Dinamani - ஐந்து குண்டுகள் - http://www.dinamani.com/junction/five-bullets/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2678573 ஜங்ஷன் ஐந்து குண்டுகள் அத்தியாயம் 44 சுதாகர் கஸ்தூரி Tuesday, April 4, 2017 11:08 AM +0530 ஆறு மாதங்கள் கழித்து :

கல்கத்தா:  ஹல்திராம்ஸ் ரெஸ்டாரண்ட்டில் பொதுவாகவே கூட்டம் அலைமோதும். மார்வாடி, பெங்காலி உணவு வகை தவிர, டப்பா டப்பாவாக ரசகுல்லா வாங்கிப்போகும் பயணிகள் வந்தவண்ணம் இருப்பார்கள்.

‘நல்லவேளை நீ முன்னாடியே போன் பண்ணினே. ராஞ்ச்சி-ஹவுரா ட்ரெயின் டிக்கட் கிடைக்கிறது அவ்வளவு ஈஸியில்ல, முத்துக்குமார்’ விக்ரம் சின்ஹா, சோளே பட்டுராவை சுவைத்துக்கொண்டே பேசினார்.

‘ரெண்டு நாள்தான் கல்கத்தா டூர். அதான் ராஞ்சி வரமுடியல, சாரி’ என்றான் முத்துக்குமார்.

‘நோ ப்ராப்ளம்.’ என்றவர் ஒரு நிமிட மவுனத்தின் பின் ‘ஒண்ணு கேக்கலாமா?’என்றார்.

முத்துக்குமார் உள்ளூறப் புன்னகைத்து ‘கேளுங்க’ என்றான்.

‘எதுக்கு, என்கிட்ட அந்த ஐந்து குண்டுகளைக் கொடுத்துட்டு, தவறான குண்டுகளை வைக்கச் சொன்னே? மதுரை ஏர்ப்போர்ட்டுல வந்து என்னை பிக் அப் பண்ணிட்டு கார்ல வர்றப்போ, நீ அந்த குண்டுகளைக் கொடுத்ததை இன்னும்  நான் மறக்கலை’

‘வீட்டுல பிரச்னை வந்திருக்கும் சார். அது உங்களுக்குப் புரியாது. சாரி, அது கொஞ்சம் பெர்சனல்’

‘இருக்கட்டும்’ என்றார் விக்ரம் ‘நான் ராஞ்சியிலேர்ந்து கிளம்பறதுக்கு முன்னாடியே போன் போட்டு, வெப்லி மார்க் 4ல இருக்கற மாதிரி, ஆனா வேறு குண்டுகள் கொண்டு வாங்க’ன்னு சொன்னபோது எனக்குப் புரியலை. நல்லவேளை காருக்குள்ள சி.சி.டிவி இல்ல, சுளூவா மாத்திட்டேன்.’

இரு நிமிட மவுனத்தின்பின் அவர் தொடர்ந்தார் ‘அந்த ஒரிஜினல் குண்டுகள்.. அவை உனக்கு வேணுமா? ஏன் கேக்கிறேன்னா, அந்த காலக்கட்ட குண்டுகள் என்  கலெக்‌ஷன்ல இல்ல. ஒரு தொகை பேசி முடிச்சிக்கலாம்’

‘எவ்வளவு தருவீங்க?’ என்றான் முத்துக்குமார்

‘என்ன … ரெண்டு லட்சம்.. ஓகே மூணு.. அதுக்கு மேல கேக்காதீங்க’

எட்டு மாதம் கழித்து

சென்னை: அடையார்பார்க் ஓட்டலில் லாபியில், முத்துக்குமார் லிண்டாவைப் பார்த்து கை உயர்த்தினான். அவள் புன்னகைத்து, கையசைத்தாள். இருவரும் ஒரு ஓரமாக இருந்த ஒரு மேசையில் அமர்ந்தனர்.

‘லிண்டா, மெலிந்திருக்கிறாய்’ என்றான் அவன்.

‘இதைவிட ஒரு பெண்ணிற்கு இனிமையான சொல் இருக்க முடியாது’ என்றாள் லிண்டா

‘எனக்கு சமீபத்தில்தான் பொய் சொல்லும் பழக்கம் வந்திருக்கிறது’

‘உனக்கு எப்போதோ வந்துவிட்டது. அந்த குண்டுகள்… எனக்கென்னமோ அதில் உன் சதி வேலை இருப்பதாகப் படுகிறது. ஆனால் ஏன்?’

‘விடு. ஆய்வு வேலைகள் எப்படிப் போய்க் கொண்டிருக்கின்றன?’

‘வெகுவாக முன்னேறி வருகிறோம். அது தொடர்பாகத்தான் சென்னையில் இரு நாட்களாக ஒரு கருத்தரங்குக்கு வந்திருக்கிறேன். இன்று எனது பேப்பர் விவாதிக்கப்படும்.’ என்றவள் நிறுத்தினாள்

‘முத்துக்குமார்’ என்றவாறு அவன் கைகளைப் பற்றினாள் ‘ நான் வரும்போது அந்தத் தொகையை எனக்கு எடுத்துக் கொள்ளவே நினைத்திருந்தேன். ஆனால், அந்தப் பாடல்கள், நடேசபிள்ளையின் நாட்குறிப்பு…என்னை அசைத்துவிட்டன. அந்தத் தொகை ஆனி என்ற ஒரு பெண்ணின் தூய அன்பிற்கும், முத்துராசாவின் மரியாதை கலந்த அன்பிற்குமாக காலம் கடந்து நிற்கப்போகும் பாலம் என உணர்ந்தேன். எப்படியும் அதனை உங்கள் குடும்பத்திற்குக் கொடுத்துவிட இறுதியில் முயற்சித்தேன்.. ஆனால் அந்த ஐந்து குண்டுகள்…. எப்படி போலியாக முடியும்? அனைத்தும் உண்மையான அந்த அன்பு, மரியாதை, நட்பு, மரபு… அதை மாசுபடுத்தும் அளவிற்கு எப்படி போலிகள் அங்கு நுழைய முடியும்?’

‘அவர்களின் உணர்ச்சிகளும், வாழ்வும் போலியில்லை என நிரூபிக்க போலி குண்டுகள் வரவேண்டியிருந்தது’

‘புரியவில்லை’

‘ஆனி செய்த பொருளுதவியை முத்துராசா தனக்கு என ஏற்கவில்லை. மருத்துவமனையாக, சத்திரம்  கட்ட நினைத்தார். அப்படிப்பட்டவர் குடும்பமும் அதே போல் கொடையை மறுத்ததில் என்ன தவறு இருக்கிறது? உங்களது புற்றுநோய் ஆய்வுக்கு அந்த பணம் பயன்படுகிறதே? இல்லாவிட்டால், இங்கு பட்டுப்புடவைகளும், நகைகளும், கார்களுமாக நின்றிருக்கும். இப்போ, உறவுகள் புதிதாக முளைத்துப் பலப்பட்டிருக்கின்றன. எனவே… எல்லாம் நல்லதுக்கே என நினைத்துக்கொள்’

அவள் அவனை உற்றுப் பார்த்தாள். ‘ஸோ.. நீ அந்த குண்டுகளை…’

‘இந்தப் பேச்சை இத்தோடு நிறுத்திக்கொள்வோம்.’

‘நான் ஆனி வம்சத்தவள். அவள் போல நானும் எதாவது உன் குடும்பத்திற்கு உதவி செய்தேயாக வேண்டும். நீ ஏற்றுக்கொண்டே தீரவேண்டும்’

‘நான் முத்துராசா வம்சத்தவன். எனக்கென எதையும் ஏற்க மாட்டேன். ஆனால்..’

‘சொல்’ என்றாள் க்ரீன் டீயை உறிஞ்சியவாறு

‘அந்த கன்னியம்மாள் சத்திரத்தை ஒரு மருத்துவமனையாக மாற்றத் திட்டமிட்டிருக்கிறோம். நாற்பது லட்சம் தேவைப்படுகிறது. எங்களிடமிருந்து பத்து லட்சம் போட்டிருக்கிறோம். விக்ரம் சின்ஹா மூன்று லட்சம் நன்கொடை கொடுத்திருக்கிறார்..’

பொத்தைதான் பெருங்கல்லோ, பொதிகைதான் பெருமலையோ?முத்தையன் மனசுறுதி; அதுக்குத்தான் அளவுண்டோ?

முற்றும்

]]>
sudhakar Kasthuri, 5 bullets, சுதாகர் கஸ்தூரி, ஐந்து குண்டுகள் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/4/w600X390/a.jpg http://www.dinamani.com/junction/five-bullets/2017/apr/04/அத்தியாயம்-43-2678573.html
2674291 ஜங்ஷன் ஐந்து குண்டுகள் அத்தியாயம் 43 சுதாகர் கஸ்தூரி Tuesday, April 4, 2017 11:08 AM +0530  

‘சரி, விடுங்க, அனாமத்தா வர்ற செல்வத்தையெல்லாம் நம்பி நிக்கக்கூடாது. உழைச்சு வந்த சோறே உடம்புல ஒட்ட மாட்டக்கி.. இதுல ஊரான் பணமெல்லாமா நமக்கு ஒட்டும்’  பெரியப்பா  உரக்கவே புலம்பினார்.

‘வரப்போவுதுன்னு நினைச்சு பொடவ, நகயெல்லாம் எடுத்துட்டமே? கடனட்டைக் கடங்காரன் அடுத்த மாசம் வந்து நிப்பானே? யாரு அடைக்க?’

‘டே, அந்த திசயன்விளை நிலம் இப்ப வாங்க முடியாதுன்னு சொல்லிறு. பத்திரம் இன்னும்  எழுதலேல்லா?’

மாடசாமி ஒரு மூலையில் அசையாது அமர்ந்திருந்தார். முத்துக்குமார் கவலையானான். இவர் எப்படி இதனைத் தாங்கிக்கொள்வார்?

‘மாமா’ தடுமாறினான் அவன். இவரை என்ன உறவென்று சொல்லி அழைப்பது. நேற்று வரை சார். இன்று மாமாவா, அத்தானா அல்லது அண்ணனா?

அவர் எதுவும் சொல்லாமல் எழுந்து போனார்

இருநிமிடங்களில் அங்கிருந்த உற்சாகம் கரைந்து போய், சோகம் அப்பிக்கிடந்தது. மெல்ல ஆட்கள் மாடசாமியின் வீட்டிலிருந்து வெளியேறினர். பக்கத்துவீட்டு ரோசம்மா டீச்சர் உள்ளே மகளிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்     ‘நா அப்பவ நினச்சேண்டி. இந்த வெள்ளக்காரி ஆண்டவருக்கு அடங்கினவளாத் தெரியல. அவ வந்த நேரம்தான்…’

லிண்டாவிடம் அடுத்தடுத்து பல மின்னஞ்சல்கள் வந்தன. போன் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருந்த்து. மாலை நாலுமணியளவில் அவள் ஒரு கத்தை காகிதங்களுடன் முத்துக்குமாரிடம் வந்தாள் ‘வழக்கறிஞர்கள் தயாரித்திருக்கிற அறிக்கை. ஒரு உடன்படிக்கைன்னு சொல்லலாம்’

‘என்ன இது?’

‘இந்த ப்ராஜெக்ட் முடிவுக்கு வந்துவிட்டது’ இனி, அந்தத் தொகை, ஆனியின் ட்ரஸ்ட்டிடமே சேரும். இதில் எங்களுக்கு எந்த மறுப்பும் இல்லை; பின்னாளில் இதுபற்றி நாங்கள் கேள்வியெழுப்ப மாட்டோம் என்று உங்கள் குடும்பத்தினர் கையெழுத்திடவேண்டும். லாயர்களின் ஆவணப்படுத்தும் சடங்கு..’

மவுனமாக அவன் அதனை வாங்கிக்கொண்டு பெரியப்பாவின் வீட்டிற்குப் போனான். லிண்டா அவன் போவதை ஒரு நிமிடம் பார்த்துக்கொண்டிருந்தாள். பெருமூச்செறிந்து, தன் வேலையைப் பார்க்கப் போனாள்.

‘விடுறே. பைசா வராட்டிப் போவுது.  மாடசாமி. நீ நம்மாளு கேட்டியா? இப்படி ஒரு சொந்தக்காரன் இருக்கறதே இப்படி இந்த வெள்ளக்காரி வந்துதான தெரியுது? எல்லாத்துலயும் ஒரு நல்லது இருக்கும். நாமதான் அது என்னான்னு பாத்துப் பொளச்சுக்கிடணும்’ பெரியப்பா தன் வீட்டில் தத்துவார்த்தமாகப் பேசிக்கொண்டிருந்தார்.

மாடசாமி சேரில், முன்னே குனிந்து , தரையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.
‘அதில்ல பெரீப்பா, மவள நல்லாப் படிக்க வச்சிரலாம். நல்ல எடமாப் பாத்துக் கட்டிக்கொடுத்திரலாம்னு கொஞ்சம் அதிகமா ஆசைப்பட்டுட்டேன். ‘ஆட்டுக்கு வாலு அளந்துதான் வச்சிருக்கேன்னுட்டான் ஆண்டவன்’

‘நானும் மெட்ராஸ்ல பையன்கிட்ட போய் இருக்கப்போறன். எனக்கு எதுக்குக் இந்த ஸ்கூட்டர் எளவெல்லாம்.? கண்ணு வேற சரியா தெரிய மாட்டேக்கி. ஒன் பொண்ணுகிட்ட கொடுத்துரு. அவ, சள்ளுன்னு காலேஜ் போய் வரட்டு.’

‘அது வேணாம் பெரீப்பா. அவளுக்கு காலேஜ் பஸ் வருது.’

‘அப்ப நீ வச்சிக்க’

‘டே மாடா’ என்றாள் பெரியம்மா காப்பியை ஆற்றிக்கொடுத்தபடியே ‘அவள ஏன் ஹாஸ்டல்ல விடுத? சண்முகம் வீட்டுல நிக்கட்டு. எம்மருமவளுக்கு பொம்பளப் பிள்ளேள்னா அம்புட்டு பிரியம் பாத்துக்க. தங்கமாப் பாத்துக்கிடுவா.ஏங்க, சும்மா நிக்கீயளே? சொல்லுங்களேன்’

பெரியப்பா அவசரமாக ‘ஆமாம்ல’ என்றார். ‘ சேலையூர்ல காலேஜ் வண்டி வரும்லா? கேட்டு வையி.  சம்முவம் வீட்டுலேர்ந்து மெயின்ரோடு கொஞ்ச தூரம். நான் போயி பிள்ளய பஸ்ஸ்டாப்புல கொண்டு விட்டுக் கூட்டியாந்துடறேன்.’

‘அதெல்லம் வேணாம் பெரீப்பா’

‘எனக்கு வேறென்ன என்ன சோலி? சும்மா முட்டைக்கி மயிர் பிடுங்கிட்டிருக்கேன் அங்கிட்டு. ஒண்ணு, எதாச்சும் உருப்படியா ஒரு சோலி செய்யணும், இல்ல, இந்தா, இவள மாரி, சீரியல் பாக்கணும். நமக்கு அது ஓடாது’

‘என்னச் சொல்லலேன்னா இந்த மனுசனுக்கு உறக்கமே வராது.’ பெரியம்மா முணுமுணுத்துக்கொண்டே உள்ளே போனாள்.

‘அந்த திசையன்விளை நிலத்தை முடிச்சிருவம் பெரீப்பா. உங்க பூர்வீகச் சொத்து. உங்க்கிட்ட இருக்கட்டு’ மாடசாமி நிலம் பற்றிப் பேசத் தொடங்கினார்.

முத்துக்குமார், அனைவரிடமும் கையெழுத்து வாங்கிக்கொண்டு திரும்பினான்.

தொடரும்

]]>
ஐந்து குண்டுகள், 5 gundugal http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/28/w600X390/Merlin_200580.jpg http://www.dinamani.com/junction/five-bullets/2017/mar/28/அத்தியாயம்-42-2674291.html
2670047 ஜங்ஷன் ஐந்து குண்டுகள் அத்தியாயம் 42 சுதாகர் கஸ்தூரி Tuesday, March 28, 2017 10:00 AM +0530 ‘சரி, விடுங்க, அனாமத்தா வர்ற செல்வத்தையெல்லாம் நம்பி நிக்கக்கூடாது. உழைச்சு வந்த சோறே உடம்புல ஒட்ட மாட்டக்கி.. இதுல ஊரான் பணமெல்லாமா நமக்கு ஒட்டும்’  பெரியப்பா  உரக்கவே புலம்பினார்.

‘வரப்போவுதுன்னு நினைச்சு பொடவ, நகயெல்லாம் எடுத்துட்டமே? கடனட்டைக் கடங்காரன் அடுத்த மாசம் வந்து நிப்பானே? யாரு அடைக்க?’

‘டே, அந்த திசயன்விளை நிலம் இப்ப வாங்க முடியாதுன்னு சொல்லிறு. பத்திரம் இன்னும்  எழுதலேல்லா?’

மாடசாமி ஒரு மூலையில் அசையாது அமர்ந்திருந்தார். முத்துக்குமார் கவலையானான். இவர் எப்படி இதனைத் தாங்கிக்கொள்வார்?

‘மாமா’ தடுமாறினான் அவன். இவரை என்ன உறவென்று சொல்லி அழைப்பது.நேற்று வரை சார். இன்று மாமாவா, அத்தானா அல்லது அண்ணனா?

அவர் எதுவும் சொல்லாமல் எழுந்து போனார்

இருநிமிடங்களில் அங்கிருந்த உற்சாகம் கரைந்து போய், சோகம் அப்பிக்கிடந்தது. மெல்ல ஆட்கள் மாடசாமியின் வீட்டிலிருந்து வெளியேறினர். பக்கத்துவீட்டு ரோசம்மா டீச்சர் உள்ளே மகளிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்     ‘நா அப்பவ நினச்சேண்டி. இந்த வெள்ளக்காரி ஆண்டவருக்கு அடங்கினவளாத் தெரியல. அவ வந்த நேரம்தான்…’

லிண்டாவிடம் அடுத்தடுத்து பல மின்னஞ்சல்கள் வந்தன. போன் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருந்த்து. மாலை நாலுமணியளவில் அவள் ஒரு கத்தை காகிதங்களுடன் முத்துக்குமாரிடம் வந்தாள் ‘வழக்கறிஞர்கள் தயாரித்திருக்கிற அறிக்கை. ஒரு உடன்படிக்கைன்னு சொல்லலாம்’

‘என்ன இது?’

‘இந்த ப்ராஜெக்ட் முடிவுக்கு வந்துவிட்டது’ இனி, அந்தத் தொகை, ஆனியின் ட்ரஸ்ட்டிடமே சேரும். இதில் எங்களுக்கு எந்த மறுப்பும் இல்லை; பின்னாளில் இதுபற்றி நாங்கள் கேள்வியெழுப்ப மாட்டோம் என்று உங்கள் குடும்பத்தினர் கையெழுத்திடவேண்டும். லாயர்களின் ஆவணப்படுத்தும் சடங்கு..’

மவுனமாக அவன் அதனை வாங்கிக்கொண்டு பெரியப்பாவின் வீட்டிற்குப் போனான். லிண்டா அவன் போவதை ஒரு நிமிடம் பார்த்துக்கொண்டிருந்தாள். பெருமூச்செறிந்து, தன் வேலையைப் பார்க்கப் போனாள்.

‘விடுறே. பைசா வராட்டிப் போவுது.  மாடசாமி. நீ நம்மாளு கேட்டியா? இப்படி ஒரு சொந்தக்காரன் இருக்கறதே இப்படி இந்த வெள்ளக்காரி வந்துதான தெரியுது? எல்லாத்துலயும் ஒரு நல்லது இருக்கும். நாமதான் அது என்னா?ன்னு பாத்துப் பொளச்சுக்கிடணும்’ பெரியப்பா தன் வீட்டில் தத்துவார்த்தமாகப் பேசிக்கொண்டிருந்தார்.

மாடசாமி சேரில், முன்னே குனிந்து, தரையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.
‘அதில்ல பெரீப்பா, மவள நல்லாப் படிக்க வச்சிரலாம். நல்ல எடமாப் பாத்துக் கட்டிக்கொடுத்திரலாம்னு கொஞ்சம் அதிகமா ஆசைப்பட்டுட்டேன். ‘ஆட்டுக்கு வாலு அளந்துதான் வச்சிருக்கேன்னுட்டான் ஆண்டவன்’

‘நானும் மெட்ராஸ்ல பையன்கிட்ட போய் இருக்கப்போறன். எனக்கு எதுக்குக் இந்த ஸ்கூட்டர் எளவெல்லாம்.? கண்ணு வேற சரியா தெரிய மாட்டேக்கி. ஒன் பொண்ணுகிட்ட கொடுத்துரு. அவ, சள்ளுன்னு காலேஜ் போய் வரட்டு.’

‘அது வேணாம் பெரீப்பா. அவளுக்கு காலேஜ் பஸ் வருது.’

‘அப்ப நீ வச்சிக்க’

‘டே மாடா’ என்றாள் பெரியம்மா காப்பியை ஆற்றிக்கொடுத்தபடியே ‘ அவள ஏன் ஹாஸ்டல்ல விடுத? சண்முகம் வீட்டுல நிக்கட்டு. எம்மருமவளுக்கு பொம்பளப் பிள்ளேள்னா அம்புட்டு பிரியம் பாத்துக்க. தங்கமாப் பாத்துக்கிடுவா.ஏங்க, சும்மா நிக்கீயளே? சொல்லுங்களேன்’

பெரியப்பா அவசரமாக ‘ஆமாம்ல’ என்றார். ‘ சேலையூர்ல காலேஜ் வண்டி வரும்லா? கேட்டு வையி.  சம்முவம் வீட்டுலேர்ந்து மெயின்ரோடு கொஞ்ச தூரம். நான் போயி பிள்ளய பஸ்ஸ்டாப்புல கொண்டு விட்டுக் கூட்டியாந்துடறேன்.’

‘அதெல்லம் வேணாம் பெரீப்பா’

‘எனக்கு வேறென்ன என்ன சோலி? சும்மா முட்டைக்கி மயிர் பிடுங்கிட்டிருக்கேன் அங்கிட்டு. ஒண்ணு,எதாச்சும் உருப்படியா ஒரு சோலி செய்யணும், இல்ல, இந்தா, இவள மாரி, சீரியல் பாக்கணும். நமக்கு அது ஓடாது’

‘என்னச் சொல்லலேன்னா இந்த மனுசனுக்கு உறக்கமே வராது.’ பெரியம்மா முணுமுணுத்துக்கொண்டே உள்ளே போனாள்.

‘அந்த திசையன்விளை நிலத்தை முடிச்சிருவம் பெரீப்பா. உங்க பூர்வீகச் சொத்து. உங்க்கிட்ட இருக்கட்டு’ மாடசாமி நிலம் பற்றிப் பேசத் தொடங்கினார்.

முத்துக்குமார் , அனைவரிடமும் கையெழுத்து வாங்கிக்கொண்டு திரும்பினான்.

தொடரும்

]]>
ஐந்து குண்டுகள், சுதாகர் கஸ்தூரி, Sudhakar Kasthuri http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/21/w600X390/mental-health-us.jpg http://www.dinamani.com/junction/five-bullets/2017/mar/28/அத்தியாயம்-42-2670047.html
2669977 ஜங்ஷன் ஐந்து குண்டுகள் அத்தியாயம் 41 சுதாகர் கஸ்தூரி Tuesday, March 21, 2017 09:51 AM +0530 மாடசாமி வீட்டின் ஹாலில், சில நிமிடங்கள் கனத்த மவுனம் நிலவியது. ‘இவன் என்ன சொல்லுதான்?’ என்றார் பெரியப்பா எரிச்சலும் திகைப்புமாய். ‘டே, நம்மாளுகளுக்கு புத்தி போறாது கேட்டியா? எதுக்கும் இந்தம்மா சொல்லுற மாரி, லண்டனுக்கு அனுப்பி வைச்சி..’

லிண்டா திகைப்பில் உறைந்திருந்தாள். ‘ விக்ரம், மீண்டும் சரி பாருங்கள். ஒன்றும் அவசரமில்லை.

‘நிச்சயமாகச் சொல்கிறேன். இக்குண்டுகள் போலி’

‘எதை வைத்துச் சொல்கிறீர்கள்?’ என்றான் முத்துக்குமார் பேயறைந்த முகத்தைச் சமாளித்தவாறு.

‘லுக். இதில் இருந்தவை மார்க் 3 ரக குண்டுகள். வெப்லி மார்க் 4 துப்பாக்கிகள், 0.455 காலிபர், மார்க் 3 குண்டுகளை ஏற்றுக்கொள்ளும். இந்த மார்க் 3 ரக குண்டுகளின் இரு முனைகளிலும் வளைவான அரைக்கோள வடிவில் குழி இருக்கும். இது மிக மோசமாக, ஆட்களைக் கொல்கிற ஆற்றல் வாய்ந்தது என்பதால், 1899ல் தி ஹேக் மாநாட்டின் பின் இக்குண்டுகள் தடை செய்யப்பட்டன. மாறாக கூரான நுனியுடைய  மார்க் 2 குண்டுகள் 1900 முதல் மீண்டும் பயனுக்கு வந்தன. அவை 1912 வரை பயன்பாட்டில் இருந்தன. இதே காலத்தில் சில மார்க் 3 குண்டுகள் புழக்கத்தில் இருந்தன என்றாலும் அபூர்வமாகவே கிடைக்கும். இவற்றை எளிதில் சர்வீஸில் பயன்படுத்தி இருக்க முடியாது. எனவே, நீங்கள் சொன்ன காலக்கட்டத்தில் இக்குண்டுகள் பயன்பட்டிருக்க முடியாது.’

‘என்ன சொல்ல வர்றீங்க? இதை யாரோ மாத்தியிருக்காங்கன்னா?’ பெரியப்பா கிட்டத்தட்ட இரைந்தார்.

‘இருக்கலாம். லுக் ஓல்ட் மேன். என் மீது கத்தாதீர்கள். என் அறிவுக்குப் பட்டதைச் சொன்னேன். மற்றபடி, இது உங்க தலைவலி’ விக்ரம் முகம் சிவந்து எழுந்தார்.

‘சாரி, சாரி, அவருக்கு என்னமோ டென்ஷன். மன்னிச்சுக்குங்க’ என்றார் மாடசாமி பதறி.

‘வேற குண்டுகள்னா, இந்த துப்பாக்கியில எப்படி கச்சிதமா பொருந்தி இருந்துச்சு?’ முத்துக்குமார் கவலையுடன் கேட்டான்.

‘மார்க் 2, மார்க் 3ம் ஒரே அளவுதான். இரண்டிற்கும் எடையிலதான் வேறுபாடு உண்டு. ரெண்டும் தர்றேன். நீங்களே பாருங்க.’ என்ற விக்ரம் தன் தோல் பையிலிருந்து சில குண்டுகளை எடுத்து கவனமாக மேசையின் ஒரு ஓரமாக வைத்தார்.

முண்டியடித்துக்கொண்டு வந்தவர்கள், ஒரு வரிசையாக ஒதுங்கி, இரு குண்டுகளையும் அருகருகே பார்த்தார்கள். ஒன்று நீண்ட கூர் நுனியுடனும் மற்றது தட்டையான நுனியில் ஒரு குழியுடனும் இருந்த்து.

‘எனவே, என் முடிவு இதுதான். இந்த துப்பாக்கி அந்தக் காலத்து வெப்லி. சந்தேகமில்லை. ஸ்பெஷலாக செய்யப்பட்டது. உறுதி. குண்டுகள் வேறு காலத்தவை- அதுவும் உறுதி’

லிண்டாவின் செல்போன் ஒலித்தது. அவர்கள் சொல்லாமலே புரிந்துகொண்டார்கள். இங்கிலாந்திலிருந்து அழைப்பு.

தொடரும்

]]>
குண்டுகள், bullets http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/21/w600X390/webley.jpg http://www.dinamani.com/junction/five-bullets/2017/mar/21/அத்தியாயம்-41-2669977.html
2665847 ஜங்ஷன் ஐந்து குண்டுகள் அத்தியாயம் 40 சுதாகர் கஸ்தூரி Tuesday, March 14, 2017 10:02 AM +0530  

லிண்டா நிமிர்ந்தாள். முத்துக்குமார் தொடர்ந்தான் ‘இந்த துப்பாக்கியை இங்கேயே சோதனை செய்யவேண்டும். அங்கு சென்று, இது அந்த துப்பாக்கி இல்லை என்று சொல்லிவிட்டால், எப்படி நம்புவது? எனவே ஒரு மூன்றாம் மனிதரை அழைத்துச் சோதனை செய்யச் சொல்லலாம். என்ன சொல்கிறீர்கள்?’

லிண்டாவின் கண்களில் ஒரு வேதனை படர்ந்தது. கடைசியில் நீயும் இப்படி காசுக்கு…

‘சரி. எங்கள் லாயர்களிடம் கேட்டுச் சொல்கிறேன். யார் அந்த மூன்றாம் மனிதர்?’

‘விக்ரம் சின்ஹா, துப்பாக்கி வல்லுநர்’ என்றான் முத்துக்குமார். லிண்டா அவனைப் பார்த்த்தில் ஒரு ஏளனம் இருந்தது.

‘டில்லியில் மாருதி கார்கள் போல, அன்றைய இந்தியாவில் வெப்லிகளும், என்ஃபீல்டுகளும் நிறைந்திருந்தன என்றாரே? அவரா?’

சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டான் முத்துக்குமார் ‘அவர் பன்னாட்டு துப்பாக்கி ஆய்வாளர்களின் குழுமங்களில் உள்ளவர் லிண்டா. இன்று, இந்தியா மட்டுமல்ல, ஆங்கிலேய காலனியாதிக்க நாடுகளில் எந்த துப்பாக்கிகள், பீரங்கிகள், குண்டுகள் எப்போது பயன்படுத்தப்பட்டன என்பதைப் பற்றிய ஆய்வுகளில் அவரது புத்தகங்களின் உசாத்துணைகள் இருக்கும். இக்திடார் ஆலம் கான், நடுகாலத்திய இந்தியாவில் துப்பாக்கிகள் என்ற புத்தகத்தில் எழுதியவற்றிற்கு, விக்ரம் ஒரு விரிவான கட்டுரை எழுதி….’

‘அவரது அறிவு பற்றி எனக்குத் தெரியத் தேவையில்லை, முத்து, அவரால் என்ன செய்துவிடமுடியும் எனக் நினைக்கிறாய்? இது எந்த காலத்தியது அல்லது யாருடையது என்றா?’

‘அனைத்தும்’ என்றான் பிடிவாதமாக முத்துக்குமார். ‘அவர் நாளை மறுநாள் இங்கு வருவதாகச் சொல்லியிருக்கிறார். ராஞ்சியிலிருந்து, இங்கு வந்து போகும் போக்குவரத்து செலவு போக, ஒரு நாளைய அவரது ஃபீஸ் ரூபாய் பத்தாயிரம். இது போன்று பல குழப்பங்களை அவர் சுமுகமாகத் தீர்த்துவைத்திருக்கிறார். அவருடைய பயோடேட்டாவை உனக்கு அனுப்பி வைக்கிறேன்’.

லிண்டாவின் முகத்தில் ஒரு வலி தெரிந்தது. மவுனமாக, தன் வழக்கறிஞரைத் தொடர்பு கொண்டாள். ஒருமணி நேரம் கழித்து வந்த மின்னஞ்சலை ப்ரிண்ட் எடுத்துக்கொண்டு, முத்துராசா குடும்பத்தினரை அழைத்தாள்.

‘எனது வழக்கறிஞர்களும், ட்ரஸ்ட்டிகளும் இந்த சோதனைக்கு ஒப்புதல் அளித்திருக்கிறார்கள். ஆனால், ஆய்வின் ஒவ்வொரு படியும் வீடியோ, ஆடியோ பதிவு செய்யப்படவேண்டும். அது நேரலையாக அவர்களுக்கும் அனுப்பப்படும். இதற்கு ஒத்துக்கொண்டால், ஆய்வை இங்கு விக்ரம் சின்ஹாவைக் கொண்டு தொடரலாம்’

அனைவரும் மவுனமாகத் தலையாட்டினர். ‘இசக்கியாபிள்ள மவன் வீடியோ கடை வச்சிருக்கான், இவனே… முத்து.. கலியாணம் காட்சின்னா நம்மூர்ல அவந்தான் கேட்டியா? அவன கூப்பிட்டு, வீடியோ எடுக்கச் சொல்லுவம். நமக்குன்னா ஒரு டிஸ்கவுண்ட்டு போடுவான்.. என்ன சொல்லுத?’

பெரியப்பாவின் சிபாரிசுகளை கவனமாகத் தவிர்த்தான் அவன். மூன்று கடைகளின் விலைப்பட்டியலை லிண்டாவுக்குக் கொடுத்து அவளையே தேர்ந்தெடுக்கச் சொன்னான். இறுதியில் ஒரு சி.சி.டி.வி, துப்பாக்கி இருக்கும் அறையில் இருக்கவேண்டுமென்பது முடிவானது. மாடசாமியின் வீட்டின் மாடியில் ஒரு அறையில் துப்பாக்கி , மேசைமீது ஒரு கண்ணாடிப்பெட்டியில் வைக்கப்பட்டு, அருகில் ஒரு மேசை விளக்கு எப்போதும் எரிந்திருக்க, மேலே வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வியினால் 24 மணிநேரமும் நேரலையாக அது இங்கிலாந்தில் கண்காணிக்கப்பட்டது.

மதுரை வரை விமானத்தில் வந்த விக்ரம் சின்ஹாவை முத்துக்குமாரே நேரில் போய் அழைத்து வந்தான். ஏதோ அரசியல்வாதியின் வீட்டுத் திருமணமென்று , நகரில் உருப்படியான ஓட்டல்களின் அறைகள் கிடைக்காததால், விக்ரம் சின்ஹா மாடசாமியின் வீட்டிலேயே தங்கவைக்கப்பட்டார். ஏ.ஸி இல்லாத்தை நிமிடத்திற்கு ஒரு முறை சுட்டிக்காட்டினார்.

இரவு ஒரு மணியளவில் திடீரென மின்சாரம் போய்விட, வீட்டில் இருந்தவர்கள் சலசலத்து எழுந்தனர்.  அனைவரும் துப்பாக்கி இருந்த அறை நோக்கி ஓடி வர, அங்கு மூடப்பட்டிருந்த கதவின் அருகே டார்ச்சுடன் முத்துக்குமார் நின்றிருந்தான். ‘பயப்படவேண்டாம். சி.சி.டிவிக்கு பாட்டரி பேக் அப் இருக்கு.’ என்றவன் மாடிப்படியில் நின்றிருந்த லிண்டாவை உற்றுப் பார்த்தான். 'கோடிகளுக்காக , ஒரு நாள் உறக்கம் போவது தவறில்லை லிண்டா’

மறுநாள் காலை, பத்து மணியளவில், மாடசாமியின் வீட்டின் ஹாலில் பலர் கூடியிருந்தனர். ஒரு பதற்றத்துடன் சலசலப்பு உயர்ந்து கேட்டது. குடும்பத்தில் இல்லாத சில பெரிய மனிதர்களையும் சாட்சிக்கு அழைத்து வந்திருந்தார் பெரியப்பா ‘ இருக்கட்டும்லே. நாளைக்கு எவனாச்சும் ஒங்க பங்காளிகளா நின்னு பைசாவ லவுட்டிட்டானுவோ-ன்னு சொல்லிரப் படாதுல்லா? அதான்… ஒக்காருங்க ஐயர்வாள். டே, இங்கிட்டு ஒரு சேர் போடு’

ஒரு மேசையில் வெள்ளைப்படுதா விரித்திருக்க, சின்ஹா அதன் மறுபுறம் அமர்ந்திருந்தார். கையுறை அணிந்தபடி, துப்பாக்கியை அவர் எடுக்கும்போது, ஒருவன் படு மும்முரமாக அதனை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தான்.

‘இது வெப்லி மார்க் 4. ஆங்கிலேய உயர் அதிகாரிகள், ஆர்மி அதிகாரிகள், ஏன் சில தனியாட்களும் 1900களில் பயன்படுத்திய மாடல் இது. போயர் போரில் பயன்படுத்திப் பிரபலமான ஒன்று’ யாருக்கும் புரியாத, வேண்டாத விவரங்களை விக்ரம் அள்ளித் தெளித்தபடி துப்பாக்கியை கவனமாகப் பார்த்தார்.

ஒரு பூதக்கண்ணாடி கொண்டு அதனை முழுதும் ஆராய்ந்தவர் ‘இது ஸ்பெஷலாகச் செய்து வாங்கியது. பிடி சற்றே மென்மையாக வளைக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக பெண்கள் பயன்படுத்துவதாக இருந்தால்மட்டுமே இப்படி அழகுசெய்வார்கள். ம்ம்ம் தங்க முலாம் பூசியிருக்கிறார்கள்.’ துப்பாக்கியை மேலே திறந்து, உள்ளிருந்த குண்டுகளை வெளியே எடுத்தார்.

சட்டென அவர் முகம் மாறியது. ‘இந்த குண்டுகள்…’ அவர் நிதானமாக ஒவ்வொரு குண்டாக எடுத்து பூதக்கண்ணாடியாலும் கவனித்துப் பார்த்தார்.

அனைவரையும் ஒரு முறை நோக்கினார்.

‘இந்த குண்டுகள் போலி’

தொடரும்

]]>
ஐந்து குண்டுகள், sudhakar Kasthuri http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/14/w600X390/Webley-3.jpg http://www.dinamani.com/junction/five-bullets/2017/mar/14/அத்தியாயம்-40-2665847.html
2661767 ஜங்ஷன் ஐந்து குண்டுகள் அத்தியாயம் 39 சுதாகர் கஸ்தூரி Tuesday, March 7, 2017 10:33 AM +0530 செல்லியாத்தாவின் வீட்டில் பாத்திரங்கள் உருண்டன. லிண்டா, அவளது கையைப் பிடித்து அமர்ந்திருக்க, செல்லியாத்தா ஏதோ உளறியபடி அழுதுகொண்டிருந்தாள். முத்துக்குமார் பரணில் பரபரப்பாகத் தேடிக்கொண்டிருந்தான். அந்த ட்ரங்க் பெட்டி.. அதனருகே இருக்கும் மஞ்சள் பை?

எதிலும் கிடைக்கவில்லை அந்த துப்பாக்கியும் ஐந்து குண்டுகளும்.

‘யாத்தா, அஞ்சு தோட்டான்னு சொன்னியே? அதென்னா?’ முத்துக்குமார் பல விதங்களிலும் கேட்டுப் பார்த்துவிட்டான். அவள் சொல்லுவதாகத் தெரியவில்லை. மீண்டுm மீண்டும் ‘மூத்தவ போவயிலே..’

‘நாம் மிக அருகில் வந்துவிட்டோம்’ என்றாள் லிண்டா. இவர் சொல்லிவிட்டால் ப்ரச்சனை தீர்ந்த்து. அந்த துப்பாக்கி.. எங்கு இருக்க்க்கூடும்?’

ஒரு இடத்திலும் கிடைக்காமல் ஏமாற்றம் மிஞ்ச, சட்டென லிண்டா உடைந்தாள். அவளது விசும்பல் ஒலிகேட்டு, செல்லியாத்தா, அழுகையை நிறுத்தி, லிண்டாவைக் கூர்ந்து பார்க்கலானாள்.

‘அந்த துப்பாக்கி, அந்த குண்டுகள். அதன்பின் பெரும் வரலாறு நிற்கிறது. அதின்றி எங்கு போக முடியும்? ஆனியின் வலிகள், தியாகங்கள் வீணாகிப் போய்விடுமோ?’

செல்லியாத்தா அவள் புலம்புவதைக் கேட்டுக்கொண்டிருந்தாள் ‘நீ அழுவாதே ஆத்தா. என்ன வேணும் ஒனக்கு?’

‘நீ சொன்னியே…அந்த துப்பாக்கி, ஐந்து குண்டுகள். அவை வேண்டும்’

செல்லியாத்தா எழுந்தாள். விறுவிறுவென வெளியே நடந்தாள் தொடர்ந்து முத்துக்குமாரும், லிண்டாவும் ஓட்டமும் நடையுமாக அவள் பின் செல்ல, இருபது நிமிடங்களில், முள் வேலங்காட்டினுள், சமீபத்தில் தோண்டப்பட்ட முத்துராசாவின் சமாதியின் அருகே ஒரு மரத்தின் அடியிலிருந்து சற்றே விலகி,   நின்றாள்.  முத்துக்குமார், சில ஆட்களோடு அங்கு வந்து கிட்டதட்ட பத்து அடி விஸ்தீரத்தில் தோண்டத் தொடங்கியதை மறுக்கவில்லை அவள். க்ளங் என்ற சத்தத்துடன் நாலு அடியில் கிடைத்த அந்தப் பொருளை சலனமின்றிப் பார்த்து நின்றாள்.

துருப்பிடித்திருந்த அந்த உலோகப்பெட்டி, க்றீச்சிட்டுத் திறந்தது. அதனுள், பளபளப்பு குறைந்த, ஆனாலும் கம்பீரம் குறையாத, லேசான மினுங்கலுடன், தங்க நிறத்தில் வெப்லி மார்க் 4 கைத்துப்பாக்கி ஒன்று இருந்தது. அதோடு பழுப்படைந்த இரு காகிதங்கள்..

‘நடேசபிள்ளையின் நாட்குறிப்பிலிருந்து கிழிக்கப்பட்ட பக்கம்’ என்றாள் லிண்டா அதனைப் பார்த்தபடி. ‘பக்கம் எண் 43

சிரமத்துடன் முத்துக்குமார் அதனை படித்தான். அதே சாய்ந்த எழுத்துக்கள்.’ ஆனி, இன்று காலை என்னைப் பார்க்க அழைத்திருந்தாள். விடைபெற்றுச் செல்லுமுன் ஒரு பரிசு கொடுக்கவேண்டும் என்று சொன்னாள். முத்தாயி அருகிலிருந்தாள். அவளது அழகுத் தொப்பியில் புதைத்துக் கொடுத்த வஸ்து. கனமாக இருக்கவே ‘என்ன இது?’ என்றேன். ‘ஆண்டர்ஸன் எனக்குத் தந்த வெப்லி’ என்றாள். இதனைப் பத்திரமாகப் பாதுகாத்து வையுங்கள். அன்று என்ன நடந்த்து என்பதற்கு இது மட்டுமே சாட்சி. என்றாள்.’ எனக்குப் புரிய பல நிமிடங்களாயிற்று.’

மற்ற சிறிய காகிதம் பலவருடங்களுக்குப்பின் எழுதப்பட்டிருந்தது ‘எது அன்பிற்கு அத்தாட்சியாக நின்றதோ, எது தியாகத்தின் சின்னமாக நின்றதோ, எது காக்கப்படவேண்டுமோ, அதனை இன்று முத்துராசாவிடம் சேர்ப்பிக்கிறேன். என் மனப்பாரம் குறைந்துவிட்டது’

முத்துக்குமார் குடும்பம் மிகப் பரபரப்பாயிருந்தது. ‘ஏலா, எத்தனை நாள்ல பைசா வரும்?’ என்றார் பெரியப்பா ,குறைந்த பட்சம் முப்பது தடவை கேட்டிருப்பார்.

லிண்டாவின் கண்களில் ஒரு நிறைவு தெரிந்தது. இன்னும் இரு நாட்களில் கிளம்பறேன்’ என்றாள் முத்துக்குமாரிடம்/ ‘எல்லாம் சரியாகப் பொருந்தி வந்துவிட்டது. இது அந்த துப்பாக்கிதானா என்பது மட்டும் உறுதி செய்துவிட்டால் போதும். அது மிக எளிது. உங்களுக்கு பணம் இன்னும் ஒரு மாதகாலத்தில் வந்துவிடும் ‘ என்றாள்.

‘முதலில் இந்தப் பணம் எனக்கு வேண்டுமென்று மட்டுமே நினைத்திருந்தேன் முத்துக்குமார் ‘ என்றாள் சூடான இஞ்சி டீயை உறிஞ்சியபடி.

‘இப்போ…சரி..மேலும் சில வெஞ்ச்சர் கேபிடலிஸ்ட்களை அணுகிப் பார்த்துவிடலாம். என்ன கொஞ்ச நாட்களாகும் ஆகட்டும்.’ முத்துக்குமாரின் கையிலிருந்து துப்பாக்கியை வாங்க கைநீட்டினாள்.

முத்துக்குமார் அவளைப் பார்த்து புதிராகச் சிரித்தான். ‘உன்னிடம் துப்பாக்கியைக் கொடுக்க முடியாது, சாரி’

தொடரும்

]]>
sudhakar Kasthuri, ஐந்து குண்டுகள், சுதாகர் கஸ்தூரி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/7/w600X390/Webley-MkVI.jpg http://www.dinamani.com/junction/five-bullets/2017/mar/07/அத்தியாயம்-39-2661767.html
2657565 ஜங்ஷன் ஐந்து குண்டுகள் அத்தியாயம் 38 சுதாகர் கஸ்தூரி Tuesday, February 28, 2017 09:54 AM +0530  

‘என்ன ஆச்சு?’ முத்துக்குமார் ஆர்வமாகக் கேட்டான். பெரியப்பா கொஞ்ச நாள் முன்னாடி சொன்னாரே? அந்த நிகழ்வைத்தான் சொல்கிறாளோ?

‘அப்ப, எங்கம்மா பிரம்மதேசத்துல இருந்தா. அங்கிட்டு பொத்தைன்னு ஒரு  குன்று இருந்திச்சி. அதும்பக்கம்  இருந்தம். எஞ்சித்தப்பன் கொஞ்சம் வாயிக்கொழுப்பு பாத்துக்க. இங்க வந்தா, திமிரா நடந்துப்பான். ‘சேரி, மாப்பிள தம்பி, மருவாத கொடுப்பம்’னு பெரிய தாத்தா கண்டுக்காம இருந்தாரு. யாருகிட்ட கேட்டானோ, ஒரு தடவ, பெரிய தாத்தா இல்லாதப்ப, ஆனியம்மா பத்தி  என்னமோ தப்பா சொல்லிட்டான்.’

முத்துக்குமார் நிமிர்ந்தான்.

‘பெரிய தாத்தாவுக்கு யாரோ சொல்லிட்டாவ. யாத்தி, அவரு பொங்கிட்டாரு. அவன ஓட ஓட விரட்டி, தேரடிப் பக்கம் பிடிச்சு, தூண்ல கட்டிவைச்சாராம். பொறவு, குறுவாளை எடுத்து’ அவளப் பத்தி பேசின நாக்குதானல இது?’ன்னு கேட்டுகிட்டே, நாக்கை அறுத்து எறிஞ்சாராம். அதுக்கப்புறம்தான், ஊர்ப்பெரிவங்க, அவரை அமைதியாக்கி... அம்புட்டு ஆயுதத்தையும் கருப்பண்ணசாமி கோயில்ல வச்சுட்டாவ. இவரும் ‘ஆயுதம் எடுக்கமாட்டேன்’ன்னு சத்தியம் பண்ணிக் கொடுத்துட்டாரு’

‘அது ஏன் ஆனி பெயரு சொன்னா இம்புட்டு கோவம் வந்துச்சி, ஆத்தா?’

செல்லியாத்தா அவன் தலையில் செல்லமாகக் குட்டினாள் ‘ போல, போக்கத்த பயலே. அவருக்கும், இந்தா நிக்காளே இவளுக்கும் தெய்வ சம்பந்தம்லா? இவதாம்ல அந்த ஆனியம்மா’

முத்துக்குமார் சிரித்தான்’ ‘யாத்தா, அந்தம்மா எப்பவோ போயிருச்சு.’

‘இல்லலே’ ஆவேசமானாள் செல்லியம்மா ‘இவதான் அவ. எங்கம்மா  எம்புட்டு சொல்லியிருக்கா.? ஆனியம்மாவும் அவளும் அம்புட்டு பாசம் பாத்துக்க. ஆனியம்மாவுக்கும், பெரிய தாத்தாவுக்கும் என்ன தொடர்புன்னு நீயோ நானோ பேசக்கூடாது. வாயி அவிஞ்சி போவும். தனியா இருக்கச்சே, தாத்தா, ராத்திரி யாருகிட்டயோ பேசுவாராம். அம்மா யாருன்னு பாக்கப் போவயில, முன்னாடி யாரும் இருக்க மாட்டாளாம். யாருட்டப்பா பேசுதீய?ன்னு அவ கேட்டா ‘ஏட்டி, ஆனி நிக்காள்லா முன்னாடி? காங்கலியா?ன்னுவாராம்.’

லிண்டா அருகில் ஒரு சிரிப்புடன் நின்றிருக்க, செல்லியாத்தா மீண்டும் பாடத்தொடங்கினாள்.

பொத்தைதான் பெருங்கல்லோ, பொதிகைதான் பெருமலையோ?

முத்தையன் மனசுறுதி அதுக்குத்தான் அளவுண்டோ?

அறுதியாச் சொல்லிடுதேன்  நிக்குறவா கேளேண்டி

உறுதின்னா ராசாதான் ஊரெல்லாஞ் சொல்லிடுமே

முத்துக்குமார் உதட்டைப் பிதுக்கி ‘இது தேறாது’ என்பதாகத் தலையசைத்தான். லிண்டா ஆமோதிப்பதாகத் தலையசைத்து, ஒரு சிரிப்புடன் செல்லியாத்தாவைத் தாண்டிச் செல்ல முயன்றாள்.

தேஞ்சியே ஓடாக ராசா முத்தையா

நெஞ்சத்தான் காங்கலயே? ஆரெடுத்துப் போனாளோ?

ஊனுருகி உடலுருகி வீதியிலே கிடக்கையிலே

ஆனிதான் வந்தாளோ, அள்ளிட்டுப் போனாளோ?

லிண்டா நின்றாள். ‘ஆனி’ என்ற வார்த்தை அவளுக்குப் புரிந்தது கண்டு, முத்துக்குமார், அந்த வரிகளை அவளுக்குத் தேவையில்லாமல் விளக்கினான். உணர்வுகள் மனதுக்குப் புரியும்போது மொழி ஒரு தடையல்ல. இருவரும் வெளியேறுகையில், செல்லியாத்தாவின் பாடல் மாறி, புதியதாக தெளிவாக ஒலித்தது.

குஞ்சியிலே நெய்தடவி குமரியிலே புறப்பட்டா

காஞ்சிக்கும் அப்பாலே கலங்கிடுவான் துரையெல்லாம்

அஞ்சிறுமே புலியெல்லாம் அய்யா கிளம்பிட்டா

இதுபோல ஒரு பாடல்தான் அன்று பாடினாள்? முத்துக்குமார் சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே செல்லியாத்தாவின் குரல் மேலும் அழுகை தோய்ந்து, காற்றில் மிதந்து வந்தது.

‘அஞ்சுகுண்டு வச்சிருக்கான் அய்யாவென அறிஞ்சிட்டா’

தொடரும்

]]>
ஐந்து குண்டுகள், சுதாகர் கஸ்தூரி, 5 Kundugal http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/28/w600X390/gun_and_bullets_-_kuwait.jpg http://www.dinamani.com/junction/five-bullets/2017/feb/28/அத்தியாயம்-38-2657565.html
2652960 ஜங்ஷன் ஐந்து குண்டுகள் அத்தியாயம் 37 சுதாகர் கஸ்தூரி Monday, February 20, 2017 05:34 PM +0530 செல்லியாத்தா, பையினுள் தேடி ஒரு மாலையை எடுத்தாள் ‘ இது நீ, அன்னிக்கு போட்டிருந்தது. முத்து மால. எங்க ஆச்சி ஒனக்கு செஞ்சி கொடுத்துச்சே, அந்த மாலை. ஆமா, அவ கொடுத்தாளாம்லா, காதுல மாட்டற சிமிக்கி.. அத இன்னும் வச்சிருக்கேல்லா?’

முத்துக்குமார் லிண்டாவின் காதில் முணுமுணுத்தான் ‘ஷி இஸ் ஹாலூஸினேட்டிங்.. ஆனியை இவ பாத்ததில்ல. நாம் கிளம்பலாமா?’

‘நோ. அவ பேசட்டும்’ லிண்டாவின் குரலில் ஒரு தீவிரம் தெரிந்தது. ‘முத்துக்குமார், என் தமிழ் அவளுக்குப் புரியாது. அவள் பேசுவதை என்னால் மிகுந்த சிரமத்துடன் புரிந்துகொள்ள முடிகிறது.  நான் சொல்வதை மொழி பெயர்த்துச் சொல்லு ‘ ஆமா, இது நாந்தான்’’

‘வாட்?’ திகைத்த முத்துக்குமார் அவள் சொல்வதை மொழிபெயர்த்தான். செல்லியாத்தாவின் கண்கள் மின்னின.

‘நாந்தான் சொல்லுதேன்லா? நீ வருவேன்னு காத்துட்டேயிருந்தேன், கேட்டியா? முத்தாயிக்கிழவி சொல்லிச்சு. ஒருநாளு அவ வருவாட்டீ, வந்தா, இந்த மாலையக் காமி. அவளுக்குத் தெரியும். எம்பெயரச் சொல்லு.’

முத்துவின் தலை சுற்றியது. என்ன சொல்கிறாள் இந்த கிறுக்குக் கிழவி?

லிண்டா அவளருகே குனிந்தாள் ‘என்னப் பத்தி பாட்டி வேறென்ன சொல்லியிருக்கா?’

செல்லியாத்தாவின் முகம் மாறியது ‘வேறென்ன சொல்லுவா? பெரிய தாத்தா இருக்கறவரை, அவரைப் பாத்துகிட்டே புலம்புவா பாத்துக்க. அவ சொல்லச் சொல்ல எங்கண்ணு முன்னாடி நீல்லா வந்து நிப்ப?’

‘எதாச்சும் துப்பாக்கி பத்திச் சொன்னாளா?’

முத்துக்குமார் பொறுமையிழந்து அங்குமிங்கும் நோக்கினான். பரணில் ஒரு ட்ரங்குப்பெட்டி போல் ஒன்று. அதனருகே ஒரு பானை. அதனருகே ஒரு பூனை அமர்ந்து வேடிக்கை பார்த்திருந்தது.  அவன் மீண்டும் செல்லியாத்தாவைப் பார்த்தபோது அவள் லிண்டாவின் கையை இறுகப் பற்றியபடி உரத்த குரலில் பாடலும், பேச்சுமாக இருந்தாள்.

மூத்தவ போகையிலே தங்கச்சி கைபிடிச்சு

சேத்தே கொடுத்துட்டா செம்மையா வீடுறவே

செத்தேநான் போனாலும் மவனுக்குத் தாய்வேணும்

அத்தயப் பாத்துகிட, அன்பா நடந்துகிட

‘நீ போனப்புறம் பெரியதாத்தா வாசல்லதான் படுக்கை. கேட்டியா? அவர் பொஞ்சாதி , மவராசி இடுப்பு வலில கிடந்தா பாத்துக்க. ஒருவாட்டி, அவரக் கூப்பிட்டு ‘ இந்தாரும்வே, நாம்போயிட்டா, வீடு நாறிடக்கூடாது. அத்தைய, மாமாவப் பாத்துக்கிட ஆள்வேணும். எம்மவனுக்கு ஒரு அம்ம வேணும். கேட்டியளா? எந்தங்கச்சிய  கட்டிகிடும்’ன்னா.

‘ஏட்டி, ஒனக்கென்ன புத்தி பேதலிச்சிறுச்சா, சிறுக்கி,சும்மா கெட’ன்னாரு தாத்தா.

அவ அழுது ஆர்ப்பாட்டம் வக்கயில, அவரு சத்தியம் செஞ்சாரு நல்லா கேட்டுக்கோ ‘மவனுக்குத் தாய் வேணும், அம்ம, அப்பனப் பாத்துகிட ஒருத்தி வீட்டுல வேணும். இவ தங்கச்சிய வீட்டுக்குக் கொண்டாறேன்’ன்னு சத்திய வாக்கு.  அவ, நிறைவாக் கண்ணு மூடினா. மூணு மாசங்கழிஞ்சி, அவரு தம்பியக் கூட்டியாந்து, கொளுந்தியாளக் கட்டிக்கொடுத்து, ’வீட்டோடு நில்லுலே’ன்னாரு. அவனுக்கு தன்னோட  வாழைத்தோட்டத்தக் கொடுத்து, எம்மவன ஒம்மவனா வளத்துக்கிடுன்னாரு. ‘

செல்லியாத்தா நிறுத்தி, தண்ணீர் குடித்தாள். பின் பாடத் தொடங்கினாள்

முத்தைய்ய மவராசன் மகனைக் கொடுத்திட்டே

சத்தியவழி நின்னான்: சித்தியும் தாயானா

பொய்யொண்ணு மில்லயடா: மெய்யாலுஞ் சொல்லிடுதேன்

மெய்வீழும் நாள் வரையில் மெய்தீண்டா தானின்னான்

அய்யனுக்கு ஒப்பாக அகிலத்தில் ஆளுண்டா?

அவரு தம்பி புளியரை, நாரோயில்ன்னு அலைஞ்சிகிட்டிருந்தாரு. இவரு வீட்டுள்ளார எப்பவாச்சும்தான் போவாரு. வெளிய, இந்தா இங்கன ஒரு வேப்பமரம் நின்னிச்சி, அதுன்னடியில, கட்டிலு போட்டு கிடப்பாரு. தலையருகே, அருவா, வாளு, ஈட்டின்னு இருக்கும். ‘

லிண்டா, அவள் கையைத் தொட்டு நிறுத்தினாள் ‘அவர் தலையருகே ஒரு துப்பாக்கி, கைத் துப்பாக்கி வைச்சிருந்தாரா?’

செல்லியாத்தா, மீண்டும் தன் உலகத்தில் புகுந்துவிட்டாள். அவளது குரலும், வேகமான பேச்சும், முத்துக்குமாருக்கு மொழிபெயர்ப்பதில் சிரமமாக இருந்ததால், ஒரு நேரத்தில் மொழிபெயர்ப்பதை விட்டுவிட்டான். அவள் தன்போக்கில் ஏதோ விசும்பியபடி பாடிக்கொண்டிருந்தாள்.

பத்து நிமிட அமைதிக்குப்பின் லிண்டா முத்துவின் தோளைத் தொட்டாள் ‘அந்த ஆயுதங்கள் எங்கே? முத்து, கேள்’

முத்துக்குமார் மொழிபெயர்த்துக் கேட்க அவள் முணுமுணுத்தாள் ‘ அதான் சாமி முன்னாடி வச்சாச்சே? குறுவாளு மனுச ரத்தம் கண்டுட்டுல்லா?’

தொடரும்

]]>
sudhakar Kasthuri, ஐந்து குண்டுகள், சுதாகர் கஸ்தூரி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/20/w600X390/gene-tierney-1940s-2.jpg http://www.dinamani.com/junction/five-bullets/2017/feb/21/அத்தியாயம்-37-2652960.html
2649350 ஜங்ஷன் ஐந்து குண்டுகள் அத்தியாயம் 36 சுதாகர் கஸ்தூரி Tuesday, February 14, 2017 10:15 AM +0530 லிண்டா எங்கோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். முத்துக்குமார் ஹலோ என்றபோது, துணுக்குற்று எழுந்தாள். ‘என்ன ஆச்சு?’ என்றபோது ‘ப்ச்’ என்றாள். ‘ஏதோ கனமாக இருக்கிறது. இதுவரை நான் இப்படி உணர்ந்த்தில்லை. அந்த பாட்டி.. செல்லி… அவரது எதிர்ப்பு, அவரது ஓலம்.. அதை என்னவென்று சொன்னாய்?’

‘ஒப்பாரி’ என்றான் முத்துக்குமார்.

‘அது சுயமாக அவருக்கு வருகிறதா?  பார்த்தால் மனநிலை சரியில்லாதவர் போலத் தோன்றுகிறார்..’

‘அது..’ தயங்கினான் முத்துக்குமார் ‘அது, குடும்பத்தில் பரம்பரையாக வரும் ஒன்று. பெரிய பாட்டி முத்தாயி இயல்பாகப் பாடல் இயற்றிப் பாடக்கூடியவராக இருந்தார். ‘

‘அதோடு, கற்பனையாக பலவற்றையும் கூட்டிக் கதையாகச் சொல்லக் கூடியவர்’ என்றாள் லிண்டா புன்னகையுடன்

‘ஆம்’ என்றான் முத்துக்குமார் சிரிப்புடன் ‘கற்பனையான உலகில் வாழ்ந்தவர். அவர் மகள், திருமணமான சில வருடங்களிலேயே, குழந்தையாக இருந்த செல்லியைத் தூக்கிக்கொண்டு தாய் வீடு திரும்பிவிட்டார். செல்லிக்கு கற்பனை உலகில் சஞ்சரிப்பது எளிதாகவும், இன்பமாகவும் இருந்தது. பாட்டியிடம், தன் பெரிய தாத்தா பற்றி கதை கேட்டு வளர்ந்தவளின் மனச்சிதைவு, தான் வாழும் காலத்தின் முன் சென்று  இரு தலைமுறைக்கு முன் நடந்த நிகழ்வுகளில் வாழத்தொடங்கினாள்’ என்பார் என் அப்பா. எங்களைப் பொறுத்த வரை, அவர் ஒரு மரைகழண்ட கேஸ்.’

‘அவரது பாடல்கள்.. அவரே இயற்றிப் பாடியதா?’

‘சில அவருடையவை, பல, அவர் முத்தாயிப் பாட்டியிடம் கேட்டவை. 1960களில் நா.வானமாமலை ஆராய்ச்சி இதழுக்கு நாட்டுப்புறப்பாடல் தொகுப்புக்கு இவங்க பாடல்களையும் பதிய வந்தாராம். அண்ணன் மேற்கொண்ட  வலிக்காகவும், இறப்புக்குக்காவும் பாடின பாடல்கள் கொஞ்சம் தெளிவில்லாமலும், இவங்க தவிர வேற யாரும் பாடவில்லை என்பதாலும், அவர் பதிவுல ஏறாமப் போயிருச்சாம். இதுக்கு முன்னாடி 1940களில் நாட்டுப்புறப் பாடல் தொகுப்பிற்கு வந்தப்போ முத்தாயியோட மகள் எங்க வேலம்மா பாட்டி மறுத்துட்டதா சொல்லுவாங்க.’

‘அந்தக் குரல். தட்ஸ் ஹாண்ட்டிங். என்ன ஆழமான ஒரு வலி வெளிப்பாடு இல்ல?!’

‘லிண்டா’ என்றான் முத்துக்குமார் வந்த வேலையைப் பார்ப்போம். இப்ப, அந்தத் துப்பாக்கி இல்லேன்னா, எங்களுக்குப் பணம் வராதா?’

‘அப்படித்தான் லாயர்கள் சொல்லுகிறார்கள். உயிலின்படி, துப்பாக்கி வழிகாட்ட மட்டுமே நம்மால் உறுதி செய்ய முடியும். இதுவரை அவரிடம் இருந்த முத்துராசா குடும்பத்தின் மரபணு, உங்கள் குடும்பத்தின் வம்சாவளியை நிரூபித்திருக்கிறது. அவ்வளவுதான். குண்டுகளின் இருப்பு மட்டுமே உங்களுக்கு சொத்தில் உரிமை இருப்பதை உறுதி செய்ய முடியும்.’

முத்துக்குமார் சில நிமிடங்கள் சிந்தனை வயப்பட்டு நின்றிருந்தான். ஐந்து குண்டுகள் அடங்கிய துப்பாக்கி கிடைத்தால், கோடிகள்.. கிடைக்காவிட்டால்….

‘முத்து, எனக்கு அந்த முதியவளைக் காண வேண்டும்போல் இருக்கிறது. அவளை இங்கே அழைக்க முடியுமா?’

‘வேண்டாம்’ என்றான் முத்துக்குமார். ‘நாம் அவள் வீட்டிற்கே போவோம். இங்கே வந்தால் எப்படி, நடந்து கொள்வாள் எனச் சொல்ல முடியாது’.

செல்லியாத்தாவின் வீட்டை அவர்கள் அடைந்தபோது, தெரு வெறிச்சோடிக்கிடந்தது. பத்தரை மணி வெயில் உச்சியில் உறைக்க, வேப்பமர நிழல் சற்றே குளுமையைத் தந்தது. ஒரு மூலையில் சுருண்டு படுத்திருந்த செல்லியாத்தா, அவர்கள் வரும் ஓசையில் எழுந்து விரைந்து வந்தாள்.

‘யாரு? ஆனிம்மாவா?’ என்றபடி எழுந்தாள் செல்லியாத்தா. ‘நீ வருவன்னு தெரியும். ஒன்னப்பாக்கத்த்த்தான் உசிரை இத்தனை நாளும் பிடிச்சு வச்சிருந்தேன் பாத்துக்க’

‘யாத்தா, இவங்க ஆனியில்ல. லிண்டா’ என்றான் முத்துக்குமார் புன்னகையுடன். லிண்டாவைப் பார்த்துப் புன்னகையுடன் ‘இவள் உன்னை ஆனி என நினைத்திருக்கிறாள். இவள் வாழ்க்கையில் இதுவரை ஆனியைப் பார்த்ததே கிடையாது. மனநோயின் உச்சம்..’ என்றான்.

‘ஏலா, இவள அன்னிக்கு கூட்டிட்டு வந்தல்லா? இவளக் கண்டுட்டு ரெண்டு நாளா ஒறங்கல பாத்துக்க. மண்டைக்குள்ள ஒரே இடி. இவள எங்கிட்டோ பாத்திருக்கம்லா?ன்னுட்டு. அதான் கவனமா ஒருவாட்டி பாத்து கேட்டுகிடலாந்தான் .. யாத்தா, ஒம்பேரென்னா?.’

‘லிண்டா, பாட்டி’ என்றான் முத்துக்குமார்.

‘ஒங்கிட்ட கேக்கல, மூதி. அவ சொல்லட்டு.’

தடுமாறிப்போன அவன், செல்லியின் கேள்வியை மொழிபெயர்க்க, லிண்டா ஒரு சிரிப்புடன் அவள் கையைப் பற்றியபடி ‘லிண்டா..’என்றாள்.

‘ஆங். கொரலும் அதேதான். இல்ல, ஒம் பேரு வேற’ செல்லியாத்தா தலையை இங்குமங்கும் ஆட்டினாள்.

‘யாத்தா, இவ முததடவயா இங்க வர்றா, புரியுதா? சொம்மா தொணதொணங்காத’

செல்லியாத்தா உள்ளே போனாள். தனது ட்ரங்குப் பெட்டியில் ஒரு ப்ளாஸ்டிக் பையினுள் வைத்திருந்த சில காகிதங்களை எடுத்து வந்து அவளிடம் நீட்டினாள். ‘நீ இங்ஙன வந்தது, நாம் பொறக்கறதுக்கு முன்னாடி. இதுல பாரு’

சற்றே பழுப்பேறிப்போயிருந்த அந்த காகிதங்களின் நடுவே ஒரு போட்டோ. கறுப்பு வெள்ளையில், வெள்ளை நிற கவுனும், தலையில் தொப்பியுமாக, எங்கோ நோக்கிச் சிரித்தபடி நின்றிருந்த ஒரு வெள்ளைக்காரப் பெண்ணின் கழுத்தளவு போட்டோ...

லிண்டாவின் கண்கள் நிலைகுத்தின... ‘இது இது ஆனி. அவள் கழுத்தில் இருப்பது?

தொடரும்..

]]>
ஐந்து குண்டுகள், சுதாகர் கஸ்தூரி, Dinamani thodar http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/14/w600X390/womanwearingfeatherhat.jpg http://www.dinamani.com/junction/five-bullets/2017/feb/14/அத்தியாயம்-36-2649350.html
2644791 ஜங்ஷன் ஐந்து குண்டுகள் அத்தியாயம் 35 சுதாகர் கஸ்தூரி Tuesday, February 7, 2017 10:00 AM +0530 ஜனவரி 28, 1914

அந்தச் சிறுவன் ஓடி வந்ததை, முத்துராசா அசிரத்தையாகத்தான் கவனித்தான். இடது கையின் நாலு விரல்களைக் கொண்டு மட்டும் ஒரு மரக்கட்டையைப் பிடித்துவிட எளிதில் முடிந்துவிடவில்லை. கட்டையை ஒரு முனையில் செதுக்கி கூராக்கி வேல் போல் செய்து கொடுப்பதற்கு இப்போதெல்லாம் மூன்று நாட்கள் பிடிக்கிறது. வேட்டைக்குப் போக இருப்பவர்கள் நெருக்குகிறார்கள்.

‘மாமோய். அத்தைக்கு ஒடம்பு சொவமில்லயாம். உடனே கூட்டியாரச் சொன்னாக’ பையன் மூச்சிரைத்துக்கொண்டே சொல்லிவிட்டு, எங்கோ ஓடிப்போனான்.

‘கப நாடி தூக்கலா இருக்கு கேட்டியா? இழுத்துகிட்டுத்தான் கிடக்கா. காலேல இஞ்சி கஷாயத்துல மருந்து கரைச்சி ஒரு வாட்டி கொடுக்கச் சென்னேன்.. இருமி, கோழையா வந்துச்சி. சே..ரி.. சரியாயிரும்னு பாத்தா, ஒரு நிமிசத்துல நெஞ்சுல திரும்பவும் சளி கட்டிருதே இவளுக்கு?’ வைத்தியர் நெற்றியில் சிந்தனை மடிப்புகள் ஏற முணுமுணுத்தார்.

‘பெரியாஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருவமா? இங்கிலீஷ்காரன் என்ன கொடுக்கான்னு பாப்பம். இல்ல, நாரோயிலு போலாம். அங்கிட்டு சில பாதிரிமாருங்க மருந்து கொடுக்காகளாம்’

‘அவுங்க கிறிஸ்துவங்களா மாறு-ம்பாவளே?’

முத்துராசாவின் மனைவி பலவீனமாகக் கையை உயர்த்தி அவனை அழைத்தாள். ‘என்னாட்டி வேணும்?’ என்றான் முத்துராசா கனிவாக, குனிந்து.

‘பொளக்க மாட்டேன்’

‘அப்படிச் சொல்லதவுட்டீ. எல்லாஞ் சொவமாகும். வண்டி கட்டிறுதேன். பெரியாஸ்பத்திரி போவம், என்னா?’

‘அதெல்லாம் வேணாம்’ என்றாள் பலவீனமாகத் தலையசைத்து. ‘இந்தாங்க, ஒரு சத்தியம் பண்ணிக்கொடுங்க.’

முத்தாயி, ஒரு நாள் அந்த வெள்ளைக்காரியிடம் அழைத்துப் போனதையும், அவள் ஆங்கிலத்தில் நடந்ததைச் சொல்லச் சொல்ல, முத்தாயி மொழிபெயர்த்துச் சொன்னதையும், உணர்ச்சிப்பெருக்கில், தான், காதில் கிடந்ததைப் பிய்த்தெடுத்து ரத்தம் வழிய, அவளுக்குக் கொடுத்ததையும், பதறிய அந்த வெள்ளைக்காரி வாங்க மறுத்ததையும், பின் ஒரு அன்பின் அடையாளமாக ஏற்றுக்கொண்டு ரத்தக்கறை படிந்த தோடுகளை, ஒரு பெட்டியில் வைத்துக் கொண்டதையும் அவள் சொல்லவில்லை. சொல்ல நேரமுமில்லை.

‘கிறுக்கி.. கஞ்சியக் குடிச்சிட்டு உறங்கு. உச்சிக்கு சூடா ரசம் வச்சித்தரச்சொல்லுதேன். ஒந்தங்கச்சி எங்கிட்டுப் போனா? மொளகு தட்டி….’

‘ரசம் கிடக்கு. நாம் பாடையில கிடக்கறதுக்கு முன்னாடி, ஒரு சத்தியம் பண்ணுங்கங்கேன்’

முத்துராசா உடைந்தான் ‘என்னாட்டி சொல்லுத? என் என் ராணில்லா.. கொஞ்சம் மனசு பிடிச்சு நில்லு. நீ இல்லாட்டி நான் என்ன செய்வேன்?’

‘அதாஞ் சொல்லுதேன். என் ராசால்லா நீரு? ஒமக்கும், பிள்ளைக்கும் ஒருத்தி வேணும் வீட்டுல. நாம் போயிட்டா, இன்னொரு கட்டு கட்டிக்கிடுங்க’

‘வாய மூடு’ சீறியவன் அழுகையில் தடுமாறினான்.

‘ஒமக்கு வேண்டான்னாலும், பிள்ளைக்கு அம்மாக்காரி வேணும்லா? அத்தைக்கும் மாமாவுக்கும் வீட்டுல ஆக்கிப்போட ஆளு வேணும்லா?அதுக்காச்சும் கட்டுங்க’

‘நீ இருந்த இடத்துல இன்னொருத்தியா? உளறாம உறங்குட்டீ’

‘என் தங்கச்சியக் கட்டுங்க. அவளுக்கும் அத்தை, மாமா உறவு உண்டும். பிள்ளைய அவ பிள்ளையாட்டாம் பாசமாப் பாத்துக்குவா’

‘முடியாது’ கண்ணீர்த்துளி இமை சேர அவன் தலையசைத்தான்.

‘பிள்ளைக்கு அம்மா வேணும், அத்தை, மாமாவுக்கு மருமவ வேணும்னாச்சும் அவளக் கட்டிகிடுங்க. சத்தியம் பண்ணிக்கொடுங்க ராசாவே’ அவள் தீனமாகப் பேசியபடியே, நடுங்கிய வலது கையை முன்னே நீட்டினாள்.

முத்துராசா அவளது கையில் தன் கையை வைத்தான்.. உறுதியாக.

அன்றிரவு, அமைதியாக உறக்கத்தில் அவள் இறந்து போனாள்.

காரியமெல்லாம் முடிந்த இரு மாதத்தில் முத்துராசாவின் மாமனார் மெல்ல பேச்சைத் தொடங்கினார் ‘அவதான் போயிட்டா. வம்சத்தைக் காப்பாத்தணும்லா? ரெண்டாம் கட்டு, மூத்தா இருக்கச்சே கட்டினாத்தான் கேப்பாவ. இப்ப மாப்பிள தட்டக்கூடாது.’

முத்துராசா மவுனமாக இருந்தான். ‘மவராசி போவயிலே, ஒங்ககிட்ட சத்தியம் வாங்கினா.. அதுக்காச்சும்..’

‘அவளுக்குக் கொடுத்த சத்தியத்த மீறமாட்டேன், மாமா. ஒரு வாரத்துல சொல்லியனுப்புதேன்’

நாகர்கோவில் அருகே சிலம்பம், சுருள் வாள் என வீர விளையாட்டுகளைப் பயிற்றுவித்துக் கொண்டிருந்த தன் தம்பி குமரவேலை வரவழைத்தான். ‘லே, கொஞ்ச நாள் இங்கிட்டு நம்ம நிலத்தையும் பாத்துகிட்டு இரி.என்னா?’

‘நான் இங்கிட்டு இருந்தாத்தான்ணே வேலை நடக்கு. நாரோயில்ல நா நிக்கலேன்னா, கூட இருக்கறவனுவ ஓய்ச்சிப்போடுவானுவோ’

‘சரி, விக்கிரமாதித்தன் கணக்கா, ஆறுமாசம் இங்கிட்டு, ஆறுமாசம் அங்கிட்டுன்னு இரு. எனக்கு முந்தி மாரி கம்பு சுழட்ட முடியல. விரலு இல்லேல்லா..’

தம்பி கண் கலங்கினான். ‘என்ன செய்யணும்ணே? ‘

‘வள்ளியம்மைய நீ கட்டணுங்கேன்’

‘அண்ணே!’

‘எல்லாத்தையும் நாம் பாத்துக்கறேன். நீ சரின்னு சொன்னாப் போதும்’

சேதி அறிந்து மாமனார் வீடு அமளிப்பட்டது. ஆத்திரமடைந்து கேட்க வந்தவர்களை அமர வைத்து முத்துராசா நிதானமாக எடுத்துரைத்தான் ‘நான் என்ன சத்தியம் செஞ்சு கொடுத்தேன்? என் மவனுக்கு ஒரு அம்மா, என் அம்மா அப்பாவுக்கு ஒரு மருமக.. ஒங்க பொண்ணு, எந்தம்பிக்கு வாக்கப்பட்டாலும் அதேதானே ஆகிறா? எனக்கு பொண்டாட்டியாத்தான் வரணும்னு இல்லேல்லா?’

மாமனார் கண் கலங்கினார் ‘ஒம்மப் போல ஒரு மாப்பிள கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்யா. ராமனா நிக்கீரே?’

‘அவ சீதையால்லா இருந்தா? லச்சுமணனா எந்தம்பி நிக்கான். சரி, கலியாணத்துக்கு ஆக வேண்டிய வேலையப் பாருங்க.’

திருமணத்தன்று, தன் மகனை, மணமக்களிடம் ஒப்படைத்தான் முத்துராசா. ‘இப்ப நீ சித்தியில்லட்டீ.  இவனுக்குத் தாயி’

வீட்டின் வெளியே, வேப்ப மரத்தின் அடியில் தனது பழைய கட்டிலைப் போட்டுப் படுக்கத் தொடங்கினான். ‘உள்ளாற வந்து கிடங்கண்ணே’ என்று முத்தாயி பலமுறை வற்புறுத்தியும் மறுத்தவன், பொறுக்க முடியாமல் ஒரு நாள் அவளை அழைத்துச் சொன்னான் ‘அடக் கூமுட்ட, கேளு. நானும் உள்ள படுத்தேன்னு வையி. இவன் நாளப்பின்ன, நாரோயில் போனாம்னு சொன்னா, ஊரு என்ன சொல்லும்?. தம்பி இல்லாதப்ப… இதெல்லாம் நாம கேக்கணுமாங்கேன்? எனக்கு வாசல்ல காத்து வருது. அதோட வீட்டுக்குக் காவலும் ஆயிறுச்சுல்லா?’

விசயம் கேள்விப்பட்டு நடேசபிள்ளை பல நிமிடங்கள் உறைந்து போனார். பின்னர் தனது குறிப்பேட்டில் எழுதினார் ‘பீஷ்மனின் மறு அவதாரம்  நெல்லையருகே நடக்கக் கண்டேன்’

இரவு, முத்துராசாவின் தலைமாட்டில் தலையணையின் அடியில் இரு பொருட்கள் வைப்பதை முத்தாயி மட்டுமே அறிவாள். ஒன்று, நீண்ட அருவாள். மற்றொன்று ஒரு வெல்வெட்டுப் பை. அதனுள் பளபளவென்றிருந்த கைத்துப்பாக்கி.

காலையில் முத்துராசா எழுந்ததும், அவை இரண்டையும் எடுத்து மறைவாக வைப்பது முத்தாயியின் வேலையாயிருந்தது.

வானை நோக்கி அண்ணாந்து, அவன் வாசலில் கிடப்பதை ஒரு முழுநிலவு இரவில் கண்டு, முத்தாயி புலம்பினாள்.

‘சித்தியோடு மகந்தானும் வீட்டுள்ளே கிடக்கையிலே…

பத்தியமா மவராசன் தெருவில் கிடந்தானே.. ராசா தெருவில் கிடந்தானே’

தொடரும்

]]>
ஐந்து குண்டுகள், dinamani thodar sudhakar kasthuri http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/6/w600X390/-thamil.jpg http://www.dinamani.com/junction/five-bullets/2017/feb/07/அத்தியாயம்-35-2644791.html
2640926 ஜங்ஷன் ஐந்து குண்டுகள் அத்தியாயம் 34 சுதாகர் கஸ்தூரி Tuesday, January 31, 2017 10:00 AM +0530 எலும்புகள் சுத்தம் செய்யப்பட்டு, சிறு அளவிலான மின் ரம்பத்தால் அறுக்கப்பட்டன. அதன் பல துண்டுகள் வேறுவேறான பார்கோடு ஒட்டப்பட்ட சோதனைக் குழாய்கள் போன்ற பாலிமர் குழாய்களில் கவனமாக, கைபடாமல் இடப்பட்டு மூடப்பட்டன. ஒவ்வொரு பார்கோடு எண்ணும் வேறு வேறு மாதிரிகளைக் குறித்தாலும்,அவை எந்த  எலும்புக்கூட்டின் தொடர்புடையவை என்பதை ஒரு வம்சாவளித் தொடர் மூலம் அந்த மென்பொருளால் காட்டிவிட முடியும்.

எளிதில் ஒரு பையில் வைத்துக் கொண்டு போகக்கூடியதாக இருப்பினும், அவை அனைத்தும் மிகுந்த பொருட்செலவில், கூரியர் மூலம் லண்டனுக்கு அனுப்பப்பட்டன. அவற்றின் கூரியர் ரசீதுகள் கவனமாக கோப்பில் வைக்கப்பட்டன. ‘பின்னொரு நாள் எவராவது அந்த எலும்பு மாதிரிகள் கொண்டு செல்லப்பட்ட விதம் தவறானது என்று கோர்ட்டில் வழக்குத் தொடரக் கூடாது என்பதற்காகவும், தணிக்கை அதிகாரிகள் இந்தப் பண விநியோகத்தில் எவ்வாறு ஒவ்வொரு படியும் செயல்படுத்தப்பட்டது என்பதை ஆராய்ந்தால், அதில் சட்டத்திற்கு மாறான முறையில் எந்தச் செயலும் இருந்துவிடக் கூடாது என்பதற்காவும், முன்னேற்பாட்டுடன் இம்முடிவுகள் எடுக்கப்பட்டன’ என்று லிண்டா முத்துகுமாரிடம் சொன்னாள்.

லிண்டாவின் போக்கில் ஒரு மாறுதல் இருப்பதை முத்துக்குமார் கவனித்தான். அவள் அதிகம் பேசுவதைத் தவிர்ப்பதாகவும் கணினியில் தீவிரமாக வேலையில் தனித்து ஈடுபடுவதையும் கொண்டு, இது வேலைப்பளு என முடிவு கட்டினான்.

முதலில் வெறுக்கப்பட்டு, விலக்கப்பட்ட மாடசாமியை நோக்கி, தன் விரிவான குடும்பம் நட்பாகி வருவதையும் அவன் கவனித்தான். ‘ஒம்ம பங்கையும் எங்க தொழில்ல போடுங்கண்ணாச்சி, கேட்டியளா? பார்ட்னர்ஷிப்புல பணம் அள்ளலாம்’ என்றவர்கள் ‘பேசாம ரெண்டு மூணு லாரி வாங்கி விட்டுட்டா என்னா? நல்ல லாபம்ங்கான் மாடசாமி. நாம அவன் தொழில்ல மொதலீடு செஞ்சா, அவனும் நம்ம பக்கம் திரும்புவான்லா? மனுசாளுக்கு மனுசாள் ஒத்தாச, அதான் வேணும்’ என்றார்கள்.

குடும்பத்தில் ஒரு உற்சாகம் தொத்திக் கொண்டிருந்தது. மாடசாமி மூலம் ஒரு இன்னோவா புக் செய்து, திற்பரப்பு அருவிக்குச் சென்று ஒரு நாள் முழுதும் குதூகலமாக இருந்து வந்தார்கள்.

பெரியப்பா ஒரு வாரத்தில் சிகப்பு நிற ஆக்டிவா ஒன்றில் வந்தார் ‘கார்த்திக் சொன்னாண்டே. யப்பா, எதுக்கு வேகாத வெயில்ல இப்படி பஸ் மாறி அலையறீய? ஒரு ஆக்டிவா வேங்கிடுங்கன்னான். நானும் சே…ரீ.. நமக்கும் வயசாயிட்டே வருதுல்லா’ன்னு… வேங்கிட்டேன்.’

‘பைசா எப்படி பெரீப்பா கட்டப்போறீய?’ வாயில் வந்த வார்த்தைகள் பிரமிப்பில் வெளியே வந்துவிட ‘ ஏ.. அதான் பைசா வந்துரும்லா? செக்கா குடுப்பானா இல்ல கேஷா டே? செக்குன்னா வரி கட்ட வேண்டிவரும்லா?’

பெரியம்மா பளபளவென ஒரு புடவையைச் சுற்றியிருந்தாள் ‘மருமவோ நேத்திக்கு ஆட்டோல டவுணுக்கு கூட்டிப் போனா, இவனே.. இறங்கிட்டுப்பாக்கேன்.. போத்தீஸ்ஸு. வாங்கத்தே, பட்டுப் பொடவ எடுக்கணும்’ன்னா. அவளுக்கு ஒண்ணு, எனக்கொண்ணுல்லா எடுத்துட்டா?! நல்லாருக்காடே?’

‘எம்புட்டு ஆச்சி?’

‘அதென்ன களுத நாப்பதாயிரம் இருக்கும். கடன் கார்டு தேச்சிட்டா கேட்டியா? ஒரு மாசத்துல வெள்ளக்காரி பணம் வந்துரும்லாடே? ‘

ஒரு வாரத்தில் இங்கிலாந்திலிருந்து முடிவுகள் வந்தன. கை விரல் அறுபட்டிருந்த எலும்புக்கூடு ஆண். அதன் YSTR மரபணுக்கள் மாடசாமியின் மரபணுவில் ஒத்திருந்தன. மற்ற அனைவருக்க்கும் அதன் பங்கு குறைந்த அளவில் காணப்பட்டன. அந்த எலும்புக்கூடு முத்துராசாவுடையதென்றால், இவர்கள் அனைவரும் அவனது குடும்பத்தினரே என்பது நிச்சயமான ஒன்று.

வலதுபுறமிருந்த எலும்புக்கூடு ஒரு பெண்ணுடையது. அதன் மாதிரிகளிலிருந்த MRNA மரபணுக்கள், மாடசாமியிடம் காணப்பட்டது பிறரிடம் காணப்படவில்லை. எனவே மாடசாமியின் தாய் வழி அவள் என்பது உறுதியானது.

லிண்டாவின் முகத்தில் ஒரு பொலிவு தெரிந்தது. ‘எக்ஸலெண்ட். சரியான குடும்பத்தைக் கண்டுபிடித்துவிட்டோம். இனி, அந்த ஐந்து குண்டுகள் கொண்ட அந்த துப்பாக்கி .. அது மட்டும்தான் கிடைக்கவேண்டும்’

]]>
sudhakar kasthuri, ஐந்து குண்டுகள், சுதாகர் கஸ்தூரி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/30/w600X390/genes-genetic-DNA-paternity-Stockfresh.jpg http://www.dinamani.com/junction/five-bullets/2017/jan/31/அத்தியாயம்-34-2640926.html
2636898 ஜங்ஷன் ஐந்து குண்டுகள் அத்தியாயம் 33 சுதாகர் கஸ்தூரி Monday, January 23, 2017 12:29 PM +0530 லிண்டா கழுத்தைத் துடைத்துக்கொண்டாள். வீடியோ எடுப்பவன், அனாவசியத்திற்கு அவள் அருகே நெருங்கி நின்று கொண்டிருந்தான். ‘போலீஸ் வந்தப்புற்ம தோண்டுங்கய்யா. அவன் வேற சல்லியம் செய்வான்’ என்று பெரியப்பா முணுமுணுத்தார். எவரும் கேட்டதாகத் தெரியவில்லை. முத்துக்குமார் ஒரு ஓரமாக நின்று பார்த்துக்கொண்டிருந்தான்.

‘செல்லியாத்தா தோண்டக் கூடாதுன்னு கத்துதாளே? அவளும் பாத்தியதைப் பட்டவள்ளா? நாளைக்கு கோர்ட்டு, அவள் சம்மதம் இல்லாம எப்படி தோண்டுனீய?ன்னு கேட்டான்னு வைங்க’ முத்துக்குமார் முடிக்கு முன்னே, பெரியப்பா ஆதரவுடன் அவன் தோளில் கை வைத்தார்.

‘ஏலா. அவ ஏற்கெனவே பயித்தியம்னு ஊரே அறிஞ்ச விசயம். அவ சொல்லுறதெல்லாம் கோர்ட்டு கேக்காது. அதுக்காக நீ போயி கோர்ட்டுல எங்க செல்லியாத்தா வெட்ட வேணாம்னான்னு சொல்லி வைக்காத, கேட்டியா?’

மெல்ல மெல்ல மண்ணில் எலும்புகள் தோன்றத்தொடங்கின. கடப்பாறையையும், மண்வெட்டியையும் மேலே கொடுத்துவிட்டு, சிறு கருவிகளால் கவனமாக மண்ணைத் தோண்டி, ப்ளாஸ்டிக் வாளிகளில் நிறைத்து மேலே அனுப்பினர்.

‘ஏ, வலது பக்கம் கை தெரியுது பாரு. ஆங். அதான். பாத்து, பாத்து’

இரண்டு மணி நேரத்தில் மூன்று எலும்புக்கூடுகள் சற்றே சிதிலமான நிலையில் வெளிப்பட்டன. இரு கூடுகள் ஒன்றோடொன்று  இணையாக, மற்றொன்று, அவர்கள் கால்மாட்டில் குறுக்காக.

‘இடது பக்கம் இருக்கறதுதான் முத்துராசா. கீழ இருக்கறது முத்தாயி. அவ, ‘செத்தா, அண்ணன் கால்மாட்டுலதான் கிடப்பேன்’னு சொன்னான்னுட்டு, அங்கனயே புதச்சம்’

லிண்டாவுடன் இருந்த இருவர், கையுறை, காலுறை இட்டபடி, மூக்கிற்கு முகமூடி அணிந்துகொண்டு, மெல்ல குழிக்குள் இறங்கினர். வீடியோ அவர்களை ஃபோகஸ் செய்து, அவர்கள் செய்வதை படமெடுத்தது.

இறங்கிய ஒருவர் தனது கையிலிருந்த கருவியைப் பார்த்தபடியே, உதட்டருகே நீண்டிருந்த மைக்ரோபோனில் பேசத்தொடங்கினார் ‘ஜி.பி.எஸ், இந்த இடத்தினைக்  இவ்வாறு காட்டுகிறது. என் காலருகே இருக்கும் கூடு மனித எலும்புக்கூடு. அதன் இடது கையின் கட்டைவிரல் இல்லை. ‘

மூன்று எலும்பு கூடுகளுக்கும் இவ்வாறு வீடியோவில் பதிந்தபின், சிறு இயந்திரம் கொண்டு, எலும்புகளின் ஒரு பகுதி வெட்டியெடுக்கப்பட்ட்து. ப்ளாஸ்டிக் உறைகளில் அவை இடப்பட்டு, மார்க்கரால், அவை அடையாளமிடப்பட்டு , மடிக்கணனி ஒன்றில் இருந்த மென்பொருளில் பதிவு செய்யப்பட்டன. பதிவு செய்யப்பட்ட நேரம், இடம், யாருடைய மாதிரி, யாரிடம் அவை இப்போது உள்ளன என்பன அதில் அடங்கும்.  நேரடியாக, இம்மாதிரிகள் ஆய்வுச்சாலையை அடையும்போது, அதன் நேரம், வந்து சேர்ந்த விதம் போன்றவை பதியப்பட்டு, சோதனைகளுக்கு அனுப்பப்படும். ஒவ்வொரு இடத்திலும், நேரம், யார் கையில் மாதிரி இருக்கிறது, என்பன சலிப்பில்லாமல் பதிவு செய்யப்படும். இந்த chain of custody இது போன்ற மாதிரிகளுக்கு மிக முக்கியம்.

அனைத்து நிகழ்வும் வீடியோவிலும், புகைப்படத்திலும் பதிந்தபின், குழியை மூடும்முன், லிண்டா ஒருமுறை உள்ளே இறங்கினாள். முத்துராசாவின் மண்டையோடு மற்றும் இடது கையைக் கவனித்தாள். இடது கையிலிருந்த நான்கு விரல்களும் அவளை நோக்கி வளைந்து, வா, வா என்பது போல் இருந்தன. அவன் முகம் பிற மண்டையோடுகள் போல பல்லிளிக்காமல், அவளை ஒரு சினேகப் புன்னகையுடன் பார்ப்பது போல் தோன்றியது. ஒரு நிமிடம் அங்கேயே நின்றிருந்தவளை ‘லெட்ஸ் கோ’ என்ற முத்துக்குமாரின் குரல் உலுக்கியது.

‘சரி, இனிமே எத்தனை நாள்ல பணம் வரும்?’ முத்துவின் தங்கை யாரிடமோ கேட்டாள்.

‘எலும்பெல்லாம் எடுத்துட்டாங்கல்லா? இனிமே ஆராய்ஞ்சி, ஒரு மாசத்துல சொல்லிருவாங்க. யாரு என்னான்னு?’

‘அதான் தெரியுமே, இது பெரிய தாத்தா, கீழ அத்தைப்பாட்டி,’

‘ஏட்டி, லூசா ஒனக்கு? நமக்குத்தாண்டி தாத்தா, பாட்டியெல்லாம். அவுக, இனிமேத்தான் கண்டுபிடிக்கணும்.. அவங்க தேடற முத்துராசா இவுகதானான்னு சொல்லணும்லா?’

‘இவருதான் அவருன்னு தெரியணும்னா, அவங்ககிட்ட அந்த முத்துராசாவோட மரபணுவெல்லாம் இருக்கோ? எப்படி பொருத்திப் பாப்பாங்க?’

‘வேற எதாவது தடயம் இருக்கும். நீ சும்மா இரி. தொணதொணங்காத. பைசா வாரச்சே, ஒனக்கு பங்கு கொடுத்துருவம்’

‘எங்க வீட்டுக்காரரு ஸிட்டி வேணும்னாரு. நாந்தான் அக்கார்டு வேணுங்கேன்.’

முத்துக்குமாரும், லிண்டாவும் ஒன்றும் பேசாமல் நடந்தனர்.

தொடரும்

]]>
sudhakar Kasthuri, சுதாகர் கஸ்தூரி, ஐந்து குண்டுகள் தொடர் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/23/w600X390/Gravediggers-in-Hungary-compete-in-first-national-grave-digging-contest.jpg http://www.dinamani.com/junction/five-bullets/2017/jan/24/அத்தியாயம்-33-2636898.html
2630420 ஜங்ஷன் ஐந்து குண்டுகள் அத்தியாயம் 32 சுதாகர் கஸ்தூரி DIN Tuesday, January 17, 2017 10:00 AM +0530 நாயுடு தடுமாறினார் ‘அஹ்? அவன் ஆண்டர்ஸனை மட்டும் கொன்றிருக்க வேண்டும்’

‘அப்போது சபாபதியைக் கொன்றது யார் என நினைக்கிறீகள்?’ ஆனி மடக்கினாள்.

‘அது.. சுதேசிகளாக இருக்கக்கூடும்’

‘சபாபதியின் உடலில் கிடைத்த குண்டுகள் வெப்லி மார்க் 4ல் இருந்து வந்ததாக அறிக்கை சொல்கிறது. வெப்லி , சுதேசிகளின் கையில் போயிருக்க வாய்ப்பே இல்லை.’

ஜட்ஜின் நீல நிறக்கண்கள் அவளை உற்று நோக்கின.

‘முத்துராசா, ஒரு நல்ல காப்பாளன் இல்லை, பெண்ணே. அவன் நடுவில் ஆண்டர்சனை சுதேசிகள் மத்தியில் ஆபத்தான நிலையில் விட்டுவிட்டு, வேறு எங்கோ சென்றிருக்கிறான். அவர்கள் ஆண்டர்ஸனைச் சுடுமுன், சபாபதியின் குழு அங்கு வந்துவிடவே அவர்கள் ஓடிச்செல்ல முயன்றிருக்கின்றனர். இதனை அறிந்த முத்துராசா, முதலில் சபாபதியையும், பின் ஆண்டர்சனையும் கொன்றிருக்கிறான். தக்க சாட்சிகள் மூலம் கோர்ட் இவ்வாறு அறிகிறது. மிக்க மன அழுத்தத்தில் நீ இருக்கிறாய். உனக்கு ப்ரமை பிடித்திருக்கிறது. உன் வாழ்வில் இப்படி துயரச் சம்பவம் நடந்ததில் இந்நீதிமன்றம் உன்னுடன் இரக்கப்படுகிறது’

ஆனி இரு உள்ளங்கைகளையும் இறுகப்பற்றியிருந்தாள். மெல்ல மெல்ல அவளுக்குப் புரியத் தொடங்கியது. எப்படி எது நடந்திருந்தாலும், ஒன்று உண்மை – முத்துராசா தப்ப முடியாது.

கண்களை மூடினாள் ஆனி. காட்டில் தீனமாக அழுத பெண்கள் நினைவுக்கு வந்தனர். முத்தாயியையும், பிற சேடிப் பெண்களையும் சீண்டிக்கொண்டிருந்தவர்கள் எளிதில் தப்பியதும், அவர்கள் எகத்தாளமாக சிரித்துக்கொண்டே சென்றதும் கண்ணுக்குள் நின்றது.

‘யுவர் ஹானர்’ என்றாள் ஆனி மெல்ல ‘அன்று உங்களிடம் சொன்னதையே அனைவரின் முன்னும் செல்ல நினைக்கிறேன். முத்துராசா ஆண்டர்ஸனை வேண்டுமென்றே விட்டுச் செல்லவில்லை. அவன் வந்தது எனது கூடாரத்துள்’

‘நோ, ஆனி’ பதறினாள் அவள் அன்னை. கன்னிங்ஹாம் அவளை வெறித்துப் பார்த்தார்.

ஆனி தொடர்ந்தாள் ‘ எங்களுக்கு ஆபத்து என்று எவரோ அவனிடம் திரித்துச் சொல்லி அனுப்பியிருக்கின்றனர். அவன் வந்தபோது ஒரேயொரு வீரன் மட்டும் நின்றிருந்தான். அவனைக் கேளுங்கள்.’

‘அவனும் முத்துராசா காரணமின்றி வந்ததாகவே சொன்னான்’

ஆனி பெருமூச்செறிந்தாள் .இது சதி.

‘முத்துராசா தூக்கிலடப்படவேண்டும் பெண்ணே. உன் ஆண்டர்ஸனின் ஆன்மா சாந்தியடையும். இங்கிலாந்து சாம்ராஜ்யத்தில் ஒரு கறை துடைக்…’

‘முத்துராசா வந்தது என்னைக் காண’

தொப் என சத்தம் கேட்ட்து. ஆனியின் அன்னை மயங்கிக் கீழே விழுந்திருந்தாள். அவளை எடுக்க்கூட, கன்னிங்க்ஹாம் உணர்வற்றவராய் உறைந்திருந்தார். வேலைக்கார்கள் இருவர் ஓடிவந்து, ஆனியின் அன்னையை அமர வைத்து, நீரை அவள் முகத்தில் தெளித்தனர்.

‘நீ.. உன் சுய நினைவில்தான் இதனைச் சொல்கிறாயா?’ நீதிபதி மிக நிதானமாக்க் கேட்டார்.

‘ஆம் என்றாள் ஆனி. ‘நீங்கள் எப்படி இதனை எடுத்துகொள்கிறீர்கள் என்பது எனக்கு அக்கறையில்லை. அவன் பார்க்க வந்த்து என்னைத்தான்., என் நலனில் அக்கறை கொண்ட்தால்தான்.  சதி புரிந்த்தும், மீண்டும் ஆண்டர்சனைக் காக்க விரைந்தான். நான் அவன் பின் சென்றேன்.’

‘உனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது’ என்றார் நீதிபதி

‘ஆம்’ என்று கூச்சல் கேட்ட்து. ஆனியின் அன்னை கத்திக்கொண்டிருந்தாள் ‘ உனக்குப் பைத்தியம்தான். அழகான ஆண்டர்ஸன் இருக்கையில் ஒரு பழுப்பனுடன் உறவு…சே.. ஆனி, இது நீயில்லை., நீதிபதியவர்களே, இவளை சென்னையில் நல்ல மருத்துவரிடம் காட்டி…’

‘நான் உண்மையைச் சொன்னேன்’ என்றாள் ஆனி ஓவ்வொரு வார்த்தையையும் நிறுத்தி. ‘ எப்படிப் புரிந்துகொள்வீர்கள் என்பது உங்களது மனம் பொறுத்த்து’

நீதிபதி மெல்ல எழுந்தார். வெளியே இருங்கள் என அவர்களை அடுத்த அறைக்கு அனுப்பி விட்டு தனியாக அறையில் உலவினார். அவரது சிந்தனையில் இங்கிலாந்தும், அதன் பெருமையும், ஒரு கனவானின் பெண்ணின் கற்புமாக அலைந்தன.

இரு மணி நேரம் கழித்து நீதிபதியின் அறையில் விஞ்ச் துரையும், இன்ஸ்பெக்ட்டரும் அமர்ந்திருந்தனர். ஒரு மணி நேர விவாத்த்தின் பின் அவர்கள் விரைந்து வெளியேறினர். முத்துராசாவும், நடேசபிள்ளையும் நீதிபதியின் அறையில் அழைக்கப்பட்டனர்.

வெளிவந்த முத்துராசாவின் இடது கையில் பெரிய கட்டு போடப்பட்டிருந்த்து. துணியின் கனத்தையும், அடுக்கையும் மீறி அது ரத்தத்தில் சிவந்திருந்த்து.

தீர்ப்பு பற்றி ஒரு விளக்கம் கவர்னருக்குச் சென்றது. ‘தகுந்த ஆதாரங்கள் இல்லா நிலையில் இந்நிகழ்வு பரஸ்பர துப்பாக்கிச்சூட்டின் விளைவு என முடிவுக்கு வருகிறேன். தனது கடமையில் தவறிய முத்துராசா, தனக்கே தண்டனையாக , விரலை வெட்டிக்கொண்டான். ஆனி என்ற இங்கிலாந்துப் பிரஜையின் குடும்ப மானம் கருதி, அவர்கள் விவரம் மறைக்கப்படுகிறது.. முத்துராசா விடுவிக்கவேண்டும் என்றும், இனி, அவர்கள் இருவரும் ஆயுட்காலம் வரை தொடர்பு கொள்ளமாட்டார்கள் என்றும், கன்னிங்ஹாம் குடும்ப கவுரவத்திற்கு இடையூறாக அவள் இருக்கமாட்டாள் எனவும், அதற்காக வேறு காலனிக்கு அவள் சென்றுவிடுவாள் என்றும்  அவள் இவ்வாறு வாக்குக்கொடுத்ததற்காக அவள் தந்தை , இவ்வழக்கில்  மேல் முறையீடு செய்வதை நிறுத்தவேண்டும் என்றும் நிபந்தனைகள் இட்டு,  முத்துராசாவை குற்றவாளியல்ல என தீர்ப்பளிக்கிறேன். கன்னிங்ஹாம் குடும்பத்தின் கவுரவத்தை முன்னிட்டும், இங்கிலாந்துப் பிரஜை ஒருத்தியின் கவுரவம் முன்னிட்டும். இந்த கேஸ் பற்றிய விவரங்கள் எந்தப் பத்திரிகையிலும், எந்த கெஜட்டிலும் வரவேண்டாமென பரிந்துரைக்கிறேன்’

ஆனி ,ஒரு மாதத்தில் மும்பை சென்று,  தென்னாப்பிரிக்காவுக்குக் கப்பலேறினாள். அவளது உடைமைகளில் ஒரு சிறு கண்ணாடிப்புட்டியில் ஃபார்மால்டிஹைடில் சுருங்கிய உடல் உறுப்பொன்று மிதந்துகொண்டிருந்த்து. அதனருகே ஒரு சிறு நகைப்பெட்டியும் இருந்த்து.

]]>
ஐந்து குண்டுகள், சுதாகர் கஸ்தூரி, ainthu kundugal http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/10/w600X390/Webley_MKIV.jpg http://www.dinamani.com/junction/five-bullets/2017/jan/17/அத்தியாயம்-32-2630420.html
2630412 ஜங்ஷன் ஐந்து குண்டுகள் அத்தியாயம் 31 சுதாகர் கஸ்தூரி Tuesday, January 10, 2017 11:51 AM +0530  

வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்க, நடேசபிள்ளை தன் குடையை விரித்துக்கொண்டார். சுலோசன முதலியார் பாலத்தின் அடியில் வெள்ள நீர் புரண்டு ஓட, மக்கள் கரையிலும், மேலே பாலத்திலுமாக நின்றிருந்தார்கள். நீதிபதி , தன் வீட்டிலிருந்து இன்னும் கிளம்பவில்லை. ‘ஒரு துளி மண்ணுல விழல, பிள்ளைவாள் ஊருக்கு முந்தி கொடை பிடிக்காரு. இப்படித்தான், வூட்டுல..’ என்று ஒரு பெண் நடேசபிள்ளை பாலத்தில் ஆட்களைத் தள்ளி நடந்துகொண்டிருப்பதைக் கிண்டல் செய்ய, அருகிலிருந்த பெண்கள். வாயைக் கையால் மூடி, உடல் குலுங்கிச் சிரித்தனர்.

‘சும்மா கெடங்கவுட்டீ. அந்தாளுதான் நம்ம ராசாவுக்கு சாதகமா பேசுதாரு. கொடுவாய மூடிட்டு இருப்பீயளா?’ என்று எவளோ எரிந்து விழ, பதில் சொல்ல வந்த பெண், பாலத்தில் சலசலப்பு கேட்க, உரையாடலை விடுத்து அங்கே வேடிக்கை பார்க்கலானாள்.

‘நீதிபதி வீட்லேர்ந்து இப்பத்தான் கொளம்புதாவளாம்’

நடேசபிள்ளை பாலத்தின் நடுப்பகுதியை அடைந்தார். கையை உயர்த்தி அனைவரையும் அமைதியாக இருக்குமாறு பணித்தார். ‘நல்ல சேதிதான். முத்துராசா விடுதலையாயிருவான். இன்னும் கொஞ்ச நாள் விசாரணைக்கு வைக்காங்க. ஒரு பாதகமுமில்ல. எல்லாரும் ஊருக்குப் போய்ச்சேருங்க’ தொண்டை கிழியப் பலமுறை கத்திவிட்டு, ‘ஏலா, சும்மா நிக்காம, ஆளாளுக்குப் போய்ச் சொல்லுங்கடே. ஆத்துக்குள்ள பொம்பளேள் நிக்கா. வெள்ளம் வந்தா அடிச்சிட்டுப் போயிரும். போங்க’ என்றார். மழை மெல்ல வலுக்க, ஆட்கள் நாலாபுறமும் சிதறிப் பிரிந்து, செய்தியை அறிந்து, மகிழ்ச்சியில் கலைந்தனர்.

நீதிபதியின் அறையில், அதிகாலையிலேயே வந்துவிட்டிருந்த கன்னிங்ஹாம் குடும்பம் அமைதியாக அமர்ந்திருந்தனர். திருமதி கன்னிங்ஹாமின் விழிகள்  சிவந்திருக்க, முகம் உப்பியிருந்த்து. கன்னிங்ஹாம் பாறைபோல் இறுகியிருந்தார்.

‘மிஸ் ஆனி. நீ சொல்வதெல்லாம் சுய நினைவோடுதான் சொல்கிறாயா?’ ஆனி , ஆம் என்பது போல் தலையசைத்தாள் ‘யுவர் ஹானர், யுவர் ஹைனஸ், மிலாட்.. இதில் எதைச் சொல்வதென அவளுக்குத் தெரிந்திருக்கும்.

அதனைக் கவனியாதது போல் நீதிபதி தொடர்ந்தார்/ ‘நீ சொல்லப்போவது, ஆங்கிய சாம்ராஜ்யத்தில் முதன்முதலாக நடைபெற்ற அரசியல் படுகொலையின் வழக்கினைப் பாதிக்கும். பொறுப்புள்ள ஒரு இங்கிலாந்துப் பிரஜையாக…  ‘

‘என் கடமையை ஆற்றுவேன்’

நீதிபதியின் முகம் சிவந்தது ‘இருவர் வீழ்ந்ததைப் பார்த்த்தாகச் சொல்கிறாய்.. சபாபதியை யார் சுட்டது?’

‘அதற்கு முன் சபாபதியின் நிலை பற்றிச் சொல்ல விரும்புகிறேன், யுவர் ஹானர். அவன், என் கணவனாக ஆகியிருக்கவேண்டிய, ஆண்டர்ஸனைக் கொல்லும் திட்டத்துடன் இருந்ததை நான் அறிந்தேன். ‘

ஜட்ஜின் புருவங்கள் உயர்ந்தன ‘சுதேசி?’

‘இல்லை. இது உள்ளூர் பகையின் அரசியல். சபாபதியும் அவன் குழுக்களும் பெண்களை துன்பப்படுத்துவது பொறுக்காது, ஒருவன் அதனைத் தண்டித்தான். அவன் மீது கொண்ட விரோதத்தின் பழித்திட்டம் அது.’

‘நீ சொல்வதை ஆர்தர் கேன்ன் டாயில் கேட்டிருந்தால், ஷெர்லாக் ஹோம்ஸின் அடுத்த கதை இதனை ஒட்டி அமைந்திருக்கும்.. இதற்கு என்ன அத்தாட்சி?’

‘ஆண்டர்ஸன் என்னிடம் தனிமையில் சொன்ன விவரம் இது. சபாபதியினால் அவருக்கு ஆபத்து வருமென அவர் எண்ணியிருந்தார். அதனால்தான் தனக்குக் காவலாக அந்த முத்துராசாவை துணைக்கழைத்தார்’

நீதிபதி சிந்தனை வயப்பட்டு, தன் உதடுகளை அழுத்தித் திறந்தார். ‘இருப்பினும், சுதேசிகளுடன் போரிடவே சபாபதியை மறுபக்கம் ஆண்டர்ஸன் அனுப்பியதாக , அவன் குழுவினர் தெரிவித்தார்கள். நீ சொல்வது ஒப்புக்கொள்வதாக இல்லை’

‘எதிரிகள் என சபாபதி காட்டியவர்கள், அவன் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஆண்டர்ஸனை அவர்கள் பதுங்கியிருந்த சுதேசிகள் என நம்ப வைப்பதில் அதிக சிரமமில்லை. அதில் ஒருவனை நான் அடையாளம் கண்டுகொண்டேன். அவன் பெயர்.. சங்கரலிங்கம். அவனையும் மற்றொருவனையும் சபாபதி முன்னே பதுங்கி நடக்க விட்டு, சுதேசிகள் சுட்டதாக ஆண்டர்ஸனையோ, அந்த முத்துராசாவையோ சுடுவது என்பது திட்டம். ‘

‘சங்கர லிங்கம்’ நீதிபதி மணியை அடித்து சேவகனை வரவழைத்து, காகித்த்தில் அப்பெயரை எழுதிக் கொடுத்தார் ‘ இன்ஸ்பெக்ட்டரிடம் கொடு’

ஆனி தொடர்ந்தாள் ‘எதிர்த்திசையிலிருந்து வளைவாக வந்த பாதையில் குறுக்கே கடந்து ஆண்டர்ஸனின் பின்புறமாக வந்தபோதுதான், அவர்கள் இருவரையும் கண்டேன். ஆண்டர்ஸன் அவர்களைக் குறிவைக்க எத்தனித்தபோது, எதிரே சபாபதி, ஆண்டர்ஸனை நோக்கி துப்பாக்கியை உயர்த்தியது தெரிந்தது. ஒரு குண்டில் அவன் வீழ்ந்தான்.’

‘யார் சுட்டது?’

‘முத்துராசா’

‘ம்ம்ம்’ என்றார் நீதிபதி ‘ஆண்டர்ஸனைச் சுட்டது யார்?’

ஆனி மவுனித்தாள்

‘நீ மிக அருகில் இருந்திருக்கிறாய். ஆண்டர்ஸன் தன்னை நோக்கி துப்பாக்கியை நீட்டியதாகவும், தான் தற்காப்புக்கு அவனை நோக்கி ரிவால்வரை நீட்டியதாகவும் முத்துராசா ஒத்துக்கொண்டிருக்கிறான்.

ஆனியின் கைகள் இறுகின. விஞ்ச் துரையருகே அமர்ந்திருந்த போலீஸ் அதிகாரி கோவிந்த நாயுடு எழுந்தார்.

‘முத்துராசாவிற்கும் ஆண்டர்ஸனுக்கும் ஏற்கெனவே பகை இருந்திருக்கிறது. இதனை குழுவில் இருந்த பலரும் போலிஸிடம் விசாரணையில் சொல்லியிருக்கிறார்கள். அதோடு, முத்துராசாவிற்கு சுதேசிகளிடம் தொடர்பு இருந்திருக்கிறது. அந்த சிதம்பரம் பிள்ளையின் கூட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறான். எனவே அவன் அரசுக்கு எதிராகச் செயல்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. அவன் ஆண்டர்ஸனைக் கொன்றிருக்கக் கூடும்’

ஆனி, அவரை நேரே நோக்கினாள் ‘முத்துராசாவிடமிருந்து கைப்பற்றிய துப்பாக்கியில் எத்தனை குண்டுகள் இருந்தன?’

‘ஐந்து’ என்றார் நாயுடு.

‘இருவரையும் முத்துராசா சுட்டிருந்தால்,’ ஆனி புன்னகைத்தாள் ‘நீங்கள் கைப்பற்றிய அவனது வெப்லி மார்க் 4-ல் நான்கு குண்டுகள் மட்டுமே இருந்திருக்க வேண்டும்’

தொடரும்...

]]>
ஐந்து குண்டுகள், ainthu gundugal, sudhakar kasthuri, dinamani http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/10/w600X390/b5_16251.jpg http://www.dinamani.com/junction/five-bullets/2017/jan/10/அத்தியாயம்-31-2630412.html
2625964 ஜங்ஷன் ஐந்து குண்டுகள் அத்தியாயம் 30 சுதாகர் கஸ்தூரி Tuesday, January 3, 2017 10:00 AM +0530 ‘தோண்டிற வேண்டியதுதான். எல்லாருக்கும் நல்லது ஒன்ணு நடக்குன்னா, பெரிய தாத்தா தானே வெளிய வந்துருவாருல்லா’ பெரியப்பா சொல்லிக்கொண்டிருந்தார். ‘முந்தி, ஒரு தடவ யாரோ ஒருத்தரு இவர் கியாரண்டியில பணம் வாங்கிட்டு ஓடிட்டானாம். பணம் கொடுத்தவன் கோபத்துல ‘நீருதாம்வே அவன பணத்தோட ஓட வச்சீரு. அதுல உமக்கு பங்கு இருக்குன்னு சொல்லி விவாதம் வளத்திருக்கான். இவர்கிட்ட ‘நீர் பைசா வாங்கலைன்னா, ஒம்ம விரல அறுத்துப் போடும்வே எனக் கத்த, இவரு அப்பவே  இடது கை கட்டைவிரல வெட்டிப் போட்டாராம். இப்படி ஒரு  கத உண்டும். எதுக்குச் சொல்லுதேன்…’  அனைவரும் பெரிய தாத்தா எத்தனை பேருக்கு உதவினார் என்பதைப் பற்றி பேசிக்கொண்டிருக்க, செல்லி மட்டும் தனியே நிற்பதை முத்துக்குமார் கவனித்தான்.

‘என்ன செல்லியாத்தா? ஒங்களுக்கு முன்னாடி போனவங்களெல்லாம் எந்திச்சி வாராக போலிருக்கு?’ என்றான்

‘எவனாச்சும் அங்கிட்டுப் போய் தோண்டினீய, கொலை விழும், பாத்துக்க’ திடீரென அலறினாள் செல்லியாத்தா.தரையில் தொப்பென அமர்ந்து, மடேர் மடேரென கைகளால் தரையை அறைந்தாள்.

‘அந்த கோட்டிய எவம்ல கூட்டது?வெளிய தூக்கி எறி’

‘அவளுக்கும் பாத்தியத இருக்கு பாத்துகிடுங்க. பெரியவா. மருவாதியாப் பேசுங்க’ என்றாள் பெரியம்மா, செல்லியாத்தா தரையில் அறைவதைத் தவிர்த்தபடியே.

‘கிடக்கட்டு. எல்லாம் இவம்மா , பெரிய தாத்தா தங்கச்சிகிட்ட நிக்க விட்டதுதான் தப்பாப் போச்சி. பழசையே பேசிட்டிருக்கும்..எளவு’

லிண்டா , செல்லியாத்தாவைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தாள். ‘ஷி இஸ் ஹலுஸினேட்டிங்’ என்றான் முத்துக்குமார். ‘பை போலார், ஸ்கிசோப்ரீனியான்னு சொன்னாங்க. மருந்தெல்லாம் வேணாம்னுட்டா.’

‘ டே மாடசாமி, பெர்மிஷன் கொடுத்துட்டாங்களா, தோண்டிறலாமா?’

‘தோண்டிறலாம். சரியா எடம் தெரியுமா உங்களுக்கு?’

‘இந்த கிறுக்கி தினமும் அங்கிட்டுதான போய் நிப்பா? பெரிய பாட்டியோட இடது பக்கம் தாத்தா, கிழக்கு மேற்கா, அப்பால, இடம் இல்லேன்னுட்டு, முத்தாயிக் கிழவிய வடக்கு தெற்கா, தாத்தா கால்மாட்டுல பொதச்சாங்க. பொறவு, எல்லாம் எரிப்புதான்.’

ஆண்கள் வரிசையாக வெளியேற, செல்லியாத்தாவின் தோள்களைப் பற்றித் தூக்கி இருவர் உள்ளறைக்கு  இழுத்துப் போனார்கள். கால்களை உதைத்து அவள் குழந்தைபோல் அரற்றிச் செல்கையில் தேம்பலாக சில வரிகள் காற்றில் கலந்து, மறைந்தது.

‘குஞ்சியிலே நெய்தடவி குமரியில புறப்பட்டா

காஞ்சிக்கும் அப்பாலே கலங்கிடுவான் துரையெல்லாம்

அஞ்சிறுமே புலியெல்லாம் அய்யா கிளம்பிட்டா’

அதன்பின் வந்த வரியை அவர்கள் கேட்கவில்லை.

]]>
ஐந்து குண்டுகள், தினமணி தொடர், சுதாகர் கஸ்தூரி, Dinamani http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/2/w600X390/8039272610_d8a0713181_b.jpg http://www.dinamani.com/junction/five-bullets/2017/jan/03/அத்தியாயம்-30-2625964.html
2558884 ஜங்ஷன் ஐந்து குண்டுகள் அத்தியாயம் - 13 சுதாகர் கஸ்தூரி Wednesday, September 14, 2016 12:06 PM +0530 லிண்டா 'உங்க பெரியதாத்தாவை எரிச்சாங்களா, அடக்கம் பண்ணினாங்களா?' என்றாள்.

'அடக்கம் பண்ணினாங்க' என்றான். ஊருக்கு வெளியே ஒரு உடைமரக்காட்டில் நடுவே இரு கல்லறைகள் இருக்கின்றன என்பதையும், அங்கு செல்லியாத்தா சில நாட்கள் சென்று வருவாள் என்பதும் அவன் அறிந்திருந்தான். செல்லியாத்தா எப்போது போகிறாள், வருகிறாள் என்பது பலருக்கும் தெரியாது. சற்றே மரை கழண்ட கேஸ் என்பதால் செல்லியாத்தாவைப் பற்றி குடும்பத்திலேயே அதிகம் எவரும் கண்டுகொள்வதில்லை.

ஒவ்வொரு இடமாக லிண்டாவுடன் சுற்றியதில், நடுநடுவே ஆனி பற்றி அவள் சொல்லி வந்திருந்தாள். அன்று, ஏதோ விவரமாகச் சொல்லும் மூடில் இருந்தாள். குளிர்பானம் ஒன்றை உறிஞ்சியபடி ஆனி பற்றி மெல்லச் சொல்ல ஆரம்பித்தாள்.

- தொடரும்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/30/w600X390/graveyard.jpg http://www.dinamani.com/junction/five-bullets/2016/aug/30/அத்தியாயம்---2558884.html