Dinamani - தமிழ்நாடு - http://www.dinamani.com/travel/travel-tamilnadu/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2917058 சுற்றுலா தமிழ்நாடு வாழ்க்கைல எக்கனாமிக்கல் எக்ஸ்டஸி வேணும்னா சுருளி அருவிக்கு சுற்றுலா போங்க பாஸ்! கார்த்திகா வாசுதேவன் DIN Thursday, May 10, 2018 12:03 PM +0530  

தேனி மாவட்டம், கம்பம் நகருக்கு அருகில் இருக்கிறது சுருளிப்பட்டி எனும் சிற்றூர். இந்த ஊர் இரண்டு விஷயங்களுக்காகத் தமிழக அளவில் பிரபலம். ஒன்று காமெடி நடிகர் சுருளிராஜன் பிறந்தது இந்த ஊரில் தான் என்பதால் இவ்வூரைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் உண்டு. இரண்டாவது விஷயம் இவ்வூரில் இருக்கும் சுருளி அருவி.

அருவிக்குச் செல்ல நபர் ஒருவருக்கு 5 ரூபாய் கட்டணம். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் எதுவுமில்லை. காலை 7 மணி முதல் மாலை 4.30 மணி வரை அருவிக்கரையில் இருக்கலாம். அதற்குமேல் அனுமதி இல்லை.

இந்த அருவியில் வருடத்தின் அத்தனை நாட்களிலும் ஆர்ப்பரித்துக் கொண்டு தண்ணீர் கொட்டுவதில்லை... எப்போதாவது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெருமழைக்கு வாய்ப்பிருக்கும் பொது அருவியில் நீர்வரத்து அதிகமாகி அருவியை அணுக முடியாமல் செல்லும் வழி வெள்ளநீரால் அடைபட்டுக் கொண்டால் மட்டுமே இந்த அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்படும்.

சில நேரங்களில் நக்ஸலைட்டுகள் ஊடுருவல் எனக்கூறி அப்போதும் அருவியில் குளிக்க காட்டிலாகாவினர் தடை விதிப்பார்கள். மற்றபடி தன்னில் ஆசையுடன் நனைய வரும் சுற்றுலாப் பயணிகளை அரவணைத்து அணைத்துக் கொள்ளும் அன்னையாகவே அன்பு காட்டக் கூடியது இந்த அருவி. மிதமான வேகத்தில் உச்சந்தலையில் ஜில்லிட்டு இறங்கும் அருவி நீர் முதல்முறை அருவிக்குளியலில் ஈடுபடுவோருக்கு மிகப்பெரிய எக்ஸ்டஸி (பேரின்ப உணர்வு).

பார்க்கிங் ஏரியாவை அருவியிலிருந்து 2 கிலோமீட்டருக்கு முன்பே நிறுத்தி விடுகிறார்கள். அங்கே வாகனங்களைப் பார்க் செய்து விட்டு இறங்கி நடந்து செல்ல வேண்டும். நடக்கும் போது கொஞ்சம் கவனம் தேவை. இல்லாவிட்டால் மரங்கள் தோறும் தொங்கிக் கொண்டும், பேன் பார்த்துக் கொண்டும், குடும்பப் பஞ்சாயத்துகளில் மத்யஸ்தம் செய்து கொண்டும் இருக்கும் ஆஞ்சநேய அவதாரர்களுக்கு நமது பொருட்களைத் தாரை வார்க்க நேரும். அவற்றைக் குரங்குகள் என்று சொல்ல மனம் வரவில்லை. உற்றுக் கவனிக்கையில் அவற்றின் அறிவு பிரமிக்கச் செய்வதாக இருக்கிறது.

நாங்கள் கடக்கும் போது காயம் பட்ட வயதான மாருதியொன்றின் உடலில் எங்கெங்கே காயங்கள் உள்ளன என்று ஆராய்ந்து கைகளால் மென்மையாகத் தடவி ஆறுதல் படுத்திக் கொண்டிருந்தது இளம் மந்தியொன்று. குட்டி மந்திகள் ஒன்றிரண்டு காயம் பட்ட மாருதியின் மடியில் தலை சாய்த்தும், தோளில் முகம் புதைத்தும் சோகம் காட்டி அரவணைத்துக் கொண்டிருந்தன. சற்றுத் தொலைவில் காயத்துக்கு காரணமான இளம் ஆண் மந்தியொன்று இன்னும் கோபமடங்காது கர்புர்ரெனத் தன் கோபத்தை வெளிப்படுத்திய வண்ணம் அலைந்து கொண்டிருந்தது. கிட்டத்தட்ட ஆதிமனிதர்களை நினைவுபடுத்திக் கொண்டு மனித இனத்தின் ஜனன சாட்சியங்களாக அரங்கேறிக் கொண்டிருந்தது அந்தக் காட்சிகள் அங்கு.

இந்த முறை அருவிக்குச் செல்லும் வழியிலமைந்த பாராட்டத்தக்க அம்சங்களில் ஒன்றெனச் சொல்லவேண்டுமெனில் அது கழிப்பிட வசதிகளெனச் சொல்லலாம். ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக இரண்டு, மூன்று இடங்களில் கழிப்பிட வசதிகள் சுத்தமாகப் பராமரிக்கப்பட்டிருந்தன. கழிவறைகளில் சிற்சில சிதிலங்கள் இருந்தாலும் சுகாதாரத்தில் அவை மோசமென்று சொல்லமுடியாது. கழிவறைக்குழாய்களில் தங்கு தடையின்றி தண்ணீர் வருவதே பெரிய விஷயமில்லையா?

அருவிக்குச் செல்லும் வழியெங்கும் திராட்சைத் தோட்டங்கள் பரவலாகக் கண்ணில் படுகின்றன. தோட்டக்காரர்கள் மிக அருமையான முறையில் அந்தத் திராட்சைத் தோட்டங்களைப் பராமரித்துக் கொண்டிருப்பது அங்கிருந்த சுத்தத்தில் பிரதிபலித்தது. அருவிக்குச் சென்று திரும்புகையில் கிலோ 50 ரூபாய்க்கு நம்பி திராட்சைகளை வாங்கிச் செல்லலாம். பழங்கள் புளிப்போ, துவர்ப்போ இல்லாமல் நல்ல ருசி!

ஒருவழியாக அருவியை நெருங்கி விட்டீர்கள் எனில் ஒரு ஆற்றுப்பாலம் குறுக்கிடும். பெருமழைக்காலங்களில் இந்த ஆற்றுப்பாலத்தை மறித்துக் கொண்டும் தண்ணீர் வரத்து இருக்கும். அப்போது பாலத்தைக் கடக்கமுடியாத போது அருவியில் குளிக்கத் தடை விதிப்பார்கள். சாதாரண காலங்களில் இதைத் தாண்டினால் அருவிக்குச் செல்லும் படிகள் நெருங்கி விடும். ஆரோக்யமானவர்களால் விறுவிறுவென ஏறிக் கடக்க முடிவதான அகலமான படிகள் அருவி தொடும் இடத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எனத் தனித்தனியாகப் பாதை பிரிவதோடு பெண்கள் பகுதியில் ஆடை மாற்றுவதற்கும், கொண்டு செல்லும் பொருட்களை பாதுகாக்கவும் ஓரிரு சிறு லாக்கர் அறை வசதியும் செய்யப்பட்டிருக்கிறது. இது காட்டிலாகா சார்பில் இலவசமாகக் கட்டப்பட்டிருக்கலாம். ஆனால் அதைப் பராமரிப்பவர்கள் ஏதோ உங்களால் முடிந்ததைக் கட்டணமாகக் கொடுங்கள் என்று கேட்கிறார்கள். கொடுத்தால் தங்களின் சொத்துக்கள் எதுவும் கரையாது என நினைப்பவர்கள் மறுக்காமல் ஐம்பதோ, நூறோ கொடுத்தார்கள். மாற்று ஆடைகள், கைப்பைகள் என அங்கே வைத்து விட்டு அறையைப் பூட்டி சாவியை நாமே வைத்துக் கொள்ளலாம். 

நாங்கள் அங்கே செல்லும் போது அருவியில் தண்ணீர் வரத்து மிதமாகத் தான் இருந்தது. காலையில் பத்து மணிக்கு முன்பாகச் சென்று விட்டால் கூட்டம் சற்றுக் குறைவாக இருக்கிறது. நேரமாக, ஆக வெயில் ஏற, ஏற கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்வதையும் காண முடிந்தது. அருவியிலிருந்து கொட்டும் நீரை மேலே எங்கேயோ தடுத்து ஒரு டியூப் வழியாக குடிநீராகவும் கீழே தேவைப்படுபவர்களுக்கு வழங்குகிறார்கள். அருவியில் குளிக்க வைக்க முடியாத சிறு குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் இந்தத் தண்ணீரில் தலையையும், உடலையும் ஆசை தீர நனைத்துக் கொள்ளலாம். தண்ணீர் தேனாக இனிக்கிறது. நம்மூர் RO தண்ணீரெல்லாம் இதன் சுவைக்கு முன் பிச்சை வாங்க வேண்டும். கற்கண்டுத் தித்திப்பாய் இன்னும் அதன் சுவை நாவை விட்டு அகலவில்லை.

ஆயிற்று, இப்போது அருவிக்கு நேர் கீழே வந்து நின்று கும்பலில் குளிக்க வாகான இடமும் பிடித்தாயிற்று. ஆனந்தத்திற்கு குறைவில்லை. முதலில் சிதறித் தெறிக்கும் அருவியில் முதல் பெருந்துளி நேராக தமது உச்சந்தலை தொடும் போதே கண் மூடிப் பரவசமாகி விடுகிறார்கள் பலர். சேலையிலும், நைட்டியிலும், தாவணியிலும், சுரிதாரிலும், முன் கொசுவக் கண்டாங்கிச் சேலையிலுமாக கலர் கலராக தலை முடி விரிந்து பரவி நீரோட்டத்தில் அலையாட அருவி நீர் உச்சந்தலையில் பாய்ந்திறங்கி முழுக்காட்ட கண் மூடி ரசித்து ஆனந்தமாக அனுபவிக்கும் பற்பல தபஸ்வினிகளை அங்கே காண முடிந்தது. கும்பலில் எல்லோரும் சாத்வீகிகளாக இருந்து விடுவதில்லை சில துர்வாசினிகளும் இருந்தார்கள். ‘ஏம்மா, எம்மா நேரந்தான் இப்படி அசையாம ஒரே இடத்துல நின்னு குளிப்ப, நகரும்மா மித்தவங்களும் குளிக்காண்டாமா?!’ என கோப முகம் காட்டி இடித்துத் தள்ளிக் கொண்டு அருவிக்கு தலை காட்டியவர்களையும் காண முடிந்தது. இடித்துத் தள்ளிக் கொண்டும், உரத்து முணுமுணுத்தவாறும் இருந்த போதும் பெண்கள் அருவிக் குளியலின் ஆனந்தமயோனுபவத்தை ஒரு துளி விடாமல் ரசித்துப் பருகினார்கள் என்று தான் சொல்ல வேண்டும். எதிரில் கம்பித் தடுப்பிற்கு அப்பால் ஆண்கள் குளிக்கும் பகுதி. அங்கே எல்லாம் சரக்கடித்து மட்டையானால் முகத்தில் ஒரு ஞான ஒளி தோன்றுமே அந்த ரேஞ்சில் ஆண்கள் அடித்த வெயிலுக்கு ஆனந்தமாக அருவிக் குளியலுக்கு தலையை மட்டுமல்ல மொத்த உடலையும் ஒப்புக் கொடுத்திருந்தனர். அவர்களுக்கென்ன சிற்றாடை தேவையில்லை உள்ளாடை போதுமே. பெண்களை விட ஆண்கள் அதிசுதந்திரமாக அருவிக் குளியலை பேரின்பத்துடன் அனுபவித்து மகிழ்ந்து கொண்டிருந்தனர். உள்ளே சென்ற எவருக்கும் அருவியின் தாலாட்டிலிருந்து தலையை மீட்டுக் கொள்ளும் விருப்பம் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனாலும் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்து தானே ஆக வேண்டும். 

ஒருவழியாக அங்கிருந்த பராமரிப்பாளர் வந்து ‘ரொம்ப நேரமா குளிக்கிறவங்கல்லாம் வெளில வாங்க சார், வாங்க மேடம், மித்தவங்களும் குளிக்கனுமே’ என்று குரல் கொடுத்து உள்ளிருந்த கும்பலைக் கலைத்தனர்.

அப்பாடா! ஒரு வழியா ஆசை தீர அருவிக் குளியல் போட்டாச்சு இனி மீண்டும் வந்த வழியிலேயே 1 1/2 கிலோ மீட்டர் நடந்து பார்க்கிங் பகுதிக்குச் செல்பவர்கள் செல்லலாம். அன்றியும் மதிய உணவு தயார் செய்து எடுத்து வந்து இங்கேயே உண்பதென்றாலும் அதற்கும் அங்கே விஸ்தாரமாக இடமிருக்கிறது. ஒரு தார்பாலின் சீட் விரித்து எத்தனை பேர் வேண்டுமானாலும் பந்தி விரித்து சாப்பிடலாம். பார்க்கிங் பகுதியில் பணியாரம், சமோஷாக்கள், கப்பக்கிழங்கு சிப்ஸ்கள் எனப் பொரித்து விற்கிறார்கள். அவற்றை பெரும்பாலும் யாரும் வாங்கி உண்பதாகத் தெரியவில்லை. கொய்யாப்பழக் கடைகள், இளநீர் கடைகளில் கணிசமான கூட்டம் நின்றது. அது தவிர பேன் சீப்பு, ஈர்விழிகள், போன்ற அதிசயமான பொருட்களையும் தரையில் பரப்பி வைத்து விற்றுக் கொண்டிருந்தார்கள். 

கல்லெறியும் தூரத்தில் சுருளியாண்டவர் ஆலயம் இருக்கிறது. பக்த மகா ஜனங்கள் அங்கேயும் செல்லத் தவறவில்லை. 

கீழிருக்கும் கோயிலைத் தவிரவும் சுருளி மலை மேலும் சிவலிங்கம் ஒன்றுண்டு. 20 ஆண்டுகளுக்கு முன் என் சித்தப்பா குடும்பத்தாருடன் அங்கே சென்று வழிபட்ட அனுபவமுண்டு எனக்கு. பொதுவாக அங்கே மலையேறிச் செல்ல அப்போதெல்லாம் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டிருந்தது. சித்தப்பாவுக்கு மலைப்பகுதிகளில் வாகனம் ஓட்டி அந்தப் பகுதிகளிலெல்லாம் நல்ல அறிமுகமிருந்ததால் துணிந்து எங்களை மேலே அழைத்துச் சென்றார். மலைமேலேறும் ஒற்றையடிப்பாதையில் காட்டுப் புதர்கள், வானுயர்ந்த மரங்கள் மற்றும் முள் மரங்களின் ஊடே நடந்து சென்றால் சுமார் ஒன்றரை மணி நேரத்தில் மேலிருக்கும் சிவனை தரிசிக்கலாம். அங்கே கதம்ப வண்டுகள் நிறைய உண்டு. உடன் வந்த உறவினர் ஒருவரை தேனீ ஒன்று கடித்து விட அவர் சட்டையக் கழற்றி உதறியதில் மரக்கிளை பட்டு கதம்ப வண்டுக் கூட்டம் சிதறிச் சூழ்ந்தது எங்களை. அச்சத்துடன் மலையிறங்கியவர்களை விடாமல் துரத்தின அந்த பெரிய வண்டுகள். அன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் அந்த வண்டுகளில் விஷக் கொடுக்குகளில் சிக்கி அவதிப்பட்டார்கள். மறுநாள் காலை கண்விழித்துப் பார்க்கையில் வண்டினால் கடிபட்டவர்களின் முகம் பேயறைந்தாற் போலிருந்தது. அதன் கொடுக்குகள் பதிந்த தடம் ஏதோ கொடுக்காப்புளி முள் குத்தினாற் போல பிடுங்கி நீக்கக் கடினமானதாக இருந்தது. அந்த வலி தீர கிட்டத்தட்ட ஒரு வாரமானது என்றார்கள் கடிபட்டவர்கள். கடிபடாமல் தப்பியவர்கள் நானும் எனது சித்தப்பாவும் மட்டுமே. இப்போது மலைமேலிருக்கும் சிவனை தரிசிக்க அனுமதியுண்டா? பாதைகள் செப்பனிடப்பட்டிருக்கின்றனவா என்று தெரியவில்லை. இம்முறை நாங்கள் குழந்தைகளுடன் சென்றதால் அதைப் பற்றி எனக்கு விசாரிக்கத் தோன்றவும் இல்லை. அருவியில் குளித்த ஆனந்தமே போதும் என ஊர் திரும்பினோம்.

சுருளி அருவிச் சுற்றுலாவில் தவிர்க்க வேண்டியவை...

  • சுற்றுலாப் பயணிகளில் சிலர் அருவிக்குச் செல்லும் வழியிலிருக்கும் மந்திகளுக்கு சமோஷாக்களையும், இனிப்புப் பணியாரங்களையும் இன்னும் சிப்ஸ், கேக்குகள் என தாங்கள் உண்ணக் கொண்டு வந்த ஐட்டங்களை எல்லாம் பேரன்போடு உவந்து தானமளித்துக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது. சில இடங்களில் இவர்கள் அளிக்கும் ஜங்க் ஃபுட் தானங்களைப் பெற மந்திகள் ஆர்வத்துடன் கையேந்தி நிற்கும், ஏங்கிப் போய் முகம் பார்த்துக் காத்திருக்கும் அவலத்தையும் காண முடிந்தது. இது முற்றிலும் தவறான செய்கை. மனித இனம் தான் பசிக்குப் பிச்சையெடுக்கும் கேவல நிலைக்குத் தாழ்ந்து விட்டதென்றால் இயற்கை உணவுகளுக்குப் பழக்கப்பட்டுப் போன மந்திகளையும் அந்த நிலைக்கு தாழ்த்த வேண்டிய அவசியமென்ன? உங்களுக்கு நிஜமாகவே விலங்குகளின் பால் அன்பிருந்தால் அவற்றை இயல்பாக காட்டில் இயங்க அனுமதித்தாலே போதும். உங்கள் வருகையால் அவை தங்களது இயல்பு நிலை கெட்டு மனிதனைப் போல கையேந்தும் நிலையை வரவழைக்காதீர்கள்.
  • இரண்டாவது அருவியில் குளிக்க வருவதே அங்கே பாய்ந்து வரும் மூலிகை நீரில் உடல் நனைத்து ஆசுவாசம் பெறத்தான். அங்கேயும் போய் ரசாயன ஷாம்பூக்களையும், ரெடிமேட் சிகைக்காய்த்தூள் தூள்களையும், கண்ட, கண்ட நறுமண எண்ணெய்களையும் தேய்த்து போதாக்குறைக்கு உடலுக்கும் நறுமண சோப்புக்களைத் தேய்த்துக் குளித்துக் கொண்டிருந்தீர்கள் என்றால் உங்களை விடவும் முட்டாள்கள் வேறு எவரும் இல்லை. இத்தனைக்கும் அருவியில் குளிக்கையில் சோப்பு, ஷாம்பூ, எண்ணெயெல்லாம் பயன்படுத்தக் கூடாது என அருவிப் பராமரிப்புப் பணியாளர்கள் அறிவுறுத்தியும் கூட 
  • நம் மக்கள் அதற்கு செவி கொடுப்பதாக இல்லை. அவர்கள் இஷ்டத்துக்கு பிறரை ஏமாற்றுவதாக நினைத்து தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள். இதற்குப் பேசாமல் வீட்டுக் குளியலறையில் குளித்து விட்டுப் போகலாம்.
  • மூன்றாவது மேலே அருவி வரை ஏறிச் சென்று குளிக்க முடியாதவர்கள் அல்லது சோம்பேறித்தனப்படுபவர்கள் சிலர் அருவியிலிருந்து வழிந்து தண்ணீர் கீழிருக்கும் ஓடைக்கு வரும் பாதையில் தேங்கியிருக்கும் சிறு குட்டையிலிருக்கும் நீரில் குளித்துக் கொண்டிருந்ததையும் காண முடிந்தது. இதே ஓடையில் நீர் வரத்து அதிகமிருந்தால் இப்படிக் குளிப்பதில் அர்த்தமிருக்கிறது. ஏனெனில் பெருமழைக்காலங்களில் மேலே அருவியில் குளிப்பவர்களிடமிருந்து வழிந்து வரும் அழுக்கு நீர் தேங்காமல் ஓடிக் கொண்டே இருந்தால் அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. அதே குட்டையாகத் தேங்கிய நீரில் அழுக்குகள் மேலும் சேரவே வாய்ப்புகள் அதிகம். இது ஆரோக்யமானதல்ல.

இந்த மூன்று விஷயங்களும் சுருளி அருவிச் சுற்றுலாவில் பயணிகள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் என்பேன்.

மெச்சுதலான விஷயம்...

சுருளி அருவிக்கு சுற்றுலா செல்வதென்பது வெறும் பொழுது போக்குக்காக மட்டுமில்லை... தாவரவியல், விலங்கியல், வன விலங்கியல் மற்றும் அக்ரிகல்ச்சுரல் பயிலும் மாணவர்கள் இதை ஒரு கல்விச் சுற்றுலாவாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். பல்லுயிர்ப் பெருக்கத்திற்கான மிகச்சிறந்த உதாரணமாக உயிர்ப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் ஆதார மலைகளில் சுருளிமலையும் ஒன்று. வன இலாகாவினர் அங்கிருக்கும் நெடிதுயர்ந்த மரங்கள், அரிதான செடிகொடிகள் அனைத்திலும் அவற்றுக்குரிய அறிவியல் பெயர்களையும் குறிப்பிட்டுப் பாதுகாத்திருக்கிறார்கள். இது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

முடிவாக...

தமிழ்நாடு முழுவதும் மக்களிடையே மத்திய அரசுக்கெதிரான கடுமையான அதிருப்தி அலைகளை எழுப்பி வரும் நியூட்ரினோ ஆய்வகம் அமையவிருப்பதும் இதே சுருளியாற்றிலிருந்து கல்லெறியும் தொலைவில் தான் என்கிறார்கள். நியூட்ரினோ ஆய்வகம் இங்கு அமைந்தால் நிச்சயம் இந்த மலைப்பகுதியிலுள்ள லட்சோபலட்சம் மூலிகைச் செடிகளுக்கும் வன உயிரனப் பெருக்கத்திற்கும் இயற்கைச் சமநிலைக்கும் நிச்சயம் பங்கம் வரலாம். அதை இந்தப் பகுதி மக்கள் விரும்பவில்லை. இயற்கையுடன் இயைந்த தங்களது இயல்பு வாழ்க்கையை கெடுத்துக் கொள்ளும் ஆசை யாருக்குத்தான் இருக்கக் கூடும்.

வாய்ப்பிருப்பவர்கள் வருடத்திற்கு ஒருமுறையாவது அருவியில் நீர்வரத்து இருக்கும் போது சுருளி மலைக்கும், அருவிக்கும் சென்று வாருங்கள். சுருளி அருவிச் சுற்றுலா நிச்சயம் உங்களையும் உங்களது பர்ஸையும் ஏமாற்றாத சிக்கனச் சுற்றுலாவாக மனதை அள்ளும்.

]]>
tamilnadu tour, suruLi falls tour, economical ecstacy, சுருளி அருவிச் சுற்றுலா, சிக்கனச் சுற்றுலா, தமிழ்நாடு சுற்றுலா, சுருளி மலை, சுருளி அருவி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/10/w600X390/z_suruli_falls_3.jpg http://www.dinamani.com/travel/travel-tamilnadu/2018/may/10/if-you-want-economical-ecstacy-visit-suruli-falls-tour-2917058.html
2912077 சுற்றுலா தமிழ்நாடு ஒகேனக்கல்: பரிசல் சவாரிக்கு நீண்ட நேரம் காத்திருக்கும் சுற்றுலாப் பயணிகள் ஆர்.ராதாகிருஷ்ணன் DIN Thursday, May 3, 2018 01:41 AM +0530 ஒகேனக்கல்லில் பரிசல் சவாரிக்குச் செல்ல உயிர் காக்கும் உடை (லைப் ஜாக்கெட்) தட்டுப்பாட்டால் நீண்ட நேரம் சுற்றுலாப் பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ளது ஒகேனக்கல் சுற்றுலாத் தலம். கர்நாடக மாநிலத்தைக் கடந்து காவிரி ஆறு இங்கு அருவிகளாக ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. பிரதான அருவி, ஐந்தருவி, சினி அருவி என இங்குள்ள அருவிகளில் தண்ணீர், பாறைகளில் புகைப்போல மேலெழுந்து கொட்டு அழகை காண சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கில் வருகின்றனர்.
விடுமுறை நாள்களில் ஒகேனக்கல்லுக்கு வருவோரின் எண்ணிக்கை 50,000-ஐ கடக்கும். அவ்வாறு வருவோர் பிரதான அருவிகளில் குளித்து குடும்பத்துடன் பரிசலில் சென்று அருவிகளைச் சுற்றிப்பார்க்க பரிசல் துறைக்கு வருகின்றனர்.
உயிர் காக்கும் உடை தட்டுப்பாடு: ஒகேனக்கல் அருவியில் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்ல 400-க்கும் மேற்பட்ட பரிசல்கள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நிகழ்ந்த பரிசல் விபத்துக்குப் பிறகு, பரிசல் ஓட்டிகளுக்கு, தருமபுரி மாவட்ட நிர்வாகம் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.
இந்த வகையில், ஒரு பரிசலில் நால்வரை மட்டுமே அழைத்துச் செல்ல வேண்டும். உயிர் காக்கும் உடையின்றி யாரையும் அழைத்துச் செல்லக் கூடாது. ஒரே நேரத்தில் பல பரிசல்களை இணைத்து அருவிக்கு அனுப்ப வேண்டும் உள்ளிட்டவை இந்த நிபந்தனைகளில் அடங்கும். நான்கு நபர்களை பரிசலில் அழைத்துச் செல்ல ரூ.750 கட்டணமாகப் பெறப்படுகிறது. இதில் ரூ.150 பராமரிப்பு மற்றும் நுழைவுக் கட்டணம் என பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தால் எடுத்துக் கொள்ளப்பட்டு, மீதமுள்ள ரூ. 600 பரிசல் ஓட்டிகளுக்கு வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், ஒகேனக்கல் அருவியில் பரிசல் சவாரிக்கு சுமார் 1,500 உயிர் காக்கும் உடை தேவைப்படுப்படும் எனக் கூறப்படுகிறது. தற்போது 500 உயிர் காக்கும் உடைகள் மட்டுமே உள்ளதாகக் கூறப்படுகிறது. இதிலும், பல உடைகள் பழுதாக உள்ளது எனக் கூறி 250 உயிர் காக்கும் உடைகள் மட்டுமே சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படுகிறது. இதனால், விடுமுறை நாள்களில் பரிசல் சவாரிக்காக வருகிற பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். இதனால், பல நேரங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கும் பரிசல்துறையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பணியாளர்களுக்கும் வாக்குவாதம் நிகழ்வது தொடர்கிறது.
இதுகுறித்து சுற்றுலாப் பயணி செல்வம் என்பவர் கூறியது: ஒகேனக்கல் அருவிக்கு குளிக்கவும், பரிசல் சவாரி செல்வதற்காகவும் பெரும்பாலான பயணிகள் வருகின்றனர். இதில் பரிசலில் சவாரி செய்ய ஒரு முறைக்கு 75 பரிசல்கள் மட்டுமே அனுப்பப்படுகின்றன. இங்கு போதுமான உயிர் காக்கும் உடைகள் இல்லை. இதனால், சவாரி சென்ற பரிசல்கள் திரும்ப வந்த பின்னர், உடைகளைப் பெற்று கரையில் காத்திருக்கும் பயணிகளுக்கு வழங்கப்படுகிறது. இதற்காக டிக்கெட் பெற்றுக்கொண்டு சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. எனவே, குறித்து நேரத்தில் ஊர் திரும்ப முடிவதில்லை. இதனால், சில நேரங்களில் ஏராளமான பயணிகள் பரிசல் சவாரி செய்யாமலேயே திரும்புகின்றனர். எனவே, உயிர் காக்கும் உடைகள் தட்டுபாடின்றி வழங்கி, பயணிகளைக் காத்திருக்கச் செய்யாமல் பரிசல் சவாரிக்கு அனுப்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இது குறித்து, பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் கூறியது: ஒகேனக்கல் ஆற்றில் ஒருமுறைக்கு 75 பரிசல்கள் மட்டுமே அனுப்ப வேண்டும் என்பது மாவட்ட நிர்வாகம், பரிசல் ஓட்டிகள் பேச்சுவார்த்தையில் ஏற்கெனவே எடுத்த முடிவாகும். இதனடிப்படையில், தற்போது பரிசல்கள் அனுப்பப்படுகின்றன. பரிசல் பயணிகளுக்கு வழங்க 610 உயிர் காக்கும் உடைகள் உள்ளன. 
இவற்றில் பெரும்பாலும், முறையாக பராமரிப்பின்மையால் பழுது ஏற்பட்டு, தற்போது, 210 உயிர் காக்கும் உடைகள் மட்டும் நல்ல நிலையில் உள்ளன. இவை தற்போது ஒரு முறைக்குச் செல்லும் 75 பரிசல்களுக்கு வழங்க போதுமானதாக உள்ளன. 
இப் பரிசல்கள் கரைக்கு வந்த பின்னரே அவர்களிடமிருந்து உயிர் காக்கும் உடைகள் பெற்று அடுத்த முறை செல்வோருக்கு வழங்கப்படுகிறது. இதனால், தாமதம் ஏற்படுவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர். எனவே, தற்போது 610 புதிய உயிர் காக்கும் உடைகள் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் விடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய உடைகள் கொள்முதல் செய்து பயணிகளுக்கு வழங்கப்படும் என்றார்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/3/w600X390/oknakal.jpg அருவியில் பரிசல் சவாரி செல்லும் சுற்றுலாப் பயணிகள். http://www.dinamani.com/travel/travel-tamilnadu/2018/may/03/ஒகேனக்கல்-பரிசல்-சவாரிக்கு-நீண்ட-நேரம்-காத்திருக்கும்-சுற்றுலாப்-பயணிகள்-2912077.html
2912076 சுற்றுலா தமிழ்நாடு மாமல்லபுரத்தில் களை கட்டியது கோடை சுற்றுலா DIN DIN Thursday, May 3, 2018 01:40 AM +0530 தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதை அடுத்து, கடற்கரை சுற்றுலா நகரமாக விளங்கும் மாமல்லபுரத்தில் உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் வருகையால் கோடை சுற்றுலா சீசன் களை கட்டியுள்ளது.
சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கும் மாமல்லபுரம் சிற்பங்களை கண்டு ரசிப்பதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருகின்றனர். தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், சென்னை, செங்கல்பட்டு, மதுராந்தகம், காஞ்சிபுரம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் குழுவினராகவும், குடும்பத்தினராகவும் வருகை தருகின்றனர். தற்போது கோடை வெயிலையும் பார்க்காமல் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கார், வேன், பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் வரும் சுற்றுலாப் பயணிகள், மதியம் முதல் மாலை வரை, கடற்கரை கோயில் ஐந்து ரதம், வெண்ணெய் உருண்டை பாறை, அர்ச்சுனன் தபசு, கலங்கரை விளக்கம் ஆகிய பகுதிகளை சுற்றிப்பார்த்து விட்டு, அங்குள்ள மர நிழலில் ஓய்வெடுத்து விடுமுறையை கொண்டாடி வருகின்றனர்.
மாலை நேரத்தில் கடற்கரைக் கோயிலை கண்டு ரசித்தபடி, கடல் அருகே சென்று கடல் அலைகளுடன் விளையாடியும், கடலில் குளித்தும் பொழுதைக் கழித்து மகிழ்கின்றனர்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/3/w600X390/mamalapuram.jpg மாமல்லபுரம் கடற்கரை கோயில் பகுதியை சுற்றிப் பார்க்கும் சுற்றுலாப் பயணிகள். http://www.dinamani.com/travel/travel-tamilnadu/2018/may/03/மாமல்லபுரத்தில்-களை-கட்டியது-கோடை-சுற்றுலா-2912076.html
2902185 சுற்றுலா தமிழ்நாடு கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி DIN DIN Wednesday, April 18, 2018 02:37 AM +0530 பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு செவ்வாய்க்கிழமை முதல் வனத் துறையினர் அனுமதியளித்துள்ளனர்.
பெரியகுளம் அருகே 7 கி.மீ. தொலைவில் உள்ள கும்பக்கரை அருவியில், கடந்த மார்ச் 20 ஆம் தேதி தண்ணீர் வரத்து இல்லாததால், அருவிக்குச் செல்ல வனத் துறையினர் தடைவிதித்தனர். 
இந் நிலையில், கடந்த 10 நாள்களுக்கும் மேலாக கொடைக்கானல் மலைப் பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால், அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது. எனவே, பாதுகாப்பு கருதி அருவிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினர் தடை விதித்தனர்.
தற்போது, செவ்வாய்க்கிழமை முதல் அருவியில் சீரான நீர்வரத்து உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினர் அனுமதித்துள்ளனர். மேலும், நீர்வரத்தைப் பொருத்து சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர் என, வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/18/w600X390/kumbakarai.jpg கும்பக்கரை அருவிக்குச் செல்ல வனத் துறையினர் அனுமதியளித்துள்ளதை அடுத்து, சந்தோஷமாக குளியல்போடும் சுற்றுலாப் பயணிகள். http://www.dinamani.com/travel/travel-tamilnadu/2018/apr/18/கும்பக்கரை-அருவியில்-குளிக்க-சுற்றுலாப்-பயணிகளுக்கு-அனுமதி-2902185.html
2838968 சுற்றுலா தமிழ்நாடு சபரிமலை யாத்திரை... க.தி.மணிகண்டன் DIN Friday, January 5, 2018 11:01 PM +0530 பயணங்களில் பல விதங்கள் உண்டு. அதில், ஆன்மிகப் பயணம் நமக்கு புதிய அனுபவத்தைக் கொடுக்கும். அதுவும், சபரிமலை யாத்திரை மேற்கொள்வது தனிச்சிறப்பு மிகுந்த ஒன்று. ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை மாதம் முதல் தேதி மாலை அணிந்துகொண்டு, ஒரு மண்டலம் விரதம் இருந்து புனித யாத்திரையை ஐயப்ப பக்தர்கள் மேற்கொள்வார்கள்.
மற்ற பயணங்களை போல் அல்ல சபரிமலை பயணம். இதில் சிறிய பாதை, பெரிய பாதை என 2 வழிகள் உள்ளன. பெரிய பாதை என்பது 48 மைல் தொலைவு கொண்டதாகும்.
கல், முள் என்று மிக கடினமான பாதையைக் கொண்டது. எருமேலியிலிருந்து சபரிமலை வரை கிட்டத்தட்ட 75 கி.மீ. இருக்கும். சிறிய பாதை சில கி.மீ. தொலைவு மட்டுமே. எனவே, பல பக்தர்கள் சிறிய பாதையில் அதிகமாக சென்று வருகின்றனர்.

நான் இதுவரை எட்டு முறை சபரிமலைக்கு சென்று வந்திருக்கிறேன். கடந்த ஆண்டு (2017) ஒன்பதாவது முறையாகச் சென்று திரும்பும் பாக்கியம் எனக்கு கிட்டியது. சபரிமலைக்குச் செல்வது என்பது மிகவும் புனிதமான ஒரு செயல் என்று கருதுகிறேன். பெரும்பாலும் சிறிய வழிப் பயணத்தில் சென்றே உண்மையின் உருவாக வீற்றிருக்கும் சுவாமி ஐயப்பனை இதுவரை தரிசனம் செய்திருக்கிறேன். இளமை காலத்தில் நான் முதன்முதலாக மாலை அணிந்து சென்றபோது, பெரிய பாதையில் சென்றதாக நினைவு இருக்கிறது. ஆனால், விவரம் அறிந்து இதுவரை பெரிய பாதையில் நான் சென்றதில்லை.

கடந்த டிசம்பர் மாதம் எழும்பூரில் இருந்து கொல்லம் ரயிலில் கேரள மாநிலம், செங்கனூர் சென்றோம். ரயில் சுமார் அரை மணி நேரம் தாமதம் என்பதால் அதிகாலை 4.30 மணியளவில் செங்கனூர் சென்றடைந்தோம். அங்கிருந்து எருமேலிக்கு நேரடி பேருந்து வசதி இல்லை. ஆனால், பம்பை செல்வதற்கு 5 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து என்ற கணக்கில் அடிக்கடி வந்துகொண்டிருந்தது.

ஐயப்பனின் அறுபடை வீடு: தமிழகத்தில் முருகனுக்கு அறுபடை வீடு இருப்பது போல், கேரளத்தில் ஐயப்பனுக்கு சபரிமலை, எருமேலி உள்பட அறுபடை வீடுகள் உள்ளன. இந்த முறை அறுபடை வீட்டுக்கும் சென்று சுவாமியை தரிசனம் செய்துவிட்டு திரும்பலாம் என்று திட்டமிட்டிருந்தோம். ஆனால், செங்கனூரில் இருந்து எருமேலிக்கு நேரடி பேருந்து வசதி இல்லை என்று தெரிந்ததும் கேரள அரசின் போக்குவரத்துத் துறை மீது அதிருப்தி அடைந்தேன். அங்கு நம்மூர் போல் அல்ல; அந்த மாநிலம் மலைகள் நிறைந்தது என்பதால் நாம் நினைப்பது போல் எல்லாம் பேருந்து வசதி இருக்காது என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன்.
அங்கு விசாரித்து பார்த்தபோது, கோட்டயத்திலிருந்து எருமேலிக்கு அடிக்கடி பேருந்து வசதி உண்டு என்பதை அறிந்து "அடடா கோட்டயத்தில் ரயில் நின்ற போதே இறங்கியிருக்கலாமோ" என்று எனக்குள் கூறிக் கொண்டேன்.
பின்னர், அங்கிருந்து பம்பா செல்லலாம் என ஒரு மனதாக முடிவெடுத்தோம். இந்த முறை எனது தாயார் முதல்முறையாக மாலை அணிந்து உடன் வந்தார். எனது உறவினரும், நண்பருமான ஹரிஹரன் உள்பட 3 பேர் மட்டுமே இந்த முறை சென்றோம்.

பசுமை சூழ்ந்த கேரளம்: கேரளம் என்றாலே பசுமைதான். கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரளத்துக்கு நான் எப்போது சென்றாலும் பேருந்துப் பயணத்தில் ஜன்னல் ஓரம் அமர்ந்து செல்வதையே விரும்புவேன். ஜில்லென்ற காற்று முகத்தை வருடி, தலை முடியை கோதிவிட்டுச் செல்வதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. உணரும்போது மட்டுமே அதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

வளைந்து, வளைந்து மலைப் பாதையில் சென்றதால் அவ்வப்போது தலைசுற்றல் வந்தது. அண்டை மாநிலத்தில் இருந்தாலும் அதுபோன்ற ஓர் எண்ணம் எழாத வகையில், தமிழ் குரல்கள் மட்டுமே பேருந்து முழுவதும் ஒலித்துக் கொண்டிருந்தது.
சென்னையிலிருந்து வந்த ஒரு அன்பர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து காரசாரமாக தன்னுடன் வந்தவர்களுடன் விவாதித்துக் கொண்டிருந்தார். வழியில் உணவுக்காக பேருந்து நின்றது.

தேநீரை அருந்திவிட்டு அப்படியே செல்லிடப்பேசியில் சில புகைப்படங்களையும் எடுத்தோம். சரியாக, 9 மணியளவில் பம்பா சென்றடைந்தோம். மயக்கம் வருவதுபோல் இருந்ததால், பேருந்தைவிட்டு இறங்கியவுடன் லெமன் சோடா அருந்தினோம்.
(கேரளத்தின் பிரதான காலை உணவான புட்டு+கடலை கறி மற்றும் லெமன் சோடாவுக்கும் நான் அடிமை)

நாம் ஏற்கெனவே ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ள ரசீதையும், நமது அடையாள அட்டையையும் பம்பா நதியின் முன்பு, அந்த மாநில போலீஸார் அமைத்துள்ள சிறப்புக் கவுண்ட்டரில் காண்பித்தால், அதில் சீல் ஒன்றை பதிவு செய்து தருகிறார்கள்.
பம்பையில் புனித நீராடி விட்டு, இறைவனை வேண்டிக் கொண்டு இருமுடியை தலையில் சுமந்து சிறிய பாதை வழியாக சபரிமலை ஏறத் தொடங்கினோம்.

கன்னிமூல கணபதி: மலை அடிவாரத்தில் முதலில் வரும் கன்னிமூல கணபதி திருக்கோயிலில் தேங்காயை உடைத்துவிட்டு மலையேறத் தொடங்கினோம். மலையடிவாரத்தில் நாம் கொண்டு செல்லும் பைகள் ஸ்கேன் சோதனைக்கு உள்படுத்தப்படுகிறது. அதைத் தொடர்ந்து, மலையேற அனுமதிக்கப்படுகிறோம்.

ஒரு கட்டத்தில் தாயாருக்கு மயக்கம் வருவது போல் ஆகிவிட்டது. எனினும், அந்த இடத்தில் நிர்வாகம் ஏற்படுத்தியிருந்த மருத்துவ குடிலில் முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் யாத்திரையைத் தொடர்ந்தோம். முதலில் நீலிமலை. இந்த மலையை ஏறுவது சற்று கடினமாகவே இருக்கும். இருப்பினும், சரண கோஷங்களை எழுப்பிக் கொண்டே தொடர்ந்து ஏறிச் சென்றால் பெரிதாக எதுவும் தெரியாது. அடுத்தது அப்பாச்சிமேடு. அதைக் கடந்தால் சமதளம் வந்துவிடும். அதைத் தொடர்ந்து, சபரி பீடம், சரங்குத்தி ஆகிய இடங்களைக் கடந்து செல்ல வேண்டும்.
சபரிமலைக்கு முதல்முறையாக வருபவர்கள் சரங்குத்தியில் தாங்கள் கொண்டுவரும் மரத்தாலான வேல், சரம் ஆகியவற்றை குத்திவிட்டுச் செல்ல வேண்டும்.

அதையடுத்து, இரு பாதைகள் வருகின்றன. ஒருபாதையில் ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களையும், மற்றொரு பாதையில் முன்பதிவு செய்யாதவர்களையும் போலீஸார் பிரித்து அனுப்புகின்றனர். இதன்மூலம், முன்பதிவு செய்தவர்கள் சற்று விரைந்து செல்ல முடியும். பிற்பகல் 1 மணியுடன் கோயில் நடை சாத்தப்பட்டதால் அங்கேயே நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது, தன்னார்வ இளைஞர்கள் பக்தர்களின் தண்ணீர் தாகத்தை போக்கிக் கொண்டிருந்தனர்.

தன்னார்வலர்களாக தமிழக மாணவர்கள்: தூத்துக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞருடன் கலந்துரையாடினேன். கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பதாகக் கூறிய அவர், தமிழகத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தன்னார்வலர்களாக இங்கு வந்திருக்கிறோம் என்று கூறினார். அவர்களை அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் அழைத்து வந்திருக்கிறது.
அவர்கள் அனைவரும் ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு பணிக்கு உள்படுத்தப்படுவதாக அறிந்தேன். ஆகாஷ் போன்ற இளைஞர்களால் அங்கிருந்து நிறைய கற்றுக் கொள்ள முடியும் என்பது நிதர்சனம்.

3 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டதை அடுத்து, 18 படி ஏறி சுவாமி தரிசனம் செய்தோம். பின்னர், மஞ்ச மாதா சன்னதிக்கு பின்புறம் கட்டப்பட்டுள்ள அன்னதானக் கூடம் அருகே ஓய்வெடுத்தோம். அன்றைய தினம் நெய் அபிஷேகம் செய்ய இயலாது என்பதால் அங்கு தங்க முடிவு செய்தோம். மறுநாள் காலை நெய் அபிஷேகத்தை முடித்துக் கொண்டு மலையில் இருந்து இறங்கத் தொடங்கினோம். சபரிமலையில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு சிறப்பான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
முதலுதவி சிகிச்சை மையங்கள், கழிப்பறை வசதிகள், குடிநீர் வசதி என அனைத்தும் சிறப்பாக இருந்தது.

மலையிலிருந்து இறங்கி பம்பா வந்து சேர்ந்தோம். முதல்முறையாக எனது தாயார் வந்திருக்கிறார் என்பதால், எருமேலிக்குச் செல்ல முடிவு செய்தோம். எருமேலியில் நாங்கள் சென்ற சமயம் கோயில் நடை சாத்தப்பட்டிருந்தது. பின்னர், அன்னதான கூடத்தில் உணவு அருந்திவிட்டு, வாவர் சுவாமி கோயிலுக்குச் சென்று திரும்பினோம்.

பந்தள ராஜா: அங்கிருந்து பந்தளம் செல்ல முடிவு செய்தாேம். ஆனால், நேரடி பேருந்து வசதி இல்லை. பத்தனம்திட்டா நகருக்குச் சென்று பின்னர் அங்கிருந்து செல்ல வேண்டும் என்று ஒருவர் யோசனை வழங்கி வழிகாட்டவும் செய்தார். அவர் கூறியபடி, அங்கிருந்து ஐயப்பனின் வளர்ப்புத் தந்தையும், பாண்டிய வம்சாவளியினருமான மன்னன் ராஜசேகரனின் அரண்மனைக்குச் சென்றோம். மாலை நேரத்தில் சென்றதால் அந்தக் கோயிலும் நடை சாத்தப்பட்டிருந்தது. திறக்கும் வரை காத்திருந்தோம்.
முன்னதாக, அரண்மனையை சுற்றிப் பார்த்த எங்களுக்கு, திருவாபரணப் பெட்டியை தரிசிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
கேரள மாநிலத்தில் கோயில்களில் பெரும்பாலும் ஆண்கள் சட்டை அணிந்து செல்லக் கூடாது என்பது நியதி.
சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தபோது, ஆறு ஒன்றைக் கடந்துசென்றால் சிவன் கோயில் இருக்கும் என்பது தெரியவந்தது. அங்கு சென்றோம். வழியில் ஒரு பெரிய தொங்குபாலம் ஆற்றுக்கு நடுவே இருந்தது.

பதைபதைப்பை ஏற்படுத்திய ஆட்டோ பயணம்: பந்தளத்திலிருந்து அச்சன்கோயிலுக்கு 35 கி.மீ. என்று கூகுள் செய்து தெரிந்துகொண்டேன். மாலை வேளை என்பதால் பேருந்துகளில் கூட்ட நெரிசல் இருக்கும் என்று கருதி ஆட்டோவில் செல்லலாம் என்று முடிவெடுத்தேன். ஆட்டோ ஓட்டுநரிடம் அச்சன்கோயிலுக்கு செல்வது எப்படி என்று வினவியபோது, அடூர் வரை சென்று அங்கிருந்து நீங்கள் அச்சன்கோயிலுக்கு பேருந்தில் செல்லலாம் என்றார். பின்னர், அடூருக்கு ரூ.200 ஆகும் என்றார். நான் அச்சன்கோயில் வரை எவ்வளவு என்றபோது ரூ.400 என்றார். சரி. மாலை 6 மணி ஆகிவிட்டதே பேருந்தில் சென்றால் நேரம் ஆகிவிடும். அங்கு கோயில் நடை சாத்திவிடப்போகிறார்கள் என்று கருதி, ஆட்டோவில் செல்லலாம் என்று கூறினேன்.
ஆனால், எடுத்த எடுப்பில் ஹரிஹரன் வேண்டாம் என்று மறுத்தார். ஆட்டோ ஓட்டுநரை பார்த்தால் எனக்கு சந்தேகமாக இருக்கிறது என்று என்னை எச்சரித்தார். மனிதரை மனிதர் முதலில் நம்ப வேண்டும் என்று வசனம் பேசிவிட்டு வா செல்லலாம் நேரம் ஆகிறது என்று சற்று விளக்கிச் சொன்னேன்.

ஆனால், ஆட்டோ ஓட்டுநரோ நேராக ஒரு கடைக்குச் சென்று ஆட்டோவை நிறுத்தினார். ஏன் இங்கு நிறுத்துகிறீர்கள் என்றேன். மலையாளம் ஓரளவு பேசத் தெரியும் என்பதால், அவர் பேசுவதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. "அச்சன்கோயில் வனப்பகுதி என்பதால் நான் திரும்பி தனியாக வர வேண்டியிருக்கும். அதனால் என்னுடன் நண்பர் ஒருவரை அழைத்துக் கொள்கிறேன்" என்றார். அவர் வர 5 நிமிடம் ஆகும் என்றும் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள் என்றும் கூறினார்.

சரி என்று நாங்களும் பொறுமை காத்தோம். அதற்கு இடைப்பட்ட வேளையில், என்னிடமும், ஹரியிடமும் எங்கு வேலை பார்க்கிறீர்கள் என்று அவர் விசாரித்தார். சாதாரணமாக கேட்பதற்கும் விசாரிப்பதற்கும் வித்தியாசம் உண்டு.
ஹரி என்னிடம் அவரை கவனி என்பது போல் ஜாடை செய்தார். அப்போது எனக்கு லேசாக மனதில் சந்தேக உணர்வு எழுந்தது.
உடன் வேறு அம்மாவும் வந்திருப்பதால் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று உள்ளுணர்வு தோன்றியது.

அவரது நண்பர் 10 நிமிடங்கள் கழித்து வந்தார். கைப்பேசியுடன் இணைக்கும் வகையிலான சிறிய ஒலிப்பெருக்கியை எடுத்துக் கொண்டார் ஆட்டோ ஓட்டுநர்.
பத்திரிகையில் பணிபுரிந்து வருவதால் பல்வேறு நிகழ்வுகளை தினமும் படித்தும், பார்த்தும் வரும் எனக்கு மனதில் ஏதோ இனம் புரியாத ஒரு பதற்றம் உருவாகியது. இருப்பினும், ஐயப்பனை மனதில் நினைத்துக் கொண்டு அமைதியாக இருந்தேன். அப்போது, கூகுள் வரைபடத்தை பயன்படுத்தலாம் என்று சட்டென்று ஒரு யோசனை மனதில் உதித்தது.

ஹரியின் கைபேசி ஏற்கெனவே சார்ஜ் இல்லாமல் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. எனது கைபேசியிலும் 40 சதவீதம் சார்ஜே இருந்தது. வரைபடத்தில் அச்சன்கோயில் செல்லும் வழியைத் தேர்வு செய்தேன். அடூர் வரை சரியாக சென்ற ஆட்டோ, அதன்பிறகு திசை மாறியது. 7 மணியை கடந்துவிட்டதால் இருள் சூழத் தொடங்கியது. அதற்கு நடுவில் ஒலிப்பெருக்கியில் பாடலை வேறு அதிக சப்தத்துடன் ஒலிக்கவிட்டு அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர். சரி, இனிமேலும், பொறுமை காக்க முடியாது என்று ஓட்டுநரிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தேன். எங்கு செல்கிறீர்கள் என்றேன். "என்ன கூகுள் மேப்பா? புனலூர் செல்கிறேன்" என்றார். நான் அச்சன்கோயில் தானே செல்ல வேண்டும் என்றேன் என்று பதில் கேள்வி எழுப்பினேன்.

இதையடுத்து, எதையோ சொல்லி மழுப்பிய அவர், ஆட்டோ ஸ்டாண்ட் ஒன்றில் நிறுத்தி அங்கிருந்த ஆட்டோகாரர்களிடம் ஏதோ விசாரித்தார். திரும்பி வந்தபோது தனது சீருடையான காக்கி சட்டையையும் கழற்றி ஆட்டோவில் எறிந்தார் (உள்ளுக்குள் அவர் கலர் சட்டை அணிந்திருந்தார்). எங்களிடம் வேறு ஒரு வழி இருக்கிறது அதில் செல்லலாமா? என்று வினவினார்.
எனக்கு மனதில் ஏதோ சரியாக படவில்லை. அப்போது, ஒரு பேருந்து குறுக்கிட்டது. அது புனலூர் செல்லும் பேருந்து என்பதை அறிந்தேன். உடனடியாக, அந்தப் பேருந்து நிற்கும் அடுத்த நிறுத்தத்தில் எங்களை இறக்கிவிட்டு விடுங்கள் என்றேன். அவரும், இறக்கிவிட்டார். 35 கி.மீ. ஆகியிருக்கிறது என்றார். எனக்கு சட்டென்று கோபம் தலைக்கேறியது.

அச்சன்கோயில் செல்ல முடியாது என்று முன்பே கூறியிருக்க வேண்டியதுதானே. நாங்கள் பேருந்திலேயே சென்றிருப்போமே என்று கூறினேன். மன்னித்துக் கொள்ளுங்கள் என்றார். அதற்குள், ரூ.300 கொடுத்துவிட்டு இறங்கு என்று ஹரி வற்புறுத்தினார்.
அந்தத் தொகையைக் கொடுத்துவிட்டு இறங்கி தாயாரின் முகத்தை பார்த்தேன். பெருமூச்சு விட்டார்.

அங்கிருக்கும் ஒரு காவலரிடம் நடந்ததை விளக்கினேன். அவரோ, அச்சன்கோயில் வனப் பகுதி. இந்த நேரத்தில் செல்ல முடியாது என்றார். கோயிலும் முன்னிரவே மூடப்பட்டு விடும் என்பதை பின்னர் அறிந்தேன். அந்த ஆட்டோ ஓட்டுநர் எதற்காக எங்களை இதுபோல் அலைக்கழிக்க நினைத்தார் என்பதை என்னால் யூகிக்க முடியவில்லை. அவர் சந்தேகிக்கும்படி நடந்துகொண்டுவிட்டார் என்பதே வருத்தம். மொழி தெரியாத மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் சென்றால், குறிப்பாக இரவு நேரங்களில் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை எனக்கு இந்த அனுபவம் கற்றுக்கொடுத்திருக்கிறது.


சற்று குழப்பம் அடைந்ததாலும், இரவு நேரம் என்பதாலும் அங்கிருந்து தென்காசி பேருந்தில் ஏறினோாம். அச்சன்கோயில், ஆரியங்காவு, குளத்துப்புழை ஆகிய எஞ்சிய 3 அறுபடை வீடுகளை தரிசிக்க முடியவில்லை. தென்காசிக்கு இரவு 10 மணியளவில் வந்து சேர்ந்தோம். அங்கிருந்து மறுநாள் காலை வந்து சேர்ந்தோம். மதுரையில் மீனாட்சி அம்மனை தரிசித்துவிட்டு, அங்கிருந்து திருப்பரங்குன்றம் சென்றோம். மலையைக் குடைந்து கட்டப்பட்டிருந்த அறுபடை வீடுகளில் ஒன்றான அந்தக் கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு, அங்கிருந்து மற்றொரு அறுபடை வீடான பழமுதிர்ச்சோலை சென்றோம். அழகர் கோயிலும் அங்குள்ளதால் கள்ளழகரையும் தரிசித்தோம். சென்னை மாநகரப் பேருந்துகளில் விரும்பம்போல் பயணம் செய்யும் ஒரு நாள் பயணச்சீட்டு ரூ.50-க்கு வழங்கப்படுவதுபோல், மதுரை போக்குவரத்தும் அந்த வசதியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பயணச்சீட்டை கொண்டு இரவு 10 மணி வரை பேருந்துகளில் ஏறி இறங்கலாம். பின்னர், மதுரை பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து சென்னை வந்தடைந்தோம். பயணம் இனிதே நிறைவுற்றது.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/5/w600X390/sabarimala1.JPG http://www.dinamani.com/travel/travel-tamilnadu/2018/jan/05/சபரிமலை-யாத்திரை-2838968.html
2799423 சுற்றுலா தமிழ்நாடு மாமல்லபுரத்தில் கொட்டும் மழையிலும் குவிந்த வெளிநாட்டினர்..! DIN DIN Wednesday, November 1, 2017 02:26 AM +0530 மாமல்லபுரத்தில் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை கனமழை பெய்த போதிலும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கையில் குடையுடன் வந்து சிற்பங்களை கண்டு ரசித்தனர். 
யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் காலத்து கற்சிற்பங்களை கண்டுகளிக்க ஆண்டு முழுவதும் பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து மாமல்லபுரம் , செங்கல்பட்டு மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் திங்கள்கிழமை தொடங்கி 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை மதியம் வரை கனமழை பெய்தது. மதியத்துக்கு மேல் வானம் வெளுத்து வெயில் அடித்தது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை கொட்டும் மழையிலும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கையில் குடைகளுடன் வந்து அருச்சுனன் தபசு, ஐந்து ரதம், வெண்ணெய் உருண்டை பாறை ஆகியவற்றை கண்டு ரசித்தனர். 

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/1/w600X390/mamalapuram.jpg கொட்டும் மழையிலும் குடைகளைப் பிடித்தபடி மாமல்லபுரத்துக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள். http://www.dinamani.com/travel/travel-tamilnadu/2017/nov/01/மாமல்லபுரத்தில்-கொட்டும்-மழையிலும்-குவிந்த-வெளிநாட்டினர்-2799423.html
2768560 சுற்றுலா தமிழ்நாடு பொலிவிழந்த ஏழைகளின் ஊட்டி...! DIN DIN Thursday, September 7, 2017 02:34 AM +0530 ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏலகிரி மலையில் போதிய பராமரிப்பு இல்லாததால் களையிழந்துள்ளதாக சுற்றுலாப் பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஏலகிரி மலையில் உள்ள மங்களம் ஏரி பல ஆண்டுகளுக்கு முன்பு தாமரைக் குளமாகக் காட்சியளித்தது. மழை மற்றும் நீர்வரத்து குறைந்ததால் தற்போது கோரைபுற்கள் வளர்ந்து காணப்படுகின்றன. மேலும், போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால், இதனருகே உள்ள சிறுவர் பூங்காவின் விளையாட்டு உபகரணங்கள் பாழடைந்துள்ளன.
நிலாவூர் ஏரி அருகே புகழ் பெற்ற கதவநாச்சியம்மன் கோயில் உள்ளது. இங்கு வரும் பக்தர்கள் ஏரியில் படகு சவாரி செய்வது வழக்கம். தற்போது ஏரியில் தண்ணீர் இல்லாததால் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது. 
இதன் அருகே உள்ள பூங்கா அலுவலகம், மகளிர் சுய உதவிக் குழு உணவகம் அனைத்தும் பயன்பாடில்லாமல் உள்ளன. இதனால், கட்டடங்கள் சேதமடைந்து வருகின்றன.
மேலும், இங்குள்ள கூட்டுரான் ஏரி, மஞ்சள் கொல்லை புதூர் ஏரி, அத்தனாவூர் குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. 
மழைநீர் தேக்கங்கள் உரிய முறையில் பராமரிக்கப்படாததால் மழைக் காலங்களில் வெள்ளநீர் வீணாகி, ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சிக்கு செல்கிறது.
இதுகுறித்து ஏலகிரி குறிஞ்சி வானவில் அறக்கட்டளை நிறுவனர் பொன்.கதிர் கூறியதாவது: 
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே அனைத்து ஏரிகளையும் தூர்வார வேண்டியும், பூங்காக்களைச் சீரமைக்க வேண்டியும் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும், ஏலகிரி மலையில் சில கின்னஸ் சாதனைகளை செய்து உலக அரங்கில் ஏலகிரியின் பெருமையைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. தற்போது 5 ஏக்கர் பரப்பளவில் திருக்குறள் தோட்டம் அமைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/7/w600X390/elagiri.jpg http://www.dinamani.com/travel/travel-tamilnadu/2017/sep/07/பொலிவிழந்த-ஏழைகளின்-ஊட்டி-2768560.html
2755963 சுற்றுலா தமிழ்நாடு 4 நாள் தொடர் விடுமுறை: மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் DIN DIN Wednesday, August 16, 2017 02:29 AM +0530 கிருஷ்ண ஜெயந்தி, சுதந்திர தின விழா உள்பட 4 நாள் தொடர் விடுமுறையையொட்டி, மாமல்லபுரத்துக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை திங்கள்கிழமை அதிகரித்தது.
சர்வதேச சுற்றுலாத்தலமான மாமல்லபுரம் பல்லவர் கால கற்சிற்பங்களுக்கு பெயர் போனது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, , கிருஷ்ண ஜயந்தி, சுதந்திர தினம் என 4 நாள் தொடர் விடுமுறை காரணமாக மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
கடற்கரை கோயில், அர்ச்சுணன் தபசு, ஐந்துரதம், வெண்ணெய் உருண்டை பாறை, பழைய மற்றும் புதிய கலங்கரை விளக்கம், புலிக்குகை, வராகமண்டபம் உள்ளிட்ட பகுதிகளை அவர்கள் கண்டு ரசித்தனர்.
பயணிகளின் வருகை அதிகரித்ததால், மாமல்லபுரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளால் கடற்கரை சாலை, அரச்சுணன் தபசு ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்தமுடியாமல் சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாயினர்.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/16/w600X390/mamalapuram.jpg மாமல்லபுரம் கடற்கரை கோயில் பகுதியை பார்வையிட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள். http://www.dinamani.com/travel/travel-tamilnadu/2017/aug/16/4-நாள்-தொடர்-விடுமுறை-மாமல்லபுரத்தில்-குவிந்த-சுற்றுலாப்-பயணிகள்-2755963.html
2753752 சுற்றுலா தமிழ்நாடு ஆகஸ்ட் 15 -இல் வண்டலூர் பூங்கா இயங்கும் DIN DIN Saturday, August 12, 2017 03:32 AM +0530 சுதந்திர தினமான வரும் செவ்வாய்க்கிழமை (ஆக.15), வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயங்கும் என தமிழ்நாடு வனத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். அன்றைய தினம் அரசு விடுமுறையாக இருந்தாலும், உயிரியல் பூங்கா வழக்கம் போல் செயல்படும் என அவர் அறிவித்துள்ளார்.

 

]]>
http://www.dinamani.com/travel/travel-tamilnadu/2017/aug/12/ஆகஸ்ட்-15--இல்-வண்டலூர்-பூங்கா-இயங்கும்-2753752.html
2748638 சுற்றுலா தமிழ்நாடு நீலகிரி மலை ரயிலுக்கு விரைவில் கண்ணாடிப் பெட்டிகள்! DIN DIN Thursday, August 3, 2017 02:40 AM +0530
நீலகிரி மலை ரயிலுக்கு விரைவில் 'விஸ்டாடூம்' என அழைக்கப்படும் கண்ணாடியால் தயாரிக்கப்பட்ட பெட்டிகளை சென்னை ஐ.சி.எஃப். (ரயில் இணைப்புப் பெட்டி தொழிற்சாலை) வழங்க திட்டமிட்டுள்ளதாக தெற்கு ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎப் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஆர்.சி.எஃப் (ரயில் பெட்டி தொழிற்சாலை) ஆகிய இடங்களில் மட்டுமே பயணிகளுக்கான ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.
இதற்கிடையே, மலைப்பிரதேச சுற்றுலாவுக்கு ஐஆர்சிடிசி சார்பில் இயக்கப்படும் ரயில்களுக்கு கண்ணாடி மேற்கூரை ரயில் அதாவது 'விஸ்டாடூம்' பெட்டிகளைத் தயாரிக்க பெரம்பூர் ஐ.சி.எப்.-க்கு கடந்தாண்டு ரயில்வே வாரியம் உத்தரவிட்டது. அதன்படி, இங்கு தயாரிக்கப்பட்ட 3 கண்ணாடி மேற்கூரை ரயில் பெட்டிகள் விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற மலைவாசத்தலமான அரக்குப் பள்ளத்தாக்குக்கு அளிக்கப்பட்டன. அந்தக் கண்ணாடி ரயில் அங்கு சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
நீலகிரி மலை ரயிலுக்கு...! இதையடுத்து, புகழ் பெற்றதும் மிகவும் பழமையானதுமான நீலகிரி மலை ரயிலுக்கு மொத்தம் 40 இருக்கைகள் கொண்ட 'விஸ்டாடூம்' பெட்டிகள் தயாரிக்கப்படவுள்ளன. பெரிய கண்ணாடி ஜன்னல்களால் இந்தப் பெட்டி வடிவமைக்கப்படும். பெட்டிகளில் வைக்கப்படும் பொத்தான்கள் மூலம் கண்ணாடியை மாற்றி வானத்தைப் பார்க்கலாம். இருக்கைகளை 180 டிகிரியில் சுற்றலாம். எந்தப் பக்கம் ரயில் போகுதோ அந்தப் பக்கம் மாற்றி உட்காரலாம். மேலும்,
டி.வி.கள், இயற்கை காட்சிகளை நின்று பார்ப்பதற்கேற்ற இடவசதி, மேற்கத்திய கழிப்பறை என பல்வேறு வசதிகளுடன் இந்தப் பெட்டிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
ரூ.4 கோடி செலவு: ஒரு கண்ணாடி ரயில் பெட்டியை தயாரிக்க ரூ.4 கோடி செலவாகிறது. இதில், சொகுசு இருக்கைகள், பாதுகாப்பு குறிப்புகளைத் தெரிவிப்பதற்கான எல்.இ.டி. திரைகள், வைஃபை வசதி, தேநீர், காபி பானங்களுக்கான தானியங்கி இயந்திரங்கள், கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெறும். முக்கியமாக மலைப்பிரதேச இயற்கை அழகை ரசிக்கும் வகையில் ரயில் பெட்டிகளின் மேற்கூரைகள் தரமான கண்ணாடிகளால் வடிவமைக்கப் பட்டு இருக்கும். மேலும் சுழலும் இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக இயற்கை அழகை விருப்பப்பட்ட கோணங்களில் பயணிகள் கண்டு ரசிக்கலாம்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/6/w600X390/nilagiri.jpg நீலகிரி மலை ரயில். http://www.dinamani.com/travel/travel-tamilnadu/2017/aug/03/நீலகிரி-மலை-ரயிலுக்கு-விரைவில்-கண்ணாடிப்-பெட்டிகள்-2748638.html
2747179 சுற்றுலா தமிழ்நாடு சூலூர் அருகே இரட்டைக் கொலை: 8 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த போலீசார் மதன் DIN Monday, July 31, 2017 12:24 PM +0530
சூலூர் அருகே கருமத்தம்பட்டியில் விசைத்தறி உரிமையாளர் மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருமத்தம்பட்டியில் விசைத்தறி உரிமையாளர் குமாரசாமி(63). அவரது மனைவி சுந்தராம்மாள்(50). இவர்கள் இருவரையும் கொலை செய்துவிட்டுத் தப்பிய கொலை குற்றாவாளியை கருமத்தம்பட்டி போலீசார் தேடி வந்தனர்.

தீவிர விசாரணைக்கு பின்பு கொலை குற்றவாளி ஈரோடு மாவட்டம், லக்காபுரம், வாய்க்கால் மேட்டைச் சேர்ந்த வீரப்பன் மகன் பெருமாள்(43) என்பது தெரியவந்தது. பின்னர், போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு 8 மணி நேரத்தில் கொலைகுற்றவாளியை கைது செய்து, அவரிடம் இருந்த நகை மற்றும் சொல்போனை பறிமுதல் செய்தனர்.

விசைத்தறி உரிமையாளர் தன்னை திட்டியதால் அவரை கொலை செய்ததாகவும், அப்போது அங்கிருந்த அவரது மனைவியையும் கொன்றதாகவும் பெருமாள் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

]]>
http://www.dinamani.com/travel/travel-tamilnadu/2017/jul/31/சூலூர்-அருகே-இரட்டைக்-கொலை-8-மணி-நேரத்தில்-குற்றவாளியை-கைது-செய்த-போலீசார்-2747179.html
2743364 சுற்றுலா தமிழ்நாடு கொடைக்கானல் பேரிஜம் ஏரிப் பகுதியில் காட்டுயானைகள் நடமாட்டம்: சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு DIN DIN Tuesday, July 25, 2017 02:37 AM +0530 கொடைக்கானல் பேரிஜம் ஏரிப்பகுதியில் திங்கள்கிழமை காட்டு யானைகள் நடமாட்டம் இருந்ததால் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
கொடைக்கானலிலிருந்து சுமார் 25 கி.மீ தூரமுள்ள பேரிஜம் பகுதி முற்றிலும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு காட்டுயானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்த இடத்தை பார்வையிட வனத்துறையினரிடம் அனுமதி பெற்ற பின்னரே செல்லமுடியும். மேலும் அப்பகுதிக்கு காலை 9 மணிக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் பிற்பகல் 3 மணிக்குள் திரும்பி விடுவர்.
இந்நிலையில் பேரிஜம் ஏரிப் பகுதியில் 3 காட்டுயானைகள் நடமாடுவதை ரேஞ்சர் கிருஷ்ணசாமி பார்த்துள்ளார். இதையடுத்து அவர் மாவட்ட வனத்துறை அலுவலர் முருகனுக்கு தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளுக்கு பேரிஜம் பகுதிக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
இதுகுறித்து கொடைக்கானல் வனத்துறை ரேஞ்சர் ஒருவர் கூறியதாவது:
கொடைக்கானல் மலைப் பகுதிகளான பேத்துப்பாறை, புலியூர், கோம்பைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் நடமாட்டம் உள்ளது. தற்போது பேரிஜம் ஏரிப் பகுதியிலும் காட்டுயானைகள் புகுந்துள்ளன. எனவே இதுபோல் வேறு பகுதிகளில் யானைகள் நடமாட்டம் இருப்பது தெரிய வந்தால் உடனடியாக வனத்துறை அலுவலகத்துக்குத் தகவல் தரவேண்டும் என்றார்.

 

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/elephant.jpg கொடைக்கானல் பேரிஜம் பகுதியில் திங்கள்கிழமை உலா வந்த காட்டு யானை. http://www.dinamani.com/travel/travel-tamilnadu/2017/jul/25/கொடைக்கானல்-பேரிஜம்-ஏரிப்-பகுதியில்-காட்டுயானைகள்-நடமாட்டம்-சுற்றுலாப்-பயணிகளுக்கு-அனுமதி-மறுப்பு-2743364.html
2732352 சுற்றுலா தமிழ்நாடு குற்றாலத்தில் படகு சவாரி தொடக்கம்: சுற்றுலாப் பயணிகள்உற்சாகம் DIN DIN Thursday, July 6, 2017 12:30 AM +0530 குற்றாலத்தில் படகு சவாரி புதன்கிழமை தொடங்கியது.
குற்றாலத்திலிருந்து ஐந்தருவி செல்லும் சாலையில் வெண்ணைமடைக் குளத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்குச் சொந்தமான படகு குழாமில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு ஆட்சியர் சந்தீப்நந்தூரி தலைமை வகித்து, குழாமைத் திறந்துவைத்தார்.
திருநெல்வேலி புறநகர் மாவட்டச் செயலர் கே.ஆர்.பி. பிரபாகரன் எம்.பி. படகு சவாரியை கொடியசைத்துத் தொடக்கிவைத்தார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியதாவது:
படகு குழாமில் 34 படகுகள் உள்ளன. சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான லைப் ஜாக்கெட்டுகள் உள்ளன. கடந்த ஆண்டில் ஜூன்19இல் படகு சவாரி தொடங்கியது. நிகழ்வாண்டில் இக்குளம் நிரம்புவதில் தாமதம் ஏற்பட்டதால் படகு சவாரி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. கடந்த ஆண்டில் படகு குழாமிலிருந்து ரூ. 5 லட்சம் வருமானம் கிடைத்தது என்றார்அவர்.
இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக படகு சவாரி செய்தனர். அரை மணி நேரத்துக்கு சவாரி செய்ய தனிநபர் செல்லும் கயாக் வகை படகுகளுக்கு ரூ. 95-ம், 4 பேர் செல்லும் துடுப்புப் படகுக்கு ரூ. 185-ம், மிதிபடகுக்கு ரூ. 150-ம், இருவர் செல்லும் மிதிபடகுக்கு ரூ. 120-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விழாவில், தென்காசி செங்கோட்டை வேளாண்மைக் கூட்டுறவு சங்கத் தலைவர் வி. உச்சிமாகாளி, தாய்கோ வங்கி துணைத் தலைவர் என். சேகர், தென்காசி ஒன்றிய அதிமுக செயலர் சங்கரபாண்டியன், மேலகரம் பேரூர் கழக செயலர் கார்த்திக்குமார், நகரச் செயலர் முத்துக்குமார், குற்றாலம் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் கணேஷ் தாமோதரன், மேலகரம் பாலசுப்பிரமணியன், வழக்குரைஞர் பிரிவு நிர்வாகிகள் திருமலைக்குமார், சுப்பிரமணியன், சார்பு அணி மாவட்டச் செயலர்கள் சாந்தசீலன், சேர்மபாண்டி, தமிழ்நாடு ஹோட்டல் குற்றாலம் கிளை மேலாளர் அசோகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/6/w600X390/kutralam.jpg படகு சவாரியில் உற்சாகமாக ஈடுபட்ட சுற்றுலாப்பயணிகள். http://www.dinamani.com/travel/travel-tamilnadu/2017/jul/06/குற்றாலத்தில்-படகு-சவாரி-தொடக்கம்-சுற்றுலாப்-பயணிகள்உற்சாகம்-2732352.html
2728406 சுற்றுலா தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும்: பொன். ராதாகிருஷ்ணன் நாகர்கோவில் DIN Wednesday, June 28, 2017 09:38 AM +0530 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக அரசியலில் 50 ஆண்டுகளாக கலப்படம் உள்ளது. தமிழக முன்னேற்றம் குறித்து அனைத்துக் கட்சி இளைஞர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும். உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போக ஒருசின்னம் தடை என்று கூறமுடியாது என்றார்.

மேலும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2015/7/11/14/w600X390/ponradha.jpg http://www.dinamani.com/travel/travel-tamilnadu/2017/jun/28/அரசுப்-பள்ளி-ஆசிரியர்கள்-தங்களது-குழந்தைகளை-அரசு-பள்ளியில்-சேர்க்க-வேண்டும்-பொன்-ராதாகிருஷ்ணன்-2728406.html
2728405 சுற்றுலா தமிழ்நாடு ஜிஎஸ்டியிலிருந்து கிராமத் தொழில்களுக்கு விலக்கு கிடைக்குமா? திண்டுக்கல், DIN Wednesday, June 28, 2017 08:59 AM +0530 கிராமத் தொழில்கள் ஏற்கெனவே நலிவடைந்து வரும் நிலையில், ஜிஎஸ்டி வரி விதிப்பின் மூலம் மேலும் பாதிக்கப்படுவதை தடுக்க, அவற்றுக்கு விலக்க அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நாடு முழுவதும் ஜூலை 1ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ள ஜிஎஸ்டி வரி (சரக்கு மற்றும் சேவை வரி) விதிப்பு முறை அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சுங்க வரி, கலால் வரி, சேவை வரி, மதிப்புக் கூட்டு வரி (வாட்), கேளிக்கை வரி, சேவை வரி என 17-க்கும் மேற்பட்ட பெயர்களில் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபாடுகளுடன் வரி வசூலிக்கும் முறை பின்பற்றப்பட்டு வந்தது.

பெரு நிறுவனங்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களும் இந்தியா முழுவதும் எளிமையான முறையில் வர்த்தகம் செய்யும் நிலையை உருவாக்கியுள்ளதால், ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைக்கு ஒரு தரப்பினர் அமோக ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே நேரம், கிராமத் தொழில்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லாத நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கிராமத் தொழில்கள் மூலமாக மட்டும் இந்தியாவில் 1.23 கோடி பேர் வேலை வாய்ப்பை பெறுகின்றனர். மெழுவர்த்தி தயாரிப்பு, வத்தல், வடகம், தேன், சோப்பு, பத்தி உள்ளிட்ட கிராமத் தொழில்கள் மூலம் ரூ. 26,689 கோடி மதிப்பிலான பொருள்கள் ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழகத்தை பொருத்தவரையிலும், 17.89 லட்சம் பேர் கிராமத் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டுக்கு ரூ.175 கோடி மதிப்பிலான பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்நிலையில், ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும்போது கிராமத் தொழில்களுக்கு தேவையான மூலப் பொருள்களின் விலை உயர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தரத்தின் அடிப்படையில், கிராமத் தொழில்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருள்களின் விலை ஏற்கெனவே கூடுதலாக இருப்பதாகக் கூறி பலரும் தவிர்க்கின்றனர். இந்நிலையில், ஜிஎஸ்டி வரியின் எதிரொலியாக மேலும் விலையை அதிகரித்தால், கிராமத் தொழில்கள் மூலம் தயாரிக்கப்படும் பொருள்கள் சந்தை வாய்ப்பை இழக்க நேரிடும். மேலும், தரமான பொருள்களை வாங்க நினைக்கும் சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாகிவிடும். அதன் மூலம், கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தொடங்கப்பட்ட கதர் மற்றும் தொழில் ஆணையத்தின் நோக்கமும் கேள்விக்குறியாகும் நிலை உருவாகும்.

இது குறித்து காந்தி கிராம அறக்கட்டளையின் செயலர் கே. சிவக்குமார் கூறியது: தமிழகத்தில் சர்வோதயா சங்கம், கதர் அறக்கட்டளை என 77 கதர் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. காந்தி கிராம கதர் அறக்கட்டளையைப் பொருத்தவரை, சித்தா மற்றும் ஆயுர்வேத வகையில் 260 மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. சித்தா மருந்துகளுக்கு இதுவரை வரி விதிக்கப்படவில்லை. ஆயுர்வேத மருந்துகளுக்கு மட்டும் 5 சதவீத வரி வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது, ஜிஎஸ்டி அமலாகும்போது 12 சதவீத வரி கட்ட வேண்டிய நிலை உருவாகும். மேலும், மருந்துகளுக்கு தேவையான மூலப் பொருள்களை மகளிர் சுய உதவிக் குழுக்களிடமிருந்து பெற முடியாத நிலை ஏற்படும்.

ஜிஎஸ்டி வரி செலுத்தும் நிறுவனங்களிடமிருந்து மூலப் பொருள்களை பெறும்போது, மருந்துகளின் விலை உயர்வதோடு, கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதும் தடைபடும். எனவே, சேவை மனப்பான்மையோடு செயல்படும் நிறுவனங்களுக்கும், தரமான பொருள்களை உற்பத்தி செய்துவரும் கிராமத் தொழில்களுக்கும் ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றார். இது குறித்து கதர் மற்றும் கிராமத் தொழில்கள் இயக்குநரக அலுவலர் ஒருவர் கூறுகையில், கிராமத் தொழில்களை நலிவடையாமல் பாதுகாக்கும் வகையில், ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான ஒப்புதல் கிடைக்கும் என நம்புகிறோம் என்றார்.
 
 

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/11/23/w600X390/GST.jpg http://www.dinamani.com/travel/travel-tamilnadu/2017/jun/28/ஜிஎஸ்டியிலிருந்து-கிராமத்-தொழில்களுக்கு-விலக்கு-கிடைக்குமா-2728405.html
2723127 சுற்றுலா தமிழ்நாடு வெள்ளிமலைக்கு ஓர் சுற்றுலா... க.தி.மணிகண்டன் DIN Monday, June 19, 2017 01:18 AM +0530 பயணங்களில் பல விதம் உண்டு. அதிலும் மலை வாசஸ்தலங்களுக்கு சுற்றுலா செல்வது மிகச் சிறந்த அனுபவத்தை நமக்கு கொடுக்கும். காங்ரீட் காடுகளிலிருந்து தப்பி மரங்கள் சூழ்ந்த பசுமையான மலைப் பிரதேசங்களுக்கு வருடத்துக்கு ஒரு முறையாவது சென்று வர வேண்டும். அதன்படி அண்மையில் வெள்ளிமலைக்கு ஒரு சுற்றுலா சென்று வந்தேன்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளகுறிச்சியில் இருந்து சுமார் 40கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த  வெள்ளி மலை. மலைக்குன்றுகளில் சிறந்து விளங்கும் கல்வராயன் மலையும், வெள்ளிமலையும் கள்ளக்குறிச்சி நகருக்கு மிக அருகில் இருக்கிறது.
கள்ளகுறிச்சியில் இருந்து கச்சிராயபாளையம் வழியாக செல்லும்போது கோமுகி அணையும், தாகப்பாடி அம்மன் ஆலயமும் அமைந்திருகிறது. கோமுகி அணையில் இருக்கும் தண்ணீர் அருகில் இருக்கும் கிராமங்களில் விவசாய நிலங்களுக்குப் பயன்படுகிறது.
இதன் வழியே பயணித்தால் ஒரு சிறு கிராமத்தில் அமைந்திருக்கிறது மலை அடிவாரம். இங்கிருந்து தொடங்குகிறது திகில் பயணம். வளைந்து, வளைந்து செல்லும் குறுகிய சாலையில் பயணிப்பது சற்று திகில் அனுபவமாக இருந்தாலும், இயற்கையின் அழகை ரசித்துக் கொண்டே அந்த திகில் அனுபவத்தை ரசிக்க முடிகிறது.
பசுமையைப் போர்வையாக போர்த்தி இருக்கும் இக்கல்வராயன் மலை 2 பிரிவுகளால் பிரிக்கப்பட்டுள்ளது. வடபகுதி சின்ன கல்வராயன் மலை எனவும், தென் பகுதி பெரிய கலவராயன் மலை எனவும் பிரிக்கப்பட்டுள்ளது.சின்ன கல்வராயன் மலை சராசரியாக 2,700 அடி உயரமும்,பெரிய கல்வராயன் மலை 4,000 அடி உயரமும் கொண்டவை.  
குறிஞ்சி நிலத்தைச் சார்ந்தஇம்மக்கள் தேன் எடுப்பதையும், ஆடு,மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்ப்பதிலும் முக்கியத் தொழிலாகக் கொண்டுள்ளனர்.


சுமார் 1 மணி நேரப் பயணத்திற்கு பின்பு பெரியார் நீர்வீழ்ச்சி நம்மை வரவேற்கிறது. பறவைகளின் சப்தமும், அருவியின் ஓசையும் தவிர வேறு எந்த சப்தமும் இல்லாமல் அமைதியாக இருக்கிறது இந்த இடம்.மலை முகடுகளில் இருந்து ஆர்பரித்து வரும் இந்த மூலிகை தண்ணீரில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர். இதைக் கடந்து சென்றால் கரியாலூர் ஏரி படகு சவாரியும், தாழ் வெள்ளி மலையும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மையமும் அமைந்திருக்கிறது.
கள்ளக்குறிச்சியிலிருந்து வெள்ளிமலைக்கு பேருந்து வசதியும் உள்ளது. வெள்ளிமலையில் பெட்ரோல் பங்கும் உள்ளது. மேலும், உணவகங்களும், கடைகளும் உள்ளன.
குடும்பத்துடன் சுற்றுலா செல்ல சிறந்த இடமாக இம்மலை அமைந்திருக்கிறது என்பதில் சற்றும் சந்தேகமில்லை.
கொடைக்கானல், ஊட்டி, ஏர்காடு போன்ற மலைவாசஸ்தலங்களுக்கு செல்வது போல், இந்த வெள்ளிமலைக்கும் ஒருமுறை சென்று வரலாம்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/19/w600X390/kalvaryan.jpg http://www.dinamani.com/travel/travel-tamilnadu/2017/jun/19/வெள்ளிமலைக்கு-ஓர்-சுற்றுலா-2723127.html
2722624 சுற்றுலா தமிழ்நாடு கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு DIN DIN Sunday, June 18, 2017 02:33 AM +0530 கொடைக்கானலில் சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
கொடைக்கானலில் தற்போது சீசன் முடிந்த நிலையிலும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. சுற்றுலா இடங்களான வெள்ளிநீர் வீழ்ச்சி, பியர் சோழா அருவி, பாம்பார் அருவி, மோயர் பாயிண்ட், பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ்வாக், பில்லர்ராக், பசுமைப் பள்ளத்தாக்கு, செட்டியார் பூங்கா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களில் சனிக்கிழமை அதிக அளவில் சுற்றுலா பயணிகள் காணப்பட்டனர்.
மேலும் பிற்பகலிலும், மாலையிலும் ஒரு மணி நேரம் மழை பெய்ததால் அதிக அளவில் குளிர்ச்சி நிலவியது. ஆனாலும் மழையை பொருள்படுத்தாமல் கொடைக்கானல் ஏரியில் படகு சவாரியும், ஏரிச்சாலையைச் சுற்றி சைக்கிள், குதிரை சவாரியும் செய்து சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனர்.
இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறியதாவது: தரைப் பகுதியில் அக்னி நட்சத்திரம் முடிந்தும் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. எனவே கொடைக்கானனலில் மிதமான சீசன் நிலவுவதால் வந்துள்ளோம். மேகமூட்டம், இயற்கைக் காட்சிகள், அருவிகள் மனதுக்கு இதமளிக்கிறது என்றனர்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/18/w600X390/kodaikanal.jpg கொடைக்கானல் ஏரியில் சனிக்கிழமை படகு சவாரி செய்து மகிழும் சுற்றுலாப் பயணிகள். http://www.dinamani.com/travel/travel-tamilnadu/2017/jun/18/கொடைக்கானலுக்கு-சுற்றுலாப்-பயணிகள்-வருகை-அதிகரிப்பு-2722624.html
2721998 சுற்றுலா தமிழ்நாடு கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை DIN DIN Saturday, June 17, 2017 02:35 AM +0530 தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதையடுத்து வெள்ளிக்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வியாழக்கிழமை பிற்பகல் முதல் பலத்த மழை பெய்தது. இதனால் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, வெள்ளிக்கிழமை காலை முதல் சுற்றுலாப்பயணிகள் அருவியில் குளிப்பதற்கும், அங்கு செல்வதற்கும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும், அருவியில் சீரான நீர்வரத்து ஏற்படும் வரை அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/17/w600X390/river.jpg கும்பக்கரை அருவியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு. http://www.dinamani.com/travel/travel-tamilnadu/2017/jun/17/கும்பக்கரை-அருவியில்-வெள்ளப்-பெருக்கு-சுற்றுலாப்-பயணிகள்-குளிக்கத்-தடை-2721998.html
2720562 சுற்றுலா தமிழ்நாடு கொடைக்கானலில் மழை: அருவிகளில் நீர்வரத்து தொடக்கம் DIN DIN Thursday, June 15, 2017 12:39 AM +0530 கொடைக்கானலில் புதன்கிழமை பரவலாக பெய்த மழையால் அங்குள்ள அருவிகளில் நீர்வரத்து தொடங்கியுள்ளது.
கொடைக்கானலில் கடந்த 2 வாரங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை முதல் மேகமூட்டமாக காணப்பட்டது. இதையடுத்து பிற்பகலில் பரவலாக பெய்யத் தொடங்கிய மழை 2 மணி நேரம் நீடித்தது.
இந்த மழையால் வெள்ளிநீர் வீழ்ச்சி, வட்டக்கானல் அருவி, பியர் சோழா அருவி, பேரிபால்ஸ் அருவி, செண்பகா அருவி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து தொடங்கியுள்ளது. மேலும் இந்த மழையால் புறநகர்ப் பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு ஓரளவு குறையும் என பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
பேரிக்காய் விவசாயிகள் மகிழ்ச்சி: கொடைக்கானலில் பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான பேரி மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இங்கு ஜூலை மாதம் முதல் பேரிக்காய் விளைச்சல் அதிகரித்து காணப்படும். இந்நிலையில், கொடைக்கானலில் பரவலாக மழை பெய்து வருவதால் பேரிக்காய் விளைச்சலுக்கு ஏற்ற மழையாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

 

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/15/w600X390/kodaikanal.jpg http://www.dinamani.com/travel/travel-tamilnadu/2017/jun/15/கொடைக்கானலில்-மழை-அருவிகளில்-நீர்வரத்து-தொடக்கம்-2720562.html
2714953 சுற்றுலா தமிழ்நாடு உலக சுற்றுச்சூழல் தினம்: மாமல்லபுரம் கடற்கரையில் தூய்மைப்பணி DIN DIN Tuesday, June 6, 2017 02:20 AM +0530 உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி,மாமல்லபுரம் கடற்கரையில் தூய்மைப்பணி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மாமல்லபுரம் பேரூராட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருப்போரூர் எம்எல்ஏ எம்.கோதண்டபாணி தலைமை வகித்தார். பேரூராட்சிச் செயல் அலுவலர் என்.எம்.முருகன் வரவேற்றார்.
செங்கல்பட்டு கோட்டாட்சியர் ஜெயசீலன், மாமல்லபுரத்தில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள், நகரைத் தூய்மையாக வைத்திருத்தல் குறித்து ஆலோசனைகளை வழங்கினார். மேலும், பிளாஸ்டிக் பொருள்களை தவிர்த்தல் குறித்தும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சுற்றுலா வளர்ச்சிக் கழக ஓட்டல் மேலாளர் வெங்கடேசன், திருக்கழுகுன்றம் வட்டாட்சியர் மனோகரன், முன்னாள் கவுன்சிலர்கள் பெ.பூங்குழலி, ரா.ராஜசேகர், ச.கோகிலா, ஜெ.அப்துல்காதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாமல்லபுரம் கடற்கரையில் துப்புரவுப் பணி மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வாகன ஊர்தியை சார் ஆட்சியர் ஜெயசீலன், எம்எல்ஏ எம்.கோதண்டபாணி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து மாமல்லபுரம் கடற்கரையில் கிடந்த பிளாஸ்டிக் குப்பைகளை துப்புரவு பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து அகற்றினர். மேலும், விழிப்புணர்வு ஊர்வலத்தின்போது, சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/6/w600X390/mamalapuram.jpg மாமல்லபுரம் கடற்கரையில் நடைபெற்ற தூய்மைப் பணி. http://www.dinamani.com/travel/travel-tamilnadu/2017/jun/06/உலக-சுற்றுச்சூழல்-தினம்-மாமல்லபுரம்-கடற்கரையில்-தூய்மைப்பணி-2714953.html
2713216 சுற்றுலா தமிழ்நாடு குற்றாலத்தில் சீசன் தொடங்கியது: சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல் DIN DIN Saturday, June 3, 2017 02:46 AM +0530 கேரளத்தில், தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், குற்றாலத்திலும் சீசன் தொடங்கியுள்ளது.
பேரருவி மற்றும் ஐந்தருவியில் வெள்ளிக்கிழமை காலை முதல் தண்ணீர் விழத் தொடங்கியதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சீசன் நிலவும். கடந்த இரு ஆண்டுகளாக சீசன் களைகட்டாததால் சுற்றுலாப் பயணிகளும், வர்த்தகர்களும் மிகுந்த வருத்தமடைந்தனர்.
இந்நிலையில், நிகழாண்டு தென்மேற்குப் பருவமழை ஜூன் 1ஆம் தேதி தொடங்கும் என வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், கேரளத்தில் பருவமழை தொடங்கியது. அதன் தாக்கமாக குற்றாலம் மலைப் பகுதியில் கடந்த சில தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது மெல்லிய சாரலுடன், குளிர்ந்த காற்றும் வீசியது.
வியாழக்கிழமை இரவு பெய்த மிதமான மழையின் காரணமாக பேரருவி மற்றும் ஐந்தருவியில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் தண்ணீர் விழத் தொடங்கியது. இதையடுத்து, குற்றாலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அருவிகளை நோக்கி படையெடுக்கத் தொடங்கிவிட்டனர்.
ஐந்தருவி: ஐந்தருவியின் நான்கு கிளைகளிலும் காலைமுதலே தண்ணீர் விழத் தொடங்கியது. இங்கு பேருந்து வசதி இல்லாததால் வாகனங்களில் வந்த சுற்றுலாப் பயணிகள் மட்டும் சென்று குளித்து மகிழ்ந்தனர். மாலை முதல் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் அருவிகளில் தண்ணீர்வரத்து வெகுவாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/3/w600X390/kutralam.jpg குற்றாலம் பேரருவியில் உற்சாகமாக குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள். http://www.dinamani.com/travel/travel-tamilnadu/2017/jun/03/குற்றாலத்தில்-சீசன்-தொடங்கியது-சுற்றுலாப்-பயணிகள்-உற்சாக-குளியல்-2713216.html
2711464 சுற்றுலா தமிழ்நாடு ஓட்டல்கள் அடைப்பு: மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகள் அவதி DIN DIN Wednesday, May 31, 2017 02:37 AM +0530 மத்திய அரசின் சேவை வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாமல்லபுரத்தில் செவ்வாய்க்கிழமை ஓட்டல்கள் அடைக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாயினர்.
ஜிஎஸ்டி வரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாமல்லபுரத்தில் ஓட்டல்கள் உரிமையாளர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை உணவகங்களை மூடினர். மாமல்லபுரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் உள்ள ஓட்டல்கள் மற்றும் உணவு விடுதிகள் அனைத்து அடைக்கப்பட்டன. இதனால் சுற்றுலா பயணிகள் உணவருந்த முடியாமல் அவதிப்பட்டனர். பின்னர் சாலையோர சிற்றுண்டிக் கடைகளில் கிடைத்த உணவை சாப்பிட்டனர். மாமல்லபுரத்தில் தங்கி இருக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் செவ்வாய்க்கிழமை உணவகங்கள் மூடப்பட்டதால் உணவுக்காக அலைந்து திரிந்தனர்.
மாமல்லபுரம் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் என்.ஜனார்த்தனம் கூறுகையில், மாமல்லபுரத்தில் 100 சதவீதம் ஓட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்ட்கள் அடைக்கப்பட்டு போராட்டம் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்தார். இதேபோன்று திருக்கழுகுன்றம், திருப்போரூர், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, மறைமலை நகர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் ஓட்டல்கள் மூடிக் கிடந்தன. வேலைகளுக்கு வருவோர் வழக்கம்போல் கட்டுச்சோறு கொண்டு வராதவர்களும் செவ்வாய்க்கிழமை சாப்பாட்டிற்கு வழியின்றி பிஸ்கெட், ரொட்டி போன்றவற்றை வாங்கி சாப்பிட்டு
பசியாறினர்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/31/w600X390/hotel.jpg மாமல்லபுரத்தில் பேருந்து நிலையம் அருகில் மூடப்பட்டிருந்த ஓட்டல். http://www.dinamani.com/travel/travel-tamilnadu/2017/may/31/ஓட்டல்கள்-அடைப்பு-மாமல்லபுரத்தில்-சுற்றுலாப்-பயணிகள்-அவதி-2711464.html
2708141 சுற்றுலா தமிழ்நாடு கொடைக்கானலில் நாய்கள் கண்காட்சி DIN DIN Thursday, May 25, 2017 02:53 AM +0530 கொடைக்கானலில் கோடை விழாவையொட்டி கால்நடைத் துறை சார்பில் புதன்கிழமை நாய்கள் கண்காட்சி நடைபெற்றது.
இங்குள்ள பிரையண்ட் பூங்காவில் நடைபெற்ற இந்த நாய்கள் கண்காட்சியில் பொமரேனியன், அல்சேஷன், புல்டாக், ஜெர்மன் ஷெப்பர்டு, லாப்ரடார், டாபர்மென் போன்ற 10-க்கும் மேற்பட்ட வகைகளில் கொடைக்கானல், சென்னை போன்ற இடங்களிலிருந்து சுமார் 50 நாய்கள் பங்கேற்றன.
அப்போது 5 பிரிவுகளின் கீழ் நடைபெற்ற போட்டிகளில் நாய்களின் உடலமைப்பு, சுத்தம், கீழ்படிதல் உள்ளிட்டவைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் கொடைக்கானலைச் சேர்ந்த ஜெர்மன் ஷெப்பர்டு நாய் முதல் பரிசை பெற்றது.
மேலும் சென்னையைச் சேர்ந்த டாபர்மென் நாய்க்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில் 'ஏ' பிரிவில் வெற்றி பெற்ற கொடைக்கானலைச் சேர்ந்த நாயின் உரிமையாளர் ராடன் சுதர்சனுக்கு முதல் பரிசாக கோப்பை மற்றும் சான்றிதழை மாவட்ட வன அலுவலர் முருகன் வழங்கினார்.
'பி' பிரிவில் முதல் பரிசை ஜெர்மன் ஷெப்பர்டு நாயின் உரிமையாளர் ஜான் பீட்டருக்கும், அதே பிரிவில் சுதன் என்பவரின் நாய்க்கு இரண்டாம் பரிசும் வழங்கப்பட்டன.
மேலும் 'சி' பிரிவில் ஜெர்மன் ஷெப்பர்டு இனத்தைச் சேர்ந்த நாயின் உரிமையாளர் சக்திவேலுக்கு முதல் பரிசும், நாதன் என்பவரின் நாய்க்கு இரண்டாம் பரிசும் வழங்கப்பட்டது. இதேப் போல 5 பிரிவுகளில் வெற்றி பெற்ற நாய்களின் உரிமையாளர்களுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் கால்நடைத் துறை துணை இயக்குநர் ஜெபராஜ், சுற்றுலா அலுவலர் உமாதேவி, டாக்டர் ஹக்கீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/25/w600X390/dog.jpg http://www.dinamani.com/travel/travel-tamilnadu/2017/may/25/கொடைக்கானலில்-நாய்கள்-கண்காட்சி-2708141.html
2704616 சுற்றுலா தமிழ்நாடு 121-ஆவது உதகை மலர்க்காட்சி இன்று தொடக்கம்: முதல்வர் தொடக்கி வைக்கிறார் DIN DIN Friday, May 19, 2017 02:35 AM +0530 உதகையின் பிரசித்தி பெற்ற மலர்த்திருவிழாவான உதகை மலர்க்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
121-ஆவது ஆண்டாக நடைபெறும் இந்த மலர்க்காட்சியை தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு தலைமையிலும், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையிலும், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைக்கிறார்.
இந்த மலர்க்காட்சிக்காக பூங்காவின் முகப்பில் 1 லட்சத்து 20 ஆயிரம் காரனேஷன் மலர்களைக் கொண்டு மகாபலிபுரம் கடற்கரை கோயில் உருவம் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஆயிரக்கணக்கான மலர்களைக் கொண்டு ஹார்ன்பில் பறவையின் உருவமும் உருவாக்கப்பட்டுள்ளது.
பூங்காவில் உள்ள காட்சி மாடத்தில் ஆஸ்டர், லில்லியம், கேலண்டூலா, பெட்டூனியா, பிளாக்ஸ், சால்வியா, காரனேஷன், கிரசாந்திமம், பிகோனியா, ஆசியாடிக் லில்லி, கேண்டீப்ட் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மலர் ரகங்களைக் கொண்டு 15,000 மலர்த் தொட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
அதேபோல, பூங்கா முழுவதும் மலர்களால் ஆங்காங்கே சிறப்பு அலங்காரங்களும் செய்யப்பட்டுள்ளன. இவற்றைத்தவிர நடப்பு ஆண்டில் 60 ரகங்களில் பல வண்ண டேலியா மலர்களும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் பூங்காவில் தனியார் மற்றும் அரசுத் துறைகளின் சார்பில் காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இம்மலர்க்காட்சியை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை காலை 8.55 மணிக்கு தொடக்கி வைக்கிறார். 3 நாள்களுக்கு நடைபெறும் இக்கண்காட்சியின் நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (மே 21) மாலை நடைபெறவுள்ளது. இதில், தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பரிசளிக்கிறார்.

 

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/27/w600X390/palanisamy2.jpg http://www.dinamani.com/travel/travel-tamilnadu/2017/may/19/121-ஆவது-உதகை-மலர்க்காட்சி-இன்று-தொடக்கம்-முதல்வர்-தொடக்கி-வைக்கிறார்-2704616.html
2704013 சுற்றுலா தமிழ்நாடு சென்னையை சுற்றிப் பார்க்க சுற்றுலாத் துறை ஏற்பாடு DIN DIN Thursday, May 18, 2017 02:30 PM +0530 சென்னையை சுற்றிப் பார்க்கும் வகையில் ஒரு நாள் சுற்றுலாவுக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட அறிவிப்பு:
சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை, பிர்லா கோளரங்கம், வள்ளுவர் கோட்டம், பாம்பு பண்ணை, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில், மெரீனா கடற்கரை, முட்டுக்காடு படகு குழாம், கோவளம் ஆகிய இடங்களுக்கு அரைநாள் சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இச்சுற்றுலாவுக்கு நாள்தோறும் காலை 8 மணி முதல் 1 மணி வரையிலோ அல்லது பகல் 1.30 மணி முதல் மாலை 6.30 மணி வரையிலோ பயணிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள்.
இதற்கு, சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இயக்கும் நவீன பேருந்தில் ஒருவருக்கு ரூ.300, குளிரூட்டப்பட்ட பேருந்தில் ரூ.375 வசூலிக்கப்படும்.

இதேபோல், ஒருநாள் சுற்றுலாவாக கோவளம், மாமல்லபுரம், காஞ்சிபுரம், முட்டுக்காடு படகு இல்லம், விஜிபி தங்க கடற்கரை ஆகிய இடங்களுக்கு பயணிகள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இது தவிர சக்தி சுற்றுலாவாக மாங்காடு, திருவேற்காடு, பூந்தமல்லி, திருமுல்லைவாயில், செம்புலிவரம், பஞ்சட்டி, மேலூர் திருவுடையம்மன் ஆகிய அம்மன் கோயில்களுக்கு ரூ.550 கட்டணத்திலும் ஆன்மிக சுற்றுலா செல்லலாம்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/22/w600X390/chennai1.jpg http://www.dinamani.com/travel/travel-tamilnadu/2017/may/18/சென்னையை-சுற்றிப்-பார்க்க-சுற்றுலாத்-துறை-ஏற்பாடு-2704013.html
2699733 சுற்றுலா தமிழ்நாடு குமரியில் சித்ரா பெளர்ணமி: சூரியன் மறையும் நேரத்தில் சந்திரன் உதயம் DIN DIN Thursday, May 11, 2017 12:53 AM +0530 கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் சித்ரா பெளர்ணமி நாளான புதன்கிழமை மேகமூட்டம் காரணமாக சூரியன் மறையும் காட்சி தெளிவாகத் தெரியவில்லை. அதேநேரத்தில் சந்திரன் உதயமாகும் காட்சியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர்.
சித்ரா பெளர்ணமி நாளையொட்டி அரபிக் கடலில் சூரியன் மறையும் அதே வேளையில் வங்காள விரிகுடாவில் இருந்து சந்திரன் தனது ஒளியை வீசத் தொடங்கும். இந்த அபூர்வக் காட்சியை கன்னியாகுமரியில் ஒரே இடத்தில் அமர்ந்து பார்க்கலாம். இதைக் காண மாலை 6 மணிக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் முக்கடல் சங்கமத்தில் திரண்டிருந்தனர். ஆனால் மேகமூட்டம் காரணமாக சூரியன் அஸ்தமிக்கும் காட்சி தெளிவாகத் தெரியவில்லை. இதனால் பயணிகள் மிகவும் ஏமாற்றமடைந்தனர். ஆனால் சந்திரன் உதயமாகும் காட்சி ஆரம்பத்தில் தெளிவாகத் தெரியாவிட்டாலும் இரவு 7 மணிக்குப் பின்னர் மிகவும் தெளிவாகத் தெரிந்தது. இதை சுற்றுலாப் பயணிகள் பார்த்து ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர்.
சிறப்பு பூஜை: சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும், நிர்மால்ய பூஜையும் நடைபெற்றது. காலை 6 மணிக்கு தீபாராதனை, காலை 8 மணிக்கு ஸ்ரீபலி பூஜை, பந்திரடி பூஜை, உஷ பூஜை ஆகியன நடைபெற்றது. காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பின்னர் வைரக் கிரீடம், வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.
முற்பகல் 11.30 மணிக்கு உச்சிகால அலங்கார தீபாராதனை, பிற்பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு சாயரட்ஷை தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு புஷ்பாபிஷேகம், இரவு 8 மணிக்கு தீபாராதனை, இரவு 8.15 மணிக்கு கோயில் உள்பிரகாரத்தில் அம்மன் பவனி வருதல் தொடர்ந்து வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு, அத்தாழ பூஜை, ஏகாந்த தீபாராதனை ஆகியன நடைபெற்றது.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/11/w600X390/kumari.jpg கன்னியாகுமரியில் தெரிந்த சந்திர உதயம். http://www.dinamani.com/travel/travel-tamilnadu/2017/may/11/குமரியில்-சித்ரா-பெளர்ணமி-சூரியன்-மறையும்-நேரத்தில்-சந்திரன்-உதயம்-2699733.html
2699058 சுற்றுலா தமிழ்நாடு குமரியில் இன்று சித்ரா பெளர்ணமி: சந்திரன் உதயம், சூரிய அஸ்தமனம் ஒரே நேரத்தில் பார்க்கலாம் DIN DIN Wednesday, May 10, 2017 02:54 AM +0530 சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் ஒரே நேரத்தில் சூரியன் மறையும் காட்சியையும், சந்திரன் உதயமாகும் காட்சியையும் புதன்கிழமை மாலை 6 மணிக்கு பார்க்கலாம்.
சித்ரா பெளர்ணமி நாளான புதன்கிழமை அரபிக் கடலில் சூரியன் மறையும் அதே வேளையில் வங்காள விரிகுடாவில் இருந்து சந்திரன் தனது ஒளியை வீசத் தொடங்கும். இந்த அபூர்வக் காட்சியை கன்னியாகுமரியில் ஒரே இடத்தில் அமர்ந்து பார்க்கலாம். இதனைக் காண ஆயிரக்கணக்கான வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் முக்கடல் சங்கமத்தில் கூடுவது வழக்கம். உள்ளூர் பயணிகள் பார்வையிட வசதியாக நாகர்கோவிலில் இருந்து கூடுதல் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு பூஜை: சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு, கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளது. அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும், நிர்மால்ய பூஜையும் நடைபெறும். காலை 6 மணிக்கு தீபாராதனை, காலை 8 மணிக்கு ஸ்ரீபலி பூஜை, பந்திரடி பூஜை, உஷ பூஜை ஆகியன நடைபெறும். காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பின்னர் அம்மனுக்கு வைரக் கிரீடம், வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்வர்.
முற்பகல் 11.30 மணிக்கு உச்சிகால அலங்கார தீபாராதனை, பிற்பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு புஷ்பாபிஷேகம், 8 மணிக்கு தீபாராதனை, 8.15 மணிக்கு கோயில் உள்பிரகாரத்தில் அம்மன் பவனி வருதல், தொடர்ந்து வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்குத் தாலாட்டு, அத்தாழ பூஜை, ஏகாந்த தீபாராதனை ஆகியன நடைபெறும்.
ஏற்பாடுகளை தேவசம் போர்டு இணை ஆணையர் பாரதி, பகவதியம்மன் கோயில் மேலாளர் ஆறுமுகதரன் (பொ) உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

]]>
http://www.dinamani.com/travel/travel-tamilnadu/2017/may/10/குமரியில்-இன்று-சித்ரா-பெளர்ணமி-சந்திரன்-உதயம்-சூரிய-அஸ்தமனம்-ஒரே-நேரத்தில்-பார்க்கலாம்-2699058.html
2699155 சுற்றுலா தமிழ்நாடு மாமல்லபுரத்தில் கடல் சீற்றம் DIN DIN Wednesday, May 10, 2017 02:31 AM +0530 மாமல்லரத்தில் திங்கள்கிழமை இரவு முதல் கடல் சீற்றத்தின் காரணமாக ராட்சத அலைகள் கரையைத் தாண்டி வந்த வண்ணமாக உள்ளது. அலைகள் படகுகளை கடலுக்குள் இழுத்துச் செல்லாமல் இருக்க மீனவர்கள் மீன்பிடி படகுகளை பாதுகாப்பான இடத்துக்கு எடுத்துச் சென்றனர்.
கடல்சீற்றம் குறித்து மீனவர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் அறிவியல் ஆர்வலர்கள் கூறியதாவது:
பொதுவாக பெளர்ணமி, அமாவாசை தினங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படுவது வழக்கம். கடல்நீர் மேலே எழுவதன் காரணமாக உருவாகும் ராட்சத அலைகள் கரையை தாண்டி வந்து செல்லும். இந்த நேரத்தில் கடலுக்குள் செல்வதும் கடற்கரை அருகே நடமாடுவதும் ஆபத்தானது என்றனர்.

மாமல்லபுரத்தில் கடல் சீற்றத்தால் கரையை நோக்கி தாவி வரும் ராட்சத அலைகள்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/10/w600X390/mamalapuram.jpg ராட்சத அலைகள் படகுகளை இழுத்துச் செல்லாமல் இருக்க அவற்றை பாதுகாப்பான இடத்திற்கு இழுத்துச் செல்லும் மீனவர்கள். http://www.dinamani.com/travel/travel-tamilnadu/2017/may/10/மாமல்லபுரத்தில்-கடல்-சீற்றம்-2699155.html
2697353 சுற்றுலா தமிழ்நாடு நீலகிரி கோடை விழா: கோத்தகிரியில் தொடங்கியது 2 நாள் காய்கறிக் கண்காட்சி DIN DIN Sunday, May 7, 2017 12:28 AM +0530 நீலகிரி மாவட்டத்தில், கோடை விழாவையொட்டி 9-ஆவது ஆண்டாக 2 நாள் காய்கறிக் கண்காட்சி கோத்தகிரியில் சனிக்கிழமை தொடங்கியது.
கோத்தகிரி, நேரு பூங்காவில் நடைபெறும் இந்தக் கண்காட்சியையும், நீலகிரி கோடை விழாவையும் சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தொடக்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில், அரசின் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத் துறை முதன்மைச் செயலர் அபூர்வ வர்மா, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் வெ.பழனிகுமார், தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை இயக்குநர் (பொறுப்பு) ஆனந்தகுமார், நீலகிரி மாவட்ட ஆட்சியர் பி.சங்கர், தோட்டக் கலைத் துறை இணை இயக்குநர் என்.மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கண்காட்சியையொட்டி, 1,500 கிலோ எடையில் பல வண்ணங்கள் கொண்ட குடைமிளகாயைக் கொண்டு 25 அடி நீளத்துக்கு கப்பல் வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் 500 கிலோ எடையில் மஞ்சள், பச்சை நிற சுகுனி காய்களைக் கொண்டு 10 அடி உயரத்துக்கு கலங்கரை விளக்கமும், முள்ளங்கியைக் கொண்டு ஒரு ஜோடி அன்னப் பறவையும் நீலகிரி மாவட்ட தோட்டக் கலைத் துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ளன.
இத்துடன், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சார்பில் கத்திரிக்காய்களாலான பாண்டா கரடி, கோவை மாவட்டத்தின் சார்பில் பூசணிக் காய்களாலான புலி, விழுப்புரம் மாவட்டத்தின் சார்பில் கத்திரிக்காய் மற்றும் வெள்ளைப் பூசணியைக் கொண்டு மயில், திண்டுக்கல் மாவட்டத்தின் சார்பில் சேனைக் கிழங்கிலான உருவங்களும், சிவகங்கை மாவட்டத்தின் சார்பில் குடை மிளகாயாலான வேலுநாச்சியார் உருவமும், மதுரை மாவட்டத்தின் சார்பில் காய்கறிகளாலான ஜல்லிக்கட்டு உருவமும், தேனி மாவட்டத்தின் சார்பில் கத்திரிக்காய்களாலான காட்டெருமை, திருநெல்வேலி மாவட்டத்தின் சார்பில் பூசணிக்காய்களாலான மான் உருவம், புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பில் முட்டைக்கோஸினால் உருவாக்கப்பட்ட மயில் உருவமும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.
இவற்றுடன் போட்டியாளர் அரங்கில் சமவெளிப் பகுதிகளில் விளையும் காய்கறிகள் மற்றும் மலைத் தோட்டக் காய்கறிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. காய்கறிச் சாகுபடியின் முக்கியத்துவத்தை இல்லத்தரசிகளுக்கு உணர்த்தும் வகையில் வீட்டுக் காய்கறித் தோட்ட மாதிரிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறவுள்ள விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.
கோத்தகிரி நேரு பூங்காவில் நடைபெறும் இந்தக் காய்கறிக் கண்காட்சியைக் காண நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கோத்தகிரியில் குவிந்துள்ளனர்.

 

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/7/w600X390/vegatable.jpg குடைமிளகாயால் உருவாக்கப்பட்டுள்ள கப்பல். http://www.dinamani.com/travel/travel-tamilnadu/2017/may/07/நீலகிரி-கோடை-விழா-கோத்தகிரியில்-தொடங்கியது-2-நாள்-காய்கறிக்-கண்காட்சி-2697353.html
2696869 சுற்றுலா தமிழ்நாடு கோத்தகிரியில் காய்கறிக் கண்காட்சி இன்று தொடக்கம் DIN DIN Saturday, May 6, 2017 02:43 AM +0530 கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் 9-ஆவது காய்கறிக் கண்காட்சி சனிக்கிழமை (மே 6) தொடங்க உள்ளது.
இரண்டு நாள்கள் நடைபெறும் இக்கண்காட்சிக்காக, தோட்டக்கலைத் துறை சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதில், குடைமிளகாயைக் கொண்டு கப்பல் உருவம், பல்வேறு காய்கறிகளால் உருவாக்கப்பட்ட கலங்கரை விளக்கம் என பல்வேறு மாதிரிகள் தோட்டக் கலைத் துறை மற்றும் தனியார் துறை சார்பில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறையினர் கூறியதாவது:
கோத்தகிரி காய்கறிக் கண்காட்சியில் நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ. 20, சிறுவர்களுக்கு ரூ. 10, கேமரா கட்டணமாக ரூ. 30, விடியோ கட்டணமாக ரூ. 75 வசூலிக்கப்படுகிறது. இதில், பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரும் விவசாயிகள், பொதுமக்கள் தாங்கள் பயிரிட்ட பயிர்களைக் கொண்டு பொம்மை, சிலைகள் உள்ளிட்டவற்றை உருவாக்கி கண்காட்சியில் வைப்பர். அதில் சிறந்தவையாகத் தேர்ந்தெடுக்கப்படும் படைப்புகளுக்குப் பரிசுகள் வழங்கப்படும். போட்டியில் வெற்றி பெறுவோருக்கான பரிசுத் தொகை, கோத்தகிரி தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் மே 15-ஆம் தேதி காலை 10 முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படுகிறது.
போட்டியாளர்கள் ஒரு பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்துகொள்ளலாம். ஆனால், ஒருவருக்கு ஒரு பரிசுதான் வழங்கப்படும். போட்டியாளர்கள் கொண்டு வரும் பொருள்கள் போட்டியாளர்களால் பயிர் செய்யப்பட்டதாகவோ, தயாரிக்கப்பட்டதாகவோ இருக்க வேண்டும்.
போட்டியாளர்களால் பயிர் செய்யப்படவில்லை என்பது நடுவரின் ஆய்வில் தெரிய வந்தால் பரிசு வழங்கப்பட மாட்டாது. போட்டிக்காக வைக்கப்படும் காட்சிப் பொருள்களுக்கு நுழைவுக் கட்டணமாக ஒரு பிரிவுக்கு ரூ. 20 வசூலிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/6/w600X390/ooty.jpg http://www.dinamani.com/travel/travel-tamilnadu/2017/may/06/கோத்தகிரியில்-காய்கறிக்-கண்காட்சி-இன்று-தொடக்கம்-2696869.html
2695522 சுற்றுலா தமிழ்நாடு கோடை விடுமுறை: சுற்றுலாப் பயணிகளால் களை கட்டுகிறது வேளாங்கண்ணி DIN DIN Thursday, May 4, 2017 12:31 AM +0530 கோடை விடுமுறையையொட்டி, திரளான சுற்றுலாப் பயணிகளின் வருகையால் களை கட்டத் தொடங்கியுள்ளது வேளாங்கண்ணி.
நாகை மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சிப் பகுதியாக இருந்தாலும், உலகளவில் நாகை மாவட்டத்தின் அடையாளமாக விளங்குகிறது வேளாங்கண்ணி. கீழை நாடுகளின் லூர்து எனப் போற்றப்படும் புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தால் ஆன்மிகப் புகழ்ப் பெற்ற இந்த ஊர், மாவட்டத்தின் முக்கிய ஆன்மிகத் தலங்களுள் ஒன்றாகவும், தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகவும் உள்ளது.
புனித ஆரோக்கிய அன்னையின் பேராலய வழிபாட்டுக்காக நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் வேளாங்கண்ணி வந்து செல்வது வழக்கம். சனி, ஞாயிறு மற்றும் பிற விடுமுறை நாள்களில் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கும்.
தற்போது, கல்வி நிலையங்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தினமும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இப்பகுதிக்கு வந்து செல்கின்றனர்.
பேராலய நிர்வாகம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதி அறைகளும், 50-க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகளும் இருந்தாலும், அறை முன்பதிவு இல்லாமல் விடுமுறை நாள்களில் வேளாங்கண்ணிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்குமிடம் கிடைக்காமல் அலைக்கழிப்புக்குள்ளாக நேரிடும்.
வேளாங்கண்ணிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் முதல் தேர்வு புனித ஆரோக்கிய அன்னை பேராலயம். அடுத்த நிலையில், பிரதான பொழுதுபோக்கு அம்சமாக இருப்பது கடல் குளியலும், கடல் உணவுகளை சமைத்து உண்பதும்தான்.
பல நேரங்களில் பேராலயத்தை விட, கடற்கரையில் குழுமி மகிழும் மக்கள் கூட்டமே அதிகமாக இருக்கும்.
ஆனால், வேளாங்கண்ணி பேராலயம் எதிரே உள்ள கடல் பகுதி குளித்து மகிழ்வதற்கு உரியது இல்லை என்பது கடந்த காலத்தில் நேரிட்ட பல உயிரிழப்பு சம்பவங்கள் நிரூபித்துள்ளன. இந்த இடத்தில் கடலில் குளிப்பது ஆபத்தானது என்ற அறிவிப்புப் பலகை இருந்தாலும், அது சுற்றுலாப் பயணிகளின் கருத்தை கவருவதாக இல்லை. இதன் காரணமாக, பாதுகாப்பற்ற நிலையிலேயே ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வேளாங்கண்ணி கடலில் குளித்துச் செல்கின்றனர்.
கடலில் குளிக்கும் பக்தர்களைக் கண்காணிப்பதற்காக இந்தப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கோபுரம் அண்மைக்காலமாக சேதமடைந்து, பயன்பாடற்ற நிலையில் இருந்தது. தற்போது அந்தக் கோபுரம் முழுமையாக அகற்றப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் வேளாங்கண்ணியில் சுற்றுலாப் பயணிகளின் கடல் குளியலுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏற்படுத்த வேண்டும். கடற்கரையோர கண்காணிப்புக்கு காவல் துறை கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகள் உடை மாற்றிக் கொள்வதற்காக தாற்காலிக உடை மாற்றும் அறைகளை ஏற்படுத்த வேண்டும் என்பது சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.
ஒரு சுற்றுலாப் பயணியின் வருகையின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாவும் உள்ளூரைச் சேர்ந்த 4 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது சுற்றுலாத் துறை தெரிவிக்கும் புள்ளி விவரம். இதன்படி, தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் வேளாங்கண்ணியில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் சுற்றுலாப் பயணிகள்.


வேளாங்கண்ணி கடற்கரை கடைவீதி பகுதியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/4/w600X390/velangani.jpg வேளாங்கண்ணி கடலில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகளில் ஒரு பகுதியினர். http://www.dinamani.com/travel/travel-tamilnadu/2017/may/04/கோடை-விடுமுறை-சுற்றுலாப்-பயணிகளால்-களை-கட்டுகிறது-வேளாங்கண்ணி-2695522.html
2695020 சுற்றுலா தமிழ்நாடு கொடைக்கானலில் இம்மாதம் 3- ஆவது வாரத்தில் கோடை விழா DIN DIN Wednesday, May 3, 2017 02:20 AM +0530 கொடைக்கானலில் இம்மாதம் 3-ஆவது வாரத்தில் கோடை விழா நடைபெற உள்ளதாக, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
கொடைக்கானலில் தற்போது சீசன் தொடங்கியுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இந் நிலையில், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவை, மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந் நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் வினித், வட்டாட்சியர் பார்த்திபன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் மோகன் ராம், பூங்கா மேலாளர் ராஜா பிரியதர்சன், டி.எஸ்.பி. செல்வம், நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளர் செந்தில்குமார் மற்றும் வருவாய்த் துறை, தோட்டக்கலை துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இது குறித்து ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியது: கொடைக்கானலில் மே 3 ஆவது வாரத்தில் கோடை விழா நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் படிப்படியாக செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.
பிரையண்ட் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதால், கூடுதலாக டிக்கெட் கொடுக்குமிடம் அமைக்கப்படும். ஏரியைச் சுற்றி வைக்கப்பட்டுள்ள தள்ளு வண்டிகள், கடைகளுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்யப்பட்டு, அவர்களின் உரிமையாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என்றார்.

 

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2014/9/9/23/w600X390/kodaikanal_lake_life.jpg http://www.dinamani.com/travel/travel-tamilnadu/2017/may/03/கொடைக்கானலில்-இம்மாதம்-3--ஆவது-வாரத்தில்-கோடை-விழா-2695020.html
2672214 சுற்றுலா தமிழ்நாடு சுற்றுலா தொழில் துறையில் சிறப்பான சேவை செய்த 112 பேருக்கு விருது DIN DIN Saturday, March 25, 2017 02:21 AM +0530 சென்னையில் சுற்றுலா தொழில் துறையில் பயணிகளுக்கு சிறப்பான சேவை வழங்கி வரும் 112 பேரைப் பாராட்டி தமிழ்நாடு சுற்றுலா விருது, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மத்திய, மாநில சுற்றுலா துறை மற்றும் மதுரா வெல்கம் முதல் சுற்றுலா இதழ் இணைந்து 2-ஆவது ஆண்டாக 2016-ஆம் ஆண்டுக்கான சுற்றுலா விருது வழங்கும் விழா சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மத்திய தென்மண்டல சுற்றுலாத்துறை இயக்குநர் ஸ்ரீவர்தன் சஞ்சய் தலைமை வகித்தார். மத்திய வடமண்டல சுற்றுலாத்துறை இயக்குநர் சோயப் சமது முன்னிலை வகித்தார்.
நடிகை பூர்ணிமா பாக்யராஜ் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குநர் பாக்யராஜ் பங்கேற்று சிறந்ததாகத் தேர்வு செய்யப்பட்ட விமான நிறுவனம், நட்சத்திர ஹோட்டல்கள், பயண ஏற்பாட்டாளர்கள் என சுற்றுலாத் தொழில் சார்ந்தவர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
வடசென்னையில் ஏழை எளிய மக்களுக்கு குறைந்த செலவில் மருத்துவச் சேவை அளித்து வரும் டாக்டர் ஜெயச்சந்திரனுக்கு மாமனிதர் விருது, ரூ.1 லட்சத்துக்கான காசோலை, தொழிலதிபர் வி.ஜி.பி.சந்தோஷத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது என மொத்தம் 112 பேருக்கு விருது வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு சுற்றுலா விருது வழங்கும் குழுத் தலைவர் வி.கே.டி.பாலன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/25/w600X390/pakyaraj.jpg சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு சுற்றுலா விருது வழங்கும் விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதை வி.ஜி.பி. குழுமத் தலைவர் வி.ஜி.சந்தோஷத்துக்கு வழங்குகிறார் திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ். http://www.dinamani.com/travel/travel-tamilnadu/2017/mar/25/சுற்றுலா-தொழில்-துறையில்-சிறப்பான-சேவை-செய்த-112-பேருக்கு-விருது-2672214.html
2671492 சுற்றுலா தமிழ்நாடு சுற்றுலா பொருள்காட்சி: பார்வையாளர்களைக் கவர்ந்த நிழல் கிராமம் DIN DIN Friday, March 24, 2017 02:44 AM +0530 சுற்றுலா தொழில் பொருள்காட்சியில் நிஜம்போல் இடம் பெற்றுள்ள நிழல் கிராமம் பார்வையாளர்கள், மாணவர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
சென்னை தீவுத்திடலில் 43 -ஆவது தொழில் பொருள்காட்சியில் பெரியோர், சிறுவர்களை கவரும் கடல்வாழ் மீன்கள், புலி, சிங்கம் உள்ளிட்ட மிருகங்கள் ஆகியவை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
செயற்கை படகு குளம், ராட்டினம், வீட்டு உபயோகப் பொருள்கள் கண்காட்சி உள்பட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் இங்கு இடம்பெற்றுள்ளன. இதனால், நாள்தோறும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பொருள்காட்சியை ஆர்வத்துடன் பார்வையிட்டுச் செல்கின்றனர்.
நிழல் கிராமம்: குறிப்பாக, தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் குறித்த புகைப்படங்களும், தமிழ் கலாசாரத்தை பறைசாற்றும் புகைப்படங்களும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
இதில், நீலகிரி மலை ரயில் குகைப்பாலத்தில் செல்வது போன்று தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இதேபோல், ஒரு கிராமத்தை அப்படியே கண் முன்னே நிறுத்தும் வகையில், நிழல் மாதிரி கிராமத்தை வடிவமைத்துள்ளனர். அதில் கிராம கோயில் வழிபாடு, ஜல்லிக்கட்டு விளையாடும் இளைஞர்கள், பார்வையாளர்கள் வரிசை, குடிசை வீடுகள், ஆடு, மாடு, கோழிகள், உழவர்கள் மாட்டு வண்டியில் செல்வது, விவசாயப் பணி செய்யும் ஆண்கள், பெண்கள் என மிகவும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தின் கலை, பண்பாடு, கலாசாரத்தையும், தமிழர்களின் வாழ்வியல் நடைமுறைகளையும் பறைசாற்றும் வகையில் அமைத்துள்ளதால் பார்வையாளர்கள், மாணவர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
இதுகுறித்து சுற்றுலாத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்தாண்டு முக்கிய மலை சுற்றுலாத் தலங்களை அட்டை வடிவமைப்பில் இடம்பெறச் செய்திருந்தோம். இந்த ஆண்டு, நிழல் மாதிரி கிராமத்தை வடிவமைத்து இடம் பெறச் செய்துள்ளோம். இதற்கு பொதுமக்கள், மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இது, இனிவரும் காலங்களில் நாங்கள் மேலும் சிறப்பாகச் செயல்பட ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/24/w600X390/show1.jpg சென்னை தீவுத்திடலில் சுற்றுலாத் துறை அரங்கில் இடம்பெற்றுள்ள 'நிழல் கிராமம்'. http://www.dinamani.com/travel/travel-tamilnadu/2017/mar/24/சுற்றுலா-பொருள்காட்சி-பார்வையாளர்களைக்-கவர்ந்த-நிழல்-கிராமம்-2671492.html
2667316 சுற்றுலா தமிழ்நாடு மாமல்லபுரம் கடற்கரையில் அகற்றப்படாத குப்பை: சுகாதாரச் சீர்கேட்டால் அவதி DIN DIN Friday, March 17, 2017 02:49 AM +0530 மாமல்லபுரம் கடற்கரையில் அகற்றப்படாத குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
கடந்த 11, 12 ஆகிய தேதிகளில் மாசி மகத் திருவிழாவையொட்டி, மாமல்லபுரம் கடற்கைரயில் பெளர்ணமி நிலவில் பழங்குடி இருளர் சமுதாய மக்கள் தங்களது குலதெய்வமான கன்னியம்மனுக்கு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
அப்போது, கடற்கரையில் கூடி ஆங்காங்கே மண்ணாலும், சேலைகளாலும் சிறு சிறு குடில்கள் அமைத்து, தங்கள் குடும்பத்தினருடன் தங்கி, உணவு சமைத்து கன்னியம்மனை வழிபட்டனர். அப்போது தங்களது உறவுமுறைக்குள் திருமணம், நிச்சயதார்த்தம் போன்ற நிகழ்ச்சிகளையும் நடத்தினர். இதில், தமிழகத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில், அவர்கள் அமைத்த குடில்கள், உணவு சமைத்தப் பொருள்கள், பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவற்றை கடற்கரையிலேயே விட்டுவிட்டுச் சென்றனர். விழா முடிந்து ஒரு வாரம் ஆகும் நிலையில், இதுவரை குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்படாமல் இருப்பதால் கடற்கரை பகுதியில் துர்நாற்றும் வீசுகிறது. மேலும், இந்தக் கழிவுகள் கடலில் கலப்பதால் கடல் நீரும் பாழாகும் நிலை உள்ளது.
கடற்கரைக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் நடக்க முடியாமல், முகம் சுளித்தபடி செல்கின்றனர்.
எனவே, மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் கடற்கரையில் உள்ள குப்பை, பிளாஸ்டிக் கழிவுகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/17/w600X390/mamalapuram.jpg மாமல்லபுரம் கடற்கரையில் அகற்றப்படாமல் உள்ள குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள். http://www.dinamani.com/travel/travel-tamilnadu/2017/mar/17/மாமல்லபுரம்-கடற்கரையில்-அகற்றப்படாத-குப்பை-சுகாதாரச்-சீர்கேட்டால்-அவதி-2667316.html
2614887 சுற்றுலா தமிழ்நாடு ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் வெள்ளப் பெருக்கு DIN DIN Wednesday, December 14, 2016 03:00 AM +0530 வர்தா புயல், மழையால் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, திருப்பத்தூர், ஆலங்காயம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் திங்கள்கிழமை பிற்பகல் முதல் கனமழை பெய்தது. இதன் காரணமாக வாணியம்பாடியை அடுத்த ஏலகிரி மலை அடிவாரத்தில் உள்ள சுற்றுலா தலமான ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரித்து ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் வாணியம்பாடி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சிக்கு சென்று பார்வையிட்டு அருவியில் உற்சாகத்துடன் நீராடி செல்கின்றனர். மேலும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர்.
அமிர்தி அருவியில்...
வேலூர், டிச. 13: வேலூர் அருகே அமிர்தி அருவியில் தண்ணீர் விழுந்ததால் விடுமுறை தினமான செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
வர்தா புயல் காரணமாக ஜவ்வாதுமலையில் திங்கள்கிழமை பலத்த மழை பெய்ததால் அமிர்தி ஆறு, வன உயிரியல் பூங்கா அருகேயுள்ள அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மீலாது நபி பண்டிகையையொட்டி செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததால் அமிர்தி பூங்காவிற்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/12/14/w600X390/falls.jpg ஜலகாம்பாறை நீர் வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீர். http://www.dinamani.com/travel/travel-tamilnadu/2016/dec/14/ஜலகாம்பாறை-நீர்வீழ்ச்சியில்-வெள்ளப்-பெருக்கு-2614887.html
2559375 சுற்றுலா தமிழ்நாடு நீர்வரத்து குறைந்ததால் மணிமுத்தாறு அணை மூடல் DIN DIN Friday, September 2, 2016 02:49 PM +0530
நீர்வரத்து குறைந்து, நீர்மட்டம் சரிந்ததையடுத்து, மணிமுத்தாறு அணை வியாழக்கிழமை மூடப்பட்டது.

தென்மேற்குப் பருவமழை நிகழாண்டு குறைந்ததையடுத்து, திருநெல்வேலி மாவட்டத்தில் பிரதான அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து காணப்படுகிறது. மேலும், கடும் வெப்பம், மேற்குத் தொடர்ச்சி மலையில் வறட்சி காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து இல்லை.

வியாழக்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 104.24 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 49 கனஅடி, கடனாநதி அணைக்கு விநாடிக்கு 44 கனஅடி, ராமநதி அணைக்கு 21 கனஅடி, அடவிநயினார் அணைக்கு 5 கனஅடி நீர்வரத்து இருந்தது. கருப்பாநதி, குண்டாறு, வடக்குப் பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு அணைகளுக்கு நீர்வரத்து இல்லை.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவை, பாசனத் தேவைக்காக  பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணைகளின் நீர் இருப்பை பொருத்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைகளுக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்து காணப்படுவதால் மணிமுத்தாறு வியாழக்கிழமை மூடப்பட்டது. பாபநாசம், சேர்வலாறு அணைகளிலிருந்து 850 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கடனாநதி அணையிலிருந்து 65 கனஅடி, ராமநதி அணையில் 35 கனஅடி, குண்டாறு அணையில் 5 கனஅடி, அடவிநயினார் அணையில் 20 கனஅடி, வடக்குப் பச்சையாறு அணையில் 10 கனஅடி, கொடுமுடியாறு அணையில் 5 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு: அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தபோதிலும், பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளில் நீர்வரத்து கணிசமாக இருந்தது. சுற்றுலாப் பயணிகள் கூட்டமும் அதிகமாகக் காணப்பட்டது.

நீர்மட்டம் நிலவரம்: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 51 அடி, சேர்வலாறு அணை நீர்மட்டம் 63.10 அடி, மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 58 அடி, கடனாநதி அணை நீர்மட்டம் 47.20 அடி, ராமநதி அணை நீர்மட்டம் 47 அடி, கருப்பாநதி அணை நீர்மட்டம் 24.77 அடி, குண்டாறு அணை நீர்மட்டம் 30.87 அடி, அடவிநயினார் அணை நீர்மட்டம் 52 அடி, வடக்குப் பச்சையாறு அணை நீர்மட்டம் 11 அடி, நம்பியாறு அணை நீர்மட்டம் 10.95 அடி, கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 16 அடியாக இருந்தது.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/9/2/w600X390/manimuththaaru.jpg http://www.dinamani.com/travel/travel-tamilnadu/2016/sep/02/நீர்வரத்து-குறைந்ததால்மணிமுத்தாறு-அணை-மூடல்-2559375.html
2558928 சுற்றுலா தமிழ்நாடு புதுவைக் கடலில் டிசம்பர் முதல் டால்பின் சுற்றுலா: வனத் துறை திட்டம் DIN DIN Tuesday, August 30, 2016 05:14 PM +0530 புதுவைக் கடலில் டிசம்பர் முதல் டால்பின் சுற்றுலா: வனத் துறை திட்டம்
கோவாவைப் போல புதுச்சேரியிலும் நடுக்கடல் பகுதிக்குச் சுற்றுலாப் பயணிகளை படகில் அழைத்துச் சென்று, டால்பின்களை காண்பிக்கும் திட்டத்தை, வருகிற டிசம்பர் முதல் செயல்படுத்த வனத் துறை திட்டமிட்டுள்ளது.
 கடலில் வாழும் பெரிய மீன் இனங்களில் ஒன்றான டால்பின்கள் மனிதனுடன் நெருங்கிப் பழகும் தன்மையுடையது.
 இந்த டால்பின்கள், புதுவை கடல்பரப்பில் அரிதாக காணப்படுகின்றன. குறிப்பாக, டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை புதுவையை ஒட்டிய நடுக்கடல் பகுதியில் அதிகமாகக் காணப்படும் டால்பின்களை சுற்றுலாப் பயணிகள் நேரில் பார்க்கும் வசதிகளை ஏற்படுத்தும் முயற்சியில் புதுவை வனத் துறை ஈடுபட்டுள்ளது.
 இந்தத் திட்டம் குறித்து புதுவை வனப் பாதுகாவலர் குமார் கூறியது: புதுவையில் சூழலியல் சுற்றுலாவை மேம்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளோம். அதன் ஒரு பகுதியாக, பயணிகளை படகில் அழைத்துச் சென்று டால்பின்களை காட்டும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 பொதுவாக டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரையில் புதுவை கடல்பரப்புக்கு டால்பின்கள் வரும்.
 அவை கரையில் இருந்து சுமார் ஒரு நாட்டிக்கல் மைல் தொலைவில் நீந்தும். டால்பின்களின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, அவற்றின் வருகையிடங்கள் ஜி.பி.எஸ். தொழில்நுட்பம் மூலம் கண்டுபிடிக்கப்படும்.
 அதன் பின்னர் சுற்றுலா பயணிகளை படகு மூலம் டால்பின்கள் வரும் இடங்களுக்கு அழைத்துச் செல்வோம்.


 இதற்காக அவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும். இது போன்ற டால்பின்களை காட்டும் திட்டம், கோவாவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதுவையில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசின் உதவி பெறுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.
 டால்பின் சுற்றுலாவுக்கு பயணிகளை அழைத்துச் செல்லும் படகின் விலை சுமார் ரூ.48 லட்சம். அதனால் முதலில் வாடகை படகு மூலம் திட்டத்தை செயல்படுத்தி விட்டு, வருவாய் அதிகரிக்கும்போது சொந்தப் படகு வாங்கப்படும்.


 சூழலியல் (எகோ-டூரிஸம்) சுற்றுலாவின் ஒரு பகுதியாக உள்ள இதனை வனத்துறையே செயல்படுத்தலாம். சுற்றுலாத் துறையின் பங்களிப்பு தேவைப்படாது. அநேகமாக இந்த டிசம்பர் மாதத்திலேயே டால்பின் சுற்றுலாவை தொடங்கும் முனைப்பில் வனத்துறை உள்ளது என்றார் குமார்.
வனத்துக்குள் சைக்கிள் சவாரி
 சூழலியல் சுற்றுலாவின் ஒரு பகுதியாக காட்டுக்குள் சைக்கிளில் சென்று சுற்றிப் பார்க்கும் திட்டம் தொடங்கப்படவுள்ளது.
 காடுகளே இல்லாத புதுச்சேரியில், வனத் துறை உருவாக்கப்பட்ட பிறகு பல இடங்களில் அதிகளவு மரங்கள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், பசுமைப் போர்வையை அதிகரிக்கும் நோக்கில் ஒரே இடத்தில் அதிக மரங்களை நட்டு காடுகளும் உருவாக்கப்பட்டன. இதன் மூலம் புதுவையின் பசுமைப் பரப்பு 17 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.


 இது போன்ற செயற்கை வனப்பகுதிகள் மணப்பட்டு, காட்டேரிகுப்பம், வாதானூர் உள்ளிட்ட இடங்களில் உள்ளன.
 இந்த வனப்பகுதிகளில் சிறிய காட்டு உயிரினங்கள், பறவைகள் ஆகியவை வசிக்கின்றன. இவ்வாறு வனப்பகுதிகளில் சூழலியல் சுற்றுலா திட்டத்தை வனத் துறை செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக புதுவை நகரப் பகுதிக்கு அருகில் உள்ள மணப்பட்டு வனத்தில் சைக்கிள் சவாரி செய்யும் வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, வனப்பகுதியில் சைக்கிள் செல்லும் அளவுக்கு சிறிய பாதை ஏற்படுத்தப்படும்.
 இந்தப் பாதையில் சைக்கிள்களை ஓட்டிச் சென்று சுற்றுலாப் பயணிகள் வனத்தை சுற்றிப் பார்க்கலாம். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வனத் துறைக்கு வருவாய் கிடைக்கும் என்று வனப்பாதுகாவலர் குமார் தெரிவித்தார்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/30/w600X390/dolphin.jpg http://www.dinamani.com/travel/travel-tamilnadu/2016/aug/30/புதுவைக்-கடலில்-டிசம்பர்-முதல்-டால்பின்-சுற்றுலா-வனத்-துறை-திட்டம்-2558928.html
2556883 சுற்றுலா தமிழ்நாடு தமிழ்நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு! DIN DIN Wednesday, August 24, 2016 01:10 PM +0530 இந்தியாவில் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து போகும் சுற்றுலா தலமாக கோவா, கேரளா, மற்றும் ஜம்மு காஷ்மீர் என்று பொதுவாக கருதப்பட்டாலும், இந்திய சுற்றுலா அமைச்சம் அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து போகும் மாநிலம் தமிழ்நாடு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு இந்தியாவிற்கு  வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளில் 20 சதவீதம் பேர் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். கடந்த ஆண்டு தமிழகம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருந்த போதும் சுற்றுலா பயணிகளின் வரத்து இங்கு அதிகமாகவே இருந்தது என தெரியவந்துள்ளது. 2015ம் ஆண்டில் இந்தியாவிற்கு 23 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.

இது 2014ம் ஆன் ஆண்டுடன் ஒப்பிடும் போது 4.4 சதவீதம் அதிகம். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அடிக்கடி வந்து போன மாநிலங்களின் வரிசையில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.

தமிழகத்திற்கு 4.68 மில்லியன் சுற்றுலா பயணிகளும், மகாராஷ்டிராவில், 4.41 மில்லியன், உத்தரப் பிரதேசத்தில், 3.1 மில்லியன், தில்லியில். 2.38 மில்லியன், மேற்கு வங்கத்தில் 1.49,  ராஜஸ்தான், 1.48 கேரளா 0.98 மில்லியன், கர்நாடகா, 0.64,  மற்றும் கோவாவில் 0.54 மில்லியன் சுற்றுலா பயணிகளும் வந்து போயுள்ளனர்.

மகாராராஷ்டிராவில் சுற்றுலா பயணிகளின் வருகை 18.9 சதவீதமும், உத்தரபிரதேசத்தில் 13.3 சதவீதமும், தில்லியில், 10.2 சதவீதமும், சுற்றுலா பயணிகளின் வருகை இருந்தது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எளிதாக வந்து செல்ல வசதியான மாநிலமாக  பீகார், அரியானா, குஜராத், கேரளா, புதுச்சேரி மற்றும் தெலுங்கானா உள்ளன.

]]>
Tamil nadu, tourism http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/15/w600X390/goa-tourism.jpg http://www.dinamani.com/travel/travel-tamilnadu/2016/aug/15/வெளிநாட்டு-சுற்றுலா-பயணிகள்-2556883.html
2556884 சுற்றுலா தமிழ்நாடு திருமலை நாயக்கர் மகாலில் லேசர் முறையில் ஒலி-ஒளிக் காட்சி DIN DIN Wednesday, August 24, 2016 01:09 PM +0530 மதுரை திருமலை நாயக்கர் மகாலில் லேசர் முறை ஒலி-ஒளிக் காட்சி அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான கருத்துரு மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

 மதுரையிலுள்ள திருமலைநாயக்கர் மகால் கி.பி.1636 ஆம் ஆண்டு கட்டப்பட்ட புராதனச் சின்னமாகும். மதுரை வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் கோயிலுக்கு அடுத்தபடியாக திருமலைநாயக்கர் மகாலையே அதிகம் பார்வையிடுகின்றனர்.  தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள மகாலில் கடந்த 1981 ஆம் ஆண்டு ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டை முன்னிட்டு ஒலி-ஒளிக் காட்சி அமைக்கப்பட்டது. தினமும் இரவு இரு காட்சிகளாக நடைபெறும் ஒலி-ஒளிக் காட்சியின் மூலம் மதுரை வரலாற்றை தமிழ், ஆங்கிலத்தில் பார்வையாளர்களுக்கு விளக்குகின்றனர்.

 தினமும் குறைந்தது 300 பேர் ஒலி-ஒளிக் காட்சியை கட்டணம் செலுத்தி பார்க்கின்றனர். கடந்த 2009 ஆம் ஆண்டு பல லட்ச ரூபாய் செலவில் ஒலி-ஒளிக்காட்சியானது டிஜிட்டல் முறைக்கு மாற்றி நவீனப்படுத்தப்பட்டது.   ஒலி-ஒளிக் காட்சியின் விளக்கங்களும் புதிதாக அமைக்கப்பட்டன. பாண்டிய மன்னர்கள் வரலாறு, கண்ணகி நீதி கேட்டது என பல விஷயங்களில் புதுமை புகுத்தப்பட்டன. தற்போது ஒலி-ஒளிக்காட்சி சாதனங்களில் அடிக்கடி பழுது ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதனால் காட்சிகள் ரத்து செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஒலி-ஒளிக்காட்சியை லேசர் முறைக்கு மாற்றிட மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறினர்.

 தற்போதைய டிஜிட்டல் ஒலி-ஒளிக் காட்சியை லேசர் முறையில் மாற்றிட பல கோடி செலவாகும். மதுரையை பொலிவுறு நகர் திட்டத்தில் அறிவிக்கும் நிலையில், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் மகாலில் லேசர் முறையில் ஒலி-ஒளிக் காட்சி நவீனப்படுத்தப்பட உள்ளதாகவும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறினர்.

]]>
Nayakar mahal, madurai special http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/15/w600X390/thirumalai-nayakar-mahal.jpg http://www.dinamani.com/travel/travel-tamilnadu/2016/aug/15/திருமலை-நாயக்கர்-மகாலில்-லேசர்-முறையில்-ஒலி-ஒளிக்-காட்சி-2556884.html
2505 சுற்றுலா தமிழ்நாடு கொடைக்கானல் பூங்காவில் பூத்துக் குலுங்கும் குருவிப் பூ DIN DIN Monday, August 15, 2016 08:16 AM +0530

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும் குருவிப் பூக்களை சுற்றுலாப் பயணிகள் பார்த்து மகிழ்கின்றனர்.

கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவரும் இடம் பிரையண்ட் பூங்கா. இங்கு ஆந்தோரியம், டந்தேஸ், சில்வெனியா, பேன்சி, மேரி கோல்ட் உள்ளிட்ட 35 வகையான மலர் செடிகள் திறந்த வெளியில் உள்ளன.    மேலும் ஆர்டிக்ஸ், வெனிசிலா, கல்ரோஜா, வெர்ஜினியா, ரூபேஸ் உள்ளிட்ட 80 வகையான மலர்ச் செடிகள் கண்ணாடி மாளிகைக்குள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

 இவை தவிர சீசன் காலங்களிலும் சீசன் இல்லாத (ஆப் சீசன்) காலங்களிலும் ஏராளமான மலர்ச் செடிகள் நடவு செய்யப்படுகின்றன.   இந்நிலையில், ஆப் சீசன் காலமான ஜூன் 15 முதல் செப்டம்பர் மாதம் வரை மட்டுமே பூக்கக் கூடிய குருவிப் பூ தற்போது பிரையண்ட் பூங்காவில் பூத்துக் குலுங்குகிறது. இவற்றை சுற்றுலாப் பயணிகள் வியப்புடன் பார்த்து மகிழ்கின்றனர்.  

இது குறித்து தோட்டக்கலைத்துறை அலுவலர் ஒருவர் கூறியது: கொடைக்கானலில் தற்போது "ஆப் சீசன்" காலமாக இருப்பதால் சீசனுக்கு நடவு செய்யப்பட்ட மலர்கள் தற்போது பெய்து வரும் மழையில் சேதமடைந்துள்ளன.

சேதமடைந்த மலர்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இருப்பினும் பூங்காவிற்கு வரும் பயணிகள் பார்த்து ரசிக்கும் வகையில் கண்ணாடி மாளிகைக்குள் உள்ள மலர்களும், குருவிப் பூ, பச்சைரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்களும் பூத்துள்ளன.

விரைவில் குறுகிய காலத்தில் பூத்துக் குலுங்கும் நாற்றுகள் நடவு செய்யப்பட உள்ளன என்றார்.

]]>
Kodaikanal, flowers http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/15/w600X390/634936904233607156_bryant-park1.jpg http://www.dinamani.com/travel/travel-tamilnadu/2016/jul/04/கொடைக்கானல்-பூங்காவில்-பூத்துக்-குலுங்கும்-குருவிப்-பூ-2505.html
2604 சுற்றுலா தமிழ்நாடு வேடந்தாங்க-ல் 33 ஆயிரம் வெளிநாட்டுப் பறவைகள்: சுற்றுலாப் பயணிகள் அதிகரிப்பு நாகூர் ரூமி DIN Wednesday, July 13, 2016 04:41 PM +0530

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு 33,360 வெளிநாட்டுப் பறவைகள் வந்து குவிந்துள்ளதால், அவற்றைக் காண சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் வருகின்றனர்.

தமிழகத்தின் முக்கியமான பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கலில் சீசன் களைகட்டியுள்ளதால், உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் கடந்த 1858-ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. வேடந்தாங்கல் ஏரியின் நடுவில் கருவேல மரங்களும், கடம்ப மரங்களும் அதிகம் இருக்கின்றன. ஏரியில் நீர்வரத்து அதிகமாக இருக்கும்போது, இம் மரங்களில் தங்கி கூடு கட்டி வாழ்வதற்குத் தகுந்த சூழல் நிலவுவதால், வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரம் மைல்கள் தாண்டி பறவைகள் இங்கு வந்து செல்கின்றன.

இங்கு ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதம் தொடங்கி, மே மாதம் வரை பருவ காலமாக இருக்கும். அப்போது பறவைகள் இங்கு வந்து தங்கி இனவிருத்தி செய்து வம்சத்தைப் பெருக்கிக் கொள்ள சாதகமான சூழல் நிலவுகிறது.

இந்த ஆண்டுக்கான சீசன் தொடங்கி, சரணாலயம் கடந்த ஆண்டு டிசம்பர் 11-ஆம் தேதி பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டது. வட கிழக்குப் பருவ மழையால் அதிக அளவில் நீர் இருப்பதாலும், சூழ்நிலை பறவைகளுக்குச் சாதகமாக அமைந்துள்ளதாலும் சுமார் 33,360 வெளிநாட்டுப் பறவைகள் வேடந்தாங்கலுக்கு வந்துள்ளன.

இச் சரணாயத்துக்கு சிங்கப்பூர், ரங்கூன், இலங்கை, மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்து நத்திகொத்திநாரை, சாம்பல் நாரை, வக்கா, நீர்க் காகம், கூழைக்கடா, பாம்புத்தாரா, ஊசிவால் வாத்து, சிறிய வெள்ளைக் கொக்கு, உண்ணி கொக்கு, கரண்டிவாயன், புள்ளிமூக்கு வாத்து, நீளச் சிறகு வாத்து, தட்டவாயன், நாமக்கோழி, மீன்கொத்தி நாரை உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் வந்து குவிந்துள்ளன.

எனவே கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிக அளவில் உள்ளது. சீசன் தொடங்கியது முதல் இதுவரை 75,000 சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றுள்ளனர்.

சரணாலயத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ. 5-ம், சிறியவர்களுக்கு ரூ. 2-ம், புகைப்படம் எடுக்க, கேமராவுக்கு ரூ. 150-ம், செல்போன் கேமராவுக்கு ரூ. 25-ம் வசூலிக்கப்படுகிறது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/7/11/w600X390/vedanthangal.jpg http://www.dinamani.com/travel/travel-tamilnadu/2016/jul/11/வேடந்தாங்க-ல்-33-ஆயிரம்-வெளிநாட்டுப்-பறவைகள்-சுற்றுலாப்-பயணிகள்-அதிகரிப்பு-2604.html
2603 சுற்றுலா தமிழ்நாடு சூரியன் மறையும் நேரத்தில் சந்திரன் உதயம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் நாகூர் ரூமி DIN Monday, July 11, 2016 02:37 PM +0530 சித்ரா பெளர்ணமி தினமான வியாழக்கிழமை சூரியன் மறையும் நேரத்தில் சந்திரன் உதயமாகும் அபூர்வக் காட்சி சரிவர தெரியாததால், கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் கூடியிருந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
 ஆண்டுதோறும் சித்ரா பெளர்ணமி தினத்தில் தோன்றும் இந்தக் காட்சியை கன்னியாகுமரியில் காண முடியும். அன்று இந்தியா முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரியில் கூடுவது வழக்கம்.
 நிகழாண்டு இந்த அரிய காட்சியைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கூடியிருந்தனர். மேகமூட்டம் காரணமாக சூரியன் மறையும் காட்சி சரிவர தெரியவில்லை. மேலும், சந்திரன் உதயமாகும் காட்சி 6.40 மணிக்குத்தான் ஓரளவுக்கு தெரிந்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மிகவும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/7/11/w600X390/43.jpg http://www.dinamani.com/sutrula/sutrula-tamilnadu/2016/jul/11/சூரியன்-மறையும்-நேரத்தில்-சந்திரன்-உதயம்-சுற்றுலாப்-பயணிகள்-ஏமாற்றம்-2603.html
2509 சுற்றுலா தமிழ்நாடு அபூர்வ மூலிகைகள் நிறைந்த கொல்லிமலை வனம் நாகூர் ரூமி DIN Monday, July 4, 2016 05:21 PM +0530 கொல்லிமலையில் பல ஆயிரம் ஏக்கரில் அபூர்வ வகை மூலிகைகள் இருந்தும் அவற்றைப் பயன்படுத்தவும், பாதுகாக்கவும் வாய்ப்பு இல்லாத அவல நிலை உள்ளது.
 கூடுவிட்டுக் கூடு பாயும் அதிசய சித்தர்கள் பலர் இன்னும் வாழ்வதாக மக்கள் நம்பிக்கை கொண்டுள்ள இடம்தான் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை. கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில்ஓரி ஆட்சி செய்த வளமான மலை நாடு. கடல் மட்டத்தில் இருந்து 1,200 மீட்டர் உயரத்தில், 250 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட மூலிகை வனம். இங்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர்.
 14 வருவாய்க் கிராமங்களை (மலை நாடு) உள்ளடக்கிய 250-க்கும் மேற்பட்ட கிராமங்களைக் கொண்டதுமான இந்த மலை நாட்டுக்கு, நவநாகரிக புதிய கலாசாரங்கள் வந்துவிட்டாலும், இங்குள்ள மூலிகைகளும், சிறு தானியங்களும் கொல்லிமலையின் பழைமையைப் பாதுகாத்து வருகின்றன.
 இங்குள்ள மக்கள் ஆயிரக்கணக்கில் உள்ள ஆபூர்வ வகை மூலிகைகளைக் காப்பாற்றி, அழியாது பாதுகாத்து வருகின்றனர். தினை, கேழ்வரகு, சாமை ஆகிய பாரம்பரிய சிறு தானியங்களைப் பல நூறு ஏக்கர்களில் பழைய விவசாய முறைகளை மேற்கொண்டு சாகுபடி செய்து வருகின்றனர்.
 14 மலை நாடுகளில் பரவிக் கிடக்கும் மூலிகைகள்: வாழவந்தி நாடு, வளப்பூர் நாடு, அரியூர் நாடு, தின்னனூர் நாடு, குண்டூர் நாடு, சேளூர் நாடு, தேவனூர் நாடு, ஆலந்தூர் நாடு, குண்டனி நாடு, திருப்புலி நாடு, எடப்புலி நாடு, சித்தூர் நாடு, பெரக்கரை நாடு, பெயில் நாடு என 14 வருவாய்க் கிராமங்களில் லட்சக்கணக்கில் மூலிகைகளும், ஆதி காலத்து சிறு தானியங்களும் பரவிக் கிடக்கின்றன.
 மூலிகைகளில் ஜோதிப் புல், சாய்ந்தாடும் பாவை, கருநெல்லி, சிவப்புக் கற்றாழை, கருவாழை, சிவப்புக் கடுக்காய், ரோமவிருட்சம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
 ஜோதிப் புல் ஒன்றைப் பிடுங்கி தீயில் பற்றவைக்க மெழுகுவர்த்தி போல விடியவிடிய சுடர்விட்டு வெளிச்சம் தருமாம். இன்றும் இந்த மலையில் உள்ள குகைகளில் தங்கியிருக்கும் சித்தர்கள் பலருக்கு இரவு நேர வெளிச்சம் கொடுப்பது இந்த ஜோதிப்புல்தானாம்.
 இதேபோல, ரோம விருட்சம் என்ற மரத்தின் இலைகளை அரைத்து 45 நாள்கள் தலையில் தேய்த்து, கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை அருவியில் குளித்துவர தலை முடி உதிர்வது உடனே நின்று, கருகரு முடியைப் பெறலாம் எனக் கூறப்படுகிறது.
 கொல்லிமலையில் உள்ள அடர் வனங்களில் இயற்கையில் விளையும் ஒரு வாழைதான் கல் வாழை, இந்தப் பழத்தை இரண்டு மண்டலம் (90 நாள்கள்) சாப்பிட்டு வர, பெருத்த தேகம் கொண்டோர் இளைத்து சராசரியான தேகத்தைப் பெறுவார்களாம்.
 ஆதள மூலிகைச் செடியின் இலையைக் கிள்ளினால் அதில் ஒருவித பால் கசியுமாம். அந்தப் பாலுடன் கரும் பூனையின் முடியைக் கலந்து செம்பு பாத்திரத்தில் ஊற்றி, சூடு செய்து சுண்டவைத்து, அதை மலைத் தேன் கொண்டு பிசைந்து, சிறு உருண்டையாக்கி, அதை செப்புத் தகடு எந்திரத்தினுள் இட்டு 6 மாதங்களுக்கு மூடி வைக்க வேண்டுமாம். 6 மாதங்கள் கழித்து செப்புத் தகட்டை நீக்கிவிட்டு சிறு உருண்டைகளை வாயில் போட்டு அதக்கிக் கொண்டால் யார் கண்ணுக்கும் தெரியாமல் மனிதர்கள் மாயமாக மறைந்து விடுவார்களாம். அத்தகைய ஆற்றல் கொண்ட அபூர்வ மூலிகைதான் ஆதளம். இந்த அபூர்வ மூலிகையின் சக்தியால்தான் இன்றளவும் பல சித்தர்கள் யார் கண்ணுக்கும் புலப்படாமல் வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது.
 இதுபோன்று இந்தப் பகுதியில் பல ஆயிரம் மூலிகைகள் இங்கு பயன் தெரியாமல், பாதுகாப்பும் இல்லாமல் மறைந்து கிடக்கின்றன.
 மாறாத சிறுதானியங்கள் சாகுபடி: கொல்லிமலை 14 மலை நாடுகளில் உள்ள மலைவாழ் மக்களின் முக்கியத் தொழில் விவசாயம்தான். வீரிய ஒட்டு ரகங்கள், மரபணு மாற்று விதைகள் என்று நவீன விவசாயம் இங்கும் வந்துவிட்டாலும், இங்குள்ள மக்கள் பலரும் கேழ்வரகு, தினை, சாமை ஆகிய மூன்று சிறு தானியங்களைப் பல நூறு ஆண்டுகளாக, பல ஆயிரம் ஏக்கர்களில் பயிரிட்டு வருகின்றனர்.
 டிராக்டர், ரசாயன உரம், பூச்சி மருந்து என்று பசுமைப் புரட்சி சில ஆண்டுகளுக்கு முன்னர் மலை மீது ஏறிவிட்டபோதிலும், பாரம்பரிய விவசாயத்தைக் கைவிடாமல் பழைமைப் புரட்சி செய்து வருகின்றனர் இந்த மக்கள்.
 பழைமைக்கும், பாரம்பரியத்துக்கும் பாதுகாப்பு தேவை: இதுகுறித்து தமிழ்நாடு பழங்குடியினர் மலையாளி நலச் சங்க மாநிலத் தலைவர் கே. குப்புசாமி கூறியதாவது:
 கொல்லிமலையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மூலிகை வகைகள், உடல் நலன் காக்கும் பழ வகைகள், சிறு தானியங்கள் உள்ளன. இவற்றைப் பயன்படுத்த பல கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், இவற்றைப் பாதுகாக்க எந்த ஏற்பாடும் இல்லை.
 மூலிகை ஆராய்ச்சி மையம், வேளாண் வணிகத் துறை மூலம் சிறு தானியச் சந்தை, பழச் சந்தை ஆகியவற்றை கொல்லிமலையின் அமைப்பதன் மூலம், இந்தப் பொக்கிஷங்களைப் பாதுகாக்கவும், மக்களின் நலன் காக்கும் வகையில் பயன்படுத்தவும் முடியும் என்றார் அவர்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/7/4/w600X390/mount.jpg http://www.dinamani.com/sutrula/sutrula-tamilnadu/2016/jul/04/அபூர்வ-மூலிகைகள்-நிறைந்த-கொல்லிமலை-வனம்-2509.html
2508 சுற்றுலா தமிழ்நாடு புதுப்புது வண்ணங்களில் பொலிவு பெறும் காந்தி மண்டபம்: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி நாகூர் ரூமி DIN Monday, July 4, 2016 05:14 PM +0530 சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள காந்தி மண்டபம் அடிக்கடி புதுப்பொலிவுடன் நிறம் மாற்றப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் அதை ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

கன்னியாகுமரியில் மகாத்மா காந்தியின் அஸ்தியின் ஒரு பகுதி வைக்கப்பட்ட இடத்தில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபம், 1956-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதில் உள்ள மையக் கூண்டு 79 மீட்டர் உயரம் கொண்டது. இது காந்தியடிகளின் வயதைக் குறிப்பிடுவதாக உள்ளது. இந்த மண்டபத்தினுள் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு, சுதந்திரப் போராட்டத்தில் அவரது பங்களிப்புகள் அனைத்தும் கல்வெட்டுகளாகவும், ஓவியங்களாகவும் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இடம்பெற்றுள்ளன. இதை உலகம் முழுவதிலுமிருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டுச் செல்கின்றனர்.

காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதி சூரிய கதிர்கள் காந்தியின் அஸ்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் விழும்படி இந்த மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும். அன்றைய தினம் அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் காந்தி அஸ்தி கட்டடத்தில் மரியாதை செலுத்துவார்கள். இந்த மண்டபம் நாள்தோறும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்து வைக்கப்பட்டிருக்கும். இதைப் பார்வையிட சுற்றுலாப் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.

உலகம் முழுவதிலும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் இந்த மண்டபம் அடிக்கடி வெவ்வேறு வண்ணங்களில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. ஒருமுறை பார்க்கும் சுற்றுலாப் பயணிகள் அடுத்தமுறை வந்து மீண்டும் இதைப் பார்க்கும்போது புதுவண்ணம் பெற்றிருப்பதால் மண்டபத்தின் முன் நின்று ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/7/4/w600X390/kumari.jpg http://www.dinamani.com/sutrula/sutrula-tamilnadu/2016/jul/04/புதுப்புது-வண்ணங்களில்-பொலிவு-பெறும்-காந்தி-மண்டபம்-சுற்றுலாப்-பயணிகள்-மகிழ்ச்சி-2508.html
2507 சுற்றுலா தமிழ்நாடு ஜவ்வாது மலையில் கோடை விழா தொடக்கம் நாகூர் ரூமி DIN Monday, July 4, 2016 05:11 PM +0530 திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த ஜவ்வாதுமலை ஒன்றியம், ஜமுனாமரத்தூரில் 19ஆவது கோடை விழா சனிக்கிழமை தொடங்கியது.

ஜமுனாமரத்தூர் வனத்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தலைமை வகித்தார்.

வருவாய் அலுவலர் சா.பழனி, கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் எம்.எஸ்.நைனாகண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சுற்றுலா அலுவலர் (பொறுப்பு) ப.சு.செல்வராஜ் வரவேற்றார்.

கோடை விழாவையொட்டி அமைக்கப்பட்டிருந்த அரசின் பல்துறை பணிவிளக்க கண்காட்சியைத் திறந்து வைத்து தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் பேசுகையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறு, குறு விவசாயிகளின் கடன் தள்ளுபடி, அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 4 கிராமில் இருந்து 8 கிராமாக உயர்வு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

ஜவ்வாதுமலையில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குள்ளர்கள் வாழ்ந்த வாலிபாறை கற்குகைகள் உள்ளன.

சுற்றுலாப் பயணிகள் கண்டு மகிழும் வகையிலான சிறுவர் பூங்கா, பீமன் நீர்வீழ்ச்சி, கோவிலூர் ஏரி, தென்மலை அத்திப்பட்டு நீர்மத்தி மரம், மேல்பட்டு கிராமத்தில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கண்ணாடி மாளிகை, 1000 ஆண்டுகள் பழைமையான வனத்துறை மூலிகைப் பண்ணை ஆகியை அமைந்துள்ளன.

இத்தனை சிறப்புகள் வாய்ந்த ஜவ்வாதுமலையை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் என்று இங்கு பேசிய பலர் குறிப்பிட்டனர். எனவே, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று ஜவ்வாதுமலை தமிழகத்தின் சிறந்த சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படும் என்றார்.

தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கோடை விழாவைத் தொடங்கி வைத்து, ரூ.97 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார்.

விழாவில், செஞ்சி வெ.ஏழுமலை எம்.பி., செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன், மாவட்ட வன அலுவலர் இரா.தன்னப்பன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மா.காளிதாசன், ஜவ்வாதுமலை ஒன்றியக் குழுத் தலைவர் கோ.ராஜமாணிக்கம், மாவட்ட வழங்கல் அலுவலர் சாவித்திரி, கலால் உதவி ஆணையர் எஸ்.பானு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/sutrula/sutrula-tamilnadu/2016/jul/04/ஜவ்வாது-மலையில்-கோடை-விழா-தொடக்கம்-2507.html
2506 சுற்றுலா தமிழ்நாடு தனுஷ்கோடி கடலில் சுற்றுலா பயணிகள் நீராடுவதால் ஆபத்து நாகூர் ரூமி DIN Monday, July 4, 2016 05:10 PM +0530

ராமேசுவரம் தனுஷ்கோடி கடல் பகுதியில் தடையை மீறி நீராடும் சுற்றுலாப் பயணிகள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ராமேசுவரம்  ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வருகின்றனர். இவர்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் புயலால் அழிந்தபோன தனுஷ்கோடி பகுதியை பார்வையிடுவதற்காக செல்கின்றனர்.

முகுந்தராயர் சத்திரம் பகுதி முதல் தனுஷ்கோடி வரை தென் கடலில் சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் நீராடுகின்றனர். இந்த கடல் பகுதியில் கடலில் நீரோட்டமும், நீரின் சுழற்சியும் அதிகமாக இருக்கும். இங்கு குளித்த பலர் அலையில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதனால் இங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இப்பகுதியில் தடையை மீறி இளைஞர்களும் பெண்களும் நீராடினர். உயிரிழப்புகள் ஏற்படாமல் இருக்கும் வகையில் இங்கு நீராடுவோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

]]>
http://www.dinamani.com/sutrula/sutrula-tamilnadu/2016/jul/04/தனுஷ்கோடி-கடலில்-சுற்றுலா-பயணிகள்-நீராடுவதால்-ஆபத்து-2506.html
1001 சுற்றுலா தமிழ்நாடு அரபிக் பாடத்தில் ஆம்பூர் மாணவி மாநிலத்தில் மூன்றாமிடம் kirthika PTI Thursday, May 26, 2016 05:45 PM +0530    ஆம்பூர்,, பத்தாம் வகுப்பு அரசு தேர்வில் அரபிக் பாடத்தில், ஆம்பூர் ஹபீபியா ஓரியண்டல் அரபிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி தாஹியா தஸீன் (படம்) மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்தார். அரபிக் பாடத்தில், மாணவி தாஹியா தஸீன் 97 மதிப்பெண்கள் பெற்றார். பாடவாரியாக இவர் பெற்ற மதிப்பெண்கள் விவரம்: அரபிக்-97, ஆங்கிலம்-84, கணிதம்-54, அறிவியல்-91, சமூக அறிவியல்-95. மொத்தம் 421. மென்பொருள் பொறியாளர் ஆவதே தனது லட்சியம் என்று அவர் தெரிவித்தார். மாநில அளவில் 3-ஆம் இடம் பிடித்த மாணவியை பள்ளியின் தாளாளர் எம்.ஷாஹித் அஹமத், தலைமை ஆசிரியை எஸ்.ஜெ.முஜிபுன்னிசா, அரபிக் ஆசிரியை பி.கமருன்னிசா, மாணவியின் தந்தை பி.நிசாத் அஹமத், தாய் உமைரா ஜரீன் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

]]>
http://www.dinamani.com/sutrula/sutrula-tamilnadu/2016/may/26/அரபிக்-பாடத்தில்-ஆம்பூர்-மாணவி-மாநிலத்தில்-மூன்றாமிடம்-1001.html
1000 சுற்றுலா தமிழ்நாடு உருது பாடத்தில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்து ஆம்பூர் மாணவிகள் சாதனை ஆம்பூர், PTI Thursday, May 26, 2016 05:44 PM +0530 பத்தாம் வகுப்புத் தேர்வில் உருது பாடத்தில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்து ஆம்பூர் ஹசனாத்-இ-ஜாரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சாதனை படைத்தனர்.
 ஆம்பூர் ஹசனாத்-இ-ஜாரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி அஃபீஃபா பத்தூல் உருது பாடத்தில் 98 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தார். இவர் பாடவாரியாக பெற்றுள்ள மதிப்பெண்கள்: உருது-98, ஆங்கிலம்-92, கணிதம்-100, அறிவியல்-93, சமூக அறிவியல்-98. இவரது மொத்த மதிப்பெண்கள் 481. இவரது தந்தை முஹம்மத் பாஷா ஆம்பூரில் உள்ள பள்ளி வாசலில் பணிபுரிகிறார். தாய் யாஸ்மீன் பிர்தோஸ். மாணவி அஃபீஃபா பத்தூல் ஆசிரியை ஆக விரும்புவதாக தெரிவித்தார்.
 அதே பள்ளியைச் சேர்ந்த மாணவி நிஹாலா கெளனைன் ரூமி. உருது பாடத்தில் 98 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்துள்ளார். அவர் பாடவாரியாக பெற்றுள்ள மதிப்பெண்கள்: உருது-98, ஆங்கிலம்-94, கணிதம்-90, அறிவியல்-97, சமூக அறிவியல்-99, மொத்தம் 478. இவரது தந்தை முஹம்மத் சயீத்துல்லா ரூமி அரபிக் மதர்ஸாவில் பணிபுரிகிறார். தாய் இஸ்ரத் நாஸ்னீன். மாணவி நிஹாலா கெளனைன் ரூமி எதிர்காலத்தில் மென்பொருள் பொறியாளர் ஆவதே விருப்பம் எனத் தெரிவித்தார். அதே பள்ளியைச் சேர்ந்த மாணவி நீலுஃபர் நாஜ் உருது பாடத்தில் 98 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்துள்ளார். பாடவாரியாக பெற்றுள்ள மதிப்பெண்கள்: உருது-98, ஆங்கிலம்-84, கணிதம்-100, அறிவியல்-95, சமூக அறிவியல்-100. மொத்தம் 477 மதிப்பெண்கள். இவரது தந்தை தௌலத் பாஷா, தாய் ஷாஜிதா. இவர் மருத்துவர் ஆவதே விருப்பம் என்றார்.
 மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவிகளை முஸ்லிம் கல்விச் சங்க தலைவர் என். முஹம்மத் ஜக்கரியா, தாளாளர் என். முஹம்மத் சயீத், செயற்குழு உறுப்பினர் பிர்தோஸ் கே.அஹமத், தலைமை ஆசிரியை முதஹ்ஹிரா பேகம் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.
 இப்பள்ளி கடந்த 5 ஆண்டுகளாக 12-ஆம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சியும், கடந்த 3 ஆண்டுகளாக 10-ஆம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சியும் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
 

]]>
http://www.dinamani.com/sutrula/sutrula-tamilnadu/2016/may/26/உருது-பாடத்தில்-மாநில-அளவில்-முதல்-மூன்று-இடங்களைப்-பிடித்து-ஆம்பூர்-மாணவிகள்-சாதனை-1000.html
998 சுற்றுலா தமிழ்நாடு கொளத்தூரில் ஸ்டாலின்: வீதி வீதியாகச் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் (புகைப்படங்கள்) kirthika PTI Thursday, May 26, 2016 05:43 PM +0530 சென்னை : திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று கொளத்தூர் தொகுதியில் வீதி வீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அவருக்கு பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் உறுப்பினராக நேற்று பதவி ஏற்றுக்கொண்ட திமுக பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின், தன்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்த கொளத்தூர் தொகுதி வாக்காளர்களுக்கு வீதி வீதியாக சென்று நேரில் நன்றி தெரிவித்தார். பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் சாலைகளின் இருபுறங்களிலும் திரண்டு நின்று மு.க.ஸ்டாலினுக்கு ஆராவார வரவேற்பு அளித்தனர். ஏராளமானோர் அவருக்கு கை குலுக்கியும், சால்வை அணிவித்தும், மலர் மாலைகள் அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனர்.

 

 

 

மேலும் இளைஞர்கள், மாணவ, மாணவியர் உட்பட ஏராளமானோர் அவருடன் ஆர்வத்துடன் செல்பீ புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

 

 

 

நேற்று இரவு 9 மணி வரை திறந்த ஜீப்பில் நின்றபடி வாக்காளர்களுக்கு இரு கரம் கூப்பி நன்றி தெரிவித்தார். ஏற்கனவே கடந்த 23-ம் தேதியன்று கொளத்தூர் தொகுதி, கிழக்கு பகுதிக்கு உட்பட்ட 30-க்கும் மேற்பட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த  மு.க.ஸ்டாலின் நேற்று மேற்கு பகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

 

 

]]>
http://www.dinamani.com/sutrula/sutrula-tamilnadu/2016/may/26/கொளத்தூரில்-ஸ்டாலின்-வீதி-வீதியாகச்-சென்று-வாக்காளர்களுக்கு-நன்றி-தெரிவித்தார்-புகைப்படங்கள்-998.html
993 சுற்றுலா தமிழ்நாடு ஆக்கப்பூர்வமானதாக மாறுகிறதா தமிழக அரசியல் நிலவரம் kirthika PTI Thursday, May 26, 2016 05:33 PM +0530

சென்னை : நீர் அடித்து நீர் விலகாது என்பது போல... நான், நீ என போட்டிப் போட்டுக் கொண்டு எத்தனையோ அணிகள் வந்தும், தமிழக மக்கள் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் மட்டுமே தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனர்.

இந்த தேர்தலில் ஆளுங்கட்சியை அப்படியே வைத்துக் கொண்டு, எதிர்க்கட்சியைத்தான் மாற்றியமைத்துள்ளனர். அந்த வகையில் பலமான எதிர்க்கட்சியாக திமுகவுக்கு மிகச் சிறந்த பொறுப்பை மக்கள் வழங்கியுள்ளதாகவே கருத வேண்டும்.

மீண்டும் தங்களுக்கு வாய்ப்பு கொடுத்து ஆட்சியில் அமர வைத்த மக்களுக்கு நல்லாட்சியை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தமிழக முதல்வராக ஜெயலலிதா ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ளார்.

வெற்றிக் கனியைத் தராவிட்டாலும், எதிர்க்கட்சி என்ற மிகப்பெரிய பலத்தை மக்கள் அளித்திருப்பதால் அந்த பொறுப்பை உணர்ந்து செயல்படும் நோக்கத்தோடு திமுகவும் சட்டப்பேரவைக்குள் காலடி எடுத்து வைத்துள்ளது.

இந்த நிலையில், முன்னெப்போதும் இல்லாத ஒரு அரசியல் சூழல் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. அதாவது, தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்கும் விழாவுக்கு திமுக தலைவர் கருணாநிதிக்கும், பொருளாளர் ஸ்டாலினுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது.

அது வெறும் சம்பிரதாய அழைப்பு என்று விட்டுவிடாமல், திமுக சார்பில் மு.க. ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு தமிழக மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

ஸ்டாலின் பின் வரிசையில் அமர்த்தப்பட்டதால், கருணாநிதிக்கும் சற்று கோபம் வந்தது. அவரது கண்டனத்தையும் வெளிப்படுத்தினார்.

ஆனால், அந்த கண்டனத்துக்கு உடனடியாக வருத்தம் தெரிவித்த ஜெயலலிதா, இது வேண்டுமென்றே நடந்த தவறல்ல என்று விளக்கமும் அளித்திருந்தார்.

அதோடு விட்டுவிடாமல், எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் ஸ்டாலினுக்கு வாழ்த்துகளையும், ஆளுங்கட்சியுடன், எதிர்க்கட்சி இணைந்து தமிழக மேம்பாட்டுக்காக பணியாற்ற அழைப்பும் விடுத்திருந்தார்.

அடடா.. இது அல்லவா ஆரோக்கியமான அரசியல் என்று தமிழக மக்கள் மூக்கின் மீது விரல் வைப்பதற்குள், அடுத்த நாள் சட்டப்பேரவையில் சந்தித்துக் கொண்ட ஜெயலலிதாவும் ஸ்டாலினும் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக் கொண்டது பெரிதாகப் பேசப்பட்டது.

ஆட்சிப் பொறுப்பேற்றதுமே, டாஸ்மாக் நேரம் குறைப்பு, 500 கடைகள் மூடல், 100 யூனிட் மின்சாரச் சலுகை என அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டார் ஜெயலலிதா.

மக்களின் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு என்பார்கள். எனவே, வழக்கம் போல ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தாமல், அதிமுகவையே மீண்டும் ஆட்சியில் அமரவைத்த மக்களின் தீர்ப்பு நிச்சயம் நல்ல பாதையிலேயே தமிழகத்தை பயணிக்க வைக்க உதவும் என்று நம்பலாம்.

மாறி வரும் அரசியல் ஆக்கப்பூர்வமானதாகவும் மாறும் என நம்பலாம்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/5/26/w600X390/admk-dmk.jpg admk-dmk http://www.dinamani.com/sutrula/sutrula-tamilnadu/2016/may/26/ஆக்கப்பூர்வமானதாக-மாறுகிறதா-தமிழக-அரசியல்-நிலவரம்-993.html