலகலுக்கு காரணமென்று தெரிகிறது. அண்மையில் இந்த ஜோடியின் நிச்சயதார்த்த விழா எளிமையாக நடைபெற்றது.

]]>
mithali raj, sonali, deepika padukone, சோனாலி, தீபிகா படுகோன், ப்ரியங்கா சோப்ரா http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/15/w600X390/mn21.jpg http://www.dinamani.com/cinema/cinema-news/2018/aug/21/எனக்கு-நம்பிக்கையும்-ஆதரவும்-அளிப்பது-என்-மகன்-ரன்வீர்தான்-சோனாலி-பிந்த்ரே-நெகிழ்ச்சி-2984699.html
2984694 சினிமா செய்திகள் இளையராஜா இசையமைத்துள்ள ‘60 வயது மாநிறம்’ படப்பாடல்கள்! DIN DIN Tuesday, August 21, 2018 12:31 PM +0530  

தாணு தயாரிப்பில் ராதா மோகன் இயக்கத்தில் 60 வயது மாநிறம் என்றொரு படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு,  சமுத்திரக்கனி போன்றோர் நடித்துள்ளார்கள். விஜி வசனத்தில் உருவாகியுள்ள இப்படத்துக்கு பா. விஜய், பழனி பாரதி, விவேக் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளார்கள்.

அடுத்த வாரம் வெளியாகும் இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

]]>
60 Vayadu Maaniram Songs , Prakash Raj, Vikram Prabhu, Ilaiyaraaja http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/21/w600X390/60vayadu8181988xx.jpg http://www.dinamani.com/cinema/cinema-news/2018/aug/21/60-vayadu-maaniram-songs-2984694.html
2984685 சினிமா செய்திகள் இந்த வாரம் வெளியாகும் நான்கு தமிழ்ப் படங்கள்! எழில் DIN Tuesday, August 21, 2018 11:00 AM +0530  

ஆகஸ்ட் மாத இறுதியில் பல படங்கள் வெளியாகத் திட்டமிட்டுள்ளன. அதன்படி இந்த வாரம் ஆகஸ்ட் 24 அன்று நான்கு தமிழ்ப் படங்கள் வெளியாகவுள்ளன.

லக்‌ஷ்மி, மேற்குத் தொடர்ச்சி மலை, களரி, எச்சரிக்கை. இவற்றில் லக்‌ஷ்மி, மேற்குத் தொடர்ச்சி மலை ஆகிய இரு படங்களுக்கும் அதிகக் கவனம் கிடைத்துள்ளன.

பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ், கருணாகரன், தித்யா நடிப்பில் ஏ.எ.ல். விஜய் இயக்கியுள்ள படம் - லக்‌ஷ்மி. இசை - சாம் சிஎஸ். 

விஜய் சேதுபதி தயாரிப்பில் இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள படம் - மேற்குத் தொடர்ச்சி மலை. லெனின் பாரதி இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஆண்டனி பங்கு, காயத்ரி, ஆறு பாலா, தாமரை போன்றோர் நடித்துள்ளார்கள். திரைப்பட விழாக்களில் பல விருதுகள் பெற்றுள்ளது இந்தப் படம்.

]]>
Lakshmi http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/21/w600X390/laxmi871.jpg http://www.dinamani.com/cinema/cinema-news/2018/aug/21/4-tamil-releases-this-week-2984685.html
2984065 சினிமா செய்திகள் ஜி டிவியின் அட்டகாசமான வெப் தொடர் கள்ளச்சிரிப்பு! உமா DIN Monday, August 20, 2018 04:52 PM +0530 ஜானர்: திகில் / டிராமா | மொழி: தமிழ் | எபிசோடுகள்: 8 | நேரம்: 22 நிமிடம்

எல்லோர் வாழ்க்கையிலும் பிரச்னைகள், கவலைகள் உண்டு. ஆனால் யாரும் எவ்வித மனநிலையில் இருந்தாலும் சரி, ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்க வேண்டும் என்றால், கேமராவுக்கு முன் அதையெல்லாம் மறைத்து, உடனடியாக ஒரு சிரிப்பை உதிர்ப்பார்கள். அந்த சிரிப்பின் அர்த்தம் என்ன? அது உண்மையான புன்னகைதானா? அது தான் 'கள்ளச்சிரிப்பு' எனும் வெப் தொடரின் கான்செப்ட். புகைப்படம் சார்ந்த விஷயங்கள் தான் இதன் மெல்லிய சரடு. ஒருவர் தன் முகத்தை மறைத்து போலியாக வாழ்ந்தால் அது அவருக்கும் அவர் சார்ந்த சமூகத்துக்கும் எவ்வளவு ஆபத்தை விளைவிக்கும் என்பதை இக்கதை விளக்கும்.

தன்னை இந்தச் சமுதாயத்தில் சரியான விதமாக வெளிப்படுத்திக் கொள்ள ஒருவர் எவ்வளவு தூரம் முயற்சி செய்வார்? இந்தக் கதையின் மையம் அதுவே.  24 வயதுப்  தன், விருப்பத்துக்கு மாறாக, பெற்றோரின் கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்து கொள்கிறாள். ஒரு பிரச்னையில் கணவனைக் கொலை செய்துவிடுகிறாள். அந்தக் கொலையை மறைக்க காதலனின் உதவியைக் கோர, அவன் அங்கு வருகிறான். அதே சமயத்தில் அவளது பெற்றோர் அங்கு எதிர்பாராத விதமாக வர, கணவனின் உடலையும், காதலனையும் மறைத்து வைக்க வேண்டும். இதைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள், எதிர்பாராத திருப்பங்கள் என விறுவிறுப்பாக இந்த வெப் தொடர் எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு எபிஸோடிலும் அந்தந்த வாரத்தின் மர்ம முடிச்சுக்கள் விடுவிக்கப்படும்.

இந்த ஷோ திரில்லர், டார்க் காமெடி மற்றும் காதல் போன்ற பல ஜானர்களில் இருக்கும். மொத்தத்தில் பரபரப்பான த்ரில்லர் டிராமா ஜானர் இது.  மேலும் இது போன்ற சர்வதேச நிகழ்ச்சி எதுவும் இல்லை. இதன் கான்செப்ட்,  கதைக் கரு, காட்சிப்படுத்தும் வகை மற்றும் கதாபாத்திரங்கள் என எல்லாமே தனித்தன்மையானவை. புத்தம் புதிது.

ஆண்கள், பெண்கள் உள்பட 18-35 வயதிற்குள் இருப்பவர்கள்தான் இந்நிகழ்ச்சிக்கான பார்வையாளர்களின் இலக்கு (டார்கெட் ஆடியன்ஸ்).  பெண் மையக் கதை என்பதால் பெண்களுக்கு முக்கியத்துவம் அதிகம் இருக்கும்.சுவாரஸ்யமான, நகைச்சுவையான அதே சமயம் தீவிரம் குறையாமல் அது இருக்கும்.

கதாநாயகி அம்ருதா ஸ்ரீனிவாசன் தமிழ் டிஜிட்டல் நடிகர்களில் மிகப் பிரபலமானவர். இவர் 3 திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நல்ல  கதை சொல்லியான ரோஹித் நந்தகுமார் வெப் சீரிஸில் முதன் முதலாக இயக்குனராக அறிமுகமாகிறார். கார்த்திக் சுப்பராஜ் (திரைப்படஇயக்குநர் மற்றும் ஸ்டோன் பெஞ்சின் தயாரிப்பாளர்) இவர் இயக்கிய மூன்று படங்களும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்தவை (பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி). அவரது 4-வது படம், பிரபு தேவா நடிப்பில் வெளியான மெளனப் படமான மெர்க்குரி.

இந்த வெப் தொடரை தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் , பெங்காலி, மராத்தி,மலயாளம், தெலுங்கு மொழிகளிலும் தயாரித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விபரங்களுக்கு Facebook.com/ZEE5, Twitter.com/ZEE5India, மற்றும் Instagram.com / ZEE5  

 

]]>
Web Series, zee 5, kalla chiruppu, amrutha srinivasan, அம்ருதா ஸ்ரீனிவாசன், டார்க் காமெடி, ஜி டிவி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/20/w600X390/Kallachirippu-1170x658.jpg http://www.dinamani.com/cinema/cinema-news/2018/aug/20/ஜி-டிவியின்-அட்டகாசமான-வெப்-தொடர்-கள்ளச்சிரிப்பு-2984065.html
2984062 சினிமா செய்திகள் ரஜினி - கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்கிறார் த்ரிஷா: அதிகாரபூர்வ அறிவிப்பு! எழில் DIN Monday, August 20, 2018 04:19 PM +0530  

 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. விஜய் சேதுபதி, சிம்ரன், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ் போன்றோரும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துவருகிறார்கள்.

இந்நிலையில் இப்படத்தில் த்ரிஷா நடிப்பது உறுதியாகியுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழின் பிரபல நடிகையான த்ரிஷா இதுவரை ரஜினி படத்தில் மட்டும் நடித்ததில்லை. தமிழின் இதர பிரபல நடிகர்கள் அனைவருடைய படத்திலும் த்ரிஷா நடித்துள்ள நிலையில், இந்தப் படத்தின் மூலம் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/20/w600X390/trisha919191xx.jpg http://www.dinamani.com/cinema/cinema-news/2018/aug/20/ரஜினி---கார்த்திக்-சுப்புராஜ்-படத்தில்-நடிக்கிறார்-த்ரிஷா-அதிகாரபூர்வ-அறிவிப்பு-2984062.html
2984054 சினிமா செய்திகள் சாவியின் பேத்தி நான், தமிழை அவமதிக்க மாட்டேன்: பிக் பாஸில் இருந்து வெளியேறிய வைஷ்ணவி விளக்கம்! எழில் DIN Monday, August 20, 2018 03:43 PM +0530  

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நேற்று வெளியேறினார் வைஷ்ணவி.

கடந்த வாரம் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் வைஷ்ணவி தமிழை அவமதிப்பாக நடிகர் டேனியல் குற்றம் சுமத்தினார். இதற்கு ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார் வைஷ்ணவி. அவர் கூறியதாவது: 

டேனியலின் திட்டம் என்னவென்றால், தமிழைப் பயன்படுத்தி மக்களிடம் அனுதாப ஓட்டுகள் பெறவேண்டும் என்பதுதான். இதுபோல முதல்தடவையாக அவர் சொல்லவில்லை. ஆனால் அது ஒளிபரப்பானதா என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை அது அவருடைய திட்டம் என அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். என் தாத்தா சாவி என்பதை அவர்கள் மறந்திருக்கலாம். அவர் பிரபல தமிழ் எழுத்தாளர். என்னால் மொழியைச் சரியாகப் பேசமுடியாமல் போகலாம். ஆனால் மொழியை ஒருபோதும் அவமதிக்கமாட்டேன். பார்வையாளர்கள் அந்தளவுக்கு முட்டாள்கள் அல்ல என்று கூறியுள்ளார்.

]]>
Vaishnavi Prasad http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/20/w600X390/vaishnavi1221111xxxx.jpg http://www.dinamani.com/cinema/cinema-news/2018/aug/20/vaishnavi-prasad-2984054.html
2984034 சினிமா செய்திகள் ‘இங்லீஷ், விங்லீஷ்’ நடிகை சுஜாதா குமார் மரணம்! சரோஜினி DIN Monday, August 20, 2018 12:15 PM +0530  

‘இங்லீஷ் விங்லீஷ்’ திரைப்படத்தில் நடிகை ஸ்ரீதேவியின் அமெரிக்க அக்காவாக நடித்த பாலிவுட் நடிகை சுஜாதா குமார் நேற்றிரவு காலமானார். கடந்த பல மாதங்களாகக் கேன்சரால் பாதிக்கப்பட்ட சுஜாதா, தற்போது கேன்சர் முற்றி நான்காம் நிலை மெட்டாஸ்டேடிக் கேன்சரால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. சுஜாதாவின் மரணத்தை அவரது சகோதரி சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி நேற்றிரவு 11.30 மணியளவில் ட்விட்டரில் வருத்தத்துடன் பதிவு செய்திருந்தார்.

சுசித்ராவின் ட்வீட்...

‘என் சகோதரி சுஜாதா குமார் நம்மை விட்டு நீங்கி விட்டார். மரணத்தால் இந்த உலகத்தைக் காட்டிலும் சிறந்ததோர் இடத்துக்கு அவரது ஆத்மா சென்றடையக் கூடும் என்றாலும் அவரில்லாத வெற்றிடத்தை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. ஆகஸ்ட் 19, இரவு 11.26 மணியளவில் அவர் மரணமடைந்தார். அவரற்ற வாழ்க்கை மீண்டும் பழைய மாதிரி திரும்புவது கடினம்.’

நடிகை சுஜாதா குமார் 24 சீரியல்களில் பாப்புலர் நடிகையாக இருந்தார். நடிகை ஸ்ரீதேவிக்கு அக்காவாக இங்க்லீஷ் விங்லீஷ் தவிர ராஞ்சனா மற்றும் குஜாரிஷ் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்தவர்.
 

]]>
actor Sujata Kumar passes away, நடிகை சுஜாதா குமார் மரணம், கேன்சர், இங்லீஷ் விங்லீஷ், cancer, english vinglish, sridevi, http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/20/w600X390/sujatha-kumar.jpg http://www.dinamani.com/cinema/cinema-news/2018/aug/20/english-vinglish-actor-sujata-kumar-passes-away-2984034.html
2984033 சினிமா செய்திகள் கோலமாவு கோகிலா படத்தைப் பார்த்து ரசித்து சிரித்தேன் என்று சொன்ன விஐபி இவர்தான்! சினேகா DIN Monday, August 20, 2018 12:12 PM +0530  

லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள கோலமாவு கோகிலா (கோகோ) படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் நயன்தாரா. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். இசை - அனிருத். கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் கோலமாவு கோகிலா வெளியானது.

இப்படத்தில் முக்கிய காதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்துள்ளார். ப்ரோமோஷனுக்காக வெளியான 'எனக்கு கல்யாண வயசு தான் வந்துடுச்சு' என்ற பாடல்  கோலமாவு கோகிலா படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. கோலமாவு கோகிலாவாக நயன்தாரா வாழ்ந்திருக்கிறார் எனலாம். அப்படியொரு ரகளையான பாத்திரம். முதற்காட்சி முதல் இறுதிக்காட்சி வரை அப்பாவித்தனமான முகத்தை வைத்துக்கொண்டு சிக்கலான வியூகங்களுக்குள் சாமர்த்தியமாக இவர் பயணிக்கும் விதம் அபாரம். நயன்தாரா என்றல்ல, ஒவ்வொரு பாத்திரங்களுக்குமே பிரத்யேகமான குணாதியசத்தையும் தோரணையையும் தர இயக்குநர் மிகவும் மெனக்கெட்டிருக்கிறார். நகைச்சுவையை அதகளப்படுத்தியுள்ள இயக்குநருக்கு பலத்த பாராட்டுக்கள் கிடைத்துக் கொண்டிருக்கும் வேளையில், இப்படத்தைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படக்குழுவினரை போனில் அழைத்து தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். 'சிரிச்சு சிரிச்சு ரசிச்சேன்' என்று நெல்சன் திலீப்குமாரிடம் படம் பிடித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதை நெல்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.