Dinamani - தமிழ்நாடு - http://www.dinamani.com/tamilnadu/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3058637 தமிழ்நாடு வங்கக்கடலில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'பெய்ட்டி' புயலாக மாறியது DIN DIN Saturday, December 15, 2018 10:41 PM +0530
வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'பெய்ட்டி' புயலாக மாறி உள்ளது. இந்த புயலால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என்றும், மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியதாவது: தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஆந்திர மாநிவலம் மசூலிப்பட்டினத்தை நோக்கி நகரத் தொடங்கியது.

இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டம் புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு நாடுகள் வரிசைப்படி தாய்லாந்து 'பெய்ட்டி' என பெயரிடப்பட்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் என எச்சரித்துள்ளது. 

சென்னையில் இருந்து 590 கிலோ மீட்டர் தொலைவில் ஆந்திராவை நோக்கி மணிக்கு 17 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் பெய்ட்டி புயல், நாளை மறுநாள் திங்கள்கிழமை (டிச.17) ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் - காக்கிநாடா இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் வடக்கு கடற்கரைக்கு 200 கிலோ மீட்டர் தூரம் வரை புயல் வரும் என்றும் அப்போது மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். இதன் காரணமாக வட தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் மிதமான மற்றும் கனமழை பெய்யும் எனவும் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆந்திர கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த புயலால் கோதாவரி, விசாகப்பட்டினம், கிருஷ்ணா, குண்டூர் மாவட்டங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த ஏனம் மாவட்டமும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. 

புயல் சின்னம் நெருங்குவதால் தமிழகத்தின் துறைமுகங்களில் புயல் எச்சரிகை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன. புயல் தொடர்பான புகார்களை 1077 என்ற கட்டணமில்லை எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தமிழக கடலோரப் பகுதிகளான திருவொற்றியூர், எண்ணூர், பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/4/w600X390/rains-11.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/15/வங்கக்கடலில்-உருவாகியிருந்த-ஆழ்ந்த-காற்றழுத்த-தாழ்வு-மண்டலம்-பெய்ட்டி-புயலாக-மாறியது-3058637.html
3058636 தமிழ்நாடு ஸ்டெர்லைட் வழக்கின் தீர்ப்பு முதல்வரின் ஆணவப் பேச்சுக்கும், அலட்சியமான நிர்வாகத்திற்கும் கொடுத்த தர்ம அடி DIN DIN Saturday, December 15, 2018 09:57 PM +0530
ஸ்டெர்லைட் வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பு முதல்வரின் ஆணவப் பேச்சுக்கும், அலட்சியமான நிர்வாகத்திற்கும் தர்ம அடி என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஸ்டெர்லைட் ஆலையை மூடிய அரசாணையை தமிழக அரசின் கொள்கை முடிவு என்று ஏற்றுக்கொள்ள முடியாது” என்று நெற்றியில் அடித்ததைப் போல் சுட்டிக்காட்டி ஆலையைத் திறக்க, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அளித்திருக்கும் 40 பக்கத் தீர்ப்பு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அதிமுக அரசின் கன்னத்தில் ஓங்கி விடப்பட்ட அறையாகவே அமைந்திருக்கிறது.

மனிதநேயமற்ற முறையில் போலீஸ் மூலம் துப்பாக்கிச்சூடு நடத்தி, அறவழியில் போராடிய 13 பேரின் உயிரைப் பறித்த இந்த அரசு, லட்சக்கணக்கான மக்களுக்கு சுகாதாரக்கேடு விளைவிக்கும், சுற்றுப்புறச் சூழலை அடியோடு நாசப்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதிலும் அலட்சியம் காட்டி, இன்றைக்கு டெல்லி பூமியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவமானப்பட்டு அசிங்கப்பட்டதோடு மட்டுமின்றி, நிர்வாகத் திறமைக்குப் பெயர் போன தமிழக அரசு அதிகாரிகளுக்கும் மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறார்.

“ஆலையை மூட அமைச்சரவையைக் கூட்டி கொள்கை முடிவு எடுங்கள்” என்று திமுக சார்பில் சட்டப்பேரவையில் ஆணித்தரமாக வாதாடினேன். அனைத்து எதிர்க்கட்சிகளும் இதே கோரிக்கையை வலியுறுத்தின. ஏன் உயர்நீதிமன்ற நீதிபதிகளே அரசாணை போதாது, அமைச்சரவையைக் கூட்டி முடிவு எடுத்திருக்க வேண்டும் என்று எச்சரித்தார்கள்.

ஆனால் எதையும் காது கொடுத்துக் கேட்காமல் - எல்லாவற்றிலும் கரை கண்டதைப்போல, கொள்கை முடிவு எடுப்பதற்குப் பதிலாக ஆலையை மூட தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் அனுப்பிய கடிதத்தை மட்டும் ஏற்றுக் கொண்டு அதன் அடிப்படையில் ஆலையை மூடி அரசாணை பிறப்பித்தது அதிமுக அரசு.

இதற்கு முதல்வரும், துணை முதல்வரும் சட்டப்பேரவையிலும் மக்கள் மன்றத்திலும் நிர்வாகத் திறமையில் தாங்கள் புலிகள் போல் கருத்து தெரிவித்து பிரதான எதிர்க்கட்சியின் கருத்தினை கேலி செய்தார்கள். உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எச்சரிக்கையை ஏற்க மறுத்தார்கள். இருவரும் “இனிமேல் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவே முடியாது” என்று அடாவடியாகப் பேசினார்கள்.

ஆனால் இன்றைக்கு தேசிய தீர்ப்பாயத்தின் தீர்ப்பு முதல்வரின் முகத்தில் கழுவ முடியாத கரியைப் பூசியிருக்கிறது. “நியாயப்படுத்த முடியாத உத்தரவு” என்றும், “தமிழக அரசு தன்னிடம் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் எடுக்கப்படாத முடிவு” என்றும் இடித்துரைத்துள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயம் முதல்வரின் ஆணவப் பேச்சுக்கும், அலட்சியமான நிர்வாகத்திற்கும் தர்ம அடி கொடுத்திருக்கிறது.

“தினம் தினம் கோப்புக்களைப் பார்த்து உடனுக்குடன் முடிவு எடுத்து விடுகிறேன்” என்று வீண் தம்பட்டம் அடித்து வீராப்புப் பேசி வரும் முதல்வரின் நிர்வாக லட்சணம் தீர்ப்பின் ஒவ்வொரு வரியிலும் சிரிப்பாய் சிரிக்கிறது. “கொள்கை முடிவு எடுத்து ஆலை மூடப்படவில்லை என்பதால் அந்த அரசு ஆணையை ரத்து செய்யும் அதிகாரம் தீர்ப்பாயத்திற்கு இருக்கிறது” என்றே தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதைப் பார்த்தால், திமுக குறிப்பிட்டது போல் கொள்கை முடிவு எடுத்திருந்தால் பசுமைத் தீர்ப்பாயம் நிச்சயம் தலையிட்டிருக்காது என்றே தெரிகிறது.

ஆகவே, உயர்நீதிமன்றமும், பிரதான எதிர்க்கட்சியான திமுகவும் எடுத்து வைத்த வாதத்தை ஏதோ உள்நோக்கத்துடன் ஏற்றுக் கொள்ளாமல் பிடிவாதமாக நடந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி, இதற்கு தார்மீகப் பொறுப்பேற்று தூத்துக்குடி மக்களிடம் மட்டுமல்ல - சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்களிடமும், உயிரிழந்த குடும்பங்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

இனியாவது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். “மேல்முறையீடு செய்வோம்” என்று வழக்கமான பல்லவியைப் பாடிக் கொண்டிருக்காமல், உடனடியாக தமிழக அரசே முன்னின்று ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சுற்றுப்புறச்சூழல் ஆபத்து தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் சேகரிக்கவேண்டும்.

சேகரித்து, அந்த ஆலை தொடருவது “சீர் செய்யவே முடியாத மாசு ஏற்படுத்தும்” (IRREVERSIBLE POLLUTION) என்பதை உறுதி செய்யும் வகையில் அறிவியல் பூர்வமான ஆய்வுகளை மேற்கொண்டு, தமிழக அமைச்சரவை கூடி ஒரு கொள்கை முடிவு எடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” என்று அறிவுறுத்தியுள்ளார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/4/w600X390/stalin.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/15/ஸ்டெர்லைட்-வழக்கின்-தீர்ப்பு-முதல்வரின்-ஆணவப்-பேச்சுக்கும்-அலட்சியமான-நிர்வாகத்திற்கும்-கொடுத்த-தர-3058636.html
3058635 தமிழ்நாடு கூட்டணி குறித்த வதந்திகளை நம்பாதீர்: கமல்ஹாசன் DIN DIN Saturday, December 15, 2018 09:40 PM +0530
கூட்டணி குறித்த வதந்திகளை நம்பாதீர் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:

மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும், நான் அரசியலுக்கு வந்த காரணத்தை நாம் உணர்வோம். அது குறுகிய ஆதாயங்களுக்காக அல்ல. கூட்டணி குறித்த வதந்திகளை நம்பாதீர். மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது. உந்தப்பட்டால் தனித்து நிற்போம் என பதிவிட்டுள்ளார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/23/w600X390/kamal3.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/15/கூட்டணி-குறித்த-வதந்திகளை-நம்பாதீர்-கமல்ஹாசன்-3058635.html
3058634 தமிழ்நாடு வைகுண்ட ஏகாதசி: டிச.18-இல் திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை DIN DIN Saturday, December 15, 2018 09:08 PM +0530 திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலில் பரமபதவாசல் திறப்பையொட்டி டிசம்பர் 18 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ராசாமணி விடுத்துள்ள அறிவிப்பில், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலில், வைகுந்த ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறப்பு டிசம்பர் 18 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது.

இதனையொட்டி, அன்றைய தினம் திருச்சி மாவட்டத்துக்கு உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். 

பள்ளி, கல்லூரி தேர்வுகள் நடைபெற்று வருவதால் இந்த உத்தரவு கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது. 

மேலும் இந்நாளில் அனைத்து துணை கருவூலங்களும், மாவட்ட கருவூலமும் பாதுகாப்பாக குறைந்த பணியாளர்களைக் கொண்டு செயல்படும். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு ஜனவரி 5 ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

]]>
http://www.dinamani.com/tamilnadu/2018/dec/15/வைகுண்ட-ஏகாதசி-டிச18-இல்-திருச்சி-மாவட்டத்திற்கு-உள்ளூர்-விடுமுறை-3058634.html
3058632 தமிழ்நாடு ம.பி, ராஜஸ்தான் முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு DIN DIN Saturday, December 15, 2018 07:17 PM +0530
சென்னை: மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. 

மத்திய பிரதேசத்தின் முதல்வராக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கமல்நாத்தும், ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட்டும் பதவியேற்க உள்ளனர். 

இந்த பதவியேற்பு விழாவில் பாஜகவுக்கு எதிராக செயல்பட்டு வரும் தேசிய தலைவர் சரத்பவார், சரத்யாதவ், மாயாவதி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/13/w600X390/stalin1.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/15/மபி-ராஜஸ்தான்-முதல்வர்கள்-பதவியேற்பு-விழாவில்-முகஸ்டாலின்-பங்கேற்பு-3058632.html
3058631 தமிழ்நாடு நாகை, காரைக்கால், புதுச்சேரி துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம் DIN DIN Saturday, December 15, 2018 07:11 PM +0530 தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றறழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று, திங்கள்கிழமை (டிச.17) கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், நாகை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது மணிக்கு சுமார் 13 கி. மீ. வேகத்தில் மேற்கு, வடமேற்கு திசைகளில் நகர்ந்து, சென்னைக்கு 690 கி.மீ. தொலைவிலும், ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்துக்கு 890 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது வரும் 24 மணி நேரத்தில் புயலாக மாறி வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து திங்கள்கிழமை தீவிரப் புயலாக மாறி, ஆந்திர கடற்கரைப் பகுதியில் ஓங்கோலுக்கும் - காக்கிநாடாவுக்கும் இடையே பிற்பகலில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாகை துறைமுக அலுவலகத்தில் இன்று புயல் முன்னறிவிப்புக் கொடியான 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இதேபோன்று, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களிலும் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/12/15/w600X390/flag3.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/15/நாகை-காரைக்கால்-புதுச்சேரி-துறைமுகங்களில்-3-ஆம்-எண்-புயல்-எச்சரிக்கைக்-கூண்டு-ஏற்றம்-3058631.html
3058630 தமிழ்நாடு ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன்: வைகோ  DIN DIN Saturday, December 15, 2018 06:58 PM +0530
ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கம்டன அறிக்கையில்,ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீா்ப்பாயம் அளித்துள்ள தீா்ப்பு ஆலை நிர்வாகமே எழுதி வெளியிட்டதுபோல் உள்ளது.

ஆலை இயங்குவதற்கு தமிழக அரசும், தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியமே முக்கிய காரணமாகும். இந்த ஆலை தூத்துக்குடி மக்களின் உயிர் குடிக்கும் எமன். தீா்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்று வெல்வேன்.

தூத்துக்குடியிலிருந்து ஸ்டெர்லைட் ஆலை அகற்றப்படுவதை வருகிற காலம் காணத்தான் போகிறது என வைகோ கூறியுள்ளார். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/15/w600X390/vaiko-1-2.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/15/ஸ்டெர்லைட்-விவகாரத்தில்-பசுமை-தீர்ப்பாய-உத்தரவை-எதிர்த்து-உச்சநீதிமன்றம்-செல்வேன்-வைகோ-3058630.html
3058629 தமிழ்நாடு பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது: டிடிவி தினகரன் DIN DIN Saturday, December 15, 2018 06:51 PM +0530
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என அம்மா மக்கள் முன்னேற்றறக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து, அவர் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட்டுள்ள அறிக்கையில், ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமைத் தீா்ப்பாயம் உத்தவிட்டிருப்பது தூத்துக்குடி பகுதி மக்களையும், ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

ஆலையை மூடுவதாக மேம்போக்காக அரசு உத்தரவு வெளியிட்டது தவறு என பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக ஆா்வலா்களும் தெரிவித்தனா். ஆனாலும், அனைவரும் சுட்டிக்காட்டியபடி, அமைச்சரவையைக் கூட்டி கொள்கை முடிவெடுத்து அந்த ஆலையை மூட அரசு விரும்பவில்லை. அதன் பலனைத்தான் இன்று தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் தமிழக அரசு கண்டிருக்கிறது. 

இப்போதாவது தூத்துக்குடி மக்களின் நலன் கருதி, சட்டப் பேரவையைக் கூட்டி ‘தமிழகத்தில் தாமிர ஆலைகளே வேண்டாம்‘ என்ற கொள்கை

முடிவெடுத்து தீா்மானம் நிறைவேற்றி வேண்டும். அதன் பின்பு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முன்வர வேண்டும் என்று டிடிவி தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/28/w600X390/TTV.jpeg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/15/பசுமை-தீர்ப்பாயத்தின்-உத்தரவு-தமிழகத்தை-அதிர்ச்சியில்-ஆழ்த்தியுள்ளது-டிடிவி-தினகரன்-3058629.html
3058628 தமிழ்நாடு உரிமைகளை போராடி பெற்றுத்தரும் ஒரே கட்சி அதிமுகதான்: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் DIN DIN Saturday, December 15, 2018 06:16 PM +0530
எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் போராடி உரிமைகளை பெற்றுத்தரும் ஒரே கட்சி அதிமுகதான் என்று தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரித்தார். 
 
இதுகுறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கஜா புயலால் மிகப்பெரிய பேரிடர் ஏற்பட்டுள்ளது. மின் விநியோகம் சீர் செய்யப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வங்கிகள் மூலம் நிவாரணம் வழங்குவதில் சிக்கல் உள்ளதால், நிவாரண தொகையை வங்கி கணக்குகளில் மொபைல் பேங்கிங் மூலமாகவும் வழங்குவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளது. 

காழ்ப்புணர்ச்சி காரணமாகவே சாலை மறியல் நடக்கிறது என்றவர் மத்திய அரசு நல்ல நிவாரண நிதியை வழங்குவார்கள் என்றார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து வேகமாக நடைபெற்று வருகிறது என்றார். 

மேலும், எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும் போராடி உரிமைகளை பெற்றுத்தரும் ஒரே கட்சி அதிமுகதான். செந்தில்பாலாஜி கட்சி மாறியதை பத்தோடு பதினொன்றாகத்தான் பார்க்கிறேன் என்றவர் திராவிடக் கட்சிகளால் தமிழகத்தில் வளர்ச்சி இல்லை என பாஜக கூறுவது அக்கப்போரான குற்றச்சாட்டு என்றார் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/12/15/w600X390/o.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/15/உரிமைகளை-போராடி-பெற்றுத்தரும்-ஒரே-கட்சி-அதிமுகதான்-அமைச்சர்-ஓஎஸ்மணியன்-3058628.html
3058627 தமிழ்நாடு ஜூனியா் அதிகாரிகளை பொறுப்பு மேலாண் இயக்குநா்களாக நியமித்ததை உடனடியாக ரத்து செய்க: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் DIN DIN Saturday, December 15, 2018 06:00 PM +0530
ஜூனியா் அதிகாரிகளை பொறுப்பு மேலாண் இயக்குநர்களாக நியமித்ததை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்த்தி உள்ளார். 

இதுதொடர்பாக அவர் இன்று சனிக்கிழமை (டிச.15) வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் நிர்வாகத்தை சீரழிக்கும் வகையில், மேலாண் இயக்குநர் பதவிகளில் ஜூனியர் அதிகாரிகளைப் பொறுப்பு அதிகாரிகளாக நியமித்து, ஏழை எளியவர்கள், சிறு வியாபாரிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அடித்தட்டு மக்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் பயன்படும் போக்குவரத்துத் துறையை ஸ்தம்பிக்க வைத்துள்ள போக்குவரத்துத் துறை அமைச்சரின் செயலுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் சொல்வதைக் கேட்கா விட்டால் பொது மேலாளர்களை இன்சார்ஜ் பொறுப்பில் போட்டு பார்த்துக் கொள்கிறேன் என்று மேலாண் இயக்குநர்கள் கூட்டத்தில் வெளிப்படையாகவே அச்சுறுத்தும் முறையில் அமைச்சர் பேசினார் என்று போக்குவரத்துக் கழகத்தில் செய்தி அடிபடுகிறது.

அதை நிரூபிக்கும் வகையில், சீனியாரிட்டி பட்டியலில் முதலில் இருக்கும் அனுபவம் வாய்ந்த சீனியர்களை எல்லாம் புறக்கணித்து, ஓரங்கட்டி விட்டு, அனுபவம் இல்லாதவர்களையும், மண்டலங்களில் பொது மேலாளராகக் கூட பணியாற்றாதவர்களை மேலாண் இயக்குநர்களாக போக்குவரத்துத் அமைச்சர் விஜயபாஸ்கர் அபத்தமாகவும், பெருத்த ஆதாயத்திற்காகவும் நியமித்திருப்பது போக்குவரத்துத் துறையில் மிகப்பெரிய அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது.

அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு துறையும் குரங்கு கையில் சிக்கிய பூ மாலை போல் எப்படியெல்லாம் பிய்த்து எறியப்படுகிறது என்பதைத்தான் இந்த நியமனங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

பொறுப்பு மேலாண் இயக்குநர் பதவி போக்குவரத்துத் துறையில் கூவிக் கூவி ரேட்டிற்கு விற்கப்படும் சூழல் புரையோடிப் போயிருப்பதுதான் இப்போது அரசு போக்குவரத்துக் கழகங்களில் நடந்துள்ள இதுபோன்ற நியமனங்களில் எதிரொலித்திருக்கிறது. மதுரையில் பொது மேலாளராக இருப்பவர் கோவைக்கும், சென்னையில் இருப்பவர் விழுப்புரத்திற்கும், ஈரோட்டில் இருப்பவர் மதுரைக்கும் நியமிக்கப்பட்டு, இரட்டைப் பொறுப்பு வழங்கப்பட்டு, இன்றைக்கு போக்குவரத்துக் கழக நிர்வாகம் நிலைகுலைந்து போயிருக்கிறது. ஓரிடத்தில் பணிபுரியும் பொது மேலாளர் 160 கிலோமீட்டர்களுக்கும் மேலுள்ள வேறொரு இடத்தில் இன்சார்ஜ் அதிகாரியாக நியமிக்கப்படுவதின் மர்மம் என்ன?

இந்தப் பொறுப்பு மேலாண் இயக்குநர்கள் ஏதோ பெயரளவுக்கோ, தற்காலிகமாகவோ நியமிக்கப்படவில்லை. அவர்களுக்கு இந்த இன்சார்ஜ் பதவிக்காக கூடுதலாக 19 ஆயிரம் ரூபாய் மாதாந்திர ஊதியம் வழங்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட அரசு போக்குவரத்துக் கழகத்தில் பங்குதாரராக ஆக்கப்படுகிறார்கள்.

அதையும் விட முக்கியமாக ஒரு மேலாண் இயக்குநருக்கு உள்ள அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டு நிர்வாகக்குழு கூட்டங்களிலும் பங்கேற்கும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மூத்த பொது மேலாளர்கள் கூட்டத்தில் பின் வரிசையில் அமர்ந்திருந்த இந்த ஜூனியர் மேலாண் இயக்குநர்கள் முன் வரிசையில் அமர்ந்திருப்பது கேலிக்கூத்தாகவும், நிர்வாக அவலட்சணமாகவும் இருக்கிறது. இன்சார்ஜ் மேலாண் இயக்குநர்களுக்கு இவ்வளவு அதிகாரங்களைக் கொடுத்து அமைச்சர் தனது ஊழலுக்கும், தான் சொல்லும் உத்தரவுகளை பிறப்பிக்கவும் பயன்படுத்தி, அரசு போக்குவரத்துக் கழகங்களை அடியோடு திவாலாக்கும் முயற்சியா என்ற கேள்வி எழுகிறது.

ஆகவே ஜூனியர் அதிகாரிகளை இன்சார்ஜ் மேலாண் இயக்குநர்களாக நியமித்ததை உடனடியாக ரத்து செய்து, சீனியாரிட்டிப்படி மூத்த, அனுபவம் உள்ள அதிகாரிகளை அரசு போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குநர்களாக நியமிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 

ஊழல் செய்யும் ஒற்றை நோக்குடனும், ஊழலுக்கு உடந்தையாக இருக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடனும் இப்படி இன்சார்ஜ் மேலாண் இயக்குநர்களை நியமிப்பது சாமானிய மக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு மூடு விழா நடத்தும் அதிமுக அரசின் கேடுகெட்ட செயல் என மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/12/7/w600X390/stalin1.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/15/ஜூனியா்-அதிகாரிகளை-பொறுப்பு-மேலாண்-இயக்குநா்களாக-நியமித்ததை-உடனடியாக-ரத்து-செய்க-முகஸ்டாலின்-வலிய-3058627.html
3058624 தமிழ்நாடு செந்தில் பாலாஜி சென்றுதான் திமுகவில் உள்ள வெற்றிடத்தை நிரப்ப வேண்டுமா? - பொள்ளாச்சி ஜெயராமன் DIN DIN Saturday, December 15, 2018 05:43 PM +0530
சென்னை: செந்தில் பாலாஜி சென்றுதான் திமுகவில் உள்ள வெற்றிடத்தை நிரப்ப வேண்டுமா? என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுகவில் இருந்து வேறு கட்சிகளுக்கு சென்றவர்கள் யாரும் வளர்ச்சி பெற்றதாக வரலாறு இல்லை. 

கிளை செயலாளராக இருந்த ஒருவர் முதல்வராக முடியும் என்பதற்கு அதிமுகவே உலக நாடுகளுக்கு உதாரணம் என்றவர் அதிமுக நிரந்தரமான நிலையான புரட்சி போர்க்கப்பல் என்றார். 

மேலும், செந்தில் பாலாஜி சென்றுதான் திமுகவில் உள்ள வெற்றிடத்தை நிரப்ப வேண்டுமா? என கேள்வி எழுப்பினார் பொள்ளாச்சி ஜெயராமன். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/12/15/w600X390/jayaraman.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/15/செந்தில்-பாலாஜி-சென்றுதான்-திமுகவில்-உள்ள-வெற்றிடத்தை-நிரப்ப-வேண்டுமா---பொள்ளாச்சி-ஜெயராமன்-3058624.html
3058623 தமிழ்நாடு ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டங்கள் வேண்டாம்: மாவட்ட ஆட்சியர் DIN DIN Saturday, December 15, 2018 05:29 PM +0530
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், அதனை எதிர்த்து மக்கள் போராட்டங்களை நடத்த வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சந்தீப் நந்தூரி, சட்டம் ஒழுங்கு பாதிக்கும் வகையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக எந்தவிதமான போராட்டங்களிலும் ஈடுபட வேண்டாம்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. மக்கள் எந்த விதமான அச்சமும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/13/w600X390/sandeep.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/15/ஸ்டெர்லைட்டுக்கு-எதிராக-போராட்டங்கள்-வேண்டாம்-மாவட்ட-ஆட்சியர்-3058623.html
3058620 தமிழ்நாடு பிரிந்து சென்றவர்கள் அனைவரும் மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும்: அமைச்சர் கே.பி.அன்பழகன் DIN DIN Saturday, December 15, 2018 04:42 PM +0530
தருமபுரி: பிரிந்து சென்றவர்கள் அனைவரும் மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும். அவர்களை வரவேற்று அதிமுகவில் இணைத்துக்கொள்ள தயாராக உள்ளோம் என்று மாநில உயா்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். 

தருமபுரியில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக மக்களுக்காக அதிமுக அரசு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் காரணமாக தொடர்ந்து இந்த அரசு மக்கள் செல்வாக்கை பெற்றுள்ளது. அரசு செயல்படுத்திவரும் மக்கள் நலத் திட்டங்களால், அரசுக்கு மக்கள் எப்போதும் உறுதுணையாக இருப்பர். 

அதிமுகவிலிருந்து பிரிந்து சென்று தனியாக செயல்பட்ட 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரான செந்தில் பாலாஜி, தற்போது திமுகவில் இணைந்துள்ளார். அவர் எப்போதும் அதிமுகவில் உணர்வுபூர்வமாக செயல்பட்டவர் அல்ல. வேறு கட்சிகளில் இருந்து அதிமுகவுக்கு வந்த யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. 

மக்களோடு கூட்டணி வைத்துள்ள அதிமுகவிலிருந்து எத்தனை பேர் வெளியேறினாலும் பாதிப்பில்லை. தொண்டர்களின் ஆதரவு இருக்கும் வரை இந்த கட்சியை ஒன்றும் செய்துவிட முடியாது. 

பிரிந்து சென்றவர்கள் அனைவரும் மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும். அவர்களை வரவேற்று அதிமுகவில் இணைத்துக்கொள்ள தயாராக உள்ளோம் என்றார் கே.பி.அன்பழகன்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/8/w600X390/admk-anbhazhakan.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/15/பிரிந்து-சென்றவர்கள்-அனைவரும்-மீண்டும்-அதிமுகவில்-இணைய-வேண்டும்-அமைச்சர்-கேபிஅன்பழகன்-3058620.html
3058618 தமிழ்நாடு திங்களன்று கரையை கடக்கும் புயல் சின்னத்தால் 2 நாட்களுக்கு கன மழை எச்சரிக்கை PTI PTI Saturday, December 15, 2018 04:19 PM +0530
சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயல் சின்னமாக மாறி திங்கட்கிழமை ஓங்கோல் - காக்கிநாடா இடையே கரையை கடக்கும்.

இதன் காரணமாக கடலோர ஆந்திரா மற்றும் வட தமிழக மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரி, ஆந்திராவின் கடலோரப் பகுதிகளில் சனிக்கிழமை முதல் தரைக் காற்று மணிக்கு 45- 55 கி.மீ. வேகத்தில் வீசும். சமயத்தில் 65 கி.மீ. வேகத்தில் வீசக் கூடும்.

தெற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்காக நகர்ந்து மச்சிலிப்பட்டினத்துக்கு 890 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் (சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) புயலாக மாறி, அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் (ஞாயிறு, திங்கள்) தீவிரப் புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இது மேலும் வடக்கு மற்றும் வடமேற்காக நகர்ந்து ஆந்திர மாநிலம் ஓங்கோல் - காக்கிநாடா இடையே டிசம்பர் 17ம்  தேதி பிற்பகலில் கரையை கடக்கும். இதன் காரணமாக ஆந்திர மாநிலத்தின் ஒரு சில பகுதிகளில் மிகக் கன மழை பெய்யும். தமிழகத்தின் ஒரு சில இடங்களில் டிசம்பர் 16ம் தேதி கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

டிசம்பர் 17ம் தேதி காலை முதல் ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் காற்றின் வேகம் மெல்ல அதிகரித்து மணிக்கு 80- 90 கி.மீ. வேகத்திலும், இது மேலும் அதிகரித்து மணிக்கு 100 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/12/15/w600X390/dec15.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/15/storm-to-cross-coast-near-kakinada-heavy-rain-forecast-for-ap-tn-3058618.html
3058617 தமிழ்நாடு மேக்கேதாட்டு விவகாரத்தில் சோனியா, ராகுல் சொன்னதை ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்: தமிழிசை வலியுறுத்தல் DIN DIN Saturday, December 15, 2018 04:08 PM +0530
சென்னை: மேக்கேதாட்டு விவகாரத்தில் தில்லியில் சோனியா காந்தி, ராகுல்காந்தியை சந்தித்து பேசியபோது அவர்கள் என்ன சொன்னார்கள் என்பது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்கள் மத்தியில் தெளிவுபடுத்த வேண்டும் என தமிழிசை வலியுறுத்தி உள்ளார். 

கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு என்ற இடத்தில் அணையைக் கட்ட கர்நாடக அரசின் வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக சட்டப்பேரவையில் கடந்த வாரம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

டிசம்பர் 16 ஆம் தேதி கருணாநிதி சிலை திறப்பு விழா அழைப்பிதழ் வழங்குவதற்காக தில்லி சென்ற மு.க.ஸ்டாலின், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, ராகுல் காந்தியை நேரில் சந்திக்குபோது மேக்கேதாட்டு விவகாரம் குறித்து பேசுவேன் என தெரிவித்தார். 

இந்நிலையில், மேகதாது விவகாரம் குறித்து சோனியா, ராகுல்காந்தியை சந்தித்து பேசியது மற்றும் அவர்கள் என்ன சொன்னார்கள் என்பது குறித்து ஸ்டாலின் மக்கள் மத்தியில் தெளிவுபடுத்த வேண்டும் என பாஜக தமிழக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். 

மேலும், கஜா பாதிப்பில் அரசியல் செய்யாமல் மக்களுக்கு உதவ வேண்டும் என்பதே மத்திய அரசின் நிலைப்பாடு என்ற தமிழசை, கஜா புயல் சீரமைப்பு பணிகளுக்காக பிரதமர் மோடி தமிழகத்துக்கு ரூ.6,500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஏற்கனவே, மின்பாதிப்புகளை சரிசெய்யவதற்காக உடனடியாக ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார். 

5 மாநில தேர்தலில் பாஜக சற்று பின்னடைவை சந்தித்திருந்தாலும், 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக அதிகளவில் வெற்றி பெறும் என தமிழிசை தெரிவித்தார். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/13/w600X390/tamilesai.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/15/மேக்கேதாட்டு-விவகாரத்தில்-சோனியா-ராகுல்-சொன்னதை-ஸ்டாலின்-தெளிவுபடுத்த-வேண்டும்-தமிழிசை-வலியுறுத்தல-3058617.html
3058611 தமிழ்நாடு எண்ணூர், கடலூர், நாகை துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் DIN DIN Saturday, December 15, 2018 02:47 PM +0530 எண்ணூர், கடலூர், நாகை துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தற்போது இது சென்னைக்கு அருகே 690 கி.மீ தொலைவில் நிலைக்கொண்டுள்ளது.  

இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று ஆந்திர மாநிலம் ஓங்கோல் - காக்கிநாடா இடையே 17ஆம் தேதி பிற்பகலில் கரையை கடக்கும். இதன்காரணமாக இன்றும், நாளையும் வட தமிழக கடலோர பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.  

எனவே மீனவர்கள் 16, 17, 18 தேதிகளில் தென்மேற்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம். 45 முதல் 55 கி.மீ. வரை தரைக்காற்று பலமாக வீசும். சென்னையில் தரைக்காற்று பலமாக வீசும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிலையில் வங்கக்கடலில் புதிய புயல் உருவாகவிருப்பதால் 
எண்ணூர், கடலூர், நாகை துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/12/15/w600X390/cyclone.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/15/எண்ணூர்-கடலூர்-நாகை-துறைமுகங்களில்-3ஆம்-எண்-புயல்-எச்சரிக்கை-கூண்டு-ஏற்றம்-3058611.html
3058608 தமிழ்நாடு ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி DIN DIN Saturday, December 15, 2018 02:38 PM +0530 ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக் கோரியும், தமிழக அரசின் நடவடிக்கைக்குத் தடை விதிக்கக் கோரியும் வேதாந்தா குழுமம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு அளிக்கப்படும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்திருந்தது. இதையடுத்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

அதில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட்ட தேசிய பசுமை தீர்ப்பாயம் தமிழக அரசின் மனுவையும் தள்ளுபடி செய்தது. மேலும், ஆலைக்கு தேவையான மின்சாரம் வழங்குவது, ஆலை இயக்கம் தொடர்பாக 3 வார காலத்திற்குள் புதிய வழிமுறைகளை தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம் ஏற்படுத்துவது, ஆலைக் கழிவுகளைக் கண்காணிக்க தமிழக அரசு குழு அமைக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை இந்த தீர்ப்பில் தேசிய பசுமை தீர்ப்பாயம் சுட்டிக்காட்டியுள்ளது. 

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தீர்ப்பாயம் அனுமதி அளித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியார்களுக்கு பேட்டியளித்தபோது அவர் இவ்வாறு கூறினார். கடந்த மே மாதம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/19/w600X390/eps.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/15/ஸ்டெர்லைட்-ஆலையை-திறக்கும்-உத்தரவை-எதிர்த்து-மேல்முறையீடு-செய்யப்படும்-முதல்வர்-எடப்பாடி-பழனிசாமி-3058608.html
3058594 தமிழ்நாடு புதிய புயலால் வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் DIN DIN Saturday, December 15, 2018 01:48 PM +0530 புதிய புயலால் வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தற்போது இது சென்னைக்கு அருகே 690 கி.மீ தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. 

இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று ஆந்திர மாநிலம் ஓங்கோல் - காக்கிநாடா இடையே 17ஆம் தேதி பிற்பகலில் கரையை கடக்கும். இதன்காரணமாக இன்றும், நாளையும் வட தமிழக கடலோர பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. 

எனவே மீனவர்கள் 16, 17, 18 தேதிகளில் தென்மேற்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம். 45 முதல் 55 கி.மீ. வரை தரைக்காற்று பலமாக வீசும். சென்னையில் தரைக்காற்று பலமாக வீசும். இவ்வாறு அவர் கூறினார். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/22/w600X390/rains-20.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/15/புதிய-புயலால்-வடதமிழகத்தின்-கடலோர-மாவட்டங்களில்-கனமழை-பெய்யும்-சென்னை-வானிலை-ஆய்வு-மையம்-3058594.html
3058605 தமிழ்நாடு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு DIN DIN Saturday, December 15, 2018 01:40 PM +0530  

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக் கோரியும், தமிழக அரசின் நடவடிக்கைக்குத் தடை விதிக்கக் கோரியும் வேதாந்தா குழுமம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு அளிக்கப்படும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்திருந்தது.

நீதிபதி தருண் அகர்வால் குழு சமர்பித்துள்ள அறிக்கையில், குழு ஆய்வு செய்த இடத்தில் 3.5 லட்சம் மெட்ரிக் டன் தாமிரக் கழிவுகள் பட்டா நிலம் எனக் கூறப்படும் இடத்தில் கொட்டப்பட்டுள்ளது எனவும், அக்கழிவுகளை 12 மீட்டர் உயரம் வரை குவித்து வைக்க அனுமதிக்க வேண்டும் என்றும், அதற்கு மேல் கொட்டப்படும் தாமிரக் கழிவுகள் விதி மீறலுக்கு வழி வகுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் கழிவே நிலத்தடி நீர் மாசுபாட்டுக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொதுவாகவே தமிழகத்தின் நிலத்தடி நீரின் டிடிஎஸ் அதிகமாகவும், பெரும்பாலும் உப்புத்தன்மையுடனும் காணப்படுகிறது. குறிப்பாக, கடலுக்கு அருகில் தூத்துக்குடி இருப்பதால், நிலத்தடி நீரில் டிடிஎஸ் அளவு அதிகமாகக் காணப்படுகிறது. தவிர, ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர் மாசு அடையவில்லை. எனவே, ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசாணைக்கு எதிரான மேல்முறையீட்டை பசுமைத் தீர்ப்பாயம் விசாரிக்க வேண்டும் வேதாந்தா குழுமம் சார்பில் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆலைக்கு தேவையான மின்சாரம் வழங்குவது, ஆலை இயக்கம் தொடர்பாக 3 வார காலத்திற்குள் புதிய வழிமுறைகளை தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம் ஏற்படுத்துவது, ஆலைக் கழிவுகளைக் கண்காணிக்க தமிழக அரசு குழு அமைக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை இந்த தீர்ப்பில் தேசிய பசுமை தீர்ப்பாயம் சுட்டிக்காட்டியுள்ளது. 

கடந்த மே மாதம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 
 

]]>
Sterlite, NGT, thoothukudi, tuticorn, ஸ்டெர்லைட், தூத்துக்குடி, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/3/w600X390/STERLITE.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/15/ஸ்டெர்லைட்-ஆலையை-திறக்க-தேசிய-பசுமை-தீர்ப்பாயம்-உத்தரவு-3058605.html
3058604 தமிழ்நாடு திமுக பலவீனமாக உள்ளதால் ஆள் பிடிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது: அமைச்சர் ஜெயக்குமார் DIN DIN Saturday, December 15, 2018 01:37 PM +0530 திமுக பலவீனமாக உள்ளதால் ஆள் பிடிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
உலக மீனவர் தினத்தையொட்டி பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. பழவேற்காட்டில் சுற்றுலாவை மேம்படுத்தும் திட்டங்கள் உள்ளன. இதன்மூலம் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இலங்கை சிறையில் உள்ள 16 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  

அதிமுகவுக்கு மக்களின் துணை இருக்கிறது. திமுக எத்தனை கூட்டணி வைத்தாலும், எத்தனை பேரை இழுத்தாலும் எங்களுக்கு கவலையில்லை. பலவீனமாக இருப்பதால் திமுக ஆள் பிடிக்கும் வேலையை பார்கின்றனர். இது அதிமுகவுக்கு எந்தக் காலத்திலும் பின்னடைவை ஏற்படுத்தாது. இவ்வாறு அவர் கூறினார். 


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/29/w600X390/jayakumar.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/15/திமுக-பலவீனமாக-உள்ளதால்-ஆள்-பிடிக்கும்-வேலையில்-ஈடுபட்டுள்ளது-அமைச்சர்-ஜெயக்குமார்-3058604.html
3058602 தமிழ்நாடு சென்னை ஐஐடி உணவு விடுதியில் தனித்தனி வாயில்கள் அமைத்தது கண்டிக்கத்தக்கது: பொன்.ராதாகிருஷ்ணன் DIN DIN Saturday, December 15, 2018 01:14 PM +0530 சென்னை ஐஐடி உணவு விடுதியில் தனித்தனி வாயில்கள் அமைத்தது கண்டிக்கத்தக்கது என மத்திய இணைய அமைச்சர் பொன்.ராதாகருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள உணவு விடுதியில் மாணவர்களை பாகுப்படுத்தும் வகையில், சைவம், அசைவம் என பிரித்து தனித்தனி நுழைவு வாயில் வைக்கப்பட்டுள்ளதாக அம்பேத்கர் பெரியார் வட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்தனர். 

கடும் எதிர்ப்பையடுத்து சென்னை ஐஐடி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தனித்தனி நுழைவு வாயில் அகற்றப்பட்டது. இதனிடையே இவ்விவகாரம் தொடர்பாக விடுதி விவகாரங்கள் செயலாளர், மாணவர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். மேலும் இதுகுறித்து மாணவர்களின் மின்னஞ்சலுக்கு மன்னிப்புக் கடிதமும் அவர் அனுப்பியுள்ளார். 

இதுகுறித்து பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 
சென்னை ஐஐடி உணவு விடுதியில் சைவம் மற்றும் அசைவம் சாப்பிடும் மாணவர்களுக்கென தனித்தனி வாயில்கள் மற்றும் கை கழுவுமிடம் அமைத்தது தவறான செயல். இது கண்டிக்கத்தக்கது. நிர்வாகம் தனது தவறை திருத்திக்கொள்ள வேண்டும். 

தமிழகத்தில் எந்த கட்சியோடும் பாஜகவுக்கு எந்த பிரச்னையும் இல்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 வழிச்சாலை திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாக கூறுவது வேடிக்கையானது. 5 மாநில தேர்தலுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்ந்ததற்கும் மத்திய அரசுக்கும் தொடர்பில்லை. இவ்வாறு அவர் கூறினார். 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/9/w600X390/ponnar.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/15/சென்னை-ஐஐடி-உணவு-விடுதியில்-தனித்தனி-வாயில்கள்-அமைத்தது-கண்டிக்கத்தக்கது-பொன்ராதாகிருஷ்ணன்-3058602.html
3058597 தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஒன்றும் தியாகி இல்லை: அமைச்சர் செல்லூர் ராஜூ DIN DIN Saturday, December 15, 2018 12:58 PM +0530 முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஒன்றும் தியாகி இல்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, 
திமுகவில் கவுன்சிலராக இருந்த செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவி கொடுத்து அதிமுக அழகு பார்த்தது. திமுகவில் யாரேனும் இணைந்தால் அது தற்கொலைக்கு சமம். 

உண்மையான அதிமுக தொண்டர்கள் யாரும் கட்சியை விட்டு செல்ல மாட்டார்கள். கரூர் மாவட்டத்தில் முன்பை விட அதிமுக சிறப்பாக வளர்ச்சியடைந்து உள்ளது. 

பிரதமர் மோடி கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிடாதது எங்களுக்கு ஒரு பொருட்டல்ல. தேவையான நிதியை ஒதுக்கினாலே போதும். புயலால் பாதித்த மக்களுக்கு தேவையான நிவாரண பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது என்றார்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/26/w600X390/craju.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/15/முன்னாள்-அமைச்சர்-செந்தில்-பாலாஜி-ஒன்றும்-தியாகி-இல்லை-அமைச்சர்-செல்லூர்-ராஜூ-3058597.html
3058583 தமிழ்நாடு செந்தில் பாலாஜி, திமுகவில் சேர்ந்தது சந்தர்ப்பவாதம்: தமிழிசை சௌந்தரராஜன் DIN DIN Saturday, December 15, 2018 11:22 AM +0530 செந்தில் பாலாஜி, திமுகவில் சேர்ந்தது சந்தர்ப்பவாதம் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
மேக்கேதாட்டுவில் கர்நாடகா அணை கட்டுவதை தமிழக பாஜக எதிர்க்கும். கருணாநிதி சிலை திறப்பிற்கு ரஜினி செல்வதால் கூட்டணி ஒன்றும் மாறி விடாது.

கருணாநிதி சிலை திறப்பு விழாவை, திமுக கூட்டணி கட்சிகளின் விழாவாக தான் பார்க்க வேண்டும். எந்த விழாவாக இருந்தாலும், அதை கூட்டணிக்கட்சி விழா போல ஸ்டாலின் நடத்தி வருகிறார்.

செந்தில் பாலாஜி, திமுகவில் சேர்ந்தது சந்தர்ப்பவாதம். இவ்வாறு அவர் கூறினார்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/12/15/w600X390/bjp.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/15/செந்தில்-பாலாஜி-திமுகவில்-சேர்ந்தது-சந்தர்ப்பவாதம்-தமிழிசை-சௌந்தரராஜன்-3058583.html
3058582 தமிழ்நாடு பசுமை வழிச்சாலையால் யாரையும் பாதிப்புக்குள்ளாக்கும் நோக்கம் இல்லை: முதல்வர் பழனிசாமி DIN DIN Saturday, December 15, 2018 11:17 AM +0530  

8 வழிச் சாலைத் திட்டம் தொடர்பாக சேலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறியதாவது:

ஒட்டுமொத்த மக்களின் நலன் கருதியே பசுமை வழிச்சாலைத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தியாவிலேயே 2-வது பசுமை வழிச்சாலை தமிழகத்தில் அமைய வாய்ப்பு கிடைத்துள்ளது. பசுமை வழிச்சாலை திட்டம் மூலம் யாரையும் பாதிப்புக்குள்ளாக்கும் நோக்கம் தமிழக அரசுக்கு இல்லை. 

வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது சாலை வசதி மிக முக்கியமாகிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பே வெளிநாடுகளில் தொழில்வளம் பெருகி 8 மற்றும் 10 வழிச் சாலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதுபோன்ற சூழ்நிலை தமிழகத்தில் ஏற்பட வேண்டும். இங்கும் தொழில்வளம் பெருக வேண்டும்.  

சேலம்-சென்னை சாலை திட்டத்துக்கு 11 சதவீதம் பேர்தான் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர், 89 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. முன்பு இதுபோன்ற திட்டங்கள் ஏற்படுத்தப்பட்ட போது குறைந்த அளவு மட்டுமே இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. ஆனால், தற்போது விவசாயிகளுக்கு தேவையான இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது. 

50 ஆண்டுகாலமாக காவிரிப் பிரச்னை உள்ளது. காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு பின்பற்றப்பட வேண்டும். அது தான் தமிழகத்தின் நிலைப்பாடு. 5 மாநில தேர்தலுக்கும் தமிழகத்துக்கும் சம்பந்தமில்லை. இங்கு தேர்தல் வரும்போது அதுகுறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவித்தார்.  

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/19/w600X390/eps.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/15/பசுமை-வழிச்சாலையால்-யாரையும்-பாதிப்புக்குள்ளாக்கும்-நோக்கம்-இல்லை-முதல்வர்-பழனிசாமி-3058582.html
3058581 தமிழ்நாடு குட்கா ஊழல் வழக்கு: சென்னை சிபிஐ அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா  DIN DIN Saturday, December 15, 2018 11:13 AM +0530 குட்கா ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா சென்னை சிபிஐ அலுவலகத்தில் இன்று ஆஜராகியுள்ளார். 

கடந்த 2016-இல் வருமானவரித் துறையினர் சென்னை செங்குன்றத்தில் உள்ள குட்கா கிடங்கியில் சோதனை நடத்தினர். அங்கு கிடைத்த ரகசிய டைரியில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சென்னை காவல்துறை ஆணையராக அப்போது இருந்த இப்போதைய டிஜிபி தே.க.ராஜேந்திரன், ஓய்வு பெற்ற டிஜிபி எஸ்.ஜார்ஜ் உள்ளிட்ட பலர் லஞ்சம் வாங்குவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.  

இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி தே.க.ராஜேந்திரன்,  ஓய்வு பெற்ற டிஜிபி ஜார்ஜ் ஆகியோர் வீடுகள் உள்பட 35 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி சோதனை செய்து, முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக, அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்தனர். 

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோருக்கு தில்லி சிபிஐ அதிகாரிகள் அழைப்பாணை அனுப்பியிருந்தனர். இதன்படி முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் இன்று ஆஜராகியுள்ளார்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/12/15/w600X390/ramana.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/15/குட்கா-ஊழல்-வழக்கு-சென்னை-சிபிஐ-அலுவலகத்தில்-முன்னாள்-அமைச்சர்-பிவிரமணா-3058581.html
3058578 தமிழ்நாடு குடிநீருக்கு கட்டணம் பெரும் கொள்ளை: மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்! ராமதாஸ் DIN DIN Saturday, December 15, 2018 10:45 AM +0530 நிலத்தடி நீருக்கும் கட்டணம் வசூலிப்பது மனிதநேயமற்ற மிகப்பெரிய கொள்ளை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
நிலத்திலிருந்து விவசாயம் தவிர்த்த பிற பயன்பாடுகளுக்காக எடுக்கப்படும் தண்ணீருக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. குடிநீர் உள்ளிட்ட வீட்டுப் பயன்பாட்டுக்கு எடுக்கப்படும் நிலத்தடி நீருக்கும் கட்டணம் வசூலிப்பது மனிதநேயமற்ற மிகப்பெரிய கொள்ளையாகும்.

நிலத்தடி நீர் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்குடன் இந்தக் கட்டணம் விதிக்கப்பட்டிருப்பதாகவும், வரும் ஜூன் மாதம் முதல் கட்டண முறை நடைமுறைக்கு வருவதாகவும் மத்திய அரசின் மத்திய நிலத்தடி நீர் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன்படி, தொழிற்சாலைகள், புட்டிகளில் குடிநீரை அடைக்கும் குடிசைத்தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவை நிலத்தடி நீரை எடுப்பதற்காக மத்திய அரசிடம் இருந்து மறுப்பின்மை சான்றிதழ் பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. வீடுகளில் குடிநீர் உள்ளிட்ட பல்வேறுத் தேவைகளுக்காக ஓர் அங்குலத்துக்கும் குறையாத விட்டம் கொண்ட குழாயில் தினமும் 20 கன மீட்டர் வரை நிலத்தடி நீரை எடுப்பவர்கள், ஒரு கன மீட்டருக்கு ரூ.2 வரை கட்டணம் செலுத்த வேண்டும்; வீடுகளும் மத்திய அரசிடம் மறுப்பின்மை சான்றிதழ் பெற வேண்டுமாம்.

இனி வரும் காலங்களில் நீருக்காக மூன்றாவது உலகப் போர் மூளும் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கப்படும் சூழலில் நிலத்தடி நீரை பாதுகாப்பது அவசியமானது. அதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து வகை நடவடிக்கைகளும் வரவேற்கத்தக்கவை. தொழிற்சாலை உள்ளிட்ட பயன்பாடுகளுக்காக எடுக்கப்படும் நிலத்தடி நீருக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதும் கூட ஏற்றுக்கொள்ளத்தக்கது தான். ஆனால், வீடுகளில் குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்காக எடுக்கப்படும் நிலத்தடி நீருக்கு கட்டணம் வசூலிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மக்களின் அடிப்படைத் தேவையான குடிநீரை இலவசமாக வழங்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை ஆகும். அவ்வாறு இருக்கும் போது குடிநீருக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது மக்கள் மீது நடத்தப்படும் பொருளாதாரத் தாக்குதல் ஆகும்.

நிலத்தடி நீருக்கு கட்டணம் அறிவித்துள்ள மத்திய அரசின் நிலத்தடி நீர் ஆணையம், இந்த அறிவிப்பால் மக்கள் கோபம் அடைவார்கள் என்பதை உணர்ந்து கொண்டு முன்கூட்டியே இரு விளக்கங்களை அளித்திருக்கிறது. முதலாவது நிலத்தடி நீருக்காக வசூலிக்கப்படும் கட்டணம் என்பது அதற்கான விலை அல்ல; மாறாக நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாப்பதற்கான செலவு என்பதாகும். இரண்டாவது வேளாண் தேவைக்காக பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்பதாகும். இரண்டுமே  மக்களை ஏமாற்றுவதற்காக அளிக்கப்படும் விளக்கம் ஆகும். நிலத்தடி நீருக்கான கட்டணம் என்ன பெயரில் வசூலிக்கப்பட்டாலும் அது அதற்கான விலை தான். ஹிட்லருக்கு புத்தர் என்று பெயர் மாற்றம் செய்தால், அவர் எப்படி ஆசைகளைத் துறந்து, அமைதியை நேசிப்பவர் ஆகி விட மாட்டாரோ, அதேபோல் தான் பரமாரிப்புச் செலவு என்று கூறுவதாலேயே அது நிலத்தடி நீருக்கான கட்டணம் இல்லாமல் போய்விடாது.

அடுத்ததாக, விவசாயத்திற்காக எடுக்கப்படும் நிலத்தடி நீருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்று அறிவிப்பை நினைத்து உழவர்களும், மற்றவர்களும் நிம்மதி அடைய முடியாது. இது ஓர் ஏமாற்று வேலை ஆகும். வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு கட்டணம் இல்லை என்பது தற்காலிக சலுகை மட்டுமே. அடுத்த சில ஆண்டுகளில் வேளாண் பயன்பாட்டுக்கான தண்ணீருக்கும் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்பது தான் மத்திய அரசின் திட்டம் ஆகும்.

நிலத்தடி நீருக்கு கட்டணம் வசூலிப்பது என்பது 1987-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டு 2012-ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட தேசிய தண்ணீர் கொள்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகும். இதற்காக 2012&ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தேசிய வரைவு தண்ணீர் கொள்கையில்,‘‘விவசாயத் தேவைக்கான தண்ணீருக்கு விலை நிர்ணயிக்கப்பட வேண்டும், தண்ணீர் வழங்கும் பொறுப்பில் இருந்து அரசு விலகிக் கொள்ள வேண்டும், தண்ணீர் வினியோகத்தை முழுக்க முழுக்க தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது. பா.ம.க. உள்ளிட்ட சில கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் தண்ணீர் கொள்கையை மத்திய அரசு  இறுதி செய்தது.

அதைத் தொடர்ந்து 2012-ஆம் ஆண்டு மே மாதம் தில்லியில் நடைபெற்ற தேசிய தண்ணீர் வார விழா தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்,‘‘நிலத்தடி நீர் இலவசமாகக் கிடைப்பதால்தான், அதன் மதிப்பு யாருக்கும் தெரியவில்லை. நீர் இலவசப் பொருளல்ல. அது ஒரு வணிகப் பொருள். உரிய விலை கொடுத்துத்தான் நிலத்தடி நீரை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். நிலத்தடி நீரை நாட்டுடைமையாக்கி, அதை தனியார் வசமோ அல்லது தனியாரோடு கூட்டுச் சேர்ந்தோ நிர்வாகம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். நிலத்தடி நீர் நல்ல விலைக்கு விற்பனை செய்யப்பட, தேசிய நீர் கொள்கை-2012 வடிவமைக்கப்படுகிறது’’ என்று கூறினார்.

2012 தேசிய நீர் கொள்கை, அதுதொடர்பான அப்போதைய பிரதமரின் வார்த்தைகளுக்குத் தான் இப்போது செயல்வடிவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த ஆண்டு நிலத்தடி  நீர்த்தேவை 2,53,00,000 கோடி லிட்டர் ஆகும். இதில் 10 விழுக்காடு, அதாவது 25,00,000 கோடி லிட்டர் மட்டுமே தொழிற்சாலைகள் மற்றும் குடிநீர் பயன்பாட்டுக்கானது ஆகும். மீதமுள்ள 2,28,00,000 கோடி லிட்டர் நிலத்தடி நீர் வேளாண் பயன்பாட்டுக்கானது ஆகும். நிலத்தடி நீரை நிர்வகிக்கும் உரிமை தனியாருக்கு வழங்கப்படும் போது, 90% நிலத்தடி நீர் இலவசமாக பயன்படுத்தப்படுவதை தனியார் நிறுவனங்கள் அனுமதிக்காது. அப்போது நிச்சயமாக வேளாண் பயன்பாட்டுக்கான தண்ணீருக்கும் கட்டணம் வசூலிக்கப்படும். எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும்  ஆபத்தை இப்போதே தடுக்க வேண்டும்.

எனவே, குடிநீர் உள்ளிட்ட வீட்டுப் பயன்பாடு, வேளாண் பயன்பாடு ஆகியவற்றுக்கான நிலத்தடி நீருக்கு எக்காலத்திலும், எந்த பெயரிலும் கட்டணம் வசூலிக்கப்படாது என அரசு உறுதியளிக்க வேண்டும். 2012&ஆம் ஆண்டின் தேசிய தண்ணீர் கொள்கையில் இந்த வாக்குறுதியை அரசு சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/12/21/w600X390/ramadoss1.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/15/குடிநீருக்கு-கட்டணம்-பெரும்-கொள்ளை-மத்திய-அரசு-திரும்பப்-பெற-வேண்டும்-ராமதாஸ்-3058578.html
3058568 தமிழ்நாடு கருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பு? DIN DIN Saturday, December 15, 2018 10:09 AM +0530  

முன்னாள் முதல்வர், மறைந்த  திமுக தலைவர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலை அண்ணா அறிவாலயத்தில் டிசம்பர் 16-ஆம் தேதி திறக்கப்படும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. புனரமைக்கப்பட்ட அண்ணாவின் சிலையும் அதே நாளில் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதியின் சிலையைத் திறந்து வைக்க வருமாறு ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியாவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தில்லிக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தார். 

இதையடுத்து, அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க சென்னைக்கு வரும் சோனியா, மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.

மேலும் இந்த விழாவுக்கு நடிகர் ரஜினிகாந்த், நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆகியோருக்கு திமுக மூத்த நிர்வாகிகள் நேரில் சென்று அழைப்பு விடுத்தனர்.

இந்நிலையில், கருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல முக்கியத் தலைவர்கள் பங்கேற்கும் இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதனிடையே நடிகர் கமல்ஹாசன் இதில் பங்கேற்பது தொடர்பாக இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியாகாதது குறிப்பிடத்தக்கது.  

]]>
Rajinikanth, karunanidhi, stalin, கருணாநிதி, மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/12/12/w600X390/rajini.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/15/கருணாநிதி-சிலை-திறப்பு-விழாவில்-நடிகர்-ரஜினிகாந்த்-பங்கேற்பு-3058568.html
3058511 தமிழ்நாடு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ-க்கள் சசிகலாவை சந்திக்க திட்டம்? DIN DIN Saturday, December 15, 2018 08:14 AM +0530  

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விலகி, மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்தார்.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீதான ஈர்ப்பால் திமுகவில் இணைந்தேன். தமிழகத்தின் அடுத்த முதல்வராக மு.க.ஸ்டாலின் வருவது உறுதி. திமுகவில் நான் இணைந்தது அந்தத் தலைமைக்கு (டிடிவி தினகரன்) ஆச்சரியமாக இருக்கலாம் என்று தெரிவித்தார். 

இந்நிலையில், டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக-வில் இணைந்து செயல்பட்டு வரும் தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட தகுதி நீக்கம் செய்யப்பட்ட 9 எம்எல்ஏ-க்களும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவை வரும் திங்கள்கிழமை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/1/w600X390/SASIKALA.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/15/தகுதி-நீக்கம்-செய்யப்பட்ட-எம்எல்ஏ-க்கள்-சசிகலாவை-சந்திக்க-திட்டம்-3058511.html
3058508 தமிழ்நாடு விரைவில் தினகரன் கூடாரம் காலியாகும்: அரசு தலைமை கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன் அரியலூர் DIN Saturday, December 15, 2018 08:09 AM +0530 விரைவில் தினகரன் அணி கூடாரம் காலியாகும் என்றார் அரசு தலைமை கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன்.

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசியது: வரும் மக்களவைத் தேர்தலில் கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் வகையில், அனைவரும் அயராது பாடுபட வேண்டும்.

செந்தில்பாலாஜி எப்போது எந்தக் கட்சிக்கு செல்வார் என யாராலும் சொல்ல முடியாது. விரைவில் தினகரன் கூடாரம் காலியாகும் என்றார் அவர். ஜயஙகொண்டம் எம்எல்ஏ., ஜெ.கே.என். ராமஜெயலிங்கம், அதிமுக நகரச் செயலர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/12/15/w600X390/sr.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/15/விரைவில்-தினகரன்-கூடாரம்-காலியாகும்-3058508.html
3058510 தமிழ்நாடு அதிமுகவில் சேர செந்தில்பாலாஜி முயற்சி செய்தார்: அமைச்சர் பி. தங்கமணி  நாமக்கல் DIN Saturday, December 15, 2018 08:08 AM +0530 அதிமுகவில் சேர செந்தில் பாலாஜி முயற்சி செய்தார் என்றும் அவரை சேர்த்துக் கொள்ள கட்சி தலைமை மறுத்துவிட்டது என்றும் மின்சாரம், மதுவிலக்கு, ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி தெரிவித்தார்.

நாமக்கல்லில் அவர் செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:- முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி திமுகவில் இருந்துதான் அதிமுகவுக்கு வந்தார். மீண்டும் திமுகவில் சேர்ந்துவிட்டார். அவர் திமுகவில் இருக்கும்போது ஒன்றியக் குழு உறுப்பினராக இருந்தார்.

இப்போது அவர் வெறும் உறுப்பினராகத்தான் இருக்கப் போகிறார். திமுகவில் அந்த சிறப்புதான் அவருக்குக் கிடைக்கும். அமமுகவில் இருந்து செந்தில்பாலாஜி விலகியது குறித்து டிடிவி.தினகரன் பேசும்போது, முலாம் பூசப்பட்ட தங்கம் அடையாளம் காணப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

அமமுகவில் இருக்கிறவர்கள் எல்லாம் முலாம் பூசப்பட்டவர்கள்தான். அதிமுகவில் அனைவரும் சொக்கத்தங்கங்கள். செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்து விலகி 2 ஆண்டுகள் ஆகி விட்டன. திமுக, மதிமுக, அதிமுக, அமமுக இப்போது மீண்டும் திமுக என்று பல கட்சிகள் மாறியுள்ளார்.

அதிமுகவில் இருந்து ஒரு சாதாரண தொண்டர்கூட திமுகவுக்குச் செல்லவில்லை. அமமுகவில் இருந்துதான் திமுகவுக்கு சென்றுள்ளனர். அதிமுகவையும், அமமுகவையும் இணைக்கும் முயற்சி இல்லை. டி.டி.வி.தினகரனைத் தவிர்த்து வேறு யார் வந்தாலும் சேர்த்துக் கொள்வோம் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறியிருக்கிறார்.

அதிமுகவில் சேர செந்தில் பாலாஜி முயற்சி செய்தார். ஆனால், அவரை சேர்த்துக் கொள்ள கட்சி தலைமை மறுத்து விட்டது. மு.க. ஸ்டாலின் இந்த ஆட்சி நீடிக்காது என கடந்த 2 ஆண்டுகளாகக் கூறிகொண்டு தான்இருக்கிறார். இன்னும் 2 ஆண்டுகளுக்கும் அதிமுக ஆட்சியில் இருக்கும். அடுத்து வரும் தேர்தலிலும் அதிமுகவே வெற்றி பெறும் என்றார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/10/w600X390/thangamani.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/15/அதிமுகவில்-சேர-செந்தில்பாலாஜி-முயற்சி-செய்தார்-அமைச்சர்-பி-தங்கமணி-3058510.html
3058509 தமிழ்நாடு இன்று நாமக்கல்லில் காணொலி காட்சி மூலம் உரையாடுகிறார் மோடி: தமிழிசை செளந்தரராஜன் பங்கேற்பு நாமக்கல் DIN Saturday, December 15, 2018 08:06 AM +0530 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது எப்படி? என்பது குறித்து ஆலோசனை வழங்க, நிர்வாகிகளிடம் கருத்துக் கேட்பதற்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி இன்று உரை நிகழ்த்த உள்ளார்.

தமிழகத்தில் 5 நாடாளுமன்ற தொகுதிகளில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாமக்கல்லில் நடைபெறும் நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பங்கேற்கிறார். நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பாஜக வியூகம் வகுத்து வருகிறது. இதனால், நாடாளுமன்றத் தேர்தலில் அதிக கவனம் செலுத்த பாஜக முடிவு செய்துள்ளது.

அதனடிப்படையில், ஒவ்வொரு மாநிலத்திலும் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பேசி தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து கருத்துகளை பரிமாற முடிவு செய்துள்ளார். இதற்காக பல்வேறு மாநில பாஜகவினருடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி பேசி வருகிறார். அப்போது தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்கள் குறித்தும், தொண்டர்களை உற்சாகப்படுத்தி பிரசாரத்தில் ஈடுபடுவது குறித்தும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் உரையாடுகிறார்.

தமிழகத்தில் சேலம், கோவை, நாமக்கல், கன்னியாகுமரி, நீலகிரி ஆகிய 5 தொகுதிகளில் இருந்து தேர்தல் பூத் கமிட்டி அளவிலான நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டத்துக்கு அந்தந்தத் தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் பொம்மைக்குட்டைமேடு, கவின் மஹாலில் மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பங்கேற்கிறார். நிகழ்ச்சியில் பங்கேற்கும் நிர்வாகிகள், தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து தங்கள் கருத்துகளை பிரதமர் மோடியிடம் தெரிவிக்க உள்ளனர்.

மேலும் அவர் தேர்தல் பணி குறித்து நிர்வாகிகளுக்கு விளக்கி பேசுவார் என நாமக்கல் மாவட்ட பாஜக தலைவர் என்.பி. சத்தியமூர்த்தி தெரிவித்தார். 5 மாநிலத் தேர்தலில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்ட 5 தொகுதி நிர்வாகிகளிடம் மோடி காணொலி காட்சி மூலம் உரையாட உள்ளது அனைத்து அரசியல் கட்சியினரிடையேயும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/5/w600X390/bjp.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/15/இன்று-நாமக்கல்லில்-காணொலி-காட்சி-மூலம்-உரையாடுகிறார்-மோடி-தமிழிசை-செளந்தரராஜன்-பங்கேற்பு-3058509.html
3058507 தமிழ்நாடு சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் DIN DIN Saturday, December 15, 2018 08:03 AM +0530  

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 5 காசுகள் உயர்ந்தும், டீசல் விலை 8 காசுகள் குறைந்தும் விற்பனையாகிறது. 

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்த நிலையில் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து குறைந்து வந்தது. இந்நிலையில், 5 மாநில பேரவைத் தேர்தல் முடிவுக்குப் பின்னர் பெட்ரோல், டீசல் விலையில் கடந்த 2 தினங்களாக குறைந்தும், அதிகரித்தும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. 

இதையடுத்து வெள்ளிக்கிழமை விலையில் இருந்து பெட்ரோல் விலை 5 காசுகள் அதிகரித்தும், டீசல் விலை 8 காசுகள் குறைந்தும் விற்பனையாகிறது.

சென்னையில் சனிக்கிழமை நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 72.99 ஆகவும், டீசல் விலை ஒரு லிட்டர் ரூ. 68.10 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/9/w600X390/petrolbunk1.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/15/சென்னையில்-இன்றைய-பெட்ரோல்-டீசல்-விலை-நிலவரம்-3058507.html
3058506 தமிழ்நாடு புயலை வைத்து அரசியல் செய்ய நினைத்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள் புதுக்கோட்டை DIN Saturday, December 15, 2018 08:01 AM +0530 கஜா புயலை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய நினைத்தால் மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஆர். பி. உதயகுமார்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கிய அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: புயல் தாக்கத்தில் இருந்த பொதுமக்களுக்கு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திய அரசாக தமிழக அரசு இருந்து வருகிறது.

புயலை வைத்து எதிர்க்கட்சிகள் தமிழகத்தை போராட்டக்களமாக மாற்ற நினைத்தால் மக்கள் அவர்களை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களோடு மக்களாக களத்தில் நின்று, மீட்புப் பணிகளைத் துரிதமாக செயல்பட்டவர் அமைச்சர் விஜயபாஸ்கர்.

அவர் மேற்கொண்ட நடவடிக்கையால்தான், புயல் பாதித்த மாவட்டங்களில் தொற்றுநோய்ப் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. தமிழக அரசுக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு மத்திய அரசு வழங்கிய நிதி 15 ஆவது நிதிக் குழுவின் நிலுவை நிதியாகும். கஜா புயலுக்காக மத்திய அரசு இதுவரை எவ்வித நிதி உதவியையும் தரவில்லை.

உரிய நிதியைத் தரும் என்று தமிழக அரசு நம்பிக்கையோடு உள்ளது. மாநில அரசு புயல் நிவாரண நிதியாக இதுவரை ரூ.1,104 கோடி வழங்கியுள்ளது. விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க இன்னமும் ரூ.2500 கோடி தேவைப்படுகிறது. நிவாரணப் பணிகளை அரசு காலதாமதம் செய்யவில்லை.

நிவாரணப் பணியை முழுமையாக முடிக்க கால அவகாசம்தான் கேட்கிறோம். இது தேர்தல் களமோ அல்லது அரசியல்களமோ அல்ல. நிவாரணப் பணிகள் முழுமையாக முடிந்த பிறகு எந்த விவாதத்துக்கும் நாங்கள் தயாராக உள்ளோம். எதிர்க்கட்சிகள் இதை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்றார் அமைச்சர் உதயகுமார்.

99.92 சதவிகிதம் மின் இணைப்பு: புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் பாதித்தப்பட்ட பகுதிகளில் 99.92 சதவிகிதம் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மருத்துவர் சி. விஜயபாஸ்கர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/16/w600X390/udhayakumar.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/15/புயலை-வைத்து-அரசியல்-செய்ய-நினைத்தால்-மக்கள்-ஏற்க-மாட்டார்கள்-3058506.html
3058505 தமிழ்நாடு துணை முதல்வர் மகன் மீது பொய் புகார்: காவல் ஆணையரிடம் அதிமுகவினர் மனு திருநெல்வேலி DIN Saturday, December 15, 2018 07:49 AM +0530 தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் மீது ஆட்சியரிடம் பொய் புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருநெல்வேலி மாநகர காவல் ஆணையரிடம் அதிமுக மாநகர் மாவட்டச் செயலர் தச்சை கணேசராஜா மனு அளித்தார்.

இது தொடர்பாக அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 10ஆம் தேதி பாலாமடையைச் சேர்ந்த ஒருவர் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். அதில், சீவலப்பேரியில் இருந்து குப்பக்குறிச்சி செல்லும் பிரதான சாலையில் தமிழக துணை முதல்வர் மகன் மற்றும் அதிமுக பிரமுகர்கள் அடியாள்களின் உதவியோடு ஆற்று மணலை திருடி கேரளத்துக்கு விற்பனை செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் மணல் கடத்தலை தட்டிக் கேட்பவர்களை ரவுடிகள் மூலம் மிரட்டுவதாகவும் பொய்யான புகாரை அளித்துள்ளார். துணை முதல்வரின் மகன் மற்றும் அதிமுக நிர்வாகிகளின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே ஆதாரமின்றி பொய் புகார் அளித்தவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/30/w600X390/ops.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/15/துணை-முதல்வர்-மகன்-மீது-பொய்-புகார்-காவல்-ஆணையரிடம்-அதிமுகவினர்-மனு-3058505.html
3058504 தமிழ்நாடு கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி மதுரை DIN Saturday, December 15, 2018 07:45 AM +0530 கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ என்ற திரைப்படத்துக்கு தடை கோரும் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மதுரையைச் சேர்ந்த சக்கரவர்த்தி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தயாரிப்பாளர் சங்கத்தில் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ என்ற பெயரில் படத் தலைப்பு பதிவு செய்து வைத்திருந்தேன். இந்தப் படத்தின் கதை மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரை கதாநாயகனாக கொண்டு, அவர் வெளிநாட்டுக்குச் சென்று ஆராய்ச்சிகள் செய்து சாதனை படைப்பது போல இருக்கும்.

இந்நிலையில், வேலு பிலிம்ஸ் ஐசரி கணேஷ் என்னை அணுகி இப்படத்தின் தலைப்பு தனக்கு வேண்டும் எனவும், இதற்காக ரூ. 1.5 லட்சம் முன் பணமாகவும், மீதி பணத்தை பின்னர் தருவதாகவும் கூறினார். இதற்கு நான் சம்மதம் தெரிவித்தேன். இந்நிலையில், தற்போது இப்படத்தின் (அனிமேஷன் படம்) தயாரிப்பு முடிந்து, படம் வெளியிடப்பட உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் கதை குறித்து தயாரிப்பாளர்களிடம் கேட்டபோது, அலங்காநல்லூரில் இருந்து 6 இளைஞர்கள் சென்னை வந்து, ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக போராட்டம் நடத்துவது போல அமைத்துள்ளதாகத் தெரிவித்தனர்.

இது எனது கதைக்கு எதிரானது. எனது கதை முழுக்க எம்.ஜி.ஆர். அவர்களின் கனவு தொடர்பானது. ஆனால் இந்தப் படம், எனது கதைக்கு எதிராக அமைந்துள்ளதால் இப்படத்துக்கு தணிக்கைக் குழு சான்று அளிக்க தடை விதிக்கவேண்டும் எனக் கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், இதுகுறித்து மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தீர்வு காண உத்தரவிட்டு, வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/12/15/w600X390/court.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/15/கிழக்கு-ஆப்பிரிக்காவில்-ராஜூ-திரைப்படத்துக்கு-தடை-கோரிய-மனு-தள்ளுபடி-3058504.html
3058503 தமிழ்நாடு ஹெச்.ராஜாவை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் மதுரை DIN Saturday, December 15, 2018 07:41 AM +0530 பாஜக தேசியச் செயலர் எச்.ராஜாவை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

மதுரை பாண்டிகோயில் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனியார் அறக்கட்டளை நிகழ்ச்சியில் தொல்.திருமாளவன் பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்துள்ளதை விடுதலை சிறுத்தைகள் இயக்கம் வரவேற்கிறது.

இந்த நிகழ்வு திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட தோழமை கட்சிகளின் ஜனநாயக சக்திக்கு வலு சேர்க்கும் விதமாக உள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து ஜாதிய நோக்கோடு தீண்டாமை உணர்வோடு பேசி வரும் பாஜக தேசியச் செயலர் எச்.ராஜாவை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். கலப்பு திருமணங்கள் காலம் காலமாக நடந்து வருகிறது.

இதற்கும் விடுதலை சிறுத்தைகளுக்கும் என்ன தொடர்பு உள்ளது. ஜாதிய தீண்டாமையை, மதவாதத்தை உயர்த்திப்பிடிக்கும் கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற முடியாது என்பதை 5 மாநில தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி தலைமையில் மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகள் வெற்றிபெறும்.

திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது பெற்றுள்ளார். அவருக்கு விடுதலை சிறுத்தைகள் இயக்கம் வாழ்த்துக்களை தெரிவிக்கிறது என்றார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/26/w600X390/thirumaa.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/15/ஹெச்ராஜாவை-வன்கொடுமை-தடுப்புச்-சட்டத்தில்-கைது-செய்ய-வேண்டும்-3058503.html
3058441 தமிழ்நாடு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: இன்று புயலாக மாறுகிறது DIN DIN Saturday, December 15, 2018 04:28 AM +0530 தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து, சனிக்கிழமை புயலாகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து தீவிர புயலாகி, ஓங்கோல்-காக்கிநாடா இடையே வரும் 17-ஆம் தேதி கரையைக் கடக்க உள்ளது. 
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் வெள்ளிக்கிழமை கூறியது: 
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வியாழக்கிழமை நிலவிவந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. இது வெள்ளிக்கிழமை சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 930 கி.மீ. தொலைவிலும், மசூலிப்பட்டினத்துக்கு  தென்கிழக்கே சுமார் 1,090 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது தற்போது மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில்  நகர்கிறது.  சனிக்கிழமை புயலாக வலுப்பெறும். அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளது. 
இந்தப் புயல் வரும் 17-ஆம் தேதி பிற்பகலில் ஆந்திர கடற்கரைப் பகுதியில் ஓங்கோல்-காக்கிநாடாவுக்கு இடையே கரையைக் கடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வடதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில்  சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மழை பெய்யக் கூடும்.  
55 கி.மீ. வேகத்தில் காற்று: தரைக் காற்று, மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். தென், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்  மீனவர்கள் செல்ல வேண்டாம்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/18/w600X390/cyclone.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/15/ஆழ்ந்த-காற்றழுத்த-தாழ்வு-மண்டலம்-இன்று-புயலாக-மாறுகிறது-3058441.html
3058429 தமிழ்நாடு மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு:  புதுவை பேரவையில் தீர்மானம் DIN DIN Saturday, December 15, 2018 04:24 AM +0530 மேக்கேதாட்டு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து, புதுவை சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுவை சட்டப்பேரவையில் தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:
 புதுவை மாநில மக்களின் நலனுக்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு மாறாகவும் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு என்ற இடத்தில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு புதுவை சட்டப்பேரவை கண்டனத்தையும் எதிர்ப்பையும் பதிவு செய்கிறது. மேலும், அணை அமைப்பதற்கான பூர்வாங்கத் திட்ட அறிக்கை தயார் செய்வதற்கு கர்நாடக அரசுக்குத் தடையில்லாச் சான்றிதழ் வழங்கிய மத்திய நீர்வள ஆணையத்தின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.
திட்ட அறிக்கை தயார் செய்வதற்கு வழங்கப்பட்ட தடையில்லாச் சான்றிதழை மத்திய நீர்வள ஆணையம் உடனடியாக திரும்பப் பெற மத்திய அரசு உத்தரவிடக் கோரியும், கர்நாடக அரசு இந்த விவகாரத்தில் மேலும் தொடர் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் தடை விதித்து மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். 
மேலும், மேக்கேதாட்டுவில் கர்நாடக அரசு, அணை ஏதும் கட்டாமல் தடுக்கவும், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, புதுவைக்கு வழங்கப்பட்ட நீராதார உரிமைகளைப் பாதுகாக்கவும், புதுவை அரசு நிர்வாக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஆதரவு அளிப்பது என்ற இந்த சட்டப் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தை முன்மொழிகிறேன் என்றார் முதல்வர் நாராயணசாமி.
இதைத்தொடர்ந்து, தீர்மானத்தின் மீது உறுப்பினர்களின் கருத்துகளை பதிவு செய்ய பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் அனுமதித்தார். பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் வி.சாமிநாதன், கே.ஜி.சங்கர், எஸ்.செல்வகணபதி ஆகியோர் பேசுகையில், இந்த விவகாரத்தில் மத்திய அரசை விமர்சிக்காமல், கர்நாடக அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு முதல்வர் நாராயணசாமி, பொதுப்பணித் துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் ஆகியோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
தீர்மானம் நிறைவேறியது: இதைத்தொடர்ந்து, தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆளும் காங்கிரஸின் கூட்டணி கட்சியான திமுக, எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ்,  அ.தி.மு.க.,  மாஹே தொகுதி சுயேச்சை உறுப்பினர் ராமச்சந்திரன், நியமன எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் பேசினர்.
இதையடுத்து, அந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக  பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் அறிவித்தார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/24/w600X390/pondy.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/15/மேக்கேதாட்டு-அணைக்கு-எதிர்ப்பு--புதுவை-பேரவையில்-தீர்மானம்-3058429.html
3058260 தமிழ்நாடு அன்பழகன் பிறந்த நாளில் சிறப்பு நிவாரண முகாம்கள்: ஸ்டாலின் வேண்டுகோள் DIN DIN Saturday, December 15, 2018 03:04 AM +0530 தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் பிறந்த நாளான டிசம்பர் 19-இல் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பு நிவாரண முகாம்களை நடத்த வேண்டும் என்று தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனின் பிறந்த நாள் டிசம்பர் 19-இல் வருகிறது. கருணாநிதியைவிட வயதில் மூத்தவர் அவர். பெரியாரின் வாழ்நாளையும் கடந்து வாழ்பவர்.  கஜா புயலின் தாக்கத்தாலும், தனது உடல்நிலை கருதியும் பிறந்த நாள் விழாவை முழுமையாகத் தவிர்த்திட விரும்புவது குறித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். 
திமுகவின் தலைவர் என்ற முறையில் என்னிடமும் அதனையே வேண்டுகோளாகவும் விடுத்திருந்தார்.
திமுகவினர் ஏற்கெனவே கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், க.அன்பழகனின் பிறந்த நாளான டிசம்பர்-19  அன்று சிறப்பு நிவாரண முகாம்கள் மூலம் நல உதவிகளை செய்திட வேண்டும். நேரில் வாழ்த்து தெரிவிப்பது என்ற பெயரில் உடல்நலம் குன்றியிருக்கும் க.அன்பழகனைச் சிரமப்படுத்த வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/12/13/w600X390/stalin.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/15/அன்பழகன்-பிறந்த-நாளில்-சிறப்பு-நிவாரண-முகாம்கள்-ஸ்டாலின்-வேண்டுகோள்-3058260.html
3058259 தமிழ்நாடு மாநிலக் கட்சிகளின் கூட்டணி அமைய வேண்டும்: நெடுமாறன் DIN DIN Saturday, December 15, 2018 02:57 AM +0530 மக்களவைத் தேர்தலில் மாநிலக் கட்சிகளின் கூட்டணி அமைய வேண்டும் என்று தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
2018-ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற 5 மாநிலத் தேர்தல்களின் முடிவுகள் ஓர்  உண்மையை உணர்த்தியிருக்கிறது. 
காங்கிரஸ் - பாஜக ஆகிய இரு அகில இந்தியக் கட்சிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியின் முடிவே இத்தேர்தல் என்று கருதினால் அது தவறானது. மாநிலக் கட்சிகளின் உதவியின்றி எந்த அகில இந்தியக் கட்சியும் தேர்தலில் வெற்றிபெற முடியாது என்ற உண்மையை மட்டுமல்ல, அகில இந்தியக் கட்சிகளை மாநிலக் கட்சிகளால் வீழ்த்தவும் முடியும் என்ற உண்மையையும் இத்தேர்தல் உணர்த்தியிருக்கிறது.
தெலங்கானா மாநிலத்தில் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியும், மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணிக் கட்சியும் அண்மையில் நடந்த சட்டப் பேரவைத்  தேர்தலில் பெற்ற வெற்றிகள் இந்த உண்மையை எடுத்துக் காட்டியுள்ளன. மேற்கண்ட இரு மாநிலங்களிலும் காங்கிரஸூம், பாஜகவும் வலுவான கூட்டணிகளை அமைத்துப் போட்டியிட்ட போதிலும், அவற்றை மாநிலக் கட்சிகள் தோற்கடித்து பெரும் வெற்றி 
பெற்றுள்ளன. காங்கிரஸ் வெற்றி பெற்ற மூன்று மாநிலங்களிலும் மாநிலக் கட்சிகள் வலிமையாக இல்லாத மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே,  2019-ஆம் ஆண்டில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் இந்தியாவை உண்மையான கூட்டாட்சி நாடாக உருவாக்கும் தேர்தலாக அமைய உள்ளது. மாநிலக் கட்சிகள் தொலைநோக்குப் பார்வையுடனும், கொள்கை உறுதியுடனும் இயங்கினால் மேற்கண்ட கோட்பாட்டிலும், தேர்தலிலும் வெற்றிபெற முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2014/5/23/2/w600X390/pala_nedumaran.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/15/மாநிலக்-கட்சிகளின்-கூட்டணி-அமைய-வேண்டும்-நெடுமாறன்-3058259.html
3058258 தமிழ்நாடு குட்கா ஊழல்: அமைச்சருக்கு சிபிஐ அழைப்பாணை DIN DIN Saturday, December 15, 2018 02:57 AM +0530 குட்கா ஊழல் தொடர்பான வழக்கு விசாரணையில் ஆஜராகுமாறு தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோருக்கு தில்லி சிபிஐ அதிகாரிகள் அழைப்பாணை அனுப்பியுள்ளனர்.
  கடந்த 2016-இல் வருமானவரித் துறையினர் சென்னை செங்குன்றத்தில் உள்ள  குட்கா கிடங்கியில் சோதனை நடத்தினர். அங்கு கிடைத்த ரகசிய டைரியில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சென்னை காவல்துறை ஆணையராக அப்போது இருந்த இப்போதைய டிஜிபி தே.க.ராஜேந்திரன், ஓய்வு பெற்ற டிஜிபி எஸ்.ஜார்ஜ் உள்ளிட்ட பலர் லஞ்சம் வாங்குவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
 இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி தே.க.ராஜேந்திரன்,  ஓய்வு பெற்ற டிஜிபி ஜார்ஜ் ஆகியோர் வீடுகள் உள்பட 35 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி சோதனை செய்து, முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக, அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனிடம் சிபிஐ அதிகாரிகள்  விசாரணை செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, தில்லி சிபிஐ அதிகாரிகள் அழைப்பாணை அனுப்பியுள்ளனர்.
இதன்படி, இருவரும் டிசம்பர் 15-ஆம் தேதி (சனிக்கிழமை)  சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும். இவர்களிடம் விசாரணை நடத்த தில்லி சிபிஐ அதிகாரிகள் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.

]]>
http://www.dinamani.com/tamilnadu/2018/dec/15/குட்கா-ஊழல்-அமைச்சருக்கு-சிபிஐ-அழைப்பாணை-3058258.html
3058257 தமிழ்நாடு ஸ்டாலின் மீதான ஈர்ப்பால் திமுகவில் இணைந்தேன்: செந்தில் பாலாஜி பேட்டி DIN DIN Saturday, December 15, 2018 02:56 AM +0530 தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீதான ஈர்ப்பால் திமுகவில் இணைந்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். தொண்டர்களை அரவணைத்துச் செல்லும் சிறந்த தலைவராக ஸ்டாலினை பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி விலகி, மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்தார்.
 வெள்ளிக்கிழமை பகல் 12.05 மணியளவில் தனது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயம் வந்த செந்தில் பாலாஜி,  மு.க.ஸ்டாலினைச் சந்தித்து பொன்னாடை போர்த்தி திமுகவில் சேர்ந்தார். திமுகவின் அடிப்படை உறுப்பினர் படிவத்திலும் கையெழுத்திட்டுக் கொடுத்தார்.  அதன் பின், சுமார் 50 நிமிஷங்களுக்கு மேலாக அரசியல் விவகாரங்கள் குறித்து  ஸ்டாலினுடன் ஆலோசித்தார். திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.ராசா உள்பட முக்கிய நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஓர் இயக்கத்தில் (அமமுக) பொறுப்பேற்று செயல்பட்டு வந்தேன். மு.க.ஸ்டாலின் மீதான ஈர்ப்பால் திமுகவின் அடிப்படை உறுப்பினராகி உள்ளேன். தொண்டர்களை அரவணைத்துச் செல்லும் சிறந்த தலைவராக மு.க.ஸ்டாலினைப் பார்க்கிறேன். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான ஆட்சி, தமிழக உரிமைகளை விட்டுக் கொடுக்கும் மக்கள் விரோத அரசாக உள்ளது. மத்திய அரசுக்கு அடிபணிந்து செல்கிறது.
ஆனால், தமிழக உரிமைகளை மீட்டெடுக்க மு.க.ஸ்டாலின் போராடி வருகிறார்.  அவரது கரத்தை வலுப்படுத்துவதற்காகவே திமுகவில் இணைந்தேன்.
இருள் அகற்றி ஒளி தருவது சூரியன். என் மனதில் இருந்த இருளை அகற்றி எனக்கு புதிய வழியைத் திமுக தந்துள்ளது. மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது வந்தாலும் இபிஎஸ், ஓபிஎஸ் மக்கள் விரோத ஆட்சியை மக்கள் தூக்கி எறிவார்கள்.  தமிழகத்தின் அடுத்த முதல்வராக மு.க.ஸ்டாலின் வருவது உறுதி.
டிடிவி தினகரனுடன் என்ன கருத்து வேறுபாடு எனக் கேட்கிறீர்கள். ஒரு தலைமையின் கீழ் செயல்பட்டு வந்துள்ளோம். அந்த தலைமை குறித்து பேசுவது சரியான மரபாக, நாகரிகமாக இருக்காது. திமுகவில் நான் இணைந்தது அந்தத் தலைமைக்கு (டிடிவி தினகரன்) ஆச்சரியமாக இருக்கலாம். 
நவம்பர் 14-ஆம் தேதி தருமபுரியில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில்தான் அந்தத் தலைமையை கடைசியாகச் சந்தித்தேன். அதன் பிறகு ஒரு மாதமாக எந்தக் களப் பணியிலும் பங்கேற்கவில்லை.
கரூர் மாவட்ட நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி திமுகவில் இணைந்துள்ளேன்.
மேல்முறையீடு தேவையில்லை: 18 எம்எல்ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்ததும் மேல்முறையீடு வேண்டாம் என்று முதலில் கூறியது நான்தான். மேலும்  மேல்முறையீடு செய்தால் தீர்ப்பு வருவதற்கு காலதாமதம் ஆகும். அதனால் வேண்டாம். தேர்தலைச் சந்தித்து, வெற்றிபெற்று ஆட்சியைக் கவிழச் செய்வோம் என்றும் வலியுறுத்தினேன்.
டிடிவி தினகரன் தொடர்பான கேள்விகளுக்கு வேறொரு சந்தர்ப்பத்தில்  பதில் அளிக்கிறேன்.
கரூர் மாவட்டத்தில் திமுகவில் ஏற்கெனவே முக்கிய நிர்வாகிகள் உள்ளனர். அவர்களோடு இணைந்து பணியாற்றுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை.  தொண்டர்களை அரவணைத்துச் செல்பவராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.  கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்கு தேர்தல் வந்தால் யார் போட்டியிட்டாலும் துணைநிற்பேன். ஒருவேளை ஸ்டாலின் விரும்பினால் அத்தொகுதியில் போட்டியிடத் தயாராக இருக்கிறேன் என்றார். 
அரசியல் பயணம்: கரூரில் 2 முறை ஒன்றியக் கவுன்சிலராக நின்று வெற்றிபெற்றுள்ளார். முதல் முறை சுயேச்சையாகப் போட்டியிட்டுள்ளார். அதன்பிறகு அதிமுகவில் இணைந்து செயல்பட்டார். 2006, 2011-இல் கரூர் தொகுதியிலிருந்தும், 2016-இல் அரவக்குறிச்சி தொகுதியிலிருந்தும் வெற்றிபெற்றார். 2011-ஆம் ஆண்டிலிருந்து 4 ஆண்டுகள் போக்குவரத்துத் துறை அமைச்சராகச் செயல்பட்டுள்ளார். 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்பட்டு வந்தார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களில்  செந்தில்பாலாஜியும் ஒருவர்.  அதைத் தொடர்ந்து தற்போது திமுகவில் இணைந்துள்ளார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/12/15/w600X390/sentil-2.jpg சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அக்கட்சியில் இணைந்த  முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. http://www.dinamani.com/tamilnadu/2018/dec/15/ஸ்டாலின்-மீதான-ஈர்ப்பால்-திமுகவில்-இணைந்தேன்-செந்தில்-பாலாஜி-பேட்டி-3058257.html
3058256 தமிழ்நாடு சேலம் தலைவாசல் பகுதியில் 800 ஏக்கரில் சர்வதேச தரத்தில் கால்நடை ஆராய்ச்சி மையம் DIN DIN Saturday, December 15, 2018 02:56 AM +0530 சேலம் தலைவாசல் கூட்டு சாலையில் 800 ஏக்கரில் சர்வதேச தரத்திலான கால்நடை ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட உள்ளது என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

சேலத்தை அடுத்த வீரகனூர் பேரூராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் அவர்  பேசியது:

வீரகனூர் பேரூராட்சியில் 21 அரசுத் துறைகள் மூலமாக 27,092 பேருக்கு ரூ.94.55 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்,   ரூ.35.41 கோடி மதிப்பில் 31 புதிய திட்ட பணிகள் துவக்க விழா,   ரூ.1.55 கோடியில் முடிவுற்ற பணிகள் துவக்க விழா,

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழாவில் ரூ.131.51 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

சேலம் மாவட்டம் தலைவாசல் கூட்டு சாலையில் உலகத்தரத்தில் 800 ஏக்கரில் கால்நடை ஆராய்ச்சி மையம் பல நூறு கோடியில் தொடங்கப்பட உள்ளது. 

இம்மையத்தில் விவசாயிகளுக்கு கால்நடைகளை எப்படி வளர்ப்பது, எப்படி பராமரிப்பது என்பது பற்றி பயிற்சியும்,  செயல்விளக்கமும் அளிக்கப்படும். இதில் கால்நடை,  மீன்,  பன்றி,  ஆடு வளர்ப்பு ஆராய்ச்சி செய்யப்படும். மேலும் உயர் ரக கால்நடைகள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படும் .

சேலம் மாவட்டத்திலேயே கெங்கவல்லி தொகுதியில்தான் அதிக பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும் இங்கு பாலங்கள்,  தடுப்பணைகள் கட்டும்போது மற்ற தொகுதிக்கு முன்மாதிரியாகத் திகழும்.

அதிமுக அரசில் எந்தத் திட்டமும் நிறைவேற்றப்படவில்லை;  நன்மைகள் நடக்கவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். இது செயல்படுகிற அரசு என்பதற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவே சான்றாக உள்ளது.

நதிநீர் பிரச்னைகளில் திமுக செய்தது என்ன? 

மத்தியில் பாஜக ஆட்சியின்போது,  முரசொலி மாறன்  மத்திய அமைச்சராக இருந்தார். அப்போது எந்த திட்டங்களையும் தமிழகத்துக்குச் செய்யவில்லை. பின்னர் பாஜக வலுவிழந்த பிறகு காங்கிரஸ் கூட்டணிக்கு மாறி திமுகவினர் அமைச்சர் பதவிகளைப் பெற்றனர். திமுகவுக்கு கொள்கையோ, கோட்பாடோ கிடையாது.

நதிநீர் பிரச்னைகளில் குறிப்பாக காவிரி,  முல்லைப்பெரியாறு,  பாலாறு பிரச்னைகளில் திமுக என்ன செய்தது? அவர்கள் எதையும் செய்யவில்லை. 

தமிழக அரசு மீது தொடர்ந்து எதிர்க்கட்சிகள் செய்து வரும் பொய் பிரசாரம் முறியடிக்கப்படும். 

ஆனால் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் நடக்கும் இந்த ஆட்சியில் விவசாயிகளுக்குத் தேவையான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. நீர் மேலாண்மைத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

வேளாண்மைத் துறையில் தமிழகம் தன்னிறைவு: குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் கடந்த 2017-இல் ரூ.100 கோடியில் ஏரி, குளம் சீரமைக்கப்பட்டது. இந்த ஆண்டில் ரூ.328 கோடியில் 1,511 ஏரி, குளங்களில் குடிமராமத்துத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 

3 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கி தடுப்பணைகளை கட்டி வருகிறோம். வேளாண் துறையில் தமிழகம் தன்னிறைவு பெற்ற மாநிலமாக உள்ளது. உயர்கல்வியில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. 

2011 இல் 21 சதவீதமாக இருந்த உயர்கல்வி படிப்போரின் எண்ணிக்கை தற்போது 46 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றார். 31 திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார். 

விழாவில் ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ், எம்.பி.க்கள் வி.பன்னீர்செல்வம், காமராஜ்,  எம்எல்ஏக்கள் எஸ்.செம்மலை, ஜி.வெங்கடாசலம், மருதமுத்து, சின்னத்தம்பி, ராஜா, சித்ரா, மனோண்மணி, வெற்றிவேல்,  தமிழக தலைமை கூட்டுறவு வங்கியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆர்.இளங்கோவன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.சுகுமார்,  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அருள்ஜோதி அரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/12/15/w600X390/donartion.jpg பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடன் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, எம்.பி.க்கள்  வி. பன்னீர்செல்வம்,கே. காமராஜ், எம்எல்ஏக்கள் ஜி. வெங்கடாசலம்,எஸ். செம்மலை, ஆர்.எம். http://www.dinamani.com/tamilnadu/2018/dec/15/சேலம்-தலைவாசல்-பகுதியில்-800-ஏக்கரில்-சர்வதேச-தரத்தில்-கால்நடை-ஆராய்ச்சி-மையம்-3058256.html
3058255 தமிழ்நாடு சிறந்த பெண் எம்.பி. விருது: கருணாநிதி இருந்தால் மகிழ்ந்திருப்பார் DIN DIN Saturday, December 15, 2018 02:43 AM +0530 சிறந்த பெண் நாடாளுமன்றவாதி விருது பெற்றதற்காக, கருணாநிதி இருந்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்று மாநிலங்களவைத் திமுக குழு தலைவர் கனிமொழி கூறினார்.
லோக் மத் செய்தி நிறுவனம் சார்பில் தில்லியில் நடைபெற்ற விழாவில் 2018-ஆம் ஆண்டுக்கான சிறந்த நாடாளுமன்ற பெண் உறுப்பினருக்கான விருதை கனிமொழிக்கு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வழங்கினார். இந்த நிலையில், சென்னை திரும்பிய கனிமொழிக்கு விமான நிலையத்தில் திமுக மகளிர் அணியைச் சேர்ந்தோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
 பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
சிறந்த பெண் நாடாளுமன்றவாதி விருது அளித்த லோக் மத் செய்தி நிறுவனத்துக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் குழுவுக்கும் நன்றி. இந்த நேரத்தில் கருணாநிதியை நினைத்துக் கொள்கிறேன். அவர் இருந்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பார். பெருமைப்பட்டிருப்பார். 
 திமுகவுக்கும், மு.க.ஸ்டாலினுக்கும், நாடாளுமன்ற மூத்த உறுப்பினர்களுக்கும் நன்றி.  இன்னும் அதிகமாக பணியாற்ற வேண்டும் என்ற உத்வேகத்தை இந்த விருது அளித்துள்ளது. அனைவரையும் இணைத்து மதச்சார்பற்ற இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும்.
மேக்கேதாட்டு அணை பிரச்னை குறித்து தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வருகிறோம். இந்தப் பிரச்னையில் மத்திய அரசு தலையிட்டு முடிவு எடுக்க வேண்டும். ரஃபேல் ஊழல் குறித்தும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் என்றார்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/3/w600X390/KANI.JPG http://www.dinamani.com/tamilnadu/2018/dec/15/சிறந்த-பெண்-எம்பி-விருது-கருணாநிதி-இருந்தால்-மகிழ்ந்திருப்பார்-3058255.html
3058254 தமிழ்நாடு எங்கிருந்தாலும் வாழ்க: டி.டி.வி. தினகரன் DIN DIN Saturday, December 15, 2018 02:42 AM +0530 செந்தில் பாலாஜி எங்கிருந்தாலும் வாழ்க என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி: 
செந்தில் பாலாஜியை எனக்கு  2006-ஆம் ஆண்டு முதல் நன்றாகத் தெரியும். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொடங்கிய போது எங்களுடன் நன்றாகத்தான் பணியாற்றினார். நான்கு மாதங்களுக்கு முன்பாக, சொந்தப் பிரச்னைகள் இருப்பதாகவும், அதனால் கட்சியில் தீவிரமாகப் பணியாற்ற மாட்டேன் எனவும் தெரிவித்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினமான டிசம்பர் 5-ஆம் தேதி அஞ்சலி நிகழ்வுக்கு அவர் வரவில்லை. சில நாள்கள் கழித்து செந்தில் பாலாஜி திமுகவுக்குச் செல்ல இருப்பதாக செய்திகள் வந்தன. யாரையும் இழுத்து வைக்க முடியாது. அவர் எங்கிருந்தாலும் வாழ்க.
 என்மீது அவருக்கு தனிப்பட்ட முறையில் கோபம் இருப்பதாகத் தெரியவில்லை. ஒன்றரை ஆண்டுகள் வரை எங்களுடன் சரியாகத்தான் இருந்தார். சொந்தப் பிரச்னைகளால் ஒதுங்கியிருப்பதாகக் கூறினார். இப்போது திமுகவுக்குச் சென்றுள்ளார். அவர் சென்று விட்டதால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கூடாரம்  காலியாகிவிடவில்லை.
பட்டியலைக் கொடுக்கவில்லை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கட்சி தொடங்கிய போது அருகிலேயே இருந்து பார்த்தவன்.  செந்தில் பாலாஜி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியில்  சேர்ந்திருந்தால்கூட  வருத்தம் அடைந்திருக்க மாட்டோம். ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு கூட குற்றவாளி என வழக்குத் தொடர்ந்த திமுகவில் இணைந்துள்ளார்.  துரோகிகளுடன் சேர்ந்திருந்தால்கூட பரவாயில்லை, எதிரிகளுடன் சேர்ந்துவிட்டார். அதுதான் எனக்கு வருத்தமாக உள்ளது.
மேலும், கரூர் தொகுதியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர் விண்ணப்பங்கள் வந்துள்ளன. மேலும் உறுப்பினர் படிவங்களைக் கொண்டு வந்து தருகிறேன் என்றார். அந்தப் படிவங்கள் இதுவரை வரவில்லை. 
அமமுகவில் இணைவதற்கு இதுவரை 1.20 கோடி விண்ணப்பங்கள் வந்துள்ளன. 
அதில், 1.02 கோடி விண்ணப்பங்கள் முழுமையான அளவில் பூர்த்தி ஆகியுள்ளன. அவை உறுப்பினர் அட்டை கொடுப்பதற்கு தயாராக உள்ளன. இத்தகைய வலுவான அமைப்பாக நாங்கள் இருக்கிறோம். ஒருசில நபர்களோ, குழுவோ வெளியேறுவதால் எங்களுக்கு எந்த இழப்பும் இல்லை என்றார் தினகரன்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/12/4/w600X390/ttv.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/15/எங்கிருந்தாலும்-வாழ்க-டிடிவி-தினகரன்-3058254.html
3058253 தமிழ்நாடு "பதவி ஆசைக்காகவே திமுகவுக்கு சென்றுள்ளார் செந்தில் பாலாஜி': விஜயபாஸ்கர் DIN DIN Saturday, December 15, 2018 02:42 AM +0530 பதவி ஆசைக்காகவே திமுகவுக்குச் சென்றுள்ளார் செந்தில்பாலாஜி என்றார் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்.
கரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமமுகவினர் அதிமுகவில் இணையும் விழாவில் புதிய நிர்வாகிகளை வரவேற்ற அவர், பின்னர் கூறியது: கரூர் மாவட்ட அமமுக நிர்வாகிகளைப் பிரிந்து பதவி ஆசைக்காக  திமுகவிற்குச் சென்றுள்ளார் செந்தில்பாலாஜி. 
சென்ற மாதம் வரை தினகரனை முதல்வராக்குவேன் என்றும்,  அதிமுகவில் இருந்தபோது என் உயிரும், உதிரமும் உள்ளவரை அதிமுகவுக்கு விசுவாசம் மிக்கவனாக இருப்பேன் என்றும் கூறியவர்.
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் எந்த இயக்கத்தை எதிர்த்தார்களோ, அதில்  ஐக்கியமாகியுள்ளார். உண்மையான அதிமுகவினர் மீண்டும் தங்களது தாய்க் கழகத்தில் இணைந்துள்ளனர்.  
செந்தில்பாலாஜி திமுகவுக்கு தாவியுள்ளார்.  முதல்வர், துணை முதல்வர் வழிகாட்டுதலின்பேரில் கரூர் மாவட்டத்தில் எந்தத் தேர்தல் வந்தாலும் நாங்கள் வெல்வோம். பதவி ஆசைக்காகவே அதிமுகவில் இருந்தார் செந்தில்பாலாஜி என்றார். பேட்டியின்போது கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ  எம். கீதாமணிவண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/18/w600X390/vijayabaskar.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/15/பதவி-ஆசைக்காகவே-திமுகவுக்கு-சென்றுள்ளார்-செந்தில்-பாலாஜி-விஜயபாஸ்கர்-3058253.html
3058252 தமிழ்நாடு மேக்கேதாட்டு: தமிழக முதல்வருடன் பேசத் தயார் DIN DIN Saturday, December 15, 2018 02:38 AM +0530 மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்து சட்டரீதியாக இல்லாமல் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறினார்.
சென்னை குரோம்பேட்டை ரேலா இன்ஸ்டிட்யூட் மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள கர்நாடக மாநிலம் தும்கூர் ஸ்ரீசித்த கங்கா மடம் தலைமை மடாதிபதி சிவகுமார சுவாமிஜியை (112)  கர்நாடக முதல்வர் குமாரசாமி வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:  உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை அனுமதிக்கப்பட்ட மடாதிபதி சிவகுமார சுவாமிஜிக்கு பித்தப்பையில் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர் தற்போது நலமுடன் உள்ளார்.  மேக்கேதாட்டுஅணை விவகாரம் தொடர்பாக இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும். இது தொடர்பாக தமிழக முதல்வருடன் பேச்சு வார்த்தை நடத்த தயாராக உள்ளோம்.
இருமாநில மக்களுக்கும் பயன்படாமல் ஆண்டுதோறும் கடலில் வீணாகக் கலக்கும் நீரை சேமித்து இரு மாநில சகோதர விவசாயிகளும் பயன்படுத்தும் திட்டமாக மேக்கேதாட்டு அணை திட்டத்தை மேம்படுத்த முடியும். 
இது தொடர்பாக நாங்கள் தமிழக அரசிடம் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களுடனும் பேச்சு வார்த்தைக்குத் தயாராக உள்ளோம் என்றார் குமாரசாமி.
முன்னதாக கர்நாடக முன்னாள் முதல்வர்கள் எஸ்.எம்.கிருஷ்ணா,எடியூரப்பா ஆகியோரும் ரேலா மருத்துவமனைக்கு வந்து மடாதிபதி சிவகுமார சுவாமிஜியை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர். ரேலா இன்ஸ்டியூட் மெடிக்கல் சென்டர் நிர்வாக இயக்குநர் முகமது ரேலா, தலைவர் ஸ்ரீநிஷா மாறன், தலைமை மருத்துவர் இளங்குமரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/25/w600X390/HDKumaraswamy21.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/15/மேக்கேதாட்டு-தமிழக-முதல்வருடன்-பேசத்-தயார்-3058252.html
3058251 தமிழ்நாடு சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை  திட்டத்துக்கு எதிரான வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைப்பு DIN DIN Saturday, December 15, 2018 02:37 AM +0530 சென்னை - சேலம் பசுமைவழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

பசுமை வழிச்சாலைத் திட்டம்: மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் சென்னை-சேலம் இடையே 8 வழி சாலைத் திட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டத்துக்காக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 1,900 ஹெக்டேர் பரப்பளவிலான நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது.     இந்தத் திட்டத்துக்கு, நில உரிமையாளர்கள், விவசாயிகள், பல்வேறு அமைப்புகளின் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
வழக்கு: இந்தத் திட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி  பாதிக்கப்பட்ட நில உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி, விவசாயிகள், தருமபுரி மக்களவைத் தொகுதி

உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்தத் திட்டத்துக்காக நிலங்களை கையகப்படுத்தக்கூடாது எனவும், நிலங்களில் இருந்து அதன் உரிமையாளர்களை வெளியேற்றக்கூடாது எனவும் உத்தரவிட்டிருந்தது. 

உத்தரவாதம்: இந்த திட்டத்துக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளிக்காவிட்டால், திட்டத்தைத் தொடர மாட்டோம் என தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் உத்தரவாதம் அளித்திருந்தது.

உயர்நீதிமன்றம் கேள்வி: இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, திட்டம் தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் வெளியிட்டிருந்த அறிவிப்பாணை தொடர்பாக கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்கவும்,

திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.

புதிதாக அளவீடு: இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் காணொலிக் காட்சி மூலம் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.கார்த்திகேயன், நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குநர் பி.டி.மோகன் சார்பில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். 

அந்த அறிக்கையில், தேசிய நெடுஞ்சாலைகள் திட்டம் 1956-இன் படி இந்தத் திட்டத்துக்கான ஆரம்பக்கட்ட ஏரியல் சர்வே அடிப்படையிலேயே 3ஏ என்ற அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான 3டி என்ற அந்த அறிவிப்பாணை இன்னும் வெளியிடப்படவில்லை. இந்தத் திட்டத்துக்காக கிராமங்களில் உள்ள வீடுகள் இடிபடாமலும், தீர்த்தமலை வனப்பகுதிக்குள் சாலை செல்வதை தவிர்த்து புதிதாக நில அளவை செய்துள்ளோம். இந்த அறிவிப்பாணைகள் எந்த வகையிலும் நீதிமன்ற வழக்கு விசாரணையில் குறுக்கிடவில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தீர்ப்புக்காக ஒத்திவைப்பு: இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்குத் தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், எழுத்துப்பூர்வ வாதங்களை வரும் ஜனவரி 4 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்தனர்.

]]>
http://www.dinamani.com/tamilnadu/2018/dec/15/சென்னை---சேலம்-பசுமை-வழிச்சாலை--திட்டத்துக்கு-எதிரான-வழக்கு-தீர்ப்புக்காக-ஒத்திவைப்பு-3058251.html
3058250 தமிழ்நாடு "வில்லங்கச் சான்றுகளை 4 நாள்களில் அளிக்க வேண்டும்' DIN DIN Saturday, December 15, 2018 02:35 AM +0530 வில்லங்கச் சான்றுகளை குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட நாள்களுக்குள் அளிக்க வேண்டுமென பதிவுத் துறை தலைவர் ஜெ.குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். 

இதுகுறித்து, அவர் வெள்ளிக்கிழமை அனுப்பிய சுற்றறிக்கை:-

இணையதளம் வழியாக விண்ணப்பித்து விரைவுக் குறியீடு மற்றும் பதிவு அலுவலரின் இலக்க சான்றொப்பமிட்ட வில்லங்கச் சான்று மற்றும் சான்றிட்ட நகல் வழங்கும் திட்டம் முதல்வர் பழனிசாமியால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி, கணினிமயமாக்கப்பட்ட விவரங்களில் இருந்து வில்லங்கச் சான்று தயாரித்து மூன்று நாள்களுக்குள் அனுப்ப வேண்டும்.

கணினிமயமாக்கப்படாத காலத்துக்கான வில்லங்கச் சான்றினை நான்கு நாள்களுக்குள் தயாரித்து அளிக்கவேண்டும். இந்த நிகழ்வுகளில் ஏற்படும் காலதாமதம் கடுமையான விஷயமாகப் பார்க்கப்படும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/12/15/w600X390/ec.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/15/வில்லங்கச்-சான்றுகளை-4-நாள்களில்-அளிக்க-வேண்டும்-3058250.html
3058249 தமிழ்நாடு ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆறுமுகசாமி ஆணையம் முன்  சுகாதாரத் துறைச் செயலர் ஆஜர் DIN DIN Saturday, December 15, 2018 02:33 AM +0530 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்காக, நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை ஆஜரானார்.
 பல்வேறு ஆவணங்களுடன் வந்த அவர், அவற்றை ஆணையத்தில் சமர்ப்பித்ததாகத் தெரிகிறது. மேலும், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாகவும், ஜெ.ராதாகிருஷ்ணன் சில தகவல்களைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
அதேபோன்று, போயஸ் தோட்ட இல்லத்தில் பணியாற்றி வந்த மூன்று பெண்களிடமும் நீதிபதி ஆறுமுகசாமி வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினார். அவர்களது விளக்கங்கள் அனைத்தும் வாக்குமூலமாகப் பதிவு செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையத்தில் ஜெயலலிதா, சசிகலாவின் உறவினர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள், காவல் துறை அதிகாரிகள், அரசு, அப்பல்லோ மருத்துவர்கள் என இதுவரை 130-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த விசாரணை தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
அதை உறுதிபடுத்தும் விதமாக,  கர்நாடக மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்த அனுமதி கேட்டு தமிழக உள்துறைக்கும், கர்நாடக சிறைத் துறைக்கும் விசாரணை ஆணையம்  அண்மையில் கடிதம் எழுதி இருந்தது. மேலும், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் ஆகியோர் வரும் 18-ஆம் தேதியும்,  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரியும், தற்போதைய சென்னை மாநகர  காவல் துணை ஆணையருமான சுதாகர் ஆகியோர்  வரும் 20-ஆம் தேதியும் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு விசாரணை ஆணையம் அழைப்பாணை அனுப்பியது நினைவுகூரத்தக்கது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/12/7/w600X390/radhakrishnan.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/15/ஜெயலலிதா-மரணம்-தொடர்பான-விசாரணை-ஆறுமுகசாமி-ஆணையம்-முன்--சுகாதாரத்-துறைச்-செயலர்-ஆஜர்-3058249.html
3058248 தமிழ்நாடு சசிகலாவுக்கு எதிரானஅந்நியச் செலாவணி வழக்கு: காணொலிக் காட்சி மூலம் குற்றச்சாட்டுப் பதிவு DIN DIN Saturday, December 15, 2018 02:33 AM +0530 ஜெ.ஜெ. தொலைக்காட்சிக்கு உபகரணங்கள் வாங்கியது தொடர்பான அந்நியச் செலாவணி வழக்கில் காணொலிக் காட்சி மூலம் சசிகலாவுக்கு எதிராக மறு குற்றச்சாட்டுப் பதிவு செய்வதற்கான  விசாரணையை  டிசம்பர் 20-ஆம் தேதிக்கு எழும்பூர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 

ஜெ.ஜெ. தொலைக்காட்சிக்கு வெளிநாட்டில் இருந்து எலக்ட்ரானிக் உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா மற்றும் அவரது உறவினர் பாஸ்கரன் ஆகியோருக்கு எதிராக அமலாக்கப் பிரிவினர்  எழும்பூர் நீதிமன்றத்தில் அந்நிய செலாவணி மோசடி வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கில், கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாஸ்கரன் மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது. பின்னர்,  பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு எதிராக, காணொலிக் காட்சி வழியாக குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது. 

குற்றச்சாட்டு பதிவுக்குப் பின்னர், அந்த ஆவணத்தில் கையெழுத்திடுவது உள்ளிட்ட சில நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை.  சசிகலாவுக்கு எதிராக மறு குற்றச்சாட்டு பதிவு செய்வதற்காக  டிசம்பர் 13-ஆம் தேதி சசிகலா நேரில் ஆஜராக  எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சசிகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, காணொலிக் காட்சி மூலம் சசிகலாவுக்கு எதிராக மறு குற்றச்சாட்டைப் பதிவு செய்யவும், விசாரணையை 4 மாத காலத்துக்குள் முடிக்கவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்ற நீதிபதி மலர்மதி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், உயர்நீதிமன்ற உத்தரவு நகலை தாக்கல் செய்தார். 

இதனைத் தொடர்ந்து காணொலிக் காட்சி மூலம் சசிகலாவுக்கு எதிராக மறு குற்றச்சாட்டுப்பதிவு செய்வதற்காக வழக்கு விசாரணையை வரும் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/31/w600X390/sasikala.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/15/சசிகலாவுக்கு-எதிரானஅந்நியச்-செலாவணி-வழக்கு-காணொலிக்-காட்சி-மூலம்-குற்றச்சாட்டுப்-பதிவு-3058248.html
3058247 தமிழ்நாடு மக்களோடுதான் அதிமுக கூட்டணி:  எடப்பாடி கே.பழனிசாமி DIN DIN Saturday, December 15, 2018 02:30 AM +0530 வரும் மக்களவைத் தேர்தலில் மக்களோடுதான் அதிமுக கூட்டணி அமைக்கும் என்று  தமிழக முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
சேலம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் அதிமுகவினரின் வரவேற்பை ஏற்று பேசியது:-
வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் அதிக மக்களவை உறுப்பினர்கள் வெற்றி பெற்றால்தான் அதிகத் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த  முடியும். ,அதிக நிதியையும் மத்திய அரசிடம் இருந்து பெற முடியும்.
 பிற கட்சிகளுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டணி பேசுகிறார். அதிமுகவைப் பொருத்தவரை மக்களுடன்தான் கூட்டணி.  எத்தனை கட்சிகள் போட்டியிட்டாலும் அதிமுகவே வெற்றி பெறும்.
ஆட்சிகளை ஒப்பிடுங்கள்: அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது,  தமிழகத்துக்கு  பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தினார்.
அதிமுக பற்றியே எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிவருகிறார். அதிமுகவைப் பற்றி பேசினால்தான் அவருக்கு தூக்கமே வரும்.
 சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை நடைபெறும்போது,  அதிமுக  ஆட்சி நிலைக்குமா என்று மு.க.ஸ்டாலின் கேட்டார்.  மக்களின் ஆதரவு இருந்தால் எத்தனை ஆண்டுகளானாலும் இந்த ஆட்சி நிலைக்கும். இது மக்களின் ஆட்சி. மக்களின் தேவைகளை நிறைவேற்றுகின்ற அரசு. விவசாயிகளும் ,பொதுமக்களும் நினைப்பதைப் பிரதிபலிக்கின்ற அரசாக அதிமுக அரசு உள்ளது. 
வழக்குகளை எதிர்கொள்வோம்:அதிமுக அமைச்சர்கள் மீது பொய்யான வழக்குகள் போட்டு, மக்களை எப்படியாவது திசை திருப்பவேண்டும் என்று சிலர் நினைக்கின்றனர்.  இதற்காக திட்டங்களை வகுக்க ஆரம்பித்துவிட்டார்கள். எத்தனை வழக்குகள் போட்டாலும்,அத்தனையையும் எதிர்கொள்வோம்.  என் மீதான வழக்குக்கு,  உச்சநீதிமன்றத்தில் தடையாகிவிட்டது.
காற்றிலே ஊழல் செய்த கட்சி திமுக.   இந்தியா தலைகுனிவதற்கு காரணமே திமுகதான்.ஆனால் தங்களுடைய ஆட்சியிலே எதுவுமே நடக்கவில்லை என்ற பொய்யான தகவலை  மக்களிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
முதல்வரை சந்திக்க முன்அனுமதி தேவையில்லை: இந்தியாவிலேயே முன்அனுமதி இல்லாமல் சந்திக்கக் கூடிய ஒரே முதல்வராக நான் இருக்கிறேன். கல்வி, மருத்துவத் துறைகளில் தமிழகம் மிகப் பெரிய சாதனைகளை ஏற்படுத்திவருகிறது.
வரக் கூடிய  அத்தனை கோப்புகளிலும் கையெழுத்திட்டுள்ளேன்.எந்த நேரமும் தமிழக முதல்வரை பார்க்கக்கூடிய ஒரே கட்சி,அதிமுக கட்சிதான். 
அனைத்துத் துறைகளிலும் முதன்மையாக இருக்கக் கூடிய அளவுக்கு தமிழக அரசு இரவு,பகல் பாராமல் பாடுபட்டு, அத்தனை மக்களுக்கும் நன்மையான திட்டங்களை வழங்குகிறது என்றார்.

திட்டமிட்டு பொய் பிரசாரம்

அதிமுக ஆட்சி மீது திட்டமிட்டு ஊழல் குற்றச்சாட்டுகள் தெரிவித்து பொய் பிரசாரம் செய்து வருகின்றனர் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
சேலத்தை அடுத்த வீரகனூர் பேரூராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
முதல்வர் ஜெயலலிதா மறைந்தவுடன்,  அதிமுக ஆட்சி கவிழும்,  கட்சி  உடையும் என்று எதிர்க்கட்சியினர் எதிர்பார்த்தனர்.  ஆனால் எதுவும் நடக்கவில்லை.  தற்போது ஊழல் குற்றச்சாட்டு என்ற புதிய ஆயுதத்தைக் கையில் எடுத்துக் கொண்டு நீதிமன்றம் செல்வதாகக் கூறுகின்றனர். இந்த ஆட்சி மீது வேண்டும் என்றே திட்டமிட்டு ஊழல் குற்றச்சாட்டு தெரிவித்து பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.
 உள்ளாட்சித் துறை அமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது எப்படி ஒப்பந்தம் விடப்பட்டதோ அப்படித்தான் தற்போது ஒப்பந்தம் விடப்படுகிறது.  அதிமுகவால் எம்எல்ஏ,  அமைச்சர் பதவியை அனுபவித்த செந்தில்பாலாஜி இயக்கத்துக்கு துரோகம் செய்துவிட்டு வெளியே சென்றவர். அவர் நன்றி மறந்தவர் என்றார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/23/w600X390/eps3.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/15/மக்களோடுதான்-அதிமுக-கூட்டணி--எடப்பாடி-கேபழனிசாமி-3058247.html
3058246 தமிழ்நாடு வருமான வரித்துறை நோட்டீஸ்: தினகரன் மனு தள்ளுபடி DIN DIN Saturday, December 15, 2018 02:29 AM +0530 வருமான வரி கணக்கை மறு ஆய்வு செய்வது தொடர்பாக வருமானவரித் துறை அனுப்பிய நோட்டீûஸ ரத்து செய்யக் கோரி டிடிவி தினகரன் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 
வருமான வரித்துறை கடந்த 1995-1996 ஆம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கு தொடர்பாக விளக்கம் கோரி அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு கடந்த 1997-ஆம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸில், டிடிவி தினகரன் நடத்திய டிப்பர் இன்வெஸ்ட்ன்மென்ட் நிறுவனத்தின் பெயரில் வெஸ்ட் பேக் லிமிடெட் நிறுவனத்துக்கு முன் பணமாக ஒரு லட்சம் டாலர் கொடுத்தது மற்றும் பான்யன் ட்ரீ நிறுவனத்துக்கு 11 லட்சம் டாலருக்கான வரைவோலை வழங்கிய விபரங்கள் தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டிருந்தன. இதற்கு டிடிவி தினகரன் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. 
இந்த நிலையில், கடந்த 1987-1988 ஆம் ஆண்டு முதல் 1997-1998 வரையிலான காலத்துக்கான டிடிவி தினகரனின் கணக்குகளை மீண்டும் ஆய்வு செய்ய உள்ளதாக வருமான வரித் துறை கடந்த 2001 ஆம் ஆண்டு டிடிவி தினகரனுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. வருமான வரித் துறையின் இந்த நோட்டீûஸ எதிர்த்து டிடிவி தினகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி  எஸ்.எம்.சுப்ரமணியம், மனுதாரர்  ஆரம்ப நிலையிலேயே விசாரணையை எதிர்த்து நீதிமன்றத்தை நாடியுள்ளார். எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரர் வருமானவரித் துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.  தனது தரப்பு விளக்கங்களை வருமான வரித்துறையிடம் தெரிவிக்கலாம். அதே போன்று மனுதாரர் தரப்பு கருத்தைத் தெரிவிக்க வருமான வரித்துறை வாய்ப்பளிக்க வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/18/w600X390/dinakaran.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/15/வருமான-வரித்துறை-நோட்டீஸ்-தினகரன்-மனு-தள்ளுபடி-3058246.html
3058239 தமிழ்நாடு அணை பாதுகாப்பு மசோதாவை திரும்பப் பெற வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் DIN DIN Saturday, December 15, 2018 02:08 AM +0530 அணை பாதுகாப்பு மசோதாவை இப்போதைய வடிவிலேயே நிறைவேற்றக் கூடாது எனவும், அதனை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டுமெனவும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தின் விவரம்:-

"அணை பாதுகாப்பு மசோதா 2018' தொடர்பாக தங்களது தலையீட்டைக் கோருவதற்காக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். அணை பாதுகாப்புச் சட்டம் குறித்து கடந்த ஜூன் 15-ஆம் தேதி தங்களுக்குக் கடிதம் எழுதியிருந்தேன்.   

அதில், அணை பாதுகாப்பு மசோதாவை அனைத்து மாநிலங்களுடன் கலந்து ஆலோசனை செய்து ஒருமித்த கருத்தை ஏற்படுத்திய பிறகே அதனை நிறைவேற்ற வேண்டுமெனக் கோரியிருந்தேன். மேலும், இந்த விவகாரத்தில் தமிழக மக்களின் கவலைகளை நிவர்த்தி செய்யும் வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்திருந்தேன்.

இப்போது மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அணை பாதுகாப்பு மசோதாவில் தமிழகத்தின் சார்பில் முன்வைக்கப்பட்ட முக்கியமான கவலைகளும், யோசனைகளும் தீர்க்கப்படவில்லை, மசோதாவில் சேர்க்கப்படவில்லை.

அணை பாதுகாப்பு மசோதா 2018-இன் 23 (1) பிரிவின்படி, ஒரு மாநிலத்திலுள்ள குறிப்பிட்ட அணையானது மற்றொரு மாநிலத்துக்குச் சொந்தமாகவும், அதனால் நிர்வகிக்கப்படுவதாகவும் இருந்தால் அந்த குறிப்பிட்ட அணைக்கு மாநில அணை பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்படும். அதாவது, இரு மாநிலங்கள் தொடர்புடைய அணைகள் விஷயத்தில் தேசிய அணை பாதுகாப்பு ஆணையமானது, மாநில அணை பாதுகாப்பு அமைப்பாகச் செயல்படும்.

இதன்மூலம், ஒரு மாநிலத்தில் உள்ள அணையானது மற்றொரு மாநிலத்துக்குச் சொந்தமாக இருந்தாலும் அந்த மாநிலமானது அந்த அணையின் மீது எந்த உரிமையையும் கொண்டாட முடியாத நிலை ஏற்படும். முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம்,  தூணக்கடவு,  பெருவாரிப்பள்ளம் ஆகிய அணைகள் அண்டை மாநிலத்தில் அமைந்திருந்தாலும் தமிழகத்துக்குச் சொந்தமாகும்.

மாநிலங்களுக்கு இடையிலான ஒப்பந்த முறை மூலமாக அணைகள் தமிழகத்தால் பராமரிக்கப்பட்டும், இயக்கப் பட்டும் வருகிறது. முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்த அணையில் தமிழகத்துக்கு உள்ள உரிமையை உறுதி செய்துள்ளது.

முல்லைப் பெரியாறு உள்ளிட்ட நான்கு அணைகளில் தமிழகத்துக்கு உள்ள உரிமையை மறுத்து, அந்த அதிகாரங்களை தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்திடம் அளிப்பது என்பது தமிழகத்தின் உரிமைகள் மீது செய்யப்படும் ஆக்கிரமிப்பாகும். 

மேலும், அது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. இந்த நடவடிக்கை அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள சமஷ்டி கொள்கைகளையும் மீறுவதாகும் .

எனவே, பிற மாநிலங்களில் அணைகள் இருந்தாலும் அது எந்த மாநிலத்துக்குச் சொந்தமானதோ அந்த மாநிலமே பராமரித்து,  கட்டுப்பாட்டில் வைத்து இயக்கும் அளவுக்கு உரிய திருத்தங்களை அணை பாதுகாப்பு மசோதாவில் கொண்டு வர வேண்டும்.

புதிய யோசனை: அணை பாதுகாப்பு மசோதாவில் புதிய உள்பிரிவையும் சேர்க்க வேண்டுமென தமிழக அரசு யோசனையை முன்வைக்கிறது. அதாவது, பிற மாநிலத்தில் அணை இருந்தாலும் அந்த அணைக்குச் சொந்தமான மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகளும், அலுவலர்களும் அணை அமைந்திருக்கும் வனப்பகுதிக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும். 

இதற்கான உரிய சட்டப் பிரிவைச் சேர்க்க வேண்டுமென ஏற்கெனவே வலியுறுத்தியது. ஆனால், கடந்த 12-ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் தமிழகத்தின் யோசனை சேர்க்கப்படவில்லை.

எனவே, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அணை பாதுகாப்பு மசோதாவை உடனடியாக திரும்பப் பெற மத்திய நீர்வளம்,  நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்புத் துறைக்கு தாங்கள் உரிய அறிவுறுத்தலை வழங்க வேண்டும். 

அணை பாதுகாப்பு மசோதாவில் தமிழகத்தின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு அனைத்து மாநிலங்களின் ஒருமித்த கருத்துடன் அதனை நிறைவேற்ற வேண்டும். இந்த விஷயத்தில் தங்களிடம் இருந்து சாதகமான பதிலை எதிர்பார்க்கிறேன்' என்று தனது கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/28/w600X390/eps.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/15/அணை-பாதுகாப்பு-மசோதாவை-திரும்பப்-பெற-வேண்டும்-பிரதமர்-நரேந்திர-மோடிக்கு-முதல்வர்-பழனிசாமி-கடிதம்-3058239.html
3058066 தமிழ்நாடு மேட்டுப்பாளையத்தில் யானைகள் நலவாழ்வு முகாம் தொடக்கம் DIN DIN Saturday, December 15, 2018 12:55 AM +0530 மேட்டுப்பாளையத்தில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் வெள்ளிக்கிழமை துவங்கியது.

தமிழகத்திலுள்ள கோயில்கள் மற்றும் திருமடங்களைச் சேர்ந்த யானைகளுக்குப் புத்துணர்வு அளிக்கும் வகையில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் யானைகள் நல வாழ்வு முகாம்  2003-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. 

நீலகிரி மாவட்டம், தெப்பக்காட்டில் 4 ஆண்டுகள் நடைபெற்ற இந்த முகாம் அதற்குப் பின்னர் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப் படுகையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 11-ஆவது யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாம் மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோயில் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றுப் படுகையில் வெள்ளிக்கிழமை துவங்கியது. 

இதன் தொடக்க நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி,  இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்,  வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி. ஜெயராமன் ஆகியோர் பங்கேற்று முகாமை தொடங்கிவைத்தனர். 

முகாமில் பங்கேற்ற யானைகளுக்கு ஆப்பிள்,  தர்பூசணி,  வாழைப் பழம், கரும்பு, வெல்லம் ஆகியவற்றை வழங்கினர். 

துவக்க நிகழ்ச்சியில் இந்து அறநிலையத் துறை ஆணையர் டி.கே.ராமச்சந்திரன், தலைமையிடத்து இணை ஆணையர் ஹரிப் பிரியா, கோவை இணை ஆணையர் ராஜமாணிக்கம்,  சட்டம் சார்ந்த இணை ஆணையர் அசோக்,  பண்ணாரி உதவி இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் ராமு, முகாம் பொது மேற்பார்வையாளர் வெற்றிச்செல்வன், ஆய்வாளர்கள் சேகர், தமிழ்வாணன், காரமடை கோயில் செயல் அலுவலர் பெரியமருதுபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

6 ஏக்கர் நிலப் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த யானைகள் முகாமில், பாகன்கள் தங்குமிடம், ஓய்வு அறை,  தீவன மேடை,  சமையல் கூடம், பாகன்கள் மற்றும் யானைகளுக்கு மருத்துவப் பரிசோதனை நிலையம்,  யானைகள் நடைப் பயிற்சி மேற்கொள்வதற்காக 3.4 கி.மீ தொலைவுக்கு நடைபாதை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. யானைகளுக்கு ஷவர் குளியல் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

முகாமைச் சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க 6 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காக கண்காணிப்புக் கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. 

முகாமுக்குள் காட்டு யானைகள் புகுவதைத் தடுக்க ஒன்றரை கி.மீ தொலைவுக்கு சூரிய மின்வேலி, தொங்கு மின்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. முகாமைச் சுற்றிலும் 14 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜ் தலைமையில் டிஎஸ்பி மணி மேற்பார்வையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

முகாமில் பங்கேற்ற  அமைச்சர்கள்  எஸ்.பி.வேலுமணி,  திண்டுக்கல் சீனிவாசன், சேவூர் ராமச்சந்திரன்,  சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி. ஜெயராமன்ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால்  கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் கடந்த 2003- ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 11-ஆவது  முகாம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.  இந்த முகாமில் 22 கோயில் யானைகள், 4 திருமடத்தின் யானைகள், புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த 2 யானைகள் என  மொத்தம் 28 யானைகள் பங்கேற்கின்றன. யானைகள் பாதுகாப்பாக இருக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. யானைகள் முகாம் நடத்துவதற்கு 23 கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கும் தகவல் எங்களுக்கு இதுவரை தெரியாது. வனத் துறை கட்டுப்பாட்டில் முதுமலை,  சேலம்,  வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் 52 யானைகள் உள்ளன. இங்குள்ள யானைகளுக்கும் விரைவில் புத்துணர்வு முகாம் நடத்தப்படும் என்றனர்.  

சுழற்சி முறையில் பாதுகாப்பு: யானைகள் நல வாழ்வு முகாம் பாதுகாப்பு ஏற்பாடுகள்குறித்து மேட்டுப்பாளையம் வனச் சரகர் செல்வராஜ் கூறியதாவது: 
முகாமில் டின் ஷீட், சோலார், தொங்கு கம்பி, சீரியல் பல்புகள், வெளிச்சம் எதிரொலிக்கும் பட்டைகள்,  பிளேம் லைட்டுகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.  

8 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  4 ரோந்து வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.  3 வனத் துறை பணியாளர்கள், 70 தற்காலிகப் பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

நெல்லிமலை, கண்டியூர், தேக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது 11 யானைகள் ஒரு குழுவாகவும், 12 யானைகள் இன்னொரு குழுவாகவும் நடமாடி வருகின்றன. இந்த யானைகள் விவசாய நிலங்கள், குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழையாமல் இருக்க வனத் துறையினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியாற்ற உள்ளனர் என்றார்.

 

யானைகள் நலவாழ்வு முகாமை தொடங்கிவைத்து யானைகளுக்கு பழங்களை ஊட்டும்  அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, சேவூர் எஸ்.ராமசந்திரன் ஆகியோர். உடன்,  சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், ஆட்சியர் த.ந.ஹரிஹரன், எம்எல்ஏக்கள் அம்மன் கே.அர்ச்சுணன்,  ஓ.கே.சின்னராஜ், கஸ்தூரி வாசு உள்ளிட்டோர். 

முகாமில் யானைகளுக்கு வழங்கப்படும் உணவுகள்

கூந்தல் பனை, தென்னைமட்டை,  புல் (கோ1,  கோ2,  கோ3),  கரும்பு சோகை, சாறுள்ள கரும்பு,  பலா இலை,  சோளத்தட்டு,  ரீட்ஸ்,  அத்தி,  ஆல்,  அரசு, மூங்கில், கீரை வகைகள் போன்றவை வழங்கப்படும். 

தானிய வகைகள்:   அரிசி, பச்சைப் பயறு,  கொள்ளு மருந்து,  ஊட்டச்சத்து உணவுகள்:  அஷ்டசூரணம், சியாவணபிராஷ்,  பயோ பூஸ்ட் மாத்திரை, புரோட்டின் சப்ளிமென்ட்,  மல்டி வைட்டமின் மாத்திரைகள்,  மினரல் மிக்ஸர். சிறப்பு உணவு வகைகளாக பேரிச்சை, அவுல்,  கேரட்,  பீட்ரூட் போன்றவை வழங்கப்படுகிறது.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/12/15/w600X390/elephant2.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/15/மேட்டுப்பாளையத்தில்-யானைகள்-நலவாழ்வு-முகாம்-தொடக்கம்-3058066.html
3057979 தமிழ்நாடு குட்கா ஊழல்: அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிபிஐ சம்மன் DIN DIN Friday, December 14, 2018 08:16 PM +0530
குட்கா ஊழல் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பிவி ரமணா ஆகியோர் நாளை (சனிக்கிழமை) ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. 

குட்கா ஊழல் வழக்குத் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள், சுகாதாரத்துறை அமைச்சர், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 35 இடங்களில் கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி சோதனை செய்து, முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட கிடங்கு உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்பட பலரை சிபிஐ அதிகாரிகள் அடுத்ததடுத்து கைது செய்தனர்.

இந்நிலையில் இவ் வழக்கு விசாரணைக்கு நாளை ஆஜராகுமாறு சிபிஐ அதிகாரிகள், அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் பிவி ரமணா ஆகியோருக்கு அழைப்பாணை வழங்கியுள்ளனர். 

முன்னதாக, அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனுக்கு அழைப்பாணை வழங்கினர். இதை ஏற்று கடந்த வெள்ளிக்கிழமை ஆஜரான சரவணனிடம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அதிகாரிகள் ஏழரை மணி நேரம் விசாரணை செய்தனர். இதையடுத்து, இவ்விசாரணைக்கு சரவணன் செவ்வாய்க்கிழமை மீண்டும் சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜரானார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் பல கட்டங்களாக விசாரணை நடத்தினர். விசாரணையில் சரவணன் அளித்த பதில்களை சிபிஐ அதிகாரிகள் பதிவு செய்தனர். காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த விசாரணை மாலைவரை நடைபெற்றது.

இந்த நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அழைப்பாணை அனுப்பியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/27/w600X390/vijayabaskar.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/14/குட்கா-ஊழல்-அமைச்சர்-விஜயபாஸ்கருக்கு-சிபிஐ-சம்மன்-3057979.html
3057976 தமிழ்நாடு வருமானவரித் துறை அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்யக் கோரிய தினகரனின் மனு: உயர் நீதிமன்றம் நிராகரிப்பு  DIN DIN Friday, December 14, 2018 06:36 PM +0530  

சென்னை: வருமானவரித் துறை அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் டிடிவி  தினகரன் தாக்கல் செய்த மனுவை நிராகரித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

வருமான வரித் துறை கடந்த 1995-1996 ஆம் ஆண்டுக்கான வருமான வரிக்கணக்கு தொடர்பாக விளக்கம் கோரி அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு கடந்த 1997 ஆம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பியது. 

அந்த நோட்டீஸில், டிடிவி தினகரன் நடத்திய டிப்பர் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் பெயரில் வெஸ்ட் பேக் லிமிடெட் நிறுவனத்துக்கு முன்பணமாக ஒரு லட்சம் டாலர் கொடுத்தது மற்றும் பான்யன் ட்ரீ நிறுவனத்துக்கு ரூ.11 லட்சம் டாலருக்கான வரைவோலை வழங்கிய விபரங்கள் தொடர்பாக கேட்கப்பட்டிருந்தன. இதற்கு டிடிவி தினகரன் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. 

இந்த நிலையில் கடந்த 1987-1988 ஆம் ஆண்டு முதல் 1997-1998 வரையிலான காலத்துக்கான டிடிவி தினகரனின் கணக்குகளை மீண்டும் ஆய்வு செய்ய உள்ளதாக வருமானவரித்துறை கடந்த 2001 ஆம் ஆண்டு டிடிவி தினகரனுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. வருமான வரித்துறையின் இந்த நோட்டீஸை எதிர்த்து டிடிவி தினகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. 

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வருமானவரித் துறை சார்பில் வழக்குரைஞர் சீனிவாசன் ஆஜரானார். டிடிவி தினகரன் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், வழக்கு விசாரணயை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இந்நிலையில்  இந்த வழக்கானது வெள்ளியன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது டிடிவி  தினகரன் தாக்கல் செய்த மனுவை நிராகரித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

]]>
TTV, IT returns, inspection, notice, cancellation, pettion, chennai HC, dismiss, http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/12/4/w600X390/ttv.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/14/வருமானவரித்-துறை-அனுப்பிய-நோட்டீஸை-ரத்து-செய்யக்-கோரிய-தினகரனின்-மனு-உயர்-நீதிமன்றம்-நிராகரிப்பு-3057976.html
3057966 தமிழ்நாடு ஐஐடி சென்னை உணவு விடுதியிலேயே இப்படி ஒரு தீண்டாமையா? DIN DIN Friday, December 14, 2018 04:24 PM +0530  

சென்னை: ஐஐடி சென்னை கல்வி மையத்தில், மாணவர்களுக்கான உணவு விடுதியில், சைவ மற்றும் அசைவ மாணவர்களுக்கு தனித்தனி வழியும், தனித்தனி பாத்திரங்களும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சைவ உணவருந்தும் மாணவர்களுக்கு உணவு விடுதிக்கு வர தனி வழியும், கைக் கழுவுவதற்கு தனி வாஷ்பேஸினும் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு அம்பேத்கர் பெரியார் ஸ்டடி சர்கிள் அமைப்பைச் சேர்ந்த ஐஐடி மாணவர்கள் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து, அதற்கான புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர்.

மேலும், உணவுப் பரிமாறும் பாத்திரங்களும், தட்டுகளும் சைவ மற்றும்  அசைவ மாணவர்களுக்கு தனித்தனியாக பயன்படுத்தப்படுவதாகவும், கல்வித் தரத்தில் உலகின் முதல் கல்வி மையமாக விளங்க முயற்சிக்கும் ஐஐடி சென்னை, உணவு விடுதியில் கலாச்சாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளது என்றும் மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/12/14/w600X390/IIT-MadrasMes.jpeg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/14/row-over-separate-entrances-and-utensils-for-veg-non-veg-students-at-iit-madras-mess-3057966.html
3057964 தமிழ்நாடு தேசிய அணைகள் பாதுகாப்புச் சட்ட மசோதா விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும்: முதல்வர் கடிதம் DIN DIN Friday, December 14, 2018 03:42 PM +0530
புது தில்லி: மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய அணைகள் பாதுகாப்புச் சட்ட மசோதா விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மாநில அரசுகளின் கருத்தைக் கேட்காமல் மக்களவையில் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனைத் திரும்பப் பெற நீர்வளத் துறை  அமைச்சகத்துக்கு அறிவுறுத்த பிரதமர் மோடிக்கு முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதல்வர் பழனிசாமி எழுதியிருக்கும் கடிதத்தில், மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய அணைகள் பாதுகாப்பு மசோதாவை மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

அனைத்து மாநில அரசுகளுடனும் கலந்தாலோசனை செய்த பிறகே மசோதாவை நிறைவேற்ற வேண்டும், அனைத்து மாநில அரசுகளுடனும் கருத்தொற்றுமை ஏற்படாத வரை மசோதாவை நிறைவேற்றக் கூடாது என்று கடிதத்தில் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/14/w600X390/palanisamy.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/14/தேசிய-அணைகள்-பாதுகாப்புச்-சட்ட-மசோதா-விவகாரத்தில்-பிரதமர்-தலையிட-வேண்டும்-முதல்வர்-கடிதம்-3057964.html
3057963 தமிழ்நாடு அந்நிய செலாவணி வழக்கு: சசிகலா மீது 20-ஆம் தேதி  'விடியோ கான்பெரன்ஸிங்' முறையில் குற்றச்சாட்டு பதிவு    DIN DIN Friday, December 14, 2018 03:34 PM +0530  

சென்னை: அந்நிய செலாவணி வழக்கில் சசிகலா மீது 20-ஆம் தேதி 'விடியோ கான்பெரன்ஸிங்' முறையில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று எழும்பூர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.   

அமலாக்கப் பிரிவினர் ஜெ.ஜெ. தொலைக்காட்சிக்கு வெளிநாட்டில் இருந்து எலக்ட்ரானிக் உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா மற்றும் அவரது உறவினர் பாஸ்கரன் ஆகியோருக்கு எதிராக அந்நியச் செலாவணி மோசடி வழக்குகளைப் பதிவு செய்தனர்.
எழும்பூர் பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்றத்தில் சசிகலாவுக்கு எதிராக நான்கு வழக்குகள் விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கில், கடந்த 2017 ஜூலை மாதம் பாஸ்கரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. பின், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு எதிராக, காணொலிக் காட்சி வழியாக குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது. இதற்குப் பின், அந்த ஆவணத்தில் கையெழுத்திடுவது உள்ளிட்ட சில நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. சசிகலாவுக்கு எதிராக மறு குற்றச்சாட்டு பதிவு செய்வதற்காக நவம்பர் 30-ஆம் தேதி அவரை ஆஜர்படுத்த எழும்பூர் நீதிமன்ற நீதிபதி மலர் மதி உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் சசிகலாவை ஆஜர்படுத்தவில்லையென பெங்களூரு சிறை நிர்வாகத்தின் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, வழக்கு விசாரணையை டிசம்பர் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம், சசிகலாவை நேரில் ஆஜர்படுத்துமாறு கர்நாடக சிறைத்துறைக்கு உத்தரவிட்டார்.

உடனடியாக எழும்பூர் நீதிமன்ற நீதிபதி மலர் மதி உத்தரவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த உயர் நீதிமன்றம், சசிகலா நேரில் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.   

அத்துடன் இந்த வழக்கில் விசாரணையை விடியோ கான்பெரன்ஸிங் முறையில் நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ள நீதிமன்றம், சசிகலா மற்றும் பாஸ்கரன் மீதான வழக்கினை 4 மாதங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.     

இந்நிலையில் அந்நிய செலாவணி வழக்கில் சசிகலா மீது 20-ஆம் தேதி  'விடியோ கான்பெரன்ஸிங்' முறையில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று எழும்பூர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.   

வெள்ளியன்று எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி மலர் மதி முன்னிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு தாக்கல் செய்யபட்டது. இதையடுத்து அந்நிய செலாவணி வழக்கில் சசிகலா மீது 20-ஆம் தேதி  'விடியோ கான்பெரன்ஸிங்' முறையில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று நீதிபதி மலர் மதி உத்தரவிட்டார். 
 

]]>
sasikala, FERA case, bengalooru prison, framing of charges, video conferencing, egmore court, order http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/1/w600X390/SASIKALA.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/14/அந்நிய-செலாவணி-வழக்கு-சசிகலா-மீது-20-ஆம்-தேதி--விடியோ-கான்பெரன்ஸிங்-முறையில்-குற்றச்சாட்டு-பதிவு-3057963.html
3057957 தமிழ்நாடு 17ம் தேதி பிற்பகலில் புயல் சின்னம் ஓங்கோல் - காக்கிநாடா இடையே கரையை கடக்கும் DIN DIN Friday, December 14, 2018 02:45 PM +0530
சென்னை: வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகவிருக்கும் புயல் சின்னம் 17ம் தேதி பிற்பகலில் ஓங்கோல் - காக்கிநாடா இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக சென்னைக்கு தென் கிழக்கே 930 கி.மீ. தொலைவிலும், மசூலிப்பட்டினத்தில் இருந்து 1090 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இந்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று ஆந்திராவை நோக்கி நகர்ந்து ஓங்கோலுக்கும் - காக்கிநாடாவுக்கும் இடையே 17ம் தேதி பிற்பகலில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 15, 16ம் தேதிகளில் ஒரு சில இடங்களில் மழையும், ஓரிரு இடங்கனில் கன மழையும் பெய்யக் கூடும்.

வங்கக் கடலின் தென் மேற்கு மற்றும் மத்திய மேற்குப் பகுதிகளுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருப்பவர்கள் கரை திரும்பவும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/12/4/w600X390/balachandran.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/14/17ம்-தேதி-பிற்பகலில்-புயல்-சின்னம்-ஓங்கோல்---காக்கிநாடா-இடையே-கரையை-கடக்கும்-3057957.html
3057953 தமிழ்நாடு செந்தில் பாலாஜி அதிமுகவில் சேர்ந்திருந்தால் வருத்தப்பட்டிருக்க மாட்டேன்: டிடிவி தினகரன் DIN DIN Friday, December 14, 2018 02:01 PM +0530 செந்தில் பாலாஜி திமுகவுக்கு பதில் அதிமுகவில் சேர்ந்திருந்தால் வருத்தப்பட்டிருக்க மாட்டேன் என அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
4 மாதத்திற்கு முன்பு சொந்த காரணங்களுக்காக கட்சியை விட்டு விலகி இருப்பதாக செந்தில் பாலாஜி கூறினார். கடைசியாக தர்மபுரியில் தான் அவரை சந்தித்தேன். 

செந்தில் பாலாஜி சென்றதால் வருத்தம் இல்லை, எங்கிருந்தாலும் வாழ்க. ஜெயலலிதா மீது வழக்கு தொடர்ந்த திமுகவில் செந்தில் பாலாஜி சேர்ந்தது வருத்தம் அளிக்கிறது, அதிமுகவில் சேர்ந்திருந்தால் கூட வருத்தப்பட்டிருக்க மாட்டேன். 

செந்தில் பாலாஜி சென்றதால், அமமுகவிற்கு பாதிப்பில்லை. எந்த காலத்திலும் துரோகிகளுடன் இணைய மாட்டேன். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் மேல் முறையீடு கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

முன்னதாக இன்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமமுகவில் இருந்து விலகி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/12/14/w600X390/ttv.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/14/செந்தில்-பாலாஜி-அதிமுகவில்-சேர்ந்திருந்தால்-வருத்தப்பட்டிருக்க-மாட்டேன்-டிடிவி-தினகரன்-3057953.html
3057951 தமிழ்நாடு திமுகவில் இணைந்தது ஏன்? சிறந்த தலைவர் யார்? செந்தில் பாலாஜி விளக்கம் DIN DIN Friday, December 14, 2018 01:21 PM +0530
சென்னை: அமமுகவில் இருந்து திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அண்ணா அறிவாலயத்தில் இன்று பிற்பகலில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, தொண்டர்களை அரவணைத்துச் செல்பவரே சிறந்த தலைவராக இருக்க முடியும். மு.க. ஸ்டாலினை சிறந்த தலைவராக நான் பார்க்கிறேன்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நான் ஒரு இயக்கத்தில் பொறுப்பேற்று செயல்பட்டு வந்தேன். இன்று ஸ்டாலின் மீதான ஈர்ப்பால் திமுகவில் என்னை இணைத்துக் கொண்டேன்.

ஒரு சிறந்த தலைவர் என்பது தொண்டர்களுடைய அரவணைப்பை பெற்றிருப்பவராக இருக்க  வேண்டும். அப்படிப்பட்ட தலைவராக ஸ்டாலினைப் பார்க்கிறன். இபிஎஸ் - ஓபிஎஸ் தலைமையிலான அரசு மக்களுக்கு எதிரான ஆட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது
கரூர் மாவட்ட மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப திமுகவில் இணைந்துள்ளேன். இருளை அகற்றி ஒளி தருவது சூரியன், இன்று எனது மனதில் இருந்த இருளை அகற்றி ஒளி தந்திருப்பது திமுக. 

சில ஊடகங்கள் சொல்வது போல எங்கெங்கோ சென்றுவிட்டு திமுகவுக்கு வரவில்லை. 1996ம் ஆண்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டேன். பிறகு அதிமுகவில் இணைந்து கொண்டு பணியாற்றினேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஒரு தலைமையின் கீழ் செயல்பட்டோம். இப்போது திமுகவில் இணைந்துள்ளேன். ஸ்டாலினின் கரத்தை வலுப்படுத்தவே திமுகிவில் இணைந்துள்ளோம்.

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் உங்களுக்கு மனக்கசப்பு ஏற்பட்டதாக செய்தியாளர்கள் கேட்டதற்கு, டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்ற தீர்ப்புக்குப் பிறகு மேல்முறையீடு செய்ய வேண்டாம், தேர்தலை சந்திக்கலாம் என்று முதலில் சொன்னதே நான்தான் என்று கூறினார். ஒரு தலைமையின் கீழ் இருந்த நான் தற்போது அதனை விமரிசிப்பது சரியாக இருக்காது என்றும் பதிலளித்தார்.

மேலும் அவர் பேசுகையில், தமிழக முதல்வராக ஜெயலலிதா இருக்க வேண்டும் என்றுதான் மக்கள் வாக்களித்தார்களே தவிர, ஈபிஎஸ், ஓபிஎஸ் தலைமையிலான அரசுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை என்றும் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/12/14/w600X390/sendhil.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/14/திமுகவில்-இணைந்தது-ஏன்-சிறந்த-தலைவர்-யார்-செந்தில்-பாலாஜி-விளக்கம்-3057951.html
3057949 தமிழ்நாடு மேக்கேதாட்டுவில் அணை விவகாரம்: புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் DIN DIN Friday, December 14, 2018 01:04 PM +0530 மேக்கேதாட்டுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு என்ற இடத்தில் அணையைக் கட்ட கர்நாடக அரசின் வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக சட்டப்பேரவையில் கடந்த வாரம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இதேபோல, புதுவையிலும் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை நடத்த வேண்டும் என புதுவையில் உள்ள எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. அதன் அடிப்படையில் பேரவையின் சிறப்புக்கூட்டம் இன்று நடைபெறும் என பேரவைச் செயலர் வின்சென்ட் ராயர் அறிவித்தார். 

அதன்படி புதுவை சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டம் இன்று காலை நடைபெற்றது. அதில், மேக்கேதாட்டுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/20/w600X390/pondy-sec.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/14/மேக்கேதாட்டுவில்-அணை-விவகாரம்-புதுச்சேரி-சட்டப்பேரவையில்-தீர்மானம்-நிறைவேற்றம்-3057949.html
3057948 தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பாதை தவறிவிட்டார்: அமைச்சர் உதயகுமார் DIN DIN Friday, December 14, 2018 01:00 PM +0530
திமுகவில் இருந்து விலகி அதிமுக, அமமுக சென்ற செந்தில் பாலாஜி, பாதை தவறி மீண்டும் திமுகவில் இணைந்துள்ளார் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து செயல்பட்டு வந்தார். 

அமமுகவுடன் இணைந்து செயல்பட்டதால் பேரவைத் தலைவர் தனபாலால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில் செந்தில் பாலாஜியும் ஒருவர். இவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றமும் தீர்ப்பு கூறியது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரனை செந்தில்பாலாஜி வலியுறுத்தி வந்துள்ளார். அதை டிடிவி தினகரன் ஏற்கவில்லை எனத் தெரிகிறது. இதனால், அமமுகவிலிருந்து விலக முடிவெடுத்த செந்தில்பாலாஜி, திமுகவில் இருந்து பிரிந்து சென்று சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு, தனது ஆதரவாளர்கள் 500க்கும் மேற்பட்டோருடன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மீண்டும் திமுகவில் இணைந்துள்ளார் செந்தில் பாலாஜி.

இந்நிலையில், திமுகவில் இணைந்துள்ள செந்தில் பாலாஜி பாதை தவறிவிட்டார் என்றும் செந்தில் பாலாஜி பாதை தவறியதால் தான் தினகரன் தற்போது பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறார் என அமைச்சர் உதயகுமார் கூறினார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/7/w600X390/udhakumar.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/14/முன்னாள்-அமைச்சர்-செந்தில்-பாலாஜி-பாதை-தவறிவிட்டார்-அமைச்சர்-உதயகுமார்-3057948.html
3057941 தமிழ்நாடு 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திமுகவில் ஐக்கியமானார் செந்தில் பாலாஜி DIN DIN Friday, December 14, 2018 12:54 PM +0530
சென்னை: திமுகவில் இருந்து பிரிந்து சென்று சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கட்சியில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.

அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவுக்கு மாறினார். இன்று அங்கிருந்து விலகிய அவர், தனது ஆதரவாளர்களுடன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர் அட்டையை பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் துரைமுருகன், டி.ஆர். பாலு, ஆர். ராஜா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதனை முன்னிட்டு அண்ணா அறிவாலயத்தில் ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளனர். பட்டாசுகள் வெடித்து தொண்டர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து செயல்பட்டு வந்தார். 

அமமுகவுடன் இணைந்து செயல்பட்டதால் பேரவைத் தலைவர் தனபாலால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில் செந்தில் பாலாஜியும் ஒருவர். இவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றமும் தீர்ப்பு கூறியது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரனை செந்தில்பாலாஜி வலியுறுத்தி வந்துள்ளார். அதை டிடிவி தினகரன் ஏற்கவில்லை எனத் தெரிகிறது. இதனால், அமமுகவிலிருந்து விலகும் முடிவை செந்தில்பாலாஜி எடுத்துள்ளார்.

மேலும், கரூரைச் சேர்ந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் மோதல் உள்ளதால், மீண்டும் அதிமுகவுக்குச் செல்ல முடியாத நிலையில் செந்தில்பாலாஜி இருந்து வருகிறார்.

இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை காலை 12 மணியளவில் தனது ஆதரவாளர்களுடன் செந்தில் பாலாஜி இணைந்தார்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2014/2/2/1/w600X390/senthilbalaji.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/14/18-ஆண்டுகளுக்குப்-பிறகு-மீண்டும்-திமுகவில்-ஐக்கியமானார்-செந்தில்-பாலாஜி-3057941.html
3057947 தமிழ்நாடு தமிழகத்தைப் புறக்கணிக்கும் பேத்தை புயல்: ஒரே ஒரு நாள் சென்னைக்கு கனமழைக்கு வாய்ப்பு DIN DIN Friday, December 14, 2018 12:47 PM +0530
சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று தீவிரப் புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது.

முதலில் வட தமிழகம் - ஆந்திரா இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட புயல், ஆந்திரா நோக்கி நகர ஆரம்பித்ததால், தமிழகத்துக்கு புயல் வாய்ப்பு தவிர்க்கப்பட்டது. அதனால், தமிழகத்துக்கான மழை வாய்ப்பும் குறைந்துவிட்டது. 

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இரண்டு நாள் மழை வாய்ப்பு குறைந்து தற்போது வட தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே மழை பெய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று புயல் சின்னமாக மாறும் தாழ்வு மண்டலம் காரணமாக, தெற்கு ஆந்திரா மற்றும் வடக்கு தமிழகம் பகுதிகளில் கன மழை பெய்யும் என்றும், இது மேலும் தீவிரமடைந்து, புயல் கரையைக் கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. புயல் எங்கு கரையைக் கடக்கும் என்பது இதுவரை கணிக்கப்படவில்லை. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் குறைந்தது ஒரு நாள் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புயல் கரையைக் கடக்கும் போது தனுஷ்கோடி முதல் புலிகாட் வரை கடல் அலைகளின் சீற்றம் அதிகமாக இருக்கும் என்றும், ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் அனைவரும் கரை திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/12/14/w600X390/dec_14th.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/14/cyclone-phethai-may-miss-tamil-nadu-and-hit-andhra-pradesh-3057947.html
3057940 தமிழ்நாடு திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் பிறந்த நாள் அன்று நிவாரணப்பணி மேற்கொள்வீர்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் DIN DIN Friday, December 14, 2018 12:40 PM +0530 திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் பிறந்த நாள் அன்று நிவாரணப்பணி மேற்கொள்வீர் என தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பேராசான் - தத்துவ வித்தகர் நம் இனமானப் பேராசிரியர் பெருந்தகை தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா -தலைவர் கலைஞரின் தலைமையினை ஏற்று இயக்கம் காப்பது ஒன்றே இலட்சியம் என வாழ்பவர். கழகத்தின் பொதுச் செயலாளரான பேராசிரியர் பெருந்தகை அவர்களுக்கு டிசம்பர் 19ஆம் நாளன்று 97வது பிறந்தநாள்.

தலைவர் கலைஞரைவிட வயதில் மூத்தவர் - தந்தை பெரியாரின் வாழ்நாளையும் கடந்து வாழ்பவர். கொள்கை வழி அண்ணனாகத் தலைவர் கலைஞருக்குத் துணை நின்று, இன்று உங்களில் ஒருவனான எனக்கு, தந்தை நிலையிலிருந்து வழிகாட்டி வருபவர். பேராசிரியர் பெருந்தகை அவர்கள் தனது பிறந்தநாள் விழாக்களை, தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள கஜா புயலின் தாக்கத்தாலும், தனது உடல்நிலை கருதியும் முழுமையாகத் தவிர்த்திட விரும்புவதால், அதுகுறித்து நேற்று (13-12-2018) அறிக்கை வெளியிட்டிருந்தார். கழகத்தின் தலைவர் என்ற முறையில் என்னிடமும் அதனையே வேண்டுகோளாகவும் விடுத்திருந்தார்.

கழகத்தினர் ஏற்கனவே கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், பேராசிரியர் பெருந்தகையின் பிறந்தநாளான டிசம்பர்-19  அன்று சிறப்பு நிவாரண முகாம்கள் மூலம் நலத்திட்ட உதவி செய்திட வேண்டுமெனவும் - நேரில் வாழ்த்து தெரிவிப்பது என்ற பெயரில் உடல்நலம் குன்றியிருக்கும் பேராசிரியர் பெருந்தகை அவர்களை சிரமப்படுத்த வேண்டாம் என்றும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

பேராசிரியரின் விருப்பத்தை நிறைவேற்றும் மாணவர்களாக கழகத்தினர் செயல்பட்டு, அவர் நமக்கு கற்றுத்தந்த கொள்கைக் பாடங்களுக்கு சிறப்பு சேர்ப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.    
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/12/13/w600X390/stalin.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/14/பேராசிரியர்-அன்பழகனின்-97ஆம்-பிறந்த-நாளில்-நிவாரணப்-பணிகளை-மேற்கொள்வீவர்-தொண்டர்களுக்கு-முகஸ்டாலி-3057940.html
3057944 தமிழ்நாடு அரசினர் ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்புக! வைகோ வலியுறுத்தல் DIN DIN Friday, December 14, 2018 12:29 PM +0530 அரசினர் ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், மாமல்லபுரம் அடுத்த மணமை ஊராட்சியில் 1935 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட அரசினர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் 276 இருபால் மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஆதிதிராவிடப் பள்ளியாக இருந்தபோதிலும் ஏனைய எல்லாம் சமூகத்து பிள்ளைகளும் இணைந்து பயிலும் பொதுப்பள்ளியாக விளங்கி வருகின்றது. இந்த பள்ளிக்குப் போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. அருகாமையில் உள்ள கடம்பாடி ஊராட்சி, குன்னத்தூர் ஊராட்சியைச் சார்ந்த மாணவர்களும் இந்தப் பள்ளியில் பயின்று வருகின்றனர்.

முதல் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை 91 இருபால் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட ஆசிரியர் பணியிடம் 5; ஆனால் பணியாற்றுவது ஒரே ஓர் ஆசிரியர் மட்டும்தான். 6-ஆம் வகுப்பில் இருந்து 10-ஆம் வகுப்பு வரை 137 இருபால் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட ஆசிரியர் பணியிடம் 9; ஆனால் பணியாற்றுவது ஒரே ஓர் ஆசிரியர் மட்டும்தான். 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு வரை 48 இருபால் மாணவர்கள் பயின்று வருகின்றனர்; இவ்வகுப்புகளுக்கு 3 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். 

கூடுதலாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று பலமுறை மனு கொடுத்தும் போதுமான ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படவில்லை. வகுப்புகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் மற்றும் கணினி, உடற்கல்வி, ஆய்வுக் கூடங்கள், நூலகம், விளையாட்டுத் திடல், கழிவறைகள் இவை அனைத்தும் ஒவ்வொரு பள்ளியிலும் இருப்பதை தமிழக அரசு உறுதிப்படுத்திட வேண்டும். தேர்வுகள் நெருங்கி வருகின்ற வேளையில் போதுமான ஆசிரியர்களை உடனடியாக பணி அமர்த்திட வேண்டுகின்றேன்.

கல்பாக்கம் அணு உலை சுற்றுச்சுவர் அருகாமையில் அமைந்துள்ள இந்தப் பள்ளிக்கு எந்தப் பயனும் இல்லை என்பது தெளிவாகிறது. அணு உலை அமைவதற்கு நிலம் கொடுத்த சுற்றுப்புற கிராம மக்களுக்கு மக்கள் நலத் திட்டங்களைச் செய்து வருவதாக மத்திய அரசு சொல்வது இதன் மூலமாக பொய்த்துப்போய் உள்ளது. மேலும் காலம் தாழ்த்திடாமல் போர்க்கால அடிப்படையில் போதுமான ஆசிரியர்கள் பணியிடங்களை நியமித்திட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/3/w600X390/vaiko.png http://www.dinamani.com/tamilnadu/2018/dec/14/அரசினர்-ஆதிதிராவிட-நல-மேல்நிலைப்-பள்ளியில்-ஆசிரியர்-பணியிடங்களை-உடனே-நிரப்புக-வைகோ-வலியுறுத்தல்-3057944.html
3057939 தமிழ்நாடு செந்தில் பாலாஜி திமுகவில் இணைவது, கடலில் கரைத்த பெருங்காயம் போன்றது: அமைச்சர் ஜெயகுமார் பேட்டி DIN DIN Friday, December 14, 2018 11:41 AM +0530
சென்னை: திமுகவில் செந்தில் பாலாஜி இணைவது, கடலில் கரைத்த பெருங்காயம் போன்றது என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து செயல்பட்டு வந்தார். 

அமமுகவுடன் இணைந்து செயல்பட்டதால் பேரவைத் தலைவர் தனபாலால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில் செந்தில் பாலாஜியும் ஒருவர். இவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றமும் தீர்ப்பு கூறியது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரனை  செந்தில்பாலாஜி வலியுறுத்தி வந்துள்ளார். அதை டிடிவி தினகரன் ஏற்கவில்லை எனத் தெரிகிறது. இதனால், அமமுகவிலிருந்து விலகும் முடிவை செந்தில்பாலாஜி எடுத்துள்ளார்.

இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் செந்தில் பாலாஜி இணைய உள்ளார். 

செந்தில்பாலாஜி திமுகவில் இன்று இணையும் நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் அவரது ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திமுகவில் செந்தில் பாலாஜி இணைவது, கடலில் கரைத்த பெருங்காயம் போன்றது. பழைய பாசத்தின் அடிப்படையிலேயே செந்தில் பாலாஜி திமுகவில் இணைய உள்ளார் என்றார்.

மேலும், அமமுகவில் இருந்து விலகிய செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் அதிமுகவில் வந்து இணைந்துள்ளனர் என்று தெரிவித்த ஜெயகுமார், தான் ஆபத்தான மனிதர் என்பதை தினகரனே ஒத்துக்கொண்டுள்ளார் ஜெயகுமார் கூறினார். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/12/14/w600X390/jayakumar.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/14/செந்தில்-பாலாஜி-திமுகவில்-இணைவது-கடலில்-கரைத்த-பெருங்காயம்-போன்றது-அமைச்சர்-ஜெயகுமார்-பேட்டி-3057939.html
3057937 தமிழ்நாடு கோவை தேக்கம்பட்டி வனப்பகுதியில் யானைகள் புத்துணர்வு முகாம் தொடங்கியது DIN DIN Friday, December 14, 2018 11:35 AM +0530 கோவை தேக்கம்பட்டி வனப்பகுதியில் யானைகள் புத்துணர்வு முகாம் இன்று தொடங்கி உள்ளது. 

கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட  வன பத்ரகாளியம்மன் கோயில் அருகே பவானி ஆற்றங்கரையோரத்தில் கோயில் யானைகளுக்கான புத்துணர்வு  முகாம் 2012 ஆம் ஆண்டு முதல் நடந்து வருகிறது.  இந்த ஆண்டுக்கான 6 ஆவது புத்துணர்வு முகாம் தேக்கம்பட்டியில் இன்று தொடங்கி உள்ளது. 

இதனை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சேவூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். அப்போது அவர்களை யானைகளுக்கு கரும்புகள், பழங்கள் வழங்கினர். ஜனவரி 30 ஆம் தேதி வரை 48 நாள்கள் நடைபெற உள்ள இந்த முகாமில் தமிழகத்திலுள்ள 29 கோயில் யானைகள் பங்கேற்க உள்ளன. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/12/14/w600X390/ele.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/14/கோவை-தேக்கம்பட்டி-வனப்பகுதியில்-யானைகள்-புத்துணர்வு-முகாம்-தொடங்கியது-3057937.html
3057925 தமிழ்நாடு ஆக்கிரமிப்பு வீடுகளில் குடிநீர், மின் இணைப்பு, பொங்கல் பண்டிகை பரிசுகளை நிறுத்தலாம்: உயர்நீதிமன்றம் அதிரடி DIN DIN Friday, December 14, 2018 11:10 AM +0530
சென்னை: ஆக்கிரமிப்பை காலிசெய்ய மறுப்பவர்களின் வீடுகளுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பை துண்டிக்கவும், பொங்கல் பண்டிகை பரிசும் வழங்கக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை பெருநகரில் மதுரவாயல் முதல் நேப்பியர் பாலம் வரை சுமார் 17 கி.மீ. தூரத்துக்கு கூவம் ஆறும், மணப்பாக்கம் மிலிட்டரி பாலம் முதல் பட்டினப்பாக்கம் வரை சுமார் 25 கி.மீ. நீளத்துக்கு அடையாறும் முக்கிய நதிகளாக ஓடுகின்றன. அத்துடன் ஓட்டேரி நல்லா கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய், வேளச்சேரி வீராங்கல் ஓடை, பள்ளிக்கரணை சதுப்பு நிலக் கால்வாய், மாதவரம் தணிகாசலம் கால்வாய், புழல் ஏரியின் உபரிநீர் கால்வாய் மற்றும் மணப்பாக்கம் ராமாபுரம் வடிகால்வாயும், கீழ்கட்டளை, ஆதம்பாக்கம், ஒட்டியம்பாக்கம், சிட்லபாக்கம், செம்பாக்கம் ஏரிகள் ஆகியவற்றின் உபரி நீர் செல்லும் கால்வாய்கள் சென்னை மாநகரின் நீர்வழிப் பாதைகளில் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாக உள்ளன. ஒரு காலத்தில் இந்த நீர்வழிப் பாதைகளில் மாசுபடாத நீர் ஓடியது. இத்தனை நீர்வழிப்பாதைகளிலும் இணைக்கும் வகையில் செயற்கையாக அமைக்கப்பட்ட முக்கிய நீர்வழிப்பாதைதான் பக்கிங்ஹாம் கால்வாய். 

சென்னை மாநகரின் கால்வாய்கள், ஓடைகள், ஆறுகளை எல்லாம் இணைத்துச் சமன்படுத்தி ஒரு கால்வாயை அமைப்பதன் மூலம் எதிர்காலத்தில் மாநகரின் வெள்ளப்பெருக்கைத் தடுத்திட முடியும் என்ற கோணத்தில்தான் 1801-ஆம் ஆண்டில் முதல்கட்டமாக எண்ணூரிலிருந்து சென்னை வரை பக்கிங்ஹாம் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கியது. பிறகு ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதிக்கும், தமிழகத்தின் விழுப்புரம் பகுதிக்கும் இக்கால்வாய் விரிவாக்கம் செய்யப்பட்டது. இன்று சென்னையில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தும் ஆறுகளும், ஏரிகளும் அன்றைக்கு பக்கிங்ஹாம் கால்வாயின் நீர்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்குள்தான் இருந்தன.

1890-ஆம் ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான படகுகளில் வணிகப் பொருள்களை சுமந்து செல்லும் வகையில் சிறப்பு பெற்றிருந்த இக்கால்வாய், பின்னர் அடிக்கடி ஏற்பட்ட வெள்ளத்தாலும், வறட்சியாலும் கால்வாய் வழி வணிகம் படிப்படியாகத் தடைபட்டது. இந்நிலையில் ஆக்கிரமிப்புகள், பாலங்கள், சென்னை கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரயில் திட்டம் போன்றவைகளால் நாளுக்கு நாள் பக்கிங்ஹாம் கால்வாயின் நீர்வழிப் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டது. 

மாநகரில் பல இடங்களில் கால்வாயின் அகலம் சுருங்கி இருந்தாலும், கொருக்குப்பேட்டை முதல் எண்ணூர் வரை சுமார் 15 கி.மீ. தூரத்துக்கு இக்கால்வாய் தற்போதும் உயிர்ப்புடன்தான் இருந்து வருகிறது. 

ஆனால், சமீபகாலமாக அரசு அதிகாரிகளின் பாராமுகத்தால் இக்கால்வாய் முற்றிலுமாக மாசடைந்து நீர்வழி அடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது. கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை பகுதிகளில் இருபுறமும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. திருவொற்றியூர் மணலி சாலையிலிருந்து எண்ணூர் முகத்துவாரம் வரையில் எங்கு பார்த்தாலும் ஆகாயத் தாமரை ஆக்கிரமித்துள்ளது.

முகத்துவாரத்திலிருந்து சத்தியமூர்த்தி நகர் வழியாக செல்லும் இக்கால்வாயில் கருப்பு நிறத்தில் எண்ணெய் கலந்த கழிவுநீர் ஓடுகிறது. அத்துடன் அதில் வீசும் துர்நாற்றம் சுற்றுப்பகுதி சுகாதாரத்தை சீர்கெட வைத்துள்ளது. 

இதற்கு காரணம் திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட வடசென்னை பகுதிகளில் பாதாளச் சாக்கடை திட்டத்தில் சேகரிக்கப்படும் கழிவுநீர் அனைத்தும் எவ்வித சுத்திகரிப்பும் இன்றி இக்கால்வாயில் கலந்தே செல்கின்றன.

சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, ரசாயன ஆலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு எண்ணெய்களும் இக்கால்வாயில்தான் கலந்து செல்கின்றன.

கழிவு நீராலும், ஆக்கிரமித்து வரும் ஆகாயத் தாமரையாலும், கணக்கில்லாமல் கொட்டப்படும் பிளாஸ்டிக் குப்பைகளாலும் சென்னை மாநகரின் முக்கிய நீர்வழிப்பாதையின் உயிர்நாடியாக இருந்தது வரும் பக்கிங்ஹாம் கால்வாய் சீரழிவின் விளிம்பில் உள்ளதை கருத்தில் கொண்டு, அரசு நிர்வாகம் இதனை உடனடியாக சீர்படுத்த வேண்டுமென இப்பகுதியினர் எதிர்பார்ப்பாக இருந்து வந்தது. 

இந்நிலையில், பக்கிங்ஹாம் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளில் இருந்து வெளியேற மறுப்பவர்களின் குடும்ப அட்டை, குடிநீர் இணைப்பு, மின் இணைப்புகளை நிறுத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவிதிதுள்ளது. 

மேலும், வெளியேற மறுத்தால், அவர்களின் ரேஷன் கார்டை திரும்பப் பெறுதல் வேண்டும், பொங்கல் பண்டிகை பரிசும் போன்ற நலத்திட்டங்களை வழங்கக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/16/w600X390/baking-ham.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/14/ஆக்கிரமிப்பு-வீடுகளில்-குடிநீர்-மின்-இணைப்பு-பொங்கல்-பண்டிகை-பரிசுகளை-நிறுத்தலாம்-உயர்நீதிமன்றம்--3057925.html
3057936 தமிழ்நாடு ஜெயலலிதா மரணம்: போயஸ் கார்டன் பணிப்பெண்கள் மூவர் விசாரணை ஆணையத்தில் ஆஜர் DIN DIN Friday, December 14, 2018 11:09 AM +0530  

சென்னை: ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் பணியாற்றிய 3 பணிப்பெண்கள் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்று ஆஜர் ஆகியுள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்த போது, போயஸ் கார்டன் இல்லத்தில் பணிப்பெண்களாகப் பணியாற்றிய தஞ்சையைச் சேர்ந்த தேவிகா, பூமிகா, சிவயோகம் ஆகிய 3 பேரும், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகியுள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை கடந்த 2017 -ஆம் ஆண்டு செப்டம்பர் 25 -ஆம் தேதி தமிழக அரசு அமைத்தது. 

சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் கடந்த நவம்பர் 22 -ஆம் தேதி நீதிபதி ஆறுமுகசாமி தனது விசாரணையைத் தொடங்கினார்.

ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் இதுவரை ஜெயலலிதாவின் உறவினர்கள், சசிகலாவின் உறவினர்கள், அரசு மற்றும் அப்பல்லோ மருத்துவர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள், காவல் துறை உயரதிகாரிகள் உள்ளிட்ட 100 -க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளது. 

துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கும் விசாரணை ஆணையம் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/12/6/w600X390/Jayalalithaa-Jayalalitha-health-update.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/14/ஜெயலலிதா-மரணம்-போயஸ்-கார்டன்-பணிப்பெண்கள்-மூவர்-விசாரணை-ஆணையத்தில்-ஆஜர்-3057936.html
3057935 தமிழ்நாடு ஜெயலலிதா மரணம்: விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா வீட்டின் பணிப்பெண்கள் ஆஜர் DIN DIN Friday, December 14, 2018 11:04 AM +0530 ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா வீட்டின் பணிப்பெண்கள் ஆஜராகியுள்ளனர். 

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா, சசிகலாவின் உறவினர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள், காவல் துறை அதிகாரிகள், அரசு, அப்பல்லோ மருத்துவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். 

இந்நிலையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா வீட்டின் பணிப்பெண்கள் இன்று ஆஜராகியுள்ளனர். தஞ்சவூரை சேர்ந்த தேவிகா, பூமிகா, சிவயோகம் ஆகிய மூவரும் போயஸ் கார்டனில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பணிப்பெண்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/3/w600X390/arumugasamy.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/14/ஜெயலலிதா-மரணம்-விசாரணை-ஆணையத்தில்-ஜெயலலிதா-வீட்டின்-பணிப்பெண்கள்-ஆஜர்-3057935.html
3057928 தமிழ்நாடு வட இந்தியர்கள் மயமாகும் பொதுத்துறை நிறுவனங்கள்: மாநில ஒதுக்கீடு தேவை! ராமதாஸ் DIN DIN Friday, December 14, 2018 10:44 AM +0530 தமிழகத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் முழுக்க முழுக்க வட இந்தியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் நியமனத்தில் முழுக்க முழுக்க வட இந்தியர்களுக்கு தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டு மக்களின் உழைப்பாலும், தியாகத்தாலும் எழுப்பப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களில்  தமிழர்களுக்கு வேலை மறுக்கப்படுவது இந்தியாவில் தான் தமிழகம் இருக்கிறதா? என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மணலியில் உள்ள சென்னை பெட்ரோலிய நிறுவனத்தில் வேதியியல் பொறியாளர் பணிக்கு 21 பேர், இயந்திரவியல் பொறியாளர் பணிக்கு 9 பேர், மின்னியல் பொறியாளர் பணிக்கு 5 பேர் உட்பட மொத்தம் 8 வகையான பணிகளுக்கு 42 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிக்கை கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அப்பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நவம்பர் 11-ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்தொடர்ச்சியாக வேதியியல் பொறியாளர் பணிக்கான நேர்காணலுக்கு ஒரு பணிக்கு மூவர் வீதம் 65 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் கூட தமிழகத்தைச் சேர்ந்தவர் அல்ல என்பது தான் அதிர்ச்சியளிக்கும் விஷயமாகும்.

சென்னை பெட்ரோலிய நிறுவனத்திற்கான பணியாளர்களும், அதிகாரிகளும் கடந்த 2003-ஆம் ஆண்டு வரை முழுக்க முழுக்க தமிழக அளவில் தான் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர். 2003-ஆம் ஆண்டிற்கு பிறகு வட இந்தியர் படிப்படியாக உள்ளே திணிக்கப்பட்டனர். இப்போக்கு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, இப்போது முழுக்க முழுக்க வட இந்தியர்கள் மட்டுமே அதிகாரிகளாக நியமிக்கப்படுகின்றனர். அதற்கு ஏற்ற வகையில் தேர்வு முறையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2003-ஆம் ஆண்டு வரை சென்னை பெட்ரோலிய நிறுவனம் நேரடியாக ஆட்களைத் தேர்வு செய்து வந்த நிலையில், கடந்த 15 ஆண்டுகளாக ஆள்தேர்வுக்கான போட்டித்தேர்வுகளை நடத்தும் பொறுப்பு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

போட்டித்தேர்வுகளில் முறைகேடுகளை செய்து தான் முழுக்க முழுக்க வட இந்தியர்கள் சென்னை பெட்ரோலிய நிறுவனத்தின் அதிகாரிகளாக நியமிக்கப்படுகின்றனர். கடந்த ஆண்டு அஞ்சல்துறை பணிக்கான போட்டித்தேர்வில் தமிழ்ப் பாடத்தில், தமிழே தெரியாத ஹரியானா மாணவர்கள் எப்படி 96% மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்தனரோ, அதேபோல் தான் சென்னை பெட்ரோலிய நிறுவன அதிகாரிகள் பணிக்கான தேர்வுகளிலும் வட இந்தியரை வெற்றி பெறச் செய்வதற்காக அனைத்து முறைகேடுகளும் செய்யப்படுகின்றன. இதற்கு சென்னை பெட்ரோலிய நிறுவன நிர்வாகமும் துணை போகிறது.

அதிகாரிகள் நிலையிலான நியமனங்களில் மட்டுமே வட இந்தியர் திணிக்கப்பட்ட நிலை மாறி இப்போது தொழில் பழகுனர், அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட பணிகளிலும் வட இந்தியர்கள் திட்டமிட்டு திணிக்கப்படுகின்றனர். அதிகாரிகள் நிலைக்கு கீழ் உள்ள பணிகள் அனைத்தும் முழுக்க முழுக்க உள்ளூர்வாசிகளுக்கு மட்டும் தான் வழங்கப்பட வேண்டும் என்பது மரபாகும். ஆனால், மரபை உடைத்து  வட மாநிலத்தவர்கள் அதிக எண்ணிக்கையில் சென்னை பெட்ரோலிய நிறுவனத்தில் சேர்க்கப்படுகின்றனர்.

சென்னை பெட்ரோலியம் நிறுவனத்திற்கு சென்னை துறைமுகத்திலிருந்து கச்சா எண்ணெய் கொண்டு வருவதற்காக குழாய்ப் பாதை அமைக்கப்பட்டது. அதற்கு கடற்கரையோரப் பகுதிகளில் வாழும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், குழாய்ப்பாதை அமைக்க ஒத்துழைத்தால் அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று சென்னை பெட்ரோலிய நிறுவனம் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், அதைக் கூட நிறைவேற்றாமல் வட இந்தியர்களை பணியில் திணிக்கும் முயற்சியில் நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது. 

சென்னை பெட்ரோலிய நிறுவனத்தில் மட்டும் தான் இந்த நிலை என்று கூற முடியாது. தெற்கு ரயில்வே, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், பெல் நிறுவனம் உட்பட தமிழகத்திலுள்ள அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் இதே நிலை தான் நிலவுகிறது. பிகார், உத்தரப்பிரதேசம், உத்தர்காண்ட், மத்தியப் பிரதேசம் ஆகிய வட மாநிலங்கள் மற்றும் ஒதிஷா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தான் தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை ஆக்கிரமித்துள்ளனர். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

தமிழ்நாட்டில் உள்ள எந்த பொதுத்துறை நிறுவனமாக இருந்தாலும் அதை அமைப்பதற்கான நிலங்களை தமிழக மக்களோ, அரசோ தான் கொடுத்திருப்பார்கள். தொடக்கக்காலத்தில் இந்த நிறுவனங்களின் முன்னேற்றத்திற்கு அவர்கள் தான் கடுமையாக உழைத்திருப்பார்கள். அவர்களுக்கு துரோகம் செய்து  விட்டு பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மத்திய ஆட்சியாளர்களின் துணையுடன் பணியில் அமர்த்தப் பட்டால் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எல்லாம் இந்தியாவின் அங்கம் தானா... இல்லையா? என்ற வினா எழுகிறது. இந்த வினாவுக்கு மத்திய அரசு  அதன் சமூகநீதி செயல்பாடுகளால் பதிலளிக்க வேண்டும்.

தமிழகத்திலுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் அதிகாரிகள் நிலையிலான பணிகளில் 75 விழுக்காடும், அதற்கு கீழ் உள்ள பணிகளில் 100 விழுக்காடும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மாநில ஒதுக்கீடாக வழங்கப்பட வேண்டும். இந்தக் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுத்தால், இந்த சமூக அநீதியைக் கண்டித்து சென்னை பெட்ரோலிய நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டத்தை பா.ம.க. நடத்தும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/11/28/w600X390/ramadoss.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/14/வட-இந்தியர்கள்-மயமாகும்-பொதுத்துறை-நிறுவனங்கள்-மாநில-ஒதுக்கீடு-தேவை-ராமதாஸ்-3057928.html
3057926 தமிழ்நாடு ஜெயலலிதா மரணம்: விசாரணை ஆணையத்தில் சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆஜர் DIN DIN Friday, December 14, 2018 10:35 AM +0530 ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆஜராகியுள்ளார். 

கடந்த 2016-ஆம் ஆண்டு ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவர் கவனித்து வந்த துறைகள் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டன. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவி ஏற்றார். அதிமுக கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பம் காரணமாக முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் துறந்தார். 

மேலும், அக்கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார். இதையடுத்து, ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறியதுடன், அதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்தார். அதன் அடிப்படையில், கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. 

கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. அதன்படி,  கர்நாடக மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்த அனுமதி கேட்டு தமிழக உள்துறைக்கும், கர்நாடக சிறைத் துறைக்கும் விசாரணை ஆணையம் அண்மையில் கடிதம் எழுதி இருந்தது. 

மேலும், சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை (டிச. 14) ஆஜராகுமாறும் அண்மையில் அழைப்பாணை அனுப்பப்பட்டது. இதையடுத்து விசாரணை ஆணையம் முன்பு சுகாதாரத் துறை முதன்மை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் இன்று ஆஜராகியுள்ளார். அவரிடம் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விசாரிக்கப்பட உள்ளது. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/27/w600X390/radhakrishnan.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/14/ஜெயலலிதா-மரணம்-சுகாதாரத்-துறை-முதன்மைச்-செயலர்-ஜெராதாகிருஷ்ணன்-ஆஜர்-3057926.html
3057927 தமிழ்நாடு டிடிவி தினகரன் உட்பட அமமுகவினர் அனைவரும் திமுகவில் இணைவர்: அமைச்சர் ஜெயகுமார்  DIN DIN Friday, December 14, 2018 10:34 AM +0530
சென்னை: டிடிவி தினகரன் உட்பட அமமுகவினர் அனைவரும் திமுகவில் இணைவார்கள் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து செயல்பட்டு வந்தார். 

அமமுகவுடன் இணைந்து செயல்பட்டதால் பேரவைத் தலைவர் தனபாலால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில் செந்தில் பாலாஜியும் ஒருவர். இவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றமும் தீர்ப்பு கூறியது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரனை  செந்தில்பாலாஜி வலியுறுத்தி வந்துள்ளார். அதை டிடிவி தினகரன் ஏற்கவில்லை எனத் தெரிகிறது. இதனால், அமமுகவிலிருந்து விலகும் முடிவை செந்தில்பாலாஜி எடுத்துள்ளார்.

மேலும், கரூரைச் சேர்ந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் மோதல் உள்ளதால், மீண்டும் அதிமுகவுக்குச் செல்ல முடியாத நிலையில் செந்தில்பாலாஜி இருந்து வருகிறார்.

இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் செந்தில் பாலாஜி இணைய உள்ளார். 

இதையடுத்து அமமுகவை அழிக்க நினைப்பவர்கள் உயர் மின் அழுத்த மின்சாரத்தை தொடுவதற்கு சமம் என்றும் ஒரு சிறு குழு விலகி செல்வதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடாது என டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார். 
 
இந்நிலையில், அமைச்சர் ஜெயகுமார் தனியார் தமிழ் தொலைகாட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், டிடிவி தினகரன் உள்பட அமமுகவினர் அனைவரும் திமுகவில் இணைவார்கள் என்றும் அதற்கு முன்னோட்டம்தான் செந்தில் பாலாஜி என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். 

மேலும், ராமாயணத்தில் கைகேயி புலம்பியது போல டிடிவி தினகரன் உச்சகட்டமாக புலம்பியிருப்பதாவும், நாளைக்கே இடைத்தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி பெற்றும் என ஜெயகுமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/29/w600X390/jayakumar.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/14/டிடிவி-தினகரன்-உட்பட-அமமுகவினர்-அனைவரும்-திமுகவில்-இணைவர்-அமைச்சர்-ஜெயகுமார்-3057927.html
3057907 தமிழ்நாடு ஆந்திராவுக்கும் சென்னைக்கும் இடையே புயல் கரையை கடக்கிறது: சென்னை வானிலை ஆய்வு மையம் DIN DIN Friday, December 14, 2018 09:57 AM +0530
சென்னையில் இருந்து 170 கி.மீ. தொலைவில் தென்கிழக்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ள புயல், இது இன்று அடுத்து புயலாக மாறி வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து தெற்கு ஆந்திரம் மற்றும் அதையொட்டிய வட தமிழகம் கடற்கரை நோக்கி கடக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதனால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் எச்சரிக்கை காரணமாக வங்கக் கடலில் வருகிற 17-ஆம் தேதி வரை கடல் சீற்றத்துடன் காணப்படும் எனவும், வடதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றானது மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும். என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

வங்க கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, காரைக்கால் துறைமுகத்தில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் பாதுகாப்புடன் இருக்கவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கரை திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/12/14/w600X390/clouds.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/14/ஆந்திராவுக்கும்-சென்னைக்கும்-இடையே-புயல்-கரையை-கடக்கிறது-சென்னை-வானிலை-ஆய்வு-மையம்-3057907.html
3057897 தமிழ்நாடு காரைக்கால் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் கூண்டு ஏற்றம் DIN DIN Friday, December 14, 2018 09:21 AM +0530
காரைக்கால்: வங்க கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, காரைக்கால் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

வங்க கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர், புதுச்சேரி, பாம்பன் ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ள நிலையில், இன்று இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

வங்க கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வருகிற 14, 15 ஆகிய இரண்டு நாள்கள் தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.  

புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து வெள்ளிக்கிழமை புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தப் புயலானது சனிக்கிழமை அதி தீவிரப் புயலாக மாறக்கூடும் என்பதால் கடலூர், சென்னை, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் பலத்த மழைக்கான வாய்ப்புள்ளதாக கடலூர் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, புயல் எச்சரிக்கை காரணமாக வங்கக் கடலில் வருகிற 17-ஆம் தேதி வரை கடல் சீற்றத்துடன் காணப்படும் எனவும், மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வங்க கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாகை, பாம்பன், காரைக்கால், கடலூர் மற்றும் புதுச்சேரி துறைமுகத்தில் தொலைதூர புயல் எச்சரிக்கையைக் குறிக்கும் 1-ஆம் எண் எச்சரிக்கைக் கூண்டு நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் ஏற்றப்பட்டது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் பாதுகாப்புடன் இருக்கவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், சென்னையில் இருந்து 1,210 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதாகவும், மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் ஆந்திர கடற்கரையை நோக்கி நகர்வதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், காரைக்கால் துறைமுகத்தில் 2-ஆம் எண் எச்சரிக்கைக் கூண்டு இன்று வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டுள்ளது. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/12/14/w600X390/flag1.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/14/காரைக்கால்-துறைமுகத்தில்-இரண்டாம்-எண்-புயல்-கூண்டு-ஏற்றம்-3057897.html
3057878 தமிழ்நாடு பெட்ரோல் விலையில் இன்று மாற்றம் இல்லை: எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு DIN DIN Friday, December 14, 2018 08:41 AM +0530
பெட்ரோல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை என்றும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 8 காசுகள் குறைந்து லிட்டர் ரூ.68.18 ஆக விற்பனை செய்யப்படும் என தெரிவித்துள்ளது. 

பெட்ரோலியப் பொருள்களின் விலை தொடர்ந்து இறங்கு முகத்தில் இருந்து வந்த நிலையில், 5 மாநில தேர்தல் முடிவுகளுக்கு பின்பு, 57 நாட்களுக்கு பின்னர் நேற்று வியாழக்கிழமை பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் உயர்ந்து. டீசல் விலையில் எந்த மாற்றம் செய்யப்படாமல் விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில், இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் மாற்றம் இல்லாமல் ரூ.72.94 ஆகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 8 காசுகள் குறைந்து, லிட்டர் ரூ.68.26 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 
 
கடந்த இரு மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைந்து வந்ததால் ஆறுதல் அடைந்த வாகன ஓட்டிகள் 5 மாநில தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் இரு தினங்களாக பெட்ரோல், டீசல் விலைகளில் சிறிதளவிலான ஏற்றமும், மாற்றமும் நிகழந்து வருவது மீண்டும் அச்சத்தை எழுப்பி உள்ளது. 

கடந்த அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.86.10 ஆகவும், டீசல் விலை ரூ.80.04 என வரலாறு காணாத உச்சத்தை தொட்டது குறிப்பிடத்தக்கது. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/28/w600X390/PETROL2.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/14/பெட்ரோல்-விலையில்-இன்று-மாற்றம்-இல்லை-எண்ணெய்-நிறுவனங்கள்-அறிவிப்பு-3057878.html
3057859 தமிழ்நாடு மதுரை ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி: ரயில் போக்குவரத்தில் மாற்றம் மதுரை DIN Friday, December 14, 2018 08:06 AM +0530 மதுரை ரயில் நிலைய நடைமேடை மற்றும் தரைத்தளத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால் ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

பழனி - மதுரை பயணிகள் ரயில் (56709) டிச. 14 ஆம் தேதி கூடல் நகர் மற்றும் மதுரை இடையே பகுதி வாரியாக ரத்து செய்யப்படுகிறது. மதுரை - பழனி பயணிகள் ரயில் (56710) டிச. 14, 15ஆம் தேதிகளில் மதுரை, கூடல்நகர் இடையே பகுதி வாரியாக ரத்து செய்யப்படுகிறது. 

விழுப்புரம் - மதுரை பயணிகள் ரயில் (56705) டிச. 14 ஆம் தேதி திண்டுக்கல் மற்றும் மதுரை இடையே பகுதி வாரியாக ரத்து செய்யப்படுகிறது. மதுரை - விழுப்புரம் பயணிகள் ரயில் (56706) டிச. 14, 15ஆம் தேதிகளில் மதுரை, திண்டுக்கல் இடையே பகுதி வாரியாக ரத்து செய்யப்படுகிறது. செங்கோட்டை - மதுரை பயணிகள் ரயில் (56734) டிச. 14ஆம் தேதி விருதுநகர், மதுரை இடையே பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது. 

மதுரை - செங்கோட்டை பயணிகள் ரயில்(56735) டிச. 14ஆம் தேதி மதுரை, விருதுநகர் இடையே பகுதி வாரியாக ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/14/w600X390/train1.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/14/மதுரை-ரயில்-நிலையத்தில்-பராமரிப்பு-பணி-ரயில்-போக்குவரத்தில்-மாற்றம்-3057859.html
3057857 தமிழ்நாடு செந்தில்பாலாஜி எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் வெற்றிபெற முடியாது: மாரியப்பன் கென்னடி DIN DIN Friday, December 14, 2018 07:51 AM +0530
திமுகவில் இணையும் செந்தில்பாலாஜி எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் இனிமேல் வெற்றிபெற முடியாது என தினகரன் ஆதரவாளரும் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான மாரியப்பன் கென்னடி கூறினார். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து செயல்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, பேரவைத் தலைவர் தனபாலால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில் ஒருவர். இவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றமும் தீர்ப்பு கூறியது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரனை செந்தில்பாலாஜி வலியுறுத்தி வந்துள்ளார். அதை டிடிவி தினகரன் ஏற்கவில்லை எனத் தெரிகிறது. இதனால், அமமுகவிலிருந்து விலகும் முடிவை செந்தில்பாலாஜி எடுத்துள்ளார்.

மேலும், கரூரைச் சேர்ந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் மோதல் உள்ளதால், மீண்டும் அதிமுகவுக்குச் செல்ல முடியாத நிலையில் செந்தில்பாலாஜி இருந்து வருகிறார்.

இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை(டிச.14) காலை 11.30 மணியளவில் செந்தில் பாலாஜி இணைய உள்ளார். 

இந்நிலையில், பதவியில்லை என்றவுடன் திமுகவில் சேரும் செந்தில்பாலாஜிக்கு கண்டனம் தெரிவித்துள்ள தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான மாரியப்பன் கென்னடி, செந்தில்பாலாஜி திமுகவுக்கு சென்றால் செல்லாக் காசாகி விடுவார். செந்தில்பாலாஜி எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் இனிமேல் வெற்றிபெற முடியாது என தெரிவித்தார்.

இதனிடையே பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்தால் அவர்களின் செயல்பாட்டிற்கு ஏற்ப உரிய பதவியை ஈபிஎஸ்-ஓபிஎஸ் வழங்குவார்கள் என்றும் செந்தில்பாலாஜி திமுகவில் இணைந்தால் எங்களுக்கு எந்த லாபமோ, நஷ்டமோ இல்லை என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/25/w600X390/senthilbalaji.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/14/செந்தில்பாலாஜி-எந்த-தொகுதியில்-போட்டியிட்டாலும்-வெற்றிபெற-முடியாது-மாரியப்பன்-கென்னடி-3057857.html
3057856 தமிழ்நாடு புதுவையில் இன்று பேரவை சிறப்புக் கூட்டம் புதுச்சேரி DIN Friday, December 14, 2018 07:38 AM +0530 மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக, புதுவை சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு என்ற இடத்தில் அணையைக் கட்ட கர்நாடக அரசின் வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக சட்டப்பேரவையில் கடந்த வாரம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதேபோல, புதுவையிலும் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை நடத்த வேண்டும் என புதுவையில் உள்ள எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. அதன் அடிப்படையில் பேரவையின் சிறப்புக்கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் என பேரவைச் செயலர் வின்சென்ட் ராயர் அறிவித்தார்.

கூட்டத்தில் மேக்கேதாட்டு அணை கட்ட வரைவு அறிக்கை தயாரிக்க அனுமதி அளித்த மத்திய அரசைக் கண்டித்து அரசின் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்று திமுக, அதிமுக வலியுறுத்தியுள்ளன.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/20/w600X390/pondy-sec.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/14/புதுவையில்-இன்று-பேரவை-சிறப்புக்-கூட்டம்-3057856.html
3057748 தமிழ்நாடு கரும்புக்கான நிலுவைத் தொகை விரைவில் வழங்க நடவடிக்கை DIN DIN Friday, December 14, 2018 05:03 AM +0530 கரும்புக்கான நிலுவைத் தொகையை விவசாயிகளுக்கு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் தமிழ்நாடு சர்க்கரை கழக நிர்வாக இயக்குநர் ரீட்டா ஹரிஷ் தாக்கர்.
தஞ்சாவூரில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற தமிழ்நாடு சர்க்கரை கழகத்தின் 43 ஆம் ஆண்டு பேரவைக் கூட்டத்தில் அவர் பேசியது:
தஞ்சாவூர்,  புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட கரும்புகள் சேதம் குறித்து குருங்குளம் சர்க்கரை ஆலை பணியாளர்கள் ஆய்வு செய்தனர். கடந்த 3 ஆண்டுகளாக வறட்சி நிலவி வந்த நிலையில் நிகழாண்டு புயலால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், சர்க்கரை உற்பத்தியில் தேசிய அளவில் நான்காமிடத்தில் இருந்த தமிழகத்தில் தற்போது கரும்பு உற்பத்தி குறைந்துள்ளது. எனவே, சர்க்கரை உற்பத்தியில் தமிழகத்தைவிட பின்னடைவில் இருந்த மாநிலங்கள் இப்போது முன்னிலை பெற்றுள்ளன.
ஆலையில் ஆண்டுக்கு 6 முதல் 7 மாதங்கள் அரைவை செய்வதற்கான கரும்புகள் இருக்க வேண்டும். ஆனால், சில ஆண்டுகளாக 3 மாதங்கள் அரைவை செய்யும் அளவுக்குத்தான் கரும்புகள் வருகின்றன. 
விவசாயிகளின் சிரம நிலையை அரசு அலுவலர்கள் அறிந்துள்ளனர். இது அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும். குருங்குளம் சர்க்கரை ஆலையில் 2015 - 16, 2016 - 17 ஆம் ஆண்டுகளில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 23.86 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு அரசு அறிவித்த ஊக்கத்தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 
டிச. 20-இல் அரைவை தொடக்கம்: கஜா புயலால் குருங்குளம் சர்க்கரை ஆலையின் மேற்கூரைகள், இயந்திரங்கள், இணை உற்பத்தி நிலையம் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஏற்கெனவே திட்டமிடப்பட்ட நாளான டிச. 6-ம் தேதி அரைவையைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. என்றாலும், பாதிப்புகள் சீர் செய்யப்பட்டு டிச. 20-ம் தேதி அரைவையைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் ரீட்டா ஹரிஷ் தாக்கர்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, தமிழ்நாடு சர்க்கரை ஆலை கழக இயக்குநர் சி.ஆர். பாலாஜி, குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி ஜனனி செளந்தர்யா  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வெளிநடப்பு: இதனிடையே, பங்குதாரர்களுக்கு ஆண்டறிக்கை புத்தகம் வழங்கப்படாததைக் கண்டித்து ஏறத்தாழ 150 கரும்பு விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். சுமார் 10 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/12/14/w600X390/collectormeeta.jpg கூட்டத்தில் பேசுகிறார் தமிழ்நாடு சர்க்கரை கழக நிர்வாக இயக்குநர் ரீட்டா ஹரிஷ் தாக்கர். http://www.dinamani.com/tamilnadu/2018/dec/14/கரும்புக்கான-நிலுவைத்-தொகை-விரைவில்-வழங்க-நடவடிக்கை-3057748.html
3057771 தமிழ்நாடு சென்னை அருகே புயலுக்கு வாய்ப்பு: வடதமிழகத்தில் பலத்த மழை பெய்யும் DIN DIN Friday, December 14, 2018 04:50 AM +0530 தென் கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது மேலும் வலுவடைந்து, வெள்ளிக்கிழமை முற்பகலில்  புயலாக மாறவுள்ளது. இது தீவிரப் புயலாகி மாமல்லபுரம் அருகே சனிக்கிழமை கரையை கடக்கக் கூடும். 
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் வியாழக்கிழமை கூறியது: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இந்திய பெருங்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வியாழக்கிழமை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. 
இது தற்போது சென்னைக்கு தென் கிழக்கே 1,120 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. தொடர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்து, வெள்ளிக்கிழமை முற்பகலில் புயலாக மாறவுள்ளது. இது வடமேற்கு நோக்கி நகர்ந்து, தெற்கு ஆந்திரம் மற்றும் அதையொட்டிய வட தமிழகம் கடற்கரை நோக்கி கடக்கக் கூடும். இதன்காரணமாக, வடதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை (டிச.15, 16) ஆகிய நாள்களில் பலத்த மழை பெய்யக்கூடும். வடதமிழக கடலோரம், புதுச்சேரியில் அநேக இடங்களிலும்,  உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழையும் பெய்யும் என்றார் அவர். 
பலத்த காற்றுவீசும்: வடதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றானது மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும். 
மீனவர்களுக்கு எச்சரிக்கை: காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் மேலும் வலுவடைந்து, புயலாக மாறவுள்ளதால், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை (டிச.15, 16) ஆகிய நாள்களில் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.   
சென்னைக்கு அருகே புயல்: தென் கிழக்கு வங்கக்கடலில் மையம்கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் மேலும்  வலுவடைந்து வெள்ளிக்கிழமை புயலாக மாறவுள்ளது. மேலும்,  இது சென்னைக்கு அருகே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. 
இது குறித்து  வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது: இந்த புயல் தெற்கு ஆந்திரம் மற்றும் அதையொட்டிய  வடதமிழக கடலோரப் பகுதிகளில் கரையைக் கடக்கும். குறிப்பாக, இந்த புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. வெள்ளிக்கிழமை முற்பகல் புயலாகவும், சனிக்கிழமை இரவு தீவிர புயலாகவும் மாற வாய்ப்பு உள்ளது என்றனர். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/12/14/w600X390/clouds.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/14/சென்னை-அருகே-புயலுக்கு-வாய்ப்பு-வடதமிழகத்தில்-பலத்த-மழை-பெய்யும்-3057771.html
3057766 தமிழ்நாடு பேராசிரியர்களிடம் அசல்  சான்றிதழை ஒப்படைக்காத 80 சதவீத கல்லூரிகள் DIN DIN Friday, December 14, 2018 04:41 AM +0530 அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ), அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்தபோதும், 80 சதவீத பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்குக் கல்லூரி நிர்வாகத்தினர் அசல் சான்றிதழ்களைக் கொடுக்கவில்லை என்பது தெரியவந்திருக்கிறது.


இதில் சில கல்லூரிகள் சான்றிதழ்களை ஒப்படைக்காமலேயே, பெற்றுக்கொண்டதுபோல கையெழுத்திட்டுத் தருமாறு வற்புறுத்துவதாகவும், சில கல்லூரிகள் பிணையப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு ஒப்படைத்து வருவதாகவும் பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தனியார் பொறியியல் கல்லூரிகள், பத்தாம் வகுப்பு முதல்,  பிஎச்.டி.  வரையான அசல் சான்றிதழ்களை வேலைக்குச் சேரும் பேராசிரியர்களிடம் வாங்கி வைத்துக் கொள்கின்றன. அக்கல்லூரியிலிருந்து விலகும்போது சான்றிதழ்களை நிர்வாகம் தர மறுப்பதும், குறிப்பிட்ட தொகையைச் செலுத்துமாறு கட்டாயப்படுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்திடம் பல முறை புகார்கள் வந்தபோதும்,  எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், சென்னையில் தனியார் கல்லூரிப் பேராசிரியருக்கு  அண்ணா  பல்கலைக்கழகத்தின் குரோம்பேட்டை எம்.ஐ.டி.யில் பணிவாய்ப்பு கிடைத்தது. அங்கு  பணியில் சேர்ந்து மூன்று மாதங்கள் ஆன பிறகும்கூட அந்த தனியார் கல்லூரி அவருடைய அசல் சான்றிதழ்களைத் தர மறுத்ததால் மனமுடைந்த அப்பேராசிரியர், தற்கொலை செய்துகொண்டார். 

இதிலும்  அண்ணா பல்கலைக்கழகம் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கவில்லை எனப் புகார் எழுந்தது. அசல் சான்றிதழ் தர மறுக்கும் கல்லூரிகளின் இணைப்பு அந்தஸ்தை பல்கலைக்கழகம் ரத்து செய்யவேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்தினர்.

இச்சூழலில், பொறியியல் கல்லூரிகளுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்து ஏஐசிடிஇ, அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவை கடந்த 5-ஆம் தேதி சுற்றறிக்கை  அனுப்பின. 

அண்ணா பல்கலைக்கழகச் சுற்றறிக்கையில், பொறியியல் கல்லூரிகள் அசல் சான்றிதழ்களைத் தர மறுப்பதாக பேராசிரியர்களிடமிருந்து பல்கலைக்கழகத்துக்கு தொடர் புகார்கள் வருகின்றன. எனவே, சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின்னர் அனைத்து அசல் சான்றிதழ்களும் பேராசிரியர்களுக்கு உடனடியாக திரும்பக் கொடுக்கப்பட்டுவிட்டதை கல்லூரித் தலைவரும், முதல்வரும் உறுதிப்படுத்தவேண்டும். அசல் சான்றிதழ்களை கல்லூரிகள் வாங்கி வைக்கக்கூடாது. இதுதொடர்பான விவகாரத்தில், பல்கலைக்கழகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றமும் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது. எனவே, அசல் சான்றிதழ்களை உடனடியாகத் திரும்பக் கொடுக்காத கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக அனைத்துக் கல்லூரிகளும் வரும் 17-ஆம் தேதிக்குள் பதிலளிக்கவேண்டும் என கூறப்பட்டிருந்தது. 

தமிழகத்தில் உள்ள 530 பொறியியல் கல்லூரிகளில் 20 சதவீத கல்லூரிகள் மட்டுமே அசல் சான்றிதழ்களைப் பேராசிரியர்களுக்குத் திரும்பக் கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது. இக்கல்லூரிகள் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரபல பொறியியல் கல்லூரிகள். அவை பேராசிரியர்களிடம் ரூ. 20-க்கான பிணைய பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு, அசல் சான்றிதழ்களை திரும்ப ஒப்படைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

 80 சதவீத கல்லூரிகள் அசல் சான்றிதழ்களைதி திரும்ப ஒப்படைக்கவில்லை. சில கல்லூரிகள் சான்றிதழ்களை திரும்பக் கொடுக்காமலேயே பெற்றுக் கொண்டதுபோல கையெழுத்திட வற்புறுத்துவதாகவும் பேராசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இப்பிரச்னையால் சில கல்லூரிகள் நவம்பர் மாத ஊதியத்தைக்  கொடுக்காமல் நிறுத்தி வைத்திருப்பதாகவும் தெரிகிறது.

அரசாணை வெளியிட வேண்டும்: இதுகுறித்து அகில இந்திய தனியார் கல்லூரி ஊழியர் சங்கத் தலைவர் கார்த்திக் கூறியதாவது: ஏஐசிடிஇ, அண்ணா பல்கலைக்கழக உத்தரவைப் பின்பற்றி 100 பிரபல கல்லூரிகள் மட்டுமே அசல் சான்றிதழ்களை ஒப்படைத்திருக்கின்றன. கல்லூரி பெயர் கெட்டுவிடக் கூடாது என்ற அச்சத்தில், ஊழியர்களிடம் பிணைய பத்திரத்திலும், ஒன்றுமே எழுதாத காகிதங்களிலும் கையெழுத்து வாங்கிக் கொண்டும் சான்றிதழ்களை ஒப்படைத்திருக்கின்றன.

சேலம், திருச்சி பகுதிகளில் உள்ள சில தனியார் பொறியியல் கல்லூரிகள் சான்றிதழ்களை ஒப்படைக்காமலே,  பெற்றுக்கொண்டது போல கையெழுத்திட்டுத் தருமாறு பேராசிரியர்களை வற்புறுத்தி வருவதாகவும் பேராசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதற்காக, நவம்பர் மாத ஊதியமும் வழங்கப்படவில்லை.

ஏஐசிடிஇ, பல்கலைக்கழக சுற்றறிக்கைகளை, இந்த தனியார் கல்லூரி பெரு முதலாளிகள் கண்டுகொள்ளவும் மாட்டார்கள், மதிக்கவும் மாட்டார்கள். தமிழக அரசு அரசாணையாக அல்லது அறிவிக்கையாக வெளியிடவேண்டும். அப்போதுதான் தீர்வு கிடைக்கும் என்றார்.

புகார் தெரிவிக்கலாம்: இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) குமார், பொறியியல் கல்லூரிகள் அசல் சான்றிதழ்களைத் திரும்ப ஒப்படைக்கவில்லை என்றால் ஏஐடிசிஇ அல்லது அண்ணா பல்கலைக்கழகத்திடம் பேராசிரியர்கள் புகார் தெரிவிக்கலாம்.

பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு அந்தஸ்து வழங்கும் பல்கலைக்கழக மையத்தை 044 - 2235 7100 என்ற எண்ணில் புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2013/7/8/11/w600X390/annauniversity.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/14/பேராசிரியர்களிடம்-அசல்--சான்றிதழை-ஒப்படைக்காத-80-சதவீத-கல்லூரிகள்-3057766.html
3057765 தமிழ்நாடு 3 மாதங்களுக்குள்  837 துணை சுகாதார நிலையங்கள்: மாநிலம் முழுவதும் அமைக்கத் திட்டம் DIN DIN Friday, December 14, 2018 04:39 AM +0530 அடுத்த 3 மாதங்களில் மாநிலம் முழுவதும் 837 துணை சுகாதார நிலையங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த நிலையங்கள் அமைக்கப்பட்ட பின்னர், ஊரகப் பகுதிகளில் உள்ள மக்கள் அடிப்படை மருத்துவத் தேவைகளுக்காக நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் உள்ள மக்களுக்கும் மருத்துவ சேவைகள் தங்கு தடையின்றி கிடைப்பதற்கான நிலையை எட்டும் நோக்கில் இத்தகைய திட்டங்களை அரசு முன்னெடுத்திருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாநிலத்தில் தற்போது 25 மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகள்,162 தாலுகா மருத்துவமனைகள் என 300-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகள் உள்ளன. சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளுடன் அவை அமைக்கப்பட்டுள்ளன.  இதைத் தவிர 1,300-க்கும் அதிகமான ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இத்தனை வசதிகள் இருந்தபோதிலும், பெரும்பாலும் நகர்ப்புறங்களில் உள்ளவர்களுக்கு மட்டுமே மருத்துவ சேவைகள் எளிதாகக் கிடைக்க கூடிய நிலை உள்ளது. அதேவேளையில் ஊரகப் பகுதிகளில் உள்ளவர்கள், மருத்துவ தேவைகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களை சார்ந்தே இருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.
அதுவும்,  10 கிராமங்களுக்கு ஓர் ஆரம்ப சுகாதார நிலையம் என்ற அளவிலேயே அது செயல்பட்டு வருவதாகத் தெரிகிறது. இந்நிலையில், மாநிலம் முழுவதும் 985 துணை சுகாதார நிலையங்களை அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதுதொடர்பான அறிவிப்பு நிகழாண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் வெளியிடப்பட்டது.
அதன்படி, தற்போது 148 துணை சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், மீதமுள்ளவற்றை விரைந்து அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.
அனைவருக்கும் நல்வாழ்வு திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கைள் எடுக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:
மருத்துவத் துறையைப் பொருத்தவரை நாட்டிலேயே தமிழகம்தான் சிறந்து விளங்குகிறது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் சிகிச்சைக்காக இங்கு வருகின்றனர்.
தேசிய அளவில் 10 ஆயிரம் பேருக்கு 6 மருத்துவர்கள் என்ற விகிதாசாரம் தற்போது உள்ளது. அதே தமிழகத்தை எடுத்துக் கொண்டால்,  10 ஆயிரம் பேருக்கு 8 மருத்துவர்கள் உள்ளனர். அதனால்தான் இங்கு தரமான மருத்துவம் சாத்தியமாகிறது.
அதுமட்டுமன்றி, டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா போன்றவற்றால் கடந்த ஆண்டு மாநிலத்தில் பெரிய அளவில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. அதேபோன்று பன்றிக் காய்ச்சலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து இடங்களுக்கும் மருத்துவ வசதி சென்றடைந்ததுதான் இதற்கு முக்கியக் காரணம். அந்த வரிசையில் தற்போது ஊரகப் பகுதிகளில் துணை சுகாதார நிலையங்கள் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, காய்ச்சல் பரிசோதனை உள்பட 12 வகையான பரிசோதனைகள் அங்கு மேற்கொள்ளப்பட்டு தேவையான முதலுதவிகள் அளிக்கப்படுகின்றன. தடுப்பூசிகளும் அங்கு போடப்படுகின்றன. இடைநிலை மருத்துவ பணியாளர்கள் மூலமாக அந்த துணை சுகாதார நிலையங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மூன்று கிராமங்களுக்கு ஒரு துணை சுகாதார நிலையம் அமைக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

]]>
http://www.dinamani.com/tamilnadu/2018/dec/14/3-மாதங்களுக்குள்--837-துணை-சுகாதார-நிலையங்கள்-மாநிலம்-முழுவதும்-அமைக்கத்-திட்டம்-3057765.html
3057750 தமிழ்நாடு சசிகலாவிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரணை DIN DIN Friday, December 14, 2018 04:30 AM +0530 பெங்களூரில் சிறையில் உள்ள சசிகலாவிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை விசாரணை நடத்தினர்.

2017-ஆம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் வருமான வரித் துறையைச் சேர்ந்த 1,200 அதிகாரிகள் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் 
சசிகலாவுக்கு தமிழகத்தில் சொந்தமான ஜெயா தொலைக்காட்சி, நமது எம்ஜிஆர் நாளிதழ் அலுவலகங்கள், கேளிக்கை விடுதிகள், ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் வீடு, கொடநாடு வீடு,

உறவினர்கள் கிருஷ்ணபிரியா, விவேக், நடராஜன் வீடுகள், ஜெயலலிதாவின் வழக்குரைஞர் செந்தில், உதவியாளர் பூங்குன்றன் வீடுகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.  

இந்த சோதனையின் போது முக்கியமான சொத்து ஆவணங்கள், ரொக்கம் உள்ளிட்டவற்றை வருமான வரித் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் கடந்த ஓராண்டாக விசாரணை நடத்திய வருமான வரித் துறை அதிகாரிகள், பெங்களூரில் மத்திய சிறையில் உள்ள சசிகலாவிடமும் வியாழக்கிழமை விசாரணை நடத்தினர். 

சென்னையிலிருந்து 7 பேர் கொண்ட வருமான வரித் துறை அதிகாரிகள் குழுவினர், சசிகலாவிடம் வியாழக்கிழமை காலை 11.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை தொடர்ந்து 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். 

இந்த விசாரணையை வெள்ளிக்கிழமையும் (டிச.14) தொடர அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

]]>
http://www.dinamani.com/tamilnadu/2018/dec/14/சசிகலாவிடம்-வருமான-வரித்-துறை-அதிகாரிகள்-விசாரணை-3057750.html
3057749 தமிழ்நாடு அனைத்து அமைச்சர்களுக்கும் முழு அதிகாரம்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி DIN DIN Friday, December 14, 2018 04:29 AM +0530 துணை முதல்வர் உள்ளிட்ட அனைத்துத் துறை அமைச்சர்களும், சுதந்திரமாகச் செயல்பட முழு அதிகாரத்தை வழங்கியுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
சேலம் மாநகராட்சியின் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் ரூ.166.52 கோடி மதிப்பின் கீழ் 8 புதிய திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டு  விழா,   சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் ரூ.5.10 கோடி மதிப்பிலான 4 முடிவுற்ற புதிய திட்டப் பணிகள் திறப்பு,   ரூ.27.23 கோடி மதிப்பிலான 3 திட்டப் பணிகள் தொடக்கம்,  3,026 பயனாளிகளுக்கு 1.23 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியன வியாழக்கிழமை நடைபெற்றன.  விழாவில் முதல்வர் பேசியது:
எந்தத் துறையிலும் முதல்வர் என்ற முறையில் நான் தலையிடவில்லை. துணை முதல்வர் உள்ளிட்ட அனைத்துத் துறை அமைச்சர்களும், சுதந்திரமாகச் செயல்பட முழு அதிகாரத்தை வழங்கி உள்ளேன். அதனால் அனைத்துத் துறைகளும் மிகச் சிறப்பாகச் செயல்படுகின்றன.
கஜா புயல் நிவாரணப் பணிகள் மும்முரம்: கஜா புயல் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில், ஏராளமானோர் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து நிற்பது  மிகுந்த மன வேதனை அளிக்கிறது. அங்கு புனரமைப்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கஜா புயலால் 2.21 லட்சம் மின் கம்பங்கள் சேதமடைந்தன. அந்த மின் கம்பங்களை பதிக்கும் பணியில் 26,000 மின்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்போது 75 சதவீதம் பணி நிறைவடைந்துள்ளது.  வயல் நிறைந்த பகுதிகளில் மின்துறை ஊழியர்கள் தங்கள் தோள்களில் மின்கம்பங்களைச் சுமந்து சென்று அதைப் பதித்து வருகின்றனர். மின் துறை ஊழியர்கள் தங்களது உயிரை கொடுத்து பணியாற்றி வருகின்றனர்.
அதுபோல தூய்மைப் பணியில் 2,400 துப்புரவு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  அனைத்துத் துறை அதிகாரிகளும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். அரசு இயந்திரம் முழுவீச்சில் சீரமைப்பு,  நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளது.
 சாலை விபத்துகளில் மனித உயிர்கள் பலியாகி வருகின்றன.  இந்தவகையில், விலை மதிப்பில்லாத  மனித உயிரிழப்புகளைத் தவிர்க்கும் வகையில் புதிய சாலை திட்டம் தேவைப்படுகிறது. 
8 வழிச்சாலை திட்டத்துக்கு ஆதரவு தேவை: சேலம்-சென்னை 8 வழி சாலை திட்டம் நிறைவேற்றப்பட்டால், நேர விரயம் குறையும். பொருளாதார வளர்ச்சியும், தொழில் வாய்ப்புகளும் பெருகும்.  
 தருமபுரி-கோவை சாலை அமைக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் வாகனப் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது வாகனப் பெருக்கம் 150 சதவீதமாக அதிகரித்துவிட்டது.
தமிழகத்தில் ஆண்டுக்கு 17 லட்சம் வாகனங்கள் பெருகுகின்றன.  இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் வாகனப் பெருக்கம் மேலும் அதிகரிக்கும். இதனால் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் வெளிநாடுகளில் உள்ளது போன்ற 8 வழி சாலை திட்டப் பணி தேவைப்படுகிறது. மக்கள் நலன் கருதி அனைவரும் இந்தத் திட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
உள்ளாட்சி அமைப்பு  என்பது உடலில் உள்ள இதயம்  போன்றது.  தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் சிறந்த முறையில் இயங்குகின்றன.  
முன்மாதிரி நகரமாக சேலம் திகழும்: சேலம் நகரில் நவீன பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது.  முன்மாதிரி நகரமாக உருவெடுக்க உள்ளது. சேலம் மக்களுக்கு தனிக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்றி குடிநீர் விநியோகம் செய்து வருகிறோம்.
மின் தடையில்லாமல் மின்சாரம் வழங்க சாலைகளில் மின் கேபிள்களை பதித்து வரும் பணி நடைபெற்று வருகிறது. 
இதுபோல புதை சாக்கடை திட்ட பணிகளை செய்து வருகிறோம். மாநகர மக்களின் அனைத்து தேவைகளை நிறைவேற்றி வருகிறோம் என்றார் பழனிசாமி.
அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாரிசாக  அரசியலில் வந்தார். பின்புற வழியில் வந்து ஆட்சியைப் பிடிக்க ஆர்.கே.நகர் எம்எல்ஏவும், அமமுக துணைப் பொதுச்செயலருமான டி.டி.வி.தினகரன் முயற்சிக்கிறார்.  ஆனால் தமிழக முதல்வர் விவசாயக் குடும்பத்தில் பிறந்து அடிமட்டத்தில் இருந்து ஆட்சியில் நிலைத்து நிற்கிறார் என்று நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
நகராட்சி நிர்வாக ஆணையர் ஜி.பிரகாஷ் பேசியது: தமிழக நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் குடிநீர் திட்டங்களில் 47 லட்சம் நகர்ப்புற குடியிருப்புகளுக்கு 26 லட்சம் குடியிருப்புகளுக்கு இணைப்பு வழங்கிவிட்டோம். 
ஓராண்டில் 35 லட்சம் குடியிருப்புகளுக்கு இணைப்பு வழங்கப்படும். தமிழகத்தில் 8 ஆண்டுகளில் ரூ.10,000 கோடி முதலீடு செய்து சாலை, உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது. 
நகரில் உள்ள குப்பைமேடுகளை அகற்றி பொழுதுபோக்கு மற்றும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருகிறோம். அந்தவகையில் எருமாபாளையம் குப்பைமேடு பொழுதுபோக்கு மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இந்த பணிகள் 6 முதல் 9 மாதத்தில் முடிவுறும் என்றார்.
விழாவில் ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ், எம்.பி. வி.பன்னீர்செல்வம், எம்எல்ஏ-க்கள் எஸ்.செம்மலை, ஜி.வெங்கடாஜலம், ஏ.பி.சக்திவேல், எஸ்.வெற்றிவேல், ராஜா, மனோண்மணி, மாநகராட்சி ஆணையர் ரெ.சதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/12/14/w600X390/pooja.jpg சேலத்தில் சீர்மிகு நகர திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. உடன் நகராட்சி, ஊரக வளர்ச்சி சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ், http://www.dinamani.com/tamilnadu/2018/dec/14/அனைத்து-அமைச்சர்களுக்கும்-முழு-அதிகாரம்-முதல்வர்-எடப்பாடி-கேபழனிசாமி-3057749.html
3057746 தமிழ்நாடு தஞ்சை பெரிய கோயிலில் யார் கோரினாலும் பஜனை நிகழ்ச்சிக்கு அனுமதி அளிப்பீர்களா?: உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி DIN DIN Friday, December 14, 2018 04:12 AM +0530 தஞ்சை பெரிய கோயிலில் பஜனை நிகழ்ச்சிக்கு யார் கோரினாலும் அனுமதி அளிப்பீர்களா?  என தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர், கடந்த வாரம் தஞ்சை பெரிய கோயிலில் யோகா மற்றும் தியான நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருந்தார். இதற்காக கோயில் வளாகத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்குத் தடைவிதிக்கக் கோரி வழக்குரைஞர் முத்துக்கிருஷ்ணன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இதனை அவசர வழக்காக விசாரித்த நீதிபதிகள், நிகழ்ச்சிக்கு இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டனர்.  மேலும் இதுகுறித்து தொல்லியல் துறை பதில் அளிக்கவும் உத்தரவிட்டிருந்தனர்.
இந்த நிலையில் நீதிபதிகள் கே.கே. சசிதரன், பி.டி. ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை மனு விசாரிக்கப்பட்டது. 
அப்போது,  தொல்லியல் துறை கண்காணிப்பு பொறியாளர் சுப்பிரமணி, கோயில் இணை ஆணையர் பரணிதரன் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.  
அப்போது, தஞ்சை பெரிய கோயிலில் தியான நிகழ்ச்சி நடத்த வாழும் கலை அமைப்பினருக்கு மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கவில்லை. அவர்கள் கோயிலில் பஜனை நிகழ்ச்சி நடத்த மட்டுமே அனுமதி கோரியிருந்தனர். அதற்கு மட்டுமே அனுமதி வழங்கினோம். கொட்டகை அமைக்கவோ, வேறு ஏதேனும் ஆக்கிரமிப்பு செய்யவோ எந்தவொரு அனுமதியும் வழங்கவில்லை என்றனர். நிகழ்ச்சிக்கு வழங்கிய  அனுமதி தொடர்பான ஆவணங்களை கோயில் இணை ஆணையர் பரணிதரன் சமர்ப்பித்தார்.
இதையடுத்து,  தஞ்சை பெரிய கோயிலின் பழைமையை பாதுகாக்கவே நீதிமன்றம் இதில் தலையிடுகிறது. தஞ்சை பெரிய கோயிலில் பஜனை நடத்த யார் அனுமதி கோரினாலும் அளிப்பீர்களா, தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கோயில் உள்ளபோது, இந்து சமய அறநிலையத் துறை பரிந்துரையின்பேரில் எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது. மேலும், எதன் அடிப்படையில் பந்தல்அமைக்க அனுமதி அளித்தீர்கள் என நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.  தொடர்ந்து, தனியார் நிகழ்ச்சிக்கு கோயிலில் அனுமதி அளிப்பது தொடர்பாக தொல்லியல் துறை மற்றும் கோயில் நிர்வாகத்துக்கு உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி வழக்கு விசாரணையை டிச. 20ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/12/5/w600X390/supreme-court3.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/14/தஞ்சை-பெரிய-கோயிலில்-யார்-கோரினாலும்-பஜனை-நிகழ்ச்சிக்கு-அனுமதி-அளிப்பீர்களா-உயர்நீதிமன்ற-நீதிபதிகள-3057746.html
3057745 தமிழ்நாடு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குரைஞர் ஆஜராகவில்லை DIN DIN Friday, December 14, 2018 04:12 AM +0530 உச்சநீதிமன்றத்தில் பட்டாசு தொடர்பான வழக்கு டிசம்பர் 11 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் வழக்குரைஞர் ஆஜராகாததால் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாத பசுமைப் பட்டாசுகளை மட்டுமே இனி தயாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் தீபாவளிப் பண்டிகை விடுமுறைக்கு மூடப்பட்ட பட்டாசு ஆலைகளை திறக்காமல் ஆலை உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 
இந்நிலையில்,  கடந்த டிசம்பர் 11-ஆம் தேதி, பட்டாசு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பசுமைப் பட்டாசு தயாரிப்பது எப்படி என்பது குறித்து வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினர்தான் விளக்க வேண்டும் என்று கூறிய  நீதிபதி, வழக்கை ஜனவரி 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதனால் மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளை திறக்க இயலாத நிலையில்  பட்டாசு ஆலை உரிமையாளர்கள்  உள்ளனர். இதற்கிடையை தமிழக அரசு பட்டாசு தொடர்பான வழக்கில் சீராய்வு மனு தாக்கல் செய்யும் என ஆலை உரிமையாளர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் வழக்குரைஞர் ஆஜராகவில்லை. மேலும் மக்களவை மற்றும் மாநிலங்களவையில்  பட்டாசு பிரச்னை குறித்து எந்த ஒரு தமிழக எம்.பி.யும் கேள்வி எழுப்பவில்லை. இதனால் பட்டாசு விவகாரத்தில் தமிழக அரசு அக்கறையுடன் செயல்படவில்லை என சிவகாசிப் பகுதியில் உள்ள பட்டாசு ஆலை உரிமையாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

]]>
http://www.dinamani.com/tamilnadu/2018/dec/14/உச்சநீதிமன்றத்தில்-தமிழக-அரசு-வழக்குரைஞர்-ஆஜராகவில்லை-3057745.html
3057744 தமிழ்நாடு கரும்புக்கான நிலுவைத் தொகை விரைவில் வழங்க நடவடிக்கை DIN DIN Friday, December 14, 2018 04:11 AM +0530 கரும்புக்கான நிலுவைத் தொகையை விவசாயிகளுக்கு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் தமிழ்நாடு சர்க்கரை கழக நிர்வாக இயக்குநர் ரீட்டா ஹரிஷ் தாக்கர்.
தஞ்சாவூரில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற தமிழ்நாடு சர்க்கரை கழகத்தின் 43 ஆம் ஆண்டு பேரவைக் கூட்டத்தில் அவர் பேசியது:
தஞ்சாவூர்,  புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட கரும்புகள் சேதம் குறித்து குருங்குளம் சர்க்கரை ஆலை பணியாளர்கள் ஆய்வு செய்தனர். கடந்த 3 ஆண்டுகளாக வறட்சி நிலவி வந்த நிலையில் நிகழாண்டு புயலால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், சர்க்கரை உற்பத்தியில் தேசிய அளவில் நான்காமிடத்தில் இருந்த தமிழகத்தில் தற்போது கரும்பு உற்பத்தி குறைந்துள்ளது. எனவே, சர்க்கரை உற்பத்தியில் தமிழகத்தைவிட பின்னடைவில் இருந்த மாநிலங்கள் இப்போது முன்னிலை பெற்றுள்ளன.
ஆலையில் ஆண்டுக்கு 6 முதல் 7 மாதங்கள் அரைவை செய்வதற்கான கரும்புகள் இருக்க வேண்டும். ஆனால், சில ஆண்டுகளாக 3 மாதங்கள் அரைவை செய்யும் அளவுக்குத்தான் கரும்புகள் வருகின்றன. 
விவசாயிகளின் சிரம நிலையை அரசு அலுவலர்கள் அறிந்துள்ளனர். இது அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும். குருங்குளம் சர்க்கரை ஆலையில் 2015 - 16, 2016 - 17 ஆம் ஆண்டுகளில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 23.86 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு அரசு அறிவித்த ஊக்கத்தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 
டிச. 20-இல் அரைவை தொடக்கம்: கஜா புயலால் குருங்குளம் சர்க்கரை ஆலையின் மேற்கூரைகள், இயந்திரங்கள், இணை உற்பத்தி நிலையம் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஏற்கெனவே திட்டமிடப்பட்ட நாளான டிச. 6-ம் தேதி அரைவையைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. என்றாலும், பாதிப்புகள் சீர் செய்யப்பட்டு டிச. 20-ம் தேதி அரைவையைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் ரீட்டா ஹரிஷ் தாக்கர்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, தமிழ்நாடு சர்க்கரை ஆலை கழக இயக்குநர் சி.ஆர். பாலாஜி, குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி ஜனனி செளந்தர்யா  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வெளிநடப்பு: இதனிடையே, பங்குதாரர்களுக்கு ஆண்டறிக்கை புத்தகம் வழங்கப்படாததைக் கண்டித்து ஏறத்தாழ 150 கரும்பு விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். சுமார் 10 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/12/14/w600X390/collectormeet.jpg கூட்டத்தில் பேசுகிறார் தமிழ்நாடு சர்க்கரை கழக நிர்வாக இயக்குநர் ரீட்டா ஹரிஷ் தாக்கர். http://www.dinamani.com/tamilnadu/2018/dec/14/கரும்புக்கான-நிலுவைத்-தொகை-விரைவில்-வழங்க-நடவடிக்கை-3057744.html
3057743 தமிழ்நாடு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்த ஆலோசித்த 8 பேர் கைது: பொதுமக்கள் சாலை மறியல் DIN DIN Friday, December 14, 2018 04:10 AM +0530 தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கருதி, அடுத்த கட்டப் போராட்டம் நடத்துவது தொடர்பாக வியாழக்கிழமை ஆலோசனையில் ஈடுபட்ட 8 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களை விடுவிக்க வலியுறுத்தி பெண்கள் மறியலில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நடைபெற்று வருகிறது. 
இந்நிலையில், ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் அடுத்தகட்டப் போராட்டத்தில் ஈடுபடுவது தொடர்பாக போராட்டக் குழுவினர் பல்வேறு இடங்களில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடி திரேஸ்புரத்தில் ஆலோசனையில் ஈடுபட்டதாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்த குமரெட்டியாபுரம் மகேஷ், தருவைகுளம் மைக்கேல், தூத்துக்குடி புதுத் தெரு மரிய அன்ஸ் உள்ளிட்ட 8 பேரை கைது செய்த வடபாகம் போலீஸார், அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். 
இந்தத் தகவல் பரவியதைத் தொடர்ந்து, தூத்துக்குடி புதுத் தெருவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் கடற்கரைச் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக கூறி சாலையில் திரண்டனர். 8 பேரையும் விடுவிக்காவிட்டால் போராட்டம் தொடரும் எனக் கூறிய அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, காவல் துணைக் கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையிலான போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற 8 பேரையும் சிறிது நேரத்தில் போலீஸார் விடுவித்ததைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அந்தப் பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு நிலவியது.

]]>
http://www.dinamani.com/tamilnadu/2018/dec/14/ஸ்டெர்லைட்-ஆலைக்கு-எதிராக-போராட்டம்-நடத்த-ஆலோசித்த-8-பேர்-கைது-பொதுமக்கள்-சாலை-மறியல்-3057743.html
3057742 தமிழ்நாடு 1,324 பள்ளிகளை மூட முடிவு: அன்புமணி கண்டனம் DIN DIN Friday, December 14, 2018 04:10 AM +0530 மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள 1,324 அரசு  தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதற்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: ஒரு அரசுப் பள்ளியைக்கூட மூட மாட்டோம் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறி வருகிறார்.

ஆனால்,  மாணவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ள 1,324 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை அருகில் உள்ள அரசுப் பள்ளிகளுடன் இணைக்க அரசு தீர்மானித்துள்ளது. 

மூடப்படும் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் அனைவருமே பரம ஏழைகள்தாம். அப்படிப்பட்டக் குழந்தைகளைச் சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு அவர்களின் பெற்றோர் நிச்சயமாக அனுப்பி வைக்க மாட்டார்கள்.  
மாணவர்களின் கல்வித் தேவையை நிறைவேற்ற வேண்டிய அரசு, அதன் தவறான அணுகுமுறையால், ஏழைக் குழந்தைகளின் கல்வி வாய்ப்பைப் பறித்து, அவர்களைக் குழந்தைத் தொழிலாளர்களாக உருவாக்கத் துடிப்பது கண்டிக்கத்தக்கது.

மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை மூடுவதற்குப் பதிலாக அவற்றை அனைத்து வசதிகளும் கொண்ட மாதிரி பள்ளிகளாக மாற்ற வேண்டும். இதற்கான நிதியை தாராளமாக ஒதுக்க வேண்டும். 

போதிய வகுப்பறைகள், அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட ஆசிரியர்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள், மழலையர் வகுப்புகள், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்திக் கொடுத்தால், அடுத்த சில ஆண்டுகளில் இப்பள்ளிகள் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என்பது உறுதி.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/30/w600X390/anbumani.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/14/1324-பள்ளிகளை-மூட-முடிவு-அன்புமணி-கண்டனம்-3057742.html
3057727 தமிழ்நாடு திமுகவில் செந்தில் பாலாஜி? எனக்குத் தெரியாது DIN DIN Friday, December 14, 2018 04:02 AM +0530 முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி திமுகவில் இணைவது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று முன்னாaள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கூறினார். 

திமுகவில் செந்தில் பாலாஜியை இணைக்கும் முயற்சியில் ஆ.ராசா ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஆதாரமாக ஆ.ராசாவும், செந்தில் பாலாஜியும் விமான நிலையத்தில் ஒருவர் பின் ஒருவராக வரும் படம் சமூகவலைதளங்களில் வெளியானது. இந்த நிலையில், சென்னை விமானநிலையத்துக்கு வியாழக்கிழமை வந்த ஆ.ராசாவிடம்,  திமுகவில் செந்தில் பாலாஜி இணைவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு ராசா, அது பற்றி எதுவும் தெரியாது. ஊரிலிருந்து இப்போதுதான் வருகிறேன் என்று பதிலளித்தார். இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் குறித்து கேள்வி எழுப்பியதற்கு, அது பழைய படம் என்றார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/12/9/w600X390/araja.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/14/திமுகவில்-செந்தில்-பாலாஜி-எனக்குத்-தெரியாது-3057727.html
3057718 தமிழ்நாடு புதிய தலைமைச் செயலகம் தொடர்பான வழக்கு: லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாற்றும் அரசாணை ரத்து DIN DIN Friday, December 14, 2018 04:00 AM +0530 புதிய தலைமைச் செயலக கட்டடம் கட்டியதில் நடந்த முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.ரகுபதி தலைமையில் கடந்த 2011-ஆம் ஆண்டு விசாரணை ஆணையம் அமைத்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.     ரகுபதி ஆணையம் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் துரை முருகன் ஆகியோருக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை ரத்து செய்யக் கோரியும், ரகுபதி ஆணையத்துக்கு தடை விதிக்க கோரியும் 3 பேரின் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனிநீதிபதி, ரகுபதி ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதித்து, ஆணையத்தின் ஆவணங்களை பரிசீலித்து தேவைப்பட்டால் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு மாற்ற உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பொருளாளர் துரைமுருகன் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தது.

இந்த நிலையில் வழக்கு நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் பி.வில்சனும், அரசு தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வழக்குரைஞர் ஏ.நடராஜனும் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இந்த விவகாரத்தில் ரகுபதி ஆணையத்தின் சார்பில் சமர்பிக்கப்பட்ட ஆவணங்களை முழுமையாக தமிழக அரசு பரிசீலிக்காமல் நேரடியாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அவசரகதியில் உத்தரவிட்டுள்ளது சட்ட விரோதமானது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி, இந்த விவகாரம் தொடர்பான ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்பி அந்த ஆவணங்களில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார். 

அதன்படி புதிய தலைமைச் செயலக கட்டடம் கட்டியதில் ரூ.629 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதால் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. 

விசாரணை ஆணையம் என்பது உண்மையைக் கண்டறிந்து அரசுக்குப் பரிந்துரை அல்லது அறிவுறுத்தும் அமைப்பே தவிர நீதித்துறையின் அங்கம் இல்லை. ஆணையத்தின் பரிந்துரைகளை நீதிமன்றத்தின் உத்தரவுகளாகக் கருத முடியாது. 

நீதிபதி ரகுபதி ஆணையம் அரசுக்கு எந்தவொரு அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை. மேலும் இந்த ஆணையத்தை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு இதுவரை மேல்முறையீடும் செய்யவில்லை. நீதிபதி ரகுபதியின் ராஜிநாமாவை அரசு எந்தவிதமான மறுப்பும் தெரிவிக்காமல் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த சூழலில் நீதிபதி ரகுபதி ஆணையம் சேகரித்த ஆவணங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட முடியாது. இந்த விவகாரத்தில் ஆணையம் அமைக்கப்பட்டதற்கான நோக்கம் நிறைவேறவில்லை. 

எனவே புதிய தலைமைச் செயலக விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை மற்றும் கடிதம் ரத்து செய்யப்படுவதாக நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். இந்த உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்படும் எனத் தெரிகிறது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/4/w600X390/HIGHCOURTt.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/14/புதிய-தலைமைச்-செயலகம்-தொடர்பான-வழக்கு-லஞ்ச-ஒழிப்புத்-துறைக்கு-மாற்றும்-அரசாணை-ரத்து-3057718.html
3057713 தமிழ்நாடு ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை: ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட மூவருக்கு அழைப்பாணை DIN DIN Friday, December 14, 2018 03:58 AM +0530 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் ஆகியோருக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் வியாழக்கிழமை அழைப்பாணை அனுப்பி உள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவர் கவனித்து வந்த துறைகள் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டன. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவி ஏற்றார். 
அதிமுக கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பம் காரணமாக முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் துறந்தார். மேலும், அக்கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார்.
இதையடுத்து, ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறியதுடன், அதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்தார். அதன் அடிப்படையில், கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.
ஓபிஎஸ்.ஸூக்கு அழைப்பாணை: கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. 
அதன்படி,  கர்நாடக மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்த அனுமதி கேட்டு தமிழக உள்துறைக்கும், கர்நாடக சிறைத் துறைக்கும் விசாரணை ஆணையம்  அண்மையில் கடிதம் எழுதி இருந்தது. மேலும், சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை (டிச. 14) ஆஜராகுமாறும் அண்மையில் அழைப்பாணை அனுப்பப்பட்டது.
இந்நிலையில், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் ஆகியோர் டிசம்பர் 18-ஆம் தேதியும்,  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரியும், தற்போதைய சென்னை மாநகர  காவல் துணை ஆணையருமான சுதாகர் ஆகியோர்  டிசம்பர் 20-ஆம் தேதியும் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு விசாரணை ஆணையம் வியாழக்கிழமை அழைப்பாணை அனுப்பி உள்ளது.

]]>
http://www.dinamani.com/tamilnadu/2018/dec/14/ஜெயலலிதா-மரணம்-தொடர்பான-விசாரணை-ஓபன்னீர்செல்வம்-உள்ளிட்ட-மூவருக்கு-அழைப்பாணை-3057713.html
3057711 தமிழ்நாடு மேக்கேதாட்டு அணை விவகாரம்: அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது DIN DIN Friday, December 14, 2018 03:58 AM +0530 மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக, கர்நாடகம் மீது அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
எடப்பாடியில் அவர் வியாழக்கிழமை நிருபர்களிடம் கூறியது:-
மேக்கேதாட்டு  அணை விவகாரத்தில், கர்நாடக அரசின் விரிவானத் திட்ட அறிக்கைக்குத் தடை கோரிய தமிழக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது ஏமாற்றம் அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ளும். 
தமிழக அரசால் தொடுக்கப்பட்ட வழக்கின் அடிப்படையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் வகையில் செயல்படும் கர்நாடக நீர்வளக் குழும அதிகாரிகள் மீதும், உரிய துறை அமைச்சர் மீதும் அவமதிப்பு வழக்கை தமிழக அரசு தொடர்ந்திருக்கிறது. 
கஜா நிவாரணப் பணிகள் விரைவில் முழுமையடையும்: கஜா புயலால் பாதிக்கப்பட்ட  பகுதிகளில் நடைபெற்று வரும் அரசின் நிவாரணப் பணிகள் குறித்து சிலர் குறைகூறி வருகின்றனர்.  எந்தச் செயலையும் சொல்வது எளிது. ஆனால் செய்வது கடினம்.  
கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான மின்கம்பங்கள் முறிந்து விட்டன, சுமார் 1,500-க்கும் அதிகமான மின் மாற்றிகள் சேதம் அடைந்துள்ளன. இவை அனைத்தும் தமிழக அரசால் போர்க்கால அடிப்படையில் சீர் செய்யப்பட்டு வருகிறது. 
புயல் பாதித்த பெரும்பாலான பகுதிகளில் நிவாரணப் பணிகள் முழுமை அடைந்து வருகின்றன. தொலைதூரத்தில் உள்ள சில கிராமப் பகுதிகளில் நடைபெற்றுவரும் நிவாரணப் பணிகள் விரைவில் முழுமை அடையும்.
சிலை கடத்தல் வழக்கு: சிலைகள் கடத்தல் வழக்கு குறித்து தமிழக அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து  நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்த பின்னரே கருத்து கூறமுடியும் என்றார்.

"பிரிந்து சென்றவர்கள் அதிமுகவுக்கு வரலாம்'

ஆர்.கே.நகர் எம்எல்ஏவும் அமமுக துணைப் பொதுச்செயலருமான டிடிவி.தினகரனை தவிர, அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற யாரும் மீண்டும் சேரலாம் என்று எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறியது: அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அதிமுகவில் இணைந்துகொள்ள வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமமுகவில் இருந்து டி.டி.வி. தினகரனைத் தவிர யார்வேண்டுமானாலும் அதிமுகவுக்கு வருவதை ஏற்கத் தயாராக உள்ளோம்.  சிலர் வேறு கட்சிக்கு செல்வது என்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். அதிமுகவில் இணையும்அமமுக நிர்வாகிகளுக்கு உரிய மரியாதை அளிக்கப்படும்.  இனி வருங்காலத்திலும் பிரிந்து சென்றவர்கள் திரும்பி வந்தாலும் அவர்களை இணைத்துகொள்ளத் தயாராக உள்ளோம் என்றார்.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/28/w600X390/eps.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/14/மேக்கேதாட்டு-அணை-விவகாரம்-அவமதிப்பு-வழக்கு-தொடரப்பட்டுள்ளது-3057711.html
3057708 தமிழ்நாடு ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியிலிருந்து சக்திகாந்த தாஸை நீக்க வேண்டும் DIN DIN Friday, December 14, 2018 03:57 AM +0530 ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியிலிருந்து சக்திகாந்த தாஸை நீக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பிரதமர் மோடிக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் சக்திகாந்த தாஸ், தற்போது நடைபெற்று வரும் ஜி.20 மாநாட்டில் மத்திய அரசின் சார்பில் கலந்துகொள்ள அனுப்பப்பட்டார். தற்போது ரிசர்வ் வங்கியின் 25-ஆவது ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
ரிசர்வ் வங்கியின் ஆளுநருக்குக் கூடத் தெரியாமல் மோடி அரசால் அறிவிக்கப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் பின்னணியில் மூளையாக இருந்து செயல்பட்டவர் சக்திகாந்த தாஸ்.
பண மதிப்பு இழப்பால் கருப்புப் பணம் ஒழிக்கப்படும், கள்ள நோட்டுகள் ஒழியும், பண மதிப்பு நீக்கத்தால் மின்னணு பரிமாற்றம் அதிகரிக்கும் என்றெல்லாம் பத்திரிகை, ஊடகங்களில் பண மதிப்பு இழப்பு முடிவை ஆதரித்துப் பேசியவர் இவர். 
பண மதிப்பு  நீக்க நடவடிக்கையால் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு, வங்கியின் முன் மணிக்கணக்கில் மக்கள் காத்துக் கிடந்தபோது ஒரு நாளில் ரூ. 4500 எடுக்கலாம் என்ற முடிவை ரூ.2000 ஆகக் குறைத்தவர் இவர். வங்கியில் பழைய நோட்டுகளை மாற்ற வருகிறவர்களின் கையில் மை வைக்க வேண்டும். அப்போதுதான் ஒருவரே திரும்பத் திரும்ப வங்கிக்கு வருவது தடுக்கப்படும் என்று ஆலோசனை சொன்னதும் இவரே.
தன்னிச்சையாக இயங்க வேண்டிய ரிசர்வ் வங்கியை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வகையிலேயே பாஜக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. எனவே, சக்திகாந்த தாஸ் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும். ரிசர்வ் வங்கியின் நிர்வாக ஆலோசனைக் குழுவில் கடந்த ஓராண்டில் நியமிக்கப்பட்டவர்களும் நீக்கப்பட வேண்டும். இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் இந்தியாவின் முக்கிய அரசியல் கட்சிகள் வழக்குத் தொடுக்க முன்வரவேண்டும் எனத் தெரிவித்துள்ளார் வைகோ.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/26/w600X390/vaiko1.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/14/ரிசர்வ்-வங்கி-ஆளுநர்-பதவியிலிருந்து-சக்திகாந்த-தாஸை-நீக்க-வேண்டும்-3057708.html
3057704 தமிழ்நாடு மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் DIN DIN Friday, December 14, 2018 03:56 AM +0530 மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும்  திமுக -  காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை கூறியது: 
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தன்னையும், தன்னுடைய அரசையும் மத்திய பாஜக அரசு இறுதி வரை காப்பாற்றும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், தற்போதுள்ள சூழலில்  தன்னையே  காப்பாற்றிக் கொள்ள முடியாத பாஜக,  தமிழக அரசை எப்படி காப்பாற்ற முடியும்? 5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பெரிய தோல்வி இல்லை என்று தமிழக முதல்வர் தெரிவித்திருப்பது,  பாஜகவுக்கு அவர் கீழ்படிந்துள்ளதை காட்டுகிறது.
"கஜா' புயல் நிவாரணத்தில் கூட ஊழல் நடந்துள்ளது. கரூர், ஈரோடு மாவட்டங்களில் நெசவாளர்கள் குறைந்த விலையில் அதிக போர்வைகளை உற்பத்தி செய்து வைத்துள்ளனர். ஆனால் தமிழக அரசு அவர்களிடம்  போர்வைகளை வாங்காமல் வெளி மாநிலங்களில் அதிக விலைக்கு போர்வைகளை வாங்கி ஊழல் செய்துள்ளனர். 
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது. திமுக - காங்கிரஸ் கூட்டணி பலமான அணியாக உள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்றார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2013/12/22/3/w600X390/evkselongavan.jpg http://www.dinamani.com/tamilnadu/2018/dec/14/மக்களவைத்-தேர்தலில்-40-தொகுதிகளிலும்-திமுக---காங்கிரஸ்-கூட்டணி-வெற்றி-பெறும்-3057704.html