Dinamani - நியூஸ் ரீல் - http://www.dinamani.com/cinema/news-reel/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2672590 சினிமா நியூஸ் ரீல் ஹாலிவுட் நிறுவனத்துடன் இணைந்த இசையமைப்பாளர்!   DIN DIN Saturday, March 25, 2017 09:22 AM +0530 "வந்தா மல' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சாம் டி ராஜ். தற்போது  வி.இசட். துரை இயக்கத்தில் உருவாகும் படம் உள்ளிட்ட மூன்று படங்களுக்கு இசையமைத்து வரும் இவர், தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த நெட்பிலிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றவுள்ளார். இந்நிறுவனம் ஹாலிவுட் பட தயாரிப்பிலும் ஆன்லைன் வீடியோ சேவையிலும் பிரபலமாக திகழ்ந்து வரும் நிறுவனமாகும். ஏற்கெனவே  ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் என்டர்டைன்மென்ட்  மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்து நெட்பிலிக்ஸ் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் படங்களையும், டிவி நிகழ்ச்சிகளையும் ஆன்லைன் மூலம் வழங்குவதில் முன்னிலையில் உள்ள இந்நிறுவனம், தற்போது இந்தியாவிலும் சினிமா மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஆன்லைன் வீடியோவில் வழங்கவுள்ளது. 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/25/w600X390/q9.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/mar/25/ஹாலிவுட்-நிறுவனத்துடன்-இணைந்த-இசையமைப்பாளர்-2672590.html
2672589 சினிமா நியூஸ் ரீல் மதிப்பெண்!   DIN DIN Saturday, March 25, 2017 09:21 AM +0530 ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரின் வாழ்க்கையைத் தழுவி உருவாகி வரும் படம் "மதிப்பெண்.' ஒரு நடுத்தர ஆசிரியரின் மகனான இளங்கோ, தன் ஊர்த் தலைவரின் சாதி வெறியை அடக்கி ஒழிக்க, தன் தாயின் சபதத்தின்படி, ஐ.ஏ.எஸ். படிக்க சென்னைக்கு வருகிறான். அவனின் அறிவாற்றலை அறிந்து கொண்ட நாயகி தாமரை, அவன் ஐ.ஏ.எஸ். ஆவதற்கு வேண்டிய பல உதவிகள் செய்கிறாள். அவர்களுக்கு இடையே நட்பு அரும்பி, நாளடைவில் அது காதலாக மாறுகிறது. பிறகு, அவன் மாவட்ட ஆட்சியாளராக மைசூரில் பணி ஏற்கிறான். தாமரையை ஏற்க விரும்பி சென்னையில் திருமண நிச்சயம் செய்ய ஏற்பாடு செய்யச் சொல்கிறான் இளங்கோ. ஆனால், அதற்கு அவன் சொன்னபடி செல்லவில்லை. அவன் ஏன் வரவில்லை. அவனுக்கு ஏற்பட்ட விபரீதங்கள் என்ன என்பதை பல திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக சொல்லும் கதை இது. பாண்டியன் கலைக்கூடம் சார்பில் இரா.சோதிவாணன் கதை எழுதி தயாரிக்கிறார். ஸ்ரீஜித், நேகா, அமிர்தா, லிவிங்ஸ்டன், நாஞ்சில் விஜயன் உள்ளிட்டோர் நடிக்கின்றர். திரைக்கதை எழுதி இயக்குகிறார் கிருஷ்ணமூர்த்தி. ஏப்ரலில் படம் திரைக்கு வருகிறது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/25/w600X390/q8.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/mar/25/மதிப்பெண்-2672589.html
2672588 சினிமா நியூஸ் ரீல் சீனாவின் மறைமுக போர்!   DIN DIN Saturday, March 25, 2017 09:19 AM +0530 திரையுலக வட்டாரத்தில் பரவலாக அறியப்பட்டவர் ஜெயங்கொண்டான். கே.கே.நகர் காமராஜர் சாலையில் "கவிஞர் கிச்சன்' என்ற பெயரில் துரித உணவகம் நடத்தி வரும் இவர், சினிமா வாய்ப்புத் தேடி சென்னை வரும் இளைஞர்களுக்கு தன் ஹோட்டலில் வேலை, தங்குமிடம் என நம்பிக்கை தருபவர். ஒரு சில படங்களில் பாடல்கள் எழுதியுள்ள இவர், தற்போது கதை, வசனகர்த்தாவாகவும் வெளிப்பட்டுள்ளார். மாருதி ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. "பசங்க', "கோலி சோடா' படங்களில் நடித்த சிறுவர்கள் இந்தப் படத்துக்காக மீண்டும் இணைகிறார்கள். கஞ்சா கருப்பு, ஆனந்த்ராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பாமரன் இயக்குகிறார். கதை அம்சம் குறித்து... "இன்றைய பரபரப்பான உலகில், மற்றவரிடம் அக்கறை கொள்ளவோ, கரிசனத்தோடு நடந்து கொள்ளவோ முடியாத நிலையில்தான் இருக்கிறோம். அதோடு, இன்றைய உலகில் வேகமாகப் போட்டி போடுவதை முன்னிட்டு உடனடி கலாசாரத்துக்குப் பழகிவிட்டோம். இந்த உடனடி கலாசாரத்தை மாற்றிக்கொள்வதில் இருந்தே மாற்றத்தைத் தொடங்கிவிடலாம். நாம் சமைக்கும் உணவு சில மணி நேரங்களிலேயே கெட ஆரம்பித்துவிடும் என்பது இயற்கையின் நியதி. இதை முன் வைத்து நம் உணவு கலாசாரத்தின் மீது சீனா போன்ற நாடுகள் தொடுத்துள்ள ஒரு மறைமுகப் போர் குறித்த கதை'' இது என்றார் ஜெயங்கொண்டான். 

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/25/w600X390/q7.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/mar/25/சீனாவின்-மறைமுக-போர்-2672588.html
2672587 சினிமா நியூஸ் ரீல் விக்ரம் ஜோடியானார் ஐஸ்வர்யா ராஜேஷ்!   DIN DIN Saturday, March 25, 2017 09:18 AM +0530 கௌதம் வாசுதேவ்மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் "துருவ நட்சத்திரம்.'  படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பில் விக்ரம் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. இப்படத்துக்கான கதாநாயகியாக அனு இம்மானுவேல் ஒப்பந்தம் செய்யப்பட்டார். கால்ஷீட் பிரச்னையால் அவர் விலகி விடவே, தற்போது ரீது வர்மா ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை கௌதம் வாசுதேவ்மேனனின் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த ஜோமன் மாற்றப்பட்டு சந்தான கிருஷ்ணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.  இவர் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரனின் மகன் ஆவார். இந்நிலையில் இன்னொரு கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ்தான் விக்ரமின் ஜோடி எனவும், ரீது வர்மா கதையின் முக்கிய வேடம் ஏற்கிறார் எனவும் படக்குழு தெரிவிக்கிறது. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/25/w600X390/q6.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/mar/25/விக்ரம்-ஜோடியானார்-ஐஸ்வர்யா-ராஜேஷ்-2672587.html
2669319 சினிமா நியூஸ் ரீல் ஆர்.கே.யின் புதிய திட்டம்! DIN DIN Monday, March 20, 2017 01:02 PM +0530 ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்களின் படங்களும் வசூல்ரீதியாக சிக்கலைச் சந்தித்து வரும் நேரம் இது. இது குறித்து பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன் சமீபத்தில் வெளிப்படையாக தெரிவித்த கருத்து, எல்லாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தது. இதற்கெல்லாம் தீர்வாக வெளிவரவுள்ள "வைகை எக்ஸ்பிரஸ்' படத்துக்கு தமிழகம் முழுவதும் ஆயிரம் விநியோகஸ்தர்களை நியமித்து புதிய திட்டத்தை வெளியிட்டுள்ளார் ஆர்.கே. இவர்கள் வீடு வீடாகப் போய் டிக்கெட் விற்பார்கள். இரண்டு டிக்கெட் வாங்கினால் மூன்று டிக்கெட் இலவசம். குடும்பத்தோடு எல்லாரையும் தியேட்டருக்கு வரவழைப்பதே இதன் இலக்கு. திரையிட்ட தியேட்டர்கள் நிரம்புவதுடன்,  ஒரு வார கால ஓட்டத்திற்கு இது உத்தரவாதம் அளிக்கும் என்பது இந்த திட்டத்தின் நோக்கம். இது குறித்து பேசிய ஆர்.கே. "ஆன் லைன் மூலம் டிக்கெட் புக் செய்யப்படும் போது, சர்வீஸ் சார்ஜ் பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த வருமானம் எந்தத் தயாரிப்பாளரையும் போய்ச் சேருவதில்லை. இதைப் பற்றி யாரும் பேசுவதில்லை. இந்த வருமானத்தை விநியோகஸ்தர்களுக்குத் தரலாம். இதனால் சிலருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். ஆனால், இது பற்றி எந்தச் சங்கமும் இதுவரை வாய் திறக்கவில்லை. இந்தத் திட்டத்தை எல்லாப் படங்களின் விநியோகஸ்தர்களும் நடத்த வேண்டும். அதை நான் தொடங்கி வைக்கிறேன்'' என்றார் ஆர்.கே. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/20/w600X390/rk.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/mar/20/ஆர்கேயின்-புதிய-திட்டம்-2669319.html
2669318 சினிமா நியூஸ் ரீல் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் DIN DIN Monday, March 20, 2017 12:59 PM +0530 31 வருடங்கள் திரைத்துறையில் இருந்த சாவித்திரி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் மொத்தம் 263 படங்களில் நடித்து தனிச்சிறப்பு பெற்றவர். தற்போது இவரது வாழ்க்கையைத் தழுவி உருவாகி வரும் படம் "நடிகையர் திலகம்.' வைஜெயந்தி மூவிஸ் மற்றும் ஸ்வப்னா சினிமாஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. நாக் அஷ்வின் இயக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர் சமந்தா. தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/20/w600X390/a3.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/mar/20/சாவித்திரி-வேடத்தில்-கீர்த்தி-சுரேஷ்-2669318.html
2669316 சினிமா நியூஸ் ரீல் ஜெயம் ரவி படத்தில் சிங்கப்பூர் நடிகர்  DIN DIN Monday, March 20, 2017 12:56 PM +0530 "மிருதன்' படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவி - சக்தி சௌந்தர்ராஜன் கூட்டணி இணையும் படம் "டிக் டிக் டிக்.' ஹித்தேஷ் ஜபக்கின் நேமிசந்த் ஜபக் புரொடக்ஷன்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. விண்வெளியை மையப்படுத்தி இந்தியாவில் உருவாகும் முதல் படம் என்கிற சிறப்பை இப்படம் பெறுகிறது. விண்வெளிக்கும்,  பூமிக்குமான தொடர்புகளைப் பின்னணியாகக் கொண்டு இப்படத்தின் கதைக் களம் அமைக்கப்பட்டுள்ளது. விண்வெளி குறித்து பல ஆராய்ச்சிகள் நடந்து வரும் நிலையில், அது பற்றி கற்பனையாக உருவாக்கப்பட்ட கதை இது. சென்னையில் உள்ள ஏவி.எம். ஸ்டுடியோவில் பிரத்யேகமாக அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தின் முக்கிய கதாபாத்திரம் ஒன்றுக்காக ஹாலிவுட் நடிகர்கள் பலரின் பெயர் பரிசீலனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் சிங்கப்பூர் நடிகர் ஆரோன் அஜிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரைப் பூர்வீகமாகக் கொண்ட ஆரோன் அஜிஸ் ஹாலிவுட் உள்ளிட்ட பல நாட்டு மொழிப் படங்களில் நடித்து உலக சினிமா ரசிகர்களின் கவனம் பெற்றவர். தற்போது இந்தப் படத்தின் வில்லன் வேடத்தை அஜீஸ் ஏற்கிறார். பல இந்திய படங்களுக்காக அணுகியும் நடிக்க ஒப்புகொள்ளாத ஆரோன் அஜீஸ் இப்படத்தின் திரைக்கதைக்காக நடிக்க ஒப்புக் கொண்டதாக தெரிவித்துள்ளார். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/20/w600X390/a2.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/mar/20/ஜெயம்-ரவி-படத்தில்-சிங்கப்பூர்-நடிகர்-2669316.html
2669315 சினிமா நியூஸ் ரீல் ஏப்ரல் 14-ஆம் தேதி ரஜினியின் "2.0.' டீஸர்! DIN DIN Monday, March 20, 2017 12:53 PM +0530 ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் "2.0.' அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்துக்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படம், இந்திய சினிமா வரலாற்றில் அதிக பொருட்செலவில் உருவாகும் படம் என்று கூறப்படுகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சுமார் 400 கோடியில் இப்படத்தைத் தயாரித்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இதனால் தென்னிந்தியா மட்டுமல்லாமல், வட இந்திய மொழிகளிலும் இப்படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதன் இன்னொரு பிரமிக்க கூடிய அம்சமாக இப்படத்தின் இந்தியத் தொலைக்காட்சி உரிமை சுமார் 110 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. ஜீ டி.வி. நிறுவனம் இந்தப் படத்தின் இந்திய தொலைக்காட்சி உரிமையை பெற்றுள்ளது. தற்போது பிரதான காட்சிகள் அனைத்துமே படமாக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் ஒரே ஒரு பாடலும், சில காட்சிகள் மட்டுமே மீதம் இருப்பதாக  இயக்குநர் ஷங்கர் தனது சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 14-ஆம் தேதி முதல் டீஸர் வெளியிடப்படவுள்ளது. இந்தியா மட்டுமன்றி, உலக அளவில் தமிழ்ப் படங்களே வெளியாகாத நாடுகளிலும் இப்படத்தைத் தீபாவளிக்கு வெளியிட லைகா நிறுவனம் முடிவு செய்துள்ளது. 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/20/w600X390/a1.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/mar/20/ஏப்ரல்-14-ஆம்-தேதி-ரஜினியின்-20-டீஸர்-2669315.html
2668347 சினிமா நியூஸ் ரீல் இனி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்! DIN DIN Saturday, March 18, 2017 09:42 AM +0530 "பரதேசி', "கபாலி' படங்களுக்குப் பிறகு தன்சிகாவை தமிழ் சினிமாவில் பார்க்க முடியவில்லை... எங்க இருக்கீங்க?...
என எஸ்.எம்.எஸ். அனுப்பினால், நாளை சந்திக்கலாமா?... பதில் எஸ்.எம்.எஸ். 
அனுப்புகிறார். குறித்த நேரத்தில் நடந்த உரையாடலில் இருந்து...
"கபாலி' படத்துக்குப் பின் ஏன் இந்த பெரிய இடைவெளி...?
எந்த இடைவெளியும் இல்லை. சில படங்களின் ரிலீஸ் தள்ளி போயிருக்கிறது. "விழித்திரு', "காத்தாடி', "காலக்கூத்து',"ராணி', "கிட்னா' என வரிசையாக படங்கள் இருக்கின்றன.  
தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்துவதாக...? 
ஆமாம், நேற்று வரை தெலுங்கு பட படப்பிடிப்பில்தான் இருந்தேன். இதுவரை இந்திய சினிமாவில் பதிவு செய்யப்படாத ஒரு படமாக "வாலு ஜடா'.  இந்தப் படத்துக்காக ஒரு நீண்ட கால்ஷீட் தந்து நடித்திருக்கிறேன். கௌதம் வாசுதேவ் மேனனின் உதவியாளர் இயக்குநர். இது என் கேரியரில் ஒரு முக்கியமான படம். 
"பரதேசி',"கபாலி' படங்களுக்குப் பின் ரொம்பவே அழுத்தமான கதைகளைத் தேர்வு செய்கிறீர்கள்... என்ன திட்டம்...?
நான் ஒரு என்டர்டெயினர். ஒரே மாதிரியான வேடங்களில் நடித்தால் மக்களுக்கு பிடிக்காது. எல்லாவற்றிலும் கவனம் கலைக்க வேண்டும். நல்ல நடிப்புக்கு இடம் கொடுக்க வேண்டும் என்பதுதான் காரணம்.  
கதை, கேரக்டர், ஹீரோ, இயக்குநர், தயாரிப்பு நிறுவனம் என எதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்...?
எல்லாவற்றையும்தான் பார்ப்பேன். என்னுடைய கதாபாத்திரம் ரொம்பவே முக்கியம்.   முந்தைய படங்களின் சாயல் இருக்க கூடாது என்பதில் கவனமாக இருப்பேன். நல்ல இயக்குநராகவும் இருக்க வேண்டும். ஹீரோ ஒரு பொருட்டு கிடையாது. 
கிளாமர் பாலிஸி...?
கிளாமருக்கு இலக்கணம் எதுவும் கிடையாது. "மாஞ்சா வேலு' படத்தில் நடித்ததற்கும், "கபாலி' படத்தில் நடித்ததற்கும் இடையே நிறைய வித்தியாசம் இருக்கிறது. இந்த வித்தியாசம்தான் ஒரு நடிகைக்கு முக்கியம். கிளாமர் பெரிய விஷயம் இல்லை. 
பாவனா விவகாரம் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள்...?
அது பெரும் கொடுமை. இனி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று அந்த சம்பவம் கற்றுக் கொடுத்துள்ளது. குற்றவாளிகளுக்கு அரபு நாடுகளில் கொடுப்பது போன்ற தண்டனையை உடனே வழங்க வேண்டும். 
நடிகைகள் பாதுகாப்புக்காக வரலெட்சுமி அமைப்பு தொடங்கி இருக்கிறார்..?
வரவேற்க வேண்டிய விஷயம். நானும் அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். 
உங்களுக்கு ஒரு அநீதி நடந்தால் எப்படி பாதுகாத்து கொள்வீர்கள்...?
எனக்கு தற்காப்பு கலைகள் தெரியும். சமீபத்தில் "காத்தாடி' படப்பிடிப்பின் போது எனக்கும் இது மாதிரி ஒரு சம்பவம் நடக்க இருந்தது. என் படக்குழுவினருடன் இணைந்து அவர்களைத் தாக்கி நிலைமையை சமாளித்தோம். பெண் குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே, தற்காப்பு கலைகளை சொல்லித் தர வேண்டும். பள்ளிகளில் இது ஒரு வகுப்பாக இடம் பெற வேண்டும். 
சினிமாவில் உங்களின் நெருக்கமான நண்பர்கள் யார்?
சினிமாவில் எனக்கு நண்பர்கள் கிடையாது. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/18/w600X390/q8.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/mar/18/இனி-ஜாக்கிரதையாக-இருக்க-வேண்டும்-2668347.html
2668346 சினிமா நியூஸ் ரீல் காவிரி நீர் பிரச்னையை மையமாகக்கொண்டு உருவாகும் படம் உயிர்க்கொடி DIN DIN Saturday, March 18, 2017 09:41 AM +0530 காவிரி நீர் பிரச்னையை முன் வைத்து உருவாகி வரும் படம் "உயிர்க்கொடி.' கர்நாடகம் செல்லும் ஒரு தமிழ்ப் பெண், அங்கே சில நாள்கள் தங்க நேரிடுகிறது. அப்போது தன் குழந்தைக்கு அருகில் உள்ள வீட்டில் தண்ணீர் கேட்டு வாங்கிக் குடிக்க கொடுக்கும் போது, தமிழர்களை வெறுக்கும் ஒரு கன்னடப் பெண் அதனை தட்டிவிடுகிறாள். இந்த இரண்டு பெண்களுக்குமான உரையாடல்களில் இருந்து தொடங்குவதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கே நடக்கும் சில சம்பவங்கள், தமிழ்ப் பெண்ணுக்கு கோபத்தை வரவழைக்கிறது. அதன் பின் அந்த பெண் காவிரி பிரச்னைக்கு சொல்லும் தீர்வு என்ன? முன் வைக்கிற காரணங்கள் என்ன? என்பதே கதை. கதாநாயகனாக நடித்து இப்படத்தை எழுதி இயக்குகிறார் ரவி. பெங்களூரைச் சேர்ந்த அஞ்சனா நட்சத்திரா கதாநாயகியாக நடிக்கிறார். அமல்ராஜ், கீதா,  ஜானகி,  பாபு குரு, ஷோபா உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களை ஏற்கின்றனர். பெங்களூர், கோவா, பொள்ளாச்சி, அவிநாசி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. படத்தின் இறுதிக் கட்ட பணிகள் நடந்து வருகின்றன. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/18/w600X390/q9.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/mar/18/காவிரி-நீர்-பிரச்னையை-மையமாகக்கொண்டு-உருவாகும்உயிர்க்கொடி-2668346.html
2668345 சினிமா நியூஸ் ரீல் தயாரிப்பாளரின் வருத்தம்! DIN DIN Saturday, March 18, 2017 09:39 AM +0530 கே.3 சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் படம் "திட்டிவாசல்.' நாசர், மகேந்திரன், ஈஷா அகர்வால், தனிஷ் ஷெட்டி, வினோத்குமார் நடிக்கின்றனர். கதை எழுதி இயக்குகிறார் பிரதாப் முரளி. வனப் பகுதிகளை பின்னணியாக கொண்டு இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முடிந்து இறுதிக் கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், படத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீநிவாஸ் ராவ் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார். அவரிடம் பேசும் போது, "கன்னடம் மற்றும் தெலுங்கில் படங்கள் தயாரித்த அனுபவம் எனக்கு உண்டு. தமிழ்ப் படைப்புகள் மேல் எனக்கு மரியாதை உண்டு. நானும் ஒரு கதையை தேர்வு செய்து தயாரிப்பாளராக தமிழில் அறிமுகமானேன். முதலில் மேக்னா நாயுடுவை இதன் கதாநாயகியாக தேர்வு செய்தோம். கதை கேட்டு அவரும் ஒப்புக் கொண்டார். காடும் காடு சார்ந்ததுதான் இதன் கதை. இதனால் வனப்பகுதிகளை ஒட்டியுள்ள ஹோட்டல்களில் மட்டுமே தங்க முடியும். ஆனால், மேக்னா நாயுடு நட்சத்திர ஹோட்டலில் மட்டும்தான் தங்குவேன் என பிரச்னை செய்தார். இதனால் படப்பிடிப்பு நின்று போனது. நிலைமையை விளக்கிய பின்பும் அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் எல்லாருக்கும் தெரிந்த நடிகையும் கிடையாது. இதனால் அவரை படத்தில் இருந்து வெளியேற்றி விட்டு படப்பிடிப்பை நடத்தினோம்'' என்றார் தயாரிப்பாளர். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/18/w600X390/q6.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/mar/18/தயாரிப்பாளரின்-வருத்தம்-2668345.html
2668344 சினிமா நியூஸ் ரீல் படமாகும் ரஜினி வசனம்! DIN DIN Saturday, March 18, 2017 09:38 AM +0530 "பயணங்கள் முடிவதில்லை', "வைதேகி காத்திருந்தாள்', "அம்மன் கோவில் கிழக்காலே', "மெல்லத் திறந்தது கதவு', "ராஜாதி ராஜா' உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குநராக வலம் வந்தவர் ஆர்.சுந்தர்ராஜன். இவரின் மகன் தீபக் தற்போது இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். ஏ.எல்.விஜய்யிடம் "தாண்டவம்',  "தலைவா', "சைவம்' உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய இவர் தற்போது "கெட்ட பையன் சார் இவன்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். "இது எப்படி இருக்கு', "என் வழி தனி வழி', "கதம் கதம்', "போடா ஆண்டவனே நம்ம பக்கம்' உள்ளிட்ட ரஜினி பேசிய வசனங்களைத் தொடர்ந்து "முள்ளும் மலரும்' படத்தில் ரஜினி பேசிய இந்த வசனமும் தலைப்பாகியுள்ளது. நட்டி கதாநாயகனாக நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மானின் தங்கை மகன் காஷிஃப் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பி.சி.ஸ்ரீராமின் மாணவர் கௌதம் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்திறார். 6 ஃபேஸ் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. படத்தின் கதாநாயகி மற்றும் முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்கும் நடிகர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/18/w600X390/q5.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/mar/18/படமாகும்-ரஜினி-வசனம்-2668344.html
2665278 சினிமா நியூஸ் ரீல் மீரா கதிரவன் தயாரித்து இயக்கும் படம் விழித்திரு DIN DIN Monday, March 13, 2017 01:28 PM +0530 சென்னை மாநகரை களமாக கொண்டு உருவாகி வரும் படம் "விழித்திரு'. விதார்த், கிருஷ்ணா, வெங்கட்பிரபு, தம்பி ராமையா, தன்சிகா, அபிநயா, எஸ்.எஸ்.பி.சரண் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். "அவள் பெயர் தமிழரசி' படத்தின் மூலம் பரவலான பாராட்டுகளைப் பெற்ற மீரா கதிரவன், இப்படத்தை தயாரித்து இயக்குகிறார். தமிழகம் முழுவதும் சௌர்ந்தர்யன் பிக்சர்ஸ் இப்படத்தை வெளியிடவுள்ளது. வெவ்வேறு களங்களில் பயணமாகும் நான்கு மனிதர்களுக்கு ஒரே இலக்கு. ஒருநாள் இரவில் அந்த இலக்கை நோக்கி பயணமாகும் அந்த நான்கு பேரின் அனுபவங்களும், பயண சுவாரஸ்யங்களும்தான் திரைக்கதை. சென்னை போன்ற மாநகர வாழ்க்கையில் அனுதினமும் சவால்தான். ஒவ்வொருவருக்குமான தேடல்களும், பயணங்களும் ஒவ்வொரு மாதிரியானவை. எல்லாவற்றையும் ஆராய்ந்தால் பணம் என்கிற ஒற்றை தேவை முதன்மையானதாக இருக்கும். ஆனால், அது மட்டுமே வாழ்க்கை இல்லை. சக மனிதனின் நேசமும், அதை கடத்தும் மகத்துவமான அன்புமே வாழ்க்கை என்பது இதன் கதைக் கரு. ஒரே நாள் இரவில் நடந்து முடிவதாக கதைக் களம் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை இன்னொரு இசையமைப்பாளருக்கு பாடல் எழுதாத டி.ராஜேந்தர், இக்கதைக்கு தன் பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காக பாடல் எழுதி அதற்கு நடனமாடியுள்ளார். பாரதிதாசனின் பாடல் ஒன்று இதில் படமாக்கப்பட்டுள்ளது. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/13/w600X390/movie1.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/mar/13/மீரா-கதிரவன்-தயாரித்து-இயக்கும்-படம்-விழித்திரு-2665278.html
2665277 சினிமா நியூஸ் ரீல் பாலாவுடன் இணையும் ரஜினியின் நெருங்கிய நண்பர்! DIN DIN Monday, March 13, 2017 01:25 PM +0530 "தாரை தப்பட்டை' படத்தைத் தொடர்ந்து சாட்டை யுவன், பிரகதி நடிப்பில் உருவாகும் படத்தை இயக்க இருந்தார் பாலா. இந்நிலையில் யாரும் எதிர்பாரா வகையில் ஜோதிகா நடிக்கும் படத்தை இயக்குகிறார். இன்னொரு கதாபாத்திரத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். படத்துக்கு "நாச்சியார்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஈயான் ஸ்டுடியோஸ் மற்றும் பாலாவின் பி ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இப்படத்தை தயாரிக்கிறது. இளையராஜா இசையமைக்கிறார். படப்பிடிப்பு துவங்கியுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ரஜினியின் லிங்கா படத்தை தயாரித்திருந்தார். கன்னடத்தில் அநேக படங்களைத் தயாரித்துள்ள இவர் முதன் முறையாக நடிக்கிறார். இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையை ஒட்டியுள்ள கிராமப்புற பகுதிகளில் தொடங்கியுள்ளது. செப்டம்பரில் படம் திரைக்கு வருகிறது. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/13/w600X390/bala.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/mar/13/பாலாவுடன்-இணையும்-ரஜினியின்-நெருங்கிய-நண்பர்-2665277.html
2665276 சினிமா நியூஸ் ரீல் சோனியா அகர்வால் நடிக்கும் அகல்யா DIN DIN Monday, March 13, 2017 01:22 PM +0530 தன்னை முன்னிறுத்தும் வகையிலான கதைகளை தேர்வு செய்வதில் சோனியா அகர்வாலும் ஆர்வம் காட்டி வருகிறார். இந்த வகையில் இவரின் அடுத்த படம் "அகல்யா'. தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் இப்படம்  கன்னடம், ஹிந்தி என இரு மொழிகளில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இப்படத்தை ஹாரர் மூவி நிறுவனம் தயாரித்து வருகிறது. விளம்பர படவுலகில் தேர்ந்த அனுபவம் கொண்ட ஷிஜின்லால் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். கதாநாயகன் இல்லாத இக்கதை முழுக்க முழுக்க சோனியா அகர்வாலை மட்டுமே மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. அமானுஷ்யம் மற்றும் த்ரில்லர் பாணி கதையாக இது உருவாகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகன் ஒருவர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார். கேரளத்தில் நடைபெற்ற இப்படத்தின் பூஜையில் மோகன்லால் கலந்து கொண்டு படப்பிடிப்பை துவக்கி வைத்தார். தமிழ்ப் பதிப்புக்கான துவக்க விழா கடந்த வாரம் சென்னை ஏவி.எம்.ஸ்டூடியோவில் நடைபெற்றது. ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர் இதில் பணிபுரியவுள்ளனர்.  சென்னை மற்றும் மூணாறு பகுதிகளில் அடுத்தக் கட்ட படப்பிடிப்புகள் நடைபெறவுள்ளது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/13/w600X390/agalya.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/mar/13/சோனியா-அகர்வால்-நடிக்கும்-அகல்யா-2665276.html
2665275 சினிமா நியூஸ் ரீல் இங்கிலாந்தில் திரையிடப்படும் பாகுபலி 2 DIN DIN Monday, March 13, 2017 01:18 PM +0530 எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் வெளியான "பாகுபலி' காட்சிக்கு காட்சி பிரமிப்பும், பிரம்மாண்டமும் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. முதல் பாகத்தின் படப்பிடிப்பின் போதே இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பு பாதியளவு முடிந்து விட்டதாகவும் கூறப்பட்டு வந்தது. இதையடுத்து மீதமுள்ள காட்சிகள் அவ்வப்போது படமாக்கப்பட்டன. இறுதிக் கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது. பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா,  சத்யராஜ் உள்ளிட்ட முதல் பாகத்தில் நடித்த நடிகர்களே இதிலும் நடிக்கின்றனர்.  தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் வெளியாகவுள்ள இப்படம், திரைக்கு வருவதற்கு முன்பே இங்கிலாந்தில் திரையிடப்படவுள்ளது. இந்தியாவின் 70-ஆவது சுதந்திர ஆண்டை கொண்டாடும் வகையில் பிரிட்டிஷ் ஃபிலிம் இன்ஸ்ட்டியூட் ஏப்ரல் 24 -ஆம் தேதி முதல் இந்திய அளவில் பல திரைப்படங்களை திரையிடவுள்ளது. "பாகுபலி 2' படத்தை, விழாவில் கலந்து கொள்ளும் இங்கிலாந்து ராணி காணவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/13/w600X390/part_2.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/mar/13/இங்கிலாந்தில்-திரையிடப்படும்-பாகுபலி-2-2665275.html
2665273 சினிமா நியூஸ் ரீல் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ரஜினியின் "2.0.' DIN DIN Monday, March 13, 2017 01:13 PM +0530 ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் "2.0.' ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் நீரவ் ஷா ஒளிப்பதிவில் உருவாகி வரும் இப்படம் இந்திய அளவில் அதிக பட்ஜெட்டில் தயாராகி வரும் படம் என்று சொல்லப்படுகிறது. சென்னை, தில்லி, மும்பை உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிப்புகள் நடந்து வந்தன. ஒருபுறம் வேகமாக படப்பிடிப்பு நடைபெற்று வந்த அதே நேரத்தில், மறுபுறம் படத்தின் கிராபிக்ஸ் இறுதிக் கட்டப் பணிகளும் மும்முரமாக நடந்தது. இதைப்போல் பின்னணி குரல்பதிவும் அவ்வப்போது நடந்து வந்தது. ரஜினிகாந்த் தனது காட்சிகளில் பெரும் பகுதிக்கு பின்னணி பேசி விட்டார். தற்போது ஒரு சில முக்கிய காட்சிகளுக்கான இறுதிக் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட அரங்குகளில் ரஜினி, அக்ஷய் குமார் பங்கேற்ற சண்டைக்காட்சி படமாக்கப்பட்டுள்ளது. எமி ஜாக்சன் தனது காட்சிகள் முழுவதுமாக முடிந்து விட்டதாக சுட்டுரை பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஒரு பாடல் தவிர்த்து மற்ற காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுள்ள நிலையில், வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி இப்படத்தின் டீஸர் வெளியிடப்படவுள்ளது. மே மாத இறுதியில் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியாகிறது. வரும் தீபாவளி வெளியீடாக படம் திரைக்கு வரவிருக்கிறது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/13/w600X390/rajini.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/mar/13/இறுதிக்கட்ட-படப்பிடிப்பில்-ரஜினியின்-20-2665273.html
2663708 சினிமா நியூஸ் ரீல் நடிகை பாவனா குறித்து... நடிகர் ப்ரித்விராஜ் DIN DIN Friday, March 10, 2017 01:20 PM +0530 "பெண்களை இழிவு படுத்தும்  காட்சிகள்,   வசனங்கள்  உள்ள பல படங்களில் நான் நடித்திருக்கிறேன். அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனி, நான் நடிக்கும்  படங்களில் பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் காட்சிகள்.. வசனங்கள்  இருக்காது என்று உறுதி கொடுக்கிறேன். எனது தாய்,  உடைந்து தடம் மாறிப்போய் கொண்டிருந்த வாழ்க்கையை சரி செய்து, இரண்டு இளம் மகன்களை வளர்த்து இன்று இந்த நிலைக்கு கொண்டு வந்தார்... இன்று... என் அருமைத் தோழி செட்டுக்குள் நடந்து வந்து "ஆதம்' படத்தின் ஷூட்டிங்கிற்கு வந்தபோது, மீண்டும் ஒருமுறை என் வாழ்க்கையில் அற்புதமான ஒரு பெண்ணின் தன்னிகரில்லா துணிவின் தருணத்தை காணும் வாய்ப்பு கிடைத்தது. அவர் ஒரு வாக்கியம்தான் சொன்னார்.  "ஒரு சம்பவமோ அல்லது ஒரு நபரோ உன் வாழ்க்கையை கட்டுப்படுத்த முடியாது..'  இந்த வார்த்தைகள் கவுன்சிலிங் மற்றும் விவாதங்களில் உலகெங்கும் இடம்பெற வேண்டிய ஒன்றாகும்.   கோடிக்கணக்கான வெளியே கேட்காத குரல்களின்  பிரதிபலிப்பு அந்த வார்த்தைகளில் உள்ளது.   இத்தனை காலம்,  நான் விவேகமாக இல்லாததற்காக  நான் மன்னிப்பு கோருகிறேன்... பெண் வெறுப்பு அடங்கிய காட்சிகள்  அமைந்த படங்களில் நடித்ததற்கு நான் மன்னிப்பு கோருகிறேன் ... பெண்களின்  தன்மானத்தை இழிவுப்படுத்தும் வசனங்களை உச்சரித்து, ரசிகர்களிடம்  கைத்தட்டலைப் பெற்றதற்கு நான் மன்னிப்பு கோருகிறேன். ஒருபோதும் இனி  அப்படி நடிக்க  மாட்டேன்.  இனி எப்போதும் பெண்ணை அவமதிப்பதைக்  கொண்டாடும் படங்களில் நடிக்கவும் மாட்டேன். நான் ஒரு நடிகன், நடிப்பது என் தொழில்.   அதற்காக, திரைப்படங்களில் வரும் கரும்பகுதிகளைக் கொண்ட   பாத்திரங்களில் நடிக்க மாட்டேன்.   மன தைரியத்தின், துணிச்சலின்   உறுதியின்   சின்னமாக நிற்கும்  அந்த பெண்ணின் பின்னால்,  ஒரு காயப்பட்ட பிரபலம்  இருக்கிறாள்.  தாய்மார்கள் மற்றும் ஆண்கள்... எழுந்து நின்று பாவனாவுக்கு கை தட்டுங்கள்''  என்று  பதிவு செய்திருக்கும்  ப்ரித்விராஜ், மலையாளத்து திரைப்படத்தில்  ஒரு புதிய,  அவசியமான  கண்ணோட்டத்தை வலியுறுத்தியிருக்கிறார். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/10/w600X390/m3.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/mar/10/நடிகை-பாவனா-குறித்து-நடிகர்-ப்ரித்விராஜ்-2663708.html
2663707 சினிமா நியூஸ் ரீல் சினிமா அவ்வளவு ஈஸி இல்லை! DIN DIN Friday, March 10, 2017 01:19 PM +0530 குறுகுறு கண்களும் கன்னக்குழி சிரிப்புமாக அஸ்வினிடம் பேசும் போதே நமக்கும் உற்சாகம் ஒட்டிக்கொள்கிறது... "மணல் கயிறு 2' படம் முடிந்து தற்போது கதை தேடல்களில் ஈடுபாடு காட்டுகிறார் அஸ்வின். நாடகம், சினிமா, அரசியல் என பன்முகங்கள் கொண்ட எஸ்.வி.சேகரின் மகன். 
இன்னும் எஸ்.வி.சேகரின் மகன் என்றுதான் உங்களை அணுக முடிகிறது.... தனித்துவமான படங்கள் இல்லாதது வருத்தம்தானே...?
கண்டிப்பாக வருத்தம்தான். இன்னும் என்னை நிரூபிக்க வேண்டி இருக்கிறது. அதற்கான காத்திருப்பில்தான் இருக்கிறேன். "என் பெயர் உனக்கு விசிட்டிங் கார்டு மாதிரிதான்... ஆனால், அது மட்டுமே உனக்கு போதாது...'' என்று அப்பா அடிக்கடி சொல்லுவார். அதை மதில் ஏற்றியே வைத்திருக்கிறேன். 
இத்தனை வருடங்களாகியும் மூன்றே படங்கள்தான்...  இந்த வேகம் போதுமா...?
எல்லா ஹீரோக்களுக்கும் வருடத்துக்கு மூன்று படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசை. ஆனால், நான் நடிக்கிற படங்கள் அப்படி சின்ன இடைவெளிகளில் முடிக்க முடியாத படங்களாக இருக்கின்றன. என் எல்லா படங்களுக்கும் ஷூட்டிங் நாட்கள் குறைவுதான். ஆனால், எல்லாவற்றிலும் திருப்தியாக உணர்ந்திருக்கிறேன். "வேகம்' ரிகர்சல் அதிகம் எடுத்துக் கொண்டு நடித்தேன். டெக்னிக்கலாகவும் நேரம் எடுத்துக் கொண்டது. "நினைவில் நின்றவள்' படமும் அப்படித்தான். "மணல் கயிறு 2' நல்ல அடையாளம் கொடுத்திருக்கிறது. பல தரப்பிலும் பாராட்டுகள் வந்து சேர்ந்துள்ளன.  இப்போது நான் ஓடவேண்டிய நேரம் வந்திருக்கிறது. அடுத்து நடிக்கிற படங்கள் எல்லாமே வேறு மாதிரி இருக்கும். 
அப்பா எஸ்.வி.சேகரின் படங்களை ரீமேக் செய்தால் நடிப்பீர்களா...?
அப்பாவின் படங்கள் எல்லாரையும் சென்று சேர்ந்த படங்கள். அதனால் எதையும் எடுத்தோம், கவிழ்த்தோம் என செய்து விட முடியாது. எல்லாமும் கைக் கூடி வர வேண்டும். அப்பா நடித்த "கதாநாயகன்' படம் அந்த யோசனையில் இருக்கிறது. 
அப்பா அரசியலிலும் இயங்கி வருகிறார்...?
சினிமாவில் இன்னும் பயணிக்க வேண்டியது நிறையவே இருக்கிறது.  இப்போதைக்கு என் சினிமா கேரியர் மேல் மட்டும்தான் எல்லா கவனமும்.  
முதல் படத்துக்கும் மூன்றாவது படத்துக்கும் இடையிலான சினிமா பற்றிய உங்கள் ஐடியா எந்த அளவுக்கு மாறியுள்ளது...?
ஒரு கதை இருந்தால், அந்த கேரக்டர் தானாகவே சிறப்பாக வந்து விடும் என நினைத்துக் கொண்டு இருந்தேன். ஆனால், சுவாரஸ்யமான, சவாலான ஒரு கேரக்டர் இருந்தால், அதைச் சுற்றி பிரமாதமான கதை பிடித்து விடலாம் என்று "மணல் கயிறு 2' நடித்த பிறகு தெரிந்து கொண்டேன். அந்த வித்தியாசத்தை இப்போது தெளிவாகப் புரிந்துக் கொண்டேன்.  சினிமா அவ்வளவு ஈஸி இல்லை. உடல் எடையை 20 கிலோ வரை குறைத்து விட்டேன். டான்ஸ், சண்டை என அடுத்த கட்டத்துக்கு வந்திருக்கிறேன். நல்ல கதாபாத்திரம் என்றால் வில்லனாக நடிக்கவும் தயார். அது கதைக்கும் முக்கியமானதாக இருக்க வேண்டும். அப்படி ஒரு திருப்புமுனைக்கு காத்திருக்கிறேன்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/10/w600X390/m1.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/mar/10/சினிமா-அவ்வளவு-ஈஸி-இல்லை-2663707.html
2663706 சினிமா நியூஸ் ரீல் பெண் கல்வியை வலியுறுத்தும் "இலை' DIN DIN Friday, March 10, 2017 01:18 PM +0530 இந்தியா போன்ற வளரும் நாடுகளில் கல்விச் சூழல் என்பது சாதகமானதாக இல்லை. அதுவும் கிராமப் புற பகுதிகளில் நிலைமை இன்னும் மோசம். இந்த பின்னணியை களமாக கொண்டு உருவாகி வரும் படம் "இலை.' ஸ்வாதி நாராயணன், சுஜீத் ஸ்டெபானோஸ், கிங்மோகன், ஸ்ரீதேவி, ஷைன் குருக்கள், விஜு பிரகாஷ், கனகலதா, சோனியா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 1990-ஆம் ஆண்டின்  காலகட்ட பின்னணியில் தமிழக கிராமம் ஒன்றை களமாக கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. பெரும் தடைகளைத் தாண்டி சாதித்து காட்டிய சில பெண்கள் குறித்த செய்திகளை மையமாக கொண்டு இக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட கிராமத்தில்  பெண் பிள்ளைகளைப் படிக்க வைக்கக் கூடாது என்று ஊர்க் கட்டுப்பாடு இருக்கிறது. அந்த ஊரில் வசிக்கும் பெண்ணுக்கு படித்து வாழ்வில் உயர வேண்டும் என்று கனவு. அவளின் இலக்குக்கு குடும்பமும், ஊர்க் கட்டுப்பாடும் எதிரே நிற்கிறது. ஆனால், அந்த பெண்ணின் அப்பா அவளின் லட்சியத்துக்கு துணையாக இருக்கிறார். அதன் பின் அந்த பெண் நினைத்த கல்விச் சூழலை அடைந்தாளா?
ஊர்க் கட்டுப்பாடு என்னவாயிற்று? என்பதை சொல்லுவதே படம். ஆரல்வாய்மொழி, சாலக்குடி, திண்டுக்கல் , தேனி போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இப்படத்தை பினிஷ் ராஜ் இயக்குகிறார். லீஃப்  புரொடக்ஷன்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கிறது. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/10/w600X390/m2.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/mar/10/பெண்-கல்வியை-வலியுறுத்தும்-இலை-2663706.html
2663705 சினிமா நியூஸ் ரீல் பாலா படத்தில் ஜோதிகாவுடன் ஜி.வி.பிரகாஷ் DIN DIN Friday, March 10, 2017 01:17 PM +0530 "தாரை தப்பட்டை' படத்தைத் தொடர்ந்து முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்க இருப்பதாக தெரிவித்திருந்தார் இயக்குநர் பாலா. "சாட்டை' யுவன், புதுமுகம் பிரகதி ஆகியோர் பிரதான வேடங்களில் நடிக்கவிருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் இப்படம் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் விக்ரம் அல்லது சூர்யா நடிக்கும் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜோதிகாவுக்காக பிரத்யேக கதையொன்றை உருவாக்கினார். திருமணத்துக்குப் பின் சினிமாவுக்கு திரும்பியுள்ள ஜோதிகா, முழுக்க முழுக்க தன்னை பிரதானப்படுத்தும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கிறார். அந்த பாணியில் இந்தப் படம் இருக்கும் என கூறப்படுகிறது. படத்துக்கு "நாச்சியார்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஜோதிகாவுடன் ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கிறார். கடந்த வாரம் இப்படத்தின் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியிடப்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. செப்டம்பர் மாத வெளியீடாக படம் திரைக்கு வருகிறது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/10/w600X390/m4.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/mar/10/ஜோதிகாவுடன்-ஜிவிபிரகாஷ்-2663705.html
2661806 சினிமா நியூஸ் ரீல் விஜய் யேசுதாஸ் படத்தில் பாரதிராஜா DIN DIN Tuesday, March 7, 2017 12:39 PM +0530 இவோக் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாக உருவாகி வரும் படம் "படை வீரன்.' பிரபல பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். புதுமுகம் அம்ரிதா கதாநாயகியாக நடிக்கிறார். இயக்குநர் பாரதிராஜா, "கல்லூரி' அகில், கலையரசன், "தெய்வம் தந்த வீடு' நிஷா, இயக்குநர் மனோஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்கின்றனர். மணிரத்னத்தின் உதவியாளர் தனா இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். ராஜவேல் மோகன் ஒளிப்பதிவில், கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். புவன் ஷ்ரீனிவாசன் படத்தொகுப்பு செய்கிறார்.  தேனி மாவட்ட பின்னணியில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் அரவிந்த்சாமி கடந்த வாரம் வெளியிட்டார்.  
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/7/w600X390/padaiveeran.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/mar/07/விஜய்-யேசுதாஸ்-படத்தில்-பாரதிராஜா-2661806.html
2661803 சினிமா நியூஸ் ரீல் ஜெய் ஆகாஷ் நாயகனாக நடிக்கும் அமாவாசை DIN DIN Tuesday, March 7, 2017 12:36 PM +0530 அமானுஷ்யம், பேய் உள்ளிட்ட பின்னணிகளைக் கொண்டு படங்கள் உருவாக்குவதற்கு பெரும் பட்ஜெட் தேவையில்லை என்பதால், அது தொடர்பான படங்களின் வரத்து அதிகரித்துள்ளது. இந்த வரிசையில் அடுத்து இணைய வருகிற படம் "அமாவாசை.' முழுக்க முழுக்க இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி வருவது இப்படத்தின் தனிச்சிறப்பு. ஜெயாஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாக உருவாகி வரும் இப்படத்தில் ஜெய் ஆகாஷ் கதாநாயகனாக நடிக்கிறார். தன்யா மௌரியா கதாநாயகியாக நடிக்கிறார். ராஜேஷ் விவேக், ஜீவா, ஷ்ரான், சாக்ஷி, ஷோகன், ப்ரீத்தி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நீண்ட இடைவெளிக்குப் பின் முமைத்கான் இப்படத்தின் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார். இளம் தலைமுறை ரசிகர்களின் ரசனை ஓட்டங்களுக்கு ஏற்ப படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் ராஜேஷ் சவந்த் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானின் உதய்பூர், ஜோத்பூர் மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. சென்னையில் பிரத்யேக அரங்குகள் அமைக்கப்பட்டு பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.  தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் உருவாகும் இப்படத்துக்கு பாலிவுட் இசையமைப்பாளர் சையத் அஹமத் இசையமைக்கிறார். படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.  


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/7/w600X390/ja.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/mar/07/ஜெய்-ஆகாஷ்-நாயகனாக-நடிக்கும்-அமாவாசை-2661803.html
2661802 சினிமா நியூஸ் ரீல் கேக்கிறான் மேய்க்கிறான் DIN DIN Tuesday, March 7, 2017 12:29 PM +0530 ஆடம்பர வாழ்க்கைக்காக குறுக்கு வழிகளில் பணம் தேடும் இளைஞர்கள் குறித்து உருவாகி வரும் படம் "கேக்கிறான் மேய்க்கிறான்.' சபா, லுப்னா, அமீர், நரேன், சபீதா ஆனந்த், மதுமிதா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் சாம் இமானுவேல். சமீபமாக அரங்கேறும் குற்றச் செயல்கள் அனைத்தும் ஆடம்பர வாழ்க்கைக்கான பணத் தேடல்களை மையமாகக் கொண்டு நடைபெறுகின்றன. குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களின் அத்தியாவசியத் தேவை அல்லது ஆடம்பர தேவைகளுக்காக குறுக்கு வழிகளில் பணத்தை அடைய முயற்சி செய்கின்றனர். இதற்காக அவர்கள் தேர்வு செய்யும் முறைகள் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் விதமாக முடிந்து விடுகின்றன. அப்படி தங்களின் ஆடம்பரத் தேவைகளுக்காக பணத்தை அடைய முயற்சிக்கும் நான்கு இளைஞர்கள் குறித்த வாழ்க்கையைப் படம் பிடிப்பதே திரைக்கதை. அஸ்விகா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை, திருநெல்வேலி, கோவளம், பூவாறு உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று முடிந்துள்ளது. இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.  
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/7/w600X390/KM.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/mar/07/கேக்கிறான்-மேய்க்கிறான்-2661802.html
2661801 சினிமா நியூஸ் ரீல் சென்னை பின்னணியில் உருவாகியுள்ள படம் மாநகரம் DIN DIN Tuesday, March 7, 2017 12:28 PM +0530 சென்னை பின்னணியில் உருவாகியுள்ள படம் "மாநகரம்'. ஸ்ரீ, சந்தீப், ரெஜினா, சார்லி, முனிஸ்காந்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். வரும் 10-ஆம் தேதி படம் வெளியாகவுள்ளது. இக்கதையில் சென்னைக்கு தரப்பட்டிருக்கும் இமேஜ் குறித்து இயக்குநரிடம் பேசுகையில், " சென்னை என்றாலே வன்முறை என்ற அளவில்தான் இதுவரை பெரும்பாலான கதைகள் உருவாகியுள்ளன. ஆனால், அது போல் இல்லாமல் வேறு ஒரு பார்வையில் சென்னை மாநகர வாழ்க்கையைப் படம் பிடித்துள்ளோம். படம் பார்க்கும் ஒவ்வொருவரும் சென்னையைப் பெருமையாக எண்ணும் அளவுக்கு திரைக்கதை இருக்கும். ஒவ்வொருவருக்கும் புது அனுபவத்தைத் தருவதாக இப்படம் அமைந்துள்ளது'' என்றார். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/7/w600X390/MANAGARAM.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/mar/07/சென்னை-பின்னணியில்-உருவாகியுள்ள-படம்-மாநகரம்-2661801.html
2661799 சினிமா நியூஸ் ரீல் தமிழில் வெளியாகும் கொங் ஸ்கூல் ஐஸ்லேண்ட் DIN DIN Tuesday, March 7, 2017 12:26 PM +0530 மனிதர்களின் ஆராய்ச்சி சில நேரங்களில் விபரீதங்களை விளைவித்துவிடும். இதன் பின்னணியை கற்பனையாகக் கொண்டு ஹாலிவுட்டில் இதுவரை வந்த படம் பெரும் அளவில் வெற்றிப் பெற்றுள்ளன. அந்த பாணியில் அடுத்து கவனத்தை ஈர்க்க வருகிறது, "கொங் ஸ்கூல் ஐஸ்லேண்ட்.' மனிதர்களின் வாடையே இல்லாத இயற்கைச் சூழலில், அமைதியாக வாழ்ந்து வரும் ராட்சசக் குரங்குகளின் கூட்டத்தை தனது ஆராய்ச்சிக்காக ஒரு குழுவினர் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர். மிகப் பெரிய தோற்றத்துடன், பலம் பொருந்திய அந்த குரங்குகள் அவர்களுக்குச் சவால் விடும் வகையில் திகழ்கின்றன. இந்த இரு தரப்புக்கும் இடையிலான சம்பவங்களே படத்தின் திரைக்கதை. 1973-ஆம் கால  கட்டங்களில் நடைபெறுவதாக அமைக்கப்பட்டுள்ள இக்கதையை டான் கில்ரி, மேக்ஸ் இருவரும் இணைந்து எழுதியுள்ளனர். டாம் கில்ட்சன், சாம்வேல் ஜாக்சன், ஜான்குட்மேன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கூப்பர், எட்ஜர் இருவரும் இணைந்து இயக்கியுள்ள இப்படம், வரும் 10-ஆம் தேதி தமிழில் வெளியாகவுள்ளது. 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/7/w600X390/KONGS.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/mar/07/தமிழில்-வெளியாகும்-கொங்-ஸ்கூல்-ஐஸ்லேண்ட்-2661799.html
2660047 சினிமா நியூஸ் ரீல் ஜூலியும் நாலு பேரும்! DIN DIN Saturday, March 4, 2017 05:02 PM +0530 சர்வதேச அளவில் நடக்கும் நாய் கடத்தல்களைப் பற்றி அலசும் விதமாக உருவாகி வரும் படம் "ஜூலியும் நாலு பேரும்.' இடது காது மடலில் அதிர்ஷ்ட மச்சங்களை கொண்ட நாய், அதிர்ஷ்ட நாயாக கருதப்படுகிறது. இந்த குறிப்பிட்ட நாய் அமெரிக்காவில் அதிகளவில் காணப்படுகிறது. இந்த நாய் கூடவே இருந்தால், வாழ்வில் அதிர்ஷ்டமும், வளமும் கூடவே வரும் என்பது நம்பிக்கையாக திகழ்ந்து வருகிறது. இதற்காக இந்த நாய்களுக்கு மவுசு அதிகம். இதை குறி வைத்து பல கடத்தல் தொழில்கள் அரங்கேறி வருகின்றன. உலகின் பல்வேறு நாடுகளுக்கு இந்த நாய்கள் கடத்தப்பட்டு வியாபாரம் செய்யப்படுகின்றன. இப்படி இந்தியா கொண்டு வரப்படும் நாய், சென்னையில் ஒரு தொழிலதிபருக்கு விற்கப்படுகிறது. அந்த நாயை நான்கு பேர் கொண்ட கும்பல் கடத்தி காசு பறிக்கப் பார்க்கிறது. பின் நடக்கும் சம்பவங்களை நகைச்சுவையாக சொல்லுவதே இப்படத்தின் திரைக்கதை. அமுதவாணன், ஜார்ஜ் விஜய், யோகானந்த், அல்யா மனசா, மாறன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சதீஷ் ஆர்.வி. எழுதி இயக்குகிறார். காவ்யா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/4/w600X390/q12.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/mar/04/ஜூலியும்-நாலு-பேரும்-2660047.html
2660046 சினிமா நியூஸ் ரீல் கதாநாயகனாகும் இசையமைப்பாளர் மகன்!   DIN DIN Saturday, March 4, 2017 05:01 PM +0530 இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராம் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் "பள்ளி பருவத்திலே.' வி.கே.பி.டி. கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாக உருவாகி வரும் இப்படத்தில், வெண்பா கதாநாயகியாக அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரங்களில் கே.எஸ்.ரவிகுமார், ஊர்வசி, தம்பிராமையா, கஞ்சாகருப்பு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இது நிஜ சம்பவங்களின் தொகுப்பாக உருவாகி வருகிறது. தஞ்சையில் உள்ள ஆம்பளாபட்டு என்ற கிராமத்தில் நடந்த தன் பள்ளி பருவ சம்பவங்களை இதன் மூலம் கதையாக்கியுள்ளார் இயக்குநர் வாசுதேவ் பாஸ்கர். அந்த பள்ளியில் படித்த நிறைய பேர் இன்று மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், ஆடிட்டர், தொழிலதிபர்களாக சமூகத்தில் மதிக்கப்படுகிற உயரத்தில் இருக்கிறார்கள். அப்படி அவர்கள் உருவாகக் காரணமான ஆசிரியர் சாரங்கன் கதாபாத்திரத்தை கே.எஸ்.ரவிகுமார் ஏற்று நடிக்கிறார். அதே மாதிரி ஊர்வசி கதாபாத்திரமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்றைய கால கட்டத்தில் மறந்து போன கிராமத்தின் சாயல்களை மீட்டெடுக்கும் விதமாக இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. புதுமுகம் விஜய் நாராயணன் இசையில் வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/4/w600X390/q13.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/mar/04/கதாநாயகனாகும்-இசையமைப்பாளர்-மகன்-2660046.html
2660045 சினிமா நியூஸ் ரீல் எங்கேயும் நான் இருப்பேன்! DIN DIN Saturday, March 4, 2017 05:00 PM +0530 அமானுஷ்ய சக்திகளின் பின்னணியை களமாக கொண்டு உருவாகி வருகிறது "எங்கேயும் நான் இருப்பேன்.' லியா பிலிம் கம்பெனி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் பிரஜின், சுரேஷ், கலா கல்யாணி, தாஜ் அமீர், ரஷித் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் பென்னிதாமஸ். ஜாதி, மதம், பணம், சமூக அந்தஸ்து காரணமாக பிரிக்கப்பட்டு, படுகொலை செய்யப்படும் ஒருவனின் ஆன்மா, கொலை வெறியுடன் அமானுஷ்ய சக்தியாக உலா வருகிறது. காதலுக்காக தான் கொலை செய்யப்பட்ட காரண காரியங்களை ஆராயும் அந்த ஆன்மா, தன்னை தீர்த்தவர்களைப் பழி தீர்க்க துடிக்கிறது. அதற்கான தடைகளை மீறி நடந்தது என்ன? என்பதை விறுவிறுப்பாக சொல்லுவதே திரைக்கதை. பொள்ளாச்சி, கோவை, சென்னை, ஏர்வாடி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அப்சல் யூசுப், ஈ.எஸ்.ராம் இருவரும் இசையமைக்கிறார்கள். நாகமானசி, முருகன் மந்திரம், பாபுராஜ் உள்ளிட்டோர் பாடல்களை எழுதுகின்றனர். சாலி ஒளிப்பதிவு செய்கிறார்.          

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/4/w600X390/q14.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/mar/04/எங்கேயும்-நான்-இருப்பேன்-2660045.html
2660044 சினிமா நியூஸ் ரீல் ஹாலிவுட் கலைஞர்களின் பங்களிப்பில்..! DIN DIN Saturday, March 4, 2017 04:59 PM +0530 புராண கதாபாத்திரங்களை அடிப்படையாக கொண்டு பயண சாகசமாக உருவாகி வரும் படம் "இது வேதாளம் சொல்லும் கதை.' அஷ்வின், குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ரதிந்திரன் ஆர். பிரசாத் எழுதி இயக்குகிறார். இப்படத்தின் முக்கிய காட்சிகள் மத்திய பிரதேசத்தில் உள்ள சம்பல் பள்ளத்தாக்கில் படமாக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.  சண்டை காட்சிகளுக்காக அஷ்வின் உட்பட 30 மல்யுத்த வீரர்களுக்கு பிரபல ஹாலிவுட் நடிகரும், மல்யுத்த வீரருமான க்ரெக் ப்யூரிட்ஜ் பயிற்சி அளிக்கிறார்; வில்லனாகவும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தாலியைச் சேர்ந்த ரோபர்டோ ஜஸாரா இப்படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை ஏற்றுள்ளார். படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஜிப்ரானின் பின்னணி இசை கோர்ப்பு பணிகள் தொடங்கியுள்ளன. ஹோல் வைட் ஓர்ல்ட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/4/w600X390/q15.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/mar/04/ஹாலிவுட்-கலைஞர்களின்-பங்களிப்பில்-2660044.html
2658257 சினிமா நியூஸ் ரீல் ஜி.வி.பிரகாஷின் அடுத்தப் படம் ஐங்கரன் DIN DIN Wednesday, March 1, 2017 12:39 PM +0530 "4ஜி', "அடங்காதே', "சர்வம் தாராளமயம்' உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் ஜி.வி.பிரகாஷ் அடுத்து நடித்து வரும் படம் "ஐங்கரன்.' "ஈட்டி' படத்தை இயக்கிய ரவி அரசு கதை எழுதி இப்படத்தை இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக மகிமா நம்பியார் நடிக்கிறார். "ஆரஞ்சு மிட்டாய்', "றெக்க' படங்களைத் தயாரித்த காமன்மேன் கணேஷ் தயாரிக்கிறார். "ஆடுகளம்' நரேன், காளி வெங்கட், அருள்தாஸ், சுவாமிநாதன்  உள்ளிட்டோர் கதையின் பிரதான வேடங்களில் நடிக்கின்றனர். காதல் மற்றும் ஆக்ஷன் த்ரில்லராக இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பெயர் அடங்கிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 20-ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ள நிலையில், அடுத்த கட்டப் படப்பிடிப்பு தமிழகத்தின் பிற பகுதிகளில் நடைபெறவுள்ளது. சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு, ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.  ராஜா முகமது படத்தொகுப்பில், கலை இயக்குநராக துரைராஜ் பணியாற்றுகிறார். ஏகாதசி, மதன் கார்க்கி, ரோகேஷ், சிவசங்கர், விவேக் ஆகியோர் பாடல்களை எழுதுகின்றனர். ராஜு சுந்தரம், ஷோபி இருவரும் நடன இயக்குநர்களாக பணியாற்றுகின்றனர். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/1/w600X390/gv.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/mar/01/ஜிவிபிரகாஷின்-அடுத்தப்-படம்-ஐங்கரன்-2658257.html
2658254 சினிமா நியூஸ் ரீல் காயத்ரி ரகுராம் இயக்கும் யாதுமாகி நின்றாள் DIN DIN Wednesday, March 1, 2017 12:36 PM +0530 சினிமாவில் பின்னணி நடனமாடும் பெண்களின் வாழ்க்கைச் சூழலை மையமாகக் கொண்டு உருவாகி வரும் படம் "யாதுமாகி நின்றாள்.' நடன இயக்குநர், நடிகை என அறியப்பட்ட காயத்ரி ரகுராம் கதை எழுதி இப்படத்தை இயக்குகிறார். சினிமாவில் பின்னணி நடனமாடும் ஒரு பெண், தன் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களும், கொடுமைகளும்தான் கதை. குடும்ப சூழ்நிலை காரணமாக நடனமாடி வரும் பெண்,  சாதாரண கனவுகளோடும், ஆசைகளோடும் பயணிக்கிறாள். ஆனால், அவளுக்கு தனது தொழிலில் நிறைய சவால்கள். அதை தன் மனோபலத்தால் வென்று தனது குடும்பத்தைக் காப்பாற்றுவதே திரைக்கதை. சுமார் இருபது ஆண்டு காலமாக திரைத்துறையில் பயணித்து வரும் ஒரு பெண், தான் சந்தித்த அனுபவங்களைச் சொல்வதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. திரைத்துறையில் பயணிக்கும் பெண்களின் மன தைரியத்தை வெளிக்காட்டும் விதமாக இப்படம் உருவாகிறது. கவர்ச்சிகரமான சினிமா உலகில் யாருக்கும் தெரியாது மறைந்திருக்கும் கதையை ரசிகர்களுக்குத் தெரியப்படுத்தும் விதமாக இப்படம் உருவாகி வருகிறது. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/1/w600X390/gayathiri.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/mar/01/காயத்ரி-ரகுராம்-இயக்கும்-யாதுமாகி-நின்றாள்-2658254.html
2658253 சினிமா நியூஸ் ரீல் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அடிமைப்பெண்! DIN DIN Wednesday, March 1, 2017 12:32 PM +0530 ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற படங்கள் நீண்ட கால இடைவெளிக்குப் பின் தற்போது டிஜிட்டல் மயமாகி வருகின்றன. "கர்ணன்', "வசந்த மாளிகை', "ஆயிரத்தில் ஒருவன்' என வரிசையாக வந்த படங்கள் தற்கால ரசிகர்களின் கவனத்தையும் கவர்ந்தது. இந்த வரிசையில் அடுத்து வருகிறது "அடிமைப்பெண்.' 1969-ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் 48 வருடங்களுக்குப் பின் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ளது. எம்.ஜி.ஆர்.,  ஜெயலலிதா நடித்த இப்படத்தை எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது.  தி ரிஷிஸ் மூவீஸ் பட நிறுவனத்தை சேர்ந்த சாய் நாகராஜன் இப்படத்தை டிஜிட்டலில் நவீனப்படுத்தி வருகிறார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/1/w600X390/mgr.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/mar/01/டிஜிட்டல்-தொழில்நுட்பத்தில்-அடிமைப்பெண்-2658253.html
2658251 சினிமா நியூஸ் ரீல் இயக்குநராக அறிமுகமாகும் பரணி DIN DIN Wednesday, March 1, 2017 12:30 PM +0530 "பெரியண்ணா', "பார்வை ஒன்றே போதுமே', "சார்லி சாப்ளின்', "சுந்தரா டிராவல்ஸ்' உள்ளிட்ட படங்களின் மூலம் இசை ரசிகர்களின் கவனம் பெற்றவர் இசையமைப்பாளர் பரணி. தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து வந்த இவர் தற்போது கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகும் படம் "ஒண்டிக்கட்ட.'  பிரண்ட்ஸ் சினி மீடியா நிறுவனத்தின் தயாரிப்பாக உருவாகி வரும் இப்படத்தில் விக்ரம் ஜெகதீஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நேகா நடிக்கிறார். தர்மராஜ், கலைராணி, சாமிநாதன், முல்லை, கோதண்டம், சென்ராயன், மதுமிதா உள்ளிட்டோர் கதையின் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கும்பகோணம், தஞ்சை, பாபநாசம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/1/w600X390/bharani.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/mar/01/இயக்குநராக-அறிமுகமாகும்-பரணி-2658251.html
2658249 சினிமா நியூஸ் ரீல் பாலா இயக்கத்தில் ஜோதிகா: உறுதிசெய்த சூர்யா DIN DIN Wednesday, March 1, 2017 12:27 PM +0530 ஜோதிகாவுக்காக பிரத்யேக கதை ஒன்றை பாலா உருவாக்கி வருவதாக சூர்யா தெரிவித்திருந்தார். இப்போது இது அதிகாரப்பூர்வமான அறிவிப்பாக வெளியாகியுள்ளது. திருமணத்துக்குப் பின் சினிமாவுக்கு திரும்பியுள்ள ஜோதிகா, முழுக்க முழுக்க தன்னைப் பிரதானப்படுத்தும் கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிக்கிறார். அந்த பாணியில் இந்தப் படம் இருக்கும் என கூறப்படுகிறது. கதையில் பங்கேற்கவுள்ள நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வு தொடங்கியுள்ளது. பாலாவின் பி ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து சூர்யாவின் 2டி நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் மிகவும் பிரபலமான கதாநாயகன் ஒருவர் நடிப்பார் எனவும் கூறப்படுகிறது. மார்ச் முதல் வாரத்தில் இப்படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் அடங்கிய மொத்த விவரமும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/1/w600X390/jothika.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/mar/01/பாலா-இயக்கத்தில்-ஜோதிகா-உறுதிசெய்த-சூர்யா-2658249.html
2655933 சினிமா நியூஸ் ரீல் தேனி வட்டார வாழ்க்கை! DIN DIN Saturday, February 25, 2017 03:52 PM +0530 ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக படத் தலைப்புகளில் வித்தியாசம் காட்டுவதை இயக்குநர்கள் பெரிதும் விரும்புகிறார்கள். இதற்காக வழக்கு நடையில் இல்லாத வார்த்தைகளை தேடிப் பிடிக்கிறார்கள். இந்த வரிசையில் பெயர் வைக்கப்பட்டுள்ள படம் "கோம்பே.' தேங்காயில் இருந்து தேங்காயையும் நீரையும் எடுத்த பின் கீழே போடப்படும் கூட்டைத்தான் கோம்பே என்பார்கள். சார்லஸ், தீர்த்தா உள்ளிட்ட புதுமுகங்கள் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, படத்தொகுப்பு செய்வதுடன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் ஹாபிஸ் இஸ்மாயில். படம் குறித்து அவரிடம் பேசுகையில்... "கோம்பே' என்றால் வெற்றுக் கூடு என்று பொருள் படும். இப்போது நாட்டில் நடக்கிற சம்பவங்களை பார்க்கும் போது மனித வாழ்க்கையும் அப்படித்தான் இருக்கிறது. கொலைகளும், தாக்குதல்களும் அதிகரித்து விட்ட நிலையில், மனித உயிருக்கு மரியாதை இல்லை. இதுதான் இந்த கதையின் மையம். தேனியில் வாழும் ஓர் இளைஞன், காசுக்காக எதையும் செய்யத் துணிபவன். அவனது வாழ்க்கையை சொல்வதுதான் திரைக்கதை. காசுக்காக கொலைகூட செய்பவனின் வாழ்க்கையில் ஒரு பெண் நுழைகிறாள். அவள் அவன் வாழ்வை மாற்ற முயல்கிறாள் அதனால் ஏற்படும் சம்பவங்கள்தான்'' படம் என்கிறார் இயக்குநர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/25/w600X390/m2.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/feb/25/தேனி-வட்டார-வாழ்க்கை-2655933.html
2655931 சினிமா நியூஸ் ரீல் புது விதமாக சிருஷ்டி! DIN DIN Saturday, February 25, 2017 03:51 PM +0530 சாந்தனு, சிருஷ்டி டாங்கே நடிக்கும் படம் "முப்பரிமாணம்.' இயக்குநர் பாலாவின் உதவியாளர் அதிரூபன் இயக்குகிறார். பொள்ளாச்சி வி.விசு, கோல்டு வி.குமார் தயாரிப்பு. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை. இதுபற்றி சிருஷ்டி டாங்கே கூறியது... "ரஜினி சார்தான் இப்படத்தின் ஆடியோவை வெளியிட்டார். முன்னதாக இதன் டிரெய்லர் "கபாலி' படத்துடன் வெளியிடப்பட்டிருந்தது. பாடல் காட்சி ஒன்றில் 29 நட்சத்திரங்கள் நடித்துக் கொடுத்தனர். நான் நடித்த படங்களில் இது புது மாதிரியாக இருக்கும். வழக்கமான சினிமா என்பதைத் தாண்டி முயற்சி செய்திருக்கிறேன். படப்பிடிப்பில் இயக்குநர் போட்ட கண்டிஷன் கடுமையாக இருந்தது. யாரிடமும் பேசக்கூடாது, சிரிக்கக்கூடாது, மீண்டும் மீண்டும் காட்சிகளைப் படமாக்கி தந்த டார்ச்சர் தாங்க முடியாமல் கண்ணீர்விட்டு அழுதேன். படத்திலிருந்து வெளியேறிவிடுகிறேன் என்றேன். இன்னும் 2 நாள் நடித்துவிட்டு அந்த காட்சிகளைத் திரையிட்டு பார்த்துவிட்டு முடிவு செய் என்றார். காட்சியைப் பார்த்தபோது திருப்தி ஏற்பட்டதால் தொடர்ந்து நடித்தேன். இதை புகாராக கூறவில்லை. இந்தப் படத்தில் எனக்குப் பெயர் கிடைத்தால் அது இயக்குநருக்குத்தான் சேரும்'' என்றார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/25/w600X390/m3.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/feb/25/புது-விதமாக-சிருஷ்டி-2655931.html
2655929 சினிமா நியூஸ் ரீல் பாசப் போராட்டக் கதை! DIN DIN Saturday, February 25, 2017 03:37 PM +0530 தாய் - மகன் பாசப் போராட்டத்தை களமாக கொண்டு உருவாகி வரும் படம் "செவிலி.' அரவிந்த் ரோஷன், கீர்த்தி ஷெட்டி, பூவிதா, நெல்லை சிவா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஆர்.ஏ.ஆனந்த் எழுதி இயக்குகிறார். படம் குறித்து இயக்குநர்... "நம் கலாசாரத்தை பொறுத்தவரையில் தாய் பாசம் என்பது முதன்மையானது. எத்தனையோ நவீனங்களுக்கு மத்தியிலும், இன்னும் வசீகரமாக இருந்து கொண்டிருப்பது அதுதான். அந்த பாசப்பிணைப்புதான் இதன் களம். சிறு வயதில் இருந்தே தாய் அரவணைப்பு கிடைக்காத மகன், சமூகம் வெறுக்கும் மனிதனாக வளர்ந்து வருகிறான். ஒரு கட்டத்தில் தன்னிலை உணரும் அவன் தாயைத் தேடி அலைகிறான். அப்போது அவன் வாழ்க்கையில் நிகழும் அற்புதங்களே திரைக்கதை. இதனிடையே அவனை மனிதனாக மாற்றுகிற ஒரு காதல், பழைய வாழ்க்கையைத் தொடரும் படி வற்புறுத்துகிற எதிரிகள் என இன்னொரு களமும் உண்டு. மதுரை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. கேரள மாநிலம் அதிரம்பள்ளியில் படத்தின் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த மாத வெளியீடாக படம் திரைக்கு வருகிறது'' என்றார் இயக்குநர் ஆனந்த்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/25/w600X390/m4.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/feb/25/பாசப்-போராட்டக்-கதை-2655929.html
2655928 சினிமா நியூஸ் ரீல் பாயும் ஒளி நீ எனக்கு...! DIN DIN Saturday, February 25, 2017 03:36 PM +0530 "மாற்றான்', "அநேகன்' படங்களைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் எழுதி இயக்கி வரும் படம் "கவண்.' ஏ.ஜி.எஸ்.எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் விஜய்சேதுபதி. மடோனா செபாஸ்டின், பாண்டியராஜன், விக்ராந்த், போஸ் வெங்கட், ஜெகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். டி.ராஜேந்தர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார். "கனா கண்டேன்' படம் முதல் கே.வி.ஆனந்தோடு பணியாற்றி வரும் இரட்டை எழுத்தாளர்கள் சுபா இப்படத்திலும் பங்களித்துள்ளார்கள். இந்த எழுத்து கூட்டணியில் கபிலன் வைரமுத்துவும் புதிதாக இணைந்துள்ளார். ஹிப் ஹாப் தமிழாவின் இசையில் மகாகவி பாரதியாரின் "பாயும் ஒளி நீ எனக்கு...' என்ற பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. எளிமையான மனிதர்கள், அதிகாரமிக்கவர்களை எதிர்த்து வெல்வதுதான் படத்தின் திரைக்கதை. படப்பிடிப்பு முடிந்து இறுதிக் கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அருண்ராஜா காமராஜ், கபிலன் வைரமுத்து இருவரும் பாடல்களை எழுதியுள்ளனர். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரண் கலை இயக்கத்தில், ஆண்டனி படத்தொகுப்பு செய்துள்ளார். மார்ச் மாத வெளியீடாக படம் திரைக்கு வருகிறது.  
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/25/w600X390/m6.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/feb/25/பாயும்-ஒளி-நீ-எனக்கு-2655928.html
2653556 சினிமா நியூஸ் ரீல் ஒன் ஹார்ட் DIN DIN Tuesday, February 21, 2017 12:31 PM +0530 ஆஸ்கர் மற்றும் கிராமிய விருதுகளின் மூலம் உலக இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஏ.ஆர்.ரஹ்மான், அதன் பின் இசைப் பயணங்களில் தனி ஆர்வம் காட்டினார். அமெரிக்கா, இங்கிலாந்து, மெக்சிகோ, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தனது இசை நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வந்தார். அமெரிக்காவில் மேற்கொண்ட இசை சுற்றுப் பயண நிகழ்ச்சியின் தொகுப்பு, உலகெங்கும் திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது. இந்த இசைத் திரைப்படத்துக்கு ஒன் ஹார்ட் என பெயரிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 14 நகரங்களில் நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் தலைமையிலான இசை சுற்றுப்பயணம், இசை நிகழ்ச்சி, இசை ஒத்திகை மற்றும் பிரத்யேக பேட்டிகள் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன. கனடாவின் டொரான்டோ நகரில் உள்ள ஸ்காட்டியா பேங்க் திரையரங்கில் இந்த இசைத் திரைப்படம் கடந்த 5-ஆம் தேதி பிரத்யேகமாக திரையிடப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் திரையுலகில் 25-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி உருவாகியுள்ள இந்த இசைத் திரைப்படம் உலகம் முழுவதும் ஏப்ரல் மாதம் வெளியாகிறது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/21/w600X390/ar.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/feb/21/ஒன்-ஹார்ட்-2653556.html
2653554 சினிமா நியூஸ் ரீல் எங் மங் சங் DIN DIN Tuesday, February 21, 2017 12:29 PM +0530 பாலிவுட்டில் படங்களை இயக்கத் தொடங்கிய பின்னர், தமிழ் சினிமாவில் அவ்வளவாக கவனம் செலுத்தவில்லை பிரபுதேவா. இதனிடையே கடந்த ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கிய "தேவி' படத்தில் நடித்தார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்து நடிப்பதற்காக கதைகளைக் கேட்டு வந்தார். குறிப்பாக புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு தரும் வகையில் கதைகளை தேர்வு செய்து வந்தார். இதையடுத்து தற்போது "முண்டாசுப்பட்டி', "இன்று நேற்று நாளை' ஆகிய படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றிய அர்ஜுன் என்பவருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார். படத்துக்கு "எங் மங் சங்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. பிரபுதேவாவுக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடிக்கிறார். இயக்குநர் தங்கர்பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, பாகுபலி பிரபாகர் கலக்கேயா, சித்ரா லட்சுமணன், அஸ்வின் உள்ளிட்டோர் கதையின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். குருதேவ் ஒளிப்பதிவு செய்யவுள்ள இப்படத்துக்கு அம்ரீஷ் இசையமைக்கவுள்ளார். இப்படத்தை வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சென்னையில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/21/w600X390/pd.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/feb/21/எங்-மங்-சங்-2653554.html
2653553 சினிமா நியூஸ் ரீல் விக்ரமின் 53-ஆவது படம்! DIN DIN Tuesday, February 21, 2017 12:28 PM +0530 "இருமுகன்' படத்தைத் தொடர்ந்து ஹரியின் இயக்கத்தில் "சாமி' படத்தின் இரண்டாம் பாகத்தில் விக்ரம் நடிப்பதாக பேசப்பட்டு வந்தது. ஆனால், இதில் மாற்றம் ஏற்பட்டு "வாலு' படத்தின் இயக்குநர் விஜய்சந்தர் இயக்கத்தில் நடிக்கிறார். விக்ரமின் 53-ஆவது படமாக உருவாகவுள்ள இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. மூவிங் பிரேம் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 10-ஆம் தேதி சென்னையில் தொடங்கியுள்ளது. விக்ரம் ஜோடியாக நடிப்பதற்கு காஜல் அகர்வால், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வந்தன. மூவருமே வெவ்வேறு படங்களில் நடித்து வருவதால், அவர்களிடம் கால்ஷீட் பெறுவதில் சிக்கல் எழுந்தது. இதையடுத்து தற்போது தமன்னா தேர்வாகியுள்ளார். சூரி, ராதாரவி, ரவிகிஷன், ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்டோர் கதையின் பிரதான வேடங்களில் நடிக்கின்றனர். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். கலை இயக்குநராக மாயாபாண்டி பணியாற்றுகிறார். சண்டை பயிற்சி இயக்குநராக ரவிவர்மன் பணியாற்றுகிறார். ரூபன் படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். சென்னை மீனம்பாக்கம் பின்னி மில்லில் பிரத்யேக அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/21/w600X390/vikram.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/feb/21/விக்ரமின்-53-ஆவது-படம்-2653553.html
2653552 சினிமா நியூஸ் ரீல் நாகேஷ் திரையரங்கம் DIN DIN Tuesday, February 21, 2017 12:25 PM +0530 சென்னை தியாகராயர் நகர், பாண்டி பஜாரில் மறைந்த நடிகர் நாகேஷுக்குச் சொந்தமான ஒரு திரையரங்கம் இருந்தது. நாகேஷ் திரையரங்கம் என்ற பெயரிலேயே அது இயங்கி வந்தது. 1984-ஆம் ஆண்டு இந்த திரையரங்கத்தை திறந்து வைத்தவர் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். 2008-ஆம் ஆண்டு அந்த திரையரங்கம் மூடப்பட்டு திருமண மண்டபமாக மாற்றப்பட்டது. இந்த திரையரங்கத்தை மையமாகக் கொண்டு தற்போது "நாகேஷ் திரையரங்கம்' என்ற பெயரில் படம் உருவாகி வருகிறது. நெடுஞ்சாலை ஆரி கதாநாயகனாக நடிக்கிறார். "வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்', "இனிமே இப்படித்தான்' படங்களில் நடித்த ஆஸ்னா சவேரி கதாநாயகியாக நடிக்கிறார். பானுப்பிரியா, காளி வெங்கட், லொள்ளு சபா சாமிநாதன், சித்தரா, லதா உள்ளிட்டோர் முக்கிய வேடங்கள் ஏற்கிறார்கள். ட்ரான்ஸ் இண்டியா மீடியா நிறுவனத்துடன் இணைந்து என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இசாக் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இதற்கு முன்பு அகடம் என்ற படத்தின் மூலம் கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/21/w600X390/aari.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/feb/21/நாகேஷ்-திரையரங்கம்-2653552.html
2653551 சினிமா நியூஸ் ரீல் கடைசி பெஞ்ச் கார்த்தி DIN DIN Tuesday, February 21, 2017 12:23 PM +0530 இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வர்த்தகத்தில் தனி முத்திரை பதித்துள்ள சுதிர் புதோடா தனது ராமா ரீல்ஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரித்து வரும் படம் "கடைசி பெஞ்ச் கார்த்தி'. பரத் கதாநாயகனாக நடிக்கிறார். பஞ்சாபில் மியூசிக்கல் ஆல்பங்களின் பிரபல மாடலான ருஹானி ஷர்மா, அங்கனாராய் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். ரவிமரியா, ஞானசம்பந்தன், சனா, சுரேகா, வாணி, இயக்குநர் காசி, மூணார் டேவிட், வினோத் ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ரவி பார்கவன். இவர் தமிழில் "வெல்டன்', "ஒரு காதல் செய்வீர்', "திரு ரங்கா' ஆகிய படங்களையும், தெலுங்கில் இரண்டு படங்களையும் இயக்கியுள்ளார். படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/21/w600X390/bharath.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/feb/21/கடைசி-பெஞ்ச்-கார்த்தி-2653551.html
2651900 சினிமா நியூஸ் ரீல் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் 88-ஆவது படம் மொட்ட சிவா கெட்ட சிவா DIN DIN Saturday, February 18, 2017 03:49 PM +0530 தெலுங்கில் வெளிவந்து பெரும் வெற்றி  பெற்ற படம் "பட்டாஸ்.' கல்யாண்ராம் நடிப்பில் வெளிவந்த இப்படம் தெலுங்கு சினிமாவில் பெரும் வசூல் சாதனை புரிந்துள்ளது. இப்படம் தற்போது "மொட்ட சிவா கெட்ட சிவா' என்ற பெயரில் தமிழில் ரீமேக் ஆகியுள்ளது. லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் நிக்கி கல்ராணி, சத்யராஜ், லட்சுமிராய், கோவை சரளா, வி.டி.வி.கணேஷ், மயில்சாமி, "மகாநதி' சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.பி.செளத்ரி தயாரித்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வரும் 17-ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. ஜீவா நடிப்பில் வெளிவந்த "சிங்கம்புலி' படத்தை இயக்கிய சாய்ரமணி இப்படத்தை இயக்கிவுள்ளார். படத்தின் உருவாக்கம் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து அவரிடம் பேசுகையில்... "காஞ்சனா' படத்தின் அடுத்தடுத்த பாகங்களின் வெற்றிக்குப் பின் லாரன்ஸ் இரண்டு படங்களை இயக்கி நடிப்பதாக இருந்தது. அந்த சமயத்தில் தெலுங்கில் வெளிவந்த "பட்டாஸ்' படத்தைப் பார்த்த லாரன்ஸ், அப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருந்தார். படத்தை இயக்கும் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது. கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த இக்கதையில், விஜய் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். அந்தளவுக்கு இந்த கதையின் கமர்ஷியல் வீச்சு இருக்கும். லாரன்ஸுக்கு தொடர்ந்து கமர்ஷியல் ஹீரோ அந்தஸ்து இருந்து வந்ததால் அவர் நடிப்பது இப்படத்துக்கு பொருத்தமாக இருந்தது. சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 88-ஆவது படமாக இது உருவாகியுள்ளது. அனைத்து தரப்பினரும் பார்த்து ரசிக்க கூடிய விதமாக இப்படம் உருவாகியுள்ளது'' என்றார் சாய்ரமணி.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/18/w600X390/m5.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/feb/18/சூப்பர்-குட்-ஃபிலிம்ஸ்-தயாரிக்கும்-88-ஆவது-படம்-மொட்ட-சிவா-கெட்ட-சிவா-2651900.html
2651899 சினிமா நியூஸ் ரீல் வளரும் பாடகர்...! DIN DIN Saturday, February 18, 2017 03:47 PM +0530 தமிழ் இசை ரசிகர்களின் கவனத்துக்குரிய பாடகராக தனி முத்திரை பதித்து வருகிறார் அனந்து.  "வேட்டைக்காரன்' படத்தில் இடம் பெற்ற "புலி உறுமுது...புலி உறுமுது...'' பாடலை அதிரடி பாடலாகப் பாடிய இவர், "கபாலி'யில் இடம் பெற்ற ""மாய நதி...''  பாடலிலும் ரசிக்க வைத்தார்.  "பைரவா' படத்தில் இடம் பெற்ற "பட்டய கௌப்பு...'' இவரின் சமீபத்திய ஹிட் பாடலாக அமைந்துள்ளது. ""பைரவா' படத்தில் ஒரு பாடலை பாடுவதாக இருந்த எனக்கு எந்த பாடல் கிடைக்கும், என்று தெரியாது. இதற்கிடையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மெட்டு போட்டு வைத்திருக்க, அதை கேட்க வேண்டும் என்று விஜய் விரும்பியதால், என்னை அந்த மெட்டில் பாட வைத்து அவருக்கு அனுப்பி வைத்தார். மெட்டை கேட்ட விஜய், பாடகர் குறித்து பேசிய போது, "இந்த குரலே நல்லாதான் இருக்கு... இவரே பாடட்டும்...' என்று அவர் சொல்லிவிட்டார். பிறகு தான் எனக்கு அந்த பாடல் கிடைத்தது. அதே போன்று, விஜய் பாடிய "பாப்பா...பாப்பா...'' பாடல் பதிவின் போதும், என்னை உடன் இருக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். அதே போல் வைரமுத்துவின் வரிகளை பாடியிருப்பதும், எனக்கு பெருமையாக இருக்கிறது'' என்றார் அனந்து. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/18/w600X390/m4.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/feb/18/வளரும்-பாடகர்-2651899.html
2651897 சினிமா நியூஸ் ரீல் ஐரோப்பாவில் விஜய் 61! DIN DIN Saturday, February 18, 2017 03:43 PM +0530 "பைரவா' படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தை அட்லி இயக்கி வருகிறார். விஜய் நடிப்பில் 61-ஆவது படமாக இது உருவாகவுள்ளது. இன்னும் பெயரிடப்படாமல் படப்பிடிப்பு துவங்கியுள்ள இப்படத்தை இராம நாராயணனின் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100 வதுபடமாக தயாரிக்கிறது. சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, ஜோதிகா, சமந்தா, காஜல் அகர்வால், வடிவேலு, சத்யன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜோதிகா நடிப்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், தற்போது ஜோதிகா நடிப்பது உறுதியாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். கலை இயக்குநராக முத்துராஜ் பணியாற்றுகிறார். "பைரவா' படத்தைத் தொடர்ந்து இப்படத்தில் சண்டைப் பயிற்சி இயக்குநராக அனல் அரசு பணியாற்றவுள்ளார். முதற்கட்டப் படப்பிடிப்பு கடந்த  1-ஆம் தேதி சென்னையில் துவங்கியுள்ளது. சில முக்கிய காட்சிகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் படமாகவுள்ளது. விஜயேந்திர பிரசாத் திரைக்கதை எழுதுகிறார். வரும் தீபாவளி பண்டிகைக்கு படம் திரைக்கு வரும் எனத் தெரிகிறது.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/18/w600X390/m3.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/feb/18/ஐரோப்பாவில்-விஜய்-61-2651897.html
2651896 சினிமா நியூஸ் ரீல் மீண்டும் இணையும் திருடன் போலீஸ் கூட்டணி DIN DIN Saturday, February 18, 2017 03:42 PM +0530 "திருடன் போலீஸ்' படத்தின் மூலம் அறிமுக இயக்குநர்களில் சிறப்பிடம் பெற்றவர் கார்த்திக் ராஜு. தற்போது இவர் எழுதி இயக்கும் படம் "உள்குத்து.' கெனன்யா பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாக உருவாகி வரும் இப்படத்தில் "அட்டகத்தி' தினேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். நந்திதா கதாநாயகியாக நடிக்கிறார். ஸ்ரீமன், பால சரவணன், ஷரத் லோகிதஸ்வா, திலீப் சுப்பராயன், ஜான் விஜய், சாயாசிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படம் குறித்து கார்த்திக் ராஜு கூறுகையில் கடல் சார்ந்த பின்னணியில் உருவாகும் இப்படம் மீனவர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டது. குறிப்பாக மீன் வெட்டும் தொழிலாளார்களின் சூழலை பிரதிபலிப்பதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மீன் வெட்டும் தொழிலாளியான தினேஷுக்கு நிகழும் ஒரு சம்பவம் அவர் சார்ந்த சமூகச் சூழலை எப்படி பாதிக்கிறது. அதிலிருக்கும் சவால்களை அந்த சமூகம் எப்படி கையாள்கிறது என்பதே கதை. நாகர்கோவில் மாவட்டத்தில் உள்ள முட்டம் கிராமப்புறப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதுவரையிலான என் திரைப் பயணத்தில் இப்படம் முக்கிய பங்கு வகிக்கும். இந்தப் படம் எனக்கு மைல் கல்லாக அமையும் என்கிறார் இயக்குநர்.   

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/18/w600X390/m2.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/feb/18/மீண்டும்-இணையும்-திருடன்-போலீஸ்-கூ-2651896.html
2648753 சினிமா நியூஸ் ரீல் நடிகராக அறிமுகமாகிறார் சன் மியூசிக் நிகழ்ச்சித் தொகுப்பாளார் பாலா DIN DIN Monday, February 13, 2017 10:28 AM +0530 சின்னத்திரையில் மிளிரும் கலைஞர்கள் சமீபமாக சினிமாவுக்கு வருவது அதிகரித்துள்ளது. ரசிகர்களின் அபிமானத்தை ஏற்கெனவே சின்னத்திரை மூலம் பெற்றிருப்பதே  இதற்கு  காரணமாகச் சொல்லப்படுகிறது. தயாரிப்பாளரும், இயக்குநரும் இவ்வகையில் வரும் கலைஞர்களை அறிமுகப்படுத்துவதிலும் ஆர்வமாக உள்ளனர். இந்தப் பட்டியலில் தற்போது சேர்ந்திருப்பவர் சன் மியூசிக் நிகழ்ச்சித் தொகுப்பாளார் பாலா. "கண்டேன் காதல் கொண்டேன்' என்ற பெயரில் உருவாகி வரும் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக அறிமுகமாகிறார் அஷ்வினி. மயில்சாமி, ராஜசேகர், ராதா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். நாகா இசையமைப்பில் ஒளிப்பதிவு செய்கிறார் சுரேஷ் தேவன். வெங்கட் ஜி.சாமி படத்தை எழுதி இயக்குகிறார். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/13/w600X390/bala.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/feb/13/நடிகராக-அறிமுசன்-மியூசிக்-நிகழ்ச்சித்-தொகுப்பாளார்-பாலா-2648753.html
2648751 சினிமா நியூஸ் ரீல் விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கும் படம் பக்கா! DIN DIN Monday, February 13, 2017 10:19 AM +0530 கிராமத்துப் பின்னணியைக் களமாகக் கொண்டு உருவாகி வரும் படம் "பக்கா.' விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். சூரி,  ஆனந்த்ராஜ், சிங்கம்புலி, மனோபாலா, சிங்கமுத்து, மயில்சாமி உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கின்றனர். இயக்குநர் பேரரசுவிடம் உதவியாளராகப் பணியாற்றி வந்த எஸ்.எஸ்.சூர்யா இப்படத்தை எழுதி இயக்குகிறார். கிராமத்து வாழ்க்கையின் அச்சு அசல் பிரதிபலிப்பாக இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விஞ்ஞான வளர்ச்சியால் பாதிக்கப்பட்ட கிராமத்து வாழ்க்கையின் சித்திரிப்பாக இப்படம் உருவாக்கப்படவுள்ளது. காதல், ஆக்ஷன், நகைச்சுவை, சென்டிமெண்ட் கலந்த ஜனரஞ்சகமான படமாக இப்படம் உருவாகவுள்ளது. கடந்த 1-ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. தென்காசியில் தொடங்கியுள்ள முதற்கட்ட படப்பிடிப்பு, குற்றாலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் பாடல் காட்சிகள் படமாகவுள்ளன. இதற்காக பிரத்யேக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. சி. சத்யா இசையமைக்கும் இப்படத்துக்கு  சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/13/w600X390/vikramprabhu.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/feb/13/விக்ரம்பிரபு-கதாநாயகனாக-நடிக்கும்-படம்-பக்கா-2648751.html
2648750 சினிமா நியூஸ் ரீல் முந்திரிவள்ளிகள் தளிர்க்கும் போல் ரீமேக்கில் ரஜினி! DIN DIN Monday, February 13, 2017 10:17 AM +0530 மோகன்லால், மீனா நடித்து சமீபத்தில் வெளிவந்த படம் "முந்திரிவள்ளிகள் தளிர்க்கும் போல்.' மலையாளத்தில் வெளிவந்த இப்படம்  பெரும் வரவேற்பு பெற்றதுடன், வசூலிலும் சாதனை படைத்தது.  ஜிபு ஜேக்கப் இயக்கியுள்ள இப்படத்தின் ரீமேக் உரிமைகளை வாங்குவதற்கு பல்வேறு மொழிகளில் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ரஜினிகாந்த் நடிப்பது குறித்தும் பரவலான பேச்சு நிலவுகிறது. தற்போது தெலுங்கு ரீமேக் பணிகள் தொடங்கியுள்ளன. இந்தப் படத்தையும் ஜிபு ஜேக்கப் இயக்கவுள்ளார். இது குறித்து சமீபத்தில் பேட்டியளித்துள்ள ஜிபு ஜேக்கப், "இப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டால், ரஜினிதான் என்னுடைய முதல் தேர்வாக இருப்பார்' என தெரிவித்துள்ளார். மோகன்லால் - மீனா இருவரும் திருமணமாகி பல ஆண்டுகள் கழித்து, மீண்டும் தங்களுடைய பழைய காதலைத் தேடுவதே "முந்திரிவள்ளிகள் தளிர்க்கும்போல்' படத்தின் கதையாகும். தற்போது கமர்ஷியலுக்கு முக்கியத்துவம் அதிகம் அளிக்காமல் நல்ல திரைக்கதைகளைத் தேடி வரும் ரஜினி இதில் நடிப்பார் என நம்பப்படுகிறது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/13/w600X390/rajini.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/feb/13/முந்திரிவள்ளிகள்-தளிர்க்கும்-போல்-ரீமேக்கில்-ரஜினி-2648750.html
2647759 சினிமா நியூஸ் ரீல் பெங்களூரில் வாழும் தமிழ் குடும்பத்தை மையமாகக் கொண்ட படம் நிசப்தம் DIN DIN Saturday, February 11, 2017 01:34 PM +0530 இன்றைய சமூக சூழலில் மனித நேயமும், மன மாற்றமும் எவ்வளவு முக்கியம் என்பதை கருவாக கொண்டு உருவாகி வரும் படம் "நிசப்தம்'. அஜய், "நாடோடிகள்' அபிநயா, கிஷோர், பேபி சைதன்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின், படப்பிடிப்பு முடிந்து இறுதிப் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள். மூன்று பாடல்களையும் நா.முத்துக்குமார் எழுதியிருக்கிறார். அதில் குறிப்பாக, "மண்மீது பெண்ணாய் வந்தாய் கண்ணே...' என்ற பாடல் அனைவராலும் பேசப்படும் என்று படக்குழு கூறியுள்ளது. இப்பாடலுக்காக மீண்டும் ஒரு தேசிய விருது, நா.முத்துக்குமாருக்கு கிடைக்கலாம் என்றும் படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இப்படத்தின் கதையைக் கேட்ட பெங்களூ காவல் துறை ஆணையர், பெங்களூரு மத்திய சிறையில் படப்பிடிப்பை நடத்த அனுமதி வாங்கி தந்துள்ளார். மேலும் இப்படத்தின் இசை கோர்ப்பு பணிகளில் உலகில் சிறந்த இசை கலைஞர்களாகிய செல்லோயிஸ்ட் ஜேக் சாரக்கி, "கேம் ஆப் த்ரோன்ஸ்' புகழ் செல்லோ கலைஞர் டீனா குவா, மற்றும் செர்பியன் இசை கலைஞர் விளாடிஸ்வர் நடிஷானா போன்றோர் பங்கேற்றுள்ளனர். மைக்கேல் அருண் எழுதி இயக்கியுள்ள இப்படம், பெங்களூரில் வாழும் தமிழ் குடும்பத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/11/w600X390/m1.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/feb/11/பெங்களூரில்-வாழும்-தமிழ்-குடும்பத்தை-மையமாகக்-கநிசப்தம்-2647759.html
2647758 சினிமா நியூஸ் ரீல் கிராம வாழ்க்கையை பிரதிபலிக்கும் படம் அய்யனார் வீதி DIN DIN Saturday, February 11, 2017 01:28 PM +0530 செந்தில்வேல் தயாரிப்பில் ஜிப்சி ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் "அய்யனார் வீதி.' பாக்யராஜ், பொன்வண்ணன், சாட்டை யுவன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பண்பாடு மற்றும் கலாசாரத்தை பிரதிபலிக்கும் விதமாக இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து இயக்குநரிடம் பேசும் போது, "இந்த படத்தை இயக்க வேண்டும் என்று நினைத்தபோது கதை கொடுத்த நண்பன் பாஸ்கருக்கும், படத்தை நானே தயாரிக்கிறேன் என்று சொல்லி என் 18 வருட போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த செந்தில்வேலுக்கும், விஜயசங்கருக்கும் இதற்காக உதவி செய்த எல்லாருக்கும் நன்றி. பொன்வண்ணன் எனக்கு பெரும் துணையாக நின்றார். அவருக்கு நன்றி. பாக்யராஜ் இல்லாமல் பொன்வண்ணன்  எதையும் செய்ய மாட்டார். இருவரும் பாரதிராஜா சாரிடம் இருந்து வந்தவர்கள். இந்த படத்தின் டீசரை எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்தில் வெளியிட்டோம். கதாநாயகன் யுவன் பெரிதாக பேச மாட்டார். ஆனால் நடிப்பில் தனித்துவம் காட்டுவார். படம் பேசும்படி இருக்கும். பாக்யராஜ் நடித்த படங்களில் இது குறிப்பிடும்படியான அடையாளமாக இருக்கும். நம் கிராம வாழ்க்கையை பிரதிபலிக்கும் மண் சார்ந்த கதைகள் இப்போது குறைவு. அதை நிவர்த்தி செய்யும் விதமாக திரைக்கதை இருக்கும்'' என்றார் இயக்குநர். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/11/w600X390/m6_1.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/feb/11/கிராம-வாழ்க்கையை-பிரதிபலிக்கும்-படம்-அய்யனார்-வீதி-2647758.html
2647757 சினிமா நியூஸ் ரீல் தமிழுக்கு வரும் ஹாலிவுட் நிறுவனம்! DIN DIN Saturday, February 11, 2017 01:25 PM +0530 ஹாலிவுட்டின் மிகப் பெரிய படத் தயாரிப்பு நிறுவனம் வார்னர் பிரதர்ஸ். கலிபோர்னியாவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸில் இந்த நிறுவனத்தின் தலைமையகம் உள்ளது. இந்த நிறுவனம் தயாரித்த முதல் படம் "கோல்ட் டிக்கர்ஸ்.' வசூலை அள்ளிக் குவித்த "மேட்ரிக்ஸ்', "ஹாரி பார்ட்டர்', "பேட்மேன்' போன்ற பல படங்களைத் தயாரித்த நிறுவனம் இது. இந்த நிறுவனம் முதன் முறையாக ஒரு தமிழ் படத்தை வெளியிடவுள்ளது. இதற்கு முன், பாலிவுட் படங்களை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆனால் தென்னிந்தியாவில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிப்படங்களை இதுவரை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டதில்லை. தமிழ்ப்படத்தின் பெயர் "கனவு வாரியம்.' தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நிலவி வரும் மின்வெட்டை மையமாக வைத்து இந்த படம் ஜனரஞ்சகமாக உருவாக்கப்பட்டுள்ளது. காதல், காமெடி, சென்டிமென்ட் என அனைத்து அம்சங்களும் கொண்ட பொழுது போக்கு படமாக எடுக்கப்பட்டுள்ளது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதுடன் கதாநாயகனாவும் நடிக்கிறார் அருண் சிதம்பரம்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/11/w600X390/m4.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/feb/11/தமிழுக்கு-வரும்-ஹாலிவுட்-நிறுவனம்-2647757.html
2647756 சினிமா நியூஸ் ரீல் ரெசிடென்ட் ஈவில் கடைசி பாகம்! DIN DIN Saturday, February 11, 2017 01:24 PM +0530 ஹாலிவுட்டில் ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற்ற கதைகள், தொடர்ந்து பல பாகங்களாக வெளிவருவது வழக்கம். இதற்கு பல உதாரணங்கள் இருப்பினும், இந்த வரிசையில் சமீபமாக சேர்ந்துள்ள படம் "ரெசிடென்ட் ஈவில்.' பிரபல ஹாலிவுட் நட்சத்திரம் மில்லா ஜோவோவிச் நடிப்பில் கடந்த 15 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் இப்படம்,  இதுவரை பல பாகங்கள் வெளிவந்துள்ளன. இப்படத்தின் நிறைவு பகுதி தற்போது வெளிவந்துள்ளது. "ரெசிடென்ட் ஈவில், ஃபைனல் சாப்டர்' என்ற பெயரில் வெளிவந்துள்ள இப்படத்தை  சோனி பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அநியாயத்திற்கான பெரும் போராட்டம் இனிதே முற்றுப் பெறுவதாக கதைக் களம் அமைக்கப்பட்டுள்ளது. ஆலிஸ் கதாபாத்திரத்தின் பல்வேறு ஆக்ஷன் காட்சிகளின் அநாயசமும், கடினமான பல்வேறு படப்படிப்பு இடங்களின் தாக்கமும் இதில் பிரமிக்க வைத்துள்ளது. இளைய சமுதாயத்துக்கு உலகத்தை காக்கும் எண்ணம் பண்பும், பரிவை கற்றுக் கொடுப்பதாக திரைக்கதை அமைப்பட்டுள்ளது. மேலும், சோனி பிக்சர்ஸ் நிறுவனம் "கட்டபாவ காணோம்', "இனிமே இப்படித்தான்' புகழ் சந்தோஷ் தயாநிதி இசையில் சுனிதா சாரதி குரலில் "யாரோ இவள்...'  என்ற விளம்பர பாடல் இதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/11/w600X390/m2.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/feb/11/ரெசிடென்ட்-ஈவில்-கடைசி-பாகம்-2647756.html
2646555 சினிமா நியூஸ் ரீல் "ஹஷ்' படத் தழுவலாக கொலையுதிர் காலம்! DIN DIN Thursday, February 9, 2017 10:50 AM +0530 "டோரா', "அறம்' என தன்னை முன்னிலைப்படுத்தும் கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார் நயன்தாரா. இதனிடையே "கொலையுதிர் காலம்' என்ற படத்திலும் நடிக்கிறார். "உன்னைப் போல் ஒருவன்', "பில்லா 2' படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி இப்படத்தை இயக்குகிறார். இசையமைப்பாளர் யுவன் தயாரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியுள்ளது. ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ஹாலிவுட்டில் பெரும் வரவேற்பைப் பெற்ற "ஹஷ்' படத் தழுவலாக இப்படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. காது கேட்காத, வாய் பேச முடியாத ஒரு பெண் எழுத்தாளர், வீட்டில் தனியாக இருக்கும் போது, சைக்கோ கொலைகாரன் ஒருவனிடம் சிக்கிக் கொள்கிறார். அவரிடமிருந்து தப்பித்தாரா என்பது தான் "ஹஷ்' படத்தின் திரைக்கதை. ஹஷ் படத்தின் பிரதான கதாபாத்திரத்தின் சாயல், "கொலையுதிர் காலம்' படத்தின் பிரதான கதாபாத்திரத்திலும் இருக்கும். மற்றபடி "ஹஷ்' படத்துக்கும் எங்களது படத்துக்கும் சம்பந்தமில்லை என படக்குழு தெரிவித்துள்ளது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/9/w600X390/kolaiyudhir_kaalam.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/feb/09/ஹஷ்-படத்-தழுவலாக-கொலையுதிர்-காலம்-2646555.html
2646552 சினிமா நியூஸ் ரீல் தேனாண்டாள் பிலிம்ஸ் கைப்பற்றிய காற்று வெளியிடை DIN DIN Thursday, February 9, 2017 10:47 AM +0530 "காதல் கண்மணி' படத்துக்குப் பின் மணிரத்னம் இயக்கி வரும் "காற்று வெளியிடை' படத்தில் கார்த்தி, அதிதி ராவ், ஷ்ரதா ஸ்ரீநாத், ருக்மணி விஜயகுமார், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ரவிவர்மன் ஒளிப்பதிவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் விநியோக உரிமையை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சென்னை, லடாக், ஊட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. தற்போது இறுதி கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் "காற்று வெளியிடை' படத்தின் முதல்பார்வை இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 50 விநாடிகள் மட்டுமே அடங்கிய இந்த டீஸர் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. "ரோஜா' படத்தின் மூலம் இணைந்த மணிரத்னம் - ஏ.ஆர்.ரஹ்மான் - வைரமுத்து கூட்டணிக்கு இது 25-ஆம் ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/9/w600X390/Kaatru_Veliyidai.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/feb/09/தேனாண்டாள்-பிலிம்ஸ்-கைப்பற்றிய-காற்று-வெளியிடை-2646552.html
2646551 சினிமா நியூஸ் ரீல் அஜித்துடன் நடிக்க ஆர்வம் காட்டும் வடிவேலு DIN DIN Thursday, February 9, 2017 10:45 AM +0530 வடிவேலு சிம்பு தேவன் இயக்கத்தில் "இம்சை அரசன் 23ம் புலிகேசி' இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். அதன் பின் ஜி.வி.பிரகாஷ் நடிக்கவுள்ள ஒரு படத்துக்கு ஒப்பந்தமாகியுள்ளார். காத்திருந்தும், கதை சொல்ல ஆளில்லாத நிலையில் பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிக்க விரும்புகிறார் வடிவேலு. எனவே ரஜினி, கமலுக்கு பிறகு இரு துருவங்களாக இருக்கும் விஜய், அஜித் படங்களில் நடிப்பதற்கு முடிவுசெய்து, அதற்கான காய் நகர்த்தும் பணிகளில் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் நடிக்க, அட்லீ இயக்கும் படத்துக்காக வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ள நிலையில், வடிவேலு நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. படத்தின் பெரும் பகுதிகள் அமெரிக்காவில் படமாகவுள்ளது. இதற்காக தொடர்ச்சியாக 30 நாள்கள் வரை கால்ஷீட் ஒதுக்கியுள்ளார் வடிவேலு. இதைத் தொடர்ந்து அஜித் நடிக்கும் படத்திலும் வடிவேலு நடிக்க ஆர்வமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/9/w600X390/vadivelu1.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/feb/09/அஜித்துடன்-நடிக்க-ஆர்வம்-காட்டும்-வடிவேலு-2646551.html
2646550 சினிமா நியூஸ் ரீல் அதர்வா நடிக்கும் ஒத்தைக்கு ஒத்த DIN DIN Thursday, February 9, 2017 10:38 AM +0530 மாணவர்களின் போராட்டத்தையும், ஒற்றுமையையும் மையமாகக் கொண்டு உருவாகி வரும் படம் "ஒத்தைக்கு ஒத்த.' அதர்வா, தியாகராஜன், நரேன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பா. ரஞ்சித்தின் உதவியாளர் பர்னீஷ் இப்படத்தின் கதை எழுதி இயக்குகிறார். விஷன் ஐ மீடியா நிறுவனத்தின் சார்பில் தினேஷ் கார்த்திக் தயாரிக்கிறார். கல்லூரி பருவ வாழ்க்கையை மையமாகக் கொண்டு மாணவர்களின் உலகத்தைப் படம் பிடிப்பதாக இக்கதை உருவாகி வருகிறது. படத்துக்குப் படம் தன் கதாபாத்திரங்களில் வித்தியாசம் காட்டி வரும் அதர்வா, இப்படத்துக்காகவும் தனது உடலமைப்பை மாற்றியுள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் ஏறக்குறைய 20 நாள்கள் தொடர் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/9/w600X390/atharva.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/feb/09/அதர்வா-நடிக்கும்-ஒத்தைக்கு-ஒத்த-2646550.html
2643700 சினிமா நியூஸ் ரீல் உண்மை சம்பவம் ஒன்றின் தழுவல்தான் அட்டு ! DIN DIN Saturday, February 4, 2017 10:24 AM +0530 படம் வெளிவருதற்கு முன்பே அப்படத்தின் சிறப்பியல்புகள் குறித்து சினிமா வட்டாரங்களில் பேசப்படுவது இயல்பு. இந்த வகையில் சமீபமாக பேச்சில் அடிப்பட்டு வரும் படம் "அட்டு'. ரிஷிரித்திக், அர்ச்சனா ரவி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம், எதிர்பார்ப்புக்குரிய படங்களின் வரிசையில் திகழும் படமாக வளர்ந்து வருகிறது. சமீபத்தில் வெளியாகியுள்ள இப்படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் இப்படம் குறித்த ஆவலைத் தூண்டியுள்ளன. விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு படம் திரையிட்டு காட்டப்பட்டுள்ள நிலையில், படத்தின் விநியோக உரிமையை ஸ்டுடியோ 9 நிறுவனம் பெற்றுள்ளது. "தர்மதுரை', "தங்க மீன்கள்', "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்',"சூது கவ்வும்' உள்ளிட்ட படங்களை இந்நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதைப் போன்று படத்தின் ரீமேக் உரிமையும் வாங்கப்பட்டுள்ளது. தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளுக்கு ரீமேக் உரிமை விற்கப்பட்டுள்ளது.  கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் ரத்தன் லிங்கா. வட சென்னை வாழ்க்கைதான் களம். உண்மை சம்பவம் ஒன்றின் தழுவலாக இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாத வெளியீடாக படம் திரைக்கு வருகிறது. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/4/w600X390/m5.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/feb/04/உண்மை-சம்பவம்-ஒன்றின்-தழுவல்-படம்தான்-அட்டு-2643700.html
2643703 சினிமா நியூஸ் ரீல் எமலோகத்தில் காமெடி கதை சோக்காலி மைனர் DIN DIN Saturday, February 4, 2017 10:19 AM +0530 தமிழ் நடிகர்கள் தெலுங்கு மார்க்கெட்டை குறி வைப்பது போன்று, தெலுங்கு நடிகர்களும் தமிழ் சினிமா மார்க்கெட்டை குறி வைத்து தங்களது படங்களை இறக்குகின்றனர். அந்த வகையில்  மகேஷ்பாபு, பவன்கல்யாண் ஆகியோர் தங்களது படங்களை தமிழில் வெளியிட்டு வருகின்றனர். இந்த வரிசையில் அடுத்து தமிழில் வெளிவரும் படம் "சோக்காலி மைனர்' தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற இப்படம், தற்போது தமிழில் வெளிவருகிறது. தேவிபரணிகா வழங்கும் ஓம்கார பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் நாகார்ஜுனா இரட்டை வேடங்களில் நடிக்கிறார். ரம்யாகிருஷ்ணன், அனுஷ்கா, லாவண்யா திரிபாதி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். நகைச்சுவையை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் திரைக்கதை, எமலோகத்தில் நடப்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எமலோகத்தில் எமன் அரசவைக்கும், நாகார்ஜூனாவுக்கும் இடையே நடக்கும் காமெடிதான் கதை. கதை, வசனம்- மைக்கேல் யாகப்பன். தயாரிப்பு- கௌபாய் எம்.நிரஞ்சன்குமார் யாதவ். இயக்கம் - கல்யாண கிருஷ்ண குருசாலா.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/4/w600X390/m8.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/feb/04/எமலோகத்தில்-காமெடி-கதை-சோக்காலி-மைனர்-2643703.html
2643702 சினிமா நியூஸ் ரீல் வித்தியாசத் தலைப்புகளில்... DIN DIN Saturday, February 4, 2017 10:17 AM +0530 ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இயக்குநர்கள்  தங்களது படத் தலைப்புகளில் வித்தியாசம் காட்டி வருகின்றனர். இந்த வகையில் வெளிவந்த "பரதேசி' "பிச்சைக்காரன்', "நானும் ரௌடிதான்' பாணியில் ஜெய் ஆகாஷ் நடிக்கும் படத்துக்கு "ஆமா, நான் பொறுக்கிதான்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஜி பிலிம் பேக்ட்ரி நிறுவனத்தின் தயாரிப்பாக உருவாகி வரும் இப்படத்தில் அனிஷா, தீப்தி, பொன்னம்பலம், கயல் வின்சென்ட், சாம்ஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சர்வதேச அளவில் நடைபெறும் சமூக விரோத தொழிலில் ஏற்படும் பிரச்னைகளை மையமாக கொண்டு கதைக் களம் உருவாக்கப்பட்டுள்ளது. யூ.கே முரளி இசையமைக்கிறார். ஒளிப்பதிவு செய்து படத்தை இயக்குகிறார் தேவராஜ். மே மாதத்தில் படம் வெளியாகவுள்ளது. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/4/w600X390/m7.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/feb/04/வித்தியாசத்-தலைப்புகளில்-2643702.html
2643701 சினிமா நியூஸ் ரீல் பாலிவுட் தலைப்பு தமிழில்! DIN DIN Saturday, February 4, 2017 10:16 AM +0530 பாலிவுட் நடிகர் ஓம் புரி இறக்கும் தருவாயிலும் இரண்டு படங்களில் நடித்து வந்தார். அதில் முக்கியமானது சல்மான்கானின் "டியூப்லைட்.' இதுவே ஓம் புரி நடித்த கடைசிப் படமாக அமைந்து விட்டது. ஓம் புரியின் கடைசிப் படம் இது என்பதால், பாலிவுட் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போது இதே தலைப்பில் தமிழில் படம் உருவாகி வருகிறது. அறிமுக இயக்குநர் இந்த்ரா இயக்கி, இசையமைத்து, ஹீரோவாகவும் நடிக்கிறார். ஆஸ்ட்ரிச் மீடியா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.  தியா, பாண்டியராஜன், பிரவீன் பிரேம், வினோத், புஜ்ஜி பாபு, ரம்யா ஷங்கர் உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரங்கள் ஏற்கிறார்கள். சராசரி கோட்டுக்கு கீழ் இருக்கும் ஓர் ஆண் தன்னை விட அழகும் அறிவும் அதிகமாக இருக்கும் பெண்ணை காதலிக்க, அது எங்கே போய் முடிகிறது என்பதுதான் கதை. படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்புகள்  நடந்து வருகின்றன.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/4/w600X390/m6.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/feb/04/பாலிவுட்-தலைப்பு-தமிழில்-2643701.html
2641510 சினிமா நியூஸ் ரீல் சினிமாவோடு வேறு எந்த தொழிலையும் ஒப்பிட முடியாது: ஸ்ரேயா DIN DIN Tuesday, January 31, 2017 12:43 PM +0530 பொதுவாக ஹீரோயின்கள் தங்கள் வயதை வெளியில் சொல்வதில்லை. உண்மையான வயது குறித்து ரசிகர்களுக்குத் தெரிய வந்தால் தங்களுக்குள்ள ஈர்ப்பு குறைந்து விடும் என்ற எண்ணம் இதற்கு காரணமாகச் சொல்லப்படுகிறது. படங்களில் கூட மனைவி, குழந்தைக்கு அம்மா போன்ற வேடங்களைத் தவிர்த்து காதலியாக மட்டுமே நடிக்க முயல்கின்றனர். குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்க வரும் வாய்ப்புகளை அநேக ஹீரோயின்கள் உதறி விடுகின்றனர். திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்து ஓய்ந்த பிறகு மார்க்கெட் இழக்கும் நிலையில் மனைவி, அம்மா வேடங்களில் நடிக்க முன்வருகின்றனர். விதி விலக்காக தனது வயதுகேற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கிறார் ஸ்ரேயா. ""சினிமாவோடு வேறு எந்த தொழிலையும் ஒப்பிட முடியாது. 17 வயது முதல் நான் நடித்து வருகிறேன். இப்போது 34 வயதாகிறது. எந்த வயதாக இருந்தாலும் ஏன் 65 வயதானாலும் சினிமாவில் மட்டும்தான் நல்ல வேடங்களில் நடிக்க வாய்ப்புக் கிடைக்கிறது. அமிதாப்பச்சனுக்கு இந்த வயதிலும் அருமையான வேடங்களில் நடிக்க வாய்ப்புக் கிடைக்கிறது. நடிகையாக இருப்பதற்கு நான் ஆசிர்வதிக்கப்பட்டிருப்பதாகவே கருதுகிறேன்'' என்று தெரிவித்துள்ளார் ஸ்ரேயா.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/31/w600X390/sreya.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/jan/31/சினிமாவோடு-வேறு-எந்த-தொழிலையும்-ஒப்பிட-முடியாது-ஸ்ரேயா-2641510.html
2641508 சினிமா நியூஸ் ரீல் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் குஷ்பு DIN DIN Tuesday, January 31, 2017 12:41 PM +0530 தற்போது அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வரும் குஷ்பு, மீண்டும் நடிக்க வருகிறார், ஆனால், நடிக்கப் போவது தமிழ்ப் படத்தில் அல்ல. தெலுங்கு படத்தில்... த்ரி விக்ரம் எழுதி இயக்கும் இப்படத்துக்காக 9 ஆண்டுகளுக்குப் பின் நடிக்க இருக்கிறார். பவன் கல்யாண் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்கிறார். இந்த அறிவிப்பை தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் குஷ்பு. பவன் கல்யாணுக்கு வில்லியாக குஷ்பு நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. தெலுங்கு மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் இப்படம் உருவாகிறது. இப்படம் மூலம் தமிழிலும் கால் பதிக்க உள்ளார் பவன் கல்யாண்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/31/w600X390/Kushboo.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/jan/31/மீண்டும்-நடிப்பில்-கவனம்-செலுத்தும்-குஷ்பு-2641508.html
2641506 சினிமா நியூஸ் ரீல் சாந்தனு நடிக்கும் முப்பரிமாணம் DIN DIN Tuesday, January 31, 2017 12:39 PM +0530 பள்ளி, கல்லூரி வாழ்க்கையின் பதிவாக உருவாகி வரும் படம் "முப்பரிமாணம்.' சாந்தனு, சிருஷ்டி டாங்கே, தம்பி ராமையா, ரவிபிரகாஷ், அப்புக்குட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் அதிரூபன். ராசாமதியின் ஒளிப்பதிவில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். கதிர், நிஷா ஆகிய இரு கதாபாத்திரங்களின் பள்ளிப் பருவத்தில் இருந்து 22 வயது வரை நடக்கும் சம்பவங்களே திரைக்கதை. பொதுவாக பள்ளி, கல்லூரி என்றால் காதல் மட்டுமே பிரதானமாக இருக்கும் திரைக்கதை போன்று இல்லாமல், அதிலுள்ள உளவியலைப் படம் பிடிப்பதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. பின்னணி இசைக்கு மட்டும் 55 நாட்கள் ஆனது. ஜி.வி.பிரகாஷ் இதற்கு முன்பு பின்னணி இசைக்கு இத்தனை நாள்கள் எடுத்துக் கொண்டதில்லை. ஒவ்வொருவரும் தனது வாழ்க்கையை இதில் பொருத்திப் பார்த்துக் கொள்ளும் வகையில் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் வரும் ஒரு பாடலில் 27 நடிகர்கள் பங்கேற்றுள்ளனர். அடுத்த மாதம் படம் திரைக்கு வருகிறது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/31/w600X390/n1.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/jan/31/சாந்தனு-நடிக்கும்-முப்பரிமாணம்-2641506.html
2641504 சினிமா நியூஸ் ரீல் தமிழில் வெளியாகும் புலி முருகன்! DIN DIN Tuesday, January 31, 2017 12:35 PM +0530 குறைந்த பட்ஜெட்... அதிக வசூல்... இதுதான் மலையாள சினிமாவின் தனித்துவம். ஆக்ஷன், காமெடி, காதல் எல்லாம் கலந்த ஜனரஞ்சகம் என்பதற்கே பேச்சு இல்லாமல், கதைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து படங்கள் உருவாக்கப்படுவதுதான் மலையாள சினிமாவின் இயல்பு. இந்த வகையில் சமீபத்தில் வெளிவந்து இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ள படம் "புலி முருகன்.' படத்துக்குச் செலவான தொகையை விட பல மடங்கு லாபம் ஈட்டியுள்ளதாக படக்குழுவினரே வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இப்படத்தின் ரீமேக் மற்றும் டப்பிங் உரிமையை பல்வேறு மொழிகளில் பெறுவதற்கு தயாரிப்பு நிறுவனங்கள் போட்டியிட்டு வருகின்றன. தமிழிலும் போட்டி நிலவி வந்த நிலையில், மலையாளத்தில் படத்தை உருவாக்கிய முலக்குபாடம் பிலிம்ஸ் நிறுவனமே தமிழிலும் இப்படத்தை உருவாக்குகிறது. மோகன்லால், கமாலினி முகர்ஜி, ஜெகபதிபாபு, லால், கிஷோர், நமீதா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தின் வசனத்தை ஆர்.பி.பாலா எழுதியுள்ளார். கதை மற்றும் திரைக்கதை உதயகிருஷ்ணா. இயக்கம் வைஷாக். தெலுங்கில் "மன்னியம் புலி' என்ற பெயரில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தமிழில் "புலி முருகன்' என்ற பெயரிலேயே வெளியாகவுள்ளது இப்படம்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/31/w600X390/pulimurugan.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/jan/31/தமிழில்-வெளியாகும்-புலி-முருகன்-2641504.html
2640281 சினிமா நியூஸ் ரீல் கரிசக்காட்டு மக்களின் வாழ்க்கையை சொல்ல வரும் படம் அரசகுலம் DIN DIN Sunday, January 29, 2017 03:49 AM +0530 பி.ஆர். சைன் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "அரசகுலம்.'  ரத்தன் மெளலி கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயனாநாயர் நடிக்கிறார். ராஜசிம்மன், ராஜஸ்ரீ, ராஜா, ஷங்கர், பாலமுருகன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.  கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் குமார்மாறன். வாழ்க்கை என்பது ஒரே மாதிரியானதுதான். இருக்கிற இடம், வசதி, வாய்ப்புகளைப் பொறுத்து வாழ்க்கையின் தரம் மட்டுமே மாறுபடுகிறது. வன்முறையாளர்கள், அரசியல் கட்சி, ஜாதி, மதம் ஆகியவற்றில் வெறிப்பிடித்தவர்கள் என்பது போல் தென் மாவட்ட மக்களின் வாழ்க்கை சித்தரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அவர்களுக்குள் இருக்கும் உறவு, நேசம், காதல், குடும்ப அன்பு ஆகியவை எல்லா மனிதர்களுக்குள்ளும் இருப்பது போன்றுதான் உள்ளது. இதை வெளிக்காட்டும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.  தன்னை தஞ்சம் என்று நம்பி வருபவர்களுக்கு தன் உயிரையும் கொடுக்கும் கரிசக்காட்டு மக்களின் வாழ்க்கை முறையை இதுவரையில் சொல்லப்படாத அளவில் பதிவு செய்வதே கதை. படப்பிடிப்பு முடிந்து இறுதிக் கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/29/w600X390/m3.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/jan/29/கரிசக்காட்டு-மக்களின்-வாழ்க்கையை-சொல்ல-வருஅரசகுலம்-2640281.html
2640280 சினிமா நியூஸ் ரீல் கிருஷ்ணனாக நடிக்க ஆசை! அமீர்கான் DIN DIN Sunday, January 29, 2017 03:46 AM +0530 "பாகுபலி' படத்தின் மூலம் இந்திய சினிமாவையே தென்னிந்திய பக்கம் திரும்ப வைத்தவர் எஸ்.எஸ். ராஜமௌலி. இப்போது "பாகுபலி' படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகிறார். இந்நிலையில் தனது அடுத்தப் படத்துக்கான திரைக்கதையை தேர்வு செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். ஹிந்தி உள்ளிட்ட அநேக இந்திய மொழிகளில் உருவாகவுள்ள இப்படத்தில் நடிப்பது குறித்து முன்னணி நட்சத்திரங்கள் பலர், கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அமீர்கான் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். ராஜமௌலி மகாபாரத இதிகாசத்தை படமாக எடுத்தால், அதில் கிருஷ்ணன் அல்லது கர்ணன் பாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று அமீர்கான் தெரிவித்துள்ளார். நான் ராஜமௌலி படங்களின் மிகப்பெரிய ரசிகன். என்றாவது ஒருநாள் அவர் மகாபாரதத்தைப் படமாக எடுத்தால், அதில் கிருஷ்ணனாகவோ அல்லது கர்ணன் கதாபாத்திரத்திலோ நடிக்க ஆசைப்படுகிறேன். ஆனால் கிருஷ்ணனாக நடிக்கத்தான் அதிகம் விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.  

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/29/w600X390/m1.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/jan/29/கிருஷ்ணனாக-நடிக்க-ஆசை-அமீர்கான்-2640280.html
2640279 சினிமா நியூஸ் ரீல் அப்பா காலத்து கதையில் மகன் ! DIN DIN Sunday, January 29, 2017 03:44 AM +0530 கே.பாக்யராஜிடம் உதவியாளராக இருந்து 80-களில் "கன்னிராசி' படம் மூலம் நடிகர், இயக்குநராக அறிமுகமானவர் பாண்டியராஜன். தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் இடத்தை பிடித்தவர் தொடர்ந்து பல்வேறு படங்கள் இயக்கியதுடன் நடித்தும் வருகிறார். இவரது மகன் ப்ரித்வி. 2006-ஆம் ஆண்டு "கைவந்த கலை' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். திரையுலகில் பிரகாசிக்க இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறார். 
தனது அறிமுக ராசி ஒர்க் அவுட் ஆகாததால் தந்தை பாண்டியராஜன் காலத்து ராசியை துணைக்கு அழைக்கும் விதமாக 80-களின் கதைக்கு தாவி இருக்கிறார். அந்த காலத்து ஸ்டெப் கட்டிங் ஹேர் ஸ்டைலுடன் தனது பெயரையும் ப்ரித்விராஜன் என மாற்றிக்கொண்டு "காதல் முன்னேற்றக் கழகம்' படத்தில் நடிக்கிறார். மாணிக் சத்யா எழுதி இயக்குகிறார். 
1980-களில் நடக்கின்ற காதல் கதை. சென்னை, ஊட்டி, கடலூர், திட்டக்குடி, விருத்தாசலம், பெரம்பலூரில் படப்பிடிப்பு நடக்கிறது. ஹாரிஸ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு. பி.சி.சிவன் இசை. கோபிநாத், மலர்க்கொடி முருகன், ஆனந்த் தயாரிக்கின்றனர். ப்ரித்விராஜன், சாந்தினி ஜோடியுடன் சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, கிஷோர், முனிஸ்ராஜா, அமீர், சிவசேனாதிபதி ஆகியோர் நடிக்கின்றனர்.  

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/29/w600X390/m4.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/jan/29/அப்பா-காலத்து-கதையில்-மகன்--2640279.html
2640278 சினிமா நியூஸ் ரீல் அதிக பட்ஜெட்டில் மலையாள சினிமா! DIN DIN Sunday, January 29, 2017 03:43 AM +0530 மலையாள சினிமாவை பொறுத்தவரை அதிக பட்ஜெட்டில் சினிமாக்கள் உருவாக்கப்படுவதில்லை. கதையை மட்டுமே நம்பி படங்கள் தயாரிக்கப்படுவதால் மோகன்லால், மம்முட்டி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களே ஒற்றை இலக்க கோடியில் உருவாகி விடும். இந்நிலையில், இந்தியாவிலேயே அதிகமான பட்ஜெட்டில் மலையாளத்தில் சினிமா உருவாகிறது. இதில் மோகன்லால், அமிதாப்பச்சன், விக்ரம், ஐஸ்வர்யா ராய் உட்பட பலர் நடிக்கின்றனர். மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான படம், "புலிமுருகன்.' அதிக பட்ஜெட்டில் உருவான முதல் மலையாள படம் இது. 
இந்தப் படம் மலையாள சினிமாவில், முதன் முதலாக 100 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது. இதையடுத்து மலையாளத்தில் பெரிய பட்ஜெட்டில் படங்கள் தயாரிக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதற்கிடையில் மலையாளத்தின் மூத்த எழுத்தாளரும் கதாசிரியருமான எம்.டி.வாசுதேவநாயரின், "இரண்டாம் முழம்' நாவலை படமாக்க தீர்மானித்துள்ளனர். இது சுமார் 400 கோடி ரூபாயில் உருவாக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/29/w600X390/m5.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/jan/29/அதிக-பட்ஜெட்டில்-மலையாள-சினிமா-2640278.html
2637454 சினிமா நியூஸ் ரீல் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஐங்கரன் DIN DIN Tuesday, January 24, 2017 10:58 AM +0530 ரவி அரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கவுள்ள படத்துக்கு "ஐங்கரன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. "ஈட்டி' படத்தை இயக்கி கவனம் ஈர்த்த ரவி அரசு இயக்கும் படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் இது உறுதி செய்யப்பட்டு பெயர் வைக்கப்பட்டுள்ளது. "4ஜி', "சர்வம் தாளமயம்', "அடங்காதே' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வரும் ஜி.வி.பிரகாஷ்,  தன் அடுத்தடுத்த படங்களுக்கான இயக்குநர்களைத் தேர்வு செய்து வருகிறார். இப்படங்களைத் தொடர்ந்து "ஈட்டி' படத்தின் இயக்குநர் ரவி அரசு கூறிய கதை பிடித்துவிடவே, தேதிகள் ஒதுக்கி தந்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இப்படத்தின் பெயர் அடங்கிய "ஃபர்ஸ்ட் லுக்' போஸ்டரை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார். மேலும் அவர் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவிருந்த "புரூஸ் லீ' படம் பிப்ரவரியில் வெளியாகவுள்ளது. "ஐங்கரன்' என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் நாயகியாக மடோனா செபாஸ்டியன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பிப்ரவரி மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தை "ஆரஞ்சு மிட்டாய்' மற்றும் "றெக்க' படங்களின் தயாரிப்பாளர் கணேஷ் தயாரிக்கவிருக்கிறார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/24/w600X390/gv.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/jan/24/ஜிவிபிரகாஷ்-நடிக்கும்-ஐங்கரன்-2637454.html
2637453 சினிமா நியூஸ் ரீல் "கத்தி சண்டை' படத்தைத் தொடர்ந்து விஷால் நடிக்கும் துப்பறிவாளன் DIN DIN Tuesday, January 24, 2017 10:56 AM +0530 மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் "துப்பறிவாளன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. "கத்தி சண்டை' படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் "துப்பறிவாளன்' படத்தில் நடித்து வருகிறார் விஷால். வினய், பிரசன்னா, பாக்யராஜ், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் நந்தகோபால் இருவரும் இணைந்து தயாரித்து வருகிறார்கள். அரோல் கொரேலி இசையமைத்து வரும் இப்படத்துக்கு கார்த்திக் ஒளிப்பதிவு செய்து வருகிறார். சென்னையில் படப்பிடிப்பு தொடங்கி 2 கட்டங்களை முடித்துள்ளனர். இம்மாத இறுதியில் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கி, மொத்தமாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துப்பறிவாளன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இணையத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு. இதற்கு சமூக வலைத்தளங்களில் பரவலான கவனம் ஏற்பட்டுள்ளது. அனைத்து தரப்பிலும் ஈர்க்கப்பட்டதால் படத்துக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/24/w600X390/vishal.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/jan/24/கத்தி-சண்டை-படத்தைத்-தொடர்ந்து-விஷால்-நடிக்கும்-துப்பறிவாளன்-2637453.html
2637452 சினிமா நியூஸ் ரீல் அப்பா-மகன் உறவைச் சொல்லும் யாகன்! DIN DIN Tuesday, January 24, 2017 10:53 AM +0530 மாப்பாணர் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "யாகன்'.  சஜன், அஞ்சனா கீர்த்தி, முனீஸ்காந்த்,  ஜெயராஜ்,  பாவா லட்சுமணன், ராஜேந்திர நாத் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை,  திரைக்கதை,  வசனம் எழுதி இயக்குகிறார் வினோத் தங்கவேலு. கிராமங்களில் நடைபெறும் பல வன்முறை சம்பவங்களுக்கு அடிப்படையே புரிந்து கொள்ளாமல் இருப்பதுதான்.  அந்த மோதலால் ஏற்படும் இழப்பு எத்தகையது என்பதை அழுத்தமாகச் சொல்லும் விதமாக இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.  தான் சம்பந்தமேபடாத ஓர் அவமானம், அந்த அவமானத்துக்கு ஹீரோவின் குடும்பமே காரணம் எனப் புரிந்துகொள்ளப்படுவதால் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்படுகிறது. இழப்புகளைச் சந்திக்க நேர்கிறது. அதற்கு ஹீரோ என்ன தீர்வு காண்கிறார் என்பது கதை. அப்பாவுக்கும் மகனுக்குமான உறவு கதையின் பின்னணியாக இருக்கும். அப்பா மகனுக்குமான நெருக்கத்தை, அன்பை, அன்னியோன்யத்தை நா. முத்துக்குமார் பாடலாக எழுதியுள்ளார். இப்பாடல் இசை ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெறும் என படக்குழு தெரிவித்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து படத்தின் இறுதிக் கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/24/w600X390/m1.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/jan/24/அப்பா-மகன்-உறவைச்-சொல்லும்-யாகன்-2637452.html
2637448 சினிமா நியூஸ் ரீல் விஜய்யின் 61-ஆவது படத்தில் ஜோதிகா! DIN DIN Tuesday, January 24, 2017 10:48 AM +0530 விஜய்யின் 60- ஆவது படமான "பைரவா' பொங்கல் பண்டிகைக்கு வெளியாகியுள்ள நிலையில், தற்போது விஜய்யின் அடுத்த படம் குறித்த செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. விஜய்யின் 61-ஆவது படமாக உருவாகும் இப்படத்தை, "தெறி' படத்தை இயக்கிய அட்லி இயக்குகிறார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்றும், "காவலன்' படத்திற்கு பிறகு விஜய்யுடன் வடிவேலு இணைந்து நடிக்கிறார் என்றும் தகவல்கள் வருகின்றன. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் காஜல் அகர்வால் நடிப்பதாகவும், செய்திகள்  தொடர்ந்து வந்து கொண்டிருந்த நிலையில்,  "திருமலை' படத்திற்கு பிறகு விஜய் படத்தில் ஜோதிகா நடிக்கப் போவதாகவும் செய்திகள் வந்தன. கதையின் பிரதான கதாபாத்திரம் ஒன்றில் ஜோதிகாவை நடிக்க வைக்க பேச்சு நடந்ததாகவும், அதற்கு ஜோதிகா தரப்பிலும் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இந்தச் செய்தியில் உண்மையில்லை என படக்குழு தெரிவித்துள்ளது. தற்போது வரை படத்தில் நடிப்பவர்கள் இறுதி செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/24/w600X390/jothika.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/jan/24/விஜய்யின்-61-ஆவது-படத்தில்-ஜோதிகா-2637448.html
2634947 சினிமா நியூஸ் ரீல் தமிழில் வெளியாகும் ஹ்ரித்திக் ரோஷனின் காபில்  DIN DIN Thursday, January 19, 2017 01:18 PM +0530 "காட்ஸ் ஆப் ஈஜிப்ட்', "பேட்மேன்  சூப்பர்மேன்', "மேகானிக் - ரீசரக்ஷன்' உள்ளிட்ட ஹாலிவுட் படங்களையும் "பாகி', "அசார்', "உத்டா பஞ்சாப்', "ருஸ்தம்' உள்ளிட்ட ஹிந்தி படங்களையும் விநியோகம் செய்த இ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தற்போது ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் சஞ்சய் குப்தா இயக்கத்தில் உருவான "பலம்' படத்தை தமிழில் வெளியிடுகிறது. "காபில்' என்ற பெயரில் ஹிந்தியில் உருவான இப்படத்தின் தமிழ்ப் பதிப்பாக இப்படம் வெளியாகவுள்ளது. 31 வயதான பின்னணி குரல் கலைஞர் ரோஹன் தனது பெரும்பான்மையான வாழ்க்கையை ஸ்டுடியோக்களிலேயே கழிக்கிறார். பிறப்பிலேயே பார்வையற்ற ரோஹனுக்கு ஒரு தருணத்தில் சுப்ரியாவை சந்திக்கிறான்.  அவள் மீது காதல் வயப்படுகிறான். சுப்ரியாவின் பிரிவு ரோஹனின் வாழ்க்கையை மேலும் தனிமைப்படுத்துகிறது. சுப்ரியா பிரிவின் காரணத்தை ஆராய முற்படும் ரோஹனுக்கு, தன்னை சுப்ரியா பிரிந்ததற்கான உண்மை புலப்படுகிறது. தன்னை தனிமைப் படுத்தியவர்களுக்கெதிரான யுத்தத்தில்  ஈடுபடுகிறான். பின் நடந்தது என்ன என்பதே கதை.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/19/w600X390/m5.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/jan/19/தமிழில்-வெளியாகும்-ஹ்ரித்திக்-ரோஷனின்-காபில்-2634947.html
2634945 சினிமா நியூஸ் ரீல் 19 வருடங்களுக்குப் பின் தமிழுக்கு வருகிறார் கஜோல் DIN DIN Thursday, January 19, 2017 01:15 PM +0530 பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த கஜோல், ஏவி.எம். நிறுவனத்தின் அழைப்பை ஏற்று "மின்சாரக் கனவு' படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்தார். முன்னணி வரிசையில் இருக்கும் போதே, திருமணம் செய்து கொண்ட கஜோல் சினிமாவிலிருந்து விலகினார். அவ்வப்போது ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்தவர், 19 வருடங்களுக்குப் பின் தமிழுக்கு வருகிறார்.  நீண்ட இடைவெளிக்குப் பிறகு "வேலையில்லா பட்டதாரி-2' படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கலைப்புலி தாணுவோடு, தனுஷ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் திரைக்கதை எழுதி இயக்குகிறார். அமலாபால், விவேக், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், ரிஷிகேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கியது. ஷான்ரோல்டன் இசையமைக்க, சமீர்தாஹிர் ஒளிப்பதிவு செய்கிறார்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/19/w600X390/m4.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/jan/19/19-வருடங்களுக்குப்-பின்-தமிழுக்கு-வருகிறார்-கஜோல்-2634945.html
2634944 சினிமா நியூஸ் ரீல் உளவியலை பின்னணியாகக் கொண்டு உருவாகும் படம் பிரகாமியம் DIN DIN Thursday, January 19, 2017 01:15 PM +0530 மனித மன உளவியல் நிகழ்வுகளை மையமாக கொண்டு உருவாகி வரும் படம் "பிரகாமியம்.' பார்வதி, சுபா, ரகுமான், வாசுதேவன் உள்ளிட்ட புதுமுகங்கள் நடிக்கின்றனர். கதையின் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதுடன் படத்தையும் எழுதி இயக்குகிறார் பிரதாப். படம் குறித்து பேசுகையில், "நிலநடுக்கம் அது கொடுமை. மன நடுக்கம் அது மிகக் கொடுமை... என மறைந்த நா.முத்துக்குமார் ஒரு பாடலில் எழுதியிருப்பார். அதுதான் இந்தக் கதைக்கான முதல் புள்ளி. ஆழ்மன உலகத்தில் நிகழும் காதல்தான் இதன் களம். தந்தை - மகன் இருவருக்குமான சம்பவங்களை உலக அரசாங்கங்களுக்கும் மக்களுக்கும் நிகழும் சம்பவங்களாக சம்பந்தப்படுத்துவது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பது இதன் சிறப்புகளில் ஒன்று. கலை, ஆவணம், கமர்ஷியல் என மூன்று வகையான கதை சொல்லும் யுக்திகள் இதில் கையாளப்பட்டுள்ளன. தணிக்கைக்கு படத்தை திரையிட்டபோது படத்துக்கு "எஸ்' சான்றிதழ் வழங்குவதாக அதிகாரிகள் கூறினர். அதன்படி சைகாலஜி டாக்டர் ஒருவரின் துணையுடன் இப்படத்தை பார்க்க வேண்டும் என்று பொருள். இறுதியாக சில நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டதால் படத்துக்கு "ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்றார் பிரதாப். 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/19/w600X390/m3_1.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/jan/19/உளவியலை-பின்னணியாகக்-கொண்டு-உருவாகும்-படம்-பிரகாமியம்-2634944.html
2634929 சினிமா நியூஸ் ரீல் மீண்டும் இணையும் கூட்டணி! DIN DIN Thursday, January 19, 2017 11:10 AM +0530 "எல்லாம் அவன் செயல்', "அழகர் மலை'  படங்களைத் தொடர்ந்து ஆர் கே - வடிவேலு கூட்டணி மீண்டும் இணைகிறது. முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவமுள்ள,  "நீயும் நானும் நடுவுல பேயும்' எனப் பெயரிடப்பட்ட இப்படம், மக்கள் பாசறை  நிறுவனத்தின் தயாரிப்பாக உருவாகவுள்ளது. "தண்ணில கண்டம்' படத்தை இயக்கிய எஸ் என் சக்திவேல் எழுதி இயக்குகிறார்.  "எல்லாம் அவன் செயல்' படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ராஜரத்தினம் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார். இதனிடையே ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ஆர்கே நடித்துள்ள "வைகை எக்ஸ்பிரஸ்' பிப்ரவரியில் திரைக்கு வருகிறது. நீது சந்திரா, இனியா, கோமல் ஷர்மா,  சுஜா வாருணி, ஆர் கே செல்வமணி, எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/19/w600X390/m2.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/jan/19/மீண்டும்-இணையும்-கூட்டணி-2634929.html
2632752 சினிமா நியூஸ் ரீல் சாவித்திரியாக நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ்! DIN DIN Tuesday, January 17, 2017 10:31 AM +0530  

60 - 70-ஆம் ஆண்டு கால கட்டங்களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கியவர் சாவித்திரி. இப்போதைய கால கட்டத்திலும் சாவித்திரி போல் நடிக்க விரும்புவதாகவும், அவர்தான் ரோல் மாடல் என்று கூறும் நடிகைகளை பார்க்க முடியும். அந்தளவுக்கு தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து மறைந்தவர் சாவித்திரி.

அதே போல் சாவித்திரியின் தனிப்பட்ட வாழ்க்கை பல்வேறு ஏற்றத் தாழ்வுகள் நிறைந்தது. துரோகம், ஏமாற்றம், வறுமை என பல மாற்றங்கள் அவரது வாழ்க்கையில் உண்டு. இவரது வாழ்க்கை சினிமா கதைக்கான சுவாரஸ்யங்கள் நிறைந்தது என்பதால், அதை சினிமாவாக எடுப்பதற்கு பல்வேறு முயற்சிகள் நடந்து வருகின்றன.

இயக்குநர் நாக் அஸ்வின் என்பவர் சாவித்திரி வாழ்க்கையை திரைப்படமாக இயக்குகிறார். இதில் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வாகியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். சாவித்திரியின் வாழ்க்கை கதையை விவரிக்கும் கதாபாத்திரத்தை சமந்தா ஏற்க உள்ளார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/14/w600X390/m1.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/jan/14/சாவித்திரியாக-நடிக்கிறார்-கீர்த்தி-சுரேஷ்-2632752.html
2632753 சினிமா நியூஸ் ரீல் டி.எம்.கிருஷ்ணாவின் மியூசிக் ஆல்பம்! DIN DIN Tuesday, January 17, 2017 10:22 AM +0530  

கடந்த மார்கழி சீஸன்களில் எதிலும் கலந்து கொள்ளாத டி.எம்.கிருஷ்ணா, மியூசிக் ஆல்பம் ஒன்றை தயாரிப்பதில் மும்முரம் காட்டி வந்தார். சமூக பிரச்னை ஒன்றை களமாக கொண்டு உருவாகியுள்ள இந்த ஆல்பம் "புறம்போக்கு' என்ற பெயரில் வெளியாகியுள்ளது. இந்த ஆல்பம்  உருவாக்கத்தில் டி.எம்.கிருஷ்ணாவுடன் இணைந்து பணியாற்றி வரும் இயக்குநர் ரத்தீந்தரன் பிரசாத்திடம் இது குறித்து பேசும் போது...

"நான் ஏற்கெனவே உருவாக்கிய "கொடைக்கானல் வொன்ட்' என்ற மியூசிக் ஆல்பத்துக்கு பல தரப்பிலும் வரவேற்பு கிடைத்தது. கொடைக்கானல் பகுதியில் நிகழ்ந்த சமூக அவலத்தை வெளிக்காட்டும் விதமாக அந்த ஆல்பம் உருவாகியிருந்தது. அந்த ஆல்பத்தை பார்த்த டி.எம்.கிருஷ்ணா, அவர் உருவாக்க இருந்த ஆல்ப பணிகளுக்கு என்னையும் இணைத்துக் கொண்டார். இசையிலும், மொழியிலும் டி.எம்.கிருஷ்ணா செய்யும் பரிசோதனையாக இந்த ஆல்பம் இருக்கும். இந்த மியூசிக் ஆல்பம் நிச்சயம் பெரும் மாற்றத்துக்கான திறவுகோலாக இருக்கும்'' என்றார் ரத்தீந்தரன் பிரசாத். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/14/w600X390/m2.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/jan/14/டிஎம்கிருஷ்ணாவின்-மியூசிக்-ஆல்பம்-2632753.html
2632751 சினிமா நியூஸ் ரீல் மைக்கேல் ஜாக்சன் பெயரில் நடன போட்டி! DIN DIN Saturday, January 14, 2017 09:24 AM +0530 பிரபுதேவா மைக்கேல் ஜாக்சனை சந்தித்த போது, ஜாக்சன் தன் தொப்பி ஒன்றை பிரபுதேவாவுக்குப் பரிசளித்தார். அந்த தொப்பியை மையமாகக் கொண்டு நடன போட்டியை நடத்த இருக்கிறார் பிரபுதேவாவின் தம்பி நாகேந்திர பிரசாத்.

இது குறித்து அவரிடம் பேசும் போது, "அண்ணனுக்கும், மைக்கேல் ஜாக்சனுக்கும் இடையே நடந்த சந்திப்பின் அடையாளமாக தொப்பி உள்ளது. அதை மைக்கேல் ஜாக்சனின் நினைவாக வைத்திருந்த பிரபுதேவா, நான் நடனப் பள்ளி நடத்தி வருவதால் எனக்கு அதை கொடுத்தார். தற்போது அந்த தொப்பியை மையமாக வைத்து மைக்கேல் ஜாக்சனின் பெயரில் "எம்ஜே கேப்' என்ற நடன போட்டியை நடத்துகிறோம். நடனத்துறையில் சாதிக்க துடிக்கும் இளம் தலைமுறையினரை ஊக்குவிக்கும் விதமாக இந்த போட்டி நடக்கவுள்ளது. மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, கொச்சின், சென்னை ஆகிய நகரங்களில் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

பிபாய், ஃபிரி ஸ்டைல் என்ற இரு பிரிவுகளாக போட்டிகள் நடக்கும். இதிலிருந்து 10 பேரை தேர்வு செய்து, பிறகு இறுதிப் போட்டி நடத்தப்படும். பிரபுதேவாவின் முன்னிலையில் நடக்கும் இறுதிப் போட்டி சென்னையில் வரும் 20-ஆம் தேதி  நடக்கிறது. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு சுமார் 11 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும்'' என்றார் நாகேந்திர பிரசாத். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/14/w600X390/m3.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/jan/14/மைக்கேல்-ஜாக்சன்-பெயரில்-நடன-போட்டி-2632751.html
2632750 சினிமா நியூஸ் ரீல் பா.ரஞ்சித் தயாரிப்பில் பரியேறும் பெருமாள் DIN DIN Saturday, January 14, 2017 09:23 AM +0530 "அட்டகத்தி', "மெட்ராஸ்', "கபாலி' ஆகிய படங்களை இயக்கிய பா.ரஞ்சித் தயாரிப்பாளராக அடுத்தக் கட்டத்துக்கு செல்கிறார். நீலம் புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள இவர், "பரியேறும் பெருமாள்' என்ற படத்தை தயாரிக்கிறார். இயக்குநர் ராமிடம் இணை இயக்குநராக பணியாற்றிய மாரி செல்வராஜ்  கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார். திருநெல்வேலி சுற்று வட்டாரப் பகுதியை சார்ந்த ஒரு கிராமத்து இளைஞனின் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இக்கதை எழுதப்பட்டுள்ளது.  காதல், ஆக்ஷன் அடங்கிய ஜனரஞ்சகமான படமாக  திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் நெல்லை மாவட்ட இளைஞராக கதிர் கதாநாயகனாக நடிக்கிறார். "கிருமி' படம் மூலம் பரவலான வரவேற்பை பெற்ற கதிர், இப்படத்துக்காக சிறப்பு பயிற்சிகள் பெற்று நடிக்கவுள்ளார். கதாநாயகியாக ஆனந்தி நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். ஒளிப்பதிவு - ஸ்ரீதர். கலை  - ராமு. ஜனவரி மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. படப்பிடிப்பு முழுவதும் நெல்லையிலே நடைபெறவுள்ளது. 

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/14/w600X390/m4.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/jan/14/பாரஞ்சித்-தயாரிப்பில்-பரியேறும்-பெருமாள்-2632750.html
2632749 சினிமா நியூஸ் ரீல் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் "மாரியப்பன்' DIN DIN Saturday, January 14, 2017 09:18 AM +0530 ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பனின் கதையை இயக்குகிறார் நடிகர் ரஜினிகாந்தின் மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ்.சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜெனீரோவில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். இவரின் வாழ்க்கையை சினிமாவாக எடுக்க உள்ளார் ஐஸ்வர்யா தனுஷ். இதற்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்பே மாரியப்பனை சந்தித்து அவர் கடந்து வந்த பாதைகள் குறித்து தகவல்களை சேகரித்துள்ளார்.இந்த படத்திற்கான முதல் போஸ்டர், புத்தாண்டு அன்று வெளியிடப்பட்டது. பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வெளியிட்டார்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/14/w600X390/m14.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/jan/14/ஐஸ்வர்யா-தனுஷ்-இயக்கும்-மாரியப்பன்-2632749.html
2629744 சினிமா நியூஸ் ரீல் பொங்கலுக்கு களமிறங்கும் ஹாலிவுட் படம் DIN DIN Monday, January 9, 2017 03:43 PM +0530  

விஜய்யின் "பைரவா' பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ள நிலையில், போட்டியாக பலரும் தங்களது வெளியீட்டு அறிவிப்பை வெளியிட்டு வருகிறார்கள். பார்த்திபனின் "கோடிட்ட இடங்களை நிரப்புக', ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் "புருஸ்லீ', ஜெய் நடிக்கும் "எனக்கு வாய்த்த அடிமைகள்' உள்ளிட்ட படங்களும் பொங்கலைக் குறி வைத்து காத்திருக்கின்றன. இந்த பட்டியலில் குறிப்பிடும்படியான ஹாலிவுட் படமும் இடம்பெறுகிறது.

ரஜினியுடன் "கோச்சடையான்' படத்தில் நடித்த தீபிகா படுகோன்,  முதன்முறையாக நடிக்கும் ஹாலிவுட் படம் "டிரிபிள் எக்ஸ் ரிட்டர்ன் ஆப் ஸான்டர் கேஜ்' வின் டீசல் ஹீரோவாக நடிக்கும் இப்படம், ஹாலிவுட் மற்றும் பாலிவுட் உலகில் பெரும் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.

பாலின பிரச்னைகளைக் களமாக கொண்ட இப்படம், தமிழகத்திலும் வெகுவான திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஹாலிவுட்டில் வெளியாவதற்கு முன்பே இந்தியாவில் இப்படம் வெளியாகவுள்ளது. தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் இப்படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பெரு நகரங்களில் இப்படத்துக்கான முன் பதிவு தொடங்கியுள்ளது.  

-ஜி. அசோக்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/9/w600X390/xxx.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/jan/09/பொங்கலுக்கு-களமிறங்கும்-ஹாலிவுட்-படம்-2629744.html
2629743 சினிமா நியூஸ் ரீல் பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் விஜய் - 61வது பட படப்பிடிப்பு DIN DIN Monday, January 9, 2017 09:57 AM +0530 "பைரவா' படத்தைத் தொடர்ந்து அட்லி இயக்கவுள்ள படத்துக்கு தேதிகள் ஒதுக்கி தந்துள்ளார் விஜய். ஸ்ரீ தேனான்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்துக்கான கதாநாயகி, தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட படக்குழுவினரைத் தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. நகைச்சுவை பகுதிக்கு வடிவேலு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் விஜய் ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால், சமந்தா என இருவரில் ஒருவரைத் தேர்வு செய்ய அட்லி தரப்பு ஆர்வம் காட்டி வந்தது. இந்நிலையில் சமந்தா தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் "கத்தி', "தெறி' ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய்யுடன் மீண்டும் இணைகிறார் சமந்தா. தெலுங்கு படமொன்றில் தற்போது நடித்து வரும் சமந்தா, அடுத்து விஜய் நடிக்கும் படத்துக்கு கால்ஷீட் ஒதுக்கியுள்ளார். விஜய்யின் 61-ஆவது படமாக உருவாகவுள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். புதுமுகம் விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பாளராக ரூபன் பணிபுரியவுள்ளார். பிப்ரவரி இரண்டாவது வாரம் முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/9/w600X390/vijay-atlee-thalapathy61.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/jan/09/பிப்ரவரி-இரண்டாவது-வாரத்தில்-விஜய்---61வது-பட-படப்பிடிப்பு-2629743.html
2629742 சினிமா நியூஸ் ரீல் 100-ஆவது நாள் விழாவை பிரம்மாண்டமாக கொண்டாடிய படக்குழு DIN DIN Monday, January 9, 2017 09:52 AM +0530 வெள்ளி விழா, பொன் விழா என்ற காலகட்டம் போய் ஒரு வாரத்துக்கே மல்லுக் கட்டுகிறது தமிழ் சினிமா. இந்நிலையில் 100-ஆவது நாள் விழாவை பிரம்மாண்டமாக கொண்டாடியிருக்கிறது "தர்மதுரை' படக்குழு. "ஸ்டுடியோ 9 புரொடக்ஷன்ஸ்' தயாரித்த இப்படத்தை சீனு ராமசாமி எழுதி இயக்கியிருந்தார். விஜய் சேதுபதி, தமன்னா உள்ளிட்ட பலர் நடித்தனர். தமிழகம் முழுவதும் பரவலான இடங்களில் 100-ஆவது நாளை இப்படம் நிறைவு செய்து விளம்பரங்கள் வெளியிடப்பட்டிருந்த நிலையில், விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று படக்குழுவினருக்கு கேடயம் வழங்கினார். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/9/w600X390/vijaysethupathi.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/jan/09/100-ஆவது-நாள்-விழாவை-பிரம்மாண்டமாக-கொண்டாடிய-படக்குழு-2629742.html
2629741 சினிமா நியூஸ் ரீல் நயன்தாரா, அனுஷ்காவை பின்பற்றும் த்ரிஷா DIN DIN Monday, January 9, 2017 09:50 AM +0530 நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்கா உள்ளிட்ட சீனியர் நடிகைகள் தங்களது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளைத் தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்து விட்டனர். "மாயா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது "அறம்', "டோரா' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. இப்படங்கள் முழுக்க முழுக்க நயன்தாராவை மட்டுமே மையமாகக் கொண்டு நகரும் கதைகளாக உருவாகி வருகின்றன. அனுஷ்காவும் "அருந்ததி', "பாகுபலி' உள்ளிட்ட படங்கள் போன்று தன்னை முன்னிறுத்தும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து  நடித்து வருகிறார். இந்த வரிசையில் தற்போது த்ரிஷாவும் இணைகிறார். பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வரும் த்ரிஷா, தன்னை முன்னிறுத்துகிற கதாபாத்திரங்களைத் தேர்வு செய்வதில் ஆர்வமாக இருந்து வருகிறார். தற்போது அதன் முதன் முயற்சியாக உருவாகும் படத்துக்கு "1818' எனப் பெயரிடப்பட்டுள்ளது. மைன்ட் டிராமா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சுமன், ராஜேந்திரபிரசாத், பிரமானந்தம், ரமேஷ் திலக், மீரா கோஷல் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.  தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் இப்படத்தை ரிதுன்சாகர் எழுதி இயக்குகிறார்.  

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/9/w600X390/trisha.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/jan/09/நயன்தாரா-அனுஷ்காவை-பின்பற்றும்-த்ரிஷா-2629741.html
2629738 சினிமா நியூஸ் ரீல் சதுர அடி 3500 DIN DIN Monday, January 9, 2017 09:36 AM +0530 உண்மைச் சம்பவத்தைத் தழுவி உருவாகி வரும் படம் "சதுர அடி 3500.' ரகுமான், இனியா, நிகில் மோகன், ராம்கோபால் வர்மாவின் "ஐஸ்கிரீம்' படத்தில் அறிமுகமாகி பெரும் வரவேற்பைப் பெற்ற சுவாதி தீக்ஷித் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் ஸ்டீபன். சென்னை மாநகரத்தில் அண்மையில் நடந்த ஒரு சம்பவத்தை மையமாகக் கொண்டு திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. த்ரில்லர் பாணி கதைகள் பெரும் அளவில் வெளிவந்து  கொண்டிருக்கும் இவ்வேளையில், அதே பாணியில் இப்படம் உருவாகி வருகிறது. வழக்கமான அமானுஷ்ய சக்திகளின் கதை என்றில்லாமல், மனிதர்களை மட்டுமே மையமாக கொண்டு நடந்த சம்பவம் இது. ஆவி புகுந்த இனியாவின் ஆக்ரோஷமான நடிப்பில் சுவாதி தீக்ஷித் மிரளும் காட்சிகள் திகிலாக படமாகியிருக்கின்றன. மறைந்த கவிஞர் நா.முத்துக்குமார் பாடல் வரிகளுக்கு கணேஷ் ராகவேந்திரா இசை அமைத்திருக்கிறார். ஆனந்தகுட்டன், ஐ.பிரான்சிஸ் ஒளிப்பதிவு செய்கின்றனர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/9/w600X390/Q1.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/jan/09/சதுர-அடி-3500-2629738.html
2628810 சினிமா நியூஸ் ரீல் நல்ல கதைதான் முக்கியம்! ப்ரணிதா DIN DIN Saturday, January 7, 2017 04:23 PM +0530 முன்னணி இடத்துக்கு தகுதிகள் நிறைய இருந்தும்,  அவ்வப்போது வரும் வாய்ப்புகளில் மட்டுமே நடிக்கிறார் ப்ரணிதா. "சகுனி', "மாசு' ஆகிய படங்களைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பின் "எனக்கு வாய்த்த அடிமைகள்' படத்தில் நடிக்கிறார். ""தெலுங்குதான் என் மொழி என்றாலும், தமிழ் சினிமாக்களில் நடிப்பதையே பெரிதும் விரும்புகிறேன். கமர்ஷியல் சினிமாக்களின் வாய்ப்புகளை நான் பெரிதாக ஏற்பதில்லை. தெலுங்கில் அப்படி நடித்தாலும், தமிழில் நல்ல கதாபாத்திரத்துக்காகவே காத்திருக்கிறேன். கவர்ச்சியாக நடிப்பதை விட நல்ல நடிகை என பெயர் வாங்கவே ஆசைப்படுகிறேன். "எனக்கு வாய்த்த அடிமைகள்' படத்தின் திரைக்கதை வழக்கமானதில் இருந்து மாறுபட்டது. காதல் ஜோடிகளுக்கு இடையே தற்போது பிரேக் - அப் சகஜமாகி வருகிறது. அப்படியொரு நிலையிலிருக்கும் ஜோடியின் கதை இது. தற்போது நான் நன்றாக தமிழ் பேச கற்றுக் கொண்டிருக்கிறேன். இதனால் எல்லா கதாபாத்திரங்களையும் எளிதாக கையாள முடியும் என நினைக்கிறேன். காதல் தோல்வி ஏற்பட்டால் அதற்கு கொலையோ, தற்கொலையோ தீர்வு கிடையாது என்பதை சொல்வதுதான் கதையின் மையம்'' என்கிறார் ப்ரணிதா.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/7/w600X390/m8.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/jan/07/நல்ல-கதைதான்-முக்கியம்-ப்ரணிதா-2628810.html
2628809 சினிமா நியூஸ் ரீல் உதிரிப்பூக்களின் பாதிப்பில்...! DIN DIN Saturday, January 7, 2017 04:22 PM +0530 சைட்டோ ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "என்னோடு நீ இருந்தால்.' மானசா நாயர்,  வெண்ணிற ஆடை மூர்த்தி,  ரோகிணி,  அஜய் ரத்னம், வையாபுரி,  பிளாக் பாண்டி,  மீரா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி கதாநாயகனாக நடிக்கிறார் மு.ரா.சத்யா. இலக்கிய அனுபவங்களிலிருந்து இயக்குநராகி இருக்கும் சத்யாவிடம் பேசுகையில்... ""எப்போதும் படிப்பும்,  எழுத்துமாக இருப்பேன். அப்படி ஒரு சமயம் மகேந்திரனின் "உதிரிப்பூக்கள்' திரைக்கதையைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பாதிப்பில் நான் எழுதிய கதைதான் இது. சிலவற்றைப் பற்றி நாம் பேசிக் கொண்டே இருப்போம். ஆனால் அதைப் பற்றி விழிப்புணர்வு இருக்காது. அதற்காகவே இக்கதையை சினிமாவாக எடுக்க வேண்டும் எனத் தோன்றியது. காதல் பிரதானமாக இருந்தாலும், உள்ளுக்குள் இருக்கிற அக்கறை உணர்வு எல்லாருக்குமானது'' என்கிறார் மு.ரா.சத்யா. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/7/w600X390/m7.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/jan/07/உதிரிப்பூக்களின்-பாதிப்பில்-2628809.html
2628808 சினிமா நியூஸ் ரீல் த்ரில்லர் கதை "456'! DIN DIN Saturday, January 7, 2017 04:21 PM +0530 தலைப்புகளில் தனித்துவம் காட்டுவதற்காக எண்களில் பெயர் சூட்டுவது அவ்வப்போது நடந்து வருகின்றன. கதையில் முக்கிய அங்கம் வகிக்கும் வகையில் இந்தப் பெயர்கள் தேர்வு செய்யப்படுகின்றன. "3', "555', "420' என பல படங்கள் வெளிவந்துள்ளன. இந்த வரிசையில் அடுத்து இணைய வரும் படம் "456'. விஜய் டி.வி.யின் "கனா காணும் காலங்கள்', "ஆபீஸ்' தொடர்களின் மூலம் வரவேற்பை பெற்ற கார்த்திக் ராஜ் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். மலையாள வரவு நிரஞ்சனா கதாநாயகியாக நடிக்கிறார். மனோபாலா, கிரேன் மனோகர், மஹேஸ்வரன், சுரேகா உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களை ஏற்கிறார்கள். முக்கிய கதாபாத்திரம் ஏற்பதுடன் இப்படத்தின் கதை எழுதி இயக்குகிறார் சாய் சத்யம். காதல் மற்றும் த்ரில்லர் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. பிலிம் ஆர் சுந்தர் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப்பள்ளியில் பயின்ற சஷாங் ரவிச்சந்திரன் இசையமைக்கிறார். ராஜராஜன் படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். மேக் ரியல் மீடியா பாலமுருகன் படத்தின் விஷூவல் எஃபெக்ட்ஸ் பணிகளை கவனிக்கிறார். படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/7/w600X390/m2.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/jan/07/த்ரில்லர்-கதை-456-2628808.html
2628807 சினிமா நியூஸ் ரீல் 19 ரூபாயில் படம்...! DIN DIN Saturday, January 7, 2017 04:20 PM +0530 "சிங்கம்', "வேலையில்லா பட்டதாரி' என மெகா ஹிட்டானப்  படங்களின் இரண்டாம் பாகம் வெளிவரும் சீஸன் இது. இந்த வரிசையில் இடம் பிடிக்கிறது "மதுரை டூ தேனி வழி: ஆண்டிப்பட்டி.' கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. போட்டோ அண்ட் வீடியோ கிராபர்ஸ் இணைந்து வழங்க எஸ்.பி.எஸ்.மீடியா ஒர்க்ஸ் சார்பில் இப்படம் தயாராகி வருகிறது. விஷ்வக், சிவகாசி பாலா, சௌமியா, தேஜஸ்வி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். விஷுவல் கம்யூனிகேஷன் படித்த இரண்டு மாணவர்களும்,  ஒரு மாணவியும் இணைந்து ஒரு திரைப்படத்தை இயக்குவதற்காக முயற்சிக்கிறார்கள். அவர்களின் அந்தப் படம் இயக்கும் கனவு நிறைவேறியதா? இல்லையா? என்பதே இதன் கதை. காமெடி, காதல், குடும்ப சென்டிமெண்ட் கலந்து தேனியிலிருந்து மதுரை வருகிற பேருந்து பயணத்தின் சுவாரஸ்யங்களோடு உருவாகியுள்ளது திரைக்கதை. மேலும் தமிழ் சினிமாவில் முதல் முயற்சியாக தியேட்டர்களில் வெறும் 19 ரூபாயில் படம் பார்க்கும் அனுபவத்தை ரசிகர்களுக்கு தரும் விதமாக ஒரு மிகப்பெரிய முயற்சியை நெக்ஸ்ட் லெவல் சினிமாஸ் நிறுவனம் இப்படம் மூலம் செய்யவுள்ளது. மே மாதம் வெளியாகவிருக்கும் இப்படத்தை ரசிகர்கள் தியேட்டரில் 19 ரூபாய் என்கிற மிகக்குறைந்த கட்டணத்தில் பார்த்து ரசிக்கலாம். ஒளிப்பதிவு செய்து கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் எஸ்.பி.எஸ்.குகன்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/7/w600X390/m1.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/jan/07/19-ரூபாயில்-படம்-2628807.html
2626506 சினிமா நியூஸ் ரீல் பாடல்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொண்ட மதன் கார்க்கி DIN DIN Tuesday, January 3, 2017 10:26 AM +0530 கவனிக்கத்தக்க பாடலாசிரியராக வளர்ந்து வரும் மதன் கார்க்கி, கடந்த ஆண்டு 31 படங்களில் பணியாற்றி 71 பாடல்களை எழுதியிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான், யுவன்ஷங்கர் ராஜா, ஹாரீஸ் ஜெயராஜ், டி.இமான், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களை எழுதியுள்ள கார்க்கி, கோபி சுந்தர், குறளரசன், டிரம்ஸ் சிவமணி, நிவாஸ் பிரசன்னா என வளர்ந்து வரும் இசைக் கலைஞர்களின் இசையிலும் தன் பாடல்களைப் படைத்துள்ளார். " 7 ஆண்டுகள் கடந்து விட்டன நான் பாடல்கள் எழுத வந்து. சென்ற ஆண்டின் இறுதியில் நான் பாடல்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டு, தரமான பாடல்களுக்கு உழைக்கும் ஆசையை வெளிப்படுத்தினேன். திரைப் பாடல்களை குறைத்துக் கொண்டு தனியிசை பாடல்களுக்காக தொடங்கிய டூபாடு தளத்திற்கு 85 தனியிசைப் பாடல்கள் இயற்ற காலம் கிடைத்தது. "மிருதன்' படத்தில் வந்த "முன்னாள் காதலி...'', "மனிதன்' படத்தில் வந்த "முன் செல்லடா...'', "இருமுகன்' படத்தில் இடம் பெற்ற "கண்ணை விட்டு...'', "24' படத்துக்காக எழுதிய "மெய் நிகரா...'', "பெங்களூரு நாள்கள்' படத்துக்காக "என் விழியின் கனவு...'', "ஜீரோ' படத்துக்காக நான் எழுதிய "வேறெதுவும்...'' என வெவ்வேறு சூழல்களில் பாடல்கள் எழுதும் வாய்ப்பு என்னையும், என் எழுத்தையும் மேம்படுத்தியுள்ளது. உறுதுணை புரிந்த அனைவருக்கும் என் நன்றிகள்'' என்றார் கார்க்கி. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/3/w600X390/madhankarki.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/jan/03/நான்-பாடல்களின்-எண்ணிக்கையை-குறைத்துக்-கொண்டேன்-மதன்-கார்க்கி-2626506.html
2626509 சினிமா நியூஸ் ரீல் சிபிஐ அதிகாரி வேடத்தில் நயன்தாரா DIN DIN Tuesday, January 3, 2017 10:21 AM +0530 "டிமான்டி காலனி' படத்தின் மூலம் பரவலான பாராட்டுக்களைப் பெற்ற இயக்குநர் அஜய் ஞானமுத்து, அடுத்து இயக்கும் படம் "இமைக்கா நொடிகள்.' நயன்தாரா அக்காவாகவும், அதர்வா தம்பியாகவும் நடிக்கின்றனர். த்ரில்லர் பாணி திரைக்கதையான இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பெங்களூருவில் நடந்து வருகிறது. சிபிஐ அதிகாரியாக நடிக்கும் நயன்தாரா இப்படத்துக்காக பிரத்யேகமாக குதிரையேற்ற பயிற்சி, சண்டை பயிற்சியைக் கற்று நடித்து வருகிறார். வில்லனாக பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் நடிக்கிறார். மேலும் நான்கு வயது குழந்தைக்குத் தாயாக நடிக்கிறார் நயன்தாரா. முதலில் இந்த படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியே கிடையாது என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் ஒரு ப்ளாஷ் பேக் காட்சி இணைக்கப்பட்டுள்ளது. அதில் நயன்தாராவுக்கு விஜய் சேதுபதி கணவராக நடிப்பார் என்று தெரிகிறது. இதற்காக விஜய்சேதுபதி கால்ஷீட் ஒதுக்கியுள்ளார். நயன்தாரா - விஜய்சேதுபதி தொடர்பான காட்சிகள் படப்பிடிப்பின் இறுதியாக எடுக்கப்படவுள்ளது. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/3/w600X390/nayanthara.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/jan/03/சிபிஐ-அதிகாரி-வேடத்தில்-நயன்தாரா-2626509.html
2626508 சினிமா நியூஸ் ரீல் இயக்குனர் அவதாரம் எடுக்கும் எடிட்டர் பி.லெனின் DIN DIN Tuesday, January 3, 2017 10:18 AM +0530 மாற்று சினிமாக்களில் பெரிதும் ஆர்வம் கொண்ட எடிட்டர் பி.லெனின் எழுதி இயக்கும் படம் "கண்டதை சொல்லுகிறேன்.' "பூ' ராமு, ஆனந்த், ஜானகி, கருணா, ஜெனிஃபர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 106 நிமிடங்கள் மட்டுமே ஓடக் கூடிய இப்படத்தை தனஞ்ஜெயன் தயாரிக்கிறார். மக்களில் குறிப்பிட்ட ஒரு பிரிவினரது கலை- கலாசாரத் தன்மையுடன் தங்கள் உறவினர் மற்றும் நண்பர்களுடனான இன்ப- துன்பங்களையும் அன்பையும், அவர்களின் குடும்ப உறவுகள் தொடர்பான அம்சங்களையும் விளக்கும் கதையாக இது உருவாகியுள்ளது. மாசானம், தன் முன்னோரால் தனக்கு வழங்கப்பட்ட இசைக்கருவியான பறை முழக்கத்துக்கு இந்த சமூகம் உரிய மரியாதை அளிக்காததால் விரக்தி அடைகிறான். மாசானத்தின் மகன் சுடலை பறை இசைப்பதில் கெட்டிக்காரன். அவன் பாரம்பரியமான இந்த இசைக்கருவி வாசிப்பதில் சில மாற்றங்களை ஏற்படுத்தி, அதை, மற்றவர்களுக்கு சுவாரஸ்யமாகக் கற்பிக்கிறான். கிராமத்துக்கு வரும் சித்தார்த், சுடலையின் பறையிசையைக் கற்றுக் கொள்கிறான். பணத்தையே குறியாகக் கொண்ட மனநிலையிலிருந்து மாறுபட்டு புதிய இளந்தலைமுறையினரான சுடலையும் சித்தார்த்தும் சேர்ந்து இசைத் துறையை எப்படி செழுமைப்படுத்தினர் என்பது திரைக்கதை. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/3/w600X390/kandathai.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/jan/03/இயக்குனர்-அவதாரம்-எடுக்கும்-எடிட்டர்-பிலெனின்-2626508.html
2626507 சினிமா நியூஸ் ரீல் மீண்டும் ரஜினியின் "பாட்ஷா'! DIN DIN Tuesday, January 3, 2017 10:14 AM +0530 ரஜினியின் "பாட்ஷா' படத்தை மெருகூட்டி 5.1 ஒலி வடிவத்தில் மீண்டும் வெளியிட இருக்கிறார்கள். "பாட்ஷா' படத்தைத் தயாரித்த சத்யா மூவிஸ் நிறுவனம், தங்களுடைய நிறுவனம் தொடங்கி 50 ஆண்டுகள் ஆவதால் மீண்டும் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது. இப்படத்தில் ரஜினி உள்ளிட்ட நடிகர்கள் பேசிய டப்பிங்கை படக்குழு எதுவுமே செய்யவில்லை.  பின்னணி இசையை மட்டும் தற்போதுள்ள கருவிகளை வைத்து புதிதாக உருவாக்கி சேர்க்கப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேகமான இசை வடிவத்தை தற்போதுள்ள நவீன டிஜிட்டல் வடிவத்துக்கு மாற்றியுள்ளார் இசையமைப்பாளர் தேவா. மெருகூட்டப்பட்ட "பாட்ஷா' படத்தின் டீஸருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு உள்ள நிலையில், ஜனவரியில் வெளியாகிறது இப்படம். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/3/w600X390/basha_movie.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/jan/03/மீண்டும்-ரஜினியின்-பாட்ஷா-2626507.html
2626505 சினிமா நியூஸ் ரீல் "அட்டு' படத்தின் இசை விநியோக உரிமையை கைப்பற்றிய ஸ்டுடியோ 9 மியூசிக் DIN DIN Tuesday, January 3, 2017 10:07 AM +0530 "சலீம்', "தர்மதுரை' உள்ளிட்ட படங்களின் மூலம் தயாரிப்பாளராகவும், "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', "சூது கவ்வும்', "தங்க மீன்கள்', "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' உள்ளிட்ட படங்களின் மூலம் தன்னை விநியோகஸ்தராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர் ஆர்.கே.சுரேஷ். "தாரை தப்பட்டை', "மருது' உள்ளிட்ட படங்களில் நடிகராகவும் பரிணமித்துள்ள இவர், தற்போது "ஸ்டுடியோ 9 மியூசிக்' எனும் புதிய இசை நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதன் மூலம் தரமான தமிழ்த் திரைப் பாடல்களை வெளியீடு செய்யவுள்ளது இந்நிறுவனம். இதன் தொடக்கமாக புதுமுகங்கள் நடிப்பில் உருவாகி வரும் "அட்டு' படத்தின் இசை விநியோக உரிமையை இந்நிறுவனம் பெற்றுள்ளது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/3/w600X390/Attu-Movie-Teaser.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2017/jan/03/அட்டு-படத்தின்-இசை-விநியோக-உரிமையை-கைப்பற்றிய-ஸ்டுடியோ-9-மியூசிக்-2626505.html
2624964 சினிமா நியூஸ் ரீல் சுஜாதாவின் நம்பிக்கை வார்த்தைகள்! DIN DIN Saturday, December 31, 2016 09:22 AM +0530 மென்பொருள் பொறியாளராகத் தொடங்கி பின் தொலைக்காட்சியில் தயாரிப்பாளராக பணியாற்றிக்கொண்டு பகுதி நேரமாக திரைப்படங்களுக்கு பாடல் எழுதிக்கொண்டிருந்தவர் கபிலன் வைரமுத்து. இன்று திரைத்துறையில் முழுநேர எழுத்தாளராக இயங்கத் தொடங்கியிருக்கிறார்.

எழுத்துலகம் நீங்கள் விரும்பி வந்த துறையா...?

எமக்குத் தொழில் எழுத்துதான். தமிழ்ப் பாட்டுலகம் இல்லாமல் கதை, திரைக்கதை, வசனம் என இன்னப் பிற அம்சங்களில் தேர்ந்து திகழ வேண்டும் என்பது என் ஆசையாக இருந்தது. அதை நோக்கித்தான் பயணப்பட்டேன். எழுத்து, வாசிப்பு என இயங்கிக் கொண்டே இருந்தால் என்ன நடக்குமோ, அந்த இடத்துக்கு வந்திருக்கிறேன்.
 
சமீபத்திய மகிழ்வு...

இந்த ஆண்டின் தொடக்கத்தில், தொலைக்காட்சி ஊடகத்தை அடிப்படையாகக் கொண்ட "மெய்நிகரி' என்ற என் நாவல் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் பாடப்பொருளாக கற்பிக்கப்பட்ட செய்தி மகிழ்ச்சி தந்தது. எழுதுகிற எழுத்து கல்வியாக மாணவர்களைச் சென்றடையும்போது அது இரட்டிப்பு ஆனந்தம் தருகிறது.

அண்ணன் கார்க்கியை போல் சினிமாவில் முழுவதுமாக நீங்கள் இயங்கவில்லையே...

இயக்குநர்களுக்கும் - இசையமைப்பாளர்களுக்கும் - பாடலாசிரியர்களுக்கும் ஒளிப்பதிவாளர்களுக்கும் இருப்பது போல, தமிழ்த் திரையுலகில் எழுத்தாளர்களுக்கும் தெளிவான பணி முகம் வேண்டும். காலப்போக்கில் உருவாகும்.  பல ஆண்டுகளுக்கு முன் எழுத்தாளர் சுஜாதா அவர்கள் சொன்ன நம்பிக்கை வார்த்தைகள் இது. அதன் அடிப்படையில் சில முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறேன். "அநேகன்' படத்தில் "தெய்வங்கள் இங்கே...' என்ற பாடலுக்காக இயக்குநர் கே.வி.ஆனந்த்தை சந்தித்தபோது என் எழுத்து விருப்பங்களை தெரிவித்தேன். விரைவில் வெளிவரவிருக்கும் "கவண்' திரைப்படத்தில் எழுத்தாளராகவும் பாடலாசிரியராகவும் படம் நெடுக பங்களிக்கின்ற வாய்ப்பை வழங்கியிருக்கிறார். அவரோடு பயணித்த இந்த ஆண்டு கலகலப்பும் கல்வியும் நிறைந்த கல்லூரி ஆண்டைப் போல் இருந்தது. தற்போது மேலும் சில மூத்த இயக்குநர்களோடு பணியாற்றத் தொடங்கியிருக்கிறேன். தீவிரமான ரசிகர்கூட்டம் ஆர்வமாக எதிர்பார்த்துகொண்டிருக்கும் படங்களில் அங்கம் வகிப்பதன் மூலம் வெகுஜன சினிமாவின் வெவ்வேறு பரிமாணங்களை அறிய முடிகிறது.

அடுத்தடுத்து...

மூத்தத் தலைமுறையோடு பணிபுரிகிற அதே சமயம், என்னைப் போல் வளர்ந்து வரும் தலைமுறையோடும் கை கோர்த்திருக்கிறேன். கௌதம்மேனன் அவர்களின் உதவி இயக்குநர் மனு ஆனந்த், மிஷ்கின் குழுவில் இருந்த பிரியதர்ஷனி, தரணி யிடம் பணிபுரிந்த ஹரிபாஸ்கர் போன்ற அறிமுக இயக்குநர்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதும்போதும் - "இந்திரஜித்' படத்திற்காக கிருஷ்ணபிரசாத், "மதியால் வெல்' படத்திற்காக பாலமுரளி போன்ற பல புதுமுக இசையமைப்பாளர்களுக்கு பாடல் எழுதும்போதும் அவர்களின் கண்கள் வழி என் உலகம் விரிகிறது.

வைரமுத்து சாரிடம் வியப்பது...

நேர நிர்வாகம்.

அப்பாவிடம் பிடித்த 5 பாடல்கள்...

"என்னில் விழுந்த மழைத்துளியே...', "எரிமலை எப்படி பொறுக்கும்...', "கண்ணுக்கு மை அழகு...', "மூங்கில் காடுகளே...', "அந்திமழை பொழிகிறது...'.

அப்பா தவிர்த்து பிடித்த எழுத்தாளர்கள்...

அப்துல் ரகுமான், ஈரோடு தமிழன்பன், அறிவுமதி, யுகபாரதி, கல்யாண்ஜி.
 

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/12/31/w600X390/m1.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2016/dec/31/சுஜாதாவின்-நம்பிக்கை-வார்த்தைகள்-2624964.html
2624963 சினிமா நியூஸ் ரீல் மூதாதையர்களின் போராளி! DIN DIN Saturday, December 31, 2016 09:21 AM +0530 2007- ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வீடியோ விளையாட்டு ஒன்றின் கருவை மையமாக கொண்டு ஹாலிவுட்டில் உருவாகியுள்ள படம் "அஸ் ஆஸியேன்ஸ்  கீரிடு'. அதிரடி சண்டைக் காட்சிகளும், அற்புத சாகசக் காட்சிகளும் நிறைந்த பொழுதுபோக்கு அம்சங்களை கொண்ட இப்படம், ஸ்பெயின் நாட்டில் நடக்கும் 15-ஆம் நூற்றாண்டு கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத சூழலில், தனது மூதாதையர்களின் வாழ்க்கை நினைவுக்கு வருகிறது. நிழலாகவும், நிஜமாகவும் கடந்த கால சம்பவங்கள் பின் தொடர்கிறது. நினைவுகளில் சிக்கி மீள முடியாமல் தவிக்கும் ஒரு கதாபாத்திரத்தின் செயல்பாடுகளே கதை. மரணத் தண்டனை விதிக்கப்பட்ட ஒரு நபரை, சமூக நல அமைப்பு காப்பாற்றுகிறது. அந்த அமைப்புக்கு நன்றிக்  கடனாக ஓர் ஆராய்ச்சிக்கு உதவுகிறார் அந்த நபர். தொழில்நுட்ப வளர்ச்சியின் மேம்பாட்டால் 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தனது மூதாதையர்களில் ஒருவரான போராளியின் நினைவலைகள் மற்றும் செயல்பாடுகளுக்குள் சிக்கி கொள்கிறார். நூற்றாண்டுகளை கடந்து தொடரும் அந்த போராட்டத்தை முன்னெடுக்கும் போராளியாக அவர் மாற வேண்டிய சூழல் உருவாகிறது. அதன் பின் நடந்தவை என்ன என்பதே கதை. கல் லன்ஸ், மேரியன் லார்ட், ஜெர்மி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜஸ்டீன் இயக்கியுள்ளார். வரும் 30-ஆம் தேதி தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/12/31/w600X390/m2.jpg http://www.dinamani.com/cinema/news-reel/2016/dec/31/மூதாதையர்களின்-போராளி-2624963.html